<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - முதற்பகுதி - தொடரடைவு

நூ - முதல் சொற்கள்
நூக்கல் 1
நூதனம் 1
நூபுரம் 4
நூல் 6
நூலர் 2
நூலி 1
நூலிலி 1
நூலின்முதல்கயிறு 1
நூலே 2
நூலோர் 2
நூவும் 1
நூழில் 1
நூழை 2
நூற்கலையே 1
நூற்பா 3
நூற்றொன்று 1
நூறாயிரமே 1
நூறு 1
நூறைஅதாம் 1
நூன் 1
நூன்மறை 1
நூன்முகத்தின்பேர் 1
நூன்முடிவு 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    நூக்கல் (1)
உருத்தல் பொடித்திடல் நாறல் முளைத்தல் ஆம் நூக்கல் ஊன்றல் நோன்றலும் தள்ளல் ஆம் பாதுகாத்தல் - 9.செயல்பற்றியபெயர்:9 19/2

 TOP
 
    நூதனம் (1)
புதுமை புனை நூதனம் புத்தேள் விருந்து கோடி புனிறு வம்பு கடி யாணர் நவம் புதிதும் ஆகும் - 7.பண்புப்பெயர்:7 22/3

 TOP
 
    நூபுரம் (4)
பரிபுரம் நூபுரம் அரவம் குடச்சூலே ஞெகிழி பரலின் அரியகம் சிலம்பு ஆம் பரல் அரி ஆம் பாதசரமதின்பேர் - 6.பல்பொருள்பெயர்:6 29/2
சிகி மயில் நூபுரம் கேது தீ என நாற்பேராம் சிகண்டி மயில் பாலையாழ்த்திறமும் ஆம் சகத்தே - 10.ஒருசொல்பல்பொருள்:10 5/4
அரவம் ஒலி பாம்புடன் நூபுரம் இவை முப்பேராம் அரலையே கழலை விதை மரல் கனி நாற்பேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 89/2
சிலை ஒலி கல் உரு வில் ஆம் ஒலி தொனி காற்று இடி ஆம் சிலம்பு ஒலி நூபுரம் கிரி ஆம் விலங்கல் வெற்பு விலக்கு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 111/2

 TOP
 
    நூல் (6)
கோத்திரம் மண் குலம் மலை ஆம் தீர்த்தம் விழா நீர் ஆம் கூத்தன் நடன் உயிர் ஆகும் ஓத்து நூல் மறை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 63/1
சூத்திரம் நூற்பா நூல் ஆம் பாத்து அடிசில் பகுப்பு ஆம் சோத்தியம் நொய் சோர்வு ஆகும் சீத்தை மடன் இழிவு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 63/3
வாமம் இடப்பால் அழகு துடை ஒளி சிந்துவும் ஆம் வாமனம் திக்கானை குறள் நூல் ஆம் பூமயிலே - 10.ஒருசொல்பல்பொருள்:10 74/4
காரிகை பெண் அழகு கலித்துறை ஒரு நூல் ஆகும் கரியவன் இந்திரன் சனியன் கண்ணன் சாத்தனும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 98/1
கலை மதி பங்கு உடை இரலை கல்வி நூல் வயிரம் காலநுட்பம் விலங்கின்ஆண் மகரம் மா கவடு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 111/1
சூலி சிவன் காளி சூல் கொண்ட பெண்ணும் ஆகும் தூலம் ஒரு நாள் மிகை ஆம் நூல் பிடகம் நூன் ஆன் - 10.ஒருசொல்பல்பொருள்:10 117/2

 TOP
 
    நூலர் (2)
மன்னியசூழ்வோர் உழையர் நூலர் எண்ணர் துணைவர் அமாத்தியர் மூத்தோர் முதுவோர் தேர்ச்சியர் ஏனாதி - 2.மக்கள்பெயர்:2 13/1
ஒரு நூலர் கைக்கோளர் தந்துவாயர்த்தரும் ஆம் உமணரே அளவர் உப்புவாணிகர்பேர் சிற்பி - 2.மக்கள்பெயர்:2 17/2

 TOP
 
    நூலி (1)
நுணுகு நொசி நுண்மையின்பேர் நுனியும் ஆம் சின்னம் நூலி இறை கன்று ஆசு கலம் தோகம் தன்னம் - 7.பண்புப்பெயர்:7 6/2

 TOP
 
    நூலிலி (1)
திரள் விதவை அமங்கலி நூலிலி கைமை கயினி தீர்ந்த கலனழிமகள்பேர் மைமை வந்தி இரண்டும் - 2.மக்கள்பெயர்:2 43/3

 TOP
 
    நூலின்முதல்கயிறு (1)
நூலின்முதல்கயிறு கச்சை குணம் தாமம் பழுதை நுண் பாசம் வடம் புரி நாண் இரச்சை அக்கம் தாம்பு ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 9/1

 TOP
 
    நூலே (2)
துண்டான பருத்தி பன்னல் தூலம் பஞ்சு ஆகும் துய் துடர் சூத்திரம் தந்து பனுவல் இவை நூலே - 6.பல்பொருள்பெயர்:6 8/4
சாலகம் சாளரம் அரும்பு ஆம் சால் உழும்சால் சால் ஆம் சலம் சினம் பொய் நீர் நடுக்கம் எனும் புலவர் நூலே - 10.ஒருசொல்பல்பொருள்:10 119/4

 TOP
 
    நூலோர் (2)
இருபிறப்போர் பூசுரர் நூலோர் ஆதிவருணர் எரிவளர்ப்போர் விப்பிரர் ஆய்ந்தோர் சடங்கர் பார்ப்பார் - 2.மக்கள்பெயர்:2 3/2
நூலோர் மந்திரி பார்ப்பார் கவிப்புலவர் மூன்றாம் நுவல் குலிங்கம் ஊர்க்குருவி குதிரை இருபெயராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 120/1

 TOP
 
    நூவும் (1)
வருத்தும் எள்ளு குமிகை திலம் எண் நூவும் நாற்பேர் மற்று அதின்காய் கவை ஆம் வேயரிசி தோரைஅதாம் - 4.மரப்பெயர்:4 25/1

 TOP
 
    நூழில் (1)
அன்ன கோவையின்பேர் ஆம் நூழில் கொடிக்கொற்றான் ஆயிடும் வச்சிரவல்லி பிரண்டை என கழறே - 4.மரப்பெயர்:4 22/4

 TOP
 
    நூழை (2)
பேதம் முழைஞ்சிலும் குகைப்பேர் அறையின்பேர் முழைஞ்சு பிலமும் ஆம் அதன் வாசல் நூழை சுருங்கையுமே - 5.இடப்பெயர்:5 16/4
அணு நுணுக்கம் கூர் முளரி நுழை நுவணை நூழை ஆய்தல் அயிர் ஓய்தல் உயிர் முன் நுணங்கு நுட்பம் - 7.பண்புப்பெயர்:7 6/1

 TOP
 
    நூற்கலையே (1)
புலவு தசை ஒரு மரம் ஆம் நிலவு மதி ஒளி ஆம் புலிங்கம் ஊர்க்குருவி தீப்பொறி எனும் நூற்கலையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 110/4

 TOP
 
    நூற்பா (3)
சூத்திரம் நூற்பா நூல் ஆம் பாத்து அடிசில் பகுப்பு ஆம் சோத்தியம் நொய் சோர்வு ஆகும் சீத்தை மடன் இழிவு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 63/3
கம்பலை துன்பொலி நெருக்கம் அச்சம் நூற்பா ஆம் கம்பம் நடுக்கம் தூண் ஆம் கிம்புரி பூண் முடி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 77/2
பா எனல் சொற்பா நூற்பா பரப்பு பாவுதல் ஆம் பாவம் நேமகம் பவம் ஆம் நாவு நடு நாக்கு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 127/1

 TOP
 
    நூற்றொன்று (1)
விதுவணிவோன் எண்குணன் எண்தோளன் மலைவில்லான் வெண்ணீற்றன் பசுபதி நூற்றொன்று சிவன்பெயரே - 1.தெய்வப்பெயர்:1 3/4

 TOP
 
    நூறாயிரமே (1)
உரத்த நூறாயிரமே இலக்கம் அது பத்தே உறு நியுதம் அது பத்தே கோடி எனும் கூற்றே - 7.பண்புப்பெயர்:7 40/4

 TOP
 
    நூறு (1)
தர தசம் பான் பது பத்து ஆம் நூறு சதம் ஆகும் சகத்திரம் ஆயிரம் அயுதமே பத்தாயிரம் ஆம் - 7.பண்புப்பெயர்:7 40/3

 TOP
 
    நூறைஅதாம் (1)
மலை இறால் இறல் ஆகும் கெடிற்றுமீன் கெளிறு ஆம் மலங்கின்பேர் நூறைஅதாம் ஆரல் ஆரால் ஆம் - 3.விலங்கின்பெயர்:3 37/2

 TOP
 
    நூன் (1)
சூலி சிவன் காளி சூல் கொண்ட பெண்ணும் ஆகும் தூலம் ஒரு நாள் மிகை ஆம் நூல் பிடகம் நூன் ஆன் - 10.ஒருசொல்பல்பொருள்:10 117/2

 TOP
 
    நூன்மறை (1)
வெயில் பொரு சொல் மலை கீர்த்தி ஆம் ஓத்து சாகை வேதம் இருக்குஆதி நூன்மறை எழுதாக்கிளவி - 8.ஒலிபற்றியபெயர்:8 7/2

 TOP
 
    நூன்முகத்தின்பேர் (1)
முடிவின் அணிந்துரை பதிகம் புனைந்துரை பாயிரமே முகவுரை நூன்முகத்தின்பேர் கணக்கு எழுத்து எண் இயலே - 8.ஒலிபற்றியபெயர்:8 8/4

 TOP
 
    நூன்முடிவு (1)
படலம் அத்தியாயம் இலம்பகம் ஓத்து காண்டம் பரிச்சேதம் நூன்முடிவு ஆம் புறவுரை தந்துரையே - 8.ஒலிபற்றியபெயர்:8 8/3

 TOP