|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
சூட்டி (8)
திரு நுதல் சுட்டி திகழ சூட்டி
முத்த கலன் அணி மொய்ப்புற சேர்த்து - உஞ்ஞை:34/196,197
வாகை கண்ணி வலத்தில் சூட்டி
தானை சேரி தலை பெரும் திருவன் - உஞ்ஞை:37/261,262
செம்பொன் நெல்லின் செல் கதிர் சூட்டி
வெண் துகில் இட்ட விசய முரசம் - உஞ்ஞை:39/23,24
கண்ணி சூட்டி கடை மணை பூட்டி - உஞ்ஞை:56/195
புனை மலர் பிணையல் புரவலன் சூட்டி
இன மடல் பெண்ணை ஈர்ம் தோடு திருத்தி - இலாவாண:16/1,2
தெரி மலர் கோதை திகழ சூட்டி
அரி மலர் கண்ணி நின் அகத்தனள் ஆக - இலாவாண:16/94,95
கைவினை கண்ணி கவின் பெற சூட்டி
தகை மலர் பொன் தார் வகை பெற அணிந்து - மகத:5/62,63
மதி முகம் சுடர மன்னவன் சூட்டி
திரு மணி பந்தருள் திரு கடம் கழிப்பி - மகத:22/276,277
TOP
சூட்டிய (3)
மண் ஆர் மார்பன் மாதரை சூட்டிய
காமர் பிணையல் கதுப்பு அணி கனற்ற - இலாவாண:16/13,14
பெருமகன் சூட்டிய பிணையல் அல்லது - வத்தவ:15/13
சேடுறு தாமம் சிறந்தோன் சூட்டிய
வாடுறு பிணையலொடு வகை பெற வளாஅய் - வத்தவ:16/16,17
TOP
சூட்டில் (1)
சூழ் பொன் சூட்டில் சுடர் மணி புளகத்து - உஞ்ஞை:48/19
TOP
சூட்டின (1)
வண்ணம் சூட்டின கண்ணியில் கிடந்த - உஞ்ஞை:38/307
TOP
சூட்டினர் (1)
அணிபெற கிடந்த அம் பொன் சூட்டினர்
சூடுறு பொன் வினை சுவணர் புனைந்த - இலாவாண:7/18,19
TOP
சூட்டினன் (1)
புனை மலர் பிணையல் சூட்டினன் புகன்று என் - இலாவாண:15/148
TOP
சூட்டினை (1)
பிணையல் சூட்டினை பெருந்தகை மற்று இது - வத்தவ:15/57
TOP
சூட்டு (12)
வதுவை சூட்டு அணி வண்டு வாய் திறப்பவும் - உஞ்ஞை:33/75
சுருள் முறை வகுத்து சூட்டு புரி உறீஇ - உஞ்ஞை:34/191
கண்ணி நெற்றி வெண் சூட்டு ஏற்றி - உஞ்ஞை:39/20
தோட்டார் திரு நுதல் சூட்டு அயல் சுடரும் - உஞ்ஞை:40/101
நெய் சூட்டு இயன்ற சிறு பல் உண்டி - உஞ்ஞை:40/130
முல்லை அம் கோதை சில் சூட்டு அணிந்து - உஞ்ஞை:42/149
மல்லிகை நறும் சூட்டு வெள்ளிதின் விளங்க அதன் - உஞ்ஞை:46/233
காட்டு_கோழி சூட்டு தலை சேவல் - உஞ்ஞை:52/62
நெய் சூட்டு அமைந்த சிற்றூண் பந்தரோடு - இலாவாண:2/81
சூட்டு நலம் புனைந்து சுடர் நுதற்கு ஈய - இலாவாண:15/134
சூட்டு முகம் திருத்தி வேட்டு நறு நீரின் - மகத:14/108
மங்கல நறும் சூட்டு மரபின் அணிந்து - மகத:22/211
TOP
சூட்டும் (3)
சுண்ணமும் சூட்டும் சுவை நறும் தேறலும் - உஞ்ஞை:37/268
மல்லிகை சூட்டும் நெல் வளர் கதிரும் - உஞ்ஞை:42/68
ஆரமும் சூட்டும் நேர் துணை குழிசியும் - உஞ்ஞை:58/46
TOP
சூட்டொடு (1)
சூட்டொடு விரைஇ சுற்றுபு முடித்து - இலாவாண:5/175
TOP
சூட (1)
வள் இதழ் கண்ணி வளம் பெற சூட
அரும்பினும் போதினும் பெரும் தண் மலரினும் - மகத:9/21,22
TOP
சூடக (2)
சூடக முன்கை சுடர் குழை மகளிரொடு - மகத:6/91
சூடக முன்கையில் சுழன்று மாறு அடித்தும் - வத்தவ:12/60
TOP
சூடகத்து (2)
சூடகத்து ஏற்ற சுடர் ஒளி பவளமொடு - மகத:22/234
பாடகத்து அரவமும் சூடகத்து ஓசையும் - வத்தவ:12/210
TOP
சூடகம் (1)
சூடகம் ஏற்றியும் பாடகம் திருத்தியும் - வத்தவ:12/118
TOP
சூடி (1)
துணை மலர் பிணையல் தோன்ற சூடி
சுடர் மணி ஆழி படை பயின்று பலித்த - மகத:9/134,135
TOP
சூடியும் (1)
சுனை பூ குற்றும் சுள்ளி சூடியும்
சினை பூ அணிந்தும் கொடி பூ கொய்தும் - இலாவாண:12/129,130
TOP
சூடு (2)
கூற்று தொழில் இளையர் குடர் சூடு மருப்பின - இலாவாண:2/189
சூடு அமை சாந்தும் ஈடு அறிந்து புனைந்த - மகத:9/44
TOP
சூடுகம் (1)
பாவையும் யானும் பண்புளி சூடுகம்
ஈ-மின் ஐய என்று இரந்தனள் நீட்ட - இலாவாண:15/112,113
TOP
சூடுதல் (1)
சூடுதல் தேற்றாள் சுற்றுபு திரியும் - இலாவாண:15/136
TOP
சூடுறு (4)
சூடுறு பாண்டிலில் சுருங்கிய கதிர்த்தாய் - உஞ்ஞை:33/41
சூடுறு பொன் வினை சுவணர் புனைந்த - இலாவாண:7/19
பாடகம் சுமந்த சூடுறு சேவடி - மகத:8/14
சூடுறு கிண்கிணி பாடு பெயர்ந்து அரற்ற - வத்தவ:8/18
TOP
சூது (2)
ஓது சாலையும் சூது ஆடு கழகமும் - இலாவாண:7/132
சூது பொரு கழகத்து அருகலும் தோம்_இல் - இலாவாண:8/62
TOP
சூர் (3)
வெம் சூர் தடிந்த அஞ்சுவரு சீற்றத்து - உஞ்ஞை:42/230
சூர் உறு மஞ்ஞையின் சோர்ந்த கூந்தலர் - உஞ்ஞை:44/22
சுனை வாய் நிறைக்கும் சூர் உடை சிலம்பின் - உஞ்ஞை:50/40
TOP
சூரல் (2)
தென்மலை பிறந்த பொன் மருள் சூரல்
கரும் கண்-தோறும் பசும்பொன் ஏற்றி - உஞ்ஞை:40/375,376
கரும் கண் சூரல் செங்கோல் பிடித்த - மகத:5/99
TOP
சூரலும் (2)
வள்ளியும் வகுந்தும் சுள்ளியும் சூரலும்
வழை சேர் வாழையும் கழை சேர் கானமும் - உஞ்ஞை:46/276,277
சுள்ளியும் சூரலும் வள்ளியும் மரலும் - உஞ்ஞை:50/27
TOP
சூரவரன் (1)
சுருங்கா கடும் திறல் சூரவரன் எனும் - மகத:26/80
TOP
சூரன் (1)
சூரன் இவன் என சொல்லும் குறிப்பினள் - உஞ்ஞை:40/329
TOP
சூரனும் (1)
தேம் தார் சூரனும் திறல் பிரமசேனனும் - மகத:27/126
TOP
சூல் (2)
நாகு சூல் நீங்கிய சேதா தொகுத்து - உஞ்ஞை:39/64
பெரும் சூல் பெண்டிர் பேர் அழல் நோக்கி - உஞ்ஞை:43/143
TOP
சூழ் (15)
சூழ் பொன் சூட்டில் சுடர் மணி புளகத்து - உஞ்ஞை:48/19
சுர முதல் அடைந்த சூழ் அகன் புரிசை - உஞ்ஞை:52/7
தாழின் தாழ்ந்து சூழின் சூழ் இயல் - உஞ்ஞை:53/102
கோள் இமிழ் கனலி சூழ் திசை பொத்தி - உஞ்ஞை:56/12
தோழியை காணாள் சூழ்_வளி சுழற்சியள் - இலாவாண:18/74
சூழ் வளை முன்கை சுடர் குழை மாதர் - இலாவாண:19/32
கல் சூழ் புல் அதர் மெல் அடி ஒதுங்கி - இலாவாண:20/46
சுடு கதிர் அணிந்த சூழ் கதிர் செல்வன் - மகத:3/98
சூழ் வினையாளர்க்கு தோன்றல் சொல்லும் - மகத:10/20
சூழ்ச்சியும் சூழ் பொருள் துணிவும் எல்லாம் - மகத:25/7
சூழ் வளை தோளி காம நல் கடலில் - வத்தவ:13/83
சூழ் வளி சுழற்ற ஆழ் கயத்து அழுந்தினன் - நரவாண:1/24
மஞ்சு சூழ் நெடு வரை விஞ்சத்து அடவி - நரவாண:3/52
புடை சூழ் நடுவண் பொன் மலர் காவின் - நரவாண:8/44
இடை சூழ் அருவி ஏந்து வரை சென்னி - நரவாண:8/45
TOP
சூழ்_வளி (1)
தோழியை காணாள் சூழ்_வளி சுழற்சியள் - இலாவாண:18/74
TOP
சூழ்க (1)
வாழ்வோர் உளர் எனில் சூழ்க தன் வினை என - உஞ்ஞை:36/63
TOP
சூழ்ச்சி (28)
யூகி சூழ்ந்த உரைப்ப_அரும் சூழ்ச்சி
வாய் திறந்து இன்று இது கோமகற்கு உரை என - உஞ்ஞை:43/6,7
சூழ்ச்சி வெள்ளத்து ஆழ்ச்சி எய்தி - உஞ்ஞை:43/13
திருமண சூழ்ச்சி எழுமைத்து ஆயினும் - உஞ்ஞை:47/227
சுடுதற்கு ஒவ்வா சூழ்ச்சி அண்ணலை - இலாவாண:9/258
ஏழ்ச்சி வேண்டும் சூழ்ச்சி கொடுக்க என - இலாவாண:11/180
சுள்ளி வெண் சூழ்ச்சி சுரும்பு உண தொடுத்து - இலாவாண:12/108
மறுதரவு உடைய மாய சூழ்ச்சி
உறுதியொடு ஒளித்தனர் உள்ளியது முடித்து என் - இலாவாண:17/196,197
ஆகியது அறியும் அரும் பொருள் சூழ்ச்சி
யூகியின் அல்லதை உதயணகுமரன் - இலாவாண:19/18,19
அவம்_இல் சூழ்ச்சி தவ முது_மகனொடு - இலாவாண:20/69
அவம்_இல் சூழ்ச்சி தவறு_இல் தோழன் - இலாவாண:20/104
மட_மகள் கொண்ட இடன் அறி சூழ்ச்சி
யூகி உளன் எனின் இகழாள் இவன் என - மகத:1/16,17
அகன்று பெயர்ந்து அழிக்கும் அரும் பெறல் சூழ்ச்சி
நவின்ற தோழனொடு பயம் பட வலித்து - மகத:1/31,32
போகிய பொழுதின் ஆகிய சூழ்ச்சி
அரும்_பெறல் தோழரை பொருந்தலும் பொருக்கென - மகத:7/2,3
மாண்ட சூழ்ச்சி மந்திர அமைச்சர் - மகத:7/59
மாண்ட சூழ்ச்சி மனத்தே மறுகி - மகத:7/87
அரும்_பெறல் சூழ்ச்சி அவனையும் பின்னிணை - மகத:9/124
அரும் திறல் சூழ்ச்சி அடல் வேல் தானை - மகத:17/20
வழு_இல் சூழ்ச்சி வயந்தககுமரனை - மகத:17/183
வஞ்ச சூழ்ச்சி வருடகாரன் - மகத:25/166
அகலாது ஆகிய அரும்_பெறல் சூழ்ச்சி
சகுனி கௌசிகன் சார்ச்சியை முன்னே - மகத:26/46,47
வாய்த்த சூழ்ச்சி வருடகாரனொடு - மகத:27/66
வருடகாரன் பொருள் தெரி சூழ்ச்சி
பொய்யாது முடித்தலின் மெய்யுற தழீஇ - வத்தவ:1/3,4
பயன் தெரி சூழ்ச்சி பதின்மர் இளையருள் - வத்தவ:4/35
ஆற்றல் சூழ்ச்சி அருமறை உண்டு என - வத்தவ:6/71
வாய் மொழி சூழ்ச்சி தோழற்கு உணர்த்தலின் - வத்தவ:7/153
ஊறு இல் சூழ்ச்சி யூகந்தராய - வத்தவ:7/186
ஆகிய அறிவின் அரும்_பெறல் சூழ்ச்சி
யூகியின் அன்றோ என உரைப்போரும் - நரவாண:6/133,134
அவம்_இல் சூழ்ச்சி ஆய் தார் அண்ணலும் - நரவாண:8/86
TOP
சூழ்ச்சிக்கு (1)
எண்ணிய சூழ்ச்சிக்கு இடையூறு ஆம் என - இலாவாண:19/47
TOP
சூழ்ச்சியது (1)
அரிய தோழன் சூழ்ச்சியது அமைதியும் - உஞ்ஞை:46/128
TOP
சூழ்ச்சியர் (3)
மேவனம் என்னும் சூழ்ச்சியர் ஆகி - உஞ்ஞை:35/43
தெரிவுறு சூழ்ச்சியர் செய்வதை அறியார் - உஞ்ஞை:56/1
சுற்றம் ஆக்கும் சூழ்ச்சியர் ஆகி - மகத:4/99
TOP
சூழ்ச்சியன் (6)
செய்வது துணியும் சிந்தை சூழ்ச்சியன்
வெவ் வழி நிலம் மிசை வில்லேப்பாட்டிடை - உஞ்ஞை:53/67,68
இன் உயிர் துறக்கும் என்று எண்ண_அரும் சூழ்ச்சியன்
உற்றதை உணரும் ஒற்றாள் இளையனை - உஞ்ஞை:56/168,169
யாப்பு உள்ளுறுத்த அமைதி சூழ்ச்சியன்
செறிந்த செய்கை அறிந்து மனத்து அடக்கி - இலாவாண:8/92,93
நல் நகர் வௌவும் இன்னா சூழ்ச்சியன்
என் வகை அறிந்த நன் பொருளாளன் - மகத:1/12,13
உள் பொருள் வலிக்கும் உறுதி சூழ்ச்சியன்
மல்லல் தானை மற பெரும் சீற்றத்து - மகத:21/20,21
கடன் நமக்கு அது என இடனுறு சூழ்ச்சியன்
தாமே சென்று தம் வினை முடிக்கும் - மகத:23/19,20
TOP
சூழ்ச்சியில் (1)
செறிந்த சூழ்ச்சியில் செய்வது கூறலும் - மகத:26/2
TOP
சூழ்ச்சியின் (4)
முதிர் மதி சூழ்ச்சியின் முற்ற நாடி - உஞ்ஞை:34/85
சுற்றம் ஆக சூழ்ச்சியின் விளக்கி - உஞ்ஞை:37/59
பெண்-பால் சூழ்ச்சியின் பிழைப்பு பல எனும் - மகத:14/31
வஞ்ச சூழ்ச்சியின் வணக்கின் அல்லதை - மகத:20/161
TOP
சூழ்ச்சியும் (6)
கரும கிடக்கையும் கலங்கா சூழ்ச்சியும்
மறை புறப்படாமையும் அறையுண்ணாமையும் - உஞ்ஞை:46/117,118
அரிமான் ஏறும் நரி மான் சூழ்ச்சியும்
காட்டமொடு எனையவை பிறவும் - உஞ்ஞை:54/29,30
ஏழ்ச்சியும் இறுதியும் சூழ்ச்சியும் உணர - உஞ்ஞை:58/58
மடனும் அன்பும் மாசு_இல் சூழ்ச்சியும்
இடன் உடை அறிவும் என்று இவை பிறவும் - மகத:10/69,70
சூழ்ச்சியும் சூழ் பொருள் துணிவும் எல்லாம் - மகத:25/7
ஓலை மாற்றமும் சூழ்ச்சியும் துணிவும் - வத்தவ:8/49
TOP
சூழ்ச்சியுள் (4)
தெரிவுறு சூழ்ச்சியுள் இருவரும் எண்ணி - உஞ்ஞை:35/62
கையிகந்து பெருகிய செய்கை சூழ்ச்சியுள்
பொய் நிலம் அமைத்த பொறி அமை மாடத்து - இலாவாண:17/67,68
மந்திர சூழ்ச்சியுள் வெம் திறல் வீரன் - மகத:8/90
வரையும் வாயில் தெரியும் சூழ்ச்சியுள்
ஈர்_ஐம்பதின்மரை இகல் கெட நூறி - மகத:21/8,9
TOP
சூழ்ச்சியொடு (2)
தேசத்து அமைதியும் மாசு_இல் சூழ்ச்சியொடு
எண் வகை நிறைந்த நன் மகற்கு அல்லது - உஞ்ஞை:36/91,92
கருத்தில் சூழ்ச்சியொடு கானத்து அக-வயின் - இலாவாண:1/50
TOP
சூழ்ச்சியோடு (1)
ஆக்கம் உண்டு எனும் சூழ்ச்சியோடு ஒருபால் - மகத:18/7
TOP
சூழ்ந்த (12)
விரி_நூல் அந்தணர் வெண்_மணை சூழ்ந்த
திரு மணி கட்டில் திறத்துளி எய்தி - உஞ்ஞை:34/23,24
முத்து வாய் சூழ்ந்த பத்திக்கோடு அசைஇ - உஞ்ஞை:34/215
கோல் வளை மகளிர் கொட்டையை சூழ்ந்த
அல்லியும் இதழும் போல நண்ணி - உஞ்ஞை:42/14,15
யூகி சூழ்ந்த உரைப்ப_அரும் சூழ்ச்சி - உஞ்ஞை:43/6
நூல் மேல் சூழ்ந்த நுனிப்பில் வழாமை - உஞ்ஞை:43/22
வெண் நரை சூழ்ந்த தண்ணுமை பறை தலை - உஞ்ஞை:46/317
நிலா வெண் மாடமொடு உள் அறை சூழ்ந்த
உலாவும் மண்டபத்து உலாவுதல் இன்றி - உஞ்ஞை:47/46,47
பெரு மலை சூழ்ந்த அரிது இயல் அமைவோடு - உஞ்ஞை:58/104
இறைவன் பிரிக்கும் அறிவில் சூழ்ந்த
படிவ உருவம் பட்டாங்கு எய்தி - இலாவாண:8/21,22
தெரி மதி அமைச்சனொடு திறவிதின் சூழ்ந்த
அரு மதி திண் கோள் அறம் புரி மகள் என் - இலாவாண:9/266,267
உறுநர் சூழ்ந்த ஒருபால் ஒடுங்கி - இலாவாண:19/216
அறிய சூழ்ந்த குறியினர் ஆகி - மகத:17/212
TOP
சூழ்ந்தது (1)
நும்மின் ஆதல் எம்மில் சூழ்ந்தது
அறிய கூறினேன் யான் என அவளொடும் - இலாவாண:9/243,244
TOP
சூழ்ந்து (11)
நீதி மருங்கின் நினைவு அவன் சூழ்ந்து
யாது எனப்படினும் படுக இவன் பணி - உஞ்ஞை:34/71,72
எழு துகள் சூழ்ந்து மழுகுபு மாழ்கி - உஞ்ஞை:38/14
பொரு படை இளையர் புகன்றனர் சூழ்ந்து
செரு அடு செம்மலை செல்லல் ஓம்பி - உஞ்ஞை:57/1,2
பரிசனம் சூழ்ந்து பரிவு நன்கு ஓம்ப - உஞ்ஞை:57/105
சுருக்கம் இன்றி சூழ்ந்து உடன் திரியா - இலாவாண:4/7
ஒரு பொருள் ஒழியாது அவளொடும் சூழ்ந்து
மறைப்பு இடன் அமைத்து புறத்தோர் முன்னர் - இலாவாண:9/249,250
வெம் புகை சூழ்ந்து மேல் எரி ஊர - இலாவாண:19/72
யாங்கு இனிது இருத்தும் என்று அறிவினில் சூழ்ந்து
பற்றார் ஆயினும் உற்றார் ஆயினும் - இலாவாண:20/99,100
வரை தாழ் தேனொடு உகாஅய் விரை சூழ்ந்து
மணியும் முத்தும் அணி பெற வரன்றி - மகத:2/32,33
அளத்தும் நாம் என துளக்கு இலள் சூழ்ந்து
பலர் புகழ் மார்பன் பயின்ற விச்சைகள் - மகத:14/170,171
தகை கொள் வேந்தன் தமரொடு சூழ்ந்து
செம் கடை வேல் கண் வெள் வளை பணை தோள் - மகத:21/17,18
TOP
சூழ்பு (1)
ஊர்கோள் ஏய்ப்ப சூழ்பு உடன் வளைஇய - உஞ்ஞை:46/234
TOP
சூழ்வது (1)
தோழனும் தானும் சூழ்வது துணியா - இலாவாண:9/33
TOP
சூழ்வர (3)
வைகு புலர் விடியல் வயவர் சூழ்வர
பெரு நல தானை பிரச்சோதனன் தமர் - உஞ்ஞை:56/149,150
கூறை கீறி சூழ்வர உடீஇ - வத்தவ:14/66
ஏழை மாதரை சூழ்வர நின்ற - வத்தவ:14/73
TOP
சூழ்வனர் (2)
தோழனும் தமரும் சூழ்வனர் குழீஇ - இலாவாண:9/255
தோழியர் எல்லாம் சூழ்வனர் ஏந்த - வத்தவ:8/17
TOP
சூழ்வனள் (1)
வாழ்வது வலியாள் சூழ்வனள் இருப்ப - மகத:21/43
TOP
சூழ்விடை (1)
தாழ்விடை தாங்கி சூழ்விடை துளங்கா - மகத:1/43
TOP
சூழ்வினை (2)
சூழ்வினை அறுத்த சொல்_அரும் கடு நோய் - உஞ்ஞை:33/202
தோழற்கு உணர்த்தும் சூழ்வினை தொடங்கி - இலாவாண:10/84
TOP
சூழ (31)
தரும தருக்கர் தற்புறம் சூழ
பரிபு மெலிந்த படிவ பண்டிதன் - உஞ்ஞை:36/229,230
சுற்றுபு சூழ முற்றத்து ஏறி - உஞ்ஞை:38/134
தோழியர் சூழ ஊழூழ் ஒல்கி - உஞ்ஞை:42/121
பெரு மூதாட்டியர் பேணுவனர் சூழ
திருமாதேவி அரு நகர் உற்ற - உஞ்ஞை:47/183,184
முள் அரை இலவம் ஒள் எரி சூழ
பொங்கு புகை கழுமிய பூம் பொழில் படாஅன் - உஞ்ஞை:56/214,215
பல் மாண் படைஞர் பரந்தனர் சூழ
மலிந்து அவண் ஏறி வத்தவர் பெருமகன் - உஞ்ஞை:56/280,281
விறல் படை சூழ விளங்கு மணி பைம் பூண் - உஞ்ஞை:58/1
பணை எருத்து ஏற்றி பல்லவர் சூழ
தேர் திரி மறுகு-தோறு ஊர் முழுது அறிய - இலாவாண:2/38,39
கன்னி மகளிர் துன்னுவனர் சூழ
நான்முக கடவுளொடு தாள் முதல் தானம் - இலாவாண:3/57,58
மன்ன குமரன் தன்னோர் சூழ
உருத்த மன்னர் ஊர்ச்சி வேழத்து - இலாவாண:4/106,107
நிழல் திகழ் தெள் நீர் நீலம் சூழ
பறவை தொழுதி பக்கம் நீக்கி - இலாவாண:5/44,45
பொலிவு உடை உரிமையொடு பரிசனம் சூழ
புலி முக மாடம் மலிர ஏறி - இலாவாண:9/67,68
மை வரை மருங்கின் மட பிடி சூழ
தெய்வ யானை நின்றது நோக்கி - இலாவாண:11/110,111
துகள் அணி இரும் பிடி துன்னுபு சூழ
அம் தண் மராஅத்த பைம் தளிர் வாங்கி - இலாவாண:12/140,141
யாவதும் கொடாஅள் அறிவில் சூழ
விம்முறு நிலைமை நோக்கி துன்னிய - இலாவாண:17/155,156
அழல் புகை சூழ அஞ்சுவனள் நடுங்கி - இலாவாண:19/34
பல் குடி தொல்லூர் புல்லுபு சூழ
உயர் மிசை உலகின் உரு கெழு பல் மீன் - மகத:3/11,12
கன்னி ஆயம் துன்னுபு சூழ
மதில் புறம் கவைஇய புது பூம் காவில் - மகத:5/28,29
பொலம் தொடி மகளிர் பொலிவொடு சூழ
வந்த பொழுதில் கதுமென நோக்கிய - மகத:6/131,132
ஆயம் சூழ அமளியுள் ஏறி - மகத:7/76
தோழர் சூழ வேழ மேல்கொண்டு - மகத:18/80
உதயணகுமரன் உற்றோர் சூழ
விசய முரசொடு வியல் நகர் அறிய - மகத:20/126,127
பெரும் படை தலைவரும் பிறரும் சூழ
பூரண குண்டலன் என்னும் அமைச்சனொடு - மகத:26/83,84
நால் பெரும் படையும் நம் புறம் சூழ
மேல் படை நெருங்கு-காலை மாற்றவன் - மகத:27/28,29
தாங்க_அரும் காதல் தம்பியர் சூழ
பூம் கழல் தோழர் புடைபுடை ஆர்தர - மகத:27/140,141
நல் நாள் கொண்டு துன்னினர் சூழ
வெம் கண் யானை மிசை வெண் குடை கவிப்ப - வத்தவ:1/14,15
ஆயம் சூழ அரசனை வணங்கி - வத்தவ:5/38
தானையும் சூழ தானே அணிந்து தன் - வத்தவ:9/8
கிளை அல் மன்னர் கேளிர் சூழ
தளை அகப்பட்ட-காலையும் தளை அவிழ் - நரவாண:3/5,6
தெரி மாணாளர் திறவதின் சூழ
அரிமா சுமந்த ஆசனத்து இருந்து - நரவாண:7/75,76
நன்னர் அமைந்த நால்வரும் சூழ
தளர் நடை காலத்து இளமை இகந்து - நரவாண:8/37,38
TOP
சூழா (1)
துணை நல தோழர் துன்னினர் சூழா
மண்ணு நீராட்டின் மலைந்தனர் ஆகி - இலாவாண:5/52,53
TOP
சூழி (1)
ஓடைக்கு அமைந்த சூழி சுடர் நுதல் - உஞ்ஞை:48/24
TOP
சூழியின் (1)
சூழியின் பொலிந்தன பாழியில் பயின்றன - மகத:26/71
TOP
சூழியும் (1)
சூழியும் ஓடையும் சுடர் மணி கோவையும் - இலாவாண:2/200
TOP
சூழின் (1)
தாழின் தாழ்ந்து சூழின் சூழ் இயல் - உஞ்ஞை:53/102
TOP
சூழினும் (1)
மழைத்துளி படினும் வான் துகள் சூழினும்
விலக்கி தவிர்க்கும் வில் தொழில் உள்ளிட்டு - உஞ்ஞை:37/49,50
TOP
சூள் (1)
கடும் சூள் அறைஇ காவலன் கேட்ப - நரவாண:1/227
TOP
சூளாமணியொடு (1)
சூளாமணியொடு துளங்கு கடை துயல்வரும் - இலாவாண:3/71
TOP
சூளுறு (1)
சூளுறு கிளவியில் தொழுதனள் கேட்ப - மகத:14/185
TOP
சூறை (2)
சூறை கடு வளி பாற பறந்து என - மகத:27/74
சூறை வளியிடை சுழல் இலை போல - வத்தவ:12/200
TOP
|
|
|