<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - முதற்பகுதி - தொடரடைவு

ஈ - முதல் சொற்கள்
ஈ 1
ஈகுதல் 1
ஈகை 4
ஈகையான் 1
ஈங்கை 1
ஈச்சுரி 1
ஈசர் 1
ஈசன் 3
ஈசன்இடப்பாகி 1
ஈசனும் 1
ஈசானன் 1
ஈசுரன் 1
ஈட்டம் 1
ஈட்டி 2
ஈடு 3
ஈண்டு 2
ஈண்டே 1
ஈதல் 2
ஈமசம் 1
ஈமத்தாடி 1
ஈமம் 1
ஈய்ந்து 1
ஈயம் 2
ஈயல் 1
ஈயோட்டி 1
ஈர்க்கு 1
ஈர்த்தல்அதின் 1
ஈர்ப்பு 1
ஈர்வாள் 1
ஈரங்கோலியனே 1
ஈரம் 2
ஈரல் 1
ஈராறும் 2
ஈராறொன்று 1
ஈரிரண்டாய் 1
ஈருள் 1
ஈரெட்டும் 1
ஈரேழ் 1
ஈரேழ்நாழிகை 1
ஈரேழாம் 2
ஈரேழும் 1
ஈரொன்பான் 1
ஈவு 1
ஈழம் 2
ஈற்றா 1
ஈறு 2
ஈன்பை 1
ஈன்ற 1
ஈன்றல் 1
ஈன்றாள் 1
ஈன்றானம் 1
ஈனம் 1
ஈனர் 1
ஈனர்பேர் 1
ஈனல் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    ஈ (1)
பொறி அளி ஈ மதுகரம் கேசவம் பிருங்கம் சரகம் புட்பிரசம் பிரமரம் சஞ்சாளிகம் கண்ணாசி - 3.விலங்கின்பெயர்:3 29/2

 TOP
 
    ஈகுதல் (1)
கனத்தின் வேட்பித்தல் ஈகுதல் ஏற்றல் ஆறு கருமம் அவர் தொழில் ஆகும் பாரத்துவாசி - 2.மக்கள்பெயர்:2 4/2

 TOP
 
    ஈகை (4)
தாளியின்பேர் புலிதுடக்கி இண்டு ஈகை ஈங்கை தானீஞ்சில் ஆம் பகண்டை சிவிதை சிவேதையும் ஆம் - 4.மரப்பெயர்:4 19/2
வித்தம் ஆடகம் ஈகை பொருள் பூரி செங்கொல் வெறுக்கை அரி பீதம் சாமீகரம் சாம்புனதம் - 6.பல்பொருள்பெயர்:6 1/3
அருளல் உபகாரம் நல்கல் விதரணம் தியாகம் அளித்திடல் உதாரம் வழங்குதல் பொழிதல் ஈகை
  விரவு பணித்திடல் நீட்டல் கவிகை சிவிகையும் ஆம் வேந்தர் வரையாது கொடுத்திடுதல் கொடைமடமே - 9.செயல்பற்றியபெயர்:9 4/3,4
ஈகை இண்டை கொடை பொன் ஆம் ஆகுலம் நோய் ஒலி ஆம் ஏகமே தனிமை ஒன்று ஆம் காகுளி ஆர்ப்பு அணை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 9/3

 TOP
 
    ஈகையான் (1)
உதவுவோன் ஈகையான் தாதா தியாகி உபகாரி வள்ளல் அளியோன் கொடையாளியின்பேர் - 2.மக்கள்பெயர்:2 24/2

 TOP
 
    ஈங்கை (1)
தாளியின்பேர் புலிதுடக்கி இண்டு ஈகை ஈங்கை தானீஞ்சில் ஆம் பகண்டை சிவிதை சிவேதையும் ஆம் - 4.மரப்பெயர்:4 19/2

 TOP
 
    ஈச்சுரி (1)
கவுரி அறம்வளர்த்தசெல்வி சுந்தரி ஈச்சுரி பூங்கணைக்கிழத்தி அருளேழை சாம்பவிதாய் வாலை - 1.தெய்வப்பெயர்:1 4/2

 TOP
 
    ஈசர் (1)
கவுதமன் காசிபன் ஈசர் ஆம் மந்தவோசை காகுளி மந்தம் தக்கு ஆம் மத்திமம் பஞ்சமமே - 8.ஒலிபற்றியபெயர்:8 12/2

 TOP
 
    ஈசன் (3)
பரமன் அரியான் தாணு நந்தி புலித்தோலான் பாண்டரங்கன் நக்கன் உருத்திரன் மூர்த்தி ஈசன்
  சிரதரன் பிஞ்ஞகன் காமதகனன் அழலேந்தி சித்தன் அனுபமன் சூலன் அசஞ்சலன் கபர்த்தி - 1.தெய்வப்பெயர்:1 2/1,2
நவைஇல் பெருமான் அதிகன் பதி ஈசன் ஓசன் ஆதன் ஆசிரியன் ஆசாரியன் தேசிகனே - 2.மக்கள்பெயர்:2 5/4
ஈசன் நரபதி லோலன் கொற்றவன் பார்த்திபன் மன் ஏந்தல் ஆண்டகை துரை பூபாலன் அண்ணல் வேந்தன் - 2.மக்கள்பெயர்:2 6/2

 TOP
 
    ஈசன்இடப்பாகி (1)
புவனை திரிபுரை வாமி அபிராமி அன்னபூரணி ஆரியை அமலை ஈசன்இடப்பாகி
  தவசதானந்தி மாதா நாரி ஐயை சங்கரி அம்பிகை உமை பார்ப்பதி ஐயேழ் காணே - 1.தெய்வப்பெயர்:1 4/3,4

 TOP
 
    ஈசனும் (1)
ஆதன் உயிர் பேதையும் ஆம் ஏதம் இடர் மறு ஆம் ஆதி முதல் நேரோடல் மன் மால் ஈசனும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 53/1

 TOP
 
    ஈசானன் (1)
அரவன் ஈசானன் அழலாடி அண்ணல் பெருமான் அந்திவண்ணன் கண்ணுதல் ஐம்முகன் பூதநாதன் - 1.தெய்வப்பெயர்:1 2/3

 TOP
 
    ஈசுரன் (1)
முதல்வன் ஈசுரன் நடனன் சிற்பரன் கபாலி முக்கணன் புராரி சிம்புளாயினோன் அனந்தன் - 1.தெய்வப்பெயர்:1 3/1

 TOP
 
    ஈட்டம் (1)
கருவி துளை இயம் கவசம் யாழ் ஈட்டம் துடர்ச்சி கலனை துகில் புயல் கூட்டம் படை வினை கச்சையும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 90/1

 TOP
 
    ஈட்டி (2)
கொழுத்த தண்டு பீலி எஃகம் பிண்டி பாலம்அதாம் குந்தம் தோமரம் கொந்தம் ஈட்டி விட்டேறு ஐந்தும் - 6.பல்பொருள்பெயர்:6 21/2
கோல் கணை வாள் ஈட்டி துகிலிகை துலாம் கோடு கோல் இரந்தை யாழ்நரம்பு அஞ்சனக்கோல் செங்கோலே - 10.ஒருசொல்பல்பொருள்:10 115/4

 TOP
 
    ஈடு (3)
மால் கருமை பகடு ஏந்தல் பாடு இருமை மோடு வால் குவவு தகை பொழில் பீடு அண்ணல் பணை ஈடு
  மேல் கயவு நளி பாழி வீறு செம்மல் மானம் வியன் மூரி முடலை நாலேழொன்று உன்னுகவே - 7.பண்புப்பெயர்:7 4/3,4
விறல் ஈடு நலம் தீரம் திண்மை மைந்து நோன்மை மெய் ஊக்கம் மிடல் ஆண்மை மொய்ம்பு வலி மல்லல் - 7.பண்புப்பெயர்:7 16/2
ஈடு உவமை குழைவு வலி பெருமை நாற்பேராம் இடங்கர் குடம் தூர்த்தர் சிறுவழி முதலை நாற்பேர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 33/3

 TOP
 
    ஈண்டு (2)
ஏல் இடையும் நடு ஆகும் ஈண்டு இவணே இம்பர் இவ்விடப்பேர் ஆண்டு அவண் அவ்விடம் உம்பர் உவண் ஆம் - 5.இடப்பெயர்:5 33/3
ஈண்டு கடைக்கணித்தல் ஆம் சரிதை ஐயம் பிடிகம் இரந்த பிண்டம் பலி பாகம் பயிக்கமும் பிச்சையின்பேர் - 9.செயல்பற்றியபெயர்:9 6/2

 TOP
 
    ஈண்டே (1)
எண் இலக்கம் எள் எளிமை கணிதம் நினைவெழல் ஆம் ஈண்டே இவ்விடம் சடுதி என்பர் ஆண்டவரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 48/4

 TOP
 
    ஈதல் (2)
அதிபன் ஐம்பத்தாறுபெயர் புவிராசர்க்கு உரைப்பார் அடுத்து ஓதல் ஈதல் படைக்கலம்பயிறல் வேட்டல் - 2.மக்கள்பெயர்:2 7/2
விழைவிளைஞர் பதினைந்தும் சூத்திரர்பேர் இவர்க்கு வியன் கல்வி உழவு ஈதல் மூவர்தொழில்முடித்தல் - 2.மக்கள்பெயர்:2 15/3

 TOP
 
    ஈமசம் (1)
சார் இணங்கன் கழுது குணபாசி சவம் குணபம் சாவு நிசிசரம் வெள்ளை ஈமசம் பசாசு - 1.தெய்வப்பெயர்:1 23/3

 TOP
 
    ஈமத்தாடி (1)
மதகரியையுரித்தவன் பெம்மான் ஈமத்தாடி வயிரவன் பினாகி ஆலமர்கடவுள் சடையோன் - 1.தெய்வப்பெயர்:1 3/2

 TOP
 
    ஈமம் (1)
இடுகாடு சுடுகாடு காளவனம் சுடலை எரிவனம் துற்காடு பிணவரை புறங்காடு ஈமம்
  படுகாடு பிதிர்வனமே சுடுநிலம் மயானம் பன்னிரண்டாம் குயிலாயம் குடம்பை கட்சி கூண்டு - 5.இடப்பெயர்:5 29/1,2

 TOP
 
    ஈய்ந்து (1)
பாவணியல் ஈய்ந்து காப்பான் - 0.காப்பு:0 1/4

 TOP
 
    ஈயம் (2)
செனிவடு தாம்பிரம் சிக்கம் உதும்பரமே சுற்பம் செம்பு ஆகும் ஈயம் வங்கம் சீருளும் சொன்னதுவே - 6.பல்பொருள்பெயர்:6 2/4
வங்கம் வெள்ளி ஈயம் வழுதுணை புணை ஓர் நாடு ஆம் மங்குல் இருள் கார் விசும்பு ஆம் பொன் பொரும் அங்கனையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 13/4

 TOP
 
    ஈயல் (1)
வெட்கிய இந்திரகோபம் ஈயல் மூதா ஆம் மின்மினிப்பேர் கைச்சோதம் நித்தில் என அறியே - 3.விலங்கின்பெயர்:3 28/4

 TOP
 
    ஈயோட்டி (1)
குஞ்சி குன்றி சேய் மயிர் புள்பார்ப்பொடு நாற்பேராம் குஞ்சம் ஈயோட்டி தொங்கல் குறளை குன்றி படி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 22/3

 TOP
 
    ஈர்க்கு (1)
இத்தரமாம் குதை பகழி புங்கம்அதாம் உடு ஈர்க்கு இறகு காம்பு ஆம் மொட்டம்பு உதண்டம் ஆவனவே - 6.பல்பொருள்பெயர்:6 19/4

 TOP
 
    ஈர்த்தல்அதின் (1)
அரிதல் சேதித்தல் விடுவாய் கெய்தல் சூலல் அறுத்தல் கொய்தல் கத்தரித்தல் ஈர்த்தல்அதின் பகுப்பே - 9.செயல்பற்றியபெயர்:9 11/4

 TOP
 
    ஈர்ப்பு (1)
கமை தவறு பொறுமை ஆம் துமிதல் அரிவு ஈர்ப்பு ஆம் கம் மயன் வான் தலை விண் கால் வெண்மை நீர்க்கு ஆமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 73/4

 TOP
 
    ஈர்வாள் (1)
உழிப்பெயரே தறிகை கணிச்சியும் ஆகும் ஈர்வாள் உர கரபத்திரமும் வேதினமும் உரைத்தாரே - 6.பல்பொருள்பெயர்:6 21/4

 TOP
 
    ஈரங்கோலியனே (1)
சக்கிரியும் நந்தியும் செக்கான்பேர் அடி தூசன் ஏகாலி ஈரங்கோலியனே - 2.மக்கள்பெயர்:2 18/4

 TOP
 
    ஈரம் (2)
அன்பின்பேர் நார் ஈரம் பரிவு ஆர்வம் நேயம் அளி பாசம் பற்று ஆணம் காதல் புரிவு ஆகும் - 7.பண்புப்பெயர்:7 19/1
போர் சதையநாள் அமர் நெல்சும்மையும் முப்பேராம் பூருவம் முன் கிழக்கும் ஆம் ஈரம் அன்பு குளிர்வு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 100/2

 TOP
 
    ஈரல் (1)
எருவை செந்நீர் கறை சுடுவல் சோரி நெய்த்தோர் சோரை இரத்தப்பேர் ஈருள் என்பது ஈரல் ஆம் சோரி - 2.மக்கள்பெயர்:2 58/3

 TOP
 
    ஈராறும் (2)
இறுகிய சாலிகை அரணம் மேடகம் கந்தளம் ஆசு ஈராறும் கவசப்பேர் எனும் கரியகுழலே - 6.பல்பொருள்பெயர்:6 24/4
கணம் வறிது இட்டிமை ஒட்டு ஈராறும் அற்பம் ஆகும் கலி தூரம் சேண் சேய்மை ஆம் வடிதல் போகல் - 7.பண்புப்பெயர்:7 6/3

 TOP
 
    ஈராறொன்று (1)
மிடியொடு நல்குரவு ஈராறொன்று தரித்திரப்பேர் வெறுமையும் ஆம் அரி முருட்டு தெவ்வு முரண் பகை ஆம் - 7.பண்புப்பெயர்:7 29/3

 TOP
 
    ஈரிரண்டாய் (1)
கார் கூதிர் முன்பனி பின்பனியொடு இளவேனில் கடுவேனில் ஆறும் ஆவணி முதல் ஈரிரண்டாய்
  சேர் ஆடி வரை நிரையாய் பெரும்பொழுது என்றாகும் சிறுபொழுது காலையும் நன்பகலுடன் எற்பாடும் - 1.தெய்வப்பெயர்:1 50/1,2

 TOP
 
    ஈருள் (1)
எருவை செந்நீர் கறை சுடுவல் சோரி நெய்த்தோர் சோரை இரத்தப்பேர் ஈருள் என்பது ஈரல் ஆம் சோரி - 2.மக்கள்பெயர்:2 58/3

 TOP
 
    ஈரெட்டும் (1)
இருள் அசிதம் ஈரெட்டும் கறுப்பின்பேர் களங்கம் இழிபு கறை கசடு மாசு இவை மலின பசையே - 7.பண்புப்பெயர்:7 12/4

 TOP
 
    ஈரேழ் (1)
பொலி திதலை நுணங்கு ஈரேழ் தேமல் ஆம் வாகு புயம் மொய்ம்பு தோளின் இயற்பேர் பசுந்தோளணங்கே - 2.மக்கள்பெயர்:2 49/4

 TOP
 
    ஈரேழ்நாழிகை (1)
காலை செவ்வி யாமம் அமையம் பாணி எல்வை காலம் போது ஈரேழ்நாழிகை நாழி கடிகை - 1.தெய்வப்பெயர்:1 46/3

 TOP
 
    ஈரேழாம் (2)
தோகை பிணிமுகம் மொகரம் சிகி மயில் ஈரேழாம் தூவி சந்திராங்கம் அணி கூழை தொங்கல் சருணம் - 3.விலங்கின்பெயர்:3 22/2
கோ எனல் கண் பசு திசை நீர் கிரணம் பார் மலை கோன் குலிசம் விண் அம்பு உரை இரங்கல் சுவற்கம் ஈரேழாம்
  கா எனலே சோலை துலாம் காப்பு தோள்சுமை ஆம் கவுசிகம் பண் கூகை சுடர் கால் பட்டு ஆவனவே - 10.ஒருசொல்பல்பொருள்:10 127/3,4

 TOP
 
    ஈரேழும் (1)
சாரு மனை அகம் இல் என்று ஈரேழும் வீடு ஆம் தாழ் குச்சில் குரம்பை புரை கூரை சிற்றில் குடில் ஆம் - 5.இடப்பெயர்:5 10/2

 TOP
 
    ஈரொன்பான் (1)
மரு மதுவை நறை வாசம் மன்றல் ஈரொன்பான் மணம் ஆகும் நாறுதல் கந்தித்தல் கமழ்தலின்பேர் - 7.பண்புப்பெயர்:7 27/3

 TOP
 
    ஈவு (1)
மிசை உணவு மேடு ஆகும் பசி பசப்பு பசி ஆம் வீசல் எறிந்திடல் ஈவு ஆம் ஊசல் உஞ்சல் சளிப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 17/1

 TOP
 
    ஈழம் (2)
நதியின் அவிமுத்தம் வாரணவாசி வாரணாசி காசிப்பெயர் சிங்களம் ஈழம் நகரே - 5.இடப்பெயர்:5 13/4
தனி ஈழம் பிங்கலம் தேசிகம் சாதரூபம் தமனியம் நிதானம் பீதகம் ஆடை தொடுக்கம் - 6.பல்பொருள்பெயர்:6 2/1

 TOP
 
    ஈற்றா (1)
வதி கிருட்டி பத்திரை வற்சலம் ஈனல் ஈற்றா மலடு வற்சை ஆம் தன்னம் வற்சமும் கன்று ஆமே - 3.விலங்கின்பெயர்:3 9/4

 TOP
 
    ஈறு (2)
ஒடிவு தவல் ஈனம் அருகுதல் அஃகல் சிறுகல் ஓய்வு குன்றல் ஈறு சிங்கல் ஊனம் எஞ்சல் குறைவே - 7.பண்புப்பெயர்:7 7/4
தலை முதல் அக்கிரம் மோனை பூருவம் முன் ஆதி தாள் எழுவாய் அடி ஆகும் கடை முடிவு ஈறு இறுதி - 7.பண்புப்பெயர்:7 9/3

 TOP
 
    ஈன்பை (1)
சிதகின் நிரை காலேயம் பசுக்கூட்டம் ஐந்தாம் செருத்தல் மடு சுரை ஈன்பை பீனசமும் முலைப்பேர் - 3.விலங்கின்பெயர்:3 9/3

 TOP
 
    ஈன்ற (1)
முன் உரைத்த அனுலோமர் பிறிதிலோமரிலே முறைவழாது ஈன்ற பிள்ளைபேர் அந்தராளன் - 2.மக்கள்பெயர்:2 41/1

 TOP
 
    ஈன்றல் (1)
பலித்தல் கிடை திடல் வாய்த்தல் பயப்பு ஈன்றல் பெறல் ஆம் பரிசனம் தொட்டிடல் ஊறு துவளல் திவளலும் ஆம் - 9.செயல்பற்றியபெயர்:9 15/3

 TOP
 
    ஈன்றாள் (1)
அன்னை அனை ஆய் தல்லி மோய் தள்ளை ஈன்றாள் அம்மை வயின் பொறை அவ்வை ஆயி பெற்றாள் புனிற்றாய் - 2.மக்கள்பெயர்:2 36/1

 TOP
 
    ஈன்றானம் (1)
தொக்க பிதிர் ஈன்றானம் மானத்தன் பயந்தான் தொழுமச்சன் பதினொன்றும் தகப்பன்பேர் அனைத்தே - 2.மக்கள்பெயர்:2 35/4

 TOP
 
    ஈனம் (1)
ஒடிவு தவல் ஈனம் அருகுதல் அஃகல் சிறுகல் ஓய்வு குன்றல் ஈறு சிங்கல் ஊனம் எஞ்சல் குறைவே - 7.பண்புப்பெயர்:7 7/4

 TOP
 
    ஈனர் (1)
ஈனர் கனகதர் களைஞர் கொலைஞர் மாதங்கர் இழிஞர் வங்கர் குணுங்கர் கவுண்டரும் புலையர்பேர் ஆம் - 2.மக்கள்பெயர்:2 18/2

 TOP
 
    ஈனர்பேர் (1)
நெறியிலர் கல்லார் பதகர் முறையிலரோடு அதமர் நீசர் கையர் தீக்குணரும் ஈனர்பேர் முடிவே - 2.மக்கள்பெயர்:2 26/4

 TOP
 
    ஈனல் (1)
வதி கிருட்டி பத்திரை வற்சலம் ஈனல் ஈற்றா மலடு வற்சை ஆம் தன்னம் வற்சமும் கன்று ஆமே - 3.விலங்கின்பெயர்:3 9/4

 TOP