<<முந்திய பக்கம்

பெருங்கதை - தொடரடைவு

ஏ - முதல் சொற்கள்
ஏ 2
ஏஎய் 1
ஏஎர் 3
ஏஎல் 1
ஏக 8
ஏகல் 1
ஏகவல்லி 2
ஏகி 2
ஏகினும் 2
ஏகு 1
ஏகு-மின் 1
ஏகுதும் 1
ஏங்க 1
ஏங்கவும் 1
ஏங்கி 1
ஏங்கிய 1
ஏசா 1
ஏசினன் 1
ஏசுவது 2
ஏட்டினும் 1
ஏட்டு 4
ஏடு 2
ஏண் 2
ஏணி 4
ஏணியும் 1
ஏத்த 15
ஏத்தல் 1
ஏத்தி 15
ஏத்தியலாளரும் 1
ஏத்தினர் 3
ஏத்தும் 2
ஏத்துவனர் 2
ஏதம் 28
ஏதம்_இல் 4
ஏதமாம்-கொல் 1
ஏதில் 5
ஏதிலன் 2
ஏதிலென் 1
ஏதிலை 1
ஏதின்மை 1
ஏது 4
ஏது-கொல் 1
ஏதுவாக 1
ஏந்த 3
ஏந்தல் 2
ஏந்தலும் 2
ஏந்தி 20
ஏந்திய 10
ஏந்தினள் 2
ஏந்து 33
ஏந்துவனர் 1
ஏப்பெறு 1
ஏம 16
ஏமம் 10
ஏமாக்கும் 1
ஏமாப்பு 1
ஏமுறவு 1
ஏமுறு 1
ஏய்ப்ப 21
ஏய்பு 1
ஏய 3
ஏயது 1
ஏயதை 1
ஏயர் 26
ஏயர்க்கு 2
ஏயற்கு 1
ஏயினன் 3
ஏர் 54
ஏர்தர 1
ஏர்தரும் 1
ஏர்ப்பு 1
ஏரி 1
ஏரும் 1
ஏல் 1
ஏல்வு 1
ஏலத்து 1
ஏலம் 1
ஏலமும் 3
ஏலாது 2
ஏவ 2
ஏவல் 7
ஏவலின் 4
ஏவலும் 1
ஏவற்கு 1
ஏவா 1
ஏவி 1
ஏவினேன் 1
ஏழ் 7
ஏழ்ச்சி 2
ஏழ்ச்சியும் 2
ஏழாயிரவர் 2
ஏழேழ் 1
ஏழை 1
ஏழையம் 1
ஏழையர் 1
ஏழையை 1
ஏற்கும் 4
ஏற்ப 26
ஏற்பவை 1
ஏற்பன 1
ஏற்பும் 1
ஏற்போர்க்கு 1
ஏற்ற 34
ஏற்றம் 3
ஏற்றமும் 1
ஏற்றல் 4
ஏற்றலின் 1
ஏற்றலும் 3
ஏற்றனன் 2
ஏற்றி 46
ஏற்றிய 3
ஏற்றியும் 4
ஏற்றினமால் 1
ஏற்றினரால் 1
ஏற்றினள் 1
ஏற்றினன் 1
ஏற்று 25
ஏற்று_அரு 1
ஏற்றுக 1
ஏற்றும் 4
ஏற்றுவனள் 1
ஏற்றோர் 3
ஏற 7
ஏறல் 2
ஏறலும் 3
ஏறா 2
ஏறி 52
ஏறிய 12
ஏறிய-ஞான்று 1
ஏறின் 2
ஏறினம் 1
ஏறினர் 2
ஏறினள் 2
ஏறினனால் 2
ஏறினும் 2
ஏறு 10
ஏறுக 3
ஏறுண்டு 1
ஏறுதற்கு 1
ஏறுப 1
ஏறும் 11
ஏறொடு 1
ஏன்ற 1
ஏனத்து 1
ஏனம் 1
ஏனமொடு 1
ஏனல் 2
ஏனலும் 2
ஏனவை 1
ஏனை 14
ஏனைய 7
ஏனையது 1
ஏனையர் 1
ஏனையோர் 1
ஏனோர் 6
ஏனோர்-மாட்டு 1
ஏனோர்க்கு 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
    ஏ (2)
ஒண் நுதல் மாதர் கண் ஏ பெற்ற - உஞ்ஞை:36/323
ஏ என அஞ்சும் சாயல் நோக்கி - நரவாண:8/65

 TOP
 
    ஏஎய் (1)
எயில் மூதாளரை வயின்வயின் ஏஎய்
   வாயில் சுட்டி வள நகர் அறிய - உஞ்ஞை:36/37,38

 TOP
 
    ஏஎர் (3)
ஏனைய பிறவும் ஏஎர் உடையன - உஞ்ஞை:42/87
நின்-கண் கிடந்த நீர் அணி ஏஎர்
   என் கண் கவற்றிற்று என்றலோடு இயலி - மகத:9/102,103
ஏம செவ்வி ஏஎர் நுகரும் - மகத:14/91

 TOP
 
    ஏஎல் (1)
ஏஎல் பெற்று எழுந்து இருந்தனன் உரைக்க என - இலாவாண:9/158

 TOP
 
    ஏக (8)
ஏக விடு_கொடி எழில் தோள் எழுதி - உஞ்ஞை:34/201
ஏக திகிரி இரு நிலத்து இறைவன் - உஞ்ஞை:48/84
ஏக உத்தரியம் இடைச்சுவல் வருத்த - இலாவாண:4/121
இன மணி பூணும் ஏக வட்டமும் - இலாவாண:5/139
ஏக செங்கோல் ஏயர் பெருமகன் - இலாவாண:8/3
ஏக செய்த பின் ஆகு பொருள் நாடி - இலாவாண:8/130
ஏக வல்லியும் ஏற்பன அணிந்து - மகத:9/67
ஏக வாரம் இலங்கு கழுத்தினன் - நரவாண:2/26

 TOP
 
    ஏகல் (1)
ஏகல் ஆற்றீர் என் உற்றீர் என - நரவாண:2/35

 TOP
 
    ஏகவல்லி (2)
இடை முலை கிடந்த ஏகவல்லி
   முற்றுறு கழங்கொடு முதல் அகடு பொருந்தி - உஞ்ஞை:46/211,212
இடைப்படீஇ பிறழும் ஏகவல்லி
   அணி கலை புனைந்த அரசிலை பொன் அடர் - இலாவாண:7/22,23

 TOP
 
    ஏகி (2)
விடுத்தவள் ஏகி அடுத்ததும் உரைத்ததும் - வத்தவ:13/182
ஊழ் வினை வகையின் உடம்பு இட்டு ஏகி
   நன்றி இல் விலங்கின் பிறவி நயந்து நீ - நரவாண:3/96,97

 TOP
 
    ஏகினும் (2)
வாசவதத்தையை வலிதில் கொண்டு ஏகினும்
   தீது நிகழினும் ஏதம் இல் என - உஞ்ஞை:47/187,188
வேறுபட்டு ஏகினும் கூறுபட்டு இயலா - இலாவாண:8/13

 TOP
 
    ஏகு (1)
ஏகு என உய்த்து தம் இரு நலம் காட்டி - உஞ்ஞை:40/339

 TOP
 
    ஏகு-மின் (1)
இன்னே போதும் ஏகு-மின் விரைந்து என - மகத:1/88

 TOP
 
    ஏகுதும் (1)
இடத்து இட்டு ஏகுதும் எனினே எங்கும் - உஞ்ஞை:49/24

 TOP
 
    ஏங்க (1)
பெய் வளை தோளி வெய்து உயிர்த்து ஏங்க
   குலம் கெழு குருசில் கொடி கை மாறி - உஞ்ஞை:56/32,33

 TOP
 
    ஏங்கவும் (1)
பரிவுறு நெஞ்சினர் பையாந்து ஏங்கவும்
   கல் மிசை மருங்கில் மின் மிளிர்ந்தது போல் - உஞ்ஞை:46/250,251

 TOP
 
    ஏங்கி (1)
தான தீயிடை தான் உழன்று ஏங்கி
   காணல் செல்லாள் காஞ்சனை புலம்பி - இலாவாண:18/87,88

 TOP
 
    ஏங்கிய (1)
ஏங்கிய நினைவுடன் இனைந்து அழுது உகுத்த - வத்தவ:14/140

 TOP
 
    ஏசா (1)
பேசிய முறைமையின் ஏசா நல் எழில் - வத்தவ:12/92

 TOP
 
    ஏசினன் (1)
ஏசினன்
   நவில்-தொறும் இனிய ஞானம் போல - நரவாண:7/147,148

 TOP
 
    ஏசுவது (2)
ஏசுவது இல்லா எழில்படு காரிகை - உஞ்ஞை:43/36
ஏசுவது இல்லா வாசவதத்தையும் - இலாவாண:7/120

 TOP
 
    ஏட்டினும் (1)
ஏட்டினும் கிடையினும் மூட்டு அமை கிழியினும் - இலாவாண:2/141

 TOP
 
    ஏட்டு (4)
வெள்_ஏட்டு அங்கண் வித்தகம் எழுதிய - உஞ்ஞை:32/69
ஏட்டு வினை கணக்கன் ஈடு அறிந்து ஒற்றிய - வத்தவ:10/95
கோட்டிய முடியன் ஏட்டு பொறி நீக்கி - வத்தவ:10/109
ஏட்டு மிசை ஏற்றி இயல்பினின் யாப்புறுத்து - நரவாண:8/17

 TOP
 
    ஏடு (2)
ஏடு கோளாளர் எனையர் என்று எண்ணி - உஞ்ஞை:37/153
இறு முனை மருங்கின் ஏடு பட திருகி - மகத:27/176

 TOP
 
    ஏண் (2)
தூண் மிசைக்கு ஏற்ப ஏண் முள் அழுத்திய - இலாவாண:6/58
எண்ணியது உண்ணும் ஏண் தொழில் அறாஅ - வத்தவ:3/44

 TOP
 
    ஏணி (4)
நெடு நீர் மாடத்து ஏணி ஏறி - உஞ்ஞை:40/156
நகர் காண் ஏணி விரைவனர் ஏறினர் - இலாவாண:7/47
நீள் நிலை நெடு மதில் ஏணி சாத்தி - மகத:24/138
இமையோர் உலகிற்கு ஏணி ஆகிய - வத்தவ:3/70

 TOP
 
    ஏணியும் (1)
நிலை கால் ஏணியும் தலைச்சிறந்து ஏறி - மகத:20/150

 TOP
 
    ஏத்த (15)
ஏனை தாயரும் ஆனாது ஏத்த
   வத்தவர் பெருமகன் வல்ல வீணை - உஞ்ஞை:34/180,181
தொல் இசையாளர் சொல் எடுத்து ஏத்த
   புகழ் ஆர்வு எய்திய திகழ் முடி சென்னியன் - உஞ்ஞை:37/148,149
புது துணை மகளிர் ஒதுக்கு நடை ஏத்த
   காஞ்சனமாலை பூம் புறத்து அசைஇ - உஞ்ஞை:58/72,73
கலி கெழு மூதூர் கைதொழுது ஏத்த
   வலி கெழு நோன் தாள் வந்தவர் இறைவன் - இலாவாண:4/3,4
தொழுத கையர் புகுதுக என்று ஏத்த
   வாயில் புக்கு கோயில் வரைப்பில் - மகத:13/72,73
காமர் சுற்றம் கை தொழுது ஏத்த
   தாமரை செம் கண் தகை பெற கழீஇ - வத்தவ:7/125,126
விடுத்தனென் போகி வியன் உலகு ஏத்த
   வடு தீர் மா தவம் புரிவேன் மற்று என - வத்தவ:17/6,7
வேட்டு அவள் புணர்ந்து வியன் உலகு ஏத்த
   அன்பு நெகிழ்ந்து அணைஇ இன் சுவை அமிழ்தம் - வத்தவ:17/114,115
புகழ்ந்து பலர் ஏத்த பொருக்கென பெயர்த்தே - நரவாண:1/151
சிறுவன் வேண்டும் அது சிறந்தது என்று ஏத்த
   பின்னை மற்று அவன் மன்னிய வேட்கையொடு - நரவாண:3/175,176
பெரியவர் ஏத்த பிறந்த நம்பிக்கு - நரவாண:6/35
நகரத்தாளரொடு நாடு புகழ்ந்து ஏத்த
   நிகர்_இல் செல்வத்து நிதியம் தழீஇ - நரவாண:6/141,142
இரு கரை மருங்கினும் இ நிலம் ஏத்த
   சீர்மையொடு பொருந்தி சிறப்பு முந்துறீஇ - நரவாண:7/40,41
வந்திருந்தன்று என கண்டவர் ஏத்த
   வேல் நல வேந்தன் விழு பெரும் கோயிலுள் - நரவாண:7/56,57
போகு கொடி வீதியில் புகுந்து பலர் ஏத்த
   அரு வரை மருங்கின் அருவி போல - நரவாண:8/75,76

 TOP
 
    ஏத்தல் (1)
யாத்த காதலொடு ஏத்தல் ஆற்றாள் - உஞ்ஞை:42/109

 TOP
 
    ஏத்தி (15)
இலங்கு சுடர் விளக்கோடு எதிர்வந்து ஏத்தி
   புறங்காப்பு இளையர் புரிந்து அகம் படுப்ப - உஞ்ஞை:33/98,99
செம் முது செவிலியர் கை புனைந்து ஏத்தி
   சந்தன நறு நீர் மண்ணுறுத்தி ஆட்டி - உஞ்ஞை:34/187,188
கோல்_தொடி கொண்ட கொள்கை என்று ஏத்தி
   மிகுதியின் மிக்க தன் மேல் திணைக்கு ஏற்ப - உஞ்ஞை:36/120,121
தகை முடி வேந்தன் தாள் புகழ்ந்து ஏத்தி
   தகை சால் சிறப்பின் தன்னொடு நம்மிடை - உஞ்ஞை:37/55,56
இருந்தவர் தெருளார் இசை புகழ்ந்து ஏத்தி
   நூலும் செவியும் நுண்ணிதின் நுனித்தே - உஞ்ஞை:37/132,133
கழுமிய காதலொடு கைதொழுது ஏத்தி
   நகர மாந்தர் பகர்வரால் பரந்து என் - உஞ்ஞை:40/389,390
தோன்றும் மாதரை தோன்ற ஏத்தி
   பைம் கேழ் சாந்தும் குங்கும குவையும் - உஞ்ஞை:42/65,66
பல்லோர் பல் சிறப்பு அயர்வனர் ஏத்தி
   வெல் போர் வேந்தன் மட மகள் விரும்பி - உஞ்ஞை:42/80,81
கொடுக்குவ வேண்டும் என்று எடுத்து_எடுத்து ஏத்தி
   அரும் திறல் காவலர் அச்சம் எய்தி - உஞ்ஞை:44/122,123
பொங்கு புகழ் வேந்தன் வென்றி ஏத்தி
   விண்ணகம் ஏறின் அல்லது விரி நீர் - உஞ்ஞை:45/83,84
கயல் புரை கண்ணி இயல்பு கிளந்து ஏத்தி
   பொன் அணி நகரமொடு தம் மனை புலம்ப - உஞ்ஞை:47/258,259
வழிபடு தெய்வம் வணங்குவனன் ஏத்தி
   கழி பிடி வலங்கொண்டு ஒழிவிடத்து ஒழிந்து - உஞ்ஞை:53/94,95
காவலன் மகளை கைதொழுது ஏத்தி
   ஆய் பத அடிசில் மேயதை ஊட்டி - உஞ்ஞை:57/101,102
வண்ண மகளிர் வழி நின்று ஏத்தி
   செண்ண சேவடி போற்றி சே_இழை - மகத:5/80,81
ஒண் புகழ் உவந்தனர் ஏத்தி
   வரை நிரைத்து அன்ன மாடம்-தோறும் - நரவாண:7/50,51

 TOP
 
    ஏத்தியலாளரும் (1)
ஏத்தியலாளரும் கூத்தியர் குழுவும் - நரவாண:6/88

 TOP
 
    ஏத்தினர் (3)
எவ்வழியோரும் ஏத்தினர் எதிர்கொள - இலாவாண:5/63
பூ தூய் வீதி-தோறு ஏத்தினர் எதிர்கொள - இலாவாண:9/65
இசைத்தனர் புக்கு நின்று ஏத்தினர் கூறுவர் - மகத:25/4

 TOP
 
    ஏத்தும் (2)
வழு_இல் கொள்கை வானவர் ஏத்தும்
   கழி பெரும் கடவுளை வழிபடின் அல்லது - உஞ்ஞை:42/7,8
நகாஅர் பல்லவர் நலம் புகழ்ந்து ஏத்தும்
   விழுப்பம் எய்தி ஒழுக்கு இயல்பு ஓம்பி - இலாவாண:11/175,176

 TOP
 
    ஏத்துவனர் (2)
எழு முறை இறைஞ்சுக என்று ஏத்துவனர் காட்ட - இலாவாண:3/66
கோப்புறு விழு கலம் ஏத்துவனர் காட்டி - இலாவாண:5/137

 TOP
 
    ஏதம் (28)
எய்த போதுவல் ஏதம் ஆயினும் - உஞ்ஞை:43/78
இ வழி மற்று இவள் நிற்றலும் ஏதம்
   வருக ஈண்டு என வத்தவன் வலிப்ப - உஞ்ஞை:44/128,129
தீது நிகழினும் ஏதம் இல் என - உஞ்ஞை:47/188
ஏதம் இன்றால் இன்பம் பயத்தலின் - உஞ்ஞை:47/228
நெறி-வயின் ஏதம் குறி-வயின் காட்டி - உஞ்ஞை:49/42
இரும் புறத்து இருந்தோர்க்கு ஏதம் என்று எண்ணி - உஞ்ஞை:53/19
இன்ப காதலற்கு ஏதம் அஞ்சி - உஞ்ஞை:53/136
என்-கொல் நிகழும் ஏதம் இன்று என - உஞ்ஞை:55/41
ஏதம் பட்டனன் ஆதலின் இன்னே - உஞ்ஞை:56/217
எண்ணுவர் ஆயின் ஏதம் தரும் என - இலாவாண:8/136
ஏதம்_இல் காட்சியோர் மா தவர் உறையும் - இலாவாண:15/41
ஏதம் இன்றி இறைக்கடன் கழித்து - இலாவாண:15/48
இகப்ப எண்ணுதல் ஏதம் உடைத்தே - இலாவாண:19/17
என் காமுறலின் ஏதம் அஞ்சி - இலாவாண:19/192
காதல் கணவன் ஏதம் இன்மை - இலாவாண:20/37
ஏதம் இல்லை இவணிர் ஆ-மின் என்று - மகத:6/183
ஏதம் அதனால் நிகழ்பவை இவை என - மகத:10/40
ஏதம் இல்லை இது என தேறி - மகத:14/33
என்னதும் நோவல் ஏதம் உடைத்து என - மகத:14/118
ஏனோர்க்கு இசைப்பின் ஏதம் தரும் என - மகத:14/285
ஏதம் இன்மையும் நீதியும் வினாஅய் - மகத:18/60
போதர துணிந்தனன் ஏதம் இன்றி - மகத:19/152
வேதத்து இயற்கையின் ஏதம் தீர - மகத:22/22
ஏதம்_இல் காட்சி ஏயர் பெருமகன் - மகத:22/271
இகழ்ச்சி ஏதம் தலைத்தது எனக்கு இன்று என - மகத:24/165
ஏதம் இல் செவி முதல் இனிதின் இசைப்ப - வத்தவ:7/45
ஏதம்_இல் காட்சி தாபதன் மட மகள் - வத்தவ:15/6
ஏதம்_இல் ஒழுக்கின் மா தவர் இல் பிறந்து - வத்தவ:17/85

 TOP
 
    ஏதம்_இல் (4)
ஏதம்_இல் காட்சியோர் மா தவர் உறையும் - இலாவாண:15/41
ஏதம்_இல் காட்சி ஏயர் பெருமகன் - மகத:22/271
ஏதம்_இல் காட்சி தாபதன் மட மகள் - வத்தவ:15/6
ஏதம்_இல் ஒழுக்கின் மா தவர் இல் பிறந்து - வத்தவ:17/85

 TOP
 
    ஏதமாம்-கொல் (1)
ஏதமாம்-கொல் இஃது என்று உரைப்போரும் - வத்தவ:17/56

 TOP
 
    ஏதில் (5)
ஏதில் மன்னனை எண்ணான் தெளிந்த - உஞ்ஞை:35/6
ஏதில் மன்னர் தூதுவ மாக்கள் - உஞ்ஞை:36/299
ஏதில் வேந்தன் காதலின் வினவ - இலாவாண:9/81
ஏதில் பெரும் பொருள் நீதியுள் இன்மையின் - இலாவாண:9/217
ஏதில் மன்னன் காதலி பயந்த - இலாவாண:10/128

 TOP
 
    ஏதிலன் (2)
எம் திறம் அறியா ஏதிலன் போல - இலாவாண:9/176
ஏதிலன் நல் நாட்டு என் துறந்து இறந்தனை - மகத:9/162

 TOP
 
    ஏதிலென் (1)
ஏனை நூற்கும் ஏதிலென் அல்லேன் - மகத:12/18

 TOP
 
    ஏதிலை (1)
என்-வயின் நினையாது ஏதிலை போல - வத்தவ:7/49

 TOP
 
    ஏதின்மை (1)
ஏதின்மை ஈனும் ஏனோர்-மாட்டு என - வத்தவ:8/7

 TOP
 
    ஏது (4)
எடுத்து இயல் கிளவியோடு ஏது காட்டி - உஞ்ஞை:35/142
தேவர் சொல்லும் அது ஏது அதை ஆக என - உஞ்ஞை:37/258
இடுக்கண் தருதற்கு ஏது ஆகி - இலாவாண:18/32
எடுத்து நிலை அரிது என ஏது காட்டி - மகத:19/89

 TOP
 
    ஏது-கொல் (1)
ஏது-கொல் உற்றது என்று எஞ்சிய நெஞ்சின் - இலாவாண:18/57

 TOP
 
    ஏதுவாக (1)
கழி பொருள் எதிர் பொருட்கு ஏதுவாக
   அழி பொருள் அன்றி ஆகு பயம் கூற - இலாவாண:13/70,71

 TOP
 
    ஏந்த (3)
காஞ்சனமாலையும் கை இசைத்து ஏந்த
   அளற்று எழு தாமரை அள் இலை நீரில் - உஞ்ஞை:42/118,119
தோழியர் எல்லாம் சூழ்வனர் ஏந்த
   சூடுறு கிண்கிணி பாடு பெயர்ந்து அரற்ற - வத்தவ:8/17,18
யாழ அற்பு கனி ஊழ் அறிந்து ஏந்த
   ஓவாது நுகர்ந்து தாவா செல்வமொடு - வத்தவ:9/77,78

 TOP
 
    ஏந்தல் (2)
யாது-கொல் மற்று இ ஏந்தல் பணி என - உஞ்ஞை:34/70
பூம் தார் அணிந்த ஏந்தல் வெண் குடை - உஞ்ஞை:42/46

 TOP
 
    ஏந்தலும் (2)
மந்தரம் ஏந்தலும் என்று இவை பிறவும் - மகத:4/88
இரும் கண் வையகத்து ஏந்தலும் உரியன் - நரவாண:8/141

 TOP
 
    ஏந்தி (20)
கன பொன் மாசை காண ஏந்தி
   மன்றமும் மறுகும் கம்பலை கழும - உஞ்ஞை:35/76,77
பூ நறும் தேறல் பொலன் வள்ளத்து ஏந்தி
   ஒழுகி நிலம் பெறாஅது ஒசிந்து கடைபுடைத்து - உஞ்ஞை:35/177,178
கார் இரும் கூந்தல் கையின் ஏந்தி
   அகலின் அகலும் உயிரினள் ஆகி - உஞ்ஞை:40/195,196
ஒளித்த வெம் படை வெளிப்பட ஏந்தி
   மலைக்குநர் உளர் எனின் விலக்குநர் ஆகி - உஞ்ஞை:43/44,45
தந்தனையாகி என் தகை வாள் ஏந்தி
   ஊறு உண்டு எனினும் உழையின் பிரியாது - உஞ்ஞை:45/59,60
அரும் கயல் அடை பை அங்கையின் ஏந்தி
   பெரும் கண் பேதையர் இரும் துயர் எய்தவும் - உஞ்ஞை:46/229,230
ஒருப்படுத்து ஒழியாது விருப்பின் ஏந்தி
   மலை-வயின் பிறந்த மாண்புறு பெரும் கலம் - உஞ்ஞை:51/31,32
உழை கலம் ஏந்தி உழை படர்ந்து இயல - உஞ்ஞை:56/197
முடி மிசை ஏந்தி முன்னர் நடப்ப - இலாவாண:5/35
நிறைய முகந்து முறைமையின் ஏந்தி
   ஐஞ்ஞூற்று_இரட்டி அணி இதழ் தாமரை - இலாவாண:5/46,47
ஒருப்படுத்து ஊழூழ் முறைமையின் ஏந்தி
   நானம் கலந்த நறு நெய் தோய்த்து - இலாவாண:5/88,89
எழு உறழ் திணி தோள் எடுத்தனர் ஏந்தி
   புடை இரு பக்கமும் போதிகை பொருந்தி - இலாவாண:6/131,132
தாமரை தட கையில் தாமம் ஏந்தி
   விச்சாதரர் நகர் எ சாரும் மயங்கி - இலாவாண:6/144,145
முதிர் கனி அமிர்தம் எதிர்கொண்டு ஏந்தி
   மேவன பல பயின்று ஈவன போன்ற - இலாவாண:13/26,27
தழையும் கண்ணியும் விழைவன ஏந்தி
   பொன் பூம் கிண்கிணி புற அடி பிறழ - இலாவாண:16/7,8
இன்னவை பிறவும் இயைய ஏந்தி
   வண்ண மகளிர் வழி நின்று ஏத்தி - மகத:5/79,80
கந்துகம் ஏந்தி கசிந்த கோதைக்கு - வத்தவ:12/222
அரச மங்கலம் அமைவர ஏந்தி
   பல் பூம் படாகை பரந்த நீழல் - வத்தவ:17/102,103
பிணர் படு தட கையில் பிறவும் ஏந்தி
   ஒள் நுதல் இரும் பிடி ஒன்றே போல - நரவாண:3/67,68
கரி அகல் ஏந்தி கா-வயின் பெற்றோன் - நரவாண:6/117

 TOP
 
    ஏந்திய (10)
ஏந்திய நீழல் சாந்து கண் புலர்த்திய - உஞ்ஞை:38/127
நின்னை உவக்கும் நின் பெருமான் ஏந்திய
   வெல் வேல் கடுக்கும் வெம்மை நோக்கத்து - உஞ்ஞை:42/52,53
கனல் சேர் புகை அகல் ஏந்திய கையின் - உஞ்ஞை:42/89
இகல் இரும் கும்பத்து ஏந்திய சென்னியது - உஞ்ஞை:42/225
மங்கல செப்பின் மாண ஏந்திய
   குங்குமம் கொண்ட கூன் வழுக்குறவும் - உஞ்ஞை:46/255,256
ஏந்திய கையர் மாம் தளிர் மேனி - உஞ்ஞை:57/47
ஏந்திய சென்னி மாந்தர் கூடி - இலாவாண:5/68
பூம் குழை மகளிர் பொலம் கலத்து ஏந்திய
   தேம் கமழ் தேறலொடு தெளி மது மடுப்பினும் - இலாவாண:14/60,61
கோட்கு அமைந்து ஏந்திய கோல பல் மலர் - இலாவாண:15/107
யவன பேழையுள் அடைந்தோர் ஏந்திய
   தமனிய பல் கலம் தளிர் இயல் மாதர் - மகத:22/213,214

 TOP
 
    ஏந்தினள் (2)
ஏந்தினள் ஏற்ற இரும் பிடி இரீஇ - உஞ்ஞை:44/151
ஏந்தினள் எடுத்திட்டு எறிவுழி முன்கையின் - வத்தவ:12/198

 TOP
 
    ஏந்து (33)
புனைந்து ஏந்து அல்குல் காசு புதையாது - உஞ்ஞை:40/147
வளர்ந்து ஏந்து இள முலை மருங்கு இவர்ந்து கிடந்த - உஞ்ஞை:40/179
எழுதி அன்ன ஏந்து நுண் புருவம் - உஞ்ஞை:40/321
சாந்தின் செய்த ஏந்து இலை எறி வேல் - உஞ்ஞை:41/10
திருந்து இழை அணிந்த பரந்து ஏந்து அல்குல் - உஞ்ஞை:45/2
ஏந்து இளம் கொங்கையும் எடுக்கல் ஆற்றாள் - உஞ்ஞை:48/78
மாம் தளிர் மேனி ஏந்து புணை ஆக - உஞ்ஞை:54/136
ஏந்து எழில் ஆகத்து இறுவரை தாழ்ந்த - உஞ்ஞை:58/7
சிலம்பு ஒலி சீறடி சென்று ஏந்து புருவத்து - இலாவாண:2/47
ஐது ஏந்து அல்குலர் செய்கையில் திரியா - இலாவாண:3/67
இடம் அமைத்து இயற்றிய ஏந்து நிலை கோணத்து - இலாவாண:5/42
மலர்ந்து ஏந்து அகலத்து இலங்கு மணி ஆரத்து - இலாவாண:6/125
வணர்ந்து ஏந்து வளர் பிறை வண்ணம் கடுப்ப - இலாவாண:7/33
சேடு ஏந்து வனப்பின் செழு மலர் தடம் கண் - இலாவாண:8/105
மோடு ஏந்து அரிவை முற்றத்து முனாது - இலாவாண:8/106
சிலை அணி அழித்த சென்று ஏந்து புருவத்து - இலாவாண:12/91
பை அழித்து அகன்ற பரந்து ஏந்து அல்குல் - இலாவாண:15/65
முரிந்து ஏந்து புருவம் பொருந்திய பூ நுதல் - இலாவாண:15/87
திரு வில் அன்ன சென்று ஏந்து புருவம் - இலாவாண:16/25
இன்பம் பொதிந்த ஏந்து அணி வன முலை - இலாவாண:16/27
முகிழ்ந்து ஏந்து இள முலை முத்தொடு முழீஇ - இலாவாண:16/85
திகழ்ந்து ஏந்து அகலத்து செம் சாந்து சிதைய - இலாவாண:16/86
அரவு பை அன்ன ஐது ஏந்து அல்குல் - இலாவாண:19/146
வேந்துபட கடந்த ஏந்து சுடர் நெடு வேல் - மகத:1/2
கூந்தல் அணிந்த ஏந்து நுதல் சென்னி - மகத:3/37
இலை பூண் திளைக்கும் ஏந்து இள முலையள் - மகத:5/22
ஏந்து இள வன முலை எழில் வளை பணை தோள் - மகத:6/157
ஐது ஏந்து அல்குல் அவந்திகை வீவும் - மகத:7/57
போந்த பொழுதின் ஏந்து நிலை மாடத்து - மகத:9/139
இலங்கு கதிர் இலை பூண் ஏந்து முலை ஆகத்து - வத்தவ:5/95
பை என கிடந்த அது ஏந்து அல்குல் - வத்தவ:11/71
ஐது ஏந்து அல்குலும் ஆகமும் அசைஇ - நரவாண:1/209
இடை சூழ் அருவி ஏந்து வரை சென்னி - நரவாண:8/45

 TOP
 
    ஏந்துவனர் (1)
இல்லின் மகளிர் ஏந்துவனர் ஈத்த - வத்தவ:16/34

 TOP
 
    ஏப்பெறு (1)
ஏப்பெறு துயரமொடு இலங்கு_இழை இறைஞ்சி - உஞ்ஞை:34/243

 TOP
 
    ஏம (16)
ஏம வெண் குடை ஏயர் மகனொடு - உஞ்ஞை:36/104
இடுக்கண் போதின் ஏம பூமியுள் - உஞ்ஞை:37/34
ஏம முந்நீர் எறி சுறவு உயர்த்த - உஞ்ஞை:40/182
காமம் காலா ஏம நோக்கத்து - உஞ்ஞை:41/55
இன்பம் ஆகிய ஏம வெண் குடை - உஞ்ஞை:49/64
ஏம நெடும் கரை எய்தி யாமத்து - உஞ்ஞை:57/108
ஏம முரசம் இழும் என சிலைப்ப - இலாவாண:5/18
ஏம செங்கோல் ஏயர் பெருமகன் - இலாவாண:6/16
தாமம் தாழ்ந்த ஏம வெண் குடை - இலாவாண:7/122
காமம் என்னும் ஏம பெரும் கடல் - மகத:3/52
தான் மீக்கூரிய ஏம வெண் குடை - மகத:5/7
ஏம நல் நெறி ஈதல் ஆற்றார் - மகத:10/35
ஏம செவ்வி ஏஎர் நுகரும் - மகத:14/91
ஏம வெண் குடை இன் நிழல் பரப்பி - வத்தவ:2/78
ஏம வையத்து இயல்பு அன்று ஆயினும் - வத்தவ:15/72
ஏம வைகல் இயல்வது ஆம் எனின் என - நரவாண:8/144

 TOP
 
    ஏமம் (10)
எழில் மணி விளக்கின் ஏமம் போகி - உஞ்ஞை:34/2
எதிர்ப்புனல் ஆடுநர்க்கு ஏமம் ஆக - உஞ்ஞை:40/275
இன் உயிர்க்கு ஏமம் ஆகுதல் அரிது என - உஞ்ஞை:45/86
ஏமம் ஆக இவன் எய்துவன் என்று தம் - உஞ்ஞை:48/51
நின் உயிர்க்கு ஏமம் அறிந்தனை நீங்கு என - உஞ்ஞை:52/122
எம்மை கொண்டு வந்து ஏமம் சார்த்தி - இலாவாண:10/32
ஏமம் ஈக என்று இடவகன் போக்க - மகத:27/191
ஏமம் ஈத்த இயல்பினன் ஆகி - வத்தவ:1/28
யாமம் காவலர் அசைய ஏமம்
   வாய்ந்த வைகறை வையக வரைப்பின் - வத்தவ:5/64,65
ஏமம் சான்ற இ நில வரைப்பின் - நரவாண:8/46

 TOP
 
    ஏமாக்கும் (1)
இடை ஏமாக்கும் என்று அடைவனர் விலக்கி - உஞ்ஞை:42/127

 TOP
 
    ஏமாப்பு (1)
ஏமாப்பு இல என எடுத்துரை நாட்டி - இலாவாண:20/32

 TOP
 
    ஏமுறவு (1)
ஏமுறவு ஒழியா ஏயர் மன்னனை - இலாவாண:11/38

 TOP
 
    ஏமுறு (1)
ஏமுறு வேட்கை ஆகும் என்பது - வத்தவ:7/135

 TOP
 
    ஏய்ப்ப (21)
சிரல் சிறகு ஏய்ப்ப சிப்பம் விரித்த - உஞ்ஞை:34/216
மை உண்டு மதர்த்த மணி ஒழுக்கு ஏய்ப்ப
   கோல ஆகத்து கொடிபட எழுதிய - உஞ்ஞை:40/219,220
நிலா விடு பசும் கதிர் கலாவம் ஏய்ப்ப
   நீர் அணி கொண்ட ஈரணி நீக்கி - உஞ்ஞை:42/142,143
எண்ணல் ஆகத்து பெண் உலகு ஏய்ப்ப
   கன்னி மகளிர் கதிர்த்த கோலமொடு - உஞ்ஞை:42/181,182
கொடும் கால் குண்டிகை கொட்டம் ஏய்ப்ப
   அறாஅது ஒழுகும் அம் முலை ஆரம் - உஞ்ஞை:43/130,131
பெரியோர்க்கு உதவிய சிறு நன்று ஏய்ப்ப
   கரவாது பெருகி கை இகந்து விளங்கும் - உஞ்ஞை:44/138,139
விளைவுறு தீங்கனி வீழ்ச்சி ஏய்ப்ப
   தளை அவிழ் தாமமொடு தலை பல புரளவும் - உஞ்ஞை:46/21,22
குமிழ்த்து எழு வெம் பனி கோங்கு அரும்பு ஏய்ப்ப
   முகிழ்த்தல் முன்னிய முலை முதல் முற்றத்து - உஞ்ஞை:46/224,225
ஊர்கோள் ஏய்ப்ப சூழ்பு உடன் வளைஇய - உஞ்ஞை:46/234
வெண் நிற அருவி வீழ்ச்சி ஏய்ப்ப
   மத்தக மருங்கின் மாலையொடு கிடந்த - உஞ்ஞை:48/61,62
ஒளி செம் சீறடி உருக்கு அரக்கு ஏய்ப்ப
   உளி தலை வெம்பரல் ஊன்றுபு நலிய - உஞ்ஞை:53/163,164
எண் திசை மருங்கினும் இவர் திரை ஏய்ப்ப
   கண்ட பூம் திரை காழ் முதல் கொளீஇ - இலாவாண:4/133,134
குன்று கண் கூடிய குழாஅம் ஏய்ப்ப
   ஒன்று கண்டு அன்ன ஓங்கு நிலை வனப்பின் - இலாவாண:7/4,5
அளைக்கு இவர் அரவின் தளர்ச்சி ஏய்ப்ப
   முளைத்து எழு முலை கச்சு அசைத்தலின் அசைந்த - இலாவாண:7/27,28
உணர்ந்தோர் கொண்ட உறு நன்று ஏய்ப்ப
   வணர்ந்து ஏந்து வளர் பிறை வண்ணம் கடுப்ப - இலாவாண:7/32,33
கோடு கொள் மயிலின் குழாஅம் ஏய்ப்ப
   மாடம்-தோறும் மலிந்து இறைகொண்டனர் - இலாவாண:7/93,94
அம் தண் மஞ்ஞை ஆடு இடம் ஏய்ப்ப
   கோதையும் குழலும் துள்ளுபு விரிய - இலாவாண:7/101,102
பனி இறை வாவல் படர்ச்சி ஏய்ப்ப
   படையினும் தொழிலினும் நடை வேறு இயன்ற - இலாவாண:8/120,121
இடை திரைக்கு அணவரூஉம் எழுச்சி ஏய்ப்ப
   வாக்கு அமை பிடி வார் வலித்த கையினர் - மகத:20/70,71
காலம் ஏய்ப்ப கரும் தலை வீழவும் - மகத:20/79
பொன் கோங்கு ஏய்ப்ப நல் கலன் அணிந்த - வத்தவ:11/47

 TOP
 
    ஏய்பு (1)
தறுகண் இமையான் தருக்கினொடு உறுதி ஏய்பு
   இறு முனை மருங்கின் ஏடு பட திருகி - மகத:27/175,176

 TOP
 
    ஏய (3)
தமர்-வயின் ஏய தன்மையள் ஆகி - மகத:14/50
ஏய மற்று இதுவும் இனிது என வாங்கி - வத்தவ:14/112
எரியுறு நெடு வேல் ஏய இறைவன் - நரவாண:7/152

 TOP
 
    ஏயது (1)
ஏயது மறுக்கலும் இருந்தோன் கூய் நின் - உஞ்ஞை:35/149

 TOP
 
    ஏயதை (1)
பெரு நில மன்னர் ஏயதை அல்லது - வத்தவ:8/74

 TOP
 
    ஏயர் (26)
இரு நிலத்து இறைமை ஏயர் பெருமகன் - உஞ்ஞை:36/43
ஏம வெண் குடை ஏயர் மகனொடு - உஞ்ஞை:36/104
எறி படை தானை ஏயர் பெருமகன் - உஞ்ஞை:46/139
எதிர் மலர் பைம் தார் ஏயர் பெருமகன் - உஞ்ஞை:52/82
இரு நில கிழமை ஏயர் இறைவன் - உஞ்ஞை:56/151
இன் மகிழ் இருக்கை ஏயர் மகனோடு - இலாவாண:2/4
இடி கண் முரசின் ஏயர் பெருமகன் - இலாவாண:2/166
இடி உறழ் முரசின் ஏயர் பெருமகற்கும் - இலாவாண:3/2
ஏம செங்கோல் ஏயர் பெருமகன் - இலாவாண:6/16
இரு புடை பெயரா ஏயர் பெருமகன் - இலாவாண:7/49
ஏக செங்கோல் ஏயர் பெருமகன் - இலாவாண:8/3
இடி உறழ் முரசின் ஏயர் இறைவன் - இலாவாண:8/23
ஏமுறவு ஒழியா ஏயர் மன்னனை - இலாவாண:11/38
பாய் பரி இவுளி ஏயர் பெருமகன் - இலாவாண:11/59
ஏயர் கொற்றம் இவன்-வயின் கொடுத்து - இலாவாண:11/138
ஏயர் குலமுதற்கு இறைவன் ஆகி - இலாவாண:11/147
இருள்_அறு செங்கோல் ஏயர் இறைவன் - இலாவாண:17/115
ஏயர் அற்றத்து இடுக்கண்-காலை - மகத:1/9
இசைந்த வனப்பின் ஏயர் மகற்கும் - மகத:6/61
ஏயர் குருசிலை தூய் மொழி வினவ - மகத:6/188
ஏயர் பெரும் குடிக்கு ஆகு பெயர் உண்டு என - மகத:10/18
இன்னா நீக்கலும் ஏயர் குலத்தோற்கு - மகத:18/102
ஏதம்_இல் காட்சி ஏயர் பெருமகன் - மகத:22/271
ஏயர் பெருமகன் எதிர்வது விரும்ப - மகத:27/155
ஏயர் பெருமகன் சேயது நோக்கி - வத்தவ:3/2
இமிழ் திரை வையத்து ஏயர் பெருமகன் - வத்தவ:17/66

 TOP
 
    ஏயர்க்கு (2)
ஏயர்க்கு இறை என இயற்றிய வண்ணமும் - இலாவாண:11/157
ஏற்று அலர் பைம் தார் ஏயர்க்கு என்றும் - வத்தவ:8/44

 TOP
 
    ஏயற்கு (1)
இன் இயல் மான் தேர் ஏயற்கு இயல்பு என - இலாவாண:9/54

 TOP
 
    ஏயினன் (3)
இவரே வருக என ஏயினன் அருளி - உஞ்ஞை:35/36
ஆய் புகழ் வேந்தன் ஏயினன் ஆகி - நரவாண:6/47
யூகியும் உணர ஏயினன் ஆகி - நரவாண:7/124

 TOP
 
    ஏர் (54)
மலர் ஏர் உண்கண் மாதர்க்கு அமைந்த - உஞ்ஞை:35/60
ஏர் இள மகளிர்க்கு இயற்கை என்று எண்ணி - உஞ்ஞை:35/85
ஏர் அணி எருத்தம் இறை_மகன் ஏறலும் - உஞ்ஞை:38/321
ஏர் அணி அமைந்த எழு நில நல் வினை - உஞ்ஞை:40/16
கயல் ஏர் நெடும் கண் கடும் பனி கால - உஞ்ஞை:40/359
படை ஏர் கண்ணியர் பணிந்து கை கூப்பி - உஞ்ஞை:42/125
உயிர் ஏர் கணவரை தானை பற்றி - உஞ்ஞை:44/10
ஏர் இரும் குலிக புனல் பரந்து இழிதரும் - உஞ்ஞை:44/83
வடி ஏர் தடம் கண் வாள் என மிளிரும் - உஞ்ஞை:44/153
நுண் ஏர் மருங்கின் நும் மடித்தி எம் பெருமான் - உஞ்ஞை:47/29
ஏர் வளம் படுத்த எல்லைய ஆகி - உஞ்ஞை:49/102
ஏர் இலவங்கமும் ஏலமும் இருப்பையும் - உஞ்ஞை:50/33
முத்து ஏர் முறுவல் முயங்கு கயல் தடம் கண் - உஞ்ஞை:52/22
சிலை ஏர் புருவ செம் கண் செல்வி - உஞ்ஞை:52/23
வில் ஏர் உழவர் செல் சாத்து எறிந்துழி - உஞ்ஞை:52/26
ஏர் அலர் தாரோன் ஆற்றலின் ஊர்தர - உஞ்ஞை:52/114
திரு ஏர் சாயலை தே மொழி துவர் வாய் - உஞ்ஞை:53/56
மான் ஏர் நோக்கியர் - இலாவாண:5/112
ஈர நுண் துகில் அகற்றி ஏர் உடை - இலாவாண:5/164
மூரி நிமிர்வன போல ஏர் பெற்று - இலாவாண:6/102
பெயலிடை பிறழும் மின் ஏர் சாயலர் - இலாவாண:7/96
கொடி ஏர் சாயல் கொழும் கவின் வாட - இலாவாண:10/113
கயல் ஏர் கண்ணி துயில் ஏற்று எழவே - இலாவாண:11/66
இறும்பு அமல் ஏலமும் ஏர் இலவங்கமும் - இலாவாண:12/21
குழையர் கோதையர் இழையர் ஏர் இணர் - இலாவாண:14/13
கொம்பு ஏர் மருங்குல் கோமகன் குறுகி - இலாவாண:15/109
சீர் கெழு திரு முகத்து ஏர் அணி ஆகிய - இலாவாண:19/93
ஏர் இலவங்கம் தீம் பூ ஏலம் - மகத:1/116
முளை ஏர் முறுவல் முகிழ்த்த சில் நகை - மகத:6/49
கரும்பு ஏர் கிளவி கதிர் முகை முறுவல் - மகத:14/132
வாள் ஏர் கண்ணி வல்லேன் யான் என - மகத:14/182
மான் ஏர் நோக்கி மனத்தில் கொண்டு - மகத:14/286
ஏர் அணி நெடும் குடை இறை மீக்கூரிய - மகத:17/14
இலை தார் மார்பின் ஏர் அணி தட கை - மகத:17/18
இன்னது என்னான் பொன் ஏர் தோழிக்கு - மகத:17/80
தருசகன் தங்கை தகை ஏர் சாயல் - மகத:20/179
மாசு_இல் கற்பின் மருந்து ஏர் கிளவி - வத்தவ:4/3
மான் ஏர் நோக்கி மாறி பிறந்துழி - வத்தவ:6/65
உயிர் ஏர் கிழத்தி ஆகலின் உள்ளகத்து - வத்தவ:8/14
என் நேர் என்ற மின் ஏர் சாயலை - வத்தவ:8/107
அடி நனி காண்புழி அணங்கு ஏர் சாயல் - வத்தவ:12/34
வாள் ஏர் தடம் கண் வாசவதத்தை - வத்தவ:12/135
கோள் ஏர் மதி முகம் கோட்டி நோக்க - வத்தவ:12/136
விளங்கி ஏர் பிறழ வேல்_கணி இருந்து - வத்தவ:12/174
பூண் திகழ் கொங்கை புயல் ஏர் கூந்தல் - வத்தவ:12/265
கொடி ஏர் மருங்குல் குயில் மொழி செ வாய் - வத்தவ:13/64
அருள் ஏர் வாசகம் தெருளுற அறிந்து - வத்தவ:13/155
காம்பு_ஏர்_தோளி கையின் நீக்கலும் - வத்தவ:13/224
வில்_ஏர்_நுதல் வர வேந்தன் சென்று எதிர் - வத்தவ:14/83
கயத்து உறு மகள் எனில் கயல் ஏர் கண்கள் - வத்தவ:17/43
போது ஏர் கண்ணியும் புகன்றனள் ஒழுக - நரவாண:1/166
ஏர் அணி உடைய இலாவாணகம் எனும் - நரவாண:2/4
மருந்து ஏர் கிளவி மதனமஞ்சிகை-தன் - நரவாண:8/142
என்னும் உவகையின் மின் ஏர் நுடங்கிட - நரவாண:8/104

 TOP
 
    ஏர்தர (1)
நிலம் அமர் செங்கோல் நித்திலம் ஏர்தர
   தலை மலை படலை தருசகன் புகுந்து - மகத:22/253,254

 TOP
 
    ஏர்தரும் (1)
கரு முகில் மருங்கின் இருள் அறுத்து ஏர்தரும்
   வெம்மை செல்வன் மேல் நிலை பெற்ற - உஞ்ஞை:58/20,21

 TOP
 
    ஏர்ப்பு (1)
ஏர்ப்பு ஒலி வளை கை இரண்டேயாயினும் - வத்தவ:12/204

 TOP
 
    ஏரி (1)
ஏரி பெரும் குளம் நீர் நிறை இலவாம் - மகத:27/18

 TOP
 
    ஏரும் (1)
பயிர்ப்பும் உட்கும் இயற்கை ஏரும்
   மடனும் அன்பும் மாசு_இல் சூழ்ச்சியும் - மகத:10/68,69

 TOP
 
    ஏல் (1)
கோல கொழு விரல் ஏல் ஒளி எறிப்ப - இலாவாண:12/78

 TOP
 
    ஏல்வு (1)
ஏல்வு அன்று என்ன மேலவை கிளவா - மகத:19/28

 TOP
 
    ஏலத்து (1)
நாகத்து அல்லியும் ஏலத்து இணரும் - உஞ்ஞை:51/24

 TOP
 
    ஏலம் (1)
ஏர் இலவங்கம் தீம் பூ ஏலம்
   கப்புர பளிதமொடு உட்படுத்து இயற்றிய - மகத:1/116,117

 TOP
 
    ஏலமும் (3)
ஏர் இலவங்கமும் ஏலமும் இருப்பையும் - உஞ்ஞை:50/33
இறும்பு அமல் ஏலமும் ஏர் இலவங்கமும் - இலாவாண:12/21
சீரகத்து அரிசியும் ஏலமும் ஏனை - மகத:17/144

 TOP
 
    ஏலாது (2)
கவிகைக்கு ஏலாது கட்டு என கலிழ்ந்தோள் - உஞ்ஞை:56/112
ஏலாது என்று அவள் சேலம் திருத்தி - வத்தவ:12/97

 TOP
 
    ஏவ (2)
இகழ்வு இல் அ தொழில் இறைவன் ஏவ
   பெரு மண் வேந்தனை பிழைப்பு இன்று ஓம்புதற்கு - மகத:12/79,80
விரை செலல் இவுளி வேந்தன் ஏவ
   ஓடை அணிந்த ஒண் பொன் நெற்றி - நரவாண:7/16,17

 TOP
 
    ஏவல் (7)
ஏவல் இளையர் இசைத்த மாற்றம் - உஞ்ஞை:44/105
ஏவல் இளையரும் எதிர் எழுந்து ஓடி - உஞ்ஞை:44/112
ஏவல் மகளிர் வாய் மொழி கம்பலும் - இலாவாண:2/109
ஏவல் கேட்கும் காவலர் எல்லாம் - வத்தவ:1/43
இன்னது செய்க என ஏவல் இன்றியும் - வத்தவ:10/27
ஏவல் சிலதியர்-தாம் அவர்க்கு உரைப்ப - வத்தவ:13/5
ஏவல் சிலதியை ஆவயின் கூஉய் - வத்தவ:14/113

 TOP
 
    ஏவலின் (4)
வினை மாண் இளையரை ஏவலின் விரும்பி - மகத:8/29
பொரு படை தொகுத்து போதுக என்று ஏவலின்
   விருத்திகாரரும் வேண்டியது பெறூஉம் - மகத:19/56,57
தமர்களை ஏவலின் அவர் வந்து அவரை - மகத:26/49
இருவர் மாற்றமும் தெரிக என்று ஏவலின்
   உருமண்ணுவா அதற்கு உறு வழக்கு உரைத்தனன் - நரவாண:1/43,44

 TOP
 
    ஏவலும் (1)
அவன்-தலை வைக்கும் ஆணை ஏவலும்
   உவந்ததை எல்லாம் உரை-மின் நீர் என - உஞ்ஞை:34/108,109

 TOP
 
    ஏவற்கு (1)
ஏவற்கு அமைந்த காவல் தொழிலொடு - உஞ்ஞை:57/69

 TOP
 
    ஏவா (1)
உறு தொழில் இளையரை உதயணன் ஏவா
   மறு_இல் மாதர் ஒழிய நம் கோயில் - வத்தவ:15/143,144

 TOP
 
    ஏவி (1)
இரும் சின இளையரும் வருக என ஏவி
   வலி கெழு நோன் தாள் வத்தவன் வலித்ததும் - மகத:19/115,116

 TOP
 
    ஏவினேன் (1)
இப்படி தருக என ஏவினேன் எமர்களை - வத்தவ:10/118

 TOP
 
    ஏழ் (7)
மூ_ஏழ் திறத்தொடு முற்ற காட்டி - உஞ்ஞை:37/116
ஏழ் அடி இடுதல் ஆற்றாது ஆயினும் - உஞ்ஞை:53/132
எல்லி யாமம் ஏழ் இருள் போல - மகத:7/96
ஏழ் ஆண்டு அமைந்தன தன்மையளாயினும் - மகத:22/110
ஒண் பந்து ஓர் ஏழ் கொண்டனள் ஆகி - வத்தவ:12/54
முரண்டு எழு வனப்பின் மூ_ஏழ் ஆகிய - வத்தவ:12/175
ஆறு_ஏழ் நாழிகை விலக்குவல் அத்துணை - வத்தவ:14/20

 TOP
 
    ஏழ்ச்சி (2)
ஏழ்ச்சி வேண்டும் சூழ்ச்சி கொடுக்க என - இலாவாண:11/180
ஏழ்ச்சி இன்றி கீழ்ப்பட்டு ஒழுகினும் - வத்தவ:11/15

 TOP
 
    ஏழ்ச்சியும் (2)
ஏழ்ச்சியும் இறுதியும் சூழ்ச்சியும் உணர - உஞ்ஞை:58/58
ஏழ்ச்சியும் எறி படை அளவும் எம் பெருமான் - மகத:25/6

 TOP
 
    ஏழாயிரவர் (2)
ஏழாயிரவர் எறிபடையாளரும் - மகத:26/67
இடவகன் பணியின் ஏழாயிரவர்
   சவரர் புளிஞரும் குவடு உறை குறவரும் - மகத:27/7,8

 TOP
 
    ஏழேழ் (1)
ஏழேழ் மறவரை வீழ நூறலின் - இலாவாண:9/147

 TOP
 
    ஏழை (1)
ஏழை மாதரை சூழ்வர நின்ற - வத்தவ:14/73

 TOP
 
    ஏழையம் (1)
இனி பொய் உண்ணும் ஏழையம் அல்லம் என்று - உஞ்ஞை:40/167

 TOP
 
    ஏழையர் (1)
எக்கர் கிளைக்கும் ஏழையர் காண்-மின் - உஞ்ஞை:40/155

 TOP
 
    ஏழையை (1)
வள்ளி மருங்கின் ஒள் இழை ஏழையை
   கச்சு ஆர் வன முலை விச்சாதரியே - நரவாண:8/54,55

 TOP
 
    ஏற்கும் (4)
தண் புனலாட்டின் தக்கணை ஏற்கும்
   அந்தணாளர் அடைக விரைந்து என - உஞ்ஞை:39/51,52
பொருள்-வயின் பிரிவோர் வரவு எதிர் ஏற்கும்
   கற்பு உடை மாதரின் கதுமென உரறி - உஞ்ஞை:49/76,77
ஏற்கும் மாந்தர்க்கு ஆற்ற வீசி - இலாவாண:5/125
ஏற்கும் தானத்து பாற்பட அணிந்து - இலாவாண:7/153

 TOP
 
    ஏற்ப (26)
ஐயப்படூஉம் அணியிற்கு ஏற்ப
   ஒண்மையும் நிறையும் ஓங்கிய ஒளியும் - உஞ்ஞை:34/150,151
மிகுதியின் மிக்க தன் மேல் திணைக்கு ஏற்ப
   தகுவன கூறும் தலைமகன் மகள் என - உஞ்ஞை:36/121,122
கூடம் குத்திய கொழும் காழ்க்கு ஏற்ப
   நாசிகை தானத்து நகை முத்து அணிந்து - உஞ்ஞை:38/249,250
நால் பெரு வாயில் ஏற்ப இயற்றி - உஞ்ஞை:53/74
தொகை தொழில் ஓப்பும் தகை செவிக்கு ஏற்ப
   பணைத்த எருத்தின் பைம் கண் செயிர் நோக்கு - உஞ்ஞை:58/14,15
ஏற்ப விரீஇய இலையும் கொழுந்தும் - இலாவாண:2/143
கொழுந்திற்கு ஏற்ப அழுந்துபடு குலாவும் - இலாவாண:2/144
நால் பெரு வாயில் முதல்-தொறும் ஏற்ப
   தமனிய பேரில் தலை நிலம் தழீஇய - இலாவாண:4/86,87
அணி வலம் சுரிந்த அமைதிக்கு ஏற்ப
   வளர் பிறை அன்ன மல்லிகை கத்திகை - இலாவாண:4/141,142
சேட்டு எழில் பொலிந்த திரு முகக்கு ஏற்ப
   மூரி கொள்ளான் முனிதல் செல்லான் - இலாவாண:4/173,174
சேவடிக்கு ஏற்ப செழும் மதி பாகு என - இலாவாண:4/186
இளையவன் படிவம் ஏற்ப இயல்புறீஇ - இலாவாண:5/150
தூண் மிசைக்கு ஏற்ப ஏண் முள் அழுத்திய - இலாவாண:6/58
எட்டு வகை பெரும் சிறப்பு ஏற்ப எழுதி - இலாவாண:6/69
உளை மயிர் அணிந்த உச்சிக்கு ஏற்ப
   வாய் புகு அன்ன வந்து ஒசி கொடி போல் - இலாவாண:6/107,108
தகை மணி கோவை தன் கைக்கு ஏற்ப
   பரூஉ திரள் குறங்கின் பளிக்கு மணி வள் உகிர் - இலாவாண:6/110,111
நிரல் அளவு அமைத்த விரலிற்கு ஏற்ப
   செம்மையில் சிறந்து வெம்மைய ஆகி - இலாவாண:15/55,56
கண்ணிற்கு ஏற்ப நுண்ணிதின் ஒழுகி - இலாவாண:15/86
ஈய கொண்டு தன் எழில் முடிக்கு ஏற்ப
   சூடுதல் தேற்றாள் சுற்றுபு திரியும் - இலாவாண:15/135,136
உச்சிக்கு ஏற்ப ஒப்பனை கொளீஇ - இலாவாண:15/140
ஆகக்கு ஏற்ப அணிகம் வாராய் - இலாவாண:19/124
ஏற்ப முடித்து பூ பிறிது அணியாள் - மகத:9/64
இரந்தனன் ஆகி ஏற்ப காட்டிய - மகத:14/135
வீணைக்கு ஏற்ப விசையொடு மற்று இவை - மகத:14/207
ஏற்ப எடுப்பித்து எல்லியும் காலையும் - வத்தவ:3/17
குலாலற்கு ஏற்ப பெரும் குயம் அருளி - வத்தவ:9/48

 TOP
 
    ஏற்பவை (1)
இருவரும் தம்முள் ஏற்பவை கூறி - மகத:18/95

 TOP
 
    ஏற்பன (1)
ஏக வல்லியும் ஏற்பன அணிந்து - மகத:9/67

 TOP
 
    ஏற்பும் (1)
தரும விகற்பமொடு தானை ஏற்பும்
   கரும விகற்பமொடு காமமும் கெழீஇய - உஞ்ஞை:34/29,30

 TOP
 
    ஏற்போர்க்கு (1)
ஏற்போர்க்கு ஈக இன்றே போன்ம் என - நரவாண:7/121

 TOP
 
    ஏற்ற (34)
திண் நிலை படுகால் திருந்து அடிக்கு ஏற்ற
   மணி கலம் ஒலிப்ப மாடம் ஏறி - உஞ்ஞை:33/190,191
ஏற்ற முன்கை தொடி வீழ்ந்து அற்றால் - உஞ்ஞை:36/119
ஏற்ற கோலத்து இயம்பும் கிண்கிணி - உஞ்ஞை:38/228
ஏந்தினள் ஏற்ற இரும் பிடி இரீஇ - உஞ்ஞை:44/151
காற்றினும் எரியினும் ஏற்ற ஆர்ப்பினும் - உஞ்ஞை:46/206
புடை துளைக்கு ஏற்ற இடை துளை யாப்பின் - இலாவாண:6/63
அடியிற்கு ஏற்ற முடியிற்று ஆகி - இலாவாண:6/81
திரு நுதற்கு ஏற்ற பரிசர கைவினை - இலாவாண:7/34
ஏற்ற செவ்வி மாற்றம் கூறி - இலாவாண:10/8
எருத்திற்கு ஏற்ற திரு தகு கழுத்தின் - இலாவாண:15/78
புரி நூல் மீ கோள் பூம் புறத்து ஏற்ற தன் - இலாவாண:15/126
சேவடிக்கு ஏற்ற செம்பொன் கிண்கிணி - இலாவாண:19/184
மாற்றோர் நுகர படாஅது ஏற்ற
   பல் மணி பயின்ற ஒண் முகட்டு உச்சி - மகத:3/22,23
மம்மர் வைகறை மருங்கு துயில் ஏற்ற
   அனந்தர் முரற்சி அளைஇ புதைந்த - மகத:4/51,52
இலங்கு இழை மாதர் ஏற்ற ஏறி - மகத:6/130
ஏற்ற பொழுதே இன்ப தேவியோடு - மகத:10/11
வனப்பிற்கு ஏற்ற வலியும் விச்சையும் - மகத:20/159
சூடகத்து ஏற்ற சுடர் ஒளி பவளமொடு - மகத:22/234
வதுவைக்கு ஏற்ற மங்கல பேர் அணி - மகத:22/237
மைந்தர் அழகிற்கு ஏற்ற
   அழல் மணி நெடு முடி அரசருள் அரசன் - மகத:22/251,252
பத்தற்கு ஏற்ற பசை அமை போர்வை - வத்தவ:3/77
இயல்பு உடை அம் கண் ஏற்ற பின் காணாது - வத்தவ:7/92
கருவி வானில் கார் துளிக்கு ஏற்ற
   அருவி வள்ளியின் அணி பெறு மருங்குலள் - வத்தவ:7/214,215
ஏற்ற கோலத்து இளமையொடு புணர்ந்தோர் - வத்தவ:11/37
மற்று அதற்கு ஏற்ற வகை பல உண்டு அவை - வத்தவ:14/31
பள்ளி ஏற்ற பின் பதன் அறிந்து வணங்கி - நரவாண:1/144
இசைந்த வெண் துகில் ஏற்ற தானையன் - நரவாண:2/21
தன்மைக்கு ஏற்ற தலை பேர் அணிகலம் - நரவாண:7/9
ஏற்ற சிறப்பின் யூகி-தன்னொடு - நரவாண:7/85
ஏற்ற முகத்தின் இறைவனும் விரும்பி - நரவாண:7/106
விரலும் விரலிற்கு ஏற்ற அங்கையும் - நரவாண:8/100
அங்கைக்கு ஏற்ற பைம் தொடி முன்கையும் - நரவாண:8/101
முன்கைக்கு ஏற்ற நன்கு அமை தோளும் - நரவாண:8/102
தோளிற்கு ஏற்ற வாள் ஒளி முகமும் - நரவாண:8/103

 TOP
 
    ஏற்றம் (3)
ஏற்றம் விரும்பலும் இளம் பிடி எடுப்பி - உஞ்ஞை:45/67
கட்டில் ஏற்றம் கடந்த பின்னர் - இலாவாண:4/26
ஆனை ஏற்றம் அறிய காட்டி - இலாவாண:9/76

 TOP
 
    ஏற்றமும் (1)
ஏற்றமும் இழிவும் இடையிடை பல்கி - உஞ்ஞை:49/48

 TOP
 
    ஏற்றல் (4)
ஏற்றல் காணும் எம் இறைவன் தான் என - உஞ்ஞை:36/243
ஏற்றல் வேண்டும் என்று இரந்து ஏற்றினமால் - உஞ்ஞை:45/78
உடன் பிடி ஏற்றல் உற்றனெம் ஆகி - உஞ்ஞை:47/82
தானம் ஏற்றல் தகாஅது என்று தன் - மகத:8/115

 TOP
 
    ஏற்றலின் (1)
தனக்கு பதமாக தலைப்பெய்து ஏற்றலின்
   வார் கவுள் வேழமும் வசத்தது அன்றி அவன் - மகத:27/164,165

 TOP
 
    ஏற்றலும் (3)
கால் பிடி-தன்னொடு ஏற்றுக ஏற்றலும்
   வேல் படை இளையர் நால் பெரும் திசையும் - உஞ்ஞை:43/40,41
ஏற்று இனம் ஏற்றலும் காற்று என கடாஅய் - உஞ்ஞை:47/84
எண்ணாயிரம் கை ஏற்றினள் ஏற்றலும்
   கண் ஆர் மாதர் மதி முகம் காணில் - வத்தவ:12/245,246

 TOP
 
    ஏற்றனன் (2)
மாக விசும்பின் இன் துயில் ஏற்றனன்
   கேகயத்து அரசன் என அது கேட்டே - மகத:20/139,140
ஏற்றனன் கொண்டு வேற்றுமை இன்றி - வத்தவ:10/108

 TOP
 
    ஏற்றி (46)
நிறை_நூல் பொத்தக நெடு மணை ஏற்றி
   வல்லோர் வகுத்து வாசனை வாக்கியம் - உஞ்ஞை:34/26,27
குற்றம்_இல் குறங்கில் கோ வலம் ஏற்றி
   கோதை மார்பில் காதலின் ஒடுக்கி - உஞ்ஞை:34/158,159
உழை செல் மகளிர் உக்கம் ஏற்றி
   சித்திரம் பயின்ற செம்பொன் ஓலை - உஞ்ஞை:34/213,214
வெண் கால் அமளி விருப்பின் ஏற்றி
   அணி இழை மகளிரும் யானையும் வணக்கும் - உஞ்ஞை:35/99,100
கடிது இயல் வையம் கவ்வையின் ஏற்றி
   கொடி அணி கூலம் கொண்டனன் போவுழி - உஞ்ஞை:35/151,152
எழுது நுண் புருவம் ஏற்றி இயைவித்து - உஞ்ஞை:35/179
புலவி தண்டம் தமர் வயின் ஏற்றி
   இல்லையாயினும் சொல் வகை செருக்கி - உஞ்ஞை:35/191,192
பணை எருத்து ஏற்றி பண்ணின ஆகி - உஞ்ஞை:38/110
கண்ணி நெற்றி வெண் சூட்டு ஏற்றி
   தூ துகில் உடுத்து தொடி உடை தட கை - உஞ்ஞை:39/20,21
விசைய வேழத்து இசை எருத்து ஏற்றி
   பெரு விறல் வேந்தன் சிறுவரை எல்லாம் - உஞ்ஞை:39/39,40
நன் கலம் ஏற்றி நாள்_அணி அணிந்து - உஞ்ஞை:39/55
முழுது நுதல் நெருங்க முரிய ஏற்றி
   செதும்பல் தாமரை செவ் இதழ் போல - உஞ்ஞை:40/322,323
கரும் கண்-தோறும் பசும்பொன் ஏற்றி
   தொடி தலை படு கோல் பிடித்த கையர் - உஞ்ஞை:40/376,377
ஏற்றி பண்ணிய இன களிறு நிரைஇ - உஞ்ஞை:41/19
புனைவு கொண்டு ஏற்றி வினைவலர் இயற்றிய - உஞ்ஞை:42/88
நல் நகர் நடுவண் பொன் மணை ஏற்றி
   பெரும் திசை நோக்கி இருந்து அவண் இறைஞ்சி - உஞ்ஞை:42/107,108
நீர் ஆடு பல் கலம் நெரிய ஏற்றி
   ஆராடு தானத்து ஐந்நூறாயிரம் - உஞ்ஞை:42/113,114
இடு மணி யானை எருத்தம் ஏற்றி
   அடல் முரசு அறைந்தமை அறிந்தனம் ஆதலின் - உஞ்ஞை:43/17,18
இரும் பிடி நின்னொடு ஒருங்கு உடன் ஏற்றி
   கொடுக்குவ வேண்டும் என்று எடுத்து_எடுத்து ஏத்தி - உஞ்ஞை:44/121,122
உதயணகுமரன் ஒரு பிடி ஏற்றி
   போவது பொருள் என காவலர் இரப்ப - உஞ்ஞை:44/136,137
பெருந்தகை அண்ணல் பிடி மிசை ஏற்றி
   திருந்து இழை அணிந்த பரந்து ஏந்து அல்குல் - உஞ்ஞை:45/1,2
ஊறு களி யானை ஒருங்கு உடன் ஏற்றி
   வீறுபடு கோலமொடு வியல் நகர் விழவு அணி - உஞ்ஞை:54/78,79
என் அணி பெரும் கலம் தன் அணிந்து ஏற்றி
   குற்றம்_இல் பெரும் புகழ் கோப்பெருந்தேவி - உஞ்ஞை:54/81,82
பாவையை தழீஇ பண்ணு பிடி ஏற்றி
   எய்தா அரும்_பொருள் எய்திய பின்றை - உஞ்ஞை:54/107,108
காப்பு பொறி ஒற்றி யாப்புற ஏற்றி
   தனிமை எய்திய மன்னனும் தையலும் - உஞ்ஞை:56/199,200
பணை எருத்து ஏற்றி பல்லவர் சூழ - இலாவாண:2/38
கண் ஆர் குருசிலை கவின்பெற ஏற்றி
   தகை மலர் தாரோன் தட கை பற்றி அவள் - இலாவாண:3/157,158
வாசவதத்தை மதி முகத்து ஏற்றி
   சிதர் அரி மழை கண் மதர்வை நோக்கம் - இலாவாண:9/98,99
சில் அரி கண்ணியொடு சிறு பிடி ஏற்றி
   செயற்படு கருமத்து இயற்கை இற்று என - இலாவாண:9/106,107
கோல எருத்தம் குலவ ஏற்றி
   வள நகர் புக்கு தன் உள மனைக்கு எல்லாம் - இலாவாண:11/143,144
காட்ட காணாள் கதம் பாடு ஏற்றி
   வாள் கண் பாவை மருவற்கு இன்னா - மகத:14/40,41
மெல் விரல் நோவ பல்-கால் ஏற்றி
   ஆற்றாள் ஆகி அரும்_பெறல் தோழியை - மகத:14/203,204
யானை ஏற்றி அணி முரசு அறைதலும் - மகத:19/61
பவழ கொட்டை பொன் செருப்பு ஏற்றி
   திகழ் செய் கோல திரு மணை இரீஇ - மகத:22/202,203
பீடத்து இரீஇய பாடு அறிந்து ஏற்றி
   நறு நீர் துவர் கை வயின்வயின் உரீஇ - மகத:22/207,208
வெற்றி முரசம் வேழம் ஏற்றி
   நகரினும் நாட்டினும் பகர்வனர் அறைக என - மகத:27/182,183
ஈமம் ஏற்றி அவன் உரிமை சனத்திற்கு - மகத:27/190
பிறை மருப்பு யானை பிணர் எருத்து ஏற்றி
   பறை விட்டன்றால் பகை முதல் அறுத்து என் - மகத:27/219,220
முறையின் ஏற்றி பந்து நிலத்து இடலும் - வத்தவ:12/132
பொரு_இல் பக்கத்து பொன் கலம் ஏற்றி
   வருக என மூவரும் ஒரு கலத்து அயில - வத்தவ:14/162,163
அரு விலை நன் கலம் அமைவர ஏற்றி
   குரவர் போல கூட்டுபு கொடுப்ப - வத்தவ:17/111,112
ஆர்வ உள்ளத்து அவனுடன் ஏற்றி
   ஊரப்படு நீ ஓர் இருள் எல்லையுள் - நரவாண:3/126,127
நாளும்நாளும் நன்கனம் ஏற்றி
   ஊழின்ஊழின் உயர ஓட்டி - நரவாண:4/84,85
பெரும் கை யானை பிணர் எருத்து ஏற்றி
   இரும் கண் அதிர - நரவாண:6/60,61
சாலங்காயனை தோல்வினை ஏற்றி
   உரைத்த கிளவிக்கு ஒன்றே போல - நரவாண:7/103,104
ஏட்டு மிசை ஏற்றி இயல்பினின் யாப்புறுத்து - நரவாண:8/17

 TOP
 
    ஏற்றிய (3)
இடைநாள் பிறையின் ஏற்றிய திரு வில் - உஞ்ஞை:37/26
அழி கவுள் வேழத்து அணி எருத்து ஏற்றிய
   இடி உமிழ் முரசின் இரும் கண் தாக்கி - மகத:5/34,35
நாற்றிய கையர் ஏற்றிய கோலமொடு - மகத:17/169

 TOP
 
    ஏற்றியும் (4)
கதுப்பு அணி புனைந்தும் கதிர் வளை ஏற்றியும்
   மது களி கொண்ட மதர் அரி நெடும் கண் - இலாவாண:16/73,74
இலக்கண செ விரல் ஏற்றியும் இழித்தும் - மகத:14/272
பிடித்த பூம் பந்து அடித்து விசும்பு ஏற்றியும்
   அடித்த பந்தால் விடுத்தவை ஓட்டியும் - வத்தவ:12/68,69
சூடகம் ஏற்றியும் பாடகம் திருத்தியும் - வத்தவ:12/118

 TOP
 
    ஏற்றினமால் (1)
ஏற்றல் வேண்டும் என்று இரந்து ஏற்றினமால்
   கூற்ற ஆணை எம் கொற்றவன் தலைத்தாள் - உஞ்ஞை:45/78,79

 TOP
 
    ஏற்றினரால் (1)
கட்டில் ஏற்றினரால் கருதியது முடித்து என் - இலாவாண:3/167

 TOP
 
    ஏற்றினள் (1)
எண்ணாயிரம் கை ஏற்றினள் ஏற்றலும் - வத்தவ:12/245

 TOP
 
    ஏற்றினன் (1)
பிடி ஏற்றினன் ஆல் பெருந்தகை உவந்து என் - உஞ்ஞை:44/155

 TOP
 
    ஏற்று (25)
ஏற்று இனம் வரூஉம் நாற்றம் கழுமிய - உஞ்ஞை:37/212
சாற்றிட கொண்ட ஏற்று உரி முரசம் - உஞ்ஞை:38/100
ஏற்று அரி மாவின் தோற்றம் போல - உஞ்ஞை:39/37
ஏற்று உரி முரசின் இறைவன் மூதூர் - உஞ்ஞை:43/195
ஏற்று இனம் ஏற்றலும் காற்று என கடாஅய் - உஞ்ஞை:47/84
ஏற்று சிங்கத்தின் இடித்து எழுந்து உரறி - உஞ்ஞை:47/112
ஏற்று அமை இரும் பிடி இயக்கமும் எண்ணி - உஞ்ஞை:52/5
கூற்று உறழ் மொய்ம்பின் ஏற்று பெயர் அண்ணல் - உஞ்ஞை:54/66
யாப்பு உடை நண்பின் ஏற்று பெயரன் - உஞ்ஞை:56/148
ஏற்று உரி போர்த்த இடி உறழ் தழங்குரல் - இலாவாண:2/28
ஏற்று உரி அதல் மிசை ஆற்றுளி இருந்து - இலாவாண:3/122
அம் வயிற்கு ஏற்று கவ்விதின் பொலிந்து - இலாவாண:6/61
இடையிற்கு ஏற்று புடையில் பொலிந்து - இலாவாண:6/98
கயல் ஏர் கண்ணி துயில் ஏற்று எழவே - இலாவாண:11/66
ஏற்று எழுந்தனனால் இனியவரிடை என் - இலாவாண:18/119
ஏற்று எழுந்ததன் பின் இனியோர் குழீஇ - இலாவாண:19/1
ஏற்று எதிர்கொள்ளும் இன்ப கம்பலை - மகத:16/13
பூண் ஏற்று அகன்ற புடை கிளர் அகலத்து - மகத:20/62
தாம் ஏற்று அழுத்திய சத்தி வாங்கி - மகத:20/63
ஏற்று உரி முரசின் இறை_மகன் பணித்த - மகத:23/61
இசை கொள் ஓசையின் இன் துயில் ஏற்று
   விசை கொள் மான் தேர் வியல் கெழு வேந்தன் - வத்தவ:5/82,83
ஏற்று அலர் பைம் தார் ஏயர்க்கு என்றும் - வத்தவ:8/44
எழுந்த மாதரொடு இறைவனும் ஏற்று
   கழிந்த கங்குல் கனவினை வியந்து - நரவாண:1/110,111
நல் பெரும் கனவின் நடுங்குவனள் ஏற்று
   வெள்ள தானை வியலக வேந்தன் - நரவாண:1/142,143
ஏற்று_அரு மலையும் செலற்கு_அரும் தீவும் - நரவாண:4/90

 TOP
 
    ஏற்று_அரு (1)
ஏற்று_அரு மலையும் செலற்கு_அரும் தீவும் - நரவாண:4/90

 TOP
 
    ஏற்றுக (1)
கால் பிடி-தன்னொடு ஏற்றுக ஏற்றலும் - உஞ்ஞை:43/40

 TOP
 
    ஏற்றும் (4)
குஞ்சர ஏற்றும் கொடி தேர் வீதியும் - உஞ்ஞை:36/358
பண்டி துறை ஏற்றும் பகட்டு இணை போல - உஞ்ஞை:53/54
பட்ட நெற்றியில் பொட்டிடை ஏற்றும்
   மற்றது புறங்கையில் தட்டினர் எற்றியும் - வத்தவ:12/88,89
அங்கையின் ஏற்றும் புறங்கையின் ஓட்டியும் - வத்தவ:12/229

 TOP
 
    ஏற்றுவனள் (1)
போற்று பல கூற ஏற்றுவனள் இருப்ப - மகத:5/96

 TOP
 
    ஏற்றோர் (3)
ஏற்றோர் தாக்கி கூற்று உறை உலகினுள் - உஞ்ஞை:46/14
ஏற்றோர் யாவர் ஈண்டு வந்து எதிர்க்க என - மகத:27/136
ஏற்றோர் சாய்த்த இ குருகுலத்தகத்து ஓர் - வத்தவ:11/13

 TOP
 
    ஏற (7)
தானை தவிசில் தகையோன் ஏற
   ஏனை தவிசில் நங்கையை இருத்தினர் - உஞ்ஞை:34/231,232
வாயின் முற்றத்து வயங்கு_இழை ஏற
   பாத பீடிகை பக்கம் சேர்த்தலும் - உஞ்ஞை:38/240,241
விடற்கு_அரும் தோழர் புடை களிறு ஏற
   அம் தண் பொதியில் சந்தன மரமும் - உஞ்ஞை:58/29,30
வாசவதத்தை வையம் ஏற
   கோல் தொழிலாளர் மாற்று மொழி இயம்ப - உஞ்ஞை:58/75,76
கோடு உயர் மாடத்து கொடு முடி ஏற
   அரத்த கொப்புளொடு வருத்தம் கொண்ட-கொல் - மகத:8/15,16
வலம்படும் நமக்கு என வலம்கொண்டு ஏற
   ஒழிந்த மாந்தர் பொலிந்து புறம் காப்ப - மகத:19/191,192
ஒள் நறும் தெரியல் உதயணன் ஏற
   பண்ணி செல்க பத்திராபதி என - நரவாண:3/122,123

 TOP
 
    ஏறல் (2)
மூது அறி பாகன் ஏறல் இயையான் - உஞ்ஞை:38/246
ஏறல் நன்று என கூறி வைத்தலின் - மகத:13/43

 TOP
 
    ஏறலும் (3)
பல் வளை ஆயத்து பைம்_தொடி ஏறலும்
   செய்யோள் அமர்ந்த செம்பொன் தாமரை - உஞ்ஞை:38/256,257
ஏர் அணி எருத்தம் இறை_மகன் ஏறலும்
   தூய்மை இன்று என மா நிலத்து இயங்கா - உஞ்ஞை:38/321,322
வீறு பெறு விமானத்து விரைந்து அவர் ஏறலும்
   மற்றை மூவரும் கொற்றவன் குறுகி - நரவாண:4/63,64

 TOP
 
    ஏறா (2)
ஈமம் ஏறா இயல்பு உடை அமைதியர்க்கு - வத்தவ:1/27
ஏறா கருமம் இது என எண்ணி - நரவாண:3/34

 TOP
 
    ஏறி (52)
மணி கலம் ஒலிப்ப மாடம் ஏறி
   அணி கால் பவழத்து யவனர் இயற்றிய - உஞ்ஞை:33/191,192
கலன் அணி ஆயம் கைதொழ ஏறி
   புலம்புகொள் மஞ்ஞையின் புல்லென சாம்பி - உஞ்ஞை:33/195,196
இழை அணி இரும் பிடி எருத்தம் ஏறி
   கடை அணி ஆவணம் கைதொழ போதந்து - உஞ்ஞை:34/37,38
திரு மணி அம்பலம் கொண்டு ஒருங்கு ஏறி
   இரட்டை தவிசின் இருக்கை காட்டி - உஞ்ஞை:34/41,42
அரக்கு பூமி ஆயமொடு ஏறி
   பரப்பு மலர் ஒருசிறை பாவையை நிறீஇ - உஞ்ஞை:34/226,227
சந்தன பீடிகை சார்வு அணை ஏறி
   பல் மயிர் கவரியொடு பரிசனம் சுற்ற - உஞ்ஞை:37/15,16
அண்ணல் யானையும் பண்ணுறுத்து ஏறி
   இலைய இன பரி கொளீஇ சிலையின் - உஞ்ஞை:37/45,46
பொன் கோட்டு அம்பலம் பொலிய ஏறி
   கற்றறிவாளர் சுற்றிய நடுவண் - உஞ்ஞை:37/185,186
பொய் பேய் ஏறி பொள்ளென நக்கு - உஞ்ஞை:37/241
சுற்றுபு சூழ முற்றத்து ஏறி
   பிடியும் வையமும் வடிவு அமை பிடிகையும் - உஞ்ஞை:38/134,135
கோல் கொள் கன்னியர் மேல்கொண்டு ஏறி
   விசி பிணியுறுத்த வெண் கோட்டு ஊர்தி - உஞ்ஞை:38/156,157
விழா மலி சுற்றமொடு வெண் மணல் ஏறி
   நாள் அத்தாணி வால் அவை நடுவண் - உஞ்ஞை:38/280,281
கூட கூம்பின் நீள் திரள் ஏறி
   உச்சிக்கு இவரும் கட்கு இன் கடுவன் - உஞ்ஞை:40/72,73
நெடு வீழ் ஊசல் முடி பிணி ஏறி
   தொடு வேல் முற்றத்து தோழியோடு ஆடா - உஞ்ஞை:40/113,114
நெடு நீர் மாடத்து ஏணி ஏறி
   பொறி மயில் பெடையின் பொங்குபு பாய்தலின் - உஞ்ஞை:40/156,157
வார் நீர் துடைத்து வயந்தகன் ஏறி
   வானக நாள்_மீன் தானம் நோக்கி - உஞ்ஞை:52/2,3
கண் பொரி கள்ளி கவர் சினை ஏறி
   கூப்பிடு குரல் இசை சேண் புலத்து இசைப்பவும் - உஞ்ஞை:52/49,50
மலிந்து அவண் ஏறி வத்தவர் பெருமகன் - உஞ்ஞை:56/281
பாகர் தருதலின் பணை எருத்து ஏறி
   கரு முகில் மருங்கின் இருள் அறுத்து ஏர்தரும் - உஞ்ஞை:58/19,20
நளி வரை அன்ன நளகிரி ஏறி
   ஒளி மணி கொடும் பூண் உதயணகுமரனை - இலாவாண:8/51,52
விண்ணகத்து இழிந்து விமானம் ஏறி
   மண்ணகத்து இயங்கல் மனத்தின் வேண்டிய - இலாவாண:8/194,195
புலி முக மாடம் மலிர ஏறி
   மையல் வேழம் அடக்கிய மன்னனை - இலாவாண:9/68,69
பாடு அமை படுகால் பைய ஏறி
   நங்காய் காண் உன் பெருமான் நல் நகர் - இலாவாண:10/71,72
மட மொழி மகளிரும் மைந்தரும் ஏறி
   கடல் மலை பெயரும் காலம் போல - இலாவாண:12/38,39
அடு திறல் அண்ணல் அணி பெற ஏறி
   மறு_இல் மா நகர் குறுக வரு வழி - இலாவாண:18/30,31
அருமை அமைச்சர் பெரு மலை ஏறி
   கொண்டு யாம் தருதும் கண்டனை தெளிக என - மகத:2/10,11
இலங்கு இழை மாதர் ஏற்ற ஏறி
   பொலம் தொடி மகளிர் பொலிவொடு சூழ - மகத:6/130,131
ஆயம் சூழ அமளியுள் ஏறி
   நறு மலர் காவினுள் துறுமிய பூம் துணர் - மகத:7/76,77
கோதை ஆயம் பரவ ஏறி
   திரு மலர் வீதி போதந்து எதிர் மலர் - மகத:8/33,34
வான் தோய் மண்டபம் வந்து ஒருங்கு ஏறி
   தேன் தோய் கோதை சில்லென உராய் - மகத:8/49,50
அலர் ததை ஐம்பால் அணி_இழை ஏறி
   போந்தனள் ஆகி பூம் தண் கானத்துள் - மகத:13/12,13
வித்தக கைவினை சத்தி ஏறி
   உட்கு தக உரைத்தலும் கட்கு இன் பாவை - மகத:14/153,154
இழை நிரைத்து இலங்க ஏறி இறைகொள - மகத:16/28
பொற்பு உடை புரவி பொலிய ஏறி
   நல் படை நலியா நன்மையொடு பொலிந்த - மகத:17/225,226
இடு மணி இல்லது ஓர் பிடி மிசை ஏறி
   படு மணி வாயில் பலரொடும் போதர - மகத:18/76,77
நிலை கால் ஏணியும் தலைச்சிறந்து ஏறி
   இரும் பேர் உலகம் ஒருங்கு இயைந்தது போல் - மகத:20/150,151
மிலைச்சர் ஏறி தலை படை தருக்குவ - மகத:26/74
கான வேங்கை கவர் சினை ஏறி
   அச்சம் எய்தி எத்திசை மருங்கினும் - வத்தவ:3/71,72
கொடுஞ்சி நெடும் தேர் கோல் கொள ஏறி
   நெடும் கொடி வீதி நீந்துபு போகி - வத்தவ:7/147,148
பழிப்பு_இல் பள்ளி பலர் தொழ ஏறி
   திரு இரண்டு ஒரு மலர் சேர்ந்து அவண் உறையும் - வத்தவ:8/27,28
நிலா விரி முற்றத்து குலாவொடு ஏறி
   பந்தடி காணிய நிற்ப இப்பால் - வத்தவ:12/14,15
காவலன் பிடி மிசை காண் தக ஏறி
   பல் வகை மகளிரொடு பையென சென்று தன் - வத்தவ:12/30,31
ஆடு அரங்கு ஏறி அணைந்திருந்து அவளோடு - வத்தவ:13/195
காணும் தன்மையர் காண்வர ஏறி
   பிடியும் சிவிகையும் பிறவும் புகாஅள் - வத்தவ:15/113,114
திரு மாண் ஆகத்து தேவியொடு ஏறி
   இருந்த-பொழுதின் பொருந்திய அல்லியுள் - நரவாண:1/91,92
வெண் மலை மீமிசை ஏறி வேட்கையின் - நரவாண:1/154
இறுவரை ஏறி இமையோடு ஆடும் - நரவாண:1/185
தானும் தேவியும் தகை பெற ஏறி
   வானோர் கிழவனின் வரம்பு இன்று பொலிய - நரவாண:4/54,55
முகில் உளம் கிழிய அகல் விசும்பு ஏறி
   எழுச்சி எல்லை முனிந்த பின்னர் - நரவாண:4/107,108
இடு மணி யானை எருத்தம் ஏறி
   படு முகில் மீமிசை பனி மதி போல - நரவாண:8/78,79
வெள்ளி விமானம் விதிர்விதிர்த்து ஏறி
   வள்ளி மருங்கின் ஒள் இழை ஏழையை - நரவாண:8/53,54
செல்வ பல் கதிர் செறிந்து வனப்பு ஏறி
   இன்பம் விளைந்த நன் பெரு நெல்லின் - நரவாண:8/77,78

 TOP
 
    ஏறிய (12)
சீறடி சுவட்டு எழுத்து ஏறிய சென்னியர் - உஞ்ஞை:35/210
வீர குமரரும் விரும்புவனர் ஏறிய
   மாவும் களிறும் மருப்பு இயல் ஊர்தியும் - உஞ்ஞை:38/10,11
திரு நுதல் ஆயத்து தேவியர் ஏறிய
   பெரும் கோட்டு ஊர்தி பின்பின் பிணங்கி - உஞ்ஞை:38/179,180
ஏறிய வையத்து எடுத்த கஞ்சிகை - உஞ்ஞை:38/185
பெருங்கோ நங்கை பெட்ப ஏறிய
   இரும் கை இளம் பிடி கட செருக்கு எய்தி - உஞ்ஞை:40/30,31
தொடி அணி தோளியர் துன்னி ஏறிய
   வடிவு அமை அம்பி அடியின் உள் வானத்து - உஞ்ஞை:41/44,45
இகழ்தல் இன்றி ஏறிய வீரர் - மகத:20/28
எலிச்செவி அரசன் தம்பி ஏறிய
   கொலை பெரும் களிற்றின் எருத்தத்து பாய்ந்து அவன் - மகத:20/88,89
வென்றோன் ஏறிய வேழம் சார்ந்து அவன் - மகத:20/107
கட்டில் ஏறிய காவல் வேந்தன் - மகத:23/1
ஏறிய யானையும் தன் மெய் கலனும் - வத்தவ:1/5
கூறி அ பகல் போய் ஏறிய பின்றை - வத்தவ:13/161

 TOP
 
    ஏறிய-ஞான்று (1)
இறும்பு புரை எருத்தம் ஏறிய-ஞான்று
   கண்டது முதலா கானம் நீந்தி - வத்தவ:5/54,55

 TOP
 
    ஏறின் (2)
விண்ணகம் ஏறின் அல்லது விரி நீர் - உஞ்ஞை:45/84
வாயில் போந்து வையம் ஏறின்
   சாயல் நோம் என தாய் அகட்டு எடுத்து - மகத:5/94,95

 TOP
 
    ஏறினம் (1)
ஏறினம் ஆகி இள மர காவினுள் - மகத:8/22

 TOP
 
    ஏறினர் (2)
செய் வளை மகளிர் செய் குன்று ஏறினர்
   உணர்ந்தோர் கொண்ட உறு நன்று ஏய்ப்ப - இலாவாண:7/31,32
நகர் காண் ஏணி விரைவனர் ஏறினர்
   ஒரு புடை அல்லது உட்குவரு செங்கோல் - இலாவாண:7/47,48

 TOP
 
    ஏறினள் (2)
வதுவை வையம் ஏறினள் போல - உஞ்ஞை:38/213
தேறிய தோழி ஏறினள் சென்று தன் - மகத:22/115

 TOP
 
    ஏறினனால் (2)
கரை ஏறினனால் கார் நீர் கடந்து என் - உஞ்ஞை:51/91
கட்டில் ஏறினனால் கருதியது முடித்து என் - மகத:22/285

 TOP
 
    ஏறினும் (2)
பாகர் ஏறினும் தோல் கயிறு இடினும் - இலாவாண:11/118
உலகம் எல்லாம் ஏறினும் ஏறுக - நரவாண:4/71

 TOP
 
    ஏறு (10)
இலக்க திண் படை ஏறு பல காட்டலும் - உஞ்ஞை:37/51
ஏறு இ இரும் பிடி என்னொடு என்று தன் - உஞ்ஞை:45/61
கவரிமான் ஏறு கண்படை கொள்ளும் - உஞ்ஞை:50/20
வரை ஏறு அரிமா போல மற்று அதன் - உஞ்ஞை:51/90
ஏறு பெற்று இகந்த பின்றை வீறு பெற்று - உஞ்ஞை:56/277
நிறத்து ஏறு எஃகின் அனைய ஆதலின் - மகத:21/97
வெண் தார் அணிந்த வெள் ஏறு கிடந்த - வத்தவ:5/74
விள்ளா விழு புகழ் வெள் ஏறு என்பதை - வத்தவ:5/115
வெள் ஏறு கிடந்த வெண் தாமரை பூ - நரவாண:1/93
மேலை அம் பாற்கடல் வெள் ஏறு கிடந்த - நரவாண:3/194

 TOP
 
    ஏறுக (3)
இரும் பிடி இனிதுழி ஏறுக சென்று என - உஞ்ஞை:53/90
ஏறுக இருவரும் என்று அவன் உரைத்தலின் - நரவாண:4/62
உலகம் எல்லாம் ஏறினும் ஏறுக
   பலர் புகழ் வேந்தே என்று அவன் பணிதலும் - நரவாண:4/71,72

 TOP
 
    ஏறுண்டு (1)
நிறத்து ஏறுண்டு நிலத்து வீழ்வது போல் - மகத:20/59

 TOP
 
    ஏறுதற்கு (1)
ஏறுதற்கு அமைந்த இரும் கவுள் வேழமும் - மகத:19/94

 TOP
 
    ஏறுப (1)
ஏறுப இழிப ஆகாயம் நிற்பன - வத்தவ:12/202

 TOP
 
    ஏறும் (11)
முரசு எறி முற்றத்து முந்து வந்து ஏறும்
   அரச மங்கையர் அடி மிசை கொண்ட - உஞ்ஞை:38/158,159
வீழ்ந்த திங்களை விசும்பு கொண்டு ஏறும்
   தெய்வ மகாஅரின் ஐயுற தோன்றி - உஞ்ஞை:40/74,75
சீயமும் ஏறும் பாய் பரி புரவியும் - உஞ்ஞை:42/85
கடமான் ஏறும் கவரியும் கரடியும் - உஞ்ஞை:46/279
அரிமான் ஏறும் நரி மான் சூழ்ச்சியும் - உஞ்ஞை:54/29
யானையும் சுரி உளை அரிமான் ஏறும்
   மானின் பெடையும் வாள் வரி உழுவையும் - இலாவாண:11/30,31
சீயமும் ஏறும் திருவும் பொய்கையும் - மகத:9/40
அன்ன வீணையும் அரிமான் ஏறும்
   பல் மர காவும் பாவையும் பந்தியும் - மகத:14/75,76
உருமண்ணுவா உடன் ஏறும் அதற்கு - நரவாண:4/57
ஏறும் இடமும் இழியும் வகையும் - நரவாண:4/77
கலை மான் ஏறும் கவரியும் களித்த - நரவாண:4/138

 TOP
 
    ஏறொடு (1)
பால ஆ ஏறொடு பதினாறாயிரம் - வத்தவ:11/33

 TOP
 
    ஏன்ற (1)
இயைந்து அணி பெற்ற ஏன்ற அம் வயிற்று - இலாவாண:4/124

 TOP
 
    ஏனத்து (1)
கானத்து அகிலும் ஏனத்து எறியும் - உஞ்ஞை:58/86

 TOP
 
    ஏனம் (1)
ஏனல் பெருந்தினை ஏனம் காவலர் - உஞ்ஞை:50/51

 TOP
 
    ஏனமொடு (1)
எறி மயிர் ஏனமொடு எண்கு இனம் இரிய - உஞ்ஞை:51/59

 TOP
 
    ஏனல் (2)
ஏனல் பெருந்தினை ஏனம் காவலர் - உஞ்ஞை:50/51
ஏனல் குறவர் இரும் குடி சீறூர் - இலாவாண:14/46

 TOP
 
    ஏனலும் (2)
அருவி அறையும் உருவ ஏனலும்
   குழியும் குவடும் வழி நீர் அசும்பும் - உஞ்ஞை:46/274,275
கொய் குரல் ஏனலும் குளிர் சுனை பாறையும் - இலாவாண:12/149

 TOP
 
    ஏனவை (1)
எந்திர ஊர்தியொடு ஏனவை இயற்றி - இலாவாண:8/187

 TOP
 
    ஏனை (14)
ஏனை தாயரும் ஆனாது ஏத்த - உஞ்ஞை:34/180
ஏனை தவிசில் நங்கையை இருத்தினர் - உஞ்ஞை:34/232
இறை கெழு குமரரும் ஏனை விச்சை - உஞ்ஞை:37/139
இறைகொண்டு ஈண்டிய ஏனை மாந்தரும் - உஞ்ஞை:39/49
ஏனை மாடமும் எழுந்தன்றால் எரி என் - உஞ்ஞை:43/205
ஏனை நின்ற இருபதின் எல்லையும் - உஞ்ஞை:52/112
ஏனை நூற்கும் ஏதிலென் அல்லேன் - மகத:12/18
சீரகத்து அரிசியும் ஏலமும் ஏனை
   காயமும் எல்லாம் ஆய்வனர் அடக்கி - மகத:17/144,145
உயர்ச்சி உள்ளத்து இசைச்சனும் ஏனை
   தட வரை மார்பின் இடவகன் உளப்பட - மகத:19/187,188
யானும் வேண்டின் வருகுவன் ஏனை
   சேண் நில மன்னர் கேண்மை உடையோர்க்கு - மகத:24/18,19
ஏனை கேள்வியும் இணை தனக்கு இல்லவன் - வத்தவ:3/66
ஏனை உலகமும் இவற்கே இயைக என - வத்தவ:7/35
யூகி தன்னோடு ஒழிய ஏனை
   பாகு இயல் படைநர் பலரையும் விடுத்து - வத்தவ:9/61,62
ஏனை வகையின் மேல் நிலை திரியாது - நரவாண:6/104

 TOP
 
    ஏனைய (7)
கோல வை வேல் ஏனைய குமரர்க்கு - உஞ்ஞை:40/361
ஏனைய பிறவும் ஏஎர் உடையன - உஞ்ஞை:42/87
மாலை பந்தும் ஏனைய பிறவும் - உஞ்ஞை:57/46
யானையும் தானையும் ஏனைய பிறவும் - இலாவாண:2/20
ஏனைய பிறவும் ஆனா உவகையொடு - இலாவாண:11/97
நாணும் தொடரும் ஏனைய பிறவும் - இலாவாண:19/120
ஏனைய பிறவும் எழில் நகர் விழவு அணி - வத்தவ:15/112

 TOP
 
    ஏனையது (1)
வானும் வணக்குவம் ஏனையது என் என - உஞ்ஞை:43/85

 TOP
 
    ஏனையர் (1)
இ நாட்டார் அலிர் ஏனையர் போல்வீர் - மகத:6/184

 TOP
 
    ஏனையோர் (1)
ஏனையோர் பிறரும் புனைவனர் ஈண்டி - வத்தவ:15/129

 TOP
 
    ஏனோர் (6)
ஏனோர் உணர்த்துதல் நீக்கி கோமான் - உஞ்ஞை:47/153
வையத்து ஏனோர் வல்லர் அல்லா - உஞ்ஞை:48/103
ஏனோர் அறியா இயற்கைத்து ஆகி - இலாவாண:10/29
இசைச்சன் முதலா ஏனோர் பிறர்க்கும் - வத்தவ:9/38
ஏனோர் பிறர்க்கும் நாள்நாள்-தோறும் - வத்தவ:10/105
ஏனோர் பிறர்க்கும் இவை என வகுத்த - நரவாண:6/94

 TOP
 
    ஏனோர்-மாட்டு (1)
ஏதின்மை ஈனும் ஏனோர்-மாட்டு என - வத்தவ:8/7

 TOP
 
    ஏனோர்க்கு (2)
ஏனோர்க்கு இசைப்பின் ஏதம் தரும் என - மகத:14/285
ஏனோர்க்கு இன்று என எய்திய உவகையர் - வத்தவ:8/117

 TOP