<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - முதற்பகுதி - தொடரடைவு

ஞா - முதல் சொற்கள்
ஞாங்கர் 3
ஞாட்பகம் 1
ஞாட்பு 3
ஞாதி 1
ஞாபகம் 1
ஞாபகமும் 1
ஞாயில் 1
ஞாயிறு 1
ஞாலம் 1
ஞாழலின்பேர் 1
ஞாளி 2
ஞாளியையூர்தி 1
ஞானபாகை 1
ஞானம் 3
ஞானி 4
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 

    ஞாங்கர் (3)
பால் புடை பாரிசம் மருங்கு புறம் சார்வு பாங்கர் சிறை ஞாங்கர் உழி யாங்கர் பக்கம் ஆகும் - 5.இடப்பெயர்:5 33/1
வெருளுறு முத்தலை கழுவே கழுமுளும் சூலப்பேர் விட்டேறு சத்தி மதம் கயில் எஃகம் ஞாங்கர்
  அரணம் உடம்பிடி குந்தம் ஒன்பதும் வேலின்பேர் அடல் கைவேல் கப்பணம் தோமரம் ஆகும் நேமி - 6.பல்பொருள்பெயர்:6 17/2,3
ஞாங்கர் வேல் பக்கம் முன்பு மேல் என நான்காகும் நல் ஆங்கு அவ்விடம் நிகர் ஆம் காங்கு சுரம் கறுப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 15/3

 TOP
 
    ஞாட்பகம் (1)
தளரும் அடுகளம் இறுக்கை செருக்களம் செம்புலமே தடவை பறந்தலையொடு ஞாட்பகம் சமர்செயிடமே - 5.இடப்பெயர்:5 28/4

 TOP
 
    ஞாட்பு (3)
மறைவுஇல் பங்கு பயல் பாகம் பகுதி அத்தம் கூறு வாரம் பால் பாதியின்பேர் சீர் குரு ஞாட்பு அதிகம் - 7.பண்புப்பெயர்:7 8/3
மறன் இகல் சல்லிகம் பூசல் ஆர்ப்பு அமர் தெவ்வு உடன்றல் மலைப்பு இரணம் தாக்கு கோறல் கிடைத்தல் ஞாட்பு ஏற்றல் - 9.செயல்பற்றியபெயர்:9 24/1
நாட்டியம் கூத்து எண்ணமும் ஆம் ஞாட்பு அமர் பாரமும் ஆம் நல்ல புட்டம் புடவையே நிறைவு காக்கையும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 39/1

 TOP
 
    ஞாதி (1)
தக்க மனு பன்னிரண்டு நரர்பேர் ஆம் ஞாதி தாயத்தார் குடி சுற்றம் மூதாதை பாட்டன் - 2.மக்கள்பெயர்:2 35/2

 TOP
 
    ஞாபகம் (1)
உரம் அறிவு தெளிவு புந்தி புலன் போதம் மேதை உணர்வு மதி காட்சி ஞாபகம் தேறல் சீலம் - 7.பண்புப்பெயர்:7 15/3

 TOP
 
    ஞாபகமும் (1)
பிண்டம்அது பொழிப்பு ஆகும் அரும்பொருள் ஞாபகமும் பிசியும் ஆம் தொகுதிசெய்தல் பதிகம் என்னும் இதுவே - 8.ஒலிபற்றியபெயர்:8 9/4

 TOP
 
    ஞாயில் (1)
படர் ஞாயில் மதிலுறுப்பு ஆம் கிடங்கு ஓடை அகப்பா பதவு உடு பாம்புரி கேணி பரிகம் அகழ் வாயே - 5.இடப்பெயர்:5 7/4

 TOP
 
    ஞாயிறு (1)
ஆதித்தன் ஞாயிறு ஆயிரம்கிரணி பகலோன் அருக்கன் எல்லை சம்பு திமிராரி விருச்சிகனே - 1.தெய்வப்பெயர்:1 33/1

 TOP
 
    ஞாலம் (1)
புவனி தரித்திரி சகம் மண்டலம் ஞாலம் வையம் புவனம் அகலிடம் சாந்தை மகி நேமி பாரி - 5.இடப்பெயர்:5 4/1

 TOP
 
    ஞாழலின்பேர் (1)
அளி பயிலும் பலினி ஞாழலின்பேர் பாலிகையே அடம்பு ஆகும் சித்திரம் ஏரண்டம் ஆமணக்கே - 4.மரப்பெயர்:4 14/4

 TOP
 
    ஞாளி (2)
முடுவல் கூரன் சுணங்கன் ஞாளி அக்கன் சூரன் முடுகு எகினம் பாசி சுனகம் சுவா சுகினம் - 3.விலங்கின்பெயர்:3 17/2
நளி பெருமை குளிர் செறிவு தேள் பொலிவு திரள் ஆம் ஞாளி கள்ளு குக்கலும் ஆம் வாள் வசி கூர் ஒளியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 136/4

 TOP
 
    ஞாளியையூர்தி (1)
வித்தகன் ஞாளியையூர்தி வயிரவன் பத்தொன்பான் விளங்கு பெயராம் வடுகன்தாய் வடுகி மோடி - 1.தெய்வப்பெயர்:1 11/3

 TOP
 
    ஞானபாகை (1)
அடரும் உபநிடதம் மறை முடி ஞானபாகை அருத்தபாகையும் கருமபாகையும் அப்பொருள் ஆம் - 8.ஒலிபற்றியபெயர்:8 8/1

 TOP
 
    ஞானம் (3)
தெருளல் சேதனம் சைதன்னியம் ஞானம் ஆகும் தெளியும் பேரறிவும் முதுக்குறைவு ஆம் என்றறியே - 7.பண்புப்பெயர்:7 15/4
சிதலை பிணி கறையான் ஆம் கதவம் காப்பு அடைப்பு ஆம் சிதம் ஞானம் உடு வெளுப்பு ஆம் புதவு புல்லு கதவு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 50/3
உரம் வலி மார்பு ஊக்கம் மருந்து எரு ஞானம் ஆறாம் உரி அளவு தோல் உரித்து ஆம் சரி வளை பாதையும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 88/1

 TOP
 
    ஞானி (4)
அங்கணன் பேயோடாடி சருவஞ்ஞன் ஞானி அமலன் அரன் நீலகண்டன் பித்தன் நித்தன் சோதி - 1.தெய்வப்பெயர்:1 1/2
தேவர்முதுவோன் ஞானி வரன் சதானந்தன் திசைமுகன் மால் உந்திவந்தோன் தாதாவிதாதா - 1.தெய்வப்பெயர்:1 15/1
நயவாணி பாரதி பாமகள் வாக்கி கலைமான் ஞானி புராதனி உலகமாதா வெண்கமலை - 1.தெய்வப்பெயர்:1 16/3
இதல் பூழும் சிரவமுமே கவுதாரி ஆகும் இகல் சேவல் வாரணம் குக்குடம் ஞானி குருகு - 3.விலங்கின்பெயர்:3 25/1

 TOP