<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - 2-ஆம் பகுதி - தொடரடைவு

வி - முதல் சொற்கள்
விகற்பமும் 1
விகுதியும் 1
விசயம் 1
விசாகமும் 1
விசாரமும் 3
விசாலம் 1
விசாலமும் 2
விசியும் 1
விசிறியும் 1
விசும்பு 1
விசும்பும் 2
விசையனும் 1
விஞ்சையர்ஊரும் 1
விட்டிலும் 1
விடங்கம் 1
விடபம் 1
விடபும் 2
விடம் 1
விடமும் 4
விடர் 1
விடலை 1
விடாமழை 1
விடியலும் 1
விடுத்தலும் 1
விடை 1
விடையீடும் 1
விடையும் 1
விண் 1
விண்டு 1
விண்ணவரும் 1
விண்ணும் 22
விண்மீனும் 2
வித்தகர் 1
வித்தம் 1
வித்தும் 3
விதந்துகட்டியவழக்கும் 1
விதப்பு 1
விதம் 1
விதமும் 1
விதவை 1
விதித்தலும் 1
விதியும் 2
விதியே 1
விதிர்ப்பு 1
விந்தம் 1
விபுதர் 1
விபுலம் 1
விபூதி 1
விம்மல் 1
விம்மிதமும் 1
விமானமும் 2
வியங்கோள் 1
வியங்கோளும் 3
வியப்பு 1
வியப்பும் 1
வியம் 1
வியர்ப்பு 1
வியலே 1
வியன் 1
வியனும் 1
வியாழமும் 10
வியாழனும் 1
வியாளம் 1
விரணம் 1
விரித்துரையும் 1
விரிபூவும் 1
விரிபொருளும் 1
விரிவு 1
விரிவும் 2
விருச்சிகமும் 1
விருத்தம் 1
விருத்தமும் 1
விருத்தி 1
விருந்தம் 1
விருப்பமுடையோனும் 1
விருப்பமும் 3
விருப்பும் 1
விரும்பலும் 3
விரையே 1
விரைவு 1
விரைவும் 7
விரோதம் 1
வில்குதையும் 2
வில்பொதுவும் 1
வில்லின்நாணும் 2
வில்லும் 12
வில்லே 1
வில்லேருழவர் 1
விலங்கின் 1
விலங்கின்கன்றும் 1
விலங்கின்கூட்டமும் 1
விலங்கின்கொம்பும் 2
விலங்கின்பெண்ணும் 1
விலங்கின்பொதுவும் 1
விலங்கின்வாலும் 1
விலங்கினொலியும் 1
விலங்கு 1
விலங்குதலே 1
விலங்கும் 4
விலங்கேறு 1
விலோதம் 1
விழலும் 1
விழவு 1
விழவும் 5
விழாவும் 6
விழியும் 3
விழுப்பொருளும் 1
விழுமம் 1
விழைச்சு 1
விழைந்தோன் 1
விழைவு 1
விளக்கமும் 1
விளக்கின் 2
விளக்கு 1
விளக்குத்தண்டும் 2
விளக்கும் 3
விளம்பலாகும் 23
விளம்பினர் 13
விளம்புதலாகும் 1
விளம்பும் 1
விளம்புவர் 4
விளரி 1
விளரே 1
விளவு 1
விளாமரமும் 1
விளாவும் 1
விளிம்பும் 1
விளிவு 1
விளைநிலமும் 3
விளையாட்டும் 3
விளையும் 1
விளையே 1
விளைவயலும் 1
விளைவும் 1
விற்றலும் 1
விறகும் 3
விறப்பு 1
விறலனும் 1
விறலும் 1
விறலே 1
வினாயகன் 1
வினாவும் 1
வினைக்குடையாரும் 1
வினைஞரும் 1
வினைமாற்றும் 1
வினைமுத்தியும் 1
வினையும் 3

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    விகற்பமும் (1)
பிதிரும் தெய்வமும் கிளையும் விகற்பமும் - 7.பகர_வருக்கம்:7 186/2

 TOP
 
    விகுதியும் (1)
அன்னே விகுதியும் சாரியையும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 168/1

 TOP
 
    விசயம் (1)
விசயம் வென்றியும் சூரியன்வட்டமும் - 10.வகர_வருக்கம்:10 111/1

 TOP
 
    விசாகமும் (1)
முறமே சுளகும் விசாகமும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 151/1

 TOP
 
    விசாரமும் (3)
விசாரமும் எள்ளும் விளம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 445/2
சூழல் விசாரமும் சூழ்தலும் இடமும் - 3.சகர__வருக்கம்:3 179/1
மந்திரம் விசாரமும் கோவிலும் மதுவும் - 8.மகர_வருக்கம்:8 36/1

 TOP
 
    விசாலம் (1)
விசாலம் கடம்பும் இடமும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 110/1

 TOP
 
    விசாலமும் (2)
விசாலமும் வாமமும் விளம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 273/2
சாலகம் கூட்டமும் மதிலும் விசாலமும் - 3.சகர__வருக்கம்:3 75/2

 TOP
 
    விசியும் (1)
இந்துவும் விசியும் கள்ளும் குதிரையும் - 1.உயிர்_வருக்கம்:1 126/8

 TOP
 
    விசிறியும் (1)
விசிறியும் எனவே விளம்பினர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 355/3

 TOP
 
    விசும்பு (1)
விசும்பு மேகமும் துறக்கமும் விண்ணும் - 10.வகர_வருக்கம்:10 109/1

 TOP
 
    விசும்பும் (2)
அந்தரம் விசும்பும் இடையும் அளவும் - 1.உயிர்_வருக்கம்:1 66/1
வானம் விசும்பும் மழையும் கனியும் - 10.வகர_வருக்கம்:10 105/1

 TOP
 
    விசையனும் (1)
கிருட்டிணன் மாலும் விசையனும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 211/1

 TOP
 
    விஞ்சையர்ஊரும் (1)
சேடி விஞ்சையர்ஊரும் பாங்கியும் - 3.சகர__வருக்கம்:3 208/1

 TOP
 
    விட்டிலும் (1)
பதங்கம் விட்டிலும் பறவைகளும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 56/1

 TOP
 
    விடங்கம் (1)
விடங்கம் அழகும் கொடியும் கொடுங்கையும் - 10.வகர_வருக்கம்:10 115/1

 TOP
 
    விடபம் (1)
விடபம் விடையும் இடபராசியும் - 10.வகர_வருக்கம்:10 114/1

 TOP
 
    விடபும் (2)
விடர் காமுகரும் தூர்த்தரும் விடபும்
  தவத்தோரிடமும் கானும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 112/1,2
விரிவு விடபும் அகலமும் விளம்புவர் - 10.வகர_வருக்கம்:10 143/1

 TOP
 
    விடம் (1)
விடம் ஒருமரமும் தேளும் நஞ்சும் - 10.வகர_வருக்கம்:10 117/1

 TOP
 
    விடமும் (4)
ஆலம் விடமும் அலர்ந்தபூவும் - 1.உயிர்_வருக்கம்:1 236/1
கடு முள்ளும் விடமும் கசப்பும் கடுத்தலும் - 2.ககர_வருக்கம்:2 18/1
இரத்தமும் விடமும் மாசும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 141/2
காளம் விடமும் கருமையும் கழுவும் - 2.ககர_வருக்கம்:2 199/1

 TOP
 
    விடர் (1)
விடர் காமுகரும் தூர்த்தரும் விடபும் - 10.வகர_வருக்கம்:10 112/1

 TOP
 
    விடலை (1)
விடலை பாலைத்தலைவனும் விறலனும் - 10.வகர_வருக்கம்:10 116/1

 TOP
 
    விடாமழை (1)
சோனை விடாமழை ஓணமும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 233/1

 TOP
 
    விடியலும் (1)
வைகறை விடியலும் யாமமும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 210/1

 TOP
 
    விடுத்தலும் (1)
விடை எதிர்மொழியும் ஏறும் விடுத்தலும்
  ஏகுதலும் என இயம்பினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 113/1,2

 TOP
 
    விடை (1)
விடை எதிர்மொழியும் ஏறும் விடுத்தலும் - 10.வகர_வருக்கம்:10 113/1

 TOP
 
    விடையீடும் (1)
உறழ் விடையீடும் ஒப்பும் செறிவும் - 1.உயிர்_வருக்கம்:1 417/1

 TOP
 
    விடையும் (1)
விடபம் விடையும் இடபராசியும் - 10.வகர_வருக்கம்:10 114/1

 TOP
 
    விண் (1)
விண் ஆகாசமும் மேகமும் துறக்கமும் - 10.வகர_வருக்கம்:10 118/1

 TOP
 
    விண்டு (1)
விண்டு மாயோனும் வெற்பும் வேயும் - 10.வகர_வருக்கம்:10 119/1

 TOP
 
    விண்ணவரும் (1)
விபுதர் முற்றத்துறந்தோரும் விண்ணவரும் - 10.வகர_வருக்கம்:10 129/1

 TOP
 
    விண்ணும் (22)
அண்டம் விண்ணும் உலகமும் முட்டையும் - 1.உயிர்_வருக்கம்:1 45/1
பரிதியும் விண்ணும் வெற்பும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 54/2
அம்பு வேயும் நீரும் விண்ணும்
  மேகமும் கணையும் விளம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 69/1,2
விண்ணும் அம்மியும் விளம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 84/2
அனந்தம் அளவின்மையும் பொன்னும் விண்ணும் - 1.உயிர்_வருக்கம்:1 173/1
ஆசினி மரவுரியும் வயிரமும் விண்ணும்
  மரமும் பலாவின்விசேடமும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 188/1,2
நட்சத்திரமும் கிடங்கும் விண்ணும்
  அம்பும் கழமையும் அறையலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 362/2,3
ககனம் விண்ணும் படையும் கற்பகமும் - 2.ககர_வருக்கம்:2 2/1
காயம் காழ்ப்பும் உடலும் விண்ணும்
  கறியும் கரிப்பும் முக்காயமும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 183/1,2
குண்டலம் விண்ணும் குழையும் வட்டமும் - 2.ககர_வருக்கம்:2 247/1
கொண்மூ விண்ணும் மேகமும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 355/1
கோ விழியும் விண்ணும் சுவர்க்கமும் பசுவும் - 2.ககர_வருக்கம்:2 391/1
சிதலையும் விண்ணும் மேகமும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 197/2
சேண் விண்ணும் உயரமும் அகலமும் சேய்த்தும் - 3.சகர__வருக்கம்:3 211/1
விண்ணும் மதமும் சாரிடமும் வேட்டலும் - 5.தகர_வருக்கம்:5 82/2
தேயம் விண்ணும் உடலும் நாடும் - 5.தகர_வருக்கம்:5 176/1
நாகம் விண்ணும் குரங்கும் தூசும் - 6.நகர_வருக்கம்:6 38/1
பாழி விண்ணும் தவத்தோர் சாலையும் - 7.பகர_வருக்கம்:7 164/1
விண்ணும் மேலும் விளம்பலாகும் - 8.மகர_வருக்கம்:8 172/2
வான் கொண்மூவும் மழையும் விண்ணும்
  பெருமையும் நீரும் வலியும் நீளமும் - 10.வகர_வருக்கம்:10 107/1,2
விசும்பு மேகமும் துறக்கமும் விண்ணும்
  திசையும் எனவே செப்பினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 109/1,2
வேணி மயிர்ச்சடையும் விண்ணும் நதியும் - 10.வகர_வருக்கம்:10 192/1

 TOP
 
    விண்மீனும் (2)
திடனும் விண்மீனும் செப்பலாகும் - 3.சகர__வருக்கம்:3 95/2
மீன் விண்மீனும் சித்திரையும் மீனும் - 8.மகர_வருக்கம்:8 122/1

 TOP
 
    வித்தகர் (1)
வித்தகர் கொல்லரும் ஆயரும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 122/1

 TOP
 
    வித்தம் (1)
வித்தம் பொன்னும் பழித்தலும் ஞானமும் - 10.வகர_வருக்கம்:10 125/1

 TOP
 
    வித்தும் (3)
அரலை கனியும் கழலையும் வித்தும்
  கடலும் கற்றாழையும் கழறலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 102/1,2
காழ் பரலும் கோலும் வித்தும் மாலையும் - 2.ககர_வருக்கம்:2 194/1
விரையே மணமும் சாந்தும் வித்தும்
  தூபமும் எனவே சொல்லினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 138/1,2

 TOP
 
    விதந்துகட்டியவழக்கும் (1)
பயிர் விதந்துகட்டியவழக்கும் பைங்கூழும் - 7.பகர_வருக்கம்:7 71/1

 TOP
 
    விதப்பு (1)
விதப்பு வலியும் மதிலுறுப்பும் மிகுதியும் - 10.வகர_வருக்கம்:10 120/1

 TOP
 
    விதம் (1)
விதம் புள்பொதுவும் விதமும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 126/1

 TOP
 
    விதமும் (1)
விதம் புள்பொதுவும் விதமும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 126/1

 TOP
 
    விதவை (1)
விதவை கலன்கழிமகளிரும் சோறும் - 10.வகர_வருக்கம்:10 121/1

 TOP
 
    விதித்தலும் (1)
கூட்டுதலும் விதித்தலும் மிகுதியும் வாய்மையும் - 1.உயிர்_வருக்கம்:1 248/2

 TOP
 
    விதியும் (2)
ஊழே பகையும் பழமையும் விதியும்
  பெற்றியும் வெயிலும் பேசப்படுமே - 1.உயிர்_வருக்கம்:1 433/1,2
விதியும் புத்தியும் முகிலும் செம்மையும் - 2.ககர_வருக்கம்:2 68/2

 TOP
 
    விதியே (1)
விதியே குணமும் இயல்பும் மயனும் - 10.வகர_வருக்கம்:10 124/1

 TOP
 
    விதிர்ப்பு (1)
விதிர்ப்பு நடுக்கமும் மிகுதியும் கம்பமும் - 10.வகர_வருக்கம்:10 123/1

 TOP
 
    விந்தம் (1)
விந்தம் வனசமும் வெற்பும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 127/1

 TOP
 
    விபுதர் (1)
விபுதர் முற்றத்துறந்தோரும் விண்ணவரும் - 10.வகர_வருக்கம்:10 129/1

 TOP
 
    விபுலம் (1)
விபுலம் பெருமையும் விரிவும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 128/1

 TOP
 
    விபூதி (1)
விபூதி குற்றமும் கொடுமையும் தசையும் - 10.வகர_வருக்கம்:10 130/1

 TOP
 
    விம்மல் (1)
விம்மல் ஒலித்தலும் ஏங்குதலும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 131/1

 TOP
 
    விம்மிதமும் (1)
கடி விம்மிதமும் சிறப்பும் மையமும் - 2.ககர_வருக்கம்:2 21/1

 TOP
 
    விமானமும் (2)
ஊர்தி சிவிகையும் தேரும் விமானமும்
  பாண்டிலும் குதிரையும் யானையும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 431/1,2
மானம் விமானமும் பெருமையும் குற்றமும் - 8.மகர_வருக்கம்:8 104/1

 TOP
 
    வியங்கோள் (1)
வியங்கோள் கொளலும் ஏவலும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 137/1

 TOP
 
    வியங்கோளும் (3)
வியங்கோளும் கற்பகமும் இரக்கமும் - 1.உயிர்_வருக்கம்:1 255/2
ஏவல் வியங்கோளும் வறுமையும் ஆணையும் - 1.உயிர்_வருக்கம்:1 477/1
வயின் வியங்கோளும் ஏவல்கொளலும் - 10.வகர_வருக்கம்:10 41/1

 TOP
 
    வியப்பு (1)
வியப்பு சினக்குறிப்பும் அதிசயமும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 133/1

 TOP
 
    வியப்பும் (1)
வியப்பும் காணும் ஓவியமும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 96/3

 TOP
 
    வியம் (1)
வியம் கொள்வோனும் மழுவும் வில்லும் - 10.வகர_வருக்கம்:10 132/1

 TOP
 
    வியர்ப்பு (1)
வியர்ப்பு மேவலும் பொருதலும் அச்சமும் - 10.வகர_வருக்கம்:10 136/1

 TOP
 
    வியலே (1)
வியலே அகலமும் காடும் மேம்பாடும் - 10.வகர_வருக்கம்:10 135/1

 TOP
 
    வியன் (1)
உமட்டியர் என்ப வியன் கடல் பிணாக்களும் - 1.உயிர்_வருக்கம்:1 386/1

 TOP
 
    வியனும் (1)
உயர்ந்தோரும் குணமும் வியனும் சனமும் - 1.உயிர்_வருக்கம்:1 397/2

 TOP
 
    வியாழமும் (10)
அரசன் வியாழமும் வேந்தனும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 116/1
ஆசான் வியாழமும் குருவும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 193/1
குரு மாத்திரையும் வியாழமும் உயர்ச்சியும் - 2.ககர_வருக்கம்:2 269/1
வியாழமும் தலைவனும் சாமியும் வேளும் - 3.சகர__வருக்கம்:3 65/2
சீவன் வியாழமும் உயிரும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 134/1
சுரர் குரு என்பது வியாழமும் போகியும் - 3.சகர__வருக்கம்:3 154/1
சுவாமி குமரனும் வியாழமும் முனிவனும் - 3.சகர__வருக்கம்:3 161/1
பொலிவும் வியாழமும் பொன்னும் பானுவும் - 7.பகர_வருக்கம்:7 318/2
வியாளம் பாம்பும் புலியும் வியாழமும் - 10.வகர_வருக்கம்:10 134/1
வியாழமும் அரசனும் விளம்பினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 195/2

 TOP
 
    வியாழனும் (1)
ஒள்ளியோன் வியாழனும் சுக்கிரனும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 506/1

 TOP
 
    வியாளம் (1)
வியாளம் பாம்பும் புலியும் வியாழமும் - 10.வகர_வருக்கம்:10 134/1

 TOP
 
    விரணம் (1)
விரணம் விழலும் ஊறும் விளம்புவர் - 10.வகர_வருக்கம்:10 142/1

 TOP
 
    விரித்துரையும் (1)
அகலிடமும் விரித்துரையும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 8/2

 TOP
 
    விரிபூவும் (1)
அலர் விரிபூவும் புறங்கூறலும் பழியும் - 1.உயிர்_வருக்கம்:1 136/1

 TOP
 
    விரிபொருளும் (1)
விரிபொருளும் இலாபமும் விளம்பினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 140/2

 TOP
 
    விரிவு (1)
விரிவு விடபும் அகலமும் விளம்புவர் - 10.வகர_வருக்கம்:10 143/1

 TOP
 
    விரிவும் (2)
தடம் தடக்கரையும் விரிவும் அல்குலும் - 5.தகர_வருக்கம்:5 11/1
விபுலம் பெருமையும் விரிவும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 128/1

 TOP
 
    விருச்சிகமும் (1)
தேள் விருச்சிகமும் அனுடநாளும் - 5.தகர_வருக்கம்:5 169/1

 TOP
 
    விருத்தம் (1)
விருத்தம் ஓர்கவிதையும் வட்டமும் மூப்பும் - 10.வகர_வருக்கம்:10 145/1

 TOP
 
    விருத்தமும் (1)
விருத்தமும் எனவே விளம்பினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 39/2

 TOP
 
    விருத்தி (1)
விருத்தி தன்தொழிலும் வளர்ச்சியும் ஆளும் - 10.வகர_வருக்கம்:10 140/1

 TOP
 
    விருந்தம் (1)
விருந்தம் சுற்றமும் மிருகக்குழாமும் - 10.வகர_வருக்கம்:10 144/1

 TOP
 
    விருப்பமுடையோனும் (1)
வெய்யோன் கொடியனும் விருப்பமுடையோனும்
  பானுவும் எனவே பகர்ந்தனர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 178/1,2

 TOP
 
    விருப்பமும் (3)
காமர் கட்டழகும் விருப்பமும் மதனும் - 2.ககர_வருக்கம்:2 181/1
பெட்பு மேன்மையும் விருப்பமும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 282/1
வாஞ்சி தாழ்வாரமும் மகிழ்ச்சியும் விருப்பமும் - 10.வகர_வருக்கம்:10 82/1

 TOP
 
    விருப்பும் (1)
விருப்பும் காமமும் விளம்பலாகும் - 2.ககர_வருக்கம்:2 177/2

 TOP
 
    விரும்பலும் (3)
புரிவு விரும்பலும் வேறுபடலும் செயலும் - 7.பகர_வருக்கம்:7 235/1
புரியே விரும்பலும் செய்தலும் புரமும் - 7.பகர_வருக்கம்:7 237/1
பெட்டல் விரும்பலும் வேண்டலும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 281/1

 TOP
 
    விரையே (1)
விரையே மணமும் சாந்தும் வித்தும் - 10.வகர_வருக்கம்:10 138/1

 TOP
 
    விரைவு (1)
விரைவு சீக்கிரமும் வெம்மையும் வேண்டலும் - 10.வகர_வருக்கம்:10 141/1

 TOP
 
    விரைவும் (7)
ஒல்லை சிறுபொழுதும் தொல்லையும் விரைவும் - 1.உயிர்_வருக்கம்:1 498/1
விரைவும் அச்சமும் கூர்மையும் புணர்ச்சியும் - 2.ககர_வருக்கம்:2 21/4
விரைவும் குதிரையின்கதியும் விளம்புவர் - 2.ககர_வருக்கம்:2 105/2
ஞெரேலெனல் விரைவும் ஒலியும் ஆகும் - 4.ஞகர_வருக்கம்:4 10/1
விரைவும் பெருமையும் காழ்த்தலும் மிகுதியும் - 7.பகர_வருக்கம்:7 80/3
வல்லை விரைவும் காடும் வன்மையும் - 10.வகர_வருக்கம்:10 50/1
வல் சூதும் விரைவும் வலியும் கச்சும் - 10.வகர_வருக்கம்:10 51/1

 TOP
 
    விரோதம் (1)
விரோதம் வேறுபாடும் இருளும் - 10.வகர_வருக்கம்:10 139/1

 TOP
 
    வில்குதையும் (2)
குதை வில்குதையும் பசியும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 250/1
வில்குதையும் எல்லையும் விளம்பலாகும் - 5.தகர_வருக்கம்:5 80/2

 TOP
 
    வில்பொதுவும் (1)
சார்ங்கம் மாயோன்வில்லும் வில்பொதுவும் - 3.சகர__வருக்கம்:3 72/1

 TOP
 
    வில்லின்நாணும் (2)
வில்லின்நாணும் விளம்பலாகும் - 2.ககர_வருக்கம்:2 246/2
நாரி பன்னாடையும் வில்லின்நாணும்
  நறவும் பெண்ணும் நவிலலாகும் - 6.நகர_வருக்கம்:6 48/1,2

 TOP
 
    வில்லும் (12)
ஆர்வம் வில்லும் நிரையமும் காதலும் - 1.உயிர்_வருக்கம்:1 227/1
குடுமி வில்லும் வெற்றியும் உச்சியும் - 2.ககர_வருக்கம்:2 239/1
காயின்கொத்தும் வில்லும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 280/2
வில்லும் மஞ்ஞையும் விளம்பலாகும் - 2.ககர_வருக்கம்:2 325/2
கொக்கரை வில்லும் சங்கும் வளையும் - 2.ககர_வருக்கம்:2 344/1
சாபம் சபித்தலும் வில்லும் அசமும் - 3.சகர__வருக்கம்:3 61/1
சிலை ஓர்மரமும் மலையும் வில்லும்
  கல்லும் எனவே கழறலாகும் - 3.சகர__வருக்கம்:3 112/1,2
தனு தனுராசியும் நுட்பமும் வில்லும்
  உடம்பும் எனவே உரைக்கலாகும் - 5.தகர_வருக்கம்:5 57/1,2
தாரம் வெள்ளியும் நாவும் வில்லும்
  தந்திரியின்ஓர்இசையும் தலைவியும் - 5.தகர_வருக்கம்:5 70/1,2
காரிப்பறவையும் வில்லும் கருதுவர் - 5.தகர_வருக்கம்:5 130/2
வியம் கொள்வோனும் மழுவும் வில்லும் - 10.வகர_வருக்கம்:10 132/1
வில்லே ஒளியும் மூலமும் வில்லும் - 10.வகர_வருக்கம்:10 148/1

 TOP
 
    வில்லே (1)
வில்லே ஒளியும் மூலமும் வில்லும் - 10.வகர_வருக்கம்:10 148/1

 TOP
 
    வில்லேருழவர் (1)
வில்லேருழவர் வேடரும் வேந்தரும் - 10.வகர_வருக்கம்:10 149/1

 TOP
 
    விலங்கின் (1)
பாயலும் விலங்கின் சேக்கையும் வலியும் - 7.பகர_வருக்கம்:7 164/3

 TOP
 
    விலங்கின்கன்றும் (1)
கன்று மரக்கன்றும் விலங்கின்கன்றும்
  கைவளையும் என கழறலாகும் - 2.ககர_வருக்கம்:2 156/1,2

 TOP
 
    விலங்கின்கூட்டமும் (1)
கதுப்பு விலங்கின்கூட்டமும் கவுளும் - 2.ககர_வருக்கம்:2 50/1

 TOP
 
    விலங்கின்கொம்பும் (2)
உலவை மரக்கோடும் விலங்கின்கொம்பும்
  காற்றும் தழையும் கழறலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 398/1,2
மாட்டின்கொம்பும் விலங்கின்கொம்பும்
  மரத்தின்கொம்பும் வழங்கலாகும் - 2.ககர_வருக்கம்:2 373/3,4

 TOP
 
    விலங்கின்பெண்ணும் (1)
நாகு விலங்கின்பெண்ணும் மரையும் - 6.நகர_வருக்கம்:6 39/1

 TOP
 
    விலங்கின்பொதுவும் (1)
குரங்கு அரியும் வளைவும் விலங்கின்பொதுவும் - 2.ககர_வருக்கம்:2 275/1

 TOP
 
    விலங்கின்வாலும் (1)
விலங்கின்வாலும் பண்ணிகாரமும் - 2.ககர_வருக்கம்:2 314/3

 TOP
 
    விலங்கினொலியும் (1)
ஒலியும் பயிலும் விலங்கினொலியும்
  பசும்புலும் புள்ளொலியும் பகர்வர் - 7.பகர_வருக்கம்:7 71/2,3

 TOP
 
    விலங்கு (1)
விலங்கு கால்விலங்கும் குறுக்கும் மிருகமும் - 10.வகர_வருக்கம்:10 146/1

 TOP
 
    விலங்குதலே (1)
விலங்குதலே செலவிடுதலும் நீங்கலும் - 10.வகர_வருக்கம்:10 147/1

 TOP
 
    விலங்கும் (4)
உம்பல் நற்குலமும் தந்தியும் விலங்கும் - 1.உயிர்_வருக்கம்:1 385/1
தளை ஆண்மயிரும் சிலம்பும் விலங்கும்
  பிணைத்தலும் பூமுகையும் முறுக்குத்தாரும் - 5.தகர_வருக்கம்:5 49/1,2
துடர் சொற்றொடர்பும் விலங்கும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 110/1
நெகிழம் சங்கிலியும் விலங்கும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 93/1

 TOP
 
    விலங்கேறு (1)
ஒருத்தல் விலங்கேறு கரடியும் பன்றியும் - 1.உயிர்_வருக்கம்:1 501/1

 TOP
 
    விலோதம் (1)
விலோதம் பெண்மயிர்ச்சுருளும் பதாகையும் - 10.வகர_வருக்கம்:10 150/1

 TOP
 
    விழலும் (1)
விரணம் விழலும் ஊறும் விளம்புவர் - 10.வகர_வருக்கம்:10 142/1

 TOP
 
    விழவு (1)
விழவு மிதுனராசியும் விழாவும் - 10.வகர_வருக்கம்:10 152/1

 TOP
 
    விழவும் (5)
சாறு கள்ளும் விழவும் சாறும் - 3.சகர__வருக்கம்:3 82/1
விழவும் கள்ளும் விளம்பலாகும் - 3.சகர__வருக்கம்:3 222/2
துணங்கு நன்னாளும் விழவும் அறலும் - 5.தகர_வருக்கம்:5 117/1
துணங்கை அல்லும் விழவும் ஓர்கூத்தும் - 5.தகர_வருக்கம்:5 118/1
துத்தி நாளும் விழவும் நெய்யும் - 5.தகர_வருக்கம்:5 125/1

 TOP
 
    விழாவும் (6)
சூதனரும் விழாவும் சொல்லலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 85/3
அறல் நீர்த்திரையும் நீரும் விழாவும்
  நுண்மணலும் என நுவலலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 162/1,2
தீத்தம் விழாவும் தீர்த்தமும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 104/1
இன்பமும் செவ்வியும் குழைவும் விழாவும்
  அமைதலும் பாவின் பதமும் பதமும் - 7.பகர_வருக்கம்:7 57/4,5
விழாவும் முருகனும் எலுமிச்சும் வனப்பும் - 8.மகர_வருக்கம்:8 134/2
விழவு மிதுனராசியும் விழாவும் - 10.வகர_வருக்கம்:10 152/1

 TOP
 
    விழியும் (3)
கண் அருளும் விழியும் இடமும் கணுவும் - 2.ககர_வருக்கம்:2 37/1
குவளை விழியும் நெய்தல்பூவும் - 2.ககர_வருக்கம்:2 285/1
கோ விழியும் விண்ணும் சுவர்க்கமும் பசுவும் - 2.ககர_வருக்கம்:2 391/1

 TOP
 
    விழுப்பொருளும் (1)
கனவும் விழுப்பொருளும் கழறினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 187/2

 TOP
 
    விழுமம் (1)
விழுமம் சிறப்பும் சீர்மையும் இடும்பையும் - 10.வகர_வருக்கம்:10 151/1

 TOP
 
    விழைச்சு (1)
விழைச்சு புணர்வும் இளமையும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 153/1

 TOP
 
    விழைந்தோன் (1)
விழைந்தோன் கொண்கனும் வேட்டோனும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 154/1

 TOP
 
    விழைவு (1)
விழைவு புணர்ச்சியும் காதலும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 155/1

 TOP
 
    விளக்கமும் (1)
விளக்கமும் பேயும் காலமும் மணமும் - 2.ககர_வருக்கம்:2 21/3

 TOP
 
    விளக்கின் (2)
கட்டிலும் தாளமும் விளக்கின் தகழியும் - 7.பகர_வருக்கம்:7 137/3
விளக்கு விளக்கின் தகழியும் ஒளியும் - 10.வகர_வருக்கம்:10 159/1

 TOP
 
    விளக்கு (1)
விளக்கு விளக்கின் தகழியும் ஒளியும் - 10.வகர_வருக்கம்:10 159/1

 TOP
 
    விளக்குத்தண்டும் (2)
கவுசிகம் விளக்குத்தண்டும் ஓர்பண்ணும் - 2.ககர_வருக்கம்:2 106/1
மத்திகை மாலையும் விளக்குத்தண்டும்
  சம்மட்டியும் என சாற்றினர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 34/1,2

 TOP
 
    விளக்கும் (3)
ஒளி முச்சுடரும் ஒளிப்பிடமும் விளக்கும்
  புகழும் கிரணமும் கேட்டையும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 504/1,2
சுடர் முச்சுடரும் பொறியும் விளக்கும்
  ஒளியும் தளிரும் உரைக்கலாகும் - 3.சகர__வருக்கம்:3 140/1,2
சுடரும் சோதியும் விளக்கும் உடுவும் - 3.சகர__வருக்கம்:3 230/2

 TOP
 
    விளம்பலாகும் (23)
வேங்கையும் கொழுப்பும் விளம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 24/2
மேகமும் கணையும் விளம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 69/2
விண்ணும் அம்மியும் விளம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 84/2
மேட்டையும் புடவையும் விளம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 192/2
விசாலமும் வாமமும் விளம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 273/2
மேலோரும் ஈசனும் விளம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 333/4
விசாரமும் எள்ளும் விளம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 445/2
வேங்கையும் கணித்தலும் விளம்பலாகும் - 2.ககர_வருக்கம்:2 33/2
விருப்பும் காமமும் விளம்பலாகும் - 2.ககர_வருக்கம்:2 177/2
வில்லின்நாணும் விளம்பலாகும் - 2.ககர_வருக்கம்:2 246/2
வீரனும் எனவே விளம்பலாகும் - 2.ககர_வருக்கம்:2 319/3
வில்லும் மஞ்ஞையும் விளம்பலாகும் - 2.ககர_வருக்கம்:2 325/2
மேல்காற்றும் என்ன விளம்பலாகும் - 2.ககர_வருக்கம்:2 372/2
மெய்ப்பாடும் ஒப்பும் விளம்பலாகும் - 3.சகர__வருக்கம்:3 67/2
வெட்சியும் எனவே விளம்பலாகும் - 3.சகர__வருக்கம்:3 104/3
விழவும் கள்ளும் விளம்பலாகும் - 3.சகர__வருக்கம்:3 222/2
மேதியும் எனவே விளம்பலாகும் - 5.தகர_வருக்கம்:5 62/4
வில்குதையும் எல்லையும் விளம்பலாகும் - 5.தகர_வருக்கம்:5 80/2
வெண்மையும் சிறகும் விளம்பலாகும் - 5.தகர_வருக்கம்:5 159/3
மிகுதியும் எனவே விளம்பலாகும் - 6.நகர_வருக்கம்:6 104/4
வெள்ளியும் முகரிமையும் விளம்பலாகும் - 7.பகர_வருக்கம்:7 25/3
வென்றியும் சொல்லும் விளம்பலாகும் - 7.பகர_வருக்கம்:7 211/2
விண்ணும் மேலும் விளம்பலாகும் - 8.மகர_வருக்கம்:8 172/2

 TOP
 
    விளம்பினர் (13)
வேதனையும் என விளம்பினர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 2/2
விசிறியும் எனவே விளம்பினர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 355/3
வெண்குடையும் என விளம்பினர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 171/2
மிகுதியும் எனவே விளம்பினர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 26/2
மிகுதியும் எனவே விளம்பினர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 29/2
மேடும் எனவே விளம்பினர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 137/2
விருத்தமும் எனவே விளம்பினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 39/2
வெல்லமும் எனவே விளம்பினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 111/2
வினையும் ஊழும் விளம்பினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 124/2
விரிபொருளும் இலாபமும் விளம்பினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 140/2
வியாழமும் அரசனும் விளம்பினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 195/2
வேளாளரும் என விளம்பினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 207/2
மெய்ம்மையும் எனவே விளம்பினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 208/2

 TOP
 
    விளம்புதலாகும் (1)
வெறுத்தலும் எனவே விளம்புதலாகும் - 8.மகர_வருக்கம்:8 150/2

 TOP
 
    விளம்பும் (1)
வேதனை துயரும் சுடலும் விளம்பும் - 10.வகர_வருக்கம்:10 196/1

 TOP
 
    விளம்புவர் (4)
விரைவும் குதிரையின்கதியும் விளம்புவர் - 2.ககர_வருக்கம்:2 105/2
வேலனும் வெறியாட்டாளனும் விளம்புவர் - 10.வகர_வருக்கம்:10 55/2
விரணம் விழலும் ஊறும் விளம்புவர் - 10.வகர_வருக்கம்:10 142/1
விரிவு விடபும் அகலமும் விளம்புவர் - 10.வகர_வருக்கம்:10 143/1

 TOP
 
    விளரி (1)
விளரி இளமையும் யாழும் வேட்கையும் - 10.வகர_வருக்கம்:10 156/1

 TOP
 
    விளரே (1)
விளரே கொழுப்பும் இளமையும் வெண்மையும் - 10.வகர_வருக்கம்:10 160/1

 TOP
 
    விளவு (1)
விளவு கமரும் விளாமரமும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 157/1

 TOP
 
    விளாமரமும் (1)
விளவு கமரும் விளாமரமும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 157/1

 TOP
 
    விளாவும் (1)
வெள்ளில் விளாவும் பாடையும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 183/1

 TOP
 
    விளிம்பும் (1)
ஓரம் சகாயமும் விளிம்பும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 522/1

 TOP
 
    விளிவு (1)
விளிவு சாதலும் கேடும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 158/1

 TOP
 
    விளைநிலமும் (3)
விளைநிலமும் திக்கும் புலனும் தனிமையும் - 7.பகர_வருக்கம்:7 240/2
விளைநிலமும் பொலிவும் பூமியும் கணவனும் - 7.பகர_வருக்கம்:7 280/2
வேலி மதிலும் விளைநிலமும் காவலும் - 10.வகர_வருக்கம்:10 200/1

 TOP
 
    விளையாட்டும் (3)
உண்டாட்டு விளையாட்டும் பெண்விளையாட்டும் - 1.உயிர்_வருக்கம்:1 371/1
சாழல் விளையாட்டும் கரடியும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 81/1
மரக்கலமும் விளையாட்டும் வகுத்தனர் - 7.பகர_வருக்கம்:7 150/3

 TOP
 
    விளையும் (1)
கோணலும் விளையும் பெருமையும் பனையும் - 5.தகர_வருக்கம்:5 11/3

 TOP
 
    விளையே (1)
விளையே இளமையும் புலமும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 161/1

 TOP
 
    விளைவயலும் (1)
செய் விளைவயலும் ஏவல்வினையும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 195/1

 TOP
 
    விளைவும் (1)
மடையும் விளைவும் யானைசேரிடமும் - 10.வகர_வருக்கம்:10 93/4

 TOP
 
    விற்றலும் (1)
பகர்தல் விற்றலும் பேசலும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 8/1

 TOP
 
    விறகும் (3)
இந்தனம் எரியிடுகனலும் விறகும்
  இசையும் புகையும் இயம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 284/1,2
காட்டம் குதிரையும் விறகும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 164/1
முளரி தீயும் காடும் விறகும்
  முள்மரமும் சிறுமையும் தாமரையும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 144/1,2

 TOP
 
    விறப்பு (1)
விறப்பு வெஞ்சமரும் செறிவும் அச்சமும் - 10.வகர_வருக்கம்:10 163/1

 TOP
 
    விறலனும் (1)
விடலை பாலைத்தலைவனும் விறலனும் - 10.வகர_வருக்கம்:10 116/1

 TOP
 
    விறலும் (1)
வீரம் விறலும் ஓங்கலும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 169/1

 TOP
 
    விறலே (1)
விறலே வலியும் வென்றியும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 162/1

 TOP
 
    வினாயகன் (1)
வினாயகன் ஐங்கரன்தானும் புத்தனும் - 10.வகர_வருக்கம்:10 164/1

 TOP
 
    வினாவும் (1)
ஏ இடைச்சொல்லும் தேற்றமும் வினாவும்
  ஈற்றசையும் அம்பும் இகழ்ச்சியும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 484/1,2

 TOP
 
    வினைக்குடையாரும் (1)
போசர் காவியும் வினைக்குடையாரும் - 7.பகர_வருக்கம்:7 323/1

 TOP
 
    வினைஞரும் (1)
மயன் தெய்வத்தச்சனும் வினைஞரும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 45/1

 TOP
 
    வினைமாற்றும் (1)
மற்று வினைமாற்றும் அசைச்சொல்லும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 65/1

 TOP
 
    வினைமுத்தியும் (1)
தவா வினைமுத்தியும் மலையும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 42/1

 TOP
 
    வினையும் (3)
வினையும் ஊழும் விளம்பினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 124/2
வினையும் இயலம்பும் வேதனும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 193/2
ஒற்றும் வினையும் உரைத்தனர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 197/2

 TOP