<<முந்திய பக்கம்

பெருங்கதை - தொடரடைவு

ஞா - முதல் சொற்கள்
ஞாட்பினுள் 2
ஞாண் 3
ஞாயில் 3
ஞாயிற்று 3
ஞாயிறு 6
ஞாயிறும் 2
ஞால 2
ஞாலக்கு 1
ஞாலத்து 25
ஞாலந்து 1
ஞாலம் 7
ஞாழ் 1
ஞாழல் 2
ஞாழலும் 3
ஞாறிய 1
ஞான்று 1
ஞான 1
ஞானத்தாளர் 1
ஞானத்தின் 1
ஞானம் 4

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
    ஞாட்பினுள் (2)
பேர் அமர் ஞாட்பினுள் பெரு முது தந்தை-தன் - உஞ்ஞை:56/56
மாற்று தொழில் மன்னர் மயங்கிய ஞாட்பினுள்
   கூற்று தொழில் இளையர் குடர் சூடு மருப்பின - இலாவாண:2/188,189

 TOP
 
    ஞாண் (3)
பின்னுறு பொன் ஞாண் பெரும் தொடர் கோத்த - உஞ்ஞை:46/177
யாப்புறு புரி ஞாண் வீக்கு முதல் அவிழ - உஞ்ஞை:52/86
பொன் ஞாண் துயல்வரும் பொங்கு இள வன முலை - மகத:6/18

 TOP
 
    ஞாயில் (3)
வாயிற்கு அமைந்த ஞாயில் புரிசையும் - உஞ்ஞை:48/178
நீள் புடை இகந்துழி ஞாயில் ஒதுங்கி - இலாவாண:19/51
நல தகு ஞாயில் இலக்கண இள முலை - மகத:3/24

 TOP
 
    ஞாயிற்று (3)
கட்புல மருங்கில் கலந்த ஞாயிற்று
   வெப்ப நீக்கி தட்பம் தான் செய - உஞ்ஞை:48/58,59
குழவி ஞாயிற்று எழில் இகந்து எள்ளும் - உஞ்ஞை:55/4
பகுதி ஞாயிற்று உரு ஒளி திகழ - இலாவாண:4/2

 TOP
 
    ஞாயிறு (6)
குழவி ஞாயிறு குன்று இவர்வது போல் - உஞ்ஞை:33/129
எல்லை ஞாயிறு இரவு எழும் எனினும் - உஞ்ஞை:36/179
பரிதி ஞாயிறு பல்லவர் காணின் - உஞ்ஞை:48/42
ஞாயிறு படாமல் கோயில் புகுதல் - மகத:6/125
ஞாலம் விளக்கும் ஞாயிறு நோக்கி - வத்தவ:15/65
விண் மிசை ஞாயிறு விழுங்க கண்டனென் - நரவாண:1/155

 TOP
 
    ஞாயிறும் (2)
மதியமும் ஞாயிறும் கதி திரிந்து ஓடி - உஞ்ஞை:32/22
மாக விசும்பின் மதியமும் ஞாயிறும்
   எழுதலும் படுதலும் அறியா இன்பமொடு - இலாவாண:9/184,185

 TOP
 
    ஞால (2)
காலனோடு ஒக்கும் ஞால பெரும் புகழ் - உஞ்ஞை:36/101
ஞால மாந்தரை நாணி அன்ன - இலாவாண:14/7

 TOP
 
    ஞாலக்கு (1)
மன் உயிர் ஞாலக்கு இன் உயிர் ஒக்கும் - இலாவாண:11/17

 TOP
 
    ஞாலத்து (25)
ஞாலத்து இன் உயிர் வாழ்வோர் நாப்பண் - உஞ்ஞை:37/204
பொங்கு திரை ஞாலத்து மயக்கம் நீக்கும் - உஞ்ஞை:42/58
அறை கடன் ஞாலத்து இறை கடன் ஆதலின் - உஞ்ஞை:43/11
அம் கண் ஞாலத்து அன்புடையோரை - உஞ்ஞை:45/38
அம் கண் ஞாலத்து அழல் உமிழ்ந்து இமைக்கும் - உஞ்ஞை:47/48
மா இரு ஞாலத்து மன் உயிர் உண்ணும் - உஞ்ஞை:47/88
இருள் கண் புதைத்த இரும் கண் ஞாலத்து
   விரி கதிர் பரப்பிய வெய்யோன் போல - இலாவாண:1/20,21
வியன் கண் ஞாலத்து இயன்றவை கேள்-மின் - இலாவாண:1/57
இரும் கண் ஞாலத்து இளையோர் ஈட்டிய - இலாவாண:7/76
இடம்படு ஞாலத்து உடம்பொடு புணர்ந்த - இலாவாண:10/98
அதிரா ஞாலத்து அரசு வீற்றிருந்த - இலாவாண:11/79
இரும் கண் ஞாலத்து இன் உயிர் ஓம்பும் - இலாவாண:13/33
இரும் கடல் உடுத்த இ பெரும் கண் ஞாலத்து
   தன்னின் அல்லது தாம் மீக்கூரிய - இலாவாண:17/105,106
அதிரா இயற்கை அம் கண் ஞாலத்து
   குதிரை மருப்பும் கொளற்கு அரிது ஆகிய - மகத:3/69,70
மா இரு ஞாலத்து மன்னவன் மகளே - மகத:6/124
அம் கண் ஞாலத்து அளவை ஆகிய - மகத:14/7
அம் கண் ஞாலத்து அழகு வீற்றிருந்த - மகத:17/54
மன் உயிர் ஞாலத்து இன் உயிர் அன்ன - மகத:19/74
அலை கடல் ஞாலத்து ஆக்கையொடு ஆர் உயிர் - மகத:20/170
கண் அகன் ஞாலத்து பெண் அரும் கலம் அவள் - வத்தவ:6/28
அம் கண் ஞாலத்து ஆரேயாயினும் - வத்தவ:6/33
ஆல வித்தின் பெருகி ஞாலத்து
   நன்றி ஈன்றது என்று அவட்கு ஒத்த - வத்தவ:7/224,225
பரவை மா கடல் பயம் கெழு ஞாலத்து
   உருவின் மிக்க உதயணன் சேர்ந்து - வத்தவ:17/49,50
கோல அருவி அம் சிகரியும் ஞாலத்து
   ஒரு நடு ஆகிய உயர் பெரும் குன்றமும் - நரவாண:1/182,183
அம் கண் ஞாலத்து அரசியல் அமைதி - நரவாண:7/135

 TOP
 
    ஞாலந்து (1)
அவலம் கோடல் அம் கண் ஞாலந்து
   வெம் கண் வேந்தன் பைம் தொடி பாவாய் - இலாவாண:10/64,65

 TOP
 
    ஞாலம் (7)
ஞாலம் தரும் பொருள் இயற்பட நாடிய - உஞ்ஞை:47/122
ஞாலம் திரியா நல் நிறை திண் கோள் - இலாவாண:7/53
ஞாலம் காவல் நஞ்சு என நீக்கி - இலாவாண:11/58
ஞாலம் முழுதும் நவைக்குற்று எழினும் - இலாவாண:19/28
ஞாலம் விளக்கும் ஞாயிறு நோக்கி - வத்தவ:15/65
ஞாலம் புகழும் சாலங்காயன் - நரவாண:7/84
ஞாலம் எல்லாம் நயந்து உடன் காண - நரவாண:8/3

 TOP
 
    ஞாழ் (1)
தன் ஞாழ் நவிற்றிய தாமரை அங்கை - மகத:6/17

 TOP
 
    ஞாழல் (2)
ஞாழல் படு சினை தோழியர் நூக்க - உஞ்ஞை:40/37
ததர் இதழ் ஞாழல் தாழ் சினை தூக்கி - மகத:9/27

 TOP
 
    ஞாழலும் (3)
புன்னையும் செருந்தியும் பொன் இணர் ஞாழலும்
   இன்னவை பிறவும் இடையறவு இன்றி - உஞ்ஞை:48/154,155
ஞாழலும் புன்னையும் வீழ நூக்கி - உஞ்ஞை:51/41
புன்னையும் ஞாழலும் மகிழும் பொருந்திய - மகத:9/7

 TOP
 
    ஞாறிய (1)
கண் நிழல் ஞாறிய காமர் பள்ளியுள் - இலாவாண:11/51

 TOP
 
    ஞான்று (1)
தானை தலை தாள் தந்த ஞான்று அவன் - உஞ்ஞை:47/230

 TOP
 
    ஞான (1)
ஞான வல்லியத்து அரும் பொருள் நுனித்தனென் - மகத:12/17

 TOP
 
    ஞானத்தாளர் (1)
ஞானத்தாளர் நல் ஒழுக்கு அன்று என - வத்தவ:15/42

 TOP
 
    ஞானத்தின் (1)
அகம் புக்கனன் போல் அகன்ற ஞானத்தின்
   உள் நெறி கருத்தின் நண்ணியது ஆகிய - மகத:12/73,74

 TOP
 
    ஞானம் (4)
தெய்வ ஞானம் திறம்பட காட்டி - இலாவாண:11/134
ஞானம் நவின்ற நல்லோன் இவன் என - மகத:12/48
நவில்-தொறும் இனிய ஞானம் போல - நரவாண:7/148
நல் பொருள் ஞானம் நவின்று துறைபோகி - நரவாண:8/40

 TOP