0.காப்பு
1.தெய்வப் பெயர்த் தொகுதி
2.மக்கட் பெயர்த் தொகுதி
3.விலங்கின் பெயர்த் தொகுதி
4.மரப் பெயர்த் தொகுதி
5.இடப் பெயர்த் தொகுதி
6.இயற்கைச் செயற்கைப் பலபொருட் பெயர்த் தொகுதி
7.பண்பு பற்றிய பெயர்த் தொகுதி
8.ஒலி பற்றிய பெயர்த் தொகுதி
9.செயல் பற்றிய பெயர்த் தொகுதி
10.ஒரு சொற் பல்பொருட் பெயர்த் தொகுதி
|
** கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய
** பொதிகை நிகண்டு - முதற்பகுதி
** சென்னை சர்வசலாசாலை
** தமிழ் லெக்ஸிகன் பதிப்பாசிரியர்
** S வையாபுரிப் பிள்ளை 12-4-2026
** பரிசோதித்தது
** 1934
@0 காப்பு
**0
#1
பொன் பூத்த வெள்ளிப்பொருப்பனும் மனோன்மணியும்
முன் பூத்த வேழமுகத்தானே இன் பூத்த
பூவணியல் போலப் பொதிகைநிகண்டைப் பாடப்
பாவணியல் ஈய்ந்து காப்பான்
** நூல்
@1 தெய்வப் பெயர்த் தோகுதி
**1
#1
சங்கரன் உமாபதி பிரான் நம்பன் யோகி
சயம்பிறை சதாசிவன் கங்காளன் மான்ஏந்தி
அங்கணன் பேயோடாடி சருவஞ்ஞன் ஞானி
அமலன் அரன் நீலகண்டன் பித்தன் நித்தன் சோதி
மங்கைபங்கன் சம்பு மகேசன் வாமதேவன்
மாதேவன் நிமலன் விடையோன் கொன்றைசூடி
கங்கைஅணிவோன் பரசுதரன் ஆதிகிரியன்
காலகாலன் கயிலையாளி திகம்பரனே
**2
#2
பரமன் அரியான் தாணு நந்தி புலித்தோலான்
பாண்டரங்கன் நக்கன் உருத்திரன் மூர்த்தி ஈசன்
சிரதரன் பிஞ்ஞகன் காமதகனன் அழலேந்தி
சித்தன் அனுபமன் சூலன் அசஞ்சலன் கபர்த்தி
அரவன் ஈசானன் அழலாடி அண்ணல் பெருமான்
அந்திவண்ணன் கண்ணுதல் ஐம்முகன் பூதநாதன்
வரன் அனகன் புனிதன் முகுந்தாபங்கன் பகவன்
மத்தன் அத்தன் தத்துவாதீசன் மறைமுதலே
**3
#3
முதல்வன் ஈசுரன் நடனன் சிற்பரன் கபாலி
முக்கணன் புராரி சிம்புளாயினோன் அனந்தன்
மதகரியையுரித்தவன் பெம்மான் ஈமத்தாடி
வயிரவன் பினாகி ஆலமர்கடவுள் சடையோன்
சுதனபோசனன் பிச்சாடனன் விமலன் மெய்யன்
தும்புருநாதன் சாமதாற்பரியன் புயங்கன்
விதுவணிவோன் எண்குணன் எண்தோளன் மலைவில்லான்
வெண்ணீற்றன் பசுபதி நூற்றொன்று சிவன்பெயரே
**4
#4
சிவை இமையவல்லி பரை அந்தரி பவானி
தேவி உலகாயி சத்தி காமக்கோட்டத்தி
கவுரி அறம்வளர்த்தசெல்வி சுந்தரி ஈச்சுரி பூங்
கணைக்கிழத்தி அருளேழை சாம்பவிதாய் வாலை
புவனை திரிபுரை வாமி அபிராமி அன்ன
பூரணி ஆரியை அமலை ஈசன்இடப்பாகி
தவசதானந்தி மாதா நாரி ஐயை
சங்கரி அம்பிகை உமை பார்ப்பதி ஐயேழ் காணே
**5
#5
காளி காத்தியை பாலைக்கிழத்தி பண்ணம்பணத்தி
கன்னி நாமினி விமலை பஞ்சமி மாதங்கி
ஆளிஊர்பவள் சவுரி பகவதி வாள்கையாள்
ஆயி கலையூர்தி அயிராணி யாமளை வே
தாளி பயிரவி மாரி சூலி சக்ரபாணி
சாமுண்டி நீலி துர்க்கை சண்டிகை கொற்றவை எண்
தோளி விந்தை கங்கைநாரணி வீரி யோகி
சூரி மயிடாரி தாருகவிநாசனியே
**6
#6
சமரிசெயை கங்காளி மாலினி அகோரி
தமருகி அந்தரி விசையை சுந்தரி முக்கண்ணி
அமரி அரனோடாடி காமி நெடுங்காத்திரி
ஐயை கோமளை மாயை மதுபதி கபாலி
குமரி அலகைக்கொடியாள் வல்லணங்கு ஆரணி மா
கோரி அறுபதும் காளி துர்க்கை பொதுப்பேர் ஆம்
இமை வலவை வஞ்சனி சூர் மாயவள் சண்பனியோடு
இடாகினி சாகினி சன்மினி யோகினி ஆகினவே
**7
#7
ஆகுவாகன் இலம்போதரன் சூற்பகன்னன்
ஆனைமுகன் கணபதி முக்கண்ணன் விக்கினேசன்
ஏகதந்தன் ஐங்கரன் பாசாங்குசன் கயாரி
ஏரம்பன் வக்கிரதுண்டன் விநாயகன் பேர்
வேகம் மிகும் உக்கிரன் செந்நிறன் சிம்புளானோன்
வில்லிகட்கதரன் சடையன் சிறுவிதி மகாரி
மோகம் உயர் பத்திரைக்குநாயகன் குரோதன்
முக்கணன் பத்தாம் வீரபத்திரன் பேர் மொழியே
**8
#8
மொழிபுலவன் வேலன் சேய் குகன் அமரர்தளவாய்
முருகன் காங்கேயன் வேள் சூர்ப்பகை மயூரன்
குழகன் மால்மருகன் கார்த்திகைமகன் விசாகன்
குமரன் ஆறிருகரன் சண்முகன் சடாக்கரத்தான்
அழகன் சேவலங்கொடியோன் கடம்பன் வெற்பன் சுவாமி
அமணழித்தான் குறிஞ்சிமன் கற்பகஎறிந்தோன் சேந்தன்
எழிலிளையன் செட்டி வள்ளி தெய்வானைகேள்வன்
ஈசன்மகன் சரவணபவன் கந்தன்பேரே
**9
#9
பேருலகில் ஆறுதலத்துஇறைவன் உமைசிறுவன்
பேசு உருத்திராயுதத்தான் நாரதசினேகன்
தாருகசங்காரி அவுணரைக்கடிந்தோன் குரவன்
சங்கராசாரி திருப்புகழன் வெறியாட்டான்
சீருறு கீரனைக்காத்தோன் அருணகிரிக்கருள்வோன்
செங்கிடாயூர்தி அயன்சிறைபுரிந்துவிடுத்தோன்
மேருஅசைத்தோன் இலக்கத்துஒன்பதின்மர்முன்னோன்
வேடன் ஒன்றோடு ஐம்பதும் சுப்பிரமணியற்கு ஆமே
**10
#10
ஆனைவாகனன் முடுவலாளி ஆரியனோடு
அரிகரபுத்திரன் புறங்காப்பான் அற்பசனந்தன்
கானுறு குத்திரதேவன் சாதவாகனத்தான்
கடல்வண்ணன் காரி தவளக்கண்ணன் பூதன்
ஏனைய கோழிக்கொடியோன் பூரணை புட்கலை சேர்
இறை யோகி தண்டதரன் அறங்காப்பான் கையன்
பானலணிவான் சாத்தன் வனமூர்த்தி நீண்டோன்
பரியூர்தி ஐயன் பேர் இருபான்முத்தொகையே
**11
#11
முத்தன் கேத்திரபாலன் சட்டையன் கபாலன்
முடுவல்சேனையன் வடுகன் நிருவாணி காரி
சித்தன் காலனையூர்ந்தோன் தமிழ்க்கிழவன் குமரன்
திரிசூலன் கருங்குதிரையாளிபிள்ளை நக்கன்
வித்தகன் ஞாளியையூர்தி வயிரவன் பத்தொன்பான்
விளங்கு பெயராம் வடுகன்தாய் வடுகி மோடி
குத்திரி வெம் காடுகாள் மாரியொடு கொற்றி
கொடியை மூதணங்கு பெயர் எட்டென விண்டனரே
**12
#12
விண்டரி அச்சுதன் கண்ணன் கரியவன் கோபாலன்
விட்டுணு நாரணன் வாசுதேவன் காகுத்தன்
கொண்டல்வண்ணன் கருடகேதனன் கருடாரூடன்
கோவிந்தன் மால் மதுசூதனன் அனந்தசயனன்
வண்டுருவன் நாரசிங்கன் வாமனன் முராரி
மாயன் நெடியோன் திரிவிக்கிரமன் வனமாலி
தண்டன் உபேந்திரன் பகவன் சங்குசக்ரபாணி
சம்புபிரான் படியிடந்தோன் உந்திபூத்தோனே
**13
#13
பூவளந்தான் நவநீதசோரன் நிரைமேய்த்தோன்
பூமகள்கோன் திருமார்பன் உலகுண்டோன் வலவன்
காவலன் தாமோதரன் மாதவன் வாமன் நேமி
காளிகாமர்த்தனன் கேசவன் சார்ங்கபாணி
தேவகிசேய் மதன்தந்தை அயன்தந்தை முகுந்தன்
சீதரன் சனார்த்தனன் பேய்முலையுண்டோன் அனந்தன்
கோவலன் ராகவன் ராமன் கடல்துயின்றோன் ஆயன்
குவடெடுத்தோன் கடலையடைத்தான் புருடோத்தமனே
**14
#14
தமன் விசையசாரதி பத்தவதாரன் ஆதி
சகடுதைத்தான் ஐம்படையான் பாண்டவர்சகாயன்
உமைதுணைவன் பின்னைமன் பீதாம்பரன் வராகன்
உயர் பதுமநாபன் அறிதுயிலன் அனந்தபாலன்
கமலலோசனன் தாசரதி பெருமாள் எண்பான்
காமபாலன் பலபத்திரன் முசலி வெள்ளை
அமர் நீலாம்பரன் ஓர்குண்டலன் இரேபதிமன்
அனந்தன் அலாயுதன் பனந்தாமன் பலதேவனுக்கே
**15
#15
தேவர்முதுவோன் ஞானி வரன் சதானந்தன்
திசைமுகன் மால் உந்திவந்தோன் தாதாவிதாதா
மேவும் எண்கணோன் வேதன் பரமேட்டி குரவன்
விரிஞ்சன் இரணியகெற்பன் நயன் அன்னமூர்தி
தாஇல் படைப்போன் விதி மண்பொதுத்தந்தை சூதன்
சம்புகம் மந்தணன் கமலயோனி பிதாப்பகவன்
பூவிருந்தோன் அனக்கொடியோன் கலைமகள்மணாளன்
போதன் இறை சதன் பிதாமகன் பிரமன்பெயரே
**16
#16
பெயர்பெறு பொன் பொறி விமலை மாவாக்கம் இளையாள்
பெரும் திருப்பூமான் சலசை கமலை அரிப்பிரியை
பயவுததிமகள் விந்தை இந்திரை தாக்கணங்கு
பதுமை சீதேவி செய்யாள் செல்வி இலக்குமிபேர்
நயவாணி பாரதி பாமகள் வாக்கி கலைமான்
ஞானி புராதனி உலகமாதா வெண்கமலை
சுயபனுவலாள் பூரவாகனி காயத்ரி
சொல் சாவித்திரி இசைமான் பிராமி நாமானே
**17
#17
மானதன் வேள் இரதிநண்பன் உருவிலி மனோபு
மாரன் மதுசகன் சம்பராரி தென்றல்தேரோன்
வேனிலான் மதன் அழகன் மோகன் வில்லி மால்சேய்
மீன்கொடியோன் மதிக்குடையோன் பெண்படையோன் வசந்தன்
ஆன மனோசன் கரும்பன் அங்கசன் கந்தற்பன்
அனங்கன் பூமகன் சேய் சித்தசன் பஞ்சபாணன்
கானிறை பூவாளி கிளிப்பரியன் இருள்களிற்றோன்
கடல்முரசன் காமன் மனோபவன் மதனன்பேரே
**18
#18
மதத்து அசுரவயிரி அரி மருத்துவன் கோசிகன் மால்
வச்ரதரன் புருகூதன் போகி முகிலூர்தி
சதக்கிருது புரந்தரன் வாசவன் மகவான் புலவன்
சக்கரன் பொன்னகர்க்கிறை ஆயிரங்கண்ணன் வேந்தன்
அதுச்சபன் கோபதிகாரி வேள்விமன்னன் கரியோன்
அமரர்கோன் சசிகேள்வன் மருதநிலத்ததிபன்
கதிப்புரோகிதன் பாகசாதனன் வலாரி
காமன் அயிராபதன் உச்சிரவாவுக்கிறையே
**19
#19
இறை ஆகண்டலன் சம்பராரி பஞ்சநிதியோன்
இந்திரன் சுநாசி தேவேந்த்ரன் முப்பானெண்பேர்
அறை சசி புலோமிசை சுந்தரி இந்திராணி
அயிராணி பேராகும் அரம்பை திலோத்தமையோடு
உறுவசி மேனகை சசியும் பஞ்சவேசையர் ஆம்
உயர் தருச் சங்குடன் பதுமம் சுரபி சிந்தாமணியும்
குறைவில் ஐந்துநிதி மகவான் ஏவல்கேட்பதுவாம்
கொண்ட விண்ணாட்டிறை கொடிதான் இடி எனப் பேசுவரே
**20
#20
சுவற்கர் உம்பர் விபுதர் உயர்நிலையர் வரர் வானோர்
சுரர் அமரர் கடவுளர் புத்தேளிர் ஐயர் மெய்யர்
தவத்தர் அண்டர் அமுதர் விண்ணோர் மேலோர் ஆதித்தர்
தானவர் பண்ணவர் பகவர் அதிதி சுதர் தீர்த்தர்
அவிப்புலவர் புங்கவர் பட்டாரகர் இலேகர்
ஆத்தர் இமையோர் அவுணாரியர்தேவர் முப்பால்
நவக்கடவுள் இயவுள் புத்தேள் சூரணங்கு தேவு
நல்ல தெய்வம் தேவதம் எட்டு என்பர் பொதுப்பேரே
**21
#21
பொதுநாமம் தெய்வம் மின்னார்தமக்கு அணங்கும் சூரும்
புத்தேளிர் பெண்கள் பெயராம் மகளிர் ஆகும்
முதியள் கெடலணங்கு தவ்வை கலதி சீகேடி
முகடி கொடித்துவசி கரவாகி சேட்டையின்பேர்
மதி தடினி துனி விமலை திரிபதகை கங்கை
வரநதி தீபவதி மந்தாகினி பகீரதி வா
னதி சனுவி உந்தி சிந்து தீர்த்திகை நீர்மடந்தை
நளினி சகத்திரமுகி தூய்தாக்கி ஆபகையே
**22
#22
பகும் அரக்கர் தயித்தியர் தண்டார் அவுணர் அசுரர்
பண்ணவர் மாற்றார் நிருதர் திதிமைந்தர் யாதர்
தகுவர் நிசிசரர் பிசிதாசனர் வக்ரதந்தர்
தானவர் இராக்கதர் மெய்காப்போர் கார்வண்ணர்
மிகு கடங்கடாம் இராக்கதர் அசுரர் பொதுப்பேர்
விஞ்சையர் கோசரர் சேடியோருடன் சேணியரும்
ககன வித்தியாதார்பேர் கந்திருவர் யாழோர்
காந்திருவர் கிம்புருடர் கின்னரர் ஆம் பாரே
**23
#23
பாரிடம் சாதகம் சாதம் கிருத்திமமே கூளி
பலிகவரும் குறள் ஆறும் பூதப்பேர் ஆகும்
சூர் அலகை கணம் மண்ணை கூளி வெறி பாசம்
சோகு மயல் கடி அழல் பிரேதம் வேதாளம்
சார் இணங்கன் கழுது குணபாசி சவம் குணபம்
சாவு நிசிசரம் வெள்ளை ஈமசம் பசாசு
கூரும் அருள் வியந்தரம் வெம் கால் கிரகம் சங்கை
குணங்கு பிணம் அறிவிலி முப்பானொன்றும் பேயே
**24
#24
பானு அழல் அங்கி எரி தழல் கனலி தபனன்
பாவகன் அங்காரகன் தீ வசுத் தூமகேது
தீனி சுடர் தகனன் அனல் ஞெகிழி சித்ரபானு
சிகி தேயு வார் அலரி சோதி தென்கீழ்த்திசையோன்
ஆன தனஞ்செயன் சுபலன் சசி சாதவேதா
வழனம் வன்னி முளரி கனல் பகவன் வாயு சகன்
ஊன் எழுநாக் கொல்லி அசமூர்தி உதாசனனே
உதிரன் நெருப்பு அக்கினி நாற்பானொன்றாய்க் காட்டே
**25
#25
காட்டுஅழல் காவகம் தாவம் ஆகும் பாவகன் தீக்
கடவுளாம் கடையனல் உத்தரம் மடங்கல் வடவை
மூட்டு வடவாக்கினி ஊழித்தீ ஆம் அனையார்
மூள் சுதை சுவாகா ஆம் சுவலை தீ நடை ஆம்
ஆட்டு பொறி புலிங்கம் ஆம் முற்கை தீக்கொள்ளி
அரணி ஞெலி தீக்கடைகோல் புகை குய்வு வெடி குய்
பூட்டு அரி தாளிப்பு ஆவி நறை தூமம் ஒன்பான்
புகையுறை ஒட்டுறை நிராலம்பனம் மூன்று அரிதே
**26
#26
அரி மடங்கல் கால் கூற்று நடுவன் இமன் சூலன்
அறவன் மால் சமன் மறலி அந்தகன் தென்திசைக்கோன்
தருமன் நமன் தென்னவன் செங்கோல்கடவுள் பாசன்
சண்டன் ஞமன் கணிச்சியன் காரானூர்தி காலன்
கரியன் வைவச்சுதன் தண்டதரன் இருபத்தாறும்
காலன்பேர் குத்தனும் சித்திரனும் அவன் கணக்கு ஆம்
வரநதிமன் பாசதரன் குடதிசையன் பெருக்கன்
வலையாளி சலபதி சுறாமன் வருணனுக்கே
**27
#27
வருணம் அறல் மழை அலர் புட்கரம் மாரி புவனம்
வாரி கார் வாருதகம் வனம் கமலம் பவனம்
இரதமம் சம்பரம் பயசு சலிலம் கீலாலம்
ஏரி கயம் பானியம் புனல் ஆலம் நாரம்
கருவி அயம் பதம் அளகம் அம்பு கோ வனிகம்
கவந்தம் சீவனம் சிந்து பயம் சலம் அம்புதம் கம்
பரம் அமுதம் அங்குசம் அப்புடன் அகிலம் தோயம்
பாணி வெள்ளம் காண்டம் வாருணம் நீர் ஐம்பானே
**28
#28
பாயும் கால் வளி உலவை நீழல் சமீரணன் கம்
பவ மானே கோடை கொண்டல் பரிசனன் மால் உரவோன்
சாய் உரகவர்த்தி கந்தவாகனன் ப்ரவஞ்சன்
சலனன் உயிர் ஒலி ஊதை கோதை அரி கூதை
வாயு மருத்து உயிர்ப்பு அனிலம் கந்தவகன் புலனே
மாலி கந்தன் ஆசுகம் சட்கோணன் மாருதமே
ஆயுசகன் வாதம் வந்து கூதிர் வங்கூழ் வேற்றலாம்
பவனம் வாடை சதாகதி காற்று ஏழாறே
**29
#29
ஆறு தென்றல் மலையக்கால் வசந்தன் மந்தாநிலமே
அரும் சிறுகால் இளம்கால் தென்கால் தென்றி மென்கால்
மீறும் மந்தமாருதம் பத்து ஆம் கோடை மேல்கால்
மிகு வடந்தை வாடை வடகால் கொண்டல் கீழ்கால்
தேறு உயிர் அபானன் உதானன் சமன் வியானன்
தேவன் நாகன் கூர்மன் தனன் கிருதன் தசக்கால்
சூறை சாரிகை சுழல்கால் கூதிரும் மூதிருமே
சொல் பனிக்கால் ஊழிக்கால் சண்டமாருதமே
**30
#30
உதியரசன் புருடவாகனன் இயக்கர்வேந்தன்
ஒரு தனதன் இருநிதியான் மரகதன் விமானன்
பதிசிநேகிதன் கனகன் மந்திரி புட்பகத்தான்
பாக்கியன் பிங்கலன் கின்னரேசன் அளகேசன்
நிதியிறைவன் முட்கரன் வச்சிரவணன் பொக்கிஷனே
நிறைசெல்வன் சிவிகையன் மூன்றேழ் குபேரன்பேர்
மதி அருக்கர் பன்னிருவர் உருத்திரர் பன்னொருவர்
வசுக்கள் எட்டு மருத்தர் இரண்டு அனைத்தும் வானவரே
**31
#31
வானம் வெளி மங்குல் அண்டம் அம்பரம் கோ அனந்தம்
மாகம் விசும்பு ஆசினி மீ வான் கெதி அந்தரம் கம்
தானம் உம்பர் நபம் காயம் விண்டலம் புட்கரம் விண்
சார் வியோமம் ககனம் மாதிரம் குண்டலம் தோது
ஊனமிலாக் குடில் வேணி ஆகாசம் முப்பான்
ஒரு பெயராம் அண்டகடாகம் கடகம் ஓடு
மேனிலை பித்திகை தோடு கடம் அதற்கு ஏழ்பேராம்
மேருவின் தென்பால் வடபால் அயனம் இரு கதியே
**32
#32
கதிரவன் என்று அருணன் ஊழ் அலரி சுடர் இரவி
கனலி தினகரன் பருதி தரணி இனன் சண்டன்
உதையன் அரி பானு திவாகரன் வேந்தன் அழலோன்
ஒளி பதங்கன் பாற்கரன் தீவிரன் வெய்யோன் சவிதாப்
பிதிர் அனலி எழுபரியோன் பகல் சோதி விசையன்
பேசு பனிப்பகை விலோசனன் எல்லி தபனன்
இதையன் அண்டயோனி தினமணி சான்றோன் மாலி
இருள்வலி வித்தகன் சூரன் விண்மணி ஆதவனே
**33
#33
ஆதித்தன் ஞாயிறு ஆயிரம்கிரணி பகலோன்
அருக்கன் எல்லை சம்பு திமிராரி விருச்சிகனே
ஓதுற்ற வலஞ்சுற்றி கண்ணன் மார்த்தாண்டன்
உலகவிளக்கு ஓராழியான் கமலபாந்தி
சூதற்ற மித்திரன் செங்கதிர் அறுபானிரண்டும்
சூரியன் ஆம் பருதி வட்டம் விசையமும் மண்டிலமும்
வேதிக்கும் ஒளிர் கிரணம் கரம் கிளர் தீவிரமாம்
வெயில் என்றூழ் ஆதவம் ஊர்கோள் வட்டநிலையே
**34
#34
நிலவு பிறைமதி அமுதகதிர் திங்கள் ஆலோன்
நிசாபதி அம்புலி குமுதநண்பன் இந்து களங்கன்
கலையன் முயற்கூடு சசி குரங்கி பசுங்கதிரோன்
கலாநிதி நிசாசரன் சுதாகரன் குபேரன்
அலவன் இமகரன் சாந்தன் குளிரி அல்லோன் வேந்தன்
அரி குடோதயன் மானி உடுபதி தண்சுடரே
நல விது தானவன் சோமன் சந்திரன் ஏழைந்தாம்
நல் நிலாச் சந்திரிகை நிலவின்பேர் அறியே
**35
#35
அறிவோன் அங்காரகன் வக்கிரன் பவுமன் குருதி
அரத்தன் நிலமகன் அனலன் குசன் பூமன் ஆரல்
பிறதாபன் வளவன் அழல் மங்கலன் சேய் உதிரன்
பெரும் தீக்கோண் மேடன் விருச்சிகன் செவ்வாய்க்கு இருபான்
நெறி மால் பண்டிதன் கணக்கன் மதிசேய் தேர்ப்பாகன்
நிபுணன் அனுவழி சாமன் வாக்கி புந்தி புலவன்
செறி தூதன் அருணன் அறிவோன் சவுமன் பச்சை
சிந்தைகூரியன் மேதை புதன் பதினொன்பதுமே
**36
#36
பதி பிரகற்பதி பீதன் குருச் சீவன் அரசன்
பகர் வேந்தன் அந்தணன் பொன் சுரர்அமைச்சன் ஆசான்
முதிய சிகண்டிகன் வேதன் ஆண்டளப்பான் எனும் பன்
மூன்றும் வியாழப்பெயர் ஓர்கண்ணன் வெள்ளி சுங்கன்
துதி கவி காப்பியன் உசன் பாற்கவன் பளிங்கு மழைக்கோள்
சுகன் புகர் சல்லியன் சீதன் போதி புயல்காணன்
மதி அசுரகுருத் திங்கள் பிரசுரன் ஒள்ளியனும்
வகுத்து இருபான் சுக்கிரன்பேர் தொகுத்தனர் காரணரே
**37
#37
காரி கதிர்மகன் சவுரி காக்கைவாகனத்தான்
கரியன் நோய்முகன் நீலன் முதுமகன் பங்கு அந்தன்
மூரி மேற்கோள் சந்தில் சாவகன் கீழ்மகனே
முடவன் மந்தன் கலியன் விசி சனி பதினொன்பான்பேர்
சீரிய ராகுவின்பெயரே தமம் கரும்பாம்பு ஆகும்
சிகி மதியின்பகை கேதுச் செம்பாம்பு அதாகும்
கூரில் சனிமகன் மாந்தி குளிகன் முப்பேர் ஆகும்
கோள் ஏழும் தொடுத்த நாள் கிழமையும் வாரமுமே
**38
#38
மேடம்அதற்கு ஆட்டின்பேர் இடபம் விடைப்பேர் ஆம்
மிதுனம் தாரணம் கவைஞன் தண்டு யாழ் இரட்டை
பாடல் விழாச் சயமகள் பாடவை ஆம் கற்கடகம்
பயில் சேக்கை ஞெண்டின்பேர் புலி சிங்கப்பேர்கள்
கோடு சிங்கப்பேர் பெண்கள்பேர் கன்னிப்பேர் ஆம்
கோல் சீரை தூங்கல் செட்டி வாணிகன் கட்டளை தூக்கு
ஆடு நிறை துலை துலாம் தொடர் மணி பற்பனும் தேள்க்கு
ஆம் பெயரும் விருச்சிகம் வில்பெயர் தனுசு ஆம் மகளே
**39
#39
மகரம்அது கலை புல்வாய் சுறமான் என்று உரைப்பார்
வரு பாண்டப்பொதுப்பேரே கும்பம்அதாம் மீன்பேர்
பகரும் மீனப்பெயர் ஆம் ஓரையில் இராசி
பவனமும் ஆம் முதற்றொட்டு மூன்று வட்டமாகப்
புகு நந்தை பத்திரையே சயையுடனே இருத்தை
பூரணை ஆம் திதி பக்கம் ஆம் இருக்கம் தாரை
பகு சிதம் தாராகணம் நாள் உற்கை சுக்கை சோதி
பம்பு உடு மீன் கணம் தினம் பன்மூன்று நக்கேத்திரமே
**40
#40
திரம் முதல்நாள் ஏறு இரலை மருத்துவன் ஐப்பசி யாழ்ச்
சென்னியுடன் பரிப்பேரும் அச்சுவதி நாமம்
பரணி கிழவன் சோறு கங்குல் முக்கூட்டுஅடுப்புப்
பகல் காடு தாழி தார் சோடு தாசி தாதி
தருமன்நாள் பூதம் இவை பதினாலும் அதற்காம்
சாற்று அளகு இறால் ஆரல் வாணன் அங்கி அளக்கர்
இருவை அறுவாய் அறுமீன் நாடன் நாவிதனோடு
எரிநாள் கார்த்திகைப்பேர் பன்னிரண்டு என வைத்தனரே
**41
#41
வையம் உருள் பிரமன்நாள் சகடு ததி பண்டி
மானம் பார் தேர் ஊற்றால் ஐமீன் உரோணி
மொய் உரோகணி அதின்பேர் மதிநாள் பேராளன்
மும்மீன் இந்திரன் பாலை நரிப்புறம் மார்கழி ஆம்
வெய்யவன் மான்தலை மாழ்கு மதியும் மகசிரம் ஆம்
வியன் சிலை யாழ் இறை செங்கை மூதுரை ஆதிரைப் பேர்
பொய்யில் கழை கரும்பு பிண்டி அதிதிநாள் பாலை
புணர்தம் ஆவணம் புனிதம் புணர்பூசம் கொடியே
**42
#42
கொடிறு குருநாள் வண்டு தைமதி பாற்குடங்கர்
குளம் பூசம் பாம்பு ஆயில் கவை பணிநாள் நான்கும்
இடுவது ஆயிலியப்பேர் நெல் ஞமலி வாய்க்கால்
இசை வேள்வி கொடுநுகம் முன்சனி பிதிர்நாள் மாசி
படியும் வேட்டுவன் ஒன்பான் மகம் எலி நாவிதனே
பகவதிநாள் கணை துற்கை இடைச்சனியும் பூரம்
கடையில்வருசனி நெய்த்தோர் புயல்நாள் சூரியன்நாள்
காணுந்தி பாற்குனி பங்குனி ஏழ் உத்திரமே
**43
#43
உத்தமக் கைம்மீன் கன்னி கவுத்துவம் காமரமே
உடன் களிறு தீநாள் ஐவிரல் நவ்வி எண்பேர்
அத்தம்அதாம் சுவை பயறு துவட்டன்நாள் நடுநாள்
அளக்கும் நெய் மீன் புலி தச்சனுடைப்பேர் சித்திரைக்கு ஆம்
மெய்த் துளக்கு மீன் மரக்கால் காற்றின்நாள் விளக்கு
வீழ்க்கை வெறுநுகம் பதுமம் தீபம் எட்டும் சோதி
முத்தில் விளைநாள் சுளகு காற்றின்நாள் சேட்டை
முறம் வைகாசியும் விசாகம்தனைப் பன்னுவரே
**44
#44
பனைப்பெயர் தேள் மித்திரன்நாள் அனுடநாள்க்கு இசைப்பார்
பாழி இந்த்ரன்நாள் சேட்டை வல்லாரை வேதி
அனல்பெயரும் கேட்டை குருகு ஆனி தேட்கடை வில்
அசுரன்நாள் அன்றில் கொக்கு ஆம் ஏழ்பெயரும் மூலம்
புனல்தினமே உடைகுளம் முற்குளம் ஆம் பூராடம்
பூமிநாள் கூவல் மணி முடி ஆனி ஆடி
தொனித்த கடைக்குளம் விசுநாள் உத்திராடம் ஓணம்
சோணம் முக்கோல் மாயவன்நாள் உலக்கை சிரவணமே
**45
#45
வண் கொடிப்பேர் பறவை ஆவணி நள்ளு வசுநாள்
வயிரம் ஆம் அவிட்டப்பேர் வருணன்நாள் சுண்டன்
பண் குன்று செக்குப் போர் சதையப்பேர் நாளி
பாதநாள் முற்கொழுங்கோல் மிசையும்நாள் புரட்டை
பெண்களில் பூரட்டாதிப்பேர் நீபம் முரசு
பிற்கொழுங்கோல் அரசு அறிவன் உத்திரட்டாதிப்பேர்
நண் கடைமீன் இரவிநாள் தொழுப் பெருநாள் சூலம்
நாவாய்ப்பேர் புருடநாள் இரேபதிக்கு ஆம் சால்பே
**46
#46
சாலி அருந்துதி வடமீன் முப்பெயராம் தினமே
சமையம் எல்லை உடுக் கால் ஆனியம் திவாத் திவசம்
ஏல்வை நாள் பகல் வைகல் அல்கலும் பன்னிரண்டாம்
எல்லை கால் பதம் போழ்து கொன் பொழுது வேலை
காலை செவ்வி யாமம் அமையம் பாணி எல்வை
காலம் போது ஈரேழ்நாழிகை நாழி கடிகை
மேல் இருத்தை பதம் கன்னல் நாடி நாழிகை ஆம்
விகலை கலை காலநுட்பம் துடியுடன் ஆம் கணமே
**47
#47
கணம் இறை மாத்திரை லேசம் ஒல்லை சிறுவரையே
காலவிரைவு ஆம் நொடியும் வல்லையும் மற்று அதற்காம்
பணியும் நெடும்போதும் நீட்டித்தல் நெடித்தல்
பாணித்தல் நெடுநாள்பேர் பானாளே அரைநாள்
அணி திவா எல் பகல்பேர் எல்லி நிசாக் கங்குல்
அல் வியாபரி மாலை சாமம் நத்தம் யாமம்
உணரும் நிசி யாமினி இராக் கருக்கல் இரவு ஆம்
உச்சி மத்தியானம் நடுப்பகலே நன்பகலே
**48
#48
நன் புலரி விடியல் வைகல் வைகறைப்போது ஆகும்
நவில் உதையம் காலைப்பேர் யாமம்அதாம் சாமம்
இன்பமுறு சந்தி அந்தி சாயம் மாலையின்பேர்
இருள் நீலம் துணங்கறல் கச்சளம் தமம் திவாந்தம்
வன்பின் அந்தகாரம் அரி கருத் திமிரம் மாயை
மாசும் ஆம் பூரணைராச் சிலிவாலி ஆகும்
அன்பு அமராரக் குகு ஆம் அமவாசி சுடர்க்கூட்டு
அமையும் ஆம் பவ்வம் உவாப் பூரணைப்பேர் வருமே
** 49
#49
வருடம் ஆயனம் சாமம் சமை ஆண்டு அப்பித்தம்
வற்சரப்பேர் ஆறு ஆகும் அயனம் அதில் பாதி
பருவம் இருது ஆனியம் ஆம் மதி திங்கள் மாதம்
பல் ஊழி மடங்கல் உகம் முடிவு அயன்நாள் கற்பம்
பெரு வயது ஆயுகம் ஆயுள் வாணாள் என்றாகும்
பின்றை பிற்றை பின்னை பின்பு பிந்தி பின்நாள் ஆகும்
நெருநல் முன்பு முன்றை முற்றை முன்னை முந்தை முந்து
நேற்று நென்னல் ஒன்பானும் முன்நாள் காரிகையே
**50
#50
கார் கூதிர் முன்பனி பின்பனியொடு இளவேனில்
கடுவேனில் ஆறும் ஆவணி முதல் ஈரிரண்டாய்ச்
சேர் ஆடி வரை நிரையாய்ப் பெரும்பொழுது என்றாகும்
சிறுபொழுது காலையும் நன்பகலுடன் எற்பாடும்
ஓர் மாலை யாமமும் வைகறையும் என ஆறாய்
உதித்து ஐந்து கடிகை முதல் ஒவ்வொரு பத்து ஆகும்
கூர் மாதப்பிறப்பு விசுச் சங்க்ராந்தி ஆகும்
கோடை வேனில்காலம் சாரல்காலம் மழையே
**51
#51
மழை பரம் விண் கந்தமமை கொண்டல் மஞ்சு சீலம்
மால் விளைவு முகில் கருவி சீமூதம் சீதம்
பொழி கனம் செல் வார் குயின் கொண்மூத் தாராதாரம்
புயல் மங்குல் சீமுகம் பயோதரம் அம்புதம் கம்
எழிலி அம்பு புகை விசும்பு சலதரம் கார் மாரி
இளை குளிரி ககனம் விண்டு அப்பிரம் வான் கந்தரம் மை
அழை மேகம் நாற்பது என்றாம் விடியொலி செல் மடங்கல்
அசனி உரும் இகுளி விண்ணேறு அனலேறும் இடியே
**52
#52
இடி சவலை தடி தடித்துச் சஞ்சலை மின் சம்பை
இலங்கு கனருசி மின்னல் வித்துருவோடு ஒன்பான்
வடி திவலை துளி தூவல் சொரி சிதறி தூறல்
மாரி பிதிர் வானம் சீகரம் வருடம் பெயலே
குடி உததி ஆலி சிகரம் தூற்றல் மழை ஆம்
கொடும் சோனை பனித்தல் விடாமழை ஆம் ஆசாரம்
நெடிய மழை தலையல் மழைவிடுதல் இமம் துகினம்
நீகரம் மூன்றும் பனிப்பேர் சிகம் எனவும் உறுமே
**53
#53
உறை தளி சீகரம் தலையல் சிதர் தூவல் ஆலி
உளி திவலை துமி பெயல் பன்னொன்றாகும் துளிப்பேர்
நிறை கனோபலம் ஆலி எனும் ஆலாங்கட்டி
நீண்டிடும் இந்திரதனு வான்சிலை பச்சைவில் ஆம்
மறைமுனிவர் கருடர் தயித்தியர் இயக்கர் சித்தர்
வானவர் கிம்புருடர் படர் கின்னரர் கந்தருப்பர்
பொறை நாகர் உடுப்பேய் விஞ்சையர் மாகவாசர்
போகர் சாதகர் அரக்கர் கணம் பதினெட்டுக்கே
** முதலாவது தெய்வப்பெயர்த் தொகுதி முற்றும்
@2 இரண்டாவது மக்கட் பெயர்த் தொகுதி
**54
#1
அடிகள் இருடிகள் பெரியோர் உறுவர் தவர் முனைவோர்
அறவர் தபோதனர் துறவோர் முனிவர் வல்லோர் நீத்தோர்
படிவர் இலிங்கிகள் யோகர் புலன்வென்றோர் தடிந்தோர்
பண்ணவர் அந்தணர் முதியோர் பற்றிலர் அகாமர்
சடைமுடியோர் மாதவர் தாபதர் அறிஞர் தூயோர்
சார்பில்லோர் உயர்ந்தவர் மோனிகள் ஐயர் மெய்யர்
ஒடிவில் கனிமூலசாகாசனர் எண்ணான்கோடு
ஒன்றும் அருந்தவர் நாமம் என்று சொல்லும் தமிழே
**55
#2
தமிழ்முனிவன் கும்பன் உருத்திரசமனன் பொதிகா
சலன் பொருனைத்தலைவன் வாருதியுண்டோன் குறியோன்
அமர்விந்தம் பிலம்புகுத்தோன் லோபாமுத்திரைமன்
அரிமதநாசனன் வில்வலாரி அகத்தியன்பேர்
உமிழ்சமியர் திகம்பரர் காளாமுகர் பாசுபதர்
யோகர் சைவர் மால்சமையமுனிவர் பாகவதர்
திமிரர் உருகர் சாவகர் மாசீவர் புத்தர் சமணர்
தேரர் சாரணர் பவுத்தர் சாக்கியர் சீவரரே
**56
#3
வரமுனிவர் தொழுகுலத்தோர் மேற்குலத்தோர் உயர்ந்தோர்
மறையோர் வேதியர் வேதர் முப்புரிநூல்மார்பர்
இருபிறப்போர் பூசுரர் நூலோர் ஆதிவருணர்
எரிவளர்ப்போர் விப்பிரர் ஆய்ந்தோர் சடங்கர் பார்ப்பார்
விரி அறவோர் மெய்யர் முத்தீச்செல்வர் அந்தணாளர்
விந்தமாலையர் வேதபாரகர் வேள்வியினோர்
பெரியர் ஐயர் அந்தணர் பிராமணர் நாலேழும்
பேர் பிரமசாரி வன்னி ஆம் எனச் சொல் அனமே
**57
#4
அனக்கொடியும் கமலமாலையும் தருமமுரசும்
அந்தணர்க்கே ஆம் ஓதல் ஓதுவித்தல் வேட்டல்
கனத்தின் வேட்பித்தல் ஈகுதல் ஏற்றல் ஆறு
கருமம் அவர் தொழில் ஆகும் பாரத்துவாசி
தனுக்குரவன் கும்பசன் வேதிக்கொடியோன் துரோணா
சாரியன்பேர் பண்டிதர் நல்லோர் சான்றோர் ஆன்றோர்
வினிப் புலவர் உலகு மேதாவி தக்கோர் உயர்ந்தோர்
மிக்கோர் ஆரியர் விசாரிதர் அறிஞர்க்குஅவையே
**58
#5
அவை கலைஞர் மேதையர் கற்றவர் கவிஞர் மூத்தோர்
அறிஞர் கவி நாவலர் பாவலர் புலவர் சூருச்
சவை விபுதர் விற்பனர் வித்துவான் முதுவோர் சாடுச்
சாருதி சங்கமும் அவர்க்காம் குரவன் இறை போதன்
பவம்இல் உரவோன் அடிகள் அத்தன் ஐயன் ஆண்டோன்
பணிக்கன் ஆசான் சாமி கோமான் உபாத்தி
நவைஇல் பெருமான் அதிகன் பதி ஈசன் ஓசன்
ஆதன் ஆசிரியன் ஆசாரியன் தேசிகனே
** 59
#6
தேசபதி தோன்றல் கோ இறை கோன் மண்டலிகன்
செம்மல் விறலோன் சுகியன் குரிசில் மல்லன் கோமான்
ஈசன் நரபதி லோலன் கொற்றவன் பார்த்திபன் மன்
ஏந்தல் ஆண்டகை துரை பூபாலன் அண்ணல் வேந்தன்
பேசு அரசன் நிபுணன் அரன் விசையன் வழாஅன் பொருநன்
பெருந்தகை பிரான் இறைவன் ஆதன் மன்னன் பெருமான்
நேசமுடியோன் காந்தன் தலைவன் தாட்டிகனே
நிருபன் நாயகன் கொழுநன் விடலை பூபதியே
**60
#7
பதி முதல்வன் புரவலன் ஆதிபன் தீரன் பூபன்
பதிதன் காவலன் மகிபன் மீளியொடு காளை
அதிபன் ஐம்பத்தாறுபெயர் புவிராசர்க்கு உரைப்பார்
அடுத்து ஓதல் ஈதல் படைக்கலம்பயிறல் வேட்டல்
எதிர் பகைமேற்சேறல் புவிபுரத்தல் அவர் தொழிலாம்
எழு படை கூழ் குடி அமைச்சு நட்பு அரண் ஆறு உடைமை
நிதியின் அறம் பொருள் இன்பம்தனை அறத்தான் மறத்தான்
நிருமித்தல் அரசரியல் நெறிநடத்தல் முறையே
**61
#8
முறை அரிச்சந்திரன் நளன் புரூரவாச் சகரன்
முசுகுந்தன் கார்த்தவீரனும் சக்கரவிருத்தர்
திறைகொள் விராடன் காரி நிருதி துந்துமாரி
செம்பியனே சகரன் நளன் முதல்வள்ளள் ஏழாம்
அறி கன்னன் சிசுபாலன் சந்திமான் சந்தன்
அந்திமான் வக்கிரன் அக்குரன் இடையேழ்வள்ளல்
பெறும் மலையன் எழிலி நள்ளி பசுந்தொடையன் பாரி
பேகன் ஓரியும் கடையேழ்வள்ளல் மூவகையே
**62
#9
வகுத்த பாரதர்குரு கோத்திரர் கவுரர் பவுரர்
வழிப்பேராம் பனைக்கொடியோன் சரவணையில்படுத்தோன்
பகுத்த காங்கயன் பிரமசாரி வீட்டுமன்பேர்
பாண்டுகுந்திசேய் முரசுக்கொடியன் உதிட்டிரனே
தகைப் பொறையன் குவளைமாலையன் தருமன்பேர் ஆம்
சற்பதுசன் காந்தாரிதிருதிராட்டிரன்சேய்
தொகுத்த வணங்காமுடியன் வலம்புரிமாலிகையான்
சுயோதனன் ஐந்தாம் திரியோதனன்பெயர் கன்னிகையே
**63
#10
கன்னன் அங்கர்கோன் கச்சைக்கொடியோன் கானீனன்
கதிர்சேய் குண்டலம் ஆம் மாருதி பிருகோதரனே
மின் இடும்பிமன் கையுரன் சிங்கதுசன் தண்டன்
வீமன்பேர் காண்டிபன் பற்குனன் சைவசாசி
தன் அனுமக்கொடியன் அல்லற்குருப் பாத்தன் விசையன்
தனஞ்செயன் சுவேதவாகனன் மகவான்பாலன்
பன்னும் விவற்சுனன் காண்டாவனப்பகை கிரீடி
பாசுபதன் கிருட்டிணன் அர்ச்சுனன்பெயர் ஆய்மதியே
**64
#11
மதிகுலத்தான் மீனவன் கைதவன் வேம்பின்தாரான்
வழுதி வரகுணன் மாறன் செழியன் வைகைநதியான்
பொதிகையினான் தமிழ்நாடன் கொற்கையன் கூடலினான்
பூழியன் உக்கிரன் குமரிச்சேர்ப்பன் மீன்கொடியோன்
சிதைவுஇல் கவுரியன் முடியோடுதித்தவன் பஞ்சவனும்
தென்னனும் பாண்டியன் மூவேழ் புலிக்கொடியோன் பொன்னி
நதியுடையான் செம்பியன் கோச் சூரியன் மால் வளவன்
நல் கோழிவேந்தன் ஆர்மாலையன் நேரியனே
**65
#12
நேரிவெற்பன் கிள்ளி சென்னி புனல்நாடன் அபையன்
நிகழ் சோழன் பதினைந்தாம் கொல்லிவெற்பன் கோதை
கேரளன் குண்டகன் கோளன் வில்லவன் வஞ்சியினான்
கிரிப் பொருநைத்துறைவன் பூழியன் உதியன் குடகன்
சேரலன் குட்டுவன் வரம்பன் மலையமான் குடக்கோ
சேரமான் பொறையன் வானவன் கொங்கன் போந்தின்
தாரினன் மூவேழ்பெயரும் சேரன்பேர் வேளிர்
தரு குறும்பர் அரிட்டர் புரோசரும் குறுமன்னவரே
**66
#13
மன்னியசூழ்வோர் உழையர் நூலர் எண்ணர் துணைவர் அ
மாத்தியர் மூத்தோர் முதுவோர் தேர்ச்சியர் ஏனாதி
பொன் அமைச்சர் ஆவிர் இவை மந்திரிகள் நாமம்
பொருநர் படைத்தலைவர் சேனேசர் தளவாய்பேர்
நல் நிமித்திகன் சாக்கை வள்ளுவன் உள்ளளப்போன்
நாமம் ஆம் காவிதியர் கணக்கர் அபிதானம்
துன்னு பரியாளர் முறையோர் பரிவாரப்பேர்
தோற்று காரியக்காரர் கருமர் எனும் பரிசே
**67
#14
பரதவர் எட்டியர் நாய்கர் கவிப்பர் இளங்கோக்கள்
பரதர் சீரகத்தாமர் கோவலர் கோவளிப்போர்
பொருள்வேசரதர் உழவர் ஒட்டியர் முத்தொழிலோர்
பொன்னீட்டர் தேசிகர் இச்சியர் வணிகர் இப்பர்
தருமமன்னர் செட்டியர் கோவர்த்தனர் சிலேட்டை
தனவசியர் கோவசியர் பூவசியர் பொதுப்பேர்
உரையோதல் வேட்டல் பசுக்காவல் உபகாரம்
உழவு வாணிபம் வசியர்க்கு ஆகும் அறுதொழிலே
**68
#15
தொழிலாளர் வெள்ளைவட்டர் காராளர் களமர்
சுரநதிகுலேசர் கார்ப்பிணையர் மேழியினோர்
உழவர் பூபாலர் குவளைத்தாமர் சதுர்த்தர்
உயிர்வளர்ப்பார் வேளாளர் அயன்பதத்திலுதித்தோர்
விழைவிளைஞர் பதினைந்தும் சூத்திரர்பேர் இவர்க்கு
வியன் கல்வி உழவு ஈதல் மூவர்தொழில்முடித்தல்
வழிபாடு வாணிபம் ஆம் அறுதொழில் என்றுரைப்பார்
வகுத்த நாற்குலத்தை வழிபடுவோர் மற்றவரே
**69
#16
மற்ற வயித்தியர் பிடகர் ஆயுள்வேதியர் மா
மாத்தியர் வாகடர் மருத்தர் பண்டிதர்பேர் ஏழாம்
வெற்றிஅரைவனர் துவட்டர் தபதியர் கண்ணாளர்
வினைஞர் கொல்லர் சிற்பியர் தட்டார் முனைவர் சொன்னர்
உற்றறிவார் மண்ணீட்டர் கஞ்சர் கலர் கன்னார்
ஓவர் தச்சர் கம்மியர்பேர் பதினெட்டாம் மோகர்
சித்திரர் ஓவியர்பேர் ஆம் தோல் துன்னர் பொல்லர்
செம்மார்பேர் ஆரியர் மிலேச்சர் மிலைச்சருக்கே
**70
#17
சரிதையுறு யோனகர் சோனகர் யவனர் ஆகும்
சங்குஈர்வார் வளைபோழ்நர் ஊன்விற்பார் சூனர்
ஒரு நூலர் கைக்கோளர் தந்துவாயர்த்தரும் ஆம்
உமணரே அளவர் உப்புவாணிகர்பேர் சிற்பி
மருள் உவச்சன்பேர் குயவன் வேட்கோபி வேளான்
மட்பகை சக்கிரி கும்பகாரகன் குலாலன்
தரி குசவன்பேர் சூனர் பொல்லர் துன்னர் சாலி
தைப்போர்பேர் காரோடர் உறைகாரர் மானே
**71
#18
மானி ஏனாதி சீமங்கலி மஞ்சிகனே
மயிர்வினைஞன் தீர்த்தன் நாவிதன்பேர் சண்டாளர்
ஈனர் கனகதர் களைஞர் கொலைஞர் மாதங்கர்
இழிஞர் வங்கர் குணுங்கர் கவுண்டரும் புலையர்பேர் ஆம்
தேனிசையர் வயிரியர்பண்ணவர் சூதர் ஓவர்
சென்னியர் வந்திப்பர் செயிரியர் மதங்கர் பாணர்க்
கானபேர் சக்கிரியும் நந்தியும் செக்கான்பேர்
அடி தூசன் ஏகாலி ஈரங்கோலியனே
**72
#19
கோலிய காழியர் வண்ணார்பேர் ஆம் பாசீகர்
கூவியர் பண்ணியர் பாகர் பாசகரே மடையர்
வாலுவரும் அவர்க்காகும் தமிழ்க்கூத்தர் பேரே
வாயிலோர் கழைக்கூத்தர்பேரே வேழம்பர்
தோல்வினைஞர்பேர் பறம்பர் பாடினிபேர் பாட்டி
சொல் விறலி மதங்கி ஆம் கஞ்சுகி மெய்காப்பான்
சால்வலவர் பண்ணுவார் வாதுவர் மாவலர் மாச்
சானியர்பேர் மதயானைப்பாகர் தோரணரே
**73
#20
தோராத தேர்ப்பாகன் வலவன் சாரதியும்
சூதனும் ஆம் குணுங்கர் சவுண்டிகர் இயவர் குழலர்
ஏராரும் நரம்பர் குயிலுவர் மேழர் யவனர்
இசைப்போர்பேர் படுவர் சவுண்டிகர் பழையர் பிழிஞர்
ஓராய் கள்விலைஞர்பேர் கிழவன் உரியோன்பேர்
உல்லியரே கூவநூலோர்பேர் நீகாமன்
வாராரும் மீகாமன் மீவான் மாலுமியும்
மரக்கலன்பேர் நீகான்பேர் நியவன் என விரும்பே
**74
#21
விருத்தி தொறுத் தொண்டு அடிமை சேடர் தொதுத் தொத்து ஆள்
வீண் கிணகர் தாசர் தொழும்பு ஆம் சேடர் அருகர்
உரித்தர் நண்பர் சிலதர் துணைவோர் தோழர் இணங்கர்
ஒண் பாங்கர்பேர் ஏடா முன்னிலையாம் சிலதி
திருத்தி குழைதண்டிப் பெண்ணுசி பாங்கி தோழி
சேடிபேர் முன்னிலைதான் ஏடி எலாள் ஆம்
வருத்து உழையர் ஏவலரே பரிசனர்பேர் வினையில்
வழியினில் பண்பினில் உரைப்போர் தூதர் என்று ஒத்தனவே
**75
#22
ஒற்றர் உசாச் சாரணர் வேய் வேயர் என நான்காம்
ஓர் வெறியாட்டாளன் வேலோன் படிவன் முருகன்
தெற்று கோமரன் தேவராளிபெயர் ஆகும்
தேவராட்டியின்பெயரே சாலினி என்றோதும்
மற்றை வழிச்செல்வோர்பேர் பதிதர் ஆம் புதியர்
வம்பர் அதிதிகளும் ஆம் நொதுமலர் வம்பலரே
துற்று அயலோர் ஏதிலர் ஆம் கம்மியரே தொழுவர்
தொழில்செய்வோர்பேர் வியவன் ஏவுவான் கூற்றே
**76
#23
கூத்தர் விநயர் பொருநர் நிருத்தர் கண்ணுளாளர்
கோடியர் நட்டுவர் நடத்தார் வயிரியர் நாடகர்பேர்
பூத்திடும் நாடகி நிருத்தி நடனி அலங்காரி
போர்மையள் ஆம் கூத்திகள்பேர் வந்தி கவி கற்றோன்
ஆர்த்த வண்டர் கடிகையர்பேர் இயவுள் புகழோன்பேர்
அருளன் காருண்ணியன் கிருபாலு தயாலுவின்பேர்
தூர்த்தர் இடங்கழி போகர் பரத்தர் விடர் படிறர்
துர்ச்சனர் பல்லுவர் விடமர் காமியர்பேர் விதியே
**77
#24
விதரணன் உதாரி தேயி கொடுப்போன் வியாழன்
வேளாளன் வள்ளியோன் புரவலனே கேள்வன்
உதவுவோன் ஈகையான் தாதாத் தியாகி
உபகாரி வள்ளல் அளியோன் கொடையாளியின்பேர்
இதவசனன் பரிசிலான் யாசகன் நல்கூர்ந்தோன்
ஏழை தரித்திரன் தீனன் இலம்பாட்டன் ஏற்போன்
கதியிலான் ஒற்கன் ஆதுலன் மிடியன் கிஞ்சன்
கலியன் வறியோன் உறுகண்ணாளன் இரவலனே
**78
#25
வலவை வல்லோன் வல்லுநன் மாட்டார்பேர் கூர்ப்பிலன்பேர்
மந்தனா நாகரிகர் சதுரர் காமுகர் ஆம்
குலமிலர் குலீனர் ஆம் அழகிலன் பண்ணறை ஆம்
குருடன் அந்தராளனுடன் சிதடனும் அந்தகன்பேர்
அலி பேடி நபுங்கிஷம் பெண்டகம் சண்டம் கிலீபம்
ஆகும் கூன் சினகோடி கோணல் ஆம் குஞ்சம்
உலைவுஇல் வாமனம் சிந்து குறள் ஆகும் மூங்கை
ஊமை குணி மூகையும் ஆம் வெதிர் செவிடு என்றறியே
**79
#26
அறிவிலன் யாதன் பேதை மடன் ஏழை மூகன்
அஞர் இழுதை அண்ணை அஞ்ஞை சிதடன் முழுமகன் ஆம்
சிறியர் நலமிலர் கயவர் மூடர் கலர் சுமடர்
தீயர் நசிர் கனிட்டர் கள்வர் கலகர் புல்லர் மூர்க்கர்
பொறியிலர் சூனவர் சீத்தை நபண்டிதர் சிற்றினரே
புள்ளுவர் கீழ்மையர் முசுண்டர் பல்லுவர் உலோபர்
நெறியிலர் கல்லார் பதகர் முறையிலரோடு அதமர்
நீசர் கையர் தீக்குணரும் ஈனர்பேர் முடிவே
**80
#27
முடங்கு பங்கு குனி சிதைவு முடவர்பேர் ஆகும்
முழுச்சவனர் வேதிகர் நிசாதர் வஞ்சர்பேர் ஆம்
கடும் படிறர் தீனர் கரவிடர் திருடர் சோரர்
கள்வர் புரையோர் கபடர் தேநர் கள்ளர்பேர் ஆம்
துடர்ந்தவர் புல்லுவர் வேட்டர் காதலர் சினேகர்
சூழ் நல்லோர் ஆர்வலர் ஒன்றினர் நயந்தோர் விழைந்தோ
ருடன் பசைந்தோர் நள்ளுநர் சேர்ந்தார் பெட்டார் கூட்டர்
ஒட்டினர் வல்லுநர் புரிந்தோர் மித்திரர் மேவினரே
**81
#28
மேவலர் சார்பிலர் அரிகள் பரர் கெலிஞர் நேரார்
வேண்டார் பற்றார் பகைவர் கருதலர் வில்லங்கர்
தாவு இகலர் கிட்டலர் கூடலர் சேரார் எண்ணார்
தரியார் செற்றார் நிகரார் அடையலார் திருந்தார்
ஏவு வணங்கார் அமரர் பொருநர் உள்ளார் நள்ளார்
எதிர்ந்தார் வெய்யோர் இரிஞர் அமடர் மன்னார் ஒன்னார்
வாவு தெவ்வர் அமித்திரர் ஒட்டார் மருவார் மானர்
மாற்றலர் போற்றலர் சேயர் சூரர் வட்கார் கேளார்
தூவும் இன்னாதார் முனைந்தோர் அண்டர் விட்டார் நண்ணார்
துன்னார் மண்டினர் ஒல்லார் செறுநரும் சத்துருவே
**82
#29
துரிதமிலாக் கேள் குடும்பம் சார்பு சூழ் நட்டார்
துணை கூளி இகுளை நட்புக் கிளை விருந்து கடும்பு
பரிசனம் பாசனம் துடர் மித்திரர் உற்றோர் கேளிர்
பற்று உறவு பந்தம் நண்பு தமர் ஒக்கல் சுற்றம்
உரியர் நள்ளி இருபத்தேழு உறவின்முறைப்பேர் ஆம்
உட்பீதி சவலை பயத்தான் பீருப் பீதன்
வெருவி சகிதன் பிளிறன் அச்சமுற்றோன்பேர் ஆம்
விளம்பு நக்கன் என்ப நிருவாணிபாற்படுமே
**83
#30
படர் மறவர் வாளுழவர் மள்ளர் கதர் வயவர்
படைத்தலைவர் பூரணர் கூளியர் மிண்டர் துண்டர்
திடர் வியவர் பூதர் விறலோர் மீளி வண்டர்
திறலோர் அண்ணியரே சன்னத்தர் ஆயுத்தர்
அடு மூவேழ் வீரர்பெயர் காதகன் காருகனே
அருந்துதன் காலனும் கொலைஞர்பேர் பொருட்பெண் கணிகை
தொடரும் விலைமகள் வேசி பெறுவகொள்வாள் பரத்தை
சூளை பயனிலி தாசி வரைவில்பெண்பேர் குறியே
**84
#31
குறவர் கானவர் புனவர் பழிஞர் வெற்பர் குழுவர்
குன்றுவரும் இறவுளரும் குறிஞ்சியர்பேர் அதில் பெண்
சிறு குறத்தி கொடிச்சி ஆம் கானகநாடன்பேர்
சிலம்பன் வெற்பன் பொருப்பன் ஆம் புள்ளுவரோடு எயினர்
மறவர் தெறும்பினர் இறுக்கர் பாலையர்பேர் எயிற்றி
மறத்தி பல்லி பெண் காளை விடலையும் மீளியும் கோப்
பொறையிலர் விரோதர் காதகர் கோபர் வன்பர்
புளிஞர் வனசரர் சவரர் பாவமூர்த்திகளே
**85
#32
திகழ் எயினர் பையர் பாதகர் கோளர் மறவர்
சில்லர் கொலைஞோர் காடர் முருடர் வேட்டுவரே
பகர் வேடர் மாகுலர் சிராதர் இவை குறிஞ்சி
பாலை மக்கட்பொதுப்பேர் ஆம் பொதுவர் கோவிந்தர்
சுகவமுதர் அண்டர் ஆவலர் விந்தர் பாலர்
தொறுவர் கோவலர் குடவர் கோபாலர் ஆயர்
இகழ்மொழியர் பொறையர் கொச்சையோர் முல்லைத்திணையோர்
இடையர் பதினேழு நடுநிலத்தினர்பேர்ப் பொதுவே
**86
#33
பொதுவி நெய்யின்முடைச்சி நடுநிலத்தியொடு குடத்தி
புன்மொழிச்சி ஆச்சி தொறுவியும் இடைச்சி நாமம்
அதின் இறைவன் குறும்பொறைநாடன் கோன் கானாடன்
அண்ணலும் தோன்றலும் ஆகும் தொழுவர் மன்ளர் களமர்
உதகர் கழனியர் விளைஞர் பண்ணையர் கம்பளரே
உழவர் கடைஞோர் களைஞர் மருதநிலத்தவர்பேர்
நதியுறு காலாட்டி கடைசியர் கிழத்தி உழத்தி
நல் மகிழ்நன் கிழவன் ஊரன் தலைவன்பேரே
**87
#34
தலை நுளையர் பரதர் பரதவர் திமிலர் அளவர்
சலவாணர் கலவர் மரக்கலர் கழியர் கடலர்
வலைஞர் இவை நெய்தல்நிலத்தார்நாமம் பரத்தி
வலைச்சி கடல்பெண் குழைச்சி நுளைச்சி குரத்தியுமே
அலைநிலப்பெண் ஆம் புலம்பன் துறைவன் மெல்லன் சேர்ப்பன்
அரிய கொண்கன் ஐம்பேர் நெய்தல்தலைவன்பேர் ஆம்
விலைசெயும் உப்பளத்தார்க்கே அளமர் எனச் சாற்றும்
வேண்டிய மன்பதை பஞ்ஞீலிரண்டு மக்கட்பரப்பே
**88
#35
மக்கள் மானிடர் மாந்தர் ஆண்டையர் மண்ணிலத்தார்
மனிதர் மானவர் மாக்கள் சனர் உலகர் மனிடர்
தக்க மனுப் பன்னிரண்டு நரர்பேர் ஆம் ஞாதி
தாயத்தார் குடிச் சுற்றம் மூதாதை பாட்டன்
புக்க பிதா மகன் பேரன் பெரியோன் விதாதாப்
போற்றன்பேர் தந்தை பிதாத் தாதை அப்பன் ஐயன்
தொக்க பிதிர் ஈன்றானம் மானத்தன் பயந்தான்
தொழுமச்சன் பதினொன்றும் தகப்பன்பேர் அனைத்தே
**89
#36
அன்னை அனை ஆய் தல்லி மோய் தள்ளை ஈன்றாள்
அம்மை வயின் பொறை அவ்வை ஆயி பெற்றாள் புனிற்றாய்
தன்னை பயந்தாள் மாதா அம்மனை பன்னேழும்
தாய்பேர் தவ்வையும் ஆகும் வளர்த்ததாய் செவிலி
மன்னு கைத்தாய் கோடாய் பாராட்டும்தாய் பிற்றாய்
மாமன் அம்மான் மாதுலன் ஆம் மாமி அத்தை ஆகும்
முன்னுதித்தாள் சேட்டை தவ்வை தன்னை அக்கை அண்ணி
மூத்தாள்பேர் அத்தை அக்காள் தமக்கையும் தங்கிடுமே
**90
#37
தங்கைபேர் இளையாள் கைபாங்கி பின்னை பின் ஆம்
சட்டகனும் சகலனும் ஓர்குடியினில்கொண்டவன் ஆம்
புங்கவன் மூத்தோன் ஐயன் சேட்டன் அண்ணா அண்ணன்
பொறையன் முன்னோன் தம்முன் ஒன்பான் தமையன்பேர் ஆம்
அம் கனுட்டன் அனிச்சனே பின்னிளவல் பின்னோன்
ஆதரம்சேர் தம்பி என்றே இளையோன்பேர் ஆறாம்
செங்கனிவாய் மானனையாய் சோதரரே துணைவர்
சேர் சகோதரரும் உடன்பிறந்தவர்பேர்க் கணிப்பே
**91
#38
கணவன் வரன் கொழுநன் வேட்டோன் உரியன் கேள்வன்
கண்டன் காதலன் கொண்கன் பதி பிரான் தலைவன்
மணமகன் பிரீதியன் மணாளன் நண்பன் காந்தன்
மணவாளன் தவன் மகிழ்நன் வல்லவனே பத்தா
துணைவன் நாயகன்பேர் இல்லாள் காந்தை தேவி
துணைவி காதலி மனை இல் களம் தாரம் பாரி
அணை மனையாள் வாழ்க்கை விருந்து உரிமை மணவாட்டி
ஐ குடும்பி பன்னி மணமகள் ஆம் நாயகியே
**92
#39
அகவிளக்கம் பொருள் செம்மல் குட்டன் முளை இளவல்
அருளேயன் சிறுவன் காதலன் மதலை தோன்றல்
மகன் மருமான் சுதன் பாலன் சந்ததி கால் எச்சம்
மைந்தன் மழவோன் சேடன் புத்திரன் சேய் தனையன்
புகழ் வழி நந்தனன் புதல்வன் குமரன் நாலேழாம்
புதல்வி சுதை புத்திரி குமாரி ஐயை பாலை
நகு சிறுவி தனையை செல்வி பந்தனையே குட்டி
நந்தனையே மதிப்பு மகள் பெண்பிள்ளைக்கு இயம்பே
**93
#40
பிள்ளை சிறார் முளை குழவி எச்சம் மகார் மகவு
பிஞ்சு குஞ்சு குழந்தை இருமக்களுக்கும் பொதுப்பேர்
விள்ளு கைமை பெறும் பிள்ளை கோளகன் கோளிலி ஆம்
வேற்றோர்க்குப் பெறும் பிள்ளை குண்டகன் ஆம் கன்னிக்கு
உள்ள மகன் கானீனன் நாற்குலத்தின் ஆண் பெண்
உயர்பு இழிபாய்க் கலந்துபெற்ற பிள்ளை அனுலோமன்
தெள்ளும் ஆண் இழிபும் பெண் உயர்புமாய்ப் பெற்ற
சேய் பிறிதிலோமன் எனச் செப்பினர் முன்னோரே
**94
#41
முன் உரைத்த அனுலோமர் பிறிதிலோமரிலே
முறைவழாது ஈன்ற பிள்ளைபேர் அந்தராளன்
பின்னதின் மாறிப் பிறந்த சேய் விராத்தியன் ஆம்
பிறங்கடையே மருகன் மருமான் நான்கு பேரும்
அன்னியமின் மருமகன்பேர் காளை மகன் மாந்தன்
ஆடவன் பூமான் குமரன் அவன் புருடன் ஆடூஉ
இன்னவும் மைந்தனும் ஆண்பால் பொதுப்பேர் ஆம் நம்பி
என்பது ஆண் சிறப்பு நங்கை பெண் சிறப்பு ஆம் தெரியே
**95
#42
தெரிவை மானினி நாரி மகள் வனிதை மாது
சிறுமி இளம்பிடி மடந்தை தையல் பிணா மகடூஉ
அரிவை மடவாள் அணங்கு பேதை மங்கை பெதும்பை
ஆடவள் காரிகை ஆட்டி பெண்டு நல்லாள் காந்தை
பிரியை மாயோள் மனிதி நங்கை நாகரிகை
பேடு மடவாள் பேதி வஞ்சனியே விரும்பி
வரிசையின் அங்கனை தோகை ஆறாறும் பெண்பேர்
வாழுவதி தம்பதியும் ஆண்பெண் இரட்டையரே
**96
#43
இரவி நங்கை நாயகி தாய் சாமி அத்தை அடிகள்
இசமாட்டி தலைவி ஐயை கோமாள் பிராட்டி
அரசி அரசாள் இறைவி கண்ணாட்டி குரத்தி
அப் பதினேழ் முதல்விபேர் கன்னி குமரியின்பேர்
திரள் விதவை அமங்கலி நூலிலி கைமை கயினி
தீர்ந்த கலனழிமகள்பேர் மைமை வந்தி இரண்டும்
உர மலடிபேர் வண்ணமகள் கோலம்செய்வாட்கு
உரிய பெயர் விருத்தை மூப்புள்ளவள்பேர்ச் சிறப்பே
**97
#44
சிறு பேதை பெதும்பை மங்கை மடந்தையே அரிவை
தெரிவை பேரிளம்பெண் ஏழ்பருவம் மின்னார் இவர்க்கே
அறும் ஏழ் பன்னொன்று பதின்மூன்றே பத்தொன்பான்
ஐயைந்து முப்பானொன்று எண்ணைந்தும் வயதாம்
குறளி குண்டம் கூளி துட்டையொடு படுவி தூங்கி
குட்டனியோடு அசதி எட்டும் தொழுத்தைபேர் கூறும்
வெறும் ஓரை பொய்தல் பண்ணை அவை ஆயம் பெண்கள்
விளையாட்டுக் கெடவரலும் ஆம் அதற்குத்தானே
**98
#45
தானை வாகினி கவனம் பரிகரம் நிதானம்
சனம் பாடி படாதிகம் தந்திரம் பதாதி
சேனை பலம் காந்தாரம் தளம் பகுதி கூடி
திரள் பதாகினி கடகம் சோனை தண்டம் யூபம்
வானி அமடகம் அனிகம் வரூதினி மூவொன்பான்
வாய்த்த படைப் பொதுப்பேர் ஒட்டு உண்டை தொந்தே யூபம்
கான் அணி சூழ் படைவகுப்பு ஆம் மணிகை நெற்றி தூசி
கடைக்குழை கூழைஅதாம் தார் கொடிப்படை ஆகுமதே
**99
#46
ஆகம் உடம்பு உருவம் உடல் புணர்ப்பு உறுப்புக் குரம்பை
அங்கம் உயிர்நிலை ஊற்கம் விக்கிரகம் மூர்த்தம்
தேகம் அவையவம் காயம் ஆதாரம் சட்டை
திரு மேனி தாபரம் மெய் புட்கலம் சரீரம்
மாகனம் களேபரம் பூதியம் பிண்டம் சடலம்
வடிவு ஆம் காத்திரம் பூட்சி கடம் புதை சட்டகமே
சாய்கை தனு யாக்கை புரம் படிவம் முப்பானெட்டாம்
சவம் பிணம் களேபரம் பிரேதம் அழல் கழிவே
**100
#47
கழல் சரணம் பதம் பாதம் அங்கிரி தாள் சலனம்
காலடி ஒன்பான் கரண்டை கரடு பரடு ஆகும்
முழுகு கணைங்கால் சங்கம் கணைக்கால் ஆம் சானு
முழந்து முழங்கால் முட்டு ஆம் குறங்கு ஊரு வாமம்
எழுது கவான் சோகம் ஐந்தும் துடை ஆகும் துடைவேர்
இசைவு கந்து கொழுத்து முட்டுக் கிரந்தி சந்து பொருத்து ஆம்
தழுவியதோர் கழுத்தும் ஆம் கடிதடமே நிதம்பம்
சகனம் அல்குல் ஆம் பக்கம் ஒக்கரை ஒக்கலையே
**101
#48
கலத்த பகம் யோனி குய்யம் பெண்குறி ஆம் பூவும்
கற்பபுரம்தானும் ஆங்காம் இலிங்கம் கோசம்
புலத்த ஆண்குறி ஆகும் குறிகாணாத்தலமே
பொதுவாகும் இடை உக்கம் மருங்கு நடு நுசுப்பு
நலத்துறு மத்திமம் அரை ஆம் இதலை சுழி போகில்
நாபி உந்தி இலஞ்சி கொப்பூழ் நாமம் ஆம் உதரம்
துலக்கு மடி வயின் அகடு மோடு குக்கி சடரம்
துத்தவமும் சுத்தும் வயிறு ஆகும் பூண்முலையே
**102
#49
முலை சுவற்கம் கொம்மை நகில் கொங்கை தனம் சேக்கை
முகிழ் பயோதரம் குயம் குரூஉக்கண் அம்மம் பறம்பு ஆம்
மலை முலைக்கண் சுதலை சிலீமுகம் பால்கண் சூசாம்
மருமம் உரம் மார்பு அகலம் ஆகம் நெஞ்சே ஐந்தாம்
சொலும் நெரிசல் பொறி தேமர் பீர் துத்தி உத்தி
சுணங்கு வரி திதனி வசந்திகை இனந்தி தித்தி
பொலி திதலை நுணங்கு ஈரேழ் தேமல் ஆம் வாகு
புயம் மொய்ம்பு தோளின் இயற்பேர் பசுந்தோளணங்கே
**103
#50
தோள் கரமே புயம் பாணி அத்தமும் கைத்தலப்பேர்
தோய் முழங்கை கூர்ப்பரம் ஆம் கிலுத்தம் மணிக்கட்டு ஆம்
ஆள் குடங்கை அகங்கை அங்கை உள்ளங்கைப்பேர் ஆம்
அங்குலியே விரல் ஆகும் நகத்தின்பேர் உகிர் ஆம்
மூள் கை ஒன்று அராணம்அதாம் வென் அபரம் பிறகு
முதுகு புறம் கோரை வெரின் பிறக்கும் ஆம் தோள்மேல்
நீள் கயிலோடு எருத்தம் நிவம் பிடரி பரம் செகிலம்
நிதலம் இமில் சிறுபுறமும் பிடரி ஆம் இங்கே
**104
#51
இங்கிதம் கந்தரம் கண்டம் களம் மிடறு கழுத்து ஆறு
இதைக் கிரீபமும் என்பார் முகம் வதனம் துண்டம்
பங்கயம் வத்திரம் ஐந்தும் ஆனனம் ஆம் தட்டம்
பாலிகையே இதழ் ஓட்டம் அதரம் முத்தம் உதடு ஆம்
தங்கிய மோவாய் தட்டம் தாடி ஆம் சதனம்
தந்தம் பல் எயிறு ஆகும் நகை முறுவல் மூரல்
பொங்கிழி ஆர்ப்பு அசி ஆசம் விடம் பனமும் சிரிப்பு ஆம்
புகல் சிகுவை நாத் தாலம் தாரம் இவை நாக்கே
**105
#52
நாக்கின்மேல் அண்ணம் அண்ணாக்கு உண்ணாக்கு என்றாகும்
நவிலும் அண்ணம் மிடறு ஆகும் சிபுகம் அண்ணம் அணரி
ஆக்கு அணலும் கீழ்வாயின்புறம் ஆம் கபோலம்
அனுக் கதுப்புக் கொடிறு கவுள் கன்னம் கேசமும் ஆம்
பார்க்கும் விழி நயனம் நேத்திரம் அக்கம் சக்குப்
பார்வை திட்டி திருட்டி லோசனம் தாரம் நாட்டம்
நோக்கம் விலோசனம் திருக்குத் தெரிசனம் அம்பகம் கோ
நுவல் ஆலோகனம் தாரை அக்கி கண் பத்திரட்டே
**106
#53
இரு விழியின் விளிம்பு இமை ஆம் மணி தாரை ஆகும்
இணை நாசி கோணை கிராணம் துண்டம் மூக்கு ஆம்
பிரு நுதல் புரூரம் பீர் புதல் புதடி பூருப்
பீரு குடி புருவம்அதாம் கேள்வி அள்ளுக் காது
சொருகு சோத்திரம் கன்னம் ஐந்துபேர் செவிக்கு ஆம்
குழை குளம் அளிகம் விலாடம் பனிச்சை பாலம்
பெருகு பண்டம் மத்தகம் உண்டகம் நுதல் ஆம் பத்துப்
பேரும் நெற்றி ஆகும் என்பர் பேரறிஞர் உவந்தே
**107
#54
உவவி முண்டம் சிரம் சென்னி முடி மூர்த்தம் சிகரம்
உத்தமாங்கம் தலை சேகரம் உச்சி கம்மே
நவிரொடு மத்தகம் பதினாலும் சிரசின்பேர் ஆம்
நவிர் பங்கி உளை கதுப்புச் சிகை குஞ்சி குடிஞை
தவிர் சுரியல் குழல் கேசம் ஓரி தொங்கல் பித்தை
தளை பிச்சம் தார் சிரோருகமும் ஆண்மயிர்ப்பேர்
கவி சுடிகை சூழி நவிரம் சூட்டி உச்சி
காண் சிமிலி சிகை சிக்கம் சிமை குடுமி முடியே
**108
#55
முடி மவுலி குழல் பந்தி சிகழிகை பின்னகமே
முச்சிதம் மிலங்கொப்புச் சுடிகைதொங்கல் கொண்டைக்
குடைய பெயர் சுரியல் குழல் குரல் அளகம் கேசம்
உளை கதுப்புப் பரிசாரம் கூழை குருள் ஓதி
நெடிமை சுருள் பங்கி சிரோதம் கோதை ஐம்பால்
நேர் விலோதம் கூந்தல் கொந்தளம் மாராட்டம்
அடு ரோமம் பெண்மயிர்ப்பேர் கொந்தளம் விரோதம்
அளகம் மயிர்க்குழற்சி எனத் தெளிகுவை நீ மயிலே
**109
#56
மயிர்ச்செறிவு ரோமமும் சிரோதமும் ஆம் வேணி
மயிர்த்திரள் கோடீரம் பின்னலும் கபத்தம் குடிலம்
இயல் சடிலமும் சடைப்பேர் வாரி வரை பிறங்கோடு
இறை வரியும் பொறி ஆகும் சரை திரை ஆம் பலிதம்
செயத்த நரைப்பேர் நாடி சங்கனனம் நரம்பு
சிரை ஆகும் கழலையின்பேர் அரலைஅதாம் காசம்
மயிர்த்த கபம் கோழை ஐ ஆம் கச்சை வடுச் சேக்கை
அங்கிதமே வசி உடலில் தழும்பு ஆயத்திடுமே
**110
#57
அத்தி களேபரம் அங்கம் எலும்பு ஆம் கங்காளம்
ஆவதே முழுஎலும்பு ஆம் வெண்டலை கபாலம்
மெய்த்தலையினோடு மண்டை ஆம் கவந்தம் யூபம்
மெய்க்குறை மட்டையும் அதுவாம் கிருத்திமம் தொக்கு உரியல்
கொத்து உரிவை உரி ஒலியல் அதள் பொச்சை சருமம்
குளிர் துவக்குப் புனிறு வடகம் புறணி போர்வை
வைத்த பச்சை தோல்பெயர் சூல் சினை கருப்பம் விந்து
வாலை வயா வயின் பொறை பீள் வயல் கருப்பேர் தருமே
**111
#58
தரு தசை ஊன் விடக்கு முடை வள்ளுரம் புண் புனிதம்
தடி பிசிதம் புலவு புலால் இறைச்சி இற்றி ஊத்தை
புரணி பூதியம் ஊழ்த்தல் மாங்கிஷப்பேர் குருதி
புண்ணீர் சோணிதம் உதிரம் செம்பால் புலானீர்
எருவை செந்நீர் கறை சுடுவல் சோரி நெய்த்தோர் சோரை
இரத்தப்பேர் ஈருள் என்பது ஈரல் ஆம் சோரி
வெருவு துப்பு விழுக்கு இழுது நெய் நிணம் வெளுப்பு
விளர் விளிறு கொழுப்பு ஆகும் வழும்பின்பேர் வழுக்கே
**112
#59
வழுத்தரு மாசு அழுக்கு ஊத்தை விட்டை கட்டம் இலத்தி
மலம் ஆகும் பொறி வாயில் குறி கந்தம் கரணம்
செழித்திடும் இந்திரியப்பேர் மெய் வாய் கண் மூக்குச்
செவி ஐந்தும் பொறி ஆகும் சுவை ஒளி ஊறு ஓசை
அழுத்தியதோர் நாற்றம் ஐந்தும் புலன் ஆகும் சீவன்
ஆதன் இயமான் அணுப் புற்கலன் சேதனனே
ஒழித்த பசுப் பிரகிருதி சதசத்துச் சகலன்
உயிர் பூமான் அவ்வியத்தன் உள்ளம் ஆன்மாவே
** மக்கட்பெயர்த் தொகுதி முற்றும்
@3 மூன்றாவது விலங்கின் பெயர்த் தொகுதி
**113
#1
மாப் புலி கராளி அரிமா வயப்போத்து அறுகு
மடங்கல் கேசரி நகாயுதம் மிருகராசன்
கோப்பின் விலங்கரசு கண்டீரவம் ஆளி சீயம்
கோளரி ஐமுகன் பஞ்சானனம் பூட்கை வயமா
தீப்பொறிநேர் முடங்குளையே வயப்புலி மூவேழும்
சிங்கப்பேர் ஆம் பூட்கை வாளமே யாளி
காப்பறுகும் யானை யாளிப்பேர் ஆம் காட்டாக்
கவையமா ஆமா என்று இயம்பினர் வல்லவரே
**114
#2
வல்லியம் வன்மா வேங்கை தீவி புண்டரீகம்
வயவரி சித்திரகாயம் சாத்தூலம் வயமாப்
புல் உழுவை மிருகாரி கொடுவரி வியாளம்
புலி தரக்குக் குயவரி வியாக்கிரம் வியாமி
ஒல்லுவட்டம் இருபான்பேர் பல்லம் எலுக் கரடி
உளியமே கவிழ்தலை குடாவடி எண்கு இருளி
பல்லுகமே தலைவிரியும் ஆம் அதன்பேர் கிருச்சம்
பாய்ந்த சசம் முயல் மூன்றும் முசல்பேர் தந்தனரே
**115
#3
தந்தி போதகம் கயம் கராத்திரி வல்விலங்கு
சாமோற்பவம் பகடு வழுவை இபம் கடிவை
மந்தகுணி மந்தமாக் கோட்டி கரி கருணி
மருண்மாக் குஞ்சரம் பூட்கை மாதங்கம் நால்வாய்
சிந்துரம் மதாவளம் கைம்மாக் களிறு கும்பி
சிறுகணி தந்தாவளம் உவாத் தும்பி வேழம்
உந்திரதி தூங்கல் கறையடி புழைக்கை வயமா
ஒருத்தல் ஏரம்பம் மதநிதி எறும்பியுடனே
**116
#4
உடற்று புகர்முகம் களபம் நாகம் மததீபம்
உம்பல் அத்தி கோட்டுமா மாதிரம் தோல் ஆம்பல்
நடைக்கிரி கரேணு வாரணம் களவன் ஏழேழ்
நான்கு ஆனைப் பொதுப்பேர் அத்தினி கருணி வடவை
பிடிப்பேர் கரேணுவும் ஆம் மதகயம் தோல் கடம் ஆம்
பேர் யூபநாதனே அரசுவாவின்பேர்
துடர்க் களபம் கயமுனியே கயந்தலை போதகமும்
துடியடியும் யானை பெறும் கன்றதின்பேர் தானே
**117
#5
தானம்அதா கடம் கடாம் கம்பம் மதப்பேர் ஆம்
தாலும் மதகம் குடம் மத்தகம் கும்பம் ஆகும்
யானையின்கை துதிக்கை தொண்டு கொண்டலம் தொண்டையும் ஆம்
அதின் கரடம் கொடிறு இணரி கவுளும் மதச்சுவடு ஆம்
மானமொடு பிருது கொம்புநடு ஆம் புட்கரமே
மதக் கைநுனி ஆம் எயிறு கோடு தந்தம் மருப்போடு
ஊனம்இல் கொம்பு ஆம் பூண் கிம்புரி ஆகும் பட்டம்
ஓடை ஆம் செவிஅடி சூழிகை கதுப்பு ஆம் கடமே
**118
#6
கடைக்கண் நிரியாணம் ஆம் பல்லடி கரீரம்
காங்கியும் புட்கரமும் ஆம் கைநீர் விலாழி
தடுக்கும் முன்கால் அங்கிதம் காத்திரம் பின்கால் ஆரம்
தாலவட்டம் வால் வாலின்நுனியே வேசகம் ஆம்
படுத்த முதுகே மஞ்சு ஆம் அதின் நோய் பாகலம் ஆம்
படுகுழிப்பேர் பயம்பு கொப்பம் வாரி ஆம் கூட்டம்
மடிக்கடகம் ஆம் துயிலுமிடமே சேவகம் ஆம்
அதின் கூடப்பேர் ஓளி வாரி ஆலையமே
**119
#7
ஆலம் நிகர் தூசி சயிந்தவம் கவனி இவுளி
அத்திரி கந்திருவம் அரி கோடை உன்னி பாய்மா
வாலி அயம் துரகதம் பாடலம் பரி மண்டிலம் மா
வாசி கொக்கு அச்சுவம் சடிலம் கனவட்டம் வாகம்
கோலம் வயமாத் துரங்கம் கிள்ளை குரகதமே
கோடகம் பத்திரி குந்தம் கொய்யுளையே கோரம்
தூலமுறு மட்டம் வேதோற்பவம் வாரிசமே
துரகம் மாதிகம் கற்கி சத்தியம் அண்டசமே
**120
#8
அண்டமர்க் கந்துகம் புரவி கோணம் கோடரம் என்று
ஆறேழும்இரண்டுமே குதிரைப்பேர் எனலாம்
மண்டு குரம் குரச்சை குளம்பின்பேர் விலாழி
வாய்நீர் ஆம் சுவல் குசை வேசகமும் கேசரிப்பேர்
கொண்ட நடை வீதிஅதாம் மந்திரமே சாலை
குதிரை நிற்கும் பந்தியின்பேர் ஆதிகம் மாதிகமே
தண்டு பரி மாற்கம்அதாம் வானரம் மயூரம்
சரம் சசமே மல்லம் எனச் சாற்றிடும் ஐங்கதியே
**121
#9
கதி சுரபி தொறுத் தேனுக் கபிலை ஆக் குடம் கோக்
காலி நிரை ஆன் குரம் கோமளம் பெற்றம் சேதாச்
சுதை பதினைந்தாம் பசுவின்பேர் கபிலை தேனுச்
சுரபி தெய்வப்பசு ஆகும் காலி தொறுக் கோட்டம்
சிதகின் நிரை காலேயம் பசுக்கூட்டம் ஐந்தாம்
செருத்தல் மடுச் சுரை ஈன்பை பீனசமும் முலைப்பேர்
வதி கிருட்டி பத்திரை வற்சலம் ஈனல் ஈற்றா
மலடு வற்சை ஆம் தன்னம் வற்சமும் கன்று ஆமே
**122
#10
கன்றாத நரை இறால் சேப் புல்லம் பூணி
காளை குண்டை விடை பாண்டில் புங்கவம் கோப் பதி ஆன்
குன்றாத தூர்வகம் ஏறு இடபம் நந்தி கூளி
குத்தம் தூரியம் பாறல் கொட்டியமே மூரி
சென்றோடும் பகடு பெற்றம் எருது நாலாறாம்
திமில் இமில் அக்கே முரிப்பு ஆம் கார் மூரி மேதி
மன்றாரும் கவரி காசா மயிடம் கவைத்தாள்
வடவை சவுரியம் காரான் எருமையின்பேர் பகரே
**123
#11
பகடு மயிடம் கிடாவின்பேர் மை மலடு ஆம்
பள்ளை மறி ஒருத் துருவை அயம் மேடம் வருடை
தகர் அருணம் மேழகம் தண்ணகம் கிடாய் வெள்ளை
சகம் சாகம் உதள் கார் வற்காலி துள்ளல் மோத்தை
உகழ் புருவை செச்சை மேடகம் கொச்சை அசம் மை
உடுத் துருக் கம்பளம் வெறி ஏழகம் கொறி ஆட்டின்பேர்
அகழ் சரபம் வருடை வரையாட்டின்பேர் சோரன்
அணங்கு குட்டன் மறி பறளும் குட்டியின்பேர் கருதே
**124
#12
கருமா வல்லுளி கோல மைமாக் குரோட்டுக்
களிறு போழ்மாக் கனலி கோணி வன்றி கான்மா
இருளி பூதரம் முந்தூழ் போத்திரி வராகம்
எறுளி சூகரம் மோழல் இரணி கிடி கிருட்டி
அரி ஏனம் கோட்டுமாக் கிருகிடி கேழலுமே
அடும் பன்றி நாலேழ்பேர் சல்லம் முண்மா முளவு
தரிசலம் சல்லியம் சல்லி எய் முள்ளம் சலவம்
சல்லவம் முட்பன்றி அதின் முள் சல்லம் சலமே
** 125
#13
சலிப்பில் சீகரம் சவரம் சமரி அன்னம் எகினம்
சவரிமாக் கவரிமா மானமாப் பட்டம்
வலிப்பின் மரை சாமரைப்பேர் ஆவிதம் கான்குதிரை
மரை ஆகும் அருணம் மறி உழை ஏணன் சூனன்
குலைப்பில் பிணை சாரங்கம் இரலை நவ்வி மிருகம்
குரங்கமே வற்சையம் மான் பன்னிரண்டாம் கருமான்
கலைப்பேர் ஆம் கலை இரலை வற்சையம் புல்வாய் ஆம்
கத்திரம் காத்திரம் கீரி நகிலன் தீர்வையுமே
**126
#14
வயமுறும் அத்திரி கோகு கரம் காளவாயே
வாலேபம் கருத்தவம் வேசரி கழுதைப்பேர் ஆம்
இயலுறு கோவேறுகழுதைப்பேர் வேசரி ஆம்
இரவணம் தாசோகம் நெடுங்கழுத்தல் கனகதமே
உயருறும் அத்திரி கரபம் ஒட்டகத்தின்பேர் ஆம்
உக்குரோட்டு ஓரி கோமாயு ஒண்டன் இகலன்
அயர் உள்ளான் தூங்கி சம்பு சிருகாலன் சுண்டன்
ஆக்கினிகிதம் பூரிமாவோடு இ நரியே
**127
#15
நரமிருகம் பிலவங்கம் மந்தி கவி வாலி
நகையி வானரம் சாகாமிருகம் கோடரமே
அரி கடுவன் யூகம் கானவினோதன் நாகம்
ஆடும் வலிமுகம் மதிச்சம் கீசகம் மற்கடமே
உர நிரந்தம் கோகிலம் கானவன் மூவேழ் குரங்கு ஆம்
யூகம் காருகம் இரண்டும் கருங்குரங்கு ஆம் ஓரி
கரிமுகன் கோலாங்கூலம் கலை கூலம் கடுவன்
கள்வனே மைம்முகம் எட்டாம் முசு என்று ஓதே
**128
#16
ஓதி விடருகம் கடுவன் வெருகு அலவன் பூஞை
ஒண் பூசை மார்ச்சாலன் மண்டலி விலாளம்
பாதகஞ்செய் எலிப்பகை இல்புலி பவணம் பாக்கன்
பதினாலும் பூனையின்பேர் மிருகமதம் நரந்தம்
மா துருக்கம் நானம் மான்மதம் எனும் பேர் ஐந்தும்
மருவளர் கஸ்தூரியின்பேர் மறுவி மறி நாவி
மோதியபேர் மூன்று புழுகுப்பூனைப்பேர் ஆம்
முசலி கோதா உடும்பின்பேர் தடியும் ஆமே
**129
#17
தடு ஞமலி கீழ்ச்சென்னி பற்காட்டி நாக்கி
சாரமேயன் பட்டி குக்கல் குரைமுகனே
முடுவல் கூரன் சுணங்கன் ஞாளி அக்கன் சூரன்
முடுகு எகினம் பாசி சுனகம் சுவாச் சுகினம்
விடு புரோகதி இருபான் நாயின்பேர் கொக்கும்
விருகமும் செந்நாயின்பேர் மூஞ்சூறுச் சுண்டன்
அடு சூறன் சுந்தரியும் சுவவும் ஆம் உறுத்தை
அணில் பேராம் வெளிலும் வரிப்புறமும் ஆம் திருவே
**130
#18
திருகல் சாய்நதம் காமரூபி காமுருகி
சிகிப்பகை தண்டு ஆசம் ஓணான் ஓந்தி ஓதி
சரடம் சாயனம் கோம்பி முசலி ஓந்தியின்பேர்
சார் கருப்பை ஆகு இரும்பன் சிகரி எலி வகுப்பாம்
கரு விருடம் மூடிகம் மாகிர் உந்துருத் துந்தளமே
கனகதமும் பெருச்சாளிப்பேர் குரங்கு மா மான்
மிருகம் விலங்கின்பொதுப்பேர் கணம் குலம் வியூகம்
விருந்தம் சால கூட்டம் யூகம் சேகரமே
**131
#19
சேகரத்தில் ஏறு உம்பல் பகடு ஓரி கலை மாச்
சேவல் போத்து ஒருத்தல் களிறு உதழ் கண்டி மோத்தை
வேகமுற்ற தகர் கடுவன் போதகம் சேவி இரலை
விலங்கின் ஆண்பேர் பிடி பிணா மந்தி பெட்டை
நாகு பிணை பாட்டி பெடை பேடு கடமையும் பெண்
நாமம் ஆம் பறழ் பிள்ளை குஞ்சி கன்று பார்ப்பு
வாகின் மறி குருளையும் குட்டியின்பேர் ஆம் குருத்து
மருப்பு உலவை சிருங்கம் கோடு ஐம்பேர் ஆம் கொம்பே
**132
#20
கொம்பிலாமிருகப்பேர் குமரம் ஏழையும் ஆம்
கூலம் வேசகம் தோகை வால் இலாங்குலமும்
வெம்பு வாலதியும் ஆம் வால்கீழே பிருட்டம்
வெருகம் ஆம் பீலி மயில் போத்து எழால் சேவல்
அம் பறவைஆண்பேர் ஆம் பேடு பெடை பெட்டை
அளகு புள்ளின்பெண்பேர் ஆம் குஞ்சு பிள்ளை பார்ப்பு
செம் பறவைக்குஞ்சியின்பேர் தொழுதி அதின் கூட்டம்
சிறகடித்தல் ஓசனித்தல் துழனி ஒலித் தாக்கே
**133
#21
தாக்கியன் புள் உவணன் கீர்த்தனன் பறவைக்குஅரசு
சற்பாரி ககபதி நாகாசனனே வயினன்
ஏர்க் கலுழன் வயினதேயன் கருடன்பேர் ஆம்
எகினம் ஓதிமம் அஞ்சம் விகங்கம் வக்கிராங்கம்
தேக்கனம் மராளம் எழுபேர் அன்னம்அதற்காம்
சிம்புள் சாழுகம் வருடை சம்பரம் துரோணம்
ஆர்க்கும் அட்டபதி எண்கால்புள்ளுடன் வாருண்டம்
அவை சரபம் ஆம் அசுணப்புள்பேர் கேகயமே
**134
#22
கேகயம் சிகாவளம் மயூரம் மஞ்ஞை பீலி
கேழ் ஞமலி சிகண்டி கலாபம் சருணி நவிரம்
தோகை பிணிமுகம் மொகரம் சிகி மயில் ஈரேழாம்
தூவி சந்திராங்கம் அணி கூழை தொங்கல் சருணம்
மேகநிறப் பீலி கலாபம் தோகை சிகண்டம்
வேசகம் கூந்தலும் மயிலின்இறகு ஆகும் முருந்து என்று
ஆகும் அதன் முள்ளின்பேர் குரல் ஏங்கல் அகவல்
ஆலல் எழால் இயன் மயிலாட்டு என நேமித்தனரே
**135
#23
நேமி யானையிறாஞ்சி சக்கரமே கோகம்
நேர் ஆனைக்குருகு கொம்பி சக்கரவாகப்பேர்
காமகாகளம் பரபுட்டம் பிகமே பிதத்தி
களகண்டம் கோரகை கோகிலம் குயிலின்பேர் ஆம்
ஊமன் கோட்டான் குடிஞை கௌசிகமே பெரும்புள்
உலூகலம் குரால் நிசாசரி கூகைஅதின்பேர்
சோமன் நிலாமுக்கி போதகை சகோரம்அதாம்
தூக்கணங்குரீஇ சிதகன் எனும் பேர் சார்ந்தனவே
**136
#24
சாரங்கம் என்பது சாதகப்புள் ஆம் கரடம்
தனி அரிட்டம் பிள்ளை கொடி காரி புட்டம் காகம்
கூரும் காக்கையின்பேர் ஆம் வாயசமும் அதற்காம்
கொண்ட காகோலம் அண்டங்காக்கைப்பேர் அர்க்கம்
காரண்டம் நீர்க்காக்கை குக்கில் செம்போத்து ஆகும்
காரி பிள்ளை கிரவுஞ்சம் மூன்றும் அன்றில் ஆகும்
பாரின் புண்டரம் உவணம் பணவை பூகந்தி
பவணை பாசம் சகுந்தம் எருவை கழுகு இதுவே
**137
#25
இதல் பூழும் சிரவமுமே கவுதாரி ஆகும்
இகல் சேவல் வாரணம் குக்குடம் ஞானி குருகு
பதப்படை ஆண்டலை கொற்றி துவசம் சாமப்புள்
பகு சரணாயுதம் காலாயுதம் கோழிப்பேர் ஆம்
மதக் கற்கி கஞ்சரீடம் கிகிணி வயவன்
வலியான் பேர் கஞ்சனம் பாரத்துவாசமும் பேர்
பிதற்று வயவன் கயவாய் வஞ்சுளன் கஞ்சனமே
பிள்ளை வயான் காரி கரிக்குருவிப்பேர் பாரே
**138
#26
பாரசிகை பாறு கங்கம் சேனம் என மூன்றும்
பருந்து ஆம் வானம்பாடி கம்புள் கலிங்கம்அதாம்
கீரம் அவந்திகை வன்னி தத்தை சுவாகதமே
கிள்ளை அரி சுகம் சாரு ஒன்பதுபேர் கிளிக்கு ஆம்
சாரிகையே பூவை நாகுணவாய்ப்புள் ஆகும்
சகடம் விகங்கம் குலிங்கம் புலிங்கமும் ஊர்க்குருவிப்
பேர் அதுவாம் உள்ளல் உள்ளான்பேர் ஆம் கூன் இருடி
பிக்கலை கின்னரம் ஆந்தைப்பேராய் உன்னுகவே
**139
#27
உன்னமொடு கின்னரம் கிராமம் நீர்ப்பறவை
உக்குரோசமும் ஆகும் காளபதம் புறவம்
பொன்னுறு களரவதம் பாராவதம் கபோதம்
புறவு ஆம் தூதுணமும் ஆம் கபிலசமே குறும்பூழ்
தென்னுறு காடையின்பேர் ஆம் திகத்திரி தித்திரியே
சிரல் கவுதம் சிச்சிலி மீன்கொத்தி பொன்வாய்ப்புள் ஆம்
மன்னு செவ்வல் குருவியின்பேர் சில்லை பகண்டைஅதாம்
வருடம்புள்ளோடு சலாங்கமும் பொய்யாப்புள்ளே
**140
#28
புட்கரம் வண்டானம் சாரசம் சிகரி தாளி
போதாப் பிதாக் குருகு நாரையின்பேர் குரண்டம்
கட்குருகு பகம் வலாகமும் கொக்கின்பேர் ஆம்
காதம்பம் பூழான் கானாங்கோழிப்பேர் ஆம்
வட்கு சம்பங்கோழி கம்புள் ஆம் துரிஞ்சில் வாவல்
வௌவால் அஞ்சலிகை ஆலாலமும் மற்று அதற்காம்
வெட்கிய இந்திரகோபம் ஈயல் மூதா ஆம்
மின்மினிப்பேர் கைச்சோதம் நித்தில் என அறியே
**141
#29
அறுபதம் சிலீமுகம் சஞ்சரிகம் மா மதுபம்
அரி சூதம் புண்டரிகம் வரி கழுது ஞிமிறு
பொறி அளி ஈ மதுகரம் கேசவம் பிருங்கம் சரகம்
புட்பிரசம் பிரமரம் சஞ்சாளிகம் கண்ணாசி
துறுமலர்க்கேள் சாரங்கம் கரும்பு மந்தி கீதம்
சுரும்பு கேசரம் கண்டம் தும்பி வரிக்கடை தேன்
சிறை வண்டு ஆம் சிமிலி சில்லை சில்வீடு நெடி
சிதடி சலாபம் பதங்கம் சில்லிசை விட்டிலுக்கே
**142
#30
விட்ட நுளம்பு அஞலம் மசகம் துள்ளல் சலவல்
வெவ் ஒலுங்கு மற்கூறலொடு நொள்ளல் கொதுகு ஆம்
பட்ட சகுந்தம் குடிஞை குருவி பக்கி விகுரம்
பதங்கம் விகங்கம் சகுனம் பிணிமுகம் புள் போகில்
கட்டிய பத்திரி வயினம் புலிங்கமே அக்கம்
ககம் குரீஇ பறவையின்பேர் சினை கருப் பீள் வரிட்டம்
முட்டையுடன் கோசம் அண்டம் ஆம் துண்டம் சஞ்சு
மூக்கு அலகு சுவவும் ஆம் சச்சு எனவும் பறையே
**143
#31
பறை சதனம் குரல் வாசம் கூழை சிறை சேதம்
பத்திரமே தோகை இறை தூவி பிச்சம் கூரல்
இறகு பக்கம் சதம் சிறகின்பேர் ஆகும் சிகடை
இறும்பு அழலி ஊர்மிருகம் பீலிகை சுலோகம்
முறை விபிலன் கண்மூக்கி எறும்பின்பேர் ஒன்பான்
உலுகை கரவான் சிலம்பி சிலந்தியின்பேர் தெறுக்கால்
முறுகு விருச்சிகம் துட்டன் விடம் நளி தேள் ஆகும்
முகடே மற்குணம் மூட்டை குடவனும் பன்னுவரே
**144
#32
பன்னகம் மண்டலி போகி அகி மிருகம் நாகம்
பாந்தள் விடருகம் புயங்கம் சக்கிரி மராளம்
துன்னு அரவு தாசனன் கட்செவி தந்தசூகம்
சூரி பவனாசனம் கஞ்சுகி அரி வியாளம்
குன் உரகம் காத்திரவேயன் பணி விகாதம்
கூடபதம் விடதரம் காகோதரம் மாசுணமே
அன்னியம் கும்பீனசம் அண்டசம் பணம் காரீசம்
அங்கதம் காலிலி சர்ப்பம் ஆறாறும் பாம்பே
**145
#33
பாம்பினுள் குக்குடசற்பம் குடசற்பம் பறவைப்
பாம்பு ஆம் இராசிலம் துண்டமும் சாரைப்பாம்பு ஆம்
கூம்பு கருவழலையின்பேர் இராசம் மந்தம் ஆகும்
கோளகை மண்டலி ஆகும் மூர்க்கனே நாகம்
தேம் பெரும்பாம்பே பாந்தள் மாசுணம் ஆம் விரியன்
சிறுபாம்பு ஆம் கண்கொத்தி மால் உதாசனன் ஆம்
தூம்பு தட்டம் பை காறு பல் கட்டாம் உத்தி
துத்தி பொறி பணம் பை படம் நாக்கவர் நானிலத்தே
**146
#34
நிலவேர் கூழ் நன்னாகம் பூநாகம் ஆகும்
நிறைக் கறையான் சிதல் செல் ஆம் உழு உசு என்றாகும்
பலிதம் பொந்து இற்கோதாக் கோகிலமே புள்ளி
பல்லி கெவுளியின்பேர் ஆம் நெளிவட்டை செழுகஞ்
சிலது நாகரவட்டை நொள்ளைஅதாம் ஆழல்
சிதல் ஆகும் மீனி நா குணி கிருமி கீடம்
உலையும் எலும்பிலி பொட்டுப் புழுவின்பேர் கிளிஞ்சில்
ஊமை எருந்து ஏரல் பிண்டம் இப்பி சிப்பிக்கு உறுமே
**147
#35
உறுப்படக்கி துளி கூர்மம் கச்சபமே கமம்
ஒடுங்கி ஆமையின்பேர் ஆம் கரவு கரா இடங்கர்
கறுத்த வன்மீன் கிஞ்சுமாரம் முதலையின்பேர் அலவன்
கள்வன் ஆம் அதி ஞெண்டு கவைத்தாள் கற்கடகம்
நிறுத்த குளிர் ஞெள்ளி நள்ளி இடுக்கி நண்டின்பேர் ஆம்
நீகம் அரி மரை தேரை தளர் நுணல் மண்டூகம்
துறுத்து சரிசபம் தவளை ஆம் வட்டி அலகு
சோகி பலகறை கவடி வெள்வரியும் பணியே
**148
#36
பணிலம் வாரணம் நாகு சுரிமுகம் கொக்கரை கூன்
பாலிவலம் புரிகோடு வளைநந்து நத்தை
தணியுமிடம் புரிநத்தம் கம்பு வெள்ளை சங்கம்
சலஞ்சலமே சங்கின்பேர் இப்பி ஆயிரம் சூழ்ந்து
அணியுமிடம் புரி ஆகுமிடம் புரி ஆயிரம் சூழ்ந்து
அதனை வலம்புரி என்பார் வலம்புரி ஆயிரம் சூழ்
மணி வளையே சலஞ்சலம் ஆம் சலஞ்சலம் ஆயிரம் சூழ்
வளை பாஞ்சசன்னியம் என மொழிவர் கலைஞோரே
**149
#37
கலை மகரம் மான் சுறா மீனேறும் சுறவு ஆம்
கயல் சபரம் சேல் ஆம் கெண்டையின்பேர் வரால்மீன்
மலை இறால் இறல் ஆகும் கெடிற்றுமீன் கெளிறு ஆம்
மலங்கின்பேர் நூறைஅதாம் ஆரல் ஆரால் ஆம்
சலசரம் மீப்புழல் வகுலி மயிலை பட்டம் மச்சம்
சவலை சம்பை புழல் மீனம் மீன்பொதுப்பேர் பத்தாம்
செலும் ஆனைமீன் திமியம் மீனை விழுங்குவது
திமிதிமி அ மீனை உண்ணும் திமிங்கிலம் சந்ததமே
** மூன்றாவது விலங்கின் பெயர்த் தொகுதி முற்றும்
@4 நாலாவது மரப் பெயர்த் தொகுதி
**150
#1
சந்தானதருவும் அரிசந்தனமும் பாரி
சாதமும் மந்தாரமும் கற்பகமும் எனத் தரு ஓர்
ஐந்தாகும் மலயசம் சந்து ஆரமே சந்தம்
ஆகுதி தண்வாசி இலேபனம் பூசல் சாந்தம்
பந்தான சாந்தொடு சந்திரதிலகம் சாத்துப்
படிவிரை படீரமும் சந்தனமரப்பேர் பிசினம்
கந்தார் செஞ்சந்தனம் ஆம் அகில் அகருப் பூழில்
காகதுண்டம் ஆம் துருக்கம் மரவமும் குங்குமமே
**151
#2
குமை துருமோற்பலம் குயரூபிணி கன்னிகாரம்
கோங்கின்பேர் பிணரும் ஆம் வகுளம் கேசரத்தோடு
அமை இலஞ்சி மகிழ்மரப்பேர் பாடலம் புன்காலி
அவை இரண்டும் பாதிரி ஆம் சண்பகம் செண்பகம் ஆம்
கமழ் சிறுசெண்பகம் சாதி மாலதி என்று இரண்டாம்
கருமுகை பித்திகை ஆகும் திலகம் மஞ்சாடிஅதாம்
சமி கலிசம் நெருப்புவன்னி குலிசமும் ஆம் அனிச்சம்
தருப்பலம் புன்காலி ஆம் குருந்து குந்தம் ஆமே
**152
#3
ஆமலகம் நெல்லியின்பேர் கடுவே பத்தியமும்
அரிதகியும் ஆம் தான்றி கவித்துருமம் ஆகும்
காமரம் வானோங்கி பழுமரம் இயக்குரோதம்
காணும் நெடு வீழி வடம் தொன்மரமே கோளி
ஏமுறும் ஆலம் பூதம் ஆலின்பேர் பத்தாம்
இறலி சுவி இரத்தி இந்திரியும் இத்திப்பேர் ஆம்
தேமரசு சுவலை சராசனம் அச்சுவத்தம்
திருமரம் பிப்பிலம் போதி பணை கணவம் அதற்கே
**153
#4
அதம் அதவு கோளி உதும்பரம் அத்தி நான்காம்
ஆரம் ஆர் சல்லதி தாதகி ஆத்தி நான்காம்
இதழி ஆக்கு பதம் தாமம் கடுக்கை மதலை
இணர்ப் பாசுபதம் ஆறும் கொன்றையின்பேர் ஆகும்
வதரி கோல் கொடிகோல் குல்வலி இரந்தை ஆகும்
மற்று இரந்தைக்கனி கோலம் கொண்டை எனலாகும்
கதகமே சில்லம் இல்லம் தேறு ஆகும் பூவை
காசை அச்சி அஞ்சனி நாற்பெயர் காயாமரமே
**154
#5
மருதின்பேர் அருச்சுனமும் பூதவமும் ஆகும்
வாசந்தி குருக்கத்தி நாகரி மாதவிப் பேர்
குருகதி முத்தகமும் ஆம் வைதேகி பனசம்
கூழை ஆசினி சக்கை வருக்கை நத்தை பாகல்
தரு பலாப் பலவின்பேர் நேரோடு நாவல்
சம்பு நன் வலாங்குழி நாவல் பேர் சாதவம் ஆம்
முருகு அருணம் சம்பிரமம் புல் இலிகுசம் ராசமோகி
சதபலம் எலுமிச்சு ஏழ்பேர் சொன்னாரே
**155
#6
நாரம் நாரங்கம் நாரத்தையே நரந்தம்
நாரலும் அம் வாகைப்பேர் பாண்டில் சீரிடம் ஆம்
பூரணி சன்மலி பொங்கர் இலவின்பேர் தாளி
புற்பதி பட்டிகை கள்ளன் போந்து புல்லு நெடுவை
காரி கரும்புறம் தாலம் தாழி பெண்ணை பனை பூ
கதம் சகுந்தம் கந்தி பூகம் பூக்கம் கமுகு ஆம்
சார் இலாங்கலி தென்னை தென் நாளிகேரம்
தாழை தெங்கு ஆம் பன்னாடை நாரியும் நெய்யரியே
**156
#7
அரிய துவர்க்காய் கோலம் பிளகு பாகுடன் பாக்கு
அடைக்காய் ஆம் தேக்கின்பேர் சாகம் ஆம் அழிசில்
பொரியரை செம்மரம் சேய் அங்கோலம் அழிஞ்சிலும் ஆம்
புன்னாகம் நாகம் வழை சுரபுன்னைப்பேர் ஆம்
பிரசாரம் திமிசு திமில் கணி அசனம் வேங்கைப்
பேர் ஆகும் கோவிதாரம் குராமரப்பேர்
சுரதாருத் தேவதாரத்தின்பேர் நறவம்
சுள்ளி மராப் பணை கணவம் சாலமரம் ஆமே
**157
#8
ஆம்பிரம் சேகரம் மாழை மாந்தி கொக்குச் சூதம்
ஆறும் தேமாவின்பேர் எகின் மாழை கிஞ்சம்
தேம்பிய ஆம்பிரம் புளிமாவின்பேர் ஆம்பிரமே
சிந்தூரம் யூகினி எகினம் சிந்தகம் திந்திருணி
காம்பு புளிமரத்தின்பேர் ஆம் செயலை பிண்டி
காகோளி ஆயிலும் அசோகமரம் ஆகும்
வேம்பு பிசிதம் பாரி பத்திரம் வாதாரி
மேவு பிசுமந்தம் நிம்பம் ஆம் எனும் இவ் உலகே
**158
#9
உலவைமரம் ஓடை ஆம் வேல் குடையும் உடை ஆம்
உடுப்பை உடுவைப் பேர் காதிரம் கருங்காலிப்பேர்
கலி சிறுமாரோடமே செங்கருங்காலிப்பேர்
கனம் களாம் களவின்பேர் வெள்ளில் விளாம் கபித்தம்
பொலி விளாக் கடிப்பகையும் விளவின்பேர் காஞ்சம்
புன்கின்பேர் ஆகும் காஞ்சனம் தமாலமும் ஆம்
பலசொடு பலாசு புனமுருக்கு ஆம் முள்முருக்கே
பரும் கவிர் கிஞ்சுகம் ஆகும் ஆச்சாப்பேர் ஆவே
**159
#10
ஆவலுறு குறிஞ்சி குரவகம் மேகவன்னி
அலர்ப்பாணம் சகசரி கோரண்டம் மலைக்கரு ஆம்
மேவு கொட்டம் குரவு ஆகும் கிரிமல்லி குடசம்
வெட்பாலை ஆம் நுணவை தணக்கு ஆம் மாலூரம்
கூவிளை நின்மலதாருச் சிவதருவே வில்வம்
கூவிளமும் ஆம் கடம்பல் கூம்பல் குமிழ்மரப்பேர்
ஏவு கொட்டம் குடிலமே குரவமரப்பேர் ஆம்
இருப்பை மதுகம் குலிகம் இலுப்பை எனக் கிளத்தே
**160
#11
கிளை அமை முந்தூழ் வேணுத் தூம்பு வெதிர் வேரல்
கீசகம் வேல் ஆம்பல் அரி பாண்டில் அம்பு திரிகண்
கழை பணை பாதிரி விண்டு முடங்கல் சந்தி நேமி
காம்பு வரை புறக்காழ் கண் கணை திகிரி ஓங்கல்
முளை துளை வேய் வேழம் தேசனம் முப்பான்மூன்று
மூங்கிலின்பேர் காளம் கோடரம் எட்டி மாணி
திளையும் காஞ்சுரைப்பேர் ஆம் பஞ்சரம் செங்கோடு
செருந்திப்பேர் அகத்தியின்பேர் கரீரம் அச்சம் முனியே
**161
#12
முனை மராம் இந்தளம் விசாலமொடு கதம்பம்
முகை நீபம் கடம்பு ஆம் சிந்துரம் செச்சை சிந்தம்
பனி குல்லை சேதாரம் வெட்சி ஆம் பானுபத்தம்
உச்சித்திலதம் சூரியகாந்தம் ஆகும்
இனிய கருமுளம் கழு மாதுளங்கம் தாடிமமோடு
எழுவே தாதிமமே மாதுளை ஏழ் மாதளைப்பேர்
கனி மடி பட்டிகை பறிவை முடங்கல் கண்டல் முசலி
கைதை கேதகை முடவி முண்டகம் தாழையதே
**162
#13
அதிமதுரம் மதுகம் அட்டி அதிங்கமும் ஆம் நீலி
அவுரி ஆம் நறுவிலிப்பேர் அலி ஆம் கோத்திரிகை
மதுரசம் முந்திரிகை ஆம் வானீரம் புள்ளி
வஞ்சுளமும் வஞ்சியின்பேர் முழிஞ்சில் முன்னை ஆகும்
கதலி இலைமரம் நவிரை திரணபதி செகுலி
காய் அரம்பை வாழை மருகே மகரவாழை
விதமாகும் செம்மரத்தம் சிவமந்தாரமும் ஆம்
விருந்தம் வனம் குல்லை துழாய் துளசி துளவினுக்கே
**163
#14
துளிரும் வலம்புரி நந்தியாவட்டம் ஆகும்
துடி ஆஞ்சி ஏலம்அதாம் புனமுருக்கை புன்கு ஆம்
தளவு மாகதி மவ்வல் ஊதிகை கற்பு ஐந்தும்
தளிர்த்த முல்லைப்பேர் உழிஞை சிறுபூளை ஆகும்
குளிர் குளவி பனிச்சை மலைப்பச்சை ஆம் இசங்கு
குண்டலி முத்தாம்பலும் ஆம் பானு அருக்கு எருக்கு ஆம்
அளி பயிலும் பலினி ஞாழலின்பேர் பாலிகையே
அடம்பு ஆகும் சித்திரம் ஏரண்டம் ஆமணக்கே
**164
#15
மணத்த மாலதி மவ்வல் புருணம் அனங்கமுமே
மல்லிகைப்பேர் புட்டில் பசுநாய்ப் பிராய் புக்கு ஆம்
கணப்பீரம் வச்சிரம் மாவிருட்சம் வச்சிராங்கம்
கள்ளியின்பேர் இந்திரசூரியம் சிந்துவாரம்
துணுக்குறு நிர்க்குண்டி நொச்சிப்பேர் ஆம் துரோணம்
தும்பை ஆம் குருஞ்சனம் சிற்குரு முருங்கை ஆகும்
குணத்துடி கூதாளம் கூதாளி கூதளம் ஆம்
கோதி கோதும்பைஅதாம் பாயசம் பால்சொறியே
**165
#16
சொறிமூலி கண்டுரம் காஞ்சொறி ஆகும் மத்தம்
தூர்த்தூரம் மதுமத்தம் அருணம் மத்து ஊமத்து ஆம்
நறுமருப்பு ஆத்திரகம் அல்லம் இஞ்சி ஆம் தேறு
நல் நிசி பீதகம் கதலி அரிசனம் காஞ்சனியே
செறி மஞ்சள்பேர் சுண்டி வேர்க்கொம்பு சுக்கு ஆம்
தீட்சணம் மரீசம் கோளகம் திரங்கல் கமறி
கறி மிரியல் கலினை காயமும் மிளகு ஆம் பத்தல்
காசை கொறுக்கச்சி சரவணம் சரம் நாணலுமே
**166
#17
நாணிய மாகதி கலினி பிப்பிலியே செற்பம்
நாசினி காமன் கடுகி திப்பிலிப்பேர் ஆறாம்
பூணு பசும்பிடி தகரம் பச்சிலை தமாலம்
புல்லகண்டம் கழை வேழம் இக்கு இரசதாளி
வேணுவொடு கன்னல் ஆலையும் கரும்பு என்றாகும்
வேரி வசுவாசி பீதகம் மூலகந்தம்
காணு விரை மூலம் இருவேலிப்பேர் கவிரம்
கணவீரம் கரவீரம் அலரியின்பேர் மரபே
**167
#18
மருக்கொழுந்து தமனகம் ஆம் இருவாட்சி அனங்கம்
மயிலையும் ஆம் குல்லை கஞ்சம் பங்கி கஞ்சா ஆகும்
பருத்தியின்பேர் காற்பாசம் பன்னலும் பஞ்சியும் ஆம்
பகன்றி கிலுகிலுப்பையின்பேர் குன்றி குஞ்சம் ஆகும்
மிருக்கரி கத்தரி வங்கம் வழுதிலையின்பேர் ஆம்
இதற்கு வழுதுணையும் ஆம் காரவல்லி கூரம்
விரைத்த பாகலின்பேர் கக்கரிப்பேர் வாலுந்தி
வெள்ளரிப்பேர் உருவாரம் வெள்ளை நாளிகமே
**168
#19
நாள் அலா பூத்தும்பி பிறக்கொடி சுரை ஆம் கொற்றான்
நந்தை என்றாம் திரிபுரி சாறடைப்பேர் மஞ்சிகமே
தாளியின்பேர் புலிதுடக்கி இண்டு ஈகை ஈங்கை
தானீஞ்சில் ஆம் பகண்டை சிவிதை சிவேதையும் ஆம்
கோளுறும் ஆடாதோடை வாசை ஆம் விரலி
கோடை கரமலரி இலாங்கலியே கார்த்திகைப்பூத்
தாளுறு காந்துகம் தோன்றி கோடல் காந்தளின்பேர்
சகுடம் சேம்பு ஆகும் பாவிரி பசிரிக்கு அடைவே
**169
#20
அடகொடு சிக்குருவும் இலைக்கறி ஆகும் சிலந்தி
அமுதவல்லி சீந்தில்பேர் கமதாயம்தானே
துடரும் நிலவாகைப்பேர் தாடிமமே சந்தம்
சூட்டு சத்திக்கொடி ஆகும் புட்டில் பீர் பீர்க்கு ஆம்
படலிகையும் ஆம் தூர்வை இளம்புல்லே சற்பம்
பதம் விடாரியும் அறுகு ஆம் சுருளிலை தாம்பூலங்
கொடி திரையல் மெல்லிலை தின்னிலை நாகவல்லி
குறித்த பான் அடைக்கொடியும் வெற்றிலைப்பேர்க்கு இயம்பே
**170
#21
இயவை ஆடகம் யாமம் முதிரையொடு தோரை
ஏலம் இவை துவரை ஆம் கடலை மஞ்சூரம்அதாம்
பயறு உழுந்து மாடம் ஆம் முற்கமே பாசிப்
பயறு சிறுபயறு ஆகும் தட்டை இதை கூலம்
கயவுறு காராமணி ஆம் குலத்தமே கொள்ளும்
காணம் ஆம் சிற்கடி முற்கம்போடு சிம்பை
வியன் அவரை ஆம் குரால் சில்லி சாகினியும்
மேகநாதனும் கீரைப்பேர் ஆம் கன்னிகையே
**171
#22
கன்னி காக்கணம் கிகிணி கருவிளையின் பேர் ஆம்
கற்றாழை குமரி கன்னி மஞ்சி ஆரலையும்
மன்னு சசரியும் ஆகும் உருளரிசி கொற்ற
மல்லி ஆம் சிவந்தி சீவனி பாலைப் பேர் ஆம்
சொன்ன குசை குசம் குமுதம் கூர்ச்சமும் தெர்ப்பைஅதாம்
சுண்டிலின்பேர் சமங்கை சுச்சு ஆம் தொண்டை விம்பன் கொவ்வை
அன்ன கோவையின்பேர் ஆம் நூழில் கொடிக்கொற்றான்
ஆயிடும் வச்சிரவல்லி பிரண்டை எனக் கழறே
**172
#23
கழல் கழங்கு கச்சூரம் உழல் கழற்சி ஆகும்
கணமுரி வேத்திரம் சாதி சூரல் பிரம்பு ஆகும்
செழில் அசுனம் காயம் இவை உள்ளியின்பேர் சுரசஞ்
சிறுகிழங்கு ஆம் கருணை கந்தம் சேனை சூரணம் ஆம்
தழை வரி விரீகி மணி மூக்கி பயிர் பைங்கூழ்
சாலி பசும்புலி தொலியல் சொல் வை பத்தும் நெல் ஆம்
வழுது வை பலாலம் வைக்கோல் அமுது படி அரிசி
வளர் அரி தண்டுலமும் ஆம் தவிடு முட்டை முடையே
**173
#24
முடுகு நொய்யே நொறுங்கு ஆகும் பதர் பதடி ஆகும்
மூட்டு பொழி பொங்கழியும் தூற்றாநெற்பொலி ஆம்
வடுவில் போர்க் குவை சூடு சும்மை என மூன்றாம்
மலைநெல்லின்பேர் தோரை ஐவனம் ஆம் குளநெல்
கடுகு நீர்வாரம் ஆம் ஏனல் கம்பு கவலை
கங்கு இறடி தினை ஆகும் ஏனல் குரல் கதிர் ஆம்
நடும் இருவி அருவி தினைத்தாள் ஆகும் சொன்னல்
நறுங்கு இறுங்கு சோளம்அதாம் கோத்திரவம் வரகே
**174
#25
வருத்தும் எள்ளுக் குமிகை திலம் எண் நூவும் நாற்பேர்
மற்று அதின்காய் கவை ஆம் வேயரிசி தோரைஅதாம்
குருத்து எருவை சூகரி வராகி சாய் முத்தம்
கோரை கொறுக்கையின்பேர் வாட்கோரை செருந்திஅதாம்
கரித்த கண்டல் முண்டகமே பூச்சி முள்ளிப் பேர் ஆம்
கல்லாரம் நீர்க்குளிரி ஆம் நெட்டி கிடைச்சு
பருத்த சடை கிடை ஆம் சைவலம் சடைச்சி நாரம்
பாசி ஆம் காளாம்பி ஆம்பியும் உண்டியுமே
**175
#26
முண்டகம் அம்போருகம் சரோருகம் சரோசம்
முளரி மரை சலசம் கேகயம் பதுமம் விந்தம்
புண்டரிகம் நளினம் கோகனகம் மாலுந்தி
பூநிதி பங்கயம் வனசம் அம்புசம் வாரீசம்
இண்டை திருமனை கமலம் நாளிகன்னி கேந்திரம்
இறும்பி விரிஞ்சம் பகற்பூச் சகசம் அரவிந்தம்
மண்டு விதியகம் சதபத்திரி புவனம் கஞ்சம்
அம்புயம் முப்பானாலும் தாமரைப்பேர் இறுமே
**176
#27
இறும்பு இராசிலம் தளம் தாமரைப்பூ ஆம் பொகுட்டே
ஏற்று உருட்பூக் கன்னிகை பூங்கொட்டைஅதாம் அதின்காய்
மறிந்த வராடகம் புட்பராகம் அதின்மணி ஆம்
வளையம் தாள் கொடி நாளம் நாற்பேராம் நீலம்
அறிந்த குவலயம் கோலம் கல்லாரம் பானல்
அரத்தம் இந்தீவரம் குவளை காவி கழுநீராய்ப்
பெறும் பெயர் உற்பலமும் ஆம் நெய்தல் அல்லி ஆம்பல்
பெரும் குமுதம் கயிரவம் நாற்பேர் எனப் பேர் தருமே
**177
#28
தரு அடவி நகம் சாகி குசம் சாதி சாலம்
தாபரம் பாதவம் விருக்கம் அகலியம் அத்திரியே
துருமம் பூதரம் தாருப் பொதும்பர் பொங்கர் பதினேழ்
சொல்லும் மரப்பேர் பொழில் நந்தனவனம் உய்யானம்
அரி துடவை பூந்தோட்டம் மரச்செறிவு ஆராமம்
அடவி உத்தியானம் வனம் உபவனம் தண்டலை கா
முருகு இரண்டேழ் சோலைக்கு ஆம் சகுனமொடு கந்தம்
மூலம் இவை கிழங்கு ஆம் தூர் சடை சிவை வேர் ஆமே
**178
#29
வேருறும் அங்குரம் பொடிப்பு நாறு கான் முளை ஆம்
விடபம் கோடிபம் கொம்பு பணை சினை கோல் கொம்பர்
தாருவுடன் கவடு உலவை களை பொங்கர் காம்பு
தாழ் புறக்கம் சாய்கை உறுப்பு இடபம் கோடு ஆமே
வார் உலவு தழை கப்புக் கொப்பின்பேர் தூழில்
வள்ளி இரத்தி இலதை வல்லி கொடிப்பேர் ஆம்
சேரும் அரி கலை காழ்ப்பு கரி காழ் ஆசினியும்
சேகு வயிரம்அதாகும் பொந்து பொள்ளல் பொய்யே
**179
#30
பொய்யாத தலம் தகடு பன்னம் அடை ஓலை
புல் உலவை சாய்கை சதனம் சதம் பலாசம்
மெய் ஆர் பத்திரம் தழை தமாலம் இலைப்பேர் ஆம்
மென் கிசலை குழை கிளை வல்லரி முறியே அலங்கல்
எய்யாத மஞ்சரி பல்லவமும் பூந்தளிர்ப்பேர்
இலிர்த்தல் சிலிர்த்தலும் துளிர்த்தல் கிளைத்தல் குழைத்தலுமே
கொய்யாது தளிர்த்தலின்பேர் வளன் பயினே முருந்து
குருத்து முதல் செறி யானி பிசினும் அதன் முகிவே
**180
#31
முகிழம் சாலகம் போகில் நனை மொக்குள் மொட்டு
முகிழ் கலிகை கோரகமே முகை மொந்தை அரும்பு ஆம்
அகலும் அலர் தாமம் இணர் துணர் புட்பம் குசுமம்
மலர் போது சுமனசம் தார் வீயும் பூப்பொதுப்பேர்
தகு கண்ணி துணர் தொத்து மஞ்சரி பூங்கொத்து ஆம்
தாது மகரந்தம் கேசரம் கொங்கு மலர்த்தூள்
மகரமும் பராகமும் ஆம் அவிழ்தல் விள்ளல் நெகிழ்தல்
மலர்தல் வெடித்திடல் விரிதல் உடைதல் அலர்தலுக்கே
**181
#32
அலரின் அல்லி அகவிதழ் ஆம் புல்லி புறவிதழ் ஆம்
அயர் பழம்பூத் தேம்பல் செம்மல் சாம்பலும் ஆம் ஏடு
மலர் தகடு தோடு மடல் பூவிதழ் ஆம் பிஞ்சு
வடுக் காய் தீவிளியும் ஆம் பலன் கனியே பழம் ஆம்
பலனதின் தோல் செதிள் ஆகும் காழ் கொட்டை பீசம்
பரல் விதை வித்து ஆம் குச்சம் படுச் சாறு தாறு
குலை குடும்பு காய்க் கொத்து ஆம் பலனம் காய்த்தது ஆம்
கொடும் அபகேசிகை வடுகு பழி பலனிலாதே
**182
#33
பலிதம்இல் பூவாக்காய்க்கும்மரம் கோளி வானப்
பத்தியம் ஆம் உலர்ந்தமரம் வானம் எனப் பேர் ஆம்
உலம் அடவி ஆரணியம் வனம் தாவம் புறவம்
உயர் தடகி கான் கடறு காந்தாரம் அத்தம்
திலம் முளரி சுரம் ககனம் பழுவம் விடர் காண்டம்
தில்லம் கானகம் வல்லை கானல் கடம் கானம்
தொலைவுஇல் பொச்சை குறும்பொறை கண்டகம் கல்லி களரி
துருக்கமே கட்சி முப்பானொருபேர் காட்டினுக்கே
**183
#34
காட்டுநிறை தூறு குன்மம் பஞ்சி செடி விடபம்
காண் அரியல் சிறுதூறு ஆம் பதுக்கை அறல் இறல் ஆம்
வீட்டு குறுங்காடு இறும்பு ஆம் வல்லை பெருங்காடு ஆம்
விளை அரண் காவற்காடு ஆம் முதையல் முதிர்காடு ஆம்
பூட்டதிகம் இளங்காடு ஆம் கரிகாடு பொச்சை
பொதிசுரமும் பொரிகாடு ஆம் பொச்சை வேலியின்பேர்
கூட்டு அகக்காழ் ஆண் புறக்காழ் பெண் ஆகும் வெளிறு
கொடுவல் அலி ஆம் கடுக் கண்டகம் இரண்டும் உள்ளே
**184
#35
முளரி அறல் சமிதை எரி துரும்பு கள்ளி ஞெகிழி
முடுகு சிராய் இடுகு கட்டை இந்தனமே காட்டம்
முளர் முருடு விறகின்பேர் உரை அதிங்கம் குளியம்
யோகம் மூலியும் மருந்தும் ஔடதத்தின்பொதுப்பேர்
தளர்வறு சல்லியகரணி கருவியின் புண்ணாற்றல்
சந்தானகரணி துண்டம்பொருத்தல் ஆம் விரணக்
களையொழித்தல் சம்மானகரணிஅதாம் மூர்ச்சை
களைந்து உயிரீகுதல் அமுதம் அமுதசஞ்சீவனியே
**185
#36
வனை தாமம் அலங்கல் சிகழிகை கண்ணி அணியல்
மாலிகை தார் மஞ்சரி கத்திகை படலை மிலையல்
புனை கோதை சுக்கை வாசிகை தொங்கல் ஒலியல்
பூந்தெரியல் பிணையல் இலம்பகம் துடரே சுருங்கல்
நினைவாகும் தொடை இருபானிரண்டும் மாலையின்பேர்
நீடும் இலம்பகம் சூட்டும் நுதலணி என்றாகும்
சினை ஆகும் வாசிகைப்பேர் படலை சிகழிகை ஆம்
செயம்பெற்றோர் அணிவதுதான் வாகைமாலிகையே
** நான்காவது மரப் பெயர்த் தொகுதி முற்றும்
@5 ஐந்தாவது இடப் பெயர்த் தொகுதி
**186
#1
மால்இல் ஆனந்தநிலம் நிருவாணம் வீடு
வாழ் சிவம் கைவலம் சித்தி முத்தம் விபவருக்கம்
காலும் முத்தி கேவலம் பஞ்சமகெதி மீளாதகதி
அமுதம் மோக்கமும் மோட்சம்அதாகும் உவணை
மேலுலகு கோவில் வானகம் புவனம் சுவர்க்கம்
விசும்பு உம்பர் உயர்நிலை புத்தேளுலகு கற்பம்
சில விமானமும் தேவலோகம் அதாம் சேடி
சேணி விஞ்சையூர் பவணம் நாகருலகு அதுவே
**187
#2
அதம் அதோகதி பிலம் பாதாளம் பாதலம் ஆம்
அளறு கும்பி சிறை இருள் ஆவிரம் ஊழல் பூதி
புதவு சுவப்பிரம் நரகம் திகிரி துர்க்கம் நிரையம்
புலவு நாரகம் பவர்க்கம் அள்ளல் இவை நரகு ஆம்
முது விசும்பு அம்பரம் உலகு தேம் திசை கோக் ககுபம்
முகம் அரிதம் ஆசை மாதிரம் புலமே காட்டம்
இது திக்கு ஆம் கிழக்குப் பூருவம் குணம் பிராசி
இந்திரியே குணக்கு இரவி யோனி கீழ்த்திசையே
**188
#3
திசையினில் சிவேதை தெற்குத் தெக்கணமே வாசி
தென்திசை யாமமும் ஆம் பச்சிமம் குடக்கு மேல் மேற்கு
உசிதமுறு பிரத்திசை வாருணம் குட மேல்திசை ஆம்
உத்தரம் உதீசி உதி உதக்கு வடதிசை ஆம்
வசுதை மேதினி உலகு தலம் புடவி தரணி
மண் கிடக்கை தரை பாலம் பிருதுவி காசினி பூ
அசலை தாத்திரி நகம் தராதலம் கோ விபுலை
அம்பரி அம்புயம் நாகதாரை யுகம் புவியே
**189
#4
புவனி தரித்திரி சகம் மண்டலம் ஞாலம் வையம்
புவனம் அகலிடம் சாந்தை மகி நேமி பாரி
பவனம் வசுமதி விசுவம் பொழில் வேலாவலயம்
பாத்திபம் வையகம் இம்பர் படி தாலம் பொறையே
அவனி தாரணி பணை சக்கரம் நிலம் கோத்திரி பார்
அளக்கர் வசுந்தரை இகம் பணாதரி தாபரமே
குவலயம் மாதிரம் தரை பூதலம் திணை பூதியமும்
குவ்வும் அறுபத்தாறும் பூமியின்பேர் நாடே
**190
#5
நாடு கண்டம் நீவரம் மண்டலம் ஏணி தேசம்
நல் அழுவம் சனபதம் பைதிரம் உலகு பாண்டில்
கூடு சும்மை தண்ணடையே பொழில் பதினான்கு ஆகும்
குறிச்சி நிலம் பட்டினம் நிவேசனம் சம்வாகம்
பாடி புரம் பூண்டி வேசனம் நியமம் பாக்கம்
பதி நகர் வைப்பு உறையுள் குறும்பு அகரம் நொச்சி வேலி
கேடகம் நிகாயம் சோபணம் முட்டம் வசதி
கிளர் சேரி பூக்கம் பூரியம் வாழ்க்கை குடியே
**191
#6
குடிக் காடு புரி அருப்பம் பக்கணம் கிராமம்
குகை மடம்பம் பள்ளி கோசரம் கற்பம் பாண்டி
படப்பை தாவளம் நிலையம் குடம் வாசம் சரணம்
பாழி சும்மை கறுவடம் பேட்டு அகலுள் பட்டி இருக்கை
திடத் தாமம் கடை நகரம் குலம் குப்பம் கோட்டம்
சேர்வு வாழ்வு அறுபானொன்று ஆகும் ஊர்ப்பொதுப்பேர்
தடக் கிரிசார் குறிஞ்சி சுரம்சார் பாலை காடுசார்
முல்லை நாடுசார் மருதம் நெய்தல் கடலே
**192
#7
கடகம் உவளகம் சாலம் ஓதை எயில் வரைப்புக்
காப்பு அரண் வெண்ணகை அகப்பாப் புரிசை இஞ்சி ஆரை
தட மதிள் வளாகம் நொச்சி ஆரல் சிறை வேலி
தளி வேதி பிரகாரம் வாரியுடன் கோட்டை
துடர் வளையம் வேங்கை சுற்றின் மதில்பேர் நாலேழாம்
தோணி விதப்பு எந்திரம் கோசம் தகைப்பு நாஞ்சில்
படர் ஞாயில் மதிலுறுப்பு ஆம் கிடங்கு ஓடை அகப்பாப்
பதவு உடுப் பாம்புரி கேணி பரிகம் அகழ் வாயே
**193
#8
வாயில் கடை புழை தோட்டி தூம்பொடு துவாரம்
வாரியும் வாசல்பேர் ஆம் கோபுரம் நீள்வாயில்
சேய பெருவாயிலும் ஆம் புதவு குறும் புழையே
திட்டியின்பேர் ஆம் வாசற்படி கருக்கு நகம் ஆம்
பாயும் வழித் திண்ணையின்பேர் அளிந்தம் ஆம் பதணம்
பரிகமும் உப்பரிகை அகப்பாவும் மேடையின்பேர்
சாய்வுஇல் அரமியம் நிலாமுற்றப்பேர் மானம்
சமத்தமும் வேரமும் ஆகும் மண்டபப்பேர்ப் பொதுவே
**194
#9
பொதி மன்று அம்பலம் மன்றம் பொதுசபை ஆம் தெற்றி
பொற்சாலை அம்பலம் சித்திரகூடம் முப்பேர்
விதி தரணி வேத்தவை அத்தாணி அரண்மனையும்
வேந்துஇருக்கை ஆம் குலம் மாளிகை பவனம் சாலம்
மதிய திருமனை கோயில் அரசர்இல்பேர் பள்ளி
அறச்சாலை அறப்புறமும் ஆம் தளியே சாலை
மதி கோட்டம் சேதியம் சன்னிதி நிலையம் கோயில்
மந்திரம் நிகேதனம் தேவாலயப்பேர் சேரே
**195
#10
சேர்பு வயின் பாத்தி மாளிகை மாடம் புக்கில்
செறி வசதி இடவகை மந்திரம் முறையுள் இல்லம்
சாரு மனை அகம் இல் என்று ஈரேழும் வீடு ஆம்
தாழ் குச்சில் குரம்பை புரை கூரை சிற்றில் குடில் ஆம்
ஆர் உறையுள் கந்தவாரமும் அந்தப்புரம் ஆம்
மட்டில் அடுக்களை பாகசாலை உணாக்கோட்டம்
கூர் மடைப்பள்ளியின்பேர் குட்டிமம் படுத்தபூமி
குறடு திட்டை மண்ணீடு திண்ணை வேதிகையே
**196
#11
வேதியே ஓமகுண்டம் ஆம் பள்ளி பாழி
வியன் மடம் தாபதம் காண்டை முனிவர்இருப்பிடம் ஆம்
ஓதும் இறை வளவி வீட்டு இறப்பு ஆகும் விடங்கம்
முகடு ஆம் அங்கணம் முன்றில் இல்முனும் முற்றம்அதாம்
பாதி ஆரோகணம் சோபானம் தாழ்வாரம்
படியும் ஆம் கலனிருக்கை பண்டசாலைஅதாம்
காது சுவர் பித்திகை பல்கணி குறுங்கண் சாலம்
காலதர் வாதாயனமே சாளரம் சாலகமே
**197
#12
சாலம் உயர் சலதாரை அங்கணம் தூம்பு ஆகும்
சாட்டுக் காமரம் சுல்லி குமுதம் முக்கூட்டு ஆய்தம்
தூலம் உத்தானமும் அடுப்பு ஆம் கலன்கள் சுடுபூமி
சுள்ளைஅதாம் தக்கசமே சதுர்க்கைஅதாம் சந்து
மூலை முக்குச் சந்தியின்பேர் கோணம் முடுக்கு ஆகும்
முச்சந்தி அந்தி சிருங்காடகம் நாற்சந்தி
கோலியிடு சுருங்கை கன்னவாசலின்பேர் புகலே
குதிரின்பேர் பாடி பாசறையும் முனைப் பதியே
**198
#13
பதி உறையூர் கோழிஅதாம் கஞ்சி கச்சி காஞ்சிப்பதி
ஆகும் காளகம் கடாரம் ஆம் கூடல்
மதுரை ஆம் காவிரிப்பூம்பட்டினம் புகார் ஆம்
வஞ்சி கருவூர் வேணு வனம் நெல்லை ஆகும்
மிதுலை விதேகைப்பெயர் ஆம் கோசலை சாகேதம்
விநிதை அயோத்தியின்பேர் ஆம் அவந்தி உஞ்சை ஆகும்
நதியின் அவிமுத்தம் வாரணவாசி வாரணாசி
காசிப்பெயர் சிங்களம் ஈழம் நகரே
**199
#14
நகர்க் கூலம் பீடிகை அங்காடி ஆவணம் ஆம்
நவின்ற நெடுந்தெரு மன்றம் மார்க்கரியமமும் ஆம்
வகுத்த குறுந்தெரு மறுகு ஆம் பக்கணம் சிரேணி
வாடை பூரியம் சேடி தெரு ஞெள்ளல் வீதி
புகுத்த ஆபீனம் வேசனம் ஆகும் பத்தும்
பொதுவீதிப்பேர் செண்டு வையாளி வெளியே
அகற்று திருமுற்றம் இவை புரவிவட்டம் நான்காம்
அடரும் தூள் பூழி பொடி புழுதியின்பேர்த் தரமே
**200
#15
தரணி குன்று குவடு வரை பதலை நகம் சயிலம்
தாணு மாதிரம் விலங்கல் விண்டு சையம் சிமையம்
இரவி பொருப்பு அடுக்கல் பூதரம் சாரல் பொச்சை
இறும்பு குறும்பொறை திகிரி சுரும்பு பொகுட்டு அசலம்
அரிசிகரம் பிறங்கல் வெற்புச் சிகரி சிலை நாகம்
அத்திரி தராதரம் சிலோச்சயம் வேதண்டம்
கிரி தடம் குத்தரம் பொங்கர் மந்தரம் கற்பறம்பு
கேளிதம் கல்லகம் நவிரம் கனதரம் ஓதிமமே
**201
#16
ஓதி பருப்பதம் வீரம் சிலம்பு பொறை விசையம்
ஓங்கல் பொற்றை கோத்திரி சிராவணமே பீலி
பாதவம் என்று அறுபதுமே மலையின்பேர் அறையே
பாறையின்பேர் கோடு கொடுமுடி கூடம் சிகரம்
மீதுயர்ந்த குவடு ஐந்தும் மலையின்உச்சிப்பேர் ஆம்
விவரம் முழை முடுக்கர் விடர் கந்தரமே நிகுஞ்சம்
பேதம் முழைஞ்சிலும் குகைப்பேர் அறையின்பேர் முழைஞ்சு
பிலமும் ஆம் அதன் வாசல் நூழை சுருங்கையுமே
**202
#17
சுருங்கு தடம் சாரல் வாரம் சானு நிதம்பம்
சொன்ன மலைப்பக்கம்அதாம் கற்பாழி பொறையே
கரண்டை துறுகல் ஆகும் வலம் சிலை கல் உபலம்
கன சிராவணம் சையம் உலம் திரண்டகல் ஆம்
முரம்பு பரல் பருக்கைஅதாம் குவை திடறு திட்டை
மோடு சுவல் மேடு குப்பை திடர் படரே வன்பால்
விரிந்த குவால் அவல் ஒதுங்கல் பதுக்கையும் மேட்டின்பேர்
விடர் விட்பு கமர் மூன்றும் நிலம் பிளந்த வடுவே
**203
#18
வடமலை வில்மலை தேவாலயம் துருவாரூடம்
மந்தரம் உத்தரகிரி பொன்மலை மத்துமலையே
நெடுமலையும் மேருவின்பேர் வெள்ளிமலை கயிலை
நீண்ட சயிலாதி விசையாத்தம் வேதண்டம்
கட தவளகிரி இரசதாசலம் சிவாத்திரி
கயிலாசகிரிப்பேர் தென்மலை பொதிகை மலையம்
அடர் பொதி சந்தனகிரி தாம்பிரபேதி தமிழ்வெற்பு
அகத்தியாசலம் தென்றல்கிரி பொதியமலையே
**204
#19
மலை ஆகும் குடமலை வல்லியம் கொல்லிக்கிரி ஆம்
வட்டவரை உவளகம் சக்கரவாளகிரி ஆம்
ஒலியல் வருபுனல் தடினி குடிஞை துனி ஓணம்
உந்தி துறை சிந்து நதி ஆற்றின்பேர் உயவை
கலுழி கான்யாற்றின்பேர் உவகை அருவியின்பேர்
காகந்தி பொன்னி காவேரி காவிரிப்பேர்
சலம் மிகு தக்கணகங்கை கடநதி தண் பொருனை
தண் பொருந்தம் தாம்பிரபன்னியும் பெரியாறு எனுமே
**205
#20
ஆற்றினில் கோதாவிரிப்பேர் விருத்தகங்கை வைகையாற்றின்பேர்
வேகவதி கவுதமைப்பேர் கோதை
மாற்று கன்னிப்பேர் குமரி ஓடை கால் கால்வாய்
வாய்க்காலின்பேர் குரம்பு குலை சேது வரம்பு
தேற்றுமணை செய்கரைப்பேர் கோலம் நீர்க்கொழுந்து ஆம்
தெளிந்தநீர் சலசலம் ஆம் உந்திநீர்ச் சுழி ஆம்
ஊற்றின்பேர் உறவி ஆம் கூவலே கூவமொடு
பூவல் அசும்பு கிணறு ஆம் எனச் சொல்வாரே
**206
#21
வாரி அரி நேமி நதிபதி பவ்வம் குரவை
வாருணம் சலேந்திரி அன்னவம் அளக்கர் கார்கோள்
நீர் உவரி சலநிதி தீகரந்தம் நீரலை முன்னீர்
தரங்கி திரை உததி உவர் வேலாவலயம்
வீரை மகராலயம் அம்பரம் அத்தி ஓதம்
வெள்ளம் பாராவாரம் வேலையே சலதி
பாருடை சக்கரம் புணரி கடல் அம்புராசி
பரவை உப்புச் சலராசி ஆழி சாகரமே
**207
#22
கரை நரலை ஆர்கலி வாரணம் சிந்து பெருநீர்
கழிச் சிரத்தினாகரம் வாருதி சலவட்டமும் என்று
உரைதரும் ஐம்பதுபேரும் சமுத்திரத்துக்கு ஆகும்
ஓரம் அலைவாய் தீரம் தடம் வாரம் திமிரி
வரை அணை கூலம் கோடு பாரம் நீர்க்கரைப்பேர்
வளர் வேலை பாரியம் பாராவாரம் குவடும்
விரை கடலின்கரை ஆம் கல்லோலம் அலை தரங்கம்
விசிகரம் சீகரம் குமிழி நீர் அறலும் திரையே
**208
#23
திருகு புவ்வம் புற்புதம் ஆசூசம் மொக்குள் கொப்பூழ்
செறி புரையும் குமிழியின்பேர் நுரை பேனம் ஆகும்
குரை கலங்கல்நீர் கலுழி ஆவிலம் ஆம் கூவம்
கும்பீரம் கயம் தொடு குண்டு அழுந்து அகழ் அகாதம்
நிரலுறும் ஆழமும் நீந்துபுனல் ஆம் வளாறு
நிறைநீர் பிராறும் அதாம் உவர்நீர்ப் பேருறை ஆம்
இருணம் அழல்நிலமும் உவர்த்தலம் ஆகும் காயல்
இடும் கானல் முரம்பு என்னும் இம்மூன்றும் கழியே
**209
#24
கழிமுகம் தோணாமுகம் அதோமுகமே போந்து
கயவரி புகாரும் அழிமுகமும் என ஏழாம்
அழிவுஇல் உவளகம் அளக்கர் கழிநிலம் உப்பளம் ஆம்
அரங்கம் ஆற்றிடைக்குறை ஆம் இலங்கை துருத்தியும் ஆம்
குழை அளக்கர் அசறு தொய்யில் செதும்பு அளறு சகதி
குழம்பு அசும்பு அங்கணம் பொகுட்டுக் கொள்ளல் பங்கம் பூழி
அளறு தெளி மயசு செய்யல் வரி தோணி காலாழ்
அஞறும் அசுபாகம் அள்ளல் சேதகமும் சேறே
**210
#25
சேறுஅதனில் குமிழ் பொகுட்டு ஆம் வெண்மணல் வாலுகம் ஆம்
தீய கருமணல் அறல் ஆம் அதர் அயிரி மணல் ஆம்
பாறுஇல் புளினம் தூதி மணல்குன்று ஆம் தரிசு
பாழ் கிராம்பின்பேர் புற்றரை சாட்டுவலம் ஆம்
ஊறு இலஞ்சி பொய்கை வன தரம் வட்டம் எல்வை
உவளகம் கோட்டகம் தங்கல் கயம் பயம் தடாகம்
கூறு சுனை குழி பல்வலம் கிடங்கும் அலங்கல்
குண்டம் ஊருணி பண்ணை ஏரி பங்கம் படுவே
**211
#26
படுகர் குளம் சவர்தரம் நீர்நிலை நளினி ஓடை
பட்டம் இலஞ்சகம் ஆவி அலந்தை குட்டம் கேணி
மடுவொடு புட்கரணி தடம் பூ இ முப்பானெட்டும்
வாவியின்பேர் இந்திரவாவிகள் இலவந்திகை ஆம்
தடி பலம் செய் மாக் கழனி பணை ஆலவாலம்
தாழ் பழனம் பானல் செறுக் கைதை பண்ணை அகணி
கொடி வரப்புள் வயல் கண்டம் விளைநிலப்பேர் புன்செய்
குண்டில் பாத்தியும் இவை முப்பேர் சிறுசெய் ஆமே
**212
#27
செய் வரம்பு மாசி பரம்பொடு குரம்பு ஆம் வரம்பில்
சேர் அருகு கங்கு எனவாம் உழவின்பேர் துடவை
தொய்யிலும் ஆம் சாலேயம் செந்நெல்விளைநிலம் ஆம்
துதிக்கும் உருவரை என்ப பலவிளையும்நிலம் ஆம்
மொய் கடவு துடவை கொல்லை படப்பையும் தோட்டப்பேர்
முதையல் பழங்கொல்லையின்பேர் புதியகொல்லை இதை ஆம்
பொய்யுறு வன்மீகம் அளை புற்று ஆகும் குரும்பு
புற்றஞ்சோறு ஆம் துச்சில் ஒதுக்கிடப்பேர் அளவே
**213
#28
அளவுதரும் சாந்தம் ஒருவந்தம் வேறிடம் ஆம்
அரங்கம் ஆயுதம் கூத்துச் சூது பயில் களம் ஆம்
வளர் கழகம் களம் கிடை கல்லூரி என நான்கும்
மகிழ் கல்விபயிலிடப்பேர் அமர்க்களம் போர்க்களமே
களரி பொருங்களம் யுத்தகளம் இரணகளம் செங்களம்
கடவை படுகளம் ஆகவபூமி மடவை
தளரும் அடுகளம் இறுக்கை செருக்களம் செம்புலமே
தடவை பறந்தலையொடு ஞாட்பகம் சமர்செயிடமே
**214
#29
இடுகாடு சுடுகாடு காளவனம் சுடலை
எரிவனம் துற்காடு பிணவரை புறங்காடு ஈமம்
படுகாடு பிதிர்வனமே சுடுநிலம் மயானம்
பன்னிரண்டாம் குயிலாயம் குடம்பை கட்சி கூண்டு
தடு கூடு பஞ்சரமும் ஆம் பாழி பாயல்
சட்டகம் கண்படை படுக்கை அமளி பள்ளி சேக்கை
விடு சயனம் உறையுள் கட்சி துயிலிடம் ஆம் பொத்து
மென்பண்ணை சேக்கை பட்டம் விலங்குதுயிலிடமே
**215
#30
துயிலிடம் வெம் பரி கரிக்குக் கண்டம் சேவகம் ஆம்
தொழுவே ஆன்நிலை பசுவின்புரை ஆகும் அருப்பம்
உயரும் ஆரிடம் அழுவம் அழுக்கிடம் ஆம் ஞெள்ளல்
உவளகம் குப்புறல் பயம்பு தாழ்வு குழி படுகர்
பயல் இழிவு கிழக்கு அவல் கீழ் பள்ளம்அதாம் கோழிப்
பறவையிடம் கிரவுஞ்சம் யோசனைப்பேர் புகை ஆம்
குயிலும் சாமார்த்தம் காவதம் காதம் ஆகும்
கூப்பிடுதூரப்பேர் குரோசம் என வருமே
**216
#31
வரி இடவை அடி செப்பம் கிறி இயவை வாரி
வகுந்து ஒழுக்கம் நடை தாரி வதி செலவு பாதை
சரி கடறு வயவை நெறி அதரி குவை பயணம்
தாரை அத்தம் கால் பதவை ஆறு வகிர் அயனம்
தெரு நடவை பதம் மாற்கம் சுரம் வட்டை பட்டம்
சேர் வழிப்பேர் ஏழைந்தாம் அருநெறிப்பேர் தூம்பு
சுரம் அத்தம் கடம் கடறு ஆம் கவலை கவர்வழி ஆம்
சுருங்கை சோபானம் ஆரோகணம் கற்படியே
**217
#32
படி அளக்கர் பெருவழி ஆம் விடங்கர் சிறுவழி ஆம்
பணை வரம்பின்வழிப்பேர் மரீசி ஆம் வழி பால்
இடை வயின் கண் குலம் முதல் உள் பதி அகம் தேம் பக்கம்
இடன் களம் சார் கடை முனை மேல் வாமம் கீழ் சூழல்
புடை வலம் பின் பாடு பட்டி வாய் வைப்புத் தேயம்
புறம் மருங்கு நிலம் தானம் உழி தலை இல் பாங்கர்
கடை முகம் வளாகம் அயல் உறை தெவ்வு முன் கால்
கை புலம் நாற்பானேழும் இடப்பெயரின்பாலே
**218
#33
பால் புடை பாரிசம் மருங்கு புறம் சார்வு
பாங்கர் சிறை ஞாங்கர் உழி யாங்கர் பக்கம் ஆகும்
சால் பிரமம் கூழை நனந்தலை ஒத்தல் அணுகாச்
சமன் மையம் ஆதனம் மத்திமம் நள்ளு நாப்பண்
ஏல் இடையும் நடு ஆகும் ஈண்டு இவணே இம்பர்
இவ்விடப்பேர் ஆண்டு அவண் அவ்விடம் உம்பர் உவண் ஆம்
ஏலுடன் அஞ்ஞாங்கர் தலை அன்னர் முன் தான் முதல் ஆம்
வினவும் எங்கு யாங்கு எவண் யாண்டு எவ்விடம் அத்தனையே
** ஐந்தாவது இடப்பெயர்த் தொகுதி முற்றும்
@6 ஆறாவது இயற்கைச் செயற்கைப் பலபொருட் பெயர்த் தொகுதி
**219
#1
அத்தம் இரணியம் மாழை வங்காரம் காணம்
ஆசை பொலன் செந்தாது மாசை உரை சாமி
பத்திரம் பூரியம் காரம் சாதகும்பம் புதையல்
பண்டம் காங்கேயம் முதல் உறை வசு மாடு அனந்தம்
வித்தம் ஆடகம் ஈகை பொருள் பூரி செங்கொல்
வெறுக்கை அரி பீதம் சாமீகரம் சாம்புனதம்
கைத்து நிதி சந்திரம் கூழ் மித்திரையே ஏமம்
காணி காஞ்சனம் தங்கம் வேங்கை சொன்னம் தனமே
**220
#2
தனி ஈழம் பிங்கலம் தேசிகம் சாதரூபம்
தமனியம் நிதானம் பீதகம் ஆடை தொடுக்கம்
கனகம் அபரஞ்சி திரவியம் சுவணம் அருத்தம்
கல்யாணம் முகரி செம்பொன் அறுபதோடிரண்டாம்
தொனி தாரம் இரசதம் காவுதம் களதபுதமே
சுல்லு வெள்ளி வெண்பொன் ஆம் திருமேனி எருவை
செனிவடுத் தாம்பிரம் சிக்கம் உதும்பரமே சுற்பம்
செம்பு ஆகும் ஈயம் வங்கம் சீருளும் சொன்னதுவே
**221
#3
சொன்னல் கருந்தாது அகி கொல் அயம் கரும்பொன் இரும்பு ஆம்
சொன்னவை ஐம்பொன் ஆம் தரா மதுகம் ஆகும்
மின் உறையும் கஞ்சமும் வெண்கலம் ஆம் முன் ஐந்தோடு
இவையும் தாது எழுலோகம் காரீயம் நாகம்
பின்னு வங்கம் தானாம் மாயாபுரி ஆர்கூடம்
பித்தளை ஆம் இவை கூட நவலோகம் ஆகும்
உன்னிய வங்காரமே தகணமொடு மாழை
உலோகமதன்கட்டிகள் சம்பகம் இரும்பாணிகளே
**222
#4
இரும்புணியே காந்தப்பேர் சந்திரகாந்தப்பேர்
இந்து சிலை சூரியகாந்தம் சலாகைஅதாம்
தரும் சூதம் இரதம் விந்து ஆம் கெந்தகப்பேர் நாறி
சத்தியும் ஆம் சாதிலிங்கம் இங்குலிகம் இலிங்கம்
பொரும் குலிங்கம் ஆகும் அரிதாரப்பேர் பழுப்பு ஆம்
பொரிகாரம் இடங்கணம் ஆம் காயம் இங்கு என்றாகும்
திரும்பு உருசி சயிந்தவம் ஏலவணம் உப்பின்பேர் ஆம்
சீதாரி குங்குலியம் குங்குலு குக்குலுவே
**223
#5
குலவு மாணிக்கம் முத்து மரகதமே நீலம்
கோமேதகம் பதுமராகமே வயிரம்
சிலைவுஇல் வயிடூரியமே பவளம் நவமணி ஆம்
செம்மணி மாமணி மாணிக்கப்பேர் முத்தாரம்
அலர் தரளம் மவுத்திகம் நித்திலம் முத்தம் பச்சை
அரியும் மரகதம் ஆகும் மணி நீலம் ஆகும்
கலியில் கோமேதகப்பேர் மேதை பற்பராகம்
கவுத்துவம் ஆம் வச்சிரம் என்பது வயிரம் ஆமே
**224
#6
வயிடூரியம் வாலவாயம் ஆம் பவளம்
வரு துவர் துப்பொடு துகிர் வித்துருமம் அரத்தமும் பேர்
அயிர் பிரவாளமும் ஆம் காசு இரற்றினம் கல் மனவோடு
அரதனம் சலாகை மணிப்பொது அக்கு மனவு
பயில் உருத்திராக்கம் முப்பேர் வளை மணிக்கும் ஆகும்
பளிங்கு படிகம் பளிக்கு ஆம் காரிகமும் தாதும்
சுய காவிக்கல் ஆகும் சிந்துரம் சிலேகம்
சுடிகை சுட்டி திலதம் பொட்டு இவை திலகப்பெயரே
**225
#7
திலகம் புண்டரம் நுதலிலிடுகுறி ஆம் தொய்யில்
சேயிழையார் முலைக்கோலம் ஆம் சாந்து களபம்
கலவைச் சேறே விரை காலேகவண்ணம் தளம் ஆம்
காசறை ஏலம் தகரம் மயிர்ச்சாந்தின்பேர் ஆம்
புலி கலவை வட்டிகை பீதமும் நான்கு சாந்து ஆம்
பூசுபொருள்பேர் அங்கராகம் ஆம் கூலம்
பலபொருளே மனவகம் பண்ணியம் பண்ணிகாரம்
பரிகாரம் வளம் தாரம் பல பண்டம் இவையே
**226
#8
பண்டாரம் பொக்கிஷப்பேர் தண்டம் கோசமும் ஆம்
பளிதம் பாளிதம் சசி கற்சரம் கனசாரமுமே
கொண்டார் கற்பூரம் எனத் தேய்வை செச்சை சேறு
குழம்பு ஆம் அச்சுதம் விந்தம் அறுகு அரிசிக்கூட்டு ஆம்
அண்டாத துப்பு அரத்தம் கொம்பு அரக்கு ஆம் செம்பஞ்சு
அலத்தகம் ஆம் பூளை இலவின்பஞ்சின்பேர் ஆம்
துண்டான பருத்தி பன்னல் தூலம் பஞ்சு ஆகும்
துய் துடர் சூத்திரம் தந்து பனுவல் இவை நூலே
**227
#9
நூலின்முதல்கயிறு கச்சை குணம் தாமம் பழுதை
நுண் பாசம் வடம் புரி நாண் இரச்சை அக்கம் தாம்பு ஆம்
சாலம் வலை ஆம் வலையில்கயிறு மாசு என்பார்
சாணி திருநீறு பொடி சாந்தம் காப்பே மஞ்சூலி
விபூதியின்பேர் ஆம் பொடி பூழி புழுதி
தூளி சுண்ணம் தாது துகள் நீற்றின்பேர் ஆகும்
வால் அடலை வெண்பலி சாம்பரும் சாம்பல்பேர் ஆம்
மண்சாந்து சுதை களபம் சுடுசுண்ணம் தகுமே
**228
#10
தகர் சின்னம் பிதிர் சிதர் பராகமே பின்னர்
தரணி ரேணுவின்பேர் ஆம் பிசின் பயின் என்றாகும்
ஞெகிழி தீக்கொள்ளிஅதாம் கடைக்கொள்ளி முளரி
நீள் இராதமும் அலாதமும் ஆகும் கந்துள்
பகர் இருந்தை நல்லமுமே கரியின் பேர் வெண்டேர்
பாழ்த்தேர் பொய்த்தேர் கானல் பேய்த்தேரின்பேர் ஆம்
மகிழ் விதை நெல்மணி அலகு பலகறையும் பரல் ஆம்
வாய்த்த துணை அறை தூக்குச் சல்லி எனும் பொருளே
**229
#11
பொருவு புன்கம் பாளிதம் பால் அடிசில் உணாப் புழுக்கல்
போனகம் துற்று உண்டி மிசை மடை அயினி பொம்மல்
சரு மிதவை கூழ் அசனம் போசனம் பாத்து அமலை
சாதம் ஓதனம் அன்னம் புகா நிமிரல் மூரல்
பருகு வல்சி புவனகம் துய்ப்பு அமுது சொன்றி கவளம்
பட்சணம் ஊண் பதம் முப்பானாறும் சோற்றின்பேர்
சுரருணவு பலி சருவோடு அவி ஆம் மாற்றுணவு
தோட்கோப்புப் பொதிசோறு கட்டனத்தின் பேரே
**230
#12
பேருணவு பெருப்பு ஆகும் பாயசம் பால்சோறு ஆம்
பிழை மிச்சில் சேடம் மிகுபொருள் எச்சம் மிகை ஆம்
ஓரும் எச்சில் உச்சிட்டம் ஆம் கருனை பொரியற்குஉறும்பேர்
பால் பாகு அரக்கு மோழை கூழ் காடி
ஆருறு கஞ்சியின்பேர் ஆம் வெந்தை அகுகுல்லி
ஆவி உக்காரியின்பேர் பிட்டு அரில் அருப்பம் நொடிது ஆம்
பூரிகம் அண்டகை தோய்வை அடை நோலை யூபம்
புதுக் கஞ்சம் லட்டுகம் மோதகங்கள் அப்பவகையே
**231
#13
வகையாம் பிண்ணாக்கு ஒச்சை வறையல் மலாவகம் ஆம்
மாவின்பேர் இடி நுவணி பிண்டி என மூன்றாம்
புகை ஆணம் தீயல் குழம்பு இவை மூன்றுங் கறி ஆம்
புளிங்கறிப்பேர் துவை ஆகும் பாளிதமே புல்லம்
தொகையான கண்டு அயிரே கண்டம் என ஐந்தும்
தூய கண்டசருக்கரை ஆம் அக்காரம் விசையம்
நகை கன்னல் கட்டி குளம் ஐந்து சருக்கரை ஆம்
நறும் பால் கீரம் பயசு பயம் அமுதம் நான்கே
**232
#14
அமுதம் ஐயம் நவநீதம் கவினம் வெண்ணை நாற்பேர்
ஆகாரம் அவி கிருதம் ஆச்சியம் துப்பு இழுது
தமி நேயம் ஏழு நெய்ப்பேர் அளை பெருகு ததியும்
தயிர் ஆம் மோர் அருப்பம் உசர் தக்கிரம் கலாயம்
கமழ் அதிகம் மற்சிகை ஆம் அமரி சுதை மருந்து
கனி அமிழ்தம் அமுதப்பேர் களம் கரளம் காளம்
உமிழ் கடு ஆலம் காலம் காரி சிங்கி நஞ்சு ஆம்
உணவு ஊட்டம் குளகு இரை தீன் உறை விலங்குஊண் பாலே
**233
#15
பாலி படு விழி விசுளி இக்கு ஆணம் கஞ்சாப்
பாடலி சுயோகி வேகினி மருட்டம் கவ்வை
மாலி மாதவம் பானம் சூலி குந்தி விகுனி
வடி அரிட்டம் சாயனம் சுலோகி சிக்கர் மோலி
ஆலி மடம் பேதை பிழி சுவிகை சுரை சூரை
அறிவழி முண்டகம் மேதை விளம்பி அம்பி தணியல்
சாலி ஆவசம் தோப்பி நாளி தொண்டி சேறு
சாறு ஆம்பல் ஞமலி யாது உவ மறவி மதியே
**234
#16
மதுரையுடன் மாரி சுமாலினி ஐம்பானிரண்டு
மயக்கு கள்ளின்பேர் ஆகும் நனை நறவு தேறல்
முது பிரசம் மதுகரம் கள் வேரி மகரந்தம்
முருகு நறை மட்டு மதுத் தேன்பேர் பன்னிரண்டாம்
இதுகளும் அக் கள்ளினுக்கு ஆம் வெள்ளில் பாடையின்பேர்
இறும் காடு சோதனி துரான் நரலே சிக்குச்
சிதள் மயலும் செற்றையின்பேர் சுடுபு சுமை சும்மை
சோடை சும்மாடு ஐந்தும் சுமட்டின்பேர்ப் பரப்பே
**235
#17
பரசு குளிர் கணிச்சி தழல் நவியம் மழுத் தண்ணம்
பாலமும் ஆம் மூவிலைவேல் சூல் காளம் சத்தி
வெருளுறு முத்தலைக் கழுவே கழுமுளும் சூலப்பேர்
விட்டேறு சத்தி மதங் கயில் எஃகம் ஞாங்கர்
அரணம் உடம்பிடி குந்தம் ஒன்பதும் வேலின்பேர்
அடல் கைவேல் கப்பணம் தோமரம் ஆகும் நேமி
ஒரு பருதி சுதெரிசனம் வளை எஃகம் திகிரி
ஒளிவட்டம் ஆழி எட்டும் சக்கரப்பேர் தனக்கே
**236
#18
தனு சராசனம் சிந்து வாரம் கோதண்டம்
தடி சிலை துரோணம் கார்முகம் சார்ங்கம் சாபம்
முனிதவர்க் காண்டிபம் வேணு கொடுமரம் பினாகம்
மூவைந்தோடொன்றும் வில் ஆம் சார்ங்கம் மால்வில் ஆம்
அனகன்வில் பினாகம்அதாம் பூரி தொடை நாரி
ஆவம் வடம் குணப் பூட்டுச் சிஞ்சினி நாண் நரம்பும்
வினைய நாணியின்பேர் ஆம் பற்றாக்கை பாசம்
விற்கட்டு ஆம் விற்குதைப்பேர் குலை ஆம் பத்தினியே
**237
#19
பத்திரம் போத்திரம் சிலீமுகம் தொடை உரோபம்
பகழி மாற்கணம் கங்கபத்திரம் கோல் பாணம்
அத்திரம் சாயகம் புங்கம் தோணி வண்டு கதிரம்
ஆசுகம் பத்திரி பூதை ககம் விசிகம் பல்லம்
தத்து கணை வாளியேச் சரம் அம்பின்பேர் ஆம்
சரக்கட்டுக் குப்பி குலை புதை புழுக்கு ஆம் உடுவே
இத்தரமாங் குதை பகழி புங்கம்அதாம் உடு ஈர்க்கு
இறகு காம்பு ஆம் மொட்டம்பு உதண்டம் ஆவனவே
**238
#20
ஆவநாழிகை ஆகும் தூணி அம்புக்கூடு ஆம்
அசனி சதகோடி வச்சிராயுதப்பேர் சம்பம்
பூவயிரம் குலிசமும் ஆம் குயம் கொடுவாள் அரிவாள்
புள்ளமும் ஆம் அசி நவிர் நாந்தகம் கட்கம் கோணம்
மா வசி மட்டாயுதம் தூவத்தி வஞ்சம் உவணி
வள் ஏதி கரவாளம் குறும்பிடி வாள் சுரிகை
மேவு கண்டம் கண்டகம் பத்திரம் நாட்டம் முசுண்டி
வேணு இருபானிரண்டும் கத்தியின்பேர் எழுமே
**239
#21
எழுக் கணையம் பரிகமும் ஆம் கழுக் கடை முள்கழு ஆம்
இகல்வட்டம் சுழல்படை பாராவளையம் ஆகும்
கொழுத்த தண்டு பீலி எஃகம் பிண்டி பாலம்அதாம்
குந்தம் தோமரம் கொந்தம் ஈட்டி விட்டேறு ஐந்தும்
பழுச் சவளம் ஆம் முலை மூக்கரிகருவி குளிர் ஆம்
பரு நவியம் கோடாரிப்பேர் குடாரமும் ஆம்
உழிப்பெயரே தறிகை கணிச்சியும் ஆகும் ஈர்வாள்
உரக் கரபத்திரமும் வேதினமும் உரைத்தாரே
**240
#22
தாரொடு கப்பணம் கோலம் இருப்புமுள் நாராசம்
சலாகை ஆம் சுவர்களையுகருவி கன்னம் ஆகும்
சீர் கதை தண்டு எறுள் வயிரம் குணில் குறண்டு ஏழ் தடிப்பேர்
தேறு சங்கு கூத்திகை காத்திரி மட்டி முட்டம்
போர் முசுண்டி முற்கரம் ஆம் பறளை பறளிகை கற்பொறி
அல்லி அள்ளு ஐந்தும் பற்றிரும்பு ஆம் கவணின்
பேர் ஒடிசில் கவணை குளிர் குணிலும் ஆம் ஊசிப்
பேர் சூசி அதின் துளைப்பேர் பாசம் ஆம் துடரே
**241
#23
துடர் துவக்குச் சங்கிலி ஆம் இடங்கணியும் அதற்காம்
துடர் நிகளம் பிணை தளையும் இடங்கணியும் விலங்கு ஆம்
இடலாணி ஊசி கண்டம் மூன்று எழுத்தாணியின்பேர்
விடுபடை அத்திரம் ஆம் விடாப்படை சத்திரம் ஆம்
படை கருவி தானை கடுமுள் சுதனம் கழுமுள்
படைக்கலம் எஃகு ஏதி துப்பு வேலும் ஆயுதப்பேர்
வடி நிசி வை பூ அயிர் வாள் அயில் முனை முள் கூர்மை
வசியும் ஆம் நுதி நுனி ஆம் தடறு புட்டில் உறையே
**242
#24
உறழ் பலகை கடம் தகட்டம் கிடுகு சேடகம் தோல்
உரிச் சிராய் வட்டணம் கட்டியம் வட்டம் தட்டு
மறை பரிசை வேதிகை தோற்பரமும் கேடகப்பேர்
வன் கோதை கைப்புடை கைக்கட்டியின்பேர் சிரகம்
பறிவில் கீசகம் தலைக்கிராணப்பேர் பருமம்
பரம் பரணம் மெய்யுறை சடாரிக் கச்சை கண்டம்
இறுகிய சாலிகை அரணம் மேடகம் கந்தளம் ஆசு
ஈராறும் கவசப்பேர் எனும் கரியகுழலே
**243
#25
கரி முகபடாம் சூழி மைந்தனம் ஆம் புரசை
சுவடு கச்சை தூசு ஆனைக் கழுத்திலிடு கயிறு ஆம்
பரிய பிலகடம் பலகாரம் கரி மேல் தவிசு ஆம்
பல்லணம் பண் படை பருமம் பரம் பரிக் கல்லணை ஆம்
புரவி வாய்வடம் வற்கம் வடிகயிறு குசை ஆம்
பொன் கடியாலம் கவினம் கறுள் கலினம் மூட்டு ஆம்
வரிசை அங்கவடி மொட்டுப் படி கச்சம் ஆகும்
மத்திகை கோல் சம்மட்டி ஆம் உளை கேசரியே
**244
#26
கேசரப் பிஞ்ஞகம் ஒன்றும் தலைக்கோலப்பேர் ஆம்
கிரீடம் சேகரம் சுடிகை முடி மெளலி மோலி
மாசுஇல் சூடிகை ஏழு மகுடப்பேர் மகுடம்
மாலிகை கரோடிஅதாம் முடியுறுப்பு மகுடம்
ஆசில் கோடகம் பதுமம் கிம்புரி தாமமும் ஆம்
ஆரமும் கண்டிகை மதாணியும் பதக்கம் ஆகும்
தேசுறு கன்னாவதங்கம் செவிமலர்ப்பேர் உத்தி
திருவாம் தொய்யகம் தலைப்பாளையின்பேர் புல்லினவே
**245
#27
புல்லகம் சூட்டு இலம்பகமும் நுதலணி ஆம் சுட்டி
பொலன் சுடிகை ஆம் ஓடை பட்டம்அதாம் குழைப்பேர்
சல்லி மிஞ்சிகையொடு குண்டலம் ஆகும் தூம்பு
தாடங்கம் தோடு ஆம் வல்லிகை குணுக்குக் கொட்டை
வல்ல கடிப்பிணை கம்பி கடுவடம் காதணி ஆம்
வாகுவலையத்தின்பேர் அங்கதம் கேயூரம்
நல்ல தோளணி ஆம் கங்கணம் தொடி கண்டிகையே
நல் கடகம் ஆம் பூணூல் உபவீதம் பிடியே
**246
#28
பிடிகம் சூடகம் சங்கு வளை குருகு கன்று
பெறு வண்டு தொடி சரி ஒன்பானும் வளையலின்பேர்
படியின் இலைச்சினை வீகம் ஆழி மோதிரமும்
பவுத்திரமும் விரலணி ஆம் சரம் ஆரம் தாமம்
வடமொடு காழ் சரப்பணிப்பேர் சரிமணி கலாபம்
மனவு தோரையும் அரைப்பட்டிகைப்பேர் மேகலையே
விடு காஞ்சியே கலாபம் தாமம் பதுமம்
விரிசிகையும் மணிக்கோவை அம் அரை மேலணியே
**247
#29
அரைஞாணே இரதனம் கிண்கிணி சதங்கை கழலே
ஆண்அணி பாடகம் பாதகடகம் ஒவ்வோர் பேராம்
பரிபுரம் நூபுரம் அரவம் குடச்சூலே ஞெகிழி
பரலின் அரியகம் சிலம்பு ஆம் பரல் அரி ஆம் பாதசரமதின்பேர்
பாதசாலம்தான் பூண் ஆரம்
சங்கிலி மதாணி நகை வள்ளி கலன் பண்டம்
கருது பணி இழை அணி ஆபரணம் பூடணப்பேர்
கயில் மடையே கடைப்பூண் ஆம் மயில் அனைய நிதியே
**248
#30
நிதிசெய் கதலிகை தூக்கம் தொங்கலின்பேர் தாங்கி
நெறி வயிரம் கோளகை கிம்புரிப் பூண் என்றாகும்
கொதி தளிகை வள்ளம் பாசனம் தட்டம் சக்கம்
கோரம் தாலம் கலமும் வட்டிலின்பேர் கிண்ணம்
திதிகை நாழிகைவட்டில் கன்னலும் ஆம் தறுவி
சிலகமும் சட்டுவப்பேர் நெய்விடும் சுருவை சுருக்கு ஆம்
முதி படிக்கம் படியகம் ஆம் இந்தளமே தூபமூட்டி
தடவு என்பதுமாம் கண்டை மணி ஆமே
**249
#31
கண்டை படலிகை பரந்த கைமணி ஆம் பாண்டில்
கஞ்சமும் கிட்டியும் தாளம் எறிமணி சேகண்டி
கெண்டி கோடிகம் கடபம் ஆம் பாணி கோயாங்
கேள் கரகம் கரண்டகம் குண்டிகை கமண்டலப்பேர்
கொண்ட சின்னம் பீலி ஆம் காளம் காகளம் ஆம்
கோடு இரலை ஆம்பல் வயிர் கொம்பு ஆகும் பணவம்
திண்டி ஆனகம் படகம் ஆம் இடக்கை ஆமந்திரிகை
குளிர் முழவம் ஆம் கடிப்பின்பேர் குணிலே
**250
#32
குணில்படும் ஓர்கண்பறைப்பேர் பதலை மொந்தை ஆகும்
குடப்பறை பன்றிப்பறை ஆம் சகண்டம் முரசு ஆகும்
திணிய தக்கை சல்லரி தண்ணுமையொடு நிசாளம்
திமிலை பம்பை ஆம் நந்தி துந்துமி பேரிகை ஆம்
துணிவின் முருகியம் துடி தொண்டகம் குறிஞ்சிப்பறை ஆம்
துடி பாலைக்கு ஆம் பம்பை கோட்பறை முல்லைக்கு ஆம்
கிணை மருதப்பறை நெய்தல்பறைப்பேர் சாபறை ஆம்
கிரிக் கரடிப்பறை தட்டை சிறுபறை ஆகுளியே
**251
#33
குழி முழவம் பதலை கடிப்பறை பகுவாய் தவில் ஆம்
கொடும் துடி தண்ணுமை உடுக்கு ஆம் பரினம் மண் மாற்சனை ஆம்
முழவு திண்டி முருடு தக்கை பேரி பம்பை பீலி
முரசு தகுணி தந்தண்ணம் துந்துமி தடாரி
கழிவுஇல் கோடணை இயமே பணையம் வாத்தியப்பேர்
கவிப்பு ஆதபத்திரம் சத்திரம் கவிகை தொங்கல்
அழிவுஇல் பிச்சம் குடையின்பேர் கால்செய்வட்டம் உக்கம்
ஆலவட்டம் தாலம் விருந்தமும் ஆம் சிற்றிடையே
**252
#34
சிற்றாலவட்டம் வீசனம் பீலி விசிறி
சிறிய சாந்தாற்றியும் ஆம் கோடிகம் பூத்தட்டு ஆம்
கற்றாய் பீடிகை கடிப்புக் கோடிகம் துமாணம்
கண்டிகை காண்டமும் பூண்கொள்கலம் ஆம் அம்மானை
பற்றாரம் மனையின்பேர் கந்துகமே பந்து ஆம்
பந்துமட்டத் துருத்தி பெருந்தாரை சிறுதாரை
வற்றாத சிவிறியும் ஆம் சீப்பின்பேர் சிக்கம்
மயிர்வாரி கங்கமும் ஆம் ஆரை பாயினுக்கே
**253
#35
பாதம்காப்புக் கழல் தோல் செருப்புப் பாதுகைப்பேர்
பாவல் மிதியடி ஆகும் அதில் கொட்டை குடை ஆம்
கோதும் சாணம் தோட்டி அங்குசம் துறோட்டி
கோணமே கசப்பகையின் பேர் அடை பட்டடை ஆம்
ஓதும் கூடத்தின்பேர் சம்மட்டி குறடு
முருடு சுட்டுக்கோல் உலை ஆணக்கோல் ஆம் கோள் என்று
ஓதும் பேர் கொழு ஆம் மின்னாராடும் பண்டம்
ஓரை ஆம் உலைத் துருத்தி உதியோடு அத்திரியே
**254
#36
அத்து சிவை குருகு இரண்டும் கொல்லுலைமுக்கு ஆகும்
ஆரி தொட்டி புதவு கபாடம் காப்பு வாரி
தைத்த கதவின்பேர் தாழ் கடப்புத்தாழ் சீப்பு ஆம்
தறி நிலை கந்து எழுக் கம்பம் கால் மதலை தாணு
இத்தனையும் தூணின்பேர் யூபம் வேள்வித்தூண்
என்பர் ஆளானம் வெளில் ஆனைத்தூண் ஆகும்
மத்திகையே கவுசிகம் தம்பமும் விளக்குத்தண்டு ஆம்
வல்லிகையும் அதற்காகும் குறுந்தறி ஓதிகையே
**255
#37
போதம் பாறு அம்பி பாரதி தோணி வங்கம்
புணை ஆனம் திமிலி நவ்வு மதலை தொள்ளு நாவாய்க்
கோதகம் சதாப் பஃறி பாதை ஆதனமும்
கூறு மரக்கலம் பதினெட்டாம் அதில் பாய் இதை ஆம்
சேதம்அறு வஞ்சி வள்ளம் ஓடம் தோணியுமே
சிறுகலம் ஆம் படுவை அம்பி மிதவை தொள்ளுப் பகடு
பாதையில்போம் பட்டிகையே புணை எனும் ஏழ்பேரும்
படிந்த தெப்பம் அதின்பேர் ஆம் விசியின்பேர் அரியே
**256
#38
அரி குயவு எந்திரம் வையம் சயந்தனம் கூவிரியே
அகல் கொடிஞ்சி இரதம் செந்தனம் தேர் ஒன்பான்பேர்
பருதி சில்லி நேமி உந்தி உருள் உதரி திகிரி
பாரியம் கால் ஆழி பத்தும் தேர்க்காலின்பேர் ஆம்
தெரி கிடுகு தேர்ச்சுற்று ஆம் சார் பலகை பா ஆம்
தேர்மொட்டுக் கூம்பு ஆம் தேர்க்கதிரின்பேர் ஆர் ஆம்
விரி தட்டுத் தேர்நடு நாப்பணும் ஆகும் கொடிஞ்சி
மெய்த்த கூவிரம் ஆகும் தவிசு தடுக்கு உரித்தே
**257
#39
உருள் சகடம் சாடு சாகாடு வையம் பாண்டில்
ஒழுகு வண்டில் ஆம் பாண்டில் கஞ்சிகை வையமுமே
பரிகள் கட்டும் ஊர்தியின்பேர் கந்து இருசு உள்ளிரும்பு ஆம்
பண்டியும் ஆம் தண்டிகை கஞ்சிகை மணிக்கால் யானம்
அரசர்வாகனம் வையம் சிவிகையின்பேர் பள்ளி
அனிதமும் ஆம் பீடிகை விட்டரம் தவிசு பீடம்
வரதி பத்திராசனம் சிங்காதனம் ஆம் பாண்டில்
மஞ்சமொடு பரியங்கம் பாரி கட்டில் உறுமே
**258
#40
உறி சிக்கம் சிதர் தூக்குச் சிமிலி ஆம் தடியே
உலக்கை முசலமும் ஆம் சோதனி துடைப்பம் மாறா
முறம்அதைச் சூற்பம் சுளகு சேட்டை சின்னம் தட்டு
முற்றில் என்பார் குதம்பம்தாம் கிடுகு சட்டம் ஆகும்
இறவை வட்டில் வட்டிகை கூடைப்பேர் ஆம் சேணி
இறவையே கடவை தடவையும் ஏணி ஆகும்
தறுகு கண்ணேணியின்பேரே மால்பு ஆகும் தழலே
தட்டை கிளிகடிகருவி ஆம் எனச் சொல்லினரே
**259
#41
சொல் கழங்கு காசு வல்லுச் சூது ஆகும் கவறு
துள்ளு ஆயம் தாயம்அதாம் சாரி நாய் ஆகும்
நல் கலனை படை படைவாள் நுகம் தொடுப்பு ஏர் அலமே
நாஞ்சிலில் ஆம் கலப்பை பணவை கழுது இதணம்
கற்குலவு பரணின்பேர் அம்பணம் கால் குளகம்
கடன் கச்சம் தூம்பு மரக்காலின்பேர் நாழி
வற்கமே குஞ்சம்அதாம் தண்டு குழாயின்பேர்
மஞ்சுகம் மஞ்சிரை பேழை மூழி பெட்டி ஆமே
**260
#42
ஆம்பியே பூட்டை காராம்பி கிழார் அரி ஆம்
ஆடு ஊசல் உஞ்சல் ஊஞ்சலின்பேர் ஆம் பெரிய
தாம்பின்பேர் பண்பு ஆகும் பிழா இடா இறை ஆம்
தயிர்கடையும்தறி வெளில் ஆம் மூழி மத்தம் மூழை
காம்பு மத்தின்பேர் வகிர் வார் வள் ஆகும் துணியே
கடிகை கண்டம் துண்டம் ஆம் கஞ்சனம் தற்பணமே
பூம் படிமக்கலன் ஆடி முகிர்தம் ஒளிவட்டம்
புளகம் அத்தம் தெரிசனம் கண்ணாடியின்பேர் கூறே
**261
#43
கூறை வேடகம் புட்டம் காளகம் சித்திரையே
கோடி கோடிகம் படாம் பரிவட்டம் சீரை
வேறு உடை அம்பரம் சாடி நீவியம் தூசு ஆடை
வேதகம் பட்டு ஆசாரம் கலை கலிங்கம் பஞ்சி
ஆறு உடுக்கை கோசிகம் சம்படம் தானை வட்டம்
ஆபரணம் சூடிகம் வத்திரம் வாசம் புடவை
தூறின் மடி மிடையல் இலக்கரம் அறுவை சீலை
துப்பட்டி வேட்டி சோமன் துகில் என்பாரே
**262
#44
பாரியொடு நாகமுல் நல் ஆடை ஆம் காம்பு
பாளிதம் கோசிகம் பட்டு நேத்திரம் பட்டாடைப்
பேர் எனலாம் தேவாங்கம் சாயச்சீலையின்பேர்
பிணித்திடு சித்திரப்புடவை பொத்தகம் என்றாகும்
போர்வை மீக்கோள் ஆகும் வடகம் அத்தவாளம்
போர்த்திய உல்லாசமும் ஆம் உத்தராசம் கஞ்சாரும்
உத்தரீகமே ஏகாசம் ஆம் கொய்சகம்
நீவி ஆம் தோக்கை முன்றானை மெய்யே
**263
#45
மெய்ப்பை காஞ்சுகம் அங்கி காஞ்சிகை குப்பாயம்
மேல்வானம் கஞ்சுகமும் சட்டை ஆம் வயிரம்
வைப்பின் வயிரச் சூழி மயிர்ப்படம் ஆம் விணிகை
வார் வம்பு பட்டிகை வட்டுடை முலைக்கச்சின்பேர்
கைப்பில் குஞ்சகம் தலைப்பா ஆம் கண்டம் காண்டம்
கஞ்சிகை படாம் எழினி அவடி படம் திரைப்பேர்
ஐப் படங்கு வானி விதானமும் மேற்கட்டியின்பேர்
ஆகும் கேவணம் குழி வட்டத்தின்பேர் அணையே
**264
#46
அணை தவிசு தளிமம் மெத்தை ஆகும் உபத்தாணம்
அடைத்த தலையணையின்பேர் கம்பலம் சிம்புளியும்
பணையுறு கம்பளத்தின்பேர் கேதனம் பதாகை
படங்கு படாம் சத்தி விலோதனம் தோகை வானி
இணை துவசம் பெரும்கொடி ஆம் சிறுகொடி கத்திகை ஆம்
ஏர் வீதிக்கொடி விடங்கம் ஆகும் சிதார் சிதவல்
துணி கூவிரமும் தேர்க்கொடி ஆம் ஓவியமும்
துலங்குறு வட்டிகை ஓவும் சித்திரப்பேர் மரபே
**265
#47
மரவுரி வற்கலை இறைஞ்சி சீரையின்பேர் ஆகும்
வளர் பதலை தளம் சாடி அகளமும் தாழியின்பேர்
உரை கரீரம் தடாக் குழிசி ஆம் இடங்கர்
உற்ற வட்ட நிறை நீர்ச்சால் ஆம் இடங்கர் குடிகை
பரவு கடம் தாலி கும்பம் குணம் கலசம் குடம் ஆம்
பானை மிடாக் குண்டம்அதாம் நுவற்கரி தற்கரியே
கரகம் சீகரம் கன்னல் சிரகம்அதாம் குடிஞை
கடிஞை பிச்சைப்பாத்திரம் ஆம் சுடர் மணிக் கொப்பு அணங்கே
**266
#48
கொப்புரி கிடாரமொடு தவிசும் அதற்காகும்
குடுவை குண்டு விசனை சட்டி ஆம் கலசப்பானை
அப்பெயர் கஞ்சனை ஆம் மந்தனி தயிர்த்தாழியின்பேர்
அகில் சராவம் சுத்திகை ஆம் பாண்டில் இடிஞ்சிலும் என்று
இப்பெயரே சுடர்த்தகழி ஆம் பாண்டம் கலம் என்று
இரண்டுமே கொள்கலப்பேர் மூடை பொதி சுமைப்பேர்
எய்ப்பறு சிலாவட்டம் சாணைக்கல் ஆகும்
எழுதுகோல் துகிலிகை கோல் அஞ்சனக்கோல் வடிவே
** ஆறாவது இயற்கை செயற்கைப் பலபொருட் பெயர்த் தொகுதி முற்றும்
@7 ஏழாவது பண்பு பற்றிய பெயர்த் தொகுதி
**267
#1
வடிவு அளவு வண்ணமொடு காட்சி கருத்து ஐந்து
வகை பண்பு ஆம் பருதி தட்டு நேமி கொம்மை வலையம்
கடகம் கோளகை சில்லி ஆழி மல்லம் பாண்டில்
கடும் திகிரி மண்டிலம் சக்கரம் விருத்தம் வளையம்
அடிகொள் பாலிகை பதினேழ் வட்டவடிவு ஆகும்
அரி அடர்பு இயைமை மூன்றே தகட்டுவடிவு ஆம்
குடிலம் கூன் கோண் கோட்டம் வளைத்தல் வணர் வாங்கல்
குலவல் தட்டுக் கோணல் வளாவலும் வளைவு ஆம் அவையே
**268
#2
அவை தொழுதி குழுக் கோட்டம் தோடு சங்கம் கூட்டம்
அடர் சமுகம் திரள் குவிதல் மொய் கணம் நிகாயம்
சவை குவால் சமுதாயம் கழுமல் குப்பை கதம்பம்
சமவாயம் கருவி நிவகம் குவவு இராசி
குவை குழாம் தொகுதி தொகை மூவொன்பானொன்று ஆம்
குழல் சுகிர் நாள் வேய் நாளி தூம்பு புரை வேணுத்
துவணாடி சுரை துளையே புழல் புழை துவாரம்
சுரி கையடை தமர் ஆகும் கற்றை கதிர்த்திரளே
**269
#3
திரட்சி கணை குவவு கொம்மை சேர்த் துறுமல் சோகம்
சேடு புஞ்சம் மாழை வட்டுப் பிழம்பு முண்டம் குழியம்
உரத்த பந்தம் தொழுதி பிண்டம் பூகம் முத்தை குவிதல்
உண்டையும் ஆம் படலை பம்பல் படர்ச்சி பரந்தன ஆம்
தரப் புளகம் குமிழ்ப்பு மொக்குள் கொப்புள் ஆம் பிணரே
சற்சரை ஆம் பயினி சங்கம் குவிதல் கூடுதல் ஆம்
பரப்பு அழுவம் பப்பு ஓவல் பரவை பாப் பாவல்
பாய்தல் தாவுதல் ஞெமிர்தல் விரிவு விசாலமுமே
**270
#4
சால நனி கதழ்வு அதிகம் விதப்பு ஊகம் பெருகல்
தவம் புதுமை மதம் பிறங்கல் இறப்பு அமலை பூங்கு
சீலம் மிகை அலை பூரிப்பு ஆன்றல் கூர் கழுமல்
சிறப்பு உருத்தல் பொங்கலின்பேர் பெருமை மாத் தடம் கொன்
மால் கருமை பகடு ஏந்தல் பாடு இருமை மோடு
வால் குவவு தகை பொழில் பீடு அண்ணல் பணை ஈடு
மேல் கயவு நளி பாழி வீறு செம்மல் மானம்
வியன் மூரி முடலை நாலேழொன்று உன்னுகவே
**271
#5
உன்னதம் மேடு ஒழுக்கம் உச்சம் பரி நிமிர்ப்புப் போகல்
உத்துங்கம் மிசை ஏந்தல் ஓங்கல் கப்புத் தூங்கல்
மன்னுதலே புரை ஊக்கம் பிறங்கல் புங்கம் நிவப்பு
வார்தல் சேண் சிகரம் இருபானிருபேர் உயர்வு ஆம்
பன்னம்அதுப் பருமை பரூஉப் பீனமும் ஆம் அகறல்
பாழி யாப்பு ஆய்வு தடம் வியல் அகலுள் ஆன்றல்
என்னும் எட்டும் அகலப்பேர் கண்ணறை பாழியும் ஆம்
இருசு நேர் செம்மை செப்பம் செவ்வை செவ்வன் அணங்கே
**272
#6
அணு நுணுக்கம் கூர் முளரி நுழை நுவணை நூழை
ஆய்தல் அயிர் ஓய்தல் உயிர் முன் நுணங்கு நுட்பம்
நுணுகு நொசி நுண்மையின்பேர் நுனியும் ஆம் சின்னம்
நூலி இறை கன்று ஆசு கலம் தோகம் தன்னம்
கணம் வறிது இட்டிமை ஒட்டு ஈராறும் அற்பம் ஆகும்
கலி தூரம் சேண் சேய்மை ஆம் வடிதல் போகல்
குணி ஒழுகு ஆயதம் தீர்தல் வார்தல் வரி உறையே
கொடி நேர்பு நெடுமை நெடில் நீளப்பேர் முடிவே
**273
#7
முடிவு அகலம் யா அடங்கல் சமத்தம் அனைத்து அகண்டம்
முழுவதும் முற்று அடைய முட்டம் எல்லாம் பன்னோர்பேர்
மிடைவு துற்றல் செறி பொதுளல் மிண்டல் பம்பல் நிபுடம்
விரளல் நிரந்தரம் துன்றல் அடர் திணுங்கு துதைதல்
சடிலம் நனி துறை துறுமல் துன்னல் நெருங்குதல்பேர்
ததைதலுடன் பதினொன்பான் ஆம் தேய்வு நிரப்பே
ஒடிவு தவல் ஈனம் அருகுதல் அஃகல் சிறுகல்
ஓய்வு குன்றல் ஈறு சிங்கல் ஊனம் எஞ்சல் குறைவே
**274
#8
குறைவுஇல் பூரணம் திளைத்தல் கமம் தெவிட்டல் மலிதல்
குளிர் ததும்பல் பரம் துவன்றல் கெழுத் திகழ்தல் ஆர்தல்
நிறைவு பிறங்குதல் முழுத்தல் செகிழல் மல்கல் கழுமல்
நிரம்பலே தெவிழல் பெருகுதல் இருபான்பேர் ஆம்
மறைவுஇல் பங்கு பயல் பாகம் பகுதி அத்தம் கூறு
வாரம் பால் பாதியின்பேர் சீர்க் குரு ஞாட்பு அதிகம்
பொறை கனம் பாரமும் ஆகும் துவம் துருவம் தோன்றல்
புவியின் நிற்றல் ஆம் நொய்மை இலகு நொவ்வு இலேசே
**275
#9
இலகு மென்மை சுகுமாரம் மிருது ஆம் அளவை
இன்மையின்பேர் அனந்தமும் அபாரமும் மானமும் ஆம்
பல அளவை கடன் கச்சம் அளவு ஆம் ஆலம்பம்
பற்றுக்கோடு ஊற்றம் தூக் கந்து தண்டம் ஆகும்
தலை முதல் அக்கிரம் மோனை பூருவம் முன் ஆதி
தாள் எழுவாய் அடி ஆகும் கடை முடிவு ஈறு இறுதி
நலம் முகிவு முற்று அந்தம் ஒல்லையின்பேர் நாப்பண்
நள் இடை நாச் சமன் பகல் மத்திமத்தின்பேர் வரையே
**276
#10
வரைவு துணை தனை அவதி தாறு அளவு காறு
மானம் மட்டுப் பிரமாணம் நோகமபு காலை
பரியந்தம் ஏணி கோதனம் காடம் கொற்றம்
பதினெட்டாம் எல்லையின்பேர் நிரல் பந்தி ஓளி
நிரை ஆம் கூர்ப்புக் கழிப்பு உள்ளதுசிறத்தல் ஆகும்
நீமம் அரி தெளிர் தயங்கல் காந்தி நகல் சோதி
விரியல் வயங்குதல் விளங்கல் மின் நிலவு வெயில் வாள்
வில் வாமம் நிழல் அலங்கல் ஒடித்தல் இலகுதலே
**277
#11
இலங்கல் இமைத்திடல் ஒளிர்தல் மிளிர் துளங்கல் பிறழ்தல்
என் கிரணம் அவிர்தல் சுடர் தேசு நகை தாமம்
துலங்கல் கதிர் மின்னல் பிரகாசம் முப்பத்தாறாம்
சுக்கிலம் கெளரவம் குருகு வெள்ளி வால் குருத்து
நலஞ்செய் விளர் சிதம் பாண்டு பால் அசுவம் சுவேதம்
நரை தவளம் சுசி சீதம் பான்மை அபதாரம்
அலங்கு பாண்டுரம் விசிதம் வெளுப்பு வெள்ளை விளக்கம்
அருச்சுனம் சுப்பிரம் இருபானைந்தும் வெண்மைக்கு அருளே
**278
#12
அருணம் சேய் சேப்பு அரத்தம் செக்கர் துவர் சோணம்
அரக்குப் பாடலம் பூவல் சேது துப்பு அராகம்
குருதி அத்துச் சிந்துரம் உலோகிதம் அஞ்சிட்டம்
குறி செந்து சிவப்பே இங்குலிகமும் செந்நிறப்பேர்
கருள் காளம் காளகம் மை களம் காரி கார் மாக்
கறை நீலம் காளிமம் மால் அஞ்சனமே மாயம்
இருள் அசிதம் ஈரெட்டும் கறுப்பின்பேர் களங்கம்
இழிபு கறை கசடு மாசு இவை மலினப் பசையே
**279
#13
பசுமை அரிதம் சாமம் பாசு அரி பலாசம்
பைது அரித்துச் சாமளம் பை பத்தாம் பச்சையின்பேர்
நிசி அரித்திராபம் பீதகம் பீதம் பொன்மை
நிறப்பேர் பிங்கலம் பசலை பசப்பும் ஆம் கபிலம்
வசி புகர் புற்கெனல் புன்மை புல் குரால் நிறம் ஆம்
வரிபுகர்கேழ் பயப்பு வண்ணம் சாயல் சந்தம் மாமை
கசி வருணம் மேனி உருக் குரு வடிவு நிறப்பேர்
கட்டழகு விசித்திரப்பேர் அழகு அலங்காரமுமே
**280
#14
காரிகை பொன் சந்தம் தேசிகம் சொக்கு மஞ்சு
காமர் ஒண்மை வாமம் பூத் தகை தளிமம் மாழை
ஆரி கவின் மயம் விடங்கம் சுபம் செழுமை காந்தம்
அந்தம் நவ்வி மணி வனப்புக் கோலம் நன்கு மாமை
ஏர் அணி நல் யாணர் வண்ணம் பொலன் சேடு இராமம்
எழில் மாதர் குருகு பொற்புச் செவ்வி தொட்டி பாங்கு
தேர் அணங்கு சுந்தரம் பத்திரம் அம்மே நோக்குச்
சித்திரம் மனோகரமும் அழகு ஏழேழ் தருமே
**281
#15
தருணம் கோமளம் கொம்மை குழவு வெண்மை நாகு
தகை மழவு குருளை விண் போதகம் புருவை யவனம்
முருகு இளைசு பதினைந்தும் இளமையின்பேர் விருத்தம்
முற்றல் மூப்பு ஆம் மழுங்கல் புல்லெனல் மட்கலும் ஆம்
உரம் அறிவு தெளிவு புந்தி புலன் போதம் மேதை
உணர்வு மதி காட்சி ஞாபகம் தேறல் சீலம்
தெருளல் சேதனம் சைதன்னியம் ஞானம் ஆகும்
தெளியும் பேரறிவும் முதுக்குறைவு ஆம் என்றறியே
**282
#16
அறியாமைப்பேர் அசேதனம் ஆகும் மூரி
அடல் கூளி மீளி கோன் முடலை உம்பல் வாய்மை
விறல் ஈடு நலம் தீரம் திண்மை மைந்து நோன்மை
மெய் ஊக்கம் மிடல் ஆண்மை மொய்ம்பு வலி மல்லல்
எறுழ் மதுகை தானம் மதம் சத்துவம் துப்பு ஆற்றல்
ஏண் முரண் உரம் தோற்றம் தாவு தாம் மானம்
திறல் பாழி முன்பு வயம் பலம் முடுகல் மல்லாய்ச்
செப்பும் நாற்பான்மூன்றும் வலு எனச் சொல்வீரே
**283
#17
வீரியம் பராக்கிரமம் சவுரியம் சேவகமே
வீரப்பேர் வென்றி வலன் கொற்றம் முல்லை வாகை
போர் விசையம் சயம் ஆடு விறல் புகல் வெற்றியின்பேர்
பொறி ஆக்கம் திருப் பெருக்கம் இடம் வாழ்க்கை விபவம்
சீர் விருத்தி வெறுக்கை மாடு இயற்கை செல்வப்பேர் ஆம்
செழுமை சால்பு ஆன்றல் வளம் நிறை மாண்பு வாய்த்தல்
நேர் அமைதி மாண் மாண்டல் மாட்சிமைப்பேர் பத்தாம்
நிலையழிவு தோல்வி தோற்றிடல் தொலைவு ஆம் கனியே
**284
#18
கனி கிருபை தகவு இரட்சை போர்மை அருள் இரக்கம்
கருணை தயாத் தயவின்பேர் தூய்மை சுத்தம் துப்பு
புனிதம் பாவனர் தூய்து வேத்தியம் தூய் சவுசம்
பூதமே பவுத்திரமும் சுசியின்பேர் சாந்தம்
பனி அளி தண் மழை சீதம் நளிர் குளிர் சீதளப்பேர்
படும் கடுமை கோரம் வெம்மை உருமம் வெம்பல் உருப்பம்
அனல் கருமம் தாபம் வெப்பமும் உட்டிணப்பேர்
அடை வளப்பம் கொழுமை செழுமையும் கொழுப்பு ஆம் அன்றே
**285
#19
அன்பின்பேர் நார் ஈரம் பரிவு ஆர்வம் நேயம்
அளி பாசம் பற்று ஆணம் காதல் புரிவு ஆகும்
நன்பவம் ஏழ் தொடரும் அன்பே உழுவல் ஆம் மகிழ்ச்சி
நகை கடிசம் அகமலர்ச்சி சுகம் தொய்யில் கட்டி
இன்பமும் ஆனந்தம்அதாம் ஏமமும் மற்று அதற்காம்
இறுமாப்பு எக்களிப்பு ஏமாப்பு அபிமானம் தந்து
பின்பு மத்தம் செம்மாப்பு தருக்கு மதர் செருக்குப்
பெருமிதம் வீற்றிருத்தல் பாடவம் மலர்ச்சி களிப்பே
**286
#20
களி அகம் நெஞ்சு உளம் உள்ளம் இதையமே உன்னம்
கருது சித்தம் மனத்தின்பேர் சிந்தனை தியானம்
தெளி நினைவு இங்கிதம் கருத்துச் சூழ்ச்சி எண்ணம் குறிப்புச்
சிந்தை நாட்டியமும் ஆம் வலித்தல் முன்னல் ஊகம்
உளல் படர்தல் சிந்தித்தல் நினைத்தல் உள்ளல் ஊழ்த்தல்
உன்னலின்பேர் புகறல் எண்ணல் பேணல் சுட்டல் நுதலல்
வளர்க்குதல் காணல் கண்ணல் குறித்திடல் எட்டாகும்
வரையறுத்தல் குணித்தல் கணித்திடல் எனவே பொறியே
**287
#21
பொறை சகித்தல் சமை நோன்றல் சமித்தல் பொறுமையின்பேர்
பொறையின்மை கூரம் நோனாமை பொறாமையின்பேர்
நறுமை நன்கு நயம் சேடு விழுமம் நன்னர் யாணர்
நலம் மணி உத்தமம் நன்மை கடவுள் ஒண்மை நன்று ஆம்
உறுதியின்பேர் உண்மை வரன்முறை நியதி தெய்வம்
ஊழ் விதிப்பேர் உறு நோன்பு தவன் விரதம் தவப்பேர்
அறம் உதவி தருமம் ஏண் உடைமை தன்மம் ஆகும்
ஆணையின்பேர் ஏவல் ஆம் அமைவு ஆம் என்பதுவே
**288
#22
அதிகம் ஊதியம் பயப்புப் பயம் பசை இலாபம்
ஆக்கம் நந்தல் பலித்தலும் ஆம் பழமை முன் புராணம்
முதுமுறை தொன்று ஊழ் புராதனம் பூர்ப்பம் முந்தை
மூரி தொண்டு பண்டு தொல்லை ஒல்லை பூருவம் ஆம்
புதுமை புனை நூதனம் புத்தேள் விருந்து கோடி
புனிறு வம்பு கடி யாணர் நவம் புதிதும் ஆகும்
திதி திரம் மன்னுதல் தாணு துஞ்சல் நிலைபேறு ஆம்
தேறு மன்ற நிச்செயம் தீர்க்கம் தரிப்பு நிசமே
**289
#23
நிசப் பிரியம் ஓகை மாராயம் உவகையின்பேர்
நீங்காமை தண்டாமை ஆனாமை ஆகும்
வசக்கு இகுளை கேண்மை தொடர் கேள் நட்பும் அறுபேர்
மறுத்தல் வட்கல் உட்கு இலச்சை நாண் சமழ்த்தல் வெள்கல்
கசக்கம் வெட்கம் ஆம் கேண்மை உணர்வு கண் நாகரிகம்
கண்ணோட்டம் நயப்பும் அதாம் கணிதம் எண்ணம் ஆகும்
அசுத்தியிலா வழுக்கின்மை அமலம் விமலமும் ஆம்
அதிகாரமுறைமை பாரம்பரியத்திறமே
**290
#24
திறத்தினுடன் வகை கூறுபாடு வகுத்தலின்பேர்
திணை குடி ஆம் பரியாயம் முறை ஆகும் மாவே
வெறுப்பு அறுத்தல் ஒல்லாமை முனை அவாவின்மை
வேண்டாமை உவர்ப்பும் ஆம் விரத்தி சார்வறுத்தல்
துறத்தல் துறவியின்பேர் ஒற்றுமை ஒருமை குறிப்புத்
தொட்டிமை ஆம் செய்தி செயல் இயல்பு ஒழுக்கு ஆசாரம்
நெறித்தல் மரியாதமுறை கை நடை நியாயம்
நீதி நெறி மஞ்சரி கையறை சாரித்திரமே
**291
#25
சாரமொடு சேறு இரதம் தமிழ் அமுதம் சுவைப்பேர்
தனி இலவம் புளி புளிப்பு ஆம் தித்தம் கைப்பு ஆகும்
காரமே கரில் கடுகம் காயம் காழ்ப்பு ஆகும்
கனி இனிடு இன் மதுரம் தீம் தெங்கு தித்திப்பு இனிப்பு ஆம்
பேர் பேரே அபிதானம் நாமமும் ஆம் துப்புப்
பின் ஏது வாயில் காரணம் நிமித்தம் திறமே
வார் பொருட்டு ஆம் உரன் ஊக்கம் உள்ளமிகுதியின்பேர்
வாழ் வியப்பு அற்புதம் இறும்பூது அதிசெயம் விம்மிதமே
**292
#26
விம்மி நிறைவேறலின்பேர் சபலம் ஆம் துப்பு
விளைவு மல்லல் மங்கலம் போக்கியம் பொற்பு மலர்ச்சி
பொம்மல் பூப் பொலிவு ஒன்பான் அமைவு புல்லல் கெழுமல்
பொருந்தல் ஆம் வெகுவிதம் நானாவிதம் பல்விதம் ஆம்
மும்மை ஒழிபு இறப்பு அம்மை மறுமை வருபிறப்பு ஆம்
மொழி இம்மை இப்பிறப்பு ஆம் ஒருமை ஒருபிறப்பு ஆம்
எம்மை எந்தப்பிறப்பு ஏம் ஏழ்பவம் ஏழுபிறப்பு ஆம்
இழிதகவு பரிபவம் ஆம் எளிமை எண்மை உரித்தே
**293
#27
உரிமையின்பேர் உரி பாங்கு கெழுக் காணி கிழமை
உரித்து ஆட்சி தகை தாயம் பாலுடன் பத்தாகும்
விரை முருகு கந்தம் மோதவம் வம்பு நாற்றம்
வெறி கடி ஆமோதம் தேம் பரிமளம் கான் வசந்தம்
மரு மதுவை நறை வாசம் மன்றல் ஈரொன்பான்
மணம் ஆகும் நாறுதல் கந்தித்தல் கமழ்தலின்பேர்
அருவருப்புத் துற்கந்தம் பூதி ஆம் பயிர்ப்போடு
அருவருப்புக் குச்சிதம் ஆம் தூவும் மன்னும் இழிபே
**294
#28
இழுக்கு மறல் பொல்லாப்புப் பொல்லாங்கு மறவி
இகழ்ச்சி புன்மை கீழ்ச் சோர்வு ஒன்பானும் மறத்தலின்பேர்
வழுக்கும் ஆம் கரில் பழி போக்கு அரில் பிழை தோம் காசு
வடுத் தவறு பொய் பழுது தப்பு வசை ஏதம்
அழுக்கு மிறை குறை ஏச்சு கறை கோது நவையே
ஆசு மறுப் புகர் களங்கம் துகள் கழிப்பு மாசு
கொழுப்பு அரிப்புச் செயிர் மானம் புரை முப்பான்மூன்றும்
குற்றம்அதாம் தளர்ச்சியின்பேர் ஏட்டை அசாக் கொடியே
**295
#29
கொடுமையின்பேர் பூதி கண்டம் உறைப்பு வஞ்சம் கோரம்
கோடணை உக்கிரம் கலாம் கடுமை சடம் பத்தும்
கடினமும் ஆம் குறை இலம்பாடு ஒற்கம் இன்மை மிச்சை
கலி வறுமை குறு வாழ்க்கை நிரப்பு அல்கல் சிறுமை
மிடியொடு நல்குரவு ஈராறொன்று தரித்திரப்பேர்
வெறுமையும் ஆம் அரி முருட்டு தெவ்வு முரண் பகை ஆம்
மடியும் அதாம் உறவி உறவு ஆம் மடம் பேதமையும்
மருட்சியும் ஆம் ஏதித்தல் இனைவு இரக்கப்பயனே
**296
#30
பயம் அடுப்புத் தாருணம் நாம் கவலை வெறி வீமம்
பனிப்புப் பீர் வெறுப்பு உருமு வெரு அசூர் பிறப்பே
அயர்வு உட்குக் கோபம் வெடி பேம் புலம்பு இறை கொன்
அச்சம்அதாகும் பிரமம் துரிதம் இறை கவனம்
உயவு அழுங்கல் கவற்சி கதி அணங்கு ஆய்வு சமழ்த்தல்
உயங்கல் ஆகுலம் ஓவு கலக்கம் நொசி மழுங்கல்
வயா வருத்தம் பதினெட்டாம் மடி இழிவு நந்தல்
வழு உருங்கல் கயம் கேடு சுதம் கந்தல் சிதைவே
**297
#31
சிதம்பு சித்தி சீரணம் சீத்தையும் குணமின்மையின்பேர்
செடியும்அதாம் விளம்பிதம் தாமதம் ஆகும் சண்டம்
கதம் குரூரம் கோபம் மறம் வெகுளி சீற்றம்
காய்வு உளர் கலாம் புகைதல் விடைத்திடல் குறோதம்
முதும்பல் கறுப்பு உருத்தல் சிவப்பே புழுங்கல் சீறல்
உடற்றல் தீவிரம் முணவல் கொதித்தல் கன்றல் கஞறல்
வெதும்பல் பவ தொந்தமே சலம் வயிரம் வெம்பல்
வெறுத்தல் செயிர் மறம் அரிப்பு எண் நால்ஒன்றும் சினமே
**298
#32
சினத்த படர் இன்னல் வெறுப்பு இடும்பை புன்கண் கேதம்
செல்லல் கோட்டாலை அலக்கண் பீழை அரந்தை
பனித்தல் கவ்வை யாதனை இன்னாங்கு பையுள் ஏதம்
பருவரல் இட்டளம் உறுகண் மம்மர் அல்லல் கரந்தை
துளிப்பு இடுக்கண் பீடை அலம்வரல் அல்லகண்டம்
சூர் விழுமம் கையாறு கவலை துக்கம் பைதல்
அனுக்கம் நோய் நடலை எவ்வம் வெய்துறலே பழங்கண்
ஐயெட்டும் துன்பத்தின் அபிதானவிதமே
**299
#33
விதிர்ப்பு உலைவு தள்ளாடல் பொதிர்ப்பு அசைத்தல் பனிப்பு
விதலை கம்பம் கம்பிதம் சஞ்சலம் சபலம் துளங்கல்
அதிர்ப்பு விதர் குலைவு சலம் கலங்கல் நடுக்கம்அதாம்
அழுங்கலும் ஆம் தலையிழிவு சாய்வு ஆகும் தஞ்சம்
எதிர்த் தண்மை தாழ்வு ஆகும் மொழி விழிவோடு உவர்ப்பே
எள்ளல் நகை நகல் ஒல்லல் நிந்தையின்பேர் குடிலம்
மதிப்பிலி சாட்டியம் படிறு புள்ளுவம் குத்திரமே
மாயை குய்யம் பட்டிமை கூடமும் வஞ்சம் எனுமே
**300
#34
என் எவன் எற்று ஆவோ ஐயோ அக்கோ அந்தோ
ஏ அத்தா அன்னோ அற்புதமும் இரக்கம்அதாம்
கொன் வறிது வீதா வீண் பயனிலி நாற்பேராம்
கோணல் மனக்கோட்டமும் அவ்வியமும் அழுக்காறு ஆம்
பின்னம் விபரிதம் விகிர்தம் வேற்றுமை விரூபம்
பேதம் விள்ளல் விகண்டை விகடிதம் வீற்று விகடம்
அன்னியமே திரிவு விகற்பமும் வேறுபாடு ஆம்
மகமொடு தியானம் பாவகம் செடி பாவனையே
**301
#35
பாவம் பாதகம் பவம் தீவினை ஆகும் ஒற்றை
பலனில் கேவலம் புலம்பு தனிமை ஏகமும் ஆம்
சோவம் மாழாத்தல் உணராமை மத்தம் இளமை
சோகம் இருள் வெருள் மோகம் உன்மத்தம் பித்தம்
தாவம் பேது அனந்தர் களன் ஏமம் மருள் மான்று
சழங்கு அரி மைந்தே பித்து மயர் கழுமு மாழ்கல்
நோவு மறன் மயல் மயக்கம்அதாம் கைதூவாமை
நொய்துறும் கையொழியாமை ஆம் பெயர் மைவிழியே
**302
#36
மையல் மதனம் காமம் விரகம் ஏம் ஆசை
மால் வேண்டல் வேணவா மாதர் நசை நயப்பு
வெய்ய பற்று இராகம் சார் விவறல் பெட்பு வேட்கை
வெப்பம் நச்சு ஆதரம் இச்சை ஏட்டை வயா நம்பு
கை இரதி பிணை விழைவு மேவல் வெஃகல் விருப்பம்
காதல் ஆர்வம் கவற்றல் வீழ்தல் பெட்டல் மோகம்
மை இவர்தல் தாழ்தல் அவா வாஞ்சை நாற்பதுபேர்
ஆசை ஆம் கைக்கிளை ஓர்தலைக்காமம் அணங்கே
**303
#37
அணங்கு குந்தம் பிணி மடி உரோகம் நிழல் மாரி
ஆமயம் சூர் மடங்கல் பையுள் புன்கணும் நோய் ஆகும்
தணந்த சங்கை கடுத்தல் ஐயம் விப்பிரம் பிராந்தி
சந்தேகம் கொல் அனுமானமும் ஆகும் தீங்கு
குணம் குமுட்டுப் பாடு அந்தராயம் தீடு ஊறு
கோளே அந்தரம் தட்டு அலாபமும் விக்கினம் ஆம்
வணங்கு அழுங்கல் மடி அலசல் ஆஞ்சி ஞொள்கல் சோபம்
மந்தம் அசைவு ஆலசியம் ஆயாசம் சோம்பே
**304
#38
ஆயும் அழிவின்மை கன்னி குமரி கோணையும் ஆம்
அடைக்கலப்பேர் கையடை ஆம் சாலூரம் கயவு
சாயல் இவை மென்பாடு ஆம் செயலறல் கையறவு ஆம்
சமம் இகல் கேழ் ஆங்கு அன்ன போல் என்ன அனைய
ஏய்வு படி நேர் கதழ்வு தூக்கு வீழ் மானம்
இணை துணை அற்று உறழ் ஒத்தல் நிகர் பொருவ கடுப்ப
தீய புரை உவமை மலைவு ஒப்பு இருபத்தாறாம்
சிச்சீ ஏலே ஏய் என் இழி இகழ்ச்சி மரபே
**305
#39
மரபு நீர் பான்மை வண்மை கிழமை பெற்றி தகவு
மாலை பால் இயல்பு தன்மை தகுதி சந்தர் தகைமை
பரிசின் முறை சால்பு விதி கொள்கை அதிகாரம்
படி குணமே நிறம் இருபான்மூன்று பண்பின்பேர் ஆம்
ஒரு பலமே தொடி கஃசு கால்பலம் ஆம் நிறையே
ஒரு துலாம் இடை அரைத்துலாம் கால்துலாமே
சொரி தூக்கு ஆம் ஒன்று ஏகம் பிரதமம் ஒற்றையும் ஆம்
சுவடு உகளம் உபையம் இணை துணை துவமும் இரண்டே
**306
#40
இரட்டொழி மூ முத் திரி மூன்று ஆம் சதுரும் பாத்து
மிசை நான்கு நால் ஆகும் பஞ்சம் அஞ்சும் ஐந்து ஆம்
அரற்று சடம் சட்டு ஆறு ஆம் சத்தம் ஏழு ஆகும்
அட்டம் எட்டு ஆம் நவம் தொண்டு ஒன்பானும் ஒன்பது ஆகும்
தரத் தசம் பான் பது பத்து ஆம் நூறு சதம் ஆகும்
சகத்திரம் ஆயிரம் அயுதமே பத்தாயிரம் ஆம்
உரத்த நூறாயிரமே இலக்கம் அது பத்தே
உறு நியுதம் அது பத்தே கோடி எனும் கூற்றே
** ஏழாவது பண்பு பற்றிய பெயர்த் தொகுதி முற்றும்
@8 எட்டாவது ஒலி பற்றிய பெயர்த் தொகுதி
**307
#1
கூற்று இசை வினாக் கிளவி நொடி காதை வாணி
குயில் இயம் பேச்சு அறை பனுவல் வாக்கு உரை தோல் புகல் கீர்
மாற்றம் மொழி கதை தீர்ப்புப் பறை செப்பம் சொல் ஆம்
வாசகம் பாசுரம் வார்த்தை நடை வசனம் நான்கு ஆம்
தோற்றுரை யாழ்மொழி பதம் ஆம் ஏத்தல் மெய்ச்சல் வாழ்த்தல்
துதி வழுத்தல் புகழ்தல் பரசுதல் பரவல் பழிச்சல்
போற்றல் தோத்திரம் துதித்தல் ஆம் மாசில் வாழ்த்தே
புகல்வர் ஆசிடை பலகால் விளம்பல் மீதுரையே
**308
#2
உரைத்தல் இயம்புதல் இறுத்தல் சாற்றலே ஆடல்
ஓதல் பகருதல் குயிறல் புகறல் சொற்றல் மொழிதல்
விரித்தல் அறைந்திடல் கரைதல் விளம்பலே கூறல்
மிழற்றல் நவிலுதல் பணித்தல் இசைத்தலொடு பேசல்
தெரித்தல் செப்பலே நொடித்தல் சொல்லல் எண்மூன்றாகும்
திசைச்சொல் தேசிகம் ஆம் இடித்தல் கழறலுமே
மருட்டு உறுதிச்சொல் ஆகும் உல்லாபம் குதலை
மழலை கொஞ்சல் மிழலை ஐந்தும் மென்சொல்லாய் வருமே
**309
#3
வரநிலைமை பரம் வாய்மை ஆணை வேளாண்மை
வாய் உண்மை நிச்சயம் சத்தியம் மன்ற மெய்ப்பேர்
சரதம் சாதமும் ஆகும் வழுது மிச்சம் பெட்டு
சாதனை வக்கிரம் விகிர்தம் படிறு பொக்கம் வஞ்சம்
நிரவும் வலக்காரம் மடி அனுசிதமே மாயம்
நிசிதமொடு சடம் பிசி பன்னாறு பொய்யின்பேர் ஆம்
பரியாதம் பழிச்சொல் தீச்சொல் சிறுசொல் பழிப்பு ஆம்
பழிமொழி ஏச்சு அலர் கவ்வை அம்பல்அதாய்ப் படியே
**310
#4
படித்தல் அத்தியானம் வாசித்தல் ஓதலின்பேர்
பாடலும் ஆம் பிதற்றுதல் விடாதுபேசுதல் ஆம்
இடக்கர் கூகனம் மறைத்தசொல் ஆகும் மேம்பாடு
இசைத்தல் நெடு மொழி பெருஞ்சொல் பலரறிசொல் ஆகும்
கடைப்பிடி ஓர்ப்புடன் குறிக்கோள் இவை தேற்றமொழி ஆம்
கடவுதல் வினாவுதம் ஆம் எதிர்மொழி உத்தரமே
விடைப்பேர் சல்லாபம் வினா விடை கூடும்பொருள் ஆம்
விரிச்சி கோள் நிமித்தம் வாய்ப்புள் சகுனம் முதிர்வே
**311
#5
முதுமை பழமொழி பழஞ்சொல் முதுமுன்சொல் பழமை
மூதுரையே கதையும் காரணச்சொல் ஆம் அசதி
இதம் நகையும் நயச்சொல் ஆம் அனந்தம்தான் பொருளேயில்லாமை
புனருத்தம் கூறியகூறுதலான்
குதலை எனும் வாளா கோளா பேசா ஆகும்
கூவல் ஆகருடணை வாஎனல் கரைதல் கேதல்
உதவகுத்தல் அகவல் விளித்திடல் அழைத்தல்பேர் ஆம்
உளைத்தலும் ஆம் அறைகூவல் போர்அழைக்கும்குறியே
**312
#6
குறளை கொடுவாய் கொண்டி புறங்கூற்றுத் தொடுப்புக்
குஞ்சமொடு பிசினமும் ஆம் புறத்தோரைப் பழித்தல்
அறைகூறல் ஆம் நயம் சன்மானம் உபசாரம்
அருமை முகமனும் ஆம் ஓடு ஒடுவும் உடன்நிகழ்வு ஆம்
பெறும் ஆணை வஞ்சனம் வட்டித்தலே சாபம்
பிரமாணம் சூழ் சபதம் விரதமும் சத்தியப்பேர்
உறுதி கலை விச்சை வித்தை ஊதியமே சாலம்
ஓதி கல்வி கேள்வியும் ஆம் கற்றல் பயிலுதலே
**313
#7
பயில் சீர்த்தி ஏற்றம் சீர் இசை தோற்றம் புகழ் மேம்பாடு
ஒளி கியாதம் மீக்கூறொடு சுவேதம்
வெயில் பொரு சொல் மலை கீர்த்தி ஆம் ஓத்துச் சாகை
வேதம் இருக்குஆதி நூன்மறை எழுதாக்கிளவி
முயல் சுருதி ஆரணம் ஆம் மறை வழி வைதிகம் ஆம்
முதல் வேதம் பவுடிகமோடு இருக்கு ஆகும் இரண்டு ஆம்
தயித்திரியம் மூன்று ஆம் உதார்த்தானுதார்த்தம்
சாமம் கோசிகம் நாலாம் அதர்வணம் என்று அடக்கே
**314
#8
அடரும் உபநிடதம் மறை முடி ஞானபாகை
அருத்தபாகையும் கருமபாகையும் அப்பொருள் ஆம்
பிடகம் ஆகமம் பனுவல் ஆரிடம் தந்திரமே
பெரும் சமையம் சூத்திரநூல் பேர் ஏழாம் சருக்கம்
படலம் அத்தியாயம் இலம்பகம் ஓத்துக் காண்டம்
பரிச்சேதம் நூன்முடிவு ஆம் புறவுரை தந்துரையே
முடிவின் அணிந்துரை பதிகம் புனைந்துரை பாயிரமே
முகவுரை நூன்முகத்தின்பேர் கணக்கு எழுத்து எண் இயலே
**315
#9
எண்கணிதம் கரணமே கணக்குச் சோதிடப்பேர்
யாப்புப் பாத்தொடர் கவிதை செய்யுளொடு தூக்கே
அண் கவி பாட்டின்பேர் முற்பா வெள்ளை வெண்பா
அகவல் தொகை ஆசிரியம் முரற்பாவே கலிப்பா
மொண்ட அசையடி அம்போதரங்கம் அராகப்பேர்
முடுகியல் வண்ணகம் ஆம் சொற்பொருள் அருத்தம் உரை ஆம்
பிண்டம்அது பொழிப்பு ஆகும் அரும்பொருள் ஞாபகமும்
பிசியும் ஆம் தொகுதிசெய்தல் பதிகம் என்னும் இதுவே
**316
#10
இதியாசம் இலக்கியம் காட்டுதல் உதாரணப்பேர்
எழுத்துவண்ணம் வடிவு தன்மை ஆகும் ஒற்றே மெய் ஆம்
பதி ஆய்தம் புள்ளி தனிநிலை புலிதம் ஆகும்
பலதொடரே குளகம் ஒருதொடரே முத்தகம் ஆம்
குதி கீதம் அணு வழி இராகம் கந்திருவம்
கொளை வரி காமரம் பாட்டுப் பாணி பண் கேயமும் ஆம்
மதி பாலையாழ்க் குறிஞ்சியாழ் மருதயாழ்ச் செவ்வழியாழாம்
பண் பாடற்கு ஏற்ற குரல் யாழே
**317
#11
குரல் துத்தம் கைக்கிளையே உழை இளியே விளரி
குணி தாரம் ஏழிசை ஆம் மிடறு நாக்கு அண்ணம்
சிரம் நுதல் நெஞ்சொடு நாசி பிறப்பிடம் ஏழிசைக்கு ஆம்
சேர் நான்கு நான்கு மூன்று இரண்டு நால் மூன்றே
இரு தொகை மாத்திரை அவைக்கு ஆம் நெடில் ஏழும் எழுத்து ஆம்
இணர் மௌவல் முல்லை கடம்பே வஞ்சி நெய்தல்
விரை வீரை புன்னை மணம் பால் தேன் கள் ஆன்நெய்
வெறி ஏலம் மாதுளை வாழைக்கனியும் சுவையே
**318
#12
சுவை வண்டு கிள்ளை பரி கரி நுணல் ஆன் மேடம்
தொனி ஏழாம் விசுவாமித்திரன் யமன் முக்கதிரே
கவுதமன் காசிபன் ஈசர் ஆம் மந்தவோசை
காகுளி மந்தம் தக்கு ஆம் மத்திமம் பஞ்சமமே
தவிர் துத்தம் சமனிசை ஆம் வல்லிசையே உச்சம்
தாரம் எச்சு ஆம் கோடபதி விபஞ்சி கலம் கருவி
திவவுறு வல்லரி யாழ்ப்பேர் வீணை தண்டு வாரி
சிறந்திடு கின்னரப்பேர் ஆம் அதின் இசை எழாலே
**319
#13
எழு நரம்பு துயரி குரல் நாடியும் தந்திரி ஆம்
யாழ்வலிக்கட்டே திவவு மாடகம் என்பதுவே
பழகு முறுக்காணியின்பேர் இசைக்குழல் வங்கியம் ஆம்
பாட்டு இரை கோசனை சும்மை நாதம் இடியோசை
துழனியிசை உரை புலம்பு களன் ஆரவாரம்
சுருதி ஆகுலம் ஓதை தொனி இயம் கோடனையே
செழும் வெகுளி அரவம் மூவேழும் ஒலிப்பேர் ஆம்
சிலை ஒலிப்பேர் உழையும் மருமரஞ்சமும் ஆம் தெளியே
**320
#14
தெளித்தல் விம்மல் குமிறல் இரட்டுதல் அரற்றல் ஓர்தல்
சிலம்பல் இயம்புதல் சிதைத்தல் இசைத்தலே முழங்கல்
இளித்தல் உரற்றுதல் உரைத்தல் இரைத்தலே ஏங்கல்
இடித்தல் குளிறுதல் துவைத்தல் அலம்பலே கறங்கல்
உழைத்தல் அழுங்குதல் தழங்கல் தொனித்தலே கதித்தல்
உலம்பல் தெவிட்டுதல் கனைத்தல் புலம்பலே சிரற்றல்
பிளிற்றல் முக்கல் குருமித்தல் நரலலே நெளிர்தல்
பிரற்றலே பயிறல் முரலுதலும் ஒலித்திடலே
**321
#15
ஒல்லெனல் ஞெரேலெனல் வல்லெனல் மொகேரென்னல்
ஒய்யெனல் வெடேலெனல் பொள்ளெனல் சரேரென்னல்
கல்லெனல் திடீரெனல் இம்மெனல் விரீரென்னல்
கம்மெனல் படீரெனல் பொம்மெனல் குபீரென்னல்
கொல்லென அம்மெனல் இழூஉமெனலே பொள்ளென்னல்
கொம்மெனலும் அனுகரணவோசையின்பேர் ஆகும்
சில்லல் கூப்பிடல் கத்தல் கதறல் ஆம் உரப்பல்
தெளித்தல் அதிர்த்திடல் தட்டல் எனக்கடவதாமே
**322
#16
கடகடென்றல் பகபகென்றல் மொளுமொளென்றலுடனே
கலகலென்றல் நெறுநெறென்றல் நெடுநெடென்றல் கடிதாய்ப்
படபடென்றல் மொடுமொடென்றல் சளசளென்றல் பின்னும்
பகபகென்றல் களகளென்றல் திடுதிடென்றல் அல்லால்
தடதடென்றல் கொளுகொளென்றல் மொகுமொகென்றல் வேறு
சரசரென்றல் பரபரென்றல் கரகரென்றல்தானும்
மடமடென்றல் வெடுவெடென்றல் கொடுகொடென்றல் இவை போல்
வருவன எல்லாம் விரைவினோசை எனும் ஆர்ப்பே
**323
#17
ஆர்ப்புக் கோசனை குமிறல் கோடனையே கொழித்தல்
ஆகுலம் கோலாகாலம் உலம்பலே கலித்தல்
பேர்ப்பு அரற்றலே கறங்கலொடு தமரம் பூசல்
பேரோசை திமிலம் குமிலம் கலகம் குமுதம்
போர்ப்புரை அப்படுத்தல்கள் அகளம் உழறல் அபையம்
போராட்டம் பிறகடம் ஆடம்பரமே சத்தம்
கூர்ப்புள சந்தடியே கம்பலை அடாபிடியும்
குரைத்தலும் ஆம் முப்பதும் பேரொலி எனப் பேர் தொழுமே
** எட்டாவது ஒலி பற்றிய பெயர்த் தொகுதி முற்றும்
@9 ஒன்பதாவது செயல் பற்றிய பெயர்த் தொகுதி
**324
#1
தொழில் கருமம் கன்மம் விதி செயல் வினைப்பேர் ஐந்தாம்
தொழில்பயில்வு தொறு ஆம் காதரம் வினையின்தொடர்வு ஆம்
இழைத்தல் பாரித்தல் நிருமித்தலே குயிற்றல்
இயற்றல் அயருதல் வனைதல் ஆற்றல் செயல் எட்டாம்
பழக்கு சிட்டி சிருட்டி பிறப்பித்தல் படைத்தலின்பேர்
பண்ணை கெடவரல் பொய்தல் வண்டல் உண்டாட்டு ஓரை
உழக்கிய விலாசனை கிரீடை உப்புக் கேளிர்
ஒன்பதொன்றும் பெண்கள்விளையாட்டின்பேர் விரிவே
**325
#2
விரி பொழுதுபோக்கு விளையாட்டுப் பாராட்டு
மெய்ச்சல் வினோதம் களித்தல் குலவல் கொண்டாடலின்பேர்
வரைதல் கடி கைப்பற்றல் மணம் வேட்டல் மன்றல்
வதுவை தீவலஞ்செயல் கல்யாணம் விவாகப்பேர்
முருகு துணங்கறல் விழாச் சாறு புத்தேள் சேறு
மூவிரண்டு உச்சபத்தின்பேர் மலர் அடைச்சல் செருகல்
சொருகல் ஆம் வனைவு அணி ஒப்பனை மலைச்சல் மிலைதல்
சூடல் வேய்வு அலங்கரித்தல் புனைவு மண் கைசெயலே
**326
#3
கைதொடல் போசனம் தின்றல் பொசித்தல் துவ்வல் மிசைதல்
கவ்வல் பாரணம் துற்றல் உணல் பருகல் மாந்தல்
துய் தினலே அமுதுசெய்தல் நுகர் வயிறல் ஆர்தல்
துப்பு அருந்தலே துய்த்தல் உண்டல் எழுமூன்றாம்
உய்து நுங்கல் விழுங்குதல்பேர் துயில் கனா வளர்தல்
உறங்கல் பள்ளி துயிறல் படல் கண்ணடைத்தல் அனந்தல்
வெய்துறு கண்படை துஞ்சல் நித்திரை தூங்கலின்பேர்
விடிந்து எழுப்பல் எடுத்தலே தெளித்தல்பேர்ப் பொருளே
**327
#4
பொருமல் விம்மல் கசிவு உரோதனம் இரங்கல் ஏங்கல்
புழுங்கல் கலுழுதல் கலக்கம் ஒன்பது அழுதலின்பேர்
தருதல் கொடை வீசல் கடப்பாடு இடுதல் இகுத்தல்
தானம் வண்மை வேளாண்மை பகுப்பு உதவல் வேள்வி
அருளல் உபகாரம் நல்கல் விதரணம் தியாகம்
அளித்திடல் உதாரம் வழங்குதல் பொழிதல் ஈகை
விரவு பணித்திடல் நீட்டல் கவிகை சிவிகையும் ஆம்
வேந்தர் வரையாது கொடுத்திடுதல் கொடைமடமே
**328
#5
மடக்கல் குத்தி முடக்கம் நொறில் முணங்கு ஒடுக்கம் பாந்தம்
வலிது அடக்கம் பதுங்கலும் ஆம் வதிதல் வைகல் இறுத்தல்
விடுத்தல் இறை விசித்தல் அல்கல் தாழ்தலும் தங்கலின்பேர்
விடுத்தன் மோசனம் மோக்கம் தீர்த்தல் உயிர்த்தலும் ஆம்
இடுக்கல் பெற்றி இழிவு ஆம் மீக்கோ இவர் ஏறுதல் ஆம்
இறங்கல் சுதம் அவதாரம் குனிவு குரங்கலும் ஆம்
உடற்றல் சொலித்திடம் ஆம் வீசுதல் விலங்கல் இடுதல்
ஓச்சல் எறிதலின்பேர் ஆம் பூய்த்தல் பிய்த்தல் காணே
**329
#6
காண்டல் தெரிசனம் நோக்கல் கண்ணுதலே பார்வை
காட்சி பார்த்தலின்பேர் ஆம் சிறக்கணிப்பு அபாங்கம்
ஈண்டு கடைக்கணித்தல் ஆம் சரிதை ஐயம் பிடிகம்
இரந்த பிண்டம் பலி பாகம் பயிக்கமும் பிச்சையின்பேர்
வேண்டல் குறைகோள் ஏன்றல் வாங்கல் இரத்தலின்பேர்
வேண்டாம் ஆற்றுதல் காத்தல் நிறுத்தல் மறுத்திடல் ஆம்
தோண்டல் அகழுதல் கிளைத்தல் ஒண்டல் தொட்டல் பிளிறல்
தொடுதல் கிளறுதலும் ஆம் பிடித்தல் பற்றல் தொடலே
**330
#7
தொடுத்தல் பந்தம் யாப்பு அசைப்புச் சிமிழ்ப்பு ஆர்த்தல் வீக்கல்
துறு விசித்தல் பிணித்தல் கட்டல் ஒன்பதாம் கதுவாய்
வடுப்படலாம் விளம்பல் பாரித்தலாம் பிறக்கு
வழுக்கு அயக்குச் சோர்வு ஆகும் எறிதல் எற்றல் குற்றல்
புடைத்தலும் ஆம் புடைத்தலே தகர்த்தல் குட்டல் ஆகும்
புதைத்தலே பொதிர்ப்பு வீக்கமும் ஆகும் வதைத்தல்
அடித்தலே அறைதல் எற்றன் மோதல் அழுத்துதலும்
அதுக்கலும் ஆம் தூய்தாக்கல் சீய்த்தலாம் தெரியே
**331
#8
தெரித்தல் வரைந்திடல் பொறித்தல் கீறலே தீட்டல்
சிவக்கல் வரித்தலும் எழுத ஆம் கணக்கு இலேகை
வரித்த வரி பொறி போயம் இலிகிதம் ஆகாதம்
வன்னம் எழுத்து அக்கரம் ஆம் கீழ்த்தல் குற்றல் தேய்த்தல்
அரக்கல் சிதைத்தலின்பேர் மஞ்சனம் தோய்தல் குளித்தல்
ஆடல் படிதலும் நானம்செய்தலின்பேர் தேய்த்தல்
உரைத்தல் உரிஞ்சலின்பேர் ஆம் இமிழ்த்தலே தெவிட்டல்
உமிழ்த்தலும் ஆம் பறித்தல் குற்றல் களைத்தல் கட்டல் வழியே
**332
#9
வழிபடல் அற்சனை ஆராதனையே பூசனைப்பேர்
மகம் யாகம் கிருது ஓமம் இட்டி எச்சம் யூபம்
பழிஇல் வேழ்வியின்பேர் வந்தனை வணங்கல் காணல்
பணிதல் வந்திப்பு இறைஞ்சல் பணி தாழ்தலும் தெண்டனின்பேர்
தொழுதலும் கைகூப்புதல் அஞ்சலியொடு கும்பிடல்பேர்
சுகத்து ஆடல் சம்போகம் மைதுனம் கிரீடை
விழைவு புல்லுக் கலவி ஆலிங்கனமே கூட்டம்
விழைச்சு இயைதல் புணர்ச்சி மணம் தழுவல் முயங்குதலே
**333
#10
முயங்கிடத்தில் கூடியுமே கூட்டமில்லாதிருத்தல்
மொய்த்ததொரு புலவி ஆம் அணுகாமல் இளைஞோர்
மயங்க உரைமறுத்தலே ஊடல் என உரைப்பர்
மகிழ்நர் பிரிந்ததன் பின்னர் வாயிலடைத்திருத்தல்
இயங்குதலில்லாத் துனியும் புலவிநீட்டமும் ஆம்
இவ் ஊடல் ஒழிதலின்பேர் உணர்தல் ஒல்லல் ஆகும்
நயம்கொளும் பாடினி முதலோர் புலவி ஒழிந்திடவே
நவின்று வேண்டுதல் வாயில் என்று பரிந்துரையே
**334
#11
பரிதல் இசித்திடல் ஞெமிர்தல் ஒடிதலே இடிதல்
பட இறுத்தல் இறுதல் ஒசித்திடல் அகைத்தல் முறிதல்
முரிதலின்பேர் ஊழ்த்தல் மூடுதல் கவித்தல் பாத்தல்
மொஞ்சல் மூசுதல் ஐந்தாம் கூசல் மட்கல் கெடுதல்
இரிதல் உடைவே திட்கல் நெரிதலே ஞொள்கல்
இடைவு தொங்கல் சாய்வு சரிதலும் ஓடல் ஆகும்
அரிதல் சேதித்தல் விடுவாய் கெய்தல் சூலல்
அறுத்தல் கொய்தல் கத்தரித்தல் ஈர்த்தல்அதின் பகுப்பே
**335
#12
பகுத்தல் எற்றல் கண்டித்தல் தறித்தலே துமித்தல்
பரிதலே தடித்தல் வெட்டல் ஏழாகும் விரியல்
இகுத்தல் பரப்பலின்பேர் ஆம் தணித்தல் செம்மித்தலின்பேர்
எருக்கல் காதுதல் சவட்டல் மாரணம் சட்டித்தல்
செகுத்தல் வீட்டுதல் படுத்தல் ஒழித்தல் எற்றல் கோறல்
செவிட்டல் முருக்குதல் பன்மூன்றும் கொலைசெய்தலின்பேர்
அகைத்தலும் ஆம் ஊறு அணங்குகோள் வேட்டம் கொலை ஆம்
அமர் வேட்டைபற்றியதாம் அமுக்கல் ஞெமுங்குதலே
**336
#13
குதித்தலின்பேர் மிதித்தல் உகளுதல் பாழ்தல் உறுக்கல்
குப்புறல் ஆம் உகைத்தல் உம்பல் கஞறலோ பொதுங்கல்
கதித்தலே பொலிதல் பாச்சலும் எழுச்சிஅதின்பேர்
கதழ்வு வல்லை கதனம் ஒல்லை துரியம் நொறில் கடுப்பு
விதப்பு விசை கடுகல் சண்டம் முடுகல் ஞெள்ளல் கோரம்
வேகம் சீக்கிரம் சடுதி குத்திரமே கவனம்
அதிர்த் துனைவு துவறலோடு தாரை விரைவின்பேர்
அறுமூன்றுநான்கும் எல்கல் தாழ்த்தல் மந்தமுறலே
**337
#14
உறல் பொருந்தல் மருவல் அண்ணல் இசைவு நண்ணல் யோகம்
ஒல்லல் இசைப்பு அணுகல் சிவணுதல் அல்கல் இயைவு
பெறல் அணவல் சார்வு தொடல் தின்னல் கூடலின்பேர்
பிரிவு உணர்வு வரைவு வல்லி தணப்பு ஒருவல் துறத்தல்
துறவி கடி நீங்கல் ஒன்பான் குயிறலே தோளல்
துளைத்தல் திளைத்தலும் ஆம் தாபித்தல் நிலைசெய்தல்
நிறுவல் தோன்றலும் நிறுத்தம் ஆம் தடவல் வருடல்
நீவலும் தைவரலும் என மொழிவர் பாவலரே
**338
#15
வலத்தல் வாரணம் நிணத்தல் ஆணை தட்டல் முடைதல்
மாற்றல் வாரித்தலொடு தடை தடுத்தல் தகைதல்
விலக்கலின்பேர் நெகிழல் ஒல்லல் குழைவின்பேர் ஏவல்
வியங்கோள் ஆம் கண்டூதி சொறி இரண்டும் தினவு ஆம்
பலித்தல் கிடைத் திடல் வாய்த்தல் பயப்பு ஈன்றல் பெறல் ஆம்
பரிசனம் தொட்டிடல் ஊறு துவளல் திவளலும் ஆம்
கலத்திடல் வளாவுதல் அளாவுதல் துளாவல்
கலம்பகம் சங்கீரணம் கலாவலும் என்று இயலே
**339
#16
இயற்றல் உத்தியோகம் உஞற்று ஊக்கம் தாளாண்மை
இயல் உழைப்புச் சாயம் ஆள்வினை முதுமை தாள்வு
முயற்சிஅதாம் பேராண்மை அருமையிடல் ஓங்கி
முடித்தல் ஊராண்மைஅதாம் உண்டாதல் பூத்தல்
பயத்தலும் ஆம் பிறகிடலே பிறக்கிடல் பின்றலும் ஆம்
பாதீடு பெய்தல் அளித்திடல் செறித்தல் மூன்றாம்
வெயர்த்தலே கசிவு வேர்வு ஆம் சுவேதமும் ஆம்
விற்றல் பகருதல் மாறல் நொடை விலைசெப்பு அகவே
**340
#17
வேய் எனும் சொல் ஒற்று ஆகும் ஞொள்கல் சிங்கல் போகல்
மெலிவு கிரிசம் தேம்பல் நாம்பல் இளைத்தலின்பேர்
காய்தல் வறத்திடல் முளித்தல் உலறல் முதிரலும் ஆம்
காலல் உமிழ்த்திடல் பில்கல் பிளிற்றலும் கொப்பளிப்பு ஆம்
மாய்தல் ஆவரணம் இவை மறைதல் ஆம் தெற்றல்
மாறுபாடு ஆம் பொல்லம் துன்னம் ஆம் சங்கம்
ஆயமே உல்கு சாரிகையும் ஆம் பிணக்கே
அரில் வாரம் துவக்கு மறல் நாற்பேர் ஆவனவே
**341
#18
ஆவிவிடல் மாளுதல் சமாதி பொன்றல் முடிதல்
அவன்றல் யோகம் தபுதல் இலல் இறத்தல் மரணம்
வீவு துஞ்சல் மாய்வும் உஞ்சல் சாவும் மூவைந்தாம்
விளிவும் ஆம் பரிகரி வக்கிரம் மாறல் சேறல்
தாவு மீண்டிடல் ஐந்தாம் சம்பிரதம் சித்து ஆம்
தரித்தல் பரித்திடல் பொறுத்தல் தாங்கல் சமத்தலின்பேர்
வாவல் தாவுதல் கடத்தல் தாண்டல் தத்தல் ஆகும்
வளைத்தல் சுற்றல் சூழுதல் வளாகம் எனத் தெருளே
**342
#19
தெருட்டலுடன் வருட்டலும் வற்புறுத்தல் ஆம் வரன்றல்
தெள்ளல் கொழித்திடல் ஆகும் பூட்கை மேற்கோள் ஆம்
உருத்தல் பொடித்திடல் நாறல் முளைத்தல் ஆம் நூக்கல்
ஊன்றல் நோன்றலும் தள்ளல் ஆம் பாதுகாத்தல்
புரத்தல் நிலைபெறல் ஓம்பல் திதி நோக்கம் காத்தல்
போற்றலும் ஆம் அரண் காவல் தட்டி கதவு ஏமம்
இருள் கடியே வேலி சேமமும் காப்புஅதாகும்
இளை தலை காவல் பெயர் என்பார் தமிழ்ச் சொல்பவரே
**343
#20
பவனிக்கே பேருலாப்போதல் ஆம் வழங்கல்
பயிறல் உலவலின்பேர் ஆம் தூய்மைசெய்தலுடனே
உவளித்தல் இரண்டும் உவலாளனத்தின்பேர் ஆம்
உவளல் அசைந்திடல் துவண்டல் ஒசித்தல் துவண்டிடல் ஆம்
மவுனப்பேர் மோனம் வாளா கோளா ஆகும்
வரி இறை கறை கடனும் கரம் குடியும் இறுப்பு ஆம்
குவிதல்பேர் சாம்பல் கூம்பலும் ஒடுங்கல் ஆகும்
குறை திறை கப்பமும் தெவ்வர் பாகுடத்தின் கவர்ப்பே
**344
#21
கவர்தலே குடைதல் ஞெலிதலும் கடைதல் ஆகும்
கட்டலே சோர்வு பட்டி கரவு கரவடமே
சவுரியமே படிறு திருட்டொடு கள்ளல் கரப்புச்
சாங்கம் தேயம் களவு தேனுவுமே களவு ஆம்
துவர்தல் கீறுதல் கீழ்தல் கீண்டல் வகிர் பிளத்தல்
துணி கீன்றல் கீறல் போழ்ந்திடல் பீறல் கிழிவு ஆம்
நவிதல் அவித்திடல் நதுத்தல் நொதுத்தலும் மற்று அதற்காம்
நாடல் நேடுதல் துருக் கையரிக்கொளல் தேடுதலே
**345
#22
தேடும் அலமரல் சொரிதல் மறுகல் ஞொட்கல் திரிதல்
தெருமரலே பிரமரி சூர்த்தலும் சுழறல் ஆகும்
ஓடல் நீளுதல் நீண்டல் நிமிர் பாறல் நீடல்
ஓர் ஆறாம் நேரோடல் ஆதி வீதியும் ஆம்
வாடல்இல் வெம் பரியோட்டம் மண்டிலமே சாரி
மாதி வாளியும் ஆகும் பாதீடுதான் பங்கீடு
பகுப்பே பாத்துப் பாகமும் பங்கிடல் ஆம்
ஏற்படல் ஒட்டுதல் வலித்தல் நேரல் உடன்படலே
**346
#23
படர்ச்சி இவருதல் ஏகல் ஒதுக்கம் இல்லல் சேறல்
படர்தல் இயங்குதல் வழங்கல் போதல் ஆம் இறத்தல்
கடத்தல் விடுத்திடல் பிரிதல் மறுங்கலே தணத்தல்
கழித்தல் இகந்திடல் நீங்கல் நீர்தல் மூவேழும்
நடப்பது ஆம் கவர்தல் வவ்வல் கொளலும் வாருதல் ஆம்
நறிது ஆக்கல் முண்டிதமே மழித்தல் சமைத்திடலே
வடித்தலின்பேர் நுடக்கலே துவட்டல் ஆம் ஊட்டல்
மாட்டல் பொத்தல் இரண்டாகும் சரணம் மறை புகலே
**347
#24
மறன் இகல் சல்லிகம் பூசல் ஆர்ப்பு அமர் தெவ்வு உடன்றல்
மலைப்பு இரணம் தாக்கு கோறல் கிடைத்தல் ஞாட்பு ஏற்றல்
செறல் முடுகல் போர் பொருதல் ஆயோதனம் தும்பை
தீய்த்தல் வினை முரண் கூட்டம் மொய் செரு நேர் கிட்டல்
முறுகல் ஆகவம் சமமே தலைப்பு அடல் மண்டுதலே
முட்டல் சமர் சங்கிராமம் சண்டையிடல்பேர்
உறவின்மேல்சாராமை தழிஞ்சி ஆம் பகையை
ஒறுத்தல் வள்ளை ஆம் சுடல் சந்தாபம் தூபிதமே
**348
#25
தூவல் உகுத்திடல் சிதர்த்தல் சிதந்தல் ஊழ்த்தலும் ஆம்
துண்டல் எய்தல் உகைத்தல் நடவுதல் கடவல் கைத்தல்
ஏவல் உய்த்தல் ஒட்டல் ஊர்ந்திடல் செலுத்தல் பத்தாம்
இடைவெட்டு ஆறலை அதர்கோள் வழிப்பறி ஆம் வழியின்
மா எதிர்ப்பு ஆற்றுப்படை ஆம் தரல் கொடுபோயிடல் ஆம்
வலியழித்தல் ஆற்றறுத்தலே மடித்தல் உழற்றல்
ஆவது உழக்குதல் ஆகும் ஞெகிழ்தல் ஞொள்கல் அலையல்
ஆஞ்சி அலைதலின்பேர் ஆம் என்று நாடுகவே
**349
#26
நாடகம் தாண்டவம் கண்ணுள் வாணி நட்டம் நிருத்தம்
நடம் நடனம் படிகம் நாட்டியம் தூக்குத் தூங்கல்
ஆடல் ஆலுதல் பெயர்தல் அகவல் நடை நடித்தல்
அசைவே நட்டணை ஆட்டுக் கூத்து மூவேழாம்
பாடு இலையம் பித்தம் வீரட்டானம் கடகம்
பவுரி கரணம் பரதம் பிரமரியே புரியமோடு
அலைப்பு உள்ளாளம் கூத்தினில்விகற்பாம் பழகல்
உழத்தல் பருமித்தல் சிரமஞ்செய்தல் நடையே
**350
#27
நடனம்அதில் கொடுகொட்டி தாண்டவம் பாண்டரங்கம்
நந்திகூத்து ஆம் கபாலமும் ஆம் மால்கூத்தே
குடமல்லோடு அல்லியம் ஆம் பாவை செல்விகூத்து ஆம்
குடை துடி சேய்கூத்து ஆம் துற்கையின்கூத்து மரக்கால்
கடையமே சசிகூத்து ஆம் பேடும் அதன் கூத்து ஆம்
கருது துடி ஏழ்மாதர்கூத்து இருக்கை பழுவின்
புடையொற்றல் துணங்கைஅதாம் குரவை கைகோத்தாடல்
புது வெறியாட்டு அணங்கு வெறி கழங்கும் வாய்த்தனவே
**351
#28
வாயினில் கையால் தட்டல் ஆவலம்கொட்டுதல் ஆம்
வட்டித்தல் ஒற்றறுத்தல் வட்டணை தட்டலும் ஆம்
ஆய குடங்கைகொட்டிக்குவித்தல் கொம்மை செங்கை
அதைக் குவித்துக்கொட்டல் ஆம் தாளவொத்துச் சதி சீரே
அதுவாம் குடந்தம் கைகூப்பி மெய்யைக்கொட்டல்
ஏகபதம் குந்தித்தல் குஞ்சித்தல் ஆகும்
பாயும் அசைத்தலின்பேரே துயல்வரலொடு அசைதல்
பாழல் சொரியலும் ஆகும் நாற்பெயர் ஒற்றுமையே
**352
#29
ஒற்றல் உடுத்தலின்பேர் ஆம் கொட்டலே சாத்தலுடன்
சதுர்த்தல் அப்பலின்பேர் மூன்றாகும் பூசல்
தெற்று புலர்த்துதல் வரித்தல் இரண்டாகும் வைத்தல்
தெறுத்தல் நெரித்தலின்பேரும் இரண்டாகும் இறுக்கல்
தற்றுதல் ஆம் கொள்ளை கொண்டி சூறை ஆம் உரோசல்
சார்ந்து உராய்ப்போதல் உரிஞ்சுதல் ஆம் சுவாசம்
அல் தும்மல் மூச்சு ஆம் ஆவித்தல் கொட்டாவியின்பேர்
அலது உமிழ்த்தல் ஊற்காரம் காறல் சத்தி அகல்வே
** ஒன்பதாவது செயல் பற்றிய பெயர்த் தொகுதி முற்றும்
@10 பத்தாவது ஒருசொற் பல்பொருட் பெயர்த்தொகுதி
** ககர வெதுகை
**353
#1
அகரம் எழுத்து ஊர் ஆகும் மகம் வேள்வி நாள் ஆம்
அகம் இடம் உள் மனம் பாவம் மனை மரம் கள் விலை ஆம்
சிகரம் மலைமுடி கவரி மதிழ் தலை வெற்பு அலை ஆம்
சிகழிகை வாசிகை மாலை மயிர் முடி முப்பெயர் ஆம்
தகர் விலங்கின்ஆண் உடைதல் ஆடு என முப்பெயர் ஆம்
சகம் பூமி ஆடு இரண்டாம் நகம் தரு வெற்பு உகிர் ஆம்
புகர் வெள்ளி நிறம் ஆசு ஆம் ஒகரம் மயில் எழுத்து ஆம்
பொகுட்டே கன்னிகை சேற்றில் குமிழ் வெற்பாய்ப் பகரே
**354
#2
பகம் கொக்குக் கான்கோழி பகுப்புடன் பெண்குறி ஆம்
பகல் ஒளி திவா முகிழ்த்தம் நடுச் சுடர் நாள் பகுப்பு ஆம்
முகம் திசை வத்திரம் ஆகும் நுகம் நுகக்கோல் அலம் ஆம்
முகடு வெரின் முகடு உயர்வு ஆம் பகர்தல் விற்றல் சொலல் ஆம்
இகம் புவி இம்மையும் இருபேர் உகம் நுகம் பார் யுகம் ஆம்
இக அசைச்சொல் அகறலும் பேர் அகி அரவோடு இரும்பு ஆம்
ககம் கணை புள்பொதுப்பெயர் ஆம் மகிழ் வகுளம் மகிழ்வு ஆம்
ககனம் கான் படை விசும்பு என்று ஒருமூன்றாம் விகற்பே
**355
#3
விகடம் உயர் விகிர்தமும் ஆம் தகடு இலை ஐம்மையும் ஆம்
மிகை குற்றம் மிகல் மேடு ஆம் நகை நகை தேசு உவப்பு ஆம்
பகடு புணை பெருமை கரி ஏறொடு கிடா ஆம்
பகவனே தெய்வமும் மும்மூர்த்திகளும் ஆகும்
அகடு வயின் புறம் நடு நீடுதல் உள்ளோடு ஐம்பேர்
அகவல் ஆசிரியம் மயில்குரல் கூத்து என்றாகும்
சகடம் உருள் ஊர்க்குருவி ரோகிணி யோகமும் ஆம்
தகை பெருமை அழகு அன்பு தடை பண்பு ஆம் மகளே
**356
#4
மகரம் இல் சுறாக் கொங்கு ஆம் சுகம் இன்பம் கிளி ஆம்
மகரந்தம் கள்ளுத் தேன் மலர்த்தாது முப்பேர்
இகல் பகை போர் வலி நிகர் ஆம் சிகை குடுமி கழுகு ஆம்
எஃகு உருக்கு வேலாழி படைக்கலன் கூர்மையும் ஆம்
புகல் குதிர் சொல் உடல் கெதி பக்குவம் அடல் புக்கலும் ஆம்
புகை புகை யோசனை ஆகும் திகை சுணங்கு திசை ஆம்
சிகரி வெற்பு நாரை எலி கோபுரம் நாற்பேராம்
திகிரி மலைவே ஆழி வண்டில்வட்டம் நிகழ்த்தே
**357
#5
நிகழ் நிகழ்ச்சி ஒளி ஆம் அகணி வயல் உள் ஆம்
ஞெகிழி சிலம்பு அனல் அனலின்பொறி அறை கொள்ளியும் ஆம்
இகுளை சுற்றம் தோழி நட்பு ஆம் அகல் அகற்சி விளக்கு ஆம்
இகுத்தல் விளி வீர்தல் கொலை வீழ்த்தல் அழைத்தலும் ஆம்
சகலம் முற்றும் துண்டமும் ஆம் அகலம் உரம் விரிவு ஆம்
சகுந்தமே கழுகு புள்ளின்பொதுப் பூகம் முப்பேர்
சிகி மயில் நூபுரம் கேதுத் தீ என நாற்பேராம்
சிகண்டி மயில் பாலையாழ்த்திறமும் ஆம் சகத்தே
**358
#6
சகுனி நிமித்திகன் புள் ஆம் மகன் சுதன் இந்திரன் ஆம்
சகுனமே பறவை கிழங்கொடு நிமித்தம் மூன்றாம்
எகினமே புளி கவரி நாய் அன்னம் மா ஆம்
இகலன் நரி பகைஞனும் ஆம் துகள் பொடி மாசு இரண்டாம்
அகலுள் பரப்பு ஊர் அகலம் நாடு என நாற்பேராம்
அகைத்தல் வேதனை ஒடித்தல் அறுத்தல் அழித்தலும் ஆம்
முகரி பொன் ஓர் ஆறு ஆகும் சகி தோழி பொறை ஆம்
முகை திரள் பூமொட்டு மிடா மூன்று என ஆகினவே
**359
#7
ஆகுவே மூடி கஞ்சா மரை எலி முப்பேராம்
ஆகம் மார்பு உடல் ஆகும் போகில் புள் பூ மொட்டு ஆம்
பாகு பாகல் குழம்பு பாக்குப் பால் பகுப்பு ஆம்
பாகலே காரவல்லியோடு பலாமரம் ஆம்
வாகு தோள் அழகு ஆகும் பாகம் மையம் பகுப்பு ஆம்
வாகை மரம் செயம் பண்பு ஆம் சேகு காழ் விதை ஆம்
சாகம் வண்டு தேக்கு ஆடு சிறுகீரை தான் ஆம்
சாகரம் சிந்து உறங்காமை ஆம் இசைக் கோகிலமே
**360
#8
கோகிலம் பல்லி கள் குயில் ஆம் நாகு இளமை சங்கு ஆம்
கூகை ஓர் செடி புள் ஆம் பூகம் முண்டம் கமுகு ஆம்
போகி பாம்பு இந்திரன் ஆம் போகல் நெடில் போக்கு ஆம்
போகமே பாம்பு உடலும் போகம் விகற்பமும் ஆம்
யூகமே குரங்கு படை உணர்ச்சி தற்கம் உவப்பு ஆம்
யோகம் பாவனை கூட்டம் உயர்ச்சி உபாயமும் ஆம்
தோகை மயில் மயில்பீலி விலங்கின்ஆண் பெண் ஆம்
சோகம் மயலொடு திரள் ஆம் நாகரிகம் மாதே
**361
#9
நாகம் மலை கரி புன்னை குரங்கு விசும்பு அரவு
நல் ஆடை காரீயம் சுவற்கம் ஒன்பான்பேர் ஆம்
சீகரம் நீர்த்திரை கரகம் திவலை சாமரை ஆம்
சேகரம் மாமரம் மகுடம் தலை வேர் கூட்டமும் ஆம்
ஈகை இண்டை கொடை பொன் ஆம் ஆகுலம் நோய் ஒலி ஆம்
ஏகமே தனிமை ஒன்று ஆம் காகுளி ஆர்ப்பு அணை ஆம்
கேகயம் ஓர் பண் கமலம் மயில் அசுணம் நாடு ஆம்
கிண்டு நாகரம் செழுகம் சுக்கு ஓர் அக்கரமே
**362
#10
அக்கு என்பு சங்கு மணி விடைமுரிப்பு மணவு ஆம்
அக்கம் விழி மனவு இரண்டாம் சொக்கு அழகு மயல் ஆம்
இக்கு என்ப கரும்பு கள் ஆம் சுக்கை தார் உடு ஆம்
எக்கல் குவிந்திடல் சொரிவு ஆம் மொக்குள் குமிழ் முகிழ் ஆம்
செக்கு என்பது ஒரு நாளும் செக்கும் இருபேராம்
சிக்கம் சீப்பு உறி சிகை ஆம் திக்கு விழி திசை ஆம்
கொக்கு என்ப பகம் செந்நாய் பரி மூலம் மா ஆம்
குக்கில் செம்போத்து ஒரு மருந்து என்று இருபேர் வக்கணையே
**363
#11
வக்கிரமே மடங்கல் வட்டம் கொடுமை பொறாமையும் ஆம்
மக்கள் சிறார் மானிடர் ஆம் நக்கல் உண்டல் சொரிவு ஆம்
சக்கரமே மலை வண்டில் பெருமை வட்டம் ஆழி
தரை பிறப்புக் கடல் ஓர் புள் ஒன்பது பேர் ஆகும்
பக்கமே சிறகு நட்புத் திதி அருகு நாற்பேர்
பக்கணம் ஊண் வீதியும் ஆம் தெக்கணம் தெற்கு உரன் ஆம்
சக்கிரி மால் அரவு இறைவன் மட்பகை செக்கான் ஆம்
சார்ந்த நக்கன் இருவாணி சிவன் இருபேர் ஆக்கே
**364
#12
ஆக்கம் மலர்மகள் திரு ஆம் பூக்கம் ஊர் கமுகு ஆம்
அக்காரம் புடவை வெல்லம் என இரண்டுபேராம்
ஊக்கமே உற்சாகம் முயற்சி வலி பொலிவோடு
உள்ளத்தின்மிகுதி என ஐந்துபேராகும்
மேக்கு மேற்றிசை மேல் ஆம் பாக்கு இடைச்சொல் பாக்கு ஆம்
வியந்திடு கைக்கிளை இசையும் ஒருதலைக்காமமும் ஆம்
சேக்கை முலை உறங்கிடம் ஆம் நோக்கு அழகு விழி ஆம்
செழும் தூக்கு ஆராய்வு நடம் கவி நிறை அங்கமுமே
** ககரவெதுகை முற்றும்
** ஙகர வெதுகை
**365
#13
அங்கம் உடல் ஆறங்கம் எலும்பு கட்டில் உறுப்பு ஆம்
அங்கி சட்டை நாள் எரி ஆம் பங்கி கஞ்சா மயிர் ஆம்
சங்கம் வெற்றி சுகம் கணைக்கால் புலவர் சங்கு எண் சவை ஆம்
சங்கு படை வளை சங்லு ஆம் கங்கு தினை பருந்து ஆம்
புங்கம் அம்புக்குதை அம்பு புடவை உயர்ச்சியும் ஆம்
பொங்கர் மரக்கொம்பு இலவு ஆம் பொங்கல் மிகை கொதிப்பு ஆம்
வங்கம் வெள்ளி ஈயம் வழுதுணை புணை ஓர் நாடு ஆம்
மங்குல் இருள் கார் விசும்பு ஆம் பொன் பொரும் அங்கனையே
**366
#14
அங்கதம் தோளணி பாம்பு வசைச்சொல் என்றாகும்
அங்கணம் ஓர் பாலம் முற்றம் சலதாரை சேரும்
இங்கிதமே நயம் குறிப்பு ஆம் சங்கை ஐயம் மதிப்பு ஆம்
இங்கு இவண் காயமும் ஆகும் சங்கரன் மால் சிவன் ஆம்
திங்கள் மதி மாதம்அதாம் பிங்கலம் பொன் பசப்பு ஆம்
சிங்களமே முசு நாடு ஆம் கொங்கை கொப்பு முலை ஆம்
பங்கம் நல் தூசொடு பழுது சேறு பின்னம் நான்காம்
பங்கு முடம் பாதி பக்கம் சனி ஆகும் பாங்கே
**367
#15
பாங்கு பக்கம் சகி அழகு ஆம் வாங்கல் கொள்ளல் வளைவு ஆம்
பங்கயம் பார் தாமரை ஆம் சிங்கல் குன்றல் மெலிவு ஆம்
ஓங்கல் வெற்புத் தலைவன் மேடு உயர்வு ஓங்கல் வேய் ஆம்
உரை தூங்கல் சோம்பு ஆனை துயில் நடம் தராசு ஆம்
ஞாங்கர் வேல் பக்கம் முன்பு மேல் என நான்காகும்
நல் ஆங்கு அவ்விடம் நிகர் ஆம் காங்கு சுரம் கறுப்பு ஆம்
வேங்கை புலி பொன் கணி ஆம் மூங்கில் வேய் நாள் ஆம்
விளம்பு காங்கேயன் வீட்டுமன் குகன் என்று அசையே
**ஙகரவெதுகை முற்றும்
** சகர வெதுகை
**368
#16
அசி சிரிப்பு ஆயுதம் வாள் ஆம் சுசி சுத்தம் கனல் ஆம்
ஆசு விரைவு ஆசுகவி கவசம் அற்பம் தீது ஆம்
பிசி உணவு பொய் ஆகும் அசலை புவி உமை ஆம்
பிசினனே பொய்யன் உலோபன் கோளன் முப்பேர்
வசி கூர்மை வசியம் வாள் ஏவலும் வீதியும் ஆம்
மாசு குற்றம் சிறுமை மழை அழுக்கு என நாற்பேராம்
சசி மதி கற்பூரம் இந்திராணி என மூன்றாம்
தாசி நாள் அடிமையும் வேசையும் ஆம் பார் மிசையே
**369
#17
மிசை உணவு மேடு ஆகும் பசி பசப்புப் பசி ஆம்
வீசல் எறிந்திடல் ஈவு ஆம் ஊசல் உஞ்சல் சளிப்பு ஆம்
அசனம் உணா வேங்கையும் ஆம் நிசி பொன் மஞ்சள் இரவு ஆம்
ஆசினி பலா வயிரம் மரவுரி விண் சிறப்பு ஆம்
முசலி பலபத்திரனும் உடும்பு தாழையும் ஆம்
மூசல் சா மொய்த்திடல் ஆம் பாசு வேய் பசப்பு ஆம்
இசை ஒலி சொல் புகழ் பாட்டு ஆம் அசுணம் மயில் புள் ஆம்
எச்சம் மகம் குறை சேய் ஆம் இச்சை மிடி வசையே
**370
#18
வசதி ஊர் வீடு இதம் ஆம் கசிவு இரக்கம் கசிவு ஆம்
வாசம் இருப்பிடம் மணம் புள்சிறகு சீலையும் ஆம்
அசனி இடி உண்பான் வச்சிரப்படை முப்பெயராம்
ஆசை திசை அன்பு பொன் ஆம் மாசுகம் காற்று அம்பு ஆம்
பிசிதம் நீர் இறைச்சி உதாரணம் வேப்பமரம் ஆம்
பிச்சம் மயிர் குடையின்பேர் உச்சி உச்சி முடி ஆம்
விசையம் வெற்றி சூரியமண்டலம் கிரி சற்கரை ஆம்
விச்சை விதை கல்விஅதாம் கொச்சை தகர் அசமே
**371
#19
அசம் தகரும் குதிரையும் மூவாட்டை நெல்லும் ஆகும்
அச்சமே பயம் தகடு அஞ்சலி அகத்தி நாற்பேர்
வசந்தம் மணம் இந்திரன்மாளிகை தென்றல் முப்பேர்
வாசி வளம் குதிரை தெற்குக் குழலோசை நாற்பேர்
விசும்பு பொன் உலோகம் முகில் விண்ணுடனே திசை ஆம்
விசை துரியம் பொறி ஆகும் குசை நாணல் சுவல் ஆம்
குசம் தனம் சம்பிரம் தொட்டி தசும்பு மிடாக் குடம் ஆம்
கோசிகம் ஓர் மறை ஆடை என்பர் தேசிகரே
**372
#20
தேசிகன் தேசாந்திரி ஆசான் வணிகன் முப்பேர்
தேசிகம் பொன் காந்தி அழகு ஓர் திசைச்சொல் கூத்து ஆம்
கேசரமே மகிழ்மரமும் பூந்தாதும் ஆகும்
கேசமே மயிர் கவுள் ஆம் கீசகம் வேய் குரங்கு ஆம்
காசை குசை அஞ்சனி ஆம் காசு மணி மறு ஆம்
கச்சையே தழும்பு கவசம் கயிறு மூன்றாம்
பாசம் முறை அன்பு ஊசித்துளை பேய் பார் கயிறு ஆம்
பாசி அணி நாய் வருணன் சடைச்சி பற்றுப் பாசே
**373
#21
பாசனம் உண்கலன் பாண்டம் சுற்றம் என மூன்றாம்
பச்சை மரகதம் புதன் மால் ஓர் செடி தோல் ஐம்பேர்
கோசம் முட்டை முறை குறி பண்டாரம் மதிலுறுப்பு ஆம்
குணி செச்சை ஆடு வெட்சி தேய்வையும் முப்பேராம்
தூசு கலை புரசை தூசிப்படை முப்பேராம்
சொற்றிடும் வச்சிரம் குலிசம் கள்ளி வயிரமும் ஆம்
பேசும் நொச்சி ஊர் சிந்துவாரம் மதில் ஆகும்
பின் வசுப் பொன் வசுக்கள் ஆன்கன்று அனல் வஞ்சியரே
** சகர வெதுகை முற்றும்
** ஞகர வெதுகை
**374
#22
வஞ்சி கொடி மரம் பா ஊர் மேற்செலவு பெண் ஆம்
வஞ்சம் வாள் கபடமும் ஆம் பஞ்சம் மிடி ஐந்து ஆம்
இஞ்சி மதில் ஆத்திரம் ஆம் நெஞ்சு மனம் மார்பு ஆம்
எஞ்சல் குறைவு இழைத்தலும் ஆம் கஞ்சி கஞ்சி ஊர் ஆம்
குஞ்சி குன்றி சேய் மயிர் புள்பார்ப்பொடு நாற்பேராம்
குஞ்சம் ஈயோட்டி தொங்கல் குறளை குன்றி படி ஆம்
கஞ்சனமே கரிக்குருவி கண்ணாடி இரண்டாம்
கஞ்சன் அயன் கன்னான் நட்டுவன் கஞ்சன் ஆமே
**375
#23
கஞ்சம் மரை தாளம் அப்பம் கஞ்சா வெண்கலம் ஆம்
கஞ்சிகையே இடுதிரை வத்திரம் சிவிகை ஆகும்
அஞ்சலி வவ்வால் தொழல் ஆம் வஞ்சனை பொய் சூர் ஆம்
அஞ்சனம் மை கறுப்பொடு திக்கானையிலொன்று ஆகும்
மஞ்சரியே பூங்கொத்து மாலை தளிர் ஆகும்
மஞ்சு பூண் வனப்பு வலி முகில் யானை முதுகு ஆம்
துஞ்சல் வலி நிலைபேறு துயில் சோம்பு சாவும்
துஞ்சியிருப்பதும் ஆறாம் கிஞ்சுகம் வாய் அணங்கே
**376
#24
கிஞ்சுகம் என்பது முருக்கு முதலை சிவப்பு ஆகும்
கிளர் காஞ்சி மேகலை ஊர் மரம் எதிரூன்றலும் ஆம்
முஞ்சுதல் என்பது சாவும் மொய்த்திடலும் ஆகும்
மொழி நாஞ்சில் என்பதுவே கலப்பை மதிலுறுப்பு ஆம்
பஞ்சரம் வாட்கோரை புள்ளின்கூடு செருந்தியும் ஆம்
படும் கஞறல் பொலிவு குன்றல் எழுச்சி எனலாகும்
தஞ்சம் எனும் மொழி பற்றுக்கோடு எளிமை ஆகும்
சாற்றும் அஞர் துயர் அறிவிலோர் ஆம் இவ்விடத்தே
** ஞகர வெதுகை முற்றும்
** டகர வெதுகை
**377
#25
இடம் வாமம் பொருள் இடம் ஆம் சடம் உடல் பொய் ஆறு ஆம்
இடபம் மரக்கொம்பு எருது ஆம் முடி மகுடம் தலை ஆம்
குடம் ஊர்தல் கரை கும்பம் மால் கூத்துப் பசு ஆம்
குடிஞையே கூகை புள்ளின்பொது நதி முப்பெயராம்
தடம் மலை விசாலம் சீர் சுனை அடிகோள் பெரிது ஆம்
தடி வயல் வில் ஊன் உடும்பு தண்டு உலக்கை மின் ஆம்
திடம் நிசமும் பெலமும் ஆம் விடம் நஞ்சு தேள் ஆம்
செடி சிதைவு கான் பாவம் குணமின்மை கடனே
**378
#26
கடம் வழி கான் குடம் கயிறு கடல் நீதி முழவு
கரிக் கதுப்பு மதம் ஆனைத் திரள் உடல் பன்னொன்றாம்
படம் உடுக்கை கொடி பாம்பின்படம் கோலக் கிளி ஆம்
படர் நினைப்பு நடை துயரம் வீரர் நாற்பேராம்
மடம் முனி இல் பேதமை ஆம் குடை கவிகை குடைவு ஆம்
மடல் உலா மடல் பூவின்இதழ் பனைஏடு ஆகும்
நடலை பொய் வஞ்சனை நுடக்கு ஆம் வடம் முழுக் கால் கயிறு ஆம்
நடை வழியே ஒழுக்கம் நடை செல்வம் ஆம் கொடியே
**379
#27
கொடிறு பூசம் கதுப்பு ஆம் படிறு பொய்யே கனவு ஆம்
கொடி துவசம் காக்கை வில் ஆம் குடி குலம் ஊர் நுதல் ஆம்
மடி வயின் சோம்பு உடை தாழை மடங்குதல் சாவு அறுபேர்
மடை சோறும் கடைப்பூணும் புனல் மடையும் ஆகும்
தொடி வளைகில் ஒரு பலம் ஆம் படிவம் நோன்பு உரு ஆம்
துடி ஏலம் காலநுட்பம் பறை முப்பேராகும்
வெடி புகையே இடி வெடித்தல் வெளி பயம் ஐம்பேராம்
விடர் கமர் கான் முளி இருப்புத் தூர்த்தர் மலை விடவே
**380
#28
விடை விடல் ஏறு எதிர்மொழி ஆம் கிடை கிடப்புக் குழு ஆம்
விடங்கம் ஏர் கொடி கொடுங்கை படங்கு கொடி வானி
கடை முடிவு அங்காடி இடம் வாயில் கடைதலும் ஆம்
கடிகை துண்டம் நாளிகை ஓர் குலம் கதவில் தாழ் ஆம்
படை கலனை ஆயுதம் கண்படை சேனை அலம் ஆம்
படுவி குளம் கள்விற்பாள் நொடி பிதிர் வார்த்தையும் ஆம்
அடை இலை சும்மாடு அடுத்தல் கணம் வழி அப்பமும் ஆம்
அடர் நெருக்கம் போர் தகடு ஆம் துடர் மாலை துடர்பே
**381
#29
துடவை கொலை உழவின்பேர் அடல் கொலை போர் வலி ஆம்
தொடு மருதம் தோட்டமும் ஆம் குடுமி உச்சி மலை ஆம்
கடகம் மதில் வளை சேனை கரித்திரள் வட்டமும் ஆம்
கடு விடம் முள் கசப்பு அரிதகியும் நாற்பேராம்
படி பகை பார் நிகர் குணம் சோபானம் அங்கவடியும்
பாரமும் வாயிற்படியும் படிவும் நாழியும் ஆம்
சடிலமே சடை குதிரை செறிவு நெருக்கமும் ஆம்
சடை வேணி வேர் ஆகும் தொடை தார் நாண் வடமே
**382
#30
வடகம் உல்லாசம் தோல் ஆம் விடலை மன்னன் உடைவு ஆம்
வடுச் செம்பு தழும்பு வண்டு ஆம் உடுக்கை துடி இடை ஆம்
சுடிகை உச்சி முடி அணி ஆம் வடுகு இசை யாழ்த்திறம் ஆம்
சுடர் ஒளி முக்கதிர் ஆகும் பிடிகம் ஐயம் வளை ஆம்
படலிகை ஓர் மணி வட்டம் பீர்க்குப் பூந்தட்டு ஆம்
படலை பரி மணி மாலை படர்வு ஒருகண்பறை ஆம்
கடி வடிவு விரைவு ஐயம் கூர்மை பேய் விளக்கம்
காலம் மணம் பயம் காப்புப் புதுமை நீங்கிடலே
**383
#31
இடை நிறையே நடு மருங்குல் இடமும் நாற்பேராம்
இடக்கர் மறைச்சொல் குடம் ஆம் படப்பை கொல்லை ஊர் ஆம்
படுதல் ஒலி சொலல் பூத்தல் இன்மை உண்டாதலும் ஆம்
படு மரத்தின்குலை கள்ளும் நீர்நிலை நன்மையின் பேர்
அடி முதல் கால் செண்டு வெளி அடிமை கவிப் பதம் ஆம்
மடுப் பொருநாள் அடுத்தல் அச்சம் அடுப்பொடு நாற்பேராம்
வடவை பிடி எருமை தீத்திரள் பரிப் பெட்டையும் ஆம்
மடங்கல் உகம் இமன் இடி தீச் சிங்கம் நோய்ப் பாடே
**384
#32
பாடு பக்கம் படுதல் ஒலி பெருமை வாய்பாடு ஆம்
பாடி பாசறை ஊர் ஆம் நாடி கன்னல் நரம்பு ஆம்
மாடு புடை செல்வப்பேர் ஆடு வெற்றி தகர் ஆம்
மாடம் மனை உழுந்தின்பேர் வாடை தெருக் காற்று ஆம்
கோடிகமே பூந்தட்டும் சீலையும் ஆம் இருபேர்
குடம்பை முட்டை கூடு ஆகும் உடன்றல் சினம் போர் ஆம்
சேடு நன்மை பெருமையே அழகு திரட்சியும் ஆம்
சேடன் ஓர் குலம் அனந்தன் பாங்கனும் கூடியவே
**385
#33
கூடம் மனை மலையுச்சி கவடு சம்மட்டியும் ஆம்
கோடு வளை வயிர் குவடு கரை மருப்புக் கொப்பு ஆம்
ஓடை நீர்நிலைக் கிடங்கு ஓர் மரம் பட்டம் கொடி ஆம்
உடு விண்மீன் கிடங்கு மரக்கலம் விசியம் பீர்க்கு ஆம்
ஈடு உவமை குழைவு வலி பெருமை நாற்பேராம்
இடங்கர் குடம் தூர்த்தர் சிறுவழி முதலை நாற்பேர்
பீடிகை ஆசனபீடம் ஆவணம் தட்டு ஆகும்
பெட்டல் இச்சை செறலும் ஆம் நட்டம் நடம் கேடே
**386
#34
கேடகமே ஊர் பலகை பரிசை மூன்றாகும்
கிடுகு தேர்மரச்சுற்றும் கேடகம் சட்டமும் ஆம்
கோடை காந்துகம் குதிரை மேல்காற்றும் ஆகும்
கோடரம் வானரம் சோலை குதிரை மரக்கொம்பர்
மோடு மேடு உதரம்அதாம் சேடி ஊர் சகி ஆம்
முடங்கல் வேய் முடங்குதல் நோய் தாழை நாற்பேராம்
ஆடி உத்திராடம் மாதம் கண்ணாடியும் ஆம்
ஆடல் கூடுதல் வென்றி கூத்து எனும் சாடு உரையே
**387
#35
சாடி கோள்உரை தாழி சீலையும் முப்பேராம்
சட்டி பக்கம் விசளையும் ஆம் கட்டி வெல்லம் சுகம் ஆம்
கோடி புதிது எண் கலைப்பேர் ஆடகம் பொன் துவரை
கோடகமே முடி உறுப்புக் குதிரை புதுமையும் ஆம்
பாடலம் பாதிரி துரகம் சிவப்பு முப்பேராகும்
பட்டு நகர் சீலையின்பேர் வெட்சி புதல் புறம் ஆர்
தோடு பனைமடல் கூட்டம் மலரிதழ் காதணி ஆம்
தோட்டி கதவோடு கரித் துறோட்டியும் கட்டினரே
**388
#36
கட்டளையே நிறையறிதல் உரையறிதல் ஒப்பு ஆம்
கடவுள் முனி தெய்வமொடு நன்மை என மூன்றாம்
தொட்டலே தொடுதல் தோண்டுதல் கைதீண்டலும் ஆம்
சுட்டல் குறி சுடுதலின்பேர் மட்டு அளவு கள் ஆம்
நட்டலே நடுதலொடு நட்பியற்றுந்தொழில் ஆம்
நாட்டம் விழி பண் வாள் ஆம் ஓட்டம் இதழ் தோல்வு ஆம்
தட்டை கிளிகடிகோல் வேய் தினைத்தாள் முண்டமும் ஆம்
சட்டமே பலகை பள்ளி கிடுகு என விட்டனரே
**389
#37
இட்டிகை செய்திடல் ஆணி இட்டி குந்தம் மகம் ஆம்
இடி உறுதிச்சொல் இடி நெல்மா இடித்தல் நாற்பேர்
குட்டம் நோய் குளம் குறிது ஆம் பெட்பு ஆசை பெரிது ஆம்
குட்டன் மகன் மறி பிணி ஆம் குட்டி மகள் பறழ் ஆம்
பட்டிகையே கச்சு இரதம் பணை தெப்பம் நாற்பேர்
பட்டமே பதவி வழி சவரி சேக்கையின்பேர்
கொட்டம் மதம் ஒரு மருந்து ஆம் செட்டி செட்டி குகன் ஆம்
கோட்டம் கோண் படப்பை கொட்டில் கோயில் சும்மை தட்டே
**390
#38
தட்டு அசடு கேடகம் தேர்நடுத்தட்டுத் தடை ஆம்
தட்டல் தடை கிட்டலும் ஆம் பட்டி குக்கல் ஊர் ஆம்
முட்டு எனும் சொல் இடையூறு சந்து எல்லாம் ஆகும்
முடலை வலி பெருமை திரட்சியும் எனப் பேர் மூன்றாம்
கட்டலே தடைகளைதல் பந்தித்தல் களவு ஆம்
கடுத்தல் எனும் சொல் ஐயம் ஒப்பு வேகமும் ஆம்
புட்கரம் வான் பாண்டம் முகம் வாள் குருகம் புயம் நீர்
புழைக்கைநுனி நிறைவு தீர்த்தம் பருந்தாய் நாட்டே
**391
#39
நாட்டியம் கூத்து எண்ணமும் ஆம் ஞாட்பு அமர் பாரமும் ஆம்
நல்ல புட்டம் புடவையே நிறைவு காக்கையும் ஆம்
கோட்டி உமையவள் பிரமை சவை முப்பேராகும்
கூறு திட்டை திண்ணை உரல் மேட்டின்பேர் ஆகும்
வேட்டுவன் என்பது மகநாள் புழு வேடன் மூன்றாம்
வியன் வட்டம் கலை ஊர்கோள் பரிசை வட்டம் தாழ்வு ஆம்
பாட்டி தாய்தந்தையைஈன்றாள் விலங்கில்பெண் ஆம்
பரும் கிட்டி ஓரீற்றாத் தாளம் ஆம் மணியே
**டகரவெதுகை முற்றும்
** ணகர வெதுகை
**392
#40
மணம் வெறி வேட்டிடல் புணர்வு ஆம் பணம் மகி பொன் பை ஆம்
மணி அழகு கண்டை நவமணி கருமை நன்று ஆம்
கணம் உடு நோய் துடி திரட்சி பேய் வலையம் கணம் ஆம்
கணி அளவு வேங்கைஅதாம் புணர்வு இசைதல் சேர்வு ஆம்
குணம் இயல்பு கயிறு பண்பு கும்பம் வில்நாண் ஐம்பேர்
குணில் கடிப்புக் குறுந்தடி ஆர் திணை ஒழுக்கம் நிலம் ஆம்
உணர்வு அறிவு தெளிவு ஊடல்ஒழித்தல் என மூன்றாம்
ஓணம் நதி மாயோன்நாள் ஆம் எனும் தாரணியே
**393
#41
அணி அழகு நிரை செய்யுள் கலன் அணவல் படை ஆம்
அணையே செய்கரை மெத்தை அடுதல் வாத்தியம் ஆம்
பணி கருவி அரவு தொழில் பூண் வார்த்தை பணிவு ஆம்
பணை வயல் வேய் பரிப்பந்தி பருத்தல் மரக்கொம்பு ஆம்
துணி கடிகை சோதி ஆம் நுணவை சக்கை மா ஆம்
துணை இரட்சை இரண்டு ஆகும் கணை திரட்சி அம்பு ஆம்
பிணி முகம் புள் மயில் ஆகும் பணவை பரண் பேய் ஆம்
பிணை தொடர்பு விலங்கின்பெண் விருப்பம் ஆம் அணங்கே
**394
#42
அணங்கு நோய் அழகு ஆசை துயர் கொலை பெண் அணங்கு ஆம்
ஆணம் அன்பு குழம்பு ஆகும் நாண் இலச்சை கயிறு ஆம்
துணங்கு அறலே இருள் விழவு ஆம் துணங்கை நாள் கூத்து ஆம்
தூணி அம்புக்கூடு அளவு ஆம் வாணம் மறை அம்பு ஆம்
குணுங்கர் குயில் உவர் இழிஞர் தோல்கருவி ஓர் பேர்
கோணலே கோண் வளைவு மாறுபாடு ஆகும்
வணங்கல் பணி வளைந்திடல் ஆம் குணங்கு பேய் குணக்கு ஆம்
வாணி பாரதி கூத்து வார்த்தை அம்பு ஆம் காணே
**395
#43
காணம் நிதி செக்கு ஒரு கண் ஓர் பரிஊண் கொள் ஆம்
காணி எண்ணோடு ஆட்சிஅதாம் கோணி பன்றி முடன் ஆம்
பாணம் அம்பு குறிஞ்சி பட்டு ஆம் வேணி சடை விசும்பு ஆம்
பாணி கை பற்று ஓசை நீர் நகர் கான் போது இயம் ஆம்
ஆணை முறை மெய் ஏவல் வெற்றி சூள் தடைப் பேர்
ஆணிதான் வயிரம் அழகு எழுத்தாணி திறன் ஆம்
ஏணி எல்லை உலகு இறைவை மான் பழு ஏணியும் ஆம்
யாணர் கலம் புதிது அழகு தச்சர் அண்டர் ஆமே
**396
#44
அண்டரே பகைவர் வானோர் இடையர் முப்பேர்
அண்டம் வெளி முட்டை ஆம் சுண்டனெலி நாள் ஆம்
புண்டரமே நுதல்குறியும் கழுகும் இருபேராம்
புண்டரீகம் புலி திக்கானை கஞ்சம் வண்டு ஆம்
பிண்டம் உடல் பெலி பிச்சை உரை பிரமம் மறை ஆம்
பேணல் பேணுதல் குறிப்பு ஆம் சேண் நீளம் உயர்வு ஆம்
குண்டலி பாம்பு இசங்கு ஆகும் கண்டல் கைதை முள் ஆம்
கொண்கன் நாயகன் சேரன் என்பது கண்டனரே
**397
#45
கண்டம் நவகண்டம் வயல் கழுத்து ஆணி கடிகை
கவசம் இடுதிரை வெல்லம் கரிக் கயிறு துன்பு ஆம்
குண்டலம் வான் குழை ஆகும் கொண்டல் முகில் காற்று ஆம்
கொண்டை முடி ஓர் கனி ஆம் குண்டை சட்டி ஏறு ஆம்
துண்டம் முகம் நாசி துணி சாரைப்பாம்பு ஆகும்
தொண்டை மிடறு ஆனையின்கை கோவை ஒரு நாடு ஆம்
முண்டகம் மத்தகம் தாழை முளரி மது முள்ளி
முள்ளுடைய மூலம் அறுபேர் என விண்டனரே
**398
#46
விண்டு மலை வேய் காற்று மேகம் மால் ஐந்தாம்
விண் முகில் வான் சுவற்கம் ஆம் கண் இடம் வேய் விழி ஆம்
வண்டு வளை அளி பூசம் அம்பு புரி வெண்மை
மாசு வலம்புரி மகளிராடல் ஒன்பான்பேராம்
தண்டம் எறுழ் கரிவழி தண்டனை பாரம் நான்காம்
தண்டி யாழ் தடி படை குழாய் ஓந்தி ஐந்தாம்
அண்டசம் நண்டு உடும்பு அரவு கரா ஓந்தி தவளை
யானை மீன் ஆமை பரி பல்லி புள்பேர் உண்டே
**399
#47
உண்டை திரள் பிச்சை படையுறுப்பு ஆகும் முப்பேர்
ஒண்மை அறிவு ஒழுங்கு அழகு மிகுதி நன்மை ஐம்பேர்
சுண்டை மதுச் சுண்டை ஆம் கண்டகம் முள் வான் ஆம்
தொண்டு ஒன்பான் பழமை சுக்குத் தொழும்பு நுழைவழி ஆம்
மண்டலி மண் நாய் பாம்பு பூனை இறை நாற்பேர்
மண்டலம் தட்டு ஊர்கோள் மண்டலம் குதிரை நாடு ஆம்
சண்டன் அலி கால் வெய்யோன் பிண்டி தரு மா ஆம்
தண்ணம் மழு ஒரு பறை ஆம் பண்ணம் அருமொழியே
**400
#48
பண் இசை மாக் கலனை ஆம் அண்ணல் பெரிது இறை ஆம்
பண்ணை வயல் நீர்த்தாழ்வு மருதம் சேக்கையும் ஆம்
மண் அணு ஒப்பனை முழவின் மாற்சனை மண் நான்காம்
வண்மை கொடை வாய்மை வளம் வலி புகழ் ஐம்பேராம்
திண்ணம் நிசம் வலி ஆடு ஆம் எண்ணம் இசை உழைவு ஆம்
செண்டு செண்டு பரி வழி ஆம் தண்டு அகம் கான் வகுப்பு ஆம்
எண் இலக்கம் எள் எளிமை கணிதம் நினைவெழல் ஆம்
ஈண்டே இவ்விடம் சடுதி என்பர் ஆண்டவரே
**401
#49
ஆண்டு அவிடம் வருடம் ஆம் பாண்டு வெண்மை நோய் ஆம்
அரும் தாணுச் சிவன் மலை தூண் இலை தறி ஐம்பேராம்
காண்டம் நீர் வனம் கலசம் திரை முடிவு அம்பு உடை ஆம்
காண்டகம் பொற்பு அணிச் செப்புக் கமண்டலமும் ஆகும்
பாண்டில் ஏறு ஊர்தி வட்டம் சுடர்த் தாள் கட்டிலும் ஆம்
பகர் வண்ணம் சந்தம் நிறம் பண்பு மூன்றாகும்
மாண்டல் மாட்சிமை இறப்புப் போனது மூன்றாகும்
வணர் அழகு வளைவு ஆகும் இணை இரண்டு ஒப்பதுவே
**ணகர வெதுகை முற்றும்
**தகர வெதுகை
**402
#50
அதம் இறங்கல் கீழுலகு ஆம் மதமதர்ப்புக் கடம் ஆம்
அதிர்ப்பு ஓசை நடுக்கம் ஆம் ஒதுக்கம் நடை மறைப்பு ஆம்
மதலை பிள்ளை கொன்றை மரக்கலம் கொடுங்கை தூண் ஆம்
மதவு புதல் வனப்பு வலியுடன் மிகுதி ஐந்தாம்
சிதலை பிணி கறையான் ஆம் கதவம் காப்பு அடைப்பு ஆம்
சிதம் ஞானம் உடு வெளுப்பு ஆம் புதவு புல்லுக் கதவு ஆம்
முதலை கராச் செங்கிடை ஆம் கதழ்வு சினம் சிறப்பு ஆம்
முதல் ஆதி பொருள் இறைவன் அரசன்பேர் இதுவே
**403
#51
இதழ் உதடு மலரேடு ஆம் அதர் வழி ஆட்டு அதர் ஆம்
எது வினா ஓர் இறை ஆம் சிதடன் மடன் குருடு ஆம்
கதலி கொடி காற்றாடி வாழை தேற்று ஆகும்
கதுப்பு ஓதி கவுள் ஆகும் விதப்பு மிகை நடுக்கு ஆம்
பதலை வரை தாழி ஒருகண்பறை மிடா ஆம்
பதம் அழகு ஊண் வரிசை சொல் பேர் தாழ்ச்சி வழி கால் ஆம்
திதி பொருள் பக்கம் காப்பு ஆம் மதன் வனப்பு வேள் ஆம்
சிதர் உறி வண்டொடு திவலை துணி துகள் ஆம் சதமே
**404
#52
சதம் இறகு எண் இலை திரம் ஆம் வெதிர் செவிடன் வேய் ஆம்
சதி உமை கற்பாட்டி உரோகிணி தாளம் கொலை ஆம்
மிதவை தெப்பம் சோறு ஆகும் கதி விரைவு கெதி ஆம்
விதி வினை பணபயன் ஆகும் பதி அரன் ஊர் தவன் ஆம்
மதி அசைச்சொல் விது மாதம் புத்தி மதிப்பு ஆகும்
மதுகம் எட்டி இருப்பை தரா மதுரம் வண்டு மகிழ் ஆம்
பிதிர் கொடி தூவல் பிதிர் ஆம் கதை கதை தண்டு உரை ஆம்
பித்திகையே சுவர் முல்லை கருமுகை ஆதலுமே
**405
#53
ஆதன் உயிர் பேதையும் ஆம் ஏதம் இடர் மறு ஆம்
ஆதி முதல் நேரோடல் மன் மால் ஈசனும் ஆம்
பூதம் ஐம்பூதம் குறள் ஆல் இறப்பு உயிர் நாள் சுசி ஆம்
போதகமே புணை இளமை யானையின்கன்று அறிவு ஆம்
சூதன் முனி சாரதி ஆம் பூதியம் பார் உடல் ஆம்
சூதம் மா வண்டு இரதம் தோற்றல் பாரதம் ஆம்
காதல் கொலை ஆசை ஆம் சேது கரை சிவப்பு ஆம்
கதிர் ஒளி அம்பு இரவி கருங்காலி குரல் ஓதே
**406
#54
ஓதிமம் வெற்பு அன்னம் ஆம் ஓதை ஒலி மதில் ஆம்
ஓதி மயிர் ஓந்தி மலை பூனை அறிவு ஐந்தாம்
சாதி குலம் சண்பகம் ஓர் தருப் பிரம்பு கள் ஆம்
சாதகம் புள் பயிற்சி முறி செனனம் பூதமும் ஆம்
சோதி உடு விளக்கு இரவி சுடர் சோதி சிவன் ஆம்
சுதை அமுது ஆன் மகள் சுண்ணச்சாந்து செல்வம் ஐந்தாம்
பூதி செல்வம் நீறு அறிவு சேறு துகள் நரகு ஆம்
புதை கணைக்கட்டு உடல் புதுமை நிறை புதைத்தல் மாதே
**407
#55
மாதவமே இளவேனில் மதுத் தவம் மூன்றாகும்
மது மயக்கம் நறவு தேன் வசந்தம் அசுரனும் ஆம்
சூதகம் ஆசூசம் மின்னார் பூப்புச் சூதிடம் ஆம்
தூது மணல் சந்து உரை ஆம் மாது இடைச்சொல் பெண் ஆம்
பீதகம் பொன் இருவேலி சாந்து பொன்மை நான்காம்
பீதம் எலி பசலை பன்றி பொன் சாந்து அச்சமும் ஆம்
சேதகம் சேறு அணை சிவப்பு ஆம் ஏதி அம்பு வாள் ஆம்
சீதை படைச் சால் கொடுப்பை திரு ஆம் கோதையரே
**408
#56
கோதை குழல் காற்று ஒழுங்கு மாலை கைத் தோற்கட்டே
குடகன் மட வாள் உடும்பு வில்நாண் ஒன்பதுமாம்
மேதை புதன் இறைச்சி தோல் அறிவு கள்ளோடு ஐந்தாம்
வேதி திண்ணை பலகை விரவுதல் கேட்டை நாள் ஆம்
பேதை அறியான் குருடன் ஓர் பருவம் பெண் ஆம்
பேதி அவிடதம் கள்ளும் மாறுபாடு ஆகும்
பாதை வழி தோணி ஆம் கேது சிகி கொடி ஆம்
பாதிரியே குதிரை பாடலம் எனும் மூதுரையே
**409
#57
மூதுரை ஆதிரை கதை ஆம் தாதி சகி நாள் ஆம்
முத்தமே பிரியம் இதழ் முத்து நகரியும் ஆம்
மாதிரம் திக்கு ஆகாயம் மலை யானை நிலம் ஆம்
மாதர் வனப்பொடு காதல் மகளிர் இடைச்சொல் ஆம்
வீதி தெரு ஓடல் ஆம் வீதல் கொடை சாவு ஆம்
வித்தமே பொன் அறிவு பழித்தல் என மூன்றாம்
தாது மலர்த்தாது உடல்தாது ஐம்பூதம் சத்ததாது
துகள் காவிக்கல் ஆறு எனும் இப்போதே
**410
#58
போது போது அலர் ஆகும் சாதம் நிசம் குறள் ஆம்
புத்தன் மால் பவுத்தன் சாந்தகன் புதியன் நான்காம்
சீதம் நீர் குளிர் முகில் ஆம் கீதம் இசை வண்டு ஆம்
சேத்து உவமையுறுப்பு அசைச்சொல் செம்மை ஐயங் கருத்து ஆம்
வாதை வடகாற்று இடர் ஆம் வேதை மாற்றிடர் ஆம்
வரும் பதுக்கை மலை தூறு ஆம் பதங்கம் விட்டில் புள் ஆம்
ஓதம் ஒரு நோய் கடல் ஆம் போதம் அம்பி அறிவு ஆம்
உத்தரமே மறுவசனம் வடதிசை அத்தனையே
**411
#59
அத்தன் அப்பன் அரன் குரு ஆம் பித்தன் அரன் மடன் ஆம்
அத்தம் நாள் வனம் பாதி ஆடி பொன் கை பொருள் ஆம்
துத்தம் இசை மருந்து பால் வயிறு நெய் யாழ்நரம்பு ஆம்
தொத்து அடிமை பூங்கொத்து ஆம் தத்தை அவ்வை கிளி ஆம்
சித்தம் உளம் திடன் ஆகும் கைத்தல் சினம் கசப்பு ஆம்
சித்து அறிவு செயம் ஆகும் சத்தம் ஏழ் ஒலி ஆம்
நத்தம் இரவு ஊர் வளை ஆம் பத்திரமே விறல் வாள்
நலம் சிறகு அம்பு இலை படை சிங்காதனம் சித்திரமே
**412
#60
சித்திரம் பொய் கவி அழகு ஆமணக்கு அடவி வியப்பு ஆம்
சித்திரபானுக் கதிரோன் கனல் ஆண்டு ஒன்று ஆகும்
சத்திரம் கைப் படை குடை சத்திரம் கருவி மகம் ஆம்
சத்தி உமை பெலம் துவசம் வேல் குடை காறலும் ஆம்
அத்திரி ஒட்டகம் பரி வேசரி மரம் வெற்பு அம்பு ஆம்
அத்தி கடல் அது எலும்பு கோறல் கரி ஐந்தாம்
பத்திரி புள் காளி பரி இலை வானம் அம்பு ஆம்
பத்தி முறை அன்பு ஒழுக்கம் வழிபாடு உத்தமமே
**413
#61
உத்தமம் நன்கு அழகு ஆகும் மித்திரன் நட்பினன்பேர்
உத்தி திரு உறுப்பு ஊகம் படப்பொறி தேமலும் ஆம்
அத்து அரைஞாண் சிவப்பு அசைச்சொல் இசைப்படுத்தல் ஐந்தாம்
அத்தினி பெண் பிடி இரண்டாம் சுத்தி சுசி சங்கு ஆம்
பொத்தகம் சித்திரப்புடவை பண்டாரம் மேடு ஆம்
புத்தேள் தெய்வதம் புதிது ஆம் பைத்தல் சினம் பசப்பு ஆம்
சுத்திகை தார் சம்மட்டி சுடர்த் தண்டு மூன்றாம்
சூழ் நிதம்பம் அல்குல் மலைச்சார்பு ஆம் சத்தியமே
**414
#62
சத்தியம் மெய் சபதம் ஆம் உத்திரம் நாள் பா ஆம்
தைத்தல் செறிகுற்றல் ஆம் துத்தி பொறி சுணங்கு ஆம்
கத்திகை தார் கொடிமரம் ஆம் பத்து ஒழுக்கம் தசம் ஆம்
கத்தன் இறை சிவன் ஆகும் கத்தி கல் மெய்ப்பொருத்து ஆம்
குத்தியே மண் அடக்கம் ஆசாளும் ஆகும்
கூறு ஆத்தி உடைமை தாதகி குடி முப்பேராம்
வத்திரமே முகம் கலை ஆம் மத்தகம் கம் குளம் ஆம்
வாதுவர் தேர்ப்பாகர் பரிவடிப்போர் கோத்திரமே
**415
#63
கோத்திரம் மண் குலம் மலை ஆம் தீர்த்தம் விழா நீர் ஆம்
கூத்தன் நடன் உயிர் ஆகும் ஓத்து நூல் மறை ஆம்
நேத்திரம் கண் பட்டாடை பாத்தி செய்யின்பகுப்பு ஆம்
நீத்தம் வெள்ளம் தணப்பு ஆகும் ஊழ்த்தல் செவ்வி நினைப்பு ஆஞம்
சூத்திரம் நூற்பா நூல் ஆம் பாத்து அடிசில் பகுப்பு ஆம்
சோத்தியம் நொய் சோர்வு ஆகும் சீத்தை மடன் இழிவு ஆம்
காத்திரம் மெய் கனம் கோபம் கீரி கரி அடி ஆல்
காய்த்தல் சினத்திடல் மரம் காய்த்திடல் பேர் தந்திடுமே
** தகரவெதுகை முற்றும்
** நகர வெதுகை
**416
#64
தந்தம் நகை கொம்பு ஆகும் நந்தி சிவன் ஏறு ஆம்
சந்து முட்டுத் தூது சந்து ஆம் நந்து நத்தை சங்கு ஆம்
இந்தனமே இசை விறகு ஆம் மைந்தன் உரன் மகவு ஆம்
எந்தை பிதாச் சிவன் ஆகும் வந்தி கற்றோர் மலடு ஆம்
கந்தம் மணம் கிழங்கு பொறி கழுத்தடி வெற்பு அவை ஆம்
கந்துகமே பரி பந்து ஆம் அந்தகன் கால் குருடு ஆம்
அந்தரம் விண் முடிவு நடுப் பேதம் இடம் ஐந்தாம்
அந்தி சந்தி மாலை யாழ் இரவு ஆம் சிந்தனையே
**417
#65
சிந்து முச்சீர் நதி கடல் நீர் குறள் தேசம் சிதர் ஆம்
சிந்துரம் பொட்டு ஆனை புளி செங்குடை செம்மையும் ஆம்
பந்து கட்டு நீர்த்துருத்தி கந்துகம் முப்பேராம்
பந்தமே கிளை கட்டு ஆம் மந்தன் மந்தன் சனி ஆம்
சந்தம் நிறம் அழகு கவி குலம் இசை சாந்து ஆறாம்
சந்தானம் தரு மகவு ஆம் நந்தல் கெடல் வாழ்வு ஆம்
விந்தம் ஒரு மலை கமலம் எண் ஊர் நாற்பேராம்
விந்து விதை சோதி துளி எழுத்துடன் மந்திரமே
**418
#66
மந்திரம் கள் கோயில் மனை பரித்திரள் மேல் அளப்பு ஆம்
மந்தாரம் செம்மரம் ஓர் தரு நோய் கார் நிழல் ஆம்
கந்திருவம் பண்பு அரி ஆம் தந்து இழை சாத்திரம் ஆம்
கந்தரமே கழுத்து முகில் மலைமுழை முப் பேராம்
சந்தி இசை வந்தி வேய் சதுக்கம் மொழியுறுப்பு ஆம்
தந்தி கரி முயற்சை யாழ்நரம்பு கணபதி ஆம்
அந்தில் ஆம் கசை இடம் ஆம் கந்து தூண் முட்டு ஆம்
அந்தணர் பார்ப்பார் அறிவோர் ஆகும் ஏந்திழையே
**419
#67
ஏந்தல் கோன் பெருமை மேடு இலகுவம் நாற்பேராம்
எந்திரம் தேர் திரிகை மதிலுறுப்பொடு சக்கரம் ஆம்
காந்தல் காய்வு ஒளிர் ஆகும் காந்தி அழகு ஒளி ஆம்
காந்தம் அழகு ஒளி ஊசிக்காந்தம் ஒரு கதை ஆம்
மாந்தல் இறந்திடல் உணவு ஆம் சாந்து சந்தம் குழம்பு ஆம்
மாந்தி மாக் குளிகனும் ஆம் சாந்தி பொறை சுசி ஆம்
கூந்தல் மயிர் பீலி ஆம் காந்தன் கோன் பதி ஆம்
குந்தமே குருந்து கண்நோய் படை பரி காந்துகமே
**420
#68
காந்தாரம் இசை காடு கொடுமையும் முப்பேராம்
கருது செந்து நரகு ஓரி சீவன் அணு நான்காம்
வேந்து ஆதல் மதி இரவி மகவான் கோன் பொன் ஆம்
விந்தை திரு அணி ஆகும் மொந்தை மொந்தல் பறை ஆம்
மாந்தானுண்ணான் சுழல்வு ஆம் சாந்தை பார் பொறை ஆம்
மந்தி வண்டு கதிர் குரங்கு ஆம் கந்தை நங்கை துணி ஆம்
போந்தானே நாகரிகன் சேரன் போனான்பேர்
புகல் உந்தி நதி கடல் கொப்பூழ் உருள் செப்புகவே
** நகர வெதுகை முற்றும்
** பகர வெதுகை
**421
#69
செப்பு மொழி செப்பு இரண்டாம் அப்பு அலப்பல் பொலிவு ஆம்
செப்பம் நடுநிலை நெஞ்சு செவ்வை தெரு நான்காம்
ஒப்பு நிகர் கொடைப்பொருள் ஆம் குப்பை செற்றை மேடு ஆம்
உப்பு ஓரை கடல் இனிமை உவரோடு உப்பு ஆகும்
கொப்பு மரக்கொம்பு அணி ஆம் தப்பல் ஒழிப்பு அடிப்பு ஆம்
கொப்புழ் உந்தி நீர்க்குமிழ் ஆம் தப்பு இயம் பொய்யுரை ஆம்
துப்பு அரக்கு வலுப் பகை தூய்து அனுபவம் நெய் துகிர் ஆம்
தொப்பி மது அங்கி எனச் சொல்லுவர் தாபரித்தே
**422
#70
தாபரம் மெய்நிலை தரு ஆம் தபுதல் சாக் கேடு ஆம்
தரி யூபம் படை கவந்தம் அகத்தறி முப்பேராம்
நீபம் நிமித்தம் கடம்பு உத்திரட்டாதி ஆகும்
நீடு செபம் செபித்திடலும் துடையும் இருபேராம்
பூபன் இறையோன் குசன் ஆம் சாபம் வில்லுச் சபிப்பு ஆம்
போற்று தபனன் பருதி செந்தீயும் ஆகும்
கோபம் அறம் புழு ஆம் விபூதி செல்வம் நீறு ஆம்
கூறு அபரம் முதுகு பிணக்கு கர்மம் என்னும் யாப்பே
**423
#71
யாப்பு இறுக்கல் கவி கட்டு ஆம் இபம் கரி கோடரம் ஆம்
இயலும் அபிதானம் வியாக்கியானம் மகம் பேர் ஆம்
நாப்பண் நடுத் தேர்த்தட்டி யாழுறுப்பு மூன்றாம்
நவின்றிடு கப்பணம் கைவேல் இருப்பும் முள்ளும் ஆகும்
சீப்பு எனும் சொல் கதவில்தாழ் சீவுறு சிக்கமும் ஆம்
திகழ் குபேரன் சோமன் அளகையர்கோன் ஆகும்
காப்பு வளை திருநீறு கதவு காவலும் ஆம்
கண்டிடும் பப்பு உவமை பரப்பு ஆம் கமலானனியே
** பகர வெதுகை முற்றும்
** மகர வெதுகை
**424
#72
கமலம் தாமரை நீர் ஆம் சமன் நடுக் காலனும் ஆம்
கமலை கங்கை திரு ஊர் ஆம் தமம் இருள் இராகு ஆம்
அமலம் அழகு அழுக்குஇலதாம் அமரர் தெவ்வர் சுரர் ஆம்
அமலை ஒலி சோறு உமை ஆம் ஞமலி கள் நாய் மயில் ஆம்
குமரி கன்னி காளி அழியாமை கற்றாழையும் ஆம்
குமுதம் அல்லி அடுப்பு ஒலி திக்கானை தெற்பை ஐந்தாம்
சிமிலி உறி குடுமி விட்டில் மூன்றுபேராகும்
திகழ் அமுதம் முத்தி பால் சுதை சோறு என்றமையே
**425
#73
அமை அமைதி மூங்கில் ஆம் கமம் நிறைவு செறிவு ஆம்
அம்மை தாய் அழகு வருபிறவி உமை நான்காம்
சிமையம் மலை பொதிகை ஆம் நிமிரல் சோறு இரிவு ஆம்
செம்மை செவ்வை சிவப்பு ஆகும் அம் அசை நீர் அழகு ஆம்
சமை பொறுமை சமை எனலாம் அமளி அணை சினம் ஆம்
சம்பிரவி நரி மும்மூர்த்திகள் நாவல் மடிவு ஆம்
கமை தவறு பொறுமை ஆம் துமிதல் அரிவு ஈர்ப்பு ஆம்
கம் மயன் வான் தலை விண் கால் வெண்மை நீர்க்கு ஆமே
**426
#74
காமரம் நாள் அடுப்பு இசை ஆம் சோமன் வள்ளல் இந்து ஆம்
கம்பலம் சிம்புளி போர்வை செம்படாம் மூன்றாம்
ஏமம் இரவு இன்பு உவப்பு நீறு பொன் காப்பு இணைவு ஆம்
இமைத்தல் ஒளி இமைத்தல் ஆம் சமழ்ப்பு இலச்சை துயர் ஆம்
தாமம் முடி நகர் ஒளி தார் வடம் இதழி சாந்து ஆம்
சாமம் மறை பசப்பு இரவு விலைத்தாழ்வு கறுப்பு ஆம்
வாமம் இடப்பால் அழகு துடை ஒளி சிந்துவும் ஆம்
வாமனம் திக்கானை குறள் நூல் ஆம் பூமயிலே
**427
#75
பூமன் இறை அயன் குசன் ஆம் ஓமம் மகம் மருந்து ஆம்
பூமானே இலக்குமியும் நாயகனும் ஆகும்
காமன் வேள் கணைமகவான் பிப்பிலி நாற்பேராம்
காமம் மருள் ஆசை விந்து ஆம் ஊமன் புள் குணி ஆம்
தேம் இடம் வாசம் தேசம் மதுரம் தேன் ஆகும்
சேமம் இன்பம் காவல் ஆம் நாமம் பேர் குறி ஆம்
மாமன் மாதுலன் மால் ஆம் யாமம் நிசி தெற்கு ஆம்
வம்பு தீ திடர் மணம் வார் நிலையாமை அம்பே
**428
#76
அம்பு கணை நீர் மேகம் மூங்கில் கூர்மையும் ஆம்
அருள் சாமி குரு இறைவி யாழ் முதல்வியும் ஆம்
தும்பு சிம்பு தோடு ஆகும் உம்பர் சுரர் மேல் ஆம்
தும்பி கரி வண் தாழை வண்டு மது ஆகும்
கம்புள் சம்பங்கோழி சங்கு ஆம் தும்பை தும்பை போர் ஆம்
கம்பு சங்கு தினை கம்பு ஆம் மொய்ம்பு பெலம் தோள் ஆம்
உம்பல் குலம் எழுச்சி வலி யானை விலங்கு ஐந்தாம்
உறு கும்பம் மத்தகம் இல் குடம் சம்பூரணமே
**429
#77
சம்பரம் புள் கலை நீர் ஆம் கும்பி கரி சேறு ஆம்
சம்பளம் கொத்து எலுமிச்சு ஆம் தம்பம் தூண் அபரம் ஆம்
கம்பலை துன்பொலி நெருக்கம் அச்சம் நூற்பா ஆம்
கம்பம் நடுக்கம் தூண் ஆம் கிம்புரி பூண் முடி ஆம்
அம்பணமே மரக்காலும் ஆமையும் என்று இருபேர்
அடு நேமி வளை கடல் பார் புள் வட்டம் ஐந்தாம்
கொம்பு கொப்பு மருப்பு ஆம் சம்பகம் தகர் ஆணியும் ஆம்
கொம்மை முலை அழகு இளமை கொட்டல் வட்டம் ஆமே
**430
#78
ஆம்பல் வேய் கள் அல்லி இபம் ஒலி வங்கியம் ஆம்
ஆம்பிரம் மாப்புளி புளிப்பு ஆம் சாம்பு பறை பொன் ஆம்
காம்பு வேய் மலர்த்தாள் கும்புதல் பட்டு என்றாகும்
கடிய சம்பம் ஓர் கோழி வச்சிரம் காழ்த்தலும் ஆம்
பாம்பு வரப்பு அரவு ஒலி நீர் அடைப்பு ஒழுங்கு ஐம்பேராம்
பரும் தாம்பு மடை மணி பூண் கயிறு நான்காகும்
சாம்பல் பழம் பூக்குவிவு ஆம் ஆம்பி ஒலி காளான்
தான் நாமம் பரம் தூசு விண் கடல் என்று அயிரே
** மகர வெதுகை முற்றும்
** யகர வெதுகை
**431
#79
அயம் இரும்பு கடம் பரி நீர் ஆடி வையைம் பேர் ஆம்
அயனம் வழி இறப்புச் சோறு ஆண்டினில்பாதியும் ஆம்
மயல் செற்றை மால் பேய் ஆம் வயலே செய் வெளி ஆம்
மயிலை மீன் இருவாச்சி கடைராசி முப்பேர்
கயம் மடுக் கீழ் பெருமை தேய்வு ஆனை ஆழமும் ஆம்
கயினி அத்தம் கைம்மை ஆம் வயம் நீர் புள் வலி ஆம்
பயம் அமுதம் நீர் அச்சம் பால் பயன் பேர் ஐந்தாம்
பயிர் ஒலி பைங்கூழ் பறவைக்குரல் பயிறல் பெயரே
**432
#80
பெயர் பெருமை நாமம் இசை பெயர்ச்சியும் நாற்பேராம்
பெயல் இடுதல் மழை ஆகும் சயம் அடல் சற்கரை ஆம்
நியமம் நெறி நிசம் நியதி நகர் கோயில் ஐந்தாம்
நெய் கிருதம் நிணம் ஆகும் பை படம் பை பசப்பு ஆம்
இயம் ஒலி சொல் மேளம் ஆம் வயின் இடம் வீடு அகடு ஆம்
இயல் சாயல் நடை தமிழ் ஆம் பயன்பெறல் சொல்பொருள் ஆம்
வயவன் வலியான் வீரன் கணவன் மூன்றாகும்
அயர்வு உயிர்ச்சி பொருந்தாமை மயக்கமும் ஆம் குயிலே
**433
#81
குயில் உரை கோகிலம் மேகம் துளையொடு நாற்பேராம்
குயிறல் குடைந்திடல் பண்ணல் சொறிதல் கூவுதல் ஆம்
கயில் பிடரி அணிப் பூட்டு ஆம் வியல் பெருமை விரிவு ஆம்
கையிடம் ஒப்பனை தங்கை குணம் படை கைசிறிது ஆம்
அயில் உணவு முனை வேல் ஆம் உயிர் ஆவி காற்று ஆம்
ஆயம் சூது இயற்றல் சுங்கம் ஆதாயம் சவை ஆம்
செயிர் சினம் குற்றமும் ஆகும் செயல் ஒழுக்கம் தொழில் ஆம்
தெய் கொலை தெய்வமும் தாளமுறைப் பயில்வும் ஆமே
**434
#82
பயல் சிறுமை பள்ளம்அதாம் பயம்பு கொப்பம் தாழ்வு ஆம்
பாயல் மெத்தை குதிப்பு ஆகும் சாயல் அழகு எழல் ஆம்
அயிரி மணல் மீன் கறி ஆம் குயம் முலை வாள் குழகு ஆம்
அய்யன் மூத்தவன் சாத்தன் அப்பன் வேதியன் ஆம்
வயிரம் ஒரு மணி குலிசம் சினம் சேகு வாள் ஆம்
வயமாக் குஞ்சரம் பன்றி பரி சிங்கம் புலி ஆம்
உயவை காக்கணம் முல்லை கான்யாறு என்றாகும்
உரை செய்யல் தொழில் காவல் சேறு ஒழுங்கு ஆம் மெய்யே
**435
#83
மெய் உடம்பு மெய்மை ஆம் பொய் சடம் பொந்து ஆகும்
வேய் துளை ஒற்று அணிதலும் மூங்கிலும் நாற்பேராகும்
ஐ இடைச்சொல் அழகு இருமல் அரசனில்சாமியும் ஆம்
ஐயை உமை துற்கை சுதை தவப்பெண் ஆசாள் ஆம்
மை இருள் மை மலடு ஆடு மேகம் அழுக்காறு ஆம்
வையம் தேர் ஏறு உரோகணி புவி ஊர்தியும் ஆம்
வெய்யவன் வெய்யோன் இரவி விருப்பினன் முப்பேராம்
வியன் அதிகம் பெருமை அதிசெயம் என மொய்த்திடுமே
**436
#84
மொய் செருக்கு வண்டு ஆனை திரட்சி நாற்பேராம்
முழு நெய்தல் ஆம்பல் பறை திணை நெய்வு நான்காம்
வை அயில் வைக்கோல் நெல் ஆம் செய் வயல் ஏவலும் ஆம்
மாயம் வஞ்சம் பொய் ஆம் பயோதரம் கார் முலை ஆம்
சையம் மலை அணை ஆம் வியாழம் மகி புலி ஆம்
சாயனம் கள் ஓந்தி ஆம் தீ அனல் தீங்கு ஆகும்
தொய்யில் சேறு உழவு துயர் மகிழ்ச்சி நாற்பேராம்
சொல் குய்வு கறிகரித்தல் புகை ஆம் சேயிழையே
**437
#85
சேய் இளமை சேண் குசன் வேள் மகன் தூரம் சிவப்பு ஆம்
தேயமே கழி நாடு ஆம் தூய் தூய்மை உணவு ஆம்
ஆய்தலே கொய்தல் நுணுக்கம் தேர்ச்சி மூன்றாம்
ஐயம் அனுமானம் வழுச் சங்கை பிச்சைஓடு ஆம்
காயம் உடல் ஐங்காயம் கறிகரித்தல் விண் ஆம்
காணும் வாய் குழல் இடம் மெய் வாய் வாய்த்தல் ஐம்பேர்
நேயமே நெய் எண்ணெய் அன்பு மூன்றாகும்
நிகர் மாயன் மால் கறுப்பன் ஒழிப்பான் பெண்ணரசே
** யகர வெதுகை முற்றும்
** ரகர வெதுகை
**438
#86
அரசு மன்னன் ஒரு மரம் ஆம் மரபு தொன்மை முறை ஆம்
அரசன் இறை சிகண்டிகன் ஆம் சுருதி ஒலி மறை ஆம்
சிரசு தலை மேம்பாடு ஆம் கரில் பிழை காழ்த்தலும் ஆம்
சிரகம் வட்டில் கமண்டலமும் தலைத் திராணமும் ஆம்
புரசு பலாசு இளம்மகவு ஆம் பிரசம் தேன் வண்டு ஆம்
புரம் நகரம் உடம்பு ஆகும் சிரம் நெடுநாள் சிரசு ஆம்
இரசம் பாரதம் இனிப்பு ஆம் முரண் வலியே பகை ஆம்
இரலை கலை அசுபதி புல்வாய்கொம்பு ஆம் தரமே
**439
#87
தரம் உவமை தலைதரிப்பு ஆம் மரம் அறுத்தல் அரம் ஆம்
சரல் சரலே மழைநாள் ஆம் துரம் வலி உச்சமும் ஆம்
பரம் முடிவு கெதி கவசம் ஆனையின்பின்கால் ஆம்
பரணி துடி கலன் நாள் ஆம் புரணி தோல் வயல் ஆம்
இரவி மலை வெய்யோன் ஆம் வரன் அயன்கோன் சிவன் ஆம்
இரவு நிசி யாசகமும் ஆம் விரவு கொடை கலப்பு ஆம்
பிரமம் மறை மகம் தீ மந்திரம் ஆல் ஆடு இரவி
பிரமன் அரன் முனிவர் முத்தி மதி இரண்டாறு உரித்தே
**440
#88
உரம் வலி மார்பு ஊக்கம் மருந்து எரு ஞானம் ஆறாம்
உரி அளவு தோல் உரித்து ஆம் சரி வளை பாதையும் ஆம்
கரம் விடம் கை குடிஇறை வேசரி கிரணம் ஐந்தாம்
கரகம் ஆலாங்கட்டி கமண்டலம் நீர்த்துளி ஆம்
குரல் இசை யாழ்நரம்பு கதிர் கூந்தல் இறகு ஐந்தாம்
குரம் உளைஞ்சில் பரிக்குளம்பு ஆம் வருணம் நிறம் குலம் ஆம்
இரதம் அரைஞாண் இரதம் சுவை புணர்ச்சி தேர் ஆம்
இரதி பிடி இரதி இச்சை பித்தளையாய்ப் பரவே
**441
#89
பரவை திருக்கூத்து உததி பரப்பு ஒரு பெண் நான்காம்
பரி சுமத்தல் வேகம் காத்திடல் வருத்தம் ஆகும்
அரவம் ஒலி பாம்புடன் நூபுரம் இவை முப்பேராம்
அரலையே கழலை விதை மரல் கனி நாற்பேராம்
குரவை வாயொலி கடல் ஆம் கிரகம் மனை கோள் ஆம்
குரு நிறை நோய் புகை ஆசான் பாரம் வியாழமும் ஆம்
சுரம் நெறி கான் சுரம் ஆகும் அருகல் குன்றல் சார்வு ஆம்
சுரை பசுவின்முலை துளை கள் என முப்பேர் கருதே
**442
#90
கருவி துளை இயம் கவசம் யாழ் ஈட்டம் துடர்ச்சி
கலனை துகில் புயல் கூட்டம் படை வினை கச்சையும் ஆம்
அருவி மலைச்சாராறு தினைத்தாளும் ஆகும்
அருணன் சூரியன் அருணன் புதன் சிவன் நாற்பேராம்
முருகு இளமை மணம் எழுச்சி வேள் விழா மது ஆம்
முரசு ஒரு நாள் பறை ஆகும் தரளம் முத்துத் திரள்வு ஆம்
குருகு வளை புள் இளமை நாரை வெள்ளை மூலம்
கோழி மாதவி உலைமூக்கு ஒன்பதுபேர் உரையே
**443
#91
உரை மொழி தேய்தலும் ஆகும் கரை கரை சோர்தலும் ஆம்
உரு வடிவு நிறம் பயம் அட்டையும் உருப்போடலுமாம்
நரை சவரி பரி தாரை வெள்ளை நந்தி ஐந்தாம்
நரம்பு வடம் நாடியும் ஆம் குரம்பை உடல் கூடு ஆம்
விரை மணம் தூபம் சாந்து ஆம் வரைதல் கொள்ளல் விடல் ஆம்
விருத்தம் பாவினம் வட்டம் மூப்பு மலை நான்காம்
அரை இடை பாதியும் ஆகும் வரை மலை வேய் வரிப் பேர்
அருள் கருணை உமை ஆகும் இருள் நரகம் இருளே
**444
#92
இருசு பண்டியுள்இரும்பு செவ்வை இருபேராம்
எருவை செம்பு கழுகு இரத்தம் கோரை நாணலும் ஆம்
அருணம் மான் எலுமிச்சுத் தகர் சிவப்பு நான்காம்
அரணம் வேல் மதில் காடு கவசம் காவலும் ஆம்
குருதி செந்நீர் குசன் சிவப்பு ஆம் சுரி குவிதல் பிடாரம்
குரங்கு கோண் கவி விலங்கு ஆம் முருந்து வெள்ளை முருந்து ஆம்
பருதி ஊர்கோள் இரவி நேமி வட்டம் உருள் ஆம்
பரிகம் அம்பு மதில் மேடை கிடங்கு எனக்கு ஓசரியே
**445
#93
சரம் சரித்தல் வடம் சரம் மூச்சு அம்பு நாணலும் ஆம்
தருணம் போது இளமையும் ஆம் சரணம் தாள் புகல் ஆம்
அரம்பை சூர் கதலியும் ஆம் அருந்தல் உணல் குறைவு ஆம்
அரங்கம் ஆற்றிடைக்குறை கூத்தாடிடம் அம்பலம் ஆம்
நரந்தம் நாரத்தையும் கஸ்த்தூரியும் என்றாகும்
நார் பரிவு கயிறு இரண்டாம் வேர் மரவேர் வேர்வு ஆம்
விருந்தமே கிளை துளசி விலங்கின்கூட்டமும் ஆம்
வெருகு அலவன் ஓர் செடி ஆம் ஞெரல் ஓசை விரைவே
**446
#94
விருத்தி தொழில் ஆதாயம் வளர்ச்சி அடிமையும் ஆம்
வீரம் மலை சேவகம் ஆம் வீரை துயர் கடல் ஆம்
கிருத்திமம் பொய் தொழில் பூதம் தோல் என நாற்பேராம்
கிருட்டி ஓரீற்றாவும் பன்றியும் என்று இரண்டாம்
துருத்தி தோல் அரங்கம் நீர்த்துருத்தி துட்டை நான்காம்
சுருங்கையே நுழைவாயில் கரந்துசெய் கற்புடை ஆம்
அருப்பம் ஊர் மோர் மதுக் கால்நோய் துற்கம் அழுக்கு ஆம்
அரத்தமே குருதி செம்மை குவளை கடம்பு அரக்கே
**447
#95
அரக்கு மெழுகொடு சிவப்புக் கள்ளின்விகற்பமும் ஆம்
அரற்றல் ஒலி அழுதலும் ஆம் உருத்தல் சினம் முளைப்பு ஆம்
இரத்தம் உதிரம் சிவப்பு ஆம் அருத்தம் நிதி பகுப்பு ஆம்
எருந்து உரலும் கிளிஞ்சிலும் ஆம் மருங்கு இடை பக்கமும் ஆம்
நிரப்பு மிடி இகல் குன்றல் சமை நோய் ஐம்பேராம்
நேர் மிகுதி சமம் நேர்மை நிகர் உடன்பாடு அணு ஆம்
துருக்கமே அரண் செடி குங்குமம் கஸ்த்தூரியும் ஆம்
சூரன் சூர் தீ இரவி விறலோன் ஆயரியே
**448
#96
அரி கடல் காற்று இந்திரன் மால் காந்தி மலை பரி பொன்
நாடு அரிசி உவா தேரை நிறம் மதி தீ அடல் வாள்
இரவு குரங்கு அரவு புகை கிளி கணை வேய் அரித்தல்
இமன் கூர்மை பறை சோலை புகர் விசி சேகு அரிதல்
கருவி பகை பன்றி சிங்கம் தேர் தகடு நேமி
கண்வரி நெற்கதிர் பசுமை வண்டு மதுப் பாயல்
பரிபுரத்தின் பரல் இவை நாற்பானேழு என்றாகும்
பரிவு எனும் சொல் அன்பு துன்பம் இன்பமும் ஆம் பாரே
**449
#97
பாரம் நிறை பார் கவசம் மரபு பொறை பாரம்
பரிகலனை தோணி நீர்க்கரை கழுகும் பத்தாம்
வாரம் மலைச்சார் கிழமை கடல் கரை பங்கு அன்பு ஆம்
வரி கடல் வேய் நெல் பசலை எழுத்து இசை வண்டு இறை ஆம்
ஆரம் மழை பதக்கம் முத்தம் ஆத்தி சந்தம் தொடை ஆம்
அருச்சுனம் என்பது வெண்மை மருதம் ஆம் இரண்டாம்
தாரம் இசை நா மனைவி வெள்ளி கண் பண்டமும் ஆம்
தரித்திரி பார் மிடியனும் என்று உரைத்தனர் காரிகையே
**450
#98
காரிகை பெண் அழகு கலித்துறை ஒரு நூல் ஆகும்
கரியவன் இந்திரன் சனியன் கண்ணன் சாத்தனும் ஆம்
சாரிகை சங்கொடு பூவை சுழல்காற்று மூன்றாம்
சாபம் வரையாடு புள் ஆம் மருதம் மரம் திணை ஆம்
ஆரி கதவு அழகு ஆகும் சூரணம் தூள் கிழங்கு ஆம்
ஆர்தல் உண்டல் நிறைவு ஆகும் ஆரை மதில் பாய் ஆம்
தூரியமே எருது எழுதும்கோல் இயம் சீலையும் ஆம்
சுரிகை வாள் கவசம் வலம்புரி ஆம் கூர்விழியே
**451
#99
கூரல் குழல் சிறகு ஆகும் கூர் மிகல் வை கூர்ப்பு ஆம்
கூர்மம் ஆமையும் ஓர் புராணமும் கோபமும் ஆம்
சாரலே மலைப் பக்கமலை ஒருசார் மழை ஆம்
தாரு காரிப்பெயரே சண்முகன் காளியும் ஆம்
ஆரல் குசன் கார்த்திகை தீ அரண் உறுப்பு ஓர் மீன் ஆம்
அரிதமே பசுமை திக்கு ஆம் திருமாச் சீர் சிறப்பு ஆம்
மூரல் அனம் நகை பல் ஆம் சார்பிடம் பற்று ஆகும்
முரம்பு காயலும் மேடும் பாறையும் முப்பேரே
**452
#100
பேர் பெருமை நாமமும் ஆம் பீர் பசலை பீர்க்கு ஆம்
பீருவே அச்சமுற்றோன் புருவமும் என்று இரண்டாம்
போர் சதையநாள் அமர் நெல்சும்மையும் முப்பேராம்
பூருவம் முன் கிழக்கும் ஆம் ஈரம் அன்பு குளிர்வு ஆம்
வார் நெடுமை நீர் வானம் கச்சு அனிகம் ஒழுங்கு ஆம்
வாரணம் சங்கு ஆனை தடை கடல் கோழி பரம் ஆம்
சீர் தடி நேர் திருப் பாரம் தாளவொத்துப் புகழ் ஆம்
தீர்த்தனே சிவன் குரு ஆம் தீர்த்தம் விழா நீரே
**453
#101
நீர் குணம் ஓர் நாள் புனல் ஆம் ஆர்வம் அன்பு நரகு ஆம்
நிரை பந்தி பசு ஆகும் இரை உண்டி இருப்பு ஆம்
பார் புவி பார் பாரமும் ஆம் கீரம் பால் கிளி ஆம்
பாரி வள்ளல் கட்டில் புவி துகில் மனையாள் கனம் ஆம்
ஏர் உழவு ஆன் அழகு ஆகும் ஓரை பொய்தல் இல் ஆம்
ஏரி குளம் பிடரியும் ஆம் வாருணம் நீர் மேற்கு ஆம்
கார் சினம் நீர் தகர் புயல் போது இருள் கறுப்புக் கூந்தல்
கருங்குரங்கு ஏர்ப்பருவமும் பத்தெனும்பேர் வைத்தாரே
**454
#102
தார் கொடி பூப் படை தொடை கிண்கிணிக் கோவை ஒழுங்கு ஆம்
சாரங்கம் சாதகப்புள் வண்டு மான் மூன்றாம்
சூர் துயர் நோய் அணங்கு பயம் சூரன் அஞ்சாமையும் ஆம்
சூரை செடி பிரம்பும் ஆம் காரை செடி நீறு ஆம்
ஆர் இரதத்துறுகதிரும் ஆத்தி கூர்மையும் ஆம்
அரிட்டம் நோய் கொடி மது ஆம் அருக்கம் எஞ்சல் எருக்கு ஆம்
பாரதி நாமகள் புணை ஆம் பூரணி காய் இலவு ஆம்
பார் ஆவாரம் பூமி கடல் ஆம் நாரியரே
**455
#103
நாரி சிலை நாண் நறவு பெண் பன்னாடையும் ஆம்
நாரம் அன்பு சைவலம் நீர் நாரத்தை நான்காம்
வாரி வழி கதவு மதில் கடல் சீப்புச் செல்வம்
வங்கிய நீர் கரிக்கூடம் வெள்ளம் வரவு எனலாம்
மூரி முரண் சோம்பு எருமை விடை பெருமை நெரிவு ஆம்
முருடு கட்டை அறிவிலதாம் திரிமனையாள் மூன்றாம்
காரி விடம் சனி வடுகன் சாத்தன் வள்ளல் மகவு ஆன்
கருக்குருவி கருமை கொடி என்றனர் ஆய்ந்தோரே
**456
#104
தோரைதான் மணியின்வடம் விரைவு வேயரிசி
துவரையும் கைவரையும் மலைநெல்லும் என ஆறாம்
மாரி நோய் புயல் ஆணம் நமன்தூதர் வடுகி
மழைபொழிதல் மாய்வு மது என்று இவை எட்டாகும்
ஓரி ஓர் வள்ளல் முசு நரி மயிர் நான்காகும்
உயர் பொருனரே பாணர் கூத்தர் மன்னர் கோ ஆம்
கோரை கொறுக்கையும் முதுகும் காளியும் மூன்றாகும்
குராலே கூகையும் நிறமும் என்பர் ஆரியரே
**457
#105
ஆரியர் நல்லோர் கலர் ஆம் ஆர்ப்பு ஒலி போர் நகை ஆம்
அரில் பிணக்குத் தூறு ஆசு ஆம் பொருள் பொருள் சேய் உரை ஆம்
தாரை வழி கண் மழை பார் உடுக் கூர்மை ஆறாம்
தரணி பார் மலை கதிர் ஆம் மரை கமலம் விலங்கு ஆம்
போர்வை மீக்கோள் கவசம் தோலினுக்கும் ஆகும்
புரை மறு நேர் துளை உயர்வு ஆம் புரி கயிறு ஊர் புரிவு ஆம்
ஊர் நடத்தல் ஊர் ஆகும் ஓர் அறிதல் எண் ஆம்
ஓது இராசியம் யோனி மறைவுடன் இராவே
**458
#106
இராகம் இச்சை நிறம் இசை ஆம் கருமை நிறம் வலி ஆம்
இயல் கரடம் ஆனைமதச்சுவடு காக்கையின்பேர்
அராகம் இச்சை சிவப்பொடு வண்ணகம் முப்பேர் என்பார்
அறி மருமான் மருமகனும் புத்திரனும் ஆகும்
பிராணன் உயிர் உயிர்க்காற்று ஆம் மரக்கால் கூத்து அளவு ஆம்
பெருங்கரண்டம் நீர்க்காக்கை அணிகலச்செப்பு ஆகும்
கரீரமே அகத்தி மிடாக் கரியின்பல்லடி ஆம்
கரி சேகு சான்று தந்தி இருந்தையும் பராவே
**459
#107
பராகம் மலர்த்தூள் அணு ஆம் பரசு மழுத் துதி ஆம்
பகர் கரணம் நடம் கலவி கணித்தல் காரணம் ஆம்
துரோணமே சிலை பதக்குத் தும்பை சிம்புள் கொடி ஆம்
சொற்றிடும் கராம்பு பாழ் ஓர் மருந்தும் ஆகும்
கராளமே துன்மாற்கம் நஞ்சம் இருபேராம்
கடும் குரோட்டு என்பது பன்றியும் நரியும் ஆகும்
கிராணமே கிரணம் மூக்கொடு கிரிகித்தலும் ஆம்
கிளர்க்கும் சாரசம் நாரை இனிப்பு என்னும் தலமே
**ரகர வெதுகை முற்றும்
**லகர வெதுகை
**460
#108
தலம் இலை பாரம் கையும் ஆம் எலி பூரம் எலி ஆம்
தலை இடம் விண் சிரம் முதல் ஆம் கலகம் ஒலி துயர் ஆம்
வலம் வலம் கண் பெலம் ஆகும் நலம் நன்மை தேள் ஆம்
வலவன் வெற்றியான் வலியன் தேர்ப்பாகன் மால் ஆம்
புலவன் நாவலன் அறிவன் புதன் தேவன் நான்காம்
புலம் பொலி துன்பு இரங்கல் அச்சம் தனிமையும் ஐம்பேராம்
உலகம் மிசை புவி திசை விண் உயர்ந்தோரும் ஆகும்
உலவை கொப்புத் தழை மருப்புக் காற்று மரக்குலமே
**461
#109
குலம் மனை ரேபதி கோவில் சாதி கூட்டமும் ஆம்
குலையே செய்கரை அம்புக்குதை காய்க்கொத்து ஆகும்
அலவன் மதி வெருகு நண்டு ஆம் மலைவு அணி போர் மலைவு ஆம்
அலர் மலர் நீர் பழி மூன்றாம் வலவை வல்லோன் சூர் ஆம்
கலம் இழை உண்கலம் தோணி மண்கலன் யாழ் எண் ஆம்
கலி வறுமை ஒலி வாரி யுகம் வலி வீரமும் ஆம்
புலம் அறிவு பூமி வயல் ஐம்புலன் பொன் இடம் ஆம்
புலி சாந்து புலி ஆகும் பலிதம் நரை பலமே
**462
#110
பலம் நிறை காய் கனி சேனை ஆதாயம் ஐந்தாம்
பலி பூசை பிச்சை திருநீறு தெய்வவுணவு ஆம்
அலகு ஒளி நெற்கதிர் சோகி எண் மாறு நுளம்பு ஆம்
அலரி அழகு இரவி குளம் கண் வரி பூச்செடி ஆம்
திலம் அடவி மஞ்சாடி எள்ளுடன் மூன்றாகும்
திலகம் நுதல்குறி உயர்வு மஞ்சாடி தான் ஆம்
புலவு தசை ஒரு மரம் ஆம் நிலவு மதி ஒளி ஆம்
புலிங்கம் ஊர்க்குருவி தீப்பொறி எனும் நூற்கலையே
**463
#111
கலை மதிப் பங்கு உடை இரலை கல்வி நூல் வயிரம்
காலநுட்பம் விலங்கின்ஆண் மகரம் மாக் கவடு ஆம்
சிலை ஒலி கல் உரு வில் ஆம் ஒலி தொனி காற்று இடி ஆம்
சிலம்பு ஒலி நூபுரம் கிரி ஆம் விலங்கல் வெற்பு விலக்கு ஆம்
துலை நிறையும் தூரமும் ஆம் இலையம் நடம் இறப்பு ஆம்
தோல் பலகை கரி வனப்புத் தோல்விஅதன்மொழி ஆம்
மலையன் பாண்டியன் சேரன் வள்ளல் பொருப்பனும் ஆம்
வல்லை வலி விரைவு துருக்கம் கான் வல்லவளே
**464
#112
வல் விரைவு வலி சூது ஆம் செல் இடி கார் சிதல் ஆம்
வலம்புரி ஓர் மரம் நந்தியாவட்டம் வளை ஆம்
அல் இருள் இரா ஆகும் கல் ஒலி கல் மலை ஆம்
அலங்கலே தளிர் மாலை இரங்கல் அசைவு ஒளி ஆம்
வில் ஒளி மூலம் சிலை ஆம் மல்லல் வலி வளம் ஆம்
வேலி மதிள் ஊர்காப்பு ஆம் வேல் அயில் கூர் மரம் ஆம்
இல் இடம் வீடு இல்லெனல் இராசி இல்லாள் சாவு ஆம்
எல் இகழ்ச்சி பகல் இரவி ஒளி எனச் சொல்லுகவே
**465
#113
சொல் உரை நெல் புகழ் சூது ஆம் இல்லம் மனை தேறு ஆம்
தொல்லை துயர் பழமையும் ஆம் புல்லம் நிறம் எருது ஆம்
மல் அடல் மாயவன்கூத்து வளம் முகட்டு மல் ஆம்
வல்லி கொடி தளை வரைவு ஆய்ப்பாடி வள்ளி பெண் ஆம்
கொல் அசை கொல்லுதல் ஐயம் வருத்தம் ஏவலும் ஆம்
குல்லை வெட்சி துளவு சித்தமூலி மூன்றாகும்
புல் அனுடம் புணர்ச்சி புன்மை புலி பனை புற்குறை ஆம்
பொல்லே பொல்லாங்கு பீறுதல் ஆம் பல பெயரே
**466
#114
பல்லமே கரடியொடு கணக்குப் பாணமும் ஆம்
பால் இயல்பு திசைப் பகுத்தல் வெள்ளை பக்கம் பால் ஆம்
சில்லி தேருருள் வட்டம் கீரை சில்வீடு ஆகும்
சில்லை சினம் சில்லிகை முள்காடு பகண்டையும் ஆம்
அல்லி அகவிதழ் ஆம்பல் காயா முப்பெயராம்
அலம் நாஞ்சில் அன்மொழி ஆம் சலனம் காற்று அடி ஆம்
முல்லை வென்றி நிலம் கற்புத் தளவு நாற்பெயராம்
மூலம் முதல் கிழங்கு ஏது நாள் எனச் சால்புறுமே
**467
#115
சால்பு குணம் மாட்சிமைப்பேர் பாலம் மழு நுதல் ஆம்
சாலி அருந்துதி கள்ளும் நெல்பொதுவும் ஆகும்
கால் வனம் காம்பு அடி மரக்கால் மகவு தறி ஊற்றம்
காலன் காற்று அங்குரம் தேருருள் இடம் வாய்க்கால் ஆம்
வால் வெளுப்பு மிகை தூய்து வாலுதி நாற்பெயராம்
வாலி நீர்த்துளி அனந்தன் கிட்கிந்தைக்குஇறை ஆம்
கோல் கணை வாள் ஈட்டி துகிலிகை துலாம் கோடு
கோல் இரந்தை யாழ்நரம்பு அஞ்சனக்கோல் செங்கோலே
**468
#116
கோலம் பீர்க்கு அழகு பன்றி பாக்கு நீர்க்கொழுந்து
குவளையுடன் இரந்தை இரந்தைக்கனியும் ஆகும்
சாலம் சாலேகம் வலை சவை மதில் ஓர் மரம் ஆம்
சாலை அறப்புறம் சோலை பரிப்பந்தி மூன்றாம்
ஆலம் பூ வட விருக்கம் நஞ்சு நீர் நான்காம்
ஆல் அசை ஓர் மரம் ஆகும் மேல் இடம் விண் மேற்கு ஆம்
நீலம்தான் பனை கொடுமை உற்பலம் நீல் நிறம் ஆம்
நீலியே பயல் அவுரி நீலி மாலினியே
**469
#117
மாலி மதுப் பருதியும் ஆம் ஆலல் ஒலி ஆட்டு ஆம்
மால் புதன் கார் மயல் காற்று இந்திரன் பெருமை அரி ஆம்
சூலி சிவன் காளி சூல் கொண்ட பெண்ணும் ஆகும்
தூலம் ஒரு நாள் மிகை ஆம் நூல் பிடகம் நூன் ஆன்
காலிலி சற்பமும் காற்றும் அருணனும் முப்பெயராம்
கலிங்கம் ஊர்க்குருவி கலை கம்புள் ஓர் நாடு ஆம்
பீலி மயில் மயில்தோகை ஆலவட்டம் கிரி ஆம்
பிலவங்கம் தேரை குரங்கு ஆம் புவியின் பாலே
**470
#118
பாலிகை வாள் உதடு முளைப்பாரி வட்டம் நான்காம்
பாலை மகள் நிலம் மரம் ஆம் ஏல்வை குளம் பொழுது ஆம்
கூலம் வரம்பு ஆவணம் நீர்க்கரை பண்டம் பாகல்
குழல் கடியே விலங்கின்வாலுடன் எண்பேராகும்
ஏலம் மயிர்ச்சாந்து துடி ஓசையும் முப்பெயராம்
இலம்பகம் மாலிகை சருக்கம் நுதல்சூட்டு மூன்றாம்
வேலை கடல் கடற்கரை செய்தொழில் பொழுதும் ஆகும்
விலங்கு காற்று அளை மிருகம் விலக்கு ஆம் வேல்விழியே
**471
#119
வேலன் வெறியாட்டாளன் குமரன் இருபெயராம்
வேலாவலையம் பூமி கடல் இரண்டுபெயராம்
மாலையே இரவந்தி ஒழுங்கு மாலிகை ஆம்
மல்லிகை தீபிகைத்தட்டுத் தீபம் மவ்வல் மூன்றாம்
ஆலையம் ஊர் கரிக்கூடம் கோயிலும் முப்பெயராம்
அலிப்பேர் பேடு அனந்தன் ஆம் வலித்தல் சொல்லல் வளைவு ஆம்
சாலகம் சாளரம் அரும்பு ஆம் சால் உழும்சால் சால் ஆம்
சலம் சினம் பொய் நீர் நடுக்கம் எனும் புலவர் நூலே
**472
#120
நூலோர் மந்திரி பார்ப்பார் கவிப்புலவர் மூன்றாம்
நுவல் குலிங்கம் ஊர்க்குருவி குதிரை இருபெயராம்
கீலாலமே உதிரம் காடி புனல் ஆகும்
கிளர் இலாங்கலி கலப்பை தென்னை காந்தளும் ஆம்
காலேகம் சாந்தில்ஒன்றும் பசுத்திரளும் ஆகும்
கலுழி கலங்கியநீரும் கான்யாறும் ஆகும்
வாலாமை அருவருப்பு மாதர்பூப்பு ஆகும்
மலர்தல் விள்ளல் தோன்றல் விரிவு ஆம் தாலம் இசையே
**473
#121
தாலமே பனை பூமி உண்கலம் நாக்கு ஆகும்
தலையலே மழைபெய்துவிடலொடு நீர்த்துளி ஆம்
காலமே பொழுதொடு வைகறையும் என இரண்டாம்
கலினையே மிளகு குதிரையின்கலனை இரண்டாம்
சூலை நோய் பத்திரை ஆம் சூல் சூலம் கரு ஆம்
துறும் சிலீமுகம் வண்டு கணை முலைக்கண் ஆகும்
ஓலை குழை ஏடு ஆம் கலாம் கொடுமை சினம் ஆம்
ஒலியல் கலை நதி தொடை தோல் பெயர் உலாவிடுமே
**474
#122
உலோகம் தாது உலகமும் ஆம் உலக்கை தடி நாள் ஆம்
ஒல்லை சிறுவரை அடுத்தல் விரைவு தொன்மை ஆகும்
கலாபமே தோகை மயில் மணி வடம் சீலையும் ஆம்
கருதும் அல்கலே சுருங்கல் வைகுதல் நாள் ஆகும்
சலாகை நாராசம் மணி சவளம் விடு பேய் ஆம்
தாழ் இலஞ்சி மகிழ்மரம் ஆம் குளம் கொப்பூழ் ஆகும்
விலோதமே கூந்தலும் பதாகையும் என்று இரண்டாம்
வெளிறிய பல்லே பலது நகையும் ஆம் புவிக்கே
** லகரவெதுகை முற்றும்
** வகர வெதுகை
**475
#123
புவனம் நீர் உலகம் ஆம் நுவணை நுண்மை மா ஆம்
பூவை புள்ளுக் காயா ஆம் சீவன் உயிர் குரு ஆம்
கவனம் கான் கலக்கம் வெம்மை பரிக்கதி உட்கருத்து ஆம்
கவி புலவன் வெள்ளி வானரம் கவிப்பு நாற்பேர்
யவனர் சித்ரகாரர் சோனகர் கண்ணாளரும் ஆம்
இவறல் சென்மம் ஆசை ஆம் தவல் பெருமை குறைவு ஆம்
பவனம் காற்று அவனி மனை கோயில் அரவு உலகு ஆம்
பவம் செனனம் பாவம் ஆம் தவம் பொலிவு தவசே
**476
#124
தவிசு தனிவழி தடுக்கு மெத்தை புலன் நான்காம்
சவி வனப்புக் காந்தி மணிக்கோவை செவ்வி ஆகும்
நவிரம் மலை குழல் உச்சி புன்மை யாழிசை ஆம்
நவிர் இசை யாழ் குழல் ஆகும் அவிர் பீறல் ஒளி ஆம்
கவிகை பிச்சம் கொடுத்தலும் ஆம் சுவடு இணை ஓர் எண் ஆம்
கவடு வஞ்சம் புரசை கப்பு ஆம் குவடு அசலம் கோடு ஆம்
செவிலி தவ்வை வளர்த்தவளாம் தவர் தலத்தர் சிலை ஆம்
சிவம் குறுணி முத்தி கலம் சிவனும் உரைக்குவரே
**477
#125
குவலையம் பார் குவளையும் ஆம் துவர் பவளம் துவர்ப்பு ஆம்
குவவு திரள் குவிதலுடன் பெருமையும் முப்பேராம்
இவர்தல் அளைந்திடல் ஏறல் எழுச்சி ஆசையும் ஆம்
எவனம் வினா இளமையும் ஆம் சுவலை அரசு அழல் ஆம்
கவலை தினை வழி கவல் ஆம் அவதி எல்லை இடர் ஆம்
கவசம் அங்கி காப்பு ஆகும் உவர் கடல் ஓர் நிலம் ஆம்
துவரை ஆடகம் ஊர் ஆம் செவி செவி கேட்பதும் ஆம்
சுவல் பிடர் கொய் உளை மேடு கரிச் சுவல் பேசுவரே
**478
#126
சுவவு சுண்டன் சுவற்கமொடு புள்ளின்மூக்கு ஆகும்
துவக்குத் தோல் சங்கிலி எத்தனிப்பு மூன்றாகும்
நவம் மழையின்காலம் ஒன்பான் கேண்மை புதுமையும் ஆம்
நவியம் மழுக் கோடாரி கடிவாளம் ஆகும்
உவணம்அது பருந்து எருவை கருடன் உயர்ச்சியும் ஆம்
உவளகம் ஊருணி மதில் ஓர் பக்கம் அவல் கரை ஆம்
அவல் எனல் சிற்றுணவு பள்ளம் நீர்நிலை முப்பெயராம்
அவி அமுதம் பெலி அவிதல் நெய் ஆம் பாவையரே
**479
#127
பா எனல் சொற்பா நூற்பாப் பரப்புப் பாவுதல் ஆம்
பாவம் நேமகம் பவம் ஆம் நாவு நடு நாக்கு ஆம்
மா எனல் வண்டு அழைத்தல் வெறுப்பு இவுளி செல்வம் திரு மா
மால் விலங்கு கருநிறம் மாமரம் பதினோர்பேராம்
கோ எனல் கண் பசுத் திசை நீர் கிரணம் பார் மலை கோன்
குலிசம் விண் அம்பு உரை இரங்கல் சுவற்கம் ஈரேழாம்
கா எனலே சோலை துலாம் காப்புத் தோள்சுமை ஆம்
கவுசிகம் பண் கூகை சுடர்க் கால் பட்டு ஆவனவே
**480
#128
ஆ இரக்கம் பசு வியப்போடு இசை ஆச்சாமரம் ஆம்
ஆவி உயிர் குளம் நாற்றம் புகை மூச்சு ஐம்பேராம்
தா வருத்தம் பகை தாண்டல் வலி கொடு என்றல் ஐந்தாம்
சவுரியமே களவு வீரியம் இரண்டுபேராம்
காவி கள்ளுக் காவிக்கல் குவளை மூன்றாகும்
கவந்தம் பேய் தலைக்குறை தண்ணீர் மூன்றுபேராம்
நாவிதன் மஞ்சிகன் பூரம் கார்த்திகை முப்பேராம்
நவ்வி மான் அழகு தோணியும் ஆம் ஓவியமே
**481
#129
ஓவியர் சித்திரகாரர் சிற்பநூலோர் ஆம்
ஓ இரக்கமோடு நீர் தகை நீக்கம் கதவு ஆம்
கூவிரம் தேர் தேர்மொட்டு ஆம் தாவம் இடர் ஊர் ஆம்
கோவம் பொன் சினம் ஆகும் சே எருது பரி ஆம்
வாவல் எனும் மொழி தாவல் வவ்வலும் ஆகும்
மவுலி முடி சடை தொடை ஆம் சவலை எய்ப்பு மின் ஆம்
ஆவரணம் கலன் ஆடை சவட்டை தடை மறைவு ஆம்
ஆவணம் நாள் வீதி உரித்தென மொழி நீ வியந்தே
**482
#130
நீவி துடைத்திடல் ஆடை கொய்சகம் முப்பேராம்
நீண்ட சிவை உமை மரவேர் கொல்உலை ஓரியும் ஆம்
ஏவல் வியங்கோள் ஆணை வறுமை மூன்றாகும்
இயம்பு கவை எள்ளிளங்காய் சவர் வழி துன்பமும் ஆம்
சீவனியே ஓர் மருந்து செவ்வழி யாழ்த்திறம் ஆம்
சேவல் புள்ளின்ஆண் காவல் சேறு கோழியும் ஆம்
கேவலம் என்பது தனிமை முத்தியும் என்றாகும்
கிடைத்த சவுரியன் வீரன் சனி எனும் அவ்வுரையே
**483
#131
அவ்வை தாய் அவ்வையும் ஆம் செவ்வி பொழுது அழகு ஆம்
அறைந்த சேவகம் வீரம் ஆனையின்கூடமும் ஆம்
பவ்வம் மரக்கணு வாரி குமிழி உவா நான்காம்
பகர் தெவிட்டல் நிறைத்தல் ஒலி அடைத்தல் கான்றிடல் ஆம்
தவ்வை தாய் முன்பிறந்தாள் சேட்டை மூன்றாகும்
சவுரி மால் அயன் சனி ஓர் நதியும் நான்காகும்
தெவ்வு பகை அமர் ஆகும் சிவப்பு நிறம் சினம் ஆம்
செப்பு அவந்தி ஊர் கிளி என்று இயம்புதி நீ உவந்தே
**484
#132
உவா எனும் சொல் இளையோனும் பவ்வமும் தந்தியும் ஆம்
உவப்பு மேடு உவகையும் ஆம் நிவப்பு உயர்ச்சி மேடு ஆம்
கவான் எனும் சொல் உயர்ச்சி துடை மேடு திரட்சியும் ஆம்
கவுசிகனே இந்திரனும் ஒரு முனியும் ஆகும்
சுவாமி பொருள் முதல்வன் செவ்வேள் மூன்றுபெயராகும்
துவை பிண்ணாக்குடன் இறைச்சி ஒலித்திடலும் ஆகும்
சிவேதை தெற்கு மருந்து ஆம் சுவேதம் வெண்மை வெயர்வு ஆம்
செழிக்கும் ஆவலம் வாய்கொட்டுதல் இழைக்கும் வளமே
** வகர வெதுகை முற்றும்
** ளகர வெதுகை
**485
#133
வளம் பதவி எழில் வளம் ஆம் வளமை மாண் கொழுப்பு ஆம்
வாளி அம்பு மண்டிலம் ஆம் காளி துற்கை பனை ஆம்
குளம் கரும்பின்கட்டி நுதல் குட்டமும் முப்பேராம்
குளிர் குளிர்ச்சி நண்டு கவண் கருவி முழா மழு ஆம்
தளம் படை பூவிதழ் சாந்தம் சமதலம் தாழியும் ஆம்
தளை விலங்கு துடர்ச்சி சிலம்பு ஆண்மயிர் தாள் ஐந்தாம்
களம் கறுப்பு இல்லவள் கழுத்துக் களர் இடம் போர்க்களம் ஆம்
களபம் ஆனையின்கன்றும் கலவை என்றும் கிளத்தே
**486
#134
கிளர் கிரணம் கோட்டுமலர் கிளர்தல் பூந்தாது ஆம்
கிளை கிளைத்தல் மூங்கில் சுற்றம் ஏழிசையிலோர்பேர்
உளர்தல் சிதறுதல் தடவல் கிண்டுதலும் ஆகும்
உளை மயிர் மாக்குசைமயிர் ஆம் விளை வயல் காடு இரண்டாம்
களரி களரிடம் கருமை சவை போர்செய்யிடம் ஆம்
களகமே பெருச்சாளி கல்விகூரிடம் ஆம்
முளரி தீக் கான் விறகு சிறுமை தாமரை ஆம்
முளை ஆணி வேய் முளைத்தல் சேய் எனவும் விளம்பே
**487
#135
விளர் கொழுப்பு வெளுப்பு உரித்தாம் விளவு கமர் மரம் ஆம்
விளரி யாழ் யாழ்நரம்பு வேட்கை இளமையும் ஆம்
அளவை எல்லை நாள் ஆகும் அளறு பங்கம் நரகு ஆம்
அளி கொடை தேன் பரிவு வண்டு ஆம் தளி கோயில் துளி ஆம்
இளமை இளமையின்பருவம் தண்மை காமமும் ஆம்
இளை காவற்காடு இளமை புயல் வேலி நான்காம்
களிறு தந்தி அத்தம் நாள் ஆண்விலங்கு மீன் ஆம்
களி குழம்பு மதுக்களிப்பாய்க் காணல் வெளிப்படுமே
**488
#136
வெளில் அணில் வேள்வியின்தம்பம் தயிர்கடையும்தறி ஆம்
மீளி வலி திண்ணியனே பெருமை தலைவனும் ஆம்
பளிதமே கற்பூரம் கணக்கு எண் பல்லமும் ஆம்
பாளிதமே கண்டம் சேற்றொடு குழம்பு பட்டு ஆம்
இளி உரித்தல் இணுங்கல் இசித்திடல் இசையும் ஆகும்
இளவல் பின்னோன் இளம்பயிர் ஆம் தளிமம் மெத்தை அழகு ஆம்
நளி பெருமை குளிர் செறிவு தேள் பொலிவு திரள் ஆம்
ஞாளி கள்ளுக் குக்கலும் ஆம் வாள் வசி கூர் ஒளியே
**489
#137
ஒளி புகழ் முச்சுடர் கேட்டை ஒளிர் ஆறுபெயராம்
ஒளிவட்டம் கண்ணாடிச் சக்கராயுதம் ஆம்
அளை தயிர் புற்றொடு முழை ஆம் களவு மரம் களவு ஆம்
அளகம் நீர் குழல்வகை ஆம் துளி ஆமை துளி ஆம்
வளை தொடி சக்கரம் புன்னை சங்கு மனையுறுப்பு ஆம்
மள்ளர் கானவர் வீரர் பள்ளர் மூன்றாகும்
களவனே கருநிறத்தோன் ஆனை ஞெண்டும் ஆகும்
கள்வன் முசுச் சோரனும் ஆம் மள்ளல் நரகு அளறே
**490
#138
அளித்தல் செறித்திடல் காத்தல் கொடுத்திடலும் ஆகும்
அளகு கார்த்திகை கூகை கோழியல்லாப்பெடை ஆம்
திளைத்தல் அனுபவித்தல் செறித்திடல் நிறைதல் ஆகும்
தேள் அனுடம் தெறுக்கால் ஆம் வேள் குகன் காமனும் ஆம்
விளக்கு நாள் விளக்கொளி ஆம் இளைப்பு இரக்கம் நோய் ஆம்
வேள்வி கொடை நாள் மகம் ஆம் தோள் புயம் கை ஆகும்
துளக்கமே அச்சமொடு பிரகாசம் ஆகும்
துளும்பலே திமிறல் துள்ளல் என்பர் கேள்வியரே
**491
#139
கேள்வி செவி கல்வியும் ஆம் தாள் அடி முன் முயல்வு ஆம்
கேளிர் பெண்கள்விளையாட்டுச் சுற்றம் இருபேராம்
கோள் வலி பொய் கொலை கிரகம் குணம் கொள்கை ஊறு ஆம்
கோளி கொள்வோன் கொழிஞ்சி பூவாக்காய்க்கும்மரம் ஆம்
காளை எருது இளமையோன் பாலை இறைவனும் ஆம்
காளம் காஞ்சுரை சின்னம் சூலம் நஞ்சு கறுப்பு ஆம்
ஓளி ஒழுங்குடன் ஆனைக்கூடம் இருபேராம்
உரை களேபரம் உடம்பு பிணம் ஆம் உள்ளதுவே
**492
#140
உள்ளல் நினைவு உள்ளான் ஆம் எள்ளல் நகை இழிப்பு ஆம்
உள்ளம் உயிர் முயற்சி நெஞ்சு ஆம் கள்ளு மதுக் களவு ஆம்
பள்ளி நகர் துயில் பாயல் கோயில் முனி இருப்பு ஆம்
பரிய கோளகை வட்டம் மண்டலி பாம்பு ஆகும்
அள்ளுரமே செறிவு காடு அயில் வலி பற்றிரும்பு ஆம்
அளக்கர் புவி உப்பளம் சேறு வரி கார்த்திகை ஆம்
புள் அவிட்டம் வண்டு புள் ஆம் வள்ளம் வட்டில் புணை ஆம்
புளகமே கண்ணாடி குமிழ்ப்பு எனக் கொள்ளுகவே
**493
#141
கொள்ளை மிகை கொடுவியாதி பொள்ளல் அப்பம் பொந்து ஆம்
கூளி தமர் வாமனம் பேய் குறள் வீரர் ஏறு ஆம்
வள் வலி வாள் முனை காது ஆம் வெள்ளம் எள் நீத்தமும் ஆம்
வள்ளி கொடி ஆபரணம் கைவளை வள்ளியும் ஆம்
வெள்ளை தகர் வெளிறு அனந்தன் மது வெண்பாச் சங்கு ஆம்
வேளாளன் உபகாரி வெள்ளாளன் இரண்டாம்
ஞெள்ளலே வீதி பள்ளம் மென்மை மூன்றாகும்
நெடிய காளகம் கறுப்பு ஊர் உடை ஆம் வெள்வளையே
**494
#142
வெள்ளில் விளாப் பாடையும் ஆம் விள்ளல் உரை நெகிழ்வு ஆம்
வேளாண்மை நிசம் கொடுத்தல் முயற்சி மூன்றாகும்
பிள்ளை மகவொடு காக்கை வயிரவனும் ஆகும்
பேணும் காளியர் வண்ணார் உறைகாரர் ஆகும்
ஞொள்கல் இழைத்திடல் சோம்பு நோய் அச்சம் திரிவு ஆம்
நுண் களங்கன் வஞ்சகனும் சந்திரனும் ஆகும்
கிள்ளை எனும் மொழி குதிரை தந்தை இரண்டாகும்
கிளிஞ்சில் எருந்துடன் மலங்குமீன் ஆம் பொற்குழையே
** ளகர வெதுகை முற்றும்
** ழகர வெதுகை
**495
#143
குழை தழை துவாரம் குண்டலம் சேறு நாற்பேர்
குழல் அளகம் துளையுடைத்து ஆம் பொருள் இசையின் குழல் ஆம்
கழை கரும்பு புணர்பூசம் மூங்கில் மூன்றாகும்
கழல் செருப்புக்கால் கழங்கு காலணி கால் பேர் ஆம்
விழைவு மயல் புணர்ச்சியும் ஆம் கழுமல் பற்று மயக்கு ஆம்
விழிதல் கொடை சாவு ஆகும் செழுமை எழில் வளம் ஆம்
உழை உடம் மான் யாழ்நரம்பு ஆம் அழுவம் விரி நாடு ஆம்
ஊழ் எனும் சொல் பகை முறைமை வெயில் முப்பேர் தொழுமே
**496
#144
தொழு உழலை ரேபதி ஆம் குழகு இளமை அழகு ஆம்
தொழுதி குழுப் புள்ளொலி ஆம் மழை குளிர்ச்சி புயல் ஆம்
கழுது பேய் பரண் வண்டு ஆம் பழம் முதுமை கனி ஆம்
கழங்கு பேய் நடம் கழல் ஆம் கொழுந்து தளிர் புதல் ஆம்
இழுது இமை நெய் ஆகும் இழுதை மடன் பொய் ஆம்
எழிலி வள்ளல் புயல் ஆகும் எழில் அழகு தொண்டு ஆம்
விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் முப்பெயராம்
விழவு விழா மிதுனம்அதாம் கிழம் உரிமை கிழமே
** பொதிகை நிகண்டின் பிரதி இதனோடு முடிகின்றது
**
**
|
** கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய
** பொதிகை நிகண்டு - முதற்பகுதி
** சென்னை சர்வசலாசாலை
** தமிழ் லெக்ஸிகன் பதிப்பாசிரியர்
** S வையாபுரிப் பிள்ளை
** பரிசோதித்தது
** 1934
@0 காப்பு
**0
#1
பொன்பூத்த வெள்ளிப் பொருப்பனும னோன்மணியு
முன்பூத்த வேழ முகத்தானே - யின்பூத்த
பூவணியல் போலப் பொதிகைநிகண் டைப்பாடப்
பாவணிய லீய்ந்துகாப் பான்
** நூல்
@1 தெய்வப் பெயர்த் தோகுதி
**1
#1
சங்கர னுமாபதி பிரானம்பன் யோகி
சயம்பிறை சதாசிவன்கங் காளன்மா னேந்தி
அங்கணன்பே யோடாடி சருவஞ்ஞன் ஞானி
யமலனர னீலகண்டன் பித்தனித்தன் சோதி
மங்கைபங்கன் சம்புமகே சன்வாம தேவன்
மாதேவ னிமலன்விடை யோன்கொன்றை சூடி
கங்கையணி வோன்பரசு தரனாதி கிரியன்
காலகா லன்கயிலை யாளிதிகம் பரனே
**2
#2
பரமனரி யான்றாணு நந்திபுலித் தோலான்
பாண்டரங்க னக்கனுருத் திரன்மூர்த்தி யீசன்
சிரதரன்பிஞ் ஞகன்காம தகனனழ லேந்தி
சித்தனனு பமன்சூல னசஞ்சலன்க பர்த்தி
யரவனீ சானனழ லாடியண்ணல் பெருமா
னந்திவண்ணன் கண்ணுதலைம் முகன்பூத நாதன்
வரனனகன் புனிதன்முகுந் தாபங்கன் பகவன்
மத்தனத்தன் றத்துவா தீசன்மறை முதலே
**3
#3
முதல்வனீ சுரனடனன் சிற்பரன்க பாலி
முக்கணன் புராரிசிம்பு ளாயினோ னனந்தன்
மதகரியை யுரித்தவன்பெம் மானீமத் தாடி
வயிரவன்பி னாகியா லமர்கடவுள் சடையோன்
சுதனபோச னன்பிச்சா டனன்விமலன் மெய்யன்
றும்புருநா தன்சாம தாற்பரியன் புயங்கன்
விதுவணிவோ னெண்குணனெண் டோளன்மலை வில்லான்
வெண்ணீற்றன் பசுபதிநூற் றொன்றுசிவன் பெயரே
**4
#4
சிவையிமைய வல்லிபரை யந்தரிப வானி
தேவியுல காயிசத்தி காமக்கோட் டத்தி
கவுரியறம் வளர்த்தசெல்வி சுந்தரியீச் சுரிபூங்
கணைக்கிழத்தி யருளேழை சாம்பவிதாய் வாலை
புவனைதிரி புரைவாமி யபிராமி யன்ன
பூரணியா ரியையமலை யீசனிடப் பாகி
தவசதா னந்திமா தாநாரி யையை
சங்கரியம் பிகையுமைபார்ப் பதியையேழ் காணே
**5
#5
காளிகாத் தியைபாலைக் கிழத்திபண்ணம் பணத்தி
கன்னிநா மினிவிமலை பஞ்சமிமா தங்கி
யாளியூர் பவள்சவுரி பகவதிவாட் கையா
ளாயிகலை யூர்தியயி ராணியா மளைவே
தாளிபயி ரவிமாரி சூலிசக்ர பாணி
சாமுண்டி நீலிதுர்க்கை சண்டிகைகொற் றவையெண்
டோளிவிந்தை கங்கைநா ரணிவீரி யோகி
சூரிமயி டாரிதா ருகவிநா சனியே
**6
#6
சமரிசெயை கங்காளி மாலினிய கோரி
தமருகியந் தரிவிசையை சுந்தரிமுக் கண்ணி
யமரியர னோடாடி காமிநெடுங் காத்திரி
யையைகோ மளைமாயை மதுபதிக பாலி
குமரியல கைக்கொடியாள் வல்லணங்கா ரணிமா
கோரியறு பதுங்காளி துர்க்கைபொதுப் பேரா
மிமைவலவை வஞ்சனிசூர் மாயவள்சண் பனியோ
டிடாகினி சாகினிசன்மினி யோகினியா கினவே
**7
#7
ஆகுவா கனிலம்போ தரன்சூற்ப கன்ன
னானைமுகன் கணபதிமுக் கண்ணன்விக்கி னேசன்
ஏகதந்த னைங்கரன்பா சாங்குசன்க யாரி
யேரம்பன் வக்கிரதுண் டன்விநா யகன்பேர்
வேகமிகு முக்கிரன்செந் நிறன்சிம்பு ளானோன்
வில்லிகட்க தரன்சடையன் சிறுவிதி மகாரி
மோகமுயர் பத்திரைக்கு நாயகன்கு ரோதன்
முக்கணன்பத் தாம்வீர பத்திரன்பேர் மொழியே
**8
#8
மொழிபுலவன் வேலன்சேய் குகனமரர் தளவாய்
முருகன்காங் கேயன்வேள் சூர்ப்பகைம யூரன்
குழகன்மான் மருகன்கார்த் திகைமகன்வி சாகன்
குமரனா றிருகரன்சண் முகன்சடாக் கரத்தான்
அழகன்சே வலங்கொடியோன் கடம்பன்வெற் பன்சுவாமி
யமணழித்தான் குறிஞ்சிமன்கற் பகவெறிந்தோன் சேந்தன்
எழிலிளையன் செட்டிவள்ளி தெய்வானை கேள்வன்
ஈசன்மகன் சரவணப வன்கந்தன் பேரே
**9
#9
பேருலகி லாறுதலத் திறைவனுமை சிறுவன்
பேசுருத்தி ராயுதத்தா னாரதசி னேகன்
தாருகசங் காரியவு ணரைக் கடிந்தோன் குரவன்
சங்கரா சாரிதிருப் புகழன்வெறி யாட்டான்
சீருறுகீ ரனைக்காத்தோ னருணகிரிக் கருள்வோன்
செங்கிடா யூர்தியயற் சிறைபுரிந்து விடுத்தோன்
மேருவசைத் தோனிலக்கத் தொன்பதின்மர் முன்னோன்
வேடனொன்றோ டைம்பதுஞ்சுப் பிரமணியற் காமே
**10
#10
ஆனைவா கனன்முடுவ லாளியா ரியனோ
டரிகரபுத் திரன்புறங்காப் பானற்ப சனந்தன்
கானுறுகுத் திரதேவன் சாதவா கனத்தான்
கடல்வண்ணன் காரிதவ ளக்கண்ணன் பூதன்
ஏனையகோ ழிக்கொடியோன் பூரணைபுட் கலைசே
ரிறையோகி தண்டதர னறங்காப்பான் கையன்
பானலணி வான்சாத்தன் வனமூர்த்தி நீண்டோன்
பரியூர்தி யையன்பே ரிருபான்முத் தொகையே
**11
#11
முத்தன்கேத் திரபாலன் சட்டையன்க பாலன்
முடுவற்சே னையன்வடுக னிருவாணி காரி
சித்தன்கா லனையூர்ந்தோன் றமிழ்க்கிழவன் குமரன்
திரிசூலன் கருங்குதிரை யாளிபிள்ளை நக்கன்
வித்தகன்ஞா ளியையூர்தி வயிரவன்பத் தொன்பான்
விளங்குபெய ராம்வடுகன் றாய்வடுகி மோடி
குத்திரிவெங் காடுகாள் மாரியொடு கொற்றி
கொடியைமூ தணங்குபெய ரெட்டெனவிண் டனரே
**12
#12
விண்டரியச் சுதன்கண்ணன் கரியவன்கோ பாலன்
விட்டுணுநா ரணன்வாசு தேவன்கா குத்தன்
கொண்டல்வண்ணன் கருடகே தனன்கருடா ரூடன்
கோவிந்தன் மால்மதுசூ தனனனந்த சயனன்
வண்டுருவ னாரசிங்கன் வாமனன்மு ராரி
மாயனெடி யோன்றிரிவிக் கிரமன்வன மாலி
தண்டனுபேந் திரன்பகவன் சங்குசக்ர பாணி
சம்புபிரான் படியிடந்தோ னுந்திபூத் தோனே
**13
#13
பூவளந்தா னவநீத சோரனிரை மேய்த்தோன்
பூமகள்கோன் றிருமார்ப னுலகுண்டோன் வலவன்
காவலன்றா மோதரன்மா தவன்வாம னேமி
காளிகா மர்த்தனன்கே சவன்சார்ங்க பாணி
தேவகிசேய் மதன்றந்தை யயன்றந்தை முகுந்தன்
சீதரன்ச னார்த்தனன்பேய் முலையுண்டோ னனந்தன்
கோவலன்ரா கவன்ராமன் கடற்றுயின்றோ னாயன்
குவடெடுத்தோன் கடலையடைத் தான்புருடோத் தமனே
**14
#14
தமன்விசைய சாரதிபத் தவதார னாதி
சகடுதைத்தா னைம்படையான் பாண்டவர்ச காயன்
உமைதுணைவன் பின்னைமன்பீ தாம்பரன்வ ராகன்
உயர்பதும நாபனறி துயிலனந்த பாலன்
கமலலோ சனன்றாச ரதிபெருமா ளெண்பான்
காமபா லன்பலபத் திரன்முசலி வெள்ளை
யமர்நீலாம் பரனோர்குண் டலனிரே பதிம
னனந்தனலா யுதன்பனந்தா மன்பலதே வனுக்கே
**15
#15
தேவர்முது வோன்ஞானி வரன்சதா னந்தன்
றிசைமுகன்மா லுந்திவந்தோன் றாதாவி தாதா
மேவுமெண்க ணோன்வேதன் பரமேட்டி குரவன்
விரிஞ்சனிர ணியகெற்ப னயனன்ன மூர்தி
தாவில்படைப் போன்விதிமண் பொதுத்தந்தை சூதன்
சம்புகம்மந் தணன்கமல யோனிபிதாப் பகவன்
பூவிருந்தோ னனக்கொடியோன் கலைமகண்ம ணாளன்
போதனிறை சதன்பிதா மகன்பிரமன் பெயரே
**16
#16
பெயர்பெறுபொன் பொறிவிமலை மாவாக்க மிளையாள்
பெருந்திருப்பூ மான்சலசை கமலையரிப் பிரியை
பயவுததி மகள்விந்தை யிந்திரைதாக் கணங்கு
பதுமைசீ தேவிசெய்யாள் செல்வியிலக் குமிபேர்
நயவாணி பாரதிபா மகள்வாக்கி கலைமான்
ஞானிபுரா தனியுலக மாதாவெண் கமலை
சுயபனுவ லாள்பூர வாகனிகா யத்ரி
சொற்சாவித் திரியிசைமான் பிராமிநா மானே
**17
#17
மானதன்வே ளிரதிநண்ப னுருவிலிம னோபு
மாரன்மது சகன்சம்ப ராரிதென்றற் றேரோன்
வேனிலான் மதனழகன் மோகன்வில்லி மால்சேய்
மீன்கொடியோன் மதிக்குடையோன் பெண்படையோன் வசந்தன்
ஆனமனோ சன்கரும்ப னங்கசன்கந் தற்பன்
அனங்கன்பூ மகன்சேய்சித் தசன்பஞ்ச பாணன்
கானிறைபூ வாளிகிளிப் பரியனிருட் களிற்றோன்
கடன்முரசன் காமன்மனோ பவன்மதனன் பேரே
**18
#18
மதத்தசுர வயிரியரி மருத்துவன்கோ சிகன்மால்
வச்ரதரன் புருகூதன் போகிமுகி லூர்தி
சதக்கிருது புரந்தரன்வா சவன்மகவான் புலவன்
சக்கரன்பொன் னகர்க்கிறையா யிரங்கண்ணன் வேந்தன்
னதுச்ச பன்கோ பதிகாரி வேள்விமன்னன் கரியோ
னமரர்கோன் சசிகேள்வன் மருதநிலத் ததிபன்
கதிப்புரோ கிதன்பாக சாதனன்வ லாரி
காமனயி ராபதனுச் சிரவாவுக் கிறையே
**19
#19
இறையாகண் டலன்சம்ப ராரிபஞ்ச நிதியோன்
இந்திரன்சு நாசிதே வேந்த்ரன்முப்பா னெண்பேர்
அறைசசிபு லோமிசைசுந் தரியிந்தி ராணி
யயிராணி பேராகு மரம்பைதிலோத் தமையோ
டுறுவசிமே னகைசசியும் பஞ்சவே சையராம்
உயர்தருச்சங் குடன்பதுமஞ் சுரபிசிந்தா மணியுங்
குறைவிலைந்து நிதிமகவா னேவல்கேட் பதுவாங்
கொண்டவிண்ணாட் டிறைகொடிதா னிடியெனப்பே சுவரே
**20
#20
சுவற்க ரும்பர் விபுதருயர் நிலையர்வரர் வானோர்
சுரரமரர் கடவுளர்புத் தேளிரையர் மெய்யர்
தவத்தரண்ட ரமுதர்விண்ணோர் மேலோரா தித்தர்
தானவர்பண் ணவர்பகவ ரதிதிசுதர் தீர்த்தர்
அவிப்புலவர் புங்கவர்பட் டாரகரி லேகர்
ஆத்தரிமை யோரவுணா ரியர்தேவர் முப்பா
னவக்கடவுள் இயவுள்புத்தேள் சூரணங்கு தேவு
நல்லதெய்வந் தேவதமெட் டென்பர்பொதுப் பேரே
**21
#21
பொதுநாமந் தெய்வமின்னார் தமக்கணங்குஞ் சூரும்
புத்தேளிர் பெண்கள்பெய ராமகளி ராகு
முதியள்கெட லணக்குதவ்வை கலதிசீ கேடி
முகடிகொடித் துவசிகர வாகிசேட் டையின்பேர்
மதிதடினி துனிவிமலை திரிபதகை கங்கை
வரநதிதீ பவதிமந்தா கினிபகீ ரதிவா
னதிசனுவி யுந்திசிந்து தீர்த்திகைநீர் மடந்தை
நளினிசகத் திரமுகிதூய் தாக்கியா பகையே
**22
#22
பகுமரக்கர் தயித்தியர்தண் டாரவுண ரசுரர்
பண்ணவர்மாற் றார்நிருதர் திதிமைந்தர் யாதர்
தகுவர்நிசி சரர்பிசிதா சனர்வக்ர தந்தர்
தானவரி ராக்கதர்மெய் காப்போர் கார்வண்ணர்
மிகுகடங்க டாமிராக் கதரசுரர் பொதுப்பேர்
விஞ்சையர்கோ சரர்சேடி யோருடன் சேணியருங்
ககனவித்தி யாதார்பேர் கந்திருவர் யாழோர்
காந்திருவர் கிம்புருடர் கின்னரராம் பாரே
**23
#23
பாரிடஞ்சா தகஞ்சாதங் கிருத்திமமே கூளி
பலிகவரும் குறளாறும் பூதப்பே ராகும்
சூரலகை கணமண்ணை கூளிவெறி பாசஞ்
சோகுமயல் கடியழன்பி ரேதம் வேதாளஞ்
சாரிணங்கன் கழுதுகுண பாசிசவங் குணபஞ்
சாவுநிசி சரம்வெள்ளை யீமசம் பசாசு
கூருமருள் வியந்தரம்வெங் கால்கிரகஞ் சங்கை
குணங்குபிண மறிவிலிமுப் பானொன்றும் பேயே
**24
#24
பானுவழ லங்கியெரி தழல்கனலி தபனன்
பாவகனங் காரகன்றீ வசுத்தூம கேது
தீனிசுடர் தகனனனல் ஞெகிழிசித்ர பானு
சிகிதேயு வாரலரி சோதிதென்கீழ்த் திசையோன்
ஆனதனஞ் செயன்சுபலன் சசிசாத வேதா
வழனம்வன்னி முளரிகனல் பசுவன்வா யுசகன்
ஊனெழுநாக் கொல்லியச மூர்தியுதா சனனே
யுதிரனெருப் பக்கினிநாற் பானொன்றாய்க் காட்டே
**25
#25
காட்டழல்கா வகந்தாவ மாகும்பா வகன்றீக்
கடவுளாங் கடையனலுத் தரமடங்கல் வடவை
மூட்டுவட வாக்கினியூ ழித்தீயா மனையார்
மூள்சுதைசு வாகாவாஞ் சுவலைதீ நடையாம்
ஆட்டுபொறி புலிங்கமா முற்கை தீக் கொள்ளி
யரணிஞெலி தீக்கடை கோல் புகைகுய்வு வெடிகுய்
பூட்டரிதா ளிப்பாவி நறைதூம மொன்பான்
புகையுறையொட் டுறைநிரா லம்பனமூன் றரிதே
**26
#26
அரிமடங்கல் கால்கூற்று நடுவனிமன் சூல
னறவன்மால் சமன்மறலி யந்தகன்றென் றிசைக்கோன்
தருமனமன் றென்னவன்செங் கோற்கடவுள் பாசன்
சண்டன்ஞமன் கணிச்சியன்கா ரானூர்தி காலன்
கரியன்வைவச் சுதன்றண்ட தரனிருபத் தாறுங்
காலன்பேர் குத்தனுஞ்சித் திரனுமவன் கணக்காம்
வரநதிமன் பாசதரன் குடதிசையன் பெருக்கன்
வலையாளி சலபதிசு றாமன்வரு ணனுக்கே
**27
#27
வருணமறல் மழையலர்புட் கரமாரி புவனம்
வாரிகார் வாருதகம் வனங்கமலம் பவனம்
இரதமஞ்சம் பரம்பயசு சலிலங்கீ லாலம்
ஏரிகயம் பானியம் புனலால நாரங்
கருவியயம் பதமளக மம்புகோ வனிகம்
கவந்தஞ்சீ வனஞ்சிந்து பயஞ்சலமம் புதங்கம்
பரமமுத மங்குசமப் புடனகிலந் தோயம்
பாணிவெள்ளங் காண்டம்வா ருணநீரைம் பானே
**28
#28
பாயுங்கால் வளியுலவை நீழல்சமீ ரணன்கம்
பவமானே கோடைகொண்டல் பரிசனன்மா லுரவோன்
சாயுரக வர்த்திகந்த வாகனன்ப்ர வஞ்சன்
சலனனுயி ரொலியூதை கோதையரி கூதை
வாயுமருத் துயிர்ப்பனிலங் கந்தவகன் புலனே
மாலிகந்த னாசுகஞ்சட் கோணன்மா ருதமே
யாயுசகன் வாதம்வந்து கூதிர்வங்கூழ் வேற்ற
லாம்பவனம் வாடைசதா கதிகாற்றே ழாறே
**29
#29
ஆறுதென்றன் மலையக்கால் வசந்தன்மந்தா நிலமே
யருஞ்சிறுகா லிளங்காறென் காறென்றி மென்கான்
மீறுமந்த மாருதம்பத் தாங்கோடை மேல்கால்
மிகுவடந்தை வாடைவட கால்கொண்டல் கீழ்கால்
தேறுயிர பானனுதா னன்சமன்வி யானன்
றேவனா கன்கூர்மன் றனன்கிருதன் றசக்கால்
சூறைசா ரிகைசுழல்கால் கூதிருமூ திருமே
சொற்பனிக்கா லூழிக்கால் சண்டமா ருதமே
**30
#30
உதியரசன் புருடவா கனனியக்கர் வேந்த
னொருதனத னிருநிதியான் மரகதன்வி மானன்
பதிசிநேகி தன்கனகன் மந்திரிபுட் பகத்தான்
பாக்கியன்பிங் கலன்கின்ன ரேசனள கேசன்
நிதியிறைவன் முட்கரன்வச் சிரவணன்பொக் கிஷனே
நிறைசெல்வன் சிவிகையன்மூன் றேழ்குபே ரன்பேர்
மதியருக்கர் பன்னிருவ ருருத்திரர்பன் னொருவர்
வசுக்களெட்டு மருத்தரிரண் டனைத்தும்வா னவரே
**31
#31
வானம்வெளி மங்குலண்ட மம்பரங்கோ வனந்த
மாகம்விசும் பாசினிமீ வான்கெதியந் தரங்கம்
தானமும்பர் நபங்காயம் விண்டலம்புட் கரம்விண்
சார்வியோ மங்ககன மாதிரங்குண் டலந்தோ
தூனமிலாக் குடில் வேணி யாகாச முப்பா
னொருபெயரா மண்டகடா கங்கடக் மோடு
மேனிலைபித் திகைதோடு கடமதற்கேழ் பேராம்
மேருவின்றென் பால்வடபா லயனமிரு கதியே
**32
#32
கதிரவனென் றருணனூ ழலரிசுட ரிரவி
கனலிதின கரன்பருதி தரணியினன் சண்ட
னுதையனரி பானுதிவா கரன்வேந்த னழலோ
னொளிபதங்கன் பாற்கரன்றீ விரன்வெய்யோன் சவிதாப்
பிதிரனலி யெழுபரியோன் பகல்சோதி விசையன்
பேசுபனிப் பகைவிலோ சனனெல்லி தபன
னிதையனண்ட யோனிதின மணிசான்றோன் மாலி
யிருள்வலிவித் தகன்சூரன் விண்மணியா தவனே
**33
#33
ஆதித்தன் ஞாயிறா யிரங்கிரணி பகலோன்
அருக்கனெல்லை சம்புதிமி ராரிவிருச் சிகனே
யோதுற்ற வலஞ்சுற்றி கண்ணன்மார்த் தாண்ட
னுலகவிளக் கோராழி யான்கமல பாந்தி
சூதற்ற மித்திரன்செங் கதிரறுபா னிரண்டுஞ்
சூரியனாம் பருதிவட்டம் விசையமு மண்டிலமும்
வேதிக்கு மொளிர்கிரணங் கரங்கிளர் தீவிரமாம்
வெயிலென்றூ ழாதவமூர் கோள்வட்ட நிலையே
**34
#34
நிலவுபிறை மதியமுத கதிர்திங்க ளாலோ
னிசாபதியம் புலிகுமுத நண்பனிந்து களங்கன்
கலையன்முயற் கூடுசசி குரங்கிபசுங் கதிரோன்
கலாநிதிநி சாசரன்சு தாகரன்கு பேரன்
அலவனிம கரன்சாந்தன் குளிரியல்லோன் வேந்தன்
அரிகுடோ தயன்மானி யுடுபதிதண் சுடரே
நலவிதுதா னவன் சோமன் சந்திரனே ழைந்தா
நன்னிலாச் சந்திரிகை நிலவின்பே ரறியே
**35
#35
அறிவோனங் காரகன்வக் கிரன்பவுமன் குருதி
யரத்தனில மகனனலன் குசன்பூம னாரல்
பிறதாபன் வளவனழல் மங்கலன்சே யுதிரன்
பெருந்தீக்கோண் மேடன்விருச் சிகன்செவ்வாய்க் கிருபா
னெறிமால்பண் டிதன்கணக்கன் மதிசேய்தேர்ப் பாகன்
நிபுணனனு வழிசாமன் வாக்கிபுந்தி புலவன்
செறிதூத னருணனறி வோன்சவுமன் பச்சை
சிந்தைகூ ரியன்மேதை புதன்பதினொன் பதுமே
**36
#36
பதிபிரகற் பதிபீதன் குருச்சீவ னரசன்
பகர்வேந்த னந்தணன்பொன் சுரரமைச்ச னாசான்
முதியசிகண் டிகன்வேத னாண்டளப்பா னெனும்பன்
மூன்றும்வியா ழப்பெயரோர் கண்ணன்வெள்ளி சுங்கன்
றுதிகவிகாப் பியனுசன்பாற் கவன்பளிங்கு மழைக்கோள்
சுகன்புகர்சல் லியன்சீதன் போதிபுயல் காணன்
மதியசுர குருத்திங்கள் பிரசுரனொள் ளியனும்
வகுத்திருபான் சுக்கிரன்பேர் தொகுத்தனர்கா ரணரே
**37
#37
காரிகதிர் மகன்சவுரி காக்கைவா கனத்தான்
கரியனோய் முகனீலன் முதுமகன்பங் கந்தன்
மூரிமேற் கோள்சந்திற் சாவகன்கீழ் மகனே
முடவன்மந்தன் கலியன்விசி சனிபதினொன் பான்பேர்
சீரியரா குவின்பெயரே தமங்கரும்பாம் பாகுஞ்
சிகிமதியின் பகைகேதுச் செம்பாம்ப தாகுங்
கூரில்சனி மகன்மாந்தி குளிகன்முப்பே ராகுங்
கோளேழுந் தொடுத்தநாட் கிழமையும்வா ரமுமே
**38
#38
மேடமதற் காட்டின்பே ரிடபம்விடைப் பேரா
மிதுனந்தா ரணங்கவைஞன் றணடியா ழிரட்டை
பாடல்விழாச் சயமகள்பா டவையாங் கற்கடகம்
பயில்சேக்கை ஞெண்டின்பேர் புலிசிங்கப் பேர்கள்
கோடுசிங்கப் பேர்பெண்கள் பேர்கன்னிப் பேராங்
கோல்சீரை தூங்கல்செட்டி வாணிகன்கட் டளை தூக்
காடுநிறை துலைதுலாந் தொடர்மணிபற் பனுந்தேட்
காம்பெயரும் லிருச்சிகம்விற் பெயர் தனுசா மகளே
**39
#39
மகரமது கலைபுல்வாய் சுறமானென் றுரைப்பார்
வருபாண்டப் பொதுப்பேரே கும்பமதா மீன்பேர்
பகருமீ னப்பெயரா மோரையில்லி ராசி
பவனமுமா முதற்றொட்டு மூன்றுவட்ட மாகப்
புகுநந்தை பத்திரையே சயையுடனே யிருத்தை
பூரணையாந் திதிபக்க மாமிருக்கந் தாரை
பகுசிதந்தா ராகணநா ளுற்கைசுக்கை சோதி
பம்புடுமீன் கணந்தினம்பன் மூன்றுநக்கேத் திரமே
**40
#40
திரமுதனா ளேறிரலை மருத்துவனைப் பசியாழ்ச்
சென்னியுடன் பரிப்பேரு மச்சுவதி நாமம்
பரணிகிழ வன்சோறு கங்குன்முக்கூட் டடுப்புப்
பகல்காடு தாழிதார் சோடுதா சிதாதி
தருமனாட் பூதமிவை பதினாலு மதற்காம்
சாற்றளகி றாலாரல் வாணனங்கி யளக்க
ரிருவையறு வாயறுமீ னாடனா விதனோ
டெரிநாட்கார்த் திகைப்பேர்பன் னிரண்டென வைத்தனரே
**41
#41
வையமுருட் பிரமனாட் சகடுததி பண்டி
மானம்பார் தேரூற்றா லைமீ னுரோணி
மொய்யுரோ கணியதின்பேர் மதிநாட்பே ராளன்
மும்மீனிந் திரன்பாலை நரிப்புறமார் கழியாம்
வெய்யவன்மான் றலைமாழ்கு மதியுமக சிரமாம்
வியன்சிலையா ழிறைசெங்கை மூதுரையா திரைப்பேர்
பொய்யில்கழை கரும்புபிண்டி யதிதிநாட் பாலை
புணர்தமா வணம்புனிதம் புணர்பூசங் கொடியே
**42
#42
கொடிறுகுரு நாள்வண்டு தைமதிபாற் குடங்கர்
குளம்பூசம் பாம்பாயில் கவைபணிநா ணான்கு
மிடுவதா யிலியப்பேர் நென்ஞமலி வாய்க்கா
லிசைவேள்வி கொடுநுகமுற் சனிபிதிர்நாண் மாசி
படியும்வேட் டுவனொன்பான் மகமெலிநா விதனே
பகவதிநாட் கணை துற்கை யிடைச்சனியும் பூரங்
கடையில்வரு சனிநெய்த்தோர் புயனாட்சூ ரியனாட்
காணுந்தி பாற்குனிபங் குனியேழுத் திரமே
**43
#43
உத்தமக்கைம் மீன்கன்னி கவுத்துவங்கா மரமே
யுடன்களிறு தீநாளை விரனவ்வி யெண்பே
ரத்தமதாஞ் சுவைபயறு துவட்டனா ணடுநா
ளளக்குநெய்மீன் புலிதச்ச னுடைப்பேர்சித் திரைக்கா
மெய்த்துளக்கு மீன்மரக்கால் காற்றினாள் விளக்கு
வீழ்க்கைவெறு நுகம்பதுமந் தீபமெட்டுஞ் சோதி
முத்தில்விளை நாட்சுளகு காற்றினாள் சேட்டை
முறம்வைகா சியும்விசா கந்தனைப்பன்னுவரே
**44
#44
பனைப்பெயர்தேண் மித்திரனா ளனுடநாட் கிசைப்பார்
பாழியிந்த்ர னாட்சேட்டை வல்லாரை வேதி
யனற்பெயருங் கேட்டைகுரு கானிதேட் கடைவில்
அசுரனா ளன்றில் கொக்கா மேழ்பெயரு மூலம்
புனற்றினமே யுடைகுளமுற் குளமாம்பூ ராடம்
பூமிநாட் கூவன்மணி முடியானி யாடி
தொனித்தகடை குளம்விசுநா ளுத்திராட மோணஞ்
சோணமுக்கோன் மாயவனா ளுலக்கைசிர வணமே
**45
#45
வண்கொடிப்பேர் பறவையா வணிநள்ளு வசுநாள்
வயிரமா மவிட்டப்பேர் வருணனாட் சுண்டன்
பண்குன்று செக்குப்போர் சதையப்பேர் நாளி
பாதநாண் முற்கொழுங்கோல் மிசையுநாட் புரட்டை
பெண்களிற்பூ ரட்டாதிப் பேர்நீப முரசு
பிற்கொழுங்கோ லரசறிவ னுத்திரட்டா திப்பேர்
நண்கடைமீ னிரவிநாட் டொழுப்பெருநாட் சூல
நாவாய்ப்பேர் புருடநா ளிரேபதிக்காஞ் சால்பே
**46
#46
சாலியருந் துதிவடமீன் முப்பெயராந் தினமே
சமையமெல்லை யுடுக்காலா னியந்திவாத் திவச
மேல்வைநாட் பகல்வைக லல்கலும்பன் னிரண்டாம்
எல்லைகால் பதம்போழ்து கொன்பொழுது வேலை
காலைசெவ்வி யாமமமை யம்பாணி யெல்வை
காலம்போ தீரேழ்நா ழிகைநாழி கடிகை
மேலிருத்தை பதங்கன்ன னாடிநா ழிகையாம்
விகலைகலை காலநுட்பந் துடியுடனாங் கணமே
**47
#47
கணமிறைமாத் திரைலேச மொல்லைசிறு வரையே
காலவிரை வாநொடியும் வல்லையுமற் றதற்காம்
பணியுநெடும் போதுநீட் டித்தனெ டித்தல்
பாணித்த னெடுநாட்பேர் பானாளே யரைநாள்
அணிதிவா வெற்பகற்பே ரெல்லிநிசாக் கங்குல்
அல்வியா பரிமாலை சாமநத்தம் யாமம்
உணருநிசி யாமினியி ராக்கருக்க லிரவாம்
உச்சிமத்தி யானநடுப் பகலேநன் பகலே
**48
#48
நன்புலரி விடியல்வைகல் வைகறைப்போ தாகு
நவிலுதையங் காலைப்பேர் யாமமதாஞ் சாம
மின்பமுறு சந்தியந்தி சாயமா லையின்பேர்
இருணீலந் துணங்கறல்கச் சளந்தமந் திவாந்தம்
வன்பினந்த காரமரி கருத்திமிர மாயை
மாசுமாம் பூரணைராச் சிலிவாலி யாகு
மன்பமரா ரக்குகுவா மமவாசி சுடர்க் கூட்
டமையுமாம் பவ்வமுவாப் பூரணைப்பேர் வருமே
** 49
#49
வருடமா யனஞ்சாமஞ் சமையாண்டப் பித்தம்
வற்சரப்பே ராறாகு மயனமதிற் பாதி
பருவமிரு தானியமா மதிதிங்கண் மாதம்
பல்லூழி மடங்கலுக முடிவயனாட் கற்பம்
பெருவயதா யுகமாயுள் வாணாளென் றாகும்
பின்றைபிற்றை பின்னைபின்பு பிந்திபின்னா ளாகும்
நெருநன்முன்பு முன்றைமுற்றை முன்னைமுந்தை முந்து
நேற்றுநென்ன லொன்பானு முன்னாட்கா ரிகையே
**50
#50
கார்கூதிர் முன்பனிபின் பனியொடிள வேனிற்
கடுவேனி லாறுமா வணிமுதலீ ரிரண்டாய்ச்
சேராடி வரைநிரையாய்ப் பெரும்பொழுதென் றாகுஞ்
சிறுபொழுது காலையுநன் பகலுடனெற் பாடு
மோர்மாலை யாமமும்வை கறையுமென வாறா
யுதித்தைந்து கடிகைமுத லொவ்வொருபத் தாகுங்
கூர்மாதப் பிறப்புவிசுச் சங்க்ராந்தி யாகுங்
கோடைவே னிற்காலஞ் சரற்கால மழையே
**51
#51
மழைபரம்விண் கந்தமமை கொண்டன்மஞ்சுசீல
மால்விளைவு முகில்கருவி சீமூதஞ் சீதம்
பொழிகனஞ்செல் வார்குயிற்கொண் மூத்தாரா தாரம்
புயன்மங்குல் சீமுகம்ப யோதரமம் புதங்கம்
எழிலியம்பு புகை விசும்பு சலதரங்கார் மாரி
யிளைகுளிரி ககனம்விண்டப் பிரம்வான்கந் தரமை
யழைமேக நாற்பதென்றாம் விடியொலிசென் மடங்க
லசனியுரு மிகுளிவிண்ணே றனலேறு மிடியே
**52
#52
இடிசவலை தடிதடித்துச் சஞ்சலைமின் சம்பை
யிலங்குகன ருசிமின்னல் வித்துருவோ டொன்பான்
வடிதிவலை துளிதூவல் சொரிசிதறி தூறன்
மாரிபிதிர் வானஞ்சீ கரம்வருடம் பெயலே
குடியுததி யாலிசிக ரந்தூற்றன் மழையாங்
கொடுஞ்சோனை பனித்தல்விடா மழையா மா சாரம்
நெடியமழை தலையல்மழை விடுதலிமந் துகினம்
நீகரமூன் றும்பனிப்பேர் சிகமெனவு முறுமே
**53
#53
உறைதளிசீ கரந்தலையல் சிதர்தூவ லாலி
யுளிதிவலை துமிபெயல்பன் னொன்றாகுந் துளிப்பேர்
நிறைகனோ பலமாலி யெனுமாலாங் கட்டி
நீண்டிடுமிந் திரதனுவான் சிலைபச்சை வில்லா
மறைமுனிவர் கருடர் தயித் தியரியக்கர் சித்தர்
வானவர்கிம் புருடர்படர் கின்னரர்கந் தருப்பர்
பொறைநாக ருடுப்பேய்விஞ் சையர்மாக வாசர்
போகர்சா தகரரக்கர் கணம்பதினெட் டுக்கே
** முதலாவது தெய்வப்பெயர்த் தொகுதி முற்றும்
@2 இரண்டாவது மக்கட் பெயர்த் தொகுதி
**54
#1
அடிகளிரு டிகள் பெரியோ ருறுவர்தவர் முனைவோ
ரறவர்தபோ தனர்துறவோர் முனிவர்வல்லோர் நீத்தோர்
படிவரிலிங் கிகள்யோகர் புலன்வென்றோர் தடிந்தோர்
பண்ணவரந் தணர்முதியோர் பற்றில ரகாமர்
சடைமுடியோர் மாதவர்தா பதரறிஞர் தூயோர்
சார்பில்லோ ருயர்ந்தவர்மோ னிகளையர் மெய்யர்
ஒடிவில்கனி மூலசா காசனரெண் ணான்கோ
டொன்றுமருந் தவர்நாம மென்றுசொல்லுந் தமிழே
**55
#2
தமிழ்முனிவன் கும்பனுருத் திரசமனன் பொதிகா
சலன்பொருனைத் தலைவன்வா ருதியுண்டோன் குறியோன்
அமர்விந்தம் பிலம்புகுத்தோன் லோபாமுத் திரைமன்
னரிமதநா சனன்வில்வ லாரியகத் தியன்பே
ருமிழ்சமியர் திகம்பரர்கா ளாமுகர்பா சுபதர்
யோகர்சைவர் மால்சமைய முனிவர்பா கவதர்
திமிரருகர் சாவகர்மா சீவர்புத்தர் சமணர்
தேரர்சா ரணர்பவுத்தர் சாக்கியர்சீ வரரே
**56
#3
வரமுனிவர் தொழுகுலத்தோர் மேற்குலத்தோ ருயர்ந்தோர்
மறையோர்வே தியர்வேதர் முப்புரிநூன் மார்பர்
இருபிறப்போர் பூசுரர்நூ லோராதி வருண
ரெரிவளர்ப்போர் விப்பிரராய்ந் தோர்சடங்கர் பார்ப்பார்
விரியறவோர் மெய்யர்முத்தீச் செல்வரந்த ணாளர்
விந்தமா லையர்வேத பாரகர்வேள் வியினோர்
பெரியரைய ரந்தணர் பிராமணர்நா லேழும்
பேர்பிரம சாரிவன்னி யாமெனச்சொல் லனமே
**57
#4
அனக்கொடியுங் கமலமா லையுந் தரும முரசு
மந்தணர்க்கே யாமோத லோதுவித்தல் வேட்டல்
கனத்தின் வேட் பித்தலீ குதலேற்ற லாறு
கருமமவர் தொழிலாகும் பாரத்து வாசி
தனுக்குரவன் கும்பசன்வே திக்கொடியோன் றுரோணா
சாரியன்பேர் பண்டிதர்நல் லோர்சான்றோ ரான்றோர்
வினிப்புலவ ருலகுமே தாவிதக்கோ ருயர்ந்தோர்
மிக்கோரா ரியர்விசா ரிதரறிஞர்க் கவையே
**58
#5
அவைகலைஞர் மேதையர்கற் றவர்கவிஞர் மூத்தோர்
அறிஞர்கவி நாவலர்பா வலர்புலவர் சூருச்
சவைவிபுதர் விற்பனர்வித் துவான் முதுவோர் சாடுச்
சாருதிசங் கமுமவர்க்காங் குரவனிறை போதன்
பவமிலுர வோனடிக ளத்தனைய னாண்டோன்
பணிக்கனா சான்சாமி கோமானு பாத்தி
நவையில்பெரு மானதிகன் பதியீச னோச
னாதனா சிரியனா சாரியன்றே சிகனே
** 59
#6
தேசபதி தோன்றல்கோ விறைகோன்மண் டலிகன்
செம்மல்விற லோன்சுகியன் குரிசின்மல்லன் கோமான்
ஈசனர பதிலோலன் கொற்றவன்பார்த் திபன்மன்
ஏந்தலாண் டகை துரைபூ பாலனண்ணல் வேந்தன்
பேசரச னிபுணனரன் விசையன் வழாஅன் பொருநன்
பெருந்தகைபி ரானிறைவ னாதன்மன்னன் பெருமா
னேசமுடி யோன்காந்தன் றலைவன்றாட் டிகனே
நிருபனா யகன்கொழுநன் விடலைபூ பதியே
**60
#7
பதிமுதல்வன் புரவலனா திபன்றீரன் பூபன்
பதிதன்கா வலன் மகிபன் மீளியொடு காளை
யதிபனைம்பத் தாறுபெயர் புவிராசர்க் குரைப்பார்
அடுத்தோத லீதல்படைக் கலம்பயிறல் வேட்டல்
எதிர்பகைமேற் சேறல்புவி புரத்தலவர் தொழிலாம்
எழுபடைகூழ் குடியமைச்சு நட்பரணா றுடைமை
நிதியினறம் பொருளின்பந் தனையறத்தான் மறத்தா
னிருமித்த லரசரிய னெறிநடத்தல் முறையே
**61
#8
முறையரிச்சந் திரனளன்பு ரூரவாச் சகரன்
முசுகுந்தன் கார்த்தவீ ரனுஞ்சக்கர விருத்தர்
திறைகொள்விரா டன்காரி நிருதிதுந்து மாரி
செம்பியனே சகரனளன் முதல்வள்ள லேழாம்
அறிகன்னன் சிசுபாலன் சந்திமான் சந்த
னந்திமான் வக்கிரனக் குரனிடையேழ் வள்ளல்
பெறுமலைய னெழிலிநள்ளி பசுந்தொடையன் பாரி
பேகனோ ரியுங்கடையேழ் வள்ளன்மூ வகையே
**62
#9
வகுத்தபா ரதர்குருகோத் திரர்கவுரர் பவுரர்
வழிப்பேராம் பனைக்கொடியோன் சரவணையிற் படுத்தோன்
பகுத்தகாங் கயன்பிரம சாரிவீட் டுமன்பேர்
பாண்டுகுந்தி சேய்முரசுக் கொடியனுதிட் டிரனே
தகைப்பொறையன் குவளைமா லையன்றருமன் பேராஞ்
சற்பதுசன் காந்தாரி திருதிராட் டிரன்சேய்
தொகுத்தவணங் காமுடியன் வலம்புரிமா லிகையான்
சுயோதனனைந் தாந்திரியோ தனன்பெயர்கன் னிகையே
**63
#10
கன்னனங்கர் கோன்கச்சைக் கொடியோன்கா னீனன்
கதிர்சேய்குண் டலனாமா ருதிபிருகோ தரனே
மின்னிடும்பி மன்கையுரன் சிங்கதுசன் றண்டன்
வீமன்பேர் காண்டிபன்பற் குனன்சைவ சாசி
தன்னனுமக் கொடியனல்லற் குருப்பாத்தன் விசையன்
றனஞ்செயன்சு வேதவா கனன்மகவான் பாலன்
பன்னும்விவற் சுனன்காண்டா வனப்பகை கிரீடி
பாசுபதன் கிருட்டிணனர்ச் சுனன்பெயராய் மதியே
**64
#11
மதிகுலத்தான் மீனவன்கை தவன்வேம்பின் றாரான்
வழுதிவர குணன்மாறன் செழியன்வைகை நதியான்
பொதிகையினான் றமிழ்நாடன் கொற்கையன்கூ டலினான்
பூழியனுக் கிரன்குமரிச் சேர்ப்பன்மீன் கொடியோன்
சிதைவில்கவு ரியன்முடியோ டுதித்தவன்பஞ் சவனுந்
தென்னனும்பாண் டியன்மூவேழ் புலிக்கொடியோன் பொன்னி
நதியுடையான் செம்பியன்கோச் சூரியன்மால் வளவன்
நற்கோழி வேந்தனார் மாலையனே ரியனே
**65
#12
நேரிவெற்பன் கிள்ளிசென்னி புனனாட னபையன்
நிகழ்சோழன் பதினைந்தாங் கொல்லிவெற்பன் கோதை
கேரளன்குண் டகன்கோளன் வில்லவன்வஞ் சியினான்
கிரிப்பொருநைத் துறைவன்பூ ழியனுதியன் குடகன்
சேரலன்குட் டுவன்வரம்பன் மலையமான் குடக்கோ
சேரமான் பொறையன்வா னவன்கொங்கன் போந்தின்
றாரினன்மூ வேழ்பெயருஞ் சேரன்பேர் வேளிர்
தருகுறும்ப ரரிட்டர்புரோ சருங்குறுமன் னவரே
**66
#13
மன்னியசூழ் வோருழையர் நூலரெண்ணர் துணைவர
மாத்தியர்மூத் தோர்முதுவோர் தேர்ச்சியரே னாதி
பொன்னமைச்ச ராவிரிவை மந்திரிக ணாமம்
பொருநர்படைத் தலைவர்சே னேசர்தள வாய்பேர்
நன்னிமித்தி கன்சாக்கை வள்ளுவனுள் ளளப்போ
னாமமாங் காவிதியர் கணக்கரபி தானந்
துன்னுபரி யாளர்முறை யோர்பரிவா ரப்பேர்
தோற்றுகா ரியக்காரர் கருமரெனும் பரிசே
**67
#14
பரதவரெட் டியர்நாய்கர் கவிப்பரிளங் கோக்கள்
பரதர்சீ ரகத்தாமர் கோவலர்கோ வளிப்போர்
பொருள்வேச ரதருழவ ரொட்டியர்முத் தொழிலோர்
பொன்னீட்டர் தேசிகரிச் சியர் வணிக ரிப்பர்
தருமமன்னர் செட்டியர்கோ வர்த்தனர்சி லேட்டை
தனவசியர் கோவசியர் பூவசியர் பொதுப்பே
ருரையோதல் வேட்டல்பசுக் காவலுப கார
முழவுவா ணிபம்வசியர்க் காகுமறு தொழிலே
**68
#15
தொழிலாளர் வெள்ளைவட்டர் காராளர் களமர்
சுரநதிகு லேசர்கார்ப் பிணையர்மே ழியினோர்
உழவர்பூ பாலர்குவ ளைத்தாமர் சதுர்த்த
ருயிர்வளர்ப்பார் வேளாள ரயன்பதத்தி லுதித்தோர்
விழைவிளைஞர் பதினைந்துஞ் சூத்திரர்பே ரிவர்க்கு
வியன்கல்வி யுழவீதன் மூவர்தொழின் முடித்தல்
வழிபாடு வாணிபமா மறுதொழிலென் றுரைப்பார்
வகுத்தநாற் குலத்தைவழி படுவோர்மற் றவரே
**69
#16
மற்றவயித் தியர்பிடக ராயுள்வே தியர்மா
மாத்தியர்வா கடர்மருத்தர் பண்டிதர்பே ரேழாம்
வெற்றியரை வனர் துவட்டர் தபதியர்கண் ணாளர்
வினைஞர் கொல்லர் சிற்பியர்தட் டார்முனைவர் சொன்ன
ருற்றறிவார் மண்ணீட்டர் கஞ்சர்கலர் கன்னார்
ஓவர் தச்சர் கம்மியர்பேர் பதினெட்டா மோகர்
சித்திரரோ வியர்பேராந் தோற்றுன்னர் பொல்லர்
செம்மார்பே ராரியர்மி லேச்சர்மிலைச் சருக்கே
**70
#17
சரிதையுறு யோனகர்சோ னகர்யவன ராகுஞ்
சங்கீர்வார் வளைபோழ்ந ரூன்விற்பார் சூனர்
ஒருநூவர் கைக்கோளர் தந்துவாயர்த் தருமா
முமணரே யளவருப்பு வாணிகர்பேர் சிற்பி
மருளுவச்சன் பேர்குயவன் வேட்கோபி வேளான்
மட்பகைசக் கிரிகும்ப காரகன்கு லாலன்
றரிகுசவன் பேர்சூனர் பொல்லர் துன்னர் சாலி
தைப்போர்பேர் காரோட ருறைகாரர் மானே
**71
#18
மானியே னாதிசீ மங்கலிமஞ் சிகனே
மயிர்வினைஞன் றீர்த்தனா விதன்பேர்சண் டாளர்
ஈனர்கன கதர்களைஞர் கொலைஞர்மா தங்கர்
இழிஞர்வங்கர் குணுங்கர்கவுண் டரும்புலையர் பேராந்
தேனிசையர் வயிரியர்பண் ணவர்சூத ரோவர்
சென்னியர்வந் திப்பர்செயி ரியர்மதங்கர் பாணர்க்
கானபேர் சக்கிரியு நந்தியுஞ்செக் கான்பே
ரடிதூச னேகாலி யீரங்கோ லியனே
**72
#19
கோலியகா ழியர்வண்ணார் பேராம்பா சீகர்
கூவியர்பண் ணியர்பாகர் பாசகரே மடையர்
வாலுவரு மவர்க்காகுந் தமிழ்க்கூத்தர் பேரே
வாயிலோர் கழைக்கூத்தர் பேரேவே ழம்பர்
தோல்வினைஞர் பேர்பறம்பர் பாடினிபேர் பாட்டி
சொல்விறலி மதங்கியாங் கஞ்சுகிமெய் காப்பான்
சால்வலவர் பண்ணுவார் வாதுவர்மா வலர்மாச்
சானியர்பேர் மதயானைப் பாகாதோ ரணரே
**73
#20
தோராத தேர்ப்பாகன் வலவன்சா ரதியுஞ்
சூதனுமாங் குணுங்கர்சவுண் டிகரியவர் குழலர்
ஏராரு நரம்பர்குயி லுவர்மேழர் யவன
ரிசைப்போர்பேர் படுவர்சவுண் டிகர்பழையர் பிழிஞர்
ஓராய்கள் விலைஞர்பேர் கிழவனுரி யோன்பேர்
உல்லியரே கூவநூ லோர்பேர் நீ காமன்
வாராரு மீகாமன் மீவான்மா லுமியு
மரக்கலன்பேர் நீகான்பேர் நியவனென விரும்பே
**74
#21
விருத்திதொறுத் தொண்டடிமை சேடர்தொதுத் தொத்தாள்
வீண்கிணகர் தாசர்தொழும் பாஞ்சேட ரருக
ருரித்தர்நண்பர் சிலதர்துணை வோர்தோழ ரிணங்க
ரொண்பாங்கர் பேரேடா முன்னிலையாஞ் சிலதி
திருத்திகுழை தண்டிப்பெண் ணுசிபாங்கி தோழி
சேடிபேர் முன்னிலைதா னேடியெ லாளாம்
வருத்துழைய ரேவலரே பரிசனர்பேர் வினையில்
வழியினிற்பண் பினிலுரைப்போர் தூதரென்றொத் தனவே
**75
#22
ஒற்றருசாச் சாரணர்வேய் வேயரென நான்காம்
ஓர்வெறியாட் டாளன்வே லோன்படிவன் முருகன்
றெற்றுகோ மரன்றேவ ராளிபெய ராகுந்
தேவராட் டியின்பெயரே சாலினியென் றோதும்
மற்றைவழிச் செல்வோர்பேர் பதிதராம் புதியர்
வம்பரதி திகளுமா நொதுமலர்வம் பலரே
துற்றயலோ ரேதிலராங் கம்மியரே தொழுவர்
தொழிற்செய்வோர் பேர்வியவ னேவுவான் கூற்றே
**76
#23
கூத்தரவி நயர்பொருநர் நிருத்தர்கண்ணு ளாளர்
கோடியர்நட் டுவர் நடத்தார் வயிரியர்நா டகர்பேர்
பூத்திடுநா டகிநிருத்தி நடனியலங் காரி
போர்மையளாங் கூத்திகள்பேர் வந்திகவி கற்றோ
னார்த்தவண்டர் கடிகையர்பே ரியவுள்புக ழோன்பேர்
அருளன்கா ருண்ணியன்கிரு பாலுதயா லுவின்பேர்
தூர்த்தரிடங் கழிபோகர் பரத்தர்விடர் படிறர்
துர்ச்சனர்பல் லுவர் விடமர் காமியர்பேர் விதியே
**77
#24
விதரணனு தாரிதேயி கொடுப்போன் வியாழன்
வேளாளன் வள்ளியோன் புரவலனே கேள்வன்
உதவுவோ னீகையான் றாதாத் தியாகி
யுபகாரி வள்ளலளி யோன்கொடையா ளியின்பேர்
இதவசனன் பரிசிலான் யாசகனல் கூர்ந்தோன்
ஏழைதரித் திரன்றீன னிலம்பாட்ட னேற்போன்
கதியிலா னொற்கனா துலன்மிடியன் கிஞ்சன்
கலியன்வறி யோனுறுகண் ணாளனிர வலனே
**78
#25
வலவைவல்லோன் வல்லுநன்மாட் டார்பேர்கூர்ப் பிலன்பேர்
மந்தனா நாகரிகர் சதுரர்கா முகராங்
குலமிலர் குலீனரா மழகிலன்பண் ணறையாங்
குருடனந்த ராளனுடன் சிதடனுமந் தகன்பேர்
அலிபேடி நபுங்கிஷம்பெண் டகஞ்சண்டங் கிலீப
மாகுங்கூன் சினகோடி கோணலாங் குஞ்சம்
உலைவில்வா மனஞ்சிந்து குறளாகு மூங்கை
யூமைகுணி மூகையுமாம் வெதிர்செவிடென் றறியே
**79
#26
அறிவிலன்யா தன்பேதை மடனேழை மூகன்
அஞரிழுதை யண்ணையஞ்ஞை சிதடன் முழு மகனாஞ்
சிறியர்நல மிலர்கயவர் மூடர்கலர் சுமடர்
தீயர்நசிர் கனிட்டர்கள்வர் கலகர்புல்லர் மூர்க்கர்
பொறியிலர்சூ னவர்சீத்தை நபண்டிதர்சிற் றினரே
புள்ளுவர்கீழ் மையர் முசுண்டர் பல்லுவரு லோபர்
நெறியிலர்கல் லார்பதகர் முறையிலரோ டதமர்
நீசர்கையர் தீக்குணரு மீனர்பேர் முடிவே
**80
#27
முடங்குபங்கு குனிசிதைவு முடவர் பேராகு
முழுச்சவனர் வேதிகர் நிசாதர்வஞ்சர் பேராங்
கடும்படிறர் தீனர்கர விடர் திருடர் சோரர்
கள்வர்புரை யோர்கபடர் தேநர்கள்ளர் பேராம்
துடர்ந்தவர்புல் லுவர்வேட்டர் காதலர் சினேகர்
சூழ்நல்லோ ரார்வலரொன் றினர்நயந்தோர் விழைந்தோ
ருடன்பசைந்தோர் நள்ளுநர்சேர்ந் தார்பெட்டார் கூட்டர்
ஒட்டினர்வல் லுநர்புரிந்தோர் மித்திரர் மேவினரே
**81
#28
மேவலர்சார் பிலரரிகள் பரர்கெலிஞர் நேரார்
வேண்டார்பற் றார்பகைவர் கருதலர்வில் லங்கர்
தாவிகலர் கிட்டலர்கூ டலர்சேரா ரெண்ணார்
தரியார்செற் றார்நிகரா ரடையலார் திருந்தார்
ஏவுவணங் காரமரர் பொருநருள்ளார் நள்ளார்
எதிர்ந்தார்வெய் யோரிரிஞ ரமடர்மன்னா ரொன்னார்
வாவுதெவ்வ ரமித்திரரொட் டார்மருவார் மானர்
மாற்றலர்போற் றலர்சேயர் சூரர்வட்கார் கேளார்
தூவுமின்னா தார்முனைந்தோ ரண்டர்விட்டார் நண்ணார்
துன்னார்மண் டினரொல்லார் செறுநருஞ் சத்துருவே
**82
#29
துரிதமிலாக் கேள்குடும்பஞ் சார்புசூழ் நட்டார்
துணைகூளி யிகுளை நட்புக் கிளைவிருந்து கடும்பு
பரிசனம்பா சனந்துடர்மித் திரருற்றோர் கேளிர்
பற்றுறவு பந்தநண்பு தமரொக்கல் சுற்றம்
உரியர்நள்ளி யிருபத்தே ழுறவின்முறைப் பேரா
முட்பீதி சவலைபயத் தான்பீருப் பீதன்
வெருவிசகி தன்பிளிற னச்சமுற்றோன் பேராம்
விளம்புநக்க னென்பநிரு வாணிபாற் படுமே
**83
#30
படர்மறவர் வாளுழவர் மள்ளர்கதர் வயவர்
படைத்தலைவர் பூரணர்கூ ளியர்மிண்டர் துண்டர்
திடர்வியவர் பூதர்விற லோர்மீளி வண்டர்
திறலோரண் ணியரேசன் னத்தரா யுத்தர்
அடுமூவேழ் வீரர்பெயர் காதகன் காருகனே
யருந்துதன்கா லனுங்கொலைஞர் பேர்பொருட்பெண் கணிகை
தொடரும்விலை மகள்வேசி பெறுவகொள்வாள் பரத்தை
சூளைபய னிலிதாசி வரைவில்பெண்பேர் குறியே
**84
#31
குறவர்கா னவர்புனவர் பழிஞர்வெற்பர் குழுவர்
குன்றுவரு மிறவுளருங் குறிஞ்சியர்பே ரதிற்பெண்
சிறுகுறத்தி கொடிச்சியாங் கானகநா டன்பேர்
சிலம்பன்வெற்பன் பொருப்பனாம் புள்ளுவரோ டெயினர்
மறவர்தெறும் பினரிறுக்கர் பாலையர்பே ரெயிற்றி
மறத்திபல்லி பெண்காளை விடலையு மீளியுங்கோப்
பொறையிலர் விரோதர்கா தகர்கோபர் வன்பர்
புளிஞர்வன சரர்சவரர் பாவமூர்த் திகளே
**85
#32
திகழெயினர் பையர்பா தகர்கோளர் மறவர்
சில்லர்கொலை ஞோர்காடர் முருடர்வேட் டுவரே
பகர்வேடர் மாகுலர் சிராதரிவை குறிஞ்சி
பாலைமக்கட் பொதுப்பேராம் பொதுவர் கோவிந்தர்
சுகவமுத ரண்டரா வலர்விந்தர் பாலர்
தொறுவர்கோ வலர்குடவர் கோபால ராயர்
இகழ்மொழியர் பொறையர் கொச்சையோர் முல்லைத்திணையோ
ரிடையர்பதி னேழு நடு நிலத்தினர்பேர்ப் பொதுவே
**86
#33
பொதுவிநெய்யின் முடைச்சிநடு நிலத்தியொடு குடத்தி
புன்மொழிச்சி யாச்சிதொறு வியுமிடைச்சி நாம
மதினிறைவன் குறும்பொறைநா டன்கோன்கா னாடன்
அண்ணலுந் தோன் றலுமாகுந் தொழுவர்மன்ளர் களம
ருதகர்கழ னியர் விளைஞர் பண்ணையர்கம் பளரே
யுழவர்கடை ஞோர்களைஞர் மருதநிலத் தவர்பேர்
நதியுறுகா லாட்டிகடை சியர்கிழத்தி யுழத்தி
நன்மகிழ்நன் கிழவனூ ரன்றலைவன் பேரே
**87
#34
தலைநுளையர் பரதர்பர தவர்திமில ரளவர்
சலவாணர் கலவர் மரக் கலர்கழியர் கடலர்
வலைஞரிவை நெய்தனிலத் தார்நாமம் பரத்தி
வலைச்சிகடற் பெண்குழைச்சி நுளைச்சிகுரத் தியுமே
யலைநிலப்பெண் ணாம்புலம்பன் றுறைவன்மெல்லன் சேர்ப்பன்
அரிய கொண்கனைம்பேர்நெய்தற்றலைவன் பேராம்
விலைசெயுமுப் பளத்தார்க்கே யளமரெனச் சாற்றும்
வேண்டியமன் பதைபஞ்ஞீ லிரண்டு மக்கட் பரப்பே
**88
#35
மக்கண்மா னிடர்மாந்தர் யாண்டையர்மண் ணிலத்தார்
மனிதர்மா னவர்மாக்கள் சனருலகர் மனிடர்
தக்கமனுப் பன்னிரண்டு நரர்பேரா ஞாதி
தாயத்தார் குடிச்சுற்ற மூதாதை பாட்டன்
புக்கபிதா மகன்பேரன் பெரியோன் விதாதாப்
போற்றன்பேர் தந்தை பிதாத் தாதையப்ப னையன்
தொக்கபிதி ரீன்றானம் மானத்தன் பயந்தான்
றொழுமச்சன் பதினொன்றுந் தகப்பன்பே ரனைத்தே
**89
#36
அன்னையனை யாய்தல்லி மோய்தள்ளை யீன்றாள்
அம்மைவயின் பொறையவ்வை யாயிபெற்றாள் புனிற்றாய்
தன்னைபயந் தாள் மாதா வம்மனைபன் னேழுந்
தாய்பேர்தவ் வையுமாகும் வளர்த்ததாய் செவிலி
மன்னுகைத்தாய் கோடாய்பா ராட்டுந்தாய் பிற்றாய்
மாமனம்மான் மாதுலனா மாமியத்தை யாகு
முன்னுதித்தாள் சேட்டைதவ்வை தன்னையக்கை யண்ணி
மூத்தாள்பே ரத்தையக்கா டமக்கையும் தங்கிடுமே
**90
#37
தங்கைபே ரிளையாள்கை பாங்கிபின்னை பின்னாஞ்
சட்டகனுஞ் சகலனுமோர் குடியினிற் கொண்டவனாம்
புங்கவன்மூத் தோனையன் சேட்டனண்ணா வண்ணன்
பொறையன் முன்னோன் றம்முன்னொன் பான் றமையன்பேரா
மங்கனுட்ட னனிச்சனே பின்னிளவல் பின்னோ
னாதரஞ்சேர் தம்பியென்றே யிளையோன்பே ராறாம்
செங்கனிவாய் மானனையாய் சோதரரே துணைவர்
சேர்சகோ தரருமுடன் பிறந்தவர்பேர்க் கணிப்பே
**91
#38
கணவன்வரன் கொழுநன்வேட்டோனுரியன் கேள்வன்
கண்டன்கா தலன்கொண்கன் பதிபிரான் றலைவன்
மணமகன் பிரீதியன்ம ணாளனண்பன் காந்தன்
மணவாளன் றவன்மகிழ்நன் வல்லவனே பத்தா
துணைவனா யகன்பேரில் லாள்காந்தை தேவி
துணைவிகா தலிமனையிற் களந்தாரம் பாரி
யணைமனையாள் வாழ்க்கைவிருந் துரிமைமண வாட்டி
யைகுடும்பி பன்னிமண மகளா நாயகியே
**92
#39
அகவிளக்கம் பொருள்செம்மல் குட்டன்முளை யிளவல்
அருளேயன் சிறுவன்கா தலன்மதலை தோன்றல்
மகன்மருமான் சுதன்பாலன் சந்ததிகா லெச்சம்
மைந்தன்மழ வோன்சேடன் புத்திரன்சேய் தனையன்
புகழ்வழிநந் தனன்புதல்வன் குமரனா லேழாம்
புதல்விசுதை புத்திரி குமாரியையை பாலை
நகுசிறுவி தனையைசெல்வி பந்தனையே குட்டி
நந்தனையே மதிப்புமகள் பெண்பிள்ளைக் கியம்பே
**93
#40
பிள்ளைசிறார் முளைகுழவி யெச்சமகார் மகவு
பிஞ்சுகுஞ்சு குழந்தையிரு மக்களுக்கும் பொதுப்பேர்
விள்ளுகைமை பெறும்பிள்ளை கோளகன்கோ ளிலியாம்
வேற்றோர்க்குப் பெறும்பிள்ளை குண்டகனாங் கன்னிக்
குள்ளமகன் கானீன னாற்குலத்தி னாண்பெண்
னுயர்பிழிபாய்க் கலந்துபெற்ற பிள்ளையனு லோமன்
றெள்ளுமா ணிழிபும்பெண் ணுயர்புமாய்ப் பெற்ற
சேய்பிறிதி லோமனெனச் செப்பினர்முன் னோரே
**94
#41
முன்னுரைத்த வனுலோமர் பிறிதிலோ மரிலே
முறைவழா தீன்றபிள்ளை பேரந்த ராளன்
பின்னதின்மா றிப்பிறந்த சேய்விராத் தியனாம்
பிறங்கடையே மருகன்மரு மானான்கு பேரு
மன்னியமின் மருமகன்பேர் காளைமகன் மாந்த
னாடவன்பூ மான்குமர னவன்புருட னாடூஉ
வின்னவுமைந் தனுமாண்பாற் பொதுப்பேரா நம்பி
யென்பதாண் சிறப்புநங்கை பெண்சிறப்பாந் தெரியே
**95
#42
தெரிவைமா னினிநாரி மகள்வனிதை மாது
சிறுமியிளம் பிடிமடந்தை தையல்பிணா மகடூஉ
அரிவைமட வாலணங்கு பேதைமங்கை பெதும்பை
யாடவள்கா ரிகையாட்டி பெண்டுநல்லாள் காந்தை
பிரியைமா யோள்மனிதி நங்கைநா கரிகை
பேடுமட வாள்பேதி வஞ்சனியே விரும்பி
வரிசையினங் கனைதோகை யாறாறும் பெண்பேர்
வாழுவதி தம்பதியு மாண்பெண்ணிரட் டையரே
**96
#43
இரவிநங்கை நாயகிதாய் சாமியத்தை யடிக
ளிசமாட்டி தலைவியையை கோமாள் பிராட்டி
யரசியர சாளிறைவி கண்ணாட்டி குரத்தி
யப்பதினேழ் முதல்விபேர் கன்னிகும ரியின்பேர்
திரள்விதவை யமங்கலிநூ லிலிகைமை கயினி
தீர்ந்தகல னழிமகள்பேர் மைமைவந்தி யிரண்டு
முரமலடி பேர்வண்ண மகள்கோலஞ் செய்வாட்
குரியபெயர் விருத்தைமூப் பள்ளவள்பேர்ச் சிறப்பே
**97
#44
சிறுபேதை பெதும்பைமங்கை மடந்தையே யரிவை
தெரிவைபே ரிளம்பெண்ணேழ் பருவமின்னா ரிவர்க்கே
யறுமேழ்பன் னொன்றுபதின் மூன்றேபத் தொன்பா
னையைந்து முப்பானொன் றெண்ணைந்தும் வயதாம்
குறளிகுண்டங் கூளிதுட்டை யொடுபடுவி தூங்கி
குட்டனியோ டசதியெட்டுந் தொழுத்தைபேர் கூறும்
வெறுமோரை பொய்தல்பண்ணை யவையாயம் பெண்கள்
விளையாட்டுக் கெடவரலு மாமதற்குத் தானே
**98
#45
தானைவா கினிகவனம் பரிகர நிதானஞ்
சனம்பாடி படாதிகந் தந்திரம் பதாதி
சேனைபலங் காந்தாரந் தளம்பகுதி கூடி
திரள்பதா கினிகடகஞ் சோனைதண்டம் யூபம்
வானியம டகமனிகம் வரூதினிமூ வொன்பான்
வாய்த்தபடைப் பொ துப்பேரொட் டுண்டைதொந்தே யூபங்
கானணிசூழ் படைவகுப்பா மணிகைநெற்றி தூசி
கடைக்குழைகூழையதாந்தார் கொடிப்படையாகுமதே
**99
#46
ஆகமுடம் புருவமுடல் புணர்ப்புறுப்புக் குரம்பை
யங்கமுயிர் நிலையூற்கம் விக்கிரக மூர்த்தந்
தேகமவை யவங்காய மாதாரஞ் சட்டை
திருமேனி தாபரமெய் புட்கலஞ் சரீரம்
மாகனங் களேபரம்பூ தியம்பிண்டஞ் சடலம்
வடிவாங்காத் திரம்பூட்சி கடம்புதைசட் டகமே
சாய்கைதனு வாக்கை புரம் படிவமுப்பா னெட்டாஞ்
சவம்பிணங் களேபரம் பிரேதமழன் கழிவே
**100
#47
கழல்சரணம் பதம்பாத மங்கிரிதாள் சலனங்
காலடியொன் பான்கரண்டை கரடுபர டாகும்
முழுகுகணைங் கால்சங்கங் கணைக்காலாஞ் சானு
முழந்துமுழங் கான்முட்டாங் குறங்கூரு வாம
மெழுதுகவான் சோகமைந்துந் துடையாகுந் துடைவே
ரிசைவுகந்து கொழுத்துமுட்டுக் கிரந்திசந்து பொருத்தாந்
தழுவியதோர் கழுத்துமாங் கடிதடமே நிதம்பஞ்
சகனமல்கு லாம்பக்க மொக்கரை யொக்கலையே
**101
#48
கலத்தபகம் யோனிகுய்யம் பெண்குறியாம் பூவுங்
கற்பபுரந் தானுமாங் காமிலிங்கங் கோசம்
புலத்தவாண் குறியாகுங் குறிகாணாத் தலமே
பொதுவாகு மிடையுக்க மருங்குநடு நுசுப்பு
நலத்துறுமத் திமமரையா மிதலைசுழி போகில்
நாபியுந்தி யிலஞ்சிகொப்பூழ் நாமமா முதரந்
துலக்குமடி வயினகடு மோடுகுக்கி சடரந்
துத்தவமுஞ் சுத்தும்வயி றாகும்பூண் முலையே
**102
#49
முலைசுவற்கங் கொம்மைநகில் கொங்கை தனஞ் சேக்கை
முகிழ்பயோ தரங்குயங் குரூஉக்கணம்மம் பறம்பாம்
மலைமுலைக்கண் சுதலைசிலீ முகம்பாற்கண் சூசா
மருமமுர மார்பகல மாகநெஞ்சே யைந்தாஞ்
சொலுநெரிசல் பொறிதேமர் பீர்துத்தி யுத்தி
சுணங்குவரி திதனிவசந் திகையினந்தி தித்தி
பொலிதிதலை நுணங்கீரேழ் தேமலாம் வாகு
புயமொய்ம்பு தோளினியற் பேர்பசுந்தோ ளணங்கே
**103
#50
தோள்கரமே புயம்பாணி யத்தமுங்கைத் தலப்பேர்
தோய்முழங்கை கூர்ப்பரமாங் கிலுத்தமணிக் கட்டா
மாள்குடங்கை யகங்கையங்கை யுள்ளங்கைப் பேராம்
அங்குலியே விரலாகு நகத்தின்பே ருகிரா
மூள்கையொன்ற ராணமதாம் வென்னபரம் பிறகு
முதுகுபுறங் கோரைவெரின் பிறக்குமாந் தோண்மே
னீள்கயிலோ டெருத்தநிவம் பிடரிபரஞ் செகில
நிதலமிமில் சிறுபுறமும் பிடரியா மிங்கே
**104
#51
இங்கிதங்கந் தரங்கண்டங் களமிடறு கழுத்தா
றிதைக்கிரீ பமுமென்பார் முகம்வதனந் துண்டம்
பங்கயம்வத் திரமைந்து மானனமாந் தட்டம்
பாலிகையே யிதழோட்ட மதரமுத்த முதடாந்
தங்கியமோ வாய்தட்டந் தாடியாஞ் சதனந்
தந்தம்பல் லெயிறாகு நகைமுறுவல் மூரல்
பொங்கிழியார்ப் பசியாசம் விடம்பனமுஞ் சிரிப்பாம்
புகல்சிகுவை நாத்தாலந் தாரமிவை நாக்கே
**105
#52
நாக்கின்மே லண்ணமண்ணாக் குண்ணாக்கென் றாகு
நவிலுமண்ண மிடறாகுஞ் சிபுகமண்ண மணரி
யாக்கணலுங் கீழ்வாயின் புறமாங் கபோல
மனுக்கதுப்புக் கொடிறுகவுள் கன்னங் கேசமுமாம்
பார்க்கும்விழி நயனநேத் திரமக்கஞ் சக்குப்
பார்வைதிட்டி திருட்டிலோ சனந்தார நாட்ட
நோக்கம்விலோ சனந்திருக்குத் தெரிசனமம் பகங்கோ
நுவலாலோ கனந்தாரை யக்கிகண்பத் திரட்டே
**106
#53
இருவிழியின் விளிம்பிமையா மணிதாரை யாகு
மிணைநாசி கோணைகிரா ணந்துண்ட மூக்காம்
பிருநுதல் புரூரம்பீர் புதல்புதடி பூருப்
பீருகுடி புருவமதாங் கேள்விவள்ளுக் காது
சொருகுசோத் திரங்கன்ன மைந்துபேர் செவிக்காஞ்
குழைகுள மளிகம்விலா டம்பனிச்சை பாலம்
பெருகுபண்ட மத்தகமுண் டகநுதலாம் பத்துப்
பேருநெற்றி யாகுமென்பர் பேரறிஞ ருவந்தே
**107
#54
உவவிமுண்டஞ் சிரஞ்சென்னி முடிமூர்த்தஞ் சிகரம்
உத்தமாங் கந்தலைசே கரமுச்சி கம்மே
நவிரொடுமத் தகம்பதினா லுஞ்சிரசின் பேரா
நவிர்பங்கி யுளைகதுப்புச் சிகைகுஞ்சி குடிஞை
தவிர்சுரியல் குழல்கேச மோரிதொங்கல் பித்தை
தளைபிச்சந் தார்சிரோ ருகமுமாண் மயிர்ப்பேர்
கவிசுடிகை சூழிநவி ரஞ்சூட்டி யுச்சி
காண்சிமிலி சிகைசிக்கஞ் சிமைகுடுமி முடியே
**108
#55
முடிமவுலி குழல்பந்தி சிகழிகைபின் னகமே
முச்சிதம் மிலங்கொப்புச் சுடிகைதொங்கல் கொண்டைக்
குடையபெயர் சுரியல்குழல் குரலளகங் கேசம்
உளைகதுப்புப் பரிசாரங் கூழைகுரு ளோதி
நெடிமைசுருள் பங்கிசிரோ தங்கோதை யைம்பா
னேர்விலோ தங்கூந்தல் கொந்தளமா ராட்டம்
அடுரோமம் பெண்மயிர்ப்பேர் கொந்தளம் விரோத
மளகமயிர்க் குழற்சியெனத் தெளிகுவைநீ மயிலே
**109
#56
மயிர்ச்செறிவு ரோமமுஞ் சிரோதமுமாம் வேணி
மயிர்த்திரள்கோ டீரம்பின் னலுங்கபத்தங் குடில
மியற்சடில முஞ்சடைப்பேர் வாரிவரை பிறங்கோ
டிறைவரியும் பொறியாகுஞ் சரைதிரையாம் பலிதஞ்
செயத்தநரைப் பேர்நாடி சகைனன நரம்பு
சிரையாகுங் கழலையின்பே ரரலையதாங் காச
மயிர்த்தகபங் கோழையையாங் கச்சைவடுச் சேக்கை
யங்கிதமே வசியுடலிற் றழும்பாயத் திடுமே
**110
#57
அத்திகளே பரமங்க மெலும்பாங்கங் காள
மாவதே முழுவெலும்பாம் வெண்டலை கபாலம்
மெய்த்தலையி னோடுமண்டை யாங்கவந்தம் யூப
மெய்க்குறைமட் டையுமதுவாங் கிருத்திமந்தொக் குரியல்
கொத்துரிவை யுரியொலிய லதள்பொச்சை சருமங்
குளிர்துவக்குப் புனிறுவட கம்புறணி போர்வை
வைத்தபச்சை தோற்பெயர்சூல் சினைகருப்பம் விந்து
வாலைவயா வயிற்பொறைபீள் வயல்கருப்பேர் தருமே
**111
#58
தருதசையூன் விடக்குமுடை வள்ளுரம்புண் புனிதந்
தடிபிசிதம் புலவுபுலா லிறைச்சியிற்றி யூத்தை
புரணிபூ தியமூழ்த்தல் மாங்கிஷப்பேர் குருதி
புண்ணீர்சோ ணிதமுதிரஞ் செம்பால் புலானீர்
எருவை செந்நீர் கறைசுடுவல் சோரிநெய்த்தோர் சோரை
யிரத்தப்பே ரீருளென்ப தீரலாஞ் சோரி
வெருவுதுப்பு விழுக்கிழுது நெய்நிணம் வெளுப்பு
விளர்விளிறு கொழுப்பாகும் வழும்பின்பேர் வழுக்கே
**112
#59
வழுத்தருமா சழுக்கூத்தை விட்டை கட்ட மிலத்தி
மலமாகும் பொறிவாயில் குறிகந்தங் கரணஞ்
செழித்திடுமிந் திரியப்பேர் மெய்வாய்கண் மூக்குச்
செவியைந்தும் பொறியாகுஞ் சுவையொளியூ றோசை
யழுத்தியதோர் நாற்றமைந்தும் புலனாகுஞ் சீவ
னாதனிய மானணுப் புற்கலன் சேதனனே
யொழித்தபசுப் பிரகிருதி சதசத்துச் சகல
னுயிர்பூமா னவ்வியத்த னுள்ளமான் மாவே
** மக்கட்பெயர்த் தொகுதி முற்றும்
@3 மூன்றாவது விலங்கின் பெயர்த் தொகுதி
**113
#1
மாப்புலி கராளியரி மாவயப்போத் தறுகு
மடங்கல்கே சரிநகா யுதமிருக ராசன்
கோப்பின்விலங் கரசுகண்டீ ரவமாளி சீயங்
கோளரியை முகன்பஞ்சா னனம்பூட்கை வயமா
தீப்பொறிநேர் முடங்குளையே வயப்புலி மூவேழும்
சிங்கப்பே ராம்பூட்கை வாளமே யாளி
காப்பறுகும் யானையா ளிப்பேராங் காட்டாக்
கவையமா வாமாவென் றியம்பினர் வல்லவரே
**114
#2
வல்லியம்வன் மாவேங்கை தீவிபுண்ட ரீகம்
வயவரிசித் திரகாயஞ் சாத்தூலம் வயமாப்
புல்லுழுவை மிருகாரி கொடுவரி வியாளம்
புலிதரக்குக் குயவரி வியாக்கிரம் வியாமி
யொல்லுவட்ட மிருபான்பேர் பல்லமெலுக் கரடி
யுளியமே கவிழ்தலை குடாவடியெண் கிருளி
பல்லுகமே தலைவிரியு மாமதன்பேர் கிருச்சம்
பாய்ந்தசச முயன் மூன்று முசற்பேர்தந் தனரே
**115
#3
தந்திபோ தகங்கயங் கராத்திரிவல் விலங்கு
சாமோற் பவம்பகடு வழுவையிபங் கடிவை
மந்தகுணி மந்தமாக் கோட்டிகரி கருணி
மருண்மாக்குஞ் சரம்பூட்கை மாதங்க நால்வாய்
சிந்துர மதாவளங்கைம் மாக்களிறு கும்பி
சிறுகணிதந் தாவள முவாத்தும்பி வேழ
முந்திரதி தூங்கல்கறை யடிபுழைக்கை வயமா
வொருத்தலே ரம்பமத நிதியெறும்பி யுடனே
**116
#4
உடற்றுபுகர் முகங்களப நாகமத தீப
மும்பலத்தி கோட்டுமா மாதிரந்தோ லாம்பல்
நடைக்கிரிக ரேணுவா ரணங்களவ னேழேழ்
நான்கானைப் பொதுப்பேரத் தினிகருணி வடவை
பிடிப்பேர் கரேணுவுமா மதகயந்தோற் கடமாம்
பேர்யூப நாதனே யரசுவா வின்பேர்
துடர்க்களபங் கயமுனியே கயந்தலை போதகமுந்
துடியடியும் யானைபெறுங் கன்றதின்பேர் தானே
**117
#5
தானமதா கடங்கடாங் கம்பமதப் பேராந்
தாலுமத கங்குடமத் தகங்கும்ப மாகும்
யானையின்கை துதிக்கைதொண்டுகொண்டலந் தொண்டையுமா
மதின் கரடங் கொடிறிணரி கவுளுமதச் சுவடா
மானமொடு பிருதுகொம்பு நடுவாம்புட் கரமே
மதக்கை நுனி யாமெயிறு கோடுதந்த மருப்போ
டூனமில்கொம் பாம்பூண்கிம் புரியாகும் பட்ட
மோடையாஞ் செவியடிசூ ழிகைக துப்பாங் கடமே
**118
#6
கடைக்கணிரி யாணமாம் பல்லடி கரீரங்
காங்கியும்புட் கரமுமாங் கைநீர் விலாழி
தடுக்குமுன்கா லங்கிதங்காத் திரம்பின்கா லாரந்
தாலவட்டம் வால்வாலி னுனியேவே சகமாம்
படுத்தமுது கேமஞ்சா மதினோய்பா கலமாம்
படுகுழிப்பேர் பயம்புகொப்பம் வாரியாங் கூட்டம்
மடிக்கடக மாந்துயிலு மிடமே சேவகமா
மதின்கூடப் பேரோளி வாரி யாலையமே
**119
#7
ஆலநிகர் தூசிசயிந் தவங்கவனி யிவுளி
யத்திரிகந் திருவமரி கோடையுன்னி பாய்மா
வாலியயந் துரகதம்பா டலம்பரிமண் டிலமா
வாசிகொக்கச் சுவஞ்சடிலங் கனவட்டம் வாகங்
கோலவய மாத்துரங்கங் கிள்ளைகுர கதமே
கோடகம்பத் திரிகுந்தங் கொய்யுளையே கோரந்
தூலமுறு மட்டம்வே தோற்பவம்வா ரிசமே
துரகமா திகங்கற்கி சத்தியமண் டசமே
**120
#8
அண்டமர்க்கந் துகம்புரவி கோணங்கோ டரமென்
றாறேழு மிரண்டுமே குதிரைப்பே ரெனலாம்
மண்டுகுரங் குரச்சைகுளம் பின்பேர் விலாழி
வாய்நீராஞ் சுவல்குசைவே சகமுங் கேசரிப்பேர்
கொண்டநடை வீதியதா மந்திரமே சாலை
குதிரைநிற்கும் பந்தியின்பே ராதிக மாதிகமே
தண்டுபரி மாற்கமதாம் வானர மயூரஞ்
சரஞ்சசமே மல்லமெனச் சாற்றிடு மைங் கதியே
**121
#9
கதிசுரபி தொறுத்தேனுக் கபிலையாக் குடங்கோக்
காலிநிரை யான்குரங்கோ மளம்பெற்றஞ் சேதாச்
சுதைபதினைந் தாம்பசுவின் பேர்கபிலை தேனுச்
சுரபிதெய்வப் பசுவாகுங் காலிதொறுக் கோட்டஞ்
சிதகினிரை காலேயம் பசுக்கூட்ட மைந்தாஞ்
செருத்தன்மடுச் சுரையீன்பை பீனசமு முலைப்பேர்
வதிகிருட்டி பத்திரைவற் சலமீன லீற்றா
மலடுவற்சை யாந்தன்னம் வற்சமுங்கன் றாமே
**122
#10
கன்றாத நரையிறால் சேப்புல்லம் பூணி
காளைகுண்டை விடைபாண்டில் புங்கவங்கோப் பதியான்
குன்றாத தூர்வகமே றிடபநந்தி கூளி
குத்தந்தூ ரியம்பாறல் கொட்டியமே மூரி
சென்றோடும் பகடுபெற்ற மெருதுநா லாறாந்
திமிலிமிலக் கேமுரிப்பாங் கார்மூரி மேதி
மன்றாருங் கவரிகா சாமயிடங் கவைத்தாள்
வடவைசவு ரியங்காரா னெருமையின்பேர் பகரே
**123
#11
பகடுமயி டங்கிடா வின்பேர்மை மலடாம்
பள்ளைமறி யொருத்துருவை யயமேடம் வருடை
தகரருண மேழகந்தண் ணகங்கிடாய் வெள்ளை
சகஞ்சாக முதல்கார்வற் காலிதுள்ளன் மோத்தை
யுகழ்புருவை செச்சைமே டகங்கொச்சை யசமை
யுடுத்துருக்கம் பளம்வெறியே ழகங்கொறியாட் டின்பேர்
அகழ்சரபம் வருடைவரை யாட்டின்பேர் சோர
னணங்குகுட்டன் மறிபறளுங் குட்டியின் பேர் கருதே
**124
#12
கருமாவல் லுளிகோல மைமாக்கு ரோட்டுக்
களிறுபோழ் மாக்கனலி கோணிவன்றி கான்மா
விருளிபூ தரமுந்தூழ் போத்திரி வராக
மெறுளிசூ கரமோழ லிரணிகிடி கிருட்டி
யரியேனங் கோட்டுமாக் கிருகிடிகே ழலுமே
யடும்பன்றி நாலேழ்பேர் சல்லமுணமா முளவு
தரிசலஞ்சல் லியஞ்சல்லி யெய்முள்ளஞ் சலவஞ்
சல்லவமுட் பன்றியதின் முட்சலலஞ் சலமே
** 125
#13
சலிப்பில்சீ கரஞ்சவரஞ் சமரியன்ன மெகினம்
சவரிமாக் கவரிமா மானமாப் பட்டம்
வலிப்பின்மரை சாமரைப்பே ராவிதங்கான் குதிரை
மரையாகு மருணமறி யுழையேணன் சூனன்
குலைப்பில்பிணை சாரங்க மிலைநவ்வி மிருகங்
குரங்கமே வற்சையமான் பன்னிரண்டாங் கருமான்
கலைப்பேராங் கலையிரலை வற்சையம்புல் வாயாம்
கத்திரங்காத் திரங்கீரி நகிலன்றீர் வையுமே
**126
#14
வயமுறுமத் திரிகோகு கரங்காள வாயே
வாலேபங் கருத்தவம்வே சரிகழுதைப் பேரா
மியலுறுகோ வேறுகழு தைப்பேர்வே சரியா
மிரவணந்தா சோகநெடுங் கழுத்தல்கன கதமே
யுயருறுமத் திரிகரப மொட்டகத்தின் பேரா
முக்குரோட் டோரிகோ மாயுவொண்ட னிகல
னயருள்ளான் றூங்கிசம்பு சிருகாலன் சுண்ட
னாக்கினிகி தம்பூரி மாவோடி நரியே
**127
#15
நரமிருகம் பிலவங்க மந்திகவி வாலி
நகையிவா னரஞ்சாகா மிருகங்கோ டரமே
யரிகடுவன் யூகங்கா னவினோத னாக
மாடும்வலி முகமதிச்சங் கீசகமற் கடமே
யுரநிரந்தங் கோகிலங்கா னவன்மூவேழ் குரங்காம்
யூகங்கா ருகமிரண்டுங் கருங்குரங்கா மோரி
கரிமுகன்கோ லாங்கூலங் கலைகூலங் கடுவன்
கள்வனே மைம்முகமெட் டாமுசுவென் றோதே
**128
#16
ஓதிவிட ருகங்கடுவன் வெருகலவன் பூஞை
யொண்பூசை மார்ச்சாலன் மண்டலி விலாளம்
பாதகஞ்செ யெலிப்பகையிற் புலிபவணம் பாக்கன்
பதினாலும் பூனையின்பேர் மிருகமத நரந்த
மாதுருக்க நானமான் மதமெனும்பே ரைந்து
மருவளர்கஸ் தூரியின் பேர் மறுவிமறி நாவி
மோதியபேர் மூன்றுபுழு குப்பூனைப் பேரா
முசலிகோ தாவுடும்பின் பேர்தடியு மாமே
**129
#17
தடுஞமலி கீழ்ச்சென்னி பற்காட்டி நாக்கி
சாரமே யன்பட்டி குக்கல்குரை முகனே
முடுவல்கூ ரன்சுணங்கன் ஞாளியக்கன் சூரன்
முடுகெகினம் பாசிசுன கஞ்சுவாச் சுகினம்
விடுபுரோ கதியிருபா னாயின்பேர் கொக்கும்
விருகமுஞ்செந் நாயின் பேர் மூஞ்சூறுச் சுண்ட
னடுசூறன் சுந்தரியுஞ் சுவவுமா முறுத்தை
யணிற்பேராம் வெளிலும்வரிப் புறமுமாந் திருவே
**130
#18
திருகல்சாய் நதங்காம ரூபிகா முருகி
சிகிப்பகைதண் டாசமோ ணானோந்தி யோதி
சரடஞ்சா யனங்கோம்பி முசலியோந் தியின்பேர்
சார்கருப்பை யாகிரும்பன் சிகரியெலி வகுப்பாங்
கருவிருட மூடிகமா கிருந்துருத்துந் தளமே
கனகதமும் பெருச்சாளிப் பேர்குரங்கு மாமான்
மிருகம்விலங் கின்பொ துப்பேர் கணங்குலம் வியூகம்
விருந்தஞ்சா லங்கூட்டம் யூகஞ்சே கரமே
**131
#19
சேகரத்தி லேறும்பல் பகடோரி கலைமாச்
சேவல்போத் தொருத்தல்களி றுதழ்கண்டி மோத்தை
வேகமுற்ற தகர்கடுவன் போதகஞ்சே விரலை
விலங்கினாண் பேர்பிடிபி ணாமந்தி பெட்டை
நாகுபிணை பாட்டிபெடை பேடுகட மையும்பெ
ணாமமாம் பறழ்பிள்ளை குஞ்சிகன்று பார்ப்பு
வாகின்மறி குருளையுங்குட் டியின் பேராங் குருத்து
மருப்புலவை சிருங்கங்கோ டைம்பேராங் கொம்பே
**132
#20
கொம்பிலா மிருகப்பேர் குமரமே ழையுமாங்
கூலம்வே சகந்தோகை வாலிலாங் குலமும்
வெம்புவா லதியுமாம் வாற்கீழே பிருட்டம்
வெருகமாம் பீலிமயில் போத்தெழால் சேவ
லம்பறவை யாண்பேராம் பேடுபெடை பெட்டை
யளகுபுள்ளின் பெண்பேராங் குஞ்சுபிள்ளை பார்ப்பு
செம்பறவைக் குஞ்சியின் பேர் தொழுதியதின் கூட்டஞ்
சிறகடித்த லோசனித்த றுழனியொலித் தாக்கே
**133
#21
தாக்கியன்புள் ளுவணன்கீர்த் தனன்பறவைக் கரசு
சற்பாரி ககபதிநா காசனனே வயின
னேர்க்கலுழன் வயினதே யன்கருடன் பேரா
மெகினமோ திமமஞ்சம் விகங்கம்வக் கிராங்கந்
தேக்கன மராளமெழு பேரன்ன மதற்காஞ்
சிம்புள்சாழுகம்வருடை சம்பரந்து ரோணம்
மார்க்குமட்ட பதியெண்காற் புள்ளுடன்வா ருண்ட
மவைசரப மாமசுணப் புட்பேர்கே கயமே
**134
#22
கேகயஞ்சி காவளம யூரமஞ்ஞை பீலி
கேழ்ஞமலி சிகண்டிகலா பஞ்சருணி நவிரந்
தோகைபிணி முகமொகரஞ் சிகிமயிலீ ரேழாந்
தூவிசந்தி ராங்கமணி கூழைதொங்கல் சருண
மேகநிறப் பீலிகலா பந்தோகை சிகண்டம்
வேசகங்கூந் தலுமயிலி னிறகாகு முருந்தென்
றாகுமதன் முள்ளின்பேர் குரலேங்க லகவ
லாலலெழா லியன்மயிலாட் டெனநேமித் தனரே
**135
#23
நேமியா னையிறாஞ்சி சக்கரமே கோக
நேரானைக் குருகுகொம்பி சக்கரவா கப்பேர்
காமகா களம்பரபுட் டம்பிகமே பிதத்தி
களகண்டங் கோரகைகோ கிலங்குயிலின் பேராம்
ஊமன்கோட் டான்குடிஞை கௌசிகமே பெரும்பு
ளுலூகலங் குரானிசா சரிகூகை யதின் பேர்
சோமனிலா முக்கிபோ தகைசகோ ரமதாந்
தூக்கணங் குரீஇசிதக னெனும்பேர்சார்ந் தனவே
**136
#24
சாரங்க மென்பதுசா தகப்புள்ளாங் கரடந்
தனியரிட்டம் பிள்ளைகொடி காரிபுட்டங் காகம்
கூருங்காக் கையின்பேராம் வாயசமு மதற்காம்
கொண்டகா கோலமண்டங் காக்கைப்பே ரர்க்கங்
காரண்டநீர்க்காக்கை குக்கில்செம்போத் தாகுங்
காரிபிள்ளை கிரவுஞ்ச மூன்றுமன்றி லாகும்
பாரின்புண் டரமுவணம் பணவைபூ கந்தி
பவணைபா சஞ்சகுந்த மெருவைகழு கிதுவே
**137
#25
இதற்பூழுஞ் சிரவமுமே கவுதாரி யாகு
மிகற்சேவல் வாரணங்குக் குடஞானி குருகு
பதப்படையாண் டலைகொற்றி துவசஞ்சா மப்புட்
பகுசரணா யுதங்காலா யுதங்கோழிப் பேரா
மதக்கற்கி கஞ்சரீ டங்கிகிணி வயவன்
வலியான்பேர் கஞ்சனம்பா ரத்துவா சமும்பேர்
பிதற்றுவய வன்கயவாய் வஞ்சுளன்கஞ் சனமே
பிள்ளைவயான் காரிகரிக் குருவிப்பேர் பாரே
**138
#26
பாரசிகை பாறுகங்கஞ் சேனமென மூன்றும்
பருந்தாம்வா னம்பாடி கம்புள்கலிங் கமதாங்
கீரமவந் திகைவன்னி தத்தைசுவா கதமே
கிள்ளையரி சுகஞ்சாரு வொன்பதுபேர் கிளிக்காஞ்
சாரிகையே பூவைநா குணவாய்ப்புள் ளாகும்
சகடம்விகங் கங்குலிங்கம் புலிங்கமுமூர்க் குருவிப்
பேரதுவா முள்ளலுள்ளான் பேராங்கூ னிருடி
பிக்கலைகின் னரமாந்தைப் பேராயுன் னுகவே
**139
#27
உன்னமொடு கின்னரங்கி ராமநீர்ப் பறவை
யுக்குரோ சமுமாகுங் காளபதம் புறவம்
பொன்னுறுக ளரவதம்பா ராவதங்க போதம்
புறவாந்தூ துணமுமாங் கபிலசமே குறும்பூழ்
தென்னுறுகா டையின் பேராந் திகத்திரிதித் திரியே
சிரல்கவுதஞ் சிச்சிலிமீன் கொத்திபொன்வாய்ப் புள்ளா
மன்னுசெவ்வற் குருவியின்பேர் சில்லைபகண் டையதாம்
வருடம்புள் ளோடுசலாங் கமும்பொய்யாப் புள்ளே
**140
#28
புட்கரம்வண் டானஞ்சா ரசஞ்சிகரி தாளி
போதாப்பி தாக்குருகு நாரையின்பேர் குரண்டங்
கட்குருகு பகம்வலா கமுங்கொக்கின் பேராங்
காதம்பம் பூழான்கா னாங்கோழிப் பேராம்
வட்குசம்பங் கோழிகம்பு ளாந்துரிஞ்சில் வாவல்
வௌவாலஞ் சலிகையா லாலமுமற் றதற்காம்
வெட்கியவிந் திரகோப மீயன்மூ தாவா
மின்மினிப்பேர் கைச்சோத நித்திலென வறியே
**141
#29
அறுபதஞ்சி லீமுகஞ்சஞ் சரிகமா மதுப
மரிசூதம் புண்டரிகம் வரிகழுது ஞிமிறு
பொறியளியீ மதுகரங்கே சவம்பிருங்கஞ் சரகம்
புட்பிரசம் பிரமரஞ்சஞ் சாளிகங் கண்ணாசி
துறுமலர்க்கேள் சாரங்கங் கரும்புமந்தி கீதம்
சுரும்புகே சரங்கண்டந் தும்பிவரிக் கடைதேன்
சிறைவண்டாஞ் சிமிலிசில் லைசில்வீ டுநெடி
சிதடிசலா பம்பதங்கம் சில்லிசைவிட் டிலுக்கே
**142
#30
விட்டநுளம் பஞலமச கந்துள்ளல் சலவல்
வெவ்வொலுங்கு மற்கூற லொடுநொள்ளல் கொதுகாம்
பட்டசகுந் தங்குடிஞை குருவிபக்கி விகுரம்
பதங்கம்விகங் கஞ்சகுனம் பிணிமுகம்புட் போகில்
கட்டியபத் திரிவயினம் புலிங்கமே யக்கங்
ககங்குரீஇ பறவையின்பேர் சினைகருப்பீள் வரிட்டம்
முட்டையுடன் கோசமண்ட மாந்துண்டஞ் சஞ்சு
மூக்கலகு சுவவுமாஞ் சச்செனவும் பறையே
**143
#31
பறைசதனங் குரல்வாசங் கூழைசிறை சேதம்
பத்திரமே தோகையிறை தூவிபிச்சங் கூர
லிறகுபக்கஞ் சதஞ்சிறகின் பேராகுஞ் சிகடை
இறும்பழலி யூர்மிருகம் பீலிகைசு லோக
முறைவிபிலன் கண்மூக்கி யெறும்பின்பே ரொன்பா
னுலுகைகர வான்சிலம்பி சிலந்தியின்பேர் தெறுக்கான்
முறுகுவிருச் சிகந்துட்டன் விடநளிதே ளாகு
முகடேமற் குணமூட்டை குடவனும்பன் னுவரே
**144
#32
பன்னகமண் டலிபோகி யகிமிருக நாகம்
பாந்தள்விட ருகம்புயங்கம் சக்கிரிம ராளந்
துன்னரவு தாசனன்கட் செவிதந்த சூகஞ்
சூரிபவ னாசனங்கஞ் சுகியரிவி யாளங்
குன்னுரகங் காத்திரவே யன்பணி விகாதங்
கூடபதம் விடதரங்கா கோதரமா சுணமே
யன்னியங்கும் பீனசமண் டசம்பணங்கா ரீச
மங்கதங்கா லிலிசர்ப்ப மாறாறும் பாம்பே
**145
#33
பாம்பினுட்குக் குடசற்பங் குடசற்பம் பறவைப்
பாம்பாமி ராசிலந்துண் டமுஞ்சாரைப் பாம்பாங்
கூம்புகரு வழலையின்பே ரிராசமந்த மாகுங்
கோளகைமண் டலியாகு மூர்க்கனே நாகந்
தேம்பெரும்பாம் பேபாந்தண் மாசணமாம் விரியன்
சிறுபாம்பாங் கண்கொத்தி மாலுதா சனனாம்
தூம்புதட்டம் பைகாறு பற்நட்டா முத்தி
துத்திபொறி பணம்பைபட நாக்கவர்நா னிலத்தே
**146
#34
நிலவேர்கூழ் நன்னாகம் பூநாக மாகு
நிறைக்கறையான் சிதல்செல்லா முழுவுசுவென் றாகும்
பலிதம்பொந் திற்கோதாக் கோகிலமே புள்ளி
பல்லிகெவு ளியின்பேரா நெளிவட்டை செழுகஞ்
சிலதுநா கரவட்டை நொள்ளையதா மாழல்
சிதலாகு மீனிநா குணிகிருமி கீட
முலையுமெலும் பிலிபொட்டுப் புழுவின்பேர் கிளிஞ்சி
லூமையெருந் தேரல்பிண்ட மிப்பிசிப்பிக் குறுமே
**147
#35
உறுப்படக்கி துளிகூர்மங் கச்சபமே கம
மொடுங்கியா மையின்பேராங் கரவுகரா விடங்கர்
கறுத்தவன்மீன் கிஞ்சுமார முதலையினபே ரலவன்
கள்வனா மதிஞெண்டு கவைத்தாள்கற் கடக
நிறுத்தகுளிர் ஞெள்ளிநள்ளி யிடுக்கிநண்டின் பேரா
நீகமரி மரைதேரை தளர்நுணன்மண் டூகந்
துறுத்துசரி சபந்தவளை யாம்வட்டி யலகு
சோகிபல கறைகவடி வெள்வரியும் பணியே
**148
#36
பணிலம்வா ரணநாகு சுரிமுகங்கொக் கரைகூன்
பாலிவலம் புரிகோடு வளைநந்து நத்தை
தணியுமிடம் புரிநத்தங் கம்புவெள்ளை சங்கஞ்
சலஞ்சலமே சங்கின்பே ரிப்பியாயி ரஞ்சூழ்ந்
தணியுமிடம் புரியாகு மிடம்புரியா யிரஞ்சூழ்ந்
ததனைவலம் புரியென்பார் வலம்புரியா யிரஞ்சூழ்
மணிவளையே சலஞ்சலமாஞ் சலஞ்சலமா யிரஞ்சூழ்
வளைபாஞ்ச சன்னியமென மொழிவர்கலை ஞோரே
**149
#37
கலைமகர மான்சுறா மீனேறுஞ் சுறவாங்
கயல்சபரஞ் சேலாங்கெண் டையின்பேர்வ ரான்மீன்
மலையிறா லிறலாகுங் கெடிற்றுமீன் கெளிறா
மலங்கின்பேர் நூறையதா மாரலா ராலாஞ்
சலசரமீப் புழல்வகுலி மயிலைபட்ட மச்சம்
சவலைசம்பை புழன்மீன மீன்பொதுப்பேர் பத்தாஞ்
செலுமானை மீன்றிமியம் மீனைவிழுங் குவது
திமிதிமியம் மீனையுண்ணுந் திமிங்கிலஞ்சந் ததமே
** மூன்றாவது விலங்கின் பெயர்த் தொகுதி முற்றும்
@4 நாலாவது மரப் பெயர்த் தொகுதி
**150
#1
சந்தான தருவுமரி சந்தனமும் பாரி
சாதமுமந் தாரமுங்கற் பகமுமெனத் தருவோ
ரைந்தாகு மலயசஞ்சந் தாரமே சந்த
மாகுதிதண் வாசிலே பனம்பூசல் சாந்தம்
பந்தான சாந்தொடுசந் திரதிலகஞ் சாத்துப்
படிவிரைப டீரமுஞ்சந் தனமரப்பேர் பிசினங்
கந்தார்செஞ் சந்தனமா மகிலகருப் பூழிற்
காகதுண்ட மாந்துருக்க மரவமுங்குங் குமமே
**151
#2
குமைதுருமோற் பலங்குயரூ பிணிகன்னி காரங்
கோங்கின்பேர் பிணருமாம் வகுளங்கே சரத்தோ
டமையிலஞ்சி மகிழ்மரப்பேர் பாடலம்புன் காலி
யவையிரண்டும் பாதிரியாஞ் சண்பகஞ்செண் பகமாங்
கமழ்சிறுசெண் பகஞ்சாதி மாலதியென் றிரண்டாங்
கருமுகைபித் திகையாகுந் திலகமஞ்சா டியதாம்
சமிகலிச நெருப்புவன்னி குலிசமுமா மனிச்சந்
தருப்பலம்புன் காலியாங் குருந்துகுந்த மாமே
**152
#3
ஆமலக நெல்லியின்பேர் கடுவேபத் தியமு
மரிதகியு மாந்தான்றி கவித்துரும மாகுங்
காமரம்வா னோங்கிபழு மரநியக்கு ரோதங்
காணுநெடு வீழிவடந் தொன்மரமே கோளி
யேமுறுமா லம்பூத மாலின்பேர் பத்தா
மிறலிசுவி யிரத்தியிந் திரியுமித்திப் பேராந்
தேமரசு சுவலைசரா சனமச்சு வத்தந்
திருமரம்பிப் பிலம்போதி கணைபணவ மதற்கே
**153
#4
அதமதவு கோளியுதும் பரமத்தி நான்கா
மாரமார் சல்லதிதா தகியாத்தி நான்காம்
இதழியாக் குபதந்தா மங்கடுக்கை மதலை
இணர்ப்பாசு பதமாறும் கொன்றையின்பே ராகும்
வதரிகோற் கொடிகோல்குல் வலியிரந்தை யாகு
மற்றிரந்தைக் கனிகோலங் கொண்டையென லாகுங்
கதகமே சில்லமில்லந் தேறாகும் பூவை
காசையச்சி யஞ்சனிநாற் பெயர்காயா மரமே
**154
#5
மருதின்பே ரருச்சுனமும் பூதவமு மாகும்
வாசந்தி குருக்கத்தி நாகரிமா தவிப்பேர்
குருகதிமுத் தகமுமாம் வைதேகி பனசங்
கூழையா சினிசக்கை வருக்கைநத்தை பாகல்
தருபலாப் பலவின்பேர் நேரோடு நாவல்
சம்புநன்வ லாங்குழிநா வற்பேர்சா தவமா
முருகருணஞ் சம்பிரமம் புலிலிகுசம் ராச
மோகிசத பலமெலுமிச் சேழ்பேர்சொன் னாரே
**155
#6
நாரநா ரங்கநா ரத்தையே நரந்த
நாரலுமாம் வாகைப்பேர் பாண்டில்சீ ரிடமாம்
பூரணிசன் மலிபொங்க ரிலவின்பேர் தாளி
புற்பதிபட் டிகைகள்ளன் போந்துபுல்லு நெடுவை
காரிகரும் புறந்தாலந் தாழிபெண்ணை பனைபூ
கதஞ்சகுந்தங் கந்திபூ கம்பூக்கங் கமுகாஞ்
சாரிலாங் கலிதென்னை தென்னாளி கேரந்
தாழைதெங்காம் பன்னாடை நாரியுநெய் யரியே
**156
#7
அரியதுவர்க் காய்கோலம் பிளகுபா குடன்பாக்
கடைக்காயாந் தேக்கின்பேர் சாகமா மழிசில்
பொரியரை செம்மரஞ்சேயங் கோலமழிஞ் சிலுமாம்
புன்னாக நாகம்வழை சுரபுன்னைப் பேராம்
பிரசாரந் திமிசுதிமில் கணியசனம் வேங்கைப்
பேராகுங் கோவிதா ரங்குரா மரப்பேர்
சுரதாருத் தேவதா ரத்தின்பேர் நறவஞ்
சுள்ளிமராப் பணைகணவஞ் சாலமர மாமே
**157
#8
ஆம்பிரஞ்சே கரமாழை மாந்திகொக்குச் சூத
மாறுந்தே மாவின்பே ரெகின்மாழை கிஞ்சந்
தேம்பியவாம் பிரம்புளிமா வின்பேராம் பிரமே
சிந்தூரம்யூ கினியெகினஞ் சிந்தகந்திக் திருணி
காம்புபுளி மரத்தின்பே ராஞ்செயலை பிண்டி
காகோளி யாயிலும சோகமர மாகும்
வேம்புபிசி தம்பாரி பத்திரம்வா தாரி
மேவுபிசு மந்தநிம்ப மாமெனுமிவ் வுலகே
**158
#9
உலவைமர மோடையாம் வேல்குடையு முடையா
முடுப்பையுடு வைப்பேர்கா திரங்கருங்கா லிப்பேர்
கலிசிறுமா ரோடமே செங்கருங்கா லிப்பேர்
கனங்களாங் களவின்பேர் வெள்ளில்விளாங் கபித்தம்
பொலிவிளாக் கடிப்பகையும் விளவின்பேர் காஞ்சம்
புன்கின்பே ராகுங்காஞ் சனந்தமா லமுமாம்
பலசொடுப லாசுபுன முருக்காமுண் முருக்கே
பருங்கவிர்கிஞ் சுகமாகு மாச்சாப்பே ராவே
**159
#10
ஆவலுறு குறிஞ்சிகுர வகமேக வன்னி
யலர்ப்பாணம் சகசரிகோ ரண்டமலைக் கருவா
மேவுகொட்டங் குரவாகுங் கிரிமல்லி குடசம்
வெட்பாலை யாநுணவை தணக்காமா லூரங்
கூவிளைநின் மலதாருச் சிவதருவே வில்வங்
கூவிளமு மாங்கடம்பல் கூம்பல்குமிழ் மரப்பேர்
ஏவுகொட்டங் குடிலமே குரவமரப் பேரா
மிருப்பைமது கங்குலிக மிலுப்பையெனக் கிளத்தே
**160
#11
கிளையமைமுந் தூழ்வேணுத் தூம்புவெதிர் வேரல்
கீசகம்வே லாம்பலரி பாண்டிலம்பு திரிகண்
கழைபணைபா திரிவிண்டு முடங்கல்சந்தி நேமி
காம்புவரை புறக்காழ்கண் கணைதிகிரி யோங்கன்
முளைதுளைவேய் வேழந்தே சனமுப்பான் மூன்று
மூங்கிலின்பேர் காளங்கோ டரமெட்டி மாணி
திளையுங்காஞ் சுரைப்பேராம் பஞ்சரஞ்செங் கோடு
செருந்திப்பே ரகத்தியின்பேர் கரீரமச்ச முனியே
**161
#12
முனைமரா மிந் தளம்வி சாலமொடு கதம்ப
முகைநீபங் கடம்பாஞ்சிந் துரஞ்செச்சை சிந்தம்
பனிகுல்லை சேதாரம் வெட்சியாம் பானு
பத்தமுச்சித் திலதஞ்சூ ரியகாந்த மாகு
இனியகரு முளங்கழுமா துளங்கந்தா டிமமோ
டெழுவேதா திமமேமா துளையேழ்மா தளைப்பேர்
கனிமடிபட் டிகைபறிவை முடங்கல்கண்டன் முசலி
கைதைகே தகைமுடவி முண்டகந்தா ழையதே
**162
#13
அதிமதுர மதுகமட்டி யதிங்கமுமா நீலி
யவுரியா நறுவிலிப்பே ரலியாங்கோத் திரிகை
மதுரசமுந் திரிகையாம் வானீரம் புள்ளி
வஞ்சுளமும் வஞ்சியின்பேர் முழிஞ்சில்முன்னை யாகுங்
கதலியிலை மரநவிரை திரணபதி செகுலி
காயரம்பை வாழைமரு கேமகர வாழை
விதமாகுஞ் செம்மரத்தஞ் சிவமந்தா ரமுமாம்
விருந்தம்வனங் குல்லைதுழாய் துளசிதுள வினுக்கே
**163
#14
துளிரும்வலம் புரிநந்தி யாவட்ட மாகுந்
துடியாஞ்சி யேலமதாம் புனமுருக்கை புன்காந்
தளவுமா கதிமவ்வ லூதிகைகற் பைந்துந்
தளிர்த்தமுல்லைப் பேருழிஞை சிறுபூளை யாகுங்
குளிர்குளவி பனிச்சைமலைப் பச்சையா மிசங்கு
குண்டலிமுத் தாம்பலுமாம் பானுவருக் கெருக்கா
மளிபயிலும் பலினிஞா ழலின்பேர்பா லிகையே
யடம்பாகுஞ் சித்திரமே ரண்டமா மணக்கே
**164
#15
மணத்தமா லதிமவ்வல் புருணமனங் கமுமே
மல்லிகைப்பேர் புட்டில்பசு நாய்ப்பிராய் புக்காங்
கணப்பீரம் வச்சிரமா விருட்சம்வச் சிராங்கம்
கள்ளியின்பே ரிந்திரசூ ரியஞ்சிந்து வாரந்
துணுக்குறுநிர்க் குண்டிநொச்சிப் பேராந்து ரோணந்
தும்பையாங் குருஞ்சனஞ்சிற் குருமுருங்கை யாகுங்
குணத்துடிகூ தாளங்கூ தாளிகூ தளமாங்
கோதிகோ தும்பையதாம் பாயசம்பாற் சொறியே
**165
#16
சொறிமூலி கண்டுரங்காஞ் சொறியாகு மத்தந்
தூர்த்தூர மதுமத்த மருணமத்தூ மத்தா
நறுமருப்பாத் திரகமல்ல மிஞ்சியாந் தேறு
நன்னிசிபீ தகங்கதலி யரிசனங்காஞ் சனியே
செறிமஞ்சட் பேர்சுண்டி வேர்க்கொம்பு சுக்காந்
தீட்சண மரீசங்கோ ளகந்திரங்கல் கமறி
கறிமிரியல் கலினைகா யமுமிளகாம் பத்தல்
காசைகொறுக் கச்சிசர வணஞ்சரநா ணலுமே
**166
#17
நாணியமா கதிகலினி பிப்பிலியே செற்ப
நாசினிகா மன்கடுகி திப்பிலிப்பே ராறாம்
பூணுபசும் பிடிதகரம் பச்சிலைத மாலம்
புல்லகண்டங் கழைவேழ மிக்கிரச தாளி
வேணுவொடு கன்னலா லையுங்கரும்பென் றாகும்
வேரிவசு வாசிபீ தகமூல கந்தங்
காணுவிரை மூலமிரு வேலிப்பேர் கவிரங்
கணவீரங் கரவீர மலரியின்பேர் மரபே
**167
#18
மருக்கொழுந்து தமனகமா மிருவாட்சி யனங்க
மயிலையுமாங் குல்லைகஞ்சம் பங்கிகஞ்சா வாகும்
பருத்தியின்பேர் காற்பாசம் பன்னலும்பஞ் சியுமாம்
பகன்றிகிலு கிலுப்பையின்பேர் குன்றிகுஞ்ச மாகும்
மிருக்கரிகத் தரிவங்கம் வழுதிலையின் பேரா
மிதற்குவழு துணையுமாங் காரவல்லி கூரம்
விரைத்தபா கலின்பேர்கக் கரிப்பேர்வா லுந்தி
வெள்ளரிப்பே ருருவாரம் வெள்ளைநா ளிகமே
**168
#19
நாளலாபூத் தும்பிபிறக் கொடிசுரையாங் கொற்றா
னந்தையென்றாந் திரிபுரிசா றடைப்பேர்மஞ் சிகமே
தாளியின்பேர் புலிதுடக்கி யிண்டீகை யீங்கை
தானிஞ்சி லாம்பகண்டை சிவிதைசிலே தையுமாங்
கோளுறுமா டாதோடை வாசையாம் விரலி
கோடைகர மலரியிலாங் கலியேகார்த் திகைப்பூத்
தாளுறுகாந் துகந்தோன்றி கோடல்காந் தளின்பேர்
சகுடஞ்சேம் பாகும்பா விரிபசிரிக் கடைவே
**169
#20
அடகொடுசிக் குருவுமிலைக் கறியாகுஞ் சிலந்தி
யமுதவல்லி சீந்திற்பேர் கமதாயந் தானே
துடருநில வாகைப்பேர் தாடிமமே சந்தஞ்
சூட்டுசத்திக் கொடியாகும் புட்டில்பீர் பீர்க்காம்
படலிகையு மாந்தூர்வை யிளம்புல்லே சற்பம்
பதம்விடா ரியுமறுகாஞ் சுருளிலைதாம் பூலங்
கொடிதிரையன் மெல்லிலைதின் னிலைநாக வல்லி
குறித்தபா னடைக்கொடியும் வெற்றிலைப்பேர்க் கியம்பே
**170
#21
இயவையா டகம்யாம முதிரையொடு தோரை
யேலமிவை துவரையாங் கடலைமஞ்சூ ரமதாம்
பயறுழுந்து மாடமா முற்கமே பாசிப்
பயறுசிறு பயறாகுந் தட்டையிதை கூலங்
கயவுறுகா ராமணியாங் குலத்தமே கொள்ளுங்
காணமாஞ் சிற்கடிமுற் கம்போகு சிம்பை
வியனவரை யாங்குரால் சில்லிசா கினியு
மேகநா தனுங்கீரைப் பேராங்கன் னிகையே
**171
#22
கன்னிகாக் கணங்கிகிணி கருவிளையின் பேராங்
கற்றாழை குமரிகன்னி மஞ்சியா ரலையு
மன்னுசச ரியுமாகு முருளரிசி கொற்ற
மல்லியாஞ் சிவந்தசீ வனிபாலைப் பேராம்
சொன்னகுசை குசங்குமுதங் கூர்ச்சமுந்தெர்ப் பையதாம்
சுண்டிலின்பேர் சமங்கைசுச்சாந் தொண்டை விம்பன் கொவ்வை
யன்னகோ வையின்பேரா நூழில்கொடிக் கொற்றா
னாயிடும்வச் சிரவல்லி பிரண்டையெனக் கழறே
**172
#23
கழல்கழங்கு கச்சூர முழல்கழற்சி யாகுங்
கணமுரிவேத் திரஞ்சாதி சூரல்பிரம் பாகுஞ்
செழிலசுனங் காயமிவை யுள்ளியின் பேர் சுரசஞ்
சிறுகிழங்காங் கருணைகந்தஞ் சேனைசூ ரணமாந்
தழைவரிவி ரீகிமணி மூக்கிபயிர் பைங்கூழ்
சாலிபசும் புலிதொலியல் சொல்வைபத்து நெல்லாம்
வழுதுவைப லாலம்வைக்கோ லமுதுபடி யரிசி
வளரரிதண் டுலமுமாந் தவிடுமுட்டை முடையே
**173
#24
முடுகுநொய்யே நொறுங்காகும் பதர்பதடி யாகு
மூட்டுபொழி பொங்கழியுந் தூற்றாநெற் பொலியாம்
வடுவில்போர்க் குவைசூடு சும்மையென மூன்றா
மலைநெல்லின் பேர்தோரை யைவனமாங் குளநெற்
கடுகுநீர் வாரமா மேனல்கம்பு கவலை
கங்கிறடி தினையாகு மேனல்குரல் கதிரா
நடுமிருவி யருவிதினைத் தாளாகுஞ் சொன்ன
னறுங்கிறுங்கு சோளமதாங் கோத்திரவம் வரகே
**174
#25
வருத்து மெள்ளுக் குமிகைதில மெண்ணூவு நாற்பேர்
மற்றதின்காய் கவையாம்வே யரிசிதோ ரையதாங்
குருத்தெருவை சூகரிவ ராகிசாய் முத்தங்
கோரைகொறுக் கையின்பேர்வாட் கோரைசெருந்தியதாங்
கரித்தகண்டல் முண்டகமே பூச்சிமுள்ளிப் பேராங்
கல்லார நீர்க்குளிரி யாநெட்டி கிடைச்சு
பருத்தசடை கிடையாஞ்சை வலஞ்சடைச்சி நாரம்
பாசியாங் காளாம்பி யாம்பியுமுண் டியுமே
**175
#26
முண்டகமம் போருகஞ்ச ரோருகஞ்ச ரோச
முளரிமரை சலசங்கே கயம்பதுமம் விந்தம்
புண்டரிக நளினங்கோ கனகமா லுந்தி
பூநிதிபங் கயம்வனச மம்புசம்வா ரீச
மிண்டைதிரு மனைகமல நாளிகன்னி கேந்திர
மிறும்பிவிரிஞ் சம்பகற்பூச் சகசமர விந்த
மண்டுவிதி யகஞ்சதபத் திரிபுவனங் கஞ்ச
மம்புயமுப் பானாலுந் தாமரைப்பே ரிறுமே
**176
#27
இறும்பிரா சிலந்தளந்தா மரைப்பூவாம் பொகுட்டே
யேற்றுருட்பூக் கன்னிகைபூங் கொட்டையதா மதின்காய்
மறிந்தவரா டகம்புட்ப ராகமதின் மணியாம்
வளையந்தாள் கொடிநாள நாற்பேரா நீல
மறிந்தகுவ லயங்கோலங் கல்லாரம் பான
லரத்தமிந்தீ வரங்குவளை காவிகழு நீராய்ப்
பெறும்பெயருற் பலமுமா நெய்தலல்லி யாம்பல்
பெருங்குமுதங் கயிரவநாற் பேரெனப்பேர் தருமே
**177
#28
தருவடவி நகஞ்சாகி குசஞ்சாதி சாலந்
தாபரம்பா தவம்விருக்க மகலியமத் திரியே
துருமம்பூ தரந்தாருப் பொதும்பர்பொங்கர் பதினேழ்
சொல்லுமரப் பேர்பொழினந் தனவனமுய் யான
மரிதுடவை பூந்தோட்ட மரச்செறிவா ராம
மடவியுத்தி யானம்வன முபவனந்தண் டலைகா
முருகிரண்டேழ் சோலைக்காஞ் சகுனமொடு கந்த
மூலமிவை கிழங்காந்தூர் சடைசிவைவே ராமே
**178
#29
வேருறுமங் குரம்பொடிப்பு நாறுகான் முளையாம்
விடபங்கோடி பங்கொம்பு பணைசினைகோல் கொம்பர்
தாருவுடன் கவடுலவை களைபொங்கர் காம்பு
தாழ்புறக்கஞ் சாய்கையுறுப் பிடபங்கோ டாமே
வாருலவு தழைகப்புக் கொப்பின்பேர் தூழில்
வள்ளியிரத் தியிலதை வல்லிகொடிப் பேராஞ்
சேருமரி கலைகாழ்ப்பு கரிகாழா சினியுஞ்
சேகுவயி ரமதாகும் பொந்துபொள்ளல் பொய்யே
**179
#30
பொய்யாத தலந்தகடு பன்னமடை யோலை
புல்லுலவை சாய்கைசத னஞ்சதம் பலாச
மெய்யார்பத் திரந்தழைத மாலமிலைப் பேரா
மென்கிசலை குழைகிளைவல் லரிமுறியே யலங்க
லெய்யாத மஞ்சரிபல் லவமும்பூந் தளிர்ப்பேர்
இலிர்த்தல்சிலிர்த் தலுந்துளிர்த்தல் கிளைத்தல்குழைத் தலுமே
கொய்யாது தளிர்த்தலின்பேர் வளன்பயினே முருந்து
குருத்துமுதற் செறியானி பிசினுமதன் முகிவே
**180
#31
முகிழஞ்சா லகம்போகி னனைமொக்குண் மொட்டு
முகிழ்கலிகை கோரகமே முகைமொந்தை யரும்பா
மகலுமலர் தாமமிணர் துணர்புட்பங் குசும
மலர்போது சுமனசந்தார் வீயும்பூப் பொதுப்பேர்
தகுகண்ணி துணர்தொத்து மஞ்சரிபூங் கொத்தாந்
தாதுமக ரந்தங்கே சரங்கொங்கு மலர்த்தூண்
மகரமும்ப ராகமுமா மவிழ்தல்விள்ள னெகிழ்தன்
மலர்தல்வெடித் திடல்விரித லுடைதலலர் தலுக்கே
**181
#32
அலரினல்லி யகவிதழாம் புல்லிபுற விதழா
மயர்பழம்பூத் தேம்பல்செம்மல் சாம்பலுமா மேடு
மலர்தகடு தோடுமடல் பூவிதழாம் பிஞ்சு
வடுக்காய்தீ விளியுமாம் பலன்கனியே பழமாம்
பலனதின்றோல் செதிளாகுங் காழ்கொட்டை பீசம்
பரல்விதைவித் தாங்குச்சம் படுச்சாறு தாறு
குலைகுடும்பு காய்க்கொத்தாம் பலனங்காய்த் ததுவாம்
கொடுமபகே சிகைவடுகு பழிபலனி லாதே
**182
#33
பலிதமில்பூ வாக்காய்க்கு மரங்கோளி வானப்
பத்தியமா முலர்ந்தமரம் வானமெனப் பேரா
முலமடவி யாரணியம் வனந்தாவம் புறவ
முயர்தடகி கான்கடறு காந்தார மத்தம்
திலமுளரி சுரங்ககனம் பழுவம்விடர் காண்டந்
தில்லங்கா னகம்வல்லை கானல்கடங் கானந்
தொலைவில்பொச்சை குறும்பொறைகண் டகங்கல்லி களரி
துருக்கமே கட்சிமுப்பா னொருபேர்காட் டினுக்கே
**183
#34
காட்டுநிறை தூறுகுன்மம் பஞ்சிசெடி விடபங்
காணரியல் சிறுதூறாம் பதுக்கையற லிறலாம்
வீட்டுகுறுங் காடிறும்பாம் வல்லைபெருங் காடாம்
விளையரண்கா வற்காடாம முதையலுதிர் காடாம்
பூட்டதிக மிளங்காடாங் கரிகாடு பொச்சை
பொதிசுரமும் பொரிகாடாம் பொச்சைவே லியின்பேர்
கூட்டகக்கா ழாண்புறக்காழ் பெண்ணாகும் வெளிறு
கொடுவலலி யாங்கடுக்கண் டகமிரண்டு முள்ளே
**184
#35
முளரியறல் சமிதையெரி துரும்புகள்ளி ஞெகிழி
முடுகுசிரா யிடுகுகட்டை யிந்தனமே காட்ட
முளர்முருடு விறகின்பே ருரையதிங்கங் குளியம்
யோகமூ லியுமருந்து மௌடதத்தின் பொதுப்பேர்
தளர்வறுசல் லியகரணி கருவியின்புண் ணாற்றல்
சந்தான கரணிதுண்டம் பொருத்தலாம் விரணக்
களையொழித்தல் சம்மான கரணியதா மூர்ச்சை
களைந்துயிரீ குதலமுத மமுதசஞ்சீ வனியே
**185
#36
வனைதாம மலங்கல்சிக ழிகைகண்ணி யணியல்
மாலிகைதார் மஞ்சரிகத் திகைபடலை மிலையல்
புனைகோதை சுக்கைவா சிகைதொங்க லொலியல்
பூந்தெரியல் பிணையலிலம் பகந்துடரே சுருங்கல்
நினைவாகுந் தொடையிருபா னிரண்டுமா லையின்பேர்
நீடுமிலம் பகஞ்சூட்டு நுதலணியென் றாகுஞ்
சினையாகும் வாசிகைப்பேர் படலைசிக ழிகையாஞ்
செயம்பெற்றோ ரணிவதுதான் வாகைமா லிகையே
** நான்காவது மாப் பெயர்த் தொகுதி முற்றும்
@5 ஐந்தாவது இடப் பெயர்த் தொகுதி
**186
#1
மாலிலா னந்தநில நிருவாணம் வீடு
வாழ்சிவங்கை வலஞ்சித்தி முத்தம்விப வருக்கங்
காலுமுத்தி கேவலம்பஞ் சமகெதிமீ ளாத
கதியமுத மோக்கமுமோட் சமதாகு முவணை
மேலுலகு கோவில்வா னகம்புவனஞ் சுவர்க்கம்
விசும்பும்ப ருயர்நிலைபுத் தேளுலகு கற்பம்
சிலவிமா னமுந்தேவ லோகமதாஞ் சேடி
சேணிவிஞ்சை யூர்பவண நாகருல கதுவே
**187
#2
அதமதோ கதிபிலம்பா தாளம்பா தலமா
மள றுகும்பி சிறையிருளா விரமூழல் பூதி
புதவுசுவப் பிரநரகந் திகிரிதுர்க்க நிரையம்
புலவுநார கம்பவர்க்க மள்ளலிவை நரகா
முதுவிசும்பம் பரமுலகு தேந்திசைகோக் ககுப
முகமரித மாசைமா திரம்புலமே காட்ட
மிதுதிக்காங் கிழக்குப்பூ ருவங்குணம் பிராசி
யிந்திரியே குணக்கிரவி யோனிகீழ்த் திசையே
**188
#3
திசையினிற்சி வேதைதெற்குத் தெக்கணமே வாசி
தென்றிசையா மமுமாம்பச் சிமங்குடக்கு மேன்மேற்
குசிதமுறு பிரத்திசைவா ருணங்குடமேல் திசையா
முத்தரமு தீசியுதி யுதக்குவட திசையாம்
வசுதைமே தினியுலகு தலம்புடவி தரணி
மண்கிடக்கை தரைபாலம் பிருதுவிகா சினிபூ
அசலைதாத் திரிநகந்த ராதலங்கோ விபுலை
யம்பரியம் புயநாக தாரையுகம் புவியே
**189
#4
புவனிதரித் திரிசகமண் டலஞாலம் வையம்
புவனமக லிடஞ்சாந்தை மகிநேமி பாரி
பவனம்வசு மதிவிசுவம் பொழில்வேலா வலயம்
பாத்திபம்வை யகமிம்பர் படிதாலம் பொறையே
யவனிதா ரணிபணைசக் கரநிலங்கோத் திரிபா
ரளக்கர்வசுந் தரையிகம்ப ணாதரிதா பரமே
குவலயமா திரந்தரைபூ தலந்திணைபூ தியமுங்
குவ்வுமறு பத்தாறும் பூமியின்பேர் நாடே
**190
#5
நாடுகண்ட நீவரமண் டலமேணி தேச
நல்லழுவஞ் சனபதம்பை திரமுலகு பாண்டில்
கூடுசும்மை தண்ணடையே பொழில் பதினான் காகுங்
குறிச்சிநிலம் பட்டினநி வேசனஞ்சம் வாகம்
பாடிபுரம் பூண்டிவே சனநியமம் பாக்கம்
பதிநகர்வைப் புறையுள்குறும் பகரநொச்சி வேலி
கேடக நிகாயஞ்சோ பணமுட்டம் வசதி
கிளர்சேரி பூக்கம்பூ ரியம்வாழ்க்கை குடியே
**191
#6
குடிக்காடு புரியருப்பம் பக்கணங் கிராமங்
குகைமடம்பம் பள்ளிகோ சரங்கற்பம் பாண்டி
படப்பைதா வளநிலையங் குடம்வாசஞ் சரணம்
பாழிசும்மை கறுவடம்பேட் டகலுள்பட்டி யிருக்கை
திடத்தாமங் கடைநகரங் குலங்குப்பங் கோட்டஞ்
சேர்வுவாழ் வறுபானொன் றாகுமூர்ப் பொதுப்பேர்
தடக்கிரிசார் குறிஞ்சிசுரஞ் சார்பாலை காடு
சார்முல்லை நாடுசார் மருதநெய்தல் கடலே
**192
#7
கடகமுவ ளகஞ்சால மோதையெயில் வரைப்புக்
காப்பரண்வெண் ணகையகப்பாப் புரிசையிஞ்சி யாரை
தடமதிள் வளாகநொச்சி யாரல்சிறை வேலி
தளிவேதி பிரகாரம் வாரியுடன் கோட்டை
துடர்வளையம் வேங்கைசுற்றின் மதிற்பேர்நா லேழாந்
தோணிவிதப் பெந்திரங்கோ சந்தகைப்பு நாஞ்சில்
படர்ஞாயின் மதிலுறுப்பாங் கிடங்கோடை யகப்பாப்
பதவுடுப்பாம் புரிகேணி பரிகமகழ் வாயே
**193
#8
வாயில்கடை புழைதோட்டி தூம்பொடுது வாரம்
வாரியும்வா சற்பேராங் கோபுரநீள் வாயிற்
சேயபெரு வாயிலுமாம் புதவுகுறும் புழையே
திட்டியின்பே ராம்வாசற் படிகருக்கு நகமாம்
பாயும் வழித் திண்ணையின்பே ரளிந்தமாம் பதணம்
பரிகமுமுப் பரிகையகப் பாவுமே டையின்பேர்
சாய்விலர மியநிலா முற்றப்பேர் மானஞ்
சமத்தமும் வேரமுமாகு மண்டபப்பேர்ப் பொதுவே
**194
#9
பொதிமன்றம் பலமன்றம் பொ துசபையாந் தெற்றி
பொற்சாலை யம்பலஞ்சித் திரகூட முப்பேர்
விதிதரணி வேத்தவையத் தாணியரண் மனையும்
வேந்திருக்கை யாங்குலமா ளிகைபவனஞ் சால
மதியதிரு மனைகோயி லரசரிற்பேர் பள்ளி
யறச்சாலை யறப்புறமு மாந்தளியே சாலை
மதிகோட்டஞ் சேதியஞ்சன் னிதிநிலையங் கோயின்
மந்திரநி கேதனந்தே வாலயப்பேர் சேரே
**195
#10
சேர்புவயின் பாத்திமா ளிகை மாடம் புக்கில்
செறிவசதி யிடவகைமந் திரமுறையு ளில்லஞ்
சாருமனை யகமில்லென் றீரேழும் வீடாந்
தாழ்குச்சிற் குரம்பைபுரை கூரைசிற்றில் குடிலா
மாருறையுள் கந்தவா ரமுமந்தப் புரமா
மட்டிலடுக் களைபாக சாலையுணாக் கோட்டம்
கூர்மடைப்பள் ளியின்பேர்குட் டிமம்படுத்த பூமி
குறடுதிட்டை மண்ணீடு திண்ணைவே திகையே
**196
#11
வேதியேயோ மகுண்ட மாம்பள்ளி பாழி
வியன்மடந்தா பதங்காண்டை முனிவரிருப் பிடமா
மோதுமிறை வளவிவீட் டிறப்பாகும் விடங்க
முகடாமங் கணமுன்றி லின்முனுமுற் றமதாம்
பாதியா ரோகணஞ்சோ பானந்தாழ் வாரம்
படியுமாங் கலனிருக்கை பண்டசா லையதாம்
காதுசுவர் பித்திகைபல் கணிகுறுங்கண் சாலம்
காலதர்வா தாயனமே சாளரஞ்சா லகமே
**197
#12
சாலமுயர் சலதாரை யங்கணந்தூம் பாகுஞ்
சாட்டுக்கா மரஞ்சுல்லி குமுதமுக்கூட் டாய்தம்
தூலமுத்தா னமுமடுப்பாங் கலன்கள்சுடு பூமி
சுள்ளையதாந் தக்கசமே சதுர்க்கையதாஞ் சந்து
மூலைமுக்குச் சந்தியின்பேர் கோணமுடுக் காகு
முச்சந்தி யந்திசிருங் காடகநாற் சந்தி
கோலியிடு சுருங்கைகன்ன வாசலின்பேர் புகலே
குதிரின்பேர் பாடிபா சறையுமுனைப் பதியே
**198
#13
பதியுறையூர் கோழியதாங் கஞ்சிகச்சி காஞ்சிப்
பதியாகுங் காளகங்க டாரமாங் கூடல்
மதுரையாங் காவிரிப்பூம் பட்டினம்பு காராம்
வஞ்சிகரு வூர்வேணு வனநெல்லை யாகு
மிதுலைவிதே கைப்பெயராங் கோசலைசா கேதம்
விநிதையயோத் தியின்பேரா மவந்தியுஞ்சை யாகு
நதியினவி முத்தம்வா ரணவாசி வார
ணாசிகா சிப்பெயர்சிங் களமீழ நகரே
**199
#14
நகர்க்கூலம் பீடிகையங் காடியா வணமா
நவின்றநெடுந் தெருமன்ற மார்க்கரிய மமுமாம்
வகுத்தகுறுந் தெருமறுகாம் பக்கணஞ்சி ரேணி
வாடை பூ ரியஞ்சேடி தெருஞெள்ளல் வீதி
புகுத்தவா பீனம்வே சனமாகும் பத்தும்
பொதுவீதிப் பேர்செண்டு வையாளி வெளியே
யகற்றுதிரு முற்றமிவை புரவிவட்ட நான்கா
மடருந்தூள் பூழிபொடி புழுதியின்பேர்த் தரமே
**200
#15
தரணிகுன்று குவடுவரை பதலைநகஞ் சயிலந்
தாணுமா திரம்விலங்கல் விண்டுசையஞ் சிமைய
மிரவிபொருப் படுக்கல்பூ தரஞ்சாரல் பொச்சை
யிறும்புகுறும் பொறைதிகிரி சுரும்புபொகுட் டசல
மரிசிகரம் பிறங்கல்வெற்புச் சிகரிசிலை நாக
மத்திரித ராதரஞ்சி லோச்சயம்வே தண்டங்
கிரிதடங்குத் தரம்பொங்கர் மந்தரங்கற் பறம்பு
கேளிதங்கல் லகநவிரங் கனதரமோ திமமே
**201
#16
ஓதிபருப் பதம்வீரஞ் சிலம்புபொறை விசைய
மோங்கல்பொற்றை கோத்திரிசி ராவணமே பீலி
பாதவமென் றறுபதுமே மலையின்பே ரறையே
பாறையின்பேர் கோடுகொடு முடிகூடஞ் சிகர
மீதுயர்ந்த குவடைந்து மலையி னுச்சிப் பேராம்
விவரமுழை முடுக்கர்விடர் கந்தரமே நிகுஞ்சம்
பேதமுழைஞ் சிலுங்குகைப்பே ரறையின்பேர் முழைஞ்சு
பிலமுமா மதன்வாச னூழைசுருங் கையுமே
**202
#17
சுருங்குதடஞ் சாரல்வா ரஞ்சானு நிதமபஞ்
சொன்னமலைப் பக்கமதாங் கற்பாழி பொறையே
கரண்டைதுறு கல்லாகும் வலஞ்சிலைகல் லுபலங்
கனசிரா வணஞ்சைய முலந்திரண்ட கல்லா
முரம்புபரல் பருக்கையதாங் குவைதிடறு திட்டை
மோடுசுவல் மேடுகுப்பை திடர்படரே வன்பால்
விரிந்தகுவா லவலொதுங்கல் பதுக்கையுமேட் டின்பேர்
விடர்விட்பு கமர்மூன்று நிலம்பிளந்த வடுவே
**203
#18
வடமலைவின் மலைதேவா லயந்துருவா ரூட
மந்தரமுத் தாகிரிபொன் மலைமத்து மலையே
நெடுமலையு மேருவின்பேர் வெள்ளிமலை கயிலை
நீண்டசயி லாதிவிசை யாத்தம்வே தண்டங்
கடதவள கிரியிரச தாசலஞ்சி வாத்திரி
கயிலாச கிரிப்பேர்தென் மலைபொதிகை மலைய
மடர்பொதிசந் தனகிரிதாம் பிரபேதி தமிழ்வெற்
பகத்தியா சலந்தென்றற் கிரிபொதிய மலையே
**204
#19
மலையாகுங் குடமலைவல் லியங்கொல்லிக் கிரியாம்
வட்டவரை யுவளகஞ்சக் கரவாள கிரியா
மொலியல்வரு புனறடினி குடிஞைதுனி யோண
முந்திதுறை சிந்துநதி யாற்றின்பே ருயவை
கலுழிகான் யாற்றின்பே ருவகையரு வியின்பேர்
காகந்தி பொன்னிகா வேரிகா விரிப்பேர்
சலமிகுதக் கணகங்கை கடநதிதண் பொருனை
தண்பொருந்தந் தாம்பிரபன் னியும் பெரியா றெனுமே
**205
#20
ஆற்றினிற்கோ தாவிரிப்பேர் விருத்தகங்கை வைகை
யாற்றின்பேர் வேகவதி கவுதமைப்பேர் கோதை
மாற்றுகன்னிப் பேர்குமரியோடைகால் கால்வாய்
வாய்க்காலின் பேர் குரம்பு குலைசேது வரம்பு
தேற்றுமணை செய்கரைப்பேர் கோலநீர்க் கொழுந்தாந்
தெளிந்தநீர் சலசலமா முந்திநீர்ச் சுழியா
மூற்றின்பே ருறவியாங் கூவலே கூவ
மொடுபூவ லசும்புகிண றாமெனச்சொல் வாரே
**206
#21
வாரியரி நேமிநதி பதிபவ்வங் குரவை
வாருணஞ்ச லேந்திரியன் னவமளக்கர் கார்கோள்
நீருவரி சலநிதிதீ கரந்தநீ ரலைமுன்
னீர்தரங்கி திரையுததி யுவர்வேலா வலயம்
வீரைமக ராலயமம் பரமத்தி யோதம்
வெள்ளம்பா ராவாரம் வேலையே சலதி
பாருடைசக் கரம்புணரி கடலம்பு ராசி
பரவையுப்புச் சலராசி யாழிசா கரமே
**207
#22
கரைநரலை யார்கலிவா ரணஞ்சிந்து பெருநீர்
கழிச்சிரத்தி னாகரம்வா ருதிசலவட் டமுமென்
றுரைதருமைம் பதுபேருஞ் சமுத்திரத்துக் காகு
மோரமலை வாய்தீரந் தடம்வாரந் திமிரி
வரையணைகூ லங்கோடு பாரநீர்க் கரைப்பேர்
வளர்வேலை பாரியம்பா ராவாரங் குவடும்
விரைகடலின் கரையாங்கல் லோலமலை தரங்கம்
விசிகரஞ்சீ கரங்குமிழி நீரறலுந் திரையே
**208
#23
திருகுபுவ்வம் புற்புதமா சூசமொக்குள் கொப்பூழ்
செறிபுரையுங் குமிழியின்பேர் நுரைபேன மாகும்
குரைகலங்க னீர்கலுழி யாவிலமாங் கூவங்
கும்பீரங் கயந்தொடுகுண் டழுந்தகழ காத
நிரலுறுமா ழமுநீந்து புனலாம்வ ளாறு
நிறைநீர்பி ராறுமதா முவர் நீர்ப்பே ருறையா
மிருணமழ னிலமுமுவர்த் தலமாகும் காய
லிடுங்கானன் முரம்பென்னு மிம்மூன்றுங் கழியே
**209
#24
கழிமுகந்தோ ணாமுகம தோமுகமே போந்து
கயவரி புகாருமழி முகமுமென வேழா
மழிவிலுவ ளகமளக்கர் கழிநிலமுப் பளமா
மரங்கமாற் றிடைக்குறையா மிலங்கைதுருத் தியுமாம்
குழையளக்க ரசறுதொய்யில் செதும்பளறு சகதி
குழம்பசும்பங் கணம்பொகுட்டுக் கொள்ளல்பங்கம் பூழி
ய?றுதெளி மயசுசெய்யல் வரிதோணி காலா
ழஞறுமசு பாகமள்ளல் சேதகமுஞ் சேறே
**210
#25
சேறதனிற் குமிழ்பொகுட்டாம் வெண்மணல்வா லுகமாந்
தீயகரு மணலறலா மதரயிரி மணலாம்
பாறில்புளி னந்தூதி மணற்குன்றாந் தரிசு
பாழ்கிராம் பின்பேர்புற் றரைசாட்டு வலமா
மூறிலஞ்சி பொய்கைவன தரம்வட்ட மெல்வை
யுவளகங்கோட் டகந்தங்கல் கயம்பயந் தடாகங்
கூறுசுனை குழிபல்வ லங்கிடங்கு மலங்கல்
குண்டமூ ருணிபண்ணை யேரிபங்கம் படுவே
**211
#26
படுகர்குளஞ் சவர்தரநீர் நிலைநளினி யோடை
பட்டமிலஞ் சகமாவி யலந்தைகுட்டங் கேணி
மடுவொடுபுட் கரணிதடம் பூவிமுப்பா னெட்டும்
வாவியின்பே ரிந்திரவா விகளிலவந் திகையாந்
தடிபலஞ்செய் மாக்கழனி பணையால வாலந்
தாழ்பழனம் பானல்செறுக் கைதைபண்ணை யகணி
கொடிவரப்புள் வயல்கண்டம் விளைநிலப்பேர் புன்செய்
குண்டில்பாத்தி யுமிவைமுப் பேர்சிறுசெய் யாமே
**212
#27
செய்வரம்பு மாசிபரம் பொடுகுரம்பாம் வரம்பிற்
சேரருகு கங்கெனவா முழவின்பேர் துடவை
தொய்யிலுமாஞ் சாலேயஞ் செந்நெல்விளை நிலமாந்
துதிக்குமுரு வரையென்ப பலவிளையு நிலமா
மொய்கடவு துடவைகொல்லை படப்பையுந்தோட் டப்பேர்
முதையல்பழங் கொல்லையின்பேர் புதியகொல்லை யிதையாம்
பொய்யுறுவன் மீகமளை புற்றாகுங் குரும்பு
புற்றஞ்சோ றாந்துச்சி லொ துக்கிடப்பே ரளவே
**213
#28
அளவுதருஞ் சாந்தமொரு வந்தம்வே றிடமா
மரங்கமா யுதங்கூத்துச் சூதுபயில் களமாம்
வளர்கழகங் களங்கிடைகல் லூரியென நான்கு
மகிழ்கல்வி பயிலிடப்பே ரமர்க்களம்போர்க் களமே
களரிபொருங் களம்யுத்த களமிரண களஞ்செங்
களங்கடவை படுகளமா கவபூமி மடவை
தளருமடு களமிறுக்கை செருக்களஞ்செம் புலமே
தடவைபறந் தலையொடுஞாட் பகஞ்சமர் செயிடமே
**214
#29
இடுகாடு சுடுகாடு காளவனஞ் சுடலை
யெரிவனந்துற் காடுபிண வரைபுறங்கா டீமம்
படுகாடு பிதிர்வனமே சுடுநில மயானம்
பன்னிரண்டாங் குயிலாயங் குடம்பைகட்சி கூண்டு
தடுகூடு பஞ்சரமு மாம்பாழி பாயல்
சட்டகங்கண் படைபடுக்கை யமளிபள்ளி சேக்கை
விடுசயன முறையுள்கட்சி துயிலிடமாம் பொத்து
மென்பண்ணை சேக்கைபட்டம் விலங்குதுயி லிடமே
**215
#30
துயிலிடம்வெம் பரிகரிக்குக் கண்டஞ்சே வகமாந்
தொழுவேயா னிலைபசுவின் புரையாகு மருப்ப
முயருமா ரிடமழுவ மழுக்கிடமா ஞெள்ளல்
உவளகங்குப் புறல்பயம்பு தாழ்வுகுழி படுகர்
பயலிழிவு கிழக்கவல்கீழ் பள்ளமதாங் கோழிப்
பறவையிடங் கிரவுஞ்சம் யோசனைப்பேர் புகையாம்
குயிலுஞ்சா மார்த்தங்கா வதங்காத மாகுங்
கூப்பிடுதூ ரப்பேர் குரோசமென வருமே
**216
#31
வரியிடவை யடிசெப்பங் கிறியியவை வாரி
வகுந்தொழுக்க நடைதாரி வதிசெலவு பாதை
சரிகடறு வயவைநெறி யதரிகுவை பயணந்
தாரையத்தங் கால்பதவை யாறுவகி ரயனந்
தெருநடவை பதமாற்கஞ் சுரம்வட்டை பட்டஞ்
சேர்வழிப்பே ரேழைந்தா மருநெறிப்பேர் தூம்பு
சுரமத்தங் கடங்கடறாங் கவலைகவர் வழியாஞ்
சுருங்கைசோ பானமா ரோகணங்கற் படியே
**217
#32
படியளக்கர் பெருவழியாம் விடங்கர்சிறு வழியாம்
பணைவரம்பின் வழிப்பேர் மரீசியாம் வழிபா
லிடைவயின்கண் குலமுதலுட் பதியகந்தேம் பக்கம்
இடன்களஞ்சார் கடைமுனைமேல் வாமங்கீழ் சூழல்
புடைவலம்பின் பாடுபட்டி வாய்வைப்புத் தேயம்
புறமருங்கு நிலந்தான முழிதலையிற் பாங்கர்
கடைமுகம் வளாகமய லுறைதெவவு முன்கால்
கைபுலநாற் பானேழு மிடப்பெயரின் பாலே
**218
#33
பால்புடை பாரிச மருங்குபுறஞ் சார்வு
பாங்கர்சிறை ஞாங்கருழி யாங்கர்பக்க மாகும்
சால்பிரமங் கூழைநனந் தலையொத்த லணுகாச்
சமன்மைய மாதனமத் திமநள்ளு நாப்பண்
ஏலிடையு நடுவாகு வீண்டிவணே யிம்பர்
இவ்விடப்பே ராண்டவணவ் விடமும்ப ருவணா
மேலுடனஞ் ஞாங்கர்தலை யன்னர்முன்றாண் முதலாம்
வினவுமெங்கி யாங்கெவண்யாண் டெவ்விடமத் தனையே
** ஐந்தாவது இடப்பெயர்த் தொகுதி முற்றும்
@6 ஆறாவது இயற்கைச் செயற்கைப் பலபொருட் பெயர்த் தொகுதி
**219
#1
அத்தமிர ணியமாழை வங்காரக் காண
மாசைபொலன் செந்தாது மாசையுரை சாமி
பத்திரம்பூ ரியங்காரஞ் சாதகும்பம் புதையல்
பண்டங்காங் கேயமுத லுறைவசுமா டனந்தம்
வித்தமா டகமீகை பொருள்பூரி செங்கொல்
வெறுக்கையரி பீதஞ்சா மீகரஞ்சாம் புனதங்
கைத்துநிதி சந்திரங்கூழ் மித்திரையே யேமங்
காணிகாஞ் சனந்தங்கம் வேங்கைசொன்னந் தனமே
**220
#2
தனியீழம் பிங்கலந்தே சிகஞ்சாத ரூபந்
தமனிய நிதானம்பீ தகமாடை தொடுக்கங்
கனகமப ரஞ்சிதிர வியஞ்சுவண மருத்தங்
கல்யாண முகரிசெம்பொ னறுபதோ டிரண்டாந்
தொனிதார மிரசதங்கா வுதங்களத புதமே
சுல்லுவெள்ளி வெண்பொன்னாந் திருமேனி யெருவை
செனிவடுத்தாம் பிரஞ்சிக்க முதும்பரமே சுற்பஞ்
செம்பாகு மீயம்வங்கஞ் சீருளுஞ்சொன் னதுவே
**221
#3
சொன்னல்கருந் தாதகிகொல் லயங்கரும்பொ னிரும்பாஞ்
சொன்னவை யைம்பொன்னாந் தராமதுக மாகு
மின்னுறையுங் கஞ்சமும்வெண் கலமாமுன் னைந்தோ
டிவையுந்தா தெழுலோகங் காரீய நாகம்
பின்னுவங்கந் தானாமா யாபுரியார் கூடம்
பித்தளையா மிவைகூட நவலோக மாகும்
உன்னியவங் காரமே தகணமொடு மாழை
யுலோகமதன் கட்டிகள்சம் பகமிரும்பா ணிகளே
**222
#4
இரும்புணியே காந்தப்பேர் சந்திரகாந் தப்பே
ரிந்துசிலை சூரியகாந் தஞ்சலா கையதாந்
தருஞ்சூத மிரதம்விந்தாங் கெந்தகப்பேர் நாறி
சத்தியுமாஞ் சாதிலிங்க மிங்குலிக மிலிங்கம்
பொருங்குலிங்க மாகுமரி தாரப்பேர் பழுப்பாம்
பொரிகார மிடங்கணமாங் காயமிங்கென் றாகுந்
திரும்புருசி சயிந்தவமே லவணமுப்பின் பேராஞ்
சீதாரி குங்குலியங் குங்குலுகுக் குலுவே
**223
#5
குலவுமா ணிக்கமுத்து மரகதமே நீலங்
கோமேத கம்பதும ராகமே வயிரஞ்
சிலைவில்வயி டூரியமே பவளநவ மணியாஞ்
செம்மணிமா மணிமாணிக் கப்பேர்முத் தாரம்
அலர்தரள மவுத்திகநித் திலமுத்தம் பச்சை
யரியுமர கதமாகு மணிநீல மாகுங்
கலியில்கோ மேதகப்பேர் மேதைபற்ப ராகங்
கவுத்துவமாம் வச்சிரமென் பதுவயிர மாமே
**224
#6
வயிடூரியம்வால வாயமாம் பவளம்
வருதுவர்துப் பொடுதுகிர்வித் துருமமரத் தமும்பே
ரயிர்பிரவா ளமுமாங்கா சிரற்றினங்கன் மனவோ
டரதனஞ் சலாகைமணிப் பொதுவக்கு மனவு
பயிலுருத்தி ராக்கமுப்பேர் வளைமணிக்கு மாகும்
பளிங்குபடி கம்பளிக்காங் காரிகமுந் தாதுஞ்
சுயகாவிக் கல்லாகுஞ் சிந்துரஞ் சிலேகஞ்
சுடிகைசுட்டி திலதம்பொட் டிவைதிலகப் பெயரே
**225
#7
திலகம்புண் டரநுதலி லிடுகுறியாந் தொய்யில்
சேயிழையார் முலைக்கோல மாஞ்சாந்து களபங்
கலவைச்சே றேவிரைகா லேகவண்ணந் தளமாங்
காசறையே லந்தகர மயிர்ச்சாந்தின் பேராம்
புலிகலவை வட்டிகைபீ தமுநான்கு சாந்தாம்
பூசுபொருட் பேரங்க ராகமாங் கூலம்
பலபொருளே மனவகம்பண் ணியம்பண்ணி காரம்
பரிகாரம் வளந்தாரம் பலபண்ட மிவையே
**226
#8
பண்டாரம் பொக்கிஷப்பேர் தண்டங்கோ சமுமாம்
பளிதம்பா ளிதஞ்சசிகற் சரங்கனசா ரமுமே
கொண்டார்கற் பூரமெனத் தேய்வைசெச்சை சேறு
குழம்பாமச் சுதம்விந்த மறுகரிசிக் கூட்டாம்
அண்டாத துப்பரத்தங் கொம்பரக்காஞ் செம்பஞ்
சலத்தகமாம் பூளையில வின்பஞ்சின் பேராந்
துண்டான பருத்திபன்னல் தூலம்பஞ் சாகும்
துய்துடர்சூத் திரந்தந்து பனுவலிவை நூலே
**227
#9
நூலின்முதற் கயிறுகச்சை குணந்தாமம் பழுதை
நுண்பாசம் வடம்புரிநா ணிரச்சையக்கந் தாம்பாஞ்
சாலம்வலை யாம்வலையிற் கயிறுமா சென்பார்
சாணிதிரு நீறுபொடி சாந்தங்காப் பேமஞ்
சூலிவிபூ தியின்பேராம் பொடிபூழி புழுதி
தூளிசுண்ணந் தாதுதுக ணீற்றின்பே ராகும்
வாலடலை வெண்பலிசாம் பருஞ்சாம்பற் பேரா
மண்சாந்து சுதைகளபஞ் சுடுசுண்ணந் தகுமே
**228
#10
தகர்சின்னம் பிதிர்சிதர் பராகமே பின்னர்
தரணிரே ணுவின்பேராம் பிசின்பயினென் றாகும்
ஞெகிழிதீக் கொள்ளியதாங் கடைக்கொள்ளி முளரி
நீளிரா தமுமலா தமுமாகுங் கந்துள்
பகரிருந்தை நல்லமுமே கரியின் பேர் வெண்டேர்
பாழ்த்தேர்பொய்த் தேர்கானல் பேய்த்தேரின் பேராம்
மகிழ்விதைநென் மணியலகு பலகறையும் பரலாம்
வாய்த்ததுணை யறைதூக்குச் சல்லியெனும் பொருளே
**229
#11
பொருவுபுன்கம் பாளிதம்பா லடிசிலுணாப் புழுக்கல்
போனகந்துற் றுண்டிமிசை மடையயினி பொம்மல்
சருமிதவை கூழசனம் போசனம்பாத் தமலை
சாதமோ தனமன்னம் புகாநிமிரல் மூரல்
பருகுவல்சி புவனகந்துய்ப் பமுதுசொன்றி கவளம்
பட்சணமூண் பதமுப்பானா றுஞ்சோற் றின்பேர்
சுரருணவு பலிசருவோ டவியாமாற் றுணவு
தோட்கோப்புப் பொதிசோறு கட்டனத்தின் பேரே
**230
#12
பேருணவு பெருப்பாகும் பாயசம்பாற் சோறாம்
பிழைமிச்சில் சேடமிகு பொருளெச்ச மிகையாம்
ஓருமெச்சி லுச்சிட்ட மாங்கருனை பொரியற்
குறும்பேர்பால் பாகரக்கு மோழைகூழ் காடி
யாருறுகஞ் சியின்பேராம் வெந்தையகு குல்லி
யாவியுக்கா ரியின்பேர்பிட் டரிலருப்ப நொடிதாம்
பூரிகமண் டகைதோய்வை யடைநோலை யூபம்
புதுக்கஞ்சம் லட்டுகமோ தகங்களப்ப வகையே
**231
#13
வகையாம்பிண் ணாக்குவொச்சை வறையல்மலா வகமாம்
மாவின்பே ரிடிநுவணி பிண்டியென மூன்றாம்
புகையாணந் தீயல்குழம் பிவைமூன்றுங் கறியாம்
புளிங்கறிப்பேர் துவையாகும் பாளிதமே புல்லந்
தொகையான கண்டயிரே கண்டமென வைந்துந்
தூயகண்ட சருக்கரையா மக்காரம் விசையம்
நகைகன்னல் கட்டிகுள மைந்துசருக் கரையா
நறும்பால்கீ ரம்பயசு பயமமுத நான்கே
**232
#14
அமுதமைய நவநீதங் கவினம்வெண்ணை நாற்பேர்
ஆகார மவிகிருத மாச்சியந்துப் பிழுது
தமிநேய மேழுநெய்ப்பே ரளைபெருகு ததியுந்
தயிராமோ ரருப்பமுசர் தக்கிரங் கலாயங்
கமழதிக மற்சிகையா மமரிசுதைமருந்து
கனியமிழ்த மமுதப்பேர் களங்கரளங் காள
முமிழ்கடுவா லங்காலங் காரிசிங்கி நஞ்சா
முணவூட்டங் குளகிரைதீ னுறைவிலங்கூண் பாலே
**233
#15
பாலிபடு விழிவிசுளி யிக்காணங் கஞ்சாப்
பாடலி சுயோகிவே கினிமருட்டங் கவ்வை
மாலிமா தவம்பானஞ் சூலிகுந்தி விகுனி
வடியரிட்டஞ் சாயனஞ்சு லோகிசிக்கர் மோலி
யாலிமடம் பேதைபிழி சுவிகைசுரை சூரை
யறிவழிமுண் டகமேதை விளம்பியம்பி தணியல்
சாலியா வசந்தோப்பி நாளிதொண்டி சேறு
சாறாம்பல் ஞமலியா துவமறவி மதியே
**234
#16
மதுரையுடன் மாரிசுமா லினியைம்பா னிரண்டு
மயக்குகள்ளின் பேராகு நனைநறவு தேறன்
முதுபிரச மதுகரங்கள் வேரிமக ரந்த
முருகுநறை மட்டுமதுத் தேன்பேர்பன் னிரண்டாம்
இதுகளுமக் கள்ளினுக்காம் வெள்ளில்பா டையின்பே
ரிறுங்காடு சோதனி துரானரலே சிக்குச்
சிதள்மயலுஞ் செற்றையின்பேர் சுடுபுசுமை சும்மை
சோடைசும் மாடைந்துஞ் சுமட்டின்பேர்ப் பரப்பே
**235
#17
பரசுகுளிர் கணிச்சிதழ னவியமழுத் தண்ணம்
பாலமுமா மூவிலைவேல் சூல்காளஞ் சத்தி
வெருளுறுமுத் தலைக்கழுவே கழுமுளுஞ்சூ லப்பேர்
விட்டேறு சத்திமதங் கயிலெஃகம் ஞாங்கர்
அரணமுடம் பிடிகுந்த மொன்பதும்வே லின்பேர்
அடற்கைவேல் கப்பணந்தோ மரமாகு நேமி
யொருபருதி சுதெரிசனம் வளையெஃகந் திகிரி
யொளிவட்ட மாழியெட்டுஞ் சக்கரப்பேர் தனக்கே
**236
#18
தனுசரா சனஞ்சிந்து வாரங்கோ தண்டந்
தடிசிலைது ரோணங்கார் முகஞ்சார்ங்கஞ் சாப
முனிதவர்க்காண் டிபம்வேணு கொடுமரம் பினாக
மூவைந்தோ டொன்றும்வில்லாஞ் சார்ங்கமால் வில்லாம்
அனகன்விற் பினாகமதாம் பூரிதொடை நாரி
யாவம்வடங் குணப்பூட்டுச் சிஞ்சினிநா ணரம்பும்
வினையநா ணியின்பேராம் பற்றாக்கை பாசம்
விற்கட்டாம் விற்குதைப்பேர் குலையாம்பத் தினியே
**237
#19
பத்திரம்போத் திரஞ்சிலீ முகந்தொடை யுரோபம்
பகழிமாற் கணங்கங்க பத்திரங்கோல் பாணம்
அத்திரஞ்சா யகம்புங்கந் தோணிவண்டு கதிரம்
ஆசுகம்பத் திரிபூதை ககம்விசிகம் பல்லந்
தத்துகணை வாளியேச் சரமம்பின் பேராஞ்
சரக்கட்டுக் குப்பிகுலை புதைபுழுக்கா முடுவே
இத்தரமாங் குதைபகழி புங்கமதா முடுவீர்க்
கிறகுகாம் பாமொட்டம் புதண்டமா வனவே
**238
#20
ஆவநா ழிகையாகுந் தூணியம்புக் கூடாம்
அசனிசத கோடிவச்சி ராயுதப்பேர் சம்பம்
பூவயிரங் குலிசமுமாங் குயங்கொடுவா ளரிவாள்
புள்ளமுமா மசிநவிர்நாந் தகங்கட்கங் கோண
மாவசிமட் டாயுதந்தூ வத்திவஞ்ச முவணி
வள்ளேதி கரவாளங் குறும்பிடிவாட் சுரிகை
மேவுகண்டங் கண்டகம்பத் திரநாட்ட முசுண்டி
வேணுவிரு பானிரண்டுங் கத்தியின்பே ரெழுமே
**239
#21
எழுக்கணையம் பரிகமுமாங் கழுக்கடைமுட் கழுவா
மிகல்வட்டஞ் சுழல்படைபா ராவளைய மாகுங்
கொழுத்ததண்டு பீலியெஃகம் பிண்டிபா லமதாங்
குந்தந்தோ மரங்கொந்த மீட்டிவிட்டே றைந்தும்
பழுச்சவள மாமுலைமூக் கரிகருவி குளிராம்
பருநவியங் கோடாரிப் பேர்குடா ரமுமா
முழிப்பெயரே தறிகைகணிச் சியுமாகு மீர்வா
ளுரக்கரபத் திரமும்வே தினமுமுரைத் தாரே
**240
#22
தாரொடுகப் பணங்கோல மிருப்புமுண்ணா ராசஞ்
சலாகையாஞ் சுவர்களையுங் கருவிகன்ன மாகுஞ்
சீர்கதைதண் டெறுள்வயிரங் குணில்குறண்டேழ் தடிப்பேர்
தேறுசங்கு கூத்திகைகாத் திரிமட்டி முட்டம்
போர்முசுண்டி முற்கரமாம் பறளைபற ளிகைகற்
பொறியல்லி யள்ளைந்தும் பற்றிரும்பாங் கவணின்
பேரொடிசில் கவணைகுளிர் குணிலுமா மூசிப்
பேர்சூசி யதின்றுளைப்பேர் பாசமாந் துடரே
**241
#23
துடர் துவக்குச் சங்கிலியா மிடங்கணியு மதற்காந்
துடர்நிகளம் பிணைதளையு மிடங்கணியும் விலங்கா
மிடலாணி யூசிகண்ட மூன்றெழுத்தா ணியின்பேர்
விடுபடை யத்திரமாம் விடாப்படைசத் திரமாம்
படைகருவி தானைகடு முட்சுதனங் கழுமுட்
படைக்கலமெஃ கேதிதுப்பு வேலுமா யுதப்பேர்
வடிநிசிவை பூவயிர்வா ளயின்முனைமுட் கூர்மை
வசியுமா நுதிநுனியாம் தடறுபுட்டி லுறையே
**242
#24
உறழ்பலகை கடந்தகட்டங் கிடுகுசே டகந்தோ
லுரிச்சிராய் வட்டணங்கட் டியம்வட்டந் தட்டு
மறைபரிசை வேதிகைதோற் பரமுங்கே டகப்பேர்
வன்கோதை கைப்புடைகைக் கட்டியின்பேர் சிரகம்
பறிவில்கீ சகந்தலைக் கிராணப்பேர் பருமம்
பரம்பரண மெய்யுறை சடாரிக்கச்சை கண்ட
மிறுகியசா லிகையரண மேடகங்கந் தளமா
சீராறுங் கவசப்பே ரெனுங்கரிய குழலே
**243
#25
கரிமுக படாஞ்சூழி மைந்தனமாம் புரசை
சுவடுகச்சை தூசானைக் கழுத்திலிடு கயிறாம்
பரியபில கடம்பலகா ரங்கரிமேற் றவிசாம்
பல்லணம்பண் படைபருமம் பரம்பரிக்கல் லணையாம்
புரவிவாய் வடம்வற்கம் வடிகயிறு குசையாம்
பொற்கடியா லங்கவினங் கறுள்கலின மூட்டாம்
வரிசையங்க வடிமொட்டுப் படிகச்ச மாகும்
மத்திகைகோல் சம்மட்டி யாமுளைகே சரியே
**244
#26
கேசரப்பிஞ் ஞகமொன்றுந் தலைக்கோலப் பேராங்
கிரீடஞ்சே கரஞ்சுடிகை முடிமெளலி மோலி
மாசில்சூ டிகையேழு மகுடப்பேர் மகுட
மாலிகை கரோடியதா முடியுறுப்பு மகுடம்
ஆசில்கோ டகம்பதுமங் கிம்புரிதா மமுமாம்
ஆரமுங்கண் டிகைமதா ணியும்பதக்க மாகுந்
தேசுறுகன் னாவதங்கஞ் செவிமலர்ப்பே ருத்தி
திருவாந்தொய் யகந்தலைப்பா ளையின்பேர்புல் லினவே
**245
#27
புல்லகஞ்சூட் டிலம்பகமு நுதலணியாஞ் சுட்டி
பொலன்சுடிகை யாமோடை பட்டமதாங் குழைப்பேர்
சல்லிமிரி சிகையொடுகுண் டலமாகுந் தூம்பு
தாடங்கந் தோடாம்வல் லிகைகுணுக்குக் கொட்டை
வல்லகடிப் பிணைகம்பி கடுவடங்கா தணியாம்
வாகுவலை யத்தின்பே ரங்கதங்கே யூரம்
நல்லதோ ளணியாங்கங் கணந்தொடிகண் டிகையே
நற்கடக மாம்பூணூ லுபவீதம் பிடியே
**246
#28
பிடிகஞ்சூ டகஞ்சங்கு வளைகுருகு கன்று
பெறுவண்டு தொடிசரியொன் பானும்வளை யலின்பேர்
படியினிலைச் சினைவீக மாழிமோ திரமும்
பவுத்திரமும் விரலணியாஞ் சரமாரந் தாமம்
வடமொடுகாழ் சரப்பணிப்பேர் சரிமணி கலாபம்
மனவுதோ ரையுமரைப்பட் டிகைப்பேர்மே கலையே
விடுகாஞ்சி யேகலா பந்தாமம் பதுமம்
விரிசிகையு மணிக்கோவை யாமரைமே லணியே
**247
#29
அரைஞாணே யிரதனங்கிண் கிணிசதங்கை கழலே
யாணணிபா டகம்பாத கடகமொவ்வோர் பேராம்
பரிபுரநூ புரமரவங் குடச்சூலே ஞெகிழி
பரலினரி யகஞ்சிலம்பாம் பரலரியாம் பாத
சரமதின்பேர் பாதசா லந்தான்பூ ணாரஞ்
சங்கிலி மதாணிநகை வள்ளிகலன் பண்டங்
கருதுபணி யிழையணியா பரணம்பூ டணப்பேர்
கயின்மடையே கடைப்பூணா மயிலனைய நிதியே
**248
#30
நிதிசெய்கத லிகை தூக்கந் தொங்கலின்பேர் தாங்கி
நெறிவயிரங் கோளகைகிம் புரிப்பூணென் றாகுங்
கொதிதளிகை வள்ளம்பா சனந்தட்டஞ் சக்கங்
கோரந்தா லங்கலமும் வட்டிலின்பேர் கிண்ணந்
திதிகைநா ழிகைவட்டிற் கன்னலுமாந் தறுவி
சிலகமுஞ்சட் டுவப்பேர்நெய் விடுஞ்சுருவை சுருக்கா
முதிபடிக்கம் படியகமா மிந்தளமே தூப
மூட்டிதட வென்பதுமாங் கண்டைமணி யாமே
**249
#31
கண்டைபட லிகைபரந்த கைமணியாம் பாண்டில்
கஞ்சமுங்கிட் டியுந்தாள மெறிமணிசே கண்டி
கெண்டிகோ டிகங்கடப மாம்பாணி கோயாங்
கேள்கரகங் கரண்டகங்குண் டிகைகமண்ட லப்பேர்
கொண்டசின்னம் பீலியாங் காளங்கா களமாங்
கோடிரலை யாம்பல்வயிர் கொம்பாகும் பணவந்
திண்டியா னகம்படக மாமிடக்கை யாமந்
திரிகைகுளிர் முழவமாங் கடிப்பின்பேர் குணிலே
**250
#32
குணில்படுமோர் கட்பறைப்பேர் பதலைமொந்தை யாகுங்
குடப்பறைபன் றிப்பறையாஞ் சகண்டமுர சாகுந்
திணியதக்கை சல்லரிதண் ணுமையொடு நிசாளந்
திமிலைபம்பை யாநந்தி துந்துமிபே ரிகையாந்
துணிவின்முரு கியந்துடிதொண் டகங்குறிஞ்சிப் பறையாங்
துடிபாலைக் காம்பம்பை கோட்பறைமுல் லைக்காங்
கிணைமருதப் பறைநெய்தற் பறைப்பேர்சா பறையாங்
கிரிக்கரடிப் பறைதட்டை சிறுபறையா குளியே
**251
#33
குழிமுழவம் பதலைகடிப் பறைபகுவாய் தவிலாங்
கொடுந்துடிதண் ணுமையுடுக்காம் பரினமண்மாற் சனையா
முழவு திண்டி முருடுதக்கை பேரிபம்பை பீலி
முரசுதகு ணிதந்தண்ணந் துந்துமி தடாரி
கழிவில்கோ டணையியமே பணையம்வாத் தியப்பேர்
கவிப்பாத பத்திரஞ்சத் திரங்கவிகை தொங்கல்
அழிவில்பிச்சங் குடையின்பேர் கால்செய்வட்ட முக்க
மாலவட்டந் தாலவிருந் தமுமாஞ்சிற் றிடையே
**252
#34
சிற்றால வட்டம்வீ சனம்பீலி விசிறி
சிறியசாந் தாற்றியுமாங் கோடிகம்பூத் தட்டாங்
கற்றாய்பீ டிகைகடிப்புக் கோடிகந் துமாணம்
கண்டிகைகாண் டமும்பூண்கொள் கலமாமம் மானை
பற்றாரம் மனையின்பேர் கந்துகமே பந்தாம்
பந்துமட்டத் துருந்திபெருந் தாரைசிறு தாரை
வற்றாத சிவிறியுமாஞ் சீப்பின்பேர் சிக்கம்
மயிர்வாரி கங்கமுமா மாரையா யினுக்கே
**253
#35
பாதங்காப் புக்கழறோல் செருப்புப்பா துகைப்பேர்
பாவன்மிதி யடியாகு மதிற்கொட்டை குடையாங்
கோதுஞ்சா ணந்தோட்டி யங்குசந் துறோட்டி
கோணமே கசப்பகையின் பேரடைபட் டடையா
மோதுங்கூடத்தின்பேர் சம்மட்டி குறடு
முருடுசுட்டுக் கோலுலையா ணக்கோலாங் கோளென்
றோதும்பேர் கொழுவாமின் னாராடும் பண்ட
மோரையா முலைத்துருத்தி யுதியோடத் திரியே
**254
#36
அத்துசிவை குருகிரண்டுங் கொல்லுலைமுக் காகு
மாரிதொட்டி புதவுகபா டங்காப்பு வாரி
தைத்தகத வின்பேர் தாழ் கடப்புத்தாழ் சீப்பாந்
தறிநிலைகந் தெழுக்கம்பங் கான்மதலை தாணு
இத்தனையுந் தூணின்பேர் யூபம்வேள் வித்தூண்
என்பரா ளானம்வெளி லானைத்தூ ணாகு
மத்திகையே கவுசிகந்தம் பமும்விளக்குத் தண்டாம்
வல்லிகையு மதற்காகுங் குறுந்தறியோ திகையே
**255
#37
போதம்பா றம்பிபா ரதிதோணி வங்கம்
புணையானந் திமிலிநவ்வு மதலைதொள்ளு நாவாய்க்
கோதகஞ் சதாப்பஃறி பாதையா தனமுங்
கூறுமரக் கலம்பதினெட் டாமதிற்பா யிதையாஞ்
சேதமறு வஞ்சிவள்ள மோடந்தோ ணியுமே
சிறுகலமாம் படுவையம்பி மிதவைதொள்ளுப் பகடு
பாதையிற்போம் பட்டிகையே புணையெனுமேழ் பேரும்
படிந்ததெப்ப மதின்பேராம் விசியின்பே ரரியே
**256
#38
அரிகுயவெந் திரம்வையஞ் சயந்தனங்கூ விரியே
யகல்கொடிஞ்சி யிரதஞ்செந் தனந்தேரொன் பான்பேர்
பருதிசில்லி நேமியுந்தி யுருளுதரி திகிரி
பாரியங்கா லாழிபத்துந் தேர்க்காலின் பேராந்
தெரிகிடுகு தேர்ச்சுற்றாஞ் சார்பலகை பாவாந்
தேர்மொட்டுக் கூம்பாந்தேர்க் கதிரின்பே ராராம்
விரிதட்டுத் தேர்நடுநாப் பணுமாகுங் கொடிஞ்சி
மெய்த்தகூ விரமாகுந் தவிசுதடுக் குரித்தே
**257
#39
உருள்சகடஞ் சாடுசா காடுவையம் பாண்டி
லொழுகுவண்டி லாம்பாண்டில் கஞ்சிகைவை யமுமே
பரிகள் கட்டு மூர்தியின்பேர் கந்திருசுள் ளிரும்பாம்
பண்டியுமாந் தண்டிகைகஞ் சிகைமணிக்கால் யான
மரசர்வா கனம்வையஞ் சிவிகையின்பேர் பள்ளி
யனிதமுமாம் பீடிகைவிட் டரந்தவிசு பீடம்
வரதிபத்தி ராசனஞ்சிங் காதனமாம் பாண்டில்
மஞ்சமொடு பரியங்கம் பாரிகட்டி லுறுமே
**258
#40
உறிசிக்கஞ் சிதர்தூக்குச் சிமிலியாந் தடியே
யுலக்கைமுச லமுமாஞ்சோ தனிதுடைப்ப மாறா
முறமதைச்சூற் பஞ்சுளகு சேட்டைசின்னந் தட்டு
முற்றிலென்பார் குதம்பந்தாங் கிடுகுசட்ட மாகு
மிறவைவட்டில் வட்டிகைகூ டைப்பேராஞ் சேணி
யிறவையே கடவைதட வையுமேணி யாகுந்
தறுகுகண்ணே ணியின்பேரே மால்பாகுந் தழலே
தட்டைகிளி கடிகருவி யாமெனச்சொல் லினரே
**259
#41
சொற்கழங்கு காசுவல்லுச் சூதாகுங் கவறு
துள்ளாயந் தாயமதாஞ் சாரிநா யாகு
நற்கலனை படைபடைவா ணுகந்தொடுப்பே ரலமே
நாஞ்சிலி லாங்கலப்பை பணவைகழு திதணங்
கற்குலவு பரணின்பே ரம்பணங்கால் குளகங்
கடன்கச்சந் தூம்புமரக் காலின்பேர் நாழி
வற்கமே குஞ்சமதாந் தண்டுகுழா யின்பேர்
மஞ்சுகமஞ் சிரைபேழை மூழிபெட்டி யாமே
**260
#42
ஆம்பியே பூட்டைகா ராம்பிகிழா ரரியா
மாடூச லுஞ்சலூஞ் சலின்பேராம் பெரிய
தாம்பின்பேர் பண்பாகும் பிழாவிடா விறையாந்
தயிர்கடையுந் தறிவெளிலா மூழிமத்த மூழை
காம்புமத்தின் பேர்வகிர்வார் வள்ளாகுந் துணியே
கடிகைகண்டந் துண்டமாங் கஞ்சனந்தற் பணமே
பூம்படிமக் கலனாடி முகிர்தமொளி வட்டம்
புளகமத்தந் தெரிசனங்கண் ணாடியின்பேர் கூறே
**261
#43
கூறைவே டகம்புட்டங் காளகஞ்சித் திரையே
கோடிகோ டிகம்படாம் பரிவட்டஞ் சீரை
வேறுடையம் பரஞ்சாடி நீவியந்தூ சாடை
வேதகம்பட் டாசாரங் கலைகலிங்கம் பஞ்சி
யாறுடுக்கை கோசிகஞ்சம் படந்தானை வட்ட
மாபரணஞ் சூடிகம்வத் திரம்வாசம் புடவை
தூறின்மடி மிடையலிலக் கரமறுவை சீலை
துப்பட்டி வேட்டிசோ மன்றுகிலென் பாரே
**262
#44
பாரியொடு நாகமுநல் லாடையாங் காம்பு
பாளிதங்கோ சிகம்பட்டு நேத்திரம்பட் டாடைப்
பேரெனலாந் தேவாங்கஞ் சாயச்சீ லையின்பேர்
பிணித்திடுசித் திரப்புடவை பொத்தகமென் றாகும்
போர்வைமீக் கோளாகும் வடகமத்த வாளம்
போர்த்தியவுல் லாசமுமா முத்தரா சங்கஞ்
சாருமுத்த ரீகமே யேகாச மாங்கொய்
சகநீவி யாந்தோக்கை முன்றானை மெய்யே
**263
#45
மெய்ப்பைகாஞ் சுகமங்கி காஞ்சிகைகுப் பாய
மேல்வானங் கஞ்சுகமுஞ் சட்டையாம் வயிரம்
வைப்பின்வயி ரச்சூழி மயிர்ப்படமாம் விணிகை
வார்வம்பு பட்டிகைவட் டுடைமுலைக்கச் சின்பேர்
கைப்பில்குஞ்ச கந்தலைப்பா வாங்கண்டங் காண்டங்
கஞ்சிகை படாமெழினி யவடிபடந் திரைப்பேர்
ஐப்படங்கு வானிவிதா னமுமேற்கட் டியின்பே
ராகுங்கே வணங்குழிவட் டத்தின்பே ரணையே
**264
#46
அணைதவிசு தளிமமெத்தை யாகுமுபத் தாண
மடைத்ததலை யணையின்பேர் கம்பலஞ்சிம் புளியும்
பணையுறுகம் பளத்தின்பேர் கேதனம் பதாகை
படங்குபடாஞ் சத்திவிலோ தனந்தோகை வானி
யிணைதுவசம் பெருங்கொடியாஞ் சிறுகொடிகத் திகையா
மேர்வீதிக் கொடிவிடங்க மாகுந்தார் சிதவல்
துணிசிகூ விரமுந்தேர்க் கொடியாமோ வியமுந்
துலங்குறுவட் டிகையோவுஞ் சித்திரப்பேர் மரபே
**265
#47
மரவுரிவற் கலையிறைஞ்சி சீரையின்பே ராகும்
வளர்பதலை தளஞ்சாடி யகளமுந்தா ழியின்பேர்
உரைகரீ ரந்தடாக் குழிசியா மிடங்க
ருற்றவட்ட நிறைநீர்ச்சா லாமிடங்கர் குடிகை
பரவுகடந் தாலிகும்பங் குணங்கலசங் குடமாம்
பானைமிடாக் குண்டமதா நுவற்கரிதற் கரியே
கரகஞ்சீ கரங்கன்னல் சிரகமதாங் குடிஞை
கடிஞைபிச்சைப் பாத்திரமாஞ் சுடர்மணிக்கொப் பணங்கே
**266
#48
கொப்புரி கிடாரமொடு தவிசுமதற் காகுங்
குடுவைகுண்டு விசனைசட்டி யாங்கலசப் பானை
யப்பெயர்கஞ் சனையாமந் தனிதயிர்த்தா ழியின்பே
ரகில்சராவஞ் சுத்திகையாம் பாண்டிலிடிஞ் சிலுமென்
றிப்பெயரே சுடர்த்தகழி யாம்பாண்டங் கலமென்
றிரண்டுமே கொள்கலப்பேர் மூடைபொதி சுமைப்பேர்
எய்ப்பறு சிலாவட்டஞ் சாணைக்கல் லாகு
மெழுதுகோல் துகிலிகைகோ லஞ்சனக்கோல் வடிவே
** ஆறாவது இயற்கை செயற்கைப் பலபொருட் பெயர்த் தொகுதி முற்றும்
@7 ஏழாவது பண்பு பற்றிய பெயர்த் தொகுதி
**267
#1
வடிவளவு வண்ணமொடு காட்சிகருத் தைந்து
வகைபண்பாம் பருதிதட்டு நேமிகொம்மை வலையங்
கடகங்கோ ளகைசில்லி யாழிமல்லம் பாண்டில்
கடுந்திகிரி மண்டிலஞ்சக் கரம்விருத்தம் வளையம்
அடிகொள்பா லிகைபதினேழ் வட்டவடி வாகு
மரியடர்பி யைமைமூன் றேதகட்டு வடிவாங்
குடிலங்கூன் கோண்கோட்டம் வளைத்தல்வணர் வாங்கல்
குலவல்தட்டுக் கோணல்வளா வலும்வளைவா மவையே
**268
#2
அவைதொழுதி குழுக்கோட்டந் தோடுசங்கங் கூட்ட
மடர்சமுகந் திரள்குவிதல் மொய்கண நிகாயஞ்
சவைகுவால் சமுதாயங் கழுமல்குப்பை கதம்பஞ்
சமவாயங் கருவிநிவ கங்குவ விராசி
குவைகுழாந் தொகுதிதொகை மூவொன்பா னொன்றாங்
குழல்சுகிர்நாள் வேய்நாளி தூம்புபுரை வேணுத்
துவணாடி சுரைதுளையே புழல்புழை துவாரஞ்
சுரிகையடை தமராகுங் கற்றைகதிர்த் திரளே
**269
#3
திரட்சிகணை குவவுகொம்மை சேர்த்துறுமல் சோகஞ்
சேடுபுஞ்ச மாழைவட்டுப் பிழம்புமுண்டங் குழிய
முரத்தபந்தந் தொழுதிபிண்டம் பூகமுத்தை குவித
லுண்டையுமாம் படலைபம்பல் படர்ச்சிபரந் தனவாந்
தரப்புளகங் குமிழ்ப்புமொக்குள் கொப்புளாம் பிணரே
சற்சரையாம் பயினிசங்கங் குவிதல்ட டுதலாம்
பரப்பழுவம் பப்போவல் பரவைபாப் பாவல்
பாய்தல்தா வுதல்ஞெமிர்தல் விரிவுவிசா லமுமே
**270
#4
சாலநனி கதழ்வதிகம் விதப்பூகம் பெருகல்
தவம்புதுமை மதம்பிறங்க லிறப்பமலை பூங்கு
சீலமிகை யலைபூரிப் பான்றல்கூர் கழுமல்
சிறப்புருத்தல் பொங்கலின்பேர் பெருமைமாத் தடங்கொன்
மால்கருமை பகடேந்தல் பாடிருமை மோடு
வால்குவவு தகைபொழில்பீ டண்ணல்பணை யீடு
மேல்கயவு நளிபாழி வீறுசெம்மன் மானம்
வியன் மூரி முடலைநாலேழொன்றுன் னுகவே
**271
#5
உன்னதமே டொழுக்கமுச்சம் பரிநிமிர்ப்புப் போக
லுத்துங்க மிசையேந்த லோங்கல்கப்புத் தூங்கல்
மன்னுதலே புரையூக்கம் பிறங்கல்புங்க நிவப்பு
வார்தல்சேண் சிகரமிரு பானிருபே ருயர்வாம்
பன்னமதுப் பருமைபரூஉப் பீனமுமா மகறல்
பாழியாப் பாய்வுதடம் வியலகலு ளான்ற
லென்னுமெட்டு மகலப்பேர் கண்ணறைபா ழியுமா
மிருசுநேர் செம்மைசெப்பஞ் செவ்வைசெவ்வ னணங்கே
**272
#6
அணுநுணுக்கங் கூர்முளரி நுழைநுவணை நூழை
யாய்தலயி ரோய்தலுயிர் முன்னுணங்கு நுட்பம்
நுணுகுநொசி நுண்மையின்பேர் நுனியுமாஞ் சின்ன
நூலியிறை கன்றாசு கலந்தோகந் தன்னங்
கணம்வறிதிட் டிமையொட்டீ ராறுமற்ப மாகுங்
கலிதூரஞ் சேண்சேய்மை யாம்வடிதல் போகல்
குணியொழுகா யதந்தீர்தல் வார்தல்வரி யுறையே
கொடிநேர்பு நெடுமைநெடி னீளப்பேர் முடிவே
**273
#7
முடிவகலம் யாவடங்கல் சமத்தமனைத் தகண்டம்
முழுவதுமுற் றடையமுட்ட மெல்லாம்பன் னோர்பேர்
மிடைவு துற்றல் செறிபொதுளன் மிண்டல்பம்ப னிபுடம்
விரளநிரந் தரந்துன்ற லடர்திணுங்கு துதைதல்
சடிலநனி துறைதுறுமல் துன்னனெருங் குதற்பேர்
ததைதலுடன் பதினொன்பா னாந்தேய்வு நிரப்பே
யொடிவுதவ லீனமரு குதலஃகல் சிறுக
லோய்வுகுன்ற லீறுசிங்க லூனமெஞ்சல் குறைவே
**274
#8
குறைவில்பூ ரணந்திளைத்தல் கமந்தெவிட்டன் மலிதல்
குளிர்ததும்பல் பரந்துவன்றல் கெழுத்திகழ்த லார்த
னிறைவுபிறங் குதன்முழுத்தல் செகிழன்மல்கல் கழும
னிரம்பலே தெவிழல்பெரு குதலிருபான் பேரா
மறைவில்பங்கு பயல்பாகம் பகுதியத்தங் கூறு
வாரம்பால் பாதியின்பேர் சீர்க்குருஞாட் பதிகம்
பொறைகனம்பா ரமுமாகுந் துவந்துருவந் தோன்றல்
புவியினிற்ற லாநொய்மை யிலகுநொவ்வி லேசே
**275
#9
இலகுமென்மை சுகுமார மிருதுவா மளவை
யின்மையின்பே ரனந்தமு மபாரமுமா னமுமாம்
பலவளவை கடன்கச்ச மளவாமா லம்பம்
பற்றுக்கோ டூற்றந்தூக் கந்துதண்ட மாகுந்
தலைமுதலக் கிரமோனை பூருவமுன் னாதி
தாளெழுவா யடியாகுங் கடைமுடிவீ றிறுதி
நலமுகிவு முற்றந்த மொல்லையின்பேர் நாப்ப
ணள்ளிடைநாச் சமன்பகல்மத் திமத்தின்பேர் வரையே
**276
#10
வரைவுதுணை தனையவதி தாறளவு காறு
மானமட்டுப் பிரமாண நோகமபு காலை
பரியந்த மேணிகோ தனங்காடங் கொற்றம்
பதினெட்டா மெல்லையின்பேர் நிரல்பந்தி யோளி
நிரையாங்கூர்ப் புக்கழிப்புள் ளதுசிறத்த லாகு
நீமமரி தெளிர்தயங்கல் காந்திநகல் சோதி
விரியல்வயங் குதல்விளங்கல் மின்னிலவு வெயில்வாள்
வில்வாம நிழலலங்க லொடித்தலில குதலே
**277
#11
இலங்கலிமைத் திடலொளிர்தன் மிளிர்துளங்கல் பிறழ்த
லெற்கிரண மவிர்தல்சுடர் தேசுநகை தாமந்
துலங்கல்கதிர் மின்னல்பிர காசமுப்பத் தாறாஞ்
சுக்கிலங்கெள ரவங்குருகு வெள்ளிவால் குருத்து
நலஞ்செய்விளர் சிதம்பாண்டு பாலசுவஞ் சுவேத
நரைதவளஞ் சுசிசீதம் பான்மையப தார
மலங்குபாண் டுரம்விசிதம் வெளுப்புவெள்ளை விளக்க
மருச்சுனஞ்சுப் பிரமிருபா னைந்தும்வெண்மைக் கருளே
**278
#12
அருணஞ்சேய் சேப்பரத்தஞ் செக்கர்துவர் சோண
மரக்குப்பா டலம்பூவல் சேதுதுப்ப ராகங்
குருதியத்துச் சிந்துர முலோகிதமஞ் சிட்டங்
குறிசெந்து சிவப்பேயிங் குலிகமுஞ்செந் நிறப்பேர்
கருள்காளங் காளகமை களங்காரி கார்மாக்
கறைநீலங் காளிமமா லஞ்சனமே மாய
மிருளசித மீரெட்டுங் கறுப்பின்பேர் களங்க
மிழிபுகறை கசடுமா சிவைமலினப் பசையே
**279
#13
பசுமையரி தஞ்சாமம் பாசரிப லாசம்
பைதரித்துச் சாமளம்பை பத்தாம்பச் சையின்பேர்
நிசியரித்தி ராபம்பீ தகம்பீதம் பொன்மை
நிறப்பேர்பிங் கலம்பசலை பசப்புமாங் கபிலம்
வசிபுகர்புற் கெனல்புன்மை புற்குரா னிறமாம்
வரிபுகர்கேழ் பயப்புவண்ணஞ் சாயல்சந்த மாமை
கசிவருண மேனியுருக் குருவடிவு நிறப்பேர்
கட்டழகு விசித்திரப்பே ரழகலங்கா ரமுமே
**280
#14
காரிகைபொன் சந்தந்தே சிகஞ்சொக்கு மஞ்சு
காமரொண்மை வாமம்பூத் தகைதளிம மாழை
யாரிகவின் மயம்விடங்கஞ் சுபஞ்செழுமை காந்த
மந்தம்நவ்வி மணிவனப்புக் கோலநன்கு மாமை
யேரணிநல் யாணர்வண்ணம் பொலன்சே டிராம
மெழின்மாதர் குருகுபொற்புச் செவ்விதொட்டி பாங்கு
தேரணங்கு சுந்தரம்பத் திரமம்மே நோக்குச்
சித்திரம னோகரமு மழகேழேழ் தருமே
**281
#15
தருணங்கோ மளங்கொம்மை குழவுவெண்மை நாகு
தகைமழவு குருளைவிண்போ தகம்புருவை யவன
முருகிளைசு பதினைந்து மிளமையின்பேர் விருத்த
முற்றன்மூப் பாமழுங்கல் புல்லெனன்மட் கலுமாம்
உரமறிவு தெளிவுபுந்தி புலன்போத மேதை
யுணர்வுமதி காட்சிஞா பகந்தேறல் சீலந்
தெருளல்சே தனஞ்சைதன் னியஞன மாகுந்
தெளியும்பே ரறிவுமுதுக் குறைவாமென் றறியே
**282
#16
அறியாமைப் பேரசே தனமாகு மூரி
யடல்கூளி மீளிகோன் முடலையும்பல் வாய்மை
விறலீடு நலந்தீரந் திண்மைமைந்து நோன்மை
மெய்யூக்க மிடலாண்மை மொய்ம்புவலி மல்ல
லெறுழ்மதுகை தானமதஞ் சத்துவந்துப் பாற்ற
லேண்முர ணுரந்தோற்றந் தாவுதா மானந்
திறல்பாழி முன்புவயம் பலமுடுகல் மல்லாய்ச்
செப்புநாற் பான்மூன்றும் வலுவெனச்சொல் வீரே
**283
#17
வீரியம் பராக்கிரமஞ் சவுரியஞ்சே வகமே
வீரப்பேர் வென்றிவலன் கொற்றமுல்லை வாகை
போர்விசையஞ் சயமாடு விறல்புகல்வெற் றியின்பேர்
பொறியாக்கந் திருப்பெருக்க மிடம்வாழ்க்கை விபவம்
சீர்விருத்தி வெறுக்கைமா டியற்கை செல்வப் பேராஞ்
செழுமைசால் பான்றல்வள நிறைமாண்பு வாய்த்த
னேரமைதி மாண்மாண்டன் மாட்சிமைப்பேர் பத்தா
நிலையழிவு தோல்விதோற் றிடறொலைவாங் கனியே
**284
#18
கனிகிருபை தகவிரட்சை போர்மையரு ளிரக்கம்
கருணைதயாத் தயவின்பேர் தூய்மைசுத்தந் துப்பு
புனிதம்பா வனர் தூய்து வேத்தியந்தூய் சவுசம்
பூதமே பவுத்திரமுஞ் சுசியின்பேர் சாந்தம்
பனியளிதண் மழைசீத நளிர்குளிர்சீ தளப்பேர்
படுங்கடுமை கோரம்வெம்மை யுருமம்வெம்ப லுருப்ப
மனல்கரு மந்தாபம் வெப்பமுமுட் டிணப்பே
ரடைவளப்பங் கொழுமைசெழு மையுங்கொழுப்பா மன்றே
**285
#19
அன்பின்பேர் நாரீரம் பரிவார்வ நேய
மளிபாசம் பற்றாணங் காதல்புரி வாகு
நன்பவமேழ் தொடருமன்பே யுழுவலா மகிழ்ச்சி
நகைகடிசம் மகமலர்ச்சி சுகந்தொய்யில் கட்டி
யின்பமுமா னந்தமதா மேமமுமற் றதற்கா
மிறுமாப்பெக் களிப்பேமாப் பபிமானந் தந்து
பின்புமத்தஞ் செம்மாப்பு தருக்குமதர் செருக்குப்
பெருமிதம்வீற் றிருத்தல்பா டவமலர்ச்சி களிப்பே
**286
#20
களியகநெஞ் சுளமுள்ள மிதையமே யுன்னங்
கருதுசித்த மனத்தின்பேர் சிந்தனைதி யானந்
தெளிநினைவிங் கிதங்கருத்துச் சூழ்ச்சியெண்ணங் குறிப்புச்
சிந்தைநாட் டியமுமாம் வலித்தன்முன்ன லூக
முளல்படர்தல் சிந்தித்த னினைத்தலுள்ள லூழ்த்த
லுன்னலின்பேர் புகறலெண்ணல் பேணல்சுட்ட னுதலல்
வளர்க்குதல்கா ணல்கண்ணல் குறித்திடலெட் டாகும்
வரையறுத்தல் குணித்தல்கணித் திடலெனவே பொறியே
**287
#21
பொறைசகித்தல் சமைநோன்றல் சமித்தல்பொறு மையின்பேர்
பொறையின்மை கூரநோனாமை பொறாமை யின்பேர்
நறுமைநன்கு நயஞ்சேடு விழுமநன்னர் யாணர்
நலமணியுத் தமநன்மை கடவுளொண்மை நன்றா
முறுதியின்பே ருண்மைவரன் முறைநியதி தெய்வ
மூழ்விதிப்பே ருறுநோன்பு தவன்விரதந் தவப்பே
ரறமுதவி தருமமே ணுடைமைதன்ம மாகு
மாணையின்பே ரேவலா மமைவாமென் பதுவே
**288
#22
அதிகமூ தியம்பயப்புப் பயம்பசை யிலாப
மாக்கநந்தல் பலித்தலுமாம் பழமைமுன் புராண
முதுமுறைதொன் றூழ்புரா தனம்பூர்ப்ப முந்தை
மூரிதொண்டு பண்டுதொல்லை யொல்லைபூ ருவமாம்
புதுமைபுனை நூதனம்புத் தேள்விருந்து கோடி
புனிறுவம்பு கடியாணர் நவம்புதிது மாகுந்
திதிதிரமன் னுதறாணு துஞ்சனிலை பேறாந்
தேறுமன்ற நிச்செயந்தீர்க் கந்தரிப்பு நிசமே
**289
#23
நிசப்பிரிய மோகைமா ராயமுவ கையின்பேர்
நீங்காமை தண்டாமை யானாமை யாகும்
வசக்கிகுளை கேண்மைதொடர் கேள்நட்பு மறுபே
மறுத்தல்வட்க லுட்கிலச்சை நாண்சமழ்த்தல் வெள்கல்
கசக்கம்வெட்க மாங்கேண்மை யுணர்வுகண்ணா கரிகங்
கண்ணோட்ட நயப்புமதாங் கணிதமெண்ண மாகு
மசுத்தியிலா வழுக்கின்மை யமலம்விம லமுமா
மதிகார முறைமைபா ரம்பரியத் திறமே
**290
#24
திறத்தினுடன் வகைகூறு பாடுவகுத் தலின்பேர்
திணைகுடியாம் பரியாய முறையாகு மாவே
வெறுப்பறுத்த லொல்லாமை முனையவா வின்மை
வேண்டாமை யுவர்ப்புமாம் விரத்திசார் வறுத்தல்
துறத்தறுற வியின்பேரொற் றுமையொருமை குறிப்புத்
தொட்டிமையாஞ் செய்திசெய லியல்பொழுக்கா சார
நெறித்தன்மரி யாதமுறை கைநடைநி யாய
நீதிநெறி மஞ்சரிகை யறைசாரித் திரமே
**291
#25
சாரமொடு சேறிரதந் தமிழமுதஞ் சுவைப்பேர்
தனியிலவம் புளிபுளிப்பாந் தித்தங்கைப் பாகுங்
காரமே கரில்கடுகங் காயங்காழ்ப் பாகுங்
கனியினிதின் மதுரந்தீந் தெங்குதித்திப் பினிப்பாம்
பேர்பேரே யபிதான நாமமுமாந் துப்புப்
பின்னேது வாயில்கா ரணநிமித்தந் திறமே
வார்பொருட்டா முரனூக்க முள்ளமிகு தியின்பேர்
வாழ்வியப்பற் புதமிறும்பூ ததிசெயம்விம் மிதமே
**292
#26
விம்மிநிறை வேறலின்பேர் சபலமாந் துப்பு
விளைவுமல்லன் மங்கலம்போக் கியம்பொற்பு மலர்ச்சி
பொம்மல்பூப் பொலிவொன்பா னமைவுபுல்லல் கெழுமல்
பொருந்தலாம் வெகுவிதநா னாவிதம்பல் விதமா
மும்மையொழி பிறப்பம்மை மறுமைவரு பிறப்பா
மொழியிம்மை யிப்பிறப்பா மொருமையொரு பிறப்பா
மெம்மையெந்தப் பிறப்பாமேழ் பவமேழு பிறப்பா
மிழிதகவு பரிபவமா மெளிமையெண்மை யுரித்தே
**293
#27
உரிமையின்பே ருரிபாங்கு கெழுக்காணி கிழமை
யுரித்தாட்சி தகைதாயம் பாலுடன்பத் தாகும்
விரைமுருகு கந்தமோ தவம்வம்பு நாற்றம்
வெறிகடியா மோதந்தேம் பரிமளங்கான் வசந்த
மருமதுவை நறைவாச மன்றலீ ரொன்பான்
மணமாகு நாறுதல்கந் தித்தல்கமழ் தலின்பே
ரருவருப்புத் துற்கந்தம் பூதியாம் பயிர்ப்போ
டருவருப்புக் குச்சிதமாந் தூவுமன்னு மிழிபே
**294
#28
இழுக்குமறல் பொல்லாப்புப் பொல்லாங்கு மறவி
யிகழ்ச்சிபுன்மை கீழ்ச்சோர்வொன் பானுமறத் தலின்பேர்
வழுக்குமாங் கரில்பழிபோக் கரில்பிழைதோங் காசு
வடுத்தவறு பொய்பழுது தப்புவசை யேத
மழுக்குமிறை குறையேச்சு கறைகோது நவையே
யாசுமறுப் புகர்களங்கந் துகள்கழிப்பு மாசு
கொழுப்பரிப்புச் செயிர்மானம் புரைமுப்பான் மூன்றுங்
குற்றமதாந் தளர்ச்சியின்பே ரேட்டையசாக் கொடியே
**295
#29
கொடுமையின் பேர் பூதிகண்ட முறைப்புவஞ்சங் கோரங்
கோடணையுக் கிரங்கலாங் கடுமைசடம் பத்துங்
கடினமுமாங் குறையிலம்பா டொற்கமின்மை மிச்சை
கலிவறுமை குறுவாழ்க்கை நிரப்பல்கல் சிறுமை
மிடியொடுநல் குரவீரா றொன்றுதரித் திரப்பேர்
வெறுமையுமா மரிமுருட்டு தெவ்வுமுரண் பகையா
மடியுமதா முறவியுற வாமடம்பே தமையு
மருட்சியுமா மேதித்த லினைவிரக்கப் பயனே
**296
#30
பயமடுப்புத் தாருணநாங் கவலைவெறி வீமம்
பனிப்புப்பீர் வெறுப்புருமு வெருவசூர் பிறப்பே
யயர்வுட்குக் கோபம்வெடி பேம்புலம்பு விறைகொ
னச்சமதா கும்பிரமந் துரிதமிறை கவன
முயவழுங்கல் கவற்சிகதி யணங்காய்வு சமழ்த்த
லுயங்கலா குலமோவு கலக்கநொசி மழுங்கல்
வயாவருத்தம் பதினெட்டா மடியிழிவு நந்தல்
வழுவுருங்கல் கயங்கேடு சுதங்கந்தல் சிதைவே
**297
#31
சிதம்புசித்தி சீரணஞ்சீத் தையுங்குணமின் மையின்பேர்
செடியுமதாம் விளம்பிதந்தா மதமாகுஞ் சண்டங்
கதங்குரூ ரங்கோப மறம்வெகுளி சீற்றங்
காய்வுளர் கலாம்புகைதல் விடைத்திடல் குறோத
முதும்பல்கறுப் புருத்தல்சிவப் பேபுழுங்கல் சீற
லுடற்றறீ விரமுணவல் கொதித்தல்கன்றல் கஞறல்
வெதும்பல்பவ தொந்தமே சலம்வயிரம் வெம்பல்
வெறுத்தல்செயிர் மறமரிப்பெண் ணாலொன்றுஞ் சினமே
**298
#32
சினத்தபட ரின்னல்வெறுப் பிடும்பைபுன்கண் கேதஞ்
செல்லல்கோட் டாலையலக் கண்பீழை யரந்தை
பனித்தல்கவ்வை யாதனையின் னாங்குபையு ளேதம்
பருவரலிட் டளமுறுகண் மம்மரல்லல் கரந்தை
துளிப்பிடுக்கண் பீடையலம் வரலல்ல கண்டஞ்
சூர்விழுமங் கையாறு கவலைதுக்கம் பைத
லனுக்கநோய் நடலையெவ்வம் வெய்துறலே பழங்க
ணையெட்டுந் துன்பத்தி னபிதான விதமே
**299
#33
விதிர்ப்புலைவு தள்ளாடல் பொதிர்ப்பசைத்தல் பனிப்பு
விதலைகம்பங் கம்பிதஞ்சஞ் சலஞ்சபலந் துளங்க
லதிர்ப்புவிதர் குலைவுசலங் கலங்கல்நடுக் கமதா
மழுங்கலுமாந் தலையிழிவு சாய்வாகுந் தஞ்ச
மெதிர்த்தண்மை தாழ்வாகு மொழிவிழிவோ டுவர்ப்பே
யெள்ளனகை நகலொல்ல னித்தையின்பேர் குடில
மதிப்பிலிசாட் டியம்படிறு புள்ளுவங்குத் திரமே
மாயைகுய்யம் பட்டிமைகூ டமும்வஞ்ச மெனுமே
**300
#34
என்னெவனெற் றாவோவை யோவக்கோ வந்தோ
வேயத்தா வன்னோவற் புதமுமிரக் கமதாங்
கொன்வறிது வீதாவீண் பயனிலிநாற் பேராங்
கோணன்மனக் கோட்டமுமவ் வியமுமழுக் காறாம்
பின்னம்விப ரிதம்விகிர்தம் வேற்றுமை விரூபம்
பேதம்விள்ளல் விகண்டைவிக டிதம்வீற்று விகட
மன்னியமே திரிவுவிகற் பமும்வேறு பாடா
மகமொடுதி யானம்பா வகஞ்செடிபா வனையே
**301
#35
பாவம்பா தகம்பவந்தீ வினையாகு மொற்றை
பலனில்கே வலம்புலம்பு தனிமையே கமுமாஞ்
சோவமா ழாத்தலுண ராமைமத்த மிளமை
சோகமிருள் வெருண்மோக முன்மத்தம் பித்தந்
தாவம்பே தனந்தர்கள ளேமமருண் மான்று
சழங்கரிமைந் தேபித்து மயர்கழுமு மாழ்க
னோவுமறன் மயன்மயக்க மதாங்கைதூ வாமை
நொய்துறுங்கை யொழியாமை யாம்பெயர்மை விழியே
**302
#36
மையன்மத னங்காமம் விரகமே மாசை
மால்வேண்டல் வேணவா மாதர்நசை நயப்பு
வெய்யபற்றி ராகஞ்சார் விவறல்பெட்பு வேட்கை
வெப்பநச்சா தரமிச்சை யேட்டைவயா நம்பு
கையிரதி பிணைவிழைவு மேவல்வெஃகல் விருப்பங்
காதலார் வங்கவற்றல் வீழ்தல்பெட்டன் மோக
மையிவர்த றாழ்தலவா வாஞ்சைநாற் பதுபே
ராசையாங் கைக்கிளையோர் தலைக்காம மணங்கே
**303
#37
அணங்குகுந்தம் பிணிமடியு ரோகநிழன் மாரி
யாமயஞ்சூர் மங்கல்பையுள் புன்கணுநோ யாகுந்
தணந்தசங்கை கடுத்தலையம் விப்பிரம்பி ராந்தி
சந்தேகங் கொல்லனுமா னமுமாகுந் தீங்கு
குணங்குமுட்டுப் பாடந்த ராயந்தீ தூறு
கோளேயந் தரந்துட்ட லாபமும்விக் கினமாம்
வணங்கழுங்கன் மடிவலச லாஞ்சிஞொள்கல் சோப
மந்தமசை வாலசிய மாயாசஞ் சோம்பே
**304
#38
ஆயுமழி வின்மைகன்னி குமரிகோ ணையுமா
மடைக்கலப்பேர் கையடையாஞ் சாலூரங் கயவு
சாயலிவை மென்பாடாஞ் செயலறல்கை யறவாஞ்
சமமிகல்கே ழாங்கன்ன போலென்ன வனைய
எய்வுபடி நேர்கதழ்வு தூக்குவீழ் மான
மிணைதுணையற் றுறழொத்த னிகர்பொருவ கடுப்ப
தீயபுரை யுவமைமலை வொப்பிருபத் தாறாஞ்
சிச்சீயே லேயேயெ னிழி இகழ்ச்சி மரபே
**305
#39
மரபுநீர் பான்மைவண்மை கிழமைபெற்றி தகவு
மாலைபா லியல்புதன்மை தகுதிசந்தந் தகைமை
பரிசின்முறை சால்புவிதி கொள்கையதி காரம்
படிகுணமே நிறமிருபான் மூன்றுபண்பின் பேரா
மொருபலமே தொடிகஃசு காற்பலமா நிறையே
யொருதுலா மிடையரைத் துலங்காற் றுலாமே
சொரிதூக்கா மொன்றேகம் பிரதமமொற் றையுமாஞ்
சுவடுகள முபையமிணை துணைதுவமு மிரண்டே
**306
#40
இரட்டொழிமூ முத்திரிமூன் றாஞ்சதுரும் பாத்து
மிசைநான்கு நாலாகும் பஞ்சமஞ்சு மைந்தா
மரற்றுசடஞ் சட்டாறாஞ் சத்தமே ழாகு
மட்டமெட்டா நவந்தொண்டொன் பானுமொன்ப தாகுந்
தரத்தசம்பான் பதுபத்தா நூறுசத மாகுஞ்
சகத்திரமா யிரமயுத மேபத்தா யிரமா
முரத்தநூ றாயிரமே யிலக்கமது பத்தே
யுறுநியுத மதுபத்தே கோடியெனுங் கூற்றே
** ஏழாவது பண்பு பற்றிய பெயர்த் தொகுதி முற்றும்
@8 எட்டாவது ஒலி பற்றிய பெயர்த் தொகுதி
**307
#1
கூற்றிசைவி னாக்கிளவி நொடிகாதை வாணி
குயிலியம்பேச் சறைபனுவல் வாக்குரைதோல் புகல்கீர்
மாற்றமொழி கதைதீர்ப்புப் பறைசெப்பஞ் சொல்லாம்
வாசகம்பா சுரம்வார்த்தை நடைவசன நான்காந்
தோற்றுரையாழ் மொழிபதமா மேத்தன்மெய்ச்சல் வாழ்த்த
றுதிவழுத்தல் புகழ்தல்பர சுதல்பரவல் பழிச்சல்
போற்றறோத் திரந்துதித்த லாமாசில் வாழ்த்தே
புகல்வரா சிடைபலகால் விளம்பன்மீ துரையே
**308
#2
உரைத்தலியம் புதலிறுத்தல் சாற்றலே யாட
லோதல்பக ருதல்குயிறல் புகறல்சொற்றல் மொழிதல்
விரித்தலறைந் திடல்கரைதல் விளம்பலே கூறன்
மிழற்றனவி லுதல்பணித்த லிசைத்தலொடு பேசல்
தெரித்தல்செப்ப லேநொடித்தல் சொல்லலெண்மூன் றாகுந்
திசைச்சொற்றே சிகமாகு மிடித்தல்கழ றலுமே
மருட்டுறுதிச் சொல்லாகு முல்லாபங் குதலை
மழலைகொஞ்சன் மிழலையைந்து மென்சொல்லாய் வருமே
**309
#3
வரநிலைமை பரம்வாய்மை யாணைவே ளாண்மை
வாயுண்மை நிச்சயஞ்சத் தியமன்ற மெய்ப்பேர்
சரதஞ்சா தமுமாகும் வழுதுமிச்சம் பெட்டு
சாதனைவக் கிரம்விகிர்தம் படிறுபொக்கம் வஞ்சம்
நிரவும்வலக் காரமடி யனுசிதமே மாயம்
நிசிதமொடு சடம்பிசிபன் னாறுபொய்யின் பேராம்
பரியாதம் பழிச்சொறீச் சொற்சிறுசொற் பழிப்பாம்
பழிமொழியேச் சலர்கவ்வை யம்பலதாய்ப் படியே
**310
#4
படித்தலத்தி யானம்வா சித்தலோ தலின்பேர்
பாடலுமாம் பிதற்றுதல் விடாதுபே சுதலா
மிடக்கர்கூ கனமறைத்த சொல்லாகு மேம்பா
டிசைத்தனெடு மொழிபெருஞ்சொற் பலரறிசொல் லாகுங்
கடைப்பிடியோர்ப் புடன்குறிக்கோ ளிவைதேற்ற மொழியாங்
கடவுதல்வி னாவுதலா மெதிர்மொழியுத் தரமே
விடைப்பேர்சல் லாபம்வினா விடைகூடும் பொருளாம்
விரிச்சிகோ ணிமித்தம்வாய்ப் புட்சகுன முதிர்வே
**311
#5
முதுமைபழ மொழிபழஞ்சொன் முதுமுன்சொல் பழமை
மூதுரையே கதையுங்கா ரணச்சொல்லா மசதி
யிதநகையு நயச்சொல்லா மனத்தந்தான் பொருளே
யில்லாமை புனருத்தங் கூறியகூறுதலான்
குதலையெனும் வாளாகோ ளாபேசா வாகும்
கூவலா கருடணைவா வெனல்கரைதல் கேத
லுதவகுத்த லகவல்விளித் திடலழைத்தற் பேரா
முளைத்தலுமா மறைகூவல் போரழைக்குங் குறியே
**312
#6
குறளைகொடு வாய்கொண்டி புறங்கூற்றுத் தொடுப்புக்
குஞ்சமொடு பிசினமுமாம் புறத்தோரைப் பழித்த
லறைகூற லாநயஞ்சன் மானமுப சார
மருமைமுக மனுமாமோ டொடுவுமுட னிகழ்வாம்
பெறுமாணை வஞ்சனம்வட் டித்தலே சாபம்
பிரமாணஞ் சூழ்சபதம் விரதமுஞ்சத் தியப்பே
ருறுதிகலை விச்சைவித்தை யூதியமே சால
மோதிகல்வி கேள்வியுமாங் கற்றல்பயி லுதலே
**313
#7
பயிற்சீர்த்தி யேற்றஞ்சீ ரிசைதோற்றம் புகழ்மேம்
பாடொளி கியாதமீக் கூறொடு சுவேதம்
வெயிற்பொருசொன் மலைகீர்த்தி யாமோத்துச் சாகை
வேதமிருக் காதிநூன் மறையெழுதாக் கிளவி
முயற்சுருதி யாரணமா மறைவழிவை திகமாம்
முதல் வேதம் பவுடிகமோ டிருக்காகு மிரண்டாந்
தயித்திரிய மூன்றாமு தார்த்தானு தார்த்தஞ்
சாமங்கோ சிகநாலா மதர்வணமென் றடக்கே
**314
#8
அடருமுப நிடதமறை முடிஞான பாகை
யருத்தபா கையுங்கரும பாகையுமப் பொருளாம்
பிடகமாக மம்பனுவ லாரிடந்தந் திரமே
பெருஞ்சமையஞ் சூத்திரநூற் பேரேழாஞ் சருக்கம்
படலமத்தி யாயமிலம் பகமோத்துக் காண்டம்
பரிச்சேத நூன்முடிவாம் புறவுரைதந் துரையே
முடிவினணிந் துரைபதிகம் புனைந் துரைபா யிரமே
முகவுரைநூன் முகத்தின்பேர் கணக்கெழுத்தெண் ணியலே
**315
#9
எண்கணிதங் கரணமே கணக்குச்சோ திடப்பேர்
யாப்புப்பாத் தொடர்கவிதை செய்யுளொடு தூக்கே
யண்கவிபாட் டின் பேர்முற் பாவெள்ளை வெண்பா
அகவல்தொகை யாசிரிய முரற்பாவே கலிப்பா
மொண்டவசை யடியம்போ தரங்கமரா கப்பேர்
முடுகியல்வண் ணகமாஞ்சொற் பொருளருத்த முரையாம்
பிண்டமது பொழிப்பாகு மரும்பொருண்ஞா பகமும்
பிசியுமாந் தொகுதிசெய்தல் பதிகமென்னு மிதுவே
**316
#10
இதியாச மிலக்கியங்காட் டுதலுதா ரணப்பே
ரெழுத்துவண்ணம் வடிவுதன்மை யாகுமொற்றே மெய்யாம்
பதியாய்தம் புள்ளிதனி நிலைபுலித மாகும்
பலதொடரே குளகமொரு தொடரேமுத் தகமாம்
குதிகீத மணுவழியி ராகங்கந் திருவங்
கொளைவரிகா மரம்பாட்டுப் பாணிபண்கே யமுமாம்
மதிபாலை யாழ்க்குறிஞ்சி யாழ்மருத யாழ்ச்செவ்
வழியாழாம் பண்பாடற் கேற்றகுரல் யாழே
**317
#11
குரல்துத்தங் கைக்கிளையே யுழையிளியே விளரி
குணிதார மேழிசையா மிடறுநாக் கண்ணஞ்
சிரநுதனெஞ் சொடுநாசி பிறப்பிடமே ழிசைக்காஞ்
சேர்நான்கு நான்குமூன் றிரண்டுநான் மூன்றே
யிருதொகைமாத் திரையவைக்கா நெடிலேழு மெழுத்தா
மிணர்மௌவன் முல்லைகடம் பேவஞ்சி நெய்தல்
விரைவீரை புன்னைமணம் பாறேன்க ளானெய்
வெறியேல மாதுளைவா ழைக்கனியுஞ் சுவையே
**318
#12
சுவைவண்டு கிள்ளைபரி கரிநுணலான் மேடந்
தொனியேழாம் விசுவாமித் திரன்யமன்முக் கதிரே
கவுதமன்கா சிபனீச ராமந்த வோசை
காகுளிமந் தந்தக்காமத் திமம்பஞ் சமமே
தவிர்துத்தஞ் சமனிசையாம் வல்லிசையே யுச்சந்
தாரமெச்சாங் கோடபதி விபஞ்சிகலங் கருவி
திவவுறுவல் லரியாழ்ப்பேர் வீணைதண்டு வாரி
சிறந்திடுகின் னரப்பேரா மதினிசை யெழாலே
**319
#13
எழுநரம்பு துயரிகுர னாடியுந்தந் திரியாம்
யாழ்வலிக்கட் டேதிவவு மாடகமென் பதுவே
பழகுமுறுக் காணியின்பே ரிசைக்குழல்வங் கியமாம்
பாட்டிரைகோ சனைசும்மை நாதமிடி யோசை
துழனியிசை யுரைபுலம்பு களனார வாரஞ்
சுருதியா குலமோதை தொனியியங்கோ டனையே
செழும்வெகுளி யரவமூ வேழுமொலிப் பேராஞ்
சிலையொலிப்பே ருழையுமரு மரஞ்சமுமாந் தெளியே
**320
#14
தெளித்தல்விம்மல் குமிறலிரட் டுதலரற்ற லோர்தல்
சிலம்பலியம் புதல்சிதைத்த லிசைத்தலே முழங்கல்
இளித்தலுரற் றுதலுரைத்த லிரைத்தலே யேங்க
லிடித்தல்குளி றுதறுவைத்த லலம்பலே கறங்க
லுழைத்தலழுங் குதறழங்க றொனித்தலே கதித்த
லுலம்பறெவிட் டுதல்கனைத்தல் புலம்பலே சிரற்றல்
பிளிற்றல்முக்கல் குருமித்த னரலலே நெளிர்தல்
பிரற்றலே பயிறன்முர லுதலுமொலித் திடலே
**321
#15
ஒல்லெனன் ஞெரேலெனல்வல் லெனன்மொகே ரென்னல்
ஒய்யெனல் வெடேலெனல்பொள் ளெனல்சரே ரென்னல்
கல்லென றிடீரெனலிம் மெனல்விரீ ரென்னல்
கம்மெனல் படீரெனல்பொம் மெனல்குபீ ரென்னல்
கொல்லெனலம் மெனலிழூஉ மெனலேபொள் ளென்னல்
கொம்மெனலு மனுகரண வோசையின்பே ராகுஞ்
சில்லல்கூப் பிடல்கத்தல் கதறலா முரப்பல்
தெளித்தலதிர்த் திடல்தட்ட லெனக்கடவ தாமே
**322
#16
கடகடென்றல் பகபகென்றல் மொளுமொளென் றலுடனே
கலகலென்ற னெறுநெறென்ற னெடுநெடென்றல் கடிதாய்ப்
படபடென்றல் மொடுமொடென்றல் சளசளென்றல் பின்னும்
பகபகென்றல் களகளென்றல் திடுதிடென் றலல்லாற்
றடதடென்றல் கொளுகொளென்றன் மொகுமொகென்றல் வேறு
சரசரென்றல் பரபரென் றல்கரகரென் றறானு
மடமடென்றல் வெடுவெடென்றல் கொடுகொடென்ற லிவைபோல்
வருவனவெல் லாம்விரைவி னோசையெனு மார்ப்பே
**323
#17
ஆர்ப்புக்கோ சனைகுமிறல் கோடனையே கொழித்த
லாகுலங்கோ லாகால முலம்பலே கலித்தல்
பேர்ப்பரற்ற லேகறங்க லொடுதமரம் பூசல்
பேரோசை திமிலகுமி லங்கலகங் குமுதம்
போர்ப்புரையப் படுத்தல்கள கனமுழற லபையம்
போராட்டம் பிறகடமா டம்பரமே சத்தங்
கூர்ப்புளசந் தடியேகம் பலையடா பிடியுங்
குரைத்தலுமா முப்பதும்பே ரொலியெனப்பேர் தொழுமே
** எட்டாவது ஒலி பற்றிய பெயர்த் தொகுதி முற்றும்
@9 ஒன்பதாவது செயல் பற்றிய பெயர்த் தொகுதி
**324
#1
தொழிற்கருமங் கன்மம்விதி செயல்வினைப்பே ரைந்தாந்
தொழிற்பயில்வு தொறுவாங்கா தரம்வினையின் தொடர்வாம்
இழைத்தல்பா ரித்தனிரு மித்தலே குயிற்ற
லியற்றலய ருதல்வனைத லாற்றல்செய லெட்டாம்
பழக்குசிட்டி சிருட்டிபிறப் பித்தல்படைத் தலின்பேர்
பண்ணைகெட வரல்பொய்தல் வண்டலுண்டாட் டோரை
யுழக்கிய விலாசனை கிரீடையுப்புக் கேளி
ரொன்பதொன்றும் பெண்கள்விளை யாட்டின்பேர் விரிவே
**325
#2
விரிபொழுது போக்குவிளை யாட்டுப்பா ராட்டு
மெய்ச்சல்வினோ தங்களித்தல் குலவல்கொண்டாட லின்பேர்
வரைதல்கடி கைப்பற்றன் மணம்வேட்டன் மன்றல்
வதுவைதீ வலஞ்செயல்கல் யாணம்விவா கப்பேர்
முருகுதுணங் கறல்விழாச் சாறுபுத்தேள் சேறு
மூவிரண்டுச் சபத்தின்பேர் மலரடைச்சல் செருகல்
சொருகலாம் வனைவணிவொப் பனைமலைச்சன் மிலைதல்
சூடல்வேய் வலங்கரித்தல் புனைவுமண்கை செயலே
**326
#3
கைதொடல்போ சனந்தின்றல் பொசித்தறுவ்வன் மிசைதல்
கவ்வல்பா ரணந்துற்ற லுணல்பருகன் மாந்தல்
துய்தினலே யமுதுசெய்த னுகர்வயிற லார்தல்
துப்பருந்த லேதுய்த்த லுண்டலெழு மூன்றா
முய்துநுங்கல் விழுங்குதற்பேர் துயில்கனா வளர்த
லுறங்கல்பள்ளி துயிறல்படல் கண்ணடைத்த லனந்தல்
வெய்துறுகண் படைதுஞ்ச னித்திரைதூங் கலின்பேர்
விடிந்தெழுப்ப லெடுத்தலே தெளித்தற்பேர்ப் பொருளே
**327
#4
பொருமல்விம்மல் கசிவுரோ தனமிரங்க லேங்கல்
புழுங்கல்கலு ழுதல்கலக்க மொன்பதழு தலின்பேர்
தருதல்கொடை வீசல்கடப் பாடிடுத லிகுத்தல்
தானம்வண்மை வேளாண்மை பகுப்புதவல் வேள்வி
அருளலுப காரநல்கல் விதரணந் தியாக
மளித்திட லுதாரம்வழங் குதல்பொழித லீகை
விரவுபணித் திடனீட்டல் கவிகைசிவி கையுமாம்
வேந்தர்வரை யாதுகொடுத் திடுதல்கொடை மடமே
**328
#5
மடக்கல்குத்தி முடக்கநொறில் முணங்கொடுக்கம் பாந்தம்
வலிதடக்கம் பதுங்கலுமாம் வதிதல்வைக லிறுத்தல்
விடுத்தலிறை விசித்தலல்க றாழ்தலுந்தங் கலின்பேர்
விடுத்தன்மோ சனமோக்கந் தீர்த்தலுயிர்த் தலுமாம்
இடுக்கல்பெற்றி யிழிவாமீக் கோளிவரே றுதலா
மிறங்கல்சுத மவதாரங் குனிவுகுரங் கலுமா
முடற்றல்சொலித் திடலாம்வீ சுதல்விலங்க லிடுத
லோச்சலெறி தலின்பேராம் பூய்த்தல்பிய்த்தல் காணே
**329
#6
காண்டறெரி சனநோக்கல் கண்ணுதலே பார்வை
காட்சிபார்த் தலின்பேராஞ் சிறக்கணிப் பபாங்க
மீண்டுகடைக் கணித்தலாஞ் சரிதையையம் பிடிக
மிரந்தபிண்டம் பலிபாகம் பயிக்கமும்பிச் சையின்பேர்
வேண்டல்குறை கோளேன்றல் வாங்கலிரத் தலின்பேர்
வேண்டாமாற் றுதல்காத்த னிறுத்தன்மறுத் திடலாந்
தோண்டலக ழுதல்கிளைத்த னொண்டறொட்டல் பிளிற
றொடுதல்கிள றுதலுமாம் பிடித்தல்பற்ற றொடலே
**330
#7
தொடுத்தல்பந்தம் யாப்பசைப்புச் சிமிழ்ப்பார்த்தல் வீக்க
றுறுவிசித்தல் பிணித்தல்கட்ட லொன்பதாங் கதுவாய்
வடுப்படலாம் விளம்பல்பா ரித்தலாம் பிறக்கு
வழுக்கயக்குச் சோர்வாகு மெறிதலெற்றல் குற்றல்
புடைத்தலுமாம் புடைத்தலே தகர்த்தல்குட்ட லாகும்
புதைத்தலே பொதிர்ப்புவீக் கமுமாகும் வதைத்த
லடித்தலே யறைதலெற்றன் மோதலழுத் துதலு
மதுக்கலுமாந் தூய்தாக்கல் சீய்த்தலாந் தெரியே
**331
#8
தெரித்தல்வரைந் திடல்பொறித்தல் கீறலே தீட்டல்
சிவக்கல்வரித் தலுமெழுத வாங்கணக்கி லேகை
வரித்தவரி பொறிபோய மிலிகிதமா காதம்
வன்னமெழுத் தக்கரமாங் கீழ்த்தல்குற்ற றேய்த்தல்
அரக்கல்சிதைத் தலின்பேர்மஞ் சனந்தோய்தல் குளித்த
லாடல்படி தலுநானஞ் செய்தலின்பேர் தேய்த்த
லுரைத்தலுரிஞ் சலின்பேரா மிமிழ்த்தலே தெவிட்ட
லுமிழ்த்தலுமாம் பறித்தல்குற்றல் களைத்தல் கட்டல் வழியே
**332
#9
வழிபடலற் சனையாரா தனையேபூ சனைப்பேர்
மகம்யாகங் கிருதோம மிட்டியெச்சம் யூபம்
பழியில்வேழ் வியின் பேர்வந் தனைவணங்கல் காணல்
பணிதல்வந்திப் பிறைஞ்சல்பணி தாழ்தலுந்தெண் டனின்பேர்
தொழுதலுங்கை கூப்புதலஞ் சலியொடுகும் பிடற்பேர்
சுகத்தாடல் சம்போக மைதுனங் கிரீடை
விழைவு புல்லுக் கலவியாலிங் கனமே கூட்டம்
விழைச்சியைதல் புணர்ச்சிமணந் தழுவன் முயங்குதலே
**333
#10
முயங்கிடத்திற் கூடியுமே கூட்டமில்லா திருத்தன்
மொய்த்ததொரு புலவியா மணுகாம லிளைஞோர்
மயங்கவுரை மறுத்தலே யூடலென வுரைப்பர்
மகிழ்நர்பிரிந் ததற்பின்னர் வாயிலடைத் திருத்தல்
இயங்குதலில் லாத்துனியும் புலவிநீட்ட முமாம்
இவ்வூட லொழிதலின்பே ருணர்தலொல்ல லாகும்
நயங்கொளும்பா டினிமுதலோர் புலவியொழிந் திடவே
நவின்றுவேண் டுதல்வாயி லென்றுபரிந் துரையே
**334
#11
பரிதலிசித் திடன்ஞெமிர்த லொடிதலே யிடிதல்
படவிறுத்த லிறுதலொசித் திடலகைத்தன் முறிதல்
முரிதலின்பே ரூழ்த்தன்மூ டுதல்கவித்தல் பாத்தல்
மொஞ்சல்மூ சுதலைந்தாங் கூசல்மட்கல் கெடுத
லிரிதலுடை வேதிட்க னெரிதலே ஞொள்க
லிடைவுதொங்கல் சாய்வுசரி தலுமோட லாகும்
அரிதல்சே தித்தல்விடு வாய்கெய்தல் சூலல்
அறுத்தல்கொய்தல் கத்தரித்தன் லீர்த்தலதின் பகுப்பே
**335
#12
பகுத்தலெற்றல் கண்டித்த றறித்தலே துமித்தல்
பரிதலே தடித்தல்வெட்ட லேழாகும் விரிய
லிகுத்தல்பரப் பலின்பேராந் தணித்தல்செம்மித் தலின்பேர்
எருக்கல்கா துதல்சவட்டல் மாரணஞ்சட் டித்தல்
செகுத்தல்வீட் டுதல்படுத்த லொழித்தலெற்றல் கோறல்
செவிட்டல்முருக் குதல்பன்மூன் றுங்கொலைசெய் தலின்பேர்
அகைத்தலுமா மூறணங்கு கோள்வேட்டங் கொலையா
மமர்வேட்டை பற்றியதா மமுக்கன்ஞெமுங் குதலே
**336
#13
குதித்தலின்பேர் மிதித்தலுக ளுதல்பாழ்த லுறுக்கல்
குப்புறலா முகைத்தலும்பல் கஞறலோ பொதுங்கல்
கதித்தலே பொலிதல்பாச் சலுமெழுச்சி யதின்பேர்
கதழ்வுவல்லை கதனமொல்லை துரியநொறில் கடுப்பு
விதப்புவிசை கடுகல்சண்ட முடுகல்ஞெள்ளல் கோரம்
வேகஞ்சீக் கிரஞ்சடுதி குத்திரமே கவன
மதிர்த்துனைவு துவறலோடு தாரைவிரை வின்பேர்
அறுமூன்று நான்குமெல்கல் தாழ்த்தல்மந்த முறலே
**337
#14
உறல்பொருந்தல் மருவலண்ண லிசைவுநண்ணல் யோக
மொல்லலிசைப் பணுகல்சிவ ணுதலல்க லியைவு
பெறலணவல் சார்வுதொட றுன்னல்கூ டலின்பேர்
பிரிவுணர்வு வரைவுவல்லி தணப்பொருவல் துறத்தல்
துறவிகடி நீங்கலொன்பான் குயிறலே தோளல்
துளைத்தல்திளைத் தலுமாந்தா பித்தனிலை செய்தல்
நிறுவறோன் றலுநிறுத்த லாந்தடவல் வருட
னீவலுந்தை வரலுமென மொழிவர்பா வலரே
**338
#15
வலத்தல்வா ரணநிணத்த லாணைதட்டல் முடைதல்
மாற்றல்வா ரித்தலொடு தடைதடுத்தல் தகைதல்
விலக்கலின்பேர் நெகிழலொல்லல் குழைவின்பே ரேவல்
வியங்கோளாங் கண்டூதி சொறியிரண்டுந் தினவாம்
பலித்தல்கிடைத் திடல்வாய்த்தல் பயப்பீன்றல் பெறலாம்
பரிசனந்தொட் டிடலூறு துவளல்திவ ளலுமாங்
கலத்திடல் வளாவுத லளாவுதல் துளாவல்
கலம்பகஞ்சங் கீரணங் கலாவலுமென் றியலே
**339
#16
இயற்றலுத்தி யோகமுஞற் றூக்கந்தா ளாண்மை
யியலுழப்புச் சாயமாள் வினைமுதுமை தாள்வு
முயற்சியதாம் பேராண்மை யருமையிட லோங்கி
முடித்தலூ ராண்மையதா முண்டாதல் பூத்தல்
பயத்தலுமாம் பிறகிடலே பிறக்கிடல்பின் றலுமாம்
பாதீடு பெய்தலளித் திடல்செறித்தல் மூன்றாம்
வெயர்த்தலே கசிவுவேர் வாஞ்சுவே தமுமாம்
விற்றல்பக ருதல்மாறல் நொடைவிலைசெப் பகவே
**340
#17
வேயெனுஞ்சொல் லொற்றாகு ஞொள்கல்சிங்கல் போகல்
மெலிவுகிரி சந்தேம்பல் நாம்பலிளைத் தலின்பேர்
காய்தல்வறத் திடல்முளித்த லுலறல்முதி ரலுமாம்
காலலுமிழ்த் திடல்பில்கல் பிளிற்றலுங்கொப் பளிப்பாம்
மாய்தலே வரணமிவை மறைதலாந் தெற்றல்
மாறுபா டாம்பொல்லந் துன்னமாஞ் சங்க
மாயமே யுல்குசா ரிகையுமாம் பிணக்கே
யரில்வாரந் துவக்குமற னாற்பேரா வனவே
**341
#18
ஆவிவிடல் மாளுதல் சமாதிபொன்றல் முடித
லவன்றல்யோ கந்தபுத லிலலிறத்தல் மரணம்
வீவுதுஞ்சல் மாய்வுமுஞ்சல் சாவுமூ வைந்தாம்
விளிவுமாம் பரிகரிவக் கிரமாறல் சேறல்
தாவுமீண் டிடலைந்தாஞ் சம்பிரதஞ் சித்தாந்
தரித்தல்பரித் திடல்பொறுத்தல் தாங்கல்சமத் தலின்பேர்
வாவறா வுதல்கடத்தல் தாண்டல்தத்த லாகும்
வளைத்தல்சுற்றல் சூழுதல் வளாகமெனத் தெருளே
**342
#19
தெருட்டலுடன் வருட்டலும்வற் புறுத்தலாம் வரன்றல்
தெள்ளல்கொழித் திடலாகும் பூட்கைமேற் கோளா
முருத்தல்பொடித் திடனாறன் முளைத்தலா நூக்க
லூன்றனொன்ற லுந்தள்ள லாம்பாது காத்தல்
புரத்தனிலை பெறலோம்பல் திதிநோக்கங் காத்தல்
போற்றலுமா மரண்காவல் கட்டிகத வேம
மிருட்கடியே வேலிசே மமுங்காப்ப தாகு
மிளைதலைகா வற்பெயரென் பார்தமிழ்ச்சொல் பவரே
**343
#20
பவனிக்கே பேருலாப் போதலாம் வழங்கல்
பயிறலுல வலின்பேராந் தூய்மைசெய்த லுடனே
யுவனித்த லிரண்டுமுவ லாளனத்தின் பேரா
முவளலசைந் திடறிவண்ட லொசித்தறுவண் டிடலா
மவுனப்பேர் மோனம்வா ளாகோளா வாகும்
வரியிறை கறைகடனுங் கரங்குடியு மிறுப்பாங்
குவிதற்பேர் சாம்பல்கூம் பலுமொடுங்க லாகுங்
குறைதிறைகப் பமுந்தெவ்வர் பாகுடத்தின் கவர்ப்பே
**344
#21
கவர்தலே குடைதன்ஞெலி தலுங்கடைத லாகுங்
கட்டலே சோர்வுபட்டி கரவுகர வடமே
சவுரியமே படிறுதிருட் டொடுகள்ளல் கரப்புச்
சாங்கந்தே யங்களவு தேனுவுமே களவாம்
துவர்தல்கீ றுதல்கீழ்தல் கீண்டல்வகிர் பிளத்த
றுணிகீன்றல் கீறல்போழ்ந் திடல்பீறல் கிழிவாம்
நவிதலவித் திடனதுத்த னொதுத்தலுமற் றதற்கா
நாடனே டுதறுருக்கை யரிக்கொளல்தே டுதலே
**345
#22
தேடுமல மரல்சொரிதல் மறுகன்ஞொட்க றிரித
றெருமரலே பிரமரிசூர்த் தலுஞ்சுழற லாகு
மோடனீ ளுதனீண்ட னிமிர்பாற னீட
லோராறா நேரோட லாதிவீ தியுமாம்
வாடலில்வெம் பரியோட்ட மண்டிலமே சாரி
மாதிவா ளியுமாகும் பாதீடு தான்பங்
கீடுபகுப் பேபாத்துப் பாகமும்பங் கிடலா
மேற்படலொட் டுதல்வலித்த னேரலுடன் படலே
**346
#23
படர்ச்சியிவ ருதலேக லொதுக்கமில்லல் சேறல்
படர்தலியங் குதல்வழங்கல் போதலா மிறத்தல்
கடத்தல்விடுத் திடல்பிரிதன் மறுங்கலே தணத்தல்
கழித்தலிகந் திடனீங்க நீர்தன்மூ வேழு
நடப்பதாங் கவர்தல்வவ்வல் கொளலும்வா ருதலா
நறிதாக்கன் முண்டிதமே மழித்தல்சமைத் திடலே
வடித்தலின்பேர் நுடக்கலே துவட்டலா மூட்டன்
மாட்டல் பொத்த லிரண்டாகுஞ் சரணமறை புகலே
**347
#24
மறனிகல்சல் லிகம்பூச லார்ப்பமர்தெவ் வுடன்றல்
மலைப்பிரணந் தாக்கோறல் கிடைத்தன்ஞாட் பேற்றல்
செறல்முடுகல் போர்பொருத லாயோதந் தும்பை
தீய்த்தல்வினை முரண்கூட்ட மொய்செருநேர் கிட்டன்
முறுகலா கவஞ்சமமே தலைப்படன்மண் டுதலே
முட்டல்சமர் சங்கிரா மஞ்சண்டை யிடற்பேர்
உறவின்மேற் சாராமை தழிஞ்சியாம் பகையை
யொறுத்தல்வள்ளை யாஞ்சுடல்சந் தாபந்தூ பிதமே
**348
#25
தூவலுகுத் திடல்சிதர்த்தல் சிதந்தலூழ்த் தலுமாந்
துண்டலெய்த லுகைத்தனட வுதல்கடவல் கைத்தல்
ஏவலுய்த்த லொட்டலூர்ந் திடல்செலுத்தல் பத்தா
மிடைவெட்டா றலையதர்கோள் வழிப்பறியாம் வழியின்
மாவெதிர்ப்பாற் றுப்படையாந் தரல்கொடுபோ யிடலாம்
வலியழித்த லாற்றறுத்த லேமடித்த லுழற்ற
லாவதுழக் குதலாகு ஞெகிழ்தன்ஞொள்க லலைய
லாஞ்சியலை சலின்பேரா மென்றுநா டுகவே
**349
#26
நாடகந்தாண் டவங்கண்ணுள் வாணிநடி நிருத்த
நடநடனம் படிகநாட் டியந்தூக்குத் தூங்கல்
ஆடலா லுதல்பெயர்த லகவனடை நடித்தல்
அசைவேநட் டணையாட்டுக் கூத்துமூ வேழாம்
பாடிலையம் பித்தம்வீ ரட்டானங் கடகம்
பவுரிகர ணம்பரதம் பிரமரியே புரிய
மோடலைப்புள் ளாளங்கூத் தினில்விகற்பாம் பழக
லுழத்தல்பரு மித்தல்சிர மஞ்செய்த னடையே
**350
#27
நடனமதிற் கொடுகொட்டி தாண்டவம்பாண் டரங்க
நந்திகூத் தாங்கபா லமுமாமால் கூத்தே
குடமல்லோ டல்லியமாம் பாவைசெல்வி கூத்தாம்
குடைதுடிசேய் கூத்தாந்துற் கையின்கூத்து மரக்கால்
கடையமே சசிகூத்தாம் பேடுமதன் கூத்தாங்
கருதுதுடி யேழ்மாதர் கூத்திருக்கை பழுவின்
புடையொற்ற றுணங்கையதாங் குரவைகைகோத் தாடல்
புதுவெறியாட் டணங்குவெறி கழங்கும்வாய்த் தனவே
**351
#28
வாயினிற்கை யாற்றட்ட லாவலங்கொட் டுதலாம்
வட்டித்த லொற்றறுத்தல் வட்டணைதட் டலுமாம்
ஆயகுடங் கைகொட்டிக் குவித்தல்கொம்மை செங்கை
யதைக்குவித்துக் கொட்டலாந் தாளவொத்துச் சதிசீ
ரேயதுவாங் குடந்தங்கை கூப்பிமெய்யைக் கோட்ட
லேகபதங் குந்தித்தல் குஞ்சித்த லாகும்
பாயுமசைத் தலின்பேரே துயல்வரலொ டசனைதல்
பாழல்சொரி யலுமாகு நாற்பெயரொற் றுமையே
**352
#29
ஒற்றலுடுத் தலின்பேராங் கொட்டலே சாத்த
லுடன்சதுர்த்த லப்பலின்பேர் மூன்றாகும் பூசல்
தெற்றுபுலர்த் துதல்வரித்த லிரண்டாகும் வைத்தல்
தெறுத்தல்நெரித் தலின்பேரு மிரண்டாகு மிறுக்கல்
தற்றுதலாங் கொள்ளைகொண்டி குறையா முரோசல்
சார்ந்துராய்ப் போதலுரிஞ் சுதலாஞ் சுவாச
மற்றும்மல் மூச்சாமா வித்தல்கொட்டா வியின்பே
ரலதுமிழ்த்த லூற்காரங் காறல்சத்தி யகல்வே
** ஒன்பதாவது செயல் பற்றிய பெயர்த் தொகுதி முற்றும்
@10 பத்தாவது ஒருசொற் பல்பொருட் பெயர்த்தொகுதி
** ககர வெதுகை
**353
#1
அகரமெழுத் தூராகு மகம்வேள்வி நாளா
மகமிடமுண் மனம்பாவ மனைமரங்கள் விலையாஞ்
சிகரமலை முடிகவரி மதிழ்தலைவெற் பலையாஞ்
சிகழிகைவா சிகைமாலை மயிர்முடிமுப் பெயராந்
தகர்விலங்கி னாணுடைத லாடெனமுப் பெயராஞ்
சகம்பூமி யாடிரண்டா நகந்தருவெற் புகிராம்
புகர்வெள்ளி நிறமாசா மொகரமயி லெழுத்தாம்
பொகுட்டேகன் னிகைசேற்றிற் குமிழ்வெற்பாய்ப் பகரே
**354
#2
பகங்கொக்குக் கான்கோழி பகுப்புடன்பெண் குறியாம்
பகலொளிதி வாமுகிழ்த்த நடுச்சுடர்நாட் பகுப்பா
முகந்திசைவத் திரமாகு நுகநுகக்கோ லலமா
முகடுவெரின் முகடுயர்வாம் பகர்தல்விற்றல் சொலலா
மிகம்புவியிம் மையுமிருபே ருகநுகம்பார் யுகமா
மிகவசைச்சொ லகறலும்பே ரகியரவோ டிரும்பாம்
ககங்கணைபுட் பொதுப்பெயரா மகிழ்வகுள மகிழ்வாங்
ககனங்கான் படைவிசும்பென் றொருமூன்றாம் விகற்பே
**355
#3
விகடமுயர் விகிர்தமுமாந் தகடிலையைம் மையுமா
மிகைகுற்ற மிகன்மேடா நகைநகைதே சுவப்பாம்
பகடுபுணை பெருமைகரி யேறொடு கிடாவாம்
பகவனே தெய்வமுமும் மூர்த்திகளு மாகு
மகடுவயின் புறநடுநீ டுதலுள்ளோ டைம்பே
ரகவலா சிரியமயிற் குரல்கூத்தென் றாகுஞ்
சகடமுரு ளூர்க்குருவி ரோகிணியோ கமுமாந்
தகைபெருமை யழகன்பு தடைபண்பா மகளே
**356
#4
மகரமிற் சுறாக்கொங்காஞ் சுகமின்பங் கிளியாம்
மகரந்தங் கள்ளுத்தேன் மலர்த்தாது முப்பேர்
இகல்பகைபோர் வலிநிகராஞ் சிகைகுடுமி கழுகா
மெஃகுருக்கு வேலாழி படைக்கலன்கூர் மையுமாம்
புகல்குதிர்சொல் லுடல்கெதிபக் குவம்அடல்புக் கலுமாம்
புகைபுகையோ சனையாகுந் திகைசுணங்கு திசையாஞ்
சிகரிவெற்பு நாரையெலி கோபுரநாற் பேராந்
திகிரிமலை வேயாழி வண்டில்வட்ட நிகழ்த்தே
**357
#5
நிகழ்நிகழ்ச்சி யொளியாகு மகணிவய லுள்ளாம்
ஞெகிழிசிலம் பனலனலின் பொறியறைகொள் ளியுமா
மிகுளைசுற்றந் தோழிநட்பா மகலகற்சி விளக்கா
மிகுத்தல்விளி வீர்தல்கொலை வீழ்த்தலழைத் தலுமாஞ்
சகலமுற்றுந் துண்டமுமா மகலமுரம் விரிவாஞ்
சகுந்தமே கழுகுபுள்ளின் பொதுப்பூக முப்பேர்
சிகிமயில்நூ புரங்கேதுத் தீயெனநாற் பேராஞ்
சிகண்டிமயில் பாலையாழ்த் திறமுமாஞ் சகத்தே
**358
#6
சகுனிநிமித் திகன்புள்ளா மகன்சுதனிந் திரனாஞ்
சகுனமே பறவைகிழங் கொடுநிமித்த மூன்றா
மெகினமே புளிகவரி நாயன்ன மாவா
மிகலனரி பகைஞனுமாந் துகள்பொடிமா சிரண்டா
மகலுள்பரப் பூரகல நாடெனநாற் பேரா
மகைத்தல்வே தனையொடித்த லறுத்தலழித் தலுமா
முகரிபொன்னோ ராறாகுஞ் சகிதோழி பொறையா
முகைதிரள்பூ மொட்டுமிடா மூன்றெனவா கினவே
**359
#7
ஆகுவே மூடிகஞ்சா மரையெலிமுப் பேரா
மாகமார் புடலாகும் போகில்புட்பூ மொட்டாம்
பாகுபா கன்குழம்பு பாக்குப்பால் பகுப்பாம்
பாகலே காரவல்லி யோடுபலா மரமாம்
வாகுதோ ளழகாகும் பாகமையம் பகுப்பாம்
வாகைமரஞ் செயம்பண்பாஞ் சேகுகாழ் விதையாஞ்
சாகம்வண்டு தேக்காடு சிறுகீரை தானாஞ்
சாகரஞ்சிந் துறங்காமை யாமிசைக்கோ கிலமே
**360
#8
கோகிலம்பல் லிகள்குயிலா நாகிளமை சங்காங்
கூகையோர் செடிபுள்ளாம் பூகமுண்டங் கமுகாம்
போகிபாம் பிந்திரனாம் போகல்நெடில் போக்காம்
போகமே பாம்புடலும் போகவிகற் பமுமாம்
யூகமே குரங்குபடை யுணர்ச்சிதற்க முவப்பாம்
யோகம்பா வனைகூட்ட முயர்ச்சியுபா யமுமாந்
தோகைமயில் மயிற்பீலி விலங்கினாண் பெண்ணாஞ்
சோகமய லொடுதிரளா நாகரிக மாதே
**361
#9
நாகமலை கரிபுன்னை குரங்குவிசும் பரவு
நல்லாடை காரீயஞ் சுவற்கமொன்பான் பேராஞ்
சீகரநீர்த் திரைகரகந் திவலைசா மரையாஞ்
சேகரமா மரமகுடந் தலைவேர்கூட் டமுமா
மீகையிண்டை கொடைபொன்னா மாகுலநோ யொலியா
மேகமே தனிமையொன்றாங் காகுளியார்ப் பணையாங்
கேகயமோர் பண்கமல மயிலசுண நாடாங்
கிண்டுநா கரஞ்செழுகஞ் சுக்கோரக் கரமே
**362
#10
அக்கென்பு சங்குமணி விடைமுரிப்பு மணவா
மக்கம்விழி மனவிரண்டாஞ் சொக்கழகு மயலா
மிக்கென்ப கரும்புகள்ளாஞ் சுக்கைதா ருடுவா
மெக்கல்குவிந் திடல்சொரிவா மொக்குள்குமிழ் முகிழாஞ்
செக்கென்ப தொருநாளுஞ் செக்குமிரு பேராஞ்
சிக்கஞ்சீப் புறிசிகையாந் திக்குவிழி திசையாங்
கொக்கென்ப பகஞ்செந்நாய் பரிமூல மாவாங்
குக்கில்செம்போத் தொருமருந்தென் றிருபேர்வக் கணையே
**363
#11
வக்கிரமே மடங்கல்வட்டங் கொடுமைபொறா மையுமாம்
மக்கள்சிறார் மானிடரா நக்கலுண்டல் சொரிவாஞ்
சக்கரமே மலைவண்டில் பெருமைவட்ட மாழி
தரைபிறப்புக் கடலோர்பு ளொன்பதுபே ராகும்
பக்கமே சிறகுநட்புத் திதியருகு நாற்பேர்
பக்கணமூண் வீதியுமாந் தெக்கணந்தெற் குரனாஞ்
சக்கிரிமா லரவிறைவன் மட்பகைசெக் கானாஞ்
சார்ந்தநக்க னிருவாணி சிவனிருபே ராக்கே
**364
#12
ஆக்கமலர் மகள்திருவாம் பூக்கமூர் கமுகாம்
அக்காரம் புடவைவெல்ல மெனவிரண்டு பேரா
மூக்கமே யுற்சாக முயற்சிவலி பொலிவோ
டுள்ளத்தின் மிகுதியென வைந்துபே ராகும்
மேக்குமேற் றிசைமேலாம் பாக்கிடைச்சொல் பாக்காம்
வியந்திடுகைக் கிளையிசையு மொருதலைக்கா மமுமாஞ்
சேக்கைமுலை யுறங்கிடமா நோக்கழகு விழியாஞ்
செழுந்தூக்கா ராய்வுநடங் கவிநிறையங் கமுமே
** ககரவெதுகை முற்றும்
** ஙகர வெதுகை
**365
#13
அங்கமுட லாறங்க மெலும்புகட்டி லுறுப்பாம்
அங்கிசட்டை நாளெரியாம் பங்கிகஞ்சா மயிராஞ்
சங்கம்வெற்றி சுகங்கணைக்கால் புலவர்சங்கெண் சவையாஞ்
சங்குபடை வளைசங்காங் கங்குதினை பருந்தாம்
புங்கமம்புக் குதையம்பு புடவையுயர்ச் சியுமாம்
பொங்கர்மரக் கொம்பிலவாம் பொங்கல்மிகை கொதிப்பாம்
வங்கம்வெள்ளி யீயம்வழு துணைபுணையோர் நாடா
மங்குலிருள் கார்விசும்பாம் பொன்பொருமங் கனையே
**366
#14
அங்கதந்தோ ளணிபாம்பு வசைச்சொல்லென் றாகு
மங்கணமோர் பாலமுற்றஞ் சலதாரை சேரு
மிங்கிதமே நயங்குறிப்பாஞ் சங்கையைய மதிப்பா
மிங்கிவண்கா யமுமாகுஞ் சங்கரன்மால் சிவனாந்
திங்கள்மதி மாதமதாம் பிங்கலம்பொன் பசப்பாஞ்
சிங்களமே முசுநாடாங் கொங்கைகொப்பு முலையாம்
பங்கநற்றூ சொடுபழுது சேறுபின்ன நான்காம்
பங்குமுடம் பாதிபக்கஞ் சனியாகும் பாங்கே
**367
#15
பாங்குபக்கஞ் சகியழகாம் வாங்கல்கொள்ளல் வளைவாம்
பங்கயம்பார் தாமரையாஞ் சிங்கல்குன்றல் மெலிவா
மோங்கல்வெற்புத் தலைவன்மே டுயர்வோங்கல் வேயா
முரைதூங்கல் சோம்பானை துயில்நடந் தராசா
ஞாங்கர்வேல் பக்கமுன்பு மேலெனநான் காகு
நல்லாங்கவ் விடநிகராங் காங்குசுரங் கறுப்பாம்
வேங்கைபுலி பொன்கணியா மூங்கில்வேய் நாளாம்
விளம்புகாங் கேயன்வீட் டுமன்குகனென் றசையே
**ஙகரவெதுகை முற்றும்
** சகர வெதுகை
**368
#16
அசிசிரிப்பா யுதம் வாளாஞ் சுசிசுத்தங் கனலா
மாசுவிரை வாசுகவி கவசமற்பந் தீதாம்
பிசியுணவு பொய்யாகு மசலைபுவி யுமையாம்
பிசினனே பொய்யனுலோ பன்கோளன் முப்பேர்
வசிகூர்மை வசியம்வா ளேவலும்வீ தியுமா
மாசுகுற்றஞ் சிறுமைமழை யழுக்கெனநாற் பேராஞ்
சசிமதிகற் பூரமிந்தி ராணியென மூன்றாந்
தாசிநா ளடிமையும்வே சையுமாம்பார் மிசையே
**369
#17
மிசையுணவு மேடாகும் பசிபசப்புப் பசியாம்
வீசலெறிந் திடலீவா மூசலுஞ்சல் சளிப்பாம்
அசனமுணா வேங்கையுமா நிசிபொன்மஞ்ச ளிரவா
மாசினி பலாவயிர மரவுரிவிண் சிறப்பா
முசலிபல பத்திரனு முடும்புதா ழையுமா
மூசல்சா மொய்த்திடலாம் பாசுவேய் பசப்பாம்
இசையொலிசொற் புகழ்பாட்டா மசுணமயில் புள்ளா
மெச்சமகங் குறைசேயா மிச்சைமிடி வசையே
**370
#18
வசதியூர் வீடிதமாங் கசிவிரக்கங் கசிவாம்
வாசமிருப் பிடமணம்புட் சிறகுசீ லையுமாம்
அசனியிடி யுண்பான்வச் சிரப்படைமுப் பெயராம்
ஆசைதிசை யன்புபொன்னா மாசுகங்காற் றம்பாம்
பிசிதநீ ரிறைச்சியுதா ரணம்வேப்ப மரமாம்
பிச்சமயிர் குடையின்பே ருச்சியுச்சி முடியாம்
விசையம்வெற்றி சூரியமண் டலங்கிரிசற் கரையாம்
விச்சைவிதை கல்வியதாங் கொச்சைதக ரசடே
**371
#19
அசந்தகருங் குதிரையுமூ வாட்டை நெல்லு மாகும்
அச்சமே பயந்தகடஞ் சலியகத்தி நாற்பேர்
வசந்தமண மிந்திரன்மா ளிகைதென்றல் முப்பேர்
வாசிவளங் குதிரைதெற்குக் குழலோசை நாற்பேர்
விசும்புபொன்னு லோகமுகில் விண்ணுடனே திசையாம்
விசைதுரியம் பொறியாகுங் குசைநாணல் சுவலாங்
குசந்தனஞ்சம் பிரந்தொட்டி தசும்புமிடாக் குடமாங்
கோசிகமோர் மறையாடை யென்பர்தே சிகரே
**372
#20
தேசிகன்றே சாந்திரியா சான்வணிகன் முப்பேர்
தேசிகம்பொன் காந்தியழ கோர்திசைச்சொல் கூத்தாங்
கேசரமே மகிழ்மரமும் பூந்தாது மாகுங்
கேசமே மயிர்கவுளாங் கீசகம்வேய் குரங்காங்
காசைகுசை யஞ்சனியாங் காசுமணி மறுவாங்
கச்சையே தழும்புகவ சங்கயிறு மூன்றாம்
பாசமுறை யன்பூசித் துளைபேய்பார் கயிறாம்
பாசியணி நாய்வருணன் சடைச்சிபற்றுப் பாசே
**373
#21
பாசனமுண் கலன்பாண்டஞ் சுற்றமென மூன்றாம்
பச்சைமர கதம்புதன்மா லோர்செடிதோ லைம்பேர்
கோசமுட்டை முறைகுறிபண் டாரமதி லுறுப்பாங்
குணிசெச்சை யாடுவெட்சி தேய்வையுமுப் பேராந்
தூசுகலை புரசைதூ சிப்படைமுப் பேராஞ்
சொற்றிடும்வச் சிரங்குலிசங் கள்ளிவயி ரமுமாம்
பேசுநொச்சி யூர்சிந்து வாரமதி லாகும்
பின்வசுப்பொன் வசுக்களான் கன்றனல்வஞ் சியரே
** சகர வெதுகை முற்றும்
** ஞகர வெதுகை
**374
#22
வஞ்சிகொடி மரம்பாவூர் மேற்செலவு பெண்ணாம்
வஞ்சம்வாள் கபடமுமாம் பஞ்சமிடி யைந்தாம்
இஞ்சிமதி லாத்திரமா நெஞ்சுமன மார்பாம்
எஞ்சல்குறை விழைத்தலுமாங் கஞ்சிகஞ்சி யூராங்
குஞ்சிகுன்றி சேய்மயிர்புட் பார்ப்பொடுநாற் பேராங்
குஞ்சமீ யோட்டிதொங்கல் குறளைகுன்றி படியாங்
கஞ்சனமே கரிக்குருவி கண்ணாடி யிரண்டாங்
கஞ்சனயன் கன்னானட் டுவன்கஞ்ச னாமே
**375
#23
கஞ்சமரை தாளமப்பங் கஞ்சாவெண் கலமாங்
கஞ்சிகையே யிடுதிரைவத் திரஞ்சிவிகை யாகும்
அஞ்சலிவவ் வாற்றொழலாம் வஞ்சனைபொய் சூரா
மஞ்சனமை கறுப்பொடுதிக் கானையிலொன் றாகு
மஞ்சரியே பூங்கொத்து மாலைதளி ராகு
மஞ்சுபூண் வனப்புவலி முகில்யானை முதுகாந்
துஞ்சல்வலி நிலைபேறு துயில்சோம்பு சாவுந்
துஞ்சியிருப் பதுமாறாங் கிஞ்சுகவா யணங்கே
**376
#24
கிஞ்சுகமென் பதுமுருக்கு முதலைசிவப் பாகுங்
கிளர்காஞ்சி மேகலையூர் மரமெதிரூன் றலுமாம்
முஞ்சுதலென் பதுசாவு மொய்த்திடலு மாகு
மொழிநாஞ்சி லென்பதுவே கலப்பைமதி லுறுப்பாம்
பஞ்சரம்வாட் கோரைபுள்ளின் கூடுசெருந் தியுமாம்
படுங்கஞறல் பொலிவுகுன்ற லெழுச்சியென லாகுந்
தஞ்சமெனு மொழிபற்றுக் கோடெளிமை யாகுஞ்
சாற்றுமஞர் துயரறிவி லோராமிவ் விடத்தே
** ஞகர வெதுகை முற்றும்
** டகர வெதுகை
**377
#25
இடம்வாமம் பொருளிடமாஞ் சடமுடல்பொய் யாறா
மிடபமரக் கொம்பெருதா முடிமகுடந் தலையாங்
குடமூர்தற் கரைகும்ப மால்கூத்துப் பசுவாங்
குடிஞையே கூகைபுள்ளின் பொதுநதிமுப் பெயராந்
தடமலை விசாலஞ்சீர் சுனையடிகோண் பெரிதாந்
தடிவயல்வில் லூனுடும்பு தண்டுலக்கை மின்னாந்
திடநிசமும் பெலமுமாம் விடநஞ்சு தேளாஞ்
செடிசிதைவு கான்பாவங் குணமின்மை கடனே
**378
#26
கடம்வழிகான் குடங்கயிறு கடனீதி முழவு
கரிக்கதுப்பு மதமானைத் திரளுடல்பன் னொன்றாம்
படமுடுக்கை கொடிபாம்பின் படங்கோலக் கிளியாம்
படர்நினைப்பு நடைதுயரம் வீரர்நாற் பேராம்
மடமுனியிற் பேதமையாங் குடைகவிகை குடைவாம்
மடலுலா மடற்பூவி னிதழ்பனையே டாகும்
நடலைபொய்வஞ் சனைநுடக்காம் வடமுழுக்கால் கயிறாம்
நடைவழியே யொழுக்கநடை செல்வமாங் கொடியே
**379
#27
கொடிறுபூ சங்கதுப்பாம் படிறுபொய்யே கனவாங்
கொடிதுவசங் காக்கைவில்லாங் குடிகுலமூர் நுதலா
மடிவயின்சோம் புடைதாழை மடங்குதல்சா வறுபேர்
மடைசோறுங் கடைப்பூணும் புனன்மடையு மாகுந்
தொடிவளைகி லொருபலமாம் படிவநோன் புருவாந்
துடியேலங் காலநுட்பம் பறைமுப்பே ராகும்
வெடிபுகையே யிடிவெடித்தல் வெளிபயமைம் பேராம்
விடர்கமர்கான் முளியிருப்புத் தூர்த்தர்மலை விடவே
**380
#28
விடைவிடலே றெதிர்மொழியாங் கிடைகிடப்புக் குழுவாம்
விடங்கமேர் கொடிகொடுங்கை படங்குகொடி வானி
கடைமுடிவங் காடியிடம் வாயில்கடை தலுமாங்
கடிகைதுண்ட நாளிகையோர் குலங்கதவிற் றாழாம்
படைகலனை யாயுதங்கண் படைசேனை யலமாம்
படுவிகுளங் கள்விற்பாள் நொடிபிதிர்வார்த் தையுமாம்
அடையிலைசும் மாடடுத்தல் கணம்வழியப் பமுமாம்
அடர்நெருக்கம் போர்தகடாந் துடர்மாலை துடர்பே
**381
#29
துடவைகொலை யுழவின்பே ரடல்கொலைபோர் வலியாந்
தொடுமருதந் தோட்டமுமாங் குடுமியுச்சி மலையாங்
கடகமதில் வளைசேனை கரித்திரள்வட் டமுமாங்
கடுவிடமுட் கசப்பரீ தகியுநாற் பேராம்
படிபகைபார் நிகர்குணஞ்சோ பானமங்க வடியும்
பாரமும்வா யிற்படியும் படிவுநா ழியுமாஞ்
சடிலமே சடைகுதிரை செறிவுநெருக் கமுமாஞ்
சடை வேணிவேராகுந் தொடைதார்நாண் வடமே
**382
#30
வடகமுல்லா சந்தோலாம் விடலைமன்ன னுடைவாம்
வடுச்செம்பு தழும்புவண்டா முடுக்கைதுடி யிடையாஞ்
சுடிகையுச்சி முடியணியாம் வடுகிசையாழ்த் திறமாஞ்
சுடரொளிமுக் கதிராகும் பிடிகமையம் வளையாம்
படலிகையோர் மணிவட்டம் பீர்க்குப்பூந் தட்டாம்
படலைபரி மணிமாலை படர்வொருகட் பறையாங்
கடிவடிவு விரைவையங் கூர்மைபேய் விளக்கங்
காலமணம் பயங்காப்புப் புதுமைநீங் கிடலே
**383
#31
இடைநிறையே நடுமருங்கு லிடமுநாற் பேரா
மிடக்கர்மறைச் சொற்குடமாம் படப்பைகொல்லை யூராம்
படுதலொலி சொலல்பூத்த லின்மையுண்டா தலுமாம்
படுமரத்தின் குலைகள்ளு நீர்நிலைநன் மையின் பேர்
அடிமுதல்கால் செண்டுவெளி யடிமைகவிப் பதமா
மடுப்பொருநா ளடுத்தலச்ச மடுப்பொடுநாற் பேராம்
வடவைபிடி யெருமைதீத் திரள்பரிப்பெட் டையுமா
மடங்கலுக மிமனிடிதீச் சிங்கநோய்ப் பாடே
**384
#32
பாடுபக்கம் படுதலொலி பெருமைவாய் பாடாம்
பாடிபா சறையூரா நாடிகன்னல் நரம்பா
மாடுபுடை செல்வப்பே ராடுவெற்றி தகரா
மாடமனை யுழுந்தின்பேர் வாடைதெருக் காற்றாங்
கோடிகமே பூந்தட்டுஞ் சீலையுமா மிருபேர்
குடம்பைமுட்டை கூடாகு முடன்றல்சினம் போராஞ்
சேடுநன்மை பெருமையே யழகுதிரட் சியுமாஞ்
சேடனோர் குலமனந்தன் பாங்கனுங்கூ டியவே
**385
#33
கூடமனை மலையுச்சி கவடுசம்மட் டியுமாங்
கோடுவளை வயிர்குவடு கரைமருப்புக் கொப்பாம்
ஓடைநீர் நிலைக்கிடங்கோர் மரம்பட்டங் கொடியாம்
உடுவிண்மீன் கிடங்குமரக் கலவிசியம் பீர்க்கா
மீடுவமை குழைவுவலி பெருமைநாற் பேராம்
இடங்கர்குடந் தூர்த்தர்சிறு வழிமுதலை நாற்பேர்
பீடிகையா சனபீட மாவணந்தட் டாகும்
பெட்டலிச்சை செறலுமா நட்டநடங் கேடே
**386
#34
கேடகமே யூர்பலகை பரிசைமூன் றாகுங்
கிடுகுதேர் மரச்சுற்றுங் கேடகஞ்சட் டமுமாம்
கோடைகாந் துகங்குதிரை மேல்காற்று மாகுங்
கோடரம்வா னரஞ்சோலை குதிரைமரக் கொம்பர்
மோடுமே டுதரமதாஞ் சேடியூர் சகியா
முடங்கல்வேய் முடங்குதனோய் தாழைநாற் பேராம்
ஆடியுத்தி ராடமா தங்கண்ணா டியுமாம்
ஆடல்கூ டுதல்வென்றி கூத்தெனுஞ்சா டுரையே
**387
#35
சாடிகோ ளுரைதாழி சீலையுமுப் பேராஞ்
சட்டிபக்கம் விசளையுமாங் கட்டிவெல்லஞ் சுகமாம்
கோடிபுதி தெண்கலைப்பே ராடகம்பொன் றுவரை
கோடகமே முடியுறுப்புக் குதிரைபுது மையுமாம்
பாடலம்பா திரிதுரகஞ் சிவப்புமுப்பே ராகும்
பட்டுநகர் சீலையின்பேர் வெட்சிபுதல் புறமார்
தோடுபனை மடல்கூட்ட மலரிதழ்கா தணியாந்
தோட்டிகத வோடுகரித் துறோட்டியுங்கட் டினரே
**388
#36
கட்டளையே நிறையறித லுரையறித லொப்பாங்
கடவுள்முனி தெய்வமொடு நன்மையென மூன்றாந்
தொட்டலே தொடுதல்தோண் டுதல்கை தீண் டலுமாஞ்
சுட்டல்குறி சுடுதலின்பேர் மட்டளவு கள்ளாம்
நட்டலே நடுதலொடு நட்பியற்றுந் தொழிலாம்
நாட்டம்விழி பண்வாளா மோட்டமிதழ் தோல்வாந்
தட்டைகிளி கடிகோல்வேய் தினைத்தாள்முண் டமுமாஞ்
சட்டமே பலகைபள்ளி கிடுகெனவிட் டனரே
**389
#37
இட்டிகைசெய் திடலாணி யிட்டிகுந்த மகமாம்
இடியுறுதிச் சொல்லிடிநென் மாவிடித்த னாற்பேர்
குட்டநோய் குளங்குறிதாம் பெட்பாசை பெரிதாங்
குட்டன்மகன் மறிபிணியாங் குட்டிமகள் பறழாம்
பட்டிகையே கச்சிரதம் பணைதெப்ப நாற்பேர்
பட்டமே பதவிவழி சவரிசேக் கையின்பேர்
கொட்டமத மொருமருந்தாஞ் செட்டிசெட்டி குகனாங்
கோட்டங்கோண் படப்பை கொட்டில் கோயில்சும்மை தட்டே
**390
#38
தட்டசடு கேடகந்தேர் நடுத்தட்டுத் தடையாந்
தட்டல்தடை கிட்டலுமாம் பட்டிகுக்க லூராம்
முட்டெனுஞ்சொ லிடையூறு சந்தெல்லா மாகு
முடலைவலி பெருமைதிரட் சியுமெனப்பேர் மூன்றாங்
கட்டலே தடைகளைதல் பந்தித்தல் களவாங்
கடுத்தலெனுஞ் சொல்லைய மொப்புவே கமுமாம்
புட்கரம்வான் பாண்டமுகம் வாள்குருகம் புயநீர்
புழைக்கைநுனி நிறைவுதீர்த் தம்பருந்தாய் நாட்டே
**391
#39
நாட்டியங்கூத் தெண்ணமுமா ஞாட்பமர்பா ரமுமா
நல்லபுட்டம் புடவையே நிறைவுகாக் கையுமாம்
கோட்டியுமை யவள்பிரமை சவைமுப்பே ராகும்
கூறுதிட்டை திண்ணையுரல் மேட்டின்பே ராகும்
வேட்டுவனென் பதுமகநாட் புழுவேடன் மூன்றாம்
வியன்வட்டங் கலையூர்கோள் பரிசைவட்டந் தாழ்வாம்
பாட்டிதாய் தந்தையையீன் றாள்விலங்கிற் பெண்ணாம்
பருங்கிட்டி யோரீற்றாத் தாளமா மணியே
**டகரவெதுகை முற்றும்
** ணகர வெதுகை
**392
#40
மணம்வெறிவேட் டிடல்புணர்வாம் பணமகிபொன் பையா
மணியழகு கண்டைநவ மணிகருமை நன்றாங்
கணமுடுநோய் துடிதிரட்சி பேய்வலையங் கணமாங்
கணியளவு வேங்கையதாம் புணர்விசைதல் சேர்வாம்
குணமியல்பு கயிறுபண்பு கும்பம்வின்னா ணைம்பேர்
குணில்கடிப்புக் குறுந்தடியார் திணையொழுக்க நிலமாம்
உணர்வறிவு தெளிவூட லொழித்தலென மூன்றா
மோணநதி மாயோனா ளாமெனுந்தா ரணியே
**393
#41
அணியழகு நிரைசெய்யுட் கலனணவல் படையாம்
அணையேசெய் கரைமெத்தை யடுதல்வாத் தியமாம்
பணிகருவி யரவுதொழில் பூண்வார்த்தை பணிவாம்
பணைவயல்வேய் பரிப்பந்தி பருத்தல்மரக் கொம்பாந்
துணிகடிகை சோதியா நுணவைசக்கை மாவாந்
துணையிரட்சை யிரண்டாகுங் கணைதிரட்சி யம்பாம்
பிணிமுகம்புள் மயிலாகும் பணவைபரண் பேயாம்
பிணைதொடர்பு விலங்கின்பெண் விருப்பமா மணங்கே
**394
#42
அணங்குநோ யழகாசை துயர்கொலைபெண் ணணங்காம்
ஆணமன்பு குழம்பாகு நாணிலச்சை கயிறாந்
துணங்கறலே யிருள்விழவாந் துணங்கைநாள் கூத்தாந்
தூணியம்புக் கூடளவாம் வாணமறை யம்பாங்
குணுங்கர்குயி லுவரிழிஞர் தோற்கருவி யோர்பேர்
கோணலே கோண்வளைவு மாறுபா டாகும்
வணங்கல்பணி வளைந்திடலாங் குணங்குபேய் குணக்காம்
வாணிபா ரதிகூத்து வார்த்தையம்பாங் காணே
**395
#43
காணநிதி செக்கொருகண் ணோர்பரியூண் கொள்ளாங்
காணியெண்ணோ டாட்சியதாங் கோணிபன்றி முடனாம்
பாணமம்பு குறிஞ்சிபட்டாம் வேணிசடை விசும்பாம்
பாணிகைபற் றோசைநீர் நகர்கான்போ தியமாம்
ஆணைமுறை மெய்யேவல் வெற்றிசூள் தடைப்பேர்
ஆணிதான் வயிரமழ கெழுத்தாணி திறனாம்
ஏணியெல்லை யுலகிறைவை மான்பழுவே ணியுமாம்
யாணர்கலம் புதிதழகு தச்சரண்ட ராமே
**396
#44
அண்டரே பகைவர்வா னோரிடையர் முப்பேர்
அண்டம்வெளி முட்டையாஞ் சுண்டனெலி நாளாம்
புண்டரமே நுதற்குறியுங் கழுகுமிரு பேராம்
புண்டரீ கம்புலிதிக் கானைகஞ்சம் வண்டாம்
பிண்டமுடல் பெலிபிச்சை யுரைபிரம மறையாம்
பேணல்பே ணுதல்குறிப்பாஞ் சேணீள முயர்வாங்
குண்டலிபாம் பிசங்காகுங் கண்டல்கைதை முள்ளாங்
கொண்கனா யகன்சேர னென்பதுகண் டனரே
**397
#45
கண்டநவ கண்டம்வயல் கழுத்தாணி கடிகை
கவசமிடு திரைவெல்லங் கரிக்கயிறு துனபாங்
குண்டலம்வான் குழையாகுங் கொண்டல்முகில் காற்றாங்
கொண்டைமுடி யோர்கனியாங் குண்டைசட்டி யேறாந்
துண்டமுக நாசிதுணி சாரைப்பாம் பாகுந்
தொண்டைமிட றானையின்கை கோவையொரு நாடா
முண்டகமத் தகந்தாழை முளரிமது முள்ளி
முள்ளுடைய மூலமறு பேரெனவிண் டனரே
**398
#46
விண்டுமலை வேய்காற்று மேகமா லைந்தாம்
விண்முகில்வான் சுவற்கமாங் கண்ணிடம்வேய் விழியாம்
வண்டுவளை யளிபூச மம்புபுரி வெண்மை
மாசுவலம் புரிமகளி ராடலொன்பான் பேராந்
தண்டமெறுழ் கரிவழிதண் டனைபார நான்காந்
தண்டியாழ் தடிபடை குழாயோந்தி யைந்தாம்
அண்டசநண் டுடும்பரவு க[ரா]வோந்தி தவளை
யானைமீ னாமைபரி பல்லிபுட்பே ருண்டே
**399
#47
உண்டைதிரள் பிச்சைபடை யுறுப்பாகு முப்பேர்
ஒண்மையறி வொழுங்கழகு மிகுதிநன்மை யைம்பேர்
சுண்டைமதுச் சுண்டையாங் கண்டகமுள் வானாந்
தொண்டொன்பான் பழமைசுக்குத் தொழும்புநுழை வழியா
மண்டலிமண் ணோய்பாம்பு பூனையிறை நாற்பேர்
மண்டலந்தட் டூர்கோள்மண் டலங்குதிரை நாடாஞ்
சண்டனலி கால்வெய்யோன் பிண்டிதரு மரவாந்
தண்ணமழு வொருபறையாம் பண்ணமரு மொழியே
**400
#48
பண்ணிசைமாக் கலனையாம் அண்ணல்பெரி திறையாம்
பண்ணைவயல் நீர்த்தாழ்வு மருதஞ்சேக் கையுமாம்
மண்ணணுவொப் பனைமுழவின் மாற்சனைமண் ணான்காம்
வண்மைகொடை வாய்மைவளம் வலிபுகழைம் பேராந்
திண்ணநிசம் வலியாடா மெணணமிசை யுழைவாஞ்
செண்டுசெண்டு பரிவழியாந் தண்டகங்கான் வகுப்பாம்
எண்ணிலக்க மெள்ளெளிமை கணிதநினை வெழலாம்
ஈண்டேயிவ் விடஞ்சடுதி யென்பராண் டவரே
**401
#49
ஆண்டவிடம் வருடமாம் பாண்டுவெண்மை நோயாம்
அருந்தாணுச் சிவன்மலைதூ ணிலைதறியைம் பேராங்
காண்டநீர் வனங்கலசந் திரைமுடிவம் புடையாங்
காண்டகம்பொற் பணிச்செப்புக் கமண்டலமு மாகும்
பாண்டிலே றூர் திவட்டஞ் சுடர்த்தாள் கட் டிலுமாம்
பகர்வண்ணஞ் சந்தநிறஞ் பண்புமூன் றாகு
மாண்டல்மாட் சிமையிறப்புப் போனதுமூன் றாகும்
வணரழகு வளைவாகு மிணையிரண்டொப் பதுவே
**ணகர வெதுகை முற்றும்
**தகர வெதுகை
**402
#50
அதமிறங்கல் கீழுலகா மதமதர்ப்புக் கடமாம்
அதிர்ப்போசை நடுக்கமா மொதுக்கநடை மறைப்பாம்
மதலைபிள்ளை கொன்றைமரக் கலங்கொடுங்கை தூணா
மதவுபுதல் வனப்புவலி யுடன்மிகுதி யைந்தாஞ்
சிதலைபிணி கறையானாங் கதவங்காப் படைப்பாஞ்
சிதஞான முடுவெளுப்பாம் புதவுபுல்லுக் கதவாம்
முதலைகராச் செங்கிடையாங் கதழ்வுசினஞ் சிறப்பா
முதலாதி பொருளிறைவ னரசன்பே ரிதுவே
**403
#51
இதழுதடு மலரேடாம் அதர்வழியாட் டதராம்
எதுவினா வோரிறையாஞ் சிதடன்மடன் குருடாங்
கதலிகொடி காற்றாடி வாழைதே றாகுங்
கதுப்போதி கவுளாகும் விதப்புமிகை நடுக்காம்
பதலைவரை தாழியொரு கட்பறை மிடாவாம்
பதமழகூண வரிசைசொற்பேர் தாழ்ச்சிவழி காலாந்
திதிபொருள்பக் கங்காப்பா மதன்வனப்பு வேளாஞ்
சிதருறிவண் டொடுதிவலை துணிதுகளாஞ் சதமே
**404
#52
சதமிறகெண் ணிலைதிரமாம் வெதிர்செவிடன் வேயாஞ்
சதியுமைகற் பாட்டிரோ கணிதாளங் கொலையாம்
மிதவைதெப்பஞ் சோறாகுங் கதிவிரைவு கெதியாம்
விதிவினைபண பயனாகும் பதியரனூர் தவனாம்
மதியசைச்சொல் விதுமாதம் புத்திமதிப் பாகும்
மதுகமெட்டி யிருப்பைதரா மதுரம் வண்டு மகிழாம்
பிதிர்கொடிதூ வற்பிதிராங் கதைகதைதண் டுரையாம்
பித்திகையே சுவர்முல்லை கருமுகையா தலுமே
**405
#53
ஆதனுயிர் பேதையுமா மேதமிடர் மறுவாம்
ஆதிமுத னேரோடல் மன்மாலீ சனுமாம்
பூதமைம்பூ தங்குறளா லிறப்புயிர்நாட் சுசியாம்
போதகமே புணையிளமை யானையின்கன் றறிவாஞ்
சூதன்முனி சாரதியாம் பூதியமபா ருடலாஞ்
சூதமா வண்டிரதந் தோற்றல்பா ரதமாங்
காதல்கொலை யாசையாஞ் சேதுகரை சிவப்பாங்
கதிரொளியம் பிரவிகருங் காலிகுர லோதே
**406
#54
ஓதிமம்வெற் பன்னமா மோதையொலி மதிலாம்
ஓதிமயி ரோந்திமலை பூனையறி வைந்தாஞ்
சாதிகுலஞ் சண்பகமோர் தருப்பிரம்பு கள்ளாஞ்
சாதகம்புட் பயிற்சிமுறி செனனம்பூ தமுமாஞ்
சோதியுடு விளக்கிரவி சுடர்சோதி சிவனாஞ்
சுதையமுதான் மகள்சுண்ணச் சாந்துசெல்வ மைந்தாம்
பூதிசெல்வ நீறறிவு சேறுதுகள் நரகாம்
புதைகணைக்கட் டுடல்புதுமை நிறைபுதைத்தல் மாதே
**407
#55
மாதவமே யிளவேனில் மதுத்தவமூன் றாகு
மதுமயக்க நறவுதேன் வசந்தமசு ரனுமாஞ்
சூதகமா சூசமின்னார் பூப்புச்சூ திடமாந்
தூதுமணற் சந்துரையா மாதிடைச்சொல் பெண்ணாம்
பீதகம்பொன் னிருவேலி சாந்துபொன்மை நான்காம்
பீதமெலி பசலைபன்றி பொன்சாந்தச் சமுமாஞ்
சேதகஞ்சே றணைசிவப்பா மேதியம்பு வாளாஞ்
சீதைபடைச் சால்கொடுப்பை திருவாங்கோ தையரே
**408
#56
கோதைகுழற் காற்றொழுங்கு மாலைகைத்தோற் கட்டே
குடகன்மட வாளுடும்பு வின்னாணொன் பதுமாம்
மேதைபுத னிறைச்சிதோ லறிவுகள்ளோ டைந்தாம்
வேதிதிண்ணை பலகைவிர வுதல்கேட்டை நாளாம்
பேதையறி யான்குருட னோர்பருவம் பெண்ணாம்
பேதியவி டதங்கள்ளு மாறுபா டாகும்
பாதைவழி தோணியாங் கேதுசிகி கொடியாம்
பாதிரியே குதிரைபா டலமெனுமூ துரையே
**409
#57
மூதுரையா திரைகதையாந் தாதிசகி நாளாம்
முத்தமே பிரியமிதழ் முத்துநக ரியுமாம்
மாதிரந்திக் காகாய மலையானை நிலமாம்
மாதர்வனப் பொடுகாதல் மகளிரிடைச் சொல்லாம்
வீதிதெரு வோடலாம் வீதல்கொடை சாவாம்
வித்தமே பொன்னறிவு பழித்தலென மூன்றாந்
தாதுமலர்த் தாதுடற்றா தைம்பூதஞ் சத்த
தாதுதுகள் காவிக்கல் லாறெனுமிப் போதே
**410
#58
போதுபோ தலராகுஞ் சாதநிசங் குறளாம்
புத்தன்மால் பவுத்தன்சாந் தகன்புதிய னான்காஞ்
சீதநீர் குளிர்முகிலாங் கீதமிசை வண்டாம்
சேத்துவமை யுறுப்பசைச்சொல் செம்மையையங் கருத்தாம்
வாதைவட காற்றிடராம் வேதைமாற் றிடராம்
வரும்பதுக்கை மலைதூறாம் பதங்கம்விட்டிற் புள்ளாம்
ஓதமொரு நோய்கடலாம் போதமம்பி யறிவாம்
உத்தரமே மறுவசனம் வடதிசையத் தனையே
**411
#59
அத்தனப்ப னரன்குருவாம் பித்தனரன் மடனாம்
அத்தநாள் வனம்பாதி யாடிபொன்கை பொருளாந்
துத்தமிசை மருந்துபால் வயிறுநெய்யாழ் நரம்பாந்
தொத்தடிமை பூங்கொத்தாந் தத்தையவ்வை கிளியாஞ்
சித்தமுளந் திடனாகுங் கைத்தல்சினங் கசப்பாஞ்
சித்தறிவு செயமாகுஞ் சத்தமே ழொலியாம்
நத்தமிர வூர்வளையாம் பத்திரமே விறல்வாள்
நலஞ்சிறகம் பிலைபடைசிங் காதனஞ்சித் திரமே
**412
#60
சித்திரம்பொய் கவியழகா மணக்கடவி வியப்பாஞ்
சித்திரபா னுக்கதிரோன் கனலாண்டொன் றாகுஞ்
சத்திரங்கைப் படைகுடைசத் திரங்கருவி மகமாஞ்
சத்தியுமை பெலந்துவசம் வேல்குடைகா றலுமாம்
அத்திரியொட் டகம்பரிவே சரிமரம்வெற் பம்பாம்
அத்திகட லதவெலும்பு கோறல்கரி யைந்தாம்
பத்திரிபுட் காளிபரி யிலைவான மம்பாம்
பத்திமுறை யன்பொழுக்கம் வழிபாடுத் தமமே
**413
#61
உத்தமநன் கழகாகு மித்திரனட் பினன்பேர்
உத்திதிரு வுறுப்பூகம் படப்பொறிதே மலுமாம்
அத்தரைஞாண் சிவப்பசைச்சொல் லிசைப்படுத்த லைந்தாம்
அத்தினிபெண் பிடியிரண்டாஞ் சுத்திசுசி சங்காம்
பொத்தகஞ்சித் திரப்புடவை பண்டார மேடாம்
புத்தேள்தெய் வதம்புதிதாம் பைத்தல்சினம் பசப்பாம்
சுத்திகைதார் சம்மட்டி சுடர்த்தண்டு மூன்றாஞ்
சூழநிதம்ப மல்குல்மலைச் சார்பாஞ்சத் தியமே
**414
#62
சத்தியமெய் சபதமா முத்திரநாட் பாவாந்
தைத்தல்செறி குற்றலாந் துத்திபொறி சுணங்காம்
கத்திகைதார் கொடிமரமாம் பத்தொழுக்கந் தசமாம்
கத்தனிறை சிவனாகுங் கத்திகல்மெய்ப் பொருத்தாங்
குத்தியே மண்ணடக்க மாசாளு மாகும்
கூறாத்தி யுடைமைதா தகிகுடிமுப் பேராம்
வத்திரமே முகங்கலையா மத்தகங்கங் குளமாம்
வாதுவர்தேர்ப் பாகர்பரி வடிப்போர்கோத் திரமே
**415
#63
கோத்திரமண் குலமலையாந் தீர்த்தம்விழா நீராங்
கூத்தனட னுயிராகு மோத்துநூன் மறையாம்
நேத்திரங்கண் பட்டாடை பாத்திசெய்யிற் பகுப்பாம்
நீத்தம்வெள்ளந் தணப்பாகு மூழ்த்தல்செவ்வி நினைப்பாஞ்
சூத்திரநூற் பாநூலாம் பாத்தடிசில் பகுப்பாஞ்
சோத்தியநொய் சோர்வாகுஞ் சீத்தைமட னிழிவாங்
காத்திரமெய் கனங்கோபங் கீரிகரி யடியால்
காய்த்தல்சினத் திடல்மரங்காய்த் திடற்பேர்தந் திடுமே
** தகரவெதுகை முற்றும்
** நகர வெதுகை
**416
#64
தந்தநகை கொம்பாகு நந்திசிவ னேறாஞ்
சந்துமுட்டுத் தூதுசந்தா நந்துநத்தை சங்காம்
இந்தனமே யிசைவிறகா மைந்தனுரன் மகவாம்
எந்தைபிதாச் சிவனாகும் வந்திகற்றோர் மலடாம்
கந்தமணங் கிழங்குபொறி கழுத்தடிவெற் பவையாங்
கந்துகமே பரிபந்தா மந்தகன்கால் குருடாம்
அந்தரம்விண் முடிவுநடுப் பேதமிட மைந்தாம்
அந்திசந்தி மாலையா ழிரவாஞ்சிந் தனையே
**417
#65
சிந்துமுச்சீர் நதிகடனீர் குறள்தேசஞ் சிதராஞ்
சிந்துரம்பொட் டானைபுளி செங்குடைசெம் மையுமாம்
பந்துகட்டு நீர்த்துருத்தி கந்துகமுப் பேராம்
பந்தமே கிளைகட்டா மந்தன்மந்தன் சனியாஞ்
சந்தநிற மழகுகவி குலமிசைசாந் தாறாஞ்
சந்தானந் தருமகவா நந்தல்கெடல் வாழ்வாம்
விந்தமொரு மலைகமல மெண்ணூர்நாற் பேராம்
விந்துவிதை சோதிதுளி யெழுத்துடன் மந்திரமே
**418
#66
மந்திரங்கள் கோயில்மனை பரித்திரன்மே லளப்பாம்
மந்தாரஞ் செம்மரமோர் தருநோய்கார் நிழலாங்
கந்திருவம் பண்பரியாந் தந்திழைசாத் திரமாம்
கந்தரமே கழுத்துமுகில் மலைமுழைமுப் பேராம்
சந்தியிசை வந்திவேய் சதுக்கமொழி யுறுப்பாந்
தந்திகரி முயற்சையாழ் நரம்புகண பதியாம்
அந்திலாங் கசையிடமாங் கந்துதூண் முட்டாம்
அந்தணர்பார்ப் பாரறிவோ ராகுமேந் திழையே
**419
#67
ஏந்தல்கோன் பெருமைமே டிலகுவநாற் பேராம்
எந்திரந்தேர் திரிகைமதி லுறுப்பொடுசக் கரமாம்
காந்தல்காய் வொளிராகுங் காந்தியழ கொளியாங்
காந்தமழ கொளியூசிக் காந்தமொரு கதையாம்
மாந்தலிறந் திடலுணவாஞ் சாந்துசந்தங் குழம்பா
மாந்திமாக் குளிகனுமாஞ் சாந்திபொறை சுசியாங்
கூந்தல்மயிர் பீலியாங் காந்தன்கோன் பதியாம்
குந்தமே குருந்துகண்ணோய் படைபரிகாந் துகமே
**420
#68
காந்தார மிசைகாடு கொடுமையுமுப் பேராம்
கருதுசெந்து நரகோரி சீவனணு நான்காம்
வேந்தாதல் மதியிரவி மகவான்கோன் பொன்னாம்
விந்தைதிரு வணியாகு மொந்தைமொந்தல் பறையா
மாந்தானுண் ணான்சுழல்வாஞ் சாந்தைபார் பொறையா
மந்திவண்டு கதிர்குரங்காங் கந்தைநங்கை துணியாம்
போந்தானே நாகரிகன் சேரன்போ னான்பேர்
புகலுந்தி நதிகடல்கொப் பூழுருட்செப் புகவே
** நகர வெதுகை முற்றும்
** பகர வெதுகை
**421
#69
செப்புமொழி செப்பிரண்டா மப்பலப்பல் பொலிவாஞ்
செப்பநடு நிலைநெஞ்சு செவ்வைதெரு நான்காம்
ஒப்புநிகர் கொடைப்பொருளாங் குப்பைசெற்றை மேடாம்
உப்போரை கடலினிமை யுவரோடுப் பாகுங்
கொப்புமரக் கொம்பணியாந் தப்பலொழிப் படிப்பாங்
கொப்புழுந்தி நீர்க்குமிழாந் தப்பியம்பொய் யுரையாந்
துப்பரக்கு வலுப்பகைதூய் தனுபவநெய் துகிராந்
தொப்பிமது வங்கியெனச் சொல்லுவர்தா பரித்தே
**422
#70
தாபரமெய் நிலைதருவாந் தபுதல்சாக் கேடாந்
தரியூபம் படைகவந்த மகத்தறிமுப் பேராம்
நீபநிமித் தங்கடம்புத் திரட்டாதி யாகும்
நீடுசெபஞ் செபித்திடலுந் துடையுமிரு பேராம்
பூபனிறை யோன்குசனாஞ் சாபம்வில்லுச் சபிப்பாம்
போற்றுதப னன்பருதி செந்தீயு மாகுங்
கோபமறம் புழுவாம்வி பூதிசெல்வ நீறாங்
கூறபர முதுகுபிணக் கர்[ம]மென்னும் யாப்பே
**423
#71
யாப்பிறுக்கல் கவிகட்டா மிபங்கரிகோ டரமாம்
இயலுமபி தானம்வியாக் கியானமகம் பேராம்
நாப்பணடுத் தேர்த்தட்டி யாழுறுப்பு மூன்றாம்
நவின்றிடுகப் பணங்கைவே லிருப்புமுள்ளு மாகும்
சீப்பெனுஞ்சொற் கதவிற்றாழ் சீவுறுசிக் கமுமாந்
திகழ்குபே ரன்சோமன் அளகையர்கோ னாகுங்
காப்புவளை திருநீறு கதவுகா வலுமாம்
கண்டிடும்பப் புவமைபரப் பாங்கமலா னனியே
** பகர வெதுகை முற்றும்
** மகர வெதுகை
**424
#72
கமலந்தா மரைநீராஞ் சமனடுக்கா லனுமாம்
கமலைகங்கை திருவூராந் தமமிருளி ராகாம்
அமலமழ கழுக்கிலதா மமரர்தெவ்வர் சுரராம்
அமலையொலி சோறுமையா ஞமலிகள்நாய் மயிலாங்
குமரிகன்னி காளியழி யாமைகற்றா ழையுமாங்
குமுதமல்லி யடுப்பொலிதிக் கானைதெற்பை யைந்தாஞ்
சிமிலியுறி குடுமிவிட்டில் மூன்றுபே ராகும்
திகழமுத முத்திபால் சுதைசோறென் றமையே
**425
#73
அமையமைதி மூங்கிலாங் கமநிறைவு செறிவாம்
அம்மைதா யழகுவரு பிறவியுமை நான்காஞ்
சிமையமலை பொதிகையா நிமிரல்சோ றிரிவாஞ்
செம்மைசெவ்வை சிவப்பாகு மம்மசைநீ ரழகாஞ்
சமைபொறுமை சமையெனலா மமளியணை சினமாஞ்
சம்பிரவி நரிமும்மூர்த் திகள்நாவல் மடிவாங்
கமைதவறு பொறுமையாந் துமிதலரி வீர்ப்பாங்
கம்மயன்வான் றலைவிண்கால் வெண்மைநீர்க் காமே
**426
#74
காமரநா ளடுப்பிசையாஞ் சோமன்வள்ள லிந்தாங்
கம்பலஞ்சிம் புளிபோர்வை செம்படா மூன்றாம்
ஏமமிர வின்புவப்பு நீறுபொன்காப் பிணைவா
மிமைத்தலொளி யிமைத்தலாஞ் சமழ்ப்பிலச்சை துயராந்
தாமமுடி நகரொளிதார் வடமிதழி சாந்தாஞ்
சாமமறை பசப்பிரவு விலைத்தாழ்வு கறுப்பாம்
வாமமிடப் பாலழகு துடையொளிசிந் துவுமாம்
வாமனந்திக் கானைகுறள் நூலாம்பூ மயிலே
**427
#75
பூமனிறை யயன்குசனா மோமமக மருந்தாம்
பூமானே யிலக்குமியு நாயகனு மாகும்
காமன்வேள் கணைமகவான் பிப்பிலிநாற் பேராம்
காமமரு ளாசைவிந்தா மூமன்புட் குணியாந்
தேமிடம்வா சந்தேச மதுரந்தே னாகும்
சேமமின்பங் காவலா நாமம்பேர் குறியாம்
மாமன்மா துலன்மாலாம் யாமம்நிசி தெற்காம்
வம்புதீ திடர்மணம்வார் நிலையாமை யம்பே
**428
#76
அம்புகணை நீர்மேக மூங்கில்கூர் மையுமாம்
அருட்சாமி குருவிறைவி யாழ்முதல் வியுமாம்
தும்புசிம்பு தோடாகு மும்பர்சுரர் மேலாந்
தும்பிகரி வண்டாழை வண்டுமது வாகுங்
கம்புள்சம்பங் கோழிசங்காந் தும்பைதும்பை போராங்
கம்புசங்கு தினை கம்பா மொய்ம்புபெலந் தோளாம்
உம்பல்குல மெழுச்சிவலி யானைவிலங் கைந்தாம்
உறுகும்ப மத்தகமிற் குடஞ்சம்பூ ரணமே
**429
#77
சம்பரம்புட் கலைநீராங் கும்பிகரி சேறாஞ்
சம்பளங்கொத் தெலுமிச்சாந் தம்பந்தூண பரமாங்
கம்பலைதுன் பொலிநெருக்க மச்சநூற் பாவாங்
கமபநடுக் கந்தூணாங் கிம்புரிபூண் முடியாம்
அம்பணமே மரக்காலு மாமையுமென் றிருபேர்
அடுநேமி வளைகடல்பார் புள்வட்ட மைந்தாங்
கொம்புகொப்பு மருப்பாஞ்சம் பகந்தகரா ணியுமாங்
கொம்மைமுலை யழகிளமை கொட்டல்வட்ட மாமே
**430
#78
ஆம்பல்வேய் கள்ளல்லி யிபமொலிவங் கியமாம்
ஆம்பிரமாப் புளிபுளிப்பாஞ் சாம்புபறை பொன்னாங்
காம்புவேய் மலர்த்தாள்கும் புதல்பட்டென் றாகும்
கடியசம்ப மோர்கோழி வச்சிரங்காழ்த தலுமாம்
பாம்புவரப் பரவொலிநீ ரடைப்பொழுங்கைம் பேராம்
பருந்தாம்பு மடைமணிபூண் கயிறுநான் காகுஞ்
சாம்பல்பழம் பூக்குவிவா மாம்பியொலி காளான்
றானாமம் பரந்தூசு விண்கடலென் றயிரே
** மகர வெதுகை முற்றும்
** யகர வெதுகை
**431
#79
அயமிரும்பு கடம்பரிநீ ராடிவையைம் பேராம்
அயனம்வழி யிறப்புச்சோ றாண்டினிற்பா தியுமாம்
மயல்செற்றை மால்பேயாம் வயலேசெய் வெளியாம்
மயிலைமீ னிருவாச்சி கடைராசி முப்பேர்
கயமடுக்கீழ் பெருமைதேய் வானையா ழமுமாங்
கயினியத்தங் கைம்மையாம் வயநீர்புள் வலியாம்
பயமமுத நீரச்சம் பால்பயன்பே ரைந்தாம்
பயிரொலிபைங் கூழ்பறவைக் குரல்பயிறற் பெயரே
**432
#80
பெயர்பெருமை நாமமிசை பெயர்ச்சியுநாற் பேராம்
பெயலிடுதன் மழையாகுஞ் சயமடல்சற் கரையாம்
நியமநெறி நிசநியதி நகர்கோயி லைந்தாம்
நெய்கிருத நிணமாகும் பைபடம்பை பசப்பாம்
இயமொலிசொல் மேளமாம் வயினிடம்வீ டகடாம்
இயல்சாயல் நடைதமிழாம் பயன்பெறல்சொற் பொருளாம்
வயவன்வலி யான்வீரன் கணவன்மூன் றாகு
மயர்வுயிர்ச்சி பொருந்தாமை மயக்கமுமாங் குயிலே
**433
#81
குயிலுரைகோ கிலமேகந் துளையொடுநாற் பேராங்
குயிறல்குடைந் திடல்பண்ணல் சொறிதல்கூ வுதலாம்
கயில்பிடரி யணிப்பூட்டாம் வியல்பெருமை விரிவாங்
கையிடமொப் பனைதங்கை குணம்படைகை சிறிதாம்
அயிலுணவு முனைவேலா முயிராவி காற்றாம்
ஆயஞ்சூ தியற்றல்சுங்க மாதாயஞ் சவையாஞ்
செயிர்சினங்குற் றமுமாகுஞ் செயலொழுக்கந் தொழிலாந்
தெய்கொலைதெய் வமுந்தாள முறைப்பயில்வு மாமே
**434
#82
பயல்சிறுமை பள்ளமதாம் பயம்புகொப்பந் தாழ்வாம்
பாயல்மெத்தை குதிப்பாகுஞ் சாயலழ கெழலாம்
அயிரிமணல் மீன்கறியாங் குயமுலைவாள் குழகாம்
அய்யன்மூத் தவன்சாத்த னப்பன்வே தியனாம்
வயிரமொரு மணிகுலிசஞ் சினஞ்சேகு வாளாம்
வயமாக்குஞ் சரம்பன்றி பரிசிங்கம் புலியாம்
உயவைகாக் கணமுல்லை கான்யாறென் றாகு
உரைசெய்யல் தொழில்காவல் சேறொழுங்கா மெய்யே
**435
#83
மெய்யுடம்பு மெய்மையாம் பொய்சடம்பொந் தாகும்
வேய்துளையொற் றணிதலுமூங் கிலுநாற்பே ராகும்
ஐயிடைச்சொல் லழகிரும லரசனிற்சா மியுமாம்
ஐயையுமை துற்கைசுதை தவப்பெண்ணா சாளாம்
மையிருள்மை மலடாடு மேகமழுக் காறாம்
வையந்தே ரேறுரோ கணிபுவியூர் தியுமாம்
வெய்யவன்வெய் யோனிரவி விருப்பினன்முப் பேராம்
வியனதிகம் பெருமையதி செயமெனமொய்த் திடுமே
**436
#84
மொய்செருக்கு வண்டானை திரட்சிநாற் பேராம்
முழுநெய்த லாம்பல்பறை திணைநெய்வு நான்காம்
வையயில்வைக் கோனெல்லாஞ் செய்வயலே வலுமாம்
மாயம்வஞ்சம் பொய்யாம்ப யோதரங்கார் முலையாஞ்
சையமலை யணையாம்வி யாழமகி புலியாஞ்
சாயனங்கள் ளோந்தியாந் தீயனல்தீங் காகும்
தொய்யில்சே றுழவுதுயர் மகிழ்ச்சிநாற் பேராஞ்
சொல்குய்வு கறிகரித்தல் புகையாஞ்சே யிழையே
**437
#85
சேயிளமை சேண்குசன்வேள் மகன்றூரஞ் சிவப்பாம்
தேயமே கழிநாடாந் தூய்தூய்மை யுணவாம்
ஆய்தலே கொய்தல்நுணுக் கந்தேர்ச்சி மூன்றாம்
ஐயமனு மானம்வழுச் சங்கைபிச்சை யோடாம்
காயமுட லைங்காயங் கறிகரித்தல் விண்ணாங்
காணும்வாய் குழலிடமெய் வாய்வாய்த்த லைம்பேர்
நேயமே நெய்யெண்ணெ யன்புமூன் றாகும்
நிகர்மாயன் மால்கறுப்ப னொழிப்பான்பெண் ணரசே
** யகர வெதுகை முற்றும்
** ரகர வெதுகை
**438
#86
அரசுமன்ன னொருமரமா மரபுதொன்மை முறையாம்
அரசனிறை சிகண்டிகனாஞ் சுருதியொலி மறையாஞ்
சிரசுதலை மேம்பாடாங் கரில்பிழைகாழ்த் தலுமாஞ்
சிரகம்வட்டில் கமண்டலமுந் தலைத்திரா ணமுமாம்
புரசுபலா சிளமகவாம் பிரசந்தேன் வண்டாம்
புரநகர முடம்பாகுஞ் சிரநெடுநாட் சிரசாம்
இரசம்பா ரதமினிப்பா முரண்வலியே பகையாம்
இரலைகலை யசுபதிபுல் வாய்கொம்பாந் தரமே
**439
#87
தரமுவமை தலைதரிப்பா மரமறுத்த லரமாஞ்
சரல்சரலே மழைநாளாந் துரம்வலியுச் சமுமாம்
பரமுடிவு கெதிகவச மானையின்பின் காலாம்
பரணிதுடி கலனளாம் புரணிதோல் வயலாம்
இரவிமலை வெய்யோனாம் வரனயன்கோன் சிவனாம்
இரவுநிசி யாசகமுமாம் விரவுகொடை கலப்பாம்
பிரமமறை மகந்தீமந் திரமாலா டிரவி
பிரமனரன் முனிவர்முத்தி மதியிரண்டா றுரித்தே
**440
#88
உரம்வலிமார் பூக்கமருந் தெருஞான மாறாம்
உரியளவு தோலுரித்தாஞ் சரிவளைபா தையுமாங்
கரம்விடங்கை குடியிறைவே சரிகிரண மைந்தாங்
கரகமா லாங்கடடி கமண்டலநீர்த் துளியாங்
குரலிசையாழ் நரம்புகதிர் கூந்தலிற கைந்தாங்
குரமுளைஞ்சில் பரிக்குளம்பாம் வருணநிறங் குலமாம்
இரதமரை ஞாணிரதஞ் சுவைபுணர்ச்சி தேராம்
இரதிபிடி யிரதியிச்சை பித்தளையாய்ப் பரவே
**441
#89
பரவைதிருக் கூத்துததி பரப்பொருபெண் ணான்காம்
பரிசுமத்தல் வேகங்காத் திடல்வருத்த மாகும்
அரவமொலி பாம்புடனூ புரமிவைமுப் பேராம்
அரலையே கழலைவிதை மரல்கனிநாற் பேராம்
குரவைவா யொலிகடலாங் கிரகமனை கோளாங்
குருநிறைநோய் புகையாசான் பாரம்வியா ழமுமாம்
சுரநெறிகான் சுரமாகு மருகல்குன்றல் சார்வாஞ்
சுரைபசுவின் முலைதுளைகள் ளெனமுப்பேர் கருதே
**442
#90
கருவிதுளை யியங்கவசம் யாழீட்டந் துடர்ச்சி
கலனைதுகில் புயல்கூட்டம் படைவினைகச் சையுமாம்
அருவிமலைச் சாராறு தினைத்தாளு மாகும்
அருணன்சூ ரியனருணன் புதன்சிவனாற் பேராம்
முருகிளமை மணமெழுச்சி வேள்விழா மதுவா
முரசொருநாட் பறையாகுந் தரளமுத்துத் திரள்வாங்
குருகுவளை புள்ளிளமை நாரைவெள்ளை மூலங்
கோழிமா தவியுலைமூக் கொன்பதுபே ருரையே
**443
#91
உரைமொழிதேய் தலுமாகுங் கரைகரைசோர் தலுமா
முருவடிவு நிறம்பயமட் டையுமுருப்போ டலுமாம்
நரைசவரி பரிதாரை வெள்ளைநந்தி யைந்தாம்
நரம்புவட நாடியுமாங் குரம்பையுடல் கூடாம்
விரைமணந்தூ பஞ்சாந்தாம் வரைதல்கொள்ளல் விடலாம்
விருத்தம்பா வினமவட்ட மூப்புமலை நான்காம்
அரையிடைபா தியுமாகும் வரைமலைவேய் வரிப்பேர்
அருள்கருணை யுமையாகு மிருள்நரக மிருளே
**444
#92
இருசுபண்டி யுள்ளிரும்பு செவ்வையிரு பேராம்
எருவைசெம்பு கழுகிரத்தங் கோரைநா ணலுமாம்
அருணமா னெலுமிச்சுத் தகர்சிவப்பு நான்காம்
அரணம்வேல் மதில்காடு கவசங்கா வலுமாம்
குருதிசெந்நீர் குசன்சிவப்பாஞ் சுரிகுவிதல் பிடாரங்
குரங்குகோண் கவிவிலங்கா முருந்துவெள்ளை முருந்தாம்
பருதியூர் கோளிரவி நேமிவட்ட முருளாம்
பரிகமம்பு மதில்மேடை கிடங்கெனக்கோ சரியே
**445
#93
சரஞ்சரித்தல் வடஞ்சரமூச் சம்புநா ணலுமாந்
தருணம்போ திளமையுமாஞ் சரணந்தாள் புகலாம்
அரம்பைசூர் கதலியுமா மருந்தலுணல் குறைவாம்
அரங்கமாற் றிடைக்குறைகூத் தாடிடமம் பலமாம்
நரந்தநா ரத்தையுங்கஸ்த் தூரியுமென் றாகும்
நார்பரிவு கயிறிரண்டாம் வேர்மரவேர் வேர்வாம்
விருந்தமே கிளைதுளசி விலங்கின்கூட் டமுமாம்
வெருகலவ னோர்செடியா ஞெரலோசை விரைவே
**446
#94
விருத்திதொழி லாதாயம் வளர்ச்சியடி மையுமாம்
வீரமலை சேவகமாம் வீரைதுயர் கடலாம்
கிருத்திமம்பொய் தொழில்பூதந் தோலெனநாற் பேராங்
கிருட்டியோ ரீற்றாவும் பன்றியுமென் றிரண்டாந்
துருத்திதோ லரங்கநீர்த் துருத்திதுட்டை நான்காஞ்
சுருங்கையே நுழைவாயில் கரந்துசெய்கற் புடையாம்
அருப்பமூர் மோர்மதுக்கா னோய்துற்க மழுக்காம்
அரத்தமே குருதிசெம்மை குவளைகடம் பரக்கே
**447
#95
அரக்குமெழு கொடுசிவப்புக் கள்ளின்விகற் பமுமாம்
அரற்றலொலி யழுதலுமா முருத்தல்சின முளைப்பாம்
இரத்தமுதி ரஞ்சிவப்பா மருத்தநிதி பகுப்பாம்
எருந்துரலுங் கிளிஞ்சிலுமா மருங்கிடைபக் கமுமாம்
நிரப்புமிடி யிகல்குன்றல் சமைநோயைம் பேராம்
நேர்மிகுதி சமநேர்மை நிகருடன்பா டணுவாந்
துருக்கமே யரண்செடிகுங் குமங்கஸ்த்தூரி யுமாஞ்
சூரன்சூர் தீயிரவி விறலோனா யரியே
**448
#96
அரிகடல்காற் றிந்திரன்மால் காந்திமலை பரிபொன்
னாடரிசி யுவாதேரை நிறமதிதீ யடல்வா
ளிரவுகுரங் கரவுபுகை கிளிகணைவே யரித்த
லிமன்கூர்மை பறைசோலை புகர்விசிசே கரிதல்
கருவிபகை பன்றிசிங்கந் தேர்தகடு நேமி
கண்வரிநெற் கதிர்பசுமை வண்டுமதுப் பாயல்
பரிபுரத்தின் பரலிவைநாற் பானேழென் றாகும்
பரிவெனுஞ்சொல் லன்புதுன்ப மின்பமுமாம் பாரே
**449
#97
பாரநிறை பார்கவச மரபுபொறை பாரம்
பரிகலனை தோணிநீர்க் கரைகழுகும் பத்தாம்
வாரமலைச் சார்கிழமை கடல்கரைபங் கன்பாம்
வரிகடல்வேய் நெற்பசலை யெழுத்திசைவண் டிறையாம
ஆரமழை பதக்கமுத்த மாத்திசந்தந் தொடையாம்
அருச்சுனமென் பதுவெண்மை மருதமா மிரண்டாந்
தாரமிசை நாமனைவி வெள்ளிகண்பண் டமுமாந்
தரித்திரிபார் மிடியனுமென் றுரைத்தனர்கா ரிகையே
**450
#98
காரிகைபெண் ணழகுகலித் துறையொருநூ லாகுங்
கரியவனிந் திரன்சனியன் கண்ணன்சாத் தனுமாஞ்
சாரிகைசங் கொடுபூவை சுழல்காற்று மூன்றாஞ்
சாபம்வரை யாடுபுள்ளா மருதமரந் திணையாம்
ஆரிகத வழகாகுஞ் சூரணந்தூள் கிழங்காம்
ஆர்தலுண்டல் நிறைவாகு மாரைமதில் பாயாந்
தூரியமே யெருதெழுதுங் கோலியஞ் சீலையுமாஞ்
சுரிகைவாள் கவசம்வலம் புரியாங்கூர் விழியே
**451
#99
கூரல்குழற் சிறகாகுங் கூர்மிகல்வை கூர்ப்பாங்
கூர்மமா மையுமோர்பு ராணமுங்கோ பமுமாஞ்
சாரலே மலைப்பக்க மலையொருசார் மழையாந்
தாருகா ரிப்பெயரே சண்முகன்கா ளியுமாம்
ஆரல்குசன் கார்த்திகைதீ யரணுறுப்போர் மீனாம்
அரிதமே பசுமைதிக்காந் திருமாச்சீர் சிறப்பாம்
மூரலன நகைபல்லாஞ் சார்பிடம்பற் றாகும்
முரம்புகா யலுமேடும் பாறையுமுப் பேரே
**452
#100
பேர்பெருமை நாமமுமாம் பீர்பசலை பீர்க்காம்
பீருவே யச்சமுற்றோன் புருவமுமென் றிரண்டாம்
போர்சதைய நாளமர்நெற் சும்மையுமுப் பேராம்
பூருவமுன் கிழக்குமா மீரமன்பு குளிர்வாம்
வார்நெடுமை நீர்வானங் கச்சனிக மொழுங்காம்
வாரணஞ்சங் கானைதடை கடல்கோழி பரமாஞ்
சீர்தடிநேர் திருப்பாரந் தாளவொத்துப் புகழாந்
தீர்த்தனே சிவன்குருவாந் தீர்த்தம்விழா நீரே
**453
#101
நீர்குணமோர் நாட்புனலா மார்வமன்பு நரகா
நிரைபந்தி பசுவாகு மிரையுண்டி யிருப்பாம
பார்புவிபார் பாரமுமாங் கீரம்பால் கிளியாம்
பாரிவள்ளல் கட்டில்புவி துகில்மனையாள் கனமாம்
ஏருழவா னழகாகு மோரைபொய்த லில்லாம்
ஏரிகுளம் பிடரியுமாம் வாருணநீர் மேற்காங்
கார்சினநீர் தகர்புயல்போ திருள்கறுப்புக் கூந்தல்
கருங்குரங்கேர்ப் பருவமும்பத் தெனும்பேர்வைத் தாரே
**454
#102
தார்கொடிபூப் படைதொடைகிண் கிணிக்கோவை யொழுங்காஞ்
சாரங்கஞ் சாதகப்புள் வண்டுமான் மூன்றாஞ்
சூர்துயர்நோ யணங்குபயஞ் சூரனஞ்சா மையுமாஞ்
சூரைசெடி பிரம்புமாங் காரைசெடி நீறாம்
ஆரிரதத் துறுகதிரு மாத்திகூர் மையுமாம்
அரிட்டநோய் கொடிமதுவா மருக்கமெஞ்ச லெருக்காம்
பாரதிநா மகள்புணையாம் பூரணிகா யிலவாம்
பாராவா ரம்பூமி கடலாநா ரியரே
**455
#103
நாரிசிலை நாணறவு பெண்பன்னா டையுமாம்
நாரமன்பு சைவலநீர் நாரத்தை நான்காம்
வாரிவழி கதவுமதில் கடல்சீப்புச் செல்வம்
வங்கியநீர் கரிக்கூடம் வெள்ளம்வர வெனலாம்
மூரிமுரண் சோம்பெருமை விடைபெருமை நெரிவாம்
முருடுகட்டை யறிவிலதாந் திரிமனையாள் மூன்றாங்
காரிவிடஞ் சனிவடுகன் சாத்தன்வள்ளல் மகவான்
கருக்குருவி கருமைகொடி யென்றனராய்ந் தோரே
**456
#104
தோரைதான் மணியின்வடம் விரைவுவே யரிசி
துவரையுங்கை வரையுமலை நெல்லுமென வாறாம்
மாரிநோய் புயலாண நமன்றூதர் வடுகி
மழைபொழிதல் மாய்வுமது வென்றிவையெட் டாகும்
ஓரியோர் வள்ளன்முசு நரிமயிர்நான் காகும்
உயர்பொருன ரேபாணர் கூத்தர்மன்னர் கோவாங்
கோரைகொறுக் கையுமுதுகுங் காளியுமூன் றாகும்
குராலேகூ கையுநிறமு மென்பரா ரியரே
**457
#105
ஆரியர்நல் லோர்கலரா மார்ப்பொலிபோர் நகையாம்
அரில்பிணக்குத் தூறாசாம் பொருள்பொருட்சே யுரையாம்
தாரைவழி கண்மழைபா ருடுக்கூர்மை யாறாந்
தரணிபார் மலைகதிரா மரைகமலம் விலங்காம்
போர்வைமீக் கோள்கவசந் தோலினுக்கு மாகும்
புரைமறுநேர் துளையுயர்வாம் புரிகயிறூர் புரிவாம்
ஊர்நடத்த லூராகு மோரறித லெண்ணா
மோதிரா சியம்யோனி மறைவுட னிராவே
**458
#106
இராகமிச்சை நிறமிசையாங் கருமைநிறம் வலியாம்
இயற்கரட மானைமதச் சுவடுகாக் கையின்பேர்
அராகமிச்சை சிவப்பொடுவண் ணகமுப்பே ரென்பார்
அறிமருமான் மருமகனும் புத்திரனு மாகும்
பிராணனுயி ருயிர்க்காற்றா மரக்கால்கூத் தளவாம்
பெருங்கரண்ட நீர்க்காக்கை யணிகலச்செப் பாகுங்
கரீரமே யகத்திமிடாக் கரியின்பல் லடியாங்
கரிசேகு சான்றுதந்தி யிருந்தையும் பராவே
**459
#107
பராகமலர்த் தூளணுவாம் பரசுமழுத் துதியாம்
பகர்கரண நடங்கலவி கணித்தல்கா ரணமாம்
துரோணமே சிலைபதக்குத் தும்பைசிம்புட் கொடியாம்
சொற்றிடுங்க ராம்புபா ழோர்மருந்து மாகும்
கராளமே துன்மாற்கஞ் நஞ்சமிரு பேராம்
கடுங்குரோட் டென்பதுபன் றியுநரியு மாகுங்
கிராணமே கிரணமூக் கொடுகிரிகித் தலுமாங்
கிளர்க்குஞ்சா ரசநாரை யினிப்பென்னுந் தலமே
**ரகர வெதுகை முற்றும்
**லகர வெதுகை
**460
#108
தலமிலைபா ரங்கையுமா மெலிபூர மெலியாந்
தலையிடம்விண் சிரமுதலாங் கலகமொலி துயராம்
வலம்வலங்கண் பெலமாகு நலநன்மை தேளாம்
வலவன்வெற்றி யான்வலியன் றேர்ப்பாகன் மாலாம்
புலவனா வலனறிவன் புதன்றேவ னான்காம்
புலம்பொலிதுன் பிரங்கலச்சந் தனிமையுமைம் பேராம்
உலகமிசை புவிதிசைவிண் ணுயர்ந்தோரு மாகும்
உலவை கொப்புத் தழைமருப்புக் காற்றுமரக் குலமே
**461
#109
குலமனைரே பதிகோவில் சாதிகூட் டமுமாங்
குலையேசெய் கரையம்புக் குதைகாய்க்கொத் தாகும்
அலவன்மதி வெருகுநண்டா மலைவணிபோர் மலைவாம்
அலர்மலர்நீர் பழிமூன்றாம் வலவைவல்லோன் சூராங்
கலமிழையுண் கலந்தோணி மண்கலன்யா ழெண்ணாங்
கலிவறுமை யொலிவாரி யுகம்வலிவீ ரமுமாம்
புலமறிவு பூமிவய லைம்புலன்பொன் னிடமாம்
புலிசாந்து புலியாகும் பலிதநரை பலமே
**462
#110
பலநிறைகாய் கனிசேனை யாதாய மைந்தாம்
பலிபூசை பிச்சைதிரு நீறுதெய்வ வுணவாம்
அலகொளிநெற் கதிர்சோகி யெண்மாறு நுளம்பாம்
அலரியழ கிரவிகுளங் கண்வரிபூச் செடியாம்
திலமடவி மஞ்சாடி யெள்ளுடன்மூன் றாகும்
திலகநுதற் குறியுயர்வு மஞ்சாடி தானாம்
புலவுதசை யொருமரமா நிலவுமதி யொளியாம்
புலிங்கமூர்க் குருவிதீப் பொறியெனுநூற் கலையே
**463
#111
கலைமதிப்பங் குடையிரலை கல்வி நூல் வயிரங்
காலநுட்பம் விலங்கினாண் மகரமாக் கவடாஞ்
சிலையொலிகல் லுருவில்லா மொலிதொனிகாற் றிடியாஞ்
சிலம்பொலிநூ புரங்கிரியாம் விலங்கல்வெற்பு விலக்காந்
துலைநிறையுந் தூரமுமா மிலையநட மிறப்பாந்
தோல்பலகை கரிவனப்புத் தோல்வியதன் மொழியாம்
மலையன்பாண் டியன்சேரன் வள்ளல்பொருப் பனுமாம்
வல்(லை)வலி விரைவு துருக் கங்கான்வல் லவளே
**464
#112
வல்விரைவு வலிசூதாஞ் செல்லிடிகார் சிதலாம்
வலம்புரியோர் மரநந்தி யாவட்டம் வளையாம்
அல்லிரு ளிராவாகுங் கல்லொலிகல் மலையாம்
அலங்கலே தளிர்மாலை யிரங்கலசை வொளியாம்
வில்லொளிமூ லஞ்சிலையா மல்லல்வலி வளமாம்
வேலிமதி ளூர்காப்பாம் வேலயில்கூர் மரமாம்
இல்லிடம்வீ டில்லென லிராசியில்லாள் சாவாம்
எல்லிகழ்ச்சி பகலிரவி யொளியெனச்சொல் லுகவே
**465
#113
சொல்லுரைநெற் புகழ்சூதா மில்லமனை தேறாந்
தொல்லைதுயர் பழமையுமாம் புல்லநிற மெருதாம்
மல்லடல்மா யவன்கூத்து வளமுகட்டு மல்லாம்
வல்லிகொடி தளைவரைவாய்ப் பாடிவள்ளி பெண்ணாங்
கொல்லசைகொல் லுதலையம் வருத்தமே வலுமாங்
குல்லைவெட்சி துளவுசித்த மூலிமூன் றாகும்
புல்லனுடம் புணர்ச்சிபுன்மை புலிபனைபுற் குறையாம்
பொல்லேபொல் லாங்கு பீறுதலாம்பல பெயரே
**466
#114
பல்லமே கரடியொடு கணக்குப்பா ணமுமாம்
பாலியல்பு திசைப்பகுத்தல் வெள்ளைபக்கம் பாலாஞ்
சில்லிதே ருருள்வட்டங் கீரைசில்வீ டாகுஞ்
சில்லைசினஞ் சில்லிகைமுட் காடுபகண் டையுமாம்
அல்லியக விதழாம்பல் காயாமுப் பெயராம்
அலநாஞ்சி லன்மொழியாஞ் சலனங்காற் றடியா
முல்லைவென்றி நிலங்கற்புத் தளவுநாற் பெயரா
மூலமுதற் கிழங்கேது நாளெனச்சால் புறுமே
**467
#115
சால்புகுண மாட்சிமைப்பேர் பாலமழு நுதலாஞ்
சாலியருந் துதிகள்ளு நெற்பொதுவு மாகுங்
கால்வனங்காம் படிமரக்கால் மகவுதறி யூற்றங்
காலன்காற் றங்குரந்தே ருருளிடம்வாய்க் காலாம்
வால்வெளுப்பு மிகைதூய்து வாலுதிநாற் பெயராம்
வாலிநீர்த் துளியனந்தன் கிட்கிந்தைக் கிறையாங்
கோல்கணைவா ளீட்டி துகி லிகைதுலாங் கோடு
கோலிரந்தை யாழ்நரம்பஞ் சனக்கோல்செங் கோலே
**468
#116
கோலம்பீர்க் கழகுபன்றி பாக்குநீர்க் கொழுந்து
குவளையுட னிரந்தையிரந் தைக்கனியு மாகுஞ்
சாலஞ்சா லேகம்வலை சவைமதிலோர் மரமாஞ்
சாலையறப் புறஞ்சோலை பரிப்பந்தி மூன்றாம்
ஆலம்பூ வடவிருக்க நஞ்சுநீர் நான்காம்
ஆலசையோர் மரமாகும் மேலிடம்விண் மேற்காம்
நீலந்தான் பனைகொடுமை யுற்பலநீ னிறமாம்
நீலியே பயலவுரி நீலிமா லினியே
**469
#117
மாலிமதுப் பருதியுமாம் ஆலலொலி யாட்டாம்
மால்புதன்கார் மயல்காற்றிந் திரன்பெருமை யரியாஞ்
சூலிசிவன் காளிசூற் கொண்டபெண்ணு மாகுந்
தூலமொரு நாண்மிகையா நூல்பிடக நூலான்
காலிலிசற் பமுங்காற்று மருணனுமுப் பெயராங்
கலிங்கமூர்க் குருவிகலை கம்புளோர் நாடாம்
பீலிமயில் மயிற்றோகை யாலவட்டங் கிரியாம்
பிலவங்கந் தேரைகுரங் காம்புவியின் பாலே
**470
#118
பாலிகைவா ளுதடுமுளைப் பாரிவட்ட நான்காம்
பாலைமக ணிலமரமா மேல்வைகுளம் பொழுதாம்
கூலம்வரம் பாவணநீர்க் கரைபண்டம் பாகல்
குழல் கடியே விலங்கின்வா லுடனெண்பே ராகும்
ஏலமயிர்ச் சாந்துதுடி யோசையுமுப் பெயரா
மிலம்பகமா லிகைசருக்க நுதற்சூட்டு மூன்றாம்
வேலைகடல் கடற்கரைசெய் தொழில்பொழுது மாகும்
விலங்குகாற் றளைமிருகம் விலக்காம்வேல் விழியே
**471
#119
வேலன்வெறி யாட்டாளன் குமரனிரு பெயராம்
வேலாவ லையம்பூமி கடலிரண்டு பெயராம்
மாலையே யிரவந்தி யொழுங்குமா லிகையாம்
மல்லிகைதீ பிகைத்தட்டுத் தீபமவ்வல் மூன்றாம்
ஆலையமூர் கரிக்கூடங் கோயிலுமுப் பெயராம்
அலிப்பேர்பே டனந்தனாம் வலித்தல்சொல்லல் வளைவாஞ்
சாலகஞ்சா ளரமரும்பாஞ் சாலுழுஞ்சால் சாலாம்
சலஞ்சினம்பொய் நீர்நடுக்க மெனும்புலவர் நூலே
**472
#120
நூலோர்மந் திரிபார்ப்பார் கவிப்புலவர் மூன்றாம்
நுவல்குலிங்க மூர்க்குருவி குதிரையிரு பெயராம்
கீலால மேயுதிரங் காடிபுன லாகும்
கிளரிலாங் கலிகலப்பை தென்னைகாந் தளுமாம்
காலேகஞ் சாந்திலொன்றும் பசுத்திரளு மாகுங்
கலுழிகலங் கியநீருங் கான்யாறு மாகும்
வாலாமை யருவருப்பு மாதர்பூப் பாகும்
மலர்தல் விள்ளல் தோன்றல்விரி வாந்தால மிசையே
**473
#121
தாலமே பனைபூமி யுண்கலநாக் காகுந்
தலையலே மழைபெய்து விடலொடுநீர்த் துளியாம்
காலமே பொழுதொடுவை கறையுமென விரண்டாம்
கலினையே மிளகுகுதி ரையின் கலனை யிரண்டாஞ்
சூலைநோய் பத்திரையாஞ் சூல்சூலங் கருவாங்
துறுஞ்சிலீ முகம்வண்டு கணைமுலைக்கண் ணாகும்
ஓலைகுழை யேடாங் கலாங்கொடுமை சினமாம்
ஒலியல்கலை நதிதொடைதோற் பெயருலா விடுமே
**474
#122
உலோகந்தா துலகமுமா முலக்கைதடி நாளாம்
ஒல்லைசிறு வரையடுத்தல் விரைவுதொன்மை யாகும்
கலாபமே தோகைமயில் மணிவடஞ்சீ லையுமாம்
கருதுமல்க லேசுருங்கல் வைகுதல்நா ளாகுஞ்
சலாகைநா ராசமணி சவளம்விடு பேயாந்
தாழிலஞ்சி மகிழ்மரமாங் குளம்கொப்பூ ழாகும்
விலோதமே கூந்தலும் பதாகையுமென் றிரண்டாம்
வெளிறியபல் லேபலது நகையுமாம் புவிக்கே
** லகரவெதுகை முற்றும்
** வகர வெதுகை
**475
#123
புவனநீ ருலகமா நுவணைநுண்மை மாவாம்
பூவைபுள்ளுக் காயாவாஞ் சீவனுயிர் குருவாங்
கவனங்கான் கலக்கம்வெம்மை பரிக்கதியுட் கருத்தாங்
கவிபுலவன் வெள்ளிவா னரங்கவிப்பு நாற்பேர்
யவனர்சித்ர காரர்சோ னகர்கண்ணா ளருமாம்
இவறல் சென்ம மாசையாந் தவல்பெருமை குறைவாம்
பவனங்காற் றவனிமனை கோயிலர வுலகாம்
பவஞ்செனனம் பாவமாந் தவம்பொலிவு தவசே
**476
#124
தவிசுதனி வழிதடுக்கு மெத்தைபுல னான்காஞ்
சவிவனப்புக் காந்திமணிக் கோவைசெவ்வி யாகும்
நவிரமலை குழலுச்சி புன்மையா ழிசையாம்
நவிரிசையாழ் குழலாகு மவிர்பீற லொளியாம்
கவிகைபிச்சங் கொடுத்தலுமாஞ் சுவடிணையோ ரெண்ணாங்
கவடுவஞ்சம் புரசைகப்பாங் குவடசலங் கோடாஞ்
செவிலிதவ்வை வளர்த்தவளாந் தவர் தலத்தர் சிலையாஞ்
சிவங்குறுணி முத்திகலஞ் சிவனுமுரைக் குவரே
**477
#125
குவலையம்பார் குவளையுமாந் துவர்பவளந் துவர்ப்பாங்
குவவுதிரள் குவிதலுடன் பெருமையுமுப் பேராம்
இவர்தலளைந் திடலேற லெழுச்சியா சையுமாம்
எவனம்வினா விளமையுமாஞ் சுவலையர சழலாங்
கவலைதினை வழிகவலா மவதியெல்லை யிடராங்
கவசமங்கி காப்பாகு முவர்கடலோர் நிலமாங்
துவரையா டகமூராஞ் செவிசெவிகேட் பதுமாஞ்
சுவல்பிடர்கொய் யுளை மேடு கரிச்சுவல்பே சுவரே
**478
#126
சுவவுசுண்டன் சுவற்கமொடு புள்ளின் மூக்காகும்
துவக்குத்தோல் சங்கிலியெத் தனிப்புமூன் றாகும்
நவமழையின் காலமொன்பான் கேண்மைபுது மையுமாம்
நவியமழுக் கோடாரி கடிவாள மாகும்
உவணமது பருந்தெருவை க[ரு]டனுயர்ச் சியுமாம்
உவளகமூ ருணிமதிலோர் பக்கமவல் கரையாம்
அவலெனல்சிற் றுணவுபள்ள நீர்நிலைமுப் பெயராம்
அவியமுதம்பெலியவிதல் நெய்யாம்பா வையரே
**479
#127
பாவெனல்சொற் பாநூற்பாப் பரப்புப்பா வுதலாம்
பாவநே மகம்பவமாம் நாவுநடு நாக்காம்
மாவெனல்வண் டழைத்தல்வெறுப் பிவுளிசெல்வந் திருமா
மால்விலங்கு கருநிறமா மரம்பதினோர் பேராங்
கோவெனல்கண் பசுத்திசைநீர் கிரணம்பார் மலைகோன்
குலிசம்விண்ணம் புரையிரங்கல் சுவற்கமீ ரேழாங்
காவெனலே சோலைதுலாங் காப்புத்தோட் சுமையாங்
கவுசிகம்பண் கூகைசுடர்க் கால்பட்டா வனவே
**480
#128
ஆவிரக்கம் பசுவியப்போ டிசையாச்சா மரமாம்
ஆவியுயிர் குளநாற்றம் புகை மூச்சைம் பேராம்
தாவருத்தம் பகைதாண்டல் வலிகொடென்ற லைந்தாம்
சவுரியமே களவுவீ ரியமிரண்டு பேராங்
காவிகள்ளுக் காவிக்கற் குவளை மூன் றாகுங்
கவந்தம்பேய் தலைக்குறைதண் ணீர்மூன்று பேராம்
நாவிதன்மஞ் சிகன் பூரங் கார்த்திகைமுப் பேராம்
நவ்விமா னழகுதோ ணியுமாமோ வியமே
**481
#129
ஓவியர்சித் திரகாரர் சிற்பநூ லோராம்
ஓவிரக்க மோடுநீர் தகைநீக்கங் கதவாங்
கூவிரந்தேர் தேர்மொட்டாந் தாவமிட ரூராங்
கோவம்பொன் சினமாகுஞ் சேவெருது பரியாம்
வாவலெனு மொழிதாவல் வவ்வலு மாகும்
மவுலிமுடி சடைதொடையாஞ் சவலையெய்ப்பு மின்னாம்
ஆவரணங் கலனாடை சவட்டைதடை மறைவாம்
ஆவணநாள் வீதியுரித் தெனமொழிநீ வியந்தே
**482
#130
நீவி துடைத் திடலாடை கொய்சகமுப் பேராம்
நீண்டசிவை யுமைமரவேர் கொல்லுலையோ ரியுமாம்
ஏவல்வியங் கோளாணை வறுமைமூன் றாகு
மியம்புகவை யெள்ளிளங்காய் சவர்வழிதுன் ப[மு]மாஞ்
சீவனியே யோர்மருந்து செவ்வழியாழ்த் திறமாஞ்
சேவல்புள்ளி னாண்காவல் சேறுகோ ழியுமாங்
கேவலமென்பதுதனிமை முத்தியுமென் றாகும்
கிடைத்தசவு ரியன்வீரன் சனியெனுமவ் வுரையே
**483
#131
அவ்வைதா யவ்வையுமாஞ் செவ்விபொழு தழகாம்
அறைந்தசே வகம்வீர மானையின் கூடமுமாம்
பவ்வமரக் கணுவாரி குமிழியுவா நான்காம்
பகர்தெவிட்ட னிறைத்தலொலி யடைத்தல்கான் றிடலாந்
தவ்வைதாய் முன்பிறந்தாள் சேட்டைமூன் றாகும்
சவுரிமா லயன்சனியோர் நதியுநான் காகுந்
தெவ்வுபகை யமராகுஞ் சிவப்புநிறஞ் சினமாஞ்
செப்பவந்தி யூர்கிளியென் றியம்பு திநீ யுவந்தே
**484
#132
உவா வெனுஞ்சொ லிளையோனும் பவ்வமுந்தந் தியுமாம்
உவப்புமே டுவகையுமா நிவப்புயர்ச்சி மேடாங்
கவானெனுஞ்சொ லுயர்ச்சிதுடை மேடுதிரட் சியுமாங்
கவுசிகனே யிந்திரனு மொருமுனியு மாகுஞ்
சுவாமிபொருண் முதல்வன் செவ்வேள் மூன்றுபெய ராகுந்
துவைபிண்ணாக் குடனிறைச்சி யொலித்திடலு மாகுஞ்
சிவேதைதெற்கு மருந்தாஞ் சுவேதம்வெண்மை வெயர்வாஞ்
செழிக்குமா வலம்வாய்கொட் டுதலிழைக்கும் வளமே
** வகர வெதுகை முற்றும்
** ளகர வெதுகை
**485
#133
வளம்பதவி யெழில்வளமாம் வளமைமாண் கொழுப்பாம்
வாளியம்பு மண்டிலமாங் காளிதுற்கை பனையாங்
குளங்கரும்பின் கட்டிநுதல் குட்டமுமுப் பேராங்
குளிர்குளிர்ச்சி நண்டுகவண் கருவிமுழா மழுவாந்
தளம்படைபூ விதழ்சாந்தஞ் சமதலந்தா ழியுமாந்
தளைவிலங்கு துடர்ச்சிசிலம் பாண்மயிர்தா ளைந்தாம்
களங்கறுப்பில் லவள்கழுத்துக் களரிடம்போர்க் களமாம்
களபமா னையின்கன்றுங் கலவையென்றுங் கிளத்தே
**486
#134
கிளர்கிரணங் கோட்டுமலர் கிளர் தல்பூந் தாதாம்
கிளைகிளைத்தல் மூங்கில்சுற்ற மேழிசையி லோர்பேர்
உளர்தல்சித றுதல்தடவல் கிண்டுதலு மாகும்
உளைமயிர்மாக் குசைமயிராம் விளைவயல்கா டிரண்டாம்
களரிகள ரிடங்கருமை சவைபோர்செய் யிடமாங்
களகமே பெருச்சாளி கல்விகூ ரிடமாம்
முளரிதீக் கான்விறகு சிறுமைதா மரையாம்
முளையாணி வேய்முளைத்தல் சேயெனவும் விளம்பே
**487
#135
விளர் கொழுப்பு வெளுப்புரித்தாம் விளவுகமர் மரமாம்
விளரியாழ் யாழ்நரம்பு வேட்கையிள மையுமாம்
அளவையெல்லை நாளாகு மளறுபங்க நரகாம்
அளிகொடைதேன் பரிவுவண்டாந் தளிகோயில் துளியாம்
இளமையிள மையின்பருவந் தண்மைகா மமுமாம்
இளைகாவற் காடிளமை புயல்வேலி நான்காங்
களிறுதந்தி யத்தநா ளாண்விலங்கு மீனாங்
களிகுழம்பு மதுக்களிப்பாய்க் காணல்வெளிப் படுமே
**488
#136
வெளிலணில்வேள் வியின்றம்பந் தயிர்கடையுந் தறியா
மீளிவலி திண்ணியனே பெருமைதலை வனுமாம்
பளிதமே கற்பூரங் கணக்கெண்பல் லமுமாம்
பாளிதமே கண்டஞ்சேற் றொடுகுழம்பு பட்டாம்
இளியுரித்த லிணுங்கலிசித் திடலிசையு மாகும்
இளவல்பின்னோ னிளம்பயிராந் தளிமமெத்தை யழகாம்
நளிபெருமை குளிர்செறிவு தேள்பொலிவு திரளாம்
ஞாளிகள்ளுக் குக்கலுமாம் வாள்வசிகூ ரொளியே
**489
#137
ஒளிபுகழ் முச் சுடர்கேட்டை யொளிராறு பெயராம்
ஒளிவட்டங் கண்ணாடிச் சக்கரா யுதமாம்
அளைதயிர்புற் றொடுமுழையாங் களவுமரங் களவாம்
அளகநீர் குழல்வகையாந் துளியாமை துளியாம்
வளைதொடிசக் கரம்புன்னை சங்குமனை யுறுப்பாம்
மள்ளர்கா னவர் வீரர் பள்ளர்மூன் றாகுங்
களவனே கருநிறத்தோ னானைஞெண்டு மாகும்
கள்வன்முசுச் சோரனுமா மள்ளல்நர களறே
**490
#138
அளித்தல்செறித் திடல்காத்தல் கொடுத்திடலு மாகும்
அளகுகார்த் திகைகூகை கோழியல்லாப் பெடையாம்
திளைத்தலனு பவித்தல்செறித் திடனிறைத லாகும்
தேளனுடந் தெறுக்காலாம் வேள்குகன்கா மனுமாம்
விளக்குநாள் விளக்கொளியா மிளைப்பிரக்க நோயாம்
வேள்விகொடை நாண்மகமாந் தோள்புயங்கை யாகும்
துளக்கமே யச்சமொடு பிரகாச மாகும்
துளும்பலே திமிறல்துள்ள லென்பர்கேள் வியரே
**491
#139
கேள்விசெவி கல்வியுமாந் தாளடிமுன் முயல்வாங்
கேளிர்பெண்கள் விளையாட்டுச் சுற்றமிரு பேராங்
கோள்வலிபொய் கொலைகிரகங் குணங்கொள்கை யூறாங்
கோளிகொள்வோன் கொழிஞ்சிபூ வாக்காய்க்கு மரமாங்
காளையெரு திளமையோன் பாலையிறை வனுமாம்
காளங்காஞ் சுரைசின்னஞ் சூலநஞ்சு கறுப்பாம்
ஓளியொழுங் குடனானைக் கூடமிரு பேராம்
உரைகளே பரமுடம்பு பிணமாமுள் ளதுவே
**492
#140
உள்ளல்நினை வுள்ளானா மெள்ளல்நகை யிழிப்பாம்
உள்ளமுயிர் முயற்சிநெஞ்சாங் கள்ளுமதுக் களவாம்
பள்ளிநகர் துயில்பாயல் கோயில்முனி யிருப்பாம்
பரியகோ ளகைவட்ட மண்டலிபாம் பாகும்
அள்ளுரமே செறிவுகா தயில்வலிபற் றிரும்பாம்
அளக்கர்புவி யுப்பளஞ்சே றுவரிகார்த் திகையாம்
புள்ளவிட்டம் வண்டுபுள்ளாம் வள்ளம்வட்டில் புணையாம்
புளகமே கண்ணாடி குமிழ்ப்பெனக்கொள் ளுகவே
**493
#141
கொள்ளைமிகை கொடுவியாதி பொள்ளலப்பம் பொந்தாம்
கூளிதமர் வாமனம்பேய் குறள்வீர ரேறாம்
வள்வலிவாள் முனைகாதாம் வெள்ளமெண்ணீத் தமுமாம்
வள்ளிகொடி யாபரணங் கைவளைவள் ளியுமாம்
வெள்ளைதகர் வெளிறனந்தன் மதுவெண்பாச் சங்காம்
வேளாள னுபகாரி வெள்ளாள னிரண்டாம்
ஞெள்ளலே வீதிபள்ள மென்மைமூன் றாகு
நெடியகா ளகங்கறுப்பூ ருடையாம் வெள் வளையே
**494
#142
வெள்ளில்விளாப் பாடையுமாம் விள்ளலுரை நெகிழ்வாம்
வேளாண்மை நிசங்கொடுத்தல் முயற்சிமூன் றாகும்
பிள்ளைமக வொடுகாக்கை வயிரவனு மாகும்
பேணுங்கா ளியர் வண்ணா ருறைகார ராகும்
ஞொள்கலிழைத் திடல்சோம்பு நோயச்சந் திரிவா
நுண்களங்கன் வஞ்சகனுஞ் சந்திரனு மாகும்
கிள்ளையெனு மொழிகுதிரை தந்தையிரண் டாகுங்
கிளிஞ்சிலெருந் துடன் மலங்கு மீனாம்பொற் குழையே
** ளகர வெதுகை முற்றும்
** ழகர வெதுகை
**495
#143
குழைதழை துவாரங்குண் டலஞ்சேறு நாற்பேர்
குழலளகந் துளையுடைத்தாம் பொருளிசையின் குழலாம்
கழைகரும்பு புணர்பூச மூங்கில்மூன் றாகுங்
கழல்செருப்புக் கால்கழங்கு காலணிகாற் பேராம்
விழைவுமயல் புணர்ச்சியுமாங் கழுமல்பற்று மயக்காம்
விழிதல்கொடை சாவாகுஞ் செழுமையெழில் வளமாம்
உழையிடமான் யாழ்நரம்பா மழுவம்விரி நாடாம்
ஊழெனுஞ்சொற் பகைமுறைமை வெயில்முப்பேர் தொழுமே
**496
#144
தொழுவுழலை ரேபதியாங் குழகிளமை யழகாந்
தொழுதிகுழுப் புள்ளொலியாம் மழைகுளிர்ச்சி புயலாங்
கழுதுபேய் பரண்வண்டாம் பழமுதுமை கனியாங்
கழங்குபேய் நடங்கழலாங் கொழுந்துதளிர் புதலாம்
இழுதிமை நெய்யாகு மிழுதைமடன் பொய்யாம்
எழிலிவள்ளல் புயலாகு மெழிலழகு தொண்டாம்
விழுமஞ்சீர் மையுஞ்சிறப்பு மிடும்பையுமுப் பெயராம்
விழவுவிழா மிதுனமதாங் கிழமுரிமை கிழமே
** பொதிகை நிகண்டின் பிரதி இதனோடு முடிகின்றது
**
**
|