|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
தூ (8)
தூ துகில் உடுத்து தொடி உடை தட கை - உஞ்ஞை:39/21
தூ வெள் அரும் சிறை சேவலொடு உளரி - உஞ்ஞை:40/54
துறை மாண்பு ஒராஅ தூ மணல் அடைகரை - உஞ்ஞை:41/120
தூ நிற தண் துளி தான் நின்று சொரிந்து - உஞ்ஞை:49/87
கல்லின் காட்டிய செல்லல் தூ வழி - உஞ்ஞை:50/45
தொடுப்போர் வீழ்த்த தூ வெள் அலரும் - இலாவாண:2/93
தேன் உலை வெந்த தூ நிற துழவையும் - இலாவாண:3/39
துறை விதி நுனித்த தூ தொழிலாளர் - இலாவாண:5/129
TOP
தூ-பால் (1)
தூ-பால் அமைச்சர் மேல்-பால் அறிவின் - நரவாண:7/82
TOP
தூக்க (1)
கொண்டோன் பிழைத்த தண்டம் தூக்க
வடிக்கண் இட்டிகை பொடி துகள் அட்டி - உஞ்ஞை:36/154,155
TOP
தூக்கம் (1)
ஊக்கம் இலர் என தூக்கம் இன்றி - மகத:19/52
TOP
தூக்கி (7)
வெண் கோட்டு நெடும் தூண் விதானம் தூக்கி
தே நவின்று ஓங்கிய திரு நாறு ஒருசிறை - உஞ்ஞை:34/222,223
தண்டம் தூக்கி தலை புனல் விழவினை - உஞ்ஞை:42/49
புடைபுடை-தோறும் தொடக்கொடு தூக்கி
கட்டி தோய்த்த காழ் அகில் நறும் புகை - மகத:5/54,55
ததர் இதழ் ஞாழல் தாழ் சினை தூக்கி
பைம் தாள் பொருந்தி செம் சாந்து உதிர - மகத:9/27,28
தோன்ற தூக்கி ஆங்கு அவை அமைத்து - மகத:17/168
கண்டவர் நடுங்க தண்டம் தூக்கி
இன் உயிர் தபுக்க என எரியகத்து இட்டதும் - மகத:26/52,53
நன்றி தூக்கி நாடிய பின்றை - வத்தவ:9/60
TOP
தூக்கிய (1)
செறி இலை பொன் குழை சிறப்பொடு தூக்கிய
சிறு துளை காதின் செம் கண் செம் நோக்கு - உஞ்ஞை:47/18,19
TOP
தூங்கி (2)
நோய் இல் இன்ப காய் பல தூங்கி
யாழ அற்பு கனி ஊழ் அறிந்து ஏந்த - வத்தவ:9/76,77
உண்டு மகிழ் தூங்கி தண்டா இன்பமொடு - வத்தவ:11/89
TOP
தூங்கினும் (1)
குரவை ஆயம் கூடி தூங்கினும்
தன் வரைத்து அல்லா விம்முறு விழுமமொடு - உஞ்ஞை:46/182,183
TOP
தூங்கு (1)
தீம் சுவை நசைஇய தூங்கு சிறை வாவல் - உஞ்ஞை:52/71
TOP
தூங்குபு (1)
தூங்குபு மறலும் உழை சிறு சிலதியர் - உஞ்ஞை:33/24
TOP
தூங்கும் (1)
மராஅம் மயிலின் மயங்குபு தூங்கும்
குழாஅம் மகளிர் குரவை காண்-மின் - உஞ்ஞை:40/145,146
TOP
தூசி (1)
சிலைத்தன தூசி மலைத்தன யானை - மகத:27/107
TOP
தூசு (5)
மேகலை விரீஇய தூசு விசி அல்குல் - உஞ்ஞை:44/6
தூசு ஆர்ந்து துளும்பும் காசு விரி கலாபத்து - உஞ்ஞை:48/107
தொட்டிமை கலந்த தூசு விரி அல்குல் - உஞ்ஞை:50/8
சொரிவனர் ஆட்டி தூசு விரித்து உடீஇ - உஞ்ஞை:57/97
தூசு குடிஞையும் துலா மண்டபமும் - இலாவாண:12/43
TOP
தூசும் (2)
பைம் கேழ் கலிங்கமும் பட்டு தூசும்
நீலமும் அரத்தமும் வால் இழை வட்டமும் - உஞ்ஞை:42/207,208
மண்ணுறு மணியும் மாலையும் தூசும்
கண்ணுற மொய்த்த கழி பேர் அவாவினின்று - இலாவாண:5/123,124
TOP
தூண் (9)
வெண் கோட்டு நெடும் தூண் விதானம் தூக்கி - உஞ்ஞை:34/222
பொழி மணி திண் தூண் பொறிபட புடைத்து - உஞ்ஞை:47/110
பொன் குடம் பொருந்திய பொழி அமை மணி தூண்
நல் பெரும் பந்தருள் முத்து மணல் பரப்பி - உஞ்ஞை:48/87,88
புடை திரண்டு அமைந்த போதிகை பொன் தூண்
வேண்டு அக மருங்கில் காண் தக நிறீஇ - இலாவாண:6/46,47
தூண் மிசைக்கு ஏற்ப ஏண் முள் அழுத்திய - இலாவாண:6/58
திண் தூண் சதுரம் கொண்ட எல்லையுள் - மகத:9/39
ஆயிரம் பொன் தூண் அணி மணி போதிகை - மகத:22/247
அ தூண் நடுவண் ஒத்த உருவின - மகத:22/249
சந்தன பெரும் தூண் ஒன்பது நாட்டிய - மகத:22/250
TOP
தூண்டில் (2)
தூண்டில் இரையின் துடக்கு உள்ளுறுத்து - உஞ்ஞை:35/108
காரிகை கடு நுனை தூண்டில் ஆக - இலாவாண:7/73
TOP
தூண்டு (1)
வேண்டிடம்-தோறும் தூண்டு திரி கொளீஇ - உஞ்ஞை:47/173
TOP
தூணின் (1)
பவழ பட்டத்து பளிக்கு மணி தூணின்
திகழ் பொன் போதிகை செம்பொன் செழும் சுவர் - இலாவாண:2/88,89
TOP
தூணொடு (1)
ஓவிய எழினி தூணொடு சேர்த்து - வத்தவ:14/3
TOP
தூதரை (1)
துன்ன_அரும் கோயிலுள் தூதரை விடுத்தர - உஞ்ஞை:36/49
TOP
தூதனொடு (1)
எதிர்வரு தூதனொடு அதிர கூடி - வத்தவ:4/93
TOP
தூதால் (1)
கடைக்கண் தூதால் காவலன் கடைஇ - உஞ்ஞை:37/171
TOP
தூதின் (1)
கால குறும்பர் ஓலை தூதின்
பெரும் பொறி அண்ணல் அரும் பொறி ஒற்றி - உஞ்ஞை:58/81,82
TOP
தூதினர் (1)
துறை நெறி போகிய தோழி தூதினர்
அரசர்க்கு ஆயினும் அடியர்க்கு ஆயினும் - உஞ்ஞை:35/87,88
TOP
தூது (1)
தூது செல் ஒழுக்கின் சாதகன் உரைப்ப - வத்தவ:4/84
TOP
தூதுவ (1)
ஏதில் மன்னர் தூதுவ மாக்கள் - உஞ்ஞை:36/299
TOP
தூதுவர் (5)
தூதுவர் போல மூசின குழீஇ - உஞ்ஞை:38/65
மறைந்தனர் வந்து மாற்றோன் தூதுவர்
செறிந்த சூழ்ச்சியில் செய்வது கூறலும் - மகத:26/1,2
ஆடு இயல் யானை ஆருணி தூதுவர்
மாடியம் தானை வருடகாரனொடு - மகத:26/18,19
கொற்ற வேந்தன் தூதுவர் வந்து நம் - வத்தவ:10/7
காவலன் தூதுவர் கடைத்தலையார் என - வத்தவ:14/105
TOP
தூதுவன் (2)
பரிதல் வேண்டா பகைவன் தூதுவன்
சகுனி கௌசிகன்-தன்னை அன்றியும் - மகத:26/9,10
மாதர் மனை-வயின் தூதுவன் ஆகி - நரவாண:8/120
TOP
தூதையும் (2)
பந்தும் கிளியும் பசும்பொன் தூதையும்
கந்து இயல் மயிலும் கரந்து உறை பூவையும் - உஞ்ஞை:34/160,161
தூதையும் முற்றிலும் பேதை மஞ்ஞையும் - மகத:5/75
TOP
தூப்பதம் (1)
காக்கையும் கழுகும் தூப்பதம் துறந்து - உஞ்ஞை:56/209
TOP
தூபத்து (1)
தூபத்து ஒழுக்க தாபத பள்ளி - மகத:4/61
TOP
தூம் (1)
மலர் தூம் மாடம் மயங்கிய மறுகின் - உஞ்ஞை:38/138
TOP
தூம்பும் (2)
நாழிகை தூம்பும் நறு மலர் பந்தும் - உஞ்ஞை:38/106
முரவும் தூம்பும் முழங்குபு துவைப்ப - மகத:25/16
TOP
தூமம் (2)
தூமம் நவின்ற நாம கைவினை - இலாவாண:2/83
தேவர் தூமம் மேவர எடுப்பி - இலாவாண:3/49
TOP
தூய் (2)
பூ தூய் வீதி-தோறு ஏத்தினர் எதிர்கொள - இலாவாண:9/65
ஏயர் குருசிலை தூய் மொழி வினவ - மகத:6/188
TOP
தூய்மை (3)
தூய்மை காட்டும் வாய்மை முற்றாது - உஞ்ஞை:33/59
தூய்மை இன்று என மா நிலத்து இயங்கா - உஞ்ஞை:38/322
தூய்மை உள்ளமொடு கோமகன் கூப்பும் - உஞ்ஞை:48/52
TOP
தூய்மைக்கு (1)
தூய்மைக்கு ஒத்த தொழிலன் ஆகி - உஞ்ஞை:53/88
TOP
தூய்மையன் (1)
வாய்மையின் வழாஅ தூய்மையன் ஆகி - நரவாண:2/62
TOP
தூய்மையின் (1)
துளக்கு_இல் கேள்வி தூய்மையின் முற்றி - உஞ்ஞை:37/136
TOP
தூய்மையுள் (1)
கோல் நெய் பூசி தூய்மையுள் நிறீஇ - மகத:14/110
TOP
தூய்மையொடு (1)
மெய்யில் தூய்மையொடு மேதகு வனப்பின் - இலாவாண:4/47
TOP
தூய்மையோற்கு (1)
துறத்தல் வேண்டும் தூய்மையோற்கு என - உஞ்ஞை:36/302
TOP
தூயது (1)
மேலில் தூயது காலில் கடியது - உஞ்ஞை:42/226
TOP
தூயள் (1)
தூயள் என்னா தீது உரை எய்தி - உஞ்ஞை:36/110
TOP
தூயன் (1)
தூயன் ஆகி வாய் மொழி பயிற்றி - வத்தவ:6/80
TOP
தூயும் (1)
கோதை பரிந்தும் குட நீர் தூயும்
மான் ஏர் நோக்கியர் - இலாவாண:5/111,112
TOP
தூர் (1)
பூ தூர் நிலையோடு யாப்புற அமைத்து - உஞ்ஞை:42/32
TOP
தூர்த்த (1)
தூர்த்த கள்வன்-பால் போய் கேள் என - வத்தவ:14/28
TOP
தூர்த்தரும் (1)
விடரும் தூர்த்தரும் விட்டேறு உரைப்ப - உஞ்ஞை:35/226
TOP
தூர்த்தனர் (1)
ஆர்த்தனர் மறவர் தூர்த்தனர் பல் கணை - மகத:27/108
TOP
தூவ (2)
உடு அமை பகழி ஒருங்கு உடன் தூவ
விடு கணை விடலை வில்லின் விலக்கி - உஞ்ஞை:55/139,140
வண்ண மலரும் சுண்ணமும் தூவ
அநங்க தானத்து அணி மலர் காவில் - மகத:5/115,116
TOP
தூவவும் (1)
மான் துகள் அவிய மது_பலி தூவவும்
தெற்றி முது மரத்து உச்சி சேக்கும் - உஞ்ஞை:33/86,87
TOP
தூவி (3)
தூவி மஞ்ஞை தோகை விரித்து அகவ - உஞ்ஞை:43/194
வாவி புள்ளின் தூவி விம்மிய - உஞ்ஞை:56/135
காழ் அகில் புகை நிறம் கடுக்கும் தூவி
பல் சிறை புறவம் பரிந்து உடன் ஆடி - நரவாண:1/67,68
TOP
தூவியும் (2)
எறிந்தும் தூவியும் எற்றியும் தெளித்தும் - உஞ்ஞை:42/79
மதி மருள் திரு முகத்து எதிர் நீர் தூவியும்
பொதி பூம் பந்தின் எதிர் நீர் எறிந்தும் - உஞ்ஞை:42/190,191
TOP
தூற்றாது (1)
புறஞ்சொல் தூற்றாது புகழும் தன்மையள் - வத்தவ:10/31
TOP
தூற்றி (1)
விருந்தினன் போன்ம் என புரிந்து அலர் தூற்றி
விடரும் தூர்த்தரும் விட்டேறு உரைப்ப - உஞ்ஞை:35/225,226
TOP
தூற்றும் (1)
போற்றா மாக்கள் தூற்றும் பெரும் பழி - உஞ்ஞை:35/250
TOP
தூறலும் (1)
துய்_அற திரண்டு தூறலும் இலவாய் - வத்தவ:16/8
TOP
தூஉம் (3)
எதிர் நீர் தூஉம் இளையோர் திரு முகத்து - உஞ்ஞை:40/299
பாழ் நில வாழ்நர் பரவினர் தூஉம்
செம் தடி குருதி பைம் நிண கொழும் குடர் - உஞ்ஞை:52/8,9
நல்லோர் தூஉம் நறு நீர் நனைப்ப - வத்தவ:17/104
TOP
தூஉய் (2)
ஆலி வெண் மணல் அணிபெற தூஉய்
கோல வனப்பில் கோடணை போக்கி - உஞ்ஞை:49/84,85
பலி ஆர் நறு மலர் பற்பல தூஉய்
வழுக்கா மரபின் வழுத்தினன் கொண்டு - வத்தவ:3/102,103
TOP
|
|
|