<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - முதற்பகுதி - தொடரடைவு

பீ - முதல் சொற்கள்
பீசம் 1
பீடம் 1
பீடிகை 4
பீடு 1
பீடை 1
பீதகம் 5
பீதம் 3
பீதமும் 1
பீதன் 2
பீதாம்பரன் 1
பீர் 5
பீர்க்கு 5
பீரு 2
பீருவே 1
பீலி 10
பீலிகை 1
பீழை 1
பீள் 2
பீறல் 2
பீறுதல் 1
பீனசமும் 1
பீனமும் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    பீசம் (1)
பலனதின் தோல் செதிள் ஆகும் காழ் கொட்டை பீசம் பரல் விதை வித்து ஆம் குச்சம் படு சாறு தாறு - 4.மரப்பெயர்:4 32/3

 TOP
 
    பீடம் (1)
அரசர்வாகனம் வையம் சிவிகையின்பேர் பள்ளி அனிதமும் ஆம் பீடிகை விட்டரம் தவிசு பீடம்
  வரதி பத்திராசனம் சிங்காதனம் ஆம் பாண்டில் மஞ்சமொடு பரியங்கம் பாரி கட்டில் உறுமே - 6.பல்பொருள்பெயர்:6 39/3,4

 TOP
 
    பீடிகை (4)
நகர் கூலம் பீடிகை அங்காடி ஆவணம் ஆம் நவின்ற நெடுந்தெரு மன்றம் மார்க்கரியமமும் ஆம் - 5.இடப்பெயர்:5 14/1
கற்றாய் பீடிகை கடிப்பு கோடிகம் துமாணம் கண்டிகை காண்டமும் பூண்கொள்கலம் ஆம் அம்மானை - 6.பல்பொருள்பெயர்:6 34/2
அரசர்வாகனம் வையம் சிவிகையின்பேர் பள்ளி அனிதமும் ஆம் பீடிகை விட்டரம் தவிசு பீடம் - 6.பல்பொருள்பெயர்:6 39/3
பீடிகை ஆசனபீடம் ஆவணம் தட்டு ஆகும் பெட்டல் இச்சை செறலும் ஆம் நட்டம் நடம் கேடே - 10.ஒருசொல்பல்பொருள்:10 33/4

 TOP
 
    பீடு (1)
மால் கருமை பகடு ஏந்தல் பாடு இருமை மோடு வால் குவவு தகை பொழில் பீடு அண்ணல் பணை ஈடு - 7.பண்புப்பெயர்:7 4/3

 TOP
 
    பீடை (1)
துளிப்பு இடுக்கண் பீடை அலம்வரல் அல்லகண்டம் சூர் விழுமம் கையாறு கவலை துக்கம் பைதல் - 7.பண்புப்பெயர்:7 32/3

 TOP
 
    பீதகம் (5)
நறுமருப்பு ஆத்திரகம் அல்லம் இஞ்சி ஆம் தேறு நல் நிசி பீதகம் கதலி அரிசனம் காஞ்சனியே - 4.மரப்பெயர்:4 16/2
வேணுவொடு கன்னல் ஆலையும் கரும்பு என்றாகும் வேரி வசுவாசி பீதகம் மூலகந்தம் - 4.மரப்பெயர்:4 17/3
தனி ஈழம் பிங்கலம் தேசிகம் சாதரூபம் தமனியம் நிதானம் பீதகம் ஆடை தொடுக்கம் - 6.பல்பொருள்பெயர்:6 2/1
நிசி அரித்திராபம் பீதகம் பீதம் பொன்மை நிறப்பேர் பிங்கலம் பசலை பசப்பும் ஆம் கபிலம் - 7.பண்புப்பெயர்:7 13/2
பீதகம் பொன் இருவேலி சாந்து பொன்மை நான்காம் பீதம் எலி பசலை பன்றி பொன் சாந்து அச்சமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 55/3

 TOP
 
    பீதம் (3)
வித்தம் ஆடகம் ஈகை பொருள் பூரி செங்கொல் வெறுக்கை அரி பீதம் சாமீகரம் சாம்புனதம் - 6.பல்பொருள்பெயர்:6 1/3
நிசி அரித்திராபம் பீதகம் பீதம் பொன்மை நிறப்பேர் பிங்கலம் பசலை பசப்பும் ஆம் கபிலம் - 7.பண்புப்பெயர்:7 13/2
பீதகம் பொன் இருவேலி சாந்து பொன்மை நான்காம் பீதம் எலி பசலை பன்றி பொன் சாந்து அச்சமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 55/3

 TOP
 
    பீதமும் (1)
புலி கலவை வட்டிகை பீதமும் நான்கு சாந்து ஆம் பூசுபொருள்பேர் அங்கராகம் ஆம் கூலம் - 6.பல்பொருள்பெயர்:6 7/3

 TOP
 
    பீதன் (2)
பதி பிரகற்பதி பீதன் குரு சீவன் அரசன் பகர் வேந்தன் அந்தணன் பொன் சுரர்அமைச்சன் ஆசான் - 1.தெய்வப்பெயர்:1 36/1
உரியர் நள்ளி இருபத்தேழு உறவின்முறைப்பேர் ஆம் உட்பீதி சவலை பயத்தான் பீரு பீதன்
  வெருவி சகிதன் பிளிறன் அச்சமுற்றோன்பேர் ஆம் விளம்பு நக்கன் என்ப நிருவாணிபாற்படுமே - 2.மக்கள்பெயர்:2 29/3,4

 TOP
 
    பீதாம்பரன் (1)
உமைதுணைவன் பின்னைமன் பீதாம்பரன் வராகன் உயர் பதுமநாபன் அறிதுயிலன் அனந்தபாலன் - 1.தெய்வப்பெயர்:1 14/2

 TOP
 
    பீர் (5)
சொலும் நெரிசல் பொறி தேமர் பீர் துத்தி உத்தி சுணங்கு வரி திதனி வசந்திகை இனந்தி தித்தி - 2.மக்கள்பெயர்:2 49/3
பிரு நுதல் புரூரம் பீர் புதல் புதடி பூரு பீரு குடி புருவம்அதாம் கேள்வி அள்ளு காது - 2.மக்கள்பெயர்:2 53/2
துடரும் நிலவாகைப்பேர் தாடிமமே சந்தம் சூட்டு சத்திக்கொடி ஆகும் புட்டில் பீர் பீர்க்கு ஆம் - 4.மரப்பெயர்:4 20/2
பயம் அடுப்பு தாருணம் நாம் கவலை வெறி வீமம் பனிப்பு பீர் வெறுப்பு உருமு வெரு அசூர் பிறப்பே - 7.பண்புப்பெயர்:7 30/1
பேர் பெருமை நாமமும் ஆம் பீர் பசலை பீர்க்கு ஆம் பீருவே அச்சமுற்றோன் புருவமும் என்று இரண்டாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 100/1

 TOP
 
    பீர்க்கு (5)
துடரும் நிலவாகைப்பேர் தாடிமமே சந்தம் சூட்டு சத்திக்கொடி ஆகும் புட்டில் பீர் பீர்க்கு ஆம் - 4.மரப்பெயர்:4 20/2
படலிகை ஓர் மணி வட்டம் பீர்க்கு பூந்தட்டு ஆம் படலை பரி மணி மாலை படர்வு ஒருகண்பறை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 30/3
ஓடை நீர்நிலை கிடங்கு ஓர் மரம் பட்டம் கொடி ஆம் உடு விண்மீன் கிடங்கு மரக்கலம் விசியம் பீர்க்கு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 33/2
பேர் பெருமை நாமமும் ஆம் பீர் பசலை பீர்க்கு ஆம் பீருவே அச்சமுற்றோன் புருவமும் என்று இரண்டாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 100/1
கோலம் பீர்க்கு அழகு பன்றி பாக்கு நீர்க்கொழுந்து குவளையுடன் இரந்தை இரந்தைக்கனியும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 116/1

 TOP
 
    பீரு (2)
உரியர் நள்ளி இருபத்தேழு உறவின்முறைப்பேர் ஆம் உட்பீதி சவலை பயத்தான் பீரு பீதன் - 2.மக்கள்பெயர்:2 29/3
பிரு நுதல் புரூரம் பீர் புதல் புதடி பூரு பீரு குடி புருவம்அதாம் கேள்வி அள்ளு காது - 2.மக்கள்பெயர்:2 53/2

 TOP
 
    பீருவே (1)
பேர் பெருமை நாமமும் ஆம் பீர் பசலை பீர்க்கு ஆம் பீருவே அச்சமுற்றோன் புருவமும் என்று இரண்டாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 100/1

 TOP
 
    பீலி (10)
வெம்பு வாலதியும் ஆம் வால்கீழே பிருட்டம் வெருகம் ஆம் பீலி மயில் போத்து எழால் சேவல் - 3.விலங்கின்பெயர்:3 20/2
கேகயம் சிகாவளம் மயூரம் மஞ்ஞை பீலி கேழ் ஞமலி சிகண்டி கலாபம் சருணி நவிரம் - 3.விலங்கின்பெயர்:3 22/1
மேகநிற பீலி கலாபம் தோகை சிகண்டம் வேசகம் கூந்தலும் மயிலின்இறகு ஆகும் முருந்து என்று - 3.விலங்கின்பெயர்:3 22/3
ஓதி பருப்பதம் வீரம் சிலம்பு பொறை விசையம் ஓங்கல் பொற்றை கோத்திரி சிராவணமே பீலி
  பாதவம் என்று அறுபதுமே மலையின்பேர் அறையே பாறையின்பேர் கோடு கொடுமுடி கூடம் சிகரம் - 5.இடப்பெயர்:5 16/1,2
கொழுத்த தண்டு பீலி எஃகம் பிண்டி பாலம்அதாம் குந்தம் தோமரம் கொந்தம் ஈட்டி விட்டேறு ஐந்தும் - 6.பல்பொருள்பெயர்:6 21/2
கொண்ட சின்னம் பீலி ஆம் காளம் காகளம் ஆம் கோடு இரலை ஆம்பல் வயிர் கொம்பு ஆகும் பணவம் - 6.பல்பொருள்பெயர்:6 31/3
முழவு திண்டி முருடு தக்கை பேரி பம்பை பீலி முரசு தகுணி தந்தண்ணம் துந்துமி தடாரி - 6.பல்பொருள்பெயர்:6 33/2
சிற்றாலவட்டம் வீசனம் பீலி விசிறி சிறிய சாந்தாற்றியும் ஆம் கோடிகம் பூத்தட்டு ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 34/1
கூந்தல் மயிர் பீலி ஆம் காந்தன் கோன் பதி ஆம் குந்தமே குருந்து கண்நோய் படை பரி காந்துகமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 67/4
பீலி மயில் மயில்தோகை ஆலவட்டம் கிரி ஆம் பிலவங்கம் தேரை குரங்கு ஆம் புவியின் பாலே - 10.ஒருசொல்பல்பொருள்:10 117/4

 TOP
 
    பீலிகை (1)
இறகு பக்கம் சதம் சிறகின்பேர் ஆகும் சிகடை இறும்பு அழலி ஊர்மிருகம் பீலிகை சுலோகம் - 3.விலங்கின்பெயர்:3 31/2

 TOP
 
    பீழை (1)
சினத்த படர் இன்னல் வெறுப்பு இடும்பை புன்கண் கேதம் செல்லல் கோட்டாலை அலக்கண் பீழை அரந்தை - 7.பண்புப்பெயர்:7 32/1

 TOP
 
    பீள் (2)
வைத்த பச்சை தோல்பெயர் சூல் சினை கருப்பம் விந்து வாலை வயா வயின் பொறை பீள் வயல் கருப்பேர் தருமே - 2.மக்கள்பெயர்:2 57/4
கட்டிய பத்திரி வயினம் புலிங்கமே அக்கம் ககம் குரீஇ பறவையின்பேர் சினை கரு பீள் வரிட்டம் - 3.விலங்கின்பெயர்:3 30/3

 TOP
 
    பீறல் (2)
துவர்தல் கீறுதல் கீழ்தல் கீண்டல் வகிர் பிளத்தல் துணி கீன்றல் கீறல் போழ்ந்திடல் பீறல் கிழிவு ஆம் - 9.செயல்பற்றியபெயர்:9 21/3
நவிரம் மலை குழல் உச்சி புன்மை யாழிசை ஆம் நவிர் இசை யாழ் குழல் ஆகும் அவிர் பீறல் ஒளி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 124/2

 TOP
 
    பீறுதல் (1)
புல் அனுடம் புணர்ச்சி புன்மை புலி பனை புற்குறை ஆம் பொல்லே பொல்லாங்கு பீறுதல் ஆம் பல பெயரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 113/4

 TOP
 
    பீனசமும் (1)
சிதகின் நிரை காலேயம் பசுக்கூட்டம் ஐந்தாம் செருத்தல் மடு சுரை ஈன்பை பீனசமும் முலைப்பேர் - 3.விலங்கின்பெயர்:3 9/3

 TOP
 
    பீனமும் (1)
பன்னம்அது பருமை பரூஉ பீனமும் ஆம் அகறல் பாழி யாப்பு ஆய்வு தடம் வியல் அகலுள் ஆன்றல் - 7.பண்புப்பெயர்:7 5/3

 TOP