0.காப்பு / பாயிரம்
1.ஓரெழுத்துப் பலபொருள்
2.ககரவெதுகை
3. ஙகரவெதுகை
4 சகரவெதுகை
5 ஞகரவெதுகை
6 டகரவெதுகை
7 ணகரவெதுகை
8 தகரவெதுகை
9 நகரவெதுகை
10 பகரவெதுகை
11 மகரவெதுகை
12 யகரவெதுகை
13 ரகரவெதுகை
14 லகரவெதுகை
15 வகரவெதுகை
16 ழகரவெதுகை
17 ளகரவெதுகை
18 றகரவெதுகை
19 னகரவெதுகை
|
** நாநார்த்த தீபிகை
** திருநெல்வேலி
** கவிராயர் முத்துசுவாமி பிள்ளையவர்கள் இயற்றியது
@0 பாயிரம்
** நூலாசிரியரின் மருகர்
** தமிழறிஞர் சுவாமிநாத பிள்ளையவர்கள் இயற்றிய
** சிறப்புப்பாயிரம்
#1
சீர் மருவு பாண்டி வளர் நாட்டினின் மலர்ப் பொழில்
செறிந்து இலகு பாகை என்னும்
திவ்ய நகர் அதிபன் உயர் கங்கைகுலதிலகன் மிகு
சீர்த்திபெறு சைவரத்நம்
சிறந்திடு குணாகரன் அறக்கடல் மனர்க்கு முடி
செங்குவளை அணியன் மார்பன்
திகழ்கின்ற வடகலைகள் தென்கலைகள் முற்றும் உச்
சிக்கு அறுத்து உளவு தேர்ந்தும்
ஏர்தரு தெலுங்கு நாகர முதல பாடைகள்
எனைத்தையும் வரம்புகண்டும்
எல்லையில்லாத கலை வேட்கையன் அனந்தையர்
இயற்றிய தவங்கள்தாமே
எழில்கொள் ஒரு வடிவுற்று எனப் பொறை தயங்கும் எழு
தாயுதப்பெருமாள் வரத்து
இனிமைதரு மகவு எனவும் ஆகி வளர் முத்துசுவா
மிக்கவியிராசர் கோமான்
பார் மிசை இலக்கியம் எனப் பல துறைக் கொடு
பரந்தியல் நிகண்டு முதலாப்
பற்பலல் அகராதிகளையும் திரட்டி அதிலுறு
பதர் அடைகள் நீத்து நன்றாம்
பதங்களொடு சிற்சில் வடபதமும் செறித்து அழகு
பத்து உற விருத்தவகையால்
பகர்ந்து அருளி நாநார்த்ததீபிகை எனும் சுவைகொள்
பாடலினை யாவரேனும்
ஓர்தலுற்றிடின் உறு மனத்து இருள் இரித்து அகல்
வுறும் பொருள் விளக்கு செயலால்
உயர்கலைகளுக்கு உரிய பொருள்வகை எனைத்தையும்
முனற்கு முன் அளித்திடுதலால்
உலகுறும் இலக்கியம் எனும் திரள்களுக்கு முத
லாய் உறுதிபெற்ற செயலால்
உதயன் எனவும் சுரர்கள் தருவதெனவும் கலைஞர்
உளம் எனவும் ஒளிர்கின்றதே
#2
பற்பல நூல் கற்கினும் என் பாடித்தான் என்
பயனிலவே எழுத்தொடு சொல் பான்மை வந்த
உற்பவம் ஓர்ந்திலராய் இனனைய தன்மைக்கு
உற்பவித்த முத்துசுவாமிக் கவீந்த்ரன்
அற்புதமாய்ப் பயில் பிரசங்கமதில் சில்போழ்து
அகப்படு புல்லறிவரையும் ஆய்ந்த கேள்வி
விற்பனரும் வெல்லரிது என்றால் இந்நூலை
விண்ட தவற்கு ஒரு வியப்போ விபுலையீரே
#3
புகழ் பெருகு கம்பனொடும் ஒட்டக்கூத்தன்
புகழேந்தி காளமுகில் முதல்வராய
முகமுறு நல் புலவர் கண் முன் மாய்ந்தது ஓரின்
முற்றவும் நன்று இற்றை ஞான்று உறின் நாவல்லீர்
தகவுள இ முத்துசுவாமிக் கவீந்த்ரன்
தன் முன் எதிர்ப்பட்டவர்கள் தன்மை குன்றிப்
பகலவன் முன் மின்மினி போல் ஆவார் இச் சொல்
பயனுள என்பதற்கு அவன் நூல் பகரும் சான்றே
#4
முன் இலக்கு இசை நூல் முது இலக்கியங்கள்
மொழிப்பிறழ்வு அடை சொலால் முழுதும்
துன் இலக்கு இதயத் துனி வடகலையால்
சோதனை கண்டு சுத்தமதாப்
பன் இலக்கியங்கட்கு இலக்கியம் என இப்
பதப்பொருள் பகர்ந்தனன் பாகை
தன் இலக்கினில் வாழ்தரும் கவி முத்து
சுவாமியாம் தமிழ்ப் புரவலனே
#5
கம்பனுக்கும் கும்பனுக்கும் காளி ஒட்டக்கூத்தனுக்கும்
கம்பனுக்கும் வாணி கருத்துருக்கும் கம்பனுக்கும்
கொண்டல் நிகர் முத்துசுவாமி குருசாமி செயும்
தண் தமிழ் ப்ரசங்கமதில்தான்
** தற்சிறப்புப் பாயிரம்
** பரசிவம்
#6
உலகம் ஓர் மூன்றும் ஏத்த உயிர்க்கு உயிராகி எங்கும்
இலகிய கடவுள் பாதம் இறைஞ்சி முன்னோர் பல் நூலில்
சில வெவ்வேறு உரைத்த எல்லாம் சேர்த்து ஒன்றாத் திரட்டி ஓர்சொல்
பலபொருள் எனும் நாநார்த்ததீபிகை பகரலுற்றாம்
** திரிபுரசுந்தரி
#7
தெரிதர நவில் நாநார்த்ததீபிகைக்கு ஒரு தீங்கு இன்றி
விரிவு எலாம் சுருக்கமாக விளம்பிடவேண்டி அன்பால்
திரிபுவநங்கள் ஈன்று அத் தேவர் மூவரையும் தந்த
திரிபுரசுந்தரித் தாய் சேவடி வணக்கம்செய்வாம்
**விநாயகர்
#8
பதம் ஆர் பொருள் சொல் நாநார்த்ததீபிகைப் பேர்ப் பனுவல்செயத்
திதமா விரும்பும் மநம் மருண்டு தேம்பித் தளைபட்டு உழலாமே
இதமாம் செம்பாகச் சொல்வளம் ஈய மலர்ப் பொன்னடி ஏத்தி
மதம் ஆர் வெள்ளிக் கோட்டுமுக மாதங்கத்தை வணங்குவாம்
** முருகக்கடவுள்
#9
கருங்கடல் சுருக்கி உண்டு செந்தமிழ்க் கடல் விரிக்கும்
அரும் தவக் குறுமுநிக்கு அன்று அருள் குருபரன் தாள் போற்றி
வருந்துறாது ஐயம் பேதம் மயக்கமும் நீங்கப் பத்துத்
திருந்து அழகொடு நாநார்த்ததீபிகை செப்பலுற்றாம்
**திருமால்
#10
திருமறுமார்பன் உலகு எலாம் புரக்கும் திரு நெடுமால் கல்வி பயிறற்கு
ஒரு முதல் என்னத் தொழத்தகும் கடவுள் உபய தாமரைப் பதம் பணிந்து
வரு ககராதி னகரவீறு எதுகை வைத்து அதில் கலப்புறாது அடைவே
பொருள்பெற எழுத்தின் முறையில் நாநார்த்ததீபிகை என இது புகல்வாம்
** கலைமகள்
#11
படிக வெண்ணிறத்தளாய்ச் செம்பதுமத்தோன் நான்முகத்தும்
குடிகொள் மெய்ஞ்ஞாநமூர்த்தி குசேசயப் பதம் வணங்கி
அடி ஒன்றில் இரண்டும் ஒன்றுமாக ஓர் தொடையில் செய்யுள்
முடிய ஓர் சொல் நாநார்த்தம் முறைதர மொழிகின்றேனால்
** ஆசிரியர்
#12
கந்தன் பழனிப்பதிக் குமரன் கருணைபெறு செண்பகக்கவிஞன்
மைந்தன் எழுதாயுதப்பெருமாள் எனும் நாவலர்கோன் வரமதனால்
வந்த அடியேன் அவர் இரு தாள் வணங்கிப் புகல்வன் வடநூல் சொல்
செந்தமிழினும் பொருள் தொகுத்துச் செயும் நாநார்த்ததீபிகையே
** அவையடக்கம்
#13
கற்ப நாடுறு மைந்தர்க்கு ஓர் பாடம் ஆம் என்னக் கற்ற
விற்பனர் கொள்வராக வேண்டு கொண்டு அடைசொற்கு அஞ்சிப்
பற்பல விருத்தத்தாலும் பகர்ந்தவும் தள்ளார் என்றோர்
சொல் பலபொருள் விளக்கம் சொல்லினன் நகை நாணாமே
** நாநார்த்த தீபிகை நூல்
@1 ஓரெழுத்துப் பலபொருள்
**1
#1
அப் பரன் உமை மால் வேதா அணி ஆமை அமர் கால் சூட்டு ஆம்
கப் பிரமன் காற்று ஆன்மாக் கனல் கதிர் நமன் மயில் பேர்
குப் புவி இடைச்சொல் பாவம் சிறுமையும் பழிப்பும் கூறும்
விப் பரமான்மாக் காற்று ஓர் உபசர்க்கம் விழி விண் புள்ளே
**2
#2
ஆ இரக்கம் பசுச் சொலிசை புழுக்கம் நினைவு ஆச்சா
அற்புதம் ஓர் வினா வினையின்விகுதி வாய்திறத்தல்
ஓ இடைச்சொல் மதகுநீர்தாங்குகதவு இரக்கம்
ஓர் வினா ஓலமிட்டவிளி யோநி வியப்பு ஆம்
மா வலி செய்யவள் செல்வம் நிலம் வியங்கோளசைச்சொல்
வண்டு கறுப்பு அளவு புத்தி பரி கரி மைம்மா நெல்மா
வயல் சந்திரன் மாதம் வெறுப்பு ஓர் சிற்றெண் ஓர்
மரம் பெருமை அழைக்கை மரணம் சநம் வேலையுமே
**3
#3
கா அசைச்சொல் துலாம் பூஞ்சோலை தோள்சுமை காஎன்றல்
சே இளஎருது அழிஞ்சில் தே அநுக்கிரகம் தெய்வம்
தூ வெள்ளை பற்றுக்கோடு நடுக்கம் தூபம் பொன் சுத்தம்
பா என்ப கிரணம் செய்யுள் பரப்புக் காருகர்தம்நூற்பா
**4
#4
கோ விழி கணை நீர் திக்குக் குலிசம் விண் கதிர் பால்நல்கும்கோ
விடை மதி சுவர்க்கம் குருசில் வாக்கு இலக்குப் பூமி
பூ வனப்பு இடம் பார் கூர்மை பொலிவு உடல் கமலம் கண்ணில்பூ
விளைவொடு பிறப்பு நிலம் புட்பம் நகர்பன்முப்பேர்
**5
#5
ஊ என்பது உணவோடு ஊன் ஆம்
தா வயின் பகை வருத்தம்
நா என்ப நடுவு நாக்கும்
யா ஒரு வினா அசைச்சொல்
**6
#6
சீ எழில் கமலை வாணி இலவங்கம் செல்வம் வில்வம்
சீயெனல் சரளம் வேடம் விடம்புண்ணில்சீ பன்னொன்றாம்
தீ என்ப நெருப்புப் புத்தி நிரையம் தீங்கு என்ன நாற்பேர்
மீ உயரம் விண் மேல் ஆம் வீ என்ப பூவும் புள்ளும்
**7
#7
ஐ அரன் திசாமுகம் கை வினைப்பெயர் விகுதியாதி
ஐ உருபோடு இடைச்சொல் அழகு ஐயன் கபம் வெற்புஉச்சி
கை இடம் திரள் வியூகம் சிறுமை இல் முகட்டில் மூட்டும்
கை ஒரு விகுதி செய்யும்முறை ஓர் மெய்யுறுப்பு ஒழுக்கம்
**8
#8
தை ஒரு மாதம் பூசம் வை என்ப கூர்மை நெல்தாள்
பை அராப்படம் படாதியால் செய்த உறை பச்சைப் பேர்
மை இருள் அஞ்சநம் செம்மறி முகில் கண்ணில்தீட்டும்மை
ஒரு விகுதி குற்றம் மலட்டொடு கறுப்பு ஒன்பான்பேர்
@2 ககர வெதுகை
**9
#1
பகவன் மால் பிரமன் புத்தன் சிநன் குருப் பரமன் தேவன்
பகவதி முதல்வி செல்வி பார்ப்பதி துர்க்கை வாணி
அகவல் ஓர் பா ஓர் ஓசை மயில்குரல் அழைத்தல் ஆடல்
தகவு அருள் உரிமை பண்பு ஆம் சகன் ஓர் மன் சகாயன் நண்பன்
**10
#2
விககமே கிரகம் அம்பு பறவை மேகம் விண்மீன் ஆம்
விகடமே அகலம் பேதம் விசாலம் சுந்தரம் உந்மத்தம்
முகடு என்ப வீட்டினுச்சி மலைத்தலை முலைமுகப்பேர்
சகதி சேறு உலகம் பூமி சநம் ஈராறெழுத்தின் சந்தை
**11
#3
சகநியம் பரிக்குரம் பிந்தினது வால் உபத்தம் தாழ்மை
ககம் என்ப பறவை காற்றுக் கணை விண்மீன் கிரகம் ஐம்பேர்
சுகம் இன்பம் கிளி நீர் வில்வம் துணியங்கப்புதல் சுவர்க்கம்
நகம் வெற்பு மரம் பாம்பு ஓர் மெய்யுறுப்பு நாகுணமரப்பேர்
**12
#4
மகம் வேள்வி விழா ஓர் நாள் ஆம் மகன் மைந்தன் புருடன் என்ப
முகம் ஓர்மெய்யுறுப்பு ஆரம்பம் பிரதானம் முகப்பு உபாயம்
யுகம் நுகம் முழம் நான்கு உள்ளது பயம் கிருதாதியும்பேர்
மகரம் ஓர் நிதியம் வன்மீன் மலர்த்தாது ஓர் இராசி ஓர் மீன்
**13
#5
சிகரி கோபுரம் விருக்கம் கருநாரை வெற்பும் செப்பும்
புகர் நிறம் மழைக்கோள் குற்றம் இபம் முகப்பொறி புற்கென்றல்
பகர்தல் சொல்லுதல் விற்றல் பேர் பகிநி சோதரியும் பெண்ணும்
சுகர்மம் நல்வினை ஓர் யோகம் துகள் என்ப குற்றம் தூள் ஆம்
**14
#6
அகலமே விரிவு மார்பு ஆம் அகலுள் பீடு அகலம் நாடு ஊர்
இகல் பகை வலி போர் முப்பேர் இகுளையே தோழி சுற்றம்
உகல் கெடல் உகுதல் சிந்தல் உகளலே குதித்தல் தாண்டல்
பகல் ஒளி நடுப் பிளத்தல் பொழுது நாள் பகலோன் நீங்கல்
**15
#7
புகல் குதிர் பிரவேசித்தல் உடல் புகுமிடம் சொல் வென்றி
புகழ் என்ப துதி கீர்த்திப் பேர் புகறலே குறித்தல் சொல்லல்
அகளமே மிடாத் தாழிப் பேர் அகறல் நீங்குதல் அகற்சி
அகி விருத்திரன் பாம்பு ஈயம் அகிலம் பூமியும் அனைத்தும்
**16
#8
திகிரி சக்கிரம் வேய் வட்டம் தேர் உருள் திரிகை வெற்பு ஆம்
வகிர் என்ப வழி தோலின்வார் வகிர்தல் வார்ந்திடல் பிளத்தல்
குகு மதிக்கலை தோற்றாதநிசின்குயில்தொனி ஓர் நாடி
சகுடம் நாய் பொதியம் சேம்பு ஆம் தகுதி தக்கது பண்பு என்ப
**17
#9
மகுடம் ஓர் சிவாகமம் சுற்றிக்கட்டும்சடை மௌலிப் பேர்
ககுதம் முக்கியம் எருத்தின் இமில் செங்கோல் கனகதண்டம்
பகுதி பிரகிருதி சேனை குடியிறை வளம் பங்கீடு ஆம்
சகுநம் புள்பொதுக் கிழங்கு நிமித்தம் மங்களவிருப்பம்
**18
#10
சகுநி ஓர் கரணம் புள் ஓர் தராதிபன் நிமித்தம்பார்ப்போன்
முகுரமே மகிழ் குலாலன்தடி முகுளம் கண்ணாடி
குகை நரிவால்புல் வெற்பின் முழையும் மண்குகையும் கூறும்
நகை விளையாட்டு இன்பம் பூண் சிரிப்பு ஒளி நயச்சொல் பல்லே
**19
#11
இகத்தல் நீங்குதல் கடத்தல் விட்டிடல் ஏகலும் பேர்
முகப்பு மொள்ளுகை தலைப்பு ஆம் விகற்பம் வேற்றுமை விதர்க்கம்
இகழ்ச்சி பொச் சாப்பு நிந்தை புகழ்ச்சி ஏத்துதல் கீர்த்தித்தல்
பொகுட்டுத் தாமரைப்பூங்கொட்டை பொருப்புச் சேற்றுஎழும் கொப்புள் பேர்
**20
#12
இகுத்தலே மறித்தல் தாண்டல் எறிதல் துன்புறுத்தல் வீழ்த்தல்
செகுத்தலோடு அழைத்தல் ஈதல் விரித்தல் சீத்திடல் ஈரைம்பேர்
உகுத்தல் ஊற்றுதல் விடுத்தல் சொரிதலோடு உதிர்த்தல் என்ப
பகுத்தல் வெட்டுதல் கொடுத்தல் பங்கிடல் என முப்பேரே
**21
#13
அகாதம் விண்ணவரால் தொட்ட குளம் பிலம் நிலையாஆழம்
நிகாயம் ஓர் வினைஞர்கூட்டம் பரமான்மா வீடு இலக்கு ஆம்
நிகாரமே அவமாநம் நெல்தூற்றுகை விழுங்குதல் பேர்
விகாரம்நோய் திரிபு உலாவல் விளையாட்டுச் சிநன்தன்கோயில்
**22
#14
விகாசம் விள்ளுகை விளக்கம் மிகிரமே மேகம் காற்று ஆம்
விகாதமே தடை விரோதம் விகிரம் வெண்மணல் புள் என்ப
விகாயசம் பறவை விண் ஆம் மிகிரன் சூரியன் புத்தன் பேர்
விகூடம்தான் மறைவு நிந்தை விகிர்தம் குற்சிதம் பொய் நோயே
**23
#15
சகடம் பண்டி சண்டைபொன்னற்கு இந்து மறைதல் உரோகிணிநாள்
அகடு வயிறு நடு உள் ஆம் அகணி உள்ளிட்டது மருதம்
தகடு பொன்னாதியின் இலை போல் சமைத்தது இலை போன்றதும் இலையும்
பகடு பெருமை யானை கடாப் படுவை ஓடம் போரெருதே
**24
#16
மகதி பெரிது நாரதயாழ் கிசிதன் வாசவன் திருமால் செப்பும்
சிகதை ஓர் நோய் சருக்கரை வெண்மணல் அ மணல் சேர் தரை
குகநம் குரூரம் எலி பாம்பு ஆம் குககை பொறாமை படிற்றொழுக்கம்
குகரம் கூழங்கை தொளை பகன் ஓர் அரக்கன் குபேரன் இநன்
**25
#17
நகரம் புரம் ஊர் கைந்நகப்பேர் நகுலி மாஞ்சி குக்குடி ஆம்
மகிஷி அரசமாது எருமை மகிளை அரிவைப்பெண் ஞாழல்
முகிரன் மூர்க்கன் காமுகன் ஆம் நிகிர்தன் பீடிப்பவன் கபடி
நிகிர்தி கபடம் கபடி அறுத்திடல் தள்ளுதல் நிந்தையும் ஆமே
**26
#18
எகினம் கவரிமாப் புளிமாப் புளி ஆண்மரம் ஓதிமம் நாய் ஆம்
சிகுரம் பதற்றம் மனைக்கீரி சிரோருகம் கட்செவி வெற்பு
பகுலை பசுக் கார்த்திகை ஏலம் பகுளம் கறுப்புக் கனல் பல ஆம்
சிகுவை சுவாலை நா வாக்கு வெகுரூபன் மால் சிவன் காமன்
**27
#19
சகத்து வாயு உலகப்பேர் நிகர்த்தல் ஒத்தல் சமர்செய்தல்
அகப்பா மதிலுள்மேடை மதில் அகற்றல் நீக்கல் அகலித்தல்
தொகுத்தல் ஈட்டல் தொகைசெய்தல் சுருக்கல் தொகுதிசெய்தலும் ஆம்
அகைத்தல் அறுத்தல் உலைப்பு உய்த்தல் அடித்தல் ஒடித்தல் உயர்த்துதலே
**28
#20
விகங்கம் புள் ஓதிமம் அம்பு ஆம் அகண்டம் கண்டமிலது எல்லாம்
சிகண்டம் மயில்சூட்டு அதின் தோகை திகம்பரம் அம்மணம் இருள் பேர்
சிகண்டி மயில் குக்குடம் பாலைத்திறத்துஓர்பண் வீட்டுமன்செற்றோன்
பகன்றை சிவதை கிலுகிலுப்பை சகுந்தம் பறவைப்பொதுக் கழுகு
**29
#21
சகசரி பொன்குறிஞ்சி சகி கூடச்சஞ்சரிப்பாள்
சகநம் அரைத்தலம் மகளிரின் பின் அரைப்புறம் ஆம்
நிகடம் நிகளம் சாணைக்கல் உரைகல் அருகு
நிகளம் கால்விலங்கு யானைக்கிடுசங்கிலிப் பேர்
ககநம் அறியக்கூடாதது துக்கம் படை விண்
காடு புகக்கூடாதது அகாதபிலக்குகை ஆம்
நிகமம் வழி கடைத்தெரு நிச்சயம் வேதம் நகரம்
ஞெகிழி கால்சிலம்பு நெருப்புறுவிறகு நெருப்பே
**30
#22
அகம் இடம் உள் இராகதுவேடாதி மநம் மனை வெற்பு
அரவு தரு நானெனல் ஆன்மாப் பாவம் துன்பம்
பகம் முயற்சி புகழ் அறம் கொக்கு இச்சை வைராக்கியம் வை
பவம் வீர்யம் ஞாநம் முத்தி யோநி சிவமல்லி
சிகரம் மரநுனி புளகம் மலையுச்சி உயர்ச்சி
சிரசு மாதுளவிதை நேர் மாமணித்துண்டப்பேர்
தகர் கிடாய் சுறாமீன் ஆண்குஞ்சரம் யாளியின்ஆண்
சகலம் எல்லாம் மரவுரி துண்டம் தோலும் சாற்றும்
**31
#23
சகளம் நீலாம்பரம் வெள்ளாட்டுஆண் கள் உருண்டை
தணியற்பிட்டு உருப்படல் ஊமத்தை மருட்காரை
சிகி கேதுக்கோள் எருது குதிரை சூட்டுளது
சேவல் மயில் விருக்கம் அம்பு தீ என ஒன்பான்பேர்
சகிதம் கூடப்பட்டது அஞ்சுவதும் ஆகும்
சகை பூமி கற்றாழை நன்னாறி குறுட்டை
சிகை கிரணம் சுவாலை மரச்சினை விழுது கவளம்
செங்காந்தள் குடுமி மயில்சூட்டு முதன்மையுமே
**32
#24
சகசம் உடன்பிறந்தது தன்னியல்பு
விகசிதம் அலர்ச்சி நடுவாம் மென்னகை
விகநகம் பஞ்சை எக்கும் வில் கொலை
தகரம் மயிர்ச்சாந்து ஓர் மரம் ஈயம்
**33
#25
அகரம் முதலெழுத்து அந்தணர்சிரேணி ஊர்
அகரு கார்அகில் இருவீடு அகிலும் ஆம்
சிகழிகை பூத்தார் மலர்முடி வாசிகை
சுகிர்தம் புண்ணியம் சுபம் நற்செய்கையே
**34
#26
விகிர்தி ஒர் ஆண்டு பேதம் விகுதி
நெகிழ்தல் குழைதல் மலர்தல் தளருதல்
மகிழ்நன் மகிழ்வோன் மருதத்தலைவன்
நகுதல் ஒளிர்தல் இகழ்தல் நகைத்தல்
**35
#27
ககுபம் திசை தந்திரித்தடை மருது
சுகுமாரம் வெண்கரும்பு மிருது
தகையே பெருமை தன்மை இளைப்பு
புகை யோசனை தீப்புறப்படும் ஆவி
**36
#28
யுகந்தரம் பழுபாகலும் பார்மரமும் ஆம்
சுகந்தி நல்மணமுளது ஏலாவாலுகம்
திகம்பரன் சினவரன் சிவன் நிருவாணி பேர்
முகுந்தம் ஓர் நிதி குந்துரு வெள் இரதமே
**37
#29
புகார் கழிமுகம் காவிரிப்பூம்பட்டினம்
குகூலம் உமித்தீத் தறி நிரப்பியகுழி
துகூலம் என்ப வெண்பட்டு மென்தூசும் ஆம்
அகோரம் சிவன் முகத்து ஒன்று அஞ்சாமையே
**38
#30
பக்கணம் ஊறுகாய் தின்பன வேடச்சேரி என்ப
முக்கணன் கணேசன் வீரபத்திரன் மகேசன் முப்பேர்
உக்கம் பேராலவட்டம் நுசுப்பு இடபமும் உரைப்ப
சொக்கம் தூய்து எழில் கீதப்பேர் சுக்கிரன் கனலோன் ஓர் கோள்
**39
#31
பொக்கம் பொய் பொலிவு மிக்கு ஆம் பொக்கு என்ப பதர் குற்றப்பேர்
செக்கர் செவ்வான் சிவப்பு மக்கள் மாநுடர் சிறார் ஆம்
எக்கல் எக்குதல் ஏறல் பேர் எஃகம் ஆயுதம் வேல் சக்ரம்
நிக்கிரகம் ஒடுக்கம் எல்லை பந்தகமும் நேரும்
**40
#32
சக்கிரம் கோண் வரைந்த மந்திரத்தகடு இராசிச்சக்கிரம்
தேசம் தேர்க்கால் சலதி நீர்ச்சுழியோடு ஆணைச்சக்கிரம்
திரிகை செக்குச் சமூகம் வெட்பாலை சேனை
சக்கிரவாகம் ஓர் ஆயுதம் வட்டம் என மூவைம்பேர்
**41
#33
வக்கிரம் கொடுமை வட்டம் திருமுதல் வளைவும் ஆகும்
வக்கிரன் குரூரன் செவ்வாய் சுக்கு ஒரு மருந்து சோகம்
சுக்கிலம் விளர்ப்பு ஓர் தாது சுக்கையே மலர்த்தார் விண்மீன்
கைக்கிளை இசையினொன்றும் ஒருதலைக்காமமும் பேர்
**42
#34
தெக்கணம் செய்யுளின்தொடர்ச்சி தெற்குச் சரளமரம் வலப்பால்
அக்கமாலை அருந்ததியோடு உருத்திராக்கமணிமாலை
கக்கம் பாவம் கிளைக்கொடி புல் உலர்கான் தூறு கைம்மூலம்
சிக்கல் மெலிதல் அகப்படுதல் செக்கு ஓர் இயந்திரம் சதையம்
**43
#35
தக்கன் தெரிந்தோன் ஓர் பிரசாபதி உதாசநன் சமர்த்தன்
உக்கிரன் வீரேசன் அரன் சதுர்த்தையால் மன்னருக்குதித்தோன்
இக்குகந்தை நீர்முள்ளி நெருஞ்சி நாணல் வெள்ளீறில்
இக்குவாகு குந்துருக்கம்பிசின் ஓர் இராசன் பேய்ச்சுரையே
**44
#36
அக்கம் கண் ஐம்புலன் ஞாநம் வழக்குச் சகடம்
அச்சுக் கால்பலம் கவறு தான்றி சுவர்ச்சிகைப் பேர்
சிக்கம் மெலிவு உறி சீப்புக் குடுமி சிறைச்சாலை
செக்கர்வானிறத்தோன் வீரேச்சுரன் மகேசன்
பக்கம் மயிர்த் திரள் சிறகு சகாயம் நட்புக் கிரகம்
படை அடுப்பின்தொளை உறுப்புத் திரள் பூர்வாபரம் என்
பக்கம் விலாப்புறம் சாத்தியம் அரசுவா வருக்கம்
பகை மாதப்பாதி பித்தி சமீபம் பாரிசமே
**45
#37
அக்கரம் விண் எழுத்து முத்தி அறம் தவம் மிக்கான்மா
அக்கு விடையின்முரிப்புச் சங்குமணி எலும்பு ஆம்
நக்கன் நிருவாணி சமணன் சிவன் வந்திப்போன்
நக்கிரம் வாயிலினிடு மேற்படி மரம் ஆண்முதலை
விக்கிரகம் சமர் பிரிப்புச்செயல் உடல்வித்தாரம்
விக்கிரம் மிகு வலி சம்பத்துக் கால்வைப்பு ஆம்
அக்கிரம் முக்கியம் ஊற்றம் பரிமாணம் பலம் முன்
ஆதி திரள் சிரேட்டம் நுனி மதில் அதிகம் மேல் ஆம்
**46
#38
சுக்கிரம் கள் இந்திரியம் காடி நீர் கண்நோய்
சுகிர்தம் பொன் புளிவஞ்சி புளி ஆனிமாதம்
சக்கிரி செக்கான் குயவன் சக்கிரவாகப்புள்
சற்பம் சக்கிரவேந்தன் சக்கிரபாணியும் பேர்
கொக்கு மாமரம் மூலநாள் பரி ஓர் பறவை
குக்குடம் தீப்பொறி கோழி கானாங்கோழியும் ஆம்
பக்குமம் பூவிதழ் இமையின்மயிர் பூந்தாது இறகு
பஞ்சின்நூலாதியின் நுண் நுனி அடுப்பின்தொளையே
**47
#39
பக்ககம் பாரிசம் பக்கவாயில் ஆம்
தெக்கணன் நல்மநத்தவன் தியாகி பேர்
அக்கதம் பொரி அவை அரிசி தானியம்
பக்கதி புள்சிறகடி முதல்திதி
**48
#40
உக்கிரகந்தம் வெள்ளுள்ளி இங்கு ஆம்
உக்கிரகந்தை ஓமம் வசம்பு எனும்
திக்கு எனல் புகலிடம் திசை உதாரணம்
சிக்குரு எனல் இலைக்கறி முருங்கையே
**49
#41
ஏககுண்டலன் குபேரன் பலராமன் ஆதிசேடன்
கீகசம் புழு எலும்பு ஆம் கீகடம் மகதம் பாய்மா
வாகசம் பெரும்பாம்பு ஆரைப்புதல் புனல்பாய்ச்சல் தீ ஆம்
காகணி கால்பணம் கால்கஃசு கால்முழம் சோகிப் பேர்
**50
#42
ஆகதம் குணிதம் கந்தை அடிப்பது பொய்ம்மைச்சொல் ஆம்
தோகதம் வயாநோய் வேட்கை தோகளம் சிந்தை இச்சை
மாகதன் இராசமாதின் வணிகற்கு உற்பவன் துதிப்போன்
ஆகமம் வருகை ஓர் நூல் ஆகவம் சமர் வேள்விப் பேர்
**51
#43
ஆகம் மார்பொடு தேகப்பேர் ஏகமே தனிமை ஒன்று ஆம்
ஊகம் வாநரம் தருக்கம் உத்தியினிச்சயப்பேர்
கோகம் நேமிப்புள் செந்நாய் தவளை சிற்றீந்தும் கூறும்
சாகம் வெள்ளாட்டுஆண் தேக்கம்தரு இலைக்கறி ஓர் தீவே
**52
#44
தோகம் சாதகப்புள் அற்பம் குலபரம்பரை சுதன் பேர்
மோகமே பழுது அஞ்ஞாநம் மூர்ச்சை ஆசைப்பெருக்கம்
வேகம் ஓர் மரம் ப்ரவாகம் இந்தியம் விசை நாற்பேராம்
மோகர் ஓவியர் உந்மத்தர் மூகன் நல்கூர்ந்தோன் ஊமன்
**53
#45
ஆகரம் உறைவிடத்தோடு அரதனப்பூமி கூட்டம்
சீகரம் கரகம் தூறல் திவலை சாமரம் கல்லோலம்
சேகரம் சூட்டுமாலை சிரம் மகுடம் திரட்சி
ஆகலநம் பிணித்தல் எண்பெருக்குதல் ஆசித்தல்
**54
#46
காகளம் மிகுதி சுட்கம் தெரியாச்சொல் களம் எக்காளம்
காகளி தருணப்பெண் காகளம் கண்டத்து எழும் மெல்லோசை
ஏகன் மற்றவன் மகேசன் பிரதாநன் ஒருவன் என்ப
பாகன் ஊர்தியைஊர்வோன் ஓர் அசுரன் பங்கினன் புதன் பேர்
**55
#47
ஆகிருதி உரு உடம்பு ஆம் ஆகுலம் வருத்தம் ஓசை
கோகிலம் குயில் கலப்பை குறைக்கொள்ளி உலக்கை என்ப
காகு பாமரச்சொல் கண்டதோடத்தின் ஒலி விகாரம்
நாகு வெற்பு எருமை ஆன் சங்கு இளமை புற்று ஆமா நத்தை
**56
#48
பாகு வெல்லம் பருப்புக்குழம்பு பாக்குப் பாகன் பேர்
வாகு தோள் அழகு ஆம் என்ப வாகை ஓர் மரம் தோள் வெற்றி
சாகை தோள் அருகு வேதப்பங்கு அரிதகி கொம்பர்ப் பேர்
தோகை வால் மயில் முன்றானை துவசம் புள்சிறகும் ஆமே
**57
#49
நீகாசம் உறுதி ஒப்பு ஆம் பூகேசம் ஆல் நீர்ப்பாசி
நாகாதிபதி சுரேசன் வாசுகி நால்கோட்டுயானை
ஆகாரம் உருவம் உண்டி நெய் தெரியாக்கருத்து ஆம்
மாகாலன் மாசாத்தன்தன் படைத்தலைவன் மாதேவன்
**58
#50
நாகதந்தம் யானைக்கொம்பு அதுபோல் நாட்டும் முளையாணி
ஆகநிகம் மண்அகழ் கருவி பன்றி பெருச்சாளியும் ஆகும்
நாகபுட்பம் புன்னாகம் சிறுநாகப்பூச் சம்பகம் ஆம்
ஓகம் வெள்ளம் பரம்பரை வீடு இடம் குழாம் ஆம் கூத்தின்துருதம்
**59
#51
சூகம் நெல்வால் அம்பு முனை சுனை காற்று இரக்கம் கருநெய்தல்
சேகம் வளர்க்கும் மிருகம் புள்ளொடு நீரிறைக்கை வல்லமை ஆம்
பேகம் முகில் மண்டூகப்பேர் பேகன் பீரு ஓர் வள்ளல்
மேகம் ஓர் நோய் முகில் கோரை வீகம் பூட்டு மோதிரமே
**60
#52
போகம் வேசை கரி பரியின் பணையம் பொருள் இராச்யம் அநுபோகம்
விளைவு பாம்பினுடல் படம் பாலநம் போசநம் சுகம் ஆம்
யோகம் உடல் கூட்டரவு மருந்து உபாயம் கவசம் நிலைமை பிரயோகம்
விட்கம்பாதி தநம் யுத்தி முயற்சி இயமாதி
**61
#53
வாகம் நானூற்றுக்குறுணித் தொகை பாய்மாத் தேர் எருது என்ப
ஆகருடம் வில்பழக்கம் சூது அதன்தன் பலகை கவறு இழுத்தல்
கோகருணம் ஓர் தலம் ஓர் பாம்பு அணி விரல் சாண் கோச்செவி மான்
போகவதி பாதாளநதி உரகபுரி சுகாநுபவை
**62
#54
சாகசம் ஆராயாமல்செய்தல் வலாற்காரம்
தண்டித்தல் துவேடம் பொல்லாதசெயல்செய்கை
காகம் ஓர் சுரதபந்தம் ஓர் மரம் ஓர் தீவு ஓர்
கண்ணுளபுள் ஓர் அளவை தலைகழுவுதலும் பேர்
நாகம் விண் சுவர்க்கம் மலை நாகதந்தம் புன்னை
நாகப்பூக் குரங்கு குரூராசாரம் துத்த
நாகம் ஈயம் தகரம் கரி சுரதபேதம்
நல்தூசு ஓர் கரணம் முகில் பெருங்கோரை பாம்பு ஆம்
**63
#55
பாகம் பாக்கியம் சிசு பக்குவம் சமைத்தல் பிச்சை
பங்கு ரூபகப்பாதி ஏகதேசமும் ஆம்
பூகமே கமுகு திரண்டது தொளை காலப்பேர்
போகல் ஏகுதல் நடத்தல் நீளுதலோடு உயர்தல்
நாகரம் ஓர் மொழி நகரோற்பவம் கோரை சுக்கு ஆம்
நாகரிகம் கண்ணோட்டம் நகரசம்பந்தமும் பேர்
வாகரம் மோக்கத்தினிச்சை நிருணயம் சாணைக்கல்
வடவாமுகாநலம் செந்நாய் தடை அச்சமுமே
**64
#56
காகரூகன் கபடி திகம்பரன் நல்கூர்ந்தோன்
காமசிதன் இடம்பமுளோன் பயப்பட்டோன் என்ப
மேகலை ஏழ்கோவைப் பெண்அரைமாலை கயிறு
வெற்பின்நடுக் கடிப்புறம் வாளுறை வேள்விக்கோலம்
போகி நாவிதன் அரசன் சுகாநுபவன் பிரபு
புருகூதன் வியாபாரத் தொழில்செய்வோன் பாம்பு
யோகி சிவன் மாசாத்தன் யோகுடையோன் அருகன்
யோகிநி ஓர் தேவதை யாமளை திதிச்சூலமுமே
**65
#57
சைகதம் மணல்திடர் மணல்தறைப் பெயர்
சைகதிகன் சமணன் துறந்தவன்
நைகமன் வைச்சியன் நகரவாசி ஆம்
வைகல் நாள் கழிவுநாள் வதிதல் வைகறை
**66
#58
ஆகசு என்பது தவறு அதமம் பாவம் ஆம்
கீகடன் என்ப நல்கூர்ந்தோன் கிருபணன்
வேகடன் அரதனவினைஞன் இளமையன்
மாகதம் வெண்சீரகம் மகதோற்பவம்
**67
#59
மாகதி முல்லை திப்பலி ஓர் பாடை ஆம்
மேகநம் மூத்திரம் ஆண்குறி மேவுறும்
கேகயம் அசுணப்புள் ஓர் தேயம் ஆம்
பாகலம் யானையின்நோய் நறுங்கோட்டமே
**68
#60
பாகதேயம் குடியிறை பாக்கியம்
மேகநாதம் சிறுகீரை காரொலி
மேகநாதன் வருணன் இராவணி
மேகபுட்ப மழைத்துளி ஓசை நீர்
**69
#61
சோகம் மனத்துயர் திரளை தொடை ஆம்
மாகம் மகப்பூரணையுறும்மாதம் விண்
யூகம் படையின்வகுப்புக் தலைப்பேனும்
பாகல் பலாமரம் ஓர் பைங்கொடியுமே
**70
#62
கோகநதம் செங்குமுதம் செந்தாமரை
சாகரம் கண்துயிலாமை சமுத்திரம்
வாகரன் பண்டிதன் துறவி முமுட்சு ஆம்
சாகி வெள்ளாடு வேதம் தரு என்னுமே
**71
#63
வாகிநி ஓர் படைத்தொகை நதி சேனை
போகில் புள்பொதுப் பூமொட்டுக் கொப்பூழ்
ஆகு வராகம் எலி பெருச்சாளி ஆம்
வாகுசம் தானாப் பிறந்த எள்ளுக் கிளி
**72
#64
வாகுரை மிருகம் படுக்கும் வலை உறி
கோகுலம் கோயில் கோசாலை பசுத்திரள்
நாகுலி என்ப சிற்றரத்தை செவ்வியம்
ஈகை இச்சை கொடை எடுப்பு ஈங்கையே
**73
#65
சாகாமிருகம் குரங்கு தேவாங்கு அணில்
வாகீசன் கவிஞன் வாக்கிறை அயன்
பாகூடம் சலசரம் பற்பதமும் ஆம்
காகோலம் ஓர் நஞ்சு அண்டங்காக்கையே
**74
#66
தீக்கணம் விடம் கடுஞ்சூடு இரும்பு போர் செய்யுள் சீரின்
தீக்கணம் கடலின் உப்புத் தீப்பொறி உவர்ப்போடு எண்பேர்
மோக்கமே மோசநம் பேய்ப்பாதிரை மரணம் முத்தி
பாக்கரன் தகநன் பாநு வாக்குப் பாமகள் சொல் ஆமே
**75
#67
ஊக்கலே முயலல் நோக்கல் நெகிழ்த்தல் மேற்கொளல் நினைத்தல்
தாக்கல் எண்பெருக்கல் முட்டல் தாக்கு என்ப வலியும் போரும்
தூக்கலே நிறுத்தல் தேர்தல் எடுத்தல் தூக்குதலும் ஆகும்
நீக்கலே அகற்றல் போக்கல் பிரித்தல் மாற்றலும் நிகழ்த்தும்
**76
#68
நோக்கலே காத்தல் பார்த்தல் நோக்கு என்பது அழகு பார்வை
பாக்கியம் யவட்சாரம் முன் சுபாசுபவினை அட்டுப்பு ஆம்
யோக்கியன் பிரியவாக்கி உபாயகன் சமர்த்தன் தக்கோன்
ஆக்கிரகம் கைக்கொள்கை அருள்கை நிற்பந்தம் கோபம்
**77
#69
மேக்கு மேற்கு உயர்வு மேல் ஆம் மீக்கோள் ஏறுதல் மேல்போர்வை
சூக்குமம் நுண்மை ஆன்மா அணுத் தேற்று ஓர் சிவாகமப்பேர்
தோக்குமம் பசுமை பச்சை யவை காதின்மலமும் சொல்ப
சேக்கை கற்கடகம் கொங்கை மிருகம்துஞ்சிடம் படுக்கை
**78
#70
ஆக்கம் பெருக்கம் கொடிப்படை தாக்கணங்கு இலாபம் பொருள் ஐம்பேர்
ஊக்கம் வலி உற்சாகம் மநவெழுச்சி மிகுதி உயர்ச்சி எனும்
தூக்கம் உறக்கம் ஆலசியம் குடையில் அணியில் தூங்குவ ஆம்
தூக்குக் கூத்துப் பாட்டு உறி காற்றுலாம் துலாம் தூக்கணம் ஒப்பே
**79
#71
ஆக்கல் உண்டாக்கல் செய்தல் சமைத்தல்
ஆக்கிநேயம் தென்கிழக்கு ஓர் புராணம்
சீக்கிரம் பண்டி இலாமிச்சம் விசை
பாக்கு எதிர்கால இடைச்சொல் துவர்க்காய்
@3 ஙகர வெதுகை
**80
#1
அங்கசம் உரோமம் செந்நீர் அங்கசன் மைந்தன் காமன்
அங்கதி கொடை தீ ஓர் நோய் அயன் அங்கிகோத்திரன் பேர்
துங்கம் வெற்பு உயர்ச்சி புன்னை துங்கி தைவேளை மஞ்சள்
புங்கம் மங்களஒழுக்கம் வல்லூறு அம்புக்குதைப் பேர்
**81
#2
வங்கம் ஓர் தேயம் நாவாய் வழுதுணை தகரம் ஈயம்
பொங்கர் வெற்பு இலவு கொம்பர் புங்கவன் சிரேட்டன் தேவன்
பிங்கலன் சிவன் இநன்பால் தகநன் ஓர் முநி குபேரன்
சிங்கலே மெலிதல் குன்றல் திங்கள் சந்திரன் மாதப்பேர்
**82
#3
தொங்கல் ஆண்மயிர் பூமாலை தோகை வெண்கவிகை நாலல்
மங்கல் மட்குதல் கெடல் பேர் மங்குல் விண் இரவு மேகம்
சுங்கி ஆல் இத்தி கல்லால் துங்கீசன் மகேசன் சோமன்
பங்கி ஆண்மயிர் உரோமம் பிரகாரம் தரங்கம் பத்தி
**83
#4
தங்கிசம் மருமம் துட்டம் கவசம் கண்டநம் காட்டுஈ ஆம்
வங்கிசம் முதுகின்என்பு குலம் சமவாயம் மூங்கில்
இங்கிதம் மனக்குறிப்பின் தொழில் கமநம் புணர்ச்சி
சங்கிதை புராண வேதங்களில்சில பங்கு சாஸ்த்ரம்
**84
#5
சங்கியை விசாரம் எண் ஆம் சங்குரம் திமிசு தேரே
அங்கிரி மரவேர் கால் ஆம் அங்ஙனம் ஆங்கு அத்தன்மை
பொங்குதல் கிளர்தல் கூர்தல் பொலிதல் பொங்கிடல் சோறுஆக்கல்
குங்குமம் செந்நிறம் செஞ்சாந்தொடு மரமும் கூறும்
**85
#6
சங்காசம் சமீபம் ஒப்பு ஆம் அங்காரம் தழல் இருந்தை
சிங்காணம் வளை மண்ணின் பாத்திரம் மூக்கின்மலம் கிட்டப்பேர்
சிங்காரம் யானையின் பூடணம் சிந்தூரம் கை செய்யும்
சிங்காரம் நவரசத்தொன்று இலவங்கம் பொடியும் செப்பும்
**86
#7
பிங்கம் பொன்னிறம் சிசு ஆம் பிங்கலம் பிங்கலந்தை பொன்மை
பிங்கலை வாமநப்பிடி பொன்னிறப்பெண் வலச்சரம் ஆந்தை
சங்கிநி ஓர் நாடி சதபுப்பி ஓர் சாதிப்பெண்
கங்கு தீப்பொறி வரம்பின் அருகு கருந்தினை முப்பேர்
**87
#8
கங்கதம் குற்சிதம் தருக்கம் கங்குல் பரணிநாள் இரவு
அங்கபாலி உபமாதா ஆலிங்கனம் கோடியும் ஆகும்
இங்கம் தெரியாக்கருத்து அங்கசேட்டை மநுடாதிகள் என்ப
சங்கிராமம் ரணமேல் செல்வழி ஆற்றின்மேல் அணை சமரே
**88
#9
அங்கம் இடம் பூண் உருவகம் போர் அப்ரதாநம் உடல் உடலின்
அங்கம் உபாயம் குறி மடி கோது அருகு ஓர் தேயம் ஓர் கூத்து ஆம்
சிங்கி ஆடாதோடை விடம் இராகுவின்தாய் குறிசெப்பும்
சிங்கி சிங்கப்பெண் சிறுகத்தரி மஞ்சிட்டை தேம்புறுத்தல்
**89
#10
பங்காரம் நீர்க்குமிழி புனல்பாசி சேது சோபாநம்
சங்கீரணம் ஓர் அணி உடம்பாடு அசுத்தம் நிறைவும் கலந்ததும் ஆம்
சங்குகந்நம் ஒட்டகம் கத்தபம் கோவேறுகழுதைப் பேர்
சங்குலம் வியாகுலம் செறிவாய் நிறைவுற்றது தம்மில்பகைச்சொல்
**90
#11
சங்கதி ஞாநம் தொடர்பு கூட்டம் கூட்டரவு ஆம்
சங்கிரகம் உடம்பாடு ஈட்டுதல் உயர்ச்சி சுருக்கம்
சங்கம் ஓர் நிதி சிறுநாகுணம் நுதல்என்பு ஓர் எண்
சவை பிராணித்திரள் புலவர் சங்கு குழாம் புணர்ச்சி
பங்கம் நீர்த்திரை குடிலம் சேறு பிந்நம் தோல்வி
பயம் பாவம் உரோமம் ஓர் நோய் பிளப்பு ஈரைம்பேர்
சங்கரம் ஆபத்து விடம் உடம்பாடு கலப்புச்
சமர் கருமநிச்சயம் வன்னிக்காய் குப்பையுமே
**91
#12
மங்கலியம் வெளித்துவாரவழி தயிர் ஓர் அகில் வில்
வம் திராய் திருமரம் சுக்கு அழகிது வெண்கடலை
மங்கலியை சதபுட்பை வெள்வசம்பு ஞாழல்
வன்னி கவிழ்தும்பை சங்கபுப்பி சுமங்கலை ஆம்
சங்கு வெண்சங்கு இலை நரம்பின்திரள் ஆப்பு ஓர் ஆயு
தம் கைவளை ஆண்குறி நீர்ப்பன்றி குற்றி ஓர் எண்
அங்குசு நூலாதியின் நுண் நுனி கிரணம் அருக்கன்
அங்குரம் நெல்முளை இரத்தம் நீர் உரோமமுமே
**92
#13
அங்காரகம் நெருப்புக்கொள்ளியும் பொன்குறிஞ்சியும் ஆம்
அங்காரிகை கரும்பின்தடி முருக்கின்அலர்க்கொத்து
அங்காரிணி கதிரோன் நீங்கு திசை அழல்சட்டி
அங்காரிதம் நீறாயது பலாசுஅலர்த்திரளே
**93
#14
சங்ககம் தலையின்நோய் சங்கு கைவளை
சங்கடம் நெருக்கமாமிடம் வருத்தமும்
அங்கணம் முற்றம் இல்பகுப்புத் தூம்புவாய்
அங்கதம் தோளணி வசைச்சொல் பொய்யும் ஆம்
**94
#15
சங்கதம் திடம் இணக் கச்சொல் சார்ந்தது
சங்கரன் ஓர் உருத்திரன் சதாசிவன்
சங்கருடணன் திருமால் அலாயுதன்
சங்கை அச்சம் முழந்தாள் சந்தேகமே
**95
#16
கங்கணம் கரசூத்திரம் கையணி
சிங்கம் ஓர் விலங்கு ஓர் இராசிப் பெயர்
அங்கராகம் மெய்ப்பூச்சு மெய்ச்சட்டை ஆம்
அங்கி அங்கப்பை கார்த்திகை அக்கிநி
**96
#17
கங்கபத்திரம் கழுகின்சிறை கணை
மங்கலை மங்கலப்பெண் வெள்ளறுகு
புங்கவம் இடபம் மருந்து சிரேட்டம்
மங்கலம் பொலிவு சுபம் சுபவாழ்த்தே
**97
#18
இங்கு பெருங்காயத்தோடு இவ்விடம்
கொங்கு மலர்த்தாது ஓர் தமிழ் நாடு
பங்கு முடவன் சனி பாதி கூறு
பங்குநி உத்திரநாள் ஓர் மாதமே
**98
#19
பங்குரம் என்ப நசிப்பொடு கோணல்
அங்குலி கைவிரல் யானைக்கையின்நுனி
இங்குலிகம் சிவப்புச் சாதிலிங்கம்
செங்கை சிவந்தகை ஆதிரைநாளே
**99
#20
சங்காடிகை மூக்கு இரட்டை தொழுத்தை
சங்காதம் திரள் ஓர் நிரையம் கொலை
சங்காரம் கொலை குப்பை அழிப்பு ஆம்
வங்காரம் பொன் உலோகக்கட்டியே
**100
#21
சாங்கரி குகன் கணேசன் தாங்கலே சுமத்தல் ஏரி
ஞாங்கர் வேல்படையும் முன்பும் பக்கமும் மேலும் நாற்பேர்
ஓங்கலே வெற்பு மூங்கில் உயர்தல் ஓங்குதல் எழுச்சி
சாங்கிகன் விசையுற்றுஓடுபவன் சங்கவினைஞன் என்ப
**101
#22
பாங்கர் தோழர் பக்கம் இடம் தீங்கு நவை பாவம் துட்டம்
ஏங்கல் ஒலித்தல் மயில்குரலோடு இளைத்தல் அழுதல் இரங்கல்பேர்
தூங்கல் யானை தாழ்தல் நடித்திடல் சோம்பு உறங்கல் தூங்குதல் ஆம்
தேங்கல் ததும்பல் திடுக்கிடல் பேர் நீங்கல் பிரிதல் செல்லுதலே
**102
#23
வாங்கல் வளைதல் கொளல் இழுத்தல் சார்ங்கம் மால் வில் வில்பொது ஆம்
வீங்கல் பருத்தல் ஏக்கறல் பேர் வேங்கை புலி பொன் ஓர் மரப்பேர்
ஆங்கு அவ்விடத்தோடு ஒப்பு என்ப ஊங்கு உவ்விடம் உன்னதம் மிகுதி
பாங்கு முறைமை உரிமை இடம் பக்கம் அழகு நன்மைப் பேர்
**103
#24
தூங்காமை சோர்வுஇல் விழிப்புடைமை சோம்பின்மை
ஆங்காரஞ் சுட்ட கரித்திரள் அகங்காரம்
காங்கேயம் பொன் முத்தக்காசு கமலத்தின்வேர்
காங்கேயன் தெய்வவிரதன் கந்தக்கடவுள்
@4 சகர வெதுகை
**104
#1
கசடு குற்றம் களங்கம் கசிபு கூறையும் சோறும் பேர்
அசதி கற்பிலாள் நயச்சொல் அசந்தி மல்லிகை தீச்சட்டி
அசநி வச்சிராயுதம் தீச்சட்டியோடு அனலேறு என்ப
அசம் மூவாண்டுறுநெல் ஆடு ஆம் அசுபமே தீமை பாவம்
**105
#2
கசம் மதகயம் வறட்புண் தலைமயிர் கட்டு நாற்பேர்
குசம் மரப்பொது தருப்பை கொங்கை நீர் தாம்பு ஓர் தீவு ஆம்
நிசம் மெய் நித்தியம் தனாது நிசை மஞ்சள் இராத்திரிப் பேர்
விசன் என்ப மனுடன் நாய்கன் விசிகம் தோமரம் அம்பு என்ப
**106
#3
அசிப் படைக்கலம் வாள் ஓர் ஆறு அவமதிச்சிரிப்பும் ஆகும்
குசி இரும்பால்செயப்பட்டது கொடுவினைஞன் மத்தன்
மிசி சடாமாஞ்சி ஓமம் சதபுட்பை சதபுப்பிப் பேர்
வசி உடல்தழும்பு கூர்மை கழுமுள் வாள் வசியம் என்றாம்
**107
#4
உசிதமே மிதம் நியாயம் யோக்கியம் பழக்கம் நாற்பேர்
கசிதல் ஊறுதல் இரங்கல் உருகல் வேர்த்திடல் கவன்றல்
சசியமே பயிரும் காயும் சசிவன் மந்திரி சகாயன்
அசிரம் காற்று உடல் சத்தாதிவிடயம் தீ தவளை முற்றம்
**108
#5
சுசிரமே நெருப்புப் பள்ளந் தொளை தொளைக்கருவியும் பேர்
விசிரம்பம் பத்தி நேயம் விளையாட்டுக்கலகம் என்ப
சிசு என்ப குழந்தை குஞ்சு ஆம் பசுபதி சிவன் தீத்தெய்வம்
பசு உயிர் ஆன் வெள்ளாட்டுஆண் பிரமதகணம் ம்ருகாதி
**109
#6
பிசுளம் நீர்க்காக்கை காஞ்சிமரமும் நீர்க்கடம்பும் பேசும்
இசை பண் சொல் ஒலி புகழ்ப் பேர் மிசை மேல் சோறு உயர்ச்சி மேடு
கசை பரிமுகத்தின்தாம்பு கரிணி சட்டுவம் சவுக்கு ஆம்
தசை வத்தி ஊன் முன்தானை அவத்தை கோள்களின்தசைப் பேர்
**110
#7
பசை பிசின் பசை இலாபம் பற்று இச்சை பசைவு சாரம்
அசைதலே துவளல் சோம்பல் ஆடலோடு உலாவல் தங்கல்
விசையன் ஓர் வடுகன் மாலின் துவாரிகன் விடையோன் பார்த்தன்
விசையை அம்பிகைதன்பாங்கி சயைத்திதி வீரச்செல்வி
**111
#8
விசர்க்கமே மலம்கழித்தல் கொடை தள்ளிவிடல் விடுத்தல்
இசித்தல் ஈழ்த்திடல் உரித்தல் இணுங்குதல் சிரித்தல் நாற்பேர்
விசித்திரம் பலநிறம் பேரழகொடு வியப்பும் ஆகும்
இசைத்தலே புணர்த்தல் கட்டல் சொல்லலோடு ஒலித்தல் என்ப
**112
#9
நிசர்க்கமே படைப்பு இயற்கை நீசனே குறளன் தாழ்ந்தோன்
ஒசித்தலே ஒடித்தல் சாய்த்தல் ஊசல் ஊசுதல் ஊஞ்சல் பேர்
நசித்தல் கேடுறல் இறத்தல் நாசமே மரணம் கேடு ஆம்
அசைத்தல் கட்டிடல் ஆட்டல் பேர் ஆசையே திசையோடு இச்சை
**113
#10
மசகம் கொசு குத்திரநோய்ப் பேர் வசிரம் கசதிப்பலி உப்பு ஆம்
விசதம் தூய்தானது வெண்மை விசரம் கூட்டம் படர்ச்சி கொலை
தசநம் கவசம் பல் என்ப சுசமம் எனல் சுந்தரம் உவமை
வசம் அதீநம் பிரபுத்வமின்மை வாஞ்சை சென்மமுமே
**114
#11
அசலம் மலை ஆப்பு அசைவின்மை அசிரன் அருக்கன் கனல் கவந்தன்
குசன் மத்தன் செவ்வாய் நரகாசுரன் இராமகுமாரன் பேர்
விசிகை பாரக்கோல் வைத்யசாலை வீடு தெருக் கருத்து ஆம்
அசிதம் சிரிக்கின்றது கருமை வெலக்கூடாதது அலர்ந்ததுமே
**115
#12
நிசிதம் நிறைவு கூர்த்ததும் ஆம் நிசுளம் மெய்ப்பை நீர்க்கடம்பு
சசியகம் வாளொடு தெங்கின்பேதம் சசியநிறத்துமணி
கசியம் கசையின் அடிக்கு உசிதமுளது பரியின்இடைகள் ஆம்
பிசு ஓர் கண்நோய் பஞ்சு ஓர் கள் பிசுநன் கோளன் துட்டன் பேர்
**116
#13
பிசண்டமே பசுவின்அங்கம் படுக்கையும் வயிறும் பேசும்
பசுங்கதிர் பீட்டை சோமன் பசும்புல் பைம்பயிர் பச்சைப்புல்
குசும்பமே கமண்டலம் பொன் குங்குமம் குசும்பைப்பூ ஆம்
அசும்பு என்ப கிணறு ஊற்றுப் பொல்லாநிலம் வழுக்குப்பூமி
**117
#14
வசந்ததூதம் என்ப குயில் மாமரம் பஞ்சமராகம்
வசந்தம் தென்றல் ஓர் இருது வாசவன்தன் மாளிகை ஆம்
வசந்தன் மதநதளபதியோர் கூத்து வசந்த விழாமதகன்
தசும்பு கடாரம் குடம் என்ப விசும்பு திசை விண் முகில் சுவர்க்கம்
**118
#15
வசதி மருதத்தூர் வீடு இராத்திரி நல்லிடம் ஆம்
வசுகம் எருக்குச் சிவமல்லிகை அளத்துஉப்பும் பேர்
முசலி நிலப்பனை ஓந்தி உடும்பு வீட்டுடும்பு
முதலை கேதகி பலபத்திரராமன் என்ப
விசல்லியை வண்டானப்பெண் சிவதை நேபாள
விதை சீந்தி நாகணந்தி காந்தள் குப்பைமேனி
அசன் அயன் மாயோன் சிவன் மன்மதன் இரகுசுதன் பேர்
அசிதன் வெலற்கரியோன் மாயவன் சனி நீல்நிறத்தோன்
**119
#16
சுசி வெண்மை சுத்தமந்த்ரி முதிர்வேனில் ஆடி
தூயது முச்சுடர் கழிவுபடாதது சிங்காரம்
வசு கிரணம் குபேரன் அனல் சிவமல்லி தநம் நீர்
மணி மதுரம் வறட்சி தும்புக்கயிறு தரன் முதலோர்
வசை மிகுதி கணவன்தன்சோதரி பெண்ஆனை
மகள் பெண் மலட்டுஆ வசம்பு நிணம் பழிச்சொல் குற்றம்
விசையம் மார்த்தாண்டமண்டலம் வெற்றி தெய்வ
விமாநம் சற்கரை கடுக்காய் ஓர் சிவாகமமே
**120
#17
பசநம் பாகம்செயல் வழிபாடு
வசநம் வார்த்தை வசித்தல் மனை துகில்
தசமி பத்தாம்திதி கூன்கிழவன்
குசலம் நன்மை சமர்த்துப் புண்ணியம்
**121
#18
அசமோதை இலவம்பிசின் ஓமம்
சசம் வெள்ளுலோத்திரம் முயல் போளம்
சசி இந்திராணி சதாவரி சந்திரன்
விசி பத்மச்சுருள் விரதியர்பீடம்
**122
#19
குசிகம் படைவாள் தான்றி மராமரம்
ஒசிதல் தளர்தல் ஒடிதல் அசைவுறல்
விசிநி பதுமக்குளம் பதுமக்கொடி
சிசிரம் பனி சீதளம் ஓர் இருது
**123
#20
அசநம் சிரித்தல் வேங்கைத்தரு போசநம்
சிசுகம் உல்லமீன் சிஞ்சுமாரம் எனும்
பிசுநம் குங்குமம் குறளை பருத்திப்பேர்
குசுமம் கண்ணின்நோய் பூப் பழம் பூப்புமே
**124
#21
நிசாசரர் அரக்கர் கள்வர் நிசாசரி அரக்கி துட்டை
நிசாதநம் இடம் உண்மைப் பேர் நிசாந்தம் வைகறை வீடு என்ப
நிசாமநம் காட்சி கேள்வி நிசீதம் நள்ளிரவு இரா ஆம்
நிசாரமே கொடை சமூகம் திரவியம் நியாயம் சாரம்
**125
#22
விசாகன் செவ்வேள் இரப்போன் நிசாடியே அரக்கி வேசை
குசாக்கிரம் மரத்தினுச்சி முலைக்காம்பு குசநுனிப்புல்
விசாரம் மீன் தேர்ச்சி சிந்தை விசாரதன் அறிஞன் ஊகி
விசாலை பேய்த்துமிட்டி உச்சைநிநகர் விரிவும் ஆமே
**126
#23
சுசீமம் சுந்தரம் குளிர்ச்சி மசூரையே சூளை ஓர் நெல்
குசீலவன் கற்றுப்பாடி அக்கிநீத்திரன் வான்மீகி
கசேருவே முதுகின்என்பு கரணை முத்தக்காசும் பேர்
அசோகமே திமிசு சோகமல்லது ஓர் மரம் வெண்சூதம்
**127
#24
நிசாசரம் கூகை பாம்பு நரிப் பெயர்
குசீதம் பொலிசைகொடுத்தல் சுசீவநம்
விசேடகம் விசேடம்செய்வது திலகம்
விசேடம் நுதல்குறி அவயவம் சிறப்பே
**128
#25
உச்சடை இடம்பாசாரம் வெள்ளுள்ளி வட்டக்கோரை
எச்சமே குறைவு புள்ளின்மலம் மகப்பொது யாகப்பேர்
பிச்சம் புள்சிறகு ஆண்பங்கி வெண்குடை பீலிக்குஞ்சம்
புச்சம் பின்புறம் வால் என்ப மெச்சல் கொண்டாடல் வாழ்த்தல்
**129
#26
எச்சன் பாவகன் முகுந்தன் அச்சுதன் மால் கேடில்லோன்
உச்சிதன் உயர்ச்சியுள்ளோன் வளர்ந்தோன் உற்பந்தன் முப்பேர்
விச்சித்தி சேதம் கைமெய் காட்டு அபிநயம் வீட்டெல்லை
வச்சிரம் ஓர்யோகம் வச்சிராயுதம் வயிரம் என்ப
**130
#27
அச்சு என்ப தேரின்அச்சோடு அடையாளம் உயிரெழுத்து ஆம்
கச்சுரை பூனைக்காலி சிறியகாஞ்சொறி கச்சோலம்
விச்சுவகருமன் வேதா விகர்த்தநன் தேவசிற்பி
அச்சுவதரம் ஓர் நாகம் கோவேறுகழுதை ஆமே
**131
#28
உச்சுவலம் சிங்காரம் விகசிதம் விளக்கம் தூய்து ஆம்
விச்சுவாவசு ஓர் ஆண்டு ஓர் கந்தர்வன் விபாவரிப் பேர்
இச்சையே இட்டம் ஆசை மச்சையே மரக்காழ் மூளை
கொச்சை சீகாழி வெள்ளாடு அறிந்துகூறாச்சொல் கீழ்மை
**132
#29
செச்சை வெள்ளாட்டுஆண் வெட்சி செஞ்சாந்தின் குழம்பு ஓர் மாடம்
பச்சை ஓர் புதல் புதன் மால் மரகதம் பசுமை தோல் ஆம்
பொச்சை காடும் பொருப்பும் பொற்றையும் கரிகாடும் பேர்
மிச்சை பொய் மிடி அஞ்ஞாநம் விச்சையே மறுகு வித்தை
**133
#30
அச்சம் கரடி பயம் அகத்தி பளிங்கு தெளிந்தது அபிமுகம் ஆம்
உச்சம் உயர்ச்சி வல்லிசைப் பேர் துச்சம் உறுகண் பாழ் அற்பம்
கச்சம் கரை நீர்த்தலம் சின்னி அருகு ஈறு அளக்கும்கால் கடன் ஆம்
குச்சம் பூங்கொத்து எண்ணான்குவடமுத்தாரம் கூன் ஆந்தை
**134
#31
கச்சை அரைஞாண் உள்ளுடைக்கீள் கயிறு உத்தியோகம் இபக் கழுத்தின்
கச்சை உத்தரீயம் உபரிகை நாற்கட்டு வீடு ஒப்பு ஆம்
பிச்சை சருவசுவைத்தெளிவு வாழை இலவம் பிசின் இரக்கும்
பிச்சை ஒழுங்கு பரிக்குரநோய் கமுகம்பாளை இலவும் பேர்
**135
#32
பிச்சடம் கண்நோய் ஈயம் திராப் பெயர்
சச்சநம் சேனைப்புறக்காவல் நற்சநம்
கச்சபம் ஆமை ஓர் நிதியின் கட்டுரை
கச்சபி வாணியின்யாழ் கமடப்பெண்
**136
#33
நிச்சயம் மெய்ம்மை நிருணயம் என்றும்
தச்சன் மரவினைஞன் சித்திரைநாள்
நொச்சி புரிசை ஓர் மரம் சிற்றூர்
பச்சிமம் மேற்கும் பிற்பட்டதுமே
**137
#34
பிச்சிலை இலவோடு இருவீடு எனும் மரம்
அச்சுவத்தம் கல்லால் அரசு இருபெயர்
விச்சுவம் சுக்குப் புவநம் சகலமும்
விச்சுவன் பரன் திரிவிக்ரமன் இந்திரன்
**138
#35
இச்சியை கொடை யாசநம் பூசனை
நிச்சிரேணி சிற்றீந்தோடு ஏணி ஆம்
நிச்சிரேயசம் மோக்கம் மங்களம்
கச்சுரன் சிரங்குள்ளவன் விடன்
**139
#36
கீசகம் மூங்கில் காற்றின் ஒலிக்கும் மூங்கிலும் ஆம் என்ப
பேசகம் யானைவாலின் அடித்தசைப்பிண்டம் கூகை
மேசகம் இருள் கறுப்புச் சாமளம் மயில்பீலிக்கண்
சூசகன் ஒற்றன் கோளன் கேசரி துரகம் சிங்கம்
**140
#37
ஓசசு கிரணம் ஞாநம் வலி செருக்கு ஒளி சொல்பண்பு ஆம்
தேசசு இந்திரியம் வெண்ணெய் பிரதாபம் திறல் தீக் காந்தி
சாசநம் இறை இறாவூர் சாத்திரம் கருமம் தாநசாசநம்
பொறித்தல் ஆணை அடக்கல் ஆயுதம் ஏவல்சொல்
**141
#38
தேசநம் கொறுக்கை மூங்கில் தேசி ஓர் இராகம் பாய்மா
யோசநம் நாற்குரோசம் ஆன்மாக் கூடுதல் யோசித்தல்
காசமே வளைமண் கோழை உறி நாணல் முதிர்புல் கண்நோய்
பீசமே விதை ஏதுச் சுக்கிலத்தாது தத்துவப்பேர்
**142
#39
வாசரை நிசி பெண் பூமி வாசிதை பெண் பெண்ஆனை
பேசலம் சமர்த்து உலக்கை குயில் அழகியதும் பேசும்
மாசலம் முதலை நோய் ஆம் மாசலன் துதிப்போன் கள்வன்
மூசலே மொய்த்தல் சாய்தல் மோசைதான் இலவு வாழை
**143
#40
தேசிகன் வணிகன் ஆசாரியன் தேசத்துள்ளவன் பேர்
வாசிகை ஆடாதோடை நுதல்சூட்டும்மாலை என்ப
ஆசிதம் சகடபாரம் துலாம் இருநூறு ஆம் பாரம்
கேசிநி சங்கபுப்பி பாதாந்தகேசப்பெண்ணே
**144
#41
ஆசியம் முகோற்பவம் வாய் முகம் முகாந்தரம் சிரிப்பு ஆம்
மாசு மேகம் கறுப்பு மலிமசம் அழுக்குக் குற்றம்
ஆசுகம் கணை புள் காற்று ஆம் ஆசுகன் அருக்கன் வாயு
ஓசையே நாதம் கீர்த்தி பூசை பூசனை பூஞைப் பேர்
**145
#42
மாசங்கம் நிதியத்தொன்று மநுடரின்நரம்பு ஓர் எண் ஆம்
வாசந்தம் குயில் தாசேரம் வாசந்தன் விகிதன் தூர்த்தன்
ஆசந்தி வேத்திராதநம் சிறுகட்டில் பாடை
வாசந்தி என்ப முல்லை குருக்கத்தி பாதிரைப் பேர்
**146
#43
பாசநம் யோக்கியம் சுற்றம் இருப்பிடம் உண்கலன் பாண்டம்
கோசரம் இந்தியத்து அகப்பட்டது காண்குற்றது ஐம்புலன் ஆம்
சோசம் லவங்கம் சோகம் வாழைப்பழத்தோல் பனம்பழம் ஆம்
வாசம் ஒலி நீர் நெய் அவிசு மணம் வீடு இறகு துகில் வேகம்
**147
#44
வேசம் வீடு வேசைமனை வீசல் எறிதல் கொடுத்தல் பேர்
ஆசி போர் வாழ்த்து ஒத்ததறை தூசி பரி தூள் படையுறுப்பு ஆம்
சூசி ஊசி கேதகைப்பூ முனை ஓர் சுரதம் அபிநயப்பேர்
பாசி வருணன் மீன் கரியமணி நீர்ப்பாசி கிடைச்சு என்ப
**148
#45
மாசி மகநாள் ஓர் மாதம் பாசு மூங்கில் பசுமையும் ஆம்
ஆசு விரைவு ஓர் இடைக்கார்நெல் அற்பம் பிழை ஓர் கவி கவசம்
காசு மணிப்பூடணக்கோவை கஃசில் செய் முத்திரைப்பணம் பொற்காசு
மணியின்பொது சூதுக்கருவி குற்றம் என அறுபேர்
**149
#46
கோசம் வாளுறை பயற்றின்நெற்றுப் புத்தகம் மொக்
குள்பூக் கள்கிண்ணி மதிலுறுப்பு முட்டை அண்ட
கோசம் வீடு உடல் பண்டசாலை சநத்திரள் பெண்
குறி திவ்யம் போளம் நூல் சொயவெள்ளி சொயப்பொன்
பாசம் ஊசித்துளை பேய் கலாபார்த்தம் கிரணம்
பருந்து நிந்தார்த்தம் கயிறு சுவர்ணார்த்தம் ஆசா
பாசம் மயிர்க்கற்றை கண்ணி செவிக்கடை நேயம் சோ
பநார்த்தமொடு குடையாதியின்கடை மூவைம்பேர்
**150
#47
சூசகம் நாய் பூனை வாயசம் ஊசி சஞ்ஞை
சூசநை கந்தநம் பார்வை பொதுத்தல் அபிநயம் ஆம்
வாசநை பூர்வாநுபவசிந்தை பரிமளப்பேர்
வாசி குணம் கூறு பரி கணை பறவை பொலிசை
கேசரம் பூந்தாது மகிழ் பெருங்காயம் நாக
கேசரம் அச்சுவ சிங்கப் பிடரின்மயிர் புன்னை
வாசிதம் புள்குரல் விலங்கின்தொனி அறிவு துகிலால்
மறைக்கப்பட்டது வாசம்கட்டினதும் ஆமே
**151
#48
கூசல் கூசுதல் வெருவல் வெள்கல் அச்சக்குறிப்பு என்ப
பூசல் சமர் அலங்கரித்தல் பேரொலி பூசுதலும் பேர்
பாசறை துன்பம் பகைமேற்சென்றோர் தங்கும்பதி ஆம்
தாசி கருங்குறிஞ்சி அடியாள் பரணிநாள் சாற்றும்
**152
#49
பேசி வாளுறை முட்டை முகிழ் மாஞ்சி பிசிதபிண்டம்
வீசி அலை சுகம் அற்பம் மயிரின்வளைவு ஒழுங்கு அற்றம்
ஆசினிதான் மரக்காழ் ஈரப்பலா ஆகாயம்
பாசுபதம் சிவமல்லி பசுபதி சம்பந்தமுமே
**153
#50
யாசகம் இராசயானை இரப்பு ஆம்
மோசகம் துறவு வாழை முருங்கை
வேசகம் வால் அச்சுவத்தின்குசைமயிர்
யாசகன் வேள்விக்குரியோன் இரவலன்
**154
#51
கேசம் வெட்டிவேர் தலைமயிர் கயிறு கை
ஆசயம் கருத்துப் பநசம் சார்விடம்
தூசரம் கழுதை மங்கின மானிறம்
கேசவன் நன்மயிருள்ளோன் கிருட்டிணன்
**155
#52
காசறை மணி மயிர்ச்சாந்து கத்தூரி
தாசன் அடியான் சதுர்த்தன் பரதவன்
ஊசி தையல்கருவி எழுத்தாணி
கோசிகம் எனல் உடு கூறை பட்டாடையே
**156
#53
நாசிகை வாயிலின்மேல்படி நாசி ஆம்
காசிபி அவநி அருணன் கருடன் பேர்
தூசு புடைவை இபத்தின் புரோசை தூள்
ஆசுசுக்கணி சூரியன் அக்நியே
**157
#54
ஈசாநம் வடகீழ்த்திக்கும் ஈசன் ஐம்முகத்தொன்றும் பேர்
ஆசாரம் படை ஒழுக்கம் சொரிமழை வியாபிப்பு ஆடை
மாசாலி பெருநெல் பீர்க்கு ஆம் மாசேநன் அருகன் கந்தன்
வாசாலை மிகவும் பேசவல்லள் நாகணவாய்ப்புள் ஆம்
**158
#55
கௌசிகம் கூகை கீரி குக்குலுத் தீபகம்பம்
கௌசிகன் விசுவாமித்ரன் மேகவாகநன் பாம்பாட்டி
வைசாகம் சாண் உளொத்த பதநிலை மத்து ஓர் மாதம்
ஔசீரம் கவரிக்காம்பு ஆசநம் வெட்டிவேர் படுக்கை
**159
#56
வைசயந்தம் இந்திரன்தன் மாளிகையும் பதாகையும் ஆம்
வைசயந்தி தழுதாழை பதாகை விண்டுவின்மாலை
கைசிகம் ஓர் பண் கேசத்திரள் கைசிகி ஓர் விருத்தி
வைசிகம் அங்குரம் முருங்கைத்தைலம் காரணம் மன்னும்
**160
#57
ஆசாடம் நற்றவர்கைக்கோல் ஆடிமாதம் மலையமலை
மோசாடம் சந்தநம் கதலிக்கருப்பம் கருஞ்சீரகம் முப்பேர்
கோசாதகி நாயுருவி பிடிப்பீர்க்குப் படோலிகையும் கூறும்
ஆசாபந்தம் சிலம்பியின் நூலாடை நம்பிக்கையும் ஆமே
**161
#58
ஆசான் ஆசாரியன் செவ்வேள் அருகன் பாலையாழ்த்திறப்பேர்
நாசீரம் முன்னெழும்சேனை முந்திநடத்தும்வாகநம் ஆம்
ஆசூ வலிதில் கூலிகொடா அமஞ்சி நரகவாதை எனும்
காசூ வேலாயுதம் விகலவாக்கு ஓர் நோய் புத்தியும் காட்டும்
**162
#59
தீச்சிகம் குசும்பைப்பூக் குங்குமம் எரிகொள்ளி செப்பும்
தீச்சிகை தீக்கொழுந்து செங்காந்தள் குப்பைமேனி
ஆச்சுவாசம் சாக்காடு பழங்கதைஅத்தியாயம்
மூர்ச்சிதன் எனல் உயர்ந்தோன் மயங்கினோன் மூடன் முப்பேர்
**163
#60
ஆச்சிரமம் முனிவரிடம் மடம் பிரமசரியாதி
ஆச்சிரவம் சபதம் சொற்படிகேட்டல் கிலேசமும் ஆம்
ஆச்சுரிதகம் பெருமைச்சிரிப்பு நகக்குறியின்வடு
ஆச்சாதநம் போர்த்துக்கொளல் மறைவும் ஆடையுமே
**164
#61
ஆச்சியம் நெய் சிறீவாசமும் ஆகும்
வாச்சியம் சொலத்தக்கது வாத்தியப்பேர்
பூச்சியன் மாமன் பூசிக்கத்தக்கவன்
ஈச்சுரன் சுவாமி மன்மதன் மகேசனே
@5 ஞகர வெதுகை
**165
#1
அஞர் துன்பம் நோய் அச்சப்பேர் அஞ்ஞனே மூடன் மூர்க்கன்
கஞறலே பொலிவு எழுச்சி கதக்குறிப்பொடு நெருங்கல்
முஞல் கொசுவொடு முயல் பேர் முஞ்சலே மொய்த்தல் சாதல்
உஞற்றலே முயறல் செய்தல் உஞற்று உற்சாகம் வழக்கு ஆம்
**166
#2
வஞ்சகன் குரூரன் தூர்த்தன் மனைக்கீரி நரி வஞ்சிப்போன்
பஞ்சதம் குயில் காலப்பேர் சிஞ்சிநி பதப்பூண் வில்நாண்
அஞ்சநம் கறுப்புக் கண்ணிலிடுமை மேல்திசையானைப் பேர்
கஞ்சநமே கண்ணாடி கரிக்குரீஇ வலியான் என்றாம்
**167
#3
வஞ்சநி காளிஏவல்பெண் இடாகிநி வஞ்சிப்பாள்
அஞ்சநை சார்வபூமப்பிடியுடன் அனுமன்பெற்றாள்
பஞ்சமம் அழகு ஐந்தாவது ஓர் சொரம் நிறைவு ஓர் பண் ஆம்
குஞ்சரம் கேசம் யானை குஞ்சி ஆண்மயிர் புள்குஞ்சே
**168
#4
குஞ்சம் கூன் புறங்கூற்று யானைக்கொம்பு பல் கன்னம் பீலிக்குஞ்சம்
பைங்கொடியின் வீடாக்கொளும் முழைஞ்சு அடவியும் பேர்
நெஞ்சமே மனமும் மார்பும் புஞ்சம் நெல்பொலி பிழம்பு ஆம்
பஞ்சமே செழிப்பிலாமை பரப்புடன் ஐந்தும் ஆமே
**169
#5
வஞ்சமே கொடுமை பொய் வாள் சிறுமை வஞ்சனையும் மன்னும்
பஞ்சரம் செருந்தி பண்ணும் பறவைக்கூடு உடலின்என்பு ஆம்
பிஞ்சரம் பொற்சிவப்பு அந்நிறப்பரி அரிதாரம் பொன்
மஞ்சரி தளிர் மஞ்சாடி பருத்தமுத்து ஒழுக்கம் மாலை
**170
#6
பிஞ்சலம் குசப்புல் பொன்மை பிஞ்சையே பஞ்சு மஞ்சள்
சஞ்சலை கமலை மின்னல் சஞ்சன் மாதேவன் வேதா
கிஞ்சற்கம் விண் பூந்தாது ஆம் கிஞ்சாரு கணை நெல்லின்வால்
கஞ்சன் தாமரையோன் ஓர்கால்முடவன் கண்ணன்தன்மாமன்
**171
#7
கஞ்சிகை மணிக்கால்பள்ளி இடுதிரை பரிகட்டுஊர்தி
பஞ்சிகை சிறுதேக்கு ஓர் நுண் பதவுரை வரவின்போக்கு ஆம்
அஞ்சிதம் பொருந்தல் கொண்டாடப்படல் அசைத்தல் முப்பேர்
சஞ்சு புள்அலகு ஏரண்டம் சஞ்சையே புகழ்ச்சி ஆசை
**172
#8
அஞ்சுகம் உத்தரீயம் ஆடை மெல்லாடையும் பேர்
கஞ்சுகம் பாம்புச்சட்டை குப்பாசம் கவசம் என்ப
கிஞ்சுகம் முள்முருக்குப் பலாசு கேகயப்புள் செம்மை
கஞ்சுகி மெய்காப்பாளன் கட்செவி அகில் விடன் பேர்
**173
#9
தஞ்சம் பற்றுக்கோடு எளிமை சஞ்ஞை உரன் பேர் அபிநயம் ஆம்
பிஞ்சம் புள்ளின்இறகு கொலை வலி வியாகுலமும் பேணும்
கஞ்சரீடம் வாள்கூர்மை விரதசாரி கரிக்குருவி
துஞ்சல் சோம்பல் நிலைபெறுதல் துயிலல் சாதல் என நாற்பேர்
**174
#10
இஞ்சி மதில் ஓர் மருந்து என்ப இஞ்சை களவாதியும் கொலையும்
வஞ்சி கருவூர் ஓர் மரம் ஓர் வல்லி ஓர் பாப் பாக்கழிப்பண்
மஞ்சு பனி பூண் முகடு இளமை வலி கார் கரியின்முதுகு அழகு ஆம்
கஞ்சை மணியுண்டாம்பூமி கமலை கள்விற்கும்வீடே
**175
#11
அஞ்சம் வெள்விடை பிராணவாயு மந்திராதி
அன்னப்புள் புயத்துச்சி பங்கு இருப்பு முன் ஆம்
கஞ்சம் அம்போருகம் அமிர்தம் தலைமயிர் தாளம் வெண்
கலம் நாழி வட்டில் பண்டசாலை அப்பம் என்ப
அஞ்சன் ஓர் துறவி மதன் பொறாமையிலான் சிரேட்டன்
அருக்கன் சீதரன் தியாகவேந்தன் அந்தரான்மா
விஞ்சையர் விற்பன்னர் வித்தியாதரரும் ஒக்கும்
விஞ்ஞாநம் முக்ய வினைநூல் சிற்பத்துணர்வே
**176
#12
பஞ்சநகம் புலி போதகம் கச்சபம்
பஞ்சமி அஞ்சாம்திதி துரௌபதி ஆம்
சஞ்சலம் அலைவதும் காற்றும் கிலேசமும்
அஞ்சலி உழக்குக் கும்பிடல் கூப்புதல்
**177
#13
மஞ்சிகை தாளிக்கொடி பேழை காதணி
மஞ்சுளம் இரம்மியம் சுந்தரம் குயில்
வஞ்சுளம் திமிசு வஞ்சி அசோகும் ஆம்
குஞ்சை இன்தொனி படகம் குன்றியே
**178
#14
பஞ்சாங்குலம் ஆமணக்குக் கையும் ஆம்
பஞ்சாசியம் ஐம்முகம் கண்டீரவம்
கஞ்சாரம் தந்தாவளம் வயிறு
கஞ்சாரன் சூரியன் கமலாசநன்
**179
#15
பாஞ்சசந்நியம் தீ நாணல் பரந்தாமனுடைய சங்கம்
காஞ்சநம் பொன் பூந்தாது புன்னை செண்பகம் நாகப்பூ
ஆஞ்சியே வெறியாட்டு ஏலம் சோம்பலோடு அலையல் நாற்பேர்
காஞ்சி ஓர் மரம் ஓர் ஊர் எண்கோவைமேகலை ஓர் பண் ஆம்
**180
#16
பாஞ்சலம் காற்றுக் கனல் இலாபப்பொருள்
காஞ்சியம் கஞ்சக்கருவி அப் பாத்திரம்
நாஞ்சில் கலப்பை மதிலுறுப்பும் பெயர்
பாஞ்சாலிகை துரௌபதி மரப்பாவை
@6 டகர வெதுகை
**181
#1
கடகம் கற்கடகராசி படை மதில் கேடகம் கைக்கடகம்
ஓர் கூத்து வட்டம் கயத்திரள் மலைப்பக்கப்பேர்
சடகம் ஊர்க்குருவி கள்ளுப் பாநபாசநம் கள்பாநம்
பிடகம் சாத்திரம் பெளத்தாகமம் பெட்டி பிளவை ஆமே
**182
#2
சடகை திப்பலி மூலத்தோடு ஊர்க்குருவிப்பெண் சாற்றும்
விடதரம் பாம்பு மேகம் விடன் என்ப தூர்த்தன் தேள் ஆம்
இடபியே பூனைக்காலி ஆண்வடிவப்பெண் கைம்மை
புடபேதம் உயர்த்துக் கொட்டும் பறை புரம் நதிக்கோணல் பேர்
**183
#3
கடமையே முறைமை காட்டுப்பசுக் கடன் இறுப்பு நாற்பேர்
இடம் இடம் இடப்பால் செல்வம் இராசி வீடு அகலம் விண் ஆம்
சடம் உடல் கடுமை பொய் ஆம் சடன் மதியீனன் மூர்க்கன்
வடம் பெருங்கயிறோடு ஆலமரம் நாணி மணிக்கோவைப் பேர்
**184
#4
தடம் வளையம் வரம்பு கரை இடம் தடாகம் செல்லும்
தடம் விரிவு ஓமகுண்டம் பெருமை தாழ்வரை திராசு ஆம்
படம் இடுதிரை தீட்டும் சித்திரப்படாம் புடைவை பாம்பின்
படம் யானை முகபடாமும் பதாகையும் முரளும் ஆமே
**185
#5
விடம் இலவணம் நீர் நஞ்சு வெற்பு எலி கருங்காலிப் பேர்
பிடரமே தயிரின் மத்துப் பெருங்கோரை பானை என்ப
படர் நடை வழி நோய் துன்பம் பகை வீரர் நினைப்பு மேடு
விடர் நிலப்பிளப்புக் காடு தூர்த்தர் வெற்பின் முழைப் பேர்
**186
#6
படலம் வீட்டுஇறப்புக் கண்நோய் பரிச்சேதம் திலகம் கூட்டம்
படலிகை பெரும்பீர்க்குக் கைம்மணி வட்டப்படிவம் தட்டம்
படலை தார் கோத்த மாலை வெளிக்கதவொடு படர்ச்சி
அடல் கொலை வலி போர் முப்பேர் அடவியே காடு சோலை
**187
#7
படல் கெடல் அத்தமித்தல் துயில் மாளல் படுதல் தட்டி
மடல் பனையோலை தாழைமடல்போல்வ மலரிதழ்ப் பேர்
கடல்வண்ணன் திருமால் ஐயன் கடவுளே தெய்வம் நன்மை
முடவனே சனி கால் நொண்டி முடுவல் செந்நாய் பெண்நாயே
**188
#8
தடவு என்ப பெருமை தூபமுட்டியும் வளைவும் சாற்றும்
கொடி காக்கை துவசம் நீளம் குகனாடல் படர்கொடிப் பேர்
செடி பதனழிவு பாவம் புதல் செறிவு எருத்தின் ஆர்ப்பு ஆம்
தடி வயல் உலக்கை வில்லுத் தசை உடும்பொடு கைத்தண்டே
**189
#9
துடி எழுமாதராடல் கூதாளி உடுக்கை அங்கத்துடி
வன்பால்பறை சிற்றேலம் சிறிது ஐயம் காலநுட்பம்
படி அங்கவடி சோபாநம் பகை ஒப்பு நாழி வாயிற்படி
விதம் கொற்றுப் பூமி நிறையறிகருவி பண்பே
**190
#10
பிடி பெண்ஒட்டகம் பெண்ஆனை கவரிமான் கைப்பிடிப் பேர்
முடி நாற்றின்முடி கிரீடம் மயிர்முடி குடுமி சென்னி
வடி கூர்மை கயிறு கள் ஆம் வடிவு அழகு உருவம் வண்ணம்
அடிகளே முநிவன் மூத்தோன் குடில் சிறுவீடு ஆகாயம்
**191
#11
சுடிகையே மகுடம் உச்சி மயிர்முடி நெற்றிச்சுட்டி
குடிஞை புள்பொதுவும் யாறும் கோட்டானும் குடிசையும் பேர்
கடிதல் வெட்டுதல் தண்டித்தல் கதம்செய்தல் அழித்தல் கொய்தல்
படிதலே குளித்தல் தாழ்தல் படிவமே வடிவும் நோன்பும்
**192
#12
குடிலமே வளைவு வஞ்சம் ஆகாயம் சடையும் கூறும்
குடிலை ஓர் நதி ஓர் மந்த்ரம் கொடிறு பூசம் கதுப்பு ஆம்
நெடில் வேய் நெட்டெழுத்து நீளம் நெடுமை பெண்மயிர் நீட்டப்பேர்
படிறு பொய் களவு வஞ்சம் படுவி குட்டநி கள்விற்பாள்
**193
#13
உடு விண்மீன் அகழ் ஆடு அம்புத்தலை அம்பின்சிறகு ஓடக்கோல்
வடு வசை தழும்பு இளங்காய் வாள் செம்பு பிரமசாரி
படுகர் நீர்நிலை மென்பாலோடு இழிந்தேறும்வழி பள்ளப்பேர்
முடுகலே விசையில்போதல் மொய்த்திடல் வலி எதிர்த்தல்
**194
#14
கிடுகு தேர்மரச்சுற்றுக் கேடகம் தென்னோலைப்படல் பேர்
இடுதலே சொரிதல் வைத்தல் போடுதல் ஈதல் பண்ணல்
தொடுதலே தீண்டல் பற்றல் தோண்டுதல் புனைதல் என்ப
விடுதலே எறிதல் போக்கல் தீர்தல் விட்டிடலும் ஆமே
**195
#15
அடை கநம் அப்பவர்க்கம் இலை புள்ளின்அடை அடுத்தல்
கடை இடம் முடிவு கீழ்மை வாயில் அங்காடி பாதை
கிடை பசுக்கிடை கிடைச்சு மறையோதுமிடம் கிடப்பு ஆம்
தொடை அம்பு ஓர் உறுப்பு நாணி தார் செய்யுள்தொடை தொடுத்தல்
**196
#16
நடை வாயில்கடவை கூத்து வழி நடப்பு ஒழுக்கம் என்ப
படை படைக்கலம் படுத்தல் பரியின் கல்லணை சேனைப் பேர்
மடை சோறு நீர் பாய் தூம்பு மதகு அணிக்கடைப்புணர்ப்பு ஆம்
முடை ஓலைக்குடை புலால் அ முடைநாற்றம் தவிடும் ஆமே
**197
#17
மடக்கு ஓர் சித்திரப்பாட்டு ஓர் மட்கலன் மடக்கியதும் ஆகும்
கடத்தல் தாண்டுதல் நடத்தல் கடப்பாடு கடமை ஈகை
கடத்துதல் நாள்கழித்தல் விலக்குதல் கடக்கச்செய்தல்
படப்பை ஊர்ப்புறம் கொல்லைப் பேர் படித்தலே பழகல் ஓதல்
**198
#18
அடர்த்தலே பொரல் நெருக்கல் அடித்தல் கொட்டுதல் அதுக்கல்
துடித்தலே பதறல் துள்ளல் நொடித்தல் கை பிதிர்த்தல் சொல்லல்
கடித்திரம் அரையில் கட்டும் புடைவை மேகலை தோல்பேதம்
கடுத்தல் கோபித்தல் ஐயப்படல் ஒத்தல் கடுகலும் பேர்
**199
#19
தொடுத்தல் நாணேற்றல் எய்தல் தொடங்கல் கட்டிடல் கோத்தல் பூத்தொடுத்தல்
பாத்தொடர்புசெய்தல் சேர்த்தல் பின்தொடர்தல் ஒன்பான்
விடுத்தலே நடத்தல் தீர்தல் போகவிட்டிடுதல் தங்கல்
அடுப்பு என்ப தீவாய்த்தானம் பரணிநாள் அச்சம் முப்பேர்
**200
#20
துடைத்தலே அழித்தல் ஒன்றில் துவள் நீரைத் துகளைப் போக்கல்
படைத்தல் ஆக்குதல் அந்நாதி பரிமாறல் உடைத்தாதல் பேர்
புடைத்தல் குட்டுதல் அடித்தல் வீங்குதல் நெல்கொழித்தல்
கடைப்பிடி மறப்பிலாமை கருமத்தின் துணிவு தேற்றம்
**201
#21
இடங்கரே முதலை தூர்த்தர் நீர்ச்சாலும் குடமும் ஏற்கும்
குடங்கரே குடிசை கும்பம் குடம்பை புள்கூடு முட்டை
படங்கு மேற்கட்டியோடு பெருங்கொடி படாத்தின்வீடு ஆம்
இடிம்பனே மூர்க்கன் பாலன் ஓர் இராக்கதனும் எய்தும்
**202
#22
நிடதம் ஓர் மலை ஓர் தேயம் நிடாதனே புலைஞன் வேடன்
தடவல் பூசுதல் நீவல் பேர் சடாயு குக்குலு ஓர் புள் ஆம்
கடறு காடு அருநெறிப் பேர் கடா வினா எருமைப்போத்து ஆம்
துடம் நெல்லின்உமி தான்றிப் பேர் துடாரமே பனி குளிர்ச்சி
**203
#23
குடபம் மரப்பொந்து உழக்கு என்ப சுடவி இரு சீரகம் பாகல்
விடபம் கொம்பு மரப்படர்ச்சி பெருந்தூறோடு தளிர் விடை ஆம்
கடமை ஆடு கடன் கடமான் கடவை ஏணி கவரிறுக்கு
திடமே கடிநம் பருத்தது மெய் செறிவு திரம் தீவிரம் வலியே
**204
#24
சடரம் வயிறு கடிநப்பேர் சடிலம் குதிரை சடை நெருக்கம்
நடலை பொய் வஞ்சனை துன்பம் நடவை கடப்புமரம் வழிப் பேர்
முடலை பெருமை வலி திரளை முருடு கழலை பெருங்குறடு ஆம்
விடலை காமவிடன்பாலைத்தலைவன் இளைஞன் விறலோனே
**205
#25
நடியே பவளக்கொடி நடிப்பாள் நடுவன் இயமன் நடுச்சொல்வோன்
மடி பொய் சோம்பு நோய் கேடு வயிறு ஆன்மடி கேதகி ஆடை
கடிநம் பானை குரூரப்பேர் கடுவன் வெருகு ஆண்குரங்கு ஆண்நாய்
மடு ஆற்றினுட்பள்ளம் சுனை ஆம் குடுமி உச்சி தலைமயிரே
**206
#26
இடை பார் சுவர்க்கம் நுசுப்பு நடுப் பசு வாக்கு இடத்தோடு இடச்சரப்பேர்
குடை பாதுகையின்குமிழ் கவிகை சதுரக்கள்ளி குகன்கூத்து ஆம்
சடை ஆல்விழுது கழுத்தின் மயிர்ப்பின்னல் கிடைச்சுத் தவத்தர் தலைச்சடை
வேர் மயிர்ச்சிக்கு அறிவில்லாள் பூனைக்காலி சடாமாஞ்சி
**207
#27
புடை கல்புழை பொந்து இடம் பக்கம் அடைதல் புகல் சேருதல் பெறுதல்
உடைதல் தகர்தல் சாய்தல் தளர்வு உடைமை பணதி பொருள் உரிமை
குடைதல் கடைதல் உடல் குடைதல் குளித்தல் தொளைத்தல் தோண்டலும் ஆம்
விடையன் விடையத்தவன் தேசமுடையோன் காமன் விடைக்கொடியோன்
**208
#28
பொடி சன்னம் தூள் விபூதிப் பேர் பொடித்தல் முளைத்தல் தூளாக்கல்
அடுதல் பொரல் கொல்லுதல் சமைத்தல் அடுக்கல் வெற்போடு அடுக்குதல் பேர்
கடுமை மிகுதி கடிது என்ப கடுப்புக் கடுத்தல் கடுகல் சினம்
கெடுதல் முறிதல் கேடாதல் கிடைத்தல் வாய்த்தல் எதிர்த்தலுமே
**209
#29
புடக்கிரீவம் தயிர்கடையும் தாழியொடு செப்புக்குடம் ஆம்
இடித்தல் உறுதிச்சொல்சொலல் கட்டிடித்தல் குற்றல் இடிமுழங்கல்
ஒடித்தல் முறித்தல் ஒளிசெய்தல் ஒடுக்கம் அடக்கம் முடிவு இடப்பேர்
மடித்தல் கெடுதல் மடிசெய்தல் மடுத்தல் தடுத்தல் உட்கொள்ளல்
**210
#30
உடுக்கை சேலை ஓர் பறை ஆம் உடைத்தல் தகர்த்தல் பேதித்தல்
படுத்தல் ஆகச்செயல் சயனித்திடன் துன்புறுத்தல் புள்படுத்தல்
தொடுப்புக் கலப்பை சால்வளைப்புக் குறளை சேர்க்கை தொடுத்ததும் ஆம்
அடைத்தல் மூடல் திறவாமை அரணம்செய்தல் உட்படுத்தல்
**211
#31
குடம் பூசம் சற்கரை கரிச்சந்நாகம் திருமால் கூத்து நீர்க்குடம்
கால்பரடு ஓர் கொடுந்தமிழ்நாடு உண்டை வீடு சிலாகுட்டம்
நிடங்கம் அம்புக்கூடு அம்பு ஆம் கிடங்கு குழி நீர்நிலை அகழி
விடங்கம் அழகு விழாலரிசி முகடு வீதிக்கொடி கொடுங்கை
**212
#32
மடங்கல் ஊழி மடங்குதல் நோய் இடி ஊழித்தீ நமன் சிங்கம்
முடங்கல் தாழை வரைந்தனுப்பும் ஓலை மூங்கில் முடங்குதல் ஆம்
கொடிஞ்சி தேர்க்கூம்பொடு தேல் ஆம் குடும்பம் குடிமை சுற்றப்பேர்
ஒடுங்கல் பதுங்கல் கூம்புதல் ஆம் கடும்பு உறவு சுமையடையே
**213
#33
விடாகபாயி திருக் கெளரி விடாங்கன் பரமன் சச்சநன் ஆம்
தடாகம் குளம் யந்திரகூடம் குடாரம் குரங்கு தருப்பொதுப் பேர்
விடாணி கிடாய்க் கொம்புப்பாலை சிறுகொம்பொடு கொம்புள மிருகம்
கடாயம் துவர்ப்புநிறம் சாயம் பிசின் மேற்பூச்சுச் சுகந்தப்பேர்
**214
#34
கடாரம் தமிழ் சூழ் ஓர் நாடு பொன்மை கடம் போல் பெரும் பாத்ரம்
சடாலம் தேன்கூடு ஆலமரம் வேள்வித்தறிக்கிட்டிடும் வளையம்
கடாவல் செலுத்தல் வினாவல் பேர் கடீரம் முழைஞ்சு கடித்தலம் ஆம்
குடீரம் சிற்றில் குடிசையும் ஆம் கோடீரம் சூடிகை சடையே
**215
#35
அடகு கடன்கொளற்கு ஈடா வைப்பது இலைக்கறி ஆம்
அடி முதல் செய்யுளின் பாதம் கீழ் கால் காலடிப் பேர்
இடபம் மதகயம் விடை முக்கியப்பொருள் பன்றியின்வால்
ஏழ்சொரத்தொன்று ஓர் புதல் ஓர் இராசி செவித்தொளை ஆம்
கடம் மிகுதி உடல் அரை பாழ்ங்கிணறு கயிறு யானைக்
கதுப்பு அதன் மத்தகம் யானைத்திரள் அதன் மும்மதம் மண்
கடம் மலைப்பக்கம் கடன் பாய் பிணம் பிணத்தேர் சமாதி
கபம் சுடலை அருநெறி காடு உரைகல் சாணைக்கல்
**216
#36
நடம் நடநம் பெருமரம் நெட்டிக்கோரை என்ப
நடு என்ப நுசுப்பு மையம் நீதி கடுவனும் ஆம்
குடந்நடமே பெருமுத்தக்காசுபெருமரப்பேர்
குடி குலம் ஊர் குடிமை சிற்றில் கும்பதாசியும் ஆம்
புடம் இலைக்கலம் வியாபிப்பு அலர்ச்சி தெரிந்தது எருப்
பொதிந்தெரித்தல் கணிதசுத்தம் மூக்கின்இதழ் வெண்மை
வெடி இடி கள் அச்சம் நறும்புகை வெளியும் ஒக்கும்
விடை இடபம் விடுத்தல் அதிவிடையம் எதிர்மொழியே
**217
#37
கடி புதுமை வாசம் விளக்கம் மிகுதி ஐயம்
காவல் விவாகம் கூர்மை சீக்கிரம் பிசாசம்
கடிதடம் இன்பம் சிறப்புச் சிறுகும்பம் தடுக்குக்
கரிப்பு அச்சம் நீக்கம் ஒலி எனப் பத்தொன்பான்பேர்
கடிகை நாழிகை துண்டம் பருவகாலமும் ஆம்
கடுகமே கடுரோணி திரிகடுகம் கார்ப்பு ஆம்
கடில்லகம் கஞ்சாங்கோரை சாறடை பாகலும் பேர்
கடுகந்தம் வெள்ளுள்ளி முருங்கை இஞ்சி ஆமே
**218
#38
கடு என்ப முதுகின்நோய் விடம் உவர்ப்புக் கார்ப்புக்
கைப்புக் கேழ்வரகு தினை சுகந்தியொடு நிந்தை
கடுரோணி மற்சரம் ஓர் விருக்கம் கூன் முள்ளுக்
காரியமல்லது கடுமை பிரியமல்லதும் பேர்
படு நோயிலான் சதுரன் தெரிந்தவன் கூர்ப்பாய்ச்செய்
பவன் கள் சதபுப்பி உப்பு மரக்குலை பேய்ப்புடோல் ஆம்
விடயம் கோசரம் தேசம் இந்தியம் சத்தாதி
விதம் எவனால் யாதொன்றை அறிவதோ அதுவே
**219
#39
இடங்கம் மண்தொடுபடை கல்லுளி பொரிகாரம் வா
ளின் உறை கற்சாணை கோபம் செருக்குக் கணைக்கால்
கடம்பம் இலைக்கறிக்காம்பு கடம்பமரம் அம்பு ஆம்
கடன் கொள்ளும்கடன் அளத்தல் கடமை குடியிறைப் பேர்
இடிம்பம் முலைகுடிகுழந்தை பெருந்துன்பம் மார்பின்
இடப்பக்கத்து ஈரல் சசமுட்டை ஏரண்டம்
கடம்பரை சாறடை பிடரின்நரம்பு கடுரோணி
கரிணி பெருங்குரும்பை மநோசிலை பிரசாரணியே
**220
#40
விடாகபி இந்திரன் திருமால் பாவகன் மகேசன்
விடாணம் யானைக்கொம்பு மிருகக்கொம்பும் பேர்
கடாகம் கூர்மத்தின்முதுகோடு எருமைக்கன்று
கப்பரை எண்ணெய் முதலாம் பாகபாத்திரப்பேர்
படாகை விருதுக்கொடி பத்தநத்தருகாம் கிராமம்
பாடீரம் வயல் கார் சந்தநம் வேய்ங்காழ் தகரம்
படாம் என்ப புடைவை பெருங்கொடியொடு இடுதிரை ஆம்
பாடீநம் குங்கிலியமரம் வாளைமீனே
**221
#41
மடம் அறியாமை அறப்புறம் மாணவரும் முனிவரும் உறும் உறையுள்
விடலி பெற்றிழப்பாள் மலடி சூத்திரகன்னிகை விவாகத்தின் முன் பூத்தாள்
வடவை பார்ப்பனி தூதிகை கடைஅனல் பெண்பரி தவாங்குலக்குய்ய வநிதை
படுதல் உண்டாதல் தாக்குதல் கெடுதல் வருந்துதல் செயப்படல் மாளல்
**222
#42
படகம் ஓர் பறை போர்ப்பறையின்ஒலி
வடகம் வற்றல் மேற்போர்வை வடை தோல்
சுடர் முச்சுடர் தீச்சிகை விளக்கோடு ஒளி
தொடர் நூல் சங்கிலி நட்புத் தொடர்ந்ததே
**223
#43
தொடர்பு தொடுத்தது செய்யுள் தொடர்ச்சி
கெடவரல் மகளிர்தம்திரள் அவர் கிரீடை
தொடவை உழவு நந்தநவநம் தோட்டம்
இடி இடியேறு ஒலி சுண்ணம் நெல்மாவே
**224
#44
தொடி கங்கணம் கைச்சூடகம் ஒருபலம்
படிகம் சூரியகாந்தம் பளிங்கு எனும்
தடிதல் குறைத்தல் தறித்தல் கொல்லுதல்
முடிதல் சாதல் முகிதல் முடிச்சிடல்
**225
#45
வடிதல் நீளல் நீரொழுகுதல் வற்றுதல்
தொடு மருதத்திணை தோட்டம் வஞ்சனை
வடுகன் ஓர் தேசன் சிறுவன் வைரவன்
படுநிலம் பாலைத்திணை படுகளமே
**226
#46
இடக்கர் மீதூர்தல் தூர்த்தர் மறைத்தசொல்
இடக்கை ஓர் பறை இடதுகை என்ப
கிடக்கை பாயல் கிடத்தல் அகலிடம்
கடிப்பம் காதணி பூண்கொள்கலனே
**227
#47
தடித்தல் பருத்தல் நொடித்தல் மின்னுதல்
முடித்தல் அழித்தல் முகித்தல் சூடுதல்
வடித்தல் வடியிடல் வசமாக்குதல் ஆம்
சடைச்சி மயிர்ச்சடையினள் நீர்ப்பாசியே
**228
#48
கட்கம் வாள் கடமான் என்ப கட்சி கூடம் அமளி காடு ஆம்
நிட்கம் மார்பணி பொன் பத்துப்பணம் நிறுத்திடுபலப்பேர்
மட்கல் மங்குதல் மழுங்கல் வட்கலே கெடுதல் வெள்கல்
வெட்கல் நாணுதல் கூசல்பேர் விட்கிரம் மயூரம் கோழி
**229
#49
விட்கம்பம் தறி ஓர் யோகம் நாடகாங்கம் வித்தாரம்
நிட்கிரமம் சாமர்த்யம் புத்தி சம்பத்து நேரும்
நிட்குடம் கதவு வீடு வயல் புறக்கடைத் தோப்பு என்ப
பிட்சையே சேவை கூலி இரப்பு இரப்புப்பொருள் பேர்
**230
#50
இட்டகந்தம் சுகந்தம் ஏலாவாலுகமும் ஆகும்
இட்டமே துலங்கச்செய்கை மகவினை இச்சை யோகம்
கிட்டம் வேர்வாதியாம் பன்னிருமலம் இருப்புக்கிட்டம்
குட்டமே தொழுநோய் ஆழம் சிறுகுளம் நறுங்கோட்டப்பேர்
**231
#51
சட்டமே நியமத்திட்டம் வரிச்சட்டம் கிடுகு செப்பம்
தட்டம் உண்கலன் நச்சுப்பல் தட்டியே படல் காவல் பேர்
நட்டம் கூத்து இலாபத்தாழ்வு ஆம் துட்டன் துற்சநன் தேள் என்ப
விட்டரம் தருப்பைமுட்டி இருப்பிடம் விருக்கம் பீடம்
**232
#52
சிட்டர் சத்தமர் உயர்ந்தோர் செட்டி வாணிகன் செவ்வேள் ஆம்
கட்டலே பிணித்தல் கள்ளல் களைதல் கட்டுதல் தடுத்தல்
கொட்டல் அப்புதல் அடித்தல் குவித்தல் சிந்துதல் தேள்கொட்டல்
இட்டன் பூச்சியன் நேயன் பேர் ஏட்டையே வெருகு ஆண்மேதி
**233
#53
இட்டி சங்கிரகச்செய்யுள் கொடை பூசை வேள்வி இச்சை
சட்டி ஓர் திதி ஓர் மட்பாத்திரம் அறுபதுமே சாற்றும்
திட்டியே சுகம் ஆநந்தம் பரிணாமம் திருட்டி தாநம்
பட்டிமை களவு வஞ்சம் பட்டுப் பட்டாடை சிற்றூர்
**234
#54
பட்டினி தேவியல்லாப் பரகூத்தி உணவிலாமை
ஒட்டு அநுபந்தம் புள்ளொட்டு ஓர் அணி படைவகுப்பு ஆம்
கட்டு மிக்குறுதி கட்டும்தன்மை கட்டுடைமை பந்தம்
மட்டு அளவு அவதி கள்ளுப் பெருந்தமருகம் வாசப்பேர்
**235
#55
முட்டு என்ப குறைவு இடைஞ்சல் பணிமுட்டு முழந்தாள் பூப்பு ஆம்
கொட்டை காதணி நூல்பஞ்சு பாதுகைக்குமிழ் காழ்க்கொட்டை
தட்டை வேய் கிளியோப்பும்கோல் ஓர் பறை தினைத்தாள் முண்டம்
மட்டை நெட்டிலையுடைத்தாம் மரப்பணை உடற்குறைப் பேர்
**236
#56
முட்டி வாள்பிடி கைப்பொத்து ஆம் மூட்டல் மூட்டுதல் பொருத்தல்
நிட்டுரம் குரூரம் அச்சொல் நீட்டல் நீள்வித்தல் ஈதல்
சட்டை பாம்பின்தோல் மெய்ப்பை சாட்டியம் வருத்தம் வஞ்சம்
பட்டாங்கு மெய்ம்மை ஊழ் ஆம் பாட்டுச் சொல் கீதம் செய்யுள்
**237
#57
கட்கி கடமான் வாள்பிடித்தோன் வெட்சி ஓர் பூ நிரைகவர்தல்
புட்பரதம் பூந்தேர் பூந்தேன் புட்டம் புடைவை வளர்ப்பதும் ஆம்
கொட்புச் சுழற்சி கோணல் பேர் குட்டன் மகன் செம்மறிக்குட்டி
பெட்புப் பெருமை ஆசையும் ஆம் பிட்டகம் கண்நோய் அப்பம்
**238
#58
கட்டம் மோவாய் மலம் சுங்கம் துறுமிடம் காடு இடுக்கணும் ஆம்
ஒட்டல் பொருந்தல் உடன்படல் பேர் வட்டுச் சூதுக் கவறு உருண்டை
தட்டல் இடறல் ஒத்தறுத்தல் தகர்த்தல் முட்டல் மறுத்தல் எனும்
முட்டல் எதிர்த்தல் தொடல் பாய்தல் நெருக்கல் தட்டல் முட்டுதலே
**239
#59
குட்டி ஆணல்லா விலங்கின் குழவி சிறுவி சிறியதும் ஆம்
யட்டி சிறுதேக்கு அதிமதுரம் ஓர் முத்தாரம் தடி ஈட்டி
பொட்டுப் பயறாதியின் மூடல் திலகம் அதுபோல்வது புழுப் பேர்
பெட்டை கழுதை பரி மரை ஒட்டக சிங்கப்பெண் பறவைப் பெண்
**240
#60
புட்கரம் ஓர் தீர்த்தம் ஓர் இராகம் வண்டானம்
போர் மேளப்பத்தல் முகப்பு ஓர் நாகம் பதுமம்
புட்கரத்தீவு ஓரிலைத் தாமரை களிப்பு ஆகாயம்
புனல் யானைக்கரநுனி வாளோரம் ஈரேழ்பேர்
புட்கரிணி பொய்கை கயப்பிடி சதுரவாவி
புட்கலம் ஓர் முகில் திரட்சி நிறைந்தது சிரேட்டம்
புட்பகம் பித்தளை இரும்பாதிய கனல்பூச்சட்டி
பூந்தேர் புட்பாஞ்சநத்தோடு அரதன கங்கணமே
**241
#61
அட்டமே வறட்சி குறுக்கு அட்டாலை மிகுதி
ஆவணம் நம்புகை சதுக்கம் நிறைவு இருநான்கும் பேர்
திட்டமே பரிபாகம் ஆநந்தம் காலம்
தெய்வம் ஒப்புரவு உறுதி கட்டளை ஏழ் பெயராம்
பட்டம் அம்மி மணையாதி எழுதுபடம் அதுபோல்
பண்ணுவன நாற்சந்தி இராசாவாம் குரு ஆம்
பட்டம் விதைப்புக்காலம் கவரிமா ஓடை
பதவி விரணாதி பந்தநம் பிரதிபந்தம்
**242
#62
உட்டணம் தீ வெயில் கடுஞ்சூடு உருப்பம் முதிர்வேனில்
உட்டிகை ஒட்டகப்பெட்டை ஓர் மட்பாண்டமும் ஆம்
வட்டம் சுற்றுகை நீர்ச்சால் மடுப் பரிவட்டம் கைம்
மணி பணவட்டம் பலகை வட்டவடிவு ஊர்கோள்
கட்டளை துலாம் நியமம் நிறைகல் உரையாணி
கருவி செங்கல் செயும் கட்டில் ஆணையும் ஏவலும் பேர்
பட்டி செவ்வுலோத்திரம் காட்டுத்தொழு நாய் நுதலின்
பட்டம் இடம் களவு சிற்றூர் விக்ரமன்தன் அமைச்சன்
**243
#63
விட்டி பத்திரைக்கரணம் கூலியிலாவேலை
விலை கூலியாள் வலிதுசெயல் நரகவாதை
வட்டிகை கைம்மணி கூடை சித்திரம் ஓர் சாந்து ஆம்
வட்டித்தல் பரிமாறல் வஞ்சினம் ஒத்தறுத்தல்
தட்டு மேனிலை மறிப்புப் பலகை வட்டம் தராசின்
தட்டு முறம் வளைவு தடை முட்டுத் தேர்த்தட்டு ஆம்
நிட்டை யாசகம் வெவத்தை கிலேசம் கேடு உறுதி
நிருவாகம் முடிவு தவம் சமாதி சித்தி மேன்மை
**244
#64
அட்டாபதம் சாரிப்பலகை எண்கால்புள் எட்
டடிமான் சந்திரமல்லி பொன் சிலம்பி புழு ஆம்
பட்டாரகன் தேவன் பட்டமன்னன் முநிவன்
பட்டிகை கச்சு அரைஞாண் ஓர் பாதிரை தெப்பப்பேர்
கிட்டாலம் இரும்புக்கிட்டம் தாம்ப்ரகலசம்
கிட்டி கைத்தாளம் தலையீற்றுப்பசு கிட்டிக்கோல்
நிட்பாவம் சுத்தி துலக்குதல் சூர்ப்பம் போளம்
நிருவிகற்பமுள்ளது நெல்பதர் பயற்றின்நெற்றே
**245
#65
கிட்கு முழம் சாண் முழங்கை கீழானவன் ஆம்
ஒட்பம் அழகோடு அறிவுடைமை ஒண்மைப் பேர்
சட்பம் அறிவீனமுளது இளம்புல் புன்மயிர் ஆம்
புட்பம் துணியங்கம் பூப்பு மலர் ஓர் கண்நோய்
**246
#66
சட்டகம் வடிவம் சயநம் சரீரம்
கிட்டல் எதிர்த்தல் கிடைத்தல் அருகுறல்
கொட்டி குகன்தன்கூத்து ஓர் நீர்ப்புதல்
புட்டில் கூடையோடு ஆயுதக்கூடுமே
**247
#67
விட்டிலே ஓர் பறவை பராய்மரம்
ஒட்டை சுட்டுவிரல்சாண் ஒட்டகம்
கட்டை கூழை மரக்குற்றி காட்டம் ஆம்
திட்டை மேடு திடர் உரல் திண்ணையே
**248
#68
சொட்டை ஓர் ஆயுதம் தலையின்வடு
பட்டை ஓலைக்கலம் மரத்தோல் எனும்
முட்டை புள்ளின்கருவும் தவிடும் ஆம்
மொட்டை முண்டிதம் கூரின்மை மோழையே
**249
#69
ஆடகம் நானாழிக்கால் பொன்னொடு ஒர் வகைப் பொன்னும் ஆம்
கேடகம் பகைமேல்செல்வோர் உறையிடம் கிடுகும் ஒக்கும்
கோடகம் புதிது பீர்க்குக் குதிரை ஓர் முடியுறுப்பு ஆம்
சாடகம் அரக்குமஞ்சள் பச்சைச்சந்தநம் சேலைப் பேர்
**250
#70
கோடணை வாச்சியம் கூக்குரலிட்டுச்சொல்லல் ஓசை
கீடம் வண்டு உலண்டும் சொல்ப கேடு என்ப நாசம் நட்டம்
வாடம் வீட்டொழுங்கு வேலி வழி தெருத் தோப்பு மன்னும்
கோடரம் மரப்பொந்து எட்டிமரம் மரச்சினை குரங்கே
**251
#71
மாடரன் சூரியன்பால்வரும் இந்த்ரன் வியாசன் விப்ரன்
நாடல் ஆராய்தல் தேடல் நாடு இடம் உலகம் தேசம்
ஆடவன் இளைஞன் ஆடூஉ ஆடை பால்தடிப்புச் சேலை
ஏடனே செவிடன் தோழன் ஏடிதழ் பனைமடல் பேர்
**252
#72
ஆடி ஓர் மாதம் உத்திராடம் கண்ணாடி நாரை
பாடி ஊர் சேரி முல்லைப்பதி படை நாடும் பன்னும்
பீடிகை கடைத்தெருப் பாயிரம் சிற்றாதநம் பூந்தட்டு ஆம்
ஈடு என்ப குழைவு ஒப்பு ஆண்மை பெருமையோடு இடுதலும் பேர்
**253
#73
ஓடு கப்பரை மட்பாண்டத்துடைந்தது ஓர் இடைச்சொல் என்ப
தோடு பூவிதழ் காய்த்தோல் பொற்குழை அணை தொகுதி ஏடு ஆம்
மாடு என்ப பக்கம் செல்வம் மணி ஆனின்பொதுத் தநப்பேர்
மேடு என்ப திடர் உயர்ச்சி வீடு இல்லம் விடுதல் மோக்கம்
**254
#74
ஓடை நீரோடை கேணி ஓர் மரம் நுதல்பட்டப்பேர்
கோடை மேல்காற்று வேனில் சதபுட்பையொடு வெண்காந்தள்
சூடை யானைப்புரோசை மயில்சூட்டுக் குடுமி சொல்ப
வாடையே சிரேணி வீதி வாசமும் வடகாற்றும் பேர்
**255
#75
மாடகம் ஐங்குன்றிஎடைப்பொன் யாழின் முறுக்காணி
தாடிமம் ஏலம் தாதுமாதளையோடு அதன் கனி ஆம்
காடு வநம் திரள் செறிவு பரணிநாள் ஓர் விகுதி
பேடு சிற்றூர் மதநன் கூத்து அலி பறவைப்பெண் நாற்பேர்
**256
#76
கேடம் கபம் குற்சிதம் வேட்டம் பனாட்டுக் கிரிசூழ்ஊர் கயிறு ஆம்
பாடம் கடுமை உடம்பாடு மிகுதி படித்தல் தெரு ஐம்பேர்
பேடம் பெரிய கூடை கிடாய் பிரப்பம்பெட்டி முதலியவாம்
ஆடம்பரம் பல்லிய முழக்கம் கரி கற்சிதம் ஆவேசமுமே
**257
#77
போடகளம் நெட்டிக்கோரை ஓர் மீன் நாணல்புதல் என்ப
கூடல் இயலல் மதுரை திரளுதல் கூடுதல் சேருதலும் பேர்
பாடல் படித்தல் கவிசெய்தல் பாடை திரிசொல் பிணக்கட்டில்
சேடன் அநந்தன் பலதேவன் தோழன் ஏவல்செய்வோனே
**258
#78
சாடி தாழி துகில் குறளை தாடை கோரப்பல் இச்சை
நாடி புண் கைத்தாது நரம்பு அறுகம்புல் நாழிகை நாளம்
மாடி சேலைத்தலைப்பு எளிமை இலையின் நரம்போடு இறைவாரம்
மோடி வடுகன்தாய் பிணக்கு ஆம் மோடு பெருமை வயிறு உயர்ச்சி
**259
#79
பாடு செயல் கேடு இடம் வருத்தம் பெருமை படுதல் ஒலி மடிவு ஆம்
பீடு பெருமை பெருமிதப்பேர் பேடை பேழை பெண்பறவை
சேடை ஆசி சொலித்தரும் வாலரிசி நிருமாலியதாநம்
பீடை கருணை முடிமாலை விரகம் சரளமரம் பீழை
**260
#80
கூடம் இந்த்ரசாலாதி கபடம் பொய் மறைவு
கொல்சமட்டி அசைவில்லாதது மேழி மாடக்
கூடம் மலையுச்சி புரவாயில் சூனியம் நெல்
குவை குவியல் புள்கண்ணி சூழ்வது பாவமும் ஆம்
கோடம் இடைச்சேரி முகில்முழக்கம் ஒலி வட்டம்
குட்டநோய் வெண்கலம் பேரொலி ஓர்கால் முடப்பேர்
மாடம் மாளிகை உழுந்து ஐங்குன்றிஎடையுளபொன்
மனை சருமதோடம் இரு குன்றியெடைவெள்ளி
**261
#81
பாடகம் கால்கடகம் நட்டம் கூலி சதுக்கிட்கு ஓர்
பறை கரை சூதாதி பாதகம் க்ராமப்பாதி
பாடலம் வெண்சிவப்புக் குங்குமம் இடைக்கார்ச்செந்நெல்
பாதிரை சேரன்குதிரைபாதிரைப்பூக் குதிரை
ஆடல் வென்றி விளையாடல் கூத்தாடல் புணர்தல்
அசைதல் செயல் சொல்லுதல் நீராடல் ஆளுதல் ஆம்
வாடவம் பெண்பரித்திரள் வாடவக்கனல் பாதாளம்
வாடி சுற்றுவேலி மனைகட்டுமிடம் கொல்லை
**262
#82
கோடி இடம் புதுக்கூறை புதிது ஓர் பேரெண் வில்
குதை நுனி பெண்பரி இருபான் மணித்தொகை மேம்பாடு ஆம்
சேடி அடியாள் பாங்கி விஞ்சையரூர் சிரேணி
சேடு நன்மை அழகு இளமை திரட்சி பெருமைப் பேர்
கோடு சங்கு ஊதும்கொம்பு கீறும்வரை மிருகக்
கொம்பு மரச்சினை வரம்பு கொடுமுடி நீர்க்கரை ஆம்
சாடு விரதியர்பீடம் பண்டிதன் மாப்படுக்கை
சாதுரியம் புகழ்ச்சிச்சொல் சகடு பெருங்கூடை
**263
#83
பேடகம் மரப்பெட்டி திரள் வேர்வைப்பரு ஆம்
தோடம் இராத்திரி குறைவு குணமலது பாவம்
வேடம் காதணியோடு வேற்றுருக்கொள் கோலம்
பாடலி வெண்பாதிரை கள்ளுப் பேய்ப்பாதிரையே
**264
#84
ஆடகி துவரை கிருட்டிணாப்பிரகம்
கோடல் வெண்காந்தள் கொள்ளுதல் கோணல்
மூடன் அறிவிலான் மூர்ச்சிதன் மூர்க்கன்
கோடிரம் இந்திரகோபம் கீரியே
**265
#85
கோடிகம் குண்டிகை பூந்தட்டுக் கூறைப் பேர்
ஈடிகை சித்திரிக்கும்கோல் யானைக்கண்
தூடிகை கண்பீளை சித்திரம்எழுதுகோல்
கூடை ஓர் கொள்கலம் கூத்தின் விகற்பமே
**266
#86
நீடம் இடம் புள்கூடு என்ப
வாடல் மெலிதல் சோர்தல் பேர்
சூடு சுடுதல் நெல்போர் ஆம்
மூடு மரத்தூர் ஆடு என்னும்
**267
#87
வேட்டநம் மகுடம் காதுப் பணி தலைப்பாகை சுற்றல்
ஈட்டமே கூட்டம் தேட்டம் ஏட்டையே தளர்ச்சி ஆசை
ஓட்டம் மேலுதடோடு ஓடல் பேர் ஓட்டல் உய்த்திடல் துரத்தல்
கூட்டமே திரள் புணர்ச்சி கூட்டலே திரட்டல் சேர்த்தல்
**268
#88
நாட்டம் வாள் குறிப்புக் கண் ஆம் நாட்டை ஓர் இராகம் ஓர் பண்
வேட்டமே பிசின் வேட்டைப் பேர் வேட்டுவன் மகநாள் வேடன்
ஊட்டல் ஊட்டுதல் அருத்தல் ஊட்டியே மிடறு உண்டிப் பேர்
கேட்டல் கேட்டிடல் வினாவல் கேட்டை தேவி ஓர் நாள்
**269
#89
பூட்டல் பூட்டிடல் நாணேற்றல் கொளுவுதல் பூணச்செய்தல்
வேட்டல் ஆசைப்பெருக்கம் வேள்விசெய்திடல் விவாகம்
பாட்டி பெண்நரி பெண்நாய் பெண்பன்றி மூதாயும் ஆகும்
நாட்டியம் நிருத்தவாத்யகீதமும் நடநமும் பேர்
**270
#90
பூட்கை மேற்கோள் கைம்மா ஆம் பூட்சி உடல் பூண்பன உரிமை
ஆட்சி உரிமை ஆளுகைப் பேர் காட்சி அறிவு காண்பன ஆம்
மாட்சி மாண்பு நளி நிறைவு பாட்பம் கண்ணீர் வெம்மை எனும்
ஞாட்புப் பாரம் கூட்டம் போர் சேனை வலி ஐம்பேர் நாட்டும்
**271
#91
சேட்டம் மூப்புக் கொண்டாடப்பட்டது ஆனித்திங்களும் ஆம்
ஆட்டல் அசைத்தல் குளிப்பித்தல் அரைத்தல் ஆடச்செய்தல் பேர்
பூட்டு வீகம் வில்நாணி பூட்டை செக்குக் காராம்பி
கோட்டுமுகமாக் கரி பன்றி கோட்டை புரிசை நெல்குதிரே
**272
#92
தீட்டல் எழுதுதல் மினுக்கல் கூர்ப்பிடல் சித்திரித்தல்
சேட்டன் மூப்பினன் அதிசிலாக்கியன் மூத்தோன் பேர்
தோட்டி அங்குசம் அழகு கதவு வாயிலும் ஆம்
சூட்டு நுதலணி நுதலின்மாலை புள்சூட்டு என்ப
காட்டை மேம்பாடு எல்லை இடம் பதினெண்நிமிடக்
காலம் மரமஞ்சள் சட்டுவம் திசை ஏழ்பெயராம்
சேட்டை கைகாலசைத்தல் தொழில் முன்னுதித்தாள் பல்லி
சீர்கேடி நடுவிரல் மூப்பினள் கேட்டைநாளே
**273
#93
கோட்டம் உள்வீடு உள்வயிறு குதிர் மனக்கோட்டம்
வளைவு ஓர் மருந்து கோணம் பசுக்கோட்டம்
ஊர் நாடு குராமரம் தேவகோட்டம
துருக்கம் கூட்டம் ஈரேழ்பேர்
**274
#94
மாட்டல் சொருகுதல் பொருத்தல் மாட்டுதல்
கோட்டி சல்லாபம் சவை கோட்டாலை ஆம்
தாட்டியம் அடிக்கத்தக்கது தைரியம்
வீட்டுமன் தேவவிரதன் உருத்திரன்
@7 ணகர வெதுகை
**275
#1
இணக்கம் சம்மதம் பொருத்தம் தணத்தலே பிரிதல் ஏகல்
கணக்கன் எண்அறிவோன் சாமன் கணக்கு என்ப எழுத்தும் எண்ணும்
புணர்ச்சி மைதுநம் பொருத்தல் புணர்ப்பு உடல் இசைப்பு உபாயம்
உணர்த்தல் போதித்தல் ஊடலொழித்தலோடு அறிவித்தல் பேர்
**276
#2
அணங்கு தெய்வம் தெய்வப்பெண் அணங்கனை சுந்தரத்தோடு
அணங்காட்டுக் கொலை வருத்தம் ஆசை நோய் என ஒன்பான்பேர்
துணங்கறல் இருள் விழா ஆம் நுணங்கு என்ப குழைவு நுண்மை
குணுங்கர் தோல்கருவியாளர் பிசாசர் சண்டாளர் கூறும்
**277
#3
இணர் பூங்கொத்து அலர் பூந்தாது ஆம் துணரும் இ முப்பேர் ஏற்கும்
உணராமை மயக்கம் மூடம் உணவு என்ப உண்டி சோறு ஆம்
பணவை பேய் கழுகு அட்டாலை பணிதலே வணங்கல் தாழ்தல்
கணி வேங்கைமரம் வயல் பேர் கணிசம் நெல்கதிர் மதிப்பு ஆம்
**278
#4
பிணி துன்பம் நோய் கட்டு என்ப பிணிமுகம் மயில் புள் அன்னம்
மணிமாலை மகளிர்தம் ஓர் பற்குறிவடு முத்தாரம்
குணில் கவண் பறையடிக்கும்கோல் குறுந்தடியும் ஆகும்
அணு உயிர் நுணுங்கோடு அற்பம் அணுகனே சமர்த்தன் அற்பன்
**279
#5
புணரி கல்லோலம் முந்நீர் புணை மரக்கலம் தெப்பப்பேர்
அணவல் எட்டுதல் சார்தல் பேர் அணைதலே அவிதல் சேர்தல்
துணி துகில்கிழிவு துண்டம் துணைவியே மனைவி தோழி
அணிதலே புனைதல் பூணல் கணையம் அம்பு எழுப்படைப் பேர்
**280
#6
அணை புனல்கரை வரம்பு செய்கரை மெத்தை ஆகும்
துணைவன் கேள்வன் சகாயன் சோதரன் தோழன் என்ப
பணை முரசு அரசு வேய் மாப்படுக்கை மந்துரை மரத்தின்
பணை வயல் பெருமை மென்பால் பறைப்பொது பருமையும் பேர்
**281
#7
குணபம் பிணம் பொல்லாநாற்றம் குணனே குணம் வீமன் மடையன்
புணர்தல் கூடல் கலத்தல் பேர் துணிதல் தெளிதல் தொடங்கலும் ஆம்
பிணவும் பிணாவும் புல்வாய் நாய் பன்றியின் பெண் பெண்பொதுப்
பணி தோல்கருவி ஆபரணம் பாம்பு வார்த்தை பணித்தொழில் ஆம்
**282
#8
இணை ஒப்பு உபயம் துணை என்ப இணைவு பிணைவு தொடுப்பு இசைவு
கணை பாணம் பூரம் திரளை சீரகம் திப்பலிச்செடி ஆம்
பிணை மான் புல்வாய் புலி கவரிப்பெண்ணோடு ஆசை தொடர்பு என்ப
பிணைதல் பொருத்தல் இணைதல் பேர் பிணையல் பிணைதல் பூமாலை
**283
#9
வணக்கல் வளைத்தல் பணிவித்தல் மணத்தல் விவாகம்செயல்ன் கமழல்
குணக்கு வளைவு கிழக்கு என்ப குணித்தல் மதித்தல் எண்பெருக்கல்
பணித்தல் வணக்கல் சொல்லுதல் தாழ்த்திடல் கட்டளையால்பணியிடல் ஆம்
இணைத்தல் இசைத்தல் சேர்த்த்ல் பேர் பிணைத்தல் இணைத்தல் தொடுத்தலுமே
**284
#10
குணங்கல் வளைதல் அனுங்கல் பேர் பிணங்கல் ஊடல் மாறுபடல்
நுணங்கல் முடங்கல் நுண்மையுறல் நுணுங்கு ஓர் சிறுநெல் நுட்பப்பேர்
வணங்கல் வளைதல் தெண்டனிடல் மணம் கல்யாணம் வாசம் எனும்
துணங்கை இருகை முடக்கி விலா ஒற்றி ஆடல் விழாச் சொல்லும்
**285
#11
கணம் அற்பம் திவலை நொறுங்கு ஐயிருவிநாடிக்
காலம் அவசரம் பரதந்திரம் பிரமதாதிக்
கணம் வியாபார விகலத்துவம் குழாம் ம்ரு
கத்திரள் ஓர் படைத்தொகை எண் முகூர்த்தம் விழா ஓர் நோய்
குணம் உறழ்ச்சி தோடமன்மை சந்திவிக்ரகாதி
கொடை பராக்கிரமாதி புகழ் சத்துவாதி
குணம் நாணி பஞ்சின்நூல் கயிறு இதம் இந்திரியம்
குடம் பண்பு ஐம்புலன் வெள்ளையாதி நிறம் கூறும்
**286
#12
பணம் வழக்கு ஒட்டம் சூது விலை கூலி பாம்பின்
படம் தனம் கஃசெடைக்காசு சாகாதி பகர்ச்சி
அணி பெருமை ஒழுங்கு அழகு ஆபரணம் முனை எல்லை
அலங்காரம் மாலை அச்சின் ஆணி படைவகுப்பு ஆம்
மணி முத்துப்போல்வ கறுப்பு அசக்கழுத்தின் அதள் கண்
மணி ஒலிக்கும் மணி எழில் குய்யத்துறுப்பு அரதனம்
கணிகை கரிப்பிடி வேசை முன்னை முல்லைப்புதல் தற்
காரி பரமாணுக் கோதுமைப்பொடி நீர்த்திவலை
**287
#13
பணவம் சிறுமுரசு யானைப்பிடர்த்தலை
குணி சிறுசின்னி பண்பி கூழங்கையன்
திணை நிலம் குலனோடு ஒழுக்கம் குடி இடம்
துணை இணை அளவு ஒப்பு பயம் சகாயம்
**288
#14
கணிச்சி தறிகை உளி மழுவாயுதம்
கணித்தல் வரையறுத்திடல் எண்ணலும் ஆம்
அணைத்தல் தழுவுதல் சார்த்தல் அவித்தல்
பணைத்தல் கிளைத்தல் பிழைத்தல் பருத்தல்
**289
#15
கணாதிபதி பூதேசன் கணபதி
மணீசம் கையின்நுனி முத்து மலர் காய்
கணீசி பண்டி பூக்குங்கொடி குன்றி
கணேரு வணிகன் கயப்பிடி கோங்கே
**290
#16
எண் என்ப கணக்கோடு எள் ஆம் எண்ணர் சோதிடர் அமைச்சர்
கண் மரக்கணுக் கண்ணோட்டம் களன் வேய் ஓர் அவயவப்பேர்
பண் நிறை நரம்பின்யாழோடு இசைப்பாட்டுக் கலணை என்ப
புண் உடல்புண் விடக்கு ஆம் பெண்ணை ஓர் நதி பனைப் பேர்
**291
#17
மண் மிருத்திகை நிலம் தூள் முழவின் மார்ச்சனையும் மன்னும்
விண் விசும்பு இளமை மேகம் விண்ணவன் அருகன் தேவன்
எண்ணமே மதிப்புச் சூழ்ச்சி இங்கிதம் சிந்தனைப் பேர்
வண்ணம் ஒப்பனை பாச்சந்தம் வடிவு எழில் நிறம் பண்பு என்ப
**292
#18
எண்ணலே குறித்தல் தேர்தல் மதித்தல் எண்ணுதல் நினைத்தல்
கண்ணி தார் புள்படுக்கும்கயிறு தாமணி அரும்பு ஆம்
புண்ணியசநர் இயக்கர் நைருதர் அறம்செய்வோர் பேர்
ஒண்மையே மிகுதி நன்மை ஒழுங்கு அழகு அறிவும் ஆமே
**293
#19
கொண்கனே துறைவன் கொண்டோன் நண்பனே கொழுநன் தோழன்
கண்படை உறக்கம் பாயல் பண்பு இலக்கணம் குணப்பேர்
குண்டகம் தைலபாத்ரம் மலிநம் தூள் கலோத்தம் என்ப
முண்டகம் நுதல் முள்மூலம் முள்ளி கள் வநசம் தாழை
**294
#20
கண்டகர் அரக்கர் அற்பப்பகையினர் கயவர் முப்பேர்
அண்டசம் பறவை ஓந்தி பாம்பாதி சலசராதி
பண்டநம் கவசம் போர் ஆம் பண்டம் பொன் பலபொருள் பேர்
துண்டம் புள்அலகு சாரை முகம் மூக்குத் துண்டிப்பு என்ப
**295
#21
முண்டமே கவந்தம் நெற்றி தலை மொட்டை திரளை குற்றி
குண்டலம் வளையம் காதுக்குழை ஆகாயம் பாசப்பேர்
குண்டலி மயில் இசங்கு குழையினன் வருணன் பாம்பு ஆம்
மண்டலி கிளி நாய் பூனை பாம்பு மண்டலவான் பாநு
**296
#22
கொண்டல் கீழ்காற்று மேகம் மண்டல் மூளுதல் குடித்தல்
சுண்டி ஓர் புதல் சுக்கு என்ப கொண்டியம் குறளை பொய்ச்சொல்
தண்டி ஓர் புலவன் வாயிலாளன் கூற்றுவன் தண்டிப்போன்
தொண்டியே தொழும்பி கள் ஆம் தொண்டு தொன்று அடிமை ஒன்பான்
**297
#23
மண்டிலம் குதிரை நாடு வட்டம் போர் கூத்தும் ஆகும்
செண்டு செண்டாயுதம் பந்தெறிவீதி பூஞ்செண்டு என்ப
வண்டு என்ப வடுப் பூசம் கைவளை பாணம் அறுகால் சங்கு
விண்டு வேய் மேகம் காற்று வெற்பு விட்டுணு ஐம்பேரே
**298
#24
வண்டுணாமலர்மரம் சம்பகம் வேங்கைமரமும் ஒக்கும்
கண்டை பொற்சரிகை பேய்ப்பாதிரை பெருமணியும் காட்டும்
சண்டையே சங்கபுப்பி கலகம் சன்னக்கச்சோலம்
தொண்டை ஆதொண்டை யானைத்துதிக்கை உள்மிடறு கொவ்வை
**299
#25
அண்டரே இடையர் வானோர் அண்டீரன் மனுடன் வீரன்
கண்டல் கேதகை முள்ளிப் பேர் கண்டோலம் கவளம் கூடை
சண்டிகை துர்க்கை காளி தண்டை காற்கடகம் வால் ஆம்
இண்டை தாமரை ஓர் மாலை எண்டோளி காளி துர்க்கை
**300
#26
தண்டதரன் கூற்றுவன் அரசன் தண்மை தட்பம் தாழ்வு எளிமை
கண்டபரசு மழுத்தரித்தஇராமன் இராகு கறைக்கண்டன்
மண்டநம் பூண் அலங்காரம் வண்டர் சுபப்பாடகர் மிண்டர்
குண்டம் பானை ஓமகுண்டம் தாரைப்புனல் வீழ் குளம் தொழுத்தை
**301
#27
சண்டம் கொடுமை கடுங்கோபம் சலசத்திரள் காடு அலி எருது ஆம்
மண்டம் அடகு தயிர்த்தெளிவு ஊன்சாரம் சிறகு ஆமணக்கு ஐம்பேர்
பண்டர் பௌத்தர் நபுஞ்சகர் ஆம் கண்டன் கணவன் பரன் வீரன்
சுண்டல் தெறித்தல் வற்றுதல் ஆம் சுண்ணம் தூளி சுடுசாந்தே
**302
#28
தண்டம் கடிப்புக் கொலை யானை வியூகம் படை தண்டனை ராசதண்டம்
செருக்குச் சதுக்கிட்கோடு இருப்புத்தடி மத்து ஊன்றுகோல்
பிண்டம் இரும்பு வலி போளம் கவளம் பிச்சை உண்டை கருப்பிண்டம்
சிசு வீடு உடல் உறுப்பு நெருக்கம் கூட்டம் பிதிர்ப்பருவம்
**303
#29
வண்டல் புனலின் திரை கொழித்த சேறு மகளிர்விளையாட்டு ஆம்
குண்டன் கருமம்செய்யகிலான் கொழுநன் பிழைத்து அந்நியற்கு ஈன்றோன்
சுண்டன் தெரியாதவன் சதயநாளும் மூஞ்சூறும் சொல்லும்
வண்டன் மிண்டன் வாலறுத்தஎருது குறளன் மணமில்லான்
**304
#30
உண்டி இரை சோறு உணவு என்ப உண்டை உருண்டை படைவகுப்புப்
பண்டி சகடம் வயிறும் பேர் பண்டிதன் கற்றவன் புதன் ஆம்
குண்டு திரண்டகல் உண்டை குழி ஆண்குதிரை ஆழப்பேர்
மண்டை இரக்கும்கலன் தலையின்எலும்பு நெல்லிமரன் எனுமே
**305
#31
கண்ணசாரம் இருவீடு சதுரக்கள்ளி கலைமான் பேர்
புண்ணியம் நல்வினை நீர் பொன் புனிதம் தருமம் மலர் அழகு ஆம்
பிண்ணியாகம் குங்குமம் எள்பொடி குந்துருக்கம் பெருங்காயம்
கிண்ணுவம் தீவினை பிண்ணாக்கு அநேக திரவ்ய கிருதக் கள்
**306
#32
வண்ணகம் பூச்சு ஆரப்பேர் மண்ணல் கழுவல் அலங்கரித்தல்
திண்ணம் திண்மை நிச்சயம் ஆம் திண்மை திண்ணியது வலிமை
மண்ணை பேயோடு அறிவின்மை வண்மை புகழ் மெய் கொடை வளமை
உண்மை ஊழ் உள்ளது மெய்ம்மை வெண்மை வெள்ளை வெளிறு இளமை
**307
#33
கண்டகம் ஊசியின்நுனி விக்கநம் பெருமீன்குட்டி
கடமான் வேய் முள்ளு மயிர்ச்சிலிர்ப்பு வாள் வித்தை
தண்டகம் போதிகை மாயை கரிக்குருவி திரட்சி
தருப்பணை ஓர் வநம் நுரை ஓர் செய்யுளின் விசேடம்
குண்டகீடன் சாருவாகன் அதியூகி
குட்டநிகேள்வன் சோர பார்ப்பனி புத்திரன் ஆம்
பிண்டபுட்பம் தாமரை அசோகம் செம்பரத்தை
பிண்டி பிண்ணாக்கு அசோகு சுரை தகரை நெல்மாப் புனர்தம்
**308
#34
கண்டம் மணிக்குற்றம் எழுத்தாணி சந்திதாநம்
கழுத்து ஓர் யோகம் கதுப்புக் குமிழி பரதாதி
கண்டம் வாக்கு ஒகி கேந்த்ரம் தத்துப் புண் பிளவை
கடமான் சற்கரை பரிப்பூடணம் துண்டம் கைவாள்
அண்டம் ஆகாயம் முட்டை அண்டகோசப்பேர்
அண்ணம் மேல்வாய்ப்புறமும் உள்நாக்கும் ஆகும்
சண்டன் ஓர் வடுகன் உருத்திரன் வெய்யோன் யமதா
சன் மலடன் யமன் அலி அந்தப்புரம்காப்போன் பேர்
**309
#35
புண்டரம் வெண்கரும்பு நுதல்குறியொடு வெண்ணிறத்து அம்
புயம் கிரமம் குருக்கத்தி ஓர் தேயம் அறுபேர்
புண்டரிகம் தேமா வெண்குடை கமலம் கோட்டம்
புலி ஓர் திக்கயம் ஓர் வண்டு யானையின்நோய் சாரை
மண்டலம் பன்னிருராசி சமூகம் நாற்பதுநாள்
வட்டம் ஓர் பாம்பு பரிவேடம் சந்திரார்க்க
மண்டலம் சக்கிரயூகம் தேசம் இரு காலும்
மண்டலித்த நிலை பூமி நாய் வட்டத்தொழுநோய்
**310
#36
முண்டன் மொட்டைத்தலையன் இராகு ஓர் அரக்கன்
முண்டி முண்டிதத்தலையன் மயிர்வினையாளனும் ஆம்
தண்டு குழாய் இலைக்கறிக்காம்பு யாழ் சிவிகை மிதுநம்
தடி படை தண்டாயுதம் வேய் தொளைப்பொருள் நந்தீசன்
விண்டுபதம் தாமரை பாற்கடல் ஆகாயப்பேர்
விண்டுபதி கங்கை திரராசியின் சங்கிராந்தி
சுண்டை தாமரையோடை நீர்க்கரிணி யானைத்
துதிக்கை ஓர் புதல் கள்ளு வாரப்பெண் சொல்ப
**311
#37
தண்டாரம் குயத்திரிகை மதகயம் வாகநம் வில்
சண்டாளன் கொலைஞன் பார்ப்பனி சதுர்த்தற்கு உதித்தோன்
பண்டாரம் குங்குமம் பல்பண்டம் இராசாங்கம்
பரமேசற்கு அடிமையானவன் பண்டசாலை
பிண்டாரன் எருமையைப் பாலிப்பவன் பிட்சுகன் ஆம்
பிண்டீதகம் தகரை கடாரை மருட்காரை
கண்டூடம் முகப்பூர்த்தி துதிக்கைநுனி சிறங்கை
கண்டூதி தினவு காஞ்சொறிப்புதலும் ஆமே
**312
#38
தண்ணடை பச்சிலை நாடு மருதநிலத்துஊர் ஆம்
தண்ணம் மழுப்படை குளிர்ச்சி வனம் ஓர்கண்பறைப் பேர்
அண்ணல் அருகன் புத்தன் பெருமை முல்லைத்தலைவன்
அரசன் அணுகுறல் அண்ணன் பெருமையாளனும் ஆம்
பண்ணவன் ஆசாரியன் தேவன் முனிவன் அருகன்
பண்ணிகாரம் பலபண்டத்தொடு அப்பவருக்கம்
பண்ணை நீர்நிலம் மருதநிலம் கழனி விலங்கின்
படுக்கை ஓர் புதல் மகளிர்கூட்டம் அவர் ஆடல்
**313
#39
வண்டம் அரிவாள்பிடி குந்தவாயுதம்
தண்டயாமி யமன் கும்பசம்பவன்
துண்டிகேரி பருத்தி கொவ்வைப் பெயர்
சண்டிலன் உருத்திரன் சீமங்கலன்
**314
#40
இண்டநம் கிரீடை சுரதம் வாகநம்
பிண்டிகை முழங்கால்தசை உருளின்தொளை
பிண்டிதம் திரவியம் பெருக்கப்பட்டது
தண்டுலம் அரிசி விழாலரிசியுமே
**315
#41
திண்ணியம் வீடு இடம் ஆண்மை விண்மீன் ஆம்
திண்ணியன் சுக்கிரன் கனலோன் திறலினன்
ஒண்ணுதல் இயலல் நல்நுதலுள்ளாள்
கண்ணுதல் நெற்றிக்கண்ணன் கருதுதல்
**316
#42
கண்ணாளன் கண்மையுடையோன் கம்மியன்
உண்ணீடம் கிரீடம் தலைக்கீடு எனும்
மண்ணீடு திண்ணை வேயாமாடம் ஆம்
கண்ணோட்டம் கண்மை காரியநிர்வாகம்
**317
#43
ஓணம் ஓர் நாள் யாறு என்ப ஏண் நிலையுடைமை வீரம்
காணம் கொள் ஓர்கண்ணின்மை செக்குப் பொற்காசு பொன் ஆம்
சேணம் கல்லணை மெத்தைப் பேர் சேணி விஞ்சையர்ஊர் ஏணி
தூணம் தூணீரம் தூண் ஆம் தூணை தூண் இருப்புப்பாவை
**318
#44
காணலே பெறுதல் நோக்கல் கருதுதல் உணர்தல் செய்தல்
நாணல் நாணுதல் நாணல்புல் நாண் என்ப கயிறு இலச்சை
பேணலே பாதுகாத்தல் கருதுதல் விரும்பலும் பேர்
கோணனே சநி கூனுள்ளோன் கோணி கோணிகை பார் பன்றி
**319
#45
தாணு மாதேவன் குற்றி நிலைபேறு சைலம் தூண் ஆம்
வேணு வாள் வில்லு மூங்கில் வேய்ங்குழல் உள்தொளைப் பேர்
வீணை கிந்நரம் மின் என்ப ஆண்மை வீரியம் ஆண்தன்மை
சேண் என்ப அகலம் நீளம் சேய்மை விண் உயர்ச்சி ஆமே
**320
#46
கோணம் முனை மூக்கு இருப்புரற்கை குதிரை முடுக்கு மூலை யந்த்ரகோணம்
உபாயம் வாச்சியம் அங்குசம் யாழ்மீட்டும்கோல் கொடுவாள்
சாணம் உரைகல் காற்கஃசு கரவாளம் சாணைக்கல் ஆம்
சோணம் சிவப்பு ஓர் நதம் நெருப்புப் பெருமரம் செந்நிறத்துரகம்
**321
#47
பூணல் அணிதல் பூணுநூல் பூண் ஆபரணம் பூண்கட்டு ஆம்
மாணவகனே சிறுபிள்ளை பிரமசாரி மாணாக்கன்
ஆணி எல்லை உரையாணி முளை அச்சாணி எழுத்தாணி
காணி உரிமை ஓர் சிற்றெண் கேணி அகழி நீர்க்கயமே
**322
#48
வாணி நடம் பாமகள் மேகம் வாக்கு விலை நெய்யும்தொழில் பேர்
வேணி தேவதாளி நதி நீரின்வேகம் மயிர்ப்பின்னல்
ஆணை மெய்ம்மை தடை ஏவல் சபதம் வென்றி அடையாளம்
கோணை நாசி அழிவின்மை கொடுமை தேர்க்கூம்பு என நாற்பேர்
**323
#49
யாணர் எனல் புதுமை எழில் வளமையும் நன்மையும் ஆம்
ஏணி பழுவுடைக்கருவி எல்லை பெண்மான் என்ப
வாணன் அறுமீன் ஓர் வேந்து ஓர் அசுரன் வாழ்வோன்
வாணிநி ஆடுபவள் மதித்தவள் தூதி சமர்த்தி
தூணி நீலிப்புதல் நாற்குறுணி அம்புக்கூடு ஆம்
தோணி கடைநாள் ஓடம் சேறு கணை ஞாயில்
பாணி முத்தின்நீர் கருப்பஞ்சாற்றுக்கள் கீதப்
பாட்டு நெடும்போது செப்புக் கைத்தலம் என்று அறுபேர்
**324
#50
பாணம் கை கருங்குறிஞ்சி பகழி
வாணிகன் துலாராசி வைச்சியன்
சோணிதம் செந்நீர் சிவந்ததும் சொலும்
பாண் இசைப்பாட்டு ஓர் சாதி பகர்ப
**325
#51
காண்டலே தெரிதல் நோக்கல் நியமித்தல் நினைத்தல் காட்டும்
தோண்டலே அகழ்தல் மொள்ளல் நோண்டல் கிள்ளுதல் தோண்டல் பேர்
மாண்டார் மாட் சியர் இறந்தார் மாண்பு மாட்சிமை எழில் பேர்
தாண்டவம் ஓர் புல் கூத்துப் புருடநாட்டியமும் சாற்றும்
**326
#52
ஈண்டல் நெருங்கல் எய்துதல் ஆம் வேண்டல் இரத்தல் விரும்புதல் பேர்
கோண்டன் எனல் பாமரசாதன் பெருத்த கொப்பூழுடையோn ஆம்
ஆண்டு வருடம் அவ்விடப்பேர் ஈண்டு விரைவோடு இவ்விடம் ஆம்
யாண்டு எவ்விடத்தோடு ஆண்டும் பேர் கோண்டை இலந்தை கமுகு என்ப
**327
#53
காண்டம் மரப்பணை நெல்லின்தாள் குதிரை மேன்மை
கணை வில் ஏகாந்தம் மரக்கணு நாளம் நூலின்
காண்டம் அவசரம் வருக்கம் ஊன்றுகோல் அதமம்
கவ்வியம் பாநீயம் வலி முடிவு ஈரொன்பான்பேர்
பாண்டம் நதிப்பரப்பின்நடுச் செட்டின் முதல் பணம் பூண்
பரியின்அணி நாடி பாத்திரம் மேளப்பத்தல்
பாண்டிலே மூங்கில் வட்டம் தகழி கட்டில் எருது
பரி பூண்ட வாகநம் கைத் தாளம் நாடு எண்பேர்
**328
#54
தூண்டல் ஏவுதல் செலுத்தல் சுட்டுதல்
காண்டிவம் அருச்சுநன்வில் வில்பொது
பாண்டு வெண்மை ஓர் நோய் ஓர் பார்த்திவன்
பாண்டுரம் புகர்நிறம் கடாரையே
@8 தகர வெதுகை
**329
#1
உதகம் நீர் மழைத்துளிப் பேர் உதவியே கொடை சகாயம்
கதகம் மேற்கட்டி தேற்றா கதம் நோய் சென்றது கோபப்பேர்
சதகோடி இடி வச்ராயுதத்தொடு நூறுகோடி
சிதடனே குருடன் மூடன் சிதடி பேதையள் சிள்வீடே
**330
#2
விததம் பொய்ச்சொல் வித்தாரம் விதரணம் கொடை சமர்த்து ஆம்
குதம் மலத்துவாரம் யானைமேல்விரிப்பொடு குசப்புல்
சிதம் வெண்மை மெலிவு கூர்மை முகித்தல் கட்டுதல் சாந்திப் பேர்
இதரம் அந்நியம் கீழ்மைப் பேர் இதரன் பாமரன் மற்றோனே
**331
#3
உதரம் போர் வயிறும் ஆகும் உதிரம் குங்குமம் இரத்தம்
சிதர் உறி பொடி பூந்தாது திவலை சேலைத்துணிப் பேர்
புதர் புதல் போதமுள்ளோர் புதன் ஓர் கோள் அறிஞன் தேவன்
மதர்வு என்ப வலி களிப்பு ஆம் மதன் வலி அழகு காமன்
**332
#4
சிதலை நோய் துணி செல் என்ப சிதுரனே வைரி தூர்த்தன்
பதலையே வெற்புக் குன்று பரந்தவாய்ப்பறை தாழிப் பேர்
மதலையே பிள்ளை கொன்றை மரக்கலம் கொடுங்கை தூண் ஆம்
முதலை செங்கிடை வன்மீன் ஆம் முதல் இடம் முதன்மை ஆதி
**333
#5
நுதல் என்ப புருவம் நெற்றி நுதி முனை தோத்திரப்பேர்
முதல்வன் முன்னவன் மூத்தோன் ஆம் முதல்வியே தலைவி தேவி
கதவமே கதவு காப்பு ஆம் கதுவல் பற்றிடல் இழுத்தல்
புதவு கோபுரவாயிற்குள் சிறுவழி கதவு ஓர் புல்லே
**334
#6
கதி தெசை உபாயம் புத்தி கமநம் மார்க்கம் பெரும்புண்
சிதி வெண்மை கருமை யோநி பிணம்சுடுகட்டை பூர்ச்சம்
ததி தயிர் சாம்பராணி தருணம் வாசமுமாம் என்ப
பதி சிவன் அதிபன் காந்தன் தலம் வீடு ஊர் பாதை மூத்தோன்
**335
#7
பொதி மன்றம் கரிகாடு ஓலைக்குடை பொதிச்சுமையும் ஒக்கும்
மதி புத்தி இச்சை சந்த்ரன் முன்னிலைஅசைச்சொல் மாதம்
பதிகம் ஓர் பொருள் மேல் பத்துச்செயுள் பாடல் பாயிரப்பேர்
சிதிரமே கயிறு கைவாள் மழுப்படை சேர்ந்தார்க்கொல்லி
**336
#8
எதிர் நேர் முன் பிறிது ஒப்பு என்ப எதிர்தல் முற்படல் கிட்டல் பேர்
வெதி என்ப செவிடு மூங்கில் விதுளம் நீர்வஞ்சி வஞ்சி
முதிர்தல் முற்றிடல் மூப்பாதல் முதுமை மூதுரை மூப்பு என்ப
விது என்ப யானைக் கொம்பின் நடுச் சந்த்ரன் மேகவண்ணன்
**337
#9
விதுந்நகம் கீழாநெல்லி மயில்துத்தம் கொத்தமல்லி
பதுமகம் கயமுகத்தின் புகர்ப்பொறி பதுமகாட்டம்
பதுமலாஞ்சநன் குபேரன் புவநேசன் பிரமன் பானு
பதுமலாஞ்சநை சீதேவி தாரகை பனுவலாட்டி
**338
#10
பதுமிநி முதற்சாதிப்பெண் பங்கயக்கொடி அவ் ஓடை
விதுரன் ஓர் அரசன் தீரன் விற்பந்நன் பிரிந்தோன் என்ப
இதை மரக்கலப்பாய் காராமணி புதுக்கொல்லை என்றாம்
சிதையே வெண்ணிறத்தாள் வெண்சற்கரை ஈமவிறகும் செப்பும்
**339
#11
விதர்க்கம் சந் தேகம் ஊகம் எதிர்த்தல் நேருறல் முன்நிற்றல்
அதிட்டாநம் நகர் ப்ரபாவம் தேர்க்கால் மோகரித்தல் ஆகும்
குதித்தல் துள்ளுதல் கடத்தல் பதித்தல் தாழ்த்துதல் அழுத்தல்
பொதிர்ப்பு என்ப நடுக்கம் அச்சம் விதிர்ப்பும் அப் பெயர் பொருந்தும்
**340
#12
கதம்பகம் கடுகு கூட்டம் கதித்தல் மிக்குறல் எழுச்சி
கதம்பம் தேன் கடம்பு கூட்டம் கடுகு வாசனையின்வற்கம்
ஒதுங்கலே பதுங்கல் செல்லல் ஒதுக்கமே நடை ஒளிப்பு ஆம்
ததும்பல் மல்குதல் தளம்பல் சதுக்கம் நாற்சந்தி நாற்கோண்
**341
#13
சுதன் என்ப மகன் இராசன் சுதாமநம் வெற்பு மேகம்
மிதவையே சோறு தெப்பம் விதாதா மந்மதன் எண்கண்ணன்
பிதிர் நொடி திவலை தூள் ஆம் பிதாமகன் பிரமன் பாட்டன்
சதுமுகன் சிகன் விரிஞ்சன் சதாபலம் அத்தி தென்னை
**342
#14
அதம் அத்திமரம் கீழ் கேடு ஆம் ஆதமே விருப்பம் நேயம்
துதம் உதறுகை அலைப்புத் தோதநம் துயர் உழக்கோல்
வதி சேற்றுநிலம் வழிப் பேர் வாது வஞ்சினம் தருக்கம்
பதிதல் தாழுதல் அழுந்தல் பாதையே வழி நாவாய் ஆம்
**343
#15
பிதா மகேச்சுரன் முனீந்த்ரன் பெற்றவன் பிரமன் நாற்பேர்
பதாசி போர் மார்க்கம் காலாள் பதாரம் கால்குறடு காற்றூள்
வதாநியன் மிகக்கொடுப்போன் வாக்கில்வல்லவனும் ஆகும்
விதாரணம் பிளத்தல் கொல்லல் விதாரம் வெஞ்சமம் கிழித்தல்
**344
#16
மதாரம் கத்தூரி யானை யானைமைதுநம் வராகம்
உதாரன் நன்மனத்தோன் வள்ளல் பிரசித்தன் பெரியோனும் பேர்
மதூலகம் நாகணந்தி மா மலையிருப்பை என்ப
விதேயன் சாத்திராவதாநி விநயவான் ஏவல்கேட்போன்
**345
#17
கதநம் பொரல் கொல்லுதல் பேசல் கதிரம் அம்பு கருங்காலி
நிதநம் மரணம் குலம் கேடு ஆம் நிதுவநம் மைதுநம் நடுக்கம்
மதநம் கடைதல் எழில் வசந்தம் மெழுகு ஊமத்தை மருட்காரை
சதபத்திரமே மயூரம் மரங்கொத்தி சரோசம் இராசகிளி
**346
#18
குதபன் அருக்கன் அக்கிநி மேற்குலன் சோதரிபுத்திரன் விருந்தோன்
அதமம் கீழானது நிந்தை அதரம் கீழ் கீழுதடு ஈநம்
வதரம் பருத்தி பருத்திக்காய் எலும்போடு இலந்தைக்காய் மன்னும்
அதரே வழி நுண்மணல் புழுதி கதழ்வு பெருமை விசை அதிகம்
**347
#19
இதழ் ஏடு உதடு பூவின் மடல் எதிரி பகைஞன் முன்நிற்போன்
நிதி பணம் பொன் சங்கம் பதுமாதி நிறைவு மணிப்பொது ஆம்
விதி ஊழ் செய்கை முறை காலம் விரிஞ்சன் நியதி வகை கற்பம்
பொதியில் பொதியம் அம்பலம் ஆம் புதுமை மிகுதி அபூர்வப்பேர்
**348
#20
சதுகம் அரக்குப் பெருங்காயம் சதுரன் சமர்த்தன் பண்டிதன் ஆம்
மதுகை வீரம் கருந்தினைப் பேர் முதுவர் அமைச்சர் மூதுணர்ந்தோர்
பதுமன் பிரமன் ஓர் நாகம் பதுமை சிறுதேக்கு இலக்குமிப் பேர்
மதுரம் விடம் ஓர் கவி இனிப்புப் பிரியம் சுவை மத்திமஇசையே
**349
#21
மதத்தல் கொழுத்தல் மதம்கொள்ளல் மதித்தல் கடைதல் கணித்தல் பேர்
விதப்பு மிகுதி மதிலுறுப்பு ஆம் விதித்தல் விதிசொல்லுதல் படைத்தல்
மதர்ப்புக் களிப்பு மயக்கப்பேர் வதைத்தல் வருத்தப்படல் கொல்லல்
பதுக்கை முரம்பு சிறுதிட்டை பாறை சிறுதூறு என நாற்பேர்
**350
#22
சுதாகரன் சந்திரன் கருடன் மதாணி பெரும்பூண் பொன்னாரம்
பதாகை துவசம் அடையாளம் சௌபாக்கியம் கூத்தின்விகற்பம்
உதாகன் ஓர் பாம்பு ஓர் வாயு உதாத்தன் பெரியோன் கொடையாளன்
நிதேசம் கூலி உபயோகம் ஆணை அளாவுதலும் நேரும்
**351
#23
சதநம் இலை புள்சிறகு சநம் வீடு மூடுதல் ஆம்
பதவி சாலோக்யாதி பதம் நிலை செல்வம் வழிப் பேர்
மதுரசை கிங்கிணிப்பாலை பெருங்குரும்பை முந்திரிகை
புதை அம்புக்கட்டு உடம்பு மறைவு புதுமையும் புகலும்
**352
#24
வெதநம் அவாத் துயர் பாவம் பலமிலாமுயற்சி
விபத்து அசுபம் அபாக்யபலம் காமாதி தோடம்
குதபம் வாத்தியம் தருப்பை நடுப்பகலின் ஓர் மு
கூர்த்தம் எள்ளுப் பசு ஆட்டுக்கம்பளம் மூவிருபேர்
சதம் இலை நூறு இறகு நிச்சம் துணியங்கம் தமாலம்
ததம் நிறைந்தது அகன்றது தந்திரிக்கருவி என்ப
நதம் நிலையாமடுக் கடல் ஆண்ஆறு தொநி வளைவு ஆம்
நதிகாந்தம் என்ப நீர்க்கடம்பு நொச்சி கடலே
**353
#25
பதம் அடையாளம் சோறு வாக்கியம் சொல் கீதப்
பாட்டு இடம் காலம் கிரணம் பசைவு சுவர்க்காதி
பதம் அடையும்பதவி நிபம் நிச்சயம் உத்தியோகம்
பண்டம் காலின்குறி கால் வழி அறுகு காத்தல்
மதம் இடும்பு களிப்புக் கள் பூசிதம் இந்திரியம்
மான்மதம் சம்மதம் கருத்துக் கயமதம் சண்மதப்பேர்
விதம் வகை யானையின் உணவு கூலி செய்கை
விதி ஆம் விதிதம் உடம்படப்பட்டது அறியப்பட்டதுமே
**354
#26
வதரை வராகிப்புதல் சிற்றரத்தை விண்டுக்கிராந்தி
மதுபன்னி எனல் அவிரி பெருங்குமிழ் சீந்தியும் ஆம்
கதளி பிலந்தனிலிருக்கும் ஐந்நான்கு அங்குல மான்
காற்றாடி வாழை விருதுக்கொடியும் ஏற்கும்
சதி உரோகிணிநாள் வஞ்சகம் வீட்டின் இறப்புத்
தாளவொத்துச் சிவதேவி பதிவிரதை என்ப
திதி நிலைபேறு இருப்பு மரியாதை பிரதமையா
திய திதி கண்டநம் புரத்தல் அசுரரைப்பெற்றவள் பேர்
**355
#27
யதி ஓர் தாளப்பிரமாணம் ஒடுக்கம் சந்நி
யாசி செய்யுளின் மோனை சிதேந்திரியன் என்ப
அதிகம் ஊதியம் மிகுதி சிரேட்டம் ஏற்றமும் ஆம்
அதிகாரம் மிக்கசெயல் பண்பு நூல்வகுப்பு
அதிதி சிராத்தத்தொவ்வாத்திதி கௌரி பூமி
அமரரையீன்றாள் விருந்தினன் குசநந்தநன் பேர்
மது நீர் பால் பூந்தேன் தேன் இருப்பைப்பூவின்கள்
வசந்தருதுச் சித்திரைமாதம் கள் ஓர் அசுரன்
**356
#28
விதுதம் உதறுவது அலைப்பதொடு விடப்பட்டதும் ஆம்
விதுரம் வச்சிராயுதம் விகலம் துயர் வியோகம்
பதுமம் ஓர் வியூகம் இபமுகப்புகர் ஓர் பேரெண்
பங்கயம் ஓர் முடியுறுப்பு ஓர் நிதி சோதிநாள் பேர்
மதுரை சதபுட்பை சதபுப்பி முந்திரிகை
மாநகரத்தொன்று பெருங்குரும்பை அதிமதுரம்
சுதை அமிர்தம் காடி நீர் மகள் கங்கை பூச்சுச்
சுடுசுணம் செங்கல் சதுரக்கள்ளி பெருங்குரும்பை
**357
#29
பதங்கம் விட்டில் கடாயத்ரவியம் புள் வெள்ளிரதம்
பதார்த்தம் பண்டம் திரவியம் பதத்தின் பொருள் பேர்
விதண்டை ஓர் இலைக்கறி வீண்தருக்கம் மனோநிலை ஆம்
விதாரி ஓர் நோய் சிற்றாமல்லி வெள்ளீறிலும் ஆம்
நிதம்பம் பெண்ணின் முன்அரை கடித்தலம் தாழ்வரைப் பேர்
நிதாகம் முதிர்வேனில்காலம் வெயர்வு வெப்பம்
உதும்பரம் செங்குட்டம் வீட்டின் முன்நடை வாயி
லுறு திண்ணை அத்திமரம் எருக்குத் தாம்பிரமே
**358
#30
விதாநம் அவசரம் தநம் அர்ச்சனைவகை உபாயம்
வேள்வி மகவினை மந்தம் சூனியம் மேற்கட்டும்
விதாநம் யானைக்கவளம் விதி சீவகோடி
விடுதி வன்மம் வித்தாரம் துச்சம் நடாத்துதல் பேர்
நிதாநம முற்காரணம் தூய்மை யதார்த்தம் முடிவு இரப்பு ஓர்
நியமம் நிதி மறைத்துக்கொள் பொருள் கன்றின்கயிறு ஆம்
வதூ வநிதை நன்னாறி சீதேவிப்பூடு
மணவாளப்பெண் மனைவி புதுமணப்பெண் எனுமே
**359
#31
பதநம் விழுதல் பேணுதல் நழுவுதல்
இதம் அநுகூலமும் ஞாநமும் இட்டமும்
கதரம் ஈரரிவாள் வெண்கருங்காலி
மதிதம் நீர்விடா மோர் கடையப்பட்டதே
**360
#32
உதிதம் சொலப்பட்டது தோன்றுவது ஆம்
அதிமுத்தகம் குருக்கத்தி திமிசு
மிதுநம் ஆண்பெண்இணைவு ஓர் இராசி
உதயம் உதயவெற்பு உயர்ச்சி தோற்றமே
**361
#33
சுதரிசநம் மாலின் சக்கிராயுதம் நற்காட்சி
நிதரிசநம் ஓர் அணி உதாரணம் செவ்வையும் ஆம்
கிதி அவநி குறைவு வீடு ஓர் பேரெண்ணும் பேர்
கதை தண்டாயுதம் கட்டுக்கதை சொல்லும் ஆமே
**362
#34
பதத்திரி பறவை நாராசபாணம் ஆம்
அதிர்ப்பு எனல் ஆர்ப்பரிப்பு அச்சம் கம்பிதம்
கதுப்பு எனல் ஆண்மயிர் பெண்மயிரொடு கவுள்
புதைத்தல் சேமித்தல் ஆழ்த்துதல் மறைத்தலே
**363
#35
முத்தகம் என்ப கோரை தனிநின்று முடியும் செய்யுள்
வித்தகன் புலவன் ஞாநி உத்தவம் விழா வேள்வித்தீ
பத்ததி வழி ஒழுங்கு ஆம் பத்தர் நீர்ப்பத்தல் நேயர்
உத்தமம் முதன்மை நன்மை உத்துங்கம் உயர்ச்சி மேன்மை
**364
#36
சத்தமன் சிரேட்டன் மேலோன் சத்தித்தல் ஒலித்தல் கக்கல்
சுத்தம் கேவலம் தூய்து என்ப சுத்திகை அகல் இப்பிப் பேர்
நத்தம் ஊர் இரா இருட்டு ஆம் நத்து மூக்கொற்றி சங்கு
உத்தரம் மேல் சிரேட்டம் வடாது எதிருரை வடக்கே
**365
#37
முத்தன் சங்கரன் துறந்தோன் வைரவன் அருகன் மூடன்
துத்தி உண்பன படத்தின் பொறி சுணங்கு ஓர் புதல் பேர்
முத்தி மோசநம் மோக்கப்பேர் முத்து ஒரு மணி பிரீதி
பித்திகை பல்லி வச்ரம் சதாவரி கருமுகைப் பேர்
**366
#38
மத்திகை விளக்கின்தண்டு குதிரைச்சம்மட்டி என்ப
உத்திரம் மரம் கல்லால் செய்திடும் விட்டம் ஓர் நாளும் பேர்
வத்திரம் முகம் சேலைப் பேர் வத்து பல்பொருள் ஆன்மாதி
பத்திரன் சிரேட்டன் சாது உக்கிரன் இராமபத்ரன்
**367
#39
மித்திரன் இரவி நண்பன் வித்தையே கல்வி ஞாநம்
சத்திரை கொத்தமல்லி சதபுப்பி ஆம்பி முப்பேர்
அத்து ஓர் சாரியை சிவப்போடு அரையின் பட்டிகை தைப்பு என்ப
தத்துப் பாய்த்து அவமிருத்து ஆம் தத்தை முன்பிறந்தாள் கிள்ளை
**368
#40
இத்துமம் வசந்தம் காமம் காட்டம் ஓர் சமித்தும் ஏற்கும்
சத்வரம் விசை வேள்வித்தீத்தானம் நாற்சந்தி முற்றம்
இத்வரன் கயவன் தீயோன் வழிச்செல்வோன் இலம்பாட்டோன் ஆம்
அத்தை முன்னிலைஅசைச்சொல் பிதாவுடன்பிறந்தாள் ஆசாள்
**369
#41
சுத்தாந்தம் இராணிவாசம் ஏகாந்தம் இராசமன்றம்
முத்தாபலம் இசங்கம்பழம் கருப்பூரம் முத்து ஆம்
வித்தாரம் படர்ச்சி கொம்பர் விபுலம் ஓர் கவி விற்பந்நம்
உத்தாலம் விசை குரங்கு சிரேட்டம் உற்கடம் கராளம்
**370
#42
வத்தமாநம் சுவத்திகம் ஆமணக்குச் சராவம் நிகழ்காலம்
துத்தம் நிறைப்பது ஓர் இசை தீ பாலும் மயில்துத்தமும் ஐம்பேர்
பித்தம் முறிவு ஓர் பிணி மயக்கம் பித்தன் மகேசன் உந்மத்தன்
மத்தம் தலை உந்மத்தம் மதர்ப்பு உகப்பு மதம்கொள் யானையுமே
**371
#43
அத்தி எலும்பு ஓர் மரம் முந்நீர் ஆனை பொய்கை கொலையின் பேர்
உத்தி தந்தரவுத்தி திருவுறுப்புத் தேமல் படப்பொறி ஆம்
சித்தி முத்தி அணிமாதி பலன்சித்தித்தல் ஓர் யோகம்
அத்தியயம் தோடம் துயரம் அடக்கல் நாசம் அதிக்கிரமம்
**372
#44
உத்தியாநம் தலைக்கடை பூந்தோட்டம் பிரயோசநமும் பேர்
பத்திராங்கம் பூர்ச்சமரம் பதுமகம் செஞ்சந்தநம் ஆம்
தொத்துப் பூங்கொத்து அடிமை எனும் துத்தை அவிரி சிற்றேலம்
உத்துவேகம் வதுவை மிகுவிரைவோடு அச்சம் பாக்கு என்ப
**373
#45
புத்தகம் சித்திரப்படாம் பொறித்த திருமுறைப் பேர்
புத்தன் சாக்கியமுநி போதிதன் அருகன் புலவன்
உத்தஞ்சம் செவிமலர்ப்பூண் சூட்டுமாலையும் ஆம்
உத்தமை கிங்கிணிப்பாலை முதல்சாதிப்பெண் பேர்
அத்தம் மயிர்க்கற்றை முழம் துதிக்கை கண்ணடி காடு
அருநெறி கேடு அத்தவெற்பு ஓர் நாள் அருத்தப்பெயர் ஆம்
சத்தம் உரை ஒலி எழுத்து வாக்கியம் விண் பிரசித்
தம் புகழ்ச்சி சுபம் கீதம் ஏழொடு கேள்வியும் பேர்
**374
#46
சித்தம் மநம் பக்குவம்செய் அந்நம் நிச்சயம் நித்
தியம் ஓர் யோகம் ப்ரசித்தம் சோற்றவிழ் தேன்மெழுகு ஆம்
தித்தம் நன்மணத்தது பற்படகம் பூசுவது
தீக் கசப்புப் படர்வது எண்ணெய் நஞ்சுண்டகணைப் பேர்
பத்தம் கட்டுவது நம்புவது சோறும் உரைப்ப
பத்தா நாயகன் சுமப்போன் பாலிப்போன் என்றாம்
மித்தம் சிந்தனைச்சுருக்கம் நித்திரை ஆலசியம்
வித்தி விசாரணம் ஞாநம் சம்பவம் இலாபம்
**375
#47
முத்தம் அழகியது உதடு பிரியம் முத்து விடுதல்
முத்தை கவளம் திரளை முழுமடப்பெண் என்ப
வித்தம் தள்ளுவது உவமை தொளைப்பது ப்ரசித்தம்
விசாரிதம் த்ரவியம் செல்வம் விலைப்பொருள் நாலிருபேர்
அத்தன் மூத்தோன் குரவன் தந்தை சிவன் அருகன்
அத்திரம் வில் அம்பாதியா விடும் ஆயுதம் ஆம்
சித்தன் முத்தன் வடுகன் சிநன் சிவன்
சித்துடையோன் சித்து வெற்றி மாயவித்தை வேள்வி புத்தி ஞாநம்
**376
#48
குத்தி சிறைச்சாலை நிலவறை ஒளிப்புக் காப்பு ஆம்
குத்திரம் வஞ்சகம் விரைவின்குறிப்பு மலை அற்பம்
சத்தி தொடை துர்க்காதி தேவதை பெண் உமை வேல்
சௌரியம் போசநம் வாந்தி அருள் சமர்த்துத் துவசம்
சுத்தி கண்நோய் கபாலதுண்டம் மூலநோய் பரியின்
சுழி சிறுநாகுணம் சங்கு தூய்து முத்துச்சிப்பி
பத்தி நடை பிரகாரம் பகுப்புக் காலாள் ஓர்
படைத்தொகை நம்பிக்கை குணவிருத்தி சேவையுமே
**377
#49
புத்தி புசிப்பு ஓர் அந்தக்கரணம் போதிப்பு ஆம்
புத்திரிகை மரப்பாவை மகள் செம்பஞ்சு என்ப
வத்தி திரி முன்றானை சுடர் கண்ணிலிடுமை
வரி சுகந்த வத்துவில் செய் திரி மணிக்கீழ்த்தகடு ஆம்
சத்தியம் ஓர் மேலுலகம் மெய்ம்மை சபதப்பேர்
சத்திரி நித்தியதாநம்கொடுப்போன் வாள் சுரிகை
மத்தியம் மையம் நுசுப்புக் கள்ளும் நடு என்றாம்
மத்து வெறி தயிர்கடைகோல் தயிர்த்தெளிவு ஊமத்தை
**378
#50
சித்திரகம் ஏரண்டம் கொடுவேலி திலகம்
சித்திரபாநுக் கனலோன் திவாகரன் ஓர் வருடம்
சத்திரம் ஆயுதம் கைவிடாவேல் இரும்பு ஓர் வேள்வி
சதாதாநம் கிரது வநம் துகில் குடை வஞ்சகப்பேர்
சித்திரம் அற்புதம் அழகு ஓர் கவி பொய்யை மெய் போல்
செப்பல் பலநிறம் தொளை வெண்குட்டம் ஓவியம் ஆம்
பத்திரம் வாகநம் திரள் பொற்பு எருது சுபம் மேருப்
பன்னம் இறகு உடைவாள் ஓர் இபக்குலம் பொன் கோரை
**379
#51
குத்திரன் கீழ்மகன் அதமன் தியாகபோகமிலான்
குரூரன் ஈனாங்கன் நல்கூர்ந்தோன் பரத்துரோகி
அத்திரி ஓர் இருடி பருப்பதம் திவாகரன் ஒட்
டகம் குதிரை கழுதை மரம் என எழுபேர் அறைப
பத்திரி வல்லூறு தேர் தேருடையோன் பாணம்
பறவை இலை பருப்பதம் பாதவம் என ஓர் எண்பேர்
குத்திரை தேனீ கண்டங்கத்தரி ஈ முள்ளி
கொலைஞை விகலாங்கி கூத்தாடுபவள் பரத்தை
**380
#52
சித்திரை ஓர் பாம்பு எலியால் நேபாளவிதை ஓர்
திங்கள் சுபத்திரை துமிட்டி தெய்வப்பெண் ஓர் நாள்
பத்திரை ஓர் காளி கங்கை உலைத்துருத்தி குமிழ் பால்
பசு அவிரி அரத்தை விட்டி த்விதீயவட்டத் திதி ஆம்
சத்துவம் ஓர் குணம் பண்டம் சொபாவம் வலி உயிர் நிச்
சயம் மநம் நல்லது முயற்சி செந்து பிசாசாதி
தத்துவம் ஐம்பூதாதி தொண்ணூற்றாறு உளது
தன்னியல்பு பரமான்மா விளம்பமாநமுமே
**381
#53
கத்தா சாரதி பொறையோன் தாசசுதன் வாயில்
காப்பவன் கத்திரியைபால் சூத்திரற்கு உற்பவித்தோன்
சித்தாந்தம் சாத்திரம் சைவாகமநூல் ஓர் சோ
திடகணிதநூல் இது நிச்சயம் எனலும் செப்பும்
உத்தாநம் வீடுகட்டுமிடத்துஎல்லை முற்றம்
உந்முகம் புத்தகம் ஓர் ஆள் அளவை படை போர் மெட்
டுத்தாநம் திருவாயில் அடுப்பு மலம்கழித்தல்
உவகை கிளம்புதல் உத்தியோகம் முகிவும் பேர்
**382
#54
மத்தவாரணம் தேவாலயம் வீதி மண்டபம் மதகயம் வரண்டம்
மத்திமம் நடுவானது சமனிசை ஓர் இசைச்சொரம் மையமானதும் ஆம்
மத்திமை சந்தோபேதம் ஓர் வாக்கு நடுவிரல் பூப்புளவநிதை
சத்து நல்லது சத்தியம் சிலாக்கியம் உள்ளது வலி சாரம் பூச்சியமே
**383
#55
மத்தகம் நெற்றி தலை இபமத்தகம்
கைத்தல் சினத்தல் கசத்தல் வெறுத்தல்
பித்தி முடிவு சுவர் இடம் பேதநம்
சித்திரகூடம் ஓர் மலை தெற்றியே
**384
#56
யுத்தி நிச்சயசாதநம் தக்கது
பத்தியம் இதம் சேறு சுலோகம் ஆம்
பத்தியை வழி தூளி கடுமரம்
உத்தியோகம் எதிர்க்கை முயற்சியே
**385
#57
யுத்தம் நியாயம் கூடியிருக்கை போர்
நித்தியம் அநவரதம் சாச்சுவதம்
கத்துரு நாகங்களின்தாய் பொன்நிறம்
வித்துருமம் தளிர் பவளம் விருக்கம்
**386
#58
சூதகம் மாமரம் வெள்ளிரதம் ஆசூதம் சென்மம்
சேதகம் சிவப்புச் சேறு ஆம் சேதநன் ஞாநி ஆன்மா
பீதகம் பொன்மை ஓர் சாந்து இருவேலி பொன்னும் பேசும்
போதகம் இளமை தீக்கை மரக்கன்று புழைக்கைக்கன்றே
**387
#59
கேதநம் அடையாளம் வீடு அழைத்தல் கிருத்தியம் பதாகை
சேதநம் அறுத்தல் பேதம் அறிவுள்ள சீவகோடி
பீதநம் செந்நுணா அம்பணை செஞ்சாந்து அரிதாரப்பேர்
பாதபம் பாதபீடம் மரம் பாதயாநம் என்ப
**388
#60
ஏதம் பன்னிறம் சமித்து விறகு கேடு இடும்பை குற்றம்
ஓதம் கல்லோலம் வெள்ளம் உவரியோடு அண்டவாதம்
சீதமே கோணல் வஞ்சிமரம் நறுவலி குளிர்ச்சி
சூதம் வெள்ளிரதம் பாகத்தொழில் கறி மாமரப்பேர்
**389
#61
பேதம் ஓர் உபாயம் வேறுபடல் விசேடம் பிளப்பு ஆம்
மோதமே பிரியம் வாசம் மோதுதல் அடர்த்தல் மொத்தல்
வாதம் ஓர் பிணி தருக்கம் வாயுவோடு இரதவாதம்
ஆதரம் ஓடக்கூலி ஆசை ஆதரிக்கை நேயம்
**390
#62
வாதரம் குன்றிவித்து வலம்புரிச்சங்கு நீர் தேன்
ஆதரிசம் கண்ணாடி புத்தகத்துஎதிர் உரைப் பேர்
காதலன் கணவன் மைந்தன் காதலி புதல்வி காந்தை
வீதலே கெடுதல் சாதல் வேதன் எண்கணன் வியாழம்
**391
#63
ஆதவம் ஒளி வெயில் பேர் ஆதித்தர் அருக்கர் விண்ணோர்
பூதவன் திருமால் பூபன் போதன் நான்முகன் பாலன் பேர்
ஓதி கற்றறிந்தோன் கல்வி செறிவு பெண்மயிர் வெற்பு ஓந்தி
கோதி கோதும்மை நெற்றி கோது என்ப சக்கை குற்றம்
**392
#64
சோதி கண் இரவி விண்மீன் சுடர் ஈசன் ஒளி தீ ஓர் நாள்
வேதிகை பலகை திண்ணை வேதை வேதித்தல் துன்பம்
ஊதியம் இலாபம் கல்வி ஓதுதல் படித்தல் சொல்லல்
பூதியம் புவி உடல் பேர் போது பூ முகுளம் காலம்
**393
#65
மாதிரம் திசை ஆகாயம் நிலம் பருப்பதம் மாதங்கம்
சேது மாவிலிங்கு ஓர் தீர்த்தம் செய்கரை சிவப்புப் பாலம்
மாதுலம் ஓர் பாம்பு ஓர் நெல் ஊமத்தை மருட்காரைப் பேர்
ஓதையே மதிலுள்மேடை புரிசை பேரொலியும் ஆமே
**394
#66
தாது மண்ணாதி ஐந்து சத்தாதி ஐந்து பூவின்
தாது சுரோத்ராதி ஐந்து ஓர் ஆண்டு தொக்காதி ஏழ் மேதாது
பொன்னாதி ஏழ் வாதாதி முப்பிணி செய் என் சொற்றாது
போசந சாராங்கிசம் மநோநிலை காவிக்கல்
**395
#67
காதை முன்னோர் சரித்ரக்கவி கதை ஓர் விருத்தம்
சீதை சாநகி படைச்சால் பயிர் தேவகங்கை நாற்பேர்
பேதை பெண் மிடியன் மூடன் பெண்ணின் முற்பருவம் என்ப
மேதையே தரிக்கும் புத்தி நிணம் புதன் கள்ளு மேன்மை
**396
#68
நைதலே நலிதல் தேய்தல் கைதை நன்னிலம் தாழைப் பேர்
பைதலே துன்பம் பையல் பைத்தல் சீறுதல் பசத்தல்
வைதல் ஏசுதல் சபித்தல் மைதுநம் புணர்தல் ஒன்றல்
கைதவம் கபடம் சூது கைதவன் செழியன் வஞ்சன்
**397
#69
காதா ஆண்குயில் சுரும்பு சிநமுள்ளோன் காநம்செய்வோன்
ஆதாநம் பரிப்பூண் பற்றல் ஆதேசம் திரிபோடு ஆணை
கேதாரம் பாத்தி ஓர் கேத்திரம் பனிக்கிரிக்கோடும் பேர்
பூதான்மா உடல் விரிஞ்சன் கோதூமம் நரத்தை ஓர் நெல்
**398
#70
சாதகும்பம் அலரி பொன் ஆம் தாதன் தாசன் தயாலு பிதா
காதம் அகழ்ந்த குளம் கொலை நாற்குரோசதூரம் எனக் கழறும்
சாதம் மெலிவு கூர்மை சுகம் சாதம் சேறு சோறு இளம்புல்
பீதம் பாநம் மஞ்சள்நிறம் பீதை மஞ்சள் பொற்குறிஞ்சி
**399
#71
போதம் யானைக்கன்று சிசுக் குஞ்சு புத்தி மரக்கலம் ஆம்
வீதம் வலிஇல் பரி சாந்தம் வலிஇல் கரி அங்குசவினை ஆம்
காதரம் தீவினைத்தொடர்பு அஞ்சுறல் சோகாதியில் கவநம்
மாதர் மகளிர் அழகு ஆசை வாதை வருத்தும் நோய் துக்கம்
**400
#72
தூதன் புதன் தூதுவன் என்ப சூது கபடம் கவறாடல்
நீதி நியாயம் முறைமைப் பேர் ஏது நிமித்தம் உபகரணம்
போதி சிநன்தன்அறம் பெளத்த சமாதி அரசு மலை புத்தன்
கேது பதாகை அடையாளம் கிரணம் ஓர் கோள் உற்பாதம்
**401
#73
ஆதங்கம் நோய் சந்தாபம் முரசின் ஓசை அச்சப்பேர்
கோதண்டம் வில்லொடு புருவம் கூதிர் பனிக்காற்று அப்பருவம்
வேதண்டம் பற்பதம் யானை சௌதாமிநி மின் அரமகள் பேர்
காதம்பரம் கள்ளொடு வெண்ணெய் காதம்பரி சாரிகை குயிலே
**402
#74
மாதா உமை இந்திரை ஈன்றாள் மகி பிராமி முதல் எழுவர்
வேதா மலரோன் மால் அறிஞன் பாதீடு அளித்தல் பங்கிடுதல்
பாதாளம் கீழுலகம் அதோகதி வாடவத்தீ எனப் பகர்ப
ஆதீநவம் துன்புறுவது பொல்லாத மரணம் பாவமும் ஆம்
**403
#75
சாதகம் ஓர் பிரபந்தம் ஓர் புள் உபகரணம்
சந்மபத்திரிகை பூதகணம் அப்பியாசம்
ஆதநம் யானைக்கழுத்துப் பீடம் ஆசநப்பேர்
ஆதித்யன் விருந்தோம்புவோன் அதிதிசுதன் ஆம்
சாதநம் ஆண்குறி மறைவு நடை கொலை பிரேதச்
சடங்கு காரகம் நிவிர்த்தி உபாயம் சித்திக்கும்
சாதநம் பின்தொடர்தல் கொடுப்பித்தல் சேநாங்கம்
தநம் கருவி நிறைவேற்றல் சாசநம் நாமமும் ஆம்
**404
#76
வேதநம் சீவநம் ஞாநம் கூலி பொதுத்தலும் பேர்
வேதநை துன்பம் சுகதுக்காநுபவம் உணர்கை
பூதநை கண்ணனுக்கு நச்சுமுலை கொடுத்தோள் கடுக்காய்
பூதிகாட்டம் சரளமரம் தேவதாரம்
நாதம் என்ப இந்திரியம் ஓசை உரிமைப் பேர்
நாதன் நாயகன் அதிபன் பிரபு சந்திரன் ஆம்
பாதம் மரவேர் செயுளின் ஓர் அடி சூழ்ந்திருக்கும்
பருப்பதம் கால் கிரணம் வெண்ணெய் நீர் நான்கினொன்றே
**405
#77
பூதம் அடைவது தக்கது அதீதம் உபமாநம்
பூதகணம் தூய்மை செந்து புவியாதி பஞ்ச
பூதம் உண்மை தூற்றும் தாநியம் பின் அரை உண்டை
போனகாலம் தருப்பை புனையணியின் அழகு ஆம்
யூதம் விலங்காதி பறவைத்திரள் சமூகம்
யூதி முல்லை பொன்னிற வாடாமலரும் ஒக்கும்
மாதவம் வைகாசி பெருந்தவம் வசந்தகாலம்
மாதவன் இந்திரைகேள்வன் பெருந்தவத்தோன் வசந்தன்
**406
#78
மாதவி கள்ளின் வெல்லம் தொழுத்தை குருக்கத்தி
வாதி வாதம்செய்பவன் ஓர் புலமைத்திறத்தோன்
சூதன் ஓர் இருடி தச்சன் பார்ப்பனி சேர் இராச
சுதன் புகழ்வோன் தேர்ப்பாகன் சூதுளோன் மடையன்
ஆதி அதிட்டாநம் முதல் புராதநம் நேரோடல்
அரன் முதல்வன் அதிபன் ஒற்றி நாரை மநோதுக்கம்
ஈதி வெகுமழை முதலாம் அறுவகை உற்பாதம்
யாத்திரைசெய்திடல் கொள்ளை முதல பெருந்துன்பம்
**407
#79
சாதி யாதநை கள்ளின்தெளிவு கொடை முடிவு
சநநம் கோத்திரம் சிறுசம்பகம் விப்பிராதி
சாதி பொதுப் பிரம்பு நெல்லி சாரதி மாவலன் ஓர்
சந்தசு சாதிக்காய் கம்பில்லமரம் தேக்கு ஆம்
பூதி சம்பத்து உற்பாதம் துர்க்கந்தம் நிரையம்
புலாலின் பக்குவம் பிறப்பு விபூதி கயப்பொற்பு
வீதி தெரு நேரோடல் குதிரை வழி ஒழுங்கு ஓர்
வீட்டுறுப்புக் கிரணம் நெருப்பு ஓர் நாடகாங்கம்
**408
#80
வேதி மதில் சதுரவேதிகை அறிஞன் கேட்டை
விரிஞ்சன் அலங்கிருதநிலம் அங்குலி முத்திரை ஆம்
பூதிகம் காவட்டம்புல் ஓமம் கற்பூரம்
பூந்தணக்கு நிலவேம்பு சிறுகுமிழ் என்று அறுபேர்
சாது நல்ல குல புருடன் பொலிசையால் உண்போன்
சச்சநன் முக்குடைச்செல்வன் முநிவன் அழகிதுமாம்
கோதை முன்கையினில் கட்டும் உடும்புத்தோல் பூந்தார்
குடக்கோன் காற்றுக் கோதாவரி பெண்மயிர் உடும்பே
**409
#81
தாதா ஓதிமத்துவசன் தாங்குவோன் கொடுப்போன்
சாதீயான் செறிந்தோன் சச்சநன் அதிரூபன் பேர்
ஆதாரம் உடல் தாங்கிக்கொள்வது மூலாதி
அடி ஈடு குளத்தேரி பாத்தி அதிகரணம்
வாதூலம் காற்றினது திரள் சுழல்காற்று என்ப
மாதேவன் பரமேசன் உருத்திரரில் ஒருவன்
நாதேயி என்பது செம்பரத்தை தழுதாழை
நாரத்தை நீர்வஞ்சி நிலநாவல் ஆமே
**410
#82
யௌதகம் சீதநப்பொருள் ஓர் புடைவை உடைத்தொங்கல்
இரட்டை சந்தேகம் சுளகின்நுனி தக்கது ஏழ்பேர்
கௌதமன் சாக்கிய புத்தன் ஓர் தபோதநன் ஆம்
கௌதமி பார்ப்பதி கோதாவரிநதியும் கணிப்ப
கௌதுகம் உற்சவம் பிரியம் மகிழ்ச்சி சுபக்கரகங்
கணம் மரபின் சீர் கீர்த்தி கீதாதி இச்சை
மைதுநம் கூட்டரவு கலந்திருத்தல் புணர்ச்சியும் ஆம்
வைதேககன் வணிசாசூத்ரசுதன் வணிகன்
**411
#83
ஏதி கிரணம் சுவாலை படைக்கலம்
பீதி நடுக்கம் பயம் பரி பாநம்
யூதிகை முல்லைப்புதல் வாரணப்பிடி
வீதிகோத்திரன் எழுநா விரிச்சிகன்
**412
#84
காதகன் பரத்துரோகி கொலைஞன்
யாதநை நரகவாதை கொடும்துயர்
ஆதன் அறிவிலான் அருகன் குரு உயிர்
மேதி களத்தில் பிணை தறி எருமை
**413
#85
காதல் காதுதல் ஆசைப் பேர்
ஆதவன் இரவி பார்ப்பான்
மாது பெண் ஓர் அசைச்சொல்
ஆதுரம் அவாவும் நோயும்
**414
#86
கோத்தநம் ஐயெண்கோவை முத்தாரம் கோமுலைப் பேர்
பூத்தல் பெற்றிடல் உண்டாதல் புட்பித்தல் பூப்பாதல் பேர்
கூத்தன் கூத்தாடி சீவன் கோத்திரை புவி ஆன்கூட்டம்
ஆத்தி ஓர் மரம் சம்பந்தம் அடைதல் கைப்பொருள் இலாபம்
**415
#87
காத்திரம் உடல் உறுப்புப் பருமை யானையின்முன்கால் ஆம்
தாத்திரம் குடாரி கூன்வாள் சாத்துதல் அணிதல் அப்பல்
மாத்திரம் முழுமை வேறொன்றலா நியமம் ப்ரமாணம்
தாத்திரி பூமி நெல்லிமரம் வளர்த்திடுதாய் ஈன்றாள்
**416
#88
சீத்தல் தூர்த்தல் தூய்தாக்கல் ஆத்தன் சிநன் நம்புதலுள்ளோன்
சோத்தியம் அற்புதம் சோதித்தது சொல்லச்சொல்லுதல் தூய்து ஆம்
நேத்திர கண் மரவேர் பட்டாடை மத்தின்கயிறு என்ப
யாத்திரை உற்சவம் பயணம் சீவநோபாயமும் ஏற்கும்
**417
#89
ஓத்து மறை ஓரினப்பொருளை ஒருநேர்படவைத்து உரைக்கும்இயல்
வாத்து நகரி வீடு எல்லை மனைகோலுமிடம் நுழைவாயில்
சாத்தா அருகன் அரியரபுத்திரன் தண்டிப்போன் சாக்கியன் ஆம்
நீத்தார் துறந்தார் சமணர் எனும் மூத்தோர் முதியோர் முன்னுதித்தோர்
**418
#90
சாத்தியம் ஓர் யோகம் சாதிக்கத்தக்கது ஆம்
சாத்திரம் வியாகரணம் முதலிய நூல் ஆணை
காத்தியாயநி துர்க்கை உமை பாதி நரைத்துக்
கல்லாடை உடுத்த அமங்கலி ஆம் பேரிளம்பெண்
கேத்திரம் புண்ணியபூமி பழனம் மனை வாழ்க்கைக்
கிழத்தி உடல் வீடு தெய்வத்தலம் யோநி ஏழ்பேர்
கோத்திரம் கேத்திரம் சம்பாவியம் போதம் மார்க்கம்
குலம் வலி நரமம் காடு மலை குடையும் ஆமே
**419
#91
பாத்திரம் யோக்கியன் ராசமந்திரி நாட்டியப்பெண்
பாண்டம் இருகரையின்நடுச் சுருவை திரவியப்பேர்
கேத்திரியன் பரதேக சிகிற்சைசெய் யோக்கியன் தன்
கேள்வனால் பிறற்கீன்ற சுதன் பரதாரிகன் ஆம்
மாத்திரை காதணி இமைப்போது அற்பம் சத்திர சா
மராதி மருந்துக்குளிகை அளவு எழுத்தின்உறுப்பு
போத்து மயில் பசு எருமை கலை மரை நீர்ச்சாதி
புலி பூனை பரி இவற்று ஆண் விலங்கின்பாயலும் பேர்
**420
#92
சூத்திரம் வாக்கியச்செய்யுள் வெவத்தை பஞ்சின்நூல் என்ப
தோத்திரம் யானைப்பரிகக்கோல் உழவுகோல் துதி ஆம்
போத்திரம் பன்றியின் முகத்து நுனி கலப்பையின்முனைப் பேர்
கேத்திரியம் அசாத்தியநோய் விடம் கேத்திரோற்பவப்புல்
**421
#93
தாத்தியூகம் குயில் சாதகப்புள் பேர்
சாத்திரவம் சத்துருத்துவம் கேடும் ஆம்
ஆத்திரேயன் அத்திரிகோத்திரன் விது
ஆத்திரேயி பூப்புள்ளவள் ஓர் நதி
@9 நகர வெதுகை
**422
#1
அநகமே பாவமன்மை அழுக்கலது அழகு சாந்தம்
கநகம் பொன் சம்பகம் நாகப்பூ முள்முருக்கு ஊமத்தை
சநகன் ஓர் பரமயோகி தந்தை சாநகியைத்தந்தோன்
பநசம் ஓர் நோய் பலா ஆம் வநசமே பதுமம் யானை
**423
#2
வநசுவா புழுகுப்பூனை வல்லியம் கோணாய் செந்நாய்
சநநம் வங்கிசம் பிறப்பு ஆம் சநநி தாய் மலைமஞ்சள் பேர்
அநயம் தீவினை ஆபத்தோடு அசுபம் சூதாதி துன்பம்
புநர்வசு புணர்தநாள் காத்தியாயநமுநியும் போற்றும்
**424
#3
சிநவரன் அருகன் புத்தன் சிநன் சிநேந்திரன் முநீந்த்ரன்
கநி மணியுண்டாம்பூமி இனிப்புக் கந்நிகை பழப்பேர்
சநி ஓர் கோள் மணப்பெண் காந்தை மலைமஞ்சள் சநிப்பு அழுங்கல்
முநி யானைக்கன்று அகத்திமரம் வில்லு முநிவன் புத்தன்
**425
#4
தநிகனே தநவான் காந்தன் தநுசாரி திருமால் இந்த்ரன்
விநிபாதம் மரணம் நிந்தை விழுதலோடு இடுக்கண் என்ப
விநியோகம் உபயோகித்தல் பலப்பொருட்டீதல் ஏவல்
அநிருத்தன் மதன்சேய் ஒற்றன் அடங்காதோன் தடையற்றோனே
**426
#5
அநிர்தமே உழவு பொய்ச்சொல் அநிலன் ஓர் வசு வாயுப் பேர்
அநுகன் காமுகன் பின்செல்வோன் அநுபந்தி தாகம் விக்கல்
அநுசயம் பின்னிரக்கம் நெடும்பகை அநுபந்தப்பேர்
அநுமதி கலை ஒன்று ஊநப் பூரணை அநுச்சை என்ப
**427
#6
வநப்பதி பூவாமல் காய்த்திடும் மரம் மரப்பொதுப் பேர்
அநர்த்தம் கேடு அருத்தமன்மை கநிட்டை அங்குலிகை தங்கை
கநிட்டன் மிக்கிளமையுள்ளோன் சிறியோன் பின்பிறந்தோன் காட்டும்
அநுத்தரம் வடக்கு மேல் சிரேட்டங்கள் அலது மேன்மை
**428
#7
தநஞ்சயன் தகநன் பார்த்தன் தசவாயுவினில் ஒன்றும் பேர்
அநந்தன் மால் சிவன் ஓர் நாகம் மலாயுதன் ஆதிசேடன்
சுநந்தை ஓர் கடவுள்நல்லாள் சுந்தரி உரோசனைப் பேர்
இநன் கதிரவன் இராசன் நாட்டியன் அதிபன் என்றாம்
**429
#8
அநாகதம் புதிய சேலை ஆறுஆதாரத்துஒன்று என்ப
கநாகநம் கொல்லும் மத்தக்களிறு பெய்முகில் நெருக்கம்
பிநாகமே சிவகோதண்டம் திரிசூலம் மண்மாரிப் பேர்
விநாசமே மரணம் கேடு ஆம் விநேதா தேசிகன் இராசன்
**430
#9
சநாபியே சமாநம் ஞாதி தநூருகம் சிறகு உரோமம்
விநாயகன் அருகன் புத்தன் கணாதிபன் குரு புள்வேந்தன்
சுநாரம் நாய்முலைப்பால் பாம்பின்முட்டை ஊர்க்குருவி சொல்லும்
அநீகம் போர் சேனை என்ப அநேகம் ஒன்றன்மை காலம்
**431
#10
கநீயான் மிக்கிளமையுள்ளோன் மிகச்சிறியோன் கநிட்டன்
சிநீவாலி கௌரி இந்து தெரி இராஅமாவாசைப் பேர்
விநோதம் சந்தோடம் காமர் விளையாட்டால் பொழுதுபோக்கல்
மநோரதம் வாஞ்சை இன்பம் மநோரமம் எழில் மகிழ்ச்சி
**432
#11
விநதம் வளைவு வணக்கப்பேர் விநிமயம் மாற்றுகை ஈடு
தநதன் குபேரன் கொடையாளன் தநுசர் புதல்வர் தாநவர் பேர்
சநபதம் தேசம் சநம் ஆம் சநம் ஓர் உலகம் மனிதரினம்
விநயம் வணக்கம் உபசாரம் தருமம் அடக்கம் பொறை மேவும்
**433
#12
சநாதநம் என்பது நிலைபேறுளது நிச்சமானதும் ஆம்
சநாதநன் மால் ஓர் பரமயோகி சதாசிவன் பிரமன்
விநீதம் நல்ல சுமைக்குதிரை அடக்கம் விநயம் அபநீதம்
விநீதன் செட்டி சிதேந்திரியன் அடக்கமுள்ளோன் விநயவான்
**434
#13
கநம் மிகுதி செறிவு நடுத்தரப்பாடல் கஞ்சக்
கருவி நடுவானதயிர் உடல் பருமை கநக்கும்
கநம் அகலம் கோரை பிராணித்திரள் ஓர் கணிதம்
கடிநம் இருப்புத்தடி பொன் முகில் என எண்ணிருபேர்
கநரசம் நீர் சமைக்கும் அன்னாதியின் சாரம் நெருக்கம்
கருப்பூரம் கரும்பின்வேர் பெருங்குரும்பை பிசின் ஆம்
வநிதை அநுராகப்பெண் பிறப்பித்தாள் மகடூஉ
மநு சுவாயம்பூவாதியர் நீதி மந்த்ரம்
**435
#14
அநு மஞ்சள் கவுள் ஒழுங்கு ஓர் உபசருக்கம் தொடர்ச்சி
ஆயுதம் நாகுணமரம் நோய் சமீபம் மரணமும் ஆம்
தநு வில் ஓர் இராசி அற்பம் மெலிவு முரள் உடம்பு
சருமம் தானவர்ப்பயந்தாள் நீக்கமுளதும் பேர்
அநுபந்தம் பகுதி விகுதியில் தொக்க எழுத்தோடு
அடித்தொடுத்ததின் தொடர்ச்சி தோடத்துற்பவம் ஆம்
அநுபாவம் பெரியோர் தம் புத்தியை நிச்சயித்தல்
அபிப்பிராயம் காட்டும் அபிநயம் ப்ரபாவம்
**436
#15
அநங்கம் ஆகாயம் உள்ளம் அங்கமிலாமையும் ஆம்
அநந்தம் விண் முடிவின்மை நாசமன்மை காகம்
அநந்தை சிறுகாஞ்சொறி நன்னாறி குப்பைமேனி
அறுகு கடுமரம் சீந்தி மேதிநி செங்காந்தள்
தநம் கணிதத்தில் கூட்டல்குறி திரவியம் கோ
தநம் கொங்கை தன்மை பசுவின்கன்றும் சாற்றும்
வநம் துளசி அழகு சலிலம் வீடு காடு
மயாநம் மலைச்சுனை சோலை பயணம்போதலுமே
**437
#16
கநீநிகை கண்ணின் கருவிழி சிறுவிரல்
சுநீதி நன்னீதி துருவனைப்பெற்றவள்
அநூகம் கழிபிறப்புக் குலம் சீலம் ஆம்
அநூபம் எருமைக்கடா நீர்ப்படுகையே
**438
#17
அந்தகன் அழிப்போன் கூற்று ஓர் அசுரனும் குருடனும் பேர்
அந்தணர் அறவோர் பார்ப்பார் அந்தியம் அதமம் ஈறு ஆம்
சந்ததி தநயன் கோத்ரம் மரபு வித்தாரம் பந்தி
கந்தநம் கொலைப்பொருட்டுமுயலல் சூசநம் ப்ரகாசம்
**439
#18
தந்தம் பல் இபக்கொம்பு ஒத்த தாழ்வரை உயர்ந்த கல் ஆம்
தொந்தமே தொடர்பு செற்றம் துந்தியே வயிறு கொப்பூழ்
அந்தரி உமை எண்தோளி அந்தில் அவ்விடம் அசைச்சொல்
சுந்தரி பவளம் துர்க்கை கௌரி சுந்தரப்பெண்ணும் பேர்
**440
#19
குந்தளம் மயிர்க்குழற்சி கலப்பை ஓர் தேசம் கூந்தல்
அந்தி முச்சந்தி பாலையாழிசை இரவு மாலை
குந்தி பாண்டவர்தம்தாய் குற்குலுமரம் சல்லகிப் பேர்
அந்திகை கபடம் பம்பந் திராய் அடுப்பு இரவு சித்தம்
**441
#20
சந்திரகாசம் சந்திரிகை கட்கம் தசமுகன்வாள்
சந்திரம் கருப்பூரம் பொன் சலிலம் காமியம் கம்பில்லம்
இந்திரன் அந்தரான்மா இறைவன் சூரியன் சுரேசன்
இந்திரியம் நேத்ராதி வாக்காதி இரேதசு என்ப
**442
#21
சந்து தூது உடம்பின் மூட்டு முடுக்குச் சந்தநம் பொருத்து ஆம்
பந்து மட்டத்துருத்தி எறியும்பந்து உறவோன் நண்பன்
துந்துபி கவறு ஓர் ஆண்டு ஓர் அரக்கன் பேரியை முழக்கம்
தொந்துவம் இரட்டை போர் மைதுநராசி இராசியப்பேர்
**443
#22
கந்நி ஓர் இராசி துர்க்கை காளி கல்யாணமில்லாக்
கந்நி ஓர் நதி தவப்பெண் கற்றாழை அத்தநாள் ஆம்
சந்நியன் மணாளதோழன் தந்தை நிந்தியன் தயாதன்
மந்நியு வேள்வி கோபம் மநத்துயர் வருத்தம் நாற்பேர்
**444
#23
தந்தசடம் நாரத்தை புளிவஞ்சி கபித்தம் இருமிச்சை
பந்தநம் கால்தளை காவற்படுத்தல் கயிறு கொலை கட்டல்
கந்தவதி வாயுவின் நகரம் வியாசன்பெற்றாள் காசிநியாம்
மந்தன் மூர்க்கன் சநி நோயன் மடியன் நிற்பாக்கியன் மூடன்
**445
#24
உந்தி கொப்பூள் ஓர் விளையாட்டு உருளை நதி நீர்ச்சுழி முந்நீர்
கந்தி கமுகு தவப்பெண் பேர் கந்தை பழந்தூசு உத்தரியம்
பந்தி ஒழுங்கு பரிச்சாலை சிறை பத்தெழுத்துச் சந்தசும் ஆம்
இந்திராணி ஓர் சுரதம் நொச்சிமரம் இந்திரதேவி
**446
#25
சந்திரிகை பேரேலம் நிலாத் தந்து பஞ்சின்நூல் தந்த்ரம்
அந்து கயச்சங்கிலி கிணறு பதசாலம் நெல்லரிவண்டு ஆம்
மந்து புத்தி அபராதம் வந்தை பெருமை புல்லுருவி
நந்தை கொத்தான் முதல்வட்டத் திதி சம்பத்து நீர்ச்சாலே
**447
#26
துந்நம் சின்னிமரம் தைத்தல் பிந்நம் பிளப்புப் பேதிப்பு
கிந்நரம் கிந்நரி நீர்ப்புள் சந்நியுப் பங்கயன் செந்து
சந்நியம் போர் மணாட்டியின் சீதநம் அங்காடி சநவாதம்
சந்நிவேசம் ஊர்கட்டும் தாநம் வீடு மனைப்புறமே
**448
#27
பந்தகம் ஒற்றி பிணைப்படல் கட்டுச் சேவகாவிருத்தி நிற்பந்தம்
சந்தசு காயத்திரி முதலிய வேதம் கருத்து அதீநம் வாஞ்சையும் ஆம்
நந்தநம் மகிழ்ச்சி இந்திரன் சோலை நந்தநன் சுதன் மகிழ்வுள்ளோன்
கந்தளம் மதுரத்தொநி உபராகம் நவாங்குரம் கலாபம் ஓர் மான் பேர்
**449
#28
சந்திநி ஏற்றால் பொலி பசுக் காலம்தவறிப் பால் கறக்கின்ற பசு
நந்தியாவர்த்தம் தகரபாதபம் ஓர் அரண்மனை நந்தியாவட்டம்
சந்திரகாந்தம் நிலவின் முன் நீர்கால் சலாகை வெள்ளாம்பலும் சாற்றும்
துந்துமாரம் பாதாதிகம் இந்த்ரகோபம் தூமக்கிரகப்பேர்
**450
#29
அந்தம் முடிவு எல்லை நிச்சயம் மரணம் இருள் கேடு
அழகு அவயவம் சமீபம் சொபாவமும் ஆம்
சந்தம் நிறம் அழகு சந்தநம் பாட்டின் சந்தம்
சாயல் அபிப்பிராயம் தன்னிச்சை குணம் எண்பேர்
கந்தம் மரப்பணை மேகம் புயத்தினுச்சி கிழங்கு
கரணை நதிக்கரை மணம் விஞ்ஞாநாதி பஞ்ச
கந்தம் மிலேசம் திரள் வியூகம் சம்பந்தம்
களிப்புக் கந்தகம் வகுப்பு என்று ஐம்மூன்று நாமம்
**451
#30
குந்தம் தோமரம் கண்நோய் குதிரை அற்பசெந்து
குருந்தம் வநக்கோதுமை ஓர் நிதி சக்ரச்சுழற்சி
பந்தம் மயிர்முடி கட்டுப் பெருந்துருத்தி உடல் சம்
பந்தம் பாவின்தளை பந்தினில்விளக்கு உண்டையும் ஆம்
மந்தம் அசீரணம் யானைக்குலபேதம் கண்நோய்
மத்து நிற்பாக்கியம் அற்பம் மெல்லெனல் சோம்பலும் ஆம்
கந்தரம் நெல்முளை முழைஞ்சு தொளை கழுத்து முகில் பேர்
கந்துகம் பந்தொடு குதிரை குறும்பர்குதிரையும் பேர்
**452
#31
அந்தரம் விண் எல்லை உடைத்தூசு இடம் விசேடம்
அதற்காதல் புறம்பு வெளி மறைவு நடுப் பேதம்
அந்தரான்மாத் தனது தவிர்கை அயலானது
அவகாசம் தொளை குழி உள் அவசரம் தீமையும் ஆம்
மந்தரம் மெல்லெனப்போதல் ஓர் மலை சுவர்க்கம்
மயிரின்வளைவு அகலம் மத்துக் கமண்டலம் மந்தாரம்
கந்தருவம் பிறப்புஇறப்புக்கிடையிலுள பூதம்
காமரம் ஆண்குயில் குதிரை பெருவயிற்று ஓர் மானே
**453
#32
கந்தளி ஓர் முழத்தளவில் பெருவயிறும் முன்னங்
காலினிடைக் கறுப்புமுள மிருகம் ஓர் மரப்பேர்
சந்தி புணர்ப்பு எல்லை ஒட்டு ஓர் நாடகாங்கம் முச்
சந்தி அந்தி உடம்பாடு ஓர் பண் சுருங்கை யோநி
நந்தி சிறுபறை ஆநந்தம் சூது செக்கான்
நம்பன் நந்தி கேசன் இடபம் கல்லால் ஆல் ஆம்
மந்திரம் ஏகாந்தாலோசனை மந்தவோசை
மனை நகரி மறைமொழி காயத்திரியாதியுமே
**454
#33
தந்திரம் முக்கியம் உபயார்த்தகம் மருந்து தேசம்
சாத்திரம் வேதப்பிரிவின் ஓர் கலை உபாய
தந்திரம் யாகப்பிரயோகம் சேனை நெய்வார்
தறி குடும்பகிருத்தியம் வீண்சாதகம் சித்தாந்தம்
தந்திரி யாழ்நரம்பு உடம்பின்நரம்பு உறக்கம் சோம்பல்
தனமுடையோன் உபாயகன் சாத்திரி கயிறு சீந்தி
கந்து பற்றுக்கோடு பண்டியுள்ளிரும்பு தூணம்
காமம் யாக்கையின் மூட்டு நடுதறி நெல்குதிரே
**455
#34
சிந்து முச்சீரடி ஓர் நாடகப்பாட்டு ஓர் யாறு ஓர்
தேயம் இபமதம் கடல் வாமநவுரு ஓர் நதம் ஆம்
விந்து வட்டமாம்புள்ளி அட்டவற்கத்துஎண் வீசம்
நீரின் துளி பற்குறியொடு அறிபவன் பேர்
பந்துரம் உந்நதவளைவோடு இரம்மியம் அன்னப்புள்
பந்தூகம் எனல் வேங்கைமரம் உச்சித்திலகம்
சந்தை உடம்பாடு பற்பல் வியாபாரத்தொழிலோர்
சார் கூட்டம் நிலைமை இச்சை வேதாத்தியயநம்
**456
#35
சந்தாநம் சுரதருச் சந்ததி குலம் பூட்டுதல் தும்பு ஆம்
மந்தாரம் கவிர் எருக்கு ஓர் சுரதரு வானின்மறைப்பு
சிந்தூரம் புளிமரம் செந்நிறப்பொடி செங்கிடை திலகம்
சிந்தூரி செங்கழுநீர் ஆத்தி செஞ்சேலையினுடையாள்
**457
#36
நந்தகன் மகிழ்வுள்ளோன் குலபாலன்
பந்தகி கற்பில்லவள் பிடியானை
செந்நநம் ஒழுகல் நீர் தேர் திமிசு
மந்தநம் கடைதல் யானைமுகபடாம்
**458
#37
இந்தநம் விறகு எரியிடுகலன் சமிதை
மந்தரன் மெல்லெனச்செல்வோன் சூசகன்
வந்தியர் மங்கலப்பாடகர் மலடிகள்
மந்திரி பொன்னன் அமைச்சன் நிதிக்கோன்
**459
#38
கந்தபலி சம்பகமுகிழ் ஞாழல்
உந்தல் உயர்தல் ஏறல் உகைத்தல்
வந்தி புகழ்வோன் மலடி மலட்டுஆ
தந்திரிகை சீந்திக்கொடி சோம்பல்
**460
#39
இந்தளம் தூபமுட்டி ஓர் பண் எனும்
தந்தி நேபாளவிதை சற்பம் யானை
இந்திரை செய்யாள் கடாரைமரப்பேர்
குந்திரை கோரை சிறுகோரை ஞாழல்
**461
#40
கந்தராளம் கல்லால் இத்தி கல்லுகாய்
மந்தி பெண்முசு வாநரம் வண்டும் ஆம்
தந்துவாயன் சிலம்பி நெய்கின்றவன்
சிந்துவாரம் தநுசு வெண்ணொச்சியே
**462
#41
பந்நகம் பாம்பொடு பதுமகாட்டப்பேர்
சந்நயம் பிற்படை சம்பந்தம் திரள்
சந்தத்தன் கவசதாரணன் சந்நாகத்தன்
சந்நிதி என்ப கிட்டுகை சமீபமே
**463
#42
சந்நதி தொநி வணக்கம்
தந்நியம் முலைப்பால் செல்வம்
அந்நியர் அயலோர் மற்றோர்
சந்நியை அன்னை தோழி
**464
#43
ஆநகம் படகம் பேரி மிருதங்கம் முகில்முழக்கம்
மாநதம் பொய்கை உள்ளம் யாநம் வாகநம் போதல் பேர்
காநநம் கமலத்தோன்தன்முகம் காடு வீடும் காட்டும்
ஈநமே குறைவு இகழ்ச்சி மீநம் ஓர் இராசி மீனே
**465
#44
காநமே காடு கீதம் தீநமே வறுமை கேடு ஆம்
நாநம் நீராடல் நீராட்டின் திரவியம் கத்தூரி
ஈநனே தள்ளப்பட்டோன் கீழ்மகன் இகழ்ச்சியுள்ளோன்
யோநி பெண்குறி இடம் காரணமும் இங்கிதமும் ஓதும்
**466
#45
ஏநம் பன்றி நவை பாவம் நூநம் குறைவு நிச்சயம் ஆம்
சூநம் விடக்குப் பிரசவம் பூ சூநியம் பாழ் சநமின்மை
பாநம் புரத்தல் பருகுதல் ஆம் பீநம் பருமை தசைந்துளது
தாநவன் சந்திரன் தகுவன் சாநு சமத்தாழ்வரை முழந்தாள்
**467
#46
மீநத்துவசன் மதன் வழுதி சூநுச் சுதன் விண்மணி இளையோன்
வாநப்பிரத்தம் மூன்றாம் ஆச்சிரமம் தூகம் முள்முருக்கு ஆம்
ஆநர்த்தகம் நாடகசாலை அமர் ஓர் தேயம் சநம் நாற்பேர்
தேநுக் கறவை பசுப்பொது ஆம் பாநுக் கிரணம் திவாகரனே
**468
#47
சீநம் முப்பதுஅங்குலமான் பெரும்பாம்பு ஓர் நெல் ஓர்
தேயம் நிபம் சேலை தந்து கொலைத்தொழில் வஞ்சனை ஆம்
தாநம் வலி புரத்தல் சுத்தி இபமதம் வீடு அவகா
சம் கொடை கண்டநம் இருப்புச் சுவர்க்கம் இடம் நிலைப் பேர்
மாநம் அகங்காரம் மநவெழுச்சி பிரமாணம்
வலி பெருமை நவை நாழியாதி ஓர் கோபம்
வாநம் உலர்மரம் வறட்சி கொத்தல் புற்பாய் சுகந்தம்
மழை விண் நீர்த்திரை போதல் சுருங்கை சுவரடியே
**469
#48
சூநிர்தம் இனிய மெய்ச்சொல்லு மங்களம்
பேரிலம் இலந்தைக்காய் வநமுருங்கைப் பேர்
தேநுகை இளம்கற்றா மாதங்கப்பிடி
சூநை நந்தநி அண்ணம் வதைக்கும்சூழலே
**470
#49
ஞாநமூர்த்தி மகேச்சுரன் நாமகள்
ஞாநம் மோக்கத்தில் புத்தி நற்போதம் ஆம்
தாநவாரி சதமகன் மாயவன்
ஞாநி சோதிடம்வல்லவன் ஞாநவான்
**471
#50
கீநாசன் மநமிடித்தோன் உழவன் க்ருதாந்தன் முப்பேர்
மாநாதம் செவி சிங்கம் பேரொலி பெய்யும்முகில் மாதங்கம்
கேநாரம் என்ப கும்பி நிரையம் மண்டைப்பொருத்து ஆம்
காநீநன் மணமில் கந்நிகாசுதன் வியாசன் கன்னன்
**472
#51
மைந்தரே புருடர் மாந்தர் மைந்தன் திண்ணியன் மகன் பேர்
சைந்தவம் சிந்துதேயப்பரி சிந்தூற்பவம் இந்துப்பு ஆம்
ஐந்திரம் கிழக்கு இந்த்ரன்நூல் மைந்து என்ப மயக்கம் ஆண்மை
ஐந்திரி சயந்தன் காகாசுரன் வாலி அருச்சுநன் பேர்
**473
#52
ஏந்தலே உயர்ச்சி மன்னன் பெருமை ஏந்துதல் சிறந்தோன்
கூந்தல் பெண்மயிர் கலாபம் குசை மயிர் கமுகின் பாளை
பாந்தள் பேரரவு பாம்பு ஆம் பாந்தவன் நண்பன் இட்டன்
வேந்தன் இந்திரன் ஆதித்தன் வியாழன் சந்திரன் இராசன்
**474
#53
காந்தம் எனல் ஓர் குணவணி ஓர் புராணம் பிரியம் காந்தக்கல்
சாந்தம் குளிர்ச்சி பொறுமை அணைந்தது சந்தநம் ஓர் சுவை ஐம்பேர்
சாந்தி பொறுமை காமாதியடக்கம் சுபம் தோடக்கழிப்பு ஆம்
சாந்து கலவைச்சேறு மணப்பொடி சந்தநம் சுண்ணச்சாந்தே
**475
#54
காந்தாரம் சிந்தூரம் காடு அருநெறி உபசற்காதி
காந்தாரசொரம் குறிஞ்சியாழ்த்திறம் ஓர் இராகம்
காந்தாரதேயம் ஓர் பண் காற்றூள் நாணல் கரும்பு ஆம்
காந்தாரி சுயோதநன்தாய் கண்டத்துற்று எழும் நரம்பே
**476
#55
நாநா பலஎனல் தவிர்வுஎனல் சொலும்
சேநாநி கந்தக்கடவுள் சேநாபதி
ஆநாகம் நீட்சி பொருமல் வியாதி ஆம்
பாநீயம் தெண்ணீர் பருகுவனவுமே
**477
#56
காந்தன் இறையோன் காமுறுவோன் பெயர்
சாந்தன் பொறையோன் அருகன் சந்திரன்
சாந்துவம் மதுரமொழி நயப்புணர்வு
காந்தை பிரியை ஞாழல் காமிநி
@10 பகர வெதுகை
**478
#1
உபகாரம் உலுப்பை ஈகை உபதி வஞ்சனை தேர்ச்சில்லி
உபதாபம் நோய் தாபப்பேர் உபதை சோதனை காணிக்கை
உபநாகம் விரணம் ஆற்றும் மருந்து யாழ்நரம்புக்கட்டு ஆம்
சபரியை பூசை சேவை கபிஞ்சலம் காடை ஆந்தை
**479
#2
உபசத்தி சேவை ஒன்றிலொன்று கூடுதல் கொடைப் பேர்
அபசயம் பறித்தல் தோல்வி அபசற்பன் தூதன் ஒற்றாள்
அபசிதி குறைவு பூசை அழிவொடு பிராயச்சித்தம்
விபணி அங்காடிவீதி அங்காடி விலைப்பண்டப்பேர்
**480
#3
தபநம் ஓர் நிரையம் பல்லாதகம் முதிர்வேனில் என்ப
உபலம் கல் அரதநப்பேர் உபலை சற்கரை சுக்கான்பார்
சபலையே தூர்த்தை மின்னல் திப்பலி தாக்கணங்கு ஆம்
அபிசத்தி இரத்தல் நிந்தை அபிமர்த்தம் சமர் கள் ஆமே
**481
#4
அபிசநம் சநநபூமி குலம் குலவிருது கீர்த்தி
அபிசவம் முழுக்கு வேள்வி கள்ளுக்கூட்டுதலும் ஆகும்
அபிசாதன் தகுதியுள்ளோன் அறிஞன் நற்குலத்துதித்தோன்
அபிதாநம் மறைவு நாமம் அபிமதம் இணக்கம் இட்டம்
**482
#5
அபிநீதன் துலக்கப்பட்டோன் பொறுமையுள்ளோன் தக்கோன் ஆம்
அபிபந்நன் விபத்துள்ளோன் தப்புடையோன் சத்துருவாக்ராந்தன்
அபிமாநம் ஞாநம் நேசம் அகங்காரம் கொலை நாற்பேராம்
வபு நல்ல உருவம் தேகம் வபை நிணம் விவரம் என்ப
**483
#6
உபத்தம் ஆண்குறி பெண்யோநி உபத்திதி சமீபம் ஞாநம்
விபத்தி வேற்றுமை ஆபத்து ஆம் விபந்நமே பாம்பு நட்டம்
அபத்தியம் பத்தியம்மல்லது மக்கள்பொதுவும் ஆகும்
அபிக்கியை எழில் பேர் கீர்த்தி அபீக்கணம் மிகுதி நிச்சம்
**484
#7
விபாகம் பக்குவம் இனிப்புத் துற்கதி பங்கு வேறு ஆம்
விபாகரன் கனலோன் பாநு குபேரன் வெண்கதிர் நிதிக்கோன்
உபாகிதம் ஆமாரோபிக்கப்பட்டதோடு எரிகொள்ளிப் பேர்
நபாசம் ஆவணி கார்காலம் படிக்கம் தாமரைநூல் நாசி
**485
#8
கபாலம் ஓர் குட்டநோய் மட்கலத்துண்டம் தலைமண்டைப் பேர்
விபாவசுக் கனலோன் சோமன் விண்மணி ஓர் முத்தாரம்
அபாவம் இல்லாமை நாசம் அபாங்கம் புண்டரம் கடைக்கண்
கபீதநம் ஆம்பிராதம் அரசு கல்லால் வாகைப் பேர்
**486
#9
உபசம்பந்நம் அகத்து அட்ட பசு நன்கு அட்ட சாகாதி
உபராகம் பொல்லாநெறி இராகு கிராணம் பரிவாதம்
அபராசிதன் வெல்லக்கூடாதவன் மகேசன் பரந்தாமன்
அபராசிதை விண்டுக்ராந்தி சுவேதா சயந்தி துற்கையும் ஆம்
**487
#10
தபதி பிருகப்பதியாகம்செய்தோன் தச்சன் மெய்காப்போன்
அபலம் பலமற்றது கொழு ஆம் அபிரூபன் பண்டிதன் அழகன்
விபவம் பெருமை திரவியப்பேர் விபுலம் அகலம் விரிவு என்ப
அபவற்சநம் முற்றத்துறத்தல் பரமகதியும் கொடுத்தலும் ஆம்
**488
#11
தபம் ஓர் உலகம் முதிர்வேனில் கிருச்சிராதி தவம் தருமம்
கபியே கபமுள்ளோன் குரங்கு ஆம் கபிலன் தகன் ஓர் முநிவன்
சிபி ஓர் அரசன் பூர்ச்சமரம் சிபை ஆல்விழுது அம்புயக்கிழங்கு
கபுரம் குடம் பத்திரக்கோரை கமுகு பிசின் சோம்பற்றனமே
**489
#12
உபகமம் அங்கீகாரம் சமீபகமநப்பேர்
உபசாரம் காணிக்கை சிகிற்சை சேவையும் ஆம்
அபசவ்வியம் பிரதிகூலம் வலப்புறப்பேர்
அபிமரம் தன் படை அச்சம் வதை போர் என்று அறைப
சபலம் சீக்கிரம் பதற்றம் இலாபம் நிறைவேறல்
சஞ்சலம் மீன் குரங்கு ஓர் கல் வெள்ளிரதம் தாழ்மை
கபிலை புண்டரீக யானைப்பிடி வால்மிளகு
கரியமஞ்சள்நிறப்பசுவோடு இருவீடு என் மரமே
**490
#13
உபக்கிரகம் சிறை இதவான் உபயோகம் உபக்கோள்
உபநிடதம் தருமம் இராசியம் வேதாந்தப்பேர்
உபக்கிரமம் விக்கிரமம் சிகிற்சை இது முதல் என்
றுரைத்தல் மந்திரிசோதனையோடு அறிந்து தொடங்குதல் ஆம்
நபச்சரம் மேகம் காற்றுப் பறவை கிரகமும் ஆம்
நபச்சரர் வித்தியாதரர் விண்ணவர் நவக்கோள் என்ப
அபிக்கிரகம் அகங்கரம் ஆள்வினை எதிராக்கள்ளல்
அபிசங்கம் ஆக்ரோசம் அவமாநம் சபதம்
**491
#14
உபதாநம் தலையணை விசேடம் நேயம் விரதம் பந்தும் ஒக்கும்
அபதேசம் பிரசித்தி நிமித்தம் இடம் வியாசம் இலக்கு ஆகும் என்ப
அபவர்க்கம் கிரியாவசாந சாபல்லியம் மோக்கம் தியாகம்
அபிகாரம் நெய்விடல் மோகரித்தல் களவு எதிர்த்தல் ஆயத்தமாதல்
**492
#15
உபாகிருதம் மந்திரத்தால் மகத்து அட்ட பசு உபத்திரவம் என்ப
உபாசநம் சொற்படிசெய்தல் சிறுபீடம் கொலை அம்பெய்து உடலக் கற்றல்
உபாதாநம் விடையத்து இந்த்ரியாகருடணம் போக்கியப்பொருள் பேர்
உபாதி விசேடணம் கபடம் தருமசிந்தை குடும்பம்தாங்குவோனும் ஆமே
**493
#16
உபகுஞ்சிகை சிற்றேலம் கருஞ்சீரகம் ஆம்
உபகுல்லியை திப்பலிச்செடி வாய்க்கால்பிரிவு
உபசற்கம் பிராதி அடைமொழி ஓர் நோய் உபத்திரவம்
உபசல்லியம் ஊரின்அருகு புலைச்சேரியுமே
**494
#17
அபயம் இலாமச்சம் பயமற்றது
அபயன் நிற்பயன் அருகன் செம்பியன்
அபரம் பின் கரிப்பின்கால் பிற்புறம்
அபகாரம் பறிப்பு உதவிக்கேடும் ஆம்
**495
#18
அபலாபம் மறைக்கும்சொல் நேயம் ஆம்
அபியோகம் எதிர்த்தலும் உத்தியோகமும்
அபிராமம் சுந்தரம் இன்புறுவது
சிபிவிட்டன் வழுக்குத்தலையன் சிவன்
**496
#19
சபம் பசுவாதிகளின்குரம் மரவேர்
சுபம் சோபநம் ஓர் யோகம் பொலிவு
நிபம் குடம் ஒப்பு நிமித்தமும் பெயர்
விபஞ்சி குறிஞ்சியாழ்ப்பண் வீணையே
**497
#20
சுபத்திரை அற்சுதப்பிரியை ஓர் சுரபி
உபப்பிலவம் உற்பாதம் இராகு ஆம்
கபர்த்தம் சிவசடாசூடம் பலகறை
விபுச் சிவன் பிரபு வியாபகன் நித்தியம்
**498
#21
நிபாகம் சமைத்தல் வேர்வை தீதாம்பலம்
அபீகன் குரூரன் காமுகன் நிற்பயன்
விபூதி ஐச்சுரியம் பெருமை வெண்ணீறு
சபேடம் கதுப்பின் எலும்பு விரித்த கை
**499
#22
வபநம் முண்டநம் விதைத்தல்
இபம் மரக்கொம்பு யானை
விபுதர் கற்றுணர்ந்தோர் தேவர்
தபுதலே கெடுதல் சாதல்
**500
#23
வெப்பமே விருப்பம் வெம்மை வைப்பு இடம் வைத்தல் ஊர் ஆம்
கப்பரம் பிச்சை ஏற்கும் கலம் மண்டை கொப்பரைப் பேர்
பிப்பலம் திருமரம் நீர் சேலைத்துண்டு ஓர் புள் பேசும்
குப்பி ஓர் வளை மட்பாண்டம் முறுக்காணி மயிர்முடிப்பூண்
**501
#24
சப்பியன் அம்பலத்தான் சற்குலபுருடன் என்ப
அப்பிரம் தேவலோகம் ஆகாயம் மேகம் முப்பேர்
வப்பிரம் மதில் மதில்கீழ்க்குறடு ஈயம் கரை வயல் பேர்
விப்பிரலாபம் வீண்சொல் பகைச்சொல் விப்பிரயோகம்மே
**502
#25
அப்பு என்ப சமுத்திரம் நீர் தப்பு என்ப குற்றம் பொய் ஆம்
உப்பு என்ப மகளிராடல் உவர்ப்புளது இனிமை முந்நீர்
தப்புதல் துகில்மழுக்கல் தவறுதல் விலகுதல் பேர்
பப்புருக் கனலோன் பொன்மை பெருங்கீரி பரன் அயன் மால்
**503
#26
குப்பம் திடர் ஊர் குவிவும் பேர் குப்பை குழுமல் பலகூளம்
சுப்பிரம் வெள்ளப்பிரகம் ஓர் யோகம் பேரொளி வெண்மை
சுப்ரதீகம் ஈசாநத்திக்கயம் சுபாவையவம்
கைப்புக் கசப்பு வெறுப்பு என்ப கொப்புள் குமிழி குமிழ்ப்பு ஆமே
**504
#27
செப்பம் நடுநிலை மார்பு செவ்வை தெரு வழிப் பேர்
செப்பு என்ப சம்புடம் சொல் எதிர்மொழியும் ஒக்கும்
விப்பிரமம் அநுமாநம் பணிமாறிப்பூணும்
மெல்லியர்தம் இயற்குணம் பிராந்தி சோபையும் ஆம்
கொப்பு மரக்கொம்பு மயிர்முடி ஓர் காதணி ஆம்
கொப்புளித்தல் உமிழ்தல் கொப்புளமாதல் என்ப
துப்பு வலி சிவப்பு அரக்குத் துகிர் நெய் உபகரணம்
துணை அநுபவம் தூய்து ஆயுதம் பொலிவு உண்பனவே
**505
#28
கப்பணம் இருப்புமுள்ளும் கைவேலும் பேர்
சொப்பநம் கனாவொடு தூக்கம் ஞாநம் ஆம்
பிப்பலகம் தையல்சரடு சூசுகம்
ஒப்பனை அலங்கரிப்பு உவமை ஒண்ணுமே
**506
#29
இப்பியை சல்லகிமரம் பெண்ஆனைப் பேர்
அப்புசம் சங்கு நீர்க்கடம்பு தாமரை
அப்புசன் இமகிரணன் தந்வந்தரி
துப்புரவு ஐம்பொறிநுகர்ச்சி தூய்மையே
**507
#30
பப்பரம் பரூஉ ஓர் தேயம்
கப்பரன் திருடன் தூர்த்தன்
இப்பர் எட்டியர் கோபாலர்
செப்பல் ஓர் ஓசை சொல்லல்
**508
#31
கோபதி இடபம் இந்த்ரன் இரவி கொற்றவன் மகேசன்
சீபதி அரசன் மாயோன் சீபலி அவிரி நெல்லி
சோபநம் சுபம் ஓர் யோகம் சோபையே காந்தி பிச்சை
யாபநம் காலம்தள்ளல் மறுத்தல் தாபித்தல் என்ப
**509
#32
தீபம்தான் விளக்குச் சோதி சீபந்தம் கமலம் முன்னை
யூபம் பூவரசு வேள்வி வேள்வித்தூண் உடற்குறைப் பேர்
வீபற்சன் கடிநசித்தன் விரோதன் பார்த்தன் குரூரன்
மாபற்பம் ஓர் பேரெண் ஓர் மாநாகம் ஓர் நிதிப் பேர்
**510
#33
கூபம் என்ப கிணறு குழி கோபம் சினம் இந்திரகோபம்
சூபம் பருப்பு மடைத்தொழிற்பேர் தூபம் மணற்குன்றொடு புகை ஆம்
தாபம் துயரம் சந்தாபம் பாபி அதமன் பரத்ரோகி
கோபி சினத்தோன் நன்னாறி இடைப்பெண் ஓர் மண் கோபமுளாள்
**511
#34
கூபகம் எண்ணெய்த்துருத்தி மரக்கலப் பாய்மரம் நீர்க்
கூவலொடு மதகின் வாய்மரம் மருங்குல்சுழி ஆம்
தாபநம் போர்மேற்சென்றோர் உறை பாடிவீடு
சமாதி புஞ்சவநம் வைத்தல் நாட்டுதல் ஈவித்தல்
கோபன் பார்த்திவன் பல கிராமாதிகாரி
கோசாலைக்கு அதிகாரி கோபாலன் நாற்பேர்
நாபி இரண்டாம்வருணன் மிருகமதம் முதன்மை
நரபதி கொப்பூழ் உருளின்தொளை விடபேதமுமே
**512
#35
ஞாபகம் நினைப்பு அரும்பொருள் நற்புத்தி ஆம்
தீபகம் விளக்கு ஒளிசெய்தல் ஓர் அணி
தாபதர் சடைமுடிப்படிவர் மாதவர்
தாபிதம் வைப்பது நிச்சயிப்பதே
**513
#36
பூபதி மல்லிகை பூமிக்கதிபதி
ஆபரணம் அலங்காரம் அணிகலன்
சாபம் வில் சிசுச் சபிப்புச் சபதம்
கோபுரம் புரவாயில் பெருங்கோரை
**514
#37
ஆபாதம் காலம் பதநம் ஆபீலம் துன்படை அச்சம்
நாபீலம் உத்தமப்பெண்ணின் தொடைச்சந்தொடு நாபியின்ஆழம்
ஆபோகம் பூரணமுடைமை வருணச்சத்ரம் முயற்சிக்கை
காபோதம் சத்தியட்சாரம் யமுநாஞ்சநம் புறாக்கணமே
**515
#38
ஆபாசம் என்ப கிரமப்பழுது தூடணை ஆம்
சோபாநம் ஏறும் கல்லின் படி தாழ்வாரப்பேர்
பூபாலர் பூபுத்திரர் பூமியைஆளுபவர்
கோபாலன் கண்ணன் அரசன் கோவினைக்காப்போன்
**516
#39
காபாலி ஈசன் ஓர் உருத்திரன் காளி
சேபாலிகை படுக்கைக்கச்சம் கருநொச்சி
கௌபீநம் செய்கைப்பிழை கோவணம் உபத்தம்
ஆபூபிகன் அப்பம்செய்வோனே அது விற்போன்
**517
#40
நாப்பண் மத்தியம் தேர்த்தட்டு நடுவண் யாழுறுப்பு நாற்பேர்
தீப்பியம் மயில்பூடு ஓமம் யாப்பு என்ப கட்டுச் செய்யுள்
கரப்பு என்ப புரிசை காவல் கதவு கையணி வெண்ணீறு
சீப்பு என்ப கதவுறுத் தாழ் மயிர்வாரி குலைக்காய்ச் சீப்பே
@11 மகர வெதுகை
**518
#1
அமதியே காலம் சந்த்ரன் அமரர் நண்ணலர் சாவில்லார்
சுமநசர் அறிஞர் தேவர் சுமநசை புட்பம் பிச்சி
சமநமே கொலை சாந்தப்பேர் சமரம் போர் கவரிமான் ஆம்
சமம் ஒப்பு நடு ஓர் தாளம் சாது போர் சாந்தி எல்லாம்
**519
#2
தமம் இருள் மயக்கம் பாவம் தமர்தொளை தம்மவர்ப் பேர்
குமரனே இளைஞன் மைந்தன் வைரவன் குகன் புமான் ஆம்
அமரியே அமுதம் துற்கை அமருடம் பொறாமை கோபம்
அமர்தல் மேவுதல் இருத்தல் அலர்தலோடு அமர்தல் என்ப
**520
#3
கமலம் தோல் செம்பு நீர் பங்கயம் நுரையீரல் மான் பேர்
சமலமே பாவம் விட்டை தமிழ் என்பது இனிமை நீர்மை
அமலல் சேருதல் நெருங்கல் அமளி பேரொலி படுக்கை
சமி வன்னி பயற்றின்நெற்று ஆம் நமுசி ஓர் தகுவன் காமன்
**521
#4
தமிசிரம் இருட்டு இரா ஆம் சமுதாயம் பொதுப் போர் கூட்டம்
திமிரம் கண்நோய் இருள் பேர் திமிர்தல் பூசுதலோடு அப்பல்
சுமுகன் பண்டித நல்வாக்கி கருடன்தன்சுதன் ஓர் நாகம்
அமுதரே இடையர் வானோர் அமுது பால் சுவை சோறு ஆமே
**522
#5
துமுலம் கைகலந்தபோர் ஆராகுலத்தொநி தான்றியும் பேர்
அமை அமாவாசை மூங்கில் அமைதி மாட் சிமை அடக்கம்
உமை காந்தி புகழ் காசானநெல் உமாதேவி மஞ்சள்
அமைதல் சம்பவித்தல் மாண்டல் அடங்குதல் பொருந்தல் ஆமே
**523
#6
விமர்த்தநம் பிசைதல் பீடித்திடல் குழப்புதல் அழித்தல்
சமழ்ப்பு எனல் வருத்தம் வெட்கம் சமித்துப் போர் சமிதை காட்டம்
சமிர்த்தியே நிறைவு செல்வம் சமுத்திரம் கடல் ஓர் பேரெண்
அமைச்சன் மந்திரி வியாழம் சமைத்தலே அமைத்தல் அட்டல்
**524
#7
உமாசுதன் கணேசன் கந்தன் சுமாலி ஓர் அரக்கன் கள் ஆம்
சமாயோகம் சமவாயம் சம்யோகம் ப்ரயோசநப்பேர்
சமூரு வாலில்லாச் சித்ரரோமமான் நரிச்சாயல்மான்
தமோநுதன் தமோபகன் பெலசந்திர இரவி அங்கி
**525
#8
யமகம் விரதம் ஓர் சொல் பல் பொருளின் திரிபா இயற்று கவி
கமடம் பிச்சைக்கலம் ஆமை கமநம் பயணம் அசோகமரம்
கமம் ஒப்பு உசிதம் அநுகூலம் நிறைவு சமர்த்துக் கமகமும் ஆம்
தெமம் நிக்கிரகம் கிலேசாதி சகித்தல் சேறு தெண்டித்தல்
**526
#9
விமலை பம்பந்திராய் செய்யாள் வீரி உமை மாசிலள் வாணி
நிமிர்தல் ஓடல் உயர்தல் பேர் ஞெமிர்தல் முறிதல் பரப்பலும் ஆம்
அமிர்தன் தந்வந்தரி தேவன் அமைவன் அருகன் அடக்கமுளோன்
சிமிலி சிள்வீடு உறி குடுமி உமிழ்தல் தெவிட்டல் கொப்புளித்தல்
**527
#10
சமர்த்தன் சதுரசம்பந்நன் அநுகூலன் சம்பந்தனும் ஆம்
இமிழ்த்தல் சிமிழ்த்தல் ஒலித்தல் பேர் இமைத்தல் சிமிட்டல் ஒளிசெய்தல்
சமுத்திராந்தை சீதேவிப்பூடு சிறுகாஞ்சொறி பருத்தி
அமைத்தல் சமைத்தல் நியமித்தல் செய்தல் அமையப்பண்ணலுமே
**528
#11
சமாகாதம் வெஞ்சமம் கொலை ஆம் சமீரம் காற்றுச் சிறுவன்னி
சமாசம் விபத்தி தொக்கபதம் சுருக்கம் நராதி சமூகப்பேர்
விமாநம் கோயில் சுவர்க்கம் விண்ணவர்தம் தேர் ஏழ்நிலைமேடை
சமாநன் ஒருவன் ஒத்தவன் ஓர் சரீரவாயு நல்லவனே
**529
#12
தமநம் பூ உலைத்துருத்தி தழல் நெட்டிக்கோரை
தமநி நாகுணம் கழுத்து நரம்பு மஞ்சள் நாற்பேர்
கமநன் இரணியகருப்பன் மன்மதன் காமுகன் ஆம்
கமலை வராங்கநை கமலாசநை கமலாலையப்பேர்
சமன் இயமன் நடுச் சமம் காமாதியிலான் சாந்தன்
சமிதி சவை கொடும் சமம் ஒப்புமை சங்கம் என்ப
குமரி ஓர் நதி கௌரி இளமையள் கற்றாழை
கொற்றவை கந்நிகை சம்புத்தீவின் விபாகமுமே
**530
#13
அமரை அமராவதி தூண் அறுகம்புல் சீந்தி
அமலை சோறு உமை கீழாநெல்லி அழுக்கில்லாள்
அமிர்தம் பால் இனிமை நெய் நீர் சுரருணவு சுவர்க்கம்
அன்னம் இரவாமை முத்தி யாகசேடம் பொன்
சமையம் அவசரம் கருமநிச்சயம் சித்தாந்தம்
சங்கேதம் நியமம் ஆசாரம் சைவாதி
சமையம் சம்பத்துக் காலம் புத்தி ஆணை
சபதம் பேச்சு என்ன அபிதாநம்பன் மூன்றாம்
**531
#14
சமாதாநம் இருப்பு இணக்கம் பற்றல் நித்யகருமம்
தமாலம் வாள் இலை திலகம் பசும்பிடி வேய்ம்புறணி
சமாதி மநம் ஒருப்படல் இந்தியஅடக்கம் மௌநம்
சாவு சமர்த்தநம் நியமம் முற்றுதல் ஓர் அணி ஆம்
சமாபநம் கொல்லுகை முகிவு பரிச்சேதம் இணக்கம்
சமாபந்தம் பெறுகை கொலை துன்புறுத்தல் முகிவு
குமாரன் அறுமுகன் இளைஞன் யுவராசன் மகன் பேர்
குமாரி மகள் இருவாட்சி கற்றாழை குமரி
**532
#15
வமது வாந்தி புழைக்கை உமிழ்துளி
சுமநம் நல் இதையம் மலர் கோதுமை
தமநன் வீரன் குரூரன் தகநன் ஆம்
அமலம் அப்பிரகம் அழுக்கில்லதே
**533
#16
விமலம் மாசற்றது ஓர் சிவாகமம்
திமிதம் ஈரமுளடு அசைவில்லது
குமுதம் வெள்நெய்தல் ஓர் திக்குக்குஞ்சரம்
அமுதை சீந்தி கடுமரம் நெல்லியே
**534
#17
சமக்கிரம் மிகுதி நிறைவு எல்லாம்
சமப்பால் முல்லை நெய்தல்நிலம்
நிமித்தம் நற்சொல் குறி ஏது
குமைப்பு நெகிழ்ச்சி அழிப்பும் பேர்
**535
#18
சமங்கை எனல் வறட்சுண்டி மஞ்சிட்டை
சமஞ்சசம் நியாயம் நன்றாயிருப்பது
கமண்டலு இத்திமரம் சலபாத்திரம்
இமம் சந்தநம் சீதளம் பனி என்ப
**536
#19
குமாரம் கிளி மாவிலிங்கு நல் செம்பொன்
சமீரணம் எறிதல் கிடாரைத்தருப் பெயர்
சுமேதை நற்புத்தியுளன் வாலுளுவை
அமோகை கடுக்காய் விழாலரிசியே
**537
#20
கொம்பல் கொந்துதல் முன்கோபம் வெம்பல் முன்கோபம் வாடல்
சம்பளம் கரை வழிச்சோறு எலுமிச்சை பொறாமை கூலி
அம்பி காராம்பி ஓடம் மரக்கலம் நீர்ச்சால் ஆகும்
கம்பி சட்டுவம் வேய்ங்கீற்றுத் துகில்கம்பி உலோகக்கம்பி
**538
#21
தும்பி வண்டு இதன் ஆண் யானை சுரைக்கொடி கருவண்டும் பேர்
சம்பிரமம் பதற்றம் ஆதரம் பரபரப்பு ஆம்
சம்ப்ரயோகம் புணர்ச்சி பிரதாநத்தொழில் சம்பந்தம்
வம்பு வார் மிடா அடாச்சொல் நிலையின்மை புதுமை வாசம்
**539
#22
சம்பர்க்கம் தொடல்புணர்ச்சி சம்பாதம் நெருக்கம் யோநி
சம்புகன் நரி சலேசன் சம்பூலம் தாழை நாவல்
சம்பை ஓர் தாளம் மின் ஆம் சம்வேசம் படுக்கை பீடம்
பம்பை ஓர் நதி குறண்டமயிர் முல்லைப்பறை முப்பேரே
**540
#23
சம்மதம் மகிழ்வு இணக்கம் சம்மதி அநுச்சை வாஞ்சை
அம்மனை தாய் அம்மானை அம்மான் மாதுலன் தகப்பன்
அம்மை தாய் வருபிறப்பு ஓர் வனப்பு ஓர் நோய் தவப்பெண் ஐம்பேர்
சும்மை நெல்போர் நாடு ஆரவாரம் ஊர் சுமையும் ஆமே
**541
#24
ஞமலியே மயிலும் நாயும் நாமம் பேர் பெருமை கீர்த்தி
தமி தனி இராத்திரிப் பேர் தாமசி துற்கை கங்குல்
கமை என்ப பொறுமை பூமி காமர் கட்டழகு காதல்
சிமையமே குடுமி வெற்பு ஆம் தேமநம் கறி நனைத்தல்
**542
#25
சும்பகன் காமுகன் தூர்த்தன் கும்பிலன் தூர்ச்சடி திருடன்
கம்பம் அசைவு நடுக்கம் தூண் கயத்தூண் விளக்கின்தண்டு என்ப
சம்பம் தொழுநோய் இரும்புப்பூண் தடி வக்கிரப்பல் கொடிறு இடம்ப
சம்பம் குலிசம் லிகுசம் அங்கதேயம் சரக்கூடு ஓர் உண்டி
**543
#26
அம்பரீடம் போர் வறையோடு ஆம்பிராதம் பரியின்மறி
அம்பரீடன் ஓர் அரசன் திரியம்பகன் ஆயிரம்கதிரோன்
உம்பர் விண் விண்ணவர் சுவர்க்கம் உயர்ச்சி மேல் உவ்விடம் பார்ப்பார்
வம்பலர் அந்நியர் புதியோர் வம்பன் சோரசுதன் துட்டன்
**544
#27
உம்பல் குலம் சந்ததி தந்தி கிடாய் எழுச்சி உரன் அறுபேர்
நம்பல் விரும்பல் விசுவசித்தல் பம்பல் படர்ச்சி பொலிவு எழுச்சி
கொம்பு தந்தம் மரக்கொம்பு விலங்கின்கொம்பு ஊதும்கொம்பு
சிம்பை பயற்றின்நெற்று அவரை தும்பை பொருதல் ஓர்புதலே
**545
#28
மம்மர் மயக்கம் துன்பப்பேர் பொம்மல் சோறு மங்கலம் ஆம்
செம்மல் பெருமை செருக்கு மகன் சிறந்தோன் இறைவன் பழம்பூ ஆம்
விம்மல் அழுதல் இறுகுதல் பேர் வெம்மை விருப்பம் உட்டணம் ஆம்
கொம்மை இளமை கைகுவித்துக்கொட்டல் வட்ட, முலை திரட்சி
**546
#29
அம் மணியின்ஒளி சுகம் போர் சிரிப்பு அழைப்பு உன்மத்தம்
அஞ்சம் ஏழிசையாதி அளவு பரப்பிரமம்
அம் இடைச்சொல் விகுதி புளகம் தீர்க்கம் செருக்கோடு
அம்பு நியோகம் வக்ரவாக்கியம் கும்பிடும் ஆம்
கம் முடி நீர் சுகம் விண்மீன் இந்திரியம் வயல் ஆ
காயம் வெப்பம் கிங்கிணி வாச்சியம் கீதம் புவி சொற்
கம் முகில் சூநியவிந்து நகர் படுக்கை உறக்கம்
கண்டை கட்டநம் கிருபை வார்த்தை பலகையுமே
**547
#30
சம் முடிவு சுகம் சுபம் நீர் புகழ் ஒளி நூல் சுவர்க்கம்
சநநம் ஞாநம் த்யாநம் விமலம் நித்தம் சிரேய
சம் மறைவு சுழற்சி புயல்காற்று அரைப்பூண் களிப்புச்
சகோரம் நிவாரணம் நட்டம் தேர்த்தடம் சூழ்வதும் ஆம்
தம் முனிவு வெள்ளை கறுப்பு அகலம் வைராக்கியம் வால்
தநம் தாந்யம் காட்சி கண் ஞாநம் த்யாநம் பரிசுத்
தம் மனை பாநம் புணர்ச்சி பயநிவாரணம் நிச்
சயம் தாதுர்வாதம் வடம் ஒலி களத்ரம் இடைச்சொல்
**548
#31
பம் மலை பொன் சுபலக்கநம் விண்மீன் இராசி
பங்கு விகற்பம் கலகம் சமைத்தல் விந்து கௌத்து
பம் முகில் விண் ஒளி வண்டு கணம் கநம் சூல் கருத்துப்
பருவம் மதம் குடம் திலகம் பக்கம் சக்கிரப்பேர்
சம்வதநம் வசீகிருதம் சமாலோசம் தருக்கம்
சம்வர்த்தம் பிரளயம் ஓர் முகில் வருடம் தான்றி
சம்வித்துக் கருமநிச்சயம் ஒழுக்கம் ஞாநம்
சவை பெயர் போர் பேசுகை சங்கேதம் உடம்படலே
**549
#32
அம்பணம் வாழைத்தண்டு ஆமை அளக்கும்கால்
அம்பட்டை முல்லை பங்கம்பாளை புளியாரை
கும்பம் தோளணி கரியின் மத்தகம் ஓர் இராசி
குடம் சிவதை குற்குலுக் கூட்டுவது தொடுப்பதும் ஆம்
தம்பம் அசைவற்றுறல் நெல்லாதியின் தாள் யானைத்
தறி பணைகளிலாமரம் தூண் கற்கம் கைதவப்பேர்
விம்பம் அடையாளம் இருசுடரின்வட்டம் பிரதி
விம்பம் ஓர் சிவாகமம் கொவ்வைக்கனி சொரூபம்
**550
#33
அம்பரம் விண் இதழ் ஆடை சுகந்தி மன்றம் பாவம்
அம்பிகை தாய் உமை அத்தை திருதராட்டிரன்தாய்
சம்பரம் மீன் குட்டேற்று நெடுமயிர் மான் வித்தம்
சலிலம் அற்புதம் சிம்புள் ஓர் பௌத்தவிரதம்
அம்பலம் சித்திரகூடம் வெளி சவையும் ஆகும்
அம்பல் சில்லோர் அறிந்து புறங்கூறல் பழிமொழிப் பேர்
சம்பவம் காரணம் பெறுகை ஆதேயங்களுக்கு ஆ
தாரங்களின் மிக்குள்ளது சநநம் நாற்பேர்
**551
#34
கம்பளம் நீர் உத்தரியம் கீடம் கம்பளி கோக்
கழுத்தின் அணர் பூணூல் போல் இடும் தார் ஓர் நாகம்
கும்பி சிறுகுமிழ் யானை தொண்டி கொட்டைப்பாசி
குடா வயிறு ஆண்முதலை பாதிரை நிரையம் சேறு ஆம்
கம்பு மரக்கழி சங்கு நத்தை ஓர் தவசம்
கைவளை கச்சோலம் செந்தினை கழுத்துக் கைம்மா
சம்பு நாவல்தரு ஓர் தீவு அயன் மால் சிவன் ஓர்
தடி நிசிநன் பத்தியகத்தியமுள காவியமே
**552
#35
கும்பசன் வில்தொழில்குரு அகத்தியன்
அம்பர் ஓர் உபரசம் ஓர் ஊர் அவ்விடம்
கம்பலம் என்ப மேற்கட்டி கம்பளி
அம்பு நீர் வெட்டிவேர் பாணம் ஆகுமே
**553
#36
தும்பு பூட்டிடுகயிறொடு சிலும்பல் நார்
அம்புசம் தாமரை நீர்க்கடம்பும் ஆம்
கிம்புரி ஓர் முடியுறுப்புக் கட்டும் பூண்
செம்புலம் பாலைசேர்நிலம் செருக்களம்
**554
#37
அம்பாலிகை பாண்டுவின்தாய் இயக்கியும் ஆம்
ஐம்பால் பெண்கூந்தல் ஆண்பால் முதலியன
கம்பீரம் உள்ளக்களிப்புடன் ஆழப்பெயர் ஆம்
சம்பீரம் என்பது கடாரை இருமிச்சை
**555
#38
சம்பாளம் சேறு நீர்ப்பாசியும் சாற்றும்
சம்பூகம் நத்தை இபமத்தகத்தின்கீழ்
சம்போகம் பூழ்க்கை புணர்ச்சி அநுபவம் ஆம்
கம்போசம் சங்கு ஓர் தேயம் கயப்பேதம்
**556
#39
அம்ம உரைஅசைச்சொல் கேள் எனலும் ஆம்
சிம்மம் தகரமரம் கோணல் மெல்லெனல்
கம்மியர் ஓர் தொழில்செய்வோர் கண்ணாளர் பேர்
அம்மிலம் புளிப்புப் புளி புளிவஞ்சியே
**557
#40
சம்மூர்ச்சநம்தான் மயக்கம் அளாவல்
உம்மை கழிபிறப்பு உம்மென்இடைச்சொல்
செம்மை பெருமை செவ்வை சிவப்பு ஆம்
மைம்மை மலடி மலட்டெருமைப் பெயர்
**558
#41
பூமகள் பூமின் செய்யாள் பூமி பூதலம் இடப்பேர்
வாமநம் குறள் ஓர் திக்கின்மதக்கயம் ஓர் புராணம்
ஆமநாயம் குலம் வேதாகமம் சம்ப்ரதாயம்
ஏமபுட்பம் அசோகு சம்பகம் செம்பரத்தம்
**559
#42
சாமம் ஓர் உபாயம் யாமம் இன்சொல் சாமளம் ஓர் வேதம்
சேமமம் மங்களம் படைத்த பொருள் காத்தல் சிவகதிப் பேர்
சோமம் நீர் கருப்பூரம் ஓர் கொடி அதன் சாறும் சொல்ப
தோமமே திரள் படைப் பேர் தோமரம் எறிவேல் கைவேல்
**560
#43
காமரம் அடுப்புக் கீதம் அத்தநாள் காத்தண்டு என்ப
காமலம் செவிமலர்ப்பூண் நீரிலாநிலம் காமாலை
கோமளம் மிருது நீர் ஆம் சாமளம் கறுப்புப் பச்சை
ஊமன் ஊமையன் கூகைப் பேர் ஓமி ஓமத்தீ நெய்யே
**561
#44
காமன் மன்மதன் இச்சிப்போன் காமுகன் சதுரன் தூர்த்தன்
பாமன் சூரியன் குரோதன் பாமரன் கயவன் மூடன்
வீமன் ஓர் பாண்டவன் மான்இடம்ஏந்தி விதற்பர்கோமான்
கோமுகம் மேளப்பாண்டம் இலேபநம் குடிலாகாரம்
**562
#45
காமுகை காமமுள்ளாள் கயப்பிடி குருக்கத்திப்பேர்
மாமுநி கும்பயோநி சிநவரன் கொத்தமல்லி
சீமையே பிடரி சாதி கேத்திரம் தேசம் எல்லை
தேம் இடம் திசை தித்திப்புத் தேயம் தேன் மணம் கள் என்ப
**563
#46
சாமாதா சூர்யாவர்த்தம் வல்லவன் மகள்தன்கேள்வன்
கோமான் இந்திரன் ஆதித்தன் பசுவுள்ளோன் குரவன் வேந்தன்
சீமூதம் சைலம் மேகம் பிடிப்பீர்க்குத் தேவதாளி
ஆமோதம் உவகை தூரம் கமழ் பரிமளமும் ஆமே
**564
#47
தூமகேதுக் கனலோன் வாலுள்ள சுக்கை எரிகொள்ளி
வாமநன் மாயவன் குறளன் மாமை அழகு நிறம் வடிவம்
காமம் அநுச்சை தன்னிட்டம் காதல் உடம்பாடு இந்திரியம்
நேமம் சுற்றுமதில் பள்ளம் நேரம் சூது முறிவு அவதி
**565
#48
வாமம் இடப்பால் இதமலது வனப்பு முலை ஓர் உட்சமயம்
சோமவற்கம் என்ப பெருங்குமிழ் வெண்கருங்காலியும் சொல்ப
யாமை யுவதி நன்னாறி இரவு ஞாழல் கருஞ்சிவதை
ஆம் இடைச்சொல் ஓர் விகுதி அசைச்சொல் ஞாநம் நிச்சயமே
**566
#49
ஐமவதி வெள்வசம்பு உமை விண்நதி குங்குட்டம் அரிதகி ஆம்
கௌமம் மென்தூசு அட்டாலை வெண்பட்டுக் காசானநெல்
பெளமன் நரகாசுரன் செவ்வாய் சௌமியம் சோபதம் சாந்தம்
சௌமியன் சோமனைத் தெய்வமாகக்கொண்டோன் புதன் சாந்தன்
**567
#50
சாமாநியமே பொதுவானது ஒப்பானது சாதியும் ஆகும்
சீமான் அழகும்திருவுமுளோன் திருமால் அருகன் மஞ்சாடி
தீமான் அறிஞன் தேவகுரு ஏமாங்கன் வேதியன் கருடன்
கோமேதகம் பத்திரகம் தக்கோலம் பீதமணி என்ப
**568
#51
தாமம் ஒர் முடியுறுப்புக் காந்தி பிரபாவம்
சௌரியம் பட்டணம் கொன்றை கயிறு தும்பு பூப் பூந்
தாமம் மணிவடம் கிரணம் சுகம் வீடு சநநம்
சரீரம் இடம் எனப் பதினேழ் அபிதாநம் சாற்றும்
சோமன் மகேசன் தநதன் ஓர் வசு ஓர் வள்ளல்
சுதாகரன் மாருதன் பிதிர்தேவதை உடை ஆடைப் பேர்
வாமன் அருகன் புத்தன் உருத்திரன் மன்மதன் ஆம்
மாமருந்து வெள்ளுள்ளி அதிவிடையம் சுக்கே
**569
#52
தாமரசம் தாமரை தாம்பிரம் பொன்னும் ஆகும்
சாமுத்ரம் சரீரஇலக்கணம் இலவணாதி
நேமி கிணற்றுறை உருளின்விளிம்பு சுவரடி முந்
நீர் வட்டமானது சக்கிராயுதமும் நிகழ்த்தும்
வாமி கழுதைப்பெட்டை பெண்குதிரை வாம
மதத்தினன் பெண்நரியோடு ஒட்டகப்பிடியும் வகுப்ப
ஆமிசம் ஊன் கைக்கூலி சம்போகம் சுந்த
ராகார ரூபாதி அநுபவ பதார்த்தம்
**570
#53
ஆமம் பக்குவமலது இளங்காய் நோய்
ஏமம் பொன் மயல் இன்பம் காவல் ஆம்
ஓமம் திருநீறு ஓர் மருந்து ஆகுதி
பாமம் கிரணம் சிரங்குநோய் சினம்
**571
#54
யாமம் எனல் ஒடுக்குகை தடை சாமம்
வீமம் எனல் பயங்கரம் புளிவஞ்சி
சாமன் மதனற்குஇளையோன் சௌமியன்
யாமி குலப்பெண் உடன்பிறந்தாள் பெயர்
**572
#55
வாமதேவன் ஓர் இருடி மகேசன்
கோமி நரி உபாசகன் கோவுடையோன்
நாம் எனல் அச்சமும் தன்மைப்பன்மையும்
ஓம் ஓர் விகுதி பிரணவம் சம்மதம்
**573
#56
தாமதம் பையஎனல் சற்பம் ஓர் குணம்
ஆமலகம்தான் பளிங்கொடு நெல்லி ஆம்
காமி புறாச் சக்ரவாகம் காமுகன்
காமிநி காமமுளாள் புல்லுருவியே
**574
#57
கோமாட்டி ஆசாள் அரைசி கோஉள்ளவள்
சீமாட்டி செல்வமுடையாள் அழகுளாள்
மாமாத்ரன் செல்வன் மந்த்ரி யானைப்பாகன்
தாமார்க்கவம் நாயுருவி பிடிப்பீர்க்கே
**575
#58
சாம்பரி இரதி மாயை தாம்பிர சிவப்புச் செம்பு ஆம்
ஆம்பல்வேய் கள் ஊதும்கொம்பு அடைவு வெள்அல்லி யானை
தூம்பு வேய் அளக்கும்கால் உள்தொளை அருஞ்சுரம் வாயில் பேர்
சாம்பேயம் சிறுநாகப்பூப் பூந்தாது சம்பகம் பொன்
**576
#59
ஓம்பல் இவறல் காப்பாற்றல் ஒழிதல் அழுங்குவித்தலும் ஆம்
காம்பு வேய் பூந்தாள் பட்டுத் தாம்பு கயிறு தாமணிப் பேர்
மேம்பாடு அதிகப்புகழ் மேன்மை பாம்பு ஆயிலியம் ஓர் செந்து
காம்போசம் வெண்கருங்காலி புன்னை கம்போசக்குதிரை
**577
#60
சாம்பராயம் விபத்து நிகழ்வு போர்
கூம்பல் குவிதல் ஒடுங்கல் குமிழ்மரம்
சாம்பல் பழம்பூச் சாம்பர் ஒடுங்குதல்
தேம்பல் மெலிதல் பழம்பூ வாடுதல்
@12 யகர வெதுகை
**578
#1
பயசு என்ப நீர் பாலின் பேர் பயமே நீர் பயன் பால் அச்சம்
பெயர் புகழ் பெருமை நாமம் பெயல் மழை மழைத்துளிப் பேர்
அயர்தலே சோர்தல் செய்தல் அயர்வு என்ப மயக்கம் சோர்வு ஆம்
பெயர்தல் வேறாதல் ஆடல் பேர்தல் மீளுதல் நடத்தல்
**579
#2
அயம் நலம்தரும் முற்கன்மம் ஆடு நீர் பரி இரும்பு ஆம்
இயம் ஒலி வாச்சியம் சொல் இயல்பு ஒழுக்கம் தன்மைப் பேர்
கயம் ஆழம் குளம் வீடு ஓர் நோய் கரி பிரளயம் கீழ் தேய்வு ஆம்
நயம் உபசாரம் இன்பம் நலம் நீதி சூதின்பேதம்
**580
#3
புயம் என்ப முன்கை தோள் ஆம் புயல் மழைக்காற்று மேகம்
வயம் வசம் வலி புள் என்ப மயன் தச்சன் அசுரசிற்பி
அயலே அந்நியம் சமீபம் அயில் வேலாயுதம் கூர்மைப் பேர்
இயல் என்ப சாயல் பண்பு ஓர் தமிழ் நடை ஓத்தும் ஏற்கும்
**581
#4
செயல் செய்கை ஒழுக்கம் கன்மம் செயிர் என்ப சினம் குற்றப்பேர்
பயல் சிற்றாள் பாதி பள்ளம் பயன் சொல்லின் உரை இலாபம்
மயல் செத்தை பேய் மயக்கம் வயல் நன்செய் மருதவேலி
முயல் ஒரு மிருகம் போர் ஆம் மொய்ம்பு தோள் வலி கொழுப்பே
**582
#5
உயவை காக்கணம் கான்யாறு ஆம் உயிர் என்ப காற்றுச் சீவன்
வியளீகம் துன்பம் வெள்கல் வெறுப்புக் காரியம்அன்மைப் பேர்
வயிரம் பூண்கட்டு வச்ரமணி வச்ராயுதம் மரக்காழ்
வயிரியர் மதங்கர் கூத்தர் மயிலை மீன் இருவாட்சிப் பேர்
**583
#6
குயில் சொல் உள்தொளை ஓர் புள் ஆம் குயிற்றல் செய்திடல் இழைத்தல்
குயிறலே செறிதல் சொல்லல் கூவுதல் தொளைத்தலும் பேர்
பயிலலே பழகல் கற்றல் பயில் சஞ்ஞை சொல்லும் ஆகும்
யயு நெடும்தடி துரங்கம் பரி மேதக்குதிரை என்ப
**584
#7
இயக்கமே இயங்கல் பீடு ஆம் இயக்கன் குய்யகன் குபேரன்
தியக்கமே கலக்கம் தேங்கல் இயற்றல் உண்டாக்கல் செய்தல்
நயத்தல் நள்ளுதல் விரும்பல் நன்குறல் உபசரித்தல்
பயத்தல் பெற்றிடல் உண்டாதல் பயப்பு என்ப நிறம் பசப்பே
**585
#8
இயங்குதல் அசைதல் போதல் ஒளிசெய்தல் உலாவல் என்றாம்
உயங்கல் வாடுதல் வருந்தல் இயம்பலே ஒலித்தல் சொல்லல்
வியஞ்சநம் கறி குய்யம் ஒற்றெழுத்து அடையாளம் மீசை
சயம்பு மால் சிவன் விரிஞ்சன் அருகன் தானேதானாதல்
**586
#9
நியதியே இயமம் ஊழ் ஆம் நேயமே நேசம் எண்ணெய்
கயவர் கீழ்மக்கள் கள்வர் காயல் உப்பளம் புகார் ஆம்
பயின் பிசின் உள்குருத்துப் பாய்மா ஆம் பரி புலிப் பேர்
வயின் இடம் வயிறு வீடு வாய்மை சொல் வலிமை மெய்ம்மை
**587
#10
அயநம் வீடு வழி தெற்கும்வடக்குமாம் சூரியகதி ஆம்
நியமம் விரதம் உடம்பாடு பொறை நிச்சயம் நித்தியகருமம்
குயமே கொடுவாள் இளமை முலை குயவு சிறுதேர் கறிகரித்தல்
வியவன் ஏவுவோன் வீரன் வெயில் சூரியன்தன்கதிர் ஒளியே
**588
#11
நியக்கம் கீழ்மை கடா எல்லாம் வியத்தம் புத்தி தெரிந்ததும் ஆம்
நியக்குரோதம் ஆலமரம் குறுக்காய் இருகை நீட்டளவை
வயத்தை நெல்லி காகோளி சிற்றேலம் யௌவநம் உள்ள
வயத்தையல் பொன்னாங்கண்ணி சீந்தி இலவமரம் ஏழ்பேர்
**589
#12
வியப்பு ஆச்சரியம் கொண்டாட்டம் வியர்த்தல் வேர்த்தல் சினக்குறிப்பு
உயிர்ப்புச் சுவாசம் காற்று என்ப பயிர்ப்பு அசுத்தம் அருவருப்பு
பயிற்றல் பழக்கல் கற்பித்தல் வியுட்டி நிறைவு துதி பலன் ஆம்
வியுட்டம் பிரயோசநம் திவசம் வெடியல் சுடப்பட்டதும் ஆமே
**590
#13
சயந்தன் சிவன் இந்திரசுதன் பேர் நயந்தோன் எனல் காதலன் நண்பன்
சயந்தி உமை இந்திரதாயை பதாகை தழுதாழையும் ஆகும்
இயந்திரம் தேர் எயிலுறுப்பு ஓர் பாண்டம் தேவாதிட்டாந
இயந்திரம் சூத்திரப்பொறி செக்கு ஆலை திரிகை கண்ணி எனும்
**591
#14
வயசு புள் பிராயம் யௌவநம் சிசுத்துவாதி
மயம் உருவம் கோவேறுகழுதை ஒட்டகப்பேர்
சயநம் வெல்லுதலொடு நித்திரை சுரதம் படுக்கை
சயம் மதில்கீழ்க்குறடு வெற்றி வெஞ்சமம் கை கூட்டம்
இயமம் கொல்லாமைமுதலா உடற்சாதநத்துக்
கேற்ற நித்தியகருமம் தடை ஒடுக்குதலும் ஆம்
சயை உமாதேவி அவள் சகி கடுக்காய் முன்னை
தழுதாழை மூன்றாம்வட்டத்திதியும் ஆமே
**592
#15
வயவன் கரிக்குரீஇ வலியான் திண்ணியன்
இயவர் தோல்கருவியாளர் இழிஞர்
கயவு பெருமை மேம்பாடு களவும் ஆம்
பயறு சித்திரைநாள் பருப்புளதாநியம்
**593
#16
வயமா அரிமா மதமாப் புலி பரி
இயமாநன் ஆன்மா யாகவேந்தன் பெயர்
வியவாயம் மைதுநம் மறைவு என்ப
கயவாய் கருங்குரீஇ பேழ்வாய் கழிமுகம்
**594
#17
நியமித்தல் நிரூபித்தல் விதித்தல்
அயிர் நுண்மணல் கண்டசற்கரை நுண்மை
பயிர் புள்குரலொடு நெல்பயிராதி ஆம்
கயில் பூணின் கடைப்புணர்ப்புப் பிடரே
**595
#18
வியங்கம் குறைந்த அவையவம் தவளை
இயந்தா யானைப்பாகன் சாரதி
நியந்தா சாரதி ஏவாநின்றவன்
பயம்பு கரிவீழ்படுகுழி பள்ளம்
**596
#19
இயவுள் புகழாளன் தெய்வம்
எயிறு பல் யானைக்கொம்பு ஆம்
தியு ஆகாயம் திவசம் அனல்
மயு ஓர் மிருகம் கிம்புருடன்
**597
#20
வியாகுலம் ஒலி கலக்கம் வியாதி நோய் நறுங்கோட்டப்பேர்
நியாமகன் ஓடம்உய்ப்போன் மீகாமன் நியமிப்போன் ஆம்
வியாயதம் கடுமை நீளம் தீவிரம் வியாபாரப்பேர்
வியாழமே சிங்கம் துட்டகயம் வியாக்கிரம் பாம்பு என்ப
**598
#21
வியாழனே கபடி துட்டன் வியாபாரக் தொழில் செட்டு என்ப
வியூகமே படைப்புத் தற்கம் திரள் படைவகுப்பு மேவும்
வியோகமே பிரிதல் சாதல் வியோமம் ஆகாயம் நீர் ஆம்
பயோதரம் மேகம் கொங்கை பெருங்கோரை இளநீர் பன்னும்
**599
#22
வியாதன் துட்டன் வியாசமுநி வேடன் வேட்டல் வேளாதோன்
வியாமம் குறுக்காய் இருகையும் நீட்டளவை ஒடுக்கம் தடை மேவும்
நியாயம் அடைவிப்பது தக்கது அறநூல்நெறியில் திறம்பாமை
அயோகம் பிரிவு கொற்சமட்டி கடிந முயற்சி வியோகமுமே
**600
#23
வயா விருப்பம் வருத்தம் சூல் வயாநோய்
கியாதி பிரசித்தி பிருகுவின்பத்திநி
வியாகாதம் விக்கநம் ஓர் யோகம் என்ப
சயாலு பெரும்பாம்பு நாய் மிகத்தூங்குவோன்
**601
#24
தியாகம் எனல் கொடுத்திடல் தள்ளுதல் பேர்
வியாசம் கபடம் வித்தாரம் நிபம் ஆம்
வியாடம் ஊன் தின்னும் மிருகம் பாம்பு எனும்
பயாநகம் இராகு புலி பயங்கரமே
**602
#25
மயூகம் கிரணம் சுவாலை ஒளி ஆம்
மயூரகம் நாயுருவி மயில்துத்தம்
மயூரம் மயிலும் மயில்சிகைப்பூடும்
வியூடம் அகலம் வகுப்புச் சேர்ந்ததே
**603
#26
மெய் என்ப உடல் உண்மைப் பேர் மெய்யர் அந்தணர் பொய்யில்லார்
மொய் செருக்களம் போர் வண்டு தொகுதி தாய் மொய்ம்மை யானை
செய்கை செய்தொழில் ஒழுக்கம் செய்யோன் செவ்வியன் சிவந்தோன்
கொய்தலே நெரிபிடித்தல் பறித்தல் கத்தரித்தல் கூறும்
**604
#27
நெய்தல் ஐந்திணையின்ஒன்று ஓர் நீர்ப்புதல் படாதி நெய்தல்
பெய்தலே செறித்தல் வார்த்தல் பொழிதலோடு இடுதல் பேசும்
வெய்துறல் சினக்குறிப்பு வெருவந்தக்குறிப்புத் துன்பம்
தெய்வம் ஊழ் கடவுள் என்ப தொய்யல் சேறு உழவோடு இன்பம்
**605
#28
பொய் மெய்யன்மை மரப்பொந்து வெய்யோன் கொடியோன் கொடும் கதிரோன்
குய்யம் உபத்தம் மறைவுளது கூர்மம் இராசியம் கபடம்
சய்யம் ஓர் வெற்பு ஆரோக்யம் சய்யை சயநம் சொல்தொடுத்தல்
தொய்யில் மகளிர் முலையினில் சாந்து எழுதும் கோலம் ஓர் கீரை
**606
#29
குய்யே நறும்புகை தாளித்திடுகறி
நெய் ஓர் கவ்வியம் நிணம் எண்ணெயாதி
பொய்தல் மகளிர் விளையாட்டு அவர் குழாம்
நெய்வான் சித்திரைநாள் நெய்பவனே
**607
#30
ஐயமே பிச்சை பிச்சைப்பாத்திரம் அநுமாநப்பேர்
வையம் தேர் சிவிகை பண்டி வாகநம் உரோணி பூமி
ஐயர் வேதியர் புத்தேளிர் அருந்தவர் குரவர் என்றாம்
கையரே திருடர் நீசர் கையாறு துன்பம் செய்தி
**608
#31
தையல் பெண் அழகு தைப்பு ஆம் பையுள் நோய் துன்பம் அற்பம்
கையறல் படையுறுப்புக்கெடல் செயலறலும் காட்டும்
ஐயன் மாசாத்தா மூத்தோன் அப்பன் ஆசாரியன் பேர்
ஐயையே புதல்வி காளி அம்பிகை தலைவி துற்கை
**609
#32
சாயகம் அம்பு வாள் ஆம் நாயகன் தலைவன் நாதன்
வாயசி கருந்தக்காளி பேயத்தி காக்கைக்கொவ்வை
ஆயதி பொருந்தல் நீட்சி பிரபாவம் வருங்காலப்பேர்
தேயம் நாடு இடம் திருட்டு ஆம் தீயர் தீக்குணத்தர் வேடர்
**610
#33
நேயம் நீரின்விசேடகுணம் எண்ணெய் நேசம் என்ப
மாயம் பொய் கறுப்பு வஞ்சம் மாயன் மால் கரியோன் வஞ்சன்
சாயல் ஒப்பு அழகு நுண்மை மேம்பாடு சயநம் சாய்தல்
சேயவன் முருகன் செவ்வாய் சேய்மை நீளம் தூரப்பேர்
**611
#34
சேய் மகவு இளமை தூரம் சிவப்புச் செவ்வேள் செவ்வாய் ஆம்
வாய் விளிம்பு ஓர் அங்கம் வாக்கு இடம் குளம் வாய்மையும் பேர்
ஆய்தல் தேடுதல் இணுங்கல் ஆராய்தல் நுணுக்கம் என்ப
ஓய்தல் கையறல் விடாய்த்தல் ஒழிதல் உள்ளதன் நுணுக்கம்
**612
#35
காய்தலே சுடல் உணங்கல் கதிர்வீசல் கடிதல் சீறல்
தோய்தலே துவைதல் புல்லல் துழாவல் நீராடல் தீண்டல்
வேய்தல் சூடுதல் சிங்காரம் மூடுதல் வேயுளும் பேர்
ஆய்வு நுட்பம் வருத்தம் அகலம் ஆராய்வும் ஆமே
**613
#36
ஆயத்தம் செயிர்ப்புத் தள்ளல் அரிப்புச் சந்நத்தம் கூர்ப்பு ஆம்
காயத்தன் வரிப்போன் ஆன்மா காயத்தை கடுக்காய் நெல்லி
ஆயத்தி வலி வசித்வம் அன்பு வாசரம் எல்லைப் பேர்
காயத்ரி பிராமி ஓர் மந்திரம் கருங்காலி என்ப
**614
#37
ஆயம் மனைச்சுற்றளவை சுங்கம் கவற்றில் தாயம் மகளிர்குழாம்
வாயசம் கார்அகில் காக்கை மாய்தல் மறைதல் மடிதல் பேர்
கேயம் அகழி பாடுவ பண் வேய் உள்தொளை ஒற்றொடு மூங்கில்
பேயம் பருகுவன நீர் ஆம் தேய்தல் குறைதல் நலிதல் பேர்
**615
#38
பாயசம் பால்சொற்றிச் சாம்ப்ராணி பால்சோறு
பாய்தல் தாண்டுதல் பரம்பல் நீர்பாய்தல் குதித்தல்
ஆயநம் நெல்லின் பேதம் கிரணம் வருடமும் ஆம்
ஆய் எனல் ஓர் விளியுருபு ஓர் விகுதி அன்னை முப்பேர்
காயம் ஆகாயம் மாநுடதீர்த்தம் உடம்பு
கார்ப்போடு ஐங்காயம் இலக்கு இயல்பு குழாம் எண்பேர்
சாயம் பிற்பகல் அந்தி நீலாதி வருணம்
சாய்தல் கோணுதல் நுணுக்கம் கண்ணோட்டம் சரிதல்
**616
#39
தாயம் எடுத்துயர்த்தும் பேச்சு உரிமை கொடுப்பது சீ
தநப்பொருள் சூதாட்டுப் பங்கிடும் பிதிர்த்ரவியம் ஆம்
வாயில் ஐம்பொறி தூது காரணம் வாசலும் ஆம்
வாயிலோர் தமிழ்க்கூத்தர் வாசற்காப்பவர் பேர்
சாயை நிழல் அழகு பிறிதுருவம் கைக்கூலி
சநியின்தாய் வளர்த்தல் இருட்டு ஒழுங்கு நாயகி ஆம்
மாயை இலக்குமி காளி இரதி ஓர் சத்தி
வஞ்சகம் சித்து இந்திரசாலம் புத்தி தயையே
**617
#40
காயல் கழியோடு உப்பளம் கழிமுகம்
ஆயில் ஆயிலியநாள் ஓர் மரமும் ஆம்
கோயில் இராசாலையம் தேவாலயம்
வாயுபலம் ஆலங்கட்டி வானவில்
**618
#41
சாயாசீவன் கூத்தாடி பெண் மூலத்தால் பிழைப்போன்
ஆயாமம் அகலம் நீளம் ஆயோதநம் போர் வேட்டம்
பீயூடம் புனிற்றிளங்கற்றாவின் பால் அமிர்தமும் பேர்
ஆயோகம் கந்தபுட்பாதியின் அடியுறை கரைப் பேர்
**619
#42
தாயாதன் என்ப பிள்ளை தன்கோத்திரச்சுற்றம்
சாயாபதி பெண்புருடனும் மார்த்தாண்டனும் ஆம்
மாயாபுரி ஒர் முத்திமாநகரம் பித்தளைப் பேர்
காயாமரமே காசாமரம் காயாதமரம்
@13 ரகர வெதுகை
**620
#1
சரகம் வாகடம் கள்கிண்ணி மதுபாநம் தேனீ கள் ஆம்
விரகு உணர்வு உபாயம் வஞ்சம் விரணம் புண் வடு விழல்புல்
இரசநி மஞ்சள் செம்பஞ்சு அவிரியோடு இரவும் ஆகும்
பிரசந்நம் தெளிவு கள்ளுப் பிரசை சந்ததி சநப்பேர்
**621
#2
பிரசம் தேன்கூடு தேனீ தேன் பிரமரம் கள்ளும் பேர்
பிரசரம் வழி போர் வேகம் படர்தல் சாருதலும் பேசும்
பிரசவ்வியம் அநுகூலம் பராதீநம் பிரதிகூலம்
இரசிதம் பொன்னின் பூச்சோடு ஒலியுளது இடிமுழக்கம்
**622
#3
சரசு என்ப புனல் வாவிப் பேர் தரசு என்ப வேகம் வீரம்
பரசு என்ப மழுக் குடாரி பரமேட்டி சிநன் முத்தேவர்
பிரணதி பணிவு அடக்கம் பிரணிதி இரத்தல் ஒற்றாள்
இரணம் பொன் ஒலி போர் இந்திரியத்தாது கவடி என்ப
**623
#4
பிரணயம் பழக்கம் நேயம் இரப்பு நம்பிக்கையும் பேர்
இரணியம் தநம் பொன் வெள்ளி பலகறை இரேதசு என்றாம்
இரதகை அரத்தை நாக்கு ஆம் இரமணன் இட்டன் காந்தன்
பிரதரம் இரத்தக்ராணிநோய் அம்பு பிளப்பு முப்பேர்
**624
#5
பிரதிமை பதிமைபோலும் பிறிதுருவம் பாவைப் பேர்
பிரதியத்தநமே இச்சை துலக்குதல் சிறைபிடித்தல்
பிரபஞ்சம் திரள் வித்தாரம் மாறாட்டம் மாயையும் பேர்
மரபு என்ப முறைமை கோத்ரவழி பண்பு பழமை என்ப
**625
#6
சுரபி சம்பகம் சாதிக்காய் சுகந்தம் சல்லகி ஓர் தெய்வச்
சுரபி பொன் சைத்திரம் சுந்தரம் பசு இளவேனில் தேன்
பரமம் முந்தினது அநுச்சை பரமன் முந்தினவன் மேலோன்
உரம் எருஇடுதல் மார்பு வலி மதில் ஊக்கம் ஐம்பேர்
**626
#7
தரம் வெற்புப் பருத்திப்பஞ்சு குழி அச்சம் தகுதி சங்கு ஆம்
புரம் உடல் நகரம் முன் குற்குலு வீடு பூர்வகாலம்
அரரமே கதவு இரும்பு ஆம் அரவம் பாம்பு ஒலி சிலம்பு ஆம்
பரர் பிறர் பகைவர் என்ப பரல் விதை பருக்கைக்கல்லே
**627
#8
பிரவகம் காற்று ஓர் வாயு வெளிப்புறப்படலும் பேசும்
குரவம் நன்மணம் குரா ஆம் சிரவம் கோரசப்புள் காது
குரவர் தாய் தந்தை ஆசாரியர் மூத்தோர் குருக்கள் மன்னர்
தரளன் சூரியன் தூர்த்தன் பேர் தரளையே கஞ்சி தேனீ
**628
#9
பிரளயங் கற்பாந்தம் சாவு அறிவு அழிந்துறல் அற்றப்பேர்
பிரகாசம் வெயில் தெரிந்தது ஒளி பிரசித்தம் ஒப்பு ஆம்
பிரகாண்டம் சிலாக்கியம் கொப்பிலாமரம் மரப்பணைப் பேர்
பிரகோட்டம் விரித்தகை முன்கை வெளித்திண்ணை பின்கை
**629
#10
இரசாலம் மாமரம் குந்துருப்பிசின் கரும்பு போளம்
இரசாலை அறுகு சம்பாரத்தயிர் நா வெள்ளீறில்
பிரசூதம் பிரசவம் பூ பிரசூதி பெறுகை பிள்ளை
பிரணாதம் உவகைப் பேச்சின் ஒலி காதின்நோயும் பேரே
**630
#11
பிரதாநம் முதன்மை ஆன்மா கொடுப்பித்தல் புத்தி மாயை
பிரதீதன் அறிஞன் கியாதன் நிலைமையன் பெருமிதன் பேர்
பிரதீதி களிப்புக் கியாதி பிரயாகம் குதிரை வேள்வி
பிரயாணம் பயணம் யானைக்கண்ணின்முன்புறம் சாவும் பேர்
**631
#12
பிரவாளம் பவளம் வீணைத்தண்டு இளந்தளிர் முளைப் பேர்
கரவீரம் அலரி கைவாள் கரளம் காஞ்சிரம் நஞ்சு என்ப
உரவோர் நல்லறிஞர் மூத்தோர் உரன் வலி வென்றி ஞாநம்
கிரி சிலாசது கண்நோய் பூச்சியன் பந்து கேழல் வெற்பு ஆம்
**632
#13
கரடி ஓர் விலங்கு யானை கரில் குற்றம் கொடுமை கார்ப்பு ஆம்
பரணம் ஏந்துதல் கூலிப் பேர் பரியங்கம் படுக்கை கட்டில்
அரணி தீக்கடைகோல் முன்னை அரிணம் மான் மானிறப்பேர்
சரணியே வழி ஒழுங்கு சரியை ஓர் மார்க்கம் பிச்சை
**633
#14
திரி நூலின்திரி பெண் மூன்று ஆம் திரிதிவம் விண் சுவர்க்கம்
பரியே பூசனை பருத்தி உயர்ச்சி அச்சுவதி பாய்மா
வரி சுணங்க் எழுத்து இறுப்பு வழி பந்தி நெல் பண் நீளம்
பரிகதம் அசைதல் சூழ்தல் அடைதலோடு அறிதல் பன்னும்
**634
#15
தரிசகன் வாயில்காப்போன் சமர்த்தன் காண்பிப்போன் என்ப
திரிசங்கு கருடன் ஓர் பார்த்திவன் பூஞை விட்டிலும் பேர்
தரிசநம் கனாக் கண்ணாடி சாத்திரம் காட்சி புத்தி
பரிசநம் கொடை காற்று ஏவலாள் தொக்கிந்தியம் தொடல் பேர்
**635
#16
தரிசம் முந்நீர் சூர்யேந்து சங்கமம் தரிசநப்பேர்
துரிதம் பாவம் கலக்கம் தொரிதம் சீக்கிரம் பதற்றம்
புரிதலே விரும்பல் செய்தல் புரிவு என்ப விருப்பம் அன்பு ஆம்
விரிதலே விசாலமாதல் விளங்கலோடு அலர்தல் என்ப
**636
#17
பரிபுரம் கால்சிலம்பும் பாதகிங்கிணியும் ஆகும்
சுரிமுகம் நத்தை சங்கு ஆம் சுரியலே சுழிப்புக் கேசம்
அரியமா சூர்யபத்தன் பிதிர்தேவதை ஆதித்தன்
பிரியமே உவகை இட்டம் பிரியன் நாயகன் இட்டன் பேர்
**637
#18
கரியவன் சனி மால் இந்த்ரன் சான்றினன் கருநிறத்தோன்
பரிவர்த்தம் எனல் கற்பாந்தம் பலாயநம் மாற்றுகைப் பேர்
பரிவர்த்தன் கூர்மராசன் ஓடிப்போய்ப் பதுங்கினோன் ஆம்
பரிவு இன்பம் வருத்தம் அன்பு ஆம் பரிவேடம் சூழ்வது ஊர்கோள்
**638
#19
திரிகூடம் சுவேலவெற்பு இந்துப்பு முச்சிகரவெற்பு ஆம்
பரிதாநம் உடைத்தூசு ஒன்றற்கொன்றை மாற்றுதல் கௌபீநம்
நிரியாணம் மரணம் யானைக்கடைக்கண் போகுதலே மோக்கம்
மரியாதை நியாயம் எல்லை கடற்கரை நிலைமை மன்னும்
**639
#20
அரு உருவன்மை புண் ஆம் அருள் க்ருபை பொருளின்சத்தி
உரு நிறம் உருவம் அட்டை செபவுரு அகலமும் பேர்
திரு எழில் செல்வம் செல்வி சிறந்தது தெய்வவுத்தி
தெரு என்ப வழி வீதிப் பேர் தெருள் தெளிவு அறிவும் ஆமே
**640
#21
அருகன் யோக்கியன் சிநேந்த்ரன் அருகு ஓரம் சமீபம் என்ப
பருகி தீ மயில் குசப்புல் பருவரல் அருவல் துன்பம்
முருகு கள் இளமை வாசம் உற்சவம் முருகனும் பேர்
கிருசமே மெலிவோடு அற்பம் கிருமிதான் புழுச் செம்பஞ்சு ஆம்
**641
#22
உருசியே கிரணம் காந்தி சுவை இச்சை மிகப்பற்றும் பேர்
பருடமே சிக்குப்பற்றியது பலநிறம் கொடும்சொல்
இருடி மாமுநிவன் வேதம் இருதயம் மநம் நெஞ்சு அவ்வூன்
சுருதம் கேட்பது நூல் என்ப துருவித்தன் வறிஞன் துட்டன்
**642
#23
திருதராட்டிரம் மூக்குக்கால் கரிய ஓதிமம் பாம்பு அன்ப
பொருநர் போர்த்தலைவர் வீரர் பூபாலர் சமர்த்தர் கூத்தர்
சருவகன் பிரான் மகேசன் சருவரி இரவு மஞ்சள்
உருவரை பயிரெல்லாம் உண்டாம் நிலம் பூமியும் பேர்
**643
#24
கருவி ஐம்பொறி தொடர்ச்சி கவசம் வாத்தியாதி பஞ்சக்
கருவி ஆயுதம் மேகம் கல்லணை உபகரணம் ஈட்டம்
எருவையே கொறுக்கை கோரை கழுகு செம்பு இரத்தம் என்ப
உருளை தேருருள் உண்டைப் பேர் உருள் பண்டி உரோணி தேர்க்கால்
**644
#25
மிருகயு நரி வேடன்பேர் விரை விதை வாசம் சாந்து ஆம்
குருசில் மன்னவன் சிறந்தோன் குரை ஒலி அசைச்சொல் என்ப
சருமம் தோல்பலகை தோல் ஆம் சரை நரை ஓர் அரக்கி
கருள் கறுப்பு இருள் காங்காடை கரை எல்லை அருகு தீரம்
**645
#26
பொருள் பணம் முதன்மை பிள்ளை உண்மை சொற்பொருள் பல்பண்டம்
இரை சில விலங்கூண் புள்ளூண் புவி நீர் கள் ஒலி வாக்கு என்ப
சிரை ஓடம் உடம்பின்நாடி திரையல் வெற்றிலை திரங்கல்
நிரை பசுப் படைவகுப்பு ஓர் அசை பசுத்திரள் இணைப்பு ஆம்
**646
#27
புரை என்ப உவமை குற்றம் புழை ஓர் சிற்றில் உயர்ச்சி
வரை அளவு இரேகை மூங்கில் நீர்க்கரை மலை என்று ஐம்பேர்
கரைதல் வாஎனல் ஒலித்தல் கசிதல் சொல்லுதல் இரங்கல்
வரைதலே கொள்ளல் நீக்கல் மணஞ்செயல் எழுதுதல் பேர்
**647
#28
முரண் வலி பகை போர் முப்பேர் முருக்கல் கொல்லுதல் அழித்தல்
உரி அரைப்படி நார் தோல் ஆம் உருத்தல் சீறுதல் முளைத்தல்
பரிகம்பம் பயம் நடுக்கம் பரித்தலே சுமத்தல் ஓம்பல்
கரவு என்ப களவு ஒளிப்பு கரிப்பு என்ப கார்ப்பு அச்சப்பேர்
**648
#29
திரிசிகம் முடி த்ரிசூலம் திருக்குக் கண் பார்ப்போன் குற்றம்
பிருதியே விலை கூலிப் பேர் பிருட்டம் பிந்தினது வென் ஆம்
இருபிறப்பு அண்டசம் பல் இருக்கை ஊர் இருப்பிடப்பேர்
உருமம் மத்தியான்னம் வெம்மை உருக்குமம் பொன் உருக்கே
**649
#30
அரத்தநி சிறுவிரல் மட்டாம் முழம் முழங்கையும் பேர்
இரத்தம் தாம்பிரம் சிந்தூரம் செந்நீர் குங்குமம் ஆம் என்ப
பிரத்தம் வெற்பின் மேல்வட்டச் சிலாதலம் அளக்கும் நாழி
பிரத்தரம் அரத்தநம் கல் குசப்புல்லாதியின் படுக்கை
**650
#31
சிரத்தலே ஒலித்தல் தேய்த்தல் சிரத்தை நம்பிக்கை இச்சை
பிரப்பு ஒவ்வோர் பாண்டத்துள் பல்லுணாப் பெய்விப்பன பேருண்டி
சரித்தல் சஞ்சரித்தல் சாய்த்தல் தரித்தலே சுமத்தல் தங்கல்
விரித்தல் சொல்லுதல் அலர்த்தல் விளக்குதல் விரிவாக்கல் பேர்
**651
#32
துருக்கம் வெற்புஅரண் வநம் கத்தூரி குங்குமம் கலக்கம்
பெருக்கமே நிறைவு செல்வம் விசாலம் எண்பெருக்கு வ்ருத்தி
வருக்கமே இனம் வகுப்போடு ஒத்த ஓர்வகைத்திரள் பேர்
பெருக்கல் எண்ணுறழ்ச்சி சீத்தல் நிறைத்திடல் பெருகச்செய்தல்
**652
#33
மருச்சகன் இந்திரன் தீ மருச்சுதன் அநுமன் வீமன்
அருச்சுகம் மருது வெண்மை கண்நோய் பொன் மயில் புல் ஆகும்
அருச்சுநன் கார்த்தவீரியன் பார்த்தன் ஒருதாய்க்கோர்சேய்
அருச்சுநி பசுத் தொழுத்தை ஓர் நதி உஷையும் ஆமே
**653
#34
திருட்டணை ஆசை தாகம் திருட்டாந்தம் உதாரணம் நூல்
விருட்டிணி சந்திரன் யாதவன் மேடம் பாஷண்டன் பேர்
விருத்தன் மூப்பினன் கற்றோன் ஆம் மிருத்தியு மரணம் காலன்
விருத்தாந்தம் செய்தி எல்லாம் விதம் பிரகரணம் வார்த்தை
**654
#35
கிருத்ரிமம் ஒருவரால்செய்கின்றது வெடியுப்பாதி
துருத்தி நீர்ச்சிவிறி யாற்றினிடைக்குறை தோல் துருத்தி
அருப்பகன் வறிஞன் பாலன் அறிவிலான் மூர்க்கன் என்றாம்
தருப்பணம் பிதிர்மகம் கண்ணடி சமித்து உகப்புச்செய்தல்
**655
#36
இரவு இராத்திரி இரப்பு ஆம் இரந்திரம் தொளை சுருங்கை
பிரியை பெண் பிரியமுள்ளாள் பிரம்பு ஓர் பைங்கொடி தேர்முட்டி
தெரிதல் ஆராய்தல் காணல் செருந்தி ஓர் மரம் வாள்கோரை
மருமமே கபடம் மார்பு ஆம் வரம்பு ஒழுங்கு அணை மட்டு என்ப
**656
#37
குரங்கம் மான் மிருகசாதி குரங்குதல் குனிதல் கோணல்
அரங்கு அவைக்களம் சூதாடற்கமைத்திடும் அறை உள்வீடு ஆம்
இரஞ்சநம் பிரியம் செஞ்சாந்து இரண்டையே எலியால் கைம்மை
குரண்டகம் பொற்குறிஞ்சி பொன்வாடாமலரும் கூறும்
**657
#38
வரண்டகம் சுவர் உருண்டை முகப்பரு மதமாமெத்தை
கரண்டை தாபதம் கற்பாழி கரம்பை வண்டலின்மண் ஞாழல்
குரம்பு செய்கரை வரம்பு ஆம் குரம்பையே உடல் சிற்றில் ஆம்
நரம்பு என்ப ஓர் மெய்த்தாது நாண் யாழ்த்தந்திரிப் பேர்
**658
#39
பிரகரணம் ஆயுதம் சமயோசிதம் போர் அடித்தல் பிரகாரம்
பிரசலாகம் மயில்தோகை வில்லாச்சிரமம் பாம்பும் பேர்
சரசி சரசமுளோன் பொய்கை சரி மார்க்கம் கைவளை ஒப்பு ஆம்
இரசை பங்கம்பாளை புவி யானைவணங்கி தினை நாவே
**659
#40
அரணம் அரித்தல் கவசம் மதில் காவல் புயம் சீதநப்பொருள் வேல்
தரணன் இரவி வெற்பரையன் சரபம் வரையாடு எண்கால்புள்
பிரணிதாநம் சமாதாநம் உத்தியோகம் பிரயோகம்
வரதன் என்ப பிரசந்நன் சாந்தசித்தன் வரமருள்வோன்
**660
#41
பிரதி உருளின் விளிம்பில் சுற்று இரும்புப்பட்டம் பிறிதும் பேர்
பிரதிகிருதி பிறிதுருவம் பிறிதுசெய்கை பூசநை ஆம்
பிரதிசிரையம் வீடு சவை கருவிச்சாலை இருப்பிடம் ஆம்
பிரதிபத்தி கூர்த்தமதி ஒழுக்கம் பேறு கநமுடைமை
**661
#42
பிரதிமாநம் அநுரூபம் யானைக்கொம்பின்நடுவும் பேர்
பிரபு இறைவன் அதிகாரி பிரதேசநம் காணிக்கை கொடை
குரமே பரிமாவாதியின் கால்குளம்பும் சிறுநாகுணமும் பேர்
திரவம் பரிகாசம் பிசின் யாத்திரை கெட்டோடல் இலைச்சாறு ஆம்
**662
#43
பிரகீர்ணகம் சொல்லின்விரிவு சாமரம் பாய்மாவும் பேர்
பிரசாபதி பாவகன் துவட்டா வேந்தன் பிரமன் இநன் மருகன்
பிரசாவதி மைத்துநி கொழுந்தி பிரதாபன் ப்ரசித்தன் இநன்
பிரசூ மாதா பெண்குதிரை பிரசூநம் ப்ரசவம் காய் பூ
**663
#44
துரகம் மநம் அச்சுவம் என்ப துருகணம் முற்கரம் மழுப் பேர்
விரகம் காமநோய் பிரிவு ஆம் மிருகதரன் சந்திரன் பரமன்
விரசம் வழி ஆன்தொழுக் கூட்டம் மிருது மந்தம் மெல்லியது
சுரசை அரத்தை துளசிப் பேர் துருவல் கடைதல் தேடலுமே
**664
#45
கரடு பாடும் பிணர்க் கணுவும் கருமான் கொல்லன் புல்வாய் ஆம்
வரடை அன்னப்பெடை குளவி வருடை வரையாடு எண்கால்புள்
அரலை கழலை மரல் கொட்டை அருளல் கொடுத்தல் அருள்செய்தல்
பரவல் துதித்தல் பரப்புதல் ஆம் பருணம் முருக்குப் பலாசம் இலை
**665
#46
தரி நற்றுகிலாதிகளின் பேடகம் முன்றானை குகை ஓடம்
திரிகம் மும்மை முதுகெலும்பின்கீழ் முக்கூடல் முச்சந்தி
சுரிகை கவசம் உடைவாள் ஆம் சொரிதல் உதிர்தல் பொழிதல் பேர்
அரிசந்தநம் ஓர் தேவதரு மிக நன்மணச் சந்தநம் ஆமே
**666
#47
பரிசம் நோய் ஒற்றாள் வேலை தொடுதல் வருக்கஎழுத்து ஈகை
இரிணம் பாழோடு உவர்த்தறை ஆம் இரிதல் முறிதல் கெடுதல் பேர்
அரிதம் பசும்புல்தறை பசுப்பானது பைம்புரவி திசை பசுமை
திரிதல் சுழலல் சஞ்சரித்தல் செல்லல் கெடுதல் வேறாதல்
**667
#48
பரிதல் ஒடிதல் தொலைத்தல் துயர்ப்படல் வெட்டுதல் அன்புறல் இரங்கல்
பரிவாரம் வாளுறை சத்ரசாமராதி பரிசநப்பேர்
பருகம் மயிலின்தோகை பரிவாரம் பச்சைப்புல் இலை ஆம்
மிருகம் விலங்கு மான் மும்மீன் வேட்டம் இரத்தல் கயபேதம்
**668
#49
பிருகு சுங்கன் தாழ்வரை ஓர் இருடி பிராகி யமதங்கி
இருசு பண்டியுள் இரும்பு செவ்வை பிறப்பில்லாமையும் ஆம்
தருணம் இளமை ஆமணக்குச் சமையம் புதுமை குச்சமலர்
கிருதம் முதலாம்யுகம் நெய் நீர் செயப்பட்டது சிகிற்சை பலன்
**669
#50
மருதம் நாடுசார்ந்தநிலம் அந்நிலப்பண் வயல் மருது
சுருதி வேதம் செவி கேட்டல் வார்த்தை சங்கீதச்சுதி ஆம்
திருதி சுகம் தாரணை வேள்வி மகிழ்வு ஓர் யோகம் தைரியப்பேர்
நிருதி முகடி ஓர் வள்ளல் ஓர் திக்கிறை நிருபத்திரவம்
**670
#51
கருமகரன் அந்தகன் கூலிக்காரன் வேலையாள் முப்பேர்
தருமராசன் முநீந்திரன் அந்தகன் முதல்பாண்டவன் புத்தன்
தருமன் வேள்விமுடித்தான் ஓர் வேந்தன் யமன் ஓர் சாக்கியன் ஆம்
துருவன் பரமன் உத்தாநபாதசுதன் ஓர் வசுப் பிரமன்
**671
#52
தருமம் வேள்வி வேதவிதி அறம் சற்சங்கம் நீதி குணதருமம்
உவமை இயல்பு ஒழுக்கம் தநுக் கொல்லாமை கொடையாதி
பருவம் சமயோசிதம் விழவு வசந்தாதி கம் பக்குவம் மகளிர்
பருவம் பிராயம் காலம் உவாக் கணுப் பாரதத்தின் பிரிவும் பேர்
**672
#53
உரை சொற்பயன் பொன்னுரை ஒலி சொல் உரைத்தல் தேய்த்தல் சொலல் ஒலித்தல்
சுரை ஆன்முலை ஓர் படர்கொடி கள்கிண்ணி கள் உள்தொளை ஐம்பேர்
திரை நீர்த்திரை சிற்றாமல்லி உடம்பின்திரை பார் இடுதிரை ஆம்
நரை வெள்விடை வெண்மயிர் வெண்மை சரையு காற்று ஓர் நதி மேகம்
**673
#54
மரக்கால் சுவாதி துற்கையின்கூத்தொடு மால்கூத்து மரத்தின் கால்
அரக்குச் சிவப்புச் செம்மெழுகு ஆம் அரற்றல் ஒலித்தல் விடாதுரைத்தல்
இரட்டல் ஒலித்தல் அசைதல் பேர் இரட்டை இரண்டானது மிதுநம்
நிரப்பு வறுமை குறைவு என்ப நிருத்தம் கூத்து ஓர் வேதாங்கம்
**674
#55
பரிக்கிரகம் பற்றுதல் மனைவி முதல் பெற்றிடுதல் பரிசநம் ஆம்
திரித்தல் திரிபுசெயல் முறுக்கல் தெரித்தல் சொல்லல் எழுதுதல் பேர்
அரித்துப் பசும்புல் பசும்புரவி பசுமை பசுப்புள்ளது திசை ஆம்
அருக்கம் செம்பு பளிங்கு எருக்கு ஆம் அருக்கன் இநன் இந்திரன் சேட்டன்
**675
#56
விருச்சிகம் தேள் தேள்கொடுக்குப்புதல் ஓர் இராசி மயிர்ப்புழு
கிருட்டி அறிஞன் மகம்செய்தோன் கேழல் பிரண்டை ஓரீற்றா
சிருட்டி இயல்பும் படைத்தலும் ஆம் திருட்டி பார்வை கண் ஞாநம்
வருத்தமாநம் நிகழ்காலம் அகலம் ஆமணக்கு ஓர் மாளிகையே
**676
#57
அருத்தம் வழக்கம் பொருட்டு விடையம் ப்ரகாரம் பொருள் சொல்
அருத்தம் நிவிர்த்தி செம்பாதி பலன் சாத்திரம் துண்டம் பண்டம்
கருப்பம் வயிறு சூல் சந்தி சிசு உள்வீடு பலாக்காய்முள்
தருப்பம் மிருகமதம் கிரந்தம் குசப்புல் அகங்காரமும் சாற்றும்
**677
#58
பெருகல் வளர்தல் நிறைதல் பேர் பிருங்கம் இலவங்கம் வண்டு ஆம்
குருதி சிவப்புக் குசன் செந்நீர் குருந்து குருத்து ஓர் மரம் குழந்தை
மருமான் மருகன் வழித்தோன்றல் மருங்கு பக்கம் மரியாதை
கருமை கறுப்பும் பெருமையும் ஆம் கரும்பு புணர்தம் ஓர் பயிரே
**678
#59
கரங்கம் தேங்காய் தலையெலும்பு ஆம் கரப்பு ஓர் விட்டில் களவு ஒளிப்பு
சரண்டம் ஓர் பூடணம் ஓந்தி சரத்து ஓர் இருது வற்சரப்பேர்
பொருந்தல் சேர்தல் இயைதல் எனும் புருவை இளமை செம்மறி ஆம்
விருந்து புதிது ஓர் வனப்பு அதிதி மிருதம் செத்தது இரப்பதுமே
**679
#60
திரங்கல் மிளகு திரைதல் எனும் சிரண்டி யுவதி சுமங்கலப்பெண்
கிரந்தம் தநம் எண்நான்கெழுத்துக்கவி சொல் தொடுக்கின்றது நூல் ஆம்
கிரந்தி வளைவு துணியங்கம் உடைக்கட்டு ஓர் நோய் மரக்கணுப் பேர்
கிரந்திகம் திப்பலிமூலம் துணியங்கம் குற்குலுக் கருவேல்
**680
#61
முரம்பு கழிக் கான் கல் மேடு பரல் மொய்த்துயர்ந்த நிலமும் பேர்
துரிஞ்சில் வவ்வால் ஓர் மரம் ஆம் சுரும்பு மலையும் ஆண்வண்டும்
பிருங்கராசம் கரிசாலங்கண்ணி குடுமிக்கடுவன்புள்
சிருங்கி பணிப்பொன் அதிவிடையம் எருத்தின்புதல் செங்கயல்பெண்ணே
**681
#62
கரகம் ஊர்க்குருவி கமண்டலம் ஓர் புள் ஆலங்
கட்டி புன்கு தாதுமாதளை கரம் என்று ஏழ்பேர்
கிரகம் அநுக்கிரகம் விண்மீன் பிசாசாதி நவக்கோள்
கிராணம் போரெழுச்சி கைக்கொள்ளுகை பூதநாதி
கிரகராசன் கிரணமாலி இமகிரணன்
கிரமுகம் செவ்வுலோத்திரம் பூவரசு கமுகு என்ப
குரகம் எனல் நீர்முள்ளி நெருஞ்சி மஞ்சாடியும் ஆம்
குரரம் செங்கால்கருமூக்குஅன்னம் அழுகணிப்புள்
**682
#63
பிரகிருதி இருதிணைப்பால் இயல்பு வினைப்பகுதி
பிராணி காரணம் குணசாமியம் முதன்மை மூலப்
பிரகிருதி நகர்ச்சநம் இராச்சியாங்கம் தாய்
பெண்குறியும் பஞ்சபூதமும் ஓர் சந்தசும் ஆம்
பிரகரம் சேர்ந்தது திரள் யாமம் செறிந்தமலர் நாய்
பெருங்கடுமை இருகழுதை அகில் பரிச்சந்நாகம்
பிரசண்டம் வெள்ளலரி மிகக்கடுமை என்ப
பிரபை அளகாபுரி தீச்சுவாலை கிரணப்பேர்
**683
#64
இரசதம் விண்மீன் இரத்தம் வெள்ளை முத்துமாலை
யானைத்தந்தம் வெள்ளி வெண்மலை பொன்னும் பேர்
இரசநம் பொன் வெள்ளி விடம் பிசின் பழம் கடாயம்
இலைச்சாறு பல் ஒலித்தல் உணவொடு நேயமும் ஆம்
இரசநை ஓர் அணிவகுப்பு மலராதி தொடுத்தல்
ஈரெட்டுக் கோவையுள பெண் அரை நூல்மாலை
பிரசவம் பாரம்பரியப் பிரசங்கம் அநுச்சை
பிறப்புப் பூக் காய் ப்ராணன் பிள்ளை பிள்ளைப்பேறே
**684
#65
கரணம் உடல் பவாதிகம் யோகாசநம் இந்திரியம்
கணிதம் இடம் திரிகரணம் உபகரணம் அந்தக்
கரணம் நாட்டியகீதபேதம் வியாபாரம்
கலவி காரணம் கிரியை சுரதபந்தமும் பேர்
சரணம் அடைக்கலம் பாதம் வீடு குலம் மரவேர்
சஞ்சாரம் பாட்டின் ஓர் அடி காத்தல் முற்றம்
தரணம் ஈரைம்பலப்பொன் ஒரு கஃசு ஆம் வெள்ளி
தாநியம் தாண்டுதல் பாலம் தரித்தல் முலை உலகம்
**685
#66
வரணம் மாவிலிங்கு பிராகாரம் வேலியும் ஆம்
வரன் அயன் இந்திரன் சிவன் சிரேட்டன் விடன் மணாளன்
பரதம் கூத்தின் விகற்பம் நடநூல் ஓர் கண்டம்
பரன் எனல் அந்நியன் பகைவன் பரமான்மாப் பரமன்
இரதம் ஒற்றுமை புணர்ச்சி கால் உடல் வாகநம் பல்
எழுதுதல் தேர் வஞ்சிமரம் அநுராகம் ஒலி வெள்
ளிரதம் நீர் சாறு உமிழ்நீர் விடம் பிசின் பொன் புளிநீர்
இந்திரியம் வலி சிங்காராதி மதுராதி
**686
#67
பரதன் இராமாநுசன் வேட்டுவன் கூத்தன் நடநூல்
பணித்தோன் சாகுந்தலேயன் தந்துவாயன்
பிரதிகாரம் பிறிதுசெயல் சிகிற்சை திருப்பல்
பிரயோகம் உதாரணம் கூட்டுகை ஏவல் கருமம்
பிரதிசரம் கரசூத்ரம் கங்கணம் ஓர் மந்தரம்
பின்படை பூடணம் மாலை விரணசுத்தி என்ப
கரபம் மணிக்கட்டுமுதல் கநிட்டிகைமட்டுள்ள
கையோரம் ஒட்டகத்தின்குட்டி கழுதையும் ஆம்
**687
#68
பிரபவம் முந்தியஞாநத்தினுக்கிடம் விக்கிரமம்
பிறப்பினுக்குக்காரணம் நீரினுக்குமூலமும் ஆம்
குரவகம் செங்குறிஞ்சி செவ்வாடாமலர் என்று இருபேர்
குரவை கைகோத்தாடல் முந்நீர் மள்ளியர் வாயொலிப்பு ஆம்
இரலை அச்சுவதி புல்வாய் கலை ஊதுகொம்பு ஆம்
இரவணம் ஒட்டகம் கழுதையொலித்தல் வண்டும் ஏற்கும்
பிரவணம் ஒற்றுமை அடைவில் தாழ்ந்தநிலம் வணக்கம்
பிரவணன்தான் வணக்கமுளோன் சமர்த்தென் ஒருப்பட்டோன்
**688
#69
அரம் ஈர்வாள் விரைவு பண்டி விரைவில்செல்வது தோல்
அரன் என்ப உருத்திரன் உதாசநன் சங்கரிப்போன்
கரம் வலி நோய் விடம் கிரணம் துதிக்கை குடியிறை கை
கழுதை கநோபலம் சூடு எழுத்தின் சாரியை ஆம்
சரம் அம்பு ஓர் சூது மணிவடம் கொறுக்கை நாணல்
சலிலம் மேலானதயிர் சரிப்பன மூச்சும் பேர்
சிரம் மரமாதியின்நுனி முன்னணிப்படை ப்ரதாநம்
திப்பலிமூலம் சென்னி நெடுங்காலம் என்ப
**689
#70
சொரம் வெப்பநோய் அடவி அருநெறி பிராணித்
தொநி உதாத்தாதி ஏழிசையொடு உயிரெழுத்து ஆம்
திரம் அசையாதது திரளுள்ளது மோக்கமும் பேர்
திரவிணம் பொன் பராக்கிரமம் திரவியம் வீடு என்ப
பரம் மேம்பாடு அந்நியம் தீவிரம் தூரம் தனிமை
பரிக்கலணை சிலாக்கியம் மேல் முன்பு பாரமும் ஆம்
குரல் ஓசை சிறகு புள்ளின்ஒலி யாழின்நரம்பு
கூந்தல் மிடற்றில் பிறக்கும் இசை தினை நெல்கதிரே
**690
#71
திரவியம் பவ்வியம் விநயம் மருந்து குணாசிரையம்
செம்பஞ்சு பொருள் பூதலாதி பித்தளையும் ஆம்
தரவு இறைவனிடும்ஏவல் கலியுறுப்பின் ஒன்று ஆம்
தரளம் முத்தாரத்தின் நடுமணி அலைவது என்ப
பிரகாரம் ஒப்பு விசேடணம் பேதம் வகை ஆம்
பிரவாரணம் விலக்கு வேண்டியது கொடுத்தல்
பிரசாதம் நிருமலமாம் தெளிவு அநுக்கிரகம் காப்
பியகுணவிசேடம் அநுசரிப்பொடு பிரீதி
**691
#72
இரதாங்கம் தேர்க்கால் சக்கிரவாகப்புள் பேர்
இரதி மதநன்தேவி இச்சை புணர்ச்சியும் ஆம்
பிரபாதம் வைகறை தாழ்வரை கரையோடு அருவி
பிரவேணி யானையின் மேல்தவிசு மயிர்ப்பின்னல்
பிரமா விப்பிரன் வேள்விக்குரியோனால் வரிக்கப்
பெறும் அக்கிநீத்திரனாதியர் கமலாசநன் பேர்
பிரமாணம் நீட்டளவை யதாநுபவம் நூல் நம்
பிக்கை ஒரேதன்மை சூள் ஏது அளவு எல்லை
**692
#73
பிரசித்தன் மேம்பாட்டோன் அலங்கிருதன் என்ப
பிரலம்பம் சாகை தொங்கல் பனையின்முளை முப்பேர்
பிரதிக்ரகம் படிக்கம் தனக்குவசம்செய்தல்
பிற்படை தாநப்பொருள் அஃது ஏற்றல் எதிர்க்கோள் ஆம்
பிரதிட்டை கௌரவம் காரியநிருவாகம் தா
பித்தல் சாமர்த்தியம் ஓர் செய்யுள் முகிதலும் ஆம்
பிரவிர்த்தி முரணடக்கல் யானைமதம் முயற்சி
பேச்சு ஒழுக்கம் இரப்பு நீர்ப்பெருக்கு வத்தமாநம்
**693
#74
அரி கிரணம் இரவி மதி யமன் மால் இந்திரன் காற்று
அனல் குரங்கு தவளை கிளி அரவு வண்டு பரி கோ
ளரி பொன்மை பச்சை புகை பகை சிலம்பின் பரல் வேய்
ஐம்மை விசி அரிசி நெல்தாள் அரிவு கண்ணின் வரி ஆம்
புரி நகரம் பழுதை கயிறு அதின் முறுக்கோடு ஊர்ப் பேர்
புருடன் ஆண்மகன் ஆன்மா பரமான்மா விரிஞ்சன்
பரிகம் இரும்பின் தரங்குத்தடி மதிலுள்மேடை
படைக்கலம் கொல்லுகை ஓர் அகம் கதவின் தாழே
**694
#75
பரிகரம் முன்கால்கட்டும் கயிறு விவேகாரம்
பம் திரள் ஓர் அணி கட்டில் அதிகம் உபகரணம்
கிரிசம் எனல் அப்பிரகம் இரும்பு சிலாசது ஆம்
கிரிசாரம் பொதியமலை இலிங்கம் இரும்பு என்ப
அரிணி பச்சைநிறத்தினள் ஓர் அரமகள் பொற்பாவை
அழகினள் பெண்மான் ஆறங்குலக் குய்யமுடையாள்
பரிதி சக்ராயுதம் தேர்க்கால் மகச்சமிதை ஊர்கோள்
பாநு சோதிச்சக்ரச் சுற்றளவை வட்டம்
**695
#76
பரிமளம் பற்பலவாசம்கலந்த கந்தம் பிசறல்
பரிகாதம் இரும்புப்பூண்தடி கொலை ஆயுதப்பேர்
பிரியகம் சித்திரரோமமான் கடம்பு ஞாழல்
பீதசாரத்தருக் குங்குமம் வண்டும் பேசும்
கிரியை பிராயச்சித்தம் உபாயம் காரியம் நிக்
கிரகம் நியமாதி பூசநை சுபாசுபத்தின்
கிரியை நிருவாகம் ஆரம்பம் செய்தொழில் சி
கிற்சை நிச்சயம் விகுதியொடுமுடிந்த வினையே
**696
#77
பரிதாயம் நிதம்பம் நீர்நிலை கட்டில் என்ப
பரிவாதம் யாழ்வாசிக்கும்கருவி பழிப்பு ஆம்
நிரியாதநம் தருதல் கடன்தீர்த்தல் வைரம்
நீக்குதல் வைக்கும்பொருளைக் கொடுத்தல் கொல்லுதல் பேர்
கரு வெள்ளை கொழுப்பு விக்ரகாதிசெய்யும் கம்மக்
கரு முட்டை குதிரை தந்தம் கருப்பம் உருத்திரன் ஆம்
சரு விண்ணோர்உணவு வச்ரம் அம்பு சினம் பாண்டம்
தரு என்ப நாடகத்து ஓர் பாட்டு மரப்பொதுவே
**697
#78
குரு நிடேகாதி கிருத்தியம்செய்தோன் தேவ
குருப் புரோகிதன் பெரிது காம் இரதவாதக்
குரு நிறம் நல் தருமோபதேசகன் சந்திரன்தன்
குலத்து ஓர் மன் தந்தையாதியர் இருமாத்திரை ஆம்
மரு நீரிலாதநிலம் வெற்பு வாசமும் ஆம்
மருள் பைசாசம் மயக்கம் குறிஞ்சியாழ்த்திறப்பேர்
பிருகதி வாக்குக் கண்டங்கத்தரி உத்தரியம்
பெரிது விச்சுவாவசுவின்யாழ் மூப்பு முள்ளி
**698
#79
கிருகவாகுக் கோழி மயில் முதியஓந்தி
கிருமிசம் தேன் வெண்பட்டு நூல் அகிலும் ஒக்கும்
முருகன் செவ்வேள் இளமையோன் வெறியாட்டாளன்
முருமுரம் செங்கதிரோன்தன் குதிரையினொன்று உமித்தீ
குருகு வண்டானம் கைவளை குருக்கத்தி இளமை
கோழி வெண்மை மூலநாள் கொல்உலை மூக்கும் பேர்
உருசகம் மங்களப்பொருள் பல் கண்டிகை தார் பரிப்பூண்
உற்கடம் மாதளை விளங்கம் சுவர்ச்சிகை ரோசனையே
**699
#80
வருடம் மழை பாரதாதிய வருடம் ஆண்டு ஆம்
வருணன் ஓர் ஆதித்தன் குலத்தினன் நீர்க்கடவுள்
விருடம் இடபகப்புதல் ஆடாதோடை குதிரை
விடை எலி புண்ணியம் வலி சுக் கிலத்தாது எண்பேர்
விருடன் மாநவன் வீர்ய விருத்தியுளோன் சிரேட்டன்
மிருதி அறநூல் இச்சை நினைவு புத்தி மரணம்
வருணகம் மெய்ப்பூச்சு ஒப்புச் சந்தநம் வண்ணகம் ஆம்
வருணி எழுதுவோன் பிரமசாரி சித்ரகாரன்
**700
#81
அருணம் செவ்வானம் மங்கிய சிவப்புப் பொன்மை
அப்புச் செங்குட்டநோய் ஒலியின்மை அறுபேர்
துருணமே வண்டு தேள் ஆமை வில் வாள் என்ப
துருதம் விசை வேகமுளது உருக்கிய நெய்யாதி
வருணம் பொன் புகழ் சாதி குணம் யானைத்தவிசு
வடிவு துதி தாளவிசேடம் வெண்மையாதி
வருணம் குங்குமம் காந்தி சித்திரம் மெய்யெழுத்து
மாவிலிங்கு மெய்ப்பூச்சு நீர் கீதக்கிரமம்
**701
#82
இருதம் நீர் கதிரில் உதிர் நெல்பொறுக்கல் ஒளி நல்
லியல்பு பூசிதம் ஊர்க்கண் நெல் இரத்தல் உண்மை
இருபிறப்பாளன் பார்ப்பான் சந்திரன் சுக்கிரன் ஆம்
இருமை இம்மை மறுமையொடு பெருமை இருதன்மை
கருமம் எனல் முதிர்வேனில் வெயில் வெப்பம் வேர்வை
கரசாநம் தொழில் கிரியை செய்கை ஆண்தன்மை
பருமம் மெய்யுறை பாரம் கூலி பரிக்கலணை
பதினெண்கோவையின் அரைநூல்மாலை செம்பொனும் பேர்
**702
#83
நிருமலம் மாசற்றது நிர்மாலியம் அப்பிரகம்
நிருவரம் நிற்பயம் சாரம் கடோரம் வெட்கமின்மை
ஒருமை ஒன்றாம்தன்மை ஒற்றுமை ஓர் பிறப்பு ஆம்
ஒருவந்தம் ஏகாந்தம் நிச்சயம் ஒற்றுமை ஆம்
துருவம் மரக்குற்றி முளை ஆலமரம் குதிரைச்
சுழி நிலைபேறு ஓர் யோகம் நித்தியம் ஆகாயம்
துருவநக்கத்திரம் தருக்கம் ஓர் தாளம் சாற்றும்
துளக்கின்மை நிச்சயிப்பது இடையறாமையுமே
**703
#84
நிருவாணம் பரமகதி ஆடையைஉடாமை
நிமக்கநம தாவளம் நட்டாக்கிநி விநாசம்
குருவிந்தம் ஓர்வகைச் செம்மணி காராமணி வாற்
கோதுமை கண்ணடி சாதிலிங்கம் முத்தக்காசு ஆம்
துருவை ஓர் வேள்விப்பாத்திரம் சிற்றாமல்லி
துருவாடு பெருங்குரும்பை ஓர் கீதம் என்ப
குருளை முயல் புலி பன்றி சிங்கம் முசு நரி நாய்
குரங்கம் இவற்றின் பிள்ளை கூந்தல் இளமையுமே
**704
#85
பிரக்கிரகம் துரகாதிக் கயிறு சிறை கிரணம்
பிணிப்புத் தோள் அலிமரம் பொன் தராசிலிடுகயிறு ஆம்
பிரக்கிரியை பிரகரணம் பிடுங்கல் அதிகாரம்
பிரத்தியயன் பரதந்த்ரன் பிரசித்தன் எனலாம்
அரத்தம் அவிரிச்சாயம் முதலியது சிவந்தது
அநுராகத்தது பவளம் சிவப்பு உச்சித்திலகம்
பிரத்தியயம் சபதம் காரணம் தொளைத்தது நம்
பிக்கை பதவிகுதி நிருணயம் ஒழுக்கம் ஞாநம்
**705
#86
அரிட்டம் சாங்குறி வெளுளி காக்கை பிரசவவீடு
அசுபம் நன்மை வேம்பு முட்டை மோர் கள் வநமுருங்கை
இரிட்டம் அசுபம் சுபம் வாள் விநாசம் பாவமும் ஆம்
இருக்கம் நக்கத்திரம் கரடி பெருமரம் இராசி
வரிட்டம் மிக அகன்றது சிச்சிலி செம்பு மிளகு ஆம்
வருத்தகம் வியாபாரம் குறும்புள் பரிக்குழம்பு
சருக்கம் உற்சாகம் சிருட்டி இயல்பு தியாகம் நிச்
சயம் அத்தியாயம் அநுமதி மோகம் எண்பேர்
**706
#87
சருக்கரை சிற்றோடு சுக்கான்தறை சுக்கான் கரும்பின்
சாறுஅட்டது ஓர் நோய் துண்டம் கல்லு மண்டை
அருச்சி எனல் காந்தி கிராணம் சுவாலையும் ஆம்
அருத்தி சேவிப்போன் யாசகன் தநிகன் ஆசை
கிருட்டிணம் தீவினை கறுப்பு மிளகு வாயசம் கோ
கிலம் இரும்பு கலி அபரபக்கம் நாலிருபேர்
கிருட்டிணன் சூத்திரன் கண்ணன் வியாசன் அங்கி பார்த்தன்
கிருட்டணை ஓர் நதி நீலி திப்பலி பாஞ்சாலி
**707
#88
விருத்தம் சென்றது சரிதம் பருமை திரம் வட்டம்
விரோதம் சூழ்ந்தது மூப்பு ஓர் பாவினம் கற்கடாரை
ஒருத்தல் புலி கரடி பன்றி கவரி மரை புல்வாய்
உழை எருமை இவற்று ஆணும் மதமாவும் உரைப்ப
இருத்தியம் தன்வசம்செய்யும் மந்த்ரம் மநப்பிரியம்
இதமநம் மநோற்பவம் வெண்சீரகம் மேற்பூச்சு ஆம்
அருப்பம் ஓர் நோய் துயரம் முகரோமக்கிளர்ச்சி
அடவி பிட்டு மோர் வழுக்குநிலம் அரண் கள் ஊர்ப் பேர்
**708
#89
அரங்கம் சூது அமர் கூத்துப் பயிலிடம் சீரங்கம்
ஆற்றின்இடைக்குறை திராச் சிவப்பாதி நிறப்பேர்
இரங்கல் ஏங்குதல் ஒலித்தல் தயைசெய்தல் இனைதல்
இரஞ்சநி மஞ்சிட்டை கவுள் அவிரி கம்பில்லம்
பரஞ்சம் கைவாள் செக்கு நுரை சுரிகைப்பிடி ஆம்
பரம்பரை வேள்விக்கொலை சந்தாநம் மரபு என்ப
கிரந்தம் செய்யுள்தொடுத்தல் மலராதி பிணைத்தல்
கெற்சிக்கும் வீரர் ஒலி அழைத்தல் அழுதலுமே
**709
#90
கிரந்திலம் காட்டுக்கரணை நறுமுறுக்கை கருவேல்
கிருஞ்சநம் வெள்ளுள்ளி விடப்பூச்சுள்ள இறைச்சி
சிருங்கம் மரநுனி மருப்புக் குறி தலைமை சாரல்
சிகரம் இலீலையின் தெப்பம் திருநாமப்பாலை
சிருங்கலம் மேகலை யானைச்சங்கிலி ஆண் அரைஞாண்
சிரும்பணம் கொட்டாவித்தல் விரிதல் மலர்தலும் ஆம்
விருந்தம் முலைமுகம் பூந்தாள் குழாம் மிருகக்கூட்டம்
விருந்தாரகன் விபுதன் அழகுடையோன் சிரேட்டன்
**710
#91
பிரதிவிம்பம் நிழல் தேவதாதி சிலாரூபம்
பிரமரகம் சிற்றெலி பெண்மயிர்க்குழற்சி வண்டு ஆம்
சரடம் எனல் கிழத்தன்மை ஓந்தி கடிநப்பேர்
சரளம் சாம்ப்ராணி மரம் தகுதி செவ்வை என்ப
அரியயன் என்பவன் கிரணமாலி விண்ணோர்க்கிறைவன்
அரியன் மூன்றாம்வருணன் பிரபு பூச்சியன் ஆம்
பிரியங்கு திப்பலி கேழ்வரகு தினை ஞாழல்
பெருமான் மூத்தோன் அரசன் பெருமையுடையோனே
**711
#92
பிரகணம் இரும்பின்தடி வெளிவாயில் குறடு தாம்பிர கும்பம் என்ப
பிரமரி கூத்தின் விகற்பம் பெண்வண்டு ஆம் பிரமதம் மிகுமதம் மகிழ்ச்சி
திரிகை சஞ்சாரம் கிணற்றுறை இடக்கைப்பறை குயச்சக்கிரம் திரிகல்
கருணிகை தொழுத்தை நடுவிரல் பொகுட்டுக் காதணி துதிக்கையின்நுனியே
**712
#93
அருணை ஓர் தலம் மஞ்சிட்டி நன்னாறி அதிவிடையம் சிவதைப்
பிருதிவி காயப்பத்திரி கருஞ்சீரகம் கடற்கரை புவிப் பெயராம்
பிருது ஓர் அரசன் அகலம் காயப்பத்திரி கருஞ்சீரகம் பேசும்
கிருபணன் அதமன் தியாகபோகமிலான் கிருபாணி சுரிகை கத்தரி
**713
#94
அரித்தல் எண்ணினைப்பாகித்தல் கொல்லுதல் செள்ளரித்தல் நீரில் கொழித்தெடுத்தல்
கிருச்சிரம் புகக்கூடாதது பாவம் கேதம் சாந்தபநாதி விரதம்
விருத்திரம் மேகம் பருப்பதம் இருட்டு ஆம் விருத்திரன் பகைஞன் ஓர் அசுரன்
மருத்துவன் ஆயுள்வேதியன் மகவான் வருத்தநம் சீவநம் வளர்ச்சி
**714
#95
விரதம் வரிக்கின்றது நோன்பு ஒழிந்தது வஞ்சினம் சாத்ரவிதி கன்மப்பேர்
வரம் மேன்மை ஓர் நிதி சற்றுள பிரியம் குங்குமம் தெய்வப்ரசாதம்
பரிவாபம் விதைப்பது நீர்நிலை பாத்தி பரிவாரம் படாத்தின்வீடு ஆம்
சருவதோபத்திரம் வேம்பு ஓர் சித்ரக்கவிதை சதுர்த்துவாரசாலை
**715
#96
கிரமம் வேதாசாரவிதி முறைமை பொருள்தொறும் கிளர்சத்தி அடிவைப்பும் ஆம்
பிரவாகம் முக்யவாகநம் புறக்கமநம் நீர்ப்பெருக்கின்வேகம் வழக்கம்
பரியாயம் ஓர் பொருள்திரிசொல் க்ரமம் தன்மை படைப்பு அவசரம் ப்ரகாரம்
நிரியூகம் முளையாணி கடாயம் பிசின் வாசல் நெற்றியணி மாலை ஆமே
**716
#97
கரசம் எனல் புன்கு புலிநகக்கொன்றை கைந்நகப்பேர்
சுரசம் கஞ்சாங்கோரை சிறுகிழங்கு நற்சுவை ஆம்
தரணி புவி கற்றாழை சமுத்திரம் சூரியன் ஓடம்
பரணி மருந்திடும்பாண்டம் ஓர் நாள் ஓர் பிரபந்தம்
**717
#98
தருக்கம் வியாகரணபதப் பிரிவு ஊகம் சம்வாதம்
குருத்து எனல் நெட்டிலைமரம் அங்குரிக்கும் இளமடல் வெண்மை
விருத்தி சீவநம் வளர்ச்சி விரித்துரை கைசிகியாதி
விருத்தி நிறைவு ஓர் மருந்து மிகுதி இன்பம் பொலிசையுமே
**718
#99
சிரஞ்சீவி நெடுங்காலம்சீவிப்போன் காகப்புள்
சுருங்கை மதிற்குள்கள்ளவழி கள்ளவாசல் சொலும்
மருந்து கொடி மரம் புல் பூடு முதலியது அமுதம்
முருந்து சிறகடிமுள்ளு வெண்குருத்து முல்லை முகை
**719
#100
அரசு இராச்சியம் ஓர் மரம் அரசியல் அரசன்
முரசு பேரியை ஓர் பறை உத்திரட்டாதி
கரடம் யானையின் மதக்கவுள்சுவட்டொடு காகம்
பரவை பூமகளாடலும் பரப்பும் வாரிதியும்
**720
#101
கிரகசம் கரபத்திரம் கருவேல்மரம்
கிரணம் இருசுடர்க்கதிர் ஓர் சிவாகமம்
பிரசுரம் விரைவு மிகுதி திரண்டது
பிரததி படர்கொடி திரள் பரப்பும் பெயர்
**721
#102
பிரதநம் பழமை பிளத்தல் வெஞ்சமம்
பிரதமம் முதன்மையாவது முதலது
பிரதிபத்து என்பது புத்தி பிரதமை
பிரவரம் சந்ததி சிரேட்டம் கோத்திரம்
**722
#103
இரம்மியம் இட்டமானது அழகிது
புரவலன் ஆள்வோன் கொடுப்போன் புரப்போன்
வரிசை முறை வெகுமாநம் ஒழுங்கு ஆம்
அரிமந்தகமே சணகம் கடலை
**723
#104
மருகு எனல் மகரவாழை மருமகன்
மருமரம் படாத்துஒலி வறள்சருகின்ஒலி
பிருகுசன் பரசுராமன் சுக்கிரன்
பிருதநை சேனை ஓர் படைத்தொகைப் பெயர்
**724
#105
விருசிநம் வளைவு கிலேசம் தீவினை
விருடை எலியால் பூனைக்காலி ஆம்
கருதுதல் உன்னல் குறித்தல் விரும்புதல்
கருணம் மல்லிகைப்பூச் செவி ஓர் மரம்
**725
#106
அருணன் ஞாயிறு அன்னவன் தேர்ச்சாரதி
அருவி வெற்பின் வீழ் யாறு கழிமுகம்
இருது மகளிர்பூப்பும் வசந்தாதியும்
இருள் கறுப்பு இருட்டு நிரையம் மயக்கம்
**726
#107
மருவுதல் பழகல் அருகுறல் மேவுதல்
மருவகம் கடாரைமரம் மருட்காரை
சருவதோமுகம் எனல் ஆகாயம் சலம்
சருவதோமுகன் அயன் ஆன்மாச் சதாசிவன்
**727
#108
சிரவணம் வேள்வி செவி ஓணநாள் பேர்
வரவருணிநி உத்தமப்பெண் மஞ்சள் ஆம்
நரன் அருச்சுநன் மாநுடன் நாராயணன்
கரி மரம்சுட்டது சான்று கைம்மாவே
**728
#109
பரிகலம் குரவர்உண்கலன் பரிவாரம்
திரிபுடை மல்லிகை சிவதை சிற்றேலம்
துரியம் சுமைஎருதொடு நான்காவது
அரில் சிறுதூறு குற்றம் பிணக்கும் ஆம்
**729
#110
தருடணம் அவமாநம் சுரதப்பெயர்
முருடு பெருங்குறடு ஓர் பறை விறகு
உருவகம் நாடகம் ஓர் அலங்காரம்
சருவதோபத்திரை நடப்பெண் பெருங்குமிழ்
**730
#111
பிரகாடம் திடம் மிகுதி கிருச்சிரம்
பிரசேவம் தந்திரித்தடை மீன் பறி
பிரஞாநம் அடையாளம் புத்தி ஆம்
பிரதேசம் சிறுவிரல்சாண் இடமே
**731
#112
பிரதீகம் ப்ரதிகூலம் அவயவம்
பிரபாவம் பிரதாபம் மன்ஒளி
பிரயோசநம் கூடுதல் காரியம் பலன்
பிரவாசநம் பயணப்படல் கொல்லுதல்
**732
#113
புரத்தல் கொடுத்தல் ஆளுதல் காத்தல்
பரிக்கிரமம் கால்நடை விளையாட்டு ஆம்
வரிட்டன் மிகப்பெரியோன் சிரேட்டன் பெயர்
வரித்தல் வேண்டிக்கொளல் பூசுதலே
**733
#114
பரண்டை கால்பரட்டடி பெருங்கொக்கு
நரந்தம் எனல் நாரத்தை கத்தூரி
துரந்தரம் நமைமரம் சுமைஎருது
நிரந்தரம் உட்புறம்பின்மை நெருக்கம்
**734
#115
அரந்தை குறிஞ்சியாழ்ப்பண் இடுக்கண்
அரம்பை வாழை ஓர் அரமகள் என்ப
சிருங்காரி யானை கமுகு சுவேடம்
இரும்பு கரும்பொன் ஆயுதப்பொதுவே
**735
#116
வரத்திரை மதகயப் புரோசை தோலின்வார்
பருக்கை சோற்று அவிழொடு பளிங்கு கற்பரல்
கிருத்தி தோல் அறுத்தது பூர்ச்சம் கிருத்திகை
கருப்புரம் பலநிறம் கநகம் பாபம் நீர்
**736
#117
பிரதிகம் கோபம் கொலை நோய்
திரபு தகரம் திரா என்ப
திரபை வெட்கம் துட்டையும் ஆம்
முரிதல் ஒடிதல் கெடுதல் பேர்
**737
#118
துருகிணன் மாயவன் பிரமன்
கிருணி கிரணம் சுவாலையும் ஆம்
துருணி ஓடம் பெண்ஆமை
பிருசம் மிகுதி தீவிரமே
**738
#119
அரிமருகன் கணபதி மயில்வாகநன்
பரியகம் கைச்சரி கால்சரியும் பேர்
திராவகம் காந்தக்கல் உருக்கியநீர்
அராளம் நறும்பிசின் வளைவு மதகயம்
**739
#120
பிராக்ருதன் கயவன் மூடன் பிராசமே எதுகை ஈட்டி
நிராக்ருதி மறையோதாதோன் உருவின்மை நிடேதம் முப்பேர்
இராசராசன் குபேரன் சுயோதநன் வேந்தர்க்கீசன்
இராசன் சந்திரன் இயக்கன் இந்திரன் அதிபன் வேந்தன்
**740
#121
இராசி நெல்குவை மேடாதி இடையறா ஒழுங்கு இரேகை
இராசிகை வயல் இரேகை ஒழுங்கு கேழ்வரகு என்றாகும்
கராடம் தாமரைக்கிழங்கு மருட்காரை ஓர் புட்பப்பேர்
இராமை மன்மதநூல்கற்றோள் சிறுவழுதலையும் ஏற்கும்
**741
#122
பிராணகம் போளம் வேங்கைமரம் ப்ராணனுள்ள சாதி
கிராதன் சிற்றுடம்பன் வேடன் கிராதி குட்டநி கங்கைப் பேர்
தரீடம் வாரிதி முயற்சி சுந்தராகிருதி தெப்பம்
வரூதம் மெய்த்திராணம் தேரை மறைக்கும் கம்பளாதி வீடு ஆம்
**742
#123
குரால் புற்குநிறம் கோட்டான் பேர்
துரால் செத்தை துருவல் துன்பம்
சிராமம் மண்டபம் காலப்பேர்
திராவகன் சமர்த்தன் கள்வன்
**743
#124
மராளம் மாதளை அன்னப்புள்
மரூகமே மயில் மண்டூகம்
சுரூபன் சுந்தரன் விற்பந்நன்
இரேணு பற்படகம் தூளி
**744
#125
பிராமகன் விடன் கோமாயு பிராமரம் தேன் கல் என்ப
இரேகை கைவரை எழுத்தோடு இடையறாஒழுங்கு வஞ்சம்
இரேணுகை தவிடு தக்கோலம் பரசிராமன்தாய் பேர்
ஞெரேலெனல் ஒலிக்குறிப்புக் கதுமெனல் பயக்குறிப்பு ஆம்
**745
#126
இரேவடம் சூறைக்காற்று வலம்புரிச்சங்கு மூங்கில்
உரோகிடம் காவட்டம்புல் கழுதையொத்திடும் மான் ஓர் மீன்
விரோசநன் பிரகலாதசுதன் விதுக் கனலோன் பாநு
புரோகிதன் கிரியைசெய்விப்போனும் முன் இதஞ்சொல்வோனும்
**746
#127
உரோசநை பசுப்பித்தம் செங்கழுநீர் உத்தமப்பெண்ணும் பேர்
துரோணம் வில் அண்டங்காக்கை தும்பை தேள் பதக்கு ஓர் மேகம்
சுரோதம் நீர் நீரினோட்டம் பிரவாகம் சுரோத்திராதி
விரோதம் வேற்றுமை போர் வன்மம் விரோதி சத்துரு ஓர் ஆண்டு ஆம்
**747
#128
அராகம் பாலையாழ்த்திறத்தோடு இராகமன்மை முடுகியல் ஆம்
கிராகம் கைக்கொள்ளுகை முதலை கிரீடை லீலை பரிகாசம்
திராசம் அச்சம் மணிக்குற்றம் திராணம் காத்தல் திராய்ப்பூடு
தராசு பரணிநாள் நிறைகோல் சராவம் அகலோடு உலைமூடி
**748
#129
இராசாதநம் கிஞ்சுகம் முரள் சிங்காதநம் கிங்கிணிப்பாலை
கிராமியம் பாமரச்சொல் ஓர் சுரதம் கிராமோற்பவத்தது எனும்
சிராயு நெடுவாழ்நாள் இலவு ஆம் சிரீ சம்பத்து இந்திரை அழகு
கிராவம் மலையு கல்லும் பேர் கிரீவை கழுத்தின்தலை கழுத்தே
**749
#130
மரீசி தியாகபோகமிலா மநுசன் கிரணம் ஓர் இருடி
பிரீதி மகிழ்ச்சி ஓர் யோகம் மதநப்பிரியை நேயப்பேர்
வரீயான் சிரேட்டன் மிக்கிளைஞன் மாவித்தாரம் ஓர் யோகம்
கரீரம் கரிப்பல்லடி அகத்தி கலசம் கருவேல் மூங்கில்முளை
**750
#131
துரோகம் பழி மித்திரபேதம் துரோணி தோணி மலைச்சந்து
குரோடம் மார்பு மடி பன்றி குரோதி சினத்தன் ஓர் வருடம்
புரோடாசம் மாக்களி ஓமசேடம் சோமரசம் அவிசு ஆம்
துரோதரம் சூது அதின் ஒட்டம் நிரோதம் தடை கேடு அடக்கப்பேர்
**751
#132
நராங்கம் முகநோய் ஆண்குறி ஆம் வராங்கம் யானை யோனி தலை
பிராந்தரம் கானகம் நடப்பில் தூரமார்க்கம் மரப்பொந்து
பிராந்தி இல்லாதனதோற்றல் சுழற்சி மயக்கம் எனப் பேசும்
நரேந்திரன் வார்த்திகமுடையோன் விடவைத்தியன் நராதிபனே
**752
#133
இராகம் மற்சரம் கிலேசாதி அநுராகம்
இச்சை காந்தாராதி சிவப்பாதி என்ப
பராகம் பூந்துகள் கியாதி உபராகம் பூப்பு ஓர்
பருப்பதம் சந்தநம் முழுக்குப்பொடி தூளி எண்பேர்
நிராகாரம் உபவாசம் உருவமிலாமையும் ஆம்
நிரூபணம் காட்டுதல் விசாரித்தல் திருட்டாந்தம்
பிராசாதம் இராசமாளிகை தேவாலையப்பேர்
பிராணநாதன் மறலி தன்னுயிருக்கு இறைவன்
**753
#134
இராசீவம் வரைக்கெண்டை தாமரை ஓர் மான் ஆம்
இராதிநி சல்லகி நதி வச்சிராயுதம் மின் இடிப் பேர்
வராடகமே பெருங்கயிறு பலகறை தாமரைக்காய்
வராடி பலகறை ஓர் பண் ஓர் இராகமும் ஆம்
கிராணம் மூக்கு இருசுடரை அராத்தொடல் மோப்பதும் ஆம்
கிரீசன் வாக்கிறை கைலையாளி கிரிக்கதிபன்
புராணம் சற்காதி பஞ்சஇலக்கணக் காந்தாதி
புராணம் ஈரைந்து ஆணவெள்ளி பழமையும் ஆம்
**754
#135
பிராணன் உயிர் காற்று இதயவாயு இந்திரியம்
பெலம் போளம் பிரணவம் காரியமருமம் வாழ்நாள்
இராதை விசாகம் விண்டுக்கிராந்தி நெல்லி மின்னல்
இடைச்சியரில்ஒருத்தி கருணனைவளர்த்தாள் என்ப
கிராமணி நாவிதன் கிராமாதிபன் அதிபன் முக்
கியன் போகமுடையன் மாதங்கி விலைமகள் பேர்
இராமம் அழகியது வெண்மான் வெள்ளை கறுப்பு என்றாம்
இராமன் இராகவன் பலராமன் பரசுராமன்
**755
#136
கிராமம் ஐம்புலன்களின் பூர்வகமான திரள் ஏழ்
கீத சொரங்களின் திரள் ஊர் நீர்ப்பறவை நாற்பேர்
பிராமி பொன்னாங்கண்ணி ஓர் இலைக்கறி ஓர் மாதா
பிரமசத்தி நாமகள் வெள்ளெறும்பு உரோகிணிநாள்
பிராயம் மிகத்திரண்டது ஒப்புமை வயது மரணப்
பேறு துறந்து உபவாசம் சாமளவும்செய்தல்
பிராலம்பம் தொங்கலிடுமாலை திரா மேகம்
பிரேதம் ஓர் பைசாசம் பிணம் நரகசெந்து
**756
#137
சுராலையம் மேருச் சுவர்க்கம் கள்விற்கும்வீடு
துரோடி சிறுகுமிழ் ஓர் புள் புள்அலகு ஓர் மீன் பேர்
இரீதி நீர்ப்பெருக்குப் பித்தளை கிட்டம் வழக்கம்
இயல்பு மரியாதை உருகினது வைதருப்பி
உரூபகம் நாணகம் கிரந்தம் பசு விருத்தம் செயுள் சொல்
லுருபு இயல்பு நாடகம் சக்கிராதி வடிவு அழகு ஆம்
குரூரம் வெப்பம் கடிநம் பயங்கரம் பொறாமை
குரூரன் வெகுளியன் தயையிலான் பரத்துரோகி
**757
#138
உரோகிணி கந்நிகை சிவப்பி அலாயுதன்தாய் பசு ஓர்
உடுக் கடுரோகிணி பெரியகுமிழ் கண்டரோகம்
உரோகிதம் செவ்விய இந்த்ரதநுச் சிவப்புச் செங்கீற்
றுஉழை ஓர் முத்தாரம் செங்கயல் குங்குமமும் ஆம்
சிரேணி தெரு ஒழுங்கொடு கண்ணாளர்குலத்திரள் பேர்
சிரேயசு மோக்கம் தருமம் சுபம் சிலாக்கியம் ஆம்
உரோடணம் வெள்ளிரதம் உவர்த்தறை சினம் பொன்னுரைகல்
உரோதநம் கண்ணீர் ஒலியாயழுதல் சோறு எனுமே
**758
#139
கராளம் உக்கிரம் உந்நதம் மேடுபள்ளமானது கணிச்சி வெண்ணெய்ப் பேர்
இரேசநி சிவதை ஞாழல் நேபாளவிதையொடு மநோசிலை என்ப
சிரேயசி அரத்தை கடுமரம் யானைத்திப்பலி பங்கம்பாளையும் ஆம்
புரோதமே தொடுக்கப்பட்டது பரியின்மூக்குப் பின்னரை உண்டை புடைவை
**759
#140
வராகம் கோரை போர் பன்றி மலை முகில்
பிராசநம் உழவுகோல் அருத்துதல் ஆம்
தராதரம் யோக்கியாயோக்கியம் சைலம்
பராபவம் எளிமை கேடு அவமாநம்
**760
#141
பிராமணம் வேதம் பிராமணர்தம்திரள்
பிராமணி சிறுதேக்கொடு பார்ப்பனி பெயர்
சிரீவாசம் சாம்ப்ராணி செந்தாமரை
வரூதிநி ஓர் அரமகளும் சேனையும்
**761
#142
அரேணு கடலை வால்மிளகு குலப்பெண்
கரேணு மதகயம் கரிப்பிடி கோங்கு
இரேவதி கடைநாள் அலாயுதன்தேவி
இரேவை நருமதை நீலி என்றாம்
**762
#143
இராக்கதி இராக்கதப்பெண் சன்னக்கச்சோலம்
பராக்ரமம் மிகுவலி சாமர்த்யம் உத்தியோகம்
இராட்டிரம் தேசம் நகருளசநம் உற்பாதம்
விராட்டு இரண்டாம்வருணன் கருடன் விரிஞ்சனும் ஆம்
**763
#144
சிராத்தம் தென்புலத்தோர்க்கு ஊட்டுகை சிரத்தையுளது ஆம்
பிராத்தி ஓர் ஐச்சுரியம் அடைதல் இலாபப்பேர்
உரூப்பியம் சுந்தரம் வெள்ளி வெள்ளிக்காசு அதன் பூண்
சிரேட்டன் அதிமுக்கியன் மேதகவுடையோன் தந்தன்
**764
#145
புரூணம் மகளிர்சூல் சிசு ஆம்
இரேபன் குரூரன் பழிப்புள்ளோன்
பிரேமம் நேயம் பரிகாசம்
உரோபம் பாணம் மநக்கலுடம்
**765
#146
பிராசேதன் வான்மீகி வருணன்
பிராசீநர் முன்னோர் கீழ்த்திசையுள்ளோர்
பிராதாநியம் முக்கியம் பிரபுத்துவம்
திரேதா மூவகைத்தீ ஓர் யுகம் ஆம்
**766
#147
கோரகம் மலர்மொட்டுத் தாமரைச்சுருள் தக்கோலப்பேர்
தாரகம் விண்மீன் கண்ணின்மணி பிரணவம் ஆதாரம்
சாரகம் மீன்புள்ளாதி படுக்கின்ற கயிறு அரும்பு ஆம்
தோரணம் வாகநம் பைங்குழைத்தொங்கல் வெளித்துவாரம்
**767
#148
சாரணர் கற்றுப்பாடுவோர் சமண்முநிவர் ஒற்றர்
தாரணி ஒழுங்கு பூமி நாரதம் முகில் நாரத்தை
பூரணை ஐந்தாம் வட்டத் திதி புறத்தவன்தன்தேவி
ஆரம் முத்தாரம் மாலை பூடணம் மணிவடப்பேர்
**768
#149
கீரம் நீர் பால் கிளிப் பேர் கூரல் புள் சிறகு கூந்தல்
கோரம் வெய்தெனல் சோழன்மா வட்டில் போர்க்குதிரை அச்சம்
வீரம் வேர்க்கொம்பு வெற்பு ஓர் சிவாகமம் மிகுவலிப் பேர்
ஆரல் கார்த்திகைநாள் செவ்வாய் அனலொடு மதில் ஆரல்மீன்
**769
#150
சாரன் ஆசுகன் ஒற்றன் தூர்த்தன் சோரபுருடன் என்ப
சூரன் ஓர் அவுணன் வீரன் சுநகன் குக்குடம் ஆதித்தன்
தீரன் மெத்தெனச்செல்வோன் பண்டிதன் மநம்கலங்காதோன் ஆம்
ஓரி ஆண்மயிர் உரோமம் கிழநரி முசு ஓர் வள்ளல்
**770
#151
சேரி ஊர் தெருவும் ஆகும் சீரியர் சிறந்தோர் செல்வர்
நாரி பெண் உமை வில்நாண் ஆம் நார் அன்பு பனைநாராதி
காரிகை கொடும்துக்கம் சூத்திரஉரைக்கவி கவின் பெண்
பாரிபத்திரமே தேவதாரம் முள்முருக்கு வேம்பு ஆம்
**771
#152
ஆரியம் விந்த வெற்பின் வடதேயம் வடமொழிப் பேர்
பூரியம் இராசவீதி பூபர்தம்இருக்கை ஊர் ஆம்
ஆரியர் குரவர் சான்றோர் ஆயுள்வேதியர் மிலேச்சர்
ஆரியன் குரவன் ஐயன் அறிஞன் உத்தமகுலேசன்
**772
#153
ஆரியை பூச்சியப்பெண் ஓர் சந்தசு உமை ஆசாள் பேர்
காரு காருகன் கண்ணாளன் விச்சுவகன்மா சிற்பம்
சாரு சுந்தரம் கிளிப் பேர் மாருதி அநுமன் வீமன்
காருகவினை சுமத்தல் உழுதல் நூல்நூற்றல் நெய்தல்
**773
#154
காருடம் ஓர் புராணம் மரகதம் கருடதந்த்ரம்
வாருணி சதையம் மேற்கு ஓர் மதுக் குடமுநி ஓர் தூர்வை
ஆரை தோலுளி புற்பாய் ஓர் நீர்ப்புதல் மதிலும் ஆகும்
தோரை கைவரை மூங்கில்தண்டுலம் சரமணி ஓர் நெல்லே
**774
#155
கைரவன் பகைஞன் வஞ்சன் கைரிகம் பொன் நற்செங்கல்
பைரவன் பயங்கரத்தன் உருத்திரன் கேத்ரபாலன்
பைரவி ஓர் இராகம் ஓர்பண் பாலைக்கிழத்தி
சௌரியே கருடன் கன்னன் சநி யமன் துற்கை மாயோன்
**775
#156
ஆரம்பம் கொலை தொடக்கம் பெருமிதம் பதற்றம் ஆகும்
ஏரம்பம் பராக்ரமத்தின் செருக்கு எருமைக்கடாப் பேர்
மாரண்டம் வழி பாம்பின்பீள் பேருண்டம் பயம் நேமிப்புள்
வாருண்டம் செவிமலம் கண்பூளை நீரிறைக்கும் வட்டில்
**776
#157
ஆர் பன்மைவிகுதி தேருள்செறிகதிர் ஆத்தி கூர்மை
கார் புனல் புயல் கறுப்பு ஆண்மயிர் ஒரு பருவகாலம்
சீர் தண்டாயுதம் துலாம் காத்தடி திருச் செல்வம் செய்யுள்
சீர் கநம் வரிசை நன்மை புகழ் செவ்வி தாளவொத்தே
**777
#158
சூர் தெய்வம் பயம் அஞ்சாமை துன்பம் நோய் வஞ்சம் சூரன்
தார் கொடிப்படை புட்பம் பூந்தாமம் கிங்கிணிக்கோவைப் பேர்
தேர் உரோகிணி ஓர் ஊர்தி தேர்தலே தெளிவு ஆராய்தல்
நீர் புனல் நீவிர் பண்பு ஆம் நேர்மைதான் இணக்கம் நுண்மை
**778
#159
நேர் சமம் இணக்கம் செவ்வை நிகர் எதிர் ஓர் அசைப் பேர்
போர் சமர் சதையம் நெல்போர் போர்வை போர்த்துறு படாம் தோல்
வார் புனல் கச்சு நீளம் தோலின்வார் வகிரும் ஆகும்
ஊர்தல் ஊருதல் செலுத்தல் ஊர்தி வாகநம் ஊர்வோன் ஆம்
**779
#160
தீர்தலே தொலைதல் நீளல் விடல் முடிவாக்கல் செல்லல்
நேர்தலே எதிர்தல் வேண்டல் உடம்படல் சிறுகல் நீடல்
வார்தலே ஒழுகல் நீளல் வகிர்தலோடு உயர்தல் என்ப
கூர்மம் ஓர் புராணம் ஆமை கூர் என்ப மிகுதி கூர்மை
**780
#161
ஊர்மிகை சேலைப்பங்கம் தரங்கம் மோதிரம் வண்டோசை
ஆர்வமே ஆசை அன்பு ஆம் ஆர்வத்தர் காந்தர் அன்பர்
சார்வரம் கொலை இருள் பேர் சார்வு பற்று அடைவு சார்ச்சி
சேர்வு வீடு ஊர் திரட்சி தீர்வை தீர்ப்பது கீரிப் பேர்
**781
#162
பாரசவம் ஆயுதம் இரும்பு ஆம் மூரல் சோறு பல் சிரிப்பு
பாரசவன் சூத்திரையிடத்துப் பார்ப்பார்க்கு உதித்தோன் அசதிமகன்
பாரதம் பஞ்சமவேதம் வெண்சூதம் பாரதவருடம்
ஈரம் நனைந்தது அன்பு மிருகேசன் பாம்பு வயிரமணி
**782
#163
தீரம் நதியின்கரை ஈயம் கடல் குங்குமம் சித்தத்துணிவு ஆம்
பூரம் விரணசுத்தி புனல்பெருக்கு ஓர் நாள் பூரணமும் பேர்
சோரன் துருவைப்பறழ் கள்வன் வீரன் சிரேட்டன் சிநன் சூரன்
மாரி ஓர் நோய் வடுகி முகில் மழை நீர் கள்ளுச் சநநாசம்
**783
#164
மூரி நெரிவு சோம்பு வலி முந்தை பெருமை எருது எருமை
வீரி காளி வீரமுளாள் வேரி மருக் கள் இருவேலி
காரியம் செய்தொழில் பயன் ஆம் கார்முகம் ஆயுதம் வில் வேய்
பூருவம் முந்தினது கிழக்கு எழுவாய் முன்பு புராதநமே
**784
#165
ஆரகன் கள்வன் கபடி ஆர்தல் உண்டல் நிறைதல் பேர்
பாரிடம் பூதம் புவநம் பார்வல் குஞ்சு மான்கன்று
சூரியன் சோழன் பகலோன் தூர்வை தூர்த்தசேறு அறுகு ஆம்
ஈரை எறும்பு சீதேவி ஏர் ஒப்பு அழகோடு உழும் ஏரே
**785
#166
தாரகன் ஓடம்வலிப்போன் புத்திரன் ஓர் அசுரன்
தாங்குவோன் திருமாலின்சாரதி மகேசன்
சாரசம் வண்டானம் வெண்நாரை தாமரைப் பேர்
சாரிகை நாகணவாய்ப்புள் யாழ்வாசிக்கும்கோல்
காரம் வலி இமசைலம் கொலை முயற்சி எதுகை
கார்ப்பு எழுத்தின் சாரியை நிச்சயம் பொரிகாராதி
சாரங்கம் பலநிறம் வண்டு ஓர் புள் ஓர் இராகம்
சாதகப்புள் யானை மான் சலதரம் என்று எண்பேர்
**786
#167
சாரம் வலி எலும்பு முரள் சுவை மரக்காழ் மேன்மை
தநம் சூதுக்கருவி ஒற்றாள்வினை நடை நீர் மருந்தின்
சாரம் வளைமண் உவர்ப்புப் பலநிறம் நீறு உப்புச்
சார்த்துயர்த்தும் மேடு பந்தம் தக்கது இருபான்பேர்
சீரம் வாள் கலப்பை மரவுரி கிழிந்ததுணி நற்
சேலை பசுவின்முலை சூட்டொடு துத்தநாகம்
தாரம் விண்மீன் கண்மணி ஓர் யாழிசை வல்லிசை கா
தலி வெள்ளி ஆணிமுத்து முத்தின் தூய்மையுமே
**787
#168
வாரம் அவசரம் கூட்டம் நேயம் கள்கிண்ணி
மலைச்சார்பு கிழமை பங்கு வாயில் அரண்மனை ஆம்
காரி விடம் நாற்குறுணி சநி வடுகன் ஐயன்
களர்நிலம் முந்நீர்க்காரி கருமை ஓர் வள்ளல்
சாரி சுழல்காற்று உலாப்போதல் சுங்கம் யானைத்
தவிசு வட்டமாய்ஓடல் சூதுக்காய் பூவை
சீரி அலாயுதன் கச்சை சிள்வீடு முப்பேர்
சீருள் சீர் உடைமையும் வெண்கலம் செம்பாதியுமே
**788
#169
சூரி சூரியன் புலவன் காளி வடுகன்தாய்
சோர்தல் வாடுதல் தளர்தல் வழுவல் அயர்த்தலும் பேர்
பாரி இபக்கால்கயிறு ஓர் கடைவள்ளல் கெண்டி
பானை பராகம் பூமி மனைவி கநமுளது ஆம்
வாரி நீர் கடல் வெள்ளம் மதில்சுற்று வருவாய்
வழி யானைப்படுகுழி வந்திப்போன் வாணியும் ஆம்
பாரிசாதம் முள்முருக்கு ஓர் தேவவிருக்கம்
பார் பூமி தேர்ப்பரப்பு உரோகிணிநாள் எனுமே
**789
#170
வீரியம் பராக்கிரமம் பிரபாவம் தேசு
மிகவலிய உற்சாகம் சுக்கிலத்தாதுவும் பேர்
தாரு மரக்கொம்பு பட்ட வறள்மரம் செந்நுணா ஆம்
தார்வி மஞ்சள் மரமஞ்சள் செந்நுணாமரப்பேர்
காருசம் காட்டுஎள் எழுது சித்திரம் நாகப்பூக்
களபம் நுரை நாவி புற்றுக் காவிக்கல் என்ப
ஓரை இலக்கநம் சமையம் மகளிர்குழாம் அவர் ஆ
டுதல் ஆடும் களன் காலஓரை இராசியுமே
**790
#171
தாரை ஆயுதநுனி முன்னணிப்படை விண்மீன் சந்
ததி பரியின் ஐங்கதி சுக்கிரீவபன்னி ஊதும்
தாரை சுரகுருபன்னி கருவிழி மேம்பாடு
சலம்வீழ்தல் மழைத்தாரை வழி உருளின்விளிம்பு ஆம்
வீரை பெருங்குமிழ் ஏலாவாலுகம் பேயத்தி
வெள்ளீறில் சமுத்திரம் கிங்கிணிப்பாலை வாழை
வீரைமரம் நறாக் கருங்காகோளி தாமலகி
வீரப்பேருளஊர் நாயகபுத்ரவதியே
**791
#172
கௌரம் எனல் வெண்கடுகு தூயது வெண்சிவப்புக்
கமலப்பூந்தாது பொன்மை நிலவின் விசுத்தமும் ஆம்
கௌரி மநோசிலை ஞாழல் பார்ப்பதி பூப்பில்லாக்
கன்னிகை பொன்னிறப்பெண் வருணன்மனைவி பூமி
பௌருடம் ஆண்தன்மை புருடன் கையெடுப்பளவு
பராக்கிரமம் ஆண்தொழில் ஆண்தேசு என ஐம்பேர்
பௌருடேயம் புருடர்திரள் அவரால் செய்யப்
பட்டது அவர் அநுகூலம் அவர் கொலை விகாரம்
**792
#173
சீரணம் இரு சீரகம் பெருங்காயம் சுவர்ச்சிகை கிழிந்தது சீன்றம்
வாரணம் சங்கு துகில்கொடி கோழி மதாவளம் தடை கடல் என்ப
பாரம் அக்கரை தோள்சுமை கநம் இரண்டாயிரம்பலம்கொண்டது வரம்பு ஆம்
காரவி கருஞ்சீரகம் சதபுப்பி காயப்பத்திரி மயில்சிகையே
**793
#174
சாரதம் வற்சரம் புதிது ஏழிலைப்பாலை பீதமுற்கம்
தாரதமே வெள்ளிரதம் விடபேதம் சாதிலிங்கம்
சாரதி நீர்த்திப்பலி தேர்க்கடைப்பூடு தேர்ப்பாகன்
பாரதி வாக்கு ஓர் விருத்தி பாமடந்தை மரக்கலமே
**794
#175
ஊரணாயுச் சிலம்பி ஆடு அதன் கம்பளமும் பேர்
வேரம் எனல் குங்குமம் சேப்பங்கிழங்கு தேகமும் ஆம்
பூரி திரண்டது நரணி பொன் கலப்புநெல் என்ப
ஆரிடம் ஓர் மணம் இருடியின்வசநம் ஆகமமே
**795
#176
சாரகன் குதிரைப்பாலன் சஞ்சாரகன்
தாரகை நக்கத்திரம் கண்கருவிழி
மோரடம் கரும்பின்வேர் நற்பாலும் ஆம்
ஆரணம் வேதம் அதன் ஞானபாகையே
**796
#177
சூரணம் கருணை தூள் ஓர் உவர்ப்பு என்ப
பூரணம் நிறைவு ஓர் பிட்டும் எல்லாமும் ஆம்
பூரணி இலவமரம் நிறைவுள்ளவள்
வாரவாணம் கவசம் குப்பாசமே
**797
#178
ஓரம் எனல் அருகிடம் பக்கபாதமும்
நாரம் நீர்ப்பாசி நாரத்தை நீர் எனும்
சாரல் மருதயாழ்ப்பண் தாழ்வரையும் ஆம்
பீரு சதாவரி அச்சமுள்ளோன் பெயர்
**798
#179
வீருதம் கிளைசேர்கொடி மிடைதூறு
வாருணம் மேற்கு ஓர் சலசரம் வாரிதி
தூர் அடி வேர் பாரம் தேர்முகப்பு ஆம்
பீர் முலைப்பாலின்துளி பசலைப் பேர்
**799
#180
பௌரம் புரோற்பவப்பொருள் காவட்டம்புல்
கௌரவர் குருகுலத்தவர் கநமுடையோர்
சௌரியம் கள்ளத்தனம் பராக்கிரமம்
கௌரிளம் இரும்புப்பொடி கடுகு என்ப
**800
#181
வீரட்டாநம் கூத்தின் விகற்பம் வீரம்செய்தலம்
பாரத்வாசன் வில்நூலாளன் காட்டுப்பருத்தி
பாரித்தல் வளர்த்தல் நியமித்தல் பரப்புதல் பருத்தல்
பூரித்தல் உவத்தல் நிறைத்திடல் பருத்தல் பொங்குதலே
**801
#182
தாராடம் கொய்யுளைப் பாய்மா சாதகப்புள் என இருபேர்
ஆராதநம் சித்தித்தல் உகப்பித்தல் சமைத்தல் பேறடைதல்
தாராதரம் கைவாள் மேகம் தாராங்கம் வாள் புனல்துறை ஆம்
நாராயணன் சந்திரன் கடற்குகாதன் பிரமன் சிவன் திருமால்
**802
#183
பாராவதமே சிலம்பி புறாத் தும்பில்மரம் பற்பதம் என்ப
பாராவதி முல்லைக்கீதம் புறாவின்பெடை முத்தாபலம் ஆம்
ஆரோகணம் ஏறுதல் ஏறும்படி நிற்கமம் முன்வாயில் எனும்
ஆரோகம் ஏறுகை உயர்ச்சி நீட்சி நிதம்பம் அங்குரமே
**803
#184
நாராசம் எனல் இரும்புச்சலாகை நீர்யானை
நாராயணம் அச்சுவத்தமரம் மீன் பேர்
பாராயணம் முடித்தல் பற்றுதலுமான
படிப்பு எல்லாம் அங்குசபந்தநம் கரையின்வழிப் பேர்
நாராயணி திருக்கோகநதை துற்கை கங்கா
நதி ஓர் பண் ஓர் இராகம் சதாவரி ஆம்
மாரீசம் தக்கோலம் ஓர் உபபுராணம்
மாமாயம் இராசமாதங்கம் நாற்பெயரே
**804
#185
தீர்க்கம் நிச்சயம் நீளப்பேர் மார்க்கணம் தேடல் அம்பு ஆம்
மார்க்கம் மார்கழி மான்தோல் மான்மதம் வழி தெரு ஓர் கூத்து
பார்க்கவன் மழைக்கோள் நல்ல வில்லாளி பரசிராமன்
பார்க்கவி அறுகம்புல் ஓர் சத்தி பாற்கடல்பிறந்தாள்
**805
#186
ஊர்ச்சம் கார்த்திகைமாதம் விக்கிரமம் உற்சாகம் முப்பேர்
கூர்ச்சம் ப்ரூநடு வஞ்சம் பொய்த்துதி குசமுடிச்சு மீசை
மார்ச்சநம் வெள்ளுலோத்ரம் துடைத்தல் தூய்தாக்கல் மன்னும்
கூர்ச்சிகை கெட்டபால் பூமொட்டுத் தூலிகைக்கோல் ஊசி
**806
#187
சார்த்தம் சஞ்சார செட்டித்திரள் சகிதம் சமூகம்
வார்த்தமே பதர் நோயின்மை வார்த்தை சீவநம் பேச்சு என்ப
ஆர்த்தல் கட்டுதல் ஒலித்தல் பொருதல் மின்னுதல் நிறைத்தல்
ஆர்த்தவம் இருதுவின் சம்பவம் பூ அங்கநைமார் பூப்பு ஆம்
**807
#188
தீர்த்தன் மால் அருகன் ஆசான் பரிசுத்தன் குருச் சிவன் பேர்
கீர்த்தி வித்தாரம் சேறு புகழ் அநுக்கிரகம் என்ப
கார்த்திகை ஓர் மாதம் செங்காந்தள் ஓர் நாளும் ஆகும்
ஊர்த்துவம் உயர்வு மேல்நோக்கியது மேலுயர்ந்ததும் பேர்
**808
#189
கூர்ப்பரம் முழங்கை சாநு கூர்ப்பு என்ப உவர்ப்புக் கூர்மை
பார்ப்பரம் கயநோய் நீறு சோற்றுஅவிழ் கடப்பந்தாது ஆம்
ஆர்ப்புப் போர் சிரிப்பு ஒலிப்பு ஆம் ஓர்ப்பு என்ப பொறுமை தேற்றம்
பார்ப்பு என்ப தவழும்சாதி குரங்கு அணில் பறழ் புள்குஞ்சே
**809
#190
கீர்த்தநம் தோத்திரம் பாட்டு ஆம் பேர்த்தல் பிடுங்கல் கிளப்பல் பேர்
ஈர்த்தல் இழுத்தல் போழ்தலும் ஆம் வார்த்தளம் வாள் பொல்லாநாள்
தீர்த்தல் தொலைத்தல் முடிவாக்கல் தூர்த்தல் சீத்தல் நிரப்புதலும்
வேர்த்தல் வியர்த்தல் சினக்குறிப்பு ஆர்த்தி துன்பம் வில்குதையே
**810
#191
தீர்த்தம் உபாயம் யோநி பூப்பு அவதாரம் பாத்
திரம் நீர் புண்ணியத்தலம் நீர்த்துறை முநிவர் தோய்ந்த
தீர்த்தம் அவர் சொல்லிய நூல் விழா வேள்வி குரு மந்
திரி கிணற்றுத்தொட்டி தெரிசநம் ஒழியாக்கொடை ஆம்
தூர்த்தம் இரும்புக்கிட்டம் ஊமத்தை என்ப
தூர்த்தன் சூதாடுவோன் தெட்டுவோன் விடன் பேர்
மூர்த்தம் எனல் கடிநம் முத்தமாங்கம் முகூர்த்தமும் ஆம்
மூர்த்தி காடிநியம் உடல் பிரதிவிம்பமும் பேர்
**811
#192
தார்க்கியம் குதிரை தேர் மராமரப்பேர்
தார்க்கியன் கருடன் அவன் தமையனும் ஆம்
வார்த்தகம் மூப்புத்தொழில் மூப்பினர்திரள்
பார்த்தல் ஆராய்தல் தேடுதல் நோக்குதல்
@14 லகர வெதுகை
**812
#1
கலசமே குடமும் பாலும் கலவைதான் கலப்பு ஓர் சாந்து ஆம்
சலசம் தாமரை சங்கு என்ப சலநம் கால் அலைதலும் பேர்
அலசலே கழுவல் சோம்பல் அலவனே நண்டு பூனை
உலமரல் துயர் துண்ணென்றல் அலறல் கத்துதல் ஒலித்தல்
**813
#2
குலம் உடல் வீடு ஓர் சாதித்திரள் நாடு கோத்திரப்பேர்
நிலம் இடம் தறை பூமிப் பேர் நிலவு ஒளி மதி நிலா ஆம்
புலம் வயல் புலன் இடப்பேர் புலன் அறிவொடு ரூபாதி
பொலம் என்ப பொலன் பொல்லாங்கு ஆம் புலவு என்ப முடை புலாலே
**814
#3
மலம் விட்டை அழுக்குக் கிட்டம் பாவம் பன்னிருமலப்பேர்
வலம் வலி இடம் வலப்பால் வலனே ஓர் அசுரன் வெற்றி
வலயமே வளையம் கண்டரோகம் கங்கணம் வட்டப்பேர்
அலரி பூங்கணை கவின் கண்வரி பூ ஓர் மரம் அருக்கன்
**815
#4
புலர்தலே வெடிதல் வாடல் புலி ஓர் சாந்து ஓர் விலங்கு ஆம்
இலலநை சுகுமாரப்பெண் பரிகாசத்தினள் நாக்கு என்ப
பலலம் எள்பொடி சேறு ஊன் ஆம் பலிபுட்டம் காக்கை கொக்கு
இலவணம் உவர்ப்பு உப்பும் பேர் எலி பூரநாள் ஓர் செந்து
**816
#5
புலவர் பாடுநர் கண்ணாளர் பொருநர் விற்பந்நர் வானோர்
புலவன் இந்திரன் கண்ணாளன் புதன் செவ்வேள் அறிஞன் கூத்தன்
வலவனே வெற்றியாளன் தேர்ப்பாகன் வல்லவன் பேர்
உலவை மாருதம் மரக்கொம்பு ஓர் மரம் தழை மருப்பு ஆம்
**817
#6
வலவை வல்லவன் வஞ்சப்பெண் இடாகிநி வல்லோள் என்ப
இலளிதம் பிரியம் ஓர் சிவாகமம் அழகு இச்சைப் பேர்
இலளிதை ஓர் முத்தாரம் பராசத்தி ஓர் இராகம்
கலனை ஒன்றற்கு வேண்டும் உபகரணம் கலப்பை
**818
#7
கலன் அணிகலன் கோளன் கீழ்மகன் துட்டன் கலத்தின் பேர் ஆம்
நலன் என்பது அழகு நன்மை நலிதலே மெலிதல் நைதல்
விலகுதல் தவிர்தல் நீங்கல் விலங்கலே விலகல் வெற்பு ஆம்
கிலம் அற்பம் பாழ்நிலப்பேர் கிலேசம் நோயாதி துன்பம்
**819
#8
அலி நறுவிலி வெளிற்றுமரம் அலாயுதன் பேடிப் பேர்
ஒலி இடி ஓசை காற்று ஆம் ஒலியல் தார் நதி தோல் சேலை
கலி ஒலி மிடி அநீதம் போர் கடையுகம் ஓர் பா ஆம்
பொலிவு மங்கலம் எழுச்சி புணர்ச்சியும் மிகுதியும் பேர்
**820
#9
நிலையம் ஊர் வீடு கோயில் நிலைமை மெய் நிற்கும்தன்மை
உலை அனலால் கொதிக்கவைக்கும்நீர் கொல்லுலைப் பேர்
குலை அம்பின் குதை காய்க்கொத்துச் செய்கரை வில்குதைப் பேர்
தலை இடம் பெருமை ஆதி சிரசு மேல் தலைமை என்ப
**821
#10
இலக்கியம் இலக்கணத்தது உதாரணம் நிபம் இலக்கு ஆம்
உலத்தலே கெடுதல் சாதல் புலர்த்தல் பூசுதல் உலர்த்தல்
கலித்தலே பொலிவு எழுச்சி பெருகல் கக்குதல் ஒலித்தல்
சலித்தலே அசைதல் சல்லல் சடைத்தல் சஞ்சலித்தலும் பேர்
**822
#11
பலங்கடம் முருக்கு அரத்தை நெருஞ்சி குற்குலுச் செம்பஞ்சு ஆம்
கலம்பகம் ஓர் ப்ரபந்தம் கலப்புளது அளாவுதல் பேர்
புலம்பல் கோசனை பிதற்றல் புலம்பு ஒலி தனிமை அச்சம்
வலம்புரி பணிலச்சங்கு ஓர் மரம் நந்தியாவட்டப்பேர்
**823
#12
பிலம் குகை அளை தொளைப் பேர் பிலவங்கம் குரங்கு தேரை
மலங்கல் நீர்நிலை கலங்கல் மலையன் ஓர் வள்ளல் வெற்பன்
குலிங்கம் ஊர்க்குருவி காக்கை கொலைஞர் சண்டாளர் வேடர்
புலிங்கம் தீப்பொறி சிட்டுப்புள் புலை நீசத்தனம் புலாலே
**824
#13
உலகம் உயர்ந்தோர் சநம் புவநம் உலகு திசை விண் புவி நாடு ஆம்
புலகம் மணித்தோடம் வச்ரம் புழுத் தாளகம் கள்கிண்ணிப் பேர்
அலசம் காலின்நோய் சோம்பல் அலையல் அலைதல் ஆலசியம்
வலசம் பயிர் கோபுரவாயில் வயல் நெல்குதிர் அங்கீகாரம்
**825
#14
வலசை புவி நற்பார்வையுளாள் மலர்தல் அலர்தல் விரிதலும் ஆம்
இலயம் அழிப்புத் தழுவுகை ஒத்தறுப்பு நாட்டியத்திரையம்
மலயம் தேசம் ஆராமம் வரையின் பங்கு பொதியமலை
அலர் நீர் பழிச்சொல் விரிந்தமலர் பலரும் அறிந்து தூற்றலும் ஆம்
**826
#15
பலிகம் கும்பம் உறிக்கலையம் குலிசம் வயிரப்படை ஓர் மீன்
மலிதல் மிகுதல் நிறைதலும் ஆம் மலிநம் அழுக்காகியது கறை
மலிநமுகம் தீ பிணம் முசுப் பேர் மலிநமுகன் துற்சநன் இறந்தோன்
கலுழி கலங்கல்நீர் முல்லைக்கானயாறு கலங்கினோன்
**827
#16
திலகம் ஓர் பரி நீலச்சுவர்ச்சிகை மஞ்சாடி
தேகமறு நுரையீரல் திலதம் உரோமமும் ஆம்
அலகு எனல் நெல்மணி துடைப்பம் கவடி புள்ளின்மூக்கு எண்
ஆயுதக்கூர்ம்புறம் கதுப்பு நுளம்பு மகிழ்விதைப் பேர்
இலகு சீதேவிப் பேர் செங்கழுநீர் சார
மின்மை சுந்தரம் குறளானது நொய்ம்மை என்ப
இலதை வாலுழுவை மாதவி சீதேவிப்பூடு
இளங்கொடி கத்தூரி மரச்சினை அறுகு ஞாழல்
**828
#17
திலபன்னி திருவேட்டப்பிசின் வெண்சந்தநப்பேர்
சிலை ஒலி வில் வாயில்கீழ்ப் படிமரம் கல் வெற்பு ஆம்
அலம் அமையுமெனல் கலப்பை தேள்கொடுக்கும் ஆகும்
அலங்காரம் அணிகலன் கட்டழகு உவமையாதி
கலம் அசீரணம் கற்கம் மரக்கலம் மட்கலம் உண்
கலம் களம் யாழ் படைக்கலம் முத்தூணி இந்திரியம் ஆம்
சலம் வெட்டிவேர் புனல் வஞ்சனை முள்பன்றியின்முள்
சளம் அழுக்காறு அலைவது சீதனப்பொருள் என்று எண்பேர்
**829
#18
தலம் வில்நாண் முன்கையில் தாக்காது கட்டும் தடைத்தோல்
சமபூமி வாளாதிப் பிடி அகங்கை தேவத்
தலம் விரித்தகை படர்ந்தது ஆதாரம் சொபாவம்
தறை கீழானது காலின்உள் பனையும் சாற்றும்
பலம் வலிமை சமர்த்து உருவம் இந்திரியம் ஏதுப்
பருமை எலும்பு ஊன் படைவாள் உன்மாந அளவின்
பலம் இலாபம் போளம் பயன் சாதிக்காய் காய்
பழம் படை கேடகம் தநம் ஆயுதநுனி காகமும் ஆம்
**830
#19
இலலாமம் திலகம் பூடணம் முக்யம் அழகிது
இவுளி அடையாளம் வால் பதாகை பிரபாவம்
இலவம் இலேசம் மேடாதியின் மயிர் விலாசம்
இருகாட்டைப்பொழுது பயிர் முதல அரிதலும் ஆம்
பிலவம் அடைவில் தாழ்ந்த நிலம் குரங்கு ஓர் ஒலி நீர்ப்
பெருக்கு நீர்க்காக்கை இத்தி புணை விசையில் தாவும்
பிலவகதி தவளை வாசனைப்புல் கருந்தும்பில்
பெருங்கோரை தாராப்புள் மிலேச்சசாதியும் பேர்
**831
#20
சலகரங்கம் என்ப சங்கு தென்னங்காய் மேகம்
தலையல்புதுப் புனல்வரவு மழை பெய்து விடுதல்
பலி ஞாழல் காய்க்கும்மரம் நீறு உலுப்பை பூத
பலியாதி பூசை பிச்சை குடியிறை ஓர் அவுணன்
வலி உதரரேகை சாமரைக்காம்பு வீட்டு
மரவிசேடம் தோலின்திரை வன்மை நோ ஆம்
பலிதம் சித்தித்தது தாபம் சேறு கேச
பாசம் நரைமயிர் வெண்மையின்குணம் கற்பூவே
**832
#21
கலை நிருத்தம் கீதாதி புறக்கிரியை ஆலிங்
கந சும்பநாதி அகக்கிரியை சுறா எண்ணெண்
கலை கல்வி பாகையின் அங்கிசம் ஆறைங்காட்டைக்
காலம் மரக்காழ் மூலதந விருத்தி களை மே
கலை வண்ணப்பிரபந்தத்து ஓர் பந்தம் புல்வாய்
கருமான் ஆண்முசு நிவிர்த்தியாதி மந்திராதி
கலை புடைவை மதியின் சோடச பாகத்து ஒன்று
கலநை இடையாதி சரநடை சிற்பாதியுமே
**833
#22
இலக்கணம் வியாகரணம் உருவம் அடையாளம்
இலக்குமம் முக்கியம் அடையாளம் சிரேட்டமும் ஆம்
கலக்கம் அச்சம் துயர் குழப்பம் கலங்கல் தெளிவின்மை
கலப்பை உழுபடை ஒன்றற்கமைந்த உபகரணம்
இலக்குமணன் இராமாநுசன் சீமான் என்ப
இலக்குமி சம்பத்து அழகு ஞாழல் அரிப்பிரியை
வலித்தல் ஓடம்செலுத்தல் ஓர் விகாரம் சம்
மதித்தல் நோவுறல் நினைத்தல் வலிதாக்கல் இழுத்தல்
**834
#23
இலங்கை மரச்சினை துட்டை இலைக்கறி ஓர் புரி ஆம்
இலஞ்சி தடாகம் கொப்பூழ் மகிழமரம் என்ப
இலம்பகம் நூல்முடிவு நுதலணியும் மாலையும் பேர்
இலம்பம் எனல் உயர்வு விசாலமும் தொங்குதலும் ஆம்
இலிங்கம் அடையாளம் ஆண்கோசம் அநுமாநம்
இங்குலிகம் சாங்க்யபிரகிருதி சிவமூர்த்தி
கலிங்கம் வெட்பாலையின்அரிசி ஓர் தேயம் குடுமிக்
கடுவன்புள் ஆயில்மரம் புடைவை ஐம்பேர் காட்டும்
**835
#24
கலகம் கடுமை போர் வாளுறை பந்தநம்
கலிகை யாழ்மூலம் அலர்ந்த பூங்கொத்து
குலகம் பேய்ப்புடோல் புற்றுக் கருந்தும்பில்
குலிகம் இருப்பை இங்குலிகம் பந்தும் ஆம்
**836
#25
பலபத்திரன் பலதேவன் விறலோன்
பலபத்திரை திராய்ப்பூடு கற்றாழை
கலிலம் அறியொணாதது புகவொணாதது
கலுழம் கலங்கினது அழுக்குப் பாவமே
**837
#26
சலபதி வருணன் கடல் இருமிச்சை ஆம்
உலபம் விழல்புல் கிளையுடைக்கொடிப் பெயர்
பலனே பலராமன் பிரயோசநம்
தலிநம் நீக்கமுளது அற்பம் சயநம்
**838
#27
பலிநி ஞாழலொடு குப்பைமேனி
சிலிமீலிகை மின்மினி மின் கண்டிகை
புலுதம் பரியின் விசைக்கதி அளபெடை
அலையே கடல்திரை நீர்த்திரை ஆர்கலி
**839
#28
துலை துலாக்கோல் துலாம் ஏற்றமரத்துலை
நிலை முறை காலம் இடம் திரம் நிற்றல்
உலைதல் குலைதல் அழிதல் நடுங்கல்
மலைதல் பொரல் சூடுதல் துணிவின்மை
**840
#29
விலக்கநம் உதையராசி நுசுப்பு ஆம்
இலக்கம் கணக்கோடு இலக்கு நூறாயிரம்
பிலக்கம் ஓர் தீவு கல்லால் அரசு இத்தி
இலக்குக் குறி நிபம் எதிர் இலக்கமே
**841
#30
உலக்கை சிரவணநாள் உரலின்கை
மலர்ச்சி களிப்புப் பொலிவு மலர்ந்தது
சொலித்தல் இடத்தல் தீக்கொளுந்தல் சுடர்தல்
உலுத்தன் அவாவுளோன் வேடன் உலோபியே
**842
#31
இலங்கநம் கடத்தல் உணவின்மையும் ஆம்
அலங்கல் தளிர் பூமாலை ஒளிசெயல்
கலங்கல் குழம்பல் அழுதல் கலங்குதல்
விலங்கு ம்ருகப்பொது விலாங்கு கால்தளை
**843
#32
அலம்பல் கழுவல் ததும்பல் அரற்றல்
சிலம்பன் மலையன் செவ்வேள் கடவுள்
சிலம்பு பதத்திடும் ஓர் பூண் மலை ஒலி
கலிஞ்சகம் என்ப தடுக்கும் பாயுமே
**844
#33
சலகுன்மம் நீர்ச்சுழி ஆமை
செலவு வழிச்செல்லுதல் போக்கு ஆம்
பொலிதல் மிகுதல் புணர்தல் பேர்
கலுழ்தல் அழுதல் கலங்குதலே
**845
#34
கலத்தலே விரவல் புல்லல்
வலத்தலே வளைத்தல் பேசல்
தொலைத்தலே ஒழித்தல் தீர்த்தல்
மலைப்புப் போர் துணிவின்மைப் பேர்
**846
#35
வலாககம் மேகம் வெற்பு ஆம் மலீமசம் கசடு இரும்பு
துலாகோடி கால்சிலம்பு ஓர் நிறை பத்துக்கோடி சொல்லும்
பலாசம் ஓர் மரம் முருக்குப் பசுப்பு இலை கந்தமூலி
இலாடம் ஓர் தேயம் சேலை சலாதாரம் ஏரி பூமி
**847
#36
குலாயம் புள்கூடு வீடு ஆம் குலாவல் கோணுதல் கொண்டாடல்
இலேகையே எழுத்துப் பூமி இலேபம் போசநம் சாந்து என்ப
கலாம் சமர் கொடுமை கோபம் கலாபியே மயில் கல்லால் ஆம்
இலாங்கலி தெங்கு நீர்த்திப்பலி அலாயுதன் செங்காந்தள்
**848
#37
இலாங்கூலம் வால் ஆண்கோசம் இலாக்கை செம்பஞ்சு அரக்கு ஆம்
இலாஞ்சநம் அடையாளம் கைகாட்டு அபிநயமும் ஏற்கும்
சிலீந்திரம் ஓர் மீன் வாழைப்பூக் கவகம் சிற்றேலம்
சிலீந்திரி பறவைப்பெண் மண் பூநாகப்பெண்ணும் செப்பும்
**849
#38
கிலீபன் என்ப கபுஞ்சகன் விக்கிரமமில்லான் சநைச்சரன் ஆம்
இலீலை பரிகாசம் விளையாட்டு இன்பத்தொடர்ச்சிக் கிரியை எனும்
உலூகம் கூகை பாரதப்போர் உலூநகம் பிந்நம் பசு ஆம்
உலோமம் பரிப்பூண் பரி முதன்மையுளது திலகம் வால் என்ப
**850
#39
சலாகை தூலிகைக்கோல் முள்பன்றி முள்ளு நாரா
சம் குடை காந்தக்கல் அகல்மணி சவளம் எலும்பு ஆம்
தலாடகம் நாகப்பூக் காட்டுஎள் சுழல்காற்று அகழ்ந்த
தடம் குந்தம் வாகை நுரை கரிச்செவி காவிக்கல்
கலாபம் மயில்தோகை ஈரெண்கோவையுள மே
கலை கணைக்கூடு ஆபரணம் கூட்டம் மணிவடப்பேர்
துலாம் நூறு பலம் வீட்டு உத்திரம் ஓர் இராசி
துலாக்கோல் ஒப்புமை பாண்டம் திராசு நீர்த்துலாவே
**851
#40
இலாலசம் வேணவாஉள்ளது இரத்தல் அநுராகம்
இலாங்கலம் ஓர் பூக் கலப்பை கொடுங்கைமரம் பனைப் பேர்
விலாழி பரிவாயின்நுரை துதிக்கைஉமிழ்நீர் ஆம்
விலோமம் நாய் பெருங்கிணறு பாம்பு ப்ரதிகூலம்
உலோகம் நவலோகம் இரும்பு அகில் உலகம் சநம் ஆம்
உலோகிதம் செஞ்சாந்து செந்நீர் குங்குமம் போர் சிவப்பு
உலோசகம் கண்மணி இருள் காங்காடை நுதல்சுடிகை
ஊன்பிண்டம் மடமை காதணி நாணி வாழை
**852
#41
புலாகம் சுருக்கம் நெல்பதர் சோற்றுஅவிழ்
சிலாகை புகழுகை மெச்சுகை சேவை
விலாசம் விளையாட்டு இலீலாபிநயம்
சலாசயம் இலாமிச்சம் நீர்நிலையே
**853
#42
அலாதம் மரம்சுடுகரி குறைக்கொள்ளி
கலாநிதி கலைபலகற்றோன் சந்திரன்
குலாலம் கூகை கானாங்கோழி என்ப
சிலீமுகம் வண்டு பாணம் முலைக்கண்
**854
#43
உலூகலம் குங்கிலியம் உரல் கல்லால்
இலேகநம் பூர்ச்சம் எழுதுகை சேதம்
சுலோகம் ஆரியச்செய்யுள் சொல்மாலை
உலோலம் ஆசைமிக்குளது அலைவதுமே
**855
#44
உலூதை சிலம்பி எறும்பு ஓர் நோய்
இலேசம் இலேசு ஓர் அணி சடிதி
பிலேசயம் பாம்பு எலி கீரி
உலோபம் தொக்கது அவாவுடைமை
**856
#45
அல் இரா மெய்யெழுத்து ஓர் விகுதி அன்றெனல் இடைச்சொல்
கல் ஒலிக்குறிப்பு வெற்போடு அதன் பல்பேதம் காவிக்கல்
செல் இடி கறையான் மேகம் செல்லல் செல்லுதல் துன்பப்பேர்
சொல் புகழ் பேச்சு நெல் ஆம் தொல்லை தொந்தரவு தொன்மை
**857
#46
மல் வலி வருவாய் கூத்தின் விகற்பம் மற்போர் மால் கூத்து ஆம்
வல் வலி விரைவு சூது வல்லரி தளிர் பூங்கொத்து
வில் ஒளி தநுசு இராசி மூலநாள் கொடுமரப்பேர்
குல்லகம் எளிமை அற்பம் குல்லகன் தாழ்ந்தோன் அற்பன்
**858
#47
வல்லபம் பிரியம் சாதிப்பரி அதிகாரம் மன்னும்
வல்லபன் அதிபன் காந்தன் வல்லவர் மடையர் ஆயர்
இல்லமே வீடு தேற்று ஆம் ஏல்வையே திவசம் காலம்
கல்லம் சாதகப்புள் பள்ளம் கடைவாய் ஓர் புடைவை தோல் ஆம்
**859
#48
பல்லம் ஓர் தொகைக்கணக்குப் பாணம் பல்லூகம் முப்பேர்
மல்லம் ஓர் மீன் கபாலம் தகழி மற்போர் சிரேட்டம்
சல்லரி மயிரின் வக்ரம் ஓர் பறை குடையின் தொங்கல்
பல்லவர் தூர்த்தர் நீசர் கொல்லி ஓர் மலை ஓர் பண் ஆம்
**860
#49
வில்லி மன்மதன் காண்டீவன் வீரபத்திரன் வில்லாளன்
சில்லிகை வெயிலின் சோதி விலேபாமலம் சிள்வீடு
மல்லிகை ஓர் மட்பாத்ரம் ஓர் மலர்ச்செடி ஓர் மீன் பேர்
வல்லிகை செவிப்பூண் வல்லி வல்லை மாத்திரை கடுப்பு ஆம்
**861
#50
கல்லியம் இலக்கநம் வைகறை சந்நத்தம் கள் என்ப
குல்லியம் சுளகு எலும்பு புலால் குலப்பிறப்புத் தோணி
சில்லை சிள்வீடு தூர்த்தை அல்லோன் சந்திரன் அல்லாதோன்
சுல்வம் செம்பு ஒழுக்கம் வேள்வித்தொழில் நீரின் சமீபம் நாற்பேர்
**862
#51
அல்கல் நிறைதல் சுருங்குதல் நாள் இரவு வறுமை தங்குதல் ஆம்
சுல்லம் இழிகண்குரீ இழிகண் பில்லமும் அப்பெயர் சொல்ப
புல்லம் எருது மலர்ந்தது எனும் பில்லி ஏவல்பேய் பூனை
மல்லல் பொலிவு வலி வளம் ஆம் மல்லை இரக்கும் கலன் வட்டம்
**863
#52
வல்லி வள்ளி கால்தளை பைங்கொடி ஓர் பூ ஓமம் பிரிதல்
எல்லை அவதி பரியந்தம் இறுதி இநன் கூப்பிடுதூரம்
குல்லை வெட்சி துளவு என்ப கொல்லை புனம் வீட்டுப்புறம் ஆம்
முல்லை வநமல்லிகை வென்றி ஓர் பூம்புதல் கற்பு ஓர் நிலமே
**864
#53
இல் இடம் வீடு இராசி இல்லாள் இன்றெனல் ஓர் இடைச்சொல்
எல் இகழ்ச்சிக்குறிப்பு இரவி பகல் ஒளி வெய்யிலும் ஆம்
கொல் அசைச்சொல் ஐயச்சொல் பஞ்சலோகப்பேர்
குல்லியை கோமுகை வாய்க்கால் மதகு சலதாரை
புல் அநுசநாள் வெட்டைக்கோரை அறுகாதி
புணர்ச்சி புலி புன்மை பனை சாமை கம்பாதியும் பேர்
பல்லவம் செம்பஞ்சின் நிறம் சிங்காரம் விரிவு
படர்ச்சி தளிர் ஓர் தேயம் கீர்த்தநத்து ஓர் உறுப்பே
**865
#54
சல்லி மரவுரி கல்லின்நொறுங்கல் கிளைக்கொடி சந்
தாநம் உலோகப்பிளவு துணியறைத்தூக்கப்பேர்
சில்லி தேருருளை வட்டம் சூரியன்தன்கிரணம்
சிறுகீரை திமிருகை முன்றானை சிள்வீடு என்ப
சல்லியம் ஓர் குத்ரவித்தை சலாகை மருட்காரை
சண்டை தோமரம் முளை முள்பன்றி அம்பு கழுமுள்
கல்லியன் நோயுற்றொழிந்தோன் சந்நத்தன் சமர்த்தன்
கலியாணி மங்களமுளாள் உமை ஈர் இராகம்
**866
#55
வல்லரம் பூங்கொத்து இளம்புல்தறை நீரிலாவயல் வல்லியின் முழைஞ்சு ஆம்
தில்லை ஓர் மரம் புலியூர் என்ப செல்வி புத்திரி இந்திரை சீமாட்டி
உல்லாகன் பரிசுத்தன் நிபுணன் மகிழ்வுடையோன் நோயுற்றொழிந்தோன்
வல்லூரம் உவர்த்தறை வாகநம் புன்செய் உலர்ந்தஊன் வராகஊனே
**867
#56
சில்லம் இழிகண்குருவி தேற்றுமரம் இழிகண்
வல்லம் எனல் பெருமரக்காடு கோதுமை ஆம்
பல்லி ஓர் செந்து சேமரக்கொட்டை சிற்றூர்
மல்லி ஓர் மருந்து ஓர் மட்பாத்திரம் மல்லிகையே
**868
#57
ஒல்கல் சுருங்கல் தளர்தல் துவளல்
சல்லகி யானைவணங்கி முள்பன்றி
புல்லல் புணர்தல் தழுவல் பொருந்தல்
அல்லி வெள்ளாம்பல் காயா அகவிதழ்
**869
#58
வல்லியம் கொல்லிமலையும் புலியும்
சல்லியன் மத்திரராசன் சுக்கிரன்
ஒல்லை பழமை கடுப்புச் சிறுவரை
கல்லை பாதுகக்குமிழ் இலைக்கலமே
**870
#59
கல்யாணம் பொன் மங்களம் கண்ணாலம் ஆம்
பொல்லாங்கு எனல் பொச்சாப்பு இடையூறு எனும்
உல்லாசம் உள்ளக்களிப்பு உத்தரீயம்
வல்லார் வல்லவர் மாட்டாதார் பெயர்
**871
#60
கல்லாரம் நீர்க்குளிரி செங்கழுநீர்
வல்லாரை கேட்டைநாள் ஓர் புதலும் ஆம்
இல்லாள் இல்லாதவள் மனையாட்டி பேர்
கல்லோலம் என்ப மகிழ்ச்சி பெருந்திரை
**872
#61
வாலகம் வெட்டிவேர் மோதிரம் கரிபரியின்வால் ஆம்
சீலம் நல்லொழுக்கம் நல்லசெய்கை நல்லியல்பும் ஏற்கும்
தூலம் பூவரசு வீட்டுத்திரம் பஞ்சு பருத்ததும் பேர்
நீலம் ஓர் மணி ஓர் வெற்பு ஓர் நிதி விடம் பனை கறுப்பே
**873
#62
காலல் கொப்புளித்தல் கக்கல் காலை வைகறை காலப்பேர்
ஆலி ஓர் பூதரூபம் துளி மழை ஆலங்கட்டி
மாலிகை ஓர் புள் கண்டாபரணம் ஓர் நதி மாலைப் பேர்
வாலிசன் சிறுவன் மூடன் மாலியம் மாலை புட்பம்
**874
#63
சால் படைச்சால் நீர்ச்சால் ஆம் சால்பு மாட்சிமை பண்பு என்ப
பால் வெண்மை இடம் பண்பு ஓர் கவ்வியம் பக்கம் உரிமை பங்கு ஆம்
மேல் இடம் உபரி முன் மேற்கு இனியெனல் உடல் விண் மீது ஆம்
வால் வெள்ளை மிருகத்தின்வால் புனிதம் புள்ளின்வாலும் பேர்
**875
#64
ஏலம் பஞ்சவாசத்து ஓர் அரிசி மயிர்ச்சாந்து எனச் சொல்ப
கீலம் முழங்கைக்கணுக் குற்றி ஆணி முளை அக்கிநிக்கொழுந்து ஆம்
சேலம் ஆடை பீலிக்கண் சேலன் அதமன் பொறாமையன் பேர்
ஏலல் பொருந்தல் இணங்குதல் ஆம் ஏலி ஆலிங்கநம் இரவி
**876
#65
சாலி வடமீன் புடோல் கள்ளு நெல்லுக் கந்த மார்ச்சாலம்
தாலி பானை மங்கலப்பூண் கீழாநெல்லி பாதிரை ஆம்
வேலை சமையம் அநாயாசவிழவு ஈச்சுரபோசநம் செய்யும்
வேலை முந்நீர் அதன் கரை நீர்விருத்தி எல்லை புதன்தேவி
**877
#66
சாலகம் புள்கூடு அரும்புக்கொத்துச் சாளரப்பேர்
சாலிகை ஓர் படாம் கவசம் சாலை ஓர் சாலம்
பாலகன் மூடன் சிறுவன் பாலிப்போன் என்ப
பாலங்கம் குதிரை புள் ஓர் இலைக்கறி சல்லகி ஆம்
கூலம் நீர்க்கரை வரம்பு ஆவணம் பல்பண்டம் மணலின்
குன்று காராமணி பிற்படை பாகல் குளப்பேர்
கோலம் அலங்கரிப்பு இரந்தைக்கனி மெழுகியிடும் மாக்
கோலம் மான் மடி வேடம் பன்றி தெப்பம் தழுவல்
**878
#67
மாலகம் மிக்குயர் பூமி மலையின் வயல் வேம்பு ஆம்
மாலியவான் ஓர் அரக்கன் ஓர் குலப்பற்பதப்பேர்
தாலம் வட்டில் வாள்பிடி நா நடுவிரல்சாண் பனை கூந்
தற்பனை பார் கராற்போடம் கரதலம் கைம்மாநம்
சாலம் மரப்பொது ஆச்சாமரம் அரும்புக்கொத்து
சாளரம் புள்ளிக்கெண்டை சொல்விளம்பி இந்த்ர
சாலம் இடம்பம் விலங்கின்திரள் கடம்பு கல்வி
சமூகம் வலை ப்ராகாரம் செடி என மூவைம்பேர்
**879
#68
பாலம் மழுப்படை நதியின்மேல் செய்கரை நெற்றி
பருத்தி நூல்புடைவை படைவாள் கிரணம் பூமி
மூலம் வேர் கிழங்கு ஓர் நாள் காரணம் சமீபம்
முதல் உரையிலாநூல் ஓர் ஆதாரம் ஓர் நோய்
நீலன் ஓர் வாநரேசன் சநி நீல்நிறத்தோன்
நீலிகை குத்திரரோகம் அவிரி கருநொச்சி
ஆலயம் ஆனைக்கூடம் வீடு கோயிலும் ஆம்
ஆலம்பம் தொடல் பற்றுச் சார்பிடம் கொல்லுகைப் பேர்
**880
#69
சூலி துற்கை காளி சூலாயுதன் சூலுடைப்பெண்
தூலிகை சித்திரம் எழுதும்கோல் பஞ்சின் மெத்தை
நீலி பாலைக்கிழத்தி கருங்குறிஞ்சி அவிரி
நீல்நிறத்தி மனவைரத்தினள் ஈயும் நேரும்
பாலி அணை கற்பிதபோசநம் துதி ஓர் ஆறு
பசுவின்மடி பிரதேசம் எல்லை சீலைப்பேன்
பீலி பறைப்பொது வெற்பு விசிறி சிறுசின்னம்
பெரும்சவளம் தோகை மயில் மகளிரின்காலணியே
**881
#70
வேலி ஊர் அரண் காவல் நிலவளவின் ஒன்றாம்
வேல் என்ப படைக்கலம் ஓர் ஆயுதம் ஓர் மரப்பேர்
பாலிகை வட்டம் உதடு படைவாளின்முட்டி
பாலை ஓர் நிலம் மிருகசிரநாள் ஓர் மரம் ஆம்
பீலு மதாவளம் புட்பம் உகாய்மரம் கோல் அம்பு
பின்பெலும்பின்முறிவு பரமாணு நடுவிரல்சாண்
மாலை பொன்னில் பூவின் மணியில் சொல்லால் தொடுத்த
மாலை அந்திப்பொழுது இரவோடு ஒழுங்கு இயல்பும் ஆமே
**882
#71
கால் வழி நெல்முளை நான்கினொன்று மா முளை பூங்
காம்பு ஓர் மெய்யுறுப்புத் தேர்க்கால் வாய்க்கால் அளக்கும்
கால் பொழுது தரம் இடம் தூண் ஊற்றுக்கோல் காற்றுக்
காலன் எதிர்கால இடைச்சொல் சுதனும் ஒக்கும்
கோல் விட்டேறு அம்பு எழுதுகோல் ஊற்றுக்கோல் செங்
கோல் முழக்கோல் பரிக்கசை யாழ்க்குரல் துலா மரக்கோல்
மால் கருமை வேட்கை மயக்கம் காற்று மேகம்
மாயவன் இந்திரன் அருகன் புதன் சோழன் பெருமை
**883
#72
கோலகம் வன்மிகம் கமுகின்காய் மிளகு சித்திரம் தக்கோலம் குஞ்சு ஆம்
மாலதி ஓர் நதி சீந்தி நிலவு பிச்சி பாதிரை யௌவநி இராத்ரி
மாலம் உயர்பூமி கிராமாந்தரக்காடு அரிதாரம் வஞ்சனைப் பேர்
மாலிநி சம்பாபுரம் ஓர் விருத்தம் உமை கங்கை பூமாலைவிற்பாள்
**884
#73
மூலகம் கிழங்கு முல்லங்கி இருபேர் மூலியம் துகில் விலை கூலி
சூலம் ஓர் யோகம் கழுக்கடை ஓர் ஆயுதம் சூலைநோய் திசைச்சூலம்
சாலிநி தேவராட்டி தூலிகைக்கோல் சித்திரசாலை கள்விற்பாள்
தோல் உடல்தோல் கேடகம் பழத்தொலி ஓர் சொல் ஒரு வனப்பும் யானையுமே
**885
#74
ஆலமே புனல் விடம் மழை அலர்ந்தபூ
வாலமே வெட்டிவேர் கேசம் வாலும் ஆம்
ஆலை ஓர் இயந்திரம் கரும்பு கள் எனும்
ஆல் ஒரு மரம் இடைச்சொல் அசைச்சொல்லே
**886
#75
தாலவட்டம் பூச்சக்கிரம் யானைவால்
பாலர் புத்திரர் மூர்க்கர் கோபாலர் ஆம்
காலன் அந்தகன் ஓர் உபக்கோள் சநி
கோலை செவ்வியம் திப்பலி கூறுமே
**887
#76
காலம் மரணம் பொழுது என்ப
ஆலல் ஆடல் மயில்குரல் ஆம்
வேலன் முருகன் வெறியாட்டோன்
வாலை சிறுபெண் சிற்றேலம்
**888
#77
கீலாலம் புனல் இரத்தம் சாலூரம் கியாதம் தேரை
காலேயகம் அரக்குமஞ்சள் கத்தூரிமஞ்சள்
ஆலோகம் வெயில் காட்சிப் பேர் மேலோர் விண்ணவர் சிரேட்டர்
நூலே சாத்திரம் பஞ்சின்நூல் நூலோர் அந்தணர் அமைச்சர்
**889
#78
தாலாங்கம் பனைத்துவசம் ஈர்வாள் ஓர் இலைக்கறி புத்தகமும் ஆகும்
பாலாங்கம் செங்கீற்றுமான் ஓர் இலைக்கறி கரபத்ரம் கூர்மம்
தாலாங்கன் மகேசன் இலக்கணம் நிறைந்த மாபுருடன் தவளவண்ணன்
பாலாங்கன் நிறைந்த இலக்கணமிக்க மாபுருடன் பரமேசன் பேர்
**890
#79
நீலாம்பரன் கொடுங்கண்ணன் சநி இராக்கதன் வெண்ணிறஇராமன்
சாலாரம் புரவாயில்படிச் சுருள் சோபாநம் பஞ்சரக்கூடும் பேர்
ஆலாலம் விடபேதம் காளகூடம் பல்லி அரணை வவ்வால்
கோலோமி பூதகேசம் வசம்பு வெள்ளறுகு மாஞ்சி வேசை
**891
#80
ஆலாசியம் என்பது ஆலவாய் ஆண்முதலை
சாலாவிருகம் நரி நாய் செந்நாய் குரங்கு ஆம்
சாலூகம் செங்கழுநீர்க்கிழங்கு சாதிக்காய்
சேலேகம் சிந்தூரம் சந்திரதிலகம்
**892
#81
சாலேயம் செந்நெல்கழனி சதபுட்பை
வாலேயமே சிறுதேக்குக் கோமளம் கழுதை
ஆலோசனை யோசனைசெய்தல் காண்டலும் ஆம்
ஆலோலம் சஞ்சலமானது புள்ளோச்சுஒலியே
**893
#82
பௌலத்தியன் தசக்கிரீவன் புட்பகவிமாநன்
மௌலி சூடிகை அசோகு மயிர்க்கற்றை குடுமி சென்னி
கௌலீநம் சநாபவாதம் பிராணிப்போர் குலோத்துங்கப்பேர்
சௌலேயம் கற்கடாரை உமிரி சட்பதம் கற்பூவே
@15 வகர வெதுகை
**894
#1
துவசம் ஆண்குறி கட்டங்கம் துகில்கொடி அடையாளப்பேர்
அவசிதம் நிச்சயிப்பது அறிவது முகிப்பது என்ப
சிவசுதன் கணேசன் கந்தன் சிவணல் நண்ணுதல் பொருந்தல்
கவடு குஞ்சரப்புரோசை மரப்பணை கவர் வஞ்சப்பேர்
**895
#2
குவடு என்ப மலை வெற்புஉச்சி குவை குப்பை மேடு கூட்டம்
சுவடு பக்கரையின்கட்டுத் தழும்பு அடிச்சுவடும் ஆகும்
சுவணம் பொன்கஃசு பொன் கார்அகில் நற்சுந்தரம் பொருள் பேர்
கவநம் வேகம் கருத்துப் படை கவித்துவம் கலக்கம்
**896
#3
யவநர் சோனகர் கண்ணாளர் யவை ஓர் கோதுமை ஓர் நெல் ஆம்
அவரம் பிந்தினதும் யானைப்பின்னங்கால்புறமும் ஆகும்
வெவகாரம் வழக்குச் சூது சொல்ப்ரயோகம் சம்பந்தம்
அவகீதம் பலர்பழித்தது அபவாதம் வசைப்பாட்டும் பேர்
**897
#4
அவதாதம் பரிசுத்தம் வெண்ணிறம் பொன்மை அழகும் ஒக்கும்
அவரோகம் மரத்தின்வீழ்து அதில் படர்கொடி இறக்கம்
அவரோதம் மறைவோடு அந்தப்புரம் அரண்மனையும் ஆகும்
அவவாதம் அபவாதம் போல் ஆணை நம்பிக்கை சிந்தை
**898
#5
கவரம் இங்கிதம் உப்பு என்ப கவர் மரக்கப்பு வாழை
சுவரு வச்சிரவேல் பாணம் மகத்தூணின் கண்டம் வேள்வி
சுவரே மண்சுவர் சுவர்க்கம் பரலோகம் சுகம் ஆகாயம்
தவர் தவத்தினர் வில் என்ப தவறலே வழுவல் சாதல்
**899
#6
இவர்தல் ஏறுதல் நெருங்கல் எழுதல் ஏகுதல் விரும்பல்
அவலம் துன்புறல் இடப்பால் அவல் ஓர் சிற்றுண்டி பள்ளம்
கவலை செந்தினை கிலேசம் பயம் கவர்வழி முச்சந்தி
திவலை நீர்த்துளி மழைப் பேர் திவி பகல் சுவர்க்கம் விண் ஆம்
**900
#7
சுவல் பிடர் தோள்மேல் மேடு துரகதக் குசைமயிர்ப் பேர்
உவளகம் மதில் உள்வீடு பள்ளம் உப்பளம் தடாகம்
தவளம் வெள் விடைசிரேட்டம் வெண்மை சுந்தரமும் சாற்றும்
இவறலே உலோபம் செய்தல் விரும்புறல் இழுக்கல் என்ப
**901
#8
சவி கிரணம் காந்திப் பேர் தவிசு பாய் தடுக்கு மெத்தை
செவி என்ப கேள்வி காது ஆம் செவிலி முன்பிறந்தாள் தாதி
அவிசு நெய் விண்ணோர்ஊண் ஆம் அவிதலே கெடுதல் வேதல்
நவியமே மழுக் குடாரி நவிலலே சொல்லல் கற்றல்
**902
#9
நவிரமே வெற்புப் புன்மை சிரத்துஉச்சி மயிலு நாற்பேர்
அவை சவை குழாம் விற்பந்நர் அஃறிணைப்பன்மைச்சுட்டு ஆம்
சவை வீடு அம்பலம் தக்கோரின்சமூகம் பண்டிதன் சூது என்ப
துவை புளிங்கறி பிண்ணாக்குத் தொநி பருகுவது இறைச்சி
**903
#10
நிவகமே திரள் ஓர் வாயு நுவணையே தினைமா நுண்மை
துவசன் கேதநன் கள்விற்போன் துவரியே துவரை நாய் ஆம்
சவம் வேள்வி பிணம் வேகப்பேர் சவரன் சங்கரன் கிராதன்
திவம் வநம் விண் சுவர்க்கம் சிவி பூர்ச்சமரம் ஓர் வேந்தன்
**904
#11
விவச்சுவான் இரவி தேவன் சுவர்க்கம் விண்ணுலகம் கொங்கை
துவட்டா விச்சுவகன்மா ஓர் சூரியன் கஞ்சகாரன்
அவத்தை சாக்கிராதி காமவாதை சீவோபாதிப் பேர்
நிவிர்த்தியே மநமகிழ்ச்சி மீளுகை விட்டுநீங்கல்
**905
#12
கவந்தம் நீர் உடல்குறைப் பேர் கவந்தன் ஓர் அரக்கன் சற்பி
அவந்தி ஓர் ஊர் பிள்ளைப்பெற்றவள் காய்க்கும்மரம் ஈற்றா ஆம்
அவந்திகை கிளி அவந்தி நவம் துதி புதுமை ஒன்பான்
துவன்றலே நிறைதல் சாதல் துன்றுதல் பொலிவு நாற்பேர்
**906
#13
அவடம் கிணறு குழி பிலம் ஆம் அவடு பிடரி கிணறு குழி
உவணம் கருடன் கழுகு என்ப உவரி கடல் மூத்திரமும் பேர்
அவதி எல்லை பரிச்சேதம் காலம் அவதாநம் குழி ஆம்
சவநம் வேகப்பரி வேகம் முழுக்குச் சோமலதைப்பாகம்
**907
#14
குவலம் இலந்தைக்கனி முத்தாபலமும் நீலக்குவளையும் ஆம்
துவளல் அசைதல் தொடுதல் பேர் துவறல் துவலையிடல் விரைவு
தவன் மாநுடன் நாயகன் ஆள்வோன் தவிர்தல் விலகல் ஒழிதல் பேர்
அவிழ்தல் கட்டுவிடல் அலர்தல் கவிழ்தல் கீழ்மேற்படல் குனிதல்
**908
#15
உவட்டல் குமட்டல் பெருக்கெடுத்தல் உவர்த்தல் வெறுத்தல் ஓர் சுவை ஆம்
துவட்டல் துவளச்செயல் துடைத்தல் துவைத்தல் ஒலித்தல் தோய்த்தல் பேர்
கவித்தல் மூடல் சூழ்ந்திறங்கல் குவித்தல் கூப்பல் குவைசெய்தல்
அவித்தை மோகம் அஞ்ஞாநம் அவைத்தல் நெரித்தல் நெல்குற்றல்
**909
#16
அவகாரம் முதலை சமராதியின் விச்சிராமம்
திரவியம் சூது களவு பறித்தலும் ஆம்
அவதாநம் கருமசுத்தம் அபிப்ராய வியாபிப்பு
அதிவிருத்தம் சமாதாநம் கண்டநம் என்று ஐம்பேர்
பவநம் காற்று இராசி இல்லம் இராசாலையம் தாற்
பரியம் வெருகொடு சுள்ளை துலக்குதல் சுத்தியும் ஆம்
அவம் வேள்வி அழைத்தல் பயனின்மை ஆணையும் பேர்
அவரம் பிந்தினது யானையின்பின்கால்புறமே
**910
#17
சிவம் நன்மை சுகம் வேதம் பசுத்தறி ஓர் யோகம்
சிசுக் குறுணி குங்கிலியம் சிவகதி நீர் புலி ஆம்
பவம் மேன்மை சுத்தி பிறவிச்சுழற்சி பேறு உற்
பவம் பாவம் நெல்பதரைப்போக்கல் சிங்கக்கரணம்
அவி கிரணம் மூடிககம்பளம் வெற்பு மதில் காற்று
ஆடு முகில் இரவி சுரருணவு நெய் பூப்பினள் பேர்
சிவை பங்கம்பாளை வன்னிமரம் நெல்லி தருமச்
செல்வி கடுமரம் கொலுலைமுகம் கீழாநெல்லி
**911
#18
அவக்கரம் ஆண்பெணின்குய்யம் தேரினங்கம் விட்டை
அமேமத்தியம் யானையின்அடித்தூர் கரிக்குடரோடு அறுபேர்
அவக்கிரகம் கரியின்நெற்றி மழைத்தடை தம்பித்தல்
அவிக்கநம் விக்கநமின்மை பெருங்களாமரம் ஆம்
சுவத்தி ஆரோக்யாதி சுபவாழ்த்துச் சுகிர்தம்
சுவத்திகம் மங்கலப்பொருள் ஓர் இராசமனை சதுட்கம்
பவித்திரம் கோமயம் தருப்பை பூசோபகரணம்
பால் புனல் மந்திரம் பிரமசூத்திரம் பொன் செம்பே
**912
#19
சுவகை சிறுசெருப்படிப்பூடு அரத்தை கருநொச்சியும் சல்லகியும் சொல்ப
விவசன் தன்மயமல்லாஆன்மாக் கோடுடைய துட்டமேதையுள்ளோன்
கவரி மயிர்ச்சொருக்கு எருமை சாமரம் தேர் அசகந்தி காயப்பத்ரி
கவி கவிதை நாற்கவிபாடிடும்கவிஞன் குரங்கு சுங்கன் கடிவாளப்பேர்
**913
#20
கவசம் உடற்கீடு சின்னிமரம் படகப்பறைப் பேர்
அவதஞ்சம் செவிமலர்ப்பூண் சூட்டுமாலையும் ஆம்
யவபலம்தான் வெட்பாலை மூங்கில் சடாமாஞ்சி
தவம் விரதம் நமைமரம் காட்டுஅனல் காடு துதியே
**914
#21
அவசரம் உசிதசமயம் வற்சரம்
விவரம் வகை தொளை வெற்பின்முழைப் பேர்
துவர் சிவப்பு இந்தநம் பவளம் துவர்ப்பு
கவர்தல் விரும்பல் கடைதல் வவ்வுதல்
**915
#22
துவரை என்பது ஓர் பயறு துவாரகை
குவலயம் எனல் பூச்சக்கிரம் குவளை
சுவவு புள்ளின்அலகு மூஞ்சூறு
பவி வச்சிராயுதம் ஆயுதக்கூர்மை
**916
#23
கவிகை குடை உதாரம் கடிவாளம்
குவிதல் குழுமல் கூம்பல் திரளல்
நவிர் வாள் மருதயாழ்த்திறம் ஆண்மயிர்
சுவை நவரசவணி உருசி இனிமை
**917
#24
அவகாரன் திருடன் சூதுக்காரன்
அவசாநம் மரணம் முடிவு எல்லை
அவதாரம் இறங்குதல் தீர்த்தத்துறை
அவலேபம் பழிப்பு அகங்கரம் பூச்சே
**918
#25
துவக்குப் பிணக்குத் தோல் உடல் சங்கிலி
சவட்டல் குமைத்தல் அழித்தல் மெல்லுதல்
சுவப்பிரம் என்ப குழி நிரையம் தொளை
உவப்புப் பொலிவு மகிழ்ச்சி உயர்ச்சி
**919
#26
சிவப்புச் சினக்குறிப்புச் சினம் ஓர் நிறம்
விவர்த்தம் திருப்புகை கூட்டம் கூத்தும் ஆம்
தெவிட்டல் ஒலித்தல் உமிழ்தல் தேக்கிடல்
பவித்திரன் சுத்தன் பாவகன் சிவன்
**920
#27
புவநம் உலகம் புனல் பூமி
கவலல் வருந்தல் துன்புறல் ஆம்
குவவு திரட்சி திரள் பெருமை
எவனே யாவன் என்னை எனல்
**921
#28
அவா இறங்குதல் விருப்பம் அவாக்கு என்ப கவிழ்ந்தோன் ஊமை
உவா இளமையினன் யானை உததி பூரணை அமைப் பேர்
திவாகீர்த்தி நாவிதன் கௌசிகப்புள் சண்டாளன் என்ப
நிவாதம் சார்பிடம் காற்றில்லாஇடம் நீங்காக்கவசமும் பேர்
**922
#29
சுவாது தித்திப்பு இட்டப்பேர் சுவாமி நாயகன் செவ்வேள் ஆம்
நிவாரணம் சிகிற்சை தீர்தல் நிவேசநம் பாடி வீடு ஊர்
நிவேசம் பாசறை வியூகம் நிகேதநம் நகர் விவாகம்
குவேடம் செவ்வெருக்கம்காய் நஞ்சு ஒலி கோணல் செவியின்நோயே
**923
#30
விவாதம் வழக்குச் சொல்கலகம் குவாலே குப்பை மேடு குவை
சுவாதுரசையே காகோளி சொல்விளம்பி முந்திரிகை
துவாபரம் ஓர் யுகம் சங்கை சுவாத்தியாயம் செபம் வேதம்
துவாரம் உபாயம் தொளை வாயில் துவாந்தம் நிரயம் இருட்டும் பேர்
**924
#31
விவேகம் என்றல் இராசியம் நீர்த்தோணி விசாரித்துணர்அறிவு ஆம்
சுவேததாமாக் கடல்நுரை வெண்சுடரோன் கருப்பூரமும் சொல்ப
சுவேதம் வெயர்வு ஓர் தீவு மலை சுல்லு வெள்ளை சமோதகமோர்
சுவேதை வெண்பாதிரை தெற்குச் சோகி சங்கபுப்பியுமே
**925
#32
திவாபீதம் குமுதாகரம் கூகை
அவீசி நீர்த்திரையிலது ஓர் நிரயம்
குவேடை சிங்கநாதம் வேய்ஞ்சலாகை
சுவேலம் ஓர் மலை சாந்தம் வணக்கம்
**926
#33
எவ்வம் நோய் இழிசொல் துன்பம் நவ்வி மான் எழில் கைம்மீன்நாள்
பவ்வம் நீர்க்குமிழி முந்நீர் மாக்கணுப் பௌரணைப் பேர்
அவ்வியம் மநக்கோட்டம் விண்ணவர்க்குயோக்கியமாம் அந்நம்
கவ்வியம் வில்நாண் கோபஞ்சகம் பிதிரர்க்காம் அந்நம்
**927
#34
சவ்வியம் வலம்இடப்பால் அகிதம் செவ்வியமும் சாற்றும்
திவ்வியம் சுவர்க்கத்துள்ளது அழகியது இலவங்கப்பேர்
பவ்வியம் உசிதம் நன்மை பயன் மெய்ம்மை கருத்து எலும்பு ஆம்
துவ்வு உணவு அநுபவப்பேர் தெவ் அமர் பகையும் சொல்ப
**928
#35
அவ்வியத்தம் பிரதாநம் தெரியாமை ஆன்மா
அவ்வியத்தன் சிவன் மாயோன் அறிவில்லான் என்ப
அவ்வியயம் விபத்தியுறாப்பதம் அழிவின்மைப் பேர்
கவ்வியை கோத்திரள் இருகுரோசதூரமுமே
**929
#36
வவ்வல் வாருதல் அபகரித்தல் பெயர்
செவ்வந்தி ஓர் பூச் செவ்வான்அந்தி ஆம்
செவ்வி அழகு ஓர் பக்குவம் காலம்
தவ்வை முகடி முன்பிறந்தாள் தாதியே
**930
#37
சாவகன் சமணன் நீலன் தாவம் காட்டுஅனல் காடு என்ப
பாவகன் சதாசாரன் தீக்கடவுள் பாவிப்போன் சுத்தன்
ஆவணம் புணர்தம் வீதி விலைமுறி அங்காடிப் பேர்
வீவதம் வழி தோள்பாரம் விலையிடத்திருக்கும் பண்டம்
**931
#38
சீவநம் புனல் பிழைப்புத் தைத்தல் கோத்திடலும் செப்பும்
தாவநம் கமநம் தூய்மை தாவிடம் கடல் பொன் சொற்கம்
சேவநம் சேவை கோத்தல் சேவல் ஆண்பறவை காவல்
ஆவம் வில்நாண் கணைக்கூடு ஆவளி ஒழுங்கு இரேகை
**932
#39
தாவரம் புவியிடம் பூதரம் மரம் அசரம் நாணி
ஓவர் கம்மியர் பாடல்கீழ்மக்கள் ஓவியரும் ஓதும்
கோவலன் இடையன் கண்ணன் கண்ணகிகொழுநன் முப்பேர்
காவல் காப்பு அரண் மதில் பேர் பாவல் பாதுகை பரப்பல்
**933
#40
நாவல் நாமிழற்று இரக்கவொலிக்குறிப்பு ஓர் மரப்பேர்
ஆவி பிட்டு உயிர்ப்பு வாவி புகை நாற்றம் ஆன்மா என்ப
தூவி புள்சிறகு அன்னத்தின்இறகொடு மயிலின்தோகை
கோவை ஓர் ப்ரபந்தம் ஓர் பைங்கொடி கோத்தல் அணிவடப்பேர்
**934
#41
தேவசேநை இந்திரகுமாரி தேவர்தம்படை ஆம்
தேவம் மேகம் இந்திரியம் தேவன் அரசன் வானவன் பேர்
தேவவிருக்கம் குற்குலு ஏழிலையின்பாலை தேவதரு
சீவிதேசன் பிழைப்பூட்டும்செயலோன் ப்ராணநாதன் நமன்
**935
#42
சீவஞ்சீவம் பாலைமரம் சகோரம் சிவற்காடையும் ஒக்கும்
சீவந்திகை புல்லுரீஇ வன்னித்துருமம் பாலைமரம் சீந்தி
சீவன் தேவகுரு ப்ராணன் உயிருள்ளது சீவிப்பதும் ஆம்
கோவிந்தன் கண்ணன் பொதுவன் சுரகுருக் கோட்டியத்ததிபன்
**936
#43
சேவகம் யானைப்படுக்கை சேவைசெயல் வீரம்
சீவநி சஞ்சீவநி செவ்வழித்திறத்தோர்பண் ஆம்
பாவகம் செங்கொடுவேலி விழாலரிசி முன்னை
பல்லாதமரம் கனல் பாவிப்பது இராசியும் பேர்
சீவகன் பாம்பாட்டி ஓர் சமணரசன் பௌத்தன்
சேவிப்போன் சீவதரன் பொலிசையால்பிழைப்போன்
தேவநம் சூதாடல் கவறு ஒளி வழக்கு இலீலை
செயவிருப்பம் துதி கதி கனாச் செருக்குப் புலம்பல்
**937
#44
பாவநம் சாந்தபநாதி பிராயச்சித்தம் நீர்
பாவநன் பாவகன் தூயோன் சுசீகரன் வியாசன்
ஆவரணம் மறைவு ஆடை அணிகலன் ப்ராகாரம்
ஆவர்த்தம் சிந்தநம் நீர்ச்சுழி சுழற்று ஓர் மேகம்
பாவம் மநோவிகாரம் சிங்காராதி லீலை
பதார்த்தம் நிமித்தம் செந்து யோநி அபிநயம் சொபாவம்
ஐச்சுவரியம் சொல்லின்விருத்தி கருத்து உற்
பத்தி வினைவிகுதிக்ரியை பாபமும் பேர்
**938
#45
தேவி பெருங்குரும்பை நாட்டியராணி மனைவி சீ
தேவிச் செங்கழுநீர் அரசி தேவப்பெண்
நீவி செட்டின்மூலதநம் சூதின்ஒட்டப்பொருள் மா
நியோர்தம் அரையுடைக் கொய்சகம் பொலிசை நாற்பேர்
தீவிரம் வெப்பம் கடுமை கடுப்பு மிகுதியும் ஆம்
தீவிரை கேழ்வரகு கொடிஅறுகு கடுரோணி
சீவை ஆபரணஒலி பிழைப்பது வில்நாணி
சீந்தி உயிர்தருமருந்து வசம்பு பூமியுமே
**939
#46
கூவரம் கூன் அழகியது பார்மரம் தேர்க்கொடிஞ்சி தேர்க்கொடியும்
சாவரம் வெள்ளுலோத்திரம் குற்றம் பாவம் சாவு என்ப மரணம் பேய் ஆம்
கேவலம் நிச்சயிப்பது எல்லாம் படிற்றொழுக்கம் தனிமை ஞாநமும் கிளத்தும்
சீவிகை சீவநம் சேவைத்தொழில் பெயர் சீவிதம் பிழைப்பது பிராணன்
**940
#47
தேவமணி பரிக்கழுத்தின்சுழி கௌத்துவம் சிவன் பேர்
பாவநை வாசநை நினைப்பு ஒப்பனை முயற்சி பாவிப்பு ஆம்
காவலன் மெய்காப்பாளன் காக்கவல்லவன் கணவன்
சேவியம் சுசீலம் இலாமிச்சம்வேர் சேவைசெயல்
**941
#48
கூவல் புள்கூவுதல் அழைத்தல் கிணறு பள்ளமும் பேர்
தூவல் துளி மழைபெய்தல் சிதறுதல் புள்சிறகு ஆம்
பாவன் மன்மதன் நாட்டியப்புலவன் ஆன்மா
காவி கருங்குவளை ஓர் சாயம் நற்செங்கல்லே
**942
#49
சீவகம் வேங்கை திருநாமப்பாலை
சீவதன் ஆயுள்வேதியன் பகைஞன்
சீவநி பாலைமரம் சீவநாடி
தாவநி நரிவால்புல் வண்ணாத்தியே
**943
#50
சீவபுட்பம் மருக்கொழுந்து துளசி
நீவரம் இருக்கப்பட்டது கடைத்தெரு
பீவரம் பருத்தது ஆமை தசைந்தது
ஏவல் அனுப்புதல் செய்யெனல் ஆணையே
**944
#51
தாவல் பரத்தல் தாண்டல் தழுவுதல்
மேவல் மருவல் விரும்பல் அருகுறல்
பாவிதம் கமழப்பட்டது அடைந்தது
நாவிதன் பூரநாள் மயிர்வினைஞன்
**945
#52
ஓவியர் சித்திரகாரர் சிற்பியர்
கோவில் இராசாலையம் தேவாலையம்
தீவினை பாவம் முத்தீயின்கிரியை
பூவை நாகணவாய்ப்புள் காசாமரம்
**946
#53
வாவல் வவ்வால் தாவலும் ஆம்
தீவு முந்நீர்த்திடர் இனிமை
தூவு விடக்குப் பகை என்ப
நோவு மெலிவு வருத்தப்பேர்
**947
#54
கைவல்லியம் மோக்கம் சித்தி வைவச்சுதன் ஓர் மநு நமன் ஆம்
சைவம் சிவசம்பந்தமுளது ஓர் புராணம் சிவசமயம்
கௌவை பழிச்சொல் ஆயிலியம் ஒலி எள்ளிளங்காய் துயர் கள் ஆம்
சௌவீரம் காஞ்சிகம் யமுநாஞ்சநம் இரந்தைக்கனி முப்பேர்
**948
#55
ஆவாபம் விதைத்தல் பாத்தி ஓர் பாகம் பாண்டசுத்தி
மாவீரம் குயில் சிங்கம் வெண்பரி வச்ரம் யாகபாத்ரம்
மாவீரன் கருடன் சிரேட்டன் அநலன் மாதேவன் சூரன்
ஆவேசநம் ப்ரவேசம் பணிக்கூடம் பூதாவேசம்
@16 ழகர வெதுகை
**949
#1
கழகம் சூது ஆயுதம் மல் பயில்களன் கல்விச்சாலை
குழகனே அழகன் செவ்வேள் குழுமலே குவியல் கூட்டம்
அழல் கனல் அழுதல் வெப்பம் அழலோன் சூரியன் செவ்வாய் ஆம்
குழல் இசைக்குழல் ஆண்குஞ்சி தொளையுடைப்பொருள் பெண்கூந்தல்
**950
#2
சழல் வநம் மகரமற்சம் தழல் கிளிகடிகோல் தீ ஆம்
நிழல் ஒளி குளிர்ச்சி நீதி அருள் செல்வம் நீழல் என்ப
கிழி நிதிப்பொதி முடிச்சுக் கீற்று எழுதுறுபடப்பேர்
குழி பள்ளம் நிலமளக்கும்கோலின் எண்பெருக்குக் குண்டம்
**951
#3
வழி இடம் பழமை மார்க்கம் மரபு சந்ததி பின் என்ப
பொழிதலே சொரிதல் ஈதல் பொழுது சூரியன் காலப்பேர்
எழிலி ஓர் வள்ளல் மேகம் எழில் வண்ணம் அழகும் ஒக்கும்
பொழில் புவி பெருமை சோலை பூந்தோட்டம் நாடும் ஆமே
**952
#4
இழிவு பள்ளம் பழிப்புக் கேடு தாழ்வு இறக்கம் என்ப
தொழு இரேவதிநாள் தோழம் பசுப்புரை தொழுமரப்பேர்
விழு மேடதுலைச்சங்க்ராந்தித்திநம் சீர்மை மேன்மை நன்மை
ஒழுகல் செய்முறை நடத்தல் உயர்தல் நீர்வடிதல் நீளல்
**953
#5
விழுதலே வீழ்தல் சாதல் விழுமமே நன்மை துன்பம்
இழுது நெய் நிணம் இனிப்பு ஆம் இழுதை பொய் அறிவின்மைப் பேர்
முழுதொருங்குணர்ந்தோன் புத்தன் முநீந்திரன் முக்கண்மூர்த்தி
கொழுநனே அதிபன் கொண்கன் கொழுமையே நிறம் செழிப்பு ஆம்
**954
#6
கழுமுள் மாதளை சூலத்தோடு ஆயுதம் கழுக்கடைப் பேர்
அழுவமே நாடு முந்நீர் பெருமை வெற்பரண் பரப்பு ஆம்
உழுவலே குணம் விடாது தொடர்ந்த அன்பொடு முறைப் பேர்
உழையர் மந்திரியர் ஏவல்செய்வோர் பக்கத்துள்ளோரே
**955
#7
கிழமை பண்பு உரிமை வாரம் கிழக்குக் கீழ்த்திசை கீழ் பள்ளம்
உழவர் கம்பளர் வேளாளர் உழப்பு உற்சாகம் வருத்தம்
ஒழிதல் விட்டகறல் சாதல் ஒழித்தலே தவிர்த்தல் கொல்லல்
முழுகலே அமுங்கல் மூழ்கல் மொழுப்பு என்ப கவின் சிறப்பே
**956
#8
எழு வளைதடி தூண் என்ப இழை அணிகலன் பஞ்சின்நூல்
வழு என்ப தவறு கேடு ஆம் மழை குளிர் துளி நீர் மேகம்
கழுது பேய் பரண் வண்டு ஆகும் கழை புனர்தம் வேய் கன்னல்
பழுது குற்றம் பொய் பிந்நம் பழையர் கள் விற்போர் முன்னோர்
**957
#9
கழித்தலே நீக்கல் போக்கல் விழித்தல் கண்திறத்தல் பார்த்தல்
தெழித்தல் பேரொலிப்பு உறுக்கல் கொழிப்புத் தெள்ளுகை குற்றப்பேர்
ஒழுக்கம் ஆசாரம் மார்க்கம் நடை ஒழுங்குளது உயர்ச்சி
குழைத்தலே தளிர்த்தல் சேறாக்குதல் நெகிழ்த்திடல் வளைத்தல்
**958
#10
பழங்கணே மெலிவு துன்பம் குழம்பு சேறு ஆணம் பாகு ஆம்
அழுங்கல் நோய் வருத்தம் சோம்பல் ஒலித்தல் கேடு அழுதல் என்ப
மழுங்கல் கூர்கெடுதல் மட்கல் ஒழுங்கு என்ப வரிசை பந்தி
கொழுந்து இளந்தளிர் சுவாலை விழைந்தோன் கொண்டவன் நயந்தோன்
**959
#11
குழாய் குழலுடைப்பொருட்கும் மூங்கில்பாத்திரத்துக்கும் பேர்
கிழார் பூட்டை உரியோர் தோட்டம் கெழு என்ப நிறம் பொருத்தம்
எழால் என்ப யாழ்நரம்பின்இன்னிசை ஓர் புள் என்ப
துழாவுதல் கலப்பாச்செய்தல் பரப்புதல் துருவல் வெட்டல்
**960
#12
உழலல் சுழலல் உலைதல் பேர் கழனி பழனம் இடுதிரை ஆம்
கிழவன் பரணிநாள் உரியோன் மருதத்தலைவன் கிழமுடையன்
விழவு மிதுநம் உற்சவம் ஆம் தொழுவர் விளைஞர் தொழில்செய்வோர்
கழுமம் மயக்கம் பற்று என்ப கழுமல் மிகுதல் நிறைதல் பேர்
**961
#13
பழக்கம் பயிற்சி பரிசயம் ஆம் பழுப்புப் பழுத்தல் அரிதாரம்
முழக்கம் மேகத்தொநி முழங்கல் மிழற்றல் முரலல் சொலல் கொஞ்சல்
உழக்கல் பழகல் உழுதல் பேர் உழத்தல் வருந்தல் அநுபவம் ஆம்
சழக்குப் பிணக்குப் பொய் மூடம் இழுக்கு மறவி தவறு இகழ்வே
**962
#14
குழப்பல் குழம்பச்செயல் உழப்பல் கொழுப்பு மதர்ப்பு நிணம் கொழுமை
அழித்தல் கெடுத்தல் சங்கரித்தல் அழுத்தல் அழுந்தச்செயல் பதித்தல்
மழுக்கல் மழுங்கச்செயல் அடித்தல் வழுக்குச் சோர்வு வழும்பு இழுக்கு ஆம்
புழுக்கல் அவித்தல் சோறு என்ப புழைக்கை யானை தொளையுளகை
**963
#15
கழல் செருப்புக் கழற்கொடி கால் வீரர்தம்காலணி ஆம்
கழறல் கழலுதல் உறுதிச்சொல்சொல்லலும் பேர்
குழவி மான் மரை கடமை முசு எருமை யானை
குரங்கு அணில் யாளியின் பிள்ளை குழந்தை மரக்கன்று ஆம்
கழி மிகுதி மரக்கழி கோல் நூல்கழி காயல் பேர்
கழிதல் கழிவுறல் மிகுதல் செலல் கடத்தல் சாதல்
உழை அநிருத்தப்பிரியை நிசி அருக்கதேவி
ஓர் இசை மான் பசுப் பக்கம் இடம் ஓர் யாழ்நரம்பே
**964
#16
உழலை தொழுமரம் உழற்றும்வியாதி
துழனி ஒலி புள்ளீட்டத்தொனிப் பெயர்
சுழி நீர்ச்சுழி மயிர்ச்சுழி சுன்னையும் ஆம்
மழு ஓர் ஆயுதம் காய்ந்தஇரும்பே
**965
#17
தொழுதி புள்ளொலித் திரள் கூட்டம் திரட்சி
கெழுமல் பொருந்துதல் கற்றல் முளைத்தல்
இழுமெனல் இனிதுறல் அநுகரணத்தொனி
செழுமை கொழுமை வளம் மாட்சிமை எழில்
**966
#18
குழை தளிர் சேறு காது குண்டலம்
தழை பீலிக்குடை தளிர் இலையும் பேர்
குழைதல் வளைதல் நெகிழ்தல் வாடுதல்
தழைதல் வளர்தல் வாழ்தல் தழைவுறல்
**967
#19
இழுக்கல் வழுக்கல் தளர்தல் தவறுதல்
விழுப்பம் சிறப்பு மேன்மையும் நன்மையும்
இழைத்தல் அழுத்தல் இயற்றல் நூல்இழைத்தல்
தழைத்தல் செழித்தல் தளிர்த்தல் வாழ்வு ஓங்கல்
**968
#20
வழங்கல் சொல்லுதல் உலாவல் கொடுத்தல்
கழங்கு வெறியாட்டுச் சூது கழற்சி
புழுங்கல் சினக்குறிப்புப் புழுக்கியநெல்
அழுந்துதல் பதிதல் ஆழ்தல் வருந்துதல்
**969
#21
விழல் ஓர் புல் விழுதல் வீண் ஆம்
பழி நிந்தை துரோகம் குற்றம்
இழிதல் தாழ்வுறல் இறங்கல்
விழைவு என்ப புணர்ச்சி ஆசை
**970
#22
ஈழம் சிங்களம் பொன் கள் ஆம் ஏழை பெண் வறிஞன் மூடன்
வேழமே கொறுக்கை நாணல் கரும்பு வல்விலங்கு மூங்கில்
கோழியே உறையூர் ஓர் புள் கூழ் பயிர் உணவு சோறு ஆம்
பூழியே புழுதி சேறு ஓர் கொடுந்தமிழ்நாடும் போற்றும்
**971
#23
கோழையே இலச்சை கூச்சம் குறைபாடு காசம் நாற்பேர்
தாழை ஓர் மரம் தெங்கு என்ப தாழ்வு எனல் குறைவு பள்ளம்
மாழை பொன் புளிமா ஓலை வங்காரம் மடமை புஞ்சம்
மூழையே அகப்பை மத்து ஆம் மோழை கொம்பின்மை கஞ்சி
**972
#24
காழ் கொட்டை கல்பரல் சேகு ஒளி மணிவடம் பளிங்கு ஆம்
கீழ் அடி இடம் கிழக்குப் பொச்சாப்புக் கீழ்மை பள்ளம்
கேழ் ஒளி நிறம் ஒப்பும் பேர் பாழ் வீண் சூநியம் கேடு என்ப
தாழ்தலே குறைதல் ஆழ்தல் விரும்புதல் இறைஞ்சல் சாய்தல்
**973
#25
காழகம் கடாரம் சேலை காழ்ப்பு என்ப மரக்காழ் கார்ப்பு ஆம்
பூழிலே அகில் பூமிப் பேர் பூழ்க்கை கைம்மா அவ் யாளி
மாழ்கலே மயங்கல் சோம்பல் வாழ்த்துத் தோத்திரம் சுபச்சொல்
வீழ்தலே விழுதல் வெக்கல் வீழ்க்கை வீழுறுகை சுவாதி
**974
#26
ஊழல் நிரையம் சீர்கெடல் ஆம் ஊழி யுகாந்தம் நெடுங்காலம்
ஞாழல் பொன்னாவிரை கோங்கு புலிநகக்கொன்றையும் நாட்டும்
ஆழி தேர்க்கால் கரை கடல் சக்கிராயுதம் மோதிரம் வட்டம்
பூழியன் பாண்டியன் சேரன் பூழ்தி புழுதி புலவு என்னும்
**975
#27
வாழ்க்கை வாழ்வது ஊர் செல்வம் மருதநிலத்தூர் மனைவாழ்வு ஆம்
ஆழ்த்தல் புதைத்தல் அமிழ்த்துதல் ஆம் வாழ்த்தல் துதி சோபநம்பாடல்
ஊழ்த்தல் நினைத்தல் மலர்தல் புலால் உதிர்தல் செவ்வி பதனழிதல்
தாழ்த்தல் புதைத்தல் தாமதித்தல் சாய்த்தல் குறைத்தல் கீழ்ப்படுத்தல்
**976
#28
சூழல் குறிப்புக் கூட்டம் இடம் சுற்றுப்புறம் ஆம்
சூழி நீர்நிலை உச்சி யானைமுகபடாப்பேர்
பாழி வலி சொல்பதம் கல்முழை பகைவரூர் தா
பதம் பெருமை பாயல் ம்ருகசயநம் மருதத்தூர்
நூழில் கொலை யானை கொடிக்கொத்தான் தன்னுடம்பில்
நுழைத்த படைக்கலம் பறித்துநிற்றல் செக்குக் குவிதல்
கூழை கடைக்குறை சேறு நாப்பண் மயில்தோகை
கூந்தல் கட்டை புள்சிறகு பிற்படை எண்பெயரே
**977
#29
தாழி பரணிநாள் ஓர் மட்கலம் குடம்
நாழி அளக்கும்படி பூரட்டாதிநாள்
மூழி அகப்பை மத்துச் சோறு காதறை
வாழிய முன்னிலைஅசைச்சொல் வாழ்க எனல்
**978
#30
நூழை நுண்மை நுழைவாயில் சாளரம்
ஊழ் விதி பண்பு பழமை வெயில் பெயர்
யாழ் மிதுநத்தோடு ஆதிரைநாள் வீணை
சூழ்தல் எண்ணல் ஆராய்தல் சுற்றுதல்
**979
#31
நீழல் காற்று நீதி நிழல்
மாழ்கு மிருகசிரம் மயக்கம்
ஆழ்தல் அமிழ்தல் அழுந்தல் பேர்
கீழ்தல் பிளத்தல் கிழித்திடலே
@17 ளகர வெதுகை
**980
#1
அளகு கார்த்திகைநாள் கோழி மயில் கூகை இவற்றின் பெண்
களபமே சுண்ணச்சாந்து கலவைச்சாந்து யானைக்கன்று
களமம் செம்பஞ்சின்நீர் நெல் முளை செந்நெல் எழுதுகோல் பேர்
இளமை ஓர் தெசை உன்மத்தம் இளவலே இளைஞன் பின்னோன்
**981
#2
சளம் வஞ்சம் சஞ்சலம் பொய் தளி மழைத்துளி கோயில் பேர்
வளம் வருவாய் பல்பண்டம் நலம் மாண்பு செழிப்புச் செல்வம்
களரி போர்க்களம் அரங்கம் காடு பாழ்நிலம் கூட்டப்பேர்
விளரி ஓர் இசை நெய்தல்யாழ் விளர் நிணம் இளமை வெண்மை
**982
#3
களவன் கற்கடகராசி கரியவன் முசு நண்டு யானை
களி களிப்பினன் களிப்பு மாக்களி வெறி மயக்கம்
தெளிதலே துணிதல் தேர்தல் உணர்தல் தேறுதல் கொழுத்தல்
நளிநம் நீர் தாமரைப் பேர் நளிர் குளிர் வெறுப்பு நண்டு ஆம்
**983
#4
நளிநி தாமரைக்குளம் தாமரைக்கொடி சுரநதிப் பேர்
தளிமம் குட்டிமம் மேற்கட்டி சயநம் வாள் பஞ்சின்மெத்தை
வளையே கைவளை விட்டம் சக்கிரப்படை சங்கு வங்கு ஆம்
வளையம் மண்டிலமாப்போதல் வட்டம் தாமரைச்சுருட்டே
**984
#5
இளித்தலே சிரித்தல் ஈழ்த்தல் இணுங்கலோடு உரித்தல் என்ப
தெளித்தல் நிச்சயித்தல் தூவல் புரோக்கித்தல் விதைத்தல் தெள்ளல்
திளைத்தலே அநுபவித்தல் செறிதல் மூழ்குதல் நிரம்பல்
வளைத்தலே கவர்தல் சூழ்தல் வணக்குதல் தடுத்தல் கட்டல்
**985
#6
களங்கமே பழிப்பு மாசு கறுப்பு அடையாளம் கிட்டம்
களங்கன் சந்திரன் மாசுள்ளோன் விளிம்பு கண்ணிமை ஓரப்பேர்
களம்பமே கடம்பு பாணம் இலைக்கறிக் காம்பும் ஆகும்
அளிம்பகம் குயில் இருப்பை தவளை அம்புயப்பூந்தாதே
**986
#7
புளகங் குமிழ்ப்போடு ஒழுங்கு அன்னக்கவளம் புடைப்புக் கண்ணாடி
சுளகு விசாகம் ஓர் முறம் ஆம் சுளுகம் ஓர் மட்கலம் சிறங்கை
நளதம் பூந்தேன் இலாமிச்சம் நளம் அம்புயம் நெட்டிக்கோரை
வளமை செழுமை வண்மை நலம் செல்வப்பொலிவு மாட்சிமையே
**987
#8
குளம் நீர்நிலை சற்கரை நெற்றி குளியம் மருந்தின்பொது உண்டை
தளம் நாற்படை சாந்து இலை முறிவு சமதலம் பூவிதழ் தாழி
நளன் ஓர் பிதிர்தேவதை ஓர் வாநரேசன் நிடதநாட்டிறைவன்
ஒளி பிரதாபம் பிரபை விளக்கு ஒளிப்பிடம் முச்சுடர் விண்மீன்
**988
#9
தெளிவு துணிவு கலங்காமை தேற்றம் உணர்வு ஓர் குணவணி ஆம்
பிளிறல் எழுத்தில்லாஓசை கிண்டல் ஆரவாரப்பேர்
களிறு மகரமீன் அத்தநாள் ஆண்பன்றி மதகயமா
அளை மோர் வெண்ணெய் தயிர் இடம் புற்று எலியின்அளை வெற்பின் முழையே
**989
#10
களை ஓர் தாளப்பிரமாணம் காந்தி இளைப்புப் பயிர்க்களை ஆம்
தளை நாற்பாவின் ஓர் உறுப்பு ஆண்மயிர் கால்தளையோடு ஒலிச்சிலம்பு
முளை கான்முளை நெல்முளை மரத்தின்ஆப்புத் தண்டாயுதம் மூங்கில்
இளையாள் கமலை பின்பிறந்தாள் இளையோன் முருகன் பின்னுதித்தோன்
**990
#11
களவு கள்ளம் களாமரப்பேர் களைதல் களைகட்டிடல் நீக்கல்
உளியே தறிகை இடம் என்ப உளைதல் உளைச்சல் நோவுறுதல்
துளி பெண்ஆமை திவலை மழை தொளையே மூங்கில் ஓட்டையும் ஆம்
விளிதல் கெடுதல் சாதல் பேர் விளைவு விளைச்சல் மேகமுமே
**991
#12
அளக்கர் பூமி நீள்வழி உப்பளம் கார்த்திகைநாள் கடல் சேறு ஆம்
தளர்ச்சி தொய்வோடு அசாவுறுகை களிப்பு மகிழ்ச்சி தருக்கு என்ப
விளித்தல் அழைத்தல் மாய்வித்தல் இளைத்தல் எய்த்தல் மெலிதலும் ஆம்
உளைத்தல் ஒலித்தல் கூவுதல் பேர் கிளைத்தல் கிண்டல் கிளைக்கொள்ளல்
**992
#13
வளாகம் இடம் சூழ்ந்திடல் சூழவளைந்தபூமி தினைப்புனம் ஆம்
தளாடகம் காட்டுஎள் அகழ்ந்த தடம் காவிக்கல் நாகப்பூ
அளாவல் கலத்தல் அளைதல் பேர் வளாவல் வளைவு சூழ்போதல்
அளீகம் வெறுப்புப் பொய் நெற்றி களேபரம் தேகம் பிணமே
**993
#14
களகண்டம் என்ப மயில் குயில் அன்னம் புறாப் பேர்
களதௌதம் பொன் வெள்ளி இனிய மெல்லோசையும் ஆம்
குளகமே அளக்கும்கால் பலபாட்டு ஓர் வினையாக்
கொள்ளும் ஓர் சொல்லணியும் குறில்தொடர்செய்யுளும் பேர்
களம் மதுரத்தொனி மிடறு நறும்பிசின் போர்க்களம் நெல்
களம் இடம் கொம்பிலாயானை கறுப்பு மனைவியும் ஆம்
குளவி மலைப்பச்சை ஓர் தேனீ ஓர் வண்டு ஆம்
குளிகன் அட்டநாகத்தொன்று ஓர் உபக்கோள் என்ப
**994
#15
குளிர் முழவுப்பறை இலைமூக்குஅரிகத்தி சீதம்
குடை கூதிர் கவணை கிளிகடிகருவி என்ப
வெளில் என்ப தயிர்கடைதூண் யானைத்தூண் அணில் ஆம்
வெளிறு என்றல் வெள்ளறிவு வெண்மை அலி மரப்பேர்
இளை புதன்தன்தேவி காவற்காடு சுற்றி
லிடும்வேலி பூதலம் வாக்கு இளமை பசு ஏழ்பேர்
உளை கண்டீரவ துரங்கப் பிடரின்மயிர் எழுத்தில்
ஓசை நொதிச்சேறு புறமயிருடன் ஆண்மயிர்ப் பேர்
**995
#16
முளரி நுட்பம் கடைக்கொள்ளி சமித்து விறகு அம்புயம் முள்செடி தீ
அளவே அளத்தல் எல்லை எண்ணலாதியும் காட்சியாதியும் பேர்
நளி மனோசிலை பவளக்கொடி செறிவு குளிர் கூட்டம் நனி தேள் என்னும்
சுளை பலாப்பழத்தின் வித்தைப் பொதி இதழ் ஓர் காயின் விண்டுறு பருத்தி
**996
#17
அளகம் நீர் மயிர்க்குழற்சி பெண்மயிர்
உளர்தல் கோதுதல் சிதறுதல் தடவல்
கிளர்தல் இலங்கல் எழுதல் வளர்தல் ஆம்
இளி ஓர் இசை சிரிப்பு அவமாநமுமே
**997
#18
அளி கொடை அன்பு அருள் வண்டு தேன் கள் ஆம்
பளிதம் கற்பூரம் பல்லம் என் கணக்கு
ஒளிவட்டம் கண்ணடி சக்கிராயுதம்
கிளை வேய் சுற்றம் வங்கிசம் மரக்கிளையே
**998
#19
விளக்குச் சோதிநாள் விளக்குவது ஒளி ஆம்
களத்திரம் மனையாள் அரைப்புறம் அரணிடம்
களத்தொனி பாராவதம் கோகிலம் மயில்
அளித்தல் செறித்தல் கொடுத்தல் காத்தலே
**999
#20
துளங்கல் அசைதல் கலங்கல் அஞ்சுதல்
தளம்பல் நடுங்கல் தள்ளாடல் ததும்பல்
பளிங்கு சுக்கிரனே படிகம் கண்ணடி
துளும்பல் அலைதல் திமிறல் துள்ளுதல்
**1000
#21
அள் என்ப செறிவு காது ஓர் விகுதி பற்றிரும்பு கூர்மை
கள் பன்மைவிகுதி பாளைக்கண்ஊறும்நீர் மலர்த்தேன்
நள் என்ப நடு மாயோன்நாள் வள் என்ப செவி வார் கூர்மை
ஞொள்கலே மெலிதல் கூசல் அலையல் சோம்பலும் நுவற்றும்
**1001
#22
கள்ளமே களவு வஞ்சம் புள்ளுவர் கயவர் வேடர்
வள்ளம் ஓர் மரக்கைத்தோணி வட்டில் நால்நாழிக்கால் பேர்
வெள்ளம் நீர் நீர்ப்பெருக்கு மிகுதி தெண்டிரை ஓர் எண் ஆம்
மள்ளர் கானவர் போர்வீரர் திண்ணியர் மருதமாக்கள்
**1002
#23
அள்ளல் வாருதல் சேறு என்ப கிள்ளை அச்சுவம் கிளிப் பேர்
விள்ளலே தழுவல் பேசல் அலர்தல் வேறுறல் திறத்தல்
நள்ளி கற்கடகம் நண்டு ஓர் கடைவள்ளல் நண்புள்ளோன் ஆம்
புள்ளி ஒற்று இலக்கப்புள்ளி பொறி பல்லி குறி மதிப்பே
**1003
#24
பள்ளி ஊர் முநிவர்வாசம் மருதப்பெண் பாயல் கற்கும்
பள்ளி தாவளம் சிற்றூர் கண்படை அறப்புறம் கோயில் பேர்
வெள்ளியே வெண்பொன் வெண்மை சுக்கிரன் விண்மீன் என்ப
வள்ளுரம் உணக்கும்ஊன் பாழ் வநத்தறை வராகஊனே
**1004
#25
பிள்ளை புள்குஞ்சு காரிப்புள்ளு வாயசம் விலங்கின்
பிள்ளை மைந்தன் குழந்தை மரக்கன்று வடுகன் எண்பேர்
வள்ளையே உலக்கை ஓச்சும் மகளிர்பாட்டு ஓர் கொடிப் பேர்
வெள்ளை வெள்ளாடு வெண்பா பலராமன் வெண்மை சங்கே
**1005
#26
புள் வண்டு அவிட்டநாள் பறவை பொள்ளல் பொளிதல் மரப்பொந்து
வெள்கல் வெட்கல் கூசுதல் பேர் வெள்ளில் பாடை விளாமரம் ஆம்
உள்ளம் இதையம் மநவெழுச்சி உள்ளல் உள்ளான்குரீஇ நினைத்தல்
கொள்ளல் வாங்கல் உட்கொள்ளல் தெள்ளல் கொழித்தல் தெளிதலுமே
**1006
#27
தள்ளல் கழித்தல் விட்டிடல் பொய் இயலல் விழப்பண்ணுதல்
துள்ளல் மசகம் குதித்தல் கலிப்பாவின்ஓசை துருவாடு ஆம்
சுள்ளி மரக்கொம்பின் வறள் ஓர் புதலோடு ஆச்சா நறவம் ஆம்
வள்ளி கந்தப்பிரியை படர்கொடி ஓர் கிழங்கு ஆபரணப்பேர்
**1007
#28
ஞெள்ளல் விரைவுக்குறிப்பு வீதி பள்ளம் மேன்மை
ஒள்ளியோன் அறிவுடையோன் சுக்கிரன் நல்லவன் ஆம்
வள்ளுவன் முப்பால்நூல்சொற்றவன் நிமித்திகன் பேர்
பொள்ளெனல் சீக்கிரக்குறிப்போடு அநுகரணஓசை
**1008
#29
உள் என்ப உள்ளம் இடம் வெளியல்லது
முள் என்ப நுண்மை மரத்தின்முள் கூர்மை
கள்ளி உள்கள்ளமுடையவள் ஓர் மரம்
தொள்ளை மரக்கலம் தொளைப்பட்டதுமே
**1009
#30
கூளியே இடபம் பூதம் பேய் வலி சுற்றம் கூட்டம்
ஞாளியே சுவாநம் கள் ஆம் தாளி ஓர் கொடி பனைப் பேர்
வாளி காதணியும்கம்பி வட்டமாய்ஓடல் அம்பு ஆம்
காளிங்கம் மதாவளம் கட்செவி நிலப்பூசணிப் பேர்
**1010
#31
கூளியர் குறவர் நண்பர் படர் குறட்பூதவீரர்
கேளிர் மித்திரர் சுற்றத்தார் கேள்வன் நட்பாளன் கொண்கன்
தாள் என்ப முயற்சி பாதம் முதல் தினைத்தாளும் சாற்றும்
வேள்வியே மகநாள் யாகம் விதாரணம் ஓமகுண்டம்
**1011
#32
காளபிருட்டம் கருணன்வில் கழுகு முதுகில் கறுப்புள மான்
காளம் காளவிடம் கறுப்புக் காஞ்சிரம் காகளம் சூலம்
கேளி இலீலை பரிகாசம் கேள்வி கேட்டல் செவி கல்வி
மீளி பெருமை வலி அண்ணல் வீரன் பாலைநிலத்தலைவன்
**1012
#33
கோளகம் சற்கரை கவளம் மண்டலி வெள்விழி நீர்க்
குடச்சால் இந்தியத்தாநம் உடைந்தஓடு உண்டை
நாளம் நெல்லாதியின்தண்டு உள்தொளை நளினத்தண்டு ஆம்
நாளியே இலைக்காம்பு உள்தொளையுளது நெல்தாள்
காளி புது முகில்பந்தி பார்ப்பதி கங்காளி
கருநிறத்தி ஓர் மாதா நிந்தனை ஓர் புழுப் பேர்
பாளி நுனி ஓரம் அடையாளம் ஒத்த வட்டப்
பாறை பந்தி காதின்மடல் மீசையுளபெண்ணே
**1013
#34
காளிகை வெண்கலம் பொன்னாதியின் கசடு நாளம்
கார்ப்பந்தி முகுளம் மயிரொழுங்கு ஓர் யோகிநி மா
காளிகை தூசரி கள் புடோல்கொடிப் பண்டவிலை ஊன்
கரியகுணம் நவமேகம் விருச்சிகம் பத்திரப்பேர்
நாளிகை வேய்ங்குழாய் கமலநாளம் அறுபதுவி
நாடிப்போது உள்ஓட்டையுளது அடுப்பின்தொளை ஆம்
பாளிதம் பால்சோறு அன்னம் குளகண்டம் பட்டு ஆம்
பாளை பனை கமுகு தென்னம்பூக்குலை நெல்பதரே
**1014
#35
காளகண்டம் கணிமரம் நச்சுப்புள் ஊர்க்குருவி மயில் கரிக்குரீஇ ஆம்
தாளம் எனல் அரிதாரம் காலக்கிரியாமாநம் சம்பை யாதி
ஆளி சிங்கம் யாளி சுத்தக்கருத்து ஒழுங்கு ஆள்பவன் சேது அநர்த்தம் பாங்கி
கோளி அத்தி ஆல் கொளுஞ்சி பூவாதுகாய்க்கும்மரம் கொள்வோனும் பேர்
**1015
#36
சூளிகை மாளிகைமுகப்புக் கரிச்செவியின்அடி நாடகாங்கத்து ஒன்று ஆம்
காளை பாலைத்தலைவன் சேங்கன்று புருடன் கட்டிளமையோன் பேர்
கோளை மநோசிலை தோழி பத்திராஞ்சநம் கோதாவரி நீர்ச்சால் ஆம்
கோள் கொள்கை நவக்கிரகம் கொலை தீமை புறங்கூற்றுக் கொள்ளலும் பேர்
**1016
#37
காளமேடிகை என்ப கருஞ்சிவதை மஞ்சிட்டை
பூளை ஓர் புதல் இலவம்பஞ்சு மலைக்கணவாய் ஆம்
தேள் விருச்சிகராசி அநுசநாள் ஓர் செந்து
நாள் இராப்பகலும் மூவொன்பதுநக்கத்திரமும்
**1017
#38
காளகம் எனல் கறுப்புள்ளது புரைகழல்
கோளகை கட்டுறு பூணும் வட்டமும்
ஒளி மதகரிக்கூடம் ஒழுங்கு ஆம்
வேள்வியினர் கொடையாளர் விப்பிரர்
**1018
#39
கோளமே உண்டை வட்டம்
சோளம் ஓர் தவசம் மெய்ப்பை
நீளல் நீளுதல் ஓடல் பேர்
வாளமே வளப்பம் வாள் ஆம்
**1019
#40
சூளையே வேசை சுள்ளை
வேளை ஓர் புதல் நேரப்பேர்
தோள் கை ஓர் மெய்உறுப்பு ஆம்
பீள் இளங்கதிர் சூல் என்ப
**1020
#41
வேளாண்மை கொடை மெய்ம்மைப் பேர் ஆளாநம் தறி வேழத்தூண்
காளாநுசாரியம் கற்கடாரையோடு அரக்குமஞ்சள்
தூளீகதம்பம் வேங்கை கடம்பு மாவிலிங்கும் சொல்ப
நாளீகம் அம்பு இரும்பின்முளை அங்கம் களிகம் வள்ளை
**1021
#42
வேள் ஆடவன் மன்மதவேள் முருகவேள்
வேளாளர் பூவைச்சியர் ஈகையாளர் பேர்
ஆள் ஓர் விகுதி அடிமை ஓர் ஆண்மகன்
வாள் ஓர் ஆயுதம் கூர்மை ஒளியும் ஆம்
@18 றகர வெதுகை
**1022
#1
புறணி தோல் குறிஞ்சி முல்லை நிலம் புறத்தது மரத்தோல்
திறம் வகை குறைநரம்பின்யாழ் வலி பொருட்டும் செப்பும்
நிறம் வண்ணம் மார்பு பண்பு ஆம் நெறி வழி முறைமை நீதி
முறம் விசாகம் வேய்ந்தட்டு ஆம் முறுவல் பல்லொடு சிரிப்பே
**1023எ
#2
அறல் சிறுதூறு நீர் நீர்த்திரை கருமணல் அற்றல் பேர்
குறவர் குன்றவர் கிராதர் குறி குறிப்பு அடையாளப்பேர்
மறவர் வாளுழவர் வேடர் மறவியே மறதி கள் ஆம்
உறவியே உறவு நீரூற்று உலைக்களம் உயிர் எறும்பே
**1024
#3
பறி மீன்பெய்புட்டில் மீனைப் படுக்கின்ற கருவி பொன் ஆம்
மறி அழுங்கு இவுளிக் குட்டி ஆடு மான் இவற்றின் குட்டி
முறி என்ப கடன்கொள்ஓலை தளிர் தெரு முறிவும் ஆகும்
செறிதலே மிகல் கலத்தல் நெருங்கல் சேருதல் குளித்தல்
**1025
#4
மறு வடுக் குற்றம் மாசு ஆம் வறுமை இல்லாமை துன்பம்
அறுகு ஓர் புல் சிங்கம் யானையாளி ஆண்புலி நாற்பேராம்
இறுதலே முடிதல் உக்கல் கெடுதலோடு இடிதல் என்ப
பெறுதல் ஊதியப்படல் வாய்த்திடல் பிள்ளைப்பெறலும் பேசும்
**1026
#5
துறுமல் துன்றுதல் திரட்சி துறுவலே செறிதல் உண்டல்
சிறுமை நோய் துன்பம் அற்பம் தெரித்திரம் எளிமை ஐம்பேர்
எறுழ் தண்டாயுதம் வலிப் பேர் இறைவன் நாயகன் இராசன்
அறை சொல் வீட்டரங்கு அறுப்புண்டது பாறை முரஞ்சும் ஆமே
**1027
#6
கறை உரல் இரத்தம் குற்றம் குடியிறை கறுப்பு மாசு ஆம்
குறை நிறைவின்மை குற்றம் அரசிறை குறுவாழ்க்கைப் பேர்
சிறை பக்கம் சிறகு காவல் மதில் கரை சிறைப்பெண் என்ப
நிறை நிறுவுதல் நிறுத்தல் துலா மாண்பு நிறைவு நீர்ச்சால்
**1028
#7
பொறை மலை துறுகல் பாரம் புவி சுமை பொறுமை சூல் பேர்
மறை மறைவி இராசியச்சொல் அடைக்கலம் மறுத்தல் வேதம்
முறை மரபு ஒழுக்கம் தொன்மை புத்தகம் முறைமை பண்பு ஆம்
உறைதலே இருத்தல் தோய்தல் உறையுள் ஊர் சயநம் வீடே
**1029
#8
விறல் வலி பெருமை வெற்றி மிறை என்ப வருத்தம் குற்றம்
புறவம் சீகாழி காடு ஆம் பொறையன் மெய்விரதன் சேரன்
குறளி ஓர் பேய் தொழுத்தை குறைவு என்ப வறுமை ஊநம்
அறிவு என்ப உணர்வு கல்வி அறைதல் சொல்லுதல் அடித்தல்
**1030
#9
இறவையே புட்டில் ஏணி இறப்பு வீட்டிறப்புச் சாவு ஆம்
வெறிது பாழ் அறியாமைப் பேர் விறப்பு என்ப பயம் நெருக்கம்
தொறு நிரை அடிமை கூட்டம் துறத்தல் சார்பறுத்தல் நீங்கல்
குறுகல் நீட்டன்மை கிட்டல் குறிக்கோள் ஒற்றுமை கருத்தே
**1031
#10
பிறக்கமே மரக்கொம்பு அச்சம் பிறக்கு என்ப வழு அசைச்சொல்
இறத்தலே மிகுதல் சாதல் கடத்தலே கலும் இயம்பும்
பறித்தல் தோண்டுதல் பூக்கொய்தல் களைகட்டல் கவர்தல் பன்னும்
வெறித்தல் பேதுறல் வெற்றென்றல் வெறுக்கை பொன் வெறுப்புச் செல்வம்
**1032
#11
உறுக்கல் கோபக்குறிப்பு மிதித்தல் வற்புறுத்தலும் பேர்
இறுத்தலே முறித்தல் தங்கல் சொலல் இறைதரல் வடித்தல்
ஒறுத்தல் தண்டித்தல் எள்ளல் உலைத்திடல் வெறுத்தல் என்ப
நிறுத்தலே நிறுவல் நாட்டல் நிலைச்செய்தல் நிறுத்திடல் பேர்
**1033
#12
மறுத்தலே மாறுரைத்தல் வட்கல் மீட்டுஉழுதல் என்றாம்
உறுப்பு அவையவம் மரக்கொம்பு உடல் அதிகம் நெருக்கம்
வெறுப்பு அருவருப்புக் கோபம் வேண்டாமை செறிவு அச்சப்பேர்
குறைத்தல் சங்கரித்தல் வெட்டல் சுருக்குதல் குறுக்கல் என்ப
**1034
#13
கறங்கலே ஒலித்தல் சூர்த்தல் கறங்கு என்ப சுழல் காற்றாடி
பிறங்கலே நிறைவு வெற்புப் பெருமை மிக்கு ஒளி உயர்ச்சி
பிறங்குதல் மிகல் விளங்கல் பெருகுதல் ஒலித்தலும் பேர்
இறும்பு தாமரைப்பூக் குன்று மிடைதூறு குறுங்காடு என்ப
**1035
#14
பிறழ்தல் வெறுத்தல் ஒளிசெய்தல் பெயர்தல் நடுங்கல் விகற்பித்தல்
உறழ்வு பகை போர் செறிவு எண்ணின் பெருக்கோடு இடையீடு உணர்வு உவமை
கறி சாகம் காய்களைச் சுவைத்தாய்க் காயம்பெய்து அட்டது மிளகு ஆம்
தறி தூண் ஆப்பு நடுதறி ஆம் தறிகை உளி குந்தாலிப் பேர்
**1036
#15
வெறி கள் ஆடு கலக்கம் பேய் வாசம் வெறியாட்டு அச்சம் எனும்
அறிஞன் அறிவுள்ளோன் புதன் பேர் அறிவன் சிநன் உத்திரட்டாதி
உறு ஓர் ஓடம் தவம் மிகுதி உறுவன் முநிவன் அசோகுஅமர்ந்தோன்
உறுகண் வறுமை நோய் துன்பம் தறுகண் வீரம் அஞ்சாமை
**1037
#16
பிறிதல் நீங்கல் பிறிதாதல் பிறித்தல் பிரித்தல் வேறாக்கல்
முறுகல் கடுமைப்படல் முதிர்தல் முறுக்கல் திரித்தல் திருகுதல் ஆம்
செறுதல் அழித்தல் கோபித்தல் தெறித்தல் சிதறுபடல் சுண்டல்
தெறுதல் நெரிதல் கொலைசெய்தல் செறுத்தல் வெறுத்தல் கொலல் நெருக்கல்
**1038
#17
குறடு திண்ணை மரத்துண்டம் பலகை ஓர் கருவி
குறள் இருசீரடி குறுமை ஈரடிப்பாப் பூதம்
புறம் என்ப முதுகுப் பக்கம் உள்ளலதோடு இடப்பேர்
புறவு என்ப குறிஞ்சிநிலம் முல்லைநிலம் புறா ஆம்
மறம் என்றல் வலி தறுகண் சினம் கொலை பாவமும் ஆம்
மறல் பிணக்கு மயக்கம் போர் மறதி பகை காலன்
பறழ் தவழ்சாதியின் பிள்ளை புலி பூனை நரி நாய்
பன்றி முயல் குட்டி குரங்கு அணில் கீரிப்பிள்ளை
**1039
#18
பொறி அடையாளம் தேமல் புள்ளி விதி செல்வம்
பொலிவு எழுத்து ஐம்பொறி தோணி மதில்பொறி பூமகள் பேர்
எறிதலே உதைத்தல் குத்தல் வெட்டல் வீசுதல் ஆம்
இறால் எருது கார்த்திகைநாள் ஓர் மீன் தேன்கூடு
செறிவு அடக்கம் நெருக்கம் ஓர் குணவணி கூட்டமும் ஆம்
தெறுவி என்ப துடுப்புச் சட்டுவம் பாம்பின்படப்பேர்
உறுதல் வரல் மிகல் அடைதல் சம்பவித்தல் பொருந்தல்
உறுதி திடன் உணர்வு கல்வி நிச்சயம் நன்மையுமே
**1040
#19
உறை மருந்து பால்பிரை வெண்கலம் வாழ்நாள் விலங்கின்
உணவு புள்ளின்இரை நீளம் உயர்வு பை பொன் மூடும்
உறை கருவிப்புட்டில் பொருள் உறுத்தல் மழை திவலை
உவர்நீர் நெல்அளவினில் எண்குறித்து இறுதிபெய்தல்
இறை கடன் கைவரை சிறுமை சடுதி சிறகு இறைவன்
எதிர்மொழி வீட்டுஇறப்பு அரசன் இறுப்பு இறை தங்கலும் ஆம்
துறை துறுத்தல் பாவினத்தின் ஒன்று புறப்பொருளின்
சொலவு தொழில்செயுமிடம் நீர்த்துறை நதி நூல்துறையே
**1041
#20
பறந்தலை பிணம்சேர்காடு செம்புலம் ஆம்
பறம்பு என்ப பருப்பதம் கொங்கை
குறிஞ்சி செம்முள்ளி ஓர் மரம் ஓர் பண்
குன்று சார்நிலத்தொடு ஓர் இராகம்
குறும்பு பொல்லாங்கு கொடும்சமம் பாலை
நிலத்தினூர் குறும்பு அரண்இருக்கை
குறும்பொறை குறிஞ்சிநிலத்தொடு அந்நிலத்தூர்
குன்று காடு என்ன நாற்பெயரே
**1042
#21
உறப்புச் செறிவு பிளத்தல் சுருக்கம்
உறழ்ப்பு நெருக்கம் ஓர் பாலையாழ்த்திறம்
செறித்தல் பாதீடு முழுகுதல் சேர்த்தல்
கறுப்புச் சினக்குறிப்புக் கருநிறம் கறை
**1043
#22
புறம்பணை குறிஞ்சித்திணை முல்லைத்திணை
குறும்பர் குறுநிலமன்னர் குறும்பினர்
இறும்பூது ஆச்சரியம் பேருவகை
இறைஞ்சல் குனிதலொடு தெண்டனிடல்
**1044
#23
வறிது சிறுமை பயனின்மை
தெறிதல் நெரித்தல் அழித்தல் பேர்
நறை கள் வாசம் நறும்புகை ஆம்
பறை வாச்சியம் சொல் இறகு என்ப
**1045
#24
சிறப்பு மிகுதி சிறந்ததும் ஆம்
பறப்புப் பறத்தல் நடுக்கப்பேர்
பொறுத்தல் சகித்தல் சுமத்தலும் ஆம்
உறைத்தல் கார்த்தல் பெலத்திடலே
**1046
#25
திறல் கொடும்சமம் ஆண்மைப் பேர்
கிறி படிற்றுச்சொல் பாதை
நொறில் என்ப அடக்கம் வேகம்
சிறுகுடி சிற்றில் சீறூர்
**1047
#26
புற்கசர் புலைஞர் நீசர் புற்கசி மதங்கி நீலி
ஒற்கமே மிடி தளர்ச்சி உற்சேதம் உடல் உயர்ச்சி
சற்கம் வற்கலை துண்டப்பேர் சற்பி பெண்பாம்பு நீர் நெய்
சொற்கமே முலை சுவர்க்கம் சுற்பமே கயிறு செம்பு ஆம்
**1048
#27
முற்கரம் இரும்பின்தண்டு முகுளம் கொட்டாப்பும் ஆகும்
வற்கு வெள்ளாடு மெல்லிது அழகியது இமைமயிர்ப் பேர்
மற்குணம் தேங்காய் கொம்பிலாயானை மஞ்சகீடம்
மற்சம் மீன் விராடதேயம் வற்சநம் கொலை தியாகம்
**1049
#28
வற்சம் ஓர்ஆட்டைக்கன்று மார்பு வற்சரம் குழந்தை
மற்சரன் மருத்தரித்ரன் பிறர்சுபம்பொறா மநத்தோன்
உற்சவம் விழா வியாபிப்பு உளச்செருக்கு இச்சை கோபம்
தற்பணம் முதுகென்பு யானைப்புறம் தருப்பணம் பளிங்கே
**1050
#29
பற்பமே பதுமம் சாம்பல் கிற்பிடம் பிழை நோய் பாபம்
கற்பு என்ப மகளிர் நெஞ்சநிலை முல்லைப்புதல் கற்றல் பேர்
அற்றமே மறைவு சோர்வோடு அவகாசம் அறுதி என்ப
கொற்றம் கோஇயல் வெற்றிப் பேர் கொற்றியே வடுகி துற்கை
**1051
#30
செற்றமே வைரம் கோபம் செற்றல் கொல்லுதல் நெருக்கல்
எற்றலே எறிதல் கொல்லல் குத்தல் எற்றுதல் வெட்டல் பேர்
ஒற்றல் ஒற்றுதல் உடுத்தல் ஒற்று மெய்யெழுத்து ஒற்றன் பேர்
சுற்றல் சுற்றிடல் சுருட்டல் சுழலுதல் கவர்தல் சூழ்தல்
**1052
#31
துற்றலே நெருங்கல் உண்டல் துற்று உணவொடு நெருக்கம்
பற்றலே தொடர்தல் இச்சைப்படல் கொள்ளல் பிடித்தல் நாற்பேர்
சுற்று மண்டிலமாஓடல் சுழற்சி சூழ்வொடு சுருட்டு ஆம்
பற்று என்ப தொடர்ச்சி ஆசை பசை பிடிப்பு அன்பும் ஆமே
**1053
#32
அற்கம் விலை பூசாவிதிப் பேர் அற்பம் சிறுமை நொய்யதும் ஆம்
புற்கலம் மெய்க்காந்தி உடல் ஆன்மா ரூபாதியபொருள் பேர்
உற்கலிகை நீர்த்திரை விடையநினைவு ஒள்ளிழையார்இயற்குணம் ஆம்
புற்கு விலக்குக் கபிலநிறம் பொற்புப் பொலிவு ஒப்பனை அழகே
**1054
#33
குற்சம் நெல்தாள் துணியங்கம் ஓர் முத்தாரம் பூங்கொத்து ஆம்
குற்றல் களைதல் நெல்குற்றல் தெற்றல் பின்னல் மாறுபடல்
முற்றல் முகிதல் காழ்க்கொள்ளல் முதிர்தல் வளைத்தல் மூப்பாதல்
முற்றில் விசாகநாள் முறம் ஆம் முற்று முடிவு முழுதும் எனும்
**1055
#34
கற்கம் இடம்பம் விட்டை அயக்கிட்டம் பாவங்
கனல் வெள்ளைக்குதிரை குடம் கண்ணாடி காடு ஆம்
கற்சிதம் மேகத்துவநி முழக்கம் மதகயப்பேர்
கற்சூரம் பேரீந்து வெள்ளி ஓர் புழுப் பேர்
கற்பம் மயன்வாழ்நாள் ஒத்தது வேதவிதி யு
காந்தம் கற்பகம் கள்ளு மந்திரநூல் நியாயம்
சிற்பம் எண்ணெண் கலைஞாநத்தொழில் சித்திராதி
தெசவித சிற்பத்தொழில் ஓர் நூல் சுருவை நாற்பேர்
**1056
#35
கற்கசம் கடிநம் கரும்பு காம்பில்லமரம் காசமத்தகமரம் ஆம்
கற்கசி கொடியோன் சாகசி குரூரன் கடிநன் க்ருபணன் தயையில்லான்
கற்கரம் எலும்பு ஓர் மீன் சலத்துவாரம் கண்ணாடி திடம் ஒலி கூகை
சற்சரம் சீன்றம் இந்திரன்துவசம் சயகண்டை கலியுகமும் பேர்
**1057
#36
உற்கடம் தீவிரம் சுராபாநவெறி இலவங்கம்
கற்கரிகை பறைகொட்டும்கோல் சதங்கை வறுத்தபொரி
வற்கம் மரவுரி வருக்கம் துரகதவாயின்வடப்பேர்
அற்புதம் பத்துக்கோடி ஆச்சரியம் தசைக்கணுவே
**1058
#37
உற்கை விண்வீழ்கொள்ளி கடைக்கொள்ளி விண்மீனும் பேர்
பற்சந்தியம் மேகத்தொனி முழங்கும்புயல் ஆம்
உற்சருக்கம் கொடை தள்ளிவிடுகை பொதுநியாயம்
உற்புல்லம் கடுகியது ஓர் சுரதம் மலர்ந்ததுமே
**1059
#38
மற்கடம் குரங்கு ஓர் சுரதம் சிலம்பி
துற்கதி என்ப நிரையம் தரித்திரம்
கற்கரி கரகம் தயிர்கடைதாழி
அற்களம் கதவின்தாழ் பெருந்திரையே
**1060
#39
நிற்கிரந்தன் மிடியாளன் முழுமகன்
நிற்சரை சீந்தி உமிரி சரையின்மை
சற்சையே பூசுகை சாமுண்டி சிந்தநை
தற்பம் மனைவி அட்டாலை சயநமே
**1061
#40
பிற்படல் பின்னாதலும் பிந்துதலும்
முற்படல் முந்துதல் முன்னாதலும் ஆம்
உற்பலம் நறுங்கோட்டம் கருநெய்தல்
நெற்றி படைவகுப்பு ஓர் மெய்யுறுப்பே
**1062
#41
அற்று அவ்வியல்பிற்றுஎனல் ஓர் சாரியை
இற்று இத்தன்மைத்துஎனல் ஓர் இடைச்சொல்
மற்றுப் பிறிது வினைமாற்று அசைநிலை
பற்றை செங்காந்தள் சிறுதூறு என்பவே
**1063
#42
உற்காதம் பூரகம் முதல் மூன்றுள யோகாப்பியாசத்தோடு
உற்காதம் கால்இடறல் பலிப்பு அறிந்து தொடங்கல் முற்கரம் ஆம்
உற்சாகம் சந்தோடம் மநவெழுச்சி உத்தியோகப்பேர்
உற்பாதம் விண்வீழ்கொள்ளி மாரிநோய் பூகம்பாதி
**1064
#43
தாறு அளவு இரும்பின்முள்ளு மரக்குலை தநுக்கு தைப் பேர்
தூறு என்பது துறுதல் நிந்தைச்சொல் செடிப்புதை சிலும்பல்
நீறு என்ப விபூதி சாம்பர் நூறு என்ப சுண்ணம் ஓர் எண்
வீறு என்ப பெருமை வென்றி பெருமிதம் விளக்கம் வேகம்
**1065
#44
ஆறு நதி ஓர் எண் வழி ஆம் காறு கொழுவும் அளவும் பேர்
கூறு பங்கு பாதி வகை கூறுதல் சொல்லுதல் விற்றல்
சோறு பரணிநாள் உண்டி சூறை சுழல்காற்றுக் கொள்ளை
பாறு பருந்து மரக்கலம் ஆம் பேறு பெறுதல் இலாபப்பேர்
**1066
#45
மாறல் விற்றல் பிறிதுபடல் எண்பெருக்கல் நடித்தல்
மாறு பகை துடைப்பம் இலையுதிர் மரக்கொம்பு என்ப
ஏறு சிங்கம் மான் மரை புல்வாய் கவரி சுறாச் சங்கு
இவற்றின் ஆண் கடா எருது ஏறுண்டது அச்சுவதிநாள்
சாறு புளிங்கறியாதி இலைமுதலா மருந்தின்
சாரம் காய்க்குலை கள்ளும் உற்சவமும் சாற்றும்
சேறு விழா இனிமை கள்ளு நீரில் மண்சேர்குழைவு ஆம்
சீறுதல் கோபித்தல் பெருங்கோபம் உரப்பலுமே
**1067
#46
கீறல் எழுதுதல் பிளத்தல் கிழித்தல்
பாறல் பறிதல் பேரெருது எருது ஓடல்
ஊறு கொலை தொடல் இடையூறு உறுதல்
தேறு வேர்க்கொம்பாதிய தேற்றாமரம்
**1068
#47
ஊறல் சுரத்தல் நனைதல் பேர்
தூறல் மழை தூறுதல் உமிழ்தல்
தேறல் தெளிதல் தேன் கள் ஆம்
நாறல் முளைத்தல் கமழ்தலுமே
**1069
#48
ஊற்றமே புகழ் பற்றுக்கோடு உரம் உணர்வுடைமை ஊக்கம்
தேற்றமே திடன் குறிக்கோள் தெளிவு நிச்சயமும் ஆகும்
தோற்றமே வலி பிறப்புச் சொல்மாலை உதயம் நாற்பேர்
தூற்றலே முகில்துளித்தல் அலர்தூற்றல் நெல்தூற்றல் பேர்
**1070
#49
தோற்றல் காணுதல் பிறத்தல் முளைத்தல் தோல்விப்படல் பேர்
நோற்றல் நோன்புறல் பொறுத்தல் கூற்றுச் சொல் இயமன் காலன்
போற்றலே பாதுகாத்தல் புகழ்தல் பேணுதல் வணங்கல்
ஏற்றுதல் ஏறச்செய்தல் அடுக்குதல் உயர்த்தல் என்ப
**1071
#50
மேற்கோள் மீக்கோள் மேலோர்சொல் உதாரணம் சநி மேற்கொள்கை
ஆற்போதம் விண்டுக்ராந்தி காட்டுமல்லிகை எருக்கு ஆம்
ஊற்றால் மீன்கூடு உரோணி ஊற்றுதல் வார்த்தல் பெய்தல்
ஊற்று ஊன்றுகோல் நீரூற்று ஆம் காற்று ஓர் பூதம் பேய் என்ப
**1072
#51
ஏற்றம் அதிகம் மேம்பாடு நினைவு துணிவு ஏறுவதும் பேர்
ஆற்றல் வலி வல்லமை பெருமை அதிகம் தணித்தல் செய்தல் பொறை
ஏற்றல் ஒப்புக்கொளல் எழுப்பல் எதிர்த்தல் யாசித்தலும் ஏற்கும்
மாற்றல் மறுத்தல் வேறாக்கல் பாற்குநம் பங்குநி மருதே
@19 னகர வெதுகை
**1073
#1
இனம் ஒரு பொருளின்வற்கம் கிளைஞர் ஓர்வகைத்திரள் பேர்
மனவு அக்குப்பாசி சங்கின்மணி மணிப்பொதுவும் ஆகும்
துனி நதி புலவிநீட்டம் வெறுப்பொடு துன்பம் என்ப
கனிதல் முன்கோபம் நைதல் இரங்கிடல் கனிவுறல் பேர்
**1074
#2
புனிதனே அருகன் சுத்தன் புத்தன் இந்திரன் மகேசன்
சினை கருப்பம் மரக்கொம்பு அவையவம் முட்டை செப்பும்
நனை கள்ளு மலர்மொட்டு என்ப நனந்தலை நடுவோடு உச்சி
மனை என்ப மனைவி வீடு ஆம் வனைதலே புனைதல் செய்தல்
**1075
#3
குனித்தலே வளைத்தல் ஆடல் சினைத்தல் சூல்கொளல் தளிர்த்தல்
பனித்தல் துன்புறல் நடுங்கல் பயப்படல் விடாமழைப் பேர்
அனுக்கமே வருத்தம் வாட்டம் அனைத்தே அவ்வளவிற்று எல்லாம்
கனைத்தலே ஒலித்தல் பெய்தல் எருமை கற்கியின் ஆர்ப்பு என்ப
**1076
#4
கனலி கனலோன் இநன் பன்றி கனவு கனா நித்திரையும் பேர்
நனவே தெளிவோடு அகலப்பேர் நனியே மிகுதி பெருமையும் ஆம்
பனி ஓர் மஞ்சின்நீர் குளிர் ஆம் பனை ஓர் மரத்தோடு அநுசநாள்
தனியே தநவான் தனிமை எனும் தனிமை ஒற்றை ஒப்பின்மை
**1077
#5
புனிதம் தூய்மை புநர்பூசம் புனிறே புதுமை ஈன்றணிமை
புனை ஒப்பனை கால்தளை பொலிவு ஆம் புனைதல் பூணல் அலங்கரித்தல்
முனை போர் முதன்மை நுனி பகை ஆம் முனைவு வெறுப்புப் பெருங்கோபம்
வினையே செயல் வெஞ்சமம் தொழில் பேர் முனைவன் முதல்வன் மெய்த்தவனே
**1078
#6
புனமே குறிஞ்சிநிலம் கொல்லை
சினவல் பொருதல் கோபித்தல்
அனல் உட்டணமும் நெருப்பும் பேர்
பனுவல் பஞ்சின்நூல் சொல் நூல்
**1079
#7
கொன் என்ப பெருமை காலம் பயனின்மை பயமும் கூறும்
சுன் முதுமகன் சுன்னைப் பேர் மின்னல் மின்னிடல் துலங்கல்
தென் அழகு இசைக்குறிப்பு ஆம் சென்னியே சிரசு சோழன்
பின் இடம் வழி பின்பு ஈறு ஆம் பின்னலே சடை தெற்றல் பேர்
**1080
#8
பொன் எழில் இரும்பு ஓர் தாது பொலிவு இலக்குமி வியாழம்
மன் நிலைபேறு இடைச்சொல் பெருமை மன்னவன் மிக்கு என்ப
முன் என்ப பழமை முன்பு முதல் இடம் மேலும் ஆகும்
கன்மடம் அழுக்குப் பாவம் புன்மை அற்பமும் இழுக்கும்
**1081
#9
உன்மத்தம் பேது ஊமத்தை உன்னலே கிளர்தல் உள்ளல்
தன்மை தன்னிடம் பண்பு என்ப தன்னம் கோக்கன்றோடு அற்பம்
கன்னபூரம்தான் வாகை கருநெய்தல் செவிமலர்ப் பேர்
சன்னம் மெல்லியது ஏகாந்தத்தலம் மூடப்பட்டது அற்பம்
**1082
#10
முன்னர் முற்பக்கம் முன்பு ஆம் முன்னவள் முதல்வி மூத்தாள்
இன்னலே தீமை துன்பம் இன்னாப் பொல்லாங்கு இடுக்கண்
கன்னல் சற்கரை கரும்பு கரகம் நாழிகை அவ் வட்டில்
பன்னல் சொல்லுதல் யோசித்தல் பருத்தி பன்னுதல் கொய்தல் பேர்
**1083
#11
மன்னன் எப்பொருட்கும்நாதன் மகீபன் உத்திரட்டாதிப் பேர்
அன்னை தாய் தமக்கை தோழி என்னை என் தாய் ஐயச்சொல்
பின்னையே பிற்றைநாள் பின்பு இலக்குமி பின்பிறந்தாள்
பின்னோர் சூத்திரர் பின்வந்தோர் முன்னோர் தொன்மையர் அமைச்சர்
**1084
#12
கன்மாடம் கருள் பல்வண்ணம் கன்னார் கன்னுவர் கல்லின்நார்
குன்மாடம் காடிநீர் காராமணிப்பயறும் கூறும்
உன்மாதம் பைத்தியம் கொல்லுகை எலிப்பொறி ஊமத்தை
முன்னோன் முன்னவன் மாதேவன் கணேசன் முக்குடைச்செல்வன் பேர்
**1085
#13
புன்கண் நோய் மெலிவு துன்பம் பொன்றுதல் கெடுதல் சாதல்
நன்கு எழில் மிகுதி நன்று ஆம் நன்று என்ப பெருமை நன்மை
இன்பமே சுகம் மகிழ்ச்சி என்பு என்ப எலும்பு புல் ஆம்
முன்பு என்ப பெருமை தொன்மை வலிமை முன் என்ன நாற்பேர்
**1086
#14
மன்ற நிச்சயம் உண்மைப் பேர் மன்றம் அம்பலம் நீள்வீதி
கன்றலே மிகுதல் வெம்பல் இரங்குதல் கனன்றல் என்ப
குன்றவர் குறவர் வேடர் குன்றலே கெடுதல் எஞ்சல்
இன்று இந்நாள் இன்மை என்ப என்று எந்நாள் இரவி வெய்யில்
**1087
#15
கன் தராசுத்தட்டொடு கல் மன்றல் வாசம் கல்யாணம்
நன்றி நன்மை அறம் உதவி அன்றில் மூலநாள் ஓர் புள்
கன்று மரை மான் பசு எருமை கடமை கவரிப் பிள்ளை மரக்கன்று
கராம் ஒட்டகம் யானைக் குட்டி அற்பம் கைவளையே
**1088
#16
அன்னம் உணவு நீர் சோறு ஓர் புள்ளு மலம் விட்டதும் ஆகும்
உன்னம் நினைவு மனம் நீர்ப்புள் தொன்மை பழமை ஓர் வனப்பு
மன்னல் அடைதல் நிலைபெறுதல் வன்னிசிகம் குங்குமம் குசும்பம்
வன்னி பிரமசாரி கிளி ஓர் மரம் பாவகன் பரமன்
**1089
#17
குன்மம் இடப்பாட்டுஈரல் படைவிகற்பம் சுங்கம்
குன்மநோய் பணைகளிலாமரம் புறக்காவல் பேர்
சின்னம் முற்றில் காகளம் பதாகை அடையாளம்
சிறுமை மரத்தட்டுச் சேதிக்கப்பட்டதும் ஆம்
முன்னம் சீக்கரிமரம் உள்ளம் குறிப்பு முன்பு ஆம்
முன்னை முன்பு முன்னைநாள் ஓர் மரம் முன்பிறந்தாள்
கன்னிகாரம் கொன்றைமரம் கோங்குமரப்பேர்
கன்னிகை பூப்பொகுட்டு மணமிலாள் கருணிகையுமே
**1090
#18
பன்றி ஓர் விலங்கு ஓர் கொடுந்தமிழ் நாடு
அன்று அல்லஎனல் அந்நாள் அசைச்சொல்
ஒன்று தனிமை எண்ணின்முதல் மோக்கம்
குன்று சதையம் சிறுமலை குன்றமே
**1091
#19
புன்காலி காசாமரம் பாதிரைமரம்
வன்பால் குறிஞ்சித்திணை பாலைத்திணை
என்றூழ் வெயில் ஆயிரம்கதிரோனும் ஆம்
பின்றை பிறகொடு பிற்றைநாளும் பெயர்
**1092
#20
மின் ஒளி மேகப்பிரபை ஓர் விகுதி
துன்மதி பொல்லாப்புத்தி ஓர் ஆண்டு ஆம்
துன்முகம் குரங்கு ஓர் நிரையம் துரங்கம்
பின்னகம் மயிர்முடியொடு தலைக்கோலம்
**1093
#21
கன்னம் திராசு கன்னக்கோல் கவுள் செவி
பன்னம் இலை முள்முருக்குப் பலாசம் ஆம்
துன்னல் பொருந்தல் இயற்றல் நெருங்குதல்
நன்னிலை உலகம் நன்னிலைமை சுகம் தவம்
**1094
#22
பானலே மருதவேலி பழனம் நீலோற்பலப்பேர்
கானவர் குறவர் வேடர் மான்மகன் பிரமன் காமன்
வானவன் உதியன் தேவன் மானுதல் ஒத்தல் வெள்கல்
ஆனியே மூலநாள் கேடு ஓர் மாதம் ஆன்பொருந்தம்
**1095
#23
வானி ஆன்பொருநை சேநை துகில்கொடி விதாநம் மன்னும்
ஆனியம் இருது நாள் ஆம் நான்முகன் அருகன் வேதா
கூன் அடி முதலில் அத்தத்தொடு நிற்கும் சீர் கோணல் பேர்
மான் மகான் விலங்கின்சாதி ஓர் ம்ருகம் மகரராசி
**1096
#24
ஈனல் பெறுதல் தருதல் பேர் ஏனை மற்று மலங்குமீன்
கானல் வரையைக் கடலினைச் சார் சோலை கழி உப்பளம் பேய்த்தேர்
தானை முட்டைப்பொரி சேனை புடைவை ஆயுதப்பொது ஆம்
தேன் மதுக் கள் பெண்வண்டு ஆம் மீன் விண்மீன் ஓர் நீர்ச்செந்து
**1097
#25
ஆன்மபூ மந்மதன் பிரமன் ஆன்மயோநி அயன் மதநன்
ஆன்மவீரன் விறலோன் மைத்துநன் கற்றோன் புத்திரன் ஆகும்
ஆன்மா முயற்சி தைர்யம் மநம் மறிவு பிராணன் உடல் பரமஆன்மா
வாயு இயல்பு கதிராயிரத்தோன் பாவகனே
**1098
#26
ஆன்மாதீநன் மைத்துநன் பிராணாதாரன் சுதன் கற்றோன்
கான்மீரம்தான் குங்குமம் புட்கரமூலம் கல்லுளி என்ப
ஆன் ஓர் விகுதி மூன்றனுருபு ஓர் சாரியை ஆ எருது எருமை
வான் ஆகாயம் பெருமை எதிர்காலஇடைச்சொல் மழை மேகம்
**1099
#27
ஏனல் தினைப்புனம் நெல்கதிர் பைந்தினை
கூனி தொழுத்தை சிற்றிறால் கூனுள்ளவள்
மேனி உருவம் சரீரம் நிறம் எனும்
சேனை படை கடைத்தெரு ஓர் கிழங்கே
**1100
#28
மோனை எழுவாய் முதலெழுத்தொன்றுசீர்
கான் எழுத்தின் சாரியை மணம் கானகம்
நோன்மை பெருமை வலி பொறை நோன்பும் ஆம்
ஏனாதி தந்திரி மறவன் நாவிதன்
**1101
#29
நோன்பு பண்டிகை தவப்பேர் நோன்றல் நோன்புறல் பொறுத்தல்
ஊன்றலே திரப்படுத்தல் நடுதல் ஊன்றுதல் பதித்தல்
தோன்றலே சிறந்தோன் முல்லைத்தலைவன் தோன்றுதல் குமாரன்
தோன்றுதல் முளைத்தல் காணல் வெளிப்படல் உதித்தல் சொல்லும்
**1102
#30
ஆன்றல் மிகுதி அகலம் மாட்சிமை
சீன்றம் கிழிந்தது முதிர்ந்தது சீரணம்
ஆன்றவர் மிக்கோர் அறிஞர் பண்புளோர்
சான்றோன் சூரியன் மிக்கோன் நற்குணன்
**
**
** நாநார்த்த தீபிகை
** திருநெல்வேலி
** கவிராயர் முத்துசுவாமி பிள்ளையவர்கள் இயற்றியது
@0 பாயிரம்
** நூலாசிரியரின் மருகர்
** தமிழறிஞர் சுவாமிநாத பிள்ளையவர்கள் இயற்றிய
** சிறப்புப்பாயிரம்
#1
சீர்மருவு பாண்டிவளர் நாட்டினின் மலர்ப்பொழில்
செறிந்திலகு பாகையென்னும்
திவ்யநக ரதிபனுயர் கங்கைகுல திலகன்மிகு
சீர்த்திபெறு சைவரத்நம்
சிறந்திடு குணாகர னறக்கடன் மனர்க்குமுடி
செங்குவளை யணியன்மார்பன்
றிகழ்கின்ற வடகலைக டென்கலைகண் முற்றுமுச்
சிக்கறுத் துளவு தேர்ந்தும்
ஏர்தரு தெலுங்குநா கரமுதல பாடைக
ளெனைத்தையும் வரம்புகண்டும்
எல்லையில் லாதகலை வேட்கைய னனந்தைய
ரியற்றிய தவங்கடாமே
யெழில் கொளொரு வடிவுற் றெனப்பொறை தயங்குமெழு
தாயுதப் பெருமான்வரத்
தினிமைதரு மகவெனவு மாகிவளர் முத்துசுவா
மிக்கவி யிராசர்கோமான்
பார்மிசை யிலக்கிய மெனப்பல துறைக்கொடு
பரந்திய னிகண்டு முதலாப்
பற்பலக ராதிகளை யுந்திரட் டியதிலுறு
பதரடைக ணீத்துநன்றாம்
பதங்களொடு சிற்சில்வட பதமுஞ் செறித்தழகு
பத்துற விருத்தவகையாற்
பகர்ந்தருளி நாநார்த்த தீபிகை யெனுஞ்சுவைகொள்
பாடலினை யாவரேனும்
ஓர்தலுற் றிடினுறு மனத் திரு ளிரித்தகல்
வுறும் பொருள் விளக்கு செயலால்
உயர்கலைக ளுக்குரிய பொருள்வகை யெனைத்தையு
முனற்குமு னளித்திடுதலா
லுலகுறு மிலக்கிய மெனுந் திரள்க ளுக்குமுத
லாயுறுதி பெற்றசெயலால்
உதயனென வுஞ்சுரர்க டருவதென வுங்கலைஞ
ருளமெனவு மொளிர்கின்றதே
#2
பற்பல நூல் கற்கினுமென் பாடித் தானென்
பயனிலவே யெழுத்தொடுசொற் பான்மை வந்த
வுற்பவமோர்ந் திலராயி னனைய தன்மைக்
குற்பவித்த முத்துசுவா மிக்க வீந்த்ரன்
அற்புதமாய்ப் பயில்பிரசங் கமதிற் சில்போழ்
தகப்படுபுல் லறிவரையு மாய்ந்த கேள்வி
விற்பனரும் வெல்லரிதென் றாலிந் நூலை
விண்டதவற் கொருவியப்போ விபுலை யீரே
#3
புகழ்பெருகு கம்பனொடு மொட்டக் கூத்தன்
புகழேந்தி காள முகின் முதல்வ ராய
முகமுறுநற் புலவர்கண் முன் மாய்ந்த தோரின்
முற்றவுநன் றிற்றைஞான் றுறினா வல்லீர்
தகவுளவிம் முத்துசுவா மிக்க வீந்த்ரன்
றன்முனெதிர்ப் பட்டவர்க டன்மை குன்றிப்
பகலவன் முன் மின்மினிபோ லாவா ரிச்சொற்
பயனுளவென் பதற்கவனூல் பகருஞ் சான்றே
#4
முன்னிலக் கிசை நூன் முதுவிலக் கியங்கள்
மொழிப்பிறழ் வடை சொலான் முழுதுந்
துன்னிலக் கிதயத் துனிவட கலையாற்
சோதனை கண்டுசுத் தமதாப்
பன்னிலக் கியங்கட் கிலக்கிய மெனவிப்
பதப்பொருள் பகர்ந்தனன் பாகை
தன்னிலக் கினில்வாழ் தருங்கவி முத்து
சுவாமியாந் தமிழ்ப்புர வலனே
#5
கம்பனுக்குங் கும்பனுக்குங் காளியொட்டக் கூத்தனுக்கும்
கம்பனுக்கும் வாணி கருத்துருக்கும் - கம்பனுக்குங்
கொண்டனிகர் முத்து சுவாமிகுரு சாமிசெயுந்
தண்டமிழ்ப்ர சங்கமதிற் றான்
** தற்சிறப்புப் பாயிரம்
** பரசிவம்
#6
உலகமோர் மூன்று மேத்த வுயிர்க்குயி ராகி யெங்கு
மிலகிய கடவுள் பாத மிறைஞ்சிமுன் னோர்பன் னூலிற்
சிலவெவ்வே றுரைத்த வெல்லாஞ் சேர்த்தொன்றாத் திரட்டி யோர்சொற்
பலபொரு ளெனுநா நார்த்த தீபிகை பகர லுற்றாம்
** திரிபுரசுந்தரி
#7
தெரிதர நவினா நார்த்த தீபிகைக் கொருதீங் கின்றி
விரிவெலாஞ் சுருக்க மாக விளம்பிட வேண்டி யன்பாற்
றிரிபுவ நங்க ளீன்றத் தேவர்மூவரையுந் தந்த
திரிபுர சுந்த ரித்தாய் சேவடி வணக்கஞ் செய்வாம்
**விநாயகர்
#8
பதமார் பொருள் சொ னாநார்த்த தீபி கைப்பேர்ப் பனுவல்செயத்
திதமா விரும்பு மநமருண்டு தேம்பித் தளைபட் டுழலாமே
யிதமாஞ் செம்பா கச்சொல்வள மீய மலர்ப்பொன் னடியேத்தி
மதமார் வெள்ளிக் கோட்டுமுக மாதங் கத்தை வணங்குவாம்
** முருகக்கடவுள்
#9
கருங்கடற் சுருக்கி யுண்டு செந்தமிழ்க் கடல்வி ரிக்கும்
அருந்தவக் குறுமு நிக்கன் றருள் குரு பரன்றாள் போற்றி
வருந்துறா தையம் பேத மயக்கமு நீங்கப் பத்துத்
திருந்தழ கொடுநா நார்த்த தீபிகை செப்ப லுற்றாம்
**திருமால்
#10
திருமறு மார்ப னுலகெலாம் புரக்குந் திருநெடு மால்கல்வி பயிறற்
கொருமுத லென்னத் தொழத்தகுங் கடவு ளுபய தா மரைப்பதம் பணிந்து
வருக்க ராதி னகரவீறெதுகை வைத்ததிற் கலப்புறா தடைவே
பொருள் பெற வெழுத்தின் முறையினா நார்த்த தீபிகை யெனவிது புகல்வாம்
** கலைமகள்
#11
படிகவெண் ணிறத்த ளாய்ச்செம் பதுமத்தோ னான்முகத்துங்
குடிகொண்மெய்ஞ் ஞாந மூர்த்தி குசேசயப் பதம்வ ணங்கி
யடியொன்றி லிரண்டு மொன்று மாகவோர் தொடையிற் செய்யுண்
முடியவோர் சொன்னா நார்த்த முறைதர மொழிகின் றேனால்
** ஆசிரியர்
#12
கந்தன் பழனிப் பதிக்குமரன் கருணை பெறுசெண் பகக்கவிஞன்
மைந்த னெழுதா யுதப்பெருமா ளெனுநா வலர்கோன் வரமதனால்
வந்த வடியே னவரிருதாள் வணங்கிப் புகல்வன் வடநூற்சொற்
செந்த மிழினும் பொருடொகுத்துச் செயுநா நார்த்த தீபிகையே
** அவையடக்கம்
#13
கற்பநா டுறுமைந் தர்க்கோர் பாடமா மென்னக் கற்ற
விற்பனர் கொள்வ ராக வேண்டுகொண் டடைசொற்கஞ்சிப்
பற்பல விருத்தத் தாலும் பகர்ந்தவுந் தள்ளா ரென்றோர்
சொற்பல பொருள்வி ளக்கஞ் சொல்லின னகைநா ணாமே
** நாநார்த்த தீபிகை நூல்
@1 ஓரெழுத்துப் பலபொருள்
**1
#1
அப்பர னுமைமால் வேதா வணியாமை யமர்கால் சூட்டாம்
கப்பிர மன்காற் றான்மாக் கனல் கதிர் நமன்ம யிற்பேர்
குப்புவி யிடைச்சொல் பாவஞ் சிறுமையும் பழிப்புங் கூறும்
விப்பர மான்மாக் காற்றோ ருபசர்க்கம் விழிவிண் புள்ளே
**2
#2
ஆவிரக்கம் பசுச்சொலிசை புழுக்கநினை வாச்சா
வற்புதமோர் வினாவினையின் விகுதிவாய் திறத்தல்
ஓவிடைச்சொன் மதகுநீர் தாங்குகத விரக்கம்
ஓர்வினா வோலமிட்ட விளியோநி வியப்பாம்
மாவலிசெய் யவள் செல்வ நிலம் வியங்கோ ளசைச்சொல்
வண்டுகறுப் பளவுபுத்தி பரிகரிமைம் மாநென்
மாவயல்சந் திரன்மாதம் வெறுப்போர்சிற் றெண்ணோர்
மரம்பெருமை யழைக்கைமர ணஞ்சநம்வே லையுமே
**3
#3
காவசைச் சொற்று லாம் பூஞ் சோலை தோட் சுமைகா வென்றல்
சேவிள வெருதழிஞ்சில் தேவ நுக் கிரகந் தெய்வம்
தூவெள்ளை பற்றுக் கோடு நடுக்கந்தூ பம்பொன் சுத்தம்
பாவென்ப கிரணஞ் செய்யுள் பரப்புக்கா ருகர் தந் நூற்பா
**4
#4
கோவிழி கணை நீர் திக்குக் குலிசம்விண் கதிர்பா னல்குங்
கோவிடை மதிசு வர்க்கங் குருசில்வாக் கிலக்குப் பூமி
பூவனப் பிடம்பார் கூர்மை பொலிவுடல் கமலங் கண்ணிற்
பூவிளை வொடுபி றப்பு நிலம்புட்ப நகர்பன் முப்பேர்
**5
#5
ஊவென்ப துணவோ டூனாம்
தாவயின் பகைவ ருத்தம்
நாவென்ப நடுவு நாக்கும்
யாவொரு வினாவ சைச்சொல்
**6
#6
சீயெழில் கமலை வாணி யிலவங்கஞ் செல்வம் வில்வம்
சீயெனல் சரளம் வேடம் விடம்புண்ணிற் சீபன் னொன்றாம்
தீயென்ப நெருப்புப் புத்தி நிரையந்தீங் கென்ன நாற்பேர்
மீயுய ரம்விண் மேலாம் வீயென்ப பூவும் புள்ளும்
**7
#7
ஐயரன் றிசாமு கங்கை வினைப்பெயர் விகுதி யாதி
யையுரு போடி டைச்சொ லழகையன் கபம்வெற் புச்சி
கையிடந் திரள்வி யூகஞ் சிறுமையின் முகட்டின் மூட்டுங்
கையொரு விகுதி செய்யு முறையோர்மெய் யுறுப்பொ ழுக்கம்
**8
#8
தையொரு மாதம் பூசம் வையென்ப கூர்மை நெற்றாள்
பையராப் படம்ப டாதி யாற்செய்த வுறைபச் சைப்பேர்
மையிரு ளஞ்ச நஞ்செம் மறிமுகில் கண்ணிற் றீட்டு
மையொரு விகுதி குற்ற மலட்டொடு கறுப்பொன் பான்பேர்
@2 ககர வெதுகை
**9
#1
பகவன்மால் பிரமன் புத்தன் சிநன்குருப் பரமன் றேவன்
பகவதி முதல்வி செல்வி பார்ப்பதி துர்க்கை வாணி
அகவலோர் பாவோ ரோசை மயிற்குர லழைத்த லாடல்
தகவரு ளுரிமை பண்பாஞ் சகனோர்மன் சகாய னண்பன்
**10
#2
விககமே கிரக மம்பு பறவைமே கம்விண் மீனாம்
விகடமே யகலம் பேதம் விசாலஞ்சுந் தரமுந் மத்தம்
முகடென்ப வீட்டினுச்சி மலைத்தலை முலைமுகப்பேர்
சகதிசே றுலகம் பூமி சநமீரா றெழுத்தின் சந்தை
**11
#3
சகநியம் பரிக்கு ரம்பிந் தின துவா லுபத்தந் தாழ்மை
ககமென்ப பறவை காற்றுக் கணைவிண்மீன் கிரக மைம்பேர்
சுகமின்பங் கிளிநீர் வில்வந் துணியங்கப் புதல்சு வர்க்கம்
நகம் வெற்பு மரம்பாம் போர்மெய் யுறுப்புநா குணம ரப்பேர்
**12
#4
மகம்வேள்வி விழாவோர் நாளாம் மகன்மைந் தன் புருட னென்ப
முகமோர்மெய் யுறுப்பா ரம்பம் பிரதான முகப்பு பாயம்
யுக நுக முழநான் குள்ள து பயங்கி ருதாதி யும்பேர்
மகரமோர் நிதியம் வன்மீன் மலர்த்தாதோ ரிராசி யோர்மீன்
**13
#5
சிகரிகோ புரம்வி ருக்கங் கருநாரை வெற்புஞ் செப்பும்
புகர்நிற மழைக்கோள் குற்ற மிபமுகப் பொறிபுற் கென்றல்
பகர்தல் சொல் லுதல்விற் றற்பேர் பகிநிசோ தரியும் பெண்ணும்
சுகர்மம் நல் வினையோர் யோகந் துகளென்ப குற்றந் தூளாம்
**14
#6
அகலமே விரிவு மார்பா மகலுள் பீ டகல நாடூர்
இகல்பகை வலிபோர் முப்பேரிகுளையே தோழி சுற்றம்
உகல்கெட லுகுதல் சிந்த லுகள லே குதித்தல் தாண்டல்
பகலொளி நடுப்பிளத்தல் பொழுதுநாள் பகலோ னீங்கல்
**15
#7
புகல்குதிர் பிரவே சித்த லுடல் புகு மிடஞ்சொல் வென்றி
புகழென்ப துதிகீர்த் திப்பேர் புகறலே குறித்தல் சொல்லல்
அகளமே மிடாத்தா ழிப்பேர் அகறனீங் குதல கற்சி
அகிவிருத் திரன்பாம் பீய மகிலம்பூ மியும னைத்தும்
**16
#8
திகிரிசக் கிரம்வேய் வட்டந் தேருருள் திரிகை வெற்பாம்
வகிரென்ப வழிதோ லின்வார் வகிர்தல்வார்ந் திடல்பிளத்தல்
குகுமதிக் கலைதோற்றாத நிசிகுயிற் றொனியோர் நாடி
சகுடநாய் பொதியஞ் சேம்பாந் தகுதிதக் கதுபண் பென்ப
**17
#9
மகுடமோர் சிவாக மஞ்சுற் றிக்கட்டுஞ் சடைமௌ லிப்பேர்
ககுதமுக் கியமெ ருத்தி னிமில் செங்கோல் கனக தண்டம்
பகுதிபிர கிருதி சேனை குடியிறை வளம்பங் கீடாம்
சகுநம்புட் பொதுக்கி ழங்கு நிமித்தமங் களவி ருப்பம்
**18
#10
சகுநியோர் கரணம் புள்ளோர் தராதிப னிமித்தம் பார்ப்போன்
முகுரமே மகிழ்கு லாலன் றடிமுகு ளங்கண் ணாடி
குகைநரி வாற்புல் வெற்பின் முழையுமட் குகையுங் கூறும்
நகைவிளை யாட்டின் பம் பூண் சிரிப்பொளி நயச்சொல் பல்லே
**19
#11
இகத்தனீங் குதல்க டத்தல் விட்டிட லேக லும்பேர்
முகப்பு மொள் ளுகைத லைப்பாம் விகற்பம் வேற்றுமைவி தர்க்கம்
இகழ்ச்சிபொச் சாப்பு நிந்தை புகழ்ச்சியேத் துதல்கீர்த்தித்தல்
பொகுட்டுத்தா மரைப்பூங் கொட்டை பொருப்புச்சேற் றெழுங் கொப் புட்பேர்
**20
#12
இகுத்தலே மறித்த றாண்ட லெறிதல் துன் புறுத்தல் வீழ்த்தல்
செகுத்தலோ டழைத்த லீதல் விரித்தல்சீத் திடலீ ரைம்பேர்
உகுத்தலூற் றுதல்வி டுத்தல் சொரிதலோ டுதிர்த்த லென்ப
பகுத்தல் வெட்டுதல்கொடுத்தல் பங்கிட லெனமுப் பேரே
**21
#13
அகாதம்விண் ணவராற் றொட்ட குளம்பில நிலையா வாழம்
நிகாயமோர் வினைஞர் கூட்டம் பரமான்மா வீடி லக்காம்
நிகாரமே யவமா நம்நெற் றூற்றுகை விழுங்கு தற்பேர்
விகாரம்நோய் திரிபு லாவல் விளையாட்டுச் சிநன் றன் கோயில்
**22
#14
விகாசம் விள் ளுகைவி ளக்கம் மிகிரமே மேகங் காற்றாம்
விகாதமே தடைவி ரோதம் விகிரம்வெண் மணல்புள் ளென்ப
விகாயசம் பறவை விண்ணாம் மிகிரன் சூ ரியன்புத் தன்பேர்
விகூடந்தான் மறைவு நிந்தை விகிர் தங்குற் சிதம்பொய் நோயே
**23
#15
சகடம் பண்டி சண்டைபொன்னற் கிந்து மறைத லுரோகிணிநாள்
அகடு வயிறு நடுவுள்ளாம் அகணி யுள்ளிட் டதுமருதம்
தகடு பொன்னா தியினிலைபோற் சமைத்த திலைபோன் றதுமிலையும்
பகடு பெருமை யானைகடாப் படுவை யோடம் போரெருதே
**24
#16
மகதி பெரிது நாரதயாழ் கிசிதன் வாச வன் றிருமால் செப்பும்
சிகதை யோர்நோய் சருக்கரைவெண் மணலம் மணற்சேர் தரை
குகநங் குரூர மெலிபாம்பாம் குககை பொறாமை படிற்றொழுக்கம்
குகரங் கூழங் கைதொளைப கனோர ரக்கன் குபேரனிநன்
**25
#17
நகரம் புரமூர் கைந்நகப்பேர் நகுலி மாஞ்சி குக்குடியாம்
மகிஷி யரச மாதெருமை மகிளை யரிவைப் பெண்ஞாழல்
முகிரன் மூர்க்கன் காமுகனாம் நிகிர்தன் பீடிப் பவன்கபடி
நிகிர்தி கபடங் கபடியறுத் திடல் தள் ளுதல் நிந்தையுமாமே
**26
#18
எகினங் கவரி மாப்புளிமாப் புளியாண் மரமோ திமம்நாயாம்
சிகுரம் பதற்ற மனைக்கீரி சிரோரு கங்கட் செவிவெற்பு
பகுலை பசுக்கார்த் திகையேலம் பகுளம் கறுப்புக்கனல்பலவாம்
சிகுவை சுவாலை நாவாக்கு வெகுரூ பன்மால் சிவன்காமன்
**27
#19
சகத்து வாயு வுலகப்பேர் நிகர்த்த லொத்தல் சமர்செய்தல்
அகப்பா மதிலுண் மேடைமதி லகற்ற னீக்க லகலித்தல்
தொகுத்த லீட்டல் தொகை செய்தல் சுருக்கல் தொகுதி செய்தலுமாம்
அகைத்த லறுத்த லுலைப்புய்த்த லடித்த லொடித்த லுயர்த்துதலே
**28
#20
விகங்கம் புள்ளோ திமமம்பா மகண்டங் கண்ட மிலதெல்லாம்
சிகண்ட மயிற்சூட் டதின்றோகை திகம்ப ரம்மம் மணமிருட்பேர்
சிகண்டி மயில்குக் குடம்பாலைத் திறத்தோர் பண்வீட்டுமற்செற்றோன்
பகன்றை சிவதை கிலுகிலுப்பை சகுந்தம் பறவைப் பொதுக்கழுகே
**29
#21
சகசரிபொற் குறிஞ்சிசகி கூடச்சஞ் சரிப்பாள்
சகநமரைத் தலமகளி ரின்பினரைப் புறமாம்
நிகடநிக ளஞ்சாணைக் கல்லுரைகல் லருகு
நிகளங்கால் விலங்கியானைக் கிடுசங்கி லிப்பேர்
ககநமறி யக்கூடா தது துக்கம் படைவிண்
காடுபுகக் கூடாத தகா தபிலக் குகையாம்
நிகமம் வழி கடைத்தெருநிச் சயம் வேதம் நகரம்
ஞெகிழிகாற் சிலம்பு நெருப் புறுவிறகு நெருப்பே
**30
#22
அகமிடமுள் ளிராகதுவே டாதிமந மனை வெற்
பரவு தரு நானெனலான் மாப்பாவந் துன்பம்
பகமுயற்சி புகழறங்கொக் கிச்சைவைராக் கியம்வை
பவம்வீர்யம் ஞாநமுத்தி யோநிசிவ மல்லி
சிகரமர நுனிபுளக மலையுச்சி யுயர்ச்சி
சிரசுமா துளவிதைநேர் மாமணித்துண் டப்பேர்
தகர்கிடாய் சுறாமீனாண் குஞ்சரம்யா ளியினாண்
சகலமெல்லா மரவுரிதுண் டந்தோலுஞ் சாற்றும்
**31
#23
சகளம் நீ லாம்பரம் வெள்ளாட்டாண்கள் ளுருண்டை
தணியற்பிட் டுருப்படலூமத்தைமருட் காரை
சிகி கேதுக் கோளெருது குதிரைசூட் டுளது
சேவன்மயில் விருக்கமம்பு தீயெனவொன் பான் பேர்
சகிதங்கூ டப்பட்ட தஞ்சுவது மாகும்
சகைபூமி கற்றாழை நன்னாறி குறுட்டை
சிகைகிரணஞ் சுவாலைமரச் சினைவிழுது கவளம்
செங்காந்தள் குடுமிமயிற் சூட்டு முதன் மையுமே
**32
#24
சகச முடன் பிறந்தது தன்னியல்பு
விகசித மலர்ச்சி நடுவா மென்னகை
விகநகம் பஞ்சை யெக்கும் விற்கொலை
தகர மயிர்ச்சாந் தோர்மர மீயம்
**33
#25
அகர முதலெழுத் தந்தணர் சிரேணியூர்
அகரு காரகி லிருவீடகிலுமாம்
சிகழிகை பூத்தார் மலர்முடி வாசிகை
சுகிர்தம் புண்ணியஞ் சுபநற் செய்கையே
**34
#26
விகிர்தியொ ராண்டு பேதம் விகுதி
நெகிழ்தல் குழைதல் மலர்தல் தளருதல்
மகிழ்நன் மகிழ்வோன் மருதத் தலைவன்
நகுத லொளிர்த லிகழ்த னகைத்தல்
**35
#27
ககுபந் திசைதந் திரித்தடை மருது
சுகுமா ரம்வெண் கரும்பு மிருது
தகையே பெருமை தன்மை யிளைப்பு
புகையோ சனை தீப் புறப்படு மாவி
**36
#28
யுகந்தரம் பழுபாகலும்பார் மரமுமாம்
சுகந்திநன் மணமுள தேலா வாலுகம்
திகம்பரன் சினவரன் சிவனிரு வாணிபேர்
முகுந்தமோர் நிதிகுந் துருவெள் ளிரதமே
**37
#29
புகார்கழி முகங்கா விரிப்பூம் பட்டினம்
குகூல முமித்தீத் தறிநிரப் பியகுழி
துகூல மென்பவெண் பட்டுமென் றூசுமாம்
அகோரஞ் சிவன் முகத் தொன் றஞ் சாமையே
**38
#30
பக்கண மூறு காய் தின் பனவேடச் சேரி யென்ப
முக்கணன் கணேசன் வீர பத்திரன் மகேசன் முப்பேர்
உக்கம்பேரால வட்ட நுசுப்பிட பமுமு ரைப்ப
சொக்கந்தூய் தெழில்கீ தப்பேர் சுக்கிரன் கனலோ னோர்கோள்
**39
#31
பொக்கம் பொய் பொலிவு மிக்காம் பொக்கென்ப பதர்குற் றப்பேர்
செக்கர்செவ் வான்சி வப்பு மக்கண்மா நுடர்சி றாராம்
எக்கலெக் குதலே றற்பேர் எஃகமா யுதம்வேல் சக்ரம்
நிக்கிர கம்மொடுக்க மெல்லைபந் தகமு நேரும்
**40
#32
சக்கிரங் கோண்வ ரைந்த மந்திரத் தகடி ராசிச்
சக்கிரந் தேசந் தேர்க்கால் சலதிநீர்ச் சுழியோ டாணைச்
சக்கிரந் திரிகை செக்குச் சமூகம்வெட் பாலை சேனை
சக்கிர வாக மோரா யுதம் வட்ட மெனமூ வைம் பேர்
**41
#33
வக்கிரங் கொடுமை வட்டந் திருமுதல் வளைவு மாகும்
வக்கிரன் குரூரன் செவ்வாய் சுக்கொரு மருந்து சோகம்
சுக்கிலம் விளர்ப்போர் தாது சுக்கையே மலர்த்தார் விண்மீன்
கைக்கிளை யிசையி னொன்று மொருதலைக் காம மும்பேர்
**42
#34
தெக்க ணஞ்செய்யுளின்றொடர்ச்சி தெற்குச் சரள மரம் வலப்பால்
அக்க மாலை யருந்ததியோ டுருத்தி ராக்க மணிமாலை
கக்கம் பாவம் கிளைக்கொடிபுல் லுலர்கான் றூறு கைம்மூலம்
சிக்கல் மெலித லகப்படுதல் செக்கோ ரியந்தி ரஞ்சதையம்
**43
#35
தக்கன் றெரிந்தோ னோர் பிரசா பதியு தாச நன்சமர்த்தன்
உக்கி ரன்வீ ரேசனரன் சதுர்த்தை யான்மன் னருக்கு தித்தோன்
இக்கு கந்தை நீர்முள்ளி நெருஞ்சி நாணல் வெள்ளீறில்
இக்கு வாகு குந்துருக்கம் பிசினோ ரிராசன் பேய்ச்சுரையே
**44
#36
அக்கங்க ணைம்புலன்ஞா நம் வழக்குச் சகட
மச்சுக்காற் பலங்கவறு தான்றிசுவர்ச் சிகைப்பேர்
சிக்கமெலி வு றிசீப்புக் குடுமிசிறைச் சாலை
செக்கர்வா னிறத்தோன்வீ ரேச்சுரன்ம கேசன்
பக்கமயிர்த் திரள் சிறகு சகாயநட்புக் கிரகம்
படையடுப்பின் றொளையுறுப்புத் திரள் பூர்வா பரமென்
பக்கம் விலாப் புறஞ்சாத்தி யமரசுவா வருக்கம்
பகைமாதப் பாதிபித்தி சமீபம்பா ரிசமே
**45
#37
அக்கரம்விண் ணெழுத்து முத்தி யறந்தவமிக் கான்மா
அக்குவிடை யின் முரிப்புச் சங்குமணி யெலும்பாம்
நக்கனிரு வாணிசம ணன்சிவன்வந் திப்போன்
நக்கிரம்வா யிலினிடுமேற் படிமரமாண் முதலை
விக்கிரகம் சமர்பிரிப்புச் செயலுடல்வித் தாரம்
விக்கிரம மிகுவலிசம் பத்துக்கால் வைப்பாம்
அக்கிரமுக் கியமூற்றம் பரிமாணம் பலமுன்
னாதிதிரள் சிரேட்ட நுனி மதிலதிக மேலாம்
**46
#38
சுக்கிரங்கள் ளிந்திரியங் காடிநீர் கண்ணோய்
சுகிர்தம்பொன் புளிவஞ்சி புளியானி மாதம்
சக்கிரிசெக் கான்குயவன் சக்கிரவா கப்புட்
சற்பஞ்சக் கிரவேந்தன் சக்கிரபாணியும் பேர்
கொக்குமா மரமூல நாள்பரியோர் பறவை
குக்குடந் தீப் பொறிகோழி கானாங்கோ ழியுமாம்
பக்குமம் பூ விதழிமையின் மயிர் பூந்தா திறகு
பஞ்சினூ லாதியினுண் ணுனியடுப்பின் றொளையே
**47
#39
பக்ககம் பாரிசம் பக்க வாயிலாம்
தெக்கண னன்மநத் தவன்றி யாகிபேர்
அக்கதம் பொரியவை யரிசி தானியம்
பக்கதி புட்சிற கடிமு தற்றிதி
**48
#40
உக்கிர கந்தம்வெள் ளுள்ளி யிங்குவாம்
உக்கிர கந்தை யோமம் வசம்பெனும்
திக்கெனல் புகலிடம் திசையு தாரணம்
சிக்குரு வெனலிலைக் கறிமுருங்கையே
**49
#41
ஏககுண் டலன்கு பேரன் பலராம னாதி சேடன்
கீகசம் புழுவெ லும்பாம் கீகடம் மகதம் பாய்மா
வாகசம் பெரும்பாம் பாரைப் புதல்புனற் பாய்ச்சல் தீயாம்
காகணி காற்ப ணங்காற் கஃசுகான் முழஞ்சோ கிப்பேர்
**50
#42
ஆகதங் குணிதங் கந்தை யடிப்பது பொய்ம்மைச் சொல்லாம்
தோகதம் வயாநோய் வேட்கை தோகளஞ் சிந்தை யிச்சை
மாகத னிராச மாதின் வணிகற்குற் பவன்று திப்போன்
ஆகமம் வருகை யோர் நூல் ஆகவஞ் சமர்வேள் விப்பேர்
**51
#43
ஆகமார் பொடுதே கப்பே ரேகமே தனிமை யொன்றாம்
ஊகம்வா நரந்த ருக்க முத்தியி னிச்ச யப்பேர்
கோகநே மிப்புட் செந்நாய் தவளை சிற் றீந்துங் கூறும்
சாகம்வெள் ளாட்டாண் தேக்கந் தருவிலைக் கறியோர் தீவே
**52
#44
தோகஞ்சா தகப்பு ள ற்பங் குலபரம் பரைசு தன் பேர்
மோகமே பழுதஞ் ஞாந மூர்ச்சையா சைப்பெருக்கம்
வேகமோர் மரம்ப்ர வாக மிந்தியம் விசைநாற் பேராம்
மோகரோ வியருந் மத்தர் மூகனல் கூர்ந்தோ னூமன்
**53
#45
ஆகர முறைவி டத்தோ டரதனப் பூமி கூட்டம்
சீகரங் கரகந் தூறல் திவலைசா மரங்கல் லோலம்
சேகரஞ் சூட்டு மாலை சிரமகு டந்தி ரட்சி
ஆகல நம்பி ணித்த லெண்பெருக் குதலா சித்தல்
**54
#46
காகள மிகுதி சுட்கந் தெரியாச்சொல் களமெக்காளம்
காகளி தருணப் பெண்கா களங்கண்டத் தெழுமெல் லோசை
ஏகன்மற் றவன்ம கேசன் பிரதாந னொருவ னென்ப
பாகனூர் தியை யூர் வோனோ ரசுரன்பங் கினன்பு தன் பேர்
**55
#47
ஆகிருதி யுருவு டம்பா மாகுலம் வருத்த மோசை
கோகிலங் குயில்க லப்பை குறைக்கொள்ளி யுலக்கை யென்ப
காகுபா மரச்சொல் கண்ட தோடத்தி னொலிவி காரம்
நாகுவெற் பெருமை யான்சங் கிளமைபுற் றாமா நத்தை
**56
#48
பாகுவெல் லம்ப ருப்புக் குழம்புபாக் குப்பா கன் பேர்
வாகுதோ ளழகா மென்ப வாகையோர் மரந்தோள் வெற்றி
சாகைதோ ளருகு வேதப் பங்கரி தகிகொம் பர்ப்பேர்
தோகைவால் மயில் முன் றானை துவசம்புட் சிறகு மாமே
**57
#49
நீகாச முறுதி யொப்பாம் பூகேச மால் நீர்ப் பாசி
நாகாதி பதிசு ரேசன் வாசுகி நாற்கோட் டியானை
ஆகார முருவ முண்டி நெய்தெரி யாக்க ருத்தாம்
மாகாலன் மாசாத் தன்றன் படைத்தலை வன்மா தேவன்
**58
#50
நாக தந்தம் யானைக்கொம் பதுபோ னாட்டு முளையாணி
ஆக நிகமண் ணகழ்கருவி பன்றி பெருச்சாளியுமாகும்
நாக புட்பம் புன்னாகஞ் சிறுநாகப்பூச் சம்பகமாம்
ஓகம் வெள்ளம் பரம்பரைவீ டிடங்கு ழாங்கூத் தின்றுருதம்
**59
#51
சூகம் நெல்வா லம்புமுனை சுனைகாற்றிரக்கங் கருநெய்தல்
சேகம் வளர்க்கும் மிருகம்புள் ளொடுநீ ரிறைக்கை வல்லமையாம்
பேகம் முகில்மண் டூகப்பேர் பேகன் பீரு வோர்வள்ளல்
மேக மோர்நோய் முகில்கோரை வீகம் பூட்டு மோதிரமே
**60
#52
போகம் வேசை கரிபரியின் பணையம் பொருளி ராச்யமநு
போகம் விளைவு பாம்பினுடல் படம்பா லநம்போ சநஞ்சுகமாம்
யோக முடல்கூட் டரவுமருந் துபாயம் கவசம் நிலைமைபிர
யோகம் விட்கம் பாதிதநம் யுத்தி முயற்சி யியமாதி
**61
#53
வாகம் நானூற்றுக்குறுணித் தொகைபாய் மாத்தே ரெருதென்ப
ஆக ருடம்விற் பழக்கஞ்சூ ததன்றன் பலகை கவறிழுத்தல்
கோக ருணமோர் தலமோர்பாம் பணிவி ரற்சாண் கோச்செவிமான்
போக வதிபா தாளநதி யுரக புரிசு கா நுபவை
**62
#54
சாகசமா ராயாமற் செய்தல்வலாற் காரந்
தண்டித்தல் துவேடம்பொல் லாதசெயற் செய்கை
காகமோர் சுரதபந்த மோர்மரமோர் தீவோர்
கண்ணுளபுள் ளோரளவை தலைகழுவு தலும்பேர்
நாகம்விண் சுவர்க்கமலை நாகதந்தம் புன்னை
நாகப்பூக் குரங்குகுரூராசாரந் துத்த
நாகமீ யந்தகரங் கரிசுரத பேதம்
நற்றூசோர் கரணமுகில் பெருங்கோரை பாம்பாம்
**63
#55
பாகம்பாக் கியஞ்சிசுபக் குவஞ்சமைத்தல் பிச்சை
பங்குரூ பகப்பாதி யேகதே சமுமாம்
பூகமே கமுகு திரண் டதுதொளைகா லப்பேர்
போகலே குதல் நடத்தல் நீளுதலோ டுயர்தல்
நாகரமோர் மொழிநகரோற் பவங்கோரை சுக்காம்
நாகரிகங் கண்ணோட்ட நகரசம்பந் தமும் பேர்
வாகரமோக்கத்தினிச்சை நிருணயஞ்சா ணைக்கல்
வடவாமு காநலஞ்செந் நாய்தடையச் சமுமே
**64
#56
காகரூ கன்கபடி திகம்பரனல் கூர்ந்தோன்
காமசித னிடம்பமுளோன் பயப்பட்டோ னென்ப
மேகலையேழ் கோவைப்பெண் ணரைமாலை கயிறு
வெற்பினடுக் கடிப்புறம்வா ளுறைவேள்விக் கோலம்
போகிநா விதனரசன் சுகா நுபவன் பிரபு
புருகூதன் வியாபாரத் தொழிற்செய்வோன் பாம்பு
யோகிசிவன் மாசாத்தன் யோகுடையோ னருகன்
யோகிநியோர் தேவதையா மளை திதிச்சூ லமுமே
**65
#57
சைகத மணற்றிடர் மணற்ற றைப்பெயர்
சைகதி கன்சமணன்று றந்தவன்
நைகமன் வைச்சிய னகர வாசியாம்
வைகல்நாள் கழிவுநாள் வதிதல் வைகறை
**66
#58
ஆகசென் பது தவ றதமம் பாவமாம்
கீகட னென்பநல் கூர்ந்தோன் கிருபணன்
வேகட னரதன வினைஞ னிளமையன்
மாகதம் வெண்சீ ரகமக தோற்பவம்
**67
#59
மாகதி முல்லை திப் பலியோர் பாடையாம்
மேகந மூத்திர மாண்குறி மேவுறும்
கேகய மசுணப் புள்ளோர் தேயமாம்
பாகலம் யானையி னோய்நறுங் கோட்டமே
**68
#60
பாக தேயங் குடியிறை பாக்கியம்
மேக நாதஞ் சிறுகீரை காரொலி
மேக நாதன் வருண னிராவணி
மேக புட்ப மழைத்துளி யோசைநீர்
**69
#61
சோக மனத்துயர் திரளை தொடையாம்
மாக மகப்பூ ரணையுறு மாதம் விண்
யூகம் படையின் வகுப்புக் தலைப்பேனும்
பாகல் பலாமர மோர்பைங் கொடியுமே
**70
#62
கோகந தஞ்செங் குமுதஞ்செந் தாமரை
சாகரங் கண்டுயி லாமை சமுத்திரம்
வாகரன் பண்டிதன் றுறவி முமுட்சுவாம்
சாகிவெள் ளாடுவே தந்தரு வென்னுமே
**71
#63
வாகிநி யோர்படைத் தொகைநதி சேனை
போகில் புட்பொதுப் பூமொட்டுக் கொப்பூழ்
ஆகு வராக மெலிபெருச் சாளியாம்
வாகுசந் தானாப் பிறந்தவெள் ளுக்கிளி
**72
#64
வாகுரை மிருகம் படுக்கும் வலையுறி
கோகுலம் கோயில்கோ சாலை பசுத்திரள்
நாகுலி யென்பசிற்றரத்தை செவ்வியம்
ஈகை யிச்சை கொடையெடுப் பீங்கையே
**73
#65
சாகா மிருகங் குரங்குதே வாங்கணில்
வாகீ சன்கவி ஞன்வாக் கிறையயன்
பாகூ டஞ்சல சரம்பற் பதமுமாம்
காகோல மோர்நஞ் சண்டங்காக்கையே
**74
#66
தீக்கணம் விடங்க டுஞ்சூ டிரும்பு போர் செய்யுட் சீரின்
றீக்கணங் கடலி னுப்புத் தீப்பொறி யுவர்ப்போ டெண்பேர்
மோக்கமே மோச நம்பேய்ப் பாதிரை மரண முத்தி
பாக்கரன் றகநன் பாநு வாக்குப்பா மகள் சொல் லாமே
**75
#67
ஊக்கலே முயலல் நோக்கல் நெகிழ்த்தல்மேற் கொளனினைத்தல்
தாக்கலெண் பெருக்கல் முட்டல் தாக்கென்ப வலியும் போரும்
தூக்கலே நிறுத்தல் தேர்த லெடுத்தல் தூக்குதலு மாகும்
நீக்கலே யகற்றல் போக்கல் பிரித்தல் மாற் றலு நிகழ்த்தும்
**76
#68
நோக்கலே காத்தல் பார்த்தல் நோக்கென்ப தழகு பார்வை
பாக்கியம் யவட்சா ரம்முற் சுபாசுப வினையட் டுப்பாம்
யோக்கியன் பிரிய வாக்கி யுபாயகன் சமர்த்தன் றக்கோன்
ஆக்கிர கங்கைக் கொள்கை யருள்கைநிற் பந்தங் கோபம்
**77
#69
மேக்குமேற் குயர்வு மேலாம் மீக்கோளே றுதல்மேற் போர்வை
சூக்குமம் நுண்மை யான்மா வணுத்தேற்றோர் சிவாக மப்பேர்
தோக்குமம் பசுமை பச்சை யவைகாதின் மலமுஞ் சொல்ப
சேக்கைகற் கடகங் கொங்கை மிருகந்துஞ் சிடம்ப டுக்கை
**78
#70
ஆக்கம் பெருக்கங் கொடிப்படைதாக் கணங்கி லாபம் பொருளைம்பேர்
ஊக்கம் வலியுற் சாகமந வெழுச்சி மிகுதி யுயர்ச்சியெனும்
தூக்க முறக்க மாலசியங் குடையி லணியிற் றூங்குவவாம்
தூக்குக் கூத்துப் பாட்டுறிகாற் றுலாந்[து லாந்] தூக் கணமொப்பே
**79
#71
ஆக்கலுண் டாக்கல் செய்தல் சமைத்தல்
ஆக்கிநே யந்தென் கிழக்கோர் புராணம்
சீக்கிரம் பண்டி யிலாமிச் சம்விசை
பாக்கெதிர் கால விடைச்சொற் றுவர்க்காய்
@3 ஙகர வெதுகை
**80
#1
அங்கச முரோமஞ் செந்நீ ரங்கசன் மைந்தன் காமன்
அங்கதி கொடைதீ யோர் நோ யயனங்கி கோத்தி ரன்பேர்
துங்கம்வெற்புயர்ச்சி புன்னை துங்கிதை வேளை மஞ்சள்
புங்கமங் களவொழுக்கம் வல்லூறம் புக்கு தைப்பேர்
**81
#2
வங்கமோர் தேயம் நாவாய் வழுதுணை தகர மீயம்
பொங்கர் வெற் பிலவு கொம்பர் புங்கவன் சிரேட்டன் றேவன்
பிங்கலன் சிவனி நன்பாற் றகநனோர் முநிகு பேரன்
சிங்கலே மெலிதல் குன்றல் திங்கள் சந் திரன்மா தப்பேர்
**82
#3
தொங்கலாண் மயிர்பூ மாலை தோகைவெண் கவிகை நாலல்
மங்கல்மட் குதல்கெ டற்பேர் மங்குல்விண்ணிரவு மேகம்
சுங்கியா லித்தி கல்லால் துங்கீசன் மகேசன் சோமன்
பங்கியாண் மயிரு ரோமம் பிரகாரந் தரங்கம் பத்தி
**83
#4
தங்கிச மருமந் துட்டங் கவசங்கண் டநங்காட் டீயாம்
வங்கிச முதுகி னென்பு குலஞ்சம வாய மூங்கில்
இங்கித மனக்கு றிப்பின் றொழில்கம நம்பு ணர்ச்சி
சங்கிதை புராண வேதங் களிற்சில பங்கு சாஸ்த்ரம்
**84
#5
சங்கியை விசார மெண்ணாஞ் சங்குரந் திமிசு தேரே
அங்கிரி மரவேர் காலா மங்ஙன மாங்கத் தன்மை
பொங்குதல் கிளர்தல் கூர்தல் பொலிதல் பொங் கிடல்சோ றாக்கல்
குங்குமஞ் செந்நி றஞ்செஞ் சாந்தொடு மரமுங் கூறும்
**85
#6
சங்காசஞ் சமீப மொப்பா மங்காரந் தழலி ருந்தை
சிங்காணம் வளை மண்ணின்பாத் திரமூக்கின் மலங்கிட் டப்பேர்
சிங்காரம் யானை யின் பூ டணஞ்சிந்தூ ரங்கை செய்யுஞ்
சிங்காரம் நவர சத்தொன் றிலவங்கம் பொடியுஞ் செப்பும்
**86
#7
பிங்கம் பொன்னிறஞ் சிசுவாம் பிங்கலம்பிங் கலந்தை பொன்மை
பிங்கலைவா மநப்பிடி பொன்னிறப்பெண் வலச் சரமாந்தை
சங்கிநியோர் நாடிசத புப்பியோர் சாதிப்பெண்
கங்குதீப் பொறிவரம்பி னருகுகருந் தினை முப்பேர்
**87
#8
கங்க தங்குற் சிதந்தருக்கங் கங்குல் பரணி நாளிரவு
அங்க பாலி யுபமாதா வாலிங் கனங்கோ டியுமாகும்
இங்கந் தெரியாக் கருத்தங்க சேட்டை மநுடா திகளென்ப
சங்கி ராமம் ரணமேற்செல் வழியாற் றின்மே லணைசமரே
**88
#9
அங்க மிடம் பூ ணுருவகம்போ ரப்ர தாந முடலுடலின்
அங்க முபாயங் குறிமடிகோ தருகோர் தேய மோர்கூத்தாம்
சிங்கி யாடா தோடைவிட மிராகு வின்றாய் குறிசெப்புஞ்
சிங்கி சிங்கப் பெண்சிறுகத் தரிமஞ் சிட்டை தேம்புறுத்தல்
**89
#10
பங்கா ரம்நீர்க் குமிழிபுனற் பாசி சேது சோபாநம்
சங்கீ ரணமோ ரணியுடம்பா டசுத்தம் நிறைவுங் கலந்ததுமாம்
சங்கு கந்ந மொட்டகங்கத் தபங்கோ வேறு கழுதைப்பேர்
சங்கு லம்வியா குலஞ்செறிவாய் நிறைவுற்றது தம் மிற்பகைச்சொல்
**90
#11
சங்கதிஞா நந்தொடர்பு கூட்டங்கூட் டரவாஞ்
சங்கிரக முடம்பாடீட் டுதலுயர்ச்சி சுருக்கம்
சங்கமோர் நிதிசிறுநா குண நுதலென் போரெண்
சவைபிராணித் திரள் புலவர் சங்குகுழாம் புணர்ச்சி
பங்கம் நீர்த் திரைகுடிலம் சேறுபிந்நந் தோல்வி
பயம்பாவ முரோமமோர் நோய்பிளப்பீ ரைம்பேர்
சங்கரமா பத்துவிட முடம்பாடு கலப்புச்
சமர்கரும நிச்சயம்வன் னிக்காய்குப் பையுமே
**91
#12
மங்கலியம் வெளித்துவார வழிதயிரோ ரகில்வில்
வந்திராய் திருமரஞ்சுக் கழகிதுவெண் கடலை
மங்கலியை சதபுட்பை வெள்வசம்பு ஞாழல்
வன்னிகவிழ் தும்பைசங்க புப்பிசுமங் கலையாம்
சங்கு வெண்சங் கிலை நரம்பின் றிரளாப்போ ராயு
தங்கைவளை யாண்குறி நீர்ப் பன்றி குற்றி யோரெண்
அங்குசு நூ லாதியினுண் ணுனிகிரண மருக்கன்
அங்குரம் நென் முளையிரத்த நீருரோ மமுமே
**92
#13
அங்கா ரகம் நெருப்புக் கொள்ளியும் பொற் குறிஞ்சியுமாம்
அங்கா ரிகைகரும்பின் றடிமுருக்கி னலர்க்கொத்து
அங்கா ரிணிகதிரோ னீங்கு திசை யழற்சட்டி
அங்கா ரிதம் நீறா யதுபலா சலர்த்திரளே
**93
#14
சங்ககந் தலையினோய் சங்கு கைவளை
சங்கடம் நெருக்கமா மிடம்வ ருத்தமும்
அங்கண முற்றமிற் பகுப்புத் தூம்புவாய்
அங்கதந் தோளணி வசைச்சொல் பொய்யுமாம்
**94
#15
சங்கதந் திடமிணக் கச்சொற் சார்ந்தது
சங்கர னோருருத் திரன்ச தாசிவன்
சங்கரு டணன்றிரு மால லாயுதன்
சங்கையச் சம்முழந் தாள்சந் தேகமே
**95
#16
கங்க ணங்கர சூத்திரங் கையணி
சிங்க மோர்விலங் கோரிரா சிப்பெயர்
அங்க ராகமெய்ப் பூச்சுமெய்ச் சட்டையாம்
அங்கியங் கப்பை கார்த்திகை யக்கிநி
**96
#17
கங்க பத்திரங் கழுகின் சிறைகணை
மங்கலை மங்கலப் பெண் வெள்ளறுகு
புங்கவ மிடப மருந்து சிரேட்டம்
மங்கலம் பொலிவு சுபஞ்சுப வாழ்த்தே
**97
#18
இங்கு பெருங்கா யத்தோ டிவ்விடம்
கொங்கு மலர்த்தா தேரர் தமிழ் நாடு
பங்கு முடவன் சனிபாதி கூறு
பங்குநி யுத்திர நாளோர் மாதமே
**98
#19
பங்குர மென்ப நசிப்பொடு கோணல்
அங்குலி கைவிர லியானைக் கையினுனி
இங்குலி கஞ்சிவப் புச்சாதி லிங்கம்
செங்கை சிவந்தகை யாதிரை நாளே
**99
#20
சங்கா டிகைமூக் கிரட்டை தொழுத்தை
சங்கா தந்திர ளோர்நிரை யங்கொலை
சங்கா ரங்கொலை குப்பை யழிப்பாம்
வங்கா ரம்பொனு லோகக் கட்டியே
**100
#21
சாங்கரி குகன்க ணேசன் தாங்கலே சுமத்த லேரி
ஞாங்கர்வேற் படையு முன்பும் பக்கமு மேலு நாற்பேர்
ஓங்கலே வெற்பு மூங்கி லுயர்தலோங் குதலெ ழுச்சி
சாங்கிகன் விசையுற் றோடு பவன் சங்க வினைஞ னென்ப
**101
#22
பாங்கர் தோழர் பக்கமிடந் தீங்கு நவைபா வந்துட்டம்
ஏங்க லொலித்தன் மயிற்குரலோ டிளைத்த லழுத லிரங்கற்பேர்
தூங்கல் யானை தாழ்தனடித் திடல் சோம் புறங்க றூங்குதலாம்
தேங்கறதும்பல் திடுக்கிடற்பேர் நீங்கல் பிரிதல் செல்லுதலே
**102
#23
வாங்கல் வளைதல் கொளலிழுத்தல் சார்ங்க மால்வில் விற்பொதுவாம்
வீங்கல் பருத்த லேக்கறற்பேர் வேங்கை புலிபொன் னோர்மரப்பேர்
ஆங்கவ் விடத்தோ டொப்பென்ப ஊங்குவ் விடமுன் னதமிகுதி
பாங்கு முறைமை யுரிமையிடம் பக்க மழகு நன்மைப்பேர்
**103
#24
தூங்காமை சோர்வில் விழிப்புடைமை சோம்பின்மை
ஆங்காரஞ் சுட்ட கரித்திர ளகங்காரம்
காங்கேயம் பொன் முத்தக் காசுகம லத்தின்வேர்
காங்கேயன் தெய்வ விரதன்கந் தக்கடவுள்
@4 சகர வெதுகை
**104
#1
கசடுகுற் றங்களங்கங் கசிபுகூ றையுஞ்சோ றும்பேர்
அசதிகற் பிலாண யச்சொல் அசந்திமல் லிகைதீச் சட்டி
அசநிவச் சிராயு தந்தீச் சட்டியோ டனலே றென்ப
அசமூவாண் டுறுநெல் லாடாம் அசுபமே தீமை பாவம்
**105
#2
கசமத கயம்வ றட்புண் டலைமயிர் கட்டு நாற்பேர்
குசமரப் பொதுத ருப்பை கொங்கைநீர் தாம் போர் தீவாம்
நிசமெய்நித் தியந்த னாது நிசைமஞ்ச ளிராத்தி ரிப்பேர்
விசனென்ப மனுட னாய்கன் விசிகந்தோ மரமம் பென்ப
**106
#3
அசிப்படைக் கலம்வா ளோரா றவமதிச் சிரிப்பு மாகும்
குசியிரும் பாற்செ யப்பட் டது கொடு வினைஞன் மத்தன்
மிசிசடா மாஞ்சி யோமம் சதபுட்பை சதபுப் பிப்பேர்
வசியுடற் றழும்பு கூர்மை கழுமுள்வாள் வசிய மென்றாம்
**107
#4
உசிதமே மிதம் நியாயம் யோக்கியம் பழக்க நாற்பேர்
கசிதலூ று தலி ரங்க லுருகல்வேர்த் திடல்க வன்றல்
சசியமே பயிருங் காயும் சசிவன்மந் திரிச காயன்
அசிரங்காற் றுடல்சத் தாதி விடயந்தீ தவளை முற்றம்
**108
#5
சுசிரமே நெருப்புப் பள்ளந் தொளைதொளைக் கருவி யும்பேர்
விசிரம்பம் பத்தி நேயம் விளையாட்டுக் கலக மென்ப
சிசுவென்ப குழந்தை குஞ்சாம் பசுபதி சிவன் றீத் தெய்வம்
பசுவுயி ரான்வெள் ளாட்டாண் பிரமத கணம்ரு காதி
**109
#6
பிசுளம்நீர்க் காக்கை காஞ்சி மரமும் நீர்க் கடம்பும் பேசும்
இசைபண்சொல் லொலிபு கழ்ப்பேர் மிசைமேல்சோ றுயர்ச்சிமேடு
கசைபரி முகத்தின் றாம்பு கரிணிசட் டுவஞ்ச வுக்காம்
தசைவத்தி யூன் முன் றானை யவத்தைகோட் களின்ற சைப்பேர்
**110
#7
பசைபிசின் பசையி லாபம் பற்றிச்சை பசைவு சாரம்
அசைதலே துவளல் சோம்ப லாடலோ டுலாவல் தங்கல்
விசையனோர் வடுகன் மாலின் றுவாரிகன் விடையோன் பார்த்தன்
விசையையம் பிகைதற் பாங்கி சயைத்திதி வீரச் செல்வி
**111
#8
விசர்க்கமே மலங்கழித்தல் கொடைதள்ளி விடல்வி டுத்தல்
இசித்தலீழ்த் திடலு ரித்த லிணுங்குதல் சிரித்த னாற்பேர்
விசித்திரம் பலநிறம்பே ரழகொடு வியப்பு மாகும்
இசைத்தலே புணர்த்தல் கட்டல் சொல்லலோ டொலித்த லென்ப
**112
#9
நிசர்க்கமே படைப்பி யற்கை நீசனே குறளன் றாழ்ந்தோன்
ஒசித்தலே யொடித்தல் சாய்த்த லூசலூ சுதலூஞ் சற்பேர்
நசித்தல்கே டுறலி றத்தல் நாசமே மரணங் கேடாம்
அசைத்தல்கட் டிடலாட் டற்பேர் ஆசையே திசையோ டிச்சை
**113
#10
மசகங் கொசுகுத் திரநோய்ப் பேர் வசிரங் கசதிப் பலியுப்பாம்
விசதந் தூய்தானது வெண்மை விசரங் கூட்டம் படர்ச்சிகொலை
தசநங் கவசம் பல்லென்ப சுசம மெனல்சுந் தரமுவமை
வசம தீநம் பிரபுத்வ மின்மை வாஞ்சை சென்மமுமே
**114
#11
அசல மலையாப் பசைவின்மை யசிர னருக்கன் கனல்கவந்தன்
குசன்மத் தன்செவ் வாய்நரகா சுரனி ராம குமாரன்பேர்
விசிகை பாரக் கோல்வைத்ய சாலை வீடு தெருக்கருத்தாம்
அசிதஞ் சிரிக்கின் றதுகருமை வெலக்கூ டாத தலர்ந்ததுமே
**115
#12
நிசிதம் நிறைவு கூர்த்ததுமாம் நிசுள மெய்ப்பை நீர்க்கடம்பு
சசிய கம்வா ளொடுதெங்கின் பேதஞ் சசிய நிறத்துமணி
கசியங் கசையி னடிக்கு சித முளது பரியி னிடைகள்ளாம் ( பேர்
பிசுவோர் கண்ணோய் பஞ்சோர்கள் பிசுநன் கோளன் றுட்டன்
**116
#13
பிசண்டமே பசுவி னங்கம் படுக்கையும் வயிறும் பேசும்
பசுங்கதிர் பீட்டை சோமன் பசும்புல்பைம் பயிர்பச் சைப்புல்
குசும்பமே கமண்ட லம்பொன் குங்குமங் குசும்பைப் பூவாம்
அசும்பென்ப கிணறூற் றுப்பொல் லாநிலம் வழுக்குப் பூமி
**117
#14
வசந்த தூத மென்பகுயில் மாம ரம்பஞ் சமராகம்
வசந்தந் தென்ற லோரிருது வாச வன் றன் மாளிகையாம்
வசந்தன் மதந தளபதியோர் கூத்து வசந்த விழாமதகன்
தசும்பு கடாரங் குடமென்ப விசும்பு திசைவிண் முகில்சுவர்க்கம்
**118
#15
வசதிமரு தத்தூர்வீ டிராத்திரிநல் லிடமாம்
வசுகமெருக் குச்சிவமல் லிகையளத்துப் பும்பேர்
முசலிநிலப் பனையோந்தி யுடும்புவீட் டுடும்பு
முதலைகே தகிபலபத் திரராம னென்ப
விசல்லியைவண் டானப்பெண் சிவதைநே பாள
விதைசீந்தி நாகணந்தி காந்தள் குப்பை மேனி
அசனயன்மா யோன் சிவன்மன் மதனிரகு சுதன்பேர்
அசிதன்வெலற் கரியோன்மா யவன்சனி நீ னிறத்தோன்
**119
#16
சுசிவெண்மை சுத்தமந்த்ரி முதிர்வேனி லாடி
தூய துமுச் சுடர்கழிவு படாததுசிங் காரம்
வசுகிரணங் குபேரனனல் சிவமல்லி தநம்நீர்
மணிமதுரம் வறட்சி தும்புக் கயிறு தான் முதலோர்
வசைமிகுதி கணவன் றன் சோதரிபெண் ணானை
மகள் பெண்மலட் டாவசம்பு நிணம்பழிச்சொல் குற்றம்
விசையமார்த் தாண்டமண் டலம் வெற்றி தெய்வ
விமாநஞ்சற் கரைகடுக்கா யோர் சிவா கமமே
**120
#17
பசநம் பாகஞ் செயல்வழி பாடு
வசநம் வார்த்தை வசித்தல் மனை துகில்
தசமி பத்தாந் திதிகூன் கிழவன்
குசலம் நன்மை சமர்த்துப் புண்ணியம்
**121
#18
அசமோ தையி லவம்பிசி னோமம்
சசம்வெள் ளுலோத்தி ரம்முயல் போளம்
சசியிந்தி ராணி சதாவரி சந்திரன்
விசிபற் மச்சுருள் விரதியர் பீடம்
**122
#19
குசிகம் படைவாள் தான்றி மராமரம்
ஒசிதல் தளர்தலொடித லசைவுறல்
விசிநி பதுமக் குளம்பது மக்கொடி
சிசிரம் பனிசீ தளமோ ரிருது
**123
#20
அசநம் சிரித்தல்வேங் கைத்தரு போசநம்
சிசுக முல்லமீன் சிஞ்சுமா ரம்மெனும்
பிசுநங் குங்குமங் குறளை பருத்திப்பேர்
குசுமங் கண்ணினோய் பூப்பழம் பூப்புமே
**124
#21
நிசாசர ரரக்கர் கள்வர் நிசாசரி யரக்கி துட்டை
நிசாதந மிடமுண் மைப்பேர் நிசாந்தம்வை கறைவீ டென்ப
நிசாமநங் காட்சி கேள்வி நிசீ தம்நள் ளிரவி ராவாம்
நிசாரமே கொடைச மூகந் திரவியம் நியாயஞ் சாரம்
**125
#22
விசாகன்செவ் வேளி ரப்போன் நிசாடியே யரக்கி வேசை
குசாக்கிர மரத்தி னுச்சி முலைக்காம்பு குசநுனிப்புல்
விசாரமீன் றேர்ச்சி சிந்தை விசாரத னறிஞ னூகி
விசாலைபேய்த் துமிட்டி யுச்சை நிநகர் விரிவு மாமே
**126
#23
சுசீமஞ்சுந் தரங்குளிர்ச்சி மசூரையே சூளை யோர்நெல்
குசீலவன் கற்றுப் பாடி யக்கிநீத் திரன்வான் மீகி
கசேருவே முதுகி னென்பு கரணைமுத் தக்கா சும்பேர்
அசோகமே திமிசு சோக மல்லதோர் மரம்வெண் சூதம்
**127
#24
நிசாசரங் கூகை பாம்பு நரிப்பெயர்
குசீதம் பொலிசை கொடுத்தல் சுசீவநம்
விசேடகம் விசேடஞ் செய்வது திலகம்
விசேடம் நுதற்குறி யவயவஞ் சிறப்பே
**128
#25
உச்சடை யிடம்பா சாரம் வெள்ளுள்ளி வட்டக் கோரை
எச்சமே குறைவு புள்ளின் மலமகப் பொதுயா கப்பேர்
பிச்சம்புட் சிறகாண் பங்கி வெண்குடை பீலிக் குஞ்சம்
புச்சம்பிற் புறம்வா லென்ப மெச்சல்கொண் டாடல் வாழ்த்தல்
**129
#26
எச்சன்பா வகன்மு குந்தன் அச்சுதன் மால்கே டில்லோன்
உச்சித னுயர்ச்சி யுள்ளோன் வளர்ந்தோனுற் பந்தன் முப்பேர்
விச்சித்தி சேதங் கைமெய் காட்டபி நயம்வீட் டெல்லை
வச்சிர மோர்யோ கம்வச் சிராயுதம் வயிர மென்ப
**130
#27
அச்சென்ப தேரி னச்சோ டடையாள முயிரெ ழுத்தாம்
கச்சுரை பூனைக் காலி சிறிய காஞ் சொறிகச் சோலம்
விச்சுவ கருமன் வேதா விகர்த்தநன் றேவ சிற்பி
அச்சுவ தரமோர் நாகங் கோவேறு கழுதை யாமே
**131
#28
உச்சுவ லஞ்சிங் காரம் விகசிதம் விளக்கந் தூய்தாம்
விச்சுவா வசுவோ ராண்டோர் கந்தர்வன் விபாவ ரிப்பேர்
இச்சையே யிட்ட மாசை மச்சையே மரக்காழ் மூளை
கொச்சைசீ காழி வெள்ளா டறிந்து கூ றாச்சொற்கீழ்மை
**132
#29
செச்சைவெள்ளாட்டாண் வெட்சி செஞ்சாந்தின் குழம்போர் மாடம்
பச்சையோர் புதல்பு தன்மால் மரகதம் பசுமை தோலாம்
பொச்சைகா டும்பொ ருப்பும் பொற்றையுங் கரிகா டும்பேர்
மிச்சைபொய் மிடியஞ் ஞாநம் விச்சையே மறுகு வித்தை
**133
#30
அச்சங் கரடி பயமகத்தி பளிங்கு தெளிந்த தபிமுகமாம்
உச்ச முயர்ச்சி வல்லிசைப்பேர் துச்ச முறுகண் பாழற்பம்
கச்சங் கரைநீர்த் தலஞ்சின்னி யருகீ றளக்குங் கால்கடனாம்
குச்சம் பூங்கொத் தெண்ணான்கு வடமுத் தாரங் கூனாந்தை
**134
#31
கச்சை யரைஞா ணுள்ளுடைக்கீள் கயிறுத்தியோக மிபக்கழுத்தின்
கச்சை யுத்த ரீயமுபரிகைநாற் கட்டு வீடொப்பாம்
பிச்சை சருவ சுவைத்தெளிவு வாழை யிலவம் பிசினிரக்கும்
பிச்சை யொழுங்கு பரிக்குரநோய் கமுகம் பாளை யிலவும் பேர்
**135
#32
பிச்சடங் கண்ணோ யீயந் திராப்பெயர்
சச்சநஞ் சேனைப் புறக்காவல் நற்சநம்
கச்சப மாமையோர் நிதியின் கட்டுரை
கச்சபி வாணியின் யாழ்கம டப்பெண்
**136
#33
நிச்சய மெய்ம்மை நிருணய மென்றும்
தச்சன் மரவினை ஞன்சித் திரைநாள்
நொச்சி புரிசை யோர்மரஞ் சிற்றூர்
பச்சிம மேற்கும் பிற்பட் டதுமே
**137
#34
பிச்சிலை யிலவோ டிருவீ டெனுமரம்
அச்சுவத் தங்கல் லாலர சிருபெயர்
விச்சுவஞ் சுக்குப் புவநஞ் சகலமும்
விச்சுவன் பரன் றிரி விக்ரம னிந்திரன்
**138
#35
இச்சி யைகொடை யாசநம் பூசனை
நிச்சி ரேணிசிற் றீந்தோ டேணியாம்
நிச்சி ரேயச மோக்க மங்களம்
கச்சு ரன்சிரங் குள்ள வன்விடன்
**139
#36
கீசக மூங்கில் காற்றி னொலிக்குமூங் கிலுமா மென்ப
பேசகம் யானை வாலி னடித்தசைப் பிண்டங் கூகை
மேசக மிருள்க றுப்புச் சாமள மயிற்பீ லிக்கண்
சூசக னொற்றன் கோளன் கேசரி துரகஞ் சிங்கம்
**140
#37
ஓசசு கிரணம் ஞாநம் வலிசெருக் கொளிசொற் பண்பாம்
தேசசிந் திரியம் வெண்ணெய் பிரதாபந் திறல் தீக் காந்தி
சாசந மிறையி றாவூர் சாத்திரங் கருமந் தாந
சாசநம் பொறித்த லாணை யடக்கலா யுதமே வற்சொல்
**141
#38
தேசநங் கொறுக்கை மூங்கில் தேசியோ ரிராகம் பாய்மா
யோசநம் நாற்கு ரோச மான்மாக்கூ டுதல்யோ சித்தல்
காசமே வளைமண் கோழை யுறிநாணல் முதிர்புற் கண்ணோய்
பீசமே விதையே துச்சுக் கிலத்தாது தத்து வப்பேர்
**142
#39
வாசரை நிசிபெண் பூமி வாசிதை பெண்பெண் ணானை
பேசலஞ் சமர்த்து லக்கை குயிலழ கியதும் பேசும்
மாசல முதலை நோயாம் மாசலன் றுதிப்போன் கள்வன்
மூசலே மொய்த்தல் சாய்தல் மோசைதா னிலவு வாழை
**143
#40
தேசிகன் வணிக னாசாரியன் தேசத் துள்ள வன்பேர்
வாசிகை யாடா தோடை நுதற்சூட்டு மாலை யென்ப
ஆசிதஞ் சகட பாரந் துலாமிரு நூறாம் பாரம்
கேசிநி சங்க புப்பி பாதாந்த கேசப் பெண்ணே
**144
#41
ஆசிய முகோற்ப வம்வாய் முகமுகாந் தரஞ்சி ரிப்பாம்
மாசுமே கங்க றுப்பு மலிமச மழுக்குக் குற்றம்
ஆசுகங் கணைபுட் காற்றாம் ஆசுக னருக்கன் வாயு
ஓசையே நாதங் கீர்த்தி பூசை பூ சனை பூஞைப்பேர்
**145
#42
மாசங்க நிதியத் தொன்று மநுடரி னரம்போ ரெண்ணாம்
வாசந்தங் குயில்தா சேரம் வாசந்தன் விகிதன் றூர்த்தன்
ஆசந்தி வேத்தி ராத நஞ்சிறு கட்டில் பாடை
வாசந்தி யென்ப முல்லை குருக்கத்தி பாதி ரைப்பேர்
**146
#43
பாச நம்யோக் கியஞ்சுற்ற மிருப்பி டம்முண் கலன்பாண்டம்
கோச ரம்மிந் தியத்தகப்பட் டதுகாண் குற்ற தைம்புலனாம்
சோசம் லவங்கம் சோகம்வா ழைப்ப ழத்தோல் பனம்பழமாம்
வாச மொலிநீர் நெய்யவிசு மணம்வீ டிறகு துகில்வேகம்
**147
#44
வேசம் வீடு வேசைமனை வீச லெறிதல் கொடுத்தற்பேர்
ஆசி போர்வாழ்த் தொத்ததறை தூசி பரிதூள் படையு றுப்பாம்
சூசி யூசி கேதகைப்பூ முனையோர் சுரத மபிநயப்பேர்
பாசி வருணன் மீன்கரிய மணிநீர்ப் பாசி கிடைச்சென்ப
**148
#45
மாசி மகநா ளோர்மாதம் பாசு மூங்கில் பசுமையுமாம்
ஆசு விரைவோ ரிடைக்கார்நெல் லற்பம் பிழையோர் கவிகவசம்
காசு மணிப்பூ டணக்கோவை கஃசிற் செய்முத் திரைப்பணம்பொற்
காசு மணியின் பொதுசூதுக் கருவி குற்ற மெனவறுபேர்
**149
#46
கோசம்வா ளுறைபயற்றி னெற்றுப்புத் தகமொக்
குட்பூக்கட் கிண்ணிமதி லுறுப்புமுட்டை யண்ட
கோசம்வீ டுடல்பண்ட சாலைசநத் திரள் பெண்
குறிதிவ்யம் போளம் நூல் சொயவெள்ளி சொயப்பொன்
பாசமூ சித்துளை பேய் கலாபார்த்தங் கிரணம்
பருந்து நிந்தார்த் தங்கயிறு சுவர்ணார்த்த மாசா
பாசமயிர்க் கற்றைகண்ணி செவிக்கடைநே யஞ்சோ
பநார்த்தமொடு குடையாதி யின்கடைமூ வைம்பேர்
**150
#47
சூசகம் நாய் பூனைவா யசமூசி சஞ்ஞை
சூசநைகந் தநம்பார்வை பொதுத்தலபி நயமாம்
வாசநைபூர் வா நுபவ சிந்தைபரி மளப்பேர்
வாசிகுணங் கூறுபரி கணைபறவை பொலிசை
கேசரம் பூந் தாதுமகிழ் பெருங்காயம் நாக
கேசரமச் சுவ சிங்கப் பிடரின்மயிர் புன்னை
வாசிதம்புட் குரல் விலங்கின் றொனிய றிவு துகிலான்
மறைக்கப்பட் டதுவாசங் கட்டினது மாமே
**151
#48
கூசல்கூ சுதல்வெருவல் வெள்கலச்சக் குறிப்பென்ப
பூசல்சம ரலங்கரித்தல் பேரொலிபூ சுதலும் பேர்
பாசறை துன் பம்பகைமேற் சென்றோர் தங் கும்பதியாம்
தாசிகருங் குறிஞ்சியடி யாள்பரணி நாள் சாற்றும்
**152
#49
பேசிவா ளுறைமுட்டை முகிழ்மாஞ்சி பிசிதபிண்டம்
வீசியலை சுகமற்ப மயிரின்வளை வொழுங்கற்றம்
ஆசினிதான் மரக்காழீ ரப்பலா வாகாயம்
பாசுபதம் சிவமல்லி பசுபதிசம் பந்தமுமே
**153
#50
யாசக மிராச யானை யிரப்பாம்
மோசகந் துறவு வாழை முருங்கை
வேசகம் வாலச் சுவத்தின் குசைமயிர்
யாசகன் வேள்விக் குரியோ னிரவலன்
**154
#51
கேசம் வெட்டிவேர் தலைமயிர் கயிறுகை
ஆசயங் கருத்துப் பநசஞ் சார்விடம்
தூசரங் கழுதை மங்கின மானிறம்
கேசவ னன்மயிருள்ளோன் கிருட்டிணன்
**155
#52
காசறை மணிமயிர்ச் சாந்துகத் தூரி
தாச னடியான் சதுர்த்தன் பரதவன்
ஊசி தையற் கருவியெழுத் தாணி
கோசிக மென லுடு கூறைபட் டாடையே
**156
#53
நாசிகை வாயிலின் மேற்படி நாசியாம்
காசிபி யவநி யருணன் கருடன் பேர்
தூசு புடைவை யிபத்தின் புரோசை தூள்
ஆசு சுக்கணி சூரிய னக்நியே
**157
#54
ஈசாநம் வடகீழ்த் திக்கு மீசனைம் முகத்தொன் றும்பேர்
ஆசாரம் படையொ ழுக்கஞ் சொரிமழை வியாபிப் பாடை
மாசாலி பெருநெற் பீர்க்கா மாசேந னருகன் கந்தன்
வாசாலை மிகவும் பேச வல்லணா கணவாய்ப் புள்ளாம்
**158
#55
கௌசிகங் கூகை கீரி குக்குலுத் தீப கம்பம்
கௌசிகன் விசுவா மித்ரன் மேகவா கநன்பாம் பாட்டி
வைசாகஞ் சாணு ளொத்த பதநிலை மத்தோர் மாதம்
ஔசீரங் கவரிக் காம்பா சநம்வெட்டி வேர்படுக்கை
**159
#56
வைசயந்த மிந்திரன்றன் மாளிகையும் பதாகையுமாம்
வைசயந்தி தழுதாழை பதாகைவிண்டு வின்மாலை
கைசிகமோர் பண்கேசத் திரள் கைசி கியோர் விருத்தி
வைசிகமங் குரமுருங்கைத் தைலங்கா ரணமன்னும்
**160
#57
ஆசா டம்நற் றவர்கைக்கோ லாடி மாத மலையமலை
மோசா டஞ்சந் தநங்கதலிக் கருப்பங் கருஞ்சீரகமுப்பேர்
கோசா தகிநா யுருவி பிடிப் பீர்க்குப் படோலி கையுங்கூறும்
ஆசா பந்தஞ் சிலம்பியினூ லாடை நம்பிக் கையுமாமே
**161
#58
ஆசா னாசா ரியன் செவ்வே ளருகன் பாலை யாழ்த்திறப்பேர்
நாசீ ரம்முன் னெழுஞ்சேனை முந்தி நடத்தும் வாகநமாம்
ஆசூ வலிதிற் கூலிகொடா வமஞ்சி நரக வாதையெனும்
காசூ வேலா யுதம்விகல வாக்கோர் நோய்புத் தியுங்காட்டும்
**162
#59
தீச்சிகங் குசும்பைப் பூக்குங் குமமெரி கொள்ளி செப்பும்
தீச்சிகை தீக்கொழுந்து செங்காந்தள் குப்பை மேனி
ஆச்சுவா சஞ்சாக் காடு பழங்கதை யத்தியாயம்
மூர்ச்சித னென லு யர்ந்தோன் மயங்கினோன் மூடன் முப்பேர்
**163
#60
ஆச்சிரம முனிவரிடம் மடம் பிரம சரியாதி
ஆச்சிரவஞ் சபதஞ்சொற் படி கேட்டல் கிலேசமுமாம்
ஆச்சுரித கம்பெருமைச் சிரிப்புநகக் குறியின்வடு
ஆச்சாத நம் போர்த்துக் கொளல்மறைவு மாடையுமே
**164
#61
ஆச்சியம் நெய்சிறீ வாசமு மாகும்
வாச்சியஞ் சொலத்தக் கதுவாத் தியப்பேர்
பூச்சியன் மாமன் பூசிக்கத் தக்கவன்
ஈச்சுரன் சுவாமி மன்மதன் மகேசனே
@5 ஞகர வெதுகை
**165
#1
அஞர் துன்ப நோயச் சப்பேர் அஞ்ஞனே மூடன் மூர்க்கன்
கஞறலே பொலிவெ ழுச்சி கதக்குறிப் பொடுநெருங்கல்
முஞல் கொசு வொடுமுயற்பேர் முஞ்சலே மொய்த்தல் சாதல்
உஞற்றலே முய றல் செய்த லுஞற்றுற்சா கம்வ ழக்காம்
**166
#2
வஞ்சகன் குரூரன் றூர்த்தன் மனைக்கீரி நரிவஞ் சிப்போன்
பஞ்சதங் குயில்கா லப்பேர் சிஞ்சிநி பதப்பூண் வின்னாண்
அஞ்சநங் கறுப்புக் கண்ணி லிடுமைமேற் றிசையா னைப்பேர்
கஞ்சந மேகண் ணாடி கரிக்குரீஇ வலியா னென்றாம்
**167
#3
வஞ்சநி காளி யேவற் பெண்ணிடா கிநிவஞ் சிப்பாள்
அஞ்சநை சார்வ பூமப் பிடியுட னனுமற் பெற்றாள்
பஞ்சம மழகைந் தாவ தோர்சொரம் நிறைவோர் பண்ணாம்
குஞ்சரம் கேசம் யானை குஞ்சியாண் மயிர்புட் குஞ்சே
**168
#4
குஞ்சங்கூன் புறங்கூற் றியானைக் கொம்புபல் கன்னம் பீலிக்
குஞ்சம் பைங் கொடியின் வீடாக் கொளுமுழைஞ் சடவி யும் பேர்
நெஞ்சமே மனமு மார்பும் புஞ்சம்நெற் பொலிபி ழம்பாம்
பஞ்சமே செழிப்பிலாமை பரப்புடனைந்து மாமே
**169
#5
வஞ்சமே கொடுமை பொய்வாள் சிறுமைவஞ் சனையு மன்னும்
பஞ்சரஞ் செருந்தி பண்ணும் பறவைக்கூ டுடலி னென்பாம்
பிஞ்சரம் பொற்சி வப்பந் நிறப்பரி யரிதா ரம்பொன்
மஞ்சரி தளிர்மஞ் சாடி பருத்தமுத் தொழுக்க மாலை
**170
#6
பிஞ்சலங் குசப்புற் பொன்மை பிஞ்சையே பஞ்சு மஞ்சள்
சஞ்சலை கமலை மின்னல் சஞ்சன்மா தேவன் வேதா
கிஞ்சற்கம் விண் பூந் தாதாம் கிஞ்சாரு கணைநெல் லின்வால்
கஞ்சன்றா மரையோ னோர்கால் முடவன் கண் ணன்றன் மாமன்
**171
#7
கஞ்சிகை மணிக்காற் பள்ளி யிடுதிரை பரிகட் டூர்தி
பஞ்சிகை சிறுதேக் கோர் நுண் பதவுரை வரவின் போக்காம்
அஞ்சிதம் பொருந்தல் கொண்டா டப்பட லசைத்தல் முப்பேர்
சஞ்சுபுள் ளலகே ரண்டஞ் சஞ்சையே புகழ்ச்சி யாசை
**172
#8
அஞ்சுக முத்த ரீய மாடைமெல் லாடை யும்பேர்
கஞ்சுகம் பாம்புச் சட்டை குப்பாசங் கவச மென்ப
கிஞ்சுக முண்மு ருக்குப் பலாசுகே கயப்புட் செம்மை
கஞ்சுகி மெய்காப் பாளன் கட்செவி யகில்வி டன்பேர்
**173
#9
தஞ்சம் பற்றுக் கோடெளிமை சஞ்ஞை யுரன்பே ரபிநயமாம்
பிஞ்சம் புள்ளி னிறகுகொலை வலிவி யாகு லமும்பேணும்
கஞ்ச ரீடம் வாட்கூர்மை விரத சாரி கரிக்குருவி
துஞ்சல் சோம்ப னிலைபெறுதல் துயிலல் சாத லெனநாந்பேர்
**174
#10
இஞ்சி மதிலோர் மருந்தென்ப இஞ்சை களவா தியுங்கொலையும்
வஞ்சி கருவூ ரோர்மரமோர் வல்லி யோர்பாப் பாக்கழிப்பண்
மஞ்சு பனி பூண் முகடிளமை வலிகார் கரியின் முதுகழகாம்
கஞ்சை மணியுண் டாம் பூமி கமலை கள்விற் கும் வீடே
**175
#11
அஞ்சம்வெள் விடைபிராண வாயுமந்தி ராதி
யன்னப்புட் புயத்துச்சி பங்கிருப்பு முன்னாம்
கஞ்சமம் போ ருகமமிர்தந் தலைமயிர்தா ளம்வெண்
கலம் நாழி வட்டில்பண்ட சாலையப்ப மென்ப
அஞ்சனோர் துறவிம தன் பொறாமையிலான் சிரேட்டன்
அருக்கன்சீ தரன் றியாக வேந்தனந்த ரான்மா
விஞ்சையர்விற் பன்னர் வித்தியாதரரு மொக்கும்
விஞ்ஞாந முக்யவினை நூல்சிற்பத் துணர்வே
**176
#12
பஞ்சந கம்புலி போதகங் கச்சபம்
பஞ்சமி யஞ்சாந் திதிதுரௌ பதியாம்
சஞ்சல மலைவதுங் காற்றுங் கிலேசமும்
அஞ்சலி யுழக்குக் கும்பிடல் கூப்புதல்
**177
#13
மஞ்சிகை தாளிக் கொடி பேழை காதணி
மஞ்சுள மிரம்மியஞ் சுந்த ரங்குயில்
வஞ்சுளந் திமிசு வஞ்சி யசோகுமாம்
குஞ்சை யின்றொனி படகங் குன்றியே
**178
#14
பஞ்சாங் குலமா மணக்குக் கையுமாம்
பஞ்சா சியமைம் முகங்கண் டீரவம்
கஞ்சா ரந்தந் தாவளம் வயிறு
கஞ்சா ரன் சூரியன்கம லாசநன்
**179
#15
பாஞ்சசந் நியந்தீ நாணல் பரந்தாமனுடைய சங்கம்
காஞ்சநம் பொன் பூந் தாது புன்னைசெண் பகம்நா கப்பூ
ஆஞ்சியே வெறியாட் டேலஞ் சோம்பலோ டலைய னாற்பேர்
காஞ்சியோர் மரமோ ரூரெண் கோவைமே கலையோர் பண்ணாம்
**180
#16
பாஞ்சலங் காற்றுக் கனலிலா பப்பொருள்
காஞ்சியங் கஞ்சக் கருவியப் பாத்திரம்
நாஞ்சில் கலப்பை மதிலுறுப் பும் பெயர்
பாஞ்சா லிகை துரௌ பதிமரப் பாவை
@6 டகர வெதுகை
**181
#1
கடகங்கற் கடக ராசி படைமதில் கேட கங்கைக்
கடகமோர் கூத்து வட்டங் கயத்திரள் மலைப்பக் கப்பேர்
சடகமூர்க் குருவி கள்ளுப் பாநபா சநங்கட் பாநம்
பிடகஞ்சாத் திரம்பெளத் தாக மம்பெட்டி பிளவை யாமே
**182
#2
சடகைதிப் பலிமூலத்தோ டூர்க்குரு விப்பெண் சாற்றும்
விடதரம் பாம்பு மேகம் விடனென்ப தூர்த்தன் றேளாம்
இடபியே பூனைக் காலி யாண்வடி வப்பெண் கைம்மை
புடபேத முயர்த்துக் கொட்டும் பறைபுரம் நதிக்கோ ணற்பேர்
**183
#3
கடமையே முறைமை காட்டுப் பசுக்கட னிறுப்பு நாற்பேர்
இடமிட மிடப்பால் செல்வ மிராசிவீ டகலம் விண்ணாம்
சடமுடல் கடுமை பொய்யாஞ் சடன்மதி யீனன் மூர்க்கன்
வடம் பெருங் கயிறோ டால மரம்நாணி மணிக்கோ வைப்பேர்
**184
#4
தடம்வளை யம்வ ரம்பு கரையிடந் தடாகஞ் செல்லும்
தடம்விரி வோம குண்டம் பெருமைதாழ் வரைதி ராசாம்
படமிடு திரைதீட் டுஞ்சித் திரப்படாம் புடைவை பாம்பின்
படம்யானை முகப டாமும் பதாகையு முரளு மாமே
**185
#5
விடமில வணம் நீர் நஞ்சு வெற்பெலி கருங்கா லிப்பேர்
பிடரமே தயிரின் மத்துப் பெருங்கோரை பானை யென்ப
படர்நடை வழிநோய் துன்பம் பகைவீரர் நினைப்பு மேடு
விடர் நிலப் பிளப்புக் காடு தூர்த்தர்வெற் பின்முழைப்பேர்
**186
#6
படலம் வீட் டிறப்புக் கண்ணோய் பரிச்சேதந் திலகங் கூட்டம்
படலிகை பெரும் பீர்க் குக்கைம் மணிவட்டப் படிவந் தட்டம்
படலை தார் கோத்த மாலை வெளிக்கத வொடுப டர்ச்சி
அடல்கொலை வலிபோர் முப்பே ரடவியே காடு சோலை
**187
#7
படல் கெட லத்த மித்தல் துயில்மாளல் படுதல் தட்டி
மடல்பனை யோலை தாழை மடல்போல்வ மலரி தழ்ப்பேர்
கடல்வண்ணன் றிருமாலையன் கடவுளே தெய்வம் நன்மை
முடவனே சனிகா னொண்டி முடுவல்செந் நாய்பெண் ணாயே
**188
#8
தடவென்ப பெருமை தூப முட்டியும் வளைவுஞ் சாற்றும்
கொடிகாக்கை துவசம் நீளம் குகனாடல் படர்கொ டிப்பேர்
செடிபத னழிவு பாவம் புதல்செறி வெருத்தி னார்ப்பாம்
தடிவய லுலக்கை வில்லுத் தசையுடும் பொடுகைத் தண்டே
**189
#9
துடியெழு மாத ராடல் கூதாளி யுடுக்கை யங்கத்
துடிவன்பாற் பறைசிற் றேலஞ் சிறிதையங் கால நுட்பம்
படியங்க வடிசோ பாநம் பகையொப்பு நாழி வாயிற்
படிவிதங் கொற்றுப் பூமி நிறையறி கருவி பண்பே
**190
#10
பிடி பெண்ணொட் டகம்பெண் ணானை கவரிமான் கைப்பிடிப்பேர்
முடிநாற்றின் முடிகி ரீட மயிர்முடி குடுமி சென்னி
வடிகூர்மை கயிறு கள்ளாம் வடிவழ குருவம் வண்ணம்
அடிகளே முநிவன் மூத்தோன் குடில் சிறு வீடா காயம்
**191
#11
சுடிகையே மகுட முச்சி மயிர்முடி நெற்றிச் சுட்டி
குடிஞைபுட் பொதுவும் யாறுங் கோட்டானுங் குடிசை யும்பேர்
கடிதல் வெட்டுதல் தண்டித்தல் கதஞ்செய்த லழித்தல் கொய்தல்
படிதலே குளித்தல் தாழ்தல் படிவமே வடிவும் நோன்பும்
**192
#12
குடிலமே வளைவு வஞ்ச மாகாயஞ் சடையுங் கூறும்
குடிலையோர் நதியோர் மந்த்ரம் கொடிறு பூ சங்க துப்பாம்
நெடில்வேய்நெட் டெழுத்து நீளம் நெடுமை பெண் மயிர்நீட் டப்பேர்
படிறுபொய் களவு வஞ்சம் படுவிகுட் டநிகள் விற்பாள்
**193
#13
உடுவிண்மீ னகழா டம்புத் தலையம்பின் சிறகோ டக்கோல்
வடுவசை தழும்பி ளங்காய் வாள்செம்பு பிரம சாரி
படுகர் நீர் நிலைமென் பாலோ டிழிந்தேறும் வழிபள் ளப்பேர்
முடுகலே விசையிற் போதல் மொய்த்திடல் வலியெ திர்த்தல்
**194
#14
கிடுகுதேர் மரச்சுற் றுக்கே டகந்தென்னோ லைப்ப டற்பேர்
இடுதலே சொரிதல் வைத்தல் போடுத லீதல் பண்ணல்
தொடுதலே தீண்டல் பற்றல் தோண்டுதல் புனைத லென்ப
விடுதலே யெறிதல் போக்கல் தீர்தல்விட் டிடலு மாமே
**195
#15
அடைகந மப்ப வர்க்க மிலை புள்ளி னடைய டுத்தல்
கடையிட முடிவு கீழ்மை வாயிலங் காடி பாதை
கிடைபசுக் கிடைகி டைச்சு மறையோது மிடங்கி டப்பாம்
தொடையம்போ ருறுப்பு நாணி தார்செய்யுட் டொடைதொடுத்தல்
**196
#16
நடைவாயிற் கடவை கூத்து வழிநடப் பொழுக்க மென்ப
படைபடைக் கலம்படுத்தல் பரியின்கல் லணைசே னைப்பேர்
மடைசோறு நீர்பாய் தூம்பு மதகணிக் கடைப்பு ணர்ப்பாம்
முடையோலைக் குடைபு லாலம் முடைநாற்றந் தவிடு மாமே
**197
#17
மடக்கோர்சித் திரப்பாட் டோர்மட் கலன்மடக் கியது மாகும்
கடத்தறாண் டுதன டத்தல் கடப்பாடு கடமை யீகை
கடத்துத னாட்கழித்தல் விலக்குதல் கடக்கச் செய்தல்
படப்பையூர்ப் புறங்கொல் லைப்பேர் படித்தலே பழக லோதல்
**198
#18
அடர்த்தலே பொரனெ ருக்க லடித்தல்கொட் டுதல துக்கல்
துடித்தலே பதறல் துள்ளல் நொடித்தல்கை பிதிர்த்தல் சொல்லல்
கடித்திர மரையிற் கட்டும் புடைவைமே கலைதோற் பேதம்
கடுத்தல் கோ பித்த லையப் படலொத்தல் கடுக லும் பேர்
**199
#19
தொடுத்தனா ணேற்ற லெய்த றொடங்கல்கட் டிடல்கோத் தல்பூத்
தொடுத்தல்பாத் தொடர்பு செய்தல் சேர்த்தல் பின் றொடர்த லொன்பான்
விடுத்தலே நடத்தல் தீர்தல் போகவிட்டிடுதல் தங்கல்
அடுப்பென்ப தீவாய்த் தானம் பரணிநா ளச்ச முப்பேர்
**200
#20
துடைத்தலே யழித்த லொன்றிற் றுவணீரைத் துகளைப் போக்கல்
படைத்தலாக் குதலந் நாதி பரிமாற லுடைத்தா தற்பேர்
புடைத்தல்குட்டுதல டித்தல் வீங்குதல் நெற்கொ ழித்தல்
கடைப்பிடி மறப்பி லாமை கருமத்தின் றுணிவு தேற்றம்
**201
#21
இடங்கரே முதலை தூர்த்தர் நீர்ச்சாலுங் குடமு மேற்கும்
குடங்கரே குடிசை கும்பம் குடம்பைபுட் கூடு முட்டை
படங்குமேற் கட்டி யோடு பெருங்கொடி படாத்தின் வீடாம்
இடிம்பனே மூர்க்கன் பால னோரிராக் கதனு மெய்தும்
**202
#22
நிடதமோர் மலையோர் தேயம் நிடாதனே புலைஞன் வேடன்
தடவல் பூ சுதனீ வற்பேர் சடாயுகுக் குலுவோர் புள்ளாம்
கடறுகா டருநெறிப்பேர் கடாவினா வெருமைப் போத்தாம்
துடம்நெல்லி னுமிதான் றிப்பேர் துடாரமே பனிகு ளிர்ச்சி
**203
#23
குடப மரப்பொந் துழக்கென்ப சுடவி யிருசீ ரகம்பாகல்
விடபங் கொம்பு மரப்படர்ச்சி பெருந்தூ றோடு தளிர்விடையாம்
கடமை யாடு கடன் கடமான் கடவை யேணி கவரிறுக்கு
திடமே கடிநம் பருத்ததுமெய் செறிவு திரந்தீ விரம் வலியே
**204
#24
சடரம் வயிறு கடிநப்பேர் சடிலம் குதிரை சடைநெருக்கம்
நடலை பொய்வஞ் சனை துன்பம் நடவை கடப்பு மரம்வழிப்பேர்
முடலை பெருமை வலி திரளை முருடு கழலை பெருங்குறடாம்
விடலை காம விடன்பாலைத் தலைவ னிளைஞன் விறலோனே
**205
#25
நடியே பவளக் கொடிநடிப்பாள் நடுவ னியம னடுச்சொல்வோன்
மடிபொய் சோம்பு நோய்கேடு வயிறான் மடிகே தகியாடை
கடிநம் பானை குரூரப்பேர் கடுவன் வெருகாண் குரங்காணாய்
மடுவாற்றினுட்பள் ளம்சுனையாம் குடுமி யுச்சி தலைமயிரே
**206
#26
இடைபார் சுவர்க்கம் நுசுப்புநடுப் பசுவாக் கிடத்தோ டிடச் சரப்பேர்
குடைபா துகையின் குமிழ்கவிகை சதுரக் கள்ளி குகன்கூத்தாம்
சடையால் விழுது கழுத்தின்மயிர்ப் பின்னல் கிடைச்சுத் தவத்தர் தலைச்
சடைவேர் மயிர்ச்சிக் கறிவில்லாள் பூனைக் காலி சடாமாஞ்சி
**207
#27
புடைகற் புழைபொந் திடம்பக்கம் அடைதல் புகல்சே ருதல் பெறுதல்
உடைதல் தகர்தல் சாய்தல் தளர் வுடைமை பணதி பொருளுரிமை
குடைதல் கடைத லுடல் குடைதல் குளித்தல் தொளைத்தல் தோண்டலுமாம்
விடையன் விடையத் தவன்றேச முடையோன் காமன் விடைக் கொடியோன்
**208
#28
பொடிசன் னந்தூள் விபூதிப்பேர் பொடித்தல் முளைத்தல் தூளாக்கல்
அடுதல் பொரல்கொல் லுதல் சமைத்த லடுக்கல் வெற்போ டடுக்குதற்பேர்
கடுமை மிகுதி கடிதென்ப கடுப்புக்கடுத்தல் கடுகல்சினம்
கெடுதல் முறிதல் கேடாதல் கிடைத்தல் வாய்த்த லெதிர்த்தலுமே
**209
#29
புடக்கி ரீவந் தயிர்கடையுந் தாழி யொடுசெப் புக்குடமாம்
இடித்த லுறுதிச் சொற்சொலல்கட்டிடித்தல் குற்ற லிடிமுழங்கல்
ஒடித்தல் முறித்த லொளிசெய்த லொடுக்க மடக்க முடிவிடப்பேர்
மடித்தல் கெடுதல் மடி செய்தல் மடுத்தல் தடுத்த லுட்கொள்ளல்
**210
#30
உடுக்கை சேலை யோர்பறையாம் உடைத்தல் தகர்த்தல் பேதித்தல்
படுத்த லாகச் செயல்சயனித் திடறுன் புறுத்தல் புட்படுத்தல்
தொடுப்புக் கலப்பை சால்வளைப்புக் குறளை சேர்க்கை தொடுத்ததுமாம்
அடைத்தல் மூடல் திறவாமை யரணஞ் செய்த லுட்படுத்தல்
**211
#31
குடம் பூசஞ்சற் கரைகரிச்சந் நாகந் திருமால் கூத்துநீர்க்
குடங்காற் பரடோர் கொடுந் தமிழ்நா டுண்டை வீடு சிலாகுட்டம்
நிடங்க மம்புக் கூடம்பாம் கிடங்கு குழிநீர் நிலையகழி
விடங்க மழகு விழாலரிசி முகடு வீதிக் கொடி கொடுங்கை
**212
#32
மடங்க லூழி மடங்குதனோ யிடியூ ழித்தீ நமன் சிங்கம்
முடங்கல் தாழை வரைந்தனுப்பு மோலை மூங்கின் முடங்குதலாம்
கொடிஞ்சி தேர்க்கூம் பொடுதேராங் குடும்பங் குடிமை சுற்றப்பேர்
ஒடுங்கல் பதுங்கல் கூம்புதலாம் கடும்பு வுறவு சுமையடையே
**213
#33
விடாக பாயி திருக்கெளரி விடாங்கன் பரமன் சச்சநனாம்
தடாகங் குளம்யந் திரகூடம் குடாரங் குரங்கு தருப்பொதுப்பேர்
விடாணி கிடாய்க்கொம் புப்பாலை சிறுகொம் பொடுகொம் புளமிருகம்
கடாயந் துவர்ப்பு நிறஞ்சாயம் பிசின்மேற் பூச்சுச் சுகந்தப்பேர்
**214
#34
கடாரந் தமிழ்சூ ழோர்நாடு பொன்மை கடம்போற் பெரும்பாத்ரம்
சடாலந் தேன் கூ டாலமரம் வேள்வித் தறிக்கிட் டிடும் வளையம்
கடாவல் செலுத்தல் வினாவற்பேர் கடீர முழைஞ்சு கடித்தலமாம்
குடீரஞ் சிற்றில் குடிசையுமாம் கோடீ ரஞ்சூ டிகைசடையே
**215
#35
அடகுகடன் கொளற்கீடா வைப்பதிலைக் கறியாம்
அடிமுதல்செய்யுளின்பாதங் கீழ்கால்கா லடிப்பேர்
இடபமத கயம்விடைமுக் கியப்பொருள்பன் றியின்வால்
ஏழ்சொரத்தொன் றோர்புதலோ ரிராசிசெவித் தொளையாம்
கடமிகுதி யுடலரைபாழ்ங் கிணறுகயி றியானைக்
கதுப்பதன்மத் தகம்யானைத் திரளதன்மும் மதமட்
கடமலைப்பக் கங்கடன்பாய் பிணம்பிணத்தேர் சமாதி
கபஞ்சுடலை யருநெறிகா டுரைகல்சா ணைக்கல்
**216
#36
நடம்நடநம் பெருமரம்நெட் டிக்கோரை யென்ப
நடுவென்ப நுசுப்புமையம் நீதிகடு வனுமாம்
குடந்நடமே பெருமுத்தக் காசுபெரு மரப்பேர்
குடிகுலமூர் குடிமை சிற்றில் கும்பதா சியுமாம்
புடமிலைக்க லம் வியாபிப் பலர்ச்சிதெரிந் ததெருப்
பொதிந்தெரித்தல் கணிதசுத்த மூக்கினிதழ் வெண்மை
வெடியிடிகள் ளச்சநறும் புகைவெளியு மொக்கும்
விடையிடபம் விடுத்தலதி விடையமெதிர் மொழியே
**217
#37
கடி புதுமை வாசம்விளக் கம்மிகுதி யையங்
காவல்விவா கங்கூர்மை சீக்கிரம்பி சாசங்
கடிதடமின் பஞ்சிறப்புச் சிறுகும்பந் தடுக்குக்
கரிப்பச்ச நீக்கமொலி யெனப்பத்தொன் பான்பேர்
கடிகைநாழிகைதுண்டம் பருவகா லமுமாம்
கடுகமே கடுரோணி திரிகடுகங் கார்ப்பாம்
கடில்லகங்கஞ் சாங்கோரை சாறடைபா கலும்பேர்
கடுகந்தம் வெள்ளுள்ளி முருங்கையிஞ்சி யாமே
**218
#38
கடுவென்ப முதுகினோய் விடமுவர்ப்புக் கார்ப்புக் கைப்புக்
கேழ் வரகுதினை சுகந்தியொடு நிந்தை
கடுரோணி மற்சரமோர் விருக்கங்கூன் முள்ளுக்
காரியமல் லதுகடுமை பிரியமல் லதும்பேர்
படுநோயி லான்சதுரன் றெரிந்தவன்கூர்ப் பாய்ச்செய்
பவன்கள் சத புப்பியுப்பு மரக்குலைபேய்ப் புடோலாம்
விடயங்கோ சரந்தேச மிந்தியஞ்சத் தாதி
விதமெவனால் யாதொன்றை யறிவதோ வதுவே
**219
#39
இடங்கமண் டொடுபடைகல் லுளிபொரிகா ரம்வா
ளின் னுறைகற் சாணைகோ பஞ்செருக்குக் கணைக்கால்
கடம்பமிலைக் கறிக்காம்பு கடம்பமர மம்பாங்
கடன்கொள்ளுங் கடனளத்தல் கடமைகுடி யிறைப்பேர்
இடிம்பமுலை குடிகுழந்தை பெருந்துன்ப மார்பி
னிடப்பக்கத் தீரல்சச முட்டையே ரண்டம்
கடம்பரைசா றடைபிடரி னரம்புகடு ரோணி
கரிணிபெருங் குரும்பைமநோ சிலை பிரசா ரணியே
**220
#40
விடாகபியிந் திரன் றிருமால் பாவகன்ம கேசன்
விடாணம்யா னைக்கொம்பு மிருகக்கொம் பும்பேர்
கடாகங்கூர் மத்தின் முது கோடெருமைக் கன்று
கப்பரையெண் ணெய் முதலாம் பாகபாத் திரப்பேர்
படாகைவிரு துக்கொடிபத் தநத்தருகாங் கிராமம்
பாடீரம் வயல்கார்சந் தநம்வேய்ங்காழ் தகரம்
படாமென்ப புடைவைபெருங் கொடியொடிடு திரையாம்
பாடீநங் குங்கிலிய மரம்வாளை மீனே
**221
#41
மடமறி யாமை யறப்புற மாண வருமுனி வருமுறு முறையுள்
விடலிபெற் றிழப்பாள் மலடிசூத் திரகன் னிகைவிவா கத்தின் முன் பூத்தாள்
வடவைபார்ப் பனி தூ திகைகடை யனல்பெண் பரிதவாங் குலக் குய்ய வநிதை
படுதலுண்டாத றாக்குதல் கெடுதல் வருந்துதல் செயப்படல் மாளல்
**222
#42
படக மோர்பறை போர்ப்பறையினொலி
வடகம் வற்றன்மேற் போர்வை வடைதோல்
சுடர் முச் சுடர்தீச் சிகைவிளக் கோடொளி
தொடர் நூல் சங்கிலி நட்புத் தொடர்ந்ததே
**223
#43
தொடர்பு தொடுத்தது செய்யுள் தொடர்ச்சி
கெடவால் மகளிர்தந் திரளவர் கிரீடை
தொடவை யுழவு நந் தநவநந் தோட்டம்
இடியிடி யேறொலி சுண்ணநென் மாவே
**224
#44
தொடிகங் கணங்கைச் சூடக மொருபலம்
படிகஞ் சூரிய காந்தம் பளிங்கெனும்
தடிதல் குறைத்தல் தறித்தல் கொல்லுதல்
முடிதல் சாதல் முகிதல் முடிச்சிடல்
**225
#45
வடித னீளனீ ரொழுகுதல் வற்றுதல்
தொடுமரு தத்திணை தோட்டம் வஞ்சனை
வடுகனோர் தேசன் சிறுவன் வைரவன்
படுநிலம் பாலைத் திணைபடு களமே
**226
#46
இடக்கர்மீ தூர்தல் தூர்த்தர் மறைத்த சொல்
இடக்கை யோர்பறை யிடதுகை யென்ப
கிடக்கை பாயல் கிடத்த லகலிடம்
கடிப்பங் காதணி பூண்கொள் கலனே
**227
#47
தடித்தல் பருத்தல் நொடித்தல் மின்னுதல்
முடித்த லழித்தல் முகித்தல் சூடுதல்
வடித்தல் வடியிடல் வசமாக் குதலாம்
சடைச்சி மயிர்ச்சடை யினள் நீர்ப் பாசியே
**228
#48
கட்கம்வாள் கடமா னென்ப கட்சி கூடமளி காடாம்
நிட்கமார் பணிபொன் பத்துப் பண நிறுத் திடுப லப்பேர்
மட்கல்மங் குதல்மழுங்கல் வட்கலே கெடுதல் வெள்கல்
வெட்கல்நா ணுதல்கூ சற்பேர் விட்கிர மயூரங் கோழி
**229
#49
விட்கம்பந் தறியோர் யோகம் நாடகாங் கம்வித் தாரம்
நிட்கிர மஞ்சா மர்த்யம் புத்திசம் பத்து நேரும்
நிட்குடங் கதவு வீடு வயல்புறக் கடைத்தோப் பென்ப
பிட்சையே சேவை கூலி யிரப்பிரப்புப்பொ ருட்பேர்
**230
#50
இட்டகந் தஞ்சு கந்த மேலாவா லுகமு மாகும்
இட்டமே துலங்கச் செய்கை மகவினை யிச்சையோகம்
கிட்டம்வேர் வாதி யாம்பன் னிருமல மிருப்புக் கிட்டம்
குட்டமே தொழுநோ யாழம் சிறுகுளம் நறுங்கோட்டப்பேர்
**231
#51
சட்டமே நியமத் திட்டம் வரிச்சட்டங் கிடுகு செப்பம்
தட்டமுண் கலநச் சுப்பல் தட்டியே படல்கா வற்பேர்
நட்டங்கூத் திலாபத் தாழ்வாந் துட்டன்றுற் சநன்றே ளென்ப
விட்டரந் தருப்பை முட்டி யிருப்பிடம் விருக்கம் பீடம்
**232
#52
சிட்டர்சத் தமரு யர்ந்தோர் செட்டிவா ணிகன் செவ் வேளாம்
கட்டலே பிணித்தல் கள்ளல் களை தல்கட் டுதல்தடுத்தல்
கொட்டலப் புதல டித்தல் குவித்தல் சிந் து தல்தேட் கொட்டல்
இட்டன் பூச் சியனே யன்பே ரேட்டையே வெருகாண் மேதி
**233
#53
இட்டிசங் கிரகச் செய்யுள் கொடைபூசை வேள்வி யிச்சை
சட்டியோர் திதியோர் மட்பாத் திரமறு பதுமே சாற்றும்
திட்டியே சுகமா நந்தம் பரிணாமந் திருட்டி தாநம்
பட்டிமை களவு வஞ்சம் பட்டுப்பட் டாடை சிற்றூர்
**234
#54
பட்டினி தேவி யல்லாப் பரகூத்தி யுணவி லாமை
ஒட்டநு பந்தம் புள்ளொட் டோரணி படைவ குப்பாம்
கட்டுமிக் குறுதி கட்டுந் தன்மைகட்டுடைமை பந்தம்
மட்டள வவதி கள்ளுப் பெருந்தம ருகம்வா சப்பேர்
**235
#55
முட்டென்ப குறைவி டைஞ்சல் பணிமுட்டு முழந்தாள் பூப்பாம்
கொட்டைகா தணி நூற் பஞ்சு பாதுகைக் குமிழ்காழ்க் கொட்டை
தட்டைவேய் கிளியோப் புங்கோ லோர்பறை தினைத்தாள் முண்டம்
மட்டைநெட் டிலையு டைத்தா மரப்பணை யுடற்கு றைப்பேர்
**236
#56
முட்டிவாட் பிடிகைப் பொத்தா மூட்டல்மூட்டுதல்பொ ருத்தல்
நிட்டுரங் குரூர மச்சொல் நீட்டனீள் வித்த லீதல்
சட்டைபாம் பின்றோல் மெய்ப்பை சாட்டியம் வருத்தம் வஞ்சம்
பட்டாங்கு மெய்ம்மை யூழாம் பாட்டுச்சொல் கீதஞ் செய்யுள்
**237
#57
கட்கி கடமான் வாள் பிடித்தோன் வெட்சி யோர்பூ நிரைகவர்தல்
புட்ப ரதம் பூந் தேர் பூந்தேன் புட்டம் புடைவை வளர்ப்பதுமாம்
கொட்புச் சுழற்சி கோணற்பேர் குட்டன் மகன் செம் மறிக்குட்டி
பெட்புப் பெருமை யாசையுமாம் பிட்ட கங்கண் ணோயப்பம்
**238
#58
கட்ட மோவாய் மலஞ்சுங்கந் துறுமி டங்கா டிடுக்கணுமாம்
ஒட்டல் பொருந்த லுடன் படற்பேர் வட்டுச் சூதுக் கவறுருண்டை
தட்ட லிடற லொத்தறுத்தல் தகர்த்தல் முட்டல் மறுத்தலெனும்
முட்ட லெதிர்த்தல் தொடல்பாய்த னெருக்கல் தட்டல் முட்டுதலே
**239
#59
குட்டி யாணல் லாவிலங்கின் குழவி சிறுவி சிறியதுமாம்
யட்டி சிறுதேக் கதிமதுர மோர்முத் தாரந் தடியீட்டி
பொட்டுப் பயறா தியின் மூடல் திலக மதுபோல் வது புழுப்பேர்
பெட்டை கழுதை பரிமரையொட் டகசிங் கப்பெண் பறவைப் பெண்
**240
#60
புட்கரமோர் தீர்த்தமோ ரிராகம்வண் டானம்
போர்மேளப் பத்தல் முகப் போர்நாகம் பதுமம்
புட்கரத்தீ வோரிலைத்தா மரைகளிப்பா காயம்
புனல்யானைக் கர நுனிவா ளோரமீ ரேழ்பேர்
புட்கரிணி பொய்கைகயப் பிடிசதுர வாவி
புட்கலமோர் முகில் திரட்சி நிறைந்தது சி ரேட்டம்
புட்பகம்பித் தளையிரும்பா தியகனற்பூச் சட்டி
பூந்தேர் புட் பாஞ்சநத்தோ டரதனகங் கணமே
**241
#61
அட்டமே வறட்சி குறுக் கட்டாலை மிகுதி
யாவணம்நம் புகைசதுக்கம் நிறைவிருநான் கும்பேர்
திட்டமே பரிபாக மாநந்தங் காலந்
தெய்வமொப் புரவுறுதி கட்டளையேழ் பெயராம்
பட்டமம்மி மணையாதி யெழுதுபட மதுபோற்
பண்ணுவன நாற்சந்தி யிராசாவாங் குருவாம்
பட்டம் விதைப் புக்காலம் கவரிமா வோடை
பதவிவிர ணாதிபந்த நம்பிரதி பந்தம்
**242
#62
உட்டணந்தீ வெயில்கடுஞ்சூ டுருப்பமுதிர் வேனில்
உட்டிகையொட் டகப்பெட்டை யோர்மட்பாண் டமுமாம்
வட்டஞ்சுற்றுகைநீர்ச்சால் மடுப்பரிவட் டங்கைம்
மணிபணவட் டம்பலகை வட்டவடி வூர்கோள்
கட்டளைது லாம் நியமம் நிறைக லுரை யாணி
கருவி செங்கற் செயுங்கட்டி லாணையுமே வலும் பேர்
பட்டி செவ்வு லோத்திரங்காட்டுத்தொழுநாய் நுதலின்
பட்டமிடங் களவு சிற்றூர் விக்ரமன்ற னமைச்சன்
**243
#63
விட்டிபத்தி ரைக்கரணங் கூலியிலா வேலை
விலை கூலி யாள்வலிது செயல்நரக வாதை
வட்டிகைகைம் மணிகூடை சித்திரமோர் சாந்தாம்
வட்டித்தல் பரிமாறல் வஞ்சினமொத்தறுத்தல்
தட்டுமே னிலைமறிப்புப் பலகைவட்டந் தராசின்
றட்டுமுறம் வளைவு தடை முட்டுத்தேர்த் தட்டாம்
நிட்டையா சகம்வெவத்தை கிலேசங்கே டுறுதி
நிருவாக முடிவு தவஞ் சமாதிசித்தி மேன்மை
**244
#64
அட்டாப தஞ்சாரிப் பலகையெண்காற் புள்ளெட்
டடிமான்சந் திரமல்லி பொன் சிலம்பி புழுவாம்
பட்டார கன்றேவன் பட்டமன்னன் முநிவன்
பட்டிகைகச் சரைஞாணோர் பாதிரைதெப்பப்பேர்
கிட்டால மிரும்புக்கிட் டந் தாம்ப்ர கலசம்
கிட்டிகைத்தா ளந்தலையீற் றுப்பசுகிட் டிக்கோல்
நிட்பாவஞ் சுத்தி துலக் குதல் சூர்ப்பம் போளம்
நிருவிகற்ப முள்ளது நெற் பதர்பயற்றி னெற்றே
**245
#65
கிட்கு முழஞ்சாண் முழங்கைகீ ழானவனாம்
ஒட்ப மழகோ டறிவுடைமை யொண்மைப்பேர்
சட்ப மறிவீன முளதிளம்புற் புன்மயிராம்
புட்பந் துணியங்கம் பூப்புமல ரோர்கண்ணோய்
**246
#66
சட்டகம் வடிவஞ் சயநஞ் சரீரம்
கிட்ட லெதிர்த்தல் கிடைத்த லருகுறல்
கொட்டி குகன்றன் கூத்தோர் நீர்ப்புதல்
புட்டில் கூடையோ டாயுதக் கூடுமே
**247
#67
விட்டி லேயோர் பறவை பராய்மரம்
ஒட்டை சுட்டு விரற்சாணொ டொட்டகம்
கட்டை கூழை மரக்குற்றி காட்டமாம்
திட்டை மேடு திடருரல் திண்ணையே
**248
#68
சொட்டை யோரா யுதந்தலை யின்வடு
பட்டை யோலைக் கலமரத் தோலெனும்
முட்டை புள்ளின் கருவுந் தவிடுமாம்
மொட்டை முண்டிதங் கூரின்மை மோழையே
**249
#69
ஆடகம் நானா ழிக்கால் பொன்னொடொர் வகைப்பொன் னும்மாம்
கேடகம் பகைமேற் செல்வோ ருறையிடங் கிடுகு மொக்கும்
கோடகம் புதிது பீர்க்குக் குதிரையோர் முடியு றுப்பாம்
சாடக மரக்கு மஞ்சள் பச்சைச்சந் தநஞ்சே லைப்பேர்
**250
#70
கோடணை வாச்சி யங்கூக் குரலிட்டுச் சொல்ல லோசை
கீடம்வண் டுலண்டுஞ் சொல்ப கேடென்ப நாசம் நட்டம்
வாடம் வீட் டொழுங்கு வேலி வழிதெருத் தோப்பு மன்னும்
கோடர மரப்பொந் தெட்டி மரமரச் சினைகு ரங்கே
**251
#71
மாடரன் சூரியன்பால் வருமிந்த்ரன் வியாசன் விப்ரன்
நாடலா ராய்தல் தேடல் நாடிட முலகம் தேசம்
ஆடவ னிளைஞ னாடூஉ ஆடைபாற் றடிப்புச் சேலை
ஏடனே செவிடன் றோழன் ஏடிதழ் பனைம டற்பேர்
**252
#72
ஆடியோர் மாத முத்தி ராடங்கண் ணாடி நாரை
பாடியூர் சேரி முல்லைப் பதிபடை நாடும் பன்னும்
பீடிகை கடைத்தெருப்பா யிரஞ்சிற்றா தநம்பூந் தட்டாம்
ஈடென்ப குழைவொப் பாண்மை பெருமையோ டிடுத லும் பேர்
**253
#73
ஓடுகப் பரைமட் பாண்டத் துடைந்ததோ ரிடைச்சொ லென்ப
தோடுபூ விதழ்காய்த் தோல்பொற் குழையணை தொகுதி யேடா
மாடென்ப பக்கஞ் செல்வ மணியானின் பொதுத்த நப்பேர்
மேடென்ப திடரு யர்ச்சி வீடில்லம் விடுதல் மோக்கம்
**254
#74
ஓடைநீ ரோடை கேணி யோர்மர நுதற்பட் டப்பேர்
கோடைமேல் காற்று வேனில் சதபுட்பை யொடுவெண் காந்தள்
சூடையா னைப்பு ரோசை மயிற்சூட்டுக் குடுமி சொல்ப
வாடையே சிரேணி வீதி வாசமும் வடகாற் றும்பேர்
**255
#75
மாடகமைங் குன்றியெடைப் பொன்யாழின் முறுக்காணி
தாடிமமே லந்தாது மாதளையோ டதன்கனியாம்
காடுவநந் திரள் செறிவு பரணிநா ளோர் விகுதி
பேடு சிற்றூர் மதநன்கூத் தலிபறவைப் பெண்ணாற்பேர்
**256
#76
கேடங் கபங்குற் சிதம் வேட்டம் பனாட்டுக் கிரிசூ ழூர்கயிறாம்
பாடங் கடுமை யுடம்பாடு மிகுதி படித்தல் தெருவைம்பேர்
பேடம் பெரிய கூடைகிடாய் பிரப்பம் பெட்டி முதலியவாம்
ஆடம் பரம்பல் லிய முழக்கம் கரிகற் சிதமா வேசமுமே
**257
#77
போட களம்நெட் டிக்கோரை யோர்மீ னாணற் புதலென்ப
கூட லியலல் மதுரைதிரளுதல்கூடுதல்சே ருதலும் பேர்
பாடல் படித்தல் கவிசெய்தல் பாடை திரிசொல் பிணக்கட்டில்
சேட னநந்தன் பலதேவன் றோழ னேவல் செய்வோனே
**258
#78
சாடி தாழி துகில்குறளை தாடை கோரப் பல்லிச்சை
நாடி புண்கைத் தாதுநரம் பறுகம் புன்னா ழிகைநாளம்
மாடி சேலைத் தலைப்பெளிமை யிலையி னரம்போ டிறைவாரம்
மோடி வடுகன் றாய்பிணக்காம் மோடு பெருமை வயிறுயர்ச்சி
**259
#79
பாடு செயல் கே டிடம் வருத்தம் பெருமை படுத லொலிமடிவாம்
பீடு பெருமை பெருமிதப்பேர் பேடை பேழை பெண்பறவை
சேடை யாசி சொலித்தரும்வா லரிசி நிருமா லிய தாநம்
பீடை கருணை முடிமாலை விரகஞ் சரள மரம்பீழை
**260
#80
கூடமிந்த்ர சாலாதி கபடம் பொய் மறைவு
கொற்சமட்டி யசைவில்லா ததுமேழி மாடக்
கூடமலை யுச்சிபுர வாயில் சூனியம் நெற்
குவைகுவியல் புட்கண்ணி சூழ்வதுபா வமுமாம்
கோடமிடைச் சேரிமுகின் முழக்கமொலி வட்டங்
குட்டநோய் வெண்கலம்பே ரொலியோர்கான் முடப்பேர்
மாடமாளிகையுழுந்தைங் குன்றியெடை யுளபொன்
மனைசரும தோடமிரு குன்றியெடை வெள்ளி
**261
#81
பாடகங்காற் கடகநட்டம் கூலிசதுக் கிட்கோர்
பறைகரைசூ தாதிபா தகங்க்ராமப் பாதி
பாடலம் வெண் சிவப்புக்குங் குமமிடைக்கார்ச் செந்நெல்
பாதிரைசே ரன் குதிரை பாதிரைப்பூக் குதிரை
ஆடல்வென்றி விளையாடல் கூத்தாடல் புணர்தல்
அசைதல் செயல் சொல்லுதனீராடலா ளுதலாம்
வாடவம் பெண் பரித்திரள் வா டவக்கனல்பா தாளம்
வாடிசுற்று வேலிமனை கட்டுமிடங் கொல்லை
**262
#82
கோடியிடம் புதுக்கூறை புதிதோர்பே ரெண்விற்
குதை நுனிபெண் பரியிருபான் மணித்தொகைமேம் பாடாம்
சேடியடி யாள்பாங்கி விஞ்சையரூர் சிரேணி
சேடுநன்மை யழகிள மை திரட்சிபெரு மைப்பேர்
கோடுசங்கூ துங்கொம்பு கீறும் வரை மிருகக்
கொம்புமரச் சினைவரம்பு கொடுமுடிநீர்க் கரையாம்
சாடுவிர தியர்பீடம் பண்டிதன்மாப் படுக்கை
சாதுரியம் புகழ்ச்சிச்சொல் சகடுபெருங் கூடை
**263
#83
பேடக மரப்பெட்டி திரள்வேர்வைப் பருவாம்
தோடமிராத் திரிகுறைவு குணமலது பாவம்
வேடங்கா தணியோடு வேற்றுருக்கொள் கோலம்
பாடலிவெண் பாதிரைகள் ளுப்பேய்ப்பா திரையே
**264
#84
ஆடகி துவரை கிருட்டிணாப் பிரகம்
கோடல் வெண் காந்தள் கொள்ளுதல் கோணல்
மூட னறிவிலான் மூர்ச்சிதன் மூர்க்கன்
கோடிர மிந்திர கோபங் கீரியே
**265
#85
கோடிகங் குண்டிகை பூந்தட்டுக் கூறைப்பேர்
ஈடிகை சித்திரிக் குங்கோ லியானைக்கண்
தூடிகை கட்பீளை சித்திர மெழுதுகோல்
கூடையோர் கொள்கலங் கூத்தின் விகற்பமே
**266
#86
நீட மிடம்புட் கூடென்ப
வாடல் மெலிதல் சோர்தற்பேர்
சூடு சுடுதல் நெற்போராம்
மூடு மரத்தூ ராடென்னும்
**267
#87
வேட்டந மகுடங் காதுப் பணிதலைப் பாகை சுற்றல்
ஈட்டமே கூட்டந் தேட்ட மேட்டையே தளர்ச்சி யாசை
ஓட்டமே லுதடோ டற்பே ரோட்டலுய்த் திடல்து ரத்தல்
கூட்டமே திரள்பு ணர்ச்சி கூட்டலே திரட்டல் சேர்த்தல்
**268
#88
நாட்டம் வாள் குறிப்புக் கண்ணாம் நாட்டையோ ரிராக மோர்பண்
வேட்டமே பிசின்வேட் டைப்பேர் வேட்டுவன் மகநாள் வேடன்
ஊட்ட லூட் டுதல ருத்த லூட்டியே மிடறுண் டிப்பேர்
கேட்டல் கேட்டிடல்வி னாவல் கேட்டை தேவி யோர்நாள்
**269
#89
பூட்டல் பூட் டிடல்நா ணேற்றல் கொளுவுதல் பூணச் செய்தல்
வேட்டலா சைப்பெருக்கம் வேள்வி செய் திடல்வி வாகம்
பாட்டி பெண் ணரிபெண் ணாய் பெண் பன்றி மூ தாயு மாகும்
நாட்டிய நிருத்த வாத்ய கீதமும் நடந மும்பேர்
**270
#90
பூட்கை மேற்கோள் கைம்மாவாம் பூட்சி யுடல் பூண் பனவுரிமை
ஆட்சி யுரிமை யாளுகைப்பேர் காட்சியறிவு காண்பனவாம்
மாட்சி மாண்பு நளிநிறைவு பாட்பங் கண்ணீர் வெம்மையெனும்
ஞாட்புப் பாரங் கூட்டம்போர் சேனை வலியைம் பேர்நாட்டும்
**271
#91
சேட்ட மூப்புக் கொண்டாடப் பட்ட தானித் திங்களுமாம்
ஆட்ட லசைத்தல் குளிப்பித்த லரைத்த லாடச் செய்தற்பேர்
பூட்டு வீகம் வின்னாணி பூட்டை செக்குக் காராம்பி
கோட்டு முகமாக் கரிபன்றி கோட்டை புரிசை நெற்குதிரே
**272
#92
தீட்டலெழு துதல்மினுக்கல் கூர்ப்பிடல்சித் திரித்தல்
சேட்டன் மூப் பினன திசி லாக்கியன் மூத் தோன் பேர்
தோட்டியங் குசம ழகு கதவுவா யிலுமாம்
சூட்டு நுத லணி நுதலின் மாலை புட்சூட் டென்ப
காட்டைமேம் பாடெல்லை யிடம்பதினெண் ணிமிடக்
காலமர மஞ்சள் சட்டு வந்திசையேழ் பெயராம்
சேட்டைகைகா லசைத்தல் தொழில் முன்னுதித்தாள் பல்லி
சீர்கேடி நடுவிரல்மூப் பினள் கேட்டை நாளே
**273
#93
கோட்டமுள் வீடுள் வயிறு குதிர்மனக்
கோட்டம் வளைவோர் மருந்து கோ ணம்பசுக்
கோட்டமூர் நாடு குராமரந் தேவ
கோட்டந் துருக்கங் கூட்டமீ ரேழ்பேர்
**274
#94
மாட்டல் சொருகுதல் பொருத்தல் மாட்டுதல்
கோட்டிசல் லாபஞ் சவைகோட் டாலையாம்
தாட்டிய மடிக்கத் தக்கது தைரியம்
வீட்டுமன் றேவ விரத னுருத்திரன்
@7 ணகர வெதுகை
**275
#1
இணக்கஞ்சம் மதம்பொ ருத்தந் தணத்தலே பிரித லேகல்
கணக்கனெண் ணறிவோன் சாமன் கணக்கென்ப வெழுத்து மெண்ணும்
புணர்ச்சிமை துநம்பொ ருத்தல் புணர்ப்புட லிசைப்பு பாயம்
உணர்த்தல் போ தித்த லூட லொழித்தலோ டறிவித் தற்பேர்
**276
#2
அணங்குதெய் வந்தெய் வப்பெண் ணங்கனை சுந்த ரத்தோ
டணங்காட்டுக் கொலைவ ருத்த மாசைநோ யெனவொன் பான்பேர்
துணங்கற லிருள்வி ழாவாம் நுணங்கென்ப குழைவு நுண்மை
குணுங்கர்தோற் கருவி யாளர் பிசாசர்சண் டாளர் கூறும்
**277
#3
இணர் பூங்கொத் தலர் பூந் தாதாம் துணருமிம் முப்பே ரேற்கும்
உணராமை மயக்க மூடம் உணவென்ப வுண்டி சோறாம்
பணவைபேய் கழுகட் டாலை பணிதலே வணங்கல் தாழ்தல்
கணிவேங்கை மரம்வயற்பேர் கணிசம்நெற்கதிர்ம திப்பாம்
**278
#4
பிணி துன்பம் நோய்கட் டென்ப பிணிமுக மயில்புள் ளன்னம்
மணிமாலை மகளிர் தம் மோர் பற்குறி வடுமுத் தாரம்
குணில் கவண் பறைய டிக்குங் கோல் குறுந் தடியு மாகும்
அணுவுயிர் நுணுங்கோ டற்ப மணுகனே சமர்த்தன ற்பன்
**279
#5
புண ரிகல் லோல முந்நீர் புணைமரக் கலந்தெப் பப்பேர்
அணவலெட் டுதல் சார் தற்பேர் அணை தலே யவிதல் சேர்தல்
துணி துகிற் கிழிவு துண்டந் துணைவியே மனைவி தோழி
அணிதலே புனைதல் பூணல் கணையமம் பெழுப்ப டைப்பேர்
**280
#6
அணைபுனற் கரைவ ரம்பு செய்கரை மெத்தை யாகும்
துணைவன் கேள் வன்ச காயன் சோதரன் றோழ னென்ப
பணை முர சரசு வேய்மாப் படுக்கைமந் துரைமரத்தின்
பணைவயல் பெருமை மென்பால் பறைப்பொது பருமை யும்பேர்
**281
#7
குணபம் பிணம்பொல் லாநாற்றம் குணனே குணம்வீ மன்மடையன்
புணர்தல் கூடல் கலத்தற்பேர் துணிதல் தெளிதல் தொடங்கலுமாம்
பிணவும் பிணாவும் புல்வாய்நாய் பன்றி யின் பெண் பெண்பொதுப்
பணிதோற் கருவி யாபரணம் பாம்பு வார்த்தை பணித்தொழிலாம்
**282
#8
இணையொப்புபயந் துணையென்ப இணைவு பிணைவு தொடுப்பிசைவு
கணைபா ணம்பூ ரந்திரளை சீர கந்திப் பலிச்செடியாம்
பிணைமான் புல்வாய் புலிகவரிப் பெண்ணோ டாசை தொடர்பென்ப
பிணைதல் பொருத்த லிணை தற்பேர் பிணையல் பிணைதல் பூமாலை
**283
#9
வணக்கல் வளைத்தல் பணிவித்தல் மணத்தல் விவாகஞ் செயல்கமழல்
குணக்கு வளைவு கிழக்கென்ப குணித்தல் மதித்த லெண்பெருக்கல்
பணித்தல் வணக்கல் சொல்லுதல் தாழ்த் திடல்கட்டளையா ற்பணியிடலாம்
இணைத்த லிசைத்தல் சேர்த்தற்பேர் பிணைத்த லிணைத்தல் தொடுத்தலுமே
**284
#10
குணங்கல் வளைதலனுங்கற்பேர் பிணங்க லூடல் மாறுபடல்
நுணங்கல் முடங்க னுண்மையு றல் நுணுங்கோர் சிறுநெல் நுட்பப்பேர்
வணங்கல் வளைதல் தெண்டனிடல் மணங்கல் யாணம் வாசமெனும்
துணங்கை யிருகை முடக்கிவிலா வொற்றி யாடல் விழாச்சொல்லும்
**285
#11
கணமற்பந் திவலைநொறுங் கையிருவி நாடிக்
காலமவ சரம்பரதந் திரம்பிரம தாதிக்
கணம் வியா பாரவிக லத்துவங்கு ழாம்ரு
கத்திரளோர் படைத்தொகையெண் முகூர்த்தம் விழாவோர் நோய்
குணமுறழ்ச்சி தோடமன்மை சந்திவிக்ர காதி
கொடைபராக்கிரமாதி புகழ்சத்து வாதி
குணம்நாணி பஞ்சினூல் கயிறிதமிந் திரியங்
குடம்பண்பைம் புலன் வெள்ளை யாதிநிறங் கூறும்
**286
#12
பணம்வழக்கொட் டஞ்சூது விலைகூலி பாம்பின்
படந்தனங்கஃ செடைக்காசு சாகாதி பகர்ச்சி
அணிபெருமை யொழுங்க ழகா பரண முனை யெல்லை
யலங்கார மாலையச்சி னாணிபடை வகுப்பாம்
மணிமுத்துப் போல்வகறுப் பசக்கழுத்தி னதள் கண்
மணியொலிக்கு மணியெழில்குய் யத்துறுப்ப ரதனம்
கணிகைகரிப் பிடிவேசை முன்னைமுல்லைப் புதல்தற்
காரிபர மாணுக்கோ துமைப்பொடிநீர்த் திவலை
**287
#13
பணவஞ் சிறுமுர சியானைப் பிடர்த்தலை
குணிசிறு சின்னி பண்பிகூ ழங்கையன்
திணைநிலங் குலனோ டொழுக்கங் குடியிடம்
துணையிணை யளவொப் புபயஞ் சகாயம்
**288
#14
கணிச்சி தறிகை யுளிமழு வாயுதம்
கணித்தல் வரையறுத் திடலெண்ணலுமாம்
அணைத்தல் தழுவுதல் சார்த்த லவித்தல்
பணைத்தல் கிளைத்தல் பிழைத்தல் பருத்தல்
**289
#15
கணாதி பதிபூ தேசன் கணபதி
மணீசங் கையி னுனி முத்து மலர்காய்
கணீசி பண்டிபூக் குங்கொடி குன்றி
கணேரு வணிகன் கயப்பிடி கோங்கே
**290
#16
எண்ணென்ப கணக்கோ டெள்ளாம் எண்ணர்சோ திடர மைச்சர்
கண்மரக் கணுக்கண் ணோட்டங் களன்வேயோ ரவய வப்பேர்
பண்ணிறை நரம்பின் யாழோ டிசைப்பாட்டுக் கலணை யென்ப
புண்ணுடற் புண்வி டக்காம் பெண்ணையோர் நதிபனைப்பேர்
**291
#17
மண்மிருத் திகைநி லந்தூள் முழவின் மார்ச் சனையு மன்னும்
விண்விசும் பிளமை மேகம் விண்ணவ னருகன் றேவன்
எண்ணமே மதிப்புச் சூழ்ச்சி யிங்கிதஞ் சிந்த னைப்பேர்
வண்ணமொப் பனைபாச் சந்தம் வடிவெழி னிறம்பண் பென்ப
**292
#18
எண்ணலே குறித்தல் தேர்தல் மதித்தலெண் ணுதல்நினைத்தல்
கண்ணிதார் புட்ப டுக்குங் கயிறுதா மணிய ரும்பாம்
புண்ணிய சநரி யக்கர் நைருத ரறஞ்செய் வோர்பேர்
ஒண்மையே மிகுதி நன்மை யொழுங்கழ கறிவு மாமே
**293
#19
கொண்கனே துறைவன் கொண்டோன் நண்பனே கொழுநன் றோழன்
கண்படை யுறக்கம் பாயல் பண்பிலக் கணங்கு ணப்பேர்
குண்டகந் தைல பாத்ர மலிநந்தூள் கலோத்த மென்ப
முண்டகம் நுதன் முண் மூலம் முள்ளிகள் வநசந் தாழை
**294
#20
கண்டக ரரக்க ரற்பப் பகையினர் கயவர் முப்பேர்
அண்டசம் பறவை யோந்தி பாம்பாதி சலச ராதி
பண்டநம் கவசம் போராம் பண்டம் பொன் பலபொ ருட்பேர்
துண்டம்புள் ளலகு சாரை முகமூக்குத் துண்டிப் பென்ப
**295
#21
முண்டமே கவந்தம் நெற்றி தலைமொட்டை திரளை குற்றி
குண்டலம் வளையங் காதுக் குழையாகா யம்பா சப்பேர்
குண்டலி மயிலி சங்கு குழையினன் வருணன் பாம்பாம்
மண்டலி கிளிநாய் பூனை பாம்புமண் டலவான் பாநு
**296
#22
கொண்டல்கீழ் காற்று மேகம் மண்டல்மூளுதல்கு டித்தல்
சுண்டியோர் புதல்சுக் கென்ப கொண்டியங் குறளை பொய்ச்சொல்
தண்டியோர் புலவன் வாயி லாளன் கூற் றுவன் றண் டிப்போன்
தொண்டியே தொழும்பி கள்ளாம் தொண்டு தொன் றடிமை யொன்பான்
**297
#23
மண்டிலங் குதிரை நாடு வட்டம்போர் கூத்து மாகும்
செண்டு செண் டாயு தம்பந் தெறிவீதி பூஞ்செண் டென்ப
வண்டென்ப வடுப்பூ சங்கை வளைபாண மறுகால் சங்கு
விண்டுவேய் மேகங் காற்று வெற்புவிட் டுணுவைம் பேரே
**298
#24
வண்டுணா மலர்ம ரஞ்சம் பகம் வேங்கை மரமு மொக்கும்
கண்டைபொற் சரிகை பேய்ப்பா திரைபெரு மணியுங் காட்டும்
சண்டையே சங்க புப்பி கலகஞ்சன் னக்கச் சோலம்
தொண்டையா தொண்டை யானைத் துதிக்கையுண் மிடறு கொவ்வை
**299
#25
அண்டரே யிடையர் வானோர் அண்டீரன் மனுடன் வீரன்
கண்டல்கே தகைமுள் ளிப்பேர் கண்டோலங் கவளங் கூடை
சண்டிகை துர்க்கை காளி தண்டைகாற் கடகம் வாலாம்
இண்டைதா மரையோர் மாலை யெண்டோளி காளி துர்க்கை
**300
#26
தண்ட தரன் கூற் றுவனரசன் தண்மை தட்பந் தாழ்வெளிமை
கண்ட பரசு மழுத்தரித்த விராம னிராகு கறைக்கண்டன்
மண்ட நம்பூ ணலங்காரம் வண்டர் சுபப்பா டகர்மிண்டர் ( த்தை
குண்டம் பானை யோமகுண்டந் தாரைப் புனல்வீழ் குளந்தொழுத்தை
**301
#27
சண்டங் கொடுமை கடுங்கோபஞ் சலசத் திரள்கா டலியெருதாம்
மண்ட மடகு தயிர்த்தெளிவூன் சாரஞ் சிறகா மணக்கைம்பேர்
பண்டர் பௌத்தர் நபுஞ்சகராங் கண்டன் கணவன் பரன் வீரன்
சுண்டல் தெறித்தல் வற்றுதலாஞ் சுண்ணந் தூளி சுடுசாந்தே
**302
#28
தண்டங் கடிப்புக் கொலையானை வியூகம் படைதண் டனைராச
தண்டஞ் செருக்குச் சதுக்கிட்கோ டிருப்புத் தடிமத் தூன்றுகோல்
பிண்ட மிரும்பு வலிபோளங் கவளம் பிச்சை யுண்டைகருப்
பிண்டஞ் சிசுவீ டுடலுறுப்பு நெருக்கங் கூட்டம் பிதிர்ப்பருவம்
**303
#29
வண்டல் புனலின் றிரைகொழித்த சேறு மகளிர் விளையாட்டாம்
குண்டன் கருமஞ் செய்யகிலான் கொழுநற் பிழைத்தந் நியற்கீன்றோன்
சுண்டன் றெரியா தவன்சதய நாளு மூஞ்சூ றும்சொல்லும்
வண்டன் மிண்டன் வாலறுத்த வெருது குறளன் மணமில்லான்
**304
#30
உண்டி யிரைசோ றுணவென்பவுண்டை யுருண்டை படைவகுப்புப்
பண்டி சகடம் வயிறும் பேர் பண்டி தன்கற் றவன்புதனாம்
குண்டு திரண்ட கல்லுண்டை குழியாண் குதிரை யாழப்பேர்
மண்டை யிரக்குங் கலன் றலையி னெலும்பு நெல்லி மரமெனுமே
**305
#31
கண்ண சார மிருவீடு சதுரக்கள்ளி கலைமான் பேர்
புண்ணியம் நல் வினைநீர்பொன் புனிதந் தரும மலரழகாம்
பிண்ணி யாகங் குங்குமமெட் பொடிகுந் துருக்கம் பெருங்காயம்
கிண்ணு வந்தீ வினைபிண்ணாக் கநேக திரவ்ய கிருதக்கள்
**306
#32
வண்ண கம்பூச் சாரப்பேர் மண்ணல் கழுவ லலங்கரித்தல்
திண்ணந் திண்மை நிச்சயமாம் திண்மை திண்ணிய துவலிமை
மண்ணை பேயோ டறிவின்மை வண்மை புகழ்மெய் கொடை வளமை
உண்மை யூழுள் ளதுமெய்ம்மை வெண்மை வெள்ளை வெளிறிளமை
**307
#33
கண்டகமூ சியினுனிவிக் கநம்பெருமீன் குட்டி
கடமான்வேய் முள்ளுமயிர்ச் சிலிர்ப்புவாள் வித்தை
தண்டகம்போ திகைமாயை கரிக்குருவி திரட்சி
தருப்பணையோர் வநம் நுரையோர் செய்யுளின் வி சேடம்
குண்டகீ டன் சாரு வாகனதி யூகி
குட்டநிகேள் வன் சோர பார்ப்பனிபுத் திரனாம்
பிண்டபுட்பந் தாமரைய சோகஞ்செம் பரத்தை
பிண்டி பிண்ணாக்கசோகுசுரை தகரைநென்மாப் புனர் தம்
**308
#34
கண்டமணிக் குற்றமெழுத் தாணிசந்தி தாநம்
கழுத்தோர்யோ கங்கதுப்புக் குமிழிபர தாதி
கண்டம் வாக் கொலிகேந்த்ரந் தத்துப்புண் பிளவை
கடமான்சற் கரைபரிப்பூ டணந்துண்டங் கைவாள்
அண்டமா காயமுட்டை யண்டகோ சப்பேர்
அண்ணமேல் வாய்ப்புறமு முண்ணாக்கு மாகும்
சண்டனோர் வடுகனுருத் திரன் வெய்யோன் யமதா
சன்மலடன் யமனலியந் தப்புரங்காப் போன்பேர்
**309
#35
புண்டரம்வெண் கரும்பு நுதற் குறியொடுவெண் ணிறத்தம்
புயங்கிரமம் குருக்கத்தி யோர்தேய மறுபேர்
புண்டரிகந் தேமாவெண் குடைகமலங் கோட்டம்
புலியோர் திக் கயமோர்வண் டியானையினோய் சாரை
மண்டலம்பன் னிருராசி சமூகம் நாற்பதுநாள்
வட்டமோர் பாம்புபரி வேடஞ்சந் திரார்க்க
மண்டலஞ்சக் கிரயூகந் தேசமிரு காலு
மண்டலித்த நிலை பூமி நாய்வட்டத் தொழுநோய்
**310
#36
முண்டன் மொட்டைத்தலைய னிராகுவோ ரரக்கன்
முண்டி முண் டிதத்தலையன் மயிர்வினையாளனுமாம்
தண்டுகுழா யிலைக்கறிக்காம் பியாழ்சிவிகை மிதுநந்
தடிபடைதண் டாயுதம் வேய் தொளைப்பொருள்நந் தீசன்
விண்டுபதந் தாமரைபாற் கடலாகா யப்பேர்
விண்டுபதி கங்கை திர ராசியின்சங் கிராந்தி
சுண்டைதா மரையோடை நீர்க்கரிணி யானைத்
துதிக்கையோர் புதல்கள்ளு வாரப்பெண் சொல்ப
**311
#37
தண்டாரங் குயத்திரிகை மதகயம்வா கநம்வில்
சண்டாளன் கொலைஞன் பார்ப் பனிசதுர்த்தற் குதித்தோன்
பண்டாரங் குங்குமம்பல் பண்டமிரா சாங்கம்
பரமேசற் கடிமையா னவன்பண்ட சாலை
பிண்டார னெருமையைப்பா லிப்பவன்பிட் சுகனாம்
பிண்டீத கந்தகரை கடாரைமருட் காரை
கண்டூட முகப்பூர்த்தி துதிக்கை நுனி சிறங்கை
கண்டூதி தினவுகாஞ் சொறிப்புதலு மாமே
**312
#38
தண்ணடைபச் சிலைநாடு மருதநிலத் தூராம்
தண்ணமழுப் படைகுளிர்ச்சி வன மோர்கட் பறைப்பேர்
அண்ணலரு கன்புத்தன் பெருமைமுல்லைத் தலைவன்
அரசனணு குறலண்ணன் பெருமையா ளனுமாம்
பண்ணவனா சாரியன்றே வன் முனிவ னருகன்
பண்ணிகா ரம்பலபண் டத்தொடப்ப வருக்கம்
பண்ணை நீர் நிலமருத நிலங்கழனி விலங்கின்
படுக்கையோர் புதல்மகளிர் கூட்டமவ ராடல்
**313
#39
வண்ட மரிவாட் பிடிகுந்த வாயுதம்
தண்ட யாமி யமன் கும்ப சம்பவன்
துண்டி கேரி பருத்திகொவ் வைப்பெயர்
சண்டி லனுருத் திரன் சீ மங்கலன்
**314
#40
இண்டருங் கிரீடை சுரதம் வாகநம்
பிண்டிகை முழங்காற் றசையுரு ளின்றொளை
பிண்டிதந் திரவியம் பெருக்கப் பட்டது
தண்டுல மரிசி விழாலரி சியுமே
**315
#41
திண்ணியம் வீடிட மாண்மை விண் மீனாம்
திண்ணியன் சுக்கிரன் கனலோன் றிறலினன்
ஒண்ணுத வியலல் நன்னுத லுள்ளாள்
கண்ணுதல் நெற்றிக் கண்ணன் கருதுதல்
**316
#42
கண்ணாளன் கண்மை யுடையோன் கம்மியன்
உண்ணீ டங்கிரீ டந்தலைக் கீடெனும்
மண்ணீடு திண்ணை வேயா மாடமாம்
கண்ணோட்டங் கண்மை காரிய நிர்வாகம்
**317
#43
ஓணமோர் நாள்யா றென்ப ஏணிலை யுடைமை வீரம் [ னாம்
காணங்கொள் ளோர்கண் ணின்மை செக்குப்பொற் காசு பொன்
சேணங்கல் லணைமெத் தைப்பேர் சேணிவிஞ் சையரூரேணி
தூணந்தூ ணீரந் தூணாம் தூணை தூ ணிருப்புப் பாவை
**318
#44
காணலே பெறுத னோக்கல் கருதுத லுணர்தல் செய்தல்
நாணல்நா ணுதல்நா ணற்புல் நாணென்ப கயிறி லச்சை
பேணலே பாது காத்தல் கருதுதல் விரும்ப லும்பேர்
கோணனே சநிகூ னுள்ளோன் கோணிகோ ணிகைபார் பன்றி
**319
#45
தாணுமா தேவன் குற்றி நிலைபேறு சைலந் தூணாம்
வேணுவாள் வில்லு மூங்கில் வேய்ங்குழ லுட்டொளைப்பேர்
வீணைகிக் நரமின் னென்ப ஆண்மைவீரியமாண் டன்மை
சேணென்ப வகலம் நீளம் சேய்மைவிண் ணுயர்ச்சி யாமே
**320
#46
கோண முனை மூக் கிருப்புரற்கை குதிரை முடுக்கு மூலையந்த்ர
கோண முபாயம் வாச்சியமங் குசம்யாழ் மீட்டுங் கோல்கொடுவாள்
சாண முரைகல் காற்கக்சு கரவா ளஞ்சா ணைக்கல்லாம்
சோணஞ் சிவப்போர் நதம் நெருப்புப் பெரும ரஞ்செக் நிறத்துரகம்
**321
#47
பூண லணிதல் பூணு நூல் பூணா பரணம் பூண்கட்டாம்
மாண வகனே சிறுபிள்ளை பிரம சாரி மாணாக்கன்
ஆணி யெல்லை யுரையாணி முளை யச் சாணி யெழுத்தாணி
காணி யுரிமை யோர்சிற்றெண் கேணி யகழி நீர்க்கயமே
**322
#48
வாணி நடம்பா மகள் மேகம் வாக்கு விலைகெய் யுக்தொழிற்பேர்
வேணி தேவ தாளிநதி நீரின் வேக மயிர்ப்பின்னல்
ஆணை மெய்ம்மை தடையேவல் சபதம் வென்றி யடையாளம்
கோணை நாசியழிவின்மை கொடுமை தேர்க்கூம் பெனநாற்பேர்
**323
#49
யாணரெனல் புதுமையெழில் வளமையுநன் மையுமாம்
ஏணிபழு வுடைக்கருவி யெல்லைபெண்மா னென்ப
வாணன று மீனோர்வேந் தோரசுரன் வாழ்வோன்
வாணிநியா டுபவள்மதித் தவள் தூதி சமர்த்தி
தூணிநீ லிப்பு தல்நாற் குறுணியம்புக் கூடாந்
தோணிகடை நாளோடஞ் சேறுகணை ஞாயில்
பாணிமுத்தி னீர்கருப்பஞ் சாற்றுக்கள் கீதப்
பாட்டுநெடும் போது செப்புக் கைத்தலமென் றறுபேர்
**324
#50
பாணங் கைகருங் குறிஞ்சி பகழி
வாணி கன் றுலா ராசி வைச்சியன்
சோணிதஞ் செந்நீர் சிவந்த துஞ்சொலும்
பாணிசைப் பாட்டோர் சாதி பகர்ப
**325
#51
காண்டலே தெரித னோக்கல் நியமித்தல் நினைத்தல் காட்டும்
தோண்டலே யகழ்தல் மொள்ளல் நோண்டல்கிள் ளுதல் தோண்டற்பேர்
பாண்டார்மாட் சியரி றந்தார் மாண்புமாட் சிமையெ ழிற்பேர்
தாண்டவ மோர்புற் கூத்துப் புருடநாட்டியமுஞ் சாற்றும்
**326
#52
ஈண்டல் நெருங்க லெய்து தலாம் வேண்டலிரத்தல் விரும்புதற்பேர்
கோண்ட னெனல்பா மரசர் தன் பெருத்த கொப்பூழுடையோனாம்
ஆண்டு வருட மவ்விடப்பே ரீண்டு விரைவோ டிவ்விடமாம்
யாண்டெவ் விடத்தோ டாண்டும் பேர் கோண்டை யிலந்தை கமுகென்ப
**327
#53
காண்டமரப் பணைநெல்லின் றாள் குதிரை மேன்மை
கணைவில்லே காந்தமரக் கணுநாளம் நூலின்
காண்டமவ சரம்வருக்க மூன்றுகோ லதமங்
கவ்வியம்பா நீயம்வலி முடிவீரொன் பான்பேர்
பாண்டம் கதிப் பரப்பினடுச் செட்டின் முதற் பணம் பூண்
பரியினணி நாடிபாத் திரமேளப் பத்தல்
பாண்டிலே மூங்கில்வட்டந் தகழிகட்டி லெருது
பரிபூண்ட வாகாங்கைத் தாளம்கா டெண்பேர்
**328
#54
தூண்ட லேவுதல் செலுத்தல் சுட்டுதல்
காண்டிவ மருச்சு நன்வில் விற்பொது
பாண்டு வெண்மையோர் நோயோர் பார்த்திவன்
பாண்டு ரம்புகர் நிறங்க டாரையே
@8 தகர வெதுகை
**329
#1
உதகநீர் மழைத்து ளிப்பேர் உதவியே கொடைச காயம்
கதகமேற் கட்டி தேற்றா கதம் நோய்சென் றதுகோ பப்பேர்
சதகோடி யிடிவச் ராயு தத்தொடு நூறு கோடி
சிதடனே குருடன் மூடன் சிதடிபே தையள் சிள் வீடே
**330
#2
விததம் பொய்ச் சொல்வித் தாரம் விதரணங் கொடைச மர்த்தாம்
குதமலத் துவாரம் யானை மேல்விரிப் பொடுகு சப்புல்
சிதம் வெண்மை மெலிவு கூர்மை முகித்தல்கட்டுதல்சாந் திப்பேர்
இதரமந் நியங்கீழ் மைப்பே ரிதரன்பா மரன்மற் றோனே
**331
#3
உதரம் போர் வயிறு மாகு முதிரங்குங் குமமி ரத்தம்
சிதருறி பொடி பூந் தாது திவலை சேலைத்து ணிப்பேர்
புதர்புதல் போத முள்ளோர் புதனோர்கோ ளறிஞன் றேவன்
மதர்வென்ப வலிகளிப்பா மதன்வலி யழகு காமன்
**332
#4
சிதலை நோய் துணிசெல் லென்ப சிதுரனே வைரி தூர்த்தன்
பதலையே வெற்புக் குன்று பரந்தவாய்ப் பறைதா ழிப்பேர்
மதலையே பிள்ளை கொன்றை மரக்கலங் கொடுங்கை தூணாம்
முதலைசெங் கிடைவன் மீனா முதலிட முதன்மை யாதி
**333
#5
நுதலென்ப புருவம் நெற்றி நுதிமுனை தோத்தி ரப்பேர்
முதல்வன் முன் னவன் மூத் தோனா முதல்வியே தலைவி தேவி
கதவமே கதவு காப்பாங் கதுவல்பற் றிடலி ழுத்தல்
புதவுகோ புரவா யிற்குட் சிறுவழி கதவோர் புல்லே
**334
#6
கதிதெசை யுபாயம் புத்தி கமமோர்க் கம்பெரும்புண்
சிதிவெண்மை கருமை யோநி பிணஞ்சுடு கட்டை பூர்ச்சம்
ததிதயிர் சாம்ப ராணி தருணம்வா சமுமா மென்ப
பதிசிவ ன திபன் காந்தன் றலம்வீடூர் பாதை மூத்தோன்
**335
#7
பொதிமன்றங் கரிகா டோலைக் குடை பொதிச் சுமையு மொக்கும்
மதிபுத்தி யிச்சை சந்த்ரன் முன்னிலை யசைச்சொன் மாதம்
பதிகமோர் பொருண்மேற் பத்துச் செயுட்பாடல் பாயி ரப்பேர்
சிதிரமே கயிறு கைவாள் மழுப்படை சேர்ந்தார்க் கொல்லி
**336
#8
எதிர்நேர் முன் பிறிதொப் பென்ப எதிர்தல்முற் படல்கிட் டற்பேர்
வெதிரென்ப செவிடு மூங்கில் விதுளம் நீர் வஞ்சி வஞ்சி
முதிர் தல்முற் றிடல்மூப் பாதல் முதுமைமூ துரைமூப் பென்ப
விதுவென்ப யானைக் கொம்பி னடுச்சந்த்ரன் மேக வண்ணன்
**337
#9
விதுந்நகங் கீழா நெல்லி மயிற்றுத்தங் கொத்த மல்லி
பதுமகங் கயமுகத்தின் புகர்ப்பொறி பதும காட்டம்
பதுமலாஞ் சநன்கு பேரன் புவநேசன் பிரமன் பானு
பதுமலாஞ் சநைசீ தேவி தாரகை பனுவ லாட்டி
**338
#10
பதுமிநி முதற்சா திப்பெண் பங்கயக் கொடியவ் வோடை
விதுரனோ ரரசன் றீரன் விற்பந்தன் பிரிந்தோ னென்ப
இதைமரக் கலப்பாய் காரா மணிபுதுக் கொல்லை யென்றாம்
தையேவெண்ணிறத்தாள் வெண்சற் கரையீம விறகுஞ் செப்பும்
**339
#11
விதர்க்கஞ்சந் தேக மூகம் எதிர்த்தல்நே ருறல் முன்னிற்றல்
அதிட்டாநம் நகர்ப்ர பாவம் தேர்க்கால்மோ கரித்த லாகும்
குதித்தல் துள் ளுதல்க டத்தல் பதித்தல் தாழ்த் துதல ழுத்தல்
பொதிர்ப்பென்ப நடுக்க மச்சம் விதிர்ப்புமப் பெயர்பொ ருந்தும்
**340
#12
கதம்பகங் கடுகு கூட்டங் கதித்தல்மிக் குறலெ ழுச்சி
கதம்பந்தேன் கடம்பு கூட்டங் கடுகுவா சனையின் வற்கம்
ஒதுங்கலே பதுங்கல் செல்லல் ஒதுக்கமே நடையொ ளிப்பாம்
ததும்பல்மல் குதல்தளம்பல் சதுக்கம் நாற்சந்தி நாற்கோண்
**341
#13
சுதனென்ப மகனி ராசன் சுதாமநம் வெற்பு மேகம்
மிதவையே சோறு தெப்பம் விதாதாமந் மதனெண் கண்ணன்
பிதிர்கொடி திவலை தூளாம் பிதாமகன் பிரமன் பாட்டன்
சதுமுகன் சிகன்வி ரிஞ்சன் சதாபல மத்தி தென்னை
**342
#14
அதமத்தி மரங்கீழ் கேடாம் ஆதமே விருப்பம் நேயம்
துதமுத றுகையலைப்புத் தோதநந் துயரு ழக்கோல்
வதிசேற்று நிலம்வ ழிப்பேர் வாதுவஞ் சினந்த ருக்கம்
பதிதல்தா ழுதல ழுந்தல் பாதையே வழிநா வாயாம்
**343
#15
பிதாமகேச் சுரன்மு னீந்த்ரன் பெற்றவன் பிரம னாற்போர்
பதாசிபோர் மார்க்கங் காலாள் பதாரங்காற் குறடு காற்றூள்
வதாகியன் மிகக்கொ டுப்போன் வாக்கில்வல் லவனு மாகும்
விதாரணம் பிளத்தல் கொல்லல் விதாரம்வெஞ் சமங்கி ழித்தல்
**344
#16
மதாரங்கத் தூரி யானை யானைமை துநம்வ ராகம்
உதாரனன் மனத்தோன் வள்ளல் பிரசித்தன் பெரியோ னும் பேர்
மதூலகம் நாக ணந்தி மாமலை யிருப்பை யென்ப
விதேயன்சாத் திராவ தாநி விநயவா னேவல் கேட்போன்
**345
#17
கதரும் பொரல்கொல் லுதல் பேசல் கதிர மம்பு கருங்காலி
நிதந மரணங் குலங்கேடாம் நிதுவ நம்மை துநம் நடுக்கம்
மதகங் கடைத லெழில்வசந்த மெழுகூ மத்தை மருட்காரை
சதபத் திரமே மயூரமரங் கொத்தி சரோச மிராசகிளி
**346
#18
குதப னருக்க னக்கிகிமேற் குலன்சோ தரிபுத் திரன் விருந்தோன்
அதமங் கீழானது நிந்தை யதரங் கீழ்கீ ழுதடீநம்
வதரம் பருத்தி பருத்திக்கா யெலும்போ டிலந்தைக் காய்மன்னும்
அதரே வழி நுண் மணல்புழுதி கதழ்வு பெருமை விசையதிகம்
**347
#19
இதழே டுதடு பூவின் மட லெதிரி பகைஞன் முன்னிற்போன்
நிதியாணம் பொன் சங்கபது மாதி நிறைவு மணிப்பொதுவாம்
விதியூழ் செய்கை முறைகாலம் விரிஞ்ச னிய தி வகைகற்பம்
பொதியில் பொதிய மம்பலமாம் புதுமை மிகுதிய பூர்வப்பேர்
**348
#20
சதுக மரக்குப் பெருங்காயம் சதுரன் சமர்த்தன் பண்டிதனாம்
மதுகை வீரங் கருந்தினைப்பேர் முதுவ சமைச்சர் மூதுணர்ந் தோர்
பதுமன் பிரம னோர் நாகம் பதுமை சிறுதேக் கிலக்குமிப்பேர்
மதுரம் விடமோர் கவியினிப்புப் பிரியம் சுவைமத் திமவிசையே
**349
#21
மதத்தல் கொழுத்தல் மதங்கொள்ளல் மதித்தல் கடைதல் கணித்தற்பேர்
விதப்பு மிகுதி மதிலுறுப்பாம் விதித்தல் விதிசொல் லுதல்படைத்தல்
மதர்ப்புக் களிப்பு மயக்கப்பேர் வதைத்தல் வருத்தப் படல்கொல்லல்
பதுக்கை முரம்பு சிறுதிட்டை பாறை சிறு தூ றெனநாற்பேர்
**350
#22
சுதாக ரன்சந் திரன்கருடன் மதாணி பெரும் பூண் பொன்னாரம்
பதாகை துவச மடையாளம் சௌபாக் கியங்கூத் தின் விகற்பம்
உதாக னோர் பாம் போர்வாயு வு தாத்தன் பெரியோன் கொடையாளன்
நிதேசங் கூலி யுபயோக மாணை யளாவு தலுசேரும்
**351
#23
சதநமிலை புட்சிறகு சநம்வீடு மூடுதலாம்
பதவிசா லோக்யாதி பதம் நிலைசெல் வம்வழிப்பேர்
மதுரசைகிங் கிணிப்பாலை பெருங்குரும்பை முந்திரிகை
புதையம்புக் கட்டுடம்பு மறைவுபுது மையும் புகலும்
**352
#24
வெதநமவாத் துயர்பாவம் பலமிலா முயற்சி
விபத்தசுப மபாக்ய பலம் காமாதி தோடம்
குதபம்வாத் தியந்தருப்பை நடுப்பகலி னோர்மு
கூர்த்தமெள்ளுப் பசுவாட்டுக் கம்பள மூ விருபேர்
சதமிலை நூ றிறகு நிச்சந் துணியங்கந் தமாலம்
ததம் நிறைந்த தகன்றதுதந் திரிக்கருவி யென்ப
நதம் நிலையா மடுக்கடலா ணாறுதொநி வளைவாம்
நதிகாந்த மென்பநீர்க் கடம்பு நொச்சி கடலே
**353
#25
பதமடையா ளஞ்சோறு வாக்கியஞ்சொல் கீதப்
பாட்டிடங்கா லங்கிரணம் பசைவுசுவர்க் காதி
பதமடையும் பதவிநிபம் நிச்சயமுத் தியோகம்
பண்டங்கா லின்குறிகால் வழியறுகு காத்தல்
மதமிடும்பு களிப்புக்கள் பூசிதமிந் திரியம்
மான்மதஞ்சம் மதங்கருத்துக் கயமதஞ்சண் மதப்பேர்
விதம்வகையா னையினுணவு கூலிசெய்கை விதியாம்
விதிதமுடம் படப்பட்ட தறியப்பட் டதுமே
**354
#26
வதரைவரா கிப்பு தல்சிற் றரத்தை விண்டுக் கிராந்தி
மதுபன்னி யெனலவிரி பெருங்குமிழ்சீந் தியுமாம்
கதளிபிலந் தனிலிருக்கு மைந்நான்கங் குலமான்
காற்றாடி வாழைவிரு துக்கொடியு மேற்கும்
சதியுரோ கிணிநாள்வஞ் சகம்வீட்டி னிறப்புத்
தாளவொத்துச் சிவதேவி பதிவிரதை யென்ப
திதிநிலைபே றிருப்புமரி யாதைபிர தமையா
தியதிதிகண் டநம்புரத்த லசுரரைப்பெற் றவள் பேர்
**355
#27
யதியோர்தா ளப்பிரமா ணம்மொடுக்கஞ் சந்நி
யாசிசெய்யுளின்மோனை சிதேந்திரிய னென்ப
அதிகமூ தியமிகுதி சிரேட்டமேற் றமுமாம்
அதிகார மிக்க செயல் பண்பு நூல் வகுப்பு
அதிதிசிராத் தத்தொவ்வாத் திதிகௌரி பூமி
அமரரையீன் றாள் விருந்தி னன்குசநந் தநன் பேர்
மதுநீர்பால் பூந்தேன்றே னிருப்பைப்பூ வின்கள்
வசந்தருதுச் சித்திரைமா தங்கள்ளோ ரசுரன்
**356
#28
விதுதமுத றுவதலைப்ப தொடுவிடப்பட் டதுமாம்
விதுரம் வச்சி ராயுதம்வி கலந்துயர்வி யோகம்
பதுமமோர் வியூகமிப முகப்புகரோர் பேரெண்
பங்கயமோர் முடியு றுப்போர் நிதி சோதி நாட்பேர்
மதுரைசத புட்பைசத புப்பிமுந் திரிகை
மாநகரத் தொன்று பெருங் குரும்பையதி மதுரம்
சுதையமிர் தங் காடிநீர் மகள்கங்கை பூச்சுச்
சுடுசுணஞ்செங் கல்சதுரக்கள்ளிபெருங் குரும்பை
**357
#29
பதங்கம் விட்டில் கடாயத்ர வியம்புள்வெள் ளிரதம்
பதார்த்தம்பண் டந்திரவி யம்பதத்தின் பொருட்பேர்
விதண்டையோ ரிலைக்கறி வீண் டருக்கமனோ நிலையாம்
விதாரியோர் நோய்சிற்றா மல்லிவெள் ளீ றிலுமாம்
நிதம்பம் பெண்ணின் முனரை கடித்தலந்தாழ் வரைப்பேர்
நிதாக முதிர் வேனிற்கா லம்வெயர்வு வெப்பம்
உதும்பரஞ்செங் குட்டம் வீட் டின் முனடை வாயி
லுறு திண்ணை யத்திமர மெருக்குத்தாம் பிரமே
**358
#30
விதாநமவ சரந்தநமர்ச் சனை வகையு பாயம்
வேள்விமக வினைமந்தஞ் சூனியமேற் கட்டும்
விதாநம்யா னைக்கவளம் விதிசீவ கோடி
விடுதிவன்மம் வித்தாரந் துச்சம் நடாத் துதற்பேர்
நிதாநமுற்கா ரணந்தூய்மை யதார்த்தமுடி விரப்போர்
நியமம் நிதி மறைத்துக்கொள் பொருள்கன்றின் கயிறாம்
வதூவநிதை நன்னாறி சீதேவிப் பூடு
மணவாளப் பெண்மனைவி புதுமணப்பெண் ணெனுமே
**359
#31
பதநம் விழுதல் பேணுதல் நழுவுதல்
இதமநு கூலமும் ஞாநமு மிட்டமும்
கதரமீ ரரிவாள் வெண்கருங் காலி
மதிதம்நீர் விடாமோர் கடையப் பட்டதே
**360
#32
உதிதஞ் சொலப்பட் டதுதோன் றுவதாம்
அதிமுத் தகங்குருக்கத்தி திமிசு
மிதுந மாண்பெண் ணிணைவோ ரிராசி
உதய முதயவெற்புயர்ச்சி தோற்றமே
**361
#33
சுதரிசந மாலின் சக் கிராயுதம்நற் காட்சி
நிதரிசந மோரணியு தாரணஞ்செவ் வையுமாம்
கிதியவநி குறைவுவீ டோர்பேரெண்ணும் பேர்
கதை தண்டா யுதங்கட்டுக் கதை சொல்லு மாமே
**362
#34
பதத்திரி பறவைநா ராச பாணமாம்
அதிர்ப்பென லார்ப்பரிப் பச்சங் கம்பிதம்
கதுப்பென லாண்மயிர் பெண்மயி ரொடுகவுள்
புதைத்தல்சே மித்தலாழ்த் துதல்ம றைத்தலே
**363
#35
முத்தக மென்ப கோரை தனிநின்று முடியுஞ் செய்யுள்
வித்தகன் புலவன் ஞாநி யுத்தவம் விழாவேள் வித்தீ
பத்ததி வழியொ ழுங்காம் பத்தர் நீர்ப் பத்தல் நேயர்
உத்தமம் முதன்மை நன்மை யுத்துங்க முயர்ச்சி மேன்மை
**364
#36
சத்தமன் சிரேட்டன் மேலோன் சத்தித்த லொலித்தல் கக்கல்
சுத்தங்கே வலந்தூய் தென்ப சுத்திகை யகலிப் பிப்பேர்
நத்தமூ ரிராவி ருட்டாம் நத்து மூக் கொற்றி சங்கு
உத்தர மேல்சி ரேட்டம் வடாதெதி ருரைவ டக்கே
**365
#37
முத்தன் சங்கரன்று றந்தோன் வைரவ னருகன் மூடன்
துத்தியுண் பனப டத்தின் பொறிசுணங் கோர்பு தற்பேர்
முத்திமோ சநமோக் கப்பேர் முத்தொரு மணிபி ரீதி
பித்திகை பல்லி வச்ரம் சதாவரி கருமு கைப்பேர்
**366
#38
மத்திகை விளக்கின் றண்டு குதிரைச்சம் மட்டி யென்ப
உத்திர மரங்கல் லாற்செய் திடும் விட்ட மோர்நாளும்பேர்
வத்திர முகஞ்சே லைப்பேர் வத்துபல் பொருளான் மாதி
பத்திரன் சிரேட்டன் சாது வுக்கிர னிராம பத்ரன்
**367
#39
மித்திர னிரவி நண்பன் வித்தையே கல்வி ஞாநம்
சத்திரை கொத்த மல்லி சதபுப்பி யாம்பி முப்பேர்
அத்தோர்சா ரியைசி வப்போ டரையிற்பட் டிகைதைப் பென்ப
தத்துப்பாய்த் தவமி ருத்தாம் தத்தை முன் பிறந்தாள் கிள்ளை
**368
#40
இத்துமம் வசந்தங் காமம் காட்டமோர் சமித்து மேற்கும்
சத்வரம் விசைவேள் வித்தீத் தானம் நாற் சந்தி முற்றம் ( னாம்
இத்வரன் கயவன் றீயோன் வழிச்செல்வோனிலம்பாட் டோ
அத்தை முன் னிலைய சைச்சொல் பிதாவுடன் பிறந்தா ளாசாள்
**369
#41
சுத்தாந்த மிராணி வாச மேகாந்த மிராச மன்றம்
முத்தாபலம்மி சங்கம் பழங்கருப் பூர முத்தாம்
வித்தாரம் படர்ச்சி கொம்பர் விபுலமோர் கவிவிற் பந்நம்
உத்தாலம் விசைகு ரங்கு சிரேட்டமுற் கடங்க ராளம்
**370
#42
வத்த மாநஞ் சுவத்திகமா மணக்குச் சராவம் நிகழ்காலம்
துத்தம் நிறைப்ப தோரிசைதீ பாலு மயிற்றுத் தமுமைம்பேர்
பித்த முறிவோர் பிணிமயக்கம் பித்தன் மகேச னுந்மத்தன்
மத்தந் தலையுந் மத்தமதர்ப் புகப்பு மதங்கொள் யானையுமே
**371
#43
அத்தி யெலும் போர் மரமுந்நீ ரானை பொய்கை கொலையின் பேர்
உத்தி தந்தர வுத்தி திரு வுறுப்புத் தேமல் படப்பொறியாம்
சித்தி முத்தி யணிமாதி பலன் சித் தித்த லோர்யோகம்
அத்தி யயந்தோ டந்துயர மடக்கல் நாச மதிக்கிரமம்
**372
#44
உத்தியாநந் தலைக்கடைபூந் தோட்டம் பிரயோ சநமும் பேர்
பத்தி ராங்கம் பூர்ச்சமரம் பதும கஞ்செஞ் சந்தநமாம்
தொத்துப் பூங்கொத்தடிமையெனும் துத்தை யவிரி சிற்றேலம்
உத்து வேகம் வதுவைமிகு விரைவோ டச்சம் பாக்கென்ப
**373
#45
புத்தகஞ்சித் திரப்படாம் பொறித்ததிரு முறைப்பேர்
புத்தன்சாக் கியமுநிபோ திதனருகன் புலவன்
உத்தஞ்சஞ் செவி மலர்ப்பூண் சூட்டுமா லையுமாம்
உத்தமைகிங் கிணிப்பாலை முதற்சாதிப் பெண்பேர்
அத்தமயிர்க் கற்றைமுழந் துதிக்கைகண் ணடிகா
டருநெறிகே டத்த வெற்போர் நாளருத்தப் பெயராம்
சத்தமுரை யொலியெழுத்து வாக்கியம்விண் பிரசித்
தம்புகழ்ச்சி சுபங்கீத மேழொடுகேள் வியும் பேர்
**374
#46
சித்தமநம் பக்குவஞ்செ யந்நம்நிச் சயம்நித்
தியமோர்யோ கம்ப்ரசித்தம் சோற்றவிழ்தேன் மெழுகாம்
தித்தம் நன் மணத்ததுபற் படகம்பூ சுவது
தீக்கசப்புப் படர்வதெண்ணெய் நஞ்சுண்ட கணைப்பேர்
பத்தங்கட் டுவதுநம்பு வது சோறு முரைப்ப
பத்தாநா யகன்சுமப்போன் பாலிப்போ னென்றாம்
மித்தஞ்சிந் தனைச்சுருக்கம் நித்திரையா லசியம்
வித்திவிசா ரணம் ஞாநம் சம்பவமி லாபம்
**375
#47
முத்தமழ கியது தடு பிரிய முத்து விடுதல்
முத்தைகவ ளந்திரளை முழுமடப்பெண் ணென்ப
வித்தந்தள் ளுவதுவமை தொளைப்பதுப்ர சித்தம்
விசாரிதந்த்ர வியஞ்செல்வம் விலைப்பொருணா லிருபேர்
அத்தன் மூத் தோன்குரவன் றந்தைசிவ னருகன்
அத்திரம்வில் லம்பாதி யாவிடுமா யுதமாம்
சித்தன் முத் தன்வடுகன் சிநன் சிவன் சித் துடையோன்
சித்து வெற்றி மாயவித்தை வேள்விபுத்தி ஞாநம்
**376
#48
குத்தி சிறைச் சாலை நில வறையொளிப்புக் காப்பாம்
குத்திரம்வஞ் சகம்விரைவின் குறிப்புமலை யற்பம்
சத்திதொடை துர்க்காதி தேவதைபெண் ணுமைவேல்
சௌரியம்போ சநம்வாந்தி யருள் சமர்த்துத் துவசம்
சுத்திகண்ணோய் கபால துண்ட மூலநோய் பரியின்
சுழிசிறுநா குணஞ்சங்கு தூய்து முத்துச் சிப்பி
பத்திநடை பிரகாரம் பகுப்புக்கா லாளோர்
படைத்தொகைநம் பிக்கைகுண விருத்திசே வையுமே
**377
#49
புத்தி புசிப் போரந்தக் கரணம் போ திப்பாம்
புத்திரிகை மரப்பாவை மகள் செம்பஞ் சென்ப
வத்திதிரி முன்றானை சுடர்கண்ணி லிடுமை
வரிசுகந்த வத்துவிற்செய் திரிமணிக்கீழ்த் தகடாம்
சத்தியமோர் மேலுலக மெய்ம்மைசப தப்பேர்
சத்திரிநித் திய தாநங் கொடுப்போன்வாட் சுரிகை
மத்தியமை யம் நுசுப்புக் கள்ளுநடு வென்றாம்
மத்து வெறி தயிர்கடைகோல் தயிர்த்தெளிவூமத்தை
**378
#50
சித்திரக மேரண்டங் கொடுவேலி திலகஞ்
சித்திரபா நுக்கனலோன் றிவாகரனோர் வருடம்
சத்திரமா யுதங்கைவிடா வேலிரும் போர் வேள்வி
சதாதாநங் கிரதுவநந் துகில்குடைவஞ் சகப்பேர்
சித்திரமற்புதமழகோர் கவிபொய்யை மெய்போற்
செப்பல்பல நிறந்தொளை வெண் குட்டமோ வியமாம்
பத்திரம்வா கநந்திரள் பொற் பெருதுசுப மேருப்
பன்னமிற குடைவாளோ ரிபக்குலம்பொன் கோரை
**379
#51
குத்திரன்கீழ் மகனதமன் றியாக போ கமிலான்
குரூரனீ னாங்கனல் கூர்ந் தோன்பரத்து ரோகி
அத்திரியோ ரிருடி பருப் பதந்திவா கரனொட்
டகங்குதிரை கழுதைமர மெனவெழுபே ரறைப
பத்திரிவல் லூறுதேர் தேருடையோன் பாணம்
பறவையிலை பருப்பதம்பா தவமெனவோ ரெண்பேர்
குத்திரைதே னீகண்டங் கத்தரியீ முள்ளி
கொலைஞைவிக லாங்கிகூத் தாடுபவள் பரத்தை
**380
#52
சித்திரையோர் பாம்பெலியால் நேபாள விதையோர்
திங்கள் சுபத் திரைதுமிட்டி தெய்வப்பெண் ணோர் நாள்
பத்திரையோர் காளிகங்கை யுலைத்துருத்தி குமிழ்பாற்
பசுவவிரி யரத்தைவிட்டி த்வி தீயவட்டத் திதியாம்
சத்துவமோர் குணம்பண்டஞ் சொபாவம்வலி யுயிர்நிச்
சயமநம்நல் லது முயற்சி செந்து பிசா சாதி
தத்துவமைம் பூதாதி தொண்ணூற்றா றுளது
தன்னியல்பு பரமான்மா விளம்பமா நமுமே
**381
#53
கத்தாசாரதி பொறையோன் தாசசுதன் வாயிற்
காப்பவன்கத் திரியைபாற் சூத்திரற்குற் பவித்தோன்
சித்தாந்தஞ் சாத்திரஞ்சை வாகம நூ லோர்சோ
திடகணித நூலிது நிச் சயமெனலுஞ் செப்பும்
உத்தாநம் வீடுகட்டு மிடத்தெல்லை முற்றம்
உந்முகம்புத் தகமோரா ளளவைபடை போர்மெட்
டுத்தாகம் திருவாயி லடுப்புமலங் கழித்தல்
உவகைகிளம் புதலுத்தி யோகமுகி வும் பேர்
**382
#54
மத்தவா ரணந்தே வாலயம் வீதி மண்டபம் மதகயம் வரண்டம்
மத்திமம் நடுவானது சமனிசையோ ரிசைச்சொர மையமா னதுமாம்
மத்திமை சந்தோ பேதமோர் வாக்கு நடுவிரல் பூப்புள வநிதை
சத்துநல் லதுசத் தியஞ்சிலாக் கியமுள்ள துவலி சாரம் பூச்சியமே
**383
#55
மத்தகம் நெற்றி தலையிப மத்தகம்
கைத்தல் சினத்தல் கசத்தல் வெறுத்தல்
பித்தி முடிவு சுவரிடம் பேதநம்
சித்திர கூட மோர்மலை தெற்றியே
**384
#56
யுத்தி நிச்சய சாதநந் தக்கது
பத்தி யமிதஞ் சேறு சுலோகமாம்
பத்தி யைவழி தூளி கடுமரம்
உத்தி யோக மெதிர்க்கை முயற்சியே
**385
#57
யுத்தம் நியாயங் கூடி யிருக்கைபோர்
நித்திய மநவர தஞ்சாச் சுவதம்
கத்துரு நாகங் களின்றாய் பொன்னிறம்
வித்துரு மந்தளிர் பவளம் விருக்கம்
**386
#58
சூதக மாம ரம்வெள் ளிரதமா சூதஞ் சென்மம்
சேதகஞ் சிவப்புச் சேறாம் சேதநன் ஞாநி யான்மா
பீதகம் பொன்மை யோர்சாந் திருவேலி பொன்னும் பேசும்
போதக மிளமை தீக்கை மரக்கன்று புழைக்கைக் கன்றே
**387
#59
கேதந மடையாளம் வீ டழைத்தல் கிருத் தியம்ப தாகை
சேதந மறுத்தல் பேத மறிவுள்ள சீவ கோடி
பீதநம் செந்நுணாவம் பணைசெஞ்சாந் தரிதா ரப்பேர்
பாதபம் பாத பீட மரம்பாதயாந மென்ப
**388
#60
ஏதம்பன் னிறஞ்ச மித்து விறகுகே டிடும்பை குற்றம்
ஓதங்கல் லோலம் வெள்ள முவரியோ டண்ட வாதம்
சீதமே கோணல் வஞ்சி மரம்நறு வலிகு ளிர்ச்சி
சூதம்வெள் ளிரதம் பாகத் தொழில்கறி மாம ரப்பேர்
**389
#61
பேதமோ ருபாயம் வேறு படல்விசேடம்பி ளப்பாம்
மோதமே பிரியம் வாசம் மோதுத லடர்த்தன் மொத்தல்
வாதமோர் பிணித ருக்கம் வாயுவோ டிரத வாதம்
ஆதர மோடக் கூலி யாசையா தரிக்கை நேயம்
**390
#62
வாதரங் குன்றி வித்து வலம்புரிச் சங்கு நீர்தேன்
ஆதரி சங்கண் ணாடி புத்தகத் தெதிரு ரைப்பேர்
காதலன் கணவன் மைந்தன் காதலி புதல்வி காந்தை
வீதலே கெடுதல் சாதல் வேதனெண் கணன்வி யாழம்
**391
#63
ஆதவ மொளிவெயிற்பே ராதித்த ரருக்கர் விண்ணோர்
பூதவன் றிருமால் பூபன் போதனான் முகன்பா லன்பேர்
ஓதிகற் றறிந்தோன் கல்வி செறிவுபெண் மயிர்வெற் போந்தி
கோதிகோ தும்மை நெற்றி கோதென்ப சக்கை குற்றம்
**392
#64
சோதிகண்ணிரவி விண்மீன் சுடரீச னொளி தீ யோர்நாள்
வேதிகை பலகை திண்ணை வேதைவே தித்தல் துன்பம்
ஊதிய மிலாபங் கல்வி யோதுதல் படித்தல் சொல்லல்
பூதியம் புவியு டற்பேர் போது பூ முகுளங் காலம்
**393
#65
மாதிரந் திசையா காயம் நிலம்பருப் பதமா தங்கம்
சேதுமா விலிங்கோர் தீர்த்தம் செய்கரை சிவப்புப் பாலம்
மாதுல மோர்பாம் போர்நெல் லூமத்தை மருட்கா ரைப்பேர்
ஓதையே மதிலுண் மேடை புரிசைபே ரொலியு மாமே
**394
#66
தாதுமண் ணாதி யைந்து சத்தாதி யைந்து பூவின்
தாதுசுரோத்ராதி யைந்தோ ராண்டுதொக் காதி யேழ்மே
தாது பொன் னாதி யேழ்வா தாதிமுப் பிணிசெய் யென்சொற்
றாது போ சநசா ராங்கி சம்மநோ நிலைகா விக்கல்
**395
#67
காதைமுன் னோர்ச ரித்ரக் கவிகதை யோர்வி ருத்தம்
சீதைசா நகிப டைச்சால் பயிர்தேவ கங்கை நாற்பேர்
பேதைபெண் மிடியன் மூடன் பெண்ணின் முற் பருவ மென்ப
மேதையே தரிக்கும் புத்தி நிணம்பு தன் கள்ளு மேன்மை
**396
#68
நைதலே நலிதல் தேய்தல் கைதைநன் னிலந்தா ழைப்பேர்
பைதலே துன்பம் பையல் பைத்தல் சீறுதல்ப சத்தல்
வைதலே சுதல்ச பித்தல் மைது நம் புணர்த லொன்றல்
கைதவங் கபடஞ் சூது கைதவன் செழியன் வஞ்சன்
**397
#69
கா தாவாண் குயில்சு ரும்பு சிநமுள்ளோன் காநஞ் செய்வோன்
ஆதாநம் பரிப்பூண் பற்றல் ஆதேசந் திரிபோ டாணை
கேதாரம் பாத்தி யோர்கேத் திரம்பனிக் கிரிக்கோ டும்பேர்
பூதான்மா வுடல்வி ரிஞ்சன் கோதூமம் நரத்தை யோர்நெல்
**398
#70
சாத கும்ப மலரிபொனாந் தாதன் றாசன் றயாலுபிதா
காத மகழ்ந்த குளங்கொலை நாற் குரோச தூர மெனக்கழறும்
சாத மெலிவு கூர்மைசுகஞ் சாதம் சேறு சோ றிளம்புல்
பீதம் பாநம் மஞ்சணிறம் பீதை மஞ்சள் பொற்குறிஞ்சி
**399
#71
போதம் யானைக் கன்று சிசுக் குஞ்சு புத்தி மரக்கலமாம்
வீதம் வலியில் பரிசாந்தம் வலியில் கரியங் குசவினையாம்
காத ரந்தீ வினைத்தொடர்பஞ் சுறல்சோ காதி யின்கவநம்
மாதர் மகளி ரழகாசை வாதை வருத்து நோய்துக்கம்
**400
#72
தூதன் புதன்றூ துவனென்ப சூது கபடங் கவறாடல்
நீதி நியாய முறைமைப்பேர் ஏது நிமித்த முபகரணம்
போதி சிநன்ற ன றம்பெளத்த சமாதி யரசு மலைபுத்தன்
கேது பதாகை யடையாளங் கிரண மோர்கோ ளுற்பாதம்
**401
#73
ஆதங் கம்நோய் சந்தாப முரசி னோசை யச்சப்பேர்
கோதண் டம்வில் லொடுபுருவங் கூதிர் பனிக்காற் றப்பருவம்
வேதண் டம்பற் பதம்யானை சௌதா மிநிமின் னரமகள் பேர்
காதம் பரங்கள் ளொடுவெண்ணெய் காதம் பரிசா ரிகைகுயிலே
**402
#74
மாதா வுமையிந் திரையீன்றாள் மகிபி ராமி முதலெழுவர்
வேதா மலரோன் மாலறிஞன் பாதீ டளித்தல் பங்கிடுதல்
பாதா ளங்கீ ழுலகமதோ கதிவா டவத்தீ யெனப்பகர்ப
ஆதீ நவந்துன் புறுவது பொல் லாத மரணம் பாவமுமாம்
**403
#75
சாதகமோர் பிரபந்த மோர்புளுப கரணம்
சந்மபத் திரிகை பூ தகணமப்பி யாசம்
ஆதநம்யா னைக்கழுத்துப் பீடமா சநப்பேர்
ஆதித்யன் விருந்தோம்பு வோனதிதி சுதனாம்
சாதநமாண் குறிமறைவு நடைகொலைபி ரேதச்
சடங்குகா ரகம் நிவிர்த்தி யுபாயஞ்சித் திக்குஞ்
சாதநம்பின் றொடர் தல்கொடுப் பித்தல்சே நாங்கம்
தநம்கருவி நிறைவேற்றல் சாசநநா மமுமாம்
**404
#76
வேதநஞ்சீ வநம் ஞாநம் கூலி பொதுத் தலும்பேர்
வேதநைதுன் பஞ்சுகதுக் காநுபவ முணர்கை
பூதநைகண் ணனுக்குநச்சு முலைகொடுத்தோள் கடுக்காய்
பூதிகாட் டஞ்சரள மரந்தேவ தாரம்
நாதமென்ப விந்திரிய மோசையுரி மைப்பேர்
நாதனா யகனதிபன் பிரபுசந் திரனாம்
பாதமர வேர்செயுளி னோரடிசூழ்ந் திருக்கும்
பருப்பதங்கால் கிரணம்வெண்ணெய் நீர்நான்கி னொன்றே
**405
#77
பூதமடை வது தக்க ததீதமுப மாநம்
பூதகணந் தூய்மைசெந்து புவியாதி பஞ்ச
பூதமுண்மை தூற்றுந்தா நியம்பினரை யுண்டை
போனகா லந்தருப்பை புனையணியி னழகாம்
யூதம் விலங் காதிபற வைத்திரள்சமூகம்
யூதிமுல்லை பொன்னிறவா டாமலரு மொக்கும்
மாதவம்வை காசிபெருந் தவம் வசந்த காலம்
மாதவனிந் திரைகேள்வன் பெருந்தவத்தோன் வசந்தன்
**406
#78
மாதவிகள் ளின் வெல்லந் தொழுத்தைகுருக்கத்தி
வாதிவா தஞ்செய்பவ னோர் புலமைத் திறத்தோன்
சூதனோ ரிருடி தச்சன் பார்ப்பனிசே ரிராச
சுதன்புகழ்வோன் றேர்ப்பாகன் சூதுளோன் மடையன்
ஆதிய திட் டாநமுதல் புராதநம்நே ரோடல்
அரன் முதல்வ ன திபனொற்றி நாரைமநோ துக்கம்
ஈதிவெகு மழைமுதலா மறுவகையுற் பாதம்
யாத்திரைசெய் திடல் கொள்ளை முதலபெருந் துன்பம்
**407
#79
சாதியா தநைகள்ளின் றெளிவு கொடை முடிவு
சநநங்கோத் திரஞ்சிறுசம் பகம்விப்பி ராதி
சாதிபொதுப் பிரம்பு நெல்லி சாரதிமா வலனோர்
சந்தசுசா திக்காய்கம் பில்லமரந் தேக்காம்
பூதிசம்பத் துற்பாதந் துர்க்கந்தம் நிரையம்
புலாலின்பக் குவம்பிறப்பு விபூதிகயப் பொற்பு
வீதிதெரு நேரோடல் குதிரைவழி யொழுங்கோர்
வீட்டுறுப்புக் கிரணம் நெருப் போர் நாட காங்கம்
**408
#80
வேதிமதில் சதுரவே திகையறிஞன் கேட்டை
விரிஞ்சனலங் கிருதநில மங்குலிமுத் திரையாம்
பூதிகங்கா வட்டம்புல் லோமங்கற் பூரம்
பூந்தணக்கு நிலவேம்பு சிறுகுமிழென் றறுபேர்
சாது நல்ல குலபுருடன் பொலிசையா லுண்போன்
சச்சநன்முக் குடைச்செல்வன் முநிவனழ கிதுமாம்
கோதைமுன்கை யினிற்கட்டு முடும்புத் தோல் பூந்தார்
குடக்கோன்காற்றுக்கோதா வரிபெண்மயி ருடும்பே
**409
#81
தாதாவோ திமத்துவசன் றாங்குவோன் கொடுப்போன்
சாதீயான் செறிந்தோன்சச் சநன திரூ பன்பேர்
ஆதார முடல் தாங்கிக் கொள்வது மூ லாதி
யடியீடு குளத்தேரி பாத்தியதி கரணம்
வாதூலங் காற்றினது திரள்சுழல்காற் றென்ப
மாதேவன் பரமேச னுருத்திரரி லொருவன்
நாதேயி யென்பது செம் பரத்தை தழு தாழை
நாரத்தை நீர்வஞ்சி நிலநாவ லாமே
**410
#82
யௌதகஞ்சீ தநப்பொருளோர் புடைவையுடைத் தொங்கல்
இரட்டைசந்தேகஞ்சுளகி னுனிதக்க தேழ்பேர்
கௌதமன்சாக் கியபுத்த னோர்தபோ தநனாம்
கௌதமிபார்ப் பதிகோதா வரிநதியுங் கணிப்ப
கௌதுகமுற் சவம் பிரிய மகிழ்ச்சிசுபக் கரகங்
கணமரபின் சீர்கீர்த்தி கீதாதி யிச்சை
மைதுநங்கூட் டரவுகலந் திருத்தல்புணர்ச் சியுமாம்
வைதேக கன்வணிசா சூத்ரசுதன் வணிகன்
**411
#83
ஏதி கிரணஞ் சுவாலை படைக்கலம்
பீதி நடுக்கம் பயம்பரி பாநம்
யூதிகை முல்லைப் புதல்வா ரணப்பிடி
வீதி கோத்திர னெழுநா விரிச்சிகன்
**412
#84
காத கன்பரத் துரோகி கொலைஞன்
யாதநை நரக வாதை கொடுந்துயர்
ஆத ன றிவிலா னருகன் குருவுயிர்
மேதி களத்திற் பிணை தறி யெருமை
**413
#85
காதல்கா து தலா சைப்பேர்
ஆதவ னிரவி பார்ப்பான்
மாது பெண்ணோர சைச்சொல்
ஆதுர மவாவும் நோயும்
**414
#86
கோத்தந மையெண் கோவை முத்தாரங் கோமு லைப்பேர்
பூத்தல் பெற் றிடலுண் டாதல் புட்பித்தல் பூப்பா தற்பேர்
கூத்தன்கூத் தாடி சீவன் கோத்திரை புவியான் கூட்டம்
ஆத்தியோர் மரஞ்சம் பந்த மடைதல்கைப் பொருளி லாபம்
**415
#87
காத்திர முடலு றுப்புப் பருமையா னையின் முன் காலாம்
தாத்திரங் குடாரி கூன்வாள் சாத்துத லணித லப்பல்
மாத்திர முழுமை வேறொன் றலாநிய மம்ப்ர மாணம்
தாத்திரி பூமி நெல்லி மரம்வளர்த் திடுதா யீன்றாள்
**416
#88
சீத்தல் தூர்த்தல் தூய்தாக்கல் ஆத்தன் சிநனம் புதலுள்ளோன்
சோத்தி யம்மற் புதஞ்சோதித்தது சொல் லச்சொல் லுதல் தூய்தாம்
நேத்தி ரங்கண் மரவேர்பட் டாடை மத்தின் கயிறென்ப
யாத்திரையுற் சவம்பயணஞ்சீவ நோபா யமுமேற்கும்
**417
#89
ஓத்து மறையோ ரினப்பொருளை யொருநேர் படவைத் துரைக்குமியல்
வாத்து நகரி வீடெல்லை மனைகோ லுமிடம் நுழைவாயில்
சாத்தா வருக னரியரபுத் திரன் றண் டிப்போன் சாக்கியனாம்
நீத்தார் துறந்தார் சமணரெனு மூத்தோர் முதியோர் முன்னுதித்தோர்
**418
#90
சாத்தியமோர் யோகஞ்சா திக்கத்தக்கதுவாம்
சாத்திரம்வி யாகரண முதலிய நூ லாணை
காத்தியா யநிதுர்க்கை யுமைபாதி நரைத்துக்
கல்லாடை யுடுத்தவமங் கலியாம்பே ரிளம்பெண்
கேத்திரம் புண்ணிய பூமி பழனமனை வாழ்க்கைக்
கிழத்தியுடல் வீடுதெய்வத் தலம் யோநி யேழ்பேர்
கோத்திரங்கேத் திரம் சம்பா வியம் போத மார்க்கங்
குலம் வலிநர மங்காடு மலைகுடையு மாமே
**419
#91
பாத்திரம்யோக் கியன்ராச மந்திரிநாட் டியப்பெண்
பாண்டமிரு கரையினடுச் சுருவைதிர வியப்பேர்
கேத்திரியன் பரதேக சிகிற்சைசெய்யோக் கியன்றன்
கேள்வனாற் பிறற்கீன்ற சுதன்பரதா ரிகனாம்
மாத்திரைகா தணியிமைப்போ தற்பஞ்சத் திரசா
மராதிமருந் துக்குளிகை யளவெழுத்தி னுறுப்பு
போத்துமயில் பசுவெருமை கலைமரைநீர்ச் சாதி
புலி பூனை பரியிவற்றாண் விலங்கின்பாயலும் பேர்
**420
#92
சூத்திரம்வாக் கியச்செய்யுள் வெவத்தைபஞ்சி னூலென்ப
தோத்திரம்யா னைப்பரிகக் கோலுழவு கோல்து தியாம்
போத்திரம்பன் றியின் முகத்து நுனிகலப்பை யின் முனைப்பேர்
கேத்திரிய மசாத்திய நோய் விடங்கேத்தி ரோற்பவப்புல்
**421
#93
தாத்தியூ கங்குயில் சாதகப் புட்பேர்
சாத்திர வஞ்சத் துருத்துவங் கேடுமாம்
ஆத்தி ரேயனத் திரிகோத் திரன்விது
ஆத்தி ரேயி பூப் புள்ளவ ளோர்நதி
@9 நகர வெதுகை
**422
#1
அநகமே பாவ மன்மை யழுக்கல தழகு சாந்தம்
கநகம் பொன் சம்ப கம்நா கப் பூமுண் முருக்கூ மத்தை
சநகனோர் பரம யோகி தந்தைசா நகியைத் தந்தோன்
பநசமோர் நோய்ப லாவாம் வநசமே பதுமம் யானை
**423
#2
வநசுவா புழுகுப் பூனை வல்லியங் கோணாய் செந்நாய்
சநநம்வங் கிசம்பி றப்பாம் சந்நிதாய் மலைமஞ் சட்பேர்
அநயந்தீ வினையா பத்தோ டசுபஞ்சூ தாதி துன்பம்
புநர்வசு புணர்த நாள்காத் தியாயந முநியும் போற்றும்
**424
#3
சிநவர னருகன் புத்தன் சிநன் சிநேந் திரன் மு நீந்த்ரன்
கநிமணி யுண்டாம் பூமி யினிப்புக்கந் நிகைப ழப்பேர்
சநியோர்கோள் மணப்பெண் காந்தை மலைமஞ்சள் சநிப்ப ழுங்கல்
முநியானைக் கன்ற கத்தி மரம் வில்லு முநிவன் புத்தன்
**425
#4
தநிகனே தநவான் காந்தன் தநுசாரி திருமா லிந்த்ரன்
விநிபாத மரணம் நிந்தை விழுதலோ டிடுக்க ணென்ப
விநியோக முபயோ கித்தல் பலப்பொருட் டீத லேவல்
அநிருத்தன் மதன்சே யொற்ற னடங்காதோன் றடையற் றோனே
**426
#5
அநிர்தமே யுழவு பொய்ச்சொல் அநிலனோர் வசுவா யுப்பேர்
அநுகன்கா முகன்பின் செல்வோன் அநுபந்தி தாகம் விக்கல்
அநுசயம் பின்னி ரக்கம் நெடும்பகை ய நுபந் தப்பேர்
அநுமதி கலையொன் றூநப் பூரணை யநுச்சை யென்ப
**427
#6
வநப்பதி பூவா மற்காய்த் திடுமர மரப்பொ துப்பேர்
அநர்த்தங்கே டருத்த மன்மை கநிட்டையங் குலிகை தங்கை
கநிட்டன்மிக் கிளமை யுள்ளோன் சிறியோன்பின் பிறந்தோன் காட்டும்
அநுத்தரம் வடக்கு மேல்சி ரேட்டங்க ளலது மேன்மை
**428
#7
தநஞ்சயன் றகநன் பார்த்தன் றசவாயு வினிலொன் றும்பேர்
அநந்தன்மால் சிவனோர் நாக மலாயுத னாதி சேடன்
சுநந்தையோர் கடவு ணல்லாள் சுந்தரி யுரோச னைப்பேர்
இநன்கதி ரவனி ராசன் றநாட்டிய னதிப னென்றாம்
**429
#8
அநாகதம் புதிய சேலை யாறாதா ரத்தொன் றென்ப
கநாகநங் கொல்லு மத்தக் களிறுபெய் முகில்நெருக்கம்
பிநாகமே சிவகோ தண்டந் திரிசூல மண்மா ரிப்பேர்
விநாசமே மரணங் கேடாம் விநேதாதே சிகனி ராசன்
**430
#9
சநாபியே சமாநம் ஞாதி தநூருகஞ் சிறகு ரோமம்
விநாயக னருகன் புத்தன் கணாதிபன் குருபுள் வேந்தன்
சுநாரம்நாய் முலைப்பால் பாம்பின் முட்டையூர்க் குருவி சொல்லும்
அநீகம்போர் சேனை யென்ப அநேகமொன் றன்மை காலம்
**431
#10
கநீயான்மிக் கிளமை யுள்ளோன் மிகச்சிறி யோன்க நிட்டன்
சிநீவாலி கௌரி யிந்து தெரியிரா வமாவா சைப்பேர்
விநோதஞ்சந் தோடங் காமர் விளையாட்டாற் பொழுது போக்கல்
மநோரதம் வாஞ்சை யின்பம் மநோரம மெழில்ம கிழ்ச்சி
**432
#11
விநதம் வளைவு வணக்கப்பேர் விநிமய மாற்று கையீடு
தநதன் குபேரன் கொடையாளன் தநுசர் புதல்வர் தாநவர்பேர்
சநப தந்தே சஞ்சநமாம் சநமோ ருலக மனிதரினம்
விநயம் வணக்க முபசாரந் தரும மடக்கம் பொறைமேவும்
**433
#12
சநாத நம்மென் பதுநிலைபே றுளது நிச்ச மான துமாம்
சநாத நன்மா லோர்பரம யோகி சதாசி வன்பிரமன்
விநீதம் நல்ல சுமைக்குதிரை யடக்கம் விநய மபநீ தம்
விநீதன் செட்டி சிதேந்திரிய னடக்க முள்ளோன் விநயவான்
**434
#13
கநமிகுதி செறிவு நடுத் தரப்பாடல் கஞ்சக்
கருவிநடு வானதயி ருடல்பருமை கநக்குங்
கநமகலங் கோரைபிரா ணித்திரளோர் கணிதம்
கடிநமிருப்புத்தடி பொன் முகிலெனவெண் ணிருபேர்
கநரசம் நீர் சமைக்குமன்னா தியின் சாரம் நெருக்கங்
கருப்பூரங் கரும்பின்வேர் பெருங்குரும்பை பிசினாம்
வநிதைய நுராகப்பெண் பிறப்பித்தாள் மகடூஉ
மநுசுவா யம்பூவா தியர்நீதி மந்த்ரம்
**435
#14
அநுமஞ்சள் கவுளொழுங்கோ ருபசருக்கம் தொடர்ச்சி
யாயுதம்தா குணமரம்நோய் சமீபமர ணமுமாம்
தநுவில்லோ ரிராசியற்ப மெலிவுமுர ளுடம்பு
சருமந்தா னவர்ப்பயந்தாள் நீக்கமுள தும்பேர்
அநுபந்தம் பகுதிவிகு தியிற்றொக்க வெழுத்தோ
டடித்தொடுத்த தின்றொடர்ச்சி தோடத்துற் பவமாம்
அநுபாவம் பெரியோர் தம் புத்தியை நிச் சயித்தல்
அபிப்பிரா யங்காட்டு மபிநயம்ப்ர பாவம்
**436
#15
அநங்கமா காயமுள்ள மங்கமிலா மையுமாம்
அநந் தம்விண் முடிவின்மை நாசமன்மை காகம்
அநந்தைசிறு காஞ்சொறிநன் னாறிகுப்பை மேனி
யறுகுகடு மரஞ்சீந்தி மேதிநிசெங் காந்தள்
தநங்கணிதத் திற்கூட்டற் குறிதிரவி யங்கோ
தநங்கொங்கை தன்மைபசு வின்கன்றுஞ் சாற்றும்
வநந்துளசி யழகுசலி லம்வீடு காடு
மயாநமலைச் சுனைசோலை பயணம் போ தலுமே
**437
#16
கநீநிகை கண்ணின் கருவிழி சிறுவிரல்
சுநீதிநன் னீதி துருவனைப் பெற்றவள்
அ நூகங் கழிபிறப் புக்குலஞ் சீலமாம்
அநூப மெருமைக் கடாநீர்ப் படுகையே
**438
#17
அந்தக னழிப்போன் கூற்றோ ரசுரனுங் குருடனும் பேர்
அந்தண ரறவோர் பார்ப்பார் அந்திய மதம மீறாம்
சந்ததி தநயன் கோத்ர மரபுவித் தாரம் பந்தி
கந்தநங் கொலைப்பொ ருட்டு முயலல்சூ சநம்ப்ர காசம்
**439
#18
தந்தம்பல் லிபக்கொம் பொத்த தாழ்வரை யுயர்ந்த கல்லாம்
தொந்தமே தொடர்பு செற்றந் துந்தியே வயிறு கொப்பூழ்
அந்தரி யுமையெண் டோளி யந்திலவ் விடம சைச்சொல்
சுந்தரி பவளந் துர்க்கை கௌரிசுந் தரப்பெண் ணும்பேர்
**440
#19
குந்தள மயிர்க்கு ழற்சி கலப்பையோர் தேசங் கூந்தல்
அந்திமுச் சந்தி பாலை யாழிசை யிரவு மாலை
குந் திபாண் டவர் தந் தாய்குற் குலுமரஞ் சல்ல கிப்பேர்
அந்திகை கபடம் பம்பந் திராயடுப் பிரவு சித்தம்
**441
#20
சந்திர காசங் சந்திரிகைகட்கந் தசமு கன்வாள்
சந்திரங் கருப்பூரம்பொன் சலிலங்கா மியங்கம் பில்லம்
இந்திர னந்த ரான்மா விறைவன் சூரியன்சு ரேசன்
இந்திரி யம்நேத்ராதி வாக்காதி யிரேத சென்ப
**442
#21
சந்து தூ துடம்பின் மூட்டு முடுக்குச்சந் தநம்பொ ருத்தாம்
பந்து மட் டத்து ருத்தி யெறியும்பந் துறவோ னண்பன்
துந்துபி கவறோ ராண்டோ ரரக்கன்பே ரியை மு ழக்கம்
தொந்துவ மிரட்டை போர்மை துநராசி யிராசி யப்பேர்
**443
#22
கந்நியோ ரிராசி துர்க்கை காளிகல் யாண மில்லாக்
கந்நியோர் நதித வப்பெண் கற்றாழை யத்த நாளாம்
சந்நியன் மணாள தோழன் றந்தைநிந் தியன்ற யாதன்
மந்நியு வேள்வி கோப மநத்துயர் வருத்த நாற்பேர்
**444
#23
தந்த சடம்நா ரத்தைபுளி வஞ்சி கபித்த மிருமிச்சை
பந்த நங்காற் றளைகாவற் படுத்தல் கயிறு கொலைகட்டல்
கந்த வதிவா யுவினகரம் வியாசற் பெற்றாள் காசிநியாம்
மந்தன் மூர்க்கன் சநிநோயன் மடிய னிற்பாக் கியன் மூடன்
**445
#24
உந்தி கொப்பூ ளோர் விளையாட் டுருளை நதிநீர்ச் சுழிமுந்நீர்
கந்தி கமுகு தவப்பெண்பேர் கந்தை பழந்தூ சுத்தரியம்
பந்தி யொழுங்கு பரிச்சாலை சிறைபத் தெழுத்துச் சந்தசுமாம்
இந்தி ராணி யோர்சுரதம் நொச்சி மரமிந் திரதேவி
**446
#25
சந்திரிகைபே ரேலம் நிலாத் தந்து பஞ்சி னூல்தந்த்ரம்
அந்து கயச்சங் கிலிகிணறு பதசா லம்நெல் லரிவண்டாம்
மந்து புத்தி யபராதம் வந்தை பெருமை புல்லுருவி
நந்தை கொத்தான் முதல்வட்டத் திதிசம் பத்து நீர்ச்சாலே
**447
#26
துந்நஞ் சின்னி மரந்தைத்தல் பிந்நம் பிளப்புப் பேதிப்பு
கிந்ந ரங்கிந் நரிநீர்ப்புள் சந்நி யுப்பங் கயன்செந்து
சந்நியம் போர் மணாட்டியின் சீ தநமங் காடி சநவாதம்
சந்நி வேச மூர்கட்டுந் தாநம் வீடு மனைப்புறமே
**448
#27
பந்தக மொற்றி பிணைப்படல் கட்டுச் சேவகா விருத்திநிற் பந்தம்
சந்தசு காயத் திரிமுத லியவே தங்கருத் ததீநம்வாஞ் சையுமாம்
நந்தந மகிழ்ச்சி யிந்திரன் சோலை நந்தநன் சுதன்மகிழ் வுள் ளோன்
கந்தள மதுரத் தொநியுப ராகம் நவாங்குரம் கலாபமோர் மான்பேர்
**449
#28
சந்திநி யேற்றாற் பொலிபசுக் காலந் தவறிப்பால் கறக்கின்ற பசு
நந்தியா வர்த்தந் தகரபா தபமோ ரரண்மனை நந்தியா வட்டம்
சந்திர காந்தம் நிலவின்மு னீர்கால் சலாகைவெள் ளாம்பலுஞ் சாற்றும்
துந்துமா ரம்பா தாதிக மிந்த்ர கோபந்தூ மக்கிர கப்பேர்
**450
#29
அந்த முடி வெல்லைநிச் சயமரண மிருள்கே
டழகவய வஞ்சமீ பஞ்சொபா வமுமாம்
சந்தம்நிற மழகுசந்த நம்பாட்டின் சந்தம்
சாயலபிப் பிராயந் தன்னிச்சைகுண மெண்பேர்
கந்தமரப் பணை மேகம் புயத்தினுச்சி கிழங்கு
கரணைநதிக் கரைமணம் விஞ் ஞாநாதி பஞ்ச
கந்தமிலே சந்திரள்வி யூகஞ்சம் பந்தம்
களிப்புக்கந் தகம்வகுப்பென் றைம் மூன்று நாமம்
**451
#30
குந்தந்தோ மரங்கண்ணோய் குதிரையற்ப செந்து
குருந்தம் வநக் கோதுமையோர் நிதிசக்ரச் சுழற்சி
பந்தமயிர் முடிகட்டுப் பெருந்துருத்தி யுடல்சம்
பந்தம்பா வின் றளை பந் தினில்விளக்குண் டையுமாம்
மந்தமசீ ரணம்யானைக் குலபேதங் கண்ணோய்
மத்து நிற்பாக் கியமற்ப மெல்லெனல் சோம் பலுமாம்
கந்தரம் நென் முளை முழைஞ்சு தொளைகழுத்து முகிற்பேர்
கந்துகம்பந் தொடுகுதிரை குறும்பர்குதிரையும் பேர்
**452
#31
அந்தரம்விண் ணெல்லையுடைத் தூசிடம் விசேடம்
அதற்காதல் புறம்பு வெளி மறைவு நடுப் பேதம்
அந்தரான் மாத்தனது தவிர்கையய லான
தவகாசந் தொளை குழியுள் ளவசரந் தீ மையுமாம்
மந்தரமெல் லெனப்போத லோர்மலைசு வர்க்கம்
மயிரின்வளை வகலமத்துக் கமண்டலமந் தாரம்
கந்தருவம் பிறப்பிறப்புக் கிடையிலுள பூதங்
காமரமாண் குயில்குதிரை பெருவயிற்றோர் மானே
**453
#32
கந்தளியோர் முழத்தளவிற் பெருவயிறு முன்னங்
காலினிடைக் கறுப்புமுள மிருகமோர் மரப்பேர்
சந்திபுணர்ப் பெல்லையொட்டோர் நாடகாங் கம்முச்
சந்தியந்தி யுடம்பாடோர் பண்சுருங்கை யோநி
நந்திசிறு பறையாநந் தஞ்சூது செக்கான்
நம்பனந்தி கேசனிட பங்கல்லா லாலாம்
மந்திரமே காந்தாலோ சனைமந்த வோசை
மனைநகரி மறைமொழிகாயத்திரியா தியுமே
**454
#33
தந்திரமுக் கிய முபயார்த் தகமருந்து தேசஞ்
சாத்திரம்வே தப்பிரிவி னோர்கலையு பாய
தந்திரம்யா கப்பிரயோகஞ்சேனை நெய்வார்
தறிகுடும்ப கிருத்தியம் வீண் சாதகஞ்சித் தாந்தம்
தந்திரியாழ் நரம்புடம்பி னரம்புறக்கஞ் சோம்பல்
தனமுடையோனுபாயகன்சாத் திரிகயிறு சீந்தி
கந்து பற்றுக் கோடுபண்டி யுள்ளிரும்பு தூணங்
காமம்யாக் கையின் மூட்டு நடுதறிநெற் குதிரே
**455
#34
சிந்து முச்சீ ரடியோர்நா டகப்பாட்டோர் யாறோர்
தேயமிப மதங்கடல்வா மநவுருவோர் ந தமாம்
விந்து வட்ட மாம்புள்ளி யட்டவற் கத்தெண்
வீசம்நீ ரின் றுளிபற் குறியொடறி பவன்பேர்
பந்து ரமுந் ந தவளைவோ டிரம்மியமன் னப்புள்
பந்தூக மெனல்வேங்கை மரமுச்சித் திலகம்
சந்தையுடம் பாடுபற்பல் வியாபாரத் தொழிலோர்
சார்கூட்டம் நிலைமையிச்சை வேதாத்தி யயநம்
**456
#35
சந்தாநஞ் சுரதருச்சந் ததிகுலம் பூட் டுதல்தும்பாம்
மந்தாரங் கவிரெருக்கோர் சுரதருவா னின்மறைப்பு
சிந்தூரம் புளிமரஞ்செந் நிறப்பொடி செங் கிடைதிலகம்
சிந்தூரி செங்கழுநீ ராத்திசெஞ்சே லையினுடையாள்
**457
#36
நந்தகன் மகிழ்வுள் ளோன்குல பாலன்
பந்தகி கற்பில் லவள் பிடி யானை
செந்நந மொழுகல் நீர்தேர் திமிசு
மந்தநங் கடைதல் யானை முகபடாம்
**458
#37
இந்தநம் விறகெரி யிடுகலன் சமிதை
மந்தரன் மெல்லெனச் செல்வோன் சூசகன்
வந்தியர் மங்கலப் பாடகர் மலடிகள்
மந்திரி பொன்ன னமைச்ச னிதிக்கோன்
**459
#38
கந்த பலிசம் பகமுகிழ் ஞாழல்
உந்த லுயர்த லேற லுகைத்தல்
வந்தி புகழ்வோன் மலடி மலட்டா
தந்திரிகைசீந் திக்கொடி சோம்பல்
**460
#39
இந்தளந் தூப முட்டியோர் பண்ணெனும்
தந்திநே பாள விதைசற்பம் யானை
இந்திரை செய்யாள் கடாரை மரப்பேர்
குந்திரை கோரை சிறுகோரை ஞாழல்
**461
#40
கந்தரா ளங்கல் லாலித்தி கல்லுகாய்
மந்தி பெண் முசு வாநரம் வண்டுமாம்
தந்து வாயன் சிலம்பிநெய் கின்றவன்
சிந்து வாரந் தநுசுவெண் ணொச்சியே
**462
#41
பந்தகம் பாம்பொடு பதுமகாட் டப்பேர்
சந்நயம் பிற்படை சம்பந் தந்திரள்
சந்தத்தன் கவசதா ரணன் சந் நாகத்தன்
சந்நிதி யென்ப கிட்டுகை சமீபமே
**463
#42
சந்நதி தொநிவணக்கம்
தந்நிய முலைப்பால் செல்வம்
அந்நிய ரயலோர் மற்றோர்
சந்நியை யன்னை தோழி
**464
#43
ஆநகம் படகம் பேரி மிருதங்க முகின்மு ழக்கம்
மாநதம் பொய்கை யுள்ளம் யாநம்வா கநம்போ தற்பேர்
காநநங் கமலத் தோன்றன் முகங்காடு வீடுங் காட்டும்
ஈநமே குறைவி கழ்ச்சி மீநமோ ரிராசி மீனே
**465
#44
காநமே காடு கீதம் தீநமே வறுமை கேடாம்
நாநம்நீ ராடல் நீராட் டின்றிர வியங்கத் தூரி
ஈநனே தள்ளப் பட்டோன் கீழ்மகனிகழ்ச்சி யுள்ளோன்
யோநிபெண் குறியி டங்கா ரணமுமிங் கிதமு மோதும்
**466
#45
ஏநம் பன்றி நவைபாவம் நூநங் குறைவு நிச்சயமாம்
சூநம் விடக்குப் பிரசவம்பூ சூநியம்பாழ் சநமின்மை
பாநம் புரத்தல் பருகுதலாம் பீநம் பருமை தசைந்துளது
தாந வன்சந் திரன் றகுவன் சாநு சமத்தாழ் வரை முழந்தாள்
**467
#46
மீநத் துவசன் மதன்வழுதி சூநுச் சுதன்விண் மணியிளையோன்
வாநப் பிரத்த மூன்றாமாச் சிரமந் தூக முண்முருக்காம்
ஆநர்த் தகம்நா டகசாலை யமரோர் தேயஞ் சநம்நாற்பேர்
தேநுக் கறவை பசுப்பொதுவாம் பாநுக் கிரணந் திவாகரனே
**468
#47
சீநமுப்ப தங்குலமான் பெரும்பாம்போர் நெல்லோர்
தேயம் நிபஞ் சேலை தந்து கொலைத்தொழில்வஞ் சனையாம்
தாநம்வலி புரத்தல்சுத்தி யிபம தம் வீ டவகா
சங்கொடைகண் டநமிருப்புச் சுவர்க்கமிட நிலைப்பேர்
மாநமகங் காரமந வெழுச்சிபிர மாணம்
வலிபெருமை நவைநாழி யாதியோர் கோபம்
வாநமுலர் மரம் வறட்சி கொத்தல்பு ற்பாய் சுகந்தம்
மழைவிண்ணீர்த் திரைபோதல் சுருங்கைசுவ ரடியே
**469
#48
சூநிர்த மினியமெய்ச் சொல்லு மங்களம்
பேநில மிலந்தைக்காய் வநமுருங் கைப்பேர்
தேநுகை யிளங்கற்றா மாதங் கப்பிடி
சூநைநந் தநியண்ணம் வதைக்குஞ் சூழலே
**470
#49
ஞாந மூர்த்தி மகேச்சுர னாமகள்
ஞாநமோக்கத்திற் புத்திநற் போதமாம்
தாந வாரி சதமகன் மாயவன்
ஞாநி சோதிடம் வல்லவன் ஞாநவான்
**471
#50
கீநாசன் மநமி டித்தோ னுழவன்க்ரு தாந்தன் முப்பேர்
மாநாதஞ் செவிசிங் கம்பே ரொலிபெய்யு முகில்மா தங்கம்
கேநார மென்ப கும்பி நிரையமண் டைப்பொ ருத்தாம்
காநீநன் மணமில் கந்நி காசுதன் வியாசன் கன்னன்
**472
#51
மைந்தரே புருடர் மாந்தர் மைந்தன்றிண் ணியன்ம கன்பேர்
சைந்தவஞ் சிந்து தேயப் பரிசிந்தூற் பவமிந் துப்பாம்
ஐந்திரங் கிழக்கிந்த் ரன்னூல் மைந்தென்ப மயக்கமாண்மை
ஐந்திரி சயந்தன் காகா சுரன்வாலி யருச்சு நன்பேர்
**473
#52
ஏந்தலே யுயர்ச்சி மன்னன் பெருமையேந் துதல்சி றந்தோன்
கூந்தல் பெண் மயிர்க லாபங் குசைமயிர் கமுகின் பாளை
பாந்தள்பே ரரவு பாம்பாம் பாந்தவ னண்ப னிட்டன்
வேந்தனிந் திரனா தித்தன் வியாழஞ்சந் திரனி ராசன்
**474
#53
காந்த மெனலோர் குணவணியோர் புராணம் பிரியம் காந்தக்கல்
சாந்தங் குளிர்ச்சி பொறுமையணைந் ததுசந் தநமோர் சுவையைம் பேர்
சாந்தி பொறுமை காமாதி யடக்கஞ் சுபந்தோ டக்கழிப்பாம்
சாந்து கலவைச் சேறுமணப் பொடிசந் தநஞ்சுண் ணச்சாந்தே
**475
#54
காந்தாரஞ் சிந்தூ ரங்கா டருநெறி யுபசற் காதி
காந்தார சொரங்கு றிஞ்சி யாழ்த்திற மோரி ராகம்
காந்தார தேய மோர்பண் காற்றூள்நாணற்கரும்பாம்
காந்தாரி சுயோத நன்றாய் கண்டத்துற் றெழுந ரம்பே
**476
#55
நாநா பலவெ னல் தவிர் வெனல்சொலும்
சேநாநி கந்தக் கடவுள்சே நாபதி
ஆநாகம் நீட்சி பொருமல் வியாதியாம்
பாநீயந் தெண்ணீர் பருகு வனவுமே
**477
#56
காந்த னிறையோன் காமுறு வோன்பெயர்
சாந்தன் பொறையோ னருகன் சந்திரன்
சாந்துவ மதுர மொழிநயப் புணர்வு
காந்தை பிரியை ஞாழல் காமிநி
@10 பகர வெதுகை
**478
#1
உபகார முலுப்பை யீகை யுபதிவஞ் சனை தேர்ச் சில்லி
உபதாபம் நோய்தா பப்பேர் உபதை சோ தனைகாணிக்கை
உபநாகம் விரண மாற்று மருந்துயாழ் நரம்புக் கட்டாம்
சபரியை பூசை சேவை கபிஞ்சலங் காடை யாந்தை
**479
#2
உபசத்தி சேவை யொன்றி லொன்று கூடுதல் கொ டைப்பேர்
அபசயம் பறித்தல் தோல்வி யபசற்பன் றூத னொற்றாள்
அபசிதி குறைவு பூசை யழிவொடு பிராயச் சித்தம்
விபணியங் காடி வீதி யங்காடி விலைப்பண் டப்பேர்
**480
#3
தபநமோர் நிரையம் பல்லா தகமுதிர் வேனி லென்ப
உபலங்கல் லரத நப்பேர் உபலைசற் கரைசுக் கான்பார்
சபலையே தூர்த்தை மின்னல் திப்பலி தாக்க ணங்காம்
அபிசத்தி யிரத்தல் நிந்தை அபிமர்த்தஞ் சமர்கள் ளாமே
**481
#4
அபிசநஞ் சநந பூமி குலங்குல விருது கீர்த்தி
அபிசவ முழுக்கு வேள்வி கள்ளுக் கூட்டுதலு மாகும்
அபிசாதன் றகுதி யுள்ளோ னறிஞனற் குலத்து தித்தோன்
அபிதாந மறைவு நாமம் அபிமத மிணக்க மிட்டம்
**482
#5
அபிநீதன் றுலக்கப்பட்டோன் பொறுமையுள் ளோன்றக் கோனாம்
அபிபந்நன் விபத்துள் ளோன்றப் புடையோன்சத் துருவாக் ராந்தன்
அபிமாநம் ஞாநம் நேச மகங்காரம் கொலைநாற் பேராம்
வபுநல்ல வுருவந் தேகம் வபைநிணம் விவர மென்ப
**483
#6
உபத்தமாண் குறிபெண் யோநி யுபத்திதி சமீபம் ஞாநம்
விபத்திவேற் றுமையா பத்தாம் விபந்நமே பாம்பு நட்டம்
அபத்தியம் பத்தி யம்மல் லதுமக்கட் பொதுவு மாகும்
அபிக்கியை யெழில்பேர் கீர்த்தியபீக்கண மிகுதி நிச்சம்
**484
#7
விபாகம்பக் குவமி னிப்புத் துற்கதி பங்கு வேறாம்
விபாகரன் கனலோன் பாநு குபேரன் வெண் கதிர்நி திக்கோன்
உபாகித மாரோ பிக்கப் பட்டதோ டெரிகொள் ளிப்பேர்
நபாசமா வணிகார் காலம் படிக்கந்தா மரை நூல் நாசி
**485
#8
கபாலமோர் குட்ட நோய்மட் கலத்துண்டந் தலைமண் டைப்பேர்
விபாவசுக் கனலோன் சோமன் விண்மணி யோர்முத் தாரம்
அபாவமில் லாமை நாசம் அபாங்கம்புண் டரங்க டைக்கண்
கபீதந மாம்பி ராத மரசுகல் லால்வா கைப்பேர்
**486
#9
உபசம் பந்த மகத்தட்ட பசுநன் கட்ட சாகாதி
உபரா கம்பொல் லாநெறியி ராகு கிராணம் பரிவாதம்
அபரா சிதன்வெல் லக்கூடா தவன்ம கேசன் பரந்தாமன்
அபரா சிதைவிண் டுக்ராந்தி சுவேதா சயந்தி துற்கையுமாம்
**487
#10
தபதி பிருகப் பதியாகஞ் செய்தோன் றச்சன் மெய்காப்போன்
அபலம் பலமற் றதுகொழுவாம் அபிரூ பன்பண் டிதனழகன்
விபவம் பெருமை திரவியப்பேர் விபுல மகலம் விரிவென்ப
அபவற் சநமுற் றத்துறத்தல் பரம கதியுங் கொடுத்தலுமாம்
**488
#11
தபமோ ருலக முதிர்வேனில் கிருச்சி ராதி தவந்தருமம்
கபியே கபமுள் ளோன் குரங்காம் கபிலன் றக னோர் முநிவன்
சிபியோ ரரசன் பூர்ச்சமரம் சிபையால் விழுதம் புயக்கிழங்கு
கபுரங் குடம்பத் திரக்கோரை கமுகு பிசின் சோம் பற்றனமே
**489
#12
உபகமமங் கீகாரஞ் சமீபகம நப்பேர்
உபசாரங் காணிக்கை சிகிற்சைசே வையுமாம்
அபசவ்வி யம்பிரதி கூலவலப் புறப்பேர்
அபிமரந்தன் படையச்சம் வதைபோரென் றறைப
சபலஞ்சீக் கிரம்பதற்ற மிலாபம் நிறை வேறல்
சஞ்சலமீன் குரங்கோர்கல் வெள்ளிரதந் தாழ்மை
கபிலை புண்ட ரீகயா னைப்பிடிவால் மிளகு
கரியமஞ்சணிறப்பசுவோ டிருவீடென் மரமே
**490
#13
உபக்கிரகஞ் சிறையி தவா னுபயோக முபக்கோள்
உபநிடதந் தருமமிரா சியம் வேதாந் தப்பேர்
உபக்கிரமம் விக்கிரமம் சிகிற்சையிது முதலென்
றுரைத்தல் மந்திரி சோதனையோ டறிந்து தொடங் குதலாம்
நபச்சரமே கங்காற்றுப் பறவைகிரகமுமாம்
நபச்சரர்வித் தியாதரர்விண் ணவர் நவக்கோ ளென்ப
அபிக்கிரக மகங்கரமாள் வினையெதிராக் கள்ளல்
அபிசங்க மாக்ரோச மவமாநஞ் சபதம்
**491
#14
உபதாநந் தலையணைவி சேடம்நே யம் விரதம் பந்து மொக்கும்
அபதேசம் பிரசித்தி நிமித்தமிடம் வியாசமிலக்காகு மென்ப
அபவர்க்கங் கிரியாவ சாநசா பல்லியமோக் கந்தி யாகம்
அபிகாரம் நெய்விடல்மோ கரித்தல்கள வெதிர்த்தலாயத்த மாதல்
**492
#15
உபாகிருத மந்திரத்தால் மகத்தட்ட பசுவுபத் திரவ மென்ப
உபாசநஞ்சொற் படி செய்தல் சிறுபீடம் கொலையம்பெய் துடலக்கற்றல்
உபாதாநம் விடையத்திந்த் ரியாகருடணம் போக்கி யப்பொ ருட்பேர்
உபாதிவிசே டணங்கபடந் தருமசிந்தை குடும்பந்தாங் குவோனுமாமே
**493
#16
உபகுஞ்சி கைசிற்றே லங்கருஞ்சீ ரகமாம்
உபகுல்லி யை திப்ப லிச்செடிவாய்க் காற்பிரிவு
உபசற்கம் பிராதியடை மொழியோர்நோ யுபத்திரவம்
உபசல்லி யம்மூரி னருகுபுலைச் சேரியுமே
**494
#17
அபய மிலாமச் சம்பய மற்றது
அபய னிற்பய னருகன் செம்பியன்
அபரம் பின்கரிப் பின்கால் பிற்புறம்
அபகா ரம்பறிப் புதவிக் கேடுமாம்
**495
#18
அபலா பம்மறைக் குஞ்சொன் னேயமாம்
அபியோ கமெதிர்த் தலமுத்தி யோகமும்
அபிரா மஞ்சுந் தரமின் புறுவது
சிபிவிட் டன்வழுக் குத்தலை யன்சிவன்
**496
#19
சபம்பசு வாதிகளின்குர மரவேர்
சுபஞ்சோ பநமோர் யோகம் பொலிவு
நிபங்குட மொப்பு நிமித்த மும்பெயர்
விபஞ்சி குறிஞ்சி யாழ்ப்பண் வீணையே
**497
#20
சுபத்திரை யற்சுதப் பிரியையோர் சுரபி
உபப்பி லவமுற் பாதமி ராகுவாம்
கபர்த்தஞ் சிவசடா சூடம் பலகறை
விபுச்சிவன் பிரபு வியாபக னித்தியம்
**498
#21
நிபாகஞ் சமைத்தல் வேர்வைதீ தாம்பலம்
அபீகன் குரூரன் காமுகனிற்பயன்
விபூதியைச் சுரியம் பெருமைவெண் ணீறு
சபேடங் கதுப்பி னெலும்பு விரித்தகை
**499
#22
வபந முண் டநம்வி தைத்தல்
இபமரக் கொம்பியானை
விபுதர்கற் றுணர்ந்தோர் தேவர்
தபு தலே கெடுதல் சாதல்
**500
#23
வெப்பமே விருப்பம் வெம்மை வைப்பிடம் வைத்த லூராம்
கப்பரம் பிச்சை யேற்குங் கலமண்டை கொப்பரைப்பேர்
பிப்பலந் திரும ரம்நீர் சேலைத்துண் டோர்புட் பேசும்
குப்பியோர் வளைமட் பாண்ட முறுக்காணி மயிர்மு டிப்பூண்
**501
#24
சப்பிய னம்பலத்தான் சற்குல புருட னென்ப
அப்பிரந் தேவ லோக மாகாய மேக முப்பேர்
வப்பிர மதில்ம திற்கீழ்க் குறடீயங் கரைவ யற்பேர்
விப்பிர லாபம் வீண்சொல் பகைச்சொல்விப் பிரயோ கம்மே
**502
#25
அப்பென்ப சமுத்திரம் நீர் தப்பென்ப குற்றம் பொய்யாம்
உப்பென்ப மகளி ராட லுவர்ப்புள தினிமை முந்நீர்
தப்புதல் துகில்ம ழுக்கல் தவறுதல் விலகு தற்பேர்
பப்புருக் கனலோன் பொன்மை பெருங்கீரி பரன யன்மால்
**503
#26
குப்பந் திடரூர் குவிவும்பேர் குப்பை குழுமல் பலகூளம்
சுப்பி ரம்வெள் ளப்பிரக மோர்யோ கம்பே ரொளிவெண்மை
சுப்ர தீக மீசாநத் திக்க யஞ்சு பாவையவம்
கைப்புக் கசப்பு வெறுப்பென்ப கொப்புள் குமிழி குமிழ்ப்பாமே
**504
#27
செப்பநடு நிலைமார்பு செவ்வைதெரு வழிப்பேர்
செப்பென்ப சம்புடஞ்சொல் லெதிர்மொழியு மொக்கும்
விப்பிரம மநுமாநம் பணிமாறிப் பூணு
மெல்லியர் த மியற்குணம்பி ராந்திசோ பையுமாம்
கொப்புமரக் கொம்புமயிர் முடியோர்கா தணியாம்
கொப்புளித்த லுமிழ்தல் கொப்புளமாத லென்ப
துப்புவலி சிவப்பரக்குத் துகிர்நெயுப கரணந்
துணைய நுப வந்தூய்தா யுதம் பொலிவுண் பனவே
**505
#28
கப்பண மிருப்புமுள் ளுங்கைவே லும்பேர்
சொப்பநங் கனாவொடு தூக்கம் ஞாநமாம்
பிப்பல கந்தையற் சரடு சூசுகம்
ஒப்பனை யலங்கரிப் புவமை யொண்ணுமே
**506
#29
இப்பியை சல்லகி மரம்பெண் ணானைப்பேர்
அப்புசஞ் சங்குநீர்க் கடம்பு தாமரை
அப்புசனிமகிர ணன்றந் வந்தரி
துப்புர வைம்பொறி நுகர்ச்சி தூய்மையே
**507
#30
பப்பரம் பரூஉவோர் தேயம்
கப்பரன் றிருடன் தூர்த்தன்
இப்பரெட் டியர்கோ பாலர்
செப்பலோ ரோசை சொல்லல்
**508
#31
கோபதி யிடப மிந்த்ர னிரவிகொற்றவன்ம கேசன்
சீபதி யரசன் மாயோன் சீபலி யவிரி நெல்லி
சோபநஞ் சுபமோர் யோகம் சோபையே காந்தி பிச்சை
யாபநங் காலந் தள்ளல் மறுத்தல் தா பித்த லென்ப
**509
#32
தீபந் தான் விளக்குச் சோதி சீபந்தங் கமல முன்னை
யூபம் பூவரசு வேள்வி வேள்வித்தூணுடற்குறைப்பேர்
வீபற்சன் கடிந சித்தன் விரோதன்பார்த் தன்கு ரூரன்
மாபற்ப மோர்பே ரெண்ணோர் மாநாக மோர்நி திப்பேர்
**510
#33
கூப மென்ப கிணறுகுழி கோபஞ் சினமிந் திரகோபம்
சூபம் பருப்பு மடைத்தொழிற்பேர் தூப மணற்குன் றொடுபுகையாம்
தாபந் துயரஞ் சந்தாபம் பாபிய தமன் பரத்ரோகி
கோபி சினத்தோ னன்னாறி யிடைப்பெண் ணோர்மண் கோபமுளாள்
**511
#34
கூபகமெண் ணெய்த் துருத்தி மரக்கலப்பாய் மரம் நீர்க்
கூவலொடு மதகின்வாய் மரமருங்குற் சுழியாம்
தாபநம்போர் மேற்சென்றோ ருறைபாடி வீடு
சமாதிபுஞ்ச வநம்வைத்தல் நாட்டுதலீ வித்தல்
கோபன்பார்த் திவன்பலகி ராமாதி காரி
கோசாலைக் கதிகாரி கோபால னாற்பேர்
நாபியிரண் டாம்வருணன் மிருகமத முதன்மை
நரபதி கொப் பூழுருளின் றொளைவிடபே தமுமே
**512
#35
ஞாபகம் நினைப்பரும் பொருணற் புத்தியாம்
தீபகம் விளக்கொளி செய்த லோரணி
தாபதர் சடைமுடிப் படிவர் மாதவர்
தாபிதம் வைப்பது நிச்சயிப்பதே
**513
#36
பூபதி மல்லிகை பூமிக் கதிபதி
ஆபர ணம்மலங் கார மணிகலன்
சாபம்விற் சிசுச்ச பிப்புச் சபதம்
கோபுரம் புரவா யிற்பெருங் கோரை
**514
#37
ஆபா தங்கா லம்பதநம் ஆபீ லந்துன் படையச்சம்
நாபீ லமுத்த மப்பெண்ணின் றொடைச்சந் தொடுநா பியினாழம்
ஆபோ கம்பூ ரணமுடைமை வருணச் சத்ர முயற்சிக்கை
காபோ தஞ்சத் தியட்சாரம் யமுநாஞ் சநம்பு றாக்கணமே
**515
#38
ஆபாச மென்ப கிரமப் பழுது தூடணையாம்
சோபாந மேறுங் கல்லின் படி தாழ் வாரப்பேர்
பூபா லர்பூ புத்திரர் பூமியை யாளுபவர்
கோபாலன் கண்ண னரசன் கோவி னைக்காப்போன்
**516
#39
காபாலி யீச னோரு ருத்தி ரன்காளி
சேபா லிகைபடுக்கைக் கச்சங் கருநொச்சி
கௌபீ நஞ்செய் கைப்பி ழைகோ வணமுபத்தம்
ஆபூ பிகனப் பஞ்செய் வோனே யதுவிற்போன்
**517
#40
நாப்பண்மத் தியந்தேர்த் தட்டு நடுவண்யா ழுறுப்பு நாற்பேர்
தீப்பிய மயிற்பூ டோமம் யாப்பென்ப கட்டுச் செய்யுள்
கரப்பென்ப புரிசை காவல் கதவுகை யணிவெண் ணீறு
சீப்பென்ப கதவு றுத் தாழ் மயிர்வாரி குலைக்காய்ச் சீப்பே
@11 மகர வெதுகை
**518
#1
அமதியே காலஞ் சந்த்ரன் அமரர்நண் ணலர்சா வில்லார்
சுமநச ரறிஞர் தேவர் சுமநசை புட்பம் பிச்சி
சமநமே கொலை சாந் தப்பேர் சமரம்போர் கவரி மானாம்
சமமொப்பு நடுவோர் தாளம் சாது போர் சாந்தி யெல்லாம்
**519
#2
தமமிருள் மயக்கம் பாவந் தமர்தொளை தம்ம வர்ப்பேர்
குமரனே யிளைஞன் மைந்தன் வைரவன் குகன்பு மானாம்
அமரியே ய முதந் துற்கை அமருடம் பொறாமை கோபம்
அமர்தல்மே வுதலி ருத்த லலர்தலோ டமர்த லென்ப
**520
#3
கமலந்தோல் செம்பு நீர்பங் கயம் நுரை யீரல் மான் பேர்
சமலமே பாவம் விட்டை தமிழென்ப தினிமை நீர்மை
அமலல்சே ருதல்நெருங்கல் அமளிபே ரொலிப டுக்கை
சமிவன்னி பயற்றி னெற்றாம் நமுசியோர் தகுவன் காமன்
**521
#4
தமிசிர மிருட்டி ராவாம் சமுதாயம் பொதுப்போர் கூட்டம்
திமிரங்கண் ணோயி ருட்பேர் திமிர்தல் பூ சுதலோ டப்பல்
சுமுகன்பண் டிதனல் வாக்கி கருடன் றன் சுதனோர் நாகம்
அமுதரே யிடையர் வானோர் அமுது பால் சுவைசோ றாமே
**522
#5
துமுலங்கை கலந்த போரா குலத்தொநி தான்றி யும்பேர்
அமையமா வாசை மூங்கில் அமைதிமாட் சிமைய டக்கம்
உமைகாந்தி புகழ்கா சான நெல்லுமா தேவி மஞ்சள்
அமைதல்சம் பவித்தல் மாண்ட லடங்குதல் பொருந்த லாமே
**523
#6
விமர்த்தநம் பிசைதல் பீடித் திடல் குழப் புதலழித்தல்
சமழ்ப்பெனல் வருத்தம் வெட்கம் சமித்துப்போர் சமிதை காட்டம்
சமிர்த்தியே நிறைவு செல்வஞ் சமுத்திரங் கடலோர் பேரெண்
அமைச்சன்மந் திரிவி யாழஞ் சமைத்தலே யமைத்த லட்டல்
**524
#7
உமாசுதன் கணேசன் கந்தன் சுமாலியோ ரரக்கன் கள்ளாம்
சமாயோகஞ் சமவா யஞ்சம் யோகம்ப்ர யோச நப்பேர்
சமூருவா லில்லாச் சித்ர ரோமமான் நரிச்சா யல்மான்
தமோ நுதன் றமோப கன்பெ லசந்திர னிரவி யங்கி
**525
#8
யமகம் விரத மோர்சொற்பல் பொருளின் றிரிபா வியற்றுகவி
கமடம் பிச்சைக் கலமாமை கமநம் பயண மசோகமரம்
கமமொப் புசித மநுகூலம் நிறைவு சமர்த்துக் கமகமுமாம்
தெமம் நிக் கிரகங் கிலேசாதி சகித்தல் சேறு தெண்டித்தல்
**526
#9
விமலை பம்பந் திராய் செய்யாள் வீரி யுமைமா சிலள்வாணி
நிமிர்த லோட லுயர்தற்பேர் ஞெமிர்தல் முறிதல் பரப்பலுமாம்
அமிர்தன் றந்வந் தரிதேவன் அமைவ னருக னடக்கமுளோன்
சிமிலி சிள் வீ டுறிகுடுமி யுமிழ்தல் தெவிட்டல் கொப்புளித்தல்
**527
#10
சமர்த்தன் சதுர சம்பந்நன நுகூ லன்சம் பந்தனுமாம்
இமிழ்த்தல் சிமிழ்த்த லொலித்தற்பேர் இமைத்தல் சிமிட்ட லொளிசெய்தல்
சமுத்தி ராந்தை சீதேவிப் பூடு சிறுகாஞ் சொறிபருத்தி
அமைத்தல் சமைத்தல் நியமித்தல் செய்த லமையப் பண்ணலுமே
**528
#11
சமாகா தம்வெஞ் சமங்கொலையாம் சமீரம் காற்றுச் சிறுவன்னி
சமாசம் விபத்தி தொக்கபதம் சுருக்கம் நராதி சமூகப்பேர்
விமாநங் கோயில் சுவர்க்கம் விண் ணவர் தந் தேரேழ் நிலைமேடை
சமாநன் னொருவ னொத்தவனோர் சரீர வாயு நல்லவனே
**529
#12
தமநம்பூ வுலைத்துருத்தி தழல் நெட்டிக் கோரை
தமநிநா குணங்கழுத்து நரம்புமஞ்ச ணாற்பேர்
கமநனிர ணியகருப்பன் மன்மதன்கா முகனாம்
கமலைவராங் கநைகமலா சநைகமலா லையப்பேர்
சமனியம னடுச்சமங்கா மாதியிலான் சாந்தன்
சமிதிசவை கொடுஞ்சமமொப் புமைசங்க மென்ப
குமரியோர் நதிகௌரி யிளமையள்கற் றாழை
கொற்றவைகந் நிகைசம்புத் தீவின் விபா கமுமே
**530
#13
அமரையம ராவதிதூ ண றுகம்புற் சீந்தி
அமலைசோ றுமைகீழா நெல்லியழுக் கில்லாள்
அமிர்தம்பா லினிமைநெய்நீர் சுரருணவு சுவர்க்கம்
அன்னமிர வாமை முத்தி யாகசே டம் பொன்
சமையமவ சரங்கரும நிச்சயஞ்சித் தாந்தம்
சங்கே தம் நியமமா சாரஞ்சை வாதி
சமையஞ்சம் பத்துக்கா லம்புத்தி யாணை
சபதம் பேச் சென்னவபி தாநம்பன் மூன்றாம்
**531
#14
சமாதாந மிருப்பிணக்கம் பற்றல் நித்ய கருமம்
தமாலம்வா ளிலை திலகம் பசும்பிடிவேய்ம் புறணி
சமாதிமந மொருப்படலிந் தியவடக்க மௌநம்
சாவுசமர்த் தநநியம முற்றுதலோ ரணியாம்
சமாபநங்கொல் லுகைமுகிவு பரிச்சேத மிணக்கம்
சமாபந்தம் பெறுகை கொலை துன்புறுத்தல் முகிவு
குமாரனறு முகனிளைஞன் யுவராசன் மகன்பேர்
குமாரிமக ளிருவாட்சி கற்றாழை குமரி
**532
#15
வமது வாந்தி புழைக்கை யுமிழ்துளி
சுமநம் நல்லிதை யம்மலர் கோதுமை
தமநன் வீரன் குரூரன் றகநனாம்
அமல மப்பிர கம்மழுக் கில்லதே
**533
#16
விமலமா சற்றது வோர்சி வாகமம்
திமித மீர முளதசை வில்லது
குமுதம் வெண் ணெய்தலோர் திக்குக் குஞ்சரம்
அமுதை சீந்தி கடுமரம் நெல்லியே
**534
#17
சமக்கிர மிகுதி நிறைவெல்லாம்
சமப்பால் முல்லை நெய்தனிலம்
நிமித்தம் நற்சொல் குறியேது
குமைப்பு நெகிழ்ச்சி யழிப்பும் பேர்
**535
#18
சமங்கை யெனல் வறட் சுண்டிமஞ் சிட்டை
சமஞ்சச நியாயம் நன்றா யிருப்பது
கமண்டலு வித்தி மரஞ்சல பாத்திரம்
இமஞ்சந் தநஞ்சீ தளம்பனி யென்ப
**536
#19
குமாரங் கிளிமா விலிங்குநற் செம்பொன்
சமீரண மெறிதல் கிடாரைத் தருப்பெயர்
சுமேதைநற் புத்தி யுளன்வா லுளுவை
அமோகை கடுக்காய் விழால ரிசியே
**537
#20
கொம்பல் கொந் துதல் முன் கோபம் வெம்பல் முன் கோபம் வாடல்
சம்பளங் கரைவ ழிச்சோ றெலுமிச்சை பொறாமை கூலி
அம்பிகா ராம்பி யோட மரக்கல நீர்ச்சா லாகும்
கம்பிசட் டுவம்வேய்ங் கீற்றுத் துகிற்கம்பி யுலோகக் கம்பி
**538
#21
தும்பிவண் டிதனாண் யானை சுரைக்கொடி கருவண் டும்பேர்
சம்பிர மம்ப தற்ற மாதரம் பரபரப்பாம்
சம்ப்ரயோ கம்பு ணர்ச்சி பிரதாநத் தொழில்சம் பந்தம்
வம்புவார் மிடாவ டாச்சொல் நிலையின்மை புதுமை வாசம்
**539
#22
சம்பர்க்கந் தொடல்புணர்ச்சி சம்பாதம் நெருக்கம் யோநி
சம்புக னரிச லேசன் சம்பூலந் தாழை நாவல்
சம்பையோர் தாள மின்னாஞ் சம்வேசம் படுக்கை பீடம்
பம்பையோர் நதிகு றண்ட மயிர்முல்லைப் பறைமுப் பேரே
**540
#23
சம்மத மகிழ்வி ணக்கஞ் சம்மதி ய நுச்சை வாஞ்சை
அம்மனை தாயம் மானை யம்மான்மா துலன்ற கப்பன்
அம்மை தாய் வருபி றப்போர் வனப்போர் நோய் தவப்பெண்ணைம்பேர்
சும்மைநெற் போர்நா டார வாரமூர் சுமையு மாமே
**541
#24
ஞமலியே மயிலும் நாயும் நாமம்பேர் பெருமை கீர்த்தி
தமி தனி யிராத்திரிப்பேர் தாமசி துற்கை கங்குல்
கமையென்ப பொறுமை பூமி காமர்கட் டழகு காதல்
சிமையமே குடுமி வெற்பாந் தேமநங் கறிநனைத்தல்
**542
#25
சும்ப கன்கா முகன் றூர்த்தன் கும்பி லன்றூர்ச் சடிதிருடன்
கம்ப மசைவு நடுக்கந்தூண் கயத்தூண் விளக்கின் றண்டென்ப
சம்பந் தொழுநோ யிரும்புப்பூண் டடிவக் கிரப்பற் கொடிறிடம்ப
சம்பங் குலிசம் லிகுசமங்க தேயம் சரக்கூ டோருண்டி
**543
#26
அம்ப ரீடம் போர்வறையோ டாம்பி ராதம் பரியின் மறி
அம்பரீட னோரரசன் திரியம் பகனா யிரங்க திரோன்
உம்பர் விண்விண் ணவர்சுவர்க்க முயர்ச்சி மேலுவ் விடம்பார்ப் பார்
வம்ப லரந்நி யர்புதியோர் வம்பன் சோர சுதன்றுட்டன்
**544
#27
உம்பல் குலஞ்சந் ததிதந்தி கிடாயெ ழுச்சி யுரனறு பேர்
நம்பல் விரும்பல் விசுவசித்தல் பம்பல் படர்ச்சி பொலிவெழுச்சி
கொம்பு தந்த மரக்கொம்பு விலங்கின் கொம்பூ துங்கொம்பு
சிம்பை பயற்றி னெற்றவரை தும்பை பொருத லோர்புதலே
**545
#28
மம்மர் மயக்கந் துன்பப்பேர் பொம்மல் சோறு மங்கலமாம்
செம்மல் பெருமை செருக்குமகன் சிறந்தோ னிறைவன் பழம்பூவாம்
விம்ம லழுத லிறுகுதற்பேர் வெம்மை விருப்ப முட்டணமாம்
கொம்மை யிளமை கைகுவித்துக் கொட்டல் வட்ட முலை திரட்சி
**546
#29
அம்மணியி னொளிசுகம்போர் சிரிப்பழைப்புன் மத்தம்
அஞ்சமேழிசையாதி யளவு பரப் பிரமம்
அம்மிடைச்சொல் விகுதிபுள கந்தீர்க்கஞ் செருக்கோ
டம்புநியோ கம்வக்ர வாக்கியங்கும் பிடுமாம்
கம்முடிநீர் சுகம்விண்மீ னிந்திரியம் வயலா
காயம் வெப்பங் கிங்கிணிவாச் சியங்கீதம் புவிசொற்
கம்முகில் சூ நியவிந்து நகர்படுக்கை யுறக்கங்
கண்டைகட்ட நம்கிருபை வார்த்தைபல கையுமே
**547
#30
சம்முடிவு சுகஞ்சுபம்நீர் புகழொளி நூல் சுவர்க்கம்
சநநம்ஞா நம்த்யாநம் விமலம் நித்தஞ்சிரேய
சம்மறைவு சுழற்சிபுயற் காற்றரைப் பூண் களிப்புச்
சகோரம் நிவா ரணம் நட்டந் தேர்த்தடஞ்சூழ் வதுமாம்
தம்முனிவு வெள்ளைகறுப் பகலம்வைராக் கியம்வால்
தநந்தாந்யங் காட்சிகண்ஞா நம் த்யாநம் பரிசுத்
தம்மனைபா நம்புணர்ச்சி பயநிவா ரணம் நிச்
சயம்தாதுர் வாதம்வட மொலிகளத்ர மிடைச்சொல்
**548
#31
பம்மலை பொன் சுபலக்க நம்விண்மீனிராசி
பங்குவிகற் பங்கலகம் சமைத்தல் விந்து கௌத்து
பம்முகில்விண் ணொளிவண்டு கணங்கநஞ்சூல் கருத்துப்
பருவமதங் குடந் திலகம் பக்கஞ்சக் கிரப்பேர்
சம்வதநம் வசீகிருதஞ் சமாலோசந் தருக்கம்
சம்வர்த்தம் பிரளயமோர் முகில்வருடந் தான்றி
சம்வித்துக் கருமநிச் சயமொழுக்கம் ஞாநம்
சவை பெயர்போர் பேசுகைசங் கேதமுடம் படலே
**549
#32
அம்பணம்வா ழைத்தண்டோ டாமையளக் குங்கால்
அம்பட்டை முல்லைபங்கம் பாளைபுளி யாரை
கும்பந்தோ ளணிகரியின் மத்தகமோ ரிராசி
குடஞ்சிவதை குற்குலுக்கூட்டுவது தொடுப் பதுமாம்
தம்பமசை வற்றுறல் நெல் லாதியின்றாள் யானைத்
தறிபணைக ளிலாமரந்தூண் கற்கங்கை தவப்பேர்
விம்பமடை யாளமிரு சுடரின்வட்டம் பிரதி
விம்பமோர் சிவாகமங்கொவ் வைக்கனிசொ ரூபம்
**550
#33
அம்பரம்விண் ணிதழாடை சுகந்திமன்றம் பாவம்
அம்பிகைதா யுமையத்தை திருதராட்டிரன்றாய்
சம்பரமீன் குட்டேற்று நெடுமயிர்மான் வித்தஞ்
சலிலமற் புதஞ்சிம்பு ளோர்பௌத்த விரதம்
அம்பலஞ்சித் திரகூடம் வெளிசவையு மாகும்
அம்பல்சில்லோ ரறிந்து புறங் கூறல்பழி மொழிப்பேர்
சம்பவங்கா ரணம்பெறுகை யாதேயங் களுக்கா
தாரங்களின் மிக்குள் ளது சநநம் நாற்பேர்
**551
#34
கம்பளம் நீ ருத்தரியம் கீடங்கம் பளிகோக்
கழுத்தினணர் பூணூற்போ லிடுந்தாரோர் நாகம்
கும்பிசிறு குமிழ்யானை தொண்டி கொட்டைப் பாசி
குடாவயிறாண் முதலைபா திரைநிரையஞ் சேறாம்
கம்புமரக் கழிசங்கு நத்தையோர் தவசம்
கைவளைகச் சோலஞ்செந் தினைகழுத்துக் கைம்மா
சம்புநா வற்றருவோர் தீவயன்மால் சிவனோர்
தடி நிசிநன் பத்தியகத் தியமுளகா வியமே
**552
#35
கும்பசன் விற்றொழிற் குருவ கத்தியன்
அம்பரோ ருபரச மோரூ ரவ்விடம்
கம்பல மென்பமேற் கட்டி கம்பளி
அம்புநீர் வெட்டிவேர் பாண மாகுமே
**553
#36
தும்புபூட்டிடுகயி றொடுசி லும்பல்நார்
அம்புசந் தாமரை நீர்க்க டம்புமாம்
கிம்புரி யோர்முடி யுறுப்புக் கட்டும் பூண்
செம்புலம் பாலைசேர் நிலஞ்செ ருக்களம்
**554
#37
அம்பாலி கைபாண்டு வின்றா யியக்கியுமாம்
ஐம்பால்பெண் கூந்த லாண்பால் முதலியன
கம்பீர முள்ளக் களிப்புடனா ழப்பெயராம்
சம்பீர மென்பது கடாரை யிருமிச்சை
**555
#38
சம்பாளஞ் சேறு நீர்ப்பாசி யுஞ்சாற்றும்
சம் பூகம் நத்தை யிபமத் தகத்தின் கீழ்
சம்போகம் பூழ்க்கை புணர்ச்சி ய நுபவமாம்
கம்போசஞ் சங்கோர் தேயங் கயப்பேதம்
**556
#39
அம்ம வுரையசைச் சொல்கே ளெனலுமாம்
சிம்மந் தகர மரங்கோணல் மெல்லெனல்
கம்மிய ரோர்தொழிற் செய்வோர்கண் ணாளர்பேர்
அம்மிலம் புளிப்புப் புளிபுளி வஞ்சியே
**557
#40
சம்மூர்ச் சநந்தான் மயக்க மளாவல்
உம்மை கழிபிறப் பும்மென் னிடைச்சொல்
செம்மை பெருமை செவ்வை சிவப்பாம்
மைம்மை மலடி மலட்டெரு மைப்பெயர்
**558
#41
பூமகள் பூமின் செய்யாள் பூமிபூ தலமி டப்பேர்
வாமநங் குறளோர் திக்கின் மதக்கய மோர்பு ராணம்
ஆமநா யங்கு லம்வே தாகமஞ் சம்ப்ர தாயம்
ஏமபுட் பம்ம சோகு சம்பகஞ் செம்பரத்தம்
**559
#42
சாமமோ ருபாயம் யாம மின் சொற்சா மளமோர் வேதம்
சேமமங் களம்ப டைத்த பொருள்காத்தல் சிவக திப்பேர்
சோமம் நீர் கருப்பூரம்மோர் கொடியதன் சாறுஞ் சொல்ப
தோமமே திரள்படைப்பேர் தோமர மெறிவேல் கைவேல்
**560
#43
காமர மடுப்புக் கீத மத்தநாள் காத்தண் டென்ப
காமலஞ் செவிம லர்ப்பூண் நீரிலா நிலங்கா மாலை
கோமள மிருது நீராம் சாமளங் கறுப்புப் பச்சை
ஊமனூ மையன் கூ கைப்பேர் ஓமியோ மத்தீ நெய்யே
**561
#44
காமன் மன் மதனிச் சிப்போன் காமுகன் சதுரன் றூர்த்தன்
பாமன்சூ ரியன்கு ரோதன் பாமரன் கயவன் மூடன்
வீமனோர் பாண்ட வன்மா னிடமேந்தி விதற்பர் கோமான்
கோமுக மேளப் பாண்ட மிலேபநங் குடிலா காரம்
**562
#45
காமுகை காம முள்ளாள் கயப்பிடி குருக்கத் திப்பேர்
மாமுநி கும்ப யோநி சிநவரன் கொத்த மல்லி
சீமையே பிடரி சாதி கேத்திரந் தேச மெல்லை
தேமிடந் திசைதித் திப்புத் தேயந்தேன் மணங்கள் ளென்ப
**563
#46
சாமாதா சூர்யா வர்த்தம் வல்லவன் மகடன் கேள்வன்
கோமானிந் திரனா தித்தன் பசுவுள்ளோன் குரவன் வேந்தன்
சீமூதஞ் சைல மேகம் பிடிப்பீர்க்குத் தேவ தாளி
ஆமோத முவகை தூரங் கமழ்பரி மளமு மாமே
**564
#47
தூம கேதுக் கனலோன்வா லுள்ள சுக்கை யெரிகொள்ளி
வாம நன்மா யவன் குறளன் மாமை யழகு நிறம் வடிவம்
காம மநுச்சை தன்னிட்டங் காத லுடம்பா டிந்திரியம்
நேமம் சுற்று மதில் பள்ளம் நேரஞ் சூது முறிவதி
**565
#48
வாம மிடப்பா லி தமலது வனப்பு முலையோ ருட்சமயம்
சோம வற்க மென்பபெருங் குமிழ்வெண் கருங்கா லியுஞ்சொல்ப
யாமை யுவதி நன்னாறி யிரவு ஞாழல் கருஞ்சிவதை
ஆமி டைச்சொல் லோர்விகுதி யசைச்சொல் ஞாந நிச்சயமே
**566
#49
ஐம வதிவெள் வசம்புமைவிண் ண திகுங் குட்ட மரிதகியாம்
கௌம மென்றூ சட்டாலை வெண்பட் டுக்கா சானநெல்
பெளம னரகா சுரன் செவ்வாய் சௌமி யஞ்சோ பதஞ்சாந்தம்
சௌமி யன்சோ மனைத்தெய்வ மாகக் கொண்டோன் புதன்சாந்தன்
**567
#50
சாமா நியமே பொதுவான தொப்பா னதுசா தியுமாகும்
சீமா னழகுந் திருவுமுளோன் திருமா லருகன் மஞ்சாடி
தீமா னறிஞன் றேவகுரு ஏமாங் கன்வே தியன் கருடன்
கோமே தகம்பத் திரகந்தக் கோலம் பீத மணியென்ப
**568
#51
தாமமோர் முடியுறுப்புக் காந்திபிர பாவஞ்
சௌரியம்பட் டணங்கொன்றை கயிறு தும்பு பூப்பூந்
தாமமணி வடங்கிரணஞ் சுகம் வீடு சநநஞ்
சரீரமிட மெனப்பதினே ழபிதாநஞ் சாற்றும்
சோமன்மகே சன்றநத னோர்வசுவோர் வள்ளல்
சுதாகரன்மா ருதன்பி திர்தே வதையுடையா டைப்பேர்
வாமனரு கன்புத்த னுருத்திரன்மன் மதனாம்
மாமருந்து வெள்ளுள்ளி யதிவிடையஞ் சுக்கே
**569
#52
தாமரசம் தாமரைதாம் பிரம்பொன்னு மாகும்
சாமுத்ரஞ் சரீரவிலக் கணமிலவ ணாதி
நேமிகிணற் றுறையுருளின் விளிம்புசுவ ரடிமுந்
நீர்வட்ட மான துசக் கிராயுதமு நிகழ்த்தும்
வாமிகழு தைப்பெட்டை பெண்குதிரை வாம
மதத்தினன் பெண் ணரியோடொட் டகப்பிடியும் வகுப்ப
ஆமிசமூன் கைக்கூலி சம்போகஞ் சுந்த
ராகார ரூபாதி யநுபவப தார்த்தம்
**570
#53
ஆமம் பக்குவ மல திளங் காய்நோய்
ஏமம் பொன்மய லின்பங் காவலாம்
ஓமந் திருநீ றோர்மருந் தாகுதி
பாமங் கிரணஞ் சிரங்கு நோய்சினம்
**571
#54
யாம மெனலொடுக் குகை தடை சாமம்
வீம மெனல்பயங் கரம்புளி வஞ்சி
சாமன் மதனற் கிளையோன் சௌமியன்
யாமி குலப்பெண் ணுடன் பிறந் தாள் பெயர்
**572
#55
வாம தேவனோ ரிருடி மகேசன்
கோமி நரியுபா சகன் கோ வுடையோன்
நாமென லச்சமுந் தன்மைப் பன்மையும்
ஓமோர் விகுதி பிரணவஞ் சம்மதம்
**573
#56
தாமதம் பைய வெனல்சற்ப மோர்குணம்
ஆமல கந்தான் பளிங்கொடு நெல்லியாம்
காமி புறாச்சக்ர வாகங் காமுகன்
காமிநி காம முளாள் புல் லுருவியே
**574
#57
கோமாட்டி யாசாளரைசிகோ வுள்ளவள்
சீமாட்டி செல்வ முடையா ள ழகுளாள்
மாமாத்ரன் செல்வன் மந்த்ரியா னைப்பாகன்
தாமார்க் கவம்நா யுருவி பிடிப்பீர்க்கே
**575
#58
சாம்பரி யிரதி மாயை தாம்பிரஞ் சிவப்புச் செம்பாம்
ஆம்பல்வேய் கள்ளூ துங்கொம் படைவுவெள் ளல்லி யானை
தூம்புவே யளக்குங் காலுட் டொளையருஞ் சுரம்வா யிற்பேர்
சாம்பேயஞ் சிறுநாகப்பூப் பூந்தாது சம்ப கம்பொன்
**576
#59
ஓம்ப லிவ றல் காப்பாற்ற லொழித லழுங்கு வித்தலுமாம்
காம்பு வேய்பூந் தாள் பட்டுத் தாம்பு கயிறு தாமணிப்பேர்
மேம்பா டதிகப் புகழ்மேன்மை பாம்பா யிலிய மோர்செந்து
காம்போ சம்வெண் கருங்காலி புன்னை கம்போ சக்குதிரை
**577
#60
சாம்ப ராயம் விபத்து நிகழ்வுபோர்
கூம்பல் குவிதல் ஒடுங்கல் குமிழ்மரம்
சாம்பல் பழம் பூச் சாம்ப ரொடுங்குதல்
தேம்பல் மெலிதல் பழம் பூ வாடுதல்
@12 யகர வெதுகை
**578
#1
பயசென்ப நீர்பா லின்பேர் பயமேநீர் பயன்பா லச்சம்
பெயர்புகழ் பெருமை நாமம் பெயன் மழை மழைத்துளிப்பேர்
அயர்தலே சோர்தல் செய்தல் அயர்வென்ப மயக்கஞ் சோர்வாம்
பெயர் தல்வே றாத லாடல் பேர்தல்மீ ளுதல்ந டத்தல்
**579
#2
அயம் நலந் தருமுற் கன்ம மாடுநீர் பரியி ரும்பாம்
இயமொலி வாச்சி யஞ்சொல் லியல் பொழுக் கந்தன் மைப்பேர்
கயமாழங் குளம்வீ டோர்நோய் கரிபிரளயங்கீழ் தேய்வாம்
நயமுப சார மின்பம் நலம் நீதி சூதின் பேதம்
**580
#3
புயமென்ப முன்கை தோளாம் புயல்மழைக் காற்று மேகம்
வயம் வசம் வலிபுள் ளென்ப மயன் றச்ச னசுர சிற்பி
அயலேயந் நியஞ்ச மீபம் அயில் வேலா யுதங்கூர் மைப்பேர்
இயலென்ப சாயல் பண்போர் தமிழ்நடை யோத்து மேற்கும்
**581
#4
செயல்செய்கை யொழுக்கங் கன்மம் செயிரென்ப சினங்குற் றப் பேர்
பயல் சிற்றாள் பாதி பள்ளம் பயன்சொல்லி னுரையி லாபம்
மயல்செத்தை பேய்ம யக்கம் வயல்நன் செய் மருத வேலி
முயலொரு மிருகம் போராம் மொய்ம்புதோள் வலிகொ ழுப்பே
**582
#5
உய வைகாக் கணங்கான் யாறாம் உயிரென்ப காற்றுச் சீவன்
வியளீகந் துன்பம் வெள்கல் வெறுப்புக்கா ரியமன் மைப்பேர்
வயிரம் பூண் கட்டு வச்ர மணிவச்ரா யுதம ரக்காழ்
வயிரியர் மதங்கர் கூத்தர் மயிலைமீ னிருவாட் சிப்பேர்
**583
#6
குயில்சொல்லுட் டொளையோர் புள்ளாம் குயிற்றல்செய் திடலி ழைத்தல்
குயி றலே செறிதல் சொல்லல் கூவுதல் தொளைத்த லும் பேர்
பயிலலே பழகல் கற்றல் பயில்சஞ்ஞை சொல்லு மாகும்
யயுநெடுந் தடிது ரங்கம் பரிமேதக் குதிரை யென்ப
**584
#7
இயக்கமே யியங்கல் பீடாம் இயக்கன் குய் யகன்கு பேரன்
தியக்கமே கலக்கந் தேங்க லியற்றலுண் டாக்கல் செய்தல்
நயத்தல்நள் ளுதல்வி ரும்பல் நன்குற லுபசரித்தல்
பயத்தல்பெற் றிடலுண் டாதல் பயப்பென்ப நிறம்ப சப்பே
**585
#8
இயங்குத லசைதல் போத லொளி செய்த லுலாவ லென்றாம்
உயங்கல்வா டு தல்வ ருந்தல் இயம்பலே யொலித்தல் சொல்லல்
வியஞ்சநங் கறிகுய் யம்மொற் றெழுத்தடை யாள மீசை
சயம்புமால் சிவன்விரிஞ்ச னருகன்றா னேதா னாதல்
**586
#9
நியதியே யியம மூழாம் நேயமே நேச மெண்ணெய்
கயவர்கீழ் மக்கள் கள்வர் காயலுப் பளம்பு காராம்
பயின்பிசி னுட்கு ருத்துப் பாய்மாவாம் பரிபு லிப்பேர்
வயினிடம் வயிறு வீடு வாய்மைசொல் வலிமை மெய்ம்மை
**587
#10
அயநம் வீடு வழிதெற்கும் வடக்கு மாஞ்சூரியகதியாம்
நியமம் விரத முடம்பாடு பொறை நிச் சயம்நித் தியகருமம்
குயமே கொடுவா ளிளமை முலை குயவு சிறுதேர் கறிகரித்தல்
வியவ னேவு வோன் வீரன் வெயில் சூரியன்றன் கதிரொளியே
**588
#11
நியக்கங் கீழ்மை கடாவெல்லாம் வியத்தம் புத்தி தெரிந்தது மாம்
நியக்கு ரோத மாலமரங் குறுக்கா யிருகை நீட்டளவை
வயத்தை நெல்லி காகோளி சிற்றே லம்யௌ வ நமுள்ள
வயத்தை யல்பொன் னாங்கண்ணி சீந்தி யிலவ மரமேழ்பேர்
**589
#12
வியப்பாச் சரியங் கொண்டாட்டம் வியர்த்தல் வேர்த்தல் சினக் குறிப்பு
உயிர்ப்புச் சுவாசங் காற்றென்ப பயிர்ப்ப சுத்த மருவருப்பு
பயிற்றல் பழக்கல் கற்பித்தல் வியுட்டி நிறைவு துதிபலனாம்
வியுட்டம் பிரயோ சநந்திவசம் வெடியல் சுடப்பட் டதுமாமே
**590
#13
சயந்தன் சிவனிந் திரசு தன்பேர் நயந்தோ னெனல்கா தலனண்பன்
சயந்தி யுமையிந் திரதாயை பதாகை தழுதா ழையுமாகும்
இயந்தி ரந்தே ரெயிலுறுப்போர் பாண்டந் தேவா திட்டாந
இயந்தி ரஞ்சூத் திரப்பொறிசெக்காலை திரிகை கண்ணியெனும்
**591
#14
வயசுபுட் பிராயம்யௌ வநஞ்சிசுத்து வாதி
மயமுருவங் கோவேறு கழுதையொட் டகப்பேர்
சயநம்வெல் லுதலொடுநித் திரைசுரதம் படுக்கை
சயமதிற்கீழ்க் குறடுவெற்றி வெஞ்சமங்கை கூட்டம்
இயமங்கொல்லாமை முத லாவுடற்சா தநத்துக்
கேற்றநித் தியகருமம் தடையொடுக்கு தலுமாம்
சயையுமா தேவியவள் சகிகடுக்காய் முன்னை
தழுதாழை மூன்றாம்வட் டத்திதியு மாமே
**592
#15
வயவன் கரிக்குரீஇ வலியான் றிண்ணியன்
இயவர்தோற் கருவி யாள ரிழிஞர்
கயவு பெருமை மேம்பாடு களவுமாம்
பயறுசித் திரைநாள் பருப்புள தாநியம்
**593
#16
வயமா அரிமா மதமாப் புலிபரி
இயமாந னான்மா யாகவேந் தன்பெயர்
வியவா யம்மை து நமறை வென்ப
கயவாய் கருங்குரீஇ பேழ்வாய் கழிமுகம்
**594
#17
நியமித் தல்நி ரூபித்தல் விதித்தல்
அயிர் நுண் மணல் கண்ட சற்கரை நுண்மை
பயிர்புட் குரலொடு நெற்பயி ராதியாம்
கயில்பூணின் கடைப் புணர்ப்புப் பிடரே
**595
#18
வியங்கங் குறைந்த வவையவந் தவளை
இயந்தா யானைப் பாகன் சாரதி
நியந்தா சாரதி யேவா நின்றவன்
பயம்பு கரிவீழ் படுகுழி பள்ளம்
**596
#19
இயவுள் புகழாளன்றெய்வம்
எயிறு பல்யா னைக்கொம்பாம்
தியுவா காயந் திவசமனல்
மயுவோர் மிருகங் கிம்புருடன்
**597
#20
வியாகுல மொலிக லக்கம் வியாதிநோய் நறுங்கோட் டப்பேர்
நியாமக னோட முய்ப்போன் மீகாமனியமிப் போனாம்
வியாய தங் கடுமை நீளந் தீவிரம் வியாபா ரப்பேர்
வியாழமே சிங்கந் துட்ட கயம்வியாக் கிரம்பாம் பென்ப
**598
#21
வியாழனே கபடி துட்டன் வியாபாரக் தொழில்செட் டென்ப
வியூகமே படைப்புத் தற்கந் திரள்படை வகுப்பு மேவும்
வியோகமே பிரிதல் சாதல் வியோமமா காயம் நீராம்
பயோதர மேகங் கொங்கை பெருங்கோரை யிளநீர் பன்னும்
**599
#22
வியாதன் றுட்டன் வியாசமுநி வேடன் வேட்டல் வேளாதோன்
வியாமங் குறுக்கா யிருகையுநீட்டளவை யொடுக்கந் தடைமேவும்
நியாய மடைவிப் பது தக்க தற நூ னெறியிற் றிறம்பாமை
அயோகம் பிரிவு கொற்சமட்டி கடிந முயற்சி வியோகமுமே
**600
#23
வயாவி ருப்பம் வருத்தஞ்சூல் வயாநோய்
கியாதி பிரசித்தி பிருகுவின் பத்திநி
வியாகாதம் விக்கந மோர்யோக மென்ப
சயாலு பெரும்பாம்பு நாய்மிகத் தூங்குவோன்
**601
#24
தியாக மெனல் கொடுத் திடல் தள் ளுதற்பேர்
வியாசங் கபடம் வித்தாரம் நிபமாம்
வியாட மூன் றின்னு மிருகம் பாம்பெனும்
பயாநக மிராகு புலிபயங் கரமே
**602
#25
மயூகங் கிரணஞ் சுவாலை யொளியாம்
மயூர கம்நா யுருவி மயிற்றுத்தம்
மயூர மயிலும் மயி ற்சிகைப் பூடும்
வியூட மகலம் வகுப்புச் சேர்ந்ததே
**603
#26
மெய்யென்ப வுடலுண் மைப்பேர் மெய்யரந் தணர்பொய் யில்லார்
மொய்செருக் களம் போர் வண்டு தொகுதி தாய் மொய்ம்மை யானை
செய்கைசெய் தொழிலொ ழுக்கம் செய்யோன்செவ் வியன் சிவந்தோன்
கொய்தலே நெரிபிடித்தல் பறித்தல்கத் தரித்தல் கூறும்
**604
#27
நெய்தலைந் திணையி னொன்றோர் நீர்ப்புதல் படரதி நெய்தல்
பெய்தலே செறித்தல் வார்த்தல் பொழிதலோ டிடுதல் பேசும்
வெய்துறல் சினக்கு றிப்பு வெருவந்தக் குறிப்புத் துன்பம்
நெய்வமூழ் கடவு ளென்ப தொய்யல்சே றுழவோ டின்பம்
**605
#28
பொய்மெய் யன்மை மரப்பொந்து வெய்யோன் கொடியோன் கொடுங்கதிரோன்
குய்ய முபத்த மறைவுளது கூர்ம மிராசி யங்கபடம்
சய்ய மோர்வெற்பாரோக்யஞ் சய்யை சயநஞ் சொற்றொடுத்தல்
தொய்யில் மகளிர் முலையினிற்சாந் தெழுதுங் கோல மோர்கீரை
**606
#29
குய்யே நறும்புகை தாளித் திடுகறி
நெய்யோர் கவ்வியம் நிணமெண்ணெ யாதி
பொய்தல் மகளிர் விளையாட் டவர்குழாம்
நெய்வான் சித்திரை நாணெய் பவனே
**607
#30
ஐயமே பிச்சை பிச்சைப் பாத்திர மநுமா நப்பேர்
வையந்தேர் சிவிகை பண்டி வாகந முரோணி பூமி
ஐயர்வே தியர்புத் தேளி ரருந்தவர் குரவ ரென்றாம்
கையரே திருடர் நீசர் கையாறு துன்பஞ் செய்தி
**608
#31
தையல்பெண் ணழகு தைப்பாம் பையுணோய் துன்ப மற்பம்
கையறல் படையு றுப்புக் கெடல் செயலறலுங் காட்டும்
ஐயன்மா சாத்தா மூத்தோ னப்பனா சாரி யன்பேர்
ஐயையே புதல்வி காளி யம்பிகை தலைவி துற்கை
**609
#32
சாயக மம்பு வாளாம் நாயகன் றலைவ னாதன்
வாயசி கருந்தக் காளி பேயத்தி காக்கைக் கொவ்வை
ஆயதி பொருந்த னீட்சி பிரபாவம் வருங்கா லப்பேர்
தேயம்நா டிடந்தி ருட்டாம் தீயர் தீக் குணத்தர் வேடர்
**610
#33
நேயம் நீ ரின்வி சேட குணமெண்ணெய் நேச மென்ப
மாயம் பொய் கறுப்பு வஞ்சம் மாயன்மால் கரியோன் வஞ்சன்
சாயலொப் பழகு நுண்மை மேம்பாடு சயநஞ் சாய்தல்
சேயவன் முருகன் செவ்வாய் சேய்மைநீ ளந்தூ ரப்பேர்
**611
#34
சேய்மக விளமை தூரம் சிவப்புச்செவ் வேள் செவ் வாயாம்
வாய்விளிம் போரங்கம்வாக் கிடங்குளம் வாய்மை யும் பேர்
ஆய்தல்தேடுதலி ணுங்க லாராய்த னுணுக்க மென்ப
ஓய்தல்கை யறல்வி டாய்த்த லொழிதலுள் ளதனு ணுக்கம்
**612
#35
காய்தலே சுடலு ணங்கல் கதிர்வீசல் கடிதல் சீறல்
தோய்தலே துவை தல் புல்லல் துழாவனீ ராடல் தீண்டல்
வேய்தல் சூ டுதல் சிங் கார மூடுதல் வேயு ளும் பேர்
ஆய்வு நுட் பம்வருத்த மகலமா ராய்வு மாமே
**613
#36
ஆயத்தஞ் செயிர்ப்புத் தள்ள லரிப்புச்சந் நத்தங் கூர்ப்பாம்
காயத்தன் வரிப்போ னான்மா காயத்தை கடுக்காய் நெல்லி
ஆயத்தி வலிவ சித்வ மன்புவா சரமெல் லைப்பேர்
காயத்ரி பிராமி யோர்மந் திரங்கருங் காலி யென்ப
**614
#37
ஆய மனைச்சுற் றளவைசுங்கங் கவற்றிற் றாய மகளிர்குழாம்
வாய சங்கா ரகில்காக்கை மாய்தல் மறைதல் மடிதற்பேர்
கேய மகழி பாடுவபண் வேயுட் டொளையொற் றொடு மூங்கில்
பேயம் பருகு வனநீராம் தேய்தல் குறைதல் நலிதற்பேர்
**615
#38
பாயசம்பாற் சொற்றிச்சாம் ப்ராணிபாற் சோறு
பாய்தல் தாண் டுதல்பரம்ப னீர்பாய்தல் குதித்தல்
ஆயநம்நெல் லின்பேதம் கிரணம்வரு டமுமாம்
ஆயெனலோர் விளியுரு போர் விகுதியன்னை முப்பேர்
காயமா காயமா நுடதீர்த்த முடம்பு
கார்ப்போடைங் காயமிலக் கியல்புகுழா மெண்பேர்
சரயம்பிற் பகலந்தி நீலாதி வருணஞ்
சாய்தல்கோ ணுதனுணுக்கங் கண்ணோட்டஞ் சரிதல்
**616
#39
தாயமெடுத் துயர்த்தும் பேச் சுரிமை கொடுப் பதுசீ
தநப்பொருள் சூ தாட்டுப்பங் கிடும்பிதிர்த்ர வியமாம்
வாயிலைம் பொறி தூது காரணம்வா சலுமாம்
வாயிலோர் தமிழ்க்கூத்தர் வாசற்காப் பவர்பேர்
சாயை நிழ லழகுபிறி துருவங்கைக் கூலி
சநியின்றாய் வளர்த்தலிருட் டொழுங்குகா யகியாம்
மாயையிலக் குமிகாளி யிரதியோர் சத்தி
வஞ்சகஞ்சித் திந்திரசா லம்புத்தி தயையே
**617
#40
காயல் கழியோ டுப்பளங் கழிமுகம்
ஆயி லாயிலிய நாளோர் மரமுமாம்
கோயி லிராசா லையந்தே வாலயம்
வாயு பலமா லங்கட்டி வானவில்
**618
#41
சாயாசீ வன்கூத் தாடி பெண் மூலத் தாற்பி ழைப்போன்
ஆயாம மகலம் நீளம் ஆயோத நம்போர் வேட்டம்
பீயூடம் புனிற்றி ளங்கற் றாவின்பா லமிர்த மும்பேர்
ஆயோகங் கந்த புட்பா தியினடி யுறைக ரைப்பேர்
**619
#42
தாயாத னென்பபிள்ளை தன்கோத் திரச்சுற்றம்
சாயா பதிபெண் புருடனுமார்த் தாண்டனுமாம்
மாயா புரியொர்முத்தி மாநகரம் பித்தளைப்பேர்
காயா மரமேகா சாமரம்கா யாதமரம்
@13 ரகர வெதுகை
**620
#1
சரகம்வா கடங்கட் கிண்ணி மதுபாநந் தேனீ கள்ளாம்
விரகுணர் வுபாயம் வஞ்சம் விரணம்புண் வடுவி ழற்புல்
இரசநி மஞ்சள் செம்பஞ் சவிரியோ டிரவு மாகும்
பிரசந்நந் தெளிவு கள்ளுப் பிரசைசந் ததிச நப்பேர்
**621
#2
பிரசந்தேன் கூடு தேனீ தேன்பிர மரங்கள் ளும்பேர்
பிரசரம் வழிபோர் வேகம் படர்தல்சா ருதலும் பேசும்
பிரசவ்வியமநு கூலம் பராதீநம் பிரதி கூலம்
இரசிதம் பொன்னின் பூச்சோ டொலியுள திடிமு ழக்கம்
**622
#3
சரசென்ப புனல்வா விப்பேர் தரசென்ப வேகம் வீரம்
பரசென்ப மழுக்கு டாரி பரமேட்டி சிநன்முத் தேவர்
பிரணதி பணிவ டக்கம் பிரணிதி யிரத்த லொற்றாள்
இரணம் பொன் னொலிபோ ரிந்தி ரியத்தாது கவடி யென்ப
**623
#4
பிரணயம் பழக்கம் நேய மிரப்புநம் பிக்கை யும்பேர்
இரணியந் தநம்பொன் வெள்ளி பலகறை யிரேத சென்றாம்
இரதகை யரத்தை நாக்கா மிரமண னிட்டன் காந்தன்
பிரதர மிரத்த க்ராணி நோயம்பு பிளப்பு முப்பேர்
**624
#5
பிரதிமை பதிமை போலும் பிறி துரு வம்பா வைப்பேர்
பிரதியத் தநமே யிச்சை துலக்குதல் சிறைபி டித்தல்
பிரபஞ்சந் திரள்வித் தார மாறாட்ட மாயை யும்பேர்
மரபென்ப முறைமை கோத்ர வழிபண்பு பழமை யென்ப
**625
#6
சுரபிசம் பகஞ்சா திக்காய் சுகந்தஞ்சல் லகியோர் தெய்வச்
சுரபிபொன் சைத்தி ரம்சுந் தரம்பசு விளவேனிற்றேன்
பரமமுந் தினத நுச்சை பரமன்முந் தினவன் மேலோன்
உரமெரு விடுதல் மார்பு வலிமதி லூக்க மைம் பேர்
**626
#7
தரம்வெற்புப் பருத்திப் பஞ்சு குழியச்சந் தகுதி சங்காம்
புரமுடல் நகர முன்குற் குலுவீடு பூர்வ காலம்
அரரமே கதவி ரும்பாம் அரவம்பாம் பொலிசி லம்பாம்
பரர்பிறர் பகைவ ரென்ப பரல்விதை பருக்கைக் கல்லே
**627
#8
பிரவகங் காற்றோர் வாயு வெளிப்புறப் படலும் பேசும்
குரவம் நன் மணங்கு ராவாம் சிரவங்கோ ரசப்புட் காது
குரவர் தாய் தந்தை யாசா ரியர் மூத்தோர் குருக்கள் மன்னர்
தரளன் சூரியன் றூர்த் தன் பேர் தரளையே கஞ்சி தேனீ
**628
#9
பிரளயங் கற்பாந் தஞ்சா வறிவழிந் துறலற் றப்பேர்
பிரகாசம் வெயில்தெரிந்த தொளிபிர சித்த மொப்பாம்
பிரகாண்டஞ் சிலாக்கியங்கொப் பிலாமர மரப்ப ணைப்பேர்
பிரகோட்டம் விரித்த கைமுன் கைவெளித் திண்ணை பின்கை
**629
#10
இரசால மாம ரங்குந் துருப்பிசின் கரும்பு போளம்
இரசாலை யறுகு சம்பா ரத்தயிர் நாவெள் ளீ றில்
பிரசூதம் பிரச வம்பூ பிரசூதி பெறுகை பிள்ளை
பிரணாத முவகைப் பேச்சி னொலிகாதி னோயும் பேரே
**630
#11
பிரதாந முதன்மை யான்மா கொடுப்பித்தல் புத்தி மாயை
பிரதீத னறிஞன் கியாத னிலைமையன் பெருமி தன்பேர்
பிரதீதி களிப்புக் கியாதி பிரயாகங் குதிரை வேள்வி
பிரயாணம் பயணம் யானைக் கண்ணின்முற் புறஞ்சா வும்பேர்
**631
#12
பிரவாளம் பவளம் வீணைத் தண்டிளந் தளிர்முளைப்பேர்
கரவீர மலரி கைவாள் கரளங்காஞ் சிரம்நஞ் சென்ப
உரவோர் நல் லறிஞர் மூத்தோர் உரன்வலி வென்றி ஞாநம்
கிரிசிலா சதுகண் ணோய் பூச் சியன்பந்து கேழல் வெற்பாம்
**632
#13
கரடியோர் விலங்கு யானை கரில்குற்றங் கொடுமை கார்ப்பாம்
பரணமேந் துதல் கூ லிப்பேர் பரியங்கம் படுக்கை கட்டில்
அரணிதீக் கடைகோல் முன்னை அரிணமான் மானி றப்பேர்
சரணியே வழியொ ழுங்கு சரியையோர் மார்க்கம் பிச்சை
**633
#14
திரி நூலின் றிரிபெண் மூன்றாம் திரிதிவம் விண்சு வர்க்கம்
பரியே பூ சனைப ருத்தி யுயர்ச்சியச் சுவதி பாய்மா
வரிசுணங் கெழுத்தி றுப்பு வழிபந்தி நெல்பண் ணீளம்
பரிகத மசைதல் சூழ்த லடைதலோ டறிதல் பன்னும்
**634
#15
தரிசகன் வாயிற் காப்போன் சமர்த்தன்காண் பிப்போ னென்ப
திரிசங்கு கருட னோர் பார்த் திவன் பூஞை விட்டி லும் பேர்
தரிசநங் கனாக்கண் ணாடி சாத்திரங் காட்சி புத்தி
பரிசநங் கொடைகாற்றேவ லாள் தொக்கிந் தியந்தொ டற்பேர்
**635
#16
தரிசமுந் நீர்சூர் யேந்து சங்கமந் தரிச நப்பேர்
துரிதம்பா வங்க லக்கம் தொரிதஞ்சீக் கிரம்ப தற்றம்
புரிதலே விரும்பல் செய்தல் புரிவென்ப விருப்ப மன்பாம்
விரிதலே விசால மாதல் விளங்கலோ டலர்த லென்ப
**636
#17
பரிபுரங் காற்சி லம்பும் பாதகிங் கிணியு மாகும்
சுரிமுகம் நத்தை சங்காம் சுரியலே சுழிப்புக் கேசம்
அரியமா சூர்ய பத்தன் பிதிர்தேவ தையா தித்தன்
பிரியமே யுவகை யிட்டம் பிரியனா யகனிட் டன்பேர்
**637
#18
கரியவன் சனிமா லிந்த்ரன் சான்றினன் கருநி றத்தோன்
பரிவர்த்த மெனல்கற் பாந்தம் பலாயந மாற்று கைப்பேர்
பரிவர்த்தன் கூர்ம ராசன் ஓடிப்போய்ப் பதுங்கி னோனாம்
பரிவின்பம் வருத்த மன்பாம் பரிவேடஞ் சூழ்வ தூர்கோள்
**638
#19
திரிகூடம் சுவேல வெற்பிந் துப்புமுச் சிகர வெற்பாம்
பரிதாந முடைத்தூ சொன்றற் கொன்றைமாற்றுதல்கௌ பீநம்
நிரியாண மரணம் யானைக் கடைக்கண் போ குதலே மோக்கம்
மரியாதை நியாய மெல்லை கடற்கரை நிலைமை மன்னும்
**639
#20
அருவுரு வன்மை புண்ணாம் அருள்க்ருபை பொருளின் சத்தி
உருநிற முருவ மட்டை செபவுரு வகல மும்பேர்
திருவெழில் செல்வஞ் செல்வி சிறந்தது தெய்வ வுத்தி
தெருவென்ப வழிவீதிப்பேர் தெருள் தெளி வறிவு மாமே
**640
#21
அருகன்யோக் கியன்சி நேந்த்ரன் அருகோரஞ் சமீப மென்ப
பருகி தீ மயில்கு சப்புல் பருவர லருவல் துன்பம்
முருகுகள் ளிளமை வாச முற்சவ முருக னும்பேர்
கிருசமே மெலிவோ டற்பங் கிருமிதான் புழுச்செம் பஞ்சாம்
**641
#22
உருசியே கிரணங் காந்தி சுவையிச்சை மிகப்பற்றும்பேர்
பருடமே சிக்குப் பற்றி யதுபல நிறங்கொ டுஞ்சொல்
இருடிமா முநிவன் வேத மிருதயம் மநம்நெஞ் சவ்வூன்
சுருதங்கேட் பது நூ லென்ப துருவித் தன் வறிஞன் றுட்டன்
**642
#23
திருதராட்டிரமூக் குக்கால் கரியவோ திமம்பாம் பென்ப
பொருநர் போர்த் தலைவர் வீரர் பூபாலர் சமர்த்தர் கூத்தர்
சருவகன் பிரான்ம கேசன் சருவரி யிரவு மஞ்சள்
உருவரை பயிரெல் லாமுண் டாநிலம் பூமி யும்பேர்
**643
#24
கருவியைம் பொறிதொ டர்ச்சி கவசம்வாத் தியாதி பஞ்சக்
கருவியா யுதமே கங்கல் லணையுப கரண மீட்டம்
எருவையே கொறுக்கை கோரை கழுகுசெம் பிரத்த மென்ப
உருளைதேருருளுண் டைப்பேர் உருள்பண்டி யுரோணி தேர்க்கால்
**644
#25
மிருகயு நரிவே டன்பேர் விரைவிதை வாசஞ் சாந்தாம்
குருசில்மன் னவன்சி றந்தோன் குரையொலி யசைச்சொ லென்ப
சருமந்தோற் பலகை தோலாம் சரைநரை யோர ரக்கி
கருள்கறுப் பிருள்காங் காடை கரையெல்லை யருகு தீரம்
**645
#26
பொருள் பண முதன்மை பிள்ளை யுண்மை சொற்பொருள் பல்பண்டம்
இரைசில விலங்கூண் புள்ளூண் புவிநீர்கள் ளொலிவாக் கென்ப
சிரையோட முடம்பி னாடி திரையல் வெற்றிலைதி ரங்கல்
நிரைபசுப் படைவகுப்போ ரசைபசுத் திரளி ணைப்பாம்
**646
#27
புரையென்ப வுவமை குற்றம் புழையோர் சிற் றில்லு யர்ச்சி
வரையள விரேகை மூங்கில் நீர்க்கரை மலையென் றைம்பேர்
கரைதல்வா வெனலொ லித்தல் கசிதல்சொல் லுதலி ரங்கல்
வரைதலே கொள்ள னீக்கல் மணஞ்செய லெழுது தற்பேர்
**647
#28
முரண்வலி பகை போர் முப்பேர் முருக்கல் கொல்லுதல ழித்தல்
உரியரைப் படிநார் தோலாம் உருத்தல்சீ றுதல்முளைத்தல்
பரிகம்பம் பயம்நடுக்கம் பரித்தலே சுமத்த லோம்பல்
கரவென்ப களவொ ளிப்பு கரிப்பென்ப கார்ப்பச் சப்பேர்
**648
#29
திரிசிக முடித்ரி சூலம் திருக்குக்கண் பார்ப்போன் குற்றம்
பிருதியே விலைகூ லிப்பேர் பிருட்டம்பிந் தினது வென்னாம்
இருபிறப் பண்ட சம்பல் லிருக்கையூ ரிருப்பி டப்பேர்
உருமமத் தியான்னம் வெம்மை யுருக்குமம் பொன்னு ருக்கே
**649
#30
அரத்தநி சிறுவி ரன்மட் டாமுழ முழங்கை யும்பேர்
இரத்தந்தாம் பிரஞ்சிந் தூரம் செந்நீர்குங் குமமா மென்ப
பிரத்தம் வெற் பின் மேல் வட்டச் சிலாதல மளக்கும் நாழி
பிரத்தர மரத்த நங்கல் குசப்புல்லா தியின்ப டுக்கை
**650
#31
சிரத்தலே யொலித்தல் தேய்த்தல் சிரத்தைநம் பிக்கை யிச்சை
பிரப்பொவ்வோர் பாண்டத் துட்பல் லுணாப்பெய்விப்பனபேருண்டி
சரித்தல் சஞ்சரித்தல் சாய்த்தல் தரித்தலே சுமத்தல் தங்கல்
விரித்தல் சொல் லுதல லர்த்தல் விளக்குதல் விரிவாக் கற்பேர்
**651
#32
துருக்கம்வெற் பரண்வ நங்கத் தூரிகுங் குமங்க லக்கம்
பெருக்கமே நிறைவு செல்வம் விசாலமெண் பெருக்கு வ்ருத்தி
வருக்கமே யினம்வ குப்போ டொத்தவோர் வகைத்தி ரட்பேர்
பெருக்கலெண்ணுறழ்ச்சி சீத்தல் நிறைத் திடல் பெருகச் செய்தல்
**652
#33
மருச்சக னிந்தி ரன்றீ மருச்சுத ன நுமன் வீமன்
அருச்சுக மருது வெண்மை கண்ணோய்பொன் மயில்புல் லாகும்
அருச்சுநன் கார்த்த வீரி யன்பார்த்த னொருதாய்க் கோர்சேய்
அருச்சுநி பசுத்தொ ழுத்தை யோர்நதி யுஷையு மாமே
**653
#34
திருட்டணை யாசை தாகம் திருட்டாந்த முதார ணம் நூல்
விருட்டிணி சந்தி ரன்யா தவன் மேடம் பாஷண் டன்பேர்
விருத்தன்மூப் பினன்கற் றோனா மிருத்தியு மரணங் காலன்
விருத்தாந்தம் செய்தி யெல்லாம் விதம்பிர கரணம் வார்த்தை
**654
#35
கிருத்ரிம மொருவ ராற்செய்கின்றது வெடியுப் பாதி
துருத்தி நீர்ச் சிவிறி யாற்றி னிடைக்குறை தோற்று ருத்தி
அருப்பகன் வறிஞன் பால ன றிவிலான் மூர்க்க னென்றாம்
தருப்பணம் பிதிர்ம கங்கண் ணடிசமித் துகப்புச் செய்தல்
**655
#36
இரவிராத் திரியி ரப்பா மிரந்திரந் தொளைசு ருங்கை
பிரியைபெண் பிரிய முள்ளாள் பிரம்போர்பைங் கொடிதேர்முட்டி
தெரிதலா ராய்தல் காணல் செருந்தியோர் மரம்வாட் கோரை
மருமமே கபட மார்பாம் வரம்பொழுங் கணைமட் டென்ப
**656
#37
குரங்கமான் மிருக சாதி குரங்குதல் குனிதல் கோணல்
அரங்கவைக் களஞ்சூ தாடற் கமைத்திடு மறையுள் வீடாம்
இரஞ்சநம் பிரியஞ் செஞ்சாந் திரண்டையே யெலியால் கைம்மை
குரண்டகம் பொற்கு றிஞ்சி பொன்வாடா மலருங் கூறும்
**657
#38
வரண்டகஞ் சுவரு ருண்டை முகப்பரு மதமா மெத்தை
கரண்டைதா பதங்கற் பாழி கரம்பைவண் டலின் மண் ஞாழல்
குரம்பு செய் கரைவ ரம்பாம் குரம்பையே யுடல் சிற் றில்லாம்
நரம்பென்ப வோர்மெய்த் தாது நாணியாழ்த் தந்தி ரிப்பேர்
**658
#39
பிரக ரணமா யுதஞ்சமயோ சிதம்போ ரடித்தல் பிரகாரம்
பிரசலாக மயிற்றோகை வில்லாச் சிரமம் பாம்பும் பேர்
சரசி சரச முளோன் பொய்கை சரிமார்க் கங்கை வளையொப்பாம்
இரசை பங்கம் பாளை புவி யானை வணங்கி தினை நாவே
**659
#40
அரண மரித்தல் கவசமதில் காவல் புயஞ்சீ தநப்பொருள்வேல்
தரண னிரவி வெற்பரையன் சரபம் வரையா டெண்காற்புள்
பிரணி தாநஞ் சமாதாந முத்தி யோகம் பிரயோகம்
வரத னென்ப பிரசந்நன் சாந்த சித்தன் வரமருள்வோன்
**660
#41
பிரதி யுருளின் விளிம்பிற்சுற் றிரும்புப் பட்டம் பிறிதும் பேர்
பிரதி கிருதி பிறி துருவம் பிறிது செய்கை பூசநையாம்
பிரதி சிரையம் வீடுசவை கருவிச் சாலை யிருப்பிடமாம்
பிரதி பத்தி கூர்த்தமதி யொழுக்கம் பேறு கநமுடைமை
**661
#42
பிரதி மாந மநுரூபம் யானைக் கொம்பி னடுவும்பேர்
பிரபு இறைவ னதிகாரி பிரதே சநங்கா ணிக்கை கொடை
குரமே பரிமா வாதியின் காற் குளம்புஞ் சிறுநா குணமும் பேர்
திரவம் பரிகா சம்பிசின்யாத் திரைகெட் டோட லிலைச்சாறாம்
**662
#43
பிரகீர் ணகஞ்சொல் லின் விரிவு சாம ரம்பாய் மாவும் பேர்
பிரசா பதிபா வகன்றுவட்டா வேந்தன் பிரம னிநன் மருகன்
பிரசா வதிமைத் து நிகொழுந்தி பிரதா பன்ப்ர சித்தனிநன்
பிரசூ மாதா பெண்குதிரை பிரசூ நம்ப்ர சவங்காய் பூ
**663
#44
துரக மநமச் சுவமென்ப துருக ணம்முற் கரமழுப்பேர்
விரகங் காம நோய்பிரிவாம் மிருக தரன் சந் திரன்பரமன்
விரசம் வழியான் றொழுக்கூட்ட மிருது மந்த மெல்லியது
சுரசை யரத்தை துளசிப்பேர் துருவல் கடைதல் தேடலுமே
**664
#45
கரடு பாடும் பிணர்க்கணுவும் கருமான் கொல்லன் புல்வாயாம்
வரடை யன்னப் பெடைகுளவி வருடை வரையா டெண்காற்புள்
அரலை கழலை மரல்கொட்டை யருளல் கொடுத்த லருள் செய்தல்
பரவல் துதித்தல் பரப்புதலாம் பருண முருக்குப் பலாசமிலை
**665
#46
தரிநற் றுகிலா திகளின் பேடகமுன் றானை குகையோடம்
திரிக மும்மை முதுகெலும்பின் கீழ்முக் கூடல் முச்சந்தி
சுரிகை கவச முடைவாளாம் சொரித லுதிர்தல் பொழிதற்பேர்
அரிசந் தநமோர் தேவதரு மிகநன் மணச்சந் தநமாமே
**666
#47
பரிசம் நோயொற்றாள் வேலை தொடுதல் வருக்க வெழுத்தீகை
இரிணம் பாழோ டுவர்த்தறையா மிரிதல் முறிதல் கெடுதற்பேர்
அரிதம் பசும்புற் றறைப சுப்பானதுபைம் புரவி திசைபசுமை
திரிதல் சுழலல் சஞ்சரித்தல் செல்லல் கெடுதல் வேறாதல்
**667
#48
பரித லொடிதல் தொலைத்தல் துயர்ப் படல்வெட்டுதலன் புறலிரங்கல்
பரிவா ரம்வா ளுறை சத்ர சாம ராதி பரிசநப்பேர்
பருக மயிலின் றோகைபரி வாரம் பச்சைப் புல்லிலையாம்
மிருகம் விலங்கு மான் மும்மீன் வேட்ட மிரத்தல் கயபேதம்
**668
#49
பிருகு சுங்கன் றாழ்வரையோ ரிருடி பிராகி யமதங்கி
இருசு பண்டி யுள்ளிரும்பு செவ்வை பிறப்பில் லாமையுமாம்
தருண மிளமை யாமணக்குச் சமையம் புதுமை குச்சமலர்
கிருதம் முதலாம் யுகம்நெய்நீர் செயப்பட் டதுசி கிற்சைபலன்
**669
#50
மருதம் நாடு சார்ந்தநில மந்நி லப்பண் வயல் மருது
சுருதி வேதஞ் செவிகேட்டல் வார்த்தை சங்கீ தச்சுதியாம்
திருதி சுகந்தா ரணைவேள்வி மகிழ்வோர் யோகந் தைரியப்பேர்
நிருதி முகடி யோர்வள்ள லோர்திக் கிறைநி ருபத்திரவம்
**670
#51
கரும கரனந் தகன் கூலிக் காரன் வேலை யாள் முப்பேர்
தரும ராசன் முநீந்திரனந் தகன் முதற்பாண் டவன்புத்தன்
தருமன் வேள்வி முடித்தானோர் வேந்தன் யமனோர் சாக்கியனாம்
துருவன் பரம னுத்தாந பாத சுதனோர் வசுப்பிரமன்
**671
#52
தருமம் வேள்வி வேதவிதி யறஞ்சற் சங்கம் நீதிகுண
தரும முவமை யியல்பொழுக்கந் தநுக்கொல் லாமை கொடையாதி
பருவஞ் சமயோ சிதம்விழவு வசந்தா திகம்பக் குவமகளிர்
பருவம் பிராயங் காலமுவாக் கணுப்பா ரதத்தின் பிரிவும் பேர்
**672
#53
உரைசொற் பயன்பொன் னுரையொலிசொல் லுரைத்தல் தேய்த்தல் சொலலொலித்தல்
சுரையான் முலையோர் படர்கொடிகட் கிண்ணி கள்ளுட் டொளையைம்பேர்
திரைநீர்த் திரைசிற் றாமல்லி யுடம்பின் றிரைபா ரிடுதிரையாம்
நரைவெள் விடைவெண் மயிர்வெண்மை சரையு காற்றோர் நதிமேகம்
**673
#54
மரக்கால் சுவாதி துற்கையின் கூத் தொடுமால் கூத்து மரத்தின் கால்
அரக்குச் சிவப்புச் செம்மெழுகாம் அரற்ற லொலித்தல் விடாதுரைத்தல்
இரட்ட லொலித்த லசைதற்பேரிரட்டை யிரண்டா னதுமிதுநம்
நிரப்பு வறுமை குறைவென்ப நிருத்தங் கூத்தோர் வேதாங்கம்
**674
#55
பரிக்கி ரகம்பற் றுதல்மனைவி முதல் பெற் றிடுதல் பரிசநமாம்
திரித்தல் திரிபு செயல் முறுக்கல் தெரித்தல் சொல்ல லெழுதுதற்பேர்
அரித்துப் பசும்புல் பசும்புரவி பசுமை பசுப்புள் ளது திசையாம்
அருக்கஞ் செம்பு பளிங்கெருக்காம் அருக்க னிநனிந் திரன் சேட்டன்
**675
#56
விருச்சி கந்தேள் தேட்கொடுக்குப் புதலோ ரிராசி மயிர்ப்புழு
கிருட்டி யறிஞன் மகஞ்செய்தோன் கேழல் பிரண்டை யோரீற்றா
சிருட்டி வியல்பும் படைத்தலுமாம் திருட்டி பார்வை கண்ஞாநம்
வருத்த மாநம் நிகழ்கால மகலா மணக்கோர் மாளிகையே
**676
#57
அருத்தம் வழக்கம் பொருட்டுவிடை யம்ப்ரகாரம் பொருள் சொல்
அருத்தம் நிவிர்த்தி செம்பாதி பலன் சாத் திரந்துண் டம்பண்டம்
கருப்பம் வயிறு சூல்சந்தி சிசுவுள் வீடு பலாக்காய்முள்
தருப்ப மிருக மதங்கிரந்தங் குசப்பு லகங்கா ரமுஞ்சாற்றும்
**677
#58
பெருகல் வளர்த னிறைதற்பேர் பிருங்க மிலவங் கம்வண்டாம்
குருதி சிவப்புக் குசன் செந்நீர் குருந்து குருத்தோர் மரங்குழந்தை
மருமான் மருகன் வழித்தோன்றல் மருங்கு பக்க மரியாதை
கருமை கறுப்பும் பெருமையுமாம் கரும்பு புணர்த மோர்பயிரே
**678
#59
கரங்கந் தேங்காய் தலையெலும்பாம் கரப்போர் விட்டில் களவொளிப்பு
சரண்ட மோர்பூ டணமோந்தி சரத்தோ ரிருது வற்சரப்பேர்
பொருந்தல் சேர்த லியைதலெனும் புருவை யிளமை செம்மறியாம்
விருந்து புதிதோர் வனப்பதிதி மிருதஞ் செத்த திரப்பதுமே
**679
#60
திரங்கல் மிளகு திரைதலெனும் சிரண்டி யுவதி சுமங்கலப்பெண்
கிரந்தந் தநமெண் ணான்கெழுத்துக் கவிசொற்றொடுக்கின்றது நூலாம்
கிரந்தி வளைவு துணியங்க முடைக்கட் டோர் நோய் மரக்கணுப்பேர்
கிரந்தி கந்திப் பலிமூலம் துணியங் கங்குற் குலுக்கருவேல்
**680
#61
முரம்பு கழிக்கான் கன்மேடு பரன்மொய்த் துயர்ந்த நிலமும்பேர்
துரிஞ்சில் வவ்வா லோர்மரமாம் சுரும்பு மலையு மாண்வண்டும்
பிருங்க ராசங் கரிசாலங் கண்ணி குடுமிக் கடுவன்புள்
சிருங்கி பணிப்பொ னதிவிடைய மெருத்தின் புதல்செங் கயற்பெண்ணே
**681
#62
கரகமூர்க் குருவிகமண் டலமோர்புள் ளாலங்
கட்டிபுன்கு தாதுமா தளைகரமென் றேழ்பேர்
கிரகமநுக் கிரகம் விண்மீன் பிசாசாதி நவக்கோள்
கிராணம்போ ரெழுச்சிகைக்கொள் ளுகை பூத நாதி
கிரகரா சன்கிரண மாலியிம கிரணன்
கிரமுகஞ்செவ் வுலோத்திரம்பூ வரசுகமு கென்ப
குரகமெனல் நீர்முள்ளி நெருஞ்சிமஞ்சா டியுமாம்
குரரஞ்செங் காற்கருமூக்கன்னமழு கணிப்புள்
**682
#63
பிரகிருதி யிருதிணைப்பா லியல்புவினைப் பகுதி
பிராணிகா ரணங்குணசா மியமுதன்மை மூலப்
பிரகிருதி நகர்ச்சநமி ராச்சியாங் கந்தாய்
பெண்குறியும் பஞ்சபூ தமுமோர்சந் தசுமாம்
பிரகரஞ்சேர்ந் தது திரள் யா மஞ்செறிந்த மலர்நாய்
பெருங்கடுமை யிருகழுதை யகில்பரிச்சந் நாகம்
பிரசண்டம் வெள்ள லரி மிகக்கடுமை யென்ப
பிரபையள காபுரிதீச் சுவாலைகிர ணப்பேர்
**683
#64
இரசதம் விண் மீனிரத்தம் வெள்ளை முத்து மாலை
யானைத்தந் தம்வெள்ளி வெண்மலை பொன் னும்பேர்
இரசநம்பொன் வெள்ளிவிடம் பிசின்பழங்க டாயம்
இலைச்சாறு பல்லொலித்த லுணவொடுநே யமுமாம்
இரசநையோ ரணிவகுப்பு மலராதி தொடுத்தல்
ஈரெட்டுக் கோவையுள பெண்ணரை நூன் மாலை
பிரசவம்பா ரம்பரியப் பிரசங்க மநுச்சை
பிறப்புப் பூக் காய்ப்ராணன் பிள்ளை பிள்ளைப் பேறே
**684
#65
கரணமுடல் பவாதிகம்யோ காசநமிந் திரியங்
கணிதமிடந் திரிகரண முபகரண மந்தக்
கரணம் நாட்டியகீத பேதம்வியா பாரம்
கலவிகா ரணங்கிரியை சுரதபந்த மும்பேர்
சரணமடைக் கலம்பாதம் வீடுகுல மரவேர்
சஞ்சாரம் பாட்டினோ ரடிகாத்தல் முற்றம்
தரணமீ ரைம்பலப்பொன் னொருகஃசாம் வெள்ளி
தாநியந்தாண் டுதல்பாலந் தரித்தல்முலை யுலகம்
**685
#66
வரணமா விலிங்கு பிரா காரம்வே லியுமாம்
வரனயனிந் திரன் சிவன்சி ரேட்டன் விடன் மணாளன்
பரதங்கூத் தின் விகற்பம் நட நூலோர் கண்டம்
பரனெனலந் நியன் பகைவன் பரமான்மாப் பரமன்
இரதமொற்றுமை புணர்ச்சி காலுடல்வா கநம்பல்
லெழுதுதல் தேர் வஞ்சிமர மநுராக மொலிவெள்
ளிரதம்நீர் சாறுமிழ்நீர் விடம்பிசின்பொன் புளிநீர்
இந்திரியம் வலிசிங்கா ராதிமது ராதி
**686
#67
பரதனிரா மா நுசன்வேட் டுவன் கூத்த னட நூற்
பணித்தோன்சா குந்தலே யன்றந்து வாயன்
பிரதிகா ரம்பிறிது செயல்சிகிற்சை திருப்பல்
பிரயோக முதாரணங்கூட் டுகையேவல் கருமம்
பிரதிசரங் கரசூத்ரம் கங்கணமோர் மந்தரம்
பின்படைபூ டணமாலை விரணசுத்தி யென்ப
கரபமணிக் கட்டு முதற் கநிட்டிகைமட்டுள்ள
கையோர மொட்டகத்தின் குட்டி கழு தையுமாம்
**687
#68
பிரபவமுந் தியஞாநத் தினுக்கிடம்விக் கிரமம்
பிறப்பினுக்குக் காரணநீ ரினுக்குமூ லமுமாம்
குரவகஞ்செங் குறிஞ்சி செவ்வா டாமலரென் றிருபேர்
குரவைகைகோத் தாடல் முந்நீர் மள்ளியர்வா யொலிப்பாம்
இரலையச்சு வதிபுல்வாய் கலையூது கொம்பாம்
இரவணமொட்டகங்கழுதை யொலித்தல்வண்டு மேற்கும்
பிரவணமொற் றுமையடைவிற் றாழ்ந்தநிலம் வணக்கம்
பிரவணன்றான் வணக்கமுளோன் சமர்த்தெனொருப் பட்டோன்
**688
#69
அரமீர்வாள் விரைவு பண்டி விரைவிற்செல் வது தோல்
அரனென்ப வுருத்திரனு தாசநன்சங் கரிப்போன்
கரம்வலிநோய் விடங்கிரணந் துதிக்கைகுடி யிறைகை
கழுதைகநோ பலஞ்சூடெ ழுத்தின் சா ரியையாம்
சரமம் போர் சூதுமணி வடங்கொறுக்கை நாணல்
சலிலமே லான தயிர் சரிப்பன மூச் சும்பேர்
சிரமரமா தியினுனிமுன் னணிப்படைப்ர தாநந்
திப்பலிமூ லஞ்சென்னி நெடுங்கால மென்ப
**689
#70
சொரம்வெப்ப நோயடவி யருநெறிபி ராணித்
தொநியுதாத் தாதியே ழிசையொடுயி ரெழுத்தாம்
திரமசையா தது திரளுள் ளது மோக்க மும்பேர்
திரவிணம் பொன் பராக்கிரமம் திரவியம் வீ டென்ப
பரமேம்பா டந்நியந் தீ விரந்தூரந் தனிமை
பரிக்கலணை சிலாக்கியமேல் முன்புபா ரமுமாம்
குரலோசை சிறகுபுள்ளி னொலியாழின னரம்பு
கூந்தல் மிடற் றிற்பிறக்கு மிசைதினைநெற் கதிரே
**690
#71
திரவியம்பவ் வியம் விநய மருந்துகுணா சிரையம்
செம்பஞ்சு பொருள் பூத லாதிபித்தளையுமாம்
தரவிறைவ னிடுமேவல் கலியுறுப்பி னொன்றாம்
தரள முத்தா ரத்தினடு மணியலைவ தென்ப
பிரகார மொப்புவிசே டணம்பேதம் வகையாம்
பிரவார ணம் விலக்கு வேண்டியது கொடுத்தல்
பிரசாத நிருமலமாந் தெளிவ நுக்கி ரகங்காப்
பியகுணவி சேடமநு சரிப்பொடுபி ரீதி
**691
#72
இரதாங்கந் தேர்க்கால்சக் கிரவாகப் புட்பேர்
இரதிமத நன்றேவி யிச்சைபுணர்ச் சியுமாம்
பிரபாதம் வைகறைதாழ் வரைகரையோ டருவி
பிரவேணி யானையின்மேற் றவிசுமயிர்ப் பின்னல்
பிரமாவிப் பிரன்வேள்விக் குரியோனால் வரிக்கப்
பெறுமக்கி நீத்திரனா தியர்கமலா சநன்பேர்
பிரமாணம் நீட்டளவை யதா நுபவம் நூல்நம்
பிக்கையொரே தன்மைசூ ளே துவள வெல்லை
**692
#73
பிரசித்தன் மேம்பாட்டோ னலங்கிருத னென்ப
பிரலம்பஞ் சாகை தொங்கல் பனையின் முளை முப்பேர்
பிரதிக்ர கம்படிக்கந் தனக்குவசஞ் செய்தல்
பிற்படைதா நப்பொருளஃ தேற்றலெதிர்க் கோளாம்
பிரதிட்டை கௌரவங்கா ரிய நிருவா கந்தா
பித்தல்சா மர்த்தியமோர் செய்யுள் முகி தலுமாம்
பிரவிர்த்தி முரணடக்கல் யானைமத முயற்சி
பேச்சொழுக்க மிரப்புநீர்ப் பெருக்குவத்த மாநம்
**693
#74
அரிகிரண மிரவிமதி யமன்மாலிந் திரன்காற்
றனல் குரங்கு தவளைகிளி யரவுவண்டு பரிகோ
ளரிபொன்மை பச்சைபுகை பகைசிலம்பிற் பரல்வே
யைம்மைவிசி யரிசிநெற்றா ளரிவுகண்ணின் வரியாம்
புரிநகரம் பழுதைகயி றதின் முறுக்கோ டூர்ப்பேர்
புருடனாண் மகனான்மா பரமான்மா விரிஞ்சன்
பரிகமிரும் பின்றரங்குத் தடிமதிலுண் மேடை
படைக்கலங்கொல் லுகையோர கங்கதவின் றாழே
**694
#75
பரிகரமுன் காற்கட்டுங் கயிறுவிவே காரம்
பந்திரளோ ரணிகட்டி லதிகமுப கரணம்
கிரிசமென லப்பிரக மிரும்புசிலா சதுவாம்
கிரிசாரம் பொதியமலை யிலிங்கமிரும் பென்ப
அரிணிபச்சை நிறத்தினளோ ரரமகள் பொற் பாவை
யழகினள் பெண் மானாறங் குலக்குய்ய முடையாள்
பரிதிசக்ரா யுதந்தேர்க்கால் மகச்சமிதை யூர்கோள்
பா நுசோ திச்சக்ரச் சுற்றளவை வட்டம்
**695
#76
பரிமளம்பற் பலவாசங் கலந்தகந்தம் பிசறல்
பரிகாத மிரும்புப் பூண் டடிகொலையா யுதப்பேர்
பிரியகஞ்சித் திரரோம மான்கடம்பு ஞாழல்
பீதசா ரத்தருக்குங் குமம்வண்டும் பேசும்
கிரியைபிரா யச்சித்த முபாயங்கா ரியநிக்
கிரக நிய மா திபூ சநைசுபா சுபத்தின்
கிரியை நிருவாகமா ரம்பஞ்செய் தொழிற்சி
கிற்சை நிச்சயம் விகுதி யொடு முடிந்த வினையே
**696
#77
பரிதாயம் நிதம்பம் நீர் நிலைகட்டி லென்ப
பரிவாதம் யாழ்வாசிக் குங்கருவி பழிப்பாம்
நிரியாத நந்தருதல் கடன் தீர்த்தல் வைரம்
நீக்குதல்வைக் கும்பொருளைக் கொடுத்தல்கொல் லுதற்பேர்
கருவெள்ளை கொழுப்புவிக்ர காதிசெய்யுங் கம்மக்
கருமுட்டை குதிரை தந்தங் கருப்பமுருத் திரனாம்
சருவிண்ணோ ருணவுவச்ர மம்புசினம் பாண்டம்
தருவென்ப நாடகத்தோர் பாட்டுமரப் பொதுவே
**697
#78
குருநிடே காதிகிருத் தியஞ்செய்தோன் றேவ
குருப்புரோ கிதன் பெரிது காமிரத வாதக்
குருநிறம்நற் றருமோப தேசகன் சந் திரன் றன்
குலத்தோர்மன் றந்தையா தியரிருமாத் திரையாம்
மருநீரி லாதநிலம் வெற்புவா சமுமாம்
மருள்பைசா சம்மயக்கங் குறிஞ்சியாழ்த் திறப்பேர்
பிருக திவாக் குக்கண்டங் கத்தரியுத் தரியம்
பெரிதுவிச்சு வாவசுவின் யாழ்மூப்பு முள்ளி
**698
#79
கிருகவா குக்கோழி மயில்முதிய வோந்தி
கிருமிசந்தேன் வெண்பட்டு நூலகிலு மொக்கும்
முருகன் செவ் வேளிளமை யோன் வெறியாட் டாளன்
முருமுரஞ்செங்கதிரோன் றன் குதிரையினொன் றுமித்தீ
குருகுவண்டா னங்கைவளை குருக்கத்தி யிளமை
கோழிவெண்மை மூலநாள் கொல்லுலைமூக் கும் பேர்
உருசகமங் களப்பொருள்பல் கண்டிகைதார் பரிப்பூண்
உற்கடமா தளைவிளங்கஞ் சுவர்ச்சிகைரோ சனையே
**699
#80
வருடமழை பாரதா தியவருட மாண்டாம்
வருணனோ ராதித்தன் குலத்தினனீர்க் கடவுள்
விருடமிட பகப்பு தலா டாதோடை குதிரை
விடையெலிபுண் ணியம்வலிசுக் கிலத்தாது வெண்பேர்
விருடன்மா நவன்வீர்ய விருத்தியுளோன் சிரேட்டன்
மிருதியற நூலிச்சை நினைவுபுத்தி மரணம்
வருணகமெய்ப் பூச்சொப்புச் சந்தநம் வண் ணகமாம்
வருணியெழு துவோன் பிரம சாரிசித்ர காரன்
**700
#81
அருணஞ்செவ் வானமங் கியசிவப்புப் பொன்மை
யப்புச்செங் குட்டநோ யொலியின்மை யறுபேர்
துருணமே வண்டுதேளாமைவில்வா ளென்ப
துருதம் விசை வேகமுள துருக்கிய நெய் யாதி
வருணம்பொன் புகழ்சாதி குணம்யானைத் தவிசு
வடிவுதுதி தாள விசே டம் வெண்மை யாதி
வருணங்குங் குமங்காந்தி சித்திரமெய் யெழுத்து
மாவிலிங்கு மெய்ப்பூச்சு நீர்கீதக் கிரமம்
**701
#82
இருதநீர் கதிரிலுதிர் நெற்பொறுக்க லொளிநல்
லியல்புபூ சிதமூர்க்க ணெல்லிரத்த லுண்மை
இருபிறப்பா ளன்பார்ப்பான் சந்திரன்சுக் கிரனாம்
இருமையிம்மை மறுமையொடு பெருமையிரு தன்மை
கருமமெனல் முதிர்வேனில் வெயில் வெப்பம் வேர்வை
கரசாநந் தொழில்கிரியை செய்கையாண் டன்மை
பருமமெய் யுறைபாரங் கூலிபரிக் கலணை
பதினெண்கோ வையினரை நூன் மாலைசெம்பொ னும்பேர்
**702
#83
நிருமலமா சற்றதுநிர் மாலியமப் பிரகம்
நிருவரம்நிற் பயஞ்சாரங் கடோரம்வெட்க மின்மை
ஒருமையொன் றாந்தன்மை யொற்றுமையோர் பிறப்பாம்
ஒருவந்த மேகாந்தம் நிச்சயமொற் றுமையாம்
துருவமரக் குற்றிமுளை யாலமரங் குதிரைச்
சுழிநிலைபே றோர்யோகம் நித்தியமா காயம்
துருவநக்கத் திரந் தருக்க மோர்தாளஞ் சாற்றுந்
துளக்கின்மை நிச்சயிப்ப திடையறா மையுமே
**703
#84
நிருவாணம் பரமகதி யாடையையு டாமை
நிமக்கநம தாவளம்நட் டாக்கிநிவி நாசம்
குருவிந்த மோர்வகைச்செம் மணிகாரா மணிவாற்
கோதுமைகண் ணடிசாதி லிங்கமுத்தக் காசாம்
துருவையோர் வேள்விப்பாத் திரஞ்சிற்றா மல்லி
துருவாடு பெருங்குரும்பை யோர்கீத மென்ப
குருளை முயல் புலிபன்றி சிங்கமுசு நரிநாய்
குரங்கமிவற் றின் பிள்ளை கூந்தலிள மையுமே
**704
#85
பிரக்கிரகந் துரகாதிக் கயிறு சிறை கிரணம்
பிணிப்புத்தோ ள லிமரம்பொன் றராசிலிடுங் கயிறாம்
பிரக்கிரியை பிரகரணம் பிடுங்கலதி காரம்
பிரத்தியயன் பரதந்த்ரன் பிரசித்த னெனலாம்
அரத்தமவிரிச்சாய முதலியது சிவந்த
தநுராகத் ததுபவளஞ் சிவப்புச்சித் திலகம்
பிரத்தியயஞ் சபதங்கா ரணந்தொளைத் ததுநம்
பிக்கைபத விகுதிநிரு ணயமொழுக்கம் ஞாநம்
**705
#86
அரிட்டஞ்சாங் குறிவெளுளி காக்கைபிர சவவீ
டசுபம் நன்மை வேம்புமுட்டை மோர்கள் வந முருங்கை
இரிட்டமசு பஞ்சுபம் வாள் விநாசம்பா வமுமாம்
இருக்கம் நக்கத் திரங்கரடி பெருமரமி ராசி
வரிட்டமிக வகன்றது சிச் சிலிசெம்பு மிளகாம்
வருத்தகம்வியாபாரம் குறும்புள் பரிக் குழம்பு
சருக்கமுற்சா கஞ்சிருட்டி யியல்புதியா கம் நிச்
சயமத்தி யாயமநு மதிமோக மெண்பேர்
**706
#87
சருக்கரைசிற் றோடு சுக்கான் றறைசுக்கான் கரும்பின்
சா றட்ட தோர்நோய் துண் டங்கல்லு மண்டை
அருச்சியெனல் காந்திகிரா ணஞ்சுவா லையுமாம்
அருத்திசே விப்போன்யா சகன் றநிக னாசை
கிருட்டிணந்தீ வினைகறுப்பு மிளகுவா யசங்கோ
கிலமிரும்பு கலியபர பக்கம்நா லிருபேர்
கிருட்டிணன் சூத் திரன்கண்ணன் வியாசனங்கி பார்த்தன்
கிருட்டணையோர் நதிநீலி திப்பலிபாஞ் சாலி
**707
#88
விருத்தஞ்சென் றது சரிதம் பருமை திரம் வட்டம்
விரோதஞ்சூழ்ந் தது மூப்போர் பாவினங்கற் கடாரை
ஒருத்தல்புலி கரடிபன்றி கவரிமரை புல்வாய்
உழையெருமை யிவற்றாணு மதமாவு முரைப்ப
இருத்தியந்தன் வசஞ்செய்யு மந்த்ரமநப் பிரியம்
இதமநம நோற்பவம் வெண் சீரகமேற் பூச்சாம்
அருப்பமோர் நோய்துயர முகரோமக் கிளர்ச்சி
அடவிபிட்டு மோர்வழுக்கு நிலமரண்கள் ளூர்ப்பேர்
**708
#89
அரங்கஞ்சூ தமர்கூத்துப் பயிலிடஞ்சீ ரங்கம்
ஆற்றினிடைக் குறைதிராச் சிவப்பாதி நிறப்பேர்
இரங்கலேங் குதலொலித்தல் தயை செய்த லினைதல்
இரஞ்சநிமஞ் சிட்டைகவு ள விரிகம் பில்லம்
பரஞ்சங்கை வாள்செக்கு நுரைசுரிகைப் பிடியாம்
பரம்பரைவேள் விக்கொலைசந் தாநமர பென்ப
கிரந்தஞ்செய்யுட்டொடுத்தல் மலராதி பிணைத்தல்
கெற்சிக்கும் வீரரொலி யழைத்தலழு தலுமே
**709
#90
கிரந்திலங்காட்டுக்கரணை நறுமுறுக்கை கருவேல்
கிருஞ்சநம்வெள் ளுள்ளிவிடப் பூச்சுள்ள விறைச்சி
சிருங்கமர நுனிமருப்புக் குறிதலைமை சாரல்
சிகரமிலீ லையின்றெப்பந் திருநாமப் பாலை
சிருங்கலமே கலையானைச் சங்கிலியா ணரைஞாண்
சிரும்பணங்கொட் டாவித்தல் விரிதல்மலர் தலுமாம்
விருந்தமுலை முகம்பூந்தாள் குழாமிருகக் கூட்டம்
விருந்தார கன்விபுத னழகுடையோன் சிரேட்டன்
**710
#91
பிரதிவிம்பம் நிழல்தேவ தாதிசிலா ரூபம்
பிரமரகஞ் சிற்றெலி பெண் மயிர்க்குழற்சி வண்டாம்
சரடமெனல் கிழத்தன்மை யோந்திகடி நப்பேர்
சரளம் சாம் ப்ராணிமரந் தகுதிசெவ்வை யென்ப
அரியயனென் பவன்கிரண மாலிவிண்ணோர்க் கிறைவன்
அரியன் மூன் றாம் வருணன் பிரபு பூச் சியனாம்
பிரியங்கு திப்பலிகேழ் வரகு தினை ஞாழல்
பெருமான்மூத் தோனரசன் பெருமையுடை யோனே
**711
#92
பிரகண மிரும்பின் றடி வெளி வாயிற் குறடு தாம் பிரகும்ப மென்ப
பிரமரி கூத்தின் விகற்பம் பெண் வண்டாம் பிரமத மிகுமத மகிழ்ச்சி
திரிகைசஞ் சாரங் கிணற்றுறை யிடக்கைப் பறைகுயச் சக்கிரந்திரிகல்
கருணிகை தொழுத்தை நடுவிரல் பொகுட்டுக் காதணி துதிக்கையி னுனியே
**712
#93
அருணையோர் தலமஞ் சிட்டி நன் னாறி யதிவிடை யஞ்சிவ தைப்
பிருதிவி காயப் பத்திரி கருஞ்சீ ரகங்கடற் கரைபுவிப் பெயராம்
பிருதுவோ ரரசனகலங்கா யப்பத் திரிகருஞ் சீரகம் பேசும்
கிருபண ன தமன் றியாகபோ கமிலான் கிருபாணி சுரிகைகத் தரி
**713
#94
அரித்தலெண்ணினைப்பா கித்தல்கொல் லுதல் செள் ளரித்தனீ ரிற்கொழித் தெடுத்தல்
கிருச்சிரம் புகக்கூ டாதது பாவம் கேதஞ்சாந் தபநாதி விரதம்
விருத்திர மேகம் பருப்பத மிருட்டாம் விருத்திரன் பகைஞனோ ரசுரன்
மருத்துவ னாயுள் வேதியன் மகவான் வருத்தநம் சீவநம் வளர்ச்சி
**714
#95
விரதம் வரிக் கின்றது நோன் பொழிந்ததுவஞ் சினஞ்சாத்ர விதிகன் மப்பேர்
வரமேன்மை யோர்நிதிசற் றுளபிரியங் குங்குமந்தெய்வப்ர சாதம்
பரிவாபம் விதைப்பது நீர் நிலைபாத்தி பரிவாரம் படாத்தின் வீடாம்
சருவதோ பத்திரம் வேம் போர்சித்ரக் கவிதைசதுர்த் துவார சாலை
**715
#96
கிரமம்வே தாசார விதிமுறைமை பொருடொறுங் கிளர்சத்தி யடிவைப்புமாம்
பிரவாக முக்யவா கநம்புறக் கமநம்நீர்ப் பெருக்கின்வே கம் வழக்கம்
பரியாய மோர்பொருட் டிரிசொல் க்ரமந்தன்மை படைப்பவ சரம்ப்ரகாரம்
நிரியூக முளையாணி கடாயம் பிசின்வாசல் நெற்றியணி மாலையாமே
**716
#97
கரசமெனல் புன்குபுலி நகக்கொன்றை கைந்நகப்பேர்
சுரசங்கஞ் சாங்கோரை சிறுகிழங்கு நற்சுவையாம்
தரணிபுவி கற்றாழை சமுத்திரஞ்சூ ரியனோடம்
பரணிமருந் திடும்பாண்ட மோர்நாளோர் பிரபந்தம்
**717
#98
தருக்கம்வியா கரணபதப் பிரிவூகஞ் சம்வாதம்
குருத்தெனல் நெட்டிலைமரமங் குரிக்குமிள மடல் வெண்மை
விருத்திசீ வநம்வளர்ச்சி விரித்துரைகை சிகியாதி
விருத்திநிறை வோர்மருந்து மிகுதியின்பம் பொலிசையுமே
**718
#99
சிரஞ்சீவி நெடுங்காலஞ் சீவிப்போன் காகப்புள்
சுருங்கைமதிற் குட்கள்ள வழிகள்ள வாசல்சொலும்
மருந்து கொடி மரம்புற் பூடுமுத லிய தமுதம்
முருந்து சிற கடிமுள்ளு வெண்குருத்து முல்லை முகை
**719
#100
அரசி ராச்சிய மோர்மர மரசிய லரசன்
முரசு பேரியை யோர்பறை யுத்திரட் டாதி
கரடம் யானையின் மதக்கவுட் சுவட்டொடு காகம்
பரவை பூமக ளாடலும் பரப்பும்வா ரிதியும்
**720
#101
கிரகசங் கரபத் திரங்கரு வேல்மரம்
கிரண மிருசுடர்க் கதிரோர் சிவாகமம்
பிரசுரம் விரைவு மிகுதி திரண்டது
பிரததி படர்கொடி திரள்பரப் பும்பெயர்
**721
#102
பிரதநம் பழமை பிளத்தல் வெஞ்சமம்
பிரதம முதன்மை யாவது முதலது
பிரதிபத் தென்பது புத்தி பிரதமை
பிரவரஞ் சந்ததி சிரேட்டங் கோத்திரம்
**722
#103
இரம்மிய மிட்ட மான தழகிது
புரவல னாள் வோன் கொடுப்போன் புரப்போன்
வரிசை முறைவெகு மாந மொழுங்காம்
அரிமந் தகமே சணகங் கடலை
**723
#104
மருகெனல் மகர வாழை மருமகன்
மருமரம் படாத்தொலி வறட்சரு கின்னொலி
பிருகுசன் பரசு ராமன் சுக்கிரன்
பிருதநை சேனை யோர்படைத் தொகைப்பெயர்
**724
#105
விருசிநம் வளைவு கிலேசந் தீவினை
விருடை யெலியால் பூனைக் காலியாம்
கருதுத லுன்னல் குறித்தல் விரும்புதல்
கருண மல்லிகைப் பூச்செவி யோர்மரம்
**725
#106
அருணன் ஞாயிறன் னவன்றேர்ச் சாரதி
அருவி வெற்பின் வீழ் யாறு கழிமுகம்
இருது மகளிர் பூப்பும் வசந் தாதியும்
இருள் கறுப் பிருட்டு நிரைய மயக்கம்
**726
#107
மருவுதல் பழக லருகுறல் மேவுதல்
மருவகங் கடாரை மரமருட் காரை
சருவதோ முகமென லாகா யஞ்சலம்
சருவதோ முகனய னான்மாச் சதாசிவன்
**727
#108
சிரவணங் வேள்வி செவியோண நாட்பேர்
வரவரு ணிநியுத் தமப்பெண் மஞ்சளாம்
நரனருச் சுநன்மா நுடனா ராயணன்
கரிமரஞ் சுட்டது சான்றுகைம் மாவே
**728
#109
பரிகலங் குரவருண் கலன் பரி வாரம்
திரிபுடை மல்லிகை சிவதைசிற் றேலம்
துரியஞ் சுமையெரு தொடுநான் காவது
அரில்சிறு தூறு குற்றம் பிணக்குமாம்
**729
#110
தருடண மவமாநஞ்சுர தப்பெயர்
முருடு பெருங்குற டோர்பறை விறகு
உருவகம் நாடக மோரலங் காரம்
சருவதோ பத்திரை நடப்பெண் பெருங்குமிழ்
**730
#111
பிரகா டந்திட மிகுதி கிருச்சிரம்
பிரசே வந்தந் திரித்தடை மீன்பறி
பிரஞா நம்மடை யாளம் புத்தியாம்
பிரதே சஞ்சிறு விரற்சா ணிடமே
**731
#112
பிரதீ கம்ப்ரதி கூல மவயவம்
பிரபா வம்பிர தாப மன்னொளி
பிரயோ சநம்கூ டுதல்கா ரியம்பலன்
பிரவா சநம்பய ணப்படல் கொல்லுதல்
**732
#113
புரத்தல் கொடுத்த லாளுதல் காத்தல்
பரிக்கிர மங்கால் நடைவிளை யாட்டாம்
வரிட்டன் மிகப்பெரி யோன் சிரேட் டன் பெயர்
வரித்தல் வேண்டிக் கொளல் பூ சுதலே
**733
#114
பரண்டை காற்பரட்டடிபெருங் கொக்கு
நரந்த மெனல்நா ரத்தைகத் தூரி
துரந்த ரந்நமை மரஞ்சுமை யெருது
நிரந்தர முட்புறம் பின்மை நெருக்கம்
**734
#115
அரந்தை குறிஞ்சி யாழ்ப்ப ணிடுக்கண்
அரம்பை வாழையோ ரரமக ளென்ப
சிருங்காரி யானை கமுகு சுவேடம்
இரும்பு கரும்பொ னாயு தப் பொதுவே
**735
#116
வரத்திரை மதகயப் புரோசை தோலின்வார்
பருக்கை சோற் றவிழொடு பளிங்கு கற்பரல்
கிருத்திதோ லறுத்தது பூர்ச்சங் கிருத்திகை
கருப்புரம் பலநிறம் கநகம் பாபம் நீர்
**736
#117
பிரதிகங் கோபங் கொலைநோய்
திரபு தகரந் திராவென்ப
திரபை வெட்கந் துட்டையுமாம்
முரித லொடிதல் கெடுதற்பேர்
**737
#118
துருகி ணன்மா யவன் பிரமன்
கிருணி கிரணஞ் சுவாலையுமாம்
துருணி யோடம் பெண்ணாமை
பிருச மிகுதி தீவிரமே
**738
#119
அரிமரு கன்கண பதிமயில் வாகநன்
பரியகங் கைச்சரி காற்சரியும்பேர்
திராவகங் காந்தக் கல்லுருக் கியநீர்
அராளம் நறும்பிசின் வளைவு மதகயம்
**739
#120
பிராக்ருதன் கயவன் மூடன் பிராசமே யெதுகை யீட்டி
நிராக்ருதி மறையோ தாதோ னுருவின்மை நிடேத முப்பேர்
இராசரா சன்கு பேரன் சுயோதநன் வேந்தர்க் கீசன்
இராசன் சந் திரனி யக்க னிந்திர னதிபன் வேந்தன்
**740
#121
இராசிநெற் குவைமே டாதி யிடையறா வொழுங்கி ரேகை
இராசிகை வயலி ரேகை யொழுங்குகேழ் வரகென் றாகும்
கராடந்தா மரைக்கி ழங்கு மருட்காரை யோர்புட் பப்பேர்
இராமைமன் மதநூல் கற்றோள் சிறுவழு தலையு மேற்கும்
**741
#122
பிராணகம் போளம் வேங்கை மரம்ப்ராண னுள்ள சாதி
கிராதன் சிற் றுடம்பன் வேடன் கிராதிகுட் டநிகங் கைப்பேர்
தரீடம் வா ரிதிமுயற்சி சுந்தரா கிருதி தெப்பம்
வரூதமெய்த் திராணந் தேரை மறைக்குங்கம் பளாதி வீடாம்
**742
#123
குரால்புற்கு நிறங்கோட் டான்பேர்
துரால் செத்தை துருவல் துன்பம்
சிராமமண் டபங்கா லப்பேர்
திராவகன் சமர்த்தன் கள்வன்
**743
#124
மராள மாதளை யன்னப்புள்
மரூக மேமயில் மண்டூகம்
சுரூபன் சுந்தரன் விற்பந்நன்
இரேணு பற்பட கந்தூளி
**744
#125
பிராமகன் விடன் கோ மாயு பிராமரந் தேன்கல் லென்ப
இரேகைகை வரையெழுத்தோ டிடையறா வொழுங்கு வஞ்சம்
இரேணுகை தவிடு தக்கோ லம்பர சிராமன் றாய்பேர்
ஞெரேலென லொலிக்கு றிப்புக் கதுமெனல் பயக்கு றிப்பாம்
**745
#126
இரேவடஞ் சூறைக் காற்று வலம்புரிச் சங்கு மூங்கில்
உரோகிடங் காவட் டம்புல் கழுதையொத் திடுமா னோர்மீன்
விரோசநன் பிரக லாத சுதன்விதுக் கனலோன் பாநு [ னும்
புரோகிதன் கிரியை செய்விப் போனுமுன் னிதஞ்சொல் வோரேவடம்
**746
#127
உரோசநை பசுப்பித் தஞ்செங் கழுநீருத் தமப்பெண் ணும்பேர்
துரோணம் வில் லண்டங் காக்கை தும்பைதேள் பதக்கோர் மேகம்
சுரோதம் நீர் நீரி னோட்டம் பிரவாகஞ் சுரோத்தி ரா தி [ டாம்
விரோதம் வேற்றுமை போர் வன்மம் விரோதிசத் துருவோ ராண்டாம்
**747
#128
அராகம் பாலை யாழ்த்திறத்தோ டிராக மன்மை முடுகியலாம்
கிராகங் கைக்கொள் ளுகை முதலை கிரீடை லீலை பரிகாசம்
திராச மச்ச மணிக்குற்றந் திராணங் காத்தல் திராய்ப்பூடு
தராசு பரணி நாணிறைகோல் சராவ மகலோ டுலைமூடி
**748
#129
இராசா தநங்கிஞ் சுகமுரள் சிங் காத நங்கிங் கிணிப்பாலை
கிராமியம்பா மரச்சொல்லோர் சுரதங் கிராமோற் பவத்ததெனும்
சிராயு நெடுவாழ் நாளிலவாஞ் சிரீசம் பத்திந் திரையழகு
கிராவ மலையுங் கல்லும் பேர் கிரீவை கழுத்தின் றலைகழுத்தே
**749
#130
மரீசி தியாக போகமிலா மநுசன் கிரண மோரிருடி
பிரீதி மகிழ்ச்சி யோர்யோக மதநப் பிரியை நேயப்பேர்
வரீயான் சிரேட்டன் மிக்கிளைஞன் மாவித் தார மோர் யோகம்
கரீரங் கரிப்பல் லடியகத்தி கலசங் கருவேல் மூங்கின் முளை
**750
#131
துரோகம் பழிமித் திரபேதம் துரோணி தோணி மலைச்சந்து
குரோட மார்பு மடிபன்றி குரோதி சினத்த னோர் வருடம்
புரோடா சம்மாக் களியோம சேடஞ் சோம ரசமவிசாம்
துரோத ரஞ்சூ ததினொட்டம் நிரோதந் தடைகே டடக்கப்பேர்
**751
#132
நராங்க முகநோ யாண் குறியாம் வராங்கம் யானை யோனிதலை
பிராந்த ரங்கா னகநடப்பில் தூர மார்க்க மரப்பொந்து
பிராந்தி யில்லா தனதோற்றல் சுழற்சி மயக்க மெனப்பேசும்
நரேந்தி ரன்வார்த் திகமுடையோன் விடவைத் தியன ராதிபனே
**752
#133
இராகமற் சரங்கிலே சாதிய நுராகம்
இச்சைகாந் தாராதி சிவப்பாதி யென்ப
பராகம் பூந் துகள்கியாதி யுபராகம் பூப்போர்
பருப்பதஞ்சந் தநமுழுக்குப் பொடிதூளி யெண்பேர்
நிராகார முபவாச முருவமிலா மையுமாம்
நிரூபணங்காட்டுதல் விசாரித்தல் திருட் டாந்தம்
பிராசாத மிராசமா ளிகைதேவா லையப்பேர்
பிராணநா தன்ம றலி தன்னுயிருக் கிறைவன்
**753
#134
இராசீவம் வரைக்கெண்டை தாமரையோர் மானாம்
இராதிநிசல் லகிநதிவச் சிராயுதமின் னிடிப்பேர்
வராடகமே பெருங்கயிறு பலகறைதா மரைக்காய்
வராடிபல கறையோர்பண் ணோரிரா கமுமாம்
கிராண மூக் கிருசுடரை யராத்தொடல்மோப் பதுமாம்
கிரீசன்வாக் கிறைகைலை யாளிகிரிக் கதிபன்
புராணஞ்சற் காதிபஞ்ச விலக்கணக்காந் தாதி
புராணமீ ரைந்தாண வெள்ளிபழ மையுமாம்
**754
#135
பிராணனுயிர் காற்றிதய வாயுவிந் திரியம்
பெலம்போளம் பிரணவங்கா ரிய மருமம் வாழ்நாள்
இராதைவிசா கம்விண்டுக் கிராந்திநெல்லி மின்னல்
இடைச்சியரி லொருத்திகரு ணனைவளர்த்தா ளென்ப
கிராமணிநா விதன்கிரா மாதிபனா திபன் முக்
கியன்போக முடையன்மா தங்கிவிலை மகள்பேர்
இராமமழ கியது வெண்மான் வெள்ளை கறுப் பென்றாம்
இராமனிரா கவன் பலரா மன்பரசு ராமன்
**755
#136
கிராமமைம் புலன்களின் பூர் வகமான திரளேழ்
கீதசொரங் களின்றிரளூர் நீர்ப்பறவை நாற்பேர்
பிராமிபொன்னாங் கண்ணியோ ரிலைக்கறியோர் மாதா
பிரமசத்தி நாமகள்வெள் ளெறும்புரோ கிணிநாள்
பிராயமிகத் திரண்டதொடொப் புமைவயது மரணப்
பேறு துறந் துபவாசஞ் சாமளவுஞ் செய்தல்
பிராலம்பந் தொங்கலிடு மாலை திரா மேகம்
பிரேதமோர் பைசாசம் பிணம்நரக செந்து
**756
#137
சுராலையமேருச்சுவர்க்கங் கள் விற்கும் வீடு
துரோடி சிறு குமிழோர்புட் புள்ளலகோர் மீன்பேர்
இரீதிநீர்ப் பெருக்குப்பித் தளைகிட்டம் வழக்கம்
இயல்புமரி யாதையுரு கின துவை தருப்பி
உரூபகம்நா ணகங்கிரந்தம் பசுவிருத்தஞ் செயுள்சொல்
லுருபியல்பு நாடகஞ்சக் கிராதிவடி வழகாம்
குரூரம்வெப் பங்கடிநம் பயங்கரம் பொறாமை
குரூரன் வெகுளியன் றயையி லான் பரத்து ரோகி
**757
#138
உரோகிணிகந் நிகைசிவப்பி யலாயு தன்றாய் பசுவோர்
உடுக்கடுரோ கிணிபெரிய குமிழ்கண்ட ரோகம்
உரோகிதஞ்செவ் வியவிந்த்ர தநுச்சிவப்புச் செங்கீற்
றுழையோர்முத் தாரஞ்செங் கயல்குங்கு மமுமாம்
சிரேணிதெரு வொழுங்கொடுகண் ணாளர்குலத் திரட்பேர்
சிரேயசுமோக் கந்தருமஞ் சுபஞ்சிலாக் கியமாம்
உரோடணம்வெள் ளிரதமுவர்த் தறைசினம்பொன் னுரைகல்
உரோதநங்கண் ணீரொலியா யழுதல்சோ றெனுமே
**758
#139
கராளமுக் கிரமுந் நதமேடு பள்ள மானது கணிச்சிவெண் ணெய்ப்பேர்
இரேசநி சிவதை ஞாழல் நேபாள விதையொடு மநோசிலை யென்ப
சிரேயசி யரத்தை கடுமரம் யானைத் திப்பலி பங்கம்பாளையுமாம்
புரோதமே தொடுக்கப் பட்டது பரியின் மூக்குப்பின்னரையுண்டை புடைவை
**759
#140
வராகங் கோரைபோர் பன்றி மலைமுகில்
பிராசந முழவு கோலருத்து தலாம்
தராதரம் யோக்கியா யோக்கியஞ் சைலம்
பராபவ மெளிமை கேடவ மாநம்
**760
#141
பிராமணம் வேதம் பிராமணர் தந்திரள்
பிராமணி சிறுதேக் கொடுபார்ப் பனிபெயர்
சிரீவா சஞ்சாம் ப்ராணிசெந் தாமரை
வரூதிநி யோரர மகளுஞ் சேனையும்
**761
#142
அரேணு கடலைவால் மிளகு குலப்பெண்
கரேணு மதகயங் கரிப்பிடி கோங்கு
இரேவதி கடைநாளலாயுதன் றேவி
இரேவை நருமதை நீலி யென்றாம்
**762
#143
இராக்கதி யிராக்கதப்பெண் சன்னக்கச் சோலம்
பராக்ரம மிகுவலிசா மர்த்யமுத்தி யோகம்
இராட்டிரந் தேசநக ருள சநமுற் பாதம்
விராட்டிரண் டாம் வருணன் கருடன் விரிஞ் சனுமாம்
**763
#144
சிராத்தந் தென் புலத்தோர்க்கூட் டுகை சிரத்தை யுளதாம்
பிராத்தியோ ரைச்சுரிய மடைதலிலா பப்பேர்
உரூப்பியஞ்சுந் தரம்வெள்ளி வெள்ளிக்கா சதன் பூண்
சிரேட்டனதி முக்கியன்மே தகவுடையோன் றந்தன்
**764
#145
புரூண மகளிர் சூற்சிசுவாம்
இரேபன் குரூரன் பழிப்புள்ளோன்
பிரேமம் நேயம் பரிகாசம்
உரோபம் பாண மநக்கலுடம்
**765
#146
பிராசே தன்வான் மீகி வருணன்
பிராசீநர் முன்னோர் கீழ்த்திசை யுள்ளோர்
பிராதா நியமுக் கியம்பிர புத்துவம்
திரேதா மூவகைத் தீயோர் யுகமாம்
**766
#147
கோரக மலர்மொட் டுத்தா மரைச்சுருள் தக்கோ லப்பேர்
தாரகம் விண்மீன் கண்ணின் மணிபிரணவமா தாரம்
சாரக மீன்புள் ளாதி படுக்கின்ற கயிற ரும்பாம்
தோரணம் வாக நம்பைங் குழைத்தொங்கல் வெளித்து வாரம்
**767
#148
சாரணர் கற்றுப் பாடு வோர்சமண் முநிவ ரொற்றர்
தாரணி யொழுங்கு பூமி நாரத முகில்நா ரத்தை
பூரணை யைந்தாம் வட்டத் திதிபுறத் தவன் றன் தேவி
ஆரமுத் தார மாலை பூடண மணிவ டப்பேர்
**768
#149
கீரம் நீர் பால்கி ளிப்பேர் கூரல் புட் சிறகு கூந்தல்
கோரம்வெய் தெனல்சோ ழன்மா வட்டில் போர்க் குதிரை யச்சம்
வீரம்வேர்க் கொம்பு வெற்போர் சிவாகம மிகுவ லிப்பேர்
ஆரல்கார்த் திகைநாள் செவ்வா யனலொடு மதிலா ரல்மீன்
**769
#150
சாரனா சுகனொற் றன்றூர்த் தன் சோர புருட னென்ப
சூரனோ ரவுணன் வீரன் சுநகன்குக் குடமா தித்தன்
தீரன்மெத் தெனச்செல் வோன்பண் டிதன்மநங் கலங்கா தோனாம்
ஓரியாண் மயிரு ரோமங் கிழநரி முசுவோர் வள்ளல்
**770
#151
சேரியூர் தெருவு மாகுஞ் சீரியர் சிறந்தோர் செல்வர்
நாரிபெண் ணுமைவின் னாணாம் நாரன்பு பனைநா ராதி
காரிகை கொடுந்துக் கஞ்சூத் திரவுரைக் கவிக வின்பெண்
பாரிபத் திரமே தேவ தாரமுண் முருக்கு வேம்பாம்
**771
#152
ஆரியம் விந்த வெற்பின் வடதேயம் வடமொழிப்பேர்
பூரிய மிராச வீதி பூபர்தம் மிருக்கை யூராம்
ஆரியர் குரவர் சான்றோ ராயுள்வே தியர்மி லேச்சர்
ஆரியன் குரவனைய னறிஞனுத் தமகு லேசன்
**772
#153
ஆரியை பூச்சி யப்பெண் ணோர் சந்த சுமையா சாள்பேர்
காருகா ருகன்கண் ணாளன் விச்சுவ கன்மா சிற்பம்
சாருசுந் தரங்கிளிப்பேர் மாருதி யநுமன் வீமன்
காருக வினைசு மத்த லுழுதனூ னூற்றல் நெய்தல்
**773
#154
காருட மோர்பு ராண மரகதங் கருட தந்த்ரம்
வாருணி சதைய மேற்கோர் மதுக்குட முநியோர் தூர்வை
ஆரைதோ லுளிபுற் பாயோர் நீர்ப்புதல் மதிலு மாகும்
தோரைகை வரைமூங் கிற்றண் டுலஞ்சர மணியோர் நெல்லே
**774
#155
கைரவன் பகைஞன் வஞ்சன் கைரிகம் பொன்னற் செங்கல்
பைரவன் பயங்க ரத்த னுருத்திரன் கேத்ர பாலன்
பைரவி யோரி ராக மோர்பண்பா லைக்கி ழத்தி
சௌரியே கருடன் கன்னன் சநியமன் றுற்கை மாயோன்
**775
#156
ஆரம்பங் கொலைதொ டக்கம் பெருமிதம் பதற்ற மாகும்
ஏரம்பம் பராக்ர மத்தின் செருக்கெரு மைக்க டாப்பேர்
மாரண்டம் வழிபாம் பின்பீள் பேருண்டம் பயம்நே மிப்புள்
வாருண்டம் செவிம லங்கட் பூளை நீ ரிறைக்கும் வட்டில்
**776
#157
ஆர்பன்மை விகுதி தேருட் செறிகதி ராத்தி கூர்மை
கார்புனல் புயல்கறுப்பாண் மயிரொரு பருவ காலம்
சீர்தண்டா யுதந்து லாங்காத் தடி திருச் செல்வஞ் செய்யுட்
சீர்க நம் வரிசை நன்மை புகழ் செவ்வி தாள வொத்தே
**777
#158
சூர்தெய்வம் பயமஞ் சாமை துன்பம் நோய் வஞ்சஞ் சூரன்
தார்கொடிப் படைபுட் பம் பூந் தாமங்கிங் கிணிக்கோ வைப்பேர்
தேருரோ கிணியோ ரூர்தி தேர்தலே தெளிவா ராய்தல்
நீர்புனல் நீவிர் பண்பாம் நேர்மை தா னிணக்கம் நுண்மை
**778
#159
நேர்சம மிணக்கஞ் செவ்வை நிகரெதி ரோர சைப்பேர்
போர்சமர் சதையம் நெற்போர் போர்வை போர்த் துறுப டாந்தோல்
வார்புனல் கச்சு நீளம் தோலின்வார் வகிரு மாகும்
ஊர்தலூ ருதல்செ லுத்த லூர்திவா கநமூர் வோனாம்
**779
#160
தீர்தலே தொலை த னீளல் விடல் முடி வாக்கல் செல்லல்
நேர்தலே யெதிர்தல் வேண்ட லுடம்படல் சிறுக னீடல்
வார்தலே யொழுக னீளல் வகிர்தலோ டுயர்த லென்ப
கூர்மமோர் புராண மாமை கூரென்ப மிகுதி கூர்மை
**780
#161
ஊர்மிகை சேலைப் பங்கந் தரங்கமோ திரம் வண் டோசை
ஆர்வமே யாசை யன்பாம் ஆர்வத்தர் காந்த ரன்பர்
சார்வரங் கொலையி ருட்பேர் சார்வுபற் றடைவு சார்ச்சி
சேர்வு வீ டூர்தி ரட்சி தீர்வை தீர்ப் பதுகீரிப்பேர்
**781
#162
பார சவமா யுதமிரும்பா மூரல் சோறு பற்சிரிப்பு
பார சவன்சூத் திரையிடத்துப் பார்ப்பார்க் குதித்தோ னசதிமகன்
பார தம்பஞ் சமவேதம் வெண்சூ தம்பா ரதவருடம்
ஈரம் நனைந்த தன்புமிரு கேசன் பாம்பு வயிரமணி
**782
#163
தீரம் நதியின் கரையீயங் கடல்குங் குமம்சித் தத்துணிவாம்
பூரம் விரண சுத்திபுனற் பெருக்கோர் நாள் பூ ரணமும் பேர்
சோரன் றுருவைப் பறழ்கள்வன் வீரன் சிரேட்டன் சிநன் சூரன்
மாரி யோர் நோய் வடுகிமுகில் மழைநீர் கள்ளுச் சநநாசம்
**783
#164
மூரி நெரிவு சோம்புவலி முந்தை பெருமை யெருதெருமை
வீரி காளி வீரமுளாள் வேரி மருக்கள் ளிருவேலி
காரியஞ்செய் தொழில்பயனாம் கார்மு கம்மா யுதம்வில்வேய்
பூரு வம்முந் தினது கிழக் கெழுவாய் முன்பு புராதநமே
**784
#165
ஆர கன்கள் வன்கபடி யார்த லுண்டல் நிறைதற்பேர்
பாரி டம் பூ தம்புவநம் பார்வல் குஞ்சு மான்கன்று
சூரியன்சோ ழன்பகலோன் தூர்வை தூர்த்த சேறறுகாம்
ஈரை யெறும்பு சீதேவி யேரொப்பழகோ டுழுமேரே
**785
#166
தாரகனோ டம்வலிப்போன் புத்திரனோ ரசுரன்
தாங்குவோன் றிருமாலின் சாரதிம கேசன்
சாரசம்வண் டானம்வெண் ணாரைதா மரைப்பேர்
சாரிகைநா கணவாய்ப்புள் யாழ்வாசிக் குங்கோல்
காரம் வலி யிமசைலங் கொலை முயற்சி யெதுகை
கார்ப்பெழுத்தின் சாரியை நிச் சயம்பொரிகா ராதி
சாரங்கம் பலநிறம்வண் டோர்புள்ளோ ரிராகம்
சாதகப்புள் யானைமான் சலதரமென் றெண்பேர்
**786
#167
சாரம்வலி யெலும்புமுரள் சுவைமரக்காழ் மேன்மை
தநஞ்சூதுக் கருவியொற்றாள் வினைநடைநீர் மருந்தின்
சாரம்வளை மண்ணுவர்ப்புப் பலநிறம் நீ றுப்புச்
சார்த்துயர்த்து மேடுபந்தந் தக்க திரு பான்பேர்
சீரம்வாள் கலப்பைமர வுரிகிழிந்த துணிநற்
சேலைபசு வின்முலை சூட் டொடுதுத்த நாகம்
தாரம் விண்மீன் கண்மணியோர் யாழிசைவல் லிசைகா
தலிவெள்ளி யாணிமுத்து முத்தின் றூய் மையுமே
**787
#168
வாரமவ சரங்கூட்டம் நேயங்கட் கிண்ணி
மலைச்சார்பு கிழமைபங்கு வாயில ரண் மனையாம்
காரிவிடம் நாற்குறுணி சநிவடுக னையன்
களர்நிலமுந் நீர்க்காரி கருமையோர் வள்ளல்
சாரிசுழல் காற்றுலாப் போதல்சுங்கம் யானைத்
தவிசுவட்ட மாயோடல் சூதுக்காய் பூவை
சீரியலா யுதன்கச்சை சிள் வீடு முப்பேர்
சீருள்சீருடைமையும் வெண் கலஞ்செம்பா தியுமே
**788
#169
சூரிசூரியன் புலவன் காளிவடு கன்றாய்
சோர்தல்வா டுதல் தளர்தல் வழுவலயர்த்தலும் பேர்
பாரியிபக் காற்கயிறோர் கடைவள்ளல் கெண்டி
பானைபரா கம்பூமி மனைவிகந முளதாம்
வாரிநீர் கடல் வெள்ளம் மதிற்சுற்று வருவாய்
வழியானைப் படுகுழிவந் திப்போன்வா ணியுமாம்
பாரிசா தம்முண் முருக் கோர்தேவ விருக்கம்
பார் பூமி தேர்ப்பரப்பு ரோகிணிநா ளெ னுமே
**789
#170
வீரியம்ப ராக்கிரமம் பிரபாவந் தேசு
மிகவலிய வுற்சாகஞ் சுக்கிலத்தா துவும்பேர்
தாருமரக் கொம்புபட்ட வறள் மரஞ்செந் நுணாவாம்
தார்விமஞ்சள் மரமஞ்சள் செந்நுணா மரப்பேர்
காருசங்காட் டெள்ளெழுது சித்திரம் நா கப்பூக்
களபம் நுரை நாவிபுற்றுக் காவிக்கல் லென்ப
ஓரையிலக் கநஞ்சமைய மகளிர் குழா மவரா
டுதலாடுங் களன்கால வோரையிரா சியுமே
**790
#171
தாரையா யுத நுனிமுன் னணிப்படைவிண் மீன்சந்
ததிபரியி னைங்க திசுக் கிரீவபன்னி யூதுந்
தாரைசுர குருபன்னி கருவிழிமேம் பாடு
சலம் வீழ்தல் மழைத்தாரை வழியுருளின் விளிம்பாம்
வீரைபெருங் குமிழேலா வாலுகம்பே யத்தி
வெள்ளீறில் சமுத்திரங்கிங் கிணிப்பாலை வாழை
வீரைமரம் நறாக்கருங்கா கோளிதா மலகி
வீரப்பே ருள வூர்நாயகபுத்ர வதியே
**791
#172
கௌரமெனல் வெண்கடுகு தூயது வெண் சிவப்புக்
கமலப் பூந் தாதுபொன்மை நிலவின் விசுத் தமுமாம்
கௌரிமநோ சிலைஞாழல் பார்ப்பதி பூப் பில்லாக்
கன்னிகைபொன்னிறப்பெண்வரு ணன்மனைவி பூமி
பௌருடமாண் டன்மைபுரு டன்கையெடுப் பளவு
பராக்கிரம மாண்டொழிலாண் டேசுவென வைம்பேர்
பௌருடே யம்புருடர் திரளவராற் செய்யப்
பட்டதவ ரநுகூல மவர்கொலைவி காரம்
**792
#173
சீரண மிருசீரகம்பெருங் காயஞ் சுவர்ச்சிகை கிழிந்தது சீன்றம்
வாரணஞ் சங்கு துகிற்கொடி கோழி மதாவளந் தடைகட லென்ப
பாரமக் கரைதோட் சுமைகந மிரண்டா யிரம்பலங் கொண்டது வரம்பாம்
காரவி கருஞ்சீ ரகஞ்சத புப்பி காயப்பத் திரிமயிற் சிகையே
**793
#174
சாரதம்வற் சரம்புதிதே ழிலைப்பாலை பீதமுற்கம்
தாரதமே வெள்ளிரதம் விடபேதஞ் சாதிலிங்கம்
சாரதிநீர்த் திப்பலிதேர்க் கடைப்பூடு தேர்ப்பாகன்
பாரதிவாக் கோர்விருத்தி பாமடந்தை மரக்கலமே
**794
#175
ஊரணா யுச்சிலம்பி யாடதன்கம் பளமும்பேர்
வேரமெனல் குங்குமஞ்சேப் பங்கிழங்கு தேகமுமாம்
பூரிதிரண் டதுநரணி பொன்கலப்பு நெல்லென்ப
ஆரிடமோர் மணமிருடி யின்வசந மாகமமே
**795
#176
சாரகன் குதிரைப் பாலன் சஞ் சாரகன்
தாரகை நக்கத் திரங்கட் கருவிழி
மோரடங் கரும்பின் வேர்நற் பா லுமாம்
ஆரணம் வேத மதன்ஞான பாகையே
**796
#177
சூரணங் கருணை தூ ளோருவர்ப் பென்ப
பூரணம் நிறைவோர் பிட்டுமெல் லாமுமாம்
பூரணி யிலவ மரம்நிறை வுள்ளவள்
வாரவா ணங்கவ சங்குப் பாசமே
**797
#178
ஓர மெனலரு கிடம்பக்க பாதமும்
நாரம் நீர்ப் பாசி நாரத்தை நீரெனும்
சாரல் மருதயாழ்ப் பண் தாழ் வரையுமாம்
பீரு சதாவரி யச்சமுள் ளோன் பெயர்
**798
#179
வீருதங் கிளைசேர் கொடிமிடை தூறு
வாருண மேற்கோர் சலசரம் வாரிதி
தூரடி வேர்பா ரந்தேர் முகப்பாம்
பீர்முலைப் பாலின் றுளிபச லைப்பேர்
**799
#180
பௌரம் புரோற்பவப் பொருள்காவட் டம்புல்
கௌரவர் குருகுலத் தவர்கந முடையோர்
சௌரியங் கள்ளத் தனம்பராக் கிரமம்
கௌரிள மிரும்புப் பொடிகடு கென்ப
**800
#181
வீரட்டா நங்கூத்தின் விகற்பம் வீரஞ்செய்தலம்
பாரத்வா சன்வின்னூ லாளன் காட்டுப்பருத்தி
பாரித்தல் வளர்த்தனிய மித்தல்பரப் புதல்பருத்தல்
பூரித்த லுவத்தனிறைத் திடல்பருத்தல் பொங்குதலே
**801
#182
தாரா டங்கொய்யுளைப்பாய்மா சாத கப்புள் ளெனவிருபேர்
ஆரா தநஞ்சித் தித்தலுகப் பித்தல் சமைத்தல் பேறடைதல்
தாரா தரங்கை வாள் மேகம் தாராங் கம்வாள் புனற்றுறையாம்
நாராயணன்சந் திரன்கடற்கு காதன் பிரமன் சிவன் றிருமால்
**802
#183
பாரா வதமே சிலம்பி புறாத் தும்பில் மரம்பற் பதமென்ப
பாரா வதிமுல் லைக்கீதம் புறாவின் பெடைமுத் தாபலமாம்
ஆரோ கணமே றுதலேறும் படிநிற் கமமுன் வாயிலெனும்
ஆரோ கம்மே றுகையுயர்ச்சி நீட்சி நிதம்ப மங்குரமே
**803
#184
நாராச மெனலிரும்புச் சலாகைநீர் யானை
நாரா யணமச்சுவத்தமர மீன் பேர்
பாரா யணமுடித்தல் பற்றுதலு மான
படிப்பெல்லா மங்குசபந் தநங்கரையின் வழிப்பேர்
நாரா யணி திருக்கோ கநதை துற்கை கங்கா
நதியோர்பண் ணோரிரா கஞ்சதா வரியாம்
மாரீசந் தக்கோல மோருபபு ராணம்
மாமாய மிராசமா தங்கம்நாற் பெயரே
**804
#185
தீர்க்கம் நிச்சயம் நீ ளப்பேர் மார்க்கணந் தேட லம்பாம்
மார்க்கமார் கழிமான் றோல்மான் மதம்வழி தெருவோர் கூத்து
பார்க்கவன் மழைக்கோள் நல்ல வில்லாளி பரசி ராமன்
பார்க்கவி யறுகம் புல்லோர் சத்திபாற் கடற்பி றந்தாள்
**805
#186
ஊர்ச்சங்கார்த் திகைமா தம்விக் கிரமமுற் சாக முப்பேர்
கூர்ச்சம்ப்ரூ நடுவஞ் சம்பொய்த் துதிகுச முடிச்சு மீசை
மார்ச்சநம் வெள்ளு லோத்ரம் துடைத்தல்தூய் தாக்கல் மன்னும்
கூர்ச்சிகை கெட்ட பால் பூ மொட்டுத்தூ லிகைக்கோ லூசி
**806
#187
சார்த்தஞ்சஞ் சார செட்டித் திரள்சகி தஞ்ச மூகம்
வார்த்தமே பதர்நோ யின்மை வார்த்தை சீ வநம் பேச் சென்ப
ஆர்த்தல்கட் டுதலொ லித்தல் பொருதல்மின் னுதனி றைத்தல்
ஆர்த்தவ மிருது வின் சம் பவம் பூவங் கநைமார் பூப்பாம்
**807
#188
தீர்த்தன்மா லருக னாசான் பரிசுத்தன் குருச்சி வன்பேர்
கீர்த்திவித் தாரஞ் சேறு புகழநுக் கிரக மென்ப
கார்த்திகை யோர்மா தஞ்செங் காந்தளோர் நாளு மாகும்
ஊர்த்துவ முயர்வு மேனோக் கிய துமே லுயர்ந்த தும்பேர்
**808
#189
கூர்ப்பர முழங்கை சாநு கூர்ப்பென்ப வுவர்ப்புக் கூர்மை
பார்ப்பரங் கயநோய் நீறு சோற்றவிழ் கடப்பந் தாதாம்
ஆர்ப்புப்போர் சிரிப்பொ லிப்பாம் ஓர்ப்பென்ப பொறுமை தேற்றம்
பார்ப்பென்ப தவழுஞ் சாதி குரங்கணிற் பறழ்புட் குஞ்சே
**809
#190
கீர்த்த நந்தோத் திரம்பாட்டாம் பேர்த்தல் பிடுங்கல் கிளப்பற்பேர்
ஈர்த்த லிழுத்தல் போழ்தலுமாம் வார்த்த ளம்வாள் பொல்லா நாள்
தீர்த்தல் தொலைத்தல் முடிவாக்கல் தூர்த்தல் சீத்தல் நிரப்புதலும்
வேர்த்தல் வியர்த்தல் சினக்குறிப்பு ஆர்த்தி துன்பம் விற்குதையே
**810
#191
தீர்த்தமுபா யம்யோநி பூப்பவதா ரம்பாத்
திரம்நீர்புண் ணியத்தலம் நீர்த் துறைமுநிவர் தோய்ந்த
தீர்த்தமவர் சொல்லிய நூல் விழாவேள்வி குருமந்
திரிகிணற்றுத் தொட்டி தெரி சநமொழியாக் கொடையாம்
தூர்த்தமிரும் புக்கிட்ட மூமத்தை யென்ப
தூர்த்தன்சூ தாடுவோன் றெட்டுவோன் விடன்பேர்
மூர்த்தமெனல் கடிநமுத்த மாங்கமுகூர்த் தமுமாம்
மூர்த்திகா டிநியமுடல் பிரதிவிம்ப மும்பேர்
**811
#192
தார்க்கியங் குதிரை தேர்மரா மரப்பேர்
தார்க்கியன் கருட னவன்றமை யனுமாம்
வார்த்தக மூப்புத் தொழில்மூப் பினர் திரள்
பார்த்தலா ராய்தல் தேடுத னோக்குதல்
@14 லகர வெதுகை
**812
#1
கலசமே குடமும் பாலுங் கலவைதான் கலப்போர் சாந்தாம்
சலசந்தா மரைசங் கென்ப சலநங்கா லலைதலும்பேர்
அலசலே கழுவல் சோம்பல் அலவனே நண்டு பூனை
உலமரல் துயர் துண் ணென்ற லலறல்கத் துதலொ லித்தல்
**813
#2
குலமுடல் வீடோர் சாதித் திரள்நாடு கோத்தி ரப்பேர்
நிலமிடந் தறைபூ மிப்பேர் நிலவொளி மதிநி லாவாம்
புலம் வயல் புலனி டப்பேர் புலனறி வொடுரூ பாதி
பொலமென்ப பொலன்பொல் லாங்காம் புலவென்ப முடைபு லாலே
**814
#3
மலம் விட்டை யழுக்குக் கிட்டம் பாவம்பன் னிரும லப்பேர்
வலம் வலி யிடம்வ லப்பால் வலனேயோ ரசுரன் வெற்றி
வலயமே வளையங் கண்ட ரோகங்கங் கணம் வட் டப்பேர்
அலரிபூங் கணைக வின்கண் வரிபூவோர் மரம ருக்கன்
**815
#4
புலர்தலே வெடிதல் வாடல் புலியோர்சாந் தோர்வி லங்காம்
இலலநை சுகுமா ரப்பெண் பரிகாசத் தினள்நாக் கென்ப
பலலமெட் பொடி சே றூனாம் பலிபுட்டங் காக்கை கொக்கு
இலவண முவர்ப்புப் பும்பேர் எலி பூர நாளோர் செந்து
**816
#5
புலவர்பா டுநர்கண் ணாளர் பொருநர்விற் பந்நர் வானோர்
புலவனிந் திரன்கண் ணாளன் புதன் செவ்வே ளறிஞன் கூத்தன்
வலவனே வெற்றியாளன் றேர்ப்பாகன் வல்ல வன்பேர்
உலவைமா ருதம ரக்கொம் போர்மரந் தழைம ருப்பாம்
**817
#6
வலவைவல் லவன்வஞ் சப்பெ ணிடாகிநி வல்லோ ளென்ப
இலளிதம் பிரிய மோர்சி வாகம மழகிச் சைப்பேர்
இலளிதை யோர்முத்தாரம் பராசத்தி யோரி ராகம்
கலனையொன் றற்கு வேண்டு முபகர ணங்க லப்பை
**818
#7
கலனணி கலன்கோ ளன்கீழ் மகன்றுட்டன் கலத்தின் பேராம்
நலனென்ப தழகு நன்மை நலிதலே மெலிதல் நைதல்
விலகுதல் தவிர்த னீங்கல் விலங்கலே விலகல் வெற்பாம்
கிலமற்பம் பாழ்நி லப்பேர் கிலேசம்நோ யாதி துன்பம்
**819
#8
அலிநறு விலிவெ ளிற்று மரமலா யுதன்பே டிப்பேர்
ஒலியிடி யோசை காற்றாம் ஒலியல் தார் நதிதோல் சேலை
கலியொலி மிடிய நீதம் போர்கடை யுகமோர் பாவாம்
பொலிவுமங் கலமெ ழுச்சி புணர்ச்சியு மிகுதியும் பேர்
**820
#9
நிலைய மூர் வீடு கோயில் நிலைமைமெய் நிற்கும் தன்மை
உலையன லாற்கொ திக்க வைக்குநீர் கொல்லு லைப்பேர்
குலையம்பின் குதைகாய்க் கொத்துச் செய்கரை விற்கு தைப்பேர்
தலையிடம் பெருமை யாதி சிரசுமேல் தலைமை யென்ப
**821
#10
இலக்கிய மிலக்க ணத்ததுதாரண நிபமி லக்காம்
உலத்தலே கெடுதல் சாதல் புலர்த்தல் பூ சுதலு லர்த்தல்
கலித்தலே பொலிவெ ழுச்சி பெருகல்கக் குதலொ லித்தல்
சலித்தலே யசைதல் சல்லல் சடைத்தல்சஞ் சலித்த லும் பேர்
**822
#11
பலங்கட முருக்க ரத்தை நெருஞ்சி குற் குலுச்செம் பஞ்சாம்
கலம்பக மோர்ப்ர பந்தம் கலப்புள தளாவு தற்பேர்
புலம்பல்கோ சனைபி தற்றல் புலம்பொலி தனிமை யச்சம்
வலம்புரி பணிலச் சங்கோர் மரம் நந்தி யாவட் டப்பேர்
**823
#12
பிலங்குகை யளைதொ ளைப்பேர் பிலவங்கங் குரங்கு தேரை
மலங்கல் நீர் நிலைக லங்கல் மலையனோர் வள்ளல் வெற்பன்
குலிங்கமூர்க் குருவி காக்கை கொலைஞர் சண் டாளர் வேடர்
புலிங்கந் தீப் பொறிசிட் டுப்புள் புலைநீசத் தனம்பு லாலே
**824
#13
உலக முயர்ந்தோர் சநம்புவந முலகு திசைவிண் புவிநாடாம்
புலக மணித்தோ டம்வச்ரம் புழுத்தா ளகங்கட் கிண்ணிப்பேர்
அலசங் காலி னோய்சோம்ப லலைய லலைத லாலசியம்
வலசம் பயிர்கோ புரவாயில் வயல்நெற் கு திரங் கீகாரம்
**825
#14
வலசை புவிநற் பார்வையுளாள் மலர்த லலர்தல் விரிதலுமாம்
இலய மழிப்புத் தழுவுகையொத் தறுப்பு நாட்டி யத்திரையம்
மலயந் தேச மாராமம் வரையின் பங்கு பொதியமலை
அலர்நீர் பழிச்சொல் விரிந்தமலர் பலரு மறிந்து தூற்றலுமாம்
**826
#15
பலிகங் கும்ப முறிக்கலையங் குலிசம் வயிரப் படையோர்மீன்
மலிதல் மிகுதல் நிறைதலுமாம் மலிந மழுக்கா கிய துகறை
மலிந முகந் தீ பிண முசுப்பேர் மலிந முகன்றுற் சநனிறந்தோன்
கலுழி கலங்க னீர் முல்லைக் கான யாறு கலங்கினோன்
**827
#16
திலகமோர் பரிநீலச் சுவர்ச்சிகைமஞ் சாடி
தேகமறு நுரையீரல் திலதமுரோ மமுமாம்
அலகெனல்நென் மணி துடைப்பங் கவடிபுள்ளின் மூக்கெண்
ணாயுதக்கூர்ம் புறங்கதுப்பு நுளம்புமகிழ் விதைப்பேர்
இலகுசீ தேவிப்பேர் செங்கழுநீர் சார
மின்மைசுந்த ரங்குறளா னதுநொய்ம் மை யென்ப
இலதைவா லுழுவைமா தவிசீதே விப்பூ
டிளங்கொடிகத் தூரிமரச் சினையறுகு ஞாழல்
**828
#17
திலபன்னி திருவேட்டப் பிசின் வெண்சந் தநப்பேர்
சிலையொலிவில் வாயிற்கீழ்ப் படிமரங்கல் வெற்பாம்
அலமமையு மெனல்கலப்பை தேட்கொடுக்கு மாகும்
அலங்கார மணிகலன் கட் டழகுவமை யாதி
கலமசீ ரணங்கற்க மரக்கலமட் கலமுண்
கலங்களம் யாழ் படைக்கலமுத் தூணியிந்தி ரியமாம்
சலம் வெட்டி வேர்புனல்வஞ் சனைமுட்பன் றியின் முள்
சளமழுக்கா றலைவதுசீ தனப்பொருளென் றெண்பேர்
**829
#18
தலம் வின்னாண் முன்கையிற்றாக் காது கட்டுந் தடைத்தோல்
சமபூமி வாளாதிப் பிடியகங்கை தேவத்
தலம் விரித்த கைபடர்ந்த தாதாரஞ் சொபாவந்
தறைகீழா னதுகாலி னுட்பனையுஞ் சாற்றும்
பலம்வலிமை சமர்த்துருவ மிந்திரிய மேதுப்
பருமையெலும் பூன்படைவா ளுன்மாந வளவின்
பலமிலா பம்போளம் பயன் சாதிக் காய்காய்
பழம்படைகே டகந்தநமா யுதநுனிகா கமுமாம்
**830
#19
இலலாமந் திலகம் பூ டணமுக்ய மழகி
திவுளியடை யாளம்வால் பதாகைபிர பாவம்
இலவமிலே சம்மேடா தியின்மயிர்வி லாசம்
இருகாட்டைப் பொழுதுபயிர் முதலவரி தலுமாம்
பிலவமடை விற்றாழ்ந்த நிலங்குரங்கோ ரொலிநீர்ப்
பெருக்குநீர்க் காக்கையித்தி புணைவிசையிற் றாவும்
பிலவகதி தவளைவா சனைப்புல்கருந் தும்பில்
பெருங்கோரை தாராப்புள் மிலேச்சசா தியும் பேர்
**831
#20
சலகரங்க மென்பசங்கு தென்னங்காய் மேகந்
தலையல்புதுப் புனல்வரவு மழை பெய்து விடுதல்
பலிஞாழல் காய்க்குமர நீறுலுப்பை பூத
பலியாதி பூசைபிச்சை குடியிறையோ ரவுணன்
வலியு தர ரேகைசா மரைக்காம்பு வீட்டு
மரவிசே டந்தோலின் றிரைவன்மை நோவாம்
பலிதஞ்சித் தித்ததுதா பஞ்சேறு கேச
பாசம் நரை மயிர்வெண்மை யின்குணங்கற் பூவே
**832
#21
கலை நிருத்த கீதாதி புறக்கிரியை யாலிங்
கநசும்ப நாதியகக் கிரியைசுறா வெண்ணெண்
கலைகல்வி பாகையினங் கிசமாறைங் காட்டைக்
காலமரக் காழ்மூல தநவிருத்திகளைமே
கலைவண்ணப் பிரபந்தத் தோர்பந்தம் புல்வாய்
கருமானாண் முசுநிவிர்த்தி யாதிமந்தி ராதி
கலை புடைவை மதியின் சோ டசபாகத் தொன்று
கலநையிடை யா திசர நடைசிற்பா தியுமே
**833
#22
இலக்கணம்வி யாகரண முருவமடை யாளம்
இலக்குமமுக் கியமடையா ளஞ்சிரேட் டமுமாம்
கலக்கமச்சந் துயர் குழப்பங் கலங்கல் தெளி வின்மை
கலப்பையுழு படையொன்றற் கமைந்தவுப கரணம்
இலக்குமணனிராமாநு சன்சீமா னென்ப
இலக்குமிசம் பத்தழகு ஞாழலரிப் பிரியை
வலித்தலோ டஞ்செலுத்த லோர்விகா ரஞ்சம்
மதித்தனோ வுறனினைத்தல் வலி தாக்க லிழுத்தல்
**834
#23
இலங்கைமரச் சினை துட்டை யிலைக்கறியோர் புரியாம்
இலஞ்சிதடா கங்கொப்பூழ் மகிழமர மென்ப
இலம்பகம் நூன் முடிவு நுத லணியுமா லையும்பேர்
இலம்பமென லுயர்வு விசா லமுந்தொங்கு தலுமாம்
இலிங்கமடை யாள மாண் கோசமநு மாநம்
இங்குலிகஞ் சாங்க்யபிர கிருதிசிவ மூர்த்தி
கலிங்கம் வெட்பா லையினரிசி யோர்தேயங் குடுமிக்
கடுவன்புள் ளாயில்மரம் புடைவையைம்பேர் காட்டும்
**835
#24
கலகங் கடுமை போர் வாளுறை பந்தநம்
கலிகையாழ் மூல மலர்ந்தபூங் கொத்து
குலகம் பேய்ப்புடோல் புற்றுக் கருந்தும்பில்
குலிக மிருப்பையிங் குலிகம் பந்துமாம்
**836
#25
பலபத் திரன்பல தேவன் விறலோன்
பலபத் திரைதிராய்ப் பூடுகற்றாழை
கலில மறியொணா ததுபுக வொணாதது
கலுழங் கலங்கின தழுக்குப் பாவமே
**837
#26
சலபதி வருணன் கடலிரு மிச்சையாம்
உலபம் விழற்புல் கிளையுடைக் கொடிப்பெயர்
பலனே பலரா மன்பிர யோசநம்
தலிநம் நீக்க முளதற்பஞ் சயநம்
**838
#27
பலிநி ஞாழ லொடுகுப்பை மேனி
சிலிமீ லிகைமின் மினிமின் கண்டிகை
புலுதம் பரியின் விசைக்கதி யளபெடை
அலையே கடற்றிரை நீர்த்திரை யார்கலி
**839
#28
துலை துலாக் கோல்துலா மேற்ற மரத்துலை
நிலைமுறை கால மிடந்திரம் நிற்றல்
உலை தல் குலைத லழித னடுங்கல்
மலைதல் பொரல் சூ டுதல் துணி வின்மை
**840
#29
விலக்கந முதைய ராசி நுசுப்பாம்
இலக்கங் கணக்கோ டிலக்குநூ றாயிரம்
பிலக்கமோர் தீவுகல் லாலர சித்தி
இலக்குக் குறிநிப மெதிரி லக்கமே
**841
#30
உலக்கை சிரவண நாளுர லின்கை
மலர்ச்சி களிப்புப் பொலிவு மலர்ந்தது
சொலித்த லிடத்தல்தீக் கொளுந்தல் சுடர்தல்
உலுத்த னவாவுளோன் வேட னுலோபியே
**842
#31
இலங்கநங் கடத்த லுணவின் மையுமாம்
அலங்கல் தளிர்பூ மாலை யொளி செயல்
கலங்கல் குழம்ப லழுதல் கலங்குதல்
விலங்கு ம்ருகப்பொது விலாங்கு காற்றளை
**843
#32
அலம்பல் கழுவல் ததும்ப லரற்றல்
சிலம்பன் மலையன் செவ்வேற் கடவுள்
சிலம்பு பதத்திடு மோர் பூண் மலையொலி
கலிஞ்சக மென்ப தடுக்கும் பாயுமே
**844
#33
சலகுன் மம்நீர்ச் சுழியாமை
செலவு வழிச்செல் லுதல் போக்காம்
பொலிதல் மிகுதல் புணர்தற்பேர்
கலுழ்த லழுதல் கலங்குதலே
**845
#34
கலத்தலே விரவல் புல்லல்
வலத்தலே வளைத்தல் பேசல்
தொலைத்தலே யொழித்தல் தீர்த்தல்
மலைப்புப்போர் துணிவின் மைப்பேர்
**846
#35
வலாகக மேகம் வெற்பா மலீமசங் கசடி ரும்பு
துலாகோடி காற்சி லம்போர் நிறைபத்துக் கோடி சொல்லும்
பலாசமோர் சமோர் மரமு ருக்குப் பசுப்பிலை கந்த மூலி
இலாடமோர் தேயஞ் சேலை சலாதார மேரி பூமி
**847
#36
குலாயம்புட் கூடு வீடாம் குலாவல்கோ ணு தல்கொண் டாடல்
இலேகையே யெழுத்துப் பூமி யிலேபம்போ சநஞ்சாந் தென்ப
கலாஞ்சமர் கொடுமை கோபம் கலாபியே மயில்கல் லாலாம்
இலாங்கலி தெங்கு நீர்த்திப் பலியலா யுதன்செங் காந்தள்
**848
#37
இலாங்கூலம் வாலாண் கோச மிலாக்கைசெம் பஞ்ச ரக்காம்
இலாஞ்சந மடையா ளங்கை காட்டபி நயமு மேற்கும்
சிலீந்திர மோர்மீன் வாழைப் பூக்கவ கஞ்சிற் றேலம்
சிலீந்திரி பறவைப் பெண்மண் பூநாகப் பெண்ணுஞ் செப்பும்
**849
#38
கிலீப னென்ப கபுஞ்சகன்விக் கிரம மில்லான் சநைச்சரனாம்
இலீலை பரிகா சம் விளையாட்டின்பத் தொடர்ச்சிக் கிரியையெனும்
உலூகங் கூகை பாரதப்போர் உலூந கம்பிந் நம்பசுவாம்
உலோமம் பரிப்பூண் பரிமுதன்மை யுளது திலகம் வாலென்ப
**850
#39
சலாகை தூ லிகைக் கோல்முட் பன்றி முள்ளு நாரா
சங்குடைகாந் தக்கலகன் மணிசவள மெலும்பாம்
தலாடகம்நா கப்பூக்காட் டெள் சுழல்காற் றகழ்ந்த
தடங்குந்தம் வாகை நுரை கரிச்செவிகா விக்கல்
கலாபமயிற் றோகையீ ரெண்கோவை யுளமே
கலைகணைக்கூ டாபரணங் கூட்டமணி வடப்பேர்
துலாம் நூறு பலம் வீட்டுத் திரமோரி ராசி
துலாக்கோலொப் புமைபாண்டந் திராசுநீர்த் துலாவே
**851
#40
இலாலசம்வே ணவாவுள்ள திரத்தல நு ராகம்
இலாங்கலமோர் பூக்கலப்பை கொடுங்கைமரம் பனைப்பேர்
விலாழிபரி வாயினுரை துதிக்கையுமிழ் நீராம்
விலோமம் நாய் பெருங்கிணறு பாம்புப்ரதி கூலம்
உலோகம் நவ லோகமிரும் பகிலுலகஞ் சநமாம்
உலோகிதஞ்செஞ் சாந்து செந்நீர் குங்குமம் போர் சிவப்பு
உலோசகங்கண் மணியிருள்காங் காடைநுதற் சுடிகை
யூன்பிண்ட மடமைகா தணிநாணி வாழை
**852
#41
புலாகஞ் சுருக்கம் நெற்பதர் சோற்றவிழ்
சிலாகை புகழுகை மெச்சுகை சேவை
விலாசம் விளையாட் டிலீலா பிநயம்
சலாசய மிலாமிச் சம் நீர் நிலையே
**853
#42
அலாத மரஞ்சுடு கரிகுறைக் கொள்ளி
கலாநிதி கலைபல கற்றோன் சந்திரன்
குலாலங் கூகைகா னாங்கோழி யென்ப
சிலீ முகம் வண்டு பாண முலைக்கண்
**854
#43
உலூகலங் குங்கி லிய முரல் கல்லால்
இலேகநம் பூர்ச்ச மெழுதுகை சேதம்
சுலோக மாரியச் செய்யுள் சொன் மாலை
உலோல மாசைமிக் குளதலை வதுமே
**855
#44
உலூதை சிலம்பி யெறும் போர்நோய்
இலேச மிலேசோ ரணிசடிதி
பிலேச யம்பாம் பெலிகீரி
உலோபந் தொக்க தவாவுடைமை
**856
#45
அல்லிரா மெய்யெ ழுத்தோர் விகுதியன் றெனலி டைச்சொல்
கல்லொலிக் குறிப்பு வெற்போ டதன் பல்பே தங்கா விக்கல்
செல்லிடி கறையான் மேகம் செல்லல்செல் லுதல் துன் பப்பேர்
சொல்புகழ் பேச்சு நெல்லாந் தொல்லை தொந் தரவு தொன்மை
**857
#46
மல்வலி வருவாய் கூத்தின் விகற்பமற் போர்மால் கூத்தாம்
வல்வலி விரைவு சூது வல்லரி தளிர் பூங்கொத்து
வில்லொளி தநுசி ராசி மூலநாள் கொடும ரப்பேர்
குல்லக மெளிமை யற்பங் குல்லகன் றாழ்ந்தோ னற்பன்
**858
#47
வல்லபம் பிரியஞ் சாதிப் பரியதி கார மன்னும்
வல்லப ன திபன் காந்தன் வல்லவர் மடைய ராயர்
இல்லமே வீடு தேற்றாம் ஏல்வையே திவசங் காலம்
கல்லஞ்சா தகப்புட் பள்ளங் கடைவாயோர் புடைவை தோலாம்
**859
#48
பல்லமோர் தொகைக்க ணக்குப் பாணம்பல் லூக முப்பேர்
மல்லமோர் மீன்க பாலந் தகழிமற் போர்சி ரேட்டம்
சல்லரி மயிரின் வக்ர மோர்பறை குடையின் றொங்கல்
பல்லவர் தூர்த்தர் நீசர் கொல்லியோர் மலையோர் பண்ணாம்
**860
#49
வில்லிமன் மதன்காண் டீவன் வீரபத்திரன் வில் லாளன்
சில்லிகை வெயிலின் சோதி விலேபா மலஞ்சிள் வீடு
மல்லிகை யோர்மட் பாத்ர மோர்மலர்ச் செடியோர் மீன்பேர்
வல்லிகை செவிப் பூண் வல்லி வல்லைமாத்திரைக டுப்பாம்
**861
#50
கல்லிய மிலக்க நம்வை கறைசந்நத் தங்கள் ளென்ப
குல்லியஞ் சுளகெலும்பு புலால்குலப் பிறப்புத் தோணி
சில்லைசிள் வீடு தூர்த்தை யல்லோன்சந் திரனல் லாதோன்
சுல்வஞ் செம் பொழுக்கம் வேள்வித் தொழினீரின் சமீப நாற்பேர்
**862
#51
அல்கல் நிறைதல் சுருங்குதல்நாளிரவு வறுமை தங்குதலாம்
சுல்ல மிழிகட் குரீஇயிழிகண் பில்ல மும்மப் பெயர்சொல்ப
புல்ல மெருது மலர்ந்ததெனும் பில்லி யேவற் பேய் பூனை
மல்லல் பொலிவு வலிவளமாம் மல்லை யிரக்குங் கலன் வட்டம்
**863
#52
வல்லி வள்ளி காற்றளைபைங் கொடியோர் பூவோ மம்பிரிதல்
எல்லை யவதி பரியந்த மிறுதி யிநன்கூப் பிடுதூரம்
குல்லை வெட்சி துளவென்ப கொல்லை புனம்வீட் டுப்புறமாம்
முல்லை வநமல் லிகைவென்றி யோர் பூம் புதல்கற் போர்நிலமே
**864
#53
இல்லிடம்வீ டிராசியில்லா ளின்றெனலோ ரிடைச்சொல்
எல்லிகழ்ச்சிக் குறிப்பிரவி பகலொளிவெய்யிலுமாம்
கொல்லசைச்சொ லையச்சொல் பஞ்சலோ கப்பேர்
குல்லியைகோ முகைவாய்க்கால் மதகுசல தாரை
புல்ல நுச நாள்வெட்டைக் கோரையறு காதி
புணர்ச்சி புலி புன்மைபனை சாமைகம்பா தியும் பேர்
பல்லவஞ்செம் பஞ்சினிறஞ் சிங்காரம் விரிவு
படர்ச்சிதளி ரோர்தேயங் கீர்த்தநத்தோ ருறுப்பே
**865
#54
சல்லிமர வுரிகல்லி னொறுங்கல்கிளைக் கொடிசந்
தாநமுலோ கப்பிளவு துணியறைத்தூக் கப்பேர்
சில்லிதே ருருளை வட்டஞ் சூரியன்றன் கிரணஞ்
சிறுகீரை திமிருகைமுன் றானைசிள்வீ டென்ப
சல்லியமோர் குத்ரவித்தை சலாகைமருட் காரை
சண்டைதோ மரமுளை முட் பன்றியம்பு கழுமுள்
கல்லியனோ யுற்றொழிந்தோன் சந்நத்தன் சமர்த்தன்
கலியாணி மங்களமுளாளுமையோ ரிராகம்
**866
#55
வல்லரம்பூங் கொத்திளம்புற் றறைநீரி லாவயல்வல் லியின் முழைஞ்சாம்
தில்லையோர் மரம்புலியூ ரென்பசெல்வி புத்திரியிந் திரைசீ மாட்டி
உல்லாகன் பரிசுத்த னிபுணன்மகிழ் வுடையோனோ யுற்றொ ழிந்தோன்
வல்லூர முவர்த்தறைவா கநம்புன்செ யுலர்ந்தவூன் வராக வூனே
**867
#56
சில்லமிழி கட்குருவி தேற்றுமர மிழிகண்
வல்லமெனல் பெருமரக் காடுகோ துமையாம்
பல்லியோர் செந்துசே மரக்கொட்டை சிற்றூர்
மல்லியோர் மருந்தோர்மட் பாத்திரமல்லிகையே
**868
#57
ஒல்கல் சுருங்கல் தளர்தல் துவளல்
சல்லகி யானை வணங்கி முட் பன்றி
புல்லல் புணர்தல் தழுவல் பொருந்தல்
அல்லிவெள் ளாம்பல் காயா வகவிதழ்
**869
#58
வல்லியங் கொல்லி மலையும் புலியும்
சல்லியன் மத்திர ராசன் சுக்கிரன்
ஒல்லை பழமை கடுப்புச் சிறுவரை
கல்லை பாதுகக் குமிழிலைக் கலமே
**870
#59
கல்யாணம்பொன்மங் களம்கண் ணாலமாம்
பொல்லாங் கெனல்பொச் சாப்பிடை யூறெனும்
உல்லாச முள்ளக் களிப்புத்த ரீயம்
வல்லார் வல்லவர் மாட்டா தார்பெயர்
**871
#60
கல்லா ரம்நீர்க் குளிரிசெங் கழுநீர்
வல்லாரை கேட்டை நாளோர் புதலுமாம்
இல்லா ளில்லா தவள் மனை யாட்டி பேர்
கல்லோல மென்ப மகிழ்ச்சி பெருந்திரை
**872
#61
வாலகம் வெட்டி வேர்மோ திரங்கரி பரியின் வாலாம்
சீலம்நல் லொழுக்கம் நல்ல செய்கைநல் லியல்பு மேற்கும்
தூலம்பூ வரசு வீட்டுத் திரம்பஞ்சு பருத்த தும்பேர்
நீலமோர் மணியோர் வெற்போர் நிதிவிடம் பனைக றுப்பே
**873
#62
காலல்கொப் புளித்தல் கக்கல் காலைவை கறைகா லப்பேர்
ஆலியோர் பூத ரூபந் துளி மழை யாலங் கட்டி
மாலிகை யோர்புட் கண்டா பரணமோர் நதிமா லைப்பேர்
வாலிசன் சிறுவன் மூடன் மாலிய மாலை புட்பம்
**874
#63
சால்படைச் சானீர்ச் சாலாஞ் சால்புமாட் சிமைபண் பென்ப
பால்வெண்மை யிடம்பண் போர்கவ் வியம்பக்க முரிமை பங்காம்
மேலிட முபரி முன்மேற் கினியென லுடல்விண் மீதாம்
வால் வெள்ளை மிருகத் தின்வால் புனிதம்புள் ளின்வா லும் பேர்
**875
#64
ஏலம் பஞ்ச வாசத்தோ ரரிசி மயிர்ச்சாந் தெனச்சொல்ப
கீல முழங்கைக் கணுக்குற்றி யாணி முளையக் கிநிக்கொழுந்தாம்
சேல மாடை பீலிக்கண் சேல னதமன் பொறாமையன்பேர்
ஏலல் பொருந்த லிணங்குதலாம் ஏலி யாலிங் கநமிரவி
**876
#65
சாலி வடமீன் புடோல்கள்ளு நெல்லுக் கந்த மார்ச்சாலம்
தாலி பானை மங்கலப் பூண் கீழா நெல்லி பாதிரையாம்
வேலை சமைய மநாயாச விழவீச் சுரபோ சநஞ்செய்யும்
வேலை முந்நீ ரதன்கரைநீர் விருத்தி யெல்லை புதன்றேவி
**877
#66
சாலகம்புட் கூடரும்புக் கொத்துச்சாளரப்பேர்
சாலிகையோர் படாங்கவசஞ் சாலையோர் சாலம்
பாலகன் மூ டன் சிறுவன் பாலிப்போ னென்ப
பாலங்கங் குதிரைபுள்ளோ ரிலைக்கறிசல் லகியாம்
கூலம் நீர்க் கரைவரம்பா வணம்பல்பண்ட மணலின்
குன்றுகா ராமணிபிற் படைபாகல் குளப்பேர்
கோலமலங் கரிப்பிரந்தைக் கனிமெழுகி யிடுமாக்
கோலமான் மடிவேடம் பன்றி தெப்பந் தழுவல்
**878
#67
மாலகமிக் குயர் பூமி மலையின்வயல் வேம்பாம்
மாலியவா னோராக்க னோர்குலப்பற் பதப்பேர்
தாலம் வட்டில் வாட்பிடிநா நடுவிரற்சாண் பனை கூந்
தற்பனைபார் கராற்போடங் கரதலங்கைம் மாநம்
சாலமரப் பொதுவாச்சா மரமரும்புக் கொத்து
சாளரம்புள் ளிக்கெண்டை சொல்விளம்பி யிந்த்ர
சாலமிடம் பம்விலங்கின் றிரள் கடம்பு கல்வி
சமூகம்வலை ப்ராகாரஞ் செடியென மூ வைம்பேர்
**879
#68
பாலமழுப் படைத் தியின் மேற்செய்கரை நெற்றி
பருத்தி நூற் புடைவைபடை வாள்கிரணம் பூமி
மூலம் வேர் கிழங்கோர்நாள் காரணஞ்ச மீபம்
முதலுரையி லா நூலோ ராதார மோர்நோய்
நீலனோர் வாநரே சன்சநிநீ னிறத்தோன்
நீலிகைகுத் திரரோக மவிரிகரு நொச்சி
ஆலயமானைக்கூடம் வீடுகோ யிலுமாம்
ஆலம்பங் தொடல்பற்றுச் சார்பிடங்கொல் லுகைப்பேர்
**880
#69
சூலிது ற்கை காளி சூ லாயு தன்சூ லுடைப்பெண்
தூலிகைசித் திரமெழுதுங் கோல்பஞ்சின் மெத்தை
நீலிபா லைக்கிழத்தி கருங்குறிஞ்சி யவிரி
நீனிறத்தி மனவைரத் தினளீயு நேரும்
பாலியணை கற்பிதபோ சநந்து தியோ ராறு
பசுவின் மடி பிரதேச மெல்லைசீ லைப்பேன்
பீலிபறைப் பொதுவெற்பு விசிறிசிறு சின்னம்
பெருஞ்சவளம் தோகைமயில் மகளிரின்கா லணியே
**881
#70
வேலியூ ரரண்காவல் நிலவளவி னொன்றாம்
வேலென்ப படைக்கலமோ ராயுதமோர் மரப்பேர்
பாலிகைவட் டம்முதடு படைவாளின் முட்டி
பாலையோர் நிலமிருக சிரநாளோர் மரமாம்
பீலுமதா வளம் புட்ப முகாய்மரங்கோ லம்பு
பின்பெலும்பின் முறிவுபர மாணுநடு விரற்சாண்
மாலைபொன்னிற் பூவின்மணி யிற்சொல்லாற் றொடுத்த
மாலையந் திப் பொழுதிரவோ டொழுங்கியல்பு மாமே
**882
#71
கால்வழிநென் முளை நான்கி னொன் றுமா முளை பூங்
காம்போர்மெய்யுறுப்புத்தேர்க் கால்வாய்க்கா லளக்குங்
கால்பொழுது தரமிடந்தூ ணூற்றுக்கோல் காற்றுக்
காலனெதிர் காலவிடைச் சொற்சுதனு மொக்கும்
கோல்விட்டே றம்பெழுது கோலூற்றுக் கோல்செங்
கோல்முழக் கோல் பரிக்கசையாழ்க் குரல் துலா மரக்கோல்
மால்கருமை வேட்கைமயக் கங்காற்று மேகம்
மாயவனிந் திரனருகன் புதன் சோழன் பெருமை
**883
#72
கோலகம்வன் மிகங்கமுகின் காய்மிளகு சித்திரந்தக் கோலம் குஞ்சாம்
மாலதியோர் நதிசீந்தி நிலவுபிச்சி பாதிரையௌ வநியி ராத்ரி
மாலமுயர் பூமிகிரா மாந்தரக்கா டரிதாரம் வஞ்ச னைப்பேர்
மாலி நிசம் பாபுரமோர் விருத்தமுமை கங்கைபூ மாலை விற்பாள்
**884
#73
மூலகங் கிழங்கு முல்லங்கி யிருபேர் மூலியந் துகில் விலை கூலி
சூலமோர் யோகங் கழுக்கடை யோரா யுதஞ்சூலை நோய் திசைச்சூலம்
சாலிநி தேவ ராட்டிதூ லிகைக்கோல் சித்திர சாலைகள் விற்பாள்
தோலுடற் றோல்கே டகம்பழத் தொலியோர் சொல்லொரு வனப்பும்யா னையுமே
**885
#74
ஆலமே புனல்விட மழைய லர்ந்த பூ
வாலமே வெட்டிவேர் கேசம் வா லுமாம்
ஆலையோ ரியந்திரங் கரும்பு கள்ளெனும்
ஆலொரு மரமிடைச் சொல்லசைச் சொல்லே
**886
#75
தாலவட் டம் பூச் சக்கிரம் யானைவால்
பாலர் புத்திரர் மூர்க்கர்கோ பாலராம்
கால னந்தக னோருபக் கோள்சநி
கோலை செவ்வியந் திப்பலி கூறுமே
**887
#76
கால மரணம் பொழுதென்ப
ஆல லாடல் மயிற்குரலாம்
வேலன் முருகன் வெறியாட்டோன்
வாலை சிறுபெண் சிற்றேலம்
**888
#77
கீலாலம் புனலி ரத்தஞ் சாலூரங் கியாதந் தேரை
காலேய கம்ம ரக்கு மஞ்சள்கத் தூரி மஞ்சள்
ஆலோகம் வெயில்காட் சிப்பேர் மேலோர்விண் ணவர்சி ரேட்டர்
நூலேசாத் திரம்பஞ் சின்னூல் நூலோரந் தணர மைச்சர்
**889
#78
தாலாங்கம் பனைத்துவச மீர்வாளோ ரிலைக்கறிபுத் தகமு மாகும்
பாலாங்கஞ் செங்கீற்று மானோரி லைக்கறிக ரபத்ரங் கூர்மம்
தாலாங்கன் மகேசனிலக் கணநிறைந்த மாபுருடன் றவள வண்ணன்
பாலாங்க னிறைந்தவிலக் கணமிக்க மாபுருடன் பரமே சன்பேர்
**890
#79
நீலாம்ப ரன் கொடுங்கண் ணன் சநியி ராக்க தன்வெண் ணிறவி ராமன்
சாலாரம் புரவாயிற் படிச்சுருள்சோ பாநம்பஞ் சரக்கூடும்பேர்
ஆலாலம் விடபேதங் காளகூ டம்பல்லி யரணை வவ்வால்
கோலோமி பூதகே சம்வசம்பு வெள்ளறுகு மாஞ்சி வேசை
**891
#80
ஆலா சியமென்ப தாலவா யாண்முதலை
சாலா விருகம் நரிநாய்செந் நாய்குரங்காம்
சாலூகஞ் செங்கழு நீர்க்கிழங்கு சாதிக்காய்
சேலேகஞ் சிந்தூ ரஞ்சந் திரதிலகம்
**892
#81
சாலேயஞ் செந்நெற் கழனி சதபுட்பை
வாலேய மேசிறுதேக் குக்கோ மளங்கழுதை
ஆலோ சனையோ சனைசெய்தல் காண்டலுமாம்
ஆலோலஞ் சஞ்சல மானது புள் ளோச்சொலியே
**893
#82
பௌலத்தி யன்ற சக்கி ரீவன்புட் பகவி மாநன்
மௌலிசூ டிகைய சோகு மயிர்க்கற்றை குடுமி சென்னி
கௌலீநஞ் சநாபவாதம் பிராணிப்போர் குலோத்துங் கப்பேர்
சௌலேயங் கற்க டாரை யுமிரிசட் பதங்கற் பூவே
@15 வகர வெதுகை
**894
#1
துவசமாண் குறிகட் டங்கந் துகிற்கொடி யடையா ளப்பேர்
அவசிதம் நிச்ச யிப்ப தறிவது முகிப்ப தென்ப
சிவசுதன் கணேசன் கந்தன் சிவணல்நண் ணுதல்பொ ருந்தல்
கவடுகுஞ் சரப்பு ரோசை மரப்பணை கவர்வஞ் சப்பேர்
**895
#2
குவடென்ப மலைவெற் புச்சி குவைகுப்பை மேடு கூட்டம்
சுவடுபக் கரையின் கட்டுத் தழும்படிச் சுவடு மாகும்
சுவணம்பொற் கஃசு பொன்கா ரகில் நற்சுந் தரம்பொ ருட்பேர்
கவநம்வே கங்க ருத்துப் படைகவித் துவங்க லக்கம்
**896
#3
யவநர்சோனகர்கண் ணாளர் யவையோர்கோ து மையோர் நெல்லாம்
அவரம்பிந் தினதும் யானைப் பின்னங்காற்புறமு மாகும்
வெவகாரம் வழக்குச் சூது சொற்ப்ரயோ கஞ்சம் பந்தம்
அவகீதம் பலர்பழித்த தபவாதம் வசைப்பாட்டும் பேர்
**897
#4
அவதாதம் பரிசுத் தம்வெண் ணிறம்பொன்மை யழகு மொக்கும்
அவரோக மரத்தின் வீழ்தோ டதிற்படர் கொடியி றக்கம்
அவரோத மறைவோ டந்தப் புரமரண் மனையு மாகும்
அவவாத மபவா தம்போ லாணைநம் பிக்கை சிந்தை
**898
#5
கவரமிங் கிதமுப் பென்ப கவர்மரக் கப்பு வாழை
சுவருவச் சிரவேல் பாண மகத்தூணின் கண்டம் வேள்வி
சுவரேமட் சுவர்சு வர்க்கம் பரலோகஞ் சுகமா காயம்
தவர் தவத் தினர்வில் லென்ப தவறலே வழுவல் சாதல்
**899
#6
இவர்தலே று தனெ ருங்க லெழுதலே குதல்வி ரும்பல்
அவலந் துன் புறலி டப்பால் அவலோர்சிற்றுண்டி பள்ளம்
கவலைசெந் தினைகி லேசம் பயங்கவர் வழிமுச் சந்தி
திவலை நீர்த் துளிம ழைப்பேர் திவிபகல் சுவர்க்கம் விண்ணாம்
**900
#7
சுவல்பிடர் தோண்மேல் மேடு துரகதக் குசைம யிர்ப்பேர்
உவளக மதிலுள் வீடு பள்ளமுப் பளந்தடாகம்
தவளம் வெள் விடைசி ரேட்டம் வெண்மைசுந் தரமுஞ் சாற்றும்
இவறலே யுலோபஞ் செய்தல் விரும்புற லிழுக்க லென்ப
**901
#8
சவிகிர ணங்காந் திப்பேர் தவிசுபாய் தடுக்கு மெத்தை
செவியென்ப கேள்வி காதாஞ் செவிலி முன் பிறந்தாள் தாதி
அவிசுநெய் விண்ணோ ரூணாம் அவிதலே கெடுதல் வேதல்
நவியமே மழுக்கு டாரி நவிலலே சொல்லல் கற்றல்
**902
#9
நவிரமே வெற்புப் புன்மை சிரத்துச்சி மயிலு நாற்பேர்
அவைசவை குழாம் விற் பந்ந ரஃறிணைப் பன்மைச் சுட்டாம்
சவைவீடம் பலந்தக் கோரின் சமூகம்பண் டிதன் சூ தென்ப
துவைபுளிங் கறிபிண் ணாக்குத் தொநிபரு குவதி றைச்சி
**903
#10
நிவகமே திரளோர் வாயு நுவணையே தினைமா நுண்மை
துவசன்கே தநன்கள் விற்போன் துவரியே துவரை நாயாம்
சவம் வேள்வி பிணம்வே கப்பேர் சவரன் சங் கரன்கி ராதன்
திவம்வநம் விண்சு வர்க்கஞ் சிவிபூர்ச்ச மரமோர் வேந்தன்
**904
#11
விவச்சுவானிரவி தேவன் சுவர்க்கம் விண்ணுலகங் கொங்கை
துவட்டாவிச் சுவகன் மாவோர் சூரியன் கஞ்ச காரன்
அவத்தை சாக் கிராதி காம வாதைசீ வோபா திப்பேர்
நிவிர்த்தியே மநமகிழ்ச்சி மீளுகை விட்டு நீங்கல்
**905
#12
கவந்தநீ ருடற்கு றைப்பேர் கவந்தனோ ரரக்கன் சற்பி
அவந்தியோ ரூர்பிள் ளைப்பெற் றவள் காய்க்கு மரமீற் றாவாம்
அவந்திகை கிளியா வந்தி நவந்துதி புதுமை யொன்பான்
துவன்றலே நிறைதல் சாதல் துன்றுதல் பொலிவு நாற்பேர்
**906
#13
அவடங் கிணறு குழிபிலமாம் அவடு பிடரி கிணறுகுழி
உவணங் கருடன் கழுகென்ப வுவரி கடல்மூத் திரமும்பேர்
அவதி யெல்லை பரிச்சேதங் கால மவதா நங்குழியாம்
சவநம் வேகப் பரிவேக முழுக்குச் சோம லதைப்பாகம்
**907
#14
குவல மிலந்தைக் கனிமுத்தா பலமும் நீலக் குவளையுமாம்
துவள லசைதல் தொடுதற்பேர் துவறல் துவலை யிடல் விரைவு
தவன்மா நுடனாயகனாள் வோன் தவிர்தல் விலக லொழிதற்பேர்
அவிழ்தல் கட்டு விடலலர்தல் கவிழ்தல் கீழ்மேற் படல் குனிதல்
**908
#15
உவட்டல் குமட்டல் பெருக்கெடுத்த லுவர்த்தல் வெறுத்த லோர்சுவையாம்
துவட்டல் துவளச் செயறுடைத்தல் துவைத்த லொலித்த றோய்த்தற்பேர்
கவித்தல் மூடல் சூழ்ந்திறங்கள் குவித்தல் கூப்பல் குவை செய்தல்
அவித்தை மோக மஞ்ஞாநம் அவைத்தல் நெரித்தல் நெற்குற்றல்
**909
#16
அவகார முதலை சம ராதியின்விச் சிராமம்
அழைத்தல் திர வியஞ்சூது களவுபறித் தலுமாம்
அவதாநங் கருமசுத்த மபிப்ராய வியாபிப்
பதிவிருத்தஞ் சமாதாநங் கண்டநமென் றைம் பேர்
பவநங்காற் றிராசியில்ல மிராசாலை யந்தாற்
பரியம் வெரு கொடுசுள்ளை துலக்குதல்சுத் தியுமாம்
அவம்வேள்வியழைத்தல்பய னின்மையா ணையும் பேர்
அவரம்பிந் தின துயானையின் பின்காற் புறமே
**910
#17
சிவம் நன்மை சுகம் வேதம் பசுத்தறியோர் யோகஞ்
சிசுக்குறுணி குங்கிலியம் சிவகதிநீர் புலியாம்
பவமேன்மை சுத்திபிற விச்சுழற்சி பேறுற்
பவம்பாவம் நெற்பதரைப் போக்கல் சிங்கக் கரணம்
அவிகிரண மூடிககம் பளம்வெற்பு மதில்காற்
றாடுமுகி லிரவிசுர ருணவு நெய்பூப் பினள் பேர்
சிவைபங்கம் பாளை வன்னி மரம் நெல்லி தருமச்
செல்விகடு மரங்கொலுலை முகங்கீழா நெல்லி
**911
#18
அவக்கரமாண் பெணின் குய்யந் தேரினங்கம் விட்டை
யமேமத்தியம்யா னையினடித்தூர் கரிக்குடரோ டறுபேர்
அவக்கிரகங் கரியினெற்றி மழைத்தடைதம் பித்தல்
அவிக்கநம்விக் கநமின்மை பெருங்களா மரமாம்
சுவத்தியா ரோக்யாதி சுபவாழ்த்துச் சுகிர்தம்
சுவத்திகமங் கலப்பொருளோ ரிராசமனை சதுட்கம்
பவித்திரங்கோ மயந்தருப்பை பூசோப கரணம்
பால்புனல்மந் திரம்பிரம சூத்திரம் பொன் செம்பே
**912
#19
சுவகைசிறு செருப்படிப்பூ டரத்தைகரு நொச்சியுஞ்சல் லகியுஞ் சொல்ப
விவசன்றன் மயமல்லா வான்மாக்கோ டுடைய துட்ட மேதையுள்ளோன்
கவரிமயிர்ச் சொருக்கெருமை சாமரந்தே ரசகந்தி காயப் பத்ரி
கவிகவிதை நாற்கவிபா டிடுங்கவிஞன் குரங்கு சுங்கன் கடிவாளப்பேர்
**913
#20
கவசமுடற் கீடுசின்னி மரம்படகப் பறைப்பேர்
அவதஞ்சஞ் செவிமலர்ப்பூண் சூட்டுமா லையுமாம்
யவபலந்தான் வெட்பாலை மூங்கில்சடா மாஞ்சி
தவம் விரதம் நமைமரங்காட் டனல்காடு துதியே
**914
#21
அவசர முசித சமயம் வற்சரம்
விவரம் வகைதொளை வெற்பின் முழைப்பேர்
துவர்சிவப் பிந்தநம் பவளம் துவர்ப்பு
கவர் தல் விரும்பல் கடைதல் வவ்வுதல்
**915
#22
துவரை யென்பதோர் பயறு துவாரகை
குவலய மெனல் பூச் சக்கிரங் குவளை
சுவவு புள்ளி னலகுமூஞ் சூறு
பவிவச்சி ராயுத மாயுதக் கூர்மை
**916
#23
கவிகை குடையுதா ரங்கடி வாளம்
குவிதல் குழுமல் கூம்பல் திரளல்
நவிர்வாள் மருத யாழ்த்திற மாண்மயிர்
சுவைநவ ரசவணி யுருசி யினிமை
**917
#24
அவகா ரன் றிரு டன் சூதுக் காரன்
அவசர நம்மர ணம்முடி வெல்லை
அவதா ரம்மி றங் குதல் தீர்த்தத்துறை
அவலே பம்பழிப் பகங்கரம் பூச்சே
**918
#25
துவக்குப் பிணக்குத் தோலுடல் சங்கிலி
சவட்டல் குமைத்த லழித்தன் மெல்லுதல்
சுவப்பிர மென்ப குழிநிரை யந்தொளை
உவப்புப் பொலிவு மகிழ்ச்சி யுயர்ச்சி
**919
#26
சிவப்புச் சினக்குறிப் புச்சின மோர்நிறம்
விவர்த்தந் திருப்புகை கூட்டங் கூத்துமாம்
தெவிட்ட லொலித்த லுமிழ்தல் தேக்கிடல்
பவித்திரன் சுத்தன் பாவ கன்சிவன்
**920
#27
புவந முலகம் புனல்பூமி
கவலல் வருந்தல் துன்புறலாம்
குவவு திரட்சி திரள் பெருமை
எவனே யாவ னென்னையெனல்
**921
#28
அவாவிறங் குதல்வி ருப்பம் அவாக்கென்ப கவிழ்ந்தோ னூமை
உவாவிள மையினன் யானை யுததிபூ ரணைய மைப்பேர்
திவாகீர்த்தி நாவி தன்கௌ சிகப்புட்சண் டாள னென்ப
நிவா தஞ்சார் பிடங்காற் றில்லா விடம் நீங்காக் கவச மும்பேர்
**922
#29
சுவாதுதித் திப்பிட் டப்பேர் சுவாமிநா யகன்செவ் வேளாம்
நிவாரணஞ் சிகிற்சை தீர்தல் நிவேசநம் பாடி வீடூர்
நிவேசம்பா சறைவி யூகம் நிகேதநம் நகர்வி வாகம்
குவேடஞ்செவ் வெருக்கங் காய்நஞ் சொலிகோணல் செவியினோயே
**923
#30
விவாதம் வழக்குச் சொற்கலகம் குவாலே குப்பை மேடுகுவை
சுவாது ரசையே காகோளி சொல்வி ளம்பி முந்திரிகை
துவாபரம்மோர் யுகஞ்சங்கை சுவாத்தியாயஞ் செபம்வே தம்
துவார முபாயந் தொளைவாயில் துவாந்தம் நிரய மிருட்டும் பேர்
**924
#31
விவேக மென்ற லிராசியம் நீர்த் தோணி விசாரித் துணரறிவாம்
சுவேத தாமாக் கடனுரைவெண் சுடரோன் கருப்பூரமுஞ்சொல்ப
சுவேதம் வெயர்வோர் தீவுமலை சுல்லு வெள்ளை சமோதகமோர்
சுவேதை வெண்பா திரைதெற்குச் சோகி சங்க புப்பியுமே
**925
#32
திவாபீ தங்குமு தாகரங் கூகை
அவீசி நீர்த்திரை யிலதோர் நிரயம்
குவேடை சிங்க நாதம்வேய்ஞ் சலாகை
சுவேல மோர்மலை சாந்தம் வணக்கம்
**926
#33
எவ்வம் நோ யிழிசொற் றுன்பம் நவ்விமா னெழில்கைம் மீனாள்
பவ்வம் நீர்க் குமிழி முந்நீர் மாக்கணுப் பௌர ணைப்பேர்
அவ்விய மநக்கோட் டம் விண்ணவர்க்குயோக் கியமா மந்நம்
கவ்வியம் வின்னாண் கோபஞ் சகம்பிதி ரர்க்கா மந்நம்
**927
#34
சவ்வியம் வலமி டப்பா லகிதஞ்செவ் வியமுஞ் சாற்றும்
திவ்வியஞ் சுவர்க்கத் துள்ள தழகிய திலவங் கப்பேர்
பவ்விய முசிதம் நன்மை பயன் மெய்ம்மை கருத்தெலும்பாம்
துவ்வுண வநுபவப்பேர் தெவ்வமர் பகையுஞ் சொல்ப
**928
#35
அவ்வியத்தம் பிரதாநம் தெரியாமை யான்மா
அவ்வியத்தன் சிவன்மாயோ னறிவில்லா னென்ப
அவ்வியயம் விபத்தியுறாப் பதமழிவின் மைப்பேர்
கவ்வியை கோத்திரளிருகு ரோசதூ ரமுமே
**929
#36
வவ்வல் வாருத லபகரித் தற்பெயர்
செவ்வந்தி யோர் பூச் செவ்வா னந்தியாம்
செவ்வி யழகோர் பக்குவங் காலம்
தவ்வை முகடிமுன் பிறந்தாள் தாதியே
**930
#37
சாவகன் சமண னீலன் தாவங்காட் டனல்கா டென்ப
பாவகன் சதாசா ரன் றீக் கடவுள்பா விப்போன் சுத்தன்
ஆவணம் புணர் தம் வீதி விலைமுறி யங்கா டிப்பேர்
வீவதம் வழிதோட் பாரம் விலையிடத் திருக்கும் பண்டம்
**931
#38
சீவநம் புனல்பி ழைப்புத் தைத்தல்கோத் திடலுஞ் செப்பும்
தாவநங் கமநந் தூய்மை தாவிடம் கடல் பொன் சொற்கம்
சேவநம் சேவை கோத்தல் சேவலாண் பறவை காவல்
ஆவம்வின் னாண்க ணைக்கூ டாவளி யொழுங்கி ரேகை
**932
#39
தாவரம் புவியி டம்பூ தரமர மசரம் நாணி
ஓவர்கம் மியர்பா டற்கீழ் மக்களோ வியரு மோதும்
கோவல னிடையன் கண்ணன் கண்ணகி கொழுநன் முப்பேர்
காவல்காப் பரண்ம திற்பேர் பாவல்பா துகைப ரப்பல்
**933
#40
நாவல்நா மிழற்றி ரக்க வொலிக்குறிப் போர்ம ரப்பேர்
ஆவிபிட் டுயிர்ப்பு வாவி புகைநாற்ற மான்மா வென்ப
தூவிபுட் சிறகன் னத்தினிறகொடு மயிலின் றோகை
கோவையோர் ப்ரபந்த மோர்பைங் கொடிகோத்த லணிவ டப்பேர்
**934
#41
தேவ சேநை யிந்திரகு மாரி தேவர் தம்படையாம்
தேவ மேக மிந்திரியந் தேவ னரசன் வானவன் பேர்
தேவ விருக்கங் குற்கு லுவே ழிலையின் பாலை தேவதரு
சீவி தேசன் பிழைப் பூட்டுஞ் செயலோன் ப்ராண நாதனமன்
**935
#42
சீவஞ் சீவம் பாலைமரம் சகோரஞ் சிவற்கா டையுமொக்கும்
சீவந் திகைபுல் லுரீஇவன்னித் துருமம் பாலை மரஞ்சீந்தி
சீவன் றேவ குருப்ராண னுயிருள் ளதுசீ விப்பதுமாம்
கோவிந் தன்கண் ணன்பொதுவன் சுரகுருக்கோட்டியத்ததிபன்
**936
#43
சேவகம்யானைப்படுக்கை சேவை செயல் வீரஞ்
சீவ நிசஞ் சீவநிசெவ் வழித்திறத்தோர் பண்ணாம்
பாவகஞ்செங் கொடுவேலி விழாலரிசி முன்னை
பல்லாத மரங்கனல்பா விப்பதிரா சியும் பேர்
சீவகன்பாம் பாட்டியோர் சமணரசன் பௌத்தன்
சேவிப்போன் சீவ தரன் பொலிசையாற் பிழைப்போன்
தேவநஞ்சூ தாடல்கவ றொளிவழக்கி லீலை
செயவிருப்பந் து திகதிக னாச்செருக்குப் புலம்பல்
**937
#44
பாவநஞ்சாந் தபநாதி பிராயச்சித் தம் நீர்
பாவநன்பா வகன்றூயோன் சுசீகரன்வியாசன்
ஆவரண மறைவாடை யணிகலன்ப்ரா காரம்
ஆவர்த்தஞ் சிந்தநம்நீர்ச் சுழிசுழற்றோர் மேகம்
பாவமநோ விகாரஞ்சிங் காராதி லீலை
பதார்த்தம் நிமித் தஞ்செந்து யோநியபி நயஞ்சொ
பாவமைச்சு வரியஞ்சொல்லின் விருத்தி கருத்துற்
பத்திவினை விகுதிக்ரி யைபாப மும்பேர்
**938
#45
தேவிபெருங் குரும்பைநாட் டியராணி மனைவி
சீதேவிச் செங்கழுநீ ரரசிதேவப்பெண்
நீவிசெட்டின் மூலதநஞ் சூதினொட்டப் பொருள்மா
நியோர்த மரையுடைக்கொய் சகம்பொலிசை நாற்பேர்
தீவிரம்வெப் பங்கடுமை கடுப்புமிகு தியுமாம்
தீவிரைகேழ் வரகுகொடி யறுகுகடு ரோணி
சீவையா பரண வொலி பிழைப்பது வின் னாணி
சீந்தியுயிர் தருமருந்து வசம்புபூ மியுமே
**939
#46
கூவரங்கூ ன ழகியது பார்மரந்தேர்க் கொடிஞ்சிதேர்க் கொடியுங்
சாவரம்வெள் ளுலோத்திரம்குற் றம்பாவஞ் சாவென்ப மரணம் பேயாம்
கேவலம் நிச்சயிப்பதெல்லாம் படிற்றொழுக்கம் தனிமைஞா நமுங்கி ளத்தும்
சீவிகைசீ வநஞ்சேவைத் தொழிற்பெயர்சீ விதம்பிழைப்பதுபிராணன்
**940
#47
தேவமணி பரிக்கழுத்தின் சுழிகௌத்து வஞ்சிவன்பேர்
பாவநைவா சநைநினைப்பொப் பனை முயற்சி பாவிப்பாம்
காவலன்மெய் காப்பாளன் காக்கவல்ல வன்கணவன்
சேவியஞ்சு சீலமிலா மிச்சம்வேர் சேவைசெயல்
**941
#48
கூவல்புட்கூ வுதலழைத்தல் கிணறுபள்ள மும்பேர்
தூவல் துளி மழைபெய்தல் சிதறுதல்புட் சிறகாம்
பாவன்மன் மதனாட்டி யப்புலவ னான்மா
காவிகருங் குவளையோர் சாயம் நற்செங் கல்லே
**942
#49
சீவகம் வேங்கை திருநாமப் பாலை
சீவத னாயுள் வேதியன் பகைஞன்
சீவநி பாலை மரஞ்சீவ நாடி
தாவநி நரிவாற் புல்வண் ணாத்தியே
**943
#50
சீவபுட் பம்மருக் கொழுந்து துளசி
நீவர மிருக்கப் பட்டது கடைத்தெரு
பீவரம் பருத்த தாமை தசைந்தது
ஏவலனுப்புதல் செய்யென லாணையே
**944
#51
தாவல் பரத்தல் தாண்டல் தழுவுதல்
மேவல் மருவல் விரும்ப லருகுறல்
பாவிதங் கமழப் பட்ட தடைந்தது
நாவிதன் பூர நாள்மயிர் வினைஞன்
**945
#52
ஓவியர் சித்திர காரர் சிற்பியர்
கோவி லிராசா லையந்தே வாலையம்
தீவினை பாவமுத் தீயின் கிரியை
பூவைநா கணவாய்ப் புட்கா சாமரம்
**946
#53
வாவல் வவ்வால் தாவலுமாம்
தீவு முந்நீர்த் திடரினிமை
தூவு விடக்குப் பகையென்ப
நோவு மெலிவு வருத்தப்பேர்
**947
#54
கைவல் லியமோக் கஞ்சித்தி வைவச் சுதனோர் மநுநமனாம்
சைவஞ் சிவசம் பந்தமுள தோர்பு ராணஞ் சிவசமயம்
கௌவை பழிச்சொ லாயிலிய மொலியெள் ளிளங்காய் துயர்கள்ளாம்
சௌ வீ ரங்காஞ் சிகம்யமுநாஞ் சநமி ரந்தைக் கனிமுப்பேர்
**948
#55
ஆவாபம் விதைத்தல் பாத்தி யோர்பாகம் பாண்ட சுத்தி
மாவீரம் குயில்சிங் கம்வெண் பரிவச்ரம் யாக பாத்ரம்
மாவீரன் கருடன் சிரேட்ட ன நலன்மா தேவன் சூரன்
ஆவேச நம்ப்ர வேசம் பணிக்கூடம் பூதா வேசம்
@16 ழகர வெதுகை
**949
#1
கழகஞ்சூ தாயு தம்மற் பயில்களன் கல்விச் சாலை
குழகனே யழகன் செவ்வேள் குழுமலே குவியல் கூட்டம்
அழல்கன லழுதல் வெப்ப மழலோன் சூரியன் செவ் வாயாம்
குழலிசைக் குழலாண் குஞ்சி தொளையுடைப் பொருள்பெண் கூந்தல்
**950
#2
சழல்வந மகர மற்சந் தழல்கிளி கடிகோல் தீயாம்
நிழலொளி குளிர்ச்சி நீதி யருள் செல்வம் நீழ லென்ப
கிழிநிதிப் பொதிமுடிச்சுக் கீற்றெழு துறுப டப்பேர்
குழிபள்ளம் நிலம ளக்குங் கோலினெண் பெருக்குக் குண்டம்
**951
#3
வழியிடம் பழமை மார்க்கம் மரபுசந் ததிபின் னென்ப
பொழிதலே சொரித லீதல் பொழுது சூரியன்கா லப்பேர்
எழிலியோர் வள்ளல் மேகம் எழில்வண்ண மழகு மொக்கும்
பொழில்புவி பெருமை சோலை பூந்தோட்டம் நாடு மாமே
**952
#4
இழிவுபள் ளம்பழிப்புக் கேடு தாழ் விறக்க மென்ப
தொழுவிரே வதிநாள் தோழம் பசுப்புரை தொழும ரப்பேர்
விழுமேட துலைச்சங் க்ராந்தித் திநம்சீர்மை மேன்மை நன்மை
ஒழுகல்செய் முறைந டத்த லுயர் தனீர் வடித னீளல்
**953
#5
விழுதலே வீழ்தல் சாதல் விழுமமே நன்மை துன்பம்
இழுது நெய் நிணமி னிப்பா மிழுதைபொய் யறிவின் மைப்பேர்
முழுதொருங் குணர்ந்தோன் புத்தன் முநீந்திரன் முக்கண் மூர்த்தி
கொழுநனே யதிபன் கொண்கன் கொழுமையே நிறஞ்செ ழிப்பாம்
**954
#6
கழுமுள் மா தளை சூ லத்தோ டாயுதங் கழுக்க டைப்பேர்
அழுவமே நாடு முந்நீர் பெருமை வெற் பரண்ப ரப்பாம்
உழுவலே குணம்விடாது தொடர்ந்தவன் பொடுமு றைப்பேர்
உழையர்மந் திரிய ரேவல் செய்வோர்பக் கத்துள் ளோரே
**955
#7
கிழமைபண் புரிமை வாரங் கிழக்குக்கீழ்த் திசைகீழ் பள்ளம்
உழவர்கம் பளர்வே ளாளர் உழப்புற்சா கம்வ ருத்தம்
ஒழிதல்விட் டகறல் சாதல் ஒழித்தலே தவிர்த்தல் கொல்லல்
முழுகலே யமுங்கல் மூழ்கல் மொழுப்பென்ப கவின் சி றப்பே
**956
#8
எழுவளை தடிதூ ணென்ப இழையணி கலன்பஞ் சின்னூல்
வழுவென்ப தவறு கேடாம் மழைகுளிர் துளிநீர் மேகம்
கழுதுபேய் பரண்வண் டாகும் கழைபுனர் தம்வேய் கன்னல்
பழுது குற் றம்பொய் பிந்நம் பழையர்கள் விற்போர் முன்னோர்
**957
#9
கழித்தலே நீக்கல் போக்கல் விழித்தல்கண் டிறத்தல் பார்த்தல்
தெழித்தல்பே ரொலிப்பு றுக்கல் கொழிப்புத்தெள் ளுகைகுற் றப்பேர்
ஒழுக்கமா சார மார்க்கம் நடையொழுங் குளது யர்ச்சி
குழைத்தலே தளிர்த்தல் சேறாக் குதல் நெகிழ்த் திடல்வளைத்தல்
**958
#10
பழங்கணே மெலிவு துன்பங் குழம்பு சே றாணம் பாகாம்
அழுங்கல்நோய் வருத்தஞ் சோம்ப லொலித்தல்கே டழுத லென்ப
மழுங்கல்கூர் கெடுதல் மட்கல் ஒழுங்கென்ப வரிசை பந்தி
கொழுந்திளந் தளிர்சு வாலை விழைந்தோன்கொண் டவன யந்தோன்
**959
#11
குழாய்குழ லுடைப்பொ ருட்கு மூங்கிற்பாத்திரத்துக் கும்பேர்
கிழார் பூட்டை யுரியோர் தோட்டங் கெழுவென்ப நிறம்பொ ருத்தம்
எழா லென்ப யாழ்ந ரம்பி னின்னிசை யோர்புள் ளென்ப
துழாவுதல் கலப்பாச் செய்தல் பரப்புதல் துருவல் வெட்டல்
**960
#12
உழலல் சுழல லுலைதற்பேர் கழனி பழன மிடுதிரையாம்
கிழவன் பரணி நாளுரியோன் மருதத் தலைவன் கிழமுடையன்
விழவு மிதுந முற்சவமாந் தொழுவர் விளைஞர் தொழிற்செய் வோர்
கழும மயக்கம் பற்றென்ப கழுமல் மிகுதல் நிறைதற்பேர்
**961
#13
பழக்கம் பயிற்சி பரிசயமாம் பழுப்புப் பழுத்த லரிதாரம்
முழக்க மேகத் தொநி முழங்கல் மிழற்றல் முரலல் சொலல் கொஞ்சல்
உழக்கல் பழக லுழுதற்பேர் உழத்தல் வருந்தல நுபவமாம்
சழக்குப் பிணக்குப் பொய்மூட மிழுக்கு மறவி தவறிகழ்வே
**962
#14
குழப்பல் குழம்பச் செயலுழப்பல் கொழுப்பு மதர்ப்பு நிணங்கொழுமை
அழித்தல் கெடுத்தல் சங்கரித்தல் அழுத்த லழுந்தச் செயல்பதி த்தல்
மழுக்கல் மழுங்கச் செயலடித்தல் வழுக்குச் சோர்வு வழும்பிழுக்காம்
புழுக்க லவித்தல் சோறென்ப புழைக்கை யானை தொளையுளகை
**963
#15
கழல் செருப்புக் கழற்கொடிகால் வீரர் தங்கா லணியாம்
கழறல்கழ லுதலுறுதிச் சொற்சொல்ல லும் பேர்
குழவிமான் மரைகடமை முசுவெருமை யானை
குரங்கணில்யா ளியின் பிள்ளை குழந்தை மரக் கன்றாம்
கழிமிகுதி மரக்கழிகோல் நூற்கழிகா யற்பேர் \
கழிதல்கழி வுறல் மிகுதல் செலல் கடத்தல் சாதல்
உழையநிருத் தப்பிரியை நிசியருக்க தேவி
யோரிசைமான் பசுப்பக்க மிடமோர்யாழ் நரம்பே
**964
#16
உழலை தொழுமர முழற்றும் வியாதி
துழனி யொலிபுள் ளீட்டத் தொனிப்பெயர்
சுழிநீர்ச் சுழிமயிர்ச் சுழிசுன் னையுமாம்
மழுவோ ராயுதங் காய்ந்த விரும்பே
**965
#17
தொழுதிபுள் ளொலித்திரள் கூட்டந் திரட்சி
கெழுமல் பொருந்துதல் கற்றல் முளைத்தல்
இழுமென லினிதுற லநுகர ணத்தொனி
செழுமை கொழுமை வளமாட் சிமையெழில்
**966
#18
குழைதளிர் சேறு காது குண்டலம்
தழைபீ லிக்குடை தளிரிலை யும்பேர்
குழைதல் வளைதல் நெகிழ்தல் வாடுதல்
தழைதல் வளர்தல் வாழ்தல் தழைவுறல்
**967
#19
இழுக்கல் வழுக்கல் தளர்தல் தவறுதல்
விழுப்பஞ் சிறப்பு மேன்மையும் நன்மையும்
இழைத்த லழுத்த லியற்றனூ லிழைத்தல்
தழைத்தல் செழித்தல் தளிர்த்தல்வாழ் வோங்கல்
**968
#20
வழங்கல் சொல்லுத லுலாவல் கொடுத்தல்
கழங்கு வெறியாட்டுச் சூது கழற்சி
புழுங்கல் சினக்குறிப் புப்புழுக் கியநெல்
அழுந்துதல் பதித லாழ்தல் வருந்துதல்
**969
#21
விழலோர்புல் விழுதல் வீணாம்
பழிநிந்தை துரோகங் குற்றம்
இழிதல்தாழ் வு றலி றங்கல்
விழைவென்ப புணர்ச்சி யாசை
**970
#22
ஈழஞ்சிங் களம்பொன் கள்ளாம் ஏழைபெண் வறிஞன் மூடன்
வேழமே கொறுக்கை நாணல் கரும்புவல் விலங்கு மூங்கில்
கோழியே யுறையூ ரோர்புள் கூழ்பயி ருணவு சோறாம்
பூழியே புழுதி சேறோர் கொடுந்தமிழ் நாடும் போற்றும்
**971
#23
கோழையே யிலச்சை கூச்சங் குறைபாடு காசம் நாற்பேர்
தாழையோர் மரந்தெங் கென்ப தாழ்வெனல் குறைவு பள்ளம்
மாழைபொன் புளிமா வோலை வங்கார மடமை புஞ்சம்
மூழையே யகப்பை மத்தாம் மோழைகொம் பின்மை கஞ்சி
**972
#24
காழ்கொட்டை கற்ப ரற்சே கொளிமணி வடம்பளிங்காம்
கீழடி யிடங்கி ழக்குப் பொச்சாப்புக் கீழ்மை பள்ளம்
கேழொளி நிறமொப் பும் பேர் பாழ்வீண் சூ நியங்கே டென்ப
தாழ்தலே குறைத லாழ்தல் விரும்புத லிறைஞ்சல் சாய்தல்
**973
#25
காழகங் கடாரஞ் சேலை காழ்ப்பென்ப மரக்காழ் கார்ப்பாம்
பூழிலே யகில் பூ மிப்பேர் பூழ்க்கைகைம் மாவவ் யாளி ( பச்சொல்
மாழ்கலே மயங்கல் சோம்பல் வாழ்த்துத்தோத் திரஞ்சு
வீழ்தலே விழுதல் வெக்கல் வீழ்க்கைவீ ழுறுகை சுவாதி
**974
#26
ஊழல் நிரையஞ் சீர்கெடலாம் ஊழி யுகாந்தம் நெடுங்காலம்
ஞாழல் பொன்னா விரைகோங்கு புலிந கக்கொன் றையுநாட்டும்
ஆழி தேர்க்கால் கரைகடல்சக் கிராயு தம்மோ திரம்வட்டம்
பூழி யன்பாண் டியன்சேரன் பூழ்தி புழுதி புலவென்னும்
**975
#27
வாழ்க்கை வாழ்வ தூர்செல்வ மருத நிலத்தூர் மனைவாழ்வாம்
ஆழ்த்தல் புதைத்த லமிழ்த்து தலாம் வாழ்த்தல் துதிசோ பநம்பாடல்
ஊழ்த்தல் நினைத்தல் மலர்தல் புலா லுதிர்தல் செவ்வி பதனழிதல்
தாழ்த்தல் புதைத்தல் தாமதித்தல் சாய்த்தல் குறைத்தல் கீழ்ப்படுத்தல்
**976
#28
சூழல் குறிப் புக்கூட்ட மிடஞ்சுற்றுப் புறமாம்
சூழி நீர்நிலை யுச்சி யானைமுக படாப்பேர்
பாழிவலி சொற்பதங்கன் முழைபகைவ ரூர்தா
பதம் பெருமை பாயல் ம்ருக சயநமரு தத்தூர்
நூழில்கொலையானைகொடிக் கொத்தான் றன் னுடம்பி
னுழைத்தபடைக் கலம்பறித்து நிற்றல்செக்குக் குவிதல்
கூழைகடைக் குறை சேறு நாப்பண் மயிற் றோகை
கூந்தல்கட்டை புட்சிறகு பிற்படையெண் பெயரே
**977
#29
தாழி பரணிநா ளோர்மட் கலங்குடம்
நாழி யளக்கும் படி பூரட்டாதிநாள்
மூழி யகப்பைமத் துச்சோறு காதறை
வாழிய முன்னிலை யசைச்சொல் வாழ்கெனல்
**978
#30
நூழை நுண்மை நுழைவாயில் சாளரம்
ஊழ்விதி பண்பு பழமை வெயிற்பெயர்
யாழ்மிது நத்தோ டாதிரை நாள் வீணை
சூழ்த லெண்ண லாராய்தல் சுற்றுதல்
**979
#31
நீழல் காற்று நீதிநிழல்
மாழ்கு மிருக சிரமயக்கம்
ஆழ்த லமிழ்த லழுத்தற்பேர்
கீழ்தல் பிளத்தல் கிழித்திடலே
@17 ளகர வெதுகை
**980
#1
அளகுகார்த் திகைநாள் கோழி மயில் கூகை யிவற்றின் பெண்
களபமே சுண்ணச் சாந்து கல வைச்சாந் தியானைக் கன்று
களமஞ்செம் பஞ்சி னீர்நென் முளைசெந்நெ லெழுது கோற்பேர்
இளமையோர் தெசையுன் மத்த மிளவலே யிளைஞன் பின்னோன்
**981
#2
சளம்வஞ்சஞ் சஞ்ச லம்பொய் தளிமழைத் துளிகோ யிற்பேர்
வளம்வரு வாய்பல் பண்டம் நலமாண்பு செழிப்புச் செல்வம்
களரிபோர்க் களம ரங்கங் காடுபாழ் நிலங்கூட் டப்பேர்
விளரியோ ரிசைநெய் தல்யாழ் விளர்நிண மிளமை வெண்மை
**982
#3
களவன்கற் கடக ராசி கரியவன் முசுநண் டியானை
களிகளிப் பினன்க ளிப்பு மாக்களி வெறிம யக்கம்
தெளிதலே துணிதல் தேர்த லுணர்தல்தே றுதல்கொ ழுத்தல்
நளிநம்நீர் தாமரைப்பேர் நளிர்குளிர் வெறுப்பு நண்டாம்
**983
#4
நளிநிதா மரைக்குளம்தா மரைக்கொடி சுரந திப்பேர்
தளிமங்குட் டிமமேற் கட்டி சயநம்வாள் பஞ்சின் மெத்தை
வளையேகை வளைவிட் டஞ்சக் கிரப்படை சங்கு வங்காம்
வளையமண் டிலமாப் போதல் வட்டந்தா மரைச்சு ருட்டே
**984
#5
இளித்தலே சிரித்த லீழ்த்த லிணுங்கலோ டுரித்த லென்ப
தெளித்தல் நிச்சயித்தல் தூவல் புரோக்கித்தல் விதைத்தல் தெள்ளல்
திளைத்தலே யநுபவித்தல் செறிதல் மூழ் குதல் நிரம்பல்
வளைத்தலே கவர்தல் சூழ்தல் வணக்குதல் தடுத்தல் கட்டல்
**985
#6
களங்கமே பழிப்பு மாசு கறுப்படை யாளங் கிட்டம்
களங்கன் சந் திரன்மா சுள்ளோன் விளிம்புகண்ணிமையோ ரப்பேர்
களம்பமே கடம்பு பாண மிலைக்கறிக் காம்பு மாகும்
அளிம்பகங் குயிலி ருப்பை தவளையம் புயப்பூந் தாதே
**986
#7
புளகங் குமிழ்ப்போ டொழுங்கன்னக் கவளம் புடைப்புக் கண்ணாடி
சுளகு விசாக மோர்முறமாம் சுளுக மோர்மட் கலஞ்சிறங்கை
நளதம் பூந்தே னிலாமிச்சம் நளமம் புயம்நெட் டிக்கோரை
வளமை செழுமை வண்மைநலஞ் செல்வப் பொலிவு மாட்சிமையே
**987
#8
குளம் நீர் நிலைசற் கரைநெற்றி குளிய மருந்தின் பொதுவுண்டை
தளம் நாற் படைசாந் திலை முறிவு சமத லம்பூ விதழ் தாழி
நளனோர் பிதிர்தேவதையோர்வா நரேசனிடத நாட்டிறைவன்
ஒளிபிர தாபம் பிரபைவிளக் கொளிப்பி டம் முச் சுடர்விண்மீன்
**988
#9
தெளிவு துணிவு கலங்காமை தேற்ற முணர்வோர் குணவணியாம்
பிளிற லெழுத்தில் லாவோசை கிண்டலார வாரப்பேர்
களிறு மகர மீனத்த நாளாண் பன்றி மதகயமா
அளைமோர் வெண்ணெய் தயிரிடம்புற் றெலியி னளை வெற் பின் முழையே
**989
#10
களையோர் தாளப் பிரமாணங் காந்தி யிளைப்புப் பயிர்க்களையாம்
தளை நாற் பாவி னோருறுப்பாண் மயிர்காற் றளையோ டொலிச்சிலம்பு
முளைகான் முளைநென் முளைமரத்தி னாப்புத் தண்டா யுதமூங்கில்
இளையாள் கமலை பின்பிறந்தா ளிளையோன் முருகன் பின்னு தித்தோன்
**990
#11
களவு கள்ளங் களாமரப்பேர் களை தல் களைகட் டிடனீக்கல்
உளியே தறிகை யிடமென்ப வுளைத லுளைச்சல் நோவுறுதல்
துளிபெண் ணாமை திவலைமழை தொளையே மூங்கி லோட்டையுமாம்
விளிதல் கெடுதல் சாதற்பேர் விளைவு விளைச்சல் மேகமுமே
**991
#12
அளக்கர் பூமி நீள் வழியுப் பளங்கார்த் திகைநாள் கடல்சேறாம்
தளர்ச்சி தொய்வோ டசாவு றுகை களிப்பு மகிழ்ச்சி தருக்கென்ப
விளித்த லழைத்தல் மாய்வித்த லிளைத்த லெய்த்தல் மெலிதலுமாம்
உளைத்த லொலித்தல் கூவுதற்பேர் கிளைத்தல் கிண்டல் கிளைக்கொள்ளல்
**992
#13
வளாக மிடஞ்சூழ்ந் திடல் சூழ வளைந்த பூமி தினைப்புனமாம்
தளாட கங்காட் டெள்ள கழ்ந்த தடங்கா விக்கல் நாகப்பூ
அளாவல் கலத்த லளை தற்பேர் வளாவல் வளைவு சூழ்போதல்
அளீகம் வெறுப்புப் பொய்நெற்றி களேபரந்தே கம்பிணமே
**993
#14
களகண்ட மென்பமயில் குயிலன்னம் புறாப்பேர்
களதௌதம் பொன் வெள்ளி யினிய மெல்லோ சையுமாம்
குளகமே யளக்குங்கால் பலபாட்டோர் வினையாக்
கொள்ளுமோர் சொல்லணியுங் குறிற்றொடர் செய்யுளும்பேர்
களமதுரத் தொனிமிடறு நறும் பிசின் போர்க் களம்நெற்
களமிடங்கொம் பிலாயானை கறுப்புமனை வியுமாம்
குளவி மலைப் பச்சையோர் தேனீயோர் வண்டாம்
குளிகனட்ட நாகத்தொன் றோருபக்கோ ளென்ப
**994
#15
குளிர் முழவுப் பறையிலைமூக் கரிகத்தி சீதங்
குடைகூதிர் கவணைகிளி கடிகருவி யென்ப
வெளிலென்ப தயிர்கடைதூண் யானைத்தூ ணணிலாம்
வெளிறென் றல் வெள்ளறிவு வெண்மையலி மரப்பேர்
இளைபுதன்றன் றேவிகா வற்காடு சுற்றி
லிடும்வேலி பூதலம்வாக் கிளமைபசு வேழ்பேர்
உளைகண்டீ ரவதுரங்கப் பிடரின்மயி ரெழுத்தி
லோசைநொதிச் சேறுபுற மயிருடனாண் மயிர்ப்பேர்
**995
#16
முளரி நுட்பங் கடைக்கொள்ளி சமித்துவிற கம்புயமுட் செடிதீ
அளவேய ளத்தலெல்லை யெண்ணலா தியுங்காட்சி யாதி யும் பேர்
நளிமனோ சிலைபவளக் கொடி செறிவு குளிர் கூட்டம் நனிதே ளென்னும்
சுளை பலாப் பழத்தின் வித்தைப் பொதியிதழோர் காயின் விண்டுறுப ருத்தி
**996
#17
அளகம் நீர்மயிர்க் குழற்சி பெண்மயிர்
உளர்தல் கோதுதல் சிதறுதல் தடவல்
கிளர்த லிலங்க லெழுதல் வளர்தலாம்
இளியோ ரிசைசிரிப் பவமா நமுமே
**997
#18
அளிகொடை யன்பருள் வண்டுதேன் கள்ளாம்
பளிதங்கற் பூரம் பல்லமென் கணக்கு
ஒளிவட் டங்கண் ணடிசக்கி ராயுதம்
கிளைவேய் சுற்றம்வங் கிசமரக் கிளையே
**998
#19
விளக்குச் சோதிநாள் விளக்குவ தொளியாம்
களத்திர மனையாளரைப்புற மரணிடம்
களத்தொனி பாரா வதங்கோ கிலமயில்
அளித்தல் செறித்தல் கொடுத்தல் காத்தலே
**999
#20
துளங்க லசைதல் கலங்க லஞ்சுதல்
தளம்பல் நடுங்கல் தள் ளாடல் ததும்பல்
பளிங்குசுக் கிரனே படிகங் கண்ணடி
துளும்ப லலைதல் திமிறல் துள்ளுதல்
**1000
#21
அள்ளென்ப செறிவு காதோர் விகுதிபற் றிரும்பு கூர்மை
கள் பன்மை விகுதி பாளைக் கண்ணூறு நீர்ம லர்த்தேன்
நள்ளென்ப நடுமா யோனாள் வள்ளென்ப செவிவார் கூர்மை
ஞொள்கலே மெலிதல் கூச லலையல்சோம் பலுநு வற்றும்
**1001
#22
கள்ளமே களவு வஞ்சம் புள்ளுவர் கயவர் வேடர்
வள்ளமோர் மரக்கைத் தோணி வட்டில்நா னாழிக் காற்பேர்
வெள்ளம் நீர் நீர்ப்பெருக்கு மிகுதிதெண் டிரையோ ரெண்ணாம்
மள்ளர்கா னவர்போர் வீரர் திண்ணியர் மருத மாக்கள்
**1002
#23
அள்ளல்வா ருதல்சே றென்ப கிள்ளையச் சுவங்கி ளிப்பேர்
விள்ளலே தழுவல் பேச லலர்தல்வே றுறல் தி றத்தல்
நள்ளிகற் கடகம் நண்டோர் கடைவள்ளல் நண்புள் ளோனாம்
புள்ளியொற் றிலக்கப் புள்ளி பொறிபல்லி குறிம திப்பே
**1003
#24
பள்ளியூர் முநிவர் வாச மருதப்பெண் பாயல் கற்கும்
பள்ளிதா வளஞ்சிற் றூர்கண் படையறப் புறங்கோ யிற்பேர்
வெள்ளியே வெண்பொன் வெண்மை சுக்கிரன் விண்மீ னென்ப
வள்ளுர முணக்கு மூன்பாழ் வநத்தறை வராக வூனே
**1004
#25
பிள்ளை புட் குஞ்சு காரிப் புள்ளுவா யசம்வி லங்கின்
பிள்ளைமைந் தன்கு ழந்தை மரக்கன்று வடுக னெண்பேர்
வள்ளையே யுலக்கை யோச்சு மகளிர்பாட் டோர்கொடிப்பேர்
வெள்ளைவெள் ளாடு வெண்பா பலராமன் வெண்மை சங்கே
**1005
#26
புள்வண் டவிட்ட நாள் பறவை பொள்ளல் பொளிதல் மரப்பொந்து
வெள்கல் வெட்கல் கூசுதற்பேர் வெள்ளில் பாடை விளாமரமாம்
உள்ள மிதைய மநவெழுச்சி யுள்ள லுள்ளான் குரீ இநினைத்தல்
கொள்ளல் வாங்க லுட்கொள்ளல் தெள்ளல் கொழித்தல் தெளி தலுமே
**1006
#27
தள்ளல் கழித்தல் விட்டிடல்பொய் யியலல் விழப்பண்ணுதல்
துள்ளல் மசகங் குதித்தல்கலிப் பாவி னோசை துருவாடாம்
சுள்ளி மரக்கொம் பின்வறளோர் புதலோ டாச்சா நறவமாம்
வள்ளி கந்தப் பிரியைபடர் கொடியோர் கிழங்கா பரணப்பேர்
**1007
#28
ஞெள்ளல் விரை வுக்குறிப்பு வீதிபள்ள மேன்மை
ஒள்ளியோ னறிவுடையோன் சுக்கிரனல் லவனாம்
வள்ளுவன் முப் பானூல்சொற் றவனிமித்தி கன்பேர்
பொள்ளெனல்சீக் கிரக்குறிப்போ டநுகரண வோசை
**1008
#29
உள்ளென்ப வுள்ள மிடம் வெளி யல்லது
முள்ளென்ப நுண்மை மரத்தின் முட் கூர்மை
கள்ளியுட் கள்ள முடையவ ளோர்மரம்
தொள்ளை மரக்கலந் தொளைப்பட் டதுமே
**1009
#30
கூளியே யிடபம் பூதம் பேய்வலி சுற்றங் கூட்டம்
ஞாளியே சுவாநங் கள்ளாம் தாளியோர் கொடிப னைப்பேர்
வாளிகா தணியுங் கம்பி வட்டமா யோட லம்பாம்
காளிங்க மதாவ ளங்கட் செவிநிலப் பூச ணிப்பேர்
**1010
#31
கூளியர் குறவர் நண்பர் படர்குறட் பூத வீரர்
கேளிர்மித் திரர்சுற்றத்தார் கேள்வனட் பாளன் கொண்கன்
தாளென்ப முயற்சி பாத முதல் தினைத் தாளுஞ் சாற்றும்
வேள்வியே மகநாள் யாகம் விதாரண மோம குண்டம்
**1011
#32
காள பிருட்டங் கருணன் வில் கழுகு முதுகிற் கறுப்புளமான்
காளங் காள விடங்கறுப்புக் காஞ்சி ரங்கா களஞ்சூலம்
கேளி யிலீலை பரிகாசங் கேள்வி கேட்டல் செவிகல்வி
மீளி பெருமை வலியண்ணல் வீரன் பாலை நிலத்தலைவன்
**1012
#33
கோளகஞ்சற் கரைகவள மண்டலிவெள் விழிநீர்க்
குடச்சாலிந் தியத்தாந முடைந்தவோ டுண்டை
நாளம் நெல்லா தியின் றண்டுட் டொளை நளினத் தண்டாம்
நாளியே யிலைக்காம்புட் டொளையுளது நெற்றாள்
காளிபுது முகிற்பந்தி பார்ப்பதிகங் காளி
கருநிறத்தி யோர்மாதா நிந்தனையோர் புழுப்பேர்
பாளிநுனி யோரமடை யாளமொத்த வட்டப்
பாறைபந்தி காதின்மடல் மீசையுள பெண்ணே
**1013
#34
காளிகைவெண் கலம்பொன்னா தியின் கசடு நாளங்
கார்ப்பந்தி முகுளமயி ரொழுங்கோர்யோ கிநிமா
காளிகைதூ சரிகள் புடோற் கொடிப்பண்ட விலையூன்
கரிய குணம் நவமேகம் விருச்சிகம்பத் திரப்பேர்
நாளிகைவேய்ங் குழாய்கமல நாள மறு பதுவி
நாடிப்போ துள்ளோட்டை யுள தடுப்பின் றொளையாம்
பாளிதம்பாற் சோறன்னம் குளகண்டம் பட்டாம்
பாளைபனை கமுகுதென்னம் பூக்குலைநெற் பதரே
**1014
#35
காளகண்டங் கணிமரம் நச் சுப்புள்ளூர்க் குருவிமயில் கரிக்கு ரீஇயாம்
தாளமென லரிதாரங் காலக்கி ரியாமாநஞ் சம்பை யாதி
ஆளிசிங்கம் யாளிசுத்தக் கருத்தொழுங்காள் பவன் சேது வநர்த்தம் பாங்கி
கோளியத்தி யால் கொளுஞ்சி பூவாது காய்க்குமரங் கொள்வோனும் பேர்
**1015
#36
சூளிகைமா ளிகைமுகப்புக் கரிச்செவியி னடிநாட காங்கத் தொன்றாம்
காளைபாலைத்தலைவன் சேங்கன்று புருடன்கட் டிளமை யோன் பேர்
கோளை மநோ சிலைதோழி பத்திராஞ்ச நங்கோதா வரிநீர்ச் சாலாம்
கோள் கொள்கை நவக்கிரகங் கொலைதீமை புறங்கூற்றுக் கொள்ள லும்பேர்
**1016
#37
காளமே டிகையென்ப கருஞ்சிவதை மஞ்சிட்டை
பூளையோர் புதலிலவம் பஞ்சுமலைக் கணவாயாம்
தேள்விருச் சிகராசி ய நுசநா ளோர் செந்து
நாளிராப் பகலுமூ வொன்பதுநக் கத்திரமும்
**1017
#38
காளக மெனல்கறுப் புள்ளது புரைகழல்
கோளகை கட்டுறு பூணும் வட்டமும்
ஒளி மதகரிக் கூட மொழுங்காம்
வேள்வி யினர்கொடை யாளர் விப்பிரர்
**1018
#39
கோளமே யுண்டை வட்டம்
சோளமோர் தவச மெய்ப்பை
நீளல் நீ ளுதலோ டற்பேர்
வாளமே வளப்பம் வாளாம்
**1019
#40
சூளையே வேசை சுள்ளை
வேளையோர் புதல்நே ரப்பேர்
தோள் கையோர் மெய்யு றுப்பாம்
பீளிளங் கதிர்சூ லென்ப
**1020
#41
வேளாண்மை கொடைமெய்ம் மைப்பேர் ஆளாநந் தறிவே ழத்தூண்
காளாநு சாரி யங்கற் கடாரையோ டரக்கு மஞ்சள்
தூ ளீக தம்பம் வேங்கை கடம்புமா விலிங்குஞ் சொல்ப
நாளீக மம்பி ரும்பின் முளையங்கம் களிகம் வள்ளை
**1021
#42
வேளாட வன்மன் மதவேள் முருகவேள்
வேளாளர் பூவைச் சியரீகை யாளர்பேர்
ஆளோர் விகுதி யடிமையோ ராண்மகன்
வாளோ ராயுதங் கூர்மை யொளியுமாம்
@18 றகர வெதுகை
**1022
#1
புறணிதோல் குறிஞ்சி முல்லை நிலம் புறத் ததும ரத்தோல்
திறம்வகை குறைந ரம்பின் யாழ்வலி பொருட்டுஞ் செப்பும்
நிறம் வண்ண மார்பு பண்பாம் நெறிவழி முறைமை நீதி
முறம் விசா கம்வேய்ந் தட்டாம் முறுவல்பல் லொடுசிரிப்பே
**1023
#2
அறல்சிறு தூறு நீர்நீர்த் திரைகரு மணலற் றற்பேர்
குறவர்குன் றவர்கி ராதர் குறிகுறிப் படையா ளப்பேர்
மறவர்வா ளுழவர் வேடர் மறவியே மறதி கள்ளாம்
உறவியே யுறவு நீரூற் றுலைக்கள முயிரெ றும்பே
**1024
#3
பறிமீன் பெய் புட்டில் மீனைப் படுக்கின்ற கருவி பொன்னாம்
மறியழுங் கிவுளிக் குட்டி யாடுமா னிவற்றின் குட்டி
முறியென்ப கடன் கொள் ளோலை தளிர்தெரு முறிவு மாகும்
செறிதலே மிகல்கலத்தல் நெருங்கல்சே ருதல்குளித்தல்
**1025
#4
மறுவடுக் குற்ற மாசாம் வறுமையில் லாமை துன்பம்
அறுகோர்புல் சிங்கம் யானை யாளியாண் புலிநாற் பேராம்
இறுதலே முடிதலுக்கல் கெடுதலோ டிடித லென்ப
பெறுதலூ தியப்ப டல்வாய்த் திடல் பிள்ளைப் பெறலும் பேசும்
**1026
#5
துறுமல் துன் றுதல் தி ரட்சி துறுவலே செறித லுண்டல்
சிறுமை நோய் துன்ப மற்பந் தெரித்திர மெளிமை யைம் பேர்
எறுழ் தண்டா யுதம்வ லிப்பே ரிறைவனா யகனி ராசன்
அறைசொல்வீட் டரங்க றுப்புண் டதுபாறை முரஞ்சு மாமே
**1027
#6
கறையுர லிரத்தங் குற்றங் குடியிறை கறுப்பு மாசாம்
குறைநிறை வின்மை குற்ற மரசிறை குறுவாழ்க் கைப்பேர்
சிறைபக்கஞ் சிறகு காவல் மதில்கரை சிறைப்பெண் ணென்ப
நிறைநிறு வு தனி றுத்தல் துலாமாண்பு நிறைவு நீர்ச்சால்
**1028
#7
பொறைமலை துறுகல் பாரம் புவிசுமை பொ றுமை சூற்பேர்
மறைமறை விராசி யச்சொல் லடைக்கல மறுத்தல் வேதம்
முறைமர பொழுக்கங் தொன்மை புத்தக முறைமை பண்பாம்
உறைதலே யிருத்தல் தோய்த லுறையுளூர் சயநம் வீடே
**1029
#8
விறல்வலி பெருமை வெற்றி மிறையென்ப வருத்தங் குற்றம்
புறவஞ்சீ காழி காடாம் பொறையன்மெய் விரதன் சேரன்
குறளியோர் பேய்தொ ழுத்தை குறைவென்ப வறுமை யூநம்
அறிவென்ப வுணர்வு கல்வி யறைதல்சொல் லுதல டித்தல்
**1030
#9
இறவையே புட்டி லேணி யிறப்பு வீட்டிறப்புச் சாவாம்
வெறிதுபா ழறியா மைப்பேர் விறப்பென்ப பயம்நெருக்கம்
தொறுநிரை யடிமை கூட்டந் துறத்தல்சார் பறுத்த னீங்கல்
குறுகல் நீட் டன்மை கிட்டல் குறிக்கோளொற் றுமைக ருத்தே
**1031
#10
பிறக்கமே மரக்கொம் பச்சம் பிறக்கென்ப வழுவ சைச்சொல்
இறத்தலே மிகுதல் சாதல் கடத்தலே கலுமி யம்பும்
பறித்தறோண் டுதல் பூக் கொய்தல் களைகட்டல் கவர்தல் பன்னும்
வெறித்தல்பே து றல்வெற் றென்றல் வெறுக்கைபொன் வெறுப்புச் செல்வம்
**1032
#11
உறுக்கல்கோ பக்கு றிப்பு மிதித்தல்வற்புறுத்த லும்பேர்
இறுத்தலே முறித்தல் தங்கல் சொலலிறை தரல்வ டித்தல்
ஒறுத்தல் தண் டித்த லெள்ள லுலைத் திடல் வெறுத்த லென்ப
நிறுத்தலே நிறுவ னாட்டல் நிலைச்செய்த னிறுத்தி டற்பேர்
**1033
#12
மறுத்தலே மாறு ரைத்தல் வட்கல் மீட் டுழுத லென்றாம்
உறுப்பவை யவம ரக்கொம் புடலதி கம்நெருக்கம்
வெறுப்பரு வருப்புக் கோபம் வேண்டாமை செறிவச் சப்பேர்
குறைத்தல்சங் கரித்தல் வெட்டல் சுருக்குதல் குறுக்க லென்ப
**1034
#13
கறங்கலே யொலித்தல் சூர்த்தல் கறங்கென்ப சுழல்காற் றாடி
பிறங்கலே நிறைவு வெற்புப் பெருமைமிக் கொளியு யர்ச்சி
பிறங்குதல் மிகல்வி ளங்கல் பெருகுத லொலித்த லும்பேர்
இறும்புதா மரைப்பூக் குன்று மிடைதூறு குறுங்கா டென்ப
**1035
#14
பிறழ்தல் வெறுத்த லொளிசெய்தல் பெயர்தல் நடுங்கல் விகநற்பித்தல்
உறழ்வு பகைபோர் செறிவெண்ணின் பெருக்கோ டிடையீடுணர்வுவமை
கறிசா கங்காய் களைச்சுவைத்தாய்க் காயம் பெய்தட் டதுமிளகாம்
தறி தூ ணாப்பு நடுதறியாந் தறிகை யுளிகுந் தாலிப்பேர்
**1036
#15
வெறிகள் ளாடு கலக்கம் பேய் வாசம் வெறியாட் டச்சமெனும்
அறிஞ னறிவுள் ளோன்புதன்பே ரறிவன் சிநனுத் திரட்டாதி
உறுவோ ரோடந் தவமிகுதி உறுவன் முநிவனசோகமர்ந்தோன்
உறுகண் வறுமை நோய் துன்பந் தறுகண் வீர மஞ்சாமை
**1037
#16
பிறித னீங்கல் பிறிதாதல் பிறித்தல் பிரித்தல் வேறாக்கல்
முறுகல் கடுமைப் படல் முதிர்தல் முறுக்கல் திரித்தல் திருகுதலாம்
செறுதலழித்தல் கோபித்தல் தெறித்தல் சிதறு படல் சுண்டல்
தெறுதல் நெரிதல் கொலை செய்தல் செறுத்தல் வெறுத்தல் கொலல்நெருக்கல்
**1038
#17
குறடு திண்ணை மரத்துண்டம் பல கையோர் கருவி
குறளிருசீரடி குறுமை யீரடிப்பாப் பூதம்
புறமென்ப முதுகுப்பக்க முள்ளலதோ டிடப்பேர்
புறவென்ப குறிஞ்சிநில முல்லை நிலம் புறாவாம்
மறமென்றல் வலிதறுகண் சினங்கொலைபா வமுமாம்
மறல்பிணக்கு மயக்கம் போர் மறதிபகை காலன்
பறழ் தவழ்சா தியின் பிள்ளை புலி பூனை நரிநாய்
பன்றி முயற் குட்டி குரங் கணில்கீரிப் பிள்ளை
**1039
#18
பொறியடையா ளந்தேமல் புள்ளிவிதி செல்வம்
பொலிவெழுத்தைம் பொறிதோணி மதிற்பொறி பூ மகள் பேர்
எறிதலே யுதைத்தல்குத்தல் வெட்டல்வீ சுதலாம்
இறாலெருது கார்த்திகைநா ளோர் மீன்றேன் கூடு
செறிவடக்கம் நெருக்கமோர் குண வணிகூட் டமுமாம்
தெறுவியென்ப துடுப்புச்சட் டுவம்பாம்பின் படப்பேர்
உறுதல்வரல் மிகலடைதல் சம்பவித்தல் பொருந்தல்
உறுதிதிட னுணர்வுகல்வி நிச்சயம் நன் மையுமே
**1040
#19
உறைமருந்து பாற்பிரைவெண் கலம் வாழ்நாள் விலங்கி
னுணவுபுள்ளி னிரை நீள முயர்வுபைபொன் மூடும்
உறைகருவிப் புட்டில்பொரு ளுறுத்தல்மழை திவலை
யுவர் நீர்நெல் லளவினிலெண் குறித்திறுதி பெய்தல்
இறைகடன்கை வரைசிறுமை சடுதிசிற கிறைவன்
எதிர்மொழி வீட்டிறப்பரசனிறுப்பிறைதங்கலுமாம்
துறை துறுத்தல் பாவினத்தி னொன்றுபுறப் பொருளின்
சொலவு தொழிற் செயுமிடம் நீர்த் துறைநதி நூற் றுறையே
**1041
#20
பறந்தலை பிணஞ்சேர் காடுசெம் புலமாம்
பறம்பென்ப பருப்பதங் கொங்கை
குறிஞ்சிசெம் முள்ளி யோர்மர மோர்பண்
குன்று சார் நிலத்தொடோ ரிராகம்
குறும்பு பொல் லாங்கு கொடுஞ்சமம் பாலை
நிலத்தினூர் குறும்பரணிருக்கை
குறும்பொறை குறிஞ்சி நிலத்தொடந் நிலத்தூர்
குன்றுகாடென்ன நாற் பெயரே
**1042
#21
உறப்புச் செறிவு பிளத்தல் சுருக்கம்
உறழ்ப்பு நெருக்கமோர் பாலை யாழ்த்திறம்
செறித்தல்பா தீடு முழுகுதல் சேர்த்தல்
கறுப்புச் சினக்குறிப் புக்கரு நிறங்கறை
**1043
#22
புறம்பணை குறிஞ்சித் திணை முல் லைத்திணை
குறும்பர் குறுநில மன்னர் குறும்பினர்
இறும்பூ தாச்சரி யம்பே ருவகை
இறைஞ்சல் குனித லொடுதெண் டனிடல்
**1044
#23
வறிது சிறுமை பயனின்மை
தெறித னெரித்த லழித்தற்பேர்
நறைகள் வாசம் நறும்புகையாம்
பறைவாச் சியஞ்சொல் லிறகென்ப
**1045
#24
சிறப்பு மிகுதி சிறந்ததுமாம்
பறப்புப் பறத்தல் நடுக்கப்பேர்
பொறுத்தல் சகித்தல் சுமத்தலுமாம்
உறைத்தல் கார்த்தல் பெலத்திடலே
**1046
#25
திறல்கொடுஞ் சமமாண் மைப்பேர்
கிறிபடிற் றுச்சொல் பாதை
நொறிலென்ப வடக்கம் வேகம்
சிறுகுடி சிற்றில் சீறூர்
**1047
#26
புற்கசர் புலைஞர் நீசர் புற்கசி மதங்கி நீலி
ஒற்கமே மிடிதளர்ச்சி யுற்சேத முடலு யர்ச்சி
சற்கம்வற் கலை துண் டப்பேர் சற்பி பெண் பாம்பு நீர்நெய்
சொற்கமே முலைசு வர்க்கஞ் சுற்பமே கயிறு செம்பாம்
**1048
#27
முற்கர மிரும்பின் றண்டு முகுளங்கொட் டாப்பு மாகும்
வற்குவெள் ளாடு மெல்லி தழகிய திமைம யிர்ப்பேர்
மற்குணந் தேங்காய் கொம்பிலாயானை மஞ்ச கீடம்
மற்சமீன் விராட தேயம் வற்சநங் கொலைதி யாகம்
**1049
#28
வற்சமோ ராட்டைக் கன்று மார்புவற் சரங்கு ழந்தை
மற்சரன் மருத்தரித்ரன் பிறர்சுபம் பொறாம நத்தோன்
உற்சவம் விழாவி யாபிப் புளச்செருக் கிச்சை கோபம்
தற்பண முதுகென் பியானைப் புறந்தருப் பணம்ப ளிங்கே
**1050
#29
பற்பமே பதுமஞ் சாம்பல் கிற்பிடம் பிழைநோய் பாபம்
கற்பென்ப மகளிர் நெஞ்ச நிலை முல்லைப் புதல்கற் றற்பேர்
அற்றமே மறைவு சோர்வோ டவகாச மறுதி யென்ப
கொற்றங்கோ வியல் வெற்றிப்பேர் கொற்றியே வடுகி துற்கை
**1051
#30
செற்றமே வைரங் கோபஞ் செற்றல் கொல் லுதனெ ருக்கல்
எற்றலே யெறிதல் கொல்லல் குத்தலெற் றுதல்வெட் டற்பேர்
ஒற்றலொற்றுதலு டுத்தல் ஒற்றுமெய் யெழுத்தொற் றன்பேர்
சுற்றல் சுற் றிடல்சு ருட்டல் சுழலுதல் கவர்தல் சூழ்தல்
**1052
#31
துற்றலே நெருங்க லுண்டல் துற்றுண வொடுநெருக்கம்
பற்றலே தொடர்த லிச்சைப் படல் கொள்ளல் பிடித்த னாற்பேர்
சுற்றுமண் டிலமா வோடல் சுழற்சி சூழ் வொடுசு ருட்டாம்
பற்றென்ப தொடர்ச்சி யாசை பசைபிடிப் பன்பு மாமே
**1053
#32
அற்கம் விலைபூ சாவிதிப்பேர் அற்பஞ் சிறுமை நொய்ய துமாம்
புற்க லம்மெய்க் காந்தியுட லான்மா ரூபா தியபொருட்பேர்
உற்க லிகைநீர்த் திரைவிடைய நினைவொள் ளிழையா ரியற்குண மாம்
புற்கு விலக்குக் கபில நிறம் பொற்புப் பொலிவொப் பனையழகே
**1054
#33
குற்சம் நெற்றாள் துணியங்க மோர்முத் தாரம் பூங்கொத்தாம்
குற்றல் களைதல் நெற்குற்றல் தெற்றல் பின்னல் மாறுபடல் ( தல்
முற்றல் முகிதல் காழ்க்கொள்ளல் முதிர்தல் வளைத்தல் மூப்பாதல்
முற்றில் விசாக நாள் முறமாம் முற்று முடிவு முழுதுமெனும்
**1055
#34
கற்கமிடம் பம்விட்டை யயக்கிட்டம் பாவங்
கனல் வெள்ளைக் குதிரைகுடங் கண்ணாடி காடாம்
கற்சிதமே கத்துவநி முழக்கமத கயப்பேர்
கற்சூரம் பேரீந்து வெள்ளியோர் புழுப்பேர்
கற்பமயன் வாழ்நாளொத் ததுவேத விதியு
காந்தங்கற் பகங்கள்ளு மந்திர நூல் நியாயம்
சிற்பமெண்ணெண் கலைஞாநத் தொழில்சித்தி ராதி
தெசவிதசிற் பத்தொழிலோர் நூல்சுருவை நாற்பேர்
**1056
#35
கற்கசங் கடிநங் கரும்புகாம் பில்ல மரங்காச மத்தக மரமாம்
கற்கசி கொடியோன் சாகசி குரூரன் கடி நன்க்ரு பணன் றயையில்லான்
கற்கர மெலும் போர் மீன் சலத் துவாரங் கண்ணாடி திடமொலி கூகை
சற்சரஞ் சீன்ற மிந்திரன் றுவசஞ் சயகண்டை கலியுக மும்பேர்
**1057
#36
உற்கடந் தீ விரஞ்சுரா பாநவெறி யிலவங்கம்
கற்கரிகை பறைகொட்டுங் கோல்சதங்கை வறுத்தபொரி
வற்கமர வுரிவருக்கந் துரகதவா யின் வடப்பேர்
அற்புதம்பத் துக்கோடி யாச்சரியந் தசைக்கணுவே
**1058
#37
உற்கைவிண்வீழ் கொள்ளிகடைக் கொள்ளிவிண்மீ னும்பேர்
பற்சந்தி யம்மேகத் தொனி முழங்கும் புயலாம்
உற்சருக்கங் கொடைதள்ளி விடுகைபொது நியாயம்
உற்புல்லங் கடுகியதோர் சுரதமலர்ந் ததுமே
**1059
#38
மற்கடங் குரங்கோர் சுரதஞ் சிலம்பி
துற்கதி யென்ப நிரையந் தரித்திரம்
கற்கரி கரகந் தயிர்கடை தாழி
அற்களங் கதவின் றாழ்பெருந் திரையே
**1060
#39
நிற்கிரந் தன்மிடி யாளன் முழுமகன்
நிற்சரை சீந்தி யுமிரிசரை யின்மை
சற்சையே பூசுகை சாமுண்டி சிந்தநை
தற்ப மனைவியட் டாலை சயநமே
**1061
#40
பிற்படல் பின்னா தலும்பிந் துதலும்
முற்படல் முந்துதல் முன்னா தலுமாம்
உற்பலம் நறுங்கோட் டங்கரு நெய்தல்
நெற்றி படைவகுப் போர்மெய்யுறுப்பே
**1062
#41
அற்றவ் வியல்பிற் றெனலோர் சாரியை
இற்றித் தன்மைத் தெனலோ ரிடைச்சொல்
மற்றுப் பிறிது வினைமாற் றசைநிலை
பற்றைசெங் காந்தள் சிறு தூ றென்பவே
**1063
#42
உற்கா தம்பூ ரக முதன் மூன் றுளயோ காப்பி யாசத்தோ
டுற்கா தங்கா லிடறல்பலிப் பறிந்து தொடங்கல் முற்கரமாம்
உற்சா கஞ்சந் தோடமந வெழுச்சி யுத்தி யோகப்பேர்
உற்பா தம்விண் வீழ்கொள்ளி மாரி நோய்பூ கம்பாதி
**1064
#43
தாறள விரும்பின் முள்ளு மரக்குலை தநுக்கு தைப்பேர்
தூறென்ப துறுதல் நிந்தைச் சொல்செடிப் புதைசி லும்பல்
நீறென்ப விபூதி சாம்பர் நூறென்ப சுண்ண மோரெண்
வீறென்ப பெருமை வென்றி பெருமிதம் விளக்கம் வேகம்
**1065
#44
ஆறு நதியோ ரெண்வழியாம் காறு கொழுவு மளவும்பேர்
கூறு பங்கு பாதிவகை கூறு தல்சொல் லுதல்விற்றல்
சோறு பரணி நாளுண்டி சூறை சுழல்காற்றுக்கொள்ளை
பாறு பருந்து மரக்கலமாம் பேறு பெறுத லிலாபப்பேர்
**1066
#45
மாறல் விற்றல் பிறிதுபட லெண்பெருக்க னடித்தல்
மாறுபகை துடைப்பமிலை யுதிர்மரக்கொம் பென்ப
ஏறுசிங்க மான்மரைபுல் வாய்கவரி சுறாச்சங்
கிவற்றினாண் கடாவெருதே றுண்ட தச்சு வதிநாள்
சாறுபுளிங் கறியாதி யிலை முதலா மருந்தின்
சாரங்காய்க் குலைகள்ளு முற்சவ முஞ் சாற்றும்
சேறு விழா வினிமைகள்ளு நீரின்மண்சேர் குழைவாம்
சீறுதல்கோ பித்தல் பெருங் கோபமுரப் பலுமே
**1067
#46
கீற லெழுதுதல் பிளத்தல் கிழித்தல்
பாறல் பறிதல்பே தெருதெரு தோடல்
ஊறு கொலை தொட லிடையூ றுறுதல்
தேறுவேர்க் கொம்பா தியதேற் றாமரம்
**1068
#47
ஊறல் சுரத்தல் நனைதற்பேர்
தூறல் மழைதூ றுதலுமிழ்தல்
தேறல் தெளிதல் தேன்கள்ளாம்
நாறல் முளைத்தல் கமழ்தலுமே
**1069
#48
ஊற்றமே புகழ்பற் றுக்கோ டுரமுணர் வுடைமை யூக்கம்
தேற்றமே திடன்கு றிக்கோள் தெளிவு நிச் சயமு மாகும்
தோற்றமே வலிபி றப்புச் சொன்மாலை யுதயம் நாற்பேர்
தூற்றலே முகிறு ளித்த லலர் தூற்றல் நெற்றூற் றற்பேர்
**1070
#49
தோற்றல்கா ணுதல்பி றத்தல் முளைத்தல்தோல் விப்ப டற்பேர்
நோற்றல் நோன் புறல்பொ றுத்தல் கூற்றுச்சொ லியமன் காலன்
போற்றலே பாது காத்தல் புகழ்தல்பே ணுதல்வ ணங்கல்
ஏற்றுத லே றச் செய்த லடுக்குத லுயர்த்த லென்ப
**1071
#50
மேற்கோள்மீக் கோள்மே லோர் சொல் லுதாரணஞ் சநிமேற் கொள்கை
ஆற்போதம் விண்டு க்ராந்தி காட்டுமல் லிகையெ ருக்காம்
ஊற்றால் மீன் கூடு ரோணி யூற்றுதல் வார்த்தல் பெய்தல்
ஊற்றூன்று கோல்நீ ரூற்றாங் காற்றோர் பூ தம்பே யென்ப
**1072
#51
ஏற்ற மதிக மேம்பாடு நினைவு துணிவே றுவதும்பேர்
ஆற்றல் வலிவல் லமைபெருமை யதிகந் தணித்தல் செய்தல்பொறை
ஏற்ற லொப்புக் கொளலெழுப்பல் எதிர்த்தல் யாசித் தலுமேற்கும்
மாற்றல் மறுத்தல் வேறாக்கல் பாற்கு நம்பங் குநிமருதே
@19 னகர வெதுகை
**1073
#1
இனமொரு பொருளின் வற்கங் கிளைஞரோர் வகைத்தி ரட்பேர்
மனவக்குப் பாசி சங்கின் மணிமணிப் பொதுவு மாகும்
துனிநதி புலவி நீட்டம் வெறுப்பொடு துன்ப மென்ப
கனிதல்முன் கோபம் நைத லிரங்கிடல் கனிவு றற்பேர்
**1074
#2
புனிதனே யருகன் சுத்தன் புத்தனிந் திரன்ம கேசன்
சினைகருப் பம்ம ரக்கொம் பவையவ முட்டை செப்பும்
நனைகள்ளு மலர்மொட் டென்ப நனந்தலை நடுவோ டுச்சி
மனையென்ப மனைவி வீடாம் வனைதலே புனைதல் செய்தல்
**1075
#3
குனித்தலே வளைத்த லாடல் சினைத்தல்சூற் கொளல்தளிர்த்தல்
பனித்தல் துன் புறன டுங்கல் பயப்படல் விடாம ழைப்பேர்
அனுக்கமே வருத்தம் வாட்டம் அனைத்தேயவ் வளவிற் றெல்லாம்
கனைத்தலே யொலித்தல் பெய்த லெருமைகற் கியினார்ப் பென்ப
**1076
#4
கனலி கனலோ னிநன்பன்றி கனவு கனாநித் திரையும்பேர்
நனவே தெளிவோ டகலப்பேர் நனியே மிகுதி பெருமையுமாம்
பனியோர் மஞ்சி னீர்குளிராம் பனையோர் மரத்தோடநுசநாள்
தனியே தநவான் றனிமையெனுந் தனிமை யொற்றை யொப்பின்மை
**1077
#5
புனிதந் தூய்மை புநர் பூசம் புனிறே புதுமை யீன்றணிமை
புனையொப் பனைகாற் றளைபொலிவாம் புனை தல் பூண லலங்கரித்தல்
முனை போர் முதன்மை நுனிபகையாம் முனைவு வெறுப்புப் பெரு ங்கோபம்
வினையே செயல்வெஞ் சமம் தொழிற்பேர் முனைவன் முதல்வன் மெய்த்தவனே
**1078
#6
புனமே குறிஞ்சி நிலங்கொல்லை
சினவல் பொருதல் கோபித்தல்
அன லுட் டணமும் நெருப்பும் பேர்
பனுவல் பஞ்சி னூல்சொன்னூல்
**1079
#7
கொன்னென்ப பெருமை காலம் பயனின்மை பயமுங் கூறும்
சுன்முது மகன்சுன் னைப்பேர் மின்னல்மின் னிடல்து லங்கல்
தென்னழ கிசைக்கு றிப்பாஞ் சென்னியே சிரசு சோழன்
பின்னிடம் வழிபின் பீறாம் பின்னலே சடைதெற் றற்பேர்
**1080
#8
பொன்னெழி லிரும் போர் தாது பொலிவிலக் குமிவி யாழம்
மன்னிலை பேறி டைச்சொல் பெருமைமன் னவன்மிக் கென்ப
முன்னென்ப பழமை முன்பு முதலிட மேலு மாகும்
கன்மட மழுக்குப் பாவம் புன்மையற் பமுமி ழுக்கும்
**1081
#9
உன்மத்தம் பேதூ மத்தை யுன்னலே கிளர்த லுள்ளல்
தன்மைதன் னிடம் பண் பென்ப தன்னங்கோக் கன்றோ டற்பம்
கன்னபூ ரந்தான் வாகை கருநெய்தல் செவிம லர்ப்பேர்
சன்னமெல் லியதே காந்தத் தலமூடப் பட்ட தற்பம்
**1082
#10
முன்னர் முற் பக்க முன்பாம் முன்னவள் முதல்வி மூத்தாள்
இன்னலே தீமை துன்ப மின்னாப்பொல் லாங்கி டுக்கண்
கன்னல் சற் கரைகரும்பு கரகம்நாழிகையவ் வட்டில்
பன்னல் சொல் லுதல்யோ சித்தல் பருத்திபன் னுதல்கொய் தற்பேர்
**1083
#11
மன்னனெப் பொருட்கு நாதன் மகீபனுத் திரட்டா திப்பேர்
அன்னை தாய் தமக்கை தோழி என்னையென் றாயை யச்சொல்
பின்னையே பிற்றை நாள் பின் பிலக்குமி பின்பி றந்தாள்
பின்னோர்சூத் திரர்பின் வந்தோர் முன்னோர் தொன் மையரமைச்சர்
**1084
#12
கன்மாடங் கருள் பல் வண்ணங் கன்னார்கன் னுவர்கல் லின்னார்
குன்மாடங் காடி நீர்கா ராமணிப் பயறுங் கூறும்
உன்மாதம் பைத்தி யங்கொல் லுகையெலிப் பொறியூ மத்தை
முன்னோன் முன் னவன்மா தேவன் கணேசன் முக் குடைச்செல்வன்பேர்
**1085
#13
புன்கணோய் மெலிவு துன்பம் பொன்றுதல் கெடுதல் சாதல்
நன்கெழில் மிகுதி நன்றாம் நன்றென்ப பெருமை நன்மை
இன்பமே சுகம கிழ்ச்சி யென்பென்ப வெலும்பு புல்லாம் ( பேர்
முன்பென்ப பெருமை தொன்மை வலிமைமுன் னென்ன நாற்
**1086
#14
மன் றநிச் சயமுண் மைப்பேர் மன்றமம் பலம்நீள் வீதி
கன்றலே மிகுதல் வெம்ப லிரங்குதல் கனன்ற லென்ப
குன்றவர் குறவர் வேடர் குன்றலே கெடுத லெஞ்சல்
இன் றிந்நா ளின்மை யென்ப என்றெந்நா ளிரவி வெய்யில்
**1087
#15
கன்ற ராசுத் தட்டொடுகல் மன்றல் வாசங் கல்யாணம்
நன்றி நன்மை யற முதவி யன்றில் மூல நாளோர்புள்
கன்று மரைமான் பசுவெருமை கடமை கவரிப் பிள்ளைமரக்
கன்று கராமொட் டகம்யானைக் குட்டி யற்பங் கைவளையே
**1088
#16
அன்ன முணவு நீர்சோறோர் புள்ளு மலம்விட் டதுமாகும்
உன்னம் நினைவு மனநீர்ப்புள் தொன்மை பழமை யோர்வனப்பு
மன்ன லடைதல் நிலைபெறுதல் வன்னி சிகங்குங் குமம்குசும்பம்
வன்னி பிரம சாரிகிளி யோர்ம ரம்பா வகன்பரமன்
**1089
#17
குன்மமிடப் பாட்டீரல் படைவிகற்பஞ் சுங்கங்
குன்மநோய் பணைகளிலா மரம்புறக்கா வற்பேர்
சின்ன முற்றில் காகளம்ப தாகையடை யாளம்
சிறுமை மரத் தட்டுச்சே திக்கப்பட் டதுமாம்
முன் னஞ்சீக் கரிமரமுள் ளங்குறிப்பு முன்பாம்
முன்னை முன்பு முன்னைநா ளோர்மரமுன் பிறந்தாள்
கன்னிகா ரங்கொன்றை மரங்கோங்கு மரப்பேர்
கன்னிகை பூப் பொகுட்டுமண மிலாள் கருணி கையுமே
**1090
#18
பன்றியோர் விலங்கோர் கொடுந்தமிழ் நாடு
அன்றல் லவென லந்நா ளசைச்சொல்
ஒன்று தனிமையெண்ணின் முதல் மோக்கம்
குன்று சதையஞ் சிறுமலை குன் றமே
**1091
#19
புன்காலி காசா மரம்பா திரைமரம்
வன்பால் குறிஞ்சித் திணைபா லைத்திணை
என்றூழ் வெயிலா யிரங்கதி ரோனுமாம்
பின்றை பிறகொடு பிற்றைநாளும்பெயர்
**1092
#20
மின்னொளி மேகப் பிரபையோர் விகுதி
துன்மதி பொல்லாப் புத்தியோ ராண்டாம்
துன்முகங் குரங்கோர் நிரையந் துரங்கம்
பின்னக மயிர்முடி யொடுதலைக் கோலம்
**1093
#21
கன்னந் திராசுகன் னக்கோல் கவுள் செவி
பன்ன மிலைமுண் முருக்குப் பலாசமாம்
துன்னல் பொருந்த லியற்ற னெருங்குதல்
நன்னிலை யுலகம்நன் னிலைமை சுகந்தவம்
**1094
#22
பானலே மருத வேலி பழனம்நீ லோற்ப லப்பேர்
கானவர் குறவர் வேடர் மான்மகன் பிரமன் காமன்
வானவ னு தியன் றேவன் மானுத லொத்தல் வெள்கல்
ஆனியே மூல நாள் கே டோர்மாத மான்பொ ருந்தம்
**1095
#23
வானியான் பொருநை சேநை துகிற்கொடி விதாந மன்னும்
ஆனிய மிருது நாளாம் நான்முக னருகன் வேதா
கூனடி முதலி லத்தத் தொடுநிற்குஞ் சீர்கோ ணற்பேர்
மான்மகான் விலங்கின் சாதி யோர்ம்ருக மகர ராசி
**1096
#24
ஈனல் பெறுதல் தருதற்பேர் ஏனை மற்று மலங்கு மீன் தேர்
கானல் வரையைக் கடலினைச்சார் சோலை கழியுப் பளம்பேய்த்தேர்
தானை முட்டைப் பொரிசேனை புடைவை யாயு தப்பொதுவாம்
தேன்ம துக்கள் பெண் வண்டாம் மீன்விண் மீனோர் நீர்ச்செந்து
**1097
#25
ஆன்ம பூமந் மதன்பிரமன் ஆன்ம யோநி யயன்மதநன்
ஆன்ம வீரன் விறலோன்மைத் துநன்கற் றோன்புத் திரனாகும்
ஆன்மா முயற்சி தைர்யமந மறிவு பிராண னுடல்பரம
வான்மா வாயு வியல்புகதி ராயி ரத்தோன் பாவகனே
**1098
#26
ஆன்மா தீநன் மைத்து நன்பி ராணா தாரன் சுதன்கற்றோன்
கான்மீ ரந்தான் குங்குமம் புட் கரமூ லங்கல் லுளியென்ப
ஆனோர் விகுதி மூன்றனுரு போர்சா ரியையா வெருதெருமை
வானா காயம் பெருமையெதிர் கால விடைச்சொல் மழைமேகம்
**1099
#27
ஏனல் தினைப்புனம் நெற்கதிர் பைந்தினை
கூனி தொழுத்தைசிற் றிறால் கூ னுள்ளவள்
மேனி யுருவஞ் சரீர நிறமெனும்
சேனை படைகடைத் தெருவோர் கிழங்கே
**1100
#28
மோனை யெழுவாய் முதலெழுத் தொன் றுசீர்
கானெழுத் தின்சாரியை மணங் கானகம்
நோன்மை பெருமை வலிபொறை நோன்புமாம்
ஏனாதி தந்திரி மறவ னாவிதன்
**1101
#29
நோன்புபண் டிகைத வப்பேர் நோன்றல்நோன் புறல்பொ றுத்தல்
ஊன்றலே திரப்படுத்தல் நடுதலூன் றுதல்ப தித்தல்
தோன்றலே சிறந்தோன் முல்லைத் தலைவன்றோன் றுதல்கு மாரன்
தோன்றுதல் முளைத்தல் காணல் வெளிப்பட லுதித்தல் சொல்லும்
**1102
#30
ஆன்றல் மிகுதி யகல மாட்சிமை
சீன்றங் கிழிந்தது முதிர்ந்தது சீரணம்
ஆன்றவர் மிக்கோ ரறிஞர் பண்புளோர்
சான்றோன் சூரியன் மிக்கோ னற்குணன்
**
**
|
|