<<முந்திய பக்கம்

பிங்கலந்தை என்ற பிங்கல நிகண்டு - தொடரடைவு

மு - முதல் சொற்கள்
முக்கண்ணி 2
முக்கணன் 3
முக்கலும் 1
முக்குடையோன் 1
முக்குணம் 1
முக்குற்றம் 1
முக்கூட்டு 1
முக்கோல் 1
முகடி 1
முகடு 1
முகடும் 3
முகடே 1
முகத்தல் 1
முகத்திடை 1
முகபடாம் 2
முகபடாமும் 2
முகம் 1
முகமன் 1
முகமும் 1
முகரிமைப்பெயரும் 1
முகரிமையும் 1
முகவற்கு 1
முகவுரை 1
முகனும் 1
முகில் 1
முகிலும் 3
முகிழ் 1
முகிளம் 2
முகுடம் 1
முகுந்தன் 1
முகூர்த்தமும் 1
முகை 3
முகையும் 1
முச்சந்தி 1
முச்சி 2
முச்சில் 1
முச்சீரும் 1
முச்செயல் 1
முசர் 1
முசலம் 1
முசலமும் 1
முசலி 3
முசலிகை 1
முசுகுந்தன் 1
முசுண்டர் 1
முசுண்டி 2
முசுவின் 1
முசுவும் 5
முசுவே 1
முஞ்சலும் 1
முஞ்சியும் 1
முட்செடிப்பொதுவே 1
முட்டல் 1
முட்டவும் 1
முட்டு 1
முட்டை 2
முட்டையினும் 1
முட்டையும் 4
முடக்கமும் 1
முடக்கலும் 1
முடக்கிய 1
முடக்கும் 1
முடங்கல் 2
முடங்கலும் 1
முடங்குளை 1
முடமும் 1
முடலை 1
முடலையும் 2
முடவன் 2
முடி 2
முடிக்கு 1
முடிதல் 1
முடிதலும் 1
முடிப்பது 1
முடிமாலை 1
முடியினது 1
முடியும் 2
முடியே 1
முடிவாழை 1
முடிவு 5
முடிவும் 1
முடிஉறுப்பு 1
முடிஉறுப்பும் 1
முடுக்கர் 1
முடுகல் 1
முடுகலும் 1
முடுகியல் 2
முடுவல் 2
முடை 2
முடைதல் 1
முடையே 1
முண்டகம் 8
முண்டம் 1
முணங்கும் 1
முத்தகம் 1
முத்தம் 4
முத்தமிழ் 1
முத்தலை 1
முத்தன் 2
முத்தாபலமே 1
முத்தியும் 1
முத்திரை 1
முத்திரையும் 1
முத்தீ 1
முத்தீயே 1
முத்து 1
முத்தே 1
முத்தையும் 1
முத்தொழிலர் 1
முதல் 12
முதல்நாள் 1
முதல்வர் 2
முதல்வன் 3
முதல்வி 1
முதல்வேதம் 1
முதலது 2
முதலா 4
முதலாக 1
முதலாம் 1
முதலாய் 2
முதலிய 2
முதலில் 2
முதலும் 2
முதலே 1
முதலை 3
முதலையும் 1
முதற்பா 1
முதியவரம்பின்வழியே 1
முதியாள் 2
முதியோன் 1
முதிர் 1
முதிர்ந்தஇந்தளம் 1
முதிரம் 1
முதிரை 2
முது 1
முதுக்குறைவு 1
முதுகாடு 1
முதுகு 1
முதுகே 1
முதுசொல் 1
முதுநரி 1
முதுநரியும் 1
முதுநிலம் 1
முதுமகன் 1
முதுமை 3
முதுமையும் 1
முதுவர் 1
முதுவன் 1
முதுவேனில் 1
முதைப்புனம் 1
முதையே 1
முந்திரிகை 1
முந்து 1
முந்துற்று 1
முந்துறில் 1
முந்தூழும் 1
முந்தை 2
முந்நீர் 1
முப்பத்திரண்டும் 1
முப்பத்துமூவர்தம் 1
முப்பத்தொன்று 1
முப்பது 1
முப்பாலும் 1
முப்பிணி 1
முப்புரமே 1
முப்புரிநூலோர் 1
முப்பொறி 1
மும்மடி 9
மும்மணிக்கோவையும் 1
மும்மதன் 1
மும்மதில் 1
மும்மீன் 1
மும்மை 1
முயல் 2
முயலும் 1
முயற்கூடு 1
முயற்சி 2
முயற்சியும் 1
முரசம் 1
முரசின்பெயரும் 1
முரசு 10
முரஞ்சுதல் 1
முரண் 1
முரணும் 3
முரம்பு 1
முரம்பும் 1
முரம்பே 2
முரல்வும் 2
முரற்றல் 1
முரற்றலும் 1
முராரி 1
முரிதல் 2
முரிப்பு 1
முருக்குதல் 1
முருகவேளும் 1
முருகன் 3
முருகனும் 1
முருகு 2
முருகும் 2
முருகுஇயம் 1
முருகே 1
முருங்கை 1
முருடு 3
முருந்தும் 2
முருந்தே 2
முல்லை 10
முல்லைத்தலைவன் 1
முல்லைநிலத்துஊரும் 1
முல்லைநிலமாக்கள் 1
முல்லைநிலமும் 1
முல்லையின்புறமும் 2
முல்லையும் 3
முலை 3
முலைக்கச்சே 1
முலைக்கண்ணும் 2
முலைக்கண்ணே 1
முலைத்தாய் 1
முலையின்கச்சும் 1
முலையும் 3
முழங்கல் 1
முழங்கை 1
முழந்தாள் 1
முழந்தாளும் 1
முழம் 3
முழல் 1
முழலும் 1
முழவம் 2
முழவு 1
முழவும் 1
முழு 1
முழுதும் 1
முழுமகன் 1
முழுவதும் 1
முள்பன்றி 1
முள்மா 1
முள்முருக்கு 1
முள்முருக்கும் 1
முள்ளியும் 1
முள்ளின்பெயர் 1
முள்ளுடை 2
முள்ளும் 1
முள்ளே 1
முளரி 6
முளரியும் 2
முளவும் 1
முளிதல் 1
முளியும் 1
முளை 2
முளையின் 1
முளையும் 2
முளையே 1
முற்கம் 2
முற்கரம் 1
முற்காலமும் 1
முற்குளம் 1
முற்கொழுங்கோலே 1
முற்றம் 1
முற்றில் 1
முற்று 1
முற்றுதல் 2
முற்றும் 2
முறம் 2
முறமே 1
முறி 2
முறிகுளம் 1
முறிதல் 1
முறியும் 1
முறுக்குஆணி 1
முறுகலும் 1
முறுவல் 1
முறுவலும் 3
முறை 2
முறைமையும் 3
முறையும் 2
முறையே 1
முன் 6
முன்கால் 1
முன்குலத்தோர் 1
முன்சொல் 1
முன்தானை 1
முன்பனி 1
முன்பிறந்தாள் 1
முன்பிறந்தாளும் 3
முன்பிறப்பு 1
முன்பும் 3
முன்பெறு 1
முன்றில் 1
முன்றிலும் 2
முன்ன்பு 1
முன்னம் 3
முன்னமும் 1
முன்னர் 3
முன்னல் 1
முன்னவள் 1
முன்னவன் 2
முன்னிலை 3
முன்னிலைப்பெயர் 2
முன்னும் 1
முன்னுற 2
முன்னை 1
முன்னைநாள் 1
முன்னோர் 1
முன்னோன் 2
முனி 3
முனிந்தோன் 1
முனியே 1
முனிவர் 4
முனிவனும் 1
முனிவிலனாதல் 1
முனிவும் 2
முனிவுஅறாமையும் 1
முனை 1
முனைதல் 1
முனைப்பதி 1
முனையிடம் 1
முனையும் 1
முனையே 1
முனைவர் 1
முனைவன் 2


இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
  
    முக்கண்ணி (2)
வேதமுதல்வி விமலை முக்கண்ணி
  அமலை இமயவதி அயிராணி - 2.வானவர் :2 14/7,8
அலகைக்கொடியாள் மாலினி முக்கண்ணி
  பதுமை எண்தோளி பத்திரி ஆரணி - 2.வானவர் :2 27/7,8

 TOP
 
    முக்கணன் (3)
ஆகுவாகனன் ஐங்கரன் முக்கணன்
  பார்ப்பதிபுதல்வன் பாசாங்குசதரன் - 2.வானவர் :2 1/2,3
முக்கணன் விடையோன் முன்னவன் பிறப்பிலி - 2.வானவர் :2 2/7
முக்கணன் தக்கன் வேள்வி முனிந்தோன் - 2.வானவர் :2 22/2

 TOP
 
    முக்கலும் (1)
முரல்வும் நரல்வும் முக்கலும் பயிறலும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 351/1

 TOP
 
    முக்குடையோன் (1)
அசோகுஅமர்கடவுள் பகவன் முக்குடையோன்
  அறஆழிவேந்தன் அரிஅணைச்செல்வன் - 2.வானவர் :2 99/3,4

 TOP
 
    முக்குணம் (1)
சாத்துவிகம் இராசதம் தாமதம் முக்குணம் - 3.ஐயர் :3 29/1

 TOP
 
    முக்குற்றம் (1)
காமம் வெகுளி மயக்கம் முக்குற்றம் - 3.ஐயர் :3 27/1

 TOP
 
    முக்கூட்டு (1)
தாழி பெரும் சோறு தருமன்நாள் முக்கூட்டு
  போதகம் பரணி பெயர் தாசியும் ஆகும் - 2.வானவர் :2 148/2,3

 TOP
 
    முக்கோல் (1)
சோனை மாயோன்நாள் முக்கோல் சிரவணம் - 2.வானவர் :2 168/1

 TOP
 
    முகடி (1)
முகடி தெளவை கலதி மூதேவி - 2.வானவர் :2 95/2

 TOP
 
    முகடு (1)
சிகரம் மலையம் சேண் முகடு ஆகும் - 4.அவனி :4 51/2

 TOP
 
    முகடும் (3)
மலை அதன் முகடும் வரம்பும் நீர்க்கரையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 418/1
மலையும் அதன் சேண் முகடும் சிரமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 506/1
வீதிக்கொடியும் வீட்டின் முகடும்
  அழகும் கொடுங்கையும் ஆண்மையும் விடங்கம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1036/1,2

 TOP
 
    முகடே (1)
விடங்கமும் கொடைக்கையும் மஞ்சும் முகடே - 4.அவனி :4 222/1

 TOP
 
    முகத்தல் (1)
தோண்டல் முகத்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 388/1

 TOP
 
    முகத்திடை (1)
கிருகரன் என்பது முகத்திடை கெழுமி - 1.வான் :1 40/1

 TOP
 
    முகபடாம் (2)
முகபடாம் சூழி - 6.அநுபோக :6 186/1
சூழி படமே வேழ முகபடாம் - 6.அநுபோக :6 512/1

 TOP
 
    முகபடாமும் (2)
சுனையும் கரி முகபடாமும் சூழி - 10.ஒருசொல்பல்பொருள்:10 535/1
பணமும் யானை முகபடாமும் படமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 723/2

 TOP
 
    முகம் (1)
ஆனனம் வதனம் துண்டம் வத்திரம் முகம் - 5.ஆடவர் :5 309/1

 TOP
 
    முகமன் (1)
முகமன் சம்மானம் உபசாரம் நயச்சொல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 261/1

 TOP
 
    முகமும் (1)
காயலும் முகமும் கழி எனப்படுமே - 4.அவனி :4 146/1

 TOP
 
    முகரிமைப்பெயரும் (1)
முகரிமைப்பெயரும் படு என மொழிப - 10.ஒருசொல்பல்பொருள்:10 728/2

 TOP
 
    முகரிமையும் (1)
முதுக்குறைவு பேரறிவு முகரிமையும் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 89/1

 TOP
 
    முகவற்கு (1)
அரன்மகன் யானை முகவற்கு இளையோன் - 2.வானவர் :2 18/14

 TOP
 
    முகவுரை (1)
முகவுரை தந்துரை புறவுரை பாயிரம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 273/2

 TOP
 
    முகனும் (1)
நாலு தாளும் எருத்தும் முகனும்
  வெந்நும் முன்னும் வெண்மை உடையதாய் - 6.அநுபோக :6 392/3,4

 TOP
 
    முகில் (1)
திரளும் மேகமும் முகில் எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 938/1

 TOP
 
    முகிலும் (3)
எழிலியும் கொண்மூவும் விளைவும் முகிலும்
  விண்ணும் கந்தரமும் சலதரமும் விசும்பும் - 1.வான் :1 58/5,6
கழுத்து மலைமுழை முகிலும் கந்தரம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 260/1
மழையும் முகிலும் மரணமும் மதுவும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 927/1

 TOP
 
    முகிழ் (1)
முகை முகிழ் மொக்குள் முகிளம் சிற்றரும்பே - 9.மரப்பெயர் :9 172/1

 TOP
 
    முகிளம் (2)
முகிளம் கவிகை சாலகம் கோரகம் - 9.மரப்பெயர் :9 158/2
முகை முகிழ் மொக்குள் முகிளம் சிற்றரும்பே - 9.மரப்பெயர் :9 172/1

 TOP
 
    முகுடம் (1)
கோடகம் கிம்புரி முகுடம் தாமம் - 6.அநுபோக :6 68/1

 TOP
 
    முகுந்தன் (1)
கொண்டல்வண்ணன் கோவிந்தன் முகுந்தன்
  விண்டு வனமாலி வாமன் வாமனன் - 2.வானவர் :2 38/3,4

 TOP
 
    முகூர்த்தமும் (1)
பகரும் முகூர்த்தமும் பகலும் நாளும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 713/2

 TOP
 
    முகை (3)
கரீரம் குழிசி முகை தடா மிடாவே - 6.அநுபோக :6 639/1
கலுவடம் நனை முகை கன்னிகை அரும்பே - 9.மரப்பெயர் :9 158/1
முகை முகிழ் மொக்குள் முகிளம் சிற்றரும்பே - 9.மரப்பெயர் :9 172/1

 TOP
 
    முகையும் (1)
துற்றும் நளியும் முகையும் மொய்யும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 477/3

 TOP
 
    முச்சந்தி (1)
அந்தி முச்சந்தி - 4.அவனி :4 196/1

 TOP
 
    முச்சி (2)
முச்சி சிகழிகை பெண்மயிர்முடி பெயர் - 5.ஆடவர் :5 342/2
பின்னகம் பந்தம் முடி முச்சி கொண்டை - 5.ஆடவர் :5 348/1

 TOP
 
    முச்சில் (1)
சின்னம் தட்டு சேட்டை முச்சில் முறம் - 6.அநுபோக :6 583/1

 TOP
 
    முச்சீரும் (1)
கூறும் முச்சீரும் குறளும் சிந்து - 10.ஒருசொல்பல்பொருள்:10 492/2

 TOP
 
    முச்செயல் (1)
படைத்தலும் காத்தலும் அழித்தலும் முச்செயல் - 3.ஐயர் :3 24/1

 TOP
 
    முசர் (1)
அருப்பம் அளை முசர் மச்சிகையும் ஆகும் - 6.அநுபோக :6 35/1

 TOP
 
    முசலம் (1)
முசலம் இருப்புஉலக்கை - 6.அநுபோக :6 499/1

 TOP
 
    முசலமும் (1)
முசலமும் தடியும் உரோங்கலும் உலக்கை - 6.அநுபோக :6 567/1

 TOP
 
    முசலி (3)
பனந்துசன் முசலி கருந்துகில்உடையன் - 2.வானவர் :2 51/5
கோம்பி சாடம் சாயானதம் முசலி
  ஓதி தண்டோடு ஒத்தி மயில்பகை - 8.மாப்பெயர் :8 218/1,2
கண்டல் கேதகை முசலி தாழை - 9.மரப்பெயர் :9 113/2

 TOP
 
    முசலிகை (1)
முசலிகை கோதா தடி உடும்பு ஆகும் - 8.மாப்பெயர் :8 216/1

 TOP
 
    முசுகுந்தன் (1)
அரிச்சந்திரன் நளன் முசுகுந்தன் புரூரவா - 5.ஆடவர் :5 11/1

 TOP
 
    முசுண்டர் (1)
அசடர் அதன்மர் முசுண்டர் சுமடர் - 5.ஆடவர் :5 147/4

 TOP
 
    முசுண்டி (2)
முசுண்டி சிறுவாள் - 6.அநுபோக :6 456/1
தானை படையே முற்கரம் முசுண்டி - 6.அநுபோக :6 498/1

 TOP
 
    முசுவின் (1)
குழவி முசுவின் குண நடை பெறுமே - 8.மாப்பெயர் :8 286/1

 TOP
 
    முசுவும் (5)
மானும் முசுவும் கலை என வருமே - 8.மாப்பெயர் :8 249/1
முசுவும் நரியும் ஓரி ஆகும் - 8.மாப்பெயர் :8 259/1
குரங்கும் யூகமும் முசுவும் என்று இவை - 8.மாப்பெயர் :8 272/1
முதுநரியும் முசுவும் விலங்கின்சேக்கையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 224/2
மந்தி பெண்குரங்கும் வண்டும் முசுவும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 899/1

 TOP
 
    முசுவே (1)
ஓரியும் கலையும் கள்வனும் முசுவே - 8.மாப்பெயர் :8 199/1

 TOP
 
    முஞ்சலும் (1)
முஞ்சலும் துவன்றலும் முடிதலும் விளிதலும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 149/1

 TOP
 
    முஞ்சியும் (1)
தருப்பையும் முஞ்சியும் சமித்தும் அவர்க்கே - 5.ஆடவர் :5 6/1

 TOP
 
    முட்செடிப்பொதுவே (1)
முளரி முண்டகம் முட்செடிப்பொதுவே - 9.மரப்பெயர் :9 209/1

 TOP
 
    முட்டல் (1)
முட்டல் கிடைத்தல் முடுகல் நேர்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 222/1

 TOP
 
    முட்டவும் (1)
முழுவதும் முற்றும் சமத்தமும் முட்டவும்
  எவையும் எல்லாம் என்றலின் பெயரே - 7.பண்பின்செயலின்பகுதி:7 480/2,3

 TOP
 
    முட்டு (1)
முட்டு இன்று ஆகும் மூவகைமொழியே - 3.ஐயர் :3 28/2

 TOP
 
    முட்டை (2)
முட்டை தவிடே முடை பொதியும் ஆகும் - 6.அநுபோக :6 626/1
அண்டம் சினை கோசம் அரிட்டம் முட்டை - 8.மாப்பெயர் :8 86/1

 TOP
 
    முட்டையினும் (1)
குடல் போல் பையினும் முட்டையினும்
  தோன்றியும் மெய்க்கண் வியர்வினும் மிக்க - 3.ஐயர் :3 48/1,2

 TOP
 
    முட்டையும் (4)
அண்டம் முட்டையும் ஆகாயமுமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 24/1
குடம்பை முட்டையும் கூடும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 352/1
மதில்உறுப்பும் பண்டாரமும் முட்டையும்
  ஆணின்குறியும் புத்தகமும் கோசம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 412/1,2
கருவின்பெயரும் முட்டையும் உறுப்பும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 505/1

 TOP
 
    முடக்கமும் (1)
முடக்கமும் நொறிலும் மடங்கும் முணங்கும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 207/1

 TOP
 
    முடக்கலும் (1)
முடக்கலும் நீட்டலும் கிளப்பதும் நாகன் - 1.வான் :1 38/1

 TOP
 
    முடக்கிய (1)
முடக்கிய இரு கை பழு புடை ஒற்றி - 6.அநுபோக :6 356/1

 TOP
 
    முடக்கும் (1)
ஒரு கால் நிலை நின்று ஒரு கால் முடக்கும்
  பரிசாய நிலையது பைசாசநிலையே - 6.அநுபோக :6 368/1,2

 TOP
 
    முடங்கல் (2)
முண்டகம் மடியே கைதை முடங்கல்
  கண்டல் கேதகை முசலி தாழை - 9.மரப்பெயர் :9 113/1,2
மூங்கிலும் தாழையும் முடங்கல் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 939/1

 TOP
 
    முடங்கலும் (1)
ஓங்கலும் முளையும் முடங்கலும் சந்தியும் - 9.மரப்பெயர் :9 110/6

 TOP
 
    முடங்குளை (1)
சீயம் மடங்கல் கேசரி முடங்குளை
  அரிமா வயப்போத்து பஞ்சநகாயுதம் - 8.மாப்பெயர் :8 99/3,4

 TOP
 
    முடமும் (1)
பகுதியும் சனியும் முடமும் பங்கே - 10.ஒருசொல்பல்பொருள்:10 719/1

 TOP
 
    முடலை (1)
உண்டையும் திரட்சியும் பெருமையும் முடலை - 10.ஒருசொல்பல்பொருள்:10 940/1

 TOP
 
    முடலையும் (2)
முடலையும் உம்பலும் மூரியும் தோற்றமும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 3/3
தகையும் முடலையும் மூரியும் வீறும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 467/6

 TOP
 
    முடவன் (2)
முதுமகன் மேற்கோள் மந்தன் முடவன்
  செளரி பங்கு சந்தில் சனி பெயர் - 2.வானவர் :2 142/2,3
பங்கு சூனியன் முடவன் ஆகும் - 5.ஆடவர் :5 232/1

 TOP
 
    முடி (2)
பின்னகம் பந்தம் முடி முச்சி கொண்டை - 5.ஆடவர் :5 348/1
குல்லை முடி துளவம் வனமும் துழாய் எனல் - 9.மரப்பெயர் :9 228/1

 TOP
 
    முடிக்கு (1)
ஏந்திழையார் முடிக்கு இயன்ற ஐம்பாலே - 5.ஆடவர் :5 345/3

 TOP
 
    முடிதல் (1)
முடிவு முற்று முடிதல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 492/2

 TOP
 
    முடிதலும் (1)
முஞ்சலும் துவன்றலும் முடிதலும் விளிதலும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 149/1

 TOP
 
    முடிப்பது (1)
முடிப்பது கொன்றை உடுப்பது சருமம் - 2.வானவர் :2 8/2

 TOP
 
    முடிமாலை (1)
பாடம் முடிமாலை கோடி கரோடி - 6.அநுபோக :6 69/1

 TOP
 
    முடியினது (1)
முடியினது உறுப்பும் தாங்கியும் கிம்புரி - 10.ஒருசொல்பல்பொருள்:10 339/1

 TOP
 
    முடியும் (2)
முடியும் உத்தமாங்கமும் நவிரமும் - 5.ஆடவர் :5 336/2
முடியும் கடகமும் மொய் பூம் தாரும் - 6.அநுபோக :6 266/5

 TOP
 
    முடியே (1)
கூந்தல் முடியே குழலொடு தொங்கல் - 5.ஆடவர் :5 345/1

 TOP
 
    முடிவாழை (1)
முடிவாழை வெட்டுவேர் - 9.மரப்பெயர் :9 306/1

 TOP
 
    முடிவு (5)
கறுவுகொள் நெஞ்சம் கடை முடிவு அளவும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 119/2
வடிவு பெயர் தன்மை முடிவு நான்கு எழுத்தே - 7.பண்பின்செயலின்பகுதி:7 329/1
முடிவு முற்று முடிதல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 492/2
முடிவு வீடே - 7.பண்பின்செயலின்பகுதி:7 551/1
கருதிய கருமம் கடை முடிவு அளவும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 323/1

 TOP
 
    முடிவும் (1)
மடங்கலும் வடவையும் முடிவும் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 882/3

 TOP
 
    முடிஉறுப்பு (1)
பதுமம் முடிஉறுப்பு இவை ஐந்து ஆகும் - 6.அநுபோக :6 68/2

 TOP
 
    முடிஉறுப்பும் (1)
குதிரையும் புதுமையும் முடிஉறுப்பும் கோடகம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 414/1

 TOP
 
    முடுக்கர் (1)
முடுக்கர் கந்தரம் பிலம் குகை குகரம் - 4.அவனி :4 57/1

 TOP
 
    முடுகல் (1)
முட்டல் கிடைத்தல் முடுகல் நேர்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 222/1

 TOP
 
    முடுகலும் (1)
விசையும் முடுகலும் வேகமும் விரைவே - 7.பண்பின்செயலின்பகுதி:7 436/3

 TOP
 
    முடுகியல் (2)
அராகம் முடுகியல் வண்ணம் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 325/1
முடுகியல் செந்நிறம் பாலையாழ்த்திறம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 54/1

 TOP
 
    முடுவல் (2)
சுணங்கன் முடுவல் பாட்டி சுவாவே - 8.மாப்பெயர் :8 201/4
முடுவல் பெண்நாய் ஆக மொழிப - 8.மாப்பெயர் :8 202/1

 TOP
 
    முடை (2)
பூதி ஊழ்த்தல் தசை புலவு முடை என்ப - 5.ஆடவர் :5 264/1
முட்டை தவிடே முடை பொதியும் ஆகும் - 6.அநுபோக :6 626/1

 TOP
 
    முடைதல் (1)
வலத்தல் முடைதல் நிணத்தல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 403/1

 TOP
 
    முடையே (1)
பூழ்தி ஊழ்த்தல் புலவும் முடையே - 8.மாப்பெயர் :8 241/1

 TOP
 
    முண்டகம் (8)
நெற்றி முண்டகம் மத்தகம் நுதலே - 5.ஆடவர் :5 335/1
அளியே மேதை முண்டகம் பாரி - 6.அநுபோக :6 45/9
முண்டகம் மடியே கைதை முடங்கல் - 9.மரப்பெயர் :9 113/1
முளரி முண்டகம் முட்செடிப்பொதுவே - 9.மரப்பெயர் :9 209/1
முண்டகம் முள்ளுடை மூலம் என்ப - 9.மரப்பெயர் :9 266/1
நீர்முள்ளி முண்டகம் - 9.மரப்பெயர் :9 353/1
முண்டகம் நளினம் முளரி சரோருகம் - 9.மரப்பெயர் :9 358/3
முள்ளுடை முள்ளியும் நெற்றியும் முண்டகம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 941/2

 TOP
 
    முண்டம் (1)
உச்சியும் சிகரமும் முண்டம் மத்தகமும் - 5.ஆடவர் :5 336/3

 TOP
 
    முணங்கும் (1)
முடக்கமும் நொறிலும் மடங்கும் முணங்கும்
  ஒடுக்கமும் அடக்கம் ஒருங்கும் ஆமே - 7.பண்பின்செயலின்பகுதி:7 207/1,2

 TOP
 
    முத்தகம் (1)
அதிகம் முத்தகம் மாதவி வாசந்தி - 9.மரப்பெயர் :9 54/1

 TOP
 
    முத்தம் (4)
வைரம் முத்தம் மாணிக்கம் பவளம் - 3.ஐயர் :3 124/1
மணி குயிற்றுநர் முத்தம் கோப்பார் ஆகும் - 5.ஆடவர் :5 75/1
பாலிகை முத்தம் வாய்இதழ் உதடே - 5.ஆடவர் :5 310/1
பத்தினோடு ஒன்றின் முத்தம் கூறலும் - 6.அநுபோக :6 267/9

 TOP
 
    முத்தமிழ் (1)
முத்தமிழ் வல்லோன் நாற்கவி பாடுவோன் - 6.அநுபோக :6 269/16

 TOP
 
    முத்தலை (1)
மூ இலை வேல் முத்தலை கழு எனல் - 6.அநுபோக :6 464/2

 TOP
 
    முத்தன் (2)
முத்தன் முதல்வன் சுத்தன் யோகி - 2.வானவர் :2 2/12
முத்தன் கேத்திரபாலன் நிருவாணி - 2.வானவர் :2 23/2

 TOP
 
    முத்தாபலமே (1)
இசங்கு குண்டலி முத்தாபலமே - 9.மரப்பெயர் :9 261/1

 TOP
 
    முத்தியும் (1)
அமுதம் பரம் சிவம் முத்தியும் ஆகும் - 1.வான் :1 4/1

 TOP
 
    முத்திரை (1)
சாதனம் சினம் முத்திரை இலிங்கம் என்று - 7.பண்பின்செயலின்பகுதி:7 538/2

 TOP
 
    முத்திரையும் (1)
கோ இளங்கன்றும் முத்திரையும் கொங்கையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 589/1

 TOP
 
    முத்தீ (1)
தக்கிணாக்கினியம் எனும் முத்தீ மரபினர் - 5.ஆடவர் :5 2/2

 TOP
 
    முத்தீயே (1)
தக்கணாக்கினியம் மிக்க முத்தீயே - 1.வான் :1 55/2

 TOP
 
    முத்து (1)
பவளம் முத்து சங்கு ஒக்கோலை - 3.ஐயர் :3 86/1

 TOP
 
    முத்தே (1)
நித்திலம் ஆரம் தரளமும் முத்தே - 6.அநுபோக :6 116/1

 TOP
 
    முத்தையும் (1)
முத்தையும் பூகமும் சோகமும் புஞ்சமும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 478/2

 TOP
 
    முத்தொழிலர் (1)
மன்னு முத்தொழிலர் மண்மகள்புதல்வர் - 5.ஆடவர் :5 55/2

 TOP
 
    முதல் (12)
மன்னிய கதிர் முதல் கோள் வரும் நெறியே - 2.வானவர் :2 186/2
முதல் இடை கடை என மூவகைத்தானம் - 3.ஐயர் :3 33/1
சார் கால் பின் முதல் தாவளம் பால் உளி - 4.அவனி :4 272/7
நேர் முதல் ஆகி நிரையிணை பின் வரின் - 6.அநுபோக :6 233/1
முதல் நிரை ஆகி இணை நேர் பின் வரின் - 6.அநுபோக :6 239/1
மூ வகை சீரே முதல் சீர் ஆகும் - 6.அநுபோக :6 244/4
அவ்வவர் பெயர் முதல் எழுத்து வந்து உதிப்ப - 6.அநுபோக :6 255/1
காப்பு முதல் இசைக்கும் கடவுள்தானே - 6.அநுபோக :6 266/1
மோனை பிராசயம் முதல் எனப்படுமே - 7.பண்பின்செயலின்பகுதி:7 489/2
ஏனமும் சுறா முதல் இவற்றின் ஏறும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 298/1
ஒலியும் நெல் முதல் போரும் சும்மை - 10.ஒருசொல்பல்பொருள்:10 522/2
புனிதமும் புவி முதல் ஐந்தும் பூதம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 849/3

 TOP
 
    முதல்நாள் (1)
இடியும் முதல்நாள் ஏறு எனப்படுமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 204/2

 TOP
 
    முதல்வர் (2)
அண்டர் முதல்வர் ஆதித்தர் சுவர்க்கர் - 2.வானவர் :2 85/6
முதல்வர் ஏந்தல் குரிசில் மகிபாலர் - 5.ஆடவர் :5 8/4

 TOP
 
    முதல்வன் (3)
முத்தன் முதல்வன் சுத்தன் யோகி - 2.வானவர் :2 2/12
ஆதியும் நாதனும் முதல்வன் பெயரே - 5.ஆடவர் :5 110/1
ஆகமம் முதல்வன் வாக்கு அது ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 332/1

 TOP
 
    முதல்வி (1)
எமது அன்னை புண்ணிய முதல்வி பெயரே - 2.வானவர் :2 15/2

 TOP
 
    முதல்வேதம் (1)
பெளடிகம் இருக்கு முதல்வேதம் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 302/1

 TOP
 
    முதலது (2)
பக்கம் முதலது நந்தை ஆகும் - 2.வானவர் :2 198/1
முதலது நாவலந்தீவே உடையது - 4.அவனி :4 5/1

 TOP
 
    முதலா (4)
அவைதாம் ஆவணி முதலா இரண்டு இரண்டாக - 2.வானவர் :2 210/1
அவை தாம் சித்திரை முதலா செல் மாதம் - 2.வானவர் :2 212/1
அங்கு உருவகம் முதலா அலங்காரங்களை - 3.ஐயர் :3 55/3
ஐந்தின் முதலா ஒன்பதின்காறும் - 6.அநுபோக :6 268/3

 TOP
 
    முதலாக (1)
குரல் முதலாக கூறும் என்ப - 6.அநுபோக :6 312/3

 TOP
 
    முதலாம் (1)
நீர்த்துளி முதலாம் துளியும் நீள் நோய் - 10.ஒருசொல்பல்பொருள்:10 184/1

 TOP
 
    முதலாய் (2)
தலைவன் எழுத்தே முதலாய் சாற்றின் - 6.அநுபோக :6 246/1
குரங்கு முதலாய் கோட்டில் வாழும் - 8.மாப்பெயர் :8 281/1

 TOP
 
    முதலிய (2)
இரு சுடர் முதலிய இயங்கும் நெறியே - 2.வானவர் :2 182/3
அலர் கதிர் முதலிய கிரகம் ஒன்பதும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 429/1

 TOP
 
    முதலில் (2)
சமனியகரணி முதலில் உதித்த - 9.மரப்பெயர் :9 133/2
முருந்தே முதலில் செறி வெண் குருத்தே - 9.மரப்பெயர் :9 153/1

 TOP
 
    முதலும் (2)
முதலும் காலும் ஒறுத்தலும் அடி எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 16/1
முதலும் நேர்ஓட்டமும் மொழியப்பெறுமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 102/2

 TOP
 
    முதலே (1)
பாதம் முதலே எடுப்பின் மற்று அவற்கு - 6.அநுபோக :6 252/6

 TOP
 
    முதலை (3)
இங்கு இவை கராவே கராமும் முதலை - 8.மாப்பெயர் :8 318/2
அரவு தவளை முதலை ஆமை - 10.ஒருசொல்பல்பொருள்:10 23/1
முதலை செங்கிடையும் முருந்தும் இடங்கரும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 942/1

 TOP
 
    முதலையும் (1)
முதலையும் அதன்பால் மொழியப்பெறுமே - 9.மரப்பெயர் :9 264/1

 TOP
 
    முதற்பா (1)
முதற்பா வெண்பா - 7.பண்பின்செயலின்பகுதி:7 321/1

 TOP
 
    முதியவரம்பின்வழியே (1)
மஞ்சில் முதியவரம்பின்வழியே - 4.அவனி :4 39/1

 TOP
 
    முதியாள் (2)
சாலினி முதியாள் படிமத்தவளே - 5.ஆடவர் :5 104/1
விருத்தை மூத்தாள் முதியாள் பெயரே - 5.ஆடவர் :5 215/1

 TOP
 
    முதியோன் (1)
முதியோன் என்ன விதிவழி வந்த - 7.பண்பின்செயலின்பகுதி:7 236/5

 TOP
 
    முதிர் (1)
ஐயும் காசமும் அவை முதிர் கோழை - 5.ஆடவர் :5 359/1

 TOP
 
    முதிர்ந்தஇந்தளம் (1)
திவ்வியவராடி முதிர்ந்தஇந்தளம்
  அனுத்திரபஞ்சமம் தமிழ்க்குச்சரி அருட்புரி - 6.அநுபோக :6 281/7,8

 TOP
 
    முதிரம் (1)
முதிரம் பயோதரம் கதம்பம் மெய்ப்பிரம் - 1.வான் :1 59/1

 TOP
 
    முதிரை (2)
முதிரை முற்கம் பருப்பு என மொழிப - 6.அநுபோக :6 631/1
இனையவை முதிரை என்னவும் ஆகும் - 9.மரப்பெயர் :9 314/1

 TOP
 
    முது (1)
முனையிடம் குறும்பு முது பாலைநிலத்துஊர் - 4.அவனி :4 83/1

 TOP
 
    முதுக்குறைவு (1)
முதுக்குறைவு பேரறிவு முகரிமையும் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 89/1

 TOP
 
    முதுகாடு (1)
முதையே இலையுதிர்வு முதுகாடு என்ப - 9.மரப்பெயர் :9 201/1

 TOP
 
    முதுகு (1)
முதுகு மஞ்சு ஆகும் - 8.மாப்பெயர் :8 115/1

 TOP
 
    முதுகே (1)
வெரிந்^ புறம் அபரம் வெந்நும் முதுகே - 5.ஆடவர் :5 304/1

 TOP
 
    முதுசொல் (1)
முதுசொல் என்பர் பழமொழியும் ஆமே - 7.பண்பின்செயலின்பகுதி:7 267/2

 TOP
 
    முதுநரி (1)
முதுநரி இகலன் கோமாயு ஓரி - 8.மாப்பெயர் :8 206/1

 TOP
 
    முதுநரியும் (1)
முதுநரியும் முசுவும் விலங்கின்சேக்கையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 224/2

 TOP
 
    முதுநிலம் (1)
களரே முதுநிலம் - 4.அவனி :4 174/1

 TOP
 
    முதுமகன் (1)
முதுமகன் மேற்கோள் மந்தன் முடவன் - 2.வானவர் :2 142/2

 TOP
 
    முதுமை (3)
முதுமை மூப்பு முரஞ்சுதல் முற்றுதல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 191/1
ஒல்லை புராணம் முதுமை முறை ஊழ் - 7.பண்பின்செயலின்பகுதி:7 450/1
முற்றுதல் பெயரும் பழமையும் முதுமை - 10.ஒருசொல்பல்பொருள்:10 943/1

 TOP
 
    முதுமையும் (1)
முதுமையும் கிழக்கும் முன்பும் பூருவம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 853/1

 TOP
 
    முதுவர் (1)
முதுவர் மூதறிவாளர் ஆகும் - 5.ஆடவர் :5 133/1

 TOP
 
    முதுவன் (1)
திசைமுகன் வானவர் முதுவன் போதன் - 2.வானவர் :2 64/9

 TOP
 
    முதுவேனில் (1)
சீர் இளவேனில் முதுவேனில் என்று ஆங்கு - 2.வானவர் :2 209/2

 TOP
 
    முதைப்புனம் (1)
முதைப்புனம் பழங்கொல்லை - 4.அவனி :4 93/1

 TOP
 
    முதையே (1)
முதையே இலையுதிர்வு முதுகாடு என்ப - 9.மரப்பெயர் :9 201/1

 TOP
 
    முந்திரிகை (1)
மதுரசம் கோத்தனி முந்திரிகை ஆகும் - 9.மரப்பெயர் :9 265/1

 TOP
 
    முந்து (1)
முந்து நிரை இணை வந்து நேர் பின் வரின் - 6.அநுபோக :6 237/1

 TOP
 
    முந்துற்று (1)
வலக்கால் முந்துற்று இடக்கால் மண்டிலித்திடல் - 6.அநுபோக :6 371/1

 TOP
 
    முந்துறில் (1)
வலக்கால் மண்டிலித்து இடக்கால் முந்துறில்
  அதன் பெயர் ஆலீடநிலை அது ஆகும் - 6.அநுபோக :6 370/1,2

 TOP
 
    முந்தூழும் (1)
மூங்கிலின்பெயர் முந்தூழும் ஆகும் - 9.மரப்பெயர் :9 110/7

 TOP
 
    முந்தை (2)
முந்தை எண் மடங்கு கொண்டது ஒன்று ஏகம் - 6.அநுபோக :6 550/1
தொல்லை முந்தை தொன்று பண்டு - 7.பண்பின்செயலின்பகுதி:7 450/2

 TOP
 
    முந்நீர் (1)
சிந்து முந்நீர் தொன்னீர் நரலை - 4.அவனி :4 137/6

 TOP
 
    முப்பத்திரண்டும் (1)
ஆனந்தை என இவை முப்பத்திரண்டும்
  குறிஞ்சியாழ்த்திறமாக கூறுவர் - 6.அநுபோக :6 281/12,13

 TOP
 
    முப்பத்துமூவர்தம் (1)
ஆக முப்பத்துமூவர்தம் பெயரே - 2.வானவர் :2 86/3

 TOP
 
    முப்பத்தொன்று (1)
ஐஐந்து முப்பத்தொன்று எண் ஐந்தே - 5.ஆடவர் :5 216/6

 TOP
 
    முப்பது (1)
முப்பது கழிந்து அங்கு எழுபதுக்கு உளவாம் - 6.அநுபோக :6 269/19

 TOP
 
    முப்பாலும் (1)
உரைத்த முப்பாலும் உயர் குடை வேந்தர்க்கு - 5.ஆடவர் :5 47/1

 TOP
 
    முப்பிணி (1)
முப்பிணி பித்தம் வாதம் சிலேட்டுமம் - 5.ஆடவர் :5 375/1

 TOP
 
    முப்புரமே (1)
சிவன் அழித்த முப்புரமே - 2.வானவர் :2 13/3

 TOP
 
    முப்புரிநூலோர் (1)
வேதபாரகர் முப்புரிநூலோர்
  தொழுகுலர் பார்ப்பார் தொல்பெயர் ஆகும் - 5.ஆடவர் :5 1/6,7

 TOP
 
    முப்பொறி (1)
மனமும் வாக்கும் காயமும் முப்பொறி - 3.ஐயர் :3 23/1

 TOP
 
    மும்மடி (9)
பதாதி மும்மடி சேனாமுகமே - 6.அநுபோக :6 541/1
சேனாமுகம் மும்மடி தான் ஆம் குமுதம் - 6.அநுபோக :6 542/1
குமுதம் மும்மடி கொண்டது கணகம் - 6.அநுபோக :6 543/1
கணகம் மும்மடி கொண்டது வாகினி - 6.அநுபோக :6 544/1
வாகினி மும்மடி ஆகும் பிரளயம் - 6.அநுபோக :6 545/1
பிரளயம் மும்மடி கொண்டது சமுத்திரம் - 6.அநுபோக :6 546/1
சமுத்திரம் மும்மடி கொண்டது சங்கம் - 6.அநுபோக :6 547/1
சங்கம் மும்மடி கொண்டது அநீகம் - 6.அநுபோக :6 548/1
அநீகம் மும்மடி அக்குரோணி ஆகும் - 6.அநுபோக :6 549/1

 TOP
 
    மும்மணிக்கோவையும் (1)
மும்மணிக்கோவையும் பன்மணிமாலையும் - 3.ஐயர் :3 57/1

 TOP
 
    மும்மதன் (1)
தந்திக்கடவுள் தான மும்மதன்
  கங்கைசுதன் விநாயகன் கணபதி பெயரே - 2.வானவர் :2 1/5,6

 TOP
 
    மும்மதில் (1)
இரும்பினும் அன்ன மும்மதில்
  சிவன் அழித்த முப்புரமே - 2.வானவர் :2 13/2,3

 TOP
 
    மும்மீன் (1)
மதிநாள் மும்மீன் பாலை வெய்யோன் - 2.வானவர் :2 151/2

 TOP
 
    மும்மை (1)
மும்மை உம்மையும் இம்மையும் மறுமையும் - 3.ஐயர் :3 22/1

 TOP
 
    முயல் (2)
சசமும் வயமும் முயல் ஆகும்மே - 8.மாப்பெயர் :8 204/1
புலி முயல் பன்றி நரி நாய் என்று இவை - 8.மாப்பெயர் :8 277/2

 TOP
 
    முயலும் (1)
வெருகும் நரியும் முயலும் என்று இவை - 8.மாப்பெயர் :8 282/1

 TOP
 
    முயற்கூடு (1)
உடுவேந்தன் பிறை முயற்கூடு பசுங்கதிர் - 2.வானவர் :2 133/9

 TOP
 
    முயற்சி (2)
ஒக்கல்போற்றல் ஓவா முயற்சி
  மன்னிறை தருதல் ஒற்றுமைகோடல் - 5.ஆடவர் :5 56/3,4
முயற்சி ஊக்கம் இயற்றி ஆள்வினை - 7.பண்பின்செயலின்பகுதி:7 33/1

 TOP
 
    முயற்சியும் (1)
காலின்பெயரும் முயற்சியும் கபாட - 10.ஒருசொல்பல்பொருள்:10 603/1

 TOP
 
    முரசம் (1)
அரி கிணை முரசம் பணை மருதப்பறை - 4.அவனி :4 123/1

 TOP
 
    முரசின்பெயரும் (1)
முரசின்பெயரும் மூங்கிலின்பெயரும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 736/1

 TOP
 
    முரசு (10)
முரசு பிற்கொழுங்கோல் மன்னன் நீபம் - 2.வானவர் :2 172/1
முரசு விளக்கு பதாகை இணைக்கயல் - 3.ஐயர் :3 119/2
முரசு உயர் கொடியோன் தருமன் பெயரே - 5.ஆடவர் :5 14/2
வார் முரசு இயம்ப மறையோர் வாழ்த்த - 6.அநுபோக :6 269/23
சகண்டை முரசு பணையே சகடம் - 6.அநுபோக :6 420/1
முரசு தம்பட்டம் முழவும் ஆகும் - 6.அநுபோக :6 425/1
முரசு பீலி முருடு தடாரி - 6.அநுபோக :6 429/2
துகில் பறை முரசு பேர்எருதும் தூரியம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 640/1
முரசு புள்இறகு மொழி இவை பறை எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 772/1
உத்திரட்டாதியும் பறையும் முரசு எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 944/1

 TOP
 
    முரஞ்சுதல் (1)
முதுமை மூப்பு முரஞ்சுதல் முற்றுதல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 191/1

 TOP
 
    முரண் (1)
பகையும் வலியும் முரண் என பகர்வர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 945/1

 TOP
 
    முரணும் (3)
முரணும் மறமும் முன்பும் நோன்மையும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 3/1
முனையும் முரணும் உறழ்வும் தூவும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 112/1
வலியும் முரணும் நெரிவும் மூரி - 10.ஒருசொல்பல்பொருள்:10 959/2

 TOP
 
    முரம்பு (1)
பாறை மேடு முரம்பு பதுக்கை - 4.அவனி :4 43/1

 TOP
 
    முரம்பும் (1)
உவரும் முரம்பும் உப்பளமும் கானல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 333/3

 TOP
 
    முரம்பே (2)
பரல் அடுத்து உயர்நிலம் முரம்பே பதுக்கை - 4.அவனி :4 82/1
பரல் அடுத்த நிலமும் பாறையும் முரம்பே - 10.ஒருசொல்பல்பொருள்:10 946/1

 TOP
 
    முரல்வும் (2)
முரல்வும் நரல்வும் தெளிரும் ஞெளிரும் - 6.அநுபோக :6 335/1
முரல்வும் நரல்வும் முக்கலும் பயிறலும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 351/1

 TOP
 
    முரற்றல் (1)
உரற்றல் உழம்பல் முரற்றல் இரற்றல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 353/4

 TOP
 
    முரற்றலும் (1)
அரற்றலும் முரற்றலும் அழைத்தலும் கத்தலும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 357/1

 TOP
 
    முராரி (1)
கேசவன் வரதன் முராரி அனந்தன் - 2.வானவர் :2 38/6

 TOP
 
    முரிதல் (2)
முரிதல் இறுதல் முறிதல் பெயரே - 7.பண்பின்செயலின்பகுதி:7 153/2
அழிவு சிந்துதல் நந்துதல் முரிதல்
  இறுதல் சுதம் மடி ஒருங்கல் கேடு என்ப - 7.பண்பின்செயலின்பகுதி:7 154/2,3

 TOP
 
    முரிப்பு (1)
இமிலே ஏற்றின் திரள் முரிப்பு ஆகும் - 8.மாப்பெயர் :8 164/1

 TOP
 
    முருக்குதல் (1)
அடுதல் தெறுதல் செறுத்தல் முருக்குதல்
  செகுத்தல் வதைத்தல் கொல்லுதல் செப்பும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 368/3,4

 TOP
 
    முருகவேளும் (1)
முருகவேளும் அழகும் முருகே - 10.ஒருசொல்பல்பொருள்:10 947/2

 TOP
 
    முருகன் (3)
சிலம்பன் முருகன் சேயே செவ்வேள் - 2.வானவர் :2 18/2
வேலன் முருகன் வெறியாட்டாளன் - 5.ஆடவர் :5 103/1
இளவல் முருகன் காளை இளைஞன் என்ப - 5.ஆடவர் :5 200/2

 TOP
 
    முருகனும் (1)
குரவனும் பொன்னும் தலைவனும் முருகனும்
  அருகனும் இளமையாட்டியும் சாமி - 10.ஒருசொல்பல்பொருள்:10 467/1,2

 TOP
 
    முருகு (2)
சாறு முருகு துணங்கறல் விழாவுடன் - 7.பண்பின்செயலின்பகுதி:7 280/1
சம்பீரம் முருகு சதாபலம் சம்பளம் - 9.மரப்பெயர் :9 69/1

 TOP
 
    முருகும் (2)
மழவும் முருகும் தருணமும் மஞ்சும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 190/1
மணமும் முருகும் மன்றலும் வாசமும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 291/2

 TOP
 
    முருகுஇயம் (1)
தொண்டகம் முருகுஇயம் துடி அந்நிலப்பறை - 4.அவனி :4 75/1

 TOP
 
    முருகே (1)
முருகவேளும் அழகும் முருகே - 10.ஒருசொல்பல்பொருள்:10 947/2

 TOP
 
    முருங்கை (1)
கருஞ்சனம் சிக்குரு முருங்கை ஆகும் - 9.மரப்பெயர் :9 91/1

 TOP
 
    முருடு (3)
முரசு பீலி முருடு தடாரி - 6.அநுபோக :6 429/2
கூறின் முருடு பெருங்குறடு என்ப - 6.அநுபோக :6 534/1
முளரி கறலே முருடு காழ் காட்டம் - 9.மரப்பெயர் :9 208/1

 TOP
 
    முருந்தும் (2)
குருந்து முருந்தும் குருக்கத்தியும் பிள்ளையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 373/1
முதலை செங்கிடையும் முருந்தும் இடங்கரும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 942/1

 TOP
 
    முருந்தே (2)
முருந்தே இறகின்முதல்முள் ஆகும் - 8.மாப்பெயர் :8 10/1
முருந்தே முதலில் செறி வெண் குருத்தே - 9.மரப்பெயர் :9 153/1

 TOP
 
    முல்லை (10)
வனசம் சூதம் அசோகம் முல்லை
  குவளை காமன் கொலும் ஐங்கணையே - 2.வானவர் :2 56/1,2
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என - 3.ஐயர் :3 60/1
குறிஞ்சி பாலை முல்லை மருதம் - 4.அவனி :4 46/1
புறவம் புறம்பணை புறவணி முல்லை - 4.அவனி :4 89/1
கலுழி உயவை முல்லை கான்யாறு - 4.அவனி :4 92/1
நேர்திறம் பெயர்திறம் சாதாரி முல்லை என - 6.அநுபோக :6 278/1
பாணி நாட்டம் தாணு முல்லை
  சாதாரி பைரவம் காஞ்சு என இவை - 6.அநுபோக :6 283/4,5
முல்லை சாதாரி புறநீர்மை நேர்திறம் - 6.அநுபோக :6 299/1
மெளவல் முல்லை செவ் இணர் கடம்பு - 6.அநுபோக :6 315/1
தளவம் முல்லை சாதி பிச்சி - 9.மரப்பெயர் :9 299/1

 TOP
 
    முல்லைத்தலைவன் (1)
தோன்றல் அண்ணல் முல்லைத்தலைவன் - 4.அவனி :4 100/2

 TOP
 
    முல்லைநிலத்துஊரும் (1)
முல்லைநிலத்துஊரும் பாசறையும் படையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 779/1

 TOP
 
    முல்லைநிலமாக்கள் (1)
தொறுவர் விந்தர் முல்லைநிலமாக்கள் - 4.அவனி :4 98/3

 TOP
 
    முல்லைநிலமும் (1)
முல்லைநிலமும் காடும் புறவம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 842/1

 TOP
 
    முல்லையின்புறமும் (2)
குறிஞ்சிநிலமும் முல்லையின்புறமும்
  தோலும் மரப்பட்டையும் புறணி என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 839/1,2
குறிஞ்சிநிலமும் முல்லையின்புறமும்
  புறம்பணை என்று புகலப்பெறுமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 840/1,2

 TOP
 
    முல்லையும் (3)
முல்லையும் நெய்தலும் மொழி சமப்பாலே - 4.அவனி :4 278/1
வலனும் கொற்றமும் வாகையும் முல்லையும்
  சயமும் ஆடும் புகலும் படினமும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 9/1,2
குறிஞ்சிநிலமும் முல்லையும் புறவணி - 10.ஒருசொல்பல்பொருள்:10 841/1

 TOP
 
    முலை (3)
கொங்கை முலை என கூறப்படுமே - 5.ஆடவர் :5 291/3
மகளிர் கோலால் வன முலை ஆகத்து - 6.அநுபோக :6 222/1
சுரை முலை என்ப - 8.மாப்பெயர் :8 155/1

 TOP
 
    முலைக்கச்சே (1)
வம்பு வார் விசிகை பட்டிகை முலைக்கச்சே - 6.அநுபோக :6 189/1

 TOP
 
    முலைக்கண்ணும் (2)
அம்பும் முலைக்கண்ணும் அளியும் சிலீமுகம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 497/1
தோற்றமும் வாலாமையும் முலைக்கண்ணும் சூதகம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 531/1

 TOP
 
    முலைக்கண்ணே (1)
சிலீமுகம் சூசுகம் ஈற்று முலைக்கண்ணே - 5.ஆடவர் :5 293/1

 TOP
 
    முலைத்தாய் (1)
ஈன்றதாய் ஊட்டும்தாய் முலைத்தாய் கைத்தாய் - 3.ஐயர் :3 84/1

 TOP
 
    முலையின்கச்சும் (1)
முலையின்கச்சும் படிறும் வம்பே - 10.ஒருசொல்பல்பொருள்:10 996/2

 TOP
 
    முலையும் (3)
தெய்வலோகமும் முலையும் சுவர்க்கம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 528/1
சயனமும் முலையும் சேக்கை ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 547/1
முலையும் மேகமும் பயோதரம் எனப்படும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 754/1

 TOP
 
    முழங்கல் (1)
முழங்கல் தழங்கல் கத்தல் புலம்பல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 353/5

 TOP
 
    முழங்கை (1)
கூர்ப்பரம் முழங்கை - 5.ஆடவர் :5 295/1

 TOP
 
    முழந்தாள் (1)
சானு முழந்தாள் - 5.ஆடவர் :5 275/1

 TOP
 
    முழந்தாளும் (1)
மலையும் மலைப்பக்கமும் முழந்தாளும் சானு - 10.ஒருசொல்பல்பொருள்:10 480/1

 TOP
 
    முழம் (3)
ஏழ் முழம் உயர்ந்து ஒன்பான் முழம் நீண்டு - 6.அநுபோக :6 391/6
ஏழ் முழம் உயர்ந்து ஒன்பான் முழம் நீண்டு - 6.அநுபோக :6 391/6
பதின்மூன்று முழம் சுற்று உடைத்தாகி - 6.அநுபோக :6 391/7

 TOP
 
    முழல் (1)
கழங்கு முழல் கர்ச்சூரம் கொடி கழல் - 9.மரப்பெயர் :9 236/1

 TOP
 
    முழலும் (1)
கழற்காய் முழலும் கழங்கும் ஆகும் - 9.மரப்பெயர் :9 237/1

 TOP
 
    முழவம் (2)
மண்கணை முழவம் குடமுழா ஆகும் - 6.அநுபோக :6 409/1
தூரியம் முழவம் வைரம் கோடணை - 6.அநுபோக :6 429/1

 TOP
 
    முழவு (1)
முழவு குளிரே - 6.அநுபோக :6 408/1

 TOP
 
    முழவும் (1)
முரசு தம்பட்டம் முழவும் ஆகும் - 6.அநுபோக :6 425/1

 TOP
 
    முழு (1)
கழி உடலின் முழு எலும்பு கங்காளம் ஆகும் - 5.ஆடவர் :5 268/1

 TOP
 
    முழுதும் (1)
அ நால் சொல் திறம் அரில் தப முழுதும்
  செங்கதிர் வரத்தால் திவாகரன் பயந்த - 0.பாயிரம்:0 2/15,16

 TOP
 
    முழுமகன் (1)
முழுமகன் சிதடன் மூடன் பேதை - 5.ஆடவர் :5 148/1

 TOP
 
    முழுவதும் (1)
முழுவதும் முற்றும் சமத்தமும் முட்டவும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 480/2

 TOP
 
    முள்பன்றி (1)
சல்லகம் முள்பன்றி நாமம் ஆகும் - 8.மாப்பெயர் :8 194/1

 TOP
 
    முள்மா (1)
சல்லியம் முளவும் எய்யே முள்மா - 8.மாப்பெயர் :8 193/1

 TOP
 
    முள்முருக்கு (1)
கவிரே கிஞ்சுகம் முள்முருக்கு ஆகும் - 9.மரப்பெயர் :9 46/1

 TOP
 
    முள்முருக்கும் (1)
செந்நிறமும் முள்முருக்கும் கிஞ்சுகம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 335/1

 TOP
 
    முள்ளியும் (1)
முள்ளுடை முள்ளியும் நெற்றியும் முண்டகம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 941/2

 TOP
 
    முள்ளின்பெயர் (1)
சல்லமும் சலமும் அவற்றின் முள்ளின்பெயர் - 8.மாப்பெயர் :8 195/1

 TOP
 
    முள்ளுடை (2)
முண்டகம் முள்ளுடை மூலம் என்ப - 9.மரப்பெயர் :9 266/1
முள்ளுடை முள்ளியும் நெற்றியும் முண்டகம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 941/2

 TOP
 
    முள்ளும் (1)
காடும் முள்ளும் கண்டகம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 251/1

 TOP
 
    முள்ளே (1)
கண்டகம் முள்ளே கடுவும் ஆகும் - 9.மரப்பெயர் :9 205/1

 TOP
 
    முளரி (6)
கனலி எழுநா அனலி முளரி
  அனல் எரி அழலி கனல் அரி கருநெறி - 1.வான் :1 44/3,4
கண்டகம் தில்லம் களரி முளரி
  ககனம் அத்தம் வனம் காடு என புகல்வர் - 4.அவனி :4 90/7,8
முளரி கறலே முருடு காழ் காட்டம் - 9.மரப்பெயர் :9 208/1
முளரி முண்டகம் முட்செடிப்பொதுவே - 9.மரப்பெயர் :9 209/1
முண்டகம் நளினம் முளரி சரோருகம் - 9.மரப்பெயர் :9 358/3
முளரி என்ன மொழிந்திசினோரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 948/2

 TOP
 
    முளரியும் (2)
முளரியும் உற்கையும் மொழியப்பெறுமே - 4.அவனி :4 249/1
ஐயும் நுணுக்கமும் அணுவும் முளரியும்
  நுவணையும் நுட்பமும் நுணங்கும் நூழையும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 468/1,2

 TOP
 
    முளவும் (1)
சல்லியம் முளவும் எய்யே முள்மா - 8.மாப்பெயர் :8 193/1

 TOP
 
    முளிதல் (1)
உலறுதல் காய்தல் வறளுதல் முளிதல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 546/1

 TOP
 
    முளியும் (1)
தேம்பலும் குழைதலும் அனுங்கலும் முளியும்
  வாடலும் தளர்தலும் வாட்டம் எனலாகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 164/1,2

 TOP
 
    முளை (2)
செம்மல் முளை சுதன் கால் பொருள் புதல்வன் - 5.ஆடவர் :5 195/3
காலே அங்குரம் முளை எனலாகும் - 9.மரப்பெயர் :9 168/1

 TOP
 
    முளையின் (1)
பழிப்புஇல் பாலிகை பல் உணா முளையின்
  விளக்கு நிறை குடத்து விதான பந்தரில் - 6.அநுபோக :6 269/25,26

 TOP
 
    முளையும் (2)
வயிரமும் முளையும் எறுழும் மற்று அதுவே - 6.அநுபோக :6 476/1
ஓங்கலும் முளையும் முடங்கலும் சந்தியும் - 9.மரப்பெயர் :9 110/6

 TOP
 
    முளையே (1)
மூங்கிலும் சுதனும் அங்குரிப்பும் முளையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 949/1

 TOP
 
    முற்கம் (2)
முதிரை முற்கம் பருப்பு என மொழிப - 6.அநுபோக :6 631/1
பாசி முற்கம் பசும்பயறு ஆகும் - 9.மரப்பெயர் :9 312/1

 TOP
 
    முற்கரம் (1)
தானை படையே முற்கரம் முசுண்டி - 6.அநுபோக :6 498/1

 TOP
 
    முற்காலமும் (1)
சீக்கிரி மரமும் முற்காலமும் சிங்கமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 956/1

 TOP
 
    முற்குளம் (1)
உடை குளம் முற்குளம் மாரி நீர்நாள் - 2.வானவர் :2 166/1

 TOP
 
    முற்கொழுங்கோலே (1)
புரட்டாதி முற்கொழுங்கோலே நாழி - 2.வானவர் :2 171/1

 TOP
 
    முற்றம் (1)
முன்றில் அங்கணம் முற்றம் ஆகும் - 4.அவனி :4 226/1

 TOP
 
    முற்றில் (1)
அனிலநாள் முற்றில் முறம் வைகாசி - 2.வானவர் :2 162/1

 TOP
 
    முற்று (1)
முடிவு முற்று முடிதல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 492/2

 TOP
 
    முற்றுதல் (2)
முதுமை மூப்பு முரஞ்சுதல் முற்றுதல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 191/1
முற்றுதல் பெயரும் பழமையும் முதுமை - 10.ஒருசொல்பல்பொருள்:10 943/1

 TOP
 
    முற்றும் (2)
முற்றும் ஆனி அசுரநாள் மூலம் - 2.வானவர் :2 165/2
முழுவதும் முற்றும் சமத்தமும் முட்டவும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 480/2

 TOP
 
    முறம் (2)
அனிலநாள் முற்றில் முறம் வைகாசி - 2.வானவர் :2 162/1
சின்னம் தட்டு சேட்டை முச்சில் முறம் - 6.அநுபோக :6 583/1

 TOP
 
    முறமே (1)
விசாகமும் சுளகும் விளம்புவர் முறமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 950/1

 TOP
 
    முறி (2)
வல்லரி குழை முறி மஞ்சரி கிசலயம் - 9.மரப்பெயர் :9 151/1
அணை முறி குளமும் பூராடமும் முறிகுளம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 951/1

 TOP
 
    முறிகுளம் (1)
அணை முறி குளமும் பூராடமும் முறிகுளம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 951/1

 TOP
 
    முறிதல் (1)
முரிதல் இறுதல் முறிதல் பெயரே - 7.பண்பின்செயலின்பகுதி:7 153/2

 TOP
 
    முறியும் (1)
பாடமும் வேணியும் வாடையும் முறியும்
  சேரி என்ப சிரேணியும் அதற்கே - 4.அவனி :4 198/1,2

 TOP
 
    முறுக்குஆணி (1)
முறுக்குஆணி மாடகம் - 6.அநுபோக :6 332/1

 TOP
 
    முறுகலும் (1)
திருகலும் முறுகலும் மீறுதல் என்ப - 7.பண்பின்செயலின்பகுதி:7 487/1

 TOP
 
    முறுவல் (1)
பல்லும் சிரிப்பும் முறுவல் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 952/1

 TOP
 
    முறுவலும் (3)
முறுவலும் நகையும் மூரலும் ஆகும் - 5.ஆடவர் :5 315/1
மூரலும் இளியும் முறுவலும் நகையும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 239/1
முறுவலும் பல்லும் சோறும் மூரல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 958/1

 TOP
 
    முறை (2)
ஒல்லை புராணம் முதுமை முறை ஊழ் - 7.பண்பின்செயலின்பகுதி:7 450/1
ஆர்ப்பும் முறைமையும் முறை எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 953/2

 TOP
 
    முறைமையும் (3)
முறைமையும் ஊழும் பாவமும் தன்மமும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 448/1
ஆர்ப்பும் முறைமையும் முறை எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 953/2
இடமும் பின்னும் முறைமையும் வழியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 1011/2

 TOP
 
    முறையும் (2)
பரிசும் படியும் முறையும் பண்பும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 1/5
முறையும் வாழும்வழியும் ஆம் என்ப - 7.பண்பின்செயலின்பகுதி:7 448/2

 TOP
 
    முறையே (1)
சொல்லிய முறையே நால்வகை ஆகும் - 3.ஐயர் :3 60/2

 TOP
 
    முன் (6)
நல மிக முன் வரின் நன்கணம் ஆகும் - 6.அநுபோக :6 241/2
காய்ச்சீரின் முன் இரண்டும் கை கொள் கனிச்சீரின் - 6.அநுபோக :6 243/1
கனி சீரின் முன் இரண்டும் காய்ச்சீரின் பின்னும் - 6.அநுபோக :6 243/3
பெண் எழுத்து அல்லது முன் வைத்து உரையார் - 6.அநுபோக :6 260/2
தாரே முன் செல் கொடிப்படை ஆகும் - 6.அநுபோக :6 405/1
ஆதி தலை தாள் அடி முன் எழுவாய் - 7.பண்பின்செயலின்பகுதி:7 489/1

 TOP
 
    முன்கால் (1)
காத்திரம் முன்கால் - 8.மாப்பெயர் :8 113/1

 TOP
 
    முன்குலத்தோர் (1)
மேல்குலத்தோர் முன்குலத்தோர் ஐயர் - 5.ஆடவர் :5 1/5

 TOP
 
    முன்சொல் (1)
மொழிமை மூதுரை முன்சொல் பழஞ்சொல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 267/1

 TOP
 
    முன்தானை (1)
முன்தானை தோகை - 6.அநுபோக :6 185/1

 TOP
 
    முன்பனி (1)
காரே கூதிர் முன்பனி பின்பனி - 2.வானவர் :2 209/1

 TOP
 
    முன்பிறந்தாள் (1)
முன்னவள் மூத்தாள் முன்பிறந்தாள் பெயர் - 5.ஆடவர் :5 188/2

 TOP
 
    முன்பிறந்தாளும் (3)
தாயும் முன்பிறந்தாளும் அன்னை - 10.ஒருசொல்பல்பொருள்:10 86/1
முன்பிறந்தாளும் கோள்தாயும் செவிலி - 10.ஒருசொல்பல்பொருள்:10 544/1
முன்பிறந்தாளும் கிளியும் தத்தை - 10.ஒருசொல்பல்பொருள்:10 578/1

 TOP
 
    முன்பிறப்பு (1)
உம்மை முன்பிறப்பு - 7.பண்பின்செயலின்பகுதி:7 451/1

 TOP
 
    முன்பும் (3)
முரணும் மறமும் முன்பும் நோன்மையும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 3/1
பரிமாக்கலணையும் முன்பும் பரம் எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 757/2
முதுமையும் கிழக்கும் முன்பும் பூருவம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 853/1

 TOP
 
    முன்பெறு (1)
முன்பெறு சிதல் எறும்பு ஆதி மூ அறிவே - 5.ஆடவர் :5 369/2

 TOP
 
    முன்றில் (1)
முன்றில் அங்கணம் முற்றம் ஆகும் - 4.அவனி :4 226/1

 TOP
 
    முன்றிலும் (2)
தன் மனை புறத்தினும் சாமுண்டி முன்றிலும்
  பன்னகம் வாழும் பழம் பதி தன்னினும் - 6.அநுபோக :6 271/3,4
தூம்புவாயிலும் முன்றிலும் அங்கணம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 7/1

 TOP
 
    முன்ன்பு (1)
முன்ன்பு உயர்ந்து பின்ன் பணித்து ஆயது - 6.அநுபோக :6 391/9

 TOP
 
    முன்னம் (3)
பிள்ளைப்பாட்டு வாயின் முன்னம்
  வெள்ளைப்பாட்டு வேதியர்க்கு உரித்தே - 6.அநுபோக :6 262/1,2
முன்னம் துரிஞ்சில் உசிலை சீக்கிரி - 9.மரப்பெயர் :9 97/1
முன்னம் என்று மொழியப்பெறுமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 956/2

 TOP
 
    முன்னமும் (1)
முன்னமும் அகமும் உள்ளமும் உன்னமும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 15/1

 TOP
 
    முன்னர் (3)
நிலை பதி உறையுள் நிசாதனம் முன்னர்
  நியமம் வசதி நிகாயம் தேயம் - 4.அவனி :4 272/9,10
இறுதி நிரையாய் இணை நேர் முன்னர்
  வருவது மாருதகணம் என வைப்பார் - 6.அநுபோக :6 236/1,2
முன்னர் மொழிந்த ஒழிந்தவற்றோடும் - 6.அநுபோக :6 267/18

 TOP
 
    முன்னல் (1)
முன்னல் அறிதல் வலித்தல் சிந்தித்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 22/2

 TOP
 
    முன்னவள் (1)
முன்னவள் மூத்தாள் முன்பிறந்தாள் பெயர் - 5.ஆடவர் :5 188/2

 TOP
 
    முன்னவன் (2)
முக்கணன் விடையோன் முன்னவன் பிறப்பிலி - 2.வானவர் :2 2/7
முன்னவன் சேட்டன் மூத்தோன் பெயரே - 5.ஆடவர் :5 185/2

 TOP
 
    முன்னிலை (3)
முன்னிலை படர்க்கை தன்மை மூவிடம் - 3.ஐயர் :3 26/1
இன்னவை முன்னிலை அசைச்சொல் என்ப - 7.பண்பின்செயலின்பகுதி:7 340/2
முன்னிலை அசைச்சொலும் உடுபதியும் உணர்வும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 892/1

 TOP
 
    முன்னிலைப்பெயர் (2)
ஏடா என்ப தோழன் முன்னிலைப்பெயர் - 5.ஆடவர் :5 203/1
ஏடி ஏலா தோழி முன்னிலைப்பெயர் - 5.ஆடவர் :5 209/1

 TOP
 
    முன்னும் (1)
வெந்நும் முன்னும் வெண்மை உடையதாய் - 6.அநுபோக :6 392/4

 TOP
 
    முன்னுற (2)
முன்னுற மொழிதற்கு உரியன் ஆம் என - 6.அநுபோக :6 266/9
முன்னுற கிளந்த ஆண்டின் நாள் வரை - 6.அநுபோக :6 267/20

 TOP
 
    முன்னை (1)
தொன்மை முன்னை புராதனம் பழைமை - 7.பண்பின்செயலின்பகுதி:7 450/3

 TOP
 
    முன்னைநாள் (1)
நென்னலும் நெருனலும் முன்னைநாள் ஆகும் - 2.வானவர் :2 192/1

 TOP
 
    முன்னோர் (1)
மதுவர் குரவர் மூத்தோர் முன்னோர்
  உழையோர் சூழ்வோர் நூல்வல்லோரே - 5.ஆடவர் :5 115/1,2

 TOP
 
    முன்னோன் (2)
அச்சுதன் முன்னோன் காமபாலன் - 2.வானவர் :2 51/3
அரசன் தலைவன் தந்தை முன்னோன்
  குரவனோடு ஐவரும் குறிப்பினில் தந்தை - 3.ஐயர் :3 79/1,2

 TOP
 
    முனி (3)
தடி முனி சிந்துவாரம் சராசனம் - 6.அநுபோக :6 435/1
பட்டாரகன் முனி திறலோன் பண்ணவன் - 10.ஒருசொல்பல்பொருள்:10 739/1
முனி என்று உரைப்ப அகத்தியும் மொழிப - 10.ஒருசொல்பல்பொருள்:10 954/2

 TOP
 
    முனிந்தோன் (1)
முக்கணன் தக்கன் வேள்வி முனிந்தோன்
  ஏகவீரியன் சடாதரன் வில்லி - 2.வானவர் :2 22/2,3

 TOP
 
    முனியே (1)
அச்சம் முனியே கரீரம் அகத்தி - 9.மரப்பெயர் :9 89/1

 TOP
 
    முனிவர் (4)
பசாசர் அந்தரர் முனிவர் உரகர் - 1.வான் :1 92/4
முனிவர் மாதவர் இலிங்கிகள் முனைவர் - 3.ஐயர் :3 1/1
முனிவர் தாபதர் சடைமுடியோரே - 3.ஐயர் :3 10/1
வானோர் முனிவர் மறையவர் ஆசான் - 10.ஒருசொல்பல்பொருள்:10 208/1

 TOP
 
    முனிவனும் (1)
அசோகு அமர்கடவுளும் முனிவனும் உறுவன் - 10.ஒருசொல்பல்பொருள்:10 183/1

 TOP
 
    முனிவிலனாதல் (1)
தனிமையாற்றல் முனிவிலனாதல்
  இடனறிந்தொழுகல் பொழுதொடுபுணர்தல் - 5.ஆடவர் :5 54/1,2

 TOP
 
    முனிவும் (2)
வெறுப்பு ஒல்லாமையும் வேண்டாமையும் முனிவும்
  ஒறுத்தலும் உவர்த்தலும் உவர்ப்பும் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 44/1,2
முனிவும் செயிரும் சீற்றமும் வியர்ப்பும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 115/1

 TOP
 
    முனிவுஅறாமையும் (1)
பசியும் தாகமும் பிணியும் முனிவுஅறாமையும்
  உயிரின்வேதனை ஓர் ஈர்ஆறே - 3.ஐயர் :3 130/3,4

 TOP
 
    முனை (1)
பாசறை முனை மேல் சென்றோர் உறைபதி - 4.அவனி :4 27/1

 TOP
 
    முனைதல் (1)
முனைதல் விடைத்தல் பைத்தல் பெருஞ்சினம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 118/2

 TOP
 
    முனைப்பதி (1)
பாசறை முனைப்பதி பாடி பாளையம் - 4.அவனி :4 177/1

 TOP
 
    முனையிடம் (1)
முனையிடம் குறும்பு முது பாலைநிலத்துஊர் - 4.அவனி :4 83/1

 TOP
 
    முனையும் (1)
முனையும் முரணும் உறழ்வும் தூவும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 112/1

 TOP
 
    முனையே (1)
பகையும் வேண்டாமையும் வினையும் முனையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 955/1

 TOP
 
    முனைவர் (1)
முனிவர் மாதவர் இலிங்கிகள் முனைவர்
  படிவர் உறுவர் பண்ணவர் ஐயர் - 3.ஐயர் :3 1/1,2

 TOP
 
    முனைவன் (2)
பண்ணவன் பட்டாரகனே முனைவன்
  அசோகுஅமர்கடவுள் பகவன் முக்குடையோன் - 2.வானவர் :2 99/2,3
தருமன் சாந்தன் முனைவன் வாமன் - 2.வானவர் :2 102/2

 TOP