<<முந்திய பக்கம்

பிங்கலந்தை என்ற பிங்கல நிகண்டு - தொடரடைவு

கி - முதல் சொற்கள்
கிகிணி 2
கிசலயம் 1
கிஞ்சுகம் 2
கிஞ்சுகமும் 1
கிட்டல் 1
கிட்டி 3
கிடக்கை 2
கிடங்கு 2
கிடங்கும் 1
கிடந்த 1
கிடி 1
கிடுகிடெனல் 1
கிடுகு 4
கிடை 1
கிடைத்தல் 1
கிடையும் 1
கிண்கிணி 3
கிண்கிணிமாலையும் 2
கிண்டல் 2
கிண்ணமும் 2
கிணகர் 1
கிணறு 1
கிணை 1
கிம்புரி 3
கிம்புருடர் 1
கியாதம் 2
கிரகம் 1
கிரணம் 1
கிரவுஞ்சத்தீவே 1
கிரவுஞ்சம் 1
கிரவுஞ்சமும் 1
கிராணம் 1
கிராதர் 1
கிராமம் 2
கிராமும் 1
கிரி 2
கிரிசரம் 1
கிரிநெறியும் 1
கிரிமல்லிகை 1
கிரியை 1
கிரிராசன் 1
கிரீசன் 1
கிரீடம் 2
கிரீடி 1
கிரீடை 1
கிரீடையும் 1
கிரீவம் 1
கிருகரன் 2
கிருட்டி 1
கிருட்டிணசகாயன் 1
கிருட்டிணன் 1
கிருத்திமம் 3
கிருதம் 1
கிருது 1
கிருபையும் 1
கிருமியும் 1
கிரேதா 1
கில்லம் 2
கிலுகிலுப்பை 1
கிலுகிலுப்பையும் 1
கிலுத்தம் 1
கிலேசம் 1
கிழக்கின்பெயரே 1
கிழக்கு 1
கிழக்கும் 1
கிழங்கும் 4
கிழங்கே 1
கிழத்தி 1
கிழமை 3
கிழமைக்கூறுபாடு 1
கிழமையன் 1
கிழமையும் 1
கிழவன் 2
கிழவனை 1
கிழானும் 1
கிழித்தல் 1
கிழித்து 1
கிள்ளல் 1
கிள்ளி 1
கிள்ளை 4
கிளக்கும் 2
கிளத்தப்பெறுமே 1
கிளத்துப 3
கிளந்த 2
கிளப்பதும் 1
கிளப்பின் 1
கிளர் 6
கிளர்வி 1
கிளவி 47
கிளவியும் 3
கிளவியோடு 1
கிளறுதல் 1
கிளி 1
கிளிகடிகருவி 2
கிளிகடிகருவியும் 1
கிளிச்சிறை 1
கிளிஞ்சில் 1
கிளியும் 8
கிளியே 1
கிளை 2
கிளைஞரும் 1
கிளைத்தல் 2
கிளையும் 2
கிளையே 1
கிறியும் 1
கிறுக்குதல் 1
கின்னரம் 6
கின்னரர் 2
கின்னரர்பிரானே 1
கின்னராகம் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    கிகிணி (2)
கஞ்சனம் கிகிணி கஞ்சரீடம் - 8.மாப்பெயர் :8 34/1
கிகிணி கன்னி காக்கணம் கருவிளை - 9.மரப்பெயர் :9 246/1

 TOP
 
    கிசலயம் (1)
வல்லரி குழை முறி மஞ்சரி கிசலயம்
  பல்லவம் அலங்கல் கிளை பைந்தளிர் எனல் - 9.மரப்பெயர் :9 151/1,2

 TOP
 
    கிஞ்சுகம் (2)
கவிரே கிஞ்சுகம் முள்முருக்கு ஆகும் - 9.மரப்பெயர் :9 46/1
செந்நிறமும் முள்முருக்கும் கிஞ்சுகம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 335/1

 TOP
 
    கிஞ்சுகமும் (1)
கிஞ்சுகமும் குலிகமும் துப்பும் செவப்பே - 7.பண்பின்செயலின்பகுதி:7 175/5

 TOP
 
    கிட்டல் (1)
கிட்டல் துவக்கல் கட்டுதல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 383/3

 TOP
 
    கிட்டி (3)
கிட்டி சீர் பாண்டில் கஞ்சம் கைத்தாளம் - 6.அநுபோக :6 163/1
கிட்டி ஓர்ஈற்றுப்பசு - 8.மாப்பெயர் :8 152/1
தாளமும் தலை ஈற்று பசுவும் கிட்டி - 10.ஒருசொல்பல்பொருள்:10 338/1

 TOP
 
    கிடக்கை (2)
ஆய்வை கிடக்கை அணை பரியங்கம் - 4.அவனி :4 260/1
தராதலப்பெயரும் சயனமும் கிடக்கை - 10.ஒருசொல்பல்பொருள்:10 336/1

 TOP
 
    கிடங்கு (2)
சூழி கிடங்கு சலதரம் கேணி - 4.அவனி :4 157/7
ஓடை கிடங்கு கேணி உடுவே - 4.அவனி :4 180/1

 TOP
 
    கிடங்கும் (1)
ஒளி வான்மீனும் கிடங்கும் நாவாய் - 10.ஒருசொல்பல்பொருள்:10 159/2

 TOP
 
    கிடந்த (1)
பாற்பட கிடந்த பகுதியின் வருநவும் - 6.அநுபோக :6 269/6

 TOP
 
    கிடி (1)
கேழல் குரோடம் கிரி கிடி கிருட்டி - 8.மாப்பெயர் :8 192/1

 TOP
 
    கிடுகிடெனல் (1)
கலகலெனல் சலசலெனல் கிடுகிடெனல் ஆம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 359/5

 TOP
 
    கிடுகு (4)
கிடுகு என் கிளவி தேர்மரச்சுற்றே - 6.அநுபோக :6 384/1
சகடை கிடுகு பல்வகைப்பறையே - 6.அநுபோக :6 428/5
வேதிகை கிடுகு பலகை கேடகம் - 6.அநுபோக :6 508/2
பலகையும் தேர் மர சுற்றும் கிடுகு எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 337/1

 TOP
 
    கிடை (1)
சடையே கிடை எனல் - 9.மரப்பெயர் :9 356/1

 TOP
 
    கிடைத்தல் (1)
முட்டல் கிடைத்தல் முடுகல் நேர்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 222/1

 TOP
 
    கிடையும் (1)
வேணியும் வேரும் கிடையும் சடை எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 439/1

 TOP
 
    கிண்கிணி (3)
பாத சதங்கை சிறுமணி கிண்கிணி - 6.அநுபோக :6 82/1
குரலே தார் இவை கிண்கிணி மாலை - 6.அநுபோக :6 164/1
கிண்கிணி பரலும் கிளர் ஒளியும் பன்றியும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 55/1

 TOP
 
    கிண்கிணிமாலையும் (2)
கிண்கிணிமாலையும் கிளர் நெல்கதிரும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 368/1
கிண்கிணிமாலையும் தார் என கிளத்துப - 10.ஒருசொல்பல்பொருள்:10 599/2

 TOP
 
    கிண்டல் (2)
கிண்டல் கிளைத்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 390/1
கீறல் கிண்டல் கிள்ளல் கிழித்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 396/1

 TOP
 
    கிண்ணமும் (2)
கிண்ணமும் வள்ளமும் சிறுவட்டில் பெயரே - 6.அநுபோக :6 149/1
கன்னலும் கிண்ணமும் நாழிகை வட்டில் - 6.அநுபோக :6 151/1

 TOP
 
    கிணகர் (1)
சேடர் கிணகர் என்பதும் செப்பும் - 5.ஆடவர் :5 150/1

 TOP
 
    கிணறு (1)
உறவியும் கூவலும் கூபமும் கிணறு எனல் - 4.அவனி :4 164/1

 TOP
 
    கிணை (1)
அரி கிணை முரசம் பணை மருதப்பறை - 4.அவனி :4 123/1

 TOP
 
    கிம்புரி (3)
கோடகம் கிம்புரி முகுடம் தாமம் - 6.அநுபோக :6 68/1
தாங்கி கிம்புரி கோளகை பூணே - 6.அநுபோக :6 103/1
முடியினது உறுப்பும் தாங்கியும் கிம்புரி - 10.ஒருசொல்பல்பொருள்:10 339/1

 TOP
 
    கிம்புருடர் (1)
கருடர் கின்னரர் நிருதர் கிம்புருடர்
  காந்தருவர் இயக்கர் விஞ்சையர் பூதர் - 1.வான் :1 92/2,3

 TOP
 
    கியாதம் (2)
ஏற்றம் கியாதம் இசை மெய்ப்பாடு - 7.பண்பின்செயலின்பகுதி:7 297/1
ஏற்றம் கியாதம் மிகைப்பாடு என்ப - 7.பண்பின்செயலின்பகுதி:7 316/1

 TOP
 
    கிரகம் (1)
அலர் கதிர் முதலிய கிரகம் ஒன்பதும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 429/1

 TOP
 
    கிரணம் (1)
கரமே தீவிரம் கோ கிரணம் கதிர் - 2.வானவர் :2 120/1

 TOP
 
    கிரவுஞ்சத்தீவே (1)
இறலியின்தீவே கிரவுஞ்சத்தீவே
  குசையின்தீவே இலவந்தீவே - 4.அவனி :4 5/2,3

 TOP
 
    கிரவுஞ்சம் (1)
கிரவுஞ்சம் கோழி பறவை அளவு ஆகும் - 4.அவனி :4 271/1

 TOP
 
    கிரவுஞ்சமும் (1)
கவுஞ்சம் அன்றில் கிரவுஞ்சமும் சாற்றும் - 8.மாப்பெயர் :8 31/1

 TOP
 
    கிராணம் (1)
கிராணம் என்பதும் சிறுவட்டில் பெயரே - 6.அநுபோக :6 150/1

 TOP
 
    கிராதர் (1)
மறவர் எயினர் சவரர் கிராதர்
  கானவர் குறவர் புளினர் வேடர் - 4.அவனி :4 85/1,2

 TOP
 
    கிராமம் (2)
வைப்பு கிராமம் வசதி அருப்பம் - 4.அவனி :4 28/5
உன்னம் கிராமம் உற்குரோசம் - 8.மாப்பெயர் :8 69/1

 TOP
 
    கிராமும் (1)
கவியமும் மூட்டும் கிராமும் கலினமும் - 6.அநுபோக :6 523/1

 TOP
 
    கிரி (2)
ஓதி வீரம் கிரி காண்டம் ஓங்கல் - 4.அவனி :4 48/8
கேழல் குரோடம் கிரி கிடி கிருட்டி - 8.மாப்பெயர் :8 192/1

 TOP
 
    கிரிசரம் (1)
கிரிசரம் வனசரம் நதிசரம் அடுத்து - 8.மாப்பெயர் :8 138/1

 TOP
 
    கிரிநெறியும் (1)
நீர்நிலை பெயரும் அகழும் கிரிநெறியும்
  மரமும் பட்டமும் மற்று இவை ஓடை - 10.ஒருசொல்பல்பொருள்:10 217/1,2

 TOP
 
    கிரிமல்லிகை (1)
குடசம் கிரிமல்லிகை வெட்பாலை - 9.மரப்பெயர் :9 80/1

 TOP
 
    கிரியை (1)
சரியை கிரியை யோகம் ஞானம் என்று - 2.வானவர் :2 10/1

 TOP
 
    கிரிராசன் (1)
மலையரையன் கிரிராசன் இறை பாகத்து - 4.அவனி :4 68/1

 TOP
 
    கிரீசன் (1)
வாமன் கிரீசன் வரன் உமாபதி - 2.வானவர் :2 2/25

 TOP
 
    கிரீடம் (2)
வசந்தம் கிரீடம் வருடம் சரமே - 2.வானவர் :2 211/1
மகுடம் கிரீடம் மெளலி மணிமுடி - 6.அநுபோக :6 66/1

 TOP
 
    கிரீடி (1)
பற்குனன் கிரீடி பார்த்தன் வீபற்சு - 5.ஆடவர் :5 18/1

 TOP
 
    கிரீடை (1)
உண்டாட்டு கிரீடை உப்பு கேளி - 5.ஆடவர் :5 225/2

 TOP
 
    கிரீடையும் (1)
கூத்தும் கிரீடையும் பாடாண்டத்துறையும் - 3.ஐயர் :3 57/4

 TOP
 
    கிரீவம் (1)
கிரீவம் களமே கில்லம் கந்தரம் - 5.ஆடவர் :5 303/1

 TOP
 
    கிருகரன் (2)
சமானன் நாகன் கூர்மன் கிருகரன்
  தேவதத்தன் தனஞ்சயன் என்றா - 1.வான் :1 32/2,3
கிருகரன் என்பது முகத்திடை கெழுமி - 1.வான் :1 40/1

 TOP
 
    கிருட்டி (1)
கேழல் குரோடம் கிரி கிடி கிருட்டி
  மோழல் வராகம் போத்திரி கோலம் - 8.மாப்பெயர் :8 192/1,2

 TOP
 
    கிருட்டிணசகாயன் (1)
கிருட்டிணன் கிருட்டிணசகாயன் மாதவி - 5.ஆடவர் :5 18/4

 TOP
 
    கிருட்டிணன் (1)
கிருட்டிணன் கிருட்டிணசகாயன் மாதவி - 5.ஆடவர் :5 18/4

 TOP
 
    கிருத்திமம் (3)
மகோதரம் கிருத்திமம் கணம் பூதப்பெயர் - 2.வானவர் :2 116/2
துருத்தி துவக்கு கிருத்திமம் தோலே - 5.ஆடவர் :5 248/3
சருமம் கிருத்திமம் வடகம் துவக்கு - 8.மாப்பெயர் :8 242/1

 TOP
 
    கிருதம் (1)
ஆதிரம் கிருதம் ஆச்சியம் இழுது - 6.அநுபோக :6 31/1

 TOP
 
    கிருது (1)
சித்து யாகம் வேள்வி கிருது ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 43/1

 TOP
 
    கிருபையும் (1)
கிருபையும் அபயமும் கிளர் அருள் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 14/2

 TOP
 
    கிருமியும் (1)
கீடமும் பொட்டும் கிருமியும் புழுவே - 8.மாப்பெயர் :8 305/1

 TOP
 
    கிரேதா (1)
கிரேதா திரேதா துவாபரம் கலி என - 2.வானவர் :2 216/1

 TOP
 
    கில்லம் (2)
கிரீவம் களமே கில்லம் கந்தரம் - 5.ஆடவர் :5 303/1
தொண்டை கில்லம் தொண்டைக்குழியே - 5.ஆடவர் :5 334/1

 TOP
 
    கிலுகிலுப்பை (1)
பகன்றை கிலுகிலுப்பை - 9.மரப்பெயர் :9 233/1

 TOP
 
    கிலுகிலுப்பையும் (1)
பகண்டையும் சிள்வீடும் கிலுகிலுப்பையும் சில்லை - 10.ஒருசொல்பல்பொருள்:10 500/1

 TOP
 
    கிலுத்தம் (1)
கிலுத்தம் மணிக்கட்டே - 5.ஆடவர் :5 296/1

 TOP
 
    கிலேசம் (1)
கிலேசம் துயர் துனி துன்பம் துக்கம் ஆம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 123/10

 TOP
 
    கிழக்கின்பெயரே (1)
கிழக்கின்பெயரே கீழ்த்திசையும் ஆகும் - 1.வான் :1 13/2

 TOP
 
    கிழக்கு (1)
கிழக்கு தென்கிழக்கு தெற்கு தென்மேற்கு - 1.வான் :1 12/1

 TOP
 
    கிழக்கும் (1)
முதுமையும் கிழக்கும் முன்பும் பூருவம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 853/1

 TOP
 
    கிழங்கும் (4)
நாற்றமும் கிழங்கும் அணுவின்கூட்டமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 259/1
புள்பொதுவும் நிமித்தமும் கிழங்கும் சகுனம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 434/1
பழமும் கிழங்கும் காயும் சேனையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 763/1
ஒருநாள்மீனும் ஏதுவும் கிழங்கும்
  மூலம் என்று மொழிய பெறுமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 960/1,2

 TOP
 
    கிழங்கே (1)
மூலம் மூலகம் கந்தம் கிழங்கே - 9.மரப்பெயர் :9 170/1

 TOP
 
    கிழத்தி (1)
எழுத்தின் கிழத்தி நாமகள் ஆதலின் - 6.அநுபோக :6 260/1

 TOP
 
    கிழமை (3)
வாசரம் கிழமை வாரம் ஆகும் - 2.வானவர் :2 146/1
உரிமை கிழமை ஆட்சியும் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 456/1
வாரமும் குணமும் காணியும் கிழமை - 10.ஒருசொல்பல்பொருள்:10 340/1

 TOP
 
    கிழமைக்கூறுபாடு (1)
ஆர்கலி கிழமைக்கூறுபாடு அன்பு - 10.ஒருசொல்பல்பொருள்:10 1025/1

 TOP
 
    கிழமையன் (1)
காவல் கிழமையன் ஆதலானும் - 6.அநுபோக :6 266/3

 TOP
 
    கிழமையும் (1)
மாலையும் பெற்றியும் மரபும் கிழமையும்
  பாலும் விதியும் பான்மையும் இயல்பும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 1/2,3

 TOP
 
    கிழவன் (2)
மகிழ்நன் ஊரன் கிழவன் தலைமகன் - 4.அவனி :4 134/1
கிழவன் உரியோன் - 5.ஆடவர் :5 168/1

 TOP
 
    கிழவனை (1)
ஐங்கணை கிழவனை ஆர்வமொடு நோற்றலும் - 6.அநுபோக :6 268/4

 TOP
 
    கிழானும் (1)
பாலும் தேனும் கிழானும் நெய்யும் - 6.அநுபோக :6 316/1

 TOP
 
    கிழித்தல் (1)
கீறல் கிண்டல் கிள்ளல் கிழித்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 396/1

 TOP
 
    கிழித்து (1)
தலை கிழித்து அகல்வது தனஞ்சயன் ஆகும் - 1.வான் :1 42/4

 TOP
 
    கிள்ளல் (1)
கீறல் கிண்டல் கிள்ளல் கிழித்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 396/1

 TOP
 
    கிள்ளி (1)
சென்னி வளவன் செம்பியன் கிள்ளி
  பொன்னித்துறைவன் புலிக்கொடியோன் மால் - 5.ஆடவர் :5 22/1,2

 TOP
 
    கிள்ளை (4)
கீரம் கிள்ளை கிளி பெயர் ஆகும் - 8.மாப்பெயர் :8 26/2
கீரம் கிள்ளை அரி கருங்கிளிக்கு ஏற்கும் - 8.மாப்பெயர் :8 41/1
கந்தருவம் கிள்ளை மண்டிலம் கற்கி - 8.மாப்பெயர் :8 139/6
கிளியும் குதிரையும் கிள்ளை எனப்படும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 343/1

 TOP
 
    கிளக்கும் (2)
கேடகம் கடவை என்பவும் கிளக்கும் - 4.அவனி :4 178/1
கேவலமும் புலம்பும் தனிமையை கிளக்கும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 139/1

 TOP
 
    கிளத்தப்பெறுமே (1)
கிளத்தப்பெறுமே கேதுவும் இதன் பெயர் - 6.அநுபோக :6 198/1

 TOP
 
    கிளத்துப (3)
அகிஞ்சனர் என்பதும் அ பெயர் கிளத்துப - 5.ஆடவர் :5 161/1
கேசம் மராட்டம் பிறமயிரும் கிளத்துப - 5.ஆடவர் :5 346/2
கிண்கிணிமாலையும் தார் என கிளத்துப - 10.ஒருசொல்பல்பொருள்:10 599/2

 TOP
 
    கிளந்த (2)
கிளந்த இந்திரன்நாள் சேட்டையும் கேட்டை - 2.வானவர் :2 164/2
முன்னுற கிளந்த ஆண்டின் நாள் வரை - 6.அநுபோக :6 267/20

 TOP
 
    கிளப்பதும் (1)
முடக்கலும் நீட்டலும் கிளப்பதும் நாகன் - 1.வான் :1 38/1

 TOP
 
    கிளப்பின் (1)
பிள்ளைப்பாட்டு தெள்ளிதின் கிளப்பின்
  திங்கள் இரண்டில் தெய்வம் காக்கென - 6.அநுபோக :6 267/1,2

 TOP
 
    கிளர் (6)
கிருபையும் அபயமும் கிளர் அருள் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 14/2
கேழும் கரமும் தேசும் கிளர் ஒளி - 7.பண்பின்செயலின்பகுதி:7 179/5
கேசரம் துணர் இணர் கிளர் மலர்த்தாதே - 9.மரப்பெயர் :9 160/2
கிண்கிணி பரலும் கிளர் ஒளியும் பன்றியும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 55/1
ஒளியும் கோட்டின் மலர்த்தாதும் கிளர் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 341/1
கிண்கிணிமாலையும் கிளர் நெல்கதிரும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 368/1

 TOP
 
    கிளர்வி (1)
ஓபு கிளர்வி உதைபு நிகுத்தை - 4.அவனி :4 235/1

 TOP
 
    கிளவி (47)
இரு பாற்று என்ப திரிசொல் கிளவி
  செந்தமிழ் சேர்ந்த திசைதொறும் திசைதொறும் - 0.பாயிரம்:0 2/9,10
தம் குறிப்பினவே திசைச்சொல் கிளவி
  வடசொல் கிளவி வடவெழுத்து ஒரீஇ - 0.பாயிரம்:0 2/11,12
வடசொல் கிளவி வடவெழுத்து ஒரீஇ - 0.பாயிரம்:0 2/12
உரிச்சொல் கிளவி விரிக்குங்காலை - 0.பாயிரம்:0 2/18
புரி என் கிளவி புரம் என்று ஆகும் - 4.அவனி :4 25/1
ஓ என் கிளவி நீர்தகைகதவு எனல் - 4.அவனி :4 232/1
புகல் என் கிளவி குதிர் என புகலும் - 4.அவனி :4 255/1
காடு என் கிளவி இடனும் உடைத்தே - 4.அவனி :4 273/1
கள்வன் என் கிளவி கரியன் நடுச்சொல்வோன் - 5.ஆடவர் :5 137/1
தாரம் என் கிளவி அரும்பண்டம் ஆகும் - 6.அநுபோக :6 50/1
கிடுகு என் கிளவி தேர்மரச்சுற்றே - 6.அநுபோக :6 384/1
நோன்பு என் கிளவி தான் தவம் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 38/1
வேய் என் கிளவி ஒற்று ஆகும்மே - 7.பண்பின்செயலின்பகுதி:7 55/1
நியமம் என் கிளவி விதிமுறை ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 73/1
வாளா என் கிளவி தவிர்தல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 80/1
மறை புகல் கிளவி சரண் புகல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 83/1
ஒடு என் கிளவி உடன்நிகழ்வு ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 86/1
தாழ்வு என் கிளவி தன்மையது ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 92/2
மறப்பு என் கிளவி மறலும் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 109/2
சினம் என் கிளவி தெரிக்குங்காலே - 7.பண்பின்செயலின்பகுதி:7 115/2
சினத்தின்குறிப்பினை தெரிக்கும் கிளவி - 7.பண்பின்செயலின்பகுதி:7 116/4
வம்பு என் கிளவி நிலையின்மையின் பெயர் - 7.பண்பின்செயலின்பகுதி:7 167/1
புணர்ச்சியும் கூடல் புகலும் கிளவி
  அணைதல் கலவி சையோகமும் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 208/2,3
துனி என் கிளவி புலவிநீடுதல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 212/1
அவைத்தல் என் கிளவி குத்தல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 381/1
ஒடுங்கல் என் கிளவி ஒதுங்கல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 445/1
தொடி என் கிளவி ஒரு பலம் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 498/1
நொடை என் கிளவி விலை என நுவல்வர் - 7.பண்பின்செயலின்பகுதி:7 535/1
தப்பல் என் கிளவி தண்டல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 545/1
சலாங்கு என் கிளவி பொய்யாப்புள்ளே - 8.மாப்பெயர் :8 21/1
அ பெயர் கிளவி மயிற்கும் ஆகும் - 8.மாப்பெயர் :8 93/1
உளு என் கிளவி உசு ஆகும் என்ப - 8.மாப்பெயர் :8 302/1
நாங்கூழ் கிளவி பூநாகமும் ஆகும் - 8.மாப்பெயர் :8 303/1
அயம் என் கிளவி ஆடும் இரும்பும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 43/1
இரலை கிளவி மானின்ஏறும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 137/1
கடிகை கிளவி நாழிகை கபாடத்து - 10.ஒருசொல்பல்பொருள்:10 241/1
கணம் என் கிளவி காலநுட்பமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 247/1
கூற்று என் கிளவி உரையும் காலனும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 394/1
சூரன் என் கிளவி சூரன் பெயரும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 532/1
சூர் என் கிளவி அச்சமும் துன்பமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 534/1
துடி என் கிளவி சொல்லுவர் புலவர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 620/3
தெய் என் கிளவி கோறலும் தெய்வமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 642/1
நகை என் கிளவி நவிலப்பெறுமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 670/2
நாகம் என் கிளவி நல் இழை ஆடையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 687/1
பரவை கிளவி பரப்பும் கடலும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 758/1
மடங்கல் என் கிளவி மறலியும் இடியும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 882/1
வான் என் கிளவி வலியும் பெருமையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1032/1

 TOP
 
    கிளவியும் (3)
உவ்வு என் கிளவியும் ஓதுவர் அதற்கே - 7.பண்பின்செயலின்பகுதி:7 39/1
களன் என் கிளவியும் அ பெயர் கட்டுரை - 7.பண்பின்செயலின்பகுதி:7 128/2
கதையும் நுவலும் காதையும் கிளவியும்
  பனுவலும் அறையும் பறையும் வாணியும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 244/1,2

 TOP
 
    கிளவியோடு (1)
தீம் என் கிளவியோடு இரதம் இன்சுவை - 7.பண்பின்செயலின்பகுதி:7 237/2

 TOP
 
    கிளறுதல் (1)
நோண்டல் கிளறுதல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 391/1

 TOP
 
    கிளி (1)
கீரம் கிள்ளை கிளி பெயர் ஆகும் - 8.மாப்பெயர் :8 26/2

 TOP
 
    கிளிகடிகருவி (2)
தழலும் தட்டையும் கிளிகடிகருவி - 6.அநுபோக :6 477/1
கரடிகை கிளிகடிகருவி சின்னம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 572/1

 TOP
 
    கிளிகடிகருவியும் (1)
கிளிகடிகருவியும் நெருப்பும் தழலே - 10.ஒருசொல்பல்பொருள்:10 584/1

 TOP
 
    கிளிச்சிறை (1)
சாதரூபம் கிளிச்சிறை ஆடகம் - 3.ஐயர் :3 62/1

 TOP
 
    கிளிஞ்சில் (1)
ஏரலும் எருந்தும் ஊரலும் கிளிஞ்சில் - 8.மாப்பெயர் :8 333/1

 TOP
 
    கிளியும் (8)
வேண்டிய வண்டும் மாண் தகு கிளியும்
  குதிரையும் யானையும் குயிலும் தேனுவும் - 6.அநுபோக :6 313/1,2
குதிரையும் கிளியும் தவளையும் மூங்கிலும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 55/3
கிளியும் உஞ்சைப்பதியும் அவந்தி - 10.ஒருசொல்பல்பொருள்:10 69/1
கிளியும் குதிரையும் கிள்ளை எனப்படும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 343/1
கிளியும் பாலும் கீரம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 346/1
இன்பமும் கிளியும் சுகம் என விளம்புவர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 513/1
முன்பிறந்தாளும் கிளியும் தத்தை - 10.ஒருசொல்பல்பொருள்:10 578/1
ஒருமரப்பெயரும் கிளியும் நெருப்பும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1016/1

 TOP
 
    கிளியே (1)
வெட்டில் கிளியே நாவாய் ஏனம் - 3.ஐயர் :3 104/1

 TOP
 
    கிளை (2)
பல்லவம் அலங்கல் கிளை பைந்தளிர் எனல் - 9.மரப்பெயர் :9 151/2
கேளும் மூங்கிலும் யாழ்இசையும் கிளை - 10.ஒருசொல்பல்பொருள்:10 342/1

 TOP
 
    கிளைஞரும் (1)
கேட்டு இனிது இருந்த கிளைஞரும் கெடுவர் - 6.அநுபோக :6 272/4

 TOP
 
    கிளைத்தல் (2)
கிண்டல் கிளைத்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 390/1
தெகுளல் ததும்பல் தேக்கல் கிளைத்தல்
  நிரம்பல் பூரணம் கமமே நிறைவு - 7.பண்பின்செயலின்பகுதி:7 470/2,3

 TOP
 
    கிளையும் (2)
காம்பும் கிளையும் கீசகமும் வேணும் - 9.மரப்பெயர் :9 110/5
அழகும் திரட்சியும் இழையும் கிளையும்
  தளையும் கைத்தீபமும் பந்தம் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 748/1,2

 TOP
 
    கிளையே (1)
கேளே ஒக்கல் கிளையே பந்தம் - 5.ஆடவர் :5 175/1

 TOP
 
    கிறியும் (1)
கடவையும் கிறியும் நடையும் போக்கும் - 4.அவனி :4 32/3

 TOP
 
    கிறுக்குதல் (1)
வரைதல் கீறல் கிறுக்குதல் எழுதல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 366/2

 TOP
 
    கின்னரம் (6)
வீணை கின்னரம் தண்டும் ஆகும் - 6.அநுபோக :6 328/1
தந்தி வீணை கின்னரம் கோட்டம் - 6.அநுபோக :6 329/1
மிதுனம் கின்னரம் இராகப்புள்ளே - 8.மாப்பெயர் :8 51/1
இருடி பிங்கலை கின்னரம் ஆந்தை - 8.மாப்பெயர் :8 62/1
கின்னரம் நீர்ப்பறவை பெயர் ஆகும் - 8.மாப்பெயர் :8 69/2
யாழின்பெயரும் நீர்ப்பறவையும் கின்னரம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 344/1

 TOP
 
    கின்னரர் (2)
கருடர் கின்னரர் நிருதர் கிம்புருடர் - 1.வான் :1 92/2
தந்திரர் கின்னரர் என்ன சாற்றுவர் - 2.வானவர் :2 113/2

 TOP
 
    கின்னரர்பிரானே (1)
அரனுடைத்தோழன் கின்னரர்பிரானே
  மரகதன் புட்பகஊர்தி பிங்கலன் - 2.வானவர் :2 103/5,6

 TOP
 
    கின்னராகம் (1)
கின்னராகம் செவ்வழி மெளசாளி சீராகம் - 6.அநுபோக :6 279/7

 TOP