|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
கேகயம் (3)
கேகயம் சிகாவளம் மயூரம் மஞ்ஞை பீலி கேழ் ஞமலி சிகண்டி கலாபம் சருணி நவிரம் - 3.விலங்கின்பெயர்:3 22/1
முண்டகம் அம்போருகம் சரோருகம் சரோசம் முளரி மரை சலசம் கேகயம் பதுமம் விந்தம் - 4.மரப்பெயர்:4 26/1
கேகயம் ஓர் பண் கமலம் மயில் அசுணம் நாடு ஆம் கிண்டு நாகரம் செழுகம் சுக்கு ஓர் அக்கரமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 9/4
TOP
கேகயமே (1)
ஆர்க்கும் அட்டபதி எண்கால்புள்ளுடன் வாருண்டம் அவை சரபம் ஆம் அசுணப்புள்பேர் கேகயமே - 3.விலங்கின்பெயர்:3 21/4
TOP
கேசம் (2)
தவிர் சுரியல் குழல் கேசம் ஓரி தொங்கல் பித்தை தளை பிச்சம் தார் சிரோருகமும் ஆண்மயிர்ப்பேர் - 2.மக்கள்பெயர்:2 54/3
குடைய பெயர் சுரியல் குழல் குரல் அளகம் கேசம் உளை கதுப்பு பரிசாரம் கூழை குருள் ஓதி - 2.மக்கள்பெயர்:2 55/2
TOP
கேசமும் (1)
ஆக்கு அணலும் கீழ்வாயின்புறம் ஆம் கபோலம் அனு கதுப்பு கொடிறு கவுள் கன்னம் கேசமும் ஆம் - 2.மக்கள்பெயர்:2 52/2
TOP
கேசமே (1)
கேசரமே மகிழ்மரமும் பூந்தாதும் ஆகும் கேசமே மயிர் கவுள் ஆம் கீசகம் வேய் குரங்கு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 20/2
TOP
கேசர (1)
கேசர பிஞ்ஞகம் ஒன்றும் தலைக்கோலப்பேர் ஆம் கிரீடம் சேகரம் சுடிகை முடி மெளலி மோலி - 6.பல்பொருள்பெயர்:6 26/1
TOP
கேசரத்தோடு (1)
குமை துருமோற்பலம் குயரூபிணி கன்னிகாரம் கோங்கின்பேர் பிணரும் ஆம் வகுளம் கேசரத்தோடு
அமை இலஞ்சி மகிழ்மரப்பேர் பாடலம் புன்காலி அவை இரண்டும் பாதிரி ஆம் சண்பகம் செண்பகம் ஆம் - 4.மரப்பெயர்:4 2/1,2
TOP
கேசரம் (2)
துறுமலர்க்கேள் சாரங்கம் கரும்பு மந்தி கீதம் சுரும்பு கேசரம் கண்டம் தும்பி வரிக்கடை தேன் - 3.விலங்கின்பெயர்:3 29/3
தகு கண்ணி துணர் தொத்து மஞ்சரி பூங்கொத்து ஆம் தாது மகரந்தம் கேசரம் கொங்கு மலர்த்தூள் - 4.மரப்பெயர்:4 31/3
TOP
கேசரமே (1)
கேசரமே மகிழ்மரமும் பூந்தாதும் ஆகும் கேசமே மயிர் கவுள் ஆம் கீசகம் வேய் குரங்கு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 20/2
TOP
கேசரி (1)
மா புலி கராளி அரிமா வயப்போத்து அறுகு மடங்கல் கேசரி நகாயுதம் மிருகராசன் - 3.விலங்கின்பெயர்:3 1/1
TOP
கேசரிப்பேர் (1)
மண்டு குரம் குரச்சை குளம்பின்பேர் விலாழி வாய்நீர் ஆம் சுவல் குசை வேசகமும் கேசரிப்பேர்
கொண்ட நடை வீதிஅதாம் மந்திரமே சாலை குதிரை நிற்கும் பந்தியின்பேர் ஆதிகம் மாதிகமே - 3.விலங்கின்பெயர்:3 8/2,3
TOP
கேசரியே (1)
வரிசை அங்கவடி மொட்டு படி கச்சம் ஆகும் மத்திகை கோல் சம்மட்டி ஆம் உளை கேசரியே - 6.பல்பொருள்பெயர்:6 25/4
TOP
கேசவம் (1)
பொறி அளி ஈ மதுகரம் கேசவம் பிருங்கம் சரகம் புட்பிரசம் பிரமரம் சஞ்சாளிகம் கண்ணாசி - 3.விலங்கின்பெயர்:3 29/2
TOP
கேசவன் (1)
காவலன் தாமோதரன் மாதவன் வாமன் நேமி காளிகாமர்த்தனன் கேசவன் சார்ங்கபாணி - 1.தெய்வப்பெயர்:1 13/2
TOP
கேட்டை (3)
அனல்பெயரும் கேட்டை குருகு ஆனி தேட்கடை வில் அசுரன்நாள் அன்றில் கொக்கு ஆம் ஏழ்பெயரும் மூலம் - 1.தெய்வப்பெயர்:1 44/2
மேதை புதன் இறைச்சி தோல் அறிவு கள்ளோடு ஐந்தாம் வேதி திண்ணை பலகை விரவுதல் கேட்டை நாள் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 56/2
ஒளி புகழ் முச்சுடர் கேட்டை ஒளிர் ஆறுபெயராம் ஒளிவட்டம் கண்ணாடி சக்கராயுதம் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 137/1
TOP
கேட்பதும் (1)
துவரை ஆடகம் ஊர் ஆம் செவி செவி கேட்பதும் ஆம் சுவல் பிடர் கொய் உளை மேடு கரி சுவல் பேசுவரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 125/4
TOP
கேடகப்பேர் (1)
மறை பரிசை வேதிகை தோற்பரமும் கேடகப்பேர் வன் கோதை கைப்புடை கைக்கட்டியின்பேர் சிரகம் - 6.பல்பொருள்பெயர்:6 24/2
TOP
கேடகம் (3)
கேடகம் நிகாயம் சோபணம் முட்டம் வசதி கிளர் சேரி பூக்கம் பூரியம் வாழ்க்கை குடியே - 5.இடப்பெயர்:5 5/4
கேடகமே ஊர் பலகை பரிசை மூன்றாகும் கிடுகு தேர்மரச்சுற்றும் கேடகம் சட்டமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 34/1
தட்டு அசடு கேடகம் தேர்நடுத்தட்டு தடை ஆம் தட்டல் தடை கிட்டலும் ஆம் பட்டி குக்கல் ஊர் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 38/1
TOP
கேடகமே (1)
கேடகமே ஊர் பலகை பரிசை மூன்றாகும் கிடுகு தேர்மரச்சுற்றும் கேடகம் சட்டமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 34/1
TOP
கேடு (2)
வயா வருத்தம் பதினெட்டாம் மடி இழிவு நந்தல் வழு உருங்கல் கயம் கேடு சுதம் கந்தல் சிதைவே - 7.பண்புப்பெயர்:7 30/4
தாபரம் மெய்நிலை தரு ஆம் தபுதல் சா கேடு ஆம் தரி யூபம் படை கவந்தம் அகத்தறி முப்பேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 70/1
TOP
கேடே (1)
பீடிகை ஆசனபீடம் ஆவணம் தட்டு ஆகும் பெட்டல் இச்சை செறலும் ஆம் நட்டம் நடம் கேடே - 10.ஒருசொல்பல்பொருள்:10 33/4
TOP
கேண்மை (3)
வசக்கு இகுளை கேண்மை தொடர் கேள் நட்பும் அறுபேர் மறுத்தல் வட்கல் உட்கு இலச்சை நாண் சமழ்த்தல் வெள்கல் - 7.பண்புப்பெயர்:7 23/2
கசக்கம் வெட்கம் ஆம் கேண்மை உணர்வு கண் நாகரிகம் கண்ணோட்டம் நயப்பும் அதாம் கணிதம் எண்ணம் ஆகும் - 7.பண்புப்பெயர்:7 23/3
நவம் மழையின்காலம் ஒன்பான் கேண்மை புதுமையும் ஆம் நவியம் மழு கோடாரி கடிவாளம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 126/2
TOP
கேணி (2)
படர் ஞாயில் மதிலுறுப்பு ஆம் கிடங்கு ஓடை அகப்பா பதவு உடு பாம்புரி கேணி பரிகம் அகழ் வாயே - 5.இடப்பெயர்:5 7/4
படுகர் குளம் சவர்தரம் நீர்நிலை நளினி ஓடை பட்டம் இலஞ்சகம் ஆவி அலந்தை குட்டம் கேணி
மடுவொடு புட்கரணி தடம் பூ இ முப்பானெட்டும் வாவியின்பேர் இந்திரவாவிகள் இலவந்திகை ஆம் - 5.இடப்பெயர்:5 26/1,2
TOP
கேத்திரபாலன் (1)
முத்தன் கேத்திரபாலன் சட்டையன் கபாலன் முடுவல்சேனையன் வடுகன் நிருவாணி காரி - 1.தெய்வப்பெயர்:1 11/1
TOP
கேதகை (1)
கனி மடி பட்டிகை பறிவை முடங்கல் கண்டல் முசலி கைதை கேதகை முடவி முண்டகம் தாழையதே - 4.மரப்பெயர்:4 12/4
TOP
கேதம் (1)
சினத்த படர் இன்னல் வெறுப்பு இடும்பை புன்கண் கேதம் செல்லல் கோட்டாலை அலக்கண் பீழை அரந்தை - 7.பண்புப்பெயர்:7 32/1
TOP
கேதல் (1)
குதலை எனும் வாளா கோளா பேசா ஆகும் கூவல் ஆகருடணை வாஎனல் கரைதல் கேதல்
உதவகுத்தல் அகவல் விளித்திடல் அழைத்தல்பேர் ஆம் உளைத்தலும் ஆம் அறைகூவல் போர்அழைக்கும்குறியே - 8.ஒலிபற்றியபெயர்:8 5/3,4
TOP
கேதனம் (1)
பணையுறு கம்பளத்தின்பேர் கேதனம் பதாகை படங்கு படாம் சத்தி விலோதனம் தோகை வானி - 6.பல்பொருள்பெயர்:6 46/2
TOP
கேது (3)
சீரிய ராகுவின்பெயரே தமம் கரும்பாம்பு ஆகும் சிகி மதியின்பகை கேது செம்பாம்பு அதாகும் - 1.தெய்வப்பெயர்:1 37/3
சிகி மயில் நூபுரம் கேது தீ என நாற்பேராம் சிகண்டி மயில் பாலையாழ்த்திறமும் ஆம் சகத்தே - 10.ஒருசொல்பல்பொருள்:10 5/4
பாதை வழி தோணி ஆம் கேது சிகி கொடி ஆம் பாதிரியே குதிரை பாடலம் எனும் மூதுரையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 56/4
TOP
கேந்திரம் (1)
இண்டை திருமனை கமலம் நாளிகன்னி கேந்திரம் இறும்பி விரிஞ்சம் பகற்பூ சகசம் அரவிந்தம் - 4.மரப்பெயர்:4 26/3
TOP
கேயமும் (1)
குதி கீதம் அணு வழி இராகம் கந்திருவம் கொளை வரி காமரம் பாட்டு பாணி பண் கேயமும் ஆம் - 8.ஒலிபற்றியபெயர்:8 10/3
TOP
கேயூரம் (1)
வல்ல கடிப்பிணை கம்பி கடுவடம் காதணி ஆம் வாகுவலையத்தின்பேர் அங்கதம் கேயூரம்
நல்ல தோளணி ஆம் கங்கணம் தொடி கண்டிகையே நல் கடகம் ஆம் பூணூல் உபவீதம் பிடியே - 6.பல்பொருள்பெயர்:6 27/3,4
TOP
கேரளன் (1)
கேரளன் குண்டகன் கோளன் வில்லவன் வஞ்சியினான் கிரி பொருநைத்துறைவன் பூழியன் உதியன் குடகன் - 2.மக்கள்பெயர்:2 12/2
TOP
கேவணம் (1)
ஐ படங்கு வானி விதானமும் மேற்கட்டியின்பேர் ஆகும் கேவணம் குழி வட்டத்தின்பேர் அணையே - 6.பல்பொருள்பெயர்:6 45/4
TOP
கேவலம் (3)
காலும் முத்தி கேவலம் பஞ்சமகெதி மீளாதகதி அமுதம் மோக்கமும் மோட்சம்அதாகும் உவணை - 5.இடப்பெயர்:5 1/2
பாவம் பாதகம் பவம் தீவினை ஆகும் ஒற்றை பலனில் கேவலம் புலம்பு தனிமை ஏகமும் ஆம் - 7.பண்புப்பெயர்:7 35/1
கேவலம் என்பது தனிமை முத்தியும் என்றாகும் கிடைத்த சவுரியன் வீரன் சனி எனும் அவ்வுரையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 130/4
TOP
கேழ் (2)
கேகயம் சிகாவளம் மயூரம் மஞ்ஞை பீலி கேழ் ஞமலி சிகண்டி கலாபம் சருணி நவிரம் - 3.விலங்கின்பெயர்:3 22/1
சாயல் இவை மென்பாடு ஆம் செயலறல் கையறவு ஆம் சமம் இகல் கேழ் ஆங்கு அன்ன போல் என்ன அனைய - 7.பண்புப்பெயர்:7 38/2
TOP
கேழலுமே (1)
அரி ஏனம் கோட்டுமா கிருகிடி கேழலுமே அடும் பன்றி நாலேழ்பேர் சல்லம் முண்மா முளவு - 3.விலங்கின்பெயர்:3 12/3
TOP
கேள் (3)
துரிதமிலா கேள் குடும்பம் சார்பு சூழ் நட்டார் துணை கூளி இகுளை நட்பு கிளை விருந்து கடும்பு - 2.மக்கள்பெயர்:2 29/1
கெண்டி கோடிகம் கடபம் ஆம் பாணி கோயாம் கேள் கரகம் கரண்டகம் குண்டிகை கமண்டலப்பேர் - 6.பல்பொருள்பெயர்:6 31/2
வசக்கு இகுளை கேண்மை தொடர் கேள் நட்பும் அறுபேர் மறுத்தல் வட்கல் உட்கு இலச்சை நாண் சமழ்த்தல் வெள்கல் - 7.பண்புப்பெயர்:7 23/2
TOP
கேள்வன் (2)
விதரணன் உதாரி தேயி கொடுப்போன் வியாழன் வேளாளன் வள்ளியோன் புரவலனே கேள்வன்
உதவுவோன் ஈகையான் தாதா தியாகி உபகாரி வள்ளல் அளியோன் கொடையாளியின்பேர் - 2.மக்கள்பெயர்:2 24/1,2
கணவன் வரன் கொழுநன் வேட்டோன் உரியன் கேள்வன் கண்டன் காதலன் கொண்கன் பதி பிரான் தலைவன் - 2.மக்கள்பெயர்:2 38/1
TOP
கேள்வி (2)
பிரு நுதல் புரூரம் பீர் புதல் புதடி பூரு பீரு குடி புருவம்அதாம் கேள்வி அள்ளு காது - 2.மக்கள்பெயர்:2 53/2
கேள்வி செவி கல்வியும் ஆம் தாள் அடி முன் முயல்வு ஆம் கேளிர் பெண்கள்விளையாட்டு சுற்றம் இருபேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 139/1
TOP
கேள்வியரே (1)
துளக்கமே அச்சமொடு பிரகாசம் ஆகும் துளும்பலே திமிறல் துள்ளல் என்பர் கேள்வியரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 138/4
TOP
கேள்வியும் (1)
உறுதி கலை விச்சை வித்தை ஊதியமே சாலம் ஓதி கல்வி கேள்வியும் ஆம் கற்றல் பயிலுதலே - 8.ஒலிபற்றியபெயர்:8 6/4
TOP
கேளார் (1)
வாவு தெவ்வர் அமித்திரர் ஒட்டார் மருவார் மானர் மாற்றலர் போற்றலர் சேயர் சூரர் வட்கார் கேளார்
தூவும் இன்னாதார் முனைந்தோர் அண்டர் விட்டார் நண்ணார் துன்னார் மண்டினர் ஒல்லார் செறுநரும் சத்துருவே - 2.மக்கள்பெயர்:2 28/4,5
TOP
கேளிதம் (1)
கிரி தடம் குத்தரம் பொங்கர் மந்தரம் கற்பறம்பு கேளிதம் கல்லகம் நவிரம் கனதரம் ஓதிமமே - 5.இடப்பெயர்:5 15/4
TOP
கேளிர் (3)
பரிசனம் பாசனம் துடர் மித்திரர் உற்றோர் கேளிர் பற்று உறவு பந்தம் நண்பு தமர் ஒக்கல் சுற்றம் - 2.மக்கள்பெயர்:2 29/2
உழக்கிய விலாசனை கிரீடை உப்பு கேளிர் ஒன்பதொன்றும் பெண்கள்விளையாட்டின்பேர் விரிவே - 9.செயல்பற்றியபெயர்:9 1/4
கேள்வி செவி கல்வியும் ஆம் தாள் அடி முன் முயல்வு ஆம் கேளிர் பெண்கள்விளையாட்டு சுற்றம் இருபேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 139/1
TOP
|
|
|