|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும்
வேஎண்ம் (1)
நம்பி வேஎண்ம் அம்பி வருக என - உஞ்ஞை:36/172
TOP
வேக (19)
வேக ஊடல் அவள்-வயின் நீக்கி - உஞ்ஞை:40/340
வேக புள்ளின் வெவ் இசை கேட்ட - உஞ்ஞை:44/44
வேக புள்ளின் வெவ் இசைக்கு உலந்த - உஞ்ஞை:46/23
மிகை செலற்கு எழுந்த வேக வெவ் அழல் - உஞ்ஞை:46/30
விட மா நாகமும் வேக யானையும் - உஞ்ஞை:46/281
வேக வேந்தன் வெம் சமம் முருக்கி - உஞ்ஞை:46/326
வேக புள்ளமொடு விசைத்தனர் ஆர்த்து - உஞ்ஞை:56/238
வேக உள்ளத்து வேழம் தெரிந்து - இலாவாண:2/195
வேக தானை வேந்தன் மகளோடு - இலாவாண:8/2
வேக நம்பிக்கு விலக்குக அடிசில் என்று - இலாவாண:10/145
வேக வெவ் அழல் விளிய மாட்டி - இலாவாண:12/112
விருப்பு மறைத்து அடக்கி வேக நோக்கமொடு - இலாவாண:16/21
வேக வெவ் அழல் வெம் புகை அணிந்த - இலாவாண:19/114
வேக தானை வேந்தன் மகளே - இலாவாண:19/125
வேக யானை பாகர்க்கு உணர்த்தி - மகத:5/105
வேக மன்னர் மீட்டும் வந்து இறுத்த - மகத:19/46
வேக வெள் வேல் கேகயத்து அரசனை - மகத:20/97
வேக யானையொடு விழைந்து விளையாடி - நரவாண:3/102
வேக தானை வேந்தன் ஒரு மகன் - நரவாண:8/74
TOP
வேகத்து (1)
தணியா வேகத்து தருசகன் தங்கை - மகத:5/9
TOP
வேகத்துள் (1)
அழல் புரை வேகத்துள் அன்பு நீராட்டி - உஞ்ஞை:40/335
TOP
வேகம் (6)
வேகம் தணியா வெம் சின நெடு வேல் - இலாவாண:9/201
காம வேகம் உள்ளம் கனற்ற - இலாவாண:16/89
காம வேகம் கடுத்த கலப்பிடை - இலாவாண:19/165
கை வரை நில்லா காம வேகம்
அன்று முதலாக சென்று முறை நெருங்க - மகத:7/43,44
கண்ணுற கலந்த காம வேகம்
ஒள் நிற செம் தீ உள் நிறைத்து அடக்கிய - மகத:8/3,4
காம வேகம் தான் மிக பெருக - மகத:14/104
TOP
வேகமொடு (3)
அன்பின் கொண்ட ஆர்வ வேகமொடு
நச்சு உயிர்ப்பு அளைஇ நண்ணல் செல்லா - இலாவாண:16/41,42
வெம் திறல் வேகமொடு விலக்குதற்கு அரிய - மகத:4/34
தவிர்வு_இல் வேகமொடு தலைவந்திறுத்த - மகத:17/261
TOP
வேகுறு (1)
வேகுறு துயரமொடு ஆகுலம் எடுப்ப - இலாவாண:17/86
TOP
வேங்கை (3)
வேங்கை விரி இணர் விரும்புபு கொய்து - இலாவாண:12/83
வீழ் பூம் கொம்பின் வேங்கை நிரந்த - இலாவாண:12/98
கான வேங்கை கவர் சினை ஏறி - வத்தவ:3/71
TOP
வேங்கையின் (1)
பொறிப்படு வேங்கையின் குறிப்பிலர் குரங்கவும் - உஞ்ஞை:46/35
TOP
வேங்கையும் (4)
திரு கிளர் வேங்கையும் பொன்னும் பிதிர்ந்து - உஞ்ஞை:33/181
கரும் கோல் குறிஞ்சியும் கடி நாள் வேங்கையும்
சுள்ளியும் சூரலும் வள்ளியும் மரலும் - உஞ்ஞை:50/26,27
வேங்கையும் ஆவும் விளவும் வேயும் - இலாவாண:12/13
கல் சுனை நீலமும் கணி வாய் வேங்கையும்
நல் சினை நறவமும் நாகமும் நந்தியும் - இலாவாண:20/59,60
TOP
வேங்கையொடு (1)
வேங்கையொடு தொடுத்த விளையாட்டு ஊசல் - உஞ்ஞை:33/23
TOP
வேசாலி (1)
விறல் வேசாலி பாடி குறுகி - மகத:17/239
TOP
வேசாலியும் (1)
வெம் திறல் செய்கை வேசாலியும் என - மகத:17/36
TOP
வேசாலியொடு (1)
வெம் திறல் கலந்த விறல் வேசாலியொடு
சங்க மன்னர்க்கு தம் படை கூட்டி - மகத:25/40,41
TOP
வேட்கும் (4)
வழு_இல் செம் தீ பழுது_இல வேட்கும்
பொழுது மற்று இது என புரையோர்க்கு உரைப்ப - இலாவாண:3/7,8
விதியில் கூறிய விளங்கு_இழை வேட்கும்
அதிரா நெறியின் அ தொழில் கழிந்த பின் - இலாவாண:3/94,95
கொண்டோன் வேட்கும் குறிப்பினை ஆகி - இலாவாண:5/91
வேட்கும் விச்சை யாது என வினவ - மகத:12/6
TOP
வேட்கை (21)
வேட்கை கிளவி வெளிப்பட பயிற்றி - உஞ்ஞை:35/244
வேறு என அருளிய வேட்கை உண்டு எனின் - உஞ்ஞை:47/142
வெறுத்த வேட்கை தாம் உளம் சிறப்ப - இலாவாண:4/16
கண்ணின வேட்கை பின் நின்று துரப்ப - இலாவாண:7/67
வினை துகள் அறுக்கும் வேட்கை அல்லது - இலாவாண:8/138
தணப்பு_இல் வேட்கை தலைத்தலை சிறப்ப - இலாவாண:11/20
நயப்பு உள்ளுறுத்த வேட்கை நாணி - இலாவாண:16/19
வெம் தொழில் காம வேட்கை திறப்ப - மகத:6/57
வேட்டுழி வேட்கை ஓட்டா ஒழுக்கினள் - மகத:8/104
கேட்போர்க்கு எல்லாம் வேட்கை உடைத்தா - மகத:18/32
ஏமுறு வேட்கை ஆகும் என்பது - வத்தவ:7/135
வேட்கை என்னும் விழு தகு பெரு மரம் - வத்தவ:9/74
வென் வேல் தலைவனும் வேட்கை இன்றி - வத்தவ:13/164
வேந்தனும் வினவி அவள் வேட்கை விரும்பி - நரவாண:1/73
வேழம் நினைஇ வேட்கை மீதூர்ந்து - நரவாண:3/95
தருதல் வேட்கை ஒருதலை உடையள் - நரவாண:3/210
விசும்பு ஆடு ஊசலின் வேட்கை தீர்க்க என - நரவாண:4/65
விசும்பிடை திரிதரும் வேட்கை வெம் நோய் - நரவாண:5/12
பொன்றா வேட்கை புலங்களை நெருக்கி - நரவாண:8/8
ஒருதலை வேட்கை உள் நின்று நலிய - நரவாண:8/71
வேட்கை நாவின் விருப்பொடு சுவைக்கும் - நரவாண:8/81
TOP
வேட்கையர் (1)
விசும்பகம் நந்தும் வேட்கையர் போல - இலாவாண:6/143
TOP
வேட்கையவாயினும் (1)
நாள்_போது நயந்த வேட்கையவாயினும்
முகை_பதம் பார்க்கும் வண்டு இனம் போல - உஞ்ஞை:35/211,212
TOP
வேட்கையள் (1)
பருகும் வேட்கையள் பையுள் கூர - உஞ்ஞை:44/145
TOP
வேட்கையள்-தான் (1)
காம வேட்கையள்-தான் என கூற - மகத:8/98
TOP
வேட்கையன் (6)
அரும்_பெறல் அமிழ்து என விரும்பும் வேட்கையன்
முகிழ் நகை முகத்தன் ஆகி முற்று_இழை - உஞ்ஞை:40/170,171
மிக்கு வாய் கூரும் மீட்சி வேட்கையன்
கொக்கு வாய் அன்ன கூட்டு அமை விரலினன் - உஞ்ஞை:42/247,248
காட்சியின் கனையும் வேட்கையன் ஆகி - உஞ்ஞை:46/80
விலக்க நில்லா வேட்கையன் ஆகி - மகத:25/116
இயங்கல் வேட்கையன் இருக்குநன் ஆதலின் - நரவாண:1/203
விசும்பிற்கு அவாவும் வேட்கையன் ஆகி - நரவாண:8/28
TOP
வேட்கையில் (1)
விட்டு உறைவு ஆற்றா வேட்கையில் கெழுமி - இலாவாண:17/128
TOP
வேட்கையின் (11)
குமரி தீர்த்தம் மரீஇய வேட்கையின்
அரும் தவம் நுனித்த அற ஆசிரியன் - உஞ்ஞை:36/236,237
தாம் உயல் வேட்கையின் மா நிலத்து உறையுநர் - உஞ்ஞை:37/187
போதல் கண்ணே புரிந்த வேட்கையின்
ஐ அரி பரந்த அரி மலர் நெடும் கண் - உஞ்ஞை:40/217,218
ஊக்கு அமை ஊசல் வேட்கையின் விரும்பினும் - உஞ்ஞை:46/179
யானை வேட்கையின் சேனை நீக்கி - இலாவாண:1/27
ஊக்கம்_இலன் இவன் வேட்கையின் வீழ்ந்து என - இலாவாண:17/58
கூடிய வேட்கையின் ஒருவர்க்கொருவர் - வத்தவ:13/174
வேட்கையின் பெருகி நின் மெய்ப்பொருட்டு அமைந்த - வத்தவ:15/62
கேட்டு அவள் கலுழ வேட்கையின் நீக்கி - வத்தவ:17/8
வெண் மலை மீமிசை ஏறி வேட்கையின்
விண் மிசை ஞாயிறு விழுங்க கண்டனென் - நரவாண:1/154,155
காட்டினள் ஆகி வேட்கையின் விரும்பி - நரவாண:5/42
TOP
வேட்கையும் (1)
ஊக்கமும் வலியும் வேட்கையும் விழைவும் - வத்தவ:2/26
TOP
வேட்கையை (1)
பால் வகை வினையில் படர்ந்த வேட்கையை
மால் கடல் வரைப்பின் மறுத்தனர் ஒழுகுதல் - வத்தவ:6/58,59
TOP
வேட்கையொடு (5)
மீட்கும் வேட்கையொடு சேண் புலம் போகி - மகத:2/7
விஞ்சையர் ஆழி உருட்டும் வேட்கையொடு
அம் செந்தாமரை அக-வயின் நிறைந்த - நரவாண:1/126,127
வியந்து தலை பனிக்கும் வென்றி வேட்கையொடு
சேண் படு விசும்பில் சென்றவன் அவ்வழி - நரவாண:1/130,131
பின்னை மற்று அவன் மன்னிய வேட்கையொடு
விச்சை எய்தி வெள்ளி அம் பெரு மலை - நரவாண:3/176,177
காணும் வேட்கையொடு சேண் உயர் உலகில் - நரவாண:8/10
TOP
வேட்ட (4)
வேட்ட செந்நாய் வேண்டாது ஒழித்த - உஞ்ஞை:52/75
மீட்டல் செல்லா வேட்ட விருப்பொடு - இலாவாண:7/92
அ களம் வேட்ட அடல்_அரும் சீற்றத்து - மகத:17/24
நின்னை வேட்ட அந்தணன் அவற்கு - மகத:22/133
TOP
வேட்டகம் (1)
வேட்டகம் போகி அடிகள் காட்டகத்து - இலாவாண:17/48
TOP
வேட்டத்து (4)
வேழ வேட்டத்து வீழ நூறி - உஞ்ஞை:54/132
குஞ்சர வேட்டத்து கோள் இழுக்குற்ற - இலாவாண:9/37
வெம் சொல் வேட்டத்து அஞ்சுவரு சீற்றத்து - இலாவாண:9/136
விண் தோய் கானத்து வேழ வேட்டத்து
சிறை கொளப்பட்டு யான் செல் சார்வு அறுத்த பின் - இலாவாண:10/125,126
TOP
வேட்டதன் (1)
வேட்டதன் வழியே பாற்பட நாடி - மகத:1/85
TOP
வேட்டது (3)
வேட்டது பகரும் கோட்டி ஆகி - உஞ்ஞை:34/183
கேட்டது கரந்து வேட்டது பெருக்கி - உஞ்ஞை:36/13
நாட்டகம் புகுத்தற்கு வேட்டது என் மனன் - உஞ்ஞை:47/224
TOP
வேட்டம் (3)
வேழ வேட்டம் விதியின் வினாய - உஞ்ஞை:32/29
வேட்டம் போகிய போழ்தில் கோட்டம் - வத்தவ:7/57
வேட்டம் போகி வேட்டு நீர் பெறாஅ - நரவாண:2/12
TOP
வேட்டவை (1)
கேட்டவை எல்லாம் வேட்டவை விரும்பி - இலாவாண:11/98
TOP
வேட்டன (1)
வேட்டன செய்யும் வேட்டு வினை கடும் தொழில் - உஞ்ஞை:55/67
TOP
வேட்டனள் (1)
கோட்டி செவ்வியுள் வேட்டனள் விரும்பா - மகத:22/102
TOP
வேட்டனென் (1)
வேண்டியும் கொள்ளான் வேட்டனென் கொடுப்பின் - இலாவாண:1/76
TOP
வேட்டிடை (2)
வேட்டிடை பாய்தலை வெரீஇ ஓடா - இலாவாண:9/161
வேட்டிடை பட்ட எவ்வப்பொழுதினும் - நரவாண:3/11
TOP
வேட்டு (12)
இகழ்வு_இல் நோக்கமொடு இரை வேட்டு எழுந்த - உஞ்ஞை:40/253
தோட்டியின் வணக்கம் வேட்டு அவன் விரும்பி - உஞ்ஞை:45/64
கரை வேட்டு உலாஅம் கரும் கடல் அழுவத்து - உஞ்ஞை:45/88
இரை வேட்டு உலாஅம் இன சுறவு இனத்தின் - உஞ்ஞை:45/89
வேட்டன செய்யும் வேட்டு வினை கடும் தொழில் - உஞ்ஞை:55/67
உலா வேட்டு எழுந்த உதயணகுமரன் - இலாவாண:18/4
சூட்டு முகம் திருத்தி வேட்டு நறு நீரின் - மகத:14/108
கேட்டு பொருள் நல்கி வேட்டு விரைந்து எழுந்து - மகத:20/129
விழு பெரு விதியின் வேட்டு அவள் புணர்க என - மகத:22/76
கேட்டே உவந்து வேட்டு அவன் விரும்பி - வத்தவ:6/69
வேட்டு அவள் புணர்ந்து வியன் உலகு ஏத்த - வத்தவ:17/114
வேட்டம் போகி வேட்டு நீர் பெறாஅ - நரவாண:2/12
TOP
வேட்டுவ (4)
நாட்டுப்புற மாக்களும் வேட்டுவ தலைவரும் - உஞ்ஞை:43/54
கேட்டு பொருள் தெரியும் ஓர் வேட்டுவ முது_மகன் - உஞ்ஞை:55/90
வெள்ளிடை புகுந்த வேட்டுவ படையினை - மகத:27/23
வெம் கண் செய் தொழில் வேட்டுவ தலைவரொடு - வத்தவ:3/8
TOP
வேட்டுவர் (13)
வேட்டுவர் பயின்ற இடம் மற்று இ நிலம் - உஞ்ஞை:53/108
கண்ட வேட்டுவர் தண்டாது நெருக்கி - உஞ்ஞை:55/133
வீர வேட்டுவர் சார்தல் ஆற்றார் - உஞ்ஞை:55/145
வில் முகம் புகாஅர் வேட்டுவர் அஞ்சி - உஞ்ஞை:55/149
இகல் முனை வேட்டுவர் இடுக்கண் செய்ய - உஞ்ஞை:56/26
கான வேட்டுவர் கை-வயின் கொடு என - உஞ்ஞை:56/66
வெம் நில மருங்கின் வேட்டுவர் எல்லாம் - உஞ்ஞை:56/163
வேட்டுவர் ஆதல் வில்லின் காட்டி - உஞ்ஞை:56/221
வெம் திறல் வேட்டுவர் விரைந்தனர் ஆகி - உஞ்ஞை:56/235
ஆர்வ வேட்டுவர் அண்ணற்கு உரைத்து - உஞ்ஞை:56/256
வேட்டுவர் அகல கூட்டம் எய்தி - இலாவாண:9/180
வெம்மை வேட்டுவர் வியன் மலை வரைப்பின் - இலாவாண:10/33
வீக்கம் காணார் வேட்டுவர் எள்ளி - இலாவாண:17/59
TOP
வேட்டுவன் (2)
பூட்டுறு பகழி வாங்கிய வேட்டுவன்
வில் விசை கேட்ட வெரூஉ பிணை போல - உஞ்ஞை:36/331,332
வீரருள் வீரனை வேட்டுவன் கேட்ப - உஞ்ஞை:56/89
TOP
வேட்டுவீர் (1)
வெள்ளை வேட்டுவீர் புள் எவன் பிழைத்தது என்று - உஞ்ஞை:56/16
TOP
வேட்டுவோர் (1)
முரண் உடை வேட்டுவோர் மூழ்த்தனர் மூசி - உஞ்ஞை:56/49
TOP
வேட்டுழி (1)
வேட்டுழி வேட்கை ஓட்டா ஒழுக்கினள் - மகத:8/104
TOP
வேட்டோன் (1)
வேட்டோன் விட்டு காட்டகம் நீந்தி - இலாவாண:20/81
TOP
வேட்ப (2)
கேட்ட பின் அறிதும் யாம் என வேட்ப
இன்னவை கிளந்து பின் தன்-வயின் தழீஇ - இலாவாண:11/170,171
கேட்கும் செவ்வி நோக்கம் வேட்ப
இரு பெரும் மன்னர் இறைவரும் தம்முள் - மகத:18/51,52
TOP
வேட்பது (1)
கேட்ப அஃது உரையாள் வேட்பது விளம்பின் - நரவாண:1/214
TOP
வேட்பனன் (1)
மீட்டு அவன் போக்க வேட்பனன் விரும்பி அவன் - மகத:19/155
TOP
வேட்போர் (1)
வேட்போர் இன்றி வெறிய ஆக - உஞ்ஞை:38/68
TOP
வேடம் (1)
படிவ நெஞ்சமொடு பார்ப்பன வேடம்
கொண்டான் மற்று அவன் கண்டோர் விழையும் - மகத:8/107,108
TOP
வேடமும் (1)
சிறை துயர் நீக்கற்கு செய்த வேடமும்
குறிக்கொளற்கு அமைந்தவை பிறவும் திறப்பட - உஞ்ஞை:45/25,26
TOP
வேடமொடு (1)
பல் வகை தோழர் படிவ வேடமொடு
செல்வ மகதத்து எல்லை எய்தி - மகத:1/212,213
TOP
வேடரொடு (1)
கவர் கணை வேடரொடு அமர் வினை வழியினும் - உஞ்ஞை:57/83
TOP
வேண்ட (4)
குரல் வேண்ட கொண்ட - உஞ்ஞை:33/68
பல் நகர்-தோறும் மன்னவன் வேண்ட
முனைவர் வகுத்த புனை பூண் அகலத்து - இலாவாண:4/32,33
விரிசிகை வேண்ட வேறுபடு வனப்பின் - இலாவாண:19/163
ஆண்டு இனிது இருந்து யாம் வேண்ட வருக என - வத்தவ:9/24
TOP
வேண்டல்-பால (1)
வேண்டல்-பால வெறுக்கை நாடி - நரவாண:7/116
TOP
வேண்டலம் (1)
இருத்தல் அல்லது வேண்டலம் யாம் என - மகத:14/215
TOP
வேண்டலன் (1)
வேண்டலன் ஆயினும் விறல் உஞ்சேனையும் - உஞ்ஞை:40/278
TOP
வேண்டலின் (1)
தானும் நீயும் ஆகல் வேண்டலின்
மாற்றும் மாற்றம் இல் என மற்று அவற்கு - மகத:21/106,107
TOP
வேண்டா (26)
இசைக்க வேண்டா இதை உனது இல் என - உஞ்ஞை:34/43
கொள்கை அறிந்து யான் கூறவும் வேண்டா
அரு_மறை அன்மையின் அன்பின் காட்டி - உஞ்ஞை:36/296,297
கற்றிலள் என்னும் கவற்சி வேண்டா
பற்றிய கேள்வியும் முற்று_இழை முற்றினள் - உஞ்ஞை:36/356,357
கலங்க வேண்டா காவல் என் கடன் என - உஞ்ஞை:44/108
நடுக்கம் வேண்டா நங்கையும் நீயும் - உஞ்ஞை:46/188
விம்மம் உறும் அவள் வேண்டா முயக்கு என - இலாவாண:16/99
வெய்து உயிர்ப்பு அடக்கி நீ வேண்டியது வேண்டா
குறிப்பு எமக்கு உடைமை கூறலும் உண்டோ - இலாவாண:17/179,180
போதல் வேண்டா பொருள் குறை உண்டெனின் - மகத:6/182
வினவ வேண்டா செலவு என விரும்பி - மகத:8/26
வேண்டா மற்று இது மாண் தகைத்து அன்று என - மகத:10/42
வேண்டா அது என விதியின் காட்டி - மகத:10/51
ஒதுங்க விடினும் விதும்பும் வேண்டா
வாயிலுள் வைத்த வண்ண சிவிகை - மகத:13/41,42
வருந்தல் வேண்டா வாழிய நங்கை என்று - மகத:14/134
மற்போர் மார்ப இது கற்கல் வேண்டா
வலியின் ஆவது வாழ்க நின் கண்ணி - மகத:14/212,213
வேந்தனில் வந்தோர் வினவுதல் வேண்டா
அமர் மேற்கொண்டோர் யாரேயாயினும் - மகத:19/25,26
அறிந்தனென் அதன்-மாட்டு அவலம் வேண்டா
என்னினி ஆதற்கு இசைகுவதாயின் - மகத:19/81,82
தீது வேண்டா நிலைமையன் ஆகும் - மகத:24/14
கவற்சி வேண்டா காளைகள் இனி என - மகத:24/109
வேண்டா அஃது இவண் மீண்டு இது கேட்க என - மகத:25/57
பரிதல் வேண்டா பகைவன் தூதுவன் - மகத:26/9
பயிர்ப்பு இனி வேண்டா பற்றுதல் நன்று என - மகத:26/59
யாவரும் வேண்டா இதன் பின் மற்று இவனை - மகத:27/153
வேற்றுமை படும் அது வேண்டா ஒழிக என - வத்தவ:8/83
வீறு உயர் மடந்தாய் வேண்டா செய்தனை - வத்தவ:14/97
வேண்டா விடுக விரைந்து என உரைத்தலின் - நரவாண:4/33
வேண்டா என்ற பின் மீண்டும் மேக்கு ஓங்கி - நரவாண:4/102
TOP
வேண்டாது (2)
வேட்ட செந்நாய் வேண்டாது ஒழித்த - உஞ்ஞை:52/75
அரணம் வேண்டாது அச்சம் நீக்கி - இலாவாண:13/9
TOP
வேண்டாம் (1)
செரு மீக்கூற்றமும் செய்கையும் வேண்டாம்
ஒருதலையாக ஆற்றலன் மற்று இவண் - மகத:25/84,85
TOP
வேண்டாய் (1)
கொற்றம் வேண்டாய் பற்றொடு பழகிய - இலாவாண:20/25
TOP
வேண்டாயாகி (1)
ஈண்டை எம் பெருமகன் வேண்டாயாகி
மறந்தனை எம்-வயின் வலிது நின் மனன் என - வத்தவ:3/115,116
TOP
வேண்டார் (2)
உயிர் ஒழிந்தது போல் உறுதி வேண்டார்
அடங்கார் அடக்கிய அண்ணல் மற்று நின் - இலாவாண:19/14,15
வேண்டார் அட்டோன் வேண்டான் ஆயினும் - நரவாண:7/117
TOP
வேண்டாள் (1)
புல்லுகை நெகிழ புணர்வு நனி வேண்டாள்
மல்லிகை கோதை மறித்தனள் இருந்து - மகத:14/106,107
TOP
வேண்டான் (2)
நிலம் பெயர்ந்து உறைதல் நெடுந்தகை வேண்டான்
தொகுதந்து ஈண்டி கிளைஞர் ஆகி - உஞ்ஞை:38/97,98
வேண்டார் அட்டோன் வேண்டான் ஆயினும் - நரவாண:7/117
TOP
வேண்டி (24)
எவ்வம் மறைத்தல் வேண்டி வையத்து - உஞ்ஞை:35/241
இது மெய் ஆயின் இன் உயிர் வேண்டி
வாழ்வோர் உளர் எனில் சூழ்க தன் வினை என - உஞ்ஞை:36/62,63
நிலைமை வேண்டி யான் நின் நகர் வாழ்வேன் - உஞ்ஞை:36/190
நம் குடி வலித்தல் வேண்டி நம்பி - உஞ்ஞை:37/189
சொல்லுவது உண்டு என செவ்வி வேண்டி
நின்றனன் பல்லாண்டு என்றவன் இறைஞ்ச - உஞ்ஞை:47/33,34
பெருக்கம் வேண்டி பெரு நில மன்னவன் - இலாவாண:6/36
வெம் சின வேந்தனை விடுத்தல் வேண்டி
வஞ்ச இறுதி நெஞ்சு உண தேற்றி - இலாவாண:9/38,39
மறு_இல் மன்னற்கு உறுதி வேண்டி
தண் தழை மகளிரொடு தலைநின்று ஒழுக - இலாவாண:20/86,87
உற்றவன் ஆர் உயிர் உய்தல் வேண்டி
இற்றவள் பிறந்துழி காட்டும் மந்திரம் - மகத:4/65,66
உறுதி வேண்டி உருமண்ணுவாவும் - மகத:4/95
இன் உயிர் தோழர்க்கு இசைத்தல் வேண்டி
மந்திர சூழ்ச்சியுள் வெம் திறல் வீரன் - மகத:8/89,90
திரு சேர் மார்பன் தேற்றுதல் வேண்டி
மலரினும் அரும்பினும் தளிரினும் வனைந்த - மகத:8/126,127
வேண்டி வந்த வேந்தனும் வீய்ந்தனன் - மகத:20/182
மாற்றம் கேட்டு அவள் தேற்றல் வேண்டி
வத்தவர் பெருமகன் வண்ணம் கூட்டி - மகத:22/142,143
எழுச்சி வேண்டி யூகி விட்ட - மகத:24/48
வேண்டி கொண்டு மீண்டனன் போந்துழி - வத்தவ:4/89
அயில் வேல் கண்ணி அது நனி வேண்டி
தந்தேம் என்பது கேள் என பைம்_தொடி - வத்தவ:7/73,74
வியலக வரைப்பின் மேவர வேண்டி
விரத விழு கலம் விதியுளி அணிந்து - வத்தவ:7/168,169
குருகுல கிளைமை கோடல் வேண்டி
சேனையொடு சென்று செம் களம் படுத்து - வத்தவ:10/114,115
ஆக்கம் வேண்டி காப்பு உடை முனிவர் - வத்தவ:17/24
அறிய வேண்டி நெறிமையின் நாடி - நரவாண:2/38
பேணிய அசா_நோய் தீர வேண்டி
சேய் உயர் விசும்பில் செல்லும் எந்திரம் - நரவாண:4/18,19
பொன்றா புகழோன் போக்கல் வேண்டி
ஒன்றார் அட்ட யூகியை தரீஇ - நரவாண:7/77,78
செல் ஆறு இது என சொல்லுதல் வேண்டி
சால் அவை நாப்பண் சலத்தில் தீர்ந்த - நரவாண:7/91,92
TOP
வேண்டிடத்து (2)
வித்தக வண்ணமொடு வேண்டிடத்து அழுத்தி - இலாவாண:6/90
வேண்டிடத்து ஆடும் விருப்புறு நீக்கம் - இலாவாண:16/5
TOP
வேண்டிடம்-தோறும் (1)
வேண்டிடம்-தோறும் தூண்டு திரி கொளீஇ - உஞ்ஞை:47/173
TOP
வேண்டிய (8)
மண்ணகத்து இயங்கல் மனத்தின் வேண்டிய
பூம் தார் மார்பின் புரந்தர குமரனின் - இலாவாண:8/195,196
வேண்டிய செய்தலின் ஈண்டிய மாதவன் - இலாவாண:11/99
வேண்டிய செய்தலின் ஈண்டிய மாதவன் - இலாவாண:11/116
வேண்டிய அளவில் காண் தக கூட்டி - இலாவாண:20/40
வேண்டிய மருங்கில் காண் தக நெருங்கி - மகத:3/101
நீத்தவர் வேண்டிய துப்புரவு அல்லால் - மகத:14/179
அரியவை வேண்டிய அசாவொடு தோன்றி - நரவாண:6/34
வாதம் வேண்டிய சாலங்காயன் - நரவாண:7/94
TOP
வேண்டியது (7)
வேண்டியது முடிக்கும் - உஞ்ஞை:35/145
வேண்டியது உரை-மின் ஈண்டு யான் தருக என - உஞ்ஞை:36/188
வேண்டியது செய்யும் மாண்பு அலது இலம் என - உஞ்ஞை:37/68
வெய்து உயிர்ப்பு அடக்கி நீ வேண்டியது வேண்டா - இலாவாண:17/179
வேண்டியது முடிக்கும் வென்றி தானை - மகத:17/9
விருத்திகாரரும் வேண்டியது பெறூஉம் - மகத:19/57
விளைவித்து ஓம்புதும் வேண்டியது ஆம் என - வத்தவ:15/34
TOP
வேண்டியும் (1)
வேண்டியும் கொள்ளான் வேட்டனென் கொடுப்பின் - இலாவாண:1/76
TOP
வேண்டின் (4)
என் மனம் புகல வேண்டின் இவனை தன் - உஞ்ஞை:37/191
ஒன்றும் இல்லை உறுதி வேண்டின்
தந்த தெய்வம் தானே தரும் என - உஞ்ஞை:52/96,97
வீயா அமுதமும் வேண்டின் போய் தரும் - மகத:3/74
யானும் வேண்டின் வருகுவன் ஏனை - மகத:24/18
TOP
வேண்டின (1)
வேண்டின கொள்ள பெறுதிர் நீர் என - வத்தவ:2/39
TOP
வேண்டினும் (6)
யாவர் வேண்டினும் யாவரும் ஈ-மின் - இலாவாண:2/160
பாகர் வேண்டினும் பையுள் செய்யா - இலாவாண:2/194
எ வழி வேண்டினும் அ வழி காட்டும் - மகத:12/16
எனைத்து இவன் வேண்டினும் ஈவன் என்று தன் - மகத:12/49
தேவர் வேண்டினும் இசைதல் செல்லாது - வத்தவ:7/111
முரசு முழங்கு தானை அரசொடு வேண்டினும்
தருகுவல் இன்னே பருவரல் ஒழி இனி - வத்தவ:13/227,228
TOP
வேண்டினென் (1)
முன் யான் இவனை முருக்கலும் வேண்டினென்
பின் யான் இவனை பெருக்கலும் உற்றனென் - உஞ்ஞை:37/199,200
TOP
வேண்டினேன் (2)
சுற்ற பந்தமும் வேண்டினேன் என்றனன் - மகத:21/66
கோமான் எனவே கோடல் வேண்டினேன்
ஆ மான் நோக்கி ஆய்_இழை-தன்னொடு - வத்தவ:10/121,122
TOP
வேண்டு (10)
வேல் வேந்து இருந்த நூல் வேண்டு அவையத்து - உஞ்ஞை:37/101
வெள்ளி வெண் திரள் வேண்டு இடத்து ஊன்றி - உஞ்ஞை:40/13
வேண்டு அக மருங்கில் காண் தக நிறீஇ - இலாவாண:6/47
வித்தக நாசி வேண்டு இடத்து இரீஇ - இலாவாண:6/57
மென் மெல நெருங்கி வேண்டு இடம் பெறாஅர் - இலாவாண:7/138
உறு குறை அண்ணல் இவன் வேண்டு உறு குறை - இலாவாண:17/175
நீதியாள நீ வேண்டுவ வேண்டு என - இலாவாண:17/184
வேண்டு இடம்-தோறும் காண் தக நெருங்கி - மகத:4/29
நமக்கு வேண்டு என நல தகை கூற - மகத:8/81
வெதிர் இலை வீழ்ச்சியின் வேண்டு இடத்து அசைஇ - நரவாண:4/115
TOP
வேண்டு-வயின் (2)
வித்தக ஆணி வேண்டு-வயின் முருக்கி - இலாவாண:8/193
வேண்டு-வயின் சென்ற-காலை ஆண்டே - இலாவாண:20/55
TOP
வேண்டுக (1)
வேண்டுக இது என விளங்கு இழை கோமகட்கு - நரவாண:1/106
TOP
வேண்டுதிர் (1)
நசை வித்தாக வேண்டுதிர் நயக்க என - மகத:14/268
TOP
வேண்டுதும் (1)
வென்றி எய்துதல் வேண்டுதும் நாம் என - மகத:24/208
TOP
வேண்டுநர் (1)
முன் கிளை வேண்டுநர் மற்று அவர்க்கு இயைந்த - மகத:19/118
TOP
வேண்டும் (24)
அண்ணல் மருங்கின் ஆவது வேண்டும்
தன் மனம் உவந்தது தலைவர நோக்கி - உஞ்ஞை:36/117,118
துறத்தல் வேண்டும் தூய்மையோற்கு என - உஞ்ஞை:36/302
கொடுக்குவ வேண்டும் என்று எடுத்து_எடுத்து ஏத்தி - உஞ்ஞை:44/122
ஏற்றல் வேண்டும் என்று இரந்து ஏற்றினமால் - உஞ்ஞை:45/78
மெய் முதல் திரியாது வேண்டும் கிரிகையில் - இலாவாண:3/132
உறுநர் வேண்டும் உள் பொருட்கு உடன்று ஒரு - இலாவாண:8/95
ஏழ்ச்சி வேண்டும் சூழ்ச்சி கொடுக்க என - இலாவாண:11/180
உறுதி வேண்டும் யூகி மற்று இவன் - இலாவாண:17/157
அண்ணல் அரசற்கு ஆகு பொருள் வேண்டும்
ஒள் நுதல் மாதர் ஒருப்பாடு எய்தி - இலாவாண:17/186,187
முலை முதல் கொழுநன் நிலைபெற வேண்டும்
உள்ள ஊர்தி ஊக்கம் பூட்ட - இலாவாண:20/49,50
இரக்கம் இன்றி இருக்கல் வேண்டும்
அத்துணை இருந்த பின் அரும் காட்டு அக-வயின் - மகத:4/73,74
ஒழுக்கின் திரியாள் உறு பொருள் வேண்டும்
வழுக்கா அந்தணர் வருக யாவரும் - மகத:6/103,104
வேண்டும் கொள்கையன் ஆகி நீண்ட - மகத:7/60
கற்றல் வேண்டும் இனி என கற்பதற்கு - மகத:14/45
பாடல் வேண்டும் என்று ஆடு அமை தோளி - மகத:14/246
உறுதி வேண்டும் உதயணன் உரை இது - மகத:19/107
குறையின் வேண்டும் கருமம் முறையின் - மகத:19/158
விடுத்தல் வேண்டும் வல்லே விரைந்து என - மகத:23/3
மாட்டல் வேண்டும் என்று ஓட்டி எ திசையும் - மகத:25/123
வேண்டுவது உரை என்று ஆண்டவன் வேண்டும்
அரும் கல வெறுக்கையொடு பெரும் பதி நல்கி - வத்தவ:3/143,144
பொன் இழை மாதரை புணர்த்தல் வேண்டும்
இன்னே வருக என நின்னுழை பெயர்த்தந்து - வத்தவ:4/80,81
மார்புற முயங்கலும் வேண்டும் என் மனன் என - வத்தவ:7/180
சிறுவன் வேண்டும் அது சிறந்தது என்று ஏத்த - நரவாண:3/175
கருதல் வேண்டும் என கை விரல் பற்றி - நரவாண:7/156
TOP
வேண்டுவ (11)
வெண்_சுதை குன்றொடு வேண்டுவ பிறவும் - உஞ்ஞை:33/5
விசைத்து எறி பாண்டிலொடு வேண்டுவ பிறவும் - உஞ்ஞை:37/93
விரவு மலர் போதொடு வேண்டுவ வீசி - இலாவாண:6/169
வேண்டுவ உரையா மூங்கைகள் ஆம் எனும் - இலாவாண:8/139
நீதியாள நீ வேண்டுவ வேண்டு என - இலாவாண:17/184
விழைபவை பிறவும் வேண்டுவ கொண்டு - இலாவாண:18/7
வேதியர்க்கு எல்லாம் வேண்டுவ கொடுக்கும் - மகத:6/181
விருப்பின் தீரான் வேண்டுவ அமைத்து - மகத:18/115
விழாஅ கொள்க என வேண்டுவ கொடுத்து - வத்தவ:3/46
மன் ஊர் வேண்டுவ மற்று அவற்கு ஈத்து - வத்தவ:9/12
வேறு இடம் பணித்து அவர் வேண்டுவ நல்கி - வத்தவ:10/182
TOP
வேண்டுவது (1)
வேண்டுவது உரை என்று ஆண்டவன் வேண்டும் - வத்தவ:3/143
TOP
வேண்டுவல் (1)
ஒருங்கு அவண் உறைதல் வேண்டுவல் அடிகள் - வத்தவ:8/94
TOP
வேண்டுவவேண்டுவ (1)
விதி மாண் உறுப்பிற்கு வேண்டுவவேண்டுவ
கதிர் மாண் பல் கலம் கை புனைந்து இயற்றி - உஞ்ஞை:42/152,153
TOP
வேண்டுவென் (1)
சிறு வரம் வேண்டுவென் திரியாது ஈம் என - நரவாண:3/150
TOP
வேண்டுவேன் (1)
மறு_இல் சிறப்பின் ஓர் மகனை வேண்டுவேன்
பெறுதற்கு ஒத்த பிழைப்பு இலன் ஆயினும் - நரவாண:3/164,165
TOP
வேண்டேம் (1)
வேண்டேம் எனினும் ஈண்ட வீசலின் - மகத:13/26
TOP
வேண்டேன் (2)
பிறப்போ வேண்டேன் யான் என கூறி - உஞ்ஞை:40/89
யானும் வேண்டேன் ஆய்_இழை கேண்மோ - நரவாண:1/219
TOP
வேணவா (1)
விடுத்தலின் போந்து வேணவா முடித்தற்கு - நரவாண:4/46
TOP
வேணு (1)
பீலி சுற்றிய வேணு வெண் காழ் - உஞ்ஞை:32/97
TOP
வேத்தவை (1)
வேத்தவை நடுவண் வீற்று இனிது இருத்தி - இலாவாண:11/146
TOP
வேத (5)
வேந்து-அவன் நுதலிய வேத ஆசிரியரும் - உஞ்ஞை:36/250
வேத இன் இசை விளங்கு_இழை பாட - உஞ்ஞை:37/130
வேத முதல்வன் விளம்பிய நூல் வழி - இலாவாண:9/82
வீயா நண்பின் வேத மகளுழை - மகத:14/43
வேத விழு பொருள் ஓதினர் உளர் எனின் - மகத:14/175
TOP
வேதத்து (2)
ஆதி வேதத்து அக-வயின் பெரியோர் - மகத:1/86
வேதத்து இயற்கையின் ஏதம் தீர - மகத:22/22
TOP
வேதமும் (1)
சது வகை வேதமும் அறு வகை அங்கமும் - வத்தவ:3/63
TOP
வேதனை (1)
வீழினும் வீழ்க வேதனை இல்லை - உஞ்ஞை:43/52
TOP
வேதி (1)
கீத சாலை வேதி நிறைய - உஞ்ஞை:34/224
TOP
வேதிகை (5)
கீத சாலை வேதிகை காக்கும் - உஞ்ஞை:36/136
வேதிகை எறிந்த வெண் மணல் திண்ணை - உஞ்ஞை:40/124
ஆதி முற்றத்து வேதிகை முட்டி - உஞ்ஞை:43/160
நால் கடல் உம்பர் நாக வேதிகை
பாற்கடல் பரப்பில் பனி திரை நடுவண் - வத்தவ:5/66,67
பாற்படு வேதிகை சேர்த்தனள் ஆகி - வத்தவ:13/148
TOP
வேதியர் (1)
வேதியர் கடை தலை வேள்வி சமிதையும் - இலாவாண:2/94
TOP
வேதியர்க்கு (1)
வேதியர்க்கு எல்லாம் வேண்டுவ கொடுக்கும் - மகத:6/181
TOP
வேந்த (2)
பல் ஊழ் புல்லி வெல் போர் வேந்த
படை தொழில் மாற்றம் பட்டாங்கு உரைக்க என - மகத:20/132,133
வென்றி தானை வீர வேந்த நின் - நரவாண:1/31
TOP
வேந்தர் (4)
வேற்று வேந்தர் புகுந்தனர் உளர்-கொல் - உஞ்ஞை:43/134
வெம் சின வேந்தர் இங்கு இல் என்போரும் - மகத:20/163
சுற்றத்தார் எனும் சொல் உடை வேந்தர்
முன் தவம் உடையர் என்று உற்ற உள்ளமொடு - மகத:21/14,15
கொற்ற வேந்தர் நல் திறை அளப்ப - வத்தவ:14/183
TOP
வேந்தர்-தங்கட்கு (1)
வெம் கண் வேந்தர்-தங்கட்கு உற்றது - வத்தவ:6/32
TOP
வேந்தர்க்கு (2)
நச்சு மன வேந்தர்க்கு துச்சில் அமைத்த - உஞ்ஞை:40/206
வெம் சின வேந்தர்க்கு நஞ்சு உமிழ் நாகத்து - மகத:6/47
TOP
வேந்தரும் (1)
எல்லா வேந்தரும் இசையின் விரும்பி - உஞ்ஞை:36/46
TOP
வேந்தருள் (1)
விடல்_அரும் பைம் தார் வேந்தருள் வேந்தன் - மகத:17/241
TOP
வேந்தரை (3)
மிக்கு உயர் வென்றியொடு வேந்தரை அகப்படுத்து - மகத:17/23
வெம் சொல் மாற்றம் வேந்தரை உரைத்தோர் - மகத:25/75
மாண்புறு வேந்தரை மதில் அகத்து ஒழித்து - மகத:25/118
TOP
வேந்தற்கு (10)
முகை தார் வேந்தற்கு முகத்து எழு பெரும் சினம் - உஞ்ஞை:47/128
வீர வேந்தற்கு விரைந்து அவர் ஈயா - உஞ்ஞை:56/258
அலகை வேந்தற்கு உலகம் கொண்ட - இலாவாண:2/15
கொண்டதை இது என சண்ட வேந்தற்கு
எதிர்மொழி கொடீஇ கதிர் முகம் எடுத்தோன் - இலாவாண:9/92,93
வேறல் செய்கை வேந்தற்கு உண்மை - இலாவாண:9/110
ஒரு-வயின் கவித்தலுற்ற வேந்தற்கு
அருமை அமைச்சர் பெரு மலை ஏறி - மகத:2/9,10
காவல் வேந்தற்கு காட்டுபு கொடுக்க என - வத்தவ:11/34
விரைவில் சென்று வேந்தற்கு உரைப்ப - வத்தவ:14/165
பகை அடு வேந்தற்கு பணிந்தனன் உரைப்ப - நரவாண:7/8
ஆய் படை வேந்தற்கு அரும்_பெறல் திரு_மகள் - நரவாண:7/66
TOP
வேந்தன் (123)
கதிர் முடி வேந்தன் கண்ணிய நுண்_பொருட்கு - உஞ்ஞை:32/30
தார் அணி வேந்தன் தலைத்தாள் நிகழ்ந்தது - உஞ்ஞை:32/50
போர்_தொழில் வேந்தன் முன் பொருந்த காட்டி - உஞ்ஞை:32/54
வீரிய வேந்தன் விடுத்து அகம் புக்க பின் - உஞ்ஞை:32/92
தார் கெழு வேந்தன் தமர்களை விடுத்த பின் - உஞ்ஞை:36/56
தானை வேந்தன் தாள் நிழல் தங்கி - உஞ்ஞை:36/197
பல் வேல் வேந்தன் பரிவுசெய்து ஒழுகலின் - உஞ்ஞை:36/254
கொற்ற வேந்தன் குடி கெழு குமரரை - உஞ்ஞை:37/18
தகை முடி வேந்தன் தாள் புகழ்ந்து ஏத்தி - உஞ்ஞை:37/55
திரு_நாள் இருக்கை திறல் கெழு வேந்தன்
பெரு நீராட்டணி பெட்கும் பொழுது என - உஞ்ஞை:39/3,4
வெம் திறல் வேந்தன் விட்டு இவை கூற - உஞ்ஞை:39/27
பெரு விறல் வேந்தன் சிறுவரை எல்லாம் - உஞ்ஞை:39/40
பணியா வேந்தன் பணிநரை காண்-மின் - உஞ்ஞை:40/244
கடும் கண் வேந்தன் காதலர் அரவமும் - உஞ்ஞை:41/117
வேந்தன்_மகளே விரையாது என்மரும் - உஞ்ஞை:42/47
வெல் போர் வேந்தன் மட மகள் விரும்பி - உஞ்ஞை:42/81
நம்மை எள்ளிய வெம்மை வேந்தன்
சூழ்ச்சி வெள்ளத்து ஆழ்ச்சி எய்தி - உஞ்ஞை:43/12,13
வேந்தன் கோடல் வியல் நாடு கெடுத்தல் - உஞ்ஞை:43/30
வெல் போர் வேந்தன் வீரரை சவட்டி - உஞ்ஞை:43/77
ஆற்றல் வேந்தன் அற்றம் நோக்கி - உஞ்ஞை:43/133
ஆய் புகழ் வேந்தன் அரசு அத்தாணி - உஞ்ஞை:43/169
வெண் சுதை மாடமும் வேந்தன் கோயிலும் - உஞ்ஞை:43/176
சேனை வேந்தன் சிறப்பினொடு இருந்த - உஞ்ஞை:43/202
மகிழ்ச்சி எய்தி மணி முடி வேந்தன்
வத்தவர் இறைவனை விட்டனன் உழிதரல் - உஞ்ஞை:44/66,67
பொங்கு புகழ் வேந்தன் வென்றி ஏத்தி - உஞ்ஞை:45/83
தண்டார் வேந்தன் கொண்ட காலை - உஞ்ஞை:46/321
வேக வேந்தன் வெம் சமம் முருக்கி - உஞ்ஞை:46/326
ஆணை வேந்தன் அரும் கல நிதியம் - உஞ்ஞை:47/39
இரும் சின வேந்தன் பெரும் சினம் அகற்றி - உஞ்ஞை:47/192
வெம் போர் வேந்தன் மெல்லென இழிந்து - உஞ்ஞை:47/201
வெல் போர் வேந்தன் விடுக்கப்பட்ட - உஞ்ஞை:48/5
பொன் தார் வேந்தன் பூம் கொடி பாவையை - உஞ்ஞை:53/125
தண்ட வேந்தன் தமராம் நமக்கு என - உஞ்ஞை:54/85
விடுத்தனன் விடுத்து வேந்தன் இருந்த - உஞ்ஞை:54/90
செரு வில் வேந்தன் செய்கை என்ற - உஞ்ஞை:54/99
விட்ட வேந்தன் வில் தொழில் கண்டும் - உஞ்ஞை:55/130
பைம் கண் வேழத்து படை திறல் வேந்தன்
தமர் வழங்கு படையும் அவர் வழங்கு வாளியும் - உஞ்ஞை:56/267,268
வீர தானை வேந்தன் விரும்பி - உஞ்ஞை:57/15
பெரும் திறல் வேந்தன் எம் பெருமான் சிறைகொள - இலாவாண:1/51
கோல் தொழில் வேந்தன் கொற்ற முரசம் - இலாவாண:2/29
பல் களிற்று யானை படை பெரு வேந்தன்
மெல் இயல் குல_மகள் மிடை மணி பைம் பூண் - இலாவாண:2/45,46
வெம் திறல் வேந்தன் பைம்_தொடியோடும் - இலாவாண:3/120
வேந்தன் மகளொடு விளையாட்டு விரும்பி - இலாவாண:5/119
வேக தானை வேந்தன் மகளோடு - இலாவாண:8/2
வெல் போர் பெரும் படை வேந்தன் விடுத்ததும் - இலாவாண:8/41
வெற்ற வேந்தன் வெகுண்டு எழல் இன்மையும் - இலாவாண:8/54
சேனை வேந்தன் தானத்து விளிப்ப - இலாவாண:9/72
ஏதில் வேந்தன் காதலின் வினவ - இலாவாண:9/81
வெம் கண் வேந்தன் பைம் தொடி பாவாய் - இலாவாண:10/65
வெம் திறல் வேந்தன் வீழ்பவை காட்டி - இலாவாண:13/2
மாதரை மணந்த தார் கெழு வேந்தன்
வழி தொழில் கருமம் மனத்தின் எண்ணான் - இலாவாண:16/119,120
வேக தானை வேந்தன் மகளே - இலாவாண:19/125
மாற்று வேந்தன் மதில் காப்பு இகந்து தன் - மகத:1/23
அலகை வேந்தன் ஆணை கேட்பது - மகத:2/47
கொற்ற வேந்தன் குறிப்பு வழி ஓடி - மகத:4/100
ஊக்க வேந்தன் ஆக்கம் போல - மகத:5/20
விடல்_அரும் பைம் தார் வேந்தருள் வேந்தன்
சங்கரன் வாழ்க என தங்கலர் எறிந்தும் - மகத:17/241,242
வந்தனன் இவன் என வெம் திறல் வேந்தன்
பருகு அன்ன பண்பினன் ஆகி - மகத:18/48,49
தார் உடை வேந்தன் தான் பின் சென்று - மகத:18/113
கற்ற நூலின் செற்ற வேந்தன்
வேறுபட காட்டி கூறு பட அறுப்ப - மகத:19/8,9
செறு வேல் வேந்தன் செய்வதை அறியான் - மகத:19/49
வந்த வேந்தன் வலித்ததும் தங்கைக்கு - மகத:19/132
வெம் சின வேந்தன் அவள் விளிவு முந்துறீஇ - மகத:20/173
தகை கொள் வேந்தன் தமரொடு சூழ்ந்து - மகத:21/17
தலைப்பெரு வேந்தன் தான் அவண் போக்க - மகத:21/29
விருப்பொடு கேட்டு விறல் கெழு வேந்தன்
நங்கை தோழி நலத்தொடு புணர்ந்த - மகத:22/32,33
கோ பெரு வேந்தன் யாப்புறுத்து அமைத்த பின் - மகத:22/78
வெற்ற வேந்தன் கொற்ற பெரும் கணி - மகத:22/244
கட்டில் ஏறிய காவல் வேந்தன்
ஒட்டிய நண்பின் உருமண்ணுவாவினை - மகத:23/1,2
அருள் உடை வேந்தன் வழி தொடர்ந்து ஒழியான் - மகத:24/2
படை பெரு வேந்தன் பல் ஊழ் புல்லி - மகத:24/69
பட்டதை அறியார் பகை புல வேந்தன்
கெட்டு அகன்றனனால் மற்று இது என் என - மகத:24/197,198
வருக வேந்தன் பெரு விறல் பீடு அற - மகத:25/114
வேல் வல் வேந்தன் விரும்புபு கேட்ப - மகத:27/5
வெம் கோல் வேந்தன் வேற்று நாடு இது என - வத்தவ:2/3
வீணை வேந்தன் வியன் நாடு கெழீஇ - வத்தவ:2/79
கானம் நீந்தி சேனை வேந்தன்
அழுங்கல் இல் ஆவண செழும் கோசம்பி - வத்தவ:3/104,105
கொடை பெரு வேந்தன் குளிர்ந்தனன் ஆகி என் - வத்தவ:3/119
வெம் சின வேந்தன் கோயில் முற்றத்து - வத்தவ:4/47
விசை கொள் மான் தேர் வியல் கெழு வேந்தன்
கனவின் விழுப்பம் மன-வயின் அடக்கி - வத்தவ:5/83,84
உரு தகு வேந்தன் உரைத்ததன் பின்றை - வத்தவ:5/91
இகல் வேல் வேந்தன் இருத்தல் ஆற்றான் - வத்தவ:5/129
அரும் திறல் வேந்தன் அமைவர கூடி - வத்தவ:6/2
ஆணை வேந்தன் அமர்ந்தனன் துயில் என் - வத்தவ:6/85
ஆணை வேந்தன் அமர்ந்து துயில் பொழுதின் - வத்தவ:7/1
வெற்ற வேந்தன் கொற்றம் கொள்க என - வத்தவ:7/160
கொற்ற வேந்தன் தூதுவர் வந்து நம் - வத்தவ:10/7
தொடி தோள் வேந்தன் முன் துட்கென்று இறைஞ்சினள் - வத்தவ:10/89
குடை கெழு வேந்தன் கூறாது நிற்ப - வத்தவ:10/156
வெள்ள தானை வேந்தன் பெயர்ந்து - வத்தவ:12/268
விரைந்தனர் பெயர வேந்தன் காம - வத்தவ:13/1
காவல் வேந்தன் கரைந்ததற்கு அயிர்த்து - வத்தவ:13/6
நோக்கினன் ஆகி வேல் படை வேந்தன்
பைம் துணர் தொடையல் பாஞ்சாலரசற்கு - வத்தவ:13/27,28
வாகை வேந்தன் மதித்தனன் ஆகி - வத்தவ:13/48
வாள் திறல் வேந்தன் மீட்டனன் விடுத்தலின் - வத்தவ:13/137
விளைக பொலிக வேந்தன் உறு குறை - வத்தவ:13/143
ஆய்ந்த வேந்தன் ஆடல் பேர் அறை - வத்தவ:13/170
ஆனா நினைவுடன் அகல்தர வேந்தன்
தேவியை ஐயம் தெளித்தனம் ஒரு வகை - வத்தவ:13/214,215
வேந்தன் செய்வது காண்குவம் என்று - வத்தவ:13/223
அறிந்து வேந்தன் அறி பயிர் காட்ட - வத்தவ:14/10
வென்றி வேந்தன் விடுப்ப விரைவொடு - வத்தவ:14/22
ஆகியது உணரும் வாகை வேந்தன்
யூகியை வருக என கூவினன் கொண்டு - வத்தவ:14/57,58
வில்_ஏர்_நுதல் வர வேந்தன் சென்று எதிர் - வத்தவ:14/83
தந்தனன் தனியே வென்றி வேந்தன்
கோவே அருளி கொடுக்க என நீட்டலும் - வத்தவ:14/110,111
அங்கு ஒரு சிலதியை செங்கோல் வேந்தன்
தன்-பால் மண நிலை சாற்று என்று உரைப்ப - வத்தவ:14/172,173
செல்வ வேந்தன் செங்கோல் ஓச்சி - வத்தவ:14/185
கொடை நவில் வேந்தன் கொடி கோசம்பி - வத்தவ:15/150
தானை வேந்தன் தான் நெறி திரியான் - வத்தவ:17/107
வெள்ள தானை வியலக வேந்தன்
பள்ளி ஏற்ற பின் பதன் அறிந்து வணங்கி - நரவாண:1/143,144
பேரா கழல் கால் பெருந்தகை வேந்தன்
ஆர்வ வேய் தோளி அசா_நோய் தீரிய - நரவாண:1/240,241
மெல்_இயல்-தன்னை வேந்தன் விடுக்க அ - நரவாண:3/63
படை உடை வேந்தன் பனி நீர் விழவினுள் - நரவாண:3/120
குடை கெழு வேந்தன் குருகுல குருசில் - நரவாண:3/121
வீர வேந்தன் விளங்கு இழை குறு_மகள் - நரவாண:3/124
வென்று அடு தானை வேந்தன் விரும்பி - நரவாண:4/60
ஆய் புகழ் வேந்தன் ஏயினன் ஆகி - நரவாண:6/47
விரை செலல் இவுளி வேந்தன் ஏவ - நரவாண:7/16
வேல் நல வேந்தன் விழு பெரும் கோயிலுள் - நரவாண:7/57
கழி பேர் உவகையொடு காவல் வேந்தன்
ஒழிக நாம் இவற்கு ஆற்றேம் உரை என - நரவாண:7/101,102
நுனை வேல் தட கை நம் புனை முடி வேந்தன்
காணலன் கண்டீர் மாண் நலம் இயைந்த - நரவாண:7/142,143
பருகுவனன் போல படை பெரு வேந்தன்
அவணே இருப்பன் இவணேன் எனவே - நரவாண:7/154,155
வேக தானை வேந்தன் ஒரு மகன் - நரவாண:8/74
காவல் வேந்தன் காணம் காண்டலின் - நரவாண:8/152
TOP
வேந்தன்_மகளே (1)
வேந்தன்_மகளே விரையாது என்மரும் - உஞ்ஞை:42/47
TOP
வேந்தனாகலின் (1)
தகை பெரு வேந்தனாகலின் மிக சிறந்து - மகத:22/100
TOP
வேந்தனில் (1)
வேந்தனில் வந்தோர் வினவுதல் வேண்டா - மகத:19/25
TOP
வேந்தனும் (10)
வெம் திறல் வேந்தனும் நன்று என அருளி - உஞ்ஞை:37/87
செரு அடு வேந்தனும் பெரு நடுக்கு எய்த - உஞ்ஞை:43/23
கௌவை வேந்தனும் காற்று ஒலி அஞ்சி - உஞ்ஞை:44/71
செறுநன் போல செல்வ வேந்தனும்
உறுநர் வேண்டும் உள் பொருட்கு உடன்று ஒரு - இலாவாண:8/94,95
வெம் திறல் வேந்தனும் அவரொடு விராஅய் - இலாவாண:9/177
மறம் கெழு வேந்தனும் மம்மர் தீர - மகத:9/138
பெற்ற பயன் என வெற்ற வேந்தனும்
காண்பது விரும்பி மாண்பொடு புணர்ந்த - மகத:12/29,30
வேண்டி வந்த வேந்தனும் வீய்ந்தனன் - மகத:20/182
வேந்தனும் வினவி அவள் வேட்கை விரும்பி - நரவாண:1/73
வெல் போர் வேந்தனும் விரும்பினன் ஆகி - நரவாண:4/68
TOP
வேந்தனை (18)
போக வேந்தனை போக பண்ணி - உஞ்ஞை:46/327
வென் வேல் வேந்தனை விடுத்தனிர் சிறை என - இலாவாண:8/113
வெம் சின வேந்தனை விடுத்தல் வேண்டி - இலாவாண:9/38
நலம் மிகு வேந்தனை நண்ணு-மின் விரைந்து என்று - இலாவாண:10/36
வியலக வேந்தனை இயல்புளி எதிர்கொண்டு - இலாவாண:13/37
பெரு வழி முன்னி பெருந்தகை வேந்தனை
உருமண்ணுவாவும் வயந்தககுமரனும் - மகத:2/1,2
காமம் கன்றிய காவல் வேந்தனை
தம்மின் தீர்ந்து வெம் முரண் வென்றி - மகத:10/36,37
பெரு மண் வேந்தனை பிழைப்பு இன்று ஓம்புதற்கு - மகத:12/80
வலி கெழு வேந்தனை வணக்குதும் என்ன - மகத:17/64
வினை மேம்பட்ட வென்றி வேந்தனை
தெளிவது தீது என சேர்ந்து சென்று இசைப்ப - மகத:18/85,86
காவல் வேந்தனை கண்டு கை கூப்பி - மகத:19/126
கொள்ளா வேந்தனை கோயிலொடு முற்றி - மகத:24/143
பைம் தார் வேந்தனை கண்டு கை கூப்பி - மகத:26/45
வெறுத்த வேந்தனை வெற்பு இடை முற்றி - மகத:27/27
வேற்று வேந்தனை வீழ நூறுதல் - மகத:27/156
நடுக்கம் இல் வேந்தனை நாமும் முன் நின்று - மகத:27/187
பொரு படை வேந்தனை வெரீஇ புணர்த்த - வத்தவ:7/8
வாள் திறல் வேந்தனை வணங்கி தன் கை - வத்தவ:13/34
TOP
வேந்தனொடு (1)
விட்டு அகன்றனையோ வேந்தனொடு இன்று எமை - உஞ்ஞை:46/218
TOP
வேந்து (7)
வேந்து இடையிட்ட வெம் சொல்லாதலின் - உஞ்ஞை:35/15
வேல் வேந்து இருந்த நூல் வேண்டு அவையத்து - உஞ்ஞை:37/101
வேந்து பிழைத்து அகன்ற வினைவர் ஆயினும் - உஞ்ஞை:38/94
வெம் புகை தவழ்ந்து வேந்து கண் புதைப்ப - உஞ்ஞை:43/180
வேந்து பிழைத்து ஒழுகினும் காய்ந்து கலக்கு அறாஅ - மகத:4/5
விளங்கு_இழை பயந்த வேந்து புறங்காக்கும் - வத்தவ:11/1
வேந்து உறை முது நகர் வியல் மலை ஆக - நரவாண:7/160
TOP
வேந்து-அவன் (1)
வேந்து-அவன் நுதலிய வேத ஆசிரியரும் - உஞ்ஞை:36/250
TOP
வேந்துபட (1)
வேந்துபட கடந்த ஏந்து சுடர் நெடு வேல் - மகத:1/2
TOP
வேந்தும் (1)
துளங்கா ஆழி தோன்ற வேந்தும்
வெய்யோன் பெறுதலும் விறல் அவன் எய்தலும் - நரவாண:1/116,117
TOP
வேந்தே (7)
மிகுதி வேந்தே புகுக என்போரும் - இலாவாண:1/31
மன்னுக வேந்தே மண் மிசை நீடு என - இலாவாண:4/202
கழி பெரும் சிறப்பின் காவல் வேந்தே
இம்மை என்பது எமக்கு நெறி இன்மையின் - மகத:24/95,96
கோல் நெறி வேந்தே கூறும்-காலை - வத்தவ:8/77
சீர் தகை வேந்தே ஓர்த்தனை கேள்-மதி - வத்தவ:15/23
வெண் குடை நிழற்றிய வேந்தே பெண் பெறின் - நரவாண:1/52
பலர் புகழ் வேந்தே என்று அவன் பணிதலும் - நரவாண:4/72
TOP
வேந்தை (3)
இருந்த வேந்தை பொருந்து மருங்குல் - இலாவாண:6/118
ஆருணி வேந்தை வென்று கைப்படுத்தின - வத்தவ:11/28
விரைவில் சென்று வேந்தை தேட - வத்தவ:14/9
TOP
வேம்பின் (2)
வேர் முதல் ஊசல் வேம்பின் சினை-தொறும் - உஞ்ஞை:52/11
தேன் சுவை கொளீஇ வேம்பின் ஊட்டும் - இலாவாண:11/173
TOP
வேம்பு (1)
தேம்பட மொழிந்து வேம்பு மனத்து அடக்கி - உஞ்ஞை:40/203
TOP
வேமானியர் (1)
விண்ணக மருங்கின் வேமானியர் மகள் - மகத:5/89
TOP
வேய் (14)
கடிகை வேய் நலம் கழிக்கும் மென் தோள் - உஞ்ஞை:41/70
வேய் உயர் பிறங்கல் சேய் உயர்ந்து ஓடும் - உஞ்ஞை:44/21
கண் திரள் வேய் தோள் காஞ்சனமாலையை - உஞ்ஞை:46/168
அவணை போதல் அஞ்சி வேய் தோள் - உஞ்ஞை:48/134
வேய் உள் பிறந்த ஆய் கதிர் முத்தம் - உஞ்ஞை:51/11
வெம் கல் சாரல் வேய் விண்டு உதிர்த்த - உஞ்ஞை:52/60
ஆய் நல மகளிர் வேய் நலம் பழித்த - உஞ்ஞை:57/66
விரிந்து வேய் உடைத்த வெண் கதிர் முத்தம் - இலாவாண:14/20
கரப்பு அமை நெடு வேய் நரப்பு புறம் வருட - வத்தவ:3/80
வேய் என திரண்ட மென் தோள் வேயின் - வத்தவ:11/76
வேய் இரும் தடம் தோள் வெள் வளை ஆர்ப்ப - வத்தவ:12/74
உடைந்து வேய் உகுத்த ஒள் முத்து ஒரு காழ் - வத்தவ:16/31
ஆர்வ வேய் தோளி அசா_நோய் தீரிய - நரவாண:1/241
பணை வேய் மென் தோள் பதுமாதேவி - நரவாண:4/99
TOP
வேய்த்த (1)
கூந்தலும் கூந்தல் வேய்த்த கோதையும் - உஞ்ஞை:48/77
TOP
வேய்ந்து (1)
விண் வேய்ந்து அன்ன வியப்பிற்று ஆகி - மகத:22/191
TOP
வேய்படு (1)
வீணை தண்டும் வேய்படு முத்தும் - உஞ்ஞை:58/85
TOP
வேயின் (2)
துறுகல் வேயின் குறை கண்டு அன்ன - இலாவாண:12/119
வேய் என திரண்ட மென் தோள் வேயின்
விளங்கு முத்து அன்ன துளங்கு ஒளி முறுவல் - வத்தவ:11/76,77
TOP
வேயும் (2)
வேயும் வெதிரமும் வெட்சியும் குளவியும் - உஞ்ஞை:50/30
வேங்கையும் ஆவும் விளவும் வேயும்
கோங்கமும் குரவும் கொடி குருக்கத்தியும் - இலாவாண:12/13,14
TOP
வேயுள் (6)
படல் அணி வாயில் மடல் அணி வேயுள்
இடையறவு இல்லா இருக்கையில் பொலிந்த - உஞ்ஞை:43/197,198
வெள்ளி வேயுள் வெள்ளி அம் பலகை - இலாவாண:2/90
மேற்புறம் அமைந்த விளங்கு மணி வேயுள்
யாப்புறு மண்டபத்து ஆசனத்து இரீஇ - இலாவாண:5/135,136
விசித்திரத்து இயற்றிய வித்தக வேயுள்
தீம் சுவை நெல்லி திரள் காய் தாரையுள் - இலாவாண:6/65,66
முரிந்த கந்தின் எரிந்த வேயுள்
அரிந்த யாப்பில் சொரிந்த கடும் காழ் - இலாவாண:19/7,8
சித்திர முது சுவர் வித்தக வேயுள்
ஆவணம்-தோறும் அறைந்து அறிவுறுத்தலின் - மகத:5/38,39
TOP
வேயே (1)
கையே குரும்பை கதிர் மதி வேயே
நோக்கினும் ஒதுக்கினும் மா கேழ் அணிந்த - வத்தவ:12/151,152
TOP
வேயொடு (1)
வெம் சுர கான்யாற்று வேயொடு பிணங்கி - உஞ்ஞை:52/90
TOP
வேர் (4)
வேர் துளி துடைத்து வித்தக வீரன் - உஞ்ஞை:48/128
மாவும் மருதும் வேர்_அற புய்த்து - உஞ்ஞை:51/45
வேர் முதல் ஊசல் வேம்பின் சினை-தொறும் - உஞ்ஞை:52/11
விரத மழுவின் வேர்_அற துணிக்கும் - இலாவாண:11/44
TOP
வேர்_அற (2)
மாவும் மருதும் வேர்_அற புய்த்து - உஞ்ஞை:51/45
விரத மழுவின் வேர்_அற துணிக்கும் - இலாவாண:11/44
TOP
வேர்த்தது (1)
வேர்த்தது
பெருமை பயத்தால் பயந்த - வத்தவ:17/33,34
TOP
வேர்ப்ப (1)
நிலைபெற விசிப்பது போல வேர்ப்ப
மேற்பால் பிறை என விளங்க அமைந்தது - மகத:22/219,220
TOP
வேர்வு (1)
விரிந்த இவற்றொடு விடு-மின் வேர்வு என்று - இலாவாண:12/80
TOP
வேரியும் (2)
மதுவும் சீதமும் புது மலர் வேரியும்
உக்கிர ஊறலும் சிக்கர தெளியலும் - இலாவாண:2/179,180
வேரியும் தகரமும் விரையும் உரிஞ்சி - வத்தவ:16/6
TOP
வேல் (77)
ஒளிறு வேல் இளையர் தேர் நீறு அளைஇ - உஞ்ஞை:33/84
வெம் துயர் கண்ணின் வேல் இட்டது போல் - உஞ்ஞை:33/95
மதர் அரி நெடும் கண் வேல் கடை கான்ற - உஞ்ஞை:33/123
வல் வேல் சுற்றத்து மெய்ம்முறை கொண்ட - உஞ்ஞை:34/7
எறி வேல் பெரும் கடை இயைந்தனன் நிற்ப - உஞ்ஞை:34/39
பல் வேல் முற்றம் பணியில் போகி - உஞ்ஞை:35/66
வடி வேல் உண்கண் வரு பனி அரக்கி - உஞ்ஞை:36/99
தொகு வேல் முற்றம் சிவிகையில் போந்து - உஞ்ஞை:36/131
பல் வேல் வேந்தன் பரிவுசெய்து ஒழுகலின் - உஞ்ஞை:36/254
சாரியை விலக்கும் வேல் திரி வகையும் - உஞ்ஞை:37/33
பொரு வேல் முற்றத்து புரிவனர் புகுதர - உஞ்ஞை:37/98
வேல் வேந்து இருந்த நூல் வேண்டு அவையத்து - உஞ்ஞை:37/101
அடல் வேல் தானை ஆருணி அரசற்கு - உஞ்ஞை:37/203
அடல் வேல் யானை அடங்கும் காழும் - உஞ்ஞை:38/27
தொடு வேல் முற்றத்து தோழியோடு ஆடா - உஞ்ஞை:40/114
கோல வை வேல் ஏனைய குமரர்க்கு - உஞ்ஞை:40/361
சாந்தின் செய்த ஏந்து இலை எறி வேல்
போதின் புனைந்த பூம் பொறி வளையம் - உஞ்ஞை:41/10,11
வேல் திறலாளரும் மிலைச்சரும் சிலதரும் - உஞ்ஞை:42/23
வெல் வேல் கடுக்கும் வெம்மை நோக்கத்து - உஞ்ஞை:42/53
வேல் படை இளையர் நால் பெரும் திசையும் - உஞ்ஞை:43/41
கால் கடியாளர் வேல் பிடித்து ஓடி - உஞ்ஞை:43/165
வடி வேல் தடம் கண் வாசவதத்தைக்கு - உஞ்ஞை:47/30
வடி வேல் இளையரும் வல் விரைந்து ஓடி - உஞ்ஞை:47/114
வடி வேல் தானை வத்தவன் தன்னொடு - உஞ்ஞை:47/239
கலா வேல் காவலன் மட மகள் காணாது - உஞ்ஞை:47/262
பொலிக வேல் வலம் புணர்க பூ_மகள் - இலாவாண:2/40
வெற்ற வெள் வேல் வீரியன் புகழ்ந்து - இலாவாண:5/74
அரு வரை பிளந்த அஞ்சுவரு நெடு வேல்
ஒரு வலத்து உயரிய பொரு_இல் புள் கொடி - இலாவாண:5/147,148
வேல் தொழில் பொலிந்த மாற்று மருங்கு அமைத்து - இலாவாண:6/86
கொற்றவன் காண்ம் என வெற்றி வேல் தட கையர் - இலாவாண:7/36
வென் வேல் வேந்தனை விடுத்தனிர் சிறை என - இலாவாண:8/113
ஊன் சேர் கடு வேல் உதயணன் நீங்கிய - இலாவாண:8/116
வேகம் தணியா வெம் சின நெடு வேல்
யூகந்தராயணன் ஒழிவு_இலன் கேட்டு - இலாவாண:9/201,202
மாறு அடு வேல் கண் வாசவதத்தை - இலாவாண:14/38
செரு வேல் பழித்த சே அரி நெடும் கண் - இலாவாண:15/85
கடு முரண் அழித்த காய் சின நெடு வேல்
படு மணி யானை பைம் தார் வெண் குடை - இலாவாண:20/120,121
வேந்துபட கடந்த ஏந்து சுடர் நெடு வேல்
உதயணன் நிலைமை இது என உரைப்பேன் - மகத:1/2,3
கலா வேல் குருசில் விலாவணை ஓம்பி - மகத:2/14
வடி வேல் கொற்றவன் வாழ்க என பல் ஊழ் - மகத:5/36
வெள் வேல் விடலையொடு விளங்கு இழை மாதர்க்கு - மகத:7/107
அரும் திறல் சூழ்ச்சி அடல் வேல் தானை - மகத:17/20
ஊன் இவர் நெடு வேல் உருவ கழல் கால் - மகத:17/34
வீணை நவின்ற விறல் வேல் உதயணன் - மகத:18/58
செறு வேல் வேந்தன் செய்வதை அறியான் - மகத:19/49
மேல்வந்து இறுப்ப வேல் பல படையொடு - மகத:19/121
வேல் வல் இளையர் கால் புடை காப்ப - மகத:19/176
வேல் வல் இளையரும் விழுந்து குழம்பு ஆகிய - மகத:20/81
வேக வெள் வேல் கேகயத்து அரசனை - மகத:20/97
செம் கடை வேல் கண் வெள் வளை பணை தோள் - மகத:21/18
வேல் வரும் தானை நால்வரும் முதலா - மகத:23/29
மன் அடு நெடு வேல் மகத மன்னற்கு - மகத:25/43
வேல் வல் வேந்தன் விரும்புபு கேட்ப - மகத:27/5
வேல் இடை மிடைந்து வாள் இடை மின்ன - மகத:27/120
ஆற்றல் சான்ற அடல் வேல் ஆருணி - மகத:27/135
வடி வேல் தானை வத்தவர் பெருமகன் - வத்தவ:3/83
அற்பு அழல் ஊர்தர அடல் வேல் உதயணன் - வத்தவ:4/55
வடி வேல் தடம் கண் வாசவதத்தை - வத்தவ:5/11
வேல் எறிந்து அன்ன வெம்மைத்து ஆகி - வத்தவ:5/21
இகல் வேல் வேந்தன் இருத்தல் ஆற்றான் - வத்தவ:5/129
அயில் வேல் கண்ணி அது நனி வேண்டி - வத்தவ:7/73
வென் வேல் உதயணன் விதியுளி வினவும் - வத்தவ:8/32
வெள் வேல் கண்ணி ஒவ்வாள் என்று அவள் - வத்தவ:8/111
இயைந்த வேல் கண் இராசனை என்னும் - வத்தவ:9/17
நீல வேல் கண் நிரை_தொடிக்கு ஈக என - வத்தவ:11/46
வடி வேல் தட கை வத்தவர் இறைவ - வத்தவ:12/25
விளங்கி ஏர் பிறழ வேல்_கணி இருந்து - வத்தவ:12/174
வேல் என விலங்கும் சேல் என மிளிரும் - வத்தவ:12/253
நோக்கினன் ஆகி வேல் படை வேந்தன் - வத்தவ:13/27
துன்றிய வேல் கண் தொழிலும் மெய் அழகும் - வத்தவ:13/80
வடி வேல் உண்கண் வாசவதத்தை - வத்தவ:13/126
வென் வேல் தலைவனும் வேட்கை இன்றி - வத்தவ:13/164
அயில் வேல் நெடும் கண் ஓர் ஆய்_இழை அணுகி - நரவாண:1/77
வடி வேல் மன்னனும் படிவமொடு இருந்து - நரவாண:2/61
கொலை கெழு செ வேல் குருகுல குருசில் - நரவாண:3/112
வேல் நல வேந்தன் விழு பெரும் கோயிலுள் - நரவாண:7/57
நுனை வேல் தட கை நம் புனை முடி வேந்தன் - நரவாண:7/142
எரியுறு நெடு வேல் ஏய இறைவன் - நரவாண:7/152
TOP
வேல்_கணி (1)
விளங்கி ஏர் பிறழ வேல்_கணி இருந்து - வத்தவ:12/174
TOP
வேல்கெழு (1)
வேல்கெழு முற்றமொடு வீதியின் நீங்கி - உஞ்ஞை:37/2
TOP
வேலான் (1)
வெற்ற வேலான் மற்றும் கூறினன் - மகத:10/61
TOP
வேலி (3)
சந்தன வேலி சண்பகத்து இடையது ஓர் - உஞ்ஞை:33/22
பாலையும் நெய்தலும் வேலி ஆக - மகத:2/39
முல்லை தலை அணிந்த முஞ்ஞை வேலி
கொல்லை வாயில் குப்பையுள் வீழவும் - வத்தவ:2/63,64
TOP
வேலி-தொறும் (1)
இருள்பட ஓங்கிய எல்லை வேலி-தொறும்
வெருள்பட போக்கிய வெண் தீ விளக்கம் - உஞ்ஞை:50/53,54
TOP
வேலியலாளரை (1)
வேலியலாளரை வீழ நூறியும் - உஞ்ஞை:56/265
TOP
வேலில் (1)
வேலில் சாய்த்தும் கோல மான் தேர் - மகத:17/232
TOP
வேலின் (2)
செம் சுடர் வேலின் நெஞ்சு இடம் போழ - மகத:6/16
வெம் கண் நீரது ஆகி வேலின்
புன்கண் மாலை போழ தன்-கண் - மகத:7/38,39
TOP
வேலினும் (1)
கோலினும் வேலினும் மறலினும் குமைத்தது - உஞ்ஞை:42/222
TOP
வேலும் (4)
வேலும் கணையமும் வீழினும் இமையார் - உஞ்ஞை:46/17
வேலும் ஈட்டியும் கோலும் குந்தமும் - உஞ்ஞை:46/57
கொற்றக்குடையும் வெற்றி வேலும்
கொடியும் கவரியும் இடி உறழ் முரசும் - உஞ்ஞை:57/56,57
வேலும் வாளும் கோலும் கொண்ட - இலாவாண:5/36
TOP
வேலை (1)
வேலை எல்லை மீதூர்ந்து இரண்டு - மகத:6/59
TOP
வேலையில் (1)
அது நிகழ் வேலையில் புதுமண மாதரை - வத்தவ:14/170
TOP
வேலோய் (2)
மந்திரம் மறந்திலேன் மறம் கனல் வேலோய்
வல்லையாகி ஒல்லை அவனை - நரவாண:2/58,59
மாறு அடு வேலோய் மற்றவை தீர்தலின் - நரவாண:3/25
TOP
வேவினுள் (2)
தீ அகம் கழுமிய கோயில் வேவினுள்
தேவியை இழந்து பூ இதழ் சோலை - மகத:1/19,20
கோயில் வேவினுள் ஆய் வளை பணை தோள் - மகத:18/13
TOP
வேழ (10)
வேழ வேட்டம் விதியின் வினாய - உஞ்ஞை:32/29
மறவோன் சேனை வேழ சங்கமும் - உஞ்ஞை:33/78
வெண் துகில் பூட்டிய வேழ குழவியும் - உஞ்ஞை:39/74
வேழ தாழ் கை காழொடு சேர்த்த - உஞ்ஞை:42/105
வேழ வேட்டத்து வீழ நூறி - உஞ்ஞை:54/132
குழிப்படு வேழ கூன் மருப்பு இரட்டையும் - உஞ்ஞை:58/83
விண் தோய் கானத்து வேழ வேட்டத்து - இலாவாண:10/125
வெம் சின வேழ வெகுளி நீக்கும் - இலாவாண:11/92
தோழர் சூழ வேழ மேல்கொண்டு - மகத:18/80
அடக்க_அரும் வேழ தட கை வீழவும் - மகத:20/46
TOP
வேழத்து (11)
பயிர் கொள் வேழத்து பணை எருத்து இரீஇ - உஞ்ஞை:38/124
விசைய வேழத்து இசை எருத்து ஏற்றி - உஞ்ஞை:39/39
பைம் கண் வேழத்து பகடு அன்று ஈர்ந்தது இவள் - உஞ்ஞை:45/41
வெம் முரண் வேழத்து வெம் சினம் அடக்கிய - உஞ்ஞை:47/80
பைம் கண் வேழத்து படை திறல் வேந்தன் - உஞ்ஞை:56/267
அணை மிசை அமர்தந்து அஞ்சுவரு வேழத்து
பணை எருத்து ஏற்றி பல்லவர் சூழ - இலாவாண:2/37,38
உத்தம வேழத்து உயர் புறம் பொலிய - இலாவாண:2/61
உருத்த மன்னர் ஊர்ச்சி வேழத்து
மருப்பு கை அமைத்து வாய் முதல்-தோறும் - இலாவாண:4/107,108
பைம் கண் வேழத்து பணை மருப்பு உலக்கையின் - இலாவாண:14/49
அழி கவுள் வேழத்து அணி எருத்து ஏற்றிய - மகத:5/34
வெம் சின வேழத்து வெகுட்சி நீக்கி - மகத:18/98
TOP
வேழம் (27)
தகை மலி வேழம் தலைக்கடை இழிதந்து - உஞ்ஞை:32/99
வேழம் விலக்கிய யாழொடும் செல்க என - உஞ்ஞை:33/139
மத வலி வேழம் மையலுறுத்த - உஞ்ஞை:37/232
உயிர் நடுக்குறாஅ வேழம் பண்ணி - உஞ்ஞை:38/121
கூற்ற வேழம் குணம் சிதைந்தது-கொல் என்று - உஞ்ஞை:43/135
வேக உள்ளத்து வேழம் தெரிந்து - இலாவாண:2/195
கூற்ற வேழம் அடக்கிய குமரற்கு - இலாவாண:8/80
கூற்று உறழ் வேழம் குணம் சிதைந்து அழிய - இலாவாண:9/43
மையல் வேழம் அடக்கிய மன்னனை - இலாவாண:9/69
தெருட்டுதற்கு ஆய இ தீ குறி வேழம்
யாதின் சிதைந்தது அஃது அறிய உரைக்க என - இலாவாண:9/79,80
விசை உடை வேழம் வணக்கும் விச்சையும் - இலாவாண:11/155
நீல வேழம் நினைந்து உழன்றாங்கு - இலாவாண:19/212
புதிதின் கொண்ட பூ கவின் வேழம்
பணி செய பிணிக்கும் பாகர் போல - மகத:1/34,35
விலக்க_அரும் வேழம் விடுதிராயின் - மகத:5/102
பெரு வலி வேழம் பிணித்திசினாஅங்கு - மகத:17/42
வீழ நூறி வேழம் தொலைச்சி - மகத:17/247
வனப்பொடு புணர்ந்த வார் கவுள் வேழம்
சின போர் அண்ணற்கு செல்க என போக்கி - மகத:18/69,70
வெம் முரண் வேழம் வீழ்த்து மாற்றார் - மகத:20/66
வென்றோன் ஏறிய வேழம் சார்ந்து அவன் - மகத:20/107
வெற்றி முரசம் வேழம் ஏற்றி - மகத:27/182
வேழம் எல்லாம் - வத்தவ:3/93
அழி கவுள் வேழம் அடக்கும் நல் யாழ் - வத்தவ:5/13
அஞ்சா பைம் கண் ஓர் வெம் சின வேழம்
எழு வகை மகளிர் இன்பம் எய்தி - நரவாண:3/76,77
வேழம் பிறவும் விழைதக்கது என - நரவாண:3/86
வேழம் நினைஇ வேட்கை மீதூர்ந்து - நரவாண:3/95
விரை செலல் இவுளியொடு வெம் கண் வேழம்
பசும்பொன் ஓடை பண்ணொடு கொடுப்பினும் - நரவாண:5/10,11
கோடு உடை வேழம் பாடு பெற பண்ணி - நரவாண:7/18
TOP
வேழமும் (12)
வேழமும் புரவியும் பண்ணுக விரைந்து என - உஞ்ஞை:56/188
உளை பொலி மாவும் வேழமும் ஊர்ந்து அவர் - உஞ்ஞை:56/229
விரை பரி மாவும் வேழமும் தேரும் - உஞ்ஞை:57/50
மை அணி வேழமும் மாவும் பண்ணி - இலாவாண:12/37
ஏறுதற்கு அமைந்த இரும் கவுள் வேழமும்
வீறுபெற பண்ணி விரைந்தன வருக - மகத:19/94,95
வேழமும் புரவியும் ஊழூழ் விரைஇ - மகத:19/211
மாவும் வேழமும் மா மணி தேரும் - மகத:24/152
அதிர் குரல் வேழமும் புரவியும் அடக்கி - மகத:27/47
வார் கவுள் வேழமும் வசத்தது அன்றி அவன் - மகத:27/165
ஒரு நூறு ஆகிய உயர் நிலை வேழமும்
கோலம் ஆன கோபத்தில் பிறந்தன - வத்தவ:11/31,32
மாவும் வேழமும் வழக்கு நனி நீக்கி - வத்தவ:15/139
வெற்ற தானையும் வேழமும் நீக்கி - நரவாண:2/10
TOP
வேழமொடு (1)
வீர நோக்கினர் வேழமொடு வீழவும் - மகத:20/61
TOP
வேள் (3)
பொரு வேள் பேணி பொலி உஞ்சேனையுள் - உஞ்ஞை:42/55
பெரு வேள் மறைந்து பெரும் புனல் ஆடும் - உஞ்ஞை:42/56
தீ வேள் சாலை திறத்துளி மூட்டி - மகத:22/255
TOP
வேள்வி (9)
கேள்வி துறைபோகி வேள்வி முற்றிய - உஞ்ஞை:54/12
வேதியர் கடை தலை வேள்வி சமிதையும் - இலாவாண:2/94
விசும்பு உறை தேவர் வேள்வி சேதான் - இலாவாண:4/61
வேள்வி கல பை விழு பொருள் விரதத்து - இலாவாண:15/39
பெருந்தகை வேள்வி அரும் தவ படிவமொடு - மகத:3/85
மாண்ட வேள்வி மந்திர மு தீ - மகத:6/193
விழு தகு வேள்வி ஒழுக்கு இயல் ஓம்பி - மகத:22/274
விஞ்சை வேள்வி விதியில் தந்த - வத்தவ:17/26
மாசு_இல் வேள்வி மகிழ்ந்தனர் தொடங்கி - நரவாண:6/103
TOP
வேள்விக்கு (1)
வேள்விக்கு உரிய கருவி யாவும் - மகத:14/181
TOP
வேள்வியின் (1)
வேள்வியின் திரியாய் கேள்வியின் பிரியாய் - உஞ்ஞை:37/143
TOP
வேள்வியுள் (1)
மங்கல வேள்வியுள் மகள் ஈவோரும் - உஞ்ஞை:39/56
TOP
வேற்றவர் (2)
கூற்றம் போல வேற்றவர் முருக்கி - உஞ்ஞை:46/100
வேற்றவர் ஒல்லென வேற்றினன் பாய்த்து உள - உஞ்ஞை:48/10
TOP
வேற்றவன் (2)
வெம் நோய் முடுக வேற்றவன் நாடு இறந்து - உஞ்ஞை:52/126
வெண் மதி நெடும் குடை வேற்றவன் படையொடு - உஞ்ஞை:55/24
TOP
வேற்றான் (1)
வேற்றான் எனவும் மாற்றான் எனவும் - மகத:19/123
TOP
வேற்றினன் (1)
வேற்றவர் ஒல்லென வேற்றினன் பாய்த்து உள - உஞ்ஞை:48/10
TOP
வேற்று (5)
வேற்று வேந்தர் புகுந்தனர் உளர்-கொல் - உஞ்ஞை:43/134
கூற்று என தொடர வேற்று முன் விலங்கி - உஞ்ஞை:47/89
மாற்றோர் உட்கும் வேற்று நாட்டு அக-வயின் - மகத:10/33
வேற்று வேந்தனை வீழ நூறுதல் - மகத:27/156
வெம் கோல் வேந்தன் வேற்று நாடு இது என - வத்தவ:2/3
TOP
வேற்றுநர் (1)
நூற்றுவர் முற்றி வேற்றுநர் ஆக என - மகத:1/94
TOP
வேற்றுமை (6)
நாற்றமும் தோற்றமும் வேற்றுமை இன்றி - இலாவாண:2/142
உறுப்பினும் நிறத்தினும் வேற்றுமை இன்மையின் - மகத:6/44
வேற்றுமை இலன் இவனை போற்றினையாயின் - மகத:20/117
என்னும் வேற்றுமை இல்லையாயினும் - மகத:22/163
வேற்றுமை படும் அது வேண்டா ஒழிக என - வத்தவ:8/83
ஏற்றனன் கொண்டு வேற்றுமை இன்றி - வத்தவ:10/108
TOP
வேற்றோன் (3)
வேற்றோன் போல மாற்றம் பெருக்கி - இலாவாண:8/147
வேற்றோன் போல விழைவினை அகற்றி - மகத:10/12
வேற்றோன் பதி-நின்று ஆற்றலில் போந்த - வத்தவ:3/136
TOP
வேறல் (1)
வேறல் செய்கை வேந்தற்கு உண்மை - இலாவாண:9/110
TOP
வேறலம் (1)
வேறலம் என்று விளங்க கூறி - நரவாண:5/39
TOP
வேறா (1)
வீறு இயல் அமைச்சர் வேறா கேட்டு - மகத:19/157
TOP
வேறு (32)
வேறு என அருளிய வேட்கை உண்டு எனின் - உஞ்ஞை:47/142
வேறு இனி நும்மொடு விளிக நும் களவு என - உஞ்ஞை:55/87
விரித்த பூம் கொடி வேறு பல நுடங்க - இலாவாண:1/9
பல் வேறு கொடியும் படாகையும் நிரைஇ - இலாவாண:6/21
ஐ வேறு அமைந்த அடிசில் பள்ளியும் - இலாவாண:7/133
சொல் வேறு குறியொடு சுழன்று அகத்து ஒடுங்கிய - இலாவாண:8/99
பல் வேறு உருவில் தம் படைநரை பயிர்ந்து - இலாவாண:8/100
படையினும் தொழிலினும் நடை வேறு இயன்ற - இலாவாண:8/121
உறும் பெரும் சாரணர் உரை வேறு உண்மையும் - இலாவாண:13/66
தெரிந்து வேறு அமைத்து சிற்றில் இழைத்தும் - இலாவாண:14/21
உரையினும் உடம்பினும் வேறு எனின் அல்லது - இலாவாண:17/164
உயிர் வேறு அல்லா செயிர் தீர் சிறப்பும் - இலாவாண:17/165
தே மொழி கிளவியின் திறல் வேறு ஆகி - இலாவாண:18/103
மூவரும் உண்டு வேறு நிறம் எய்தி - இலாவாண:20/43
திண் பொறி கலங்கி திறல் வேறு ஆகி - மகத:6/58
மாறு அடு குருசில் வேறு இடை வினவ - மகத:6/165
ஐ வேறு உருவின் மெய் பெற புனைந்த - மகத:14/70
தேறும் மாந்தரை வேறு அவண் விடுத்து - மகத:17/58
வேறு அலன் அவனை வென்றியின் நீக்கி - மகத:18/22
வேறு என கருதுதல் விழுப்பம் அன்று என - மகத:18/89
வீரர் ஆகுவோர் வேறு திரிந்து ஒடுங்கி - மகத:19/22
மற போர் மன்னனும் மாண வேறு இருந்து - மகத:19/66
கூறு பட போக்கி வேறு பட பரப்பி - மகத:19/207
அறிய தேற்றுவோர் அயல் வேறு இல் என - மகத:22/16
விள்ளா படையொடு வேறு நீ இருப்ப - மகத:24/142
மழு வேறு உண்ட மன்னவன் போல - மகத:27/178
வேறு இடம் காட்டி ஆறு அறிந்து ஓம்பி - வத்தவ:1/31
வேறு இடம் பணித்து அவர் வேண்டுவ நல்கி - வத்தவ:10/182
பால் வேறு இவர்களை கொடுக்க என பணித்து - வத்தவ:11/50
மதி வேறு இல் என வாசவதத்தையும் - வத்தவ:13/24
வேறு ஒரு வரை நீ விடுத்தருள் என்று - வத்தவ:14/21
கேள்வியாளரை வேறு தெரிந்து அமைத்து - நரவாண:7/93
TOP
வேறுபட்டனள் (1)
வேறுபட்டனள் என விம்முவனள் இறைஞ்சி - மகத:9/100
TOP
வேறுபட்டு (1)
வேறுபட்டு ஏகினும் கூறுபட்டு இயலா - இலாவாண:8/13
TOP
வேறுபட (5)
விடல்_அரும் சீற்றமொடு வேறுபட நோக்கி - உஞ்ஞை:44/89
வித்தக பத்தி வேறுபட விரித்தவை - இலாவாண:5/177
வித்தகம் சிறப்ப வேறுபட எழுதி - இலாவாண:10/88
விரை மலர் பூம் கொடி வேறுபட உயரி - மகத:18/68
வேறுபட காட்டி கூறு பட அறுப்ப - மகத:19/9
TOP
வேறுபடு (4)
வேறுபடு திருவினுள் விளங்கு இழை மகளிரை - உஞ்ஞை:40/347
விரிசிகை வேண்ட வேறுபடு வனப்பின் - இலாவாண:19/163
வேறுபடு வனப்பின் விளங்கு_இழை வையம் - மகத:8/21
வேறுபடு வனப்பின் மும்மைய ஆனவை - வத்தவ:12/203
TOP
வேறுவேறாக (3)
வேறுவேறாக கூறுகூறு உணர்த்தி - இலாவாண:9/210
வேறுவேறாக தேற காட்டி - மகத:23/44
வேறுவேறாக கூறுகூறு அமைத்து - வத்தவ:10/81
TOP
வேறுவேறாகும் (1)
வேறுவேறாகும் விரகுளி முடித்து - வத்தவ:14/68
TOP
வேறுவேறு (4)
கோலமொடு புணர்ந்த வேறுவேறு இயற்கை - உஞ்ஞை:42/209
விரவு மலர் கோதையர் வேறுவேறு இயலி - இலாவாண:14/18
விழைவன அறிந்து வேறுவேறு அடக்கி - மகத:17/175
வேறுவேறு இயற்கைய கூறுகூறு அமைத்த - வத்தவ:12/50
TOP
வேனல் (1)
வேனல் பேர் அழல் கானவர் கொளுத்தி - உஞ்ஞை:56/22
TOP
வேனில் (4)
வேனில் தாங்கி மேனி வாடிய - உஞ்ஞை:49/88
வேனில் காலத்து தானம் நோக்கி - உஞ்ஞை:53/152
வேனில் வள்ளியின் மேனி வாடி - உஞ்ஞை:55/12
ஊன் என மலர்ந்த வேனில் இலவத்து - இலாவாண:9/139
TOP
|
|
|