|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
ஏ (1)
என் எவன் எற்று ஆவோ ஐயோ அக்கோ அந்தோ ஏ அத்தா அன்னோ அற்புதமும் இரக்கம்அதாம் - 7.பண்புப்பெயர்:7 34/1
TOP
ஏகதந்தன் (1)
ஏகதந்தன் ஐங்கரன் பாசாங்குசன் கயாரி ஏரம்பன் வக்கிரதுண்டன் விநாயகன் பேர் - 1.தெய்வப்பெயர்:1 7/2
TOP
ஏகபதம் (1)
அதுவாம் குடந்தம் கைகூப்பி மெய்யைக்கொட்டல் ஏகபதம் குந்தித்தல் குஞ்சித்தல் ஆகும் - 9.செயல்பற்றியபெயர்:9 28/3
TOP
ஏகம் (1)
சொரி தூக்கு ஆம் ஒன்று ஏகம் பிரதமம் ஒற்றையும் ஆம் சுவடு உகளம் உபையம் இணை துணை துவமும் இரண்டே - 7.பண்புப்பெயர்:7 39/4
TOP
ஏகமும் (1)
பாவம் பாதகம் பவம் தீவினை ஆகும் ஒற்றை பலனில் கேவலம் புலம்பு தனிமை ஏகமும் ஆம் - 7.பண்புப்பெயர்:7 35/1
TOP
ஏகமே (1)
ஈகை இண்டை கொடை பொன் ஆம் ஆகுலம் நோய் ஒலி ஆம் ஏகமே தனிமை ஒன்று ஆம் காகுளி ஆர்ப்பு அணை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 9/3
TOP
ஏகல் (1)
படர்ச்சி இவருதல் ஏகல் ஒதுக்கம் இல்லல் சேறல் படர்தல் இயங்குதல் வழங்கல் போதல் ஆம் இறத்தல் - 9.செயல்பற்றியபெயர்:9 23/1
TOP
ஏகாசம் (1)
உத்தரீகமே ஏகாசம் ஆம் கொய்சகம் நீவி ஆம் தோக்கை முன்றானை மெய்யே - 6.பல்பொருள்பெயர்:6 44/4
TOP
ஏகாலி (1)
சக்கிரியும் நந்தியும் செக்கான்பேர் அடி தூசன் ஏகாலி ஈரங்கோலியனே - 2.மக்கள்பெயர்:2 18/4
TOP
ஏங்கல் (3)
ஆகும் அதன் முள்ளின்பேர் குரல் ஏங்கல் அகவல் ஆலல் எழால் இயன் மயிலாட்டு என நேமித்தனரே - 3.விலங்கின்பெயர்:3 22/4
இளித்தல் உரற்றுதல் உரைத்தல் இரைத்தலே ஏங்கல் இடித்தல் குளிறுதல் துவைத்தல் அலம்பலே கறங்கல் - 8.ஒலிபற்றியபெயர்:8 14/2
பொருமல் விம்மல் கசிவு உரோதனம் இரங்கல் ஏங்கல் புழுங்கல் கலுழுதல் கலக்கம் ஒன்பது அழுதலின்பேர் - 9.செயல்பற்றியபெயர்:9 4/1
TOP
ஏச்சு (2)
அழுக்கு மிறை குறை ஏச்சு கறை கோது நவையே ஆசு மறு புகர் களங்கம் துகள் கழிப்பு மாசு - 7.பண்புப்பெயர்:7 28/3
பரியாதம் பழிச்சொல் தீச்சொல் சிறுசொல் பழிப்பு ஆம் பழிமொழி ஏச்சு அலர் கவ்வை அம்பல்அதாய் படியே - 8.ஒலிபற்றியபெயர்:8 3/4
TOP
ஏட்டை (2)
கொழுப்பு அரிப்பு செயிர் மானம் புரை முப்பான்மூன்றும் குற்றம்அதாம் தளர்ச்சியின்பேர் ஏட்டை அசா கொடியே - 7.பண்புப்பெயர்:7 28/4
வெய்ய பற்று இராகம் சார் விவறல் பெட்பு வேட்கை வெப்பம் நச்சு ஆதரம் இச்சை ஏட்டை வயா நம்பு - 7.பண்புப்பெயர்:7 36/2
TOP
ஏடா (1)
உரித்தர் நண்பர் சிலதர் துணைவோர் தோழர் இணங்கர் ஒண் பாங்கர்பேர் ஏடா முன்னிலையாம் சிலதி - 2.மக்கள்பெயர்:2 21/2
TOP
ஏடி (1)
திருத்தி குழைதண்டி பெண்ணுசி பாங்கி தோழி சேடிபேர் முன்னிலைதான் ஏடி எலாள் ஆம் - 2.மக்கள்பெயர்:2 21/3
TOP
ஏடு (2)
அலரின் அல்லி அகவிதழ் ஆம் புல்லி புறவிதழ் ஆம் அயர் பழம்பூ தேம்பல் செம்மல் சாம்பலும் ஆம் ஏடு
மலர் தகடு தோடு மடல் பூவிதழ் ஆம் பிஞ்சு வடு காய் தீவிளியும் ஆம் பலன் கனியே பழம் ஆம் - 4.மரப்பெயர்:4 32/1,2
ஓலை குழை ஏடு ஆம் கலாம் கொடுமை சினம் ஆம் ஒலியல் கலை நதி தொடை தோல் பெயர் உலாவிடுமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 121/4
TOP
ஏண் (2)
எறுழ் மதுகை தானம் மதம் சத்துவம் துப்பு ஆற்றல் ஏண் முரண் உரம் தோற்றம் தாவு தாம் மானம் - 7.பண்புப்பெயர்:7 16/3
அறம் உதவி தருமம் ஏண் உடைமை தன்மம் ஆகும் ஆணையின்பேர் ஏவல் ஆம் அமைவு ஆம் என்பதுவே - 7.பண்புப்பெயர்:7 21/4
TOP
ஏணன் (1)
வலிப்பின் மரை சாமரைப்பேர் ஆவிதம் கான்குதிரை மரை ஆகும் அருணம் மறி உழை ஏணன் சூனன் - 3.விலங்கின்பெயர்:3 13/2
TOP
ஏணி (4)
நாடு கண்டம் நீவரம் மண்டலம் ஏணி தேசம் நல் அழுவம் சனபதம் பைதிரம் உலகு பாண்டில் - 5.இடப்பெயர்:5 5/1
இறவை வட்டில் வட்டிகை கூடைப்பேர் ஆம் சேணி இறவையே கடவை தடவையும் ஏணி ஆகும் - 6.பல்பொருள்பெயர்:6 40/3
பரியந்தம் ஏணி கோதனம் காடம் கொற்றம் பதினெட்டாம் எல்லையின்பேர் நிரல் பந்தி ஓளி - 7.பண்புப்பெயர்:7 10/2
ஏணி எல்லை உலகு இறைவை மான் பழு ஏணியும் ஆம் யாணர் கலம் புதிது அழகு தச்சர் அண்டர் ஆமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 43/4
TOP
ஏணியும் (1)
ஏணி எல்லை உலகு இறைவை மான் பழு ஏணியும் ஆம் யாணர் கலம் புதிது அழகு தச்சர் அண்டர் ஆமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 43/4
TOP
ஏத்தல் (1)
தோற்றுரை யாழ்மொழி பதம் ஆம் ஏத்தல் மெய்ச்சல் வாழ்த்தல் துதி வழுத்தல் புகழ்தல் பரசுதல் பரவல் பழிச்சல் - 8.ஒலிபற்றியபெயர்:8 1/3
TOP
ஏதம் (3)
வழுக்கும் ஆம் கரில் பழி போக்கு அரில் பிழை தோம் காசு வடு தவறு பொய் பழுது தப்பு வசை ஏதம்
அழுக்கு மிறை குறை ஏச்சு கறை கோது நவையே ஆசு மறு புகர் களங்கம் துகள் கழிப்பு மாசு - 7.பண்புப்பெயர்:7 28/2,3
பனித்தல் கவ்வை யாதனை இன்னாங்கு பையுள் ஏதம் பருவரல் இட்டளம் உறுகண் மம்மர் அல்லல் கரந்தை - 7.பண்புப்பெயர்:7 32/2
ஆதன் உயிர் பேதையும் ஆம் ஏதம் இடர் மறு ஆம் ஆதி முதல் நேரோடல் மன் மால் ஈசனும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 53/1
TOP
ஏதி (3)
மா வசி மட்டாயுதம் தூவத்தி வஞ்சம் உவணி வள் ஏதி கரவாளம் குறும்பிடி வாள் சுரிகை - 6.பல்பொருள்பெயர்:6 20/3
படை கருவி தானை கடுமுள் சுதனம் கழுமுள் படைக்கலம் எஃகு ஏதி துப்பு வேலும் ஆயுதப்பேர் - 6.பல்பொருள்பெயர்:6 23/3
சேதகம் சேறு அணை சிவப்பு ஆம் ஏதி அம்பு வாள் ஆம் சீதை படை சால் கொடுப்பை திரு ஆம் கோதையரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 55/4
TOP
ஏதித்தல் (1)
மடியும் அதாம் உறவி உறவு ஆம் மடம் பேதமையும் மருட்சியும் ஆம் ஏதித்தல் இனைவு இரக்கப்பயனே - 7.பண்புப்பெயர்:7 29/4
TOP
ஏதிலர் (1)
துற்று அயலோர் ஏதிலர் ஆம் கம்மியரே தொழுவர் தொழில்செய்வோர்பேர் வியவன் ஏவுவான் கூற்றே - 2.மக்கள்பெயர்:2 22/4
TOP
ஏது (2)
பேர் பேரே அபிதானம் நாமமும் ஆம் துப்பு பின் ஏது வாயில் காரணம் நிமித்தம் திறமே - 7.பண்புப்பெயர்:7 25/3
முல்லை வென்றி நிலம் கற்பு தளவு நாற்பெயராம் மூலம் முதல் கிழங்கு ஏது நாள் என சால்புறுமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 114/4
TOP
ஏந்தல் (4)
ஈசன் நரபதி லோலன் கொற்றவன் பார்த்திபன் மன் ஏந்தல் ஆண்டகை துரை பூபாலன் அண்ணல் வேந்தன் - 2.மக்கள்பெயர்:2 6/2
மால் கருமை பகடு ஏந்தல் பாடு இருமை மோடு வால் குவவு தகை பொழில் பீடு அண்ணல் பணை ஈடு - 7.பண்புப்பெயர்:7 4/3
உன்னதம் மேடு ஒழுக்கம் உச்சம் பரி நிமிர்ப்பு போகல் உத்துங்கம் மிசை ஏந்தல் ஓங்கல் கப்பு தூங்கல் - 7.பண்புப்பெயர்:7 5/1
ஏந்தல் கோன் பெருமை மேடு இலகுவம் நாற்பேராம் எந்திரம் தேர் திரிகை மதிலுறுப்பொடு சக்கரம் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 67/1
TOP
ஏந்திழையே (1)
அந்தில் ஆம் கசை இடம் ஆம் கந்து தூண் முட்டு ஆம் அந்தணர் பார்ப்பார் அறிவோர் ஆகும் ஏந்திழையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 66/4
TOP
ஏம் (2)
எம்மை எந்தப்பிறப்பு ஏம் ஏழ்பவம் ஏழுபிறப்பு ஆம் இழிதகவு பரிபவம் ஆம் எளிமை எண்மை உரித்தே - 7.பண்புப்பெயர்:7 26/4
மையல் மதனம் காமம் விரகம் ஏம் ஆசை மால் வேண்டல் வேணவா மாதர் நசை நயப்பு - 7.பண்புப்பெயர்:7 36/1
TOP
ஏமம் (4)
கைத்து நிதி சந்திரம் கூழ் மித்திரையே ஏமம் காணி காஞ்சனம் தங்கம் வேங்கை சொன்னம் தனமே - 6.பல்பொருள்பெயர்:6 1/4
தாவம் பேது அனந்தர் களன் ஏமம் மருள் மான்று சழங்கு அரி மைந்தே பித்து மயர் கழுமு மாழ்கல் - 7.பண்புப்பெயர்:7 35/3
புரத்தல் நிலைபெறல் ஓம்பல் திதி நோக்கம் காத்தல் போற்றலும் ஆம் அரண் காவல் தட்டி கதவு ஏமம்
இருள் கடியே வேலி சேமமும் காப்புஅதாகும் இளை தலை காவல் பெயர் என்பார் தமிழ் சொல்பவரே - 9.செயல்பற்றியபெயர்:9 19/3,4
ஏமம் இரவு இன்பு உவப்பு நீறு பொன் காப்பு இணைவு ஆம் இமைத்தல் ஒளி இமைத்தல் ஆம் சமழ்ப்பு இலச்சை துயர் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 74/2
TOP
ஏமமும் (1)
இன்பமும் ஆனந்தம்அதாம் ஏமமும் மற்று அதற்காம் இறுமாப்பு எக்களிப்பு ஏமாப்பு அபிமானம் தந்து - 7.பண்புப்பெயர்:7 19/3
TOP
ஏமாப்பு (1)
இன்பமும் ஆனந்தம்அதாம் ஏமமும் மற்று அதற்காம் இறுமாப்பு எக்களிப்பு ஏமாப்பு அபிமானம் தந்து - 7.பண்புப்பெயர்:7 19/3
TOP
ஏமுறும் (1)
ஏமுறும் ஆலம் பூதம் ஆலின்பேர் பத்தாம் இறலி சுவி இரத்தி இந்திரியும் இத்திப்பேர் ஆம் - 4.மரப்பெயர்:4 3/3
TOP
ஏய் (1)
தீய புரை உவமை மலைவு ஒப்பு இருபத்தாறாம் சிச்சீ ஏலே ஏய் என் இழி இகழ்ச்சி மரபே - 7.பண்புப்பெயர்:7 38/4
TOP
ஏய்வு (1)
ஏய்வு படி நேர் கதழ்வு தூக்கு வீழ் மானம் இணை துணை அற்று உறழ் ஒத்தல் நிகர் பொருவ கடுப்ப - 7.பண்புப்பெயர்:7 38/3
TOP
ஏர் (6)
ஏர் கலுழன் வயினதேயன் கருடன்பேர் ஆம் எகினம் ஓதிமம் அஞ்சம் விகங்கம் வக்கிராங்கம் - 3.விலங்கின்பெயர்:3 21/2
நல் கலனை படை படைவாள் நுகம் தொடுப்பு ஏர் அலமே நாஞ்சிலில் ஆம் கலப்பை பணவை கழுது இதணம் - 6.பல்பொருள்பெயர்:6 41/2
இணை துவசம் பெரும்கொடி ஆம் சிறுகொடி கத்திகை ஆம் ஏர் வீதிக்கொடி விடங்கம் ஆகும் சிதார் சிதவல் - 6.பல்பொருள்பெயர்:6 46/3
ஏர் அணி நல் யாணர் வண்ணம் பொலன் சேடு இராமம் எழில் மாதர் குருகு பொற்பு செவ்வி தொட்டி பாங்கு - 7.பண்புப்பெயர்:7 14/3
விடை விடல் ஏறு எதிர்மொழி ஆம் கிடை கிடப்பு குழு ஆம் விடங்கம் ஏர் கொடி கொடுங்கை படங்கு கொடி வானி - 10.ஒருசொல்பல்பொருள்:10 28/1
ஏர் உழவு ஆன் அழகு ஆகும் ஓரை பொய்தல் இல் ஆம் ஏரி குளம் பிடரியும் ஆம் வாருணம் நீர் மேற்கு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 101/3
TOP
ஏர்ப்பருவமும் (1)
கார் சினம் நீர் தகர் புயல் போது இருள் கறுப்பு கூந்தல் கருங்குரங்கு ஏர்ப்பருவமும் பத்தெனும்பேர் வைத்தாரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 101/4
TOP
ஏரண்டம் (1)
அளி பயிலும் பலினி ஞாழலின்பேர் பாலிகையே அடம்பு ஆகும் சித்திரம் ஏரண்டம் ஆமணக்கே - 4.மரப்பெயர்:4 14/4
TOP
ஏரம்பம் (1)
உந்திரதி தூங்கல் கறையடி புழைக்கை வயமா ஒருத்தல் ஏரம்பம் மதநிதி எறும்பியுடனே - 3.விலங்கின்பெயர்:3 3/4
TOP
ஏரம்பன் (1)
ஏகதந்தன் ஐங்கரன் பாசாங்குசன் கயாரி ஏரம்பன் வக்கிரதுண்டன் விநாயகன் பேர் - 1.தெய்வப்பெயர்:1 7/2
TOP
ஏரல் (1)
உலையும் எலும்பிலி பொட்டு புழுவின்பேர் கிளிஞ்சில் ஊமை எருந்து ஏரல் பிண்டம் இப்பி சிப்பிக்கு உறுமே - 3.விலங்கின்பெயர்:3 34/4
TOP
ஏராரும் (1)
ஏராரும் நரம்பர் குயிலுவர் மேழர் யவனர் இசைப்போர்பேர் படுவர் சவுண்டிகர் பழையர் பிழிஞர் - 2.மக்கள்பெயர்:2 20/2
TOP
ஏரி (3)
இரதமம் சம்பரம் பயசு சலிலம் கீலாலம் ஏரி கயம் பானியம் புனல் ஆலம் நாரம் - 1.தெய்வப்பெயர்:1 27/2
கூறு சுனை குழி பல்வலம் கிடங்கும் அலங்கல் குண்டம் ஊருணி பண்ணை ஏரி பங்கம் படுவே - 5.இடப்பெயர்:5 25/4
ஏர் உழவு ஆன் அழகு ஆகும் ஓரை பொய்தல் இல் ஆம் ஏரி குளம் பிடரியும் ஆம் வாருணம் நீர் மேற்கு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 101/3
TOP
ஏல் (1)
ஏல் இடையும் நடு ஆகும் ஈண்டு இவணே இம்பர் இவ்விடப்பேர் ஆண்டு அவண் அவ்விடம் உம்பர் உவண் ஆம் - 5.இடப்பெயர்:5 33/3
TOP
ஏல்வை (2)
ஏல்வை நாள் பகல் வைகல் அல்கலும் பன்னிரண்டாம் எல்லை கால் பதம் போழ்து கொன் பொழுது வேலை - 1.தெய்வப்பெயர்:1 46/2
பாலிகை வாள் உதடு முளைப்பாரி வட்டம் நான்காம் பாலை மகள் நிலம் மரம் ஆம் ஏல்வை குளம் பொழுது ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 118/1
TOP
ஏலம் (5)
இயவை ஆடகம் யாமம் முதிரையொடு தோரை ஏலம் இவை துவரை ஆம் கடலை மஞ்சூரம்அதாம் - 4.மரப்பெயர்:4 21/1
கலவை சேறே விரை காலேகவண்ணம் தளம் ஆம் காசறை ஏலம் தகரம் மயிர்ச்சாந்தின்பேர் ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 7/2
விரை வீரை புன்னை மணம் பால் தேன் கள் ஆன்நெய் வெறி ஏலம் மாதுளை வாழைக்கனியும் சுவையே - 8.ஒலிபற்றியபெயர்:8 11/4
தொடி வளைகில் ஒரு பலம் ஆம் படிவம் நோன்பு உரு ஆம் துடி ஏலம் காலநுட்பம் பறை முப்பேராகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 27/3
ஏலம் மயிர்ச்சாந்து துடி ஓசையும் முப்பெயராம் இலம்பகம் மாலிகை சருக்கம் நுதல்சூட்டு மூன்றாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 118/3
TOP
ஏலம்அதாம் (1)
துளிரும் வலம்புரி நந்தியாவட்டம் ஆகும் துடி ஆஞ்சி ஏலம்அதாம் புனமுருக்கை புன்கு ஆம் - 4.மரப்பெயர்:4 14/1
TOP
ஏலவணம் (1)
திரும்பு உருசி சயிந்தவம் ஏலவணம் உப்பின்பேர் ஆம் சீதாரி குங்குலியம் குங்குலு குக்குலுவே - 6.பல்பொருள்பெயர்:6 4/4
TOP
ஏலுடன் (1)
ஏலுடன் அஞ்ஞாங்கர் தலை அன்னர் முன் தான் முதல் ஆம் வினவும் எங்கு யாங்கு எவண் யாண்டு எவ்விடம் அத்தனையே - 5.இடப்பெயர்:5 33/4
TOP
ஏலே (1)
தீய புரை உவமை மலைவு ஒப்பு இருபத்தாறாம் சிச்சீ ஏலே ஏய் என் இழி இகழ்ச்சி மரபே - 7.பண்புப்பெயர்:7 38/4
TOP
ஏவல் (5)
அறம் உதவி தருமம் ஏண் உடைமை தன்மம் ஆகும் ஆணையின்பேர் ஏவல் ஆம் அமைவு ஆம் என்பதுவே - 7.பண்புப்பெயர்:7 21/4
விலக்கலின்பேர் நெகிழல் ஒல்லல் குழைவின்பேர் ஏவல் வியங்கோள் ஆம் கண்டூதி சொறி இரண்டும் தினவு ஆம் - 9.செயல்பற்றியபெயர்:9 15/2
ஏவல் உய்த்தல் ஒட்டல் ஊர்ந்திடல் செலுத்தல் பத்தாம் இடைவெட்டு ஆறலை அதர்கோள் வழிப்பறி ஆம் வழியின் - 9.செயல்பற்றியபெயர்:9 25/2
ஆணை முறை மெய் ஏவல் வெற்றி சூள் தடை பேர் ஆணிதான் வயிரம் அழகு எழுத்தாணி திறன் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 43/3
ஏவல் வியங்கோள் ஆணை வறுமை மூன்றாகும் இயம்பு கவை எள்ளிளங்காய் சவர் வழி துன்பமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 130/2
TOP
ஏவல்கேட்பதுவாம் (1)
குறைவில் ஐந்துநிதி மகவான் ஏவல்கேட்பதுவாம் கொண்ட விண்ணாட்டிறை கொடிதான் இடி என பேசுவரே - 1.தெய்வப்பெயர்:1 19/4
TOP
ஏவலரே (1)
வருத்து உழையர் ஏவலரே பரிசனர்பேர் வினையில் வழியினில் பண்பினில் உரைப்போர் தூதர் என்று ஒத்தனவே - 2.மக்கள்பெயர்:2 21/4
TOP
ஏவலும் (3)
வசி கூர்மை வசியம் வாள் ஏவலும் வீதியும் ஆம் மாசு குற்றம் சிறுமை மழை அழுக்கு என நாற்பேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 16/3
வை அயில் வைக்கோல் நெல் ஆம் செய் வயல் ஏவலும் ஆம் மாயம் வஞ்சம் பொய் ஆம் பயோதரம் கார் முலை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 84/2
கொல் அசை கொல்லுதல் ஐயம் வருத்தம் ஏவலும் ஆம் குல்லை வெட்சி துளவு சித்தமூலி மூன்றாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 113/3
TOP
ஏவு (2)
ஏவு வணங்கார் அமரர் பொருநர் உள்ளார் நள்ளார் எதிர்ந்தார் வெய்யோர் இரிஞர் அமடர் மன்னார் ஒன்னார் - 2.மக்கள்பெயர்:2 28/3
ஏவு கொட்டம் குடிலமே குரவமரப்பேர் ஆம் இருப்பை மதுகம் குலிகம் இலுப்பை என கிளத்தே - 4.மரப்பெயர்:4 10/4
TOP
ஏவுவான் (1)
துற்று அயலோர் ஏதிலர் ஆம் கம்மியரே தொழுவர் தொழில்செய்வோர்பேர் வியவன் ஏவுவான் கூற்றே - 2.மக்கள்பெயர்:2 22/4
TOP
ஏழ் (6)
கடையில்வருசனி நெய்த்தோர் புயல்நாள் சூரியன்நாள் காணுந்தி பாற்குனி பங்குனி ஏழ் உத்திரமே - 1.தெய்வப்பெயர்:1 42/4
அறும் ஏழ் பன்னொன்று பதின்மூன்றே பத்தொன்பான் ஐயைந்து முப்பானொன்று எண்ணைந்தும் வயதாம் - 2.மக்கள்பெயர்:2 44/2
இனிய கருமுளம் கழு மாதுளங்கம் தாடிமமோடு எழுவே தாதிமமே மாதுளை ஏழ் மாதளைப்பேர் - 4.மரப்பெயர்:4 12/3
சீர் கதை தண்டு எறுள் வயிரம் குணில் குறண்டு ஏழ் தடிப்பேர் தேறு சங்கு கூத்திகை காத்திரி மட்டி முட்டம் - 6.பல்பொருள்பெயர்:6 22/2
நன்பவம் ஏழ் தொடரும் அன்பே உழுவல் ஆம் மகிழ்ச்சி நகை கடிசம் அகமலர்ச்சி சுகம் தொய்யில் கட்டி - 7.பண்புப்பெயர்:7 19/2
சித்தம் உளம் திடன் ஆகும் கைத்தல் சினம் கசப்பு ஆம் சித்து அறிவு செயம் ஆகும் சத்தம் ஏழ் ஒலி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 59/3
TOP
ஏழ்பருவம் (1)
சிறு பேதை பெதும்பை மங்கை மடந்தையே அரிவை தெரிவை பேரிளம்பெண் ஏழ்பருவம் மின்னார் இவர்க்கே - 2.மக்கள்பெயர்:2 44/1
TOP
ஏழ்பவம் (1)
எம்மை எந்தப்பிறப்பு ஏம் ஏழ்பவம் ஏழுபிறப்பு ஆம் இழிதகவு பரிபவம் ஆம் எளிமை எண்மை உரித்தே - 7.பண்புப்பெயர்:7 26/4
TOP
ஏழ்பெயரும் (1)
அனல்பெயரும் கேட்டை குருகு ஆனி தேட்கடை வில் அசுரன்நாள் அன்றில் கொக்கு ஆம் ஏழ்பெயரும் மூலம் - 1.தெய்வப்பெயர்:1 44/2
TOP
ஏழ்பேர் (1)
முருகு அருணம் சம்பிரமம் புல் இலிகுசம் ராசமோகி சதபலம் எலுமிச்சு ஏழ்பேர் சொன்னாரே - 4.மரப்பெயர்:4 5/4
TOP
ஏழ்பேராம் (1)
மேனிலை பித்திகை தோடு கடம் அதற்கு ஏழ்பேராம் மேருவின் தென்பால் வடபால் அயனம் இரு கதியே - 1.தெய்வப்பெயர்:1 31/4
TOP
ஏழ்பேரும் (1)
பாதையில்போம் பட்டிகையே புணை எனும் ஏழ்பேரும் படிந்த தெப்பம் அதின்பேர் ஆம் விசியின்பேர் அரியே - 6.பல்பொருள்பெயர்:6 37/4
TOP
ஏழ்மாதர்கூத்து (1)
கடையமே சசிகூத்து ஆம் பேடும் அதன் கூத்து ஆம் கருது துடி ஏழ்மாதர்கூத்து இருக்கை பழுவின் - 9.செயல்பற்றியபெயர்:9 27/3
TOP
ஏழகம் (1)
உகழ் புருவை செச்சை மேடகம் கொச்சை அசம் மை உடு துரு கம்பளம் வெறி ஏழகம் கொறி ஆட்டின்பேர் - 3.விலங்கின்பெயர்:3 11/3
TOP
ஏழாகும் (1)
பகுத்தல் எற்றல் கண்டித்தல் தறித்தலே துமித்தல் பரிதலே தடித்தல் வெட்டல் ஏழாகும் விரியல் - 9.செயல்பற்றியபெயர்:9 12/1
TOP
ஏழாம் (5)
திறைகொள் விராடன் காரி நிருதி துந்துமாரி செம்பியனே சகரன் நளன் முதல்வள்ளள் ஏழாம்
அறி கன்னன் சிசுபாலன் சந்திமான் சந்தன் அந்திமான் வக்கிரன் அக்குரன் இடையேழ்வள்ளல் - 2.மக்கள்பெயர்:2 8/2,3
மற்ற வயித்தியர் பிடகர் ஆயுள்வேதியர் மாமாத்தியர் வாகடர் மருத்தர் பண்டிதர்பேர் ஏழாம்
வெற்றிஅரைவனர் துவட்டர் தபதியர் கண்ணாளர் வினைஞர் கொல்லர் சிற்பியர் தட்டார் முனைவர் சொன்னர் - 2.மக்கள்பெயர்:2 16/1,2
கழிமுகம் தோணாமுகம் அதோமுகமே போந்து கயவரி புகாரும் அழிமுகமும் என ஏழாம்
அழிவுஇல் உவளகம் அளக்கர் கழிநிலம் உப்பளம் ஆம் அரங்கம் ஆற்றிடைக்குறை ஆம் இலங்கை துருத்தியும் ஆம் - 5.இடப்பெயர்:5 24/1,2
பிடகம் ஆகமம் பனுவல் ஆரிடம் தந்திரமே பெரும் சமையம் சூத்திரநூல் பேர் ஏழாம் சருக்கம் - 8.ஒலிபற்றியபெயர்:8 8/2
சுவை வண்டு கிள்ளை பரி கரி நுணல் ஆன் மேடம் தொனி ஏழாம் விசுவாமித்திரன் யமன் முக்கதிரே - 8.ஒலிபற்றியபெயர்:8 12/1
TOP
ஏழாறே (1)
ஆயுசகன் வாதம் வந்து கூதிர் வங்கூழ் வேற்றலாம் பவனம் வாடை சதாகதி காற்று ஏழாறே - 1.தெய்வப்பெயர்:1 28/4
TOP
ஏழிசை (1)
குரல் துத்தம் கைக்கிளையே உழை இளியே விளரி குணி தாரம் ஏழிசை ஆம் மிடறு நாக்கு அண்ணம் - 8.ஒலிபற்றியபெயர்:8 11/1
TOP
ஏழிசைக்கு (1)
சிரம் நுதல் நெஞ்சொடு நாசி பிறப்பிடம் ஏழிசைக்கு ஆம் சேர் நான்கு நான்கு மூன்று இரண்டு நால் மூன்றே - 8.ஒலிபற்றியபெயர்:8 11/2
TOP
ஏழிசையிலோர்பேர் (1)
கிளர் கிரணம் கோட்டுமலர் கிளர்தல் பூந்தாது ஆம் கிளை கிளைத்தல் மூங்கில் சுற்றம் ஏழிசையிலோர்பேர்
உளர்தல் சிதறுதல் தடவல் கிண்டுதலும் ஆகும் உளை மயிர் மாக்குசைமயிர் ஆம் விளை வயல் காடு இரண்டாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 134/1,2
TOP
ஏழு (3)
தமி நேயம் ஏழு நெய்ப்பேர் அளை பெருகு ததியும் தயிர் ஆம் மோர் அருப்பம் உசர் தக்கிரம் கலாயம் - 6.பல்பொருள்பெயர்:6 14/2
மாசுஇல் சூடிகை ஏழு மகுடப்பேர் மகுடம் மாலிகை கரோடிஅதாம் முடியுறுப்பு மகுடம் - 6.பல்பொருள்பெயர்:6 26/2
அரற்று சடம் சட்டு ஆறு ஆம் சத்தம் ஏழு ஆகும் அட்டம் எட்டு ஆம் நவம் தொண்டு ஒன்பானும் ஒன்பது ஆகும் - 7.பண்புப்பெயர்:7 40/2
TOP
ஏழுபிறப்பு (1)
எம்மை எந்தப்பிறப்பு ஏம் ஏழ்பவம் ஏழுபிறப்பு ஆம் இழிதகவு பரிபவம் ஆம் எளிமை எண்மை உரித்தே - 7.பண்புப்பெயர்:7 26/4
TOP
ஏழும் (2)
கூரில் சனிமகன் மாந்தி குளிகன் முப்பேர் ஆகும் கோள் ஏழும் தொடுத்த நாள் கிழமையும் வாரமுமே - 1.தெய்வப்பெயர்:1 37/4
இரு தொகை மாத்திரை அவைக்கு ஆம் நெடில் ஏழும் எழுத்து ஆம் இணர் மௌவல் முல்லை கடம்பே வஞ்சி நெய்தல் - 8.ஒலிபற்றியபெயர்:8 11/3
TOP
ஏழேழ் (2)
நடைக்கிரி கரேணு வாரணம் களவன் ஏழேழ் நான்கு ஆனை பொதுப்பேர் அத்தினி கருணி வடவை - 3.விலங்கின்பெயர்:3 4/2
தேர் அணங்கு சுந்தரம் பத்திரம் அம்மே நோக்கு சித்திரம் மனோகரமும் அழகு ஏழேழ் தருமே - 7.பண்புப்பெயர்:7 14/4
TOP
ஏழை (2)
இதவசனன் பரிசிலான் யாசகன் நல்கூர்ந்தோன் ஏழை தரித்திரன் தீனன் இலம்பாட்டன் ஏற்போன் - 2.மக்கள்பெயர்:2 24/3
அறிவிலன் யாதன் பேதை மடன் ஏழை மூகன் அஞர் இழுதை அண்ணை அஞ்ஞை சிதடன் முழுமகன் ஆம் - 2.மக்கள்பெயர்:2 26/1
TOP
ஏழைந்தாம் (2)
நல விது தானவன் சோமன் சந்திரன் ஏழைந்தாம் நல் நிலா சந்திரிகை நிலவின்பேர் அறியே - 1.தெய்வப்பெயர்:1 34/4
தெரு நடவை பதம் மாற்கம் சுரம் வட்டை பட்டம் சேர் வழிப்பேர் ஏழைந்தாம் அருநெறிப்பேர் தூம்பு - 5.இடப்பெயர்:5 31/3
TOP
ஏழையும் (1)
கொம்பிலாமிருகப்பேர் குமரம் ஏழையும் ஆம் கூலம் வேசகம் தோகை வால் இலாங்குலமும் - 3.விலங்கின்பெயர்:3 20/1
TOP
ஏற்படல் (1)
பகுப்பே பாத்து பாகமும் பங்கிடல் ஆம் ஏற்படல் ஒட்டுதல் வலித்தல் நேரல் உடன்படலே - 9.செயல்பற்றியபெயர்:9 22/4
TOP
ஏற்போன் (1)
இதவசனன் பரிசிலான் யாசகன் நல்கூர்ந்தோன் ஏழை தரித்திரன் தீனன் இலம்பாட்டன் ஏற்போன்
கதியிலான் ஒற்கன் ஆதுலன் மிடியன் கிஞ்சன் கலியன் வறியோன் உறுகண்ணாளன் இரவலனே - 2.மக்கள்பெயர்:2 24/3,4
TOP
ஏற்ற (1)
மதி பாலையாழ் குறிஞ்சியாழ் மருதயாழ் செவ்வழியாழாம் பண் பாடற்கு ஏற்ற குரல் யாழே - 8.ஒலிபற்றியபெயர்:8 10/4
TOP
ஏற்றம் (1)
பயில் சீர்த்தி ஏற்றம் சீர் இசை தோற்றம் புகழ் மேம்பாடு ஒளி கியாதம் மீக்கூறொடு சுவேதம் - 8.ஒலிபற்றியபெயர்:8 7/1
TOP
ஏற்றல் (2)
கனத்தின் வேட்பித்தல் ஈகுதல் ஏற்றல் ஆறு கருமம் அவர் தொழில் ஆகும் பாரத்துவாசி - 2.மக்கள்பெயர்:2 4/2
மறன் இகல் சல்லிகம் பூசல் ஆர்ப்பு அமர் தெவ்வு உடன்றல் மலைப்பு இரணம் தாக்கு கோறல் கிடைத்தல் ஞாட்பு ஏற்றல்
செறல் முடுகல் போர் பொருதல் ஆயோதனம் தும்பை தீய்த்தல் வினை முரண் கூட்டம் மொய் செரு நேர் கிட்டல் - 9.செயல்பற்றியபெயர்:9 24/1,2
TOP
ஏற்று (1)
இறும்பு இராசிலம் தளம் தாமரைப்பூ ஆம் பொகுட்டே ஏற்று உருட்பூ கன்னிகை பூங்கொட்டைஅதாம் அதின்காய் - 4.மரப்பெயர்:4 27/1
TOP
ஏறல் (1)
இவர்தல் அளைந்திடல் ஏறல் எழுச்சி ஆசையும் ஆம் எவனம் வினா இளமையும் ஆம் சுவலை அரசு அழல் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 125/2
TOP
ஏறு (9)
திரம் முதல்நாள் ஏறு இரலை மருத்துவன் ஐப்பசி யாழ்ச்சென்னியுடன் பரிப்பேரும் அச்சுவதி நாமம் - 1.தெய்வப்பெயர்:1 40/1
குன்றாத தூர்வகம் ஏறு இடபம் நந்தி கூளி குத்தம் தூரியம் பாறல் கொட்டியமே மூரி - 3.விலங்கின்பெயர்:3 10/2
சேகரத்தில் ஏறு உம்பல் பகடு ஓரி கலை மா சேவல் போத்து ஒருத்தல் களிறு உதழ் கண்டி மோத்தை - 3.விலங்கின்பெயர்:3 19/1
விடை விடல் ஏறு எதிர்மொழி ஆம் கிடை கிடப்பு குழு ஆம் விடங்கம் ஏர் கொடி கொடுங்கை படங்கு கொடி வானி - 10.ஒருசொல்பல்பொருள்:10 28/1
குண்டலம் வான் குழை ஆகும் கொண்டல் முகில் காற்று ஆம் கொண்டை முடி ஓர் கனி ஆம் குண்டை சட்டி ஏறு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 45/2
பாண்டில் ஏறு ஊர்தி வட்டம் சுடர் தாள் கட்டிலும் ஆம் பகர் வண்ணம் சந்தம் நிறம் பண்பு மூன்றாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 49/3
தந்தம் நகை கொம்பு ஆகும் நந்தி சிவன் ஏறு ஆம் சந்து முட்டு தூது சந்து ஆம் நந்து நத்தை சங்கு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 64/1
மை இருள் மை மலடு ஆடு மேகம் அழுக்காறு ஆம் வையம் தேர் ஏறு உரோகணி புவி ஊர்தியும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 83/3
கொள்ளை மிகை கொடுவியாதி பொள்ளல் அப்பம் பொந்து ஆம் கூளி தமர் வாமனம் பேய் குறள் வீரர் ஏறு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 141/1
TOP
ஏறுதல் (1)
இடுக்கல் பெற்றி இழிவு ஆம் மீக்கோ இவர் ஏறுதல் ஆம் இறங்கல் சுதம் அவதாரம் குனிவு குரங்கலும் ஆம் - 9.செயல்பற்றியபெயர்:9 5/3
TOP
ஏறொடு (1)
பகடு புணை பெருமை கரி ஏறொடு கிடா ஆம் பகவனே தெய்வமும் மும்மூர்த்திகளும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 3/2
TOP
ஏன்றல் (1)
வேண்டல் குறைகோள் ஏன்றல் வாங்கல் இரத்தலின்பேர் வேண்டாம் ஆற்றுதல் காத்தல் நிறுத்தல் மறுத்திடல் ஆம் - 9.செயல்பற்றியபெயர்:9 6/3
TOP
ஏனம் (1)
அரி ஏனம் கோட்டுமா கிருகிடி கேழலுமே அடும் பன்றி நாலேழ்பேர் சல்லம் முண்மா முளவு - 3.விலங்கின்பெயர்:3 12/3
TOP
ஏனல் (2)
கடுகு நீர்வாரம் ஆம் ஏனல் கம்பு கவலை கங்கு இறடி தினை ஆகும் ஏனல் குரல் கதிர் ஆம் - 4.மரப்பெயர்:4 24/3
கடுகு நீர்வாரம் ஆம் ஏனல் கம்பு கவலை கங்கு இறடி தினை ஆகும் ஏனல் குரல் கதிர் ஆம் - 4.மரப்பெயர்:4 24/3
TOP
ஏனாதி (2)
மன்னியசூழ்வோர் உழையர் நூலர் எண்ணர் துணைவர் அமாத்தியர் மூத்தோர் முதுவோர் தேர்ச்சியர் ஏனாதி
பொன் அமைச்சர் ஆவிர் இவை மந்திரிகள் நாமம் பொருநர் படைத்தலைவர் சேனேசர் தளவாய்பேர் - 2.மக்கள்பெயர்:2 13/1,2
மானி ஏனாதி சீமங்கலி மஞ்சிகனே மயிர்வினைஞன் தீர்த்தன் நாவிதன்பேர் சண்டாளர் - 2.மக்கள்பெயர்:2 18/1
TOP
ஏனைய (1)
ஏனைய கோழிக்கொடியோன் பூரணை புட்கலை சேர் இறை யோகி தண்டதரன் அறங்காப்பான் கையன் - 1.தெய்வப்பெயர்:1 10/3
TOP
|
|
|