<<முந்திய பக்கம்

பெருங்கதை - தொடரடைவு

கி - முதல் சொற்கள்
கிடக்கை 3
கிடக்கையும் 2
கிடங்கிலுள் 1
கிடங்கு 1
கிடங்கும் 1
கிடத்தியும் 1
கிடந்த 45
கிடந்தது 2
கிடந்தமை 1
கிடந்தனமாக 1
கிடந்து 6
கிடந்தும் 1
கிடந்தோட்கு 1
கிடந்தோய் 1
கிடப்ப 3
கிடப்பவும் 1
கிடப்பினும் 1
கிடுகு 2
கிடுகும் 2
கிடை 3
கிடைப்பதில் 1
கிடையினும் 1
கிடையும் 3
கிடைஇ 2
கிண்கிணி 40
கிணறும் 2
கிம்புரி 1
கிரந்தம் 1
கிரிகை 1
கிரிகையன் 1
கிரிகையில் 1
கிரிகையின் 1
கிரிசை 3
கிரிசையின் 2
கிழங்கும் 1
கிழத்தி 5
கிழத்திக்கு 1
கிழத்தியை 2
கிழத்தியொடு 1
கிழத்தீ 1
கிழமை 11
கிழமைக்கு 1
கிழமையில் 2
கிழமையின் 2
கிழமையும் 2
கிழமையுள் 1
கிழமையொடு 1
கிழவர் 2
கிழவற்கு 3
கிழவன் 13
கிழவனின் 2
கிழவனும் 1
கிழவனை 6
கிழவி 1
கிழவோள் 1
கிழி 6
கிழிக்கும் 2
கிழித்து 1
கிழிந்து 2
கிழிப்ப 2
கிழிய 2
கிழியின் 1
கிழியினும் 1
கிழியும் 2
கிள்ளியும் 1
கிள்ளை 1
கிளந்த 6
கிளந்தவன் 1
கிளந்து 11
கிளப்ப 2
கிளப்பின் 1
கிளர் 21
கிளர்_இழை 1
கிளர்ந்தது 3
கிளர்ந்து 5
கிளர 1
கிளரி 1
கிளரும் 1
கிளவா 1
கிளவி 64
கிளவி-தன் 1
கிளவிக்கு 2
கிளவியர் 1
கிளவியில் 5
கிளவியின் 4
கிளவியும் 2
கிளவியை 4
கிளவியொடு 4
கிளவியோடு 1
கிளவீ 1
கிளி 7
கிளிக்கூடும் 1
கிளியின் 2
கிளியும் 8
கிளை 15
கிளை-வயின் 1
கிளைக்கும் 1
கிளைஞர் 1
கிளைஞரும் 1
கிளைஞரை 1
கிளைத்திட்ட 1
கிளைத்திறம் 1
கிளைப்பு 1
கிளைமை 3
கிளையில் 1
கிளையினும் 1
கிளையோ 1
கிளைஇ 1
கின்னர 1
கின்னரர் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
    கிடக்கை (3)
குண்டு அகன் கிடக்கை குட_கடல் குளிப்ப - உஞ்ஞை:48/45
கண் அகன் கிடக்கை கலி கெழும் ஊழியுள் - இலாவாண:8/6
கரும கிடக்கை காண்வர காட்டி - இலாவாண:9/247

 TOP
 
    கிடக்கையும் (2)
கரும கிடக்கையும் கலங்கா சூழ்ச்சியும் - உஞ்ஞை:46/117
தருமத்து இயற்கையும் கரும கிடக்கையும்
   தலைமையது தன்மையு நிலைமையது நீர்மையும் - இலாவாண:9/208,209

 TOP
 
    கிடங்கிலுள் (1)
நீள் நீர் கிடங்கிலுள் தோணி போக்கி - மகத:25/21

 TOP
 
    கிடங்கு (1)
எங்கும் நிகர் இல்லது எழில் கிடங்கு அணிந்தது - இலாவாண:20/107

 TOP
 
    கிடங்கும் (1)
படை புற கிடங்கும் தொடை பெரு வாயிலும் - உஞ்ஞை:48/177

 TOP
 
    கிடத்தியும் (1)
வாக்குற பாடியும் மேற்பட கிடத்தியும்
   நோக்குநர் மகிழ பூ குழல் முடித்தும் - வத்தவ:12/86,87

 TOP
 
    கிடந்த (45)
வண்ணம் சூட்டின கண்ணியில் கிடந்த
   பனி பூம் குவளை பயத்தின் வளர்த்த - உஞ்ஞை:38/307,308
வளர்ந்து ஏந்து இள முலை மருங்கு இவர்ந்து கிடந்த
   பொலன் கலம் மணி பூண் பொலிய புல்லி அவள் - உஞ்ஞை:40/179,180
அம்பு என கிடந்த ஐ அரி நெடும் கண் - உஞ்ஞை:41/72
குலாஅய் கிடந்த கொடு நுண் புருவத்து - உஞ்ஞை:41/77
கலாஅய் கிடந்த குலாத்தரு கலிங்கம் - உஞ்ஞை:42/141
புல் பரந்து கிடந்த கல் அதர் கடந்த பின் - உஞ்ஞை:43/65
மத்தக புல்லகம் நக்குபு கிடந்த
   திலக திரு நுதல் வியர் பொடித்து இழிய - உஞ்ஞை:46/159,160
இடை முலை கிடந்த ஏகவல்லி - உஞ்ஞை:46/211
மத்தக மருங்கின் மாலையொடு கிடந்த
   நித்தில தாமம் நிலையின் வழாமை - உஞ்ஞை:48/62,63
வல-பால் எல்லை வயல் பரந்து கிடந்த
   அளற்று நிலை செறுவின் அகல் நிலம் கெழீஇ - உஞ்ஞை:48/172,173
வலத்தில் கிடந்த வழிவகைதானே - உஞ்ஞை:49/54
முல்லை பெரும் திணை புல்லுபு கிடந்த
   ஐம்பதின் இரட்டியொடு ஐ_ஐந்து எல்லையுள் - உஞ்ஞை:49/125,126
குறிஞ்சி பெரும் திணை குலாஅய் கிடந்த
   பதிற்றுப்பத்தொடு விதிப்பட எண்ணிய - உஞ்ஞை:50/59,60
குலாஅய் கிடந்த கோல கோணத்து - இலாவாண:4/82
அணிபெற கிடந்த அம் பொன் சூட்டினர் - இலாவாண:7/18
வனப்பு அமை அம் வயிற்று அணி தக கிடந்த
   உந்தி உள்ளுற வந்து உடல் நடுங்கி - இலாவாண:7/25,26
ஒழுகு புனல் அகழினை உடை என கிடந்த
   முழு மதில் நெடும் கடை முதல் பெரு நகரம் - இலாவாண:9/186,187
சிதர்வன கிடந்த சில் அரி சுணங்கு இவை - இலாவாண:12/88
மாயோன் மார்பின் மன்னுபு கிடந்த
   ஆரம் போல அணி பெற தோன்றி - இலாவாண:14/3,4
குங்கும கொடியொடு குலாஅய் கிடந்த
   பூம் தாது ஒழுக்கம் சாந்தொடு திமிர்ந்து - இலாவாண:16/28,29
சேடுற கிடந்த செம்பொன் செய் கலம் - இலாவாண:19/64
சால்பு என கிடந்த கோல பெரு நுகம் - மகத:3/57
அலர் என கிடந்த மதர் அரி மழை கண் - மகத:5/24
நின்-கண் கிடந்த நீர் அணி ஏஎர் - மகத:9/102
புல்லென கிடந்த புறத்தள் பொள்ளென - மகத:9/155
என்-கண் கிடந்த எல்லாம் மற்று இவள் - மகத:14/248
நிலம் பட கிடந்த நின் நேமி அம் தட கை - மகத:24/22
மருங்கு அறை கிடந்த வயந்தககுமரன் - வத்தவ:3/123
வெண் தார் அணிந்த வெள் ஏறு கிடந்த
   வண்டு ஆர் தாதின் வெண் தாமரை பூ - வத்தவ:5/74,75
எட்டு மெய்யோடு இசை பெற கிடந்த
   விள்ளா விழு புகழ் வெள் ஏறு என்பதை - வத்தவ:5/114,115
வெம் முலை ஆகத்து தண் என கிடந்த
   எழு புரை நெடும் தோள் மெல்லென எடுத்து - வத்தவ:7/78,79
பிணங்குபு கிடந்த பின்னு சேர் புறத்தொடு - வத்தவ:7/104
புல்லென கிடந்த நுதலினொடு அலமந்து - வத்தவ:7/166
ஆராய்கின்றோற்கு அகலத்து கிடந்த
   பூம் தண் மாலையொடு பொங்கு நூல் புரள - வத்தவ:7/181,182
இறைஞ்சுபு கிடந்த சிறந்தோள் தழீஇ - வத்தவ:7/216
சுழி என கிடந்த குழி நவில் கொப்பூழ் - வத்தவ:11/65
வில் என கிடந்த புருவம் வில்லின் - வத்தவ:11/66
அம்பு என கிடந்த செம் கடை மழை கண் - வத்தவ:11/67
பை என கிடந்த அது ஏந்து அல்குல் - வத்தவ:11/71
படிந்த வண்டு எழுப்பியும் கிடந்த பந்து எண்ணியும் - வத்தவ:12/237
திரு நுதல் மீமிசை திறத்துளி கிடந்த
   அருள் ஏர் வாசகம் தெருளுற அறிந்து - வத்தவ:13/154,155
பாயல் கிடந்த பல் மலர் மிதிப்பினும் - வத்தவ:17/96
வெள் ஏறு கிடந்த வெண் தாமரை பூ - நரவாண:1/93
குடர்-வயின் கிடந்த குழவியது உள்ளத்து - நரவாண:1/177
மேலை அம் பாற்கடல் வெள் ஏறு கிடந்த
   வால் இதழ் நறு மலர் வைகறை யாமத்து - நரவாண:3/194,195

 TOP
 
    கிடந்தது (2)
இடு கல் முதலன இட-வயின் கிடந்தது
   இன்னா பேர் தேர் இயற்கைத்து எண்-மதி - உஞ்ஞை:49/44,45
கிடந்தது கண்டே நடுங்குவனன் ஆகி - வத்தவ:3/95

 TOP
 
    கிடந்தமை (1)
கிடந்தமை நோக்கி உடங்கு உணர்வு எய்தி - நரவாண:8/99

 TOP
 
    கிடந்தனமாக (1)
அசைந்து யாம் கிடந்தனமாக அவ்வழி - நரவாண:2/20

 TOP
 
    கிடந்து (6)
மணி கிடந்து இமைக்கும் மாடம் மா நகர் - உஞ்ஞை:46/264
அணி கிடந்து இமைக்கும் அகன் பெரும் கோயிலுள் - உஞ்ஞை:46/265
கலாஅய் கிடந்து கவ்விய கொழுந்தின் - இலாவாண:4/83
உடன் கிடந்து இமைக்கும் ஒரு காழ் முத்தினர் - இலாவாண:6/126
நெற்சிறு_தாலி நிரல் கிடந்து இலங்க - வத்தவ:16/29
யாறு கிடந்து அன்ன வீறு சால் வீதி-தொறும் - நரவாண:8/41

 TOP
 
    கிடந்தும் (1)
பார்வை நின்றும் பதுக்கையுள் கிடந்தும்
   போர்வை புல்லுள் பொதிந்தனர் ஒளித்தும் - உஞ்ஞை:56/260,261

 TOP
 
    கிடந்தோட்கு (1)
நுங்கை-தன் நகர் கங்குல் கிடந்தோட்கு
   இன்னது நிகழ இவ்வயின் தந்த - இலாவாண:11/130,131

 TOP
 
    கிடந்தோய் (1)
பெரு மணி பாவையின் பிறந்தனை கிடந்தோய்
   திருமெய் தழீஇ அருமைத்து ஆக - இலாவாண:11/72,73

 TOP
 
    கிடப்ப (3)
பவள துணியின் பசுமையொடு கிடப்ப
   இன் அணி புக்கோர் இ வழி அல்லது - உஞ்ஞை:55/100,101
பந்தும் கழங்கும் பட்டுழி கிடப்ப
   அம் தண் மஞ்ஞை ஆடு இடம் ஏய்ப்ப - இலாவாண:7/100,101
பாடி அரும் கலம் பட்டுழி கிடப்ப
   நீடு இருளகத்து நீங்குதல் பொருள் என - மகத:17/258,259

 TOP
 
    கிடப்பவும் (1)
அற்றம்_இல் வால் அற்றன கிடப்பவும்
   சித்திர தாமரை பத்திர பரூஉ தொடி - மகத:20/50,51

 TOP
 
    கிடப்பினும் (1)
அரவு வாய் கிடப்பினும் அலர் கதிர் தண் மதி - மகத:14/139

 TOP
 
    கிடுகு (2)
பொன் கிடுகு செறிந்து போர்வை முற்றி - உஞ்ஞை:34/135
அடி தொடைக்கு அமைந்த கிடுகு உடை காப்பில் - உஞ்ஞை:48/17

 TOP
 
    கிடுகும் (2)
பொங்கு மயிர் கிடுகும் புளக தண்டையும் - உஞ்ஞை:46/60
கண்ணுளாளர் கை புனை கிடுகும்
   நாடும் நகரமும் ஆடுநர் பாடுநர் - நரவாண:8/30,31

 TOP
 
    கிடை (3)
எண்_நூற்று_அறுவர் இளம் கிடை காப்பரொடு - உஞ்ஞை:37/11
கிடை போழ் பந்தத்திடை புனைந்து இயற்றிய - உஞ்ஞை:41/4
மென் கிடை போழ்வை சந்திய ஆகி - உஞ்ஞை:42/36

 TOP
 
    கிடைப்பதில் (1)
கிடைப்பதில் இரப்போர்க்கு அளிப்பது நன்று என - வத்தவ:13/87

 TOP
 
    கிடையினும் (1)
ஏட்டினும் கிடையினும் மூட்டு அமை கிழியினும் - இலாவாண:2/141

 TOP
 
    கிடையும் (3)
கிடையும் பீலியும் இடை வரித்து அழுத்தி - உஞ்ஞை:40/7
கிடையும் பூளையும் கிழியும் பஞ்சியும் - உஞ்ஞை:43/186
கிடையும் பூளையும் இடை வரி உலண்டும் - வத்தவ:12/42

 TOP
 
    கிடைஇ (2)
இடு மணி பெரு நிரை நெடு மணில் கிடைஇ
   இரும் புறம் புதைய எழில் மறைந்திருந்த - உஞ்ஞை:39/34,35
பவழ பாவையும் பந்தும் கிடைஇ
   புகழப்பட்ட பூ மர காவினுள் - இலாவாண:15/101,102

 TOP
 
    கிண்கிணி (40)
அம் செம் கிண்கிணி அடி அலைத்தன-கொல் - உஞ்ஞை:33/180
மழலை கிண்கிணி மடவோர் மருட்ட - உஞ்ஞை:34/4
அரம் கொல் கிண்கிணி இரங்க ஒல்கி - உஞ்ஞை:34/134
மழலை கிண்கிணி கழலோன் பெருமகள் - உஞ்ஞை:34/175
அரி பொன் கிண்கிணி ஆர்ப்ப அரங்கின் - உஞ்ஞை:34/212
இரங்கு பொன் கிண்கிணி இளையோர் நடுவண் - உஞ்ஞை:35/70
பரட்டு அசை கிண்கிணி பக்கம் புல்லி - உஞ்ஞை:35/208
இரங்கு பொன் கிண்கிணி அரங்கு இயல் ஆயத்து - உஞ்ஞை:37/217
கிண்கிணி மயங்கிய தண் பெரும் கோயில் - உஞ்ஞை:38/160
ஏற்ற கோலத்து இயம்பும் கிண்கிணி
   நூற்றுவர் தோழியர் போற்று இயல் கூற - உஞ்ஞை:38/228,229
பூ போது உறுத்த மீ பொன் கிண்கிணி
   இடு மணி பெரு நிரை நெடு மணில் கிடைஇ - உஞ்ஞை:39/33,34
அரி பொன் கிண்கிணி ஆர்ப்ப இயலி - உஞ்ஞை:40/18
செம்பொன் கிண்கிணி சேனாபதி மகள் - உஞ்ஞை:40/61
கிளரும் பாசிழை கிண்கிணி கணை கால் - உஞ்ஞை:40/104
கண் பிணி பகு வாய் கிண்கிணி அரவமும் - உஞ்ஞை:41/58
அஞ்சுபு மிதியா கிண்கிணி மிழற்ற - உஞ்ஞை:42/104
பொன் செய் கிண்கிணி புதல்வர் ஆடும் - உஞ்ஞை:43/183
தவளை கிண்கிணி ததும்பு சீறடியர் - உஞ்ஞை:46/246
செம்பொன் கிண்கிணி சிலம்பொடு ஆர்ப்ப - உஞ்ஞை:46/296
பைம்பொன் பகு வாய் கிண்கிணி ஒலியும் - உஞ்ஞை:48/183
தவளை கிண்கிணி தாங்குதல் ஆற்றாது - உஞ்ஞை:53/166
கிண்கிணி தாரொடு கலவிய கதிர் அணி - இலாவாண:2/126
அணி மிழற்று அரவத்து அம் பொன் கிண்கிணி
   சிலம்பொடு சீறடி புறம் புதைந்து அரற்றவும் - இலாவாண:2/207,208
பைம்பொன் கிண்கிணி பாட்டு மிசை ஆர்க்கும் - இலாவாண:3/85
ததும்பும் கிண்கிணி தகை மலர் சேவடி - இலாவாண:7/70
பொன் அணி கிண்கிணி போழ் வாய் நிறைய - இலாவாண:7/88
பகு வாய் கிண்கிணி பரட்டு மிசை ஆர்ப்ப - இலாவாண:10/69
ஆடு பொன் கிண்கிணி அடி மிசை அரற்ற - இலாவாண:14/42
பொன் பூம் கிண்கிணி புற அடி பிறழ - இலாவாண:16/8
அடி மிசை கிண்கிணி அடை துகள் அகற்றியும் - இலாவாண:16/72
மணி அரி கிண்கிணி சிலம்பொடு மிழற்ற - இலாவாண:19/152
சேவடிக்கு ஏற்ற செம்பொன் கிண்கிணி
   பாட குரலொடு பரடு பிறழ்ந்து அரற்ற - இலாவாண:19/184,185
பசும்பொன் கிண்கிணி பரடு சுமந்து அரற்ற - மகத:5/10
பொன் அரி கிண்கிணி புடைபெயர்ந்து அரற்ற - மகத:6/97
வெகுளல் நீ என தவளை அம் கிண்கிணி
   சேவடி சேர்ந்து செறிய பற்றி - மகத:9/167,168
பசும்பொன் கிண்கிணி பதுமா நங்கையும் - மகத:22/105
சூடுறு கிண்கிணி பாடு பெயர்ந்து அரற்ற - வத்தவ:8/18
தனக்கு அமைவு எய்திய தவளை அம் கிண்கிணி
   வனப்பு எடுத்து உரைஇ வையகம் புகழினும் - வத்தவ:12/161,162
பசும்பொன் கிண்கிணி பாவையர் எல்லாம் - நரவாண:4/66
தானே வவ்விய தவளை அம் கிண்கிணி
   மான் நேர் நோக்கின் மதனமஞ்சிகையும் - நரவாண:8/90,91

 TOP
 
    கிணறும் (2)
அந்த கேணியும் எந்திர கிணறும்
   தண் பூங்காவும் தலைத்தோன்று அருவிய - உஞ்ஞை:33/3,4
கேணியும் கிணறும் நீள் நிலை படுவும் - மகத:3/6

 TOP
 
    கிம்புரி (1)
சிலை கவிழ்த்து அன்ன கிம்புரி கவ்வி - இலாவாண:6/120

 TOP
 
    கிரந்தம் (1)
விரி நூல் கிரந்தம் விளம்பிய நாவினர் - மகத:1/123

 TOP
 
    கிரிகை (1)
சமிதை கிரிகை சால்புளி கழிப்பி - இலாவாண:3/81

 TOP
 
    கிரிகையன் (1)
நீர்_கடன் ஆற்றிய நியம கிரிகையன்
   பூம் போது அணிந்த வாங்கு கரை மருங்கின் - உஞ்ஞை:53/92,93

 TOP
 
    கிரிகையில் (1)
மெய் முதல் திரியாது வேண்டும் கிரிகையில்
   கை முதல் கேண்மை கழுமி கழிந்த பின் - இலாவாண:3/132,133

 TOP
 
    கிரிகையின் (1)
மறையின் கிரிகையின் முறை அறிந்து ஓதி - இலாவாண:4/160

 TOP
 
    கிரிசை (3)
மறுமைக்கு எண்ணிய மயல்_அறு கிரிசை
   அந்தணர் சேரியும் அரும் தவர் பள்ளியும் - உஞ்ஞை:43/174,175
கேள்வி முற்றி கிரிசை நுனித்த - இலாவாண:15/38
ஈர் எண் கிரிசை இயல்புளி நடாஅய் - நரவாண:6/86

 TOP
 
    கிரிசையின் (2)
கிரிசையின் வழாஅ வரிசை வாய்மை - உஞ்ஞை:42/161
கிரிசையின் வழாஅ வரிசை வாய்மையோர் - மகத:22/23

 TOP
 
    கிழங்கும் (1)
கிழங்கும் மஞ்சளும் கொழும் கால் தகரமும் - உஞ்ஞை:51/27

 TOP
 
    கிழத்தி (5)
முல்லை கிழத்தி முன் அருள் எதிர - உஞ்ஞை:49/90
ஆர் உயிர் கிழத்தி அகன்றனள் இவண் இலள் - இலாவாண:18/34
ஒள் நுதல் பாவை ஒரு பெரும் கிழத்தி
   மண்ணக வரைப்பின் மகளிர் மற்று தன் - மகத:21/86,87
உயிர் ஏர் கிழத்தி ஆகலின் உள்ளகத்து - வத்தவ:8/14
திரு_மகன் ஆம் நின் பெரு மனை_கிழத்தி - நரவாண:3/46

 TOP
 
    கிழத்திக்கு (1)
குடி பெரும் கிழத்திக்கு தானம் செய்க என - வத்தவ:9/64

 TOP
 
    கிழத்தியை (2)
பிறப்பிடை கேண்மை பெரு மனை கிழத்தியை
   மற படை மன்னன் வாய் சோர்ந்து அரற்றா - இலாவாண:18/116,117
மனை பெரும் கிழத்தியை நினைத்தனன் ஆகி - மகத:6/19

 TOP
 
    கிழத்தியொடு (1)
மித்திரகாமன் நல் பெரும் கிழத்தியொடு
   ஆப்புற இரீஇய பிற்றை ஆருணி - வத்தவ:4/62,63

 TOP
 
    கிழத்தீ (1)
வீணை கிழத்தீ வித்தக உருவீ - இலாவாண:18/82

 TOP
 
    கிழமை (11)
மன் பெரும் சிறப்பின் மண்ணக கிழமை
   ஒரு கோல் ஓச்சிய திரு ஆர் மார்ப நின் - உஞ்ஞை:49/65,66
இரு நில கிழமை ஏயர் இறைவன் - உஞ்ஞை:56/151
ஓர் உயிர் கிழமை ஓரை அளக்கும் - இலாவாண:3/5
சிறப்பு உடை கிழமை செய்ததை அறிதலின் - மகத:18/19
முற்பால் கிழமை முதலறவு இன்றி - மகத:18/25
ஒரு பெரும் கிழமை உண்மை உணர்த்தலும் - மகத:18/53
கண் போல் கிழமை கலப்பும் உண்டு என - மகத:18/56
திருமண கிழமை பெருமகள் உறையும் - வத்தவ:6/74
உயர் தவ கிழமை நும் உடம்பின் ஆகிய - வத்தவ:7/222
மேல்நாள் கிழமை விண்ணவர் மகளை - நரவாண:3/212
பயில்-தொறும் இனிய நின் பண்பு உடை கிழமை
   உள்ளு-தொறு உள்ளு-தொறு உள்ளம் இன்புற - நரவாண:7/149,150

 TOP
 
    கிழமைக்கு (1)
சிறப்பின் விட்டிருந்து நல தகு கிழமைக்கு
   யாவரும் உரியோர் இவளின் இல் என - நரவாண:8/150,151

 TOP
 
    கிழமையில் (2)
பழமையின் பசையாது கிழமையில் கெழுவாது - உஞ்ஞை:35/136
கிழமையில் செய்தனன் கெழுதகை தரும் என - வத்தவ:8/76

 TOP
 
    கிழமையின் (2)
திரு மனை கிழமையின் ஒரு மீக்கூரி - இலாவாண:5/93
நட்பு வலை கிழமையின் நம் பொருட்டாக - மகத:18/87

 TOP
 
    கிழமையும் (2)
இன்ப கிழமையும் மன் பேர் உலகினுள் - மகத:6/112
அன்றை கிழமையும் ஆற்ற அளைஇ - மகத:18/109

 TOP
 
    கிழமையுள் (1)
உண்கண் கிழமையுள் பண்பின் தீராது - மகத:22/145

 TOP
 
    கிழமையொடு (1)
இற்பெரும் கிழமையொடு கற்பு கடம் பூட்ட - மகத:21/7

 TOP
 
    கிழவர் (2)
மண்ணக கிழவர் மனக்கோள் அறாது - இலாவாண:2/21
திரு முடி இந்திரர் இரு நில கிழவர்
   உரிமை மகளிரொடு உருபுபட புனைந்த - இலாவாண:6/147,148

 TOP
 
    கிழவற்கு (3)
வித்தக கோலத்து வீழ்ந்த கிழவற்கு
   பத்தினி ஆகிய பைம் தொடி பணை தோள் - உஞ்ஞை:48/65,66
மண்ணக கிழவற்கு மண்ணு நீர் சுமக்கும் - இலாவாண:2/227
வயந்த கிழவற்கு நயந்து நகர் கொண்ட - மகத:6/178

 TOP
 
    கிழவன் (13)
விண்ணவர் கிழவன் வீற்றிடம் கடுப்ப - இலாவாண:3/149
சிறப்பு எதிர் கொள்கை சித்தி கிழவன்
   பேர் அறம் பேணிய சீர் நெறி சிறப்பின் - இலாவாண:6/166,167
ஐம் கணை கிழவன் அமர்ந்து நிலை பெற்ற - மகத:4/35
பைம் கதிர் விரிக்கும் பனி மதி கிழவன்
   அம் கண் ஞாலத்து அளவை ஆகிய - மகத:14/6,7
இன் உயிர் கிழவன் எழுதிய பாவை - மகத:22/162
இன்ப கிழவன் இட வகை அன்றி - வத்தவ:2/90
பொங்கு நிதி கிழவன் போற்றவும் மணப்ப - வத்தவ:5/77
ஆனா கனவிடை மா நிதி கிழவன்
   விளங்கு அவை நாப்பண் துளங்கினர் புகுதலின் - நரவாண:1/88,89
ஒள் நிதி கிழவன் உரிமையொடு இருந்துழி - நரவாண:3/56
விழு நிதி கிழவன் விழையும் காதலின் - நரவாண:3/80
அறாஅ அரு நிதி கிழவன் அதனை - நரவாண:3/166
யாழின் கிழவன் இங்ஙனம் நினைஇ - நரவாண:4/104
அந்தர விசும்பின் ஆழி கிழவன்
   வந்து உடன்பிறந்தனன் பிறந்த பின்றை - நரவாண:6/30,31

 TOP
 
    கிழவனின் (2)
விண்ணக கிழவனின் விழுப்பம் கூறி - இலாவாண:2/22
வானோர் கிழவனின் வரம்பு இன்று பொலிய - நரவாண:4/55

 TOP
 
    கிழவனும் (1)
துறக்க கிழவனும் துன்னிய-காலை - இலாவாண:15/13

 TOP
 
    கிழவனை (6)
பெருந்தகை கிழவனை பேரா மறவரை - உஞ்ஞை:56/241
சேனை கிழவனை சிறை என கொண்டு - இலாவாண:1/80
அலகை ஆகிய அரும் தவ கிழவனை
   இருக்கை இயற்றிய திரு தகு செல்வத்து - இலாவாண:6/156,157
இயல்பின் திரியா இன் பெரும் கிழவனை
   வியலக வரைப்பின் மேவர வேண்டி - வத்தவ:7/167,168
வள நிதி கிழவனை வாழ்த்துவனள் வணங்கி - நரவாண:3/147
குறையா இரும் தவ கிழவனை நோக்கி - நரவாண:3/190

 TOP
 
    கிழவி (1)
ஆண் பெயர் கிழவி நாள்_மகிழ் கடவ - உஞ்ஞை:36/279

 TOP
 
    கிழவோள் (1)
குன்றா கற்பின் எம் கோ பெரும் கிழவோள்
   நித்திலம் பொதிந்த இப்பி போல - இலாவாண:11/47,48

 TOP
 
    கிழி (6)
துகிலின் வெண் கிழி துய் கடை நிமிடி - உஞ்ஞை:33/92
அவிர் நூல் பூம் கிழி யாப்பினொடு சார்த்தி - உஞ்ஞை:41/5
கேள்வி செவியில் கிழி துகில் பஞ்சி - உஞ்ஞை:48/136
கிழி இடம் பெறாஅர் வழி இடம் பார்ப்ப - உஞ்ஞை:58/27
பஞ்சி பட்டொடு துரூஉ கிழி நீக்கி - இலாவாண:4/166
சித்திர கிழி மிசை வித்தகமாக - மகத:22/144

 TOP
 
    கிழிக்கும் (2)
உரற்றும் மழை கிழிக்கும் ஒள் மணி உச்சி - இலாவாண:2/118
கரு முகில் கிழிக்கும் கடு வளி போல - மகத:17/51

 TOP
 
    கிழித்து (1)
கந்து முதல் கிழித்து கார் என உரறி - உஞ்ஞை:44/78

 TOP
 
    கிழிந்து (2)
ஓரி மீமிசை பாய்தலில் கிழிந்து
   பொதி கண் இறாஅல் பூம் புறம் புதைஇ - உஞ்ஞை:50/34,35
உரும் உறழ் முரசின் கண் கிழிந்து அதனொடு - மகத:27/76

 TOP
 
    கிழிப்ப (2)
இணை_இல் ஒரு சிறை கணை உளம் கிழிப்ப
   தனித்து ஒழி பிணையின் நினைப்பனள் நின்ற - உஞ்ஞை:33/160,161
சிந்து அரி நெடும் கண் என் நெஞ்சகம் கிழிப்ப
   கொந்து அழல் புண்ணொடு நொந்து உயிர் வாழ்தல் - வத்தவ:13/70,71

 TOP
 
    கிழிய (2)
முகில் உளம் கிழிய அகல போகி - நரவாண:4/87
முகில் உளம் கிழிய அகல் விசும்பு ஏறி - நரவாண:4/107

 TOP
 
    கிழியின் (1)
சித்திர கிழியின் வித்தகம் ஆக - மகத:17/167

 TOP
 
    கிழியினும் (1)
ஏட்டினும் கிடையினும் மூட்டு அமை கிழியினும்
   நாற்றமும் தோற்றமும் வேற்றுமை இன்றி - இலாவாண:2/141,142

 TOP
 
    கிழியும் (2)
கிடையும் பூளையும் கிழியும் பஞ்சியும் - உஞ்ஞை:43/186
தருப்பண கிழியும் தண்ணீர் கரகமும் - இலாவாண:8/165

 TOP
 
    கிள்ளியும் (1)
பத்திர சேதம் பற்பல கிள்ளியும்
   உறியோர்க்கு உதவுதல் செல்லாது ஒய்யென - இலாவாண:14/31,32

 TOP
 
    கிள்ளை (1)
கிள்ளை வாயின் அன்ன வள் உகிர் - வத்தவ:7/42

 TOP
 
    கிளந்த (6)
ஆற்றுளி கிளந்த அறு வகை சமயமும் - உஞ்ஞை:36/242
மனம் உண கிளந்த மந்திர கோட்டியுள் - உஞ்ஞை:36/277
பதினோர் ஆண்டினுள் பாற்பட கிளந்த
   விதி மாண் உறுப்பிற்கு வேண்டுவவேண்டுவ - உஞ்ஞை:42/151,152
அன்பு இன்று கிளந்த அருள்_இல் பொருள் மொழி - உஞ்ஞை:45/63
நான்முகன் மகளிர் நூன் முதல் கிளந்த
   ஒழுக்கின் திரியாள் உறு பொருள் வேண்டும் - மகத:6/102,103
அன்னவை கிளந்த பின்னர் தன்னோடு - மகத:24/130

 TOP
 
    கிளந்தவன் (1)
ஆராய்வாளன் அகம் உண கிளந்தவன்
   காரிய கிளவியில் காரணம் காட்டலின் - மகத:25/158,159

 TOP
 
    கிளந்து (11)
இன்னவை பிறவும் துன்னினர் கிளந்து
   வேந்து இடையிட்ட வெம் சொல்லாதலின் - உஞ்ஞை:35/14,15
கயல் புரை கண்ணி இயல்பு கிளந்து ஏத்தி - உஞ்ஞை:47/258
இன்னவை கிளந்து பின் தன்-வயின் தழீஇ - இலாவாண:11/171
மெல் இயல் மாதரொடு மேவன கிளந்து
   புல்லியும் தளைத்தும் புணர்ந்தும் பொருந்தியும் - மகத:14/159,160
கேகயத்து அரசனும் கிளந்து பல எண்ணி - மகத:19/125
இயற்பட ஈவல் என்று அமைச்சரொடு கிளந்து
   வேறுவேறாக தேற காட்டி - மகத:23/43,44
பொய்யா வாய் புள் மெய் பெற கிளந்து
   திரு வளர் அகலம் இருவரும் தழீஇ - மகத:24/24,25
கெழீஇய அவரை கிளந்து உடன் போக்கி - வத்தவ:14/156
முன் தனக்கு உரைத்தன முறைமுறை கிளந்து
   நீயும் யானும் வாழும் ஊழி-தொறும் - நரவாண:5/37,38
கேட்டோர் மனம் உண கிளந்து அவன் கடாவ - நரவாண:7/98
பிறந்த நம்பி திறம் கிளந்து உரைப்பேன் - நரவாண:8/24

 TOP
 
    கிளப்ப (2)
கருமம் உண்மை மரபின் கிளப்ப
   பெரும் குல பிறப்பினும் அரும் பொருள் வகையினும் - இலாவாண:13/31,32
திரு தகு மார்வன் திறவதின் கிளப்ப
   தார் அணி மார்ப காரணம் கேள்-மதி - நரவாண:3/42,43

 TOP
 
    கிளப்பின் (1)
உள்ளிய அசாஅஃது ஒளி இன்று கிளப்பின்
   மஞ்சு சூழ் நெடு வரை விஞ்சத்து அடவி - நரவாண:3/51,52

 TOP
 
    கிளர் (21)
திரு கிளர் வேங்கையும் பொன்னும் பிதிர்ந்து - உஞ்ஞை:33/181
புதை இருந்து அன்ன கிளர் ஒளி வனப்பினர் - உஞ்ஞை:34/133
கிளர்_இழை கற்கும் கேள்வி பொழுது என - உஞ்ஞை:36/134
புறம் கவின் கொண்ட நிறம் கிளர் செல்வத்து - உஞ்ஞை:38/55
அரணி கான்ற அணி கிளர் செம் தீ - உஞ்ஞை:42/160
கிளர் பொன் போதொடு களை அற பிணித்த - இலாவாண:4/143
ஆர் அணங்கு ஆகிய அணி கிளர் வனப்பின் - இலாவாண:6/158
நலம் கிளர் தடம் தோள் நவை_அற சேஎந்து - இலாவாண:19/130
திரு கிளர் மாடம் சேர்ந்து வலம் கொண்டு - மகத:6/99
கேழ் கிளர் மணி முடி கேகயத்து அரசன் - மகத:16/9
பூண் ஏற்று அகன்ற புடை கிளர் அகலத்து - மகத:20/62
திரு கிளர் சிவிகையொடு சிலதரை விடுத்தலின் - மகத:22/108
நலம் கிளர் நறு நுதல் நாறு இரும் கூந்தல் - வத்தவ:5/96
திரு கிளர் முற்றம் விருப்பொடு புகுந்து - வத்தவ:10/176
திரு கண்டு அன்ன உரு கிளர் கண்ணி - வத்தவ:12/164
கேள் உடை முறையால் கிளர் ஒளி வனப்பின் - வத்தவ:13/49
நலம் கிளர் மலர் கொண்டு இறைஞ்சினள் இருந்து யான் - வத்தவ:13/188
மணி கிளர் பலகை-வாய் புடை நிரைத்த - வத்தவ:15/105
அரத்தம் கூரும் திரு கிளர் சேவடி - வத்தவ:17/97
கிளர் சேண் இமயமும் கெங்கையும் சிந்துவும் - நரவாண:4/122
மருங்கின் நீளமும் நிறம் கிளர் சேவடி - நரவாண:8/109

 TOP
 
    கிளர்_இழை (1)
கிளர்_இழை கற்கும் கேள்வி பொழுது என - உஞ்ஞை:36/134

 TOP
 
    கிளர்ந்தது (3)
கண்டு ஒரு பாணியில் கடல் கிளர்ந்தது போல் - உஞ்ஞை:39/28
கல்லென துவன்றி கார் கிளர்ந்தது போல் - உஞ்ஞை:55/113
கடல் கிளர்ந்தது போல் கால் படை துவன்றி - உஞ்ஞை:56/190

 TOP
 
    கிளர்ந்து (5)
வான் கிளர்ந்து அன்ன வள நீராட்டணி - உஞ்ஞை:37/273
கருவி பல் படை கடல் கிளர்ந்து என உற - உஞ்ஞை:48/31
கவ்வை ஓதம் கால் கிளர்ந்து உராஅய் - உஞ்ஞை:51/66
கடல் கிளர்ந்து அன்ன அடல்_அரும் தானை - உஞ்ஞை:58/97
கருவி வானம் கால் கிளர்ந்து எடுத்த - மகத:14/260

 TOP
 
    கிளர (1)
பள்ளி மண்டபத்து ஒள் ஒளி கிளர
   திருவு கொள் உரோணி உருவு நலம் விரும்பிய - உஞ்ஞை:47/211,212

 TOP
 
    கிளரி (1)
தன்-வயின் பட்டது அவ்வயின் கிளரி
   அகம்புரி செம்மை அன்பின் காட்டி - உஞ்ஞை:36/275,276

 TOP
 
    கிளரும் (1)
கிளரும் பாசிழை கிண்கிணி கணை கால் - உஞ்ஞை:40/104

 TOP
 
    கிளவா (1)
ஏல்வு அன்று என்ன மேலவை கிளவா
   இளிவு அஞ்சு முனிவரேயாயினும் மற்று இனி - மகத:19/28,29

 TOP
 
    கிளவி (64)
சிறப்பு உடை கிளவி செவ்விதில் பயிற்றி - உஞ்ஞை:34/44
நன்னர் கிளவி நயவர பயிற்றி - உஞ்ஞை:34/234
காரண கிளவி நீர கூறி - உஞ்ஞை:35/112
பின்பயம் கருதும் பெரு நசை கிளவி
   இன் நகை தோழற்கு இனிய பயிற்றி - உஞ்ஞை:35/114,115
தன் துறைக்கு ஒவ்வா தகை_இல் கிளவி
   பைம் தொடி மாதர் பண்பு_இல பயிற்ற - உஞ்ஞை:35/132,133
பூசல் கிளவி சே_இழை பயிற்ற - உஞ்ஞை:35/155
படிற்று இயல் களைஇ பணி மொழி கிளவி
   நடுக்குறு துயரமொடு நயவர பயிற்றி - உஞ்ஞை:35/204,205
உரைத்தகு கிளவி ஓம்பார் பயிற்றி - உஞ்ஞை:35/223
வேட்கை கிளவி வெளிப்பட பயிற்றி - உஞ்ஞை:35/244
நொதுமல் கிளவி கதுமென வெரீஇ - உஞ்ஞை:36/59
அன்பின் கொண்ட அரற்றுறு கிளவி
   வளை கை நெருக்கி வாய் மிக்கு எழுதர - உஞ்ஞை:36/67,68
காரண கிளவி நீர காட்டி - உஞ்ஞை:36/96
ஐய கிளவி தெய்வம் தேற்றினும் - உஞ்ஞை:36/109
வெம் சொல் கிளவி நின் அங்கையின் அவித்து - உஞ்ஞை:36/187
சிறு_சொல் கிளவி கேளல செவி என - உஞ்ஞை:36/314
மாதர் நுதலிய மருந்து இயல் கிளவி
   ஆரும் இல் ஒருசிறை அன்புற பயிற்றி - உஞ்ஞை:36/325,326
குறையுறு கிளவி முறை பல பயிற்றி - உஞ்ஞை:37/71
மகிழ்ச்சி கிளவி மழை என இசைப்ப - உஞ்ஞை:37/81
ஓம்படை கிளவி பாங்குற பயிற்றி - உஞ்ஞை:38/225
துட்ட கிளவி பெட்டவை பயிற்றி - உஞ்ஞை:40/82
துனிப்பு உறு கிளவி பனி கடல் பிறந்த - உஞ்ஞை:40/169
மாதர் ஆற்றா மழலை அம் கிளவி
   பேதை மகளிர் சேதடி அணிந்த - உஞ்ஞை:41/56,57
எவ்வாய் அமரும் இன் மொழி கிளவி
   அ வாய் மங்கலம் ஆக என விரும்பி - உஞ்ஞை:44/125,126
ஆன் பால் செம் தேத்து அணியுறு கிளவி
   அடு திறல் ஆற்றல் அறிய கூற - உஞ்ஞை:46/151,152
இன் தீம் கிளவி ஒன்றிரண்டு மிழற்றி - உஞ்ஞை:46/299
தெளிதகு கிளவி செவ்விதின் கேட்ப - உஞ்ஞை:47/131
கூறிய கிளவி கூற்றுவன் இமிழ்த்த - உஞ்ஞை:47/247
அமிழ்தின் அன்ன அம் சில் கிளவி
   மதர்வை நோக்கின் மாதரை தழீஇ - உஞ்ஞை:48/35,36
மதுரம் பொதிந்த மழலை அம் கிளவி
   சதுர சந்தி சமழ்ப்பு_இல் கலாபத்து - உஞ்ஞை:50/6,7
ஓம்படை கிளவி பாங்குற பயிற்றி - உஞ்ஞை:53/41
பெரும் பெயர் கிளவி பிரச்சோதனன் நாட்டு - உஞ்ஞை:56/91
நல் பல கிளவி பற்பல பயிற்றி - இலாவாண:5/95
தெரிவை மகளிர் தே மொழி கிளவி
   குழி தலை புதல்வர் எழில் புறம் வரித்த - இலாவாண:7/113,114
முகமன் கிளவி தகுவ கூறி - இலாவாண:10/14
முகிழ் நகை கிளவி முகமன் கூறி - இலாவாண:17/185
அசதி கிளவி நயவர மிழற்றி - இலாவாண:17/191
அம் தீம் கிளவி என் அம் பிணை மூழ்கிய - இலாவாண:19/5
கரும் பேர் கிளவி கனம் குழை திற-வயின் - இலாவாண:20/29
திறல்படு கிளவி தெரிந்து அவன் உரைப்ப - மகத:1/82
தேன் நேர் கிளவி சென்ற உலகம் - மகத:1/149
செவ்வழி தீம் தொடை சிதைந்தன கிளவி என் - மகத:1/200
காரண கிளவி பூரண நோக்கின் - மகத:3/64
மெல்லென் கிளவி சில்லென மிழற்றி - மகத:8/27
மாண் தகு கிளவி பூண்ட நோன்பிற்கு - மகத:13/20
பண்டு உரை கிளவி பையென திரிய - மகத:14/131
கரும்பு ஏர் கிளவி கதிர் முகை முறுவல் - மகத:14/132
கோல் தேன் கிளவி குறிப்பின் காட்ட - மகத:14/205
உறு புகழ் கிளவி சிறிய கேளா - மகத:18/105
இன் இசை கிளவி இறை_மகன் இசைத்தலின் - மகத:22/86
ஓம்படை கிளவி பாங்குற பயிற்றி - மகத:23/50
அற்பு தளை கிளவி பற்பல பயிற்றி - மகத:24/9
மாசு_இல் கற்பின் மருந்து ஏர் கிளவி
   வாசவதத்தையை வாய் மிக்கு அரற்றி - வத்தவ:4/3,4
சில்லென் கிளவி மெல்லென மிழற்றி - வத்தவ:5/17
மழலை அம் கிளவி மறந்தனையோ என - வத்தவ:7/24
காரண கிளவி கழறுவனன் காட்ட - வத்தவ:7/97
முகனமர் கிளவி முன் நின்று உரைப்பின் - வத்தவ:8/6
ஆசிடை கிளவி பாசிழை பயிற்றி - வத்தவ:8/24
வந்தோர்க்கு ஒத்த இன்புறு கிளவி
   அமிர்து கலந்து அளித்த அருளினன் ஆகி - வத்தவ:10/179,180
கிளி என மிழற்றும் கிளவி கிளியின் - வத்தவ:11/72
திரு தகு கற்பின் தீம் குயில் கிளவி
   வரி குழல் கூந்தல் வசுந்தரி-தன் மகள் - வத்தவ:12/145,146
ஆசிடை கிளவி அவரின் எய்தி - நரவாண:1/63
உள்ளம் உருக்கும் ஒள் அமர் கிளவி
   ஆரா உள்ளம் உடையோர் கேண்மை - நரவாண:5/32,33
பொருந்தா மன்னரும் பொலிக எனும் கிளவி
   பெரும் திறையாக விரைந்தனர் வருக - நரவாண:6/55,56
மருந்து ஏர் கிளவி மதனமஞ்சிகை-தன் - நரவாண:8/142

 TOP
 
    கிளவி-தன் (1)
கோல் தேன்_கிளவி-தன் குவி முலை ஆகும் - வத்தவ:13/73

 TOP
 
    கிளவிக்கு (2)
கூறிய கிளவிக்கு ஒத்தது இன்று என - மகத:9/110
உரைத்த கிளவிக்கு ஒன்றே போல - நரவாண:7/104

 TOP
 
    கிளவியர் (1)
அன்புறு கிளவியர் இன்புறுவோரும - இலாவாண:1/43

 TOP
 
    கிளவியில் (5)
முன்னுறு கிளவியில் பண்ணுற பணிக்கலும் - உஞ்ஞை:32/71
தேம்படு கிளவியில் தீவிய மிழற்றி - உஞ்ஞை:41/87
பனிப்புறு கிளவியில் பக்கம் நோக்கி - உஞ்ஞை:46/254
சூளுறு கிளவியில் தொழுதனள் கேட்ப - மகத:14/185
காரிய கிளவியில் காரணம் காட்டலின் - மகத:25/159

 TOP
 
    கிளவியின் (4)
தந்து_உரை_கிளவியின் தம் துறை முடித்த - உஞ்ஞை:54/31
தே மொழி கிளவியின் திறல் வேறு ஆகி - இலாவாண:18/103
தேன் தோய்த்து அன்ன கிளவியின் தெளிபட - வத்தவ:10/19
துன்புறு கிளவியின் தொல் நலம் அழுங்க - நரவாண:3/156

 TOP
 
    கிளவியும் (2)
அறிய கூறிய அடையாண் கிளவியும்
   செறிய செய்த சிறப்பும் ஆண்மையும் - உஞ்ஞை:56/184,185
சாயலும் கிளவியும் தம்மொடு நிகர்த்த - இலாவாண:12/117

 TOP
 
    கிளவியை (4)
அம் தீம் கிளவியை ஆண்மையில் பற்றி - உஞ்ஞை:43/39
கனி படு கிளவியை கையகப்படுத்து - உஞ்ஞை:57/6
தேன் நேர் கிளவியை தேடி அரற்ற - வத்தவ:6/15
தேன்_நேர்_கிளவியை திரு நாள் அமைத்து - வத்தவ:15/78

 TOP
 
    கிளவியொடு (4)
வழிமொழி கிளவியொடு வணக்கம் சொல்லி - உஞ்ஞை:36/47
அடையாண் கிளவியொடு அறிய கூறலும் - உஞ்ஞை:36/201
அவை புகழ்ந்து எடுத்த அரும்_பெறல் கிளவியொடு
   தகை முடி வேந்தன் தாள் புகழ்ந்து ஏத்தி - உஞ்ஞை:37/54,55
பெரு முது கிளவியொடு பிறவும் பயிற்றி - மகத:12/85

 TOP
 
    கிளவியோடு (1)
எடுத்து இயல் கிளவியோடு ஏது காட்டி - உஞ்ஞை:35/142

 TOP
 
    கிளவீ (1)
தேன் நேர் கிளவீ சிறுமுதுக்குறைவீ - இலாவாண:18/83

 TOP
 
    கிளி (7)
பைம் கிளி காணாது பயிர்ந்து நின் கூஉம் - உஞ்ஞை:33/170
கிளி பயிர் அன்ன களி பயில் மழலை - உஞ்ஞை:35/196
பந்தும் பாவையும் பைம் கிளி கூடும் - உஞ்ஞை:38/173
பச்சை பால் கிளி பவழ செம் வாய் - உஞ்ஞை:52/21
கிளி வாய் அன்ன ஒளி வாய் உகிரின் - இலாவாண:15/76
கழனி காய் நெல் கவர் கிளி கடியும் - வத்தவ:8/41
கிளி என மிழற்றும் கிளவி கிளியின் - வத்தவ:11/72

 TOP
 
    கிளிக்கூடும் (1)
தெளித்து ஒளி பெறீஇய பளிக்கு கிளிக்கூடும்
   அவரவர் மேயின அவ்வயின் அருளி - உஞ்ஞை:34/164,165

 TOP
 
    கிளியின் (2)
மதலை கிளியின் மழலை பாடலும் - உஞ்ஞை:48/164
கிளி என மிழற்றும் கிளவி கிளியின்
   ஒளி பெறு வாயின் அன்ன ஒள் உகிர் - வத்தவ:11/72,73

 TOP
 
    கிளியும் (8)
பந்தும் கிளியும் பசும்பொன் தூதையும் - உஞ்ஞை:34/160
மயிலும் குயிலும் மந்தியும் கிளியும்
   பயில் பூம் பொதும்பினும் பல் மலர் காவு-தொறும் - உஞ்ஞை:38/51,52
கிளியும் மயிலும் தெளி மொழி பூவையும் - உஞ்ஞை:57/38
தோகையும் கிளியும் தொக்கவை அகல - இலாவாண:12/118
பூவையும் கிளியும் யூகமும் மந்தியும் - இலாவாண:15/30
கிளியும் பூவையும் தெளி மணி அடை பையும் - மகத:5/76
ஆடு அமை பயிரும் அன்னமும் கிளியும்
   பிறவும் இன்னன பறவையும் பறவா - மகத:14/279,280
மேதகு கிளியும் மெல் நடை அன்னமும் - வத்தவ:10/58

 TOP
 
    கிளை (15)
ஓர் இல் எழு கிளை உடன் தொக்கு ஈண்டி - உஞ்ஞை:35/135
மல்லல் பெரும் கிளை செல்வழி படர - உஞ்ஞை:38/260
கீழ் எழு செம் தீ கிளை பிரித்து அழற்ற - உஞ்ஞை:43/192
கிளை உடை பூசலோடு முளை அரில் பிணங்கிய - உஞ்ஞை:56/9
பெருமூதாளரும் பெரும் கிளை சுற்றமும் - உஞ்ஞை:57/17
பெறல்_அரும் பெரும் கிளை இறைகொண்டு ஈண்டி - இலாவாண:2/3
பிறந்த இல் பெரும் கிளை நிறைந்து ஒருங்கு ஈண்ட - இலாவாண:3/101
தாளே பெரும் கிளை தோளே துணைவி - இலாவாண:10/100
மகத மன்னனொடு மகள் கிளை ஆகி - மகத:1/25
முன் கிளை வேண்டுநர் மற்று அவர்க்கு இயைந்த - மகத:19/118
தந்தை பெரும் கிளை காரணமாக - மகத:19/130
கிளை பெரும் தொடர்ச்சியும் பயந்த இன்று எமக்கு என - மகத:24/8
வெகுளி தீயில் கிளை அற சுடுதல் - மகத:24/116
கிளை அல் மன்னர் கேளிர் சூழ - நரவாண:3/5
பேர் இனத்தவரொடு பெரும் கிளை பிரியா - நரவாண:8/132

 TOP
 
    கிளை-வயின் (1)
தளை-வயின் அகற்றலும் கிளை-வயின் பெயர்த்தலும் - உஞ்ஞை:47/133

 TOP
 
    கிளைக்கும் (1)
எக்கர் கிளைக்கும் ஏழையர் காண்-மின் - உஞ்ஞை:40/155

 TOP
 
    கிளைஞர் (1)
தொகுதந்து ஈண்டி கிளைஞர் ஆகி - உஞ்ஞை:38/98

 TOP
 
    கிளைஞரும் (1)
இளையவன் போலவும் கிளைஞரும் பிறரும் - உஞ்ஞை:46/313

 TOP
 
    கிளைஞரை (1)
ஒட்டா கிளைஞரை நட்பினுள் கெழீஇய - உஞ்ஞை:33/8

 TOP
 
    கிளைத்திட்ட (1)
யாறு செல் வம்பலர் சேறு கிளைத்திட்ட
   உவலை கேணி அவல் அடுத்து உலாவவும் - உஞ்ஞை:52/68,69

 TOP
 
    கிளைத்திறம் (1)
கிளைத்திறம் பகருநர் தலைப்பெயல் அரிது என - உஞ்ஞை:36/142

 TOP
 
    கிளைப்பு (1)
குப்பை கிளைப்பு அறா கோழி போல்வர் - மகத:14/112

 TOP
 
    கிளைமை (3)
கிளைமை கூறி உளமை கொளீஇ - மகத:17/95
கூடிய கிளைமை குணம் பல கூறி - மகத:24/11
குருகுல கிளைமை கோடல் வேண்டி - வத்தவ:10/114

 TOP
 
    கிளையில் (1)
பெரு வலி கிளையில் கூடுவது போல - உஞ்ஞை:43/97

 TOP
 
    கிளையினும் (1)
கிளையினும் பிரித்தவன் கேடு தலை எய்தி - உஞ்ஞை:33/137

 TOP
 
    கிளையோ (1)
மாயாது இருப்பின் கிளையோ மற்று இவன் - மகத:19/122

 TOP
 
    கிளைஇ (1)
கயில் எருத்து இறைஞ்சி கால் நிலம் கிளைஇ
   உருகும் நெஞ்சத்து உதயணகுமரனை - உஞ்ஞை:44/143,144

 TOP
 
    கின்னர (1)
கின்னர கீதத்து கேள்வி மாந்தர் - உஞ்ஞை:37/108

 TOP
 
    கின்னரர் (1)
கின்னரர் இட்டனராயினும் இயக்கர் - வத்தவ:3/97

 TOP