|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
ஓக்கமும் (1)
உயர்பின் ஓக்கமும் உணர்த்தற்கு ஆகா - உஞ்ஞை:51/7
TOP
ஓக்கி (2)
மு குழி கூட்டத்து உட்பட ஓக்கி
ஆற்றா செம் தீ அமைத்தனன் மேற்கொள - இலாவாண:3/15,16
ஒள் வாள் ஓக்கி எள்ளுநர் ஓட்டிய - மகத:20/112
TOP
ஓகையும் (1)
ஆக்கம் சான்ற ஆர் உயிர் ஓகையும்
நோக்கி அவரும் நுகரும் செல்வத்து - நரவாண:6/77,78
TOP
ஓங்காளர் (1)
தொன்று ஓங்காளர் துணியப்பட்ட - இலாவாண:8/9
TOP
ஓங்கி (7)
தானம் மீக்கூரி மேல் நிவந்து ஓங்கி
அமிழ்து பெய் செப்பின் அன்ன வெம் முலை - உஞ்ஞை:45/5,6
கோடு உயர் நிவப்பின் குளிர் மலை ஓங்கி
மாடம் நிரைத்த மறுகை போல - உஞ்ஞை:50/42,43
மலர் தவிசு அடுத்து தளிர் குடை ஓங்கி
பூம் கொடி கவரி புடைபுடை வீசி - இலாவாண:13/20,21
நீங்கல் செல்லா நெறிமையின் ஓங்கி
யாங்கு இனிது இருத்தும் என்று அறிவினில் சூழ்ந்து - இலாவாண:20/98,99
உள்ளம் ஊர்தர ஒழி நிலத்து ஓங்கி
கொடுக்கும் சீர்க்கமும் மடுத்து ஊழ் வளைஇய - மகத:9/35,36
பாய்ந்தவை நிலத்தினும் விசும்பினும் ஓங்கி
சூறை வளியிடை சுழல் இலை போல - வத்தவ:12/199,200
வேண்டா என்ற பின் மீண்டும் மேக்கு ஓங்கி
நாளும்நாளும் நன்கனம் ஓட - நரவாண:4/102,103
TOP
ஓங்கிய (34)
சித்திர அம்பலம் சேர்ந்து குடக்கு ஓங்கிய
அத்தம் பேரிய அணி நிலை மாடத்து - உஞ்ஞை:33/104,105
படைஅகத்து ஓங்கிய பல் பூம் சேக்கை - உஞ்ஞை:33/107
ஒண்மையும் நிறையும் ஓங்கிய ஒளியும் - உஞ்ஞை:34/151
தே நவின்று ஓங்கிய திரு நாறு ஒருசிறை - உஞ்ஞை:34/223
ஆங்கனம் ஒழுகும் காலை ஓங்கிய
மாணி படிவமொடு மதில் உஞ்சேனையுள் - உஞ்ஞை:35/22,23
புகர்_இன்று ஓங்கிய நிகர்_இல் கேள்வியன் - உஞ்ஞை:36/102
தானக மாடமொடு தலைமணந்து ஓங்கிய
வம்பு வரி கொட்டிலொடு வண் திரை மயங்கி - உஞ்ஞை:38/81,82
மடல் பனை ஊசலொடு மாடம் ஓங்கிய
உருவ வெண் மணல் பெரு வெண் கோயிலுள் - உஞ்ஞை:40/59,60
ஓங்கிய ஒழுக்கின் உயர்ந்தோர் பேணி - உஞ்ஞை:46/323
ஓங்கிய தோற்றமொடு ஒருதான் ஆகி - உஞ்ஞை:48/37
கொல்லை பயின்று வல்லை ஓங்கிய
வரையின் அருகா மரையா மட பிணை - உஞ்ஞை:49/110,111
இருள்பட ஓங்கிய எல்லை வேலி-தொறும் - உஞ்ஞை:50/53
ஓங்கிய பெரும் புகழ் உருமண்ணுவா உறை - உஞ்ஞை:54/47
புகர் அணிந்து ஓங்கிய நெற்றி பூம் கவுள் - உஞ்ஞை:58/11
ஓங்கிய பெரும் கலம் தருக்கிய உதயணன் - இலாவாண:1/74
ஒத்த ஓரை நோக்கி ஓங்கிய
கைத்தொழில் நுனித்த வித்தக வாளர் - இலாவாண:4/137,138
மாடம் ஓங்கிய மகிழ் மலி மூதூர் - இலாவாண:7/6
ஓங்கிய பெரும் புகழ் யூகி மேல்நாள் - இலாவாண:9/116
உறு பெரும் காட்சி ஓங்கிய படிவத்து - இலாவாண:11/63
ஓங்கிய பெரும் குலம் தாங்குதல் கடனா - இலாவாண:19/24
ஓங்கிய பெரும் புகழ் யூகியும் உகவா - இலாவாண:20/132
சித்திர சாலையும் ஒத்து இயைந்து ஓங்கிய
ஒட்டு வினை மாடமும் கொட்டு வினை கொட்டிலும் - மகத:4/15,16
குன்று பல ஓங்கிய குளிர் நீர் வரைப்பில் - மகத:10/30
உரைப்ப கேட்டே ஓங்கிய பெரும் புகழ் - மகத:12/76
புனை மதில் ஓங்கிய போதனபுரத்து இறை - மகத:17/25
இலை கொடி செல்வமொடு தலைப்பரந்து ஓங்கிய
கணை கால் இகணையும் கமுகும் வாழையும் - மகத:19/37,38
ஓங்கிய பெரும் புகழ் உதயணகுமரனை - மகத:22/239
ஓங்கிய தோற்றத்து உதயணன் தழீஇ - மகத:23/64
ஓங்கிய பெரும் குலம் உயர்தற்கு உரித்து என்று - மகத:24/66
இஞ்சி ஓங்கிய இராசகிரியத்து - வத்தவ:4/46
ஓங்கிய சிறப்பின் ஓர் ஊர் நல்கி - வத்தவ:9/54
ஓங்கிய ஆடலின் ஒன்று இது ஆகலின் - வத்தவ:12/177
சென்று சேண் ஓங்கிய சேதி எங்கணும் - நரவாண:4/119
கூடி காணா மாடத்து ஓங்கிய
தண் கோசம்பி பெண் சனம் நோக்கி - நரவாண:8/33,34
TOP
ஓங்கின (1)
பாம்பு ஒழுக்காக ஓங்கின ஓட்டியும் - வத்தவ:12/110
TOP
ஓங்கு (10)
ஓங்கு மடல் பெண்ணை தீம் குலை தொடுத்த - உஞ்ஞை:46/20
உச்சியில் சுமந்துகொண்டு ஓங்கு விசும்பு இவர்தற்கு - இலாவாண:6/115
ஒன்று கண்டு அன்ன ஓங்கு நிலை வனப்பின் - இலாவாண:7/5
குலை அணி கமுகொடு கோள் தெங்கு ஓங்கு
பழனம் அடுத்த கழனி கைப்புடை - இலாவாண:9/9,10
ஒருப்படுத்து ஒழியாது ஓங்கு மலை மருங்கில் - இலாவாண:11/41
ஓங்கு வரை மருங்கின் ஒளி பெற நிவந்த - இலாவாண:19/128
ஓங்கு புகழ் வென்றி உதயணன் இசைக்கும் - மகத:25/59
ஓங்கு குடை நீழல் உலகு துயில் மடிய - வத்தவ:10/133
ஓங்கு புகழ் மாதவன் உரைத்ததற்கு உடம்பட்டு - வத்தவ:15/88
உரு ஆணம் ஆகிய ஓங்கு புகழ் செல்வன் - நரவாண:6/110
TOP
ஓங்குபு (2)
ஓங்குபு நிமிர்ந்த காம்பொடு கவ்வி - இலாவாண:2/121
ஒராஅ உலகிற்கு ஓங்குபு வந்த - இலாவாண:2/137
TOP
ஓச்சி (12)
பிடி கை அன்ன பெரும் தோள் ஓச்சி
இடி குரல் முரசின் முன் எழுந்தனள் ஆடி - உஞ்ஞை:37/245,246
எழு உறழ் திணி தோள் எடுத்தனன் ஓச்சி
பொழி மணி திண் தூண் பொறிபட புடைத்து - உஞ்ஞை:47/109,110
பெரும் பணை கொட்டிலுள் அரும் பலி ஓச்சி
முற்றவை காட்டி கொற்றவை பழிச்சி - இலாவாண:2/30,31
அரிவையர் அடுமடை அமிழ்து கொண்டு ஓச்சி
பஞ்ச வாசமொடு பாகு வலத்து இரீஇ - இலாவாண:3/45,46
முதல் நிலை பலகை சுவன் முதல் ஓச்சி
மூரி நிமிர்வன போல ஏர் பெற்று - இலாவாண:6/101,102
தொடி அணி தட கை தோன்ற ஓச்சி
தாக்க_அரும் தானை தருசகன் கழல் அடி - மகத:16/32,33
செங்கோல் செல்வம் சிறப்ப ஓச்சி
நல் நகரகத்தும் நாட்டக வரைப்பினும் - வத்தவ:2/6,7
செல்வ வேந்தன் செங்கோல் ஓச்சி
தான் ஆதரவு மேன்மேல் முற்றவும் - வத்தவ:14/185,186
சிதைவு_இல் போகமொடு செங்கோல் ஓச்சி
ஒழுகும்-காலை ஓரிடத்து ஒரு நாள் - நரவாண:1/2,3
பொன் கடிப்பு ஓச்சி
பெரும் கண் வீதி-தொறும் பிற புலம் அறிய - நரவாண:6/62,63
கனை பொன் கடிப்பின் காண் தக ஓச்சி
புனை பொன் பூம் தார் புரவலன் காக்கும் - நரவாண:7/25,26
கூற்றமும் விழைய கோல் இனிது ஓச்சி
கோட்டம் இன்றி குடி புறங்காத்து - நரவாண:8/19,20
TOP
ஓச்சிய (1)
ஒரு கோல் ஓச்சிய திரு ஆர் மார்ப நின் - உஞ்ஞை:49/66
TOP
ஓச்சியும் (1)
கொங்கு அலர் கோதை கொண்டு புறத்து ஓச்சியும்
அம் செம் சாந்தம் ஆகத்து எறிந்தும் - உஞ்ஞை:42/186,187
TOP
ஓச்சு (1)
கொற்றம் கொண்டு கோல் இனிது ஓச்சு என - இலாவாண:5/73
TOP
ஓசனை (1)
ஓசனை இழிந்து முகடு வலம் செய்து - நரவாண:4/111
TOP
ஓசை (11)
ஓசை நிற்றல் உலகத்து அஞ்சுவன் - உஞ்ஞை:36/112
மேல் இயல் முறைவர் நூல் இயல் ஓசை
எஃகு எறிந்து என்ன வெஃகு அறு செவிய - உஞ்ஞை:44/79,80
ஓசை அறியா பூசலும் புலம்பும் - உஞ்ஞை:46/336
ஓசை போக்கினரால் உவகையின் மகிழ்ந்து என் - இலாவாண:11/187
ஓசை போக்கிய பின்றை ஓவாது - இலாவாண:12/1
நரல் குரல் ஓசை அளைஇ அயல - மகத:4/48
வாழ்த்தும் ஓசை மறுமொழி யார்க்கும் - வத்தவ:1/20
ஓசை முரசின் ஒல்லென தரூஉ - வத்தவ:9/43
ஓசை போகிய ஒண் பொன் கலங்களும் - வத்தவ:11/24
ஓசை ஓடிய உலவா செல்வத்து - வத்தவ:12/142
ஓசை போகிய ஒளியினள் ஆகிய - நரவாண:8/60
TOP
ஓசைத்து (1)
உர களிறு அடக்கிய ஓசைத்து ஆகி - உஞ்ஞை:37/175
TOP
ஓசைய (1)
வாசம் கமழும் ஓசைய ஆகி - உஞ்ஞை:35/195
TOP
ஓசையில் (1)
சாம கீத ஓசையில் தணிக்கும் - உஞ்ஞை:44/63
TOP
ஓசையின் (3)
பறவை இரும் பிடி பாவு அடி ஓசையின்
அவணை போதல் அஞ்சி வேய் தோள் - உஞ்ஞை:48/133,134
பஞ்சுர ஓசையின் பையென பயிரும் - மகத:1/161
இசை கொள் ஓசையின் இன் துயில் ஏற்று - வத்தவ:5/82
TOP
ஓசையும் (2)
கள் பகர் மகடூஉ கள் குடை ஓசையும்
கன் அமர் பள்ளி கம்மியர் இடிக்கும் - உஞ்ஞை:40/83,84
பாடகத்து அரவமும் சூடகத்து ஓசையும்
ஆடு பந்து ஒலியும் கேட்பின் அல்லதை - வத்தவ:12/210,211
TOP
ஓட்டா (1)
வேட்டுழி வேட்கை ஓட்டா ஒழுக்கினள் - மகத:8/104
TOP
ஓட்டி (16)
காக்கை ஓட்டி நோக்கின் உண்டு - உஞ்ஞை:40/277
எல்லை அகன்று வல்லை மருங்கு ஓட்டி
முதல் நெறி கொண்டு மு_நால் காவதம் - உஞ்ஞை:49/37,38
உருக்குறு தமனியத்து ஒழுகு கொடி ஓட்டி
பவழ கொட்டை பல் வினை நுனித்த - இலாவாண:4/109,110
உருக்குறு பசும்பொன் உள் விரித்து ஓட்டி
கருத்தின் அமைந்த காமவள்ளி - இலாவாண:6/93,94
தேர் மாறு ஓட்டி திண்ணிதின் அமைத்த - இலாவாண:9/12
உள்ளிய எல்லை ஓட்டி கள்ளமொடு - இலாவாண:9/16
மாய மள்ளரை ஆயமொடு ஓட்டி
உருமண்ணுவாவும் வயந்தககுமரனும் - இலாவாண:18/60,61
பிடித்து உரு கொளீஇ கொடி திரி ஓட்டி
கை அமைத்து இயற்றிய கலிங்க துணியினர் - மகத:1/99,100
இரவிடை எறிந்து பொரு படை ஓட்டி
கேட்போர்க்கு எல்லாம் வாள் போர் வலி தொழில் - மகத:17/92,93
தன்னொடு வந்து மன்னரை ஓட்டி
போதர துணிந்தனன் ஏதம் இன்றி - மகத:19/151,152
மாட்டல் வேண்டும் என்று ஓட்டி எ திசையும் - மகத:25/123
தன் கோல் ஓட்டி தவற்றின் நாட்டிய - வத்தவ:2/4
அழிந்த-காலை ஆணை ஓட்டி
நெருங்கி கொண்ட நீர் கெழு நிலனும் - வத்தவ:11/6,7
எம் இறை படையை எறிந்தனன் ஓட்டி
செம்மையின் சிலதியர்-தம்மொடும் சேர - வத்தவ:13/40,41
ஊழின்ஊழின் உயர ஓட்டி
கோளும் குறியும் கொண்டனன் ஆகி - நரவாண:4/85,86
மனத்தினும் வளியினும் இசைப்பின் ஓட்டி
எ சார் மருங்கினும் இனிதின் உறையும் - நரவாண:4/129,130
TOP
ஓட்டிய (6)
ஐயம் இன்றி ஆணை ஓட்டிய
தெய்வ திகிரி கைவலத்து உயரிய - இலாவாண:15/120,121
நாவல்_அம்_தண்_பொழில் நண்ணார் ஓட்டிய
காவலன் மகளே கனம் குழை மடவோய் - இலாவாண:18/76,77
ஒன்னார் ஓட்டிய உதயணன் கோயில் - மகத:19/181
ஒள் வாள் ஓக்கி எள்ளுநர் ஓட்டிய
எம்பி உற்ற இன்னா சிறை விடின் - மகத:20/112,113
ஒன்னார் ஓட்டிய உதயணன் உள்ளத்து - மகத:25/132
பரும யானையின் பற்றார் ஓட்டிய
பெருமையின் மிக்க எம் பெருமகன்-தன்னோடு - வத்தவ:10/150,151
TOP
ஓட்டியது (1)
மாறுசெயற்கு இருந்த மன்னரை ஓட்டியது
பண்ணிகாரமாக கண்ணுற்று - மகத:18/23,24
TOP
ஓட்டியும் (5)
அடித்த பந்தால் விடுத்தவை ஓட்டியும்
குழல் மேல் வந்தவை குவி விரல் கொளுத்தியும் - வத்தவ:12/69,70
அகங்கை ஓட்டியும் புறங்கையில் புகுத்தியும் - வத்தவ:12/83
பாம்பு ஒழுக்காக ஓங்கின ஓட்டியும்
காம்பு இலை வீழ்ச்சியின் ஆங்கு இழிந்திட்டும் - வத்தவ:12/110,111
அங்கையின் ஏற்றும் புறங்கையின் ஓட்டியும்
தங்குற வளைத்து தான் புரிந்து அடித்தும் - வத்தவ:12/229,230
சாரி பல ஓட்டியும் வாழி என வாழ்த்தியும் - வத்தவ:12/242
TOP
ஓட்டின் (2)
வீளை ஓட்டின் வெருவ எய்து அவர் - உஞ்ஞை:55/64
இவை இனி எம் கோல் ஓட்டின் அல்லதை - வத்தவ:11/8
TOP
ஓட்டு (1)
ஓட்டு இடத்து ஒட்டும் உறுதி வாழ்க்கையுள் - உஞ்ஞை:35/140
TOP
ஓட்டுக (1)
ஓட்டுக வல் விரைந்து என்றலின் உதயணன் - உஞ்ஞை:49/73
TOP
ஓட்டும் (1)
போ-மின் போ-மின் என்று புடை ஓட்டும்
காவலாளரை கண்டு இவண் புகுதரும் - மகத:6/28,29
TOP
ஓட (4)
யூகி என்னும் உரை பரந்து ஓட
புல்வாய் இனத்தில் புலி புக்காங்கு - உஞ்ஞை:43/74,75
ஒட்டிய வனப்பினோர் ஓட உத்தரத்து - இலாவாண:6/70
வரி வளை கையும் மனமும் ஓட
அரி ஆர் மேகலை ஆர்ப்பொடு துளங்கவும் - வத்தவ:12/124,125
நாளும்நாளும் நன்கனம் ஓட
யாழின் கிழவன் இங்ஙனம் நினைஇ - நரவாண:4/103,104
TOP
ஓடல் (1)
ஓடல் ஆற்றான் ஆகி ஒருசிறை - இலாவாண:9/178
TOP
ஓடவும் (1)
நீர் நசைக்கு எள்கி தேர் மருங்கு ஓடவும்
உள் அழல் அறாஅது ஒள் அழல் அன்ன - உஞ்ஞை:52/53,54
TOP
ஓடா (4)
வேட்டிடை பாய்தலை வெரீஇ ஓடா
பஞ்சி மெல் அடி பரல் வடு பொறிப்ப - இலாவாண:9/161,162
ஓடா கழல் கால் உதயணகுமரன் - மகத:18/12
அல்லல் காண்பதற்கு அமைச்சு வழி ஓடா
புல்லறிவாளனேன் செய்தது நினைஇ - மகத:24/107,108
ஓடா நடவா ஒசியா ஒல்கா - வத்தவ:12/206
TOP
ஓடாது (2)
ஒப்புழி அல்லது ஓடாது என்பது - மகத:22/97
ஒருமையின் ஓடாது புலம்பும் உள்ளமும் - வத்தவ:7/10
TOP
ஓடாள் (1)
தெரி இழை மாதர் உரிமையின் ஓடாள்
அன்னது ஆதல் ஒருதலை அதனால் - மகத:17/100,101
TOP
ஓடி (38)
மதியமும் ஞாயிறும் கதி திரிந்து ஓடி
கடல் நிற விசும்பின் உடன் நின்றாங்கு - உஞ்ஞை:32/22,23
அண்ணல் வருக என அவ்வயின் ஓடி
ஒண் தொடி மகளிர் கொண்டு அகம் புகுதர - உஞ்ஞை:34/229,230
கொடையகத்தோன் என கடைகழிந்து ஓடி
கவலையின் செல்லும் கவ்வையின் விலக்கி - உஞ்ஞை:35/123,124
படு_சொல் ஒற்றர் கடிது அவண் ஓடி
வானுற நிவந்த வசை_இல் மாநகர் - உஞ்ஞை:36/4,5
கோல் கொள் மள்ளர் காலின் ஓடி
நம்பி வேஎண்ம் அம்பி வருக என - உஞ்ஞை:36/171,172
அம் செம் சீறடி அஞ்சுவர ஓடி
நிரை வளை மகளிர் நீர் குடைவு ஒரீஇ - உஞ்ஞை:40/105,106
ஆய மாக்களொடு சேய் வழி ஓடி
கலந்து காதலின் ஆடலின் கை சோர்ந்து - உஞ்ஞை:40/188,189
முந்நூற்றுஎழுபதும் முப்பதும் ஓடி
வீழினும் வீழ்க வேதனை இல்லை - உஞ்ஞை:43/51,52
கால் கடியாளர் வேல் பிடித்து ஓடி
ஆணை ஆணை அஞ்சன்-மின் கரவொடு - உஞ்ஞை:43/165,166
தானை சேரியும் தலைக்கொண்டு ஓடி
கான தீயின் கடுகுபு திசைப்ப - உஞ்ஞை:43/203,204
என் மகள் உள் வழி இளையரொடு ஓடி
காவல் இன்று தன் கடன் என கூரி - உஞ்ஞை:44/100,101
ஏவல் இளையரும் எதிர் எழுந்து ஓடி
மாடமும் கடையும் மதில் புற சேரியும் - உஞ்ஞை:44/112,113
மலைக்கும் மாந்தரை தலைக்கொண்டு ஓடி
ஐ_தலை_நாகத்து அழலுறு கண்ணினர் - உஞ்ஞை:45/91,92
வடி வேல் இளையரும் வல் விரைந்து ஓடி
எய் கணை இயற்கை இயற்று அமை இரும் பிடி - உஞ்ஞை:47/114,115
எண் திசை மருங்கினும் எதிர்_எதிர் ஓடி
மண்டில மதியமொடு கதிர் மீன் மயங்கி - உஞ்ஞை:48/112,113
ஆமா இனமும் தாம் மாறு ஓடி
இடை புனல் பட்டவை புடை புனற்கு இவர - உஞ்ஞை:51/56,57
எண்பதின் எல்லை ஓடி கண் சுழன்று - உஞ்ஞை:52/103
உதிர வழியே அதிர ஓடி
பிடியது வீழ்ச்சியும் பெண் பால் சுவடும் - உஞ்ஞை:55/74,75
படியின் ஆய்ந்து கடுகுவனர் ஓடி
வெள்ளிடை வெண் மணல் மிதித்த சுவடு-தொறும் - உஞ்ஞை:55/77,78
உய் மருங்கு உபாயத்து பொய் மருங்கு ஓடி
அழல் வழி வந்து யாம் அசைந்தனம் வதிந்த - உஞ்ஞை:56/101,102
ஒல்லா மறவர் ஒலித்தனர் ஓடி
வேக புள்ளமொடு விசைத்தனர் ஆர்த்து - உஞ்ஞை:56/237,238
அழகு அமை மட பிடி ஐந்நூறு ஓடி
அழல் நிலை அத்தத்து அசைந்து உயிர் வைப்ப - இலாவாண:9/128,129
கறுவு கொளாளர் மறுவு வந்து ஓடி
உறுவு கொள் உரோணியொடு உடல் நிலை புரிந்த - இலாவாண:9/166,167
நண்ணின் மற்று இது நயந்து வழி ஓடி
மாசு_அற கழீஇ மனத்திடை ஆம் நோய் - இலாவாண:16/57,58
யாறும் குளனும் வாய் மணந்து ஓடி
தண்டலை-தோறும் தலைப்பரந்து ஊட்டி - மகத:3/3,4
கொற்ற வேந்தன் குறிப்பு வழி ஓடி
அகத்து உறைந்து ஒடுங்குதல் செல்லார் அகன் மதில் - மகத:4/100,101
பசும் கதிர் திங்கள் விசும்பு அளந்து ஓடி
கடும் கதிர் கனலி கக்குபு போகி - மகத:7/97,98
பாடி காவலர் ஓடி ஆண்டு எறிந்து - மகத:17/215
கடும் தொழில் மன்னர் உடைந்தனர் ஓடி
அடைந்தனர்-மாதோ அரண் அமை மலை என் - மகத:17/262,263
உதையணகுமரன் புகுதர ஓடி
சிதை பொருள் தெரியும் செந்நெறியாளர் - மகத:18/81,82
விலக்கவும் நில்லான் தலைக்கொண்டு ஓடி
தமரையும் தீர்ந்து நமரையும் நண்ணான் - மகத:20/136,137
இருள் இடை மருங்கின் விரைவனர் ஓடி
அற்றம் இது என ஒற்றர் காட்டிய - மகத:24/136,137
ஒளித்து அகத்து ஒடுங்கிய ஒற்றர் ஓடி
சிலை பொறி தட கையின் சேதியர் பெருமகற்கு - மகத:25/2,3
உய்ந்தோர் ஓடி ஊரகம் குறுகி - மகத:26/44
நிரந்த பெரும் படை பரந்து எழுந்து ஓடி
மாற்றோன் இருந்த மலையகம் அடுத்து - மகத:27/95,96
அரு முரண் கலுழனின் ஆர்த்து மேல் ஓடி
பொரு முரண் அழிக்கும் புனை படை பயிற்றி - மகத:27/160,161
காண் என கைவிட்டு ஓடினன் ஓடி
அடுத்த காட்சியின் தனித்து ஒரு மண்டபத்து - வத்தவ:13/251,252
உலப்ப_அரும் நீள் அதர் தலைச்செல ஓடி
காலகூடம் என்னும் வெம் நோய் - நரவாண:3/128,129
TOP
ஓடிய (2)
ஓசை ஓடிய உலவா செல்வத்து - வத்தவ:12/142
ஓடிய உள்ளத்து உயர் துணை தேவியை - நரவாண:1/221
TOP
ஓடியும் (1)
ஊடியும் உணர்ந்தும் ஓடியும் ஒளித்தும் - இலாவாண:12/153
TOP
ஓடின (1)
ஓடின தடம் கண் கூடின புருவம் - வத்தவ:12/228
TOP
ஓடினர் (1)
உழை_நிலையாளர் ஓடினர் இசைப்ப - உஞ்ஞை:34/36
TOP
ஓடினன் (1)
காண் என கைவிட்டு ஓடினன் ஓடி - வத்தவ:13/251
TOP
ஓடினை (1)
ஓடினை சொல் என நீடுதல் இன்றி - மகத:26/12
TOP
ஓடு (10)
ஓடு நீர் பெரும் துறை உள்ளம் பிறந்துழி - உஞ்ஞை:39/41
ஓடு விசை வெம் காற்று உருமொடு ஊர்தர - உஞ்ஞை:44/46
ஓடு எரி கவரலின் ஊர் புகல் ஆகாது - உஞ்ஞை:44/114
ஒன்னா மன்னனை ஓடு புறம் கண்டு - இலாவாண:1/34
ஓடு கொடி மூக்கின் ஊடு போழ்ந்து ஒன்றாய் - இலாவாண:3/97
ஓடு அரி சிதரிய ஒள் அரி மழை கண் - இலாவாண:16/16
மாடமும் வாயிலும் ஓடு எரி கவர - இலாவாண:17/84
மாடம் புக்கிருந்து ஓடு கயல் அன்ன - மகத:10/24
ஓடு கால் இளையரை ஓலையொடு போக்கின் - மகத:24/12
ஓடு அரி கண்ணி உலாவர நோக்கி - வத்தவ:12/264
TOP
ஓடுதல் (3)
ஐந்நூற்று ஓடுதல் ஆற்றாது ஆயினும் - உஞ்ஞை:43/50
ஓடுதல் புரிந்த உறு பிடி மீமிசை - உஞ்ஞை:48/76
உவந்துழி தவிராது ஓடுதல் காமுறும் - மகத:1/170
TOP
ஓடும் (6)
கை அலைத்து ஓடும் ஓர் களி_மகன் காண்-மின் - உஞ்ஞை:40/98
வேய் உயர் பிறங்கல் சேய் உயர்ந்து ஓடும்
சூர் உறு மஞ்ஞையின் சோர்ந்த கூந்தலர் - உஞ்ஞை:44/21,22
வருக ஈண்டு என வறிதின் ஓடும்
தம் அமர் புதல்வரை தலை அடி-காறும் - இலாவாண:2/169,170
கல்லும் ஓடும் புல்லும் கரியும் - இலாவாண:4/53
உருப்பு அவிர் மண்டிலத்து ஒரு-வயின் ஓடும்
மருப்பு பிறையின் மிக சுடர்ந்து இலங்காது - வத்தவ:7/164,165
பல் கதிர் மதியமொடு பரந்து விசும்பு ஓடும்
வியந்த நல் கோள் உயர்ந்துழி நோக்கி - நரவாண:1/122,123
TOP
ஓடுவன (1)
ஓடுவன போன்ற ஆதலின் மற்று நின் - உஞ்ஞை:48/125
TOP
ஓடுறும் (1)
அதர் கடிது ஓடுறும் அமைதியாளரை - நரவாண:7/70
TOP
ஓடை (2)
பசும்பொன் ஓடை பண்ணொடு கொடுப்பினும் - நரவாண:5/11
ஓடை அணிந்த ஒண் பொன் நெற்றி - நரவாண:7/17
TOP
ஓடைக்கு (1)
ஓடைக்கு அமைந்த சூழி சுடர் நுதல் - உஞ்ஞை:48/24
TOP
ஓடைய (1)
அருவி அன்ன உருவு கொள் ஓடைய
ஓடைக்கு அமைந்த சூழி சுடர் நுதல் - உஞ்ஞை:48/23,24
TOP
ஓடையும் (1)
சூழியும் ஓடையும் சுடர் மணி கோவையும் - இலாவாண:2/200
TOP
ஓடையொடு (1)
ஆயிரம் தேரும் அடர் பொன் ஓடையொடு
சூழியின் பொலிந்தன பாழியில் பயின்றன - மகத:26/70,71
TOP
ஓத்தின் (1)
ஓத்தின் வாழ்நரும் ஒழுக்கின் வாழ்நரும் - வத்தவ:2/50
TOP
ஓத்தினும் (1)
உரையினும் ஓத்தினும் உவப்ப கூறிய - வத்தவ:16/43
TOP
ஓத்து (1)
எடுத்து ஓத்து உரையின் இயம்பியாஅங்கு - மகத:15/11
TOP
ஓத்தும் (1)
உரையும் ஓத்தும் புரையா புலமை - இலாவாண:2/135
TOP
ஓத்தொடு (1)
ஓத்தொடு புணர்ந்த காப்பு உடை ஒழுக்கின் - மகத:3/83
TOP
ஓத (1)
முது நீர் பொழில் உகந்து எதிர் இன்று ஓத
பதினாறாயிரம் பதினறு வகைய - இலாவாண:4/5,6
TOP
ஓதம் (1)
கவ்வை ஓதம் கால் கிளர்ந்து உராஅய் - உஞ்ஞை:51/66
TOP
ஓதல் (1)
மேதகு மெய்யினும் ஓதல் இன்றி - மகத:15/65
TOP
ஓதி (16)
அம்_சில்_ஓதி அணங்கு வாய் கூற - உஞ்ஞை:37/251
சில் மெல் ஓதி சேர்ந்த சிறு நுதல் - உஞ்ஞை:41/76
புல்லகம் பொருந்திய மெல்லென் ஓதி
பொன் அணி மாலை பொலிந்த பூ முடீஇ - இலாவாண:3/72,73
மறையின் கிரிகையின் முறை அறிந்து ஓதி
மின் வாள் அழித்த மேதகு கைவினை - இலாவாண:4/160,161
மணி அறைந்து அன்ன மா வீழ் ஓதி
அணிபெற கிடந்த அம் பொன் சூட்டினர் - இலாவாண:7/17,18
மாலை ஓதி மடவரல் மகளிர்க்கு - இலாவாண:12/94
அம்_சில்_ஓதி அஞ்சல் நும் பெருமான் - இலாவாண:17/98
நெறி தாழ் ஓதி நெஞ்சின் அகத்தே - இலாவாண:17/148
பூம் புறம் கவவ புனை தார் ஓதி
பூண்ட பூணொடு பொறை ஒன்று ஆற்றேன் - மகத:14/148,149
அம்_சில்_ஓதி ஆகத்து அசைத்தர - மகத:14/157
வணங்குபு கொண்டு மணம் கமழ் ஓதி
மாதர் கை-வயின் கொடுப்ப காதல் - மகத:15/58,59
ஒடுங்கு_ஈர்_ஓதி என்பதை உணர்த்து என - மகத:22/153
மா வீழ் ஓதி தன் கோயில் புக்க பின் - வத்தவ:5/39
நடுங்கிய நெஞ்சமொடு ஒடுங்கு_ஈர்_ஓதி - வத்தவ:7/77
நினைப்பில் திரியா நெறிமையின் ஓதி
இமைப்போன் கண் மிசை இலங்கிய ஒளியொடு - நரவாண:2/63,64
மா வீழ் ஓதி மதனமஞ்சிகையும் - நரவாண:8/64
TOP
ஓதிய (10)
ஓதிய காலத்து உடன் விளையாடி - உஞ்ஞை:35/24
நீதியும் பிறவும் ஓதிய எல்லாம் - உஞ்ஞை:36/360
கோயிற்கு ஓதிய கோலம் உடைத்தாய் - உஞ்ஞை:47/43
அறுவைக்கு ஓதிய ஐ வகை வண்ணத்து - இலாவாண:5/128
நீதியது நேர்மை உளனாய் ஓதிய
சமைய விகற்பம் சால காட்டி - இலாவாண:8/140,141
கோற்கு அமைவுறும் நடை குதிரைக்கு ஓதிய
நூற்கணாளரொடு நுனித்து கதி வினாய் - இலாவாண:18/26,27
ஓதிய உண்டு என உணர கூற - மகத:1/87
நீதி நல் நூல் ஓதிய நாவினள் - வத்தவ:10/14
ஓதிய முறைமையின் யாதும் காணார் - வத்தவ:12/195
ஓதிய வனப்போடு உயர் நெறி முற்றி - நரவாண:1/172
TOP
ஓதியர் (1)
அம்_சில்_ஓதியர் அஞ்சினர் ஒருசார் - இலாவாண:12/126
TOP
ஓதியான் (1)
உள்ளுறுத்து ஓதியான் உள்ளம் உவப்ப - இலாவாண:11/161
TOP
ஓதியின் (2)
ஓதியின் நோக்கி உணர்ந்து யான் வருவேன் - நரவாண:2/54
ஒன்றிய உறு நோய் ஓதியின் நோக்கி - நரவாண:3/92
TOP
ஓதியும் (2)
ஓதியும் நுதலும் மாதரை நீவி - உஞ்ஞை:36/85
நீதி பெருமை நூல் ஓதியும் ஓராய் - இலாவாண:1/26
TOP
ஓதியை (5)
அம்_சில்_ஓதியை நெஞ்சு வலியுறீஇ - உஞ்ஞை:36/78
அம்_சில்_ஓதியை நெஞ்சு வலியுற - உஞ்ஞை:44/148
அலமந்து அழூஉம் அம்_சில்_ஓதியை - உஞ்ஞை:47/249
விம்முவனள் நடுங்கும் பொம்மல்_ஓதியை - உஞ்ஞை:55/119
அம்_சில்_ஓதியை அஞ்சல் ஓம்பு என - இலாவாண:9/143
TOP
ஓதினர் (2)
வேத விழு பொருள் ஓதினர் உளர் எனின் - மகத:14/175
ஆம் பொருள் ஓதினர் இகழார் அதனால் - வத்தவ:10/131
TOP
ஓது (2)
ஓது இயலாளர் உடலுநர் உழிதர - உஞ்ஞை:44/69
ஓது சாலையும் சூது ஆடு கழகமும் - இலாவாண:7/132
TOP
ஓதுநர் (1)
ஓதுநர் சாலை அகத்தும் ஓவா - இலாவாண:8/61
TOP
ஓதை (1)
ஒலி பெறு கீதத்து ஓதை போகிய - உஞ்ஞை:37/106
TOP
ஓப்ப (2)
கரும் கண் மகளிர் கை புடைத்து ஓப்ப
இரும் கண் விசும்பு_அகம் இறகு உற பரப்பி - உஞ்ஞை:40/19,20
கண் அயல் கடாஅத்து களி வண்டு ஓப்ப
மாறு தனக்கு இன்றி மறம் மீக்கூரி - நரவாண:3/69,70
TOP
ஓப்பி (2)
தேன் கவர்வு ஓப்பி திரு நுதல் சுருக்கி - உஞ்ஞை:35/176
அழல் நறும் தேறல் சுழல் வண்டு ஓப்பி
குறி வெம் காதலன் பொறி யாப்புறுத்த - உஞ்ஞை:40/160,161
TOP
ஓப்புதல் (1)
ஒக்கல் உறு துயர் ஓப்புதல் உள்ளி - மகத:7/20
TOP
ஓப்பும் (3)
படு வண்டு ஓப்பும் பண் அமை கோலத்து - உஞ்ஞை:48/27
தொகை தொழில் ஓப்பும் தகை செவிக்கு ஏற்ப - உஞ்ஞை:58/14
அடை வண்டு ஓப்பும் அவாவினர் போல - இலாவாண:6/137
TOP
ஓம்ப (3)
வாள் வலம் கொண்டு காவல் ஓம்ப
வரி நிற கோம்பி வால் இமிழ்ப்பு வெரீஇ - உஞ்ஞை:54/141,142
பரிசனம் சூழ்ந்து பரிவு நன்கு ஓம்ப
அன்றை அ பகல் அசைஇ ஒன்றிய - உஞ்ஞை:57/105,106
ஒழுக்கம் சான்றோர் பிழைப்பு இலர் ஓம்ப
மலை தொகை அன்ன மாட வீதியுள் - மகத:27/215,216
TOP
ஓம்படுத்து (3)
ஒழுக்கம் எல்லாம் ஓம்படுத்து உரைஇ - உஞ்ஞை:36/330
பிடி ஓம்படுத்து பெருமை எய்தி - உஞ்ஞை:46/111
ஊகியும் செல்க என ஓம்படுத்து உரைத்து - வத்தவ:11/60
TOP
ஓம்படை (7)
ஓம்படை கிளவி பாங்குற பயிற்றி - உஞ்ஞை:38/225
சார்ந்தனள் ஆகி அவட்கு ஓம்படை குறிப்பொடு - உஞ்ஞை:45/33
ஓம்படை கிளவி பாங்குற பயிற்றி - உஞ்ஞை:53/41
ஓம்படை கூறி ஆங்கு அவண் ஒழிய - மகத:19/200
ஓம்படை கிளவி பாங்குற பயிற்றி - மகத:23/50
ஒழிந்தோர்க்கு எல்லாம் ஓம்படை சொல்லி - வத்தவ:1/30
காஞ்சுகி மாந்தர்க்கு ஓம்படை கூறி - வத்தவ:16/45
TOP
ஓம்பல் (1)
உருவ கோலமொடு ஓம்பல் செல்லாது - உஞ்ஞை:40/341
TOP
ஓம்பார் (1)
உரைத்தகு கிளவி ஓம்பார் பயிற்றி - உஞ்ஞை:35/223
TOP
ஓம்பாளரும் (1)
நிறை ஓம்பு ஒழுக்கத்து மறை ஓம்பாளரும்
பல் நகர்-தோறும் மன்னவன் வேண்ட - இலாவாண:4/31,32
TOP
ஓம்பாளன் (1)
மறை ஓம்பாளன் மதித்தனன் ஆகி - மகத:8/75
TOP
ஓம்பி (36)
குற்றப்படினும் அற்றம் ஓம்பி
போதத்தின் அகன்று சாதத்தின் வழி நின்று - உஞ்ஞை:43/60,61
நடுக்கம் ஓம்பி விடுக்குநள் போல - உஞ்ஞை:45/32
அரும் படையாளர் ஆர் உயிர் ஓம்பி
நயந்து கைவிடாஅன் பின் செல்வோனை - உஞ்ஞை:46/137,138
செல் சுடர் அந்தி நல் இயல் ஓம்பி
பள்ளி கோயிலுள் பல்_இயம் எடுப்ப - உஞ்ஞை:47/163,164
சாயல் செல்வ தலையளித்து ஓம்பி
அணி இயல் அமிர்தம் மாற்றிய பின் அவள் - உஞ்ஞை:47/215,216
ஆணை அஞ்சிய அசைவு நன்கு ஓம்பி
கோணை நீள் மதில் கொடி கோசம்பி - உஞ்ஞை:48/68,69
பைம் கண் எருமை படு கன்று ஓம்பி
செருத்தல் செற்றிய தீம் பால் அயல - உஞ்ஞை:48/142,143
வடி கண் மாதர் வருத்தம் ஓம்பி
பகலிடத்து அற்றம் படாமை இருக்கும் - உஞ்ஞை:53/99,100
காலை வருவேன் காவல் ஓம்பி
போகல் செல்லாது புரவல இரு என - உஞ்ஞை:54/70,71
கலங்கல் ஓம்பி காஞ்சனமாலாய் - உஞ்ஞை:56/35
நீப்ப_அரும் துயரம் நெறி-வயின் ஓம்பி
தீ புகை தீர்தலும் காட்டுதும் சென்று என - உஞ்ஞை:56/128,129
வாள் தொழில் வயந்தகன் வருத்தம் ஓம்பி
பெரும் கணம் சென்ற பிறங்கு புல் கானம் - உஞ்ஞை:56/222,223
செரு அடு செம்மலை செல்லல் ஓம்பி
கூப்பிய கையினர் காப்பொடு புரிய - உஞ்ஞை:57/2,3
இழுக்கா இயல்பின் ஒழுக்கம் ஓம்பி
வஞ்சம்_இல் பெரும் புகழ் வத்தவர் இறைவனும் - உஞ்ஞை:57/8,9
அழுக்காறு அகன்ற ஒழுக்காறு ஓம்பி
கைவினை ஐந்தும் கற்று அகத்து அடக்கி - இலாவாண:4/45,46
பெயரது மற்று அதன் இயல்பு அறிந்து ஓம்பி
வெருட்டலும் தெருட்டலும் விடுத்தலும் விலக்கலும் - இலாவாண:9/84,85
பள்ளி கொண்டு புக்கு உள் அழிவு ஓம்பி
அதிரா ஞாலத்து அரசு வீற்றிருந்த - இலாவாண:11/78,79
விழுப்பம் எய்தி ஒழுக்கு இயல்பு ஓம்பி
இழுக்காது இயன்ற இலாவாணத்து அயல் - இலாவாண:11/176,177
ஆற்றுவித்து ஓம்பி போற்றுபு தழீஇ - இலாவாண:20/97
சத்தி குடத்தொடு தத்துறல் ஓம்பி
விளங்குபு துளங்கும் வென்றித்து ஆகி - இலாவாண:20/111,112
கலா வேல் குருசில் விலாவணை ஓம்பி
வயல் கொள் வினைஞர் கம்பலை வெரீஇ - மகத:2/14,15
எல் உறு பொழுதின் செல்லல் ஓம்பி
மகிழ் பதம் அயின்றிசினாங்கு மல்லிகை - மகத:7/26,27
திருந்து அடி வணங்கி வருந்தல் ஓம்பி
பீடத்து இரீஇய பாடு அறிந்து ஏற்றி - மகத:22/206,207
விழு தகு வேள்வி ஒழுக்கு இயல் ஓம்பி
செம்பொன் பட்டம் பைம் தொடி பாவை - மகத:22/274,275
கரும மாக்களை ஒரு-வயின் ஓம்பி
செறிய செய்து எமக்கு அறிய விடுக்க பின் - மகத:25/99,100
வேறு இடம் காட்டி ஆறு அறிந்து ஓம்பி
வியலக வரைப்பின் கேட்டோர் புகழ - வத்தவ:1/31,32
புன்கண் தீர புறந்தந்து ஓம்பி
வாள் தொழில் தருசகன் மீட்டனன் போக்கி - வத்தவ:4/15,16
பொறை மலி வெம் நோய் புறந்தந்து ஓம்பி
போக்கிய பின்றை வீக்கம் குன்றா - வத்தவ:4/29,30
மித்திரகாமனை கண்டு மெலிவு ஓம்பி
வருத்தம் தீர்ந்த பின் வருத்தமானன் - வத்தவ:4/95,96
பக்கல் கொண்டு பாற்படுத்து ஓம்பி
இலாவாணக வழி சாதகன் என்னும் - வத்தவ:9/46,47
காவல் ஓம்பி காட்டினிர் கொடு-மின் என்று - வத்தவ:10/82
பொச்சாப்பு ஓம்பி பொய் களிறு புதைஇ - வத்தவ:10/117
குழவி கொள்பவரின் இகழாது ஓம்பி
புகழ் பட வாழ்க புகழ் பிறிது இல்லை - வத்தவ:10/134,135
யாறு செல் வருத்தம் ஊறு இன்று ஓம்பி
அவந்தியர் கோமான் அருளிட நூல் நெறி - வத்தவ:10/183,184
உரிய ஆற்றி மரபு அறிந்து ஓம்பி
அரு விலை நன் கலம் அமைவர ஏற்றி - வத்தவ:17/110,111
இழுமென் செல்வமொடு இன் உயிர் ஓம்பி
ஒழுகுவனன்-மாதோ உதயணன் இனிது என் - வத்தவ:17/121,122
TOP
ஓம்பிய (2)
தளர் நடை இளமையில் தான் கொண்டு ஓம்பிய
வளர் கொடி மருங்குல் வருந்த புல்லி - இலாவாண:10/42,43
பல் உயிர் பருவரல் ஓம்பிய பெருமகன் - மகத:18/99
TOP
ஓம்பினன் (1)
வருத்தம் ஓம்பினன் வத்தவன் பெற்று என் - மகத:18/116
TOP
ஓம்பு (10)
காத்தல் ஓம்பு என ஆற்றுளி கூறி - உஞ்ஞை:46/93
குடி ஓம்பு இயற்கை எம் கோமகன் எழுக என - உஞ்ஞை:46/112
அரியவும் உளவோ அஞ்சல் ஓம்பு என - உஞ்ஞை:46/194
காவல் ஓம்பு என காவலன் அருளி - உஞ்ஞை:53/58
உற்ற வெம் நோய் ஓம்பு என உற்ற - உஞ்ஞை:55/15
நிறை ஓம்பு ஒழுக்கத்து மறை ஓம்பாளரும் - இலாவாண:4/31
அம்_சில்_ஓதியை அஞ்சல் ஓம்பு என - இலாவாண:9/143
அஞ்சல் ஓம்பு என நெஞ்சகம் புகல - இலாவாண:11/77
மறை ஓம்பு ஒழுக்கின் மதலை கேள்-மதி - மகத:15/1
நிறை ஓம்பு ஒழுக்கின் நின் நலம் உணரேம் - மகத:15/2
TOP
ஓம்புக (1)
தெய்வதை உண்டெனின் கையறல் ஓம்புக என - நரவாண:2/15
TOP
ஓம்புதல் (1)
பொச்சாப்பு ஓம்புதல் புரிந்தனர் நிற்ப - இலாவாண:18/63
TOP
ஓம்புதற்கு (1)
பெரு மண் வேந்தனை பிழைப்பு இன்று ஓம்புதற்கு
உருமண்ணுவாவும் உள்ளகத்து ஒடுங்க - மகத:12/80,81
TOP
ஓம்புதும் (1)
விளைவித்து ஓம்புதும் வேண்டியது ஆம் என - வத்தவ:15/34
TOP
ஓம்பும் (3)
இரும் கண் ஞாலத்து இன் உயிர் ஓம்பும்
காவல் பூண்ட கடத்தினும் விரும்பி - இலாவாண:13/33,34
இமையோர் இறைவனை எதிர்கொண்டு ஓம்பும்
அமையாது ஈட்டிய அரும் தவ முனிவரின் - இலாவாண:13/35,36
வாரணவாசி வளம் தந்து ஓம்பும்
ஏர் அணி நெடும் குடை இறை மீக்கூரிய - மகத:17/13,14
TOP
ஓமாலிகையும் (2)
ஒப்பு முறை அமைந்த ஓமாலிகையும்
வித்தகர் வனைந்த சித்திர கோதையும் - உஞ்ஞை:41/127,128
ஒள் வினை பொலிந்த ஓமாலிகையும் என்று - இலாவாண:5/32
TOP
ஓமை (1)
அடு கணை மறவர் அகல் இலை ஓமை
நெடு நிலை திரள் தாள் நேர் துணித்து அதர்வை - உஞ்ஞை:55/52,53
TOP
ஓமையும் (1)
ஓமையும் உழிஞ்சிலும் உலவையும் உகாயும் - உஞ்ஞை:52/37
TOP
ஓய் (1)
கால் தோய் கணை கதிர் சாறு ஓய் சாலி - உஞ்ஞை:48/159
TOP
ஓயாது (1)
திரிதரல் ஓயாது திகிரியின் சுழல - உஞ்ஞை:33/200
TOP
ஓர் (114)
இனைத்து ஓர் இளமையொடு எனை பல கேள்வியும் - உஞ்ஞை:32/9
தென் கடல் இட்டது ஓர் திரு மணி வான் கழி - உஞ்ஞை:32/17
சந்தன வேலி சண்பகத்து இடையது ஓர்
வேங்கையொடு தொடுத்த விளையாட்டு ஊசல் - உஞ்ஞை:33/22,23
ஆடு இயல் மஞ்ஞை அகவ அயலது ஓர்
வெயில் கண் போழா பயில் பூம் பொதும்பில் - உஞ்ஞை:33/26,27
மதர்வை ஓர் கதிர் மாடத்து பரத்தர - உஞ்ஞை:33/60
காட்டி வைத்தது ஓர் கட்டளை போல - உஞ்ஞை:33/113
அதற்கு ஓர் உபாயம் அறியாது இருந்தோன் - உஞ்ஞை:34/60
ஒன்று முதல் ஆக ஓர் எட்டு இறுத்த - உஞ்ஞை:35/82
ஓர் இல் எழு கிளை உடன் தொக்கு ஈண்டி - உஞ்ஞை:35/135
பெண்_இலி-கொல்லோ பெரியோர் பிழைப்பது ஓர்
கண்_இலி ஆகும் இ கணிகை மகள் என - உஞ்ஞை:35/162,163
பிறப்பிடை இட்டேன் ஆயினும் எனக்கு ஓர்
சிறப்பினர் ஆதல் தேற்றும் என் மனன் என - உஞ்ஞை:36/203,204
வம்பலர் மொய்த்தது ஓர் வழி தலைப்பட்டு - உஞ்ஞை:36/222
சாங்கியம் நுனித்த ஓர் சாறு அயர் முனிவனை - உஞ்ஞை:36/231
காள வனத்து ஓர் கபால பள்ளியுள் - உஞ்ஞை:36/240
கவிழ்ந்து எருத்து இறைஞ்சும் ஓர் காரிகை காண்-மின் - உஞ்ஞை:40/51
அ வழி வரும் ஓர் அந்தணாளனை - உஞ்ஞை:40/92
கை அலைத்து ஓடும் ஓர் களி_மகன் காண்-மின் - உஞ்ஞை:40/98
பட்டு இயல் கண்டத்து பலர் மனம் கவற்ற ஓர்
எட்டி குமரன் இனிதின் இயக்கும் - உஞ்ஞை:40/115,116
ஒளி மயிர் கலாபம் பரப்பி இ ஓர்
களி மயில் கணம் கொண்டு ஆடுவன காண்-மின் - உஞ்ஞை:40/119,120
நுரை கை அரிக்கும் ஓர் நுடங்கு_இடை காண்-மின் - உஞ்ஞை:40/151
மனம்கொள தேற்றும் ஓர் மைந்தனை காண்-மின் - உஞ்ஞை:40/181
ஓராது புலக்கும் ஓர் ஒள்_இழை காண்-மின் - உஞ்ஞை:40/205
கண்ணீர் ஆடும் ஓர் கனம்_குழை காண்-மின் - உஞ்ஞை:40/231
நிலத்து ஓர் அன்ன நலத்தகு பெரும் பொறை - உஞ்ஞை:42/179
ஊரக வரைப்பின் ஒல்லென எழுந்தது ஓர்
பூசல் உண்டு எனலும் பொறை உயர் மா மலை - உஞ்ஞை:44/19,20
தாள் முதல் அசைத்து ஓர் தாமரை கையன் - உஞ்ஞை:47/52
ஒழிந்து யான் வந்தனென் நிகழ்ந்ததை நினைப்பின் ஓர்
மாயம் போலும் காவல அருள் என - உஞ்ஞை:47/97,98
புள் புகன்று உறையும் ஓர் பூம் பொக்கரணியை - உஞ்ஞை:53/79
கேட்டு பொருள் தெரியும் ஓர் வேட்டுவ முது_மகன் - உஞ்ஞை:55/90
கோல உருவொடு குன்றிடை போந்த ஓர்
காலன்-கொல் இவன் கானத்தோர்க்கு என - உஞ்ஞை:55/146,147
இலங்கு இழை மாதரை என் வழி படாது ஓர்
பக்கம் கொண்டு படர்-மதி இப்பால் - உஞ்ஞை:56/36,37
பொய் நிலம் காட்டினர் என்பது ஓர் பொய் மொழி - உஞ்ஞை:56/162
ஓர் உயிர் கிழமை ஓரை அளக்கும் - இலாவாண:3/5
ஆயிரத்து_ஓர்_எட்டு அணி மலர் வாய - இலாவாண:5/10
நின் ஓர் அன்ன நீப்ப_அரும் காதல் - இலாவாண:5/71
ஒரு நாள் பூசினும் ஓர் யாண்டு விடாஅ - இலாவாண:5/98
வத்தவன் வடிவின் ஓர் வண்ண பாவை - இலாவாண:10/87
ஆண்டகை மொய்ம்பின் ஓர் அரசு அடிப்படுப்பதூஉம் - இலாவாண:11/159
வினவிய பொழுதின் விரித்து உரைத்தனன் ஓர்
பனுவலாளனை பணிந்து கைகூப்பி - இலாவாண:11/164,165
நட்பு உடை தோழனை நண்ணி அன்னது ஓர்
உள் புகன்று எழுதரும் உவகையன் ஆகி - இலாவாண:13/73,74
பெருமகன் மார்பில் பிரியாது உறையும் ஓர்
திரு_மகள் உளள் என செவியில் கேட்பினும் - இலாவாண:16/44,45
அரண் நீ அருள் என்று அடைவது போன்று ஓர்
கரு முக முசு கலை கதுமென தோன்ற - இலாவாண:16/108,109
தாழ் இரும் கூந்தலை தணப்ப நின்றது ஓர்
ஊழ் வினை உண்மையின் ஒளி வளை தோளியும் - இலாவாண:17/46,47
காரணம் உரைப்பவும் ஓர் வரை நில்லான் - இலாவாண:19/4
முகத்தே வந்து ஓர் முசுக்கலை தோன்ற - இலாவாண:19/166
மாசு_இல் முனிவரொடு மகளிர் குழீஇயது ஓர்
ஆசு_இல் பள்ளி அறிந்து முன் நாடி - இலாவாண:20/65,66
கை புனை வனப்பின் ஓர் பொய்கை ஆக - மகத:3/50
கற்பு உடை மாதரை கைப்படுத்தன்னது ஓர்
கட்டுரை வகையின் பட்டுரை அகற்றி - மகத:4/80,81
தீ ஓர் அன்ன திறல ஆகி - மகத:6/48
வனப்பு எனப்படூஉம் தெய்வம் தனக்கு ஓர்
உருவு கொண்டது போல் திரு இழை சுடர - மகத:6/93,94
பேர் உடை மாதர்க்கு ஓர் இடம் பிறந்த - மகத:6/171
பண்ணுமை நிறீஇ ஓர் பாணி கீதம் - மகத:14/245
மாண புணர்ந்தது ஓர் மகர வீணை - மகத:15/23
செய் வளை தோளியை சேர்ந்து நலன் நுகர்வது ஓர்
தெய்வம்-கொல் என தெளிதல் ஆற்றார் - மகத:15/70,71
இடு மணி இல்லது ஓர் பிடி மிசை ஏறி - மகத:18/76
உறுப்பு ஓர் அன்ன உள் பொருள் அமைச்சரும் - மகத:19/65
சிறந்தது ஓர் செய்கை செய்தேன் இன்னும் - மகத:19/79
தன் பால் படைக்கு தலைவனாகி ஓர்
வன்பு ஆர் மன்னன் வரினும் நன்று என - மகத:19/96,97
நீல கொண்மூ நீர் திரை பெய்வது ஓர்
காலம் ஏய்ப்ப கரும் தலை வீழவும் - மகத:20/78,79
அற்றம்_இல் நண்பின் யாப்பே அன்றி ஓர்
சுற்ற பந்தமும் வேண்டினேன் என்றனன் - மகத:21/65,66
கலக்கம்_இல் நிலைமையும் கைம்மாறு இல்லது ஓர்
கிளை பெரும் தொடர்ச்சியும் பயந்த இன்று எமக்கு என - மகத:24/7,8
பொன் இயல் புரிசை ஓர் பெண் உறை பூமி - மகத:24/58
பெரு மழை நடுவண் இருள் இடை எழுந்தது ஓர்
கடுவன் போல காவலனன் உரறி - மகத:24/162,163
ஓர் உயிர் கணவற்கு நீர் உகுப்பனள் போல் - மகத:24/183
மற்று அது மன்னவன் உற்று இவண் செய்தது ஓர்
முன் உபகாரம் உடைமையின் ஆகும் - மகத:25/80,81
வல்லே வருதியாயின் எமக்கு ஓர்
செல் சார்வு ஆகி சிறந்தோய் நீ என - மகத:25/163,164
பெயர்த்தும் அவற்கு ஓர் பெரும் சிறப்பு இயற்றி - மகத:27/36
படுப்பது ஓர் வாயில் பாங்குற நாடி - மகத:27/44
கோடு உயர் வரைப்பின் ஓர் மாடம் எடுப்பித்து - வத்தவ:3/15
அயலது ஓர்
இமையோர் உலகிற்கு ஏணி ஆகிய - வத்தவ:3/69,70
நருமதை கடந்து ஓர் பெரு மலை சாரல் - வத்தவ:3/133
செயிர் படு நோக்கமொடு சிறப்பிற்கு அமைந்தது ஓர்
வெண் தார் அணிந்த வெள் ஏறு கிடந்த - வத்தவ:5/73,74
மாற்று மன்னரை மருங்கு அற கெடுப்பது ஓர்
ஆற்றல் சூழ்ச்சி அருமறை உண்டு என - வத்தவ:6/70,71
மண்-பால் செல்வம் மாற்றி மற்று ஓர்
பெண்-பால் செல்வம் பேணுதல் இன்மையும் - வத்தவ:7/4,5
மயக்கம் இல் தேவி வண்ணம் கொண்டு ஓர்
இயக்கி உண்டு ஈண்டு உறைவதை அதற்கு ஓர் - வத்தவ:7/115,116
இயக்கி உண்டு ஈண்டு உறைவதை அதற்கு ஓர்
காப்பு அமை மந்திரம் கற்றனென் யான் என - வத்தவ:7/116,117
நோய் அற எறியும் மருந்து ஓர் அன்ன - வத்தவ:7/152
ஓங்கிய சிறப்பின் ஓர் ஊர் நல்கி - வத்தவ:9/54
ஒள் இழை தோழியர் ஓர் ஆயிரவரும் - வத்தவ:10/42
ஏற்றோர் சாய்த்த இ குருகுலத்தகத்து ஓர்
ஆற்றலிலாளன் தோற்றினும் அவந்தியர் - வத்தவ:11/13,14
ஓர் இருபதின்மரை ஆர் அமர் கடந்து - வத்தவ:11/43
ஒண் பந்து ஓர் ஏழ் கொண்டனள் ஆகி - வத்தவ:12/54
சரம் பட நொந்து தளர்வுடன் அவண் ஓர்
பள்ளி அம்பலத்துள் இனிது இருந்து - வத்தவ:13/2,3
கலங்கினன் ஆகி இலங்கு_இழைக்கு ஈது ஓர்
நலம் கவின் காட்ட நணுகு என அணுகி - வத்தவ:13/131,132
வயா தீர்வதற்கு ஓர் உயா துணை இன்றி - வத்தவ:13/140
தனித்து போய் ஓர் தடம் தோள் மடந்தையொடு - வத்தவ:13/194
மா தவம் புரிந்தே மான் கணம் மலிந்தது ஓர்
வீ ததை கானத்து விரதமோடு ஒழுகும் - வத்தவ:15/50,51
நாண் உத்தரீகம் தாங்கி கையுள் ஓர்
நீள் நீர் நறு மலர் நெரித்து கொடுத்து - வத்தவ:16/40,41
அயில் வேல் நெடும் கண் ஓர் ஆய்_இழை அணுகி - நரவாண:1/77
விண்ணக மருங்கில் வெண் முகில் புரைவது ஓர்
அண்ணல் யானை என் கண்ணுற வந்து தன் - நரவாண:1/146,147
பல்லோர் மருள பறந்து சென்று உயர்ந்தது ஓர்
வெண் மலை மீமிசை ஏறி வேட்கையின் - நரவாண:1/153,154
மறு இன்று விளங்கும் மற போர் ஆற்றல் ஓர்
சிறுவனை பெறுதி சே_இழை மற்று அவன் - நரவாண:1/158,159
அச்சம்_இல் ஆற்றல் ஓர் விச்சாதரரிடை - நரவாண:1/161
களைகண் ஆகி ஓர் இளையவன் தோன்றி - நரவாண:2/33
முன் உபகாரத்தின் முழு பயன் நிகர்ப்பது ஓர்
பின் உபகாரம் பெயர்த்தல் விரும்பி - நரவாண:2/39,40
தனியே போந்து ஓர் கனி கவர் கானத்து - நரவாண:3/9
அஞ்சா பைம் கண் ஓர் வெம் சின வேழம் - நரவாண:3/76
இலக்கணம் அமைந்தது ஓர் இளம் பிடி ஆகி - நரவாண:3/100
ஊரப்படு நீ ஓர் இருள் எல்லையுள் - நரவாண:3/127
பெரு வரம்பு ஆகிய பொரு_இல் செல்வ ஓர்
சிறு வரம் வேண்டுவென் திரியாது ஈம் என - நரவாண:3/149,150
கடவது கழித்த காவலன்-தனக்கு ஓர்
மறு_இல் சிறப்பின் ஓர் மகனை வேண்டுவேன் - நரவாண:3/163,164
மறு_இல் சிறப்பின் ஓர் மகனை வேண்டுவேன் - நரவாண:3/164
உதையணகுமரற்கு உவகையின் தோன்றும் ஓர்
சிறுவன் வேண்டும் அது சிறந்தது என்று ஏத்த - நரவாண:3/174,175
நச்சி நோற்ற ஓர் கச்சம்_இல் கடும் தவ - நரவாண:3/179
தான் வெளிப்படாஅள் இன்னும் நுனக்கு ஓர்
வான் வெளி படூஉம் வாரி விழு பொருள் - நரவாண:3/208,209
தளை அவிழ் தாமமொடு தச்சு வினை பொலிந்த ஓர்
இளையனின் தோன்றி இவர்களை அலைத்தல் - நரவாண:4/31,32
நிறையுடன் கொண்டு ஓர் மறைவிடம் குறுகி - நரவாண:4/48
மேல் நீ செய்த உதவிக்கு யான் ஓர்
ஐயவி அனைத்தும் ஆற்றியது இல் என - நரவாண:5/35,36
இன் ஓர் அன்ன எடுத்து உரை சொல்லி - நரவாண:6/127
தன் ஓர் அன்ன தன்மையன் ஆகி - நரவாண:6/128
இரு கவுள் மருங்கினும் சொரிதரு கடாத்தது ஓர்
இடு மணி யானை எருத்தம் ஏறி - நரவாண:8/77,78
பந்து வலியாக பையென போகி ஓர்
அம் தண் காவினுள் அசைந்தனன் இருந்து - நரவாண:8/88,89
ஆவள் என்னும் ஐயமோடு அயலது ஓர்
தேவ மாடம் சேர்ந்தனன் இருந்து - நரவாண:8/56,57
யாவரும் இல்லை மற்று இவள் ஓர் அனையார் - நரவாண:8/69
TOP
ஓர்க்கும் (1)
மனத்துள் ஓர்க்கும் மம்மர் தீர - உஞ்ஞை:47/190
TOP
ஓர்ச்சி (1)
தொடிமுதல் திணி தோள் தோன்ற ஓர்ச்சி
வல முறை வந்து பல முறை பழிச்சி - உஞ்ஞை:46/104,105
TOP
ஓர்த்த (1)
ஓர்த்த செவியன் தேர்ச்சியில் தெளிந்து - வத்தவ:3/121
TOP
ஓர்த்தனம் (1)
ஓர்த்தனம் தேறி உறுதி நோக்காது - மகத:24/82
TOP
ஓர்த்தனன் (1)
ஓர்த்தனன் அமைத்து போர்த்தனன் கொடுப்ப - மகத:15/57
TOP
ஓர்த்தனை (2)
மாற்றம் தன்னையும் ஓர்த்தனை கொண்மோ - மகத:25/64
சீர் தகை வேந்தே ஓர்த்தனை கேள்-மதி - வத்தவ:15/23
TOP
ஓர்த்து (3)
உர களிறு அடக்குவது ஓர்த்து நின்ற - உஞ்ஞை:33/141
பனி விசும்பு இயங்குநர் பாடு ஓர்த்து நிற்ப - உஞ்ஞை:37/127
குரல் ஓர்த்து தொடுத்த குருசில் தழீஇ - மகத:14/266
TOP
ஓர்த்துற (1)
உதயணகுமரனை ஓர்த்துற சொல்லி - உஞ்ஞை:37/276
TOP
ஓர்ப்பு (1)
ஓர்ப்பு_இல்-காலை உதயணகுமரனை - உஞ்ஞை:52/87
TOP
ஓர்ப்பு_இல்-காலை (1)
ஓர்ப்பு_இல்-காலை உதயணகுமரனை - உஞ்ஞை:52/87
TOP
ஓர்ப்புறு (1)
ஓர்ப்புறு நெஞ்சம் தேர்ச்சியில் திருத்தி - உஞ்ஞை:32/52
TOP
ஓர்வார் (1)
பண்ணியல் பாணி நுண் இசை ஓர்வார்
ஊரக வரைப்பின் ஒல்லென எழுந்தது ஓர் - உஞ்ஞை:44/18,19
TOP
ஓரா (5)
கண்டு கண் ஓரா காமர் காரிகை - உஞ்ஞை:40/234
மதுகை ஓரா மறம் கூர் மனத்தர் - உஞ்ஞை:40/298
இரு நில வரைப்பின் இயற்கை ஓரா
பெரு நிலம் காவல பேணாது அவர் முன் - இலாவாண:10/159,160
நின் அணி எல்லாம் நீக்கி ஓரா
பின் அணி கொண்டு பிறளே போன்றனை - வத்தவ:7/60,61
ஓரா இருந்துழி உருமண்ணுவாவும் - நரவாண:2/2
TOP
ஓராங்கு (2)
ஓராங்கு நிலைபெற்று உள் நெகிழ்ந்து அவிழ்ந்த - உஞ்ஞை:40/305
ஓராங்கு இதனை ஆராய்ந்து அல்லது - மகத:22/164
TOP
ஓராது (2)
ஓராது புலக்கும் ஓர் ஒள்_இழை காண்-மின் - உஞ்ஞை:40/205
செறுவுபு நிறீஇய செய்கை ஓராது
எறி படையாளரோடு உறு முரண் செய்ய - உஞ்ஞை:55/31,32
TOP
ஓராம் (1)
நண்ணா மன்னன் நாட்டம் ஓராம்
பண் அமை பிடி மிசை பை_அரவு_அல்குலை - உஞ்ஞை:45/76,77
TOP
ஓராய் (1)
நீதி பெருமை நூல் ஓதியும் ஓராய்
யானை வேட்கையின் சேனை நீக்கி - இலாவாண:1/26,27
TOP
ஓரான் (2)
செறிய கொள்ளும் செய்கை ஓரான்
அறிய கூறிய அன்பினன் அல்லதை - உஞ்ஞை:44/97,98
உறுதி ஓரான் பிறிது நினைந்து ஒற்றி - உஞ்ஞை:54/112
TOP
ஓரி (1)
ஓரி மீமிசை பாய்தலில் கிழிந்து - உஞ்ஞை:50/34
TOP
ஓரிடத்து (2)
ஒழுகும்-காலை ஓரிடத்து ஒரு நாள் - நரவாண:1/3
உரு அமை மாடத்து ஓரிடத்து இருந்தோள் - நரவாண:1/65
TOP
ஓரிரு (1)
ஓரிரு காவதம் ஊரா மாத்திரம் - உஞ்ஞை:48/40
TOP
ஓரின் (1)
இயற்கை ஓரின் இற்று என மதித்து - இலாவாண:12/76
TOP
ஓரை (2)
ஓர் உயிர் கிழமை ஓரை அளக்கும் - இலாவாண:3/5
ஒத்த ஓரை நோக்கி ஓங்கிய - இலாவாண:4/137
TOP
ஓரோர் (1)
ஓரோர் கணையின் உராஅய் வந்தவர் - இலாவாண:9/146
TOP
ஓலுறுத்து (1)
குரவம் பாவை கொண்டு ஓலுறுத்து ஆடியும் - இலாவாண:14/19
TOP
ஓலுறுப்பு (1)
தோள் உற தழீஇ ஓலுறுப்பு அரவமும் - உஞ்ஞை:41/89
TOP
ஓலை (22)
கடை_எழுத்து ஓலை கணக்கு_வரி காட்டி - உஞ்ஞை:32/70
சித்திரம் பயின்ற செம்பொன் ஓலை
முத்து வாய் சூழ்ந்த பத்திக்கோடு அசைஇ - உஞ்ஞை:34/214,215
பேர் எழுத்து ஓலை பெறு முறை நோக்கி - உஞ்ஞை:37/154
கணக்கு_துறை முற்றிய கடும் சொல் ஓலை
அரக்கு_பொறி ஒற்றி ஆணையின் போக்கி - உஞ்ஞை:37/208,209
பொறி உடை ஓலை பொருக்கென வீழ்த்து - உஞ்ஞை:45/30
குறிப்பு_எழுத்து ஓலை பொறி புனைந்து ஒற்றிய - உஞ்ஞை:54/96
கால குறும்பர் ஓலை தூதின் - உஞ்ஞை:58/81
செம்பொன் ஓலை சேடு பட சுருக்கி - மகத:22/225
அருமறை ஓலை ஆய்ந்தனன் அடக்கி - மகத:24/49
ஓலை போக்கி ஒல்லை வந்து இயைக என - மகத:25/32
மந்திர ஓலை போக்கிய வண்ணமும் - மகத:25/39
வெல் பொறி ஓலை விடுத்த பின் அல்லது - மகத:27/201
அருமறை ஓலை அரும் பொறி ஒற்றி - வத்தவ:4/43
ஓலை காட்ட உள்ளம் புகன்று - வத்தவ:4/50
ஓலை மாற்றமும் சூழ்ச்சியும் துணிவும் - வத்தவ:8/49
யூகிக்கு ஆக என ஓலை போக்கி - வத்தவ:9/27
முடக்கு அமை ஓலை மட_தகை நீட்டி - வத்தவ:10/96
பிரச்சோதனன் எனும் பெருமகன் ஓலை
உரை சேர் கழல் கால் உதயணன் காண்க - வத்தவ:10/111,112
ஒடியா விழு சீர் உதயணன் ஓலை
கொடி ஏர் மருங்குல் குயில் மொழி செ வாய் - வத்தவ:13/63,64
மந்திர ஓலை மாபெருந்தேவிக்கு - வத்தவ:14/109
கோசலத்து அரசன் ஓலை மங்கை - வத்தவ:14/117
முளை நுகும்பு ஓலை முதல் ஈர்க்கு விரித்து - வத்தவ:16/23
TOP
ஓலையின் (1)
ஆகு பொருள் ஓலையின் இருவரும் அறிவுற்று - உஞ்ஞை:46/330
TOP
ஓலையும் (2)
உணர எழுதிய ஓலையும் வாங்கி - உஞ்ஞை:46/124
மந்திர ஓலையும் வழக்கு அறை காவலும் - வத்தவ:13/29
TOP
ஓலையுள் (3)
ஓலையுள் பொருளும் உரைத்த மாற்றமும் - உஞ்ஞை:36/50
உள் நுகுப்பு ஓலையுள் கண் விரித்து இயற்றிய - இலாவாண:2/130
உரை எழுதி வந்த இ ஓலையுள் உறா குறை - வத்தவ:10/146
TOP
ஓலையொடு (4)
பொன் செய் ஓலையொடு பூம் குழை நீக்கி - உஞ்ஞை:34/198
ஓடு கால் இளையரை ஓலையொடு போக்கின் - மகத:24/12
வழிபாட்டு ஓலையொடு வயவரை விடுத்து - வத்தவ:11/10
பொறி ஒற்று ஓலையொடு அறிய போக்கி - நரவாண:7/71
TOP
ஓவ (2)
ஓவ வினையாளர் பாவனை நிறீஇ - இலாவாண:7/41
காவினுள் பொலிந்த ஓவ கைவினை - மகத:8/35
TOP
ஓவா (11)
பாவையர் உள்ளும் ஓவா வாழ்க்கை - இலாவாண:7/119
ஓதுநர் சாலை அகத்தும் ஓவா
சூது பொரு கழகத்து அருகலும் தோம்_இல் - இலாவாண:8/61,62
ஓவா அவலமொடு காவலன் கலங்கி - இலாவாண:9/47
மூசுதல் ஓவா மிஞிற்றினம் இரிய - இலாவாண:12/146
வீசுதல் ஓவா விழு தகு தட கை - இலாவாண:12/147
பாடல் ஓவா பழன படப்பை - மகத:2/23
பறவையும் பிறவும் உற நிமிர்ந்து ஓவா
நுண் அவா பொலிந்த கண் அவாவுறூஉம் - மகத:14/77,78
ஒலித்தல் ஓவா நல தகு நுண் நரம்பு - மகத:15/54
அரு நிலம் அதிர திரிதரல் ஓவா
வீதி வட்டமொடு ஆதிய கதி-வயின் - மகத:20/40,41
ஊரூர்-தோறும் உளப்பட்டு ஓவா
ஆர்வ மாக்களை அரும் சிறை கொளீஇ - மகத:25/29,30
விளைதல் ஓவா வியன் பெரு நாட்டொடு - வத்தவ:2/72
TOP
ஓவாது (6)
திரிதரல் ஓவாது தீயவை சொல்லிய - உஞ்ஞை:41/48
ஓவாது எழு மடங்கு உட்குவர தோன்றி - உஞ்ஞை:43/122
அமிர்து கடை கடலின் அரவம் ஓவாது
தமர் தலை மணந்த தன் பெரும் கோயில் - இலாவாண:10/45,46
ஓசை போக்கிய பின்றை ஓவாது
மாசு_இல் சிறப்பின் வான் பூத்து அன்ன - இலாவாண:12/1,2
ஆர் குரல் முரசம் ஓவாது அதிர - வத்தவ:2/41
ஓவாது நுகர்ந்து தாவா செல்வமொடு - வத்தவ:9/78
TOP
ஓவாள் (1)
திரிதரல் ஓவாள் தீய்ந்து நிறம் மழுங்கி - இலாவாண:18/69
TOP
ஓவிய (7)
உயவ கொண்ட ஓவிய தண்டிகை - உஞ்ஞை:38/141
உதயண நம்பி ஓவிய தொழிலின் - உஞ்ஞை:38/198
கோசலத்து இயன்ற ஓவிய தொழிலரும் - உஞ்ஞை:58/43
ஓவிய பாவை உய்த்து அவள் காட்ட - இலாவாண:10/95
ஓவிய பாவையை ஆகத்து ஒடுக்கி - மகத:22/175
தேவியர் இருவரும் ஓவிய செய்கையின் - வத்தவ:12/13
ஓவிய எழினி தூணொடு சேர்த்து - வத்தவ:14/3
TOP
ஓவியம் (1)
ஓவியம் உட்கும் உருவியை தழீஇ - உஞ்ஞை:45/72
TOP
ஓவியர் (5)
ஒள் வினை ஓவியர் கண்ணிய விருத்தியுள் - உஞ்ஞை:35/46
ஓவியர் உட்கும் உருவ கோலத்து - இலாவாண:4/19
கை வல் ஓவியர் மெய் பெற எழுதிய - மகத:5/41
ஓவியர் உட்கும் உருவ கோலம் - வத்தவ:13/54
ஓவியர் உட்கும் உருவியை உதயணன் - வத்தவ:14/179
TOP
|
|
|