|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
வெகுளி (1)
வெகுளி மிஞ்சிடலும் கோபமும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 172/1
TOP
வெஞ்சமரும் (1)
விறப்பு வெஞ்சமரும் செறிவும் அச்சமும் - 10.வகர_வருக்கம்:10 163/1
TOP
வெட்சி (1)
வெட்சி செச்சையும் மிகு நிரைகவர்தலும் - 10.வகர_வருக்கம்:10 174/1
TOP
வெட்சியும் (4)
குல்லை கஞ்சாவும் வெட்சியும் துழாயும் - 2.ககர_வருக்கம்:2 278/1
வெட்சியும் எனவே விளம்பலாகும் - 3.சகர__வருக்கம்:3 104/3
கொச்சை ஏறும் வெட்சியும் தேய்வையும் - 3.சகர__வருக்கம்:3 181/2
சேதாரம் வெட்சியும் பொன்தேய்மானமும் - 3.சகர__வருக்கம்:3 215/1
TOP
வெட்டலும் (1)
என்பும் உறுப்பும் வெட்டலும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 14/2
TOP
வெட்டுக்கடையும் (1)
எருக்குதல் பரித்தலும் வெட்டுக்கடையும்
கோறலும் எனவே கூறலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 450/1,2
TOP
வெடி (1)
வெடி வெள்ளிடியும் அச்சமும் வெளியும் - 10.வகர_வருக்கம்:10 173/1
TOP
வெடித்தலும் (1)
பொதிர்ப்பு வெடித்தலும் எறிதலும் பொதிர்வும் - 7.பகர_வருக்கம்:7 305/1
TOP
வெண்கலமும் (2)
வெண்கலமும் உறையும் உறைதலும் குறியும் - 1.உயிர்_வருக்கம்:1 415/5
கஞ்சம் வெண்கலமும் கஞ்சாவும் தாளமும் - 2.ககர_வருக்கம்:2 9/1
TOP
வெண்காந்தளும் (2)
இலாங்கலி கலப்பையும் தெங்கும் வெண்காந்தளும் - 1.உயிர்_வருக்கம்:1 318/1
கோடை வெண்காந்தளும் குதிரையும் வேனிலும் - 2.ககர_வருக்கம்:2 372/1
TOP
வெண்குடையும் (3)
கைவேலும் சத்திரசாலையும் வெண்குடையும்
சத்திரக்கருவியும் சாற்றலாகும் - 3.சகர__வருக்கம்:3 20/2,3
மாலையும் குஞ்சமும் தூக்கும் வெண்குடையும்
பங்கியும் துக்கமும் பகரலாகும் - 5.தகர_வருக்கம்:5 183/2,3
வெண்குடையும் என விளம்பினர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 171/2
TOP
வெண்குருகும் (1)
முந்து வெண்குருகும் முந்தலும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 133/1
TOP
வெண்குருத்தும் (1)
முருந்து வெண்குருத்தும் இறகின்மூலமும் - 8.மகர_வருக்கம்:8 136/1
TOP
வெண்சங்கும் (1)
கூனல் வெண்சங்கும் கூனலும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 322/1
TOP
வெண்ணீறும் (2)
பலி வெண்ணீறும் சோறும் பூசையும் - 7.பகர_வருக்கம்:7 95/1
வெண்ணீறும் நரகும் செல்வமும் புனலும் - 10.வகர_வருக்கம்:10 130/2
TOP
வெண்ணெயும் (1)
நுரையே வெண்ணெயும் நுரையும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 86/1
TOP
வெண்தயிரும் (1)
வெளில் வெண்தயிரும் தயிரின்மத்தும் - 10.வகர_வருக்கம்:10 184/1
TOP
வெண்தாதும் (1)
வெள்ளி சுக்கிரனும் வெண்தாதும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 185/1
TOP
வெண்பரியும் (1)
நரை வெண்பரியும் வெண்மையும் கவரியும் - 6.நகர_வருக்கம்:6 18/1
TOP
வெண்பலியும் (1)
அடலை வெண்பலியும் சுடுகாடும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 39/1
TOP
வெண்பாவும் (1)
வெள்ளை சங்கும் வெண்பாவும் தகரும் - 10.வகர_வருக்கம்:10 180/1
TOP
வெண்மை (1)
வெண்மை அறியாமையும் வெள்ளியும் - 10.வகர_வருக்கம்:10 175/1
TOP
வெண்மையும் (10)
அருச்சுனம் மருதும் வெண்மையும் பந்தும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 118/1
கம் புனலும் வெண்மையும் தலையும் ககனமும் - 2.ககர_வருக்கம்:2 68/1
வெண்மையும் குருக்கத்தியும் உலைமூக்கும் - 2.ககர_வருக்கம்:2 267/3
சுதை சுண்ணச்சாந்தும் வெண்மையும் அமுதும் - 3.சகர__வருக்கம்:3 148/1
சுவேதம் வெண்மையும் வேர்வையும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 162/1
வெண்மையும் சிறகும் விளம்பலாகும் - 5.தகர_வருக்கம்:5 159/3
நரை வெண்பரியும் வெண்மையும் கவரியும் - 6.நகர_வருக்கம்:6 18/1
பாலும் திசையும் வெண்மையும் இயல்பும் - 7.பகர_வருக்கம்:7 157/2
வாலே வெண்மையும் மிகுதியும் தூய்மையும் - 10.வகர_வருக்கம்:10 98/1
விளரே கொழுப்பும் இளமையும் வெண்மையும் - 10.வகர_வருக்கம்:10 160/1
TOP
வெதிர் (1)
வெதிர் கீசகமும் செவிடும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 176/1
TOP
வெப்பம் (1)
வெப்பம் வேனிலும் கோபமும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 177/1
TOP
வெப்பும் (1)
உருப்பு வெப்பும் துக்கமும் உதித்தலும் - 1.உயிர்_வருக்கம்:1 393/1
TOP
வெம்மையும் (2)
பாலை வெம்மையும் புணர்ந்துபோதலும் - 7.பகர_வருக்கம்:7 159/1
விரைவு சீக்கிரமும் வெம்மையும் வேண்டலும் - 10.வகர_வருக்கம்:10 141/1
TOP
வெய்யோன் (1)
வெய்யோன் கொடியனும் விருப்பமுடையோனும் - 10.வகர_வருக்கம்:10 178/1
TOP
வெயில் (1)
வெயில் சூரியனும் சுடர்களும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 179/1
TOP
வெயிலும் (2)
பெற்றியும் வெயிலும் பேசப்படுமே - 1.உயிர்_வருக்கம்:1 433/2
என்றூழ் வெயிலும் காற்றும் இரவியும் - 1.உயிர்_வருக்கம்:1 462/1
TOP
வெருவலும் (1)
வீதி நேரோடலும் வெருவலும் வீதியும் - 10.வகர_வருக்கம்:10 167/1
TOP
வெல்லமும் (5)
அக்காரம் ஆடையும் வெல்லமும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 7/1
அழகு சர்க்கரையும் வெல்லமும் அழகும் - 1.உயிர்_வருக்கம்:1 148/1
திரையும் மிடறும் துண்டமும் வெல்லமும்
பூமியும் தேசமும் கவசமும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 34/2,3
பாகனும் வெல்லமும் குழம்பும் பாணியும் - 7.பகர_வருக்கம்:7 117/2
வெல்லமும் எனவே விளம்பினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 111/2
TOP
வெள்ளம் (1)
வெள்ளம் புனலும் வேலைக்கரையும் - 10.வகர_வருக்கம்:10 182/1
TOP
வெள்ளமும் (2)
நீத்தம் வெள்ளமும் நீரும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 75/1
வாரி வெள்ளமும் கதவும் நூலும் - 10.வகர_வருக்கம்:10 93/1
TOP
வெள்ளாடும் (3)
கொச்சை கொச்சையும் வெள்ளாடும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 346/1
சாகம் வெள்ளாடும் தேக்கும் வண்டும் - 3.சகர__வருக்கம்:3 48/1
வெள்ளாடும் வெள்ளையும் வெளிறும் கள்ளும் - 10.வகர_வருக்கம்:10 180/2
TOP
வெள்ளாம்பலும் (1)
அல்லி வெள்ளாம்பலும் காயாவும் அலியும் - 1.உயிர்_வருக்கம்:1 131/1
TOP
வெள்ளி (1)
வெள்ளி சுக்கிரனும் வெண்தாதும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 185/1
TOP
வெள்ளிடியும் (1)
வெடி வெள்ளிடியும் அச்சமும் வெளியும் - 10.வகர_வருக்கம்:10 173/1
TOP
வெள்ளியும் (7)
அம்படலம் வெள்ளியும் ஓடமும் மரக்காலும் - 1.உயிர்_வருக்கம்:1 84/1
இரசதம் வெள்ளியும் காஞ்சியும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 297/1
கவி நீர்க்காக்கையும் புலவனும் வெள்ளியும்
மந்தியும் கவியும் மாவாய்க்கருவியும் - 2.ககர_வருக்கம்:2 114/1,2
தாரம் வெள்ளியும் நாவும் வில்லும் - 5.தகர_வருக்கம்:5 70/1
வெள்ளியும் முகரிமையும் விளம்பலாகும் - 7.பகர_வருக்கம்:7 25/3
மந்திரி அமைச்சனும் வெள்ளியும் பொன்னும் - 8.மகர_வருக்கம்:8 37/1
வெண்மை அறியாமையும் வெள்ளியும் - 10.வகர_வருக்கம்:10 175/1
TOP
வெள்ளில் (1)
வெள்ளில் விளாவும் பாடையும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 183/1
TOP
வெள்ளீயமும் (1)
வங்கம் வெள்ளீயமும் கருத்தும் நாவாயும் - 10.வகர_வருக்கம்:10 2/1
TOP
வெள்ளை (1)
வெள்ளை சங்கும் வெண்பாவும் தகரும் - 10.வகர_வருக்கம்:10 180/1
TOP
வெள்ளையும் (3)
சிதம் செயமுறலும் வெள்ளையும் ஞானமும் - 3.சகர__வருக்கம்:3 95/1
வெள்ளாடும் வெள்ளையும் வெளிறும் கள்ளும் - 10.வகர_வருக்கம்:10 180/2
வெளிறு வெள்ளையும் அறியாமையும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 181/1
TOP
வெளியும் (3)
மன்றம் வெளியும் பொதுவும் வாய்மையும் - 8.மகர_வருக்கம்:8 71/1
வயலே வயலும் வெளியும் மருதமும் - 10.வகர_வருக்கம்:10 35/1
வெடி வெள்ளிடியும் அச்சமும் வெளியும்
பரிமளித்தலும் புகையும் பகர்ந்தனர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 173/1,2
TOP
வெளில் (1)
வெளில் வெண்தயிரும் தயிரின்மத்தும் - 10.வகர_வருக்கம்:10 184/1
TOP
வெளிறு (1)
வெளிறு வெள்ளையும் அறியாமையும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 181/1
TOP
வெளிறும் (1)
வெள்ளாடும் வெள்ளையும் வெளிறும் கள்ளும் - 10.வகர_வருக்கம்:10 180/2
TOP
வெற்பாடும் (1)
சரபம் சிம்புள்ளும் வெற்பாடும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 33/1
TOP
வெற்பும் (14)
அகம் தருவும் குறையும் வெற்பும் மனையும் - 1.உயிர்_வருக்கம்:1 1/1
பரிதியும் விண்ணும் வெற்பும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 54/2
அரிட்டம் காக்கையும் கள்ளும் வெற்பும்
பிறவியில்குற்றமும் பேசலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 110/1,2
அருவி தினைத்தாளும் வெற்பும் ஆறும் - 1.உயிர்_வருக்கம்:1 123/1
சானு வெற்பும் அதன்பக்கமும் முழந்தாளும் - 3.சகர__வருக்கம்:3 85/1
சிகரி கோபுரமும் வெற்பும் நாரையும் - 3.சகர__வருக்கம்:3 91/1
சிமையம் மலையுச்சியும் தென்றலும் வெற்பும்
குடுமியும் எனவே கூறலாகும் - 3.சகர__வருக்கம்:3 108/1,2
சையம் ஓர்மலையும் வெற்பும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 224/1
திகிரி வேயும் வெற்பும் தேருருளும் - 5.தகர_வருக்கம்:5 85/1
பறம்பு வெற்பும் முலையும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 109/1
பிறங்கல் வெற்பும் இறையும் மிகுதியும் - 7.பகர_வருக்கம்:7 197/1
விண்டு மாயோனும் வெற்பும் வேயும் - 10.வகர_வருக்கம்:10 119/1
விந்தம் வனசமும் வெற்பும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 127/1
வேதண்டம் கயிலையும் வெற்பும் யானையும் - 10.வகர_வருக்கம்:10 194/1
TOP
வெற்றியும் (11)
அடலே கொலையும் வெற்றியும் வலியும் - 1.உயிர்_வருக்கம்:1 35/1
ஆடு வெற்றியும் கூத்தும் மேடமும் - 1.உயிர்_வருக்கம்:1 196/1
ஆடல் புணர்ச்சியும் வெற்றியும் சொல்லும் - 1.உயிர்_வருக்கம்:1 201/1
ஆணை மெய்ப்பாடும் வெற்றியும் ஏவலும் - 1.உயிர்_வருக்கம்:1 207/1
குடுமி வில்லும் வெற்றியும் உச்சியும் - 2.ககர_வருக்கம்:2 239/1
கொற்றம் வெற்றியும் அரசியலும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 364/1
கணைக்காலும் சங்கும் வளையும் வெற்றியும்
புலவரும் அன்பும் ஓர்எண்ணும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 9/2,3
சயம் சருக்கரையும் மாலையும் வெற்றியும்
பானுவும் அல்லியும் பகரலாகும் - 3.சகர__வருக்கம்:3 31/1,2
மணியும் செல்வமும் நிரையும் வெற்றியும் - 8.மகர_வருக்கம்:8 80/2
மேகமும் மேலும் வெற்றியும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 49/2
வளமையும் பெருக்கமும் வெற்றியும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 163/2
TOP
வெற்றிலையும் (2)
தும்பை போரும் வெற்றிலையும் தும்பையும் - 5.தகர_வருக்கம்:5 128/1
மருதமும் கள்ளும் பரியும் வெற்றிலையும் - 7.பகர_வருக்கம்:7 167/2
TOP
வெறி (1)
வெறி அணங்குஆடலும் அச்சமும் கலக்கமும் - 10.வகர_வருக்கம்:10 186/1
TOP
வெறியாட்டாளனும் (4)
அகிலும் எழுச்சியும் வெறியாட்டாளனும் - 8.மகர_வருக்கம்:8 134/3
முருகன் சேயும் வெறியாட்டாளனும் - 8.மகர_வருக்கம்:8 139/1
வேலனும் வெறியாட்டாளனும் விளம்புவர் - 10.வகர_வருக்கம்:10 55/2
வேலன் முருகனும் வெறியாட்டாளனும் - 10.வகர_வருக்கம்:10 202/1
TOP
வெறுக்கை (1)
வெறுக்கை பொன்னும் வெறுப்பும் செல்வமும் - 10.வகர_வருக்கம்:10 187/1
TOP
வெறுத்தலும் (1)
வெறுத்தலும் எனவே விளம்புதலாகும் - 8.மகர_வருக்கம்:8 150/2
TOP
வெறுப்பும் (6)
கைத்து பொன்னும் வெறுப்பும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 341/1
தேக்கு தேக்கும் வெறுப்பும் கமுகும் - 5.தகர_வருக்கம்:5 170/1
நளியே குளிரும் வெறுப்பும் நண்டும் - 6.நகர_வருக்கம்:6 30/1
வாசியும் ஏரும் வெறுப்பும் அழைத்தலும் - 8.மகர_வருக்கம்:8 109/4
முனையே பகையும் வெறுப்பும் கூர்மையும் - 8.மகர_வருக்கம்:8 156/1
வெறுக்கை பொன்னும் வெறுப்பும் செல்வமும் - 10.வகர_வருக்கம்:10 187/1
TOP
வென்றி (1)
ஒருவரினொருவர் வென்றி மிகுதியும் - 10.வகர_வருக்கம்:10 78/6
TOP
வென்றியும் (4)
ஆற்றல் சுமத்தலும் வென்றியும் ஆண்மையும் - 1.உயிர்_வருக்கம்:1 248/1
வென்றியும் சொல்லும் விளம்பலாகும் - 7.பகர_வருக்கம்:7 211/2
விசயம் வென்றியும் சூரியன்வட்டமும் - 10.வகர_வருக்கம்:10 111/1
விறலே வலியும் வென்றியும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 162/1
TOP
|
|
|