<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - முதற்பகுதி - தொடரடைவு

கொ - முதல் சொற்கள்
கொக்கரை 1
கொக்கின்பேர் 1
கொக்கு 5
கொக்கும் 1
கொங்கன் 1
கொங்கு 2
கொங்கை 2
கொச்சை 2
கொச்சையோர் 1
கொஞ்சல் 1
கொட்டம் 3
கொட்டல் 1
கொட்டலே 1
கொட்டாவியின்பேர் 1
கொட்டியமே 1
கொட்டில் 1
கொட்டை 3
கொடி 20
கொடிக்கொற்றான் 1
கொடிகோல் 1
கொடிச்சி 1
கொடிஞ்சி 2
கொடித்துவசி 1
கொடிதான் 1
கொடிப்படை 1
கொடிப்பேர் 2
கொடிமரம் 1
கொடியே 3
கொடியை 1
கொடிறு 4
கொடு 1
கொடுகொட்டி 1
கொடுகொடென்றல் 1
கொடுங்கை 2
கொடுத்தல் 1
கொடுத்தலும் 1
கொடுத்திடலும் 1
கொடுத்திடுதல் 1
கொடுநுகம் 1
கொடுப்பை 1
கொடுப்போன் 1
கொடுபோயிடல் 1
கொடும் 3
கொடுமரம் 1
கொடுமுடி 1
கொடுமை 3
கொடுமையின்பேர் 1
கொடுமையும் 1
கொடுவரி 1
கொடுவல் 1
கொடுவாய் 1
கொடுவாள் 1
கொடுவியாதி 1
கொடை 8
கொடைப்பொருள் 1
கொடைமடமே 1
கொடையாளியின்பேர் 1
கொண்கன் 3
கொண்ட 5
கொண்டல் 4
கொண்டல்வண்ணன் 1
கொண்டலம் 1
கொண்டாடலின்பேர் 1
கொண்டார் 1
கொண்டி 2
கொண்டை 3
கொண்மூ 1
கொத்து 3
கொதி 1
கொதித்தல் 1
கொதிப்பு 1
கொதுகு 1
கொந்தம் 1
கொந்தளம் 2
கொப்பம் 2
கொப்பளிப்பு 1
கொப்பின்பேர் 1
கொப்பு 6
கொப்புரி 1
கொப்புழ் 1
கொப்புள் 1
கொப்பூழ் 4
கொம்பர் 1
கொம்பி 1
கொம்பிலாமிருகப்பேர் 1
கொம்பு 6
கொம்புநடு 1
கொம்பே 1
கொம்மெனலும் 1
கொம்மை 6
கொய் 1
கொய்சகம் 2
கொய்தல் 2
கொய்யாது 1
கொய்யுளையே 1
கொல் 3
கொல்லர் 1
கொல்லி 1
கொல்லிக்கிரி 1
கொல்லிவெற்பன் 1
கொல்லுதல் 1
கொல்லுலைமுக்கு 1
கொல்லெனல் 1
கொல்லை 2
கொல்உலை 1
கொலை 9
கொலைசெய்தலின்பேர் 1
கொலைஞர் 1
கொலைஞர்பேர் 1
கொலைஞோர் 1
கொவ்வை 1
கொழிஞ்சி 1
கொழித்தல் 1
கொழித்திடல் 1
கொழு 1
கொழுத்த 1
கொழுத்து 1
கொழுந்து 1
கொழுநன் 2
கொழுப்பு 5
கொழுமை 1
கொள் 1
கொள்கலப்பேர் 1
கொள்கை 2
கொள்வோன் 1
கொள்ளல் 3
கொள்ளியும் 1
கொள்ளுகவே 1
கொள்ளும் 1
கொள்ளை 2
கொளலும் 1
கொளுகொளென்றல் 1
கொளை 1
கொற்கையன் 1
கொற்றம் 2
கொற்றமல்லி 1
கொற்றவன் 1
கொற்றவை 1
கொற்றான் 1
கொற்றி 2
கொறி 1
கொறுக்கச்சி 1
கொறுக்கையின்பேர் 1
கொறுக்கையும் 1
கொன் 4
கொன்றை 1
கொன்றைசூடி 1
கொன்றையின்பேர் 1


இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    கொக்கரை (1)
பணிலம் வாரணம் நாகு சுரிமுகம் கொக்கரை கூன் பாலிவலம் புரிகோடு வளைநந்து நத்தை - 3.விலங்கின்பெயர்:3 36/1

 TOP
 
    கொக்கின்பேர் (1)
கட்குருகு பகம் வலாகமும் கொக்கின்பேர் ஆம் காதம்பம் பூழான் கானாங்கோழிப்பேர் ஆம் - 3.விலங்கின்பெயர்:3 28/2

 TOP
 
    கொக்கு (5)
அனல்பெயரும் கேட்டை குருகு ஆனி தேட்கடை வில் அசுரன்நாள் அன்றில் கொக்கு ஆம் ஏழ்பெயரும் மூலம் - 1.தெய்வப்பெயர்:1 44/2
வாலி அயம் துரகதம் பாடலம் பரி மண்டிலம் மா வாசி கொக்கு அச்சுவம் சடிலம் கனவட்டம் வாகம் - 3.விலங்கின்பெயர்:3 7/2
ஆம்பிரம் சேகரம் மாழை மாந்தி கொக்கு சூதம் ஆறும் தேமாவின்பேர் எகின் மாழை கிஞ்சம் - 4.மரப்பெயர்:4 8/1
பகம் கொக்கு கான்கோழி பகுப்புடன் பெண்குறி ஆம் பகல் ஒளி திவா முகிழ்த்தம் நடு சுடர் நாள் பகுப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 2/1
கொக்கு என்ப பகம் செந்நாய் பரி மூலம் மா ஆம் குக்கில் செம்போத்து ஒரு மருந்து என்று இருபேர் வக்கணையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 10/4

 TOP
 
    கொக்கும் (1)
விடு புரோகதி இருபான் நாயின்பேர் கொக்கும் விருகமும் செந்நாயின்பேர் மூஞ்சூறு சுண்டன் - 3.விலங்கின்பெயர்:3 17/3

 TOP
 
    கொங்கன் (1)
சேரலன் குட்டுவன் வரம்பன் மலையமான் குடக்கோ சேரமான் பொறையன் வானவன் கொங்கன் போந்தின்தாரினன் - 2.மக்கள்பெயர்:2 12/3

 TOP
 
    கொங்கு (2)
தகு கண்ணி துணர் தொத்து மஞ்சரி பூங்கொத்து ஆம் தாது மகரந்தம் கேசரம் கொங்கு மலர்த்தூள் - 4.மரப்பெயர்:4 31/3
மகரம் இல் சுறா கொங்கு ஆம் சுகம் இன்பம் கிளி ஆம் மகரந்தம் கள்ளு தேன் மலர்த்தாது முப்பேர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 4/1

 TOP
 
    கொங்கை (2)
முலை சுவற்கம் கொம்மை நகில் கொங்கை தனம் சேக்கை முகிழ் பயோதரம் குயம் குரூஉக்கண் அம்மம் பறம்பு ஆம் - 2.மக்கள்பெயர்:2 49/1
திங்கள் மதி மாதம்அதாம் பிங்கலம் பொன் பசப்பு ஆம் சிங்களமே முசு நாடு ஆம் கொங்கை கொப்பு முலை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 14/3

 TOP
 
    கொச்சை (2)
உகழ் புருவை செச்சை மேடகம் கொச்சை அசம் மை உடு துரு கம்பளம் வெறி ஏழகம் கொறி ஆட்டின்பேர் - 3.விலங்கின்பெயர்:3 11/3
விசையம் வெற்றி சூரியமண்டலம் கிரி சற்கரை ஆம் விச்சை விதை கல்விஅதாம் கொச்சை தகர் அசமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 18/4

 TOP
 
    கொச்சையோர் (1)
இகழ்மொழியர் பொறையர் கொச்சையோர் முல்லைத்திணையோர் இடையர் பதினேழு நடுநிலத்தினர்பேர் பொதுவே - 2.மக்கள்பெயர்:2 32/4

 TOP
 
    கொஞ்சல் (1)
மருட்டு உறுதிச்சொல் ஆகும் உல்லாபம் குதலை மழலை கொஞ்சல் மிழலை ஐந்தும் மென்சொல்லாய் வருமே - 8.ஒலிபற்றியபெயர்:8 2/4

 TOP
 
    கொட்டம் (3)
மேவு கொட்டம் குரவு ஆகும் கிரிமல்லி குடசம் வெட்பாலை ஆம் நுணவை தணக்கு ஆம் மாலூரம் - 4.மரப்பெயர்:4 10/2
ஏவு கொட்டம் குடிலமே குரவமரப்பேர் ஆம் இருப்பை மதுகம் குலிகம் இலுப்பை என கிளத்தே - 4.மரப்பெயர்:4 10/4
கொட்டம் மதம் ஒரு மருந்து ஆம் செட்டி செட்டி குகன் ஆம் கோட்டம் கோண் படப்பை கொட்டில் கோயில் சும்மை தட்டே - 10.ஒருசொல்பல்பொருள்:10 37/4

 TOP
 
    கொட்டல் (1)
கொம்பு கொப்பு மருப்பு ஆம் சம்பகம் தகர் ஆணியும் ஆம் கொம்மை முலை அழகு இளமை கொட்டல் வட்டம் ஆமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 77/4

 TOP
 
    கொட்டலே (1)
ஒற்றல் உடுத்தலின்பேர் ஆம் கொட்டலே சாத்தலுடன் சதுர்த்தல் அப்பலின்பேர் மூன்றாகும் பூசல் - 9.செயல்பற்றியபெயர்:9 29/1

 TOP
 
    கொட்டாவியின்பேர் (1)
அல் தும்மல் மூச்சு ஆம் ஆவித்தல் கொட்டாவியின்பேர் அலது உமிழ்த்தல் ஊற்காரம் காறல் சத்தி அகல்வே - 9.செயல்பற்றியபெயர்:9 29/4

 TOP
 
    கொட்டியமே (1)
குன்றாத தூர்வகம் ஏறு இடபம் நந்தி கூளி குத்தம் தூரியம் பாறல் கொட்டியமே மூரி - 3.விலங்கின்பெயர்:3 10/2

 TOP
 
    கொட்டில் (1)
கொட்டம் மதம் ஒரு மருந்து ஆம் செட்டி செட்டி குகன் ஆம் கோட்டம் கோண் படப்பை கொட்டில் கோயில் சும்மை தட்டே - 10.ஒருசொல்பல்பொருள்:10 37/4

 TOP
 
    கொட்டை (3)
பலனதின் தோல் செதிள் ஆகும் காழ் கொட்டை பீசம் பரல் விதை வித்து ஆம் குச்சம் படு சாறு தாறு - 4.மரப்பெயர்:4 32/3
சல்லி மிஞ்சிகையொடு குண்டலம் ஆகும் தூம்பு தாடங்கம் தோடு ஆம் வல்லிகை குணுக்கு கொட்டை
  வல்ல கடிப்பிணை கம்பி கடுவடம் காதணி ஆம் வாகுவலையத்தின்பேர் அங்கதம் கேயூரம் - 6.பல்பொருள்பெயர்:6 27/2,3
பாதம்காப்பு கழல் தோல் செருப்பு பாதுகைப்பேர் பாவல் மிதியடி ஆகும் அதில் கொட்டை குடை ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 35/1

 TOP
 
    கொடி (20)
சாரங்கம் என்பது சாதகப்புள் ஆம் கரடம் தனி அரிட்டம் பிள்ளை கொடி காரி புட்டம் காகம் - 3.விலங்கின்பெயர்:3 24/1
கொடி திரையல் மெல்லிலை தின்னிலை நாகவல்லி குறித்த பான் அடைக்கொடியும் வெற்றிலைப்பேர்க்கு இயம்பே - 4.மரப்பெயர்:4 20/4
மறிந்த வராடகம் புட்பராகம் அதின்மணி ஆம் வளையம் தாள் கொடி நாளம் நாற்பேராம் நீலம் - 4.மரப்பெயர்:4 27/2
கொடி வரப்புள் வயல் கண்டம் விளைநிலப்பேர் புன்செய் குண்டில் பாத்தியும் இவை முப்பேர் சிறுசெய் ஆமே - 5.இடப்பெயர்:5 26/4
குணி ஒழுகு ஆயதம் தீர்தல் வார்தல் வரி உறையே கொடி நேர்பு நெடுமை நெடில் நீளப்பேர் முடிவே - 7.பண்புப்பெயர்:7 6/4
வஞ்சி கொடி மரம் பா ஊர் மேற்செலவு பெண் ஆம் வஞ்சம் வாள் கபடமும் ஆம் பஞ்சம் மிடி ஐந்து ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 22/1
படம் உடுக்கை கொடி பாம்பின்படம் கோல கிளி ஆம் படர் நினைப்பு நடை துயரம் வீரர் நாற்பேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 26/2
கொடிறு பூசம் கதுப்பு ஆம் படிறு பொய்யே கனவு ஆம் கொடி துவசம் காக்கை வில் ஆம் குடி குலம் ஊர் நுதல் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 27/1
விடை விடல் ஏறு எதிர்மொழி ஆம் கிடை கிடப்பு குழு ஆம் விடங்கம் ஏர் கொடி கொடுங்கை படங்கு கொடி வானி - 10.ஒருசொல்பல்பொருள்:10 28/1
விடை விடல் ஏறு எதிர்மொழி ஆம் கிடை கிடப்பு குழு ஆம் விடங்கம் ஏர் கொடி கொடுங்கை படங்கு கொடி வானி - 10.ஒருசொல்பல்பொருள்:10 28/1
ஓடை நீர்நிலை கிடங்கு ஓர் மரம் பட்டம் கொடி ஆம் உடு விண்மீன் கிடங்கு மரக்கலம் விசியம் பீர்க்கு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 33/2
கதலி கொடி காற்றாடி வாழை தேற்று ஆகும் கதுப்பு ஓதி கவுள் ஆகும் விதப்பு மிகை நடுக்கு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 51/2
பிதிர் கொடி தூவல் பிதிர் ஆம் கதை கதை தண்டு உரை ஆம் பித்திகையே சுவர் முல்லை கருமுகை ஆதலுமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 52/4
பாதை வழி தோணி ஆம் கேது சிகி கொடி ஆம் பாதிரியே குதிரை பாடலம் எனும் மூதுரையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 56/4
தார் கொடி பூ படை தொடை கிண்கிணி கோவை ஒழுங்கு ஆம் சாரங்கம் சாதகப்புள் வண்டு மான் மூன்றாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 102/1
ஆர் இரதத்துறுகதிரும் ஆத்தி கூர்மையும் ஆம் அரிட்டம் நோய் கொடி மது ஆம் அருக்கம் எஞ்சல் எருக்கு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 102/3
காரி விடம் சனி வடுகன் சாத்தன் வள்ளல் மகவு ஆன் கருக்குருவி கருமை கொடி என்றனர் ஆய்ந்தோரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 103/4
துரோணமே சிலை பதக்கு தும்பை சிம்புள் கொடி ஆம் சொற்றிடும் கராம்பு பாழ் ஓர் மருந்தும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 107/2
மல் அடல் மாயவன்கூத்து வளம் முகட்டு மல் ஆம் வல்லி கொடி தளை வரைவு ஆய்ப்பாடி வள்ளி பெண் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 113/2
வள் வலி வாள் முனை காது ஆம் வெள்ளம் எள் நீத்தமும் ஆம் வள்ளி கொடி ஆபரணம் கைவளை வள்ளியும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 141/2

 TOP
 
    கொடிக்கொற்றான் (1)
அன்ன கோவையின்பேர் ஆம் நூழில் கொடிக்கொற்றான் ஆயிடும் வச்சிரவல்லி பிரண்டை என கழறே - 4.மரப்பெயர்:4 22/4

 TOP
 
    கொடிகோல் (1)
வதரி கோல் கொடிகோல் குல்வலி இரந்தை ஆகும் மற்று இரந்தைக்கனி கோலம் கொண்டை எனலாகும் - 4.மரப்பெயர்:4 4/3

 TOP
 
    கொடிச்சி (1)
சிறு குறத்தி கொடிச்சி ஆம் கானகநாடன்பேர் சிலம்பன் வெற்பன் பொருப்பன் ஆம் புள்ளுவரோடு எயினர் - 2.மக்கள்பெயர்:2 31/2

 TOP
 
    கொடிஞ்சி (2)
அரி குயவு எந்திரம் வையம் சயந்தனம் கூவிரியே அகல் கொடிஞ்சி இரதம் செந்தனம் தேர் ஒன்பான்பேர் - 6.பல்பொருள்பெயர்:6 38/1
விரி தட்டு தேர்நடு நாப்பணும் ஆகும் கொடிஞ்சி மெய்த்த கூவிரம் ஆகும் தவிசு தடுக்கு உரித்தே - 6.பல்பொருள்பெயர்:6 38/4

 TOP
 
    கொடித்துவசி (1)
முதியள் கெடலணங்கு தவ்வை கலதி சீகேடி முகடி கொடித்துவசி கரவாகி சேட்டையின்பேர் - 1.தெய்வப்பெயர்:1 21/2

 TOP
 
    கொடிதான் (1)
குறைவில் ஐந்துநிதி மகவான் ஏவல்கேட்பதுவாம் கொண்ட விண்ணாட்டிறை கொடிதான் இடி என பேசுவரே - 1.தெய்வப்பெயர்:1 19/4

 TOP
 
    கொடிப்படை (1)
கான் அணி சூழ் படைவகுப்பு ஆம் மணிகை நெற்றி தூசி கடைக்குழை கூழைஅதாம் தார் கொடிப்படை ஆகுமதே - 2.மக்கள்பெயர்:2 45/4

 TOP
 
    கொடிப்பேர் (2)
வண் கொடிப்பேர் பறவை ஆவணி நள்ளு வசுநாள் வயிரம் ஆம் அவிட்டப்பேர் வருணன்நாள் சுண்டன் - 1.தெய்வப்பெயர்:1 45/1
வார் உலவு தழை கப்பு கொப்பின்பேர் தூழில் வள்ளி இரத்தி இலதை வல்லி கொடிப்பேர் ஆம் - 4.மரப்பெயர்:4 29/3

 TOP
 
    கொடிமரம் (1)
கத்திகை தார் கொடிமரம் ஆம் பத்து ஒழுக்கம் தசம் ஆம் கத்தன் இறை சிவன் ஆகும் கத்தி கல் மெய்ப்பொருத்து ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 62/2

 TOP
 
    கொடியே (3)
பொய்யில் கழை கரும்பு பிண்டி அதிதிநாள் பாலை புணர்தம் ஆவணம் புனிதம் புணர்பூசம் கொடியே - 1.தெய்வப்பெயர்:1 41/4
கொழுப்பு அரிப்பு செயிர் மானம் புரை முப்பான்மூன்றும் குற்றம்அதாம் தளர்ச்சியின்பேர் ஏட்டை அசா கொடியே - 7.பண்புப்பெயர்:7 28/4
நடலை பொய் வஞ்சனை நுடக்கு ஆம் வடம் முழு கால் கயிறு ஆம் நடை வழியே ஒழுக்கம் நடை செல்வம் ஆம் கொடியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 26/4

 TOP
 
    கொடியை (1)
குத்திரி வெம் காடுகாள் மாரியொடு கொற்றி கொடியை மூதணங்கு பெயர் எட்டென விண்டனரே - 1.தெய்வப்பெயர்:1 11/4

 TOP
 
    கொடிறு (4)
கொடிறு குருநாள் வண்டு தைமதி பாற்குடங்கர் குளம் பூசம் பாம்பு ஆயில் கவை பணிநாள் நான்கும் - 1.தெய்வப்பெயர்:1 42/1
ஆக்கு அணலும் கீழ்வாயின்புறம் ஆம் கபோலம் அனு கதுப்பு கொடிறு கவுள் கன்னம் கேசமும் ஆம் - 2.மக்கள்பெயர்:2 52/2
யானையின்கை துதிக்கை தொண்டு கொண்டலம் தொண்டையும் ஆம் அதின் கரடம் கொடிறு இணரி கவுளும் மதச்சுவடு ஆம் - 3.விலங்கின்பெயர்:3 5/2
கொடிறு பூசம் கதுப்பு ஆம் படிறு பொய்யே கனவு ஆம் கொடி துவசம் காக்கை வில் ஆம் குடி குலம் ஊர் நுதல் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 27/1

 TOP
 
    கொடு (1)
தா வருத்தம் பகை தாண்டல் வலி கொடு என்றல் ஐந்தாம் சவுரியமே களவு வீரியம் இரண்டுபேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 128/2

 TOP
 
    கொடுகொட்டி (1)
நடனம்அதில் கொடுகொட்டி தாண்டவம் பாண்டரங்கம் நந்திகூத்து ஆம் கபாலமும் ஆம் மால்கூத்தே - 9.செயல்பற்றியபெயர்:9 27/1

 TOP
 
    கொடுகொடென்றல் (1)
மடமடென்றல் வெடுவெடென்றல் கொடுகொடென்றல் இவை போல் வருவன எல்லாம் விரைவினோசை எனும் ஆர்ப்பே - 8.ஒலிபற்றியபெயர்:8 16/4

 TOP
 
    கொடுங்கை (2)
விடை விடல் ஏறு எதிர்மொழி ஆம் கிடை கிடப்பு குழு ஆம் விடங்கம் ஏர் கொடி கொடுங்கை படங்கு கொடி வானி - 10.ஒருசொல்பல்பொருள்:10 28/1
மதலை பிள்ளை கொன்றை மரக்கலம் கொடுங்கை தூண் ஆம் மதவு புதல் வனப்பு வலியுடன் மிகுதி ஐந்தாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 50/2

 TOP
 
    கொடுத்தல் (1)
வெள்ளில் விளா பாடையும் ஆம் விள்ளல் உரை நெகிழ்வு ஆம் வேளாண்மை நிசம் கொடுத்தல் முயற்சி மூன்றாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 142/1

 TOP
 
    கொடுத்தலும் (1)
கவிகை பிச்சம் கொடுத்தலும் ஆம் சுவடு இணை ஓர் எண் ஆம் கவடு வஞ்சம் புரசை கப்பு ஆம் குவடு அசலம் கோடு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 124/3

 TOP
 
    கொடுத்திடலும் (1)
அளித்தல் செறித்திடல் காத்தல் கொடுத்திடலும் ஆகும் அளகு கார்த்திகை கூகை கோழியல்லாப்பெடை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 138/1

 TOP
 
    கொடுத்திடுதல் (1)
விரவு பணித்திடல் நீட்டல் கவிகை சிவிகையும் ஆம் வேந்தர் வரையாது கொடுத்திடுதல் கொடைமடமே - 9.செயல்பற்றியபெயர்:9 4/4

 TOP
 
    கொடுநுகம் (1)
இடுவது ஆயிலியப்பேர் நெல் ஞமலி வாய்க்கால் இசை வேள்வி கொடுநுகம் முன்சனி பிதிர்நாள் மாசி - 1.தெய்வப்பெயர்:1 42/2

 TOP
 
    கொடுப்பை (1)
சேதகம் சேறு அணை சிவப்பு ஆம் ஏதி அம்பு வாள் ஆம் சீதை படை சால் கொடுப்பை திரு ஆம் கோதையரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 55/4

 TOP
 
    கொடுப்போன் (1)
விதரணன் உதாரி தேயி கொடுப்போன் வியாழன் வேளாளன் வள்ளியோன் புரவலனே கேள்வன் - 2.மக்கள்பெயர்:2 24/1

 TOP
 
    கொடுபோயிடல் (1)
மா எதிர்ப்பு ஆற்றுப்படை ஆம் தரல் கொடுபோயிடல் ஆம் வலியழித்தல் ஆற்றறுத்தலே மடித்தல் உழற்றல் - 9.செயல்பற்றியபெயர்:9 25/3

 TOP
 
    கொடும் (3)
குடி உததி ஆலி சிகரம் தூற்றல் மழை ஆம் கொடும் சோனை பனித்தல் விடாமழை ஆம் ஆசாரம் - 1.தெய்வப்பெயர்:1 52/3
குலை குடும்பு காய் கொத்து ஆம் பலனம் காய்த்தது ஆம் கொடும் அபகேசிகை வடுகு பழி பலனிலாதே - 4.மரப்பெயர்:4 32/4
குழி முழவம் பதலை கடிப்பறை பகுவாய் தவில் ஆம் கொடும் துடி தண்ணுமை உடுக்கு ஆம் பரினம் மண் மாற்சனை ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 33/1

 TOP
 
    கொடுமரம் (1)
முனிதவர் காண்டிபம் வேணு கொடுமரம் பினாகம் மூவைந்தோடொன்றும் வில் ஆம் சார்ங்கம் மால்வில் ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 18/2

 TOP
 
    கொடுமுடி (1)
பாதவம் என்று அறுபதுமே மலையின்பேர் அறையே பாறையின்பேர் கோடு கொடுமுடி கூடம் சிகரம் - 5.இடப்பெயர்:5 16/2

 TOP
 
    கொடுமை (3)
வக்கிரமே மடங்கல் வட்டம் கொடுமை பொறாமையும் ஆம் மக்கள் சிறார் மானிடர் ஆம் நக்கல் உண்டல் சொரிவு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 11/1
நீலம்தான் பனை கொடுமை உற்பலம் நீல் நிறம் ஆம் நீலியே பயல் அவுரி நீலி மாலினியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 116/4
ஓலை குழை ஏடு ஆம் கலாம் கொடுமை சினம் ஆம் ஒலியல் கலை நதி தொடை தோல் பெயர் உலாவிடுமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 121/4

 TOP
 
    கொடுமையின்பேர் (1)
கொடுமையின்பேர் பூதி கண்டம் உறைப்பு வஞ்சம் கோரம் கோடணை உக்கிரம் கலாம் கடுமை சடம் பத்தும் - 7.பண்புப்பெயர்:7 29/1

 TOP
 
    கொடுமையும் (1)
காந்தாரம் இசை காடு கொடுமையும் முப்பேராம் கருது செந்து நரகு ஓரி சீவன் அணு நான்காம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 68/1

 TOP
 
    கொடுவரி (1)
புல் உழுவை மிருகாரி கொடுவரி வியாளம் புலி தரக்கு குயவரி வியாக்கிரம் வியாமி - 3.விலங்கின்பெயர்:3 2/2

 TOP
 
    கொடுவல் (1)
கூட்டு அகக்காழ் ஆண் புறக்காழ் பெண் ஆகும் வெளிறு கொடுவல் அலி ஆம் கடு கண்டகம் இரண்டும் உள்ளே - 4.மரப்பெயர்:4 34/4

 TOP
 
    கொடுவாய் (1)
குறளை கொடுவாய் கொண்டி புறங்கூற்று தொடுப்பு குஞ்சமொடு பிசினமும் ஆம் புறத்தோரை பழித்தல் - 8.ஒலிபற்றியபெயர்:8 6/1

 TOP
 
    கொடுவாள் (1)
பூவயிரம் குலிசமும் ஆம் குயம் கொடுவாள் அரிவாள் புள்ளமும் ஆம் அசி நவிர் நாந்தகம் கட்கம் கோணம் - 6.பல்பொருள்பெயர்:6 20/2

 TOP
 
    கொடுவியாதி (1)
கொள்ளை மிகை கொடுவியாதி பொள்ளல் அப்பம் பொந்து ஆம் கூளி தமர் வாமனம் பேய் குறள் வீரர் ஏறு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 141/1

 TOP
 
    கொடை (8)
தருதல் கொடை வீசல் கடப்பாடு இடுதல் இகுத்தல் தானம் வண்மை வேளாண்மை பகுப்பு உதவல் வேள்வி - 9.செயல்பற்றியபெயர்:9 4/2
ஈகை இண்டை கொடை பொன் ஆம் ஆகுலம் நோய் ஒலி ஆம் ஏகமே தனிமை ஒன்று ஆம் காகுளி ஆர்ப்பு அணை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 9/3
மண் அணு ஒப்பனை முழவின் மாற்சனை மண் நான்காம் வண்மை கொடை வாய்மை வளம் வலி புகழ் ஐம்பேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 48/2
வீதி தெரு ஓடல் ஆம் வீதல் கொடை சாவு ஆம் வித்தமே பொன் அறிவு பழித்தல் என மூன்றாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 57/3
இரவி மலை வெய்யோன் ஆம் வரன் அயன்கோன் சிவன் ஆம் இரவு நிசி யாசகமும் ஆம் விரவு கொடை கலப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 87/3
அளவை எல்லை நாள் ஆகும் அளறு பங்கம் நரகு ஆம் அளி கொடை தேன் பரிவு வண்டு ஆம் தளி கோயில் துளி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 135/2
விளக்கு நாள் விளக்கொளி ஆம் இளைப்பு இரக்கம் நோய் ஆம் வேள்வி கொடை நாள் மகம் ஆம் தோள் புயம் கை ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 138/3
விழைவு மயல் புணர்ச்சியும் ஆம் கழுமல் பற்று மயக்கு ஆம் விழிதல் கொடை சாவு ஆகும் செழுமை எழில் வளம் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 143/3

 TOP
 
    கொடைப்பொருள் (1)
ஒப்பு நிகர் கொடைப்பொருள் ஆம் குப்பை செற்றை மேடு ஆம் உப்பு ஓரை கடல் இனிமை உவரோடு உப்பு ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 69/2

 TOP
 
    கொடைமடமே (1)
விரவு பணித்திடல் நீட்டல் கவிகை சிவிகையும் ஆம் வேந்தர் வரையாது கொடுத்திடுதல் கொடைமடமே - 9.செயல்பற்றியபெயர்:9 4/4

 TOP
 
    கொடையாளியின்பேர் (1)
உதவுவோன் ஈகையான் தாதா தியாகி உபகாரி வள்ளல் அளியோன் கொடையாளியின்பேர்
  இதவசனன் பரிசிலான் யாசகன் நல்கூர்ந்தோன் ஏழை தரித்திரன் தீனன் இலம்பாட்டன் ஏற்போன் - 2.மக்கள்பெயர்:2 24/2,3

 TOP
 
    கொண்கன் (3)
அலைநிலப்பெண் ஆம் புலம்பன் துறைவன் மெல்லன் சேர்ப்பன் அரிய கொண்கன் ஐம்பேர் நெய்தல்தலைவன்பேர் ஆம் - 2.மக்கள்பெயர்:2 34/3
கணவன் வரன் கொழுநன் வேட்டோன் உரியன் கேள்வன் கண்டன் காதலன் கொண்கன் பதி பிரான் தலைவன் - 2.மக்கள்பெயர்:2 38/1
குண்டலி பாம்பு இசங்கு ஆகும் கண்டல் கைதை முள் ஆம் கொண்கன் நாயகன் சேரன் என்பது கண்டனரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 44/4

 TOP
 
    கொண்ட (5)
குறைவில் ஐந்துநிதி மகவான் ஏவல்கேட்பதுவாம் கொண்ட விண்ணாட்டிறை கொடிதான் இடி என பேசுவரே - 1.தெய்வப்பெயர்:1 19/4
கொண்ட நடை வீதிஅதாம் மந்திரமே சாலை குதிரை நிற்கும் பந்தியின்பேர் ஆதிகம் மாதிகமே - 3.விலங்கின்பெயர்:3 8/3
கூரும் காக்கையின்பேர் ஆம் வாயசமும் அதற்காம் கொண்ட காகோலம் அண்டங்காக்கைப்பேர் அர்க்கம் - 3.விலங்கின்பெயர்:3 24/2
கொண்ட சின்னம் பீலி ஆம் காளம் காகளம் ஆம் கோடு இரலை ஆம்பல் வயிர் கொம்பு ஆகும் பணவம் - 6.பல்பொருள்பெயர்:6 31/3
சூலி சிவன் காளி சூல் கொண்ட பெண்ணும் ஆகும் தூலம் ஒரு நாள் மிகை ஆம் நூல் பிடகம் நூன் ஆன் - 10.ஒருசொல்பல்பொருள்:10 117/2

 TOP
 
    கொண்டல் (4)
பாயும் கால் வளி உலவை நீழல் சமீரணன் கம்பவ மானே கோடை கொண்டல் பரிசனன் மால் உரவோன் - 1.தெய்வப்பெயர்:1 28/1
மீறும் மந்தமாருதம் பத்து ஆம் கோடை மேல்கால் மிகு வடந்தை வாடை வடகால் கொண்டல் கீழ்கால் - 1.தெய்வப்பெயர்:1 29/2
மழை பரம் விண் கந்தமமை கொண்டல் மஞ்சு சீலம் மால் விளைவு முகில் கருவி சீமூதம் சீதம் - 1.தெய்வப்பெயர்:1 51/1
குண்டலம் வான் குழை ஆகும் கொண்டல் முகில் காற்று ஆம் கொண்டை முடி ஓர் கனி ஆம் குண்டை சட்டி ஏறு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 45/2

 TOP
 
    கொண்டல்வண்ணன் (1)
கொண்டல்வண்ணன் கருடகேதனன் கருடாரூடன் கோவிந்தன் மால் மதுசூதனன் அனந்தசயனன் - 1.தெய்வப்பெயர்:1 12/2

 TOP
 
    கொண்டலம் (1)
யானையின்கை துதிக்கை தொண்டு கொண்டலம் தொண்டையும் ஆம் அதின் கரடம் கொடிறு இணரி கவுளும் மதச்சுவடு ஆம் - 3.விலங்கின்பெயர்:3 5/2

 TOP
 
    கொண்டாடலின்பேர் (1)
விரி பொழுதுபோக்கு விளையாட்டு பாராட்டு மெய்ச்சல் வினோதம் களித்தல் குலவல் கொண்டாடலின்பேர்
  வரைதல் கடி கைப்பற்றல் மணம் வேட்டல் மன்றல் வதுவை தீவலஞ்செயல் கல்யாணம் விவாகப்பேர் - 9.செயல்பற்றியபெயர்:9 2/1,2

 TOP
 
    கொண்டார் (1)
கொண்டார் கற்பூரம் என தேய்வை செச்சை சேறு குழம்பு ஆம் அச்சுதம் விந்தம் அறுகு அரிசிக்கூட்டு ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 8/2

 TOP
 
    கொண்டி (2)
குறளை கொடுவாய் கொண்டி புறங்கூற்று தொடுப்பு குஞ்சமொடு பிசினமும் ஆம் புறத்தோரை பழித்தல் - 8.ஒலிபற்றியபெயர்:8 6/1
தற்றுதல் ஆம் கொள்ளை கொண்டி சூறை ஆம் உரோசல் சார்ந்து உராய்ப்போதல் உரிஞ்சுதல் ஆம் சுவாசம் - 9.செயல்பற்றியபெயர்:9 29/3

 TOP
 
    கொண்டை (3)
முடி மவுலி குழல் பந்தி சிகழிகை பின்னகமே முச்சிதம் மிலங்கொப்பு சுடிகைதொங்கல் கொண்டை
  குடைய பெயர் சுரியல் குழல் குரல் அளகம் கேசம் உளை கதுப்பு பரிசாரம் கூழை குருள் ஓதி - 2.மக்கள்பெயர்:2 55/1,2
வதரி கோல் கொடிகோல் குல்வலி இரந்தை ஆகும் மற்று இரந்தைக்கனி கோலம் கொண்டை எனலாகும் - 4.மரப்பெயர்:4 4/3
குண்டலம் வான் குழை ஆகும் கொண்டல் முகில் காற்று ஆம் கொண்டை முடி ஓர் கனி ஆம் குண்டை சட்டி ஏறு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 45/2

 TOP
 
    கொண்மூ (1)
பொழி கனம் செல் வார் குயின் கொண்மூ தாராதாரம் புயல் மங்குல் சீமுகம் பயோதரம் அம்புதம் கம் - 1.தெய்வப்பெயர்:1 51/2

 TOP
 
    கொத்து (3)
கொத்து உரிவை உரி ஒலியல் அதள் பொச்சை சருமம் குளிர் துவக்கு புனிறு வடகம் புறணி போர்வை - 2.மக்கள்பெயர்:2 57/3
குலை குடும்பு காய் கொத்து ஆம் பலனம் காய்த்தது ஆம் கொடும் அபகேசிகை வடுகு பழி பலனிலாதே - 4.மரப்பெயர்:4 32/4
சம்பரம் புள் கலை நீர் ஆம் கும்பி கரி சேறு ஆம் சம்பளம் கொத்து எலுமிச்சு ஆம் தம்பம் தூண் அபரம் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 77/1

 TOP
 
    கொதி (1)
கொதி தளிகை வள்ளம் பாசனம் தட்டம் சக்கம் கோரம் தாலம் கலமும் வட்டிலின்பேர் கிண்ணம் - 6.பல்பொருள்பெயர்:6 30/2

 TOP
 
    கொதித்தல் (1)
முதும்பல் கறுப்பு உருத்தல் சிவப்பே புழுங்கல் சீறல் உடற்றல் தீவிரம் முணவல் கொதித்தல் கன்றல் கஞறல் - 7.பண்புப்பெயர்:7 31/3

 TOP
 
    கொதிப்பு (1)
புங்கம் அம்புக்குதை அம்பு புடவை உயர்ச்சியும் ஆம் பொங்கர் மரக்கொம்பு இலவு ஆம் பொங்கல் மிகை கொதிப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 13/3

 TOP
 
    கொதுகு (1)
விட்ட நுளம்பு அஞலம் மசகம் துள்ளல் சலவல் வெவ் ஒலுங்கு மற்கூறலொடு நொள்ளல் கொதுகு ஆம் - 3.விலங்கின்பெயர்:3 30/1

 TOP
 
    கொந்தம் (1)
கொழுத்த தண்டு பீலி எஃகம் பிண்டி பாலம்அதாம் குந்தம் தோமரம் கொந்தம் ஈட்டி விட்டேறு ஐந்தும் - 6.பல்பொருள்பெயர்:6 21/2

 TOP
 
    கொந்தளம் (2)
நெடிமை சுருள் பங்கி சிரோதம் கோதை ஐம்பால் நேர் விலோதம் கூந்தல் கொந்தளம் மாராட்டம் - 2.மக்கள்பெயர்:2 55/3
அடு ரோமம் பெண்மயிர்ப்பேர் கொந்தளம் விரோதம் அளகம் மயிர்க்குழற்சி என தெளிகுவை நீ மயிலே - 2.மக்கள்பெயர்:2 55/4

 TOP
 
    கொப்பம் (2)
படுத்த முதுகே மஞ்சு ஆம் அதின் நோய் பாகலம் ஆம் படுகுழிப்பேர் பயம்பு கொப்பம் வாரி ஆம் கூட்டம் - 3.விலங்கின்பெயர்:3 6/3
பயல் சிறுமை பள்ளம்அதாம் பயம்பு கொப்பம் தாழ்வு ஆம் பாயல் மெத்தை குதிப்பு ஆகும் சாயல் அழகு எழல் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 82/1

 TOP
 
    கொப்பளிப்பு (1)
காய்தல் வறத்திடல் முளித்தல் உலறல் முதிரலும் ஆம் காலல் உமிழ்த்திடல் பில்கல் பிளிற்றலும் கொப்பளிப்பு ஆம் - 9.செயல்பற்றியபெயர்:9 17/2

 TOP
 
    கொப்பின்பேர் (1)
வார் உலவு தழை கப்பு கொப்பின்பேர் தூழில் வள்ளி இரத்தி இலதை வல்லி கொடிப்பேர் ஆம் - 4.மரப்பெயர்:4 29/3

 TOP
 
    கொப்பு (6)
கரகம் சீகரம் கன்னல் சிரகம்அதாம் குடிஞை கடிஞை பிச்சைப்பாத்திரம் ஆம் சுடர் மணி கொப்பு அணங்கே - 6.பல்பொருள்பெயர்:6 47/4
திங்கள் மதி மாதம்அதாம் பிங்கலம் பொன் பசப்பு ஆம் சிங்களமே முசு நாடு ஆம் கொங்கை கொப்பு முலை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 14/3
கூடம் மனை மலையுச்சி கவடு சம்மட்டியும் ஆம் கோடு வளை வயிர் குவடு கரை மருப்பு கொப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 33/1
கொப்பு மரக்கொம்பு அணி ஆம் தப்பல் ஒழிப்பு அடிப்பு ஆம் கொப்புழ் உந்தி நீர்க்குமிழ் ஆம் தப்பு இயம் பொய்யுரை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 69/3
கொம்பு கொப்பு மருப்பு ஆம் சம்பகம் தகர் ஆணியும் ஆம் கொம்மை முலை அழகு இளமை கொட்டல் வட்டம் ஆமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 77/4
உலகம் மிசை புவி திசை விண் உயர்ந்தோரும் ஆகும் உலவை கொப்பு தழை மருப்பு காற்று மரக்குலமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 108/4

 TOP
 
    கொப்புரி (1)
கொப்புரி கிடாரமொடு தவிசும் அதற்காகும் குடுவை குண்டு விசனை சட்டி ஆம் கலசப்பானை - 6.பல்பொருள்பெயர்:6 48/1

 TOP
 
    கொப்புழ் (1)
கொப்பு மரக்கொம்பு அணி ஆம் தப்பல் ஒழிப்பு அடிப்பு ஆம் கொப்புழ் உந்தி நீர்க்குமிழ் ஆம் தப்பு இயம் பொய்யுரை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 69/3

 TOP
 
    கொப்புள் (1)
தர புளகம் குமிழ்ப்பு மொக்குள் கொப்புள் ஆம் பிணரே சற்சரை ஆம் பயினி சங்கம் குவிதல் கூடுதல் ஆம் - 7.பண்புப்பெயர்:7 3/3

 TOP
 
    கொப்பூழ் (4)
நலத்துறு மத்திமம் அரை ஆம் இதலை சுழி போகில் நாபி உந்தி இலஞ்சி கொப்பூழ் நாமம் ஆம் உதரம் - 2.மக்கள்பெயர்:2 48/3
திருகு புவ்வம் புற்புதம் ஆசூசம் மொக்குள் கொப்பூழ் செறி புரையும் குமிழியின்பேர் நுரை பேனம் ஆகும் - 5.இடப்பெயர்:5 23/1
போந்தானே நாகரிகன் சேரன் போனான்பேர் புகல் உந்தி நதி கடல் கொப்பூழ் உருள் செப்புகவே - 10.ஒருசொல்பல்பொருள்:10 68/4
சலாகை நாராசம் மணி சவளம் விடு பேய் ஆம் தாழ் இலஞ்சி மகிழ்மரம் ஆம் குளம் கொப்பூழ் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 122/3

 TOP
 
    கொம்பர் (1)
வேருறும் அங்குரம் பொடிப்பு நாறு கான் முளை ஆம் விடபம் கோடிபம் கொம்பு பணை சினை கோல் கொம்பர்
  தாருவுடன் கவடு உலவை களை பொங்கர் காம்பு தாழ் புறக்கம் சாய்கை உறுப்பு இடபம் கோடு ஆமே - 4.மரப்பெயர்:4 29/1,2

 TOP
 
    கொம்பி (1)
நேமி யானையிறாஞ்சி சக்கரமே கோகம் நேர் ஆனைக்குருகு கொம்பி சக்கரவாகப்பேர் - 3.விலங்கின்பெயர்:3 23/1

 TOP
 
    கொம்பிலாமிருகப்பேர் (1)
கொம்பிலாமிருகப்பேர் குமரம் ஏழையும் ஆம் கூலம் வேசகம் தோகை வால் இலாங்குலமும் - 3.விலங்கின்பெயர்:3 20/1

 TOP
 
    கொம்பு (6)
ஊனம்இல் கொம்பு ஆம் பூண் கிம்புரி ஆகும் பட்டம் ஓடை ஆம் செவிஅடி சூழிகை கதுப்பு ஆம் கடமே - 3.விலங்கின்பெயர்:3 5/4
வேருறும் அங்குரம் பொடிப்பு நாறு கான் முளை ஆம் விடபம் கோடிபம் கொம்பு பணை சினை கோல் கொம்பர் - 4.மரப்பெயர்:4 29/1
அண்டாத துப்பு அரத்தம் கொம்பு அரக்கு ஆம் செம்பஞ்சு அலத்தகம் ஆம் பூளை இலவின்பஞ்சின்பேர் ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 8/3
கொண்ட சின்னம் பீலி ஆம் காளம் காகளம் ஆம் கோடு இரலை ஆம்பல் வயிர் கொம்பு ஆகும் பணவம் - 6.பல்பொருள்பெயர்:6 31/3
தந்தம் நகை கொம்பு ஆகும் நந்தி சிவன் ஏறு ஆம் சந்து முட்டு தூது சந்து ஆம் நந்து நத்தை சங்கு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 64/1
கொம்பு கொப்பு மருப்பு ஆம் சம்பகம் தகர் ஆணியும் ஆம் கொம்மை முலை அழகு இளமை கொட்டல் வட்டம் ஆமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 77/4

 TOP
 
    கொம்புநடு (1)
மானமொடு பிருது கொம்புநடு ஆம் புட்கரமே மத கைநுனி ஆம் எயிறு கோடு தந்தம் மருப்போடு - 3.விலங்கின்பெயர்:3 5/3

 TOP
 
    கொம்பே (1)
வாகின் மறி குருளையும் குட்டியின்பேர் ஆம் குருத்து மருப்பு உலவை சிருங்கம் கோடு ஐம்பேர் ஆம் கொம்பே - 3.விலங்கின்பெயர்:3 19/4

 TOP
 
    கொம்மெனலும் (1)
கொல்லெனல் அம்மெனல் இழூஉமெனலே பொள்ளென்னல் கொம்மெனலும் அனுகரணவோசையின்பேர் ஆகும் - 8.ஒலிபற்றியபெயர்:8 15/3

 TOP
 
    கொம்மை (6)
முலை சுவற்கம் கொம்மை நகில் கொங்கை தனம் சேக்கை முகிழ் பயோதரம் குயம் குரூஉக்கண் அம்மம் பறம்பு ஆம் - 2.மக்கள்பெயர்:2 49/1
வடிவு அளவு வண்ணமொடு காட்சி கருத்து ஐந்து வகை பண்பு ஆம் பருதி தட்டு நேமி கொம்மை வலையம் - 7.பண்புப்பெயர்:7 1/1
திரட்சி கணை குவவு கொம்மை சேர் துறுமல் சோகம் சேடு புஞ்சம் மாழை வட்டு பிழம்பு முண்டம் குழியம் - 7.பண்புப்பெயர்:7 3/1
தருணம் கோமளம் கொம்மை குழவு வெண்மை நாகு தகை மழவு குருளை விண் போதகம் புருவை யவனம் - 7.பண்புப்பெயர்:7 15/1
ஆய குடங்கைகொட்டிக்குவித்தல் கொம்மை செங்கை அதை குவித்துக்கொட்டல் ஆம் தாளவொத்து சதி சீரே - 9.செயல்பற்றியபெயர்:9 28/2
கொம்பு கொப்பு மருப்பு ஆம் சம்பகம் தகர் ஆணியும் ஆம் கொம்மை முலை அழகு இளமை கொட்டல் வட்டம் ஆமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 77/4

 TOP
 
    கொய் (1)
துவரை ஆடகம் ஊர் ஆம் செவி செவி கேட்பதும் ஆம் சுவல் பிடர் கொய் உளை மேடு கரி சுவல் பேசுவரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 125/4

 TOP
 
    கொய்சகம் (2)
உத்தரீகமே ஏகாசம் ஆம் கொய்சகம் நீவி ஆம் தோக்கை முன்றானை மெய்யே - 6.பல்பொருள்பெயர்:6 44/4
நீவி துடைத்திடல் ஆடை கொய்சகம் முப்பேராம் நீண்ட சிவை உமை மரவேர் கொல்உலை ஓரியும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 130/1

 TOP
 
    கொய்தல் (2)
அரிதல் சேதித்தல் விடுவாய் கெய்தல் சூலல் அறுத்தல் கொய்தல் கத்தரித்தல் ஈர்த்தல்அதின் பகுப்பே - 9.செயல்பற்றியபெயர்:9 11/4
ஆய்தலே கொய்தல் நுணுக்கம் தேர்ச்சி மூன்றாம் ஐயம் அனுமானம் வழு சங்கை பிச்சைஓடு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 85/2

 TOP
 
    கொய்யாது (1)
கொய்யாது தளிர்த்தலின்பேர் வளன் பயினே முருந்து குருத்து முதல் செறி யானி பிசினும் அதன் முகிவே - 4.மரப்பெயர்:4 30/4

 TOP
 
    கொய்யுளையே (1)
கோலம் வயமா துரங்கம் கிள்ளை குரகதமே கோடகம் பத்திரி குந்தம் கொய்யுளையே கோரம் - 3.விலங்கின்பெயர்:3 7/3

 TOP
 
    கொல் (3)
சொன்னல் கருந்தாது அகி கொல் அயம் கரும்பொன் இரும்பு ஆம் சொன்னவை ஐம்பொன் ஆம் தரா மதுகம் ஆகும் - 6.பல்பொருள்பெயர்:6 3/1
தணந்த சங்கை கடுத்தல் ஐயம் விப்பிரம் பிராந்தி சந்தேகம் கொல் அனுமானமும் ஆகும் தீங்கு - 7.பண்புப்பெயர்:7 37/2
கொல் அசை கொல்லுதல் ஐயம் வருத்தம் ஏவலும் ஆம் குல்லை வெட்சி துளவு சித்தமூலி மூன்றாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 113/3

 TOP
 
    கொல்லர் (1)
வெற்றிஅரைவனர் துவட்டர் தபதியர் கண்ணாளர் வினைஞர் கொல்லர் சிற்பியர் தட்டார் முனைவர் சொன்னர் - 2.மக்கள்பெயர்:2 16/2

 TOP
 
    கொல்லி (1)
ஊன் எழுநா கொல்லி அசமூர்தி உதாசனனே உதிரன் நெருப்பு அக்கினி நாற்பானொன்றாய் காட்டே - 1.தெய்வப்பெயர்:1 24/4

 TOP
 
    கொல்லிக்கிரி (1)
மலை ஆகும் குடமலை வல்லியம் கொல்லிக்கிரி ஆம் வட்டவரை உவளகம் சக்கரவாளகிரி ஆம் - 5.இடப்பெயர்:5 19/1

 TOP
 
    கொல்லிவெற்பன் (1)
நேரிவெற்பன் கிள்ளி சென்னி புனல்நாடன் அபையன் நிகழ் சோழன் பதினைந்தாம் கொல்லிவெற்பன் கோதை - 2.மக்கள்பெயர்:2 12/1

 TOP
 
    கொல்லுதல் (1)
கொல் அசை கொல்லுதல் ஐயம் வருத்தம் ஏவலும் ஆம் குல்லை வெட்சி துளவு சித்தமூலி மூன்றாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 113/3

 TOP
 
    கொல்லுலைமுக்கு (1)
அத்து சிவை குருகு இரண்டும் கொல்லுலைமுக்கு ஆகும் ஆரி தொட்டி புதவு கபாடம் காப்பு வாரி - 6.பல்பொருள்பெயர்:6 36/1

 TOP
 
    கொல்லெனல் (1)
கொல்லெனல் அம்மெனல் இழூஉமெனலே பொள்ளென்னல் கொம்மெனலும் அனுகரணவோசையின்பேர் ஆகும் - 8.ஒலிபற்றியபெயர்:8 15/3

 TOP
 
    கொல்லை (2)
மொய் கடவு துடவை கொல்லை படப்பையும் தோட்டப்பேர் முதையல் பழங்கொல்லையின்பேர் புதியகொல்லை இதை ஆம் - 5.இடப்பெயர்:5 27/3
இடை நிறையே நடு மருங்குல் இடமும் நாற்பேராம் இடக்கர் மறைச்சொல் குடம் ஆம் படப்பை கொல்லை ஊர் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 31/1

 TOP
 
    கொல்உலை (1)
நீவி துடைத்திடல் ஆடை கொய்சகம் முப்பேராம் நீண்ட சிவை உமை மரவேர் கொல்உலை ஓரியும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 130/1

 TOP
 
    கொலை (9)
அகைத்தலும் ஆம் ஊறு அணங்குகோள் வேட்டம் கொலை ஆம் அமர் வேட்டைபற்றியதாம் அமுக்கல் ஞெமுங்குதலே - 9.செயல்பற்றியபெயர்:9 12/4
இகுளை சுற்றம் தோழி நட்பு ஆம் அகல் அகற்சி விளக்கு ஆம் இகுத்தல் விளி வீர்தல் கொலை வீழ்த்தல் அழைத்தலும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 5/2
துடவை கொலை உழவின்பேர் அடல் கொலை போர் வலி ஆம் தொடு மருதம் தோட்டமும் ஆம் குடுமி உச்சி மலை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 29/1
துடவை கொலை உழவின்பேர் அடல் கொலை போர் வலி ஆம் தொடு மருதம் தோட்டமும் ஆம் குடுமி உச்சி மலை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 29/1
அணங்கு நோய் அழகு ஆசை துயர் கொலை பெண் அணங்கு ஆம் ஆணம் அன்பு குழம்பு ஆகும் நாண் இலச்சை கயிறு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 42/1
சதம் இறகு எண் இலை திரம் ஆம் வெதிர் செவிடன் வேய் ஆம் சதி உமை கற்பாட்டி உரோகிணி தாளம் கொலை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 52/1
காதல் கொலை ஆசை ஆம் சேது கரை சிவப்பு ஆம் கதிர் ஒளி அம்பு இரவி கருங்காலி குரல் ஓதே - 10.ஒருசொல்பல்பொருள்:10 53/4
செயிர் சினம் குற்றமும் ஆகும் செயல் ஒழுக்கம் தொழில் ஆம் தெய் கொலை தெய்வமும் தாளமுறை பயில்வும் ஆமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 81/4
கோள் வலி பொய் கொலை கிரகம் குணம் கொள்கை ஊறு ஆம் கோளி கொள்வோன் கொழிஞ்சி பூவாக்காய்க்கும்மரம் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 139/2

 TOP
 
    கொலைசெய்தலின்பேர் (1)
செகுத்தல் வீட்டுதல் படுத்தல் ஒழித்தல் எற்றல் கோறல் செவிட்டல் முருக்குதல் பன்மூன்றும் கொலைசெய்தலின்பேர்
  அகைத்தலும் ஆம் ஊறு அணங்குகோள் வேட்டம் கொலை ஆம் அமர் வேட்டைபற்றியதாம் அமுக்கல் ஞெமுங்குதலே - 9.செயல்பற்றியபெயர்:9 12/3,4

 TOP
 
    கொலைஞர் (1)
ஈனர் கனகதர் களைஞர் கொலைஞர் மாதங்கர் இழிஞர் வங்கர் குணுங்கர் கவுண்டரும் புலையர்பேர் ஆம் - 2.மக்கள்பெயர்:2 18/2

 TOP
 
    கொலைஞர்பேர் (1)
அடு மூவேழ் வீரர்பெயர் காதகன் காருகனே அருந்துதன் காலனும் கொலைஞர்பேர் பொருட்பெண் கணிகை - 2.மக்கள்பெயர்:2 30/3

 TOP
 
    கொலைஞோர் (1)
திகழ் எயினர் பையர் பாதகர் கோளர் மறவர் சில்லர் கொலைஞோர் காடர் முருடர் வேட்டுவரே - 2.மக்கள்பெயர்:2 32/1

 TOP
 
    கொவ்வை (1)
சொன்ன குசை குசம் குமுதம் கூர்ச்சமும் தெர்ப்பைஅதாம் சுண்டிலின்பேர் சமங்கை சுச்சு ஆம் தொண்டை விம்பன் கொவ்வை
  அன்ன கோவையின்பேர் ஆம் நூழில் கொடிக்கொற்றான் ஆயிடும் வச்சிரவல்லி பிரண்டை என கழறே - 4.மரப்பெயர்:4 22/3,4

 TOP
 
    கொழிஞ்சி (1)
கோள் வலி பொய் கொலை கிரகம் குணம் கொள்கை ஊறு ஆம் கோளி கொள்வோன் கொழிஞ்சி பூவாக்காய்க்கும்மரம் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 139/2

 TOP
 
    கொழித்தல் (1)
ஆர்ப்பு கோசனை குமிறல் கோடனையே கொழித்தல் ஆகுலம் கோலாகாலம் உலம்பலே கலித்தல் - 8.ஒலிபற்றியபெயர்:8 17/1

 TOP
 
    கொழித்திடல் (1)
தெருட்டலுடன் வருட்டலும் வற்புறுத்தல் ஆம் வரன்றல் தெள்ளல் கொழித்திடல் ஆகும் பூட்கை மேற்கோள் ஆம் - 9.செயல்பற்றியபெயர்:9 19/1

 TOP
 
    கொழு (1)
ஓதும் பேர் கொழு ஆம் மின்னாராடும் பண்டம் ஓரை ஆம் உலை துருத்தி உதியோடு அத்திரியே - 6.பல்பொருள்பெயர்:6 35/4

 TOP
 
    கொழுத்த (1)
கொழுத்த தண்டு பீலி எஃகம் பிண்டி பாலம்அதாம் குந்தம் தோமரம் கொந்தம் ஈட்டி விட்டேறு ஐந்தும் - 6.பல்பொருள்பெயர்:6 21/2

 TOP
 
    கொழுத்து (1)
எழுது கவான் சோகம் ஐந்தும் துடை ஆகும் துடைவேர் இசைவு கந்து கொழுத்து முட்டு கிரந்தி சந்து பொருத்து ஆம் - 2.மக்கள்பெயர்:2 47/3

 TOP
 
    கொழுந்து (1)
கழுது பேய் பரண் வண்டு ஆம் பழம் முதுமை கனி ஆம் கழங்கு பேய் நடம் கழல் ஆம் கொழுந்து தளிர் புதல் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 144/2

 TOP
 
    கொழுநன் (2)
நேசமுடியோன் காந்தன் தலைவன் தாட்டிகனே நிருபன் நாயகன் கொழுநன் விடலை பூபதியே - 2.மக்கள்பெயர்:2 6/4
கணவன் வரன் கொழுநன் வேட்டோன் உரியன் கேள்வன் கண்டன் காதலன் கொண்கன் பதி பிரான் தலைவன் - 2.மக்கள்பெயர்:2 38/1

 TOP
 
    கொழுப்பு (5)
வெருவு துப்பு விழுக்கு இழுது நெய் நிணம் வெளுப்பு விளர் விளிறு கொழுப்பு ஆகும் வழும்பின்பேர் வழுக்கே - 2.மக்கள்பெயர்:2 58/4
அனல் கருமம் தாபம் வெப்பமும் உட்டிணப்பேர் அடை வளப்பம் கொழுமை செழுமையும் கொழுப்பு ஆம் அன்றே - 7.பண்புப்பெயர்:7 18/4
கொழுப்பு அரிப்பு செயிர் மானம் புரை முப்பான்மூன்றும் குற்றம்அதாம் தளர்ச்சியின்பேர் ஏட்டை அசா கொடியே - 7.பண்புப்பெயர்:7 28/4
வளம் பதவி எழில் வளம் ஆம் வளமை மாண் கொழுப்பு ஆம் வாளி அம்பு மண்டிலம் ஆம் காளி துற்கை பனை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 133/1
விளர் கொழுப்பு வெளுப்பு உரித்தாம் விளவு கமர் மரம் ஆம் விளரி யாழ் யாழ்நரம்பு வேட்கை இளமையும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 135/1

 TOP
 
    கொழுமை (1)
அனல் கருமம் தாபம் வெப்பமும் உட்டிணப்பேர் அடை வளப்பம் கொழுமை செழுமையும் கொழுப்பு ஆம் அன்றே - 7.பண்புப்பெயர்:7 18/4

 TOP
 
    கொள் (1)
காணம் நிதி செக்கு ஒரு கண் ஓர் பரிஊண் கொள் ஆம் காணி எண்ணோடு ஆட்சிஅதாம் கோணி பன்றி முடன் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 43/1

 TOP
 
    கொள்கலப்பேர் (1)
இப்பெயரே சுடர்த்தகழி ஆம் பாண்டம் கலம் என்று இரண்டுமே கொள்கலப்பேர் மூடை பொதி சுமைப்பேர் - 6.பல்பொருள்பெயர்:6 48/3

 TOP
 
    கொள்கை (2)
பரிசின் முறை சால்பு விதி கொள்கை அதிகாரம் படி குணமே நிறம் இருபான்மூன்று பண்பின்பேர் ஆம் - 7.பண்புப்பெயர்:7 39/2
கோள் வலி பொய் கொலை கிரகம் குணம் கொள்கை ஊறு ஆம் கோளி கொள்வோன் கொழிஞ்சி பூவாக்காய்க்கும்மரம் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 139/2

 TOP
 
    கொள்வோன் (1)
கோள் வலி பொய் கொலை கிரகம் குணம் கொள்கை ஊறு ஆம் கோளி கொள்வோன் கொழிஞ்சி பூவாக்காய்க்கும்மரம் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 139/2

 TOP
 
    கொள்ளல் (3)
குழை அளக்கர் அசறு தொய்யில் செதும்பு அளறு சகதி குழம்பு அசும்பு அங்கணம் பொகுட்டு கொள்ளல் பங்கம் பூழி - 5.இடப்பெயர்:5 24/3
பாங்கு பக்கம் சகி அழகு ஆம் வாங்கல் கொள்ளல் வளைவு ஆம் பங்கயம் பார் தாமரை ஆம் சிங்கல் குன்றல் மெலிவு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 15/1
விரை மணம் தூபம் சாந்து ஆம் வரைதல் கொள்ளல் விடல் ஆம் விருத்தம் பாவினம் வட்டம் மூப்பு மலை நான்காம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 91/3

 TOP
 
    கொள்ளியும் (1)
நிகழ் நிகழ்ச்சி ஒளி ஆம் அகணி வயல் உள் ஆம் ஞெகிழி சிலம்பு அனல் அனலின்பொறி அறை கொள்ளியும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 5/1

 TOP
 
    கொள்ளுகவே (1)
புள் அவிட்டம் வண்டு புள் ஆம் வள்ளம் வட்டில் புணை ஆம் புளகமே கண்ணாடி குமிழ்ப்பு என கொள்ளுகவே - 10.ஒருசொல்பல்பொருள்:10 140/4

 TOP
 
    கொள்ளும் (1)
கயவுறு காராமணி ஆம் குலத்தமே கொள்ளும் காணம் ஆம் சிற்கடி முற்கம்போடு சிம்பை - 4.மரப்பெயர்:4 21/3

 TOP
 
    கொள்ளை (2)
தற்றுதல் ஆம் கொள்ளை கொண்டி சூறை ஆம் உரோசல் சார்ந்து உராய்ப்போதல் உரிஞ்சுதல் ஆம் சுவாசம் - 9.செயல்பற்றியபெயர்:9 29/3
கொள்ளை மிகை கொடுவியாதி பொள்ளல் அப்பம் பொந்து ஆம் கூளி தமர் வாமனம் பேய் குறள் வீரர் ஏறு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 141/1

 TOP
 
    கொளலும் (1)
நடப்பது ஆம் கவர்தல் வவ்வல் கொளலும் வாருதல் ஆம் நறிது ஆக்கல் முண்டிதமே மழித்தல் சமைத்திடலே - 9.செயல்பற்றியபெயர்:9 23/3

 TOP
 
    கொளுகொளென்றல் (1)
தடதடென்றல் கொளுகொளென்றல் மொகுமொகென்றல் வேறு சரசரென்றல் பரபரென்றல் கரகரென்றல்தானும் - 8.ஒலிபற்றியபெயர்:8 16/3

 TOP
 
    கொளை (1)
குதி கீதம் அணு வழி இராகம் கந்திருவம் கொளை வரி காமரம் பாட்டு பாணி பண் கேயமும் ஆம் - 8.ஒலிபற்றியபெயர்:8 10/3

 TOP
 
    கொற்கையன் (1)
பொதிகையினான் தமிழ்நாடன் கொற்கையன் கூடலினான் பூழியன் உக்கிரன் குமரிச்சேர்ப்பன் மீன்கொடியோன் - 2.மக்கள்பெயர்:2 11/2

 TOP
 
    கொற்றம் (2)
பரியந்தம் ஏணி கோதனம் காடம் கொற்றம் பதினெட்டாம் எல்லையின்பேர் நிரல் பந்தி ஓளி - 7.பண்புப்பெயர்:7 10/2
வீரியம் பராக்கிரமம் சவுரியம் சேவகமே வீரப்பேர் வென்றி வலன் கொற்றம் முல்லை வாகை - 7.பண்புப்பெயர்:7 17/1

 TOP
 
    கொற்றமல்லி (1)
மன்னு சசரியும் ஆகும் உருளரிசி கொற்றமல்லி ஆம் சிவந்தி சீவனி பாலை பேர் ஆம் - 4.மரப்பெயர்:4 22/2

 TOP
 
    கொற்றவன் (1)
ஈசன் நரபதி லோலன் கொற்றவன் பார்த்திபன் மன் ஏந்தல் ஆண்டகை துரை பூபாலன் அண்ணல் வேந்தன் - 2.மக்கள்பெயர்:2 6/2

 TOP
 
    கொற்றவை (1)
பயிரவி மாரி சூலி சக்ரபாணி சாமுண்டி நீலி துர்க்கை சண்டிகை கொற்றவை எண்தோளி - 1.தெய்வப்பெயர்:1 5/3

 TOP
 
    கொற்றான் (1)
நாள் அலா பூத்தும்பி பிறக்கொடி சுரை ஆம் கொற்றான் நந்தை என்றாம் திரிபுரி சாறடைப்பேர் மஞ்சிகமே - 4.மரப்பெயர்:4 19/1

 TOP
 
    கொற்றி (2)
குத்திரி வெம் காடுகாள் மாரியொடு கொற்றி கொடியை மூதணங்கு பெயர் எட்டென விண்டனரே - 1.தெய்வப்பெயர்:1 11/4
பதப்படை ஆண்டலை கொற்றி துவசம் சாமப்புள் பகு சரணாயுதம் காலாயுதம் கோழிப்பேர் ஆம் - 3.விலங்கின்பெயர்:3 25/2

 TOP
 
    கொறி (1)
உகழ் புருவை செச்சை மேடகம் கொச்சை அசம் மை உடு துரு கம்பளம் வெறி ஏழகம் கொறி ஆட்டின்பேர் - 3.விலங்கின்பெயர்:3 11/3

 TOP
 
    கொறுக்கச்சி (1)
கறி மிரியல் கலினை காயமும் மிளகு ஆம் பத்தல் காசை கொறுக்கச்சி சரவணம் சரம் நாணலுமே - 4.மரப்பெயர்:4 16/4

 TOP
 
    கொறுக்கையின்பேர் (1)
குருத்து எருவை சூகரி வராகி சாய் முத்தம் கோரை கொறுக்கையின்பேர் வாட்கோரை செருந்திஅதாம் - 4.மரப்பெயர்:4 25/2

 TOP
 
    கொறுக்கையும் (1)
கோரை கொறுக்கையும் முதுகும் காளியும் மூன்றாகும் குராலே கூகையும் நிறமும் என்பர் ஆரியரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 104/4

 TOP
 
    கொன் (4)
ஏல்வை நாள் பகல் வைகல் அல்கலும் பன்னிரண்டாம் எல்லை கால் பதம் போழ்து கொன் பொழுது வேலை - 1.தெய்வப்பெயர்:1 46/2
சீலம் மிகை அலை பூரிப்பு ஆன்றல் கூர் கழுமல் சிறப்பு உருத்தல் பொங்கலின்பேர் பெருமை மா தடம் கொன்
  மால் கருமை பகடு ஏந்தல் பாடு இருமை மோடு வால் குவவு தகை பொழில் பீடு அண்ணல் பணை ஈடு - 7.பண்புப்பெயர்:7 4/2,3
அயர்வு உட்கு கோபம் வெடி பேம் புலம்பு இறை கொன் அச்சம்அதாகும் பிரமம் துரிதம் இறை கவனம் - 7.பண்புப்பெயர்:7 30/2
கொன் வறிது வீதா வீண் பயனிலி நாற்பேராம் கோணல் மனக்கோட்டமும் அவ்வியமும் அழுக்காறு ஆம் - 7.பண்புப்பெயர்:7 34/2

 TOP
 
    கொன்றை (1)
மதலை பிள்ளை கொன்றை மரக்கலம் கொடுங்கை தூண் ஆம் மதவு புதல் வனப்பு வலியுடன் மிகுதி ஐந்தாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 50/2

 TOP
 
    கொன்றைசூடி (1)
மங்கைபங்கன் சம்பு மகேசன் வாமதேவன் மாதேவன் நிமலன் விடையோன் கொன்றைசூடி
  கங்கைஅணிவோன் பரசுதரன் ஆதிகிரியன் காலகாலன் கயிலையாளி திகம்பரனே - 1.தெய்வப்பெயர்:1 1/3,4

 TOP
 
    கொன்றையின்பேர் (1)
இதழி ஆக்கு பதம் தாமம் கடுக்கை மதலை இணர் பாசுபதம் ஆறும் கொன்றையின்பேர் ஆகும் - 4.மரப்பெயர்:4 4/2

 TOP