|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
ஐ (4)
அணை மனையாள் வாழ்க்கை விருந்து உரிமை மணவாட்டி ஐ குடும்பி பன்னி மணமகள் ஆம் நாயகியே - 2.மக்கள்பெயர்:2 38/4
மயிர்த்த கபம் கோழை ஐ ஆம் கச்சை வடு சேக்கை அங்கிதமே வசி உடலில் தழும்பு ஆயத்திடுமே - 2.மக்கள்பெயர்:2 56/4
ஐ படங்கு வானி விதானமும் மேற்கட்டியின்பேர் ஆகும் கேவணம் குழி வட்டத்தின்பேர் அணையே - 6.பல்பொருள்பெயர்:6 45/4
ஐ இடைச்சொல் அழகு இருமல் அரசனில்சாமியும் ஆம் ஐயை உமை துற்கை சுதை தவப்பெண் ஆசாள் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 83/2
TOP
ஐங்கதியே (1)
தண்டு பரி மாற்கம்அதாம் வானரம் மயூரம் சரம் சசமே மல்லம் என சாற்றிடும் ஐங்கதியே - 3.விலங்கின்பெயர்:3 8/4
TOP
ஐங்கரன் (1)
ஏகதந்தன் ஐங்கரன் பாசாங்குசன் கயாரி ஏரம்பன் வக்கிரதுண்டன் விநாயகன் பேர் - 1.தெய்வப்பெயர்:1 7/2
TOP
ஐங்காயம் (1)
காயம் உடல் ஐங்காயம் கறிகரித்தல் விண் ஆம் காணும் வாய் குழல் இடம் மெய் வாய் வாய்த்தல் ஐம்பேர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 85/3
TOP
ஐந்தாகும் (1)
ஐந்தாகும் மலயசம் சந்து ஆரமே சந்தம் ஆகுதி தண்வாசி இலேபனம் பூசல் சாந்தம் - 4.மரப்பெயர்:4 1/2
TOP
ஐந்தாம் (26)
தொகுத்த வணங்காமுடியன் வலம்புரிமாலிகையான் சுயோதனன் ஐந்தாம் திரியோதனன்பெயர் கன்னிகையே - 2.மக்கள்பெயர்:2 9/4
மலை முலைக்கண் சுதலை சிலீமுகம் பால்கண் சூசாம் மருமம் உரம் மார்பு அகலம் ஆகம் நெஞ்சே ஐந்தாம்
சொலும் நெரிசல் பொறி தேமர் பீர் துத்தி உத்தி சுணங்கு வரி திதனி வசந்திகை இனந்தி தித்தி - 2.மக்கள்பெயர்:2 49/2,3
சிதகின் நிரை காலேயம் பசுக்கூட்டம் ஐந்தாம் செருத்தல் மடு சுரை ஈன்பை பீனசமும் முலைப்பேர் - 3.விலங்கின்பெயர்:3 9/3
தொழில் கருமம் கன்மம் விதி செயல் வினைப்பேர் ஐந்தாம் தொழில்பயில்வு தொறு ஆம் காதரம் வினையின்தொடர்வு ஆம் - 9.செயல்பற்றியபெயர்:9 1/1
முரிதலின்பேர் ஊழ்த்தல் மூடுதல் கவித்தல் பாத்தல் மொஞ்சல் மூசுதல் ஐந்தாம் கூசல் மட்கல் கெடுதல் - 9.செயல்பற்றியபெயர்:9 11/2
தாவு மீண்டிடல் ஐந்தாம் சம்பிரதம் சித்து ஆம் தரித்தல் பரித்திடல் பொறுத்தல் தாங்கல் சமத்தலின்பேர் - 9.செயல்பற்றியபெயர்:9 18/3
விண்டு மலை வேய் காற்று மேகம் மால் ஐந்தாம் விண் முகில் வான் சுவற்கம் ஆம் கண் இடம் வேய் விழி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 46/1
தண்டம் எறுழ் கரிவழி தண்டனை பாரம் நான்காம் தண்டி யாழ் தடி படை குழாய் ஓந்தி ஐந்தாம்
அண்டசம் நண்டு உடும்பு அரவு கரா ஓந்தி தவளை யானை மீன் ஆமை பரி பல்லி புள்பேர் உண்டே - 10.ஒருசொல்பல்பொருள்:10 46/3,4
மதலை பிள்ளை கொன்றை மரக்கலம் கொடுங்கை தூண் ஆம் மதவு புதல் வனப்பு வலியுடன் மிகுதி ஐந்தாம்
சிதலை பிணி கறையான் ஆம் கதவம் காப்பு அடைப்பு ஆம் சிதம் ஞானம் உடு வெளுப்பு ஆம் புதவு புல்லு கதவு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 50/2,3
ஓதிமம் வெற்பு அன்னம் ஆம் ஓதை ஒலி மதில் ஆம் ஓதி மயிர் ஓந்தி மலை பூனை அறிவு ஐந்தாம்
சாதி குலம் சண்பகம் ஓர் தரு பிரம்பு கள் ஆம் சாதகம் புள் பயிற்சி முறி செனனம் பூதமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 54/1,2
சோதி உடு விளக்கு இரவி சுடர் சோதி சிவன் ஆம் சுதை அமுது ஆன் மகள் சுண்ணச்சாந்து செல்வம் ஐந்தாம்
பூதி செல்வம் நீறு அறிவு சேறு துகள் நரகு ஆம் புதை கணைக்கட்டு உடல் புதுமை நிறை புதைத்தல் மாதே - 10.ஒருசொல்பல்பொருள்:10 54/3,4
மேதை புதன் இறைச்சி தோல் அறிவு கள்ளோடு ஐந்தாம் வேதி திண்ணை பலகை விரவுதல் கேட்டை நாள் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 56/2
அத்திரி ஒட்டகம் பரி வேசரி மரம் வெற்பு அம்பு ஆம் அத்தி கடல் அது எலும்பு கோறல் கரி ஐந்தாம்
பத்திரி புள் காளி பரி இலை வானம் அம்பு ஆம் பத்தி முறை அன்பு ஒழுக்கம் வழிபாடு உத்தமமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 60/3,4
அத்து அரைஞாண் சிவப்பு அசைச்சொல் இசைப்படுத்தல் ஐந்தாம் அத்தினி பெண் பிடி இரண்டாம் சுத்தி சுசி சங்கு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 61/2
அந்தரம் விண் முடிவு நடு பேதம் இடம் ஐந்தாம் அந்தி சந்தி மாலை யாழ் இரவு ஆம் சிந்தனையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 64/4
குமரி கன்னி காளி அழியாமை கற்றாழையும் ஆம் குமுதம் அல்லி அடுப்பு ஒலி திக்கானை தெற்பை ஐந்தாம்
சிமிலி உறி குடுமி விட்டில் மூன்றுபேராகும் திகழ் அமுதம் முத்தி பால் சுதை சோறு என்றமையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 72/3,4
உம்பல் குலம் எழுச்சி வலி யானை விலங்கு ஐந்தாம் உறு கும்பம் மத்தகம் இல் குடம் சம்பூரணமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 76/4
அம்பணமே மரக்காலும் ஆமையும் என்று இருபேர் அடு நேமி வளை கடல் பார் புள் வட்டம் ஐந்தாம்
கொம்பு கொப்பு மருப்பு ஆம் சம்பகம் தகர் ஆணியும் ஆம் கொம்மை முலை அழகு இளமை கொட்டல் வட்டம் ஆமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 77/3,4
பயம் அமுதம் நீர் அச்சம் பால் பயன் பேர் ஐந்தாம் பயிர் ஒலி பைங்கூழ் பறவைக்குரல் பயிறல் பெயரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 79/4
நியமம் நெறி நிசம் நியதி நகர் கோயில் ஐந்தாம் நெய் கிருதம் நிணம் ஆகும் பை படம் பை பசப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 80/2
கரம் விடம் கை குடிஇறை வேசரி கிரணம் ஐந்தாம் கரகம் ஆலாங்கட்டி கமண்டலம் நீர்த்துளி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 88/2
குரல் இசை யாழ்நரம்பு கதிர் கூந்தல் இறகு ஐந்தாம் குரம் உளைஞ்சில் பரிக்குளம்பு ஆம் வருணம் நிறம் குலம் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 88/3
நரை சவரி பரி தாரை வெள்ளை நந்தி ஐந்தாம் நரம்பு வடம் நாடியும் ஆம் குரம்பை உடல் கூடு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 91/2
பலம் நிறை காய் கனி சேனை ஆதாயம் ஐந்தாம் பலி பூசை பிச்சை திருநீறு தெய்வவுணவு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 110/1
தா வருத்தம் பகை தாண்டல் வலி கொடு என்றல் ஐந்தாம் சவுரியமே களவு வீரியம் இரண்டுபேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 128/2
தளம் படை பூவிதழ் சாந்தம் சமதலம் தாழியும் ஆம் தளை விலங்கு துடர்ச்சி சிலம்பு ஆண்மயிர் தாள் ஐந்தாம்
களம் கறுப்பு இல்லவள் கழுத்து களர் இடம் போர்க்களம் ஆம் களபம் ஆனையின்கன்றும் கலவை என்றும் கிளத்தே - 10.ஒருசொல்பல்பொருள்:10 133/3,4
TOP
ஐந்து (5)
ஓர் மாலை யாமமும் வைகறையும் என ஆறாய் உதித்து ஐந்து கடிகை முதல் ஒவ்வொரு பத்து ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 50/3
நகை கன்னல் கட்டி குளம் ஐந்து சருக்கரை ஆம் நறும் பால் கீரம் பயசு பயம் அமுதம் நான்கே - 6.பல்பொருள்பெயர்:6 13/4
வடிவு அளவு வண்ணமொடு காட்சி கருத்து ஐந்து வகை பண்பு ஆம் பருதி தட்டு நேமி கொம்மை வலையம் - 7.பண்புப்பெயர்:7 1/1
இரட்டொழி மூ மு திரி மூன்று ஆம் சதுரும் பாத்து மிசை நான்கு நால் ஆகும் பஞ்சம் அஞ்சும் ஐந்து ஆம் - 7.பண்புப்பெயர்:7 40/1
வஞ்சி கொடி மரம் பா ஊர் மேற்செலவு பெண் ஆம் வஞ்சம் வாள் கபடமும் ஆம் பஞ்சம் மிடி ஐந்து ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 22/1
TOP
ஐந்துநிதி (1)
குறைவில் ஐந்துநிதி மகவான் ஏவல்கேட்பதுவாம் கொண்ட விண்ணாட்டிறை கொடிதான் இடி என பேசுவரே - 1.தெய்வப்பெயர்:1 19/4
TOP
ஐந்துபேர் (1)
சொருகு சோத்திரம் கன்னம் ஐந்துபேர் செவிக்கு ஆம் குழை குளம் அளிகம் விலாடம் பனிச்சை பாலம் - 2.மக்கள்பெயர்:2 53/3
TOP
ஐந்துபேராகும் (1)
ஊக்கமே உற்சாகம் முயற்சி வலி பொலிவோடு உள்ளத்தின்மிகுதி என ஐந்துபேராகும்
மேக்கு மேற்றிசை மேல் ஆம் பாக்கு இடைச்சொல் பாக்கு ஆம் வியந்திடு கைக்கிளை இசையும் ஒருதலைக்காமமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 12/2,3
TOP
ஐந்தும் (12)
எழுது கவான் சோகம் ஐந்தும் துடை ஆகும் துடைவேர் இசைவு கந்து கொழுத்து முட்டு கிரந்தி சந்து பொருத்து ஆம் - 2.மக்கள்பெயர்:2 47/3
பங்கயம் வத்திரம் ஐந்தும் ஆனனம் ஆம் தட்டம் பாலிகையே இதழ் ஓட்டம் அதரம் முத்தம் உதடு ஆம் - 2.மக்கள்பெயர்:2 51/2
செழித்திடும் இந்திரியப்பேர் மெய் வாய் கண் மூக்கு செவி ஐந்தும் பொறி ஆகும் சுவை ஒளி ஊறு ஓசை - 2.மக்கள்பெயர்:2 59/2
அழுத்தியதோர் நாற்றம் ஐந்தும் புலன் ஆகும் சீவன் ஆதன் இயமான் அணு புற்கலன் சேதனனே - 2.மக்கள்பெயர்:2 59/3
மா துருக்கம் நானம் மான்மதம் எனும் பேர் ஐந்தும் மருவளர் கஸ்தூரியின்பேர் மறுவி மறி நாவி - 3.விலங்கின்பெயர்:3 16/3
தளவு மாகதி மவ்வல் ஊதிகை கற்பு ஐந்தும் தளிர்த்த முல்லைப்பேர் உழிஞை சிறுபூளை ஆகும் - 4.மரப்பெயர்:4 14/2
மீதுயர்ந்த குவடு ஐந்தும் மலையின்உச்சிப்பேர் ஆம் விவரம் முழை முடுக்கர் விடர் கந்தரமே நிகுஞ்சம் - 5.இடப்பெயர்:5 16/3
தொகையான கண்டு அயிரே கண்டம் என ஐந்தும் தூய கண்டசருக்கரை ஆம் அக்காரம் விசையம் - 6.பல்பொருள்பெயர்:6 13/3
சிதள் மயலும் செற்றையின்பேர் சுடுபு சுமை சும்மை சோடை சும்மாடு ஐந்தும் சுமட்டின்பேர் பரப்பே - 6.பல்பொருள்பெயர்:6 16/4
கொழுத்த தண்டு பீலி எஃகம் பிண்டி பாலம்அதாம் குந்தம் தோமரம் கொந்தம் ஈட்டி விட்டேறு ஐந்தும்
பழு சவளம் ஆம் முலை மூக்கரிகருவி குளிர் ஆம் பரு நவியம் கோடாரிப்பேர் குடாரமும் ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 21/2,3
போர் முசுண்டி முற்கரம் ஆம் பறளை பறளிகை கற்பொறி அல்லி அள்ளு ஐந்தும் பற்றிரும்பு ஆம் கவணின் - 6.பல்பொருள்பெயர்:6 22/3
மருட்டு உறுதிச்சொல் ஆகும் உல்லாபம் குதலை மழலை கொஞ்சல் மிழலை ஐந்தும் மென்சொல்லாய் வருமே - 8.ஒலிபற்றியபெயர்:8 2/4
TOP
ஐந்தோடு (1)
மின் உறையும் கஞ்சமும் வெண்கலம் ஆம் முன் ஐந்தோடு இவையும் தாது எழுலோகம் காரீயம் நாகம் - 6.பல்பொருள்பெயர்:6 3/2
TOP
ஐப்பசி (1)
திரம் முதல்நாள் ஏறு இரலை மருத்துவன் ஐப்பசி யாழ்ச்சென்னியுடன் பரிப்பேரும் அச்சுவதி நாமம் - 1.தெய்வப்பெயர்:1 40/1
TOP
ஐம்படையான் (1)
தமன் விசையசாரதி பத்தவதாரன் ஆதி சகடுதைத்தான் ஐம்படையான் பாண்டவர்சகாயன் - 1.தெய்வப்பெயர்:1 14/1
TOP
ஐம்பத்தாறுபெயர் (1)
அதிபன் ஐம்பத்தாறுபெயர் புவிராசர்க்கு உரைப்பார் அடுத்து ஓதல் ஈதல் படைக்கலம்பயிறல் வேட்டல் - 2.மக்கள்பெயர்:2 7/2
TOP
ஐம்பதுபேரும் (1)
உரைதரும் ஐம்பதுபேரும் சமுத்திரத்துக்கு ஆகும் ஓரம் அலைவாய் தீரம் தடம் வாரம் திமிரி - 5.இடப்பெயர்:5 22/2
TOP
ஐம்பதும் (1)
மேருஅசைத்தோன் இலக்கத்துஒன்பதின்மர்முன்னோன் வேடன் ஒன்றோடு ஐம்பதும் சுப்பிரமணியற்கு ஆமே - 1.தெய்வப்பெயர்:1 9/4
TOP
ஐம்பால் (1)
நெடிமை சுருள் பங்கி சிரோதம் கோதை ஐம்பால் நேர் விலோதம் கூந்தல் கொந்தளம் மாராட்டம் - 2.மக்கள்பெயர்:2 55/3
TOP
ஐம்பானிரண்டு (1)
மதுரையுடன் மாரி சுமாலினி ஐம்பானிரண்டு மயக்கு கள்ளின்பேர் ஆகும் நனை நறவு தேறல் - 6.பல்பொருள்பெயர்:6 16/1
TOP
ஐம்பானே (1)
பரம் அமுதம் அங்குசம் அப்புடன் அகிலம் தோயம் பாணி வெள்ளம் காண்டம் வாருணம் நீர் ஐம்பானே - 1.தெய்வப்பெயர்:1 27/4
TOP
ஐம்புலன் (1)
புலம் அறிவு பூமி வயல் ஐம்புலன் பொன் இடம் ஆம் புலி சாந்து புலி ஆகும் பலிதம் நரை பலமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 109/4
TOP
ஐம்பூதம் (2)
பூதம் ஐம்பூதம் குறள் ஆல் இறப்பு உயிர் நாள் சுசி ஆம் போதகமே புணை இளமை யானையின்கன்று அறிவு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 53/2
தாது மலர்த்தாது உடல்தாது ஐம்பூதம் சத்ததாது துகள் காவிக்கல் ஆறு எனும் இப்போதே - 10.ஒருசொல்பல்பொருள்:10 57/4
TOP
ஐம்பேர் (7)
அலைநிலப்பெண் ஆம் புலம்பன் துறைவன் மெல்லன் சேர்ப்பன் அரிய கொண்கன் ஐம்பேர் நெய்தல்தலைவன்பேர் ஆம் - 2.மக்கள்பெயர்:2 34/3
வாகின் மறி குருளையும் குட்டியின்பேர் ஆம் குருத்து மருப்பு உலவை சிருங்கம் கோடு ஐம்பேர் ஆம் கொம்பே - 3.விலங்கின்பெயர்:3 19/4
அகடு வயின் புறம் நடு நீடுதல் உள்ளோடு ஐம்பேர் அகவல் ஆசிரியம் மயில்குரல் கூத்து என்றாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 3/3
பாசனம் உண்கலன் பாண்டம் சுற்றம் என மூன்றாம் பச்சை மரகதம் புதன் மால் ஓர் செடி தோல் ஐம்பேர்
கோசம் முட்டை முறை குறி பண்டாரம் மதிலுறுப்பு ஆம் குணி செச்சை ஆடு வெட்சி தேய்வையும் முப்பேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 21/1,2
குணம் இயல்பு கயிறு பண்பு கும்பம் வில்நாண் ஐம்பேர் குணில் கடிப்பு குறுந்தடி ஆர் திணை ஒழுக்கம் நிலம் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 40/3
உண்டை திரள் பிச்சை படையுறுப்பு ஆகும் முப்பேர் ஒண்மை அறிவு ஒழுங்கு அழகு மிகுதி நன்மை ஐம்பேர்
சுண்டை மது சுண்டை ஆம் கண்டகம் முள் வான் ஆம் தொண்டு ஒன்பான் பழமை சுக்கு தொழும்பு நுழைவழி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 47/1,2
காயம் உடல் ஐங்காயம் கறிகரித்தல் விண் ஆம் காணும் வாய் குழல் இடம் மெய் வாய் வாய்த்தல் ஐம்பேர்
நேயமே நெய் எண்ணெய் அன்பு மூன்றாகும் நிகர் மாயன் மால் கறுப்பன் ஒழிப்பான் பெண்ணரசே - 10.ஒருசொல்பல்பொருள்:10 85/3,4
TOP
ஐம்பேராம் (7)
வெடி புகையே இடி வெடித்தல் வெளி பயம் ஐம்பேராம் விடர் கமர் கான் முளி இருப்பு தூர்த்தர் மலை விடவே - 10.ஒருசொல்பல்பொருள்:10 27/4
மண் அணு ஒப்பனை முழவின் மாற்சனை மண் நான்காம் வண்மை கொடை வாய்மை வளம் வலி புகழ் ஐம்பேராம்
திண்ணம் நிசம் வலி ஆடு ஆம் எண்ணம் இசை உழைவு ஆம் செண்டு செண்டு பரி வழி ஆம் தண்டு அகம் கான் வகுப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 48/2,3
ஆண்டு அவிடம் வருடம் ஆம் பாண்டு வெண்மை நோய் ஆம் அரும் தாணு சிவன் மலை தூண் இலை தறி ஐம்பேராம்
காண்டம் நீர் வனம் கலசம் திரை முடிவு அம்பு உடை ஆம் காண்டகம் பொற்பு அணி செப்பு கமண்டலமும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 49/1,2
பாம்பு வரப்பு அரவு ஒலி நீர் அடைப்பு ஒழுங்கு ஐம்பேராம் பரும் தாம்பு மடை மணி பூண் கயிறு நான்காகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 78/3
நிரப்பு மிடி இகல் குன்றல் சமை நோய் ஐம்பேராம் நேர் மிகுதி சமம் நேர்மை நிகர் உடன்பாடு அணு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 95/3
புலவன் நாவலன் அறிவன் புதன் தேவன் நான்காம் புலம் பொலி துன்பு இரங்கல் அச்சம் தனிமையும் ஐம்பேராம்
உலகம் மிசை புவி திசை விண் உயர்ந்தோரும் ஆகும் உலவை கொப்பு தழை மருப்பு காற்று மரக்குலமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 108/3,4
ஆ இரக்கம் பசு வியப்போடு இசை ஆச்சாமரம் ஆம் ஆவி உயிர் குளம் நாற்றம் புகை மூச்சு ஐம்பேராம்
தா வருத்தம் பகை தாண்டல் வலி கொடு என்றல் ஐந்தாம் சவுரியமே களவு வீரியம் இரண்டுபேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 128/1,2
TOP
ஐம்பொன் (1)
சொன்னல் கருந்தாது அகி கொல் அயம் கரும்பொன் இரும்பு ஆம் சொன்னவை ஐம்பொன் ஆம் தரா மதுகம் ஆகும் - 6.பல்பொருள்பெயர்:6 3/1
TOP
ஐம்முகன் (1)
அரவன் ஈசானன் அழலாடி அண்ணல் பெருமான் அந்திவண்ணன் கண்ணுதல் ஐம்முகன் பூதநாதன் - 1.தெய்வப்பெயர்:1 2/3
TOP
ஐம்மையும் (1)
விகடம் உயர் விகிர்தமும் ஆம் தகடு இலை ஐம்மையும் ஆம் மிகை குற்றம் மிகல் மேடு ஆம் நகை நகை தேசு உவப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 3/1
TOP
ஐமீன் (1)
வையம் உருள் பிரமன்நாள் சகடு ததி பண்டி மானம் பார் தேர் ஊற்றால் ஐமீன் உரோணி - 1.தெய்வப்பெயர்:1 41/1
TOP
ஐமுகன் (1)
கோப்பின் விலங்கரசு கண்டீரவம் ஆளி சீயம் கோளரி ஐமுகன் பஞ்சானனம் பூட்கை வயமா - 3.விலங்கின்பெயர்:3 1/2
TOP
ஐயம் (10)
அமுதம் ஐயம் நவநீதம் கவினம் வெண்ணை நாற்பேர் ஆகாரம் அவி கிருதம் ஆச்சியம் துப்பு இழுது - 6.பல்பொருள்பெயர்:6 14/1
தணந்த சங்கை கடுத்தல் ஐயம் விப்பிரம் பிராந்தி சந்தேகம் கொல் அனுமானமும் ஆகும் தீங்கு - 7.பண்புப்பெயர்:7 37/2
ஈண்டு கடைக்கணித்தல் ஆம் சரிதை ஐயம் பிடிகம் இரந்த பிண்டம் பலி பாகம் பயிக்கமும் பிச்சையின்பேர் - 9.செயல்பற்றியபெயர்:9 6/2
இங்கிதமே நயம் குறிப்பு ஆம் சங்கை ஐயம் மதிப்பு ஆம் இங்கு இவண் காயமும் ஆகும் சங்கரன் மால் சிவன் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 14/2
சுடிகை உச்சி முடி அணி ஆம் வடுகு இசை யாழ்த்திறம் ஆம் சுடர் ஒளி முக்கதிர் ஆகும் பிடிகம் ஐயம் வளை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 30/2
கடி வடிவு விரைவு ஐயம் கூர்மை பேய் விளக்கம் காலம் மணம் பயம் காப்பு புதுமை நீங்கிடலே - 10.ஒருசொல்பல்பொருள்:10 30/4
கட்டலே தடைகளைதல் பந்தித்தல் களவு ஆம் கடுத்தல் எனும் சொல் ஐயம் ஒப்பு வேகமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 38/3
சீதம் நீர் குளிர் முகில் ஆம் கீதம் இசை வண்டு ஆம் சேத்து உவமையுறுப்பு அசைச்சொல் செம்மை ஐயம் கருத்து ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 58/2
ஆய்தலே கொய்தல் நுணுக்கம் தேர்ச்சி மூன்றாம் ஐயம் அனுமானம் வழு சங்கை பிச்சைஓடு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 85/2
கொல் அசை கொல்லுதல் ஐயம் வருத்தம் ஏவலும் ஆம் குல்லை வெட்சி துளவு சித்தமூலி மூன்றாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 113/3
TOP
ஐயர் (3)
சுவற்கர் உம்பர் விபுதர் உயர்நிலையர் வரர் வானோர் சுரர் அமரர் கடவுளர் புத்தேளிர் ஐயர் மெய்யர் - 1.தெய்வப்பெயர்:1 20/1
சடைமுடியோர் மாதவர் தாபதர் அறிஞர் தூயோர் சார்பில்லோர் உயர்ந்தவர் மோனிகள் ஐயர் மெய்யர் - 2.மக்கள்பெயர்:2 1/3
பெரியர் ஐயர் அந்தணர் பிராமணர் நாலேழும் பேர் பிரமசாரி வன்னி ஆம் என சொல் அனமே - 2.மக்கள்பெயர்:2 3/4
TOP
ஐயன் (4)
பானலணிவான் சாத்தன் வனமூர்த்தி நீண்டோன் பரியூர்தி ஐயன் பேர் இருபான்முத்தொகையே - 1.தெய்வப்பெயர்:1 10/4
பவம்இல் உரவோன் அடிகள் அத்தன் ஐயன் ஆண்டோன் பணிக்கன் ஆசான் சாமி கோமான் உபாத்தி - 2.மக்கள்பெயர்:2 5/3
புக்க பிதா மகன் பேரன் பெரியோன் விதாதா போற்றன்பேர் தந்தை பிதா தாதை அப்பன் ஐயன்
தொக்க பிதிர் ஈன்றானம் மானத்தன் பயந்தான் தொழுமச்சன் பதினொன்றும் தகப்பன்பேர் அனைத்தே - 2.மக்கள்பெயர்:2 35/3,4
புங்கவன் மூத்தோன் ஐயன் சேட்டன் அண்ணா அண்ணன் பொறையன் முன்னோன் தம்முன் ஒன்பான் தமையன்பேர் ஆம் - 2.மக்கள்பெயர்:2 37/2
TOP
ஐயெட்டும் (1)
அனுக்கம் நோய் நடலை எவ்வம் வெய்துறலே பழங்கண் ஐயெட்டும் துன்பத்தின் அபிதானவிதமே - 7.பண்புப்பெயர்:7 32/4
TOP
ஐயேழ் (1)
தவசதானந்தி மாதா நாரி ஐயை சங்கரி அம்பிகை உமை பார்ப்பதி ஐயேழ் காணே - 1.தெய்வப்பெயர்:1 4/4
TOP
ஐயை (5)
தவசதானந்தி மாதா நாரி ஐயை சங்கரி அம்பிகை உமை பார்ப்பதி ஐயேழ் காணே - 1.தெய்வப்பெயர்:1 4/4
அமரி அரனோடாடி காமி நெடுங்காத்திரி ஐயை கோமளை மாயை மதுபதி கபாலி - 1.தெய்வப்பெயர்:1 6/2
புகழ் வழி நந்தனன் புதல்வன் குமரன் நாலேழாம் புதல்வி சுதை புத்திரி குமாரி ஐயை பாலை - 2.மக்கள்பெயர்:2 39/3
இரவி நங்கை நாயகி தாய் சாமி அத்தை அடிகள் இசமாட்டி தலைவி ஐயை கோமாள் பிராட்டி - 2.மக்கள்பெயர்:2 43/1
ஐ இடைச்சொல் அழகு இருமல் அரசனில்சாமியும் ஆம் ஐயை உமை துற்கை சுதை தவப்பெண் ஆசாள் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 83/2
TOP
ஐயைந்து (1)
அறும் ஏழ் பன்னொன்று பதின்மூன்றே பத்தொன்பான் ஐயைந்து முப்பானொன்று எண்ணைந்தும் வயதாம் - 2.மக்கள்பெயர்:2 44/2
TOP
ஐயோ (1)
என் எவன் எற்று ஆவோ ஐயோ அக்கோ அந்தோ ஏ அத்தா அன்னோ அற்புதமும் இரக்கம்அதாம் - 7.பண்புப்பெயர்:7 34/1
TOP
ஐவனம் (1)
வடுவில் போர் குவை சூடு சும்மை என மூன்றாம் மலைநெல்லின்பேர் தோரை ஐவனம் ஆம் குளநெல் - 4.மரப்பெயர்:4 24/2
TOP
ஐவிரல் (1)
உத்தம கைம்மீன் கன்னி கவுத்துவம் காமரமே உடன் களிறு தீநாள் ஐவிரல் நவ்வி எண்பேர் - 1.தெய்வப்பெயர்:1 43/1
TOP
|
|
|