|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
சோண (1)
வாச பளிதமும் சோண பூவும் - மகத:17/133
TOP
சோதமன் (1)
சொரி தரு விசும்பில் சோதமன் குறுகி - நரவாண:3/169
TOP
சோதவன் (1)
சோதவன் என்னும் இருடி உலகத்து - நரவாண:3/180
TOP
சோதிடர் (2)
மாதிரத்து இயங்கும் சோதிடர் விமானமும் - இலாவாண:18/50
ஐ வகை சோதிடர் அணி பெறு கற்பம் - நரவாண:1/189
TOP
சோர் (3)
சுடரும் வாளினர் சோர் நிணர் இழுக்கி - உஞ்ஞை:46/51
அசும்பு சோர் அரு வரை அகலம் பொருந்தி - இலாவாண:14/6
அசும்பு சோர் முகில் உடை விசும்பு போழ்ந்து இயங்கிய - நரவாண:4/134
TOP
சோர்தரு (2)
சுழலும் கண்ணினன் சோர்தரு மாலையன் - உஞ்ஞை:40/77
பறைந்து இடை சோர்தரு பசலை வெண் நரை - உஞ்ஞை:43/153
TOP
சோர்ந்த (1)
சூர் உறு மஞ்ஞையின் சோர்ந்த கூந்தலர் - உஞ்ஞை:44/22
TOP
சோர்ந்தன (1)
சோர்ந்தன பல் குடர் வார்ந்தன குருதி - மகத:27/113
TOP
சோர்ந்தாங்கு (1)
ஒழுகுபு சோர்ந்தாங்கு உக்கது என் நெஞ்சு என - உஞ்ஞை:33/132
TOP
சோர்ந்து (7)
கள் அடு மகடூஉ கை சோர்ந்து இட்ட - உஞ்ஞை:40/70
கலந்து காதலின் ஆடலின் கை சோர்ந்து
மலர்ந்து கடை போழ்ந்து மாழை கழீஇ - உஞ்ஞை:40/189,190
சுவை சோர்ந்து அழிய நவை கூர்ந்து நடுங்கி - உஞ்ஞை:44/49
மற படை மன்னன் வாய் சோர்ந்து அரற்றா - இலாவாண:18/117
அழல் திரண்டு அன்ன ஆலி சோர்ந்து அவர் - மகத:24/104
சோர்ந்து கடும் கதம் சுருங்குபு நீங்க - வத்தவ:3/94
வாய் சோர்ந்து அரற்றா வாசம் கமழும் - வத்தவ:7/25
TOP
சோர்வு (1)
சோர்வு இடம் பார்த்து என் ஊர் எறிந்து அவளுடன் - வத்தவ:14/121
TOP
சோர (6)
ஈர தானை நீரிடை சோர
தோட்டார் திரு நுதல் சூட்டு அயல் சுடரும் - உஞ்ஞை:40/100,101
எரியுறு மெழுகின் உள்ளம் சோர
பரிவுறு நெஞ்சினர் பையாந்து ஏங்கவும் - உஞ்ஞை:46/249,250
கூந்தல் சோர பூம் துகில் அசைஇ - இலாவாண:5/118
ஆடற்கு அவாவும் அமிழ்தம் சோர
ஊடு போழ்ந்து உறழ ஒளி பெற உடீஇ - இலாவாண:7/159,160
ஆடு சிறகு ஒடுக்கி மாடம் சோர
கொய்ம் மலர் காவில் குறிஞ்சி முதலா - மகத:14/281,282
பணிவு இலன் எறிதலின் படை கலம் சோர
தறுகண் இமையான் தருக்கினொடு உறுதி ஏய்பு - மகத:27/174,175
TOP
சோரினும் (1)
கொடும் காழ் சோரினும் கூடம் ஊன்றிய - இலாவாண:10/162
TOP
சோரும் (3)
சோரும் கூந்தலர் வாரும் கண்ணினர் - உஞ்ஞை:44/38
சோரும் கண்ணினன் துளங்கி மெய்ம்மறப்ப - இலாவாண:10/111
சோரும் மன்னனை ஆர்வ தோழர் - இலாவாண:18/105
TOP
சோலை (14)
நறும் பூம் சோலை நாற்றம் கழுமிய - உஞ்ஞை:50/58
பொதி அவிழ் பூ மரம் பொதுளிய சோலை
அகலத்து எல்லையும் ஆழ்ச்சியது அந்தமும் - உஞ்ஞை:51/5,6
சோலை போதக சுவடுறுத்து உழல்வோர் - உஞ்ஞை:55/70
நறை மலர் சோலை இறைகொண்டிருப்ப - உஞ்ஞை:57/16
நறும் தண் சோலை இரும் கால் திமிசும் - உஞ்ஞை:58/31
பூ மலர் பொதுளிய புனல் வரை சோலை
மா மலை சாரலொடு கானம் காட்டுதல் - இலாவாண:11/28,29
மன் பெரும் சோலை மலை-வயின் போகா - இலாவாண:12/52
மாம் பொழில் சோலை மகிழ்ந்து உடன் ஆடும் - இலாவாண:12/106
செண்பக சோலை தண் தழை தைஇயும் - இலாவாண:14/36
வண்டு ஆர் சோலை வள மலை சாரல் - இலாவாண:14/67
வண்டு ஆர் சோலை வள மலை சாரல் - இலாவாண:15/1
தேவியை இழந்து பூ இதழ் சோலை
புல்லென் யாக்கையொடு போயினன் உதயணன் - மகத:1/20,21
சின்ன சோலை என்னும் மலை மிசை - மகத:17/104
மயங்கு பூம் சோலை மலை-வயின் ஆடி - வத்தவ:7/54
TOP
சோலை-தொறும் (1)
சந்தன சோலை-தொறும் தலைச்சென்று ஆடி - மகத:1/185
TOP
சோலையின் (1)
இலவு அம் சோலையின் இறை_மகன் போதர - உஞ்ஞை:56/43
TOP
சோலையும் (4)
மலர் பூம் சோலையும் திளைத்தல் ஆனார் - இலாவாண:12/151
கலவம் புகலும் கான் கெழு சோலையும்
உரிமை பள்ளியும் அருமை காப்பின் - மகத:14/17,18
குளிர் பொழில் சோலையும் குயில் தொகை பரப்பும் - நரவாண:4/140
வண்டு ஆர் சோலையும் வளம் கெழு மலையும் - நரவாண:4/145
TOP
சோலையுள் (2)
புது மலர் சோலையுள் புலந்து அவள் அகல - இலாவாண:16/53
பொதியில் சோலையுள் கதிர் என கவினிய - மகத:5/98
TOP
சோலையூடு (1)
ஊழ் அலர் சோலையூடு உவந்து விளையாடும் - நரவாண:3/85
TOP
சோலையொடு (1)
வடி மாண் சோலையொடு வகை பெற வரைந்து - உஞ்ஞை:58/65
TOP
சோற்று (5)
தொகை கணம் போதரும் அற சோற்று அட்டில் - உஞ்ஞை:40/132
அற சோற்று அட்டில் அகத்தும் புறத்தும் - இலாவாண:2/85
பெரும் சோற்று அமலை பரந்து பலர் மிசையும் - இலாவாண:3/25
பசும் சோற்று அமலை பாசம் கொளீஇ - இலாவாண:4/62
அற சோற்று அட்டிலும் அம்பல சாலையும் - மகத:4/24
TOP
சோறு (1)
புழுக்கலொடு பால் சோறு ஆயினவாயின் - உஞ்ஞை:40/281
TOP
சோறும் (1)
பாலும் சோறும் வாலிதின் ஊட்டினும் - மகத:14/111
TOP
|
|
|