|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
தெக்கணம் (1)
பக்கமே சிறகு நட்பு திதி அருகு நாற்பேர் பக்கணம் ஊண் வீதியும் ஆம் தெக்கணம் தெற்கு உரன் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 11/3
TOP
தெக்கணமே (1)
திசையினில் சிவேதை தெற்கு தெக்கணமே வாசி தென்திசை யாமமும் ஆம் பச்சிமம் குடக்கு மேல் மேற்கு - 5.இடப்பெயர்:5 3/1
TOP
தெங்கு (2)
சார் இலாங்கலி தென்னை தென் நாளிகேரம் தாழை தெங்கு ஆம் பன்னாடை நாரியும் நெய்யரியே - 4.மரப்பெயர்:4 6/4
காரமே கரில் கடுகம் காயம் காழ்ப்பு ஆகும் கனி இனிடு இன் மதுரம் தீம் தெங்கு தித்திப்பு இனிப்பு ஆம் - 7.பண்புப்பெயர்:7 25/2
TOP
தெண்டனின்பேர் (1)
பழிஇல் வேழ்வியின்பேர் வந்தனை வணங்கல் காணல் பணிதல் வந்திப்பு இறைஞ்சல் பணி தாழ்தலும் தெண்டனின்பேர்
தொழுதலும் கைகூப்புதல் அஞ்சலியொடு கும்பிடல்பேர் சுகத்து ஆடல் சம்போகம் மைதுனம் கிரீடை - 9.செயல்பற்றியபெயர்:9 9/2,3
TOP
தெப்பம் (3)
பாதையில்போம் பட்டிகையே புணை எனும் ஏழ்பேரும் படிந்த தெப்பம் அதின்பேர் ஆம் விசியின்பேர் அரியே - 6.பல்பொருள்பெயர்:6 37/4
பட்டிகையே கச்சு இரதம் பணை தெப்பம் நாற்பேர் பட்டமே பதவி வழி சவரி சேக்கையின்பேர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 37/3
மிதவை தெப்பம் சோறு ஆகும் கதி விரைவு கெதி ஆம் விதி வினை பணபயன் ஆகும் பதி அரன் ஊர் தவன் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 52/2
TOP
தெய் (1)
செயிர் சினம் குற்றமும் ஆகும் செயல் ஒழுக்கம் தொழில் ஆம் தெய் கொலை தெய்வமும் தாளமுறை பயில்வும் ஆமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 81/4
TOP
தெய்வதம் (1)
பொத்தகம் சித்திரப்புடவை பண்டாரம் மேடு ஆம் புத்தேள் தெய்வதம் புதிது ஆம் பைத்தல் சினம் பசப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 61/3
TOP
தெய்வப்பசு (1)
சுதை பதினைந்தாம் பசுவின்பேர் கபிலை தேனு சுரபி தெய்வப்பசு ஆகும் காலி தொறு கோட்டம் - 3.விலங்கின்பெயர்:3 9/2
TOP
தெய்வம் (3)
நவக்கடவுள் இயவுள் புத்தேள் சூரணங்கு தேவு நல்ல தெய்வம் தேவதம் எட்டு என்பர் பொதுப்பேரே - 1.தெய்வப்பெயர்:1 20/4
பொதுநாமம் தெய்வம் மின்னார்தமக்கு அணங்கும் சூரும் புத்தேளிர் பெண்கள் பெயராம் மகளிர் ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 21/1
உறுதியின்பேர் உண்மை வரன்முறை நியதி தெய்வம் ஊழ் விதிப்பேர் உறு நோன்பு தவன் விரதம் தவப்பேர் - 7.பண்புப்பெயர்:7 21/3
TOP
தெய்வமும் (2)
பகடு புணை பெருமை கரி ஏறொடு கிடா ஆம் பகவனே தெய்வமும் மும்மூர்த்திகளும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 3/2
செயிர் சினம் குற்றமும் ஆகும் செயல் ஒழுக்கம் தொழில் ஆம் தெய் கொலை தெய்வமும் தாளமுறை பயில்வும் ஆமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 81/4
TOP
தெய்வமொடு (1)
கட்டளையே நிறையறிதல் உரையறிதல் ஒப்பு ஆம் கடவுள் முனி தெய்வமொடு நன்மை என மூன்றாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 36/1
TOP
தெய்வவுணவு (1)
பலம் நிறை காய் கனி சேனை ஆதாயம் ஐந்தாம் பலி பூசை பிச்சை திருநீறு தெய்வவுணவு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 110/1
TOP
தெய்வானைகேள்வன்ஈசன்மகன் (1)
எழிலிளையன் செட்டி வள்ளி தெய்வானைகேள்வன்ஈசன்மகன் சரவணபவன் கந்தன்பேரே - 1.தெய்வப்பெயர்:1 8/4
TOP
தெர்ப்பைஅதாம் (1)
சொன்ன குசை குசம் குமுதம் கூர்ச்சமும் தெர்ப்பைஅதாம் சுண்டிலின்பேர் சமங்கை சுச்சு ஆம் தொண்டை விம்பன் கொவ்வை - 4.மரப்பெயர்:4 22/3
TOP
தெரி (1)
தெரி கிடுகு தேர்ச்சுற்று ஆம் சார் பலகை பா ஆம் தேர்மொட்டு கூம்பு ஆம் தேர்க்கதிரின்பேர் ஆர் ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 38/3
TOP
தெரிசனம் (3)
நோக்கம் விலோசனம் திருக்கு தெரிசனம் அம்பகம் கோ நுவல் ஆலோகனம் தாரை அக்கி கண் பத்திரட்டே - 2.மக்கள்பெயர்:2 52/4
பூம் படிமக்கலன் ஆடி முகிர்தம் ஒளிவட்டம் புளகம் அத்தம் தெரிசனம் கண்ணாடியின்பேர் கூறே - 6.பல்பொருள்பெயர்:6 42/4
காண்டல் தெரிசனம் நோக்கல் கண்ணுதலே பார்வை காட்சி பார்த்தலின்பேர் ஆம் சிறக்கணிப்பு அபாங்கம் - 9.செயல்பற்றியபெயர்:9 6/1
TOP
தெரித்தல் (2)
தெரித்தல் செப்பலே நொடித்தல் சொல்லல் எண்மூன்றாகும் திசைச்சொல் தேசிகம் ஆம் இடித்தல் கழறலுமே - 8.ஒலிபற்றியபெயர்:8 2/3
தெரித்தல் வரைந்திடல் பொறித்தல் கீறலே தீட்டல் சிவக்கல் வரித்தலும் எழுத ஆம் கணக்கு இலேகை - 9.செயல்பற்றியபெயர்:9 8/1
TOP
தெரியே (2)
இன்னவும் மைந்தனும் ஆண்பால் பொதுப்பேர் ஆம் நம்பி என்பது ஆண் சிறப்பு நங்கை பெண் சிறப்பு ஆம் தெரியே - 2.மக்கள்பெயர்:2 41/4
அடித்தலே அறைதல் எற்றன் மோதல் அழுத்துதலும் அதுக்கலும் ஆம் தூய்தாக்கல் சீய்த்தலாம் தெரியே - 9.செயல்பற்றியபெயர்:9 7/4
TOP
தெரிவை (2)
தெரிவை மானினி நாரி மகள் வனிதை மாது சிறுமி இளம்பிடி மடந்தை தையல் பிணா மகடூஉ - 2.மக்கள்பெயர்:2 42/1
சிறு பேதை பெதும்பை மங்கை மடந்தையே அரிவை தெரிவை பேரிளம்பெண் ஏழ்பருவம் மின்னார் இவர்க்கே - 2.மக்கள்பெயர்:2 44/1
TOP
தெரு (5)
வகுத்த குறுந்தெரு மறுகு ஆம் பக்கணம் சிரேணி வாடை பூரியம் சேடி தெரு ஞெள்ளல் வீதி - 5.இடப்பெயர்:5 14/2
தெரு நடவை பதம் மாற்கம் சுரம் வட்டை பட்டம் சேர் வழிப்பேர் ஏழைந்தாம் அருநெறிப்பேர் தூம்பு - 5.இடப்பெயர்:5 31/3
மாடு புடை செல்வப்பேர் ஆடு வெற்றி தகர் ஆம் மாடம் மனை உழுந்தின்பேர் வாடை தெரு காற்று ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 32/2
வீதி தெரு ஓடல் ஆம் வீதல் கொடை சாவு ஆம் வித்தமே பொன் அறிவு பழித்தல் என மூன்றாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 57/3
செப்பு மொழி செப்பு இரண்டாம் அப்பு அலப்பல் பொலிவு ஆம் செப்பம் நடுநிலை நெஞ்சு செவ்வை தெரு நான்காம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 69/1
TOP
தெருட்டலுடன் (1)
தெருட்டலுடன் வருட்டலும் வற்புறுத்தல் ஆம் வரன்றல் தெள்ளல் கொழித்திடல் ஆகும் பூட்கை மேற்கோள் ஆம் - 9.செயல்பற்றியபெயர்:9 19/1
TOP
தெருமரலே (1)
தேடும் அலமரல் சொரிதல் மறுகல் ஞொட்கல் திரிதல் தெருமரலே பிரமரி சூர்த்தலும் சுழறல் ஆகும் - 9.செயல்பற்றியபெயர்:9 22/1
TOP
தெருளல் (1)
தெருளல் சேதனம் சைதன்னியம் ஞானம் ஆகும் தெளியும் பேரறிவும் முதுக்குறைவு ஆம் என்றறியே - 7.பண்புப்பெயர்:7 15/4
TOP
தெருளே (1)
வாவல் தாவுதல் கடத்தல் தாண்டல் தத்தல் ஆகும் வளைத்தல் சுற்றல் சூழுதல் வளாகம் என தெருளே - 9.செயல்பற்றியபெயர்:9 18/4
TOP
தெவ்வர் (3)
வாவு தெவ்வர் அமித்திரர் ஒட்டார் மருவார் மானர் மாற்றலர் போற்றலர் சேயர் சூரர் வட்கார் கேளார் - 2.மக்கள்பெயர்:2 28/4
குவிதல்பேர் சாம்பல் கூம்பலும் ஒடுங்கல் ஆகும் குறை திறை கப்பமும் தெவ்வர் பாகுடத்தின் கவர்ப்பே - 9.செயல்பற்றியபெயர்:9 20/4
அமலம் அழகு அழுக்குஇலதாம் அமரர் தெவ்வர் சுரர் ஆம் அமலை ஒலி சோறு உமை ஆம் ஞமலி கள் நாய் மயில் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 72/2
TOP
தெவ்வு (4)
கடை முகம் வளாகம் அயல் உறை தெவ்வு முன் கால் கை புலம் நாற்பானேழும் இடப்பெயரின்பாலே - 5.இடப்பெயர்:5 32/4
மிடியொடு நல்குரவு ஈராறொன்று தரித்திரப்பேர் வெறுமையும் ஆம் அரி முருட்டு தெவ்வு முரண் பகை ஆம் - 7.பண்புப்பெயர்:7 29/3
மறன் இகல் சல்லிகம் பூசல் ஆர்ப்பு அமர் தெவ்வு உடன்றல் மலைப்பு இரணம் தாக்கு கோறல் கிடைத்தல் ஞாட்பு ஏற்றல் - 9.செயல்பற்றியபெயர்:9 24/1
தெவ்வு பகை அமர் ஆகும் சிவப்பு நிறம் சினம் ஆம் செப்பு அவந்தி ஊர் கிளி என்று இயம்புதி நீ உவந்தே - 10.ஒருசொல்பல்பொருள்:10 131/4
TOP
தெவிட்டல் (3)
குறைவுஇல் பூரணம் திளைத்தல் கமம் தெவிட்டல் மலிதல் குளிர் ததும்பல் பரம் துவன்றல் கெழு திகழ்தல் ஆர்தல் - 7.பண்புப்பெயர்:7 8/1
உரைத்தல் உரிஞ்சலின்பேர் ஆம் இமிழ்த்தலே தெவிட்டல் உமிழ்த்தலும் ஆம் பறித்தல் குற்றல் களைத்தல் கட்டல் வழியே - 9.செயல்பற்றியபெயர்:9 8/4
பவ்வம் மரக்கணு வாரி குமிழி உவா நான்காம் பகர் தெவிட்டல் நிறைத்தல் ஒலி அடைத்தல் கான்றிடல் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 131/2
TOP
தெவிட்டுதல் (1)
உழைத்தல் அழுங்குதல் தழங்கல் தொனித்தலே கதித்தல் உலம்பல் தெவிட்டுதல் கனைத்தல் புலம்பலே சிரற்றல் - 8.ஒலிபற்றியபெயர்:8 14/3
TOP
தெவிழல் (1)
நிறைவு பிறங்குதல் முழுத்தல் செகிழல் மல்கல் கழுமல் நிரம்பலே தெவிழல் பெருகுதல் இருபான்பேர் ஆம் - 7.பண்புப்பெயர்:7 8/2
TOP
தெள்ளல் (1)
தெருட்டலுடன் வருட்டலும் வற்புறுத்தல் ஆம் வரன்றல் தெள்ளல் கொழித்திடல் ஆகும் பூட்கை மேற்கோள் ஆம் - 9.செயல்பற்றியபெயர்:9 19/1
TOP
தெள்ளும் (1)
தெள்ளும் ஆண் இழிபும் பெண் உயர்புமாய் பெற்ற சேய் பிறிதிலோமன் என செப்பினர் முன்னோரே - 2.மக்கள்பெயர்:2 40/4
TOP
தெளி (2)
அளறு தெளி மயசு செய்யல் வரி தோணி காலாழ் அஞறும் அசுபாகம் அள்ளல் சேதகமும் சேறே - 5.இடப்பெயர்:5 24/4
தெளி நினைவு இங்கிதம் கருத்து சூழ்ச்சி எண்ணம் குறிப்பு சிந்தை நாட்டியமும் ஆம் வலித்தல் முன்னல் ஊகம் - 7.பண்புப்பெயர்:7 20/2
TOP
தெளிகுவை (1)
அடு ரோமம் பெண்மயிர்ப்பேர் கொந்தளம் விரோதம் அளகம் மயிர்க்குழற்சி என தெளிகுவை நீ மயிலே - 2.மக்கள்பெயர்:2 55/4
TOP
தெளித்தல் (2)
தெளித்தல் விம்மல் குமிறல் இரட்டுதல் அரற்றல் ஓர்தல் சிலம்பல் இயம்புதல் சிதைத்தல் இசைத்தலே முழங்கல் - 8.ஒலிபற்றியபெயர்:8 14/1
சில்லல் கூப்பிடல் கத்தல் கதறல் ஆம் உரப்பல் தெளித்தல் அதிர்த்திடல் தட்டல் எனக்கடவதாமே - 8.ஒலிபற்றியபெயர்:8 15/4
TOP
தெளித்தல்பேர் (1)
வெய்துறு கண்படை துஞ்சல் நித்திரை தூங்கலின்பேர் விடிந்து எழுப்பல் எடுத்தலே தெளித்தல்பேர் பொருளே - 9.செயல்பற்றியபெயர்:9 3/4
TOP
தெளிந்தநீர் (1)
தேற்றுமணை செய்கரைப்பேர் கோலம் நீர்க்கொழுந்து ஆம் தெளிந்தநீர் சலசலம் ஆம் உந்திநீர் சுழி ஆம் - 5.இடப்பெயர்:5 20/3
TOP
தெளியும் (1)
தெருளல் சேதனம் சைதன்னியம் ஞானம் ஆகும் தெளியும் பேரறிவும் முதுக்குறைவு ஆம் என்றறியே - 7.பண்புப்பெயர்:7 15/4
TOP
தெளியே (1)
செழும் வெகுளி அரவம் மூவேழும் ஒலிப்பேர் ஆம் சிலை ஒலிப்பேர் உழையும் மருமரஞ்சமும் ஆம் தெளியே - 8.ஒலிபற்றியபெயர்:8 13/4
TOP
தெளிர் (1)
நிரை ஆம் கூர்ப்பு கழிப்பு உள்ளதுசிறத்தல் ஆகும் நீமம் அரி தெளிர் தயங்கல் காந்தி நகல் சோதி - 7.பண்புப்பெயர்:7 10/3
TOP
தெளிவு (2)
உரம் அறிவு தெளிவு புந்தி புலன் போதம் மேதை உணர்வு மதி காட்சி ஞாபகம் தேறல் சீலம் - 7.பண்புப்பெயர்:7 15/3
உணர்வு அறிவு தெளிவு ஊடல்ஒழித்தல் என மூன்றாம் ஓணம் நதி மாயோன்நாள் ஆம் எனும் தாரணியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 40/4
TOP
தெற்கு (5)
திசையினில் சிவேதை தெற்கு தெக்கணமே வாசி தென்திசை யாமமும் ஆம் பச்சிமம் குடக்கு மேல் மேற்கு - 5.இடப்பெயர்:5 3/1
பக்கமே சிறகு நட்பு திதி அருகு நாற்பேர் பக்கணம் ஊண் வீதியும் ஆம் தெக்கணம் தெற்கு உரன் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 11/3
வசந்தம் மணம் இந்திரன்மாளிகை தென்றல் முப்பேர் வாசி வளம் குதிரை தெற்கு குழலோசை நாற்பேர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 19/2
மாமன் மாதுலன் மால் ஆம் யாமம் நிசி தெற்கு ஆம் வம்பு தீ திடர் மணம் வார் நிலையாமை அம்பே - 10.ஒருசொல்பல்பொருள்:10 75/4
சிவேதை தெற்கு மருந்து ஆம் சுவேதம் வெண்மை வெயர்வு ஆம் செழிக்கும் ஆவலம் வாய்கொட்டுதல் இழைக்கும் வளமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 132/4
TOP
தெற்பை (1)
குமரி கன்னி காளி அழியாமை கற்றாழையும் ஆம் குமுதம் அல்லி அடுப்பு ஒலி திக்கானை தெற்பை ஐந்தாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 72/3
TOP
தெற்றல் (1)
மாய்தல் ஆவரணம் இவை மறைதல் ஆம் தெற்றல் மாறுபாடு ஆம் பொல்லம் துன்னம் ஆம் சங்கம் - 9.செயல்பற்றியபெயர்:9 17/3
TOP
தெற்றி (1)
பொதி மன்று அம்பலம் மன்றம் பொதுசபை ஆம் தெற்றி பொற்சாலை அம்பலம் சித்திரகூடம் முப்பேர் - 5.இடப்பெயர்:5 9/1
TOP
தெற்று (2)
தெற்று கோமரன் தேவராளிபெயர் ஆகும் தேவராட்டியின்பெயரே சாலினி என்றோதும் - 2.மக்கள்பெயர்:2 22/2
தெற்று புலர்த்துதல் வரித்தல் இரண்டாகும் வைத்தல் தெறுத்தல் நெரித்தலின்பேரும் இரண்டாகும் இறுக்கல் - 9.செயல்பற்றியபெயர்:9 29/2
TOP
தெறுக்கால் (2)
முறை விபிலன் கண்மூக்கி எறும்பின்பேர் ஒன்பான் உலுகை கரவான் சிலம்பி சிலந்தியின்பேர் தெறுக்கால்
முறுகு விருச்சிகம் துட்டன் விடம் நளி தேள் ஆகும் முகடே மற்குணம் மூட்டை குடவனும் பன்னுவரே - 3.விலங்கின்பெயர்:3 31/3,4
திளைத்தல் அனுபவித்தல் செறித்திடல் நிறைதல் ஆகும் தேள் அனுடம் தெறுக்கால் ஆம் வேள் குகன் காமனும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 138/2
TOP
தெறுத்தல் (1)
தெற்று புலர்த்துதல் வரித்தல் இரண்டாகும் வைத்தல் தெறுத்தல் நெரித்தலின்பேரும் இரண்டாகும் இறுக்கல் - 9.செயல்பற்றியபெயர்:9 29/2
TOP
தெறும்பினர் (1)
மறவர் தெறும்பினர் இறுக்கர் பாலையர்பேர் எயிற்றி மறத்தி பல்லி பெண் காளை விடலையும் மீளியும் கோ - 2.மக்கள்பெயர்:2 31/3
TOP
தென் (1)
சார் இலாங்கலி தென்னை தென் நாளிகேரம் தாழை தெங்கு ஆம் பன்னாடை நாரியும் நெய்யரியே - 4.மரப்பெயர்:4 6/4
TOP
தென்கால் (1)
ஆறு தென்றல் மலையக்கால் வசந்தன் மந்தாநிலமே அரும் சிறுகால் இளம்கால் தென்கால் தென்றி மென்கால் - 1.தெய்வப்பெயர்:1 29/1
TOP
தென்கீழ்த்திசையோன் (1)
தீனி சுடர் தகனன் அனல் ஞெகிழி சித்ரபானு சிகி தேயு வார் அலரி சோதி தென்கீழ்த்திசையோன்
ஆன தனஞ்செயன் சுபலன் சசி சாதவேதா வழனம் வன்னி முளரி கனல் பகவன் வாயு சகன் - 1.தெய்வப்பெயர்:1 24/2,3
TOP
தென்திசை (1)
திசையினில் சிவேதை தெற்கு தெக்கணமே வாசி தென்திசை யாமமும் ஆம் பச்சிமம் குடக்கு மேல் மேற்கு - 5.இடப்பெயர்:5 3/1
TOP
தென்திசைக்கோன் (1)
அரி மடங்கல் கால் கூற்று நடுவன் இமன் சூலன் அறவன் மால் சமன் மறலி அந்தகன் தென்திசைக்கோன்
தருமன் நமன் தென்னவன் செங்கோல்கடவுள் பாசன் சண்டன் ஞமன் கணிச்சியன் காரானூர்தி காலன் - 1.தெய்வப்பெயர்:1 26/1,2
TOP
தென்பால் (1)
மேனிலை பித்திகை தோடு கடம் அதற்கு ஏழ்பேராம் மேருவின் தென்பால் வடபால் அயனம் இரு கதியே - 1.தெய்வப்பெயர்:1 31/4
TOP
தென்மலை (1)
கட தவளகிரி இரசதாசலம் சிவாத்திரி கயிலாசகிரிப்பேர் தென்மலை பொதிகை மலையம் - 5.இடப்பெயர்:5 18/3
TOP
தென்றல் (2)
ஆறு தென்றல் மலையக்கால் வசந்தன் மந்தாநிலமே அரும் சிறுகால் இளம்கால் தென்கால் தென்றி மென்கால் - 1.தெய்வப்பெயர்:1 29/1
வசந்தம் மணம் இந்திரன்மாளிகை தென்றல் முப்பேர் வாசி வளம் குதிரை தெற்கு குழலோசை நாற்பேர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 19/2
TOP
தென்றல்கிரி (1)
அடர் பொதி சந்தனகிரி தாம்பிரபேதி தமிழ்வெற்பு அகத்தியாசலம் தென்றல்கிரி பொதியமலையே - 5.இடப்பெயர்:5 18/4
TOP
தென்றல்தேரோன் (1)
மானதன் வேள் இரதிநண்பன் உருவிலி மனோபு மாரன் மதுசகன் சம்பராரி தென்றல்தேரோன்
வேனிலான் மதன் அழகன் மோகன் வில்லி மால்சேய் மீன்கொடியோன் மதிக்குடையோன் பெண்படையோன் வசந்தன் - 1.தெய்வப்பெயர்:1 17/1,2
TOP
தென்றி (1)
ஆறு தென்றல் மலையக்கால் வசந்தன் மந்தாநிலமே அரும் சிறுகால் இளம்கால் தென்கால் தென்றி மென்கால் - 1.தெய்வப்பெயர்:1 29/1
TOP
தென்னவன் (1)
தருமன் நமன் தென்னவன் செங்கோல்கடவுள் பாசன் சண்டன் ஞமன் கணிச்சியன் காரானூர்தி காலன் - 1.தெய்வப்பெயர்:1 26/2
TOP
தென்னனும் (1)
சிதைவுஇல் கவுரியன் முடியோடுதித்தவன் பஞ்சவனும் தென்னனும் பாண்டியன் மூவேழ் புலிக்கொடியோன் பொன்னிநதியுடையான் - 2.மக்கள்பெயர்:2 11/3
TOP
தென்னுறு (1)
தென்னுறு காடையின்பேர் ஆம் திகத்திரி தித்திரியே சிரல் கவுதம் சிச்சிலி மீன்கொத்தி பொன்வாய்ப்புள் ஆம் - 3.விலங்கின்பெயர்:3 27/3
TOP
தென்னை (2)
சார் இலாங்கலி தென்னை தென் நாளிகேரம் தாழை தெங்கு ஆம் பன்னாடை நாரியும் நெய்யரியே - 4.மரப்பெயர்:4 6/4
கீலாலமே உதிரம் காடி புனல் ஆகும் கிளர் இலாங்கலி கலப்பை தென்னை காந்தளும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 120/2
TOP
|
|
|