<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - முதற்பகுதி - தொடரடைவு

சொ - முதல் சொற்கள்
சொக்கு 2
சொரி 2
சொரிதல் 1
சொரியலும் 1
சொரிவு 2
சொருகல் 1
சொருகு 1
சொல் 22
சொல்பவரே 1
சொல்பொருள் 1
சொல்லல் 2
சொல்லினரே 1
சொல்லுகவே 1
சொல்லும் 2
சொல்லுவர் 1
சொல்வாரே 1
சொல்வீரே 1
சொலல் 2
சொலித்திடம் 1
சொலும் 1
சொற்பா 1
சொற்பொருள் 1
சொற்றல் 1
சொற்றிடும் 2
சொறி 1
சொறிதல் 1
சொறிமூலி 1
சொன்றி 1
சொன்ன 2
சொன்னதுவே 1
சொன்னம் 1
சொன்னர் 1
சொன்னல் 2
சொன்னவை 1
சொன்னாரே 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 

    சொக்கு (2)
காரிகை பொன் சந்தம் தேசிகம் சொக்கு மஞ்சு காமர் ஒண்மை வாமம் பூ தகை தளிமம் மாழை - 7.பண்புப்பெயர்:7 14/1
அக்கு என்பு சங்கு மணி விடைமுரிப்பு மணவு ஆம் அக்கம் விழி மனவு இரண்டாம் சொக்கு அழகு மயல் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 10/1

 TOP
 
    சொரி (2)
வடி திவலை துளி தூவல் சொரி சிதறி தூறல் மாரி பிதிர் வானம் சீகரம் வருடம் பெயலே - 1.தெய்வப்பெயர்:1 52/2
சொரி தூக்கு ஆம் ஒன்று ஏகம் பிரதமம் ஒற்றையும் ஆம் சுவடு உகளம் உபையம் இணை துணை துவமும் இரண்டே - 7.பண்புப்பெயர்:7 39/4

 TOP
 
    சொரிதல் (1)
தேடும் அலமரல் சொரிதல் மறுகல் ஞொட்கல் திரிதல் தெருமரலே பிரமரி சூர்த்தலும் சுழறல் ஆகும் - 9.செயல்பற்றியபெயர்:9 22/1

 TOP
 
    சொரியலும் (1)
பாயும் அசைத்தலின்பேரே துயல்வரலொடு அசைதல் பாழல் சொரியலும் ஆகும் நாற்பெயர் ஒற்றுமையே - 9.செயல்பற்றியபெயர்:9 28/4

 TOP
 
    சொரிவு (2)
இக்கு என்ப கரும்பு கள் ஆம் சுக்கை தார் உடு ஆம் எக்கல் குவிந்திடல் சொரிவு ஆம் மொக்குள் குமிழ் முகிழ் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 10/2
வக்கிரமே மடங்கல் வட்டம் கொடுமை பொறாமையும் ஆம் மக்கள் சிறார் மானிடர் ஆம் நக்கல் உண்டல் சொரிவு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 11/1

 TOP
 
    சொருகல் (1)
சொருகல் ஆம் வனைவு அணி ஒப்பனை மலைச்சல் மிலைதல் சூடல் வேய்வு அலங்கரித்தல் புனைவு மண் கைசெயலே - 9.செயல்பற்றியபெயர்:9 2/4

 TOP
 
    சொருகு (1)
சொருகு சோத்திரம் கன்னம் ஐந்துபேர் செவிக்கு ஆம் குழை குளம் அளிகம் விலாடம் பனிச்சை பாலம் - 2.மக்கள்பெயர்:2 53/3

 TOP
 
    சொல் (22)
சுயபனுவலாள் பூரவாகனி காயத்ரி சொல் சாவித்திரி இசைமான் பிராமி நாமானே - 1.தெய்வப்பெயர்:1 16/4
சூறை சாரிகை சுழல்கால் கூதிரும் மூதிருமே சொல் பனிக்கால் ஊழிக்கால் சண்டமாருதமே - 1.தெய்வப்பெயர்:1 29/4
பெரியர் ஐயர் அந்தணர் பிராமணர் நாலேழும் பேர் பிரமசாரி வன்னி ஆம் என சொல் அனமே - 2.மக்கள்பெயர்:2 3/4
தோல்வினைஞர்பேர் பறம்பர் பாடினிபேர் பாட்டி சொல் விறலி மதங்கி ஆம் கஞ்சுகி மெய்காப்பான் - 2.மக்கள்பெயர்:2 19/3
தழை வரி விரீகி மணி மூக்கி பயிர் பைங்கூழ் சாலி பசும்புலி தொலியல் சொல் வை பத்தும் நெல் ஆம் - 4.மரப்பெயர்:4 23/3
சொல் கழங்கு காசு வல்லு சூது ஆகும் கவறு துள்ளு ஆயம் தாயம்அதாம் சாரி நாய் ஆகும் - 6.பல்பொருள்பெயர்:6 41/1
மாற்றம் மொழி கதை தீர்ப்பு பறை செப்பம் சொல் ஆம் வாசகம் பாசுரம் வார்த்தை நடை வசனம் நான்கு ஆம் - 8.ஒலிபற்றியபெயர்:8 1/2
வெயில் பொரு சொல் மலை கீர்த்தி ஆம் ஓத்து சாகை வேதம் இருக்குஆதி நூன்மறை எழுதாக்கிளவி - 8.ஒலிபற்றியபெயர்:8 7/2
வேய் எனும் சொல் ஒற்று ஆகும் ஞொள்கல் சிங்கல் போகல் மெலிவு கிரிசம் தேம்பல் நாம்பல் இளைத்தலின்பேர் - 9.செயல்பற்றியபெயர்:9 17/1
புகல் குதிர் சொல் உடல் கெதி பக்குவம் அடல் புக்கலும் ஆம் புகை புகை யோசனை ஆகும் திகை சுணங்கு திசை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 4/3
இசை ஒலி சொல் புகழ் பாட்டு ஆம் அசுணம் மயில் புள் ஆம் எச்சம் மகம் குறை சேய் ஆம் இச்சை மிடி வசையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 17/4
முட்டு எனும் சொல் இடையூறு சந்து எல்லாம் ஆகும் முடலை வலி பெருமை திரட்சியும் என பேர் மூன்றாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 38/2
கட்டலே தடைகளைதல் பந்தித்தல் களவு ஆம் கடுத்தல் எனும் சொல் ஐயம் ஒப்பு வேகமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 38/3
பதலை வரை தாழி ஒருகண்பறை மிடா ஆம் பதம் அழகு ஊண் வரிசை சொல் பேர் தாழ்ச்சி வழி கால் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 51/3
சீப்பு எனும் சொல் கதவில்தாழ் சீவுறு சிக்கமும் ஆம் திகழ் குபேரன் சோமன் அளகையர்கோன் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 71/3
இயம் ஒலி சொல் மேளம் ஆம் வயின் இடம் வீடு அகடு ஆம் இயல் சாயல் நடை தமிழ் ஆம் பயன்பெறல் சொல்பொருள் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 80/3
தொய்யில் சேறு உழவு துயர் மகிழ்ச்சி நாற்பேராம் சொல் குய்வு கறிகரித்தல் புகை ஆம் சேயிழையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 84/4
பரிபுரத்தின் பரல் இவை நாற்பானேழு என்றாகும் பரிவு எனும் சொல் அன்பு துன்பம் இன்பமும் ஆம் பாரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 96/4
சொல் உரை நெல் புகழ் சூது ஆம் இல்லம் மனை தேறு ஆம் தொல்லை துயர் பழமையும் ஆம் புல்லம் நிறம் எருது ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 113/1
உவா எனும் சொல் இளையோனும் பவ்வமும் தந்தியும் ஆம் உவப்பு மேடு உவகையும் ஆம் நிவப்பு உயர்ச்சி மேடு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 132/1
கவான் எனும் சொல் உயர்ச்சி துடை மேடு திரட்சியும் ஆம் கவுசிகனே இந்திரனும் ஒரு முனியும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 132/2
உழை உடம் மான் யாழ்நரம்பு ஆம் அழுவம் விரி நாடு ஆம் ஊழ் எனும் சொல் பகை முறைமை வெயில் முப்பேர் தொழுமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 143/4

 TOP
 
    சொல்பவரே (1)
இருள் கடியே வேலி சேமமும் காப்புஅதாகும் இளை தலை காவல் பெயர் என்பார் தமிழ் சொல்பவரே - 9.செயல்பற்றியபெயர்:9 19/4

 TOP
 
    சொல்பொருள் (1)
இயம் ஒலி சொல் மேளம் ஆம் வயின் இடம் வீடு அகடு ஆம் இயல் சாயல் நடை தமிழ் ஆம் பயன்பெறல் சொல்பொருள் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 80/3

 TOP
 
    சொல்லல் (2)
தெரித்தல் செப்பலே நொடித்தல் சொல்லல் எண்மூன்றாகும் திசைச்சொல் தேசிகம் ஆம் இடித்தல் கழறலுமே - 8.ஒலிபற்றியபெயர்:8 2/3
ஆலையம் ஊர் கரிக்கூடம் கோயிலும் முப்பெயராம் அலிப்பேர் பேடு அனந்தன் ஆம் வலித்தல் சொல்லல் வளைவு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 119/3

 TOP
 
    சொல்லினரே (1)
தறுகு கண்ணேணியின்பேரே மால்பு ஆகும் தழலே தட்டை கிளிகடிகருவி ஆம் என சொல்லினரே - 6.பல்பொருள்பெயர்:6 40/4

 TOP
 
    சொல்லுகவே (1)
இல் இடம் வீடு இல்லெனல் இராசி இல்லாள் சாவு ஆம் எல் இகழ்ச்சி பகல் இரவி ஒளி என சொல்லுகவே - 10.ஒருசொல்பல்பொருள்:10 112/4

 TOP
 
    சொல்லும் (2)
ஒடிவில் கனிமூலசாகாசனர் எண்ணான்கோடு ஒன்றும் அருந்தவர் நாமம் என்று சொல்லும் தமிழே - 2.மக்கள்பெயர்:2 1/4
துருமம் பூதரம் தாரு பொதும்பர் பொங்கர் பதினேழ் சொல்லும் மரப்பேர் பொழில் நந்தனவனம் உய்யானம் - 4.மரப்பெயர்:4 28/2

 TOP
 
    சொல்லுவர் (1)
துப்பு அரக்கு வலு பகை தூய்து அனுபவம் நெய் துகிர் ஆம் தொப்பி மது அங்கி என சொல்லுவர் தாபரித்தே - 10.ஒருசொல்பல்பொருள்:10 69/4

 TOP
 
    சொல்வாரே (1)
ஊற்றின்பேர் உறவி ஆம் கூவலே கூவமொடு பூவல் அசும்பு கிணறு ஆம் என சொல்வாரே - 5.இடப்பெயர்:5 20/4

 TOP
 
    சொல்வீரே (1)
திறல் பாழி முன்பு வயம் பலம் முடுகல் மல்லாய் செப்பும் நாற்பான்மூன்றும் வலு என சொல்வீரே - 7.பண்புப்பெயர்:7 16/4

 TOP
 
    சொலல் (2)
முகம் திசை வத்திரம் ஆகும் நுகம் நுகக்கோல் அலம் ஆம் முகடு வெரின் முகடு உயர்வு ஆம் பகர்தல் விற்றல் சொலல் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 2/2
படுதல் ஒலி சொலல் பூத்தல் இன்மை உண்டாதலும் ஆம் படு மரத்தின்குலை கள்ளும் நீர்நிலை நன்மையின் பேர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 31/2

 TOP
 
    சொலித்திடம் (1)
உடற்றல் சொலித்திடம் ஆம் வீசுதல் விலங்கல் இடுதல் ஓச்சல் எறிதலின்பேர் ஆம் பூய்த்தல் பிய்த்தல் காணே - 9.செயல்பற்றியபெயர்:9 5/4

 TOP
 
    சொலும் (1)
சொலும் நெரிசல் பொறி தேமர் பீர் துத்தி உத்தி சுணங்கு வரி திதனி வசந்திகை இனந்தி தித்தி - 2.மக்கள்பெயர்:2 49/3

 TOP
 
    சொற்பா (1)
பா எனல் சொற்பா நூற்பா பரப்பு பாவுதல் ஆம் பாவம் நேமகம் பவம் ஆம் நாவு நடு நாக்கு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 127/1

 TOP
 
    சொற்பொருள் (1)
மொண்ட அசையடி அம்போதரங்கம் அராகப்பேர் முடுகியல் வண்ணகம் ஆம் சொற்பொருள் அருத்தம் உரை ஆம் - 8.ஒலிபற்றியபெயர்:8 9/3

 TOP
 
    சொற்றல் (1)
உரைத்தல் இயம்புதல் இறுத்தல் சாற்றலே ஆடல் ஓதல் பகருதல் குயிறல் புகறல் சொற்றல் மொழிதல் - 8.ஒலிபற்றியபெயர்:8 2/1

 TOP
 
    சொற்றிடும் (2)
தூசு கலை புரசை தூசிப்படை முப்பேராம் சொற்றிடும் வச்சிரம் குலிசம் கள்ளி வயிரமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 21/3
துரோணமே சிலை பதக்கு தும்பை சிம்புள் கொடி ஆம் சொற்றிடும் கராம்பு பாழ் ஓர் மருந்தும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 107/2

 TOP
 
    சொறி (1)
விலக்கலின்பேர் நெகிழல் ஒல்லல் குழைவின்பேர் ஏவல் வியங்கோள் ஆம் கண்டூதி சொறி இரண்டும் தினவு ஆம் - 9.செயல்பற்றியபெயர்:9 15/2

 TOP
 
    சொறிதல் (1)
குயில் உரை கோகிலம் மேகம் துளையொடு நாற்பேராம் குயிறல் குடைந்திடல் பண்ணல் சொறிதல் கூவுதல் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 81/1

 TOP
 
    சொறிமூலி (1)
சொறிமூலி கண்டுரம் காஞ்சொறி ஆகும் மத்தம் தூர்த்தூரம் மதுமத்தம் அருணம் மத்து ஊமத்து ஆம் - 4.மரப்பெயர்:4 16/1

 TOP
 
    சொன்றி (1)
பருகு வல்சி புவனகம் துய்ப்பு அமுது சொன்றி கவளம் பட்சணம் ஊண் பதம் முப்பானாறும் சோற்றின்பேர் - 6.பல்பொருள்பெயர்:6 11/3

 TOP
 
    சொன்ன (2)
சொன்ன குசை குசம் குமுதம் கூர்ச்சமும் தெர்ப்பைஅதாம் சுண்டிலின்பேர் சமங்கை சுச்சு ஆம் தொண்டை விம்பன் கொவ்வை - 4.மரப்பெயர்:4 22/3
சுருங்கு தடம் சாரல் வாரம் சானு நிதம்பம் சொன்ன மலைப்பக்கம்அதாம் கற்பாழி பொறையே - 5.இடப்பெயர்:5 17/1

 TOP
 
    சொன்னதுவே (1)
செனிவடு தாம்பிரம் சிக்கம் உதும்பரமே சுற்பம் செம்பு ஆகும் ஈயம் வங்கம் சீருளும் சொன்னதுவே - 6.பல்பொருள்பெயர்:6 2/4

 TOP
 
    சொன்னம் (1)
கைத்து நிதி சந்திரம் கூழ் மித்திரையே ஏமம் காணி காஞ்சனம் தங்கம் வேங்கை சொன்னம் தனமே - 6.பல்பொருள்பெயர்:6 1/4

 TOP
 
    சொன்னர் (1)
வெற்றிஅரைவனர் துவட்டர் தபதியர் கண்ணாளர் வினைஞர் கொல்லர் சிற்பியர் தட்டார் முனைவர் சொன்னர்
  உற்றறிவார் மண்ணீட்டர் கஞ்சர் கலர் கன்னார் ஓவர் தச்சர் கம்மியர்பேர் பதினெட்டாம் மோகர் - 2.மக்கள்பெயர்:2 16/2,3

 TOP
 
    சொன்னல் (2)
நடும் இருவி அருவி தினைத்தாள் ஆகும் சொன்னல் நறுங்கு இறுங்கு சோளம்அதாம் கோத்திரவம் வரகே - 4.மரப்பெயர்:4 24/4
சொன்னல் கருந்தாது அகி கொல் அயம் கரும்பொன் இரும்பு ஆம் சொன்னவை ஐம்பொன் ஆம் தரா மதுகம் ஆகும் - 6.பல்பொருள்பெயர்:6 3/1

 TOP
 
    சொன்னவை (1)
சொன்னல் கருந்தாது அகி கொல் அயம் கரும்பொன் இரும்பு ஆம் சொன்னவை ஐம்பொன் ஆம் தரா மதுகம் ஆகும் - 6.பல்பொருள்பெயர்:6 3/1

 TOP
 
    சொன்னாரே (1)
முருகு அருணம் சம்பிரமம் புல் இலிகுசம் ராசமோகி சதபலம் எலுமிச்சு ஏழ்பேர் சொன்னாரே - 4.மரப்பெயர்:4 5/4

 TOP