<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - முதற்பகுதி - தொடரடைவு

பூ - முதல் சொற்கள்
பூ 9
பூக்கம் 3
பூக்குவிவு 1
பூகந்தி 1
பூகம் 4
பூங்கணைக்கிழத்தி 1
பூங்கு 1
பூங்கொட்டைஅதாம் 1
பூங்கொத்து 3
பூச்சி 1
பூச்செடி 1
பூசம் 3
பூசல் 4
பூசனைப்பேர் 1
பூசுபொருள்பேர் 1
பூசுரர் 1
பூசை 2
பூஞை 1
பூட்கை 4
பூட்சி 1
பூட்டதிகம் 1
பூட்டு 3
பூட்டை 1
பூடணப்பேர் 1
பூண் 7
பூண்கொள்கலம் 1
பூண்டி 1
பூண்முலையே 1
பூணி 1
பூணு 1
பூணூல் 1
பூத்த 3
பூத்தட்டு 1
பூத்தல் 2
பூத்திடும் 1
பூத்தும்பி 1
பூதநாதன் 1
பூதப்பேர் 1
பூதம் 4
பூதமும் 1
பூதமே 1
பூதர் 1
பூதரம் 3
பூதலம் 1
பூதவமும் 1
பூதன் 1
பூதி 4
பூதியம் 3
பூதியமும் 1
பூதை 1
பூந்தட்டு 1
பூந்தட்டும் 1
பூந்தளிர்ப்பேர் 1
பூந்தாது 1
பூந்தாதும் 1
பூந்தெரியல் 1
பூந்தோட்டம் 1
பூநாகம் 1
பூநிதி 1
பூப்பு 1
பூப்பொதுப்பேர் 1
பூபதியே 1
பூபன் 2
பூபாலர் 1
பூபாலன் 1
பூம் 1
பூமகள்கோன் 1
பூமகன் 1
பூமயிலே 1
பூமன் 2
பூமான் 2
பூமானே 1
பூமி 5
பூமிநாள் 1
பூமியின்பேர் 1
பூமொட்டு 1
பூய்த்தல் 1
பூர்ப்பம் 1
பூரட்டாதிப்பேர் 1
பூரணம் 1
பூரணர் 1
பூரணி 2
பூரணை 2
பூரணைப்பேர் 1
பூரணைரா 1
பூரம் 3
பூரவாகனி 1
பூராடம் 1
பூரி 2
பூரிகம் 1
பூரிப்பு 1
பூரிமாவோடு 1
பூரியம் 3
பூரு 1
பூருவம் 4
பூவசியர் 1
பூவணியல் 1
பூவயிரம் 1
பூவல் 2
பூவளந்தான் 1
பூவாக்காய்க்கும்மரம் 2
பூவாளி 1
பூவிதழ் 2
பூவிருந்தோன் 1
பூவின்இதழ் 1
பூவும் 1
பூவை 4
பூழான் 1
பூழி 3
பூழியன் 2
பூழில் 1
பூழும் 1
பூளை 1
பூனை 2
பூனையின்பேர் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    பூ (9)
காரி கரும்புறம் தாலம் தாழி பெண்ணை பனை பூ கதம் சகுந்தம் கந்தி பூகம் பூக்கம் கமுகு ஆம் - 4.மரப்பெயர்:4 6/3
வசுதை மேதினி உலகு தலம் புடவி தரணி மண் கிடக்கை தரை பாலம் பிருதுவி காசினி பூ
  அசலை தாத்திரி நகம் தராதலம் கோ விபுலை அம்பரி அம்புயம் நாகதாரை யுகம் புவியே - 5.இடப்பெயர்:5 3/3,4
மடுவொடு புட்கரணி தடம் பூ இ முப்பானெட்டும் வாவியின்பேர் இந்திரவாவிகள் இலவந்திகை ஆம் - 5.இடப்பெயர்:5 26/2
வடி நிசி வை பூ அயிர் வாள் அயில் முனை முள் கூர்மை வசியும் ஆம் நுதி நுனி ஆம் தடறு புட்டில் உறையே - 6.பல்பொருள்பெயர்:6 23/4
காரிகை பொன் சந்தம் தேசிகம் சொக்கு மஞ்சு காமர் ஒண்மை வாமம் பூ தகை தளிமம் மாழை - 7.பண்புப்பெயர்:7 14/1
பொம்மல் பூ பொலிவு ஒன்பான் அமைவு புல்லல் கெழுமல் பொருந்தல் ஆம் வெகுவிதம் நானாவிதம் பல்விதம் ஆம் - 7.பண்புப்பெயர்:7 26/2
ஆகுவே மூடி கஞ்சா மரை எலி முப்பேராம் ஆகம் மார்பு உடல் ஆகும் போகில் புள் பூ மொட்டு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 7/1
தார் கொடி பூ படை தொடை கிண்கிணி கோவை ஒழுங்கு ஆம் சாரங்கம் சாதகப்புள் வண்டு மான் மூன்றாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 102/1
ஆலம் பூ வட விருக்கம் நஞ்சு நீர் நான்காம் ஆல் அசை ஓர் மரம் ஆகும் மேல் இடம் விண் மேற்கு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 116/3

 TOP
 
    பூக்கம் (3)
காரி கரும்புறம் தாலம் தாழி பெண்ணை பனை பூ கதம் சகுந்தம் கந்தி பூகம் பூக்கம் கமுகு ஆம் - 4.மரப்பெயர்:4 6/3
கேடகம் நிகாயம் சோபணம் முட்டம் வசதி கிளர் சேரி பூக்கம் பூரியம் வாழ்க்கை குடியே - 5.இடப்பெயர்:5 5/4
ஆக்கம் மலர்மகள் திரு ஆம் பூக்கம் ஊர் கமுகு ஆம் அக்காரம் புடவை வெல்லம் என இரண்டுபேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 12/1

 TOP
 
    பூக்குவிவு (1)
சாம்பல் பழம் பூக்குவிவு ஆம் ஆம்பி ஒலி காளான் தான் நாமம் பரம் தூசு விண் கடல் என்று அயிரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 78/4

 TOP
 
    பூகந்தி (1)
பாரின் புண்டரம் உவணம் பணவை பூகந்தி பவணை பாசம் சகுந்தம் எருவை கழுகு இதுவே - 3.விலங்கின்பெயர்:3 24/4

 TOP
 
    பூகம் (4)
காரி கரும்புறம் தாலம் தாழி பெண்ணை பனை பூ கதம் சகுந்தம் கந்தி பூகம் பூக்கம் கமுகு ஆம் - 4.மரப்பெயர்:4 6/3
உரத்த பந்தம் தொழுதி பிண்டம் பூகம் முத்தை குவிதல் உண்டையும் ஆம் படலை பம்பல் படர்ச்சி பரந்தன ஆம் - 7.பண்புப்பெயர்:7 3/2
சகலம் முற்றும் துண்டமும் ஆம் அகலம் உரம் விரிவு ஆம் சகுந்தமே கழுகு புள்ளின்பொது பூகம் முப்பேர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 5/3
கோகிலம் பல்லி கள் குயில் ஆம் நாகு இளமை சங்கு ஆம் கூகை ஓர் செடி புள் ஆம் பூகம் முண்டம் கமுகு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 8/1

 TOP
 
    பூங்கணைக்கிழத்தி (1)
கவுரி அறம்வளர்த்தசெல்வி சுந்தரி ஈச்சுரி பூங்கணைக்கிழத்தி அருளேழை சாம்பவிதாய் வாலை - 1.தெய்வப்பெயர்:1 4/2

 TOP
 
    பூங்கு (1)
சால நனி கதழ்வு அதிகம் விதப்பு ஊகம் பெருகல் தவம் புதுமை மதம் பிறங்கல் இறப்பு அமலை பூங்கு
  சீலம் மிகை அலை பூரிப்பு ஆன்றல் கூர் கழுமல் சிறப்பு உருத்தல் பொங்கலின்பேர் பெருமை மா தடம் கொன் - 7.பண்புப்பெயர்:7 4/1,2

 TOP
 
    பூங்கொட்டைஅதாம் (1)
இறும்பு இராசிலம் தளம் தாமரைப்பூ ஆம் பொகுட்டே ஏற்று உருட்பூ கன்னிகை பூங்கொட்டைஅதாம் அதின்காய் - 4.மரப்பெயர்:4 27/1

 TOP
 
    பூங்கொத்து (3)
தகு கண்ணி துணர் தொத்து மஞ்சரி பூங்கொத்து ஆம் தாது மகரந்தம் கேசரம் கொங்கு மலர்த்தூள் - 4.மரப்பெயர்:4 31/3
மஞ்சரியே பூங்கொத்து மாலை தளிர் ஆகும் மஞ்சு பூண் வனப்பு வலி முகில் யானை முதுகு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 23/3
துத்தம் இசை மருந்து பால் வயிறு நெய் யாழ்நரம்பு ஆம் தொத்து அடிமை பூங்கொத்து ஆம் தத்தை அவ்வை கிளி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 59/2

 TOP
 
    பூச்சி (1)
கரித்த கண்டல் முண்டகமே பூச்சி முள்ளி பேர் ஆம் கல்லாரம் நீர்க்குளிரி ஆம் நெட்டி கிடைச்சு - 4.மரப்பெயர்:4 25/3

 TOP
 
    பூச்செடி (1)
அலகு ஒளி நெற்கதிர் சோகி எண் மாறு நுளம்பு ஆம் அலரி அழகு இரவி குளம் கண் வரி பூச்செடி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 110/2

 TOP
 
    பூசம் (3)
கொடிறு குருநாள் வண்டு தைமதி பாற்குடங்கர் குளம் பூசம் பாம்பு ஆயில் கவை பணிநாள் நான்கும் - 1.தெய்வப்பெயர்:1 42/1
கொடிறு பூசம் கதுப்பு ஆம் படிறு பொய்யே கனவு ஆம் கொடி துவசம் காக்கை வில் ஆம் குடி குலம் ஊர் நுதல் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 27/1
வண்டு வளை அளி பூசம் அம்பு புரி வெண்மை மாசு வலம்புரி மகளிராடல் ஒன்பான்பேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 46/2

 TOP
 
    பூசல் (4)
ஐந்தாகும் மலயசம் சந்து ஆரமே சந்தம் ஆகுதி தண்வாசி இலேபனம் பூசல் சாந்தம் - 4.மரப்பெயர்:4 1/2
பேர்ப்பு அரற்றலே கறங்கலொடு தமரம் பூசல் பேரோசை திமிலம் குமிலம் கலகம் குமுதம் - 8.ஒலிபற்றியபெயர்:8 17/2
மறன் இகல் சல்லிகம் பூசல் ஆர்ப்பு அமர் தெவ்வு உடன்றல் மலைப்பு இரணம் தாக்கு கோறல் கிடைத்தல் ஞாட்பு ஏற்றல் - 9.செயல்பற்றியபெயர்:9 24/1
ஒற்றல் உடுத்தலின்பேர் ஆம் கொட்டலே சாத்தலுடன் சதுர்த்தல் அப்பலின்பேர் மூன்றாகும் பூசல்
  தெற்று புலர்த்துதல் வரித்தல் இரண்டாகும் வைத்தல் தெறுத்தல் நெரித்தலின்பேரும் இரண்டாகும் இறுக்கல் - 9.செயல்பற்றியபெயர்:9 29/1,2

 TOP
 
    பூசனைப்பேர் (1)
வழிபடல் அற்சனை ஆராதனையே பூசனைப்பேர் மகம் யாகம் கிருது ஓமம் இட்டி எச்சம் யூபம் - 9.செயல்பற்றியபெயர்:9 9/1

 TOP
 
    பூசுபொருள்பேர் (1)
புலி கலவை வட்டிகை பீதமும் நான்கு சாந்து ஆம் பூசுபொருள்பேர் அங்கராகம் ஆம் கூலம் - 6.பல்பொருள்பெயர்:6 7/3

 TOP
 
    பூசுரர் (1)
இருபிறப்போர் பூசுரர் நூலோர் ஆதிவருணர் எரிவளர்ப்போர் விப்பிரர் ஆய்ந்தோர் சடங்கர் பார்ப்பார் - 2.மக்கள்பெயர்:2 3/2

 TOP
 
    பூசை (2)
ஓதி விடருகம் கடுவன் வெருகு அலவன் பூஞை ஒண் பூசை மார்ச்சாலன் மண்டலி விலாளம் - 3.விலங்கின்பெயர்:3 16/1
பலம் நிறை காய் கனி சேனை ஆதாயம் ஐந்தாம் பலி பூசை பிச்சை திருநீறு தெய்வவுணவு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 110/1

 TOP
 
    பூஞை (1)
ஓதி விடருகம் கடுவன் வெருகு அலவன் பூஞை ஒண் பூசை மார்ச்சாலன் மண்டலி விலாளம் - 3.விலங்கின்பெயர்:3 16/1

 TOP
 
    பூட்கை (4)
கோப்பின் விலங்கரசு கண்டீரவம் ஆளி சீயம் கோளரி ஐமுகன் பஞ்சானனம் பூட்கை வயமா - 3.விலங்கின்பெயர்:3 1/2
தீப்பொறிநேர் முடங்குளையே வயப்புலி மூவேழும் சிங்கப்பேர் ஆம் பூட்கை வாளமே யாளி - 3.விலங்கின்பெயர்:3 1/3
மந்தகுணி மந்தமா கோட்டி கரி கருணி மருண்மா குஞ்சரம் பூட்கை மாதங்கம் நால்வாய் - 3.விலங்கின்பெயர்:3 3/2
தெருட்டலுடன் வருட்டலும் வற்புறுத்தல் ஆம் வரன்றல் தெள்ளல் கொழித்திடல் ஆகும் பூட்கை மேற்கோள் ஆம் - 9.செயல்பற்றியபெயர்:9 19/1

 TOP
 
    பூட்சி (1)
மாகனம் களேபரம் பூதியம் பிண்டம் சடலம் வடிவு ஆம் காத்திரம் பூட்சி கடம் புதை சட்டகமே - 2.மக்கள்பெயர்:2 46/3

 TOP
 
    பூட்டதிகம் (1)
பூட்டதிகம் இளங்காடு ஆம் கரிகாடு பொச்சை பொதிசுரமும் பொரிகாடு ஆம் பொச்சை வேலியின்பேர் - 4.மரப்பெயர்:4 34/3

 TOP
 
    பூட்டு (3)
பூட்டு அரி தாளிப்பு ஆவி நறை தூமம் ஒன்பான் புகையுறை ஒட்டுறை நிராலம்பனம் மூன்று அரிதே - 1.தெய்வப்பெயர்:1 25/4
அனகன்வில் பினாகம்அதாம் பூரி தொடை நாரி ஆவம் வடம் குண பூட்டு சிஞ்சினி நாண் நரம்பும் - 6.பல்பொருள்பெயர்:6 18/3
கயில் பிடரி அணி பூட்டு ஆம் வியல் பெருமை விரிவு ஆம் கையிடம் ஒப்பனை தங்கை குணம் படை கைசிறிது ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 81/2

 TOP
 
    பூட்டை (1)
ஆம்பியே பூட்டை காராம்பி கிழார் அரி ஆம் ஆடு ஊசல் உஞ்சல் ஊஞ்சலின்பேர் ஆம் பெரிய - 6.பல்பொருள்பெயர்:6 42/1

 TOP
 
    பூடணப்பேர் (1)
கருது பணி இழை அணி ஆபரணம் பூடணப்பேர் கயில் மடையே கடைப்பூண் ஆம் மயில் அனைய நிதியே - 6.பல்பொருள்பெயர்:6 29/4

 TOP
 
    பூண் (7)
ஊனம்இல் கொம்பு ஆம் பூண் கிம்புரி ஆகும் பட்டம் ஓடை ஆம் செவிஅடி சூழிகை கதுப்பு ஆம் கடமே - 3.விலங்கின்பெயர்:3 5/4
பாதசாலம்தான் பூண் ஆரம் சங்கிலி மதாணி நகை வள்ளி கலன் பண்டம் - 6.பல்பொருள்பெயர்:6 29/3
நிதிசெய் கதலிகை தூக்கம் தொங்கலின்பேர் தாங்கி நெறி வயிரம் கோளகை கிம்புரி பூண் என்றாகும் - 6.பல்பொருள்பெயர்:6 30/1
மஞ்சரியே பூங்கொத்து மாலை தளிர் ஆகும் மஞ்சு பூண் வனப்பு வலி முகில் யானை முதுகு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 23/3
பணி கருவி அரவு தொழில் பூண் வார்த்தை பணிவு ஆம் பணை வயல் வேய் பரிப்பந்தி பருத்தல் மரக்கொம்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 41/2
கம்பலை துன்பொலி நெருக்கம் அச்சம் நூற்பா ஆம் கம்பம் நடுக்கம் தூண் ஆம் கிம்புரி பூண் முடி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 77/2
பாம்பு வரப்பு அரவு ஒலி நீர் அடைப்பு ஒழுங்கு ஐம்பேராம் பரும் தாம்பு மடை மணி பூண் கயிறு நான்காகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 78/3

 TOP
 
    பூண்கொள்கலம் (1)
கற்றாய் பீடிகை கடிப்பு கோடிகம் துமாணம் கண்டிகை காண்டமும் பூண்கொள்கலம் ஆம் அம்மானை - 6.பல்பொருள்பெயர்:6 34/2

 TOP
 
    பூண்டி (1)
பாடி புரம் பூண்டி வேசனம் நியமம் பாக்கம் பதி நகர் வைப்பு உறையுள் குறும்பு அகரம் நொச்சி வேலி - 5.இடப்பெயர்:5 5/3

 TOP
 
    பூண்முலையே (1)
துலக்கு மடி வயின் அகடு மோடு குக்கி சடரம் துத்தவமும் சுத்தும் வயிறு ஆகும் பூண்முலையே - 2.மக்கள்பெயர்:2 48/4

 TOP
 
    பூணி (1)
கன்றாத நரை இறால் சே புல்லம் பூணி காளை குண்டை விடை பாண்டில் புங்கவம் கோ பதி ஆன் - 3.விலங்கின்பெயர்:3 10/1

 TOP
 
    பூணு (1)
பூணு பசும்பிடி தகரம் பச்சிலை தமாலம் புல்லகண்டம் கழை வேழம் இக்கு இரசதாளி - 4.மரப்பெயர்:4 17/2

 TOP
 
    பூணூல் (1)
நல்ல தோளணி ஆம் கங்கணம் தொடி கண்டிகையே நல் கடகம் ஆம் பூணூல் உபவீதம் பிடியே - 6.பல்பொருள்பெயர்:6 27/4

 TOP
 
    பூத்த (3)
பொன் பூத்த வெள்ளிப்பொருப்பனும் மனோன்மணியும் - 0.காப்பு:0 1/1
முன் பூத்த வேழமுகத்தானே இன் பூத்த - 0.காப்பு:0 1/2
முன் பூத்த வேழமுகத்தானே இன் பூத்த
  பூவணியல் போல பொதிகைநிகண்டை பாட - 0.காப்பு:0 1/2,3

 TOP
 
    பூத்தட்டு (1)
சிற்றாலவட்டம் வீசனம் பீலி விசிறி சிறிய சாந்தாற்றியும் ஆம் கோடிகம் பூத்தட்டு ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 34/1

 TOP
 
    பூத்தல் (2)
முயற்சிஅதாம் பேராண்மை அருமையிடல் ஓங்கி முடித்தல் ஊராண்மைஅதாம் உண்டாதல் பூத்தல்
  பயத்தலும் ஆம் பிறகிடலே பிறக்கிடல் பின்றலும் ஆம் பாதீடு பெய்தல் அளித்திடல் செறித்தல் மூன்றாம் - 9.செயல்பற்றியபெயர்:9 16/2,3
படுதல் ஒலி சொலல் பூத்தல் இன்மை உண்டாதலும் ஆம் படு மரத்தின்குலை கள்ளும் நீர்நிலை நன்மையின் பேர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 31/2

 TOP
 
    பூத்திடும் (1)
பூத்திடும் நாடகி நிருத்தி நடனி அலங்காரி போர்மையள் ஆம் கூத்திகள்பேர் வந்தி கவி கற்றோன் - 2.மக்கள்பெயர்:2 23/2

 TOP
 
    பூத்தும்பி (1)
நாள் அலா பூத்தும்பி பிறக்கொடி சுரை ஆம் கொற்றான் நந்தை என்றாம் திரிபுரி சாறடைப்பேர் மஞ்சிகமே - 4.மரப்பெயர்:4 19/1

 TOP
 
    பூதநாதன் (1)
அரவன் ஈசானன் அழலாடி அண்ணல் பெருமான் அந்திவண்ணன் கண்ணுதல் ஐம்முகன் பூதநாதன்
  வரன் அனகன் புனிதன் முகுந்தாபங்கன் பகவன் மத்தன் அத்தன் தத்துவாதீசன் மறைமுதலே - 1.தெய்வப்பெயர்:1 2/3,4

 TOP
 
    பூதப்பேர் (1)
பாரிடம் சாதகம் சாதம் கிருத்திமமே கூளி பலிகவரும் குறள் ஆறும் பூதப்பேர் ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 23/1

 TOP
 
    பூதம் (4)
தருமன்நாள் பூதம் இவை பதினாலும் அதற்காம் சாற்று அளகு இறால் ஆரல் வாணன் அங்கி அளக்கர் - 1.தெய்வப்பெயர்:1 40/3
ஏமுறும் ஆலம் பூதம் ஆலின்பேர் பத்தாம் இறலி சுவி இரத்தி இந்திரியும் இத்திப்பேர் ஆம் - 4.மரப்பெயர்:4 3/3
பூதம் ஐம்பூதம் குறள் ஆல் இறப்பு உயிர் நாள் சுசி ஆம் போதகமே புணை இளமை யானையின்கன்று அறிவு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 53/2
கிருத்திமம் பொய் தொழில் பூதம் தோல் என நாற்பேராம் கிருட்டி ஓரீற்றாவும் பன்றியும் என்று இரண்டாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 94/2

 TOP
 
    பூதமும் (1)
சாதி குலம் சண்பகம் ஓர் தரு பிரம்பு கள் ஆம் சாதகம் புள் பயிற்சி முறி செனனம் பூதமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 54/2

 TOP
 
    பூதமே (1)
புனிதம் பாவனர் தூய்து வேத்தியம் தூய் சவுசம் பூதமே பவுத்திரமும் சுசியின்பேர் சாந்தம் - 7.பண்புப்பெயர்:7 18/2

 TOP
 
    பூதர் (1)
திடர் வியவர் பூதர் விறலோர் மீளி வண்டர் திறலோர் அண்ணியரே சன்னத்தர் ஆயுத்தர் - 2.மக்கள்பெயர்:2 30/2

 TOP
 
    பூதரம் (3)
இருளி பூதரம் முந்தூழ் போத்திரி வராகம் எறுளி சூகரம் மோழல் இரணி கிடி கிருட்டி - 3.விலங்கின்பெயர்:3 12/2
துருமம் பூதரம் தாரு பொதும்பர் பொங்கர் பதினேழ் சொல்லும் மரப்பேர் பொழில் நந்தனவனம் உய்யானம் - 4.மரப்பெயர்:4 28/2
இரவி பொருப்பு அடுக்கல் பூதரம் சாரல் பொச்சை இறும்பு குறும்பொறை திகிரி சுரும்பு பொகுட்டு அசலம் - 5.இடப்பெயர்:5 15/2

 TOP
 
    பூதலம் (1)
குவலயம் மாதிரம் தரை பூதலம் திணை பூதியமும் குவ்வும் அறுபத்தாறும் பூமியின்பேர் நாடே - 5.இடப்பெயர்:5 4/4

 TOP
 
    பூதவமும் (1)
மருதின்பேர் அருச்சுனமும் பூதவமும் ஆகும் வாசந்தி குருக்கத்தி நாகரி மாதவி பேர் - 4.மரப்பெயர்:4 5/1

 TOP
 
    பூதன் (1)
கானுறு குத்திரதேவன் சாதவாகனத்தான் கடல்வண்ணன் காரி தவளக்கண்ணன் பூதன்
  ஏனைய கோழிக்கொடியோன் பூரணை புட்கலை சேர் இறை யோகி தண்டதரன் அறங்காப்பான் கையன் - 1.தெய்வப்பெயர்:1 10/2,3

 TOP
 
    பூதி (4)
அதம் அதோகதி பிலம் பாதாளம் பாதலம் ஆம் அளறு கும்பி சிறை இருள் ஆவிரம் ஊழல் பூதி
  புதவு சுவப்பிரம் நரகம் திகிரி துர்க்கம் நிரையம் புலவு நாரகம் பவர்க்கம் அள்ளல் இவை நரகு ஆம் - 5.இடப்பெயர்:5 2/1,2
அருவருப்பு துற்கந்தம் பூதி ஆம் பயிர்ப்போடு அருவருப்பு குச்சிதம் ஆம் தூவும் மன்னும் இழிபே - 7.பண்புப்பெயர்:7 27/4
கொடுமையின்பேர் பூதி கண்டம் உறைப்பு வஞ்சம் கோரம் கோடணை உக்கிரம் கலாம் கடுமை சடம் பத்தும் - 7.பண்புப்பெயர்:7 29/1
பூதி செல்வம் நீறு அறிவு சேறு துகள் நரகு ஆம் புதை கணைக்கட்டு உடல் புதுமை நிறை புதைத்தல் மாதே - 10.ஒருசொல்பல்பொருள்:10 54/4

 TOP
 
    பூதியம் (3)
மாகனம் களேபரம் பூதியம் பிண்டம் சடலம் வடிவு ஆம் காத்திரம் பூட்சி கடம் புதை சட்டகமே - 2.மக்கள்பெயர்:2 46/3
புரணி பூதியம் ஊழ்த்தல் மாங்கிஷப்பேர் குருதி புண்ணீர் சோணிதம் உதிரம் செம்பால் புலானீர் - 2.மக்கள்பெயர்:2 58/2
சூதன் முனி சாரதி ஆம் பூதியம் பார் உடல் ஆம் சூதம் மா வண்டு இரதம் தோற்றல் பாரதம் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 53/3

 TOP
 
    பூதியமும் (1)
குவலயம் மாதிரம் தரை பூதலம் திணை பூதியமும் குவ்வும் அறுபத்தாறும் பூமியின்பேர் நாடே - 5.இடப்பெயர்:5 4/4

 TOP
 
    பூதை (1)
அத்திரம் சாயகம் புங்கம் தோணி வண்டு கதிரம் ஆசுகம் பத்திரி பூதை ககம் விசிகம் பல்லம் - 6.பல்பொருள்பெயர்:6 19/2

 TOP
 
    பூந்தட்டு (1)
படலிகை ஓர் மணி வட்டம் பீர்க்கு பூந்தட்டு ஆம் படலை பரி மணி மாலை படர்வு ஒருகண்பறை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 30/3

 TOP
 
    பூந்தட்டும் (1)
கோடிகமே பூந்தட்டும் சீலையும் ஆம் இருபேர் குடம்பை முட்டை கூடு ஆகும் உடன்றல் சினம் போர் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 32/3

 TOP
 
    பூந்தளிர்ப்பேர் (1)
எய்யாத மஞ்சரி பல்லவமும் பூந்தளிர்ப்பேர் இலிர்த்தல் சிலிர்த்தலும் துளிர்த்தல் கிளைத்தல் குழைத்தலுமே - 4.மரப்பெயர்:4 30/3

 TOP
 
    பூந்தாது (1)
கிளர் கிரணம் கோட்டுமலர் கிளர்தல் பூந்தாது ஆம் கிளை கிளைத்தல் மூங்கில் சுற்றம் ஏழிசையிலோர்பேர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 134/1

 TOP
 
    பூந்தாதும் (1)
கேசரமே மகிழ்மரமும் பூந்தாதும் ஆகும் கேசமே மயிர் கவுள் ஆம் கீசகம் வேய் குரங்கு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 20/2

 TOP
 
    பூந்தெரியல் (1)
புனை கோதை சுக்கை வாசிகை தொங்கல் ஒலியல் பூந்தெரியல் பிணையல் இலம்பகம் துடரே சுருங்கல் - 4.மரப்பெயர்:4 36/2

 TOP
 
    பூந்தோட்டம் (1)
அரி துடவை பூந்தோட்டம் மரச்செறிவு ஆராமம் அடவி உத்தியானம் வனம் உபவனம் தண்டலை கா - 4.மரப்பெயர்:4 28/3

 TOP
 
    பூநாகம் (1)
நிலவேர் கூழ் நன்னாகம் பூநாகம் ஆகும் நிறை கறையான் சிதல் செல் ஆம் உழு உசு என்றாகும் - 3.விலங்கின்பெயர்:3 34/1

 TOP
 
    பூநிதி (1)
புண்டரிகம் நளினம் கோகனகம் மாலுந்தி பூநிதி பங்கயம் வனசம் அம்புசம் வாரீசம் - 4.மரப்பெயர்:4 26/2

 TOP
 
    பூப்பு (1)
சூதகம் ஆசூசம் மின்னார் பூப்பு சூதிடம் ஆம் தூது மணல் சந்து உரை ஆம் மாது இடைச்சொல் பெண் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 55/2

 TOP
 
    பூப்பொதுப்பேர் (1)
அகலும் அலர் தாமம் இணர் துணர் புட்பம் குசுமம் மலர் போது சுமனசம் தார் வீயும் பூப்பொதுப்பேர்
  தகு கண்ணி துணர் தொத்து மஞ்சரி பூங்கொத்து ஆம் தாது மகரந்தம் கேசரம் கொங்கு மலர்த்தூள் - 4.மரப்பெயர்:4 31/2,3

 TOP
 
    பூபதியே (1)
நேசமுடியோன் காந்தன் தலைவன் தாட்டிகனே நிருபன் நாயகன் கொழுநன் விடலை பூபதியே - 2.மக்கள்பெயர்:2 6/4

 TOP
 
    பூபன் (2)
பதி முதல்வன் புரவலன் ஆதிபன் தீரன் பூபன் பதிதன் காவலன் மகிபன் மீளியொடு காளை - 2.மக்கள்பெயர்:2 7/1
பூபன் இறையோன் குசன் ஆம் சாபம் வில்லு சபிப்பு ஆம் போற்று தபனன் பருதி செந்தீயும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 70/3

 TOP
 
    பூபாலர் (1)
உழவர் பூபாலர் குவளைத்தாமர் சதுர்த்தர் உயிர்வளர்ப்பார் வேளாளர் அயன்பதத்திலுதித்தோர் - 2.மக்கள்பெயர்:2 15/2

 TOP
 
    பூபாலன் (1)
ஈசன் நரபதி லோலன் கொற்றவன் பார்த்திபன் மன் ஏந்தல் ஆண்டகை துரை பூபாலன் அண்ணல் வேந்தன் - 2.மக்கள்பெயர்:2 6/2

 TOP
 
    பூம் (1)
பூம் படிமக்கலன் ஆடி முகிர்தம் ஒளிவட்டம் புளகம் அத்தம் தெரிசனம் கண்ணாடியின்பேர் கூறே - 6.பல்பொருள்பெயர்:6 42/4

 TOP
 
    பூமகள்கோன் (1)
பூவளந்தான் நவநீதசோரன் நிரைமேய்த்தோன் பூமகள்கோன் திருமார்பன் உலகுண்டோன் வலவன் - 1.தெய்வப்பெயர்:1 13/1

 TOP
 
    பூமகன் (1)
ஆன மனோசன் கரும்பன் அங்கசன் கந்தற்பன் அனங்கன் பூமகன் சேய் சித்தசன் பஞ்சபாணன் - 1.தெய்வப்பெயர்:1 17/3

 TOP
 
    பூமயிலே (1)
வாமம் இடப்பால் அழகு துடை ஒளி சிந்துவும் ஆம் வாமனம் திக்கானை குறள் நூல் ஆம் பூமயிலே - 10.ஒருசொல்பல்பொருள்:10 74/4

 TOP
 
    பூமன் (2)
அறிவோன் அங்காரகன் வக்கிரன் பவுமன் குருதி அரத்தன் நிலமகன் அனலன் குசன் பூமன் ஆரல் - 1.தெய்வப்பெயர்:1 35/1
பூமன் இறை அயன் குசன் ஆம் ஓமம் மகம் மருந்து ஆம் பூமானே இலக்குமியும் நாயகனும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 75/1

 TOP
 
    பூமான் (2)
அன்னியமின் மருமகன்பேர் காளை மகன் மாந்தன் ஆடவன் பூமான் குமரன் அவன் புருடன் ஆடூஉ - 2.மக்கள்பெயர்:2 41/3
ஒழித்த பசு பிரகிருதி சதசத்து சகலன் உயிர் பூமான் அவ்வியத்தன் உள்ளம் ஆன்மாவே - 2.மக்கள்பெயர்:2 59/4

 TOP
 
    பூமானே (1)
பூமன் இறை அயன் குசன் ஆம் ஓமம் மகம் மருந்து ஆம் பூமானே இலக்குமியும் நாயகனும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 75/1

 TOP
 
    பூமி (5)
தகர் விலங்கின்ஆண் உடைதல் ஆடு என முப்பெயர் ஆம் சகம் பூமி ஆடு இரண்டாம் நகம் தரு வெற்பு உகிர் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1/3
பாரதி நாமகள் புணை ஆம் பூரணி காய் இலவு ஆம் பார் ஆவாரம் பூமி கடல் ஆம் நாரியரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 102/4
புலம் அறிவு பூமி வயல் ஐம்புலன் பொன் இடம் ஆம் புலி சாந்து புலி ஆகும் பலிதம் நரை பலமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 109/4
வேலன் வெறியாட்டாளன் குமரன் இருபெயராம் வேலாவலையம் பூமி கடல் இரண்டுபெயராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 119/1
தாலமே பனை பூமி உண்கலம் நாக்கு ஆகும் தலையலே மழைபெய்துவிடலொடு நீர்த்துளி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 121/1

 TOP
 
    பூமிநாள் (1)
புனல்தினமே உடைகுளம் முற்குளம் ஆம் பூராடம் பூமிநாள் கூவல் மணி முடி ஆனி ஆடி - 1.தெய்வப்பெயர்:1 44/3

 TOP
 
    பூமியின்பேர் (1)
குவலயம் மாதிரம் தரை பூதலம் திணை பூதியமும் குவ்வும் அறுபத்தாறும் பூமியின்பேர் நாடே - 5.இடப்பெயர்:5 4/4

 TOP
 
    பூமொட்டு (1)
முகரி பொன் ஓர் ஆறு ஆகும் சகி தோழி பொறை ஆம் முகை திரள் பூமொட்டு மிடா மூன்று என ஆகினவே - 10.ஒருசொல்பல்பொருள்:10 6/4

 TOP
 
    பூய்த்தல் (1)
உடற்றல் சொலித்திடம் ஆம் வீசுதல் விலங்கல் இடுதல் ஓச்சல் எறிதலின்பேர் ஆம் பூய்த்தல் பிய்த்தல் காணே - 9.செயல்பற்றியபெயர்:9 5/4

 TOP
 
    பூர்ப்பம் (1)
முதுமுறை தொன்று ஊழ் புராதனம் பூர்ப்பம் முந்தை மூரி தொண்டு பண்டு தொல்லை ஒல்லை பூருவம் ஆம் - 7.பண்புப்பெயர்:7 22/2

 TOP
 
    பூரட்டாதிப்பேர் (1)
பெண்களில் பூரட்டாதிப்பேர் நீபம் முரசு பிற்கொழுங்கோல் அரசு அறிவன் உத்திரட்டாதிப்பேர் - 1.தெய்வப்பெயர்:1 45/3

 TOP
 
    பூரணம் (1)
குறைவுஇல் பூரணம் திளைத்தல் கமம் தெவிட்டல் மலிதல் குளிர் ததும்பல் பரம் துவன்றல் கெழு திகழ்தல் ஆர்தல் - 7.பண்புப்பெயர்:7 8/1

 TOP
 
    பூரணர் (1)
படர் மறவர் வாளுழவர் மள்ளர் கதர் வயவர் படைத்தலைவர் பூரணர் கூளியர் மிண்டர் துண்டர் - 2.மக்கள்பெயர்:2 30/1

 TOP
 
    பூரணி (2)
பூரணி சன்மலி பொங்கர் இலவின்பேர் தாளி புற்பதி பட்டிகை கள்ளன் போந்து புல்லு நெடுவை - 4.மரப்பெயர்:4 6/2
பாரதி நாமகள் புணை ஆம் பூரணி காய் இலவு ஆம் பார் ஆவாரம் பூமி கடல் ஆம் நாரியரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 102/4

 TOP
 
    பூரணை (2)
ஏனைய கோழிக்கொடியோன் பூரணை புட்கலை சேர் இறை யோகி தண்டதரன் அறங்காப்பான் கையன் - 1.தெய்வப்பெயர்:1 10/3
புகு நந்தை பத்திரையே சயையுடனே இருத்தை பூரணை ஆம் திதி பக்கம் ஆம் இருக்கம் தாரை - 1.தெய்வப்பெயர்:1 39/3

 TOP
 
    பூரணைப்பேர் (1)
அன்பு அமரார குகு ஆம் அமவாசி சுடர்க்கூட்டு அமையும் ஆம் பவ்வம் உவா பூரணைப்பேர் வருமே - 1.தெய்வப்பெயர்:1 48/4

 TOP
 
    பூரணைரா (1)
வன்பின் அந்தகாரம் அரி கரு திமிரம் மாயை மாசும் ஆம் பூரணைரா சிலிவாலி ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 48/3

 TOP
 
    பூரம் (3)
படியும் வேட்டுவன் ஒன்பான் மகம் எலி நாவிதனே பகவதிநாள் கணை துற்கை இடைச்சனியும் பூரம்
  கடையில்வருசனி நெய்த்தோர் புயல்நாள் சூரியன்நாள் காணுந்தி பாற்குனி பங்குனி ஏழ் உத்திரமே - 1.தெய்வப்பெயர்:1 42/3,4
தலம் இலை பாரம் கையும் ஆம் எலி பூரம் எலி ஆம் தலை இடம் விண் சிரம் முதல் ஆம் கலகம் ஒலி துயர் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 108/1
நாவிதன் மஞ்சிகன் பூரம் கார்த்திகை முப்பேராம் நவ்வி மான் அழகு தோணியும் ஆம் ஓவியமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 128/4

 TOP
 
    பூரவாகனி (1)
சுயபனுவலாள் பூரவாகனி காயத்ரி சொல் சாவித்திரி இசைமான் பிராமி நாமானே - 1.தெய்வப்பெயர்:1 16/4

 TOP
 
    பூராடம் (1)
புனல்தினமே உடைகுளம் முற்குளம் ஆம் பூராடம் பூமிநாள் கூவல் மணி முடி ஆனி ஆடி - 1.தெய்வப்பெயர்:1 44/3

 TOP
 
    பூரி (2)
வித்தம் ஆடகம் ஈகை பொருள் பூரி செங்கொல் வெறுக்கை அரி பீதம் சாமீகரம் சாம்புனதம் - 6.பல்பொருள்பெயர்:6 1/3
அனகன்வில் பினாகம்அதாம் பூரி தொடை நாரி ஆவம் வடம் குண பூட்டு சிஞ்சினி நாண் நரம்பும் - 6.பல்பொருள்பெயர்:6 18/3

 TOP
 
    பூரிகம் (1)
பூரிகம் அண்டகை தோய்வை அடை நோலை யூபம் புது கஞ்சம் லட்டுகம் மோதகங்கள் அப்பவகையே - 6.பல்பொருள்பெயர்:6 12/4

 TOP
 
    பூரிப்பு (1)
சீலம் மிகை அலை பூரிப்பு ஆன்றல் கூர் கழுமல் சிறப்பு உருத்தல் பொங்கலின்பேர் பெருமை மா தடம் கொன் - 7.பண்புப்பெயர்:7 4/2

 TOP
 
    பூரிமாவோடு (1)
அயர் உள்ளான் தூங்கி சம்பு சிருகாலன் சுண்டன் ஆக்கினிகிதம் பூரிமாவோடு இ நரியே - 3.விலங்கின்பெயர்:3 14/4

 TOP
 
    பூரியம் (3)
கேடகம் நிகாயம் சோபணம் முட்டம் வசதி கிளர் சேரி பூக்கம் பூரியம் வாழ்க்கை குடியே - 5.இடப்பெயர்:5 5/4
வகுத்த குறுந்தெரு மறுகு ஆம் பக்கணம் சிரேணி வாடை பூரியம் சேடி தெரு ஞெள்ளல் வீதி - 5.இடப்பெயர்:5 14/2
பத்திரம் பூரியம் காரம் சாதகும்பம் புதையல் பண்டம் காங்கேயம் முதல் உறை வசு மாடு அனந்தம் - 6.பல்பொருள்பெயர்:6 1/2

 TOP
 
    பூரு (1)
பிரு நுதல் புரூரம் பீர் புதல் புதடி பூரு பீரு குடி புருவம்அதாம் கேள்வி அள்ளு காது - 2.மக்கள்பெயர்:2 53/2

 TOP
 
    பூருவம் (4)
இது திக்கு ஆம் கிழக்கு பூருவம் குணம் பிராசி இந்திரியே குணக்கு இரவி யோனி கீழ்த்திசையே - 5.இடப்பெயர்:5 2/4
தலை முதல் அக்கிரம் மோனை பூருவம் முன் ஆதி தாள் எழுவாய் அடி ஆகும் கடை முடிவு ஈறு இறுதி - 7.பண்புப்பெயர்:7 9/3
முதுமுறை தொன்று ஊழ் புராதனம் பூர்ப்பம் முந்தை மூரி தொண்டு பண்டு தொல்லை ஒல்லை பூருவம் ஆம் - 7.பண்புப்பெயர்:7 22/2
போர் சதையநாள் அமர் நெல்சும்மையும் முப்பேராம் பூருவம் முன் கிழக்கும் ஆம் ஈரம் அன்பு குளிர்வு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 100/2

 TOP
 
    பூவசியர் (1)
தருமமன்னர் செட்டியர் கோவர்த்தனர் சிலேட்டை தனவசியர் கோவசியர் பூவசியர் பொதுப்பேர் - 2.மக்கள்பெயர்:2 14/3

 TOP
 
    பூவணியல் (1)
பூவணியல் போல பொதிகைநிகண்டை பாட - 0.காப்பு:0 1/3

 TOP
 
    பூவயிரம் (1)
பூவயிரம் குலிசமும் ஆம் குயம் கொடுவாள் அரிவாள் புள்ளமும் ஆம் அசி நவிர் நாந்தகம் கட்கம் கோணம் - 6.பல்பொருள்பெயர்:6 20/2

 TOP
 
    பூவல் (2)
ஊற்றின்பேர் உறவி ஆம் கூவலே கூவமொடு பூவல் அசும்பு கிணறு ஆம் என சொல்வாரே - 5.இடப்பெயர்:5 20/4
அருணம் சேய் சேப்பு அரத்தம் செக்கர் துவர் சோணம் அரக்கு பாடலம் பூவல் சேது துப்பு அராகம் - 7.பண்புப்பெயர்:7 12/1

 TOP
 
    பூவளந்தான் (1)
பூவளந்தான் நவநீதசோரன் நிரைமேய்த்தோன் பூமகள்கோன் திருமார்பன் உலகுண்டோன் வலவன் - 1.தெய்வப்பெயர்:1 13/1

 TOP
 
    பூவாக்காய்க்கும்மரம் (2)
பலிதம்இல் பூவாக்காய்க்கும்மரம் கோளி வானப்பத்தியம் ஆம் உலர்ந்தமரம் வானம் என பேர் ஆம் - 4.மரப்பெயர்:4 33/1
கோள் வலி பொய் கொலை கிரகம் குணம் கொள்கை ஊறு ஆம் கோளி கொள்வோன் கொழிஞ்சி பூவாக்காய்க்கும்மரம் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 139/2

 TOP
 
    பூவாளி (1)
கானிறை பூவாளி கிளிப்பரியன் இருள்களிற்றோன் கடல்முரசன் காமன் மனோபவன் மதனன்பேரே - 1.தெய்வப்பெயர்:1 17/4

 TOP
 
    பூவிதழ் (2)
மலர் தகடு தோடு மடல் பூவிதழ் ஆம் பிஞ்சு வடு காய் தீவிளியும் ஆம் பலன் கனியே பழம் ஆம் - 4.மரப்பெயர்:4 32/2
தளம் படை பூவிதழ் சாந்தம் சமதலம் தாழியும் ஆம் தளை விலங்கு துடர்ச்சி சிலம்பு ஆண்மயிர் தாள் ஐந்தாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 133/3

 TOP
 
    பூவிருந்தோன் (1)
பூவிருந்தோன் அனக்கொடியோன் கலைமகள்மணாளன் போதன் இறை சதன் பிதாமகன் பிரமன்பெயரே - 1.தெய்வப்பெயர்:1 15/4

 TOP
 
    பூவின்இதழ் (1)
மடம் முனி இல் பேதமை ஆம் குடை கவிகை குடைவு ஆம் மடல் உலா மடல் பூவின்இதழ் பனைஏடு ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 26/3

 TOP
 
    பூவும் (1)
கலத்த பகம் யோனி குய்யம் பெண்குறி ஆம் பூவும் கற்பபுரம்தானும் ஆங்காம் இலிங்கம் கோசம் - 2.மக்கள்பெயர்:2 48/1

 TOP
 
    பூவை (4)
சாரிகையே பூவை நாகுணவாய்ப்புள் ஆகும் சகடம் விகங்கம் குலிங்கம் புலிங்கமும் ஊர்க்குருவி - 3.விலங்கின்பெயர்:3 26/3
கதகமே சில்லம் இல்லம் தேறு ஆகும் பூவை காசை அச்சி அஞ்சனி நாற்பெயர் காயாமரமே - 4.மரப்பெயர்:4 4/4
சாரிகை சங்கொடு பூவை சுழல்காற்று மூன்றாம் சாபம் வரையாடு புள் ஆம் மருதம் மரம் திணை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 98/2
புவனம் நீர் உலகம் ஆம் நுவணை நுண்மை மா ஆம் பூவை புள்ளு காயா ஆம் சீவன் உயிர் குரு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 123/1

 TOP
 
    பூழான் (1)
கட்குருகு பகம் வலாகமும் கொக்கின்பேர் ஆம் காதம்பம் பூழான் கானாங்கோழிப்பேர் ஆம் - 3.விலங்கின்பெயர்:3 28/2

 TOP
 
    பூழி (3)
அகற்று திருமுற்றம் இவை புரவிவட்டம் நான்காம் அடரும் தூள் பூழி பொடி புழுதியின்பேர் தரமே - 5.இடப்பெயர்:5 14/4
குழை அளக்கர் அசறு தொய்யில் செதும்பு அளறு சகதி குழம்பு அசும்பு அங்கணம் பொகுட்டு கொள்ளல் பங்கம் பூழி
  அளறு தெளி மயசு செய்யல் வரி தோணி காலாழ் அஞறும் அசுபாகம் அள்ளல் சேதகமும் சேறே - 5.இடப்பெயர்:5 24/3,4
விபூதியின்பேர் ஆம் பொடி பூழி புழுதி தூளி சுண்ணம் தாது துகள் நீற்றின்பேர் ஆகும் - 6.பல்பொருள்பெயர்:6 9/3

 TOP
 
    பூழியன் (2)
பொதிகையினான் தமிழ்நாடன் கொற்கையன் கூடலினான் பூழியன் உக்கிரன் குமரிச்சேர்ப்பன் மீன்கொடியோன் - 2.மக்கள்பெயர்:2 11/2
கேரளன் குண்டகன் கோளன் வில்லவன் வஞ்சியினான் கிரி பொருநைத்துறைவன் பூழியன் உதியன் குடகன் - 2.மக்கள்பெயர்:2 12/2

 TOP
 
    பூழில் (1)
கந்தார் செஞ்சந்தனம் ஆம் அகில் அகரு பூழில் காகதுண்டம் ஆம் துருக்கம் மரவமும் குங்குமமே - 4.மரப்பெயர்:4 1/4

 TOP
 
    பூழும் (1)
இதல் பூழும் சிரவமுமே கவுதாரி ஆகும் இகல் சேவல் வாரணம் குக்குடம் ஞானி குருகு - 3.விலங்கின்பெயர்:3 25/1

 TOP
 
    பூளை (1)
அண்டாத துப்பு அரத்தம் கொம்பு அரக்கு ஆம் செம்பஞ்சு அலத்தகம் ஆம் பூளை இலவின்பஞ்சின்பேர் ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 8/3

 TOP
 
    பூனை (2)
மண்டலி மண் நாய் பாம்பு பூனை இறை நாற்பேர் மண்டலம் தட்டு ஊர்கோள் மண்டலம் குதிரை நாடு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 47/3
ஓதிமம் வெற்பு அன்னம் ஆம் ஓதை ஒலி மதில் ஆம் ஓதி மயிர் ஓந்தி மலை பூனை அறிவு ஐந்தாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 54/1

 TOP
 
    பூனையின்பேர் (1)
பாதகஞ்செய் எலிப்பகை இல்புலி பவணம் பாக்கன் பதினாலும் பூனையின்பேர் மிருகமதம் நரந்தம் - 3.விலங்கின்பெயர்:3 16/2

 TOP