<<முந்திய பக்கம்

ச. வயித்தியலிங்கரவர்கள் இயற்றிய சிந்தாமணி நிகண்டு
தேவையான தலைப்பின் மேல் சொடுக்கவும்
தலைப்பு சொற்பிரிப்பு மூலம் சீர் பிரிப்பு மூலம்
1.காப்பு / பாயிரம்

2.ககரவெதுகை

3. ஙகரவெதுகை

4 சகரவெதுகை

5 ஞகரவெதுகை

6 டகரவெதுகை

7 ணகரவெதுகை

8 தகரவெதுகை

9 நகரவெதுகை

10 பகரவெதுகை

11 மகரவெதுகை

12 யகரவெதுகை

13 ரகரவெதுகை

14 லகரவெதுகை

15 வகரவெதுகை

16 ழகரவெதுகை

17 ளகரவெதுகை

18 றகரவெதுகை

19 னகரவெதுகை

** சிந்தாமணி நிகண்டு
** ச. வயித்தியலிங்கரவர்கள் இயற்றியது

@1 காப்பு / சிறப்புப்பாயிரம்
** காப்பு
**1

#1
சீர் செறி செம் சடைக்கண் திகழ் மதிப்பிளவு தாங்கும்
ஏர் செறி கரிமுகன்தன் இணை மலர் அடியை ஏத்தி
நேர் செறி இளைஞர் ஓர் சொற்கு ஒரு பொருள் நேராய் ஓரப்
பார் செறி நிகண்டு சிந்தாமணி எனப் பகர்வன் ஒன்றே
**2

#2
மன்னிய நிகண்டு சூடாமணியினில் பதினொன்றாகத்
துன்னிய தொகுதி போலச் சொற்களை எதுகை கோத்து
முன்னிய அடிகள்தோறும் முதல் இரு பொருள் அடக்கிப்
பன்னிய புகுந்தேன் யானும் பயன் எண்ணிப் பழித்திடாரே
** சிறப்புப்பாயிரம்
**3

#3
சுத்த சட்குணங்களான சுந்தர முகம் ஓராறும்
கைத்தொகைகளும் முந்நான்கு கண்களும் கொண்டுநின்ற
நித்தியன் அநகன் ஈசன் நிராமயன் நிமலன் எம்மான்
தத்துவாதீதமுன்னோன் சகலலோகைகநாதன்
**4

#4
குறுமுனி இனிது தேர்ந்துகொள அறிவுறுத்திவைத்த
மறுவறு திராவிடத்தில் வயங்கு இயல் கெழீஇய மேன்மை
பெறு நிகண்டு அறிஞர் பல்லோர் பேசினர் அவற்றுள் எங்கும்
செறிவுற வளர்ந்ததன்று அம்ம செய்ய மண்டலவன் நூலே
**5

#5
ஒருமொழி அருத்தம் பல்வேறு உணர்த்திடும் தொகுதி ஆங்கு
மருவுற விரிந்தது என்ன மற்று அஃது அருத்தம் ஒன்று
தரும் இயல் இலாதவாற்றில் தகும் பொருள் ஆய்வான் புக்குப்
பெரிது இடர்ப்படும் மாணாக்கர் பேதுறவு ஒழிக்க உன்னா
**6

#6
வழிவழியாய செல்வவள மறைக்காடன் நாமப்
பழி தவிர் மகீந்திரன்தன் பௌத்திரனாகி வந்தோன்
ஒழிவறு குணத்தினான் இவ் உலகு எலாம் அடிப்படுத்த
விழுமிய புகழ் வேல்பிள்ளை மெய்த் தவத்து உதித்த நீரான்
**7

#7
ஆதுலர்க்கு அன்னம் ஈந்தும் ஔடதம் உயிர்கட்கு ஈந்தும்
நீதியின் நிறைந்தும் தொல்சீர் நெடும்குலத் தலைமை பூண்டும்
மா தகை வாழ்வின் ஓங்கிவரும் மயில்வாகனப்பேர்
மேதகு தருமவேந்தன் மெய் உயிர்த்துணையாம் பின்னோன்
**8

#8
கூர்ந்த நுண்ணுணர்வால் தெள்ளிக் குறைவறப் பற்பல் நூலும்
ஓர்ந்தவன் நம்மனோருக்கு ஒரு பெரும்துணையாய் வாழ்வோன்
நேர்ந்தவர் பிறர் இலாத நெறிமையான் தனாது மாட்டுச்
சார்ந்தவர்ப் புரக்கும் மேலைத் தகை இயல் வழாக் குணத்தோன்
**9

#9
தெய்வ மாண் திருவெண்ணீற்றால் திருக்குறு மலத்தைக் காயும்
சைவ மா சமையத்துற்றுச் சரியையில் ஒழுகும் தூயோன்
பெளவ மாநிலக்கண் தங்கும் பல்லுயிர்க்கு உயிரே அன்னான்
எவ்வமாம் வினைகள் எல்லாம் எறிந்து அறம் நடாத்தும் மேலோன்
**10

#10
குடதிசைக் குளிர் வெண் திங்கள் கோடு தாழ் வேணி அண்ணல்
தட நெடும் சிகர நொச்சித் தளியும் பூருவ மாமாசைக்
கடவயிற்று ஒரு கோட்டு ஐங்கைக் கரிசின் நகரமும் நண்ண
நடுவுற அமர்ந்த வானநாடு உறழ் வல்வையூரான்
**11

#11
காண்தகு திதலைப் பொம்மல் கன தனத்து யாணர்க்காரப்
பூண்தகு செம் கேழ்க் கஞ்சப் பூம் திரு அமர்ந்த மார்பன்
மாண்தகு ஞானமூர்த்தி வள்ளல் ஓர்பொருள் சொல்லான
ஏண்தரு தொகுதி ஒன்று இங்கு இயம்பு என இசைத்தானாக
**12

#12
பண்டிதர் சங்கம் உற்றுப் பஃறிசைப் பரப்பு மேவிக்
கொண்டுள சிறப்பிற்றாகிக் குலாவுறும் மதுர நீர்மைத்
தண் தமிழ் நூலினுள்ளும் தகுசால் வடநூலுள்ளும்
எண்தரும் ஒருபொருள் சொல் இயைவன தெரீஇத் தெளிந்து
**13

#13
நன்றுறக் ககரம் ஆதி னகர ஈறு எதுகையாக
ஒன்றுறக் கோவையாக்கி ஓர் அடிக்கு இரு சொல் சேர்த்து
மன்றுறத் திகழும் சிந்தாமணி எனும் பெயர்த்தாய் என்றும்
நின்றுற விருத்தயாப்பின் நெறிப்பட நிகழ்த்தினானால்
**14

#14
தரம்பெறு முன்னை ஊர் வாழ் சங்கரவள்ளல்தன்சேய்
திரம்பெறு முத்திச் செல்வச் சிவமத பத்தி மாண்போன்
கரம் பெறு நெல்லி என்னக் கலைப்பொருள் வினாய் முற்று ஓர்ந்து
வரம்பெறு புலவன் செய்ய வைத்தியலிங்கன் தானே
** நூல்

@2 ககரவெதுகை
**1

#1
ஆகமன் சிவனே ஆகமனம் வந்துசேருதல் பேர்
ஏகபிங்கலன் குபேரன் ஏகாக்கம் கரும்பிள்ளைக்கு ஆம்
சாகரணம் விழிப்பு சாகியே அகலியம் தான்
சேகமே தெளித்தல் என்ப சேகிலி அரம்பை ஆமே
**2

#2
அகண்டி ஓர் வாச்சியம்தான் ஆகருடணை அழைத்தல்
சிகண்டிசன் ஆண்டளப்போன் சிகாவளமே மயூரம்
பகண்டையே சிவலின் நாமம் பகலோனே கிரணமாலி
சிகண்டகம் உச்சிச்சிக்கம் சிக்கனவு இறுக்கம் ஆமே
**3

#3
சகலமங்கலை பவானி சகதாத்திரி வீரச்செல்வி
பகவதிநாளே பூரம் பகாப்பொருள் கடவுள் ஆகும்
புகர்முகமே மாதங்கம் புகலி என்பது சீகாழி
செகிலே தோள்மேலின் நாமம் செகுத்தலும் அழித்தல் ஆமே
**4

#4
அகமம் என்பது விருக்கம் அகதேசி உள்ளூர் ஏழை
மகரகேதனனே காமன் மகரிகை தோரணம் தான்
முகுடம் என்பது கிரீடம் முகுந்தனே வாசுதேவன்
மகிதலம் தாலவட்டம் மகீசுதன் செவ்வாய் ஆமே
**5

#5
அகமருடணம் நீர்ச்செய்யும் அரும் செபம் அகப்பு தாழ்வு ஆம்
இகழ்தல் என்பது நிந்தித்தல் இகளி தானே விண்ணேறு
உகவை சந்தோஷம் என்ப உகளமே இரண்டின் நாமம்
பகுளமே அபரபக்கம் பகர்ச்சி சொல் என்பர் மேலோர்
**6

#6
மகவானே குலிசவேந்தன் மகாநேமி காகப்புள்ளே
அகலியம் மரப்பொதுப் பேர் அகழ்தல் என்பதுவே தோண்டல்
நகுலமே காத்திரிக்கு ஆம் நகுடமே ஆக்கிராணம்
சகளமே மாயரூபம் சகிதம் ஒற்றுமையின் பேரே
**7

#7
சகமார்க்கம் யோகபாதம் சகருவக்கிளவி பீடு
நிகசோத்தியப்பேர் தூய்மை நிகலம் தோள்மேலின் நாமம்
பிகமே தான் காளகண்டம் பிக்கமே கயமுனிப் பேர்
மகடூஉவே அங்கனைக்கு ஆம் மகத்துவம் மேன்மை ஆமே
**8

#8
காகதுண்டப்பேர் பூழில் காகளமே எக்காளம்
சாகியம் கூட்டநாமம் சாக்கியரே பௌத்தர்
ஏகலிங்கன் குபேரன் ஏகீயனே சகாயன்
ஆகுளி சிறுபறைக்கு ஆம் ஆக்கதம் முதலை ஆமே
**9

#9
ஆகண்டலன் வலாரி அகலர் சண்டாளர் ஆகும்
கோகலியே கடம்பு கோகனகம் செங்கஞ்சம்
சாகியகிருது தோழன் சாகிரகம் விழித்தல்
ஆகிரம் விரிவு ஆம் ஆகிஞ்சனம் தரித்திரம் ஆகும்மே
**10

#10
சோகு தானே பிசாசம் சோகாப்புக் கிளவி துன்பம்
தேகம் என்பதுவே மூர்த்தம் தேகதாரகம் எலும்பு
தூகமே கந்தவாகன் தூக்கும் கோல் தராசு கோலே
பாகசாதனனே போகி பாகலம் யானைநோயே
**11

#11
அகடூரியே வியாளம் அகத்திணை உள்ளொழுக்கம்
இகிதம் சொல் தானே இன்பம் இக்கவமே கரும்பு
ஞெகிழமே பொற்சிலம்பு ஞிமிறு சஞ்சரிகம் ஆகும்
தகுவரே திதியின்மைந்தர் தகுளமும் பொய்தல் ஆமே
**12

#12
தகனையே உலோகக்கட்டி தகுணிதமே தடாரி
துகளிதம் தூளின் நாமம் துகிரே செம்பவள ரத்நம்
உகிர் கரோருகம் அது ஆகும் உகளித்தலே குதித்தல்
அகருவே காகதுண்டம் அக்கியாதம் மறைவின் பேரே
**13

#13
அகருதம் வீற்றிருத்தல் ஆகிரதம் வணங்கல்
உககனலே ஊழித்தீ உகுணமே மூட்டைப்பூச்சி
நகசமே வல்விலங்கு நகிலமே பயோதரம் தான்
தகழிகை உண்கலப்பேர் தகனமும் சுடுதல் ஆமே
**14

#14
குரு கலை மறை இராப் பேர் குக்கனே சாரமேயன்
சிகுரமே சிரோருகம்தான் சிக்கரே சொல்விளம்பி
திகழல் தானே அலங்கறிகம் திகந்தராலம் விசும்பு
சுகதர் என்பது பௌத்தர் சுக்கிலபம் வெட்கப்பேர்
**15

#15
சீகரி நீர்த்துளிக்கு ஆம் சீக்குருவே முருங்கை
தேகி சீவாத்துமாப் பேர் தேகனி அரிசனம் தான்
பாகுலம் கார்த்திகைக்கே பாகீரதிச் சொல் கங்கை
பூகரம் ஆலகாலம் பூகதர் புகழ்வோர் ஆமே
**16

#16
யோகினி காளி யோகசரன் அனுமன் பேர் ஓதும்
மூகை என்பதுவே ஊமை மூகாத்தல் மௌனமாதல்
மோகனே சம்பராரி மோகித்தலே மயங்கல்
பேகி பெண் தவளை தானே பிகராகம் ஆம் மரப்பேர்
**17

#17
வாகுசன் அரசன் வாகுவலயமே கேயூரப்பேர்
நாகபந்து ஆலசாலம் நாகமல்லிகை அனிச்சம்
மாகரியே ஆண்யானை மாகையே பசுவின் நாமம்
கேகலனே கூத்தாடி கேகையே மயில்குரல் பேர்
**18

#18
முகமனே உபசாரம் தான் முகடியே கெடலணங்கு
விகசனே குமுதநண்பன் விகசனம் சிறுநகைக்கு ஆம்
மகபதி வானோர்கோமான் மகராலயச் சொல் பௌவம்
விகிசிரனே குரங்கி விகீதம் ஒவ்வாமை ஆமே
**19

#19
இகவு தானே இகழ்ச்சி யக்கியசூத்திரமே முந்நூல்
தகவலே உதாரணப்பேர் தகழியே அகலின் நாமம்
விகமம் என்பது வியோகம் விகம்பிதமே நடுக்கம்
வகுளியே ஆரவாரம் வகுத்திரம் தெப்பம் ஆமே
**20

#20
விகலையே காலநுட்பம் விகாபதமே தியாகம்
நகரசமே மாதங்கம் நக்கனம் நிருவாணம் தான்
புகர்வு எனும் கிளவி அன்னம் புக்கசனே சண்டாளன்
உகைதலே செல்லுதற்கு ஆம் உக்காக்கம் அரைநாணின் பேர்
**21

#21
ஆகரன் கள்வன் ஆகவனம் பலி ஆகும் என்ப
தோகலியே அசோகம் தோகலமே விருப்பம்
கோகயம் அம்புயம் சுகாகோதரமே புயங்கம்
ஊகனம் தீர்த்தல் ஆகும் ஊகனி துடைப்பத்தின் பேர்
**22

#22
அகசியமே வேடிக்கை அகர்ம்முகம் வைகறைப் பேர்
நிகரணமே விழுங்கல் நிகேதம் என்பதுவே வீடு
அகிபதி ஆதிசேடன் அகிஞனே பரிசிலாளன்
இகளைச் சொல் தானே வெண்ணெய் ஈகம் சந்தனம் அதாமே
**23

#23
ஆகுகனே முன்னோன் ஆக்கிராணவிந்திரியம் மூக்கு
மாகுலவர் சொல் வேடரே மகண்மா அலிக்கு ஆம்
ஓகையே உவகை ஆக்கிரோசனம் சாபம் நாட்டும்
நீகான் என்பது மீகாமன் நிகுஞ்சனம் கொலையின் பேரே
**24

#24
அகோராத்திரம் பகலிரா ஆம் அகலிடமே கிடக்கை
மகாதேவனே கபாலி மகீபதியே பூபாலன்
சிகாவலம் சைவலப்பேர் சிகிச்சகன் பிடகன் ஆகும்
பகாலம் என்பது கபாலம் பகீரதி கங்கை ஆமே
**25

#25
அகாசரம் அறியாமைக்கு ஆம் அகாதத்துவப்பேர் ஆழம்
குகூகண்டம் காளகண்டம் குக்கி என்பதுவே மேடு
நிகாசம் என் கிளவி ஒப்பு நிகிதம் என் சொல் அனீகம்
மகேசுவரன் கங்காளன் மகோற்பலம் தாமரைப் பேர்
**26

#26
உக்கிருட்டம்மே மேன்மை உக்காரி தானே பிட்டு
சக்காரநாமம் தேமா சகசட்சு ஆதித்தன் என்பர்
ஒக்கலை மருங்கின் பக்கம் ஒஃகல் என் சொல் ஒதுங்கல்
குக்குடம் கோழியே குக்குலு குங்கிலியப்பேர் ஆமே
**27

#27
தாக்கணங்கே சீதேவி சாகேதமே அயோத்தி
சூக்குமை வாக்கின் ஒன்றே சூக்குமதாரி வஞ்சன்
காக்கணம் கருவிளைக்கு ஆம் காகொடி காஞ்சிரம் தான்
தீக்கஞ்சி கருப்பூரப்பேர் தீக்குணர் கீழோர் ஆமே
**28

#28
மீக்குவம் அருச்சுனம் தான் மீக்கூர்தலே நிரம்பல்
ஆக்கிரந்திதம் பாய்மாவின் கடுநடை ஆக்கை தேகம்
பாக்கன் என்பது மார்ச்சாலம் பாகுரி இலக்கணிக்கு ஆம்
மீக்கூற்றுப் புகழ்ச்சி நாமம் மீகாமன் மாலுமிப் பேர்
**29

#29
எக்கியம் பேரே யாகம் எக்கழுத்தம் ஏமாப்பே
சுக்கிரபகவான் வெள்ளி சுக்கிரம் ஆனிமாதம்
சிக்குவை நாவின் நாமம் சிகம் எனும் கிளவி காந்தி
சக்குத் தானே திருட்டி தக்கிரம் மோரின் பேரே
**30

#30
விக்கியானம் விபரீதார்த்தம் விக்கினாபனம் அறிக்கை
அக்கினிவாகம் தூமம் அக்கினி வீரியம் பொன்
முக்கூட்டுத் தான் அடுப்பு முகேரனே மூடன் நாமம்
வக்கிராங்கம்மே அன்னம் வகுலி மீன் பெயர் ஆகும்மே
**31

#31
விக்கிரயப்பேர் விற்றல் விக்கிராந்தம்மே வீரம்
அக்கதயோனி கன்னி அக்கிரியன் தான் முன்னோன்
எக்களித்தல்லே மிக்க மகிழ்வே ஏகாலியரே தூசர்
அக்கமம் அழுக்காறு அக்கினிசகன் அனிலம் ஆமே
** ககரவெதுகை முற்றிற்று

@3 ஙகரவெதுகை
**32

#1
அங்கசன் வேனிலாளி அங்காடி ஆவணம் தான்
கங்காளன் பூதநாதன் கங்காளி வல்லணங்கு
கொங்கனே கொல்லிவெற்பன் கொங்காரமே துருக்கம்
சங்கிரதம் புணர்ச்சி சங்கிதை சரித்திரப்பேர்
**33

#2
அங்கர் கோமானே கன்னன் அங்காத்தல் வாய்திறத்தல்
சங்கிரந்தனனே போகி சாங்கரிகம் கலப்புச்
சிங்கத்தினுரியோன் சிம்புளானோன் சிங்ஙுவை நாவு என்ப
சுங்கன் என்பது மழைக்கோள் துங்கியே இரசனிப் பேர்
**34

#3
பங்கயாசனனே வேதாப் பங்குனனே கிரீடி
செங்கதிர்பிறந்தநாள் உத்தரம் செங்கை மூதிரைக்கு ஆம்
மங்கிலியம் தாலிப் பேர் மங்குரமே பளிங்கு
புங்கலம் ஆன்மா ஆகும் பொங்கழி தூற்றாநெல்லே
**35

#4
வங்கூழே கந்தவாகன் வங்கனநாமம் சேம்பு
மங்கை பங்காளன் ஈசன் மங்கிலமே வனத் தீ
அங்கசங்கம் புணர்ச்சி அங்கரூகம் உரோமம்
இங்கரியே கத்தூரி இங்கண் இவ்விடம் அதாமே
**36

#5
அங்கூரம் தளிரே அங்கீகரணம் சம்மதித்தல் ஆகும்
சங்காரம் அழிவு தானே சங்கன்னமே நரம்பு
கங்காதரன் மாதேவன் காங்கிசையே விருப்பம்
அங்காரிகைப் பேர் கன்னல் அங்குரி விரல் அதாமே
**37

#6
பொங்கடியே மாதங்கம் புங்கவரே புத்தேளிர்
அங்கரட்சணி போர்ச்சட்டை அங்கவித்திகை தான் எண்ணே
சங்கருடணனே வெள்ளை சங்கற்பசன்மன் காமன்
அங்கிதம் உடல் தழும்பே அங்கோலம் அழிஞ்சில் ஆமே
**38

#7
ஓங்காரம் பிரணவம் தான் ஓங்காரித்தல் உறுக்கல்
காங்கேயமே செந்தாது கங்கடம் கவசநாமம்
பாங்கனே எலுவனே பங்கேருகம் பதுமம் காட்டும்
தேங்குதல் நிறைதல் என்ப திங்கள்நாள் மான் தலைப்பே
**39

#8
அங்குலியம்மே வீகம் ஐங்கணைக்கிழவன் காமன்
சங்கிரமணம் நடைக்கு ஆம் சங்கிரமே காந்தாரம்
செங்கொலே பீதம் செங்கோற்கடவுளே தென்திசைக்கோன்
அங்குரகம் கூடே அங்குலித்திரம் விரற்புட்டில் பேர்
**40

#9
அங்களி குமரி அங்கராகமே பூசும் கந்தம்
சங்கக்குண்டலன் ஈசானன் சங்கலாரே சார்பில்லார்
தங்குடிச் சுற்றம் தாயத்தார் திங்கட்குடையோன் காமன்
அங்குரித்தல் முளைத்தல் அங்ககம் அங்கம் ஆமே
** ஙகர எதுகை முற்றிற்று

@4 சகரவெதுகை
**41

#1
அசத்தியம் தத்திகாரம் அசடரே நெறியிலாதார்
விசித்திரதேகம் மேகம் விசிறி சிற்றாலவட்டம்
புசித்தல் என்பதுவே உண்டல் பூசுரர் வேள்வியாளர்
விசித்தல் கட்டல் பொருட்டே விசேடகம் நெற்றிப்பொட்டே
**42

#2
காசினி அவனி என்ப காசனன் கொலைசெய்வோனே
கேசரர் விஞ்சையர்க்கு ஆம் கேசிகன் நிறையுரோமன்
ஓசு தான் கீர்த்தி ஓச்சர் கணக்காயர் பெயரை ஓதும்
ஆசனன் பார்க்கவன் பேர் அச்சயன் கடவுள் ஆமே
**43

#3
அசுரமந்திரியே வெள்ளி ஆசவமே சுமாலி
இசைமடந்தைச் சொல்வாணி இச்சகமே சன்மானம்
உசிதனே வேம்பின் தாரோன் ஓசனே உபாத்தியாயன்
திசைமுகன் பிரமதேவன் தீச்சொல் தான் பழிச்சொல் ஆமே
**44

#4
கசடரே முறையிலாரே கச்சகமே குரங்கு
கிசலயமே அலங்கல் கிசலையும் அப்பொருட்டே
சுசிமிதம் புன்னகைக்கு ஆம் சுசீலன் நற்குணனே என்ப
அசுவம் என்பது துரங்கம் ஆசித்தல் விழைதல் ஆமே
**45

#5
சூசமே துருவாட்டேறு சூசிகாதரம் யானை
தூசரம் அற்பவெண்மை சூசுகமே முலைக்கண்
ஆக்கியே விகங்கம் ஆசேசனம் தெளித்தல்
பூசகன் அரிச்சகற்கு ஆம் புசியம் தைமாதம் ஆமே
**46 

#6
வசுமதி தாலவட்டம் வாசதம் காளவாயே
சசிமணாளன் கரேசன் சாசிபமே மண்டூகம்
விசனனம் பிறவி விச்சித்திரமே விற்பன்னம் ஏற்கும்
அசகவம் ஈசன்வில்லே அசகமும் வரையாடு ஆமே
**47

#7
ஆசங்கித்தலே ஐயங்கொள்ளல் தான் அசினம் தோலே
மாசைச் சொல் பீதம் என்ப மச்சிகையே அருப்பம்
ஈசத்துவம் ஓர் சித்தி இச்சயமே இராகம்
ஏசிச் சொல் அவந்திகைக்கு ஆம் இசலியும் சபதம் ஆமே
**48

#8
ஈசன்நாள் யாழே இச்சாவசு ஏகபிங்கலன் தான்
காசிரமே விருத்தம் கச்சோணி கமழும்பண்டம்
சூசியாசியம் மூஞ்சூறு சுசனம் என்பது மருத்துத்
தூசர் ஏகாலியர்க்கு ஆம் துச்சிமை கீழ்மை ஆமே
**49

#9
அசராது கடுக்கை ஆசுவீசம் ஐப்பசி மாதப்பேர்
உசனனே அசுரமந்திரி உச்சிட்டம் எச்சில் தானே
முசலிகையே உடும்பு முசுடர் என்பது கனிட்டர்
பசுபதி ஈமத்தாடி பாசண்டம் சமையக்கட்டே
**50 

#10
பசிதம் என்பதுவே சாம்பர் பசுங்கதிர்த்தேவே சோமன்
திசமிதன் ஆசையில்லான் திசி திசை ஆகும் என்ப
அசுதையே விடம் அது ஆகும் அச்சபல்லப்பேர் எண்கு
விசிதமே விபூதி விச்சாதரரே விஞ்சையர் பேர்க்கு ஆமே
**51 

#11
வசந்திகைக் கிளவி தேமல் வசவிச் சொல் துட்டை என்ப
பிசங்கமே பொன் கலந்த செந்நிறம் பிசமே தூவி
நிசும்பனம் கொலையின் நாமம் நீசர் என்பது முசுண்டம்
விசங்கடம் மிருகராசன் விசபிலம் சேற்றின் பேரே
**52

#12
விசயார்த்தம் கைலை வெற்பு விசாரபூ கல்விச்சங்கம்
அசமானம் உவமையின்மை அசேதனம் அறிவின்மைக்கு ஆம்
சசமேதான் முயல் சசாங்கம் சந்திரன் நாமதேயம்
குசுமாசவச்சொல் தீங்கு கூசிதம் புட்குரல் பேர்
**53

#13
உசு உளு நாமமே ஓசனித்தல் புள் இறகடித்தல்
அசுரநாள் தானே அன்றில் ஆசீர்வாதச்சொல் ஆசி
துசகமே மாதுளுங்கம் துச்சவனன் பேர் போகி
விசுவகந்தைச் சொல் பூமி விசினமும் பிரவை ஆமே
**54

#14
வாசவன் வேள்வி வேந்தன் வச்சகம் சக்கரம் தான்
ஆசிரயன் தற்காப்போன் அசுதாரணன் காபாலி
பாசகர் வாலுவர்க்கு ஆம் பசுஞானம் தன்னைக்காண்டல்
நேசம் என்பதுவே அன்பு நிச்சாரகம் மருத்தே
**55

#15
அசம்பாதை சேனை செல்லும் வழி அசரீரன் காமன்
கசங்கனமே அங்காடி காசனநாமம் ஊறு
வசுந்தரை புவனி ஆமே வசிவு தானே வணங்கல்
முசுண்டர் கீழ்மக்கள் என்ப முச்சட்டை அழகின் பேரே
**56

#16
முசருவே தயிரின் நாமம் முசுப்பதி பாடிவீடு
அசலகால் மலையக்காலே அசன்னியம் சகுனம் ஆகும்
விசமே தாமரைநூலே விச்சிராணனம் கொடை விளக்கும்
யசுரு இரண்டாம்வேதம் ஆச்சியம் நெய்யின் பேரே
**57

#17
அசுவே தான் பிராணவாயு அசிபத்திரகப்பேர் வேழம்
விசையனமே ஆராய்வு விசர்ப்பனமே பரம்பல்
அசிதாம்புருகமே நீலோற்பலம் அசித்திரனே கள்வன்
உசியே கூர்மைப் பேர் உச்சைச்சிரவம் இந்திரன்உன்னிப் பேர்
**58

#18
தாசரியே மலைப்பாம்பே சசி கடல் மழைக்கு ஆம்
ஆசிதையன் ஏனாதி ஆசாள் என்பது கோமாட்டி
நேசகன் ஈரம்கொல்லி நிசாதனே அகாதன் ஆகும்
தேசியம் திசைமொழிக்கு ஆம் சீசகம் ஈயம் ஆமே
**59

#19
நிசாகசக்கிளவி அல்லி நீசகமே பானீயம்
அசாரம் ஆமணக்கு அசம்பிரேட்சியம் ஆராய்வின்மை
விசாகன் செவ்வேள் விசிட்டம் மேன்மையைக் காட்டும்
தசாசுபன் உடுவின்வேந்தன் தசுமம் அங்காரகன் பேர்
**60

#20
கசாக்கிரம் மயிர்நுனிக்கு ஆம் கசரிபு மிருகராசன்
குசாக்கிரம் குசநுதிப் பேர் குசன் என்ப செந்தீவண்ணன்
நிசாச் சொல் தான் இரவை நாட்டும் நீசமே இழிவை ஏற்கும்
குசாட்சம் என்பது குரங்கு குசேசயம் கஞ்சம் ஆமே
**61

#21
அச்சுவத்தம்மே போதி ஆசுகனே மருத்து
வச்சிரதரன் வலாரி வாசசாம்பதி வியாழன்
கச்சுருவே நெருப்பு கச்சோதம் கத்தியோதம்
சிச்சிலி பொன்வாய்ப்புள்ளுச் சீசமும் ஈயம் ஆமே
**62

#22
இச்சானுவிருத்தி ஆசைஅடக்கமே யசனம் வேள்வி
உச்சாசனம் கொலைக்கு ஆம் உச்சற்கமே அபானம்
நிச்சாலங்கம் பொருப்பு நிசானம் ஓர்கட்பறைக்கு ஆம்
விச்சிராவம் கீர்த்திக்கே விசூரணம் துக்கம் ஆமே
**63

#23
உச்சலம் அறிவு உச்சின்னம் சமப்படுதல் ஓதும்
அச்சுவம் பரி அசூயை அழுக்காற்றின் நாமம் என்ப
வச்சிரகம் கஞ்சக்காய் வாசுதேவன் முராரி
வச்சையம் கலைமான் ஆமே வசீகரம் கைவசப்பேர்
** சகரவெதுகை முற்றிற்று

@5 ஞகரவெதுகை
**64 

#1
அஞலமே கொசுகின் நாமம் அஞ்சமே வக்கிராங்கம்
கஞறமே மதுவே கஞ்சகாரர் என்பது கன்னார் பேர்
கிஞமே தான் அறிவு கிஞ்சித்துவமே சிற்றறிவை நாட்டும்
அஞலே தான் மசகம் அஞ்சலிகை வெளவால் அபிதானம்மே
**65

#2
அஞ்சனி காசையே அஞ்ஞானமே அறிவின்மைக்கு ஆம்
குஞ்சராசனமே போதி குஞ்சுரநாமம் குன்றி
சஞ்சயம் கூட்டநாமம் சஞ்சரி தானே தேனீ
பஞ்சவன் வழுதி பாஞ்சலிகை சித்திரப்பாவை ஆமே
**66

#3
விஞ்ஞதை ஞானம் ஆமே விஞ்ஞாத்தி அறிவிப்பு ஆகும்
அஞ்ஞத்துவப் பேரே அஞ்ஞானம் அஞ்சிட்டன் சூரன்
மஞ்ஞை தானே மயூரம் மஞ்சூரம் கடலை நாமம்
பிஞ்ஞகன் பேயொடாடி பிஞ்ஞகம் பங்குசப்பேர்
**67

#4
விஞ்சுதல் மிகுதல் என்ப விஞ்சை என்பதுவே கல்வி
கஞ்சுகர் மெய்காப்பாளர் காஞ்சிகை தானே எட்டி
வஞ்சிவேந்தன்னே கொங்கன் வஞ்சுளமே அசோகம்
மஞ்சுகமே குரண்டம் மஞ்சுளம் அழகின் பேரே
**68

#5
காஞ்சனி அரிசனம் கஞ்சரீடமே வயவற்கு ஆகும்
பாஞ்சசத்திகம் இயம் பஞ்சூகமே பெருமை பன்னும்
சாஞ்சலியம் அநித்தியம் சஞ்சுகை பறவைமூக்கு
காஞ்சுகம் கவசப்பேர் கஞன்றலும் எழுச்சி ஆமே
**69

#6
சஞ்சரிகம் வண்டே சஞ்சரித்தலே வாசம்பண்ணல்
சிஞ்சுகம் அசுணமே சிஞ்சிதம் அசை அணி ஒலிக்கு ஆம்
செஞ்சாலி செந்நெலே சிஞ்சினிதம் நாணொலியின் நாமம்
முஞ்சகேசிப் பேர் விண்டு முஞல் தானும் மசகு ஆமே
**70

#7
அஞ்சுகம் தானே தத்தை அஞ்ஞன் என்பதுவே மண்ணை
கிஞ்சமே சிறுமை கிஞ்சிக்கினன் ஆன்மாப் பேர் கிளத்தும்
பஞ்சபாணன் வசந்தன் பஞ்சமகதியே மோக்கம்
மஞ்சிகனே ஏனாதி மஞ்சரம் தரளம் ஆமே
**71 

#8
வஞ்சவம் தந்தசூகம் வஞ்சப்பெண் சன்மினிக்கு ஆம்
பிஞ்சடம் பீளையே பிஞ்சானமே பீதம் என்ப
பஞ்சகுத்தம்மே ஆமை பஞ்சானனன் மாதேவன்
மஞ்சம் என்பதுவே கட்டில் மஞ்சிமம் அழகின் பேர்
**72

#9
பஞ்சதம் சாவே பஞ்சானனம் மடங்கல் பேர் பன்னும்
சிஞ்சினியே வில்நாணி சிஞ்சுமாரம் வன்மீனே
வஞ்சுளன் தான் வயானே வஞ்சினம் சபதம் ஆகும்
பஞ்சதாரைப் பேர் பாகு பஞ்சனம் அழித்தல் ஆமே
**ஞகரவெதுகை முற்றிற்று

@6 டகரவெதுகை
**73

#1
உடம்பிடி வேற்படைக்கு ஆம் உடுபம் புணையின் நாமம்
குடங்கையின் பேர் அகங்கை குடகனே வஞ்சிவேந்தன்
வடந்தையே வடகாற்று ஆகும் வடமீன் சாலி என்ப
மடங்கலின் கொடியோன் வீமன் மடவரல் இளம்பெண் ஆமே
**74

#2
அடிசில் தானே புழுக்கல் அடுகளம் போர்க்களப்பேர்
உடுவையே அகழே ஊடல் கலவியில் புலத்தல் ஓதும்
ஒடிசிலே கவணின் நாமம் ஒட்டாரே சத்துருக்கள்
கடையனல் ஊழித்தீயே கடைநாளும் இரேவதிப் பேர்
**75

#3
கொடிச்சியர் குறிஞ்சிப்பெண்கள் கோடீரக்கிளவி வேணி
அடர்ச்சியே நெருக்கம் அட்டபந்தனம் திக்குக்கட்டே
உடுப்பகையே ஆதித்தன் உடுநீர் தான் அகழே என்ப
கடிப்பிணை காதணிக்கு ஆம் காடகம் ஆடை ஆமே
**76

#4
காடிகம் தானே சீலை கடைஞரே மருதமாக்கள்
ஏடணையே விருப்பம் எடுத்துக்காட்டு உதாரணம் தான்
ஈடிகை எழுதுகோலே இடுலி பெண்ஆமை என்பர்
ஆடகி துவரை நாமம் ஆடூஉ ஆண்மகன் பேர்
**77

#5
தாடணம் தட்டல் தானே சடாட்சரன் மஞ்ஞைஊர்தி
கோடவதிப் பேர் வீணை கோடாய் நற்றோழிஅன்னை
சூடம் என்பது கோடீரம் சுடர் மௌலியரே வானோர்
பாடலோபலம் மாணிக்கம் பாடிலக்கிளவி நாடே
**78

#6
கொடுவரியே சார்த்தூலம் கூடபாதப்பேர் பாம்பு
கெடவரல் மகளிர் கூட்டம் கெடலணங்கே சீர்கேடி
தடறு தான் கருவிப்புட்டில் தட்பம் என்பதுவே தண்மை
சுடலையாடிச் சொல் ஈசன் சூடிகை முடியின் பேரே
**79

#7
துடியடி யானைக்கன்று தொடுபதமே புழுக்கல்
படனம் என்பது படித்தல் படினச்சொல் தானே வெற்றி
புடவியே தாலவட்டம் புட்கலை மணாளன் ஐயன்
மிடியனே இலம்பாட்டோன் பேர் மிடைதலும் நெருங்கல் ஆமே
**80

#8
உடைகுளமே பூராடம் உடுபதமே ஆகாயம்
கொடுநுகம் மகமே கூடல்கோமானே குமரிச்சேர்ப்பன்
படிமையே தவவேடப்பேர் படிமத்தான் வெறியாட்டாளன்
நடர் என்பது அவிநயர்க்கே நடுநாள் சித்திரை நாள் பேரே
**81

#9
நெடுந்தகைமைப் பேர் மேன்மை நிட்டேகம் உமிழ்தல் ஆகும்
கடிந்தமன் கும்பகாரன் கடைசியர் மருதப்பெண்கள்
குடும்பினி தானே இல்லாள் கொடைமடம் வரையாது ஈதல்
இடங்கமே உளி இடக்கரடக்கல் ஓர் தகுவழக்கே
**82

#10
குடவரே முல்லைமாக்கள் குடு எனும் கிளவி தேறல்
கடவு தான் வழியே கட்சாந்தரம் அந்தர்ப்புரம் அது ஆகும்
படிகரே வாயிலாளர் படைபேற்றல் கீழறுத்தல்
இடவம் பூவலயமே ஈடணம் புகழ் என்பர் மேலோர்
**83

#11
பீடகேலிப் பேர் வேசி பிட்டபம் உலகம் என்ப
வேடகம் காதணிக்கு ஆம் வேட்கை தானே அருத்தி
மாடகம் முறுக்காணி மாட்சி என்பது பிறங்கல்
மூடிகாஞ்சனன் ஏரம்பன் மூடதை அறியாமைப் பேர்
**84

#12
அடனி வில்நுனியே ஆட்சபாதன் நியாயசாத்திரி
கடலஞ்சிகப்பேர் கூர்ச்சம் கட்கம் என்பது தூவத்தி
படுவரே சவுண்டிகர்க்கு ஆம் பட்டிகர் புரையோர் நாமம்
விடபியே அகலியம் தான் வீட்சிதம் பார்வை ஆமே
**85

#13
கடுத்தலை தானே கண்டம் கட்செவியே புயங்கம்
தடித்தே சஞ்சலையைக் காட்டும் தட்சாயம் மாலூர்தி
குடக்கே பச்சிமதிசைக்கு ஆம் கோட்பதம் ஆன் குளம்பு
இடித்துரை உறுதிச்சொல்லே ஈடிதம் துதித்தல் ஆமே
**86

#14
கடிதேசம் இடையே கட்கராடமே பரிசை காட்டும்
தொடுதோலே பாதகாப்பு தோட்கோப்பு பொதிசோறு என்ப
கடமா ஆமா கடாட்சவேட்சணம் மோகப்பார்வை
அடகே நல் இலைக்கறிப் பேர் அடர்தலும் நெருங்கல் ஆமே
**87

#15
அடுக்களை மடைப்பள்ளிக்கு ஆம் அட்சயமே கேடின்மை
இடக்கியம் தேர்க்கொடிப் பேர் இடுகாடு தானே ஈமம்
கடுக்கை என்பதுவே கொன்றை காடுகாள் மூதணங்கு
அடைப்பை தாம்பூலப்பை அட்சதை சுபஅரிசி ஆமே
**88

#16
இடங்கழி நெருங்கல் காட்டும் இடையெழும் சனியே பூரம்
கடம்பனே கார்த்திகேயன் கடற்சார்பு நெய்தல் தானே
தொடர்ந்தாரே காதலித்தார் தோட்டிமை ஒற்றுமைப் பேர்
விடங்கர் சிறுவழிக்கு ஆம் விடக்கு வள்ளுரம் அது ஆமே
**89

#17
அடலம் மாறாமை அட்டமூர்த்தியே அந்திவண்ணன்
கடவல்லி தானே வேதத்துஉட்பொருள் கடுரம் மோரே
சடரம் என்பதுவே துத்தம் சட்டுவமே அகப்பை
சுடுவு சும்மாடே என்ப சுடரோன் ஆதித்தன் ஆமே
**90

#18
கடிஞை தான் இரப்போர்பாத்திரம் கடற்பிணா நெய்தல்பெண்ணே
சடுதி சீக்கிரமே சாட்டுவலம் பசும்புல்தரைக்கு ஆம்
சுடுவலே உதிரம் நாட்டும் சுடாரியே கவசம் காட்டும்
நடனச் சொல் தானே கூத்து நட்டோர் உற்றார் பேர் ஆமே
**91

#19
நிடலம் என்பதுவே நெற்றி நீடுதனம் ஊறுகோளே
படிமக்கலச்சொல் ஆடி படுகளம் போர்க்களப்பேர்
கடிவையே வல்விலங்கு கடிந்தோர் ஐம்புலனை வென்றோர்
படுகு தான் விசேடவாக்கு பாடிதம் சொல்லல் ஆமே
**92

#20
சடவஸ்தே அசித்துவஸ்துச் சடாசுவாலம் தீபப்பேர்
துடுவையே நெய்த்துடுப்புத் தொடுக்கமே ஏகாகாரம்
தடினியே தரங்கிணிக்கு ஆம் தாட்சன் ஆகாசனன் தான்
மிடலே மாவுரம் அது ஆகும் விடாணமும் விலங்கின்கொம்பே
**93

#21
தேடிதம் துதிசெய்தற்கு ஆம் திடப்பிரஞ்ஞன் சீவன்முத்தன்
கூடத்தன் நிருவிகாரசைதந்நியன் கொடிசை கன்னம்
சேடகம் வட்டணம் தான் செட்டே செட்டிமை உரைக்கும்
கூடிலி தசைஉண்போனே கொட்டியம் எருதின் பேரே
**94

#22
குடாரம் என்பது கோடாலி குடமாடல் திருமால்ஆடல்
விடாரகமே மார்ச்சாலம் விட்டேறு சத்தி தானே
கடீரகமே உபத்தம் கடமுனி கும்பயோனி
குடாவடியே பல்லூகம் குடிலை ஓங்காரம் ஆமே
**95

#23
கூடாரே சத்துருக்கள் குட்டினி தானே துட்டை
நீடாணம் கறியின் நாமம் நெடித்தலும் நெடும்போழ்து என்ப
கூடாங்கம் உறுப்படக்கி கோட்பறை சாப்பறைக்கு ஆம்
மேடூகம் பித்திகைப் பேர் மிடிமையும் வறுமை ஆமே
**96

#24
வட்புலி மிருகராசன் வடுகன்தாய் மூதணங்கு
புட்பகேதே கந்தர்ப்பன் புட்பரசப்பேர் பூந்தேன்
அட்சரமுகன் மாணாக்கன் ஆட்சாரம் குற்றச்சாட்டு
நிட்களங்கப்பேர் தூய்மை நிட்டூரம் கொடுமை ஆமே
**97

#25
ஒட்டுநர் பேரே வேட்டார் உடுவின்வேந்தன் களங்கன்
அட்டிலே பாகசாலை அடையலரே முனைந்தோர்
இட்டகாமியம் இச்சித்தபொருள்பெறல் இடாகு புள்ளி
எட்டர் தான் கடிகைமாக்களே ஏடல் என்பது கருத்தே
**98

#26
குட்டிமம் கல் படுத்த இடமே குட்டரியே குன்று
முட்டி காந்தகனே வெள்ளை முடுக்கர் என்பது நிகுஞ்சம்
புட்டகமே கலிங்கம் புடோட்சமே வெண்குடைப் பேர்
பெட்டுச் சொல் தானே மித்தை பெட்டார் சுற்றத்தார் பேரே
**99

#27
அட்டனம் ஆழியே ஆட்சேபனம் எதிர்நியாயம்
இட்டியம் ஓமநாமம் இடுகை என்பதுவே ஈகை
குட்டியம் பித்திகைக்கு ஆம் குட்டுவன் போந்தின்தாரோன்
அட்டகாசம் பேர் ஆர்ப்பே அடரார் ஒன்னார் பேர் ஆமே
**100

#28
பிட்சாடனம் யாசித்தல் பீடனநாமம் பீடை
வட்கார் என்பது சார்பில்லார் வடிசம் என்பதுவே தூண்டில்
சட்பதமே சாரங்கம் சடுலை தான் தடித்து
இட்டிடை சிறுமை தானே இடவையும் வழி ஆகும்மே
** டகரவெதுகை முற்றிற்று

@7 ணகரவெதுகை
**101

#1
பணதரமே புயங்கம் பாண்டுராகப்பேர் வெண்மை
புணரியே கார்கோளே புண்ணியசாந்தம் பூதி தானே
கணிகையே வேசி கண்ணுள்வினைஞர் கண்ணாளர் நாமம்
அணிகமே சிவிகை ஆகும் அண்டகம் பீசம் ஆமே
**102

#2
கணவம் குஞ்சராசனம் தான் கணவீரம் ஏகவீரம்
கிணகரே அடிமை என்பர் கிணை மருதப்பறைப் பேர்
மணமகள் மனைவியே மண்பொதுத்தந்தை வாணிகேள்வன்
நணுகல் என்பதுவே கிட்டல் நாணி வில் நாணி ஆமே
**103

#3
அணிந்துரை பாயிரப்பேர் அணிகலனே மதாணி
இணங்கலரே எதிர்ந்தோர் எண்குணனே அனந்தன்
அணங்கமே இலட்சணம் தான் அணுக்கமே கோரவாரம்
இணங்கலே உடன்படல் பேர் எண்ணார் மாற்றலர் பேர்
**104

#4
சோணகிரிப் பேர் அண்ணாமலை சுண்ணவரசி முல்லை
மாணவகம் கல்விப் பேர் மணிவீசம் மாதுளுங்கம்
ஏணகமே சாரங்கம் எண்கு தானே பல்லூகம்
வேணுகம் யானைத்தோட்டி வீண் பயனின்மை ஆமே
**105

#5
பிணிகைச் சொல் தானே கச்சுப் பேணார் ஒன்னார் பேர் பேசும்
தணவச்சொல் அச்சுவத்தம் தாண்டவராயன் ஈசன்
மணிகானனப்பேர் கண்டம் மண்டிகை அப்பவர்க்கம்
அணிமைக்கு நுட்பம் ஓதும் அணுபைக்கு மின்னல் ஆமே
**106

#6
வணிகமே செட்டு வண்ணமகள் கோலம் செய்வாள் ஆகும்
மணிகம் நீர்க்குடமே என்ப மணீசகம் சந்திரகாந்தம்
திணிகமே யுத்தம் காட்டும் தெண்மை தான் தெளிவை நாட்டும்
பணியல் தானே வணங்கல் பண்டிலன் தூதன் ஆமே
**107

#7
மணவை தான் அடுப்பே மிண்டன் வாய்ந்த பேர் மீளி ஆகும்
நணுகலர் அடையவர்க்கு ஆம் நண்பு நட்பு ஆகும் என்ப
உணைதல் என்பதுவே தேம்பல் உணக்கம் வாட்டநாமம்
கணிதனே பகைவன் கண்ணுளாளர் கோடியர் பேர் ஆமே
**108

#8
சேணாடு சுவர்க்கலோகம் செண்ணமே வடிவை ஏற்கும்
பூணை என்பதுவே முல்லைநிலம் புண்ணீர் இரத்தம் ஆகும்
சேணாடர் அமரரே செண்டாயுதன் ஐயன் செப்பும்
சாண்மாதுரன் விசாகன் சண்பை சீகாழி தானே
**109

#9
அண்டசம் முட்டையில்தோன்றுவன ஆண்டளப்போன் ஆசான்
கண்டியர் பாணரே கண்ணழித்தல் சொற்பொருள்உரைத்தல்
குண்டனம் வளைதல் என்ப குணங்கர் என்பது பிசாசம்
தண்டலர் சத்துருக்கள் தண்டுலம் அரிசி ஆமே
**110

#10
கண்ணுகமே துரங்கம் கண்ணுறல் காணல் ஆகும்
தண்ணவனே குரங்கி தண்டாமை தான் நீங்காமை
நண்ணுநரே அடைந்தோர் நாணுகம் நாமம் பாய்மா
பண்ணலே செய்தல் பண்டமாற்று விற்பனவு ஆகும்மே
**111

#11
அண்டகை அப்பவர்க்கம் ஆண்டையர் ஆடவர்க்கு ஆம்
தொண்டலம் யானையின்கை தொண்டகம் முருகியப்பேர்
பெண்டகன் அலி தானே பிண்டகம் நறுந்தூமம் பேசும்
அண்டிகம் செந்நாய் அண்டயோனி ஆதித்தன் ஆமே
**112

#12
கண்கூடு பிரத்தியட்சம் கண்ணுளே நாடகம் தான்
எண்தோளன் குன்றவில்லி எண்கணன் அன்னஊர்தி
குண்டீரம் தத்துவப்பேர் குணபமே பிணம் அது ஆகும்
வெண்தேரே கானல் வேணவா வேட்கைப்பெருக்கம் ஆமே
**113

#13
விண்முழுதாளி வேந்தன் வேண்டாமை தான் வெறுப்பு
மண்மகள்புதல்வரே வேளாளர் மண்டூகை வேசி
அண்மையே சமீபம் அண்டார் அடையவர் நாமம் காட்டும்
கண்ணேணி மூங்கிலேணி கண்பாடு நித்திரைப் பேர்
**114

#14
தொண்டனே அடியான் தோணாமுகம் கழியிருக்கை தோற்றும்
விண்டலமே நபங்கம் விண்ணப்பமே மன்றாட்டம்
அண்டிரன் மனுடன் என்பர் அணிமா சித்தியினுள் ஒன்று
கண்டீரம் சதுரக்கள்ளி கணாசலம் கைலை ஆமே
**115

#15
பண்டர் வந்தித்துநிற்போர் பாண்டரங்கன் ஈசானன்
புண்டரகேலி யானை புண்டரீகாக்கன் மாயோன்
முண்டகாசனனே வேதா முண்டித்தலே மழித்தல்
வண்டலம் அங்கணம் தான் வண்டானம் நாரை ஆமே
**116

#16
விண்ணேறு செல்லு வெண்டாமரையாள் வெள்ளைமெய்யாள்
நண்ணார் பொருந்தலர்க்கு ஆம் நண்பகல் மத்தியானம்
விண்மணி பரிதியே வெண்கொல் இரசதப்பேர் விள்ளும்
கண்மை கண்ணோட்டமே கண்வினைஞர் கண்ணாளர் ஆமே
**117

#17
தண்சுடர் உடுவின்வேந்தன் தண்டுலாம்புச் சொல் மோழை
கிண்கிணியே சதங்கை கிணியே கைத்தாளம் ஏற்கும்
பண்டு எனும் கிளவி தொன்மை பாணிபீடனம் விவாகம்
பெண்டு தான் மகடூஉப் பிண்டகருமம் நல் பிதிர்பூசைப் பேர்
** ணகரவெதுகை முற்றிற்று

@8 தகரவெதுகை
**118

#1
அதகம் என்பது மருந்தே ஆதரிசனம் கண்ணாடி
உதகவன் அங்கி உத்தராசங்கம் உத்தரீகம்
இதலை தான் இலஞ்சி ஆகும் இதழியே மதலை காட்டும்
கதலிகை துகிற்கொடிக்கு ஆம் காத்திரவேயம் பாம்பே
**119

#2
உதிட்டிரன் தருமராசன் ஓதிமமுயர்த்தோன் வேதா
இதைப்புனம் புதுக்கொல்லைக்கு ஆம் இதணம் பணவை நாமம்
திதிப்பிரகரணம் காத்தல் திதலை என்பது சுணங்கு
பதத்திரியே விகங்கம் பதப்பாடு மதிலுறுப்பே
**120

#3
அதிகாசம் பெருநகைக்கே அதுலிதம் அசைவின்மைப் பேர்
திதிசுதர் அவுணர் என்ப தீத்தபிங்கலமே சிங்கம்
நதநதீபதியே வேலை நத்துதல் விரும்புதற்கு ஆம்
சுதனம் ஆயுதப்பொதுப் பேர் சுதன் மகன் நாமம் ஆமே
**121

#4
ஆதபன் பரிதி அத்தியாயனம் வேதமோதல்
சாதகும்பம் கல்யாணம் சதுரானனன் வேதா ஆம்
சீதரன் அரி தானே சித்தகம் தலைச்சீரா ஆகும்
தாதகி ஆத்தி தாதமார்க்கமும் சரியையாமே
**122

#5
ஆதபத்திரம் கவிப்பே அதிசந்தானம் பொக்கப்பேர்
காதரன் அச்சமுள்ளோன் கதிரவனே ஆதித்தன்
கேதுவசனம் பதாகை கேத்திரபாலன் முத்தன்
கோதிகையே வன்மீனே குதூகலம் விருப்பம் ஆமே
**123 

#6
பதிகன் வழிச்செல்வோன் ஆம் பதுமநாபன் முகுந்தன்
புதியவரே விருந்தர் பூதகாலம் செல்காலம்
மதனபாடகம் குயில் பேர் மதிமகன் அனுவழிக்கு ஆம்
முதிதம் என்பது மாராயம் மூதாதை பாட்டன் ஆமே
**124 

#7
முதுமகன் சனியின் நாமம் மூதணங்கின் பேர் மாரி
வதிரனே செவிடன் வாதராயணன் வியாசயோகி
விதலையே நடுக்கம் வித்துவேடம் விரோதம் என்ப
அதமசரீரம் கற்பவிருட்சம் ஆதவம் ஒளிப் பேர்
**125 

#8
மேதினி தராதலம் தான் மேதையரே விற்பன்னர்
வாதமண்டலியே சூறை வாதமானம் வருத்தல்
மாதலி வாசவன்சாரதியே மாதுவம் சுமாலி
பூதேவர் வேள்வியாளர் பூதநாதன் சிவன் பேர்
**126 

#9
சாதவேதா நெருப்புச் சாத்தவர் குதிரைவீரர்
சேதிமம் தேவர்கோயில் செதும்பே அங்கணம் அது ஆகும்
ஞாதமே அறியப்பட்டது என்பர் ஞாதியர் தாயத்தார்
காதிவென்றோனே சாந்தன் காதன்மை உருக்கம் ஆமே
**127

#10
அதிரதர் முழுத்தேர்வீரர் ஆதித்தர் உயர்நிலத்தோர்
எதிர்மறை உடன்பாட்டிற்கு மறுதலை இதயம் நெஞ்சு
நொதுமலர் அயலோர் பேர் ஆம் நுதுத்தல் என்பது தணித்தல்
பதுமயோனிப் பேர் வேதாப் பாதோதி கடல் அது ஆமே
**128 

#11
சதுரந்தயானம் வையம் சாதுத்துவம் மேலாம்தன்மை
சுதந்திரியம் தன்னிட்டம் சுதிக்கியானம் சுருதிவித்தை
நிதிக்கிழவன் பேர் சோமன் நீதிஞ்சன் நியாயசாஸ்திரி
பதகர் என்பது மாதங்கர் பாதோதம் மேகம் ஆமே
**129 

#12
பாதசனே வேளாளன் பத்திராசிரயம் சாந்தம்
பீதகாரகமே வேங்கை பீததுண்டம் பொன்வாய்ப்புள்
போதை மூதறிவே என்பர் போத்திரியே குரோட்டம்
மாதவர் முனிவர் மாதி வட்டமாயோடல் ஆமே
**130

#13
மாதுருதான் ஈன்றாள் மத்தியவிருத்தப்பேர் நாபி
மீதுரை பலகால்பேசல் மீதூர்தல் நெருங்கல்
யாதசாம்பதி நீர்வேந்தன் யாதவம் பசுக்கூட்டப்பேர்
வாதரங்கப்பேர் போதி வாதனை வருத்தம் ஆமே
**131 

#14
மதுகாரி தேனீ ஆகும் மதூலகம் இனிமை காட்டும்
பொதுவியே இடைச்சி பூதகிருது புத்தேளிர்வேந்தன்
மிதலை கொப்பூழே மித்தியோத்தரம் பொய்விடைக்கு ஆம்
விதவையே கைமை என்ப வேதினம் ஈர்வாள் ஆமே
**132 

#15
அதிமித்திரன் காதலன் பேர் ஆதுவம் சொல்விளம்பி
பிதிர்பதி எருமைஊர்தி பீதகந்தம் கிருட்டி
புதசனன் அறிஞன் நாமம் புதல்வனே சிறுவன் என்ப
மதுசூதனன் முராரி மதாவளம் வேழம் ஆமே
**133 

#16
மாதரியே சாமுண்டி மதிவல்லோரே அமைச்சர்
மீது மேல் என்ப மேதாவியர் அறிஞர்கள் பேர் மேவும்
வாதானுவாதம் கேள்வி உத்தரம் வதுகை இல்லாள்
பூதவாசம் சரீரம் பூதாரம் கேழல் ஆமே
**134 

#17
சிதிகண்டன் ஈசன் சித்திரகுத்தனே யமன் கணக்கன்
கதிர்நாள் உத்தரமே கத்துருத்துவம் ஆளுகைநடத்துதல்
விதவளம் அசைவே வித்தியார்த்தியே மாணாக்கன் பேர்
மதவிருந்தம் கரேணு மதுதூதம் மாமரப்பேர்
**135 

#18
பதத்திரம் சிறகே பாத்திரீரம் காணிக்கை பன்னும்
பொதுத்தலே துளைத்தல் போதாப் பெருநாரைப் பொருள் அது ஆகும்
திதிட்சயம் அமாவாசைக்கு ஆம் சிதாபாசன் சீவன் என்ப
சதக்கிரதம் தடித்துச் சதிரிசம் உவமை ஆமே
**136

#19
சதித்துவம் கற்பினைத்தானுடைமை சதாரம் ஏறு
முதுக்குறைவுச் சொலே பேரறிவு மோதனமே முத்தம்
சுதர்த்தனம் களகண்டம் சோத்திரம் செவி என்றே சொல்லும்
திதிட்சையே பொறுமை சித்திரபுச்சகம் சிகண்டி ஆமே
**137 

#20
பிதிர்மேதமே சிராத்தம் பிதிரம் என்பது விண்ணேறு
விதுடனே கற்றவன் வித்தியோதமானம் பிரகாசம்
அதிகாந்தமே செவ்வானம் அதாதிருவே உலோபி
உதிதம் சொல்லல் உத்திட்டம் குறிப்பு என்ப நூலோர்
**138 

#21
தௌதம் என்பது வெண்டாது தைதலே அலங்கரித்தல்
பௌதிகம் பூதியத்துக்கடுத்தது பௌத்தர் புத்தர்
யௌதகம் சீதனப்பேர் யாதுதானவர் அரக்கர்
சௌதாமினிச் சொல் சம்பை சைத்துவம் செய்தல் ஆமே
**139 

#22
புதல்வி தான் மகளே பூதகிருதாயி புலோமசைக்கு ஆம்
பிதரமே பிழத்தல் பீதாம்பரம் செம்பொன் ஆடையின் பேர்
பதடியே பதரே பத்திரரேணு கீழ்த்திசையின் நால்வாய்
பொதுவரே ஆயிடையர் புத்திரமார்க்கமும் கிரியை ஆமே
**140

#23
பைதிரம் நாடு பாதசாபலியம் உதைத்தல்
ஐதிகம் பிரமாணத்து ஒன்றே அதவம் பின்பு என்பர்
தைதம் அங்குலி நுனிக்கு ஆம் தாத்துவன் உபகாரிப் பேர்
நைதிகை முல்லை வைதரணி யமனகர்நதிக்கே
**141 

#24
கைதவன் கூடல்கோமான் காதகன் கொலைசெய்வோன் ஆம்
மைதிராவருணி கும்பயோனி மத்திரம் சந்தோஷம்
வைதேயம் அறிவின்மை பேர் வைதேகி இராமன்தேவி
சைதியமுகம் கரண்டம் சைதிதம் சூரல் ஆமே
**142 

#25
சதக்கிருது அமரர் கோமான் சத்தளமே சரோசம்
மதுக்கிரமம் தேன்கூடு மதுவீசம் மாதுளுங்கம்
முதைப்புனம் பழங்கொல்லைக்கு ஆம் மூதிரி தானே மேதி
உதக்கே நல் வடதிசைப் பேர் உதிரம் தான் செந்நீர் ஆமே
**143 

#26
அதீதியம் ஆசையின்மை அதிதானம் ஈகை காட்டும்
குதபமே தருப்பைப்புல்லுக் குதரமே குறும்பொறைக்கு ஆம்
சதமகன் வச்சிரபாணி சத்தாரையே மடங்கல்
அதிதிநாளே கரும்பே ஆதிரன் பெரியோன் ஆமே
**144 

#27
அதோவே கீழ் அத்தியாபகன் மறையோதுவிப்போன்
உதாரத்துவம் பேரீகைத்தன்மையே உதிரன் செவ்வாய்
சதாபலமே சம்பீரம் சதமுனை குலிசப்பேர் ஆம்
பதாகினி படை தான் பாதசாலமே பதத்தணிப் பேர்
**145 

#28
சிதானனே கலுளன் சித்தலயம் மனவொடுக்கம் செப்பும்
சுதாகிருதே மாலூர்தி சூதனமே சட்டித்தல்
சதாபுயம் சஞ்சரீகம் சதாவர்த்தன் சார்ங்கபாணி
உதீசி உத்தரதிசைக்கு ஆம் ஓதும் மார்ச்சாலம் ஆமே
**146

#29
உத்தமாங்கப்பேர் சென்னி உதணமே மொட்டம்பு ஆகும்
அத்துவா இரண்டொன்றாகஇருத்தல் ஆதுலனே ஏழை
பத்திரைகேள்வன் வீரபத்திரன் பதவை ஆறு
முத்தாடல் கொஞ்சுதல் பேர் மூதாளர் முதியோர் ஆமே
**147

#30
உத்தம பாத்திரம் சற்பாத்திரம் உதாரன் தாதா
அத்திபஞ்சரம் கங்காளம் அத்துவிதம் ஒன்றிப்பே
இத்தை முன்னிலையசைச்சொல் ஏத்தல் என்பது பழிச்சல்
பத்திராத்துமசம் கட்கம் பாதரோகணம் போதிப் பேர்
**148 

#31
கத்தையே கழுதை கத்தியோதமே கச்சோதம் தான்
குத்திரன் கபடன் ஆகும் கூதனம் மறைத்தசொல்லே
சித்தசன் சம்பராரி சித்தாந்தனே ஈசானன்
சுத்தாந்தம் அரசன்தேவிமனை சூதவம் சுரும்பே
**149

#32
பாத்தல் பங்கிடுதல் பாதபரித்திருநம் மிதித்தல்
பூத்திரம் மலையே பூதபலி உச்சிட்டங்கொடுத்தல்
மோத்தையே செச்சை மூதா இந்திரகோபம் ஓதும்
நீத்தம் என்பதுவே வெள்ளம் நித்திலம் முத்து ஆமே
**150 

#33
பித்தை ஆண்மயிரே பீதாம்பரன் அரவணைச்செல்வன் பேர்
மித்திரலாபம் நேசத்தேட்டமே மித்தியம் பொய்
வித்துரு மின்னல் வேதநீயமே உபாதியின்மை
தத்திகாரம் அநுத்தம் ததர்முகம் தொடக்கம் ஆமே
**151 

#34
சைத்திராதம் குபேரன்தண்டலை தத்தியம் மெய்
தைத்தியர் திதியின்மைந்தர் ததாகதன் சினம்தவிர்ந்தோன்
சைத்திராவலியே சித்திராபர்வம் சதேரன் தெவ்வன்
தைத்தியாரிப் பேர் மாயன் ததைவு தான் நெருக்கம் ஆமே
**152 

#35
சித்திரகாயம் வேங்கை சிதோதரன் அளகையாளி
செத்து சந்தேகம் சித்தகாசம் பேரறிவு செப்பும்
தொத்தனே அடிமைக்காரன் தோதகன் கபடன் என்ப
தித்தித்தில் இனித்தல் ஆகும் தீத்தலோசனம் பூஞைப் பேர்
**153 

#36
ஓத்தி சாயானதம் தான் உத்துவாகம் கைப்பற்றல்
யாத்தலே கட்டல் ஆதிவராகனே அச்சுதன் பேர்
பாத்தமே எல்லாநாட்டுமொழி என்பர் பதரி கோலி
தீத்தகம் பொன்னே தீத்தாங்கம் சிகாவளம் அது ஆமே
**154

#37
வித்தியம் அறிவு வேதநாநமே அனுபவித்தல்
கத்திருவம் பாய்மாக் கத்தவியம் தத்துவம் அது ஆகும்
குத்தம் என்பது இரட்சித்தல் குதுகமே விருப்பநாமம்
வித்துதல் விதைத்தல் வேதகாரர் பேர் பொருந்தர் ஆமே
** தகரவெதுகை முற்றிற்று

@9 நகரவெதுகை
**155

#1
சாநித்தியச்சொல் தானே சமூகம் சாந்தவமே சானு
தீநாற்றம் முடையே தீந்திரியம் அறிகருவி செப்பும்
பாநேமியே பதங்கன் பாந்தல் என்பது பதுங்கல்
மாநடன் சிவனே மந்தாகம் புகழ் நாமம் ஆமே
**156 

#2
அந்தணர்வாக்கு வேதம் அந்தராளம் நடுப் பேர்
கந்தமூலம் கிழங்கு கந்தர்ப்பன் சம்பராரி
இந்திரையே சீதேவி இந்துரு பெருச்சாளிக்கு ஆம்
சிந்தைகூரியனே புந்தி சிந்தித்தல் நினைத்தல் ஆமே
**157 

#3
சுந்தரவல்லி வள்ளிநாயகி சுந்தரம் சீர்
சந்தற்பம் தருணம் சந்தனாசலம் மலையம் சாற்றும்
தந்தசம் இருபிறப்பு தாந்திரிகன் நூல்வல்லோன்\
பந்தயித்துவமே யாத்தல் பந்துரம் அபிராமப்பேர்
**158

#4
மந்தமா யானை மந்தமாருதம் இளந்தென்றற்கு ஆம்
அந்தரியாகம் உட்பூசனையே அந்தியர் கனிட்டர்
இந்திரைகேள்வன் மாயன் இந்திரவாசம் நெய்தல்
கந்தவாகன் காற்று ஆகும் கந்தித்தல் கமழ்தல் ஆமே
**159

#5
உந்திபூத்தோன் முராரி உந்தை உன்றந்தை என்ப
அந்தளம் கவசம் அந்தர்க்கரணம் உட்கருவி ஆகும்
இந்திரனாளே சேட்டை இந்திரதிசை கிழக்குச்
செந்திருவே சீதேவி செந்தாது செம்பொன் ஆமே
**160

#6
தந்திரபாலன் சேனாபதி தந்தசூகம் பாம்பே
அந்தியம் முடிவே அந்தப்புரம் மன்னன்தேவியில்லம்
சந்தனுமைந்தன் தெய்வவிரதன் சந்திரகி மஞ்ஞை
அந்திவண்ணன் கங்காளன் அந்திரன் வேடன் ஆமே
**161

#7
அந்திரம் குடரே அந்தரீட்சம் ஆகாயம் ஆகும்
தந்தியினுரியோன் ஈசன் தந்தையே அப்பன் நாமம்
செந்தமிழ்நாடு பாண்டிநாடு செந்தீவண்ணன் சேய்
நந்தனவனம் பூந்தோட்டம் நந்தனி புதல்வி ஆமே
**162 

#8
நந்தரே முல்லைமாக்கள் நாந்தகம் நவிரம் ஆகும்
தந்தவத்திரனே சம்பு தந்துரை பாயிரப்பேர்
அந்திகாசிரயமே தாவரம் அந்தரீபம் தீவே
இந்துலோகம் வெண்டாதே இந்தரி இராகு ஆமே
**163

#9
மாந்திதான் சூதமே மந்தசம் நவநீதம் ஆகும்
வாந்தரதம் சுவா மந்தினி தயிர்கடைதாழிக்கு ஆம்
காந்துகமே வெண்காந்தள் கந்தமாதிருவே பூமி
பாந்தனே வழிச்செல்வோன் ஆம் பந்தகம் கட்டின்பேரே
**164 

#10
மந்துரம் குதிரைப்பந்தி மந்திரதன் பணிக்கன்
அந்ததமசமே மிக்கவிருள் அந்தரேணம் மத்தி
மந்தாட்சம் நாணம் ஆகும் மந்தானம் மத்தே என்ப
வந்தியை மலடி வந்து மாருதப்பெயர் ஆகும்மே
**165

#11
சாந்தகம் மிருது சாந்தராயனம் மதியின் வீதி
ஆந்திகை அக்காளே அந்தரிலயம் துரியாதீதம்
வேந்து தானே பூபாலன் விநாசகம் அழிப்பின் நாமம்
பூந்தோட்டமே ஆராமம் பூநாதம் வெடியுப்பு ஆமே
** நகரவெதுகை முற்றிற்று

@10 பகரவெதுகை
**166

#1
அபரசன் பின்னோனே ஆபணியமே அங்காடிப் பேர்
உபகேசி மலைமடந்தை உபசிருட்டம் புணர்ச்சி
கபடனே வஞ்சகன் காபாலமே சிவன் நிருத்தம்
அபிநயர் கண்ணுளாளர் அபிராமம் அழகின் பேரே
**167 

#2
அபவருக்கம் பேர் முத்தி அபரதி தாமதித்தல்
உபரதி வெறுத்துத்தள்ளல் உபகசிதம் சிரிப்புக்
குபினி கொக்கரையே கோபிகாஸ்திரியே குடத்தி
அபிசரன் தானே பாங்கன் அபிடேகம் திருமுழுக்கே
**168

#3
சுபக்கமே பொருளிருக்கும்பக்கமே துப்பகம் நெய்
அபத்தியம் பிள்ளை ஆபத்தம் பிரதிட்டை ஆகும்
உபக்கிரோசப்பேரே நிந்தனை உபமிதியே ஒப்பு
விபக்கமே பகை வீபற்சு விசயன் தன் நாமம் ஆமே
**169 

#4
அபிலாபம் பேச்சே அப்பிரமாதங்கம் அரியின்யானை
இப்பாலகன் பேரே ஆதோரணன் இபங்கம் மாழை
விபகாரம் வியவகாரம் வீபத்தே உடுவின்வேந்தன்
அபகாதம் கொல்லலே அப்பிரபுட்பம் அமுதம் ஆமே
**170 

#5
ஆபதோத்தாரணன் கேத்திரபாலன் அபகம் மாய்வு
கோபநீயம் பேர் அற்றம் கோபுரம் நகரின்வாயில்
வாபீகம் சாதகப்புள் வபிலனே தந்தை என்ப
வீபணியே அங்காடி விபுலை பூவலயம் ஆமே
**171

#6
அபிசாபனம் சபித்தல் அபூபமே அப்பவர்க்கம்
விபசாயம் பயிர் விபாசை பிரகாசநாமம் விள்ளும்
கபமே கோழைப் பேர் காப்பியன் புகர் நாமம் காட்டும்
உபபீடனம் வருத்தம் உபமலம் உள்ளின்மாசே
**172

#7
கபடநாடகனே விண்டு கபோலம் என்பது கதுப்பு
அபவிருத்திப் பேர் தேய்வு ஆம் அப்பியாசம் பரீட்சை
நிபடிதமே வாசித்தல் நிபத்தியை சமர்க்களம் தான்
அபவருத்தம்மே தேய்த்தல் அபகுண்டனம் சுற்றல் பேர்
**173 

#8
அபமானமே துற்கீர்த்தி அபரிசரப்பேர் தூரம்
உபராவம் ஒளி உபாசிரயம் அடைக்கலம் என்று ஓதும்
அபிகாதி சத்துருப் பேர் அபிகிதத்துவமே மேற்கோள்
உபவீதம் பூணூல் என்பர் உபாசயம் உறக்கம் ஆமே
**174 

#9
அபயாத்தம் அச்சந்தீரஅமைக்கும்கை அபசங்கம் கால்
உபகாசம் நிந்தைமூரல் உபரசன் நாமம் தம்பி
சுபிஷமே மிகுதி என்ப சுபன்னகேதுப் பேர் மாயோன்
தபனே மார்த்தாண்டன் ஆகும் தாபியம் வைத்தல் ஆமே
**175

#10
தாபதம் முனிவர்வாசம் தபுதலே கெடுதல் என்ப
தீபிகை தானே தீபம் தீப்பியமே சுவாலை
கோபணை ஒடிசிலே கோபத்திரம் கஞ்சநூல் ஆம்
கூபரம் முழங்கை கூபம் கூவல் என்று அறையல் ஆமே
**176

#11
கோபிதாரம் குராக் கூபரங்கமே மயிர்ப்பொடிப்பு
ஞாபிதம் அறிவித்தற்கு ஆம் நபுஞ்சகன் தானே சண்டன்
தூபரம் கொம்பிலாதவிலங்கு தூபப்பேர் தூமம்
பாபமூர்த்திகளே வேடர் பாபத்தி வேட்டம் ஆமே
**177 

#12
சபலத்துவம் பேரே காரியசித்தி சபரம் சேல்மீன்
அபசவ்வியம் தான் வாமம் அபிதம் என்பது இரட்சித்தல்
உபரட்சணன் வாய்காப்போன் உபஞ்ஞையே வாலஞானம்
விபினம் பேரே காந்தாரம் விபாதனம் அழித்தல் ஆமே
**178

#13
அபயரே படைவீரர்க்கு ஆம் அபலாடிகைப் பேர் தாகம்
நிபிடம் என்பது நெருக்கம் நிபாடையே படித்தல் என்ப
விபசியம் அறிவின் நாமம் விபச்சித்து என்பது விற்பன்னன்
உபலிங்கமே உற்பாதம் உபலேபம் மெழுகுதல் பேர்
**179 

#14
உபரசம் கடனுரைக்கு ஆம் உபராசன் இளையமன்னன்
அபிசுதம் தானே கிட்டல் அபிசந்தாபம்மே யுத்தம்
விபதை என்பது நிரப்பு விபாதமே உதயகாலம்
அபிசவம் கஞ்சி அப்பியவகாரம் எல்லுதல் பேர்
**180 

#15
மாபலன் தானே வங்கூழ் மாபத்தியன் மாரன் பேர்
ஆபனிகன் கிராதன் அபீட்டிதம்மே துதித்தல்
தீபகம்பம் தீபத்தண்டே தீபவதியே ஓணம்
வேபன நாமம் உட்கு விபஞ்சி கோடவதி ஆமே
**181 

#16
சிபித்துவம் உடைத்தல் ஆகும் சிப்பிரம் தானே அற்பம்
கெபத்தமே கிரணமே கெப்பிதமே ஒல்லாமை காட்டும்
அபித்தியை இச்சை அப்பியசூயகன் அழுக்காறுள்ளோன்
அபக்கிரோசப்பேர் எள்ளல் அபிடங்கம் சாபம் ஆமே
**182 

#17
உபயத்தமே சிலேடை உபசதனச்சொல் ஏதில்
அபிநிரியாணம் தானைஎழுச்சி ஆபதம் ஆபத்தே
உபகிருதம் துணைக்கு ஆம் யூபத்தம்பம் வேள்வித்தூண்
அபிமந்திரம் செபித்தல் அபியிதம் சொல்லல் ஆமே
**183 

#18
அபூருவம் புதுமையே ஆபீரனே ஆன்வல்லோன் ஆம்
நிபாகம் என்பது சமைத்தல் நிபாடமே படித்தல் என்ப
அபாசிரயம் தான் பந்தர் அபாசீனமே இயவாசி
சபாநாதனே ஈசானன் சபடமே விரித்தகைப் பேர்
**184 

#19
விபாசமே பந்தமோசனம் விபாவியம் சிந்தித்தல்
பிபீலிகை எறும்பு தான் பைபீலமும் அப்பொருட்டே
அபானமே பாயு ஆம் ஆப்பிரச்சனம் சரிநயப்பேர்
கபாலமே வெண்டலைக்கே கபித்தமும் வெள்ளில் ஆமே
**185 

#20
உபாஞ்சனம் மெழுகலே உப்பரிகை மேன்மாடம் ஓதும்
அபாம்பதி கடலே அப்பியாகதன் அதிதி ஆகும்
உபேந்திரன் உந்திபூத்தோன் உபாசிதமே வணக்கம்
அபாங்ககமே கடைக்கண் அபாரணை உண்ணாமைப் பேர்
**186 

#21
ஆபாலி பேனே ஆப்பம் அணி கும்பஇராசி ஆகும்
கோபாலர் இடையர் கோபாயிதம் இரட்சித்தல் கொள்ளும்
ஆபாடம் நூன்முகப்பேர் அப்பிதமே சீமூதம்
கோபீதம் தூயதானம் கொப்பமும் பயம்பு ஆகும்மே
**187 

#22
அப்பியமிதமே துன்பம் அப்பிரகிருட்டம் காக்கை
சுப்பிரமணியன் செவ்வேள் சுபகரன் ஈகையாளன்
விப்பிரர் வேள்வியாளர் விபுதை தத்துவமே என்ப
அப்பிரசாதை வந்தி அபிலாசம் விருப்பம் ஆமே
** பகரவெதுகை முற்றிற்று

@11 மகரவெதுகை
**188 

#1
அமரபாதிரு வலாரி அமராசயம் கருப்பை
இமகரனே களங்கன் இமவான் வேதண்டராசன்
முமுடம் முற்றத்துறத்தல் மும்மீன் என்பது பேராளன்
யமி எனும் கிளவி நீத்தோன் யாமினியம் தெற்கு ஆமே
**189 

#2
குமரம் கொம்பிலாவிலங்கு கோமகளே கோமாட்டி
அமலகமலம் கோமூத்திரம் அமரேசன் வச்சிரபாணி
உமணரே உப்பமைப்போர் உமாகுரு இமயம் ஆகும்
அமிதமே அளவின்மைக்கே அமேத்தியம் அசுத்தம் ஆமே
**190 

#3
அமுணங்கம் அடக்கமின்மை ஆகுமே அமமே நோய் ஆம்
உமைகரநதியே கங்கை ஓமானே காமரூபி
அமையம் என்பதுவே காலம் அமூர்த்தமே உருவமின்மை
சமரம் போரே சம்பீரம் சதாபல நாமம் ஆமே
**191 

#4
நமசமே இணக்கம் நாமகரணமே நாமம் வைத்தல்
சமுருதம் அதிகமே தம்பதி திரிபுருடர்தாமே
சுமனசம் மலரே சோமபானம் ஆதுவங்குடித்தல்
சமதளம் கூட்டமே சம்பிரகாரம் சமரம் ஆமே
**192 

#5
காமித்தலே விரும்பல் காமரூபி சொல் ஓந்தி
நேமிப்புள் கோகம் என்ப நேமகம் நியமம் ஆகும்
பூமித்திரம் பொருப்புப் பூமிசம்பவையே சீதை
ஈமத்தாடிச் சொல் நீலகண்டன் ஈம் இடுகாடு ஆமே
**193 

#6
அமராபகைச் சொல் வானநதி அமிசகமே அல்கல்
கமலாசனன் விதாதாக் காமுறல் ஆசைகொள்ளல்
சமலாம்பம் பூசுதற்கு ஆம் சம்வேதம் அனுபவித்தல்
அமிதாவல் காதலித்தல் ஆம் ஆமரி வசனம் ஆமே
**194 

#7
பாமரம் அறிவின்மைக்கு ஆம் பௌமனே குருதிவண்ணன்
பூமிசம் நரகம் பூமிகொழுநனே உந்திபூத்தோன்
மாமிசதாரி ஊன்தின்போனே மாமணி மாணிக்கம்
யாமியன் கும்பயோனி யாமினி கங்குல் ஆமே
**195 

#8
அமிசனமே பிரித்தல் அமாநசியம் உபாதி
இமில் எருத்தின் முரிப்பே இமாலயம் இமயநாகம்
கமலயோனிப் பேர் வேதாக் கமலாலயம் தான் ஆரூர்
விமதனே பகைவன் என்ப விமூட்சஞ்ஞம் அறிவின்மைப் பேர்
**196

#9
ஐமுகனே மாதேவன் அமிசாமம் வேதாவாவி
கைமாறு பிரதி வேளாண்மைப் பெயர் கைமா யானை
சைமினிநகரே கூற்றுலோகமே சௌமன் புந்தி
மைம்மாவே வராகன் நாமம் மைமுகன் கள்வன் ஆமே
**197

#10
கோமலகப்பேர் கஞ்சநூலே கோமாயு சம்பு
சாமளம் பச்சை சம்பிரசாதம் நம்பிக்கை சாற்றும்
தாமணி தானே தாம்பு தாம்பிராட்சன் குயில் பேர்
கோமயம் ஆப்பி நாமம் கோமாட்டி குரத்தி ஆமே
**198

#11
அமுதுறை சம்பீரத்தின்கனி அமரார் அண்டார்
சுமலை பாற்கடல் பிறந்தாள் கமடமே உறுப்படக்கி
தமனகம் மருக்கொழுந்தே தமிசிரம் குறைவு என்ப
ஞிமிறு தான் சஞ்சரீகம் ஞெமுங்கலும் அழுந்தல் ஆமே
**199 

#12
காமபாலன் பனந்தாமன் காமதகனன் ஈசன்
சாமரீகரம் செந்தாது சம்மானனம் பேர் தாழ்தல்
தூமயோனிச் சொல் மங்குல் துமிலமே பேரொலிக்கு ஆம்
வாமலூரம் வன்மீகம் வமனம் துப்புரவாக்கல் பேர்
**200

#13
பீமரமே யுத்தம் பெம்மான் பெருமானே என்ப
நாமடந்தைச் சொல் வாணி நாமதேயம் தான் நாமம்
ஆமிரேடணமே கூறியதுகூறல் ஆமா காட்டுஆ
காமகாண்டம் மதன்வில் கம்பித்தல் நடுங்கல் ஆமே
**201 

#14
தமரகம் உடுக்கையே தம்மிலம் மயிர்முடிப் பேர் சாற்றும்
திமிசு தான் பிரசாரப்பேர் திமிராரி அண்டயோனி
நமுசிசூதனன் வலாரி நாமசேடம் இறப்பே
அமுரியே சிறுநீர் அம்போதரம் முகில் நாமம் ஆமே
**202

#15
கோமலதைச் சொல் மென்மை கோம்பி சாயானதந்தான்
தாமநிதிப் பேர் வெய்யோன் தாம்பிரம் செம்பு என்ப
தோமமே படை துமாகாரன் கருமான் பேர் தோற்றும்
நீமம் என் கிளவி காந்தி நிமலமே அழுக்கின்மைப் பேர்
**203 

#16
கமலக்கண்ணன் சங்கேந்தி கமித்தல் என்பது பொறுத்தல்
அமைவுச் சொல்லே அடக்கம் அமுத்தி இட்டமின்மை
குமரிச்சேர்ப்பன் பேர் மாறன் கூமமே நீர்நிலைக்கு ஆம்
சிமிலப்பேரே பொருப்புத் தெம்முனை பகைமுகப்பேர்
**204

#17
அமனி தான் தெருவே அம்புராசியே அளக்கர் என்ப
சமதமே பொறுமை சம்வற்சரம் ஆண்டாக்குவயம் ஆகும்
சிமி குடுமிப் பேர் சீமங்கலி நாவிதன் பேர் செப்பும்
சமவற்சி தென்திசைக்கோன் சமக்கிரம் எல்லாம் ஆமே
**205

#18
சமிட்சேபமே சுருக்கம் சாமீகரம் வெறுக்கை
அமுத்தம் கைப்படையே அம்புநிதி வேலாவலயம் ஆகும்
சமத்தாவம் இயாகதோத்திரம் சமிதர் என்பது பூதங்கள்
அமைச்சர் மந்திரிகளே அம்பவாணம் சாபம் ஆமே
**206

#19
அமுதுசெய்தல் பேர் உண்டல் அம்மிலிகைச் சொல் சிந்தம்
சமகமே சமாதானம் தான் சமீரணனே மருத்துத்
தமனமே மருக்கொழுந்து சௌமேசகம் பசும்பொன்
சமதி யுத்தம்மே சம்வன்னம் வசிகரித்தல் தானே
**207

#20
சமார்ச்சனம் தானே தூர்த்தல் சம்பதி பாக்கியப்பேர்
விமோட்சனம் விடுதலே விமலமணி படிகம் வேண்டும்
சமேதம் என்பதுவே கூடியிருத்தல் தமகன் கொல்லன்
சமூர்ச்சனம் பரம்புதற்கு ஆம் சம்மார்ச்சனம் மூடல் பேர்
**208 

#21
தமோபகமே வெளிச்சம் தமனியமே செந்தாது
சுமாரகமே நினைப்பு சுமமே போது என்பர் மேலோர்
உமேசனே குன்றவில்லி உமாதமே அறிவின்மைப் பேர்
இமையிலே வைனதேயன் இமையவர் விபுதர் ஆமே
**209

#22
தமோகரனே குரங்கி தாமிரம் தானே செம்பு
துமானம் ஆபரணப்பெட்டி தூமகேதனனே வன்னி
உமாபதி நீலகண்டன் உமாகட்கமே தருப்பை
சமானரகிதம் சொல்லே ஒப்பின்மை சம்பாளம் சேறே
**210

#23
கௌமோதகி சொல் விண்டுவின்தண்டு கைம்மீன் அத்தம்
செளமேருகம் கல்யாணம் சம்யோகமே புணர்ச்சி
சௌமாரம் இளமை சாமானியம் பொது என்றே சாற்றும்
கௌமோதம் கார்த்திகைப் பேர் கைமலை யானை ஆமே
**211 

#24
அம்பிகைபாகன் ஈசன் அமரிஷணம் தான் கோபம்
சம்பிரடசியமே ஆராய்ந்தறிந்தது சமட்டி எல்லாம்
கெம்பீரித்தல் வீரங்காட்டுதல் சிமிகம் கிளிக்கு ஆம்
அம்பணத்திச் சொல் விந்தை அம்புசாதம் கஞ்சப்பேர்
**212

#25
வம்பலே திசை வாமாவர்த்தம் இடம்புரிவளைக்கு ஆம்
விம்புவே கமுகு வேம்பின்தாரோன் மீனவன் பேர்
அம்புலியே குபேரன் அமிச்சையே ஞானம் ஆகும்
சிம்புளே எண்காற்புள்ளே சிம்மதம் அரவின் பேரே
**213 

#26
அம்புவாகம் கொண்மூ அம்புரோகிணி அம்புயப்பேர்
சம்பன்னம் குறைவிலாமை சமானியம் பொதுவே ஆகும்
நிம்பமே பிசுமந்தம் தான் நிமேஷகமே கச்சோதம்
அம்புதியே அளக்கர் அமரத்துவம் அழியாமைப் பேர்
**மகரவெதுகை முற்றிற்று

@12 யகரவெதுகை
**214 

#1
அயத்தினம் முயற்சியின்மை அயமேதம் ஓர் இயாகம்
சயிக்கமே மென்மை தான் சாயானதம் சரடம் என்ப
வியட்டிரூபப்பேர் தூலரூபமே வியனே பீடு
நியக்கரணப் பேர் நிந்தைப்படுத்தலே நியக்கி மானே
**215 

#2
ஐயவி கடுகு தானே ஆயிரங்கதிரோன் சண்டன்
கையடை அடைக்கலப்பேர் கயமுனி யானைக்கன்று
மையமே நடு மையாத்தல் மயங்குதல் நாமம் என்பர்
வையாளிவீதி செண்டுவெளி வயவரி புலிப் பேர்
**216

#3
ஆயமுக்கரவன் சோமன் அயவாகனன் தீத்தெய்வம்
ஈயுவன் இராவணன் பேர் இயற்றுதல் தானே செய்தல்
சாயனம் சொல்விளம்பி சயனார்த்தமே படுக்கை
ஞாயிலே மதிலுறுப்பு நயனம் கண் நாமம் ஆமே
**217 

#4
தீயளி காயே தீயம் தித்திப்பின் நாமம் ஆகும்
தோயதி பாராவாரம் தோயம் என்பது கீலாலம்
பாயல் மக்கட்படுக்கை பயோகனம் ஆலங்கட்டி
மாயவன் திருமால் மாயோள் மகடூஉ என்று அறையல் ஆமே
**218 

#5
துயிலெடை துயில்எழுப்பல் துயரியே யாழ்நரம்பு
நயநிலைப்படலமே நாடகம் நயப்புணர்வு கண்மை
பெயலை தான் மழை பேயோடாடிப் பெயர் பினாகபாணி
அயிணம் மான்தோல் அயிர்ப்பே ஐயம் என்று அறையல் ஆமே
**219

#6
உயர்நிலை தேவலோகம் உயல் உயிர்வாழ்தல் ஆகும்
அயுகலம் தனிமையே ஆயிரங்கண்ணன் அமரராசன்
சயகமே மலரரும்பு சயந்தனமே விமானம்
மயிடமே எருமை தான் மாயாதம் வன்மீன் ஆகும்மே
**220

#7
வயப்புலி மிருகராசன் வாயசமே அரிட்டம்
வியத்திகை பெருமை காட்டும் வியந்தரமே பிசாசம்
அயிர்க்கூடு தோட்டியே ஆய்ச்சியர் பொதுவியர் பேர் ஆகும்
இயற்றி தானே முயற்சி இயக்கர் கந்தருவர் ஆமே
**221

#8
அயினி தான் அன்னம் ஆயர் ஆன்வல்லோர் நாமம் ஆகும்
குயவரி கொடும் சார்த்தூலம் குய்யதீபகம் கச்சோதம்
நியுதமே ஓர் இலட்சம் நியாதனமே விழுத்தல்
முயலின்கூடு அம்புலிக்கு ஆம் முயங்கல் தழுவல் ஆமே
**222

#9
மயுராசனே குபேரன் மாயோன்நாளே உலக்கை
வயவு ஆசையே வியர்த்தம் வந்திடும் பயனின்மைக்கே
அயிறலே உண்டல் ஆயுள்வேதியர் மருத்துவர்க்கு ஆம்
கயிலையாளிச் சொல் ஈசன் கயவர் கீழ்மக்கள் ஆமே
**223

#10
அயிரமே கண்டசர்க்கரைப் பெயர் ஆயி தாயே
வயவரே படைவீரர்க்கு ஆம் வயானமே பறவை நாமம்
நயனோபாந்தம் கடைக்கண் நயிட்டிகம் நியமநிட்டை
புயகமே அரவு பேய்த்தேர் புகலுவர் கானல் என்றே
**224 

#11
தியுதம் கிரணம் செப்பும் தியாத்துவமே தியானம்
குயவு தானே கொடிஞ்சி குய்யபாஷிதமே மந்திரம்
கியமதமே இளைப்புக் கேயனே பாடுவோன் பேர்
அயவு என்பது அகலமே ஐயானனம் சிங்கம் ஆமே
**225

#12
கயிங்கரியப்பேர் வேலை கயிரமே கணவீரம் தான்
சுயம்பாகமே சமைத்தல் துயுலியே தொய்யில் என்ப
பயந்தாளே அம்மனைக்கு ஆம் பயோகடமே துவீபம்
இயந்தை என்பது நவிர்ப் பேர் இயல்பூவே வில்வம் ஆமே
**226

#13
துயிலல் நித்திரைசெய்தல் பேர் துய்யமே தூய்மை தோற்றும்
தியுகமே பறவை தெய்வீகம் தெய்வத்தன்மை செப்பும்
உயவரே வருந்தினர்க்கு ஆம் உயவல் தானே நினைத்தல்
பயனிலாள் கணிகை நாமம் பாயிகன் காலாள் ஆமே
**227 

#14
பயோதம் என்பது சீமூதம் பாயுருவே குதம் தான்
தியாம்பதி ஆன்மா ஆகும் தியுகாரி வாயசப்பேர்
வியாபித்தல் நிறைந்திருத்தல் வியாபாதனம் கொல்லல் பேர்
வியாதானம் வாயில் வேயர் வேவுகாரர்க்கு ஆகும்மே
**228 

#15
அயானமே சுபாபமே ஐயானனனே ஈசானன்
உயாவலே உசாவல் நாமம் உயர்திணை உயர்குலப்பேர்
குயாவே தான் கன்னிகாரம் கொய்யான் என்பது முக்கூட்டு
மயூரம் என் கிளவி மஞ்ஞை வயிர் ஊதுகொம்பு ஆகும்மே
**229 

#16
மயானமே ஈமம் தான் மாயாதேவிசுதனே புத்தன்
வயானன் பாரத்துவாசம் வயினம் என்பது சகுந்தம்
கியானமே ஞானநாமம் கேயூரம் அங்கதப்பேர்
பயோததியே அம்போதி பயாபகன் அரசன் ஆமே
**230

#17
அயோசனம் பிரிவினைப் பேர் அயுதம் பத்தாயிரம் தான்
சயாபாகம் வெற்றி சாய்கை பன்னசாலைப் பேர் சாற்றும்
தயாலுவே தயாளன் தாயத்தாரே தம்குடியின்சுற்றம்
சுயோதனனே வணங்காமுடியினன் சுயோகி கள்ளே
**231

#18
நெய்யரியே பன்னாடை நெய்த்தோர் என்பது புலால்நீர்
தெய்வமந்திரி வியாழன் தேய்வை தான் வாசச்சாந்து
செய்யுளே கவிதையே செய்யாள் திருமகள் பேர் செப்பும்
எய்யாமை அறியாமைக்கு ஆம் எய்ப்பாடி வேடரூரே
** யகரவெதுகை முற்றிற்று

@13 ரகரவெதுகை
**232 

#1
அரவணிந்தோனே ஈசன் ஆரணன் வாணிகேள்வன்
இரணியம் சாதரூபம் இராவணி இந்திரசித்துக்
கரவடர் புரையோர் நாமம் கரவீரமே கவீரம்
கிருபணனே உலோபன் கீரணம் நுகர்தல் ஆமே
**233 

#2
கேரளன் வஞ்சிவேந்தன் கிருபீடபாலம் நேமி
கோரனே நீலகண்டன் குரைமுகனே சுணங்கன்
ஆரிதம் தருமநூலே ஆராதியம் சமீபம்
ஈருள் என்பதுவே ஈரல் இரசிகன் தூர்த்தன் ஆமே
**234

#3
உரிவை தோலே உரோமாஞ்சிதம் உரோமப்பொடிப்புக்
கிரிசையே மலைமடந்தை கிருதாந்தன் எருமைஊர்தி
சருவிதமே பட்சித்தல் சராகை தான் வட்டில் நாமம்
அரமியம் நிலாமுற்றப்பேர் அரிச்சனை பூசை ஆமே
**235

#4
ஆரகமே இரத்தம் அரனிடத்தவள் பவானி
காரகனே செய்வோன் ஆம் கராசலமே மாதங்கம்
ஊரனே மகிழ்நன் நாமம் ஊர்த்துவபாதம் சிம்புள்
சாரசியே சீதேவி சாருகன் கொலைசெய்வோனே
**236

#5
சிருதரமே புயங்கம் சீருணம் நாமம் செம்பு
சுரகுருவே வியாழன் சூரியை புதுமணப்பெண்
நாலுதலே ஒலித்தல் நாரணி அம்பணத்தி
பரகதி அபவருக்கம் பரசுதல் துதித்தல் ஆமே
**237

#6
பிரகடம் வெளிப்படுத்தல் பிரதனே ஈகையாளன்
அரிசனம் காஞ்சனிக்கு ஆம் அரிதகியே கடுக்காய்
எரிவனம் சுடுகாடு என்பர் ஏரண்டம் ஆமணக்கு
கிரமுகம் தானே பூக்கம் கிருபீடயோனி தீயே
**238

#7
கிரஞ்சனமே முருங்கை கிரிட்டணமே உறைத்தல்
அரிந்தமன் சங்கமேந்தி அரேசிகமே அரம்பை
இரஞ்சகம் பிரியம் நாமம் இருபிறப்பாளர் பார்ப்பார்
தரங்கிணி தானே உந்தி தாரணி பூமி ஆமே
**239

#8
கருடகேதனனே மாயன் கருமமூலம் தருப்பை
கிருதவேசப்பேர் வேய்தல் கிரிபயமே விருக்கம்
தரிசயாமினி அமாவாசைக் கங்குல் சாரகம் தேன்
பரிசிலாளர்ச் சொல் தீனர் பரிபாவம் நிந்தை ஆமே
**240

#9
கிருத்திகை கார்த்திகைக்கு ஆம் கிருதார்த்தம் பேரே பேறு
குரத்தி என்பது கோமாட்டி குரோசம் கூப்பிடுதூரப்பேர்
அரத்தன் அங்காரகன் தான் அருப்பலமே அனிச்சம்
இரத்தகமே செவ்வாடை இராத்திரம் இரசனிப் பேர்
**241 

#10
கரிதனே அச்சமுள்ளோன் காரணி மலைமடந்தை
சரதமே சத்தியம் தான் சருவசாதகமே வேங்கை
புருடவாகனனே சோமன் பூரணைகேள்வன் ஐயன்
பிரகசம் உருக்கன் நாமம் பிரகண்டம் முன்புயப்பேர்
**242

#11
பரிணாமம் வேறுபாடு பரிவீதம் அயன்சிலைக்கு ஆம்
பிரமோதமே மாராயம் பிரதிதாரணமே யுத்தம்
கரசாகை அங்குலிப் பேர் கரேணு பெண்யானை என்ப
கிருபாணமே தூவத்தி கிரிகித்தல் பற்றுதல் பேர்
**243

#12
அருணாக்கிரசன் மாலூர்தி ஆரதியே ஆலாத்தி
கருணாக்கிரசன் இரக்கமில்லான் காராவே மேதி
சுரராக்கமே பசும்பொன் சூர்ப்பகைவன் விசாகன்
புருடோத்தமன் வராகன் புரோட்சணம் தெளித்தல் ஆமே
**244

#13
சரபத்திரம் அம்புக்குப்பி சருவஞ்ஞனே அனாதி
கெருமத்தமே விகங்கம் கிரணமாலி சொல் என்றூழ்
சருவக்கியன் சர்வஞ்ஞன் சாரமேயன் சுணங்கன்
பிரகஸ்தமே விரித்ததோள் பிருதிவி பூமிப் பேர்
**245

#14
பூரியரே கீழ்மக்கள் புராரியே பூதநாதன்
சீரணனே விருத்தன் சேரலரே பொருந்தார்
சூரலனே மாறன் பேர் சுராரலரே அரக்கர்
தூரணமே விதப்பு தூரிகை எழுதுகோலே
**246

#15
செருக்களம் போர்க்களம் தான் சீர்க்காரம் எதிரொலிப் பேர்
பருப்பதமே அடுக்கல் பரோதிதம் அச்சுறுத்தல்
இரத்திரி இத்தியாமே இரற்றுதலே ஒலித்தல்
உருத்திரகணிகை தேவதாசியே உருமு செல்லே
**247

#16
மரகதனே குபேரன் மார்ச்சனமே துடைத்தல்
முருகியமே குறிஞ்சிப்பறையே மோருதல் முகத்தல்
மருவலரே பொருந்தார் மாருதமே மருத்து
விரசுதலே நெருங்கல் வீரதை வீரம் ஆமே
**248

#17
அரியயற்கரியோன் ஈசன் ஆரகோரம் கடுக்கை
கரிமுகன் ஐங்கரன் காரூகமே கருங்குரங்கு
கிரிசரம் மலைப்பிறந்தகரி கீரிபம் கழுத்துச்
சரவணபவன் கடம்பன் சாருலோசனம் மான் பேரே
**249

#18
பௌரவர் கௌரவர்க்கு ஆம் பருவகமே முழந்தாள்
சௌரிகன் மதுவிற்போனே சாரகந்தப்பேர் ஆரம்
கௌரியன் குமரிச்சேர்ப்பன் கார்த்தபத்திரமே அம்பு
சௌரிகம் அபவருக்கம் சாருகம் கொலையின் பேரே
**250 

#19
சருவதாவே எப்போழ்தும் சார்ங்கம் மாயன் கோதண்டம்
பிரதிசீனம் பேர் மேக்குப் பிரகாபணம் துரத்தல்
மருமராஞ்சம் தமாலம் ஆதியின் ஒலி மாரன் வேள்
மிருகராசன் மடங்கல் மிருதையே பிருதிவிப் பேர்
**251

#20
ஆரகேரம் கேயூரம் அரத்தி செவ்வல்லி ஆகும்
கோரவாரம் படீரம் கோரம்பரே வேழம்பர்
மாரகாகளமே காளகண்டமே மருமம் மார்பே
நாரிகேளம் தெங்கு ஆமே நரபாலன் அரசன் பேரே
**252

#21
பிரபஞ்சனன் மருத்து பிரரோகமே அலங்கல்
பரிகம்பம் என் சொல் வீமம் பரபுட்டமே பிகப்பேர்
அரியம் தடாரி ஆரலம் பகை ஆகும் என்ப
உருகம் பிறந்தவம் தான் ஒருவுதல் நீங்கல் ஆமே
**253

#22
இருவி தானே தினைத்தாள் இரணமத்தம் புழைக்கை
சரசு தானே தடாகம் சரிதரே சஞ்சரிப்போர்
பொருகு தானே புழுக்கல் பொருந்தலரே திருந்தார்
வருடல் தானே நீவற்கு ஆம் வாரிதி அளக்கர் ஆமே
**254 

#23
பிரசினம் கேள்வி ஆமே பிரமுதிதம் சந்தோஷம்
தரியலர் பகைவர் ஆமே தருமனாளே முக்கூட்டுத்
திருமரம் கணவம் ஆமே திருசியத்துவமே பார்வை
பருணிதர் புலவர் ஆமே பாரதர் கௌரவர்ப் பேர்
**255

#24
நிரஞ்சனி பார்வதிக்கு ஆம் நேரியன் கோழிவேந்தன்
சுரஞ்சனம் கந்திக்கு ஆம் சுருவையே நெய்த்துடுப்பு
இரந்திரம் குழிக்கு ஆம் இராசீவம் அம்புயப்பூ
விருந்தனை குடும்பினிக்கு ஆம் விரதயம் ஒளியின் பேரே
**256

#25
சிருதமே நன்மை சேர்ப்பன் நெய்தலின் தலைவன் செப்பும்
மரவமே ஞாழல் மார்க்கசிரமே மார்கழிமாதம் தான்
வரதையே கன்னி வாரணசி காசி நாமதேயம்
வெருவலே அஞ்சல் வேரல் வேணுவின் நாமம் ஆமே
**257 

#26
பௌராணிகம் புராணமதம் பரிசிரயம் கூட்டம்
சௌரவமே நற்கந்தம் சருப்பமே தந்தசூகம்
பௌரிகனே குபேரன் பருணயனம் விவாகம்
கௌரிசங்கம் இரட்டை அக்கமே கரபம் கோகே
**258

#27
கரும்பிள்ளையே அரிட்டம் கரிதம் அச்சப்பேர் காட்டும்
குரங்கம் என்பது சாரங்கம் குருள் ஐம்பால் என்றே கூறும்
வரன்றலே கொழித்தல் நாமம் வருட்டலே வற்புறுத்தல்
விரிஞ்சனே அன்னஊர்தி விரூபை கூற்றின்பாரிப் பேர்
**259

#28
மருத்துவான் வானோர்கோமான் மாரகம் மரணம் தானே
அரித்திராபம் பசும்பொனிறம் அரிகல்லே மேரு
பிரக்கியாதம் தெருட்சி பிரபாதிகப்பேர் மஞ்ஞை
விரத்தனே துறவி நாமம் விருதர் போர்வீரர் ஆமே
**260 

#29
கருங்கோளே இராகு காரன் காரியம்செய்வோன் என்ப
பரந்தாமனே முராரி பரபுட்டன் காமதூர்த்தன்
கருந்தாது தான் இரும்பு காரோடர் உறைகாரர்க்கு ஆம்
புரிந்தோர் என்பது விழைந்தோர் புரஞ்சனி அழிவின் பேர்
**261

#30
பொருந்தமே பொருநையாறு புருகூதன் சசிமணாளன்
விருந்தரே புதியவர்க்கு ஆம் வெருகமே வாலின்கீழ் தான்
மரந்தமே பூந்தேன் என்ப மருத்துவர்நாளே வாசி
அரந்தையே அல்லகண்டம் அரவு கட்செவியின் பேரே
**262 

#31
இருந்தையே கரி இரட்டர் எட்டியர் நாமதேயம்
உரந்தை தானே அலக்கண் உருக்குமமே அருத்தம்
பொருந்தரே வேதகாரர் பொருட்டே ஏது என்பர் மேலோர்
திருந்தலர் பகைவர் ஆமே திரப்பியம் பொருளின் பேரே
**263 

#32
மரவினையாளர் தச்சர் மார்த்தாண்டனே அருக்கன்
பிரமரமே பிருங்கம் பிரசாகிதம் கவந்தம்
அரணியமே காந்தாரம் அரிகரபுத்திரன் ஐயன்
பரிசனனே சமீரன் பரிமாணம் அளவின் பேரே
**264

#33
பிரமிதம் அறியப்பட்டதே பிருகுடியே பீரு
மரிசிதமே அகமித்தல் மருட்டமே ஆம்பிலம் தான்
வரநதி சானவிப் பேர் வருக்கை என்பது பலாசம்
இரவலர் பரிசிலாளர் இரவிநாள் இரேவதிப் பேர்
**265

#34
இரதாங்கபாணி மாயன் இரதகீலம் சுணங்கன்
சருவாந்தரியாமி ஏகன் சரிலமே கனரசம் தான்
கிரதோடையம் இயாகதோத்திரம் கிருமி கீடம்
நிருமோட்சமே வியோகம் நேரேடு நாவல் ஆமே
**266 

#35
சூரலே வேத்திரப்பேர் சூர்ப்பமே சுளகின் நாமம்
பாரியை களத்திரம் தான் பரிமா என்பது துரங்கம்
மீரமே அம்புராசி மிருகமதம் கத்தூரி
சோரமே பட்டிமைக்கு ஆம் துரகதம் குதிரை ஆமே
**267 

#36
முரதமே பாஞ்சசன்னியம் மூர்த்தினி உத்தமாங்கம்
மிரதமே ஆகணம் தான் மிருகதரன் குபேரன்
திரபமே நாண் திருட்டம் தெளிவு என உரைப்பர் நூலோர்
அரிகளே பகைவர் ஆர்த்திரகம் இஞ்சி நாமம் ஆமே
**268

#37
சீரகத்தாமரே செட்டியர் சிரேயசுவே சீர்த்தி
பாரபத்தியம் எனும் சொல் அதிகாரம் பரை உமைப் பேர்
மேருவில்லிச் சொல் ஈசன் மிருடோத்தியம் அவத்தம்
சேருகம் பெயரே பூவை செருநர் போர்வீரர் ஆமே
**269 

#38
சிரஞ்சீவியர்க்கு நீடுசீவிப்போர் சிரேசு செல்வம்
அருந்துதன் எனும் சொலே வேதனைசெய்வோன் அரட்டர் வேளிர்
கருங்கொல் என்பது கரும்பொன் காரவல்லிச் சொல் பாகல்
நிரந்தரனே அனந்தன் நிரல் ஒழுங்கு என்பர் நூலோர்
**270

#39
பரிபாகி தானே ஏற்றபக்குவன் பாரோகம் வாள்
நிரியாண திசை இறத்தல் திசை நிரேட்சணமே பார்வை
பிரகோபணம் புரத்தல் பிரசகம் இலையுணாமா
இரதாயனிச் சொல் வேசி இரசனி இராத்திரிப் பேர்
**271 

#40
சரமமே முடிவு சர்வசங்காரி உருத்திரன் பேர்
இரகமே இரவிகாந்தம் இருதிராசம் வேனிற்கு ஆம்
நிரையமே அந்தகாரம் நேராரே சத்துருக்கள்
கரவடம் நாமம் சோரம் கருக்காயும் இளங்காய் ஆமே
**272 

#41
கிரத்தமே பட்சித்தற்கு ஆம் கிரீசனே காலகாலன்
அரட்டமே படுநிலப்பேர் அரவுநாள் ஆயில் என்ப
இரட்சிதமே புரத்தல் இருஷிகேசன் வராகன்
எரிப்புறம் நரகம் ஆமே எருமை ஊர்திச் சொல் கூற்றே
**273 

#42
தரிஞ்சகம் அன்றில் என்ப தரிசித்தல் தானே காண்டல்
சிருங்கி என்பது காங்கேயம் சிரேணமே நெடுநாளின் பேர்
குரண்டம் என்பதுவே கொக்கு குரச்சையே பரிக்குளம்பு
முருங்கலே அழிதல் நாமம் மூர்க்கர் கீழ்மக்கள் ஆமே
**274

#43
மருத்து எனும் கிளவி காற்று மருதவேந்தன் வலாரி
மிருத்தியம் மண்ணே ஆகும் விரோகமே பொந்தின் நாமம்
சரப்பமே மயிர் சருக்கம் இலம்பகம் நாமம் சாற்றும்
சரித்து எனும் சொல்லே கங்கை சரிபமே செயலையின் பேர்
**275 

#44
தரக்கு சார்த்தூலம் ஆகும் தருமவாசரமே பர்வம்
திரக்கம் என்பது கடுக்கை திரக்காரம் நிந்தை என்பர்
திருப்பிரமே ஆகாரம் திரதயம் பலகால்கேட்டல்
நார்ச் சொல்லே மனிதர் பேர் ஆம் நரலை ஆர்கலி ஆகும்மே
**276 

#45
புரிசையே மதில் புரூரம் புருவத்தின் நாமதேயம்
பிருதகரணம் பகுத்தேயறிதல் ஆம் பிரஞ்ஞம் ஓதி
நிருதரே இராக்கதர்க்கு ஆம் நெருநலும் முன்னை நாள்
பரிணமித்தல்லே வேறுபடல் புராதனமும் பண்டே
**277

#46
மரூகமே கவரிமாவே மருண்மாவே வாரணம் தான்
முராரியே வாசுதேவன் முரற்றலே ஒலித்தல் என்ப
விராகம் என்பது வெறுப்பு விரதரே துறவோர் நாமம்
வராளமே மாசுணம் தான் வரிப்புறம் அணிலின் பேரே
**278 

#47
சிரோருகம் தலைமயிர்க்கு ஆம் சிரற்புள்ளே சிச்சிலிப்புள்
திராசமே பயம் திராட்சம் முந்திரிகைப் பேர் செப்பும்
துராயுதம் அநீதி தூர்க்கை பூரத்தின் நாமம் தோற்றும்
திரோகிதம் மறைவின் நாமம் திரிட்டை காணப்படல் பேர்
**279

#48
கரோருகமே நகம் தான் கருப்புவில்லி சொல் மாரன்
உரோகதி சாரமேயன் உராவலே உலாவல் என்ப
குரீஇ எனும் கிளவி புள்ளே குரணம் என் சொல் முயற்சி
பிரீதமே உவப்பின் நாமம் பிரசுரம் மிகுதி ஆமே
**280

#49
நிராகரணம் மறுத்தல் நிருபனே மண்டலீகன்
உரோருகமே குருக்கண் ஓர்கட்புள்ளே அரிட்டம்
பிராதிரு உடன்பிறந்தான் பிராறு தான் நிறைபுனற்கு ஆம்
பராசனம் ஊறுகோளே பரிக்காரம் அலங்காரப்பேர்
**281

#50
சரோருகம் திருமால் உந்தி சரலகமே கவந்தம்
மரீசிகை கானல் தானே மருத்துபாலன் சுரேசன்
உரூடமே பகாப்பதப்பேர் உரீகாரம் வாக்குத்தத்தம்
குரூரமே கொடுமை கோரராசனம் குரோட்டம் ஆமே
**282 

#51
குரோதனே அழற்கண்வந்தோன் கூர்த்தமே விளையாட்டின் பேர்
அராலை தான் வரைவின்மாதே அரம்பிலமே பாதாளம்
உரோதமே தடை உருத்திராணி பார்ப்பதியின் நாமம்
கிரீடம் என்பது முடிக்கு ஆம் கிருட்டினாசனம் மான்தோலே
**283 

#52
சுராபகை தேவகங்கை சுரோத்தமனே ஆதித்தன்
திரோபவமே மறைப்புத் தீர்க்கவத்திரமே யானை
அராதி சத்துரு அரத்தோற்பலமே செங்குவளை ஆகும்
கராசனம் சித்திரகாயம் கர்த்தபம் கழுதை ஆமே
**284 

#53
இரேபதிகொண்கன் வெள்ளை ஈரங்கோலியரே வண்ணார்
அராபதமே சாரங்கம் அரிபுதை இரவு தானே
சராசனமே கோதண்டம் சரிற்பதியே அளக்கர்
சுராகரம் நாளிகேரம் சூரதை வீரம் ஆமே
**285

#54
சீர்கேடி சிறப்பிலாதாள் சிரமை தானே இளைப்பே
ஊர்கோளே பரிவேடப்பேர் உரகாரி வைனதேயன்
ஓர்வே ஆராய்வு உரூடி இடுகுறி நாமம் ஓதும்
ஏர்பே நல் எழுச்சி காட்டுமே ஏராளம் மிகுதி ஆமே
**286 

#55
சூர்ப்பகன்னம் புழைக்கை சுருதமே சரிதம் நாட்டும்
ஆர்த்தவம் சுமனம் தான் அம் அருணவம் அம்புராசி
ஊர்த்துவகம் மேலேறல் உரோபணமே இறங்கல்
கார்த்திகம் பாகுலப்பேர் கருதலர் பகைவர் ஆமே
**287

#56
ஆர்த்திகை துன்பம் ஆரோபித்தல் தாபித்தல் என்ப
ஊர்ச்சமே பாகுலப்பேர் உரையாடல் பேசல் என்பர்
கார்த்திகேயன் கடம்பன் காருணிகம் இரக்கம்
கூர்த்திகை படைக்கலம் தான் குரங்கி சந்திரன் பேர் ஆமே
** ரகரவெதுகை முற்றிற்று

@14 லகரவெதுகை
**288

#1
ஆலு நீர்க்குடம் அலக்கண் அல்லகண்டப்பேர் செப்பும்
தாலு நாச் சாலபஞ்சி சித்திரப்பாவை சாற்றும்
மாலுதாசனனே கண்குத்திப்பாம்பு வலக்காரம் பொய்
காலகாலன் கபாலி கலையுணர் புலவன் வேளே
**289 

#2
புலிக்கொடியோனே சோழன் புலோமசை இந்திராணி
அலத்தகமே செம்பஞ்சு ஆலிங்கனம் தழுவல் ஆகும்
இலக்கினமே முகுர்த்தம் இலிகுசமே சம்பீரம்
பலுட்டம் என்பது முடித்தல் பலகறை கவடி ஆமே
**290 

#3
அவங்கலம் அசைதல் ஆமே ஆலகண்டன் மாதேவன்
சிலம்பலே ஒலி சேலோதம் சந்திரதிலகம் செப்பும்
பிலஞ்சுலோபம் சொல் தானே பிபீலிகை புலியூர் தில்லை
உலங்கு தான் அசவல் ஒல்லார் ஒன்னார் என்று ஓதும் நூலே
**291

#4
அலுவீகமே மாலூரம் ஆலகாலம் விடம் தான்
இல்லாடமே குளப்பேர் இலக்காரமே கலிங்கம்
ஞெலிகோலின் நாமம் தீக்கடைகோலே நிலமகன் சேய்
சலதாரையே கலிங்கு சலசை சீதேவி ஆமே
**292

#5
கலதி இந்திரைக்குமூத்தாள் கலன்கழிமடந்தை கைமை
வலிமுகமே குரங்கு வலைஞரே நெய்தல்மாக்கள்
திலகடமே பிண்ணாக்குத் தில்லம் என்பது காந்தாரம்
பலகணி சாளரம் தான் பல்லாண்டு வாழ்த்தின் பேரே
**293

#6
மலையமானே குடக்கோ மாலுந்திவந்தோன் வேதா
சலசமே புண்டரீகம் சலபதி புனல்வேந்தன் பேர்
எலுவனே தோழன் எல்லோன் என்றூழ் ஆக்குவயம் என்ப
கலினமே கடிவாளம் தான் காலமீரம் பளிங்கே
**294

#7
இலம்பாட்டோன் உறுகணாளன் இலிகியே எழுத்தின் நாமம்
அவன்றலே சாதலே ஆலோன் இமகிரணன் ஆகும்
கலிங்கு தான் மதகு காலேகம் கலவைச்சாந்து என்ப
அவங்கையே துளசி அல்லகண்டமும் அலந்தை ஆமே
**295

#8
பலுகமே வலிமுகம் பாலைக்கிழத்திச் சொல் துற்கை
ஞலவலே கத்தியோதம் ஞாலமே தாலவட்டம்
வலிசமே தூண்டிலே வாலுகமே வெண்மணலின் நாமம்
விலசனமே வினோதகேளி மேலவர் விண்ணோரே
**296

#9
மூலகந்தப்பேர் வெட்டிவேர் மோலி முகுடம் ஆகும்
நாலுதல் தூங்குதலே நல்குரவே நிரப்புத்
தாலிகமே விரித்தகை சலசலோசனன் மால்
மாலுகம் நிம்பமே வாலிகை மணல் என்பர் நூலோர்
**297

#10
உலகமுண்டோனே மாயன் உலண்டமே கோற்புழுப் பேர்
சலதரன் ஈசன் சாலகடங்கடர் இராக்கதர்க்கு ஆம்
திலபகம் தூபம் என்ப சிலோச்சயமே அடுக்கல்
பலசூதனன் சுரேசன் பலாகமே மஞ்சுகப்பேர்
**298

#11
கலவி தானே புணர்ச்சி கலையானத்திச் சொல் துற்கை
குலிஞனே குலமுளோன் ஆம் குலாலனே கும்பகாரன்
சலதமே முகில் சலாங்கு பொய்யாப்புள் நாமம் சாற்றும்
கலுழன் ஆகாசனன் தான் கலைஞர் பண்டிதர் பேர் ஆமே
**299 

#12
அலிகமே இலலாடம் தான் அலலியமே கலப்பை
சலபிதம் சொல்லலே சாலிகை கவசப்பேர் சாற்றும்
குலுமி பாசறையே கூலவதி குடிஞைப் பேர் கூறும்
விலைமகள் தானே வேசி மிலைச்சலும் அணிதல் ஆமே
**300

#13
சலபமே விட்டில் சால மிகுதியின் பொருள் தரிக்கும்
கலமர் வந்தித்துநிற்போர் கல்லாலமே இரத்தி
சலநிதி அம்புராசி சாலரே நெய்தல்மாக்கள்
இலபித்தம் பேறு இலம்போதரன் ஏகதந்தன் ஆம்
**301

#14
துலக்கல் என்பது விளக்கல் துலாதரனே ஆதித்தன்
சிலுத்தம் என்பது மணிக்கட்டே கிலீபம் பேடு என்ப
இலச்சினை நாமமே முத்திரை யாழி இலேகர் வானோர்
சிலுட்டமே நிறைதல் ஆமே கீலகை கீழின் பேரே
**302

#15
ஞாலல் தூங்குதல் நல்கூர்ந்தோன் இலம்பாட்டோன் நாமதேயம்
மால்பு கண்ணேணி மல்லநாகம் இந்திரன் மாதங்கம்
வாலிசம் தலையணைக்கு ஆம் வலாகை என்பது குரண்டம்
நீலகண்டம் மயூரம் நீலவசனன் சனிப் பேர்
**303 

#16
கலாசி முன்கையின் நாமம் கலாவதியே குபேரன்
உலோசனம் அக்கமே ஆலோகனம் பார்வை ஓதும்
பலாலம் என் கிளவி வைக்கோல் பாலிசின்னப்பேர் பீலி
பிலோடமே சுடுதல் என்ப புவானீர் புண்ணீரின் பேரே
**304

#17
நிலாமுகியே சகோரம் நிலாமணி சந்திரகாந்தம்
மலாவகமே பிண்ணாக்கு வலாரியே சசிமணாளன்
புலோமசித்தே சுரேசன் புல்லியரே கீழ்மக்கள்
இவாலியே துதி இலீகை ஈர் என இயம்பும் நூலே
**305 

#18
குலீனனே குலமுளோன் கோலாங்கூலம் முசுவின் கூற்றே
இலேபிதம் தடவல் என்பர் எலுநனே கோழிவேந்தன்
உலூதையே சிலந்தி தான் உல்லோலம் பேர் ஆழிவாரம்
சுலோகியே சொல்விளம்பி துல்லிபம் மேன்மை ஆமே
**306

#19
மாலூர்தி வைனதேயன் மலரவன் அன்னஊர்தி
வாலேபமே இராடம் வாலுவர் பாசகர்க்கு ஆம்
காலேகவண்ணம் நாமம் கலவையே கலர் கீழ்மக்கள்
கேலாசமே பளிங்கு கிலுசிதம் வறுமை ஆமே
**307

#20
காலாயுதச்சொல் கோழி கலாநிதி குமுதநண்பன்
மாலூரம் என் சொலே கூவிளை மலைமகளே மாதா
வாலூகம் என் சொல் நஞ்சு மலையக்காலே வசந்தன்
தாலாலம் என் சொல் தானே பழிமொழி சலனன் காற்றே
**308

#21
உல்வியர் கூவநூலோர் உல்லோசமே மேற்கட்டி
கல்லகமே அடுக்கல் கலையினனே மானேந்தி
சல்லபமே முட்பன்றி சலியாமை அசையாமைக்கு ஆம்
பல்லகமே பல்லூகம் பலிபுட்டம் காகம் ஆமே
**309

#22
துல்லமே பேரொலிக்கு ஆம் சொல்விளம்பிச் சொல் கள்ளே
உல்லரியே தளிர்க்கு ஆம் உலூகலக் கிளவி திட்டை
இல்லவள் குடும்பினிக்கு ஆம் இலகடம் பலகாரம் தான்
வல்லுநரே வல்லோர்க்கு ஆம் வல்விலங்கு யானை ஆமே
**310

#23
உல்லியம் கூபம் உல்லகசனம் மயிர்ப்பொடிப்புச்
சல்லகண்டம் கபோதம் சலதளம் அச்சுவத்தம்
வில்லவன் கொல்லி வெற்பன் வேலிறையே விசாகன்
வல்லகி வீணை நாமம் மாலியம் மானம் ஆமே
** லகரவெதுகை முற்றிற்று

@15 வகரவெதுகை
**311

#1
அவனியின் நாமம் பூமி ஆவிரம் இடையரூரே
கவின் அழகே கவைத்தாள் கர்க்கடகப் பேர் காட்டும்
சவனனே வேகி சவ்வியசாசி என்பது கிரீடி
பவன் அரனே பவானி பார்ப்பதி நாமம் தானே
**312

#2
உவணன் என்பது மாலூர்தி உவளித்தல் தூயதாக்கல்
சுவணம் என்பது காங்கேயம் சூவானம் அடுக்களை ஆம்
பவணை என்பது சகுந்தம் பாவனத்துவனி சங்கு
மவுனம் என்பது மோனம் தான் மாவுரம் வலியின் பேரே
**313

#3
விவகாசமே சிரிப்பு விவசுதனே அருக்கன்
அவதாதமே சுவேதம் அவுணர் தானவரே ஆகும்
சிவகாமியே பவானி சீவகரே பௌத்தர்
பவனாசனம் வியாளம் பவி இடியேற்றின் பேரே
**314

#4
தேவரனே கொழுந்தன் தீவிகையே விளக்கு
நாவிதனே ஏனாதி நவநீதகம் சொறுப்பே
ஆவிடை சத்திரூபம் அவகதி அறிவே என்ப
கோவணமே கெளபீனம் கோவலர் இடையர் ஆமே
**315

#5
சிவதமே இருக்குவேதம் சேவையூர் புலியூர் என்ப
துவிபமே வல்விலங்கு தூவத்தி தானே கட்கம்
சவிகை என்பது சதுக்கம் சவுண்டிகர் மதுவிற்போர் ஆம்
கவிதை பாவே கவீரம் கணவீர நாமம் ஆமே
**316

#6
யவகாரி கிருட்டிணன் தான் அவளிகை இடுதிரைக்கு ஆம்
அவகேசி பலம் இலாத அகலியம் அவாசி தெற்குச்
சவிதாவின் நாமம் பானு தைவரல் தடவல் ஆகும்
புவியே தராதலப்பேர் புவனியும் அப்பொருட்டே
**317 

#7
இவுளி தானே துரங்கம் இவண் என்பது இவ்விடம் பேர்
உவணி தானே தூலத்தி யுவதி ஈரெட்டாண்டின்பெண்
துவனை தானே தொனித்தல் துவட்டர் கம்மாளர் நாமம்
அவையல் தானே திரட்சி அவாந்திரை வெறுமை ஆமே
**318

#8
உவணகேதன்னே மாயோன் உவளல் தான் துவளல் என்ப
கவயமாக் கிளவி காட்டுஆ காவதம் நாமம் காதம்
சுவலை தான் அச்சுவத்தம் சுவேதவாகனன் கிரீடி
துவயமே இரண்டு துவ்வார் துயருறுவோர் பேர் ஆமே
**319

#9
தேவகமே தேவீகம் சிவகன்மசன் சேய் என்ப
சீவனியப்பேரே நீர் தேவகுலப்பேர் கோட்டம்
பாவசமே காமம் தான் பவர்க்கமே அந்தகாரம்
கூவியர் வாலுவர்க்கு ஆம் கூவிளி அழைப்பின் பேரே
**320

#10
கோவரே முல்லைமாக்கள் கூவிரி இரதம் என்பர்
ஓவனே சித்திரகாரன் உவதையே மலைவீழாறு
தேவசேனாபதிச் சொல் செவ்வேளே குவிரம் தில்லம்
வீவு தானே இறப்பு விவிதம் பல்விதம் ஆகும்மே
**321

#11
உவராகம் கிரகணப்போழ்து ஓவியம் சித்திரப்பேர்
அவதூதம் நாமம் தானே முழுத்துறவு அவிடி ஏமம்
உவமேயம் உவமிக்கத்தான்படுபொருள் நிவப்பு உயர்ச்சி
துவைமாதுரன் கணேசன் துவிரம் தேனீயின் பேர்
**322

#12
கவடியே பலகறைப் பேர் கவுஞ்சம் என் கிளவி அன்றில்
இவவு தான் இழிவு உவச்சர் யவனரின் நாமம் தோற்றும்
கவிர் எனும் கிளவி பிசுகம் காவற்கடவுள் விண்டு
நுவலல் என்பது சொல்லற்கு ஆம் நூவின் பேர் திலம் அது ஆமே
**323

#13
அவிமுத்தம் காசியே ஆவேட்டனம் சுற்றுதற்கு ஆம்
கவைதல் சொல் மூடலே ஒளவியம் அழுக்காறு என்று ஓதும்
சுவசந்தம் சித்திரைப்பூரணை துவர்க்காய் பாக்கு என்பர்
அவகுஞ்சனம் குலாவல் குவம் ஆம்பல் நாமம் ஆமே
**324

#14
அவத்திரியம் ஆபத்து ஆவநாளிப் பேர் தூணி
உவத்தல் தானே களித்தல் உவாலம்பனம் நிந்திப்பே
துவத்தமே விழுதல் என்ப துவிசபதி சொல் ஆலோன்
அவக்கிராகம் சபிப்பே அவமிருத்துத் துற்சாவே
**325

#15
சுவா எனும் கிளவி ஞானி சுவதந்திரம் சுதந்திரம்
திவாமணி சித்திரபானு கவழிகை திரைச்சீலைக்கு ஆம்
நிவாகமே இடம் அவத்தியம் பாவ நாமம் நேரும்
துவா எனும் சொல் இரண்டு துவசர் கள்விற்போர் ஆமே
**326

#16
ஆவாசம் இல்லம் ஆவணியம் அங்காடி வீதி
மோவாய் தாடி வாவி குளம் என மொழிப நூலோர்
ஆவீதமே பூணூல் ஆவேசிகன் அதிதி ஆகும்
பாவாணர் புலவரே மேவலர் நாமம் பகைவர் ஆமே
**327

#17
சுவாகதம் நாமம் தத்தை சுவாது தித்திப்பின் நாமம்
நிவாசமே இருப்பிடப்பேர் நிவருணம் தானே பார்த்தல்
கவான் எனும் கிளவி ஊரு காவணம் பந்தர் என்ப
சிவாருகம் நியக்குரோதம் செவ்வழி நெய்தல்பண்ணே
**328

#18
ஐவிரல் அத்தம்நாளே ஐவனம் மலையின்நெல்லுத்
தெவ்வினை போரே தெவ்வர் சேரலர் நாமம் செப்பும்
யௌவனதசை தானே வாலிபம் அவண் அவ்விடப்பேர்
செவ்வேளின் நாமம் செட்டி திவாப் பகல் என்பர் மேலோர்
** வகரவெதுகை முற்றிற்று

@16 ழகரவெதுகை
**329

#1
உழத்தியர் மருதப்பெண்கள் உழிஞை தான் சிறுபூழைப் பேர்
சுழுத்தியே ஓரவத்தை சூழாமை ஆராய்வின்மை
பழிச்சல் என்பது துதித்தல் பழுவமே ககனநாமம்
மழித்தல் முண்டிதமாக்கற்கு ஆம் மாழாத்தல் மயங்கல் ஆமே
**330

#2
செழியனே வேம்பின்தாரோன் செழுமறை தான் நெருப்பே
அழனமே பிணம் அழுப்பே அயினியின் நாமதேயம்
குழகமே அழகு கோழிவேந்தன் ஆம் குவயம்கிள்ளி
வழியுரைப்போரே தூதர் வழை சுரபுன்னைப் பேரே
**331

#3
கழுதைவாகனி மூதேவி காழியர்கோன் சம்பந்தன்
சுழிமுனை தான் ஓர்நாடி தொழும்பரே தாசர் என்ப
மழலை என்பது நிரம்பாமென்சொலே மழமே கொம்மை
விழைதல் ஆசைப்பெருக்கம் வீழ்கதி நரகம் ஆமே
**332

#4
அழலாடி அரவணிந்தோன் அழலேந்தி தானும் அப்பேர்
உழுநரே மருதமாக்கள் உழவுகோல் முட்கோல் ஆகும்
அழிதூஉவே அலியின் நாமம் அழுப்புகம் தேவலோகம்
சுழுனையே சுழிமுனைக்கு ஆம் தொழுத்தையும் துட்டை ஆமே
**333

#5
கெழுதகைமை சொல் தானே உரிமையே கேழல் பன்றி
எழுவாய் என்பதுவே ஆதி எழுதாக்கேள்விப் பேர் வேதம்
பிழியரே துவசர் நாமம் பீழித்தல் வருத்துதற்கு ஆம்
குழுவல் என்பதுவே கூடல் குழகு அழகு என்பர் மேலோ
**334

#6
ஒழிபு எனும் கிளவி எச்சம் ஊழமே வைகறைக்கு ஆம்
குழவு தான் இளமை கோழைவிந்து எனும் கிளவி குல்லை
வழுதி பாண்டியனே வாழ்க்கைத்துணை மனைவிக்கு வாய்க்கும்
மொழிதலே சொல்லல் மோழல் கிடி என மொழிவர் அன்றே
**335

#7
கழங்கம் என்பது சூதாடுகருவி ஆம் கழுத்தலே பொய்
கொழுந்தனே தற்கொண்டான்சகோதரன் பீழை துன்பம் 
தழங்கலே ஒலித்தல் நாமம் தாழக்கோல் திறவுகோலே
அழன் பிணம் என்பர் மேலோர் அழிதலும் கெடுதல் ஆமே
**336

#8
இழிஞர் சண்டாளர் நாமம் எய்தும் பேழ் பெருமை என்ப
கெழுவலே நிறைதல் தான் போழ்முகம் எனும் கிளவி கேழல்
நுழைவாயில் சிறுவாயிற்கு ஆம் நூழிலாட்டுதலே கொல்லல்
முழுமகன் மூடன் பேரே மிழற்றுதல் மொழிதல் ஆமே
**337

#9
வழாறு தான் நிறைபுனல் பேர் வழித்தோன்றல் எனும் சொல் மைந்தன்
பிழார் இறைகூடை போழ்தல் பிளத்தலின் நாமம் காட்டும்
குழாம் எனும் கிளவி கூட்டம் கொழுவின் பேர் கொழுகொம்பு என்ப
வழுவையே வாரணம் யாழ்வல்லோர் கந்தருவர் ஆமே
** ழகரவெதுகை முற்றிற்று

@17 ளகரவெதுகை
**338

#1
ஆளகம் சுரையின் நாமம் அளவல் தானே கலத்தல்
தூளனம் நாமம் தூளே சூளியே ஆண்மயிர்ப் பேர்
காளிமமே கறுப்புக் களரவம் புறாவின்நாமம்
வேளிர் என்பது புரோசர் விளையுளும் வயலின் பேரே
**339

#2
உளியம் என்பது பல்லூகம் உள்ளுதல் நினைத்தல்
தளவமே முல்லை வல்லி தளைத்தல் தானே பிணித்தல்
நளினையே தாக்கணங்கு நாளிகேரப்பேர் தெங்கு
புளிஞர் என்பது கிராதர் புள்ளுவம் வஞ்சம் ஆமே
**340

#3
வெளிறரே அறிவிலார் பேர் வெள்ளைமெய்யாளே வாணி
வளவனே கிள்ளி வள்ளியோர் வரையாமல் ஈவோர்
களதமே மூடிகம் காளாமுகர் சைவர் நாமம்
விளைஞரே மருதமாக்கள் விளித்தலும் அழைத்தல் ஆமே
**341

#4
களிமமே எலியே காளகண்டனே பேயோடாடி
கிளவியே சொல்லே கீளல் கிளித்தலின் நாமம் காட்டும்
புளிதமே ஊனின் நாமம் புள்ளரசே மாலூர்தி
குளகனே கார்த்திகேயன் கொளை இசைப்பாட்டின்பேரே
**342

#5
அளகையாளிச் சொல் சோமன் அளத்தி என்பது நெய்தல்பெண்
கள கண்டம் பரபுட்டம்மே காளன் என்பது மாகாளன்
தளவு எனும் கிளவி முல்லை தாளகம் அரிதாரப்பேர்
ஒளியோனே கிரணமாலி ஒள்ளியர் அறிவுள்ளோரே
**343

#6
காளிகம் காரே காளிங்கமர்த்தனன் கமலக்கண்ணன்
கோளகன் கைமை பெற்றபிள்ளையே குளீரம் ஞெண்டு
காளகண்டம் குயில் பேர் களதபுதம் வெள்ளிக்கு ஆம்
சாளிகம் சரகம் கள்ளை மட்கலம்சுடுசூளைப் பேர
**344 

#7
உள்கலே நினைத்தல் உள்ளமிகுதியே ஊக்கம் ஆகும்
எள்கலே இகழ்தல் எள்ள எனும் சொல் ஒருவமைச்சொல்
நள்ளுநர் உறவோர் ஞாளியூர்தி கேத்திரபாலற்கு ஆம்
நள்ளார் நண்ணார் காளகூடமும் நஞ்சின் பேரே
**345

#8
மள்ளலே வலியே வாளா வீண் எனும் பொருள் வகுக்கும்
அள்ளை தானே பிசாசம் அளவளாவல் பேர் தோய்தல்
கிள்ளியே நேரிவெற்பன் கேளார் என்பது பொருந்தார்
மொள்ளல் என் சொல் முகத்தன் மூளிவாய் பெட்டி ஆமே
** ளகரவெதுகை முற்றிற்று

@18 றகரவெதுகை
**346

#1
அறுதொழிலோரே பார்ப்பார் அறைபோதல் கீழறுத்தல்
இறவுளர் குறிஞ்சிமாக்கள் ஈறிலியே அனந்தன்
குறுமுனி கும்பயோனி கூற்றுவன் தென்திசைக்கோன்
மறிதரல் தான் மீளல் மாறுகோள் விரோதம் ஆமே
**347

#2
கறங்குதல் சுழலல் கற்றா இளங்கன்றுப்பசுவைக் காட்டும்
குறங்கு தான் தொடை குறும்பூழ் காடையின் நாமம் கூறும்
எறும்பி என்பது மாதங்கமே ஏற்போரே பரிசிலாளர்
பறம்பர் தோல்வினைஞர் என்ப பற்றற்றார் முனிவர் ஆமே
**348

#3
செறுநர் என்பது திருந்தார் சிறுவிதி தக்கன் நாமம்
தொறுவரே முல்லைமாக்கள் துறைவன் முந்நீர்ச்சேர்ப்பன்
பொறியிலாரே கீழ்மக்கள் புறத்தவன் அறத்தைக்காப்போன்
அறவை தானே அனாதம் அறுகுணன் கடவுள் ஆமே
**349

#4
இறுக்கரே பாலைமாக்கள் இறடியே கருந்தினைப் பேர்
உறக்கம் என் சொல் அனந்தல் உற்குரோசமே உன்னம்
பிறப்பிலி பினாகபாணி புற்கை கூழ் நாமம் பேசும்
அறத்தளி தானே அந்தர்ப்புரம் அறுகால் வண்டு ஆமே
**350

#5
சறுதாகம் நாமம் வேங்கை சாற்றுதல் தானே சொல்லல்
திறலோனே திண்ணியன் பேர் திறனில்யாழ் நெய்தல்யாழே
இறையோனே எண்குணன் பேர் இறவுள் என்பது குறிஞ்சி
கறையடியே மாதங்கம் கற்பிதம் நியமம் ஆமே
**351

#6
அறிதுயிலமர்ந்தமூர்த்தி அரி அறச்செல்வி தேவி
சிறுவிதிமகஞ்சிதைத்தோன் உக்கிரன் சிறுசெய் பாத்தி
தொறுவி தானே இடைச்சி துறவர் ஐம்புலனை வென்றோர்
அறிவனாள் பிற்கொழுங்கோல் அறப்புறம் அறச்சாலை
**352

#7
தேறலர் பகைவர் நற்றாய் பெற்றதாய் நாமம் செப்பும்
நீறணிந்தோனே ஈசன் புற்புதம் மொக்குள் நேரும்
நூறலின் நாமம் தானே அழித்தல் செற்றவரே நோனார்
சீறூர் என்பதுவே வேடரூர் சொற்றல் செப்பல் ஆமே
**353

#8
உறுப்படக்கிச் சொல் ஆமை உற்கண்டிதம் துக்கித்தல்
அறத்தின்மைந்தனே குந்திபுதல்வன் வெற்பு அசலம் ஆகும்
மிறைக்கவி தானே சித்திரகவியே முற்சனியே வேள்வி
அறத்தைக்காப்போனே ஐயன் ஆறலை வழிப்பறிப்பே
**354

#9
சிறார் எனும் கிளவி மக்கட்பன்மையே சிறுவி புத்திரி
ஞறா மயில்குரல் ஞாற்சி தூங்குதல் நாமம் ஆகும்
சிறீபதி பதுமநாபன் சிறங்கணிப்பு குறைக்கு ஆம்
சிறீகண்டன் ஈமத்தாடி சிறிவில் அகிலின் பேரே
**355

#10
ஒற்றையாழித்தேரோனே ஒளியே உற்கிருஷ்டம் மேன்மை
தற்சனி தானே சுட்டுவிரல் காற்றின் சகாயன் தேயு
புற்கலமே குரம்பை புறங்காடு சுடுகாடு என்பர்
உற்பதனம் உற்பத்தி உறுவரும் முனிவர் ஆமே
**356

#11
வீற்றமே வேறுபாடு வேறல் வெல்லுதலின் பேரே
மாற்றலரே முனைந்தோர் மறத்தியர் பாலைப்பெண்கள்
ஆற்றுக்காலாட்டியர் பேர் உழத்தி ஆறுமீன் ஆரல்
கூற்றுதைத்தோனே ஈசன் குறைகோளும் இரத்தல் ஆமே
**357

#12
பிற்றையே பின்னைநாளே பிறந்தவமே பிறப்புப்
பெற்றியே தன்மை என்ப பிறைசூடி வாமதேவன்
வெற்பன் மலையன் நாமம் வெறுநுகம் சோதிநாளே
உற்கணநாமம் தட்டை ஊறுகோள் கொலையின் பேரே
**358

#13
முற்குளமே பூராடம் முறையிலோரே கனிட்டர்
உற்றபண்புரைப்போர் தூதர் ஊற்றுக்கோல் ஊன்றுகோலே
கிற்றல் கட்டுப்படுத்தல் கெற்பு தத்துவமே என்ப
கொற்றவை வீரச்செல்வி கொற்றவன் அரசன் ஆமே
**359

#14
வற்சரம் வருடமே வாற்சல்லியமே உருக்கம்
உற்கிரமணமே போதல் உற்பிராசனமே நிந்தை
அற்புதரே கம்மாளர் அறன்கடை தானே பாவம்
கொற்கைவேந்தன் கூடல்கோமான் கோறல் கொல்லல் ஆமே
**360

#15
இற்புலியே மார்ச்சாலம் ஏற்றுவாகனனே ஈசன்
அற்புதனே அனாதி அறைகூவல் பொரவழைத்தல்
கற்புரமே அருத்தம் காற்குளம் குருவினாளே
பற்குனனே கிரீடி பற்றலர் பகைவர் ஆமே
** றகரவெதுகை முற்றிற்று

@19 னகரவெதுகை
**361

#1
தானவர் திதியின்மைந்தர் தனபதி அளகையாளி
கானனமே காந்தாரம் கனோபலம் ஆலங்கட்டி
சானவி பகீரதிக்கு ஆம் சன்னத்தம் போர்க்காயத்தம்
மானதவாவி வேதாவாவி மானினி பெண் ஆமே
**362

#2
புனவரே குறிஞ்சிமாக்கள் பொன்னகர்க்கிறைவன் போகி
பனவரே வேள்வியாளர் பனிக்கதிர் உடுவின்வேந்தன்
அனுசனே இளையோன் அன்னப்பிராசனம் அன்னமூட்டல்
கனகமே சாதரூபம் கனருசி மின்னல் ஆமே
**363

#3
பனிப்பகை அண்டயோனி பனுவலாட்டிச் சொல் வாணி
மனைக்கிழத்திப் பேர் பாரி மனோசவமே விவேகம்
அனுத்தமே பொய் ஆன்வல்லோர் இடையர் ஆக்குவயம் ஆகும்
இனைத்தல் தானே ஒலித்தல் இன்னாதார் பகைவர் ஆமே
**364

#4
கானகம் நாமம் காண்டம் கனவிரதம் பானீயம்
வானரமே குரங்கு வனமாலி வாசுதேவன்
தேனுகமே பெண்யானை சினகரம் நிகேதனம் தான்
சானகமே துரோணம் சான்றவர் அறிஞர் ஆமே
**365

#5
கனரசமே கவந்தம் கான்மரம் நியக்குரோதம்
அனுவழி பண்டிதன் தான் அனுகம் செஞ்சந்தனப்பேர்
சனபதமே படப்பை சன்மானம் உபசாரம் தான்
தனிதம் என்பது முழக்கம் தனிநிலை ஆய்தம் ஆமே
**366

#6
மனனம் சிந்தித்தலே மன்பதையே மக்கட்பரப்பு
புனர்தம் பிண்டிக்கு நேரும் புனைவர் கண்வினைஞர் தானே
வனசம் பங்கயமே வானவரம்பன் மலையமானே
அனுகன் கண்டன் பேர் அன்னக்கொடியோனும் அயன் ஆகும்மே
**367

#7
வினையுரைப்போரே தூதர் வென் முதுகு என்பர் மேலோர்
அனுநயமே விருந்தோம்பல் பெயர் அனுசை தங்கை
முனைமுகம் போர்முகம் தான் முனைந்தோர் மாற்றலர் பேர் ஆகும்
அனுமிதி அனுமானம்மே அனுலேபம் அபிடேகப்பேர்
**368

#8
சூனர் ஊன்விற்போர் சொன்னகாரர் தட்டார் பேர் சொல்லும்
பேனவாகிச் சொல் ஏறு பினாகபாணிச் சொல் ஈசன்
மானசோத்திரமே கூற்றுவன்புரம் மனோசனே வேள்
சேனமே கங்கமே சென்னியரே வந்தித்துநிற்போர்
**369 

#9
அனலேறு தான் மடங்கல் அனவியே கிரணமாலி
புனராகமனம் திரும்பிவருதல் ஒன்னார் பொருந்தார்
அனுபூதி பிரமாணத்தால்அறியறிவு அனந்தல் பள்ளி
கனகாசலம் சொல் மேரு கான்றல் கக்கல் பேர் ஆமே
**370

#10
கனிட்டன் பின்னோன் கானீனன் கன்னிதான்பெற்றபிள்ளை
சனிப்பே உற்பத்தி சான்று சாட்சி ஆக்குவயம் என்ப
புனிற்றாவே இளங்கன்றுப்பசு நாமம் புனாகம் பின்பு
வனப்பே நல் அழகு வன்கண் வைரம் என்று உரைப்பர் நூலோர்
**371

#11
அனஞ்சனமே ஆகாயம் அனன்னியசன் மனோபு
மனங்கல் தானே ஒடுங்கல் மானிடமேந்தி ஈசன்
அனந்தசயனன் கோவிந்தன் அனுசிந்தை தியானித்தல் ஆம்
சினம் குரோதம் சினத்தல் செயிர்த்தலின் நாமம் ஆமே
**372

#12
மேனை வெற்பரசன்தேவி மென்பால் மருதநாமம்
மீனவன் வேம்பின்தாரோன் வினைமுதலே கருத்தா
மானனம் சங்கையே மானிதம் மானம் ஆகும் என்ப
பேனமே நுரையே பேனாசனி புருகூதன் பேரே
**373

#13
அனவரதம் எப்போழ்தும் அனுயோசனப்பேர் கேள்வி
தனையை புத்திரியே ஞானவல்லி சங்கரி பேர் சாற்றும்
புனைவிலி தானே ஒப்புப்பொருளே உன்னவர் பொருந்தார்
தனையனே மகன் சுனாசீரன் புரந்தரன் ஆகும்மே
**374

#14
புனைவுளி தான் வன்னிக்கப்படுபொருள் தனுசன் புத்திரன்
மனையறம் இல்லறப்பேர் வைனதேயன் மாலூர்தி
அனுதமம் சிரேட்டமானது அனுசாதன் நாமம் தம்பி
அனிலசகன் தீ ஆமே அனுபஸ்தி இன்மை ஆமே
**375

#15
அனுகம்பை தான் உருக்கம் ஆனந்தவல்லி தேவி
புனருத்தநாமம் கூறியதுகூறல் ஒன்றார் புல்லார்
வனிதம் சிறப்பு யானைமுகன் ஈசன்மைந்தன் ஆகும்
அனகன் சுயம்பு குன்றம் அசலம் என்று அறையல் ஆமே
**376

#16
அனாவிலன் அசுரமந்திரி ஆனனம் வதனம் ஆகும்
மனாகை பெண்யானை என்ப மனாவு அரைப்பட்டிகைக்கு ஆம்
வனீகனே பரிசிலாளன் வனச்சார்பு என்பதுவே முல்லை
வனாகி தான் முயலின் நாமம் வனதீபம் சண்பகப்பேர்
**377

#17
சன்மினி காளியேவல்செய்மகள் தன்கு உவப்பு
சின்னயோகம் குறிக்கு ஆம் சினவல் தானே செயிர்த்தல்
கின்னரர்பிரான் குபேரன் கீன்றல் என்பது கிழித்தல்
சன்மகீலன் முராரி சன்மலி இலவின் பேரே
**378

#18
சன்மனமே உற்பத்தி சனார்த்தனன் பதுமநாபன்
உன்னயம் உயர்வு தானே உன்னாமம் உயர்த்துதற்கு ஆம்
ஒன்னலரே திருந்தார் உன்மந்தம் ஊறுகோளே
அன்மயமே சந்தேகம் அனூனம் முழுமை ஆமே
**379

#19
வன்மீனே சிஞ்சுமாரம் மான்தலை திங்கள்நாளே
வின்னூலாளன் துரோணாசாரியன் வேனில் கோடை
வன்னிமித்திரன் கால் வானோர்கோமானே வலாரி ஆகும்
இன்னாது தீது தானே ஈனனம் வெள்ளி ஆமே
**380

#20
வன்மீகம் நாமம் புற்று வானவர் அதிதிமைந்தர்
புன்னாகநாமம் புன்னை பொன்செய்கொல்லர் சொல் தட்டார்
மன்னாரின் நாமம் செற்றார் மனோபவன் வேனிலாளி
பன்னாசநாமம் குல்லை பனிமலை இமயம் ஆமே
**381

#21
நான் மருப்புயானை தான் ஐராவதம் நன்னர் நன்மை
மான்மதமே கத்தூரி மனோசனே சம்பராரி
போனகமே புழுக்கல் புனல்நாடன் நேரிவெற்பன்
மான்மியம் மகிமை என்ப மானமா கவரிமாவே
**382 

#22
குன்றெறிந்தோனே செவ்வேள் கொன்றைசூடிச் சொல் ஈசன்
மன்றகம் சபை மனோபு மன்மதன் நாமதேயம்
மன்றுளாடிச் சொல் தானே மாதேவன் மானார் ஒன்னார்
தென்றல்தேரோனே மாரன் தென்மலை பொதியம் ஆமே
**383

#23
நென்னலே நெருநல் என்ப தென்கலை தமிழ்நூல் நேரும்
பொன்னி காவேரி பொன்னித்துறைவனே புனல்நாடன் பேர்
சொன்னமே ஏகாகாரம் சுனகன் என்பது சுணங்கன்
கன்னியாக்கிரணம் மன்றல் கனிட்டமே கடைவிரல் பேர்
**384

#24
கள்ளிகாரப்பேர் கோங்கு கன்னுவர் கஞ்சகாரர்
சன்னிதானம் சமூகம் சானசியே அருத்தம்
பன்னகாசனன் மாலூர்தி பான்மையின் நாமம் தன்மை
பின்னைகேள்வன் வராகன் பின்னவன் அனுசன் ஆமே
**385 

#25
தென்னவன் குமரிச்சேர்ப்பன் தினகரனே மார்த்தாண்டன்
பின்னவரே சதுர்த்தர் பின்பிறந்தாளே தங்கை
பொன்னகர் தேவலோகம் பொன்வினைமாக்கள் தட்டார்
மன்னவர் மண்டலீகர் மனக்கோட்டம் அழுக்காறு ஆமே
**386 

#26
முன்றில் என்பதுவே முற்றம் முனைப்பதி பாடிவீடு
வென்றியே வெல்வி வேனிலாளியே வேழவில்லி
துன்றல் தானே நெருங்கல் துன்னலரே பொருந்தார்
தொன்று தான் பழைமை நாமம் தொன்மரம் கோளி ஆமே
** னகரவெதுகை முற்றிற்று
** சிந்தாமணி நிகண்டு முற்றிற்று
** இஃது இயற்றமிழ்ப்போதகாசிரியராகிய
** புதுவைக் குமாரவேல்முதலியாரவர்கள் இயற்றிய
** நேரிசை வெண்பா
**387

#27
உலக இருள் நீக்கு ஒளிர் விண்மணியாய்ப்
புலவர் மனக் கண்மணியாய்ப் போந்தே நிலவியதால்
வல்வைநகர் வாழும் வயித்தியலிங்கப் புலவன்
நல்கிய சிந்தாமணி நூல் நன்கு
**
** சிந்தாமணி நிகண்டு
** ச.வயித்தியலிங்கரவர்கள் இயற்றியது

@1 காப்பு / சிறப்புப்பாயிரம்
** காப்பு
**1

#1
சீர்செறி செஞ்சடைக்கட் டிகழ்மதிப் பிளவுதாங்கும்
ஏர்செறி கரிமுகன்ற னிணைமல ரடியையேத்தி
நேர்செறி யிளைஞரோர்சொற் கொருபொரு ணேராயோரப்
பார்செறி நிகண்டுசிந்தா மணியெனப் பகர்வனொன்றே
**2

#2
மன்னிய நிகண்டுசூடா மணியினிற் பதினொன்றாகத்
துன்னிய தொகுதிபோலச் சொற்களை யெதுகைகோத்து
முன்னிய வடிகடோறு முதலிரு பொருளடக்கிப்
பன்னிய புகுந்தேன்யானும் பயனெண்ணிப் பழித்திடாரே
** சிறப்புப்பாயிரம்
**3

#3
சுத்தசட்குணங்களானசுந்தரமுகமோராறுங்
கைத்தொகைகளுமுந்நான்கு கண்களுங்கொண்டுநின்ற
நித்தியனநகனீசனிராமயனிமலனெம்மான்
றத்துவா தீதமுன்னோன் சகலலோகைகநாதன்
**4

#4
குறுமுனியினிதுதேர்ந்துகொளவறிவுறுத்திவைத்த
மறுவறுதிராவிடத்தில்வயங்கியற்கெழீஇயமேன்மை
பெறுநிகண்டறிஞர்பல்லோர் பேசினரவற்றுளெங்குஞ்
செறிவுறவளர்ந்ததன் றம்மசெய்யமண்டலவனூலே
**5

#5
ஒருமொழியருத்தம்பல்வேறுணர்த்திடுந்தொகுதியாங்கு
மருவுறவிரிந்ததென்னமற்றஃதருத்தமொன்று
தருமியலிலா தவாற்றிற்றகும் பொருளாய்வான்புக்குப்
பெரிதிடர்ப்படுமாணாக்கர் பேதுறவொழிக்கவுன்னா
**6

#6
வழிவழியாய செல்வவளமறைக்காடநாமப்
பழிதவிர்மகீந்திரன்றன்பௌத்திரனாகிவந்தோன்
ஒழிவறுகுணத்தினானிவ்வுலகெலா மடிப்படுத்த
விழுமியபுகழ்வேற்பிள்ளைமெய்த்தவத் துதித்தநீரான்
**7

#7
ஆதுலர்க்கன்னமீந்துமௌடதமுயிர் கட்கீந்தும்
நீதியினிறைந்துந் தொல்சீர் நெடுங்குலத்தலைமை பூண்டும்
மாதகைவாழ்வினோங்கிவருமயில்வாகனப்பேர்
மேதகுதருமவேந்தன்மெய்யுயிர்த்துணையாம்பின்னோன்
**8

#8
கூர்ந்தநுண்ணுணர்வாற்றெள்ளிக் குறைவறப்பற்பனூலும்
ஓர்ந்தவனம்மனோருக்கொரு பெருந்துணையாய் வாழ்வோன்
நேர்ந்தவர்பிறரிலாத நெறிமையான்றனாதுமாட்டுச்
சார்ந்தவர்ப்புரக்கு மேலைத்தகையியல்வழாக்குணத்தோன்
**9

#9
தெய்வமாண்டிரு வெண்ணீற்றாற்றிருக்குறு மலத்தைக்காயுஞ்
சைவமாசமையத் துற்றுச்சரியை யிலொழுகுந்தூயோன்
பெளவமாநிலக் கட்டங்கும்பல்லுயிர்க் குயிரேயன்னான்
எவ்வமாம் வினைகளெல்லாமெறிந்தற நடாத்துமேலோன்
**10

#10
குடதிசைக்குளிர்வெண்டிங்கட் கோடுதாழ் வேணியண்ணல்
தடநெடுஞ்சிகரநொச்சித்தளியும்பூருவமாமாசைக்
கடவயிற்றொரு கோட்டைங்கைக்கரிசினகரமுநண்ண
நடுவுறவமர்ந்தவான நாடுறழ்வல்வையூரான்
**11

#11
காண்டகுதிதலைப் பொம்மற்கனதனத்தியாணர்க்காரப்
பூண்டகு செங்கேழ்க்கஞ்சப் பூந்திருவமர்ந்தமார்பன்
மாண்டகுஞானமூர்த்திவள்ளலோர் பொருட்சொல்லான
ஏண்டருதொகுதியொன்றிங்கியம் பெனவிசைத்தானாக
**12

#12
பண்டிதர்சங்கமுற்றுப்பஃறிசைப்பரப்புமேவிக்
கொண்டுளசிறப்பிற்றாகிக்குலாவுறுமதுரநீர்மைத்
தண்டமிழ்நூலினுள்ளுந் தகுசால்வடநூலுள்ளும்
எண்டருமொருபொருட் சொலியைவனதெரீஇத்தெளிந்து
**13

#13
நன்றுறக்ககரமாதினகரவீறெதுகையாக
வொன்றுறக்கோவையாக்கியோரடிக்கிருசொற்சேர்த்து
மன்றுறத்திகழுஞ்சிந்தாமணியெனும்பெயர்த்தாயென்றும்
நின்றுறவிருத்தயாப்பினெறிப்படநிகழ்த்தினானால்
**14

#14
தரம்பெறுமுன்னையூர்வாழ்சங்கரவள்ளறன்சேய்
திரம்பெறுமுத்திச்செல்வச்சிவமதபத்திமாண்போன்
கரம்பெறுநெல்லியென்னக்கலைப்பொருள்வினாய் முற்றோர்ந்து
வரம்பெறுபுலவன் செய்யவைத்தியலிங்கன்றானே
** நூல்

@2 ககரவெதுகை
**1

#1
ஆகமன்சிவனேயாகமனம்வந்துசேருதற்பேர்
ஏகபிங்கலன்குபேரனேகாக்கங்கரும்பிள்ளைக்காம்
சாகரணம் விழிப்புச்சாகியேயகலியந்தான்
சேகமேதெளித்தலென்பசேகிலியரம்பையாமே
**2

#2
அகண்டியோர்வாச்சியந்தானாகருடணையழைத்தல்
சிகண்டிசனாண்டளப்போன்சிகாவளமேமயூரம்
பகண்டையே சிவலினாமம்பகலோனேகிரணமாலி
சிகண்டகமுச்சிச்சிக்கஞ்சிக்கனவிறுக்கமாமே.
**3

#3
சகலமங்கலைபவானிசகதாத்திரிவீரச்செல்வி
பகவதிநாளேபூரம்பகாப்பொருள்கடவுளாகும்
புகாமுகமே மாதங்கம்புகலியென்பதுசீகாழி
செகிலேதோண்மேலினாமஞ்செகுத்தலுமழித்தலாமே
**4. 

#4
அகமமென்பதுவிருக்கமகதேசியுள்ளூரேழை
மகரகேதனனேகாமன்மகரிகைதோரணந்தான்
முகுடமென்பதுகிரீடமுகுந்தனேவாசுதேவன்
மகிதலந்தாலவட்டமகீசுதன்செவ்வாயாமே.
**5

#5
அகமருடணநீர்ச்செய்யுமருஞ்செபமகப்புதாழ்வாம்
இகழ்தலென்பதுநிந்தித்தலிகளிதானேவிண்ணேறு
உகவைசந்தோஷமென்பவுகளமேயிரண்டினாமம்
பகுளமேயபரபக்கம்பகர்ச்சிசொல்லென்பர்மேலோர்
**6. 

#6
மகவானேகுலிசவேந்தன்மகாநேமிகாகப்புள்ளே
அகலியமரப்பொதுப்போகழ்தலென்பதுவேதோண்டல்
நகுலமேகாத்திரிக்காநகுடமேயாக்கிராணம்
சகளமேமாயரூபஞ்சகிதமொற்றுமையின்பேரே.
**7

#7
சகமார்க்கம்யோகபாதஞ்சக்ருவக்கிளவிபீடு
நிகசோத்தியப்பேர்தூய்மைநிகலந்தோண்மேலினா
பிகமேதான்காளகண்டம்பிக்கமேகயமுனிப்பேர்
மகடூஉவேயங்கனைக்காமகத்துவமேன்மையாமே
**8

#8
காகதுண்டப்பேர் பூழில்காகளமேயெக்காளம்
சாகியங்கூட்டநாமஞ்சாக்கியரேபௌத்தர்
ஏகலிங்கன்கு பேரனேகீயனேசகாயன்
ஆகுளிசிறுபறைக்காமாக்கதமுதலையாமே.
**9

#9
ஆகண்டலன்வலாரியகலர்சண்டாளராகும்
கோகலியேகடம்புகோகனகஞ்செங்கஞ்சம்
சாகிய கிருதுதோழன்சாகிரகம்விழித்தல்
ஆகிரம்விரிவாமாகிஞ்சனந்தரித்திரமாகும்மே.
**10

#10
சோகுதானேபிசாசஞ்சோகாப்புக்கிளவி துன்பம்
தேகமென்பதுவேமூர்த்தந்தேகதாரகமெலும்பு
தூகமேகந்தவாகன்றூக்குங்கோறரசுகோலே
பாகசாதனனேபோகிபாகலம்யானைநோயே.
**11

#11
அகடூரியேவியாளமகத்திணையுள்ளொழுக்கம்
இகிதச்சொறானேயின்பமிக்கவமேகரும்பு
ஞெகிழமேபொற்சிலம்புஞிமிறுசஞ்சரிகமாகும்
தகுவரே திதியின்மைந்தர்தகுளமும் பொய்தலாமே
**12

#12
தகனையேயுலோகக்கட்டிதகுணிதமேதடாரி
துகளிதந்தூளினாமந்துகிரேசெம்பவளரத்நம்
உகிர்கரோருகமதாகுமுகளித்தலேகுதித்தல்
அகருவேகாகதுண்டமக்கியாதமறைவின்பேரே.
**13

#13
அகருதம்வீற்றிருத்தலாகிரதம்வணங்கல்
உககனலேயூழித்தீயுகுணமேமூட்டைப்பூச்சி
நகசமேவல்விலங்குநகிலமேபயோதரந்தான்
தகழிகையுண்கலப்பேர்தகனமுஞ்சுடுதலாமே.
**14

#14
குகுகலைமறையிராப்பேர் குக்கனேசாரமேயன்
சிகுரமேசிரோருகம்தான் சிக்கரே சொல்விளம்பி
திகழறானேயலங்கறிகந்தராலம்விசும்பு
சகதரென்பதுபௌத்தர்சுக்கிலபம்வெடகப்பேர்
**15

#15
சீகரிநீர்த்துளிக்காஞ்சிக்குருவேமுருங்கை
தேகிசீவாத்துமாப்பேர்தேகனியரிசனந்தான்
பாகுலங்கார்த்திகைக்கேபாகீரதிச்சொல்கங்கை
பூகரமாலகாலம்பூகதர்புகழ்வோராமே.
**16

#16
யோகினிகாளியோகசரனனுமன்பேரோதும்
மூகையென்பதுவேயூமைமூகாத்தன்மௌனமாதல்
மோகனேசம்பராரிமோகித்தலேமயங்கல்
பேகிபெண்டவளைதானேபிகராகமாமரப்பேர்.
**17

#17
வாகுசனரசன்வாகுவலயமேகேயூரப்பேர்
நாகபந்தாலசாலநாகமல்லிகையனிச்சம்
மாகரியேயாண்யானைமாகையேபசுவினாமம்
கேகலனேகூத்தாடிகேகையேமயிற்குரற்பேர்
**18

#18
முகமனேயுபசாரந்தான்முகடியேகெடலணங்கு
விகசனேகுமுதநண்பன்விகசனஞ்சிறுநகைக்காம்
மகபதிவானோர்கோமான்மகராலயச்சொல்பெளவம்
விகிசிரனேகுரங்கி விகீதமொவ்வாமையாமே
**19

#19
இகவுதானேயிகழ்ச்சியக்கியசூத்திரமேமுந்நூல்
தகவலேயுதாரணப்பேர் தகழியேயகலினாமம்
விகமமென்பதுவியோகம் விகம்பிதமேநடுக்கம்
வகுளியேயாரவாரம் வகுத்திரந்தெப்பமாமே
**20

#20
விகலையேகாலநுட்பம்விகாபதமேதியாகம்
நகரசமேமாதங்கநக்கனநிருவாணந்தான்
புகர்வெனுங்கிளவியன்னம்புக்கசனேசண்டாளன்
உகைதலேசெல்லுதற்காமுக்காக்கமரைநாணின்பேர்.
**21

#21
ஆகரன்கள்வனாகவனம்பலியாகுமென்ப
தோகலியேயசொகந்தோகலமேவிருப்பம்
கோகயமம்புயங்காகோதரமேபுயங்கம்
ஊகனந்தீர்த்தவாருமுகனிதுடைப்பத்தின்பேர்
**22

#22
அகசியமேவேடிக்கையகர்ம்முகம்வைகறைப்பேர்
நிகரணமேவிழுங்கனிகேதமென்பதுவேவீடு
அகிபதியாதிசேடனகிஞனேபரிசிலாளன்
இகளைச்சொறானேவெண்ணெயீகஞ்சந்தனமதாமே
**23

#23
ஆகுகனேமுன்னோனாக்கிராணவிந்திரியமூக்கு
மாகுலவர்ச்சொல்வேடரேமகண்மாவலிக்காம்
ஓகையேயுவகையாக்கிரோசனஞ்சாபநாட்டும்
நீகானென்பதுமீகாமனிகுஞ்சனங்கொலையின்பேரே
**24

#24
அகோராத்திரம்பகலிராவாமகலிட மேகிடக்கை
மகாதேவனேகபாலிமகீபதியேபூபாலன்
சிகாவலஞ்சைவலப்பேர்சிகிச்சகன்பிடகனாகும்
பகாலமென்பதுகபாலம்பகீரதிகங்கையாமே
**25

#25
அகாசரமறியாமைக்காமகாதத்துவப்பேராழம்
குகூகண்டங்காளகண்டங்குக்கியென்பதுவேமேடு
நிகாசமென்கிளவியொப்புநிகிதமென்சொல்லனீகம்
மகேசுவரன்கங்காளன்மகோற்பலந்தாமரைப்பேர்
**26

#26
உக்கிருட்டம்மேமேன்மையுக்காரிதானேபிட்டுச்
சக்காரநாமந்தேமாச்சகசட்சாதித்தனென்பர்
ஒக்கலைமருங்கினபக்கமொஃகலென்சொல்லொதுங்கல்
குக்குடங்கோழியேகுக்குலுகுங்குலியப்பேராமே
**27

#27
தாக்கணங்கேசீதேவிசாகேதமேயயோத்தி
சூக்குமைவாக்கினொன்றேசூக்குமதாரிவஞ்சன்
காக்கணங்கருவிளைக்காங்காகொடிகாஞ்சிரந்தான்
தீக்கஞ்சிகருப்பூரப்பேர்தீக்குணர்கீழோராமே
**28

#28
மீக்குவமருச்சுனந்தான்மீக்கூர்தலேநிரம்பல்
ஆக்கிரந்திதம்பாய்மாவின்கடுநடையாக்கை தேகம்
பாக்கனென்பதுமார்ச்சாலம்பாகுரியிலக்கணிக்காம்
மீக்கூற்றுப்புகழ்ச்சிநாமமீகாமன்மாலுமிப்பேர்
**29

#29
எக்கியப்பேரேயாகமெக்கழுத்தம்மேமாப்பே
சுக்கிரபகவான்வெள்ளிசுக்கிரமானிமாதம்
சிக்குவைநாவினாமஞ்சிகமெனுங்கிளவிகாந்தி
சக்குத்தானேதிருட்டிதக்கிரமோரின்பேரே
**30

#30
விக்கியானம்விபரீதார்த்தம்விக்கினாபனமறிக்கை
அக்கினிவாகந்தூமமக்கினிவீரியம்பொன்
முக்கூட்டுத்தானடுப்புமுகேரனே மூடனாமம்
வக்கிராங்கம்மேயன்னம்வகுலிமீன்பெயராகும்மே
**31

#31
விக்கிரயப்பேர்விற்றல்விக்கிராந்தம்மேவீரம்
அக்கதயோனிகன்னியக்கிரியன்றான்முன்னோன்
எக்களித்தல்லேமிக்கமகிழ்வேகாலியரேதூசர்
அக்கமமழுக்காறேயக்கினிசகனனிலமாமே
** ககரவெதுகை முற்றிற்று.

@3 ஙகரவெதுகை
**32

#1
அங்கசன்வேனிலாளியங்காடியாவணந்தான்
கங்காளன்பூதநாதன்கங்காளிவல்லணங்கு
கொங்கனேகொல்லிவெற்பன்கொங்காரமேதுருக்கம்
சங்கிரதம்புணர்ச்சிசங்கிதைசரித்திரப்பேர்
**33 

#2
அங்கர்கோமானேகன்னனங்காத்தல்வாய்திறத்தல்
சங்கிரந்தனனேபோகிசாங்கரிகங்கலப்புச்
சிங்கத்தினுரியோன்சிம்புளானோன் சிங்ஙுவைநாவென்ப
சுங்கனென்பதுமழைக்கோடுங்கியேயிரசனிப்பேர்
**34

#3
பங்கயாசனனேவேதாப்பங்குனனேகிரீடி
செங்கதிர்பிறந்தநாளுத்தாஞ்செங்கைமூதிரைக்காம்
மங்கிலியந்தாலிப்போமங்குரமேபளிங்கு
புங்கலமானமாவாகும்பொங்கழிதூற்றாநெல்லே
**35

#4
வங்கூழேகந்தவாகன்வங்கனநாமஞ்சேம்பு
மங்கைபங்காளனீசன்மங்கிலமேவனத்தீ
அங்கசங்கம்புணர்ச்சியங்கரூகம்முரோமம்
இங்கரியேகத்தூரியிங்கணிவ்விடமதாமே
**36

#5
அங்கூரந்தளிரேயங்கீகரணஞ்சம்மதித்தலாகும்
சங்காரமழிவுதானேசங்கன்ன மேநரம்பு
கங்காதரன்மாதேவன்காங்கிசையேவிருப்பம்
அங்காரிகைப்பேர்கன்னலங்குரிவிரலதாமே
**37

#6
பொங்கடியேமா தங்கம்புங்கவரேபுத்தேளிர்
அங்கரட்சணிபோர்ச்சட்டையங்கவித்திகைதானெண்ணே
சங்கருடணனேவெள்ளைசங்கற்பசன்மன்காமன்
அங்கிதமுடற்றழும்பேயங்கோலமழிஞ்சிலாமே
**38

#7
ஓங்காரம்பிரணவந்தானோங்காரித்தல்லுறுக்கல்
காங்கேயமேசெந்தாதுகங்கடங்கவசநாமம்
பாங்கனேயெலுவனே பங்கேருகம்பதுமங்காட்டும்
தேங்குதனிறைதலென்பதிங்கணாண்மான்றலைப்பேர்
**39

#8
அங்குலியம்மேவீலீகமைங்கணைக்கிழவன்காமன்
சங்கிரமணநடைக்காஞ்சங்கிரமேகாந்தாரம்
செங்கொலேபீதஞ்செங்கோற்கடவுளே தென்றிசைக்கோன்
அங்குரகங் கூடேயங்குலித்திரம்விரற்புட்டிற்பேர்
**40

#9
அங்களிகுமரியங்கராக மேபூசுங்கந்தம்
சங்கக்குண்டலனீசானன்சங்கலாரேசார்பில்லார்
தங்குடிச்சுற்றந்தாயத்தார்திங்கட்குடையோன்காமன்
அங்குரித்தன்முளைத்தலங்ககமங்கமாமே
** ஙகர எதுகை முற்றிற்று

@4 சகரவெதுகை
**41. 

#1
அசத்தியந்தத்திகாரமசடரே நெறியிலாதார்
விசித்திரதேகமேகம்விசிறிசிற்றாலவட்டம்
புசித்தலென்பதுவேயுண்டல்பூசுரர்வேள்வியாளர்
விசித்தல்கட்டற்பொருட்டேவிசேடகநெற்றிப்பொட
**42. 

#2
காசினியவனியென்பகாசனன்கொலைசெய்வோனே
கேசரர்விஞ்சையர்க்காங்கேசிகனிறையுரோமன்
ஓசுதான்கீர்த்தியோச்சர்கணக்காயர்பெயரையோதும்
ஆசனன்பார்க்கவன்பேராச்சயன்கடவுளாமே.
**43

#3
அசுரமந்திரியே வெள்ளியாசவமேசுமாலி
இசைமடந்தைச்சொல்வாணியிச்சகமேசன்மானம்
உசிதனேவேம்பின்றாரோனோசனேயுபாத்தியாயன்
திசைமுகன்பிரமதேவன்றீச்சொறான்பழிச்சொலாமே
**44

#4
கசடரே முறையிலாரேகச்சகமேகுரங்கு 
கிசலயமேயலங்கல்கிசலையுமப்பொருட்டே
சுசிமிதம்புன்னகைக்காஞ்சுசீலனற்குணனேயென்ப
அசுவமென்பதுதுரங்கமாசித்தல்விழைதலாமே
**45

#5
சூசமேதுருவாட்டேறுசூசிகாதரமியானை
தூசரமற்பவெண்மைசூசுகமேமுலைக்கண்
ஆசுகியேவிகங்கமாசேசனந்தெளித்தல்
பூசகனரிச்சகற்காம்புசியந்தைமாதமாமே
**46

#6
வசுமதிதாலவட்டம்வாசதங்காளவாயே
சசிமணாளன் சுரேசன்சாசிபமேமண்டூகம்
விசனனம்பிறவிவிச்சித்திரமேவிற்பன்ன மேற்கும்
அசகவமீசன்வில்லேயசகமும்வரையாடாமே
**47

#7
ஆசங்கித்தல்லேயையங்கொள்ளாறானசினந்தோலே
மாசைச்சொலபீதமென்பமச்சிகையேயருப்பம்
ஈசத்துவமமோர்சித்தியிச்சயமேயிராகம்
ஏசிசசொலவநதிகைக்கமிசலியுஞ்சபதமாமே
**48

#8
ஈசனாளியாழேயிச்சாவசுவேகபிங்கலன்றான்
காசிரமேவிருத்தங்கச்சோணிகமழும்பண்டம்
சூசியாசியமூஞ்சூறுசுசனமென்பதுமருத்துத்
தூசரேகாலியர்க்காந்துச்சிமைகீழ்மையாமே
**49

#9
அசராதுகடுக்கையாசுவீசமைப்பசிமாதப்பேர்
உசனனேயசுரமந்திரியுச்சிட்டமெச்சிறானே
முசலிகையேயுடும்புமுசுடரென்பதுகனிட்டர்
பசுபதியீமத்தாடி பாசண்டஞ்சமையக்கட்டே
**50

#10
பசிதமென்பதுவேசாம்பர்பசுங்கதிர்த்தேவே சோமன
திசமிதனாசையில்லான்றிசிதிசையாகுமென்ப
அசுதையேவிடமதாகுமச்சபல்லப்பேரெண்கு
விசிதமேவிபூதிவிச்சாதரரேவிஞ்சையர்பேராமே
**51

#11
வசந்திகைக்கிளவிதேமல்வசவிச்சொறுட்டையென்ப
பிசங்கமேபொன்கலந்த செந்நிறம்பிசமேதூவி
நிசும்பனங்கொலையினாமநீசரென்பதுமுசுண்டர்
விசங்கடமிருகராசன்விசபிலஞ்சேற்றின்பேரே
**52

#12
விசயார்த்தங்கைலைவெற்புவிசாரபூகலலிச்சங்கம்
அசமானமுவமையின்மையசேதனமறிவின்மைக்காம்
சசமேதானமுயல்ச்சாங்கஞ்சந்திரனாமதேயம்
குசுமாசவச்சொறீங்குகூசிதம்புட்குரற்பேர்
**53

#13
உசுவுளுநாமமேயோசனித்தல்புள்ளிறகடித்தல்
அசுரநாடானேயன்றிலாசீர்வாதச்சொலாசி
துசகமேமாதுளுங்கந்துச்சவனன்பேர்போகி
விசுவகந்தைச்சொல்பூமிவிசினமும்பிரவையாமே
**54

#14
வாசவன்வேள்விவேந்தன் வச்சகஞ்சக்கரந்தான்
ஆசிரயன் தற்காப்போன் அசுதாரணன் காபாலி
பாசகர் வாலுவர்க்கு ஆம் பசுஞானம் தன்னைக் காண்டல்
நேசம் என்பதுவே அன்பு நிச்சாரகம் மருத்தே
**55

#15
அசம்பாதைசேனைசெல்லும் வழியசரீரன்காமன்
கசங்கனமேயங்காடிகாசனநாம்மூறு
வசுந்தரைபுவனியாமேவசிவுதானே வணங்கல்
முசுண்டர்கீழ்மக்களென்பமுச்சட்டையழகின்பேரே
**56

#16
முசருவேதயிரிநாமமுசுப்பதிபாடிவீடு
அசலகான்மலையக்காலேயசன்னியஞ்சகுனமாகும்
விசமேதாமரைநூலேவிச்சிராணனங்கொடைவிளக்கும்
யசுருவேயிரண்டாம்வேதமாச்சியநெய்யின்பேரே
**57

#17
அசுவேதான்பிராணவாயுவசிபத்திரகப்பேர்வேழம்
விசையனமேயாராய்வுவிசர்ப்பனமேபரம்பல்
அசிதாம்புருகமேநீலோற்பலமசித்திரனேகள்வன்
உசியேகூர்மைப்பேருச்சைச்சிரவமிந்திரனுன்னிப்பேர்
**58

#18
தாசரியேமலைப்பாம்பேசசிகடன்மழைக்காம்
ஆசிதையன்னேனாதியாசாளென்பதுகோமாட்டி
நேசகனீரங்கொல்லிநிசாதனேயகாதனாகும்
தேசியந்திசைமொழிக்காஞ்சீசகமீயமாமே
**59

#19
நிசாகசக்கிளவியல்லிநீசகமேபானீயம்
அசாரமாமணக்கசம்பிரேட் சியமாராய்வின்மை
விசாகன்செவ்வேள்விசிட்ட மேன்மையைக்காட்டுமென்ப
தசாசுபனுடுவின்வேந்தன்றசுமமங்காரகன்பேர்
**60

#20
கசாக்கிரமயிர்நுனிக்காங்கசரிபுமிருகராசன்
குசாக்கிரங்குசநுதிப்பேர்குசனென்பசெந்தீவண்ணன்
நிசாச்சொறானிரவைநாட்டுநீசமேயிழிவையேற்கும்
குசாட்சமென்பதுகுரங்குகுசேசயங்கஞ்சமாமே
**61

#21
அச்சுவத்தம்மேபோதியாககனே மருத்து
வச்சிரதானவலாரிவாசசாம்பதிவியாழன்
கச்சுருவே நெருப்புக்கசசோதங்கத்தியோதம்
சிச்சிலிபொன்வாய்ப்புள்ளுச்சீசமுமீயமாமே
**62

#22
இச்சானுவிருத்தியாசையடக்கமேயசனம்வேள்வி
உச்சாசனங்கொலைக்கா உச்சற்கமேயபானம்
நிச்சாலங்கம்பொருப்புநிசானமோர்கட்பறைக்காம்
விச்சிராவங்கீர்த்திக்கேவிசூரணந்துக்கமாமே
**63. 

#23
உச்சலமறிவேயுச்சின்னஞ்சமப்படுதலோதும்
அச்சுவம்பரியசூயையழுக்காற்றினாமமென்ப
வச்சிரகங்கஞ்சக்காய்வாசுதேவன்முராரி
வச்சையங்கலைமானாமேவசீகரங்கைவசப்பேர
** சகரவெதுகை முற்றிற்று.

@5 ஞகரவெதுகை
**64

#1
அஞலமேகொசுகினாமமஞ்சமேவக்கிராங்கம்
கஞறமே மதுவேகஞ்சகாரரென்பதுகன்னார்பேர்
கிஞமேதானறிவுகிஞ்சித்துவமேசிற்றறிவைநாட்டும்
அஞலேதான்மசகமஞ்சலிகைவெளவாலபிதானம்மே
**65

#2
அஞ்சனிகாசையேயஞ்ஞானமேயறிவின்மைக்காம்
குஞ்சராசனமேபோதிகுஞ்சுரநாமங்குன்றி
சஞ்சயங்கூட்டநாமஞ்சஞ்சரிதானேதேனீ
பஞ்சவன்வழுதிபாஞ்சலிகைசித்திரப்பாவையாமே
**66

#3
விஞ்ஞதைஞானமாமேவிஞ்ஞாத்தியறிவிப்பாகும்
அஞ்ஞத்துவப்பேரேயஞ்ஞானமஞ்சிட்டன்சூரன்
மஞ்ஞைதானேமயூரமஞ்சூரங்கடலைநாமம்
பிஞ்ஞகன்பேயொடாடிபிஞ்ஞகம்பங்குசப்பேர்
**67

#4
விஞ்சுதன்மிகுதலென்பவிஞ்சையென்பதுவேகல்வி
கஞ்சுகர்மெய்காப்பாளர்காஞ்சிகைதானேயெட்டி
வஞ்சிவேந்தன்னேகொங்கன்வஞ்சுளமேயசோகம்
மஞ்சுகமேகுரண்டமஞ்சுளமழகின்பேரே
**68

#5
காஞ்சனியரிசனங்கஞ்சரீடமேவயவற்காகும்
பாஞ்சசத்திகமியம்பஞ்சூகமேபெருமைபன்னும்
சாஞ்சலியம்மநித்தியஞ்சஞ்சுகைபறவைமூக்கு
காஞ்சுகங்கவசப்பேரேகஞன்றலுமெழுச்சியாமே
**69

#6
சஞ்சரிகம்வண்டேசஞ்சரித்தலேவாசம்பண்ணல்
சிஞ்சகமசுணமேசிஞ்சிதமசையணியொலிக்காம்
செஞ்சாலிசெந்நெலேசிஞ்சினிதநாணொலியினாமம்
முஞ்சகேசிப்பேர்விண்டுமுஞறானுமசகமாமே
**70

#7
அஞ்சுகந்தானேதத்தையஞ்ஞனென்பதுவேமண்ணை
சிஞ்சமேசிறுமைகிஞ்சிக்கினனான்மாப்பேர்கிளத்தும்
பஞ்சபாணன்வசந்தன்பஞ்சமகதியேமோக்கம்
மஞ்சிகனேயேனாதிமஞ்சரந்தாளமாமே
**71

#8
வஞ்சவந்தந்தசூகம்வஞ்சப்பெண்சன்மினிக்காம்
பிஞ்சடம்பீளையே பிஞ்சானமேபீதமென்ப
பஞ்சகுத்தம்மேயாமைபஞ்சானனன்மாதேவன்
மஞ்சமென்பதுவேகட்டின்மஞ்சிமமழகின்பேரே
**72

#9
பஞ்சதஞ்சாவேபஞ்சானனமடங்கற்பேர்பன்னும்
சிஞ்சினியேவின்னாணிசிஞ்சுமாரம்வன்மீனே
வஞ்சுளன்றான்வயானேவஞ்சினஞ்சபதமாகும்
பஞ்சதாரைப்பேர்பாகுபஞ்சனமழித்தலாமே
**ஞகரவெதுகை முற்றிற்று

@6 டகரவெதுகை
**73

#1
உடம்பிடி வேற்படைக்காமுடுபமேபுணையினாமம்
குடங்கையின் பேரகங்கைகுடகனேவஞ்சிவேந்தன்
வடந்தையேவடகாற்றாகும்வடமீனேசாலியென்ப
மடங்கலின் கொடியோன்வீமன்மடவரலிளம்பெண்ணாமே
**74

#2
அடிசிறானே புழுக்கலடுகளம்போர்க்களப்பேர்
உடுவையேயகழேயூடல்கலவியிற்புலத்தலோதும்
ஒடிசிலேகவணினாமமொட்டாரேசத்துருக்கள்
கடையனுலூழித்தீயேகடைநாளுமிரேவதிப்பேர்
**75

#3
கொடிச்சியர்குறிஞ்சிப்பெண்கள் கோடீரக்கிளவிவேணி
அடர்ச்சியேநேருக்கமட்டபந்தனந்திக்குக்கட்டே
உடுப்பகையேயாதித்தனுடுநீர்தானகழேயென்ப
கடிப்பிணைகாதணிக்காங்காடகமாடையாமே
**76

#4
காடிகந்தானேசீலைகடைஞரேமருதமாக்கள்
ஏடணையேவிருப்பமெடுத்துக்காட்டுதாரணந்தான்
ஈடிகையெழுதுகோலேயிடுலிபெண்ணாமையென்பர்
ஆடகிதுவரைநாமமாடூ உவேயாண்மகன்பேர்
**77

#5
தாடணந்தட்டா?னேசடாட்சரன்மஞ்ஞையூர்தி
கோடவதிப்பேர்வீணைகோடாய்நற்றோழியன்னை
சூடமென்பதுகோடீரஞ்சுடர்மௌலியரேவானோர்
பாடலோபலமாணிக்கம்பாடிலக்கிளவிநாடே
**78

#6
கொடுவரியேசார்த்தூலங்கூடபாதப்பேர்பாம்பு
கெடவரன்மகளிர் கூட்டங்கெடலணங்கேசீர்கேடி
தடறுதான்கருவிப்புட்டிறபமென்பதுவேதண்மை
சுடலையாடிச்சொலீசன்சூடிகைமுடியின்பேரே
**79

#7
துடியடியானைக்கன்றுதொடுபதமேபுழுக்கல்
படனமென்பதுபடித்தல்படினச்சொறானேவெற்றி
புடவியேதாலவட்டம்புட்கலைமணாளனையன்
மிடியனேயிலம்பாட்டோன்பேர்மிடைதலுநெருங்கலாமே
**80

#8
உடைகுளமேபூராடமுடுபதமேயாகாயம்
கொடுநுகமகமேகூடற்கோமானேகுமரிச்சேர்ப்பன்
படிமையேதவவேடப்பேர்படிமத்தான் வெறியாட்டாளன்
நடரென்பதவிநயர்க்கேநடுநாள் சித்திரைநாட்பேரே
**81

#9
நெடுந்தகைமைப்பேர்மேன்மைநிட்டேகமுமிழ்தலாகும்
கடிந்தமன்கும்பகாரன் கடைசியர்மருதப்பெண்கள்
குடும்பினிதானேயில்லாள் கொடைமடம்வரையாதீதல்
இடங்கமேயுளியிடைக்காடக்கலோர் தகுவழக்கே
**82

#10
குடவரேமுல்லைமாக்கள் குடுவெனுங்கிளவிதேறல்
கடவுதான் வழியேகட்சாந்தரமந்தர்ப்புரமதாகும்
படிகரேவாயிலாளர்படைபேற்றல்கீழறுத்தல்
இடவம்பூலவயமேயீடணம்புகழென்பர்மேலோர்
**83

#11
பீடகேலிப்பேர்வேசிபிட்டபமுலகமென்ப
வேடகங்காதணிக்காம்வேட்கைதானேயருத்தி
மாடகமுறுக்காணிக்கேமாட்சியென்பதுபிறங்கல்
மூடிகாஞ்சனனோம்பன்மூடதையறியாமைப்பேர்
**84

#12
அடனிவின்னுனியேயாட்சபாதானேநியாயசாத்திரி
கடலஞ்சிகப்பேர்கூர்ச்சங்கட்கமென்பதுதூவத்தி
படுவரேசவுண்டிகர்க்காம்பட்டிகர்புரையோர்நாமம்
விடபியேயகலியந்தான்வீட் சிதம்பார்வையாமே
**85

#13
கடுத்தலைதானேகண்டங்கட் செவியேபுயங்கம் 
தடித்தேசஞ்சலையைக்காட்டுந்தட்சாயமேமாலூர்தி
குடக்கேபச்சிமதிசைக்காங்கோட பதமானகுளம்பு
ஒஇடித்துரையுறுதிச் சொல்லேயீடிதந்துதித்தலாமே
**86

#14
கடிதேசமிடையே கட்கராடமேபரிசைகாட்டும்
தொடுதோலேபாதகாப்புத்தோட்கோப்புப்பொதிசோறென்ப
ஒகடமாவாமாகடாட்சவேட்சணமோகப்பார்வை
அடகேநல்லிலைக்கறிப்பேரடர்தலுநெருங்கலாமே
**87

#15
அடுக்களைமடைப்பள்ளிக்காமட்சயமேகேடின்மை
இடக்கியந்தேர்க்கொடிப்பேரிடுகாடுதானேயீமம்
கடுக்கையென்பதுவேகொன்றைகாடுகாள் மூதணங்கு
அடைப்பைதாம்பூலப்பையட்சதைசுபவரிசியாமே
**88

#16
இடங்கழிநெருங்கல்காட்டுமிடையெழுஞ்சனியேபூரம்
கடம்பனேகார்த்திகேயன்கடற்சார்புநெய்தறானே
தொடர்ந்தாரேகாதலித்தார்தோட்டிமையொற்றுமைப்பேர்
விடங்கரேசிறுவழிக்காம்விடக்குவள்ளுரமதாமே
**89

#17
அடலமாறாமையட்டமூர்த்தியேயந்திவண்ணன்
கடவல்லிதானேவேதத்துட்பொருள்கடுரமோரே
சடரமென்பதுவேதுத்தஞ்சட்டுவமேயகப்பை
சுடுவுசும்மாடேயென்பசுடரோனாதித்தனாமே
**90

#18
கடிஞைதானிரப்போர்பாத்திரங்கடற்பிணாநெய்தற்பெண்ணே
சடுதிசீக்கிரமேசாட்டுவலம்பசும்புற்றரைக்காம்
சுடுவலேயுதிரநாட்டுஞ்சுடாரியே கவசங்காட்டும்
நடனச்சொறானேகூத்துநட்டோருற்றார்பேராமே
**91

#19
நிடலமென்பதுவேநெற்றிநிடூதனமூறுகோளே
படிமக்கலச்சொலாடிபடுகளம்போர்க்களப்பேர்
கடிவையேவல்விலங்குகடிந்தோரைம்புலனைவென்றோர்
படுகுதான்விசேடவாக்குப்பாடிதஞ்சொல்லலாமே
**92

#20
சடவஸ்தேயசித்துவஸ்துச்சடாசுவாலந் தீபப்பேர்
துடுவையேநெய்த்துடுப்புத்தொடுக்கமேயேகாகாரம்
தடினியேதரங்கிணிக்காந்தாட்சனாகாசனன்றான்
மிடலேமாவுரமதாகும்விடாணமும்விலங்கின்கொம்பே
**93

#21
தேடிதந்துதிசெய்தற்காந்திடப்பிரஞ்ஞன்சீவன்முத்தன்
கூடத்தனிருவிகாரசைதந்நியன் கொடிசைகன்னம்
சேடகம்வட்டணந்தான் செட்டேசெட்டிமையுரைக்கும்
கூடிலிதசையுண்போனேகொட்டியமெருதின்பேரே
**94

#22
குடாரமென்பதுகோடாலிகுடமாடறிருமாலாடல்
விடாரகமேமார்ச்சாலம்விட்டேறுசத்திதானே
கடீரகமேயுபத்தங்கடமுனிகும்பயோனி
குடாவடியேபல்லூகங்குடிலையோங்காரமாமே
**95

#23
கூடாரேசத்துருக்கள்குட்டினிதானே துட்டை
நீடாணங்கறியினாமநெடித்தலுநெடும்போழ்தென்ப
கூடாங்கமுறுப்படக்கிகோட்பறைசாப்பறைக்காம்
மேடூகம்பித்திகைப்பேர்மிடிமையும் வறுமையாமே
**96

#24
வடபுலிமிருகராசன்வடுகன்றாய்மூதணங்கு
புட்பகேதேகந்தர்ப்பன்புட்பரசப்பேர்பூந்தேன்
அட்சரமுகன்மாணாக்கனாட்சாரங்குற்றச்சாட்டு
நிட்களங்கப்பேர்தூய்மைநிட்டூரங்கொடுமையாமே
**97

#25
ஒட்டுநர்பேரேவேட்டாருடுவின்வேந்தன்களங்கன்
அட்டிலேபாகசாலையடையலரேமுனைந்தோர்
இட்டகாமியமிச்சித்தபொருள்பெறலிடாகுபுள்ளி
எட்டர்தான் கடிகைமாக்களேடலென்பதுகருத்தே
**98

#26
குட்டிமங்கற்படுத்தவிடமேகுட்டரியேகுன்று
முட்டிகாந்தகனேவெள்ளைமுடுக்கரென்பதுநிகுஞ்சம்
புட்டகமேகலிங்கம்புடோட்சமேவெண்குடைப்பேர்
பெட்டுச்சொறானேமித்தைபெட்டார்சுற்றத்தார்பேரே
**99

#27
அட்டனமாழியேயாட் சேபனமெதிர்நியாயம்
இட்டியமோமநாமமிடுகையென்பதுவேயீகை
குட்டியம்பித்திகைக்காங்குட்டுவன்போந்தின்றாரோன்
அட்டகாசம்பேரார்ப்பேயடராரொன்னார்பேராமே
**100

#28
பிட்சாடனம்யாசித்தல்பீடனநாமம்பீடை
வட்காரென்பதுசார்பில்லார்வடிசமென்பதுவே தூண்டில்
சட்பதமேசாரங்கஞ்சடுலைதானேதடித்து
இட்டிடைசிறுமைதானேயிடவையும்வழியாகும்மே
**டகரவெதுகை முற்றிற்று.

@7 ணகரவெதுகை
**101

#1
பணதரமேபுயங்கம் பாண்டுராகப்பேர்வெண்மை
புணரியேகார்கோளே புண்ணியசாந்தம்பூதிதானே
கணிகையேவேசிகண்ணுள்வினைஞர்கண்ணாளர்நாமம்
அணிகமேசிவிகையாகுமண்டகம்பீசமாமே
**102

#2
கணவங்குஞ்சராசனந்தான்கணவீரமேகவீரம்
கிணகரேயடிமையென்பர்கிணைமருதப்பறைப்பேர்
மணமகள்மனைவியேமண்பொதுத்தந்தைவாணிகேளவன்
நணுகலென்பதுவேகிட்டனாணிவின்னாணியாமே
**103

#3
அணிந்துரைபாயிரப்பேரணிகலனேமதாணி
இணஙகலரேயெதிர்நதோரெண்குணனேயனந்தன்
அணங்கமேயிலசணந்தானணுக்கமேகோரவாரம்
இணங்கலேயுடன்படற்பேரெண்ணா?மாற்றலாபேராமே
**104

#4
சோணகிரிப்பேரண்ணாமலைசுண்ணவரசிமுல்லை
மாணவகங்கல்விப்பேர்மணிவீசமாதுளுங்கம்
ஏணகமேசாரங்கமெண்குதானேபல்லூகம்
வேணுகமியானைத்தோட்டிவீண்பய?னின்மையாமே
**105

#5
பிணிகைச்சொறானேகச்சுப்பேணாரொன்னாபேர்பேசும்
தணவச்சொலச்சுவத்தந்தாண்டவராயனீசன்
மணிகானனப்பேர் சுண்டமண்டிகையப்பவர்க்கம்
அணிமைக்குநுட்பமோதுமணுபைக்குமின்னலாமே
**106

#6
வணிகமேசெட்டுவண்ணமகள் கோலஞ்செய்வாளாகும்
மணிகநீர்க்குடமேயென்பமணீசகஞ்சந்திரகாந்தம்
திணிகமேயுத்தங்காட்டுந்தெண்மைதான்றெளிவைநாட்டும்
பணியறானே வணங்கல்பண்டிலன்றூதனாமே
**107

#7
மணவைதானடுப்பேமிண்டன்வாய்ந்தபோமீளியாகும்
நணுகலடையலக்க நண்புநடபாகுமென்ப
உணைதலென்பதுவேதேம்பலு?க்கமேவாட்டநாமம்
கணிதனேபகைவன்கண்ணுளாளர்கோடியாபேராமே
**108

#8
சேணாடுசுவர்க்கலோகஞ்செண்ணமேவடிவையேற்கும்
பூணையென்பதுவேமுல்லைநிலம்புண்ணீரிரத்தமாகும்
சேணாடாமரரேசெண்டாயுதணையற்செப்பும்
சாண்மா துரண்விசாகன்சண்பைசீகாழிதானே
**109

#9
அண்டசமுட்டையிற்றோன்றுவனவாண்டளப்போனாசான்
கண்டியர்பாணரேகண்ணழித்தல்சொற்பொருளுரைத்தல்
குண்டனம்வளைதலெனபகுணங்கரென்பதுபிசாசம்
தண்டலர்சத்துருக்கடண்டுலமரிசியாமே
**110

#10
கண்ணுகமேதூங்கங்கண்ணுறல் காணலாகும்
தண்ணவனேகுரங்கிதண்டாமைதானீங்காமை
நண்ணுநரேயடைந்தோர்நாணுகநாமம்பாய்மா
பண்ணலேசெய்தல்பண்டமாற்றுவிற்பனவாகும்மே
**111

#11
அண்டகையப்பவர்க்கமாண்டையராடவர்க்காம்
தொண்டலமியானையின்கை தொண்டகமுருகியப்பேர்
பெண்டகனலிதானேபிண்டகநறுந்தூமம்பேசும்
அண்டிகஞ்செந்நாயண்டயோனியாதித்தனாமே
**112

#12
கண்கூடுபிரத்தியட்சங்கண்ணுளே நாடகந்தான்
எண்டோளன்குன்றவில்லியெண்கணனன்னவூர்தி
குண்டீரந்தத்துவப்பேர்குணபமேபிணமதாகும்
வெண்டேரேகானல் வேணவாவேட்கைப்பெருக்கமாமே
**113

#13
விண்முழுதாளிவேந்தன்வேண்டாமைதான் வெறுப்பு
மண்மகள் புதல்வரேவேளாளர்மண்டூகைவேசி
அண்மையேசமீபமண்டாரடையலர்நாமங்காட்டும்
கண்ணேணிமூங்கிலேணிகண்பாடுநித்திரைப்பேர்
**114

#14
தொண்டனேயடியான்றோணாமுகங்கழியிருக்கைதோற்றும்
விண்டலமேநபங்கம்விண்ணப்பமேமன்றாட்டம்
அண்டிரன்மனுடனென்பரணிமாச்சித்தியினுளொன்றே
கண்டீரஞ்சதுரக்கள்ளிகணாசலங்கைலையாமே
**115

#15
பண்டர் வந்தித்துநிற்போர்பாண்டரங்கன்னீசானன்
புண்டரகேலியானைபுண்டரீகாக்கன்மாயோன்
முண்டகாசனனேவேதாமுண்டித்தலேமழித்தல்
வண்டலமங்கணந்தான்வண்டானநாரையாமே
**116

#16
விண்ணேறு செல்லுவெண்டாமரையாளேவெள்ளைமெய்யாள்
நண்ணாரே பொருந்தலர்க்கநண்பகன்மத்தியானம்
விண்மணிபரிதியேவெண்கொல்லிரசதப்பேர்விள்ளும்
கண்மைகண்ணோட்ட மேகண்வினைஞர்க்கண்ணாளராமே
**117

#17
தண்சுடருடுவின்வேந்தன்றண்டுலாம்புச்சொன்மோழை
கிண்கிணியேசதங்கைகிணியேகைத்தாளமேற்கும்
பண்டெனுங்கிளவிதொன்மைபாணிபீடனம் விவாகம்
பெண்டுதான்மகடூஉப்பிண்டகருமநற்பிதிர் பூசைப்பேர்
** ணகரவெதுகை முற்றிற்று

@8 தகரவெதுகை
**118

#1
அதகமென்பதுமருந்தேயாதரிசனங்கண்ணாடி
உதகவனங்கியுத்தராசங்கமுத்தரீகம்
இதலைதானிலஞ்சியாகுமிதழியே மதலைகாட்டும்
கதலிகைதுகிற்கொடிக்காங்காத்திரவேயம்பாம்பே
**119

#2
உதிட்டிரன்றருமராசனோதிமமுயர்த்தோன்வேதா
இதைப்புனம்புதுக்கொல்லைக்காமிதணமேபணவைநாமம்
திதிப்பிரகரணங்காத்தறிதலையென்பதுசுணங்கு
பதத்திரியேவிகங்கம்பதப்பாடுமதிலுறுப்பே
**120

#3
அதிகாசம்பெருநகைக்கேயதுலிதமசைவின்மைப்பேர்
திதிசுதரவுணரென்பதீத்தபிங்கலமேசிங்கம்
நதநதீபதியேவேலைநத்துதல்விரும்புதற்காம்
சுதனமாயுதப்பொதுப்பேர்சுதன்மகனாமமாமே
**121

#4
ஆதபன்பரிதியத்தியாயனம் வேதமோதல்
சாதகும்பங்கல்யாணஞ்சதுரானனன்வேதாவாம்
சீதரனரிதானேசித்தகந்தலைச்சீராவாகும்
தாதகியாத்திதாதமார்க்கமுஞ்சரியையாமே
**122

#5
ஆதபத்திரங்கவிப்பேயதிசந்தானம் பொக்கப்பேர்
காதரளச்சமுள்ளோன்கதிரவனேயாதித்தன்
கேதுவசனம்பதாகை கேத்திரபாலனமுத்தன்
கோதிகையேவன்மீனேகுதூகலம்விருப்பமாமே
**123

#6
பதிகனேவழிச்செல்வோனாம்பதுமநாபன்முகுந்தன்
புதியவரேவிருந்தர்பூதகாலஞ்செல்காலம்
மதனபாடகங்குயிற்பேர்மதிமகனனுவழிக்காம்
முகிதமென்பதுமாராயமூதாதைபாட்டனாமே
**124

#7
முதுமகன்சனியினாமமூதணங்கின்பேர்மாரி
வதிரனேசெவிடன்வாதராயணன்வியாசயோகி
விதலையே நடுக்கம்வித்துவேடமேவிரோதமென்ப
அதமசரீரங்கற்பவிருட்சமா தவமொளிப்பேர்
**125

#8
மேதினிதராதலந்தான்மேதையரேவிற்பன்னர்
வாதமண்டலியேசூறைவாதமானம்வருத்தல்
மாதலிவாசவன்சாரதியேமா துவஞ்சுமாலி
பூதேவர்வேள்வியாளர்பூதநாதன்சிவன்பேர்
**126

#9
சாதவேதாநெருப்புச்சாத்தவர்குதிரைவீரர்
சேதிமந்தேவர்கோயில்செதும்பேயங்கணமதாகும்
ஞாதமேயறியப்பட்டதென்பர்ஞாதியர்தாயத்தார்
காதிவென்றோனேசாந்தன்காதன்மையுருக்கமாமே
**127

#10
அதிரதர்முழுத்தேர்வீரராதித்தருயர்நிலத்தோர்
எதிர்மறையுடன்பாட்டிற்குமறுதலையிதயநெஞ்சு
நொதுமலரயலோர்பேராநுதுத்தலென்பதுதணித்தல்
பதுமயோனிப்பேர்வேதாப்பாதோதிகடலதாமே
**128

#11
சதுரந்தயானம்வையஞ்சாதுத்துவமேலாந்தன்மை
சுதந்திரியந்தன்னிட்டஞ்சுதிக்கியானஞ்சுருதிவித்தை
நிதிக்கிழவன்பேர்சோமனீதிஞ்சனியாயசாஸ்திரி
பதகரென்பதுமாதங்கர்பாதோதமேகமாமே
**129

#12
பாதசனேவேளாளன் பத்திராசிரயஞ்சாந்தம்
பீதகாரகமேவேங்கைபீததுண்டம்பொன்வாய்ப்புள்
போதைமூதறிவேயென்பர்போத்திரியேகுரோட்டம்
மாதவர்முனிவர்மாதிவட்டமாயோடலாமே
**130

#13
மாதுருதானீன்றாள்மத்தியவிருத்தப்பேர்நாபி
மீதுரைபலகாற்பேசன்மீதூர்தலேநெருங்கல்
யாதசாம்பதிநீர்வேந்தன்யாதவம்பசுக்கூட்டப்பேர்
வாதரங்கப்பேர்போதிவாதனைவருத்தமாமே
**131

#14
மதுகாரிதேனீயாகுமதூலகமினிமைகாட்டும்
பொதுவியேயிடைச்சிபூதகிருதுபுத்தேளிர்வேந்தன்
மிதலைகொப்பூழேமித்தியோத்தரம்பொய்விடைக்காம்
விதவையேகைமையென்பவேதினமீர்வாளாமே
**132

#15
அதிமித்திரன்காதலன்பேராதுவஞ்சொல்விளம்பி
பிதிர்பதியெருமையூர்திபீதகந்தங்கிருட்டி
புதசனனறிஞனாமம்புதல்வனேசிறுவனென்ப
மதுசூதனன்முராரிமதாவளம் வேழமாமே
**133

#16
மாதரியேசாமுண்டிமதிவல்லோரேயமைச்சர்
மீதுமேலென்பமேதாவியரறிஞர்கள்பேர்மேவும்
வாதானுவாதங்கேள்வியுத்தரம்வதுகையில்லாள்
பூதவாசஞ்சரீரம்பூதாரங்கேழலாமே
**134

#17
சிதிகண்டனீசன்சித்திரகுத்தனேயமன்கணக்கன்
கதிர்நாளுத்தரமேகத்துருத்துவமாளுகைநடத்தல்
விதவளமசைவேவித்தியார்த்தியேமாணாக்கன்பேர்
மதவிருந்தங்கரேணுமதுதூதமாமரப்பேர்
**135

#18
பதத்திரஞ்சிறகேபாத்திரீரங்காணிக்கைபன்னும்
பொதுத்தலேதுளைத்தல்போதாப்பெருநாரைப்பொருளதாகும்
திதிட்சயமமாவாசைக்காஞ்சிசிதாபாசன்சீவனென்ப
சதக்கிரதந்தடித்துச்சதிரிசமுவமையாமே
**136

#19
சதித்துவங்கற்பினைத்தானுடைமையேசதாரமேறு
முதுக்குறைவுச்சொலேபேரறிவுமோதனமேமுத்தம்
சுதர்த்தனங்களகண்டஞ்சோத்திரஞ்செவியென்றே சொல்லும்
திதிட்சையேபொறுமைசித்திரபுச்சகஞ்சிகண்டியாமே
**137

#20
பிதிர்மேதமேசிராத்தம்பிதிரமென்பதுவிண்ணேறு
விதுடனேகற்றவன்வித்தியோதமானம்பிரகாசம்
அதிகாந்தமேசெவ்வானமதாதிருவேயுலோபி
உதிதமேசொல்லலுத்திட்டங்குறிப்பென்பநூலோர்
**138

#21
தௌதமென்பதுவெண்டாதுதைதலேயலங்கரித்தல்
பௌதிகம்பூதியத்துக்கடுத்ததுபௌத்தர்புத்தர்
யௌதகஞ்சீதனப்பேரியாதுதானவரரக்கர்
சௌதாமினிச்சொல்சம்பைசைத்துவஞ்செய்தலாமே
**139

#22
புதல்விதான்மகளே பூதகிருதாயிபுலோமசைக்காம்
பிதரமே பிழத்தல் பீதாம்பரஞ்செம்பொனாடையின்பேர்
பதடியேபத்ரேபத்திரரேணுகீழ்த்திசையினால்வாய்
பொதுவரேயாயிடையர்புத்திரமார்க்கமுங்கிரியையாமே
**140

#23
பைதிரநாடுபாதசாபலியம்முதைத்தல்
ஐதிகம்பிரமாணத்தொன்றேயதவம்பின்பென்பர்
தைதமங்குலிநுனிக்காந்தாத்துவனுபகாரிப்பேர்
நைதிகைமுல்லைவைதரணியமனகர்நதிக்கே
**141

#24
கைதவன்கூடற்கோமான்கா தகன்கொலைசெய்வோனாம்
மைதிராவருணிகும்பயோனிமத்திரஞ்சந்தோஷம்
வைதேயமறிவின்மைப்பேர்வைதேகிராமன்றேவி
சைதியமுகங்கரண்டஞ்சைதிதஞ்சூரலாமே
**142

#25
சதக்கிருதமார்கோமான்சததளமேசரோசம்
மதுக்கிரமந்தேன்கூடுமதுவீசமாதுளுங்கம்
முதைப்புனம்பழங்கொல்லைக்கா மூதிரிதானேமேதி
உதக்கேநல்வடதிசைப்பேருதிரந்தான் செந்நீராமே
**143

#26
அதீதியமாசையின்மையதிதானமீகைகாட்டும்
குதபமேதருப்பைப்புல்லுக்குதரமேகுறும்பொறைக்காம்
சதமகன்வச்சிரபாணிசத்தாரையேமடங்கல்
அதிதிநாளேகரும்பேயாதிரன்பேரியோனாமே
**144

#27
அதோவேகீழத்தியாபகன்மறையோதுவிப்போன்
உதாரத்துவம்பேரீகைத்தன்மையேயுதிரன்செவ்வாய்
சதாபலமேசம்பீரஞ்சதமுனைகுவிசப்பேராம்
பதாகினிபடைதான்பாதசாலமேபதத்தணிப்பேர்
**145

#28
சிதானனேகலுளன்சித்தலயமன்வொடுக்கஞ் செப்பும்
சுதாகிருதேமாலூர்திசூதனமேசட்டித்தல்
சதாபுயஞ்சஞ்சரீகஞ்சதாவர்த்தன்சார்ங்கபாணி
உதீசியுத்தரதிசைக்காமோதுமார்ச்சாலமாமே
**146

#29
உத்தமாங்கப்பேர்சென்னியுதணமேமொட்டம்பாகும்
அத்துவாவிரண்டொன்றாகவிருத்தலாதுவனேயேழை
பத்திரைகேள்வன்வீரபத்திரன்பதவையாறு
முத்தாடல்கொஞ்சுதற்பேர்மூதாளர்முதியோராமே
**147

#30
உத்தமபாத்திரஞ்சற்பாத்திரமுதாரன்றாதா
அத்திபஞ்சரங்கங்காளமத்துவிதம்மொன்றிப்பே
இத்தைமுன்னிலையசைச்சொலேத்தலென்பது பழிச்சல்
பத்திராத்துமசங்கட்கம்பாதரோகணம்போதிப்பேர்
**148

#31
கத்தையேகழுதைகத்தியோதமேகச்சோதந்தான்
குத்திரன்கபடனாகுங்கூதனமறைத்தசொல்லே
சித்தசன்சம்பராரிசித்தாந்தனேயீசானன்
சுத்தாந்தமரசன்றேவிமனைசூதவஞ்சுரும்பே
**149

#32
பாத்தல்பங்கிடுதல்பாதபரித்திருநம்மிதித்தல்
பூத்திரமலையேபூதபலியுச்சிட்டங்கொடுத்தல்
மோத்தையேசெச்சைமூதாவிந்திரகோபமோதும்
நீத்தமென்பதுவேவெள்ளநித்திலமுத்தமாமே
**150

#33
பித்தையாண்மயிரேபீதாம்பரனரவணைச்செல்வன்பேர்
மித்திரலாபநேசத்தேட்டமேமித்தியம்பொய்
வித்துருமின்னல்வேதநீயமேயுபாதியின்மை
தத்திகாரம்மநுத்தந்ததர்முகந்தொடக்கமாமே
**151

#34
சைத்திராதங்குபேரன்றண்டலைதத்தியம்மெய்
தைத்தியாதிதியின்மைந்தர்ததாகதன்சினந்தவிர்ந்தோன்
சைத்திராவலியேசித்திராபர்வஞ்சதோன்றெவ்வன்
தைத்தியாரிப்பேர்மாயன்றதைவுதானெருக்கமாமே
**152

#35
சித்திரகாயம் வேங்கைசிதோதரனளகையாளி
செத்தேசந்தேகஞ்சித்தகாசம்பேரறிவுசெப்பும்
தொத்தனேயடிமைக்காரன்றோதகன்கபடனென்ப
தித்தித்தலினித்தலாகுந்தீத்தலோசனம்பூஞைப்பேர்.
**153

#36
ஓத்திசாயானதந்தானுத்துவாகங்கைப்பற்றல்
யாத்தலேகட்டலாதிவராகனேயச்சுதன்பேர்
பாத்தமேயெல்லாநாட்டுமொழியென்பர் பதரிகோலி
தீத்தகம்பொன்னேதீத்தாங்கஞ்சிகாவளமதாமே
**154

#37
வித்தியமறிவுவேதநாநமேயனுபவித்தல்
கத்திருவம்பாய்மாக்கத்தவியந்தத்துவமதாகும்
குத்தமென்பதிரட்சித்தல்குதுகமேவிருப்பநாமம்
வித்துதல்விதைத்தல்வேதகாரர்பேர்பொருந்தராமே
** தகரவெதுகை முற்றிற்று

@9 நகரவெதுகை
**155

#1
சாநித்தியச்சொறானேசமூகஞ்சாந்தவமேசானு
தீநாற்றமுடையே தீந்திரியமறிகருவிசெப்பும்
பாநேமியேபதங்கன்பாந்தலென்பது பதுங்கல்
மாநடன்சிவனேமந்தாகம்புகழ்நாமமாமே
**156

#2
அந்தணர்வாக்கு வேதமந்தராளந்நடுப்பேர்
கந்தமூலங்கிழங்குகந்தர்ப்பன்சம்பராரி
இந்திரையே சீதேவியிந்துருபெருச்சாளிக்காம்
சிந்தைகூரியனேபுந்திசிந்தித்தனினைத்தலாமே
**157

#3
சுந்தரவல்லிவள்ளிநாயகி சுந்தரஞ்சீர்
சந்தற்பந்தருணஞ்சந்தனாசலமலையஞ்சாற்றும்
தந்தசமிருபிறப்புத்தாந்திரிகன்னூல்வல்லோன்
பந்தயித்துவமேயாத்தல் பந்துரமபிராமப்பேர்
**158

#4
மந்தமாயானைமந்தமாருதமிளந்தென்றற்காம்
அந்தரியாகமுட்பூசனையேயந்தியர்கனிட்டர்
இந்திரைகேள்வன்மாயனிந்திரவாசநெய்தல்
சுந்தவாகன்காற்றாகுங்கந்தித்தல்கமழ்தலாமே
**159

#5
உந்திபூத்தோன்முராரியுந்தையுன்றந்தையென்ப
அந்தளங்கவசமந்தர்க்கரணமுட்கருவியாகும்
இந்திரனாளே சேட்டையிந்திரத்திசைகிழக்குச்
செந்திருவேசீதேவி செந்தாது செம்பொனாமே
**160

#6
தந்திரபாலன் சேனாபதிதந்தசூகம்பாம்பே
அந்தியமுடிவேயந்தப்புரமன்னன்றேவியில்லம்
சந்தனுமைந்தன்றெய்வவிரதன்சந்திரகிமஞ்ஞை
அந்திவண்ணன்கங்காளனந்திரன்வேடனாமே
**161

#7
அந்திரங்குடரேயந்தரீட்சமாகாயமாகும்
தந்தியினுரியோனீசன்றந்தையேயப்பனாமம்
செந்தமிழ்நாடு பாண்டிநாடுசெந்தீவண்ணன்சேய்
நந்தனவனம்பூந்தோட்டநந்தனிபுதல்வியாமே
**162

#8
நந்தரேமுல்லைமாக்கணாந்தகநவிரமாகும்
தந்தவத்திரனேசம்புதந்துரைபாயிரப்பேர்
அந்திகாசிரயமேதாவரமந்தரீபந்தீவே
இந்துலோகம்வெண்டாதேயிந்தரியிராகுவாமே
**163

#9
மாந்திதான்சூதமேமந்தநவநீதமாகும்
வாந்தரதஞ்சுவாமந்தினிதயிர்கடைதாழிக்காம்
காந்துகமேவெண்காந்தள்கந்தமாதிருவே பூமி
பாந்தனேவழிச்செல்வோனாம்பந்தகங்கட்டின்பேரே
**164

#10
மந்தூங்குதிரைப்பந்திமந்திரதன்பணிக்கன்
அந்ததமசமேமிக்கவிருளந்தரேணமத்தி
மந்தாட்சநாணமாகுமந்தானமத்தேயென்ப
வந்தியைமலடிவந்துமாருதப்பெயராகும்மே
**165

#11
சாந்தகமிருதுசாந்தராயனமதியின்வீதி
ஆந்திகையக்காளேயந்தரிலயந்துரியாதீதம்
வேந்துதானே பூபாலன்விநாசகமழிப்பினாமம்
பூந்தோட்டமேயாராமம்பூநாதம்வெடியுப்பாமே
** நகரவெதுகை முற்றிற்று

@10 பகரவெதுகை
**166

#1
அபரசன்பின்னோனேயாபணியமேயங்காடிப்பேர்
உபகேசிமலைமடந்தையுபசிருட்டம்புணர்ச்சி
கபடனேவஞ்சகன்காபாலமேசிவனிருத்தம்
அபிநயர்கண்ணுளாளரபிராமமழகின்பேரே
**167

#2
அபவருக்கப்பேர் முத்தியபரதிதாமதித்தல்
உபரதிவெறுத்துத்தள்ளலுபகசிதஞ்சிரிப்புக்
குபினிகொக்கரையேகோபிகாஸ்திரியேகுடத்தி
அபிசரன்றானே பாங்கனபிடேகந்திருமுழுக்கே
**168

#3
சுபக்கமேபொருளிருக்கும் பக்கமேதுப்பகந் நெய்
அபத்தியம்பிள்ளையாபத்தம்பிரதிட்டையாகும்
உபக்கிரோசப்பேரேநிந்தனையுபமிதியேயொப்பு
விபக்கமேபகைவீபற்சுவிசயன்றநாமமாமே
**169

#4
அபிலாபம்பேச்சேயப்பிரமாதங்கமரியின்யானை
இப்பாலகன்போரேயாதோரணனிபங்கமாழை
விபகாரம்வியவகாரம்வீபத்தேயுடுவின்வேந்தன்
அபகாதங்கொல்லலேயப்பிரபுட்பமமுதமாமே
**170

#5
ஆபதோத்தாரணன்கேத்திரபாலனபகமாய்வு
கோபநீயப்போற்றங்கோபுரநகரின்வாயில்
வாபீகஞ்சாதகப்புள்வபிலனேதந்தையென்ப
வீபணியேயங்காடிவிபுலைபூவலயமாமே
**171

#6
அபிசாபனஞ்சபித்தலபூபமேயப்பவர்க்கம்
விபசாயம்பயிர்விபாசைபிரகாசநாமம்விள்ளும்
கபமேகோழைப்பேரேகாப்பியன்புகர்நாமங்காட்டும்
உபபீடனம்வருத்தமுபமலமுள்ளின்மாசே
**172

#7
கபடநாடகனேவிண்டுகபோலமென்பதுகதுப்பு
அபவிருத்திப்பேர்தேய்வாமப்பியாசம்பரீட்சை
நிபடிதமேவாசித்தனிபத்தியைசமர்க்களந்தான்
அபவருத்தம்மேதேய்த்தலபகுண்டனஞ்சுற்றற்பேர்
**173

#8
அபமானமேதுற்கீர்த்தியபரிசரப்பேர்தூரம்
உபராவமொளியுபாசிரயமடைக்கலமென்றோதும்
அபிகாதிசத்துருப்பேரபிகிதத்துவமேமேற்கோள்
உபவீதம்பூணூலென்பருபாசயமுறக்கமாமே
**174

#9
அபயாத்தமச்சந்தீரவமைக்குங்கையபசங்கங்கால்
உபகாசநிந்தைமூரலுபரசனாமந்தம்பி
சுபிஷமேமிகுதியென்பசுபன்னகேதுப்பேர்மாயோன்
தபனேமார்த்தாண்டனா குந்தாபியம்வைத்தலாமே
**175

#10
தாபதமுனிவர்வாசந்தபுதலேகெடுதலென்ப
தீபிகைதானேதீபந்தீப்பியமேசுவாலை
கோபணையொடிசிலேகோபத்திரங்கஞ்சநூலாம்
கூபரமுழங்கைகூபங்கூவலென்றறையலாமே
**176

#11
கோபிதாரங்குராக்கூபரங்கமேமயிர்ப்பொடிப்பு
ஞாபிதமறிவித்தற்காநபுஞ்சகன்றானேசண்டன்
தூபரங்கொம்பிலாதவிலங்குதூபப்பேர்தூமம்
பாபமூர்த்திகளேவேடர்பாபத்திவேட்டமாமே
**177

#12
சபலத்துவப்பேரேகாரியசித்திசபாஞ்சேன்மீன்
அபசவ்வியந்தான்வாமமபிதமென்பதிரட்சித்தல்
உபரட்சணன்வாய்காப்போனுபஞ்ஞையேவாலஞானம்
விபினப்பேரேகாந்தாரம் விபாதனமழித்தலாமே
**178

#13
அபயரேபடைவீரர்க்காமபலாடிகைப்பேர்தாகம்
நிபிடமென்பதுநெருக்கநிபாடையே படித்தலென்ப
விபசியமறிவினாமம்விபச்சித்தென்பதுவிற்பன்னன்
உபலிங்கமேயுற்பாதமுபலே பமெழுகுதற்பேர்
**179

#14
உபரசங்கடனுரைக்காமுபராசனிளையமன்னன்
அபிகதந்தானேகிட்டலபிசந்தாபம்மேயுத்தம்
விபதையென்பதுநிரப்புவிபாதமேயுதயகாலம்
அபிசவங்கஞ்சியப்பியவகாரமெல்லுதற்பேர்
**180

#15
மாபலன்றானேவங்கூழ்மாபத்தியன்மாரன்பேர்
ஆபனிகன்கிராதனப்பீட்டிதமேதுதித்தல்
தீபகம்பந்தீபத்தண்டேதீபவதியேயோணம்
வேபனநாமமுட்குவிபஞ்சிகோடவதியாமே
**181

#16
சிபித்துவமுடைத்தலாகுஞ்சிப்பிரந்தானேயற்பம்
கெபத்தமேகிரணமேகெப்பிதமேயொல்லாமைகாட்டும்
அபித்தியையிச்சையப்பியசூயகனழுக்காறுள்ளோன்
அபக்கிரோசப்பேரெள்ளலபிடங்கஞ்சாபமாமே
**182

#17
உபயத்தமேசிலேடையுபசதனச்சொலேதில்
அபிநிரியாணந்தானையெழுச்சியாபதமாபத்தே
உபகிருந்துணைக்காம்யூபத்தம்பம்வேள்ளித்தூண்
அபிமந்திரஞ்செபித்தலபியதஞ்சொல்லலாமே
**183

#18
அபூருவம்புதுமையேயாபீரனேயான்வல்லோனாம்
நிபாகமென்பதுசமைத்தனிபாடமேபடித்தலென்ப
அபாசிரயந்தான்பந்தரபாசீனமேயவாசி
சபாநாதனேயீசானன்சபடமேவிரித்தகைப்பேர்
**184

#19
விபரசமேபந்தமோசனம்விபாவியஞ்சிந்தித்தல்
பிபீலிகையெறும்புதான்பையீலமுமப்பொருட்டே
அபானமேபாயுவாமாப்பிரச்சனஞ்சரிநயப்பேர்
கபாலமேவெண்டலைக்கேகபித்தமும்வெள்ளிலாமே
**185

#20
உபாஞ்சனமெழுகலேயுப்பரிகைமேன்மாடமோதும்
அபரம்பதிகடலேயப்பியாகதனதிதியாகும்
உபேந்திரனுந்திபூத்தோனுபாசிதமேவணக்கம்
அபரங்ககமேகடைக்கணபாரணையுண்ணாமைப்பேர்
**186

#21
ஆபாலிபேனேயாப்பமணிகும்பவிராசியாகும்
கோபாலரிடையர் கோபாயிதமிரட்சித்தல்கொள்ளும்
ஆபாடநூன்முகப்பேரப்பிதமேசீமூதம்
கோபீதந் தூயதானங்கொப்பமும்பயம்பாகும்மே
**187

#22
அப்பியமிதமேதுன்பமப்பிரகிருட்டங்காக்கை
சுப்பிரமணியன் செவ்வேள்சு பகரனீகையாளன்
விப்பிரர்வேள்வியாளர்வீபுதைத்ததுவமேயென்ப
அப்பிரசாதைவந்தியபிலாசம்விருப்பமாமே
** பகரவெதுகை முற்றிற்று.

@11 மகரவெதுகை
**188

#1
அமரபாதிருவலாரியமராசயங்கருப்பை
இமகரனேகளங்கனிமவான்வேதண்டராசன்
முமுடமுற்றத்துறத்தன்மும்மீமனன்பதுபேராளன்
யமியெனுங்கிளவிநீத்தோன்யாமினியந்தெற்காமே
**189

#2
குமரங்கொம்பிலாவிலங்குகோமகளேகோமாட்டி
அமலகமலங்கோமூத்திரமமரேசன்வச்சிரபாணி
உமணரேயுப்பமைப்போருமாகுருவிமயமாகும்
அமிதமேயளவின்மைக்கேயமேத்தியமசுத்தமாமே
**190

#3
அமுணங்கமடக்கமின்மையாகுமேயமமேநோயாம்
உமைகாநதியேகங்கையோமானேகாமரூபி
அமையமென்பதுவேகாலம்மூர்த்தமேயுருவமின்மை
சமரம்போரேசம்பீரஞ்சதாபலநாமமாமே
**191

#4
நமசமேயிணக்கநாமகரணமேநாமம்வைத்தல்
சமுருதமதிகமேதம்பதிதிரிபுருடர்தாமே
சுமனசமலரேசோமபானமா துவங்குடித்தல்
சமதளங்கூட்டமேசம்பிரகாரஞ்சமரமாமே
**192

#5
காமித்தலேவிரும்பல்காமரூபிச்சொலோந்தி
நேமிப்புள்கோகமென்ப நேமகநியமமாகும்
பூமித்திரம்பொருப்புப்பூமிசம்பவையேசீதை
ஈமத்தாடிச்சொனீலகண்டனிமிடுகாடாமே
**193

#6
அமராபகைச்சொல்வானநதியமிசகமேயல்கல்
கமலாசனன்விதாதாக்காமுறலாசைகொள்ளல்
சமலாம்பம்பூசுதற்காஞ்சம்வேதமனுபவித்தல்
அமிதாவல்காதலித்தலாமரிவசனமாமே
**194

#7
பாமரமறிவின்மைக்காம்பௌமனேகுருதிவண்ணன்
பூமிசநரகம் பூமிகொழுநனேயுந்திபூத்தோன்
மாமிசதாரியூன்றின்போனேமாமணிமாணிக்கம்
யாமியன்கும்பயோனியாமினிகங்குலாமே
**195

#8
அமிசனமேபிரித்தலமாநசியம்முபாதி
இமிலெருத்தின்முரிப்பேயிமாலயமிமயநாகம்
கமலயோனிப்பேர்வேதாக்கமலாலயந்தானாரூர்
விமதனேபகைவனென்பவிமூட்சஞ்ஞமறிவின்மைப்பேர்
**196

#9
ஐமுகனேமாதேவனமிசாமம்வேதாவாவி
கைமாறுபிரதிவேளாண்மைப்பெயர்கைமாயானை
சைமினிநகரேகூற்றுலோகமேசௌமன்புந்தி
மைம்மாவேவராகநாமமைமுகன்கள்வனாமே
**197

#10
கோமலகப்பேர்கஞ்சநூலேகோமாயுசம்பு
சாமளம் பச்சைசம்பிரசாதநம்பிக்கைசாற்றும்
தாமணிதானேதாம்புதாம்பிராட்சன்குயிற்பேர்
கோமயமாப்பிநாமங்கோமாட்டிகுரத்தியாமே
**198

#11
அமுதுறைசம்பீரத்தின்கனியமராரேயண்டார்
கமலைபாற்கடற்பிறந்தாள்கமடமேயுறுப்படக்கி
தமனகமருக்கொழுந்தேதமிசிரங்குறைவேயென்ப
ஞிமிறுதான்சஞ்சரீகஞெமுங்கலுமழுந்தலாமே
**199

#12
காமபாலன்பனந்தாமன்காமதகனனீசன்
சாமரீகரஞ்செந்தாது சம்மானனப்பேர்தாழ்தல்
தூமயோனிச்சொல்மங்குறுமிலமேபேரொலிக்காம்
வாமலுரம்வனமீகம்வமனந்துப்புரவாக்கற்பேர்
**200

#13
பீமாமேயுத்தம்பெம்மான்பெருமானேயென்ப
நாமடந்தைச்சொல்வாணிநாமதேயந்தானாமம்
ஆமிரேடணமேகூறியதுகூறலாமாகாட்டா
காமகாண்டம்மதன்வில்கம்பித்தனடுங்கலாமே.
**201

#14
தமரகமுடுக்கையேதம்மிலமயிர் முடிப்பேர்சாற்றும்
திமிசுதான் பிரசாரப் பேர்திமிராரியண்டயோனி
நமுசிசூதனன்வலாரிநாமசேடம்மிறப்பே
அமுரியேசிறுநீரம்போதரமுகினாமமாமே
**202

#15
கோமலதைச்சொன்மென்மைகோம்பிசாயானதந்தான்
தாமநிதிப்பேர்வெய்யோன்றாம்பிரஞ்செம்பேயென்ப
தோமமே படை துமாகாரன் கருமான்பேர்தோற்றும்
நீமமென்கிளவிகாந்திநிமலமேயழுக்கின்மைப்பேர்
**203

#16
கமலக்கண்ணன்சங்கேந்திகமித்தலென்பதுபொறுத்தல்
அமைவுச்சொல்லே அடக்கம் அமுத்தியே இட்டமின்மை
குமரிச்சேர்ப்பன்பேர்மாறன்கூமமேநீர்நிலைக்காம்
சிமிலப்பேரேபொருப்புத்தெம்முனைபகைமுகப்பேர்
**204

#17
அமனிதான்றெருவேயம்புராசியேயளக்கரென்ப
சமதமேபொறுமைசம்வற்சரமாண்டாக்குவயமாகும்
சிமிகுடுமிப்பேர்சீமங்கலிநாவிதன்பேர்செப்பும்
சமவற்சிதென்றிசைச்கோன்சமக்கிரமெல்லாமாமே
**205

#18
சமிட்சேபமேசுருக்கஞ்சாமீகரம்வெறுக்கை
அமுத்தங்கைப்படையேயம்புநிதிவேலாவலயமாகும்
சமத்தாவமியாகதோத்திரஞ்சமிதரென்பதுபூதங்கள்
அமைச்சர்மந்திரிகளேயம்பாவணஞ்சாபமாமே
**206

#19
அமுதுசெய்தற்பேருண்டலம்மிலிகைச்சொல்சிந்தம்
சமகமேசமாதானந்தான்சமீரணனே மருத்துத்
தமனமேமருக்கொழுந்துசௌமேசகம்பசும்பொன்
சமதியுத்தம்மேசமவன்னம்வசிகரித்தறானே
**207

#20
சமார்ச்சனந்தானேதூர்த்தல்சம்பதிபாக்கியப்பேர்
விமோட்சனம் விடுதலேவிமலமணிபடிகம் வேண்டும்
சமேதமென்பதுவேகூடியிருத்தலேதமகன்கொல்லன்
சமூர்ச்சனம்பரம்புதற்காஞ்சம்மார்ச்சனம்மூடற்பேர்
**208

#21
தமோபகமேவெளிச்சந்தமனியமேசெந்தாது
சுமாரகமேநினைப்புச்சுமமேபோதென்பர்மேலோர்
உமேசனேகுன்றவில்லியுமாதமேயறிவின்மைப்பேர்
இமையிலேவைனதேயனிமையவர்விபுதராமே
**209

#22
தமோகரனேகுரங்கிதாமிரந்தானேசெம்பு
துமானமாபரணப்பெட்டிதூமகேதனனேவன்னி
உமாபதிநீலகண்டனுமாகட்கமேதருப்பை
சமானரகிதச்சொலேயொப்பின்மைசம்பாளஞ்சேறே
**210

#23
கௌமோதகிச்சொல்விண்டுவின்றண்டுகைம்மீனத்தம்
சௌமேருகங்கல்யாணஞ்சம்யோகமேபுணர்ச்சி
சௌமாரமிளமைசாமானியம்பொதுவென்றேசாற்றும்
கௌமோதங்கார்த்திகைப்பேர்கைமலையானையாமே
**211

#24
அம்பிகைபாகனீசனமரிஷணந்தான்கோபம்
சம்பிரேட்சியமேயாராய்ந்தறிந்ததுசமட்டியெல்லாம்
கெம்பீரித்தல்வீரங்காட்டுதல்சிமிகங்கிளிக்காம்
அம்பணத்திச்சொலவிந்தையம்புசாதங்கஞ்சப்பேர்
**212

#25
வம்பலேதிசைவாமாவர்த்தம்மிடம்புரிவளைக்காம்
விம்புவேகமுகுவேம்பின்றாரோனேமீனவன்பேர்
அம்புலியேகுபேரனமிச்சையேஞானமாகும்
சிம்புளேயெண்காற்புள்ளே சிம்மதமரவின்பேரே
**213

#26
அம்புவாகங்கொண்மூவம்புரோகிணியம்புயப்பேர்
சம்பன்னங்குறைவிலாமைசமானியம்பொதுவேயாகும்
நிம்பமேபிசுமந்தந்தானிமேஷகமேகச்சோதம்
அம்புதியேயளக்காமரத்துவமழியாமைப்பேர்
**மகரவெதுகை முற்றிற்று

@12 யகரவெதுகை
**214

#1
அயத்தினமுயற்சியின்மையயமேதமோரியாகம்
சயிக்கமேமென்மைதான்சாயானதஞ்சரடமென்ப
வியட்டிரூபப்பேர்தூலரூபமேவியனேபீடு
நியக்காணப்பேர்நிந்தைப்படுத்தலேநியக்கிமானே
**215

#2
ஐயவிகடுகுதானேயாயிரங்கதிரோன்சண்டன்
கையடையடைக்கலப்பேர்கயமுனியானைக்கன்று
மையமேநடுமையத்தன்மயங்குதனாமமென்பர்
வையாளிவீதிசெண்டுவெளிவயவரிபுவிப்பேர்
**216

#3
ஆயமுக்கரவன் சோமனயவாகனன்றீத்தெய்வம்
ஈயுவனிராவணன்பேரியற்றுதறானே செய்தல்
சாயனஞ்சொல்விளம்பிசயனார்த்தமேபடுக்கை
ஞாயிலேமதிலுறுப்புநயனங்கண்ணாமமாமே
**217

#4
தீயளிகாயேதீயந்தித்திப்பினாமமாகும்
தோயதிபாராவாரந்தோயமென்பதுகீலாலம்
பாயன்மக்கட்படுக்கைபயோகனமாலங்கட்டி
மாயவன்றிருமான்மாயோள்மகடூஉவென்றறையலாமே
**218

#5
துயிலெடைதுயிலெழுப்பறுயரியேயாழ்நரம்பு
நயநிலைப்படலமேநாடகநயப்புணர்வுகண்மை
பெயலைதான்மழைபேயோடாடிப்பெயர்பினாகபாணி
அயிணமான்றோலயிர்ப்பேயையமென்றறையலாமே
**219

#6
உயர்நிலைதேவலோகமுயலுயிர்வாழ்தலாகும்
அயுகலந்தனிமையேயாயிரங்கண்ணனமரராசன்
சயகமேமலரரும்புசயந்தனமேவிமானம்
மயிடமேயெருமைதான்மாயாதம்வன்மீனாகும்மே
**220

#7
வயப்புலிமிருகராசன்வாயசமேயரிட்டம்
வியத்திகைபெருமைகாட்டும் வியந்தரமேபிசாசம்
அயிரக்கடுதோட்டியயாயச்சியாபொதுவியாபேராகும்
இயற்றிதானேமுயற்சியியக்கர்கந்தருவராமே
**221

#8
அயனிதானன்னமாயரான்வல்லோர்நாமமாகும்
குயவரிகொடுஞ்சார்த்தூலங்குய்யதீபகங்கச்சோதம்
நியுதமேயோரிலட்சநியாதனமேவிழுத்தல்
முயலின்கூடம்புலிக்காமுயங்கலுந்தழுவலாமே
**222

#9
மயுராசனேகுபேரன்மாயோனாளேயுலக்கை
வயவாசையேவியர்த்தம்வந்திடும்பயனின்மைக்கே
அயிறலேயுண்டலாயுள்வேதியர்மருத்துவர்க்காம்
கயிலையாளிச்சொலீசன்கயவர்கீழ்மக்களாமே
**223

#10
அயிரமேகண்டசர்க்கரைப்பெயராயிதாயே
வயவரேபடைவீரர்க்காம்வயானமேபறவைநாமம்
நயனோபாந்தங்கடைக்கணயிட்டிகநியமநிட்டை
புயகமேயரவுபேய்த்தேர்புகலுவர்கானலென்றே
****224

#11
தியுதமேகிரணஞ்செப்புந்தியாத்துவமேதியானம்
குயவுதானேகொடிஞ்சிகுய்யபாஷிதமேமந்திரம்
கியமதமேயிளைப்புக்கேயனேபாடுவோன்பேர்
அயவென்பதகலமேயையானனஞ்சிங்கமாமே
**225

#12
கயிங்கரியப்போவேலைகயிரமேகணவீரந்தான்
சுயம்பாகமேசமைத்தறுயுலியேதொய்யிலென்ப
பயந்தாளேயம்மனைக்காம்பயோகட மேதுவீபம்
இயந்தையென்பதுநவிர்ப்பேரியல் பூவேவில்வமாமே
**226

#13
துயிலனித்திரைசெய்தற்பேர்துய்யமேதூய்மைதோற்றும்
தியுகமேபறவைதெய்வீகந்தெய்வத்தன்மை செப்பும்
உயவரே வருந்தினர்க்காமுயவறானேநினைத்தல்
பயனிலாள்கணிகைநாமம்பாயிகன்காலாளாமே
**227

#14
பயோதமென்பதுசீ மூதம்பாயுருவேகுதந்தான்
தியாம்பதியானமாவாகுந்தியுகாரிவாய்சப்பேர்
வியாபித்தனிறைந்திருத்தல்வியாபாதனங்கொல்லற்பேர்
வியாதானம்வாயில் வேயர்வேவுகாரர்க்காகும்மே
**228

#15
அயானமேசுபாபமேயையானனனேயீசானன்
உயாவலேயுசாவனாமமுயர்திணையுயர்குலப்பேர்
குயாவேதான்கன்னிகாரங்கொய்யானென்பதுமுக்கூட்டு
மயூரமென்கிளவிமஞ்ஞைவயிரூதுகொம்பாகும்மே
**229

#16
மயானமேயீமந்தான்மாயாதேவிசுதனேபுத்தன்
வயானன்பாரத்துவாசம்வயினமென்பதுசகுந்தம்
கியானமேஞானநாமங்கேயூரமங்கதப்பேர்
பயோததியேயம்போதிபயாபகனரசனாமே
**230

#17
அயோசனம்பிரிவினைப்பேரயுதம்பத்தாயிரந்தான்
சயாபாகம் வெற்றிசாய்கைபன்னசாலைப்பேர்சாற்றும்
தயாலுவேதயாளன்றாயத்தாரேதங்குடியிற்சுற்றம்
சுயோதனனேவணங்காமுடியினன்சுயோகிகள்ளே
**231

#18
நெய்யரியேபன்னாடை நெய்த்தோரென்பதுபுலானீர்
தெய்வமந்திரிவியாழன்றேய்வைதான் வாசச்சாந்து
செய்யுளேகவிதையே செய்யாடிருமகள்பேர்செப்பும்
எய்யாமையறியாமைக்காமெய்ப்பாடிவேடரூரே
** யகரவெதுகை முற்றிற்று

@13 ரகரவெதுகை
**232

#1
அரவணிந்தோனேயீசனாரணன்வாணிகேள்வன்
இரணியஞ்சாதரூபமிராவணியிந்திரசித்துக்
கரவடர்புரையோர்நாமங்கரவீரமேகவீரம்
கிருபணனேயுலோபன்கீரணநுகர்தலாமே
**233

#2
கேரளன்வஞ்சிவேந்தன்கிருபீடபாலநேமி
கோரனேநீலகண்டன்குரைமுகனேசுணங்கன்
ஆரிதந்தருமநூலேயாராதியஞ்சமீபம்
ஈருளென்பதுவேயீரலிரசிகன்றூர்த்தனாமே
**234

#3
உரிவைதோலேயுரோமாஞ்சிதமுரோமப்பொடிப்புக்
கிரிசையேமலைமடந்தைகிருதாந்தனெருமையூர்தி
சருவிதமேபட்சித்தல்சராகைதான்வட்டினாமம்
அரமியநிலாமுற்றப்பேரரிச்சனைபூசையாமே
**235

#4
ஆரகமேயிரத்தமரனிடத்தவள் பவானி
காரகனேசெய்வோனாங்கராசலமேமாதங்கம்
ஊரனேமகிழ்நனாமமூர்த்துவபாதஞ்சிம்புள்
சாரசியே சீதேவிசாருகன்கொலைசெய்வோனே
**236

#5
சிருதரமேபுயங்கம்சீருணநாமஞ்செம்பு
சுரகுருவேவியாழன்சூரியைபுதுமணப்பெண்
நரலுதலேயொலித்தனாரணியம் பணத்தி
பரகதியபவருக்கம்பரசுதறுதித்தலாமே
**237

#6
பிரகடம் வெளிப்படுத்தல்பிரதனேயீகையாளன்
அரிசனங்காஞ்சனிக்காமரிதகியேகடுக்காய்
எரிவனஞ்சுடுகாடென்பரோண்டமாமணக்கே
கிரமுகந்தானே பூக்கங்கிருபீடயோனிதீயே
**238

#7
கிரஞ்சனமேமுருங்கைகிரிட்டணமேயுறைத்தல்
அரிந்தமன்சங்கமேந்தியரேசிகமேயரம்பை
இரஞ்சகம்பிரியநாமமிருபிறப்பாளர் பார்ப்பார்
தரங்கிணிதானேயுந்திதாரணிபூமியாமே
**239

#8
கருட கேதன்னேமாயன்கருமமூலந்தருப்பை
கிருதவேசப்பேர்வேய்தல்கிரிபயமேவிருக்கம்
தரிசயாமினியமாவாசைக்கங்குல்சாரகந்தேன்
பரிசிலாளர்ச்சொறீனர்பரிபாவநிந்தையாமே
**240

#9
கிருத்திகைகார்த்திகைக்காங்கிருதார்த்தப்பேரேபேறு
குரத்தியென்பதுகோமாட்டிகுரோசங்கூப்பிடுதூரப்பேர்
அரத்தனங்காரகன்றானருப்பலமேயனிச்சம்
இரத்தகமேசெவ்வாடையிராத்திரமிரசனிப்பேர்
**241

#10
கரிதானேயச்சமுள்ளோன்காரணிமலைமடந்தை
சரதமேசத்தியந்தான்சருவசாதகமேவேங்கை
புருடவாகனனேசோமன்பூரணைகேள்வனையன்
பிரகசமுருக்கனாமம்பிரகண்டமுன்புயப்பேர்
**242

#11
பரிணாமம்வேறுபாடுபரிவீதமயன்சிலைக்காம்
பிரமோதமேமாராயம்பிரதிதாரணமேயுத்தம்
கரசாகயங்குலிப்பேர்கரேணுபெண்யானையென்ப
கிருபாணமேதூவத்திகிரிகித்தல்பற்றுதற்பேர்
**243

#12
அருணாக்கிரசன்மாலூர்தியாரதியேயாலாத்தி
கருணாக்கிரசனிரக்கமில்லான்காராவேமேதி
சுரராக்கமேபசும்பொன்சூர்ப்பகைவன்விசாகன்
புருடோத்தமன்வராகன்புரோட்சணந்தெளித்தலாமே
**244

#13
சரபத்திரமம்புக்குப்பிரசருவஞ்ஞனேயனாதி
கெருமத்தமேவிகங்கங்கிரணமாலிச்சொலென்றூழ்
சருவக்கியன்சர்வஞ்ஞன்சாரமேயன்சுணங்கன்
பிரகஸ்தமேவிரித்ததோள்பிருதிவிபூமிப்பேர்
**245

#14
பூரியரேகீழ்மக்கள் புராரியேபூதநாதன்
சீரணனேவிருத்தன்சேரலரே பொருந்தார்
சூரலனேமாறன்பேர்சுராரலரேயரக்கர்
தூரணமேவிதப்புத்தூரிகையெழுதுகோலே
**246

#15
செருக்களம்போர்க்களந்தான்சீர்க்காரமெதிரொலிப்பேர்
பருப்பதமேயடுக்கல்பரோதிதமச்சுறுத்தல்
இரத்திரியித்தியாமேயிரற்றுதலேயொலித்தல்
உருத்திரகணிகைதேவதாசியேயுருமுசெல்லே
**247

#16
மரகதனேகுபேரன்மார்ச்சனமேதுடைத்தல்
முருகியமேகுறிஞ்சிப்பறையேமோருதன்முகத்தல்
மருவலரேபொருந்தார்மாருதமேமருந்து
விரசுதலே நெருங்கல்வீரதைவீரமாமே
**248

#17
அரியயற்கரியோனீசனாரகோரங்கடுக்கை
கரிமுகனைங்கான்காரூகமேகருங்குரங்கு
கிரிசரமலைப்பிறந்தகரிகிரீ பங்கழுத்துச்
சரவணபவன் கடம்பன்சாருலோசனமான்பேரே
**249

#18
பௌரவர்கௌரவர்க்காம்பருவகமேமுழந்தாள்
சௌரிகன்மதுவிற் போனேசாரகந்தப்பேராரம்
கௌரியன்குமரிச்சேர்ப்பன்கார்த்தபத்திரமேயம்பு
சௌரிகமபவருக்கஞ்சாருகங்கொலையின்பேரே
**250

#19
சருவதாவேயெப்போழ்தூஞ்சார்ங்கமாயன்கோதண்டம்
பிரதிசீனப்போமேக்குப்பிரகாபணந்துரத்தல்
மருமராஞ்சந்தமாலமாதியினொலிமாரன்வேள்
மிருகராசன்மடங்கலமிருதையேபிருதிவிப்பேர்
**251

#20
ஆரகேரங்கேயூரமரத்திசெவ்வல்லியாகும்
கோரவாரம்படீரங்கோரம்பரேவேழம்பர்
மாரகாகளமேகாளகண்டமேமருமமார்பே
நாரிகேளந்தெங்காமேநரபாலனரசன்பேரே
**252

#21
பிரபஞ்சனன்மருத்துப்பிரரோகமேயலங்கல்
பரிகம்பமென்சொல்வீமம்பரபுட்டமேபிகப்பேர்
அரியந்தடாரியாரலம்பகையாகுமென்ப
உருகம் பிறந்தவந்தானொருவுதனீங்கலாமே
**253

#22
இருவிதானேதினைத்தாளிரணமத்தம்புழைக்கை
சரசுதானேதடாகஞ்சரிதரேசஞ்சரிப்போர்
பொருகுதானேபுழுக்கல்பொருந்தலரேதிருந்தார்
வருடறானேநீவற்காம்வாரிதியளக்கராமே
**254

#23
பிரசினங்கேள்வியாமேபிரமுதிதஞ்சந்தோஷம்
தரியலர்பகைவராமேதருமனாளே முக்கூட்டுத்
திருமரங்கணவமாமேதிருசியத்துவமேபார்வை
பருணிதர்புலவராமே பாரதர்கௌரவர்ப்பேர்
**255

#24
நிரஞ்சனிபார்வதிக்காநேரியன்கோழிவேந்தன்
சுரஞ்சனமேகந்திக்காஞ்சுருவையேநெய்த்துடுப்பு
இரந்திரமேகுழிக்காமிராசீவமம்புயப்பூ
விருந்தனைகுடும்பினிக்காம்விரதயமொளியின்பேரே
**256

#25
சிருதமேநன்மைசேர்ப்பனெய்தலிற்றலைவற்செப்பும்
மரவமேஞாழல்மார்க்கசிரமேமார்கழிமாதந்தான்
வரதையேகன்னிவாரணசிகாசிநாமதேயம்
வெருவலேயஞ்சல்வேரல்வேணுவினாமமாமே
**257

#26
பௌராணிகம்புராணமதம்பரிசிரயங்கூட்டம்
சௌரவமேநற்கந்தஞ்சருப்பமேதந்தசூகம்
பௌரிகனேகுபேரன்பருணயனம்விவாகம்
கௌரிசங்கம்மிரட்டையக்கமேகரபங்கோகே
**258

#27
கரும்பிள்ளையேயரிட்டங்கரிதமச்சப்பேர்காட்டும்
குரங்கமென்பதுசாரங்கங்குருளைம்பாலென்றேகூறும்
வரன்றலேகொழித்தனாமம்வருட்டலேவற்புறுத்தல்
விரிஞ்சனேயன்னவூர்திவிரூபைகூற்றின்பாரிப்பேர்
**259

#28
மருத்துவான்வானோர்கோமான்மாரகமரணந்தானே
அரித்திராபம்பசும்பொனிறமரிகல்லேமேரு
பிரக்கியாதந்தெருட்சிபிரபாதிகப்பேர்மஞ்ஞை
விரத்தனே துறவி நாமம்விருதர்போர்வீரராமே
**260

#29
கருங்கோளேயிராகுகாரன்காரியஞ்செய்வோனென்ப
பரந்தாமனேமுராரிபரபுட்டன்காமதூர்த்தன்
கருந்தாதுதானிரும்புகாரோடருறைகாரர்க்காம்
புரிந்தோரென்பதுவிழைந்தோர்புரஞ்சனியழிவின்பேரே
**261

#30
பொருந்தமேபொருநையாறு புருகூதன்சசிமணாளன்
விருந்தரே புதியவர்க்காம் வெருகமேவாலின்கீழ்தான்
மரந்தமேபூந்தேனென்பமருத்துவர்நாளேவாசி
அரந்தையேயல்லகண்டமரவுகட்செவியின்பேரே
**262

#31
இருந்தையேகரியிரட்டரெட்டியர்நாமதேயம்
உரந்தைதானேயலக்கணுருக்குமமேயருத்தம்
பொருந்தரேவேதகாரர்பொருட்டேயேதென்பர்மேலோர்
திருந்தலர்பகைவராமேதிரப்பியம் பொருளின்பேரே
**263

#32
மரவினையாளர் தச்சர்மார்த்தாண்டனேயருக்கன்
பிரமரமே பிருங்கம்பிரசாகிதங்கவந்தம்
அரணியமேகாந்தாரமரிகரபுத்திரனையன்
பரிசனனேசமீரன்பரிமாணமளவின்பேரே
**264

#33
பிரமிதமறியப்பட்டதேபிருகுடியேபீரு
மரிசிதமேகமித்தல்மருட்ட மேயாம்பிலந்தான்
வரநதிசானவிப்பேர்வருக்கையென்பதுபலாசம்
இரவலர்பரிசிலாளரிரவிநாளிரேவதிப்பேர்
**265

#34
இரதாங்கபாணிமாயனிரதகீலஞ்சுணங்கன்
சருவாந்தரியாமியேகன்சரிலமேகனரசந்தான்
கிரதோடையம்மியாகதோத்திரங்கிருமிகீடம்
நிருமோட்சமேவியோகநேரேடுநாவலாமே
**266

#35
சூரலேவேத்திரப்பேர்சூர்ப்பமேசுளகினாமம்
பாரியைகளத்திரந்தான்பரிமாவென்பதுதுரங்கம்
மீரமேயம்புராசிமிருகமதங்கத்தூரி
சோரமேபட்டிமைக்காந்துரகதங்குதிரையாமே
**267

#36
முரதமேபாஞ்சசன்னியமூர்த்தினியுத்தமாங்கம்
மிரதமேமாசுணந்தான்மிருகதரன்குபேரன்
திரபமேநாண்டிருட்டந்தெளிவெனவுரைப்பர்நூலோர்
அரிகளே பகைவரார்த்திரகமிஞ்சிநாமமாமே
**268

#37
சீரகத்தாமரேசெட்டியர்சிரேயசுவேசீர்த்தி
பாரபத்தியமெனுஞ்சொலதிகாரம்பரையுமைப்பேர்
மேருவில்லிச்சொலீசன்மிருடோத்தியம்மவத்தம்
சேருகப்பெயரேபூவை செருநர்போர்வீரராமே
**269

#38
சிரஞ்சீவியர்க்குநீடுசீவிப்போர்சிரேசு செல்வம்
அருந்துதனெனுஞ்சொலேவேதனைசெய்வோனரட்டர்வேளிர்
கருங்கொலென்பதுகரும்பொன்காரவல்லிச்சொல்பாகல்
நிரந்தரனேயனந்தனிரலொழுங்கென்பர்நூலோர்
**270

#39
பரிபாகிதானேயேற்றபக்குவன்பாரோகம்வாள்
நிரியாணதிசையிறத்தற்றிசைநிரேட்சணமேபார்வை
பிரகோபணம்புரத்தல்பிரசகமிலையுணாமா
இரதாயனிச்சொல் வேசியிரசனியிராத்திரிப்பேர்
**271

#40
சரமமேமுடிவுசர்வசங்காரியுருத்திரன்பேர்
இரகமேயிரவிகாந்தமிருதிராசம்வேனிற்காம்
நிரையமேயந்தகாரநேராரேசத்துருக்கள்
கரவடநாமஞ்சோரங்கருக்காயுமிளங்காயாமே
**272

#41
கிரத்தமேபட்சித்தற்காங்கிரீசனேகாலகாலன்
அரட்ட மேபடுநிலப்பேரரவுநாளாயிலென்ப
இரட்சிதமேபுரத்தலிருஷிகேசன்வராகன்
எரிப்புறநரகமாமேயெருமையூர்திச்சொல்கூற்றே
**273

#42
தரிஞ்சகமன்றிலென்பதரிசித்தறானேகாண்டல்
சிருங்கியென்பதுகாங்கேயஞ்சிரேணமேநெடுநாளின்பேர்
குரண்டமென்பதுவேகொக்குக்குரச்சையேபரிக்குளம்பு
முருங்கலேயழிதனாமமூர்க்கர்கீழ்மக்களாமே
**274

#43
மருத்தெனுங்கிளவிகாற்றுமருதவேந்தன்வலாரி
மிருத்தியமண்ணேயாகும்விரோகமேபொந்தினாமம்
சரப்பமேமயிர்சருக்கமிலம்பகநாமஞ்சாற்றும்
சரித்தெனுஞ்சொல்லேகங்கைசரிபமேசெயலையின்பேர்
**275

#44
தரக்குச்சார்த்தூலமாகுந்தருமவாசரமே பர்வம்
திரக்கமென்பதுகடுக்கைதிரக்காரநிந்தையென்பர்
திருப்பிரமேயாகாரந்திரதயம்பலகாற்கேட்டல்
நார்ச்சொலேமனிதர்பேராநாலையார்கலியாகும்மே
**276

#45
புரிசையேமதில்புரூரம்புருவத்தினாமதேயம்
பிருதகரணம்பகுத் தேயறிதலாம்பிரஞ்ஞமோதி
நிருதரேயிராக்கதர்க்கா நெருநலுமுன்னைநாளே
பரிணமித்தல்லேவேறுபடல்புராதனமும்பண்டே
**277

#46
மரூகமேகவரிமாவேமருண்மாவேவாரணந்தான்
முராரியேவாசுதேவன்முரற்றலேயொலித்தலென்ப
விராகமென்பதுவெறுப்புவிரதரே துறவோர்நாமம்
வராளமேமாசுணந்தான்வரிப்புறமணிலின்பேரே
**278

#47
சிரோருகந்தலைமயிர்க்காஞ்சிரற்புள்ளே சிச்சிலிப்புள்
திராசமேபயந்திராட்சமுந்திரிகைப்பேர் செப்பும்
துராயுதமநீதிதூர்க்கை பூரத்தினாமந்தோற்றும்
திரோகிதமறைவினாமந்திரிட்டைகாணப்படற்பேர்
**279

#48
கரோருகமேநந்தான் கருப்புவில்லிச்சொன்மாரன்
உரோகதி சாரமேயனுராவலேயுலாவலென்ப
குரீஇயெனுங்கிளவி புள்ளே குரணமென்சொன்முயற்சி
பிரீதமேயுவப்பினாமம்பிரசுரமிகுதியாமே
**280

#49
நிராகரணம்மறுத்தனிருபனேமண்டலீகன்
உரோருகமேகுருக்கணோர்கட்புள்ளேயரிட்டம்
பிராதிருவுடன்பிறந்தான்பிராறுதானிறைபுனற்காம்
பராசனமூறுகோளே பரிக்காரமலங்காரப்பேர்
**281

#50
சரோருகந்திருமாலுந்திசரலகமேகவந்தம்
மரீசிகைகான்றானேமருத்துபாலன்சுரேசன்
உரூடமேபகாப்பதப்பேருரீகாரம்வாக்குத்தத்தம்
குரூரமேகொடுமைகோரராசனங்குரோட்டமாமே
**282

#51
குரோதனேயழற்கண்வந்தோன்கூர்த்தமே விளையாட்டின்பேர்
அராலைதானவரைவின்மாதேயரம்பிலமேபாதாளம்
உரோதமேதடையுருத்திராணிபார்ப்பதியினாமம்
கிரீடமென்பதுமுடிக்காங்கிருட்டினாசனமான்றோலே
**283

#52
சுராபகைதேவகங்கைசுரோத்தமனேயாதித்தன்
திரோபவமேமறைப்புத்தீர்க்கவத்திரமேயானை
அராதிசத்துருவரத்தோற்பலமேசெங்குவளையாகும்
கராசனஞ்சித்திரகாயங்கர்த்தபங்கழுதையாமே
**284

#53
இரேபதிகொண்கன்வெள்ளையீரங்கோலியரேவண்ணார்
அராபதமேசாரங்கமரிபுதையிரவுதானே
சராசனமேகோதண்டஞ்சரிற்பதியேயளக்கர்
சுராகரநாளிகோஞ்சூரதைவீரமாமே
**285

#54
சீர்கேடிசிறப்பிலாதாள் சிரமைதானேயிளைப்பே
ஊர்கோளே பரிவேடப்பேருரகாரிவைனதேயன்
ஓர்வேயாராய்வுரூடியிடுகுறிநாமமோதும்
ஏர்பேநல்லெழுச்சிகாட்டுமேராளமிகுதியாமே
**286

#55
சூர்ப்பகன்னம்புழைக்கைசுருதமேசரிதநாட்டும்
ஆர்த்தவஞ்சுமனசந்தானருணவமம்புராசி
ஊர்த்துவகம்மேலேறலுரோபணமேயிறங்கல்
கார்த்திகம்பாகுலப்பேர்கருதலர்பகைவராமே
**287

#56
ஆர்த்திகைதுன்பமாரோபித்தறாபித்தலென்ப
ஊர்ச்சமேபாகுலப்பேருரையாடல்பேசலென்பர்
கார்த்திகேயன்கடம்பன்காருணிகம்மிரக்கம்
கூர்த்திகைபடைக்கலந்தான்குரங்கிசந்திரன் பேராமே
** ரகரவெதுகை முற்றிற்று

@14 லகரவெதுகை
**288

#1
ஆலுநீர்க்குடமலக்கணல்லகண்டப்பேர்செப்பும்
தாலுநாச்சாலபஞ்சிசித்திரப்பாவைசாற்றும்
மாலுதாசனனேகண்குத்திப்பாம்புவலக்காரம்பொய்
காலகாலன்சுபாலிகலையுணர்புலவன்வேளே
**289

#2
புலிக்கொடியோனேசோழன்புலோமசையிந்திராணி
அலத்தகமேசெம்பஞ்சாலிங்கனந்தழுவலாகும்
இலக்கினமேமுகுர்த்தமிலிகுசமேசம்பீரம்
பலுட்டமென்பதுமுடித்தல்பலகறைகவடியாமே
**290

#3
அலங்கலமசைதலாமேயாலகண்டன்மாதேவன்
சிலம்பலேயொலிசேலோதஞ்சந்திரதிலகஞ்செப்பும்
பிலஞ்சுலோபச்சொறானேபிபீலிகைபுலியூர்தில்லை
உலங்குதானசவலொல்லாரொன்னாரென்றோதுநூலே
**291

#4
அலுவீகமேமாலூரமாலகாலம்விடந்தான்
இலவாடமேகுளப்பேரிலக்காரமேகலிங்கம்
ஞெலிகோலினாமமேதீக்கடைகோலேநிலமகன்சேய்
சலதாரையேகலிங்குசலசைசீதேவியாமே
**292

#5
கலதியிந்திரைக்கும்மூத்தாள்கலன்கழிமடந்தைகைமை
வலிமுகமேகுரங்குவலைஞரேநெய்தன்மாக்கள்
திலகடமேபிண்ணாக்குத்தில்லமென்பதுகாந்தாரம்
பலகணிசாளரந்தான்பல்லாண்டுவாழ்த்தின்பேரே
**293

#6
மலையமானேகுடக்கோமாலுந்திவந்தோன்வேதாச்
சலசமேபுண்டரீகஞ்சலபதிபுனல்வேந்தன்பேர்
எலுவனேதோழனெல்லோனென்றூழாக்குவயமென்ப
கலினமேகடிவாளந்தான்காலமீரம்பளிங்கே
**294

#7
இலம்பாட்டோனுறுகணாளனிலிகியேயெழுத்தினாமம்
அலன்றலேசாதலேயாலோனிமகிரணனாகும்
கலிங்குதான்மதகுகாலேகங்கலவைச்சாந்தென்ப
அலங்கையே துளசியல்லகண்டமுமலந்தையாமே
**295

#8
பலுகமேவலிமுகம்பாலைக்கிழத்திச்சொறுற்கை
ஞலவலேகத்தியோதஞாலமேதாலவட்டம்
வலிசமேதூண்டிலேவாலுகமேவெண்மணலினாமம்
விலசனமேவினோதகேளிமேலவர்விண்ணோரே
**296

#9
மூலகந்தப்பேர்வெட்டிவேர்மோலிமுகுடமாகும்
நாலுதறூங்குதற்காநல்குரவே நிரப்புத்
தாலிகமேவிரித்தகைசலசலோசனன்மால்
மாலுகநிம்பமேவாலிகைமணலென்பர்நூலோர்
**297

#10
உலகமுண்டோனேமாயனுலண்டமேகோற்புழுப்பேர்
சலதரனீசன்சாலகடங்கடரிராக்கதர்க்காம்
திலபகந்தூபமென்பசிலோச்சயமேயடுக்கல்
பலசூதனன்சுரேசன்பலாகமேமஞ்சுகப்பேர்
**298

#11
கலவிதானே புணர்ச்சிகலையானத்திச்சொறுற்கை
குலிஞனேகுலமுளோனாங்குலாலனேகும்பகாரன்
சலதமேமுகில்சலாங்குபொய்யாப்புணாமஞ்சாற்றும்
கலுழனாகாசனன்றான்கலைஞர்பண்டிதர்பேராமே
**299

#12
அலிகமேயிலலாடந்தானலலிய மேகலப்பை
சலபிதஞ்சொல்லலேசாலிகைகவசப்பேர்சாற்றும்
குலுமிபாசறையேகூலவதிகுடிஞைப்பேர் கூறும்
விலைமகடானே வேசிமிலைச்சலுமணிதலாமே
**300

#13
சலபமேவிட்டில்சாலமிகுதியின்பொருடரிக்கும்
கலமர்வந்தித்துநிற்போர்கல்லாலமேயிரத்தி
சலநிதியம்புராசிசாலரேநெய்தன்மாக்கள்
இலபித்தம்பேறிலம்போதரனேகதந்தனாமே
**301

#14
துலக்கலென்பதுவிளக்கறுலாதரனேயாதித்தன்
கிலுத்தமென்பதுமணிக்கட்டேகிலீபம்பேடென்ப
இலச்சினைநாமமேமுத்திரையாழியிலேகர்வானோர்
கிலுட்டமேநிறைதலாமேகீலகைகீழின்பேரே
**302

#15
ஞாலறூங்குதனல்கூர்ந்தோனிலம்பாட்டோனாமதேயம்
மால்புகண்ணேணிமல்லநாகமிந்திரன்மாதங்கம்
வாலிசந்தலையணைக்காம்வலாகையென்பதுகுரண்டம்
நீலகண்டம்மயூரநீலவசனன்சனிப்பேர்
**303 

#16
கலாசிமுன்கையினாமங்கலாவதியேகுபேரன்
உலோசனமக்கமேயாலோகனம்பார்வையோதும்
பலாலமென்கிளவிவைக்கோல்பாலிசின்னப்பேர்பீலி
பிலோடமேசுடுதலென்பபுலானீர்புண்ணீரின்பேரே
**304

#17
நிலாமுகியேசகோரநிலாமணிசந்திரகாந்தம்
மலாவகமே பிண்ணாக்குவலாரியேசசிமணாளன்
புலோமசித்தேசுரேசன்புல்லியரேகீழ்மக்கள்
இலாலியே துதியிலீகையீரெனவியம்புநூலே
**305 

#18
குலீனனேகுலமுளோன்கோலாங்கூலமுசுவின்கூற்றே
இலேபிதந்தடவலென்பரெலுநனேகோழிவேந்தன்
உலூதையேசிலந்திதானுல்லோலம்பேராழிவாரம்
சுலோகியேசொல்விளம்பிதுல்லிபமேன்மையாமே
**306

#19
மாலூர்திவைனதேயன்மலரவனன்னவூர்தி
வாலேபமேயிராடம்வாலுவர் பாசகர்க்காம்
காலேகவண்ணநாமங்கலவையேகலாகீழ்மக்கள்
கேலாசமேபளிங்குகிலுசிதம்வறுமையாமே
**307

#20
காலாயுதச்சொல்கோழிகலாநிதிகுமுதநண்பன்
மாலூரமென்சொலேகூவிளைமலைமகளேமாதா
வாலூகமென்சொனஞ்சுமலையக்காலேவசந்தன்
தாலாலமென்சோறானேபழிமொழிசலனன்காற்றே
**308

#21
உல்லியர்கூவநூலோருல்லோசமேமேற்கட்டி
கல்லகமேயடுக்கல்கலையினனேமானேந்தி
சல்லபமேமுட்பன்றிசலியாமையசையாமைக்காம்
பல்லகமேபல்லூகம்பலிபுட்டங்காகமாமே
**309

#22
துல்லமேபேரொலிக்காஞ்சொல்விளம்பிச்சொல்கள்ளே
உல்லரியேதளிர்க்காமுலூகலக்கிளவிதிட்டை
இல்லவள்குடும்பினிக்காமிலகடம்பலகாரந்தான்
வல்லுநரேவல்லோர்க்காம்வல்விலங்கியானையாமே
**310

#23
உல்லியங்கூபமேயுல்லகசனமயிர்ப்பொடிப்புச்
சல்லகண்டங்கபோதஞ்சலதளமச்சுவத்தம்
வில்லவன்கொல்லிவெற்பன்வேலிறையேவிசாகன்
வல்லகிவீணைநாமமாலியமானமாமே
** லகரவெதுகை முற்றிற்று

@15 வகரவெதுகை
**311

#1
அவனியினாமம்பூமியா விரமிடையரூரே
கவினழகேகவைத்தாள்கர்க்கடகப்பேர்காட்டும்
சவனனே வேகிசவ்வியசாசியென்பதுகிரீடி
பவனரனேபவானிபார்ப்பதிநாமந்தானே
**312

#2
உவணனென்பதுமாலூர்தியுவளித்தறூயதாக்கல்
சுவணமென்பதுகாங்கேயஞ்சூவானமடுக்களைக்காம்
பவணையென்பதுசகுந்தம்பாவனத்துவனிசங்கு
மவுனமென்பதுமோனந்தான்மாவும்வலியின்பேரே
**313

#3
விவகாசமேசிரிப்புவிவசுதனேயருக்கன்
அவதாதமேசுவேதமவுணர்தானவரேயாகும்
சிவகாமியேபவானிசீவகரேபௌத்தர்
பவனாசனம்வியாளம்பவியிடியேற்றின்பேரே
**314

#4
தேவரனே கொழுந்தன்றீ விகையேவிளக்கு
நாவிதனேயேனாதிநவநீதகச்சொறுப்பே
ஆவிடைசத்திரூபமவகதியறிவேயென்ப
கோவணமே கெளபீனங் கோவலரிடையராமே
**315

#5
சிவதமேயிருக்குவேதஞ்சேவையூர் புலியூரென்ப
துவிப மேவல்விலங்குதூவத்திதானேகடகம்
சவிகையென்பதுசதுக்கஞ்சவுண்டிகர்மதுவிற்போராம்
கவிதைபாவேகவீரங்கணவீரநாமமாமே
**316

#6
யவகாரிகிருட்டிணன்றானவளிகையிடுதிரைக்காம்
அவகேசிபலமிலாதவகலியமவாசிதெற்குச்
சவிதாவினாமம்பானுதைவரறடவலாகும்
புவியேதராதலப்பேர்புவனியுமப்பொருட்டே
**317 

#7
இவுளிதானே தூங்கமிவணென்பதில்விடப்பேர்
உவணிதானேதூவத்தியுவதியீரெட்டாண்டிற்பெண்
துவனைதானேதொனித்தறுவட்டர்கம்மாளர்நாமம்
அவையறானேதிரடசியவாந்திரை வெறுமையாமே
**318

#8
உவணகேதன்னேமாயோனுவளறான்றுவளலென்ப
கவயமாக்கிளவிகாட்டாக்காவதநாமங்காதம்
சுவலைதானச்சுவத்தஞ்சுவேதவாகனளகிரீடி
துவயமேயிரண்டுதுவ்வார்துயருறுவோர்பேராமே
**319

#9
தேவகமேதேவீகஞ்சிவகன்மசன்சேயென்ப
சீவனியப்பேரே நீர்தேவகுலப்பேர்கோட்டம்
பாவசமேகாமந்தான்பவர்க்கமேயந்தகாரம்
கூவியர்வாலுவாக்காங்கூவிளியழைப்பினபேரே
**320

#10
கோவரேமுல்லைமாக்கள் கூவிரியிரதமென்பர்
ஓவனேசித்திரகாரனுவதையேமலைவீழாறூ
தேவசேனாபதிச்சொல்செவ்வேளேகுவிரந்தில்லம்
வீவுதானேயிறப்புவிலிதம்பல்விதமாகும்மே
**321

#11
உவராகங்கிரகணப்போழ்தோவியஞ்சித்திரப்பேர்
அவதூதநாமந்தானேமுழுத்துறவவிடியேமம்
உவமேயமுவமிக்கத்தான்படுபொருணிவப்புயர்ச்சி
துவைமாதூன்கணேசன்று விரந்தேனீயின்பேரே
**322

#12
சுவடியேபலகறைப்பேர்கவுஞ்சமென்கிளவியன்றில்
இவவுதானிழிவுவச்சர்யவனரிணாமந்தோற்றும்
கவிரெனுங்கிளவிகிஞ்சுகங்காவற்கடவுள்விண்டு
நுவல்லென்பதுசொல்லற்காநூலின்பேந்திலமதாமே.
**323

#13
அவிமுத்தங்காசியேயாவேட்டனஞ்சுற்றுதற்காம்
கவைதற்சொன்மூடலேயௌவியமழுக்காறென்றோதும்
சுவசந்தஞ்சித்திரைப்பூரணை துவர்க்காய் பாக்கென்பர்
அவகுஞ்சனங்குலாவல்குவமாம்பனாமமாமே
**324

#14
அவத்திரியம்மாபத்தேயாவநாளிப்பேர்தூணி
உவத்தறானேகளித்தலுவாலம்பனந்நிந்திப்பே
துவத்தமேவிழுதலென்பதுவிசபதிச்சொலாலோன்
அவக்கிரகஞ்சபிப்பேயவமிருத்துத்துற்சாவே.
**325

#15
சுவாவெனுங்கிளவிஞானிசுவதந்திரஞ்சுதந்திரம்
திவாமணிசித்திரபானுகவழிகைதிரைச்சீலைக்காம்
நிவாகமேயிடநவத்தியம்பாவநாமநேரும்
துவாவெனுஞ்சொல்லிரண்டுதுவசர்கள்விற்போராமே
**326

#16
ஆவாசமில்லமாவணீயமங்காடிவீதி
மோவாயேதாடிவாவிகுளமெனமொழிபநூலோர்
ஆலீதமே பூணுலாவேசிகனதிதியாகும்
பாவாணர்புலவரேமேவலர்நாமம்பகைவராமே
**327

#17
சுவாகதநாமந்தத்தைசுவாதுதித்திப்பினாமம்
நிவாசமேயிருப்பிடப்பேர்நிவருணந்தானே பார்த்தல்
கவானெனுங்கிளவியூருக்காவணம்பந்தரென்ப
சிவாருகநியக்குரோதஞ்செவ்வழிநெய்தற்பண்ணே
**328

#18
ஐவிரலத்தநாளேயைவனமலையினெல்லுத்
தெவ்வினைபோரேதெவ்வர்சோலர்நாமஞ் செப்பும்
யௌவனதசைதானேவாலிபமவணவ்விடப்பேர்
செவ்வேளினாமஞ்செட்டிதிவாப்பகலென்பர்மேலோர்
** வகரவெதுகை முற்றிற்று.

@16 ழகரவெதுகை
**329

#1
உழத்தியர்மருதப்பெண்களுழிஞைதான்சிறு பூழைப்பேர்
சுழுத்தியேயோரவத்தைசூழாமையாராய்வின்மை
பழிச்சலென்பது துதித்தல்பழுவமேககனநாமம்
மழித்தன்முண்டிதமாக்கற்காமாழாத்தன்மயங்கலாமே
**330

#2
செழியனேவேம்பின்றாரோன்செழுமறைதானெருப்பே
அழனமே பிணமழுப்பேயயினியினாமதேயம்
குழகமேயழகுகோழிவேந்தனாக்குவயங்கிள்ளி
வழியுரைப்போரேதூதர்வழைசுரபுன்னைப்பேரே
**331

#3
கழுதைவாகனிமூதேவிகாழியர்கோன்சம்பந்தன்
சுழிமுனைதானோர்நாடிதொழும்பரேதாசரென்ப
மழலையென்பதுநிரம்பாமென்சொலேமழமேகொம்பை
விழைதலாசைப்பெருக்கம்வீழ்கதிநரகமாமே
**332

#4
அழலாடியரவணிந்தோனழலேந்திதானுமப்பேர்
உழுநரேமருதமாக்களுழவுகோன்முட்கோலாகும்
அழிதூஉவேயலியினாமமழுப்புகந்தேவலோகம்
சுழுனையேசுழிமுனைக்காந்தொழுத்தையுந் துட்டையாமே
**333

#5
கெழுதகைமைச்சொறானேயுரிமையேகேழல்பன்றி
எழுவாயென்பதுவேயாதியெழுதாக்கேள்விப்பேர்வேதம்
பிழியரே துவசர்நாமம்பீழித்தல்வருத்துதற்காம்
குழுவலென்பதுவேகூடல்குழகழகென்பர்மேலோர்
**334

#6
ஒழிபெனுங்கிளவியெச்சமூழமேவைகறைக்காம்
குழவுதானிளமைகோழைவிந்தெனுங்கிளவிகுல்லை
வழுதிபாண்டியனேவாழ்க்கைத்துணைமனைவிக்குவாய்க்கும்
மொழிதலேசொல்லன்மோழல்கிடியெனமொழிவரன்றே
**335

#7
கழங்கமென்பதுசூதாடுகருவியாங்கழுத்தலேபொய்
கொழுந்தனேதற்கொண்டான்சகோதரன்பீழைத்துன்பம்
தழங்கலேயொலித்தனாமந்தாழக்கோறிறவுகோலே
அழன்பிணமென்பர்மேலோரழிதலுங்கெடுதலாமே
**336

#8
இழிஞர்சண்டாளர் நாமமெய்தும்பேழ்பெருமையென்ப
கெழுவலே நிறைதறான் போழ்முகமெனுங்கிளவிகேழல்
நுழைவாயில்சிறுவாயிற்காநூழிலாட்டுதலேகொல்லல்
முழுமகன்மூடன்பேரேமிழற்றுதன்மொழிதலாமே
**337

#9
வழாறுதானிறைபுனற்பேர்வழித்தோன்றலெனுஞ்சொன்மைந்தன்
பிழாரிறைகூடைபோழ்தல்பிளத்தலினாமங்காட்டும்
குழாமெனுங்கிளவிகூட்டங்கொழுவின்பேர்கொழுகொம்பென்
வழுவையேவாரணம்யாழ்வல்லோர்கந்தருவராமே
** ழகரவெதுகை முற்றிற்று

@17 ளகரவெதுகை
**338

#1
ஆளகஞ்சுரையினாமமளவறானேகலத்தல்
தூளனநாமந்தூளேசூளியேயாண்மயிர்ப்பேர்
காளிமமேகறுப்புக்களரவம்புறாவினாமம்
வேளிரென்பதுபுரோசர்விளையுளும்வயலின்பேரே
**339

#2
உளியமென்பதுபல்லூகமுள்ளுதலே நினைத்தல்
தளவமேமுல்லைவல்லிதளைத்தறானேபிணித்தல்
நளினையேதாக்கணங்குநாளிகேரப்பேர்தெங்கு
புளிஞரென்பதுகிராதர்புள்ளுவம்வஞ்சமாமே
**340

#3
வெளிறரேயறிவிலார்பேர் வெள்ளைமெய்யாளேவாணி
வளவனேகிள்ளிவள்ளியோர்வரையாமலீவோர்
களதமேமூடிகங்காளாமுகர் சைவர்நாமம்
விளைஞரேமருதமாக்கள்விளித்தலுமழைத்தலாமே
**341

#4
களிமமேயெலியேகாளகண்டனேபேயொடாடி
கிளவியேசொல்லேகீளல்கிளித்தலினாமங்காட்டும்
புளிதமேயூனினாமம்புள்ளரசேமாலூர்தி
குளகனேகார்த்திகேயன்கொளையிசைப்பாட்டின்பேரே
**342

#5
அளகையாளிச்சொல்சோமனளத்தியென்பதுநெய்தற்பெண
களகண்டம்பரபுட்டம்மேகாளனென்பதுமாகாளன்
தளவெனுங்கிளவிமுல்லைதாளகமரிதாரப்பேர்
ஒளியோனேகிரணமாலியொள்ளியரறிவுள்ளோரே
**343

#6
காளிகங்காரேகாளிங்கமர்த்தனன்கமலக்கண்ணன்
கோளகன்கைமைபெற்றபிள்ளையேகுளீரஞெண்டு
காளகண்டங்குயிற்பேர்களதபுதம்வெள்ளிக்காம்
சாளிகஞ்சாசகஞ்சுள்ளைமட்கலஞ்சுடுசூளைப்பேர்
**344 

#7
உள்கலே நினைத்தலுள்ளமிகுதியேயூக்கமாகும்
எள்கலேயிகழ்தலெள்ளவெனுஞ்சொலோருவமைச்சொல்லு
நள்ளுநருறவோர்ஞாளியூர்திகேத்திரபாலற்காம்
நள்ளாரேநண்ணார்காளகூடமுநஞ்சின்பேரே
**345

#8
மள்ளலேவலியேவாளாவீணெனும்பொருள்வகுக்கும்
அள்ளைதானேபிசாசமளவளாவற்பேர்தோய்தல்
கிள்ளியேநேரிவெற்பன்கேளாரென்பதுபொருந்தார்
மொள்ளலென்சொன்முகத்தன்முனிவாய்பெட்டியாமே
** ளகரவெதுகை முற்றிற்று

@18 றகரவெதுகை
**346

#1
அறுதொழிலோரேபார்ப்பாரறைபோதல்கீழறுத்தல்
இறவுளர்குறிஞ்சிமாக்களீ றிலியேயனந்தன்
குறுமுனிகும்பயோனிகூற்றுவன்றென்றிசைக்கோன்
மறிதரறானேமீளன்மாறுகோள்விரோதமாமே
**347

#2
கறங்குதல்சுழலல்கற்றாவிளங்கன்றுப்பசுவைக்காட்டும்
குறங்குதான்றொடைகுறும்பூழ்காடையினாமங்கூறும்
எறும்பியென்பதுமாதங்கமேற்போரேபரிசிலாளர்
பறம்பர்தோல்வினைஞரென்பபற்றற்றார்முனிவராமே
**348

#3
செறுநரென்பதுதிருந்தார் சிறுவிதிதக்கனாமம்
தொறுவரேமுல்லைமாக்கடுறைவனேமுந்நீர்ச்சேர்ப்பன்
பொறியிலாரேகீழ்மக்கள்புறத்தவறைத்தைக்காப்போன்
அறவைதானேயனாதமறுகுணன்கடவுளாமே
**349

#4
இறுக்கரேபாலைமாக்களிறடியேகருந்தினைப்பேர்
உறக்கமென்சொல்லனந்தலுற்குரோசம்மேயுன்னம்
பிறப்பிலிபினாகபாணிபுற்கைகூழ்நாமம்பேசும்
அறத்தளிதானேயந்தர்ப்புரமறுகால்வண்டாமே
**350

#5
சறுதாகநாமம்வேங்கைசாற்றுதறானேசொல்லல்
திறலோனேதிண்ணியன்பேர்திறனில்யாழ் நெய்தல்யாழே
இறையோனேயெண்குணன்பேரிறவுளென்பதுகுறிஞ்சி
கறையடியேமாதங்கங்கற்பிதநியமமாமே
**351

#6
அறிதுயிலமர்ந்தமூர்த்தியரியறச்செல்விதேவி
சிறுவிதிமகஞ்சிதைத்தோனுக்கிரன்சிறுசெய்பாத்தி
தொறுவிதானேயிடைச்சிதுறவரைம்புலனைவென்றோர்
அறிவனாள் பிற்கொழுங்கோலறப்புறமறச்சாலைப்பேர்
**352

#7
தேறலர்பகைவர்நற்றாய்பெற்றதாய்நாமஞ்செப்பும்
நீறணிந்தோனேயீசன்புற்புதமொக்குணேரும்
நூறலினாமந்தானேயழித்தல்செற்றலரேநோனார்
சீறூரென்பதுவேவேடரூர்சொற்றல்செப்பலாமே
**353

#8
உறுப்படக்கிச்சொலாமையுற்கண்டிதந்துக்கித்தல்
அறத்தின்மைந்தன்னேகுந்திபுதல்வன்வெற்பசலமாகும்
மிறைக்கவிதானேசித்திரகவியேமுற்சனியேவேள்வி
அறத்தைக்காப்போனேயையனாறலைவழிப்பறிப்பே
**354

#9
சிறாரெனுங்கிளவிமக்கட்பன்மையேசிறுவிபுத்திரி
ஞறாமயிற்குரலேஞாற்சிதூங்குதனாமமாகும்
சிறீபதிபதுமநாபன்சிறங்கணிப்பேகுறைக்காம்
சிறீகண்டனீமத்தாடிசிறிவிலுமகிலின்பேரே
**355

#10
ஒற்றையாழித்தேரோனேயொளியேயுற்கிருஷ்டமேன்மை
தற்சனிதானேசுட்டுவிரல்காற்றின்சகாயன்றேயு
புற்கலமேகுரம்பைபுறங்காடுசுடுகாடென்பர்
உற்பதனம்முற்பத்தியுறுவருமுனிவராமே
**356

#11
வீற்றமேவேறுபாடுவேறல்வெல்லுதலின்பேரே
மாற்றலரேமுனைந்தோர்மறத்தியர்பாலைப்பெண்கள்
ஆற்றுக்காலாட்டியர்ப்பேருழத்தியாறுமீனாரல்
கூற்றுதைத்தோனேயீசன்குறைகோளுமிரத்தலாமே
**357

#12
பிற்றையேபின்னைநாளே பிறந்தவமேபிறப்புப்
பெற்றியேதன்மையென்பபிறைசூடிவாமதேவன்
வெற்பனேமலையனாமம்வெறுநுகஞ்சோதிநாளே
உற்கணநாமந்தட்டையூறுகோள்கொலையின்பேரே
**358

#13
முற்குளமேபூராடமுறையிலோரேகனிட்டர்
உற்றபண்புரைப்போர் தூதரூற்றுக்கோலூன்றுகோலே
கிற்றல்கட்டுப்படுத்தல்கெற்புதத்துவமேயென்ப
கொற்றவைவீரச்செல்விகொற்றவனரசனாமே
**359

#14
வற்சரம்வருடமேவாற்சல்லியமேயுருக்கம்
உற்கிரமணமேபோதலுற்பிராசனமேநிந்தை
அற்புதரேகம்மாளரறன்கடைதானேபாவம்
கொற்கைவேந்தன்கூடற்கோமான்கோறல்கொல்லலாமே
**360

#15
இற்புலியேமார்ச்சாலமேற்றுவாகனனேயீசன்
அற்புதனேயனாதியறைகூவல்பொரவழைத்தல்
கற்புரமேயருத்தங்காற்குளங்குருவினாளே
பற்குனனேகிரீடிபற்றலர்பகைவராமே
** றகரவெதுகை முற்றிற்று

@19 னகரவெதுகை
**361

#1
தானவர்திதியின்மைந்தர் தனபதியளகையாளி
கானனமேகாந்தாரங்கனோபலமாலங்கட்டி
சானவிபகீரதிக்காஞ்சன்னத்தம்போர்க்காயத்தம்
மானதவாவிவேதாவாவிமானினிபெண்ணாமே
**362

#2
புனவரேகுறிஞ்சிமாக்கள் பொன்னகர்க்கிறைவன்போகி
பனவரேவேள்வியாளர்பனிக்கதிருடுவின் வேந்தன்
அனுசனேயிளையோனன்னப்பிராசனமன்னமூட்டல்
தனகமேசாதரூபங்கனருசிமின்னலாமே
**363

#3
பனிப்பகையண்டயோனிபனுவலாட்டிச்சொல்வாணி
மனைக்கிழத்திப்பேர்பாரிமனோசவமேவிவேகம்
அனுத்தமேபொய்யான்வல்லோரிடையராக்குவயமாகும்
இனைத்தறானேயொலித்தலின்னாதார்பகைவராமே
**364

#4
கானகநாமங்காண்டங்கனவிரதம்பானீயம்
வானரமேகுரங்குவனமாலிவாசுதேவன்
தேனுகமேபெண்யானைசினகரநிகேதனந்தான்
சானகமேதுரோணஞ்சான்றவரறிஞராமே
**365

#5
கனரசமேகவந்தங்கான்மரநியக்குரோதம்
அனுவழிபண்டிதன்றானனுகஞ்செஞ்சந்தனப்பேர்
சனபதமேபடப்பைசன்மானமுபசாரந்தான்
தனிதமென்பதுமுழக்கந்தனிநிலையாய்தமாமே
**366

#6
மனனஞ்சிந்தித்தலேமன்பதையேமக்கட்பரப்பு
புனர்தம்பிண்டிக்கு நேரும்புனைவர்கண்வினைஞர்தானே
வனசம்பங்கயமேவானவரம்பனேமலையமானே
அனுகன்கண்டன்பேரன்னக்கொடியோனுமயனாகும்மே
**367

#7
வினையுரைப்போரே தூதர்வென்முதுகென்பர்மேலோர்
அனுநயமே விருந்தோம்பற்பெயரனுசைதங்கை
முனைமுகம்போர்முகந்தான்முனைந்தோர்மாற்றலர்பேராகும்
அனுமிதியனுமானம்மேயனுலேபமபிடேகப்பேர்
**368

#8
சூனரூன்விற்போர்சொன்னகாரர் தட்டார்பேர்சொல்லும்
பேனவாகிச்சொலேறுபினாகபாணிச்சொலீசன்
மானசோத்திரமேகூற்றுவன்புரமனோசனேவேள்
சேனமேகங்கமேசென்னியரேவந்தித்துநிற்போர்
**369 

#9
அனலேறுதான்மடங்கலனலியேகிரணமாலி
புனராகமனந்திரும்பிவருதலொன்னார் பொருந்தார்
அனுபூதிபிரமாணத்தாலறியறிவனந்தல்பள்ளி
கனகாசலச்சொன்மேருகான்றல் தக்கற்பேராமே
**370

#10
கனிட்டன்பின்னோன்கானீனன்கன்னிதான்பெற்றபிள்ளை
சனிப்பேயுற்பத்திசான்றுசாட்சியாக்குவயமென்ப
பனிற்றாவேயிளையகன்றுப்பசுநாமம்புனாகம்பின்பு
வனப்பேநல்லழகுவன்கண்வைரமென்றுரைப்பர்நூலோர்
**371

#11
அனஞ்சனமேயாகாயமனன்னியசன்மனோபு
மனங்கறானேயொடுங்கன்மானிடமேந்தியீசன்
அனந்தசயனன்கோவிந்தனனுசிந்தைதியானித்தற்காம்
சினங்குரோதஞ்சினத்தல் செயிர்ததலினாமமாமே
**372

#12
மேனைவெற்பரசன்றேவிமென்பாலே மருதநாமம்
மீனவன்வேம்பினறாரோன்வினைமுதலேகருத்தா
மானனஞ்சங்கையேமானிதமானமாகுமென்ப
பேனமேநுரையேபேனாசனிபுருகூதன்பேரே
**373

#13
அனவரதம்மெப்போழ்துமனுயோசனப்பேர்கேள்வி
தனையைபுத்திரியேஞானவல்லிசங்கரிபேர்சாற்றும்
புனைவிலிதானேயொப்புப்பொருளேயுன்னலர்பொருந்தார்
தனையனேமகன்சுனாசீரன்புரந்தரனாகும்மே
**374

#14
புனைவுளிதான்வன்னிக்கப்படுபொருடனுசன்புத்திரன்
மனையறமில்லறப்பேர்வைனதேயன்மாலூர்தி
அனுதமஞ்சிரேட்டமானதனுசாதனாமந்தம்பி
அனிலசகன்றீயாமேயனுபஸ்தியின்மையாமே
**375

#15
அனுகம்பைதானுருக்கமானந்தவல்லிதேவி
புனருத்தநாமங்கூறியதுகூறலொன்றார்புல்லார்
வனிதஞ்சிறப்பியானைமுகனீசன்மைந்தனாகும்
அனகன்சுயம்புகுன்றமசலமென்றறையலாமே
**376

#16
அனாவிலனசுரமந்திரியானனம்வதனமாகும்
மனாகைபெண்யானையென்பமனாவரைப்பட்டிகைக்காம்
வனீகனே பரிசிலாளன்வனச்சார்பென்பதுவேமுல்லை
வனாகிதான்முயலினாமம்வனதீபஞ்சண்பகப்பேர்
**377

#17
சன்மினிகாளியேவல்செய்மகடன்குவப்புச்
சின்னயோகங்குறிக்காஞ்சினவறானே செயிர்த்தல்
கின்னரர்பிராஙன்குபேரன்கீன்றலென்பதுகிழித்தல்
சன்மகீலன்முராரிசன்மலியிலவின்பேரே
**378

#18
சன்மனமேயற்பத்திசனார்த்தனன்பதுமநாபன்
உன்னயமுயர்வுதானேயுன்னாமமுயர்த்துதற்காம்
ஒன்னலரேதிருந்தாருன்மந்தமூறுகோளே
அன்மயமேசந்தேகமனூனமுமுழுமையாமே
**379

#19
வன்மீனேசிஞ்சுமாரமான்றலைதிங்கணாளே
வின்னூலாளன்றுரோணாசாரியன்வேனில்கோடை
வன்னிமித்திரன்கால்வானோர்கோமானேவலாரியாகும்
இன்னாதுதீதுதானேயீனனம்வெள்ளியாமே
**380

#20
வன்மீகநாமம்புற்றுவானவரதிதிமைந்தர்
புன்னாகநாமம்புன்னைபொன்செய்கொல்லாச் சொறட்டார்
மன்னாரினாமஞ்செற்றார்மனோபவன்வேனிலாளி
பன்னாசநாமங்குல்லைபனிமலையிமயமாமே
**381

#21
நான்மருப்பியானைதானைராவதநன்னர் நன்மை
மான்மதமேகத்தூரிமனோசனேசம்பராரி
போனகமேபுழுக்கல்புனனாடனேரிவெற்பன்
மான்மியமகிமையென்பமானமாகவரிமாவே
**382 

#22
குன்றெறிந்தோனேசெவ்வேள் கொன்றைசூடிச் சொலீசன்
மன்றகஞ்சபைமனோபுமன்மதனாமதேயம்
மன்றுளாடிச்சொறானேமாதேவன்மானாரொன்னார்
தென்றற்றேரோனேமாரன்றென்மலைபொதியமாமே
**383

#23
நென்னலேநெருநலென்பதென்கலைதமிழ்நூனேரும்
பொன்னிகாவேரிபொன்னித்துறைவனேபுனனாடன்பேர்
சொன்னமேயேகாகாரஞ்சுனகனென்பதுசுணங்கன்
கன்னியாக்கிரணமன்றல்கனிட்டமேகடைவிரற்பேர்
**384

#24
கன்னிகாரப் பேர்கோங்குகள்னுவர்கஞ்சகாரர்
சன்னிதானஞ்சமூகஞ்சானசியேயருத்தம்
பன்னகாசனன்மாலூர்திபான்மையினாமந்தன்மை
பின்னைகேள்வன்வராகன்பின்னவனனுசனாமே
**385 

#25
தென்னவன்குமரிச்சேர்ப்பன்றினகரனேமார்த்தாண்டன்
பின்னவரேசதுர்த்தர்பின்பிறந்தாளே தங்கை
பொன்னகர்தேவலோகம் பொன்வினைமாக்கட்ட்டார்
மன்னவர்மண்டலீகர்மனக்கோட்டமழூக்காறாமே
**386 

#26
முன்றிலென்பதுவேமுற்றமுனைப்பதிபாடிவீடு
வென்றியே வெல்விவேனிலாளியேவேழவில்லி
துன்றறானே நெருங்கறுன்னலரே பொருந்தார்
தொன்றுதான்பழைமைநாமந்தொன்மரங்கோளியாமே
** னகரவெதுகை முற்றிற்று
** சிந்தாமணி நிகண்டு முற்றிற்று
** இஃது இயற்றமிழ்ப்போதகாசிரியராகிய
** புதுவைக் குமாரவேல்முதலியாரவர்கள் இயற்றிய
** நேரிசை வெண்பா
**387

#27
உலகவிருணீக் கொளிர்விண் மணியாய்ப்
புலவர்மனக் கண்மணியாய்ப்போந்தே நிலவியதால்
வல்வைநகர் வாழும் வயித்தியலிங் கப்புலவன்
நல்கியசிந் தாமணிநூ னன்கு
**
** *