|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
சொத்துற்று (1)
சொத்துற்று அமைந்த சுதை_இல் செம் சுவர் - உஞ்ஞை:34/221
TOP
சொரி (5)
பை சொரி பவழம் போல படி தாழ் - உஞ்ஞை:53/27
கை சொரி உதிரம் கான்று வந்து இழிதர - உஞ்ஞை:53/28
கார் பெயல் அருவியில் கடாம் சொரி கவுள - மகத:20/31
கனல் சொரி மலையின் கவிய நூறி - மகத:27/170
சொரி தரு விசும்பில் சோதமன் குறுகி - நரவாண:3/169
TOP
சொரிதந்து (1)
மெய் கண் மேவார் மெல்லென சொரிதந்து
எக்கர் கிளைக்கும் ஏழையர் காண்-மின் - உஞ்ஞை:40/154,155
TOP
சொரிதரு (2)
அரதன நாகரின் சொரிதரு வெகுளியர் - உஞ்ஞை:46/13
இரு கவுள் மருங்கினும் சொரிதரு கடாத்தது ஓர் - நரவாண:8/77
TOP
சொரிதலின் (1)
செ வாய் பார்ப்பிற்கு சேர்ந்து அவண் சொரிதலின்
உறு பசி வருத்தமும் அன்பினது பெருமையும் - நரவாண:1/70,71
TOP
சொரிந்த (2)
அரிந்த யாப்பில் சொரிந்த கடும் காழ் - இலாவாண:19/8
உத்தர மருங்கின் நத்து இனம் சொரிந்த
மணி தெளித்து அன்ன அணி நிற தெண் நீர் - மகத:4/38,39
TOP
சொரிந்து (6)
கோல பாசடை பால் சொரிந்து அன்ன - உஞ்ஞை:40/53
பை சொரிந்து அன்ன பால்_இல் தோல் முலை - உஞ்ஞை:43/156
தூ நிற தண் துளி தான் நின்று சொரிந்து
வேனில் தாங்கி மேனி வாடிய - உஞ்ஞை:49/87,88
தாம் முறை சொரிந்து தம் முறைமையின் ஆட்டி - இலாவாண:5/105
எதிர் மலர் குவளை இடு நீர் சொரிந்து
சீத சந்தனம் தாதோடு அப்ப - இலாவாண:9/156,157
பழன மருதின் பார்ப்பு வாய் சொரிந்து
கரும் கால் நாரை நரன்று வந்து இறுப்ப - மகத:7/30,31
TOP
சொரிய (1)
மதி உறழ் சங்கம் நிதியம் சொரிய
அந்தர விசும்பின் ஆழி கிழவன் - நரவாண:6/29,30
TOP
சொரியும் (3)
வண்ண மகளிர் சுண்ணமொடு சொரியும்
மலர் தூம் மாடம் மயங்கிய மறுகின் - உஞ்ஞை:38/137,138
கை-வயின் கொண்ட நெய் அகல் சொரியும்
யவன பாவை அணி விளக்கு அழல - உஞ்ஞை:47/174,175
தம்பியர் தாமரை தடம் கண் சொரியும்
வெம் பனி துடைத்து பண்புளி பேணி - மகத:24/126,127
TOP
சொரிவன (1)
இரவல் மாக்கட்கு சொரிவன நல்கி - உஞ்ஞை:42/116
TOP
சொரிவனர் (1)
சொரிவனர் ஆட்டி தூசு விரித்து உடீஇ - உஞ்ஞை:57/97
TOP
சொல் (57)
அம் சொல் பேதாய் அருள் என்போரும் - உஞ்ஞை:33/171
சொல் எதிர்கொள்ளாள் மெல்_இயல் இறைஞ்சி - உஞ்ஞை:33/178
சூழ்வினை அறுத்த சொல்_அரும் கடு நோய் - உஞ்ஞை:33/202
அம் சொல் ஆயத்து அன்று யான் கண்ட - உஞ்ஞை:34/75
நிகழ்வதை உரைக்கும் புகர் சொல் மாக்கள் - உஞ்ஞை:35/3
தேன் தோய்த்து அன்ன தீம் சொல் அளைஇ - உஞ்ஞை:35/109
பொய்யொடு மிடைந்த பொருள் நசை கடும் சொல்
மையுண்டு கழுமிய மாசுபடு கலிங்கத்து - உஞ்ஞை:35/119,120
இல்லையாயினும் சொல் வகை செருக்கி - உஞ்ஞை:35/192
சில்லை சிறு_சொல் மெல்_இயல் மிழற்ற - உஞ்ஞை:35/248
படு_சொல் ஒற்றர் கடிது அவண் ஓடி - உஞ்ஞை:36/4
சொல் வரைத்து ஆயின் சொல்லுவை நீ என - உஞ்ஞை:36/181
வெம் சொல் கிளவி நின் அங்கையின் அவித்து - உஞ்ஞை:36/187
ஆசான் என்னும் சொல் பிறிது ஆமோ - உஞ்ஞை:36/309
சிறு_சொல் கிளவி கேளல செவி என - உஞ்ஞை:36/314
சொல் இசை வெரீஇய மெல்லென் பாவை - உஞ்ஞை:36/334
தொல் இசையாளர் சொல் எடுத்து ஏத்த - உஞ்ஞை:37/148
இன் சொல் மகளிர் எனை பலருள்ளும் - உஞ்ஞை:37/173
கணக்கு_துறை முற்றிய கடும் சொல் ஓலை - உஞ்ஞை:37/208
கல்வி ஆளார் சொல் இசை போல - உஞ்ஞை:38/67
வடு சொல் நீங்கிய வயங்கிய வருணத்த - உஞ்ஞை:38/344
இடி சொல் பொறாஅ இலக்கண வினையர் - உஞ்ஞை:38/345
அரும்_பெறல் மட மகள் அமிழ்துபடு தீம் சொல்
ஏசுவது இல்லா எழில்படு காரிகை - உஞ்ஞை:43/35,36
அம் சொல் பேதாய் அது இதுவாம் என - உஞ்ஞை:46/197
நண்பு கொள் ஒழுக்கின் நஞ்சு பொதி தீம் சொல்
வளைஇய மடந்தையை தெளிவனன் ஒழுகி - உஞ்ஞை:46/310,311
ஆசான் இவன் என அருளிய அ சொல்
தூசு ஆர்ந்து துளும்பும் காசு விரி கலாபத்து - உஞ்ஞை:48/106,107
அம் சொல் மகளிர் அடி மிசை ஆற்றும் - உஞ்ஞை:48/182
கரும்பு அடு தீம் சொல் காஞ்சனை எழீஇ - உஞ்ஞை:53/8
சொல் பொருள் கேட்டே வில் தொடை மடக்கி - உஞ்ஞை:56/85
பதர் சொல் பருப்பொருள் பன்னுபு நீக்கி - இலாவாண:4/51
பொருள் சொல் நிரப்பும் புலவர் போல - இலாவாண:4/52
சொல் வேறு குறியொடு சுழன்று அகத்து ஒடுங்கிய - இலாவாண:8/99
வெம் சொல் வேட்டத்து அஞ்சுவரு சீற்றத்து - இலாவாண:9/136
சொல் துணை தோழன் தொழில் பாராட்டி - இலாவாண:10/169
வெம் சொல் மாற்றம் வந்து கைகூட - இலாவாண:17/63
பொய் சொல் என்பர் புன்மையோரே - மகத:1/60
படை சொல் பாச தொடக்கு உள்ளுறீஇ - மகத:2/13
பண்ணுறும் இன் சொல் பதுமா நங்கை - மகத:16/6
படு சொல் மாற்றம் தெளிந்த பரிவினர் - மகத:20/168
சுற்றத்தார் எனும் சொல் உடை வேந்தர் - மகத:21/14
புறத்தோர் உரைக்கும் புன் சொல் கட்டுரை - மகத:21/96
திருமாதேவியும் தேன் புரை தீம் சொல்
கணம் குழை மகளை காமன் அனைய - மகத:22/50,51
பணை தோள் சில சொல் பதுமா நங்கைக்கு - மகத:23/38
பற்றுபு நம் பதி தருகுவேன் என்ற சொல்
முற்று உலகு எல்லாம் மொய்த்து ஒருங்கு தருதலின் - மகத:25/68,69
வெம் சொல் மாற்றம் வேந்தரை உரைத்தோர் - மகத:25/75
தன் சொல் எல்லாம் சென்று அவன் உரைப்ப - மகத:25/167
ஓடினை சொல் என நீடுதல் இன்றி - மகத:26/12
புன் சொல் படு நுகம் புதியவை நீக்கி - வத்தவ:2/5
கற்பேன் என்ற சொல் கட்டு அழலுறீஇ - வத்தவ:5/20
பல் பூண் சில் சொல் பட்ட தேவியை - வத்தவ:6/24
ஒக்கும் என்ற சொல் உள்ளே நின்று - வத்தவ:8/104
தேன் நேர் தீம் சொல் தேவிமார்களும் - வத்தவ:9/7
பணிந்த தீம் சொல் பதுமை என்னும் - வத்தவ:10/34
படு சொல் மாற்றத்து சுடர் முகம் புல்லென - வத்தவ:10/155
இத சொல் சொல்லவும் வணக்கம் செய்யவும் - வத்தவ:13/246
சொற்றது சொல் என கச்சினின் யாத்தனள் - வத்தவ:14/5
சொல் இயல் பெருமான் மெல்_இயல்-தன்னை - வத்தவ:17/70
அம் சொல் மழலை அவந்திகை என்னும் நின் - நரவாண:3/30
TOP
சொல்_அரும் (1)
சூழ்வினை அறுத்த சொல்_அரும் கடு நோய் - உஞ்ஞை:33/202
TOP
சொல்ல (2)
கல்லா சனத்தொடு பல்லோர் சொல்ல
புகாஅர் இயல்பு உணர்ந்தோர் என - உஞ்ஞை:35/11,12
என்று அது சொல்ல நன்று என விரும்பி - மகத:6/198
TOP
சொல்லல் (1)
நல்லது ஒன்று உண்டெனில் சொல்லல் எம் குறை என - மகத:14/183
TOP
சொல்லலும் (1)
அரும் தொழில் அந்தணன் சுருங்க சொல்லலும்
விரைந்தனம் செல்க என வெம் படை தொகுத்து - உஞ்ஞை:56/186,187
TOP
சொல்லவும் (1)
இத சொல் சொல்லவும் வணக்கம் செய்யவும் - வத்தவ:13/246
TOP
சொல்லா (2)
பழி புறம் சொல்லா பண்பினன் ஆதலின் - உஞ்ஞை:36/10
சுடர் குழை பயந்தோள் சொல்லா நிற்ப - உஞ்ஞை:37/172
TOP
சொல்லாட்டிடையும் (1)
சொல்லாட்டிடையும் செல்லல் தீர்தலின் - வத்தவ:6/25
TOP
சொல்லாதலின் (1)
வேந்து இடையிட்ட வெம் சொல்லாதலின்
சேர்ந்தோர் மாட்டும் செப்பல் தீது என - உஞ்ஞை:35/15,16
TOP
சொல்லாய் (1)
சொல்லாய் ஆயின் புல்லுவென் யான் என - உஞ்ஞை:40/97
TOP
சொல்லி (8)
இசையா மாக்கள் முன் இயல்பு_இல சொல்லி
அன்று தலைப்பட்ட ஆர்வலர் போல - உஞ்ஞை:35/33,34
வழிமொழி கிளவியொடு வணக்கம் சொல்லி
கழி பெரு நன் கலம் களிற்றின் மிசை உயரி - உஞ்ஞை:36/47,48
உதயணகுமரனை ஓர்த்துற சொல்லி
நூலறிவாளர் நால்வரை விட்ட பின் - உஞ்ஞை:37/276,277
என்பது சொல்லி எழில் வரை மார்பன் - மகத:14/143
ஒழிந்தோர்க்கு எல்லாம் ஓம்படை சொல்லி
வேறு இடம் காட்டி ஆறு அறிந்து ஓம்பி - வத்தவ:1/30,31
சித்திரக்காரரும் செல்க என சொல்லி
ஆரா கவலையின் அது பணித்ததன் பின் - வத்தவ:3/28,29
காப்பிய வாசனை கலந்தவை சொல்லி
எண்ணியது உண்ணும் ஏண் தொழில் அறாஅ - வத்தவ:3/43,44
இன் ஓர் அன்ன எடுத்து உரை சொல்லி
தன் ஓர் அன்ன தன்மையன் ஆகி - நரவாண:6/127,128
TOP
சொல்லிய (4)
திரிதரல் ஓவாது தீயவை சொல்லிய
மைத்துன மைந்தரை நோக்கி மடந்தையர் - உஞ்ஞை:41/48,49
சொல்லிய எல்லாம் நல்குவனன் ஆகி - மகத:27/37
பல் பொருள் கருமம் சொல்லிய பின்னர் - வத்தவ:11/20
சொல்லிய மகளிர் எல்லாம் காண - வத்தவ:12/219
TOP
சொல்லியது (2)
சொல்லியது பிழையா கல்வி கரணத்து - உஞ்ஞை:42/241
சொல்லியது இலன் என மெல்_இயல் மிழற்ற - நரவாண:1/235
TOP
சொல்லின் (1)
சொல்லின் நுண் பொருள் காட்டி இல்லின் - உஞ்ஞை:35/215
TOP
சொல்லினன் (1)
சொல்லினன் வினவும் சுவடு தனக்கு இன்மையின் - உஞ்ஞை:34/79
TOP
சொல்லு-மின் (1)
சுற்றமும் பெயரும் சொல்லு-மின் நீர் என - வத்தவ:13/12
TOP
சொல்லுதல் (1)
செல் ஆறு இது என சொல்லுதல் வேண்டி - நரவாண:7/91
TOP
சொல்லும் (3)
தேவர் சொல்லும் அது ஏது அதை ஆக என - உஞ்ஞை:37/258
சூரன் இவன் என சொல்லும் குறிப்பினள் - உஞ்ஞை:40/329
சூழ் வினையாளர்க்கு தோன்றல் சொல்லும்
ஆர் உயிர் அன்ன என் அற்பு வார் கொளீஇ - மகத:10/20,21
TOP
சொல்லுவது (1)
சொல்லுவது உண்டு என செவ்வி வேண்டி - உஞ்ஞை:47/33
TOP
சொல்லுவர் (1)
நின்னை சொல்லுவர் நல் நுதல் பெயரும் - வத்தவ:13/32
TOP
சொல்லுவல் (1)
இல்லையாதலின் சொல்லுவல் இன்னும் - மகத:1/67
TOP
சொல்லுவனர் (1)
அல்லோர் பிறரும் சொல்லுவனர் போய பின் - மகத:13/30
TOP
சொல்லுவார் (1)
சுற்ற மாந்தர் சொல்லுவார் மாறு அல - நரவாண:1/35
TOP
சொல்லுவை (1)
சொல் வரைத்து ஆயின் சொல்லுவை நீ என - உஞ்ஞை:36/181
TOP
சொல்லோடு (1)
சொல்லோடு படுத்து செல்க என் களிறு என - உஞ்ஞை:36/347
TOP
சொல்வன (1)
சுழலும் நிற்கும் சொல்வன போலும் - வத்தவ:12/257
TOP
சொலி (1)
என் சொலி சேறும் என்று எண்ணுபு நாணினர் - உஞ்ஞை:45/80
TOP
சொற்றது (1)
சொற்றது சொல் என கச்சினின் யாத்தனள் - வத்தவ:14/5
TOP
சொன்னோன் (1)
சொன்னோன் ஆணை முன்னர் தோன்றி - உஞ்ஞை:33/140
TOP
|
|
|