<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - இரண்டாம் பகுதி
தேவையான தலைப்பின் மேல் சொடுக்கவும்
தலைப்பு சொற்பிரிப்பு மூலம் சீர் பிரிப்பு மூலம்
1.உயிர் வருக்கம்

2.ககர வருக்கம்

3.சகர வருக்கம்

4.ஞகர வருக்கம்

5.தகர வருக்கம்

6.நகர வருக்கம்

7.பகர வருக்கம்

8.மகர வருக்கம்

9.யகர வருக்கம்

10.வகர வருக்கம்

**கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய 
**பொதிகை நிகண்டு - இரண்டாம் பகுதி
** சென்னை சர்வசலாசாலை 
** தமிழ் லெக்ஸிகன் பதிப்பாசிரியர் 
** S வையாபுரிப் பிள்ளை 
** பரிசோதித்தது 
** 1934 

@1 உயிர் வருக்கம்
** அகர வருக்கம் 
**1

#1
அகம் தருவும்  குறையும் வெற்பும் மனையும் 
அகமும் உள்ளும் ஆன்மாவும் அகப்பொருளும் 
இடமும் பாவமும் அல்லவும் ஆகும் 
**2

#2
அகைத்தல் அறுத்திடலும் ஒடித்தலும் ஈர்த்தலும் 
வேதனையும் என விளம்பினர் புலவர் 
**3

#3
அகப்பா உள்ளுயர்த்தியபாவும் மதிலும் 
**4

#4
அகவல் ஓர்பாவும் கூத்தும் ஆகும் 
**5

#5
அக்கரம் எழுத்தும் ஓர்நோயும் ஆகும் 
**6

#6
அகலுள் ஊரும் பரப்பும் நாடும் ஆகும் 
**7

#7
அக்காரம் ஆடையும் வெல்லமும் ஆகும் 
**8 

#8
அகலம் மார்பும் நீளமும் இடமும் 
அகலிடமும் விரித்துரையும் ஆகும் 
**9

#9
அகடு பொல்லாங்கும் நடுவும் வயிறும் 
**10

#10
அகளம் தாழியும் மிடாவும் ஆகும் 
**11

#11
அகி சிலம்பும் இரும்பும் தீயும் அரவும் 
தொகையும் எனவே சொல்லலாகும் 
**12

#12
அக்கு என்பும் இமிலும் சங்கும் மணியும் ஆம் 
**13 

#13
அங்கி தீயும் சட்டையும் அறுமீனும் 
**14

#14
அங்கம் ஆறங்கமும் கட்டிலும் ஆகமும் 
என்பும் உறுப்பும் வெட்டலும் ஆகும் 
**15

#15
அங்கணம் சலதாரையும் முற்றமும் சேறும் 
**16

#16
அங்கதம் வசைச்சொல்லும் பொய்யும் மார்பும் 
அரவும் தோளணியும் அசைப்பெயரும் ஆகும் 
**17

#17
அங்காரகன் தீயும் செவ்வாயும் ஆகும் 
**18

#18
அசி வாளும் அம்பும் அவமதிச்சிரிப்பும் 
ஆயுதங்களும் என்று அறைந்தனர் புலவர் 
**19

#19
அச்சம் அகத்தியும் ஐம்மையும் அஞ்சலும் 
**20

#20
அசும்பு வீசுதலும் நீரொழுகுதலும் 
காந்தியும் ஒற்கமும் கழறல் ஆகும் 
**21

#21
அசோகு சுகமும் அசோகும் ஆகும் 
**22

#22
அச்சுதன் மூதிறையும் அரியும் மருகனும் 
**23

#23
அச்சுவம் குதிரையும் அக்கிராமருந்தும் 
**24

#24
அசனம் சோறும் அளவும் பசியும் 
வேங்கையும் கொழுப்பும் விளம்பலாகும் 
**25 

#25
அசை நிரையசையும் அசைச்சொல்லும் அசைவும் ஆம் 
நேரசையும் என நிகழ்த்தலாமே
**26

#26
அசைதல் தங்கலும் நோதலும் ஆகும் 
**27

#27
அசைத்தல் கட்டுதலும் அசைத்தலும் ஆகும் 
**28

#28
அசனி வச்சிரமும் இடியும் ஆகும் 
**29

#29
அசமே ஆடும் மூவாட்டைநெல்லும் 
**30

#30
அஞலமே பஞ்சமணமும் சிங்கமும் 
**31

#31
அஞரே துக்கமும் அறிவிலாரும் 
**32

#32
அஞ்சலி வணங்கலும் வாவல்பறவையும் 
பேதையும் என்னப் பேசலாகும் 
**33

#33
அஞ்ஞை அழகும் அறிவிலானும் கிடாயும் 
**34

#34
அஞ்சனம் இருளும் மையும் கண்மருந்தும் 
ஓர்திக்கானையும் நீலக்கல்லும் 
அஞ்சனமும் என வழங்கினர் புலவர் 
**35

#35
அடலே கொலையும் வெற்றியும் வலியும் 
சமைத்தலும் பொருதலும் சாற்றலாகும் 
**36

#36
அடி அண்டம் முதலும் செண்டுவெளியும் 
காலும் கவியடியும் கழறலாகும் 
**37

#37
அடரே தகடு நெருக்கமும் ஆகும் 
**38

#38
அடுதல் கோறலும் அட்டலும் அடர்தலும் 
**39

#39
அடலை வெண்பலியும்  சுடுகாடும் ஆகும் 
**40

#40
அடுப்புப் பரணியும் அச்சமும் அடுத்திடலும் 
அடுப்பும் எனவே அறையலாகும் 
**41

#41
அடை அப்பமும் இலையும் அடுத்தலும் கனமும் 
**42

#42
அணை தலையணையும் மெத்தையும் அணையும் 
சயனமும் என்னச் சாற்றினர் புலவர் 
**43

#43
அணி ஒப்பனையும் அன்பும் அணிவகுப்பும் 
அழகும் அலங்காரமும் பூணும் பீடும் 
அணிதலும் இலக்கண அணியும் ஆகும் 
**44

#44
அணவல் புல்லலும் நணுகலும் ஆகும் 
**45

#45
அண்டம் விண்ணும் உலகமும் முட்டையும் 
ஆகாயமும் பிரமாண்டமும் ஆகும் 
**46

#46
அண்டசம் பறவையும் தேரையும் மீனும் 
அரணையும் உடும்பும் பல்லியும் நண்டும் 
ஓந்தியும் முதலையும் இப்பியும் நாகமும் 
கச்சபமும் எனக் கழறலாகும் 
**47

#47
அணு மந்திரமும் சீவனும் நுண்மையும் 
**48

#48
அணங்கே மாதரும் வருத்தலும் தெய்வமும் 
ஆசையும் அழகும் அச்சமும் கோறலும் 
நோயும் சூரும் நுவலலாகும் 
**49

#49
அண்ணம் உள்நாவும் அணரியும் ஆகும் 
**50

#50
அணுக்கமே உரகமும் சாந்தமும் ஆகும் 
**51

#51
அண்ணல் பீடு மண்ணுதலும் தலைவனும் 
புத்தனும் மரபும் புகலலாகும் 
**52

#52
அண்டர் பகைவரும் தேவரும் ஆயரும் 
**53

#53
அண்ணை பேயும் அறிவிலானும் ஆகும் 
**54

#54
அத்திரி ஒட்டகமும் கணையும் கழுதையும் 
பரிதியும் விண்ணும் வெற்பும் ஆகும் 
**55

#55
அத்திரம் கணையும் வீடும் மலையும் 
குதிரையும் கழுதையும் கூறலாகும் 
**56

#56
அத்தி யானையும் கடலும் அத்தியும் 
புள்ளும் எலும்பும் புகறலாகும் 
**57

#57
அத்தம் சொற்பொருளும் காடும் அத்தநாளும் 
அருநெறியும் பொன்னும் பாதியும் கரமும் 
கண்ணாடியும் எனக் கழறலாகும் 
**58

#58
அத்து அசைச்சொல்லும் அரைநாணும் சிவப்பும் 
இசைப்பும் துன்னமும் இயம்பலாகும் 
**59

#59
அதர் சிறுகல்லும் புழுதியும் வழியும் 
**60

#60
அத்தனே சிவனும் பிதாவும் ஆகும் 
**61

#61
அதம் பாதாளமும் கீழ்வீழ்தலும் இறங்கலும் 
**62

#62
அந்தணர் அறவோரும் பார்ப்பாரும் ஆகும் 
**63

#63
அந்தம் அஞ்ஞானமும் முடிவும் கத்தூரியும் 
அழகும் எனவே அறையலாகும் 
**64

#64
அந்தகன் குருடனும் கூற்றனும் ஆகும் 
**65

#65
அந்தில் ஆங்கும் இரண்டும் அசையும் 
இடப்பெயரும் என இயம்பலாகும் 
**66

#66
அந்தரம் விசும்பும் இடையும் அளவும் 
பேதமும் மேகமும் பேசலாகும் 
**67

#67
அந்தி மாலையும் பாலையாழோசையும் 
இரவும் அசையும் இயம்பலாகும் 
**68

#68
அந்தரி உமையும் துர்க்கையும் காளியும் 
**69

#69
அம்பு வேயும் நீரும் விண்ணும் 
மேகமும் கணையும் விளம்பலாகும் 
**70

#70
அம்மை வருபிறப்பும் தாயும் உமையும் 
அழகும் எனவே அறையலாகும் 
**71

#71
அமலை அம்பிகையும்  சோறும் ஓசையும் 
**72

#72
அமரே அமர்தலும் பூசலும் ஆகும் 
**73

#73
அம்பி நீர்மேலோடுவனவும் தெப்பமும் 
நாவாயும் என நவின்றனர் புலவர்
**74

#74
அமுதம் பாலும் முத்தியும் நீரும் 
அவியும் மேகமும் பெருமையும் ஆகும் 
**75

#75
அம்புயம் பொதியும் புட்டிலும் அம்புயமும் 
**76

#76
அம்பல் பழிமொழியும் அலர்மொழியும் ஆகும் 
**77

#77
அம் அழகும் அசையும் நீரும் ஆகும் 
**78

#78
அமரர் பகைவரும் தேவரும் ஆகும் 
**79

#79
அமறல் மிகுதியும் பொலிவும் பீடும் 
நெருக்கமும் எனவே நிகழ்த்தலாகும் 
**80

#80
அம்பணம் துலாக்கோலும் தூம்பும் ஆமையும் 
வாயும்  கதலியும் தோணியும் நீரும் 
**81

#81
அமைதல் சம்மதித்தலும் பொழுதும் ஆகும் 
**82 

#82
அமுது பாலும் சோறும் அவியும் மழையும் 
**83

#83
அம்பரம்  கூறையும் கடலும் ஆகாசமும் 
**84

#84
அம்படலம் வெள்ளியும் ஓடமும் மரக்காலும் 
விண்ணும் அம்மியும் விளம்பலாகும் 
**85

#85
அயம் இரும்பும் நீரும் பரியும் ஆடும் 
தடாகமும் மகமும் சேறும் அவனியும் 
சூதனரும் விழாவும் சொல்லலாகும் 
**86

#86
அய்யன் மூத்தோனும் சாத்தனும் அப்பனும் 
சுவாமியும் குருவும் சொல்லலாகும் 
**87

#87
அய்யம்  கடிஞையும் பிச்சையும் பொழுதும் 
அனுமானமும் என அறையலாகும் 
**88

#88
அய்யர் அந்தணரும் முனிவரும் தேவரும் 
**89

#89
அயனமே வழியும் பிறப்பும் ஊணும் 
ஆண்டினில்பாதியும் ஆகும் என்ப 
**90

#90
அயிர் நுண்மணலும் அணுவும் சர்க்கரையும் 
**91

#91
அயில் இரும்பும் உண்டலும் கூர்மையும் வேலும் 
**92

#92
அயிராணி உமையும் இந்திரன்தேவியும் 
**93

#93
அயிரி மீன்முள்ளரிந்திடுகருவியும் 
நுண்மணலும் என நுவலலாகும் 
**94

#94
அரண் மதிலும் வேலும் கவசமும் காவலும் 
செருப்பும் காடும் அஞ்சலும் ஆகும் 
**95

#95
அருளே சத்தியும் கருணையும் ஆகும் 
**96

#96
அரக்குச் சிவப்பும் மெழுகும் கள்ளும் 
**97

#97
அரில் சிறுதூறும் குற்றமும் குழலும் 
பிணக்கமும் குரலும் பரலும் வயிரமும் 
**98

#98
அரவம் நூபுரமும் பாம்பும் ஓசையும் 
ஆயிலியமும் சிலைநாணும் ஆகும் 
**99

#99
அரசு பூமியும் மன்னரும் ராச்சியமும் 
அரசமரமும் அறையலாகும் 
**100

#100
அரசர் வன்னியர் வேந்தரும் ஆகும் 
**101 

#101
அரிதம் பூமியும் பச்சையும் திக்கும் 
பசும்புல்லும் எனப் பகரலாகும்
**102

#102
அரலை கனியும் கழலையும் வித்தும் 
கடலும் கற்றாழையும் கழறலாகும்
**103 

#103
அரம்பை வாழையும் தெய்வப்பெண்ணும்
**104 

#104
அரங்கு ஓர்இல்லும் இடமும் ஆகும்
**105 

#105
அராகம் பாலைப்பண்ணும் சிவப்பும்
ஆசையும் முடுகும் பாவும் ஆகும்
**106 

#106
அருணன் ஆதித்தன்தேர்ப்பாகனும் புதனும் 
ஆதித்தனும் என அறையலாகும்
**107 

#107
அருகல் சாதலும் சுருங்கலும் ஆகும்
**108 

#108
அருகர் சாவகரும் நில்லாமையும் ஆம்
**109 

#109
அரத்தம் உற்பலமும் பொன்னும் செம்பரத்தமும்
நீபமும் சிவப்பும் பவளமும் இரத்தமும்
**110 

#110
அரிட்டம் காக்கையும் கள்ளும் வெற்பும் 
பிறவியில்குற்றமும் பேசலாகும்
**111 

#111
அரந்தை துன்பமும் குறிஞ்சியாழும் 
**112 

#112
அரணி கோலும் வேலியும் கவசமும்
**113 

#113
அருணம் சிவப்பும் மானும் எலுமிச்சும் 
ஆடும் எனவே அறையலாகும்
**114 

#114
அரங்கம் ஆற்றிடைக்குறையும் ஆடிடமும் 
வட்டாடிடமும் போரிடமும் சபையும்
**115 

#115
அருப்பம் ஊரும் காடும் அரணும் 
நந்தும் நோயும் சோலையும் ஆகும்
**116 

#116
அரசன் வியாழமும் வேந்தனும் ஆகும்
**117 

#117
அரற்றல் அழுகையும் ஓசையும் ஆகும்
**118 

#118
அருச்சுனம் மருதும் வெண்மையும் பந்தும் ஆகும்
**119 

#119
அருந்தல் அருமையும் உண்டலும் ஆகும் 
**120 

#120
அருத்தி ஆசையும் கள்ளும் ஆகும்
**121 

#121
அருகன் அருகனும் நண்பனும் ஆகும்
**122 

#122
அரிவை பருவமும் மாதரும் ஆகும்
**123 

#123
அருவி தினைத்தாளும் வெற்பும் ஆறும்
**124 

#124
அரணம் காவல்கானும் காவலும் வேலியும் 
மதிலும் அஞ்சலும் கவசமும் செருப்பும் ஆம்
**125 

#125
அரை ஓர்எண்ணும் ஓர்உறுப்பும் ஆகும்
**126 

#126
அரியே தேரும் மலையும் அரித்தலும்
மூங்கிலும் வயிரமும் பறையும் பாம்பும் 
அரிசியும் பன்றியும் அரிதலும் புரையும் 
கிளியும் நெற்கதிரும் படைக்கலமும் பொன்னும் 
புகையும் சோலையும் காந்தியும் கடலும் 
கிண்கிணிப்பரலும் தவளையும் மாலையும் 
கண்வரியும் புகரும் குலிசமும் வாயும் 
இந்துவும் விசியும் கள்ளும் குதிரையும் 
நன்னிறமும் வாளும் குரங்கும் வலியும் 
வண்டும் திகிரியும் பகையும் அம்பும் 
பாயலும் காற்றும் என்றூழும் சயனமும் 
இந்திரனும் திருமாலும் சிங்கமும் 
ஐமையும் கூற்றும் அங்கியும் பச்சையும் 
கூர்மையும் சேகும் ஆடும் சுடரும் ஆம்
**127 

#127
அலியே தீயும் சோறும் பேடனும்
மறலியும் நறுவிலியும் என வழங்கலாகும் 
**128 

#128
அலகு நெற்கதிரும் புள்வாயும் துடைப்பமும்
பலகறையும் இலஞ்சிப்பரலும் ஓர்எண்ணும்
நுளம்பும் ஆயுதமும் என நுவலலாகும் 
**129 

#129
அலரி தேனீயும் பூவும் ஓர்மரமும் 
அழகும் கண்வரியும் அருக்கனும் வாவியும்
மலர்க்கணையும் என வழுத்தலாகும் 
**130 

#130
அலவனம் புலியும் பூனையும் கண்டும் 
கடகராசியும் கழறலாகும்
**131 

#131
அல்லி வெள்ளாம்பலும் காயாவும் அலியும் 
பூந்தாதும் அகவிதழு.ம் புகலும்
**132 

#132
அல்கல் இலம்பாடும் நாளும் சுருங்கலும் 
தங்கலும் இரவும் சாற்றலாகும்
**133 

#133
அல்கு தங்கலும் கங்குலும் ஆகும்
**134 

#134
அலை கடல்திரையும் கடலும் ஆகும்
**135 

#135
அலங்கல் பூமாலையும் தளிரும் அசைவும் 
இலங்கலும் எனவே இயம்பலாகும்
**136 

#136
அலர் விரிபூவும் புறங்கூறலும் பழியும்
**137 

#137
அல்லே இராவும் இருளும் ஆதித்தனும்
**138 

#138
அவல் சிற்றுண்டியும் தடாகமும் கீழும்
**139 

#139
அவந்தி ஓர்ஊரும் கிளியும் சேனையும்
**140 

#140
அவனி பாரகரும் வேந்தரும் பூமியும்
**141 

#141
அவினயம் கூத்தும் நூலும் அங்கமும்
**142 

#142
அவிர்தல் ஒளியும் பீறலும் ஆகும்
**143 

#143
அவி தேவர்ஊணும் நெய்யும் ஆகும்
**144 

#144
அழுவம் பரப்பும் துருக்கமும் முரசும் 
நடுக்கமும் நாடும் நவிலலாகும்
**145 

#145
அழனம் தீயும் பிணமும் ஆகும்
**146 

#146
அழுங்கல் நோயும் சோம்பும் கேடும்
ஓசையும் நடுக்கமும் துன்பமும் ஏங்கலும் 
**147 

#147
அழுக்காறு மனத்தின்கோட்டமும் பொறாமையும்
**148 

#148
அழகு சர்க்கரையும் வெல்லமும் அழகும்
**149 

#149
அழுக்கே மாசும் ஆமையும் ஆகும்
**150 

#150
அளம் செறிவும் கூர்மையும் உப்பளமும் கடலும்
**151 

#151
அளையே தயிரும் முழையும் புற்றும் 
பாழிலும் மோரும் பகரலாகும்
**152 

#152
அள்ளல் சேறும் நரகமும் அள்ளலும்
**153 

#153
அளகம் கொந்தளமும் ஓதியும் நீரும்
**154 

#154
அள்ளே கூர்மையும் செறிவும் வன்மையும் 
செவியும் வலியும் பற்றிரும்பும் செப்புவர்
**155 

#155
அளி அன்பும் வண்டும் கொடுத்தலும் மதுவும்
**156 

#156
அளவை மரக்காலும் நாழியும் தினமும் 
எல்லையும் எனவே இயம்பலாகும்
**157 

#157
அளித்தல் காத்தலும் கொடுத்தலும் செறிதலும்
**158 

#158
அளக்கர் கார்த்திகையும் பூமியும் சேறும்
கடலும் உப்பளமும் கழறலாகும்
**159 

#159
அளறு நரகமும் சேறும் ஆகும்
**160 

#160
அறையே பாறையும் சிற்றிலும் அறைதலும் 
அலையும் மொழியும் மலைமுழைஞ்சும் ஆகும்
**161 

#161
அற்றம் மறைப்பொருளும் அவகாசமும் சோர்வும் 
நாயும் துடியும் சற்றும் மற்றதுவும் 
உண்மையும் முடிவும் ஓதலாகும்
**162 

#162
அறல் நீர்த்திரையும் நீரும் விழாவும் 
நுண்மணலும் என நுவலலாகும்
**163 

#163
அறுவை ஆடையும் சித்திரைநாளும்
**164 

#164
அற்பம் சிறுமையும் நாயும் ஆகும்
**165 

#165
அறுகு சிங்கமும் புலியும் யானையும்
அறுகம்புல்லும் யாளியும் ஆகும்
**166 

#166
அறுபதம் கையாந்தகரையும் வண்டும்
**167 

#167
அறிக்கை பற்றுவித்தலும் அறிதலும்
**168 

#168
அன்னே விகுதியும் சாரியையும் ஆகும்
**169 

#169
அன்றில் அன்றில்புள்ளும் மூலமும்
**170 

#170
அன்னை தாயும் மூத்தாளும் தோழியும்
**171 

#171
அனலி பாற்கரனும் தீயும் ஆகும்
**172 

#172
அனந்தன் மாலும் அருகனும் சிவனும் 
சேடனும் தெய்வமும் செப்பலாகும்
**173 

#173
அனந்தம் அளவின்மையும் பொன்னும் விண்ணும்
**174 

#174
அனந்தை ஓர்சத்தியும் பூமியும் ஆகும்
**175 

#175
அனங்கம் இருவாட்சியும் முல்லையும் ஆகும்
**176 

#176
அனிலம் பவமும் காற்றும் ஆகும்
**177 

#177
அன்னம் சோறும் அன்னப்புள்ளும்
**178 

#178
அனுக் கவுள் முகனும் தொடர்ச்சியும் ஆகும்
**179 

#179
அனித்தியம் நில்லாமையும் சந்தனமும் பொய்யும்
**180 

#180
அன்னியம் நொதுமலும் குயிலும் ஆகும்
**181

#181
அ அதிசயமும் சுட்டும் ஆதியும் உயிரும் 
துயரும் அல்லவும் சொல்லலாகும்
** அகர வருக்கம் முற்றும்
** 2 ஆகார வருக்கம்
**182 

#182
ஆகம் மார்பும் உடம்பும் ஆகும்
**183 

#183
ஆகாரம் ஊணும் வடிவும் நெய்யும்
**184 

#184
ஆகு கொப்பூழும் பெருச்சாளியும் எலியும்
**185 

#185
ஆகுலம் துன்பமும் ஓசையும் ஆகும்
**186 

#186
ஆக்கம் செல்வமும் திருமகளும் ஆகும்
**187 

#187
ஆங்கு அசைச்சொல்லும் அவ்விடமும் ஒப்பும்
**188 

#188
ஆசினி மரவுரியும் வயிரமும் விண்ணும் 
மரமும் பலாவின்விசேடமும் ஆகும்
**189 

#189
ஆசுகம் பகழியும் காற்றும் ஆகும்
**190 

#190
ஆசிடை வாழ்த்தும் கூட்டமும் ஆடையும்
**191 

#191
ஆசு கவியும் கவசமும் அற்பமும்
குற்றமும் சடுதியும் கரக்கருவியும் ஆகும்
**192 

#192
ஆசாரம் பெருமழையும் சீலமும் 
மேட்டையும் புடவையும் விளம்பலாகும்
**193 

#193
ஆசான் வியாழமும் குருவும் ஆகும்
**194 

#194
ஆசை பொன்னும் திசையும் அவாவும் 
பரிவும் அன்பும் வாமமும் ஆகும்
**195 

#195
ஆஞ்சி கூத்தும் அழுங்கலும் ஆகும்
**196 

#196
ஆடு வெற்றியும் கூத்தும் மேடமும் 
ஆடும் கூர்மையும் மானும் ஆகும்
**197 

#197
ஆடி கண்ணாடி ஓர்மாதமும் காற்றும் 
உத்திராடமும் என உரைக்கலாகும்
**198 

#198
ஆடை தொங்கலும் நோயும் சீலையும்
**199 

#199
ஆடகம் துவரையும் பொன்னும் ஆகும்
**200 

#200
ஆடவர் புருடரும் ஆண் இளைஞரும் ஆகும்
**201 

#201
ஆடல் புணர்ச்சியும் வெற்றியும் சொல்லும் 
கூத்தும் கவிதையும் கூறலாகும்
**202 

#202
ஆணம் குழம்பும் அன்பும் ஆகும்
**203 

#203
ஆணி எழுத்தாணியும் மற்றை ஆணியும் 
சயனமும் பேரழகும் சாற்றலாகும்
**204 

#204
ஆண்டார் உடையாரும் தேவரும் ஆகும்
**205 

#205
ஆணும் நன்மையும் இரதமும் ஆகும்
**206 

#206
ஆண்டு அவ்விடமும் வருடமும் புல்லும் 
நெல்லும் எனவே நிகழ்த்தலாகும்
**207 

#207
ஆணை மெய்ப்பாடும் வெற்றியும் ஏவலும் 
இலாஞ்சினையும் சூளும் தடுத்தலும் இசைப்பர்
**208 

#208
ஆதன் பேதையும் உயிரும் ஆகும்
**209 

#209
ஆதவர் அருக்கரும் வேதியரும் ஆகும்
**210 

#210
ஆதி மும்மூர்த்தியும் முதலும் ஒற்றியும்
நேரோடலும் அருக்கனும் நிகழ்த்தலாகும்
**211 

#211
ஆதித்தர் அருக்கரும் அமரரும் ஆகும்
**212 

#212
ஆதல் கூத்தும் நூலும் ஆகும்
**213 

#213
ஆம்பல் வேயும் கள்ளும் கவ்வையும்
ஊதுகொம்பும் யானையும் அல்லியும் 
ஓர்எண்ணும் இசைக்குழலும் இந்துவும் 
ஓர்பண்ணும் பேரொலியும் ஆகும்
**214 

#214
ஆம் இடைச்சொல்லும் நீரும் ஆம்என்றலும்
சூதமரமும் சொல்லலாகும்
**215 

#215
ஆம்பிரம் தேமாவும் புளிமாவும் புளிப்பும்
**216 

#216
ஆம்பி காளானும் சத்தமும் ஆகும்
**217 

#217
ஆமலகம் நெல்லியும் பளிங்கும் ஆகும்
**218 

#218
ஆயம் ஆதாயமும் மகளிர்கூட்டமும் 
சூதும் சுங்கமும் நீளமும் தோழியும் 
மல்லரியும் என வழுத்தலாகும்
**219 

#219
ஆயிரம் ஓர்எண்ணும் அளவின்மையும் ஆம்
**220 

#220
ஆய்தல் தேர்தலும் நுணுக்கமும் ஆகும்
**221 

#221
ஆய்வு தெரிதலும் துன்பமும் ஆகும்
**222 

#222
ஆரம் நித்திலமும் பதக்கமும் பூணும்
பித்தளையும் சந்தும் ஆத்தியும் மாலையும்
**223 

#223
ஆர் செறிவும் கூர்மையும் ஆத்தியும் சோதியும் 
அவனியும் நிறைவும் பாகும் தேருருளும்
**224 

#224
ஆரல் செவ்வாயும் கார்த்திகைநாளும் 
மதிலும் ஆரல்மீனும் ஆகும்
**225 

#225
ஆரை புற்பாயும் ஆரையும் எயிலும்
**226 

#226
ஆரியன் குருவும் ஓர்தேசமும் அறிஞனும் 
ஆதித்தனும் என அறையலாகும்
**227 

#227
ஆர்வம் வில்லும் நிரையமும் காதலும்
ஆர்ப்புதம் அமரும் எனவே அறைந்தனர் புலவர் 
**228 

#228
ஆர்தல் குடித்தலும் அணிதலும் நிறைதலும்
உண்டலும் எனவே உரைக்கலாகும்
**229 

#229
ஆர்கலி மழையும் கடலும் ஆகும்
**230 

#230
ஆரூபம் நீங்காமையும் அமையாமையும்
**231 

#231
ஆர்வலன் கணவனும் நண்பனும் ஆகும்
**232 

#232
ஆர்மை மதிலும் கூர்மையும் ஆகும்
**233 

#233
ஆரி கதவும் அழகும் ஆகும்
**234 

#234
ஆர்ப்பு அரவம் போரும் தூளியும் ஆகும்
**235 

#235
ஆரியர் மிலேச்சரும் அறிவுடையோரும் ஆம்
**236 

#236
ஆலம் விடமும் அலர்ந்தபூவும் 
மழையும் நீரும் மழுவும் ஆலும்
**237 

#237
ஆல் அசைச்சொல்லும் புனலும் ஆலும் 
ஆம் என்பதுவும் அல்ல என்பதுவும்
**238 

#238
ஆலி ஆலாங்கட்டியும் மழையும்
காற்றும் அறலும் கழறலாகும் 
**239 

#239
ஆலயம் ஆனைக்கூடமும் நகரமும் 
தேவராலயமும் செப்பலாகும்
**240 

#240
ஆலல் ஆடலும் ஒலியும் ஆகும்
**241 

#241
ஆவல் வளையும் அவாவும் ஆகும்
**242 

#242
ஆவி ஆருயிரும் நாற்றமும் புகையும் 
வாவியும் மூச்சும் வழங்கலாகும்
**243 

#243
ஆவணம் அங்காடியும் அடிமைஓலையும் 
பீடிகையும் புணர்தமும் வீதியும் உரிமையும்
**244 

#244
ஆவரணம் தூசும் பூணும் தடையும் 
வானும் மாசும் மறையும் ஆகும்
**245 

#245
ஆவியர் உழவரும் வேடரும் ஆகும்
**246 

#246
ஆவம் நாழிகையும் அம்புறுதூணியும்
**247 

#247
ஆழி மோதிரமும் வட்டமும் கடலும் 
நேமிப்புள்ளும் தேராழியும் கரையும் 
சக்கரமும் எனச் சாற்றலாகும்
**248 

#248
ஆற்றல் சுமத்தலும் வென்றியும் ஆண்மையும் 
கூட்டுதலும் விதித்தலும் மிகுதியும் வாய்மையும் 
ஆற்றுதலும் பொறையும் ஞானமும் வலியும்
**249 

#249
ஆறு ஓர்எண்ணும் வழியும் நதியும்
**250 

#250
ஆற்று தலைக் கடையும் ஆற்றலும் ஆகும்
**251 

#251
ஆனி ஓர்மாதமும் கேடும் மூலமும்
**252

#252
ஆனே பசுவும் இடைச்சொல்லும் ஆகும் 
**253

#253
ஆனியம் பொழுதும் நாளும் ஆகும் 
**254 

#254
ஆனகம் படகமும் துந்துமியும்  தருவும் 
**255 

#255
ஆவதி சயமும் இசையும் பசுவும் 
வியங்கோளும் கற்பகமும் இரக்கமும் 
** ஆகார வருக்கம் முற்றும்
** 3 இகர வருக்கம்
**256 

#256
இகரம் ஓர்எழுத்தும் சந்தமும் ஆகும்
**257 

#257
இகலன் நரியும் ஓரியும் ஆகும்
**258 

#258
இகுத்தல் துடைத்தலும் வீழ்த்தலும் ஈர்தலும் 
இளைத்தலும் செகுத்தலும் அருந்துவித்திடலும் 
அழைத்தலும் தாழ்த்தலும் இரிதலும் ஈவும்
**259 

#259
இகத்தல் புடைத்தலும் நெருக்கமும் காழ்த்தலும்
கடத்தலும் இயங்கலும் கழறலாகும்
**260 

#260
இகுரி வழக்கும் தோணியும் ஆகும்
**261 

#261
இக்குக் கரும்பும் கள்ளும் ஆகும்
**262 

#262
இகுளை தோழியும் நட்பும் ஆகும்
**263 

#263
இகல் பகையும் வலியும் பொருதலும் ஆகும்
**264 

#264
இங்குப் பெருங்காயமும் இவ்விடமும் ஆகும்
**265 

#265
இசித்தல் ஒசிவும் இறுத்தலும் ஆகும்
**266 

#266
இசை உரைச்சொல்லும் பொன்னும் புகழும் 
திசையும் வண்மையும் பண்பும் பாட்டும் 
இனிமையும் எனவே இயம்பலாகும்
**267 

#267
இச்சை ஆசையும் பொய்த்தலும் இடித்தலும் 
அஞ்ஞானமும் என அறையலாகும்
**268 

#268
இஞ்சி கோட்டையும் இஞ்சியும் ஆகும்
**269 

#269
இடி நெல்மாவும் உறுதிச்சொல்லும் 
தகரமும் சுண்ணமும் இடியேறும் ஆகும்
**270 

#270
இடை ஓர்இடையும் ஆயரும் நுசுப்பும் 
நடுவும் இடமும் நிறையும் யானையும்
**271 

#271
இடபம் மரக்கொம்பும் ஏறும் இராசியும் 
கிம்புரியும் எனக் கிளத்தலாகும்
**272 

#272
இடங்கர் குடமும் முதலையும் துர்த்தரும்
**273 

#273
இடம் இடப்புறமும் இடமும் செல்வமும் 
விசாலமும் வாமமும் விளம்பலாகும்
**274 

#274
இடித்தல் இடித்தலும் உறுதிச்சொல்லும்
**275 

#275
இடக்கரே குடமும் மறைச்சொல்லும் ஆகும்
**276 

#276
இடைதல் சீலையும் துன்பமும் ஆகும்
**277 

#277
இணை ஓர்ஓதியும் ஒப்பும் பனிச்சையும்
இரண்டும் எனவே இயம்பலாகும்
**278 

#278
இண்டை வனசமும் ஈங்கையும் ஆகும்
**279 

#279
இணர் பூங்கொத்தும் பூவும் ஆகும்
**280 

#280
இதழ் பூவிதழும் ஏடும் உதடும்
**281 

#281
இதை புதுப்புனமும் தோணிப்பாயும்
நாஞ்சிலும் எனவே நவிலலாகும்
**282 

#282
இதல் கவுதாரியும் சிவலும் ஆகும்
**283 

#283
இதியே பேயும் இறுதியும் ஆகும்
**284 

#284
இந்தனம் எரியிடுகனலும் விறகும்
இசையும் புகையும் இயம்பலாகும்
**285 

#285
இந்து சந்திரனும் கரடியும் யானையும்
**286

#286
இபம் மரக்கோடும் யானையும் வார்த்தையும்
**287 

#287
இமிழே இசையும் இனிமையும் ஆகும்
**288 

#288
இம்மி பொய்யும் புலமும் நுண்மையும்
**289 

#289
இமையே எண்கும் சிகியும் இமையும்
**290 

#290
இயல் இயலும் சாயலும் நடையும் தமிழும்
**291 

#291
இயவை வழியும் காடும் ஊரும்
**292 

#292
இயறல் முத்தியும் போதலும் ஆகும்
**293 

#293
இயம் மீவார்த்தையும் பறையும் ஒலியும்
**294 

#294
இயம்பல் பழிமொழியும் சொல்லலும் ஆகும்
**295 

#295
இரணம் பொன்னும் கடனும் மாணிக்கமும்
அரவும் இகலும் அறையலாகும்
**296 

#296
இருள் கறுப்பும் நிசியும் யானையும் மையலும் 
நரகமும் எனவே நவிலலாகும்
**297 

#297
இரசதம் வெள்ளியும் காஞ்சியும் ஆகும்
**298 

#298
இருவி தினைத்தாளும் இருவியும் ஆகும்
**299 

#299
இரலை ஊதுகொம்பும் கலையும் அசுபதியும்
**300 

#300
இராகம் முடுகியலும் செம்மையும் இச்சையும் 
கீதமும் எனவே கிளத்தலாகும்
**301 

#301
இருமை பெருமையும் இம்மையும் மறுமையும்
**302 

#302
இராசியம் யோனியும் மறைவும் ஆகும்
**303 

#303
இருசு செவ்வையும் பண்டியுளிரும்பும்
**304 

#304
இரதி பிடியானையும் மன்மதன்தேவியும்
பித்தளையும் ஆசையும் பேசலாகும்
**305 

#305
இரவி சூரியனும் வாணிகமும் மலையும்
**306 

#306
இரங்கல் ஓசையும் இரங்கலும் ஆகும்
**307 

#307
இரவே இரத்தலும் இரவும் ஆகும்
**308 

#308
இரதன் கண்ணும் கிளியும் ஆகும்
**309 

#309
இராடம் ஓர்தேசமும் கழுதையும் ஆகும்
**310

#310
இரதம் புணர்ச்சியும் தேரும் இன்சுவையும் 
சூதமும் கொள்ளியும் அரைஞாணும் சொல்லுவர்
**311 

#311
இருபிறப்பு எயிறும் புலியும் பறவையும் 
பார்ப்பாரும் எனப் பகரலாகும்
**312 

#312
இலாடம் ஓர்தேசமும் பாலமும் ஆகும்
**313 

#313
இலம்பகம் அத்தியாயமும் நுதலணியும் ஆகும்
**314 

#314
இலஞ்சி மாவும் மகிழும் புன்கும்
எயிலும் ஏரியும் குணமும் கொப்பூழும் ஆம்
**315 

#315
இலயம் கூத்தும் கூத்தின்விகற்பமும் 
கேடும் எனவே கிளத்தினர் புலவர்
**316 

#316
இலங்கை துருத்தியும் ஓர்ஊரும் ஆகும்
**317 

#317
இலம்பாடு வறுமையும் துக்கமும் ஆகும்
**318 

#318
இலாங்கலி கலப்பையும் தெங்கும் வெண்காந்தளும்
**319 

#319
இல் சாவும் இடமும் மனையும் மனையாளும் 
இல்லைஎன்றலும் இராசியும் ஆகும்
**320 

#320
இவர்தல் ஆசையும் ஏவலும் எழுச்சியும் 
ஏறலும் சேறலும் இயம்பலாகும்
**321 

#321
இவர்வு சேறலும் எழுதலும் ஆசையும் 
ஏறுதலும் செலுத்தலும் இயம்பலாகும்
**322 

#322
இவறல் மறவியும் ஆசையும் ஆகும்
**323 

#323
இழுமெனல் ஓசையும் இனிமையும் ஆகும்
**324 

#324
இழை ஆபரணம் நூலும் ஆகும்
**325 

#325
இழைத்தல் கூற்றும் மாற்றமும் செயலும் 
நினைத்தலும் ஏவலும் நிகழ்த்தலாகும்
**326 

#326
இழுக்குச் சோர்வும் பிழைத்தலும் ஆகும்
**327 

#327
இளி யாழ்நரம்பும் இசையும் இசித்தலும் 
நகையும் இணுங்குதலும் உரித்தலும் ஆகும்
**328 

#328
இளை தலைக்காவலும் வேலியும் புயலும் 
இளமையும் கிடங்கும் மானும் இருநிலமும் 
செய்யாளும் காடியும் செப்பலாகும்
**329 

#329
இயாளி சிங்கமும் இபமும் ஆகும்
**330 

#330
இளமை தண்மையும் கோமளமும் காமமும்
**331 

#331
இளவல் பின்தோன்றலும் ஏந்தலும் ஆகும்
**332 

#332
இளைத்தல் இரங்கலும் எய்த்தலும் ஆகும்
**333 

#333
இறை இறையிறுப்பும் இறைவனும் கடனும் 
சிறுமையும் தங்கலும் இல்லின்இறப்பும்
சென்னியும் தலைமையும் கையிறையும் மயனும் 
மேலோரும் ஈசனும் விளம்பலாகும்
**334 

#334
இறைவை புட்டிலும் ஏணியும் ஆகும்
**335 

#335
இறலே முத்தியும் போதலும் ஆகும்
**336 

#336
இறும்பு குறுங்காடும் மலையும் அதிசயமும் 
வனசமலரும் கானும் தகைமையும்
**337 

#337
இறும்பூது மலையும் தகைமையும் குழையும் 
சிறுதூறும் அதிசயமும் அறுபதமும் 
காந்தள்பூவும் தாமரைப்பூவும் ஆம்
**338

#338
இறுத்தல் ஒடித்தலும் தங்கலும் இயம்பலும்
**339 

#339
இறத்தல் கடத்தலும் சாதலும் மிகுதியும்
**340 

#340
இறப்பும் மிகுதியும் சாவும் போக்கும்
இல்லின்இறப்பும் இயம்பலாகும்
**341 

#341
இறால் தேன்கூடும் மீனும் எருதும் 
கார்த்திகையும் எனக் கழறலாகும்
**342 

#342
இனம் இருங்கிளையும் அமைச்சரும் ஆகும்
** இகரவருக்கம் முற்றிற்று
** 4 ஈகார வருக்கம்
**343 

#343
ஈகை பொன்னும் வளியும் கொடையும் 
இல்லாமையும் கற்பகமும் ஈங்கையும்
**344 

#344
ஈடு குழைவும் வலியும் பெருமையும் 
ஒப்பும் எனவே உரைக்கலாகும்
**345 

#345
ஈண்டு இவ்விடமும் இவ்வாறும் சடுதியும் 
ஈங்கையும் எனவே இசைக்கலாகும்
**346 

#346
ஈமம் மயானமும் எரியிலிடுகலமும் 
காட்டமும் எனவே கழறலாகும்
**347 

#347
ஈயல் இந்திரகோபமும் செல்லும்
**348 

#348
ஈரம் வனப்பும் அன்பும் குளிர்ச்சியும் 
அறிவும் எலுமிச்சும் பகுத்தலும் ஆகும்
**349 

#349
ஈரே கதுப்பும் ஈரும் ஆகும்
**350 

#350
ஈழம் கள்ளும் பொன்னும் ஓர்தேசமும்
**351 

#351
ஈறே முடிவும் பயனும் ஆகும்
**352 

#352
ஈன்றான் பிரமனும் தாதையும் ஆகும்
**353 

#353
ஈ மொழியும் எள்ளலும் ஈயும் ஆகும்  
**ஈகார வருக்கம் முற்றிற்று
** 5 உகர வருக்கம்
**354

#354
உகம் முடிவும் பூமியும் உரகமும் நாளும்
**355 

#355
உக்கம் கோழியும் தீயும் ஏறும் 
ஆலவட்டமும் இடையும் பக்கமும் 
விசிறியும் எனவே விளம்பினர் புலவர்
**356 

#356
உகளம் இடமுடிவும் இரண்டும் ஆகும்
**357 

#357
உச்சி நண்பகலும் உச்சியும் ஒடுக்கமும்
**358 

#358
உசிதம் நீரும் வளைதலும் நட்பும் 
உசிதமும் கூப்பிடலும் உரைக்கலாகும்
**359 

#359
உசாவே கருதலும் துணையும் ஆகும்
**360 

#360
உஞற்று உற்சாகமும் ஊக்கமும் தப்பும்
**361 

#361
உடலே பொருளும் உடம்பும் ஆகும்
**362 

#362
உடு நாவாயும் ஓட்டும்கோலும் 
நட்சத்திரமும் கிடங்கும் விண்ணும் 
அம்பும் கழமையும் அறையலாகும்
**363 

#363
உட்கை உள்ளங்கையும் உறவும்
**364 

#364
உடுக்கை துகிலும் ஓர்வாச்சியமும்
**365 

#365
உடை குடை வேலும் கூறையும் செல்வமும் 
முள்ளுடையும் எனவே மொழியலாகும்
**366 

#366
உடைமை தாளும் கலணையும் கூறையும்
**367 

#367
உட்குதல் அச்சமும் நாணமும் ஆகும்
**368 

#368
உணவு சோறும் மழையும் உண்டலும்,
**369 

#369
உண்டி உண்டலும் சோறும் ஆகும்
**370 

#370
உண்டை படையுறுப்பும் திரட்சியும் பிச்சையும்
**371 

#371
உண்டாட்டு விளையாட்டும் பெண்விளையாட்டும்
**372 

#372
உணர்வு ஊடல்தீர்தலும் அறிவும் தெளிவும் 
உணர்ச்சியும் மொழிவும் உரைக்கலாகும்
**373 

#373
உதும்பரம் அத்தியும் செம்பும் ஆகும்
**374 

#374
உதகம் பூமியும் நீரும் ஆகும்
**375 

#375
உதியன் பாண்டியனும் சேரனும் ஆகும்
**376 

#376
உத்தரம் ஓர்நூலும் வடக்கும் மேலும் 
எதிர்மொழியும் என இயம்பலாகும்
**377

#377
உத்தி படப்பொறியும் திருவினுறுப்பும் 
நுண்மைப்பொருளும் ஆர்கலியும் தேமலும்
**378 

#378
உத்தரி பரியும் யானையும் பாம்பும்
**379 

#379
உத்திரம் ஓர்நாளும் உத்திரக்கட்டையும்
**380 

#380
உத்தரகுரு பஞ்சபாண்டவரும் சாலியும்
**381 

#381
உந்தி கொப்பூழும் நீர்ச்சுழியும் கடலும் 
நதியும் தேருருளும் உயர்ச்சியும் துணையும் 
நீரும் நடுவும் மகளிர்விளையாட்டும் 
யாழுறுப்பும் என நவிலலாகும்
**382 

#382
உப்பே கடலும் இனிமையும் உவரும் 
மகளிராடலும் இரதமும் ஆகும்
**383 

#383
உப்பளம் அளமும் கழிநிலமும் ஆகும்
**384 

#384
உம்பர் தேவரும் உயர்நிலமும் மேலும்
ஆயரும் எனவே அறையலாகும்
**385

#385
உம்பல் நற்குலமும் தந்தியும் விலங்கும்
**386 

#386
உமட்டியர் என்ப வியன் கடல் பிணாக்களும்
உப்புவில்பெண்களும் உரைக்கலாகும்
**387 

#387
உயவை காக்கணமும் கான்யாறும் ஆகும்
**388 

#388
உயிரே காற்றும் சீவனும் ஆகும்
**389 

#389
உரம் மார்பும் ஊக்கமும் ஞானமும் வலியும்
**390 

#390
உரியபொறி திருவுறுப்பும் முத்தியும்
**391 

#391
உரை பொருளும் மொழியும் தேய்வும் ஓசையும்
**392 

#392
உரு ஊர் அட்டையும் நிறமும் வடிவும் 
நோயும் நாவாயும் புள்ளும் ஆகும்
**393 

#393
உருப்பு வெப்பும் துக்கமும் உதித்தலும்
**394 

#394
உருத்தல் கோபமும் தோற்றமும் ஆகும்
**395 

#395
உரியோர் மூதறிந்தோரும் மூத்தோரும்
**396 

#396
உருத்தி தொழிலும் உரிய கைம்முதலும் 
வளர்ச்சியும் செய்தூணும் வழங்கலாகும்
**397 

#397
உலகம் பாரும் திக்கும் ஆகாயமும் 
உயர்ந்தோரும் குணமும் வியனும் சனமும் 
நாடும் எனவே நவிலலாகும்
**398 

#398
உலவை மரக்கோடும் விலங்கின்கொம்பும் 
காற்றும் தழையும் கழறலாகும்
**399 

#399
உலகர் பாண்டியரும் உலோகரும் ஆகும்
**400 

#400
உலக்கை உலக்கையும் கடலும் ஓணமும்
**401 

#401
உலம் பட்டாடையும் கல்திரளும் நீரும்
துன்பமும் காற்றும் சொல்லலாகும்
**402 

#402
உவணம் கருடனும் உயர்ச்சியும் கழுகும்
**403 

#403
உவளகம் அந்தப்புரமும் பக்கமும்
நீர்த்தாழ்வும் மதிலும் வாவியும் உப்பளமும் 
ஆயர்ஊரும் அறையலாகும்
**404 

#404
உவப்பு மகிழ்ச்சியும் உயர்வும் ஆகும்
**405 

#405
உவா இளையோனும் கடலும் யானையும் 
இருவகைஉவாவும் இசைத்தனர் புலவர்
**406 

#406
உழையே மானும் யாழிலோர்நரம்பும் 
ஒன்றுமிடமும் அருக்கன்தேவியும்
**407 

#407
உழுவன் நிலைபெற்றஅன்பும் புணர்ச்சியும் 
பெற்றியும் எழுமையும் பேசலாகும்
**408 

#408
உழப்பு முயற்சியும் வலியும் உற்சாகமும்
**409 

#409
உழிஞை சிறுபூளையும் மதில்வளைத்தலும் மதிலும்
**410 

#410
உழுவை புலியும் எருமையும் ஓதுவர் 
**411 

#411
உளை சத்தவொலியும் எழுத்தினோசையும்
பரிமேல்கட்டியமயிரும் ஓதியும் 
ஆண்பால்மயிரும் அஃறிணைமயிரும் 
பரிக்கடிவாளத்தின்தளையும் பகர்வர்
**412

#412
உள்ளல் ஓர்பட்சியும் நினைவும் ஆகும்
**413 

#413
உளர்தல் சிதறலும் நீவலும் ஆகும்
**414 

#414
உள்ளம் முயற்சியும் நெஞ்சும் ஆகும்
**415 

#415
உறை ஓர்இலக்கமும் ஒழுகலும் காரமும் 
உள்ளியும் பாலூறுபிரையும் துளியும் 
படைக்கூடும் மருந்தும் பொருளும் உவர்நீரும் 
வாணாளும் ஊணும் இடைச்சொல்லும் நீளமும் 
வெண்கலமும் உறையும் உறைதலும் குறியும் 
பீடூரும் போர்வையும் பேசலாகும்
**416 

#416
உறவி உலைக்களமும் உயிரும் உறவும் 
எறும்பும் நீரூற்றும் இசைத்தனர் புலவர்
**417 

#417
உறழ் விடையீடும் ஒப்பும் செறிவும் 
புணர்வும் காலமும் பூசலும் ஆகும்
**418 

#418
உறையுள் சயனமும் மனையும் ஊர்ப்பொதுவும் 
நாடும் கோயிலும் நவிலலாகும்
**419 

#419
உறையூர் மருதம்சார்ந்தவூரும் 
சோழன் உறையூரும் சொல்லலாகும்
**420 

#420
உறுகண் நோயும் துன்பமும் வறுமையும் 
பயமும் எனவே பகரலாகும்
**421 

#421
உறுதி கல்வியும் நன்மையும் ஆகும்
**422 

#422
உறுப்பு படையுறுப்பும் உடலும் அங்கமும்
**423 

#423
உன்னம் நினைவும் நெஞ்சும் ஆகும்
** உகர வருக்கம் முற்றிற்று
** 6 ஊகார வருக்கம்
**424 

#424
ஊகம் புலியும் குரங்கும் ஐயமும்
**425 

#425
ஊக்கம் உற்சாகமும் வலியும் உண்மையும்
உள்ளமிகுதியும் முயற்சியும் ஆகும்
**426

#426
ஊசி எழுத்தாணியும் சூசியும் ஆகும்
**427 

#427
ஊதியம் இலாபமும் கல்வியும் ஆகும்
**428 

#428
ஊமை கீரியும் மூங்கையும் ஆகும்
**429 

#429
ஊரி புயலும் சங்கும் ஆகும்
**430 

#430
ஊர் பரிவேடமும் நகரும் ஆகும்
**431 

#431
ஊர்தி சிவிகையும் தேரும் விமானமும் 
பாண்டிலும் குதிரையும் யானையும் ஆகும்
**432 

#432
ஊர்தல் தடவலும் சிதறலும் நடத்தலும்
**433 

#433
ஊழே பகையும் பழமையும் விதியும்
பெற்றியும் வெயிலும் பேசப்படுமே
**434 

#434
ஊழி பாரும் காலமும் முகமும்
**435 

#435
ஊழ்த்தல்தான் நினைத்தலும் பதனழிவும் செவ்வியும்
**436 

#436
ஊறு தீமையும் தீண்டலும் கொலையும்
இடையூறும் என இயம்பலாகும்
**437 

#437
ஊற்று நீரூற்றும் ஊன்றியகோலும் ஆம்
**438 

#438
ஊனே இறைச்சியும் நெல்லும் ஆகும்
**ஊகார வருக்கம் முற்றிற்று
** 7 எகர வருக்கம்
**439 

#439
எகினம் கவரிமாவும் நீர்நாயும் 
நாயும் புளியும் அன்னமும் மானும்
புளிமாவும் எனப் புகலலாகும்
**440 

#440
எஃகே வேலும் கூர்மையும் உருக்கும்
**441 

#441
எக்கர் சொரிதலும் குவிதலும் இசைக்கும்
**442 

#442
எகினி புளிமாவும் சிந்தமும் ஆகும்
**443 

#443
எச்சம் மகனும் குறைவும் வேள்வியும்
**444 

#444
எட்டி காஞ்சிரையும் செட்டியும் இயம்பும்
**445 

#445
எண் சோதிடமும் எளிமையும் எண்ணும் 
விசாரமும் எள்ளும் விளம்பலாகும்
**446 

#446
எண்டோளி காளியும் துர்க்கையும் ஆகும்
**447 

#447
எயில் திரிபுரமும் மதிலும் ஆகும்
**448 

#448
எய்த்தல் இளைத்தலும் அறிதலும் ஆகும்
**449 

#449
எருவை செம்பும் கழுகும் கள்ளும் 
இரத்தமும் கோரையும் கொறுக்கையும் யானையும் 
நாணலும் கோகும் நவிலலாகும்
**450 

#450
எருக்குதல் பரித்தலும் வெட்டுக்கடையும் 
கோறலும் எனவே கூறலாகும்
**451 

#451
எருந்தே உரலும் கிளிஞ்சிலும் ஆகும்
**452 

#452
எல்லே பகலும் இகழ்ச்சியும் ஒளியும் 
இரவியும் இராவும் இருளும் ஆகும்
**453 

#453
எலி காரெலியும் மதுவும் ஆடியும்
**454 

#454
எல்லை பகலும் குரோசமும் இரவியும்
அந்தமும் அளவும் ஆகும் என்ப
**455 

#455
எவ்வம் துன்பமும் தனிமையும் இசைக்கும் 
**456 

#456
எழினி கிடையாடையும் இடுதிரையும் ஆகும்
**457 

#457
எழிலே அழகும் இளமையும் ஆகும்
**458 

#458
எள்ளல் நகையும் இகழ்ச்சியும் ஆகும்
**459 

#459
எற்றுதல் புடைத்தலும் எறிதலும் ஆகும்
**460 

#460
எற்று எத்தன்மைத்துஎன்றலும் ஒத்தலும்
இரக்கமும் எறிதலும் இயம்பலாகும்
**461 

#461
எறுழ் வலியும் தூணும் தண்டும் ஆகும்
**462 

#462
என்றூழ் வெயிலும் காற்றும் இரவியும்
கோடைக்காலமும் கூறலாகும்
**எகர வருக்கம் முற்றிற்று
** 8 ஏகார வருக்கம்
**463 

#463
ஏங்கல் ஏங்குதலும் இரங்கலும் ஒலியும்
**464 

#464
ஏடகம் தெங்கும் பனையும் நல்லாடையும்
ஓர்ஊரும் பலகையும் உரைக்கலாகும்
**465 

#465
ஏடு குற்றமும் கண்இமையும் உலகும் 
பூவிதழும் பனையேடும் புகலுவர்
**466 

#466
ஏணி உலகமும் எல்லையும் ஏணியும் 
இறைவையும் மானும் இயம்பலாகும்
**467 

#467
எண் வரையறையும் வலியும் நிலையுடைமையும்
**468 

#468
ஏதம் துன்பமும் குற்றமும் ஆகும்
**469

#469
ஏதி ஆயுதமும் வாளும் ஆகும்
**470 

#470
ஏதல் போதலும் நாவாயும் ஆகும்
**471 

#471
ஏந்தல் பெருமையும் மலையும் மேடும்
ஏந்துதலும் இறையும் முதலும் ஆகும்
**472 

#472
எந்திரம் திரிகையும் இரதமும் மதிலும்
ஆலையும் எனவே அறையலாகும்
**473 

#473
ஏமம் சேமமும் காவலும் இன்பமும் 
இரவும் பொன்னும் ஏமாப்பும் மயக்கமும் 
வலியும் கலையும் நீறும் வகுத்தனர்
**474 

#474
ஏரே அழகும் பெற்றமும் ஆகும்
**475 

#475
ஏலம் மயிர்ச்சாந்தும் ஏலமும் துடியும்
**476 

#476
ஏல்வை பொழுதும் வாவியும் ஆகும்
**477 

#477
ஏவல் வியங்கோளும் வறுமையும் ஆணையும்
**478 

#478
ஏறு அசுபதியும் எருதும் இட்டமும் 
இடமும் ஆண்விலங்கும் இடியும் ஓர்தருவும்
**479 

#479
ஏற்றல் கோடலும் எதிர்ந்துபொருதலும் 
ஏற்றலும் எனவே இயம்பலாகும்
**480 

#480
ஏனை ஒழிவும் இடைச்சொல்லும் ஆகும்
**481 

#481
ஏனாதி சேனைத்தலைவரும் மறவனும்
மந்திரியும் நாவிதனும் வகுத்தனர் புலவர் 
**482 

#482
ஏனம் பன்றியும் மானும் ஆகும்
**483 

#483
ஏனல் செந்தினையும் தினைவிளை புனமும்
**484 

#484
ஏ இடைச்சொல்லும் தேற்றமும் வினாவும் 
ஈற்றசையும் அம்பும் இகழ்ச்சியும் ஆகும்
**ஏகார வருக்கம் முற்றிற்று
** 9 ஐகார வருக்கம்
**485 

#485
ஐ நீலம் சாதிக்காயும் இலவங்கமும்
**486 

#486
ஐயை தவப்பெண்ணும் காளியும் துர்க்கையும் 
தலைவியும் புதல்வியும் இடைச்சியும் உமையும்
**487 

#487
ஐப்பசி மாதமும் அசுபதியும் ஆகும்
**488 

#488
ஐ இடைச்சொல்லும் அழகும் கோழையும்
இருமலும் சுவாமியும் பதியும் மந்தாரமும் 
நாதனும் எனவே நவிலலாகும்
**ஐகார வருக்கம் முற்றிற்று
** 10 ஒகர வருக்கம்
**489 

#489
ஒடுக்கம் முடியச்செய்தலும் ஒடுக்கமும்
**490 

#490
ஒடுங்கல் கைக்கொளலும் ஒடுங்கலும் ஆகும் 
**491 

#491
ஒட்டுப் படைவகுப்பும் ஒன்றுதலும் ஆகும்
**492 

#492
ஒண்மை ஒழுங்கும் நன்மையும் அறிவும் 
அழகும் மிகுதியும் அறையலாகும்
**493 

#493
ஒதுங்கல் போகுதலும் ஒதுங்கலும் ஆகும்
**494 

#494
ஒதுக்கம் மறைவும் வாயிலும் வழியும்
**495 

#495
ஒத்தல் நடுவும் ஒப்பும் ஆகும்
**496 

#496
ஒப்புப் பெருத்தலும் உவமையும் எழிலும்
இசைவும் எனவே இயம்பலாகும்
**497 

#497
ஒப்புரவு இணக்கமும் ஈகையும் கடனும்
**498 

#498
ஒல்லை சிறுபொழுதும் தொல்லையும் விரைவும்
**499 

#499
ஒலி காற்றும் இடியும் ஓசையும் மொழியும்
**500 

#500
ஒலியல் மாலையும் நோயும் தோலும் 
ஆடையும் நதியும் அறையலாகும்
**501 

#501
ஒருத்தல் விலங்கேறு கரடியும் பன்றியும் 
யானையும் குதிரையும் புலியும் மானும்
**502 

#502
ஒழுகுதல் ஒழுகும் நீர்த்துளியும் நெடுமையும் 
நேர்மையும் எனவே நிகழ்த்தலாகும்
**503

#503
ஒழுக்கம் வழியும் ஆசாரமும் ஒழுங்கும் 
உயர்ந்தகுலமும் உரைக்கலாகும்
**504 

#504
ஒளி முச்சுடரும் ஒளிப்பிடமும் விளக்கும் 
புகழும் கிரணமும் கேட்டையும் ஆகும்
**505 

#505
ஒளி வட்டம் சக்கரமும் ஆடியும்
**506 

#506
ஒள்ளியோன் வியாழனும் சுக்கிரனும் ஆகும் 
**507 

#507
ஒற்றே ஒற்றனும் ஒற்றெழுத்தும் ஆகும்
**508 

#508
ஒற்றல் ஒற்றலும் நீங்கலும் ஆகும்
**509 

#509
ஒன்று முத்தியும் ஓர்எண்ணும் ஆகும்
**ஒகர வருக்கம் முற்றிற்று
** 11 ஓகார வருக்கம்
**510 

#510
ஓகை வாவென்றலும் உவகையும் ஆகும்
**511 

#511
ஓங்கல் ஓங்கலும் மலையும் வேயும் 
தோணியும் மேடும் உயர்ச்சியும் யானையும்
**512 

#512
ஓசை பேரொலியும் வாழையும் ஆகும்
**513 

#513
ஓடல் ஓடலும் ஆவும் அல்லவும்
**514 

#514
ஓட்டம் மேலுதடும் மேலும் தோல்வியும்
**515 

#515
ஓடை நீர்நிலையும் கிடங்கும் ஓர்கொடியும் 
யானைப்பட்டமும் பாதையும் ஆகும்
**516 

#516
ஓணம் மாயோன்நாளும் ஆறும்
**517 

#517
ஓதிம கவரிமாவும் அன்னமும் 
மலையும் எனவே வழங்கலாகும்
**518 

#518
ஓதனம் பெருமறையும் சோறும் உணவும்
**519 

#519
ஓதி பெண்மயிரும் பூஞையும் மலையும் 
ஓந்தியும் ஞானமும் அன்னமும் ஆகும்
**520 

#520
ஓதம் கடலும் கடல்திரையும் ஓதமும் 
ஈரமும் எனவே இயம்பலாகும்
**521 

#521
ஓதை மேடையும் ஒலியும் மதிலும்
**522 

#522
ஓரம் சகாயமும் விளிம்பும் ஆகும்
**523 

#523
ஓரி ஆண்மயிரும் முசுவும் ஓர்வள்ளலும் 
நரியும் மாச்சேக்கையும் நவிலலாகும்
**524 

#524
ஓரை பெண்குழுவும் இராசிப்பெயரும் 
பெண்கள்கலனும் பெண்களாடுதலும் 
ஓரியும் குரவையும் தோழியும் இடைச்சொல்லும்
**525 

#525
ஓலம் ஒலியும் பாம்பும் கடலும்
**526 

#526
ஓளி ஒழுங்கும் யானைக்கூடமும்
**527 

#527
ஓவே கலிங்கிலுறுகதவும் நீக்கமும் 
இரக்கமும் வாரக்கையும் இயம்பலாகும்
**ஓகார வருக்கம் முற்றிற்று

@2 ககர வருக்கம் 
**க
**528 

#1
ககமே அம்பும் புள்ளும் ஆகும்
**529 

#2
ககனம் விண்ணும் படையும் கற்பகமும் 
காடும் புள்ளும் கீரியும் காகமும்
**530 

#3
கங்கு தீப்பொறியும் கருந்தினை பருந்தும் 
வரம்பின் அருகும் வழங்கலாகும்
**531 

#4
கச்சம் யானைக்கழுத்திடுகயிறும்
மரக்காலும் துணிவும் வாரும் அளவும் 
**532 

#5
கசம்தான் நீரும் இரும்பும் தாதும்
கங்கமும் எனவே கழறலாகும்
**533 

#6
கச்சை கவசமும் கயிறும் தழும்பும்
**534 

#7
கச்சு மீனும் முலைக்கச்சும் அங்கியும்
**535 

#8
கசடு குற்றமும் ஐயமும் மாசும்
**536 

#9
கஞ்சம் வெண்கலமும் கஞ்சாவும் தாளமும் 
வனசமும் வட்டும் அப்பமும் ஆகும்
**537 

#10
கஞறல் பொலிவும் குன்றலும் ஆகும்
**538 

#11
கஞ்சன் குறளனும் வேதனும் ஆகும்
**539 

#12
கஞ்சிகை கூறையும் திரையும் ஆகும்
**540 

#13
கஞ்சனம் கண்ணாடியும் வலியானும் ஆகும்
**541 

#14
கடலே கடலும் பசுவும் ஆகும்
**542 

#15
கடறே வழியும் காடும் ஆகும்
**543 

#16
கடை சோர்வும் இடமும் வாயிலும் முடிவும் 
கீழும் கதவும் வீதியும் ஆகும்
**544 

#17
கடகம் யானைக்குழுவும் கைவளையும் 
பரிசையும் சாரலும் ஆயுதமும் வட்டமும் 
மதிலும் நார்க்கடகமும் வீடும் கங்கணமும்
**545 

#18
கடு முள்ளும் விடமும் கசப்பும் கடுத்தலும் 
கடுக்காய்மரமும் கழறலாகும்
**546 

#19
கட்டுக் குறியும் காவலும் களவும் 
கண்ணும் மிகுதியும் பந்தமும் ஆகும்
**547 

#20
கட்டல் பந்தித்தலும் கள்ளலும் தடுத்தலும் 
களைதலும் எனவே கழறலாகும்
**548 

#21
கடி விம்மிதமும் சிறப்பும் மையமும் 
காப்பும் கரிப்பும் கடித்தலும் நாற்றமும் 
விளக்கமும் பேயும் காலமும் மணமும் 
விரைவும் அச்சமும் கூர்மையும் புணர்ச்சியும் 
கண்ணிடமும் சிறுகொடியும் புதுமையும் 
துவசமும் மிகுதியும் குடியும் வரைவும்
**549 

#22
கடம் கரிக்குழுவும் முழவும் நீதியும் 
யானைக்கன்னமும் கயிறும் மதமும் 
சுரமும் உடலும் கடனும் குடமும் 
கானும் மலைச்சாரலும் கழறலாகும்
**550 

#23
கட்கம் வாகும் மூலமும் வாளும்
**551 

#24
கட்டளை உரையறிகருவியும் ஒப்பும் 
நிறையறிகருவியும் யாற்றலும்
நிறைகல்லும் துலாராசியும் இட்டிகையும்
**552 

#25
கடவுள் தேவும் நன்மையும் முனியும் 
**553 

#26
கட்சி காடும் கூடும் அமளியும்
துயிலிடமும் எனச் சொல்லலாகும்
**554 

#27
கடுத்தல் ஒப்பும் ஐயமும் வேகமும்
**555 

#28
கடவை ஏணியும் குற்றமும் ஆகும்
**556 

#29
கடிப்பம் பூணும் செப்பும் காதணியும்
**557

#30
கட்டி கருப்பு வட்டுறுகட்டியும்
புண்ணும் மகிழ்ச்சியும் புகலலாகும்
**558 

#31
கடைப்பிடி தேற்றமும் மறவாமையும் ஆம்
**559 

#32
கடிகை நாழிகையும் துண்டமும் சமயமும் 
கதவின்தாழும் வேதமும் ஆகும்
**560 

#33
கணி ஓர்சாதியும் மருதநிலமும் 
வேங்கையும் கணித்தலும் விளம்பலாகும்
**561 

#34
கண்டம் வாளும் யானைக்கச்சையும் 
திரையும் மிடறும் துண்டமும் வெல்லமும் 
பூமியும் தேசமும் கவசமும் ஆகும்
**562 

#35
கணிச்சி உளிக்கருவியும் தோட்டியும் மழுவும்
**563 

#36
கண்டிகை பணிச்செப்பும் வாகுவலையமும் 
பதக்கமும் கண்டிகையும் பறையும் ஆகும்
**564 

#37
கண் அருளும் விழியும் இடமும் கணுவும் 
வேயும் ஞானமும் கருத்தும் இடமும்
**565 

#38
கண்டூதி தினவும் காஞ்சொறியும் ஆகும்
**566 

#39
கணை பூரநாளும் அம்பும் திரட்சியும்
**567 

#40
கண்ணுதல் ஈசனும் கருதலும் ஆகும்
**568 

#41
கணம் காலநுட்பமும் திரட்சியும் பேயும் 
வட்டமும் நோயும் முடுவும் அவையும் 
அற்பமும் எனவே அறையலாகும்
**569 

#42
கணையம் காவற்காடும் பொன்னும் 
யானைத்தறியும் எழுவும் ஆகும்
**570 

#43
கண்டகம் வாளும் முள்ளும் காடும் 
சுரிகையும் வேலும் கூர்மையும் கடினமும்
**571 

#44
கண்டல் கைதையும் ஒள் வாளும் வயிரமும் 
முள்ளும் நீர்முள்ளியும் மொழியலாகும்
**572 

#45
கண்ணி கண்ணியும் கட்டும்கயிறும் 
தாரும் முகிழமும் சாற்றலாகும்
**573 

#46
கணக்குப் பாவிகற்பமும் எண்ணும் ஆகும்
**574 

#47
கதலி துவசமும் வாழையும் தேறும்
காற்றாடியும் எனக் கழறலாகும்
**575 

#48
கதழ்வு வேகமும் சிறப்பும் ஆகும்
**576 

#49
கதி பஞ்சகதியும் மோட்சமும் ஆகும்
**577 

#50
கதுப்பு விலங்கின்கூட்டமும் கவுளும் 
ஆண்பெண்மயிரும் மஞ்சளும் ஆகும்
**578 

#51
கதம்பம் கடம்பும் பலபூவும் ஆகும்
**579 

#52
கதிர் இருசுடரும் கதிரும் ஆகும்
**580 

#53
கதவம் காத்தலும் காவலும் கதவும்
**581 

#54
கதை காரணமும் சொல்லும் தடியும்
**582 

#55
கத்திகை வாசமும் தொடையின்விகற்பமும்
துவசமும் எனவே சொல்லலாகும்
**583 

#56
கதவு காவலும் கபாடமும் ஆகும்
**584 

#57
கந்தரம் மேகமும் கழுத்தும் மலைமுழைஞ்சும்
**585 

#58
கந்துகம் குதிரையும் பந்தும் கந்துகமும்
**586 

#59
கந்திருவம் குதிரையும் தந்திரரும் இசையும்
**587 

#60
கந்தம் பஞ்சகந்தமும் கிழங்கும் 
நாற்றமும் பொன்னும் கரணையும் பகுத்தலும் 
கழுத்தடியும் எனக் கழறலாகும்
**588 

#61
கந்து பண்டியுளிரும்பும் கம்பமும் 
யாக்கையின்மூட்டும் ஆதாரமும் திரட்சியும் 
காயமும் எனவே கழறலாகும்
**589 

#62
கந்தன் அருகனும் கந்தனும் ஆகும்
**590 

#63
கப்பணம் இரும்பிற்செய்நெருஞ்சிமுள்ளும் 
கைவேலும் எனக் கழறலாகும்
**591 

#64
கமலம் செம்படாமும் நீரும் தாமரையும்
**592 

#65
கம்பம் நடுக்கமும் தூணும் ஆகும்
**593 

#66
கம்பலை துன்பமும் ஓசையும் நடுக்கமும்
அச்சமும் வருத்தமும் ஆகும் என்ப
**594 

#67
கம்பு தவசமும் கோலும் சங்கும்
**595 

#68
கம் புனலும் வெண்மையும் தலையும் ககனமும் 
விதியும் புத்தியும் முகிலும் செம்மையும் 
காற்றும் சுவர்க்கமும் கழறலாகும்
**596 

#69
கம்மியர் கம்மாளரும் தொழில்புரிவோரும்
**597 

#70
கம்புள் சம்பங்கோழியும் சங்கும் 
வானம்பாடியும் என வகுத்தனரே
**598 

#71
கயம் தேய்வும் நீரும் நோயும் குளமும் 
மென்மையும் களிறும் பெருமையும் கீழும் 
ஆழமும் எனவே அறையலாகும்
**599 

#72
கயினி அத்தநாளும் கைம்மையும்
**600 

#73
கயில் பூண்கொக்கியும் பிடரியும் ஆகும்
**601 

#74
கயவு பெருமையும் மென்மையும் ஆகும்
**602 

#75
கரணம் அந்தக்கரணமும் கூத்தும் 
காரணமும் கணிதமும் வாயும் கலவியும்
**603 

#76
கரம் குடியிறையும் கிரணமும் கழுதையும் 
கைத்தலமும் நஞ்சும் எனக் கழறினரே
**604 

#77
கரி குஞ்சரமும் பானுவும் இருந்தையும் 
கறுப்பும் சான்றும் எனக் கழறினரே
**605 

#78
கருக் கருப்பொருளும் ஏடும் கருப்பமும்
**606 

#79
கருவி ஈட்டமும் கலனும் யாழும்
துணைக்காரணமும் கவசமும் தொடர்பும் 
பல்லியமும் படைக்கலமும் தொகுதியும் 
கசையும் பலவினையும் முகிலும் கலணையும்
**607 

#80
கரகம் கமண்டலமும் ஆலாங்கட்டியும் 
துளிநீரும் கங்கையும் சொல்லுவர் புலவர்
**608 

#81
கரோடி பெருஞ்சூட்டும் சிரமாலையும் ஆம்
**609 

#82
கரிணி பிடியானையும் யானைப்பொதுவும் 
மலைமுழைஞ்சும் மலையும் வழங்கலாகும்
**610 

#83
கருமை பெருமையும் கறுப்பும் வலியும் 
நஞ்சும் எனவே நவிலலாகும்
**611 

#84
கரைதல் கூவுதலும் ஒலித்தலும் மொழிதலும் 
அழுதலும் எனவே அறையலாகும்
**612 

#85
கருமான் பன்றியும் கருமானும் ஆகும்
**613 

#86
கரேணு கொல்யானையும் பிடியானையும்
**614 

#87
கரடம் மதம்பாய்சுவடும் காக்கையும் 
**615 

#88
கரீரம் யானையின்பல்லடியும் அகத்தியும்
முளையும் மிடாவும் மொழியலாகும்
**616 

#89
கரில் காழ்ப்பும் கொடுமையும் குற்றமும் ஆகும்
**617 

#90
கரியவன் சனியும் மாலும் இந்திரனும்
**618 

#91
கருங்கை இன்மையும் கொன்றுவாழ்தொழிலும் 
வன்பணித்தொழிலும் கன்றியதொழிலும் 
எனும் முத்தொழிலையும் உயம்புவதாகும்
**619 

#92
கலமே கலமும் தோணியும் பூணும் 
அலமும் உண்கலமும் யாழும் ஓர்அளவும்
**620 

#93
கலி வலியோனும் சனியும் கலிப்பாவும் 
மிகுதியும் வஞ்சமும் ஓசையும் கடலும் 
கலியுகமும் வலியும் கழறலாகும்
**621 

#94
கலை காலநுட்பமும் காஞ்சியும் கல்வியும்
நூலும் தூசும் மந்தியும் சேகும் 
கவடும் ஒருராசியும் மதியின்கலையும் 
மானேறும் என்ன வழங்கலாகும்
**622 

#95
கல் பருப்பதமும் ஓசையும் கல்லும் 
அருவியும் அவலமும் அறையலாகும்
**623 

#96
கலாமே கொடுமையும் சினமும் ஆகும்
**624 

#97
கல்வி அறிவும் பயிற்சியும் ஆகும்
**625 

#98
கலவை சாந்தும் சேறும் ஆகும்
**626 

#99
கலித்தல் ஒலியும் பொற்பும் எழுச்சியும்
**627 

#100
கலுழி கான்யாறும் கலங்கல்நீரும்
**628 

#101
கலிங்கம் ஊர்க்குருவியும் வானம்பாடியும் 
கலிங்கதேசமுஞ் சீலையும் ஆகும்
**629 

#102
கல்லாரம் மஞ்சளும் செங்கழுநீரும் 
நீர்க்குளிரியும் என நிகழ்த்தலாகும்
**630 

#103
கலாபம் மேகலையும் அரைமணிவடமும் 
மயிலும் மயிற்பீலியும் வழங்கலாகும்
**631 

#104
கவடு கப்பும் கபடமும் யானையைக்கட்டும்கயிறும்
கழறலாகும்
**632 

#105
கவனம் போரும் கலக்கமும் காடும் 
விரைவும் குதிரையின்கதியும் விளம்புவர்
**633 

#106
கவுசிகம் விளக்குத்தண்டும் ஓர்பண்ணும் 
கோட்டானும் பட்டும் கூறலாகும்
**634 

#107
கவலை துன்பமும் கவர்த்தநெறியும் 
நோயும் கொடியும் சந்தியும் தினையும் 
அச்சமும் எனவே அறையலாகும்
**635 

#108
கவந்தம் பேயும் நீரும் செக்கும் 
யூபமும் எனவே உரைக்கலாகும்
**636 

#109
கவ்வை எள்ளிளங்காயும் காடும்
பாம்பும் பழியும் கட்டுண்பாரும் ஆம் 
**637 

#110
கவரி சாமரையும் தேரும் மேதியும்
கவரிமாவும் கழறலாகும்
**638 

#111
கவுசி குழைவும் வருத்தமும் பாட்டும்
**639 

#112
கவிகை பாட்டும் அளித்தலும் பிச்சமும்
**640 

#113
கவுந்தி பாண்டவரின்தாயும் பைம்மையும்
**641 

#114
கவி நீர்க்காக்கையும் புலவனும் வெள்ளியும் 
மந்தியும் கவியும் மாவாய்க்கருவியும்
**642 

#115
கவை ஆயிலியமும் காடும் கவரும் 
எள்ளிளங்காயும் இசைக்கலாகும்
**643 

#116
கவசம் கடலும் அரணும் ஆகும் 
**644 

#117
கழல் காலணியும் செருப்பும் காலும்
கழங்கும் எனவே கழறலாகும்
**645 

#118
கழி கழிகாலையும் மிகுதியும் கழியும் 
கழிமுகமும் எனக் கருதலாகும்
**646 

#119
கழை புனர்பூசமும் கரும்பும் மூங்கிலும்
**647 

#120
கழுது பேயும் பரணும் வண்டும்
**648 

#121
கழுமல் பற்றும் மயக்கமும் நிறைவும்
**649 

#122
கழுமுள் ஆயுதப்பொதுப்பெயரும் சூலமும் 
கழுக்கடையும் எனக் கழறலாகும்
**650 

#123
கழனி மென்பாலும் வயலும் ஆகும்
**651 

#124
கழுந்தி முத்தும் கழையும் ஆகும்
**652 

#125
கழிதல் சாதலும் கடந்திடலும் மிகுதியும்
**653 

#126
கழங்கு அணங்குஆடலும் வேலனாடலும் 
இந்திரியமும் கழற்காயும் ஆகும்
**654 

#127
கழறல் இடித்தலும் வார்த்தையும் ஆகும்
**655 

#128
களம் களாமரமும் அவையும் மிடறும்
கருமையும் நஞ்சும் நெல்வாரிடமும் 
இல்லாளும் போர்க்களமும் பரப்பும் ஆகும்
**656 

#129
களரி போரிடமும் கானும் கருமையும் 
கருமம்செய்யிடமும் சவையும் மிடறும் 
கோட்டியும் களர்நிலமும் கூறலாகும்
**657 

#130
களேபரம் உடலும் பிணமும் எலும்பும்
**658 

#131
கள் இளவேனிலும் வாவியும் சோர்வும் 
மென்பாலும் தொடர்பும் கள்ளும் ஆகும்
**659 

#132
கள்வன் முசுவும் கருநிறத்தவனும் 
யானையும் நண்டும் சோரனும் இராசியும்
**660 

#133
களை களைபயிரும் களைக்கோலும் ஆகும்
**661 

#134
களபம் சாந்தும் யானையும் கலவையும்
**662 

#135
களவன் மரக்கொம்பும் நண்டும் முசுவும்
**663 

#136
களிறு பன்றியும் கெளிற்றுமீனும்
யானையும் அத்தநாளும் சுறவும்
**664 

#137
களவு களாவும் திருட்டும் ஆகும்
**665 

#138
களங்கம் அழுக்கும் குற்றமும் ஆகும்
**666 

#139
களகன் மருதநிலமும் கள்ளும் தொடர்பும் 
பொய்கையும் எனவே புகலலாகும்
**667 

#140
களி கள்ளும் குழம்பும் செருக்கும் வடிவும்
**668 

#141
கறை குடியிறையும் உரலும் கறுப்பும் 
இரத்தமும் விடமும் மாசும் ஆகும்
**669 

#142
கறங்கல் வளைதடியும் பேயும் ஓசையும் 
சுழற்றலும் எனவே சொல்லலாகும்
**670 

#143
கறங்கு சுழலலும் வட்டமும் காற்றாடியும் 
சத்தவொலியும் சாற்றலாகும்
**671 

#144
கற்பு உள்ளுயர்த்தபூமியும் கற்பும் 
எயிலும் முல்லையும் இயம்பலாகும்
**672 

#145
கற்பம் பிரமன்ஆயுளும் சுவர்க்கமும் 
கற்பகதருவும் கழறலாகும்
**673 

#146
கறுப்புக் கருமையும் சினக்குறிப்பும் சினமும்
**674 

#147
கறியே கறியும் மிளகும் ஆகும்
**675 

#148
கன்னல் நாழிகைவட்டிலும் கரும்பும் 
குடமும் கரகமும் நாழிகையும் காமமும் 
சர்க்கரையும் என்னச் சாற்றலாகும்
**676 

#149
கன்னம் ஓர்தட்டும் காதும் ஆகும்
**677 

#150
கன்னி கன்னிகையும் இராசியும் ஓரையும் 
ஆறும் இளமையும் அழிவில்லாமையும் 
அத்தமும் துர்க்கையும் கற்றாழையும் ஆம்
**678 

#151
கனவட்டம் குதிரையும் பாண்டியன்குதிரையும்
**679 

#152
கன்றுதல் ஈதலும் கன்றலும் ஆகும்
**680 

#153
கனம் காத்திரமும் புயலும் பாரமும் 
வட்டமும் பொன்னும் செறிவும் அடைக்கொடுத்தலும்
**681 

#154
கனையே ஒலியும் செறிவும் ஆகும்
**682 

#155
கனவு மையலும் துயிலும் கனவும்
**683 

#156
கன்று மரக்கன்றும் விலங்கின்கன்றும் 
கைவளையும் எனக் கழறலாகும்
**684 

#157
கனலி சூரியனும் தீயும் பன்றியும்
**ககர முற்றிற்று
**கா
**685 

#158
காகுளி மூக்கிலெழுந்தஓசையும் 
இசையும் தவிசும் இசைத்தனர் புலவர்
**686 

#159
காசு குற்றமும் கோழையும் மணியும் 
காசின்விகற்பமும் கழறலாகும்
**687 

#160
காசை நாணலும் காயாமரமும்
**688 

#161
காசறை மணியும் மயிருறுசாந்தும் 
கத்தூரியும் எனக் கழறலாகும்
**689 

#162
காஞ்சி மேகலையும் காஞ்சிநகரும் 
பண்ணும் பூணும் நிலையின்மையும் மரமும் 
எதிரூன்றுதலும் பெருமையும் காட்சியும்
**690 

#163
காடு பொன் காடும் ஏனலும் ஆகும்
**691 

#164
காட்டம் குதிரையும் விறகும் ஆகும்
**692 

#165
காடி நெய்யும் சோறும் கறியும் 
கூழும் எனவே கூறலாகும்
**693 

#166
காட்டி பிராட்டியும் பன்றியும் ஆகும்
**694 

#167
காணம் பொற்காசும் பொன்னும் செக்கும் 
பரியூணும் கண்ணும் அளவோரும் ஆகும்
**695 

#168
காண்டம் இடுதிரையும் நதியும் கானும் 
முடிவும் கமண்டலமும் நீரும் அம்பும் 
பணிச்செப்பும் பந்தியும் தூண்டாயுதமும் 
தூசும் கோலும் காண்டமும் நூலும் 
திரளும் எனவே செப்பலாகும்
**696 

#169
காணி இலக்கமும் காணியாட்சியும்
**697 

#170
காண்டை கற்பாழியும் தவத்தோரிடமும்
**698 

#171
காதை சொல்லும் கதையும் ஆகும்
**699 

#172
காத்திரம் கனமும் உடலும் கோபமும் 
கரிமுற்காலும் கீரியும் பாம்பும் 
கூத்தும் எலும்பும் கூறலாகும்
**700 

#173
காது கொலையும் செவியும் ஆகும்
**701 

#174
காதல் ஆசையும் கோறலும் ஆகும்
**702 

#175
காந்தாரம் காடும் ஓர்பண்ணும் ஆகும்
**703 

#176
காப்பு நீறும் தூசும் வேயும்
காவலும் கதவும் கைவளையும் ஆகும்
**704 

#177
காமம் மரம் குடியும் கட்டும் இறையும் 
விருப்பும் காமமும் விளம்பலாகும்
**705 

#178
காம்பு வேயும் மலர்த்தாளும் பட்டும் 
**706 

#179
காமன் திப்பிலியும் வேளும் வண்டும்
**707 

#180
காமரம் இசையும் மத்தமும் அடுப்பும்
**708 

#181
காமர் கட்டழகும் விருப்பமும் மதனும்
**709 

#182
காம்பீரம் முருக்கும் ஓர்தேசமும் ஆகும்
**710 

#183
காயம் காழ்ப்பும் உடலும் விண்ணும் 
கறியும் கரிப்பும் முக்காயமும் ஆகும்
**711 

#184
காரி ஓர்வள்ளலும் சனியும் நஞ்சும் 
வடுகனும் கருமையும் கருமம்செய்யிடமும் 
சாத்தனும் காகமும் புரந்தரனும் கள்ளும் 
பூரியரும் கயவாயும் முதுநிலமும் என்பர்
**712 

#185
கார் கார்காலமும் மேகமும் நீரும் 
கருமையும் கொச்சையும் இருளும் முசுவும் 
சினமும் பருவமும் கூந்தலும் அஙனமும் 
கடைமுடியும் அளவும் கழறலாகும்
**713 

#186
காரிகை அழகும் பெண்ணும் கலித்துறையும் 
ஒருநூலும் என உரைக்கலாகும்
**714 

#187
காலம் வைகறையும் காலமும் ஆகும்
**715 

#188
காலை வைகறையும் நாரையும் காலமும்
**716 

#189
கால் குறுந்தறியும் வழியும் ஓர்எண்ணும் 
எல்வையும் இடமும் மறலியும் முளையும் 
காற்றும் சேயும் காடும் பாதமும் 
மரக்காலும் பூங்காம்பும் ஊற்றமும் 
வண்டிலும் வாய்க்காலும் வழங்கலாகும்
**717 

#190
காலிலி சூரியன்பாகனும் காற்றும் 
அரவும் அருக்கனும் மீனும் சனியும்
**718 

#191
காலசம் ஆலவட்டமும் காற்றும் 
வட்டமும் எனவே வழங்கலாகும்
**719 

#192
காவல் சிறையும் நீரும் அரணும் 
தம்பட்டமும் எனச் சாற்றலாகும்
**720 

#193
காவி கருங்குவளையும் காவிமண்ணும் 
கள்ளும் துன்பமும் கழறலாகும்
**721 

#194
காழ் பரலும் கோலும் வித்தும் மாலையும் 
ஒளியும் மணியின்கோவையும் சேகும்
**722 

#195
காழகம் கழுதையும் ஆடையும் கறுப்பு 
சேதகமும் எனச் செப்பலாகும்
**723

#196
காழியர் பரதரும் வண்ணாரும் ஆகும்
**724 

#197
காளிந்தம் ஏலமும் பாம்பும் ஆகும்
**725 

#198
காளை ஏறும் இளையோனும் மீளியும் 
புங்கவமும் எனப் புகலலாகும்
**726 

#199
காளம் விடமும் கருமையும் கழுவும் 
ஊதுசின்னமும் உரைக்கலாகும்
**727 

#200
காறு கொடுமையும் குற்றமும் அளவும் 
காழ்த்தலும் எனவே கழறலாகும்
**728 

#201
கானம் இசையும் பேதையும் காடும் 
தேரும் வீதியும் எனச் செப்பலாகும்
**729

#202
கானல் கதிரொளியும் கடல்சார்பில்சோலையும் 
மலைச்சார்பில்காவும் பேய்த்தேரும் ஆகும்
**730 

#203
கான் பூமணமும் பூவும் காடும் 
சாரியையும் எனச் சாற்றலாகும்
**731 

#204
கா வலியும் துலையும் சோலையும் காத்தலும் 
கற்பகமும் காவடியும் வயாவும்
**கி
**732 

#205
கிங்கிரர் தூதரும் ஓர்சாதியரும்
**733 

#206
கிஞ்சுகம் சிவப்பும் முருக்கும் ஆகும்
**734 

#207
கிடையே வேணியும் உவமையும் கிடையும்
**735 

#208
கிட்டி தலையீற்றாவும் கிட்டியும் 
தாளமும் எனவே சாற்றலாகும்
**736 

#209
கிடங்கே அகழும் வாவியும் ஆகும்
**737 

#210
கிம்புரி யானைக்கோட்டின்பூணும் 
கேயூரமும் முடியும் முடியினுறுப்பும்
**738 

#211
கிருட்டிணன் மாலும் விசையனும் ஆகும்
**739 

#212
கிருத்திமம் செய்தலும் தோலும் பொய்யும் 
பூதமும் எனவே புகலலாகும்
**740 

#213
கிழி கிழி துகிலும் சித்திரப்படமும் 
நிதிபடுபொதியும் என நிகழ்த்தலாகும்
**741 

#214
கிழக்குக் கீழும் குணக்கும் ஆகும்
**742 

#215
கிழமை மூப்பும் உரிமையும் வாரமும் 
குணமும் மாட்சியும் கூறலாகும்
**743 

#216
கிளர் கோட்டுப்பூந்தாதும் எல்லும்
**744 

#217
கிளை கிளைத்தலும் ஓர்பண்ணும் வேயும்
சுற்றமும் எனவே சொற்றலாகும்
**745 

#218
கிள்ளை குதிரையும் கிளியும் ஆகும்
**746 

#219
கிறியே வழியும் பொய்யும் ஆகும்
**747 

#220
கின்னரம் ஆந்தையும் யாழும் மிதுனமும் 
நீர்ப்புள்ளும் கின்னரமும் நிகழ்த்தும்
**கீ
**748 

#221
கீசகம் தூக்கணமும் கவியும் வேயும்
**749 

#222
கீதம் இசையும் வண்டும் மூங்கிலும்
**750 

#223
கீரம் பாலும் தீபமும் கிளியும்
காரிப்புள்ளும் கழறலாகும்
**751 

#224
கீலாலம் உதிரமும் காடியும் நீரும்
**752 

#225
கீலம் பிசினும் நாணும் ஆகும்
**753

#226
கீழ் கிழக்கும் இடமும் கயமையும் கீழும்
**754 

#227
கீழ்தல் கீண்டலும் கிழித்தலும் ஆகும்
**கு
**755 

#228
குசமை செந்திருக்கம்பூவும் மலர்ப்பொதுவும்
**756 

#229
குஞ்சம் கூனும் ஈயோட்டியும் குறளும்
குறளைச் சொல்லும் குன்றியும் நாழியும்
**757 

#230
குஞ்சரம் குவளையும் யானையும் ஆகும்
**758 

#231
குடம்பை முட்டையும் கூடும் ஏரியும்
**759 

#232
குஞ்சி ஆண்மயிரும் புள்ளின்பார்ப்பும் 
குன்றியின்புதலும் கூறலாகும்
**760 

#233
குடங்கர் குடிசையும் கும்பமும் ஆகும்
**761 

#234
குடந்தம் அஞ்சலியும் திரட்சியும் ஆகும்
**762 

#235
குட்டம் ஓர்நோயும் குளமும் ஆழமும்
**763

#236
குடி ஊரும் குலமும் புருவமும் குடியும் 
கோத்திரமும் எனக் கூறலாகும்
**764 

#237
குடம் சுட்டு ஆவும் எருமையும் ஆகும்
**765 

#238
குடிஞை புள்பொதுவும் கூகையும் ஆறும் 
பதியும் குச்சும் பகரலாகும்
**766 

#239
குடுமி வில்லும் வெற்றியும் உச்சியும் 
குவட்டினுச்சியும் ஆண்மயிரும் ஆகும்
**767 

#240
குடம் கூத்தும் பசுவும் குடமும் நகரும் 
கழைக்கட்டியும் ஆலாடலும் ஆகும்
**768 

#241
குடை குடையும் கொடையும் கல்லையும் ஆகும்
**769 

#242
குண்டம் பன்றியும் குண்டமும் ஆகும்
**770 

#243
குணுங்கர் தோற்கருவியோரும் புலையரும் 
குயிலுவரும் எனக் கூறலாகும்
**771 

#244
குண்டு சிறுசெய்யும் குண்டும் ஆழமும்
ஆண்குதிரையும் கோறலும் அறையலாகும்
**772 

#245
குணில் குறுந்தடியும் கடிப்பும் கவணும்
**773 

#246
குணம் கயிறும் பண்பும் கும்பமும் நீர்மையும் 
வில்லின்நாணும் விளம்பலாகும்
**774 

#247
குண்டலம் விண்ணும் குழையும் வட்டமும்
**775 

#248
குத்தி மண்ணும் அடக்கமும் ஆகும்
**776

#249
குத்திரம் வஞ்சமும் மலையும் ஆகும்
**777 

#250
குதை வில்குதையும் பசியும் ஆகும்
**778 

#251
குத்தல் கொடுத்தலும்ங் குத்தலும் ஆகும்
**779 

#252
குந்தம் ஓர்நிதியும் நோயும் வேலும்
குருந்தமும் குதிரையும் கூறலாகும்
**780 

#253
குபேரனம் புலியும் குபேரனும் ஆகும்
**781 

#254
குமரன் கட்டிளமையும் முருகனும் ஆகும்
**782 

#255
கும்பி சேறும் வயிறும் குஞ்சரமும் 
நரகமும் எனவே நவிலலாகும்
**783

#256
கும்பசன் குறுமுனியும் துரோணாச்சாரியும்
**784 

#257
குமுதம் அடுப்பும் ஓசையும் ஆம்பலும்
நெய்தலும் திக்கானையும் நிகழ்த்தலாகும் 
**785 

#258
குமரி கற்றாழையும் கன்னியும் காளியும்
கொற்றவையும் உமையும் கேரளநதியும் 
அணங்கும் எனவே அறையலாகும்
**786 

#259
கும்பம் ராசியும் குடமும் கும்பியின் 
மத்தகமும் எனவே வழங்கலாகும்
**787 

#260
குயிறல் கூவலும் செறிதலும் குடைதலும் 
செய்தலும் தாண்டலும் ஆய்தலும் ஆகும்
**788 

#261
குய்வு கறிகரித்தலும் குளிர்மணப்புகையும்
**789 

#262
குய்யம் யோனியும் குத்திரமும் மறைவும்
**790 

#263
குயம் அரிவாளும் கொங்கையும் இளமையும்
**791 

#264
குயில் கோகிலமும் மேகமும் நிரையும் 
துவாரமும் மகவானும் சொல்லலாகும்
**792 

#265
குரை இடைச்சொல்லும் குதிரையும் ஓசையும்
**793 

#266
குருவி புள்ளும் மூலநாளும்
**794 

#267
குருகு புள்ளும் இளமையும் கொலனும் 
கோழியும் மூலமும் நாரையும் கைவளையும் 
வெண்மையும் குருக்கத்தியும் உலைமூக்கும் 
நாகும் எனவே நவிலலாகும்
**795 

#268
குரம்பை குடிலும் உடலும் இசையும்
**796 

#269
குரு மாத்திரையும் வியாழமும் உயர்ச்சியும் 
குரவனும் நிறமும் பெருமையும் நோயும் 
குரவமும் எனவே கூறலாகும்
**797 

#270
குரல் பல்குரலும் கூந்தலும் சிறகும் 
கதிரும் தினையும் யாழின்நரம்பும் 
சதங்கையும் பாடலமும் வாசிக்கோவையும் 
இசையும் தொண்டையும் இயம்பலாகும்
**798 

#271
குரும்பை புற்றாஞ்சோறும் இளநீரும் குரும்பையும்
**799 

#272
குரவை ஓர்கூத்தும் கடலும் ஆகும்
**800 

#273
குரங்கி கள் சந்திரனும் ஆகும்
**801 

#274
குருடன் அந்தகனும் மழைக்கோளும் ஆகும்
**802 

#275
குரங்கு அரியும் வளைவும் விலங்கின்பொதுவும்
**803

#276
குருதி செவ்வாயும் குருதியும் சிவப்பும்
**804 

#277
குரம் வாசிக்குளம்பும் சேதாவும் ஆகும்
**805 

#278
குல்லை கஞ்சாவும் வெட்சியும் துழாயும்
**806 

#279
குலம் இரேபதியும் சாதியும் கோயிலும் 
கூட்டமும் இல்லமும் கூறலாகும்
**807 

#280
குலை செய்கரையும் அம்பின் குதையும் 
காயின்கொத்தும் வில்லும் ஆகும்
**808 

#281
குலிங்கம் ஊர்க்குருவியும் வாசியும் ஆகும்
**809 

#282
குவடு மலையுச்சியும் மலையும் மரக்கொம்பும்
**810 

#283
குவலையம் பூமியும் குவளையும் நெய்தலும்
**811 

#284
குவவு திரட்சியும் குவிதலும் பெருமையும்
**812 

#285
குவளை விழியும் நெய்தல்பூவும்
**813

#286
குவாலே குவிதலும் மேடும் ஆகும்
**814 

#287
குழல் ஆண்மயிரும் பெண்மயிரும் துளையும்
இசைக்கருவியும் என இயம்பலாகும்
**815 

#288
குழியே வயிறும் குண்டும் ஆகும்
**816 

#289
குழிசி மிடாவும் பானையும் ஆகும்
**817 

#290
குழை குண்டலமும் தளிரும் சேறும் 
துவாரமும் காடும் படையுறுப்பும் ஆகும்
**818 

#291
குழியம் பாரவளையும் திரட்சியும்
**819 

#292
குழையே பாட்டும் இசையும் ஆகும்
**820 

#293
குளம் குளமும் நெற்றியும் சர்க்கரையும் ஆகும்
**821 

#294
குளியம் வேங்கையும் உருண்டையும் ஆகும்
**822 

#295
குளிர் குடமுழாவும் மழுவும் நண்டும் 
கவணும் குளிர்ச்சியும் மீனினத்தொழுக்கமும்
இருத்தலும் இலைமூக்கரிகத்தியும் ஆகும் 
**823 

#296
குளிரி குடமுழவும் நண்டும் ஆகும்
**824 

#297
குறும்பொறை பாறை குறிஞ்சிநிலத்தூரும் மலையும்
காடும் எனவே கழறலாகும் 
**825 

#298
குறிஞ்சி மலைச்சார்பும் யாழும் ஓர்பண்ணும் 
இசையும் செம்முள்ளியும் இயம்பலாகும்
**826 

#299
குறளே பூதமும் குறளரும் குறுமையும்
**827 

#300
குற்றல் பறித்தலும் கோறலும் ஆகும்
**828 

#301
குறுகல் பறித்தலும் கிட்டுதலும் ஆகும்
**829 

#302
குறடு திண்ணையும் பலகையும் ஆகும்
**830 

#303
குறுந்தடி குணிலும் பொதிப்பெயரும் ஆகும்
**831 

#304
குறுமை அழங்கும் குறுகினவும் ஆகும்
**832 

#305
குன்றம் மலையும் சதையமும் ஆகும்
**833 

#306
குவ்வு புவியும் நான்காம்உருபும்
**கூ 
**834 

#307
கூடல் ஆண்பெண்ணொடுகூடுதலும் குறியும் 
மதுரையும் எனவே வழுத்தலாகும்
**835 

#308
கூடம் மலையுச்சியும் மறைவும் பொய்யும்
வஞ்சமும் சம்மட்டியும் கூடமும் கூட்டமும் 
அண்டமும் யானையின்நிலையும் இல்லும்
**836 

#309
கூட்டம் கூட்டமும் பிண்ணாக்கும் ஊணும் 
குன்றின்முடிவும் கூறலாகும்
**837 

#310
கூத்தன் உயிரும் கடனும் ஆகும்
**838 

#311
கூர்தல் பெண்குழலும் கமுகும் மயிற்பீலியும் 
**839 

#312
கூரல் பெண்மயிரும் புள்சிறகும் ஆகும்
**840 

#313
கூரே கூர்மையும் மிகுதியும் ஆகும்
**841 

#314
கூலம் நீர்க்கரையும் வரம்பும் குரங்கும் 
பாகலும் ஆவணமும் பசுவும் அங்காடியும் 
விலங்கின்வாலும் பண்ணிகாரமும்
**842 

#315
கூவிரம் தேரின்கொடிஞ்சியும் குவளையும் 
தேரும் எனவே செப்பலாகும்
**843 

#316
கூவுதல் கரைதலும் பேசுதலும் ஆகும்
**844 

#317
கூழை புள்சிறகும் பெண்மயிரும் பொன்னும் 
படையுறுப்பும் நடுவும் குரலும் பாம்பும் 
சேறும் கூழையும் பீலியும் கூறுவர்
**845 

#318
கூழ் பலஉணவும் பயிரும் பொன்னும்
**846 

#319
கூளி சுற்றமும் பேயும் எருதும் 
பூதமும் குறளனும் நட்பும் தொகுதியும் 
வீரனும் எனவே விளம்பலாகும்
**847 

#320
கூளியர் நண்பரும் வீரரும் குறவரும் 
பூதவீரரும் புகலலாகும்
**848

#321
கூற்று வார்த்தையும் பங்கும் காலனும்
**849 

#322
கூனல் வெண்சங்கும் கூனலும் ஆகும்
**கெ
**850 

#323
கெடுதல் சாய்தலும் அவிதலும் ஆகும்
**851 

#324
கெழுவுதல் பற்றும் மயக்கமும் ஆகும்
**கே
**852 

#325
கேகயம் அசுணப்புள்ளும் ஓர்பண்ணும் 
வில்லும் மஞ்ஞையும் விளம்பலாகும்
**853 

#326
கேசம் ஆண்மயிரும் பெண்பால்மயிரும் 
அஃறிணைமயிரும் அறையலாகும்
**854 

#327
கேசரம் வண்டும் பூந்தாதும் மகிழும்
**855 

#328
கேடகம் பலகையும் பரிசையும் ஊரும் 
சிங்காசனமும் செப்பலாகும்
**856 

#329
கேடம் கிளியும் ஆறும் ஆகும்
**857 

#330
கேட்டை அசைச்சொல்லும் கேட்டையும் முகடியும்
**858

#331
கேதாரம் மஞ்ஞையும் ஓர்ஊரும் ஆகும்
**859 

#332
கேது செம்பாம்பும் கொடியும் ஓர்நாளும் 
நெருப்பும் எனவே நிகழ்த்தலாகும்
**860 

#333
கேவலம் தனிமையும் முத்தியும் ஆகும்
**861 

#334
கேழல் யானையும் பன்றியும் ஆகும்
**862 

#335
கேழே நிறமும் ஒளியும் ஒப்பும்
**863

#336
கேள்வி கல்வியும் செவியும் யாழும்
**864 

#337
கேளே நட்பும் கிளையும் கணவனும்
**கை
**865 

#338
கைக்கிளை யாழ்நரம்பும் ஒருதலைக்காமமும்
**866 

#339
கைத்தல் சினமும் கசப்பும் ஆகும்
****867 

#340
கைதூவாமை கையொழியாமையும் 
படைவிகற்பமும் எனப் பகரலாகும்
**868 

#341
கைத்துப் பொன்னும் வெறுப்பும் ஆகும்
**869 

#342
கை படைவகுப்பும் ஒழுக்கமும் கரமும் 
சிறுமையும் குற்றமும் தங்கையும் சார்பும் 
ஒப்பனையும் இடமும் நஞ்சும் ஆகும்
**கொ
**870 

#343
கொக்கு மாமரமும் குரண்டமும் மூலமும் 
குதிரையும் செந்நாயும் கூறலாகும்
**871 

#344
கொக்கரை வில்லும் சங்கும் வளையும் 
பாணியும் எனவே பகரலாகும்
**872

#345
கொங்கு மலர்த்தாதும் மணமும் தேனும்
**873

#346
கொச்சை கொச்சையும் வெள்ளாடும் ஆகும்
**874 

#347
கொச்சி கொச்சியும் தீயும் ஆகும்
**875 

#348
கொட்புத் திரிதலும் சுழற்சியும் ஆகும்
**876 

#349
கொடுப்பை குன்றருவியும் தாம்பையும் குளமும்
பச்சிலையும் எனப் பகரலாகும்
**877 

#350
கொடி கரும்பிள்ளையும் வல்லியும் துவசமும் 
ஒழுங்கும் எனவே உரைக்கலாகும்
**878 

#351
கொடியன் கேதுவும் கொடியனும் ஆகும்
**879

#352
கொடிறு பூசமும் கருவிப்பற்றும்
கதுப்பும் எனவே கழறலாகும்
**880 

#353
கொட்டி பார்த்திடுகுறியும் கூட்டமும்
வாயிலும் கூத்தும் வழங்கலாகும்
**881 

#354
கொண்டை மயிர்முடியும் இலந்தைக்கனியும்
**882 

#355
கொண்மூ விண்ணும் மேகமும் ஆகும்
**883 

#356
கொண்டல் கீழ்காற்றும் மேகமும் கூதிரும்
**884 

#357
கொந்தளம் பெண்மயிரும் குருளைமயிர்க்கொத்தும்
**885 

#358
கொப்பரம் முன்கையும் மல்லடைவும் ஆகும்
**886 

#359
கொம்பு வீழ்சினையும் முட்டையும் ஆகும்
**887 

#360
கொம்மை கைகுவித்துக்கொட்டலும் இளமையும் 
முலையும் வட்டமும் திரட்சியும் கொம்மையும்
அழகுத்திட்டையும் வலியும் ஆகும்
**888 

#361
கொல்லை கொல்லையும் சோலையும் ஆகும்
**889 

#362
கொல் கொலைக்குஏவலும் அசையும் வருத்தமும்
ஐயமும் கருங்கொலும் செங்கொலும் ஆகும்
**890 

#363
கொல்லி ஓர்பண்ணும் ஓர்வெற்பும் ஆகும்
**891 

#364
கொற்றம் வெற்றியும் அரசியலும் ஆகும்
**892

#365
கொற்றி கோவிளங்கன்றும் துர்க்கையும் 
கொற்றியும் எனவே கூறலாகும்
**893

#366
கொன் பயனில்லாச்சொல்லும் பொழுதும் 
பெருமையும் அச்சமும் இடைச்சொல்லும் ஆகும் 
**கோ
**894 

#367
கோகிலம் பல்லியும் குரங்கும் குயிலும் 
துவாரமும் எனவே சொல்லலாகும்
**895 

#368
கோசம் ஆண்குறியும் முறையும் முட்டையும் 
பண்டாரமும் மதிலுறுப்பும் பகருவர்
**896 

#369
கோசிகம் சாமவேதமும் கூறையும் 
பட்டாடையும் எனப் பகரலாகும்
**897 

#370
கோடகம் புதுமையும் முடியுறுப்பும் குதிரையும்
**898 

#371
கோடி ஓர்எண்ணும் புதுமையும் தூசும்
**899 

#372
கோடை வெண்காந்தளும் குதிரையும் வேனிலும் 
மேல்காற்றும் என்ன விளம்பலாகும்
**900 

#373
கோடு சங்கும் ஊதும்கொம்பும் 
கொடுமுடியும் கரையும் வரம்பும் குன்றும் 
மாட்டின்கொம்பும் விலங்கின்கொம்பும் 
மரத்தின்கொம்பும் வழங்கலாகும்
**901 

#374
கோட்டம் நீர்நிலையும் படப்பையும் கோவிலும் 
அவ்வியமும் பசுக்கூட்டமும் நகரும் 
கோடபதியும் நாடும் குரங்கும் கறங்கும் 
குரவும் வாசமும் கோணமும் குளமும் 
உண்கலமும் வயலும் உரைக்கலாகும் 
**902

#375
கோடிகம் கெண்டியும் துகிலும் பூந்தட்டும் 
**903 

#376
கோடல் காந்தளும் சமழ்த்தலும் கொள்ளலும் 
வளைத்தலும் எனவே வழங்கலாகும் 
**904

#377
கோடரம் குரங்கும் குதிரையும் சோலையும் 
கொம்பும் மயிர்ச்சாந்தும் மரப்பொதும்பரும் 
தேர்மொட்டும் மெட்டியும் செப்பலாகும்
****905 

#378
கோட்டி சபையும் கோபுரவாயிலும் 
கூத்தின்கோட்டியும் கூறலாகும்
**906 

#379
கோணம் வாளும் மூக்கும் குதிரையும் 
அங்குசமும் என அறையலாகும்
**907 

#380
கோணல் வளைவும் சிந்தும் கூனும் 
மாறுகொளலும் வழங்கலாகும்
**908 

#381
கோதை கைக்கட்டியும் மாதரும் குழலும்
மாலையும் காற்றும் உடும்பும் சேரனும்
**909 

#382
கோத்திரம் பூமியும் குலமும் மலையும்
**910 

#383
கோபாலர் மாலும் இடையரும் ஆகும்
**911 

#384
கோமான் பன்றியும் மூத்தோனும் ஆகும்
**912 

#385
கோரம் பூமொட்டும் சோழன்குதிரையும் 
கொடுமையும் வட்டிலும் கூறலாகும்
**913

#386
கோலம் ஒப்பனையும் கொழுந்தும் நீரோட்டமும் 
பீர்க்கும் அழகும் பன்றியும் கோலமும் 
பாக்கும் இலந்தையும் இலந்தைக்கனியும்
**914 

#387
கோல் வாட்கோலும் திரட்சியும் கோலும் 
ஈட்டியும் இரந்தையும் குதிரைமத்திகையும் 
தந்திரியும் அம்பும் துகிலிகையும் துலாமும் 
முட்கோலும் மஞ்சனக்கோலும் செங்கோலும்
**915 

#388
கோவன் வசிட்டனும் ஈசனும் ஆகும்
**916 

#389
கோழி உறையூரும் கோழியும் ஆகும்
**917 

#390
கோளி ஆலும் அத்தியும் கொழுஞ்சியும் 
பூவாதுகாய்க்கும்மரமும் கொள்வோனும்
**918 

#391
கோ விழியும் விண்ணும் சுவர்க்கமும் பசுவும் 
அம்பும் நீரும் குலிசமும் திக்கும் 
பூமியும் மன்னனும் கிரணமும் உரையும் 
ஏவலும் குன்றும் இயம்பலாகும் 
**கெள
**919

#392
கெளடம் ஓர்கொடியும் ஓர்நாடும் ஆகும் 
**  ககர வருக்கம் முற்றிற்று 

@3 சகர வருக்கம்
**ச
**920 

#1
சகடம் பேரிகையும் பாண்டிலும் ஆகும்
**921 

#2
சகம் ஓர்எண்ணும் பூமியும் சட்டையும் 
சகமும் பாதியும் சட்கோணும் ஆகும்
**922 

#3
சகோரம் சக்கரவாகமும் புள்ளும் 
பேராந்தையும் செம்போத்தும் ஆகும்
**923 

#4
சகுந்தம் புள்பொதுவும் பூகமும் ஆகும்
**924 

#5
சகுனம் புள்பொதுவும் நிமித்தமும் கிழங்கும்
**925 

#6
சகுனி பறவையும் நிமித்தம்பார்ப்பவனும்
**926 

#7
சக்கரம் செங்கோலும் கடலும் பிறப்பும் 
தேருருளும் தரணியும் மலையும் பெருமையும்
வட்டமும் ஓர்புள்ளும் சக்கரமும் ஆகும் 
**927 

#8
சக்கிரி குயவனும் செக்கானும் பாம்பும் 
மாயனும் அரசனும் வழங்கலாகும்
**928 

#9
சங்கம் எனும் பெயர் சபையும் புணர்ச்சியும் 
கணைக்காலும் சங்கும் வளையும் வெற்றியும் 
புலவரும் அன்பும் ஓர்எண்ணும் ஆகும்
**929 

#10
சங்கு கைவளையும் கோழியும் ஆகும் 
**930 

#11
சச்சை குழம்பும் சட்டையும் ஆகும்
**931 

#12
சசி புலோமிசையும் கடலும் சந்திரனும் 
மழையும் கர்ப்பூரமும் வழங்கலாகும்
**932 

#13
சடம் பொய்யும் உடலும் வஞ்சமும் ஆகும்
**933 

#14
சடையே வேணியும் வேரும் ஆகும்
**934 

#15
சடிலம் நெருக்கமும் சடையும் குதிரையும்
**935 

#16
சண்டம் குரோதமும் மேன்மையும் ஆகும்
**936 

#17
சண்டன் பானுவும் கூற்றும் காலனும் 
அலியும் எனவே அறையலாகும்
**937 

#18
சதம் புள்ளினிறகும் நூறும் உறுதியும் 
இலையும் எனவே இயம்பலாகும்
**938 

#19
சத்தியம் சபதமும் மெய்யும் ஆகும்
**939 

#20
சத்திரம் குடையும் இரும்பும் வேள்வியும் 
கைவேலும் சத்திரசாலையும் வெண்குடையும் 
சத்திரக்கருவியும் சாற்றலாகும்
**940 

#21
சத்தி சூலமும் உமையும் தாயும் 
வலியும் குடையும் வேலும் கான்றலும் 
துவசமும் இச்சையும் இசையும் செய்யுளும்
**941 

#22
சதி தாளவொத்தும் கற்புடையாளும் 
சதிசெய்வானும் உரோகணியும் வட்டமும்
**942 

#23
சந்தம் கவிதையும் நிறமும் சந்தனமும் 
அன்பும் வனப்பும் அறையலாகும்
**943 

#24
சந்தி அந்தியும் சதுக்கமும் இசையும் 
மூங்கிலும் எனவே மொழியலாகும்
**944 

#25
சந்தானம் தேவதாருவும் சந்தானமும்
**945 

#26
சம்புவே சிவனும் மாலும் அயனும் 
சூரியனும் நரியும் ஓர்புல்லும் நாவலும் 
எலுமிச்சும் வச்சிரமும் இயம்பும்
**946 

#27
சம்பம் சம்பீரமும் வயிரமும் ஆகும்
**947 

#28
சமித்தல் பொறுத்தலும் நடத்தலும் ஆகும்
**948 

#29
சமழ்த்தல் நாணமும் தாழ்த்தலும் வருத்தமும்
**949 

#30
சமனே அணித்தலும் நடுவும் நமனும்
**950 

#31
சயம் சருக்கரையும் மாலையும் வெற்றியும் 
பானுவும் அல்லியும் பகரலாகும்
**951 

#32
சயிந்தவம் குதிரையும் வரம்பும் தலையும் 
இந்துப்பும் எனவே இயம்பலாகும்
**952 

#33
சரபம் சிம்புள்ளும் வெற்பாடும் ஆகும்
**953 

#34
சரணம் பாலமும் நகரமும் சார்பும்
**954 

#35
சரிதை பிச்சையும் சரிதைத்தொழிலும்
**955 

#36
சரம் மூக்கின்காற்றும் கணையும் நாணலும் 
பொருமணிவடமும் மலர்ச்சரமும் ஆகும்
**956 

#37
சரி சமமும் வழியும் கைவளையும் அழகும்
**957 

#38
சராவமே அகலும் சுத்திகையும் சலாகையும்
**958 

#39
சருவே தெய்வவுணவும் சோறும் 
அணங்கும் எனவே அறையலாகும்
**959 

#40
சருவம் பானையும் சட்டுவமும் ஆகும்
**960 

#41
சலமே நீரும் பொய்யும் நடுக்கமும்
வயிரமும் கோபமும் வழங்கலாகும்
**961 

#42
சலதரம் புயலும் வாவியும் ஆகும்
**962 

#43
சலாகை நன்மணியும் சவளமும் நாராசமும் 
**963

#44
சவுரி திருவும் மாலும் கன்னனும் 
சனியும் யமனும் யமுனையும் ஆகும்
**964 

#45
சவி மணிக்கோவையும் செவ்வையும் வலியும் 
வனப்பும் காந்தியும் என வகுத்தனரே
**965 

#46
சவமே பிணமும் மூங்கிலும் ஆகும்
**966 

#47
சனி ஒருவாரமும் துக்கமும் ஆகும்
** சா
**967 

#48
சாகம் வெள்ளாடும் தேக்கும் வண்டும் 
சாகினியும் தேனியும் சாற்றும்
**968 

#49
சாகினி சேம்பும் கீரையும் ஆகும்
**969 

#50
சாகரம் கடலும் துயிலொழித்தலும் ஆம்
**970 

#51
சாகாடு பண்டியும் ஓர்நாளும் ஆகும்
**971 

#52
சாடி கூறையும் தாழியும் கோள்சொல்லும் 
**972 

#53
சாதகம் வானம்பாடியும் பிறப்பும்
சாதனையும் பூதமும் சாற்றலாகும்
**973 

#54
சாதனை பொய் சலஞ்சாதித்தலும் ஆகும்
**974 

#55
சாதி மூங்கிலும் பிரம்பும் கள்ளும் 
தேக்கும் சீந்திலும் சிறுசெண்பகமும் 
தேனும் சாதியும் செப்பலாகும்
**975 

#56
சாதம் உண்மையும் சாதமும் பூதமும் 
**976 

#57
சாத்தன் காரியும் சாதரூபியும்
புத்தனும் அருகனும் புகலலாகும்
**977 

#58
சாத்திரி நெல்லியும் முள்ளியும் ஆகும்
**978 

#59
சாந்தாற்றி ஆலவட்டமும் பீலியும்
**979 

#60
சாந்தம் சந்தனமும் பொறுமையும் சாந்தமும்
**980 

#61
சாபம் சபித்தலும் வில்லும் அசமும்
**981 

#62
சாமம் சாமமும் பச்சையும் கருமையும்
சாமவேதமும் இரவும் ஆகும்
**982 

#63
சாம்பல் கூம்புதலும் பழம்பூவும் சாம்பலும்
**983 

#64
சாம்புதல் சாய்தலும் கூம்புதலும் ஆகும்
**984 

#65
சாமி ஆசானும் அரசனும் தலைவியும்
வியாழமும் தலைவனும் சாமியும் வேளும்
**985 

#66
சாம்பு பொன்னும் பொறையும் சாற்றும்
**986 

#67
சாயல் சரிவும் அழகும் மென்மையும் 
மெய்ப்பாடும் ஒப்பும் விளம்பலாகும்
**987 

#68
சாரல் யாழோசையும் மலையின்சாரலும் 
மலையின்மென்பாலும் வழங்கலாகும்
**988 

#69
சாரிகை அசைச்சொல்லும் பூவையும் சுங்கமும் 
சுழற்காற்றும் எனச் சொல்லலாகும்
**989 

#70
சாரங்கம் சாதகப்புள்ளும் வண்டும் 
மானும் எனவே வழங்கலாகும்
**990 

#71
சாரசம் இனிமையும் சாரமும் ஆகும்
**991 

#72
சார்ங்கம் மாயோன்வில்லும் வில்பொதுவும்
**992 

#73
சாரே இடமும் பற்றும் சார்பும்
**993 

#74
சாரணர் சமணமுனிவோரும் ஒற்றரும்
**994 

#75
சாலம் வலையும் சவையும் ஆச்சாவும் 
சாலகம் கூட்டமும் மதிலும் விசாலமும்
**995 

#76
சாலி கள்ளும் செந்நெல்லும் கவசமும் 
அருந்ததியும் என அறையலாகும்
**996 

#77
சாலை குதிரைப்பந்தியும் சோலையும் 
கோயிலும் சத்திரமும் கூறலாகும்
**997 

#78
சாலகம் சாளரவாயிலும் வலையும்
பூமொட்டும் என்னப் புகலலாகும்
**998 

#79
சால்பு மாட்சிமையும் சான்றாண்மையும் ஆம்
**999 

#80
சாலே நீர்ச்சாலும் உழுதசாலும் ஆம்
**1000 

#81
சாழல் விளையாட்டும் கரடியும் ஆகும்
**1001 

#82
சாறு கள்ளும் விழவும் சாறும் 
தருவின்குலையும் சாற்றலாகும்
**1002 

#83
சானகி வேயும் திருவும் கங்கையும்
**1003 

#84
சானம் பொன்வர்க்கமும் தமிழும் ஆகும்
**1004 

#85
சானு வெற்பும் அதன்பக்கமும் முழந்தாளும்
**1005 

#86
சான்றான் அருக்கனும் மும்மீனும் மீக்கொளும்
**சி
**1006 

#87
சிகரம் தலையும் திவலையும் திரையும் 
கவரிமாவும் மலையினுச்சியும் 
சிகரமும் கரகமும் மலையும் ஆகும்
**1007 

#88
சிக்கம் குடுமியும் சிப்பும் உச்சியும் 
சிறையும் முறியும் மெலிவும் செப்பும்
**1008 

#89
சிகி சிலம்பும் மயிலும் கேதுவும் தீயும்
**1009 

#90
சிகண்டி பாலை யாழினோசையும் 
மஞ்ஞையும் அலியும் வழங்கலாகும்
**1010 

#91
சிகரி கோபுரமும் வெற்பும் நாரையும் 
சீறெலியும் எனச் செப்பலாகும்
**1011 

#92
சிகழிகை மாலையும் மயிர்முடியும் ஆகும்
**1012 

#93
சிங்கல் குன்றலும் கெடலும் ஆகும்
**1013 

#94
சிதலை நோயும் துணியும் செல்லும்
**1014 

#95
சிதம் செயமுறலும் வெள்ளையும் ஞானமும் 
திடனும் விண்மீனும் செப்பலாகும்
**1015 

#96
சித்திரம் சித்திரகவியும் அழகும் 
கோளும் நடனமும் காடும் பொய்யும் 
வியப்பும் காணும் ஓவியமும் ஆகும்
**1016 

#97
சித்தர் திடமும் சித்தமும் ஆகும்
**1017 

#98
சித்திரபானு ஓர்ஆண்டும் பானுவும் 
தீயும் எனவே செப்பலாகும்
**1018 

#99
சித்திரன் ஓவனும் தச்சனும் அழகனும்
**1019 

#100
சிதர் அறுபதமும் துணியும் திவலையும் 
உறியும் எனவே உரைக்கலாகும்
**1020 

#101
சிதடி சிச்சிலியும் சிள்வீடும் ஆகும்
**1021 

#102
சிதடன் அந்தகனும் மூடனும் ஆகும்
**1022 

#103
சித்து ஞானமும் செயமும் ஆகும்
**1023 

#104
சிந்துரம் புளியும் சிவப்பும் திலதமும் 
செங்குடையும் யானையும் வனப்பும் சிந்தூரமும் 
வெட்சியும் எனவே விளம்பலாகும்
**1024 

#105
சிந்துவாரம் நொச்சியும் கடலும்
**1025 

#106
சிந்து முச்சீரும் நதியும் குறளும் 
கடலும் நீரும் தேசமும் ஆகும்
**1026 

#107
சிமிலி சிள்வீடும் முறியும் குடுமியும் 
சிறியவீயும் செப்புவர் புலவர்
**1027 

#108
சிமையம் மலையுச்சியும் தென்றலும் வெற்பும் 
குடுமியும் எனவே கூறலாகும்
**1028 

#109
சிரம் நெடுங்காலமும் முறியும் சென்னியும்
**1029

#110
சிரை வானரமும் நரம்பும் ஆகும்
**1030 

#111
சிரகம் கரகமும் சென்னியில்கோடும் 
திவலையும் எனவே செப்பலாகும்
**1031 

#112
சிலை ஓர்மரமும் மலையும் வில்லும் 
கல்லும் எனவே கழறலாகும்
**1032 

#113
சில்லை தூர்த்தையும் சிள்வீடும் பகன்றையும்
**1033 

#114
சில்லி சிள்வீடும் கீரையும் வட்டமும் 
தேருருளும் எனச் செப்பலாகும்
**1034 

#115
சிலம்பு மலையும் ஒலியும் சிலம்பும் ஆம்
**1035 

#116
சிலீமுகம் முலைக்கண்ணும் அம்பும் ஆகும்
**1036 

#117
சில்லிகை நல்லாடை சிள்வண்டும் ஆகும்
**1037 

#118
சிலதர் ஆரியரும் சேடரும் ஆகும்
**1038 

#119
சிவமே நன்மையும் முத்தியும் குறுணியும்
**1039 

#120
சிவப்புச் சினமும் சினக்குறிப்பும் சிவப்பும்
**1040 

#121
சிவை கொல்லனுலையும் மரவேரும் ஓரியும் 
பார்ப்பதியும் எனப் பகரலாகும்
**1041 

#122
சிறை நீர்க்கறையும் காவலும் பக்கமும் 
சிறகும் வேறிடமும் மதிலும் செப்பும்
**1042 

#123
சிறுமை நோயும் துயரமும் துன்பமும்
**1043 

#124
சிறுமூலகன் காமனும் திப்பிலியும் 
பூடும் எனவே புகலலாகும்
**1044 

#125
சினை மரக்கோடும் முட்டையும் கருவும் 
உறுப்பும் எனவே உரைக்கலாகும்
**சீ
**1045 

#126
சீகரம் கவரிமாவும் திவலையும் 
மழையும் கரகமும் செங்கையும் ஆகும்
**1046 

#127
சீதை உழவுசாலும் திருவும்
பொன்னாங்காணியும் புகலலாகும்
**1047 

#128
சீத்தை கீழ்மக்களும் பதனழிவும் ஆகும்
**1048 

#129
சீதம் குளிரும் மேகமும் நீரும்
பனியும் எனவே பகரலாகும்
**1049 

#130
சீப்பு தாழ்ப்பாளும் சீப்பும் கங்கமும்
**1050 

#131
சீர் சொல்லின்சீரும் செம்பொருளும் ஓசையும் 
ஒல்கலும் தண்டும் செல்வமும் அழகும் 
சீர்த்தியும் காத்தண்டும் சிறப்பும் பாரமும் 
தாளவொத்தும் பலவகைஇயங்களும்
**1051 

#132
சீருள் ஆக்கமும் செம்பும் ஈயமும்
**1052 

#133
சீலம் தண்டித்தலும் ஞானமும் குணமும் 
தருமமும் ஒழுக்கமும் சாற்றலாகும்
**1053

#134
சீவன் வியாழமும் உயிரும் ஆகும்
**1054 

#135
சீவன் ஓர்மருந்தும் செவ்வழியாழும் 
உயிரும் நீரும் உரைக்கலாகும்
**சு
**1055 

#136
சுகம் சுக்கிரீபமும் நன்மையும் கிளியும் 
சுங்கனும் இன்பமும் சொல்லலாகும்
**1056 

#137
சுக்கை தாரகையும் மாலையும் ஆகும்
**1057 

#138
சுங்கம் சிற்பமும் இறையும் ஆகும்
**1058 

#139
சுசியே கோடையும் சுத்தமும் தீயும்
**1059 

#140
சுடர் முச்சுடரும் பொறியும் விளக்கும் 
ஒளியும் தளிரும் உரைக்கலாகும்
**1060 

#141
சுட்டி நாவும் பட்டமும் சுட்டியும் 
மயிர்முடியும் என வழங்கலாகும்
**1061 

#142
சுட்டல் காட்டலும் பற்றலும் ஆகும்
**1062 

#143
சுடுமண் பாண்டமும் இட்டிகையும் ஆகும்
**1063

#144
சுடிகை உச்சியும் மகுடமும் சுட்டியும் 
மயிர்முடியும் என வழங்கலாகும்
**1064 

#145
சுடர்க்கடை என்பது மின்மினியும் மயிலும்
**1065 

#146
சுண்டன் மூஞ்சூறும் சதையமும் ஆகும்
**1066 

#147
சுண்டை ஓர்செடியும் கள்ளும் ஆகும்
**1067 

#148
சுதை சுண்ணச்சாந்தும் வெண்மையும் அமுதும் 
உதைகால்பசுவும் புதல்வியும் உடுவும் 
நீறும் எனவே நிகழ்த்தலாகும்
**1068 

#149
சுந்தரி மூஞ்சூறும் இந்திரன்தேவியும் 
துர்க்கையும் அம்பிகையும் சொல்லலாகும்
**1069 

#150
சும்மை நெற்போரும் நாடும் நகரும் 
ஒலியும் சுமையும் உரைக்கலாகும்
**1070 

#151
சுரை பசுமுலையும் அம்புத்தலையும் 
துளையும் சுரையும் கள்ளும் பசுவும்
**1071 

#152
சுருங்கை நுழைவாயிலும் கரந்த கற்படையும்
**1072 

#153
சுரம் பாலைநிலமும் தொனியும் வழியும் 
காடும் சுரமும் அருநெறியும் ஆகும்
**1073

#154
சுரர் குரு என்பது வியாழமும் போகியும்
**1074 

#155
சுரிகை உடைவாளும் கவசமும் ஆகும்
**1075 

#156
சுருதி வேதமும் ஒலியும் ஆகும்
**1076 

#157
சுரியல் ஆண்மயிரும் பெண்பால்மயிரும்
**1077 

#158
சுரியே நரியும் சுரியும் ஆகும்
**1078 

#159
சுரும்பு வண்டும் மலையும் ஆகும்
**1079 

#160
சுவல் தோள்மேலும் மேடும் பிடரியும்
மாக் குசையும் மயிரும் கோயிலும் ஆகும்
**1080 

#161
சுவாமி குமரனும் வியாழமும் முனிவனும் 
தலைவனும் ஆசானும் சாற்றலாகும்
**1081 

#162
சுவேதம் வெண்மையும் வேர்வையும் ஆகும்
**1082 

#163
சுள்ளி குங்குமமும் துரும்பும் ஆரமும்
**1083 

#164
சுப் புள்ளின்மூக்குஞ் சுவர்க்கமும் சுண்டனும்
**சூ
**1084 

#165
சூகை யானையும் சூகை ஆகும்
**1085 

#166
சூதம் மாமரமும் வண்டும் பிறப்பும்
பாகரும் எனவே பகரலாகும்
**1086 

#167
சூதகம் பெண்முலைக்கண்ணும் பிறப்பும் 
ஆசூசமும் பெண்பால்பூப்பும் ஆகும்
**1087 

#168
சூது தாமரையும் சூதும் ஆகும்
**1088 

#169
சூத்திரன் சாதியும் தச்சனும் ஆகும்
**1089 

#170
சூர் அஞ்சாமையும் தெய்வமும் வஞ்சமும் 
நோயும் அணங்கும் அச்சமும் துயரும்
**1090 

#171
சூரி மூதணங்கும் சூரியனும் ஆகும்
**1091 

#172
சூரன் வீரனும் நாயும் தீயும்
சூரியனும் எனச் சொல்லலாகும்
**1092 

#173
சூரியன் தீயும் சூரியனும் ஆகும்
**1093 

#174
சூல் சூழுதலும் சினையும் ஆகும் 
**1094 

#175
சூலம் இரேவதியும் சிவனாயுதமும்
**1095 

#176
சூலி சிவனும் காளியும் ஆகும்
**1096 

#177
சூழி கரிமுகபடாமும் சுனையும்
**1097 

#178
சூழ்வோர் மந்திரியும் சூழ்வோரும் ஆகும்
**1098 

#179
சூழல் விசாரமும் சூழ்தலும் இடமும்
**1099 

#180
சூளை பொதுப்பெண்ணும் சுள்ளையும் ஆகும்
**செ
**1100 

#181
செச்சை நீறும் சோடும் காடும்
கொச்சை ஏறும் வெட்சியும் தேய்வையும்
**1101 

#182
செடி குணமின்மையும் செறிவும் ஒளியும் 
பாவமும் எனவே பகரலாகும்
**1102 

#183
செட்டி குமரனும் செட்டியும் ஆகும்
**1103 

#184
செண்டு செண்டும் குதிரைசெல்வீதியும்
**1104 

#185
செதுக்கு மந்தியும் சேறும் பூதமும்
**1105 

#186
செந்து நிரையமும் ஓரியும் சீவனும் 
சிவப்பும் அணுவும் செப்பலாகும்
**1106 

#187
செப்பம் செவ்வையும் தெருவும் நடுநிலையும் 
நெஞ்சும் எனவே நிகழ்த்தலாகும்
**1107 

#188
செம்பு தாம்பிரமும் நவ்வலும் பொன்னும் 
**1108 

#189
செம்மை பெருமையும் சிவப்பும் செவ்வையும்
**1109 

#190
செம்மல் சிவனும் வாரியும் செம்மலும் 
அருகனும் பெருமையும் இறைவரும் வீரரும் 
பழம்பூவும் மகனும் சிறந்தவனும் ஆகும்
**1110 

#191
செம்புலம் பாலைநிலமும் படுகளமும்
**1111 

#192
செய்யல் செய்தொழிலும் காவலும் சேறும் 
ஒழுக்கமும் எனவே உரைக்கலாகும்
**1112 

#193
செயிரே குற்றமும் சினவலும் ஆகும்
**1113

#194
செயல் செய்தொழிலும் ஒழுக்கமும் ஆகும்
**1114 

#195
செய் விளைவயலும் ஏவல்வினையும் ஆம்
**1115 

#196
செருந்தி வாட்கோரையும் செருந்திப்புதலும்
**1116 

#197
செல் செவ்வேலும் இடியும் ஏவலும்
சிதலையும் விண்ணும் மேகமும் ஆகும்
**1117 

#198
செல்வம் சுவர்க்கமும் செல்வமும் கல்வியும்
**1118 

#199
செவ்வி அழகும் பருவமும் பொழுதும்
**1119 

#200
செவிலி முன்பிறந்தாளும் தாதியும்
**1120 

#201
செவியே கேள்வியும் காதும் ஆகும்
**1121 

#202
செழுமை வளமும் கொழுப்பும் மாட்சிமையும் 
அழகும் எனவே அறையலாகும்
**1122 

#203
சென்னி தலையும் பாணனும் சோழனும்
**1123

#204
சென்னியர் செங்கதிர்க்குலத்துவேந்தரும் 
பாணரும் கூத்தரும் பகரலாகும்
**சே
**1124 

#205
சேகரம் அழகும் சென்னியும் சூதமும்
**1125 

#206
சேக்கை மிருகம்துஞ்சிடமும் முலையும்
தழும்பும் பாயலும் சாற்றலாகும்
**1126 

#207
சேடு கட்டிளமையும் நன்மையும் பெருமையும் 
திரட்சியும் அழகும் செப்பலாகும்
**1127 

#208
சேடி விஞ்சையர்ஊரும் பாங்கியும்
**1128 

#209
சேடன் நல்லோனும் சேடனும் அடிமையும் 
பாங்கனும் அனந்தனும் இளையோனும் ஆகும்
**1129 

#210
சேட்டை மூதேவியும் முறமும் சேட்டையும்
**1130 

#211
சேண் விண்ணும் உயரமும் அகலமும் சேய்த்தும் 
நீளமும் எனவே நிகழ்த்தலாகும்
**1131 

#212
சேது செய்கரையும் சிவப்பும் ஆகும்
**1132 

#213
சேதகம் சேறும் சிவப்பும் ஆகும்
**1133 

#214
சேத்துச் சிவப்பும் அசைச்சொல்லும் ஐயமும் 
கருத்தும் ஒப்பும் குறிப்பும் ஆகும்
**1134 

#215
சேதாரம் வெட்சியும் பொன்தேய்மானமும் 
தேமாவும் எனச் செப்பலாகும்
**1135 

#216
சேமம் இன்பமும் காவலும் ஆகும்
**1136 

#217
சேய் செவ்வாயும் சிறுவனும் இளமையும்
தூரமும் சிவப்பும் முருகனும் நீளமும்
**1137 

#218
சேலேகம் திலகமும் சந்தனமும் ஆகும்
**1138 

#219
சேலை காகோளியும் சேலையும் ஆகும்
**1139 

#220
சேவல் காவலும் சாவலும் சேறும் 
புள்ளாணும் எனப் புகலலாகும்
**1140 

#221
சேவகம் வீரமும் யானைதுயிலிடமும் 
துயிலும் எனவே சொல்லலாகும்
**1141 

#222
சேறு தித்திப்பும் நரகமும் சாரமும் 
விழவும் கள்ளும் விளம்பலாகும்
**1142 

#223
சேனை படையும் ஆயுதமும் ஆகும்
**சை
**1143

#224
சையம் ஓர்மலையும் வெற்பும் ஆகும்
**1144 

#225
சைவம் புராணமும் சிவனும் ஆகமமும்
இளமையும் சைவசமயமும் சாற்றும்
**சொ
**1145 

#226
சொல் செந்நெல்லும் சொல்லும் கள்ளும் 
புகழும் எனவே புகலலாகும்
**1146 

#227
சொர்க்கம் முலையுஞ் சொக்கமும் ஆகும்
**சோ
**1147 

#228
சோகம் குறங்கும் சோகமும் ஆகும்
**1148 

#229
சோங்கு நாவாயும் குருகும் குரங்கும்
**1149 

#230
சோதி சங்கரனும் மாலும் இரவியும் 
சுடரும் சோதியும் விளக்கும் உடுவும்
**1150 

#231
சோமன் புடவையும் சந்திரனும் ஆகும்
**1151 

#232
சோர்வு கள்ளும் காகமும் ஆகும்
**1152 

#233
சோனை விடாமழை ஓணமும் ஆகும் 
** சகர வருக்கம் முற்றிற்று

@4 ஞகர வருக்கம்
**1153 

#1
ஞமலி மயிலும் நாயும் கள்ளும்
**1154 

#2
ஞாங்கர் மேலும் பக்கமும் வேலும் 
முன்பும் இடமும் மொழிதலாகும்
**1155 

#3
ஞாட்புப் படையும் பூசலும் கூட்டமும் 
பாரமும் எனவே பகரலாகும்
**1156 

#4
ஞாழல் துருக்கமும் நாகமும் ஆகும்
**1157 

#5
ஞாளி கள்ளும் நாயும் ஆகும்
**1158 

#6
ஞானம் நல்ல தத்துவநூலும் 
அறிவும் கல்வியும் அறையலாகும்
**1159

#7
ஞெகிழி நெருப்புறு கொள்ளியும் நெருப்பும் 
சிலம்பும் தீப்பொறியும் செப்பலாகும்
**1160 

#8
ஞெண்டு கர்க்கடகமும் ஞெண்டும் ஆகும்
**1161 

#9
ஞெமிர்தல் முறித்தலும் முறிதலும் பரப்பும்
**1162 

#10
ஞெரேலெனல் விரைவும் ஒலியும் ஆகும்
**1163

#11
ஞெள்ளல் வீதியும் மேன்மையும் பள்ளமும் 
பூசலும் மிகுதியும் உடன்பாடும் சோர்வும் 
ஒலியும் எனவே உரைக்கலாகும்
**1164 

#12
ஞொள்கல் சோம்பும் இளைத்தலும் நோயும் 
அச்சக்குறிப்பும் அறைந்தனர் புலவர் 
** ஞகரம் முற்றிற்று

@5 தகர வருக்கம்
**த
**1165

#1
தகை பீடும் அழகும் அன்பும் பண்பும் 
தகைதலும் இயல்பும் இளைப்பும் ஆகும் 
**1166 

#2
தகரம் நாற்றமும் மயிர்ச்சாந்தும் ஈயமும் 
தகரும் எனவே சாற்றலாகும்
**1167 

#3
தகடு என்றல் ஐமையும் இலையும் ஆகும்
**1168 

#4
தகுதி பொறையும் ஆசாரமும் ஆகும்
**1169 

#5
தகர் மேடமும் ஆடும் பூமியும் தகர்த்தலும்
**1170 

#6
தகைமை இயல்பும் அழகும் பெருமையும்
**1171 

#7
தசும்பு குடமும் மிடாவும் பொன்னும்
**1172 

#8
தச்சன் தச்சனும் சித்திரையும் ஆகும்
**1173 

#9
தஞ்சம் எளிமையும் துணையும் பீடும் 
பற்றுக்கோடும் பகரலாகும்
**1174 

#10
தடை மறுமனைவியும் தடுத்தலும் கவசமும்
**1175 

#11
தடம் தடக்கரையும் விரிவும் அல்குலும் 
பொய்கையும் தடமும் யானைத்தண்டமும் 
கோணலும் விளையும் பெருமையும் பனையும் 
மலையும் எனவே வழங்கலாகும்
**1176 

#12
தடி சாரங்கமும் தண்டும் மின்னும் 
தசையும் உடும்பும் உலக்கையும் வயலும் 
**1177 

#13
தட்டல் ஒற்றறுத்தலும் தடுத்தலும் கிட்டலும்
**1178 

#14
தட்டுத் தேர்நடுவும் தடுத்தலும் பகுத்தலும் 
திரிகையும் தட்டும் வட்டமும் முட்டும் 
குற்றமும் பரிசையும் கூறலாகும்
**1179 

#15
தட்டை தினைத்தாளும் வேயும் தீயும் 
முண்டமும் கவணும் கிளிகடிகோலும் 
கரடிகைப்பறையும் உண்கலனும் சின்னமும்
**1180 

#16
தடாரி மத்தளமும் பறையும் ஆகும் 
**1181 

#17
தடறு பத்தனும் தொண்டையும் நாரையும் 
படையுறையும் எனப் பகரலாகும்
**1182 

#18
தடவு தூபக்காலும் பெருமையும் வளைவும்
**1183 

#19
தண்மை குளிர்ச்சியும் தாழ்வும் எளிமையும்
**1184 

#20
தண்ணம் கட்பறையும் மழுவும் சாற்றுவர்
**1185 

#21
தண்ணுமை முழவும் உடுக்கையும் பறையும்
**1186 

#22
தணியே மலையும் தண்மையும் ஆகும்
**1187 

#23
தண்டு குழாயும் வீணையும் தடியும் 
ஓந்தியும் படையும் மிதுனமும் அவாவும் 
சிவிகையும் தண்டமும் செப்பலாகும்
**1188 

#24
தண்டம் குடைக்காலும் தடியும் படையும் 
தண்டித்தலும் யானைசென்றவழியும்
வரம்பும் தண்டும் சிவிகையும் ஆகும் 
**1189 

#25
தண்ணடை நாடும் கானும் உடுக்கும் 
மருதநிலத்தூரும் இலையும் ஆகும்
**1190 

#26
தத்தை முன்பிறந்தாளும் கிளியும்
**1191 

#27
தந்து சாத்திரமும் நூலும் ஆகும்
**1192 

#28
தபனன் சூரியனும் தீயும் ஆகும்
**1193 

#29
தபுதல் கேடும் சாவும் ஆகும்
**1194

#30
தம்பம் தூணும் பற்றுக்கோடும்
கவசமும் எனவே கழறலாகும்
**1195 

#31
தமரம் மெழுகும் ஓசையும் ஆகும்
**1196 

#32
தமனியன் நயனும் இரணியனும் ஆகும்
**1197 

#33
தமமே இருளும் இராகுவும் ஆகும்
**1198 

#34
தமிழ் தமிழ்விகற்பமும் நீர்மையும் இனிமையும் 
தவமும் தட்பமும் நல்லறமும் அருளும் 
கருமமும் இயல்பும் கழறலாகும்
**1199 

#35
தருமராசன் புத்தனும் அருகனும்
தருமனும் எனவே சாற்றலாகும்
**1200 

#36
தரணி நிலமும் மலையும் இரவியும்
**1201 

#37
தராவே மதுகமும் சங்கமும் சாற்றும்
**1202 

#38
தலம் தாரணியும் இலையும் ஆகும்
**1203 

#39
தலை ஆகாயமும் தலைமையும் சிரமும் 
இடமும் ஆதியும் இயம்பலாகும்
**1204 

#40
தலையல் மழைவிடுதலும் புதுப்புனல் வரவும்
**1205 

#41
தவிசு பீடமும் தடுக்கும் மெத்தையும்
இலகடமும் என்றே இயம்பலாகும்
**1206 

#42
தவா வினைமுத்தியும் மலையும் ஆகும்
**1207 

#43
தவ்வை மூத்தாளும் தாயும் மூதேவியும்
**1208 

#44
தவவு மிகுதலும் குறைதலும் ஆகும்
**1209 

#45
தழலே நெருப்பும் கிளிகடிகோலும்
**1210 

#46
தழையே வளரிளங்கொம்பும் தழையும் 
பீலிக்குடையும் பேசலாகும்
**1211 

#47
தளம் பொருபடையும் சாந்தும் தாழியும் 
நகரும் உப்பரிவாயும் பூவிதழும்
**1212 

#48
தளி சமரிடமும் துளியும் கோயிலும்
**1213 

#49
தளை ஆண்மயிரும் சிலம்பும் விலங்கும் 
பிணைத்தலும் பூமுகையும் முறுக்குத்தாரும் 
தூறல் தளையும் துழாயும் ஆடும்
**1214 

#50
தளிமம் அழகும் மெத்தையும் சயனமும்
**1215 

#51
தன்னை செவிலியும் தாயும் மூத்தாளும்
**1216 

#52
தன்மை தமையுடைப்பொருளும் அழகும்
இயல்பும் எனவே இயம்பலாகும்
**1217 

#53
தனம் முத்திறமும் பொன்னும் முலையும்
வருத்தமும் சாந்தும் பசுவின்கன்றும்
**1218 

#54
தனஞ்சயன் வாயுவும் தீயும் அருச்சுனனும்
**1219 

#55
தன்னம் மான்கன்றும் அற்பமும் ஆகும்
**1220 

#56
தனி ஒப்பின்மையும் தமியும் ஆகும்
**1221 

#57
தனுத் தனுராசியும் நுட்பமும் வில்லும் 
உடம்பும் எனவே உரைக்கலாகும்
**தா
**1222 

#58
தாசி ஆளும் பரணிநாளும் ஆம்
**1223 

#59
தாடு தலைமையும் வன்மையும் ஆகும்
**1224 

#60
தாணுத் தூணும் நிலைபேறும் மலையும் 
சங்கரனும் குற்றியும் சாற்றலாகும்
**1225 

#61
தாண்டவம் ஆடலும் தாவலும் ஆகும்
**1226 

#62
தாது பொன்முதல்ஏழும் அடிமையும் 
தரணிமுதல்ஐந்தும் இரதாதிஏழும் 
காவிக்கல்லும் பூவின்தாதும் 
மேதியும் எனவே விளம்பலாகும்
**1227 

#63
தாதை தகப்பனும் பாட்டனும் ஆகும்
**1228 

#64
தாதி அடிமையும் பரணிநாளும்
**1229 

#65
தாபரம் கோயிலும் உடலும் மலையும் 
தருவும் நிற்பனவும் பூமியும் ஆகும்
**1230 

#66
தாமம் பூவும் மணிவடமும் மலையும் 
தந்தியும் ஊரும் தாரும் சாந்தமும் 
கயிறும் கொன்றையும் ஒழுங்கும் ஒளியும் 
பொருகளமும் இடமும் புகலலாகும்
**1231 

#67
தாம்பு கயிறும் தாமணியும் ஆகும்
**1232 

#68
தாமரை தாமரையும் புலியும் ஆகும்
**1233 

#69
தாயம் உரிமையும் தம்குடித்தமரும்
**1234 

#70
தாரம் வெள்ளியும் நாவும் வில்லும் 
தந்திரியின்ஓர்இசையும் தலைவியும் 
அரும்பண்டமும் வல்லிசையும் ஆகும்
**1235 

#71
தார் பூவும் தூசியும் சதங்கையும் ஒழுங்கும் 
மாலையும் மாவும் நூல்சுற்றும் அழகும்
**1236 

#72
தாரை கண்மணியும் உடுவும் வழியும் 
கூர்மையும் மழையும் சின்னமும் தாரமும் 
ஒழுங்கும் நீரோட்டமும் உரைக்கலாகும்
**1237

#73
தாலம் தரையும் பனையும் நாவும் 
வட்டிலும் எனவே வழங்கலாகும்
**1238 

#74
தாழை தெங்கும் தாழையும் ஆகும்
**1239 

#75
தாழி கடலும் தாழியும் ஆகும்
**1240 

#76
தாழ்தல் குறைவும் வணங்கலும் தங்கலும்
**1241 

#77
தாளி பனையும் தாளிப்புல்லும்
**1242 

#78
தாளாண்மை முயற்சியும் உற்சாகமும் ஆம்
**1243 

#79
தாள் தாழ்ப்பாழும் பாதமும் முயற்சியும்
**1244 

#80
தாறு முள்கோலும் தருவின்குலையும்
வில்குதையும் எல்லையும் விளம்பலாகும்
**1245 

#81
தானை ஆயுதங்களும் படையும் தூசும்
**1246 

#82
தானம் நீராடலும் கொடுத்தலும் உதவியும் 
விண்ணும் மதமும் சாரிடமும் வேட்டலும்
**1247 

#83
தா என்பதுவே வலியும் வருத்தமும் 
கேடும் தாவெனலும் பகையும் இடையீடும்
**தி
**1248 

#84
திகையே திசையும் சுணங்கும் ஆகும்
**1249 

#85
திகிரி வேயும் வெற்பும் தேருருளும் 
ஆழியும் வட்டமும் கோகமும் மையும் 
தேரும் எனவே செப்பலாகும்
**1250 

#86
திங்கள் அம்புலியும் மாதமும் திங்களும்
**1251 

#87
திட்டை மேடும் திண்ணையும் உரலும்
**1252 

#88
திட்டி கண்ணும் திலகமும் திட்டியும்
**1253 

#89
திணை அகத்திணையும் குலமும் நிலமும் 
புறத்திணையும் ஒழுக்கமும் புகலலாகும்
**1254 

#90
திணி காசினியும் திணியும் ஆகும்
**1255 

#91
திண்ணம் பொய்யும் மெய்யும் வலியும்
**1256 

#92
தித்தி குரங்கும் இன்பமும் பையும்
தித்திப்பும் எனச் செப்பலாகும்
**1257 

#93
திதியே காத்தலும் நிலைத்தலும் பக்கமும்
**1258 

#94
திமிரம் இருளும் நரகமும் ஆகும்
**1259 

#95
திரிதல் கெடலும் உலாவலும் ஆகும்
**1260 

#96
திருக்குகம் புடவையும் முற்றமும் ஆகும்
**1261 

#97
திரை இடுதிரையும் திரைத்தலும் கடலும்
ஆலையும் பூமியும் அறைந்தனர் புலவர்
**1262 

#98
திருவே கலையும் செல்வமும் சிறப்பும்
**1263 

#99
திலகம் புண்டரமும் சுட்டியும் எள்ளும்
சிந்தூரமும் மஞ்சாடியும் செப்புவர்
**1264

#100
திலமம் சாடியும் எள்ளும் ஆகும்
**1265 

#101
திவாவே பகலும் ஆதித்தனும் ஆம்
**1266 

#102
திளைத்தல் அனுபவமும் நெருங்கலும் நிறைதலும்
**தீ
**1267 

#103
தீத்தன் ஆசானும் தேவனும் ஆகும்
**1268 

#104
தீத்தம் விழாவும் தீர்த்தமும் ஆகும்
**1269 

#105
தீர்த்தன் சிவனும் ஆசானும் அருகனும்
**1270 

#106
தீயே நெருப்பும் தீங்கும் ஆகும்
**து
**1271 

#107
துகளே குற்றமும் தூளும் ஆகும்
**1272 

#108
துச்சில் ஒதுக்கிடமும் சூடும் ஆகும்
**1273 

#109
துஞ்சல் சோம்பும் சாவும் துயிலும் 
செறிவும் நிலைபேறும் செப்பலாகும்
**1274 

#110
துடர் சொற்றொடர்பும் விலங்கும் ஆகும் 
**1275 

#111
துடி கூதாளியும் ஏலமும் பறையும்
காலநுட்பமும் குமரனாடலும்
கணையும் இதழும் கட்டுதலும் துள்ளலும்
**1276 

#112
துடவை காவும் தோட்டமும் உழவும்
**1277 

#113
துடுப்புக் கையும் இளமுலையும் ஆகும்
**1278 

#114
துணை ஒப்பும் அளவும் சகாயமும் துணைவியும் 
உபயமும் எனவே உரைக்கலாகும்
**1279 

#115
துணி சோதிநாளும் துண்டமும் சீர்மையும்
**1280 

#116
துண்டம் வதனமும் மூக்கும் துகிலும்
சாரைப்பாம்பும் முறியும் புண்மூக்கும் 
**1281 

#117
துணங்கு நன்னாளும் விழவும் அறலும்,
**1282 

#118
துணங்கை அல்லும் விழவும் ஓர்கூத்தும் 
ஒருநாளும் என உரைக்கலாகும்
**1283 

#119
துணையறை தூக்கமும் சேதுவும் ஆகும்
**1284 

#120
துணைவன் மந்திரியும் தோழனும் ஆகும்
**1285 

#121
துண்டில் மூங்கிலும் சூழலும் ஆகும்
**1286 

#122
துணைதனில் துணி மடல் பொருளும் தெளியும்
**1287 

#123
துத்தம் துத்தமும் வயிறும் பாலும்
யாழின்நரம்பும் சுணங்கனும் ஓசையும்
**1288 

#124
துதியே அகிலும் துதியும் ஆகும்
**1289 

#125
துத்தி நாளும் விழவும் நெய்யும் 
தேமலும் துணங்கையாடலும் துத்தியும்
படப்பொறியும் எனப் பகரலாகும் 
**1290 

#126
துப்பு நெய்யும் பவளமும் சுத்தமும்
பகையும் ஊற்றமும் அரக்கும் வனமும் 
அனுபவமும் வலியும் வண்ணமும் சோறும் 
துணையும் ஆயுதங்களையும் சொல்லும்
**1291 

#127
தும்பி வண்டும் சுரையும் கள்ளும் 
யானையும் எனவே அறையலாகும்
**1292 

#128
தும்பை போரும் வெற்றிலையும் தும்பையும்
**1293 

#129
தும்பு சிம்புளும் தோடும் நாளும்
**1294 

#130
துரோணம் சிம்புளும் தும்பையும் பதக்கும் 
காரிப்பறவையும் வில்லும் கருதுவர்
**1295 

#131
துருத்தி ஆற்றிடைக்குறையும் தோலும் 
துட்டையும் இலங்கையும் சொல்லுவர் புலவர்
**1296 

#132
துருக்கம் குங்குமமும் கானும் அரணும் 
கத்தூரியும் கலக்கமும் கழறலாகும்
**1297 

#133
துரங்கம் குதிரையும் நாவாயும் ஆகும்
**1298 

#134
துலையே துலாமும் தோற்றமும் ஏற்றமும்
**1299 

#135
துவக்குப் பிணக்கமும் பற்றுதலும் உடலும் 
தோலும் எனவே சொல்லலாகும்
**1300 

#136
துவ்வுதல் துய்த்தலும் ஆற்பதமும் ஆகும்
**1301 

#137
துவர் சிவப்பும் இகலும் பவளமும் காட்டமும் 
துவர்ப்பும் ஆக்கமும் சொல்லலாகும் 
**1302 

#138
துவறல் உண்டலும் தின்றலும் ஆகும்
**1303 

#139
துவைப் பிண்ணாக்கும் புளிங்கறியும் ஓசையும் 
இறைச்சியும் எனவே இயம்பலாகும்
**1304 

#140
துழாயே புல்லும் துளபமும் ஆகும்
**1305 

#141
துளி பல்துளியும் மழையின்துளியும்
அடைத்தலும் பெண்ஆமையும் ஆகும்
**1306 

#142
துள்ளல் கூத்தும் பாவின்ஓசையும்
மசகமும் எனவே வழங்கலாகும்
**1307 

#143
துளும்பல் அலைதலும் திமிறலும் ஆகும்
**1308 

#144
துனியே கோபமும் புலவிநீட்டமும் 
அந்தியும் துன்பமும் நோயும் ஆகும்
**1309 

#145
துன்னல் சேர்த்தலும் செறிதலும் கிடத்தலும்
**தூ
**1310 

#146
தூக்குப் பாட்டும் கூத்தும் துலாமும் 
தொங்கலும் குணமும் ஆராய்தலும் நிறுத்தலும் 
தூக்கணமும் முறியும் ஆசாரியனும்
**1311 

#147
தூங்கல் தாழ்வும் யானையும் சோம்பும் 
துயிலும் ஓசையும் தராசும் கூத்தும்
**1312 

#148
தூசு தூசிப்படையும் ஆடையும் 
யானைப்புரசையும் நவிற்றுவர் புலவர்
**1313 

#149
தூணி ஆவமும் முகத்தல் தூணியும்
**1314 

#150
தூணம் பகையும் தூணும் ஆகும்
**1315 

#151
தூதுணம் புறாவும் தூக்கணங்குருவியும்
**1316 

#152
தூபம் தூபமும் நீர்க்கடம்பும் ஆகும்
**1317 

#153
தூம்பு வேயும் துளையுடைப்பொருளும்
மரக்காலும் பூளையும் சலதாரையும்
**1318 

#154
தூய்மை மெய்ம்மையும் சுத்தமும் ஆகும்
**1319 

#155
தூரியம் இடமும் வாச்சியமும் துகிலும் 
எழுதுகோலும் முரசும் போரெருதும் 
எறிபடையும் ஈயமும் இயம்பலாகும்
**1320 

#156
தூவி புள்ளிறகும் அன்னத்தூவியும்
பசையும் தசையும் பலதூவிகளும் 
**1321 

#157
தூவல் திவலையும் மாரியும் ஆகும்
**1322 

#158
தூளி ஆர்ப்பும் குதிரையும் புழுதியும் 
**1323 

#159
தூ அரிந்தபுலாலும் பற்றுக்கோடும்
தூய்மையும் பசுவும் பகையும் ஊனும் 
வெண்மையும் சிறகும் விளம்பலாகும்
**தெ
**1324 

#160
தெக்கணம் தெற்கும் சூழ்தலும் ஆகும்
**1325 

#161
தெட்டி யானையும் செட்டியும் ஆகும்
**1326 

#162
தெண்டிகை ஆரவாரமும் தெவ்வமும் 
உள்ளமும் எனவே உரைக்கலாகும்
**1327 

#163
தெய்யே தெய்வமும் கொலையும் ஆகும்
**1328 

#164
தெயம் வாசமும் புத்தேளும் ஆகும்
**1329 

#165
தெரிவை பெண்ணும் கன்னிராசியும்
**1330 

#166
தெவிட்டல் நிறைதலும் கான்றலும் ஒலித்தலும்
அடைத்தலும் எனவே அறையலாகும்
**1331 

#167
தெவ்வே பகையும் செருவும் கொள்கையும்
**1332 

#168
தென் நாளிகேரமும் இசையும் வனப்பும் 
கற்பும் தெற்கும் கழறினர் புலவர்
**தே
**1333 

#169
தேள் விருச்சிகமும் அனுடநாளும்
**1334 

#170
தேக்குத் தேக்கும் வெறுப்பும் கமுகும் 
தெவிட்டலும் எனவே செப்பலாகும்
**1335 

#171
தேசி பரியும் நாயும் ஆகும்
**1336 

#172
தேசிகம் அழகும் காந்தியும் திசைச்சொல்லும் 
கூத்தும் பொன்னும் கூறலாகும்
**1337 

#173
தேசிகன் தேசாந்திரியும் குருவும் 
வணிகனும் இறைவனும் வழங்கலாகும்
**1338 

#174
தேடல் பொன்னும் தேடலும் ஆகும்
**1339 

#175
தேம் என்ப திடமும் நாற்றமும் திசையும் 
தித்திப்பும் தேசமும் தேனும் கள்ளும்
**1340 

#176
தேயம் விண்ணும் உடலும் நாடும் 
களவும் எனவே கருதினர் புலவர்
**1341 

#177
தேர்தல் ஆராய்தலும் கொள்கையும் ஆகும்
**1342 

#178
தேவு தேறலும் தெய்வமும் ஆகும்
**1343 

#179
தேனே வண்டும் நறவும் ஆகும்
**தை
**1344 

#180
தைத்தல் துன்னமும் தைத்தலும் ஆகும்
**1345 

#181
தையல் பெண்ணும் அழகும் ஆகும்
**1346 

#182
தை தைமாதமும் மூலியும் தைத்தலும் 
அலங்கலும் கள்ளும் அறையலாகும்
**தொ
**1347 

#183
தொங்கல் பீலியும் பீலிக்குடையும் 
மாலையும் குஞ்சமும் தூக்கும் வெண்குடையும் 
பங்கியும் துக்கமும் பகரலாகும்
**1348 

#184
தொட்டி வாய்தலும் தொட்டியும் கள்ளும்
**1349 

#185
தொடி கங்கணமும் வளையும் ஒருபலமும்
**1350 

#186
தொட்டல் கைதீண்டலும் தோண்டலும் உண்டலும்
**1351 

#187
தொடுத்தல் வளைத்தலும் பிணித்தலும் பற்றலும் 
சொற்கூட்டலும் எனச் சொல்லலாகும்
**1352 

#188
தொடுப்பு கோணலும் உழவும் ஆகும்
**1353 

#189
தொடை பாவுறுப்பும் மாலையும் கணையும் 
சொல்லும் தொடர்பும் தொங்கலும் ஆகும்
**1354 

#190
தொண்டு வழிபாடும் ஒன்பதும் சுருக்கும் 
பழமையும் அடிமையும் பகரலாகும்
**1355 

#191
தொண்டை யானைத்துதிக்கையும் மிடறும் 
கொவ்வையும் எனவே கூறலாகும்
**1356 

#192
தொண்டிகை வாச்சியமும் அணிகலனும் ஆகும்
**1357 

#193
தொத்து பூங்கொத்தும் தொண்டும் ஆகும்
**1358 

#194
தொய்யில் அழகும் உழவும் சேறும் 
துயரமும் குழைவும் எழுதலும் இன்பமும் 
தொய்யில்புதலும் சொல்லலாகும்
**1359 

#195
தொழு இரேபதியும் நோயும் முழலையும் 
தோழமும் தொழுதிடு என்றலும் சொல்லும்
**1360 

#196
தொழுதல் வளைதலும் தாழ்தலும் ஆகும்
**1361 

#197
தொழுதி புள்ளொலியும் கூட்டமும் ஆகும்
**1362 

#198
தொறு ஆனிரையும் தோழமும் தொகுதியும்
அடிமையும் எனவே அறையலாகும்
**தோ
**1363 

#199
தோகை தொங்கலும் வாலும் மயிலும் 
பெண்ணும் சுற்றாரலும் பேசலாகும்
**1364 

#200
தோடு தொகுதியும் பூவினிதழும்
பனையினிதழும் குன்றும் மனையும் ஆம்
**1365 

#201
தோடிரியம் கூத்தும் வாச்சியமும் ஆகும்
**1366 

#202
தோட்டி அங்குசமும் கபாடமும் தோட்டியும் 
**1367 

#203
தோணி நீரும் கடைநாளும் தெப்பமும்
தொளியும் அம்பும் மதிலுறுப்பும் ஆகும்
**1368 

#204
தோண்டல் முகத்தலும் அகழ்தலும் ஆகும்
**1369

#205
தோமரம் வாச்சியமும் ஓர்ஆயுதமும்
**1370 

#206
தோரை கைவரையும் பொன்னூலும் வேயும்
நெல்லின்விகற்பமும் அரிசியும் தூம்பும்
**1371 

#207
தோல் தோல்பலகையும் தோல்வியும் துருத்தியும்
யானையும் வனப்பும் சொல்லும் ஆகும்
**1372 

#208
தோரணம் கவியும் நிலைத்தேரும் ஆகும்
**1373 

#209
தோழி அரக்கும் பாங்கியும் ஆகும்
**1374 

#210
தோள் புயமும் துளையும் தூங்கியகையும்
**1375 

#211
தோற்றல் வலியும் பிறப்பும் தோன்றுதலும்
தோல்வியும் புகழும் சொல்லலாகும்
**1376 

#212
தோற்றம் உண்டாக்கலும் ஏற்றமும் பிறப்பும் 
ஆற்றலும் உயர்ச்சியும் காண்டலும் புகழும்
**1377 

#213
தோன்றல் முல்லைத்தலைவரும் சேயும் 
நாதனும் எனவே நவிலலாகும்
**தகரவருக்கம் முற்றிற்று

@6 நகர வருக்கம்
**ந
**1378 

#1
நகை பல்லும் மகிழ்வும் ஒளியும் இகழ்ச்சியும் 
சிரிப்பு முகமலர்ச்சியு முகையும் ஆகும்
**1379 

#2
நகம் மரப்பேரும் மலையும் உகிரும்
**1380 

#3
நகுதல் ஒளிர்தலும் நகுதலும் ஆகும்
**1381 

#4
நகரே மனையும் ஊரும் கோயிலும்
**1382 

#5
நக்கன் அருகனும் நிருவாணியும் சம்புவும்
**1383 

#6
நக்கல் தீண்டலும் தின்றலும் நகைத்தலும் 
நக்குதலும் மகிழ்ச்சியும் நவிலலாகும்
**1384 

#7
நடை ஓர்கூத்தும் வாயிலும் நடையும்
செல்வமும் ஒழுக்கமும் வழியும் ஆகும் 
**1385 

#8
நடலை வீம்பும் வஞ்சனையும் பொய்யும்
நடுங்கிடனும் நுடக்கமும் நவிலலாகும்
**1386 

#9
நட்டம் நடமும் கேடும் ஆகும்
**1387 

#10
நடு நடுச்சொல்லும் இடையும் நாப்பணும்
**1388 

#11
நதியே மலையும் ஆறும் ஆகும்
**1389 

#12
நத்தம் நகர்ப்புறனும் ஊரும் மல்லும் 
சங்கும் ஆக்கமும் ஊமையும் இரவும்
**1390 

#13
நந்தி பேரிகையும் இடபமும் சிவனும் 
செக்கானும் எனச் செப்பலாகும்
**1391 

#14
நந்தல் கேடும் ஆக்கமும் ஆகும்
**1392 

#15
நந்து நத்தையும் சங்கும் ஆகும்
**1393 

#16
நயமே இன்பமும் ஞாயமும் நன்றியும்
**1394 

#17
நயந்தோன் கணவனும் நண்பனும் ஆகும்
**1395 

#18
நரை வெண்பரியும் வெண்மையும் கவரியும் 
நாரையும் ஏறும் நவிலலாகும்
**1396 

#19
நரந்தம் காக்கையும் மணமும் கத்தூரியும் 
நாரத்தையும் என நவிலலாகும்
**1397 

#20
நலம் உபகாரமும் தேளும் சுகமும்
**1398 

#21
நவம் கார்காலமும் பூமியும் புதுமையும் 
கூத்தும் பாம்பும் ஒன்பதும் தொண்டும் 
பழமையும் கேண்மையும் பகரலாகும்
**1399 

#22
நவிலல் சொல்லுதலும் பண்ணுதலும் ஆகும்
**1400 

#23
நவிரம் மருதயாழ்த்திறமும் மலையும் 
புன்மையும் மயிரும் மலையினுச்சியும் 
உச்சியும் எனவே உரைக்கலாகும்
**1401 

#24
நவிர் தக்கேசியும் ஆண்பால்மயிரும் 
மருதயாழ்த்திறமும் வாளும் ஆகும்
**1402 

#25
நவியம் கோடாலியும் மழுவும் ஆகும்
**1403 

#26
நவ்வி மரக்கலமும் மானும் ஆகும்
**1404 

#27
நவமணி பொன்னும் நவமணியும் ஆகும்
**1405 

#28
நள்ளி ஓர்வள்ளலும் நண்டும் ஆகும்
**1406 

#29
நளினி செய்யாளும் வாவியும் பண்ணும்
**1407 

#30
நளியே குளிரும் வெறுப்பும் நண்டும்
பெருமையும் செறிவும் பேசலாகும்
**1408 

#31
நளமே தாமரையும் அகலும் ஆகும்
**1409 

#32
நறவம் தேனும் நாகமும் ஆகும்
**1410 

#33
நனை பூமொட்டும் கள்ளும் மதமும்
**1411 

#34
நனந்தலை நடுவும் உச்சியும் ஆகும்
**1412 

#35
நனவு தெளிவும் அகலமும் களனும்
**1413 

#36
நன்று மிகுதியும் நன்மையும் ஆகும்
**1414 

#37
நன்னி தவசமும் சுக்கிலமும் ஆகும்
**நா
**1415 

#38
நாகம் விண்ணும் குரங்கும் தூசும் 
பண் ஒருமலையும் பாம்பும் யானையும் 
புன்னையும் காரீயமும் ஓசையும் ஞாழலும்
**1416 

#39
நாகு விலங்கின்பெண்ணும் மரையும் 
மேதியும் ஈனாஇளமையும் நத்தையும் 
நாகும் இளமரமும் நீர்வாழ்சாதியும் 
ஆரமும் எனவே அறையலாகும்
**1417 

#40
நாஞ்சில் கலப்பையும் மதிலும் ஆகும்
**1418 

#41
நாடி நாழிகையும் நரம்பும் நாசிகையும்
**1419 

#42
நாட்டம் கண்ணும் பண்ணும் வாளும் 
ஆடலும் எனவே அறையலாகும்
**1420 

#43
நாண் மாதர்மங்கலநாணும் நாணமும் 
கயிறும் எனவே கழறலாகும்
**1421 

#44
நாதன் சிவனும் கோவும் மூத்தோரும் 
கேளும் எனவே கிளத்தினர் புலவர்
**1422 

#45
நாப்பண் நடுவும் தேரின்தட்டும்
யாழுறுப்பும் என நவிலலாகும் 
**1423 

#46
நாமம் பெயரும் அச்சமும் பெருமையும்
**1424 

#47
நாரம் நீரும் அம்பும் வாசியும் 
ஈரமும் கயிறும் அன்பும் நாரும்
**1425 

#48
நாரி பன்னாடையும் வில்லின்நாணும் 
நறவும் பெண்ணும் நவிலலாகும்
**1426 

#49
நால்வாயன் போகியும் ஐங்கரனும்
**1427 

#50
நாவிதன் பூரநாளும் அறுமீனும்
இரேபதியும் மயிர்வினைஞனும் ஆகும்
**1428 

#51
நாழி உள்துளையும் பூரட்டாதியும் 
நாழிகையும் படியும் நவிலலாகும்
**1429 

#52
நாளே செவ்வியும் நாளும் மலரும் 
உடுவும் காலையும் உரைக்கலாகும்
**1430 

#53
நாளி நாயும் கள்ளும் ஆகும்
**1431 

#54
நாற்றம் தோன்றலும் நாறுதலும் ஆகும்
**1432 

#55
நாறு நாற்றமும் நெல்லும் நாறும்
**1433 

#56
நானம் கத்தூரியும் மணமும் கவரிமாவும்
பூசுவனவும் நீராடலும் ஆகும்
**1434 

#57
நான்முகன் அருகனும் வேதனும் ஆகும் 
**நி
**1435 

#58
நிசி அரிசனமும் பொன்னும் இரவும் 
இருளும் நீலமும் இயம்பலாகும்
**1436 

#59
நிசிதம் இகழ்ச்சியும் பொய்யும் கூர்மையும்
**1437 

#60
நிதம்பம் அல்குலும் மலையின்பக்கமும்
**1438 

#61
நிதி வைப்பும் பொன்னும் இருவகைநிதியும்
கதையும் எனவே கழறலாகும்
**1439 

#62
நித்தியம் தினமும் அழிவுஇல்பொருளும்
**1440 

#63
நிமிரல் உயர்வும் சோறும் ஆகும்
**1441 

#64
நியமம் சுடுகாடும் கோயிலும் வீதியும் 
கடையும் நிச்சயமும் நகரமும் தவமும்
நியமஞ்செய்தலும் ஒருபட்சியும் ஆகும்
**1442 

#65
நிருமித்தல் படைத்தலும் ஆராய்தலும் ஆம்
**1443 

#66
நிரப்புக் குறைபாடும் இன்மையும் ஆகும்
**1444 

#67
நிலையே பொழுதும் குணமும் முறைமையும் 
நிலைபெறுமாறு முத்தியும் ஆகும்
**1445 

#68
நிலவு சந்திரனும் ஒளியும் ஆகும் 
**1446

#69
நிவப்பு நிவத்தலும் சேணும் நீளமும்
**1447 

#70
நிழல் மரக்கொம்பும் செல்வமும் குளிர்ச்சியும் 
சாயையும் நோயும் கிருபையும் ஆகும் 
**1448 

#71
நிழற்றல் நிழல்செயலும் நிழலும் நுணுக்கமும் 
நிரம்பாமென்சொல்லும் நிகழ்த்தினர் புலவர்
**1449

#72
நிறை நீர்ச்சாலும் ஆசையும் உணர்வும் 
துலாமும் அழியாநிலையும் சொல்லுவர்
**1450

#73 
நிறம் பிரகாசமும் நிறமும் மார்பும்
**நீ
**1451 

#74
நீக்கல் கொல்லலும் நீக்கலும் ஆகும்
**1452 

#75
நீத்தம் வெள்ளமும் நீரும் ஆகும்
**1453 

#76
நீபம் நீர்க்கடம்பும் உத்திரட்டாதியும் 
நிமித்தமும் எனவே நிகழ்த்தினர் புலவர்
**1454 

#77
நீலி சங்கரியும் மாலும் துர்க்கையும் 
அவுரியும் கறுப்பும் அறையலாகும்
**1455 

#78
நீலம் காலமும் நீலநிறமும் 
மணியும் இருளும் நெய்தலும் பனையும்
**1456 

#79
நீல் நீலநிறமும் காற்றும் ஆகும்
**1457 

#80
நீவு ஆடையும் இறகும் அழித்தலும்
துடைத்தலும் கொய்சகமும் சொல்லலாகும்
**1458 

#81
நீழல் ஒளியும் நிழலும் நகையும் 
ஆற்பதமும் என அறையலாகும்
**நு
**1459 

#82
நுணங்கு தேமலும் நுண்மையும் நுனியும்
**1460 

#83
நுணவை எண்ணும் ஓலையும் பிணியும்
**1461 

#84
நுதம்பு கள்ளும் அமுதும் ஆகும்
**1462 

#85
நுதலே நெற்றியும் புருவமும் கருதலும் 
புதலும் எனவே புகலலாகும்
**1463 

#86
நுரையே வெண்ணெயும் நுரையும் ஆகும்
**1464 

#87
நுவணை தினைமாவும் நுண்மையும் நூலும்
**1465 

#88
நுனியே நுண்மையும் நுனியும் ஆகும்
**நூ
**1466 

#89
நூல் சாத்திரமும் நூலும் கொடியும்
இல்லைஎனலும் எண்ணலும் வேதமும்
**1467 

#90
நூலோர் அமைச்சரும் பார்ப்பாரும் புலவரும்
**1468 

#91
நூழில் செக்கும் யானையும் கொடியும்
திரையும் நுண்பொடியும் கோறலும் செப்புவர்
**1469 

#92
நூனம் நிச்சயமும் குறைவும் ஆகும்
**நெ
**1470 

#93
நெகிழம் சங்கிலியும் விலங்கும் ஆகும்
**1471 

#94
நெஞ்சு மார்பும் மனமும் ஆகும்
**1472 

#95
நெடுமை பெண்மயிரும் வார்தலும் நெடுமையும்
நெட்டிரலுமமும் நெட்டியும் ஆகும்
**1473 

#96
நெட்டை நெடுமையும் நெய்யும் ஆகும்
**1474 

#97
நெய்தல் கடல்சார்பு நெய்தல்பூவும் 
சாபறையும் நெசவும் சாற்றலாகும்
**1475 

#98
நெல்லே வாகையும் நெல்லும் ஆகும்
**1476 

#99
நெற்றி படையுறுப்பும் நெற்றியும் ஆகும்
**1477 

#100
நெறியே நீதியும் வழியும் ஆகும்
**நே
**1478 

#101
நேத்திரம் கண்ணும் பட்டாடையும்
**1479 

#102
நேமி சக்கரமும் வட்டமும் மூங்கிலும் 
பூமியும் கடலும் நேமிப்புள்ளும் 
சகுனமும் தேர்க்காலும் சாற்றலாகும்
**1480 

#103
நேயம் அன்பும் நெய்யும் எண்ணெயும்
**1481 

#104
நேர் தலைப்படலும் சமனும் ஈதலும் 
பாதியும் நெடிலும் ஒப்பும் நுட்பமும் 
உடன்பாடும் நேரும் மஞ்சமும் தனியும் 
மிகுதியும் எனவே விளம்பலாகும்
**1482 

#105
நேர்தல் இசைதலும் மெலிதலும் வேண்டலும் 
எதிர்தலும் எனவே இயம்பலாகும்
**1483 

#106
நேரல் உடன்பாடும் அண்டலும் ஆகும்
**நொ
**1484 

#107
நொச்சி மதிலும் மதிலின்நாவலும் 
சிற்றூரும் நொச்சியும் செப்பலாகும்
**1485 

#108
நொடியே வார்த்தையும் காதையும் நொடியும்
**1486 

#109
நொறில் சீக்கிரமும் ஒடுக்கமும் நுடக்கமும்
**நோ
**1487 

#110
நோக்குப் பார்வையும் காதல்தருமாதரும் 
அழகும் எனவே அறையலாகும்
**1488 

#111
நோற்றல் பொறையும் தவஞ்செய்தலும் ஆம்
**1489 

#112
நோனாமை பொறாமையும் தவஞ்செய்யாமையும் 
**1490 

#113
நோனார் தவமில்லோரும் பகைவரும்
**1491 

#114
நோன்மை வலியும் தவமும் பொறையும்
எண்ணும் எனவே இயம்பலாகும்
** நகரவருக்கம் முற்றிற்று

@7 பகர வருக்கம்
*ப
**1492 

#1
பகவனே சிவனும் மாலும் வேதனும் 
தீயும் பரிதியும் புத்தனும் செப்பும்
**1493 

#2
பகல் நுகத்தாணியும் ஒளியும் முகிர்த்தமும் 
பானுவும் நடுவும் பகலும் செயலும்
பிரிவும் பாணியும் இரவுநாளும்
**1494 

#3
பகையே அடித்தலும் சார்தலும் பகையும்
**1495 

#4
பகம் கொக்கும் யோனியும் பகரலாகும்
**1496 

#5
பகழி அம்பும் அம்பின்குதையும் ஆகும்
**1497 

#6
பகுதி கூட்டமும் பகுதியும் ஆகும்
**1498 

#7
பக்கம் பாங்கும் திதியும் அன்பும்
சிறகும் நட்பும் செப்பலாகும்
**1499 

#8
பகர்தல் விற்றலும் பேசலும் ஆகும்
**1500 

#9
பகடு தோணியும் கடாவும் எருதும் 
பெருமையும் யானையும் பேசலாகும்
**1501 

#10
பங்கம் தீவினையும் பின்னமும் சேறும் 
திரையும் தூசும் முடமும் குற்றமும்
**1502 

#11
பங்கி ஆண்மயிரும் பிறமயிரும் ஆகும்
**1503 

#12
பங்கயன் அருக்கனும் பிரமனும் ஆகும்
**1504 

#13
பங்கு முடமும் பாதியும் சனியும் 
பகுத்தலும் எனவே பகரலாகும்
**1505

#14
பச்சை மரகதமும் மணமும் மாலும் 
புதனும் தோலும் புந்தியும் நிறமும் 
பச்சையும் இலாபமும் பகரலாகும்
**1506 

#15
பசும்பை மயிரும் பசும்பையும் ஆகும்
**1507 

#16
பசுமை எழதமும் பசப்பும் ஆகும்
**1508

#17
பசையே லாபமும் ஆசையும் ஆகும்
**1509 

#18
பசு அறிவிலாதபாவியும் பசுவும்
சீவனும் எருதும் செப்பலாகும்
**1510

#19
பஞ்சம் சிறுமையும் ஐந்தும் ஆகும்
**1511

#20
பஞ்சரம் செருந்தியும் கூடும் ஆகும் 
**1512

#21
படை படைக்கலமும் கலப்பையும் தானையும் 
பல்லணமும் படுக்கையும் பகரலாகும்
**1513 

#22
படரே நினைப்பும் வீரரும் பகையும் 
பரிவும் புதலும் கொடியும் தூதரும் 
நோவும் நடையும் படர்ச்சியும் ஆகும்
**1514 

#23
படி சோபானமும் உவமையும் நாழியும் 
பூமியும் பகையும் அங்கவடியும் 
நீரும் எனவே நிகழ்த்தலாகும்
**1515 

#24
படகம் கவரிமாவும் பணவையும்
பரணும் பண்ணும் ஒருவாச்சியமும்
**1516 

#25
படுவே நன்மையும் நீர்நிலையும் கள்ளும் 
படுக்கையும் மடுவும் மரத்தின்குலையும் 
வெள்ளியும் முகரிமையும் விளம்பலாகும்
**1517 

#26
படிவம் நோன்பும் உடலும் ஆகும்
**1518 

#27
படங்கு மேற்கட்டியும் சீலைக்குடிலும் 
கொடியும் எனவே கூறலாகும்
**1519 

#28
பட்டம் ஆயுதமும் மேலாம்பதமும் 
தூசும் ஓடையும் பரிசையும் வட்டையும் 
மாச்சேக்கையும் கவரிமாவும் நுதலணியும்
**1520 

#29
பட்சி குதிரையும் பட்சியும் ஆகும்
**1521

#30
படுதல் ஒலியும் உண்டாகுதலும்
பூத்தலும் இன்றாகுதலும் புகுதலும் புகல்வர்
**1522 

#31
படலை பரந்த வாய்ப்பறையும் மாலையும் 
பரியின்கோவையும் படர்தலும் ஆகும்
**1523

#32
படலிகை பீர்க்கும் பரந்த கைம்மணியும்
பூத்தட்டும் வட்டமும் புகலுவர் புலவர்
**1524 

#33
பட்டாரகர் தேவரும் அருகரும் ஆகும்
**1525 

#34
படப்பை பசுநிறையும் தோட்டமும் நகரும் 
நாடும் எனவே நவிற்றினர் புலவர்
**1526 

#35
பட்டு சிற்றூரும் பட்டும் ஆகும்
**1527 

#36
படாம் இடுதிரையும் ஆடையும் ஆகும்
**1528

#37
பட்டிகை கச்சம் பணையும் தோணியும்
இரதமும் எனவே இயம்புவர் புலவர்
**1529 

#38
படுவி கள்ளுவிற்பாளும் குண்டமும்
**1530 

#39
பட்டிமை களவும் வஞ்சமும் ஆகும்
**1531 

#40
படம் கட்செவியின்படமும் தூசும்
சித்திரப்படமும் கரிமுகபடாமும் 
கொடியும் எனவே கூறினர் புலவர்
**1532 

#41
படிறு பொய்யும் களவும் வஞ்சமும்
**1533 

#42
பட்டி நாயும் களவும் பிள்ளையும்
**1534 

#43
பணை பரிப்பந்தியும் வயலும் பருத்தலும்
வேயும் முரசும் மரக்கோடும் பிழைத்தலும் 
படுத்தலும் பெருமையும் பணையும் போதியும்
**1535 

#44
பணி தோல்கருவியும் சொல்லும் தொழிலும் 
பணிதலும் பாம்பும் பெருமையும் ஏவலும்
**1536 

#45
பண்டி சகடமும் யானையும் வண்டியும் 
உரோகணியும் என உரைத்தனர் புலவர்
**1537 

#46
பண் பரிக்கலணையும் பண்ணும் பாட்டும் 
பப்பும் ஆழமும் மாதர்கூட்டமும்
**1538 

#47
பண்ணை மகளிர்விளையாடலும் வயலும் 
மாதர்கூட்டமும் மிருகம்துஞ்சிடமும் 
மருதநிலமும் தண்ணீர்த்தாழ்வும் 
சபையும் தண்ணடையும் சாற்றலாகும்
**1539 

#48
பணம் பொற்காசும் பாம்பின்படமும் 
பணமும் பாம்பும் எனப் பகர்ந்தனரே
**1540 

#49
பண்ணவன் முனிவனும் தேவனும் அருகனும் 
ஆசானும் திறலோனும் ஆகும்
**1541 

#50
பண்ணவர் துறந்தோரும் தேவரும் ஆகும்
**1542 

#51
பணவை கழுதும் பரணும் அளவும்
புள்ளும் எனவே புகன்றனர் புலவர்
**1543 

#52
பண்டம் பணிகாரமும் பொன்னும் ஆகும்
**1544 

#53
பணிலம் சலஞ்சலமும் சங்கும் ஆகும்
**1545 

#54
பதலை உடுக்கும் ஒருகட்பறையும் 
தாழியும் மலையும் சாற்றினர் புலவர்
**1546 

#55
பதுக்கை சிறுதிட்டையும் பரலும் தூறும் 
பாறையும் எனவே பகர்ந்தனர் புலவர்
**1547 

#56
பதங்கம் விட்டிலும் பறவைகளும் ஆகும் 
**1548 

#57
பதம்பல் சிறப்பும் வழியும் பொதுவும்
சோறும் உணவும் சொல்லும் பாதமும் 
ஈரமும் சேமமும் காலமும் தூசும் 
இன்பமும் செவ்வியும் குழைவும் விழாவும் 
அமைதலும் பாவின் பதமும் பதமும்
**1549

#58
பதவி மேலாம்பதமும் வளமும்
**1550 

#59
பத்திரி காளியும் அம்பும் இலையும் 
குதிரையும் புள்பொதுவும் கூறும்
**1551 

#60
பத்தி வழிபாடும் ஒழுக்கமும் முறையும் 
அடைப்பும் எனவே அறைந்தனர் புலவர்
**1552 

#61
பதி மூத்தோரும் மன்னனும் பரமனும் 
குதிரையும் ஊரும் கணவனும் செல்வனும் 
பிறையும் பாவலும் பதித்தலும் ஆகும்
**1553 

#62
பத்திரம் வனப்பும் நன்மையும் படையும் 
சிங்காசனமும் இலையும் சிறகும்
அத்திரமும் என அறைந்தனர் புலவர் 
**1554 

#63
பதணம் யானையும் அரணும் ஆகும்
**1555 

#64
பதாகை கேதனமும் வல்லியும் பகரும்
**1556 

#65
பந்தம் கைவிளக்கும் அழகும் கிளையும்
உண்டையும் கட்டுப்பாடுறுதளையும் 
பாசமும் இலையும் பகர்ந்தனர் புலவர்
**1557 

#66
பந்து கந்துகமும் நீர்தூம்துருத்தியும் 
கட்டும் பந்தும் கழறினர் புலவர்
**1558 

#67
பப்புப் பரப்பும் ஒப்பும் பகரும்
**1559 

#68
பம்பரம் ஆடுபம்பரமும் மேருவும்
**1560 

#69
பம்பல் எழுச்சியும் பொன்னும் பொலிவும்
துன்னலும் வலியும் தொடர்தலும் ஆகும் 
**1561 

#70
பயம் சுதைநீரும் பாலும் பயனும் 
படையும் அச்சமும் பொன்னும் குளமும்
**1562 

#71
பயிர் விதந்துகட்டியவழக்கும் பைங்கூழும் 
ஒலியும் பயிலும் விலங்கினொலியும் 
பசும்புலும் புள்ளொலியும் பகர்வர்
**1563 

#72
பயம்பு பள்ளமும் யானைவீழ்குழியும்
**1564 

#73
பயோதரம் முலையும் புயலும் கடலும்
**1565 

#74
பயல் சிற்றாளும் பள்ளமும் பாதியும்
**1566 

#75
பரவை கடலும் திருமகளாடலும்
பரப்பும் எனவே பகர்ந்தனர் புலவர்
**1567 

#76
பரிதல் அறுத்தலும் இரங்கலும் அன்பும்
**1568

#77
பரம் பரிக்கலணையும் கவசமும் பாரமும் 
தேகமும் மேலும் மத்தியும் முன்பும்
**1569 

#78
பராகம் நாவாயும் மலரின்தூளும் 
வாணியும் இரேணுவும் என வழங்கினரே
**1570 

#79
பராக்கிரமம் வலியும் வீரமும் ஆகும்
**1571 

#80
பரி பாதுகாத்தலும் வருந்தமும் குதிரையும் 
பருத்தியும் செலவும் சுமத்தலும் வேகமும் 
விரைவும் பெருமையும் காழ்த்தலும் மிகுதியும்
**1572 

#81
பரிகம் கிடங்கும் மேடையும் கணையமும் 
மதிலும் எனவே வழங்கினர் புலவர்
**1573 

#82
பருவரல் துக்கமும் பொழுதும் சுடுமரமும்
**1574 

#83
பரிதி ஆதித்தனும் பொன்னும் ஒளியும் 
சக்கரமும் பரிவேடமும் வட்டமும்
**1575 

#84
பருமம் உயர்ச்சியும் மேகலையும் பரியும் 
தூசும் மொழியும் பரிமேல்கலணையும் 
சானமும் கவசமும் சாற்றலாகும்
**1576 

#85
பரப்புக் கடலும் பரப்பும் ஆகும்
**1577 

#86
பரசு மூங்கிலும் மழுவும் ஆகும்
**1578 

#87
பருப்பு மின்னும் பருப்பும் ஆகும்
**1579 

#88
பரிவு துன்பமும் இன்பமும் அன்பும்
**1580 

#89
பரதர் நுளையரும் வணிகரும் ஆகும்
**1581 

#90
பரத்தல் தொழலும் பரத்தலும் ஆகும்
**1582 

#91
பரணி மருந்துச்செப்பும் பரணியும்
**1583 

#92
பரித்தல் அறுத்தலும் தாங்கலும் ஆகும்
**1584 

#93
பரதம் பரதமும் நடனமும் ஆகும்
**1585 

#94
பலமே சேனையும் கிழங்கும் பயனும் 
காயும் நிறையும் பழமும் ஆகும்
**1586 

#95
பலி வெண்ணீறும் சோறும் பூசையும் 
பிச்சையும் பலித்தலும் தாருவும் காகமும் 
தேவுணவும் எனச் செப்பினர் புலவர்
**1587 

#96
பலிதம் காய்த்தருவும் நரையும் ஆகும்
**1588 

#97
பலாசு பச்சைநிறமும் இலையும் 
பலாசுமரமும் பகர்ந்தனர் புலவர்
**1589 

#98
பல்லியம் வாச்சியமும் குதிரைப்பந்தியும் 
தொங்கலும் பாணியும் மென்பாலும் ஆகும்
**1590 

#99
பல்லம் ஓர்கணக்கும் பாணமும் கரடியும் 
பரிமாவின்கலணையும் பகரலாகும்
**1591 

#100
பவமே பாவமும் தோற்றமும் ஆகும்
**1592 

#101
பவித்திரம் தருப்பையும் சுசியும் ஆகும்
**1593 

#102
பவனம் சுவர்க்கமும் நாடும் பொழுதும்
கோயிலும் மனையும் பூமியும் காற்றும் 
இராசியும் என இயம்பலாகும்
**1594 

#103
பழமை முதுமையும் வேண்டற்பாடும் 
யானையும் எனவே இயம்பினர் புலவர்
**1595 

#104
பழங்கண் ஒலியும் புன்கணும் பழுதும் 
பயனின்மையும் மாசும் பகரலாகும்
**1596 

#105
பழுது நிறைவும் பழுதும் இடமும் 
**1597 

#106
பள்ளி சிற்றூரும் கோயிலும் பாயலும்
பகைவர்இடமும் துயிலிடமும் ஆகும் 
**1598 

#107
பளிங்கு பார்க்கவனும் பளிங்கும் ஆகும்
**1599 

#108
பறவை இரவுண்டியும் பறவையும் இறகும் 
பொழுதும் எனவே புகன்றனர் புலவர்
**1600 

#109
பறம்பு வெற்பும் முலையும் ஆகும்
**1601 

#110
பற்றல் தொடலும் வளைதலும் பிணித்தலும்
**1602 

#111
பறை வாச்சியமும் வார்த்தையும் இறகும்
**1603 

#112
பன்னல் தேர்தலும் நெருக்கமும் பருத்தியும் 
பேச்சும் எனவே பேசினர் புலவர்
**1604 

#113
பனி சந்திரனும் குளிரும் அச்சமும் 
பனியும் துன்பமும் நடுக்கமும் ஆகும்
**1605 

#114
பனை அனுடநாளும் பனையும் ஆகும்
**1606 

#115
பனுவல் வார்த்தையும் செய்யுளும் நூலும்
**பா
**1607 

#116
பாகன் புதனும் பாகனும் ஆகும்
**1608 

#117
பாகு பாலும் பகுப்பும் பாக்கும்
பாகனும் வெல்லமும் குழம்பும் பாணியும் 
**1609

#118
பாக்கு எதிர்காலத்துஇடைச்சொல்லும் பாக்கும்
**1610 

#119
பாகலே காரவல்லியும் பலாவும் 
முப்பாகலும் என மொழிந்தனர் புலவர்
**1611 

#120
பாகரம் புரிசையுளுயர்த்தியநிலமும் 
பரிகமும் எனப் பகர்ந்தனர் புலவர்
**1612 

#121
பாக்கம் நெய்தலூரும் ஊரும் 
மருதவூரும் என வழங்கினரே
**1613

#122
பாகம் பாதியும் அளவும் பதமும் 
பட்டும் சர்க்கரையும் பலகூறும் ஆகும்
**1614 

#123
பாங்கர் பக்கமும் இடமும் பக்கமும்
**1615 

#124
பாங்கு பாலும் பக்கமும் பரிசம்
கன்மமும் தோழியும் கழறலாகும்
**1616 

#125
பாங்கன் பரிசும் பக்கமும் தோழனும்
**1617 

#126
பாசு வேயும் பசுமையும் ஆகும்
**1618 

#127
பாசம் ஊசித்துளையும் கயிறும்
பேயும் அன்பும் நூலும் ஆகும்
**1619 

#128
பாசி மழையும் பாசியும் ஆகும்
**1620 

#129
பாசனம் உண்கலனும் பாண்டமும் சுற்றமும்
**1621 

#130
பாடகம் சிவப்பும் பாடகமும் நீழலும்
**1622 

#131
பாடு பெருமையும் ஒலியும் படுதலும்
பக்கமும் பண்பும் இடமும் பட்டும்
**1623 

#132
பாடி நகரும் நாடும் படையும் 
பாசறையும் ஆயர்ஊரும் பகர்வர்
**1624 

#133
பாடை ஓர்இசையும் மாசந்தியும் ஆகும்
**1625 

#134
பாடலம் சேரன்பரியும் சிவப்பும்
பாதிரியும் சபதமும் மூங்கிலும் ஆகும்
**1626 

#135
பாட்டி பாணிச்சியும் பாட்டியும் நாயும் 
பன்றியும் நரியும் பாட்டிமையும் ஆகும்
**1627 

#136
பாணி பாட்டினொலியும் சோலையும் 
பண்டமும் பாடலும் ஊரும் நீரும் 
அழகும் கையும் படையும் பற்றும் 
நாடும் நெடும்பொழுதும் கானும் ஆகும்
**1628 

#137
பாண்டில் பரியங்கமும் வேயும் ஊர்தியும் 
ஏறும் இடபராசியும் வட்டமும் 
கட்டிலும் தாளமும் விளக்கின் தகழியும் 
வண்டிலும் எனவே வழங்கினர் புலவர்
**1629 

#138
பாணம் மேகவண்ணக்குறிஞ்சியும் 
பட்டும் கணையும் பகர்ந்தனர் புலவர்
**1630 

#139
பாதி சனியும் பாதியும் ஆகும்
**1631 

#140
பாதிரி மூங்கிலும் பாடலமும் ஆகும்
**1632 

#141
பாத்துப் பகுத்துண்டலும் கஞ்சியும் சோறும்
**1633 

#142
பாத்தி சிறுசெய்யும் வீடும் பகுத்தலும் 
பாண்டமும் பத்தியூர் பகர்ந்தனர் புலவர்
**1634 

#143
பாதவம் கிரியும் தருவும் ஆகும்
**1635 

#144
பாம்பு வரம்பும் பாம்பின்விகற்பமும்
**1636 

#145
பாயசம் பால்சோறும் பால்குறண்டியும் ஆம்
**1637 

#146
பாயல் வீழ்தலும் மெத்தையும் ஆகும்
**1638 

#147
பாய்மாப் புலியும் குதிரையும் பகர்வர்
**1639 

#148
பாரி தூசும் பூமியும் கட்டிலும் 
கடலும் மனைவியும் வள்ளலும் கள்ளும் 
பாரமும் பாசறையும் பகர்வர்
**1640 

#149
பார் மறையோரும் பூமியும் புத்தனும் 
கல்லின் பரப்பும் தேரின் பரப்பும் 
உரோகணியும் என உரைத்தனர் புலவர்
**1641 

#150
பாரம் பொறையும் புவியும் வன்பாரமும் 
கலணையும் கவசமும் நீர்க்கரையும் நிறையும் 
மரக்கலமும் விளையாட்டும் வகுத்தனர்
**1642 

#151
பார்வை கண்ணும் மதிப்பும் தீவகமும்
**1643 

#152
பாராவாரம் கடலும் கடற்கண் கரையும்
**1644 

#153
பாராட்டுக் கொண்டாடலும் உலாவலும்
**1645 

#154
பாரதி தோணியும் பனுவலாட்டியும்
**1646 

#155
பாரித்தல் தோற்றலும் பரப்புதலும் ஆகும்
**1647 

#156
பாலம் நீர்ப்பாலமும் நெற்றியும் பரசும்
**1648 

#157
பாலே பக்கமும் பகுத்தலும் இடமும் 
பாலும் திசையும் வெண்மையும் இயல்பும்
**1649 

#158
பாலி கள்ளும் பாலியாறும்
**1650 

#159
பாலை வெம்மையும் புணர்ந்துபோதலும் 
பொருள்வயின்பிரிதலும் பாடலும் பாலையும் 
பாலைநிலப்பாட்டும் பிரிவுணர்த்தலும் 
சொல் புணர்பூசமும் தருவும் சுவையும்
**1651 

#160
பாலிகை உதடும் பட்ட வாள்முட்டும் 
வட்டமும் எனவே வழங்கலாகும்
**1652 

#161
பாவகன் தீயும் தீக்கடவுளும் ஆம்
**1653 

#162
பாவம் பாவனையும் மெய்யும் பாவமும்
**1654 

#163
பாவை பெண்ணும் பாவையும் ஆகும்
**1655 

#164
பாழி விண்ணும் தவத்தோர் சாலையும் 
ஊரும் படுக்கையும் ஒன்னலர்ஊரும் 
பாயலும் விலங்கின் சேக்கையும் வலியும் 
பாழும் மலையின் முழையும் பகர்வர்
**1656 

#165
பாளிதம் பட்டும் கண்டசருக்கரையும் 
பால்சோறும் குழம்பும் பகரலாகும்
**1657 

#166
பானு ஆதித்தனும் ஒளியும் பகலும் ஆம் 
**1658 

#167
பானல் செய்யும் கடலும் நெய்தலும்
மருதமும் கள்ளும் பரியும் வெற்றிலையும்
**1659 

#168
பாவே நூற்பாவிகற்பமும் பனுவலும் 
நூலும் பரத்தலும் பரவலும் பாம்பும் 
**பி
**1660 

#169
பிங்கலை ஆந்தையும் ஓர்காற்றும் ஆகும் 
**1661 

#170
பிங்கலம் பொன்மையும் பொன்னும் ஆகும்
**1662 

#171
பிச்சம் ஆண்மயிரும் பீலிக்குடையும் 
வெண்குடையும் என விளம்பினர் புலவர்
**1663 

#172
பிசிதம் நீறும் இறைச்சியும் வேம்பும் 
**1664 

#173
பிசி அரும்பொருளும் பொய்யும் சோறும்
**1665 

#174
பிசினன் பொய்யனும் கோபனும் லோபனும்
**1666 

#175
பிஞ்ஞகம் பூஞையும் குரால்பசுவும் ஆகும்
**1667 

#176
பிடகம் தந்திரமும் வேதமும் ஆகும்
**1668 

#177
பிணை பெண்விலங்கும் பிணையல் மானும் 
ஆசையும் தொடர்பும் அறைந்தனர் புலவர்
**1669 

#178
பிணியே நோயும் கட்டும் ஆகும்
**1670 

#179
பிண்டம் திரளையும் பிச்சையும் யாக்கையும்
**1671 

#180
பிணா பெண்விலங்கும் பெண்ணும் ஆகும்
**1672 

#181
பிண்டி அசோகும் நெல்லின்மாவும்
பிண்ணாக்கும் சோறும் ஓர்நாளும் ஆகும்
**1673

#182
பிணர் சர்ச்சரையும் கோங்கும் ஆகும்
**1674 

#183
பிணிமுகம் புள்பொதுவும் அன்னமும் மயிலும்
**1675 

#184
பிணவல் பெண்ணும் நாயும் பேசுவர்
**1676 

#185
பித்திகை சுவர்த்தலமும் கருமுகையும் ஆகும்
**1677 

#186
பிதிரே கதையும் நொடித்தலும் தூவலும்
பிதிரும் தெய்வமும் கிளையும் விகற்பமும்
**1678 

#187
பிதா மும்மூர்த்தியும் நாரையும் தந்தையும்
**1679 

#188
பித்தன் தேரானும் பித்தனும் ஆகும்
**1680 

#189
பிப்பிலி அரசும் திப்பிலியும் ஆகும்
**1681 

#190
பிரம்பு நெய்யும் அரிசியும் வேலையும் 
தேர்முட்டியும் பிரம்பும் சொல்லலாகும்
**1682 

#191
பிரசம் தேனும் கள்ளும் தேனீயும் 
இறாலும் பிரமரமும் இசைத்தனர் புலவர்
**1683

#192
பிரமசாரியர் வேதியரும் பெருந்தவரும்
**1684 

#193
பிரமம் மும்மூர்த்தியும் பெரியோரும்
வேதாந்தமும் வேள்வியும் ஞானமும் வேதமும் 
முத்தியும் தருமமும் பூமியும் தகரும் 
மந்திரமும் சுடர்மூன்றும் ஆகும்
**1685 

#194
பிலவங்கம் குரங்கும் தேரையும் ஆகும்
**1686 

#195
பிள்ளை வயிரவனும் காக்கையும் மகனும் 
இளமரமும் என இயம்பினர் புலவர்
**1687 

#196
பிளிறல் எழுத்திலாவோசையும் ஆர்ப்பும்
**1688 

#197
பிறங்கல் வெற்பும் இறையும் மிகுதியும்
நிறைவும் பெருமையும் உயர்பும் ஆகும்
**1689 

#198
பிறங்கடை மைந்தனும் மருகனும் ஆகும்
**1690 

#199
பிறந்தை பாவமும் பவமும் ஆகும்
**1691 

#200
பிறழ்தல் ஒளிவிடலும் நடுக்கமும் பெயர்தலும்
**1692 

#201
பின் பின்தோன்றலும் பிற்றைப்பொழுதும் 
தங்கையும் திருவும் சாற்றலாகும் 
**பீ
**1693 

#202
பீடிகை தட்டும் பீடமும் கடையும்
**1694 

#203
பீதகம் சாந்தும் பொன்னும் பொன்மையும் 
பிங்கலமும் இருவேலியும் பேசும்
**1695 

#204
பீதம் பொன்னும் பொன்மையும் சாந்தும்
**1696 

#205
பீர் முலைப்பாலும் பீர்க்கும் அச்சமும்
பச்சிலையும் பசலையும் பகரலாகும்
**1697 

#206
பீருப் புருவமும் அச்சமுள்ளோனும்
**1698 

#207
பீரம் பூவரசும் பீர்க்கும் வாகையும்
**1699 

#208
பீலி சிறுசின்னமும் பொன்னும் வாச்சியமும்
கலாபமும் ஆலவட்டமும் சவளமும் 
பெருவரையும் காற்பீலியும் மயிலும் 
**1700 

#209
பீனம் பெருமையும் பாசியும் ஆகும்
**பு
**1701 

#210
புகை யோசனையும் தூமமும் ஆகும்
**1702 

#211
புகல் அடைக்கலமும் குதிரும் உடலும் 
வென்றியும் சொல்லும் விளம்பலாகும்
**1703 

#212
புகர் சுக்கிரனும் குற்றமும் அடிசிலும் 
புகர்நிறமும் எனப் புகன்றனர் புலவர்
**1704 

#213
புகழே புகழும் புகழ்தலும் அகத்தியும் 
வாகையும் எனவே வழங்கலாகும்
**1705 

#214
புங்கம் உயர்ச்சியும் அம்பும் நல்தூசும் 
அம்பின்குதையும் அறையலாகும்
**1706

#215
புட்டம் காகமும் புடவையும் நிறைவும் 
**1707 

#216
புட்கரம் நீரும் ஆகாயமும் பொலிவும்
வாளும் குருகும் தீர்த்தமும் பதுமமும் 
பாண்டமுகமும் யானைக்கைந்நுனியும் 
உட்செறி தாழும் உரைத்தனர் புலவர்
**1708 

#217
புணையே மூங்கிலும் தெப்பமும் ஆகும்
**1709 

#218
புணர்ச்சி கலவியும் சேர்தலும் ஆகும் 
**1710 

#219
புணர்வு தோய்ந்திடலும் இசைப்பும் ஆகும்
**1711 

#220
புணரி கடலும் திரையும் கரையும்
**1712 

#221
புண்டரிகம் புற்றும் புலியும் ஓர்நோயும்
குடையுள் கவரியும் மாயனும் பதுமமும் 
ஒருதிக்கானையும் கழுகும் ஓர்பூடும் 
வண்டும் அரியணையும் வாசவனும் ஆகும்
**1713

#222
புதனே புதனும் புந்தியும் ஆகும்
**1714 

#223
புதவு கதவும் ஓர்புல்லும் ஆகும்
**1715 

#224
புத்தேள் புதுமையும் தெய்வமும் ஆகும்
**1716

#225
புதைதல் அகைத்தலமும் அம்புக்கட்டும் ஆம்
**1717 

#226
புதை கணைக்கட்டும் புதுமையும் மறைவும் 
அம்பும் எனவே அறைந்தனர் புலவர்
**1718 

#227
புத்தன் மாலும் அருகனும் புத்தனும்
**1719 

#228
புதல் ஓர்புல்லும் புருவமும் பூடும்
**1720 

#229
புந்தி புதனும் ஞானமும் ஆகும்
**1721 

#230
புயமே மொய்ம்பும் வலியும் ஆகும்
**1722 

#231
புரமே உடலும் புரியும் முன்னும் ஆம்
**1723 

#232
புரவலன் வள்ளலும் வேந்தனும் ஆகும்
**1724 

#233
புரையே இல்லமும் பழுதும் குற்றமும் 
துளையும் உயர்வும் உவமையும் ஆகும்
**1725 

#234
புரையோர் மேலோரும் கீழோரும் ஆகும்
**1726 

#235
புரிவு விரும்பலும் வேறுபடலும் செயலும்
**1727 

#236
புரத்தல் வணங்கலும் காத்தலும் கொடுத்தலும் 
**1728 

#237
புரியே விரும்பலும் செய்தலும் புரமும்
சங்கும் கயிறுகட்டும் ஆகும்
**1729 

#238
புலிங்கம் அனல்பொறியும் சடகமும் ஆகும்
**1730 

#239
புலத்தல் புலத்தலும் பூத்தலும் ஆகும்
**1731 

#240
புலமே இடமும் நடுக்கமும் புந்தியும்
விளைநிலமும் திக்கும் புலனும் தனிமையும்
**1732 

#241
புலவே என்பும் புலால் முடைப்பெயரும் 
**1733 

#242
புல்லே புதலும் புணர்ச்சியும் புன்மையும் 
புலியும் பனையும் அனுடமும் வலியும்
**1734 

#243
புலி சிங்கராசியும் சிங்கமும் புலியும் 
சாந்தும் எனவே சாற்றினர் புலவர்
**1735 

#244
புலவர் கூத்தரும் அறிஞரும் புதனும் 
தேவரும் சளுக்கிவேந்தரும் புலவரும் 
பாடுநரும் துதிப்போரும் பொருநரும்
**1736 

#245
புலம்பு தனிமையும் ஒலியும் அச்சமும் 
புலம்பலும் எனவே புகன்றனர் புலவர்
**1737 

#246
புவனம் உலகமும் நீரும் ஆகும்
**1738 

#247
புழைக்கை ஆளியும் யானையும் தோலும்
**1739 

#248
புள்ளுவன் வேடனும் அகளியும் வஞ்சனையும்
**1740 

#249
புளகம் கண்ணாடியும் சோறும் மயிர்பொடித்தலும்
**1741 

#250
புளித்தல் ஆம்பிரமும் செறித்தலும் ஆகும்
**1742 

#251
புளி தித்திப்பும் புளியும் ஆகும்
**1743 

#252
புள்ளே வண்டும் அவிட்டமும் புள்ளும்
**1744 

#253
புள்ளி நண்டும் புள்ளியும் ஆகும்
**1745 

#254
புறம்பணை குறிஞ்சியும் முல்லையும் ஆகும்
**1746 

#255
புறவம் குறிஞ்சியும் முல்லைப்பதியும் 
புறவமும் கானும் முல்லையும் ஆகும்
**1747 

#256
புறணி குறிஞ்சியும் முல்லைநிலமும் 
புறம்பும் தோலும் புகலலாகும்
**1748 

#257
புறமே இடமும் முதுகும் வீரமும்
**1749 

#258
புற்றே எழுத்தும் தலையும் புற்றும்
**1750 

#259
புனிதன் சிவனும் தூயோனும் ஆகும்
**1751 

#260
புனைவு வனைதலும் எழிலும் பொலிவும் 
ஒப்பனையும் என உரைக்கலாகும்
**1752 

#261
புன்கண் நோயும் மெலிவும் துன்பமும் 
**பூ
**1753 

#262
பூகம் கமுகும் சபையும் திரட்சியும்
**1754 

#263
பூக்கம் கமுகும் ஊரும் நாடும்
கூந்தல்கமுகும் கூறினர் புலவர்
**1755 

#264
பூங்கு அற்றும் வனப்பும் பூதமும் புகல்வர்
**1756

#265
பூசை அர்ச்சனையும் பூஞையும் ஆகும்
**1757 

#266
பூட்கை சிங்கமும் மேற்கோளும் ஆகும்
**1758 

#267
பூதம் சீவனும் புனிதமும் பூதமும்
பரணியும் இறந்தகாலமும் உள்ளானும் 
ஆலும் ஐம்பூதமும் அறைந்தனர் புலவர்
**1759 

#268
பூதி துர்க்கந்தமும் செல்வமும் புவியும் 
நரகமும் உடம்பும் பூழ்தியும் கொடுமையும் 
நீறும் தசையும் ஊழலும் ஆகும்
**1760 

#269
பூதிகம் பூமியும் தேகமும் புகல்வர்
**1761 

#270
பூப்புப் பொலிவும் பூத்தலும் ஆகும்
**1762 

#271
பூபாலர் வேந்தரும் வேளாளரும் ஆகும்
**1763 

#272
பூமரம் பூத்திடுமரத்தின்பெயரும் 
அறிகுறியும் என அறைந்தனர் புலவர்
**1764 

#273
பூமன் நான்முகனும் செவ்வாயும் ஆகும்
**1765

#274
பூருவம் பழமையும் முன்பும் கிழக்கும்
**1766 

#275
பூவை காயாவும் கயிறும் கிளியும்
நாகணவாயும் நவின்றனர் புலவர்
**1767 

#276
பூழ்க்கை யானையும் யாளியும் தோலும்
**1768 

#277
பூழிலே அகிலும் நீலப்பெயரும்
**1769 

#278
பூழி புழுதியும் சேறும் ஆகும்
**1770 

#279
பூழியன் வழுதியும் சேரனும் ஆகும்
**1771 

#280
பூவே மலரும் அழகும் கூர்மையும்
விளைநிலமும் பொலிவும் பூமியும் கணவனும் 
தாமரையும் கண்ணில்சார்ந்தபூவும் 
பிறப்பும் எனவே பேசினர் புலவர்
**பெ 
**1772 

#281
பெட்டல் விரும்பலும் வேண்டலும் ஆகும்
**1773

#282
பெட்பு மேன்மையும் விருப்பமும் ஆகும்
**1774 

#283
பெண்ணை ஓர்ஆறும் பனையும் அனுடமும்
**1775 

#284
பெண்டிர் அலியும் பெண்ணும் ஆகும்
**பே
**1776 

#285
பேடு பேடியும் மன்மதனாடலும்
பறவைப்பேடும் ஊரும் ஆகும்
**1777 

#286
பேணல் மிகுத்தலும் பேணிக்கொள்ளலும்
**1778 

#287
பேதை குருடனும் பெண்ணும் மூடனும்
**1779 

#288
பேதி பேதமும் இரதமும் ஆகும்
**1780 

#289
பேயே பேயும் இல்லைஎனலும் ஆம்
**1781

#290
பேராளன் என்பது ஓர்நாளும் மிகுத்தோனும்
**1782 

#291
பேரே புகழும் நாமமும் பெருமையும்
**பை
**1783 

#292
பைதல் துன்பமும் அற்பமும் ஆகும்
**1784 

#293
பைங்கூழ் பயிரும் நோயும் ஆகும்
**1785 

#294
பைத்தல் உருத்தலும் பசத்தலும் ஆகும்
**1786 

#295
பைம்பொன் பசும்பொன்னும் மேருவும் ஆகும்
**1787 

#296
பையம் கூடையும் கோரையும் ஆகும்
**1788 

#297
பையுள் சிறுமையும் நோயும் ஆகும்
**1789 

#298
பை மெத்தெனவும் பையும் படமும் 
அழகும் பசுமையும் ஆகும் என்பர்
**பொ 
**1790 

#299
பொக்கம் பொய்யும் மிகுதியும் ஆகும்
**1791 

#300
பொகுட்டுத் தாமரைப்பூவின்கொட்டையும் 
நீரிலெழுந்த குமிழியும் பொருப்பும்
**1792 

#301
பொங்கல் கொதித்தலும் மிகுதியும் ஆகும்
**1793

#302
பொங்கர் சோலையும் பொருப்பும் மரக்கோடும் 
இலவமரமும் இசைத்தனர் புலவர்
**1794 

#303
பொச்சாப்பு மறவியும் தீதும் புகல்வர்
**1795 

#304
பொதுளல் செறித்தலும் தழைத்தலும் ஆகும்
**1796 

#305
பொதிர்ப்பு வெடித்தலும் எறிதலும் பொதிர்வும்
**1797 

#306
பொத்தகம் கோசமும் சித்திரப்புடவையும் 
பொத்தகமும் பொதுமையும் புகல்வர்
**1798 

#307
பொதியே மூடையும் பொதியும் ஆகும்
**1799 

#308
பொம்மல் பொலிவும் சோறும் மிகுதியும் 
பொய்யும் எனவே புகன்றனர் புலவர்
**1800 

#309
பொய் மரப்பொந்தும் பொக்கமும் பொய்யும்
**1801 

#310
பொய்த்தல் பொய்த்தலும் கணிகைவிளையாட்டும்
**1802 

#311
பொருள் சொற்பொருளும் மதலையும் பொன்னும் 
பண்பும் தலைமையும் பல்பண்டமும்
வாய்மையும் என வழங்கலாகும்
**1803 

#312
பொருநர் போர்த்தலைவரும் கூத்தரும் பாணரும் 
புரவலரும் வீரரும் புகன்றனர் புலவர்
**1804 

#313
பொழிலே புவியும் பெருமையும் சோலையும் 
**1805 

#314
பொறை துறுகல்லும் பூமியும் கருப்பமும் 
பாரமும் பொறையும் மலையும் ஆகும்
**1806 

#315
பொறி புள்ளிமாவும் வரியும் ஐம்புலனும் 
இயந்திரமும் திருவும் தீப்பொறியும் 
இலாஞ்சினையும் தோணியும் செல்வமும் அறிவும் 
எழுத்தும் எனவே இயம்பினர் புலவர்
**1807 

#316
பொற்பு வனப்பும் பொலிவும் ஒப்பனையும்
**1808 

#317
பொற்றை மலையும் தூறும் ஆகும்
**1809 

#318
பொன் பஞ்சலோகமும் வனப்பும் திருவும் 
பொலிவும் வியாழமும் பொன்னும் பானுவும் 
இரும்பும் எனவே இயம்பலாகும்
**போ
**1810 

#319
போகி இந்திரனும் பாம்பும் ஆகும்
**1811 

#320
போகில் புள்பொதுவும் பூவினரும்பும் 
பொகுட்டும் கொப்பூழும் புகன்றனர் புலவர்
**1812 

#321
போகல் உயர்வும் நீளமும் போதலும்
**1813

#322
போக்கு போதலும் குற்றமும் வழியும் 
இளமரமும் எனவே இயம்பினர் புலவர்
**1814 

#323
போசர் காவியும் வினைக்குடையாரும்
**1815 

#324
போதகம் மாவின்கன்றும் அப்பமும் 
யானைக்கன்றும் ஞானமும் இளமையும் 
இளம்பனையும் என இயம்பினர் புலவர்
**1816 

#325
போதம் யானைக்கன்றும் ஞானமும் 
அறிவும் நாவாயும் அறைந்தனர் புலவர்
**1817 

#326
போந்தை இளம்பனையும் அனுடநாளும் 
**1818 

#327
போந்து பெருச்சாளியும் பல்லியும் எலியும் 
பனையும் எனவே பகர்ந்தனர் புலவர்
**1819 

#328
போர்வை தோலும் மீக்கோளும் போர்த்தலும்
**1820 

#329
போர் நெற்போரும் சமரும் சதையமும்
**1821 

#330
போலே ஒப்பும் அசைச்சொல்லும் ஆகும்
**1822 

#331
போற்றல் புகழ்தலும் ஒப்பலும் ஆகும்
**பௌ
**1823

#332
பௌவம் பரவையும் கணுவும் குமிழியும் 
குருவும் தலையுவாவும் எனக் கூறும்
** பகரவருக்கம் முற்றிற்று

@8 மகர வருக்கம்
**ம
**1824 

#1
மகமே யாகமும் பெருமையும் ஆகும்
**1825 

#2
மகரந்தம் கள்ளும் தேனும் மலர்த்தாதும்
**1826 

#3
மகரம் பூவின்தாதும் சுறாமீனும் 
காதலும் மகரராசியும் கழறினர்
**1827 

#4
மக்கள் மானிடரும் சிறுவரும் ஆகும்
**1828 

#5
மகனே மைந்தனும் சிறந்தோனும் ஆகும்
**1829 

#6
மங்குல் மேகமும் இருளும் ஆகாசமும்
**1830 

#7
மங்களம் வேட்டலும் சுபங்களும் ஆகும்
**1831 

#8
மஞ்சு மாளிகைக்கொடியும் பூணும் 
யானைமுதுகும் பனியும் வலியும் 
அழகும் மேகமும் முகடும் இளமையும் 
மழையும் எனவே வகுத்தனர் புலவர்
**1832 

#9
மஞ்சரி பூங்கொத்தும் மாலையும் தளிரும்
**1833

#10
மடை பணிப்பூட்டும் நீர்போம்மடையும் 
சோறும் மடைத்தொழிலும் சொல்லுவர் புலவர்
**1834 

#11
மடம் சத்திரமும் முனிவருறைமடமும்
அறியாமையும் என அறைந்தனர் புலவர்
**1835 

#12
மடல் பனையேடும் பூவினிதழும் 
மடல் என்றுரைத்த பிரபந்தமும் ஆம்
**1836 

#13
மடி அடங்குதலும் பொய்யும் சோம்பும் 
வயிறும் நோயும் புடவையும் தாழையும் 
மடியும் கேடும் சோறும் துன்பமும் 
புடவையாதிகளை மடித்தலும் ஆகும்
**1837

#14
மடங்கல் கூற்றும் சிங்கமும் நோயும் 
மடியும் இடியும் வடவையும் மட்கலனும் 
புகழும் முடிவும் மடங்குதலும் தாழையும்
**1838 

#15
மட்டு நிறைதலும் கள்ளும் எல்லையும்
**1839 

#16
மடு நீர்நிலையும் பூவரும்பும் ஆகும்
**1840 

#17
மணி நவமணியும் அழகும் கருமையும் 
யானைமணியும் நன்மையும் இசையும்
**1841 

#18
மண்கணை முழவம் ஓர்வாச்சியமும் ஆம் 
**1842 

#19
மண் மேதினியும் அணுவும் கழுவலும்
முழவும் ஒப்பனையும் மாட்சியும் ஆகும்
**1843

#20
மணம் கலியாணமும் வாசமும் கூட்டமும் 
மகிழ்ச்சியும் எனவே வழங்கலாகும்
**1844 

#21
மண்டலம் பூமியும் வட்டமும் குதிரையும்
**1845 

#22
மண்ணை பேயும் இளமையும் பேதையும்
**1846 

#23
மண்டலி நாயும் பூமியும் பூஞையும் 
பாம்பும் மண்டலீகம் எனவும் பகர்வர்
**1847 

#24
மதலை கொன்றையும் பிள்ளையும் கொடுங்கையும் 
தூணும் மரக்கலமும் சொல்லுவர் புலவர்
**1848 

#25
மதுகம் தராவும் இருப்பையும் மதுரமும்
அட்டியும் வண்டும் அறைந்தனர் புலவர்
**1849 

#26
மதவு வனப்பும் வலியும் மடமும்
மிகுதியும் எனவே விளம்பினர் புலவர்
**1850 

#27
மதமே செருக்கும் மதமும் ஆகும்
**1851 

#28
மதன் மன்மதனும் வனப்பும் வலியும்
மாட்சிமையும் என வகுத்தனர் புலவர்
**1852 

#29
மதரே வலியும் இடமும் வனப்பும்
மிகுதியும் எனவே விளம்பினர் புலவர்
**1853

#30
மத்தகம் நெற்றியும் சென்னியும் ஆகும்
**1854 

#31
மதுகரம் கள்ளும் வண்டும் ஆகும்
**1855 

#32
மதி அசைச்சொல்லும் இந்துவும் புந்தியும் 
மாதமும் பேரறிவோடும் வாரமும்
**1856 

#33
மதுவே நறவும் இனிமையும் தேனும் 
வசந்தகாலமும் என வகுத்தனரே
**1857 

#34
மத்திகை மாலையும் விளக்குத்தண்டும்
சம்மட்டியும் எனச் சாற்றினர் புலவர்
**1858 

#35
மத்து உன்மத்தமும் மத்தின்விகற்பமும்
**1859 

#36
மந்திரம் விசாரமும் கோவிலும் மதுவும்
பரிக்குழாமும் வீடும் பகர் மந்திரமும்
**1860

#37
மந்திரி அமைச்சனும் வெள்ளியும் பொன்னும்
**1861 

#38
மந்தாரம் செம்பரத்தமும் ஓர்மரமும்
**1862 

#39
மந்தி ஆதித்தனும் குரங்கும் வண்டும்
**1863

#40
மந்தனம் மறலியும் கரிமுகபடாமும்
**1864 

#41
மந்தன் சனியும் மந்தகுணமும்
**1865 

#42
மயலே சேறும் மயக்கமும் பேயும்
**1866 

#43
மயிலை இருவாட்சியும் மீனும் ஆகும்
**1867 

#44
மயிர் மயிர்க்கருவியும் கத்திரியும் மஞ்சிகனும்
**1868 

#45
மயன் தெய்வத்தச்சனும் வினைஞரும் ஆகும்
**1869 

#46
மருளே பேயும் மையலும் பெண்ணும்
தீயும் குறிஞ்சியாழின்திறமும்
**1870 

#47
மரபு தொன்மையும் முறைமையும் ஆகும்
**1871 

#48
மராளம் மாதளையும் பாம்பும் ஆகும்
**1872 

#49
மருந்து புதற்புல்லும் அமுதமும் மருந்தும்
**1873 

#50
மராமரம் போதியும் ஆச்சாவும் கடம்பும்
**1874 

#51
மருமகன் வழித்தோன்றலும் மருகனும்
மைந்தனும் எனவே வழங்குவர் புலவர்
**1875 

#52
மரை தாமரையும் தேரையும் மிருகமும்
**1876 

#53
மருதம் வயலும் மருதநிலப்பாடலும்
மருதநிலமும் ஓர்மரமும் ஆகும்
**1877 

#54
மரக்கால் துர்க்கையாடலும் சோதியும்
அளவையும் மாயோனாடலும் ஆகும்
**1878 

#55
மருவே மணமும் மருவும் ஆகும்
**1879 

#56
மல் கோவிந்தனாடலும் வளமும்
வலியும் ஓர்கூத்தும் வழங்கலாகும்
**1880 

#57
மல்லிகை தீபத்தண்டும் மௌவலும்
புதலும் எனவே புகன்றனர் புலவர்
**1881 

#58
மலைத்தல் போரும் மறுத்தலும் சூடலும்
**1882 

#59
மலர்தல் எதிர்தலும் தோன்றலும் மலர்தலும்
**1883

#60
மல்லல் வலியும் வளமும் ஆகும்
**1884 

#61
மவுலி சடையும் கிரீடமும் ஆகும்
**1885 

#62
மழையே கொண்மூவும் குளிர்ச்சியும் ஆகும்
**1886 

#63
மள்ளர் குறவரும் வீரரும் உழவரும் 
திண்ணியோரும் எனச் செப்பலாகும்
**1887 

#64
மறை இரகசியமும் மறைவும் மந்திரமும்
பரிசையும் வேதமும் பகரலாகும்
**1888 

#65
மற்று வினைமாற்றும் அசைச்சொல்லும் ஆகும் 
**1889 

#66
மறம் சேவகமும் பிணக்கும் கூற்றும்
சினமும் கொலையும் செப்புவர் புலவர்
**1890 

#67
மறலே பிணக்கும் கூற்றும் மறவியும் 
மயக்கமும் எனவே வகுத்தனர் புலவர்
**1891 

#68
மறவர் வீரரும் வேடரும் ஆகும்
**1892 

#69
மறலி காலனும் கூற்றனும் மறப்பும் 
அழுக்காறும் என அறைந்தனர் புலவர்
**1893

#70
மன் ஒழியிசையும் அசைச்சொல்லும் வேந்தனும் 
வழிதுகூறி இடைச்சொல்லும் பயனில்லாச்சொல்லும் 
செல்வத்தினிலையும் செப்புவர் புலவர்
**1894 

#71
மன்றம் வெளியும் பொதுவும் வாய்மையும்
**1895 

#72
மன்னன் வேந்தனும் உத்திரட்டாதியும்
**1896 

#73
மன்ற எனுஞ்சொல் இடைச்சொல்லும் தேற்றமும்
**1897 

#74
மன்றல் பாலை யாழிசையும் நாற்றமும் 
வதுவையும் எனவே வகுத்தனர் புலவர்
**1898 

#75
மனவு நன்மணியும் சங்கும் ஆகும்
**1899 

#76
மனையே இல்லும் மனைவியும் ஆகும்
**மா
**1900 

#77
மாசு குற்றமும் அழுக்கும் அற்பமும் 
மழையும் மேகமும் வகுத்தனர் புலவர்
**1901 

#78
மாசி மகமும் மாதமும் ஆகும்
**1902 

#79
மாஞ்சி அனுமனும் மருந்தும் பெண்களும்
**1903

#80
மாடு சீதனமும் பெண்ணும் பக்கமும்
மணியும் செல்வமும் நிரையும் வெற்றியும்
**1904 

#81
மாடகம் யாழும் முறுக்காணியும் ஆம்
**1905 

#82
மாடம் உழுந்தும் இல்லும் ஆகும்
**1906 

#83
மாட்சி திருத்தமும் நன்மையும் ஆகும்
**1907 

#84
மாணி பிரமசாரியும் வனிதையும்
**1908 

#85
மாதவம் தவமும் வசந்தமும் கள்ளும்
**1909 

#86
மாதர் பெண்ணும் அழகும் காதலும்
இடைச்சொல்லும் எனவே இயம்பலாகும்
**1910 

#87
மாதங்கம் யானையும் உவரும் கடலும்
இளமையும் எனவே இசைத்தனர் புலவர்
**1911 

#88
மாதிரம் திசையும் வானமும் பூமியும்
மலையும் யானையும் வகுத்தனர் புலவர்
**1912 

#89
மாந்தல் வீதலும் குடித்தலும் உண்டலும்
**1913

#90
மாபெலி அசுரனும் பூசையும் ஆனிலையும்
**1914 

#91
மாயை வஞ்சனையும் சத்தியும் ஆகும்
**1915 

#92
மாய்வு மறைவும் சாவும் ஆகும்
**1916 

#93
மாயம் பொய்யும் கருமையும் வஞ்சமும்
**1917 

#94
மாருதி அனுமனும் வாயுவும் வீமனும்
**1918 

#95
மாரி மேகமும் நோயும் வடுகியும்
கள்ளும் மழையும் மரணமும் கழறுவர்
**1919 

#96
மாலதி சாதியும் மல்லிகையும் ஆகும்
**1920 

#97
மாலை அல்லும் இயலும் ஒழுக்கமும்
பொன்னாதிமாலையும் பூமாலையும் ஆம் 
**1921 

#98
மாலம் குங்குமமும் பேயும் ஆகும்
**1922 

#99
மாலே புதனும் பெருமையும் அரியும் 
மயக்கமும் நீரும் வரையும் ஆசையும் 
சோழனும் காற்றும் போகியும் பழமையும் 
ஏணியும் கருமையும் மேகமும் பொற்பும் 
கண்குத்தியும் எனக் கழறினர் புலவர்
**1923

#100
மாலர் புலையரும் வேடரும் கவசமும்
**1924 

#101
மாலி இரவியும் கள்ளும் ஆகும்
**1925 

#102
மாழை ஏரும் திரட்சியும் மடமையும் 
ஆயமும் ஓலையும் உலோகக்கட்டியும் 
ஈழமும் புளிமாவும் இசைத்தனரே
**1926 

#103
மாற்கம் சமயமும் வீதியும் வழியும் 
மறுதலையுரையும் வழங்கலாகும்
**1927 

#104
மானம் விமானமும் பெருமையும் குற்றமும் 
அளவும் இலச்சையும் ஆகும் என்பர்
**1928 

#105
மானி மாதரும் காதலும் ஆகும்
**1929 

#106
மானுதல் இலச்சையும் மயக்கமும் ஒப்பும்
**1930 

#107
மானே உழையும் மகரராசியும் 
வல்விலங்கின்பெயர்ப்பொதுவும் ஆகும்
**1931 

#108
மானவர் மனிதரும் மாண்மையுள்ளோரும் ஆம் 
**1932 

#109
மாவே தருவும் கருமையும் செல்வமும்
வண்டும் ஆடையும் மிருகமும் ஆனையும் 
மாத்தருவும் நிறமும் பீடும் ஓர்அளவையும் 
வாசியும் ஏரும் வெறுப்பும் அழைத்தலும் 
நெல்மாவும் திருவும் நிலமும் ஆகும்
**மி
**1933

#110
மிக்கவை ஞாயமன்மையும் அடிசிலும் 
நிறைதலும் ஊணும் நிகழ்த்தலாகும்
**1934 

#111
மிகை வேதனையும் துக்கமும் ஆகும்
**1935 

#112
மிச்சில் ஒழிபொருளும் எச்சிலும் ஆகும்
**1936 

#113
மிசை மேடும் உணவும் மீமிசைச்சொல்லும்
**1937 

#114
மிச்சை பொய்த்தலும் அஞ்ஞானமும் இடித்தலும்
**1938 

#115
மிஞ்சு வண்டும் மிகுதியும் ஆகும்
**1939 

#116
மிடலே மதனும் வலியும் மதியும்
**1940 

#117
மிதவை சோறும் தெப்பமும் ஆகும்
**1941 

#118
மிழற்றல் சொல்லும் நிரம்பாமென்சொலும்
**1942 

#119
மிளை காவற்காடும் மரணமும் ஆகும்
**மீ
**1943 

#120
மீக்கூற்று கீர்த்தியும் சொல்லின்செலவும்
**1944 

#121
மீளி திண்ணியனும் வலியும் மேன்மகனும் 
பீடும் கூற்றும் பூமனும் ஆகும்
**1945 

#122
மீன் விண்மீனும் சித்திரையும் மீனும்
**மு
**1946 

#123
முகம் ஆனனமும் திசையும் இடமும்
**1947 

#124
முசலி உடும்பும் தாழையும் ஓந்தியும்
முகுந்தற்குமூத்தோன்பெயரும் ஆகும்
**1948 

#125
முச்சி மயிர்முடியும் முச்சியும் ஆகும்
**1949 

#126
முடங்கல் மடங்கலும் கைதையும் மூங்கிலும்
ஓலையும் அரங்கும் நோயும் ஆகும்
**1950 

#127
முடுவல் பெண்நாயும் செந்நாயும் ஆகும்
**1951 

#128
முடி மயிர்முடியும் கிரீடமும் ஆகும்
**1952 

#129
முடலை உண்டையும் பீடும் திரள்வடிவும் 
முருடும் கழலையும் குறடும் ஊற்றமும் 
முடைநாற்றமும் என மொழியலாகும்
**1953

#130
முண்டகம் தாழையும் யானைமத்தமும் 
கள்ளும் நீர்முள்ளியும் தாமரையும் நெற்றியும் 
கடலும் முள்மூலமும் கருதலாகும்
**1954 

#131
முத்தம் உதடும் பிரியமும் முத்தும் 
மருதமும் எனவே வழங்கினர் புலவர்
**1955

#132
முதலை செங்கிடையும் முருந்தும் ஆகும்
**1956 

#133
முந்து வெண்குருகும் முந்தலும் ஆகும்
**1957 

#134
முருகு கள்ளும் இளமையும் நாற்றமும்
விழாவும் முருகனும் எலுமிச்சும் வனப்பும் 
அகிலும் எழுச்சியும் வெறியாட்டாளனும்
**1958 

#135
முரணே வலியும் பகையும் ஆகும்
**1959 

#136
முருந்து வெண்குருத்தும் இறகின்மூலமும்
**1960 

#137
முரம்பு பரலடுத்தநிலமும் பாறையும்
மேடும் எனவே விளம்பினர் புலவர்
**1961 

#138
முரசு பறையும் உத்திரட்டாதியும்
**1962 

#139
முருகன் சேயும் வெறியாட்டாளனும்
**1963

#140
முரசம் தூரியமும் பணையும் ஆகும்
**1964 

#141
முருடு முருடும் இயமும் ஆகும்
**1965 

#142
முல்லை முல்லையும் கொற்றமும் இசையும் 
கானமல்லிகையும் முல்லைநிலமும்
கற்பும் எனவே கழறினர் புலவர்
**1966 

#143
முழவு குளிரும் குடமுழாவும் இயமும் 
**1967 

#144
முளரி தீயும் காடும் விறகும்
முள்மரமும் சிறுமையும் தாமரையும் ஆகும் 
**1968 

#145
முளை அங்குரமும் மூங்கிலும் பிள்ளையும்
**1969 

#146
முறை திருமுறையும் முறைமையும் குணமும் 
ஊழும் கோசமும் கூப்பிடும்முறையும்
**1970 

#147
முற்று வளைத்தலும் முற்றுதலும் ஆகும்
**1971 

#148
முறுவல் நகையும் பல்லும் ஆகும்
**1972 

#149
முற்குளம் பூராடநாளும் முறைகுளமும்
**1973

#150
முற்றல் சூழ்போதலும் மூப்பும் முடிவும் 
வெறுத்தலும் எனவே விளம்புதலாகும்
**1974 

#151
முறமே சுளகும் விசாகமும் ஆகும்
**1975 

#152
முறியே தளிரும் முறிதலும் இலையும்
**1976 

#153
முன்னல் நினைவும் நெஞ்சும் உரைப்பர்
**1977 

#154
முன்பு வலியும் முன்பும் ஆகும்
**1978 

#155
முனி தவமுனிவரும் கும்பமுனியும்
யானைக்கன்றும் அகத்தியும் தனுவும்
**1979 

#156
முனையே பகையும் வெறுப்பும் கூர்மையும் 
முதன்மையும் வீரமும் மொழியலாகும்
** 1980 

#157
முன்னம் சீக்கரியும் முந்தினகாலமும் 
எண்ணமும் சிங்கமும் இயம்பலாகும்
**மூ
**1981 

#158
மூசல் சாவும் மொய்த்தலும் ஆகும்
**1982 

#159
மூதிரை ஈசனும் திருவாதிரையும்
**1983

#160
மூரி ஏறும் எருமையும் சோம்பும்
உரனும் பீடும் நெரிவும் தொன்மையும்
**1984 

#161
மூர்த்தி தலைவனும் உருவமும் ஆகும்
**1985 

#162
மூரல் சோறும் பல்லும் சொல்லும்
நகையும் எனவே நவின்றனர் புலவர்
**1986 

#163
மூலம் வேரும் ஏதுவும் முதலும்
மூலநோயும் மூலநாளும்
மாயனும் கிழங்கும் வழங்கினர் புலவர்
**1987 

#164
மூழி சோறுதுழாவியும் அகப்பையும்
**1988 

#165
மூழை சோறும் அகப்பையும் ஆகும்
**மெ
**1989 

#166
மெத்தை மெத்தையும் சட்டையும் ஆகும்
**1990 

#167
மெய் மெய்ப்பொருளும் உடலும் உண்மையும்
ஒற்றெழுத்தும் ஞானமும் உரைக்கலாகும்
**மே
**1991 

#168
மேக்கு மேற்றிசையும் மேலும் ஆகும்
**1992 

#169
மேகலை தூசும் மணிமேகலையும்
**1993

#170
மேடம் தகரும் கவசமும் மேடமும்
**1994 

#171
மேதை தோலும் புதனும் இறைச்சியும் 
அறிஞனும் அறிவும் மேம்பாடும் நரம்பும் 
கள்ளும் எனவும் கழறினர் புலவர்
**1995 

#172
மேல் பச்சிமமும் மேலோரும் இயல்பும் 
விண்ணும் மேலும் விளம்பலாகும்
**1996 

#173
மேழை காடியும் கஞ்சியும் ஆகும்
**1997 

#174
மேழகம் கவசமும்ந் தகரும் ஆகும்
**1998 

#175
மேனி உடம்பும் நிறமும் ஆகும்
**மை
**1999 

#176
மைந்து மயக்கமும் வலியும் ஆகும்
**2000 

#177
மைந்தன் மைந்தனும் திறலோனும் ஆகும்
**2001 

#178
மை கொண்மூவும் கண்ணிடு மையும்
இளமையும் மலடும் தகரும் கருமையும் 
குற்றமும் எனவே கூறலாகும்
**மொ
**2002 

#179
மொக்குள் பூமொட்டும் குமிழியும் ஆகும்
**2003

#180
மொய் செருக்களமும் தாயும் யானையும் 
மூசலும் திரளும் வண்டும் ஆகும்
**2004 

#181
மொய்த்தல் மூடுதலும் நெருங்கலும் ஆகும்
**2005 

#182
மொய்ம்பு வலியும் தோளும் மொழிவர்
**மோ
**2006 

#183
மோடு வயிறும் மோடும் போழ்தலும் 
பெருமையும் எனவே பேசலாகும்
** மகரவருக்கம் முற்றிற்று

@9 யகர வருக்கம்
**ய
**2007 

#1
யவனர் சோனகரும் சித்திரக்காரரும் 
கம்மாளரும் எனக் கழறினர் புலவர்
**யா
**2008 

#2
யாணர் தேனும் புதுமையும் தச்சரும் 
யாழ்நரும் நன்மையும் சித்திரக்காரரும்
**2009 

#3
யாப்புக் கவிதையும் கட்டுதலும் ஆகும்
**2010 

#4
யாமம் தெற்கும் இரவும் சாமமும்
பொழுதும் எனவே புகலலாகும்
**2011 

#5
யாழே வீணையும் மிதுனராசியும் 
ஆந்தையும் அசுபதிநட்சத்திரமும்
**2012 

#6
யானம் அறைவீடும் ஊர்தியும் தோணியும்
**யூ
**2013 

#7
யூகம் உட்பொருளுணர்தலும் தருக்கமும் 
உடற்குறையும் கருங்குரங்கும் ஓர்புல்லும் 
யூகமும் கோட்டானும் உரைத்தனரே
**2014 

#8
யூபம் படைவகுப்பும் வேள்வித்தம்பமும் 
உடற்குறையும் என உரைத்தனர் புலவர் 
**யோ
**2015 

#9
யோகம் கூட்டமும் தியானமும் உபாயமும் 
முயற்சியும் யோகமும் மொழிந்தனர் புலவர் 
** யகரவருக்கம் முற்றிற்று

@10 வகர வருக்கம்
**வ
**2016 

#1
வக்கிரம் கொடுமையும் மடங்கலும் வட்டமும் 
ஈனமும் போக்கும் இயம்பலாகும்
**2017 

#2
வங்கம் வெள்ளீயமும் கருத்தும் நாவாயும்
வழுதலையும் என வழங்கினர் புலவர் 
**2018 

#3
வசியே கூர்மையும் நட்பும் வாளும்
வடுவும் திரட்சியும் வருட்டலும் குற்றமும் 
**2019 

#4
வசந்தன் மதனும் ஒருவானரமும்
தென்றலும் எனவே செப்பலாகும்
**2020 

#5
வசந்தம் புரந்தரன்மாளிகைப்பெயரும் 
வசந்தகாலமும் வழங்கினர் புலவர்
**2021 

#6
வசித்தல் வாசமும் தங்கலும் ஆகும்
**2022 

#7
வச்சிரம் சதுரக்கள்ளியும் குலிசமும்
வயிரமும் எனவே வழங்கினர் புலவர்
**2023 

#8
வசதி மனையும் வளம்பொருமிடமும் 
ஊரும் எனவே உரைக்கலாகும்
**2024 

#9
வசு அக்கினியும் தேவரும் பொன்னும் 
ஆன்கன்றும் பொருளும் கிரணமும் ஆகும்
**2025 

#10
வஞ்சி மேற்செலவும் ஓர்ஊரும் பாவும் 
வல்லியும் பெண்ணும் வஞ்சிப்போனும் ஆம்
**2026 

#11
வஞ்சகம் பொய்யும் வாளும் கபடமும்
**2027 

#12
வஞ்சனை மாயையும் பொய்யும் வஞ்சகமும்
**2028 

#13
வடகம் சுண்டாங்கியும் அத்தவாளமும் தோலும்
**2029 

#14
வடவை பெண்ணெருமையும் பெண்குரகதமும் 
வடவைத்தீயும் பிடியானையும் ஆம்
**2030 

#15
வட்டி வட்டிலும் கூடையும் வழியும் 
புட்டிலும் எனவே புகலலாகும்
**2031 

#16
வட்கல் நாணும் சமழ்த்தலும் கேடும்
**2032 

#17
வடுகு பாடையும் மருதயாழ்த்திறமும் 
இந்தளமும் என இயம்பினர் புலவர்
**2033 

#18
வட்டம் பரிசையும் பாராவளையமும் 
தூசும் கைமணியும் குட்டமும் சாலும் 
ஊர்கோளும் தாழ்வும் வட்டமும் திகிரியும்
**2034 

#19
வட்டணை அறுத்தலும் ஒத்தலும் ஆகும்
**2035 

#20
வடுவே செம்பும் தழும்பும் கூர்மையும் 
வடுவும் அழகும் பிஞ்சும்ங் குற்றமும்
**2036 

#21
வடிவும் நிறமும் அழகும் உறுப்பும்
**2037 

#22
வடமே ஆலும் கயிறும் மணிவடமும்
**2038 

#23
வண்டு பூசமும் குற்றமும் வளையும் 
சங்கும் வாளியும் அப்பமும் வண்டும் 
பழுதையும் நூலும் மாதர்விளையாடலும்
**2039 

#24
வணங்கல் வளைதலும் தாழ்தலும் ஆகும்
**2040 

#25
வணசை சந்தனமும் சாந்தும் ஆகும்
**2041 

#26
வண்மை வளமையும் ஈகையும் வலியும் 
வாய்மையும் புகழும் வகுத்தனர் புலவர்
**2042 

#27
வண்டல் மணல்வண்டலும் மாதர்விளையாட்டும்
**2043 

#28
வண்ணம் சாந்தமும் வனைதரலும் பண்பும் 
கவியினோசையும் கழறினர் புலவர்
**2044 

#29
வதுவை கலியாணமும் நாற்றமும் வாசமும் 
புணர்வும் எனவே புகன்றனர் புலவர்
**2045 

#30
வந்திகை சுணங்கும் பூணும் நூலணியும்
**2046 

#31
வந்தி வழிபாடென்றிடலும் மலடியும்
**2047 

#32
வம்பு புதுமையும் கச்சும் மணமும் 
நிலையின்மையும் இடரும் நிகழ்த்தலாகும்
**2048 

#33
வம்பலர் புதியோரும் அயலோரும் ஆகும்
**2049 

#34
வயம் புள்பொதுவும் வலியும் நீரும் 
இரும்பும் வாசியும் தகரும் ஆம் ஆகும்
**2050 

#35
வயலே வயலும் வெளியும் மருதமும்
**2051 

#36
வயிறு கயிறும் உதரமும் ஆகும்
**2052 

#37
வயிரம் சேகும் உரனும் கூர்மையும் 
குலிசமும் கோபமும் வயிரமணியும்
**2053 

#38
வயவன் வலியானும் வேட்டனும் வீரனும்
**2054 

#39
வயா வருத்தங்களும் கருப்பமும் நோயும் 
விருத்தமும் எனவே விளம்பினர் புலவர்
**2055 

#40
வயமாக் குதிரையும் யானையும் சிங்கமும் 
புலியும் எனவே புகலலாகும்
**2056 

#41
வயின் வியங்கோளும் ஏவல்கொளலும் 
கடிமனையும் உதரமும் இடமும் ஆகும்
**2057 

#42
வரி வாரிதியும் வழியும் சுணங்கும் 
எழுத்தும் பாட்டும் இறையும் நெல்லும் 
கண்ணின்வரியும் நிறமும் வடிவும் 
நீளமும் வண்டும் தீயும் ஒழுக்கமும் 
சந்தித்தெருவும் சாற்றினர் புலவர்
**2058 

#43
வரம்பு வட்டியும் எல்லும் வரம்பும்
**2059 

#44
வரையே மணம்செயென்றலும் எழுதலும் 
வேயும் மட்டும் மலையும் கைவரையும் 
கரையும் எனவே கழறினர் புலவர்
**2060 

#45
வருடம் மழையும் ஆண்டும் ஆகும்
**2061 

#46
வரைதல் எழுதல் நீங்கலும் கொள்ளலும்
**2062 

#47
வருணம் வண்ணமும் குலமும் புனலும்
**2063 

#48
வரித்தல் பொறித்தலும் பூசுதலும் ஆகும்
**2064 

#49
வலம் வலப்பாலும் இடமும் பக்கமும் 
மேகமும் மேலும் வெற்றியும் ஆகும்
**2065 

#50
வல்லை விரைவும் காடும் வன்மையும் 
மதிளும் நோயும் வழங்குவர் புலவர்
**2066 

#51
வல் சூதும் விரைவும் வலியும் கச்சும்
**2067 

#52
வல்சி கூழும் உணவும் ஆகும்
**2068 

#53
வலவன் தேர்ப்பாகனும் மாயனும் வீரனும்
**2069 

#54
வல்லியம் புலியும் படருறு கொடியும்
**2070 

#55
வலவை வல்லோனும் வஞ்சப்பெண்ணும் 
வேலனும் வெறியாட்டாளனும் விளம்புவர்
**2071 

#56
வலம்புரி சங்கும் நந்தியாவர்த்தமும் 
ஒருமரமும் என உரைத்தனர் புலவர்
**2072 

#57
வல்லி ஆய்ப்பாடியும் வல்லிக்கொடியும் 
மலையும் நிகளமும் மாதரும் ஆகும்
**2073 

#58
வல்லிகை யாழும் காதில் பணியும்
**2074 

#59
வலித்தல் பேசலும் வளைத்தலும் நினைத்தலும்
**2075 

#60
வழியே மரபும் இடமும் தொடர்ச்சியும் 
மார்க்கமும் சேயும் மறமும் பின்னும் ஆம்
**2076 

#61
வழித்தோன்றல் மகனும் மகளும் ஆகும்
**2077 

#62
வழுதலை புனத்திலிட்ட பொய்க் கழுவும் 
வழுதுணையும் என வழங்கினர் புலவர்
**2078 

#63
வழங்கல் கொடையும் சொல்லலும் உலாவும்
**2079 

#64
வழிபாடு வணக்கமும் அர்ச்சனையும் ஆகும்
**2080 

#65
வள்ளை ஓர்பாட்டும் வள்ளையும் ஆகும்
**2081 

#66
வள்ளியம் குழலும் மிளகும் ஆகும்
**2082 

#67
வளை கைவளையும் திகிரியும் சங்கும் 
முழையும் மரவளையும் மொழியலாகும்
**2083 

#68
வள்ளி கைவளையும் கூத்தும் வள்ளியும் 
வல்லிக்கொடியும் பூணும் பெண்ணும்
**2084 

#69
வள் பற்றிரும்பும் வலியும் வாளும் 
வாளினுறையும் கூர்மையும் செறிவும் 
வாரும் செவியும் வழங்கினர் புலவர்
**2085 

#70
வளமை உபகாரமும் கொழுப்பும் மாட்சிமையும்
**2086 

#71
வளம் வளப்பாடும் பதவியும் பண்டமும் 
வனப்பும் எனவே வழங்கினர் புலவர்
**2087 

#72
வள்ளம் மரக்காலும் வட்டிலும் வள்ளமும்
**2088 

#73
வள்ளூரம் ஊனின்வகையும் பசுத்தசையும்
**2089 

#74
வறிது குன்றலும் சிறிதும் அறியாமையும் 
பயனில்சொல்லும் பகர்ந்தனர் புலவர்
**2090 

#75
வன்னி தீயும் கிளியும் சமிதையும் 
பிரமசாரியும் எனப் பேசினரே
**2091 

#76
வனம் சுடுகாடும் துழாயும் மிகுதியும் 
காடும் நீரும் வனப்பும் சோலையும்
**வா
**2092 

#77
வாகு வனப்பும் புயமும் ஆகும்
**2093 

#78
வாகை ஒருமரப்பெயரும் தவங்களும் 
ஆள்வினை முதலாம் செய்கையும் நலனும் 
கைவினை முதலாம் கல்வியும் புலமையும் 
சால்பு முதலாம் பண்பும் ஈகையும்
ஒழுக்கம் முதலாம் தவமும் அறத்துறையும் 
ஒருவரினொருவர் வென்றி மிகுதியும்
**2094 

#79
வாங்கல் வளைதலும் கொள்ளலும் நீங்கலும்
**2095 

#80
வாசம் தூசும் புள்ளினிறகும் 
பூவின் மணமும் இருப்பிடமும் ஆகும்
**2096 

#81
வாசி அங்கியமும் குதிரையும் ஆகும்
**2097 

#82
வாஞ்சி தாழ்வாரமும் மகிழ்ச்சியும் விருப்பமும்
**2098 

#83
வாடை வடகாற்றும் கலவையும் நாற்றமும் 
மறுகும் சிற்றூரும் வழங்கினர் புலவர்
**2099 

#84
வாணி பாரதியும் வார்த்தையும் பகழியும் 
கூத்தும் என்ன உரைத்தனர் புலவர்
**2100 

#85
வாதுவர் கரிப்பாகரும் பரிப்பாகரும்
**2101 

#86
வாதம் தற்கமும் நோயும் காற்றும்
**2102 

#87
வாமம் வனப்பும் குறளும் இடப்பாலும் 
ஒளியும் தொடையும் உரைத்தனர் புலவர்
**2103 

#88
வாமனம் குறளும் மாதிரத் தானையும் 
ஓர்நூலும் என உரைத்தனர் புலவர்
**2104 

#89
வாயில் காரணமும் துவாரமும் புலனும் 
தூதும் திறலும் நோயும் வாய்தலும்
**2105 

#90
வாயல் அசையும் நுணுக்கமும் வாய்தலும்
**2106 

#91
வாய் வருவாயும் குழலும் இடமும் 
வாய்மையும் வாக்கும் வாய்த்தலும் வாயும்
**2107 

#92
வாரம் பங்கும் புனலின் கரையும் 
அன்பும் கடலும் மலைச்சாரலும் கிழமையும்
**2108 

#93
வாரி வெள்ளமும் கதவும் நூலும் 
மதிலும் கடலும் வாய்தலும் நீரும் 
வருவாயும் வழியும் பகுதியும் சுற்றும் 
மடையும் விளைவும் யானைசேரிடமும்
**2109 

#94
வார் கொண்மூவும் நீளமும் நேர்மையும் 
வகிர்தலும் கச்சும் நீரும் வாரும்
**2110 

#95
வாரணம் கவசமும் கோழியும் சங்கும் 
தந்தியும் பன்றியும் தடுத்தலும் கடலும் 
காரும் குடையும் புரையும் உன்மத்தமும்
**2111 

#96
வாருணம் மேற்கும் நீரும் வாருதியும்
**2112 

#97
வாரிசம் மரையும் நீர்ப்பூடும் ஆகும்
**2113 

#98
வாலே வெண்மையும் மிகுதியும் தூய்மையும் 
வாலும் வாலதியும் இளமையும் ஆகும்
**2114 

#99
வாலி ஆயுதனும் வாலியும் ஆகும்
**2115 

#100
வாவல் கடத்தலும் நசையும் துரிஞ்சிலும்
**2116 

#101
வாழி வாழ்கெனலும் இடைச்சொல்லும் ஆகும்
**2117 

#102
வாழ்த்து வாழ்த்தலும் ஆசிடைச்சொல்லும்
**2118 

#103
வாள் கரவாளமும் ஒளியும் கயிறும் 
கச்சும் நீரும் கழறினர் புலவர்
**2119 

#104
வாளி அம்பும் சோணையும் சுற்றோட்டமும்
**2120 

#105
வானம் விசும்பும் மழையும் கனியும் 
உலர்ந்தமரமும் ஓதினர் புலவர்
**2121 

#106
வானி மேற்கட்டியும் துகிலின்கொடியும் 
சேனையும் எனவே செப்பலாகும்
**2122 

#107
வான் கொண்மூவும் மழையும் விண்ணும் 
பெருமையும் நீரும் வலியும் நீளமும்
**2123 

#108
வானவன் பிரமனும் சேரனும் ஆகும்
**வி
**2124 

#109
விசும்பு மேகமும் துறக்கமும் விண்ணும் 
திசையும் எனவே செப்பினர் புலவர்
**2125 

#110
விசாலம் கடம்பும் இடமும் ஆகும்
**2126 

#111
விசயம் வென்றியும் சூரியன்வட்டமும் 
வெல்லமும் எனவே விளம்பினர் புலவர்
**2127 

#112
விடர் காமுகரும் தூர்த்தரும் விடபும் 
தவத்தோரிடமும் கானும் ஆகும்
**2128 

#113
விடை எதிர்மொழியும் ஏறும் விடுத்தலும் 
ஏகுதலும் என இயம்பினர் புலவர்
**2129 

#114
விடபம் விடையும் இடபராசியும் 
கிம்புரியும் மரக்கொம்பும் ஆகும்
**2130 

#115
விடங்கம் அழகும் கொடியும் கொடுங்கையும் 
ஆண்மையும் முகடும் அறைந்தனர் புலவர்
**2131 

#116
விடலை பாலைத்தலைவனும் விறலனும்
**2132 

#117
விடம் ஒருமரமும் தேளும் நஞ்சும்
**2133 

#118
விண் ஆகாசமும் மேகமும் துறக்கமும்
**2134 

#119
விண்டு மாயோனும் வெற்பும் வேயும் 
காற்றும் மேகமும் கழறினர் புலவர்
**2135 

#120
விதப்பு வலியும் மதிலுறுப்பும் மிகுதியும் 
கம்பிதமும் எனக் கழறினர் புலவர்
**2136 

#121
விதவை கலன்கழிமகளிரும் சோறும் 
கைம்மணியும் எனக் கழறினர் புலவர்
**2137 

#122
வித்தகர் கொல்லரும் ஆயரும் ஆகும்
**2138 

#123
விதிர்ப்பு நடுக்கமும் மிகுதியும் கம்பமும்
**2139 

#124
விதியே குணமும் இயல்பும் மயனும் 
வினையும் ஊழும் விளம்பினர் புலவர்
**2140 

#125
வித்தம் பொன்னும் பழித்தலும் ஞானமும்
**2141 

#126
விதம் புள்பொதுவும் விதமும் ஆகும்
**2142 

#127
விந்தம் வனசமும் வெற்பும் ஆகும்
**2143 

#128
விபுலம் பெருமையும் விரிவும் ஆகும்
**2144 

#129
விபுதர் முற்றத்துறந்தோரும் விண்ணவரும்
**2145 

#130
விபூதி குற்றமும் கொடுமையும் தசையும் 
வெண்ணீறும் நரகும் செல்வமும் புனலும் 
உக்கமும் எனவே உரைத்தனர் புலவர்
**2146 

#131
விம்மல் ஒலித்தலும் ஏங்குதலும் ஆகும்
**2147 

#132
வியம் கொள்வோனும் மழுவும் வில்லும்
**2148 

#133
வியப்புச் சினக்குறிப்பும் அதிசயமும் ஆகும்
**2149 

#134
வியாளம் பாம்பும் புலியும் வியாழமும்
**2150 

#135
வியலே அகலமும் காடும் மேம்பாடும் 
மரவட்டும் என வழங்கினர் புலவர்
**2151 

#136
வியர்ப்பு மேவலும் பொருதலும் அச்சமும் 
செறிவும் எனவே செப்பினர் புலவர்
**2152 

#137
வியங்கோள் கொளலும் ஏவலும் ஆகும்
**2153 

#138
விரையே மணமும் சாந்தும் வித்தும் 
தூபமும் எனவே சொல்லினர் புலவர்
**2154 

#139
விரோதம் வேறுபாடும் இருளும் 
மயிரும் எனவே வழங்கினர் புலவர்
**2155 

#140
விருத்தி தன்தொழிலும் வளர்ச்சியும் ஆளும் 
விரிபொருளும் இலாபமும் விளம்பினர் புலவர்
**2156 

#141
விரைவு சீக்கிரமும் வெம்மையும் வேண்டலும்
**2157 

#142
விரணம் விழலும் ஊறும் விளம்புவர்
**2158 

#143
விரிவு விடபும் அகலமும் விளம்புவர்
**2159 

#144
விருந்தம் சுற்றமும் மிருகக்குழாமும்
**2160 

#145
விருத்தம் ஓர்கவிதையும் வட்டமும் மூப்பும்
**2161 

#146
விலங்கு கால்விலங்கும் குறுக்கும் மிருகமும்
**2162 

#147
விலங்குதலே செலவிடுதலும் நீங்கலும் 
எறிதலும் எனவே இசைத்தனர் புலவர்
**2163 

#148
வில்லே ஒளியும் மூலமும் வில்லும்
**2164 

#149
வில்லேருழவர் வேடரும் வேந்தரும்
**2165 

#150
விலோதம் பெண்மயிர்ச்சுருளும் பதாகையும்
**2166 

#151
விழுமம் சிறப்பும் சீர்மையும் இடும்பையும்
**2167 

#152
விழவு மிதுனராசியும் விழாவும்
**2168 

#153
விழைச்சுப் புணர்வும் இளமையும் ஆகும்
**2169 

#154
விழைந்தோன் கொண்கனும் வேட்டோனும் ஆகும்
**2170 

#155
விழைவு புணர்ச்சியும் காதலும் ஆகும்
**2171 

#156
விளரி இளமையும் யாழும் வேட்கையும் 
யாழினரம்பும் மிகுதியும் ஆகும்
**2172 

#157
விளவு கமரும் விளாமரமும் ஆகும்
**2173 

#158
விளிவு சாதலும் கேடும் ஆகும்
**2174 

#159
விளக்கு விளக்கின் தகழியும் ஒளியும்
**2175 

#160
விளரே கொழுப்பும் இளமையும் வெண்மையும்
**2176 

#161
விளையே இளமையும் புலமும் ஆகும்
**2177 

#162
விறலே வலியும் வென்றியும் ஆகும்
**2178

#163
விறப்பு வெஞ்சமரும் செறிவும் அச்சமும் 
வளமையும் பெருக்கமும் வெற்றியும் ஆகும்
**2179 

#164
வினாயகன் ஐங்கரன்தானும் புத்தனும் 
அருகனும் எனவே அறைந்தனர் புலவர்
**வீ
**2180 

#165
வீங்கல் பெருமையும் ஏங்குதலும் ஆகும்
**2181 

#166
வீசல் பரத்தலும் எறிதலும் சாதலும் 
கொடுத்தலும் மிகுத்தலும் கூறினர் புலவர்
**2182 

#167
வீதி நேரோடலும் வெருவலும் வீதியும்
**2183 

#168
வீதல் கெடுதலும் சாவும் ஆகும்
**2184 

#169
வீரம் விறலும் ஓங்கலும் ஆகும்
**2185 

#170
வீரை ஓர்மரமும் துன்பமும் கடலும்
**2186 

#171
வீ புள்பொதுவும் சாவும் நீக்கமும் 
பூவும் எனவே புகன்றனர் புலவர்
**வெ
**2187 

#172
வெகுளி மிஞ்சிடலும் கோபமும் ஆகும்
**2188 

#173
வெடி வெள்ளிடியும் அச்சமும் வெளியும் 
பரிமளித்தலும் புகையும் பகர்ந்தனர் புலவர்
**2189 

#174
வெட்சி செச்சையும் மிகு நிரைகவர்தலும்
**2190 

#175
வெண்மை அறியாமையும் வெள்ளியும்
**2191 

#176
வெதிர் கீசகமும் செவிடும் ஆகும்
**2192 

#177
வெப்பம் வேனிலும் கோபமும் ஆகும்
**2193 

#178
வெய்யோன் கொடியனும் விருப்பமுடையோனும் 
பானுவும் எனவே பகர்ந்தனர் புலவர்
**2194 

#179
வெயில் சூரியனும் சுடர்களும் ஆகும்
**2195 

#180
வெள்ளை சங்கும் வெண்பாவும் தகரும் 
வெள்ளாடும் வெள்ளையும் வெளிறும் கள்ளும் 
முன்னுள ராமனும் மொழிந்தனர் புலவர்
**2196 

#181
வெளிறு வெள்ளையும் அறியாமையும் ஆம்
**2197 

#182
வெள்ளம் புனலும் வேலைக்கரையும் 
கடலும் ஓர்எண்ணும் மிகுதியும் ஆகும்
**2198 

#183
வெள்ளில் விளாவும் பாடையும் ஆகும்
**2199 

#184
வெளில் வெண்தயிரும் தயிரின்மத்தும் 
பாடையும் அணிலும் வேழத்தம்பமும்
**2200 

#185
வெள்ளி சுக்கிரனும் வெண்தாதும் ஆகும்
**2201 

#186
வெறி அணங்குஆடலும் அச்சமும் கலக்கமும் 
பேயும் நோயும் வாசமும் தகரும்
**2202 

#187
வெறுக்கை பொன்னும் வெறுப்பும் செல்வமும் 
கனவும் விழுப்பொருளும் கழறினர் புலவர்
**வே
**2203 

#188
வேகம் உடலும் கீழும் வேகமும்
**2204 

#189
வேங்கை பொன்னும் புலியும் வேங்கையும்
**2205 

#190
வேசரி கோவேறுகழுதையும் கரமும்
**2206 

#191
வேட்டுவன் மகமும் வேடனும் ஆகும்
**2207 

#192
வேணி மயிர்ச்சடையும் விண்ணும் நதியும்
**2208 

#193
வேதிகை பலகையும் திண்ணையும் வீதியும் 
வினையும் இயலம்பும் வேதனும் ஆகும்
**2209 

#194
வேதண்டம் கயிலையும் வெற்பும் யானையும்
**2210 

#195
வேந்தன் இந்திரனும் மதியும் இரவியும் 
வியாழமும் அரசனும் விளம்பினர் புலவர்
**2211 

#196
வேதனை துயரும் சுடலும் விளம்பும்
**2212 

#197
வேய் துளையுடையபொருளும் மூங்கிலும் 
ஒற்றும் வினையும் உரைத்தனர் புலவர்
**2213 

#198
வேரி கள்ளும் தேனும் வாசமும்
**2214 

#199
வேல் வேலமரமும் படைக்கலப்பொதுவும் 
மூங்கிலும் வேலாயுதமும் மொழிவர்
**2215 

#200
வேலி மதிலும் விளைநிலமும் காவலும் 
ஊரும் வேலியும் உரைத்தனர் புலவர்
**2216 

#201
வேலை கடற்கரையும் கடலும் காலமும் 
தொழிலும் எனவே சொல்லினர் புலவர்
**2217 

#202
வேலன் முருகனும் வெறியாட்டாளனும்
**2218 

#203
வேலாவலையம் கடலும் பூமியும்
**2219 

#204
வேள்வி வேள்விக்குண்டமும் யாகமும் 
கொடையும் பூசையும் கூறினர் புலவர்
**2220 

#205
வேழம் கொறுக்கையும் கரும்பும் தும்பியும்
மூங்கிலும் ஒலியும் வேழப்பூச்சியும்
**2221 

#206
வேள் மன்மதனும் சளுக்கிவேந்தனும் 
குமரனும் எனவே கூறினர் புலவர்
**2222 

#207
வேளாளர் வள்ளலும் பொன்வாணிபரும் 
வேளாளரும் என விளம்பினர் புலவர்
**2223 

#208
வேளாண்மை வணங்கலும் உபகாரங்களும் 
மெய்ம்மையும் எனவே விளம்பினர் புலவர்
**வை
**2224 

#209
வைகல் புலர் காலையும் இறந்தகாலமும் 
தங்கலும் எனவே சாற்றினர் புலவர்
**2225 

#210
வைகறை விடியலும் யாமமும் ஆகும்
**2226 

#211
வையே கூர்மையும் வைக்கோலும் புல்லும்
**2227 

#212
வையம் தேரும் சிவிகையும் புவியும் 
வண்டிலும் ஊர்தியும் உரோகணியும் ஆகும்
**வௌ
**2228 

#213
வௌவல் பிடித்தல் வௌவால் பறவை ஆம்
**பொதிகை நிகண்டு முற்றிற்று
**
**கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய 
**பொதிகை நிகண்டு - இரண்டாம் பகுதி
** சென்னை சர்வசலாசாலை 
** தமிழ் லெக்ஸிகன் பதிப்பாசிரியர் 
** S வையாபுரிப் பிள்ளை 
** பரிசோதித்தது 
** 1934 

@1 உயிர் வருக்கம்
** அகர வருக்கம் 
**1

#1
அகந்தருவுங்  குறையும் வெற்பு மனையும் 
அகமு முள்ளு மான்மாவு மகப் பொருளும் 
இடமும் பாவமு மல்லவு மாகும்
**2

#2
அகைத்த  லறுத்திடலு மொடித்தலு மீர்த்தலும் 
வேதனை யும்மென விளம்பினர் புலவர்
**3

#3
அகப்பாவுள் ளுயர்த்திய பாவு மதிலும்.
**4

#4
அகவலோர் பாவுங் கூத்து மாகும். 
**5

#5
அக்கர மெழுத்துமோர் நோயு மாகும். 
**6

#6
அகலுள் ளூரும் பரப்பு நாடு மாகும் 
**7

#7
அக்கார மாடையும் வெல்லமு மாகும் 
**8 

#8
அகல மார்பு நீளமு மிடமும் 
அகலிட மும்விரித் துரையு மாகும் 
**9

#9
அகடு பொல்லாங்கு நடுவும் வயிறும் 
**10

#10
அகளந் தாழியு மிடாவு மாகும் 
**11

#11
அகிசிலம்பு மிரும்பு ந் தீயு மரவும் 
தொகையு மெனவே சொல்ல லாகும் 
**12

#12
அக்கென்பு மிமிலுஞ் சங்கு மணியுமாம் 
**13 

#13
அங்கி தீயுஞ் சட்டையு மறுமீனும் 
**14

#14
அங்கமா றங்கமுங் கட்டிலு மாகமும் 
என்பு முறுப்பும் வெட்டலு மாகும் 
**15

#15
அங்கணஞ் சலதாரையு முற்றமுஞ் சேறும் 
**16

#16
அங்கதம் வசைச்சொல்லும் பொய்யு மார்பும் 
அரவுந்தோ ளணியு மசைப்பெயரு மாகும் 
**17

#17
அங்காரகன் றீயுஞ் செவ்வாயு மாகும் 
**18

#18
அசிவாளு மம்பு மவமதிச் சிரிப்பும் 
ஆயுதங் களுமென் றறைந்தனர் புலவர் 
**19

#19
அச்ச மகத்தியு மைம்மையு மஞ்சலும் 
**20

#20
அசும்பு வீசுதலு நீரொழு குதலும் 
காந்தியு மொற்கமுங் கழற லாகும் 
**21

#21
அசோகு சுகமு மசோகு மாகும் 
**22

#22
அச்சுதன் மூதிறையு மரியு மருகனும் 
**23

#23
அச்சுவங் குதிரையு மக்கிரா மருந்தும் 
**24

#24
அசனஞ் சோறு மளவும் பசியும் 
வேங்கையுங் கொழுப்பும் விளம்ப லாகும் 
**25 

#25
அசைநிரை யசையு மசைச்சொல்லு மசைவுமாம் 
நேரசை யும்மென நிகழ்த்த லாமே
**26

#26
அசைதல் தங்கலு நோதலு மாகும் 
**27

#27
அசைத்தல் கட்டுதலு மசைத்தலு மாகும் 
**28

#28
அசனிவச் சிரமு மிடியு மாகும் 
**29

#29
அசமேயாடும் மூவாட்டை நெல்லும் 
**30

#30
அஞலமே பஞ்ச மணமுஞ் சிங்கமும் 
**31

#31
அஞரே துக்கமு மறிவி லாரும் 
**32

#32
அஞ்சலி வணங்கலும் வாவற் பறவையும் 
பேதையு மென்னப் பேச லாகும் 
**33

#33
அஞ்ஞை யழகு மறிவிலானுங் கிடாயும் 
**34

#34
அஞ்சன மிருளு மையுங்கண் மருந்தும் 
ஓர்திக் கானையு நீல க் கல்லு 
மஞ்சன மும்மென வழங்கிணர் புலவர் 
**35

#35
அடலே கொலையும் வெற்றியும் வலியும் 
சமைத்தலும் பொருதலுஞ் சாற்ற லாகும் 
**36

#36
அடியண்ட முதலுஞ் செண்டு வெளியும் 
காலுங் கவியடியுங் கழற லாகும் 
**37

#37
அடரே தகடு நெருக்கமு மாகும் 
**38

#38
அடுதல் கோறலு மட்டலு மடர்தலும் 
**39

#39
அடலைவெண் பலியுஞ்  சுடுகாடு மாகும் 
**40

#40
அடுப்புப் பரணியு மச்சமு மடுத் திடலும் 
அடுப்பு மெனவே அறைய லாகும் 
**41

#41
அடையப்பமு மிலையு மடுத்தலுங் கனமும் 
**42

#42
அணைதலை யணையு மெத்தையு மணையுஞ் 
சயனமு மென்னச் சாற்றினர் புலவர் 
**43

#43
அணியொப் பனையு மன்புமணி வகுப்பும் 
அழகுமலங் காரமும் பூணும் பீடும் 
அணிதலு மிலக்கண வணியு மாகும் 
**44

#44
அணவல் புல்லலு ந[ணுக]லு மாகும் 
**45

#45
அண்டம் விண்ணு முலகமும் முட்டையும் 
ஆகாய மும்பிர மாண்டமு மாகும் 
**46

#46
அண்டசம் பறவையுந் தேரையு மீனும் 
அரணையு முடும்பும் பல்லியு நண்டும் 
ஓந்தியு முதலையு மிப்பியு நாகமும் 
கச்சப மும்மெனக் கழற லாகும் 
**47

#47
அணுமந் திரமுஞ் சீவனு நுண்மையும் 
**48

#48
அணங்கே மாதரும் வருத்தலுந் தெய்வமும் 
ஆசையு மழகு மச்சமுங் கோறலும் 
நோயுஞ் சூரும் நுவல லாகும் 
**49

#49
அண்ணமுண் ணாவு மணரியு மாகும் 
**50

#50
அணுக்கமே யுரகமுஞ் சாந்தமு மாகும் 
**51

#51
அண்ணல் பீடு மண்ணுதலுந் தலைவனும் 
புத்தனு மரபும் புகல லாகும் 
**52

#52
அண்டர் பகைவருந் தேவரு மாயரும் 
**53

#53
அண்ணை பேயு மறிவிலானு மாகும் 
**54

#54
அத்திரி யொட்டகமுங் கணையுங் கழுதையும் 
பரிதியும் விண்ணும் வெற்பு மாகும் 
**55

#55
அத்திரங் கணையும் வீடு மலையும் 
குதிரையுங் கழுதையுங் கூற லாகும் 
**56

#56
அத்தி யானையு ங் கடலு மத்தியும் 
புள்ளு மெலும் [பும் ] புகற லாகும் 
**57

#57
அத்தஞ்சொற் பொருளுங் காடுமத்த நாளும் 
அருநெறியும் பொன்னும் பாதியுங் கரமும் 
கண்ணா டியுமெனக் கழற லாகும் 
**58

#58
அத்தசைச் சொல்லு மரைநாணுஞ் சிவப்பும் 
இசைப்புந் துன்னமு மியம்ப லாகும் 
**59

#59
அதர்சிறு கல்லும் புழுதியும் வழியும் 
**60

#60
அத்தனே சிவனும் பிதாவு மாகும் 
**61

#61
அதம்பா தாளமுங் கீழ்வீழ்தலு மிறங்கலும் 
**62

#62
அந்தண ரறவோரும் பார்ப்பாரு மாகும் 
**63

#63
அந்தம[ஞ் ] ஞானமு முடிவுங் கத்தூரியும் 
அழகு மெனவே யறைய லாகும் 
**64

#64
அந்தகன் குருடனுங் கூற்றனு மாகும் 
**65

#65
அந்தி லாங்கு மிரண்டு மசையும் 
இடப்பெய ரும்மென வியம்ப லாகும் 
**66

#66
அந்தரம் விசும்பு மிடையு மளவும் 
பேதமு மேகமும் பேச லாகும் 
**67

#67
அந்தி மாலையும் பாலையா ழோசையும் 
இரவு மசையு மியம்ப லாகும் 
**68

#68
அந்தரி யுமையுந் துர்க்கையுங் காளியும் 
**69

#69
அம்பு வேயும் நீரும் விண்ணும் 
மேகமுங் கணையும் விளம்ப லாகும் 
**70

#70
அம்மைவரு பிறப்புந் தாயு முமையும் 
அழகு மெனவே யறைய லாகும் 
**71

#71
அமலையம் பிகை யுஞ் சோறு மோசையும் 
**72

#72
அமரே அமர்தலும் பூசலு மாகும் 
**73

#73
அம்பிநீர் மேலோடு வனவுந் தெப்பமும் 
நாவா யும்மென நவின்றனர் புலவர்
**74

#74
அமுதம் பாலு முத்தியு நீரும் 
அவியும் மேகமும் பெருமையு மாகும் 
**75

#75
அம்புயம் பொதியும் புட்டிலு[ம]ம் புயமும் 
**76

#76
அம்பல் பழிமொழியு மலர்மொழியு மாகும் 
**77

#77
அம்மழகு மசையு நீரு மாகும் 
**78

#78
அம ரர் பகைவருந் தேவரு மாகும் 
**79

#79
அமறல் மிகுதியும் பொலிவும் பீடும் 
நெருக்கமு மெனவே நிகழ்த்த லாகும் 
**80

#80
அம்பணந் துலாக்கோலுந் தூம்பு மாமையும் 
வாயுங்  கதலியுந் தோணியு நீரும் 
**81

#81
அமைதல்சம் மதித்தலும் பொழுது மாகும் 
**82 

#82
அமுதுபாலுஞ் சோறு மவியு மழையும் 
**83

#83
அம்பரங்  கூறையும் கடலுமா காசமும் 
**84

#84
அம்பட[ல]ம் வெள்ளியு மோடமும் மரக்காலும் 
விண்ணு மம்மியும் விளம்ப லாகும் 
**85

#85
அயமிரும்பு நீரும் பரியு மாடும் 
தடாகமு மகமுஞ் சேறு மவனியும் 
சூதனரும் விழாவுஞ் சொல்ல லாகும் 
**86

#86
அய்யன் மூத்தோனுஞ் சாத் தனு மப்பனும் 
சுவாமியுங் குருவுஞ் சொல்ல லாகும் 
**87

#87
அய்யங்  கடிஞையும் பிச்சையும் பொழுதும் 
அனுமா னமுமென வறைய லாகும் 
**88

#88
அய்யரந்  தணரு முனிவருந் தேவரும் 
**89

#89
அயனமே வழியும் பிறப்பு மூணும் 
ஆண்டினிற்  பாதியு மாகு மென்ப 
**90

#90
அயிர்நுண் மணலு மணுவுஞ் சர்க்கரையும் 
**91

#91
அயிலிரும்பு முண்டலுங் கூர்மையும் வேலும் 
**92

#92
அயிராணி யுமையு மிந்திரன் றேவியும் 
**93

#93
அயிரி மீன்முள் ளரிந்திடு கருவியும் 
நுண்மண லுமென நுவல லாகும் 
**94

#94
அரண்மதிலும் வேலுங் கவசமுங் காவலுஞ் 
செருப்புங் காடு மஞ்சலு மாகும் 
**95

#95
அருளே சத்தியுங் கருணையு மாகும் 
**96

#96
அரக்குச் சிவப்பும் மெழுகுங் கள்ளும் 
**97

#97
அரில்சிறு தூறுங் குற்றமுங் குழலும் 
பிணக்கமுங் குரலும் பரலும் வயிரமும் 
**98

#98
அரவநூ புரமும் பாம்பு மோசையும் 
ஆயிலிய முஞ்சிலை நாணு மாகும் 
**99

#99
அரசு பூமியு மன்னரும் ராச்சியமும் 
அரச மரமு மறைய லாகும் 
**100

#100
அர சர் வன்னியர் வேந்தரு மாகும் 
**101 

#101
அரிதம் பூமியும் பச்சையுந் திக்கும் 
பசும்புல் லுமெனப் பகர லாகும்
**102

#102
அரலை கனியுங் கழலையும் வித்தும் 
கடலுங் கற்றாழையுங் கழற லாகும்
**103 

#103
அரம்பை வாழையுந் தெய்வப் பெண்ணும்
**104 

#104
அரங்கோ ரில்லு மிடமு மாகும்
**105 

#105
அராகம் பாலைப் பண்ணுஞ் சிவப்பும்
ஆசையு முடுகும் பாவு மாகும்
**106 

#106
அருண னாதித்தன்றேர்ப் பாகனும் புதனும் 
ஆதித்த னுமென வறைய லாகும்
**107 

#107
அருகல் சாதலுஞ் சுருங்கலு மாகும்
**108 

#108
அருகர் சாவகரு நில்லா மையுமாம்
**109 

#109
அரத்தமுற் பலமும் பொன்னுஞ்செம் பரத்தமும்
நீபமுஞ் சிவப்பும் பவளமு மிரத்தமும்
**110 

#110
அரிட்டங் காக்கையுங் கள்ளும் வெற்பும் 
பிறவியிற் குற்றமும் பேச லாகும்
**111 

#111
அரந்தை துன்பமுங் குறிஞ்சி யாழும் 
**112 

#112
அரணி கோலும் வேலியும் கவசமும்
**113 

#113
அருணஞ் சிவப்பு மானுமெலு மிச்சும் 
ஆடு மெனவே யறைய லாகும்
**114 

#114
அரங்க மாற்றிடைக் குறையு மாடிடமும் 
வட்டா டிடமும் போரிடமுஞ் சபையும்
**115 

#115
அருப்ப மூருங் காடு மரணும் 
நந்து நோயுஞ் சோலையு மாகும்
**116 

#116
அரசன் வியாழமும் வேந்தனு மாகும்
**117 

#117
அரற்ற லழுகையு மோசையு மாகும்
**118 

#118
அருச்சுன மருதும் வெண்மையும் பந்துமாகும்
**119 

#119
அருந்த லருமையு முண்டலு மாகும் 
**120 

#120
அருத்தியாசையுங் கள்ளு மாகும்
**121 

#121
அருக னருகனு நண்பனு மாகும்
**122 

#122
அரிவை பருவமு மாதரு மாகும்
**123 

#123
அருவி தினைத் தாளும் வெற்பு மாறும்
**124 

#124
அரணங் காவற்கானுங் காவலும் வேலியும் 
மதிலு மஞ்சலுங் கவசமுஞ் செருப்புமாம்
**125 

#125
அரையோ ரெண்ணுமோ ருறுப்பு மாகும்
**126 

#126
அரியே தேரு மலையு மரித்தலும்
மூங்கிலும் வயிரமும் பறையும் பாம்பும் 
அரிசியும் பன்றியு மரிதலும் புரையும் 
கிளியும் நெற்கதிரும் படைக்கலமும் பொன்னும் 
புகையுஞ் சோலையுங் காந்தியுங் கடலும் 
கிண்கிணிப் பரலுந் தவளையு மாலையும் 
கண்வரியும் புகருங் குலிசமும் வாயும் 
இந்துவும் விசியுங் கள்ளுங் குதிரையும் 
நன்னிறமும் வாளுங் குரங்கும் வலியும் 
வண்டுந் திகிரியும் பகையும் அம்பும் 
பாயலுங் காற்று மென்றூழுஞ் சயனமும் 
இந்திர னுந்திரு மாலுஞ் சிங்கமும் 
ஐமையுங் கூற்று மங்கியும் பச்சையும் 
கூர்மையுஞ் சேகு மாடுஞ் சுடருமாம்,
**127 

#127
அலியே தீயுஞ் சோறும் பேடனும்
மறலியு நறுவிலியுமென வழங்க லாகும் 
**128 

#128
அலகுநெற் கதிரும் புள்வாயுந் துடைப்பமும்
பலகறையு மிலஞ்சிப் பரலுமோ ரெண்ணும்
நுளம்பும் ஆயுதமுமென நுவல லாகும் 
**129 

#129
அலரி தேனீயும் பூவுமோர் மரமும் 
அழகுங் கண்வரியு மருக்கனும் வாவியும்
மலர்க்கணை யுமென வழுத்த லாகும் 
**130 

#130
அலவனம் புலியும் பூனையு கண்டும் 
கடக ராசியுங் கழற லாகும்
**131 

#131
அல்லிவெள் ளாம்பலுங் காயாவு மலியும் 
பூந்தா துமக விதழும் புகலும்
**132 

#132
அல்க லிலம்பாடும் நாளுஞ் சுருங்கலும் 
தங்கலு மிரவுஞ் சாற்ற லாகும்
**133 

#133
அல்கு தங்கலுங் கங்குலு மாகும்
**134 

#134
அலைகடற் றிரையுங் கடலு மாகும்
**135 

#135
அலங்கல் பூமாலையும் தளிரு மசைவும் 
இலங்கலு மெனவே யியம்ப லாகும்
**136 

#136
அலர்விரி பூவும் புறங்கூறலும் பழியும்
**137 

#137
அல்லே யிராவு மிருளுமா தித்தனும்
**138 

#138
அவல்சிற் றுண்டியுந் தடாகமுங் கீழும்
**139 

#139
அவந்தியோ ரூரும் கிளியுஞ் சேனையும்
**140 

#140
அவனி பாரகரும் வேந்தரும் பூமியும்
**141 

#141
அவினயங் கூத்து நூலு மங்கமும்
**142 

#142
அவிர்த லொளியும் பீறலு மாகும்
**143 

#143
அவிதேவ ரூணு நெய்யு மாகும்
**144 

#144
அழுவம் பரப்புந் துருக்கமு முரசும் 
நடுக்கமு நாடு நவில லாகும்
**145 

#145
அழனந் தீயும் பிணமு மாகும்
**146 

#146
அழுங்க னோயுஞ் சோம்புங் கேடும்
ஓசையும் நடுக்கமுந் துன்பமு மேங்கலும் 
**147 

#147
அழுக்காறு மனத்தின் கோட்டமும் பொறாமையும்
**148 

#148
அழகு சர்க்கரையும் வெல்லமு மழகும்
**149 

#149
அழுக்கே மாசு மாமையு மாகும்
**150 

#150
அளஞ்செறிவுங் கூர்மையு முப்பளமுங் கடலும்
**151 

#151
அளையே தயிரு முழையும் புற்றும் 
பாழிலு மோரும் பகர லாகும்
**152 

#152
அள்ளல் சேறு நரகமு மள்ளலும்
**153 

#153
அளகங் கொந்தளமு மோதியு நீரும்
**154 

#154
அள்ளே கூர்மையுஞ் செறிவும் வன்மையும் 
செவியும் வலியும் பற்றிரும்புஞ் செப்புவர்
**155 

#155
அளியன்பும் வண்டுங் கொடுத்தலு மதுவும்
**156 

#156
அளவை மரக்காலு நாழியுந் தினமும் 
எல்லையு மெனவே யியம்ப லாகும்
**157 

#157
அளித்தல் காத்தலுங் கொடுத்தலுஞ் செறிதலும்
**158 

#158
அளக்கர் கார்த்திகையும் பூமியுஞ் சேறும்
கடலு முப்பளமுங் கழற லாகும்
**159 

#159
அளறு நரகமுஞ் சேறு மாகும்
**160 

#160
அறையே பாறையுஞ் சிற்றிலு மறைதலும் 
அலையு மொழியு மலைமுழைஞ்சு மாகும்
**161 

#161
அற்ற மறைப்பொருளு மவகாசமுஞ் சோர்வும் 
நாயுந் துடியுஞ் சற்றுமற் றதுவும் 
உண்மையு முடிவு மோத லாகும்
**162 

#162
அறல் நீர்த் திரையு நீரும் விழாவும் 
நுண்மண லுமென நுவல லாகும்
**163 

#163
அறுவை யாடையும் சித்திரை நாளும்
**164 

#164
அற்பஞ் சிறுமையு நாயு மாகும்
**165 

#165
அறுகு சிங்கமும் புலியும் யானையும்
அறுகம் புல்லும் யாளியு மாகும்
**166 

#166
அறுபதங் கையாந் தகரையும் வண்டும்
**167 

#167
அறிக்கை பற்று வித்தலு மறிதலும்,
**168 

#168
அன்னே விகுதியுஞ் சாரியையு மாகும்
**169 

#169
அன்றி லன்றிற் புள்ளு மூலமும்
**170 

#170
அன்னை தாயு மூத்தாளுந் தோழியும்
**171 

#171
அனலிபாற் கரனுந் தீயு மாகும்
**172 

#172
அனந்தன் மாலு மருகனுஞ் சிவனும் 
சேடனுந் தெய்வமும் செப்ப லாகும்
**173 

#173
அனந்தம் அளவின்மையும் பொன்னும் விண்ணும்
**174 

#174
அனந்தையோர் சத்தியும் பூமியு மாகும்
**175 

#175
அனங்க மிருவாட்சியு முல்லையு மாகும்
**176 

#176
அனிலம் பவமுங் காற்று மாகும்
**177 

#177
அன்னஞ் சோறு மன்னப் புள்ளும்
**178 

#178
அனுக்கவுள் முகனுந் தொடர்ச்சியு மாகும்
**179 

#179
அனித்திய நில்லாமையுஞ் சந்தனமும் பொய்யும்
**180 

#180
அன்னியம் நொதுமலுங் குயிலு மாகும்
**181

#181
[அ] அதிசயமுஞ் சுட்டு மாதியு முயிரும் 
துயரு மல்லவுஞ் சொல்ல லாகும்
** அகர வருக்கம் முற்றும்
** 2 ஆகார வருக்கம்
**182 

#182
ஆக மார்பு முடம்பு மாகும்
**183 

#183
ஆகார மூணும் வடிவு நெய்யும்
**184 

#184
ஆகு கொப்பூழும் பெருச்சாளியு மெலியும்
**185 

#185
ஆகுலந் துன்பமு மோசையு மாகும்
**186 

#186
ஆக்கஞ் செல்வமும் திருமகளு மாகும்
**187 

#187
ஆங்கசைச் சொல்லு மவ்விடமு மொப்பும்
**188 

#188
ஆசினி மரவுரியும் வயிரமும் விண்ணும் 
மரமும் பலாவின் விசேடமு மாகும்
**189 

#189
ஆசுகம் பகழியுங் காற்று மாகும்
**190 

#190
ஆசிடை வாழ்த்துங் கூட்டமு மாடையும்
**191 

#191
ஆசு கவியுங் கவசமு மற்பமும்
குற்றமுஞ் சடுதியுங் கரக்கருவியு மா [கு]ம்
**192 

#192
ஆசா ரம்பெரு மழையுஞ் சீலமு 
மேட்டையும் புடவையும் விளம்ப லாகும்
**193 

#193
ஆசான் வியாழமுங் குருவு மாகும்
**194 

#194
ஆசை பொன்னுந் திசையும் அவாவும் 
பரிவு மன்பும் வாமமு மாகும்
**195 

#195
ஆஞ்சி கூத்து மழுங்கலு மாகும்
**196 

#196
ஆடு வெற்றியுங் கூத்து மேடமும் 
ஆடுங் கூர்மையு மானு மாகும்
**197 

#197
ஆடிகண் ணாடியோர் மாதமுங் காற்றும் 
உத்திரா டமுமென உரைக்க லாகும்
**198 

#198
ஆடை தொங்கலு நோயுஞ் சீலையும்
**199 

#199
ஆடகந் துவரையும் பொன்னு மாகும்
**200 

#200
ஆடவர் புருடரு மாணிளைஞரு மாகும்
**201 

#201
ஆடல் புணர்ச்சியும் வெற்றியுஞ் சொல்லும் 
கூத்துங் கவிதையுங் கூற லாகும்
**202 

#202
ஆணங் குழம்பு மன்பு மாகும்
**203 

#203
ஆணி யெழுத்தாணியு மற்றை யாணியும் 
சயனமும் பேரழகுஞ் சாற்ற லாகும்
**204 

#204
ஆண்டா ருடையாருந் தேவரு மாகும்
**205 

#205
ஆணு நன்மையு மிரதமு மாகும்
**206 

#206
ஆண்டவ் விடமும் வருடமும் புல்லும் 
நெல்லு மெனவே நிகழ்த்த லாகும்
**207 

#207
ஆணை மெய்ப்பாடும் வெற்றியு மேவலும் 
இலாஞ்சினையுஞ் சூளுந் தடுத்தலு மிசைப்பர்
**208 

#208
ஆதன் பேதையு முயிரு மாகும்
**209 

#209
ஆதவ ரருக்கரும் வேதியரு மாகும்
**210 

#210
ஆதிமும் மூர்த்தியு முதலு மொற்றியும்
நேரோடலு மருக்கனும் நிகழ்த்த லாகும்
**211 

#211
ஆதித்த ரருக்கரும் அமரரு மாகும்
**212 

#212
ஆதல் கூத்து நூலு மாகும்
**213 

#213
ஆம்பல் வேயுங் கள்ளுங் கவ்வையும்
ஊது கொம்பு மியானையு மல்லியும் 
ஓரெண் ணுமிசைக் குழலு மிந்துவும் 
ஓர்பண் ணும்பே ரொலியு மாகும்
**214 

#214
ஆமிடைச் சொல்லு நீருமா மென்றலும்
சூத மரமுஞ் சொல்ல லாகும்
**215 

#215
ஆம்பிரந் தேமாவும் புளிமாவும் புளிப்பும்
**216 

#216
ஆம்பிகா ளானுஞ் சத்தமு மாகும்
**217 

#217
ஆமலகம் நெல்லியும் பளிங்கு மாகும்
**218 

#218
ஆயமா தாயமு மகளிர் கூட்டமும் 
சூதுஞ் சுங்கமு நீளமுந் தோழியும் 
மல்லரி யுமென வழுத்த லாகும்
**219 

#219
ஆயிர மோரெண்ணு மளவின் மையுமாம்
**220 

#220
ஆய்தல் தேர்தலும் நுணுக்கமு மாகும்
**221 

#221
ஆய்வு தெரிதலுந் துன்பமு மாகும்
**222 

#222
ஆரநித் திலமும் பதக்கமும் பூணும்
பித்தளையுஞ்சந்து மாத்தியு மாலையும்
**223 

#223
ஆர்செறிவுங் கூர்மையும் ஆத்தியுஞ் சோதியும் 
அவனியும் நிறைவும் பாகுந்தே ருருளும்
**224 

#224
ஆரல் செவ்வாயுங் கார்த்திகை நாளும் 
மதிலும் ஆரல் மீனு மாகும்
**225 

#225
ஆரைபுற் பாயு மாரையு மெயிலும்
**226 

#226
ஆரியன் குருவுமோர் தேசமு மறிஞனும் 
ஆதித் தனுமென வறைய லாகும்
**227 

#227
ஆர்வம் வில்லும் நிரையமுங் காதலும்
ஆர்ப்புதம் அமருமெனவே யறைந்தனர் புலவர் 
**228 

#228
ஆர்தல் குடித்தலு மணிதலும் நிறைதலும்
உண்டலு மெனவே யுரைக்க லாகும்
**229 

#229
ஆர்கலி மழையுங் கடலு மாகும்
**230 

#230
ஆரூபம் நீங்காமையு மமையா மையும்
**231 

#231
ஆர்வலன் கணவனும் நண்பனு மாகும்
**232 

#232
ஆர்மை மதிலுங் கூர்மையு மாகும்
**233 

#233
ஆரி கதவு மழகு மாகும்
**234 

#234
ஆர்ப்பரவம் போருந் தூளியு மாகும்
**235 

#235
ஆரியர் மிலேச்சரு மறிவுடை யோருமாம்
**236 

#236
ஆலம் விடமு மலர்ந்த பூவும் 
மழையு நீரும் மழுவு மாலும்
**237 

#237
ஆலசைச் சொல்லும் புனலு மாலும் 
ஆமென் பதுவு மல்லவென் பதுவும்
**238 

#238
ஆலி யாலாங் கட்டியு மழையும்
காற்று மறலுங் கழற லாகும் 
**239 

#239
ஆலய மானைக் கூடமு நகரமும் 
தேவ ராலயமுஞ் செப்ப லாகும்
**240 

#240
ஆல லாடலு மொலியு மாகும்
**241 

#241
ஆவல் வளையு மவாவு மாகும்
**242 

#242
ஆவியா ருயிரு நாற்றமும் புகையும் 
வாவியு மூச்சும் வழங்க லாகும்
**243 

#243
ஆவண மங்காடியு மடிமை யோலையும் 
பீடிகையும் புணர் தமும் வீதியு முரிமையும்
**244 

#244
ஆவரணந் தூசும் பூணுந் தடையு 
வானு மாசு மறையு மாகும்
**245 

#245
ஆவிய ருழவரும் வேடரு மாகும்
**246 

#246
ஆவம் நாழிகையு மம்புறு தூணியும்
**247 

#247
ஆழிமோ திரமும் வட்டமுங் கடலும் 
நேமிப் புள்ளும் தேராழியுங் கரையுஞ் 
சக்கர முமெனச் சாற்ற லாகும்
**248 

#248
ஆற்றல் சுமத்தலும் வென்றியு மாண்மையும் 
கூட்டுதலும் விதித்தலும் மிகுதியும் வாய்மையும் 
ஆற்றுதலும் பொறையும் ஞானமும் வலியும்
**249 

#249
ஆறோ ரெண்ணும் வழியும் நதியும்
**250 

#250
ஆற்றுதலைக் கடையு மாற்றலு மாகும்
**251 

#251
ஆனியோர் மாதமும் கேடும் மூலமும்
**252

#252
ஆனே பசுவு மிடைச்சொல்லு மாகும் 
**253

#253
ஆனியம் பொழுதும் நாளு மாகும் 
**254 

#254
ஆனகம் பட கமுந் துந்துமியுந்  தருவும் 
**255 

#255
ஆவதி சயமு மிசையும் பசுவும் 
வியங்கோ ளுங்கற் பகமு மிரக்கமும் 
** ஆகார வருக்கம் முற்றும்
** 3 இகர வருக்கம்
**256 

#256
இகரமோ ரெழுத்துஞ் சந்தமு மாகும்
**257 

#257
இகல னரியு மோரியு மாகும்
**258 

#258
இகுத்தல் துடைத்தலும் வீழ்த்தலு மீர்தலும் 
இளைத்தலுஞ் செகுத்தலு மருந்து வித்திடலும் 
அழைத்தலுந் தாழ்த்தலு மிரிதலு மீவும்
**259 

#259
இகத்தல் புடைத்தலும் நெருக்கமுங் காழ்த்தலும்
கடத்தலு மியங்கலுங் கழறலாகும்
**260 

#260
இகுரி வழக்குந் தோணியு மாகும்
**261 

#261
இக்குக் கரும்புங் கள்ளு மாகும்
**262 

#262
இகுளை தோழியும் நட்பு மாகும்
**263 

#263
இகல்பகையும் வலியும் பொருதலு மாகும்
**264 

#264
இங்குப் பெருங்காயமு மிவ்விடமு மாகும்
**265 

#265
இசித்தல் ஒசிவு மிறுத்தலு மாகும்
**266 

#266
இசையுரைச் சொல்லும் பொன்னும் புகழும் 
திசையும் வண்மையும் பண்பும் பாட்டும் 
இனிமையு மெனவே யியம்ப லாகும்
**267 

#267
இச்சை யாசையும் பொய்த்தலு மிடித்தலும் 
அஞ்ஞா னமுமென வறைய லாகும்
**268 

#268
இஞ்சி கோட்டையு மிஞ்சியு மாகும்
**269 

#269
இடிநென் மாவு முறுதிச் சொல்லும் 
தகரமுஞ் சுண்ணமு மிடியேறு மாகும்
**270 

#270
இடையோ ரிடையு மாயரும் நுசுப்பும் 
நடுவு மிடமும் நிறையும் யானையும்
**271 

#271
இடபமரக் கொம்பு மேறு மிராசியும் 
கிம்புரி யுமெனக் கிளத்த லாகும்
**272 

#272
இடங்கர் குடமு முதலையுந் துர்த்தரும்
**273 

#273
இடமிடப் புறமு மிடமுஞ் செல்வமும் 
விசாலமும் வாமமும் விளம்ப லாகும்
**274 

#274
இடித்த லிடித்தலு முறுதிச் சொல்லும்
**275 

#275
இடக்கரே குடமு மறைச்சொல்லு மாகும்
**276 

#276
இடைதல் சீலையுந் துன்பமு மாகும்
**277 

#277
இணையீ ரோதியு மொப்பும் பனிச்சையும்
இரண்டு மெனவே யியம்ப லாகும்
**278 

#278
இண்டை வனசமு மீங்கையு மாகும்
**279 

#279
இணர்பூங் கொத்தும் பூவு மாகும்
**280 

#280
இதழ்பூ விதழுமேடு முதடும்
**281 

#281
இதைபுதுப் புனமுந் தோணிப் பாயும்
நாஞ்சிலு மெனவே நவில லாகும்
**282 

#282
இதல்கவு தாரியுஞ் சிவலு மாகும்
**283 

#283
இதியே பேயு மிறுதியு மாகும்
**284 

#284
இந்தன மெரியிடு கனலும் விறகும்
இசையும் புகையு மியம்ப லாகும்
**285 

#285
இந்து சந்திரனுங் கரடியும் யானையும்
**286

#286
இபமரக் கோடும் யானையும் வார்த்தையும்
**287 

#287
இமிழே யிசையு மினிமையு மாகும்
**288 

#288
இம்மி பொய்யும் புலமு நுண்மையும்
**289 

#289
இமையே யெண்குஞ் சிகியு மிமையும்
**290 

#290
இயலியலுஞ் சாயலும் நடையுந் தமிழும்
**291 

#291
இயவை வழியுங் காடு மூரும்
**292 

#292
இயறல் முத்தியும் போதலு மாகும்
**293 

#293
இயமீ வார்த்தையும் பறையு மொலியும்
**294 

#294
இயம்பல்பழி மொழியுஞ் சொல்லலு மாகும்
**295 

#295
இரணம் பொன்னுங் கடனு மாணிக்கமும்
அரவு மிகலு மறைய லாகும்
**296 

#296
இருள்கறுப்பு நிசியும் யானையு மையலும் 
நரகமு மெனவே நவில லாகும்
**297 

#297
இரசதம் வெள்ளியுங் காஞ்சியு மாகும்
**298 

#298
இருவி தினைத்தாளு மிருவியு மாகும்
**299 

#299
இரலை யூதுகொம்புங் கலையு மசுபதியும்
**300 

#300
இராக முடுகியலுஞ் செம்மையு மிச்சையும் 
கீதமு மெனவே கிளத்த லாகும்
**301 

#301
இருமை பெருமையு மிம்மையு மறுமையும்
**302 

#302
இராசியம் யோனியு மறைவு மாகும்
**303 

#303
இருசு செவ்வையும் பண்டியு ளிரும்பும்
**304 

#304
இரதி பிடியானையும் மன்மதன் றேவியும்
பித்தளையு மாசையும் பேச லாகும்
**305 

#305
இரவி சூரியனும் வாணிகமு மலையும்
**306 

#306
இரங்க லோசையு மிரங்கலு மாகும்
**307 

#307
இரவே யிரத்தலு மிரவு மாகும்
**308 

#308
இரதன் கண்ணுங் கிளியு மாகும்
**309 

#309
இராடமோர் தேசமும் கழுதையு மாகும்
**310

#310
இரதம் புணர்ச்சியுந் தேரு மின்சுவையும் 
சூதமுங் கொள்ளியு மரைஞாணுஞ் சொல்லுவர்
**311 

#311
இருபிறப் பெயிறும் புலியும் பறவையும் 
பார்ப்பா ருமெனப் பகர லாகும்
**312 

#312
இலாட மோர் தேசமும் பாலமு மாகும்
**313 

#313
இலம்பக மத்தியாயமும் நுதலணியு மாகும்
**314 

#314
இலஞ்சி மாவு மகிழும் புன்கும்
எயிலு மேரியுங் குணமுங் கொப்பூழுமாம்
**315 

#315
இலயம் கூத்தும் கூத்தின் விகற்பமும் 
கேடு மெனவே கிளத்தினர் புலவர்
**316 

#316
இலங்கை துருத்தியு மோரூரு மாகும்
**317 

#317
இலம்பாடு வறுமையுந் துக்கமு மாகும்
**318 

#318
இலாங்கலி கலப்பையுந் தெங்கும்வெண் காந்தளும்
**319 

#319
இல்சாவு மிடமு மனையு மனையாளும் 
இல்லை யென்றலு மிராசியு மாகும்
**320 

#320
இவர்த லாசையு மேவலு மெழுச்சியும் 
ஏறலுஞ் சேறலு மியம்ப லாகும்
**321 

#321
இவர்வு சேறலு மெழுதலு மாசையும் 
ஏறுதலுஞ் செலுத்தலு மியம்ப லாகும்
**322 

#322
இவறல் மறவியு மாசையு மாகும்
**323 

#323
இழுமென லோசையு மினிமையு மாகும்
**324 

#324
இழை யாபரணம் நூலு மாகும்
**325 

#325
இழைத்தல் கூற்று மாற்றமுஞ் செயலும் 
நினைத்தலு மேவலு நிகழ்த்த லாகும்
**326 

#326
இழுக்குச் சோர்வும் பிழைத்தலு மாகும்
**327 

#327
இளியாழ் நரம்பு மிசையு மிசித்தலும் 
நகையு மிணுங்குதலு முரித்தலு மாகும்
**328 

#328
இளை தலைக்காவலும் வேலியும் புயலும் 
இளமையுங் கிடங்கு மானு மிருநிலமுஞ் 
செய்யாளுங் காடியுஞ் செப்ப லாகும்
**329 

#329
இயாளி சிங்கமு மிபமு மாகும்
**330 

#330
இளமை தண்மையுங் கோமளமுங் காமமும்
**331 

#331
இளவல் பின்றோன்றலு மேந்தலு மாகும்
**332 

#332
இளைத்த லிரங்கலு மெய்த்தலுமாகும்
**333 

#333
இறையிறை யிறுப்பு மிறைவனுங் கடனுஞ் 
சிறுமையுந் தங்கலு மில்லி னிறப்புஞ்
சென்னியுந் தலைமையுங் கையிறையு மயனும் 
மேலோரு மீசனும் விளம்ப லாகும்
**334 

#334
இறவை புட்டிலு மேணியு மாகும்
**335 

#335
இறலே முத்தியும் போதலு மாகும்
**336 

#336
இறும்பு குறுங்காடு மலையு மதிசயமு 
வனச மலருங் கானுந் தகைமையும்
**337 

#337
இறும்பூது மலையுந் தகைமையுங் குழையும் 
சிறுதூறு (மதிசயமு] மறுபதமும் 
காந்தட் பூவுந் தாமரைப் பூவுமாம்
**338

#338
இறுத்த லொடித்தலுந் தங்கலு மியம்பலும்
**339 

#339
இறத்தல் கடத்தலுஞ் சாதலு மிகுதியும்
**340 

#340
இறப்பு மிகுதியுஞ் சாவும் போக்கும்
இல்லி னிறப்பு மியம்ப லாகும்
**341 

#341
இறால் தேன்கூடு மீனு மெருதும் 
கார்த்திகை யுமெனக் கழற லாகும்
**342 

#342
இனமிருங் கிளையு மமைச்சரு மாகும்
** இகரவருக்கம் முற்றிற்று
** 4 ஈகார வருக்கம்
**343 

#343
ஈகை பொன்னும் வளியுங் கொடையும் 
இல்லா மையுங் கற்பகமு மீங்கையும்
**344 

#344
ஈடு குழைவும் வலியும் பெருமையும் 
ஒப்பு மெனவே யுரைக்க லாகும்
**345 

#345
ஈண்டிவ் விடமு மிவ்வாறுஞ் சடுதியும் 
ஈங்கையு மெனவே யிசைக்க லாகும்
**346 

#346
ஈம மயானமு மெரியிலிடு கலமும் 
காட்டமு மெனவே கழற லாகும்
**347 

#347
ஈய லிந்திர கோபமுஞ் செ[ல்]லும்
**348 

#348
ஈரம் வனப்பு மன்புங் குளிர்ச்சியும் 
அறிவுமெலு மிச்சும் பகுத்தலு மாகும்
**349 

#349
ஈரே கதுப்பு மீரு மாகும்
**350 

#350
ஈழங்கள்ளும் பொன்னுமோர் தேசமும்
**351 

#351
ஈறே முடிவும் பயனு மாகும்
**352 

#352
ஈன்றான் பிரமனுந் தாதையு மாகும்
**353 

#353
ஈமொழியு மெள்ளலும் ஈயு மாகும்  
**ஈகார வருக்கம் முற்றிற்று
** 5 உகர வருக்கம்
**354

#354
உக முடிவும் பூமியு முரகமும் நாளும்
**355 

#355
உக்கங் கோழியுந் தீயு மேறும் 
ஆலவட்டமு மிடையும் பக்கமும் 
விசிறியு மெனவே விளம்பினர் புலவர்
**356 

#356
உகள மிட முடிவு மிரண்டு மாகும்
**357 

#357
உச்சி நண்பகலு முச்சியு மொடுக்கமும்
**358 

#358
உசிதம் நீரும் வளைதலும் நட்பும் 
உசிதமுங் கூப்பிடலு முரைக்க லாகும்
**359 

#359
உசாவே கருதலுந் துணையு மாகும்
**360 

#360
உஞற்றுற் சாகமு மூக்கமுந் தப்பும்
**361 

#361
உடலே பொருளு முடம்பு மாகும்
**362 

#362
உடு நாவாயு மோட்டுங் கோலும் 
நட்சத் திரமுங் கிடங்கும் விண்ணும் 
அம்புங் கழமையு மறைய லாகும்
**363 

#363
உட்கை உள்ளங் கையு முறவும்
**364 

#364
உடுக்கை துகிலு மோர்வாச் சியமும்
**365 

#365
உடைகுடை வேலுங் கூறையுஞ் செல்வமும் 
முள்ளுடையு மெனவே மொழியலாகும்
**366 

#366
உடைமை தாளுங் கலணையுங் கூறையும்
**367 

#367
உட்குத லச்சமும் நாணமு மாகும்
**368 

#368
உணவு சோறு மழையு முண்டலும்,
**369 

#369
உண்டி யுண்டலுஞ் சோறு மாகும்
**370 

#370
உண்டை படையுறுப்புந் திரட்சியும் பிச்சையும்
**371 

#371
உண்டாட்டு விளையாட்டும் பெண்விளை யாட்டும்
**372 

#372
உணர்வு ஊடறீர்தலு மறிவுந் தெளிவும் 
உணர்ச்சி[யு] மொழிவு முரைக்க லாகும்
**373 

#373
உதும்பர மத்தியுஞ் செம்பு மாகும்
**374 

#374
உதகம் பூமியும் நீரு மாகும்
**375 

#375
உதியன் பாண்டியனுஞ் சேரனு மாகும்
**376 

#376
உத்தர மோர் நூலும் வடக்கும் மேலும் 
எதிர்மொழி யுமென வியம்ப லாகும்
**377

#377
உத்தி படப்பொறியுந் திருவி னுறுப்பும் 
நுண்மைப் பொருளு மார்கலியுந் தேமலும்
**378 

#378
உத்தரி பரியும் யானையும் பாம்பும்
**379 

#379
உத்திர மோர்நாளு முத்திரக் கட்டையும்
**380 

#380
உத்தர குருபஞ்ச பாண்டவருஞ் சாலியும்
**381 

#381
உந்தி கொழுப்பூழும் நீர்ச்சுழியுங் கடலும் 
நதியுந் தேருருளு முயர்ச்சியுந் துணையும் 
நீரும் நடுவும் மகளிர் விளையாட்டும் 
யாழுறுப் புமென நவில லாகும்
**382 

#382
உப்பே கடலு மினிமையு முவரு 
மகளி ராடலு மிரதமு மாகும்
**383 

#383
உப்பள மளமுங் கழிநிலமு மாகும்
**384 

#384
உம்பர் தேவரு முயர்நிலமு மேலும்
ஆயரு மெனவே யறைய லாகும்
**385

#385
உம்பல் நற்குலமுந் தந்தியும் விலங்கும்
**386 

#386
உமட்டிய ரென்ப வியன்கடற் பிணாக்களும்
உப்புவில் பெண்களு முரைக்க லாகும்
**387 

#387
உயவை காக்கணமுங் கான்யாறு மாகும்
**388 

#388
உயிரே காற்றுஞ் சீவனு மாகும்
**389 

#389
உரமார்பு மூக்கமும் ஞானமும் வலியும்
**390 

#390
உரிய பொறிதிரு வுறுப்பு முத்தியும்
**391 

#391
உரைபொருளும் மொழியுந் தேய்வு மோசையும்
**392 

#392
உருவூ ரட்டையும் நிறமும் வடிவும் 
நோயும் நாவாயும் புள்ளு மாகும்
**393 

#393
உருப்பு வெப்புந் துக்கமு முதித்தலும்
**394 

#394
உருத்தல் கோபமுந் தோற்றமு மாகும்
**395 

#395
உரியோர் மூதறிந் தோருமூத் தோரும்
**396 

#396
உருத்தி தொழிலும் உரிய கைம்முதலும் 
வளர்ச்சியுஞ் செய்தூணும் வழங்க லாகும்
**397 

#397
உலகம் பாருந் திக்கு மாகாயமும் 
உயர்ந்தோரும் குணமும் வியனும் சனமும் 
நாடு மெனவே நவில லாகும்
**398 

#398
உலவை மரக்கோடும் விலங்கின் கொம்பும் 
காற்றுந் தழையுங் கழற லாகும்
**399 

#399
உலகர் பாண்டியரு முலோகரு மாகும்
**400 

#400
உலக்கை யுலக்கையுங் கடலு மோணமும்
**401 

#401
உலம்பட் டாடையுங் கற்றிரளு நீரும்
துன்பமுங் காற்றுஞ் சொல்ல லாகும்
**402 

#402
உவணங் கருடனு முயர்ச்சியுங் கழுகும்
**403 

#403
உவளக மந்தப் புரமும் பக்கமும்
நீர்த்தாழ்வு மதிலும் வாவியு முப்பளமும் 
ஆய ரூரு மறைய லாகும்
**404 

#404
உவப்பு மகிழ்ச்சியு முயர்வு மாகும்
**405 

#405
உவா விளையோனுங் கடலும் யானையும் 
இருவகை யுவாவு மிசைத்தனர் புலவர்
**406 

#406
உழையே மானும் யாழிலோர் நரம்பும் 
ஒன்று மிடமும் அருக்கன் றேவியும்
**407 

#407
உழுவனிலை பெற்ற வன்பும் புணர்ச்சியும் 
பெற்றியு மெழுமையும் பேச லாகும்
**408 

#408
உழப்பு முயற்சியும் வலியு முற்சாகமும்
**409 

#409
உழிஞைசிறு பூளையு மதில்வளைத்தலு மதிலும்
**410 

#410
உழுவை புலியு மெருமையு மோதுவர் 
**411 

#411
உளைசத்த வொலியு மெழுத்தி னோசையும்
பரிமேற் கட்டிய மயிரும் ஓதியும் 
ஆண்பான் மயிரும் அஃறிணை மயிரும் 
பரிக்கடி வாளத்தின் றளையும் பகர்வர்
**412

#412
உள்ளலோர் பட்சியும் நினைவு மாகும்
**413 

#413
உளர்தல் சிதறலும் நீவலு மாகும்
**414 

#414
உள்ள முயற்சியு நெஞ்சு மாகும்
**415 

#415
உறையோ ரிலக்கமும் ஒழுகலுங் காரமும் 
உள்ளியும் பாலூறு பிரையுந் துளியும் 
படைக்கூடு மருந்தும் பொருளுமுவர் நீரும் 
வாணாளு மூணும் இடைச்சொல்லும் நீளமும் 
வெண்கலமு முறையு முறைதலுங் குறியும் 
பீடூரும் போர்வையும் பேச லாகும்
**416 

#416
உறவி யுலைக்களமு முயிரு முறவும் 
எறும்பும் நீரூற்று மிசைத்தனர் புலவர்
**417 

#417
உறழ்விடை யீடு மொப்புஞ் செறிவும் 
புணர்வும் காலமும் பூசலு மாகும்
**418 

#418
உறையுள் சயனமும் மனையுமூர்ப் பொதுவும் 
நாடும் கோயிலும் நவில லாகும்
**419 

#419
உறையூர் மருதஞ் சார்ந்த வூரும் 
சோழனுறை யூருஞ் சொல்ல லாகும்
**420 

#420
உறுக ணோயும் துன்பமும் வறுமையும் 
பயமு மெனவே பகர லாகும்
**421 

#421
உறுதி கல்வியு நன்மையு மாகும்
**422 

#422
உறுப்பு படையுறுப்பு முடலு மங்கமும்
**423 

#423
உன்னம் நினைவு நெஞ்சு மாகும்
** உகர வருக்கம் முற்றிற்று
** 6 ஊகார வருக்கம்
**424 

#424
ஊகம் புலியுங் குரங்கு மையமும்
**425 

#425
ஊக்க முற்சாகமும் வலியு முண்மையும்
உள்ள மிகுதியு முயற்சியு மாகும்
**426

#426
ஊசி யெழுத்தாணியுஞ் சூசியு மாகும்
**427 

#427
ஊதிய மிலாபமுங் கல்வியு மாகும்
**428 

#428
ஊமை கீரியு மூங்கையு மாகும்
**429 

#429
ஊரி புயலுஞ் சங்கு மாகும்
**430 

#430
ஊர் பரிவேடமும் நகரு மாகும்
**431 

#431
ஊர்தி சிவிகையும் தேரும் விமானமும் 
பாண்டிலுங் குதிரையும் யானையு மாகும்
**432 

#432
ஊர்தல் தடவலுஞ் சிதறலும் நடத்தலும்
**433 

#433
ஊழே பகையும் பழமையும் விதியும்
பெற்றியும் வெயிலும் பேசப் படுமே
**434 

#434
ஊழி பாருங் காலமு முகமும்
**435 

#435
ஊழ்த்தல்தா னினைத்தலும் பதனழிவுஞ் செவ்வியும்
**436 

#436
ஊறு தீமையுந் தீண்டலுங் கொலையும்
இடையூ றுமென வியம்ப லாகும்
**437 

#437
ஊற்று நீரூற்று மூன்றிய கோலுமாம்
**438 

#438
ஊனே யிறைச்சியும் நெல்லு மாகும்
**ஊகார வருக்கம் முற்றிற்று
** 7 எகர வருக்கம்
**439 

#439
எகினம் கவரி மாவும் நீர்நாயும் 
நாயும் புளியு மன்னமு மானும்
புளிமா வுமெனப் புகல லாகும்
**440 

#440
எஃகே வேலுங் கூர்மையு முருக்கும்
**441 

#441
எக்கர் சொரிதலுங் குவிதலு மிசைக்கும்
**442 

#442
எகினி புளிமாவுஞ் சிந்தமு மாகும்
**443 

#443
எச்சம் மகனுங் குறைவும் வேள்வியும்
**444 

#444
எட்டி காஞ்சிரையுஞ் செட்டியு மியம்பும்
**445 

#445
எண்சோ திடமு மெளிமையு மெண்ணும் 
விசாரமு மெள்ளும் விளம்ப லாகும்
**446 

#446
எண்டோளி காளியுந் துர்க்கையு மாகும்
**447 

#447
எயில் திரிபுரமு மதிலு,மாகும்
**448 

#448
எய்த்தல் இளைத்தலும் அறிதலு மாகும்
**449 

#449
எருவை செம்புங் கழுகுங் கள்ளுங் 
இரத்தமுங் கோரையுங் கொறுக்கையு மியானையும் 
நாணலுங் கோகு நவில லாகும்
**450 

#450
எருக்குதல் பரித்தலும் வெட்டுக் கடையும் 
கோறலு மெனவே கூற லாகும்
**451 

#451
எருந்தே யுரலுங் கிளிஞ்சிலு மாகும்
**452 

#452
எல்லே பகலு மிகழ்ச்சியு மொளியும் 
இரவியு மிராவு மிருளு மாகும்
**453 

#453
எலிகா ரெலியு மதுவு மாடியும்
**454 

#454
எல்லை பகலுங் குரோசமு மிரவியும்
அந்தமு மளவு மாகு மென்ப
**455 

#455
எவ்வந் துன்பமும் தனிமையு மிசைக்கும் 
**456 

#456
எழினிகிடை யாடையு மிடுதிரையு மாகும்
**457 

#457
எழிலே யழகு மிளமையு மாகும்
**458 

#458
எள்ள னகையு மிகழ்ச்சியு மாகும்
**459 

#459
எற்றுதல் புடைத்தலு மெறிதலு மாகும்
**460 

#460
எற்று வெத்தன்மைத் தென்றலு மொத்தலும்
இரக்கமு மெறிதலு மியம்ப லாகும்
**461 

#461
எறுழ்வலியுந் தூணுந் தண்டு மாகும்
**462 

#462
என்றூழ் வெயிலுங் காற்று மிரவியும்
கோடைக் காலமும் கூற லாகும்
**எகர வருக்கம் முற்றிற்று
** 8 ஏகார வருக்கம்
**463 

#463
ஏங்க லேங்குதலு மிரங்கலு மொலியும்
**464 

#464
ஏடகந் தெங்கும் பனையுநல் லாடையும்
ஓரூரும் பலகையு முரைக்க லாகும்
**465 

#465
ஏடு குற்றமுங் கண்ணிமையு முலகும் 
பூவித ழும்பனை யேடும் புகலுவர்
**466 

#466
ஏணி யுலகமு மெல்லையு மேணியும் 
இறைவையு மானு மியம்ப லாகும்
**467 

#467
எண் வரையறையும் வலியும் நிலையுடைமையும்
**468 

#468
ஏதந் துன்பமுங் குற்றமு மாகும்
**469

#469
ஏதி யாயுதமும் வாளு மாகும்
**470 

#470
ஏதல் போதலு நாவாயு மாகும்
**471 

#471
ஏந்தல் பெருமையு மலையு மேடும்
ஏந்துதலு மிறையு முதலு மாகும்
**472 

#472
எந்திரந் திரிகையு மிரதமு மதிலும்
ஆலையு மெனவே யறைய லாகும்
**473 

#473
ஏமம் சேமமுங் காவலு மின்பமும் 
இரவும் பொன்னு மேமாப்பு மயக்கமும் 
வலியுங் கலையு நீறும் வகுத்தனர்
**474 

#474
ஏரே யழகும் பெற்றமு மாகும்
**475 

#475
ஏலமயிர்ச் சாந்தும் ஏலமுந் துடியும்
**476 

#476
ஏல்வை பொழுதும் வாவியு மாகும்
**477 

#477
ஏவல் வியங்கோளும் வறுமையு மாணையும்
**478 

#478
ஏறு அசுபதியு மெருது மிட்டமும் 
இடமும் ஆண்விலங்கு மிடியு மோர் தருவும்
**479 

#479
ஏற்றல் கோடலு மெதிர்ந்து பொருதலும் 
ஏற்றலு மெனவே யியம்ப லாகும்
**480 

#480
ஏனை யொழிவு மிடைச்சொல்லு மாகும்
**481 

#481
ஏனாதி சேனைத் தலைவரு மறவனும்
மந்திரியும் நாவிதனும் வகுத்தனர் புலவர் 
**482 

#482
ஏனம் பன்றியும் மானும் ஆகும்
**483 

#483
ஏனல் செந்தினையுந் தினைவிளை புனமும்
**484 

#484
ஏவிடைச் சொல்லுந் தேற்றமும் வினாவும் 
ஈற்றசையு மம்பு மிகழ்ச்சியு மாகும்
**ஏகார வருக்கம் முற்றிற்று
** 9 ஐகார வருக்கம்
**485 

#485
ஐநீலஞ் சாதிக் காயுமில வங்கமும்
**486 

#486
ஐயை தவப்பெண்ணுங் காளியுந் துர்க்கையும் 
தலைவியும் புதல்வியு மிடைச்சியு முமையும்,
**487 

#487
ஐப்பசி மாதமு மசுபதியு மாகும்
**488 

#488
ஐயிடைச் சொல்லு மழகுங் கோழையும்
இருமலுஞ் சுவாமியும் பதியு மந்தாரமும் 
நாதனு மெனவே நவில லாகும்
**ஐகார வருக்கம் முற்றிற்று
** 10 ஒகர வருக்கம்
**489 

#489
ஒடுக்க முடியச் செய்தலு மொடுக்கமும்
**490 

#490
ஒடுங்கல் கைக்கொளலு மொடுங்கலு மாகும் 
**491 

#491
ஒட்டுப் படைவகுப்பு மொன்றுதலு மாகும்
**492 

#492
ஒண்மை யொழுங்கு நன்மையு மறிவும் 
அழகு மிகுதியு மறைய லாகும்
**493 

#493
ஒதுங்கல் போகுதலு மொதுங்கலு மாகும்
**494 

#494
ஒதுக்க மறைவும் வாயிலும் வழியும்
**495 

#495
ஒத்த னடுவு மொப்பு மாகும்
**496 

#496
ஒப்புப் பெருத்தலு முவமையு மெழிலும்
இசைவு மெனவே யியம்ப லாகும்
**497 

#497
ஒப்புர விணக்கமு மீகையும் கடனும்
**498 

#498
ஒல்லைசிறு பொழுதுந் தொல்லையும் விரைவும்
**499 

#499
ஒலிகாற்று மிடியு மோசையும் மொழியும்
**500 

#500
ஒலியல் மாலையு நோயுந் தோலும் 
ஆடையு நதியு மறைய லாகும்
**501 

#501
ஒருத்தல் விலங்கே று கரடியும் பன்றியும் 
யானையுங் குதிரையும் புலியும் மானும்
**502 

#502
ஒழுகுத லொழுகு நீர்த்துளியு நெடுமையும் 
நேர்மையு மெனவே நிகழ்த்த லாகும்
**503

#503
ஒழுக்கம் வழியு மாசாரமு மொழுங்கும் 
உயர்ந்த குலமு முரைக்க லாகும்
**504 

#504
ஒளிமுச் சுடரும் ஒளிப்பிடமும் விளக்கும் 
புகழுங் கிரணமுங் கேட்டையு மாகும்
**505 

#505
ஒளிவட் டஞ்சக் கரமு மாடியும்
**506 

#506
ஒள்ளியோன் வியாழனுஞ் சுக்கிரனு மாகும் 
**507 

#507
ஒற்றே யொற்றனு மொற்றெழுத்து மாகும்
**508 

#508
ஒற்ற லொற்றலு நீங்கலு மாகும்
**509 

#509
ஒன்று முத்தியு மோரெண்ணு மாகும்
**ஒகர வருக்கம் முற்றிற்று
** 11 ஓகார வருக்கம்
**510 

#510
ஓகை வாவென்றலு முவகையு மாகும்
**511 

#511
ஓங்க லோங்கலு மலையும் வேயும் 
தோணியு மேடு முயர்ச்சியு மியானையும்
**512 

#512
ஓசை பேரொலியும் வாழையு மாகும்
**513 

#513
ஓட லோடலு மாவு மல்லவும்
**514 

#514
ஓட்ட மேலுதடு மேலுந் தோல்வியும்
**515 

#515
ஓடை நீர் நிலையுங் கிடங்குமோர் கொடியும் 
யானைப் பட்டமும் பாதையு மாகும்
**516 

#516
ஓணம் மாயோ னாளு மாறும்
**517 

#517
ஓதிமங் கவரி மாவு மன்னமும் 
மலையு மெனவே வழங்க லாகும்
**518 

#518
ஓதனம் பெருமறையுஞ் சோறு முணவும்
**519 

#519
ஓதி பெண்மயிரும் பூஞையு மலையும் 
ஓந்தியு ஞானமு மன்னமு மாகும்
**520 

#520
ஓதங் கடலுங் கடற்றிரையு மோதமும் 
ஈரமு மெனவே இயம்ப லாகும்
**521 

#521
ஓதை மேடையும் மொலியும் மதிலும்
**522 

#522
ஓரம் சகாயமும் விளிம்பு மாகும்
**523 

#523
ஓரியாண் மயிரும் முசுவுமோர் வள்ளலும் 
நரியுமாச் சேக்கையு நவில லாகும்
**524 

#524
ஓரைபெண் குழுவு மிராசிப் பெயரும் 
பெண்கள் கலனும் பெண்க ளாடுதலும் 
ஓரியும் கு[ர]வையும் தோழியு மிடைச்சொல்லும்
**525 

#525
ஓல மொலியும் பாம்புங் கடலும்
**526 

#526
ஓளி யொழுங்கும் யானைக் கூடமும்
**527 

#527
ஓவே கலிங்கிலுறு கதவு நீக்கமும் 
இரக்கமும் வாரக்கையு மியம்ப லாகும்
**ஓகார வருக்கம் முற்றிற்று

@2 ககர வருக்கம் 
**க
**528 

#1
ககமே யம்பும் புள்ளு மாகும்
**529 

#2
ககனம் விண்ணும் படையுங் கற்பகமும் 
காடும் புள்ளும் கீரியும் காகமும்
**530 

#3
கங்குதீப் பொறியுங் கருந்தினை பருந்தும் 
வரம்பி னருகும் வழங்க லாகும்
**531 

#4
கச்ச மியானைக் கழுத்திடு கயிறும்
மரக்காலுந் துணிவும் வாரு மளவும் 
**532 

#5
கசந்தான் நீரும் இரும்புந் தாதும்
கங்கமு மெனவே கழற லாகும்
**533 

#6
கச்சை கவசமுங் கயிறுந் தழும்பும்
**534 

#7
கச்சு மீனு முலைக்கச்சு மங்கியும்
**535 

#8
கசடு குற்றமு மையமு மாசும்
**536 

#9
கஞ்சம் வெண்கலமுங் கஞ்சாவுந் தாளமும் 
வனசமும் வட்டு மப்பமு மாகும்
**537 

#10
கஞறல் பொலிவுங் குன்றலு மாகும்
**538 

#11
கஞ்சன் குறளனும் வேதனு மாகும்
**539 

#12
கஞ்சிகை கூறையுந் திரையு மாகும்
**540 

#13
கஞ்சனங் கண்ணாடியும் வலியானு மாகும்
**541 

#14
கடலே கடலும் பசுவு மாகும்
**542 

#15
கடறே வழியுங் காடு மாகும்
**543 

#16
கடை சோர்வு மிடமும் வாயிலு முடிவும் 
கீழுங் கதவும் வீதியு மாகும்
**544 

#17
கடகம் யானைக் குழுவுங்கை வளையும் 
பரிசையுஞ் சாரலு மாயுதமும் வட்டமும் 
மதிலுநார்க் கடகமும் வீடுங் கங்கணமும்
**545 

#18
கடுமுள்ளும் விடமும் கசப்புங் கடுத்தலும் 
கடுக்காய் மரமுங் கழற லாகும்
**546 

#19
கட்டுக் குறியுங் காவலுங் களவும் 
கண்ணு மிகுதியும் பந்தமு மாகும்
**547 

#20
கட்டல் பந்தித்தலுங் கள்ளலுந் தடுத்தலும் 
களைதலு மெனவே கழற லாகும்
**548 

#21
கடிவிம் மிதமுஞ் சிறப்பு மையமும் 
காப்புங் கரிப்புங் கடித்தலும் நாற்றமும் 
விளக்கமும் பேயும் காலமும் மணமும் 
விரைவு மச்சமும் கூர்மையும் புணர்ச்சியும் 
கண்ணிட முஞ்சிறு கொடியும் புதுமையும் 
துவசமு மிகுதியுங் குடியும் வரைவும்
**549 

#22
கடங்கரிக் குழுவு முழவு நீதியும் 
யானைக் கன்னமுங் கயிறு மதமும் 
சுரமு முடலுங் கடனுங் குடமும் 
கானும் மலைச்சாரலுங் கழற லாகும்
**550 

#23
கட்கம் வாகு மூலமும் வாளும்
**551 

#24
கட்டளை யுரையறி கருவியு மொப்பும் 
நிறையறி கருவியுமி யாற்றலும்
நிறைகல்லுந் துலாராசியு மிட்டிகையும்
**552 

#25
கடவுள் தேவு நன்மையு முனியும் 
**553 

#26
கட்சி காடுங் கூடு மமளியும்
துயிலிட முமெனச் சொல்ல லாகும்
**554 

#27
கடுத்த லொப்பு மையமும் வேகமும்
**555 

#28
கடவை யேணியுங் குற்றமு மாகும்
**556 

#29
கடிப்பம் பூணுஞ் செப்புங் காதணியும்
**557

#30
கட்டி கருப்பு வட்டுறு கட்டியும்
புண்ணு மகிழ்ச்சியும் புகலலாகும்
**558 

#31
கடைப்பிடி தேற்றமும் மறவா மையுமாம்
**559 

#32
கடிகை நாழிகையுந் துண்டமுஞ் சமயமும் 
கதவின் றாழும் வேதமு மாகும்
**560 

#33
கணியோர் சாதியும் மருத நிலமும் 
வேங்கையுங் கணித்தலும் விளம்ப லாகும்
**561 

#34
கண்டம் வாளும் யானைக் கச்சையும் 
திரையும் மிடறுந் துண்டமும் வெல்லமும் 
பூமியுந் தேசமுங் கவசமு மாகும்
**562 

#35
கணிச்சி யுளிக்கருவியுந் தோட்டியு மழுவும்
**563 

#36
கண்டிகை பணிச்செப்பும் வாகு வலையமும் 
பதக்கமுங் கண்டிகையும் பறையு மாகும்
**564 

#37
கண்ணருளும் விழியு மிடமுங் கணுவும் 
வேயும் ஞானமுங் கருத்து மிடமும்
**565 

#38
கண்டூதி தினவுங் காஞ்சொறியு மாகும்
**566 

#39
கணை பூரநாளும் அம்புந் திரட்சியும்
**567 

#40
கண்ணுத லீசனுங் கருதலு மாகும்
**568 

#41
கணங்கால நுட்பமுந் திரட்சியும் பேயும் 
வட்டமு நோயு முடுவு மவையும் 
அற்பமு மெனவே யறைய லாகும்
**569 

#42
கணையங் காவற் காடும் பொன்னும் 
யானைத் தறியு மெழுவு மாகும்
**570 

#43
கண்டகம் வாளு முள்ளுங் காடும் 
சுரிகையும் வேலுங் கூர்மையுங் கடினமும்
**571 

#44
கண்டல் கைதையு மொள்வாளும் வயிரமும் 
முள்ளும் நீர்முள்ளியு மொழிய லாகும்
**572 

#45
கண்ணி கண்ணியுங் கட்டுங் கயிறும் 
தாரும் முகிழமுஞ் சாற்ற லாகும்
**573 

#46
கணக்குப் பாவிகற்பமு மெண்ணு மாகும்
**574 

#47
கதலி துவசமும் வாழையுந் தேறும்
காற்றா டியுமெனக் கழற லாகும்
**575 

#48
கதழ்வு வேகமுஞ் சிறப்பு மாகும்
**576 

#49
கதிபஞ்ச கதியு மோட்சமு மாகும்
**577 

#50
கதுப்பு விலங்கின் கூட்டமுங் கவுளும் 
ஆண்பெண் மயிரு மஞ்சளு மாகும்
**578 

#51
கதம்பங் கடம்பும் பலபூவு மாகும்
**579 

#52
கதிரிரு சுடருங் கதிரு மாகும்
**580 

#53
கதவங் காத்தலுங் காவலுங் கதவும்
**581 

#54
கதை காரணமுஞ் சொல்லுந் தடியும்
**582 

#55
கத்திகை வாசமுந் தொடையின் விகற்பமும்
துவசமு மெனவே சொல்ல லாகும்
**583 

#56
கதவு காவலுங் கபாடமு மாகும்
**584 

#57
கந்தரம் மேகமும் கழுத்துமலை முழைஞ்சும்
**585 

#58
கந்துகம் குதிரையும் பந்துங் கந்துகமும்
**586 

#59
கந்திருவங் குதிரையுந் தந்திரரு மிசையும்
**587 

#60
கந்தம் பஞ்ச கந்தமுங் கிழங்கும் 
நாற்றமும் பொன்னுங் கரணையும் பகுத்தலும் 
கழுத்தடி யுமெனக் கழற லாகும்
**588 

#61
கந்து பண்டியு ளிரும்புங் கம்பமும் 
யாக்கையின் மூட்டு மாதாரமுந் திரட்சியும் 
காயமு மெனவே கழற லாகும்
**589 

#62
கந்த னருகனுங் கந்தனு மாகும்
**590 

#63
கப்பண மிரும்பிற்செய் நெருஞ்சி முள்ளும் 
கைவே லுமெனக் கழற லாகும்
**591 

#64
கமலம் செம்படாமு நீருந் தாமரையும்
**592 

#65
கம்பம் நடுக்கமுந் தூணு மாகும்
**593 

#66
கம்பலை துன்பமு மோசையு நடுக்கமும்
அச்சமும் வருத்தமு மாகு மென்ப
**594 

#67
கம்பு தவசமும் கோலுஞ் சங்கும்
**595 

#68
கம் புனலும் வெண்மையுந் தலையுங் ககனமும் 
விதியும் புத்தியும் முகிலுஞ் செம்மையும் 
காற்றுஞ் சுவர்க்கமுங் கழற லாகும்
**596 

#69
கம்மியர் கம்மாளருந் தொழில்புரி வோரும்
**597 

#70
கம்புள் சம்பங்கோழியுஞ் சங்கும் 
வானம் பாடியு மெனவகுத் தனரே
**598 

#71
கயம்தேய்வு நீரு நோயுங் குளமும் 
மென்மையுங் களிறும் பெருமையுங் கீழும் 
ஆழமு மெனவே யறைய லாகும்
**599 

#72
கயினி அத்த நாளுங் கைம்மையும்
**600 

#73
கயில்பூண் கொக்கியும் பிடரியு மாகும்
**601 

#74
கயவு பெருமையு மென்மையு மாகும்
**602 

#75
கரணம் அந்தக் கரணமுங் கூத்தும் 
காரணமுங் கணிதமும் வாயுங் கலவியும்
**603 

#76
கரங்குடி யிறையுங் கிரணமுங் கழுதையும் 
கைத்தலமு நஞ்சு மெனக்கழ றினரே
**604 

#77
கரிகுஞ் சரமும் பானுவு மிருந்தையும் 
கறுப்புஞ் சான்று மெனக்கழ றினரே
**605 

#78
கருக்கருப் பொருளு மேடும் கருப்பமும்
**606 

#79
கருவி யீட்டமுங் கலனும் யாழுந்
துணைக்கா ரணமுங் கவசமும் தொடர்பும் 
பல்லிய மும்படைக் கலமுந் தொகுதியுங் 
கசையும் பலவினையு முகிலுங் கலணையும்
**607 

#80
கரகங் கமண்டலமு மாலாங் கட்டியும் 
துளிநீருங் கங்கையுஞ் சொல்லுவர் புலவர்
**608 

#81
கரோடி பெருஞ்சூட்டுஞ் சிரமா லையுமாம்
**609 

#82
கரிணி பிடியானையும் யானைப் பொதுவும் 
மலைமுழைஞ்சு மலையும் வழங்க லாகும்
**610 

#83
கருமை பெருமையுங் கறுப்பும் வலியும் 
நஞ்சு மெனவே நவில லாகும்
**611 

#84
கரைதல் கூவுதலு மொலித்தலு மொழிதலும் 
அழுதலு மெனவே யறைய லாகும்
**612 

#85
கருமான் பன்றியுங் கருமானு மாகும்
**613 

#86
கரேணு கொல்யா னையும்பிடி யானையும்
**614 

#87
கரடம் மதம்பாய் சுவடுங் காக்கையும் 
**615 

#88
கரீரம் யானையின் பல்லடியு மகத்தியும்
முளையு மிடாவு மொழிய லாகும்
**616 

#89
கரில்காழ்ப்புங் கொடுமையுங் குற்றமு மாகும்
**617 

#90
கரியவன் சனியு மாலு மிந்திரனும்
**618 

#91
கருங்கை யின்மையுங் கொன்றுவாழ் தொழிலும் 
வன்பணித் தொழிலுங் கன்றிய தொழிலும் 
எனுமுத் தொழிலையு மியம்புவ தாகும்
**619 

#92
கலமே கலமுந் தோணியும் பூணும் 
அலமு முண்கலமும் யாழுமோ ரளவும்
**620 

#93
கலிவலி யோனும் சனியுங் கலிப்பாவும் 
மிகுதியும் வஞ்சமு மோசையும் கடலும் 
கலியுகமும் வலியுங் கழற லாகும்
**621 

#94
கலைகால நுட்பமும் காஞ்சியும் கல்வியும்
நூலுந் தூசு மந்தியுஞ் சேகும் 
கவடுமொரு ராசியு மதியின் கலையும் 
மானேறு மென்ன வழங்க லாகும்
**622 

#95
கல்பருப் பதமும் ஓசையுங் கல்லும் 
அருவியு மவலமு மறைய லாகும்
**623 

#96
கலாமே கொடுமையுஞ் சினமு மாகும்
**624 

#97
கல்வி யறிவும் பயிற்சியு மாகும்
**625 

#98
கலவை சாந்தும் சேறு மாகும்
**626 

#99
கலித்த லொலியும் பொற்பு மெழுச்சியும்
**627 

#100
கலுழி கான்யாறுங் கலங்கல் நீரும்
**628 

#101
கலிங்கம் ஊர்க்குருவியும் வானம் பாடியும் 
கலிங்க தேசமுஞ் சீலையு மாகும்
**629 

#102
கல்லாரம் மஞ்சளுஞ் செங்கழு நீரும் 
நீர்க்குளி ரியுமென நிகழ்த்த லாகும்
**630 

#103
கலாப மேகலையு மரைமணி வடமும் 
மயிலு மயிற்பீலியும் வழங்க லாகும்
**631 

#104
கவடு கப்புங் கபடமும் யானையைக் 
கட்டுங் கயிறுங் கழற லாகும்
**632 

#105
கவனம் போருங் கலக்கமுங் காடும் 
விரைவும் குதிரையின் கதியும் விளம்புவர்
**633 

#106
கவுசிகம் விளக்குத் தண்டும் ஓர்பண்ணும் 
கோட்டானும் பட்டுங் கூற லாகும்
**634 

#107
கவலை துன்பமுங் கவர்த்த நெறியும் 
நோயுங் கொடியுஞ் சந்தியுந் தினையும் 
அச்சமு மெனவே யறைய லாகும்
**635 

#108
கவந்தம் பேயு நீருஞ் செக்கும் 
யூபமு மெனவே உரைக்க லாகும்
**636 

#109
கவ்வை யெள்ளி ளங்காயுங் காடும்
பாம்பும் பழியுங் கட்டுண் பாருமாம் 
**637 

#110
கவரி சாமரையுந் தேரு மேதியும்
கவரி மாவுங் கழற லாகும்
**638 

#111
கவுசி குழைவும் வருத்தமும் பாட்டும்
**639 

#112
கவிகை பாட்டு மளித்தலும் பிச்சமும்
**640 

#113
கவுந்தி பாண்டவரின் தாயும் பைம்மையும்
**641 

#114
கவிநீர்க் காக்கையும் புலவனும் வெள்ளியும் 
மந்தியுங் கவியு மாவாய்க் கருவியும்
**642 

#115
கவையா யிலியமுங் காடுங் கவரும் 
எள்ளிளங் காயு மிசைக்க லாகும்
**643 

#116
கவசங் கடலு மரணு மாகும் 
**644 

#117
கழல் காலணியுஞ் செருப்புங் காலும்
கழங்கு மெனவே கழற லாகும்
**645 

#118
கழிகழி காலையும் மிகுதியுங் கழியும் 
கழிமுக முமெனக் கருத லாகும்
**646 

#119
கழை புனர்பூசமுங் கரும்பும் மூங்கிலும்
**647 

#120
கழுது பேயும் பரணும் வண்டும்
**648 

#121
கழுமல் பற்று மயக்கமு நிறைவும்
**649 

#122
கழுமு ளாயுதப் பொதுப்பெயருஞ் சூலமும் 
கழுக்கடை யுமெனக் கழற லாகும்
**650 

#123
கழனி மென்பாலும் வயலு மாகும்
**651 

#124
கழுந்தி முத்துங் கழையு மாகும்
**652 

#125
கழிதல் சாதலுங் கடந்திடலு மிகுதியும்
**653 

#126
கழங்கணங் காடலும் வேல னாடலும் 
இந்திரிய முங்கழற் காயு மாகும்
**654 

#127
கழற லிடித்தலும் வார்த்தையு மாகும்
**655 

#128
களங்களா மரமு மவையு மிடறும்
கருமையு நஞ்சு நெல்வா ரிடமும் 
இல்லாளும் போர்க்களமும் பரப்பு மாகும்
**656 

#129
களரி போரிடமுங் கானுங் கருமையும் 
கருமஞ் செய்யிடமும் சவையு மிடறும் 
கோட்டியுங் களர்நிலமுங் கூற லாகும்
**657 

#130
களேபர முடலும் பிணமும் எலும்பும்
**658 

#131
கள்ளிள வேனிலும் வாவியுஞ் சோர்வும் 
மென்பாலுந் தொடர்புங் கள்ளு மாகும்
**659 

#132
கள்வன் முசுவுந் கருநிறத் தவனும் 
யானையு நண்டுஞ் சோரனு மிராசியும்
**660 

#133
களைகளை பயிருங் களைக்கோலு மாகும்
**661 

#134
களபஞ் சாந்தும் யானையும் கலவையும்
**662 

#135
களவன் மரக்கொம்பு நண்டு முசுவும்
**663 

#136
களிறு பன்றியுங் கெளிற்று மீனும்
யானையு மத்த நாளுஞ் சுறவும்
**664 

#137
களவு களாவுந் திருட்டு மாகும்
**665 

#138
களங்கம் அழுக்கும் குற்றமு மாகும்
**666 

#139
களகன் மருதநிலமுங் கள்ளுந் தொடர்பும் 
பொய்கையு மெனவே புகல லாகும்
**667 

#140
களிகள்ளும் குழம்பும் செருக்கும் வடிவும்
**668 

#141
கறைகுடி யிறையு முரலுங் கறுப்பும் 
இரத்தமும் விடமும் மாசு மாகும்
**669 

#142
கறங்கல் வளை தடியும் பேயு மோசையும் 
சுழற்றலு மெனவே சொல்ல லாகும்
**670 

#143
கறங்கு சுழலலும் வட்டமும் காற்றாடியும் 
சத்த வொலியுஞ் சாற்ற லாகும்
**671 

#144
கற்புள் ளுயர்த்த பூமியும் கற்பும் 
எயிலு முல்லையு மியம்ப லாகும்
**672 

#145
கற்பம் பிரம னாயுளுஞ் சுவர்க்கமுங் 
கற்பக தருவுங் கழற லாகும்
**673 

#146
கறுப்புக் கருமையுஞ் சினக்குறிப்புஞ் சினமும்
**674 

#147
கறியே கறியு மிளகு மாகும்
**675 

#148
கன்னல் நாழிகை வட்டிலுங் கரும்பும் 
குடமும் கரகமு நாழிகையுங் காமமும் 
சர்க்கரையு மென்னச் சாற்ற லாகும்
**676 

#149
கன்னமோர் தட்டுங் காது மாகும்
**677 

#150
கன்னி கன்னிகையு மிராசியு மோரையும் 
ஆறு மிளமையு மழிவில்லா மையும் 
அத்தமுந் துர்க்கையுங் கற்றா ழையுமாம்
**678 

#151
கனவட்டங் குதிரையும் பாண்டியன் குதிரையும்
**679 

#152
கன்றுத லீதலுங் கன்றலு மாகும்
**680 

#153
கனங்காத் திரமும் புயலும் பாரமும் 
வட்டமும் பொன்னுஞ் செறிவுமடைக் கொடுத்தலும்
**681 

#154
கனையே யொலியுஞ் செறிவு மாகும்
**682 

#155
கனவு மையலுந் துயிலுங் கனவும்
**683 

#156
கன்று மரக்கன்றும் விலங்கின் கன்றும் 
கைவளை யுமெனக் கழற லாகும்
**684 

#157
கனலி சூரியனுந் தீயும் பன்றியும்
**ககர முற்றிற்று
**கா
**685 

#158
காகுளி மூக்கி லெழுந்த ஓசையும் 
இசையுந் தவிசு மிசைத்தனர் புலவர்
**686 

#159
காசு குற்றமுங் கோழையு மணியும் 
காசின் விகற்பமுங் கழற லாகும்
**687 

#160
காசை நாணலுங் காயா மரமும்
**688 

#161
காசறை மணியு மயிருறு சாந்தும் 
கத்தூ ரியுமெனக் கழற லாகும்
**689 

#162
காஞ்சிமே கலையுங் காஞ்சி நகரும் 
பண்ணும் பூணும் நிலையின்மையு மரமும் 
எதிரூன் றுதலும் பெருமையுங் காட்சியும்
**690 

#163
காடுபொன் காடு மேனலு மாகும்
**691 

#164
காட்டங் குதிரையும் விறகு மாகும்
**692 

#165
காடி நெய்யுஞ் சோறுங் கறியும் 
கூழு மெனவே கூற லாகும்
**693 

#166
காட்டி பிராட்டியும் பன்றியு மாகும்
**694 

#167
காணம் பொற்காசும் பொன்னுஞ் செக்கும் 
பரியூணும் கண்ணு மளவோரு மாகும்
**695 

#168
காண்ட மிடுதிரையும் நதியுங் கானும் 
முடிவுங் கமண்டலமு நீரு மம்பும் 
பணிச்செப்பும் பந்தியும் தூண்டா யுதமும் 
தூசுங் கோலுங் காண்டமு நூலும் 
திரளு மெனவே செப்ப லாகும்
**696 

#169
காணி யிலக்கமுங் காணி யாட்சியும்
**697 

#170
காண்டை கற்பாழியுந் தவத்தோ ரிடமும்
**698 

#171
காதை சொல்லுங் கதையு மாகும்
**699 

#172
காத்திரங் கனமு முடலுங் கோபமும் 
கரிமுற் காலுங் கீரியும் பாம்பும் 
கூத்து மெலும்புங் கூற லாகும்
**700 

#173
காது கொலையுஞ் செவியு மாகும்
**701 

#174
காத லாசையுங் கோறலு மாகும்
**702 

#175
காந்தாரம் காடுமோர் பண்ணு மாகும்
**703 

#176
காப்பு நீறும் தூசும் வேயும்
காவலுங் கதவுங் கைவளையு மாகும்
**704 

#177
காம மர[ங்] குடியுங் கட்டு மிறையும் 
விருப்புங் காமமும் விளம்ப லாகும்
**705 

#178
காம்பு வேயு மலர்த்தாளும் பட்டும் 
**706 

#179
காமன்றிப் பிலியும் வேளும் வண்டும்
**707 

#180
காமர மிசையு மத்தமு மடுப்பும்
**708 

#181
காமர் கட்டழகும் விருப்பமு மதனும்
**709 

#182
காம்பீர முருக்குமோர் தேசமு மாகும்
**710 

#183
காயங் காழ்ப்பு முடலும் விண்ணும் 
கறியுங் கரிப்பும் முக்காயமு மாகும்
**711 

#184
காரியோர் வள்ளலுஞ் சனியு நஞ்சும் 
வடுகனுங் கருமையுஞ் கருமஞ் செய்யிடமும் 
சாத்தனுங் காகமும் புரந்தரனுங் கள்ளும் 
பூரியருங் கயவாயும் முதுநிலமும் [என்பர்]
**712 

#185
கார்கார் காலமு மேகமு நீரும் 
கருமையுங் கொச்சையு மிருளு முசுவுஞ் 
சினமும் பருவமுங் கூந்தலு மஙனம்முங் 
கடைமுடியு மளவுங் கழற லாகும்
**713 

#186
காரிகை யழகும் பெண்ணுங் கலித்துறையும் 
ஒருநூ லுமென வுரைக்க லாகும்
**714 

#187
காலம் வைகறையுங் காலமு மாகும்
**715 

#188
காலை வைகறையு நாரையுங் காலமும்
**716 

#189
கால்குறுந் தறியும் வழியுமோ ரெண்ணும் 
எல்வையு மிடமு மறலியு முளையும் 
காற்றுஞ் சேயுங் காடும் பாதமும் 
மரக்கா லும்பூங் காம்பும் ஊற்றமும் 
வண்டிலும் வாய்க்காலும் வழங்க லாகும்
**717 

#190
காலிலி சூரியன் பாகனுங் காற்றும் 
அரவு மருக்கனு மீனுஞ் சனியும்
**718 

#191
காலச மால வட்டமுங் காற்றும் 
வட்டமு மெனவே வழங்க லாகும்
**719 

#192
காவல் சிறையு நீரு மரணும் 
தம்பட் டமுமெனச் சாற்ற லாகும்
**720 

#193
காவி கருங்குவளையுங் காவி மண்ணும் 
கள்ளுந் துன்பமுங் கழற லாகும்
**721 

#194
காழ்பரலுங் கோலும் வித்து மாலையும் 
ஒளியும் மணியின் கோவையும் சேகும்
**722 

#195
காழகங் கழுதையு மாடையுங் கறுப்பு 
சேதகம் முமெனச் செப்ப லாகும்
**723

#196
காழியர் பரதரும் வண்ணாரு மாகும்
**724 

#197
காளிந்த மேலமும் பாம்பு மாகும்
**725 

#198
காளை யேறு மிளையோனு மீளியும் 
புங்கவ மும்மெனப் புகல லாகும்
**726 

#199
காளம் விடமுங் கருமையுங் கழுவும் 
ஊது சின்னமு முரைக்க லாகும்
**727 

#200
காறு கொடுமையுங் குற்றமு மளவுங் 
காழ்த்தலு மெனவே கழற லாகும்
**728 

#201
கான மிசையும் பேதையுங் காடும் 
தேரும் வீதியுமெனச் செப்ப லாகும்
**729

#202
கானல் கதிரொளியுங் கடற்சார்பிற் சோலையும் 
மலைச்சார்பிற் காவும் பேய்த்தேரு மாகும்
**730 

#203
கான்பூ மணமும் பூவுங் காடும் 
சாரியை யுமெனச் சாற்ற லாகும்
**731 

#204
காவலியுந் துலையுஞ் சோலையுங் காத்தலு 
கற்பக முங்கா வடியும் வயாவும்
**கி
**732 

#205
கிங்கிரர் தூதரும் ஓர்சா தியரும்
**733 

#206
கிஞ்சுகஞ் சிவப்பு முருக்கு மாகும்
**734 

#207
கிடையே வேணியு முவமையுங் கிடையும்
**735 

#208
கிட்டி தலையீற் றாவுங் கிட்டியுந் 
தாளமு மெனவே சாற்ற லாகும்
**736 

#209
கிடங்கே யகழும் வாவியு மாகும்
**737 

#210
கிம்புரி யானைக் கோட்டின் பூணும் 
கேயூரமு முடியு முடியி னுறுப்பும்
**738 

#211
கிருட்டிணன் மாலும் விசையனு மாகும்
**739 

#212
கிருத்திமஞ் செய்தலும் தோலும் பொய்யும் 
பூதமு மெனவே புகல லாகும்
**740 

#213
கிழிகிழி துகிலுஞ் சித்திரப் படமும் 
நிதிபடு பொதியுமென நிகழ்த்த லாகும்
**741 

#214
கிழக்குக் கீழுங் குணக்கு மாகும்
**742 

#215
கிழமை மூப்பு முரிமையும் வாரமும் 
குணமு மாட்சியுங் கூற லாகும்
**743 

#216
கிளர்கோட் டுப்பூந் தாது மெல்லும்
**744 

#217
கிளைகிளைத் தலும்ஓர் பண்ணும் வேயுஞ்
சுற்றமு மெனவே சொற்ற லாகும்
**745 

#218
கிள்ளை குதிரையுங் கிளியு மாகும்
**746 

#219
கிறியே வழியும் பொய்யு மாகும்
**747 

#220
கின்னர மாந்தையும் யாழு மிதுனமும் 
நீர்ப்புள் ளுங்கின் னரமு நிகழ்த்தும்
**கீ
**748 

#221
கீசகந் தூக்கணமுங் கவியும் வேயும்
**749 

#222
கீத மிசையும் வண்டு மூங்கிலும்
**750 

#223
கீரம் பாலுந் தீபமுங் கிளியும்
காரிப் புள்ளுங் கழற லாகும்
**751 

#224
கீலால முதிரமுங் காடியு நீரும்
**752 

#225
கீலம் பிசினும் நாணு மாகும்
**753

#226
கீழ் கிழக்கு மிடமுங் கயமையுங் கீழும்
**754 

#227
கீழ்தல் கீண்டலுங் கிழித்தலு மாகும்
**கு
**755 

#228
குசமை செந்திருக்கம் பூவுமலர்ப் பொதுவும்
**756 

#229
குஞ்சங் கூனுமீ யோட்டியுங் குறளும்
குறளைச் சொல்லுங் குன்றியு நாழியும்
**757 

#230
குஞ்சரங் குவளையும் யானையு மாகும்
**758 

#231
குடம்பை முட்டையுங் கூடு மேரியும்
**759 

#232
குஞ்சியாண் மயிரும் புள்ளின் பார்ப்பும் 
குன்றியின் புதலுங் கூற லாகும்
**760 

#233
குடங்கர் குடிசையுங் கும்பமு மாகும்
**761 

#234
குடந்த மஞ்சலியும் திரட்சியு மாகும்
**762 

#235
குட்டமோர் நோயும் குளமு மாழமும்
**763

#236
குடியூருங் குலமும் புருவமுங் குடியும் 
கோத்திர முமெனக் கூற லாகும்
**764 

#237
குடஞ்சுட்டாவு மெருமையு மாகும்
**765 

#238
குடிஞைபுட் பொதுவுங் கூகையு மாறும் 
பதியுங் குச்சும் பகர லாகும்
**766 

#239
குடுமி வில்லும் வெற்றியு முச்சியும் 
குவட்டி னுச்சியு மாண்மயிரு மாகும்
**767 

#240
குடங்கூத்தும் பசுவுங் குடமு நகரும் 
கழைக்கட் டியுமா லாடலு மாகும்
**768 

#241
குடை குடையுங் கொடையும் கல்லையுமாகும்
**769 

#242
குண்டம் பன்றியுங் குண்டமு மாகும்
**770 

#243
குணுங்கர் தோற்கருவி யோரும் புலையரும் 
குயிலுவ ரும்மெனக் கூற லாகும்
**771 

#244
குண்டு சிறு செய்யுங் குண்டு மாழமும்
ஆண்குதிரையுங் கோறலு மறைய லாகும்
**772 

#245
குணில் குறுந்தடியுங் கடிப்புங் கவணும்
**773 

#246
குணங்கயிறும் பண்புங் கும்பமும் நீர்மையும் 
வில்லின் நாணும் விளம்ப லாகும்
**774 

#247
குண்டலம் விண்ணுங் குழையும் வட்டமும்
**775 

#248
குத்தி மண்ணு மடக்கமு மாகும்
**776

#249
குத்திரம் வஞ்சமு மலையு மாகும்
**777 

#250
குதைவிற் குதையும் பசியு மாகும்
**778 

#251
குத்தல் கொடுத்தலுங் குத்தலு மாகும்
**779 

#252
குந்தமோர் நிதியும் நோயும் வேலும்
குருந்தமுங் குதிரையுங் கூற லாகும்
**780 

#253
குபேரனம் புலியுங் குபேரனு மாகும்
**781 

#254
குமரன் கட்டிளமையு முருகனு மாகும்
**782 

#255
கும்பி சேறும் வயிறுங்குஞ் சரமும் 
நரகமு மெனவே நவில லாகும்
**783

#256
கும்பசன் குறுமுனியுந் துரோணாச் சாரியும்
**784 

#257
குமுத மடுப்பு மோசையு மாம்பலும்
நெய்தலுந் திக்கானையு நிகழ்த்த லாகும் 
**785 

#258
குமரிகற் றாழையுங் கன்னியுங் காளியுங்
கொற்றவையு முமையும் கேரள நதியும் 
அணங்கு மெனவே யறைய லாகும்
**786 

#259
கும்பம் ராசியுங் குடமுங் கும்பியின் 
மத்தகமு மெனவே வழங்க லாகும்
**787 

#260
குயிறல் கூவலுஞ் செறிதலுங் குடைதலும் 
செய்தலுந் தாண்டலு மாய்தலு மாகும்
**788 

#261
குய்வு கறிகரித்தலுங் குளி[ர்] மணப் புகையும்
**789 

#262
குய்யம் யோனியுங் குத்திரமு மறைவும்
**790 

#263
குயமரி வாளுங் கொங்கையு மிளமையும்
**791 

#264
குயில் கோகிலமு மேகமு நிரையுந் 
துவாரமு மகவானுஞ் சொல்ல லாகும்
**792 

#265
குரையிடைச் சொல்லுங் குதிரையு மோசையும்
**793 

#266
குருவி புள்ளு மூல நாளும்
**794 

#267
குருகு புள்ளு மிளமையுங் கொலனும் 
கோழியு மூலமு நாரையுங் கைவளையும் 
வெண்மையுங் குருக்கத் தியுமுலை மூக்கும் 
நாகு மெனவே நவில லாகும்
**795 

#268
குரம்பை குடிலு முடலு மிசையும்
**796 

#269
குருமாத் திரையும் வியாழமு முயர்ச்சியும் 
குரவனு நிறமும் பெருமையு நோயும் 
குரவமு மெனவே கூறலாகும்
**797 

#270
குரல்பல் குரலுங் கூந்தலுஞ் சிறகும் 
கதிருந் தினையும் யாழி னரம்புஞ் 
சதங்கையும் பாடலமும் வாசிக் கோவையும் 
இசையுந் தொண்டையு மியம்ப லாகும்
**798 

#271
குரும்பை புற்(றாஞ்] சோறு மிள நீருங் குரும்பையும்
**799 

#272
குரவையோர் கூத்துங் கடலு மாகும்
**800 

#273
குரங்(கி] கள்சந் திரனு மாகும்
**801 

#274
குருட னந்தகனு மழைக்கோளு மாகும்
**802 

#275
குரங்கரியும் வளைவும் விலங்கின் பொதுவும்
**803

#276
குருதி செவ்வாயுங் குருதியுஞ் சிவப்பும்
**804 

#277
குரம்வாசிக் குளம்புஞ் சேதாவு மாகும்
**805 

#278
குல்லை கஞ்சாவும் வெட்சியுந் துழாயும்
**806 

#279
குலமி ரேபதியுஞ் சாதியுங் கோயிலும் 
கூட்டமு மில்லமுங் கூற லாகும்
**807 

#280
குலைசெய் கரையு மம்பின் குதையும் 
காயின் கொத்தும் வில்லு மாகும்
**808 

#281
குலிங்கமூர்க் குருவியும் வாசியு மாகும்
**809 

#282
குவடுமலை யுச்சியு மலையுமரக் கொம்பும்
**810 

#283
குவலையம் பூமியுங் குவளையு நெய்தலும்
**811 

#284
குவவு திரட்சியுங் குவிதலும் பெருமையும்
**812 

#285
குவளை விழியு நெய்தற் பூவும்
**813

#286
குவாலே குவிதலு மேடு மாகும்
**814 

#287
குழலாண் மயிரும் பெண்மயிரும் துளையும்
இசைக்கரு வியுமென வியம்ப லாகும்
**815 

#288
குழியே வயிறும் குண்டு மாகும்
**816 

#289
குழிசி மிடாவும் பானையு மாகும்
**817 

#290
குழைகுண் டலமுந் தளிருஞ் சேறும் 
துவாரமுங் காடும் படையுறுப்பு மாகும்
**818 

#291
குழியம் பார வளையுந் திரட்சியும்
**819 

#292
குழையே பாட்டு மிசையு மாகும்
**820 

#293
குளங்குளமு நெற்றியுஞ் சர்க்கரையு மாகும்
**821 

#294
குளியம் வேங்கையு முருண்டையு மாகும்
**822 

#295
குளிர்குட முழாவு மழுவு நண்டும் 
கவணுங் குளிர்ச்சியு மீனினத் தொழுக்கமும்
இருத்தலு மிலைமூக்கரி கத்தியு மாகும் 
**823 

#296
குளிரி குடமுழவு நண்டு மாகும்
**824 

#297
குறும்பொறை பாறை குறிஞ்சி நிலத்தூரு மலையுங்
காடு மெனவே கழற லாகும் 
**825 

#298
குறிஞ்சிமலைச் சார்பும் யாழுமோர் பண்ணும் 
இசையுஞ் செம்முள்ளியு மியம்ப லாகும்
**826 

#299
குறளே பூதமும் குறளரும் குறுமையும்
**827 

#300
குற்றல் பறித்தலுங் கோறலு மாகும்
**828 

#301
குறுகல் பறித்தலுங் கிட்டுதலு மாகும்
**829 

#302
குறடு திண்ணையும் பலகையு மாகும்
**830 

#303
குறுந்தடி குணிலும் பொதிப்பெயரு மாகும்
**831 

#304
குறுமை யழங்குங் குறுகினவு மாகும்
**832 

#305
குன்ற மலையுஞ் சதையமு மாகும்
**833 

#306
குவ்வு புவியும் நான்கா முருபும்
**கூ 
**834 

#307
கூடலாண் பெண்ணொடு கூடுதலுங் குறியு 
மதுரையு மெனவே வழுத்த லாகும்
**835 

#308
கூடமலை யுச்சியு மறைவும் பொய்யும்
வஞ்சமுஞ் சம்மட்டியும் கூடமுங் கூட்டமும் 
அண்டமும் யானையின் நிலையு மில்லும்
**836 

#309
கூட்டங் கூட்டமும் பிண்ணாக்கு மூணும் 
குன்றின் முடிவுங் கூற லாகும்
**837 

#310
கூத்த னுயிரும் கடனு மாகும்
**838 

#311
கூர்தல் பெண்குழலுங் கமுகுமயிற் பீலியும் 
**839 

#312
கூரல்பெண் மயிரும் புட்சிறகு மாகும்
**840 

#313
கூரே கூர்மையு மிகுதியு மாகும்
**841 

#314
கூல நீர்க்கரையும் வரம்புங் குரங்கும் 
பாகலு மாவணமும் பசுவுமங் காடியும் 
விலங்கின் வாலும் பண்ணி காரமும்
**842 

#315
கூவிரந் தேரின் கொடிஞ்சியும் குவளையும் 
தேரு மெனவே செப்ப லாகும்
**843 

#316
கூவுதல் கரைதலும் பேசுதலு மாகும்
**844 

#317
கூழை புட்சிறகும் பெண்மயிரும் பொன்னும் 
படையுறுப்பு நடுவுங் குரலும் பாம்பும் 
சேறும் கூழையும் பீலியுங் கூறுவர்
**845 

#318
கூழ்பல வுணவும் பயிரும் பொன்னும்
**846 

#319
கூளி சுற்றமும் பேயு மெருதும் 
பூதமுங் குறளனு நட்புந் தொகுதியும் 
வீரனு மெனவே விளம்ப லாகும்
**847 

#320
கூளியர் நண்பரும் வீரருங் குறவரும் 
பூத வீரரும் புகல லாகும்
**848

#321
கூற்று வார்த்தையும் பங்குங் காலனும்
**849 

#322
கூனல்வெண் சங்குங் கூனலு மாகும்
**கெ
**850 

#323
கெடுதல் சாய்தலு மவிதலு மாகும்
**851 

#324
கெழுவுதல் பற்று மயக்கமு மாகும்
**கே
**852 

#325
கேகய மசுணப் புள்ளுமோர் பண்ணும் 
வில்லு மஞ்ஞையும் விளம்ப லாகும்
**853 

#326
கேசமாண் மயிரும் பெண்பான் மயிரும் 
அஃறிணை மயிரு மறைய லாகும்
**854 

#327
கேசரம் வண்டும் பூந்தாது மகிழும்
**855 

#328
கேடகம் பலகையும் பரிசையு மூரும் 
சிங்கா சனமுஞ் செப்ப லாகும்
**856 

#329
கேடம் கிளியு மாறு மாகும்
**857 

#330
கேட்டை யசைச்சொல்லுங் கேட்டையு முகடியும்
**858

#331
கேதார மஞ்ஞையு மோரூரு மாகும்
**859 

#332
கேது செம்பாம்புங் கொடியுமோர் நாளும் 
நெருப்பு மெனவே நிகழ்த்த லாகும்
**860 

#333
கேவலந் தனிமையு முத்தியு மாகும்
**861 

#334
கேழல் யானையும் பன்றியு மாகும்
**862 

#335
கேழே நிறமு மொளியு மொப்பும்
**863

#336
கேள்வி கல்வியுஞ் செவியும் யாழும்
**864 

#337
கேளே நட்புங் கிளையுங் கணவனும்
**கை
**865 

#338
கைக்கிளை யாழ்நரம்பு மொருதலைக் காமமும்
**866 

#339
கைத்தல் சினமுங் கசப்பு மாகும்
****867 

#340
கைதூ வாமை கையொழி யாமையும் 
படை விகற் பமுமெனப் பகர லாகும்
**868 

#341
கைத்துப் பொன்னும் வெறுப்பு மாகும்
**869 

#342
கைபடை வகுப்பு மொழுக்கமுங் கரமும் 
சிறுமையுங் குற்றமுந் தங்கையுஞ் சார்பும் 
ஒப்பனையு மிடமு நஞ்சு மாகும்
**கொ
**870 

#343
கொக்குமா மரமுங் குரண்டமு மூலமும் 
குதிரையுஞ் செந்நாயுங் கூற லாகும்
**871 

#344
கொக்கரை வில்லுஞ் சங்கும் வளையும் 
பாணியு மெனவே பகர லாகும்
**872

#345
கொங்கு மலர்த்தாது மணமுந் தேனும்
**873

#346
கொச்சை கொச்சையும் வெள்ளாடு மாகும்
**874 

#347
கொச்சி கொச்சியுந் தீயு மாகும்
**875 

#348
கொட்புத் திரிதலுஞ் சுழற்சியு மாகும்
**876 

#349
கொடுப்பை குன்றருவியுந் தாம்பையுங் குளமும்
பச்சிலை யும்மெனப் பகர லாகும்
**877 

#350
கொடிகரும் பிள்ளையும் வல்லியுந் துவசமும் 
ஒழுங்கு மெனவே உரைக்க லாகும்
**878 

#351
கொடியன் கேதுவுங் கொடியனு மாகும்
**879

#352
கொடிறு பூசமுங் கருவிப் பற்றும்
கதுப்பு மெனவே கழற லாகும்
**880 

#353
கொட்டி பார்த்திடு குறியுங் கூட்டமும்
வாயிலுங் கூத்தும் வழங்க லாகும்
**881 

#354
கொண்டை மயிர்முடியு மிலந்தைக் கனியும்
**882 

#355
கொண்மூ விண்ணு மேகமு மாகும்
**883 

#356
கொண்டல் கீழ்காற்று மேகமுங் கூதிரும்
**884 

#357
கொந்தளம் பெண்மயிரும் குருளைமயிர்க் கொத்தும்
**885 

#358
கொப்பர முன்கையு மல்லடைவு மாகும்
**886 

#359
கொம்புவீழ் சினையு முட்டையு மாகும்
**887 

#360
கொம்மை கைகுவித்துக் கொட்டலு மிளமையும் 
முலையும் வட்டமுந் திரட்சியுங் கொம்மையும்
அழகுத் திட்டையும் வலியு மாகும்
**888 

#361
கொல்லை கொல்லையுஞ் சோலையு மாகும்
**889 

#362
கொல்கொலைக் கேவலு மசையும் வருத்தமும்
ஐயமுங் கருங்கொலுஞ் செங்கொலு மாகும்
**890 

#363
கொல்லியோர் பண்ணுமோர் வெற்பு மாகும்
**891 

#364
கொற்றம் வெற்றியு மரசியலு மாகும்
**892

#365
கொற்றி கோவிள ங் கன்றுந் துர்க்கையும் 
கொற்றியு மெனவே கூற லாகும்
**893

#366
கொன்பய னில்லாச் சொல்லும் பொழுதும் 
பெருமையு மச்சமு மிடைச்சொல்லு மாகும் 
**கோ
**894 

#367
கோகிலம் பல்லியுங் குரங்குங் குயிலும் 
துவாரமு மெனவே சொல்ல லாகும்
**895 

#368
கோசமாண் குறியு முறையு முட்டையும் 
பண்டா ரமுமதி லுறுப்பும் பகருவர்
**896 

#369
கோசிகஞ் சாம வேதமுங் கூறையும் 
பட்டா டையுமெனப் பகர லாகும்
**897 

#370
கோடகம் புதுமையு முடியுறுப்புங் குதிரையும்
**898 

#371
கோடியோ ரெண்ணும் புதுமையுந் தூசும்
**899 

#372
கோடை வெண் காந்தளுங் குதிரையும் வேனிலும் 
மேல்காற்று மென்ன விளம்ப லாகும்
**900 

#373
கோடு சங்கு மூதுங் கொம்பும் 
கொடுமுடியுங் கரையும் வரம்புங் குன்றும் 
மாட்டின் கொம்பும் விலங்கின் கொம்பும் 
மரத்தின் கொம்பும் வழங்க லாகும்
**901 

#374
கோட்ட நீர் நிலையும் படப்பையுங் கோவிலும் 
அவ்விய மும்பசுக் கூட்டமு நகரும் 
கோடபதியு நாடுந் குரங்குங் கறங்கும் 
குரவும் வாசமுங் கோணமும் குளமும் 
உண்கலமும் வயலு முரைக்க லாகும் 
**902

#375
கோடிகங் கெண்டியுந் துகிலும் பூந்தட்டும் 
**903 

#376
கோடல் காந்தளும் சமழ் த்தலுங் கொள்ளலும் 
வளைத்தலு மெனவே வழங்க லாகும் 
**904

#377
கோடரங் குரங்குங் குதிரையுஞ் சோலையும் 
கொம்பு மயிர்ச்சாந்து மரப்பொ தும்பரும் 
தேர்மொட்டு மெட்டியுஞ் செப்ப லாகும்
****905 

#378
கோட்டி சபையும் கோபுர வாயிலும் 
கூத்தின் கோட்டியுங் கூற லாகும்
**906 

#379
கோணம் வாளு மூக்குங் குதிரையு 
அங்குச முமென வறைய லாகும்
**907 

#380
கோணல் வளைவுஞ் சிந்துங் கூனு 
மாறு கொளலும் வழங்க லாகும்
**908 

#381
கோதை கைக்கட்டியு மாதருங் குழலு 
மாலையுங் காற்று முடும்புஞ் சேரனும்
**909 

#382
கோத்திரம் பூமியும் குலமும் மலையும்
**910 

#383
கோபாலர் மாலு மிடையரு மாகும்
**911 

#384
கோமான் பன்றியும் மூத்தோனு மாகும்
**912 

#385
கோரம்பூ மொட்டுஞ் சோழன் குதிரையும் 
கொடுமையும் வட்டிலும் கூற லாகும்
**913

#386
கோல மொப்பனையுங் கொழுந்து நீரோட்டமும் 
பீர்க்கு மழகும் பன்றியும் கோலமும் 
பாக்கு மிலந்தையு மிலந்தைக் கனியும்
**914 

#387
கோல்வாட் கோலுந் திரட்சியுங் கோலும் 
ஈட்டியு மிரந்தையுங் குதிரை மத்திகையும் 
தந்திரியு மம்புந் துகிலிகையுந் துலாமும் 
முட்கோலு மஞ்சனக் கோலுஞ்செங் கோலும்
**915 

#388
கோவன் வசிட்டனு மீசனு மாகும்
**916 

#389
கோழி யுறையூருங் கோழியு மாகும்
**917 

#390
கோளி யாலு மத்தியுங் கொழுஞ்சியும் 
பூவாது காய்க்கு மரமுங் கொள்வோனும்
**918 

#391
கோவிழியும் விண்ணுஞ் சுவர்க்கமும் பசுவும் 
அம்பு நீருங் குலிசமு ந் திக்கும் 
பூமியு மன்னனுங் கிரணமு முரையும் 
ஏவலுங் குன்று மியம்ப லாகும் 
**கெள
**919

#392
கெளடமோர் கொடியு மோர்நாடு மாகும் 
**  ககர வருக்கம் முற்றிற்று 

@3 சகர வருக்கம்
**ச
**920 

#1
சகடம் பேரிகையும் பாண்டிலு மாகும்
**921 

#2
சகமோ ரெண்ணும் பூமியுஞ் சட்டையும் 
சகமும் பாதியுஞ் சட்கோணு மாகும்
**922 

#3
சகோரம் சக்கர வாகமும் புள்ளும் 
பேராந்தை யுஞ்செம் போத்து மாகும்
**923 

#4
சகுந்தம் புட்பொதுவும் பூகமு மாகும்
**924 

#5
சகுனம் புட்பொதுவு நிமித்தமுங் கிழங்கும்
**925 

#6
சகுனி பறவையு நிமித்தம்பார்ப் பவனும்
**926 

#7
சக்கரஞ் செங்கோலுங் கடலும் பிறப்பும் 
தேருருளுந் தரணியு மலையும் பெருமையும்
வட்டமு மோர்புள்ளுஞ் சக்கரமு மாகும் 
**927 

#8
சக்கிரி குயவனுஞ் செக்கானும் பாம்பும் 
மாயனு மரசனும் வழங்க லாகும்
**928 

#9
சங்க மெனும் பெயர் சபையும் புணர்ச்சியும் 
கணைக்கா லுஞ் சங்கும் வளையும் வெற்றியும் 
புலவரு மன்புமோ ரெண்ணு மாகும்
**929 

#10
சங்கு கைவளையுங் கோழியு மாகும் 
**930 

#11
சச்சை குழம்புஞ் சட்டையு மாகும்
**931 

#12
சசிபுலோ மிசையுங் கடலுஞ் சந்திரனும் 
மழையுங் கர்ப்பூரமும் வழங்க லாகும்
**932 

#13
சடம்பொய்யு முடலும் வஞ்சமு மாகும்
**933 

#14
சடையே வேணியும் வேரு மாகும்
**934 

#15
சடிலம் நெருக்கமுஞ் சடையுங் குதிரையும்
**935 

#16
சண்டம் குரோதமு மேன்மையு மாகும்
**936 

#17
சண்டன் பானுவுங் கூற்றும் காலனும் 
அலியு மெனவே யறைய லாகும்
**937 

#18
சதம் புள்ளினிறகு நூறு முறுதியும் 
இலையு மெனவே யியம்ப லாகும்
**938 

#19
சத்தியஞ் சபதமு மெய்யு மாகும்
**939 

#20
சத்திரங் குடையு மிரும்பும் வேள்வியும் 
கைவேலுஞ் சத்திர சாலையும் வெண்குடையும் 
சத்திரக் கருவியுஞ் சாற்ற லாகும்
**940 

#21
சத்தி சூலமு முமையுந் தாயும் 
வலியுங் குடையும் வேலுங் கான்றலும் 
துவசமு மிச்சையு மிசையுஞ் செய்யுளும்
**941 

#22
சதிதாள வொத்துங் கற்புடை யாளும் 
சதிசெய் வானு முரோகணியும் வட்டமும்
**942 

#23
சந்தங் கவிதையு நிறமுஞ் சந்தனமும் 
அன்பும் வனப்பு மறைய லாகும்
**943 

#24
சந்தி யந்தியுஞ் சதுக்கமு மிசையும் 
மூங்கிலு மெனவே மொழிய லாகும்
**944 

#25
சந்தானந் தேவ தாருவுஞ் சந்தானமும்
**945 

#26
சம்புவே சிவனு மாலு மயனும் 
சூரியனு நரியு மோர்புல்லு நாவலும் 
எலுமிச் சும்வச் சிரமு மியம்பும்
**946 

#27
சம்பஞ் சம்பீரமும் வயிரமு மாகும்
**947 

#28
சமித்தல் பொறுத்தலு நடத்தலு மாகும்
**948 

#29
சமழ்த்தல் நாணமுந் தாழ்த்தலும் வருத்தமும்
**949 

#30
சமனே யணித்தலு நடுவு நமனும்
**950 

#31
சயஞ் சருக்கரையு மாலையும் வெற்றியும் 
பானுவு மல்லியும் பகர லாகும்
**951 

#32
சயிந்தவங் குதிரையும் வரம்புந் தலையும் 
இந்துப்பு மெனவே யியம்ப லாகும்
**952 

#33
சரபஞ் சிம்புள்ளும் வெற்பாடு மாகும்
**953 

#34
சரணம் பாலமு நகரமுஞ் சார்பும்
**954 

#35
சரிதை பிச்சையுஞ் சரிதைத் தொழிலும்
**955 

#36
சரமூக்கின் காற்றுங் கணையு நாணலும் 
பொருமணி வடமும் மலர்ச்சரமு மாகும்
**956 

#37
சரிசமமும் வழியுங்கைவளையு மழகும்
**957 

#38
சராவமே (ய]கலுஞ் சுத்திகையுஞ் சலாகையும்
**958 

#39
சருவே தெய்வ வுணவுஞ் சோறும் 
அணங்கு மெனவே யறைய லாகும்
**959 

#40
சருவம் பானையுஞ் சட்டுவமு மாகும்
**960 

#41
சலமே நீரும் பொய்யு நடுக்கமும்
வயிரமுங் கோபமும் வழங்க லாகும்
**961 

#42
சலதரம் புயலும் வாவியு மாகும்
**962 

#43
சலாகை நன்மணியுஞ் சவள[மு] நாராசமும் 
**963

#44
சவுரி திருவு மாலுங் கன்னனும் 
சனியும் யமனும் யமுனையு மாகும்
**964 

#45
சவிமணிக் கோவையுஞ் செவ்வையும் வலியும் 
வனப்புங் காந்தியு மெனவகுத் தனரே
**965 

#46
சவமே பிணமு மூங்கிலு மாகும்
**966 

#47
சனியொரு வாரமுந் துக்கமு மாகும்
** சா
**967 

#48
சாகம் வெள்ளாடுந் தேக்கும் வண்டும் 
சாகினி யுந்தே னியுஞ் சாற்றும்
**968 

#49
சாகினி சேம்புங் கீரையு மாகும்
**969 

#50
சாகரங் கடலுந் துயிலொழித் தலுமாம்
**970 

#51
சாகாடு பண்டியு மோர்நாளு மாகும்
**971 

#52
சாடி கூறையுந் தாழியுங் கோட்சொல்லும் 
**972 

#53
சாதகம் வானம் பாடியும் பிறப்பும்
சாதனையும் பூதமுஞ் சாற்ற லாகும்
**973 

#54
சாதனை பொய்சலஞ் சாதித்தலு மாகும்
**974 

#55
சாதி மூங்கிலும் பிரம்புங் கள்ளும் 
தேக்குஞ் சீந்திலுஞ் சிறுசெண் பகமும் 
தேனுஞ் சாதியுஞ் செப்ப லாகும்
**975 

#56
சாத முண்மையுஞ் சாதமும் பூதமும் 
**976 

#57
சாத்தன் காரியுஞ் சாத ரூபியும்
புத்தனு மருகனும் புகல லாகும்
**977 

#58
சாத்திரி நெல்லியு முள்ளியு மாகும்
**978 

#59
சாந்தாற்றி யால வட்டமும் பீலியும்
**979 

#60
சாந்தஞ் சந்தனமும் பொறுமையும் சாந்தமும்
**980 

#61
சாபஞ் சபித்தலும் வில்லு மசமும்
**981 

#62
சாமஞ் சாமமும் பச்சையுங் கருமையுஞ்
சாம வேதமு மிரவு மாகும்
**982 

#63
சாம்பல் கூம்புதலும் பழம்பூவுஞ் சாம்பலும்
**983 

#64
சாம்புதல் சாய்தலுங் கூம்புதலு மாகும்
**984 

#65
சாமி யாசானு மரசனும் தலைவியும்
வியாழமுந் தலைவனுஞ் சாமியும் வேளும்
**985 

#66
சாம்பு பொன்னும் பொறையுஞ் சாற்றும்
**986 

#67
சாயல் சரிவு மழகு மென்மையும் 
மெய்ப்பாடு மொப்பும் விளம்ப லாகும்
**987 

#68
சாரல் யாழோசையும் மலையின் சாரலும் 
மலையின் மென்பாலும் வழங்க லாகும்
**988 

#69
சாரிகை யசைச்சொல்லும் பூவையுஞ் சுங்கமும் 
சுழற்காற் றும்மெனச் சொல்ல லாகும்
**989 

#70
சாரங்கஞ் சாதகப் புள்ளும் வண்டும் 
மானு மெனவே வழங்க லாகும்
**990 

#71
சாரச மினிமையுஞ் சாரமு மாகும்
**991 

#72
சார்ங்க மாயோன் வில்லும்விற் பொதுவும்
**992 

#73
சாரே யிடமும் பற்றுஞ் சார்பும்
**993 

#74
சாரணர் சமண முனிவோரு மொற்றரும்
**994 

#75
சாலம் வலையுஞ் சவையு மாச்சாவும் 
சாலகம் கூட்டமு மதிலும் விசாலமும்
**995 

#76
சாலி கள்ளுஞ் செந்நெல்லுங் கவசமும் 
அருந்ததி யும்மென வறைய லாகும்
**996 

#77
சாலை குதிரைப் பந்தியுஞ் சோலையும் 
கோயிலுஞ் சத்திரமுங் கூற லாகும்
**997 

#78
சாலகஞ் சாளர வாயிலும் வலையும்
பூமொட்டு மென்னப் புகல லாகும்
**998 

#79
சால்பு மாட்சிமையுஞ் சான்றாண் மையுமாம்
**999 

#80
சாலே நீர்ச்சாலு முழுத சாலுமாம்
**1000 

#81
சாழல் விளையாட்டுங் கரடியு மாகும்
**1001 

#82
சாறு கள்ளும் விழவுஞ் சாறும் 
தருவின் குலையுஞ் சாற்ற லாகும்
**1002 

#83
சானகி வேயுந் திருவுங் கங்கையும்
**1003 

#84
சானம் பொன்வர்க்கமுந் தமிழு மாகும்
**1004 

#85
சானு வெற்பு மதன்பக்கமு முழந்தாளும்
**1005 

#86
சான்றா னருக்கனு மும்மீனு மீக்கொளும்
**சி
**1006 

#87
சிகரந் தலையுந் திவலையுந் திரையும் 
கவரி மாவு மலையி னுச்சியும் 
சிகரமுங் கரகமு மலையு மாகும்
**1007 

#88
சிக்கங் குடுமியுஞ் சிப்பு முச்சியும் 
சிறையு முறியு மெலிவுஞ் செப்பும்
**1008 

#89
சிகிசிலம்பு மயிலுங் கேதுவுந் தீயும்
**1009 

#90
சிகண்டி பாலை யாழி னோசையும் 
மஞ்ஞையு மலியும் வழங்க லாகும்
**1010 

#91
சிகரி கோபுரமும் வெற்பு நாரையும் 
சீறெலி யும்மெனச் செப்ப லாகும்
**1011 

#92
சிகழிகை மாலையு மயிர் முடியு மாகும்
**1012 

#93
சிங்கல் குன்றலுங் கெடலுமாகும்
**1013 

#94
சிதலை நோயுந் துணியுஞ் செல்லும்
**1014 

#95
சிதஞ்செய முறலும் வெள்ளையு ஞானமும் 
திடனும் விண்மீனுஞ் செப்பலாகும்
**1015 

#96
சித்திரஞ் சித்திர கவியு மழகும் 
கோளும் நடனமுங் காடும் பொய்யும் 
வியப்புங் காணு மோவியமு மாகும்
**1016 

#97
சித்தர் திடமுஞ் சித்தமு மாகும்
**1017 

#98
சித்திர பானுவோ ராண்டும் பானுவும் 
தீயு மெனவே செப்ப லாகும்
**1018 

#99
சித்திர னோவனுந் தச்சனு மழகனும்
**1019 

#100
சிதரறு பதமுந் துணியும் திவலையும் 
உறியு மெனவே யுரைக்க லாகும்
**1020 

#101
சிதடி சிச்சிலியுஞ் சிள்வீடு மாகும்
**1021 

#102
சிதடனந் தகனு மூடனு மாகும்
**1022 

#103
சித்து ஞானமும் செயமு மாகும்
**1023 

#104
சிந்துரம் புளியுஞ் சிவப்புந் திலதமும் 
செங்குடையும் யானையும் வனப்புஞ் சிந்தூரமும் 
வெட்சியு மெனவே விளம்ப லாகும்
**1024 

#105
சிந்து வாரம் நொச்சியுங் கடலும்
**1025 

#106
சிந்து முச்சீரு நதியுங் குறளும் 
கடலு நீருந் தேசமு மாகும்
**1026 

#107
சிமிலிசிள் வீடு முறியுங் குடுமியுஞ் 
சிறிய வீயுஞ் செப்புவர் புலவர்
**1027 

#108
சிமையமலை யுச்சியுந் தென்றலும் வெற்பும் 
குடுமியு மெனவே கூற லாகும்
**1028 

#109
சிரம் நெடுங்காலமு முறியுஞ் சென்னியும்
**1029

#110
சிரை வானரமு நரம்பு மாகும்
**1030 

#111
சிரகங் கரகமுஞ் சென்னியிற் கோடும் 
திவலையு மெனவே செப்ப லாகும்
**1031 

#112
சிலையோர் மரமு மலையும் வில்லும் 
கல்லு மெனவே கழற லாகும்
**1032 

#113
சில்லை தூர்த்தையுஞ் சிள்வீடும் பகன்றையும்
**1033 

#114
சில்லிசிள் வீடும் கீரையும் வட்டமு 
தேருரு ளும்மெனச் செப்ப லாகும்
**1034 

#115
சிலம்பு மலையு மொலியுஞ் சிலம்புமாம்
**1035 

#116
சிலீமுக முலைக்கண்ணு மம்பு மாகும்
**1036 

#117
சில்லிகை நல்லாடை சிள்வண்டு மாகும்
**1037 

#118
சிலதரா ரியருஞ் சேடரு மாகும்
**1038 

#119
சிவமே நன்மையு முத்தியுங் குறுணியும்
**1039 

#120
சிவப்புச் சினமுஞ் சினக்குறிப்புஞ் சிவப்பும்
**1040 

#121
சிவை கொல்ல னுலையு மரவேரு மோரியும் 
பார்ப்பதி யுமெனப் பகர லாகும்
**1041 

#122
சிறைநீர்க் கறையுங் காவலும் பக்கமும் 
சிறகும் வேறிடமும் மதிலுஞ் செப்பும்
**1042 

#123
சிறுமை நோயுந் துயரமுந் துன்பமும்
**1043 

#124
சிறுமூ லகன்கா மனுந்திப் பிலியும் 
பூடு மெனவே புகல லாகும்
**1044 

#125
சினைமரக் கோடு முட்டையுங் கருவும் 
உறுப்பு மெனவே யுரைக்க லாகும்
**சீ
**1045 

#126
சீகரங் கவரி மாவுந் திவலையும் 
மழையுங் கரகமுஞ் செங்கையு மாகும்
**1046 

#127
சீதை யுழவு சாலுந் திருவும்
பொன்னாங் காணியும் புகல லாகும்
**1047 

#128
சீத்தைகீழ் மக்களும் பதனழிவு மாகும்
**1048 

#129
சீதங் குளிரு மேகமு நீரும்
பனியு மெனவே பகர லாகும்
**1049 

#130
சீப்புதாழ்ப் பாளுஞ் சீப்புங் கங்கமும்
**1050 

#131
சீர்சொல்லின் சீரும் செம்பொரு[ளு] மோசையும் 
ஒல்கலுந் தண்டுஞ் செல்வமு மழகுஞ் 
சீர்த்தியும் காத்தண்டுஞ் சிறப்பும் பாரமும் 
தாள வொத்தும் பலவகை யியங்களும்
**1051 

#132
சீரு ளாக்கமுஞ் செம்பு மீயமும்
**1052 

#133
சீலந் தண்டித்தலும் ஞானமும் குணமும் 
தருமமு மொழுக்கமுஞ் சாற்ற லாகும்
**1053

#134
சீவன் வியாழமு முயிரு மாகும்
**1054 

#135
சீவனியோர் மருந்துஞ் செவ்வழி யாழும் 
உயிரு நீரு முரைக்க லாகும்
**சு
**1055 

#136
சுகஞ்சுக் கிரீபமு நன்மையுங் கிளியுஞ் 
சுங்கனு மின்பமுஞ் சொல்ல லாகும்
**1056 

#137
சுக்கை தாரகையு மாலையு மாகும்
**1057 

#138
சுங்கஞ் சிற்பமு மிறையு மாகும்
**1058 

#139
சுசி[யே] கோடையுஞ் சுத்தமுந் தீயும்
**1059 

#140
சுடர்முச் சுடரும் பொறியும் விளக்கும் 
ஒளியும் தளிரு முரைக்க லாகும்
**1060 

#141
சுட்டி நாவும் பட்டமும் சுட்டியும் 
மயிர்முடி யுமென வழங்க லாகும்
**1061 

#142
சுட்டல் காட்டலும் பற்றலு மாகும்
**1062 

#143
சுடுமண் பாண்டமு மிட்டிகையு மாகும்
**1063

#144
சுடிகை யுச்சியு மகுடமுஞ் சுட்டியும் 
மயிர்முடி யுமென வழங்க லாகும்
**1064 

#145
சுடர்க்கடை யென்பது மின்மினியு மயிலும்
**1065 

#146
சுண்டன் மூஞ்சூறுஞ் சதையமு மாகும்
**1066 

#147
சுண்டையோர் செடியுங் கள்ளு மாகும்
**1067 

#148
சுதை சுண்ணச் சாந்தும் வெண்மையு மமுதும் 
உதைகாற் பசுவும் புதல்வியு முடுவும் 
நீறு மெனவே நிகழ்த்த லாகும்
**1068 

#149
சுந்தரி மூஞ்சூறு மிந்திரன் றேவியும் 
துர்க்கையு மம்பிகையுஞ் சொல்ல லாகும்
**1069 

#150
சும்மை நெற்போரு நாடு நகரும் 
ஒலியுஞ் சுமையு முரைக்க லாகும்
**1070 

#151
சுரைபசு முலையு மம்புத் தலையும் 
துளையுஞ் சுரையுங் கள்ளும் பசுவும்
**1071 

#152
சுருங்கை நுழைவாயிலுங் கரந்தகற் படையும்
**1072 

#153
சுரம்பாலை நிலமும் தொனியும் வழியும் 
காடுஞ் சுரமு மருநெறியு மாகும்
**1073

#154
சுரர்குரு வென்பது வியாழமும் போகியும்
**1074 

#155
சுரிகை யுடைவாளுங் கவசமு மாகும்
**1075 

#156
சுருதி வேதமு மொலியு மாகும்
**1076 

#157
சுரியலாண் மயிரும் பெண்பான் மயிரும்
**1077 

#158
சுரியே நரியுஞ் சுரியு மாகும்
**1078 

#159
சுரும்பு வண்டு மலையு மாகும்
**1079 

#160
சுவல்தோண் மேலும் மேடும் பிடரியும்
மாக்குசையு மயிருங் கோயிலு மாகும்
**1080 

#161
சுவாமி குமரனும் வியாழமு முனிவனும் 
தலைவனு மாசானுஞ் சாற்ற லாகும்
**1081 

#162
சுவேதம் வெண்மையும் வேர்வையு மாகும்
**1082 

#163
சுள்ளி குங்குமமுந் துரும்பு மாரமும்
**1083 

#164
சுப்புள்ளின் மூக்குஞ் சுவர்க்கமுஞ் சுண்டனும்
**சூ
**1084 

#165
சூகை யானையுஞ் சூகை யாகும்
**1085 

#166
சூத மாமரமும் வண்டும் பிறப்பும்
பாகரு மெனவே பகர லாகும்
**1086 

#167
சூதகம் பெண்முலைக் கண்ணும் பிறப்பும் 
ஆசூசமும் பெண்பாற் பூப்பு மாகும்
**1087 

#168
சூது தாமரையுஞ் சூது மாகும்
**1088 

#169
சூத்திரன் சாதியுந் தச்சனு மாகும்
**1089 

#170
சூர் அஞ்சாமையும் தெய்வமும் வஞ்சமும் 
நோயு மணங்கு மச்சமுந் துயரும்
**1090 

#171
சூரிமூ தணங்கும் சூரியனு மாகும்
**1091 

#172
சூரன் வீரனு நாயுந் தீயும்
சூரிய னுமெனச் சொல்ல லாகும்
**1092 

#173
சூரியன் தீயுஞ் சூரியனு மாகும்
**1093 

#174
சூல்சூ ழுதலுஞ் சினையு மாகும் 
**1094 

#175
சூல மிரேவதியுஞ் சிவனா யுதமும்
**1095 

#176
சூலி சிவனுங் காளியு மாகும்
**1096 

#177
சூழி கரிமுக படாமுஞ் சுனையும்
**1097 

#178
சூழ்வோர் மந்திரியுஞ் சூழ்வோரு மாகும்
**1098 

#179
சூழல் விசாரமுஞ் சூழ்தலு மிடமும்
**1099 

#180
சூளை பொதுப்பெண்ணுஞ் சுள்ளையு மாகும்
**செ
**1100 

#181
செச்சை நீறுஞ் சோடுங் காடுங்
கொச்சை யேறும் வெட்சியுந் தேய்வையும்
**1101 

#182
செடிகுண மின்மையுஞ் செறிவு மொளியும் 
பாவமு மெனவே பகர லாகும்
**1102 

#183
செட்டி குமரனுஞ் செட்டியு மாகும்
**1103 

#184
செண்டு செண்டுங் குதிரைசெல் வீதியும்
**1104 

#185
செதுக்கு மந்தியும் சேறும் பூதமும்
**1105 

#186
செந்து நிரையமு மோரியுஞ் சீவனும் 
சிவப்பு மணுவுஞ் செப்ப லாகும்
**1106 

#187
செப்பஞ் செவ்வையுந் தெருவும் நடுநிலையும் 
நெஞ்சு மெனவே நிகழ்த்த லாகும்
**1107 

#188
செம்பு தாம்பிரமு நவ்வலும் பொன்னும் 
**1108 

#189
செம்மை பெருமையுஞ் சிவப்புஞ் செவ்வையும்
**1109 

#190
செம்மல் சிவனும் வாரியுஞ் செம்மலும் 
அருகனும் பெருமையு மிறைவரும் வீரரும் 
பழம்பூவு மகனுஞ் சிறந்தவனு மாகும்
**1110 

#191
செம்புலம் பாலை நிலமும் படுகளமும்
**1111 

#192
செய்யல் செய்தொழிலுங் காவலுஞ் சேறும் 
ஒழுக்கமு மெனவே யுரைக்க லாகும்
**1112 

#193
செயிரே குற்றமுஞ் சினவலு மாகும்
**1113

#194
செயல்செய் தொழிலு மொழுக்கமு மாகும்
**1114 

#195
செய்விளை வயலும் ஏவல் வினையுமாம்
**1115 

#196
செருந்தி வாட்கோரையுஞ் செருந்திப் புதலும்
**1116 

#197
செல்செவ் வேலு மிடியு மேவலும்
சிதலையும் விண்ணு மேகமு மாகும்
**1117 

#198
செல்வஞ் சுவர்க்கமுஞ் செல்வமுங் கல்வியும்
**1118 

#199
செவ்வி யழகும் பருவமும் பொழுதும்
**1119 

#200
செவிலி முன்பிறந் தாளுந் தாதியும்
**1120 

#201
செவியே கேள்வியுங் காது மாகும்
**1121 

#202
செழுமை வளமுங் கொழுப்பு மாட்சிமையும் 
அழகு மெனவே யறைய லாகும்
**1122 

#203
சென்னி தலையும் பாணனுஞ் சோழனும்
**1123

#204
சென்னியர் செங்கதிர்க் குலத்து வேந்தரும் 
பாணருங் கூத்தரும் பகர லாகும்
**சே
**1124 

#205
சேகர மழகுஞ் சென்னியுஞ் சூதமும்
**1125 

#206
சேக்கை மிருகந்துஞ் சிடமும் முலையும்
தழும்பும் பாயலுஞ் சாற்ற லாகும்
**1126 

#207
சேடு கட்டிளமையு நன்மையும் பெருமையும் 
திரட்சியு மழகுஞ் செப்ப லாகும்
**1127 

#208
சேடி விஞ்சைய ரூரும் பாங்கியும்
**1128 

#209
சேட னல்லோனுஞ் சேடனு மடிமையும் 
பாங்கனு மனந்தனு மிளையோனு மாகும்
**1129 

#210
சேட்டை மூதேவியு முறமுஞ் சேட்டையும்
**1130 

#211
சேண்விண்ணு முயரமு மகலமுஞ் சேய்த்தும் 
நீளமு மெனவே நிகழ்த்த லாகும்
**1131 

#212
சேது செய்கரையுஞ் சிவப்பு மாகும்
**1132 

#213
சேதகஞ் சேறுஞ் சிவப்பு மாகும்
**1133 

#214
சேத்துச் சிவப்பு மசைச்சொல்லு மையமும் 
கருத்து மொப்புங் குறிப்பு மாகும்
**1134 

#215
சேதாரம் வெட்சியும் பொன்றேய் மானமும் 
தேமா வுமெனச் செப்ப லாகும்
**1135 

#216
சேமம் இன்பமுங் காவலு மாகும்
**1136 

#217
சேய் செவ்வாயும் சிறுவனு மிளமையும்
தூரமுஞ் சிவப்பு முருகனு நீளமும்
**1137 

#218
சேலேகந் திலகமுஞ் சந்தனமு மாகும்
**1138 

#219
சேலைகா கோளியுஞ் சேலையு மாகும்
**1139 

#220
சேவல் காவலுஞ் சாவலுஞ் சேறும் 
புள்ளா ணுமெனப் புகல லாகும்
**1140 

#221
சேவகம் வீரமும் யானைதுயி லிடமும் 
துயிலு மெனவே சொல்ல லாகும்
**1141 

#222
சேறு தித்திப்பு நரகமுஞ் சாரமும் 
விழவுங் கள்ளும் விளம்ப லாகும்
**1142 

#223
சேனை படையு மாயுதமு மாகும்
**சை
**1143

#224
சையமோர் மலையும் வெற்பு மாகும்
**1144 

#225
சைவம் புராணமும் சிவனும் ஆகமமும்
இளமையுஞ் சைவ சமயமுஞ் சாற்றும்
**சொ
**1145 

#226
சொல்செந் நெல்லுஞ் சொல்லுங் கள்ளும் 
புகழு மெனவே புகல லாகும்
**1146 

#227
சொர்க்க முலையுஞ் சொக்கமு மாகும்
**சோ
**1147 

#228
சோகங் குறங்குஞ் சோகமு மாகும்
**1148 

#229
சோங்கு நாவாயுங் குருகுங் குரங்கும்
**1149 

#230
சோதி சங்கரனு மாலு மிரவியுஞ் 
சுடருஞ் சோதியும் விளக்கு முடுவும்
**1150 

#231
சோமன் புடவையுஞ் சந்திரனு மாகும்
**1151 

#232
சோர்வு கள்ளுங் காகமு மாகும்
**1152 

#233
சோனை விடாமழை யோணமு மாகும் 
** சகர வருக்கம் முற்றிற்று

@4 ஞகர வருக்கம்
**1153 

#1
ஞமலி மயிலு நாயுங் கள்ளும்
**1154 

#2
ஞாங்கர் மேலும் பக்கமும் வேலும் 
முன்பு மிடமு மொழித லாகும்
**1155 

#3
ஞாட்புப் படையும் பூசலுங் கூட்டமும் 
பாரமு மெனவே பகர லாகும்
**1156 

#4
ஞாழல் துருக்கமு நாகமு மாகும்
**1157 

#5
ஞாளி கள்ளு நாயு மாகும்
**1158 

#6
ஞான நல்ல தத்துவ நூலும் 
அறிவுங் கல்வியு மறைய லாகும்
**1159

#7
ஞெகிழி நெருப்புறு கொள்ளியு நெருப்புஞ் 
சிலம்பும் தீப்பொறியுஞ் செப்ப லாகும்
**1160 

#8
ஞெண்டு கர்க்கடகமும் ஞெண்டு மாகும்
**1161 

#9
ஞெமிர்தல் முறித்தலு முறிதலும் பரப்பும்
**1162 

#10
ஞெரேலெனல் விரைவு மொலியு மாகும்
**1163

#11
ஞெள்ளல் வீதியு மேன்மையும் பள்ளமும் 
பூசலு மிகுதியு முடன்பாடுஞ் சோர்வும் 
ஒலியு மெனவே யுரைக்க லாகும்
**1164 

#12
ஞொள்கல் சோம்பு மிளைத்தலு நோயும் 
அச்சக் குறிப்பு மறைந்தனர் புலவர் 
** ஞகரம் முற்றிற்று

@5 தகர வருக்கம்
**த
**1165

#1
தகைபீடு மழகு மன்பும் பண்பும் 
தகைதலு மியல்பு மிளைப்பு மாகும் 
**1166 

#2
தகரம் நாற்றமு மயிர்ச்சாந்து மீயமும் 
தகரு மெனவே சாற்ற லாகும்
**1167 

#3
தகடென்ற லைமையு மிலையு மாகும்
**1168 

#4
தகுதி பொறையு மாசாரமு மாகும்
**1169 

#5
தகர்மேடமும் ஆடும் பூமியும் தகர்த்தலும்
**1170 

#6
தகைமை யியல்பு மழகும் பெருமையும்
**1171 

#7
தசும்பு குடமு மிடாவும் பொன்னும்
**1172 

#8
தச்சன் தச்சனுஞ் சித்திரையு மாகும்
**1173 

#9
தஞ்ச மெளிமையுந் துணையும் பீடும் 
பற்றுக் கோடும் பகர லாகும்
**1174 

#10
தடைமறு மனைவியுந் தடுத்தலுங் கவசமும்
**1175 

#11
தடம் தடக்கரையும் விரிவு மல்குலும் 
பொய்கையுந் தடமும் யானைத் தண்டமுங் 
கோணலும் விளையும் பெருமையும் பனையும் 
மலையு மெனவே வழங்க லாகும்
**1176 

#12
தடிசா ரங்கமுந் தண்டு மின்னுந் 
தசையு முடும்பு முலக்கையும் வயலும் 
**1177 

#13
தட்டலொற் றறுத்தலுந் தடுத்தலுங் கிட்டலும்
**1178 

#14
தட்டுத்தேர் நடுவுந் தடுத்தலும் பகுத்தலுந் 
திரிகையுந் தட்டும் வட்டமு முட்டுங் 
குற்றமும் பரிசையுங் கூற லாகும்
**1179 

#15
தட்டை தினைத்தாளும் வேயுந் தீயும் 
முண்டமுங் கவணுங் கிளிகடி கோலும் 
கரடிகைப் பறையு முண்கலனுஞ் சின்னமும்
**1180 

#16
தடாரி மத்தளமும் பறையு மாகும் 
**1181 

#17
தடறு பத்தனுந் தொண்டையு நாரையும் 
படையுறை யும்மெனப் பகர லாகும்
**1182 

#18
தடவு தூபக் காலும் பெருமையும் வளைவும்
**1183 

#19
தண்மை குளிர்ச்சியுந் தாழ்வு மெளிமையும்
**1184 

#20
தண்ணங் கட்பறையு மழுவுஞ் சாற்றுவர்
**1185 

#21
தண்ணுமை முழவு முடுக்கையும் பறையும்
**1186 

#22
தணியே மலையுந் தண்மையு மாகும்
**1187 

#23
தண்டு குழாயும் வீணையுந் தடியும் 
ஓந்தியும் படையு மிதுனமுமவாவும் 
சிவிகையுந் தண்டமுஞ் செப்ப லாகும்
**1188 

#24
தண்டங் குடைக்காலுந் தடியும் படையும் 
தண்டித்தலும் யானை சென்ற வழியும்
வரம்புந் தண்டுஞ் சிவிகையு மாகும் 
**1189 

#25
தண்ணடை நாடுங் கானு முடுக்கும் 
மருத நிலத்தூரு மிலையு மாகும்
**1190 

#26
தத்தை முன்பிறந் தாளுங் கிளியும்
**1191 

#27
தந்து சாத்திரமு நூலு மாகும்
**1192 

#28
தபனன் சூரியனுந் தீயு மாகும்
**1193 

#29
தபுதல் கேடுஞ் சாவு மாகும்
**1194

#30
தம்பந் தூணும் பற்றுக் கோடும்
கவசமு மெனவே கழற லாகும்
**1195 

#31
தமர மெழுகு மோசையு மாகும்
**1196 

#32
தமனிய னயனு மிரணியனு மாகும்
**1197 

#33
தமமே யிருளு மிராகுவு மாகும்
**1198 

#34
தமிழ் தமிழ் விகற்பமு நீர்மையு மினிமையும் 
தவமுந் தட்பமு நல்லறமு மருளுங் 
கருமமு மியல்புங் கழற லாகும்
**1199 

#35
தரும ராசன் புத்தனு மருகனுந் 
தருமனு மெனவே சாற்ற லாகும்
**1200 

#36
தரணி நிலமு மலையு மிரவியும்
**1201 

#37
தராவே மதுகமுஞ் சங்கமுஞ் சாற்றும்
**1202 

#38
தலந்தா ரணியு மிலையு மாகும்
**1203 

#39
தலையா காயமுந் தலைமையுஞ் சிரமும் 
இடமு மாதியு மியம்ப லாகும்
**1204 

#40
தலையல் மழைவிடுதலும் புதுப்புனல் வரவும்
**1205 

#41
தவிசு பீடமுந் தடுக்கு மெத்தையும்
இலகடமும் என்றே யியம்ப லாகும்
**1206 

#42
தவாவினை முத்தியு மலையு மாகும்
**1207 

#43
தவ்வை மூத்தாளுந் தாயு மூதேவியும்
**1208 

#44
தவவு மிகுதலுங் குறைதலு மாகும்
**1209 

#45
தழலே நெருப்புங் கிளிகடி கோலும்
**1210 

#46
தழை [யே] வளரிளங் கொம்புந் தழையும் 
பீலிக் குடையும் பேச லாகும்
**1211 

#47
தளம்பொரு படையுஞ் சாந்துந் தாழியும் 
நகரும் உப்பரி வாயும் பூவிதழும்
**1212 

#48
தளிசம ரிடமுந் துளியுங் கோயிலும்
**1213 

#49
தளையாண் மயிருஞ் சிலம்பும் விலங்கும் 
பிணைத்தலும் பூமுகையு முறுக்குத் தாரும் 
தூற றளையுந் துழாயு மாடும்
**1214 

#50
தளிமம் அழகும் மெத்தையுஞ் சயனமும்
**1215 

#51
தன்னை செவிலியுந் தாயு மூத்தாளும்
**1216 

#52
தன்மை தமையுடைப் பொருளும் அழகும்
இயல்பு மெனவே யியம்ப லாகும்
**1217 

#53
தன முத்திறமும் பொன்னு முலையும்
வருத்தமுஞ் சாந்தும் பசுவின் கன்றும்
**1218 

#54
தனஞ்சயன் வாயுவுந் தீயு மருச்சுனனும்
**1219 

#55
தன்ன மான்கன்று மற்பமு மாகும்
**1220 

#56
தனியொப் பின்மையுந் தமியு மாகும்
**1221 

#57
தனுத்தனு ராசியு நுட்பமும் வில்லும் 
உடம்பு மெனவே யுரைக்க லாகும்
**தா
**1222 

#58
தாசி யாளும் பரணி நாளுமாம்
**1223 

#59
தாடு தலைமையும் வன்மையு மாகும்
**1224 

#60
தாணுத் தூணு நிலைபேறு மலையுஞ் 
சங்கரனுங் குற்றியுஞ் சாற்ற லாகும்
**1225 

#61
தாண்டவ மாடலுந் தாவலு மாகும்
**1226 

#62
தாது பொன்முத லேழு மடிமையும் 
தரணிமுத லைந்து மிரதாதி யேழுங் 
காவிக் கல்லும் பூவின் றாதும் 
மேதியு மெனவே விளம்ப லாகும்
**1227 

#63
தாதை தகப்பனும் பாட்டனு மாகும்
**1228 

#64
தாதி யடிமையும் பரணி நாளும்
**1229 

#65
தாபரங் கோயிலு முடலு மலையும் 
தருவு நிற்பனவும் பூமியு மாகும்
**1230 

#66
தாமம் பூவும் மணிவடமும் மலையும் 
தந்தியு மூருந் தாருஞ் சாந்தமும் 
கயிறுங் கொன்றையு மொழுங்கு மொளியும் 
பொருகளமு மிடமும் புகல லாகும்
**1231 

#67
தாம்பு கயிறுந் தாமணியு மாகும்
**1232 

#68
தாமரை தாமரையும் புலியு மாகும்
**1233 

#69
தாய முரிமையுந் தங்குடித் தமரும்
**1234 

#70
தாரம் வெள்ளியு நாவும் வில்லுந் 
தந்திரி யின்னோ ரிசையுந் தலைவியும் 
அரும்பண் டமும்வல் லிசையு மாகும்
**1235 

#71
தார்பூவுந் தூசியுஞ் சதங்கையு மொழுங்கும் 
மாலையு மாவு நூற் சுற்று மழகும்
**1236 

#72
தாரை கண்மணியு முடுவும் வழியுங் 
கூர்மையு மழையுஞ் சின்னமுந் தாரமும் 
ஒழுங்கு (நீ) ரோட்டமு முரைக்க லாகும்
**1237

#73
தாலந் தரையும் பனையும் நாவும் 
வட்டிலு மெனவே வழங்க லாகும்
**1238 

#74
தாழை தெங்குந் தாழையு மாகும்
**1239 

#75
தாழி கடலுந் தாழியு மாகும்
**1240 

#76
தாழ்தல் குறைவும் வணங்கலுந் தங்கலும்
**1241 

#77
தாளி பனையுந் தாளிப் புல்லும்
**1242 

#78
தாளாண்மை முயற்சியு முற்சா கமுமாம்
**1243 

#79
தாள்தா[ழ்]ப் பாழும் பாதமு முயற்சியும்
**1244 

#80
தாறுமுட் கோலுந் தருவின் குலையும்
விற்குதையு மெல்லையும் விளம்ப லாகும்
**1245 

#81
தானை யாயுதங்களும் படையுந் தூசும்
**1246 

#82
தானம் நீராடலுங் கொடுத்தலு முதவியும் 
விண்ணு மதமுஞ் சாரிடமும் வேட்டலும்
**1247 

#83
தாவென் பதுவே வலியும் வருத்தமும் 
கேடுந் தாவெனலும் பகையு மிடையீடும்
**தி
**1248 

#84
திகையே திசையுஞ் சுணங்கு மாகும்
**1249 

#85
திகிரி வேயும் வெற்புந் தேருருளும் 
ஆழியும் வட்டமுங் கோகமு மையுந் 
தேரு மெனவே செப்ப லாகும்
**1250 

#86
திங்கள் அம்புலியு மாதமுந் திங்களும்
**1251 

#87
திட்டை மேடுந் திண்ணையு முரலும்
**1252 

#88
திட்டி கண்ணுந் திலகமுந் திட்டியும்
**1253 

#89
திணை அகத்திணையுங் குலமு நிலமும் 
புறத்திணையு மொழுக்கமும் புகல லாகும்
**1254 

#90
திணி காசினியுந் திணியு மாகும்
**1255 

#91
திண்ணம் பொய்யு மெய்யும் வலியும்
**1256 

#92
தித்தி குரங்கு மின்பமும் பையும்
தித்திப் பும்மெனச் செப்ப லாகும்
**1257 

#93
திதியே காத்தலு நிலைத்தலும் பக்கமும்
**1258 

#94
திமிர மிருளு நரகமு மாகும்
**1259 

#95
திரிதல் கெடலு முலாவலு மாகும்
**1260 

#96
திருக்குகம் புடவையு முற்றமு மாகும்
**1261 

#97
திரையிடு திரையுந் திரைத்தலுங் கடலும்
ஆலையும் பூமியு மறைந்தனர் புலவர்
**1262 

#98
திருவே கலையுஞ் செல்வமுஞ் சிறப்பும்
**1263 

#99
திலகம் புண்டரமுஞ் சுட்டியு மெள்ளும்
சிந்தூ ரமுமஞ் சாடியுஞ் செப்புவர்
**1264

#100
திலமஞ் சாடியு மெள்ளு மாகும்
**1265 

#101
திவாவே பகலு மாதித் தனுமாம்
**1266 

#102
திளைத்த லனுபவமு நெருங்கலு நிறைதலும்
**தீ
**1267 

#103
தீத்தனா சானுந் தேவனு மாகும்
**1268 

#104
தீத்தம் விழாவுந் தீர்த்தமு மாகும்
**1269 

#105
தீர்த்தன் சிவனு மாசானு மருகனும்
**1270 

#106
தீயே நெருப்புந் தீங்கு மாகும்
**து
**1271 

#107
துகளே குற்றமும் தூளு மாகும்
**1272 

#108
துச்சி லொதுக்கிடமுஞ் சூடு மாகும்
**1273 

#109
துஞ்சல் சோம்புஞ் சாவுந் துயிலும் 
செறிவு நிலைபேறுஞ் செப்ப லாகும்
**1274 

#110
துடர் சொற்றொடர்பும் விலங்கு மாகும் 
**1275 

#111
துடி கூதாளியும் ஏலமும் பறையும்
கால நுட்பமுங் குமர னாடலும்
கணையு மிதழும் கட்டுதலுந் துள்ளலும்
**1276 

#112
துடவை காவுந் தோட்டமு முழவும்
**1277 

#113
துடுப்புக் கையு மிளமுலையு மாகும்
**1278 

#114
துணையொப்பு மளவுஞ் சகாயமுந் துணைவியும் 
உபயமு மெனவே யுரைக்க லாகும்
**1279 

#115
துணிசோதி நாளுந் துண்டமுஞ் சீர்மையும்
**1280 

#116
துண்டம் வதனமு மூக்குந் துகிலும்
சாரைப் பாம்பு முறியும் புண்மூக்கும் 
**1281 

#117
துணங்கு நன்னாளு விழவு மறலும்,
**1282 

#118
துணங்கை யல்லும் விழவுமோர் கூத்தும் 
ஒருநா ளும்மென வுரைக்க லாகும்
**1283 

#119
துணையறை தூக்கமுஞ் சேதுவு மாகும்
**1284 

#120
துணைவன் மந்திரியுந் தோழனு மாகும்
**1285 

#121
துண்டில் மூங்கிலுஞ் சூழலு மாகும்
**1286 

#122
துணைதனில் துணிமடற் பொருளுந் தெளியும்
**1287 

#123
துத்தம் துத்தமும் வயிறும் பாலும்
யாழி னரம்புஞ் சுணங்கனு மோசையும்
**1288 

#124
துதியே யகிலுந் துதியு மாகும்
**1289 

#125
துத்தி நாளும் விழவும் நெய்யும் 
தேமலுந் துணங்கை யாடலுந் துத்தியும்
படப்பொறி யும்மெனப் பகர லாகும் 
**1290 

#126
துப்பு நெய்யும் பவளமுஞ் சுத்தமும்
பகையு மூற்றமு மரக்கும் வனமும் 
அனுபவமும் வலியும் வண்ணமும் சோறும் 
துணையு மாயுதங் களையுஞ் சொல்லும்
**1291 

#127
தும்பி வண்டுஞ் சுரையுங் கள்ளும் 
யானையு மெனவே யறைய லாகும்
**1292 

#128
தும்பை போரும் வெற்றிலையுந் தும்பையும்
**1293 

#129
தும்பு சிம்புளுந் தோடு நாளும்
**1294 

#130
துரோணஞ் சிம்புளும் தும்பையும் பதக்கும் 
காரிப் பறவையும் வில்லுங் கருதுவர்
**1295 

#131
துருத்தி யாற்றிடைக் குறையுந் தோலும் 
துட்டையு மிலங்கையுஞ் சொல்லுவர் புலவர்
**1296 

#132
துருக்கங் குங்குமமுங் கானு மரணும் 
கத்தூரியுங் கலக்கமுங் கழற லாகும்
**1297 

#133
துரங்கங் குதிரையு நாவாயு மாகும்
**1298 

#134
துலையே துலாமுந் தோற்றமு மேற்றமும்
**1299 

#135
துவக்குப் பிணக்கமும் பற்றுதலு முடலும் 
தோலு மெனவே சொல்ல லாகும்
**1300 

#136
துவ்வுத றுய்த்தலு மாற்பத[மு]மாகும்
**1301 

#137
துவர்சிவப்பு மிகலும் பவளமுங் காட்டமும் 
துவர்ப்பு மாக்கமுஞ் சொல்ல லாகும் 
**1302 

#138
துவறல் உண்டலுந் தின்றலு மாகும்
**1303 

#139
துவைப் பிண்ணாக்கும் புளிங்கறியு மோசையும் 
இறைச்சியு மெனவே யியம்ப லாகும்
**1304 

#140
துழாயே புல்லுந் துளபமு மாகும்
**1305 

#141
துளிபல் துளியும் மழையின் றுளியும்
அடைத்த லும்பெண் ணாமையு மாகும்
**1306 

#142
துள்ளல் கூத்தும் பாவி னோசையும்
மசகமு மெனவே வழங்க லாகும்
**1307 

#143
துளும்பல் அலைதலுந் திமிறலு மாகும்
**1308 

#144
துனியே கோபமும் புலவி நீட்டமும் 
அந்தியுந் துன்பமு நோயு மாகும்
**1309 

#145
துன்னல் சேர்த்தலுஞ் செறிதலுங் கிடத்தலும்
**தூ
**1310 

#146
தூக்குப் பாட்டும் கூத்துந் துலாமும் 
தொங்கலுங் குணமு மாராய்தலும் நிறுத்தலும் 
தூக்கணமு முறியு மாசா ரியனும்
**1311 

#147
தூங்கல் தாழ்வும் யானையுஞ் சோம்பும் 
துயிலு மோசையுந் தராசும் கூத்தும்
**1312 

#148
தூசு தூசிப் படையு மாடையும் 
யானைப் புரசையு நவிற்றுவர் புலவர்
**1313 

#149
தூணி யாவமு முகத்தற் றூணியும்
**1314 

#150
தூணம் பகையுந் தூணு மாகும்
**1315 

#151
தூதுணம் புறாவுந் தூக்கணங் குருவியும்
**1316 

#152
தூபம் தூபமு நீர்க்கடம்பு மாகும்
**1317 

#153
தூம்பு வேயுந் துளையுடைப் பொருளும்
மரக்காலும் பூளையும் சலதா ரையும்
**1318 

#154
தூய்மை மெய்ம்மையுஞ் சுத்தமு மாகும்
**1319 

#155
தூரிய மிடமும் வாச்சியமுந் துகிலும் 
எழுது கோலு முரசும் போரெருதும் 
எறிபடையு மீயமு மியம்ப லாகும்
**1320 

#156
தூவி புள்ளிறகு மன்னத் தூவியும்
பசையுந் தசையும் பல தூவிகளும் 
**1321 

#157
தூவல் திவலையு மாரியு மாகும்
**1322 

#158
தூளி யார்ப்புங் குதிரையும் புழுதியும் 
**1323 

#159
தூவரிந்த புலாலும் பற்றுக் கோடும்
தூய்மையும் பசுவும் பகையு மூனும் 
வெண்மையுஞ் சிறகும் விளம்ப லாகும்
**தெ
**1324 

#160
தெக்கணந் தெற்கும் சூழ்தலு மாகும்
**1325 

#161
தெட்டி யானையுஞ் செட்டியு மாகும்
**1326 

#162
தெண்டிகை ஆர வாரமும் தெவ்வமும் 
உள்ளமு மெனவே யுரைக்க லாகும்
**1327 

#163
தெய்யே தெய்வமுங் கொலையு மாகும்
**1328 

#164
தெயம் வாசமும் புத்தேளு மாகும்
**1329 

#165
தெரிவை பெண்ணுங் கன்னி ராசியும்
**1330 

#166
தெவிட்ட னிறைதலுங் கான்றலு மொலித்தலும்
அடைத்தலு மெனவே யறைய லாகும்
**1331 

#167
தெவ்வே பகையுஞ் செருவுஞ் கொள்கையும்
**1332 

#168
தென் நாளிகேரமு மிசையும் வனப்பும் 
கற்புந் தெற்குங் கழறினர் புலவர்
**தே
**1333 

#169
தேள் விருச்சிகமு மனுட நாளும்
**1334 

#170
தேக்குத் தேக்கும் வெறுப்புங் கமுகும் 
தெவிட்டலு மெனவே செப்ப லாகும்
**1335 

#171
தேசி பரியு நாயு மாகும்
**1336 

#172
தேசிக மழகுங் காந்தியுந் திசைச்சொல்லும் 
கூத்தும் பொன்னும் கூற லாகும்
**1337 

#173
தேசிகன் றேசாந் திரியுங் குருவும் 
வணிகனு மிறைவனும் வழங்க லாகும்
**1338 

#174
தேடல் பொன்னுந் தேடலு மாகும்
**1339 

#175
தேமென்ப திடமு நாற்றமுந் திசையும் 
தித்திப்புந் தேசமுந் தேனுங் கள்ளும்
**1340 

#176
தேயம் விண்ணு முடலு நாடும் 
களவு மெனவே கருதினர் புலவர்
**1341 

#177
தேர்த லாராய்தலுங் கொள்கையு மாகும்
**1342 

#178
தேவு தேறலுந் தெய்வமு மாகும்
**1343 

#179
தேனே வண்டு நறவு மாகும்
**தை
**1344 

#180
தைத்தல் துன்னமுந் தைத்தலு மாகும்
**1345 

#181
தையல் பெண்ணு மழகு மாகும்
**1346 

#182
தைதை மாதமு மூலியுந் தைத்தலும் 
அலங்கலுங் கள்ளு மறைய லாகும்
**தொ
**1347 

#183
தொங்கல் பீலியும் பீலிக் குடையும் 
மாலையுங் குஞ்சமுந் தூக்கும் வெண்குடையும் 
பங்கியுந் துக்கமும் பகர லாகும்
**1348 

#184
தொட்டி வாய்தலுந் தொட்டியுங் கள்ளும்
**1349 

#185
தொடி கங்கணமும் வளையுமொரு பலமும்
**1350 

#186
தொட்டல் கை தீண்டலுந் தோண்டலு முண்டலும்
**1351 

#187
தொடுத்தல் வளைத்தலும் பிணித்தலும் பற்றலும் 
சொற்கூட் டலுமெனச் சொல்ல லாகும்
**1352 

#188
தொடுப்பு கோணலு முழவு மாகும்
**1353 

#189
தொடை பாவுறுப்பு மாலையுங் கணையுஞ் 
சொல்லுந் தொடர்புந் தொங்கலு மாகும்
**1354 

#190
தொண்டு வழிபாடு மொன்பதுஞ் சுருக்கும் 
பழமையு மடிமையும் பகர லாகும்
**1355 

#191
தொண்டை யானைத் துதிக்கையு மிடறும் 
கொவ்வையு மெனவே கூற லாகும்
**1356 

#192
தொண்டிகை வாச்சியமு மணிகலனு மாகும்
**1357 

#193
தொத்து பூங்கொத்துந் தொண்டு மாகும்
**1358 

#194
தொய்யி லழகு முழவுஞ் சேறும் 
துயரமுங் குழைவு மெழுதலு மின்பமும் 
தொய்யிற் புதலுஞ் சொல்ல லாகும்
**1359 

#195
தொழுவி ரேபதியும் நோயு முழலையும் 
தோழமுந் தொழுதி டென்றலுஞ் சொல்லும்
**1360 

#196
தொழுதல் வளைதலுந் தாழ்தலு மாகும்
**1361 

#197
தொழுதிபுள் ளொலியுங் கூட்டமு மாகும்
**1362 

#198
தொறு ஆனிரையுந் தோழமுந் தொகுதியும்
அடிமையு மெனவே யறையலாகும்
**தோ
**1363 

#199
தோகை தொங்கலும் வாலு மயிலும் 
பெண்ணுஞ் சுற்றாரலும் பேச லாகும்
**1364 

#200
தோடு தொகுதியும் பூவி னிதழும்
பனையி னிதழுங் குன்று மனையுமாம்
**1365 

#201
தோடிரியங் கூத்தும் வாச்சியமு மாகும்
**1366 

#202
தோட்டி யங்குசமும் கபாடமுந் தோட்டியும் 
**1367 

#203
தோணி நீருங் கடைநாளுந் தெப்பமும்
தொளியு மம்பு மதிலுறுப்பு மாகும்
**1368 

#204
தோண்டல் முகத்தலும் அகழ்தலு மாகும்
**1369

#205
தோமரம் வாச்சியமு மோரா யுதமும்
**1370 

#206
தோரை கைவரையும் பொன்னூலும் வேயும்
நெல்லின் விகற்பமு மரிசியுந் தூம்பும்
**1371 

#207
தோல்தோற் பலகையுந் தோல்வியுந் துருத்தியும்
யானையும் வனப்புஞ் சொல்லு மாகும்
**1372 

#208
தோரணங் கவியு நிலைத்தேரு மாகும்
**1373 

#209
தோழி யரக்கும் பாங்கியு மாகும்
**1374 

#210
தோள்புயமுந் துளையும் தூங்கிய கையும்
**1375 

#211
தோற்றல் வலியும் பிறப்புந் தோன்றுதலும்
தோல்வியும் புகழுஞ் சொல்ல லாகும்
**1376 

#212
தோற்ற முண்டாக்கலும் ஏற்றமும் பிறப்பும் 
ஆற்றலு முயர்ச்சி [யுங்] காண்டலும் புகழும்
**1377 

#213
தோன்றல் முல்லைத் தலைவருஞ் சேயும் 
நாதனு மெனவே நவில லாகும்
**தகரவருக்கம் முற்றிற்று

@6 நகர வருக்கம்
**ந
**1378 

#1
நகைபல்லு மகிழ்வு மொளியு மிகழ்ச்சியும் 
சிரிப்பு முகமலர்ச்சியு முகையு மாகும்
**1379 

#2
நகமரப் பேரு மலையு முகிரும்
**1380 

#3
நகுத லொளிர்தலு நகுதலு மாகும்
**1381 

#4
நகரே மனையு மூருங் கோயிலும்
**1382 

#5
நக்கனருகனு நிருவாணியுஞ் சம்புவும்
**1383 

#6
நக்கல் தீண்டலுந் தின்றலு நகைத்தலும் 
நக்குதலு மகிழ்ச்சியு நவில லாகும்
**1384 

#7
நடையோர் கூத்தும் வாயிலும் நடையும்
செல்வமு மொழுக்கமும் வழியு மாகும் 
**1385 

#8
நடலை வீம்பும் வஞ்சனையும் பொய்யும்
நடுங்கிடனு நுடக்கமு நவில லாகும்
**1386 

#9
நட்ட நடமுங் கேடு மாகும்
**1387 

#10
நடுநடுச் சொல்லு மிடையு நாப்பணும்
**1388 

#11
நதியே மலையு மாறு மாகும்
**1389 

#12
நத்த நகர்ப்புறனு மூரு மல்லும் 
சங்கு மாக்கமு மூமையு மிரவும்
**1390 

#13
நந்தி பேரிகையு மிடபமுஞ் சிவனும் 
செக்கா னுமெனச் செப்ப லாகும்
**1391 

#14
நந்தல் கேடு மாக்கமு மாகும்
**1392 

#15
நந்து நத்தையுஞ் சங்கு மாகும்
**1393 

#16
நயமே யின்பமு ஞாயமு நன்றியும்
**1394 

#17
நயந்தோன் கணவனு நண்பனு மாகும்
**1395 

#18
நரை வெண் பரியும் வெண்மையுங் கவரியும் 
நாரையு மேறு நவில லாகும்
**1396 

#19
நரந்தங் காக்கையு மணமுங்கத் தூரியும் 
நாரத் தையுமென நவில லாகும்
**1397 

#20
நலமுப காரமுந் தேளுஞ் சுகமும்
**1398 

#21
நவங்கார் காலமும் பூமியும் புதுமையும் 
கூத்தும் பாம்பு மொன்பதுந் தொண்டும் 
பழமையும் கேண்மையும் பகர லாகும்
**1399 

#22
நவிலல் சொல்லுதலும் பண்ணுதலுமாகும்
**1400 

#23
நவிரம் மருதயாழ்த் திறமு மலையும் 
புன்மையு மயிரு மலையி னுச்சியும் 
உச்சியு மெனவே யுரைக்க லாகும்
**1401 

#24
நவிர்தக் கேசியு மாண்பான் மயிரும் 
மருதயாழ்த் திறமும் வாளு மாகும்
**1402 

#25
நவியங் கோடாலியு மழுவு மாகும்
**1403 

#26
நவ்வி மரக்கலமு மானு மாகும்
**1404 

#27
நவமணி பொன்னு நவமணியு மாகும்
**1405 

#28
நள்ளியோர் வள்ளலு நண்டு மாகும்
**1406 

#29
நளினி செய்யாளும் வாவியும் பண்ணும்
**1407 

#30
நளியே குளிரும் வெறுப்பு நண்டும்
பெருமையுஞ் செறிவும் பேச லாகும்
**1408 

#31
நளமே தாமரையு மகலு மாகும்
**1409 

#32
நறவந் தேனு நாகமு மாகும்
**1410 

#33
நனைபூ மொட்டுங் கள்ளு மதமும்
**1411 

#34
நனந்தலை நடுவு முச்சியு மாகும்
**1412 

#35
நனவு தெளிவு மகலமுங் களனும்
**1413 

#36
நன்று மிகுதியு நன்மையு மாகும்
**1414 

#37
நன்னி தவசமுஞ் சுக்கிலமு மாகும்
**நா
**1415 

#38
நாகம் விண்ணுங் குரங்குந் தூசும் 
பண்ணொரு மலையும் பாம்பும் யானையும் 
புன்னையுங் காரீயமு மோசையு ஞாழலும்
**1416 

#39
நாகு விலங்கின் பெண்ணு மரையும் 
மேதியு மீனா விளமையு நத்தையும் 
நாகு மிள [மர] மு நீர்வாழ் சாதியும் 
ஆரமு மெனவே யறைய லாகும்
**1417 

#40
நாஞ்சில் கலப்பையு மதிலு மாகும்
**1418 

#41
நாடி நாழிகையு நரம்பு நாசிகையும்
**1419 

#42
நாட்டங் கண்ணும் பண்ணும் வாளும் 
ஆடலு மெனவே யறைய லாகும்
**1420 

#43
நாண்மாதர் மங்கல நாணு நாணமும் 
கயிறு மெனவே கழற லாகும்
**1421 

#44
நாதன் சிவனுங் கோவு மூத்தோரும் 
கேளு மெனவே கிளத்தினர் புலவர்
**1422 

#45
நாப்ப ணடுவுந் தேரின் றட்டும்
யாழுறுப் புமென நவில லாகும் 
**1423 

#46
நாமம் பெயரு மச்சமும் பெருமையும்
**1424 

#47
நாரம் நீரு மம்பும் வாசியும் 
ஈரமுங் கயிறு மன்பு நாரும்
**1425 

#48
நாரி பன்னாடையும் வில்லின் நாணும் 
நறவும் பெண்ணு நவில லாகும்
**1426 

#49
நால்வா யன்போ கியுமைங் கரனும்
**1427 

#50
நாவிதன் பூர நாளு மறுமீனும்
இரேபதி யுமயிர் வினைஞனு மாகும்
**1428 

#51
நாழியுட் டுளையும் பூரட் டாதியும் 
நாழிகையும் படியு நவில லாகும்
**1429 

#52
நாளே செவ்வியு நாளு மலரும் 
உடுவுங் காலையு முரைக்க லாகும்
**1430 

#53
நாளி நாயுங் கள்ளு மாகும்
**1431 

#54
நாற்றந் தோன்றலு நாறுதலு மாகும்
**1432 

#55
நாறு நாற்றமு நெல்லு நாறும்
**1433 

#56
நானங் கத்தூரியு மணமுங் கவரி
மாவும் பூசுவனவு நீராடலு மாகும்
**1434 

#57
நான்முக னருகனும் வேதனு மாகும் 
**நி
**1435 

#58
நிசியரி சனமும் பொன்னு மிரவும் 
இருளு நீலமு மியம்ப லாகும்
**1436 

#59
நிசித மிகழ்ச்சியும் பொய்யுங் கூர்மையும்
**1437 

#60
நிதம்ப மல்குலும் மலையின் பக்கமும்
**1438 

#61
நிதிவைப்பும் பொன்னு மிருவகை நிதியும்
கதையு மெனவே கழற லாகும்
**1439 

#62
நித்தியந் தினமு மழிவில் பொருளும்
**1440 

#63
நிமிர லுயர்வுஞ் சோறு மாகும்
**1441 

#64
நியமஞ் சுடுகாடுங் கோயிலும் வீதியும் 
கடையு நிச்சயமு நகரமுந் தவமும்
நியமஞ் செய்தலு மொருபட்சியு மாகும்
**1442 

#65
நிருமித்தல் படைத்தலு மாராய் தலுமாம்
**1443 

#66
நிரப்புக் குறைபாடு மின்மையு மாகும்
**1444 

#67
நிலையே பொழுதுங் குணமு முறைமையும் 
நிலைபெறு மாறு முத்தியு மாகும்
**1445 

#68
நிலவு சந்திரனு மொளியு மாகும் 
**1446

#69
நிவப்பு நிவத்தலுஞ் சேணு நீளமும்
**1447 

#70
நிழல்மரக் கொம்புஞ் செல்வமுங் குளிர்ச்சியும் 
சாயையு நோயுங் கிருபையு மாகும் 
**1448 

#71
நிழற்ற னிழற்செயலு நிழலு நுணுக்கமும் 
நிரம்பா மென்சொல்லு நிகழ்த்தினர் புலவர்
**1449 

#72
நிறைநீர்ச் சாலு மாசையு முணர்வும் 
துலாமு மழியா நிலையுஞ் சொல்லுவர்
**1450 

#73
நிறம்பிர காசமு நிறமு மார்பும்
**நீ
**1451 

#74
நீக்கல் கொல்லலு நீக்கலு மாகும்
**1452 

#75
நீத்தம் வெள்ளமு நீரு மாகும்
**1453 

#76
நீப நீர்க்கடம்பு முத்திரட் டாதியும் 
நிமித்தமு மெனவே நிகழ்த்தினர் புலவர்
**1454 

#77
நீலி சங்கரியு மாலுந் துர்க்கையும் 
அவுரியுங் கறுப்பு மறைய லாகும்
**1455 

#78
நீலங் காலமு நீல நிறமும் 
மணியு மிருளு நெய்தலும் பனையும்
**1456 

#79
நீல் நீலநிறமுங் காற்று மாகும்
**1457 

#80
நீவி யாடையு மிறகு மழித்தலும்
துடைத்தலுங் கொய்சகமுஞ் சொல்ல லாகும்
**1458 

#81
நீழ லொளியு நிழலு நகையும் 
ஆற்பத முமென வறைய லாகும்
**நு
**1459 

#82
நுணங்கு தேமலு நுண்மையு நுனியும்
**1460 

#83
நுணவை யெண்ணு மோலையும் பிணியும்
**1461 

#84
நுதம்பு கள்ளு மமுது மாகும்
**1462 

#85
நுதலே நெற்றியும் புருவமுங் கருதலும் 
புதலு மெனவே புகல லாகும்
**1463 

#86
நுரையே வெண்ணெயு நுரையு மாகும்
**1464 

#87
நுவணை தினைமாவு நுண்மையு நூலும்
**1465 

#88
நுனியே நுண்மையு நுனியு மாகும்
**நூ
**1466 

#89
நூல் சாத்திரமு நூலும் கொடியும்
இல்லை யெனலும் எண்ணலும் வேதமும்
**1467 

#90
நூலோ ரமைச்சரும் பார்ப்பாரும் புலவரும்
**1468 

#91
நூழில் செக்கும் யானையுங் கொடியும்
திரையும் நுண்பொடியுங் கோறலுஞ் செப்புவர்
**1469 

#92
நூன நிச்சயமுங் குறைவு மாகும்
**நெ
**1470 

#93
நெகிழஞ் சங்கிலியும் விலங்கு மாகும்
**1471 

#94
நெஞ்சு மார்பு மனமு மாகும்
**1472 

#95
நெடுமை பெண்மயிரும் வார் தலும் நெடுமையும்
நெட்டிர லுமமு நெட்டியு மாகும்
**1473 

#96
நெட்டை நெடுமையு நெய்யு மாகும்
**1474 

#97
நெய்தல் கடற்சார்பு நெய்தற் பூவும் 
சாபறையு நெசவுஞ் சாற்ற லாகும்
**1475 

#98
நெல்லே வாகையு நெல்லு மாகும்
**1476 

#99
நெற்றி படையுறுப்பு நெற்றியு மாகும்
**1477 

#100
நெறியே நீதியும் வழியு மாகும்
**நே
**1478 

#101
நேத்திரம் கண்ணும் பட்டா டையும்
**1479 

#102
நேமி சக்கரமும் வட்டமு மூங்கிலும் 
பூமியுங் கடலு நேமிப் புள்ளும் 
சகுனமுந் தேர்க்காலுஞ் சாற்ற லாகும்
**1480 

#103
நேய மன்பு நெய்யு மெண்ணெயும்
**1481 

#104
நேர்தலைப் படலுஞ் சமனு மீதலும் 
பாதியு நெடிலு மொப்பு நுட்பமும் 
உடன்பாடு நேரு மஞ்சமுந் தனியும் 
மிகுதியு மெனவே விளம்ப லாகும்
**1482 

#105
நேர்த லிசைதலு மெலிதலும் வேண்டலும் 
எதிர் தலு மெனவே யியம்ப லாகும்
**1483 

#106
நேர லுடன்பாடு மண்டலு மாகும்
**நொ
**1484 

#107
நொச்சி மதிலுங் மதிலின் நாவலுஞ் 
சிற்றூரு நொச்சியுஞ் செப்ப லாகும்
**1485 

#108
நொடியே வார்த்தையுங் காதையு நொடியும்
**1486 

#109
நொறில் சீக்கிரமு மொடுக்கமு நுடக்கமும்
**நோ
**1487 

#110
நோக்குப் பார்வையுங் காதல்தரு மாதரும் 
அழகும் மெனவே யறைய லாகும்
**1488 

#111
நோற்றல் பொறையுந் தவஞ்செய் தலுமாம்
**1489 

#112
நோனாமை பொறாமையுந் தவஞ்செய் யாமையும் 
**1490 

#113
நோனார் தவமில் லோரும் பகைவரும்
**1491 

#114
நோன்மை வலியுந் தவமும் பொறையும்
எண்ணு மெனவே யியம்ப லாகும்
** நகரவருக்கம் முற்றிற்று

@7 பகர வருக்கம்
*ப
**1492 

#1
பகவனே சிவனு மாலும் வேதனும் 
தீயும் பரிதியும் புத்தனுஞ் செப்பும்
**1493 

#2
பகல் நுகத்தாணியும் ஒளியும் முகிர்த்தமும் 
பானுவு நடுவும் பகலுஞ் செயலும்
பிரிவும் பாணியு மிரவு நாளும்
**1494 

#3
பகையே யடித்தலுஞ் சார்தலும் பகையும்
**1495 

#4
பகங்கொக்கும் யோனியும் பகர லாகும்
**1496 

#5
பகழி யம்பும் அம்பின் குதையு மாகும்
**1497 

#6
பகுதி கூட்டமும் பகுதியு மாகும்
**1498 

#7
பக்கம் பாங்குந் திதியு மன்பும்
சிறகு நட்புஞ் செப்ப லாகும்
**1499 

#8
பகர்தல் விற்றலும் பேசலு மாகும்
**1500 

#9
பகடு தோணியும் கடாவு மெருதும் 
பெருமையும் யானையும் பேச லாகும்
**1501 

#10
பங்கந் தீவினையும் பின்னமுஞ் சேறும் 
திரையுந் தூசு முடமுங் குற்றமும்
**1502 

#11
பங்கியாண் மயிரும் பிறமயிரு மாகும்
**1503 

#12
பங்கய னருக்கனும் பிரமனு மாகும்
**1504 

#13
பங்கு முடமும் பாதியுஞ் சனியும் 
பகுத்தலு மெனவே பகரலாகும்
**1505

#14
பச்சை மரகதமு மணமு மாலும் 
புதனுந் தோலும் புந்தியு நிறமும் 
பச்சையு மிலாபமும் பகர லாகும்
**1506 

#15
பசும்பை மயிரும் பசும்பையு மாகும்
**1507 

#16
பசுமை யெழதமும் பசப்பு மாகும்
**1508

#17
பசையே லாபமும் ஆசையு மாகும்
**1509 

#18
பசுவறி விலாத பாவியும் பசுவும்
சீவனு மெருதுஞ் செப்ப லாகும்
**1510

#19
பஞ்சஞ் சிறுமையும் ஐந்து மாகும்
**1511

#20
பஞ்சரஞ் செருந்தியுங் கூடு மாகும் 
**1512

#21
படைபடைக் கலமுங் கலப்பையுந் தானையும் 
பல்லணமும் படுக்கையும் பகர லாகும்
**1513 

#22
படரே நினைப்பும் வீரரும் பகையும் 
பரிவும் புதலுங் கொடியுந் தூதரும் 
நோவு நடையும் படர்ச்சியு மாகும்
**1514 

#23
படி சோபானமு முவமையு நாழியும் 
பூமியும் பகையு மங்க வடியும் 
நீரு மெனவே நிகழ்த்த லாகும்
**1515 

#24
படகங் கவரி மாவும் பணவையும்
பரணும் பண்ணு மொருவாச் சியமும்
**1516 

#25
படுவே நன்மையு நீர்நிலையுங் கள்ளும் 
படுக்கையு மடுவு மரத்தின் குலையும் 
வெள்ளியு முகரிமையும் விளம்ப லாகும்
**1517 

#26
படிவ நோன்பு முடலு மாகும்
**1518 

#27
படங்கு மேற்கட்டியுஞ் சீலைக் குடிலும் 
கொடியு மெனவே கூற லாகும்
**1519 

#28
பட்ட மாயுதமு மேலாம் பதமும் 
தூசு மோடையும் பரிசையும் வட்டையும் 
மாச்சேக்கையுங் கவரி மாவு நுதலணியும்
**1520 

#29
பட்சி குதிரையும் பட்சியு மாகும்
**1521

#30
படுத லொலியு முண்டா குதலும்
பூத்தலும் இன்றாகுதலும் புகுதலும் புகல்வர்
**1522 

#31
படலை பரந்தவாய்ப் பறையு மாலையும் 
பரியின் கோவையும் படர்தலு மாகும்
**1523

#32
படலிகை பீர்க்கும் பரந்தகைம் மணியும்
பூத்தட்டும் வட்டமும் புகலுவர் புலவர்
**1524 

#33
பட்டாரகர் தேவரு மருகரு மாகும்
**1525 

#34
படப்பை பசுநிறையுந் தோட்டமு நகரும் 
நாடு மெனவே நவிற்றினர் புலவர்
**1526 

#35
பட்டு சிற்றூரும் பட்டு மாகும்
**1527 

#36
படாமிடு திரையு மாடையு மாகும்
**1528

#37
பட்டிகை கச்சம் பணையுந் தோணியும்
இரதமு மெனவே யியம்புவர் புலவர்
**1529 

#38
படுவி கள்ளுவிற் பாளுங் குண்டமும்
**1530 

#39
பட்டிமை களவும் வஞ்சமு மாகும்
**1531 

#40
படங்கட் செவியின் படமுந் தூசுஞ்
சித்திரப் படமுங் கரிமுக படாமுங் 
கொடியு மெனவே கூறினர் புலவர்
**1532 

#41
படிறு பொய்யும் களவும் வஞ்சமும்
**1533 

#42
பட்டி நாயும் களவும் பிள்ளையும்
**1534 

#43
பணைபரிப் பந்தியும் வயலும் பருத்தலும்
வேயு முரசு மரக்கோடும் பிழைத்தலும் 
படுத்தலும் பெருமையும் பணையும் போதியும்
**1535 

#44
பணிதோற் கருவியுஞ் சொல்லுந் தொழிலும் 
பணிதலும் பாம்பும் பெருமையும் ஏவலும்
**1536 

#45
பண்டி சகடமும் யானையும் வண்டியும் 
உரோகணி யுமென வுரைத்தனர் புலவர்
**1537 

#46
பண்பரிக் கலணையும் பண்ணும் பாட்டும் 
பப்பு மாழமு மாதர் கூட்டமும்
**1538 

#47
பண்ணை மகளிர் விளையாடலும் வயலும் 
மாதர் கூட்டமு மிருகந்துஞ் சிடமும் 
மருத நிலமுந் தண்ணீர்த் தாழ்வும் 
சபையுந் தண்ணடையுஞ் சாற்ற லாகும்
**1539 

#48
பணம்பொற் காசும் பாம்பின் படமும் 
பணமும் பாம்பு மெனப்பகர்ந் தனரே
**1540 

#49
பண்ணவன் முனிவனுந் தேவனு மருகனும் 
ஆசா னுந்திற லோனு மாகும்
**1541 

#50
பண்ணவர் துறந்தோருந் தேவரு மாகும்
**1542 

#51
பணவை கழுதும் பரணு மளவும்
புள்ளு மெனவே புகன்றனர் புலவர்
**1543 

#52
பண்டம் பணிகாரமும் பொன்னு மாகும்
**1544 

#53
பணிலஞ் சலஞ்சலமுஞ் சங்கு மாகும்
**1545 

#54
பதலை யுடுக்கு மொருகட் பறையும் 
தாழியு மலையுஞ் சாற்றினர் புலவர்
**1546 

#55
பதுக்கை சிறுதிட்டையும் பரலுந் தூறும் 
பாறையு மெனவே பகர்ந்தனர் புலவர்
**1547 

#56
பதங்கம் விட்டிலும் பறவைகளு மாகும் 
**1548 

#57
பதம்பல் சிறப்பும் வழியும் பொதுவுஞ்
சோறு முணவுஞ் சொல்லும் பாதமும் 
ஈரமுஞ் சேமமும் காலமுந் தூசும் 
இன்பமுஞ் செவ்வியுங் குழைவும் விழாவும் 
அமைதலும் பாவின் பதமும் பதமும்
**1549

#58
பதவி மேலாம் பதமும் வளமும்
**1550 

#59
பத்திரி காளியு மம்பு மிலையுங் 
குதிரை யும்புட் பொதுவுங் கூறும்
**1551 

#60
பத்தி வழிபாடு மொழுக்கமு முறையும் 
அடைப்பு மெனவே யறைந்தனர் புலவர்
**1552 

#61
பதிமூத் தோரு மன்னனும் பரமனுங் 
குதிரையு மூருங் கணவனுஞ் செல்வனும் 
பிறையு[ம்] பாவலும் பதித்தலு மாகும்
**1553 

#62
பத்திரம் வனப்பு நன்மையும் படையுஞ் 
சிங்கா சனமு மிலையுஞ் சிறகும்
அத்திர மும்மென வறைந்தனர் புலவர் 
**1554 

#63
பதணம் யானையு மரணு மாகும்
**1555 

#64
பதாகை கேதனமும் வல்லியும் பகரும்
**1556 

#65
பந்தங்கை விளக்கு மழகுங் கிளையும்
உண்டையுங் கட்டுப் பாடுறு தளையும் 
பாசமு மிலையும் பகர்ந்தனர் புலவர்
**1557 

#66
பந்து கந்துகமு நீர் தூந் துருத்தியும் 
கட்டும் பந்துங் கழறினர் புலவர்
**1558 

#67
பப்புப் பரப்பு மொப்பும் பகரும்
**1559 

#68
பம்பர மாடு பம்பரமு மேருவும்
**1560 

#69
பம்ப லெழுச்சியும் பொன்னும் பொலிவும்
துன்னலும் வலியுந் தொடர்தலு மாகும் 
**1561 

#70
பயஞ்சுதை நீரும் பாலும் பயனும் 
படையு மச்சமும் பொன்னுங் குளமும்
**1562 

#71
பயிர்விதந்து கட்டிய வழக்கும் பைங்கூழும் 
ஒலியும் பயிலும் விலங்கி னொலியும் 
பசும்பு லும்புள் ளொலியும் பகர்வர்
**1563 

#72
பயம்பு பள்ளமும் யானைவீழ் குழியும்
**1564 

#73
பயோதர முலையும் புயலுங் கடலும்
**1565 

#74
பயல் சிற்றாளும் பள்ளமும் பாதியும்
**1566 

#75
பரவை கடலும் திருமக ளாடலும்
பரப்பு மெனவே பகர்ந்தனர் புலவர்
**1567 

#76
பரித லறுத்தலு மிரங்கலு மன்பும்
**1568

#77
பரம்பரிக் கலணையுங் கவசமும் பாரமும் 
தேகமு மேலு மத்தியு முன்பும்
**1569 

#78
பராகம் நாவாயு மலரின் றூளும் 
வாணியு மிரேணுவு மெனவழங் கினரே
**1570 

#79
பராக்கிரமம் வலியும் வீரமு மாகும்
**1571 

#80
பரிபாது காத்தலும் வருந்தமுங் குதிரையும் 
பருத்தியுஞ் செலவுஞ் சுமத்தலு வேகமும் 
விரைவும் பெருமையுங் காழ்த்தலு மிகுதியும்
**1572 

#81
பரிகங் கிடங்கு மேடையுங் கணையமும் 
மதிலு மெனவே வழங்கினர் புலவர்
**1573 

#82
பருவரல் துக்கமும் பொழுதுஞ் சுடுமரமும்
**1574 

#83
பரிதி யாதித்தனும் பொன்னு மொளியும் 
சக்கர மும்பரி வேடமும் வட்டமும்
**1575 

#84
பரும முயர்ச்சியு மேகலையும் பரியும் 
தூசு மொழியும் பரிமேற் கலணையும் 
சானமுங் கவசமுஞ் சாற்ற லாகும்
**1576 

#85
பரப்புக் கடலும் பரப்பு மாகும்
**1577 

#86
பரசு மூங்கிலு மழுவு மாகும்
**1578 

#87
பருப்பு மின்னும் பருப்பு மாகும்
**1579 

#88
பரிவு துன்பமு மின்பமு மன்பும்
**1580 

#89
பரதர் நுளையரும் வணிகரு மாகும்
**1581 

#90
பரத்தல் தொழலும் பரத்தலு மாகும்
**1582 

#91
பரணி மருந்துச் செப்பும் பரணியும்
**1583 

#92
பரித்த லறுத்தலுந் தாங்கலு மாகும்
**1584 

#93
பரதம் பரதமு நடனமு மாகும்
**1585 

#94
பலமே சேனையுங் கிழங்கும் பயனும் 
காயு நிறையும் பழமு மாகும்
**1586 

#95
பலிவெண் ணீறுஞ் சோறும் பூசையும் 
பிச்சையும் பலித்தலுந் தாருவுங் காகமும் 
தேவுண வுமெனச் செப்பினர் புலவர்
**1587 

#96
பலிதம் காய்த்தருவும் நரையு மாகும்
**1588 

#97
பலாசு பச்சை நிறமு மிலையும் 
பலாசு மரமும் பகர்ந்தனர் புலவர்
**1589 

#98
பல்லியம் வாச்சியமுங் குதிரைப் பந்தியும் 
தொங்கலும் பாணியு மென்பாலு மாகும்
**1590 

#99
பல்லமோர் கணக்கும் பாணமுங் கரடியும் 
பரிமாவின் கலணையும் பகர லாகும்
**1591 

#100
பவமே பாவமுந் தோற்றமு மாகும்
**1592 

#101
பவித்திரம் தருப்பையுஞ் சுசியு மாகும்
**1593 

#102
பவனஞ் சுவர்க்கமு நாடும் பொழுதும்
கோயிலும் மனையும் பூமியுங் காற்றும் 
இராசி யுமென வியம்ப லாகும்
**1594 

#103
பழமை முதுமையும் வேண்டற் பாடும் 
யானையு மெனவே யியம்பினர் புலவர்
**1595 

#104
பழங்கண் ஒலியும் புன்கணும் பழுதும் 
பயனின்மையு மாசும் பகர லாகும்
**1596 

#105
பழுது நிறைவும் பழுது மிடமும் 
**1597 

#106
பள்ளி சிற்றூருங் கோயிலும் பாயலும்
பகைவரிடமும் துயிலிடமு மாகும் 
**1598 

#107
பளிங்கு பார்க்கவனும் பளிங்கு மாகும்
**1599 

#108
பறவை யிரவுண்டியும் பறவையு மிறகும் 
பொழுது மெனவே புகன்றனர் புலவர்
**1600 

#109
பறம்பு வெற்பு முலையு மாகும்
**1601 

#110
பற்றல் தொடலும் வளைதலும் பிணித்தலும்
**1602 

#111
பறை வாச்சியமும் வார்த்தையு மிறகும்
**1603 

#112
பன்னல் தேர்தலும் நெருக்கமும் பருத்தியும் 
பேச்சு மெனவே பேசினர் புலவர்
**1604 

#113
பனிசந் திரனுங் குளிரு மச்சமும் 
பனியுந் துன்பமு நடுக்கமு மாகும்
**1605 

#114
பனையனுட நாளும் பனையு மாகும்
**1606 

#115
பனுவல் வார்த்தையுஞ் செய்யுளு நூலும்
**பா
**1607 

#116
பாகன் புதனும் பாகனு மாகும்
**1608 

#117
பாகு பாலும் பகுப்பும் பாக்கும்
பாகனும் வெல்லமும் குழம்பும் பாணியும் 
**1609

#118
பாக்கு எதிர்காலத் திடைச்சொல்லும் பாக்கும்
**1610 

#119
பாகலே கார வல்லியும் பலாவும் 
முப்பா கலுமென மொழிந்தனர் புலவர்
**1611 

#120
பாகரம் புரிசையு ளுயர்த்திய நிலமும் 
பரிக முமெனப் பகர்ந்தனர் புலவர்
**1612 

#121
பாக்கம் நெய்த லூரு மூரும் 
மருத வூரு மெனவழங் கினரே
**1613

#122
பாகம் பாதியு மளவும் பதமும் 
பட்டும் சர்க்கரையும் பலகூறு மாகும்
**1614 

#123
பாங்கர் பக்கமு மிடமும் பக்கமும்
**1615 

#124
பாங்கு பாலும் பக்கமும் பரிசம்
கன்மமுந் தோழியுங் கழற லாகும்
**1616 

#125
பாங்கன் பரிசும் பக்கமுந் தோழனும்
**1617 

#126
பாசு வேயும் பசுமையு மாகும்
**1618 

#127
பாச மூசித் துளையுங் கயிறும்
பேயு மன்பு நூலு மாகும்
**1619 

#128
பாசி மழையும் பாசியு மாகும்
**1620 

#129
பாசனம் உண்கலனும் பாண்டமுஞ் சுற்றமும்
**1621 

#130
பாடகஞ் சிவப்பும் பாடகமு நீழலும்
**1622 

#131
பாடு பெருமையு மொலியும் படுதலும்
பக்கமும் பண்பு மிடமும் பட்டும்
**1623 

#132
பாடி நகரும் நாடும் படையும் 
பாசறையு மாய ரூரும் பகர்வர்
**1624 

#133
பாடை யோரிசையு மாசந்தியு மாகும்
**1625 

#134
பாடலஞ் சேரன் பரியுஞ் சிவப்பும்
பாதிரியுஞ் சபதமு மூங்கிலு மாகும்
**1626 

#135
பாட்டி பாணிச்சியும் பாட்டியு நாயும் 
பன்றியு நரியும் பாட்டிமையு மாகும்
**1627 

#136
பாணி பாட்டி னொலியுஞ் சோலையும் 
பண்டமும் பாடலு மூரும் நீரும் 
அழகுங் கையும் படையும் பற்றும் 
நாடு நெடும் பொழுதுங் கானு மாகும்
**1628 

#137
பாண்டில் பரியங்கமும் வேயு மூர்தியும் 
ஏறு மிடப ராசியும் வட்டமும் 
கட்டிலும் தாளமும் விளக்கின் றகழியும் 
வண்டிலு மெனவே வழங்கினர் புலவர்
**1629 

#138
பாண மேக வண்ணக் குறிஞ்சியும் 
பட்டுங் கணையும் பகர்ந்தனர் புலவர்
**1630 

#139
பாதி சனியும் பாதியு மாகும்
**1631 

#140
பாதிரி மூங்கிலும் பாடலமு மாகும்
**1632 

#141
பாத்துப் பகுத்துண்டலுங் கஞ்சியுஞ் சோறும்
**1633 

#142
பாத்தி சிறுச்செய்யும் வீடும் பகுத்தலும் 
பாண்டமும் பத்தியூர் பகர்ந்தனர் புலவர்
**1634 

#143
பாதவங் கிரியுந் தருவு மாகும்
**1635 

#144
பாம்பு வரம்பும் பாம்பின் விகற்பமும்
**1636 

#145
பாயசம் பாற்சோறும் பாற்குறண் டியுமாம்
**1637 

#146
பாயல் வீழ்தலு மெத்தையு மாகும்
**1638 

#147
பாய்மாப் புலியுங் குதிரையும் பகர்வர்
**1639 

#148
பாரி தூசும் பூமியுங் கட்டிலும் 
கடலு மனைவியும் வள்ளலுங் கள்ளும் 
பார மும்பா சறையும் பகர்வர்
**1640 

#149
பார் மறையோரும் பூமியும் புத்தனும் 
கல்லின் பரப்புந் தேரின் பரப்பும் 
உரோகணி யுமென வுரைத்தனர் புலவர்
**1641 

#150
பாரம் பொறையும் புவியும் வன்பாரமும் 
கலணையுங் கவசமு நீர்க்கரையு நிறையும் 
மரக்கல மும்விளை யாட்டும் வகுத்தனர்
**1642 

#151
பார்வை கண்ணு மதிப்புந் தீவகமும்
**1643 

#152
பாராவாரங் கடலுங் கடற்கட் கரையும்
**1644 

#153
பாராட் டுக்கொண் டாடலு முலாவலும்
**1645 

#154
பாரதி தோணியும் பனுவ லாட்டியும்
**1646 

#155
பாரித்தல் தோற்றலும் பரப்புதலு மாகும்
**1647 

#156
பாலம் நீர்ப்பாலமு நெற்றியும் பரசும்
**1648 

#157
பாலே பக்கமும் பகுத்தலு மிடமும் 
பாலுந் திசையும் வெண்மையு மியல்பும்
**1649 

#158
பாலி கள்ளும் பாலி யாறும்
**1650 

#159
பாலை வெம்மையும் புணர்ந்து போதலும் 
பொருள்வயிற் பிரிதலும் பாடலும் பாலையும் 
பாலைநிலப் பாட்டு[ம்] பிரிவு ணர்த்தலும் 
[சொல்]புணர் பூசமுந் தருவுஞ் சுவையும்
**1651 

#160
பாலிகை யுதடும் பட்டவாள் முட்டும் 
வட்டமு மெனவே வழங்க லாகும்
**1652 

#161
பாவகன் தீயும் தீக்கட வுளுமாம்
**1653 

#162
பாவம் பாவனையும் மெய்யும் பாவமும்
**1654 

#163
பாவை பெண்ணும் பாவையு மாகும்
**1655 

#164
பாழி விண்ணுந் தவத்தோர் சாலையும் 
ஊரும் படுக்கையு மொன்னல ரூரும் 
பாயலும் விலங்கின் சேக்கையும் வலியும் 
பாழு மலையின் முழையும் பகர்வர்
**1656 

#165
பாளிதம் பட்டும் கண்ட சருக்கரையும் 
பாற்சோறுங் குழம்பும் பகர லாகும்
**1657 

#166
பானு வாதித்தனு மொளியும் பகலுமாம் 
**1658 

#167
பானல் செய்யுங் கடலு நெய்தலும்
மருதமுங் கள்ளும் பரியும் வெற்றிலையும்
**1659 

#168
பாவே நூற்பா விகற்பமும் பனுவலும் 
நூலும் பரத்தலும் பரவலும் பாம்பும் 
**பி
**1660 

#169
பிங்கலை யாந்தையு மோர்காற்று மாகும் 
**1661 

#170
பிங்கலம் பொன்மையும் பொன்னு மாகும்
**1662 

#171
பிச்சமாண் மயிரும் பீலிக் குடையும் 
வெண்குடை யுமென விளம்பினர் புலவர்
**1663 

#172
பிசிதம் நீறு மிறைச்சியும் வேம்பும் 
**1664 

#173
பிசியரும் பொருளும் பொய்யும் சோறும்
**1665 

#174
பிசினன் பொய்யனுங் கோபனும் லோபனும்
**1666 

#175
பிஞ்ஞகம் பூஞையும் குராற் பசுவு மாகும்
**1667 

#176
பிடகந் தந்திரமும் வேதமு மாகும்
**1668 

#177
பிணைபெண் விலங்கும் பிணையல் மானும் 
ஆசையுந் தொடர்பு மறைந்தனர் புலவர்
**1669 

#178
பிணியே நோயுங் கட்டு மாகும்
**1670 

#179
பிண்டந் திரளையும் பிச்சையும் யாக்கையும்
**1671 

#180
பிணாபெண் விலங்கும் பெண்ணு மாகும்
**1672 

#181
பிண்டி யசோகும் நெல்லின் மாவும்
பிண்ணாக்குஞ் சோறு மோர்நாளு மாகும்
**1673

#182
பிணர் சர்ச்சரையும் கோங்கு மாகும்
**1674 

#183
பிணிமுகம் புட்பொதுவு மன்னமு மயிலும்
**1675 

#184
பிணவல் பெண்ணும் நாயும் பேசுவர்
**1676 

#185
பித்திகை சுவர்த்தலமும் கருமுகையு மாகும்
**1677 

#186
பிதிரே கதையு நொடித்தலுந் தூவலும்
பிதிருந் தெய்வமும் கிளையும் விகற்பமும்
**1678 

#187
பிதாமும் மூர்த்தியு நாரையுந் தந்தையும்
**1679 

#188
பித்தன் தேரானும் பித்தனு மாகும்
**1680 

#189
பிப்பிலி யரசுந் திப்பிலியு மாகும்
**1681 

#190
பிரம்பு நெய்யு மரிசியும் வேலையும் 
தேர்[மு]ட்டியும் பிரம்புஞ் சொல்ல லாகும்
**1682 

#191
பிரசந் தேனுங் கள்ளுந் தேனீயும் 
இறாலும் பிரமரமு மிசைத்தனர் புலவர்
**1683

#192
பிரம சாரியர் வேதியரும் பெருந்தவரும்
**1684 

#193
பிரமம் மும்மூர்த்தி யும்பெரி யோரும்
வேதாந்தமும் வேள்வியு ஞானமும் வேதமும் 
முத்தியுந் தருமமும் பூமியுந் தகரும் 
மந்திர முஞ்சுடர் மூன்று மாகும்
**1685 

#194
பிலவங்கங் குரங்குந் தேரையு மாகும்
**1686 

#195
பிள்ளை வயிரவனுங் காக்கையு மகனும் 
இளமர முமென வியம்பினர் புலவர்
**1687 

#196
பிளிறல் எழுத்திலா வோசையும் ஆர்ப்பும்
**1688 

#197
பிறங்கல் வெற்பு மிறையு மிகுதியும்
நிறைவும் பெருமையு முயர்பு மாகும்
**1689 

#198
பிறங்கடை மைந்தனு மருகனு மாகும்
**1690 

#199
பிறந்தை பாவமும் பவமுமாகும்
**1691 

#200
பிறழ்த லொளிவிடலு நடுக்கமும் பெயர்தலும்
**1692 

#201
பின் பின்றோன்றலும் பிற்றைப் பொழுதும் 
தங்கையுந் திருவும் சாற்ற லாகும் 
**பீ
**1693 

#202
பீடிகை தட்டும் பீடமுங் கடையும்
**1694 

#203
பீதகஞ் சாந்தும் பொன்னும் பொன்மையும் 
பிங்கல மும்மிரு வேலியும் பேசும்
**1695 

#204
பீதம் பொன்னும் பொன்மையுஞ் சாந்தும்
**1696 

#205
பீர்முலைப் பாலும் பீர்க்கு மச்சமும்
பச்சிலையும் பசலையும் பகர லாகும்
**1697 

#206
பீருப் புருவமு மச்சமுள் ளோனும்
**1698 

#207
பீரம்பூ வரசும் பீர்க்கும் வாகையும்
**1699 

#208
பீலிசிறு சின்னமும் பொன்னும் வாச்சியமும்
கலாபமு மால வட்டமுஞ் சவளமும் 
பெருவரை யுங்காற் பீலியு மயிலும் 
**1700 

#209
பீனம் பெருமையும் பாசியு மாகும்
**பு
**1701 

#210
புகை யோசனையுந் தூமமு மாகும்
**1702 

#211
புகலடைக் கலமுங் குதிரு முடலும் 
வென்றியுஞ் சொல்லும் விளம்ப லாகும்
**1703 

#212
புகர்சுக் கிரனுங் குற்றமு மடிசிலும் 
புகர்நிற மும்மெனப் புகன்றனர் புலவர்
**1704 

#213
புகழே புகழும் புகழ்தலு மகத்தியும் 
வாகையு மெனவே வழங்க லாகும்
**1705 

#214
புங்க முயர்ச்சியு மம்பு நற்றூசும் 
அம்பின் குதையு மறைய லாகும்
**1706

#215
புட்டங் காகமும் புடவையு நிறைவும் 
**1707 

#216
புட்கரம் நீரு மாகாயமும் பொலிவும்
வாளுங் குருகுந் தீர்த்தமும் பதுமமும் 
பாண்ட முகமும் யானைக்கைந் நுனியும் 
உட்செறி தாழு முரைத்தனர் புலவர்
**1708 

#217
புணையே மூங்கிலுந் தெப்பமு மாகும்
**1709 

#218
புணர்ச்சி கலவியுஞ் சேர்தலு மாகும் 
**1710 

#219
புணர்வு தோய்ந்திடலு மிசைப்பு மாகும்
**1711 

#220
புணரி கடலுந் திரையுங் கரையும்
**1712 

#221
புண்டரிகம் புற்றும் புலியுமோர் நோயும்
குடையுள் கவரியு மாயனும் பதுமமும் 
ஒருதிக் கானையுங் கழுகுமோர் பூடும் 
வண்டு மரியணையும் வாசவனு மாகும்
**1713

#222
புதனே புதனும் புந்தியு மாகும்
**1714 

#223
புதவு கதவுமோர் புல்லு மாகும்
**1715 

#224
புத்தேள் புதுமையுந் தெய்வமு மாகும்
**1716

#225
புதைதல கைத்தலமு மம்புக் கட்டுமாம்
**1717 

#226
புதைகணைக் கட்டும் புதுமையு மறைவும் 
அம்பு மெனவே யறைந்தனர் புலவர்
**1718 

#227
புத்தன் மாலு மருகனும் புத்தனும்
**1719 

#228
புதலோர் புல்லும் புருவமும் பூடும்
**1720 

#229
புந்தி புதனு ஞானமு மாகும்
**1721 

#230
புயமே மொய்ம்பும் வலியு மாகும்
**1722 

#231
புரமே யுடலும் புரியு முன்னுமாம்
**1723 

#232
புரவலன் வள்ளலும் வேந்தனு மாகும்
**1724 

#233
புரையே இல்லமும் பழுதுங் குற்றமும் 
துளையு முயர்வு முவமையு மாகும்
**1725 

#234
புரையோர் மேலோருங் கீழோரு மாகும்
**1726 

#235
புரிவு விரும்பலும் வேறுபடலுஞ் செயலும்
**1727 

#236
புரத்தல் வணங்கலுங் காத்தலுங் கொடுத்தலும் 
**1728 

#237
புரியே விரும்பலுஞ் செய்தலும் புரமும்
சங்குங் கயிறு கட்டு மாகும்
**1729 

#238
புலிங்கம் அனற்பொறியும் சடகமு மாகும்
**1730 

#239
புலத்தல் புலத்தலும் பூத்தலு மாகும்
**1731 

#240
புலமே யிடமு நடுக்கமும் புந்தியும்
விளைநிலமுந் திக்கும் புலனுந் தனிமையும்
**1732 

#241
புலவே யென்பும் புலான்முடைப் பெயரும் 
**1733 

#242
புல்லே புதலும் புணர்ச்சியும் புன்மையும் 
புலியும் பனையு மனுடமும் வலியும்
**1734 

#243
புலி சிங்கராசியும் சிங்கமும் புலியும் 
சாந்து மெனவே சாற்றினர் புலவர்
**1735 

#244
புலவர் கூத்தரு மறிஞரும் புதனும் 
தேவருஞ் சளுக்கி வேந்தரும் புலவரும் 
பாடுந ருந்துதிப் போரும் பொருநரும்
**1736 

#245
புலம்பு தனிமையு மொலியு ம[ச்]சமும் 
புலம்பலு மெனவே புகன்றனர் புலவர்
**1737 

#246
புவன முலகமு நீரு மாகும்
**1738 

#247
புழைக்கை யாளியும் யானையுந் தோலும்
**1739 

#248
புள்ளுவன் வேடனும களியும் வஞ்சனையும்
**1740 

#249
புளகங் கண்ணாடியுஞ் சோறு மயிர்பொடித்தலும்
**1741 

#250
புளித்தல் ஆம்பிரமுஞ் செறித்தலு மாகும்
**1742 

#251
புளிதித் திப்பும் புளியு மாகும்
**1743 

#252
புள்ளே வண்டு மவிட்டமும் புள்ளும்
**1744 

#253
புள்ளி நண்டும் புள்ளியு மாகும்
**1745 

#254
புறம்பணை குறிஞ்சியு முல்லையு மாகும்
**1746 

#255
புறவங் குறிஞ்சியு முல்லைப் பதியும் 
புறவமுங் கானு மு[ல்]லையு மாகும்
**1747 

#256
புறணி குறிஞ்சியு முல்லை நிலமும் 
புறம்பு(ந்) தோலும் புகல லாகும்
**1748 

#257
புறமே யிடமு முதுகும் வீரமும்
**1749 

#258
புற்றே யெழுத்துந் தலையும் புற்றும்
**1750 

#259
புனிதன் சிவனுந் தூயோனு மாகும்
**1751 

#260
புனைவு வனைதலு மெழிலும் பொலிவும் 
ஒப்பனை யுமென வுரைக்க லாகும்
**1752 

#261
புன்கண் நோயு மெலிவுந் துன்பமும் 
**பூ
**1753 

#262
பூகங் கமுகுஞ் சபையுந் திரட்சியும்
**1754 

#263
பூக்கங் கமுகு மூரு நாடுங்
கூந்தற் கமுகுங் கூறினர் புலவர்
**1755 

#264
பூங்கற்று வனப்பும் பூதமும் புகல்வர்
**1756

#265
பூசை யர்ச்சனையும் பூஞையு மாகும்
**1757 

#266
பூட்கை சிங்கமு மேற்கோளு மாகும்
**1758 

#267
பூதஞ் சீவனும் புனிதமும் பூதமும்
பரணியு மிறந்த காலமு முள்ளானும் 
ஆலுமைம் பூதமு மறைந்தனர் புலவர்
**1759 

#268
பூதிதுர்க் கந்தமுஞ் செல்வமும் புவியும் 
நரகமு முடம்பும் பூழ்தியுங் கொடுமையும் 
நீறுந் தசையு மூழலு மாகும்
**1760 

#269
பூதிகம் பூமியுந் தேகமும் புகல்வர்
**1761 

#270
பூப்புப் பொலிவும் பூத்தலு மாகும்
**1762 

#271
பூபாலர் வேந்தரும் வேளாளரு மாகும்
**1763 

#272
பூமரம் பூத்திடு மரத்தின் பெயரும் 
அறிகுறி யுமென வறைந்தனர் புலவர்
**1764 

#273
பூமன் நான்முகனுஞ் செவ்வாயு மா[கு]ம்
**1765

#274
பூருவம் பழமையு முன்புங் கிழக்கும்
**1766 

#275
பூவை காயாவுங் கயிறுங் கிளியும்
நாகண வாயு நவின்றனர் புலவர்
**1767 

#276
பூழ்க்கை யானையும் யாளியுந் தோலும்
**1768 

#277
பூழிலே யகிலும் நீலப் பெயரும்
**1769 

#278
பூழி புழுதியுஞ் சேறு மாகும்
**1770 

#279
பூழியன் வழுதியுஞ் சேரனு மாகும்
**1771 

#280
பூவே மலரு மழகுங் கூர்மையும்
விளைநிலமும் பொலிவும் பூமியுங் கணவனும் 
தாமரையுங் கண்ணிற் சார்ந்த பூவும் 
பிறப்பு மெனவே பேசினர் புலவர்
**பெ 
**1772 

#281
பெட்டல் விரும்பலும் வேண்டலு மாகும்
**1773

#282
பெட்பு மேன்மையும் விருப்பமு மாகும்
**1774 

#283
பெண்ணை யோராறும் பனையு மனுடமும்
**1775 

#284
பெண்டிர் அலியும் பெண்ணுமாகும்
**பே
**1776 

#285
பேடு பேடியு மன்மத னாடலும்
பறவைப் பேடு மூரு மாகும்
**1777 

#286
பேணல் மிகுத்தலும் பேணிக் கொள்ளலும்
**1778 

#287
பேதை குருடனும் பெண்ணு மூடனும்
**1779 

#288
பேதி பேதமு மிரதமு மாகும்
**1780 

#289
பேயே பேயு மில்லை யெனலுமாம்
**1781

#290
பேராள னென்பதோர் நாளு மிகுத்தோனும்
**1782 

#291
பேரே புகழு நாமமும் பெருமையும்
**பை
**1783 

#292
பைதல் துன்பமு மற்பமு மாகும்
**1784 

#293
பைங்கூழ் பயிரு நோயு மாகும்
**1785 

#294
பைத்த லுருத்தலும் பசத்தலு மாகும்
**1786 

#295
பைம்பொன் பசும்பொன்னு மேருவு மாகும்
**1787 

#296
பையங் கூடையுங் கோரையு மாகும்
**1788 

#297
பையுள் சிறுமையு நோயு மாகும்
**1789 

#298
பைமெத் தெனவும் பையும் படமும் 
அழகும் பசுமையுமாகு மென்பர்
**பொ 
**1790 

#299
பொக்கம் பொய்யும் மிகுதியு மாகும்
**1791 

#300
பொகுட்டுத் தாமரைப் பூவின் கொட்டையும் 
நீரி லெழுந்த குமிழியும் பொருப்பும்
**1792 

#301
பொங்கல் கொதித்தலு மிகுதியு மாகும்
**1793

#302
பொங்கர் சோலையும் பொருப்பு மரக்கோடும் 
இலவ மரமு மிசைத்தனர் புலவர்
**1794 

#303
பொச்சாப்பு மறவியுந் தீதும் புகல்வர்
**1795 

#304
பொதுளல் செறித்தலுந் தழைத்தலு மாகும்
**1796 

#305
பொதிர்ப்பு வெடித்தலு மெறிதலும் பொதிர்வும்
**1797 

#306
பொத்தகங் கோசமுஞ் சித்திரப் புடவையும் 
பொத்த கமும்பொது மையும் புகல்வர்
**1798 

#307
பொதியே மூடையும் பொதியு மாகும்
**1799 

#308
பொம்மல் பொலிவுஞ் சோறு மிகுதியும் 
பொய்யு மெனவே புகன்றனர் புலவர்
**1800 

#309
பொய்மரப் பொந்தும் பொக்கமும் பொய்யும்
**1801 

#310
பொய்த்தல் பொய்த்தலுங் கணிகை விளையாட்டும்
**1802 

#311
பொருள்சொற் பொருளும் மதலையும் பொன்னும் 
பண்புந் தலைமை யும்பல் பண்டமும்
வாய்மை யுமென வழங்க லாகும்
**1803 

#312
பொருநர் போர்த்தலைவருங் கூத்தரும் பாணரும் 
புரவலரும் வீரரும் புகன்றனர் புலவர்
**1804 

#313
பொழிலே புவியும் பெருமையுஞ் சோலையும் 
**1805 

#314
பொறை துறுகல்லும் பூமியுங் கருப்பமும் 
பாரமும் பொறையும் மலையு மாகும்
**1806 

#315
பொறிபுள்ளி மாவும் வரியுமைம் புலனும் 
இயந்திர முந்திரு வுந்தீப் பொறியும் 
இலாஞ்சினையுந் தோணியுஞ் செல்வமு மறிவும் 
எழுத்து மெனவே யியம்பினர் புலவர்
**1807 

#316
பொற்பு வனப்பும் பொலிவு மொப்பனையும்
**1808 

#317
பொற்றை மலையுந் தூறு மாகும்
**1809 

#318
பொன் பஞ்சலோகமும் வனப்பும் திருவும் 
பொலிவும் வியாழமும் பொன்னும் பானுவும் 
இரும்பு மெனவே யியம்ப லாகும்
**போ
**1810 

#319
போகி யிந்திரனும் பாம்பு மாகும்
**1811 

#320
போகில் புட்பொதுவும் பூவி னரும்பும் 
பொகுட்டுங் கொப்பூழும் புகன்றனர் புலவர்
**1812 

#321
போக லுயர்வு நீளமும் போதலும்
**1813

#322
போக்கு போதலுங் குற்றமும் வழியும் 
இளமரமு மெனவே யியம்பினர் புலவர்
**1814 

#323
போசர் காவியும் வினைக்குடை யாரும்
**1815 

#324
போதக மாவின் கன்று மப்பமும் 
யானைக்கன்று ஞானமு மிளமையும் 
இளம்பனை யுமென வியம்பினர் புலவர்
**1816 

#325
போதம் யானைக் கன்றும் ஞானமும் 
அறிவு நாவாயு மறைந்தனர் புலவர்
**1817 

#326
போந்தை யிளம்பனையு மனுட நாளும் 
**1818 

#327
போந்து பெருச்சாளியும் பல்லியு மெலியும் 
பனையு மெனவே பகர்ந்தனர் புலவர்
**1819 

#328
போர்வை தோலு மீக்கோளும் போர்த்தலும்
**1820 

#329
போர்நெற் போருஞ் சமருஞ் சதையமும்
**1821 

#330
போலே யொப்பு மசைச்சொல்லு மாகும்
**1822 

#331
போற்றல் புகழ்தலு மொப்பலு மாகும்
**பௌ
**1823

#332
பௌவம் பரவையுங் கணுவுங் குமிழியும் 
குருவுந் தலையுவா வுமெனக் கூறும்
** பகரவருக்கம் முற்றிற்று

@8 மகர வருக்கம்
**ம
**1824 

#1
மகமே யாகமும் பெருமையு மாகும்
**1825 

#2
மகரந்தங் கள்ளுந் தேனுமலர்த் தாதும்
**1826 

#3
மகரம் பூவின் றாதுஞ் சுறாமீனும் 
காதலு மகர ராசியுங் கழறினர்
**1827 

#4
மக்கள் மானிடருஞ் சிறுவரு மாகும்
**1828 

#5
மகனே மைந்தனுஞ் சிறந்தோனு மாகும்
**1829 

#6
மங்குல் மேகமு மிருளுமா காசமும்
**1830 

#7
மங்களம் வேட்டலுஞ் சுபங்களு மாகும்
**1831 

#8
மஞ்சு மாளிகைக் கொடியும் பூணும் 
யானை முதுகும் பனியும் வலியும் 
அழகு மேகமு முகடு மிளமையும் 
மழையு மெனவே வகுத்தனர் புலவர்
**1832 

#9
மஞ்சரி பூங்கொத்து மாலையுந் தளிரும்
**1833

#10
மடைபணிப் பூட்டு நீர்போ மடையும் 
சோறு மடைத்தொழிலுஞ் சொல்லுவர் புலவர்
**1834 

#11
மடஞ்சத் திரமு முனிவருறை மடமும்
அறியா மையுமென வறைந்தனர் புலவர்
**1835 

#12
மடல்பனை யேடும் பூவி னிதழும் 
மடலென் றுரைத்த பிரபந் தமுமாம்
**1836 

#13
மடியடங் குதலும் பொய்யுஞ் சோம்பும் 
வயிறும் நோயும் புடவையுந் தாழையும் 
மடியுங் கேடுஞ் சோறுந் துன்பமும் 
புடவை யாதிகளை மடித்தலு மாகும்
**1837

#14
மடங்கல் கூற்றும் சிங்கமு நோயும் 
மடியு மிடியும் வடவையு மட்கலனும் 
புகழு முடிவு மடங்குதலுந் தாழையும்
**1838 

#15
மட்டு நிறைதலுங் கள்ளு மெல்லையும்
**1839 

#16
மடுநீர் நிலையும் பூவரும்பு மாகும்
**1840 

#17
மணிநவ மணியும் அழகுங் கருமையும் 
யானை மணியு நன்மையு மிசையும்
**1841 

#18
மண்கணை முழவ மோர்வாச் சியமுமாம் 
**1842 

#19
மண்மே தினியு மணுவுங் கழுவலும்
முழவுமொப் பனையு மாட்சியு மாகும்
**1843

#20
மணங்கலி யாணமும் வாசமுங் கூட்டமும் 
மகிழ்ச்சியு மெனவே வழங்க லாகும்
**1844 

#21
மண்டலம் பூமியும் வட்டமுங் குதிரையும்
**1845 

#22
மண்ணை பேயு மிளமையும் பேதையும்
**1846 

#23
மண்டலி நாயும் பூமியும் பூஞையும் 
பாம்பு மண்டலீக மெனவும் பகர்வர்
**1847 

#24
மதலை கொன்றையும் பிள்ளையுங் கொடுங்கையும் 
தூணு மரக்கலமுஞ் சொல்லுவர் புலவர்
**1848 

#25
மதுகந் தராவு மிருப்பையு மதுரமும்
அட்டியும் வண்டு மறைந்தனர் புலவர்
**1849 

#26
மதவு வனப்பும் வலியு மடமும்
மிகுதியு மெனவே விளம்பினர் புலவர்
**1850 

#27
மதமே செருக்கு மதமு மாகும்
**1851 

#28
மதன்மன் மதனும் வனப்பும் வலியும்
மாட்சிமை யுமென வகுத்தனர் புலவர்
**1852 

#29
மதரே வலியு மிடமும் வனப்பும்
மிகுதியு மெனவே விளம்பினர் புலவர்
**1853

#30
மத்தக நெற்றியுஞ் சென்னியு மாகும்
**1854 

#31
மதுகரங் கள்ளும் வண்டு மாகும்
**1855 

#32
மதியசைச் சொல்லு மிந்துவும் புந்தியும் 
மாதமும் பேரறி வோடும் வாரமும்
**1856 

#33
மதுவே நறவு மினிமையுந் தேனும் 
வசந்த காலமு மெனவகுத் தனரே
**1857 

#34
மத்திகை மாலையும் விளக்குத் தண்டும்
சம்மட்டி யுமெனச் சாற்றினர் புலவர்
**1858 

#35
மத்துன் மத்தமு மத்தின் விகற்பமும்
**1859 

#36
மந்திரம் விசாரமுங் கோவிலு மதுவும்
பரிக்குழாமும் வீடும் பகர்மந் திரமும்
**1860

#37
மந்திரி யமைச்சனும் வெள்ளியும் பொன்னும்
**1861 

#38
மந்தாரஞ் செம்பரத் தமுமோர் மரமும்
**1862 

#39
மந்தி யாதித்தனுங் குரங்கும் வண்டும்
**1863

#40
மந்தன மறலியுங் கரிமுக படாமும்
**1864 

#41
மந்தன் சனியும் மந்த குணமும்
**1865 

#42
மயலே சேறும் மயக்கமும் பேயும்
**1866 

#43
மயிலை இருவாட்சியு மீனு மாகும்
**1867 

#44
மயிர்மயிர்க் கருவியுங் கத்திரியு மஞ்சிகனும்
**1868 

#45
மயன்றெய்வத் தச்சனு வினைஞரு மாகும்
**1869 

#46
மருளே பேயு மையலும் பெண்ணும்
தீயுங் குறிஞ்சி யாழின் றிறமும்
**1870 

#47
மரபு தொன்மையு முறைமையு மாகும்
**1871 

#48
மராளம் மாதளையும் பாம்பு மாகும்
**1872 

#49
மருந்து புதற்புல்லு மமுதமு மருந்தும்
**1873 

#50
மராமரம் போதியு மாச்சாவுங் கடம்பும்
**1874 

#51
மரும கன்வழித் தோன்றலு மருகனும்
மைந்தனு மெனவே வழங்குவர் புலவர்
**1875 

#52
மரைதா மரையுந் தேரையு மிருகமும்
**1876 

#53
மருதம் வயலு மருதநிலப் பாடலும்
மருத நிலமுமோர் மரமு மாகும்
**1877 

#54
மரக்கால் துர்க்கை யாடலுஞ் சோதியும்
அளவையு மாயோ னாடலு மாகும்
**1878 

#55
மருவே மணமு மருவு மாகும்
**1879 

#56
மல்கோ விந்த னாடலும் வளமும்
வலியுமோர் கூத்தும் வழங்க லாகும்
**1880 

#57
மல்லிகை தீபத் தண்டு மௌவலும்
புதலு மெனவே புகன்றனர் புலவர்
**1881 

#58
மலைத்தல் போரு மறுத்தலுஞ் சூடலும்
**1882 

#59
மலர்த லெதிர்தலுந் தோன்றலு மலர்தலும்
**1883

#60
மல்லல் வலியும் வளமு மாகும்
**1884 

#61
மவுலி சடையுங் கிரீடமு மாகும்
**1885 

#62
மழையே கொண்மூவுங் குளிர்ச்சியு மாகும்
**1886 

#63
மள்ளர் குறவரும் வீரரு முழவரும் 
திண்ணி யோருமெனச் செப்ப லாகும்
**1887 

#64
மறையி ரகசியமு மறைவு மந்திரமும்
பரிசையும் வேதமும் பகர லாகும்
**1888 

#65
மற்றுவினை மாற்று மசைச்சொல்லு மாகும் 
**1889 

#66
மறஞ்சே வகமும் பிணக்குங் கூற்றும்
சினமுங் கொலையுஞ் செப்புவர் புலவர்
**1890 

#67
மறலே பிணக்குங் கூற்றும் மறவியும் 
மயக்கமு மெனவே வகுத்தனர் புலவர்
**1891 

#68
மறவர் வீரரும் வேடரு மாகும்
**1892 

#69
மறலி காலனுங் கூற்றனு மறப்பும் 
அழுக்கா றுமென வறைந்தனர் புலவர்
**1893

#70
மன்னொழி யிசையு மசைச்சொல்லும் வேந்தனும் 
வழிதுகூறி இடைச்சொல்லும் பயனில்லாச் சொல்லும் 
செல்வத்தி னிலையுஞ் செப்புவர் புலவர்
**1894 

#71
மன்றம் வெளியும் பொதுவும் வாய்மையும்
**1895 

#72
மன்னன் வேந்தனு முத்திரட் டாதியும்
**1896 

#73
மன்ற வெனுஞ்சொல் லிடைச்சொல்லுந் தேற்றமும்
**1897 

#74
மன்றல் பாலை யாழிசையு நாற்றமும் 
வதுவையு மெனவே வகுத்தனர் புலவர்
**1898 

#75
மனவு நன்மணியுஞ் சங்கு மாகும்
**1899 

#76
மனையே இல்லும் மனைவியு மாகும்
**மா
**1900 

#77
மாசு குற்றமு மழுக்கு மற்பமும் 
மழையு மேகமும் வகுத்தனர் புலவர்
**1901 

#78
மாசி மகமும் மாதமு மாகும்
**1902 

#79
மாஞ்சி யனுமனு மருந்தும் பெண்களும்
**1903

#80
மாடு சீதனமும் பெண்ணும் பக்கமும்
மணியுஞ் செல்வமு நிரையும் வெற்றியும்
**1904 

#81
மாடகம் யாழு முறுக்கா ணியுமாம்
**1905 

#82
மாட முழுந்து மில்லு மாகும்
**1906 

#83
மாட்சி திருத்தமு நன்மையு மாகும்
**1907 

#84
மாணி பிரம சாரியும் வனிதையும்
**1908 

#85
மாதவந் தவமும் வசந்தமுங் கள்ளும்
**1909 

#86
மாதர் பெண்ணு மழகுங் காதலும்
இடைச்சொல்லு மெனவே யியம்ப லாகும்
**1910 

#87
மாதங்கம் யானையு முவருங் கடலும்
இளமையு மெனவே யிசைத்தனர் புலவர்
**1911 

#88
மாதிரந் திசையும் வானமும் பூமியும்
மலையும் யானையும் வகுத்தனர் புலவர்
**1912 

#89
மாந்தல் வீதலுங் குடித்தலு முண்டலும்
**1913

#90
மாபெலி யசுரனும் பூசையு மானிலையும்
**1914 

#91
மாயை வஞ்சனையுஞ் சத்தியு மாகும்
**1915 

#92
மாய்வு மறைவுஞ் சாவு மாகும்
**1916 

#93
மாயம் பொய்யும் கருமையும் வஞ்சமும்
**1917 

#94
மாருதி யனுமனும் வாயுவும் வீமனும்
**1918 

#95
மாரி மேகமும் நோயும் வடுகியும்
கள்ளு மழையும் மரணமுங் கழறுவர்
**1919 

#96
மாலதி சாதியு மல்லிகையு மாகும்
**1920 

#97
மாலை யல்லு மியலு மொழுக்கமும்
பொன்னாதி மாலையும் பூமா லையுமாம் 
**1921 

#98
மாலங் குங்குமமும் பேயு மாகும்
**1922 

#99
மாலே புதனும் பெருமையு மரியும் 
மயக்கமும் நீரும் வரையு மாசையும் 
சோழனுங் காற்றும் போகியும் பழமையும் 
ஏணியுங் கருமையு மேகமும் பொற்பும் 
கண்குத் தியுமெனக் கழறினர் புலவர்
**1923

#100
மாலர் புலையரும் வேடருங் கவசமும்
**1924 

#101
மாலி யிரவியும் கள்ளு மாகும்
**1925 

#102
மாழை யேருந் திரட்சியு மடமையும் 
ஆயமு மோலையு முலோகக் கட்டியும் 
ஈழமும் புளிமா வும்மிசைத் தனரே
**1926 

#103
மாற்கஞ் சமயமும் வீதியும் வழியு 
மறுதலை யுரையும் வழங்க லாகும்
**1927 

#104
மானம் விமானமும் பெருமையுங் குற்றமும் 
அளவு மிலச்சையு மாகு மென்பர்
**1928 

#105
மானி மாதருங் காதலு மாகும்
**1929 

#106
மானுத லிலச்சையு மயக்கமு மொப்பும்
**1930 

#107
மானே யுழையு மகர ராசியும் 
வல்விலங் கின்பெயர்ப் பொதுவு மாகும்
**1931 

#108
மானவர் மனிதரு மாண்மையுள் ளோருமாம் 
**1932 

#109
மாவே தருவுங் கருமையுஞ் செல்வமும்
வண்டு மாடையு மிருகமு மானையும் 
மாத்தருவும் நிறமும் பீடு மோரளவையும் 
வாசியு மேரும் வெறுப்பு மழைத்தலும் 
நென்மாவுந் திருவு நிலமு மாகும்
**மி
**1933

#110
மிக்கவை ஞாய மன்மையும் அடிசிலும் 
நிறைதலு மூணு நிகழ்த்த லாகும்
**1934 

#111
மிகை வேதனையுந் துக்கமு மாகும்
**1935 

#112
மிச்சி லொழிபொருளு மெச்சிலு மாகும்
**1936 

#113
மிசைமேடு முணவு மீமிசைச் சொல்லும்
**1937 

#114
மிச்சை பொய்த்தலு மஞ்ஞானமு மிடி(த்)தலும்
**1938 

#115
மிஞ்சு வண்டு மிகுதியு மாகும்
**1939 

#116
மிடலே மதனும் வலியு மதியும்
**1940 

#117
மிதவை சோறுந் தெப்பமு மாகும்
**1941 

#118
மிழற்றல் சொல்லு நிரம்பா மென்சொலும்
**1942 

#119
மிளைகாவற் காடு மரணமு மாகும்
**மீ
**1943 

#120
மீக்கூற்று கீர்த்தியுஞ் சொல்லின் செலவும்
**1944 

#121
மீளி திண்ணியனும் வலியும் மேன்மகனும் 
பீடுங் கூற்றும் பூமனு மாகும்
**1945 

#122
மீன்விண் மீனுஞ் சித்திரையு மீனும்
**மு
**1946 

#123
முகமா னனமுந் திசையு மிடமும்
**1947 

#124
முசலி யுடும்புந் தாழையு மோந்தியும்
முகுந்தற்கு மூத்தோன் பெயரு மாகும்
**1948 

#125
முச்சி மயிர்முடியு முச்சியு மாகும்
**1949 

#126
முடங்கன் மடங்கலுங் கைதையு மூங்கிலும்
ஓலையு மரங்கு நோயு மாகும்
**1950 

#127
முடுவல் பெண்ணாயுஞ் செந்நாயு மாகும்
**1951 

#128
முடிமயிர் முடியுங் கிரீடமு மாகும்
**1952 

#129
முடலை யுண்டையும் பீடுந் திரள்வடிவு 
முருடுங் கழலையுங் குறடு மூற்றமும் 
முடைநாற் றமுமென மொழிய லாகும்
**1953

#130
முண்டகந் தாழையும் யானை மத்தமும் 
கள்ளுநீர் முள்ளியுந் தாமரையு நெற்றியும் 
கடலுமுள் மூலமுங் கருத லாகும்
**1954 

#131
முத்த முதடும் பிரியமு முத்தும் 
மருதமு மெனவே வழங்கினர் புலவர்
**1955

#132
முதலை செங்கிடையு முருந்து மாகும்
**1956 

#133
முந்து வெண்குருகு முந்தலு மாகும்
**1957 

#134
முருகு கள்ளு மிளமையு நாற்றமும்
விழாவு முருகனு மெலுமிச்சும் வனப்பும் 
அகிலு மெழுச்சியும் வெறியாட் டாளனும்
**1958 

#135
முரணே வலியும் பகையு மாகும்
**1959 

#136
முருந்து வெண்குருத்து மிறகின் மூலமும்
**1960 

#137
முரம்பு பரலடுத்த நிலமும் பாறையும்
மேடு மெனவே விளம்பினர் புலவர்
**1961 

#138
முரசு பறையு முத்திரட் டாதியும்
**1962 

#139
முருகன் சேயும் வெறியாட் டாளனும்
**1963

#140
முரசந் தூரியமும் பணையு மாகும்
**1964 

#141
முருடு முருடு மியமு மாகும்
**1965 

#142
முல்லை முல்லையுங் கொற்றமு மிசையுங் 
கான மல்லிகையு முல்லை நிலமும்
[கற்பு மெனவே கழறினர் புலவர்]
**1966 

#143
முழவு குளிருங் குடமுழாவு மியமும் 
**1967 

#144
முளரி தீயுங் காடும் விறகும்
முள்மரமும் சிறுமையுந் தாமரையு மாகும் 
**1968 

#145
முளையங் குரமு மூங்கிலும் பிள்ளையும்
**1969 

#146
முறைதிரு முறையு முறைமையுங் குணமும் 
ஊழும் கோசமும் கூப்பிடு முறையும்
**1970 

#147
முற்று வளைத்தலு முற்றுதலு மாகும்
**1971 

#148
முறுவல் நகையும் பல்லு மாகும்
**1972 

#149
முற்குளம் பூராட நாளுமுறை குளமும்
**1973

#150
முற்றல் சூழ்போதலு மூப்பு முடிவும் 
வெறுத்தலு மெனவே விளம்புத லாகும்
**1974 

#151
முறமே சுளகும் விசாகமு மாகும்
**1975 

#152
முறியே தளிரு முறிதலு மிலையும்
**1976 

#153
முன்னல் நினைவு நெஞ்சு முரைப்பர்
**1977 

#154
முன்பு வலியு முன்பு மாகும்
**1978 

#155
முனிதவ முனிவரும் கும்ப முனியும்
யானைக் கன்றும் அகத்தியும் தனுவும்
**1979 

#156
முனையே பகையும் வெறுப்புங் கூர்மையும் 
முதன்மையும் வீரமும் மொழிய லாகும்
**1980 

#157
முன்னஞ் சீக்கரி(யு] முந்தின காலமும் 
எண்ணமுஞ் சிங்கமு மியம்ப லாகும்
**மூ
**1981 

#158
மூசல் சாவு மொய்த்தலு மாகும்
**1982 

#159
மூதிரை யீசனுந் திருவா திரையும்
**1983

#160
மூரி யேறு மெருமையுஞ் சோம்பும்
உரனும் பீடு நெரிவுந் தொன்மையும்
**1984 

#161
மூர்த்தி தலைவனும் உருவமும் ஆகும்
**1985 

#162
மூரல் சோறும் பல்லுஞ் சொல்லும்
நகையு மெனவே நவின்றனர் புலவர்
**1986 

#163
மூலம் வேரு மேதுவு முதலும்
மூல நோயும் மூல நாளும்
மாயனுங் கிழங்கும் வழங்கினர் புலவர்
**1987 

#164
மூழி சோறு துழாவியு மகப்பையும்
**1988 

#165
மூழை சோறு மகப்பையு மாகும்
**மெ
**1989 

#166
மெத்தை மெத்தையுஞ் சட்டையு மாகும்
**1990 

#167
மெய்மெய்ப் பொருளு முடலு முண்மையும்
ஒற்றெழுத்து ஞானமு முரைக்க லாகும்
**மே
**1991 

#168
மேக்கு மேற்றிசையு மேலு மாகும்
**1992 

#169
மேகலை தூசு மணிமே கலையும்
**1993

#170
மேடந் தகருங் கவசமு மேடமும்
**1994 

#171
மேதை தோலும் புதனு மிறைச்சியும் 
அறிஞனும் அறிவும் மேம்பாடு நரம்பும் 
கள்ளு மெனவுங் கழறினர் புலவர்
**1995 

#172
மேல் பச்சிமமு மேலோரு மியல்பும் 
விண்ணு மேலும் விளம்ப லாகும்
**1996 

#173
மேழை காடியுங் கஞ்சியு மாகும்
**1997 

#174
மேழகங் கவசமுந் தகரு மாகும்
**1998 

#175
மேனி யுடம்பு நிறமு மாகும்
**மை
**1999 

#176
மைந்து மயக்கமும் வலியு மாகும்
**2000 

#177
மைந்தன் மைந்தனும் திறலோனு மாகும்
**2001 

#178
மைகொண் மூவுங் கண்ணிடு மையும்
இளமையு மலடுந் தகருங் கருமையும் 
குற்றமு மெனவே கூற லாகும்
**மொ
**2002 

#179
மொக்குள் பூமொட்டுங் குமிழியு மாகும்
**2003

#180
மொய்செருக் களமும் தாயும் யானையும் 
மூசலுந் திரளும் வண்டு மாகும்
**2004 

#181
மொய்த்தல் மூடுதலு நெருங்கலு மாகும்
**2005 

#182
மொய்ம்பு வலியுந் தோளு மொழிவர்
**மோ
**2006 

#183
மோடு வயிறும் மோடும் போழ்தலும் 
பெருமையு மெனவே பேச லாகும்
** மகரவருக்கம் முற்றிற்று

@9 யகர வருக்கம்
**ய
**2007 

#1
யவனர் சோனகரும் சித்திர காரரும் 
கம்மா ளருமெனக் கழறினர் புலவர்
**யா
**2008 

#2
யாணர் தேனும் புதுமையும் தச்சரும் 
யாழ்நரு நன்மையுஞ் சித்திரக் காரரும்
**2009 

#3
யாப்புக் கவிதையுங் கட்டுதலு மாகும்
**2010 

#4
யாமம் தெற்கு மிரவுஞ் சாமமும்
பொழுது மெனவே புகல லாகும்
**2011 

#5
யாழே வீணையும் மிதுன ராசியும் 
ஆந்தையு மசுபதி நட்சத் திரமும்
**2012 

#6
யான மறைவீடும் ஊர்தியுந் தோணியும்
**யூ
**2013 

#7
யூக முட்பொரு ளுணர்தலுந் தருக்கமும் 
உடற்குறை யுங்கருங் குரங்குமோர் புல்லும் 
யூகமுங் கோட்டா னுமுரைத் தனரே
**2014 

#8
யூபம் படைவகுப்பும் வேள்வித் தம்பமும் 
உடற்குறை யுமென உரைத்தனர் புலவர் 
**யோ
**2015 

#9
யோகங் கூட்டமுந் தியானமு முபாயமும் 
முயற்சியும் யோகமு மொழிந்தனர் புலவர் 
** யகரவருக்கம் முற்றிற்று

@10 வகர வருக்கம்
**வ
**2016 

#1
வக்கிரங் கொடுமையு மடங்கலும் வட்டமும் 
ஈனமும் போக்கு மியம்ப லாகும்
**2017 

#2
வங்கம் வெள்ளீயமுங் கருத்து நாவாயும்
வழுதலை யுமென வழங்கினர் புலவர் 
**2018 

#3
வசியே கூர்மையும் நட்பும் வாளும்
வடுவுந் திரட்சியும் வருட்டலுங் குற்றமும் 
**2019 

#4
வசந்தன் மதனு மொருவா னரமும்
தென்றலு மெனவே செப்ப லாகும்
**2020 

#5
வசந்தம் புரந்தரன் மாளிகைப் பெயரும் 
வசந்த காலமும் வழங்கினர் புலவர்
**2021 

#6
வசித்தல் வாசமுந் தங்கலு மாகும்
**2022 

#7
வச்சிரஞ் சதுரக் கள்ளியுங் குலிசமும்
வயிரமு மெனவே வழங்கினர் புலவர்
**2023 

#8
வசதி மனையும் வளம்பொரு மிடமும் 
ஊரு மெனவே யுரைக்க லாகும்
**2024 

#9
வசுவக் கினியுந் தேவரும் பொன்னும் 
ஆன்கன்றும் பொருளும் கிரணமு மாகும்
**2025 

#10
வஞ்சி மேற்செலவு மோரூரும் பாவும் 
வல்லியும் பெண்ணும் வஞ்சிப் போனுமாம்
**2026 

#11
வஞ்சகம் பொய்யும் வாளுங் கபடமும்
**2027 

#12
வஞ்சனை மாயையும் பொய்யும் வஞ்சகமும்
**2028 

#13
வடகஞ் சுண்டா(ங்] கியு மத்தவாளமும் தோலும்
**2029 

#14
வடவை பெண்ணெருமையும் பெண்குர கதமு 
வடவைத் தீயும் பிடியா னையுமாம்
**2030 

#15
வட்டி வட்டிலுங் கூடையும் வழியும் 
புட்டிலு மெனவே புகல லாகும்
**2031 

#16
வட்கல் நாணுஞ் சமழ்த்தலுங் கேடும்
**2032 

#17
வடுகு பாடையும் மருதயாழ்த் திறமும் 
இந்தள முமென வியம்பினர் புலவர்
**2033 

#18
வட்டம் பரிசையும் பாரா வளையமும் 
தூசுங் கைமணியுங் குட்டமுஞ் சாலும் 
ஊர்கோளுந் தாழ்வும் வட்டமுந் திகிரியும்
**2034 

#19
வட்டணை யறுத்தலு மொத்தலு மாகும்
**2035 

#20
வடுவே செம்புந் தழும்புங் கூர்மையும் 
வடுவு மழகும் பிஞ்சுங் குற்றமும்
**2036 

#21
வடிவு நிறமு மழகு முறுப்பும்
**2037 

#22
வடமே யாலுங் கயிறு மணிவடமும்
**2038 

#23
வண்டு பூசமுங் குற்றமும் வளையும் 
சங்கும் வாளியு மப்பமும் வண்டும் 
பழுதையு நூலும் மாதர்விளை யாடலும்
**2039 

#24
வணங்கல் வளைதலுந் தாழ்தலு மாகும்
**2040 

#25
வணசை சந்தனமும் சாந்து மாகும்
**2041 

#26
வண்மை வளமையு மீகையும் வலியும் 
வாய்மை[யும்] புகழும் வகுத்தனர் புலவர்
**2042 

#27
வண்டல் மணல்வண்டலு மாதர்விளை யாட்டும்
**2043 

#28
வண்ணஞ் சாந்தமும் வனைதரலும் பண்பும் 
கவியி னோசையுங் கழறினர் புலவர்
**2044 

#29
வதுவை கலியாணமு நாற்றமும் வாசமும் 
புணர்வு மெனவே புகன்றனர் புலவர்
**2045 

#30
வந்திகை சுணங்கும் பூணுநூ லணியும்
**2046 

#31
வந்தி வழிபாடென் றிடலு மலடியும்
**2047 

#32
வம்பு புதுமையுங் கச்சு மணமும் 
நிலையின்மையு மிடரு நிகழ்த்த லாகும்
**2048 

#33
வம்பலர் புதியோரு மயலோரு மாகும்
**2049 

#34
வயம்புட் பொதுவும் வலியு நீரும் 
இரும்பு வாசியுந் தகருமா மாகும்
**2050 

#35
வயலே வயலும் வெளியு மருதமும்
**2051 

#36
வயிறு கயிறு முதரமு மாகும்
**2052 

#37
வயிரஞ் சேகு முரனுங் கூர்மையும் 
குலிசமுங் கோபமும் வயிர மணியும்
**2053 

#38
வயவன் வலியானும் வேட்டனும் வீரனும்
**2054 

#39
வயாவருத் தங்களும் கருப்பமு நோயும் 
விருத்தமு மெனவே விளம்பினர் புலவர்
**2055 

#40
வயமாக் குதிரையும் யானையுஞ் சிங்கமும் 
புலியு மெனவே புகல லாகும்
**2056 

#41
வயின் வியங்கோளு மேவல் கொளலும் 
கடிமனையு முதரமு மிடமு மாகும்
**2057 

#42
வரிவா ரிதியும் வழியுஞ் சுணங்கும் 
எழுத்தும் பாட்டு மிறையு நெல்லும் 
கண்ணின் வரியு நிறமும் வடிவும் 
நீளமும் வண்டுந் தீயு மொழுக்கமும் 
சந்தித் தெருவுஞ் சாற்றினர் புலவர்
**2058 

#43
வரம்பு வட்டியு மெல்லும் வரம்பும்
**2059 

#44
வரையே மணஞ்செ யென்றலு மெழுதலும் 
வேயு மட்டு மலையுங் கைவரையும் 
கரையு மெனவே கழறினர் புலவர்
**2060 

#45
வருட மழையு மாண்டு மாகும்
**2061 

#46
வரைத லெழுதல் நீங்கலுங் கொள்ளலும்
**2062 

#47
வருணம் வண்ணமும் குலமும் புனலும்
**2063 

#48
வரித்தல் பொறித்தலும் பூசுதலு மாகும்
**2064 

#49
வலம்வலப் பாலு மிடமு[ம்] பக்கமும் 
மேகமு மேலும் வெற்றியு மாகும்
**2065 

#50
வல்லை விரைவுங் காடும் வன்மையும் 
மதிளு நோயும் வழங்குவர் புலவர்
**2066 

#51
வல்சூதும் விரைவும் வலியுங் கச்சும்
**2067 

#52
வல்சி கூழு முணவு மாகும்
**2068 

#53
வலவன் றேர்ப்பாகனு மாயனும் வீரனும்
**2069 

#54
வல்லியம் புலியும் படருறு கொடியும்
**2070 

#55
வலவை வல்லோனும் வஞ்சப் பெண்ணும் 
வேலனும் வெறியாட் டாளனும் விளம்புவர்
**2071 

#56
வலம்புரி சங்கு நந்தியா வர்த்தமும் 
ஒருமர முமென வுரைத்தனர் புலவர்
**2072 

#57
வல்லியாய்ப் பாடியும் வல்லிக் கொடியும் 
மலையு நிகளமு மாதரு மாகும்
**2073 

#58
வல்லிகை யாழுங் காதிற் பணியும்
**2074 

#59
வலித்தல் பேசலும் வளைத்தலு நினைத்தலும்
**2075 

#60
வழியே மரபு மிடமுந் தொடர்ச்சியும் 
மார்க்கமுஞ் சேயு மறமும் பின்னுமாம்
**2076 

#61
வழித்தோன்றல் மகனு மகளு மாகும்
**2077 

#62
வழுதலை புனத்தி லிட்ட பொய்க் கழுவும் 
வழுதுணை யுமென வழங்கினர் புலவர்
**2078 

#63
வழங்கல் கொடையுஞ் சொல்லலு முலாவும்
**2079 

#64
வழிபாடு வணக்கமு மர்ச்சனையு மாகும்
**2080 

#65
வள்ளையோர் பாட்டு வள்ளையு மாகும்
**2081 

#66
வள்ளியங் குழலு மிளகு மாகும்
**2082 

#67
வளைகை வளையுந் திகிரியுஞ் சங்கும் 
முழையுமர வளையு மொழிய லாகும்
**2083 

#68
வள்ளிகை வளையுங் கூத்தும் வள்ளியும் 
வல்லிக் கொடியும் பூணும் பெண்ணும்
**2084 

#69
வள்பற் றிரும்பும் வலியும் வாளும் 
வாளி னுறையுங் கூர்மையுஞ் செறிவும் 
வாருஞ் செவியும் வழங்கினர் புலவர்
**2085 

#70
வளமை யுபகாரமுங் கொழுப்பு மாட்சிமையும்
**2086 

#71
வளம் வளப்பாடும் பதவியும் பண்டமும் 
வனப்பு மெனவே வழங்கினர் புலவர்
**2087 

#72
வள்ளம் மரக்காலும் வட்டிலும் வள்ளமும்
**2088 

#73
வள்ளூரம் ஊனின் வகையும் பசுத்தசையும்
**2089 

#74
வறிது குன்றலுஞ் சிறிது மறியாமையும் 
பயனில் சொல்லும் பகர்ந்தனர் புலவர்
**2090 

#75
வன்னி தீயுங் கிளியுஞ் சமிதையும் 
பிர[ம] சாரியு மெனப்பே சினரே
**2091 

#76
வனஞ்சுடு காடுந் துழாயு மிகுதியும் 
காடு நீரும் வனப்புஞ் சோலையும்
**வா
**2092 

#77
வாகு வனப்பும் புயமு மாகும்
**2093 

#78
வாகை யொருமரப் பெயருந் தவங்களும் 
ஆள்வினை முதலாஞ் செய்கையு நலனுங் 
கைவினை முதலாங் கல்வியும் புலமையும் 
சால்பு முதலாம் பண்பு மீகையும்
ஒழுக்க முதலாந் தவமுமறத் துறையும் 
ஒருவரி னொருவர் வென்றி மிகுதியும்
**2094 

#79
வாங்கல் வளைதலுங் கொள்ளலு நீங்கலும்
**2095 

#80
வாசந் தூசும் புள்ளி னிறகும் 
பூவின் மணமு மிருப்பிடமு மாகும்
**2096 

#81
வாசி யங்கியமுங் குதிரையு மாகும்
**2097 

#82
வாஞ்சிதாழ் வாரமு மகிழ்ச்சியும் விருப்பமும்
**2098 

#83
வாடை வடகாற்றுங் கலவையு நாற்றமும் 
மறுகுஞ் சிற்றூரும் வழங்கினர் புலவர்
**2099 

#84
வாணி பாரதியும் வார்த்தையும் பகழியும் 
கூத்து மெ[ன்]ன வுரைத்தனர் புலவர்
**2100 

#85
வாதுவர் கரிப்பாக ரும்பரிப் பாகரும்
**2101 

#86
வாதந் தற்கமு நோயுங் காற்றும்
**2102 

#87
வாமம் வனப்புங் குறளுமிடப் பாலும் 
ஒளியுந் தொடையு முரைத்தனர் புலவர்
**2103 

#88
வாமனங் குறளு மாதிரத் தானையும் 
ஓர்நூ லுமென வுரைத்தனர் புலவர்
**2104 

#89
வாயில் காரணமுந் துவாரமும் புலனுந் 
தூதுந் திறலு நோயும் வாய்தலும்
**2105 

#90
வாய லசையு நுணுக்கமும் வாய்தலும்
**2106 

#91
வாய்வரு வாயுங் குழலு மிடமும் 
வாய்மையும் வாக்கும் வாய்த்தலும் வாயும்
**2107 

#92
வாரம் பங்கும் புனலின் கரையும் 
அன்புங் கடலும் மலைச்சாரலுங் கிழமையும்
**2108 

#93
வாரி வெள்ளமுங் கதவு நூலும் 
மதிலுங் கடலும் வாய்தலு நீரும் 
வருவாயும் வழியும் பகுதியுஞ் சுற்றும் 
மடையும் விளைவும் யானைசே ரிடமும்
**2109 

#94
வார்கொண் மூவு நீளமு நேர்மையும் 
வகிர்தலுங் கச்சு நீரும் வாரும்
**2110 

#95
வாரணங் கவசமுங் கோழியுஞ் சங்கும் 
தந்தியும் பன்றியுந் தடுத்தலுங் கடலும் 
காருங் குடையும் புரையுமுன் மத்தமும்
**2111 

#96
வாருண மேற்கு நீரும் வாருதியும்
**2112 

#97
வாரிச மரையு நீர்ப்பூடு மாகும்
**2113 

#98
வாலே வெண்மையு மிகுதியுந் தூய்மையும் 
வாலும் வாலதியு மிளமையு மாகும்
**2114 

#99
வாலி யாயுதனும் வாலியு மாகும்
**2115 

#100
வாவல் கடத்தலு நசையுந் துரிஞ்சிலும்
**2116 

#101
வாழி வாழ்கெனலு மிடைச்சொல்லு மாகும்
**2117 

#102
வாழ்த்து வாழ்த்தலு மாசிடைச் சொல்லும்
**2118 

#103
வாள்கர வாளமும் ஒளியுங் கயிறும் 
கச்சு நீருங் கழறினர் புலவர்
**2119 

#104
வாளி யம்புஞ் சோணையுஞ் சுற்றோட்டமும்
**2120 

#105
வானம் விசும்பு மழையுங் கனியும் 
உலர்ந்த மரமும் ஓதினர் புலவர்
**2121 

#106
வானிமேற் கட்டியுந் துகிலின் கொடியுஞ் 
சேனையு மெனவே செப்ப லாகும்
**2122 

#107
வான்கொண் மூவும் மழையும் விண்ணும் 
பெருமையு நீரும் வலியு நீளமும்
**2123 

#108
வானவன் பிரமனுஞ் சேரனு மாகும்
**வி
**2124 

#109
விசும்பு மேகமுந் துறக்கமும் விண்ணும் 
திசையு மெனவே செப்பினர் புலவர்
**2125 

#110
விசாலங் கடம்பு மிடமு மாகும்
**2126 

#111
விசயம் வென்றியுஞ் சூரியன் வட்டமும் 
வெல்லமு மெனவே விளம்பினர் புலவர்
**2127 

#112
விடர்கா முகருந் தூர்த்தரும் விடபும் 
தவத்தோ ரிடமுங் கானு மாகும்
**2128 

#113
விடையெதிர் மொழியு மேறும் விடுத்தலும் 
ஏகு தலுமென வியம்பினர் புலவர்
**2129 

#114
விடபம் விடையு மிடப ராசியும் 
கிம்பு ரியுமரக் கொம்பு மாகும்
**2130 

#115
விடங்க மழகுங் கொடியுங் கொடுங்கையும் 
ஆண்மையு முகடு மறைந்தனர் புலவர்
**2131 

#116
விடலை பாலைத் தலைவனும் விறலனும்
**2132 

#117
விடமொரு மரமுந் தேளு நஞ்சும்
**2133 

#118
விண்ணா காசமு மேகமுந் துறக்கமும்
**2134 

#119
விண்டு மாயோனும் வெற்பும் வேயுங் 
காற்று மேகமுங் கழறினர் புலவர்
**2135 

#120
விதப்பு வலியு மதிலுறுப்பு மிகுதியுங் 
கம்பித முமெனக் கழறினர் புலவர்
**2136 

#121
விதவை கலன்கழி மகளிருஞ் சோறுங் 
கைம்மணி யுமெனக் கழறினர் புலவர்
**2137 

#122
வித்தகர் கொல்லரு மாயரு மாகும்
**2138 

#123
விதிர்ப்பு நடுக்கமு மிகுதியுங் கம்பமும்
**2139 

#124
விதியே குணமு மியல்பு மயனும் 
வினையு மூழும் விளம்பினர் புலவர்
**2140 

#125
வித்தம் பொன்னும் பழித்தலு ஞானமும்
**2141 

#126
விதம்புட் பொதுவும் விதமு மாகும்
**2142 

#127
விந்தம் வனசமும் வெற்பு மாகும்
**2143 

#128
விபுலம் பெருமையும் விரிவு மாகும்
**2144 

#129
விபுதர் முற்றத் துறந்தோரும் விண்ணவரும்
**2145 

#130
விபூதி குற்றமுங் கொடுமையுந் தசையும் 
வெண்ணீறு நரகுஞ் செல்வமும் புனலும் 
உக்கமு மெனவே உரைத்தனர் புலவர்
**2146 

#131
விம்ம லொலித்தலு மேங்குதலு மாகும்
**2147 

#132
வியங்கொள் வோனு மழுவும் வில்லும்
**2148 

#133
வியப்புச் சினக்குறிப்பு மதிசயமு மாகும்
**2149 

#134
வியாளம் பாம்பும் புலியும் வியாழமும்
**2150 

#135
வியலே யகலமுங் காடுமேம் பாடும் 
மரவட் டும்மென வழங்கினர் புலவர்
**2151 

#136
வியர்ப்பு மேவலும் பொருதலு மச்சமும் 
செறிவு மெனவே செப்பினர் புலவர்
**2152 

#137
வியங்கோள் கொள[லு] மேவலு மாகும்
**2153 

#138
விரையே மணமுஞ் சாந்தும் வித்தும் 
தூபமு மெனவே சொல்லினர் புலவர்
**2154 

#139
விரோதம் வேறு பாடு மிருளும் 
மயிரு மெனவே வழங்கினர் புலவர்
**2155 

#140
விருத்தி தன்றொழிலும் வளர்ச்சியு மாளும் 
விரிபொருளு மிலாபமும் விளம்பினர் புலவர்
**2156 

#141
விரைவு சீக்கிரமும் வெ[ம்]மையும் வேண்டலும்
**2157 

#142
விரணம் விழலு மூறும் விளம்புவர்
**2158 

#143
விரிவு விடபு மகலமும் விளம்புவர்
**2159 

#144
விருந்தஞ் சுற்றமும் மிருகக் குழாமும்
**2160 

#145
விருத்தமோர் கவிதையும் வட்டமு மூப்பும்
**2161 

#146
விலங்குகால் விலங்குங் குறுக்கு மிருகமும்
**2162 

#147
விலங்குத லேசெல விடுதலு நீங்கலும் 
எறிதலு மெனவே யிசைத்தனர் புலவர்
**2163 

#148
வில்லே யொளியு மூலமும் வில்லும்
**2164 

#149
வில்லே ருழவர் வேடரும் வேந்தரும்
**2165 

#150
விலோதம் பெண்மயிர்ச் சுருளும் பதாகையும்
**2166 

#151
விழுமஞ் சிறப்புஞ் சீர்மையு மிடும்பையும்
**2167 

#152
விழவு மிதுன ராசியும் விழாவும்
**2168 

#153
விழைச்சுப் புணர்வும் [இளமையு மாகும்]
**2169 

#154
விழைந்தோன் கொண்கனும் வேட்டோனு மாகும்
**2170 

#155
விழைவு புணர்ச்சியுங் காதலு மாகும்
**2171 

#156
விளரி யிளமையும் யாழும் வேட்கையும் 
யாழி னரம்பு மிகுதியு மாகும்
**2172 

#157
விளவு கமரு விளாமரமு மாகும்
**2173 

#158
விளிவு சாதலும் கேடு மாகும்
**2174 

#159
விளக்கு விளக்கின் றகழியும் ஒளியும்
**2175 

#160
விளரே கொழுப்பு மிளமையும் வெண்மையும்
**2176 

#161
விளையே யிளமையும் புலமு மாகும்
**2177 

#162
விறலே வலியும் வென்றியு மாகும்
**2178

#163
விறப்பு வெஞ்சமருஞ் செறிவு மச்சமும் 
வளமையும் பெருக்கமும் வெற்றியு மாகும்
**2179 

#164
வினாயக னைங்கரன் றானும் புத்தனும் 
அருகனு மெனவே யறைந்தனர் புலவர்
**வீ
**2180 

#165
வீங்கல் பெருமையு மேங்குதலு மாகும்
**2181 

#166
வீசல் பரத்தலு மெறிதலுஞ் சாதலும் 
கொடுத்தலு மிகுத்தலுங் கூறினர் புலவர்
**2182 

#167
வீதி நேரோடலும் வெருவலும் வீதியும்
**2183 

#168
வீதல் கெடுதலுஞ் சாவு மாகும்
**2184 

#169
வீரம் விறலு மோங்கலு மாகும்
**2185 

#170
வீரையோர் மரமும் துன்பமுங் கடலும்
**2186 

#171
வீபுட் பொதுவுஞ் சாவு நீக்கமும் 
பூவு மெனவே புகன்றனர் புலவர்
**வெ
**2187 

#172
வெகுளி மிஞ்சிடலுங் கோபமு மாகும்
**2188 

#173
வெடிவெள் ளிடியு மச்சமும் வெளியும் 
பரிமளித்தலும் புகையும் பகர்ந்தனர் புலவர்
**2189 

#174
வெட்சி செச்சையு மிகுநிரை கவர்தலும்
**2190 

#175
வெண்மை யறியா மையும் வெள்ளியும்
**2191 

#176
வெதிர் கீசகமுஞ் செவிடு மாகும்
**2192 

#177
வெப்பம் வேனிலுங் கோபமு மாகும்
**2193 

#178
வெய்யோன் கொடியனும் விருப்ப முடையோனும் 
பானுவு மெனவே பகர்ந்தனர் புலவர்
**2194 

#179
வெயில் சூரியனுஞ் சுடர்களு மாகும்
**2195 

#180
வெள்ளை சங்கும் வெண்பாவுந் தகரும் 
வெள்ளாடும் வெள்ளையும் வெளிறுங் கள்ளும் 
முன்னுள ராமனு மொழிந்தனர் புலவர்
**2196 

#181
வெளிறு வெள்ளையு மறியா மையுமாம்
**2197 

#182
வெள்ளம் புனலும் வேலைக் கரையும் 
கடலுமோ ரெண்ணும் மிகுதியு மாகும்
**2198 

#183
வெள்ளில் விளாவும் பாடையு மாகும்
**2199 

#184
வெளில்வெண் டயிரும் தயிரின் மத்தும் 
பாடையு மணிலும் வேழத் தம்பமும்
**2200 

#185
வெள்ளி சுக்கிரனும் வெண்டாது மாகும்
**2201 

#186
வெறியணங் காடலும் அச்சமுங் கலக்கமும் 
பேயு நோயும் வாசமுந் தகரும்
**2202 

#187
வெறுக்கை பொன்னும் வெறுப்புஞ் செல்வமும் 
கனவும் விழுப்பொருளுங் கழறினர் புலவர்
**வே
**2203 

#188
வேக முடலுங் கீழும் வேகமும்
**2204 

#189
வேங்கை பொன்னும் புலியும் வேங்கையும்
**2205 

#190
வேசரி கோவேறு கழுதையுங் கரமும்
**2206 

#191
வேட்டுவன் மகமும் வேடனு மாகும்
**2207 

#192
வேணி மயிர்ச்சடையும் விண்ணு நதியும்
**2208 

#193
வேதிகை பலகையுந் திண்ணையும் வீதியும் 
வினையு மியலம்பும் வேதனு மாகும்
**2209 

#194
வேதண்டங் க[யி]லையும் வெற்பும் யானையும்
**2210 

#195
வேந்த னிந்திரனு மதியு மிரவியும் 
வியாழமு மரசனும் விளம்பினர் புலவர்
**2211 

#196
வேதனை துயருஞ் சுடலும் விளம்பும்
**2212 

#197
வேய் [து]ளையுடைய பொருளு மூங்கிலும் 
ஒற்றும் வினையு முரைத்தனர் புலவர்
**2213 

#198
வேரி கள்ளுந் தேனும் வாசமும்
**2214 

#199
வேல்வேல மரமும் படைக்கலப் பொதுவும் 
மூங்கிலும் வேலா யுதமு மொழிவர்
**2215 

#200
வேலி மதிலும் விளைநிலமுங் காவலும் 
ஊரும் வேலியு முரைத்தனர் புலவர்
**2216 

#201
வேலை கடற்கரையுங் கடலுங் காலமும் 
தொழிலு மெனவே சொல்லினர் புலவர்
**2217 

#202
வேலன் முருகனும் வெறியாட் டாளனும்
**2218 

#203
வேலா வலையம் கடலும் பூமியும்
**2219 

#204
வேள்வி வேள்விக் குண்டமும் யாகமும் 
கொடையும் பூசையுங் கூறினர் புலவர்
**2220 

#205
வேழங் கொறுக்கையுங் கரும்புந் தும்பியும்
மூங்கிலு மொலியும் வேழப் பூச்சியும்
**2221 

#206
வேள்மன் மதனுஞ் சளுக்கி வேந்தனுங் 
குமரனு மெனவே கூறினர் புலவர்
**2222 

#207
வேளாளர் வள்ளலும் பொன்வா ணிபரும் 
வேளா ளருமென விளம்பினர் புலவர்
**2223 

#208
வேளாண்மை வணங்கலு முபகா ரங்களும் 
மெய்ம்மையு மெனவே விளம்பினர் புலவர்
**வை
**2224 

#209
வைகல்புலர் காலையு மிறந்த காலமும் 
தங்கலு மெனவே சாற்றினர் புலவர்
**2225 

#210
வைகறை விடியலும் யாமமு மாகும்
**2226 

#211
வையே கூர்மையும் வைக்கோலும் புல்லும்
**2227 

#212
வையந் தேருஞ் சிவிகையும் புவியும் 
வண்டிலு மூர்தியு முரோகணியு மாகும்
**வௌ
**2228 

#213
வௌவல் பிடித்தல் வௌவால் பறவையாம்
**பொதிகை நிகண்டு முற்றிற்று
**