<<முந்திய பக்கம்

மண்டல புருடர் இயற்றிய சூடாமணி நிகண்டு
தேவையான தலைப்பின் மேல் சொடுக்கவும்
தலைப்பு சொற்பிரிப்பு மூலம் நூலில் உள்ளபடி
1.பாயிரம் / தேவப் பெயர்த் தொகுதி

2.மக்கள் பெயர்த் தொகுதி

3.விலங்கின் பெயர்த் தொகுதி

4.மரப் பெயர்த் தொகுதி

5.இடப் பெயர்த் தொகுதி

6.பல் பொருள் பெயர்த் தொகுதி

7.செயற்கை வடிவப் பெயர்த் தொகுதி

8.பண்பு பற்றிய பெயர்த் தொகுதி

9.செயல் பற்றிய பெயர்த் தொகுதி

10.ஒலி பற்றிய பெயர்த் தொகுதி

11.ஒரு சொல் பல் பொருள் பெயர்த் தொகுதி

12.பல் பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி

** மண்டல புருடர் இயற்றிய சூடாமணி நிகண்டு 

@1 சிறப்புப் பாயிரம்
**1

#1
பொன்னும் நல் மணியும் முத்தும் புனைந்த முக்குடை நிழற்ற 
மின்னு பூம் பிண்டி நீழல் வீற்றிருந்தவனை வாழ்த்தி 
மன்னிய நிகண்டு சூடாமணி என ஒன்று சொல்வன் 
இ நிலம்தன்னில் மிக்கோர் யாவரும் இனிது கேண்மின் 
**2

#2
பூ மலி அசோகின் நீழல் பொலிந்த எம் அடிகள் முன்நாள் 
ஏமமா முதல்நூல் சொல்ல கணதரர் இயன்ற பாவால் 
தாம் ஒரு வழிநூல் சொல்ல சார்புநூல் பிறரும் சொல்ல 
தோம் இலா மூன்று நூலும் துவம் என உதித்த அன்றே 
**3

#3
அங்கு அது போய பின்றை அலகுஇல் நூல் பிறந்த மற்றும் 
செங்கதிர் வரத்தில் தோன்றும் திவாகரர் சிறப்பின் மிக்க 
பிங்கலர் உரை நூற்பாவில் பேணினர் செய்தார் சேர 
இங்கு இவை இரண்டும் கற்க எளிது அல என்று சூழ்ந்து 
**4

#4
சொல்லொடு பொருள் உணர்ந்தோன் சோதிட நீதி வல்லோன் 
நல் அறிவாளன் எங்கள் நறுங் குன்றை ஞானமூர்த்தி 
பல் உயிர்க்கு ஒரு தாய் ஆகும் பரமன் மாமுனிவன் மெய்ந்நூல் 
வல்லுநர் வல்லார்க்கு எல்லாம் வரை அற தரையில் வந்து 
**5

#5
பரிதி ஒன்று உதயம்செய்து பங்கயம் அநேக கோடி 
முருகு எழ மலர்வித்து என்ன முகமுடன் அகம் மலர்த்தி 
மருவு முத்தமிழை முன்நாள் வளர்த்த பாண்டியனே போலக் 
கருதிய எல்லாம் தந்து கவிமணி மாலை சூடி 
**6

#6
செகம் எனும் பளிங்கு மாடத் திகிரி வேந்தரையே போல 
புகழ் எனும் பஞ்சி சேர்த்துப் பொலிவுறு பேர் அத்தாணி 
மகிழ் குணபத்திரன் எங்கள் வழித் தெய்வம் போல்வான் சொல்ல 
இகபரம் இரண்டும் வேண்டி இயல் இசை வல்லோர் கேட்ப 
**7

#7
விரவிய தேவர் மக்கள் விலங்கொடு மரம் இடம் பல் 
பொருள் செயும் வடிவு பண்பு போற்றிய செயல் ஒலிப் பேர் 
ஒரு சொல் பல் பொருளினோடும் உரைத்த பல் பெயர்க் கூட்டந்தான் 
வருமுறை திவாகரம் போல் வைத்து பிங்கலந்தைதன்னில் 
**8

#8
ஒருங்கு உள பொருளும் ஓர்ந்திட்டு உரைத்தனன் விருத்தம்தன்னில் 
இருந்த அவை நல்லோர் குற்றம் இயம்பிடார் என்பது எண்ணி 
திருந்திய கமலவூர்தி திருப்புகழ் புராணம் செய்தோன் 
பரந்த சீர்க் குணபத்திரன் தாள் பணிந்த மண்டலவன்தானே 

@1. தேவப் பெயர்த் தொகுதி
**9

#9
** அருகன் 
அருகன் எண்குணன் நிச்சிந்தன் அறவாழி வேந்தன் வாமன் 
சினன் வரன் உறுவன் சாந்தன் சினேந்திரன் நீதிநூலின் 
முனைவன் மாசேனன் தேவன் மூவுலகுணர்ந்தமூர்த்தி 
புனிதன் வென்றோன் விராகன் பூமிசைநடந்தோன் போதன் 
**10

#10
பண்ணவன் கமலவூர்தி பரமேட்டி காதிவென்றோன் 
புண்ணியன் புலவன் புத்தன் பூரணன் பொன்னெயில்கோன் 
விண்ணவன் விமலன் வீரன் விநாயகன் வீதசோகன் 
அண்ணல் வில் மதனைவென்றோன் அருட்கொடிவேந்தன் ஆசான்
**11

#11
முத்தன் மாமுனி கருத்தன் முக்குடைச்செல்வன் முன்னோன் 
சித்தன் எண்சிறப்பும்உள்ளோன் திகம்பரன் கொல்லாவேதன் 
நித்தன் நின்மலன் நின்னாமன் நிராயுதன் நேமிநாதன் 
அத்தன் ஆநந்தன் சோதி அரியணைச்செல்வன் ஆதி
**12

#12
ஆத்தன் குற்றங்கள்இல்லான் அசோகுஅமர்கடவுள் ஆதன் 
சாத்தன் வேதாந்தன் நாதன் சமி அநாமயன் சுயம்பு 
நீத்தவன் பிதா விதாதா நிரம்பரன் அனந்தஞானி 
தீர்த்தன் மால் பகவன் சாமி சீபதி சீமான் செய்யோன்
**13

#13
நிருமலன் வரதன் சாது நிரஞ்சனன் விறலோன் யோகி 
தருமராசன் யுகாதி சதுர்முகன் சாதரூபி 
திருமறுமார்பன் நீடு சிவகதிக்குஇறை தொண்ணூறே 
அருகன்பேர் ஆகும் மற்றும் அபிதானம் அநந்தம் ஆமே 
** 90 பெயர்கள் 13 
**14

#14
** சிவன் 
சங்கரன் இறையோன் சம்பு சதாசிவன் பேயொடுஆடி 
பொங்கு அரவுஅணிந்தமூர்த்தி புராந்தகன் பூதநாதன் 
கங்கைவேணியன் கங்காளன் கடுக்கையங்கண்ணிசூடி
மங்கைஓர்பாகன் முன்னோன் மகேச்சுரன் வாமதேவன்
**15

#15
நீலகண்டன் மாதேவன் நிருமலன் குன்றவில்லி 
சூலபாணியன் ஈசானன் பசுபதி சுடலைஆடி 
காலகாலன் கபாலி உருத்திரன் கைலைஆளி 
ஆல்அமர்கடவுள் நித்தன் ஐம்முகன் பரசுபாணி
**16

#16
அந்திவண்ணன் முக்கண்ணன் அழல்ஆடி பாண்டரங்கன் 
சந்திரசேகரன் ஆனந்தன் சடைமுடி அனந்தன் ஆதி 
தந்திஈர்உரியோன் நம்பன் தற்பரன் நீறுஅணிந்தோன் 
நந்தி ஈச்சுரன் ஏறுஊர்ந்தோன் நக்கன் மா ஞானமூர்த்தி
**17

#17
வரன் மறைமுதலி ஈசன் மான்இடம்ஏந்தி சோதி 
பிரமன்மாற்குஅரியோன் தாணு பிஞ்சகன் பினாகபாணி 
பரமன் எண்தோளன் பர்க்கன் பவன் யோகி பகவான் ஏகன் 
அரன் உமாபதி சிவன்பேர் அறுபத்தாறு அநந்தம் மற்றும் 
** 66 பெயர்கள் 17 
**18

#18
** பல தேவன் 
இலகும் ஓர் குண்டலன் மற்று இரேவதிகொண்கன் முற்றும் 
நிலவிய முசலி வெள்ளை நிகழ் நீலாம்பரன் அநந்தன் 
அலம்உறுபடையாக்கொண்டோன் அச்சுதன்முன்னர்வந்தோன் 
பலபத்திரன் காமபாலன் பனந்தாமன் பலதேவன்பேர் 
** 11 பெயர்கள் 18 
**19

#19
** அரி 
மாதவன் மாயன் செய்ய வாமனன் வாசுதேவன் 
சீதரன் நந்தகோபன் திருமகன் உவணம் ஏற்ற 
கேதனன் பதுமநாபன் கேசவன் பஞ்சவர்க்குத்
தூதனே சார்ங்கபாணி சுரிமுகச்சங்கம் ஏந்தி
**20

#20
கொண்டல்வண்ணன் காகுத்தன் கோவிந்தன் அச்சுதன் மால் 
விண்டு வேலையில்துயின்றோன் விரகினால் உந்திபூத்தோன் 
வண் துழாய்மெளலி ஆதிவராகன் வைகுண்டநாதன் 
முண்டகாசனைகேள்வன் தாமோதரன் முராரி நேமி
**21

#21
வலவன் தேவகிதன்மைந்தன் வனமாலி படிஇடந்தோன் 
சலசலோசனன் அனந்தசயனன் பீதாம்பரன்பேர் 
உலகுஅளந்தருள்வோன் பஞ்சாயுதன் உலகுஉண்டபெம்மான் 
அலகைதன் முலையோடு ஆவி அருந்தினோன் நாரசிங்கன்
**22

#22
அரவணைச்செல்வன் கண்ணன் அறிதுயில் அமர்ந்த மூர்த்தி 
பிரமனைப் பெற்ற தாதை பின்னைகேள்வன் முகுந்தன் 
கரியவன் நெடியோன் காவற்கடவுள் நாரணன் ஏழ்ஏழே 
அரியின்பேர் ஆகும் மற்றும் அபிதானம் அனந்தம் ஆமே 
** 49 பெயர்கள் 32 
**23

#23
** பிரமன் 
பிரமன் மேதினிபடைத்தோன் பிதாமகன் பிதா விதாதா 
வரன் அயன் மலரோன் இந்த மண்பொதுத்தந்தை வேதா 
இரணியகருப்பன் போதன் இனிய மால்உந்திவந்தோன் 
குரவன் ஓதிமம் உயர்த்த கொடியினன் அன்னஊர்தி 
**24

#24
இறைசதானந்தன் நீண்ட எண்கணன் விதி சுயம்பு 
மறையவன் அனந்தன் ஞானி மால்மகன் வாணிகேள்வன் 
முறைதெரி பகவன் வானோர்முதல்வன் நான்முகன் விரிஞ்சன் 
நறை மலி கமலயோனி நாமம் ஆறைந்தும் ஆமே 
** 30 பெயர்கள் 24 
**25

#25
** புத்தன் 
தருமராசன் முனீந்திரன் சினன் பஞ்சதாரை விட்டே 
அருள் சுரந்து அவுணர்க்கு ஊட்டும் ததாகதன் ஆதிதேவன் 
விரவு சாக்கியனே சைனன் விநாயகன் சினம்தவிர்ந்தோன் 
அரசு நீழலில் இருந்தோன் அறிவரன் பகவன் செல்வன்
**26

#26
அண்ணலே மாயாதேவிசுதன் அகளங்கமூர்த்தி 
நண்ணிய கலைகட்கெல்லாம்நாதன் முக்குற்றம்இல்லோன் 
எண்ணில்கண்உடையோன் வாமன் ஏற்ற புண்ணியத்தின்மூர்த்தி 
புண்ணியமுதல்வன் சாந்தன் பூமிசைநடந்தோன் புத்தன் 
** 24 பெயர்கள் 26 
**27

#27
** இந்திரன் 
மேகவாகனன் வேள்விக்குவேந்தன் விண் முழுதும் ஆளி 
பாகசாதனனே வச்சிரபாணி கோபதி சிறப்பாம் 
நாக நீள் நகர்க்கு நாதன் நால் மருப்பு யானை ஊர்தி 
போகி வாசவனே வேந்தன் புரந்தரன் புலவன் சக்கிரன்
**28

#28
மருத நல் நிலத்து வேந்தன் மருத்துவன் வானோர்கோமான் 
புருகூதன் சசிமணாளன் புரோகிதன் கெளசிகன்னே 
கரியவன் சுனாசீரன் ஆகண்டலன் உடன் வலாரி 
அரி சதக்கிரது நீண்ட ஆயிரங்கண்ணன் இந்திரன் 
** 28 பெயர்கள் 28 
**29

#29
** விநாயகன் 
அங்குசபாசம்ஏந்தி அம்பிகைதனயன் முன்னோன் 
ஐங்கரன் மூத்தோன் ஒற்றை அணி மருப்பினன் ஏரம்பன் 
கங்கைபெற்றோன் முக்கண்ணன் கணபதி ஈசன்மைந்தன் 
வெம் கயமுகனே ஆகுவாகனன் விநாயகன்பேர் 
** 13 பெயர்கள் 29 
**30

#30
** வீரபத்திரன் 
உக்கிரன் அழற்கண்வந்தோன் உமைமகன் சிம்புள்ஆனோன் 
முக்கணன் சடையோன் யானை முகவனுக்கு இளையோன் வில்லி
செக்கர் வான் நிறத்தன் குரோதன் சிறு விதி மகம் சிதைத்தோன் 
மிக்க பத்திரைக்குக்கேள்வன் வீரபத்திரன்பேர் ஆமே 
** 12 பெயர்கள் 30 
**31

#31
** கந்தன் 
முருகன் வேள் சாமி ஆறுமுகன் குகன் குழகன் மாயோன் 
மருகன் சேய் கார்த்திகேயன் வரை பக எறிந்தோன் செட்டி 
அரன்மகன் கங்கைமைந்தன் ஆண்டலைக் கொடி உயர்த்தோன் 
சரவணபவன் கடம்பன் தாரகற்செற்றோன் ஆசான்
**32

#32
வேய்ந்த பூங் குறிஞ்சிவேந்தன் வேலினுக்குஇறை விசாகன் 
சேந்தன் காங்கேயன் செவ்வேள் சிலம்பன் மா மஞ்ஞைஊர்தி 
வாய்ந்த சூர்ப்பகைவன் வள்ளிமணவாளன் தெய்வயானை 
காந்தனே குமரன் கந்தன் கலை உணர் புலவனும் பேர் 
** 31 பெயர்கள் 32 
**33

#33
** காமன் 
திருமகள்மைந்தன் மாரன் சித்தசன் சம்பராரி 
உருஇலி மன்மதன் மீன்  உறு கொடி உயர்த்த தோன்றல் 
இரதிகாதலன் வசந்தன் எழில் பெறு வேனில்ஆளி 
கருதிய கருப்புவில்லி கந்தர்ப்பன் மதன் பூவாளி
**34

#34
திங்கள்வெண்குடையோன் தென்றல்தேரினன் வில்லி மோகன் 
ஐங்கணைக்கிழவன் எய்யும் மலர்க்கணை வேள் அநங்கன் 
செங்கண் மால்மைந்தன் மிக்க திறல் மனோபவன் மனோசன் 
அங்கசன் மனோபுவே நீர் ஆழி வெம் முரசோன் காமன் 
** 27 பெயர்கள் 34 
**35

#35
** வைரவன் 
முத்தனே குமரன் பிள்ளை முடுவல் வெம் படையோன் காரி 
சித்தன் கேத்திரபாலன்னே செந்தொடைக்குரிய கோமான் 
வித்தகன் ஞாளிஊர்தி விறல் கருங்குதிரைஆளி 
வைத்த சீர் வடுகன் இன்ன வைரவன்நாமம் ஆமே 
** 12 பெயர்கள் 35 
**36

#36
** ஐயன் 
காரியே புறத்தவன் பூங் கடல்வண்ணன் நெடிய சாத்தா 
பூரணைகேள்வன் யோகி புட்கலைதன்மணாளன்
ஓரும் மாசாத்தன் செண்டாயுதன் வெள்ளையானைஊர்தி 
ஆரியன் அறத்தைக்காப்போன் அரிகரகுமரன் ஐயன் 
** 13 பெயர்கள் 36 
**37

#37
** குபேரன் 
அரனதுதோழனே கின்னரர்பிரான் அளகைஆளி 
புருடவாகனனே சோமன் புட்பகவிமானம்உள்ளோன் 
இருநிதிக்கிழவன் ஏக பிங்கலன் இயக்கர்கோமான் 
மரகதன் தனதன் மந்திரி வைச்சிரவணன் குபேரன் 
** 13 பெயர்கள் 37 
**38

#38
** யமன், காலன் 
சமன் செங்கோல்கடவுள் கூற்று தருமன் அந்தகனே சண்டன் 
நமன் வைவச்சுதனே மற்றை நடுவனே தென்றிசைக்கோன் 
யமன் அரி மறலியே மற்று எருமைஊர்தியும் ஆம் இப்பால் 
கமைஇல் கால் மறல் மடங்கல் காலன் பாசத்தனும் பேர் 
** 13,4 பெயர்கள் 38 
**39

#39
** தரும தேவதை
மரகதவல்லி பூக மா நிழல் உற்ற வஞ்சி 
பரமசுந்தரி இயக்கி பகவதி அம்மை எங்கள் 
அருகனை முடி தரித்தாள் அம்பிகை அறத்தின்செல்வி 
தருமதேவதை பேர் அம்பாலிகை என்றும் சாற்றலாமே 
** 10 பெயர்கள் 39 
**40

#40
** உமை 
அரன்இடத்தவள் காமக்கோட்டத்தி அம்பிகையே மாதா 
தருமத்தின்செல்வி தேவி சாம்பவி மலைமடந்தை 
பரை சிவை கெளரி முக்கண் பார்ப்பதியொடு பவானி 
உரை கெழு சத்தி நாரி உமை பெயர் மூவைந்து ஆமே 
** 15 பெயர்கள் 40 
**41

#41
** கங்கை, காடுகாள் 
வரநதி நீடு மந்தாகினி திரிபதகை மற்றைச் 
சுரநதி கங்கை பேர் சானவி பகீரதியும் சொல்லும் 
பெருகு மூதணங்கு மோடி பேசிய கொற்றி சூரி 
மருவிய வடுகி மாரி வடுகன்தாய் காடுகாள் பேர் 
** 6, 7 பெயர்கள் 41
**42

#42
** திருமகள் 
மாக் கடல் பிறந்த கோதை மா அரிப்பிரியை செய்யாள் 
ஆக்கம் பொன் பொறி சீதேவி அலர்மகள் பொருளின்செல்வி 
தாக்கணங்கு இளையாள் பூமின் இலக்குமி சலசை செல்வம் 
தேக்கும் இந்திரை ஈரெட்டும் திருமகள் நாமம் ஆமே 
** 16 பெயர்கள் 42 
**43

#43
** நா மகள் 
கலைமகள் பனுவலாட்டி காயத்திரி ஞானமூர்த்தி 
உலகமாதா பிராமி ஒள்ளிய வெள்ளைமெய்யாள் 
இலகு வெண் சலசம் உற்றாள் பாரதி இசைமடந்தை 
மலர் அயன்மனைவி வாக்காள் வாணி நாமகள் பேர் ஆமே 
** 13 பெயர்கள் 43 
**44

#44
** மூதேவி 
சேட்டை இந்திரைக்குமூத்தாள் சீர்கேடி சிறப்பிலாதாள் 
நீட்டிய ஏகவேணி நெடுங் காகத்துவசம்உற்றாள் 
கேட்டையே கெடலணங்கு கழுதைவாகனி கேடு எல்லாம் 
மூட்டிய கலதி தெளவை முகடி மூதேவி ஆமே 
** 12 பெயர்கள் 44 
**45

#45
** இந்திரன் மனைவி, இந்திரன் மைந்தன், அமரர் மாது
** தெய்வ மெல்லியர் - பொதுப் பெயர் 
பொருஇல் இந்திராணி செய்ய புலோமசை சசி பேரின்பம் 
தரும் அயிராணி இந்திரன்மனைவி பேர் சயந்தன் மைந்தன் 
அரமகள் அரம்பை என்ப அமரர்தம் மாதின்பேரே 
விரவு சூர் அணங்கு தெய்வ மெல்லியர்பொதுப்பேர் சொல்லும் 
** 4, 1, 2, 2 பெயர்கள்
**46

#46
** காளி இடாகினி, காளிதன் ஏவல் செய்வாள் 
சூரி மாலினி எண்தோளி சூலி சண்டிகையே தேவி 
வீரி மாதரி கங்காளி வேதாளியொடு மாதங்கி 
தாரகன் செற்ற தையல் பைரவி சிவை சாமுண்டி 
ஆரணி வல்லணங்கோடு ஐயை யாமளை முக்கண்ணி
**47

#47
அலகை வெம் கொடி உயர்த்தாள் மதுபதி ஆளிஊர்தி 
உலவிய மாயை உற்ற யோகினி காளி நாமம் 
வலவை சூர்மகள்தனோடு மாயவள் இடாகினிப் பேர் 
இலகு சன்மினி வஞ்சப்பெண் காளிதன் ஏவல் செய்வாள் 
** 25, 3 2 பெயர்கள் 47 
**48

#48
** துர்க்கை 
அமரி எண்தோளி வெற்றி அந்தரி அம்பணத்தி 
சமரி பாலைக்கிழத்தி சயமகள் வீரச்செல்வி 
குமரி மா மகிடற்செற்றாள் கொற்றவை சக்கிரபாணி 
விமலை வண் கலையானத்தி விசையை நாரணியே விந்தை
**49

#49
நீலியே நெடிய காத்தியாயினி மேதிச்சென்னி 
மேல் இடர் உற மிதித்த மெல்லியல் கெளரி ஐயை 
மாலினுக்கு இளைய நங்கை பகவதி வாள்கைக்கொண்டாள் 
சூலி சண்டிகையே கன்னி சுந்தரி துர்க்கை நாமம் 
** 30 பெயர்கள் 49 
**50

#50
** தேவர் 
அமரர் பண்ணவர் புத்தேளிர் கடவுளர் அண்டர் உம்பர் 
இமையவர் விபுதர் வானோர் இலேகரே புலவர் விண்ணோர் 
அமுதர் ஆதித்தர் மேலோர் ஐயரே சுரரே தீர்த்தர் 
உமிழ் சுடர் மெளலி சூட்டும் உயர்நிலத்தவரும் தேவர் 
** 19 பெயர்கள் 50 
**51

#51
** தெய்வம் அசுரர் 
ஈனம்இல் அணங்கு புத்தேள் ஏற்ற சூர் கடவுள் தேவே 
ஆன தெய்வதம்மே தெய்வம் ஆம் என உரைப்பர் நூலோர் 
தானவர் அவுணரோடு தைத்தியர் திதியின்மைந்தர் 
ஏனைய அசுரர் ஆகும் நிசாசரர் என்றும் ஏற்கும் 
** 6, 5 பெயர்கள் 51 
**52

#52
** இராக்கதர் விஞ்சையர் கந்தருவர் 
நிருதரே பிசிதஊணர் நிசாசரர் அரக்கர் தீமை 
தரும் இராக்கதர் பேர் சால கடங்கடர்தானும் ஆகும் 
விரவு விஞ்சையர் பேர் வித்தியாதரரே கேசரரும் ஆம் கந்
தருவர் யாழ் வல்லோரே காந்தருவர் கின்னரரும் ஆமே 
** 5, 2, 3 பெயர்கள் 52 
**53

#53
** பூதம் பேய் 
குறள் கிருத்திமமே கூளி பாரிடம் சாதகம் செந்
நெறிஇல் பூதப்பேர் ஐந்தாம் நீள் பிரேதம் வேதாளம் 
வெறி மயல் பிசாசம் பாசம் வியந்தரம் மண்ணை சோகோடு 
அறிவு அழி கழுது கூளி அலகை பேய் கடி சாவும் பேர் 
** 5, 14 பெயர்கள்
**54

#54
** ஆகாயம் 
அண்டம் வான் உலகு மங்குல் அந்தரம் அம்பரம் கோ 
குண்டலம் ககனம் காயம் குடிலம் புட்கரம் அநந்தம் 
கண்டிடா வெளியே மீ மாகத்தோடு ஆசினி நபம் கம் 
விண்தலம் விசும்பு வேணி வியோமம் ஆகாயம் ஆமே 
** 23 பெயர்கள் 54 
**55

#55
** காற்று 
வாதம் கால் வளி மருத்து வாடையே பவனம் வாயு 
கூதிர் மாருதம் மால் கோதை கொண்டலே உலவை கோடை 
ஊதை வங்கூழ் சிறந்த ஒலி சதாகதி உயிர்ப்பு 
காது அரி கந்தவாகன் பிரபஞ்சனன் சலனன் காற்றே 
** 23 பெயர்கள் 55 
**56

#56
** மேல் காற்று கீழ் காற்று வாடை 
** பனிக்காற்று சுழல் காற்று 
கோடை மேல்காற்றின்நாமம் கொண்டல் கீழ்காற்றிற்கு ஏற்கும் 
வாடையின்நாமம் வீசு வடகாற்று வடந்தை என்ப 
கூடிய கூதிர் ஊதை குளிர் பனிக்காற்றின்நாமம் 
சாடிய சுழல் காற்றின்பேர் சாரிகை சூறை ஆமே 
** 1, 1, 2, 2 பெயர்கள் 56 
**57

#57
** தென்றல் நெருப்பு 
வரு தென்கால் சிறுகால் தென்றி மலயக்கால் வசந்தன் தென்றல் 
அரி வசு தகனன் அங்கி அனல் அயவாகனன் தீ 
எரி சுசி சிகியே ஆரல் இயங்கு காற்றின் சகாயன் 
கருநெறி கனலியே அங்காரகன் சித்திரபானு 
**58

#58
தழல் உதாசனன் சிறந்த தனஞ்சயன் சாதவேதா 
செழுமைய முளரி தென்கீழ்த்திசை இறை சேர்ந்தார்க்கொல்லி 
எழுவித நாவே வன்னி ஏற்ற பாவகனே தேயு 
அழல் சுடர் ஞெகிழி இன்ன நெருப்பின்பேர் ஆறைந்து ஆமே 
** 5,30 பெயர்கள் 58 
**59

#59
** ஊழித்தீ, கனல் ஒழுங்கு 
** விண் வீழ் கொள்ளி, நறும்புகை 
வடவை தீத்திரள் மடங்கல் வரு வடவாமுகம் சூழ் 
கடையனல் ஊழித்தீ ஆம் கனல் ஒழுங்கு அது சுவாலை 
அடைவுஇல் விண் வீழுங் கொள்ளி உற்கை என்று அறையலாமே 
வெடி நறை குய் இ மூன்றும் மிகு நறும் புகையின்நாமம் 
** 5, 1, 1,3,பெயர்கள்
**60

#60
** காட்டழல், தீக்கடைகோல், விளக்கு, புகை, தீப்பொறி
** தீத்தெய்வம், தீத்தெய்வத்தின் பாரி 
தாவம் காட்டழல் அத் தீயைத் தரு கோலே ஞெலிகோல் என்ப 
தீவிகை தீபம் மற்றைத் திகழ் சுடர் ஒளி விளக்கே 
ஆவி தூபம் தூமத்தோடு அரி புகை பொறி புலிங்கம் 
பாவகன் அத் தீத்தெய்வம் பாரியே சுவாகாதேவி 
** 1, 1, 4, 4, 1,1,1 பெயர்கள் 60 
**61

#61
** நீர், புனல், வேந்தன் 
வாரி ஆலம் கீலாலம் மழையலர் கமலம் காண்டம் 
நீரம் புட்கரமே சிந்து நெடும் புனல் சலிலம் பாணி 
கார் அறல் புவனம் நாரம் கனவிரதம் கவந்தம் 
மாரி அம்பு உதமே அப்பு வருணம் சீவனம் வனம் வார்
**62

#62
பயம் மழை உதகம் தோயம் பயசு சம்பரம் பானீயம் 
வயமொடு சீவனீயம் வரு தீர்த்தம் கீரம் சீதம் 
அயம் அளத்தோடு ஆம் அம் அமுதம் கம் சலம் நீர் ஆகும் 
நயன் உறு வருணன் இந்த நல் புனல் வேந்தன்நாமம் 
** 45, 1 பெயர்கள் 62 
**63

#63
** சூரியன், பரிதியின் வட்டம், பரிதியின் கிரணம் 
பரிதி பாற்கரன் ஆதித்தன் பனிப்பகை சுடர் பதங்கன் 
இருள்வலி சவிதா சூரன் எல்லு மார்த்தாண்டன் என்றூழ் 
அருணன் ஆதவனே மித்திரன் ஆயிரம் சோதி உள்ளோன் 
தரணி செங்கதிரோன் சண்டன் தபனனே ஒளியே சான்றோன்
**64

#64
அனலியே அரியே பானு அலரியே அண்டயோனி 
கனலியே விகர்த்தனன் வெங் கதிரவன் பகலோன் வெய்யோன் 
தினகரன் பகலே சோதி திவாகரன் அரியமாவே 
இனன் உடன் உதயன் ஞாயிறு எல்லையே கிரணமாலி
**65

#65
விரவும் ஏழ்பரியோன் வேந்தன்  விரிச்சிகன் விரோசனன்பேர் 
இரவி விண்மணி அருக்கன் ஏழ்ஏழும் சூரியன்பேர் 
பரிதியின் வட்டம்தானே விசயம் ஆம் பரிதி வீசும் 
கிரணமே கரமும் மற்றைக் கிளர்ந்த தீவிரமும் ஆகும் 
** 49, 1, 2 பெயர்கள் 65 
**66

#66
** சந்திரன் 
நிலவு சோமன் களங்கன் நிசாபதி பிறை குளிர்ந்த 
கலையினன் உடுவின்வேந்தன் கலாநிதியொடு குபேரன் 
அலவனே சசியே திங்கள் அம்புலி நிசாகரன் வான் 
உலவு இமகிரணன் சாந்தம் உற்ற தண்ணவன் குரங்கி 
**67

#67
மதி இராக்கதிரே இந்து மருவு தானவனே அல்லோன் 
விதுவொடு குமுதநண்பன் சுதாகரன் வேந்தன் ஆலோன் 
சிதைவுஇலா முயலின்கூடு பசுங்கதிர்த்தே என்று எல்லாம் 
புதிய சந்திரன் மூவேழும் எட்டுமே புகன்ற நாமம் 
** 29 பெயர்கள்
**68

#68
** செவ்வாய் 
கருதிய செந்தீவண்ணன் காட்டும் அங்காரகன் சேய் 
குருதி வக்கிரனே பெளமன் குசன் நிலமகன் அரத்தன் 
மருவிய அழலோன் மற்றை மங்கலன் உடனே ஆரல் 
விரவிய உதிரன் இன்ன மேவு செவ்வாயின்நாமம் 
** 13 பெயர்கள் 68 
**69

#69
** புதன் 
சிந்தைகூரியன் கணக்கன் தேர்ப்பாகன் அருணன் சாமன் 
வந்த தூதுவனே மாலே மதிமுகன் அறிஞன் பாகன் 
அந்தம் ஆம் புலவன் மற்றை அனுவழி மேதை பச்சை 
புந்தி பண்டிதன் ஈரெட்டும் புதன் பெயர் ஆகும் அன்றே 
** 16 பெயர்கள் 69 
**70

#70
** வியாழன், வெள்ளி 
தீதுஇலாத தெய்வமந்திரி சிகண்டிசன் அமைச்சன் சீவன் 
வேதன் ஆண்டளப்பான் ஆசான் வேந்தன் பொன் வியாழன்பேர் ஆம்
ஓதிய அசுரமந்திரி உசனன் பார்க்கவனே சுங்கன் 
கோதுஇல் சுக்கிரன் பளிங்கு புகர் கவி மழைக்கோள் வெள்ளி 
** 9,9 பெயர்கள் 70 
**71

#71
** சனி, இராகு, கேது 
கதிர்மகன் மந்தன் காரி கரியவன் செளரி மேற்கோள் 
முதுமகன் பங்கு நீலன் முடவன் நோய்முகன் சனிப் பேர் 
மதி உணும் இராகு நாமம் மற்று அது தமம் கறுப்பு ஆம் 
அதிகம் ஆம் கேது செம்மை சிகி கதிர்ப்பகையும் ஆமே 
** 11, 2, 3பெயர்கள் 71 
**72

#72
** மேடம் இடபம் மிதுனம் கர்க்கடகம் 
கொண்ட மை வருடை ஆடு கொறி மறி மேடம் என்ப 
குண்டை சே மூரி புல்லம் கோ விடை இடபம் ஆகும் 
தண்டு யாழ் விழவு இரட்டை சவைமகள் மிதுனம்தானே 
நண்டு ஞெண்டு அலவன் சேக்கை நள்ளி கர்க்கடகம் ஆமே 
** 5, 6, 5, 5 பெயர்கள் 72
**73

#73
** சிங்கம் கன்னி துலாம் விருச்சிகம் 
கொலை அரி யாளி மாவே கொடும் புலி சிங்கம் என்ப 
முலை மடந்தையர் பேர் எல்லாம் மொழிந்திடும் கன்னிதானே 
துலை நிறை நிறுப்பான் சீர் கோல் தூக்கு வாணிகன் துலாப் பேர் 
உலைவுறு தெறுக்கால் தேளே ஓதிய விருச்சிகப்பேர் 
** 4, 1, 7, 2 பெயர்கள் 73
**74

#74
** தனு மகரம் கும்பம் மீனம் 
கொடுமரம் துரோணம் சாபம் சிலை தனு நால் பேரே 
வடிவின் மான் கலை சுறாவே மகரராசிக்கு முப்பேர்
குடமொடு கரீரம் சாடி குடங்கரே கும்பம் என்ப 
நெடிய மீன் மயிலை மற்சம் சலசரம் நேரும் மீனம் 
** 4, 3, 4, 4 பெயர்கள் 74 
**75

#75
** அச்சுவினி பரணி 
பரி மருத்துவநாள் வாசி பரவும் ஐப்பசி  யாழ் ஏறோடு 
இரலையே முதல்நாள் சென்னி என்பது அச்சுவினியின்பேர் 
பரணியே கிழவன் சோறு பகலவன் தராசு தாழி 
தருமன்நாள் அடுப்பு பூதம் தாசி முக்கூட்டுதானே 
** 9 10 பெயர்கள் 75
**76

#76
** கார்த்திகை உரோகிணி 
எரி பிறந்திடு நாள் ஆரல் இறால் அறுவாய் அளக்கர் 
கருது நாவிதனே அங்கி கார்த்திகை அளகும் ஏற்கும் 
பிரமன்நாள் சகடு பண்டி பேசிய சதியே வையம் 
உருள் விமானம் தேர் ஊற்றால் உரோணியே உரோகிணிப் பேர் 
** 8, 10 பெயர்கள் 76 
**77

#77
** மிருகசீரிடம் திருவாதிரை 
திங்கள்நாள் மதி பேராளன் சேர்ந்த மான்தலையே மாழ்கு 
பொங்கு மார்கழியே மும்மீன் புகழ் நரிப்புறமே பாலை 
இங்கு இவை ஒன்பது என்ப மிருகசீரிடத்தின்நாமம் 
செங்கை மூதிரை யாழ் ஈசன் தினம் இவை ஆதிரைப் பேர் 
** 9, 4 பெயர்கள் 77 
**78

#78
** புனர் பூசம் பூசம் ஆயிலியம் 
கருதிய அதிதிநாளே கழை புனர்தம் கரும்பு 
பொருஇலாப் புனிதம் பிண்டி ஆவணம் புனர்பூசப்பேர் 
குருவின்நாள் கொடிறு வண்டு குறித்த காற்குளமே பூசம் 
அரவின்நாள் கவ்வை பாம்பே ஆயில் ஆயிலியம் நாற்பேர் 
** 7, 4, 4 பெயர்கள் 78 
**79

#79
** மகம் பூரம் 
கொடுநுகம் வேள்வி வாய்க்கால் குறித்த வேட்டுவனே மாசி 
வடுஅற முதலில் தோன்றி வரும் சனி மகநாள் என்ப 
இடை எழும் சனியே தூர்க்கை எலி பகவதிநாளோடு 
கடிய நாவிதனே எய்யும் கணை இரு முப்பேர் பூரம் 
** 6, 6 பெயர்கள் 79 
**80

#80
** உத்தரம், அத்தம்
பங்குனி கடையில் வந்து பற்றிய சனியினோடு 
செங்கதிர் பிறந்த நாளும் சிறந்த உத்தரம் என்று ஆகும் 
தங்கு காமரமே அங்கி  சார்ந்த நாள் கெளத்துவத்தோடு 
அங் கைம்மீன் களிறு நவ்வி ஐவிரல் அத்தம் ஏழ் பேர் 
** 3,7 பெயர்கள் 80 
**81

#81
** சித்திரை சோதி 
அளக்கும் நெய் பயறு மீனே அறுவையே ஆடை தூசு 
துளக்குஇலா நடுநாள் தச்சன் துவட்டாநாள் சித்திரைப் பேர் 
விளக்கொடு மரக்கால் வீழ்க்கை வெறுநுகம் காற்றின்நாளே 
கிளத்திய காற்று தீபம் கேடுஇலாச் சோதி ஏழ் பேர் 
** 9, 7 பெயர்கள் 81 
**82

#82
** விசாகம் அனுடம் 
முற்றில் வைகாசி காற்று முந்து நாள் முறத்தினோடு 
வெற்றி சேர் சுளகு சேட்டை விசாகநாள் இரு முப்பேரே 
புல் தாளி பெண்ணை தேளே போந்தை மித்திரநாள் ஆறும் 
சொற்றனர் அனுடம் என்று சோர்வுஇலா நூலோர்தாமே 
** 6, 6 பெயர்கள் 82 
**83

#83
** கேட்டை மூலம் 
சேட்டை இந்திரன்நாள் வேதி செந்தழல் எரி இவ் ஐந்தும் 
கேட்டை வல்லாரை என்றும் கிளத்துப வளத்த நூலோர் 
தேட்கடை குருகு கொக்கு சிலையுடன் அன்றில் ஆனி 
ஈட்டிய அசுரநாள் இவ் ஏழ் பெயர் மூலம் என்ப 
** 6, 7 பெயர்கள் 
**84

#84
** பூராடம் உத்தராடம் திருவோணம் 
உடைகுளம் முற்குளம் நீர் உதித்த நாள் பூராடப்பேர் 
கடையினில் குளமே ஆனி கருது விச்சுவநாள் ஆடி 
மிடைஇல் உத்தராடம் என்ப மேவிய ஓணம் மாயோன் 
அடையும் நாள் உலக்கை முக்கோல் சிரவணம் சோணை ஆமே 
** 3, 4,5 பெயர்கள் 84 
**85

#85
** அவிட்டம் சதயம் 
மருவிய காகப்புள்ளு வசுக்கள்நாள் பறவை புள்ளு 
விரவும் ஆவணி அவிட்டம் விளம்பிய நாமம் ஐந்தாம் 
பெருகிய செக்கு சுண்டன் பேசிய போரே குன்று 
வருணன்நாள் சதயம் ஐந்தும் வகுத்த பேர் தொகுத்ததாமே 
** 5,5 பெயர்கள்
**86

#86
** பூரட்டாதி உத்தரட்டாதி இரேவதி 
பொருஇல் முற்கொழுங்கால் நாழி புரட்டையே பூரட்டாதி 
முரசு பிற்கொழுங்கால் மன்னன் உத்தரட்டாதி முப்பேர் 
இரவிநாள் கலமே தோணி ஏற்றம் ஆம் தொழுவே நாவாய் 
பெருகிய கடைநாள் சூலம் பெருநாள் எட்டு இரேவதிப் பேர் 
** 3, 3, 8பெயர்கள் 86 
**87

#87
** அருந்ததி விண்மீன் நாழிகை கால நுட்பம் 
வடமீனே சாலி என்ப மற்று அருந்ததியின்பேரே 
உடுவே தாரகையே பம்மே உற்கையே சுக்கை விண்மீன் 
கடிகை நாழிகை ஆம் கன்னல் இரித்தையும் அதுவே காட்டும் 
துடி கலை விகலை முப்பேர் சொல்லிய காலநுட்பம்
** 2, 5, 3, 3பெயர்கள் 87 
**88

#88
** காலம், நெடும் போழ்து 
வேலையே அமையம் செவ்வி ஏல்வையே பொழுது பாணி 
காலை கொன் பதமே போழ்து காலப்பேர் ஈரைந்து ஆகும் 
சால நீட்டித்தலோடு சார்ந்த பாணித்தல்தானும் 
நீல உண்கண்ணாய் மற்று நெடித்தலும் நெடும் போழ்து என்ப 
** 3, 10 பெயர்கள் 88 
**89

#89
** கால விரைவு மத்தியானம் இராசி 
ஒல்லையே இறையே உற்ற சிறுவரையுடன் இலேசம் 
வல்லை மாத்திரைகள் காலவிரைவின்பேர் வகுக்கில் ஆறாம் 
நல்ல நண்பகலே உச்சி நடுப்பகல் மத்தியானம் 
இல்லுடன் பவனம் ஓரை இராசியின் பெயராம் என்ப 
** 6, 3, 3 பெயர்கள் 89 
**90

#90
** இரா பகல் நாள் 
அல் விபாவரியே கங்குல் அல்கல் யாமினியே நத்தம் 
எல்லியோடு யாமம் மாலை இரசனி நிசி இரா ஆம் 
எல்லொடு திவா பகல் பேர் ஏல்வையே திவசம் வைகல் 
அல்கலே தினமே எல்லை ஆனியம் பகலே நாள் ஆம் 
** 11, 2, 8 பெயர்கள் 90 
**91

#91
** இருள், முன்னை நாள், பின்னை நாள் 
சருவரி அந்தகாரம் கச்சளம் தமம் துவாந்தம் 
இருள் என்ப திமிரமோடு துணங்கறல் என்றும் ஏற்கும் 
நெருநலும் நென்னலும்தான் நிகழ்த்துப முன்னைநாளை 
பெருகிய பின்றை பிற்றை பின்னை என்று இயம்பலாமே
** 7, 2, 2 பெயர்கள் 91 
**92

#92
** வைகறை நிலவு வெய்யில் மாலை சாமம் பருவம் 
புலரி வைகறையின்நாமம் விடியலும் போற்றும்  அப் பேர் 
நிலவு சந்திரிகை வெய்யில் நிகழ்ந்த ஆதபமே என்றூழ் 
இலகிய மாலை சாயம் சந்தி ஆம் யாமம் சாமம் 
அலைவுஅறு பருவம்தானே ஆனியம் இருது ஆகும் 
** 2, 1, 2, 2, 1, 2 பெயர்கள் 92 
**93

#93
** ஒரு கலை மாதம் மதி தெரி கலை இரா 
** மதி மறை கலை இரா 
திதியொடு பக்கம்தானே ஒருகலை தெரிக்கும் என்ப 
மதியொடு திங்கள் சொல்லின் மாதமே பேதம் இல்லை 
மதி தெரி கலை இராப் பேர் வரும் சினீ வாலி ஆகும் 
மதி மறை கலை இராவின் வரும் பெயர் குகு என்று ஆமே 
** 2, 2, 1, 1 பெயர்கள் 93 
**94

#94
** பூரணை அமாவாசை முதல் பக்கம் தொட்டு 
** மூன்று வட்டமாக வரும் லந்து பக்கங்கள் 
அந்தம் ஆம் உவாவே பவ்வம் பூரணை இருபேர் ஆகும் 
இந்துவோடு இரவி கூட்டம் அமாவாசை அமையும் என்ப 
நந்தை பத்திரையினோடு நாட்டிய சயை இரித்தை 
முந்து பூரணை ஆம் பக்கம் முதல் தொட்டு மூன்று வட்டம் 
**2, 2, 5  பெயர்கள் 94 
**95

#95
** ஆவணி முதல் இரண்டிரண்டு மாதம் 
** ஆகிய அறுவகைப் பருவம் 
பரவிய காரே கூதிர் முன் பினின் பனிகளோடு 
விரவிய இளையவேனில் விரைந்திடு முதிர்ந்தவேனில் 
மருவும் ஆவணியே ஆதி மற்று இரண்டிரண்டு மாதம் 
பருவம் மூவிரண்டும் ஆய்ந்து பார்த்திடின் வாய்த்த பேர் ஆம் 
** 6 பெயர்கள் 95 
**96

#96
** வருடம், ஆண்டில் பாதி, ஊழி, வாழ்நாள் 
** அயன் வாழ்நாள் 
இகழ்வுஇல் வற்சரமே ஆண்டே சமை முப்பேர் வருடம் என்ப 
பகரில் ஆயனமும் அப் பேர் அயனமே ஆண்டில் பாதி 
உகமுடிவுடன் மடங்கல் ஊழி ஆம் ஆயுள் வாழ்நாள் 
மகிழ்வுறு கற்பம்தானே மலர் அயன் வாழ்நாள் என்ப 
** 4, 1, 2, 1, 1 பெயர்கள் 96 
**97

#97
** மழை பெருமழை விடா மழை 
சொரி துளி திவலை தூவல் சீகரம் தூறல் மாரி 
வருடமோடு உறையே ஆலி வானமும் மழைப் பேர் பத்தாம் 
பெருமழை என்பதானே பேசில் ஆசாரம் ஆகும் 
விரவிய பனித்தல் சோனை விடாமழை இருபேர் ஆமே 
** 10, 1, 2 பெயர்கள் 97 
**98

#98
** துளி, ஆலங்கட்டி, மேல், கீழ் 
வாலிய திவலை தூவல் வண் சிதர் சீகரத்தோடு 
ஆலியே தளியே மிக்க உறை துளி ஆக ஏழ்பேர் 
ஆலியே கரகம் மற்றைக் கனோபலம் ஆலங்கட்டி 
மேலின்நாமம்தான் உம்பர் மேக்கும் ஆம் கிழக்கு கீழே 
** 7, 3, 2, 1 பெயர்கள் 98
**99

#99
** மேகம் 
பயனுறு மங்குல் சீதம் பயோதரம் தாராதாரம் 
குயின் மழை எழிலி மஞ்சு கொண்டல் சீமுதம் கொண்மூ 
வியன் முகில் விண் விசும்பு விளையும் மால் சலதரம் செல் 
புயல் கனம் கந்தரம் கார் போற்று மை மாரி மேகம் 
** 23 பெயர்கள் 99 
**100

#100
** இடி மின் 
வெடி ஒலி அசனி செல்லு விண்ணேறு மடங்கல் ஆறே 
இடியின்பேர் உருமும் மற்றை அனலேறும் இதன்பேர் என்ப 
நெடு வித்துத்து தடித்து நீள் சம்பை சபலையோடு 
கடிய சஞ்சலையே மின்னல் கனருசி மின்னின் ஏழ்பேர் 
** 8, 7பெயர்கள் 100 
**101

#101
** பனி பரிவேடம் வானவில் 
பனி இமம் துகினமும் பேர் பரிவேடம் ஊர்கோள் வட்டம் 
தனி இடு வானவில்லே இந்திரதனு என்று ஆகும் 
இனையவை தேவர் ஈட்டச் செய்யுள் நூற்றொன்று இசைத்தான் 
புனை குணபத்திரன் தாள் போற்றும் மண்டலவன்தானே 
** 2, 2, 1 பெயர்கள் 101 
** முதலாவது தேவப் பெயர்த் தொகுதி முற்றிற்று 

@2.  மக்கட் பெயர்த் தொகுதி 
**102

#1
** தெய்வ வணக்கமும் தோற்றுவாயும் 
தேன் அவிழ்த்து அளிகள் எல்லாம் செவ்வழி பாடாநின்ற 
பூ நகைத்து இலங்கு கஞ்சப் பொகுட்டின் மீதே ஒதுங்கு 
நான்முகக் கடவுள் பாதம் நாவினால் நவிற்றி ஏத்தி 
மானவர்க்கு இயன்ற பேரை வகுத்திடும் தொகுதி சொல்வாம்
**103

#2
** முனிவர் 
துறவர் சார்பில்லோர் நீத்தோர் தூய் தவர் முனைவர் மெய்யர் 
அறவர் மாதவர் கடிந்தோர் அந்தணர் அடிகள் ஐயர் 
உறுவர் தாபதர் விளங்கும் இருடிகள் உயர்ந்தோர் யோகர் 
அறிஞர் பண்ணவர் சிறந்த அருந்தவர் முனிவர் ஆமே 
** 20 பெயர்கள் 2 
**104

#3
** சமண நீத்தோர் சைவத்தோர் 
** மால் சமயத்தோர் புத்தர் 
தாஇல் செளமியரே யோகர் திகம்பரர் சமண நீத்தோர் 
மாவிரதியரே பாசுபதர் காளாமுகர் சைவத்தோர் 
மேவு மால்சமயத்தோர் பேர் மிக்க பாகவதர் ஆகும் 
சீவகர் பெளத்தரோடு தேரர் சாக்கியரே புத்தர் 
** 3, 3, 1, 4 பெயர்கள் 3 
**105

#4
** சமணரில் சித்தி பெற்றோர் 
** சடை முடித்த படிவர் அகத்தியன் 
நீரினில் பூவில் வானில் நினைத்துழி ஒதுங்குகின்ற 
சாரணர் எண்மர் ஆவார் சமணரில் இருத்தி பெற்றோர் 
பாரிய சடை முடித்த படிவர் தாபதரே என்ப 
கூரிய கும்பயோனி குறுமுனி அகத்தியன்பேர் 
** 1,1,2 பெயர்கள் 4 
**106

#5
** மறையவர் பிரமசாரி துரோணாசாரியன் 
ஐயர் வேதியரே நூலோர் அறுதொழிலாளர் ஆய்ந்தோர் 
மைஇல் பூசுரரே செந்தீ வளர்ப்பவர் தொழுகுலத்தோர் 
பொய்இல் அந்தணரே ஆதி வருணர் முப்புரிநூல் மார்பர் 
மெய்யர் விப்பிரரே வேதபாரகர் வேள்வியாளர் 
**107

#6
இருபிறப்பாளர் பார்ப்பார் ஏற்ற மேற்குலர் உயர்ந்தோர் 
வரு மறையவர்தம் பேர் ஆம் வன்னியே பிரமசாரி 
அரு மறைக்கொடியோன் வின்னூலாளன் பாரத்துவாசன் 
தரு நெறி வழாத் துரோணாசாரியன்பேர் மூன்று ஆமே 
** 19 1 3 பெயர்கள் 6 
**108

#7
** அறிஞர் ஆசாரியன் மாணாக்கன் 
சான்றவர் மிக்கோர் நல்லோர் தகுதியோர் மேலோர் ஆய்ந்தோர் 
ஆன்றவர் உலகம் மேதாவியர் அறிஞர்கள் பேர் ஆசான் 
ஊன்று தேசிகனே ஓசன் உபாத்தியாயன் பணிக்கள் 
ஏன்ற ஆசாரியன்பேர் ஏற்ற மாணாக்கன் கற்போன் 
** 9, 5, 1 பெயர்கள் 7 
**109

#8
** பண்டிதர் கலைஞர் ஒத்துரைப்போர் 
கலைஞர் மேதையரே மூத்தோர் கற்றவர் அவை விற்பன்னர் 
தலைமை ஆம் கவிஞர் சங்கம் சாரதி சூரி சாடு 
புலவர் பண்டிதர் பேர் போற்றில் அறிஞரும் புதரும் ஆகும் 
கலைஞரே கவிவல்லோர் ஆம் கணக்காயர் ஓத்துரைப்போர் 
** 14, 1, 1 பெயர்கள் 8 
**110

#9
** மூத்தோன் பெருமையின் சிறந்தோன் 
குரவன் ஐயன் சுவாமி கோமானே அடிகள் அத்தன் 
பரவிய உரவோன் ஈசன் பதி இறை மூத்தோன்பேர் ஆம் 
குரிசிலோடு அண்ணல் ஏந்தல் கூறிய தோன்றல் செம்மல் 
பெருமையில் சிறந்தோன் என்று பேசினர் மாசுஇல் நூலோர் 
** 10, 5 பெயர்கள் 9 
**111

#10
** எப்பொருட்கும் இறை உயர்ந்தவர் 
நாதனே கொழுநன் காந்தன் நாட்டிய பதி கோன் ஈசன் 
ஆதிபன் அதிபன் செம்மல் அரன் பிரான் ஆதி மன்னன் 
ஏதில் எப்பொருட்கும்தானே இறை பெயர் இவை பன்மூன்றாம் 
ஓது சீர் உலகம் என்பது உயர்ந்தவர்க்கு இயம்பும் நாமம் 
** 13, 1 பெயர்கள் 10 
**112

#11
** திரண்டோர் பெண்கள் கூட்டம் 
சவை சமவாயம் சங்கம் சமுதாயம் சமூகம் கோட்டி 
அவை குழாம் குழுவே கூட்டம் அடர் திரள் கணங்கள் ஈராறு 
இவை திரண்டோர் பேர் பண்ணை எய்திய ஓரை பொய்தல் 
அவை பெண்கள் கூட்டம் ஆயம் கெடவரல் அதுவும் ஆமே 
** 12, 5 பெயர்கள் 11 
**113

#12
** அரசன் 
புரவலன் பெருமான் ஏந்தல் பூபாலன் வேந்தன் மன்னன் 
நரபதி பொருநன் சக்கிரி நகை முடி நிருபனோடு 
குரிசில் பார்த்திவனே கோவே கொற்றவன் இறைவன் அண்ணல் 
அரசன்பேர் இவை ஈரெட்டாம் தலைவன் காவலனும் ஆமே 
** 18 பெயர்கள் 12
**114

#13
** வீட்டுமன் குருகுல வேந்தர் 
தரு தெய்வவிரதன் கங்கைதனயன் சந்தனுமுன்பெற்றோன் 
கருதிய பிரமசாரி காங்கேயன் வீட்டுமன்பேர் 
பரவு பாரதரே மற்றைப் பெளரவர் என்னும் நாமம் 
குருகுலவேந்தர்க்கு ஆகும் கெளரவர் என்றும் கூறும் 
** 5, 3 பெயர்கள் 13 
**115

#14
** தருமன் 
தரம் மிகு குவளைத்தாரான் யுதிட்டிரன் பொறையன் சாற்றும் 
முரசு உயர் கொடியோன் நீதி மொழியும் நல் அறத்தின் சேயே 
குருகுலப் பாண்டுமைந்தன் குந்திதன்புதல்வன் மெய்ம்மை 
விரதமாக்கொள்வோன் மேன்மைத் தருமன்பேர் எட்டும் ஆமே 
** 8 பெயர்கள் 14 
**116

#15
** துரியோதனன் 
மருவு காந்தாரிமைந்தன் நந்தியாவர்த்தத்தாமன் 
அரவுயர்த்தவன் வணங்காமுடியினன் அரசர்மன்னன் 
உரை கெழு சுயோதனன் கண்ணொன்றும்இல்லாதோன் ஆன 
திருதராட்டிரன்தன்செல்வன் சீர்த் துரியோதனன்பேர்  
** 7 பெயர்கள் 15
**117

#16
** கன்னன் வீமன் 
கடுங் கதிர் மதலை வீசும் கவசகுண்டலனே கச்சை 
நெடுங் கொடியினன் கானீனன் நீள் அங்கர்கோமான் கன்னன் 
மடங்கலின்கொடியோன் வெய்ய மாருதி வாயுமைந்தன் 
இடிம்பைதன்கொழுநன் வீமன் கதாயுதன் என்றும் ஏற்கும் 
** 5, 5 பெயர்கள் 16 
**118

#17
** அருச்சுனன் 
குற்றம்இல் கிருட்டிணன் பற்குனன் தனஞ்சயன் காண்டீவன் 
வெற்றி சேர் சவ்வியசாசி வீபற்சு விசயன் பார்த்தன் 
சொற்ற கேசவற்குத்தோழன் சுவேதவாகனன் கிரீடி 
அற்றம்இல் அருச்சுனற்கே அமைந்த பேர் பன்னொன்றாமே 
** 11 பெயர்கள் 17 
**119

#18
** சேரன் 
வில்லவன் கொங்கன் வஞ்சிவேந்தனே போந்தின்தாரோன் 
கொல்லிவெற்பன் குடக்கோ குட்டுவன் குடகன் கோதை 
மல்லல் சேர் உதியன் வானவரம்பனே மலையமானே 
செல்லல் தீர் பொருநையாற்றோன் சேரலன் சேரன் பேரே 
** 14 பெயர்கள் 18 
**120

#19
** சோழன் 
நேரியன் சென்னி பொன்னித்துறைவனே நேரிவெற்பன் 
ஆரின்மாலையனே கிள்ளி அபயனே கோழிவேந்தன் 
சீரிய வளவன் மிக்க செம்பியன் புலிஉயர்த்தோன் 
சூரியன் புனனாடன் கோச் சோழன் மால் என்றும் சொல்லும் 
** 14 பெயர்கள் 19 
**121

#20
** பாண்டியன் 
செழியனே கூடல்கோமான் தென்னவன் வேம்பின்தாரோன் 
வழுதியே குமரிச்சேர்ப்பன் வைகையந்துறைவன் மாறன் 
விழைவுறு பொதியவெற்பன் மீனவன் கைதவன் சொல் 
பழைய பஞ்சவனே வெய்ய கெளரியன் பாண்டியன்பேர் 
** 13 பெயர்கள் 20 
**122

#21
** குறுநில மன்னர் அமைச்சர் 
குறும்பரே அரட்டர் வேளிர் குறுநிலமன்னர் ஆகும் 
செறிந்திடும் புரோசரும் பேர் தேர்ச்சியில் துணைவர் எண்ணர் 
உறைந்திடு நூலோர் சூழ்வோர் உழையர் மந்திரரே நீதி 
அறிந்திடு முதுவர் முன்னோர் அமாத்தியர் அமைச்சர் நாமம் 
** 4, 9 பெயர்கள் 21 
**123

#22
** படைத் தலைவன் நிமித்திகன் கணக்கர் 
** வழியினுள்ளார் பரிவாரம் 
பெருகிய பொருநன் சேனாபதி படைத்தலைவன் பேரே 
வரு நிமித்திகன்பேர் சாக்கை வள்ளுவன் என்றும் ஆகும் 
கருது காவிதியர் என்ப கணக்கர்தம் வழியின் உள்ளார் 
பரவிய பரிவாரப்பேர் பரியாளம் என்னல் ஆமே 
** 2, 2, 1, 1 பெயர்கள் 22 
**124

#23
** முதல் வள்ளல் எழுவர் இடை வள்ளல் எழுவர் 
மிக்க செம்பியனே காரி விராடனே நிருதிதானும் 
தக்க துந்துமாரிதானும் சகரனும் நளனும்தாம் முன் 
அக்குரன் சந்திமானோடு அந்திமான் சிசுபாலன்னே 
வக்கிரன் கன்னன் சந்தன் இடைவள்ளல் வகுத்தவாறே 
** 7, 7பெயர்கள் 23 
**125

#24
** கடை வள்ளல் எழுவர் 
பாரி ஆய் எழிலி நள்ளி பசுந்தொடை மலையன் பேகன் 
ஓரியே கடையில் உற்றோர் உறு பொருள் தண்டாது ஈந்தும் 
வாரியில் இரந்தோர்க்கு இட்டும் வளர் புகழ் துதிக்க ஈந்தும் 
பேர் இயல் வையம் எண்ணப்பெற்றனர் முப்பால் ஆகும் 
** 7 பெயர்கள் 24 
**126

#25
** வைசியர் 
இளங்கோக்கள் மன்னர்பின்னர் இப்பர் எட்டியரே நாய்கர் 
வளம்பெறு வணிகர் நல் ஆன்காவலர் உழவர் மற்றும் 
விளங்கிய பரதர் மேய வினைஞர் செட்டியர் பன்னொன்றும் 
உளம்கெழு வைசியர் பேர் ஆம் உறு சிரேட்டிகளும் ஆகும் 
** 12 பெயர்கள் 25 
**127

#26
** சூத்திரர் 
மண்மகள்புதல்வர் வாய்ந்த வளமையர் களமர் என்றும் 
உண்மைசால் சதுர்த்தர் மாறா உழவர் மேழியர் வேளாளர் 
திண்மைகொள் ஏரின்வாழ்நர் காராளர் வினைஞர் செம்மை 
நண்ணு பின்னவர் பன்னொன்றும் நவின்ற சூத்திரர்தம் பேரே 
** 11 பெயர்கள் 26 
**128

#27
** மருத்துவர் குயவன் 
வெம்பிய பிடகர் ஆயுள்வேதியர் மருத்துவர்க்கு ஆம் 
அம்புவி மற்றும் மாமாத்திரர் என்றும் அவர்க்கே கூறும் 
கும்பகாரன் குலாலன் குறித்த வேட்கோவன் சக்கிரி 
நம்பும் மட்பகைவன் ஐந்தும் நாட்டிய குயவன்நாமம் 
** 3, 5 பெயர்கள் 27 
**129

#28
** சித்திரகாரர் கண்ணாளர் 
சிற்பர் ஓவியரே மோகர் சித்திரகாரர் நாமம் 
சிற்பியர் துவட்டர் ஓவர் தபதியர் சிறப்பின் மிக்க 
அற்புதர் யவனர் கொல்லர் அக்கசாலையர் புனைந்தோர் 
கற்பில் கம்மியரே கண்ணுள்வினைஞர் கண்ணாளர் நாமம் 
** 3, 11 பெயர்கள் 28 
**130

#29
** கொல்லர் தச்சர் தட்டார் 
கருமரே மனுவர் கொல்லர் காட்டிய நாமம் ஆகும் 
மரவினையாளன் மற்றை மயனொடு தபதி தச்சன் 
புரியும் பொன் செய்யும் கொல்லர் பொன் வினை மாக்கள் தட்டார் 
உரை கெழு சொன்னகாரர் அக்கசாலையரும் ஓதும் 
** 2, 3, 4 பெயர்கள் 29 
**131

#30
** சிற்பாசாரியர் பொருளினை உருக்கும் தட்டார் 
** பணித் தட்டார் முத்தம் கோப்பார் 
தருமுறை தெரிந்த சிற்பாசாரியர் மண்ணீட்டாளர் 
பொருளினை உருக்கும் தட்டார் பொன் செய்யும் புலவர் என்ப 
பெருகிய பணித்தட்டார்தம் பேர் கலந்தருநர்தாமே 
வருமுறை முத்தம் கோப்பார் மணி குயிற்றுநர் என்று ஆமே 
** 1, 1, 1, 1 பெயர்கள் 30 
**132

#31
** கன்னார் அநாரியர் சோனகர் உப்பு வணிகர்
கலத்தைச் செய் கஞ்சகாரர் கன்னுவர் கன்னார் ஆகும் 
மிலைச்சரே அநாரியர்க்கு ஆம் மிலேச்சரும் விதித்த பேரே 
துலைப்படும் யவனர் என்ப சோனகர் உவச்சரும் பேர் 
மலைப்புஇலா உமணர் உப்புவாணிகர் காணுங்காலே 
** 2 2 2 1 பெயர்கள் 31 
**133

#32
** வண்ணார் நாவிதர் வேதகாரர் நெய்வார் 
இருந்த காழியரே தூசர் ஈரங்கோலியரே வண்ணார் 
வரும் பெரு மஞ்சிகன் சீமங்கிலி மாசு தீர்த்துத் 
திருந்தும் ஏனாதி மூன்றும் சிறந்த நாவிதன்பேர் ஆகும் 
பொருந்தரே வேதகாரர் போற்றும் காருகர் நெய்வார் பேர் 
** 3, 3, 1, 1 பெயர்கள் 32 
**134

#33
** துன்னர் தோல் துன்னர் கூவனூலோர் 
** சங்கறுப்போர் ஊன் விற்போர் 
** தோல் வினை மாக்கள் 
பொல்லரே துன்னர் என்ப புகன்ற தோல்துன்னர் செம்மார் 
உல்லியர் கூவனூலோர் ஒளி வளைபோழ்நர்தாமே 
மெல்லிய சங்கறுப்போர் சூனர் ஊன்விற்போர் என்ப 
சொல்லிய பறம்பர்தாமே தோல்வினைமாக்கள் நாமம் 
** 1, 1, 1,1,1,1 பெயர்கள் 33 
**135

#34
** சண்டாளர் பாணர் 
கொலைஞரே களைஞர் வங்கர் குணுங்கர் மாதங்கரோடு 
புலைஞரே இழிஞர் ஏழ்பேர் பொருந்து சண்டாளர் நாமம் 
உலவு சென்னியரே பண்டர் ஓவர் வந்தித்துநிற்போர் 
பலர் புகழ் மதங்கர் சூதர் பண்ணவர் பாணர் ஆமே 
** 7, 7 பெயர்கள் 34 
**136

#35
** செக்கான் கள் விற்போர் மீகாமன் 
சக்கிரி நந்தி செக்கான்தன் பெயர் ஆகும் என்ப 
தொக்க கள்விற்போர் நாமம் செளண்டிகர் துவசரோடு 
தக்கதோர் பிழியர் மற்றும் படுவரும் சாற்றும் அன்றே 
மிக்க மீகாமன்நாமம் மீகான் மாலுமி நீகான் ஆகும் 
** 2, 4, 3 பெயர்கள் 35 
**137

#36
** பண்ணுவார் யானைப் பாகர் 
** மெய்காப்பாளர் உறைகாரர் 
மாவலர் வதுவரோடு வாதுவர் பண்ணுவார் பேர் 
சோர்வுஇலாப் பாகரோடு ஆதோரணர் யானைப்பாகர் 
காவலர் மெய்காப்பாளர் கஞ்சுகி என்றும் காட்டும் 
மேவு காரோடர் என்ப உறைகாரர் விதித்த பேரே 
** 3, 2, 2, 1 பெயர்கள் 36 
**138

#37
** தேர்ப்பாகன் ஒற்றர் மடையர் 
தூய தேர்ப்பாகன் சூதன் வலவன் சாரதியும் சொல்லும் 
வேயர் சாரணரே ஒற்றர் விதித்த பேர் மடையர் நாமம் 
ஏய வாலுவரே மிக்க கூவியர் என்றும் நூலை 
ஆயும் பானசிகர் என்றும் பாசகர் என்றும் ஆமே 
** 3, 2 பெயர்கள் 37 
**139

#38
** கூத்தர் தமிழ்க் கூத்தர் கழாயர் 
நாடகர் கண்ணுளாளர் நடர் வயிரியர் நிருத்தர் 
கோடியர் பொருநர் கூத்தர் அவிநயர் என்றும் கூறும் 
நீடிய வாயிலோரே நெடுந் தமிழ்க் கூத்தர் என்பர் 
ஆடும் வேழம்பர் என்ப கழாயருக்கு அடைத்த நாமம் 
** 8, 1, 1 பெயர்கள் 38 
**140

#39
** நரம்புக் கருவியாளர் தோற் கருவியாளர் 
** வெறியாட்டாளன் தேவராட்டி அயலவர் 
குயிலுவர் நரம்பின் ஆய கருவியைக் கொளுத்தும் மாக்கள் 
இயலும் தோற்கருவியாளர் இயவர் ஆம் வெறியாட்டாளன் 
சயமுறு தேவராளன் சாலினி தேவராட்டி 
அயலவர் நொதுமலாளர் வம்பலர் என்றும் ஆமே 
** 1,1, 1, 1, 2 பெயர்கள் 39 
**141

#40
** புதியவர் வழிச் செல்வோன் ஏவுவான்
** மூதுணர்ந்தோர் உரியோர் குறிக் கொள்வோர் 
புதியவர் விருந்தோர் என்ப அதிதி வம்பலரும் போற்றும் 
பதிகனே வழிச்செல்வோன் ஆம் வியவனே ஏவுவான்பேர் 
முதுவர் மூதுணர்ந்தோர் நாமம் கிழவரே உரியோர் பேர் ஆம் 
அதிகம் ஆம் குறிக்கொள்வோர் பாராயணர் என்பதாமே 
** 3, 1, 1, 1, 1,1  பெயர்கள் 40 
**142

#41
** தூதர் அடிமை 
வித்தகர் வினையுரைப்போர் விதியுளி வழியுரைப்போர் 
உத்தமம் ஆன பண்புற்றுரைப்பவர் தூதர் ஆகும் 
தொத்தொடு கிணகர் தாசர் தொழும்பொடு தொறு விருத்தி 
அத்தகு தொண்டு சேடர் ஆள் இவை அடிமை ஆமே 
** 4, 9 பெயர்கள் 41
**143

#42
** தோழன் தோழன் முன்னிலைப் பெயர் 
** தோழி தோழி முன்னிலைப் பெயர் 
சிலதனே நண்பன் பாங்கன் சேடனே துணைவன் தோழன் 
எலுவனும் ஆம் இவன் முன்னிலைப்பெயர் ஏடா என்ப 
சிலதியே சகியே பாங்கி சேடியே இகுளை தோழி 
நலமுறும் முன்னிலைப்பேர் நாடின் மற்று ஏடி எல்லா 
** 6 1 5 2 பெயர்கள் 42 
**144

#43
** குருடன் கூன் குறள் செவிடு முடம் ஊமை அவி 
அந்தகன் சிதடன் என்ப குருடன் ஆம் கோணல் கூன்பேர் 
சிந்து வாமனமே குஞ்சம் குறள் வதிர் செவிடு என்று ஆகும் 
முந்திய முடமே பங்கு குணி ஊமை மூகை மூங்கை 
தந்த பெண்டகனே பேடி நபுஞ்சகள் அலியே சண்டன் 
** 2, 1 3, 1, 2, 2, 4 பெயர்கள் 43 
**145

#44
** கொலையாளி வேதனைசெய்வோன் அச்சம் 
** உள்ளோன் வேகி வஞ்சகன் 
காதகன் சாருகன்தான் கடுங் கொலையாளி நாமம் 
வேதனைசெய்வோன் பேரே அருந்துதன் விளம்பல் ஆகும் 
பீதனே சகிதனோடு பீருவும் அச்சம்உள்ளோன் 
ஓதிய சவனன் வேகி உற்ற வஞ்சகன் நிசாதன் 
** 2, 1,3, 1, 1 பெயர்கள் 44 
**146

#45
** தூர்த்தர் நாகரிகர் கிராமம் உற்றோன் 
படிறர் பல்லவர் பரத்தர் பகர் இடங்கழியரோடு 
விடரும் காமுகரும் தூர்த்தர் மிக்க நாகரிகர் என்ப 
கடி நகர்ப் பதி வாழ்கின்ற சதுரர் காமுகர் என்றும் பேர் 
அடைவுள கிராமம்உற்றோன் கிராமியன் ஆகும் அன்றே 
** 6, 2, 1 பெயர்கள் 45 
**147

#46
** வல்லோன் மாட்டார் குலம் உளோன் 
** கரியவன் நோய் உற்று ஒழிந்தோன் காலாள் 
** ஆயத்தமானோன் 
வலவை வல்லுநனே வல்லோன் மாட்டார் பேர் வல்லார் என்ப 
குலம்உளோன் குலீனன் ஆகும் கரியவன் குறித்த கள்வன் 
உலவு நோய் உற்று ஒழிந்தோன் உல்லாகன் பதாதி காலாள் 
அலைவுஇல் சந்நத்தன் என்பது ஆயத்தமானோன் பேரே 
** 2, 1, 1, 1, 1, 1, 1 பெயர்கள் 46 
**148

#47
** கூர்மை'இல்லோன் நிர்வாணி மிகு புகழாளன் 
** அருளோன் கடிகை மாக்கள் 
மந்தனே கூர்மைஇல்லோன் நக்கன் நிர்வாணி நாமம் 
வெம் திறல் இயவுள் என்ப மிகு புகழாளன் பேரே 
உந்திய அருளோனே காருண்ணியன் என்பர் எட்டர் 
வந்திகள் கவிகள் கற்றோர் வண்டரே கடிகைமாக்கள் 
** 1, 1, 1, 1, 5 பெயர்கள் 47 
**149

#48
** கொடையுளோன் வரைவறக் 
** கொடுத்தளிப்போன் ஏற்போன் 
புரவலன் ஈகையாளன் போற்றும் வேளாளன் தியாகி 
உரை கெழு வேள்வியாளன் உபகாரி கொடையுளோன் ஆம் 
வரைவறக் கொடுத்தளிப்போன் வள்ளியோன் என்று கூறும் 
இரவலன் பரிசிலாளன் யாசகன் தீனன் ஏற்போன் 
** 6, 1, 4 பெயர்கள் 48 
**150

#49
** திருடர் தரித்திரன் 
கரவடர் சோரர் தேனர் பட்டிகர் புரையோர் கள்வர் 
திருடர் ஆம் தரித்திரன்பேர் அகிஞ்சனன் தீனன் பேதை 
மருவு நல்கூர்ந்தோன் இல்லோன் வறியன் ஆதுலனே ஏழை 
விரவிய உறுகணாளன் இலம்பாட்டோன் மிடியன் ஆமே 
** 6, 11 பெயர்கள் 49 
**151

#50
** திண்ணியன் தானைத் தலைவர் 
வயவனே திறலோன் மற்றை வண்டனே மிண்டன் மள்ளன் 
வியவனே விறலோன் மீளி வீரனே திண்ணியன்பேர் 
நயம்இல் கூளியர் ஏறாளர் நாட்டும் வாள் உழவர் மள்ளர் 
சயம் மிகு மறவர் தானைத்தலைவர் ஆம் படரும் ஆமே 
** 9, 6 பெயர்கள் 50 
**152

#51
** பகைவர் 
அரிகளே செறுநர் சேரார் அமரார் உள்ளாரே நள்ளார் 
மருவலர் தெவ்வர் மாணார் மாற்றலர் மன்னார் ஒன்னார் 
தரியலர் ஒட்டார் வட்கார் சார்பிலார் பற்றார் செற்றார் 
பரரொடு கேளார் ஒல்லார் பகைவர் பேர் எழுமூன்றாமே 
** 21 பெயர்கள் 51 
**153

#52
** மேவினர் 
ஒல்லுநர் தொடர்ந்தார் சேர்ந்தார் ஒட்டுநர் பெட்டார் வேட்டார் 
புல்லுநர் பசைந்தார் மித்திரர் புரிந்தார் ஆர்வலர் விழைந்தார் 
நல்லவர் காதலித்தார் நள்ளுநர் நயந்தார் கூட்டம் 
மெல்ல ஒன்றுநர் மூவாறும் மேவினர் நாமம் ஆமே 
** 18 பெயர்கள் 52 
**154

#53
** சுற்றம் 
உற்றவர் இகுளை நட்டோர் உறவு ஒக்கல் கிளையே சார்ந்தோர் 
பற்றினர் சிறந்தோர் நட்பு பந்தமே பரிசனம் கேள் 
குற்றம்இல் நண்பு கூளி குடும்பமே கடும்பு நள்ளி 
சுற்றம் மூவாறு பேரும் சூழ்ந்த பாசனமும் சொல்லும் 
** 19 பெயர்கள் 53 
**155

#54
** கீழோர் 
பொறியிலார் கயவர் நீசர் புள்ளுவர் புல்லர் தீயோர்
சிறியசிந்தையர் கனிட்டர் தீக்குணர் தீம்பர் தேரார் 
முறையிலார் முசுண்டர் மூர்க்கர் முசுடர் பல்லவரே கையர் 
மறைவுஇலாக் கலர் மூவாறும் மன்னு பூரியரும் கீழோர்  
** 19 பெயர்கள் 54 
**156

#55
** அறிவிலான் தொழில் செய்வோர் வாயில் காப்போர் 
முழுமகன் சிதடன் பேதை மூடனே மண்ணை அஞ்ஞை 
இழுதையே மடனே ஆதன் ஏழையே அறிவிலான்பேர் 
தொழுவர் கம்மியரே மற்றைத் தொழில்செய்வோர் நாமம் ஆகும்
வழுஇலா வாயிலாளர் வாயில்காப்போர்தம் பேரே 
** 10, 2, 1 பெயர்கள் 55 
**157

#56
** பெண் 
அரிவை அங்கனை மடந்தை ஆடவள் ஆட்டி மாயோள் 
சுரிகுழல் மகடூஉ காந்தை சுந்தரி வனிதை மாது 
தெரிவை மானினியே நல்லாள் சிறுமியே தையல் நாரி 
பிரியை காரிகை அணங்கு பிணா பெண்டு பேதை பெண் பேர் 
** 24 பெயர்கள் 56 
**158

#57
** புருடன் ஆண் பெண்ணைச் சிறப்பிக்கும் நாமம் 
ஆடவன் மைந்தன் காளை ஆடூஉவே மகன் புமானே 
நீடிய குமரன் ஏழும் நிருமித்த புருடன்நாமம் 
நாடிய நம்பியோடு நங்கை என்று இரண்டு ஆண் பெண்ணைத் 
தேடிய கவிகள் எல்லாம் சிறப்பிக்கும் நாமம் ஆமே 
** 7, 1, 1 பெயர்கள் 57 
**159

#58
** பெண்பாற்குரிய பருவம் ஆண்டு 
பேதையே பெதும்பை மங்கை பெருகிய மடந்தையோடு 
தீதுஇலா அரிவை மற்றைத் தெரிவை பேரிளம்பெண் என்ப 
ஏதம்இல் பருவம் ஆண்டு ஏழ் எய்து பன்னொன்று பன்மூன்று 
ஓது பத்தொன்பான் ஐயைந்து உடன் முப்பத்தொன்று எண்ணைந்தே 
** 7 பெயர்கள் 58 
**160

#59
** கைம்மை பெற்றோன் வேற்றோர்க்குப் 
** பெற்ற பிள்ளை கன்னி பெற்ற பிள்ளை 
முன்னிய கைம்மைபெற்றோன் மொழிந்த கோளகனே ஆகும் 
பின்னை வேற்றோர்க்குப் பெற்ற பிள்ளை குண்டகனே என்ப 
பன்னி வாழ்க்கைப்படா முன் படர்ந்தொரு களவினாலே 
கன்னியே பெற்ற பிள்ளை கானீனன் என்றே ஓதும் 
** 1, 1, 1 பெயர்கள் 59 
**161

#60
** நாற்குலத்துள் உயர்குலத்து ஆணும் 
** இழிகுலப் பெண்ணும் கூடிப் பெற்ற பிள்ளை 
** உயர்குலப் பெண்ணும் இழிகுலத்து ஆணும் 
** கூடிப் பெற்ற பிள்ள 
உயர்ந்த நாற்குலத்தில் ஆண் பெண் உயர்பு இழிவு இரண்டும் கூடி 
இயங்கிய பிள்ளைப் பேரே அநுலோமன் என்று கூறும் 
நயந்த அப் பெண்ணும் ஆணும் நண்ணிய உயர்வு தாழ்வில் 
வியந்திடும் பிள்ளைப் பேரே விறல் பிரதிலோமன் ஆமே 
** 1,1 பெயர்கள் 60
**162

#61
** அநுலோமத்தாணும் பிரதிலோமப் பெண்ணும் 
** கூடிப் பெற்ற பிள்ளை அநுலோமப் பெண்ணும் 
** பிரதிலோமத்தாணும் கூடிப் பெற்ற பிள்ளை 
பெருத்த அவ் அநுலோமன்னே பிரதிலோமன் என்ற பேரில் 
உரைத்த ஆண் பெண்ணில் வந்தே உற்றவன் அந்தராளன் 
நிரைத்தவர் மாறிக் கூடிப் பிறந்தவன் நீண்ட பேரே 
விரித்தது வினவிக் கேட்கில் விராத்தியன் என்னும் நூலே 
** 1, 1 பெயர்கள் 61 
**163

#62
** தலைவி நோற்பாள் 
முந்திய குரத்தி அத்தை முதல்வி கோமாட்டி ஆசாள் 
தந்திடும் இறைவி ஐயை சாமியே தலைவி நாமம் 
நந்திய பிண்டி வாமன் நன்னெறி வழாது நோற்பாள் 
கந்தியே அவ்வை அம்மை கன்னியே கெளந்தி என்ப 
** 8, 5 பெயர்கள் 62
**164

#63
** அமங்கலை மலடி கோலம் செய்வாள் 
கைம்மையே கைனி பூண்ட கலன்கழிமடந்தை ஏங்கி 
விம்மிய விதவை நான்கே அமங்கலை விளங்கு நாமம் 
மைம்மையே வந்தி என்ப மலடிக்கு வகுத்த பேர் ஆம் 
செம்மையாம் கோலம் செய்வாள் திகழ் வண்ணமகளே என்ப 
** 4, 2, 1 பெயர்கள் 63 
**165

#64
** வேசை மூத்தாள் குமரி நாடகக் கணிகை 
பரத்தையே கணிகை சூளை பயனிலாள் வரைவின்மாது 
பொருட்பெண்டு பெறுவகொள்வாள் விலைமகள் போற்றும் வேசை
விருத்தையே மூத்தாள் என்ப மின்னிடைக் குமரி கன்னி 
நிருத்தம்செய்மாது கூத்தி நாடகக்கணிகை நீள் பேர் 
** 8, 1, 1, 2 பெயர்கள் 64 
**166

#65
** அசதி பதினாறாண்டிற் பெண் பாடுவிச்சி  தம்பதி 
குட்டினி தொழுத்தை கூளி குறளியே படுவி குண்டம் 
துட்டையே அசதி ஆகும் சூழ்ந்திடும் யுவதியே ஈ
ரெட்டாண்டிற்பெண் மதங்கி எய்திய விறலி என்ப 
திட்டம் ஆம் பாடுவிச்சி தம்பதி இரட்டை ஆண் பெண் 
** 7, 1, 2, 2, பெயர்கள் 65 
**167

#66
** குறிஞ்சி மாக்கள் குறிஞ்சிப் பெண் 
** குறிஞ்சி நிலத்து இறைவன் 
குறவர் கானவரே மள்ளர் குன்றவர் புனவரோடும் 
இறவுளர் குறிஞ்சிதன்னில் இன்புறும் மாக்கள் பேரே 
குறி அறி குறத்தி மற்றைக் கொடிச்சி பெண் இறைவன்தானே 
திறன் மிகு மலையன் வெற்பன் சிலம்பன் கானகநாடன்பேர் 
** 6, 2, 4 பெயர்கள் 66 
**168

#67
** பாலையாளர் பாலைப் பெண் 
** பாலை நிலைத் தலைவன் 
கோளுறும் மறவரோடும் எயினரே குறித்த பாலை
யாளர் புள்ளுவர் இறுக்கர் அனைத்தும் ஆம் அவரோடு ஆடும் 
வாள் விழி எயிற்றி வன்கண் பிணாவொடு மறத்தி பெண் பேர் 
மீளியே காளை என்ப விடலையும் தலைவன்நாமம் 
** 4, 3, 3 பெயர்கள் 67 
**169

#68
** புளிஞர் 
குறவர் மாகுலவர் வெய்ய குன்றவர் கிராதர் மற்றை 
மறவர் கானவரே தீய வனசரர் சவரர் சொல்லும் 
முறை அழி கொலைஞர் பாவமூர்த்திகள் முருடர் சற்றும் 
பொறையிலார் எயினர் வேடர் புளிஞர் ஈரேழ்பொதுப்பேர் 
** 14 பெயர்கள் 68 
**170

#69
** முல்லையின் மாக்கள் 
முல்லையர் பொதுவர் அண்டர் முந்து கோவிந்தரே ஆன்
வல்லவர் குடவர் பாலர் மதித்த கோவலர் கோபாலர் 
சொல்லிய அமுதர் ஆயர் தொறுவரே இடையர் என்ப 
முல்லையின்மாக்கள் பேர்தாம் முந்நான்கும்ஒன்றும் ஆமே 
** 13 பெயர்கள் 69 
**171

#70
** முல்லை நிலத்தின் பெண், முல்லையின் தலைவன் 
தொறுவியே பொதுவி ஆய்ச்சி சூழ்ந்திடும் குடத்தி மற்றை 
நிறை புணர் இடைச்சி முல்லைநிலத்தின்பெண் நாமம் ஐந்து ஆம் 
குறைவறு கானநாடன் குறும்பொறைநாடனோடு 
முறை செயும் அண்ணல் தோன்றல் முல்லையின் தலைவன்நாமம் 
** 5 4 பெயர்கள் 70 
**172

#71
** மருத மாக்கள் மருத நிலப் பெண் 
** மருத நிலத் தலைவன் 
களமரே தொழுவர் மள்ளர் கம்பளர் உழவரோடு 
விளைஞரே கடைஞர் ஏழ்பேர் விளைவுறு மருதமாக்கள் 
அளவறு கடைச்சி மற்றை ஆற்றுக்காலாட்டி பெண் பேர் 
உளம் மகிழ் மகிழ்நன் ஊரன் கிழவனும் தலைவன் ஆமே 
** 7, 2, 3 பெயர்கள் 71 
**173

#72
** நெய்தல் மாக்கள் நெய்தல் நிலப் பெண் 
பரதவர் நுளையரோடு பஃறியர் திமிலர் சாலர் 
கருதிய கடலர் கோலக் கழியரே நெய்தல்மாக்கள் 
விரவிய பரத்தி மேவு நுளைச்சியே அளத்தி நீண்டு 
பெருகிய கடற்பிணாவே நெய்தலில் பெண்ணின்நாமம் 
** 7, 4  பெயர்கள் 72 
**174

#73
** நெய்தல் தலைவன் உப்பமைப்போர் 
கொண்கனே துறைவனோடு குறித்த மெல்லம்புலம்பன் 
தண் கடல் சேர்ப்பன் நெய்தல்தலைவனைச் சாற்றும் நாமம் 
பண்படும் அளவர்தாமே பகர்ந்திடும் அந்நிலத்தில் 
உண்படும் உப்பமைப்போர் உமணரும் விதித்த பேரே 
** 4, 2 பெயர்கள் 73 
**175

#74
அணியினின் பண்பின் உற்ற உவமையின் மகடூஉ ஆடூஉ 
தணிவுஇல் முன்னிலைப்பேர் வேறு சாற்றிய தோற்றமாக 
உணரும் ஐந்திணைப்பாற்பட்ட கருப்பொருள் உரைத்தாம் இப்பால் 
கணிதம் இல் முறைப்பேர் காட்டி காயத்தின் பேரும் சொல்வாம்
**176

#75
** பாட்டன் ஈன்றவன் 
தாதைதன் தாதையே மூதாதையே பாட்டன்நாமம் 
பேதம் ஒன்று இல்லா மற்றும் பிதாமகன் என்றும் ஆகும் 
தாதையே அப்பன் ஐயன் தந்தையே அம்மான் அத்தன் 
ஏதம்இல் பிதா என்று ஏழும் என்றவன்நாமம் ஆமே 
** 3, 7 பெயர்கள் 75 
**177

#76
** ஈன்றவள் வளர்த்த தாதி முன் பிறந்தாள் தங்கை 
அவ்வை அம்மனை பயந்தாள் அம்மையே யாயே அன்னை 
எவ்வம்இல் ஆயி மோய் தாய் ஈன்றவள் நாமம் ஒன்பான் 
செவ்விதின் வளர்த்த தாதி செவிலி கோடாய் கைத்தாய் ஆம் 
தவ்வை முன்பிறந்தாள் சேட்டை தங்கையே பின்னைதானே 
** 9 3 2 1 பெயர்கள் 76 
**178

#77
** தம் குடியிற் சுற்றம் மாமன் ஓர் குடியில் 
** கொண்டோன் மூத்தோன் பின்னோன் 
ஞாதியர் தாயத்தாரே நாட்டும் தம் குடியின் சுற்றம் 
மாதுலன் அம்மான் மாமன் சகலன் ஓர்குடியில்கொண்டோன் 
மூதுணர் சேட்டன் தம்முன் முன்னவன் அண்ணன் மூத்தோன் 
பேதம்இல் இளவல் பின்னே அநுசனே கனிட்டன் பின்னோன் 
** 2, 2, 1, 4, 4 பெயர்கள் 77 
**179

#78
** காதலன் 
கணவனே கொழுநன் வேட்டோன் கண்டன் வல்லவனே பத்தா 
துணைவனே தலைவன் கொண்கன் சூழ்ந்திடும் தவனே காந்தன் 
மணமகன் உரியோன் அன்பன் மணவாளன் பதியே கேள்வன் 
அணையும் காதலன்பேர் பன்னேழ் அன்றி நாயகனும் ஆமே 
**  18 பெயர்கள் 78 
**180

#79
** தேவி 
இல்லவள் உரிமை பன்னி குடும்பினி இல்லே இல்லாள் 
வல்லவை களமே தாரம் மனையாட்டி மனை விருந்தம் 
சொல்லிய பாரி வாழ்க்கைத்துணை களத்திரமே காந்தை 
நல்ல காதலி விரும்பும் நாயகி தேவி நாமம் 
** 18 பெயர்கள் 79 
**181

#80
** மகன் 
சந்ததி மதலை சூனு தனயன் காதலனே மெய்யன் 
நந்தனன் சிறுவன் தோன்றல் குட்டனே நாட்டும் செம்மல் 
முந்திய மருமான் பிள்ளை முளை சுதன் புதல்வன் புத்திரன் 
மைந்தன் கால் பொருள் சேய் எச்சம் வழி பிறங்கடை மகன்பேர் 
** 24 பெயர்கள் 80 
**182

#81
** புதல்வி மகன் மகள் என்னும் இருபாற்கும் பொது 
** பிள்ளைப் பன்மை 
சிறுவி புத்திரியினோடு சிறந்திடும் தனயை ஐயை 
மறுஇல் பந்தனை மதிப்பா மகள் சுதை புதல்வி ஏழ்பேர் 
இறை ஆகும் எச்சம்தான் இவ் இருபாற்கும் ஏற்கும் என்ப 
குறுமக்கள் மகார் சிராரைக் கூறுப இவர்தம் பன்மை 
** 7, 1, 3 பெயர்கள் 81 
**183

#82
** படை 
தானையே பதாதி வெய்ய தந்திரம் தளமே தண்டம் 
வானியே ககனம் யூகம் வாகினி அனீகம் பாடி 
சேனையே கவனம் கூடிச் செறி பலம் பரிகலம்தான் 
ஊனம்இல் படை மூவைந்து ஆம்  உறு பதாகினியும் அப் பேர் 
** 16 பெயர்கள் 82 
**184

#83
** படை வகுப்பு படை உறுப்பு பின்னணி 
** கொடிப் படை படையறற்பேர் 
அணி உண்டை ஒட்டே யூகம் ஆய்வை படைவகுப்பு ஆம் 
அணி நெற்றி கையே தூசி அடு படை உறுப்பின்பேர் ஆம் 
அணி பின்னின் கூழை ஆம் தார் கொடிப்படை ஆகும் என்ப 
பணியக் கீழறுதலோடே அறைபோதல் படையறல் பேர் 
** 4, 4, 1, 1, 2 பெயர்கள் 83
**185

#84
** மனிதர் மக்கட் பரப்பு 
மக்களே நரரே மாக்கள் மானவர் மாந்தர் மண்ணோர் 
தக்க ஆண்டையரே மைந்தர் சாற்றிய மனுடர் இன்பம் 
தொக்க மானுடர் ஈரைந்தும்  சொல்லிய மனிதர் பேர் ஆம் 
மக்கள்தம் பரப்பிற்குப் பேர் மன்பதை பைஞ்ஞீல் என்ப 
** 10, 2 பெயர்கள் 84 
**186

#85
** உடம்பு 
உடல் உறுப்பு அங்கம் யாக்கை உயிர்நிலை தேகம் காயம் 
சடலமே மூர்த்தம் மெய்யே தாவரம் தனு ஆதாரம் 
கடமொடு புதை புணர்ப்பு காத்திரம் பூட்சி ஆகம் 
புடைகொள் பூதிகம் சரீரம் புற்கலம் உடம்பின்பேரே 
** 22 பெயர்கள் 85 
**187

#86
** வடிவு பிணம் உடற்குறை 
வடிவமோடு உருவம் மேனி சட்டகம் வடிவின்பேர் ஆம் 
கடியும் நீள் பிரேதம் வேறு காட்டிய சவம் பிணப்பேர் 
அடையும் மற்று அப்பேர்தானே களேவரம் அழனம் என்று ஆம் 
உடலினில் குறை கவந்தம் அட்டை யூபமும் உரைக்கும் 
** 4, 4, 3 பெயர்கள் 86 
**188

#87
** கால் கரடு கணைக்கால் முழந்தாள் 
சரணமே பதமே மற்றைத் தாளொடு அங்கிரியே பாதம் 
கருதிய சலனம் மற்றைக் கழலுடன் அடியும் கால் ஆம் 
பரடு என்ப கரட்டின்நாமம் பற்றிய கணைக்கால் சங்கம் 
தரு முழந்தாள் முழந்து சானுவும் அதன்பேர்தானே 
** 8, 1, 1, 2 பெயர்கள் 87 
**189

#88
** தொடை அல்குல் இடை மருங்கின் பக்கம் 
நெடிய ஊரு குறங்கு நீள் வாமம் கவான் தொடைப் பேர் 
கடிதடம் நிதம்பம் என்ப கவின் திகழ் அல்குலின்பேர்
நடு நுசுப்பொடு மருங்கு நாட்டு மத்திமமே உக்கம் 
இடையின்பேர் மருங்கின் பக்கம் ஒக்கலை என்பதாமே 
** 4, 2, 5, 1 பெயர்கள் 88 
**190

#89
** வயிறு தேமல் கொப்பூழ் ஆண்குறி பெண்குறி 
உதரம் மோடு அகடு குக்கியுடன் பண்டி வயிற்றின்பேர் ஆம் 
திதலையே பொறியே துத்தி தேமல் ஆம் சுணங்கும் ஆமே 
இதலையே உந்தி நாபி இலஞ்சியே போகில் கொப்பூழ் 
புதிய ஆண்குறியே கோசம் பூப்பகம் பெண்ணின் சின்னம் 
** 5, 4, 5,1, 1 பெயர்கள் 89 
**191

#90
** மார்பு முலை முலைக்கண் 
அகலமே மருமம் நெஞ்சே ஆகமே உரமே மார்பு ஆம் 
நகிலமே கொம்மை கொங்கை நறுங் குயம் தனம் குருக்கண் 
பகர் பயோதரம் சுவர்க்கம் பறம்பு இவை முலையின் பல் பேர் 
திகழ் முலைக்கண்ணின்நாமம் சிலீமுகம் சூசுகங்கள் 
** 5, 9, 2 பெயர்கள் 90 
**192

#91
** கைத்தலம் முழங்கை மணிக்கட்டு 
** உள்ளங்கை விரல் நகம் 
கரம் அத்தம் பாணி தோளே கைத்தலம் நாற்பேர் ஆம் கூர்ப்
பரம் முழங்கை கிலுத்தம் பணித்திடும் மணிக்கட்டு என்ப 
உரவிய அகங்கை அங்கை குடங்கையே உள்ளங்கைப் பேர் 
விரல்கள் அங்குலி என்று ஆகும் மிகும் உகிர் நகமது ஆமே 
** 4, 1, 1, 3, 1, 1 பெயர்கள் 91 
**193

#92
** தோள் கழுத்து முதுகு பிடர் தோள்மேல் 
விறல் மிகு புயமும் மொய்ம்பும் மேவிய வாகுவும் தோள் 
கறைஇல் கந்தரம் கிரீவம் களம் கண்டம் கழுத்தின்நாமம் 
புறம் வெரிந்^ அபரம் வென்னே போற்றிய முதுகு நாற்பேர் 
சிறுபுறம் கயில் எருத்தம் சுவல் பிடர் நிகலம் தோள்மேல் 
** 3, 4, 4, 4, 1 பெயர்கள் 92 
**194

#93
** முகம் உதடு மேல் உதடு கழ் உதடு பல் 
வதனம் ஆனனமே துண்டம் வத்திரம் முகம் என்று ஆகும் 
இதழ் உதடு அதரமே பாலிகை முத்தம் என்றும் பேர் மேல்
உதடதே ஓட்டம் ஆம் கீழ்உதட்டின்பேர் அதரம் என்று ஆம் 
விதம் உறும் எயிறு தந்தம் மேவிய தசனம் பல்லே 
** 4, 4, 1, 1, 3 பெயர்கள் 93 
**195

#94
** பல்லும் நகையும் மோவாய் நாக்கு காது 
பன்னிய முறுவல் மூரல் பல்லும் ஆம் நகையும் ஆகும் 
முன்னிய தாடி கட்டம் சுவுகம் மோவாயின்பேர் ஆம் 
மன்னும் நா சிகுவை தாரை மற்றைத் தாலுவும் நாக்கு ஆகும் 
கன்னமே அள்ளு கேள்வி காதின்பேர் செவியும் ஆமே 
** 2, 3, 4, 4 பெயர்கள் 94 
**196

#95
** மிடறு உள்நாக்கு மேல்வாய்ப்புறம் கதுப்பு மூக்கு 
அணல் மிடறு ஆகும் மற்றை அண்ணமே உண்ணாக்கின்பேர் 
அணரியே அணலே அண்ணம் ஆன மேல்வாய்ப்புறப்பேர் 
குணமுறு கவுள் கபோலம் கொடிறு அனு கதுப்பின் கூற்று ஆம் 
துணை செய் ஆக்கிராணம் கோணம் துண்டமே நாசி மூக்கு ஆம் 
** 1, 1, 3, 4, 4 பெயர்கள் 95 
**197

#96
** கண் கண்மணி கண் இமை 
நயனம் நேத்திரமே அக்கம் நாட்டம் கோ நோக்கம் சக்கு 
வியனுறும் பார்வை தாரை விலோசனம் விழியே அக்கி 
செயமுறு திருக்கு திட்டி திருட்டி அம்பகமே கண் ஆம் 
மயமுறு தாரை கண்ணின் மணி விளிம்பு இமையின்நாமம் 
** 16, 1, 1 பெயர்கள் 96 
**198

#97
** புருவம் தெற்றி 
பிருகுடி நுதலே நீண்ட பீருவே புரூரம் பூரு 
புருவம் ஆம் புகுடியும் பேர் புடைபடு நிடலத்தோடு 
திரு நுதல் குளம் இலாடம் சேர்ந்த மத்தகமே நெற்றி 
மருவிய பாலம் முண்டம் அளிகமும் வகுக்கலாமே 
** 6, 8 பெயர்கள் 97 
**199

#98
** தலை குடுமி உச்சி
உரவிய தலையே மூர்த்தம் உவ்வியோடு உத்தமாங்கம் 
சிரம் முடி சென்னி முண்டம் சிகரம் மத்தகமும் ஆகும் 
திரு முடி சிமிலி சிக்கம் சிகை இவை குடுமி நாற்பேர் 
விரவிய சுடிகை சூழி மேவிய நவிரம் உச்சி 
** 9, 4, 3 பெயர்கள் 98 
**200

#99
** ஆண் மயிர் ஆண் பெண் மயிர்ப் பொது 
உளை நவிர் குடுமி பித்தை ஓரியே குழல் கார் குஞ்சி 
தளை சிகை தொங்கல் பங்கிதான் ஈராறு ஆண்மயிர்ப் பேர் 
வளர் குழல் கதுப்பு கேசம் மருவிய சுரியல் நான்கும் 
இளைய மைந்தர்க்கும் மற்றை இளங்கொடியார்க்கும் ஏற்கும் 
** 12, 4 பெயர்கள் 99 
**201

#100
** பெண் மயிர் மயிர்முடி 
குருள் குழல் விலோதம் ஓதி கூழை குந்தளம் மராட்டம் 
குரல் ஐம்பால் அளகம் பத்தும் பெண்மயிர் கூந்தலும் பேர் 
பெருகிய கொப்பு முச்சி பின்னகம் கொண்டை பந்தம் 
திருமிகு தம்மில்லம் பொன் சிகழிகை மயிர் முடிப் பேர் 
** 11, 7பெயர்கள் 100 
**202

#101
** பிறமயிர் செறி மயிர் மயிர்க்குழற்சி 
ஓரியே கேசம் பங்கி உளை உரோமம் மராட்டம் 
நேரும் இப் பேர்கள் ஆறும் பிற மயிர் நிகழ்த்தும் என்ப 
சேரும் அவ் உரோமம் மற்றைச் சிரோந்தமும் செறி மயிர்ப் பேர் 
வாரும் குந்தளம் விலோதம் மயிர்க்குழற்சிப் பேர் வைக்கும் 
** 6, 2, 2 பெயர்கள் 101 
**203

#102
** சடை அவயவம் சந்து 
குடிலமே வேணி நீண்ட கோடீரம் பின்னலோடு 
சடிலம் என்று ஐந்து பேரும் சடை என அடைவே சாற்றும் 
நெடிய காத்திரம் உறுப்பு நீள் அங்கம் அவயவப்பேர் 
கடிய மூட்டும் கொளுத்தும் கந்தும் சந்து ஆகும் அன்றே 
** 5, 3, 3 பெயர்கள் 102 
**204

#103
** நரம்பு கழலை கோழை உடல் தழும்பு இறை நரை 
சிரையே சங்கனனம் நாடி திருந்திய நரம்பு முப்பேர் 
அரலையே கழலை கோழை ஐயொடு காசம் ஆகும் 
மருவும் அங்கிதமே சேக்கை வசி வடு உடல் தழும்பு ஆம் 
தரு பொறி வரை இறைப் பேர் சரை நரை பலிதமும் பேர் 
** 3, 1, 2, 4, 2, 2 பெயர்கள் 103 
**205

#104
** தலை ஓடு எலும்பு கழியுடல் முழுவெலும்பு இந்திரியம் 
அழி தலையோட்டின்நாமம் கபாலமே அத்தி என்பு 
கழிவுறும் எலும்பின்நாமம் களேவரம் என்றும் காட்டும் 
கழியுடல் முழுவெலும்பு கங்காளம் என்பர் நூலோர் 
விழை பொறி கரணம் கந்தம் மேவும் இந்திரியம் முப்பேர் 
** 1, 3, 1, 3 பெயர்கள் 104
**206

#105
** சுவை ஒளி முதலியன ஓரும் கருவி உயிர் 
தரு சுவை ஒளி ஊறு ஓசை சாற்றிய நாற்றம் ஓரும் 
கருவி நா கண்ணே மெய்யே காதொடு மூக்கும் ஆகும் 
தெரிதரும் உயிரே ஆதன் சேதனன் பசுவே சீவன் 
அரிய புற்கலனே கூத்தன் அணு இயமானன் ஆன்மா 
** 5, 9 பெயர்கள் 105 
**207

#106
இருபதோடு இருபான் முப்பான் இருபான் ஈரைந்து மேலும் 
மருவிய ஆறு செய்யுள் மக்கள்தம் பெயர்க்குச் செய்தான் 
குரு நறுங் குன்றை வேந்தன் குணபத்திரன் தந்த நோன்மை 
தரு நெறி நோற்கும் வீரை தழைத்த மண்டலவன்தானே 
** இரண்டாவது மக்கட் பெயர்த் தொகுதி முற்றிற்று 

@3. விலங்கின் பெயர்த் தொகுதி
**208

#1
** காப்பு 
துலங்கு முக்குடை நிழற்ற துந்துபி முழங்க தேவர் 
நலம்பெறு கவரி வீச நல் மலர்மாரி தூவ 
அலங்கு உளை அரியணைக் கீழ் அமர்ந்த நான்முகனைப் போற்றி 
விலங்கின்பேர்த் தொகுதிதன்னை மேதினி வியப்பச் சொல்வாம்
**209

#2
** சிங்கம் யானையாளி 
அரி வயப்போத்து சீயம் அறுகு கேசரியே பூட்கை 
மருவிய மிருகராசன் வயமாவே மடங்கலோடு 
பரவு கண்டீரவம் பஞ்சானனம் சிங்கப் பல் பேர் 
பெருகிய யானையாளிப் பேர் யாளி அறுகு பூட்கை 
** 11, 3 பெயர்கள் 2 
**210

#3
** புலி 
வல்லியம் வயமாவோடு சித்திரகாயம் மற்றும் 
வெல்லுமா உழுவை பாய்மா வியாக்கிரம் தரக்கு வேங்கை 
கொல்லவே எழுந்து சீறும் குயவரி கொடுஞ் சார்த்தூலம் 
புல்லொடு புண்டரீகம் கொடுவரி புலியின்நாமம் 
** 14 பெயர்கள் 3 
**211

#4
** யானை 
தும்பி மாதங்கம் தூங்கல் தோல் கறையடி எறும்பி 
உம்பல் வாரணம் புழைக்கை ஒருத்தல் வல்விலங்கு நாகம் 
கும்பி நால்வாயே பூட்கை குஞ்சரம் கரேணு அத்தி 
கம்ப வேழம் உவாவே கரி கயம் களிறு கைம்மா
**212

#5
சிந்துரம் வயா வேகம் செறி இபம் புகர்முகங்கள் 
தந்தியே மதாவளம் தந்தாவளம் வழுவை ஆம்பல் 
மந்தமா மருண்மா மற்றை மதகயம் போதகத்தோடு 
உந்தும் ஏழைந்தும் மேலும் இரண்டும் மற்று உயர்ந்த யானை 
** 37 பெயர்கள் 5 
**213

#6
** யானைக் கூட்டத்துத் தலையானை மதகயம் 
** யானை வால் யானை வால் நுனி யானை முதுகு 
** யானை மத்தகம் 
உதவிசெய்து இனத்தைக் காக்கும் உம்பலே யூதநாதன் 
மதகயம் மதோற்கடம் பின் வாலின்பேர் தாலவட்டம் 
அதன் நுனி வேசகம்தான் ஆம் முதுகின்பேர் மஞ்சு ஆம் 
மதகமும் கும்பந்தானும் மத்தகம் என்று கூறும் 
** 1,1,1,1,1,2 பெயர்கள் 6 
**214

#7
** யானை மதம் பாய் சுவடு யானைக் கைந் நுதி 
** யானை மதம் யானைக் கொம்பின் நடு 
** யானைத் தந்தம் யானைக் கடைக் கண் 
கரடமே மதம் பாய்கின்ற சுவடு கைந்நுதிகளே புட்
கரம் அது ஆம் மதத்தின்நாமம் கடம் கடாம் தானம் ஆகும் 
பெருகிய பிரதிமானம் பேசு கொம்பின்நடுப் பேர் 
கருது கோடு எயிறு தந்தம் நிரியாணம் கடைக்கண் ஆமே 
** 1, 1, 3, 1,,2,,1 பெயர்கள் 7 
**215

#8
** யானைச் செவியடி யானைக் கவுள் யானைத் துதிக்கை 
** உமிழ்நீர் யானைப் பல்லடி யானை முன் கால் 
** யானைப் பின் கால் யானைத் துதிக்கை 
கண்டிடும் செவியடிப் பேர் சூளிகை கவுள் கதுப்பு ஆம் 
விண்ட கை உமிழும் நீரே விலாழி பல்லடி கரீரம் 
கொண்ட காத்திரமே முன்கால் கூறிய அபரம் பின்கால்
தொண்டை தொண்டலம் துதிக்கை சுண்டையும்  அப் பேர் ஆமே 
** 1,1,1,1,1,1,3 பெயர்கள் 8 
**216

#9
** பிடி யானைத் திரள் யானைக் கன்று 
** யானை படுகுழி யானை நோய் 
வடவை அத்தினி இரண்டும் பிடிகள் ஆம் கரிணியும் பேர் 
கடகம் யானைத்திரள் பேர் கயந்தலை போதகங்கள் 
துடியடி களபமோடு கயமுனி யானைக்கன்று ஆம் 
படுகுழி பயம்பு ஆம் என்ப பாகலம் யானைநோயே 
** 3, 1, 5, 1, 1 பெயர்கள்  9 
**217

#10
** குதிரை குதிரை மயிர் குதிரைக் குளம்பு 
** குதிரைபோம் மார்க்கம் 
பரி துரகம் சிறந்த பாடலம் கிள்ளை பாய்மா 
துரகதம் வாசி உன்னி தூசி கந்தருவம் கற்கி 
அரி அயம் இவுளி மாவே அச்சுவம் புரவி கோரம் 
குரகதம் கோணம் கொக்கு கொய்யுளை சடிலம் கோடை
**218

#11
கந்துகம் கனவட்டம் போர் காட்டும் பத்திரி துரங்கம் 
குந்தம் அத்திரி ஆறைந்தும் குதிரையின்நாமம் ஆகும் 
வந்த மேசகத்தினோடு சுவல் குசை மயிர் குளம்பு 
வந்த பேர் குரம் குரச்சை மாதிகம் அது போம் மார்க்கம் 
** 30, 3, 2, 1 பெயர்கள் 11 
**219

#12
** பசு தெய்வப்பசு மலட்டுப் பசு 
** ஈன்ற பசு கன்று 
குலவிய பசுப் பேர் கூலம் கோ குடம் சுரபி ஆவே 
இலகிய நிரையே தேனு பெற்றம் இவ் எட்டும் ஆகும் 
பலமுறு கபிலை தேனு பரவு தெய்வப்பசுப் பேர் 
மலடுதான் வசை ஆம் ஈற்றா வற்சலை கன்று வற்சம் 
** 8, 2, 1, 1, 1 பெயர்கள் 12 
**220

#13
** ஓர் ஈற்றுப் பசு நற்பசு பசு முலை உதை காற் பசு 
** முலை மடி பசுக் கூட்டம் 
பரவும் ஓர் ஈற்றா கிட்டி பத்திரை நல் பசுப் பேர்  
சுரை முலை ஆகும் மற்றைச் சுதை உதை காற்பசுப் பேர் 
திரு முலை மடியின்நாமம் செருத்தல் ஆபீனம் என்ப 
நிரை தொறு காலி கோட்டம் நீண்ட காலேயம் கூட்டம் 
** 1, 1, 1, 1, 2, 5 பெயர்கள் 13 
**221

#14
** எருத்து எருத்தின் முரிப்பு 
** பேரெருத்து இடபம் 
பாறல் சே பெற்றம் பூணி பாண்டில் கொட்டியம் இறாலே 
ஏறொடு மூரி புல்லம் எருத்தின்பேர் இமில் முரிப்பு ஆம் 
பாறல் பேரெருத்தின்நாமம் பகடும் தூர்வகமும் ஆகும் 
ஏறு உக்கம் நரையே நந்தி இடபம் ஆம் கூளியும் பேர் 
** 10, 1, 3, 5 பெயர்கள் 14 
**222

#15
** பொதியெருது எருமை எருமை ஆண் 
** மலட்டெருமை 
தூர்வகம் துரியம் என்ப பொதியெருது எருமையின்பேர் 
காரானே வடவை மேதி சைரிபம் கவரி காரா 
மூரியே மகிடம் எட்டும் மொழியும் மற்று ஆண்பொதுப்பேர் 
பாரிய கடாவினோடு பகடு ஆம் மை மலட்டின்நாமம் 
** 2,8, 2, 1 பெயர்கள் 15 
**223

#16
** ஆட்டின் பொது 
அருணம் செம்மறியே மோத்தை அசம் உதள் உடுவே கொச்சை 
துருவை ஏழகம் வற்காலி துள்ளலே பள்ளை வெள்ளை 
வருடை மேடம் கடா மை மறி வெறி கொறியே சாகம் 
புருவையே தகர் மூவேழும் இரண்டும் ஆட்டின்பொதுப்பேர் 
** 23 பெயர்கள் 16 
**224

#17
** செம்மறியாடு செம்மறியாட்டு ஆண் 
** ஆட்டுக் குட்டி 
துருவை மை கொறி முப்பேரும் தோற்றும் செம்மறியாட்டின்பேர்
செரு மலி தகர் கடாவே திண்ணகம் ஏழகங்கள் 
பரவு கம்பளம் என்று ஐந்தும் பற்றும் அவ் ஆணின் பல் பேர் 
மருவிய குட்டன் சோரன் மறி பறழ் குட்டி ஆமே 
** 3, 5, 4 பெயர்கள் 17 
**225

#18
** வெள்ளாடு வெள்ளாட்டுக்குட்டி 
** வெள்ளாட்டு ஆண் வரையாடு 
வெள்ளை வற்காலி கொச்சை வெள்ளாட்டின்நாமம் ஆகும் 
வெள்ளையே அதன் மறிப் பேர் மேவிய செச்சை சாகம் 
தள்ளிய மோத்தை முப்பேர் சாற்றுமே இவற்றின் ஆண் பேர் 
வள்ளிய சரபத்தோடு வருடையும் வரையாடு ஆமே 
** 3,1,3,2 பெயர்கள் 18 
**226

#19
** பன்றி 
கேழலே அரி குரோடம் கிரி கிடி கிருட்டி ஏனம் 
மோழலே இருளி முந்து வல்லுளி களிறு மைம் மா 
போழ் முகக் கோட்டு மாவே போத்திரி வராகம் கோலம் 
சூழும் ஈரெட்டும் பன்றி சூகரம் எறுழியும் பேர் 
** 18 பெயர்கள் 19 
**227

#20
** முட்பன்றி, முட்பன்றி முள், கரடி 
சல்லியம் முளவு மா எய் சல்லகம் முட்பன்றிப் பேர் 
சொல்லும் இப் பன்றி முள்ளு சூழ் சலம் சலலம் என்ப 
பல்லுகம் உளியம் எண்கு பல்லூகம் எலுவினோடு 
பல்லமே கரடி நாமம் பகர் குடாவடியும் ஆமே 
** 4 2 7 பெயர்கள் 20 
**228

#21
** சாமரம் கவரி மா காட்டா கீரி 
சவரி சீகரமே வீசும் சாமரம் கவரியும் பேர் 
கவரிமா படகம் பட்டம் மானமா எகினும் காட்டும் 
கவயமா ஆமா காட்டுஆ காத்திரி நகுலம் என்னா 
இவை இருபேரும் அன்றித் தீர்வையும் கீரி ஆமே 
** 3 4 2 3 பெயர்கள் 21 
**229

#22
** மான் கலை புல்வாய் 
அரிணம் சாரங்கம் நவ்வி அடல் உழை பிணையே சூனம் 
மிருகமே மறி குரங்கம் மேவும் மான் ஏணமும் பேர் 
இரலை வச்சயமே புல்வாய் கலை கருமானும் ஏற்கும் 
இரலை புல்வாய்க்கும் பேர் ஆம் என்றனர் குன்றாநூலோர் 
** 10 4 1 பெயர்கள் 22 
**230

#23
** கழுதை கோவேறு கழுதை ஒட்டகம் 
கழுதையின்பேர் வாலேயம் கர்த்தபம் காளவாயே 
அழகுஇல் அத்திரியே கோகு வேசரி கரமும் ஆகும் 
குழைவுறா வேசரிப் பேர் கோவேறுகழுதைக் கூற்றாம் 
அழிவுஇல் ஒட்டகம் தாசேரம் அத்திரி நெடுங்கழுத்தல் 
** 7 1 3 பெயர்கள் 23 
**231

#24
** நரி முசு 
ஓரி கோமாயு ஊளன் ஒண்டனே இகலன் சம்பு 
பூரிமாயன் குரோட்டா சிருகாலன் நரியே போற்றும் 
ஓரியே கோலாங்கூலம் உற்ற மைம்முகனே கள்வன் 
சீரிய கலையோடு ஐந்தும் முசு எனச் செப்பலாமே 
** 9, 5 பெயர்கள் 24 
**232

#25
** நாய் பெண்ணாய் செந்நாய் 
சூரனே முடுவல் பாசி புரோகதி சுனகன் குக்கல் 
கூரனே எகினன் அக்கன் குரைமுகன் ஞமலி ஞாளி 
சாரமேயன் சுணங்கன் சுவாவே நாய்தான் ஐம்முப்பேர் 
வீரிய முடுவல் பெண்நாய் விருகம் கொக்கு இரண்டும் செந்நாய் 
** 15, 1, 2 பெயர்கள் 25 
**233

#26
** பூஞை கத்தூரி நாவி 
வெருகுடன் அலவன் ஓதி விடாரகம் விலாளம் பூசை 
பொருது மார்ச்சாலம் பாக்கன் இற்புலி பூஞை ஒன்பான் 
மரு மிகு துருக்கம் நானம் மான்மதம் நரந்தம் நான்கும் 
கருது கத்தூரியின்பேர் காட்டிய மறுவி நாவி 
** 9, 4, 1 பெயர்கள் 26 
**234

#27
** குரங்கு கருங்குரங்கு 
வலிமுகம் கடுவன் பாயும் வானரம் அரியே மந்தி 
பிலவங்கம் கோகிலம் கான் பெயர்ந்த கோடரமே யூகம் 
கலக மர்க்கடமே நாகம் கவி குரங்கு இவை ஈராறு ஆம் 
குலவு காருகமே யூகம் கூறிய கருங்குரங்கே 
** 12, 2 பெயர்கள் 27 
**235

#28
** ஓந்தி மூஞ்சூறு எலி 
சாய்ந்த சாயானதங்கள் சரடமே காமரூபி 
ஏய்ந்த தண்டு ஓமான் ஓதி இசை கோம்பி முசலி ஓத்தி 
ஓந்தி ஆம் சுவவு சுண்டன் உறு சுசுந்தரி மூஞ்சூறே 
ஆய்ந்திடு சிகரி ஆகோடு இரும்பனும் அகழ் எலிப் பேர் 
** 9, 3, 3 பெயர்கள் 28 
**236

#29
** காரெலி பெருச்சாளி அணில் உடும்பு முயல் 
கருப்பை காரெலியின்நாமம் களதம் துந்துளமே ஆகு 
பெருச்சாளி மூடிகத்தோடு  உந்துரு என்றும் பேர் ஆம் 
வரிப்புறம் வெளில் அணில் பேர் வரும் தடி முசலி கோதா 
தரித்து எழும் உடும்பின்நாமம் சசம் முயல் என்னலாமே
** 1, 5, 2, 3, 1 பெயர்கள் 29 
**237

#30
** விலங்கின் ஆண் மரபு 
** விலங்கின் ஆண் பெயர் - கடுவன் மா 
கடுவன் மா ஒருத்தல் போத்து கலை தகர் களிறு சேவி
னொடு பகடு உம்பல் ஏறோடு ஓரி ஈராறும் ஆண் பேர் 
வடுஅறு குரங்கு பூஞை மற்று இவை கடுவன் ஆமே 
அடு திறல் யானை பன்றி ஆடல் வெம் புரவி மா ஆம் 
** 12, 2, 3 பெயர்கள் 30 
**238

#31
** ஒருத்தல் போத்து கலை 
கரடி புல்வாய் மான் யானை கவரியோடு எருமை பன்றி 
பொரு புலி மரை என்று ஒன்பான் புகன்றிடும் ஒருத்தல் ஆகும் 
மரை பசு புலியே பூஞை மற்றைப் புல்வாயும் போத்து ஆம் 
கருதிய முசுவும் மானும் கலை எனக் காட்டலாமே 
** 9, 5, 2 பெயர்கள் 31 
**239

#32
** தகர் களிறு சே பகடு உம்பல் 
துருவாடு வேழம் யாளி சுறா தகர் என்றே சொல்லும் 
கரியொடு சுறவு பன்றி களிறு எனக் காட்டலாமே 
செரு மலி குதிரை பெற்றம் புல்வாயே சே என்று ஆகும் 
எருமையோடு யானை பெற்றம் பகடு இபம் உம்பல் ஆமே 
** 4, 3, 3, 3, 1 பெயர்கள் 32 
**240

#33
** ஏறு ஓரி 
ஆனுடன் எருமை பன்றி ஆய் மயிர்க் கவரி சங்கு 
மானொடு மரை புல்வாயும் மாறுகொள் சுறவும் ஏறு ஆம் 
ஊன் நுகர் நரியினோடு முசு இவை ஓரி ஆகும் 
மான நூல் விலங்கின் ஆணின் மரபு என அடைத்தவாறே 
** 9, 2 பெயர்கள் 33
**241

#34
** விலங்கின் பெண் மரபு 
** விலங்கின் பெண்பால் பிடி பிணை 
பிடி பிணை பெட்டை மந்தி பிணாவோடு ஆ நாகு பாட்டி 
கொடு விலங்கின்பெண்பால் ஆம் குஞ்சரம் கவரியோடு 
நெடிய ஒட்டகம் இ மூன்றும் நெடும் பிடி நிகழ்த்தும் நாமம் 
வடிவுள உழை புல்வாய் நாய் வராகமே பிணையின் வைக்கும் 
** 8, 3, 4 பெயர்கள் 34 
**242

#35
** பெட்டை மந்தி பிணா ஆ 
ஒட்டகம் கழுதை வாசி உறு சிங்கம் மரை இவ் ஐந்தும் 
பெட்டை ஆம் முசுவோடு ஊகம் பேசிய குரங்கு மந்தி 
பட்ட புல்வாய் நாய் பன்றி பகர்ந்திடும் பிணா எனும் பேர் 
கட்டிய எருமை பெற்றம் காட்டுள மரையே ஆ ஆம் 
** 5, 3, 3, 3 பெயர்கள் 35 
**243

#36
** நாகு பாட்டி விலங்கின் பெண் பால் பொது 
** விலங்கின் ஆண் பொது 
எருமையே மரையே பெற்றம் ஏற்ற நீர்ச்சாதி நாகு ஆம் 
நரி பன்றி நாய் இ மூன்றும் நாட்டிய பாட்டி ஆகும் 
பெருகு பெண்பால் பிணா பெண் பேணும் ஆண் எவையும் ஆண் ஆம் 
பொருஇல் நூல் உணர்ந்து சொன்ன புலவர்தம் வாக்குத்தானே 
** 4 3 2 1 பெயர்கள் 36 
**244

#37
** விலங்கின் பிள்ளை மரபு 
** விலங்கின் பிள்ளை பறழ் குருளை குட்டி 
பறழ் பிள்ளை குழவி குட்டி பார்ப்பொடு குருளை கன்று 
மறியே போதகம் இவ் ஒன்பான் வல் விலங்கின் பிள்ளைப் பேர் 
பறழொடு குருளை குட்டி பற்றிய மூன்று பேரும் 
உறு புலி முயல் வராகம் ஓதிய நரி நாய் ஆமே 
** 9, 5 பெயர்கள் 37 
**245

#38
** பிள்ளையும் மறியும் (பறழ் பிள்ளை குழவி குட்டி 
** பார்ப்பு) எனும் ஐந்தும் 
முறுகு நாய் அன்றி மற்றை மொழிந்திடும் பிள்ளை என்ப 
மறி என்பது ஆடு அழுங்கும் மானொடு குதிரை வைக்கும் 
பறழ் பிள்ளை குழவி குட்டி பார்ப்பு என ஐந்து பேரும் 
குறியுள குரங்கே ஆதி கோட்டில் வாழ் விலங்கின்பிள்ளை 
** 4 பெயர்கள் 38 
**246

#39
** கன்று குழவி போதகம் 
கடமை மான் எருமை பெற்றம் கவயம் ஒட்டகமே யானை 
விடு பரி மரை கராமே மேவிய கவரி கன்று ஆம் 
கடமை மான் எருமை யானை காட்டிய குழவி ஆகும் 
அடு புலி சிங்கம் யானை ஆன போதகம் என்று ஆமே 
** 11, 4, 3 பெயர்கள் 39 
**247

#40
** பறழ் குட்டி பிள்ளை பறழ் குட்டி பறழ் பிள்ளை 
முறுகிய கீரி பூனை முயல் அணில் என்ப நான்கும் 
பறழொடு குட்டி பிள்ளை பன்னிய மூன்றும் ஆகும் 
பறழொடு குட்டிதானே பாக்கனும் அணிலும் என்ப 
பறழ் பிள்ளை இரண்டும் சொல்லில் பார்ப்பொடு தவழ் சாதிப் பேர் 
** 4, 2, 2 பெயர்கள் 40 
**248

#41
** குருளை கன்று குழவி குருளை விலங்கினிற் பொது 
குருளையும் கன்றும் மானில் கொள்ளுப குழவியோடு 
குருளையும் யாளி கொள்ளும் குழவியே முசுவின் ஆகும் 
குருளையும் முசுவின் கூற்று ஆம் கூறிய மாவே மானே 
மிருகமே குரங்கே நான்கும் விலங்கினில்பொதுப்பேர் ஆமே 
** 1, 1, 1, 1, 4 பெயர்கள் 41 
**249

#42
** விலங்கின் கூட்டம் விலங்கின் வால் 
** விலங்கினது வாலின் &ழ் 
சாலமே வியூகம் யூதம் சாற்றிய குலம் விருந்தம் 
கோலம் ஆர் கணம் விலங்கின்கூட்டம் ஆம் பிறவும் ஏற்கும் 
கூலம் வேசகமே தோகை  குறித்திடும் இலாங்கூலம் வால் 
வாலதி என்றும் பேர் ஆம் வாலின்கீழ் வெருகம் ஆமே 
** 6, 5, 1 பெயர்கள் 42 
**250

#43
** விலங்கின் கொம்பு 
** கொம்பு இலா விலங்கு தோல் 
மருப்பொடு சிருங்கம் கோடு மற்றைய உலவை கொம்பு ஆம் 
குருத்திடும் விடாணமும் பேர் குமரம் கொம்புஇலா விலங்கு ஆம் 
கிருத்தியே புறணி போர்வை கிளர் அதள் ஒலியல் தொக்கு 
துருத்தியே சருமம் பச்சை துவக்கு உரி வடகம் தோல் ஆம் 
** 5, 1, 12 பெயர்கள் 43
**251

#44
** ஊன் புலால் பசுவினது இறைச்சி 
தசை புலால் புலவு புண்ணே தடியொடு புளிதம் தூவே 
மிசிதம் வள்ளுரம் விடக்கு பேசில் ஊனின்பேர் பத்து ஆம் 
பொசிதரும் முடையே ஊழ்த்தல் பூதியே தசை புலால் ஆம் 
பசுவினது இறைச்சிதானே பகர்ந்த வள்ளுரம் அது ஆமே 
** 10, 4, 1 பெயர்கள் 44 
**252

#45
** இரத்தம் கொழுப்பு 
எருவையே நெய்த்தோர் சோரி இயம்பிடும் உதிரம் புண்ணீர் 
குருதி செம்பால் புலால்நீர் குறித்த சோணிதமே செந்நீர் 
கருதிய சுடுவன் மற்றைக் கறை ஈராறு இரத்தத்தின்பேர் 
விரவிய நிணம் கொழுப்பு விளரொடு விழுக்கும் ஆமே 
** 12, 3 பெயர்கள் 45 
**253

#46
** கருப்பம் வழும்பூ ஈரல் முடை மாசு உள்ளின் மாசு 
கருவொடு சினை பீள் சூலே கருப்பமே வயாவும் ஆகும் 
மருவிய வழும்பின்நாமம் வழுக்கு என்ப ஈருள் ஈரல் 
கருதிய முடையின்நாமம் காட்டிய புலவோடு ஊத்தை 
உருவிய மலமே மாசே உபமலம் உள்ளின் மாசு ஆம் 
** 5, 1, 1, 2, 1, 1 பெயர்கள் 46 
**254

#47
** பாம்பு சாரைப்பாம்பு 
அரவு கட்செவியே போகி அகி அரி வியாளம் சர்ப்பம் 
உரகம் பன்னகமே நாகம் உற்ற மாசுணமே சக்கிரி
பரவிய புயங்கம் பாந்தள் அங்கதம் பணி பாம்பின்பேர் 
இரைகொளும் துண்டம் சாரை இராசிலம் என்பதும் பேர் 
** 16, 2 பெயர்கள் 47 
**255

#48
** மண்டலி கண் குத்திப் பாம்பு 
** பெரும் பாம்பு நாகம் 
விடம் உமிழ் மண்டலிக்கு மேவு கோளகமே நாமம் 
நெடிய மால் உதானனே கண்குத்திப்பாம்பு என்று கூறும் 
நெடிய மாசுணமே பாந்தள் நீள் பெரும்பாம்பின்நாமம் 
முடியவே எழுந்து சீறும் மூர்க்கனே நாகம் என்ப 
** 1, 1, 2, 1 பெயர்கள் 48 
**256

#49
** கருவழலை பறவை நாகம் பாம்பின் படம் 
** படப்பொறி பாம்பின் நச்சுப் பல 
** பாம்புயிர்ப்பு காற்று 
வரு கரு வழலையின்பேர் இராசமாநாகம் ஆகும் 
குரவிய பறவைநாகம் குக்குடசர்ப்பம் என்ப 
பரவிய படம் பணம் பை படப்பொறி உத்தி துத்தி 
கருதிய தட்டம் நஞ்சு காலும் பல் அதட்டம் காற்று ஆம் 
** 1, 1, 2, 2, 1, 1 பெயர்கள் 49 
**257

#50
** அன்னம் மயில் 
எகினம் ஓதிமம் மராளம் விகங்கம் வக்கிராங்கம் அன்னம் 
சிகியொடு ஞமலி தோகை சிகாவளம் சிகண்டி மஞ்ஞை 
ஒகரமே மயூரம் மற்றும் உறு பிணிமுகம் கலாபி 
மகிழ்வுறு நவிரம் பீலி கேகயம் மயில் பல் முப்பேர் 
** 5, 13 பெயர்கள் 50 
**258

#51
** மயிற்பீலி மயிற்குரல் மயிலிறகு, அன்னத்தின் இறகு 
சரணமே சிகண்டம் கூந்தல் சந்திரகம் கலாபம் கூழை 
பெருகிய தோகை தொங்கல் பீலி ஆம் தூவியும் பேர் 
மருவிய அகவல் ஆலல் மயிற்குரல் ஏங்கலும் பேர் 
வரும் முருந்து இறகின்முள் ஆம் மற்று அன்னச்சிறகு தூவி 
** 9, 3, 1, 1 பெயர்கள் 51
**259

#52
** கருடன் சாதகப்பறவை 
மன்னிய கலுழன் மற்றை வைனனே வைனதேயன் 
பன்னக வைரியோடு தார்க்கியன் பறவைவேந்தன் 
உன்னிய கருடன்நாமம் உவணமும் அதற்கே கூறும் 
சொன்ன சாதகப்புள்தானே சூழ்ந்த சாரங்கம் என்ப 
** 7, 1 பெயர்கள் 52 
**260

#53
** எண்காற் புள் சக்கரவாகப் புள் 
சிம்புள் வாருண்டம் மற்றைச் செப்பிய வருடையோடு 
சம்பரம் துரோணம் வெய்ய சரபம் எண்கால்புள் பேர் ஆம் 
வெம்பிய நேமிப்புள்ளு விரும்பு சக்கரவாகப்புள் 
கொம்பிய கோகம் யானைக்குருகு என்று கூறலாமே 
** 6, 3 பெயர்கள் 53
**261

#54
** சுழுகு பருந்து அசுணமா 
இருந்த புண்டரமே கங்கம் எருவையே பவணையோடு 
கருஞ் சிறை உவணம் ஐந்தும் கழுகு என்ப சகுந்தமும் பேர் 
திருந்திய சேனம் பாரசிகை பாறு சேரும் கங்கம் 
பருந்தின்பேர் அசுணமாவே பகரில் கேகயம் என்று ஓதும் 
** 6, 4, 1 பெயர்கள் 54 
**262

#55
** கிளி கருங்கிளி நிலாமுகி செம்போத்து 
சாருவே அரியே வன்னி தத்தையே சுகமே கிள்ளை 
கீரமே சுவாகதம்தான் கிளி அவந்திகையும் ஆகும் 
கீரமும் கிள்ளைதானும் கிளர் கருங்கிளியின்நாமம் 
சாரமா நிலாமுகிப் பேர் சகோரம் செம்போத்து குக்கில் 
** 9, 2, 1, 1 பெயர்கள் 55 
**263

#56
** குயில் கோட்டான் நாகண வாய்ப்புள் 
கோகிலம் களகண்டம்மே கோரகை குயிலின்பேர்தான் 
ஆகுமே பிகத்தினோடு பரபுட்டம்தானும் அப் பேர் 
கூகையும் உலூகமும் பேர்க் குடிஞையும் குராலும் கோட்டான் 
நாகணவாய்ப்புள் பூவை நவிற்றும் சாரிகையும் ஆமே 
** 5, 4, 2 பெயர்கள் 56 
**264

#57
** வலியன் காரிப்பிள்ளை கரிக்குருவி 
கஞ்சனம் கிகிணியோடு வயவனே கஞ்சரீடம் 
விஞ்சு பாரத்துவாசம் வலியனை விதித்த பேரே 
வஞ்சுளன் வயவன் மற்றை வயான் என்ப காரிப்பிள்ளை
கஞ்சனம் கயவாய் என்ப கரிக்குருவிப் பேர்தானே 
** 5, 3, 2 பெயர்கள் 57 
**265

#58
** சிச்சிலி கூகை கோழி 
சிரல் கவுதம் பொன்வாய்ப்புள் தித்திரி சிச்சிலிப் பேர்
கருதிய பெரும்புள்ளோடு கெளசிகம் ஊமன் கூகை 
குருகு காலாயுதம் பேர்க் குக்குடம் ஆண்டலைப்புள் 
பெருகு வாரணம் என்று ஐந்தும் பேசிய கோழி ஆமே 
** 4, 3,,5 பெயர்கள் 58 
**266

#59
** ஊர்க்குருவி நிலங்கு கானங்கோழி 
** வானம்பாடி காடை சிவல் 
குலிங்கமே சடகமே ஊர்க்குருவி ஆம் புலிங்கமும் பேர் 
நிலங்கு பூழ் ஆம் காதம்பம் நெடிய கானங்கோழிப் பேர் 
கலிங்கமே கம்புள் வானம்பாடியாம் குறும்பூழ் காடை 
இலங்கு கோரசமே புல்லோடு இதல் சிவல் இவை முப்பேரே 
** 3, 1, 2, 1, 3,பெயர்கள் 59 
**267

#60
** கவுதாரி பகண்டை பொரய்யாப்புள் காகம் ஆந்தை 
சிரவமே கெளதாரிப் பேர் சில்லையே பகண்டை ஆகும் 
மருவிய சலாங்குதானே வாய்த்த பொய்யாப்புள் ஆமே 
கரடம் வாயசம் அரிட்டம் கரும்பிள்ளை கொடியே காகம் 
இருடி பிங்கலையே ஆந்தை கின்னரம் என்பதும் பேர்
** 1, 1, 1, 5, 3 பெயர்கள் 60 
**268

#61
** கரும்புறா புறாவின் பொது மாடப்புறா 
** உள்ளான் தூக்கணங்குருவி 
கரும்புறாவின்பேர் பாராவதம் என்ப கபோதமும் பேர் 
பொருந்து தூதுணம் கபோதம் களரவம் புறாப்பொதுப்பேர் 
பரிந்து கல்மேய்வு காளபதமே மாடப்புறா ஆம் 
திருந்திய உள்ளல் உள்ளான் சிதகம் தூக்கணங்குரீஇயே 
** 2, 3, 2, 1, 1 பெயர்கள் 61 
**269

#62
** சம்பங்கோழி அன்றில் கொய்யடிநாரை 
** பெருநாரை கருநாரை வெள்ளைநாரை 
கருதிய கம்புள் சம்பங்கோழி ஆம் கவுஞ்சம் அன்றில் 
குருகு வண்டானம் என்ப கொய்யடி நாரையின்பேர் 
பெருகிய பிதாவே போதா பெருநாரை சிகரி ஒன்றே
கருநிறநாரை வெள்ளைநாரை சாரசம் என்று ஆமே 
** 1, 1, 1, 2, 1, 1 பெயர்கள் 62
**270

#63
** நீர்க்காக்கை கொக்கு நீர் வாழ் பறவை 
மன்னு நீர்க்காக்கை அர்க்கம் மற்றும் காரண்டமும் பேர் 
பன்னிய குரண்டம் கொக்கு ஆம் வலாகமும் பகமும் அப் பேர் 
உன்னமே கிராமம் மற்றை உற்குரோசரத்தினோடு 
கின்னரம் இன்ன நீரில் கிளர்ந்து எழு பறவை ஆமே 
** 2, 3, 4 பெயர்கள் 63 
**271

#64
** வண்டு 
அரி அளி ஞிமிறு மந்தி அறுபதம் சிலீமுகம் சஞ்
சரிகமே சரகமே சஞ்சாளிகம் சுரும்பு கீடம் 
பிரமரம் மாவே கீதம் பிருங்கமே பிரசம் புள்ளு 
வரிகொள் புண்டரீகம் தும்பி மதுபம் நாலைந்தும் வண்டு ஆம் 
** 20 பெயர்கள் 64 
**272

#65
** பெண் வண்டு ஆண் வண்டு துருஞ்சில் 
** வாவல் இந்திரகோபம் தேனீ 
கரும்புளே கேசவம் தேன் கண்ட பெண்வண்டின்நாமம் 
சுரும்பொடு மதுகரங்கள் சொற்றிடும் தும்பி ஆண் பேர் 
துருஞ்சில் ஆலாலம் என்ப சோர்வில் அஞ்சலிகை வாவல் 
தரும் கோபம் ஈயல் மூதா சரகமே பிரசம் தேனீ 
** 3, 3, 1, 1, 2, 2 பெயர்கள் 65 
**273

#66
** சிள்வீடு விட்டில் நுளம்பு மின்மினி கொதுகு 
சிதடி சில்லிகையே சில்லை சிள்வீடு சிமிலியும் பேர் 
பதமுறு சலபம் விட்டில் பறவை ஆம் பதங்கமும் பேர்
விதமுறு நுளம்புதானே நிலத்தி மின்மினி கச்சோதம் 
கொதுகின்பேர் மசகம் துள்ளல் கூறின் மற்று அசவலும் பேர்
** 4, 2, 1, 1, 3 பெயர்கள் 66 
**274

#67
** பறவை ஆண் பெண் மரபு மயிலும் எழாலும் அல்லனவாகிய 
** புள்ளின் ஆண் மயில் எழால் இரண்டின் 
** ஆண் கோழி கூகைகளின் பெண் பறவைப் பெண் 
மயில் எழால் அல்லாப் புள்ளின் வகுத்த ஆண் சேவல் என்ப 
மயில் எழால் எனும் இரண்டில் வாய்த்த ஆண் போத்து அது ஆகும் 
அயர்வுறு கோழி கூகை அல்லாப் பெண் அளகு என்று ஓதார் 
பெயர்பெறும் எல்லாப் புள்ளின் பெண் பெடை பெட்டை பேடை 
** 1, 1, 1, 3 பெயர்கள் 67 
**275

#68
** பறவையின் பொது 
விகங்கம் ஆசுகியே வீயே விகிரமே குடிஞை பக்கி 
சகுந்தம் பத்திரி பதங்கம் தாழ் பிணிமுகத்தினோடு 
பகர்ந்திடும் ககமே கோலப் பறவையே பதகம் போகில் 
புகழ்ந்திடு குரீஇ மூவைந்தும் புள்பொது வயானமும் பேர் 
** 160 பெயர்கள் 68 
**276

#69
** இறகு முட்டை 
சிறகொடு சதனம் வாசம் சிறை பிஞ்சம் கூரல் பக்கம் 
பறை சதம் தூவி தோகை பத்திரம் குரலே கூழை 
இறை என உரைத்த மூவைந்தும் ஏற்றதும் இறகின்பேரே 
அறை தரும் அரிட்டம் கோசம் அண்டமே சினையே முட்டை 
** 15, 4 பெயர்கள் 69 
**277

#70
** பறவைக் குஞ்சு பறவை மூக்கு புள் சிறகடித்துப் 
** புடைத்தல் புள்ளீட்டத்தின் ஒசை பறவைக்கூட்டம் 
பிள்ளையும் பார்ப்பும் குஞ்சின்பேர் சுச்சு சுவவு துண்டம் 
ஒள்ளிய அலகு மூக்காம் ஓசனிக்கின்றது என்ப 
புள் எழச் சிறகடித்துப் புடைத்தலின்நாமம் ஆகும் 
துள்ளு புள்ளீட்டத்து ஒசை துழனி ஆம் தொழுதி கூட்டம் 
** 2, 4, 1,1,1 பெயர்கள் 70 
**278

#71
** மகர மீன் பெரு மீன் யானை மீனை விழுங்கும் மீன் 
** திமிங்கிலத்தை விழுங்கு மீன் 
கலை சுறா மீனேறு என்ப காட்டிய மகரம் ஆகும் 
செலமுறு யானைமீனே திமி பெருமீனின்நாமம் 
அலைவுறு திமிங்கிலப் பேர் ஆனையைவிழுங்கும்மீன் ஆம் 
மலை திமிங்கிலகிலம்தான் மற்று அதை விழுங்கும் மீனே 
** 3, 2, 1, 1 பெயர்கள் 71 
**279

#72
** சங்கு வலம்புரிச்சங்கு சலஞ்சலம் 
நலம்தரு நந்து சுத்தி நாகொடு வளை கம்பு கோடு 
இலங்கிய வாரணம் வண்டு இடம்புரி வெள்ளை சங்கு ஆம் 
வலம்புரி நாமம்தானே வைத்த கொக்கரை என்று ஓதும் 
சலஞ்சலம் பணிலம் என்று சாற்றினர் ஏற்ற நூலோர் 
** 10, 1, 1 பெயர்கள் 72 
**280

#73
** இடம்புரி வலம்புரி சலஞ்சலம் பாஞ்ச சன்னியம் 
இப்பி ஆயிரமே சூழ்ந்தது இடம்புரி என்று கூறும் 
ஒப்பில் சங்கு ஆயிரம் சூழ் உறு வலம்புரி என்று ஓதும் 
அப்படி அதுவும் சூழ்ந்த சலஞ்சலம் ஆகும் மற்றைத் 
தப்பிலாச் சலஞ்சலங்கள் சார்ந்தது பாஞ்சசன்னியம்
**281

#74
** முதலை ஆண் முதலை ஆமை 
** பெண் ஆமை மலங்கு மீன் 
இடங்கர் சிஞ்சுமாரம் வன்மீன் எழில் கராம் முதலையின்பேர் 
கொடும் திறல் கராம் மற்று ஆண் பேர் கூர்மமே உறுப்படக்கி 
ஒடுங்கு கச்சபமே ஆமை கமடமும் உரைக்கற்பாற்றாம் 
மடங்கிய துளி பெண்ணாமை மலங்கின்பேர் நூறை என்ப 
** 4, 1, 4, 1, 1பெயர்கள் 74 
**282

#75
** கிளிஞ்சில் இறால் மீன் ஆரால் மீன் கெண்டை மீன் 
** நத்தை அட்டை மீனின் பொதுப்பெயர் 
ஏரலோடு எருந்தே ஊரல் கிளிஞ்சில் ஆம் இறவு இறால் மீன் 
ஆரலே ஆராலின்பேர் கெண்டைமீன் சபரம் சேல் ஆம் 
ஊர் கருநந்து ஆம் நத்தை நாகும் ஆம் உருவே அட்டை 
நீருறும் மயிலை மற்சம் நெடும் புழல் மீன்பொதுப்பேர் 
** 3, 1, 1, 2, 2, 1, 3 பெயர்கள் 
**283

#76
** பல்லி நாகர வண்டு சிலம்பி எறும்பு நாங்கூழ் செல் 
புள்ளியே கெவுளி பல்லி போற்றும் கோகிலமும் அப் பேர் 
நொள்ளை நாகரவண்டின்பேர் உலூதையே நோன் சிலம்பி 
ஒள்ளிய பிலஞ்சுலோபம் பிபீலிகை ஊர் எறும்பு ஆம் 
தெள்ளு நாங்கூழ் பூநாகம் சிதலையே கறையான் செல்லே 
** 3, 1, 1,2 ,1, 2 பெயர்கள் 
**284

#77
** தேள் ஞெண்டு (நண்டு) உளு தவளை 
நளிவிடம் தெறுக்கால் துட்டன் நாட்டிய விருச்சிகம் தேள் 
களவனே குளிரம் நள்ளி கவைத்தாள் கர்க்கடகம் ஞெண்டே 
உளு உசுவாகும் என்ப உற்ற மண்டூகம் தேரை 
தளர் அரி நுணலை நீகம் தவளை ஆம் பேகமும் பேர் 
** 4, 5, 1, 6 பெயர்கள் 
**285

#78
** புழு உலண்டு கோற்றேன் தேன் கூடு 
கிருமியே புழு பொட்டும் பேர் கீடம் கோல் புழு உலண்டு ஆம் 
பிரசம் கோல்தேன் இறாலே பேசிய தேனின்கூடு ஆம் 
விரவிய விலங்கின் ஈட்டம் விருத்தம் ஓர் எழுபத்தெட்டும் 
வருமுறை உரைத்தான் வீரை மன்னன் மண்டலவன்தானே
** 2, 2, 1, 1 பெயர்கள் 
** மூன்றாவது - விலங்கின் பெயர்த் தொகுதி முற்றிற்று 

@4 மரப்பெயர்த் தொகுதி 
**286

#1
** காப்பு 
திருக் கிளர் தேவர் கோமான் ஏவலின் குபேரன் செய்த 
விருப்புறு பொன் எயிற்குள் விளங்க எண் எழுத்து இரண்டும் 
பரப்பிய ஆதி மூர்த்தி பங்கயப் பாதம் போற்றி 
மரப் பெயர்த் தொகுதிதன்னை வருமுறை கூறலுற்றாம் 
**287

#2
** ஐந்தருக்கள் சந்தன மரம் 
சந்தானம் வேண்டிற்றெல்லாம் தரும் அரி சந்தனம் பூ 
மந்தாரம் பாரிசாதம் கற்பகம் மற்று ஓர் ஐந்து ஆம் 
சந்து ஆரம் சாந்து சாந்தம் சந்திரதிலகத்தோடு 
வந்து ஏறு படீரம் பூசு மலயசம் சந்தனப்பேர்
** 5, 7 பெயர்கள் 
**288

#3
** கற்பகத் தருவின் படர் கொடி அகில் 
** பாதிரி மகிழ மரம் 
மகிழும் அக் கற்பகத்தில் வளர்கொடி காமவல்லி 
அகருவே காகதுண்டம் அகில் என்ப பூழிலும் பேர் 
பகரும் புன்காலியோடு பாடலம் பாதிரிப் பேர்
வகுளமே இலஞ்சி என்ப மகிழ் ஆம் கேசரமும் ஆமே 
** 1, 3, 2, 3 பெயர்கள் 
**289

#4
** கோங்கு சண்பகம் புன்னை சுரபுன்னை நாரத்தை 
மன்னிய கோங்கின்நாமம் வரும் துருமோற்பலம் பூங் 
கன்னிகாரமும் ஆம் என்ப சம்பகம் சண்பகப்பேர் 
புன்னை புன்னாகம் நாகம் வாழை சுரபுன்னைப் பேரே 
நல் நிற நரந்தம் நாரம் நாரங்கம் நாரத்தைப் பேர் 
** 2, 1, 2, 1, 3 பெயர்கள் 
**290

#5
** குருக்கத்தி சிறு சண்பகம் பித்திகை மஞ்சாடி 
** மகர வாழை வன மல்லிகை 
குருகு நாகரி வாசந்தி மாதவி குருக்கத்திப் பேர் 
தரு சிறுசண்பகப்பேர் சாதி மாலதியும் ஆகும் 
கருமுகை பித்திகைப் பேர் திலகம் மஞ்சாடி காட்டும் 
மருகுதான் மகரவாழை வனமல்லிகைப் பேர் மெளவல் 
** 4, 2, 1, 1, 1, 1 பெயர்கள் 
**291

#6
** மல்லிகை காயா வெட்சி துளசி 
மல்லிகையே பூருண்டி மாலதி அனங்கமும் பேர் 
அல்லி புன்காலி காசை அஞ்சனி பூவை காயா 
குல்லையே செச்சை வெட்சி கொந்து ஆர் சிந்தூரமும் பேர் 
குல்லை பூந் துளவினோடு துளாய் வனம் துளசி கூறும் 
** 3, 5, 3, 4 பெயர்கள் 6 
**292

#7
** செருந்தி அழிஞ்சில் குங்கும மரம் அனிச்ச மரம் 
செங்கோடு பஞ்சரம்தான் செருந்தியே பொருந்தி நிற்கும் 
அங்கோலம் சே அழிஞ்சில் சேமரம் என்றும் ஆகும் 
கொங்கு ஆரும் துருக்கம் என்ப குங்குமம் மரவமும் பேர் 
அம் கான அனிச்சம்தானே அருப்பலம் நறவம் சுள்ளி 
** 2, 3, 2, 3,பெயர்கள் 7 
**293

#8
** அலரி மருக்கொழுந்து இருவேலி இருவாட்சி 
கரவீரம் கவீரம் மற்றைக் கணவீரம் அலரியின்பேர் 
விரை மேவு தமனகம்தான் மேவிய மருக்கொழுந்தே 
இருவேலி மூலகந்தம் வேரி பீதகமும் ஏற்கும் 
மரு மேவும் இருவாட்சிக்கு மயிலையும் அனங்கமும் பேர் 
** 3, 1, 3, 2 பெயர்கள்
**294

#9
** தாழை பட்டிகை நந்தியாவர்த்தம் செவ்வரத்தம் 
முண்டகம் முடங்கல் கைதை முசலியே மடியே தாழை 
கண்டல் கேதகையும் அப் பேர் பறிவை பட்டிகையே காட்டும் 
வண்டு உளர் வலம்புரிப் பேர் நந்தியாவர்த்தம் என்ப 
விண்ட பூஞ் செவ்வரத்தம் மேவும் மந்தாரம் ஆமே 
** 7, 1, 1, 1 பெயர்கள் 9 
**295

#10
** பனை கூந்தற் பூகம் கமுகு பாக்கு 
தாலமே பெண்ணை புல்லு தாளி புற்பதி பனைப் பேர் 
தாலமே கூந்தற்பூகம் தரு கந்தி பூகம் பூக்கம் 
சால நீள் கமுகு முப்பேர் சாற்றிடும் துவர்க்காய் பாகு 
கோலம் என்று இந்த மூன்றும் குறித்த பாக்கிற்கு நாமம் 
** 5, 1, 3, 3 பெயர்கள் 10 
**296

#11
** பலா ஈரப் பலா மாமரம் தேமா 
பனசமே வருக்கை பாகல் பலவு இவை பலாவின்பேரே 
அனைய ஈரப்பலாவே ஆசினி என்பதாகும் 
வினவிய மாந்தி சூதம் மேவும் ஆமிரமே கொக்கே 
சினை படு மாழை மா ஆம் சேதாரம் தேமாவின்பேர் 
** 4, 1,  5, 1 பெயர்கள் 11 
**297

#12
** தெங்கு பன்னாடை வாழை கரும்பு 
தாழை தென் நாளிகேரம் இலாங்கலிதாம் தெங்கின்பேர் 
சூழும் நெய்யரி பன்னாடை சொல்லிய நாரியும் பேர் 
வாழையே கதலி ஆகும் மற்று அரம்பையும் அதன்பேர் 
வேழமே கன்னல் இக்கு மென் கழை கரும்பு நாற்பேர் 
** 4, 2, 2, 4 பெயர்கள் 12 
**298

#13
** மூங்கில் 
காம்பு பாதிரி முடங்கல் கழை பணை விண்டு நேமி 
தூம்பு வேய் தட்டை முந்தூழ் துளை கிளை முளையே வேணு 
ஆம்பல் கீசகம் வேல் வேரல் அரி அமை திகிரி வேழம் 
மேம்படு வரை மூவெட்டும் மூங்கில் ஆம் வெதிரும் அப் பேர் 
** 25 பெயர்கள் 13 
**299

#14
** ஆலமரம் வெட்பாலை குடைவேல் புன்கு 
வடம் உடன் நியக்குரோதம் பூதம் கான்மரம் வான் ஓங்கிப் 
படரும் தொன்மரமே கோளி பழுமரம் ஆலின்பேரே 
குடசம் வெட்பாலை என்ப கிரி மல்விகையுமே கூறும் 
உடை என்ப குடைவேல் ஆகும் உறு கரஞ்சகமே புன்கு 
** 7, 2, 1, 1 பெயர்கள் 14 
**300

#15
** அசோகு அரசு 
விரை செறி செயலை பிண்டி மேவு காகோளி மூன்றும் 
அருகன் எம்மான் இருந்தே அறம் பகர் அசோகின்பேர் ஆம் 
அரசின்பேர் சுவலை குஞ்சராசனம் அச்சுவத்தம் 
திருமரம் பணையே போதி கணவம் பிப்பலமும் செப்பும் 
** 3, 8 பெயர்கள் 15 
**301

#16
** புளிய மரம் தேக்கு கொன்றை முள்முருங்கை 
சிந்திகம் ஆமிலம் சிந்தூரமே எகின் புளிப் பேர்
திந்திடீகமும்  அப் பேரே தேக்கின்பேர் சாகம் சாதி 
வந்து எழும் இதழி தாமம் மதலையே கடுக்கை கொன்றை 
முந்து கிஞ்சுகத்தினோடு கவிரும் முள்முருக்கின்நாமம் 
** 5, 2, 4, 2 பெயர்கள் 16 
**302

#17
** நாவல் குழி நாவல் வேம்பு எலுமிச்சை 
சம்பு நேரேடு நாவல் சாதேவம் குழிநாவல் பேர் 
நிம்பமே வேம்பின்நாமம் நீள் பிசுமர்த்தமும் பேர் 
சம்பீரம் முருகனோடு சதாபலம் எலுமிச்சைப் பேர் 
அம் புவி இலிகுசத்தோடு அருணம் சம்பளமும் நாட்டும் 
** 2, 1 2, 6 பெயர்கள் 17 
**303

#18
** அத்தி புளிமா இலந்தை இலந்தைக் கனி 
அதவுடன் உதும்பரங்கள் கோளியே அதமே அத்தி 
இதமுறும் மாழை சிஞ்சம் எகின் மூன்றும் புளிமாவின்பேர் 
வதரி கோற்கொடி இலந்தை வளர் கோலி குவலியும்பேர் 
விதமுறு கோலம் கோண்டை வினவில் அக் கனியின்பேரே 
** 4, 3, 4, 2 பெயர்கள் 18 
**304

#19
** மாதுளை தாது மாதுளை பிரம்பு ஆத்தி 
மாதுளம் மாதுளுங்கம் கழுமுளே மாதுளைப் பேர் 
தாதுமாதுளையின்நாமம் தாடிமம் என்றே சாற்றும் 
சாதி வேத்திரமே சூரல் சாற்றிய பிரம்பு முப்பேர் 
தாதகி ஆத்தி ஆரே சல்லகி எல்லாம் ஒன்றும் 
** 3, 1, 3, 3 பெயர்கள் 19 
**305

#20
** தேற்று மரம் வாகை வில்வம் பராய் மரம்
**  கிலுகிலுப்பையின் பெயர் ஓடையின் பெயர் 
சில்லமே இல்லம் தேற்று ஆம் சிரீடமே பாண்டில் வாகை 
வில்லம் மாலூரமே கூவிளம் இவை வில்வப்பேரே 
புல்லிய பசுநா விட்டில் புக்கு இவை பராயின்பேரே 
பல் இணர்க் கிலுகிலுப்பை பகன்றை ஆம் உலவை ஓடை 
** 2, 2, 3, 3, 1, 1 பெயர்கள் 20 
**306

#21
** வாடாக் குறிஞ்சி குறிஞ்சி பேரீந்து கோட்டம் 
** மழை வண்ணக் குறிஞ்  நாயுருவி 
குரவகம் என்ப வாடாக்குறிஞ்சி ஆம் குரண்டகம்தான் 
பெருகிய குறிஞ்சி ஆகும் பேரீந்தின்பேர் கர்ச்சூரம் 
குரவமே கோட்டம் என்ப மழைவண்ணக்குறிஞ்சி பாணம் 
தரு கரமஞ்சரிப் பேர் சாற்று நாயுருவி ஆமே 
** 1,1,1,,1, 1, 1 பெயர்கள் 21 
**307

#22
** முல்லை களா கருங்காலி விளா வெண் கடுகு 
தளவு மாகதியே மெளவல் யூதிகை முல்லை சாற்றும் 
களவு என்ப களாவின்நாமம் கதிரமே கருங்காலிப் பேர் 
விளவொடு கபித்தம் வெள்ளில் விளா கடிப்பகையினோடு 
விளையும் ஐயவி சித்தார்த்தம் வெண்சிறுகடுகு இ முப்பேர் 
** 4, 1, 1, 3, 3 பெயர்கள் 22
**308

#23
** மருத மரம் வேங்கை மரம் முந்திரிகை அதி மதுரம் 
மருது பூதவத்தினோடு மற்று அருச்சுனமும் ஏற்கும் 
பெருகிய கணியும் பீதசாலமும் திமிசும் வேங்கை 
திரு மிகு மதுரசம் கோத்தனியே முந்திரிகை ஆகும் 
வரும் அதிமதுரம் யட்டி மதுகமே அதிங்கம் என்ப 
** 2, 3, 2, 3,பெயர்கள் 23 
**309

#24
** செங்காந்தள் வெண்காந்தள் புனமுருக்கு வன்னி நுணா 
காந்தள் செங்காந்தள் பற்றை இலாங்கலி தோன்றியும் பேர் 
காந்துகம் கோடல் கோடை கருது வெண்காந்தள் ஆகும் 
பூந் துணர்ப் பலாசுதானே புனமுருக்கின்பேர் என்ப 
சாய்ந்து எழு சமியே வன்னி நுணாவின்பேர் தணக்குத்தானே 
** 4, 3, 1, 1, 1 பெயர்கள் 24 
**310

#25
** குருந்தம் குமிழ் குன்றி கடம்பு 
** வெண்ணொச்சி சத்திக் கொடி 
குந்தமே குருந்தம் என்ப குமிழ் கூம்பல் குஞ்சம் குன்றி 
இந்துளம் மரா கதம்பம் இயைந்த நீபம் கடம்பு ஆம் 
சிந்துவாரம் நீர்க்குண்டி செப்பில் வெண்ணொச்சி ஆகும் 
தந்த சத்திக்கொடிப் பேர் தாடிமஞ்சம் தானாமே 
** 1, 1, 1, 4, 2 1 பெயர்கள் 25 
**311

#26
** கடுமரம் நெல்லி தான்றி திப்பலி கொத்துமலி 
அரிதகி பத்தியங்கள் கடுவே ஆமலகம் நெல்லி 
கருதிய தான்றிதானே கலித்துருமம் தானாகும் 
பரவும் மாகதி காமன் திப்பலி என்ப கலினியும்பேர் 
உருளரிசிப் பேர் கொத்துமலி என உரைக்கலாமே 
** 2, 1, 1, 3, 1 பெயர்கள் 26 
**312

#27
** கருவிளை துரிஞ்சில் ஆடாதோடை பருத்தி 
கன்னி காக்கணம் இரண்டும் கருவிளை கிகிணியும் பேர் 
முன்னமே துரிஞ்சிலின்பேர் மொழிந்த சீக்கிரியும் ஆகும் 
மன்னிய ஆடாதோடை வாசை என்று அறையலாமே 
பன்னல் கார்ப்பாசம் இன்ன பருத்தியின் பெருத்த நாமம் 
** 3, 2, 1, 2 பெயர்கள் 27 
**313

#28
** இத்தி ஆமணக்கு இருப்பை எட்டி 
இத்தியே சுவி இரத்தி இரத்திரி இறலி ஆகும் 
சித்திரகம் ஏரண்டம் சிறந்த ஆமணக்கின்நாமம் 
வைத்திடும் இருப்பைதானே மதுகம் ஆம் குலிகமும் பேர் 
கைத்த கோடரமே காளம் காஞ்சிரை முட்டி எட்டி 
** 4, 2, 2, 4 பெயர்கள் 28 
**314

#29
** செங்கருங்காலி ஆச்சாமரம் இலவம் வழுதலை 
செங்கருங்காலி நாமம் சிறுமாரோடம் தானாகும் 
தங்கிய சாலம் சுள்ளி மராமரம் ஆவே ஆச்சா 
பொங்கர் சான்மலியினோடு பூரணி இலவம் முப்பேர் 
வங்கமே வழுதலைப் பேர் வழுதுணை என்றும் ஆமே 
** 1, 4, 3, 2 பெயர்கள் 29 
**315

#30
** கழற்கொடி கழற்காய் கற்றாழை புலிதொடக்கி 
** ஈகை சிறுபூளை ஊமத்தை 
கழலின்நாமம் கர்ச்சூரம் கழற்காயே கழங்கு மற்று 
முழலும் ஆம் கற்றாழைப் பேர் முதிர்விலாக் குமரி கன்னி 
இழைவுறு புலிதொடக்கி இண்டு ஆம் ஈகை ஈங்கை 
உழிஞையே சிறுபூளைப் பேர் உன்மத்தம் ஊமத்தைப் பேர் 
** 1, 2, 2, 1, 1, 1, 1 பெயர்கள் 30 
**316

#31
** அகத்தி எருக்கு பச்சிலைமரம் சுண்டி 
** வறட்சுண்டி சதுரக் கள்ளி 
அச்சமே முனி கரீரம் அகத்தி ஆம் எருக்கு அருக்கம் 
பச்சிலைமரம் தமாலம் பசும்பிடி என்றும் பேரே 
சுச்சுவே சுண்டி என்ப சமங்கையே வறட்சுண்டிப் பேர் 
வச்சிராங்கம் கண்டீர்வம் வச்சிரம் சதுரக்கள்ளி 
** 3, 1, 2, 1, 1, 3 பெயர்கள் 31 
**317

#32
** மலைப் பச்சை ஞாழல் சிறுகீரை சேம்பு 
** வள்ளை கொத்தான் நறுவிலி 
பல் இணர்க் குளவிதானே மலைப்பச்சை பலினி ஞாழல் 
சில்லியே மேகநாதம் சாகினி சிறுகீரைப் பேர் 
சொல்லிய சகுடம் சேம்பு ஆம் சூழ்ந்த நாளிகமே வள்ளை 
நல்ல நந்தைப் பேர் கொத்தான் நறுவிலி அலி என்றாமே 
** 1, 1, 3, 1, 1, 1, 1 பெயர்கள் 32 
**318

#33
** சாறடை கூதாவி வெள்ளரி கக்கரி 
** காஞ்சொறி தாவி சிவேதை 
திரிபுரி சாறடைப் பேர் சிறந்த கூதளம் கூதாளி 
விரவிய உருவாரம்தான் வெள்ளரி விளங்கும் நாமம் 
கருது கக்கரி வாலுங்கி கண்டூதி காஞ்சொறிப் பேர் 
பரவு மஞ்சிகமே தாளி பகன்றை ஆம் சிவேதைதானே 
** 1, 1, 1, 1, 1, 1, 1 பெயர்கள் 33
**319

#34
** ஏலம் இசங்கு பாகல் பாலை மரம் 
ஏலம் ஆம் துடியோடு ஆஞ்சி இரண்டுமே இசங்கினுக்கு 
கோலு முத்தாபலம் பேர் குண்டலி என்றும் ஆகும் 
கூலமே காரவல்லி கூறிய பாகலின்பேர் 
பாலையின்பேர் சீவந்தி சீவனி என்றும் பன்னும் 
** 2, 2, 2, 2 பெயர்கள் 34 
**320

#35
** கொவ்வை பசிரி தும்பை சுரை கொடிக்கொத்தான்
** முருங்கை இலைக்கறி பீர்க்கு பெரும் பீர்க்கு 
விம்பமே தொண்டை கொவ்வை பசிரி பாவிரி துரோணம் 
தும்பையே அலாபு மற்றைச் சுரை நூழில் கொடிக்கொத்தான் ஆம் 
கொம்பர் சேர் முருங்கையே சிக்குரு அடகு இலைக்கறிப் பேர்
பம்பிய பீரம் பீர்க்கு ஆம் படலிகை பெரும்பீர்க்கு ஆமே 
** 2, 1, 1, 1, 1, 1, 1, 1 பெயர்கள் 35 
**321

#36
** பாற் சொற்றி சீந்திக் கொடி கொடி நாணல் 
பரவு பாற்சொற்றி நாமம் பாயசம் என்று கூறும் 
விரவிய அமுதவல்லி மேய சீவந்தி சீந்தி 
மருவிய இலதை வள்ளி வல்லி வண் கொடி முப்பேர் ஆம் 
சரமொடு காசை காசம் சாற்றிடு நாணலின்பேர்
** 1, 2, 3, 3 பெயர்கள் 36 
**322

#37
** வெற்றிலைக் கொடி மிளகு 
நறிய தாம்பூல வல்லி தாம்பூலி நாகவல்லி 
செறிதரும் இலைக் கொடிப் பேர் திரையல் மெல்லிலையும் ஆகும் 
கறியொடு மரீசம் காயம் கலினை கோளகம் திரங்கல் 
செறிதரும் மிளகின்நாமம் மிரியலும் செப்பல் ஆமே 
** 5, 7 பெயர்கள் 37 
**323

#38
** நெல் செந்நெல் பயிர் கதிர் இளஞ்சூல் இளங்கதிர் 
வரி சொல்லு விரீகி சாலி வளர் நெல் ஆம் யவமும் ஆகும் 
தெரியும் நல் நெல்லினோடு செஞ்சாலி செந்நெல்லின்பேர் 
பரியும் பைங்கூழ் பசும்புல் பயிர் கதிர் குரலோடு ஏனல் 
பெருகிய இளஞ்சூல் பீட்டை பீள் இளங்கதிரின்பேரே 
** 5 2, 2, 2, 1, 1 பெயர்கள் 38 
**324

#39
** பதர் நெற்போர் தூற்றாத நெற்பொலி 
** கோதுமை அரிசி வைக்கோல் மலைநெல் 
பழுதுறு பதரின்பேரே பதடி ஆம் போரே சும்மை 
பொழியத் தூற்றாத நெல்லின் பொலியே பொங்கழி என்று ஆகும் 
தழுவு கோதுமையே கோதி தண்டுலம் அரிசிதானே 
வழுது வை பலாலம் வைக்கோல் மலைநெல் ஐவனமே வைக்கும் 
** 1, 1, 1, 1, 1, 3, 1 பெயர்கள் 39 
**325

#40
** வேய் மூங்கில் அரிசி குளநெல் கம்பு 
**தினை பைந்தினை கருந்தினை தினைத்தாள் 
தந்த வேய் அரிசி தோரை குளநெல்லுத்தான் நீவாரம் 
செந்தினை கவலை கம்பு ஆம் தினையின்பேர் ஏனல் என்ப 
பைந்தினைதானும் ஏனல் பகர்ந்திடும் கருந்தினைப் பேர் 
அந்தமாம் இறடி கங்கே அருவியும் இருவியும் தாள் 
** 1, 1, 2, 1, 1, 2, .2 பெயர்கள் 40 
**326

#41
** துவரை கடலை அவரை உழுந்து பயறு 
** கொள் துவரை கடலை முதலியன காராமணி 
துவரை ஆடகமே ஆம் மஞ்சூரமே கடலையின்பேர் 
அவரை சிக்கடியே சிம்பை அழுந்திய உழுந்து மாடம் 
கவர்தரு பயறு முற்கம் காணமே குலத்தம் கொள் ஆம் 
இவை எலாம் முதிரை கூலம் இதை காராமணியின்நாமம் 
** 1, 1, 2, 1, 1, 2, 2, 1 பெயர்கள் 41 
**327

#42
** சோளம் எள் எள்ளிளங்காய் இளையெள் வரகு 
நண்ணிய சொன்னல் சோளம் நாட்டிய இறுங்கும் ஆமே 
எண்ணொடு திலமும் நூவும் எள் கவ்வை இளங்காயின்பேர் 
பண்ணிய குமிகைதானே பயனுறும் இளைஎள் ஆகும் 
மண்ணிய வரகின்நாமம் மருவு கோத்திரவம் ஆமே 
** 2, 3, 1, 1, 1 பெயர்கள் 42
**328

#43
** தருப்பை அறுகு இளம்புல் மஞ்சள் இஞ்சி 
குசையொடு குமுதம் கூர்ச்சம் குசம் தர்ப்பை என்று கூறும் 
பசையுறு பதமே தூர்வை பச்சறுகு இளம்புல் சட்பம் 
நிசி அரிசனமே பீதம் நிகரில் காஞ்சனியே மஞ்சள் 
நசையுறும் இஞ்சி அல்லம் நறுமருப்பு என்றும் ஆமே 
** 4, 2, 1, 4, 2 பெயர்கள் 43 
**329

#44
** கருணைக் கிழங்கு மரப் பொதுவின் பெயர் 
கருணையின்நாமம் கந்தம் சூரணம் என்றும் காட்டும் 
தரு அகலியம் விருக்கம் தாவரம் விடபி தாரு 
துருமமே குசம் என்று எட்டும் சொல்லிய மரப்பொதுப்பேர் 
பரவு பூருகமே சாகி பாதபம் என்றும் பன்னும் 
** 2, 11 பெயர்கள் 44 
**330

#45
** கிழங்கு முளை வேர் மரக் கொம்பு 
மூலமே சகுனம் கந்தம் மூலகம் கிழங்கின்நாமம் 
காலொடு அங்குரம் முளைப் பேர் கருது தூர் சவையே வேர் ஆம் 
கோல் இபம் விடபம் கொம்பர் கோடரம் பொங்கர் சாகை 
பால் அமர் கவடு தாரு பணை சினை உலவை கொம்பு ஆம் 
** 4, 2, 2, 12 பெயர்கள் 45 
**331

#46
** மர வயிரம் இலை தழை மரக் கன்று 
கலையொடு ஆசினியே சேகு காழ்ப்பு காழ் வயிரம் ஆகும்  
தலம் அடை தகடு பன்னம் சதனம் பத்திரம் பலாசம் 
இலை தமாலமும் ஆம் மற்றும் இதில் தழை உலவை என்ப 
புலனுறு குழவி பிள்ளை போதகம் போத்து கன்று ஆம் 
** 5, 8, 1, 4 பெயர்கள் 46 
**332

#47
** இளங் கொம்பு கப்பு தவிர் குருத்து தளிர்த்தல் 
மெல்லியல் இளங்கொம்பின்பேர் மேவிய கவரே கப்பு ஆம் 
வல்லரி கிசலயம் பூ மஞ்சரி முறி அலங்கல் 
பல்லவம் குழை தளிர்ப் பேர் பகர் குருத்தே முருந்து 
சொல்லுங்கால் குழைத்தலோடே இலிர்த்தலும் தவிர்த்தலின்பேர் 
** 1, 1, 7, 1, 2 பெயர்கள் 47 
**333

#48
** அரும்பு பூ 
முகை நனை கலிகை போகில் முகுளமே மொக்குள் மொட்டு 
மகிழ்வுறு கோரகங்கள் மற்றைச் சாலகம் அரும்பு ஆம் 
தகை பெறு குசுமம் போது தார் அலர் சுமனசம்தான் 
மிகு மண மலரே தாமம் வீ இணர் துணர் பூவின்பேர் 
** 9, 10 பெயர்கள் 48 
**334

#49
** பூங் கொத்து பூந் தாது பூந் தேன் தாதில் தாள் 
தொத்து மஞ்சரியினோடு துணர் இணர் குலை ஐந்தும் பூங்
கொத்தின்பேர் மகரம் செய்ய கொங்கு கேசரம் பூந்தாது ஆம் 
வைத்திடும் துணரும் ஆகும் மகரந்தம் பூந்தேன் என்ப 
பைத்து எழும் தாதில் தூளே பராகம் ஆம் பிரசமும் பேர் 
** 5, 4, 1, 2 பெயர்கள் 49 
**335

#50
** மலர்தல் விரி மலர் பழம்பூ பூவின் இதழ் 
அலர்தலே அவிழ்தல் விள்ளல் மலர்தல் ஆம் நெகிழ்தலும் பேர் 
இலகிய விரிமலர்ப் பேர் இகமலர் வெதிர் தொடர்ப் பூ 
பலம்அறு சாம்பல் செம்மல் பழம்பூ ஆம் தேம்பலும் பேர் 
புலனுறும் ஏடு தோடு தளம் மடல் பூவிதழ்ப் பேர் 
** 4, 3, 3, 4 பெயர்கள் 50 
**336

#51
** அகவிதழ் புறவிதழ் காய் பழம் விதை 
அல்லியே அகவிதழ்ப் பேர் அறைந்திடும் புறவிதழ்ப் பேர் 
புல்லியே வடுவும் பிஞ்சும் போற்றும் தீவிளியும் காய் ஆம் 
பல் இயல் கவிஞர் சொற்ற பழம் கனி பலமும் ஆகும் 
மெல்லிய பரலும் காழும் பீசமும் விதை வித்தும் பேர் 
** 1,1,3, 2, 4 பெயர்கள் 51 
**337

#52
** கொத்தின் பெயர் பலமிலா மரம் காய்த்திருந்த மரம் 
** உலர்ந்த மரம் பூவாது காய்க்கும் மரம் 
குலை குச்சம் தாறு சாறு குடும்பொடு படுவும் கொத்து ஆம் 
மலர் அவகேசிதானே வரு பலமிலாமரப்பேர் 
பலினம் காய்த்திருந்த தாரு பகர் உலர் மரமே வானம் 
புலர்வு இலாக் கோளியோடு வனபதி பூவாக் காய்க்கும் 
** 6, 1, 1, 1, 2 பெயர்கள் 52 
**338

#53
** விறகு மரச் செறிவு மரப்பொந்து முள் 
இந்தனம் முருடு கட்டை இடு கறல் சமிதை காட்டம் 
வெந்திடும் ஞெகிழி ஏழும் விறகு என்ப முளரியும் பேர் 
வந்த கோடரம் பொதும்பர் மரச்செறிவு ஆகும் பொந்து 
முந்து பேர் பொள்ளல் ஆகும் முள் கடு கண்டகம்மே 
** 8, 2, 1, 2 பெயர்கள் 53
**339

#54
** சோலை ஊர் சூழ் சோலை 
துடவை நந்தனவனம் பூந்தோட்டமே அரி உய்யானம் 
கடி பொழில் உத்தியானம் கா மரச்செறிவு ஆராமம் 
நெடிய தண்டலையினோடு நீள் உபவனமே சோலை 
வடிவுடை ஊர் சூழ் சோலை வனம் என வைக்கலாமே 
** 12, 1 பெயர்கள் 54 
**340

#55
** காடு 
அடவி கான் புறவம் பொச்சை ஆரணியம் காந்தாரம் 
கடம் வனம் முளரி தில்லம் ககனம் கண்டகமே தாவம் 
விடர் சுரம் பழுவம் கானல் விபினமே கட்சி கானம் 
கடறு கானனமே அத்தம் களரி காடு இருபானாற்பேர் 
** 24 பெயர்கள் 55 
**341

#56
** பெருந்தூறு சிறுதாறு குறுங்காடு 
** பெருங்காடு காவற்காடு 
நிறை தரு தூறு குன்மம் நீள் பஞ்சி விடபமும் பேர் 
அறல் இறல் பதுக்கை முப்பேர் அறியலாம் சிறிய தூறு 
குறியகாடு இறும்பு என்று ஆகும் கூறிய பெருங்கான் வல்லை 
மறை அரண் இளை இரண்டும் வைத்த காவற்காட்டின்பேர் 
** 3, 3, 1, 1, 2 பெயர்கள் 56 
**342

#57
** முதிர்காடு கரிகாடு வேலி ஆண்மரம் 
** பெண்மரம் அலி மரம் 
முதையலே இலை உதிர்ந்த முதிர்காட்டின்நாமம் ஆகும் 
பொதி கரிகாடு பொச்சை பொருந்துமே இளை வேலிப் பேர் 
அதிகம் மற்று அகங்காழ்த்திட்டது ஆண்மரம் புறக்காழ் பெண்ணும் 
விதியுள் இவ் இரண்டும் இல்லா வெளிறு அலி ஆகும் என்ப 
** 1, 2, 1, 1, 1, 1 பெயர்கள் 57 
**343

#58
** தாமரை 
புண்டரீகத்தினோடு அம்போருகம் குசேசயம் பூ 
முண்டகம் அரவிந்தம்மே முளரி பங்கயம் வாரீசம் 
இண்டை அம்புயம் சரோசம் எழில் சதபத்திரி சூழ்ந்து 
வண்டு உளர் நளினம் கஞ்சம் வனசம் தாமரையின்நாமம் 
**344

#59
** தாமரை தாமரை மலர் தாமரைக் கொட்டை 
சலசமே கமலம் மற்றும் சார்ந்த கோகனதத்தோடு 
தலம் உணும் திருமால் உந்தி சரோருகம் பதுமமும் பேர் 
மலரின்பேர் இறும்பு ஆகும் மற்று இராசீவமும் பேர் 
புலர்வுஇல் பொன் நிறத்த கொட்டை பொகுட்டே கன்னிகையும் ஆகும் 
** 21, 2, 2 பெயர்கள் 59 
**345

#60
** தாமரைச் சுருள் தாமரைக் காய் செங்கழுநீர் 
விரித்திடும் சுருளின்நாமம் விசியொடு வளையம் ஆகும் 
மருக் கிளர் தாமரைக்காய் வராடகம் என்ப நூலோர் 
அரத்த உற்பலமே வாசம் அடர்ந்த செங்குவளை கோலத் 
திருக் கிளர் கல்லாரங்கள் செங்கழுநீரின்பேரே 
** 2, 1, 2 பெயர்கள் 60 
**346

#61
** கருங்குவளை கருநெய்தல் வெண்ணெய்தல் 
கோலம் ஆர் பானல் காவி குவலயம் மணத்தை மொண்டு 
காலத் தேன் உலவுகின்ற கருங்குவளைக்குநாமம் 
நீலம் இந்தீவரம்தான் நிகழ் கருநெய்தல் என்ப 
கோல உற்பலமும் ஆகும் குமுதம் வெண்ணெய்தல் பேரே 
** 3, 1, 1 பெயர்கள் 61 
**347

#62
** அரக்காம்பல் வெள்ளாம்பல் திரள் கோரை வாட்கோரை 
செங்குமுதம் செவ்வல்லி சேதாம்பல் அரக்காம்பல் பேர் 
வெங்கள்ளு நாறும் அல்லி கைரவம் வெள்ளாம்பல் பேர் 
தங்கிய திரள் கோரைப் பேர் சாய் பஞ்சாய்க்கோரை என்ப 
அங்கு உள செருந்திதானே அடர்ந்த வாட்கோரை ஆமே 
** 3, 2, 2, 1 பெயர்கள் 62 
**348

#63
** முள்ளியின் பெயர் முள்ளுடை 
** மூலமெல்லாவற்றிற்கும் பெயர் 
** பாசியின் பெயர் நீர்க் குளிரியின் பெயர் 
ஒள்ளிய கண்டல் முள்ளி உரைத்த முண்டகமே அன்றி 
முள்ளுடை மூலம் யாவும் முண்டகம் என்றே சாற்றும் 
தள்ளிய நாரம் பாசி சைவலம் சடைச்சியும் பேர் 
வள்ளிய கல்லாரம்தான் மற்றை நீர்க்குளிரி ஆமே 
** 2, 1, 3, 1 பெயர்கள் 63 
**349

#64
** மருந்து என்பன வேல் தைத்த புண் மாற்று மருந்தின் பெயர்
**  துணிபட்ட உறுப்பைப் பொருத்தும் மருந்தின் பெயர் 
** விரணந் தீர்க்கும் மருந்தின் பெயர் 
வல்லியும் புல்லும் பூடும் மரம் முதல் மருந்து என்று ஆகும் 
சல்லியகரணி கூர் வேல் தைத்த புண் மாற்றும் துண்டம் 
புல்லிய செய்வதானே சந்தான கரணி போலும் 
மெல்லிய விரணம் தீர்க்கும் சமனியகரணி வேறே
**350

#65
** மூர்ச்சை தீர்த்துக் குற்றுயிர் தரும் மருந்து 
** மருந்தின் பொதுப் பெயர் 
மறைவிலா மிருதசஞ்சீவனி அமுது இரண்டும் 
குறைவற மூர்ச்சை தீர்த்தே குற்றுயிர் தரும் மருந்து ஆம் 
உறையொடு குளியம் யோகமுறு மருந்தின்பொதுப்பேர் 
அறையுங்கால் அந்தப் பேரே அதகமும் ஆகும் என்ப 
** 2, 4 பெயர்கள் 65 
**351

#66
** மாலை 
அலங்கலே பிணையல் ஆரம் சிகழிகை அணி சுருக்கை 
இலம்பகம் தெரியல் சுக்கை ஏற்ற கத்திகையே தாமம் 
துலங்கிய படலை கண்ணி தொடை தொங்கல் ஒலியல் கோதை 
மலர்ந்த தார் இவை மூவாறும் மாலை மஞ்சரியும் அப் பேர் 
** 19 பெயர்கள் 66 
**352

#67
** நுதல் அணியின் பெயர், வாசிகையின் பெயர் வாகை 
சூட்டுடன் இலம்பகங்கள் சூழ் நுதல்அணி என்றாகும் 
தீட்டு வாசிகையின்பேரே சிகழிகை படலை என்ப 
ஈட்டிய கல்வி கேள்வி இருங் குடி கொடை படைக்குள் 
வாட்டம்இல்லவரை வென்று மெளலி சூட்டுவது வாகை 
** 2, 2, 5 பெயர்கள் 67 
**353

#68
பரப்பு நீர் உலகுதன்னில் பாவலர் கிளைஞர் உற்ற 
நிரப்பு அடும் குணபத்திரன்தான் நித்தலும் போற்றி செய்து 
விருப்புறு விரதசீலன் வீரை மண்டலவன் செய்தான் 
மரப்பெயர்க்கு அறுபத்தெட்டு மன்னிய கவிதைதானே
** நான்காவது மரப்பெயர்த் தொகுதி முற்றிற்று 

@5 இடப் பெயர்த் தொகுதி 
**354

#1
** காப்பு 
கடல் எழும் இரவி கோடி கால் சீத்துப் பொடித்த தென்ன 
மடல் அவிழ் கமலவூர்தி வந்த வாமனையே போற்றி 
அடைவுள திணை தேம் ஊர் வான் அகம் புறம் ஆதியாய 
இடனுடைத்தாக வைத்த இடப் பெயர்த் தொகுதி சொல்வாம்  
**355

#2
** மோக்கத்தின் பெயர் 
கேடுஇலா அபவருக்கம் கேவலத்தோடு சித்தி 
வீடு கைவல்லியம்மே மீளாத கதியே நூலோர் 
பாடு நிர்வாணத்தோடு பரகதி சிவமே முத்தி 
நீடும் ஈரைந்தும் மோக்கம் அமுதமும் நிகழ்த்தலாமே 
** 11 பெயர்கள் 2 
**356

#3
** தேவலோகம் 
உயர்நிலை உவணை புத்தேள்உலகு பொன்னுலகு தானம் 
வியன்உலகம் துறக்கம் மேல்உலகம் விமானம் 
நயனுறு சுவர்க்கம் கற்பம் நாகம் விண்ணுலகோடு உம்பர் 
செயமுறு தேவலோகம் சிறந்திடும் ஈரேழ் பேரே 
** 14 பெயர்கள் 3 
**357

#4
** நாகலோகம் விஞ்சையர் ஊர் நரகம் 
பரவிய நாகலோகம் பவனம் ஆம் சேடி சேணி 
விரவு விஞ்சையர் ஊர் மற்றும் வீழ் அதோகதி பாதாளம் 
நிரயமே அளறே தீயே நீள் சுவப்பிரமே ஊழல் 
நரகு இருள் பவர்க்கம் பத்தும் நரகம் ஆம் பூதியும் பேர் 
** 1, 2, 11 பெயர்கள் 4 
**358

#5
** திக்கு கிழக்கு தெற்கு 
அரிதம் மாதிரம் விசும்போடு அம்பரம் உலகு காட்டை 
கருதிய திசை கோ ஆசை ககுபமும் திகையும் திக்கு ஆம் 
பெருகு பூருவம் குணக்கே பிராசி ஐந்திரி கிழக்கு ஆம் 
தெரியும் யாமியம் அவாசி தக்கணம் சிவேதை தெற்கே 
** 11, 4, 4 பெயர்கள் 5 
**359

#6
** மேற்கு வடக்கு நிலம் 
குடக்கு வாருணமே மேக்கு  குறித்த பச்சிமமே மேற்கு ஆம் 
நடத்திய பிரத்தியக்கும் மற்றதன் பேரே நாட்டும் 
வடக்கு உதக்கு உதீசி என்ப மற்றை உத்தரமும் ஆகும் 
விடப்படாத் திணையே மாவே வேலி பூ நிலம் நாற்பேரே 
** 5, 3, 4 பெயர்கள் 6 
**360

#7
** பூமி 
அவனி காசினி சகத்தோடு அகலிடம் அகிலம் பாரி 
குவலயம் விபுலை மற்றைக் கோத்துரை கோவே குவ்வே 
புவனி மண்டலம் தலம் பூ பொழில் வசுந்தரை உடன் பார் 
பவனம் தாரணியினோடு படி புவி தரணி வையம்
**361

#8
தாலமே அசலை நேமி வசுமதி தாரை தரித்திரி 
ஞாலம் தாத்திரி அளக்கர் நாடு பூதலம் கிடக்கை 
பாலமே பூதிகங்கள் பார்த்திவம் பொறை அனந்தை 
வேலை சூழ் மகி ஆறேழும் மேதினி உலகும் பூமி 
** 44 பெயர்கள் 8 
**362

#9
** நாட்டின் பெயர் 
பாடி மண்டலமே சும்மை பைதிரம் உலகு தேயம் 
நீடிய அகலுள் ஏணி நீவரம் கோட்டம் கண்டம் 
பீடுறு சனபதங்கள் பெரும் பொழில் இவை பன்மூன்றும் 
நாடு தண்ணடையும் ஆகும் அழுவமும் நாட்டும் அப் பேர் 
** 15 பெயர்கள் 9 
**363

#10
** மலை 
விலங்கலே பொறை வேதண்டம் விண்டு மாதிரமே வெற்பு 
சிலம்பு கோத்திரம் அடுக்கல் சிலோச்சயம் சிமயம் பொங்கர் 
நலங்கொள் குத்திரம் பறம்பு நகம் குறும்பொறையே நாகம் 
இலங்கிய வரையே பொச்சை இறும்பு கல்லகமே ஓங்கல்
**364

#11
பொருப்பொடு குவடு கல்லு பொகுட்டு ஓதி திகிரி குன்று 
பருப்பதம் சைலம் சாரல் பாதவம் பதலை தாணு 
பெருத்த பூதரமே சையம் பிறங்கல் அத்திரியே பீலி 
உருத் திகழ் கிரி மலைப் பேர் ஒன்றுடன் எண்ணைந்து என்ப 
** 41 பெயர்கள் 11
**365

#12
** சிறு மலை மலைப்பக்கம் மலையுச்சி 
புடைபடும் இறும்பு குன்று பொற்றையே சிறுமலைப் பேர் 
படு குறும்பொறையே பொச்சை பதலையும் அதன்பேர் வாரம் 
தடமொடு சாரல் சானு தகு மலைப்பக்கம் கோடு 
கொடுமுடி சிகரம் கூடம் குவடு இவை மலையின்உச்சி 
** 6, 4, 5 பெயர்கள் 12 
**366

#13
** பொன்மலை வெள்வி மலை பொதிய மலை 
நிலைபெறும் பொன்மலைப் பேர் நீள் சுராலயமே மேரு 
விலைஇல் வெண்மலை வேதண்டம் விசயார்த்தம் வெள்ளி வெற்பு ஆம் 
மலையம் தென்மலையே தென்றல் வருமலை சிமயம் நான்கும் 
புலமை சேர் கும்பயோனி பொதிய மா மலையின்நாமம் 
** 2 3 4 பெயர்கள் 13 
**367

#14
** துறுகல் கற்பாழி மலைமுழை அறை (பாறை) 
** கீழறை குகை சிறுதிடர் 
பொறை துறுகல் என்றாகும் புகலும் கற்பாழி காண்டை 
முறைமையாம் விவரத்தோடு முடுக்கர் கந்தரம் முழைப் பேர் 
அறை முரஞ்சு ஆம் பிலம் கீழறை என்ப குகை நிகுஞ்சம் 
சிறுகிய திடர் பதுக்கை திட்டையும் இட்ட நாமம் 
** 1, 1, 3, 1, 1, 1, 2 பெயர்கள் 14
**368

#15
** கல் திரண்ட கல் பருக்கைக் கல் மேடு 
சிலையொடு கன்னே சையம் சிராவணம் உபலம் கல் ஆம் 
உலம் என்ப திரண்ட கல் பேர் உறும் பரல் பருக்கை என்ப 
துலை பெறு திடறு திட்டை சுவல் மெட்டு குவாலே குப்பை 
குலவிய திடரே மேடு குவை என்றும் இவையே கூறும் 
** 5, 1, 1, 8 பெயர்கள் 15 
**369

#16
** கடல் 
பரவை தெண் திரையே சிந்து பெளவமே பாராவாரம் 
நரலை ஆர்கலியே உந்தி நதி பதி அம்பு ராசி 
குரவையே சக்கரம் கார்கோள் வேலாவலயம் முந்நீர் 
அரி மகராலயம் நீராழி அம்பரமே வேலை 
**370

#17
வாரிதி அளக்கர் நீண்ட வாரியே உததி ஓதம் 
வீரை அன்னவமே அத்தி வெள்ளம் சாகரமே ஆழி 
சாருறு சலதி உப்பு சலநிதி சமுத்திரம் சூழ் 
வாரணம் இவை ஆறாறும் மறி கடல் உவரியும் பேர் 
** 37பெயர்கள் 17 
**371

#18
** கடற்கரை திரை அலை நீர்க்கரை வரம்பு 
பாரிய பாராவாரம் பகர் வேலை கடற்கரைப் பேர் 
ஆரும் சீகரம் கல்லோலம் அறல் தரங்கம் திரைப் பேர் 
வாரமே பாரம் கோடு வரை அணை தடமே கூலம் 
தீரமே நீர்க்கரைப் பேர் செறி வரம்பிற்கும் பேரே 
** 2, 4, 8, 8 பெயர்கள் 18 
**372

#19
** அருவி பேரருவி மலைச்சாரலாறு உவர்நீர் செய்கரை 
அருவியே கழிமுகம் பேர் அருவிப் பேர் உவதை ஆகும் 
அருவியே மலையின்சாரல் ஆற்று அபிதானம் என்ப 
உரைசெயில் உவர்நீர்தானே உறை என்ப குரம்புதான் செய்
கரையின்பேர் குலையும் சேதும் காட்டுப மீட்டு அதற்கே 
** 1, 1, 1, 1, 3  பெயர்கள் 19 
**373

#20
** யாறு முல்லைக் கான் யாறு கழிமுகம் 
உந்தியே துறையே மற்றை ஒலியலே குடிஞை ஓணம் 
சிந்துவே நதியே வீசும் திரை வரு புனலே ஆறு ஆம் 
கந்தம் ஆர் கலுழி முல்லைக் கான்யாறு ஆம் கழிமுகப்பேர் 
முந்திய கயவாய் என்ப புகார் அதோமுகமும் ஆமே 
** 8, 1, 3 பெயர்கள் 20 
**374

#21
** கழி கழிநிலம் உப்பளம் மணற்குன்று உவராத் தரை 
கழியின்பேர் முரம்பு காயல் கானல் உப்பளம் என்றாகும் 
கழிநிலம் உப்பளப்பேர் காட்டும் உப்பளமே காயல் 
அழிவிலா உவளகத்தோடு அளக்கர் ஆம் புளினம் என்ப 
ஒழிவிலா மணற்குன்றின்பேர் உவர்த் தரை இரிணம் ஆமே 
** 4, 1, 3, 1, 1 பெயர்கள் 21 
**375

#22
** காவேரி பொருதை தாமிரபர்ணி கன்னி 
** கெளதமை கோதாவரி 
பொன்னி காவிரி இரண்டும் பொருந்து காவேரியின்பேர் 
பன்னிய பொருநையின்பேர் பகர்ந்த தண் பொருந்தம்தானே 
கன்னியே குமரி என்ப கெளதமையின்பேர் கோதை 
மின்னிய விருத்த கங்கை விமலை கோதாவரிப் பேர் 
** 2, 1, 1,1, 2 பெயர்கள் 22
**376

#23
** நீர் நிலை 
படுகரே தாங்கல் கேணி பல்வலம் படுவே பட்டம் 
மடு உவளகமே பண்ணை வாவியே சுனையே வட்டம் 
தடமொடு கயம் பயம் பூந் தடாகமே குளமே குட்டம் 
அடைவுள கிடங்கு சூழி  அலந்தையே குண்டம் பங்கம்
**377

#24
** நீர்நிலை தெளிந்த நீர் யாற்றிடைச் குறை 
இலஞ்சி கோட்டகமே பொய்கை ஏல்வையே ஓடை ஏரி 
நிலம்தனில் குளிர்ந்த நீரின் நிலை ஆறைந்தொன்று நீங்க 
தலந்தனில் தெளிந்த நீரைச் சற்சலம் என்று இசைப்பர் 
இலங்கையே துருத்தி ஆற்றின் இடைக்குறை அரங்கமும் பேர் 
** 29, 1, 3 பெயர்கள் 24 
**378

#25
** நீர்க் குமிழி நுரை நீர்ச் சுழி வெள்ளம் 
நுரை மொக்குள் பெளவத்தோடு நொவ்விய புற்புதங்கள் 
குரை கொள் நீர்க்குமிழி ஐந்தாம் கொப்புளும் அப் பேர்தானே 
நுரையின்பேர் பேனம் ஆகும் நொய்ய நீர்ச்சுழியே உந்தி 
பிரளயம் வாரி நீத்தம் பெருக்கு ஓதம் ஓகம் வெள்ளம் 
** 5, 1, 1, 6 பெயர்கள் 25 
**379

#26
** நிறை புனல் நீந்து புனல் கலங்கல் நீர் ஆழம் 
மண்டிய நிறை புனல் பேர் வழாறொடு பிராறும் ஆகும் 
மிண்டிய அகாதம் நீந்தும் வெம் புனல் என்ப நூலோர் 
கண்டிடும் கலங்கல் நீரே கலுழி ஆவிலமும் ஆகும் 
குண்டு அழுந்தொடு கயங்கள் கூறு கம்பீரம் ஆழம் 
** 2, 1, 2, 4 பெயர்கள் 26 
**380

#27
** நீரோட்டம் கிணறு ஊறு புனல் 
** ஊரிலுள்ளார் உண்ணும் நீர் 
கோலமே பெருகுகின்ற கொழுந்து நீரோட்டம் என்ப 
கோலிய கிணறு கூபம் கூவலே அசும்பும் கூறும் 
மேலிடா அஃகி ஊறும் வெம் புனல் உறவி ஊற்று ஆம் 
ஓலமிட்டு ஊரிலுள்ளார் உண்பது ஊருணி என்று ஓதும் 
** 1, 3, 3, 1 பெயர்கள் 27 
**381

#28
** சேறு சேற்றிற் புள்வி அருவருத்த சேறு 
அள்ளல் சேதகமே தோணி அளறுடன் அளக்கர் தொய்யல் 
கொள்ளமே செதும்பு பங்கம் குழையொடு குழம்பு காலாழ் 
தெள்ளிய அசறு செய்யல் ஈரேழும் சேறு ஆம் சேற்றில் 
புள்ளியே குமிழ் பொகுட்டு ஆம் நொதி அருவருத்த சேறு 
** 14, 2, 1 பெயர்கள் 28 
**382

#29
** பசும்புல் தரை பாழ் நிலம் வெண் மணல் 
** நுண் மணல்   மணல் 
பரவு சாட்டுவலம் என்ப பசும்புல்லுத்தரையின்பேரே 
விரவிய கரம்பு பாழ் ஆம் வாலுகம் வெண்மணல் பேர் 
மருவிய அதரினோடே அயிரும் நுண்மணல் ஆம் ஆற்றில் 
கரைதனில் கொழித்த நுண்மைக் கருமணல் அறல் என்று ஓதும்
** 1, 1, 1, 2, 1 பெயர்கள் 29 
**383

#30
** மலைசார்ந்த நிலம் வனம் சார்ந்த நிலம் நாடு சார்ந்த 
** நிலம் கடல் சார்ந்த நிலம் படுதிலம் 
கோடு சூழ் மலையின் சாரல் குறிஞ்சி ஆம் வனம் சார் முல்லை 
நாடு சார் மருதம் ஆகும் நல் கடல் சார்வு நெய்தல் 
நீடிய கொடுங்கோல் மன்னர் நெடுங்குடைக் கீழ் வாழ்கின்ற 
பாடு இலாக் குடிகள் போலப் படு நிலம் பாலை ஆமே 
**384

#31
** விளை நிலம் சிறு செய் 
பழனமே செறு வரம்புள் பணை பானல் கைதை பண்ணை 
கழனியே ஆலவாலம் காட்டிய தடி புலம் செய் 
விழைவுறு வயலே மாவே விளைநிலம் ஈரேழ் பேர் ஆம் 
குழைவுறு பாத்தியோடு குண்டிலும் சிறுசெய் கூறும் 
** 14, 2 பெயர்கள் 31 
**385

#32
** செந்நெல் விளையும் நிலம் எல்லாம் விளையும் நிலம்
** மருத நிலம் வரம்பு வரம்பருகு 
செந்நெலே விளைவதான சிறப்புடை நிலம் சலேயம் 
இன்னது என்னாமல் உண்டாம் உருவரை என்பதானே 
மன்னிய அகணி பானல் வயல் பணை மருதம் நாற்பேர் 
அ நில வரம்புதானே குரம்பு அதன் அருகு கங்கு 
** 1, 1, 4, 1, 1 பெயர்கள் 32
**386

#33
** முலலைக்கும் குறிஞ்சிக்கும் பெயர் வன்பால் 
** மென்பால் கருநிலம் 
புறவொடு புறம்பணைப் பேர் புணர் முல்லை குறிஞ்சிக்கும் பேர் 
பறையும் வன்பால் குறிஞ்சி பாலை ஆம் மருதம்தானே 
நிறையும் மென்பால் ஆம் வெற்பில் நீரினில் வெவ்^ வனத்தில் 
கறைபடு மிகுதிதானே கருநிலம் ஆகும் என்ப 
** 2, 2,1 பெயர்கள் 33 
**387

#34
** ஊர்
பாக்கமே இருக்கை பாழி பட்டினம் பள்ளி முட்டம் 
பூக்கம் சம்வாகம் நொச்சி பூரியம் பாடி பூண்டி 
மாக் கிளர் கோட்டம் வாழ்க்கை மடப்பமே குடி குடிக்காடு 
ஆக்கம் ஆம் குறிச்சி குப்பம் அருப்பமே நத்தம் சம்மை
**388

#35
** ஊர் நீரும் வயலும் சூழ்ந்த ஊர் 
அகரமே புரமே சேரி அகலுள் வைப்பு உறையுள் வேலி 
நகரம் பக்கணம் கிராமம் நவில் கருவடம் குறும்பு 
நிகர்இல் வேசனமே தாமம் நிவேசனம் பதியே பேடு 
பகர் புரி எண்ணைந்து ஊர் நீர் பண்ணை சூழ் ஊர் கிராமம் 
** 40, 1 பெயர்கள் 35 
**389

#36
** சிறு கிராமம் பெருங் கிராமம் இராசதானி 
குடி நூறு பட இருந்தால் குறைவுள கிராமம் ஆகும் 
நெடியது குடி ஐஞ்ஞூறு நிறைந்தது பெருங்கிராமம் 
வடிவுடை இராசதானி மணி மதில் கோபுரங்கள் 
புடைபடும் அகழால் சூழ்ந்த புரம் புரி நகரமும் பேர் 
** 3 பெயர்கள் 36 
**390

#37
** மலை செறிந்த ஊர் மலையும் யாறும் சூழ்ந்த ஊர் 
** ஐஞ்ஞூறு கிராமத்திற்குத் தலைமைக் கிராமம் 
** பல தீவிற் பண்டம் விற்கும் ஊர் 
மலை செறிவதுவே கேடம் மலையுடன் ஆறு சூழ் ஊர் 
அலைவுஅறு கருவடங்கள் ஐஞ்ஞூறு கிராமத்திற்கே 
தலைமை பெற்றது மடப்பம் தாழ் கடல் தீரம் தன்னில் 
பலபல தீவில் பண்டம் பகர்வ பட்டனம் என்று ஆமே 
** 1,1,1,1 பெயர்கள் 37 
**391

#38
** நெல்லும் புல்லும் நிறைந்த மலையின்  ஊர் 
** கழியிருக்கை சிற்றூர்
மட்டறு நெல்லும் புல்லும் மத்தகம்தன்னில் ஏற்றுத் 
தட்டறு மலையின் ஊரே சம்வாகம் என்றும் சாற்றும் 
தொட்ட தோணாமுகம்தான் சூழ் கழியிருக்கை என்ப 
பட்டும் நொச்சியுமே சிற்றூர் பள்ளியும் அதன்பேர் பன்னும் 
** 1, 1, 3 பெயர்கள் 38
**392

#39
** குறிஞ்சி நிலத்து ஊர் முல்லை நிலத்து ஊர் 
** நெய்தல் நிலத்து ஊர் பாலை நிலத்து ஊர், பாசறை 
குறிஞ்சி சிற்றூரே சீறூர் குறிஞ்சி நன்னிலத்தூர்ப் பேர் ஆம் 
பறித்திடு முல்லைஊரே பாடி பட்டினமே நெய்தல் 
குறித்து எழு குறும்பர்ஊரே குறும்பு பாலைக்கே கூற்று ஆம் 
பறித்த பாசறையே தெவ்வர்முனைப் பதி பாடிவீடு 
** 3, 1, 1, 1, 2 பெயர்கள் 39 
**393

#40
** மருத நிலத்து ஊர் 
புரி குடம் நகரம் பூக்கம் புரம் குடி நிகாயம் பள்ளி 
சரணம் ஆவாசம் பாக்கம் தாவளம் நிகமம் தாமம் 
பரவிய நிலயம் கோட்டம் பதி வாழ்க்கை சேர்வு பாழி 
மருத நன்னிலத்து ஊர் ஈரைந்துஇரட்டியாம் வசதியும் பேர் 
** 21 பெயர்கள் 40 
**394

#41
** கடாரம் காசி சிங்களம் கருவூர் உறையூர் 
** மதுரை காஞ்சி அவந்தி நகர் 
காழகம் கடாரம் ஆம் வாராணசி காசி என்ப 
ஈழமே சிங்களம் வீறு  எய்திய கருவூர் வஞ்சி 
கோழியே உறையூர் மாறன் கூடலே மதுரை ஆகும் 
தாழ்விலாக் காஞ்சி கச்சி சாற்றிடில் அவந்தி உஞ்சை 
** 1,1,1, 1, 1, 1, 1, 1 பெயர்கள் 41 
**395

#42
** மிதிலை காவிரிப்பூம்பட்டினம் அயோத்தி 
** சிதம்பரம் திருவாரூர் 
மிதிலையே விதேகை ஆம் காவிரிப்பூம்பட்டினம் புகார் ஆம் 
விதமுறு வினிதை கோலம் மிக்க கோசலை சாகேதம் 
நிதி வளர் அயோத்தி நாமம் நிமலம் ஆம் புலியூர் தில்லை 
கதிதரு சிதம்பரப்பேர் கமலையே திருவாரூர் ஆம் 
** 1, 1, 3, 2, 1 பெயர்கள் 42 
**396

#43
** மதில் 
பெருகிய கடகம் காப்பு பிராகாரம் நொச்சி ஆரல் 
புரிசை வேணகையே வாரி புகழ் உவளகமே இஞ்சி 
அரணமே எயிலே ஓதை அரும் சிறை வேதி சாலம் 
மருவிய அகப்பா வேலி அறுமூன்றும் மதிலின்நாமம் 
** 18 பெயர்கள் 43 
**397

#44
** அகழ் மதிலுறுப்பு மதிலுள் உயர்ந்த மேடை 
பரிகமே கிடங்கு கேணி பாம்புரி உடுவே ஓடை 
விரவிய அகழ் ஆறே பேர் மேவும் எந்திரமே கோசம் 
மருவிய நாஞ்சில் தோணி ஞாயில் அ மதில்உறுப்பு ஆம் 
பரிகமே அகப்பாவோடு பதணம் உள் உயர்ந்தமேடை 
** 6 5 3 பெயர்கள் 44 
**398

#45
** நகர வாயில் நகர வாயிற் கதவில் விட்டுப் 
** புகும் வழி நகர வாயில் திண்ணை 
** நகர வாயிற் படிச் சுருள் 
விரிந்த கோபுரமே கோட்டி மிகும் புர வாயிலின்பேர் 
பொருந்தும் அக் கதவில் விட்டுப் புகும் வழி புதவுதானே 
திருந்தும் அவ் வழிச் சார் திண்ணை அளிந்தம் ஆம் சிறந்த வாயில் 
பரந்திடும் படிச்சுருட்குப் பகர் அத்தினகமே நாமம் 
** 2, 1, 1, 1 பெயர்கள் 45 
**399

#46
** அங்காடி குதிரை வையாளி வீதி வீதி அரசர் வீதி 
கோதுஇல் ஆவணம் அங்காடி கூலம் பீடிகையும் அப் பேர் 
தீதுஇல் வையாளி வீதி திகழ் செண்டுவெளியே என்ப 
சாதி ஆம் புரவி வட்டம் திருமுற்றம்தானும் அப் பேர் 
வீதியின்பேரே ஞெள்ளல் பூரியம் அரசர்வீதி 
** 3, 3, 1, 1 பெயர்கள் 46 
**400

#47
** நெடுந்தெரு குறுந்தெரு கோணத்தெரு முச்சந்தி 
நெடுந்தெரு மன்றம் மார்க்கம் நிகமம் இ முப்பேர் செப்பும் 
ஒடுங்கிய குறுந்தெருக்கள் ஓதிய மறுகுதானே 
முடங்கிய கோணம்தன்னை முடுக்கு எனல் அடுக்கும் இப்பால் 
அடங்கிய முச்சந்திப் பேர் அந்தி என்று அறையலாமே 
** 3, 1, 1, 1 பெயர்கள் 47 
**401

#48
** சந்து நாற்சந்தி சிரேணி ஆயர்வீதி சிற்பர் வீதி 
தக்க சந்து ஆம் சதுக்கம் தரும் சிருங்காடகம்தான் 
ஒக்கும் நாற்சந்தி ஆகும் ஓதிய சதுக்கமும் பேர் 
திக்குறும் வாடை சேடி சிரேணி ஆம் ஆயர்வீதி 
மிக்க ஆபீனம் ஆம் ஆவேசனம் சிற்பர்வீதி 
** 1, 2, 2, 1,1 பெயர்கள் 48 
**402

#49
** வேடர் வீதி அம்பலம் சித்திர கூடம் அரசிருக்கை 
பற்றிய வேடர்வீதி பக்கணம் ஆகும் என்ப
மற்றை அம்பலமே மன்றம் பொதி பொது சபையும் ஆகும்
தெற்றியம்பலம்தான் ஒன்றே சித்திரகூடநாமம் 
வெற்றி அத்தாணியோடு வேத்தவை அரசிருக்கை 
** 1, 4, 1, 2 பெயர்கள் 49 
**403

#50
** அரசர் இல் தேவர் கோயில் அறச் சாலை ஓதும் பள்ளி 
சாலை மாளிகை குலங்கள் சாற்றிய பவனம் கோயில் 
மாலை வேல் அரசர்இல் பேர் மந்திரம் நிலையம் கோட்டம் 
ஆலயம் சினகரம் சேதிமம் தளி தேவர்கோயில் 
சாலை மற்று அறத்தின்சாலை அறப்புறம் ஓதும் பள்ளி 
** 5, 7, 1, 1 பெயர்கள் 50 
**404

#51
** ஓம மண்டபம் மன்னன் தேவி இல் வீடு பண்ட சாலை 
வனைதரு சமித்தம் ஓமமண்டபம் மன்னன் தேவி 
புனை இல்லம் கந்தவாரம் போற்றும் அந்தப்புரப்பேர் 
மனை இல்லம் புக்கில் மாடம் மந்திரம் வசதி வீடு ஆம் 
புனை கலன் இருக்கைதானே போற்றிய பண்டசாலை 
** 1 2 6 1 பெயர்கள் 51
**405

#52
** வீட்டிறப்பு முகடு வேயுள் வேயா மாடம் 
** முற்றம் கல்வி பயிலிடம் 
விரவு இறை வீட்டு இறப்பே வளவியும் ஆம் விடங்கம் 
தரு முகட்டின்பேர் வேயுள் வேய்தல் ஆம் தகு மண்ணீடு 
மருவிய வேயாமாடம் அங்கணம் முன்றில் முற்றம் 
கருது கல்விக்களப் பேர் கழகம் கல்லூரி ஆமே 
** 2, 1, 1, 1, 2, 2 பெயர்கள் 52 
**406

#53
** ஆயுதம் சூது கூத்துப் பயில் களம் வாயில் தாழ்வாரம்
** தரம்புவாய் சுவர் நிலாமுற்றம் 
ஆயுதம் சூது கூத்துப் பயில்களம் அரங்கம் என்ப 
வாயிலே கடை துவாரம் வாரி ஆம் சோபானம்மே 
தூய தாழ்வாரம் என்ப அங்கணம் தூம்புவாய் ஆம் 
ஆய பித்திகை சுவர்க்கு ஆம் அரமியம் நிலாமுற்றப்பேர் 
** 1, 3, 1, 1, 1, 1 பெயர்கள் 53
**407

#54
** யானைக்கூடம் குதிரைப்பந்தி பலகணி கரந்த கற்படை 
ஆலயம் ஓளி வாரி யானையின்கூடம் ஆமே 
சாலை மந்துரை இரண்டும் வாசியின்பந்திதானே 
சாலகம் சாளரம் வாதாயனம் குறுங்கண் சாலம் 
காலதர் பலகணிப் பேர் கரந்த கற்படை சுருங்கை 
** 3, 2, 6, 1 பெயர்கள் 54 
**408

#55
** கற்படுத்தநிலம் திண்ணை சிற்றில் குடில் 
** அடிச் சேரி மடைப்பள்ளி 
குட்டிமம் படுத்தபூமி குறடு வேதிகை மண்ணீடு 
திட்டையே திண்ணை சிற்றில் கூரை ஆம் குடில் குரம்பை 
தட்டுறா அடிச்சேரிப்பேர்தான் அடிக்குடில் என்று ஆமே 
அட்டிலே பாகசாலை அடுக்களை மடைப்பள்ளிப் பேர் 
** 1, 4, 1, 1, 1, 3 பெயர்கள் 55 
**409

#56
** அடுப்பு ஒமகுண்டம் முனிவர்வாசம் 
காழுறு குமுதம் சுல்லி காமரம் அடுப்பு முப்பேர் 
தாழும் உத்தானமும் பேர் தடவொடு வேள்விக்குண்டம் 
வேள்வியே ஓமகுண்டம் நித்தமும் வேதியும் பேர் 
பாழி தாபதம் கரண்டை பள்ளியே முனிவர்வாசம் 
** 4, 5, 4 பெயர்கள் 
**410

#57
** மட்கலம் சுடு சூளை பண்ணும்கூடு கூடு குதிர் 
மஞ்சு எனப் புகை சூழ் சுள்ளை மட்கலம் சுடு சூளைப் பேர் 
பஞ்சரம் பண்ணும்கூடு ஆம் பகர் குலாயனமும் அப் பேர் 
குஞ்சு உறை கட்சி கூண்டு குடம்பையே கூட்டின்பேர் ஆம் 
விஞ்சு நெல் முதலாம் பண்டம் வீழ் குதிர்  புகல் என்று ஓதும் 
** 1, 2, 3, 1 பெயர்கள் 57 
**411

#58
** மனிதர் துயிலிடம் விலங்கு துயிலிடம் யானைதுயிலிடம் 
சட்டகம் பாயல் பள்ளி சயனமே உறையுள் பாழி 
கட்சியே அமளி சேக்கை கண்படை மனிதர்பால் ஆம் 
பட்டமே போத்து சேக்கை பண்ணையும் விலங்கின்பால் ஆம் 
இட்ட சேவகமே தண்டம் யானையின்துயிலிடப்பேர்
** 10, 4,  2 பெயர்கள் 58 
**412

#59
** சுடலை பிணம்வீழ்களம் 
சுடுகாடு புறங்காட்டோடு தொடர் காளவனம் பிணக்காடு 
இடுகாடு பிதிர்வனத்தோடு ஈமமே வனம் மயானம் 
படுகாடு சுடுநிலங்கள் பன்னொன்றும் சுடலையின்பேர் 
கடிதாம் செம்புலம் பிணம்வீழ்களம் பறந்தலையும் ஆமே 
** 11, 2 பெயர்கள் 59 
**413

#60
** பொருகளம் புற்று ஒதுக்கிடம் ஏகாந்தம் 
வெற்றி கொள் களரியே ஆகவபூமி விளாகமே மொய் 
செற்றிடும் போர்க்களம் வெஞ் செருக்களம் பொருகளப்பேர் 
புற்று வன்மீகம் என்ப புகும் ஒதுக்கிடமே துச்சில் 
உற்ற வேறிடம் ஏகாந்தம் ஒருவந்தம் என்றும் பேரே 
** 6, 1, 1, 2 பெயர்கள் 60 
**414

#61
** பள்ளம் பழங்கொல்லை புதுக்கொல்லை உழவு 
இழிவு கீழ் பயம்பு தாழ்வே ஏற்றிடும் படுகர் ஞெள்ளல் 
குழி உவளகம் கிழக்கு கூறு அவல் பள்ளம் பத்து ஆம் 
பழையதாம் கொல்லைப் பேரே பகர் முதைப்புனம் ஆம் என்ப 
விழைவுறு புதிய கொல்லை இதைப்புனம் உழவு தொய்யல் 
** 10, 1, 1, 1 பெயர்கள் 61 
**415

#62
** வழி 
வதி சுரம் வட்டை நீண்ட வகுந்தொடு வயவை வாரி 
அதர் நெறி செலவு தாரி அயனமே இடவை மார்க்கம் 
பதவையே அத்தம் செப்பம் பட்டமே இயவை பாதை 
உதவிய சரியே தாரை ஒழுக்கமே நடவை ஆறு
**416

#63
** வழி அருநெறி கவர் வழி யானை செல் வழி! 
தெரு வகிர் கிறி மூவொன்பான் செப்பிய வழியின்பேரே 
அருநெறிப் பேர் சுரத்தோடு அத்தமும் கடமும் ஆகும் 
கருதிய கவலைதானே கவர்ந்திடு வழிப் பேர் என்ப 
பெரு மத யானை செல்லும் பிற வழி தண்டம் ஆமே 
** 27, 3, 1, 1 பெயர்கள் 63 
**417

#64
** சிறு வழி கற்படி நீள்வழி புது வரம்பின் வழி 
சிறுவழி விடங்கர் ஆகும் சிறந்த கற்படியின்நாமம் 
மறுஇல் சோபானமே ஆரோகணம்தானும் அற்று ஆம் 
நெறிபடும் அளக்கர் என்ப நீள்வழி நாமம்தானே 
உறுதி ஆம் புது வரம்பின் உறு வழி மரிசி என்ப 
** 1, 2, 1, 1 பெயர்கள் 64 
**418

#65
** இடம் 
இடை உழி வழி நிலம் பால் இல் உழை உளி கண் பக்கம் 
புடை தலை முதல் வளாகம் புலம் வலம் சூழல் பாங்கர் 
கடை வயின் பட்டி வைப்பு கால் களம் தேயம் பாடே 
இடம் என்ப முன் பின் சார் வாய் கீழ் மேலும் அதுவே என்ப 
** 32 பெயர்கள் 65 
**419

#66
** பக்கம் நடு 
பாங்கர் பாரிசம் மருங்கு பால் புடை புறமே பக்கம் 
ஞாங்கரும் சிறையும் மாடும் நாட்டுப அதுவே மீட்டும் 
நாம் கிளர் நள்ளு நாப்பண் நனந்தலை பிரமம் மையம் 
ஆங்குறும் மத்தியத்தோடு ஆகும் நா நடு ஏழ்பேரே
** 9, 7 பெயர்கள் 66 
**420

#67
** இவ்விடம் இம்பர் எவ்விடம் யாங்கு அவ்விடம் 
** கூப்பிடு தூரம் யோசனை தூரம் காதம் 
ஈண்டே இவ்விடம் என்பேர் ஆம் இம்பரே இவண் எனும் சொல்  
யாண்டே எவ்விடம் என்பேர் ஆம் யாங்கு என்ப எவண் எனும் சொல் 
ஆண்டே அவ்விடம் என்பேர்தான் ஆகும் கூப்பிடு குரோசம் 
காண்டும் யோசனை புகைப் பேர் காவதம் காதம் ஆமே 
** 1, 1, 1, 1, 1, 1, 1, 1 பெயர்கள் 67 
**421

#68
** ஞாங்கர் முன்னர் 
முன்னொடு மேலும் மற்றும் மொழியும் அஞ்ஞாங்கர்தானே 
முன்னரே தலைத்தாள் ஆகும் முதலொடு புரமும் அப் பேர் 
அன்னது இவ்விடப்பேர்க்கு எட்டோடு அறுபது விருத்தம் செய்தான் 
மன்னு சீர்க் குணபத்திரன் தாள் வணங்கும் மண்டலவன்தானே
** 2, 3 பெயர்கள் 68 
** ஐந்தாவது இடப் பெயர்த் தொகுதி முற்றிற்று 

@6. பல்பொருட் பெயர்த் தொகுதி 
**422

#1
** காப்பு 
உலகு எலாம் இறைஞ்சி ஏத்த உலகு எலாம் உணர்ந்த மூர்த்தி 
அலகிலா ஞானவாரி ஆறிரு குணங்களோடும் 
இலகு மூ எயிலுள் யாளி எழில் அணை இருந்தோன் பாதம் 
பலமுறை வணங்கி ஏத்தி பல்பொருட்பெயரும் சொல்வாம்
**423

#2
** பொன் 
மாசை பீதகமே பீதம் மாடையே மாடு வேங்கை 
ஆசையே சுவணம் காரம் அருத்தம் காஞ்சனமே காணம் 
தேசிகம் கனகம் கைத்து செந்தாது பொலமே அத்தம் 
பேசிய சாமி வித்தம் பெரும் தனம் உடலே பண்டம்
**424

#3
இரணியம் நிதி வெறுக்கை ஈகை கல்யாணம் ஏமம் 
பொருள் உரை சந்திரம் சாம்பூனதம் பூரி ஈழம் 
திரவியம் சாதரூபம் செங்கொல்லு நிதானம் மாழை 
அரி தபனியம் ஆறேழும் செம்பொன் ஆடகமும் ஆமே 
** 43 பெயர்கள் 3 
**425

#4
** பஞ்சலோகம் ஏழ் உலோகம் நவமணி 
** கடவுள் மணி பொற்காசு 
எதிர்இல் பொன் வெள்ளி செம்போடு இரும்பு ஈயம் பஞ்சலோகம் 
பொதி கஞ்சம் தராவும் கூட்டிப் புகன்றிடின் ஏழுலோகம் 
கதிர் நவமணியின் பேரும் கடவுள் மாமணியின்பேரும் 
நிதி நிதானங்கள் என்ப நீண்ட பொற்காசு காணம் 
** 5, 7, 1, 1, 1 பெயர்கள் 4 
**426

#5
** மணிப் பொது தெய்வ மணிப் பொது 
** மாணிக்கம் பதுமராகம் 
கருதிய மணிப்பொதுப்பேர் காசொடு மனவும் ஆகும் 
அரதனம் சலாகை தெய்வ அகன் மணிப்பொதுப்பேர்தானே 
மருவு செம்மணியே மற்றை மாமணி மாணிக்கப்பேர் 
பரவிய பதுமராகம் கெளத்துபம் என்று பன்னும் 
** 2, 2, 2, 1 பெயர்கள் 5 
**427

#6
** வைடூரியம் நீலமணி மரகதம் வைரம் முத்து 
வரைவுஅறு வாலவாயம் வைடூரியத்தின்நாமம் 
நிரை பெறு மணி எனும் பேர் நீலமாமணியின்பேரே 
மரகதம் அரியே பச்சை வச்சிரம் வைரம் ஆரம் 
தரளம் நித்திலமே முத்து மெளத்திகம்தானும் அப் பேர் 
** 1, 1, 2, 1, 4 பெயர்கள் 6 
**428

#7
** பவளம் உலோகக் கட்டி 
துப்புடன் துவர் அரத்தம் துகிர் பிரவாளம் ஐந்தும் 
மெய்ப்படு பவளம் என்ப வித்துருமம்தானும் பேர் 
கைப்படு தகணை மாழை காட்டும் வங்காரம் முப்பேர் 
ஒப்பவே உருக்கிக் கூட்டும் உலோகத்தின் கட்டி ஆமே 
** 6, 3 பெயர்கள் 7 
**429

#8
** சங்கநிதி பதுமநிதி பண்டாரம் உருக்கு 
சங்க நீள் நிதியத்தோடு தாமரை நிதியம்தானே 
அங்கண் மா ஞாலத்தே அவ் இரு உரு ஆகும் என்ப 
பொங்கிய கோசம் தண்டம் போற்று பண்டாரம் ஆகும் 
தங்கிடும் உருக்கின்நாமம் எஃகு எனச் சாற்றலாமே 
** 2, 1 பெயர்கள் 8 
**430

#9
** வெள்ளி காரீயம் செம்பு இவற்றின் பொதுப் பெயர்  
கருதிய சுல்லு தாரம் களதெளதம் வெண்பொன்னோடும் 
இரசதம் வெள்ளியின்பேர் ஏற்ற காரீயம் நாகம் 
எருவையே உதும்பரம் தாமிரமொடு வடுவே செம்பு ஆம் 
பொருவுஅறு சீருள் சிக்கம் இவைகளின் பொதுப்பேர் ஆமே 
** 5, 1, 4, 2 பெயர்கள் 9 
**431

#10
** ஈயம் பித்தளை வெண்கலம் தரா இரும்பு 
திருந்திய ஈயம் வங்கம் சீருளே சீசமும் பேர் 
புரிந்த பித்தளையே மாயாபுரி ஆரகூடமும் பேர் 
கருங் கஞ்சம் உறைகளே வெண்கலம் மதுகம் தரா ஆம் 
கருங்கொல்லே அயமே சொன்ன கரும்பொன்னும் இரும்பின்நாமம் 
** 3, 2, 2, 1, 3 பெயர்கள் 10 
**432

#11
** இரும்பு உள் வாங்கும் சலாகை சந்திர கிரணத்தில் 
** நீர் கால் சலாகை சூரியன் ஒளியில் தீக் கால் 
** சலாகை காவிக் கல் 
தொந்தமாய் இரும்பு உள் வாங்கும் சலாகை சும்பகமே என்ப 
சந்திரகிரணம் நீர் கால் சலாகையே சந்திரகாந்தம் 
வந்த சூரியகாந்தம்தான் மற்று அதன் ஒளி தீக் காலும் 
நந்து கைரிகமே தாது நல் செங்கல் காவிக்கல்லே 
** 1, 1, 1, 3 பெயர்கள் 11 
**433

#12
** பளிங்கு பலகறை பல பண்டம் 
கண்ணிய பளிங்கின்நாமம் காழ் படிகம் பருக்கை 
மண்ணிய கவுடி சோகி வராடியே பலகறைப் பேர்
பண்ணியம் வளமே கூலம் பண்டாரம் பண்ணிகாரம் 
நண்ணிய பலபண்டப்பேர் நடைப் பரிகாரமும் பேர் 
** 3, 3, 6,பெயர்கள் 12
**434

#13
** அரும் பண்டம் கருப்பூரம் கத்தாரி 
** நால்வகைச் சாந்து 
விருப்பம் ஆம் அரும்பண்டப்பேர் மேவிய தாரம் ஆகும் 
கருப்பூரம் பளிதத்தோடு கனசாரம் சசி முப்பேரே 
பிரித்த மான்மதம் கத்தூரி பீதமே கலவையோடு 
பொருத்தும் வட்டிகையும் மற்றைப் புலியும் நால்வகையின் சாந்து 
** 1, 3, 1, 4 பெயர்கள் 13 
**435

#14
** சாந்து குங்குமம் மயிர்ச் சாந்து கலவை 
கலவைச்சேறே காலேகவண்ணமே களபமே மெய் 
குலவிய விரையே சாந்து ஆம் குங்குமப்பேர் செஞ்சாந்து ஆம் 
இலகிய தகரம் ஏலம் காசறை மயிர்ச்சாந்தின்பேர் 
கலவையே களபம் என்ப கலம்பகம் கண்டபேரே 
** 4, 1, 3, 2 பெயர்கள் 14 
**436

#15
** செறிகுழம்பு அப்பல் பூசுதல் மெம்ப் பூச்சு 
உலப்புஇலாத் தேய்வை செச்சை செறிகுழம்பு உற்ற பேர் கைத்
தலத்தினின் கொட்டல் அப்பல் சாத்துதல் சதுர்த்தலும் பேர் 
புலர்த்தலே வரித்தல் என்ப பூசுதலின்பேர்தானே 
அலைத்து மெய்ப் பூசும் பூச்சின் அபிதானம் அங்கராகம் 
** 2, 3, 2, 1 பெயர்கள் 15 
**437

#16
** முலையினும் தோளினும் எழுது கோலம் 
** திலகம் நெற்றிக் குறி 
இலகிய எழுதுகோலால் இளையவர் முலையும் தோளும் 
நலம் மிக எழுது கோலம் நவின்றிடும் தொய்யில் என்ப 
திலகமே சுடிகை சுட்டி திலதமும் அதன்பேர் செப்பும் 
திலகம் புண்டரங்கள் என்ப செறி நெற்றிக்குறிகள் ஆமே 
** 1, 3, 2 பெயர்கள் 16 
**438

#17
** சாதிலிங்கம் குங்குலியம் சிந்தூரம் 
** பெருங்காயம் செம்பஞ்சு 
இங்குலிகம்தான் சாதிலிங்கம் ஆம் குலிகமும் பேர் 
குங்குலியம்தானே குங்குலுவாம் குக்குலுவும் அப் பேர் 
செங்கதிர்க் கிரணம் போலும் சிந்தூரப்பேர் சேலேகம் 
இங்குவே பெருங்காயப்பேர் எழில் அலத்தகம் செம்பஞ்சு
** 2, 2, 1, 1, 1 பெயர்கள் 17
**439

#18
** அரக்கு அரிதாரம் அக்கதம் பிரப்பு
பறை அரக்கு அரத்தம் துப்பு ஆம் பழுப்பு என்பது அரிதாரப்பேர்
அறுகு வெள்ளரிசி கூட்டி அணிவது அக்கதம் என்றாகும்
குறுணி ஒவ்வொன்றதாகக் கொள் கலம் பல்லுணாக்கள்
பெருமுறை பரப்பி வைப்ப பிரப்பு எனப் பேசலாமே
** 2, 1, 1, 1 பெயர்கள் 18
**440

#19
** ஓம விறகு நெருப்புறு விறகு கரி கடைக் கொள்ளி 
வெந்திடும் சமிதை ஓமவிறகு என் அறையலாகும்
நிந்தை செய் ஞெகிழி கொள்ளி நெருப்புறு விறகின்பேரே
கந்துளே இருந்தை நல்லம் கரி என்ப கடைக்கொள்ளிக்கு 
முந்து பேர் அலாதம் உற்கம் முளரியோடு இராதம் ஆமே
** 1, 2, 3, 4 பெயர்கள் 19
**441

#20
** சாம்பர் திருநீறு சாணி புழுதி சுண்ணச்சாண்நு
அடலை வெண்பலி சாம்பர்ப் பேர் ஆம் திருநீறே பற்பம்
பொடியொடு விபூதி காப்பு ஆம் புண்ணிய சாந்தம் சாணி
பொடி துகள் சுண்ணம் தூளி பூழியே புழுதி ஆகும்
சுடு சுண்ணச் சாந்து மண் ஆம் சுதையொடு களபமும் பேர்
** 2, 4, 1, 5, 3 பெயர்கள் 20
**442

#21
** இலவம் பஞ்சு பருத்திப் பஞ்சு, பஞ்சு
** நூற்கும் பஞ்சின் தொடர் நுனி பிசின்
நொய்யதோர் இலவின்பஞ்சு நுவன்ற பேர் பூளைதானே
பை எனும் பருத்தி பன்னல் பரியும் ஆம் தூலம் பஞ்சு ஆம்
ஐய நுண்ணிடையார் நூற்கும் அப் பஞ்சின் தொடர் நுனிப் பேர்
துய் எனும் நாமம் ஆகும் தொடர் பிசின் பயின் ஒன்றே பேர் 
** 1, 2, 1,1 1 பெயர்கள் 21 
**443

#22
** சோறு
அடிசில் போனகமே மூரல் அமலையே அயினி பொம்மல்
மடை மிசை உணா புழுக்கல் வல்சி பாளிதமே அன்னம்
தொடு பதம் மிதவை பாத்து துற்று உண்டி சொன்றி புன்கம்
ஒடு சரு அசனம் ஊண் கூழ் ஓதனம் புகாவே சோறு ஆம் 
** 26 பெயர்கள் 22
**444

#23
**விண்ணோர் உணவு பொதி சோறு மிகு பொருள் 
**  எச்சில் பேருண்டி 
மெச்சு அமிழ்து அவியினோடு  பலி சரு விண்ணோர் ஊண் ஆம் 
அச்சம்இல் பொதி சோறு என்பது ஆற்றுணா தோட்கோப்பும் பேர் 
மிச்சிலோடு எச்சம் சேடம் மிகு பொருள் என்ப முப்பேர் 
உச்சிட்டம் ஒன்றே எச்சில் பிரப்பு பேருண்டி ஆமே 
** 4, 2, 3, 1, 1 பெயர்கள் 23 
**445

#24
** பாற் சோறு பொரியல் பிட்டு உக்காரி 
** வறையல் பிண்ணாக்கு 
நிறைய நெய் பொதி பாற்சோறு  நிகழ்த்து பாயசம் என்றாகும் 
நறை இடும் கருனைதானே நாட்டிய பொரியலின்பேர்
அறைதரு வெந்தை பிட்டு ஆம் அஃகுல்லி உக்காரிப் பேர்
வறையலின்பேரே ஓச்சை மலாவகம் பிண்ணாக்கின்பேர் 
** 1, 1, 1, 1, 1, 1 பெயர்கள் 24 
**446

#25
** மாவின் பெயர் அப்பவர்க்கம் சிற்றுண்டி 
நொடிதரில் அருப்பம் பிட்டம் நுவணையே பிண்டி மாப் பேர் 
இடியும் ஆம் இலட்டுகத்தோடு ஏற்ற மோதகமே தோசை 
அடை நொலை அபூபம் கஞ்சம் அண்டகை அப்பவர்க்கம்
இடையற நுகர்வோர்தங்கட்கு இவைகள் சிற்றுண்டி ஆமே 
** 5, 8, 8 பெயர்கள் 25
**447

#26
** புளிங்கறி கறி கஞ்சி குழம்பு பால் 
கூடிய துவை எனும் சொல் புளிங்கறி கூட்டமைத்து
நீடியே சமைப்பதாகும் நீடாணம் கறிகளின்பேர் 
காடியே யவாகு மோழை கஞ்சி பாகே குழம்பு ஆம் 
பாடிலா அமிழ்து கீரம் பயசு துத்தம் பயம் பால் 
** 1, 1, 3, 1, 5 பெயர்கள் 26 
**448

#27
** தயிர் மோர் வெண்ணெய் நெய் 
ததி தயிர் பெருகும் ஆகும் தக்கிரம் காலசேயம் 
மதிதமோடு அளை அருப்பம் மச்சிகை முசரே மோர்ப் பேர் 
விதமுறு ஐயங்கவீனம் நவநீதம் வெண்ணெய் ஆம் நெய் 
இதமுறு கிருதம் நேயம் இழுது ஆச்சியம் துப்பு ஆமே 
** 2, 7, 2, 5 பெயர்கள் 27 
**449

#28
** கண்டசர்க்கரை சர்க்கரை தேன் 
கண்டம் பாளிதங்கள் என்ப கண்டசர்க்கரையின்நாமம் 
கண்டதே அயிரும் புல்லகண்டமும் அதற்கே கூற்றாம் 
விண்டு எழு கட்டி கன்னல் விசயமே குளம் அக்காரம் 
பிண்ட சர்க்கரை ஐந்தே பேர் பிரசம் தேன் மதுவும் அப் பேர் 
** 4, 5, 2 பெயர்கள் 28 
**450

#29
** கள் 
அரியல் பாடலி தேன் மட்டே அரிட்டமே சுண்டை தொண்டி 
முருகு சாயனமே கெளவை முண்டகம் சாதி சாலி 
பிரசம் மாதவமே மேதை பிழி சேறு தணியல் மாரி 
சுரை மது சுமாலி மாலி சுலோகியே சொல்விளம்பி
**451

#30
** கள் (தொடர்ச்சி) 
நறவொடு ஆசவமே தொப்பி நனை இக்கு ஞாளி குந்தி 
வெறி வெடி சாறு பானம் விகுணியே சோபம் வேரி 
மறவி தேம் சுவிகை தேறல் மகரந்தம் மதிரை ஆம்பல் 
அறிவு அழி படு ஆறெட்டும் கள்ளினுக்கு அமைந்த பேரே 
** 48 பெயர்கள் 30 
**452

#31
** அமிழ்து நஞ்சு பானம் எண்ணெய் 
அரியதோர் அமிழ்துதானே அமரியே சுதை மருந்து ஆம் 
கரளமே ஆலம் காரி கடுவுடன் காளம் சிங்கி 
விரவிய ஆலகாலம் விடம் எட்டும் நஞ்சின்பேரே 
பருகுதல் துவையே பானம் பகர் நேயம் தைலம் எண்ணெய் 
** 3, 8, 2, 2 பெயர்கள் 31 
**453

#32
** உண்பன தின்பன இலை நுகர் விலங்குணா 
** பறவையொரு சார் விலங்கு ஊண் 
அலைவுஅறு துற்றி உண்ப ஆம் திற்றி தின்ப ஆகும் 
இலை நுகர் விலங்கு உணாவே குளகு என இயம்பல் ஆகும் 
நலனுறு பறவையோடு நாட்டு ஒரு சார் விலங்கின் 
உலகின் ஊண் உண்டி ஊட்டி உணவு இரை உறையும் ஆமே 
** 1, 1, 1, 5 பெயர்கள் 32 
**454

#33
** துணைக்காரணம் இரண்டு என்னும் இலக்கம் 
துப்புடன் ஏது என்னும் சொல் துணைக்காரணப்பேர்  
ஒப்பவே சாதனத்தோடு உபகரணமும் ஆம் அப் பேர் 
செப்பிய யுகளத்தோடு சேர்ந்திடும் உபயம் என்ப 
அப்படி இரண்டு இலக்கத்து அபிதானம் ஆகும்தானே 
** 4, 2 பெயர்கள் 33 
**455

#34
** கானல் சல்லி நெல்மணி பலகறை மகிழ்விதை 
** என்பவற்றின் பெயர் வரிசையின் பெயர் 
பணிவுறு கானல் வெண்தேர் பாழ்த்த பேய்த்தேரும் ஆகும் 
துணி அறை தூக்குத்தானே சல்லி ஆம் சொல்லும் நெல்லின் 
மணி பலகறையினோடு மகிழ்விதை அலகு என்றாகும் 
அணி ஒழுங்கு ஓளி பந்தி நிரை நிரல் வரிசை ஆமே 
** 2, 3, 1, 6பெயர்கள் 34 
**456

#35
மகர கேதனனை வென்ற வாமற்கே தொழும்பு செய்வோன்
இகல் இலாக் குணபத்திரன்தன் இரு சரண் இதயம் வைத்தோன் 
மிகு புகழ் புனையா நின்ற வீரை மண்டலவன் செய்தான் 
பகர்தரும் முப்பத்தைந்து பல்பொருட்பெயர்க்குச் செய்யுள்
** ஆறாவது பல்பொருட்பெயர்த் தொகுதி முற்றிற்று 

@7 செயற்கை வடிவப் பெயர்த் தொகுதி 
**457

#1
** காப்பு
முழுமதி முக்குடைக் கீழ் மூர்த்தி தாள் போற்றல் செய்தே
எழுவகை உலோகம்தன்னில் ஏற்ற மண் மரங்கள்தம்மில்
பழுதுஅறு தோலின் நூலின் பற்பல விதங்களாக
வழுவுறாது இடும் செயற்கை வடிவப்பேர்த் தொகுதி சொல்வாம் 
**458

#2
** மழுப்படை சக்கரத்தின் பெயர் 
பரசொடு நவியம் தண்ணம் பாலமே கணிச்சி என்ப 
விரவிய மழுப்படைப் பேர் மேவு சக்கரப்பேர் நேமி 
பரிதியே வலயம் எஃகம் பகர் சுதரிசனம் ஆழி
திரு மிகும் ஒளிவட்டம்மே திகிரி ஆம் வளையும் அப் பேர்
** 5, 9 பெயர்கள் 2 
**459

#3
** வில் திருமாலின் வில் ஈசன் வில் 
தனுவொடு சிந்துவாரம் தடி சராசனம் கோதண்டம்
குனி சிலை துரோணம் சாபம் கொடுமரத்தோடு வேணு
முனி தவர் சராரோபம் கார்முகம் ஈரேழ் இவை வில்லின்பேர் 
இனியதோர் சார்ங்கம் மால் வில் ஈசன் வில் பினாகம் ஆமே 
** 14, 1, 1 பெயர்கள் 3
**460

#4
** வில்லின் நாணி அம்பு 
பூரியே தொடையே ஆவம் பூட்டே சிஞ்சினி நரம்பு
நாரியே வடம் குணம்தான் நாணி ஒன்பானே நாமம்
கூரிய சரமே வாளி கொடுங் கணை பகழி வண்டு
பாரிய கதிரம் கங்கபத்திரம் அத்திரம் கோல்   
** 9 பெயர்கள் 4 
**461

#5
** அம்பு (தொடர்ச்சி) அம்புக்கட்டு குப்பி 
** குதை மொட்டம்பு 
பாணம் ஆசுகமே பூதை பத்திரி விசிகம் புங்கம் 
தோணி சாயகமே பல்லம் தொடை சிலீமுகம் ஏ அம்பு ஆம்
பூணுறும் அம்புக்கட்டு புதை புழுகு ஆகும் குப்பி 
கோண் இலாக் குலையே புங்கம் குதை உதண் மொட்டம்பு ஆமே 
** 21, 1, 1, 2, 1 பெயர்கள் 5
**462

#6
** அம்புக்கூடு விற்குதை அம்புச் சிறகு 
** அம்பு கட்டும் பாசம் 
ஆவமே தூணி ஆவநாழிகை அம்புக்கூடு ஆம் 
கோவை செய் வில்லின் இட்ட குதைதானும் குலை என்று ஓதும் 
மேவிய உடுவே ஈர்க்கில் விரவிய சிறகு ஆம் அம்பு 
பாவகமாகக் கட்டும் பாசம் பற்றாக்கை ஆமே 
** 3, 1, 2, 1 பெயர்கள் 6 
**463

#7
** வேலாயுதம் வச்சிராயுதம் அரிவாள்
அயில் சத்தி எஃகம் ஞாங்கர் உடம்பிடி ஐந்தும் வேல் ஆம்
வயிரமே குலிசம் சம்பம் வச்சிராயுதத்தின்பேரே 
சயமுறும் அசனி என்றும் சதகோடி என்றும் சாற்றும் 
குயமொடு புள்ளம் மற்றைக் கொடுவாளே அரிவாளின்பேர் 
** 5, 5, 3 பெயர்கள் 7 
**464

#8
** கழுக்கடை கைவாள் சூலம் சுழல் படை எழு 
கழுமுளே கழுக்கடைப் பேர் கைப் பிடி வாளே கண்டம் 
கழுமுள் மூவிலைவேல் காளம் கழுவொடு சத்தி சூலம் 
சுழல் படை வட்டம் பாராவளை எனச் சொல்லும் இப்பால் 
எழு என்ப கணையத்தோடே பரிகமும் என்னலாமே 
** 1, 1, 5, 2, 2 பெயர்கள் 8 
**465

#9
** வாள் கூன் வாள் 
அசி நவிர் ஏதி நாட்டம் ஆன நாந்தகமே கட்கம் 
வசி மட்டாயுதம் தூவத்தி வஞ்சமே உவணி கோணம் 
இசையும் கண்டகம் வாள் வேணு கரவாளம் என்றும் ஏற்கும் 
நசையுறு கோணம் என்ப நாட்டிய கூன் வாள் ஆமே 
** 15, 1 பெயர்கள் 9 
**466

#10
** உடைவாள் பிண்டிபாலம் ஈட்டி விட்டேறு 
** இருப்பு முள் நாராசம் 
கொண்டு எழும் உடைவாளின்பேர் குறும்பிடி சுரிகை ஆகும் 
பிண்டி பாலத்தின்நாமம் பீலித்தண்டு எஃகமும் பேர் 
விண்டு அடர் இட்டி ஈட்டி விட்டேற்றின்பேரே கோல் ஆம் 
தண்டில் தாறு இருப்பு முள் ஆம் சலாகை நாராசம் ஆமே 
** 2, 2,1, 1, 1, 1 பெயர்கள் 10 
**467

#11
** சிறு சவளம் பெருஞ் சவளம் ஈர்வாள் தறிகை உளி 
குந்தமே படையை வெல்லும் கொடும் சிறுசவளம் என்ப 
குந்தம் தோமரம் இரண்டும் கொடும் பெருஞ்சவளம் ஆகும் 
வந்த வேதினமே ஈரும் வாள் கரபத்திரமும் பேர் 
உந்திய தறிகைதானே கணிச்சி ஆம் உளிக்கும் பேரே 
** 1, 2, 2, 1, 1 பெயர்கள் 11
**468

#12
** கைவேல் கோடாலி இலை மூக்கு அரி கத்தி 
** சுவர் அகழ் கருவி 
கவி புகழ் கைவேலின்பேர் கப்பணம் தோமரம்தான் 
நவியமே மழு கோடாலி நாட்டிய குடாரமும் பேர் 
குவி இலைமூக்குஅரிந்தகத்தியே குளிர் என்று ஓதும் 
சுவர் அகழ் கருவி நாமம் சொன்ன பேர் கன்னம் ஆமே 
** 2, 3, 1, 1 பெயர்கள் 12 
**469

#13
** தண்டு கிளி கடி கருவி குறுந்தடி கவண் 
தடி கதை எறுழே தண்டு ஆம் தட்டையும் தழலும் கிள்ளை 
கடி கருவிப் பேர் ஆகும்  குணில் குறுந்தடிப் பேர் காட்டும் 
கொடியது ஓர் கவணின்நாமம் குணிலொடு கவணையோடே 
ஒடிசிலும் குளிரும் என்றே உரைத்திடல் ஆகும் என்ப 
** 3, 2, 1, 4 பெயர்கள் 13 
**470

#14
** அஞ்சனக்கோல் எழுதுகோல் ஊசி 
** ஊசித்துளை எழுத்தாணி 
ஏசுஇல் அஞ்சனக்கோல் கோல் ஆம் தூலிகை எழுதுகோலே 
சூசியே ஊசி என்ப சொற்ற ஊசித்துளைப் பேர் 
பாசம் ஆம் ஓலை தீட்டும் படை கண்டத்துடனே ஆணி 
ஊசியே எழுத்தாணிப் பேர் இலேகனி என்றும் ஓதும் 
** 1, 1, 1, 1 பெயர்கள் 14 
**471

#15
** சங்கிலி பற்றிரும்பு கைவிடு படை கைவிடாப் படை 
தைத்திடும் தொடர் துவக்கே இடங்கணி சங்கிலிப் பேர் 
வைத்த கற்பொறியே அள்ளு வலி பெறப் பற்றுஇரும்பு ஆம் 
அத்திரம் என்பது அம்பே ஆதியா விடு படைப் பேர் 
சத்திரம் என்ப செங்கைத் தலம்விடாப்படையின்நாமம் 
** 3, 2, 1, 1 பெயர்கள் 15 
**472

#16
** ஆயுதப் பொதுப் பெயர் கூர்மை படையுறை நுனி 
படை தானை கழுமுளே வேல் படைக்கலம் சுதனம் துப்பு 
கடும் ஏதி கருவி எஃகம் கடியும் ஆயுதப்பொதுப்பேர் 
அடைவாம் வை நிசிதம் பூ வள் அயில் வசி ஆறும் கூர்மை 
தடறொடு கருவிப்புட்டில் படையுறை நுதி நுனிப் பேர் 
** 10, 6, 2,1 பெயர்கள் 16 
**473

#17
** கைக்கட்டி தலைத்திராணம் கவசம் 
கருதிய கோதையே கைக்கட்டி கைப்புடையும் ஆகும் 
சிரகம் கீசகம் இரண்டும் செப்பிய தலைத் திராணம் 
அரணம் சாலிகை சடாரி ஆசு கந்தளமே கண்டம் 
பருமம் மெய்யுறையே கச்சை பரம் பத்தும் கவசப் பல் பேர் 
** 2, 2, 10 பெயர்கள் 17 
**474

#18
** பலகை தோற்பலகை பரிசை 
சேடகம் கடகம் தட்டி சேரும் வேதிகையே வட்டம் 
கேடகம் தோலினோடு கிடுகு எட்டும் பலகையின்பேர் 
சூடும் தோற்பலகை தட்டு தோற்பரம் தோலும் ஆகும் 
நீடிய பரிசையே மாவட்டணம் நெடிய வட்டம் 
** 8, 3, 2 பெயர்கள் 18 
**475

#19
** பிரம்பின் வட்டம் யானை முக படாம் 
** யானைப் புரசை யானை கழுத்திடு கயிறு 
** யானை மேல் தவிசு 
நிலைபெறு பிரம்பின் வட்டம் நீள் வள்ளித் தண்டை ஆகும் 
மலைவுஇல் மந்தனமே சூழி மத யானை முகபடாப்பேர் 
கலைவிலாப் புரசை தூசு ஆம் கழுத்திடு கயிறே கச்சை 
இலகடம் பலகாரங்கள் யானை மேல் தவிசின்நாமம் 
** 1, 2, 1, 1, 2 பெயர்கள் 19 
**476

#20
** குதிரைக் கலணை குதிரை அங்கவடி 
** குதிரைச் சம்மட்டி 
பரியினில் கலணையின்பேர் பகர்ந்திடின் பரமும் பண்ணும் 
பருமமும் படையும் பன்னும் பல்லணம்தானும் ஆகும் 
பரவிய கச்சமோடு படி அங்கவடியின்பேரே 
மருவு சம்மட்டியே கோல் வாய்த்த மத்திகையும் அப் பேர் 
** 5, 2, 2 பெயர்கள் 20 
**477

#21
** குதிரை வாயின் வடம் கடிவாளம்
** குதிரைக்கு அணி மயிர் விலங்கு 
மறுவறு குதிரை வாயின் வடம் வடிகயிறு வற்கம் 
கறுழொடு கலியம் கெளவும் கடிவாளம் கலினமும் பேர் 
நிறுவி மற்று அதற்கு அணிந்த நெடு மயிர் உளை என்று ஓதும் 
செறி புனை தளை விலங்கு ஆம் சிருங்கலை நிகளமும் பேர் 
** 2, 3, 1, 4 பெயர்கள் 21 
**478

#22
** முடி முடிமாலை முடிஉறுப்பு ஐந்து 
சுடிகை சேகரம் கிரீடம் சூடிகை மகுடம் மெளலி 
முடியின்பேர் ஓர் ஆறு ஆகும் முடிமாலையே கரோடி 
முடிஉறுப்பு ஐந்தாம் தாமம் முகுடமே பதுமத்தோடு 
நெடிய கோடகமே மற்றும் நேர்ந்த கிம்புரி என்று ஆமே 
** 6, 1, 5 பெயர்கள் 22 
**479

#23
** பதக்கம் வாகுவலயம் தோடு குண்டலம் காதணி 
அம் பொன் ஆரம் பதக்கம் கண்டிகை மதாணியும் பேர் 
செம்பொன் அங்கதம் கேயூரம் திகழ் வாகுவலயத்தின்பேர் 
பம்பு தாடங்கம் தோடு ஆம் பகர் குழை குண்டலப்பேர் 
கம்பி வல்லிகை குணுக்கு கடிப்பிணை காதணிப் பேர் 
** 3, 2, 1, 1, 4 பெயர்கள் 23 
**480

#24
** கங்கணம் கைவளை பிள்ளைக் கைவளை சுட்டி பட்டம் 
கருது கங்கணத்தின்நாமம் கடகமே தொடியும் ஆகும் 
சரி தொடி குருகு வண்டு சங்கு சூடகமே கன்று 
பெருகு கைவளை ஆம் பிள்ளைக் கைவளை பிடிகம் என்ப 
விரவிய சுடிகை சுட்டி விட்டொளிர் ஓடை பட்டம் 
** 2, 7, 1, 1, 1 பெயர்கள் 24 
**481

#25
** பாத கிங்கிணி நூபுரம் காற்சரி கைச்சரி 
** சிலம்பு சதங்கை 
பரிபுரம் என்பதானே பாத கிங்கிணியின்நாமம் 
பெரிய நூபுரம் சிலம்பின் பேதமே வேறொன்றில்லை 
பரியகம் காற்சரிப் பேர் பகர்ந்த கைச்சரிக்கும் பேரே 
அரவமே சிலம்பின்நாமம் ஆம் சிறுமணி சதங்கை 
** 1, 1, 1, 1, 1, 1 பெயர்கள் 25 
**482

#26
** பாடகம் ஒசை செய் தளை பாதத்து அணியின் 
** பொதுப் பெயர் ஆடவர் கொடை வீரத்தால் 
** அணிவதன் பெயர் 
நீடு பாடகத்தின்நாமம் நெடும் பாத கடகம் என்ப 
தேடிய குடச்சூல் ஓசை செய்தளை ஞெகிழமும் பேர் 
பாடுறு பாத சாலம் பதத்துஅணிப்பொதுப்பேர் ஆகும் 
ஆடவர் கொடை வீரத்தால் அணிவது கழல் என்று ஆமே 
** 1, 2, 1 ,1 பெயர்கள் 26 
**483

#27
** 7 கோவை மணி 8 கோவை மணி 
** 76 கோவை மணி 18 கோவை மணி 
** 32 கோவை மணி 
ஏழு கோவைகளால் சூழ்ந்த எழில் மணி மேகலைப் பேர் 
காழ் இருநான்கே காஞ்சி கலாபம் ஈரெட்டுத் தாமம் 
தாழும் மூவாறு கோவை சாற்றிய பருமம் என்ப 
வீழும் எண்ணான்கு கோவை விரிசிகை என்பதாமே 
** 1, 1, 1, 1, 1 பெயர்கள் 27 
**484

#28
** சரிமணி அரைப்பட்டிகை அரைநாண் 
** ஆபரணத் தொங்கல் செவி மலர்ப் பூ 
சரிமணி நாமம்தானே சாற்றிய கலாபம் தோரை 
அரையினில் பட்டிகைப் பேர் அத்தொடு மனாவும் என்பர் 
இரதனம் அரைநாணின்பேர் ஏற்றிடும் தொங்கல் உத்தி 
மருவிய செவி மலர்ப் பூ மன்னு கன்னாவதஞ்சம் 
** 2, 2, 1, 1, 1 பெயர்கள் 28 
**485

#29
** மோதிரம் மணிவடம் வயிரச் சங்கிலி பூணு நூல் 
விரலணி ஆழி வீகம் இலச்சினை மோதிரப்பேர் 
சரமொடு காழே ஆரம் தாமமே மணிவடப்பேர் 
மருவு சங்கிலியே என்ப வயிரச் சங்கிலியின்நாமம் 
உருவியல் மார்பில் இட்ட உபவீதம் பூணுநூலே 
** 4, 4, 1, 1 பெயர்கள் 29 
**486

#30
** நுதலணி தெய்வ உத்தி தலைக் கோலம் 
** தலைப் பாளை கல் அழுத்தும் குழி வட்டம் 
இலம்பகம் புல்லகம் சூட்டு இவை நுதல்அணி முப்பேரே 
பொலம் புனை திருவே தெய்வஉத்தி ஆம் பிஞ்ஞகம்தான் 
துலங்கிய தலைக்கோலப்பேர் தொய்யகம் தலைப்பாளைப் பேர்
குலம் பெறு கல் அழுத்தும் குழி வட்டம் கேவணம்தான் 
** 3, 1, 1, 1, 1 பெயர்கள் 30 
**487

#31
** அணிகளின் கடைப்புணர்வு பூண் ஆபரணம் 
அணிகளின் கடைப்புணர்ப்பே அது மடை கயிலும் ஆகும் 
புணரும் கோளகையே தாங்கி வயிரம் கிம்புரி பூண் நாற்பேர் 
அணிகலன் வள்ளி பூணே அணியொடு கலமே மஞ்சு 
பணி இழை பூடணங்கள் பகரில் ஆபரணம் ஆமே 
** 2, 4, 9 பெயர்கள் 31 
**488

#32
** உண்கலம் வட்டில் சிறு வட்டில் 
** நாழிகை வட்டில் சட்டுவம் 
தட்டம் பாசனமே தாலம் தளிகை உண்கலத்தின்பேரே 
வட்டிலே சடகம் கோரம் வள்ளம் ஆம் சிறுவட்டில் பேர் 
கிட்டிய கிண்ணம் கன்னல் கிளந்த நாழிகைவட்டில் பேர் 
சட்டுவம் சிலகம் என்ப தவ்வியும் தருவியும் பேர் 
** 4, 3, 1, 1, 3 பெயர்கள் 32 
**489

#33
** கண்ணாடி கலசப் பானை படிக்கம் 
விஞ்சு தர்ப்பணமே ஆடி மிகும் ஒளிவட்டம் வேறு 
வஞ்சியர் உருவம் காட்ட வரும் படிமக்கலம் பொன் 
கஞ்சனம் முகுரம் அத்தம் புளகம் எண்பேர் கண்ணாடி 
கஞ்சனை கலசப்பானை படியகம் படிக்கம் காட்டும் 
** 8, 1, 1 பெயர்கள் 33 
**490

#34
** நெய்த் துடுப்பு தூபமுட்டி தூபமணி தாளம் 
தொட்ட நெய்த்துடுப்பினுக்கு சுருக்கொடு சுருவம் ஆம் பேர் 
இட்டமாம் தூபமுட்டி இந்தளம் தடவும் ஏற்கும் 
மட்டு அமர்கின்ற தூபமணியே கைம்மணி என்று ஆகும் 
கிட்டியே பாண்டில் கஞ்சம் கிணின் என்னும் தாளம் முப்பேர் 
** 2, 2, 1, 3 பெயர்கள் 34 
**491

#35
** பெருமணி கைம்மணி எறி மணி சின்னம் காளம் 
அடிபடு பெருமணிப் பேர் அறைந்திடும் கண்டை ஆகும் 
படலிகை பரந்த வட்டம் கைம்மணி பகர்ந்த பேரே 
திடுதிடு என்றிடத் தெழித்த சேகண்டி எறிமணிப் பேர் 
கடுகிய பீலி சின்னம் காகளம் காளம் ஆமே 
** 1, 2, 1, 1, 1 பெயர்கள் 35 
**492

#36
** கொம்பு பூண் கொள் கலம் பரணி பெட்டி பேழை 
கோடு உடன் இரலை ஆம்பல் கொம்பின்பேர் வயிரும் கூறும் 
பீடிகை துமானம் காண்டம் பேணும் கண்டிகை கடிப்பம் 
கோடிகம் இரு முப்பேர் பூண் கொள்கலம் பரணி கோயே 
நீடு மஞ்சிகமே பெட்டி நெடிய மஞ்சிகையே பேழை 
** 4, 6, 1, 1, 1 பெயர்கள் 36 
**493

#37
** கமண்டலம் கெண்டி வெண்குடை 
குண்டிகை கரகம் நீர் பெய் கோலம் ஆர் காண்டகங்கள் 
கண்ட நல் கமண்டலப்பேர் கடிப்பம் கோடிகமே கெண்டி 
கொண்ட வெண்குடையின்நாமம் குளிர் தொங்கல் கவிப்பு பிச்சம் 
தண்டு சேர் கவிகை ஆதபத்திரம் சத்தி சத்திரம் 
** 3, 2, 8 பெயர்கள் 37 
**494

#38
** பேரால வட்டம் சுற்றால வட்டம் 
ஆலவட்டத்தினோடும் அடுத்திடும் கால் செய் வட்டம் 
மேவிடும் உக்கம் தாலவிருந்தம் பேராலவட்டம் 
பிலி வீசனம் சாந்தாற்றி பெருகிய விசிறி நான்கும் 
சீலம் ஆம் காற்று வீசும் சிற்றாலவட்டம்தானே 
** 4, 4 பெயர்கள் 38 
**495

#39
** இடக்கை முழவு படகம் கடிப்பு 
** ஒரு கண் பறை பேரிகை சிறுபறை 
இடக்கையின்பேர் ஆமந்திரிகை ஆம் குளிர் முழா ஆம் 
படித்தெழு பணவம் திண்டி ஆனகம் படகம் முப்பேர் 
கடிப்பின்பேர் குணில் ஆம் மொந்தைதான் ஒருகட்பறைப் பேர் 
அடித்த பேரிகைப் பேர் நந்தி ஆகுளி சிறுபறைப் பேர் 
** 1, 1, 3, 1,1,1,1 பெயர்கள் 39 
**496

#40
** திமிலை நிசாளம் பன்றிப் பறை 
** ஒரு கண் பகுவாய்ப் பறை கரடிப் பறை 
சல்லரி திமிலை என்ப தண்ணுமை நிசாளம் ஆகும் 
பல் உள கொடிய பன்றிப்பறை குடப்பறை என்று ஆமே 
கல்லெனும் பகுவாய் ஆம் ஓர்கண்பறை பதலைதானே 
ஒல்லெனும் கரடி நாமம் உறு பறை தட்டை ஆமே 
** 1,1,1,1, 1 பெயர்கள் 40 
**497

#41
** குறிஞ்சிப்பறை பாலைப் பறை முல்லைப் பறை 
** மருதப் பறை 
தொண்டகம் முருகியம் போர்த் துடி குறிஞ்சிப்பறைப் பேர் 
மிண்டிய துடியே பாலை வேடர்தம் பறையின்நாமம் 
கொண்டு எழு பம்பை ஏறங்கோட்பறை முல்லைக்கு ஆகும் 
கிண்டிய மருதம் உற்ற கிளர் பறை கிணை என்று ஆமே 
** 3, 1, 2, 1 பெயர்கள் 41
**498

#42
** நெய்தற் பறை உவகைப் பறை தண்ணுமை 
** இடைசுருங்கு பறை மார்ச்சனை 
நிறுவு சாப்பறையே என்ப நெய்தலில் பறையின்நாமம் 
பெறும் உவகைப்பறைக்குப் பேரே தூரியம் என்று ஓதும் 
உறுமிய தண்ணுமைப் பேர் உடுக்கை ஆம் இடைசுருங்கு 
பறையின்பேர் துடி மருங்கின் மார்ச்சனை பகரின் மண் ஆம் 
** 1, 1,1, 1, 1 பெயர்கள் 42
**499

#43
** வாத்தியப் பொது 
தூரியம் முழவு திண்டி துந்துபி முருடு தக்கை 
பேரியே தகுணிச்சம் போர்ப் பீலியே தடாரி பம்பை 
வீரிய முரசு தண்ணம் மேவு கோடணை இயங்கள் 
வாரியின் அதிர் சகண்டை வாச்சியப்பொது ஈரெண்பேர் 
** 16 பெயர்கள் 43 
**500

#44
** தேர் தேருருள் 
இரதமே கொடிஞ்சியோடும் இயந்திரம் குயவு வையம் 
அரியொடு கூவிரம் தேர் ஆம் சயந்தனமும் அப் பேர் 
பரிதியே சில்லி ஆழி பாரிய காலே நேமி 
உருளுடன் உருளி தேரின் உருள் என்ப உந்தியும் பேர் 
** 8, 8 பெயர்கள் 44 
**501

#45
** தேரின் அகத்தில் செறி கதிர் தேர் நடு தேர்ப் பலகைப் பா
** தேர்க் கொடிஞ்சி தேர் மொட்டு தேர் மரச் சுற்று 
ஆர் எனும் நாமம் தேரின் அகத்தினுள் செறி கதிர்ப் பேர்
தேர் நடுப் பேரே தட்டு செப்பிய நாப்பணும் பேர் 
சார் பலகைப் பா பார் ஆம் சார்ந்த கூவிரம் கொடிஞ்சி 
தேர்மொட்டு கூம்பு தேரின் மரச்சுற்று கிடுகுதானே 
** 1, 2, 1,1,1,1 பெயர்கள் 45 
**502

#46
** பரி இழுக்கும் ஊர்தி பண்டி பண்டி உள்ளிரும்பு 
பாண்டில் கஞ்சிகை வையம் போர்ப் பரிகள் பூண்டு ஈர்க்கும் ஊர்தி 
தாண்டிய சகடு வையம் சாகாடே ஒழுகை சாடு 
தூண்டிய உருளினோடு சகடமும் சொல்லும் பண்டி 
ஈண்டிய பண்டி உள்ளின் இரும்பு கந்து இருசும் ஆமே 
** 3, 7, 2 பெயர்கள் 46 
**503

#47
** முத்துச் சிவிகை சிவிகை இராசவாகனம் 
விஞ்சிய முத்தின் ஊர்தி வெண் முத்தின் சிவிகைதானே 
தஞ்சம் ஆம் சிவிகை வையம் தண்டிகை அனிகம் யானம் 
கஞ்சிகை மணிக்காற்பள்ளி என்பன கதிர்வேல் மன்னர் 
எஞ்சல்இல் சிறப்பின் ஏறும் இராசவாகனமது ஆமே 
** 1, 4, 2 பெயர்கள் 47 
**504

#48
** கலப்பை தூண் யானைத் தூண் வேள்வித் தூண் குறுந்தறி 
அலம் உழுபடை தொடுப்போடு ஆலமே படைவாள் நாஞ்சில் 
கலனையே கலப்பை ஏழ்பேர் கந்து எழு மதலை தம்பம் 
நிலைபெறு தறி கால் தாணு நெடுந் தூண் ஆம் வெளில் யானைத்தூண் 
புலைஇல் வேள்வித்தூண் யூபம் போதிகை குறுந்தறிப் பேர் 
** 7, 6, 1, 1, 1 பெயர்கள் 48 
**505

#49
** கதவு தாழ் யானைத் தோட்டி 
கதவின்பேர் அரரி வாரி காப்பொடு கவாடம் தோட்டி 
புதவும் ஆம் காழும் சீப்பும் போற்றிய கடிகையும் தாழ் 
மதமுறும் யானைதன்னை வணக்கும் அங்குசமே தோட்டி 
விதமுறு கோணம் என்றும் விளம்புவர் அளந்தநூலோர் 
** 6, 3, 2 பெயர்கள் 49 
**506

#50
** அடைகுறடு உலையாணிக் கோல் 
** பெருங் குறடு சம்மட்டி கொழு 
பட்டடை அடைகுறட்டின்பாலது ஆம் உலையாணிக்கோல் 
சுட்டுக்கோல் என்று நாமம் சொல்லுப நல்ல நூலோர் 
முட்டிய பெருங்குறட்டை முருடு என மொழிப ஓங்கிக் 
கொட்டும் சம்மட்டி கூடம் கோள் கொழு என்று கூறும் 
** 1, 1, 1, 1, 1 பெயர்கள் 50
**507

#51
** மரக்கலம் மரக்கலத்தின் பாய் 
பாதையே வங்கம் தோணி பாரதி பஃறி அம்பி 
போதமே மதலை யானம் புணை சதா நெளவே நாவாய் 
பேதம்இல் பாறு தொள்ளை பேணுறும் மரக்கலப்பேர் 
வாதை தீர் மரக்கலப்பாய் இதை என வழங்கல் ஆமே 
** 15, 1 பெயர்கள் 51 
**508

#52
** ஓடம் தோணி தெப்பம் விச கட்டில் 
பகடு அம்பி பஃறி ஓடம் பகர் பெயர் திமிலே தோணி 
பகடு பட்டிகையே அம்பி படுவையே புணையே தெப்பம் 
மிகைபடு மிதவையும் பேர் விசியின்பேர் அரி என்று ஆகும் 
பகர்தரு பாரி மஞ்சம் பரியங்கம் பாண்டில் கட்டில் 
** 3, 1, 6, 1 பெயர்கள் 52 
**509

#53
** தவத்தோர் பீடம் சிங்காதனம் உரல் உலக்கை 
விட்டரம் தவத்தோர்பீடம் விளங்கும் பீடிகையும் அப் பேர் 
இட்ட சிங்காதனம் பத்திராசனம் என்பது ஆமே 
திட்டையே கறையே மற்றுச் செப்பிய உலூகலம்தான் 
முட்டிய உரலின் முப்பேர் முசலமே தடி உலக்கை 
** 2, 1, 3, 2 பெயர்கள் 53 
**510

#54
** உறி ஊஞ்சல் ஏணி கண்ணேணி மரக்கால் 
உறி சிதர் சிக்கம் தூக்கோடு ஓதிய சிமிலி நாற்பேர் 
நிறுவிய உஞ்சல் ஊசல் நீண்ட விண்டாண்டும் அப் பேர் 
இறைவையே சேணி ஏணி மால்பு கண்ணேணியின்பேர் 
குறைவுஇல் அம்பணம் தூம்போடு குளகம் கச்சமும் மரக்கால் 
** 4, 2, 2, 1, 4 பெயர்கள் 54 
**511

#55
** நாழி கொந்தளிப்பாய் புற்பாய் பிரப்பம்பாய் 
** தோற்பாய் தடுக்கு குழாய் பூந்தட்டு பூப்பெட்டி 
விரவிய குஞ்சம் நாழி விரிந்த கொந்தளிப்பாய் ஆரை 
பெருகிய சாப்பை புற்பாய் பிரப்பம்பாய் சாதிப்பாய் ஆம் 
சருமம் தோற்பாய் தடுக்கே தவிசு ஆகும் குழாயே தண்டு ஆம் 
பெருகு கோடிகம் பூந்தட்டே பெட்டியே மூழிவாய் ஆம் 
** 1, 1, 1, 1, 1, 1, 1, 1, 1 பெயர்கள் 55 
**512

#56
** சட்டம் விளக்குத் தண்டு முறம் புட்டில் கூடை 
சட்டமே கிடுகு ஆம் என்ப சாற்றிய கம்பம் தம்பம் 
விட்டொளிர் கெளசிகங்கள் மத்திகை விளக்குத்தண்டு ஆம் 
தட்டொடு சின்னம் சேட்டை தரும் முறம் முற்றிலும் பேர் 
புட்டிலே இறைவை என்ப வட்டிகை கூடை ஆமே 
** 1, 4, 4, 1, 1 பெயர்கள் 56 
**513

#57
** சுளகு துடைப்பம் அகப்பை மத்து 
** தயிர்கடை தறி பாவாற்றி நூல் நாழி 
சுளகின்பேர் சூர்ப்பம் என்ப துடைப்பம் சோதனி மாறும் பேர் 
வளமுறும் மூழி மூழை அகப்பை ஆம் மத்து மத்தம் 
வெளில் தயிர்கடைதறிப் பேர் மெச்சும் பாவாற்றி குச்சு ஆம் 
அளவில் காருகர் நாடா நூனாழியே ஆகும் என்ப 
** 1, 2, 2, 1, 1, 1, 1 பெயர்கள் 57 
**514

#58
** ஆம்பி இறை கூடை நீர்ப்பத்தர் சூது 
** கவற்றில் தாயம் சாரி 
கிழார் பூட்டை காம்பி அம்பி கிளந்த கார் ஆம்பி ஆகும் 
பிழார் இடார் இறைகூடைப் பேர் பெருந்தூம்பு அம்பணம் நீர்ப்பத்தர்
துழாவிய காசு வல்லு சூதின்பேர் கழங்கும் ஆகும் 
தழாது உருள் கவற்றின் தாயம் ஆயம் ஆம் சாரி நாய் ஆம் 
** 4, 2, 2, 3, 1, 1 பெயர்கள் 58 
**515

#59
** துண்டம் வகிர் சும்மாடு வலை வலைக்கயிறு நூல் 
கடிகையே துணியே துண்டம் காட்டிய வகிர் வார் வள் ஆம் 
சுடுவொடு சுமடு தாங்கும் சுமையடை சும்மாட்டின்பேர் 
வடிவுறு வலையே சாலம் மற்று அதில் கயிறும் ஆமே 
தொடருறு நூலே தந்து சூத்திரம் பனுவலும் பேர் 
** 2, 2, 3, 1, 1, 3 பெயர்கள் 59 
**516

#60
** கயிறு பசுக் கட்டும் கயிறு காற்றாடி 
பழுதையே தாமம் கச்சை பாசமே இரச்சே நாணே 
வழுவுஇலாத் தாம்பே அக்கம் வடம் புரி கயிறு அது ஆமே 
தழுவு தாமணியே தாம்பு பசுக்கட்டும் கயிறுதான் ஆம் 
சுழல் கறங்கே காற்றாடி சொல்லிய கதலியும் பேர் 
** 10, 2, 3 பெயர்கள் 60 
**517

#61
** மட்டத் துருத்தி பெருந் துருத்தி சீப்பு 
** மகளிர் ஆடும் களம் செருப்பு 
பந்து மட்டத்துருத்தி பகர் பெருந்துருத்தி நீரைச் 
சிந்திய சிவிறி ஆகும் சீப்பு கங்கதமே சிக்கம் 
பைந்தொடி மகளிர் ஆடப்படுங்களம் ஓரை என்ப 
தொந்தம் ஆம் பாதங்காப்பு கழல் தொடு தோல் செருப்பு ஆம் 
** 1, 1, 2, 1, 3 பெயர்கள் 61 
**518

#62
** மிதியடி மிதியடியின் மேல் கொட்டை 
** பற் சீவும் கோல் தூண்டில் அம்மானை 
** பந்து தவிடு நொய் 
இட்ட பாதுகையே பாவல் மிதியடி இதன் மேல் இட்ட 
கொட்டை ஆம் குடை பற்சீவும்கோல் மெல்கோல் வளிசம் தூண்டில் 
பட்ட அம்மனை அம்மானை பந்து கந்துகம் என்று ஓதும் 
முட்டையே தவிட்டின்நாமம் முடையும் ஆம் நொறுங்கு நொய்யே 
** 2, 1, 1, 1, 1, 1, 2, 1 பெயர்கள் 62 
**519

#63
** உலைத் துருத்தி கொல் உலை மூக்கு செத்தை பாடை சாணைக்கல் 
ஊதிய உலைத் துருத்தி உதியும் அத்திரியும் ஆகும் 
கோதுஇலாச் சிவையினோடு குருகு கொல்உலைமூக்கின்பேர் 
சோதனி சீக்கும் காடு துரால் நரல் மயலே செத்தை 
சா துயர்ப் பாடை வெள்ளில் சிலாவட்டம் சாணைக்கல்லே 
** 2, 2, 4, 1, 1 பெயர்கள் 63 
**520

#64
** சாடி நீர்ச் சால் கர்ப்பரை குடம் 
தடம் படு பதலை தாழி தளம் சாடி அகளமும் பேர் 
இடங்கரே நிறையே வட்டம் ஏற்ற நீர்ச்சால் இம் முப்பேர் 
கிடந்த கர்ப்பரை தசும்பு கடாகம் ஆம் குடத்தின்நாமம் 
குடங்கரே இடங்கர் தாழி குணம் கடம் கலசம் கும்பம் 
** 4, 3, 2, 7 பெயர்கள் 64 
**521

#65
** மிடா பானை தயிர்கடைதாழி 
தடாவொடு கரீரம் நீரைத் தரும் முகை குழிசி நான்கும் 
மிடா என்ப பானையின்பேர் மேவிய குண்டத்தோடு 
மிடாவும் ஆம் விரும்பு நல்லார் வெண் தயிர்கடையும்தாழி 
விடாத மந்தினியினோடு கர்க்கரி விளம்பல் ஆமே 
** 4, 2, 2 பெயர்கள் 65 
**522

#66
** கரகம் ஏற்கும் மட்கலம் 
சிரகம் கர்க்கரியே கன்னல் சீகரம் நான்கு பேரும் 
கரகத்தின்நாமம் ஆகும் கருது வற்கரியும் என்ப 
திரு அறம் செய்யார் ஏற்கும் தீய மட்கலத்தின்நாமம் 
பரவிய கடிஞை ஐயம் பாத்திரம் என்றும் ஏற்கும் 
** 5, 3 பெயர்கள் 66 
**523

#67
** தகழி குடுவை சட்டி அகல் கொள்கலம் 
** யாவற்றிற்கும் பெயர் 
இடிஞ்சிலே பாண்டில் என்ப எரிசுடர்த் தகழி நாமம் 
ஒடுங்கிய குடுவை குண்டம் ஒளி பெறு விசளை சட்டி 
அடங்கு சுத்திகையினோடு சராவமே அகலின்பேர்தான்  
இடுங்கலம் பாண்டம் ஏற்கும் கொள்கலம் எவற்றிற்கும் பேர் 
** 2, 1, 1, 2, 3 பெயர்கள் 67 
**524

#68
** புடைவை 
கோடி கோடிகம் படாமே கோசிகம் கூறை பஞ்சி 
சாடி நீவியமே சீரை சம்படம் கலை கலிங்கம் 
சூடி காடிகமே புட்டம் தூசு காழகமே வட்டம் 
ஆடை ஆவரணம் தானை அறுவை அம்பரம் ஆசாரம்
**525

#69
** புடைவை (தொடர்ச்சி) துல் நல்லாடை 
மடி பரிவட்டம் சேலை வத்திரம் உடுக்கை வாசம் 
இடையறு புடைவை ஆறைந்து இலக்காரம் என்றும் பேர் ஆம் 
இடையல் வேதகமே பட்டே ஏடகம் இவை துகில் பேர் 
நடைபெறு நாகம் பாரி நல்லாடை இரு பேர் ஆமே 
** 31, 4, 2 பெயர்கள் 69 
**526

#70
** பட்டு வர்க்கம் பட்டு பட்டு விகற்பம் 
** நற் பணித் தரசு மயிர்ப் படாம் 
பட்டுவர்க்கத்தின்நாமம் பாளிதம் கோகிகம் பேர் 
பட்டு நேத்திரம் ஆம் காம்பு படும் அதன் விகற்பநாமம் 
இட்ட நற்பணித் தூசின்பேர் ஏற்றிடும் தேவாங்கம்தான் 
மட்டமாம் முரிகம் சூழும் மயிரகம் மயிர்ப்படாமே 
** 2, 1, 1, 1, 2 பெயர்கள் 70 
**527

#71
** அத்தவாளம் சித்திரப் படாம் போர்வை 
** முன்றானை மாதர் கொய்சகம் உத்தரீயம் 
அத்தவாளம்தானே உல்லாசம் ஆம் வடகமும் பேர் 
புத்தகம் என்ப சித்திரப்படாம் ஆகும் போர்வை மீக்கோள் 
வைத்த முன்தானை தோகை மாதர் கொய்சகமே நீவி 
உத்தரீயம் ஏகாசம் உத்தராசங்கமும் பேர் 
** 2, 1, 1, 1, 1, 2 பெயர்கள் 71 
**528

#72
** கம்பளிப்படாம் கச்சு விடும் தலைப்பு மேற்கட்டி 
கம்பலம் கம்பளங்கள் கம்பளிப்படாத்தின்வர்க்கம் 
வம்பு வார் விசிகை கச்சு ஆம் வைத்த பட்டிகையும் ஆகும் 
விம்பு வட்டுடையும் அப் பேர் விரி கஞ்சம் விடுந் தலைப்பு ஆம் 
கம்பலம் படங்கு வானி விதானம் மேற்கட்டி ஆமே 
** 2, 5, 1, 4 பெயர்கள் 72 
**529

#73
** சட்டை இடுதிரை 
கஞ்சுளி அங்கி மற்றைக் காஞ்சுகமொடு குப்பாயம் 
விஞ்சு கஞ்சுகமே மெய்ப்பை மிளிரும் வாரணமே சட்டை 
கஞ்சிகை அவிடியோடு காண்டமே எழினி கண்டம் 
தஞ்சம் ஆம் படாம் படங்கள் சடுதியில் இடுதிரைப் பேர் 
** 7, 7 பெயர்கள் 73 
**530

#74
** மெத்தை தலையணை பெருங்கொடி 
** வீதியில் கட்டிய கொடி 
தவிசு அணை தளிமம் மெத்தை உபதானம் தலையணைப் பேர் 
துவசமே சத்தி வானி தோகை கேதனம் பதாகை 
தவழ் விலோதனம் படங்கு தரும் படாம் பெருங்கொடிப் பேர்
நுவலுங்கால் வீதிக் கட்டி நுடங்கிய கொடி விடங்கம் 
** 3, 1, 9, 1 பெயர்கள் 74 
**531

#75
** சிறுகொடி தேரில் கட்டும் கொடி துணி 
** சித்திரம் எழுதுதல் 
கத்திகை சிறுகொடிப் பேர் கருது கூவிரம் தேர்க்கட்டும் 
சத்தி ஆம் துணி சிதார் ஆம் சாற்றிய சிதவலும் பேர் 
சித்திரம் ஓவியம் சீர் தீட்டும் வட்டிகை ஆம் என்ன 
வைத்தனர் பொறித்தல் தீட்டல் வரைதலும் எழுதல் ஆமே 
** 1, 1 ,2, 2, 3 பெயர்கள் 75 
**532

#76
** மரவுரி உடுத்தல் இறுக்கல் 
மற்ற வற்கலை இறைஞ்சி மரவுரி சீரையும் பேர் 
சுற்றலே உடுத்தல் என்ப தற்றலே இறுக்கல் ஆகும் 
குற்றம்இல் எழுபத்தாறு தொடர் செய்தான் குணபத்திரன் தாள் 
நிற்றலும் வணங்கி நீதி நிறுத்த மண்டலவன்தானே 
** 3, 1, 1 பெயர்கள் 76 
** ஏழாவது செயற்கை வடிவப் பெயர்த் தொகுதி முற்றிற்று 

@8 பண்பு பற்றிய பெயர்த் தொகுதி 
**533

#1
** காப்பு 
கடி மலர்ப் பிண்டி நீழல் காவலன் சரணம் போற்றி 
வடிவினில் அளவுதன்னில் வண்ணத்தில் காட்சி ஆகும் 
நெடியது ஓர் பொருளின் மற்று நீள் உணர்வாலே காணப்
படு பொருளின் குணப்பேர் பண்பதாம் தொகுதி சொல்வாம்
**534

#2
** வட்டம் 
நல்ல கோளகையே கொம்மை நாட்டிய வலயம் தட்டு 
சொல்லிய பரிதி பாண்டில் சூழ்ந்திடு கடகம் நேமி 
சில்லி மண்டலமே ஆழி திகிரி பாலிகை விருத்தம் 
வல்லை சக்கரம் ஈரெட்டும் வட்டம் என்றிட்ட நாமம் 
** 16 பெயர்கள் 2 
**535

#3
** திரட்சி 
உண்டையே குவவு கொம்மையொடு பந்தம் புஞ்சம் சேடு 
முண்டமே கணையே வட்டு முத்தையே துறுமல் சோகம் 
கொண்ட சேர்வுடனே மாழை குவிதலே தொழு பூகம் 
பிண்டம் மூவாறு பேரும் திரட்சி ஆம் பிழம்பும் ஆமே 
** 19 பெயர்கள் 3 
**536

#4
** கூட்டம் தகடு 
தொழுதியே குவவு தோடு தொகை சமுதாயம் சங்கம் 
தழுவிய குழுவே கோட்டி சமவாயம் நிகாயம் குப்பை 
குழுமலே குவால் இராசி குவிதல் மூவைந்தும் கூட்டம் 
அழகிய தகட்டின்நாமம்  அரி அடர் ஐம்மை ஆமே 
** 15, 3பெயர்கள் 4 
**537

#5
** வளைவு பரந்த வடிவு குமிழ்ப்பு வடிவு 
** மொக்குள் வடிவு 
குடிலமே குலாவல் கோணல் கோட்டம் கூன் கோண் வளாவல் 
வடிவுள தட்டு வாங்கல் வணர் பத்தும் வளைவின்பேரே 
படலையே படர்ச்சி பம்பல் பரந்திடும் வடிவின்நாமம் 
புடைபடு குமிழ்ப்புத்தானே புளகம் ஆம் மொக்குள் கொப்புள் 
** 10, 3, 1, 1 பெயர்கள் 5 
**538

#6
** உள்துளை துளையுடைய பொருள் சர்ச்சரை
** மயிர்த்தொகுதி கதிர்த் தொகுதி போல்வன 
குழல் சுகிர் தூம்பு நாழி கூறிய புரை வேய் வேணு 
ஒழுகிய சுரை நாளத்தோடு ஒன்பதும் உள்துளைப் பேர் 
புழை குழல் துளை உடைத்தாம் பொருள் பிணர் சர்ச்சரைப் பேர் 
செழு மயிர் கதிர் போலச் சேர்ந்திடும் தொகுதி கற்றை 
** 9, 2, 1, 1 பெயர்கள் 6 
**539

#7
** மிகுதி 
மதம் நனி பெருகல் ஊக்கல் மற்றைய விதப்பு சால 
அதிகமே சிறப்பு இறப்போடு அலை தவ அமலை ஆன்றல் 
கதழ்வொடு பிறங்கல் கூரே கழுமல் பூரிப்பே ஊங்கு 
புதுமையே உருத்தல் மூவேழ் மிகுதி ஆம் பொங்கலும் பேர் 
** 22 பெயர்கள் 7 
**540

#8
** உயர்ச்சி 
மன்னும் மோடு ஊக்கம் ஓங்கல் வார்தல் சேண் ஒழுக்கம் பொங்கல் 
பன்னிய நிமிர்தல் புங்கம் பரி புரை உச்சம் துங்கம் 
மின்னிய நிவப்பு உகப்பு மிசை மேடு பிறங்கல் ஏந்தல் 
உன்னதம் சிகரம் மூவேழ் உயர்ச்சி உத்துங்கமும் பேர் 
** 22 பெயர்கள் 8 
**541

#9
** விரிவு பரப்பு கூடல் பருமை 
விரிவின்பேர் விசாலம் ஆகும் விபுலமும் ஆம் பரப்பு 
பரவை பப்பு அழுவம் தாவல் பாய்தல் ஆம் ஞெமிர்தலும் பேர் 
மருவிய பயினி சங்கம் மற்றிவை இரண்டும் கூடல் 
பருமையின்நாமம் பீனம் பனம் பரூஉ என்றும் பேரே 
** 2, 6, 2, 3 பெயர்கள் 9 
**542

#10
** பெருமை 
பாடு மாண் பாழி மீளி பணை பொழில் பகடு மூரி 
மோடு மால் தடவே வீறு முடலை கொன் கருமை அண்ணல் 
ஈடு மா நளியே மானம் இருமையே கயவோடு ஏந்தல் 
பீடு வான் குவவு செம்மை பெருமைப் பேர் இருபத்தேழே 
** 27 பெயர்கள் 10 
**543

#11
** நுண்மை அற்பம் 
அணு நுழை முளரி நுட்பம் ஆய்தல் முள் அயிர் நுணங்கு 
நுணுகொடு நுவணை நூழை நொசிவு ஈராறு இவை நுண்மைப் பேர்
கணம் இறை வறிது சின்னம் கன்று ஆசு தன்னம் ஒட்டே 
அணைதரு கிலமே தோகம் அற்பம் இட்டிடையும் ஆமே 
** 12, 11 பெயர்கள் 11 
**544

#12
** அகலம் செவ்வை தூரம் 
அகறல் கண்ணறையே பாழி ஆய்வொடு படர்தல் ஆன்றல் 
அகலுளே வியலிடங்கள் அகலம் இவ் எட்டும் ஆகும் 
திகழ் செம்மை இருசு செப்பம் செவ்வன் நேர் செவ்வை ஐந்தாம் 
நிகழும் சேண் சேய்மை தூரம் நீளிடைதானும் அப் பேர் 
** 8, 5, 3 பெயர்கள் 18 
**545

#13
** நீளம் முழுவதும் 
வடிதலே ஒழுகல் போகல் வரி உறை வார்தல் தீர்தல் 
நெடிலொடு ஆயதமே நேர்பு நெடுமை சேண் கொடி நீளப்பேர் 
அடைய எல்லாம் சமத்தம் அடங்கலே அகிலம் யாவும் 
முடியவே அனைத்து அகண்டம் முழுவது ஆம் முற்றும் அப் பேர் 
** 13, 10 பெயர்கள் 13 
**546

#14
** குறைதல் நெருங்கல் 
குறைதலின்பேர் நிரப்பே குன்றலே அருகல் அஃகல் 
சிறுகலே ஈனம் ஊனம் சிங்கலே எஞ்சல் தேய்வு ஆம் 
துறுமலே சடிலத்தோடு துன்னலே கஞறல் வீங்கல் 
செறி நவி பொதுளல் செற்று திணுங்கல் பத்தும் நெருங்கல் 
** 10, 10 பெயர்கள் 14 
**547

#15
** நிறைந்திடல் பாதி பாரம் 
பிறங்குதல் திளைத்தல் ஆர்தல் பெருகுதல் கழுமல் மல்கல் 
நிறைந்திடல் ஆம் துவன்றல் பூரணம் கமமும் நேரும் 
பறைந்த பால் பயல் அருத்தம் பாகம் கூறு ஐந்தும் பாதி 
அறைந்த சீர் குரு கனம் ஞாட்பு அதி பாரம் பொறையும் ஆமே 
** 9, 5, 5 பெயர்கள் 15 
**548

#16
** மென்மை தொய்மை சலியாது நிற்றல் பற்றுக்கோடு 
மிருதுவே சுகுமாரம் கோமளம் சாயல் கயவு மென்மை 
மருவிய இலகு நொவ்வோடு இலேச இசை வகுக்கும் நொய்மை 
துருவமே துவமே சற்றும் சலியாது தோன்றி நிற்றல் 
கருது பற்றுக்கோடு ஊற்றம் கந்து தூ தஞ்சமும் பேர் 
** 5, 3, 2, 4 பெயர்கள் 16 
**549

#17
** அளத்தல் அளவின்மை மிடைதல் உள்ளது சிறத்தல் 
அளவையே கடனே கச்சம் அளத்தலின்நாமம் முப்பேர் 
அளவின்மை அமானம் மற்றை அபாரமே அநந்தமும் பேர் 
வெளிபடாத் துதைதலோடு ததைதலும் மிடைதல் என்ப 
ஒளிபெறு கழிவும் கூர்ப்பும் உள்ளது சிறத்தலின்பேர் 
** 3, 3, 2, 2 பெயர்கள் 17 
**550

#18
** அடி இடை கடை 
அடி முதல் எழுவாய் மோனை ஆதி பூருவம் தலைத்தாள் 
இடை சமன் பகலே நாப்பண் எய்து மத்தியம் நள்ளும் பேர் 
கடையின்பேர் இறுதி அந்தம் காட்டிய பின்னே முற்று 
முடிவு உடன் எல்லை ஆகும் மொழிந்திடும் ஈறும் அப் பேர் 
** 6, 5, 7 பெயர்கள் 18 
**551

#19
** அளவு எல்லை 
தாறொடு வரையே மானம்தனை துணை அவதி மட்டே 
காறொடு பரிமாணங்கள் அளவின்பேர் கருதில் ஒன்பான் 
கூறிய எல்லையின்பேர் கொற்றமே வரைப்பு காட்டை 
ஏறிய பரியந்தத்தோடு ஏணி இவ் ஐந்தும் என்ப 
** 9, 5 பெயர்கள் 19 
**552

#20
** வெண்மை சிவப்பு 
குருகு பால் தவளம் வெள்ளை குருத்து வால் சுவேதம் பாண்டு 
நரை விளர் பத்தும் வெண்மை சிதமும் சுக்கிலமும் நாட்டும் 
குருதி கிஞ்சுகம் இராகம் குறித்திடும் சேது பூவல் 
அருணம் சேய் சோணம் செக்கர் அரத்தம் சேப்பு இவை சிவப்பு ஆம் 
** 12, 11 பெயர்கள் 20 
**553

#21
** பச்சை பொன்மை புகர் நிறம் மாசு 
பாசு பை அரிதம் சாமம் பசுமை சாமளமே பச்சை 
பேசு பிங்கலம் பசப்பு பீதகம் பீதம் பொன்மை 
பூசிய குரால் புற்கோடு புகர் கபிலமும் ஆம் என்ப 
மாசின்பேர் கறை களங்கம் மலினம் ஆம் கசடும் அப் பேர் 
** 6, 4, 3, 4 பெயர்கள் 21 
**554

#22
** கறுப்பு ஒளி 
இருள் மணி நீலம் நல்லம் ஏற்ற காழகமே காளம் 
கருள் களம் காரி கார் மால் கறை மாயம் கறுப்பின்பேரே 
விரியல் மின் நிலவு வில் வாள் வெயில் நிழல் வாமம் நீமம் 
அரி நகை கிரணம் காந்தி ஆம் சோதி ஒளி ஈரேழ் பேர் 
** 13, 14 பெயர்கள் 22 
**555

#23
** ஒளி செயல் 
அலங்குதல் நகல் விளங்கல் அவிர்தலினொடு வயங்கல் 
இலங்குதல் மிளிர்தல் மின்னல் இலகுதலுடன் இமைத்தல் 
துலங்குதல் ஒளிர்தல் எங்கும் சுடருதல் பிறழ்தல் ஈரேழ் 
நலம்கொள ஒளிசெயல் பேர் தயங்கலும் நாட்டலாமே 
** 15 பெயர்கள் 23 
**556

#24
** அழகு 
எழில் வண்ணம் யாணர் மாமை இராமம் ஏர் நவ்வி நோக்கு 
செழுமையே சேடு செவ்வி சித்திரம் நலமே மாதர் 
குழகொடு பொற்பு நன்கு கோலமே மணி வனப்பு 
பழிபடா விடங்கம் மாழை பத்திரம் தோட்டி பாங்கு
**557

#25
** அழகு தொடர்ச்சி மழுங்கல் 
சுந்தரம் அணங்கு மஞ்சு சொக்கு தேசிகம்  அம் பொன்னே 
சந்தம் காரிகை கவின் பூ தளிமமே வாமம் காமர் 
அந்தமே மயமே ஒண்மை ஆய்ந்த ஆறேழும்தானே 
வந்திடும் அழகின்பேர் ஆம் வட்கல் புல்லெனல் மழுங்கல் 
** 42, 2 பெயர்கள் 25 
**558

#26
** நிறம் கட்டழகு பேரழகு 
வரி புகர் சாயல் சந்தம் மாமை கேழ் பசப்பு வண்ணம் 
குரு உரு வருணம் மேனி ஈராறும் நிறப்பேர் கூறும் 
கருது கட்டழகு காமர் கருது அலங்காரமும் பேர் 
பெருகிய விசித்திரம்தான் பேரழகு ஆகும் என்ப 
**  12, 2, 1 பெயர்கள் 26 
**559

#27
** இளமை மூப்பு வண்ணம் வடிவு 
குருளையே மழவு வெண்மை குழவு கோமளமே கொம்மை 
புருவை யெளவனமே நாகு போதகம் தருணம் நவ்வி 
முருகு இளை இளமை ஈரேழ் முற்றலே விருத்தம் மூப்பு ஆம் 
மருவிய வண்ணம் சந்தம் வடிவின்பேர் செண்ணம் ஆமே 
** 14, 2, 1, 1 பெயர்கள் 27 
**560

#28
** வலி 
மிடல் வயம் திண்மை மைந்து மெய்ந்நலம் தீரம் உம்பல் 
முடலை கொன் வாய்மை கூளி  மூரியே ஊக்கம் மீளி 
அடல் விறல் ஈடே ஏணே ஆண்மையே திறலே நோன்மை 
முடுகலே மல்லல் பாழி மொய்ம்பு உரன் முரணே துப்பு
**561

#29
** வலி (தொடர்ச்சி) வீரம் 
தானமே மதமே தோற்றம் சத்துவம் தாவே ஆற்றல் 
மானம் மல் உரமே முன்பு மதுகையே எறுழ் எண்ணைந்தும் 
ஊனம்இல் வலி வீரப்பேர் உறு பராக்கிரமம் சூரம் 
ஈனம்இல் செளரியம் வீரியமே சேவகமும் ஆமே 
** 40, 5 பெயர்கள் 29 
**562

#30
** மாட்சிமை குளிர் வளப்பம் கொழுமை 
தளவுஇலா அமைதி ஆன்றல் சால்பொடு செழுமை வாய்த்தல் 
வளம் நிறை மாண்பு மாண்டல் மாண் பத்தும் மாட்சிமைப் பேர் 
நளிர் பனி அளி சீதம் தண் நன் மழை சாந்தம் ஏழும் 
குளிர் வளப்பம் கொழுப்பு ஆம் கொழுமையே செழுமை என்ப 
** 10, 1, 1, 1 பெயர்கள் 30 
**563

#31
** அறிவு சுத்தம் 
மேதை ஞாபகம் தெருட்சி மிகும் மதி உணர்வு ஞானம் 
போதமே தெளிவு புந்தி புலன் உரன் அறிவின்பேர் ஆம் 
மேதகு புனிதம் தூவே மேத்தியம் செளசம் தூய்மை 
தூய்து பாவனமே சுத்தம் சசி பவித்திரம் துப்பும் பேர் 
** 11, 10 பெயர்கள் 31
**564

#32
** வெற்றி செல்வம் 
குறைவுஇலா வலனே வென்றி கொற்றமே வெற்றம் முல்லை 
விறல் சயம் வாகை ஆடு விசயம் பத்து இவை வெற்றிப் பேர் 
மறுஇல் சீர் விபவம் மாடு வாழ்க்கையே விருத்தி ஆக்கம் 
பொறி இடம் திரு பெருக்கம் போற்றிய வெறுக்கை செல்வம் 
** 10, 11 பெயர்கள் 32 
**565

#33
** அன்பு அருள் எழுமையும் தொடர்ந்த அன்பு 
பரிவு நார் வாரம் ஈரம் பற்று அளி பாசம் அன்பு ஆம் 
புரிவு ஆணம் நேயமும் பேர் போற்றிய தயை இரக்கம் 
கருணையே கிருபை மற்றுக் கருதிய தகவு இவ் ஐந்தும் 
அருளின்பேர் உழுவல் என்பது எழுமையும் தொடர்ந்த அன்பு 
** 10, 5, 1 பெயர்கள் 33
**566

#34
** மனம் குறிப்பு 
உன்னமே அகமே சித்தம் உள்ளமே இதயம் நெஞ்சு 
முன்னம் ஏழ் மனத்தின்பேர் ஆம் முதிர் சிந்தை நினைவு சேத்து 
சொன்ன இங்கிதம் கருத்து சூழல் எண்ணம் குறிப்பு ஆம் 
வன்மை நாட்டியம் தியானம் மதம் வினை ஏடலும் பேர் 
** 7, 13 பெயர்கள் 34 
**567

#35
** குறித்தல் வரையறுத்தல் 
கண்ணலே கருதல் பேணல் காணலே நுதலல் சுட்டல் 
எண்ணலே புகறல் எட்டும் குறித்திடல் என்னலாகும் 
நண்ணிய கணித்தலோடு நாட்டிய குணித்தல் எல்லாம் 
மண்ணுளோர் வரையறுத்தல் பெயர் என்ப மதித்தலும் பேர்
** 8, 3 பெயர்கள் 35 
**568

#36
** நினைத்தல் ஏமாப்பு - இறுமாப்பு வீற்றிருத்தல் 
உன்னலே படர்தல் ஊழ்த்தல் உள்ளுதலொடு சிந்தித்தல் 
முன்னலே வலித்தல் ஊகம் மொழிபவே நினைத்தல் எண் பேர் 
மன்னு செம்மாப்பு ஏமாப்பு மற்றை ஏக்கழுத்தமும் பேர் 
இன்னவை இறுமாப்பாகும் இவையே வீற்றிருத்தல் என்ப 
** 8, 2, 2, 2 பெயர்கள் 36 
**569

#37
** உள்ளக் களிப்பு நல்லுணர்வு 
தருக்கொடு மலர்ச்சி மத்தம் தன்கு பாடவம் களிப்பு 
செருக்கு அபிமானம் ஏமம் திகழ் பெருமிதம் மதர்ப்பு 
பொருத்திடும் மதர்வு ஈராறும் புகலும் உள்ளக் களிப்பு ஆம் 
உருத்திடு ஞானம் சீலம் ஓதும் நல்லுணர்வின்நாமம் 
** 12, 2 பெயர்கள் 37 
**570

#38
** இன்பம் பேரின்பம் தெளிவு பொறை 
நகை கடி மகிழ்ச்சி ஏமம் நயம் சுகம் தொய்யல் இன்பம் 
மகிழும் ஆனந்தம் ஒன்றே மன்னு பேரின்பம் என்ப 
திகழ் நனவு உணர்வு தேறல் தேற்றம் நல் தெளிவு நாற்பேர் 
புகழ்பெறு கமித்தல் நோன்றல் சகித்திடல் பொறை முப்பேரே 
** 7, 1, 4, 3 பெயர்கள 38 
**571

#39
** நன்று தருமம் ஊழ் 
நறுமையே விழுமம் சேடு நயம் நன்றி யாணர் நன்னர் 
உறுதி ஆம் கடவுள் ஒண்மை உத்தமம் பத்தும் நன்று ஆம் 
அறம் என்ப தருமம்தானே ஆகும் ஊழின்பேர் தெய்வம் 
நிறுவிய விதியே உண்மை வரன்முறை நியதியும் பேர் 
** 10, 1, 5 பெயர்கள் 39 
**572

#40
** தவம் உவகை கண்ணோட்டம் நிலையுடைமை 
தவம் என்ப விரதம் நோன்பு ஆம் உவவொடு தவசும் ஆகும் 
உவகை மாராயம் மற்றை ஓகையே பிரியமும் பேர் 
நவமதாம் கேண்மை கண்ணே நாகரிகம் கண்ணோட்டம் 
இவை நயப்புணர்வும் ஆமே ஏண் நிலையுடைமை என்ப 
** 4, 3, 4, 1 பெயர்கள் 40 
**573

#41
** நட்பு உள்ளத்தின் மிகுதி கூறுபாடு இலாபம் 
தூக்கிய கேண்மையே கேள் தொடர்பு என்ப நட்பு முப்பேர் 
ஊக்கமே உரன் இரண்டும் உள்ளத்தின் மிகுதி என்ப 
நீக்கிலா வகை திறங்கள் நிகர்இலாக் கூறுபாடே 
ஆக்கமே பலன் பயம் பேறு அதிகம் ஊதியம் இலாபம் 
** 3, 2, 2, 6 பெயர்கள் 41 
**574

#42
** அவாவின்மை அமையுமென்றல் துறத்தல் வெட்கம் 
வெறுப்பொடு முனைவு ஒல்லாமை வேண்டாமை உவர்ப்பே மாவே 
அறுத்திடல் அவாவின்மைப் பேர் அலம் என்பது அமையும் என்றல் 
துறத்தல் சார்பறுத்தலோடு  துறவியே விரத்தி முப்பேர் 
மறுத்தல் நாண் சமழ்ப்பு வெள்கல் வட்கல் உட்கு இலச்சை வெட்கம்
** 7, 1, 3, 7 பெயர்கள் 42
**575

#43
** ஒற்றுமை சகாயம் நிலைபெறுதல் ஏவல் 
ஒருமை தொட்டிமை குறிப்போடு ஒற்றுமை என்ப முப்பேர்
தரு பெருந்துணையே துப்பு சகாயமே இணையமும் பேர் ஆம் 
பெருகிய மன்னல் துஞ்சல் திதி நிலைபெறுதல் முப்பேர் 
விரவிய தாணுவும் பேர் மேவிய ஆணை ஏவல் 
** 3, 3, 4, 1 பெயர்கள் 43 
**576

#44
** ஒழுக்கம் நீதி அழுக்கின்மை 
செயல் முறை நடை ஆசாரம் செய்தி கையறையே கையே 
இயல்பு மஞ்சரியே நீள் சாரித்திரம் ஒழுக்கம் பத்தாம் 
மயல் அறும் நெறி நியாயம் மரியாதை நீதி முப்பேர் 
வியனுறும் அழுக்கின்மைக்கு விமலமும் அமலமும் பேர்
** 10, 3, 2 பெயர்கள் 44 
**577

#45
** பழமை புதுமை 
தொல்லை முன் பண்டு முந்தை தொன்று பூருவம் புராணம் 
ஒல்லையே புராதனத்தோடு உற்ற ஊழ் பழமை பத்தாம் 
நல்ல நூதனம் விருந்து நவம் கடி புத்தேள் கோடி 
புல்லிய யாணர் வம்பு புனிறு ஒன்பான் புதுமையின்பேர்
** 10, 9 பெயர்கள் 45 
**578

#46
** பொலிவு நிச்சயம் ஆக்கம் பெயர் 
நீக்கிலாத் துப்பு மல்லல் நெடிய மங்கலமே பூவே 
போக்கமே மலர்ச்சி பொம்மல் பொற்பு இவை பொலிவு எண் பேர் ஆம் 
தீர்க்கமே தரிப்பு மன்ற தேறு இவை நிச்சயப்பேர் 
ஆக்கமே நந்தல் என்ப அபிதானம் நாமம் பேர் ஆம் 
** 8, 4, 1, 2 பெயர்கள் 46 
**579

#47
** உரித்து கணிதம் நிலை நீங்காமை முறைமை 
பாங்கொடு காணி தாயம் பால் கெழுதகைமை ஆட்சி 
ஈங்கு இவை உரித்தின்நாமம் எண்ணமே கணிதம் என்ப 
நீங்கருநிலை தண்டாமை நிகர்இல் ஆனாமையும் பேர் 
பாங்குறும் மரபு பாரம்பரியமே முறைமை ஆகும் 
** 6, 1, 2, 2 பெயர்கள் 47 
**580

#48
** அதிசயம் காரணம் பின் 
வியப்பு விம்மிதத்தினோடு விசித்திரம் இறும்பூது இன்ன 
மயக்குஇலா அதிசயப்பேர் மற்றை அற்புதமும் ஆகும் 
செயத்தகு காரணப்பேர் திறம் ஏது பொருட்டு வாயில் 
நயத்தகு நிமித்தமும் பேர் நாடுங்கால் வழியே பின் ஆம் 
** 5, 5, 1 பெயர்கள் 48 
**581

#49
** வருவாய் பொருந்தல் பற்பலமுறை குடி வெகுவிதம் 
மல்லொடு வளமே வாரி பகுதியும் வருவாயின்பேர் 
புல்லுதல் கெழுமல் என்ப பொருந்தலே அமைவும் அப் பேர் 
பற்பல முறையின்பேரே பரியாயம் திணை குடிப் பேர் 
நல்லதாம் வெகுவிதம் நாநாவிதம் விவிதம் ஆமே 
** 4, 3, 1, 1, 2 பெயர்கள் 49 
**582

#50
** அறிவுடைப் பொருள் அறிவு இல் பொருள் 
** அறிந்தும் அறியார் போலுதல் 
அறிந்திடும் பொருள் பேர் சித்து சேதனம் என்பர் ஆய்ந்தோர் 
அறிந்திடாப் பொருள் அசித்தோடு அசேதனம் சடமும் ஆகும் 
சிறந்திட உயிர்கள் ஈசன் செய்திடும் சீல நூலை 
அறிந்தும் அஃது அறியாதாரைப் போறலே அறிமடம்தான் 
** 2, 3, 1 பெயர்கள் 50 
**583

#51
** அறிவின்மை பேரறிவு அழிவின்மை உறவு நிறைவேறல் 
அறிவின்மை மடம் எய்யாமை மருட்சி பேதைமை என்றாகும் 
பெறும் முதுக்குறைவுதானே பேரறிவு என்று கூறும் 
குறைவுஇலாக் கோணை கன்னி குமரியே அழிவின்மைப் பேர் 
உறவியே உறவின்பேர் ஆம் நிறைவேறல் சபலம் ஆமே 
** 4, 1, 3, 1, 1 பெயர்கள் 51 
**584

#52
** கழி பிறப்பு வரு பிறப்பு இப் பிறப்பு 
** ஒரு பிறப்பு எப்பிறப்பும் எழு பிறப்பு 
உம்மையே கழிபிறப்பு ஆம் ஒழிந்திடு வருபிறப்பிற்கு 
அம்மையும் மறுமையும் பேர் ஆன இப் பிறப்பின்நாமம் 
இம்மை ஆம் ஒரு பிறப்பே இயம்பிடில் ஒருமைதானே 
எம்மை எப்பிறப்பும் என்ப ஏழ் பவம் எழு பிறப்பு ஆம் 
** 1, 2, 1, 1, 1,1 பெயர்கள் 52 
**585

#53
** மணம் மிகுமணம் நாறுதல் துர்க்கந்தம் 
முருகு தேன் கடி ஆமோதம் மோதவம் கந்தம் வேரி 
விரை நறை மன்றல் வம்பு வெறி மரு மணம் பல் முப்பேர் 
பரிமளம் மிகுமணப்பேர் பரவி நாறுதல் கந்தித்தல் 
விரவிய கமழ்தலும் பேர் மேவு துர்க்கந்தம் பூதி
** 13, 1, 2, 1 பெயர்கள் 53 
**586

#54
** இனிமை தித்திப்பு கைத்தல் புளிப்பு கார்ப்பு 
தூய சேறு அமுது சாரம் சுவை தீம் தேம் இனிமையின்பேர் 
தீய தேம் கனி தித்திப்பு ஆம் மதுரமும் ஆகும் தித்தம் 
ஆயது கைத்தலின்பேர் ஆமிலம் புளிப்பதாகும் 
காயமே கடுகம் காழ்ப்பு கரில் காரம் கடு கார்ப்பு ஆமே 
** 6, 3, 1, 1, 5 பெயர்கள் 54 
**587

#55
** அச்சம் கலக்கம் 
வெருவு சூர் பீர் வெறுப்பு வெறி வெடி கவலை பீதி 
உருவு பேம் விறப்பு கொன்னே உட்கு நாம் பனிப்பு அணங்கு 
தரு புலம்பு அதிர்ப்பு அடுப்பு தரம் பயம் உரும் அச்சப்பேர் 
துரிதமே பிரமம் வந்து சூழ் கதனம் கலக்கம் 
** 22, 3 பெயர்கள் 55 
**588

#56
** அச்சக் குறிப்பு தாழ்வு 
நிலைபெறாது ஓடல் தேங்கல் ஞெரேலெனல் கூசல் திட்கல் 
உலமரல் அளுக்கல் ஞொள்கலொடு துடுக்கெனலே துட்கல் 
குலைதல் வெய்துறலே அச்சக்குறிப்பு துண்ணெனலும் கூறும் 
தலையிழிபுடனே சாய்ப்பு தஞ்சமே தண்மை தாழ்வு 
** 13, 4 பெயர்கள் 56 
**589

#57
** நடுக்கம் எளிமை புல்லறிவு 
விதிர்ப்பொடு விதப்பு கம்பம் விதலை கம்பிதம் பனிப்பு 
பொதிர்ப்பு உலைவு இவை நடுக்கம் பொருந்திடும் எளிமை எண்மை 
மதிப்பிலாப் பரிபவங்கள் மற்று இழிதகவும் ஆகும் 
பிதற்று சிற்றறிவு வெண்மை வெளிறு புல்லறிவின்பேரே 
** 8, 3, 3 பெயர்கள் 57 
**590

#58
** குற்றம் 
ஆசு தோம் பிழையே போக்கே அரில் கரில் பழி அரிப்பு 
காசு மை தவறே மானம் கறை குறை மிறை கழிப்பு 
மாசொடு துகளே தப்பு மறு நவை வசை கொழிப்பே 
ஏசொடு புரையே கோதே ஏதம் மூவொன்பான் குற்றம் 
** 27 பெயர்கள் 58 
**591

#59
** மறத்தல் இழிவு தளர்ச்சி இரக்கம் 
வழுக்கொடு மறவி புன்மை மறலொடு பொல்லாங்கே கீழ் 
இழுக்கொடு சோர்வு பொச்சாப்பு இகழ்ச்சியும் மறத்தலின்பேர் 
பழித்திடும் துவ்வும் மன்னும் பகர்ந்திடும் இழிவுதானே 
இழைத்திடும் தளர்ச்சி ஏட்டை அசாவும் ஆம் இனைவு இரக்கம் 
** 10, 2, 1, 1 பெயர்கள் 59 
**592

#60
** உட்டிணம் கொடுமை 
கடுகிய வெம்மை கோரம் கருமையே உருமம் வெப்பம் 
உடன் அழல் அழனம் தாபம் உருப்பம் உட்டிணப்பேர் ஒன்பான்
கொடுமையின்பேரே சண்டம் கோடணை கடினம் கோரம் 
கடுமை உக்கிரம் உறைப்பு கலாம் சடம் வஞ்சம் பூதி 
** 9, 11 பெயர்கள் 60 
**593

#61
** வறுமை பகை 
குறை இலம்பாடு மிச்சை குறுவாழ்க்கை மிடி நிரப்பு 
சிறுமையே ஒற்கம் இன்மை தீய நல்குரவே அல்கல் 
வறுமையின் பெயர் பன்னொன்றாம் வரு தரித்திரமும் ஆகும் 
மறல் இகல் முனை முரண் தா மடி தெவ்வோடு அரி பகைப் பேர் 
** 12, 8 பெயர்கள் 61 
**594

#62
** கோபம் கோபக் குறிப்பு 
வெறுத்தலே சினம் குரோதம் வெகுளி மற்று அரிப்பு சீற்றம் 
செறித்திடும் கலாம் கதங்கள் செயிர் ஒன்பான் கோபத்தின்பேர்
கறுப்பொடு சிவப்பே போதக் கன்றலே புழுங்கல் சீறிக் 
குறித்திடும் புகைதல் பொங்கிக் கொதித்தல் கோபக்குறிப்பு ஆம்
** 9, 6 பெயர்கள் 62 
**595

#63
** முன்கோபம் பெருங்கோபம் வைரம் 
குருத்த முன்கோபம் வெம்பல் கொந்தலே கனிதல் கோம்பல் 
பெருத்த கோபம் விடைத்தல் பெருகிய முனைதல் சீறல் 
உருத்தலே உலறல் காய்தல் உடற்றல் தீவிரமும் ஆகும் 
தரித்திடும் வயிரம் செற்றம் சலம் பவம் தொந்தம் வேரம் 
** 4, 8, 5 பெயர்கள் 63 
**596

#64
** வருத்தம் மேன்மை 
உயவு அனுக்கம் கவற்சி உயங்குதல் கசிவு அணங்கே 
அயர்வொடு நொசிவே நோவே ஆய்வொடு மிறை சமழ்த்தல் 
வயாவொடு ஆகுலம் அழுங்கல் வருத்தம் மூவைந்தும் வைக்கும் 
வியல் மிகும் ஏற்றம் ஞெள்ளல் சாலூரம் மேதை மேன்மை 
** 15, 4 பெயர்கள் 64 
**597

#65
** வேறுபாடு தனிமை 
வீற்றொடு விகிர்தம் பின்னம் விபரீதம் விரூபம் விள்ளல் 
வேற்றுமை திரிபு பேதம் விகடம் ஈரைந்தும்தானே 
ஏற்றிய வேறுபாட்டுக்கு இயம்பிய நாமம் ஆகும் 
போற்றிய தனிமை ஏகம் புலம்பு கேவலமும் ஆமே 
** 10, 3 பெயர்கள் 65 
**598

#66
** மயக்கம் 
இருள் உணராமை மத்தம் இளமை மாழாத்தல் பித்தம் 
வெருள் களி கழுமல் மோகம் மேவும் உன்மத்தம் மாழ்கல் 
கருதிய அனந்தர் ஏமம் களன் பேது மையல் மைந்து 
மருள் மறல் மான்றல் மூவேழ் மயக்கம் ஆம் மயர்வும் அப் பேர் 
** 22 பெயர்கள் 66 
**599

#67
** தீது சோம்பு 
தீங்கு கோள் அந்தராயம் செப்பு விக்கினம் முட்டுப்பாடு 
ஓங்கிய அலாபம் தட்டே ஊறே அந்தரமும் தீது ஆம் 
ஆங்குள அலைசல் ஆஞ்சி அழுங்கலே மடியே ஞொள்கல் 
தூங்கலே அசைவே மந்தம் சோகம் ஆலசியம் சோம்பு ஆம் 
** 9, 10 பெயர்கள் 67 
**600

#68
** வஞ்சம் குணம்இன்மை தாமதம் 
குடிலம் புள்ளுவமே கூடம் குத்திரம் மாயை குய்யம் 
படிறு சாட்டியமே வஞ்சம் பட்டிமைதானும் அப் பேர் 
செடி சீத்தை சிதம்பினோடு சீரணம் குணம்இன்மைப் பேர் 
மிடி தரும் தாமதப்பேர் விளம்பனம் விளம்பம்தாமே 
** 9, 4, 2 பெயர்கள் 68 
**601

#69
** கேடு இகழ்ச்சி அருவருப்பு 
இழிவொடு திரிதல் நந்தல் இறுதலே முறிதல் கந்தல் 
வழு கயம் சிதைவு அழுங்கல் மடி சுதம் கேடு ஆம் நிந்தை 
இழிவு எள்ளல் நகல் ஒல்லாமை இகழ்ச்சி ஆம் உவர்ப்பும் அப் பேர்
குழைவுறா அருவருப்பு குற்சிதம் பயிர்ப்பும் ஆமே 
** 12, 6, 2 பெயர்கள் 69 
**602

#70
** பாவம் பயனிலாமை சந்தேகம் ஒருதலைக் காமம் 
மறம் அகம் கலுடம் பங்கம் வரும் செடி துரிதம் பாவம் 
வறிது கொன் வீண் விருதா மன்னிய பயனிலாமை 
அறைதரு சந்தேகப்பேர் அயிர்ப்பு ஐயம் கடுத்தல் சங்கை 
கறைஇல் ஓர்தலைக்காமப்பேர் கைக்கிளை ஆகும் என்ப 
** 6, 4, 4,1 பெயர்கள் 70 
**603

#71
** பிறப்பு சூதகம் ஈன்றணிமை 
** தோகைமார் தொடாப் பொருட்டு 
சிறந்திடும் சன்மம் தோற்றம் செனனமே பவம் சனிப்பு 
பிறந்தை உற்பவம் என்று ஏழும் பிறப்பு ஆம் உற்பத்தியும் பேர் 
அறைந்த சூதகம் ஆசெளசம் புனிறே ஈன்றணிமையின்பேர் 
துறந்த வாலாமை பூப்பு தோகைமார் தொடாப்பொருட்டே 
** 8, 1, 1, 2 பெயர்கள் 71 
**604

#72
** அதிசயமுற இரங்கல் மனக்கோட்டம் அழுக்காறு 
அன்னோவோடு அந்தோ ஆ ஓ அத்தோவோடு அச்சோ ஐயோ 
என்னே எற்று எவன் எனும் சொல் அதிசயமுற இரங்கல் 
மன்னும் ஒளவியமே என்ப மனக்கோட்டம் அழுக்காற்றின்பேர் 
சொன்ன நோனாமை கூரம் சூழ்ந்திடும் பொறாமை முப்பேர்
** 10, 1, 3 பெயர்கள் 
**605

#73
** துன்பம் 
அல்லலே அலக்கண் மம்மர் அரந்தை கோட்டாலை பீழை 
செல்லல் கேதம் கலக்கம் சிறுமை சூர் உறுகண் புன்கண் 
சொல்லும் இட்டளம் இன்னாவே துனி பருவரலே துக்கம் 
ஒல்லும் நோ அழுங்கல் பீடை உலமரல் அல்லகண்டம்
**606

#74
** துன்பம் (தொடர்ச்சி) 
கவ்வை யாதனை பழங்கண் கையாறு நடலை பையுள் 
எவ்வம் ஏதம் வெறுப்பே இடும்பையே இடுக்கண் இன்னல் 
வவ்விய படர் பனித்தல் வறுமை வெய்துறவே பைதல் 
வெவ்விய கவலை தீய விழுமம் ஆறேழும் துன்பம் 
** 42 பெயர்கள் 
**607

#75
** ஆசை 
மாதர் நச்சு இச்சை ஏடை வயா நம்பு நசை நயப்பு 
காதல் வெப்பம் விருப்பம் காமமே இராகம் பற்றே 
ஆதரம் பெட்பு வேட்கை ஆர்வமே மேவல் வெஃகல் 
ஓதிய விழைவு மூவேழ் உறு பெயர் ஆசை ஆமே 
** 21 பெயர்கள் 
**608

#76
** வேட்கைப் பெருக்கம் காமநோய் 
சூழ்தரும் மோகம் நம்பல் சொற்றிடும் இரதி வெஃகல் 
தாழ்தலே கவர்தல் பெட்டல் சார்புடன் இவறல் வேண்டல் 
வீழ்தல் வேணவா ஈராறும் வேட்கையின் பெருக்கம் என்ப 
மாழ்கிய விரகம் காமம் மதனமே காமநோய் ஆம் 
** 12, 3 பெயர்கள் 76
**609

#77
** நோய் வேதனை பண்ணும் நோய் நரக நோய் 
மாரி ஆமயமே புன்கண் மடி நிழல் மடங்கல் பையுள் 
சூர் பிணி உரோகம் குந்தம் சூழ் அணங்கு ஈராறும் நோய் 
பாரிய வாதை பீதி வேதனைபண்ணும் நோய் ஆம் 
ஓரும் யாதனை கொல்லா நோன்புறார் உறும் நரகநோயே 
** 12, 2, 1 பெயர்கள் 77 
**610

#78
** உவமை 
அன்னவே அனைய செத்தே ஆங்கு ஒப்ப புரைய போல 
என்னவே பொருவ எள்ள இகலவே கடுப்ப மான 
சொன்ன கேழ் தகவு தூக்கு துணை இணை நிகர நேர 
மன்னும் வீழ்வு உறழ அற்றே மலைவு எண் மூன்று உவமைப் பேரே
** 24 பெயர்கள் 78 
**611

#79
** குணம் பண்பு 
மாலை நீர் தகவு பெற்றி மரபொடு கிழமை வண்மை 
சால்பொடு தகுதி பான்மை தகைமையே இயல்பு தன்மை 
பால் விதி கொள்கை பண்பு படி முறை பரிசு இவ்வெல்லாம் 
கோலம் ஆர் குணம் நாலைந்தாம் குணம் நிறம் இரண்டும் பண்பாம்
** 20, 2 பெயர்கள் 79 
**612

#80
** கை ஒழியாமை ஒழுக்கம் செயல் அறல் 
** அடைக்கலம் உரிமை 
கையொழியாமை கை தூவாமை ஆம் கை ஒழுக்கம் 
கையறல் செயலறற் பேர் கையடை அடைக்கலப் பேர் 
மை இலா உரிமையின் பேர் வரு கெழுதகைமையோடு 
பொய்யிலாக் கிழமை மற்றை உரித்து எனப் புகலலாமே 
** 1, 1, 1, 1, 3 பெயர்கள் 80 
**613

#81
** ஒருபலம் காற்பலம் தக்கு நூறுபலம் 
** ஒன்று பத்து நூறு ஆயிரம் 
தொடி ஒரு பலம் ஆம் கஃசு சொற்ற கால் பலம் ஆம் தூக்கு 
நெடிய கா துலாங்கள் என்ப நிறை நூறு பலமே ஆகும் 
படியில் ஒன்று ஏகம் என்ப பத்து என்ப தசம் ஆம் நூறு 
நொடிதரின் சதம் என்று ஆகும் ஆயிரம் நூற்றுப்பத்தே 
** 1, 1, 2, 1, 1, 1, 1, 1 பெயர்கள் 81
**614

#82
தேங்கிய புகழான் குன்றைக் குணபத்திரன் திருத்தாள் போற்றி 
வீங்கு நீர்ப் பழனம் சூழ்ந்த வீரை மண்டலவன் செய்தான் 
பாங்கினால் விளங்கு பண்பு பற்றிய பெயரின் ஈட்டம் 
ஓங்கிய கவிதை எண்ணில் ஒன்பதிற்றொன்பது ஒன்றே
** எட்டாவது - பண்பு பற்றிய பெயர்த் தொகுதி முற்றிற்று 

@9. செயல் பற்றிய பெயர்த் தொகுதி 
**615

#1
** காப்பு 
வியன் மிக்க வைரத்தால் வேர் வீழ்த்து பொன் கவடு கொண்டு 
மயம் மிக்க மரகதத்தால் வண் தழை பொதுளி பூந் தொத்து 
இயலுற்ற பதுமராகம் எதிர் பிண்டி இறை தாள் போற்றி 
செயல் பற்றும் பெயர்க் கூட்டத்தைச் செப்புவம் இப்பால் கேண்மின்
**616

#2
** செய்தொழில் செய்தல் பிறப்பித்தல் 
செயல் விதி கருமம் கன்மம் செய்தொழில் வினையும் அப் பேர் 
அயர்தலே வனைதல் ஆற்றல் குயிறலோடு இழைத்தல் செய்தல் 
நியமித்தல் விதித்தல் மற்றும்  திருமித்தலொடு சிட்டித்தல் 
பயனுறப் படைத்தலோடு பாரித்தல் பிறப்பித்தல் பேர் 
** 5, 5, 6 பெயர்கள் 2 
**617

#3
** மகளிர் விளையாட்டு பொழுது போக்கல் மெச்சல் 
தொடலை உண்டாட்டு பொய்தல் சூழ் விலாசனையே வண்டல் 
கெடவரல் பண்ணை உப்பு கிரீடையே கேளி ஓரை 
புடை முலையார் ஆடல் பேர் பொழுது போக்கே வினோதம் 
படி பாராட்டுதல் குலாவல் பரிந்து கொண்டாடல் மெச்சல் 
** 11, 1, 3 பெயர்கள் 3 
**618

#4
** விவாகம் உற்சவம் 
வதுவை கைப்பற்றலே தீவலம்செய்தல் மணம் கல்யாணம் 
விதியுளி வேட்டல் மன்றல் விவாகம் எண்பேர் விளங்கும் 
புது விழா முருகு சாறு புத்தேள் உற்சவம் ஆம் சேறு 
துதை மலர் கொண்டு போற்றும் துணங்கறல் இரண்டும் அப் பேர் 
** 8, 5 பெயர்கள் 4 
**619

#5
** ஒப்பனை சூடுதல் சொருகுதல் 
புனைதல் கைசெய்தல் வேய்தல் பொற்புடன் அலங்கரித்தல் 
வனைதலே அணிதல் பூசல் மண்ணல் ஒப்பனை ஒன்பானாம் 
வன மலர் மிலைதல் வேய்தல் மலைதல் சூடுதல் இ முப்பேர் 
சினை மலர் அடைச்சலோடு செருகுதல் சொருகுதல் பேர் 
** 9, 3, 2 பெயர்கள் 5 
**620

#6
** உண்ணல் விழுங்கல் 
அருந்திடல் துய்த்தல் மாந்தல் அயிறலே அழுதுசெய்தல் 
பொருந்தவேதாம் கைதொட்டல் புசித்தல் போசனமே ஆர்தல் 
பரிந்தனர் நுகர்தல் தின்றல் பாரணம் மிசைதல் துற்றல் 
இருந்து உணல் பேர் விழுங்கல் இசைதரு நொண்டல் நுங்கல் 
** 14,2 பெயர்கள் 6 
**621

#7
** நித்திரை நிரம்பாத் தூக்கம் எழுப்பல் 
துயிலல் கண்வளர்தல் பள்ளி துயிறலே உறங்கல் துஞ்சல் 
பயிலும் கண்படை அனந்தர் படை கனவோடு பத்தும் 
இயலும் நித்திரை ஆம் தூங்கல் என்பது நிரம்பாத்தூக்கம் 
அயலவர் எடுத்தல் எற்றல் ஆங்கு அவை எழுப்பல் ஆமே 
** 10, 1, 2 பெயர்கள் 7 
**622

#8
** அழுதல் காண்டல் கடைக்கணித்தல் 
விரவிய அழுதலின்பேர் விம்மலே கலுழ் கலக்கம் 
பொருமுதல் கசிவே ஏங்கல் உரோதனம் இரங்கல் எட்டாம் 
தெரிசனம் பார்வை நோக்கம் சிறப்பின் கண்ணுறல் காண்டல் பேர் 
அருமையின் சிறக்கணித்தல் அபாங்கமே கடைக்கணித்தல் 
** 8, 4, 2 பெயர்கள் 8 
**623

#9
** கொடை 
புரவு தானம் பகுத்தல் பொழிதலே உதவல் நீட்டல் 
விரவு உபகாரம் வேள்வி விதரணம் கவிகை வண்மை 
அருளல் வேளாண்மை ஈகை அளித்தலே உதாரம் வீசல் 
தருதலினொடு தியாகம் கொடை கடப்பாடும் சாற்றும் 
** 20 பெயர்கள் 9 
**624

#10
** வரையாது கொடுத்தல் 
படை மயக்குற்றபோதும் படைமடம் ஒன்றிலாதான் 
மடை செறி கடகத்தோளான் மதிக்குடை மன்னர்மன்னன் 
கெடி மன்னர் வணங்கும் தாளான் கிருட்டிணராயன் கை போல் 
கொடை மடம் என்று சொல்ப வரையாது கொடுத்தல் ஆமே 
** 1 பெயர் 10 
**625

#11
** பிச்சை இரத்தல் கரத்தல் 
போற்றிய பயிக்கம் பாகம் பொருந்திய பலியே பிண்டம் 
சாற்றிய பிடிதம் ஐயம் சரிதை ஏழ் பிச்சையின்பேர் 
ஏற்றலே குறைகோள் பின் சென்று இரத்தலே வேண்டலும் பேர் 
மாற்றலே கரத்தல் ஆகும் மறுத்தலும் நிறுத்தலும் பேர் 
** 7, 3, 3 பெயர்கள் 11
**626

#12
** எழுதுதல் எழுத்து அரக்குதல் தூய்தாக்கல் 
தெரித்தலே வரைதலோடு தீட்டுதல் பொறித்தல் கீறல் 
வரித்தலே எழுதுதல் பேர் வரி பொறி கணக்கு இரேகை 
விரித்த அக்கரம் எழுத்து ஆம் விரகொடு சிதைத்தல் தேய்த்தல் 
அரக்குதல் கீழ்தலும் பேர் அடைவே தூய்தாக்கல் சீத்தல் 
** 6, 5, 3, 1 பெயர்கள் 12
**627

#13
** பூசை யாகம் மீதூரல் 
அர்ச்சனை வழிபாடே ஆராதனை மூன்றும் பூசை 
எச்சமே கிரது வேள்வி இட்டியே அசனம் ஓமம் 
மெச்சிய மகமே யூபம் விதியுளி யாகம் ஆகும் 
நிச்சயம் மீதூரல் போர் இடங்கழி நெருங்கலும் பேர் 
** 3, 9, 2 பெயர்கள் 13
**628

#14
** வேர்வு வருத்தம் தீர்தல் வடுப்படல் விடுதல் 
** அடங்கல் சோர்வு வழு 
வியர்த்தலே சுவேதம் வேர்வு ஆம் கசிவும் ஆம் அயாவுயிர்த்தல் 
மயக்கு அற வருத்தம் தீர்தல் வடுப்படல் கதுவாய் ஆமே 
உயிர்த்தலே விடுதல் என்ப ஒருங்கு என்ப அடங்கல்தானே 
கயக்கு சோர்வு ஆம் பிறக்கு காட்டிய வழுவின்பேரே 
** 3, 1, 1, 1, 1, 1, 1 பெயர்கள் 14
**629

#15
** மூடுதல் பரத்தல் மஞ்சனம் குளித்தல் பிறகிடல் 
மூடுதல் கவித்தல் மூய்தல் முடியவே பரத்தல் ஊர்தல் 
நீடிய நானம் என்ப நிகழ்த்து மஞ்சனத்தின்நாமம் 
ஆடலே படிதல் தோய்தல் ஆம் இவை குளித்தல் என்ப 
பீடு அறப் பிறகிடல் பேர் பிறக்கிடல் பின்றல் ஆமே 
** 2, 1, 1, 3, 2 பெயர்கள் 15 
**630

#16
** அடக்கம் தங்கல் பாந்தல் தேய்த்தல் 
முடக்கமே மடங்கல் குத்தி முணங்கொடு நொறில் ஒடுக்கம் 
அடக்கம் ஆம் வதிதல் வைகல் அல்கலே இறுத்தல் தாழ்தல் 
விடுத்தல் ஆறும் தங்கல் பேர் வசித்தலோடு இறையும் அப் பேர் 
ஒடுக்கமே பதுங்கல் பாந்தல் உரைத்தலே உரிஞ்சல் தேய்த்தல் 
** 6, 8, 2, 2 பெயர்கள் 16 
**631

#17
** காதலோர் கூட்டம் புலத்தல் புலவி நீட்டம் 
மெலிவுஇல் மைதுனம் புணர்ச்சி விழைச்சொடு விழைவு தல்லே 
கலவியே கிரீடை ஆடல் காதலோர் கூட்டம் எண் பேர் 
புலவியே புலத்தல் என்ப ஊடலும் அதன்பொருட்டே 
நலம் மிகு துனி எனும் சொல் நாட்டிய புலவி நீட்டம் 
** 8, 2, 1 பெயர்கள் 17 
**632

#18
** கூடியும் கூட்டமின்மை நணுகாராகி உரை 
** மறுத்திருத்தல் ஆடவர் நீங்க உள்ளே 
** அடைத்திருத்தல் ஊடலைத் தீர்த்தல் 
கூடியும் கூட்டம்இன்மை குலவிய புலவி என்ப 
ஊடலே நணுகாராகி  உரை மறுத்திருத்தல் ஆகும் 
ஆடவர் நீங்க உள்ளே அடைத்துறல் துனியே என்பர் 
ஊடலைத் தீர்த்தலின்பேர் உணர்த்தல் ஒல்லல் ஆகும் 
** 1, 1, 1, 2 பெயர்கள் 18 
**633

#19
** தண்டனிடல் ஆலிங்கனம் கும்பிடல் 
வந்தனம் பணிதல் காணல் வழிபடல் பணிவு இறைஞ்சல் 
தம் தலை வணங்கல் பார்த்தல் தாழ்தல் ஒன்பானும் தண்டன் 
முந்திய தழுவல் விள்ளல் முயங்கல் ஆலிங்கனப்பேர் 
அந்தமாத் தொழல் கைகூப்பல் அஞ்சலி கும்பிடல் பேர் 
** 9, 3, 3 பெயர்கள் 19 
**634

#20
** சாவு 
துஞ்சலே வீடல் மாளல் சொற்றிடும் விளிவு வீவு 
முஞ்சலே உலத்தல் பொன்றல் முடிதலே துவன்றல் மாய்தல் 
எஞ்சிய மரணம் வியோகம் இல்லெனல் கழிவு இறத்தல் 
அஞ்சிய தபுதல் சாவின் அபிதானம் பன்னேழ் ஆமே 
** 17 பெயர்கள் 20 
**635

#21
** முறிதல் சாய்தல் 
பரிதலே ஞெமிர்தல் பற்றாது ஒடிதலே இடிதல் சால 
முரிதலே இறுதல் ஆறும் முறிதலே ஒசிதலும் பேர் 
இரிதலே நெரிதல் சோரல் இடைதலே உடைதலோடு 
சரிதலே கெடுதல் ஏழும் சாய்தலின்நாமம் ஆமே 
** 7, 7 பெயர்கள் 21 
**636

#22
** முறித்தல் துவளல் இசைப்பு 
ஒசித்தலே அகைத்தல் கோடல் ஒடித்தலே முறித்தலின்பேர் 
இசித்தலே ஞெமிர்த்தலோடே இறுத்தலும் அதன்பேர் என்ப 
ஒசிந்திடல் அசைதல் சாய்ந்தே உவளலும் துவளல் ஆமே 
இசைப்பின்பேர் புணர்ச்சி மற்றை இசைவும் ஆம் இயைபும் ஆமே 
** 7, 3, 3 பெயர்கள் 22 
**637

#23
** வளைத்தல் பிடித்தல் கட்டல் 
வசப்பட வலித்தல் சூழ்தல் வளாகமும் வளைத்தல் முப்பேர் 
இசைத்திடின் பிடித்தலின்பேர் தொடல் பற்றல் இருபேர் ஆகும் 
விசித்தலே தொடுத்தல் பந்தம் வீக்குதல் சிமிழ்த்தல் யாப்பே 
அசைத்தலே பிணித்தல் ஆர்த்தல் ஒன்பதும் கட்டல் ஆமே 
** 3, 2, 9பெயர்கள் 23 
**638

#24
** அரிதல் வெட்டல் 
அரிதலின்பேர் சேதித்தல் அறுத்திடல் விடுவாய் செய்தல் 
விரிவுறச் சூலல் கொய்தல் விதியுளி ஈர்தல் ஆறாம் 
பரிதல் கண்டித்தலோடு பகுத்திடல் தடிதல் எற்றல் 
தரமுறத் துமித்தல் ஆறும் வெட்டல் ஆம் தறித்தலும் பேர் 
** 6, 7 பெயர்கள் 24
**639

#25
** கீறல் கிளைத்தல் கொழித்தல் வழிப்பறித்தல் 
கீறலே கீளல் கீண்டல் கிழித்திடல் கீன்றல் கீழ்தல் 
பீறல் ஆறாம் பேர் மற்றுப் பிளிறலே ஞெண்டல் கிண்டல் 
மாறிடக் கிளைத்தல் முப்பேர் வரன்றல் தெள்ளுதல் கொழித்தல் 
ஆறலை வழிப்பறித்தல் அதர்கோளும் அப் பேர் ஆமே 
** 6, 3, 2, 2 பெயர்கள் 25 
**640

#26
** பறித்தல் கத்தரித்தல் குட்டல் தோண்டுதல் தடுத்தல் 
கட்டலே களைதல் குற்றல் பறித்தல் கத்தரித்தல் கொய்தல் 
குட்டலே தகர்த்தல் ஆகும்  உடைத்தலும் கூறும் அப் பேர் 
தொட்டலே அகழ்தலோடு தொடுதல் தோண்டுதலின்பேர் ஆம் 
தட்டல் வாரித்தல் ஆணை தகைதலே தடுத்தலின்பேர் 
** 3, 1, 2, 3, 4 பெயர்கள் 26 
**641

#27
** ஐம்பொறி நுகர்வு விடுத்தல் அடுக்குதல் 
** ஒழிதல் தாழ்தல் 
அடுத்த துப்புரவும் துவ்வும் ஐம்பொறி நுகர்வ ஆகும் 
விடுத்தல் மோசனமே மோக்கம் வீதம் ஆம் தீர்தலும் பேர் 
அடுக்குதல் பேரே ஏற்றல் ஆம் ஓவல் ஒழிதல் என்ப 
நடுக்குறத் தாழ்தலின்பேர் குரங்குதல் குனிவும் நாட்டும் 
** 2, 4, 1, 1, 2 பெயர்கள் 27 
**642

#28
** முடைதல் மாற்றல் மிசை நிலைப்படச் செய்தல்
** நிறுத்தல் சொலித்திடல் வகிர்தல் 
வலத்தலே நிணத்தல் என்ப முடைதல் ஆம் மாற்றலின்பேர் 
விலக்கல் ஆம் மிசையின்பேரே மீமிசை ஆம் தாபித்தல் 
நிலைப்படச் செய்தலின்பேர் நிறுத்தலே நோன்றல் என்ப 
சொலித்திடல் இடத்தல் ஆகும் துவர்தலே வகிர்தல் என்ப 
** 2, 1, 1, 1, 1, 1, 1 பெயர்கள் 28 
**643

#29
** சிந்தல் வீசுதல் முட்டல் அவித்தல் 
சிதர்த்தலே உகுத்தல் தூவல் சிந்தலே உளர்தலும் பேர் 
எதிர்த்து வீசுதலே ஓச்சல் செலவிடல் எறிதல் முப்பேர் 
இதத்தொடு பொருத்தல் மாட்டல் இரு பெயர் மூட்டல் என்ப 
நதுத்தலே நொதுத்தலோடு நவித்தலும் அவித்தல் பேரே 
** 4, 3, 2, 3 பெயர்கள் 29 
**644

#30
** குத்தல் அடித்தல் வசமாக்கல் முண்டிதமாக்கல் 
புடைத்தலே எறிதல் எற்றல் பொத்தெனக் குத்தல் முப்பேர் 
அடித்தலே கொட்டல் மொத்தல் அறைதலே அகைத்தல் எற்றல் 
பிடித்தனர் அதுக்கல் மோதல் பேசிய வழுக்கல் என்ப 
வடித்தலே வசமாக்கல் பேர் மழித்தல் முண்டிதமே ஆக்கல் 
** 3, 8, 1, 1 பெயர்கள் 30 
**645

#31
** செறித்தல் துளைத்தல் வாருதல் கொள்ளை 
அளித்தல் பாதீடு பெய்தல் ஆம் முப்பேர் செறித்தல் என்ப 
துளைத்தலின்பேர் திளைத்தல் குயிறல் ஆம் தொள்ளலும் பேர் 
வளைத்தலே கவர்தல் வௌவல் வாருதல் கொளலும் ஆகும் 
கிளத்துங்கால் சூறை கொண்டி கேடுறும் கொள்ளை ஆமே 
** 3, 3, 4, 2 பெயர்கள் 31
**646

#32
** தடவல் பரத்தல் முகத்தல் தூவல் அசைதல் 
வருடல் தைவரலே நீவல் வரும் முப்பேர் தடவல் ஆகும் 
விரியலே பரத்தல் என்ப விளம்பு பாரித்தலும் பேர் 
தெரியவே தோண்டல் நோண்டல் சேரவே முகத்தலின்பேர் 
சொரிதலே பொழிதல் தூவல் துயல்வரல் அசைதலின்பேர் 
** 3, 2, 2, 2, 1 பெயர்கள் 32 
**647

#33
** காத்தல் காவல் பாதுகாத்தல் 
திதி நிலைபெறுத்தல் நோக்கல் சிறப்பொடு புரத்தல் நான்கும் 
விதமுடன் காத்தலின்பேர் வேலியே ஏமம் சேமம் 
கதவு அரண் காப்பு தட்டி கடி எட்டும் காவல் பேரே 
பதமுற ஓம்பல் போற்றல் பாதுகாத்தல் பேர் ஆகும் 
** 4, 8, 2 பெயர்கள் 33 
**648

#34
** பகுத்தல் விரித்தல் பொதிதல் புதைத்தல் 
** குற்றல் நெரித்தல் 
பகுத்தலே பாத்து பாகம் பங்கீடு பாதியும் பேர் 
இகுத்தலே விரித்தலின்பேர் ஏற்றிடும் பொதிதல் வீக்கம் 
மிகைப்படப் புதைத்தலின்பேர் தணித்தல் சேமித்தல் என்ப 
திகைக்கவே அவைத்தல் குற்றல் தெறுதல் என்பது நெரித்தல் 
** 4, 1, 1, 2, 1, 1 பெயர்கள் 34 
**649

#35
** கொலைசெய்தல் கொலை வேட்டை 
எருக்கல் காதுதல் சவட்டல் எற்றுதல் ஒழித்தல் கோறல் 
முருக்கல் வீட்டுதல் படுத்தல் முதிர் கொலைசெய்தல் ஒன்பான் 
உரைத்த மாரணமும் அப் பேர் ஊறு கோள் அணங்கு வேட்டம் 
வரித்திடின் கொலையின் நாற்பேர் வேட்டை பாபத்தி என்ப 
** 10, 4, 1 பெயர்கள் 35 
**650

#36
** மெய்கோட்டிக் கைகுவித்தல் தேடல் 
** துவட்டல் தொடுதல் 
குடமே மெய்கோட்டிக் கையைக் குவித்தலின்நாமம்தானே 
கடுகிய நாடல் நேடல் கையரிக்கொளலே தேடல் 
தொடர்புறு துருவும் ஆகும் துவட்டலே நுடக்கல் என்ப 
தொடுதலே திவளல் ஊறு பரிசனம் துவளலும் பேர் 
** 1, 4, 7, 4 பெயர்கள் 36 
**651

#37
** நடத்தல் 
கடத்தலே படர்தல் சேறல் கழிதலே இவறல் ஏகல் 
விடுத்திடல் இறத்தல் போகல் மெல்லென வழங்கல் நீங்கல் 
தடத்தினில் செலவே இல்லல் தணத்தலே இயங்கல் தீர்தல் 
நடத்தலின்பேர் ஈரெட்டாம் ஒதுங்கலும் நாட்டும்  அப் பேர் 
** 17 பெயர்கள் 37 
**652

#38
** குதித்தல் எழுச்சி 
மிதித்திடல் உகளல் பாய்தல் விரைவுடனே உறுக்கல் 
குதித்தலின்பேரே நான்காம் குப்புறல்  இதுவும் அப் பேர் 
கதித்தலே அகைத்தல் பம்பல் கஞறலே பொலிவு பாய்ச்சல் 
இதத்துடன் ஒதுக்கல் ஏர்பு என்று எட்டுமே எழுச்சியின்பேர்
** 5, 8 பெயர்கள் 38 
**653

#39
** கடுப்பு விரைவு 
கடுமையே கதழ்வு வல்லை கதனமே துரிதம் ஒல்லை 
அடைவுள நொறில் என்று ஏழும் கடுப்பு என அறையலாகும் 
முடுகலே விசையே தாரை முந்திய கவனம் வேகம் 
சடிதி சீக்கிரமே ஈண்டே விரைவின்பேர் விதுப்பும் சாற்றும்
** 7, 9 பெயர்கள் 39 
**654

#40
** விரைவுக் குறிப்பு மந்தம் 
ஐயெனலொடு பொள்ளென்றல் ஆன குத்திரமே சண்டம் 
நொய்தென்றல் கதுமென்றிட்டல் நொடியினில் பொருக்கென்றிட்டல் 
வெய்தென்றல் ஞெள்ளல் கோரம் விரைவினில் குறிப்பு பத்தாம் 
மெய்யெனலோடு மெல்லென்றல் பையெனல் தாழ்த்தல் மந்தம் 
** 10, 4 பெயர்கள் 40 ,
**655

#41
** சுழலல் கடத்தல் 
தெருமரல் மறுகலோடே அலமரல் திரிதல் கொட்கல் 
சொரிதலே சூர்த்தலோடு பிரமரி சுழலல் எட்டாம் 
பரிகரி தாவல் சேறல் பாறுதல் ஓவல் மீளல் 
வரிசையில் தாண்டல் தத்தல் வாவல் தாவுதல் கடத்தல் 
** 8. 10 பெயர்கள் 41 
**656

#42
** ஓடல் நேரோடல் மண்டலமாக ஓடல் உலாப் போதல் 
நீதியில் பாறல் ஓடல் நிமிர்தல் நீளுதலும் அப் பேர் 
ஆதியே வீதி என்ப இருபெயர் இவை நேர் ஓடல் 
மாதி சாரிகையே சுற்று வாளி மண்டலமா ஓடல் 
ஓதிய பவனி ஒன்றே உலாப்போதல் ஆகும் என்ப 
** 3, 2, 4 1 பெயர்கள் 42
**657

#43
** கிட்டுதல் நீங்குதல் உலாவல் 
மருவுதல் நண்ணல் சார்தல் மற்றைய அணுகல் புல்லல் 
அருகுறல் சிவணல் துன்னல் அண்ணல் ஒன்பான்பேர் கிட்டல் 
ஒருவுதல் துறத்தல் வல்லி உணர்வொடு தணப்பு நீங்கல் 
வருமுறை உலாவலின்பேர் வழங்கலோடு அசைதல் ஆமே 
** 9, 5, 2 பெயர்கள் 43 
**658

#44
** செலுத்தல் உராய்ப்போதல் குழைவு 
நடவலே உகைத்தல் ஒய்தல் நலமொடு தூண்டல் ஊர்தல் 
கடவலே அகைத்தல் உய்த்தல் கடிது ஓட்டல் செலுத்தல் ஒன்பான் 
உடன் உராய்ப் போதலின்பேர் உரிஞ்சலோடு உரோஞ்சல் ஆகும் 
படியவே நெகிழ்தல் ஒல்கல் இரு பெயர் குழைவின்பாலாம் 
** 9, 2, 2 பெயர்கள் 44 
**659

#45
** வலியழித்தல் வழிப்படுத்தல் எதிர்கொண்டுபோதல் உழக்கல் 
ஆற்றறுத்திடுதல்தானே ஆம் வலி அழித்தலின்பேர் 
ஆற்றிய வழிப்படுத்தல் பெயர் ஆற்றுப்படை என்றாகும் 
ஏற்றல் போதரல் எனும் சொல் எதிர்கொடுபோதல் என்ப 
மாற்றிய உழுதலோடு மடித்தலே உழக்கல் ஆகும் 
** 1, 1, 2, 2 பெயர்கள் 45 
**660

#46
** போர் 
முரண் வினை சமரே ஆர்ப்பு மொய் தும்பை ஞாட்பு தாக்கு 
செரு மறல் காளபங்கள் சினவலே அமர் மலைப்போடு 
இரணம் ஆகவம் நிகர்த்தல் இகலே வெஞ் சமம் உடன்றல்  
பொருதல் சங்கிராமம் தெவ்வு பூசல் ஆயோதனம் போர் 
** 25 பெயர்கள் 46 
**661

#47
** எதிர்தல் ஒட்டலர் நாடழித்தல் ஒட்டுநர் மேற்சாராமை 
முட்டுதலுடனே தாக்கல் தலைப்படல் முடுகல் ஏற்றல் 
கிட்டலே எதிர்தல் ஆகும் கிடைத்தலும் அதன்பேர்தானே 
ஒட்டலர் நாடு அழித்தல் உற்ற பேர் கொற்றவள்ளை 
ஒட்டுநர் மேல் சாராமை உரைத்த பேர் தழிஞ்சி ஆமே 
** 7,1,1 பெயர்கள் 47 
**662

#48
** கூத்து ஆடல் 
நடம் நட்டம் நடனம் வாணி நாடகம் நிருத்தம் தூக்கு 
படிதம் நாட்டியமே கண்ணுள் பத்தும் தாண்டவமும் கூத்து ஆம் 
நடையும் நட்டணமும் அப் பேர் நடித்திடல் பெயர்தல் ஆலல்
அடைவிலே அகவல் தூங்கல் அசைவொடு ஆறு இவை ஆடல் பேர் 
** 13, 6 பெயர்கள் 48 
**663

#49
** கூத்தின் விகற்பம் சிரமம் செய்தல் பழகல் 
பிரமரி வீரட்டானம் பேசில் உப்பிதம் மலைப்பு 
புரியமே இலயம் மற்றும் போற்றும் உள்ளாளனம்மே 
கரணமே பரதம் ஒன்பான்  கருது கூத்தின் விகற்பம் 
பருமித்தல் சிரமம்செய்தல் பழகலே உழத்தல் என்ப 
** 9, 1, 1 பெயர்கள் 49 
**664

#50
** சிவன் நிருத்தம் திருமகள் ஆடல் கொண்டல் 
** வண்ணன் கூத்து குமரன் ஆடல் 
கொடுகொட்டி பாண்டரங்கம் கூறு காபாலம் மூன்றும் 
பொடி அணி சிவன் நிருத்தம் போற்றிய பரவை செய்யாள் 
குடம் மல்லோடு அல்லியம்தான் கொண்டல்வண்ணன்தன் கூத்து ஆம் 
குடையொடு துடி இரண்டும் குமரனது ஆடல் ஆமே 
** 3, 1, 3, 2 பெயர்கள் 50 
**665

#51
** எழுவகை மாதராடல் அயிராணியாடல் 
** துர்க்கை ஆடல் காமன் ஆடல் 
துடி என்பது எழுவர் மாதர் தூங்கலின்நாமம் ஆகும் 
கடையமே அயிராணிக்குக் காட்டிய நாட்டியப்பேர் 
வடிவு அமை துர்க்கை தூக்கு மற்று அது மரக்கால் என்ப 
நெடிய காமன் கொண்டு ஆடும் நிருத்தமே விதித்த பேடு ஆம் 
** 1, 1, 1, 1 பெயர்கள் 51 
**666

#52
** வெறியாட்டு கைகோத்துஆடல் முடக்கிய 
** இருகை பழுப்புடையொற்றியாடல் 
அடுத்திடும் வெறி கழங்கோடு அணங்கு இவை வெறியாட்டின்பேர் 
தொடுத்த கைகோத்தாடல் பேர் சொல்லிய குரவை என்ப 
முடக்கிய இருகைதானும் பழுப்புடை முறையே ஒற்றித் 
துடக்கிய நடையின்நாமம் துணங்கை என்று இயம்பல் ஆமே 
** 3, 1, 1 பெயர்கள் 52
**667

#53
** கை கூப்பி மெய் கோட்டி நிற்றல் குடங்கையைக் 
** குவித்துக் கொட்டல் வாய்கையாற் கொட்டல் 
** குந்தி நிற்றல் 
குடந்தம் கைகூப்பி மெய்யைக் கோப்பொடு கோட்டி நிற்றல் 
குடங்கையைக் குவித்துக் கொட்டல் கொம்மைகொட்டுதல் என்றாகும் 
அடர்ந்து வாய் கையால் கொட்டல் ஆவலங்கொட்டல் என்ப 
படம் குந்தி நிற்றலின்பேர் பகரின் குஞ்சித்தல் ஆமே 
** 1, 2,1,1 பெயர்கள் 53
**668

#54
** தாளம் போடல் தாள ஒற்று 
வட்டித்தல் ஒற்றறுத்தல் வட்டணையுடனே மற்றும் 
தட்டல் என்று இந்த நான்கும் தாளம் போடுதலின்பேரே 
கிட்டிய தாளவொற்றுக் கிளர்ந்த பேர் சதியே சீர் என்று 
இட்ட பேர் இரண்டும் ஆம் என்று இயம்பினர் வியந்த நூலோர்  
** 4, 2 பெயர்கள் 54 
**669

#55
** துரய்மை செய்தல் ஏறுதல் இறங்குதல் மெளனம் 
உவளித்தல் தூய்மைசெய்தல் உபலாளனமும் அப் பேர் 
இவர்தலே மீக்கோள் என்ப இரண்டும் ஏறுதலின்நாமம் 
அவா மற்றும் இறங்குதல் பேர் சுதம் அவதாரம் ஆகும் 
மவுனப்பேர் மூகம் மோனம் வாளா கேளா என்று ஆமே 
** 2, 2, 3, 4 பெயர்கள் 55 
**670

#56
** அரசிறை குடியிறை சுங்கவிறை உடன்பாடு 
திறை மிறை கப்பமே பாகுடம் அரசிறைப் பேர் செப்பும் 
கறை கடன் வரி இறுப்பு கரம் குடியிறை ஐந்தேபேர் 
துறைபடும் உல்கே ஆயம் சுங்கம் சாரிகையும் ஆகும் 
நெறியொடு வலித்தல் ஒட்டல் நேரலே உடன்பாடு என்ப 
** 4, 5,3, 3 பெயர்கள் 56 
**671

#57
** உற்சாகம் மிக்க செயல் அருமை செய்தல் 
முயற்சி தாளாண்மை ஊக்கம் முந்து தாள் உத்தியோகம் 
இயற்றலே உஞற்று உழப்போடு ஆள்வினை இவை உற்சாகம் 
வியக்கும் ஊராண்மை ஒன்றே மிக ஓங்கிச் சேறல் ஆகும் 
நயக்கும் பேராண்மை ஒன்றே நாட்டிய அருமை செய்தல் 
** 9, 1, 1 பெயர்கள் 57 
**672

#58
** களவு சித்து 
கரப்பொடு கட்டல் பட்டி கரவடம் கயவு கள்ளம் 
திருட்டொடு படிறு சோரம் தேயமும் களவு ஈரைந்தாம் 
விரித்திடும் தேனுவோடு செளரியம் ஈண்டும்  அப் பேர் 
தரித்த சம்பிரதம் என்ப தக்கதாம் சித்தின்பேரே 
** 12,1 பெயர்கள் 58 
**673

#59
** சுமத்தல் அருவல் நீக்கல் மாறுபாடு தைத்தல் 
தரித்தலே பொறுத்தலோடு தாங்குதல் சுமத்தலின்பேர் 
பரித்தலும் ஆகும் என்ப பருவரல் அருவலின்பேர் 
தெரித்து ஒன்றை வரைவே நீக்கல் தெற்றலே மாறுபாடு ஆம் 
விரித்திடும் தைத்தல் அத்து மேவிய பொல்லம் துன்னம் 
** 4, 1 ,1, 1,3 பெயர்கள் 59 
**674

#60
** சுடல் மறைப்பு அழுந்துதல் உலைப்பு 
சுறுக்கெனச் சுடல் சந்தாபம் தூபிதம் இருபேர் சொல்லும் 
மறைப்பே ஆவரணம் ஆகும் மாய்த்தலும் அப் பேர்தானே 
நெறிப்பட அழுந்துதல் பேர் ஞெமுங்குதல் என்று கூறும் 
மிறைத்தலே அகைத்தல் சால வேதனை உலைப்பு முப்பேர் 
** 2, 2, 1, 3 பெயர்கள் 60 
**675

#61
** இளைத்தல் ஒடுங்கல் மேற்கோள் 
நாம்பலே பழங்கணோடு நாட்டிய மெலிவு ஞொள்கல் 
தேம்பலே கிருசம் போதச் சிக்கல் ஏழ் இளைத்தலின்பேர் 
சாம்பலே கூம்பல் என்ப இருபெயர் ஒடுங்கல் சாற்றும் 
மேம்படச் சொல்லுகின்ற மேற்கோளே பூட்கை என்ப 
** 7, 2, 1 பெயர்கள் 61 
**676

#62
** வற்புறுத்தல் முளைத்தல் அலர்தல் தள்ளல் 
வருட்டலே தெருட்டல் இன்ன வற்புறுத்தல் பேர்தானே 
உருத்தலே நாறல் தோற்றல் முளைத்தல் ஆம் பொடித்தலும் பேர் 
விரித்திடல் எதிர்தல் விள்ளல் அவிர்தலே அலர்தல் ஆகும் 
தரிப்பற நூக்கல் ஊன்றல் நோன்றலும் தள்ளல் முப்பேர் 
** 2, 4, 3, 3 பெயர்கள் 62 
**677

#63
** சிரித்தல் அவமதிச் சிரிப்பு விடல் கூடல் பிணக்கு 
முறுவலே நகையே ஆர்ப்பு மூரலே இளியே ஆசம் 
அறிவொடு சிரித்தல் ஆறே அசி அவமதிச்சிரிப்பு ஆம் 
குறியொடு விடல் வியோகம் கூடலே யோகம் என்ப 
மறல் அரில் அபரமோடு வரும் துவக்கு இவை பிணக்கு ஆம் 
** 6, 1, 1, 1, 4 பெயர்கள் 63 
**678

#64
** விற்றல் ஒற்றுமை ஒற்று தலைக்காவல் கிடைத்தல் 
விற்றல் பேர் பகர்தல் கூறல் விலை நொடை மாறல் ஐந்தாம் 
ஒற்றுமை குறிக்கோள் என்ப ஒற்று வேய் சொற்ற பேரே 
இற்று இவை நிற்க மற்றை இளை தலைக்காவல் பேரே 
பெற்றிடல் பயத்தல் வாய்த்தல் கிடைத்தல் ஆம் பேசும் முப்பேர் 
**  5, 1, 1, 1,3 பெயர்கள் 64 
**679

#65
** காய்தல் கொப்பளித்தல் மறைபுகல் ஏவல் 
** வறுமை எய்தல் 
முளிதலே வறத்தலோடு முதிர்ந்திடல் உலரல் காய்தல் 
பிளிற்றலே பில்கல் காலல் உமிழ்தல் கொப்பளித்தல் பேரே 
தளர்ச்சி ஆம் மறைபுகல் பேர் சரண்புகல் ஆகும் என்ப 
விளக்கிய வியங்கோள் ஏவல் வீதலே வறுமை எய்தல் 
** 4, 4, 1, 1, 1 பெயர்கள் 65 
**680

#66
** அலையல் சொறி துழாவல் 
அலைசலே ஞெகிழ்தல் ஞொள்கல் அலையலே ஆஞ்சியும் பேர் 
உலைவுறு சொறி கண்டூதி தினவு என இருபேர் ஓதும் 
கலவலே அளாவலோடு கலம்பகமே கலாவல் 
துலைபெறுகின்ற சங்கீரணம் ஐந்தும் துழாவலின்பேர் 
** 4, 2, 5 பெயர்கள் 66 
**681

#67
** சத்தி செய்தல் வாந்தி எடுத்தல் மூச்சு கொட்டாவி 
விம்மியே உமிழ்தல் கான்றல் மேவும் உற்காரம் சத்தி 
தும்மலே சுவாசம் மூச்சு ஆம் கொட்டாவியே ஆவித்தல் 
அம்ம இச் செயல் பற்றும் பேர்க்கு அறுபத்தேழ் விருத்தம் செய்தான்
மைம் முகில் குணபத்திரன் தாள் வணங்கும் மண்டலவன்தானே 
** 3, 2, 1 பெயர்கள் 67 
** ஒன்பதாவது செயல் பற்றிய பெயர்த் தொகுதி முற்றிற்று 

@10. ஒலி பற்றிய பெயர்த் தொகுதி
**682

#1
** காப்பு 
வலியுற்ற வெவ்வினைப் பேர் மாற்றியே அநந்த ஞானம் 
பொலிவுற்ற கேவலப் பெண் புணர்ந்து வீற்றிருந்த போதன் 
மலர் உற்று நடந்த வாமன் மரை புரை பாதம் போற்றி 
ஒலி பற்றும் பெயர்க் கூட்டத்தை உணர்த்துவம் இப்பால் கேண்மின்
**683

#2
** சொல் 
மாற்றமே மொழியே கீரே வாணியே கதை எதிர்ப்பு 
கூற்று உரை பனுவல் செப்பு குயில் வினா கிளவி காதை 
ஏற்றிடும் நொடி இயத்தோடு இசை பறை வாக்கு பாணி 
தோற்றம் ஆம் நுவலினோடு மூவேழும் சொல்லின்பேரே 
** 21 பெயர்கள் 2 
**684

#3
** வாசகம் பதம் இயம்புதல் பல்கால் விளம்புதல் 
வசித்தல் பாசுரமே வார்த்தை வாசகம் வசனமும் பேர் 
திசைப்படும் உரையே பாழி சிதைவுஇலாப் பதம் என்று ஓதும் 
இசைத்தலே பிதற்றல் பேசல் இயம்புதல் இறுத்தலும் பேர் 
விசைப்பின் மீதுரையே பல்கால் விளம்புதல் ஆகும் என்ப 
** 4, 2, 4, 1 பெயர்கள் 3
**685

#4
** வாழ்த்தல் வாழ்த்து பழித்தல் 
பழிச்சல் ஏத்துதல் துதித்தல் பரசுதல் பரவல் போற்றல் 
வழுத்தல் தோத்திரமே மெச்சல் வாழ்த்தல் ஆம் துதியும் ஏற்கும் 
அழிப்புஇலா ஆசி வாழ்த்தே ஆசிடை என்றும் கூறும் 
பழிச்சொலே சிறுசொல் தீச்சொல் பரிவாதம் பழித்தல் என்ப 
** 10, 2, 4 பெயர்கள் 4 
**686

#5
** சொல்லல் 
விரித்தலே கதைத்தலோடு மிழற்றுதல் விளம்பல் கூறல் 
உரைத்தலே நொடித்தல் சாற்றல் ஓதுதல் குயிறல் சொற்றல் 
தெரித்தலே நவிலலோடு வலித்திடல் செப்பல் ஆடல் 
பரப்புடன் மொழிதலோடு பணித்தல் பன்னெட்டும் சொல்லல் 
** 18 பெயர்கள் 5 
**687

#6
** மெய் பொய் 
சாதம் வாய் வாய்மை ஆணை சத்தியம் திடம் வேளாண்மை 
நீதியாம் நிலைமை உண்மை நிச்சயம் சரதம் மெய்ப் பேர் 
வாதையாம் மிச்சை தள்ளல் வலக்காரம் வழுது பெட்டு 
சாதனை மாயம் வஞ்சம் சடம் பிசி படிறு பொய்ப் பேர் 
** 11, 11 பெயர்கள் 6 
**688

#7
** படித்தல் விடாது பேசல் மறைத்த சொல் உறுதிச் சொல் 
படித்தல் வாசித்தல் ஓதல் பாடல் அத்தியயனமும் பேர் 
பிடித்து ஒன்றை விடாது பேசல் பிதற்றுதல் என்று பேரே 
இடக்கரே மறைத்தசொல் பேர் என்ப கூகனமும் ஆமே 
இடித்தலே கழறல் என்ப இருபெயர் உறுதிச்சொல்லே 
** 4, 1, 2, 2 பெயர்கள் 7 
**689

#8
** பழிமொழி சிலர் அறிந்து புறங்கூறல் 
** பலரும் தூற்றல் பலர் அறி சொல் 
அம்பலே கெளவை ஏசல் அலர் பழிமொழி நாற்பேரே 
அம்பலே சிலர் அறிந்திட்டது புறங்கூறல் ஆகும் 
அம்புவிப் பலரும் தூற்றும் அ மொழி அலரே என்ப 
வெம்பிய பெருஞ்சொல் என்ப மிகப் பலர் அறிசொல் ஆமே 
** 4, 1, 1, 1 பெயர்கள் 8 
**690

#9
** நிரம்பா மென் சொல் புறங் கூறல் 
மிழலையே குதலை கொஞ்சல் வினவும் உல்லாபம் உற்ற 
மழலையே ஒற்று நீங்கி வழுப்பட நிரம்பா மென்சொல் 
பிழைபடும் கொடுவாய் குஞ்சம் பிசுனம் கொண்டியம் தொடுப்பு 
விழைவிலாக் குறளை ஆறும் வெறும் புறங்கூற்றின்பேரே 
** 5, 6 பெயர்கள் 9 
**691

#10
** சத்தியம் மூதுரை பழமொழி கதை 
வழுவிலாச் சபதம் ஆணை வஞ்சினமொடு வட்டித்தல் 
தழுவிய பிரமாணம் சூள் சத்தியம் விரதமும் பேர் 
மொழிமை மூதுரை முன்சொல்லும் முதுசொல்லும் பழஞ்சொல்லும் பேர்
பழமொழி முதுமை ஆகும் படுங் கதை காரணச்சொல் 
** 7, 4, 7, 1 பெயர்கள் 10
**692

#11
** திசைச்சொல் நன்னிமித்தம் பொரஅழைத்தல் முகமன் 
தரித்திடும் திசைச்சொல் என்ப சாரும் தேசிகம் என்றாகும் 
விரிச்சியே வாய்ப்புள் என்ப மிக்க நற்சொல் நிமித்தம் 
அரிப்புறப் பொரஅழைத்தல் அறைகூவல் ஆகும் என்ப 
உரைத்திடும் முகமனின்பேர் உபசாரம் நயம் சம்மானம் 
** 1, 2, 1, 3  பெயர்கள் 11 
**693

#12
** வினாவல் எதிர்மொழி வினாவிடை கூடிய பொருள் 
** தன் மேம்பாட்டைத்தானே கூறல் அசதியாடல் 
வினாவலே கடாவல் ஆகும் விடை அதற்கு எதிர்மொழிப் பேர் 
வினாவொடு விடையும் கூடி விரும்பிய பொருள் சல்லாபம் 
தனது மேம்பாட்டுரைப் பேர்தான் நெடுமொழி என்று ஆமே 
இனா நகை நயச்சொல் என்ப எய்துமே அசதியாடல் 
** 1, 1, 1, 1, 3 பெயர்கள் 12 
**694

#13
** தேற்றம் பொருளின்மை கேளா என்பது கூறியது கூறல் 
கடைப்பிடி ஓர்ப்பு வேறு காட்டிய குறிக்கோள் தேற்றம் 
அடுத்த நல் பொருள்இலாமை அநர்த்தமே ஆகும் என்ப 
எடுத்த வாளா எனும் சொல் இது கேளா ஆகும் என்ப 
கொடுத்திடும் புனருத்திப் பேர் கூறியகூறலாமே 
** 3, 1, 1, 1 பெயர்கள் 13 
**695

#14
** அழைத்தல் கீழறுத்தல் 
கூவலே உளைத்தலோடு குறுகவே இகுத்தல் கேதல் 
வா எனல் கரைதலே ஆகருடணமொடு விளித்தல் 
மேவும் மற்று அகவல் ஒன்பான் வினாவியே அழைத்தல் பேரே 
ஆவலால் கீழ்அறுத்தல் அறைபோதல் ஆகும் என்ப 
** 11, 1 பெயர்கள் 14 
**696

#15
** சொல்மாலை ஏற்றம் மேம்பாடு புகழ் மிகுபுகழ் 
தோற்றம் சீர் சுலோகம் மெய்ப்பே சொல்மாலை நாற்பேர் சொல்லும் 
ஏற்றமே கியாதி என்ப இயன்ற மேம்பாட்டின்நாமம் 
ஊற்றம் ஆம் சீர்த்தி கீர்த்தி ஒளி புகழ் மீக்கூற்றும் பேர் 
மேல் திகழ் சீர்த்தி கீர்த்தி மிகுபுகழ் இரு பேர் ஆமே 
** 4, 1,1, 4, 2 பெயர்கள் 15
**697

#16
** முன்னிலையசைச் சொல் அசைச்சொல் 
** உடன் நிகழ்ச்சி இடைச்சொல் 
இக மியா மதி மோ வாழி இகும் சின் முன்னிலையசைச்சொல் 
இக மியா அரோ போ மாதோடு இருந்து ஓரும் ஏழ் அசைச்சொல் 
புகலுங்கால் ஒப்பிலாத போலும் அப் பொருட்டே ஆகும் 
நிகர்இலா ஒடுவும் ஓடும் நேருமே உடனிகழ்ச்சி
** 7, 8, 2 பெயர்கள் 16 
**698

#17
** இடைச்சொல் சாரியை 
அம்மோடு ஆம் தம் நம் நும் ஏ அல் ஆல் வான் பாக்கு தில்லே 
எம்மோடு ஏம் மன்னே பானே உம் ஈரெட்டு இடைச்சொல் என்ப 
அம்மோடு இற்று அற்றே அத்தே அல் இல் அன் ஆனே ஐயே 
தம் நும்மே அவ்வே குவ்வே சாரியை பன்மூன்று என்ப 
** 16, 13 பெயர்கள் 17 
**699

#18
** எழுத்தின் சாரியை வேற்றுமையுருபு 
கரமொடு கானே காரம் காட்டிய அகரம் என்ப 
தரம் உற எழுத்துக்கு ஏற்ற சாரியை நான்கே சாற்றும் 
கருதிடில் ஐயே ஆலே குவ்வொடு இன் அதுவே கண்ணே 
விரவிய ஆறும்தானே வேற்றுமையுருபின்நாமம் 
** 4, 6 பெயர்கள் 18 
**700

#19
** ஐயச் சொல் சுட்டு இடத்து ஐயச் சொல் இகழ்ச்சிச் சொல் 
என்னை கொல் எவனே யாதே இவை ஐயக்கிளவி நாற்பேர் 
உன்னிடில் அவ்வே இவ்வே உவ்வொடு மூன்றும் சுட்டு ஆம் 
மன்னிய யாண்டும் யாங்கும் மற்று இடத்து ஐயுறற்சொல் 
என் இளி ஏயே சீச்சீ ஏளனம் இகழ்ச்சி ஆமே 
** 4, 3, 2, 5 பெயர்கள் 19 
**701

#20
** கல்வி கற்றல் ஓதல் 
உலவிய விஞ்சை வித்தை ஊதியம் சாலம் ஓதி 
கலையுடன் உறுதி கேள்வி இருநான்கும் கல்வியின்பேர் 
நலமுறக் கெழுமல் கற்றல் நவிலலே பயிலலும் பேர் 
பலம் உற ஓதலின்பேர் பாடம் மையாடல் ஆமே 
** 8, 3, 2 பெயர்கள் 20 
**702

#21
** வேதம் வேத நூற் பொருள் 
ஆதிநூல் எழுதாக்கேள்வி ஆரணம் ஓத்து சாகை 
ஏதம்இல் சுருதி தன்னோடு இருக்கு இவை ஏழும் வேதம் 
வேதநூல் பொருளின்நாமம் விதித்திடும் ஞானபாகை 
ஆதியாம் கருமபாகை அருத்தபாகையும் ஆம் என்ப 
** 7, 3 பெயர்கள் 21 
**703

#22
** வேதத்தின் ஞான பாகை வேதத்துட் பொருள் 
** வேத மார்க்கம் ஆதி வேதம் 
மெய் தெரி ஆரணம்தான் வேதத்தின் ஞானபாகை 
மைஇல் உட்பொருளின்நாமம் மற்று உபநிடதம் என்ப 
வைதிகம் வேதம் உற்ற மார்க்கமே பார்க்குங்காலை 
ஐயம்இல் இருக்கினோடு பெளடிகம் ஆதிவேதம் 
** 1, 1, 1, 2 பெயர்கள் 22\
**704

#23
** இரண்டாம் வேதம் மூன்றாம் வேதம் நான்காம் வேதம் 
ஏமம் ஆம் இரண்டாம் வேதம் இசை தைத்திரியத்தோடு 
தோம்இலா யசுவாம் என்று சொல்லுவர் நல்ல நூலோர் 
சாமமே மூன்றாம் வேதம் தகைபெறு கீதம் சாரும் 
வாமம் ஆர் நான்காம் வேதம் அதர்வம் ஆம் வகுக்குங்காலே 
** 2, 1, 1 பெயர்கள் 23 
**705

#24
** பாயிரம் நூல் 
தந்துரை புனைந்துரைத்தல் சார் முகவுரையினோடு 
முந்திய பதிகமே நூன்முகம் இவை பாயிரப்பேர் 
அந்தம் ஆம் ஆகமத்தோடு ஆரிடம் பிடகம் மற்றுத் 
தந்திரம் பனுவலோடு சமயம் சூத்திரமும் நூல் பேர் 
** 5, 7 பெயர்கள் 24 
**706

#25
** நூல் முடிபு சூத்திர யாப்பு 
படலமே சருக்கம் காண்டம் பரிச்சேதம் அத்தியாயம் 
இடர் அறும் இலம்பகங்கள் நூன்முடிபு இரு முப்பேரே 
தொடை அடி வரை இன்றிச் சூத்திரம் குறித்த யாப்பு ஆம் 
படி புகழ்கின்ற நூற்பா அகவலைப் பகருங்காலே 
** 6,1 பெயர்கள் 25 
**707

#26
** ஓத்து படலம் 
நேரின மணியை ஓர்ந்து நிரல்பட வைத்திட்டாங்கே 
ஓரினப் பொருளை ஆய்ந்திட்டு ஒரு வழி வைப்பது ஓத்து ஆம் 
ஆரும் ஓர் நெறியே அன்றி அருத்தங்கள் விராய்ச் சிறந்த 
பாரிய பொதுச்சொல்தானே படர்வது படலம் என்ப
**708

#27
** வேற்றிசைப்பா உரைப்பொருள் பொழிப்பு 
சருக்கத்தின் முடிவில் மற்றுச் சார் இலம்பகத்தின் ஈற்றில் 
விருத்தமாம் நடையே ஆகும் வேற்றிசைப்பாவின்நாமம் 
விரித்துரை அதனினோடு மெய்யுரை உரைப் பொருள் பேர் 
பெருத்திடும் பொழிப்பு எனும் சொல் பிண்டமாக் கொண்டு கூறும் 
** 2 பெயர்கள் 27 
**709

#28
** பதிகம் உதாரணம் அரும் பொருள் 
பலத்தினைத் தருவதாய பதிகம் பல்வகைப் பொருட்கள் 
துலக்கமே ஆகிக் காணத் தொகுதி செய்திடுவது ஆகும் 
இலக்கியம் எடுத்துக்காட்டல் இதிகாசம் உதாரணப்பேர்
அலக்கண் தீர் ஞாபகம்தான் அரும்பொருள் பிசியும் ஆமே 
** 3, 2 பெயர்கள் 28 
**710

#29
** பாட்டு வெண்பா அகவல் கலிப்பா அராகம் 
காட்டிய யாப்பு தூக்கு கவி செய்யுள் கவிதை பாவே 
பாட்டு எனப்படும் வெண்பாவில் படும் பெயர் வெள்ளை முற்பா 
சூட்டிய அகவல் பேர் ஆசிரியமே தொகை கலிப்பா 
மூட்டிய பேர் முரற்கை முடுகியல் அராகம் ஆமே 
** 6, 2, 2, 1, 1 பெயர்கள் 29 
**711

#30
** குளகம் சந்தப்பாட்டு தாண்டகம் 
குற்றெழுத்துத் தொடர்ந்த செய்யுளே குளகம் என்ப 
இற்றென இருபத்தாறே எழுத்து நான்கடியும் ஆகி 
உற்றது சந்தப்பாட்டு ஆம் அதின் மிகல் உவந்த நாமம் 
சற்றெனும் மருங்கு நல்லாய் தாண்டகம் என்பதாமே
**712

#31
** கணக்கு எண் எழுத்து ஒற்று 
கற்று அறி எழுத்தும் எண்ணும் கணக்கு எனச் சொல்லும் நாமம் 
சொற்றிடும் கரணமோடு சூழ்ந்திடும் கணிதம் எண் ஆம்
மற்று உறு பெயரெழுத்து வடிவு தன்மையில் எழுத்து ஆம் 
ஒற்றின்பேர் உடல் உடம்போடு உறுப்பு மெய் புள்ளி ஆமே 
** 2, 2, 3, 5 பெயர்கள் 31 
**713

#32
** இசைப்பாட்டு நாற்பண் 
வரி இராகம் பண் கேயம் மன் விளி கொளையினோடு 
பரவு காந்தருவம் கீதம் பாணி காமரம் இசைப்பாட்டு 
உரவிய பாலையாழே உலாவிய குறிஞ்சியாழே 
மருதம் செவ்வழியாழ் என்ன வகுத்த நாலிசையும் நாற்பண் 
** 10, 4 பெயர்கள் 32 
**714

#33
** பாலையாழ்த் திறங்கள் குறிஞ்சி யாழ்த்திறங்கள் 
நிறைந்திடும் அராகத்தோடு நேர் திறம் உறுப்பு மற்றைக் 
குறுங்கலி ஆசான் ஐந்தும் குறித்த பாலைத்திறங்கள் 
பறைந்த நைவளம் காந்தாரம் படுமலை மருள் அயிர்ப்பு 
செறிந்த பஞ்சுரம் மெய் ஆற்றுச் செந்நிறம் குறிஞ்சி என்ப 
** 5, 8 பெயர்கள் 33 
**715

#34
** மருதயாழ்த்திறம் முல்லையாழ்த் திறம் 
** நெய்தல் யாழ்த் திறம் 
பெரு நவிர் படு குறிஞ்சி பியந்தை என்று இந்த நான்கும் 
மருதயாழ்த்திறனே ஆகும் வகுக்கும் நேர் திறத்தினோடு 
தரு பெயர் திறமே யாமை சாதாரி நான்கும் முல்லை 
விரவிய திறனில் யாழும் விளரியும் நெய்தல் ஆமே 
** 4, 4, 2 பெயர்கள் 34 
**716

#35
** நரல்வகை யாழ் ஏழிசை 
தளர்வறு பேரியாழே சகோடயாழ் மகரயாழே 
வளையும் செங்கோட்டியாழே மற்றை நால் வகை யாழ்ப் பேர் ஆம் 
களைஅறு குரலே துத்தம் கைக்கிளை உழையினோடே 
இளியொடு விளரி தாரம் என்ப ஏழிசையின்நாமம் 
** 4, 7 பெயர்கள் 35 
**717

#36
** ஏழிசைக்குப் பிறப்பிடங்கள் 
குரல் மிடறு ஆகும் துத்தம் கூறு நா கிளையே அண்ணம் 
சிரம் உழை இளியே நெற்றி சேர்ந்திடும் விளரி நெஞ்சு ஆம் 
தரம் உள தாரம் நாசி தனித்தனிப் பிறக்கும் என்னப் 
பொருவிலா ஆதிமூர்த்தி புலவருக்கு உரைத்தவாறே 
** 7 பெயர்கள் 36 
**718

#37
** ஏழிசைக்கு மாத்திரைகள் ஏழிசை அக்கரங்கள் 
நான்கொடு நான்கும் மூன்றும் நலம்பெறும் இரண்டினோடு 
நான்கு மூன்று இரண்டினோடு நல்ல மாத்திரைகள் ஆகும் 
ஆங்குள ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்னும் ஏழும் 
தீங்கிலா அக்கரங்கள் செப்பும் ஏழிசைக்கும்தானே 
** 7, 7 பெயர்கள் 37 
**719

#38
** ஏழிசைக்கும் உரிய மணங்கள் சுவைகள் 
கால் கிளர் மெளவல் முல்லை கடம்பொடு வஞ்சி நெய்தல் 
மேல் உள வீரை புன்னை விரும்பிய மணங்கள் ஏழாம் 
பாலொடு தேன்கள்தாமே பகர் தயிர் நெய்யினோடே 
ஏலமே வாழையே தாடிமக்கனி ஏழ் சுவைக்கு ஆம் 
** 7, 7  பெயர்கள் 38 
**720

#39
** ஏழிசையோசை ஏழிசையீசர் 
வண்டொடு கிள்ளை வாசி மத யானை தவளை தேனு 
ஒண் திறல் ஆடு என்று ஏழும் ஓதும் ஏழிசையில் ஓசை 
திண் திறல் விசுவாமித்திரன் யமன் அங்கி திங்கள் வெய்யோன் 
கண்ட சொல் கெளதமன் சீர்க் காசிபன் ஈசர் ஆமே 
** 7, 7 பெயர்கள் 39
**721

#40
** மந்தவோசை சமனிசை வல்லிசை 
** குரலினுக்குரிய படுமலைப் பாலை முதலிய திறம் ஏழும் 
** பாலையாழ்த் திறன் 
கருது மந்தரத்தினோடு காகுளி மந்தஓசை 
மருவிய மந்தத்தோடு மத்திமம் சமனிசைப் பேர் 
உரன் உறு தாரம் நீண்ட உச்சமே வல்லிசைப் பேர்
குரலினுக்கு உரித்தாய் நின்ற கூறும் ஆசான் திறங்கள் 
** 2, 2, 2 பெயர்கள் 40 
**722

#41
** துறையிரண்டு பண் திறம் யாழின் எழும் இன்னிசை 
துறை இரண்டு என்ப வெள்ளை தோற்றும் செந்துறைகள் ஆகும்
நிறை நரம்பதுவே கூடல் நிகழும் பண் ஆகும் என்ப 
குறை நரம்பது திறங்கள் என்பது கூறும் யாழின் 
உறையும் இன்னிசை எழாலே ஓதிய நூலின் பண்பாம் 
** 2, 1 பெயர்கள் 41 
**723

#42
** இன்னிசைக் குழல் வீணை யாழ் 
இன்னிசைக் குழலின்நாமம் ஏற்ற வங்கியமே வாரி 
கின்னரம் வீணையின்பேர் கிளத்திய தண்டும் ஆகும் 
மன்னிய யாழ்ப் பேர் கோடவதியொடு விபஞ்சி ஆகும் 
முன்னிய கருவியோடு மொழிந்திடும் கலமும் அப் பேர் 
** 1, 3, 4 பெயர்கள் 42 
**724

#43
** யாழ்வலிக்கட்டு முறுக்காணி நரம்பு 
வரும் பிரமாணம்தன்னில் வலிக்கட்டு திவவு என்று ஓதும் 
திரும்பிய முறுக்காணிப் பேர் தேரின் மாடகம் என்று ஆமே 
நரம்பின்பேர் குரலே கோலே துயரியே நாடின் முப்பேர் 
புரிந்த தந்திரியும் அப் பேர் போதன் முன் புகன்றவாறே 
** 1, 1, 4 பெயர்கள் 43 
**725

#44
** ஒலி 
அரவமே களனே ஓதை ஆகுலம் ஆரவாரம் 
சுருதி கோடணை புலம்பு தொனி இயம் துழனி ஓசை 
உரை இசை இடியே நாதம் உரைத்த கோசணையே பாடே 
இரை சும்மை வகுணி மூவேழ் இவைகளே ஒலியின்நாமம் 
** 21 பெயர்கள் 44 
**726

#45
** எடுத்தலோசை அசையுஞ் சீலையானும் 
** இலையானும் எழும் ஒலி 
தெளிறலே முரலல் முக்கல் சிரற்றுதல் பயிலல் வேறு 
குளிறலே நரலலோடு குருமித்தல் நெளிர்தல் சாலப் 
பிளிறலே உளையும் போதப் பிரற்றலும் எடுத்தலோசை 
வளியினால் அசையும் சீலை இலையொலி மருமராஞ்சம் 
** 12, 1 பெயர்கள் 45 
**727

#46
** ஒலித்தல் 
சிரற்றலே தொனித்தலோடு தெழித்தலே குமிறல் விம்மல் 
உரற்றலே அரற்றல் வேறும் உரைத்தலே உளைத்தல் ஏங்கல் 
இரைத்தலே இரட்டல் சால இடித்தலே இமிழ்த்தல் மற்றைக் 
குரைத்தலே முழக்கல் வீசிக் குளிறலே இசைத்தலோடு
**728

#47
சிலம்பலே இயம்பலோடு சிலைத்தலே துவைத்தல் கூடி 
அலம்பலே கறங்கல் சீறி அழுங்கலே தழங்கலோடு 
சிலும்பலே கலித்தல் போதத் தெவிட்டலே கனைத்தலோடே 
உலம்புதல் புலம்பல் எண்ணான்கு இவை ஒலித்தலின்பேர் என்ப 
** 32 பெயர்கள் 47 
**729

#48
** அனுகரண ஓசை 
இம்மெனல் கல்லென்றிட்டல் இழுமெனல் வல்லென்றிட்டல் 
பொம்மெனல் ஒல்லென்றிட்டல் பொள்ளெனல் நெரேலென்றிட்டல் 
கொம்மெனல் விடேலென்றிட்டல் குறிப்பொடு முகேரென்றிட்டல் 
அம்மெனல் சரேலென்றிட்டல் அனுகரணத்தின் ஓசை 
** 13 பெயர்கள் 48 
**730

#49
** உபய ஓசை 
படபட என்றொலித்தல் சாலப் பதபத களகள என்றல்
மொடுமொடு என்றிட்டல் வேறு மொகமொக கொளகொள என்றல் 
திடுதிடு என்றிட்டலோடு நெடநெட நெறுநெறு என்றல் 
கடகட கலகல என்றல் கருதிய உபய ஒசை 
** 11 பெயர்கள் 49 
**731

#50
** ஒன்று அல்லாத பேரொலி 
பூசலே தமரம் மற்றுப் பொருந்திய குமுறல் ஆர்ப்பு 
கோசணை உலம்பலோடு கோடணை கோலாகலம் 
வீசிய கலகம் வேறு மிக உளறுதல் தெழித்தல் 
பேசும் ஆகுலம் ஒன்று அல்லாப் பேரொலி ஈராறும் பேர் 
** 12 பெயர்கள் 50 
**732

#51
** பேரொலி கமையிலாது அழைத்தல் அதட்டல் 
திமிர்தலே எடுத்து வந்த திமிலமே களகளங்கள் 
குமுதமே பேரொலிப் பேர் கூப்பிடல் அலறல் கத்தல் 
கமை இலாது அழைத்தல் ஆகும் கதறலும் ஆம் தெழித்தல் 
அமைவர உரப்பல் சீறி அதிர்த்திடல் அதட்டலின்பேர் 
** 4, 4, 3 பெயர்கள் 51 
**733

#52
இறந்ததும் நிகழ்வும் மற்றை எதிர்வும் ஆம் புராணம் செய்தோன் 
அறம் தரு குணபத்திரன் தாள் அரண் எனச் சரணம் ஆனோன் 
மறம் தலைப்படாத வீரை மன்னன் மண்டலவன் செய்தான் 
சிறந்திடும் ஒலி பற்றும் பேர்ச் செய்யுள் ஐம்பத்திரண்டே
** பத்தாவது ஒலி பற்றிய பெயர்த் தொகுதி முற்றிற்று 

@11.  ஒரு சொற் பல்பொருட் பெயர்த் தொகுதி 
**734

#1
** காப்பு 
முடிவுஇல் இன்பத்து மூவா முதல்வனைப் போற்றி செய்தே 
அடிதொறும் இரண்டும் ஒன்றும் ஆதியில் பொருள் அடக்கி 
நடைபெறு ககரமாதினகர ஈறு எதுகையாகப் 
படியில் ஓர் சொல் பல்பொருள் பல்விதத் தொகை பகரலுற்றாம்
**735

#2
** ககரவெதுகை 
** பகவன் பகல் மகரம் வசி அகம் 
பகவனே ஈசன் மாயோன் பங்கயன் சினனே புத்தன் 
பகலே நாள் ஒரு முகூர்த்தம் பகலவன் நடுவே தேசு 
மகரமே சுறா பூந்தாது ஆம் வசி கூர்மை வசியம் வாளே 
அகம் மனம் மனையே பாவம் அகலிடம் உள்ளும் ஆமே 
** 5, 5, 2, 3, 5 பெயர்கள் 2 
**736

#3
** சிகரி சிகழிகை சிகரம் மகம் மாய்வு 
சிகரி கோபுரமே வெற்பு சீறு எலி கருநாரைப் பேர் 
சிகழிகை மயிர்முடிப் பேர் சிறந்த வாசிகை தேமாலை 
சிகரமே மலையின்உச்சி திரை சென்னி திவலை வெற்பு ஆம் 
மகம் யாகம் ஓர் நாள் என்ப மாய்வு என்ப மறைவும் சாவும் 
** 4, 3, 5, 2, 2 பெயர்கள் 3
**737

#4
** இகல இகுளை புகர் நகம் நகை ககனம் கடவுள் 
இகல் பகை வலி போர் முப்பேர் இகுளையே தோழி நட்பு ஆம் 
புகர் என்ப மழைக்கோள் குற்றம் புற்கெனும் நிறமும் முப்பேர் 
நகம் மலை உகிர் மரப்பேர் நகை மகிழ்வு ஒளி சிரிப்பு ஆம் 
ககனம் விண் படை காடு என்ப கடவுள் தே முனி நன்மைப் பேர்
** 3, 2, 3, 3, 3, 3, 3 பெயர்கள் 4 
**738

#5
** சாகம் பாகல் யூகம் நாகம் 
சாகம் சாகினி வெள்ளாடு தேக்கு எனும் தருவும் ஆமே 
பாகலே காரவல்லி பலா என்றும் பகரலாமே 
யூகமே கருங்குரங்கோடு உட்பொருள் உணர்தல் தர்க்கம் 
நாகம் விண் குரங்கு புன்னை நற்றூசு மலை பாம்பு யானை 
** 3,2, 3, 7 பெயர்கள் 5 
**739

#6
** திகிரி சக ஞெகிழி எகினம் 
திகிரியே மூங்கில் வட்டம் தேர் உருள் ஆழி வெற்பு ஆம் 
சிகி என்ப மஞ்ஞை தீ ஆம் தீதுறு கேதுவும் பேர் 
ஞெகிழியே சிலம்பின்நாமம் நெருப்புறு கொள்ளிக்கும் பேர் 
எகினமே புளிமா ஞாளி கவரிமா நீர்நாய் அன்னம் 
** 6, 3, 2, 5  பெயர்கள் 6 
**740

#7
** ஆகு யோகம் போக போகில் கோகிலம் குடங்கர் 
ஆகுவே எலியின்நாமம் ஆம் பெருச்சாளிக்கும் பேர் 
யோகமே தியானம் கூட்டம் உபாயம் ஆம் உயர்ச்சிக்கும் பேர் 
போகி இந்திரன் பாம்பு என்ப போகில் புட்பொது பூ மொட்டு ஆம் 
கோகிலம் குயில் பல்லிப் பேர் குடங்கரே குடிசை கும்பம் 
** 2, 4, 2, 2, 2, 2 பெயர்கள் 7 
**741

#8
** பொகுட்டு இகுத்தல் புகை அகைத்தல் 
பொகுட்டு தாமரைப்பூங்கொட்டை பொருப்பு சேற்றெழுந்த கொப்புள் 
இகுத்தலே செகுத்தல் வீழ்த்தல் இரித்தலோடு அழைத்தல் ஈதல் 
புகைக்கிடும் நாமம் தூமம் போற்றும் யோசனைக்கும் பேரே 
அகைத்தல் வேதனை ஒடித்தல் அறுத்திடல் உயர்த்தல் ஆமே 
** 3, 5, 2, 4 பெயர்கள் 8 
**742

#9
** சிக்கம் கொக்கு வக்கிரம் சக்கிரி 
சிக்கமே குடுமி நாமம் சீப்பு உடன் உறியும் ஏற்கும் 
கொக்கு மாமரமே செந்நாய் குரண்டமே குதிரை மூலம் 
வக்கிரம் கொடுமை மீளல் மடங்குதல் உடனே வட்டம் 
சக்கிரி குயவன் செக்கான் தராபதி நெடுமால் பாம்பு 
** 3, 5, 4, 5 பெயர்கள் 9 
**743

#10
** தூக்கு பாக்கு மேக்கு மெய் ஊக்கம் 
தூக்கு என்ப பாட்டும் கூத்தும் துலாமும் ஆராய்தலும் பேர் 
பாக்கு என்பது எதிர்காலத்தைப் பகர் இடைச்சொல் துவர்க்காய்
மேக்கு மேற்றிசை மேலும் பேர் மெய் உண்மை உடலும் ஆமே 
ஊக்கமே வலி உற்சாகம் உள்ளத்தின் மிகுதிக்கும் பேர் 
** 4, 2, 2, 2, 3 பெயர்கள் 10 
**744

#11
** பகடு தகடு தபனன் அகடு அருள் மகரந்தம் 
பகடு இபம் பெருமை ஏறு பஃறி ஆண்மேதி ஐம்பேர் 
தகடு இலை ஐம்மை என்ப தபனனே இரவி தீ ஆம் 
அகடு என்ப நடுவே குக்கி அருள் என்ப கருணை சத்தி 
மகரந்தம் கள்ளும் தேனும் மலர்த் தாதும் வழங்கும் முப்பேர் 
** 5, 2, 2, 2, 2, 3 பெயர்கள் 11
**745

#12
** சகுந்தம் சடை சிகண்டி சகுனி சமம் சகுனம் 
சகுந்தம் புட்பொதுவே கங்கம் சடை என்ப வேணி வேர் ஆம் 
சிகண்டியே பாலையாழின்திறத்திசை மயில் அலிப் பேர் 
சகுனி புள் நிமித்தம்பார்ப்போன் சமம் என்பது அமர் ஒப்பு ஆகும் 
சகுனமே கிழங்கு புள்ளின் சாதியும் நிமித்தமும் பேர் 
** 2, 2, 3, 2, 2, 3 பெயர்கள் 12
**746

#13
** சக்கரம் பக்கம் நக்கன் 
சக்கரம் பெருமை ஓர் புள் தரணியே பிறப்பு வட்டம் 
மிக்க தேர்உருளே ஆழி வரை என விளம்பும் எண்பேர்
பக்கம் புள் சிறகு நட்பு பகர் திதி அருகும் ஆகும் 
நக்கனே அருகன் சம்பு நிருவாணி நாட்டும் முப்பேர் 
** 8, 4, 3 பெயர்கள் 13 
**747

#14
** பூகம் புன்கண் வாகு மாசி பாகம் பயோதரம் வாகை 
பூகமே திரளை பூகம் புன்கண் என்பது நோய் துன்பம் 
வாகுவே அழகு தோள் ஆம் மாசியே மகம் ஓர் மாதம் 
பாகமே பிச்சை பங்கு ஆம் பயோதரம் புயலே கொங்கை 
வாகை பண்பு ஒழுக்கம் வெற்றி தவம் தொழில் வழங்கல் மிக்கு ஆம்
** 2, 2, 2, 2, 2, 2, 7 பெயர்கள் 14 
**748

#15
** நோக்கு நுதல் சேக்கை பூக்கம் புலிங்கம் ஆக்கம் அறல் 
நோக்கு என்பது அழகு பார்வை நுதல் என்ப புருவம் நெற்றி 
சேக்கையே மிருகம்துஞ்சும்இடம் முலை சிறந்த பாயல் 
பூக்கமே கமுகு ஊர் என்ப புலிங்கம் தீப்பொறி ஊர்ப்புள் ஆம் 
ஆக்கம் பூமகள் செல்வப்பேர் அறல் கருமணல் நீர் ஆமே 
** 2, 2, 3, 2, 2, 2, 2 பெயர்கள் 15 
**749

#16
** சீகரம் சாகரம் காகுளி ஈகை இரவி 
சீகரம் கரகம் வீசும் கவரியும் தவலையும் பேர் 
சாகரம் துயிலொழித்தல் சமுத்திரம் இருபேர் சாற்றும் 
காகுளி தவிசு கண்டத்து எழும் ஒலி இசையும் காட்டும் 
ஈகை பொன் கொடை ஈங்கைப் பேர் இரவியே மலை ஆதித்தன் 
** 3, 2, 3, 3, 2 பெயர்கள் 16
**750

#17
** தகை  அகி அரிட்டம் ககம் கடுத்தல் அகவல் அந்தம் 
தகை என்பது அழகு பண்பு தயையொடு பெருமை நாற்பேர் 
அகி என்பது அரவு இரும்பு ஆம் அரிட்டமே கள்ளு காக்கை 
ககம் என்பது அம்பு புள் ஆம் கடுத்தல் ஒப்பு ஐயம் வேகம் 
அகவல் பா மயிற்குரல் கூத்து அந்தமே அழகு ஈறு என்ப 
** 4, 2, 2, 2, 3, 3, 2 பெயர்கள் 17 
**751

#18
** அக்கு நக்கல் ஞாட்பு இக்கு ஈரம் மக்கள் வரைதல் 
அக்கு என்பு விடைமுரிப்பும் அணி சங்கு மணியும் ஆகும் 
நக்கலே நகை உண்டல் பேர் ஞாட்பு அமர் பாரம் கூட்டம் 
இக்கு என்ப கரும்பு கள் ஆம் ஈரமே குளிர்ச்சி அன்பு 
மக்கள் மானுடர் சிறார் பேர் வரைதலே கொள்ளல் நீக்கல் 
** 3, 2, 3, 2, 2, 2, 2 பெயர்கள் 18
**752

#19
** கேகயம் தோகை போகம் போகுதல் 
கேகயம் மஞ்ஞை ஓர் பண் அசுணமா கிளத்தும் முப்பேர் 
தோகையே மயில்வால் மஞ்ஞை விலங்கின்வால் சொல்லும் முப்பேர்
போகமே பாம்பின் மெய்யும் போகத்தின் விகற்பும் ஆகும் 
போகுதல் நெடுமை நேர்மை போகுதல் எனும் முப்பேரே 
** 3, 3, 2, 3 பெயர்கள் 19 
**753

#20
** கைக்கிளை சுக்கை சூத்திரம் எக்கர் மொக்குள் 
கைக்கிளை இசை விகற்பம் ஒருதலைக்காமமும் பேர் 
சுக்கை தாரகை மாலைப் பேர் சூத்திரம் பொறி நூல் நூற்பா 
எக்கரே சொரிதலோடு குவிதலும் இருபேர் என்ப 
மொக்குளே குமிழி பூவின் முகிழ் என மொழியலாமே 
** 2, 2, 3, 2, 2 பெயர்கள் 20 
**754

#21
** ஙகர எதுகை 
** புங்கம் இங்கள் சித்திரன் கங்கு தொங்கல் 
புங்கமே உயர்ச்சி அம்பு பொரும் அம்பின் குதை முப்பேரே 
திங்கள் அம்புலி மாதப்பேர் சித்திரன் ஓவன் தச்சன் 
கங்கு என்ப வரம்பின் பக்கம் கருந்தினை பருந்தும் ஆமே 
தொங்கலே பீலிக் குஞ்சம் தூக்கொடு தொடுத்த மாலை 
** 3, 2, 2, 3, 3 பெயர்கள் 21
**755

#22
** சங்கம் பங்கு வங்கம் அங்கணம் 
சங்கமே கணைக்கால் ஓர் எண் சபை சங்கு புலவர் நெற்றி 
பங்கு என்ப முடமே ஆகும் பாதியும் சனியும் ஏற்கும் 
வங்கமே வெள்ளி நாவாய் வழுதலை ஈயம் ஆமே 
அங்கணம் சேறு முற்றம் ஆம் சலதாரைக்கும் பேர்
** 6, 3, 4, 3 பெயர்கள் 22 
**756

#23
** ஞாங்கர் தூங்கல் வாங்கல் வை வேங்கை வீ 
ஞாங்கர் வேல் பக்கம் முன்பு மேல் என நான்கும் ஆகும் 
தூங்கலே நிருத்தம் யானை துயில் சோம்பு தராசு தாழ்தல் 
வாங்கலே வளைத்தல் கொள்ளல் வை என்ப கூர்மை வைக்கோல் 
வேங்கை பொன் புலி மரப்பேர் வீ நீக்கம் பூ புள் சா ஆம் 
** 4, 6, 2, 2, 3, 4 பெயர்கள் 23 
**757

#24
** மங்குல் மருந்து பங்கி அங்கதம் பங்கம் 
மங்குல் கார் இருள் விண் முப்பேர் மருந்து அமுதொடு மருந்து ஆம்
பங்கியே பிற மயிர்க்கும் பகரும் ஆண்மயிர்க்கும் பேர் ஆம் 
அங்கதம் பன்னகம் தோள் அணி உடன் வசைச்சொல் ஆகும் 
பங்கமே சேறு தூசு பழுதொடு பின்னம் ஆமே 
** 3, 2, 2, 3, 4 பெயர்கள் 24 
**758

#25
** அங்கம் பிங்கலம் பொங்கர் பொங்கல் பொச்சாப்பு 
அங்கமே உடல் உறுப்பு என்பு ஆறு அங்கம் கட்டில் ஐம்பேர் 
பிங்கலம் பொன்னும் பொன்னின் நிறத்தையும் பேசல் ஆகும் 
பொங்கரே மரத்தின் கோடு பொருப்பு உயர் இலவு முப்பேர் 
பொங்கலே கொதித்தல் மிக்கு ஆம் பொச்சாப்பு மறவி தீது ஆம் 
** 5, 2, 3, 2,  2 பெயர்கள் 25 
**759

#26
** சகர எதுகை 
** பாசனம் வாசம் கோசம் தேசிகன் 
பாசனம் என்ப சுற்றம் பாண்டம் உண்கலமும் பன்னும் 
வாசமே இருப்பிடம் பூமணம் புள்ளின் சிறகு தூசு ஆம் 
கோசமே மதில்உறுப்பு ஆண்குறி முட்டை முறை பண்டாரம் 
தேசிகன் வணிகன் தேசாந்தரியொடு குருவும் ஆமே 
** 3, 4, 5, 3 பெயர்கள் 26 
**760

#27
** மூசல் முடலை கீசகம் கேழ் வீசல் வெம்மை 
** கேசரம் கிருட்டி 
மூசல் மொய்த்திடல் சா என்ப முடலையே திரட்சி உண்டை 
கீசகம் குரங்கு வேய் ஆம் கேழ் நிறம் ஒளி ஒப்பு ஆகும் 
வீசலே எறிதல் ஈவு ஆம் வெம்மை உட்டணம் விருப்பம் 
கேசரம் மகிழ் பூந்தாது ஆம் கிருட்டி ஓர் ஈற்று ஆ பன்றி 
** 2, 2, 2, 3, 2, 2, 2, 2 பெயர்கள் 
**761

#28
** அசி நிசி நீர் பிசி சுசி சுடர் 
அசி படைக்கலமே வாளே அவமதிச் சிரிப்பு முப்பேர் 
நிசி இரா மஞ்சள் பொன் ஆம் நீர் புனல் குணம் பூராடம் 
பிசி என்ப பொய்யும் சோறும் பேசு அரும்பொருளும் முப்பேர் 
சுசி கோடை சுத்தம் தீ ஆம் சுடர் விளக்கு இரவி அங்கி 
** 3, 3, 3, 3, 3, 3 பெயர்கள் 
**762

#29
** ஆசு காசு ஆசினி தேசிகம் 
ஆசு என்ப விரைவு குற்றம் அற்பம் மெய்க்கவசம் நாற்பேர் 
காசு என்ப கோழை குற்றம் கதிர் விடும் மணி முப்பேரே 
ஆசினி பலா விசேடம் மரவுரி மரக்காழ் விண் ஆம் 
தேசிகம் அழகு காந்தி திசைச்சொல் ஓர் கூத்து செம்பொன் 
** 4, 3, 4, 5 பெயர்கள் 
**763

#30
** பச்சை கச்சை செச்சை திகை மிச்சை 
பச்சையே மரகதம் தோல் பரிமளப்புதல் மால் புந்தி 
கச்சை என்பது தழும்பு கயிறொடு கவசம் முப்பேர் 
செச்சை மை வெட்சி தேய்வை திகை என்ப திசை சுணங்கு ஆம் 
மிச்சையே பொய்த்தல் ஆகும் மிடித்தல் அஞ்ஞானம் முப்பேர் 
** 5, 3, 3, 2, 3 பெயர்கள் 
**764

#31
** பிச்சம் கச்சம் எச்சம் இபம் அச்சம் 
பிச்சம் ஆண்மயிரும் பீலிக்குடையும் வெண்குடையும் ஆகும் 
கச்சம் யானைக்கழுத்தின் கயிறு அளவொடு மரக்கால் 
எச்சமே குறை சேய் யாகம் இபம் என்ப மரக்கோடு யானை 
அச்சமே அகத்தி ஐம்மை அஞ்சல் இ முப்பேர் ஆமே 
** 3, 3, 3, 2, 3 பெயர்கள் 31 
**765

#32
** ஆசை ஆகுலம் காசை காமர் பாசம் தூசு 
ஆசையே திசை பொன் அன்பு ஆம் ஆகுலம் வருத்தம் ஓசை 
காசையே காயா நாணல் காமர்தான் அழகு காதல் 
பாசமே கயிறு கூளி பகர் ஊசித்துளை அன்பு ஆகும் 
தூசு என்பது ஆடை யானைப்புரசை தூசிப்படைப் பேர் 
** 3, 2, 2, 2, 4, 3 பெயர்கள் 32 
**766

#33
** தாசி தளி வேசரி ஆசுகம் அந்தரி கோசிகம் 
தாசியே பரணி சூளை தளி என்ப துளியே கோயில் 
வேசரி கழுதையே கோவேறு வேசரியும் ஆகும் 
ஆசுகம் பகழி காற்று ஆம் அந்தரி உமையே துர்க்கை 
கோசிகம் சாமவேதம் கூறு பட்டு ஆடைக்கும் பேர் 
** 2, 2, 2, 2, 2, 3 பெயர்கள் 33 
**767

#34
** பசு பாரதி வசு அசம் அணை சசி 
பசு ஏறு சீவன் ஆ ஆம் பாரதி வாணி தோணி 
வசுவே ஆன்கன்றும் பொன்னும் வசுக்களும் தீயும் நாற்பேர்  
அசம் மூ ஆண்டு உறு நெல் ஆடு ஆம் அணை என்ப கரையே மெத்தை
சசி என்ப கர்ப்பூரம் சந்திரன் அயிராணி முப்பேர் 
** 3, 2, 4, 2, 2, 3 பெயர்கள் 34 
**768

#35
** விசும்பு தசும்பு சாத்தன் இசை ஏங்கல் பிசுனன் 
விசும்பு பொன்னுலகு மேகம் விண்ணொடு திசையும் நாற்பேர் 
தசும்பு நல் குடம் மிடா ஆம் சாத்தனே அருகன் ஐயன் 
இசை புகழ் கிளவி பாட்டு ஆம் ஏங்கலே ஒலி இரங்கல் 
பிசுனனே கோளன் பொய்யன் உலோபனும் பேசும் முப்பேர் 
** 4, 2, 2, 3, 2, 3 பெயர்கள் 35 
**769

#36
** வச்சிரம் நொச்சி  தச்சன் உச்சி உறுப்பு 
வச்சிரம் சதுரக்கள்ளி வைரமே குலிசம் முப்பேர் 
நொச்சியே சிந்துவாரம் மதில் சிற்றூர் நுவலல் ஆமே 
தச்சனே சித்திரைப் பேர் தபதியன்தானும் ஆகும் 
உச்சி நண்பகல் உச்சிப் பேர் உறுப்பு அவயவம் உடம்பு ஆம் 
** 3, 3, 2, 2, 2 பெயர்கள் 36 
**770

#37
** பாசு பப்பு மாசு கேசம் வாசி 
பாசு என்ப பசுமை மூங்கில் பப்பு என்ப பரப்போடு ஒப்பு ஆம் 
மாசு என்ப சிறுமை குற்றம் மழை அழுக்கொடு நாற்பேரே 
கேசம் பெண்மயிர்க்கும் ஆண்பால்மயிருக்கும் கிளத்தல் ஆகும் 
வாசியே குழல் முன்நாள் மா வாசி என் ஏவல் நாற்பேர் 
** 2, 2, 4, 2, 4 பெயர்கள் 37 
**771

#38
** மிசை விசயம் முசலி வசதி வரன் 
மிசை என்பது உணவு மேடு மீமிசைச் சொல்லு முப்பேர் 
விசயமே வென்றி வெல்லம் வெங் கதிர் மண்டலப்பேர் 
முசலியே உடும்பு தாழை முந்திய இராமன் ஓந்தி 
வசதி நல்லிடம் ஊர் வீடு ஆம் வரன் அயன் பரமன் காந்தன் 
** 3, 3, 4, 3, 3 பெயர்கள் 38 
**772

#39
** ஞகர வெதுகை 
** துஞ்சல் பஞ்சரம் பரதர் கஞ்சம் குஞ்சம் 
துஞ்சலே நிலைபேறு ஆகும் துயில் சோம்பு சாவும் ஆகும் 
பஞ்சரம் செருந்தி கூடு ஆம் பரதரே கழியர் நாய்கர் 
கஞ்சமே தாளம் குல்லை கமலம் வெண்கலம் வட்டு அப்பம் 
குஞ்சம் ஈயோட்டி நாழி குறள் குன்றி குறளைச்சொல்லே 
** 4,2, 2, 5,  5 பெயர்கள் 39
**773

#40
** நெஞ்சு நிழல் மஞ்சு வஞ்சி தஞ்சம் 
நெஞ்சு என்ப மனம்  மார்பின்பேர் நிழல் செல்வம் குளிர்ச்சி சாயை
மஞ்சு பூண் வலி வனப்பு மழை யானை முதுகு இவ் ஐந்தே 
வஞ்சி மேற்செலவு ஓர் ஊர் பா வல்லி மென் மருங்குல் பெண்ணும் 
தஞ்சமே எளிமை என்ப தரு பற்றுக்கோடும் ஆமே 
** 2, 3, 5, 5, 2 பெயர்கள் 40 
**774

#41
** அஞ்சனம் மஞ்சரி அஞ்சலி இஞ்சி எறுழ் 
அஞ்சனம் கறுப்பு மை திக்கானையில் ஒன்று முப்பேர் 
மஞ்சரியே பூங்கொத்து மாலை செந்தளிரும் ஆகும் 
அஞ்சலி வணங்கல் வாவல் பறவையும் ஆகும் என்ப 
இஞ்சியே புரிசை இஞ்சி எறுழ் என்ப வலி தண்டு ஆமே 
** 3, 3 2, 2, 2 பெயர்கள் 41
**775

#42
** கிஞ்சுகம் கிருட்டிணன் கஞ்சனம் பஞ்சம் 
** பகழி வஞ்சனை மாயன் 
கிஞ்சுகம் முருக்கு செம்மை கிருட்டிணன்தான் மால் பார்த்தன் 
கஞ்சனமே கண்ணாடி கரிக்குருவிக்கும் பேரே 
பஞ்சமே சிறுமை ஐந்து ஆம் பகழி அம்பு இதன் குதைப் பேர் 
வஞ்சனை மாயை பொய் ஆம் மாயன் மால் கருநிறத்தோன் 
** 2, 2, 2, 2, 2, 2, 2 பெயர்கள் 42 
**776

#43
** குஞ்சி வஞ்சம் மாயம் கஞ்சன் களங்கம் கஞ்சிகை 
குஞ்சி ஆண்மயிர் புட்பார்ப்பு குன்றியின் கொடி முப்பேரே 
வஞ்சமே கபடம் வாள் ஆம் மாயம் வஞ்சனை பொய் என்ப 
கஞ்சனே குறளன் வேதன் களங்கம்தான் அழுக்கு குற்றம் 
கஞ்சிகை சிவிகை ஆடை கட்டு இடுதிரையும் ஆமே 
** 3, 2, 2, 2, 2, 3 பெயர்கள் 43 
**777

#44
** டகர எதுகை 
** நடலை மடல் படர் குடம் 
நடலை வஞ்சனை பொய் என்ப நடுங்கிய நுடக்கம் முப்பேர்  
மடல் பனையேடு போல்வ மலர் இதழ் ஓர் நூற்கும் பேர் 
படர் நடை நினைப்பு நோவு ஆம் பகர்ந்திடில் வீரர்க்கும் பேர் 
குடம் நகர் பசு ஓர் கூத்து கும்பமே கரும்பின்கட்டி 
** 3. 3. 4, 5 பெயர்கள் 44 
**778

#45
** மாடம் மழை கூடம் சேடன் கேடகம் 
மாடமே உழுந்தோடு இல்லாம் மழை என்ப குளிர்ச்சி மேகம் 
கூடம் இல் மறைவு கொல்லன் சம்மட்டி குவட்டின்உச்சி 
சேடன் ஓர் சாதி பாங்கன் செகம் தாங்கும் அனந்தன் என்ப 
கேடகம் பரிசை வேறு ஓர் கேடுஇல் ஊர் பலகை முப்பேர் 
** 2, 2, 4, 3, 3 பெயர்கள் 
**779

#46
** இடங்கர் முடங்கல் படங்கு விடங்கம் மிதவை 
இடங்கரே முதலை தூர்த்தர் குடங்கர் இ முப்பேர் என்ப 
முடங்கரே மடங்கல் கைதை மூங்கில் நோய் ஓலை ஐம்பேர்  
படங்கு மேற்கட்டி என்ப பகர் பெருங்கொடியும் ஆகும் 
விடங்கம் ஏர் கொடி கொடுங்கை மிதவையே தெப்பம் சோறு ஆம் 
** 3, 5, 2, 3, 2 பெயர்கள் 
**780

#47
** குடிஞை தடி தொடி மடி 
குடிஞை புள் பொதுவும் யாறும் கூகையும் ஆகும் என்ப 
தடி வயல் உலக்கை வில்லு தண்டு மின் தசை உடும்பு ஆம் 
தொடி வளை ஒரு பலப்பேர் சூழ்ந்த கங்கணமும் ஆகும் 
மடி அடங்குதலே சோம்பு வயிறு நோய் புடைவை தாழை 
** 3, 7, 3, 6 பெயர்கள் 
**781

#48
** படிவம் பந்தம் வெடி துடி தூ கொடிறு குரவை 
படிவமே வடிவம் நோன்பு ஆம் பந்தமே கிளையும் கட்டும் 
வெடி அச்சம் பரிமளிக்கும் மென்புகை வெளி இ முப்பேர் 
துடி ஏலம் பறை காலப்பேர் தூ தூய்து ஊன் பற்றுக்கோடு ஆம் 
கொடிறு பூசம் கதுப்பு ஆம் குரவையே கடல் ஓர் கூத்து 
** 2, 2, 3, 3, 3, 2, 2 பெயர்கள் 
**782

#49
** கடிகை படிறு பகர்தல் சுடிகை இடி 
கடிகை நாழிகையே துண்டம் கதவு இடு தாழே முப்பேர் 
படிறு பொய் களவு இரண்டு ஆம் பகர்தலே விற்றல் பேசல் 
சுடிகையே மகுடம் உச்சி சுட்டியும் இட்ட பேரே 
இடி இடிப் பேரே நெல்மா ஏற்றிடும் உறுதிச்சொல்லே 
** 3, 2, 2, 3, 3 பெயர்கள் 
**783

#50
** நாடி நந்தல் பாடி கோடிகம் குடம்பை கோடி குடுமி 
நாடி நாழிகை நரம்பு ஆம் நந்தல் கேடு உடனே ஆக்கம் 
பாடியே நகரம் நாடு பாசறை ஆயர் ஊர்ப் பேர் 
கோடிகம் துகில் பூந் தட்டு ஆம் குடம்பையே முட்டை கூடு 
கோடி எண் புதுமை தூசு ஆம் குடுமியே வெற்றி உச்சி 
** 2, 2, 4, 2, 2, 3, 2 பெயர்கள் 50 
**784

#51
** உடு கடு படு படுதல் 
உடு விண்மீன் கிடங்கு நாவாய் ஓட்டும்கோல் அம்பில் ஈர்க்கு ஆம் 
கடு விடம் முள்ளுதானே அரிதகி கசப்பு நாற்பேர் 
படு மரக்குலையே கள்ளு பரவும் நீர்நிலை நன்மைப் பேர் 
படுதலே ஒலி இன்றாதல் பகரில் உண்டாதல் பூத்தல் 
** 4, 4, 4, 4 பெயர்கள் 51 
**785

#52
** மாடு வைகல் சேடு பாடு பட்டு ஈடு 
மாடு பொன் பக்கம் செல்வம் வைகல் வைகறை நாள் தங்கல் 
சேடு என்ப பெருமை நன்மை திரட்சியே அழகு நாற்பேர் 
பாடு இடம் பெருமை ஓசை பட்டே பட்டாடை சிற்றூர் 
ஈடு என்ப குழைவே ஒப்பே வலியொடு பெருமையும் பேர் 
** 3, 3, 4, 3, 2, 4 பெயர்கள் 52 
**786

#53
**  மடைபடை இடை மடம் 
மடை என்ப மதகு சோறு மணிப் பணிக் கடைப்பூட்டும் பேர் 
படை படைக்கலம் கலப்பை படுக்கை பல்லணமே தானை 
இடை நடு என்ப மற்றும் இடப்பெயர் நுசுப்பும் ஆமே 
மடம் அறியாமை சத்திரம் மன்னிய முனிவாசப்பேர் 
** 3. 5, 3, 3 பெயர்கள் 53
**787

#54
** வாடை ஆடு அல்கல் கோடை ஒடை 
வாடை என்பதுதான் வீதி வடகாற்றுத்தானும் ஆமே 
ஆடு மேழகம் வெற்றிப் பேர் அல்கல் நாள் சுருங்கல் வைகல் 
கோடை மேல்காற்றினோடு குதிரை வெண்காந்தள் என்ப 
ஓடை நீர்நிலை கிடங்கே ஒரு மரம் வல்லி பட்டம் 
** 2, 2, 3, 3, 5 பெயர்கள் 54 
**788

#55
** அடுப்பு வடு மத்தகம் இடக்கர் கடைப்பிடி 
அடுப்பு என்ப பரணி நாளே அச்சமே சுல்லி முப்பேர் 
வடு செம்பு தழும்பு வண்டு ஆம் மத்தகம் நெற்றி சென்னி 
இடக்கரே மறைத்த வார்த்தை கும்பமும் என்ப நூலோர் 
கடைப்பிடி மறப்பிலாமை கருதிய தேற்றம் ஆமே 
** 3, 3, 2, 2, 2 பெயர்கள் 55
**789

#56
** பட்டம் புட்டம் குட்டம் வட்டம் 
பட்டமே ஓடை தூசு பதவி வாள் கவரிமா ஆம் 
புட்டமே காகம் ஆகும் புடைவையும் நிறைவும் முப்பேர் 
குட்டமே தொழுநோய் ஆழம் குளம் எனப் பெயர் முப்பாற்றே 
வட்டமே பரிசை நீர்ச்சால் வலயம் கைம்மணி தூசு ஊர்கோள் 
** 5, 3, 3, 6 பெயர்கள் 56 
**790

#57
** திட்டை தட்டை கிட்டி கட்டளை 
திட்டையே உரலும் மேடும் திண்ணையும் நண்ணும் முப்பேர் 
தட்டை வேய் தினைத்தாள் கிள்ளைதனைக் கடி கோலே முண்டம் 
கிட்டியே தலைஈற்றுஆ ஆம் கிருட்டி ஆம் தாளம் முப்பேர் 
கட்டளை நிறைகல் ஒப்பே இட்டிகை இயற்றல் ஆணி 
** 3, 4, 3, 4 பெயர்கள் 57 
**791

#58
** நாட்டம் நாகு ஒட்டம் உயிர் கோட்டம் தோட்டி துளை 
நாட்டம் கண் ஓர் பண் வாள் ஆம் நாகு சங்கு இளமை நத்தை 
ஓட்டம் மேல்உதடே தோல்வி உயிர் என்ப காற்றே சீவன் 
கோட்டம் கோண் படப்பை நாடு கோயில் அவ்வியம் ஆன்கொட்டில் 
தோட்டி அங்குசம் கபாடம் துணை என்பது அளவும் ஒப்பும் 
** 3, 3, 2, 2, 6, 2, 2 பெயர்கள் 58 
**792

#59
** தடம் அடல் அருத்தம் உடல் ஒங்கல் விடபம் 
தடம் மலை பெருமை கோணல் சரி கரை அகலம் வாவி 
அடல் கொலை வலி போர் ஆகும் அருத்தமே பொருள் பொன் பாதி 
உடல் பொருள் ஆகம் என்ப ஓங்கல் வெற்பு உயரம் மூங்கில் 
விடபமே இடபராசி விடை மரக்கொம்பு முப்பேர் 
** 7, 3, 3, 2, 3, 3பெயர்கள் 59 
**793

#60
** கடகம் வடகம் வலம் படுவி பரம் நொடி நானம் 
கடகமே சேனை வட்டம் கைவளை மதில் நாற்பேரே 
வடகம் தோல் அத்தவாளம் வலம் என்பது இடமே வெற்றி 
படுவி கள்விற்பாள் குண்டம் பரம் என்ப கவசம் மெய் ஆம் 
நொடி பிதிர் கிளவி ஆகும் நூனம் நிச்சயமே குன்றல் 
** 4, 2, 2, 2, 2, 2, 2 பெயர்கள் 60 
**794

#61
** கடம் மடங்கல் படம் 
கடம் கயிறு உவாக்கதுப்பு கான் சுரம் உடம்பு நீதி 
குடம் கடாம் ஈமம் யானைக்குழாம் கடன் முழவு ஐந்துஏழாம் 
மடங்கலே அசனி சீயம் மறலி நோய் யுகம் ஊழித்தீ 
படம் கரிமுகபடாம் நல் துகில் பாம்பின் பணம் முப்பேரே 
** 12, 6, 3 பெயர்கள் 61 
**795

#62
** ஆடல் பாடலம் கோடரம் ஆடவர் 
ஆடலே பெண் ஆண் கூடல் வார்த்தை கூத்தாடல் வென்றி 
பாடலம் சிவப்பினோடு பாதிரி குதிரை முப்பேர் 
கோடரம் குரங்கு சோலை கொம்பொடு குதிரை ஆகும் 
ஆடவர் புருடநாமம் ஆம் இளையவர்க்கும் பேரே 
** 4, 3, 4, 2 பெயர்கள் 62 
**796

#63
** கடி வடுகு வடவை 
கடி மணம் விரைவு கூர்மை காலம் பேய் விளக்கம் காப்பு 
வடிவு அச்சம் வாசம் ஐயம் வரைவு விம்மிதம் ஏழ்ஆறு ஆம் 
வடுகே இந்தளராகப்பேர் மருதயாழ்த்திறனும் ஆமே 
வடவையே குதிரைப்பெட்டை உவாப் பிடி வடவைத்தீ ஆம் 
** 13, 2, 3 பெயர்கள் 63
**797

#64
** கோடு மோடு முறுவல் ஆடி 
கோடு சங்கு ஊதுகொம்பு மரக்கொம்பு விலங்கின்கொம்பு 
நீடு செய் வரம்பு குன்றின் முகடு நீர்க்கரை ஏழ்பேர் ஆம் 
மோடு மேடு உதரம் ஆகும் முறுவலே நகைத்தல் பல் ஆம் 
ஆடியே ஓர் மாதம் கண்ணாடி உத்தராடம் ஆமே 
** 7, 2, 2, 3 பெயர்கள் 
**798

#65
** தட்டு செட்டி செப்பு மட்டு மார்க்கம் பட்டிகை 
தட்டு தேர்நடுவு குற்றம் தட்டொடு பரிசை முட்டு ஆம் 
செட்டி வாணிகன் செவ்வேள் ஆம் செப்பு உரை கரண்டகப்பேர் 
மட்டு என்பது எல்லை கள் ஆம் மார்க்கமே சமயம் வீதி 
பட்டிகை என்ப கச்சு பகட்டுடன் இரதனம் ஆமே 
** 5, 2, 2, 2, 2, 3 பெயர்கள் 
**799

#66
** கடை களேவரம் உடை உடுக்கை அடை நடை நார் 
கடை முடிவு இடம் வாயில் பேர் களேவரம் பிணம் உடம்பு ஆம் 
உடை துகில் செல்வம் என்ப உடுக்கை தண்ணுமை துகில் பேர் 
அடை இலை கனமே அப்பம் அடுத்தல் செல்வழி ஐம்பேர் ஆம் 
நடை வழி ஒழுக்கம் செல்வம் நார் என்ப கயிறு அன்பு ஆமே 
** 3, 2, 2, 2, 5, 3, 2  பெயர்கள் 66
**800

#67
** விடை கிடை கீதம் படி குடி கொடி 
விடை எதிர்மொழியும் ஏறும் விடுத்தலும் விளம்பும் முப்பேர் 
கிடை சடை உவமை நெட்டி கீதமே இசையும் வண்டும் 
படி அங்கவடி சோபானம் பகை குணம் உவமை பார் ஆம் 
குடி குலம் புருவம் ஊர் ஆம் கொடி வல்லி துவசம் காக்கை 
** 3, 3, 2, 6, 3, 3 பெயர்கள் 
**801

#68
** நட்டம் நகர் தொட்டல் தட்டல் தை கட்டல் 
நட்டமே நடனம் கேடு ஆம் நகர் என்ப மனையும் ஊரும் 
தொட்டல் என்பதுவே உண்டல் தோண்டல் கை தீண்டல் முப்பேர்
தட்டலே தடை கிட்டல் பேர் தை ஒரு மாதம் பூசம் 
கட்டல் என்பது தடுத்தல் களைதல் பந்தித்தல் கள்ளல் 
** 2, 2, 3, 2, 2, 4 பெயர்கள் 68 
**802

#69
** புட்கரம் வெட்சி பெட்பு பிரசம் 
புட்கரம் நிறைவு பாண்டமுகம் தீர்த்தம் புனல் வான் சேனம் 
கட்கம் பங்கயமே யானைக்கைந்நுனி குருகு ஈரைந்து ஆம் 
வெட்சி என்பதுவே செச்சை மிகு நிரைகவர்தல் என்ப 
பெட்பு என்ப பெருமை அன்பு ஆம் பிரசம் தேன் மது வண்டு ஆமே 
** 10, 2, 2, 3 பெயர்கள் 69 
**803

#70
** அடுதல் சடிலம் படலை கடுகு 
அடுதலே அட்டல் என்ப அடர்தலும் கொலையும் முப்பேர் 
சடிலமே நெருங்கலோடு சடை குதிரையும் முப்பேரே 
படலையே படர்தல் மாலை பதலையே வாசிக்கோவை 
கிடுகு தேர்மரச்சுற்றின்பேர் பரிசைக்கும் கிளத்தல் ஆமே 
** 3, 3, 4, 2 பெயர்கள் 70 
**804

#71
** படலிகை கொடியன் குண்டு தொடு முடி 
படலிகை பீர்க்கு வட்டம் பரந்த கைம்மணி பூந்தட்டு ஆம் 
கொடியனே கொடியன் கேது ஆம் குண்டு ஆழம் தாழ்வு ஆண்மாவே 
தொடு என்ப மருதப்பூமி தோட்டம் கைதவம் முப்பேரே 
முடி மயிர் முடியே சென்னி மகுடமும் மொழியலாமே 
** 4, 2, 3, 3 ,3பெயர்கள் 71 
**805

#72
** ஆடகம் அஞர் கோடகம் பீடிகை தோடு 
ஆடகம் துவரை பொன் ஆம் அஞர் அறிவிலரே துக்கம் 
கோடகம் முடியுறுப்பும் குதிரையும் புதுமையும் பேர் 
பீடிகை ஆவணம் பூந்தட்டொடு பீடம் முப்பேர் 
தோடு பூவிதழே பெண்ணைமடல் போல்வ தொகுதிக்கும் பேர்
** 2, 2, 3, 3, 3, 3பெயர்கள் 72 
**806

#73
** அடர் விடர் விடலை அடி 
அடர் என்ப நெருங்குதல் பேர் ஐம்மையின் வடிவும் ஆகும் 
விடர் முனிஇருப்பு தூர்த்தர் கமர் வெற்பின் முழை காடு ஐம்பேர் 
விடலையே தலைவன் பேரும் விறலோன்தன்பேரும் ஆகும் 
அடி செண்டுவெளி தாள் ஆதி கவிதையின்பாதம் ஆமே 
** 2, 5, 2, 4 பெயர்கள் 
**807

#74
** ணகர எதுகை 
** புணர்வு பொழில் உணர்வு குணம் கணம் 
புணர்வு தோய்ந்திடல் இசைப்பு ஆம் பொழில் புவி பெருமை சோலை 
உணர்வு என்ப தெளிவே ஊடலொழிதலே அறிவும் ஆகும் 
குணம் என்ப கயிறு பண்பு கும்பம் வில்நாணி நாற்பேர் 
கணம் உடு நோய் திரட்சி காலநுட்பம் பேய் வட்டம் 
** 2, 3, 3, 4, 6 பெயர்கள் 
**808

#75
** ஆணம் அலம் ஓணம் ஊதியம் காணம் கோணல் 
ஆணமே குழம்போடு அன்பு ஆம் அலம் நாஞ்சில் அமையும் என்றல் 
ஓணம் மாயோன்நாள் ஆறு ஆம் ஊதியம் இலாபம் கல்வி 
காணமே பரிஊண் செக்கு ஓர் காணம் பொற்காசு நாற்பேர் 
கோணலே மாறுபாடும் கூனும் ஆம் வளைவும் ஆமே 
** 2, 2, 2, 2, 4, 3 பெயர்கள் 
**809

#76
** குணில் குல்லை மணி துணி துளி பிணிமுகம் பிசிதம் 
குணில் குறுந்தடி கடிப்பு ஆம் குல்லையே துளவு வெட்சி 
மணி நவமணியே கண்டை வனப்பொடு கருமை நன்மை 
துணி சோதிநாளே துண்டம் துளி மழைத்துளி பெண்ஆமை 
பிணிமுகம் மயில் புள் பேர் ஆம் பிசிதம் நீர் இறைச்சி வேம்பு 
** 2, 2, 5, 2, 2, 2, 3 பெயர்கள் 
**810

#77
** நாண் தோணி வாணி ஏணி 
நாண் இலச்சைப் பேர்தானே கயிறு என்றும் நாட்டல் ஆகும் 
தோணியே கடைநாள் வங்கம் தொடு கணை தெப்பம் சேறு 
வாணியே ஓர் கூத்தின்பேர் வாக்கு நாமகளும் ஆமே 
ஏணியே உலகோடு எல்லை இறைவை மான் என்றும் சொல்லும் 
** 2, 5, 3, 4 பெயர்கள் 
**811

#78
** திணை செவி பிணை பிலவங்கம் கணை கட்சி பணை 
திணை நிலம் குலம் ஒழுக்கம் செவி என்ப காது கேள்வி 
பிணை ஆசை விலங்கின்பெண்பேர் பிலவங்கம் குரங்கு தேரை 
கணை அம்பு திரட்சியும் பேர் கட்சியே காடும் கூடும் 
பணை வயல் பரியின்பந்தி பருத்தல் வேய் அரசு பீடு ஆம் 
** 3, 2, 2, 2, 2, 2, 6 பெயர்கள் 78 
**812

#79
** யாணர் பாணம் சேண் ஆணை 
யாணரே புதுமை தச்சர் எய்திய வனப்பு நன்மை 
பாணம்தான் மேகவண்ணக் குறிஞ்சி எய் கணை பூம் பட்டு ஆம் 
சேண் என்பது அகலம் நீளம் செப்பிடில் உயரம் முப்பேர் 
ஆணை மெய்யுடனே வென்றி சூள் ஏவல் ஆக நாற்பேர் 
** 4, 3, 3, 4 பெயர்கள் 79 
**813

#80
** அண்டம் அயில் துண்டம் கண்டம் முண்டகம் 
அண்டம் ஆகாயம் முட்டை அயில் என்ப வேலே கூர்மை 
துண்டமே சாரைப்பாம்பு துணியொடு வதனம் மூக்கு ஆம் 
கண்டமே கவசம் வெல்லம் கழுத்து இடுதிரை வாள் துண்டம் 
முண்டகம் தாழை கள்ளு முளரி மத்தகம் முள்மூலம் 
** 2, 2, 4, 6,5 பெயர்கள் 80 
**814

#81
** அண்டர் சுண்டன் கண்டல் கரைதல் பண்டம் பாகு 
அண்டரே பகைவர் வானோர் ஆயர் என்று ஆகும் முப்பேர் 
சுண்டனே சதயநாளும் சூறனும் வேறு காட்டும் 
கண்டல் கேதகை முள்ளிப் பேர் கரைதலே விளித்தல் ஓசை 
பண்டம் பொன் பணிகாரப்பேர் பாகு பால் குழம்பு பாக்கு ஆம் 
** 3, 2, 2, 2, 2, 3 பெயர்கள் 81 
**815

#82
** விண்டு தொண்டு தண்டு வண்டு 
விண்டு என்ப மாயோன் வெற்பு மேகமே மூங்கில் காற்று ஆம் 
தொண்டு என்ப பழமை ஒன்பான் தொழும்பொடு வழிபாடு ஆமே 
தண்டு என்ப குழாயே வீணை தடி படை மிதுனம் ஓந்தி 
வண்டு என்ப சங்கு குற்றம் வளை அளி வாளி ஐம்பேர் 
** 5, 4, 6,5 பெயர்கள் 82
**816

#83
** உண்டை தொண்டை கொண்டை கண்டிகை 
உண்டையே திரளை ஆகும் உறு படை வகுப்பும் என்ப 
தொண்டை ஆதொண்டை கொவ்வை தூங்கும் யானைத்துதிக்கை 
கொண்டையே மயிர்முடிக்கும்  இலந்தையின்கனிக்கும் கூற்றாம்
கண்டிகை பதக்கம் வாகுவலயமே கலன் பெய் செப்பு 
** 2, 3, 2, 3 பெயர்கள் 83 
**817

#84
** தண்ணம் வண்ணம் மறை பண் மண் 
தண்ணம் ஓர்கண்பறைப் பேர் தறித்திடும் மழுவும் ஆகும் 
வண்ணம் ஏர் சந்தம் பண்பு ஆம் மறை இராசியமே வேதம் 
பண் என்ப பாட்டும் பண்ணும் பரிமாவின் கலணையும் பேர் 
மண் அணு ஒப்பனைப் பேர் முழவின் மார்ச்சனையும் ஆமே 
** 2, 3, 2, 3, 3 பெயர்கள் 84 
**818

#85
** அணங்கு துணங்கை குணுங்கர் துணங்கறல் தோன்றல்
அணங்கு நோய் அழகு தெய்வம் ஆசை பெண் கொலை வருத்தம்
துணங்கையே விழா பேய் கூத்து ஆம் ஆதிரை நாளும் சொல்லும் 
குணுங்கர் தோற்கருவி மாக்கள் குயிலுவர் இழிஞர் முப்பேர் 
துணங்கறல் இருள் விழா ஆம் தோன்றலே சுதன் நாதன்பேர்
** 7, 4, 3, 2, 2 பெயர்கள் 85 
**819

#86
** புணரி பணிலம் கணி பணி
புணரியே வாரி நீரின் பொரு திரை கரை முப்பேர் ஆம் 
பணிலமே சலஞ்சலம் சங்கு இருபெயர் பகரலாமே 
கணி வேங்கை மரமதாகும் கழனி சூழ் மருதமும் பேர் 
பணியே தோற்கருவி வார்த்தை பாம்பு செய்தொழிலும் ஆமே 
** 3, 2, 8, 4 பெயர்கள் 86 
**820

#87
** பாணி தாணு வேணி வியாளம் 
பாணி ஊர் நீர் கை ஓசை பற்று கான் போது நாடு 
சேணுறு சோலை பண்டம் சிறந்த பல்லியம் பன்னொன்றாம் 
தாணுவே சைலம் குற்றி சங்கரன் நிலை தூண் ஐம்பேர் 
வேணியே சடை விசும்பு ஆம் வியாளமே புலியும் பாம்பும் 
** 11, 5, 2, 2 பெயர்கள் 87 
**821

#88
** குண்டலம் குபேரன் மண்டலம் மந்தி 
** கொண்டல் கோட்டி மண்டலி 
குண்டலம் குழை விசும்பு ஆம் குபேரனே தனதன் சோமன் 
மண்டலம் பரி ஊர் வட்டம் மந்தியே ஊகம் வண்டு 
கொண்டலே முகில் கீழ்காற்று ஆம் கோட்டியே வாயில் கூட்டம் 
மண்டலி பூனை பாம்பு மண்ணொடு நாயும் ஆமே 
** 2, 2, 3, 2, 2, 2, 4 பெயர்கள் 88 
**822

#89
** புண்டரீகம் தண்டம் பிண்டி பிதா கண்டகம் களவு 
புண்டரீகம் திக்கானை புலி வண்டு கழுகு கஞ்சம் 
தண்டமே யானை செல்லும் வழி தண்டாயுதம் குடைக்கால் 
பிண்டி நெல்மா அசோகு ஆம் பிதா சிவன் பிரமன் நாரை 
கண்டகம் சுரிகை முள் வாள் களவு என்ப களா சோரப்பேர் 
** 5, 3, 2, 3, 3, 2 பெயர்கள் 89 
**823

#90
** பண்ணவன் தண்ணடை வண்மை ஒண்மை 
பண்ணவன் முனிவன் தேவன் பகர் குரு அருகன் நாற்பேர் 
தண்ணடை மருதம் சார் ஊர் நாடு என இருபேர் சாற்றும் 
வண்மையே வழங்கல் வாய்மை வளம் புகழ் வலி ஆம் என்ப 
ஒண்மையே மிகுதி நன்மை ஒழுங்கு அறிவு அழகு ஐம்பேரே 
** 4, 2, 5, 5 பெயர்கள் 90 
**824

#91
** எண் கண் காஞ்சி விண் விபுலம் பண்ணை 
எண் வலி எள் இலக்கம் எளிமை சோதிடம் விசாரம் 
கண் இடம் கணு வேய்க்கண் ஆம் காஞ்சி மேகலை ஓர் பண் ஆம் 
விண் முகில் சுவர்க்கம் வான் ஆம் விபுலம் பார் விரிவு பீடு 
பண்ணையே வயல் நீர்த்தாழ்வு மருதம் மா துயிலும் பாழி 
** 6, 3, 2, 3, 3, 4 பெயர்கள் 91
**825

#92
** காண்டம் பாண்டில் ஈண்டு 
காண்டமே திரை காடு அம்பு கமண்டலம் கலன் பெய் செப்பு 
நீண்ட கோல் முடிவு தூசு நீர் படைக்கலம் ஈரைந்தாம் 
பாண்டில் ஏறு ஊர்தி வட்டம் பணை கட்டில் விளக்கு தாளம் 
ஈண்டு என்பது இவ்விடத்தோடு இப்படி சடிதியும் பேர் 
** 10, 7, 3 பெயர்கள் 92 
**826

#93
** அண்டசம் சண்டன் தாள் சுண்டை சொர்க்கம் 
அண்டசம் முதலை ஓந்தி அரணை புள் உடும்பு பல்லி 
நண்டு மீன் தவளை ஆமை நாகம் இப்பியும் ஈராறாம் 
சண்டன் கூற்று அலி வெய்யோன் ஆம் தாள் கதவு உறு தாள் பாதம் 
சுண்டையே சுண்டை கள் ஆம் சொர்க்கமே சுவர்க்கம் கொங்கை 
** 12, 3, 2, 2, 2 பெயர்கள் 93 
**827

#94
** பணம் மணம் பணவை பையுள் நுணவை நுனி 
பணம் என்பது அரவின் பையும் பாம்பும் பொற்காசும் முப்பேர் 
மணம் என்ப வாசம் கூட்டம் வதுவையும் ஆகும் என்ப 
பணவையே பரணும் பேயும் பையுளே சிறுமை நோய் ஆம் 
நுணவை எண்ணோலை பிண்டி நுனி என்ப நுதி நுண்மைப் போர் 
** 3. 3, 2, 2, 2, 2 பெயர்கள் 94 
**828

#95
** தகர எதுகை 
** மதலை சிதலை சீதம் பதலை கதலி 
மதலையே கொன்றை பிள்ளை மரக்கலம் கொடுங்கை தூண் ஆம் 
சிதலை நோய் துணி செல் என்ப சீதம் நீர் குளிரே மேகம் 
பதலை ஓர்கண்பறைப் பேர் பருவரை தாழிக்கும் பேர் 
கதலியே வாழை தேற்று காற்றாடி துவசம் நாற்பேர் 
** 5, 3, 3, 3, 4 பெயர்கள் 95 
**829

#96
** இதழ் கதழ்வு கவி மதுகம் சிதடன் திதி 
இதழ் பனையேடு பூவின் இதழ் உதடு என இ முப்பேர் 
கதழ்வு வேகம் சிறப்பு ஆம் களி செருக்கொடு குழம்பு 
மதுகமே இருப்பை எட்டி மதுரம் ஆம் தராவும் ஆமே 
சிதடன் அந்தகன் மூடன்பேர் திதி பக்கம் நிலைபேறும் பேர் 
** 3, 2, 2, 4, 2, 2 பெயர்கள் 96 
**830

#97
** ஆதன் அங்கி போதகம் ஏதம் ஈமம் சூதன் சுவேதம்
ஆதன் ஆர் உயிர் ஓர்வுஇல்லான் அங்கி என்பது தீ சட்டை 
போதகம் யானைக்கன்று போற்றிய இளமைக்கும் பேர் 
ஏதம் துன்பம் குற்றப்பேர் ஈமமே மயானம் காட்டம் 
சூதன்  தேர்ப்பாகன் சூதன் சுவேதமே வெயர்வு வெண்மை 
** 2, 2, 2, 2, 2, 2, 2 பெயர்கள் 97 
**831

#98
** சூதம் சூதகம் பூதம் மாதவம் வாதம் 
சூதம் மாமரமே வண்டு சூதுடன் இரதம் தோன்றல் 
சூதகமே ஆசெளசம் தோகைமார் தோயாப் பூப்பு ஆம் 
பூதம் ஆல் இறந்தகாலம் புனிதம் ஐம்பூதம் சீவன் 
மாதவம் தவம் வசந்தம் வாதமே தருக்கம் காற்று ஆம் 
** 5, 2, 5, 2, 2 பெயர்கள் 98 
**832

#99
** மதன் வலித்தல் பதங்கம் பலி சிதம் நிதம்பம் 
மதன் வலி வேள் வனப்பு ஆம் வலித்தலே வளைத்தல் பேசல் 
பதங்கம் புள்பொது விட்டில் பேர் பலி பூசை பிச்சை நீறு ஆம் 
சிதம் விண்மீன் ஞானம் வெள்ளை செயமுறப்பட்டது ஆமே 
நிதம்பமே அல்குல் என்ப நெடு மலைப் பக்கமும் பேர் 
** 3, 2, 2, 2. 4, 2 பெயர்கள் 99 
**833

#100
** சதி விதி வேட்டுவன் பதி பதுக்கை பிதிர் பிண்டம் 
சதி உரோகிணி கற்பாட்டி வஞ்சனை தாளவொத்து 
விதி என்ப வினை அயன்பேர் வேட்டுவன் மகநாள் வேடன் 
பதி இறை கேள்வன் ஊர் ஆம் பதுக்கையே பாறை தூறு 
பிதிர் கதை நொடி தூவல் பேர் பிண்டமே திரளை பிச்சை 
** 4,2,2,3,2,3,2 பெயர்கள் 100 
**834

#101
** ஆதி பூதியம் பொம்மல் பாதிரி ஏதி இழை 
ஆதியே முதல் நேரோடல் அருகன் மால் ஈசன் வேதன் 
பூதியம் புவி உடல் பேர் பொம்மலே பொலிவும் சோறும் 
பாதிரி பாடலப்பேர் பணைத்து எழும் மூங்கிற்கும் பேர் 
ஏதி ஆயுதம் வாள் என்ப இழை நூல் ஆபரணம் ஆமே 
** 6, 2, 2, 2, 2, 2 பெயர்கள் 101
**835

#102
** சாதி போதம் புகல் ஓதி ஒதிமம் உருத்தல் 
சாதியே பிரம்பு கள் ஓர் தரு சிறு சண்பகப்பேர் 
போதம் ஞானம் தோணிப் பேர் புகல் குதிர் உடல் சொல் வெற்றி 
ஓதி பெண்மயிரே பூனை ஓந்தி மெய்ஞ்ஞானம் வெற்பு ஆம் 
ஓதிமம் அன்னம் வெற்பு ஆம் உருத்தலே தோற்றல் கோபம் 
** 4, 2, 4, 5, 2, 2 பெயர்கள் 102 
**836

#103
** சுதை புதை மது கதை 
சுதை மகள் கறவாத் தேனு சுண்ணச்சாந்து அமுது நாற்பேர் 
புதை என்ப கணையின்கட்டும் புதுமையும் மறைவும் முப்பேர் 
மது என்ப நறவும் தேனும் வசந்தகாலமும் ஆம் என்ப 
கதை தண்டாயுதமே வார்த்தை காரணம் இ முப்பேரே 
** 4, 3, 3, 3 பெயர்கள் 103 
**837

#104
** சீதை மேதை கோதை ஓதை உக்கம் 
சீதையே பொன்னாங்காணி படைச்சால் சீராமன்தேவி 
மேதை தோல் புதன் இறைச்சி மிக்க பேரறிவு கள் ஆம் 
கோதை முன்கைத் தோற்கட்டி குழல் தார் காற்று ஒழுங்கு சேரன் 
ஓதை பேரொலி மதில் பேர் உக்கம் தீ இடை ஆன் ஏறு 
** 3, 5, 6, 2, 4 பெயர்கள் 104 
**838

#105
** அத்தம் புத்தகம் நத்தம் துத்தம் 
அத்தம் பொன் பாதி கை கண்ணாடி சொற்பொருள் காடு ஓர்நாள்
புத்தகம் கோசம் என்ப சித்திரப் படாமும் ஆமே 
நத்தமே இருளும் ஊரும் நந்துடன் இரவு நாற்பேர் 
துத்தம் ஓர் இசை நாய் பாலே வயிறு கண்மருந்தும் சொல்லும் 
** 7, 2, 4,5  பெயர்கள் 105 
**839

#106
** அத்து தொத்து தாம்பு தத்தை தழல் உத்தரம் 
அத்து என்ப அரைஞாண் செம்மை அசைச்சொலோடு இசைப்பு நாற்பேர் 
தொத்து பூங்கொத்து தொண்டு ஆம் தூம்பு வேய் துளை மரக்கால் 
தத்தை மூத்தாள் கிளிக்கு ஆம் தழல் கிளிகடிகோல் செந்தீ
உத்தரம் ஊழித்தீ மேலொடு மறுமொழி வடக்கு ஆம் 
** 4, 2, 3, 2, 2, 4 பெயர்கள் 106 
**840

#107
** கூத்தன் கலம் ஊழ்த்தல் பாத்து தீர்த்தம் தீர்த்தன் 
கூத்தனே உயிர் நடன்பேர் குலம் குடி கோயில் கூட்டம் 
ஊழ்த்தலே நினைத்தல் செவ்வி உறு பதன்அழிவு முப்பேர் 
பாத்து என்ப கஞ்சி சோறு பகுத்திடல் வகுத்த முப்பேர் 
தீர்த்தமே விழாவும் நீரும் தீர்த்தனே அருகன் ஆசான் 
** 2, 3, 3, 3, 2, 3 பெயர்கள் 707 
**841

#108
** குத்தி கோணம் பத்தி அத்தி சத்தியம் தபுதல் 
குத்தி மண் அடக்கம் என்ப கோணம் வாள் குதிரை மூக்கு ஆம் 
பத்தியே முறை ஒழுக்கம் பகர் வழிபாடு முப்பேர் 
அத்தி ஆர்கலியே யானை அதவு எலும்பு ஆக நாற்பேர் 
சத்தியம் சபதம் மெய் ஆம் தபுதலே சாவும் கேடும் 
** 2, 3, 3, 4, 2, 2 பெயர்கள் 108 
**842

#109
** பித்திகை கத்திகை உத்தி துத்தி 
பித்திகை கருமுகைக்குப் பெயர் சுவர்த்தலமும் ஆகும் 
கத்திகை தொடை விகற்பம் துவசமே கமழ் வாசந்தி 
உத்தி செந்திரு உறுப்பு சுணங்கு உரையாடல் முப்பேர் 
துத்தியே சுணங்கு பாம்பின் சுடர்ப் பொறி புதல் ஒன்று ஆமே 
** 2, 3, 3, 3 பெயர்கள் 109 
**843

#110
** சித்திரபானு பத்திரம் சித்திரம் சத்திரம் 
சித்திரபானு செந்தீ திவாகரன் ஆண்டு ஒன்றின்பேர் 
பத்திரம் இலை வனப்பு படை நன்மை சிறகே பாணம் 
சித்திரம் அழகு ஓர் பாடல் சிறந்த விம்மிதம் ஏரண்டம் 
சத்திரம் குடையே அன்னசாலை கைவிடாவேல் வேள்வி 
** 3, 6, 4, 4 பெயர்கள் 110 
**844

#111
** காத்திரம் நேத்திரம் நீலி கோத்திரம் பாத்தி 
காத்திரம் கனம் மெய் சீற்றம் களிற்றின்முன்காலே கீரி 
நேத்திரம் கண் பட்டாடை நீலியே கருமை துர்க்கை 
கோத்திரம் புடவிதானே குலமொடு மலையும் ஆமே 
பாத்தியே சிறுசெய் இல்லம் பகுத்தலும் வகுத்த நாமம் 
** 5, 2, 2, 3, 3 பெயர்கள் 111
**845

#112
** சதம் சத்தம் கதவம் கழங்கு பதம் மதி 
சதம் இலை இறகு நூறு சத்தமே ஓசை ஏழ் ஆம் 
கதவமே கதவு காப்பு ஆம் கழங்கு பேய்நடம் கழற்சி 
பதம் மூரல் இன்பம் செவ்வி பதவி தாள் வரிசை வார்த்தை 
மதி ஓர் முன்னிலை அசைச்சொல் மாதம் அம்புலி புத்திப் பேர் 
** 3, 2, 2, 2, 7, 4 பெயர்கள் 112 
**846

#113
** பீதகம் சாதகம் சேதகம் தேயம் மாதர் 
பீதகம் சாந்து பொன்மை பெருந்தனம் இருவேலிப் பேர் 
சாதகம் வானம்பாடி சனனம் பாரிடம் முப்பேரே 
சேதகம் சேறு செம்மை தேயம்தான் உடம்பு நாடு ஆம் 
மாதர் ஓர் இடைச்சொல் காதல் வனப்பொடு மகளிர் ஆமே 
** 4, 3,2 , 2, 4 பெயர்கள் 113
**847

#114
** சோதி பூதி வீதி மேல் மாதிரம் 
சோதி மால் அருகன் பானு சுடர் விளக்கு ஈசன் ஓர்நாள் 
பூதியே நரகம் செல்வம் துர்க்கந்தம் புழுதி நீறு ஆம் 
வீதியே தெரு நேரோடல் மேல் என்பது இடம் விண் மேற்கு ஆம் 
மாதிரம் திசை ஆகாயம் மலை யானை நிலம் ஐம்பேரே 
** 7, 5, 2, 3, 5 பெயர்கள் 114 
**848

#115
** தாது வேதிகை வெதிர் கேது கிள்ளை 
தாது பொன் முதலாம் ஏழும் சடம் உறு தாது ஓரேழும் 
பூதம் ஓர் ஐந்தும் காவிக்கல்லுடன் புகலும் நாற்பேர் 
வேதிகை பலகை திண்ணை வெதிர் என்ப செவிடு வேணு 
கேதுவே சிகி பதாகை கிள்ளைதான் குதிரை தத்தை 
**4, 2, 2, 2, 2 பெயர்கள் 115 
**849

#116
** கதுப்பு விதப்பு வித்தம் அதிர்ப்பு அகப்பா 
** ஒதுக்கம் ஒருத்தல் 
கதுப்பே ஆண்மயிரும் பெண்பால்மயிரொடு கவுளும் முப்பேர் 
விதப்பே கம்பிதம் மிக்கு ஆகும் வித்தம் பொன் பழிப்பு ஞானம் 
அதிர்ப்பு ஒலி நடுக்கம் என்ப அகப்பாவே புரிசை மேடை 
ஒதுக்கமே நடை மறைப்பு ஆம் ஒருத்தல் ஆண்விலங்கு வேழம் 
** 3, 2, 3, 2, 2, 2, 2 பெயர்கள் 116 
**850

#117
** பத்திரி அத்திரி சத்தி சுத்தி 
பத்திரி பறவை காளி பரி இலை பாணம் ஐம்பேர் 
அத்திரி கழுதை விண் ஒட்டகம் பரி அசலம் அம்பு ஆம் 
சத்தியே உமை வேல் கான்றல் குடை வலி துவசம் தானாம் 
சுத்தியே அகல் வெண்சங்கம் சுத்தம் ஓர் கருவிக்கும் பேர் 
** 5, 6, 6, 4 பெயர்கள் 117 
**851

#118
** புத்தன் பூழில் புத்தேள் பூட்கை தைத்தல் சாறு முத்தம் 
புத்தன் மால் அருகன் சாத்தன் பூழில்தான் அகில் பூமிப் பேர் 
புத்தேளே புதுமை தே ஆம் பூட்கை தோல் மேற்கோள் யாளி 
தைத்தல் துன்னம் கைத்தல் பேர் சாறு கள் விழவு தாறு ஆம் 
முத்தமே பிரியம் ஓட்டம் மருத நன்னிலம் முத்து ஆமே 
** 3, 2, 2, 3, 2, 3, 4 பெயர்கள் 118 
**852

#119
** அத்தன் சித்தம் சேகரம் கைத்தல் கஞறல் சித்து செய் 
அத்தனே மூத்தோன் தந்தை அரனொடு குருவும் நாற்பேர் 
சித்தமே திடம் உள்ளம் பேர் சேகரம் தலை மா ஏர் ஆம் 
கைத்தலே சினம் கைப்பு ஆகும் கஞறலே பொலிவு கன்றல் 
சித்து என்ப சயமே ஞானம் செய் என்ப நிலம் ஏவல் பேர் 
** 4, 2, 3,2, 2, 2, 2 பெயர்கள் 119 
**853

#120
** உத்தரம் பைத்தல் மத்திகை மத்து 
உத்தரம் சித்திரம் சேர்ந்து ஒளிரும் இல் உறுப்போடு ஓர் நாள் 
பைத்தலே முனிவினோடு பசுத்தலும் பகரல் ஆகும் 
மத்திகையே சம்மட்டி சுடர் நிலைத் தண்டு மாலை 
மத்து என்ப தயிர் மத்தோடு மத்தமும் இருபேர் ஆமே 
** 2, 2, 3, 2 பெயர்கள் 120 
**854

#121
** மதர்வு புதவு புணர்ச் சிதர் அதர் 
மதர்வு மேவுதல் வனப்பு வலி இடம் மிகுதி ஐம்பேர் 
புதவு என்ப கதவு ஓர் புல் ஆம் புணர்ச்சியே கலவி கூடல் 
சிதர் உறி திவலை வண்டு சீலையின் துணி நாற்பேரே 
அதர் வழி புழுதி ஆட்டின் அதரும் நுண்மணலும் ஆமே 
** 5, 2, 2, 4, 4 பெயர்கள் 121 
**855

#122
** முதலை அதம் கதி மதம் மாயை 
முதலை செங்கிடை இடங்கர் முருந்து என மொழியல் ஆகும் 
அதம் இறங்குதல் பாதாளம் கீழும் என்று அறையும் முப்பேர் 
கதி நடை விரைவே நான்கு கதியொடு கதியும் காட்டும் 
மதம் இப மதம் செருக்கு ஆம்  மாயையே மாயம் சத்தி 
** 3, 3, 4, 2, 2 பெயர்கள் 122 
**856

#123
** பீதம் பேதை வாதுவர் மூதிரை 
பீதமே சாந்து மஞ்சள் பிங்கலத்தொடு பொன்மைப் போர் 
பேதை ஓர் பருவம் மூடன் பெண் தரித்திரனே நாற்பேர் 
வாதுவர் யானைப்பாகர் வயப் பரிமா வடிப்போர் 
மூதிரை ஆதிரைப் பேர் முக்கணன் பேரும் ஆமே 
** 4, 4, 2, 2 பெயர்கள் 123 
**857

#124
** தாதி போது போர்வை சாதம் தகைமை வீதல் 
தாதியே பரணிநாளும் அடிமையும் இருபேர் சாற்றும் 
போதுதான் காலம் பூ ஆம் போர்வை தோல் கவசம் மீக்கோள் 
சாதமே திடம் பதப்பேர் தகைமை ஏர் இயல்பு பீடு ஆம் 
வீதலே கெடுதல் சாவே இலம்பாடும் விளம்பும் முப்பேர் 
** 2, 2, 3, 2, 3, 3 பெயர்கள் 124 
**858

#125
** நகர எதுகை 
** இந்தனம் சந்தம் கந்தம் மந்திரம் 
இந்தனம் மிசையே காட்டம் எரி இடு கனலும் ஆகும் 
சந்தமே நிறம் வனப்பு சாற்றிய கவிதை சாந்தம் 
கந்தம் இந்தியம் பகுத்தல் கழுத்தடி கிழங்கு நாற்றம் 
மந்திரம் விசாரம் கோயில் வாசியின் குழாம் வீடே கள் 
** 3, 4, 5, 5 பெயர்கள் 125 
**859

#126
** அந்தில் - ஆங்கு அணவல் சந்தி நந்தி உந்தி 
அந்தில் ஆங்கு அசை இடப்பேர் அணவலே அணுகல் புல்லல் 
சந்தியே அந்தி மூங்கில் சதுக்கமும் இசைப்பும் அப் பேர் 
நந்தியே சிவனும் ஏறும் நந்தியீச்சுரனும் முப்பேர் 
உந்தி தேர்உருளே யாறே உவரி நீர்ச்சுழியே கொப்பூழ் 
** 2, 2, 2, 4, 3, 5 பெயர்கள் 126
**860

#127
** கந்து கந்துகம் கனம் பந்து குந்தளம் 
கந்து பண்டியுள் இரும்பும் கம்பமும் யாக்கை மூட்டும் 
கந்துகம் குதிரை பந்து ஆம் கனம் என்ப புயல் பாரப்பேர் 
பந்து கந்துகமும் மட்டுப் பட நீர் தூம் துருத்தியும் பேர் 
குந்தளம் மாதர் ஓதி குழல் கொத்து குருளை முப்பேர் 
** 3, 2, 2, 2, 3 பெயர்கள் 127 
**861

#128
** வேந்தன் காந்தாரம் காழகம் ஏந்தல் எஃகு 
** கூந்தல் குவலயம் 
வேந்தனே அரசன் திங்கள் வியாழன் இந்திரன் ஆதித்தன் 
காந்தாரம் இசை காடு என்ப காழகம் கருமை தூசு ஆம் 
ஏந்தலே பெருமை மேடு ஆம் எஃகு உருக்கொடு வேல் கூர்மை 
கூந்தல் பெண்மயிர் பீலிப் பேர் குவலயம் குவளை பூமி 
** 5, 2, 2, 2, 3, 2, 2 பெயர்கள் 128 
**862

#129
** அந்தரம் கந்தரம் மந்தாரம் சிந்துரம் 
அந்தரம் முடிவு பேதம் அண்டமோடு இடை நாற்பேரே 
கந்தரம் என்ப மேகம் கழுத்தொடு மலை முழைப் பேர் 
மந்தாரம் தருமரம் செவ்வரத்தமும் ஆகும் என்ப 
சிந்துரம் புளியே யானை செங்குடை திலகம் செம்மை 
** 4, 3, 2, 5 பெயர்கள் 129 
**863

#130
** கந்தருவம் கவந்தம் குந்தம் செந்து சிந்து 
கந்தருவம் பண் வாசி கவந்தம் என்பது நீர் மட்டை 
குந்தமே ஒரு வியாதி குருந்தொடு குதிரை கைவேல் 
செந்து ஓர் நரகம் ஓரி சீவனோடு அணுவும் நாற்பேர் 
சிந்து நீர் முச்சீர் ஆறு கடல் குறள் ஒரு தேசப்பேர் 
** 2, 2, 4, 4, 6 பெயர்கள் 130 
**864

#131
** அந்தி நந்து நாறுதல் மைந்தன் வசந்தம் வந்தியர் 
அந்தி முச்சந்தி பாலையாழிசை இரவு மாலை 
நந்து என்ப நத்தை சங்கு ஆம் நாறுதல் மணம் உண்டாதல் 
மைந்தனே திறலோன் சேய் ஆம் வசந்தமே வேனில் வாசம் 
வந்தியர் புகழ்வோர் பேரும் மலடிகள் பேரும் ஆமே 
** 4, 2, 2, 2, 2, 2 பெயர்கள்
**865

#132
** விந்தம் விருத்தம் அந்தணர் அணி அந்தகன் 
** அங்காரகன் மந்தன் 
விந்தம் ஓர் எண்ணும் வெற்பும் விருத்தமே வட்டம் மூப்பு ஆம் 
அந்தணர் அறவோர் பார்ப்பார் அணி படைவகுப்பு அணிப் பேர் 
அந்தகன் குருடன் கூற்று ஆம் அங்காரகன் தீ செவ்வாய் 
மந்தன் சனி கூர்ப்பு இல்லா மனுடனும் இருபேர் ஆமே 
** 2, 2, 2, 2, 2, 2, 2 பெயர்கள் 132
**866

#133
** பகர எதுகை 
** உப்பு செப்பம் துப்பு கப்பணம் 
உப்பு மெல்லியலார் ஆடல் உவர் கடல் இனிமை நாற்பேர் 
செப்பமே நடுநிலைப் பேர் தெருவொடு நெஞ்சும் ஆகும் 
துப்பு அரக்கு ஊற்றம் தூய்மை துகிர் பகை அனுபவப்பேர் 
கப்பணம் இரும்பிற்செய்த நெருஞ்சில்முள் கைவேல் ஆமே 
** 4, 3, 6, 2 பெயர்கள் 133
**867

#134
** தாபரம் நீபம் யூபம் சாபம் தளிமம் 
தாபரம் மலைபோல்நிற்றல் சடமொடு தருவும் முப்பேர் 
நீபம் உத்தரட்டாதிப் பேர் நிமித்தம் நீர்க்கடம்பும் ஆகும் 
யூபமே கவந்தம் வேள்விக்கு உறு தம்பம் படைவகுப்பு ஆம் 
சாபமே சபித்தல் வில் ஆம் தளிமமே அழகு மெத்தை 
** 3, 3, 3, 2, 2 பெயர்கள் 134 
**868

#135
** சீப்பு நாப்பண் காப்பு யாப்பு இறால்
சீப்பு என்ப கதவின் தாழும் சீவு கங்கமும் ஆம் என்ப 
நாப்பண் என்பது தேர்த்தட்டும் நடுவும் யாழுறுப்பும் முப்பேர் 
காப்பு என்ப காவலோடு கதவும் வெண்ணீறும் ஆகும் 
யாப்பு என்ப கவிதை கட்டு ஆம் இறால் தேன்கூடு எருது மீனே 
**2,  3, 3,  2, 3 பெயர்கள் 135 
**869

#136
** மகர எதுகை 
** சமன் சலம் கமலம் கலாம் குமரி ஞமலி நனை 
சமன் யமன் நடுவும் ஆகும் சலம் என்ப வயிரம் நீர் பொய் 
கமலம் நீர் வனசமும் பேர் கலாம் சினம் கொடுமை ஆகும் 
குமரி கற்றாழை கன்னி கொற்றவை காளிக்கும் பேர் 
ஞமலி நாய் மயில் கள் என்ப நனை கள்ளு மலர் மொட்டும் பேர் 
** 2, 3, 2, 2, 4, 3, 2 பெயர்கள் 136 
**870

#137
** சாமம் வாமம் பூ ஏமம் 
சாமம் ஓர் வேதம் பச்சை சாமமே கருமை நாற்பேர் 
வாமமே குறள் இடப்பால் வனப்பொடு தொடையும் ஆமே 
பூ மலர் வனப்பு கூர்மை பொலிவொடு பிறப்பு பூமி 
ஏமமே சேமம் காவல் இன்பம் பொன் இரவே மையல் 
** 4, 4, 6, 6 பெயர்கள் 137 
**871

#138
** உம்பர் வம்பு கும்பம் தும்பு சுகம் 
உம்பரே தேவர் ஆகும் உயர்நிலமுடன் மேலும் பேர் 
வம்பு என்ப புதுமை கச்சு மணம் நிலையின்மை நாற்பேர்
கும்பமே குடம் இராசி கும்பி மத்தகமும் ஆகும் 
தும்பு என்ப சிம்பு தோடு ஆம் சுகம் என்ப கிளியே இன்பம் 
** 3, 4, 3, 2, 2 பெயர்கள் 138 
**872

#139
** ஆம்பல் சாம்பல் தமிழ் தாம்பு காம்பு 
ஆம்பல் வேய் கள்ளு கவ்வை அல்லி வங்கியமே யானை 
சாம்பல் கூம்புதல் பழம் பூ தமிழ் என்பது இனிமை நீர்மை 
தாம்பு என்ப கயிறுதானே தாமணிதனக்கும் பேர் ஆம் 
காம்பு வேய் மலர்த்தாள் பட்டே கடி மலர்க்கொம்பு நாற்பேர் 
** 6, 2, 2, 2, 4 பெயர்கள் 139 
**873

#140
** அம்மை சும்மை செம்மை திரிதல் கொம்மை 
அம்மையே வரு பிறப்பும் அழகும் ஆம் தாயும் ஆகும் 
சும்மை என்பதுவே நெற்போர் நாடு ஒலி சுமையும் சொல்லும் 
செம்மை செவ்வையும் சிவப்பும் திரிதலே உலாவல் கேடு ஆம் 
கொம்மையே இளமை வட்டம் கொங்கை கை குவித்துக் கொட்டல் 
** 3, 4, 2, 2, 4 பெயர்கள் 140 
**874

#141
** அம் அழனம் கம் செம்மல் கம்மியர் 
அம் அழகு அசைச்சொல் நீர் ஆம் அழனம் தீ பிணமும் ஆகும் 
கம் என்ப தலை ஆகாயம் கனம் கால் நீர் விதி வெளுப்பு 
செம்மலே பழம்பூ ஈசன் சினேந்திரன் சிறந்தோன் மைந்தன் 
கம்மியர் கைவினைப் பேர் கண்ணாளர் தாமும் ஆமே 
** 3, 2, 7, 5, 2 பெயர்கள் 141
**875

#142
** வாமனம் காமரம் நேமி தேம் 
வாமனம் குறள் புராணம் மாதிரக் கயத்தில் ஒன்று ஆம் 
காமரம் அத்தநாளோடு அடுப்பு இசைப் பொதுவும் காட்டும் 
நேமி சக்கரம் பார் வட்டம் நேமிப் புள் கடல் ஐம்பேரே 
தேம் என்பது இடம் தித்திப்பு தேன் நாற்றம் திசை தேசப்பேர் 
** 3, 3, 5, 6 பெயர்கள் 142 
**876

#143
** தாமம் சோமன் சுரும்பு சாமி 
தாமம் வெற்பு ஒழுங்கு கொன்றை சாந்து ஒளி நகரம் தாம்பு 
பூ மணிக்கோவை மாலை பொருகளம் கரி ஈராறாம் 
சோமன் ஓர் வள்ளல் இந்து சுரும்பு என்ப மலையும் வண்டும் 
சாமியே முதல்வன் செவ்வேள் தலைவி ஆசான் வெறுக்கை 
** 12, 2, 2, 5 பெயர்கள் 143 
**877

#144
** குமுதம் சிமயம் தீ அமறல் அரில் சிமிலி 
குமுதமே அடுப்பு ஓர் திக்கின் குஞ்சரம் ஒலி வெண்ணெய்தல் 
சிமயமே மலை வெற்புஉச்சி தீ தீயே நரகு தீங்கு ஆம் 
அமறலே பொலிவு துன்னல் அரில் தூறு பிணக்கம் மாசு 
சிமிலியே குடுமி சிக்கம் சிள்வீடுதானும் ஆமே 
** 4, 2, 3, 2, 3, 3 பெயர்கள் 144 
**878

#145
** சம்பு தும்பி துன்னல் கம்புள் அம்பரம் அண்ணல் 
சம்புவே இரவி நாவல் சங்கரன் அயன் மால் ஓரி 
தும்பியே களிறு வண்டு ஆம் துன்னலே செறிதல் சேர்தல் 
கம்புளே சங்கு சம்பங்கோழி என்று இருபேர் காட்டும் 
அம்பரம் கடல் விண் தூசு ஆம் அண்ணலே தலைவன் பீடு 
** 6, 2, 2, 2, 3, 2 பெயர்கள் 145 
**879

#146
** கிம்புரி கேட்டை கும்பி குலை உம்பல் அம்பல் 
கிம்புரி முடி தந்தப்பூண் கேட்டைதான் முகடி ஓர் நாள் 
கும்பி சேறு ஆனை பூதி குலைதான் செய்கரை காய்க்கொத்து ஆம் 
உம்பல் ஆண்விலங்கு வேழம் உயர்குலம் எழுச்சிக்கும் பேர் 
அம்பலே பழிச்சொல் சில்லோர் அறிந்து அலர் தூற்றல் ஆமே 
** 2, 2, 3, 2, 4, 2 பெயர்கள் 146 
**880

#147
** கம்பலை செம்புலம் தம்பம் சமழ்த்தல் கம்பம் கந்தன் 
கம்பலை அச்சம் ஓசை கம்பிதம் துன்பம் நாற்பேர் 
செம்புலம் பாலை சேரும் திணை செருக்களம் இரண்டாம் 
தம்பமே கவசம் தூண் ஆம் சமழ்த்தலே வருத்தம் நாணம் 
கம்பமே நடுக்கம் தம்பம் கந்தனே அருகன் செவ்வேள் 
** 4, 2, 2, 2, 2, 2 பெயர்கள் 147 
**881

#148
** அமரர் அவந்தி அமுது அமலை தமம் சார்ங்கம் 
அமரரே விபுதர் தெவ்வர் அவந்திதான் கிளி ஓர் ஊர் ஆம் 
அமுது பால் தேவர்உண்டி ஆகும் இன் சுதையும் முப்பேர் 
அமலையே ஆரவாரம் அயினியோடு உமையும் முப்பேர் 
தமம் இருள் இராகுவின்பேர் சார்ங்கம் விற்பொது மால் வில் ஆம் 
** 2, 2, 3, 3, 2, 2 பெயர்கள் 148 
**882

#149
** ஆம்பிரம் சாம்பு தாண்டவம் பாம்பு பை ஆம்பி அயிராணி 
ஆம்பிரம் புளிமா தேமா ஆம் புளிப்பினுக்கும் அப் பேர் 
சாம்பு பொன் பறை ஆம் என்ப தாண்டவம் கூத்தே தாவல் 
பாம்பு என்ப கரை மராளம் பை அராப்படமே பச்சை
ஆம்பியே ஒலி காளான் ஆம் அயிராணி உமை இந்திராணி 
** 3, 2, 2, 2, 2, 2, 2 பெயர்கள் 149 
**883

#150
** காமன் காமம் கணிச்சி பூமன் புரையோர் 
** சேமம் தெக்கிணம்  
காமனே வாசவன் வேள் கழுதும் திப்பிலியும் ஆகும் 
காமமே விரகம் ஆசை கணிச்சிதான் மழுவே தோட்டி 
பூமனே பிரமன் செவ்வாய் புரையோரே கீழோர் மேலோர் 
சேமமே காவல் இன்பம் தெக்கிணம் வலம் தெற்கு ஆகும் 
** 4, 2, 2, 2, 2, 2, 2 பெயர்கள் 150 
**884

#151
** காமுகன் காது கோமளம் கலித்தல் மாமை மலயசம் 
காமுகன் விடன் வேள் மால் ஆம் காது என்ப கொலையும் காதும் 
கோமளம் பசு வனப்பு கூறிய இளமைக்கும் பேர் 
நாமம் ஆம் கலித்தல் மிக்கு நற்பொலிவு எழுச்சி ஓசை 
மாமையே நிறம் வனப்பு ஆம் மலயசம் சந்து அம் தென்றல் 
** 3, 2, 3, 4, 2, 2 பெயர்கள் 151 
**885

#152
** யகர எதுகை 
** காயம் நேயம் நிறம் ஆயம் சாயல் 
காயம் மெய் விண் வெண்காயம் பெருங்காயம் கறி கரித்தல் 
நேயம் நெய் எண்ணெய் அன்பு ஆம் நிறம் என்ப மருமம் காந்தி 
ஆயமே கவற்றின் தாயம் ஆதாயம் மாதர் கூட்டம் 
சாயல் என்பது மேம்பாடு தரும் அழகுடனே மென்மை 
** 6, 3, 2, 3, 3 பெயர்கள்
**886

#153
** வயம் வயல் சயம் கடம் நியமம் இயம் 
வயம் நீர் புள்பொது வலிப் பேர் வயல் வெளி பழனமும் பேர் 
சயம் வெற்றி சருக்கரைப் பேர் சடம் உடல் வஞ்சம் பொய் ஆம் 
நியமமே நியதி வீதி நிச்சயம் நகரம் கோயில் 
இயம் என்ப ஒலியே வார்த்தை வாச்சியம் இ முப்பேரே 
** 3, 2, 2, 3, 5, 3 பெயர்கள் 153 
**887

#154
** அயம் கயம் பயம் அயனம் 
அயம் என்ப நீர் தடாகம்  ஆடு வெம் பரி இரும்பு ஆம் 
கயம் மென்மை குளமே ஆழம் களிறு கீழ் பெருமை தேய்வு ஆம் 
பயம் என்ப சுதை நீர் அச்சம் பாலொடு பயன்பேர் ஐந்தே 
அயனமே வழியின்நாமம் ஆண்டினில் பாதிக்கும் பேர் 
** 5, 7, 5, 2 பெயர்கள் 154 
**888

#155
** பயிர் கயினி வயிரம் கயில் 
பயிர் ஒலி பயிலே பைங்கூழ் பறக்கும் புள்குரல் இ நாற்பேர் 
கயினியே அத்தநாளும் கைம்மையும் இருபேர் காட்டும் 
வயிரமே செற்றம் கூர்மை வச்சிரம் ஓர் மணியே சேகு 
கயில் பிடர்த்தலையே பூணின் கடைப்புணர்வு இருபேர்தானே 
** 4, 2, 5, 2 பெயர்கள் 155 
**889

#156
** ஐயம் ஐயன் தொய்யல் மொய் 
ஐயமே பிச்சைஏற்கும்ஓடு அனுமானம் பிச்சை 
ஐயனே மூத்தோன் சாத்தன் அப்பன் ஈச்சுரன் நாற்பேரே 
தொய்யலே உழவும் சேறும் துயரமும் மகிழ்ச்சியும் பேர் 
மொய் செருக்களம் போர் யானை மூசல் வண்டொடு திரள் பேர் 
** 3, 4, 4, 6 பெயர்கள் 156 
**890

#157
** வயவன் குயிறல் வயின் வயா மயல் மறவர் 
வயவனே வீரனோடு வலியான் காதலனும் ஆகும் 
குயிறலே செறிதல் கூவல் குடைதல் பண்ணுதல் நாற்பேரே 
வயின் இடம் உதரம் வீடு ஆம் வயா வருத்தம் காதல் 
மயல் செத்தை மயக்கம் பேய் ஆம் மறவரே வயவர் வேடர் 
** 3, 4, 3, 3, 3, 2 பெயர்கள் 157 
**891

#158
** குயில் வயமா வியல் வேய் மயிலை 
குயிலே கோகிலமும் சொல்லும் கொண்மூவும் துளையும் நாற்பேர் 
வயமாவே குதிரை சிங்கம் மத கரி புலியும் ஆகும் 
வியல் என்ப விசாலம் பீடு ஆம் வேய் துளை ஒற்று மூங்கில் 
மயிலையே மீனராசி மீன் இருவாட்சி முப்பேர் 
** 4, 4, 2, 3, 3 பெயர்கள் 158 
**892

#159
** சயிந்தவம் குயம் நயந்தோன் நலம் பயம்பு 
சயிந்தவம் குதிரையோடு தலையும் இந்துப்பும் ஆகும் 
குயம் தனம் இளமையோடு கூர் அரிவாளும் முப்பேர் 
நயந்தோனே நண்பன் கொண்கன் நலம் விருச்சிகமே நன்மை 
பயம்பு என்ப யானை வீழும் படுகுழி பள்ளம் ஆமே 
** 3, 3, 2, 2, 2 பெயர்கள் 159 
**893

#160
** இயல் ஏல்வை குய் செயிர் சேடி உயவை 
இயல் நடை தமிழ் சாயல் பேர் ஏல்வையே பொழுது வாவி 
குய் என்ப கறி கரித்தல் குளிர் நறும் புகை இரண்டாம் 
செயிர் என்ப சினம் குற்றப்பேர் சேடி விஞ்சையர்ஊர் பாங்கி 
உயவை காக்கணமே முல்லை உற்ற கான்யாறும் ஆமே 
** 3, 2, 2, 2, 2, 3 பெயர்கள் 160 
**894

#161
** செய்யல் நெய்தல் வெய்யோன் ஐயை 
செய்யலே ஒழுக்கம் காவல் சேறு செய் வினை நாற்பேரே 
நெய்தலே கடல் சார் பூமி நெய்தற்பூ சாப்பறைப் பேர் 
வெய்யோன் ஆதவனே தீயோன் விரும்பினன்தனக்கும் அப் பேர்
ஐயையே உமையாள் துர்க்கை மகள் அருந் தவப் பெண் ஆசாள் 
** 4, 3, 3, 5 பெயர்கள் 161 
**895

#162
** ஐ மை கை வையம் 
ஐ அழகு இடைச்சொல் கோழை அரசனோடு இருமல் சாமி 
மை என்பது அஞ்சனம் கார் மலடு இருள் ஆடு மாசு ஆம் 
கை இடம் படையுறுப்பு ஒப்பனை செங்கை சிறுமை சீலம் 
வையம் தேர் ஏறு உரோணி வசுந்தரை சிவிகை ஊர்தி 
** 6, 6, 6, 6 பெயர்கள் 162 
**896

#163
** சேய் வாய் மாருதி ஆய்தல் ஆறு வேய்தல் விநாயகன் 
சேய் குகன் இளமை தூரம் செம்மை சேண் சிறுவன் செவ்வாய் 
வாய் குழல் இடம் வாய்மைப் பேர் மாருதி அனுமன் வீமன் 
ஆய்தலே நுணுக்கம் தேர்தல் ஆறு என்ப வழி நதிப் பேர் 
வேய்தல் சூடுதல் மூடல் பேர் விநாயகன் அருகன் முன்னோன் 
** 7, 3, 2, 2, 2, 2, 2 பெயர்கள் 163 
**897

#164
** அயிர் செயல் தெய்வம் நயம் பெயர் 
அயிர் கரும்பின் தேம் கட்டி ஆன்ற நுண்மணலே நுண்மை 
செயல் தொழில் ஒழுக்கம் என்ப தெய்வமே கடவுள் ஊழ் ஆம் 
நயம் என்ப மகிழ்ச்சி இன்பம் நன்மை நற்பயன் நாற்பேரே 
பெயர் என்ப பெருமை கீர்த்தி பேசும் நாமப்பேர் ஆமே 
** 3, 2, 2, 4, 3 பெயர்கள் 164 
**898

#165
** ரகர எதுகை 
** சிரகம் கரகம் மரபு மறல் சரபம் 
சிரகமே கரகம் ஆகும் சென்னியின் சோடும் அப் பேர் 
கரகமே ஆலங்கட்டி கமண்டலம் துளி நீர் கங்கை 
மரபுதான் முறைமை தொன்மை மறல் என்ப பிணக்கும் கூற்றும் 
சரபம் எண்கால்புள் என்ப வரையாடுதானும் ஆமே 
** 2, 5, 2, 2, 3 பெயர்கள் 165 
**899

#166
** இரதம் அரணம் கரணம் சரணம் தன்னம் 
இரதமே புணர்ச்சி சூதம் இன்சுவை அரைஞாண் பொன் தேர் 
அரணமே கவசம் காடே அணி மதில் வேலி நாற்பேர் 
கரணம் எண் மனாதி கூத்து கலவி காரணம் ஐம்பேரே 
சரணம் தாள் மறை புகல் பேர் தன்னம் ஆன்கன்றே அற்பம் 
** 5, 4, 5, 2, 2 பெயர்கள் 166 
**900

#167
** உரம் சிரம் புரம் புரவலன் கரம் 
உரம் என்ப வலியே ஞானம் ஊக்கமே மார்பு நாற்பேர் 
சிரம் என்ப நெடுங் காலப் போர் சென்னியும் அன்னதேயாம் 
புரம் என்ப புரி முன் மெய்ப் பேர் புரவலன் வள்ளல் வேந்தன் 
கரம் என்ப கிரணம் செங்கை கழுதை நஞ்சு இறுத்தலும் பேர் 
** 4, 2, 3, 2, 5 பெயர்கள் 167 
**901

#168
** அரவம் ஆய்வு பரவை இரலை அரசு அம்பி 
அரவம் நூபுரம் பாம்பு ஓசை ஆய்வு என்ப வருத்தம் ஆய்தல் 
பரவை வாரிதி பரப்பு பங்கயமாதின் கூத்தே 
இரலையே கலை ஊதுங்கொம்பு இரண்டுடன் முதல் நாள் என்ப 
அரசு மன் இராச்சியப்பேர் அம்பி நாவாயே தெப்பம் 
** 3, 2, 3, 3, 2, 2 பெயர்கள் 768 
**902

#169
** அரம்பை ஆணு சரம் நரந்தம் சுருங்கை 
அரம்பை தெய்வப்பெண் வாழை ஆணுவே இரதம் நன்மை 
சரம் தனி மணிவடம் போர் சாயகம் நாணல் புல் பேர் 
நரந்தம் என்பது நாரத்தை நாறுங் கத்தூரிக்கும் பேர் 
சுருங்கையே கரந்து பண்ணும் கற்படை நுழைவாயில் பேர் 
** 2, 2, 4, 2, 2 பெயர்கள் 1ல 
**903

#170
** ஆரம் வாரம் தாரம் கோரம் 
ஆரமே பதக்கம் முத்தம் ஆத்தி சந்தனமே மாலை 
வாரம் நீர்க்கரையே அன்பு மலைச்சாரல் கிழமை பங்கு ஆம் 
தாரம் வல்லிசை நா வெள்ளி தலைவி ஓர் இசை கண் என்ப 
கோரம் சோழன் மா வட்டில் கொடுமை பூ மொட்டு வாசி 
** 5, 5, 6, 5 பெயர்கள் 170 
**904

#171
** இராசியம் இறப்பு பராகம் துரோணம் இராகம் 
இராசியம் மறைவே யோனி இறப்பு என்ப மிகுதி போக்கு ஆம் 
பராகமே இரேணு ஆகும் பரிமள மலர்த் தூளும் பேர் 
துரோணமே சிம்புள் காக்கை தும்பை வில்லொடு பதக்கு ஆம் 
இராகமே கீதம் செம்மை இச்சையே நிறமும் ஏற்கும் 
** 2, 2, 2, 5, 4 பெயர்கள் 171 
**905

#172
** பரி புரி பரிதல் வரி 
பரி பரி சுமத்தல் வேகம் பாதுகாத்திடல் வருத்தம் 
புரி வளை விரும்பல் செய்தல் புரத்தொடு கயிறு கட்டு ஆம் 
பரிதலே அறுத்தல் அன்பு பகர்ந்திடில் இரங்கலும் பேர் 
வரி சுணங்கு எழுத்து பாட்டு வாரிதி இறையே நெல்லு 
** 5, 6, 3, 6 பெயர்கள் 172 
**906

#173
** சரி சராவம் கரியவன் பரிகம் கரில் காதை 
சரி கரவளை வழிப் பேர் சராவமே அகல் சலாகை 
கரியவன் சனியின்பேர் ஆம் கண்ணன் இந்திரனும் ஆமே 
பரிகமே கிடங்கு மேடை பகர் மதில் கணையம் நாற்பேர் 
கரில் குற்றம் காழ்த்தலும் பேர் காதை சொல் கதையும் ஆமே 
** 2, 2, 3, 4, 2, 2 பெயர்கள் 173 
**907

#174
** மூரி வாரி நாரி பாரி 
மூரி ஏறு எருமை ஆற்றல் முறை பீடு நெரிவும் ஆமே 
வாரி நீர் கதவு வெள்ளம் மதில் கடல் வருவாய் வட்டை 
நாரி பன்னாடை பெண்ணே நறவு வில்நாணி நாற்பேர் 
பாரி ஓர் வள்ளல் கட்டில் பாரி கள் தூசு முந்நீர் 
** 6, 7, 4, 6 பெயர்கள் 174 
**908

#175
** அருகல் அமுதம் பொருள் குரு அருணம் 
அருகலே சுருங்கல் சார்தல் அமுதமே சுதை நீர் மோக்கம் 
பொருளே சொற்பொருள் பல்பண்டம் பொன் பண்பு பிள்ளை வாய்மை 
குரு நிறம் ஓர் நோய் தேயம் குரவன் பாரம் வியாழன் 
அருணம் என்பது மான் செம்மை ஆடு எலுமிச்சை நாற்பேர் 
** 2, 3, 6, 6, 4 பெயர்கள் 175 
**909

#176
** முருகு மருமான் இருசு கருமை 
முருகு கள் இளமை நாற்றம் முருகவேள் விழா வனப்பு ஆம் 
மருமானே மருமகன்பேர் வழித்தோன்றல் பேரும் ஆமே 
இருசு பண்டியுள் இரும்பு செவ்வை என்று இருபேர் என்ப 
கருமையே பெருமை ஆகும் கறுப்பொடு வலியும் ஆமே 
** 6, 2, 2, 3 பெயர்கள் 176 
**910

#177
** கிருத்திமம் விருத்தி துருத்தி அரத்தம் 
கிருத்திமம் தோலே பண்ணல் கெட்ட பொய் விட்ட பூதம் 
விருத்தியே தொழில் இலாபம் விரி பொருள் வளர்ச்சிக்கும் பேர் 
துருத்தி ஆற்றிடைக்குறைப் பேர் தோலும் ஆம் துட்டைக்கும் பேர் 
அரத்தமே இரத்தம் செம்மை அரக்கொடு உற்பலம் கடம்பு 
** 4, 4, 3, 5 பெயர்கள் 177 
**911

#178
** சீர் தார் சூர் கார் 
சீர் செல்வம் தாளவொத்து சீர்த்தி கா தண்டே பாரம் 
தார் கொடிப்படை பூ தண்டு தாமம் கிங்கிணியின் கோவை 
சூர் என்ப நோயே அச்சம் அஞ்சாமை அணங்கும் சொல்லும் 
கார் நீர் வெள்ளாடு மேகம் கறுப்பு இருள் மாரிக்காலம் 
** 6, 5, 4, 6 பெயர்கள் 178
**912

#179
** ஆர் பீர் வார் நேர் 
ஆர் கூர்மை ஆத்தி தேரின் அகத்துறு கதிரும் ஆகும் 
பீர் என்ப முலையிற்பாலும் பீர்க்கொடு பசலைக்கும் பேர் 
வார் என்ப நெடுமை கச்சு மன்னு நீர் நேர்மை நாற்பேர் 
நேர் சமம் ஈதல் பாதி நெடில் உடன்பாடு நுட்பம் 
** 3, 3, 4, 6 பெயர்கள் 179 
**913

#180
** அருணன வருணம் மகன் தரணி தையல் கரிணி 
அருணன் சூரியன் தேர்ப்பாகன் ஆதித்தன் புதன் முப்பேரே 
வருணமே குலம் நீர் ஆகும் மகன் என்ப சிறந்தோன் மைந்தன் 
தரணி பார் இரவி வெற்பு ஆம் தையல் பெண் அழகும் ஆகும் 
கரிணியே முழையும் வெற்பும் களிற்றொடு பிடியும் காட்டும் 
** 3, 2, 2, 3, 2, 4 பெயர்கள்
**914

#181
** மாரி ஓரி காரி தூரியம் 
மாரியே விளிவு கள்ளு வடுகி நோய் மேகம் ஐம்பேர் 
ஓரி ஆண்மயிர் ஓர் வள்ளல் முதுநரி முசு என்றோதும் 
காரி ஓர் வள்ளல் ஐயன் கடு சனி வடுகன் காக்கை 
தூரியம் இடபம் ஆடை துந்துபி எழுதுகோலே 
** 5, 4, 6, 4 பெயர்கள் 181
**915

#182
** பிரமம் அரசன் அம்பணம் குரல் 
பிரமமே வேதம் வேள்வி மந்திரம் பிரமன் மாலோடு 
இரவி தீ முனிவர் முத்தி ஈசன் அம்புலி பன்னொன்றே 
அரசனே வியாழன் மன் ஆம் அம்பணம் தோணி ஆமை 
குரல் கதிர் சிறகு மாதர்கூந்தல் யாழ் நரம்பு நாற்பேர் 
** 11, 2, 2, 4 பெயர்கள் 182 
**916

#183
** தோரை ஆரை அகலுள் ஓரை தாரை 
தோரை நெல் விகற்பம் மூங்கில்அரிசி கைவரை சொல் முப்பேர்
ஆரையே மதில் புற்பாய் ஆம் அகலுளே பரப்பு ஊர் நாடே 
ஓரையே மாதர் கூடி விளையாடலுடன் இராசி 
தாரை கண் மழை நேரோடல் தாரகை வழியே கூர்மை 
** 3, 2, 3, 2, 6 பெயர்கள் 183
**917

#184
** ஊர்தி ஆர்வம் அகலம் ஆர்வலர் அணு ஆர்தல் அகளம் 
ஊர்தி தேர் விமானம் பாண்டில் உம்பலே சிவிகை பாய்மா 
ஆர்வம் ஓர் நரகம் அன்பு ஆம் அகலம் மார்பொடு விசாலம் 
ஆர்வலர் கொண்கர் அன்பர் அணு என்பது உயிர் நுண்மைப் பேர் 
ஆர்தலே நிறைதல் உண்டல் அகளம்தான் மிடா நல் தாழி 
** 6, 2, 2, 2, 2, 2, 2 பெயர்கள் 184 
**918

#185
** பாரம் சூரன் துகள் சாரங்கம் 
பாரமே கவசம் தோணி பல்லணம் பொறையினோடு 
நீர் உறு கரை வன் பாரம் நிறை தரை நிகழ்த்தும் எண்பேர் 
சூரனே இரவி தீ நாய் துகள் என்ப குற்றம் தூள் ஆம் 
சாரங்கம் மானும் வண்டும் சாதகப்புள்ளும் ஆமே 
** 8, 3, 2, 3 பெயர்கள் 185 
**919

#186
** ஆரல் சாரல் மூரல் முரம்பு கூரல் 
ஆரல் கார்த்திகைநாள் செவ்வாய் அரண் உறுப்பு ஒரு மீன் நாற்பேர்
சாரலே மருதயாழின் இசையொடு சைலப் பக்கம் 
மூரலே நகை பல் சோறு ஆம் முரம்பு என்ப மேடு பாறை 
கூரல் புள்சிறகும் மாதர் ஓதியும் இருபேர் கூறும் 
** 4, 2, 3, 2, 2 பெயர்கள் 186 
**920

#187
** சாரிகை காரிகை வாரணம் பூருவம் 
சாரிகை பூவை சுங்கம் சுழல்காற்றுதானும் ஆகும் 
காரிகை அழகு பெண்ணே கலித்துறை ஓர் நூற்கும் பேர் 
வாரணம் கவசம் கோழி தடை சங்கு வாரி கைம்மா 
பூருவம் முதுமை முன்பு கிழக்கு என்றும் புகலல் ஆமே 
** 3, 4, 6, 3 பெயர்கள் 187 
**921

#188
** ஏர் இராசி பார் பயல் போர் பீரு 
ஏர் அழகு உழு பெற்றப்பேர் இராசிதான் ஓரை கூட்டம் 
பார் உலகம் தேர்ப்பார் ஆம் பயல் பள்ளம் பாதி சிற்றாள் 
போர் அமர் சதயத்தோடு புகலும் நெல் முதலாம் சும்மை 
பீருவே அச்சம்உள்ளோன் பெயரொடு புருவம் ஆமே 
** 2, 2, 2, 3, 3, 2 பெயர்கள் 188
**922

#189
** அருப்பம் மரக்கால் நிரப்பு நிறை துருக்கம் 
அருப்பம் ஆர் இடம் நோய் காடு ஆம் அரணுடன் ஊரும் அப் பேர் 
மரக்கால் ஆயிலியம் சோதி மாயவன் ஆடல் முப்பேர் 
நிரப்பு என்ப மிடி நிறைப் பேர் நிறை அழியாமை நீர்ச்சால் 
துருக்கமே அரண் கத்தூரி குங்குமமரமும் சொல்லும் 
** 5, 3, 2, 2, 3 பெயர்கள் 189 
**923

#190
** குருதி பரிதி சுருதி சுரம் இரதி 
குருதியே சிவப்பு இரத்தம் குசன் எனக் கூறும் முப்பேர் 
பரிதியே ஊர்கோள் வட்டம் பாற்கரன் நேமி நாற்பேர் 
சுருதியே ஒலி வேதப்பேர் சுரம் அருநெறி கான் மார்க்கம் 
இரதி பித்தளை பெண்யானை மதன்தேவி இச்சை நாற்பேர் 
** 3, 4, 2, 3, 4 பெயர்கள் 190 
**924

#191
** புரை விரை வீரை நரை சுரை துளும்பல் 
புரை குற்றம் உவமை இல்லம் புழை உயர்ச்சியும் ஐம்பேரே 
விரை மணம் சாந்து தூபம் வீரைதான் துயரம் வாரி 
நரை வெள்ளை இவுளி வெண்மை நந்தி நல் சவரி நாரை 
சுரை கள் ஆன்முலை துளைப் பேர் துளும்பலே திமிறல் துள்ளல் 
** 5, 3, 2, 5, 3, 2 பெயர்கள் 191 
**925

#192
** மருள் இருள் பொருநர் இருபிறப்பு 
மருள் என்ப குறிஞ்சியாழின்திறத்தொடு மயக்கமும் பேர் 
இருள் ஒரு நரகம் மையல் இருளொடு கருமை என்ப 
பொருநர் போர்த்தலைவர் கூத்தர் புரவலர் பாணர் வீரர் 
இருபிறப்பு எயிறும் பார்ப்பும் இந்துவும் புள்ளும் ஆமே 
** 2, 4, 5, 4 பெயர்கள் 192 
**926

#193
** மருதம் எருவை தரும ராசன் கரி 
மருதமே ஒரு மரம் செய் மருதம் அ நிலப்பாடல் பேர் 
எருவையே கொறுக்கை கோரை கழுகு செம்பு இரத்தம் என்ப 
தருமராசன்தான் புத்தன் சண்டனோடு அருகன்தான் ஆம் 
கரி என்பது இருந்தை சான்று கறையடி சேகு நாற்பேர் 
** 4, 5, 3, 4 பெயர்கள் 193 
**927

#194
** கருவி சுரிகை துவை 
கருவி பல்லியம் துணைக்காரணங்கள் யாழ் கவசம் ஈட்டம் 
பொரு படைக்கலம் தொடர்ச்சி புயல் பல வினைப் பேர் கூட்டம் 
பரியின் பல்லணமே ஆடை கசை பதின்முப்பேர் பன்னும் 
சுரிகையே கவசம் வாள் ஆம் துவை பிண்ணாக்கு இறைச்சி ஓசை
** 13, 2, 3 பெயர்கள்
**928

#195
** குருகு முரசு தரளம் சார்வு 
குருகு புள் இளமை நாரை கொல்உலைமூக்கு கோழி 
சரி வெள்ளை மூலநாள் வாசந்தி ஒன்பான்பேர் சாற்றும் 
முரசே உத்தரட்டாதிப் பேர் இயம் என்றும் மொழியலாமே 
தரளமே உருட்சி முத்து ஆம் சார்வு என்பது இடமும் பற்றும் 
** 9, 2, 2, 2 பெயர்கள் 195 
**929

#196
** முரண் மொய்ம்பு உரை உவா ஞெரேல் 
** நிதி உரு ஓதனம் 
முரண் வலி பகை ஆம் என்ப மொய்ம்பு தோள் வலியும் ஆகும்  
உரை என்ப களவி தேய்வு ஆம் உவா தந்தி இளையோன் பெளவம்
ஞெரேல் ஒலி விரைவும் ஆகும் நிதி இருநிதி பொன் என்ப 
உரு நிறம் வடிவு அட்டைப் பேர் ஓதனம் சோறே உண்டி 
** 2, 2, 2, 3, 2, 3, 3, 2 பெயர்கள் 196 
**930

#197
** அரி 
அரி கிளி புணரி மால் தேர் ஐம்மை இந்திரன் கால் காந்தி 
பரி புகர் பன்றி சிங்கம் பகை புகை பாயல் சோலை 
வரி மதி சேகு தேரை வானரம் இயமன் மூங்கில் 
எரி புரை நிறம் பொன் பாந்தள் இரவி கண்வரி தார் பச்சை
**931

#198
** அரி (தொடர்ச்சி) அரிதம் ஆர்ப்பு 
அரிசி நெற்கதிர் கள் கூர்மை அளி படைக்கலமே ஈர்வாள் 
அரிதலே சயனம் நேமி அடல் விசி  பறை அரித்தல் 
பரிபுரம் அதனுள் பெய்த பரலோடு இவ் ஆறேழைந்தாம் 
அரிதமே பசுமை திக்கு ஆம் ஆர்ப்பு ஒலி சிரித்தல் பேரே 
** 47, 2, 2 பெயர்கள் 198 
**932

#199
** அருவி அரலை கரடம் சுரியல் 
அருவியே மலைச்சார்வு ஆறும் அரி தினைத்தாளும் ஆகும் 
அரலையே கனி வித்து ஆழி மரல் கழலையும் ஆம் என்ப 
கரடமே மதம் பாய்கின்ற சுவட்டொடு காக்கை ஆகும் 
சுரியல்தான் பெண்மயிர்க்கே சொல்லும் ஆண்மயிர்க்கும் பேர் ஆம்
** 2, 5, 2, 2 பெயர்கள் 199 
**933

#200
** திரு பரிவு கரை கைத்து சுரகுரு 
திரு என்ப கமலை செல்வம் சிறப்பொடு முப்பேர் செப்பும் 
பரிவு என்ப துன்பம் இன்பம் பகரும் அன்பிற்கும் அப் பேர் 
கரையே நீர்க் கரை சேர்வு ஆகும் கைத்து நீள் நிதி வெறுப்பு ஆம் 
சுரகுரு மகவான் தேவமந்திரி இருபேர் சொல்லும் 
** 3, 3, 2, 2, 2 பெயர்கள் 200 
**934

#201
** அரற்றல் ஐது இரத்தம் இலாங்கலி அரக்கு 
** அருச்சுனம் அறிக்கை 
அரற்றலே அழுகை ஓசை ஐது என்ப விரைவு நொய்து ஆம் 
இரத்தம் செந்நீர் சிவப்பு ஆம் இலாங்கலி அலம் தென் காந்தள் 
அரக்கு என்ப மெழுகு கள்ளின் விகற்பமும் சிவப்பும் ஆகும் 
அருச்சுனம் மருது வெண்மை அறிக்கைதான் அறிவு பற்று ஆம் 
** 2, 2, 2, 3, 3, 2, 2 பெயர்கள் 201 
**935

#202
** அரந்தை அருந்தல் அவித்தல் அரங்கம் அரங்கு 
அரந்தை என்பது குறிஞ்சியாழிசை துன்பம் ஆகும் 
அருந்தலே அருமை உண்டல் அளித்தல்தான் கொடுத்தல் காத்தல்
அரங்கம் ஆற்றிடைக்குறைப் பேர் ஆடிடம் சபையும் அப் பேர் 
அரங்கு போரிடம் வட்டாடும் இடம் சபை மனைவி கற்பு ஆம் 
** 2, 2, 2, 3, 4 பெயர்கள் 202 
**936

#203
** முருந்து விருந்தம் குரங்கு எருந்து இடம் 
முருந்து என்ப மயிலின் தோகை  முதல் முள்ளு தவளம் ஆகும் 
விருந்தமே கிளையின்கூட்டம் விலங்கின்கூட்டமும் என்றாகும் 
குரங்கு வானரம் விலங்கின்பொது மிகு கோணல் ஆகும் 
எருந்து உரல் கிளிஞ்சில் என்பர் இடம் செல்வம் விசாலம் வாமம் 
** 2, 2, 3, 2, 3 பெயர்கள் 203 
**937

#204
** ஆரியர் ஆன் ஆரி காருகர் தாரகாரி 
ஆரியர் மிலேச்சர் நல்லோர் ஆன் என்பது இடைச்சொல் ஆ ஆம் 
ஆரியே கதவு சோழன் அழகொடு மேன்மைக்கும் பேர் 
காருகர் தந்துவாயர் கடுங் கொலையாளர் வண்ணார் 
தாரகாரி என்ப காளி சண்முகன்தானும் ஆமே 
** 2, 2, 4, 3, 2 பெயர்கள் 204 
**938

#205
** சார் சான்றோன் வேர் விழைச்சு பாராவாரம் சாரணர் 
சார் கூடல் ஒரு தாருப் பேர் சான்றோன் மான் தலை நாள் பானு 
வேர் என்ப மரவேர் வேர்வு ஆம் விழைச்சு நல் இளமை போகம் 
பாராவாரம்தான் வாரி  கடற்கரை இருபேர் பன்னும் 
சாரணர் ஒற்றர் என்ப சமண் முனிவர்க்கும் பேர் ஆம் 
** 2, 2, 2, 2, 2, 2 பெயர்கள் 205 
**939

#206
** அராகம் கரேணு கிராணம் கரீரம் 
அராகமே செந்நிறமே பாலையாழ் முடுகியற்பாட்டு ஆசை 
கரேணுவே பிடியானைக்கும் கடுங் கொலையானைக்கும் பேர் 
கிராணமே கிராணம் மூக்கு ஆம் கிளர் சிறுவட்டிலும் பேர் 
கரீரமே மிடா அகத்தி கரியின் பல்லடி முளைப் பேர் 
** 4, 2, 3, 4 பெயர்கள் 206 
**940

#207
** லகர எதுகை 
** புலவர் வலவன் அலகு அலரி 
புலவர் பாடுநரே கூத்தர் புதன் உம்பர் கவிகள் ஓவர் 
வலவனே வெற்றியாளன் மருவும் தேர்ப்பாகன் மாயோன் 
அலகு நெற்கதிரே ஆதி பலகறை நுளம்பு எண் ஏதி 
அலரி கண்வரி அருக்கன் அழகு ஒரு மரம் பூ ஆமே 
** 6, 3, 5, 5  பெயர்கள் 207 
**941

#208
** ஆலம் மூலம் சீலம் சாலம் 
ஆலமே வட விருக்கம் அடு நஞ்சோடு அலர் பூ நீர் ஆம் 
மூலம் வேர் முதலே ஏது முதிர்வுறு கிழங்கு ஓர் நாள் ஆம் 
சீலமே குணம் தண்டித்தல் திகழ் சரித்திரம் முப்பேரே 
சாலமே வலை சாலேகம் மராமரம் சபை மதில் பேர்
** 4, 5, 3, 5 பெயர்கள் 208 
**942

#209
** காலம் கலம் சாலகம் தாலம் ஆலல் அறுவை 
காலம் வைகறை காலப்பேர் கலம் அலம் யாழ் பூண் நாவாய் 
சாலகம் காலதர்ப் பேர்தானே பூ மொட்டும் ஆகும் 
தாலம் உண்கலமே நாவே தராதலம் பனையே நாற்பேர் 
ஆலல் ஆடுதல் ஒலிப் பேர் அறுவை சித்திரை நாள் ஆடை 
** 2, 4, 2, 4, 2, 2 பெயர்கள் 209 
**943

#210
** இலம்பகம் இலஞ்சி பலம் அலங்கல் 
இலம்பகம் அத்தியாயம் நுதற்சூட்டு என்று இருபேர் ஆமே 
இலஞ்சி மா வாவி கொப்பூழ் எயில் குணம் மகிழே ஏரி 
பலம் கனி பயன் காய் சேனை பலம் கிழங்கு அறுபேர் ஆகும் 
அலங்கல் என்பது பூ மாலை அசைவொடு தளிர் இலங்கல் 
** 2, 7, 6, 4 பெயர்கள் 210 
**944

#211
** ஒலி ஒலியல் கலுழி கலை 
ஒலி என்பது இடியே காற்றே ஓசை என்று ஆகும் முப்பேர் 
ஒலியலே ஆறும் தோலும் உடுத்த ஆடையும் பைந்தாரும் 
கலுழியே கான்யாறு என்ப கலங்கிய நீரும் ஆமே 
கலை மதிப் பங்கு தூசு கல்வி நூல் இரலை காஞ்சி 
** 3, 4, 2, 6 பெயர்கள்
**945

#212
** பீலி பாலிகை வேலி மெத்தை தோல் 
பீலியே ஆலவட்டம் பெருவரை கலாபி தோகை 
பாலிகை உதடு வட்டம் படைவாளின் முட்டியும் பேர் 
வேலி ஊர் மதில் காவல் பேர் மெத்தை மெல்லணையே சட்டை 
தோல் இபம் வனப்பு வார்த்தை துருத்தி தோற்பலகை ஐம்பேர் 
** 4, 3, 3, 2, 5 பெயர்கள் 212 
**946

#213
** பாலை வேலை மாலை சாலை 
பாலை ஓர் மரம் நிலம் அந்நிலத்தினில் பாடலும் பேர் 
வேலையே கடல் அதற்கு மேவிய கரையே காலம் 
மாலையே இரவோடு அந்தி மாலிகை ஒழுங்கு நாற்பேர் 
சாலையே குதிரைப்பந்தி அறப்புறம்தானும் ஆமே 
** 3, 3, 4, 2 பெயர்கள் 213
**947

#214
** அல்லி அல் ஆகம் சில்லி வல்லி 
அல்லி வெள்ளாம்பல் காயா அகவிதழ் ஆக முப்பேர் 
அல் இரா இருளே என்ப ஆகம் மார்பு உடலும் ஆமே 
சில்லியே வட்டம் கீரை தேர்உருள் சிள்வீடு என்ப 
வல்லி ஆய்ப்பாடி வள்ளி வரைவொடு நிகளம் ஆமே 
** 3, 2, 2, 4, 4 பெயர்கள் 214 
**948

#215
** இல் மல் சில்லை ஒல்லை 
இல் இல்லாள் இல்லையென்றல் இராசி சா இடம் வீடு ஆறே 
மல் வளம் வலியினோடு மாயவன் ஆடல் முப்பேர் 
சில்லை என்பது பிரண்டை சிள்வீடு தூர்த்தைக்கும் பேர் 
ஒல்லையே விரைவு தொல்லை கடுப்புடன் சிறுபோது ஆமே 
** 6, 3, 3, 4 பெயர்கள் 215
**949

#216
**  வில் வல் மலர்தல் புல் கொல் 
வில் என்ப மூலநாள் ஆம் வெஞ்சிலை ஒளியும் அப் பேர் 
வல் வலி விரைவு சூது ஆம் மலர்தலே எதிர்தல் தோன்றல் 
புல் புலி புணர்ச்சி புன்மை புதல் பனை அனுடநாள் ஆம் 
கொல் என்பது அசைச்சொல் ஐயம் கொலை ஏவல் வருத்தம் நாற்பேர்
** 3, 3, 2, 6, 4 பெயர்கள் 216
**950

#217
** மால் ஆல் அல் வால் வசந்தன் சால்பு 
மால் புதன் பெருமை மேகம் மாயவன் மயக்கம் காற்றே 
ஆலோடு அல் இரண்டு சொல்லும் ஆம் என்பது அல்லவும் பேர் 
வால் வெண்மை மிகுதி தூய்து ஆம் வசந்தனே தென்றல் காமன் 
சால்பு மாட்சிமை சான்றாண்மை சாற்றிய இருபேர்தானே 
** 6, 1, 1, 3, 2, 2 பெயர்கள் 217 
**951

#218
** வலம்புரி புலம்பு பொய் சிலம்பு செருந்தி விலங்கு 
வலம்புரி சங்கு நந்தியாவர்த்தம் ஓர் மரம் முப்பேரே 
புலம்பு ஒலி தனிமை அச்சம் பொய் என்ப பொக்கம் பொந்து ஆம் 
சிலம்பு ஒலி ஞெகிழி குன்று ஆம் செருந்தி பஞ்சரம் வாட்கோரை 
விலங்கு கால்தளை குறுக்கு மிருகத்தின் பொதுவும் ஆமே 
** 3, 3, 2, 3, 2, 3 பெயர்கள் 218 
**952

#219
** உலகம் அலவன் இலயம் வலவை வருடை 
உலகமே திசை விண் பூமி உயர்குணம் சனம் உயர்ந்தோர் 
அலவனே ஞெண்டு பூஞை அம்புலி கடகராசி 
இலயமே கூத்தும் கூத்தின் விகற்பமும் இருபேர் என்ப 
வலவை வஞ்சப்பெண் வல்லோன் வருடைதான் சிம்புள் ஆடு ஆம்
** 6, 4, 2, 2, 2 பெயர்கள் 219 
**953

#220
** கலாபம் சிலீமுகம் சலாகை விலோதம் விடம் 
கலாபமே மணிவடம் மேகலை மயிலிறகு முப்பேர்
சிலீமுகம் முலைக்கண் வண்டு சித்திரபுங்கம் தானாம்
சலாகை நல் மணி நாராசம் சவளமும் ஆகும் என்ப
விலோதம் பெண்மயிர் பதாகை விடம் என்ப நஞ்சும் தேளும்
** 3,3,3,2,2 
**954

#221
செல் இடி ஏவல் மேகம் சிதலை ஆகும் என்ப
எல் ஒளி பகல் இகழ்ச்சி இரவுடன் இரவி ஐம்பேர்
சொல் உரை கீர்த்தி நெல் ஆம் தொடுத்தலே வளைத்தல் கட்டல்
கல் ஒலி மலை கல் என்ப கரண்டம் நீர்க்காக்கை செப்பு ஆம்
** 4,5,3,3,2
**955

#222
கலி வஞ்சம் ஒலியே வாரி கடையுகம் வலி ஐம்பேரே
சிலை ஒலி மலை கல் வில் ஆம் செடி ஒளி செறிவு தீது ஆம்
தலம் என்பது இலை புவிப் பேர் தலை இடம் தலை விண் ஆதி
திலமே மஞ்சாடி எள் ஆம் திலகம் மஞ்சாடி பொட்டு ஆம்
** 5, 4, 3, 2, 4, 2, 2
**956

#223
வல்லை கான் விரைவு மைந்து ஆம் வடம் மணிவடம் ஆல் தாம்பு
பல்லம் ஓர் கணக்குப் பாணம் பல்லணம் கரடி நாற்பேர்
மல்லலே வலி வளப்பேர் வாயில் ஐம்புலன் கடைப் பேர்
முல்லை மல்லிகையே வென்றி முல்லை நல் நிலம் கற்பு ஆமே
** 3,3, 4, 2, 2, 4
**957

#224
கோல் என்பது ஈட்டி வாட்கோல் துகிலிகை துலாம் சம்மட்டி
சீல மன்னவன்தன் செங்கோல் திரட்சி யாழ்நரம்போடு அம்பு
நீல அஞ்சனக்கோலோடு நீள் இலந்தையும் பன்னோர் பேர்
காலிலி அருணன் பாம்பு காற்றொடு முப்பேர் ஆமே
** 11,3
**958

#225
கூலமே பண்ணிகாரம் புனல்கரை கோ விலங்கின்
வாலோடு ஆவணமே பாகல் வரம்பொடு குரங்கு எண்பேரே
கால் இடம் மரக்கால் பிள்ளை குறுந்தறி வனம் காம்பு ஊற்றம்
காலன் அங்குரம் கால் வாய்க்கால் காற்றுத் தேர்உருள் பன்மூன்றே
** 8, 13
**959

#226
கோலமே அழகு பன்றி பாக்கு நீர்க்கொழுந்து பீர்க்கு ஆம்
மாலியே இரவி கள் ஆம் மாந்தலே மரித்தல் உண்டல்
வேல் அயில் படைக்கலப்பேர் வேதண்டம் கைலை வெற்பு ஆம்
சாலி நெற்பொதுவும் கள்ளும் அருந்ததிதானும் ஆமே
** 5, 2, 2, 2, 2, 3
**960

#227
உலவை கால் மரத்தின்கொம்போடு உறு தழை விலங்கின்கோடு ஆம்
மலைதலே பொரல் சூடல் பேர் மந்திரி குபேரன் வெள்ளி
அலர் பழி விரி பூ நீர் ஆம் அவிர்தலே ஒளி பீறல் பேர்
எலி பூரநாள் எலிப் பேர் இரணம் பொன் கடன் மாணிக்கம்
** 4, 2, 2, 3, 2, 2, 3
**961

#228
ஆலயம் நகரம் கோயில் யானையின்கூடம் முப்பேர்
பாலமே மழு நெற்றிப்பேர் பவித்தரம் சுசி தருப்பை
நூலோர் மந்திரிகள் பார்ப்பார் நுவல் கவிப் புலவர்க்கும் பேர்
வேலாவலயம்தான் பூமி விரி கடல் இருபேர் ஆமே
** 3, 2, 2, 3, 2
**962

#229
சூலியே கருப்பப்பெண்ணும் துர்க்கையும் சிவனும் முப்பேர்
வாலியே அலாயுதன் கிட்கிந்தையின் மன்னன்பேர் ஆம்
பால் புடை இயல்பு திக்குப் பகுத்தல் பால் என்னும் ஐம்பேர்
ஏலமே மயிர்சாந்தோடே ஏலத்தின் பேரும் ஆமே
** 3, 2, 5, 2
**963

#230
** வகரவெதுகை
நவம் என்ப புதுமை கேண்மை ஒன்பது நல் கார்காலம்
கவனமே கலக்கம் வெம்மை குதிரையின்கதி போர் காடு ஆம்
உவணமே கலுழன் ஆகும் உயர்ச்சிக்கும் கழுகுக்கும் பேர்
பவனமே இராசி பூமி படர் காற்று மனையே கோயில்
** 4, 5, 3, 5
**964

#231
புவனம் நீர் புவியும் ஆகும் புரத்தலே காத்தல் வண்மை
நுவணை நூல் நுண்மை பிண்டி நூலே சாத்திரமும் தந்தும்
தவ என்ப மிகுதி குன்றல் தந்தே நூல் சாத்திரப்பேர்
சிவம் நன்மை குறுணி முத்தி சீவனே உயிர் வியாழன்
** 2, 2, 3, 2, 2, 2, 3, 2
**965

#232
இவறலே மறவி ஆசை என்ப பேரிச்சைக்கும் பேர்
இவர்தலே எழுச்சி ஆசை ஏறுதல் சேறல் மேவல்
சுவவு என்ப புள்ளின்மூக்கும் சுவர்க்கமும் சுண்டனும் பேர்
குவவு என்ப திரட்சி மற்றும் குவிதலே பெருமைக்கும் பேர்
** 3, 5, 3, 3
**966

#233
தவிசு என்ப தடுக்கு மெத்தை இலகடம் முப்பேர்தானே
சவி மணிக்கோவை செவ்வை சாற்றிய வனப்புக் காந்தி
நவிரமே மஞ்ஞை புன்மை நல் மலையுடனே உச்சி
நவிலல் சொல்லுதல் பண்ணல் பேர் நவியமே மழுக் கோடாலி
** 4, 4, 4, 2, 2
**967

#234
கவுசிகம் விளக்குத்தண்டு ஓர் பண் பட்டுக் கடிய கோட்டான்
சவுரியே திருமால் கள்வன் சனி யமன் இனைய நாற்பேர்
மவுலியே முடி கோடீரம் வட்கல் என்பது நாண் கேடு ஆம்
கவலை செந்தினை ஓர் வல்லி கவர்வழி துன்பம் நாற்பேர்
** 4, 4, 2, 2, 4
**968

#235
சேவகம் வீரம் யானைதுயிலிடம் துயிலும் செப்பும்
சீவனி ஓர் மருந்து செவ்வழித்திறத்தோர்ஓசை
ஆவணம் புனர்தம் வீதி அங்காடி உரிமை நாற்பேர்.
நீவியே துடைத்தல் ஆடை நெருங்கு கொய்சகம் முப்பேரே
** 3, 2, 4, 3
**969

#236
உவளகம் மதில் ஓர் பக்கம் ஊருணி பள்ளம் உள்ளில்
கவடு என்ப கப்பி யானைக் கழுத்திடு புரசைக்கும் பேர்
சிவை உமை மரவேர் கொல்லன்உலைமுகம் திரியும் ஓரி
கவையே ஆயிலியம் காடு கவர்வழி எள்இளங்காய்
** 5,2,4,4
**970

#237
சிவப்பு என்ப சினமும் செம்மையுடன் சினக்குறிப்பு முப்பேர்
உவப்பு என்ப மகிழ்சி மேடு ஆம் ஒழுக்கமே வழி ஆசாரம்
தெவிட்டலே அடைத்தல் கான்றல் நிறைதலும் ஒலியும் செப்பும்
துவக்கே தோல் பிணக்கு இரண்டாம் சூழலே இடம் விசாரம்
** 3, 2, 2, 4, 2, 2
**971

#238
சேவலே காவலோடு சேறு புள்ஆண் முப்பேரே
கேவலம் தனிமை முத்தி கீரம் என்பது பால் கிள்ளை
பூவை சாரிகை காயா ஆம் புலி சிங்கம் உழுவை சாந்தே
வாவல் அஞ்சலிகைப் புள்ளும் தாவலும் வகுக்கலாமே 
** 3, ,2, 2, 2, 3, 2 பெயர்கள் 238 
**972

#239
** சுவல் கவி கழி நவிர் நாஞ்சில் கவிகை கடிப்பம் 
சுவல் பிடர் தோள்மேல் மேடு துரகதக் குசை நாற்பேரே 
கவி மந்தி புலவன் சுங்கன் கழி என்ப மிகுதி காயல் 
நவிர் உளை மருதயாழ் வாள் நாஞ்சில் எந்திரம் கலப்பை 
கவிகையே குடை கொடைப் பேர் கடிப்பம் காதணி பூண் செப்பு ஆம் 
** 4, 3, 2, 3, 2, 2, 2 பெயர்கள் 239 
**973

#240
** மா கோ 
மா வண்டு பெருமை பிண்டி வாசி கூப்பிடல் வெறுத்தல் 
காவுறு விலங்கு செல்வம் கருநிறம் கமலை பத்தாம் 
கோ விழி பசு நீர் திக்கு குலிசம் விண் கிரணம் பூமி 
ஏ உரை சுவர்க்கம் வேந்தன் இரங்கல் வெற்பு ஈரேழ் ஆமே 
** 10 14 பெயர்கள் 240 
**974

#241
** ஆவி கூவிரம் குவடு காவி நாவிதன் 
ஆவியே வாவி நாற்றம் ஆர் உயிர் புகை மூச்சு ஐம்பேர் 
கூவிரம் தேர் தேர்மொட்டு ஆம் குவடு நீள் மலை வெற்புஉச்சி 
காவியே குவளை காவிக் கல்லொடு கள்ளு முப்பேர் 
நாவிதன் மஞ்சிகன் கார்த்திகை பூரநாளும் ஆமே 
** 5, 2, 2, 3, 3 பெயர்கள் 241 
**975

#242
** ஆ கா பா தா 
ஆ என்பது இரக்கம் பெற்றம் ஆச்சாவோடு இசை வியப்பு ஆம் 
கா என்ப துலாம் பூஞ்சோலை காத்தல் தோள்சுமை நாற்பேரே 
பா என்ப பனுவல் நூற்பா பரவுதல் பரப்பும் ஆகும் 
தா என்ப பகை வருத்தம் தாண்டுதல் வலி கேடு ஐம்பேர் 
** 5, 4, 4, 5 பெயர்கள் 242 
**976

#243
** கவ்வை பவ்வம் தவ்வை நவ்வி நன்று 
கவ்வையே பழிச்சொல் துன்பம் கள் ஒலி எள்இளங்காய் 
பவ்வமே குமிழி வாரி பரு மரக்கணு உவா ஆம் 
தவ்வை முன்பிறந்தாளோடு தாயும் மூதேவியும் பேர் 
நவ்வியே தோணி மான் ஆம் நன்று என்ப பெருமை நன்மை 
** 5, 4, 3, 2, 2 பெயர்கள் 243 
**977

#244
** அவல் செவிலி கவுடம் சுவடு சுபம் 
அவலே சிற்றுண்டி பள்ளம் நீர்நிலை ஆகும் முப்பேர் 
செவிலியே வளர்த்த கைத்தாய் முன்பிறந்தவளும் செப்பும் 
கவுடம் ஓர் கொடி ஓர் தேசம் இருபெயர் கழறலாமே 
சுவடு வச்சிராங்கி ஓர் எண் சுபம் என்பது அழகு வெண்மை 
** 3, 2, 2, 2, 2 பெயர்கள் 244 
**978

#245
** பவம் பாவம் சவுரியம் தண்மை யவம் யவனர் 
பவம் என்ப சனனம் பாவம் பாவம்தான் வினை தியானம் 
சவுரியம் களவு வீரம் தண்மைதான் குளிர்ச்சி தாழ்வு 
யவம் ஒரு தானியப்பேர் என்ப நெல்லிற்கும் அப் பேர் 
யவனர் சோனகர் கண்ணாளர் சித்திரகாரர் என்ப 
** 2, 2, 2, 2, 2, 3 பெயர்கள் 245 
**979

#246
** ஆவரணம் ஏவல் ஓவியர் ஓ 
ஆவரணம்தான் சட்டை தடை மறைப்பு அரணம் ஆடை 
ஏவலே வியங்கோள் என்ப எய்திய வறுமைக்கும் பேர் 
ஓவியர் சிற்பநூலோரொடு சித்திரகாரரும் பேர் 
ஓ இரக்கச்சொல் நீக்கமோடு நீர் தகை கபாடம் 
** 5,2, 2, 3 பெயர்கள் 246 
**980

#247
** அவ்வை செவ்வி தெவ் தீவினை சைவம்
அவ்வையே தாயின் பேரும் ஒளவையோடு இருபேர் ஆமே 
செவ்வி ஏர் பொழுதினோடு செப்பிய பருவம் ஆகும் 
தெவ்^ அமர் பகை இரண்டாம் தீவினை கொடுமை பாவம் 
சைவம் ஓர் புராணம் ஈசன் சமயத்தின் விகற்பும் ஆமே 
** 2, 3, 2, 2, 2 பெயர்கள் 247 
**981

#248
** ழகர எதுகை
விழவு என்ப மிதுனராசி விளங்கும் உற்சவமும் ஆகும்
கழை என்ப புனர்தம் மூங்கில் கரும்பு என விரும்பும் முப்பேர்
கழல் கழங்கொடு செருப்புக் காலணி கால் இ நாற்பேர்
கிழமை மூப்பு உரிமை பண்பு ஆம் கிழி நிதிப்பொதி கீறு ஆமே
** 2, 3, 4, 3, 2
**982

#249
சூழியே சுனையும் வெய்ய தும்பியின் முகபடாமும்
பாழியே வலி விலங்கின்படுக்கை ஊர் பற்றிலாரூர்
நாழியே அளக்கும் நாழி நாழிகை பூரட்டாதி
ஆழி மோதிரமே நேமி அலை கடல் கரையே வட்டம்
** 2, 4, 3, 5
**983

#250
இழுமெனல் ஓசை என்ப இனிமையும் இயம்பும் அப் பேர்
விழுமமே சிறப்புச் சீர்மை இடும்பையும் விதித்த பேரே
தொழு என்பது உழலைதானே இரேவதி நாளும் சொல்லும்
செழுமையே வளம் கொழுப்ப் ஆம் தேன் என்ப நறவும் வண்டும்
** 2, 3, 2, 2, 2
**984

#251
கழுது பேய் பரண் வண்டு என்ப கயவு கீழ் பெருமை மென்மை
அழுவமே பரப்பும் நாடும் அழுங்கலே இரங்கல் கேடு ஆம்
கழுமல் பற்றொடு மயக்கம் காதலே ஆசை கோறல்
கழிதல் என்பதுவே சாதல் கடந்திடல் மிகுதி முப்பேர்
** 3, 3, 2, 2, 2, 2, 3
**985

#252
மாழை பொன் உலோகக்கட்டி மடமை ஏர் புளிமா ஓலை
கூழையே சிறகு மாதர்கூந்தல் வெம் படைஉறுப்பு ஆம்
தாழை கேதகை தெங்கு ஆகும் சாகினி சேம்பு கீரை
ஊழ் முறை வெயில் பகைப் பேர் ஊசியே சூசி ஆணி
** 6, 3, 2, 2, 3, 2
**986

#253
உழை என்பது இடம் மான் யாழினோர்நரம்பிற்கும் பேர் ஆம்
குழை என்ப தளிர் துவாரம் குண்டலம் சேறு நாற்பேர்
விழைவு என்ப புணர்ச்சி காதல் வெறுக்கை என்பது பொன் செல்வம்
வழி மரபு இடம் பின் மார்க்கம் வழங்கலே கொடை உலாவல்
** 3, 4, 2, 2, 4, 2
**987

#254
ஈழம் பொன் கள் ஓர் தேசம் எல்லையே அளவை வெய்யோன்
மேழகம் கவசம் ஆடு ஆம் வேளாண்மை கொடையே மெய்மை
காழியர் வண்ணார் உப்புவாணிகர் இருபேர் காட்டும்
வேழமே கரும்பு யானை கொறுக்கைச்சி வேணு நாற்பேர்
** 3, 2, 2, 2, 2, 4
**988

#255
கூழ் என்பது உணவும் பொன்னும் பயிர் என்றும் கூறும் முப்பேர்
காழ் என்ப மணியின் கோவை கற்பரல் சேகு வித்து ஆம்
யாழ் என்ப மிதுனம் வீணை இரலை நாள் ஆதிரைப் பேர்
கீழ் என்பது இடம் கீழ்சாதி கீழ்த்திசை கயமை நாற்பேர்
** 3, 4, 4, 4
**989

#256
கோழியே குருகு ஓர் ஊராம் குய்யமே மறைவு யோனி
மூழியே வாவி சேறோடு அகப்பையும் மொழியும் முப்பேர்
மூழையே அகப்பை சோறு ஆம் முறம் சுளகொடு விசாகம்
நூழிலே கோறல் யானை நுண்கொடி கொடிக்கொத்தான்பேர்
** 2, 2, 3, 2, 2, 4
**990

#257
** தொழுதி தொறு கெழுவுதல் கீலாலம் குழல் அழிவு அவி 
தொழுதி புள்ளொலி கூட்டப்பேர் தொறு நிரை அடிமை கூட்டம் 
கெழுவுதல் மயக்கம் பற்று ஆம் கீலாலம் கறை நீர் காடி 
குழல் துளையுடைப்பொருள் பேர் மயிர் இசைக்குழல் முப்பேரே 
அழிவு என்ப வீதல் கேடு ஆம் அவி நெய் சோறு அமரர் உண்டி 
** 2, 3, 2, 3, 3, 2, 3 பெயர்கள் 257 
**991

#258
** ளகர எதுகை 
** குளம் களம் வளமை வாருணம் விளவு விம்மல் 
குளம் நுதல் கரும்பின்கட்டி குட்டமும் இட்ட நாமம் 
களம் அமர்க்களமே கண்டம் களா விடம் கறுப்பே இல்லாள் 
வளமை மாட்சிமை கொழுப்பு ஆம்  வாருணம் கடலும் மேற்கும் 
விளவு என்ப கமர் விளா ஆம் விம்மல் ஏங்குதல் ஒலித்தல் 
** 3, 6, 2, 2, 2, 2 பெயர்கள் 258 
**992

#259
** முளரி விளர் களபம் உளர்தல் 
முளரியே விறகு செந்தீ முண்டகம் சிறுமை காடு ஆம் 
விளர் என்பது இளமைதானே வெளுப்பொடு கொழுப்பும் ஆகும் 
களபமே யானைக்கன்று கமழ் சாந்து கலவை முப்பேர் 
உளர்தலே சிதறல் ஆகும் தடவலும் உரைக்கற்பாற்றே 
** 5, 3, 3, 2 பெயர்கள் 259 
**993

#260
** குளிர் நளிர் ஒளி வட்டம் இளி 
குளிர் மழு நண்டு இருத்தல் குளிர் கவண் முழா மீன் தாரை 
நளிர் குளிர் பெருமை ஞெண்டு நாட்டிய செறிவு நாற்பேர் 
ஒளி வட்டம்தான் கண்ணாடி சக்கரம் இருபேர் ஓதும் 
இளி இசை இசித்தல் எல்லே இணங்குதல் உரித்தற்கும் பேர் 
** 7, 4, 2, 5 பெயர்கள் 260 
**994

#261
** பளிதம் வெளில் களிறு ஒளி 
பளிதம் என்பது கர்ப்பூரம் பல்லம் என் கணக்கும் ஆகும் 
வெளில் அணில் வேழத்தம்பம் வெண் தயிர்கடைதறிப் பேர் 
களிறு என்ப அத்தநாளே கறையடி சுறவு பன்றி 
ஒளி இருசுடரே தீயே ஒளிப்பிடம் புகழும் ஆமே 
** 2, 3, 4, 5 பெயர்கள் 261 
**995

#262
** பாளிதம் ஓளி கோளி மீளி 
பாளிதம் சோறு கண்டசருக்கரை குழம்பு பட்டு ஆம் 
ஓளியே யானைக்கூடம் ஒழுங்கு என்றும் வழங்கும் நூலே 
கோளி தொன் மரமே அத்தி கொள்வோனும் கொழிஞ்சியும் பேர் 
மீளி திண்ணியன் வலிப் பேர் மேன் மகன் பெருமைக்கும் பேர் 
** 4, 2, 4, 4  பெயர்கள் 262 
**996

#263
** அளை அசனி உளை கிளை இளை 
அளை தயிர் முழை புற்று ஆகும் அசனியே உருமு வச்ரம் 
உளை பரி மீது கட்டும் மயிர் பிற மயிரும் ஓதும் 
கிளை என்பது ஓர் பண் மூங்கில் கேளொடு கிளைத்தலும் பேர் 
இளை புயல் இளமை வேலி தலைக்காவல் இவை நாற்பேரே 
** 3, 2, 2, 4, 4 பெயர்கள் 263
**997

#264
** உள்ளல் உழப்பு ஞெள்ளல் எள்ளல் யாமம் ஞொள்கல் 
உள்ளலே நினைவு உள்ளான்பேர் உழப்பு என்ப வலி உற்சாகம் 
ஞெள்ளலே பள்ளம் மேன்மை நீண்ட வீதியும் முப்பேரே 
எள்ளலே நகை இழிப்பு ஆம் யாமம் தெற்கு இரவு சாமம் 
ஞொள்கல் சோம்பு இளைத்தல்  அச்சக்குறிப்பு என்று நுவலற்பாலாம்
** 2, 2, 3, 2, 3, 3 பெயர்கள் 264 
**998

#265
** வள் வெள்ளை கள்வன் பள்ளி 
வள் என்ப காது கூர்மை வலி வளம் வாளே வார் ஆம் 
வெள்ளையே முசலி சங்கு வெளிறு வெள்ளாடு வெண்பா 
கள்வனே முசு ஞெண்டு யானை கருநிறத்தவனே சோரன் 
பள்ளி ஊர் சிற்றூர் கோயில் பாயல் கண்படை நீத்தோர்ஊர் 
** 6, 5, 5, 6 பெயர்கள் 265 
**999

#266
** விளக்கு வேள்வி அளக்கர் இளைத்தல் இளைத்தல் என்றூழ் 
விளக்கு ஒளி சோதிநாள் ஆம் வேள்வியே மகம் நாள் ஈதல் 
அளக்கரே புடவி சேறு உப்பளம் கடல் கார்த்திகைப் பேர் 
திளைத்தலே அனுபவித்தல் செறிதலே நிறைதல் முப்பேர் 
இளைத்தலே இளைப்பு இரங்கல் என்றூழே இரவி வெய்யில் 
** 2, 3, 5, 3, 2, 2 பெயர்கள் 266 
**1000

#267
** பிள்ளை பெட்டல் மள்ளர் உள்ளம் உஞற்று வள்ளி 
பிள்ளையே வடுகன் காக்கை பெட்டல்தான் விரும்பல் வேண்டல் 
மள்ளரே மள்ளர் வீரர் மறவர்க்கும்  குறவர்க்கும் பேர் 
உள்ளமே முயற்சி நெஞ்சு ஆம் உஞற்று இழுக்கொடு தாளாண்மை ' 
வள்ளியே வல்லி செங்கை வளை புனை இழை முப்பேரே 
** 2, 2, 4, 2, 2, 3 பெயர்கள் 267 
**1001

#268
** காளம் வேள் விபூதி கோள் ஞானி நான்முகன் 
காளமே ஊதுகொம்பு கழு நஞ்சு கருமை நாற்பேர் 
வேள் அறுமுகன் காமன்பேர் விபூதி ஊன் கொடுமை செல்வம் 
கோள் இடையூறு ஒன்பான் கோள் கொலை குணம் வலி பொய் கொள்கை 
ஞாளியே சுணங்கன் கள் ஆம் நான்முகன் அருகன் வேதா 
** 4, 2, 3, 7, 2, 2 பெயர்கள் 268 
**1002

#269
** களர் தளம் அளகம் தளை 
களர் என்ப மிடறு கோட்டி களர்நிலம் கருமை நாற்பேர் 
தளம் இலை படையே சாந்து தாழி பூவிதழே மேடை 
அளகமே மாதர்ஓதி அறல் மயிர்க்குழற்சி முப்பேர் 
தளை விலங்கொடு தொடர்ச்சி தாள் சிலம்பு ஆண்மயிர்ப் பேர் 
** 4, 6, 3, 4 பெயர்கள் 269 
**1003

#270
** புள் புளகம் கள் கனலி அள் வெள்ளம் வேணு 
புள்ளு வண்டு அவிட்டம் புள் பேர் புளகம் தர்ப்பணம் குமிழ்ப்பு ஆம் 
கள் என்ப களவு கள் ஆம் கனலி தீ இரவி பன்றி 
அள் உரம் செறிவு காதோடு அயிலும் பற்று இரும்பும் ஆகும் 
வெள்ளம் எண் மிகுதி முந்நீர் வேணுவே மூங்கில் வில் வாள் 
** 3, 2, 2, 3, 5, 3, 3 பெயர்கள் 270 
**1004

#271
** வாள் வல்லரி கூளி தோள் சுந்தரி தேள் 
வாள் என்பது ஒளி கட்கப் பேர் வல்லரி தளிர் பைங்காய் ஆம் 
கூளி பேய் தமர் ஏறு ஆசு குறள் படைத்தலைவன் கூட்டம் 
தோள் என்ப புயம் கை ஆகும் சுந்தரி உமையே சுண்டன் 
தேள் என்பது அனுடநாளே விருச்சிகம் தெறுக்காலும் பேர் 
** 2, 2, 7, 2, 2, 3 பெயர்கள்
**1005

#272
** அளி அளவை ஆசாரம் விளரி வளம் 
அளி என்ப நறவும் வண்டும் அன்பொடு கொடையும் நாற்பேர் 
அளவையே எல்லை நாள் ஆம் ஆசாரம் துகில் தூ மாரி 
விளரியே இளமை யாழில் ஓர் நரம்பு யாழ் நீள் வேட்கை 
வளம் என்ப பதவியும் பல்பண்டமும் வனப்பும் ஆகும் 
** 4, 2, 3, 4, 3 பெயர்கள் 272 
**1006

#273
** வள்ளம் வள்ளுரம் அள்ளல் அம்பு வெள்ளில் வேலன் 
வள்ளமே மரக்கால் வட்டில் கடிகை வட்டிற்கும் அப் பேர் 
வள்ளுரம் பசுஇறைச்சி வரைந்த ஊன் பொதுவும் ஆகும் 
அள்ளலே நரகம் சேறு ஆம் அம்பு நீர் புயல் வேய் ஏ ஆம் 
வெள்ளிலே விளா பாடைப் பேர் வேலன் வேள் வெறியாட்டாளன்
** 3, 2, 2, 4, 2, 2 பெயர்கள் 273 
**1007

#274
** காளை கூளியர் கோளகை கேள்வி கிடங்கு 
காளையே எருது பாலைக்கு அதிபன் நல் இளமையோன்பேர் 
கூளியர் நண்பர் பூதகண வீரர் கொலைத்திறத்தோர் 
கோளகை வட்டமோடு மண்டலிப் பாம்பும் கூறும் 
கேள்வியே செவி கல்விப் பேர் கிடங்கு அகழ் வாவி ஆமே 
** 3, 3, 2, 2, 2 பெயர்கள் 274 
**1008

#275
** இளமை அளறு அக்காரம் கிளர் களரி 
இளமையே தண்மை காமம் இளமையின் பருவம் முப்பேர் 
அளறு என்ப நரகம் சேறு ஆம் அக்காரம் புடைவை வெல்லம் 
கிளர் என்ப கிரணத்தோடு கிளர் கோட்டு மலர்ப் பூந்தாது ஆம் 
களரி போர்க்களம் காடு என்ப கருமம் செய் இடமும் ஆமே 
** 2,2,2,2, 3 பெயர்கள் 275
**1009

#276
** றகர எதுகை 
** இறைவை கூர் குறடு கொண்மூ புறவம் புறணி 
இறைவையே புட்டில் ஏணி என்ப கூர் மிகுதி கூர்மை 
குறடு என்ப பலகை திண்ணை கொண்மூ என்பது விண் மேகம் 
புறவம் ஓர் புள்ளும் காடும் முல்லை நல் நிலனும் போற்றும் 
புறணியே குறிஞ்சி முல்லை நிலத்தொடு புறமும் தோலும் 
** 2, 2, 2, 2, 3, 4  பெயர்கள் 276 
**1010

#277
** மறம் குறிஞ்சு பிறங்கல் குறும்பொறை 
மறம் சினம் பிணக்கு கூற்று ஆம் மலைந்த சேவகமும் ஆகும் 
குறிஞ்சி ஓர் இசை ஓர் பண்ணே குறிஞ்சி செம்முள்ளிக்கும் பேர் 
பிறங்கலே மிகுதி வெற்பு நிறைவு ஒலி பெருமை ஐம்பேர் 
குறும்பொறை குன்று காடு குறிஞ்சி நல் நிலத்து ஊர் முப்பேர் 
**  4, 4, 5, 3 பெயர்கள் 277 
**1011

#278
** தாறு சேறு ஊறு ஏறு 
தாறு வில்குதையே எல்லை தாழ் மரக் குலை முள்கோல் ஆம் 
சேறு என்ப கும்பி சாரம் தித்திப்பு விழவு கள்ளே 
ஊறு என்ப தீமை தீண்டல் உயிர்க்கொலை இடையூறு என்ப 
ஏறு இடி முதல்நாள் ஆகும் இடபமோடு எருதும் அப் பேர் 
** 4, 5, 4, 4 பெயர்கள் 278 
**1012

#279
** சிறை கறை முறை பிறழ்தல் 
சிறையே வேறிடம் ஆம் புள்ளின் சிறகொடு காவலும் பேர் 
கறை இறுத்திடல் இரத்தம் கறுப்பு உரல் விடம் பேர் ஐந்தே 
முறை என்ப கோசமே ஊழ் முறைமை இ முப்பேர் என்ப 
பிறழ்தலே நடுக்கம் வேறு பெயர்தலோடு ஒளிவிடல் பேர் 
** 3, 5, 3, 3 பெயர்கள் 279 
**1013

#280
** ஏற்றல் ஆற்றல் தோற்றல் போற்றல் புறம் 
ஏற்றலே கோடல் என்ப எதிர்ந்து போர்செய்தலும் பேர் 
ஆற்றலே பொறை முயற்சி அதிகமே வலியே ஞானம் 
தோற்றலே வலி பிறப்பு தோன்றுதல் புகழே நாற்பேர் 
போற்றலே புகழ்தல் ஓம்பல் புறம் என்ப முதுகு வீரம் 
** 2, 5, 4, 2, 2 பெயர்கள் 280 
**1014

#281
** அற்றம் குற்றல் குரை எற்று கொற்றி 
அற்றமே மறைவும் சோர்வும் அவகாசம்தானும் ஆகும் 
குற்றல் குற்றுதல் பறித்தல் குரை என்பது இடைச்சொல் ஓசை 
எற்று என்பது இரக்கம் ஒத்தல் எறிதல் எத்தன்மைத்து என்றல் 
கொற்றியே துர்க்கை நாமம் கோ இளங்கன்றும் கூறும் 
** 3, 2, 2, 4, 2 பெயர்கள் 281
**1015

#282
** உறழ்வு உறவி உறுகண் உறுவன் உலக்கை 
உறழ்வு என்ப புணர்வு காலம் செறிவு இடையீடு ஒப்பு ஐம்பேர் 
உறவியே எறும்பு நீர்ஊற்று உலைக்களம் உறவு உயிர்ப் பேர் 
உறுகண் என்பதுவே துன்பம் உறு பயம் மிடி நோய் நாற்பேர் 
உறுவனே முனி புத்தன்பேர் உலக்கையே உரோங்கல் ஓணம் 
** 5, 5, 4, 2, 2 பெயர்கள் 282 
**1016

#283
** விறப்பு பொறுத்தல் புந்தி இறுத்தல் கறுப்பு கன்று 
விறப்பு என்ப செறிவு வெற்றி வெருவுதல் பொருதல் நாற்பேர் 
பொறுத்தலே பொறை தாங்கல் பேர் புந்திதான் புதனே புத்தி 
இறுத்தலே ஒடித்தல் தங்கல் இயம்புதல் முப்பேர் என்ப 
கறுப்பு இருள் சினக்குறிப்பு ஆம் கன்று கைவளை கன்று ஆமே 
** 4, 2, 2, 3, 2, 2 பெயர்கள் 283 
**1017

#284
** பொறி வெறி 
பொறி மரக்கலமே செல்வம் பூமகள் எந்திரங்கள் 
அறிவு இலாஞ்சனை எழுத்தோடு ஐம்பொறி வரி ஒன்பான்பேர்
வெறி வெருவுதல் கலக்கம் வெறியாட்டு வட்டம் நாற்றம் 
குறிய பேய் துருவை கள்ளு கூறு நோய் ஒன்பது ஆமே 
** 9, 9 பெயர்கள் 284 
**1018

#285
** உறை அறை 
உறை பொருள் மருந்து வாழ்நாள் உணவு வெண்கலமே காரம் 
எறி படைக்கலத்தின் கூடே எண் குறித்து இறுதி பெய்தல் 
நறிய பால் பிரை இடைச்சொல் நகரம் நீர்த்துளி ஈராறு ஆம் 
அறை முழை மோதல் பாறை திரை சிற்றில் மொழி ஆறு ஆமே 
** 12, 6 பெயர்கள் 285 
**1019

#286
** இறை உறையுள் உறுதி பொறை 
இறை சிவன் கடன் வேந்தன் கையிறை இறுப்பிறை சிறந்தோன் 
சிறுமை புள்ளிறகு தங்கல் சென்னி கூன் இறப்பு ஈராறே 
உறையுள் என்பது நாடு ஊர் ஆம் உறுதியே நன்மை கல்வி 
பொறை மலை துறுகல் பாரம் பொறை சுமை கருப்பம் பூமி 
** 12, 2, 2, 7 பெயர்கள் 286 
**1020

#287
** இறும்பு இறும்பூது கறங்கல் கதிர் பறம்பு பாய்மா 
இறும்பு தாமரையின்பூவே மலை குறுங்காடும் ஏற்கும் 
இறும்பூது தகைமை வெற்போடு அதிசயம் குழை தூறு என்று ஆம் 
கறங்கலே சுழலல் ஓசை கதிர் என்பது இரவி சோதி 
பறம்பு உயர் மலை முலைப் பேர் பாய்மாவே குதிரை வேங்கை 
** 3, 5, 2, 2, 2, 2 பெயர்கள் 287 
**1021

#288
** கூற்று கோமான் நாற்றம் நனவு ஊற்று நோற்றல் நுணங்கு 
கூற்று என்பது இயமன் சொல் ஆம் கோமானே மூத்தோன் பன்றி 
நாற்றம் நாறுதல் தோன்றல் பேர் நனவு என்பது அகலம் தேற்றம் 
ஊற்று என்பது ஊன்றுகோலும் உறவியும் இருபேர் ஓதும் 
நோற்றலே பொறை தவப்பேர் நுணங்கு என்ப நுண்மை தேமல் 
** 2, 2, 2, 2, 2,2 ,2 பெயர்கள் 288 
**1022

#289
** கற்பம் பொற்பு பற்பம் பழங்கண் உற்கை உண்டி 
கற்பமே பிரமன் வாழ்நாள் கற்பக தரு சுவர்க்கம் 
பொற்பு என்பது அழகினோடு பொலிவும் ஒப்பனையும் ஆகும் 
பற்பமே பதுமம் தூள் ஆம் பழங்கணே துன்பம் ஓசை 
உற்கை தாரகை தீக்கொள்ளி உண்டிதான் புசித்தல் சோறே 
** 3, 3, 2, 2, 2, 2 பெயர்கள் 289 
**1023

#290
** முற்றல் நெற்றி கொற்றம் எற்றுதல் 
முற்றல் காழ்கோடல் மூப்பு முடிவுடன் வளைத்தல் நாற்பேர் 
நெற்றியே நுதலின் பேரும் நெடும் படைஉறுப்பும் ஆகும் 
கொற்றமே வன்மை வெற்றி கோ அரசியல் முப்பேரே 
எற்றுதல் புடைத்தலோடே எறிதலும் இருபேர் ஆமே 
** 4, 2, 3, 2 பெயர்கள் 290 
**1024

#291
** அறுகு வறிது மறலி மறவி குறள் 
அறுகு என்ப சிங்கம் ஓர் புல் யாளியும் ஆகும் முப்பேர் 
வறிது என்பது அருகலே சற்று அறியாமை பயன்இல்வார்த்தை 
மறலியே மயக்கம் கூற்று ஆம் மறவி கள் மறதி ஈனம்
குறள் என்ப குறளும் பேயும் குறுமையும் கூறும் முப்பேர் 
** 3, 4, 2, 3, 3பெயர்கள் 291
**1025

#292
** விறல் விழைந்தோன் நொறில் நெறி 
** நிருமித்தல் பறை 
விறல் என்ப வலி வென்றிப் பேர் விழைந்தோனே நண்பன் வேட்டோன் 
நொறில் என்ப விரைவினோடு நுடக்கமும் இருபேர் ஆமே 
நெறி வழி நீதி என்ப நிருமித்தல் படைப்பு ஆராய்தல் 
பறை பறை வசனத்தோடு பறக்கும் புள் இறகு முப்பேர் 
** 2, 2, 2, 2, 2, 3 பெயர்கள் 292 
**1026

#293
** னகர எதுகை 
** மனவு வரை தனி சாந்தம் முனை முளை இனம் எழில் 
மனவு நல் மணி சங்கு அக்கு ஆம் வரை மலை இறை வேய் மட்டு ஆம் 
தனி தமி ஒப்பின்மைப் பேர் சாந்தமே கமையும் சாந்தும் 
முனை பகை நுனி வெறுப்பு ஆம் முளை வேய் அங்குரமே பிள்ளை 
இனம் இரும் கிளை அமைச்சு ஆம் எழில் வண்ணம் இளமைக்கும் பேர் 
** 3, 4, 2, 2, 3, 3, 2, 2 பெயர்கள் 293 
**1027

#294
** ஆனகம் மானம் பானல் பாங்கர் மானல் வருடம் 
ஆனகம் படகத்தின்பேர் ஆகும் துந்துபியும் அப் பேர் 
மானமே அளவு இலச்சை விமானமே பெருமை குற்றம் 
பானலே பழனம் நெய்தல் பாங்கரே இடம் பக்கப்பேர் 
மானலே மயக்கம் ஒப்பு ஆம் வருடமே மழையும் ஆண்டும் 
** 2, 5, 2, 2, 2, 2 பெயர்கள் 294 
**1028

#295
** தானம் பீனம் பேடு நானம் வானம் 
தானமே மதம் நீராட்டு தரு கொடை சுவர்க்கம் நாற்பேர் 
பீனமே பருமை பாசி பேடு என்ப பேடி ஊரே 
நானமே பூசும் பூச்சு நானமும் குளிக்கும் நீரும் 
வானம் ஆகாயம் என்ப மழை உலர்மரமும் ஆமே 
** 4, 2, 2, 3, 3பெயர்கள் 
**1029

#296
** வானி ஆனி ஏனை ஆனியம் அனந்தை 
வானி மேற்கட்டி சேனை வண் துகிற்கொடி முப்பேரே 
ஆனி உத்தராடம் மூலம் சேதம் ஓர் மாதம் என்ப 
ஏனையே ஒழிபு மற்றை எனும் இடைச்சொற்கும் அப் பேர் 
ஆனியம் பொழுது நாள் ஆம் அனந்தை ஓர் சத்தி பூமி 
** 3, 4, 2, 2, 2 பெயர்கள் 296 
**1030

#297
** முன்னல் முன்னம் கன்னல் மன்னன் கின்னரம் கிடக்கை 
முன்னலே நினைவு நெஞ்சு ஆம் முன்னம் சீக்கிரியோடு எண்ணம் 
கன்னல் சர்க்கரை கரும்பு கரகம் நாழிகைவட்டில் பேர் 
மன்னன் உத்தரட்டாதிப் பேர் மன்னவன்தானும் ஆகும் 
கின்னரம் நீர்ப்புள் யாழ் ஆம் கிடக்கை பூதலம் பாயல் பேர் 
** 2, 2, 5, 2, 2, 2 பெயர்கள் 297 
**1031

#298
** பின்னை கொன் பொன் மன் வாழி 
பின்னையே பின்றை தங்கை பெரிய மாற்கு உரிய தேவி 
கொன் பயனிலாமை காலம் கூறிய பெருமை அச்சம் 
பொன் என்ப வனப்பு இரும்பு பூமகள் வியாழன் நாற்பேர் 
மன் நிலை மிகுதி வேந்தே வாழி வாழ்கெனல் இடைச்சொல் 
** 3, 4, 4, 3, 2 பெயர்கள் 298 
**1032

#299
** வன்னி சென்னி சீருள் கன்னி தென் 
வன்னியே பிரமசாரி வளர் கிளி சமி செந்தீ ஆம் 
சென்னி கம் பாணன் சோழன் சீருள் ஈயம் செம்பு ஆகும் 
கன்னி பெண் அழிவிலாமை கட்டிளமைக்கும் பேரே 
தென் இசை வனப்பு தாழை தெற்கொடு கற்பும் ஆமே 
** 4, 3, 2, 3, 5 பெயர்கள் 299 
**1033

#300
** குன்று அன்றில் மன்றம் மன்றல் 
குன்று வேதண்டம் ஆகும் குறைவொடு சதயம் முப்பேர் 
அன்றில் ஓர் புள்ளும் மூலநாள் என ஆம் இரண்டே 
மன்றமே வெளியின்நாமம் வாசம் அம்பலமும் அப் பேர் 
மன்றலே பரிமளப்பேர் மருவு கல்யாணமும் பேர் 
** 3, 2, 3, 2 பெயர்கள் 300 
**1034

#301
** தனம் கனவு கலிங்கம் கனை கவரி பனுவல் படப்பை 
தனம் முலை பொன் ஆன்கன்று சந்தம் முத்தனம் ஐம்பேர் ஆம் 
கனவு நித்திரை மையல் பேர் கலிங்கம் சாதகப்புள் ஆடை 
கனை செறிவு ஒலி ஆம் என்ப கவரியே சவரி மேதி 
பனுவலே கிளவி நூல் ஆம் படப்பை ஊர்ப்புறமே தோட்டம் 
** 5, 2, 2, 2, 2, 2, 2 பெயர்கள் 301 
**1035

#302
** அனந்தன் அனந்தம் அனங்கம் தனஞ்சயன் 
அனந்தனே சிவன் மால் சேடன் அலாயுதன் அருகன் ஐந்தே 
அனந்தமே முடிவிலாமை ஆடகம் விண் முப்பேரே 
அனங்கமே இருவாட்சிப் பேர் ஆகும் மல்லிகைக்கும் அப் பேர் 
தனஞ்சயன் பார்த்தனே செந்தழல் ஒரு காற்றும் ஆமே 
** 5, 3, 2, 3 பெயர்கள் 302 
**1036

#303
** சானகி தனு சானு சோனை கானல் 
சானகி சீதை மூங்கில் தனு என்பது உடல் வில் அற்பம் 
சானுவே மலை முழந்தாள் மலைப்பக்கம்தானும் ஆகும் 
சோனையே ஓணநாளும் விடாமழைசொரிதலும் பேர் 
கானலே மலைச் சார் சோலை கடற்கரைச்சோலை பேய்த்தேர் 
** 2, 3, 3, 2, 3 பெயர்கள் 303 
**1037

#304
** வான் தானை கானம் ஏனல் 
வான் என்ப விசும்பு மேகம் மழையொடு பெருமை நாற்பேர் 
தானையே சேனை ஆடை படைக்கலம்தானும் ஆகும் 
கானம் தேர் இசையே பேதை காடு தற்பாடி ஐம்பேர் 
ஏனலே செந்தினைப் பேர் தினைப்புனம் என்றும் ஆமே 
** 4, 3, 5, 2 பெயர்கள் 304 
**1038

#305
** முனி துனி பனி சினை 
முனி என்பது யானைக்கன்று முனிவன் வில் அகத்தி நாற்பேர் 
துனி என்ப புலவிநீட்டம் துன்பம் நோய் ஆறு கோபம் 
பனி என்ப நடுக்கம் துன்பம் பயம் குளிர் இமம் ஐம்பேரே 
சினை என்ப முட்டை பீள் ஆம் மரக்கொம்பும் செப்பும்  அப் பேர் 
**  4, 5, 5, 3 பெயர்கள் 305 
**1039

#306
** மான் கான் கல்லி ஏனாதி மீன் 
மானே சாரங்கம் மாவின் பொதுவொடு மகரராசி 
கானே நல் மணம் காடு என்ப கல்லி ஊர்க்குருவி ஆமை 
ஏனாதி மஞ்சிகன் மந்திரியும் தந்திரியும் என்ப 
மீனே சித்திரைநாள் வான் மீன் மயிலையும் மேவும் அப் பேர் 
** 3, 2, 2, 3, 3 பெயர்கள் 306 
**1040

#307
** ஞானம் யானம் ஏனம் மேனி 
ஞானமே அறிவு கல்வி நல்ல தத்துவநூல் முப்பேர் 
யானமே மரக்கலத்தோடு எழில் ஊர்தி விகற்பு இரண்டாம் 
ஏனம் ஓலைக்குடைப் பேர் எறுழியும் மறமும் அப் பேர் 
மேனியே வடிவம் என்ப நிறத்தையும் விளம்பல் ஆமே 
** 3, 2, 3, 2  பெயர்கள் 307 
**1041

#308
** அன்னை அன்னம் ஆகாரம் தன்மை பன்னல் 
அன்னையே முன்பிறந்தாள் தோழி தாய் ஆகும் என்ப 
அன்னம் ஓதிமமே சோறு ஆம் ஆகாரம் உடல் நெய் உண்டி 
தன்மை ஏர் இயல்பினோடு தன்மையின் இடமும் சாற்றும் 
பன்னவே நெருக்கம் வார்த்தை பருத்தியின் பேரும் ஆமே 
** 3, 2, 3, 3, 3 பெயர்கள் 308 
**1042

#309
** வனம் மனு மண்ணை புனை மனை வதுவை 
வனமே நீர் மிகுதி காடு வளர் சோலை துளசி ஈமம் 
மனுவே மந்திரம் ஓர் நூல் ஆம் மண்ணை பேய் இளமை மூடன் 
புனை என்பது அழகினோடு பொலிவும் ஒப்பனையும் ஆகும் 
மனை என்ப மனைவி வீடு ஆம் வதுவையே மணம் கல்யாணம் 
** 6, 2, 3, 3, 2, 2 பெயர்கள் 309 
**1043

#310
** அன் கனைத்தல் 
அன் வினையொடு பெயர்க்கும் விகுதி சாரியையும் ஆகும் 
மன்னிடும் கனைத்தல் என்பது இருள் ஒசை இருபேர் வைக்கும் 
இன்னன ஒரு சொல் பல் பேர்க்கு இயற்கவி முந்நூற்றொன்பான் 
சொன்னவன் குணபத்திரன் தாள் சூடும் மண்டலவன்தானே 
** 3 2 பெயர்கள் 310 
** பதினோராவது 
** ஒரு சொற் பல்பொருட் பெயர்த் தொகுதி முற்றிற்று 

@12 பல் பெயர்க் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி
**1044

#1
** காப்பு 
சொல் வகை எழுத்து எண் எல்லாம் தொல்லை நாள் எல்லையாக 
நல் வகை ஆக்கும் பிண்டி நான்முகன் நாளும் தீமை 
வெல் வினை தொடங்கச்செய்து வீடுஅருள்வோன் தாள் போற்றி 
பல்வகைப்பெயர்க்கூட்டத்தின் ஒரு பெயர் பகரலுற்றாம்
**1045

#2
** ஒன்று 
கூறியகூறினாலும் குற்றம் ஒன்றிலை அருத்தம் 
வேறு உளதாயின் என்று விதித்தலின் விரித்து முன்னம் 
ஊறுஇலாச் சிறப்பு வர்க்கம் உரைத்து இவண் பொது வர்க்கத்தில்  ' 
ஏறிய ஊழும் சொல்வாம் ஏகமே வீடுபேறு 
** 1 பெயர் 2 
**1046

#3
** இருமை இருவினை இருவகைத் தோற்றம் இருசுடர் 
இருமையே இம்மையோடு மறுமை நல்வினையினோடு 
மருவு தீவினைகள் என்ப மற்று இரு வினையின்நாமம் 
இருவகைத் தோற்றம் என்றே இடும் சர அசரங்கள் என்ப 
இருசுடர் மதியம் மற்றை இரவி என்று இயம்பலாமே 
** 2, 2, 2, 2 பெயர்கள் 3 
**1047

#4
** இரு மரபு இரு வகைக் கந்தம் இருவகை அறம் 
** இரு வகைப் பொருள் 
இரு மரபு அன்னை தந்தை எய்திய வழி ஆம் கந்தம் 
இருவகை நற்கந்தங்கள் ஏற்ற துர்க்கந்தம் என்ப 
இருவகை அறங்கள் என்ப இல்லறம் துறவறங்கள் 
இருவகைப் பொருள்கள் கல்வி ஏற்ற செல்வங்கள் ஆமே 
** 2, 2, 2, 2 பெயர்கள் 4 
**1048

#5
** இரு வகைக் கூத்து முப் பழங்கள் 
**மூவகைப் பாவ புண்ணிய வழக்கம் 
இருவகைக் கூத்துத்தானே இயன்ற தேகமே மார்க்கம் 
கருது முப்பழங்களின்பேர் கதலி மா பலா என்று ஆமே 
விரைவொடு செய்தலே செய்வித்தலே உடம்பாடு என்ன 
வருமுறை பாவமொடு புண்ணிய வழக்கம் ஆமே 
** 2, 3, 3 பெயர்கள் 5 
**1049

#6
** மும்மை முப்பொறி முக்காலம் முச்செய்கை 
மும்மையே உம்மை இம்மை மொழிந்திடும் மறுமை என்ப 
செம்மையாம் வாக்கு காயம் திகழ் மனம் முப்பொறிப் பேர் 
மும்மை ஆம் காலப் பேரின் மொழி இறப்பு எதிர் நிகழ்ச்சி 
மும்மை ஆம் செய்கை பண்ணல் முறை காத்தல் சிதைத்தல் ஆமே 
** 3, 5, 3, 3 பெயர்கள் 6 
**1050

#7
** மூன்று இடம் முந்நிலங்கள் முக்குற்றம் முச்சுடர் 
மூன்றிடம் என்ப தன்மை முன்னிலை படர்க்கை ஆகும் 
ஆன்ற முந்நிலங்கள் பூமி அந்தரம் சுவர்க்கம் என்ப 
மூன்று குற்றங்கள் காமம் முதிர் சினம் மயக்கம்தானே 
மூன்று செஞ்சுடரே திங்கள் முளைத்து எழு பரிதி அங்கி 
** 3, 3, 3, 3 பெயர்கள் 7 
**1051

#8
** மூவகை மொழி மூவகை வேதத்தீ மூவகை உயிர்த்தீ 
பழித்திடல் புகழ்தல் மெய்ம்மை பயக்கும் மும்மொழிப் பேர் ஆகும் 
கழிப்புஇல் வேதத்தின் முத்தீ காருகபத்தியத்தோடு 
அழிப்புஇலாத் தெற்கில் அங்கி ஆகவநீயம் என்ப 
ஒழிப்புஇலா உயிரில் அங்கி உதரம் விந்து உறு சினத்தீ 
** 3, 3, 3 பெயர்கள் 8 
**1052

#9
** முக்குணம் சாத்துவிகச் செயல் 
ஏற்ற சாத்துவிகத்தோடே இராசதம் தாமதங்கள் 
ஆற்று முக்குணங்கள் ஆகும் அதில் சாத்துவிகமே ஞானம் 
சாற்றிய தவமே மெய்ம்மை சால்பு நல்லருள் உண்டாதல் 
போற்றிய ஆமை போல் ஐம்புலன் அடக்குதலும் ஆமே 
** 3, 6 பெயர்கள் 9 
**1053

#10
** இராசதச் செயல் 
தானமே தவமே மெய்ம்மை தருமம் பேணுதலினோடு 
ஞானமே கல்வி கேள்வி நலன் இவை தெரிதல்தாமே 
ஈனம்ஒன்றில்லார் வைத்த இராசதகுணங்கள் என்ப 
ஊனம்இல் உறுவன் முன்னாள் உரைத்திடும் முறைமைதானே 
** 7 பெயர்கள் 10 
**1054

#11
** தாமதச் செயல் 
தாமதம் நிறை பேருண்டி சாம்புதல் சோம்பு மூரி 
காமமே நீதிகேடு கண்ணுறக்கம் பொச்சாப்பு 
நாமம் ஆம் சலமே வஞ்சம் நாட்டிய  முப்பாலும் 
மா மலிவுடனே மற்றை மெலிவொடு சமனும் ஆமே 
** 10, 3 பெயர்கள் 11
**1055

#12
** மூவகைத் தானம் உத்தம தானத்தின் இயல்பு 
மறுவறு தானம் மூன்று வகைதமில் உத்தமம்தான் 
பெறு முறை ஓம்பி வைத்துப் பேணிய பொருளைத்தானே 
குறுகியே பெறுக என்று குறை இரந்து அடங்கி நோற்கும் 
உறு தவர்க்கு உவந்து தாழ்ந்தே உபகாரம் செய்தல் ஆமே 
** 3 பெயர்கள் 12 
**1056

#13
** மத்திமதானம் அதமதானம் 
சீர் உறுப்பில்லார் மாதர் சிதடர் ஆதுலர்க்கு நல்கல் 
வாருறு கொங்கைநல்லாய் மத்திமதானம் என்ப 
ஆர்வமே புகழ் கண்ணோட்டம் அச்சம் கைம்மாறு மற்றைக் 
காரணம் இன்ன எல்லாம் கடைப்படுதானம் ஆமே
**1057

#14
** திரிகடுகம் திரிபலை திரிபுரம் அருக்கன் சூரியன் வீதி 
திரிகடுகம் சுக்கோடு திப்பலி மிளகு செப்பும் 
திரிபலை என்பதானே திகழ் கடு நெல்லி தான்றி 
புரம் மூன்று செம்பொன் வெண்பொன் போற்றிய கரும்பொன் என்ப
விரவிய மேடம் ஏறு மிதுனமே அருக்கன்வீதி 
** 3, 3, 3, 3 பெயர்கள் 14 
**1058

#15
** நால்வகை நிலம் நாற்கதி நால்வகை அங்கம் 
முல்லையே குறிஞ்சி நெய்தல் மொழிந்திடும் மருதம் என்ப 
நல்ல நானிலம் என்று ஓதும் நாற்கதி உம்பர் மக்கள் 
சொல்லிய விலங்கினோடு நரகர் சாதுரங்கம் என்ப 
வெல்லும் மால் யானை தேரே வெம் பரி காலாள் ஆமே 
** 4, 4, 4 பெயர்கள் 15 
**1059

#16
** நால்வகை இழிசொல் நால்வகை வேதம் 
குறளை பொய் கடுஞ்சொல்லோடு கூறிய பயன்இல் வார்த்தை 
நறுநுதல் கேட்டி மற்றை நால்வகை இழிசொல் ஆகும் 
மறுஇலா இருக்கினோடு வளம் மிகும் யசுவே சாமம் 
அறைதரும் அதர்வம் என்பவாம் இவை வேதம் நான்கே 
** 4, 4 பெயர்கள் 16 
**1060

#17
** நாற்பொருள் நால்வகைக் கேள்வி நால்வகை அரண்
** ஆடவர்க்குரிய நால்வகைக் குணம் 
அறமொடு பொருள் இன்பம் வீடு ஆன நாற்பொருள்கள் ஆகும் 
உறும் இவைதம்மைக் கேட்டல் ஒத்த நால்வகைக் கேள்விப் பேர் 
செறி கடம் வெற்பு நீரே திணி மதில் அரணம் நான்கு ஆம் 
அறிவொடு நிறையே ஓர்ப்பு கடைப்பிடி குணம் நான்கு ஆமே 
** 4, 4, 4 பெயர்கள் 17 
**1061

#18
** மகளிர் நாற்குணம் நால்வகைப் புண்ணியத் தோற்றம் 
நாணமே மடமே அச்சம் நாட்டிய பயிர்ப்பு நான்கும் 
மாணிழை மடநல்லார்க்கு வைத்த நாற்குணங்கள் ஆகும் 
பேணிய தவம் ஒழுக்கம் பெருங் கொடை கல்வி நான்கின் 
பூணு நற்பொருள்கள் நான்கும் புண்ணியத் தோற்றம் ஆமே 
** 4, 4 பெயர்கள் 18 
**1062

#19
** நால்வகைப் பொன் நால்வகைப் பூ 
சொல்லிய சாதரூபம் கிளிச்சிறை துலங்குகின்ற 
நல்ல ஆடகமே சாம்பூநதம் இவை நால்வகைப் பொன் 
மெல்லிய கொடிப்பூ கோட்டில் விளங்கும் பூ நீர்ப்பூ வேறு 
புல்லிய புதல்பூ என்னப் பொருந்து நால்வகையின் பூ ஆம் 
** 4, 4 பெயர்கள் 19 
**1063

#20
** நால்வகை உண்டி நான்கு ஊறுபாடு உபாயம் நான்கு 
நடைபட உண்ப தின்ப நக்குப பருகல் நான்காம் 
எறிதலே குத்தல் வெட்டல் எய்தல் நான்கு ஊறுபாடு ஆம் 
முறைபடு சாமம் பேதம் முந்திய தானம் தண்டம் 
நெறிபடும் உபாயம் நான்கும் நிருபர்தம் முறைமை ஆமே 
** 4, 4, 4 பெயர்கள் 20 
**1064

#21
** நால்வகை உயிர்த் தோற்றம் நால்வகைப் புலவர் 
துவமதாம் குடல் போர்வைக்குள் தொடர்புறு முட்டைதன்னில் 
நவையறு நிலத்தில் வேர்வில் நல் உயிர்த்தோற்றம் நான்காம் 
கவியொடு கமகன் வாதி காசுஇலா வாக்கி என்ப 
புவியின் மேல் நால்வகைத்தாம் புலமையர் இயல்புதானே 
** 4, 4 பெயர்கள் 21 
**1065

#22
** கவி கமகன் 
தீட்டிய ஆசினோடு மதுரம் சித்திரம் வித்தாரப்
பாட்டு இவை யாரும் மெச்சப் பாடுவோன் கவி என்றாகும் 
நாட்டிய அரும்பொருட்கள் செம்பொருள் நடையவாகக் 
காட்டியே விவகரிப்போன் கமகன் என்று அறையலாமே
**1066

#23
** வாதி வாக்கி 
ஏதுவும் மேற்கோளும்தான் எடுத்து உடன் காட்டி ஆங்கே 
வாதினில் பிறன்கோள் எல்லாம் மறுப்பவன் வாதி என்ப 
ஓதிய அறம் பொருட்கள் உற்றிடும் இன்பம் வீடு 
கோதுஇன்றிக் கேட்க வேட்கக் கூறுவோன் வாக்கி ஆமே
**1067

#24
** ஆசுகவி 
கொடுத்திடும் பொருளின் மற்றுக் கூறிய இனத்திற்கு ஓட்டி 
அடுத்திடும் எப்போது அப்போது அசைவின்றி யாரும் மெச்ச 
எடுத்து இயல்பாகப் பாடும் எவன் அவன் ஆசு சொல்வான் 
வடுப் பிளவு அனைய ஒண் கண் மடமொழி வல்லி நல்லாய் 
**1068

#25
** மதுர கவி 
பொருளினில் பொலிவும் சொல்லில் பொருந்திய பொலிவும் மற்றைத்
தரு தொடை தொடை விகற்பம் தாம் துதைந்து அமிர்தம் ஊற 
உருவகம் முதலா வைத்தே ஓதிய அலங்காரத்தோடு 
இருள்அற ஓசை தோன்றி  இருந்தது மதுரம் ஆமே 
**1069

#26
** சித்திர கவி 
சொற்றிடும் மாலைமாற்றே சுழிகுளம் ஏகபாதம் 
குற்றம்இல் சக்கரத்தின் கூறு எழு கூற்றிருக்கை 
கற்றிடும் அடி மயக்கு காட்டும் பாவின் புணர்ப்போடு 
ஒற்றெழுத்து யாவும் தீர்ந்த ஒருபொருள் பாட்டினோடும் 
**1070

#27
** சித்திர கவி (தொடர்ச்சி)
சித்திரப்பாவே மற்ற விசித்திரப்பா வினாவோடு 
உத்தரம் குற்றம்இல்லா ஓரெழுத்தினத்தில் பாட்டே 
வைத்திடும் காதைதன்னை மறைப்பது கரந்துறைப்பா 
தைத்த கோமூத்திரி கூட சதுர்த்தம் என்று இசைத்த பாட்டு 
**1071

#28
சருப்பதோபத்திரங்கள் சார்ந்திடும் எழுத்தினோடு 
வருக்கமும் வடநூல் வைத்து வரும் உதாரணமும் நோக்கி 
விரித்திட இசைத்து வைத்த மிறைக்கவிப் பாட்டு மற்றும் 
தெரித்தது பாடவல்லோன் சித்திரகவி என்று ஆமே 
** 19 பெயர்கள் 
**1072

#29
** வித்தார கவி 
தெரித்த மும்மணியின் கோவை செப்பு பன்மணியின் மாலை 
வருத்தம் தீர் மடலையூர்தல் மறத்தொடு கலிவெண்பாவே 
உருத்த பாசண்டம் மற்றும் உறும் இயல் இசையே கூத்து 
விரித்துறப் பாடவல்லோன் வித்தாரகவி என்று ஆமே 
** 9 பெயர்கள் 29 
**1073

#30
** வில்வீரர் நிற்கும் நால்வகை நிலை பைசாசம் 
வரி சிலை இயற்றுவோர்க்கு வகுத்த நால்வகையே நிற்றல் 
பரவு பைசாசம் மற்றும் பகர்ந்த ஆலீடத்தோடு 
பெருகிய மண்டலம்தான் பிரத்தியாலீடம் ஆகும் 
ஒருகால் நின்று ஒருகால்தன்னை முடக்கல் பைசாசம் என்ப 
** 4 பெயர்கள் 30 
**1074

#31
** ஆலிடம் மண்டலித்தல் பிரத்தியாலீடம் 
வலப்பதம் மண்டலித்து வாமபாதம்தான் முந்து 
நிலைப்பெயரே ஆலீடம் நின்ற மண்டலத்தின்நாமம் 
இலக்கணத்தோடே கூட இருகாலும் மண்டலித்தல் 
வலப்பதம் முந்திப் பிற்கால் மண்டலம் பிரத்தியாலீடம்
**1075

#32
** ஐவகைத் தானப் பொருத்தம் 
பாலனே குமரன் மன்னன் படு முதிர் கிழவன் சாவு 
கோலும் தன்பேர் எழுத்துக் குறித்து அது முதலாக் கொள்க 
ஏலும் முன் எழுத்து மூன்றும் இன்பம் பின் இரண்டும் தீது ஆம் 
சாலும் மூவகைச் சீர்தானே சாற்றிய கவிதைக்கு இன்பம்
**1076

#33
** பஞ்சபட்சி அவற்றுக்குரிய எழுத்து தொழில் 
அகரமே ஆதியாக ஐந்து குற்றெழுத்தும்தானே 
புகல் வல்லூறு ஆந்தை காக்கை போர்க் கோழியொடு கலாபி 
தொகும் உண்டி போக்கு வேந்து துயில் சாவு தொழில்கள் ஆகும் 
பகரும் ஐந்தெழுத்துள் யாது பற்றினும் அதுவே முன் ஆம் 
** 5, 5, 5 பெயர்கள் 33 
**1077

#34
** பஞ்சபட்சிகளும் தொழில்களும் இருபக்கத்திலும் 
** அமையும் முறை 
பிற்பக்கம் ஆகில் வேறு பேதிக்கும் யாதோ என்னில் 
அற்புத உண்டி சாவே அறி துயில் அரசு போக்கு 
பொற்புஅறு மரணம் தூக்கம் இல்லாத பொழுதை ஓர்ந்து 
பற்பல செய்யுள்தானே பகர்ந்திடின் மிகுந்த நன்மை
**1078

#35
** ஐம்புலன்களால் உயிர் இழப்பன 
சுவையின் மீன் அளி நாற்றத்தின் தும்பியே பரிசம்தன்னில் 
நவைஇலா அசுணம்தானே நல் இசைதனில் பதங்கம் 
உவகையாம் ஒளியை வேட்டே உயிரினை இழக்கும் ஐந்தாம் 
இவை எலாம் உடையோர்தம்பால் ஆர் உயிர் இழந்திடாதார் 
** 5 பெயர்கள் 35 
**1079

#36
** ஐந்திணை பஞ்சவாசம் 
கோலிய ஐந்திணைப் பேர் குறிஞ்சியே செறிந்த முல்லை 
பாலையே நெய்தலோடு பரவிய மருதம் ஆமே 
ஏலம் தக்கோலம் மற்றை இலவங்கத்தொடு சாதிக்காய் 
சாலும் கர்ப்பூரம் ஐந்தும் சாற்றிய பஞ்சவாசம் 
** 5, 5 பெயர்கள் 36 
**1080

#37
** ஐவகை விரை ஐவகை அகிற்கூட்டு 
சந்தனம் அகிலினோடு தகரம் குங்குமமே கோட்டம் 
இந்த ஐந்து என்று சொல்லும் எய்திய விரைகளின்பேர் 
உந்து சந்தனம் கர்ப்பூரம் உடன் எரிகாசு செந்தேன் 
அந்த ஏலங்கள் என்ப அகில் கூட்டு ஓர் ஐந்தும்தாமே 
** 5, 5 பெயர்கள் 37 
**1081

#38
** அரசன் ஐம்பெருங்குழு ஐம்பெருஞ்சுற்றம் 
தடுக்கும் மந்திரி புரோகிதன் தொழில் தூதன் ஒற்றன் 
எடுத்து வந்து இருந்த சேனைக்கு இறைவன் ஐங்குழு என்று ஆகும்
படைத்தொழிலோர் நிமித்தம்பார்ப்பவர் ஆயுள்வேதர் 
அடுத்த நட்பாளர் பார்ப்பார் ஐவகை உறுதிச் சுற்றம் 
** 5, 5 பெயர்கள் 38 
**1082

#39
** ஐவகைக் குரவர் ஐம்பால் 
அரசனே உபாத்தியாயன் அன்னையே ஐயன் மூத்தோன் 
குரவர் ஓர் ஐவர் என்றே கூறினர் வேறு நூலோர் 
ஒருவனே ஒருத்தி மற்றும் உரைத்திடும் பலரே ஒன்று 
விரவிய பல என்று ஐந்தும் மேவிய ஐம்பால் ஆமே 
** 5, 5 பெயர்கள் 39 
**1083

#40
** பஞ்சாங்கம் பஞ்சபாதகம் 
பஞ்சாங்கம் திதியே வாரம் பகர்ந்த நாள் யோகத்தோடு 
துஞ்சாத கரணம் என்ப சூழ் கொலை களவு பொய்யே 
அஞ்சாத கள்அருந்தல் ஆர் குருநிந்தை என்ப 
பஞ்சார் மெல்லடி நல்லாய் கேள் பஞ்சபாதகத்தின்பேரே 
** 5, 5 பெயர்கள் 40 
**1084

#41
** பஞ்சசயனம் கூந்தலின் ஐவகைப் பகுதி 
மயில்தூவி இலவின்பஞ்சு மற்றைச் செம்பஞ்சு வெண்பஞ்சு 
அயிர்ப்புஇலா அன்னத்தூவி ஆம் பஞ்சசயனத்தின்பேர் 
வியக்கும் ஐம்பால் வகைப் பேர் மேவிய முடியே கொண்டை 
குயிற்றிய குழல் பனிச்சை கோல வார் சுருளும் கூறும் 
** 5, 5 பெயர்கள் 41
**1085

#42
** ஐவகைத் துரக (குதிரை) ஐவகை உணவு 
மல்லமே மயூரம் மற்றை வானரம் வல்லியம்மே 
சொல்லிய சரமே என்ப துரகத கதிகள் ஐந்து ஆம் 
பல்லினால் கடித்தல் நக்கல் பருகலே விழுங்கல் மற்றும் 
மெல்லவே சுவைத்தல் ஆகும் வினவில் ஐந்து உணவுதானே 
** 5, 5 பெயர்கள் 42 
**1086

#43
** ஐவகை வினா ஐம்பூதம் 
அறியாதான் வினாவல் பின்னை அறிவு ஒப்புக் காண்டலோடு 
குறியுடன் ஐயம்தீர்தல் குறித்து அவன் அறிவுகோடல் 
கறை அற மெய் அவர்க்குக் காட்டல் ஐவகைவினா ஆம் 
பெறு நிலம் நீர் தீ காற்றே பெரு விசும்பு ஐந்துபூதம் 
** 5, 5 பெயர்கள் 43
**1087

#44
** ஈசுரன் ஐம்முகம் ஐவகை இசைக்கருவி 
தலைவன் ஐம்முகங்கள் ஆவ சத்தியோசாதம் வாமம் 
புலன் உறும் அகோரமே தற்புருடம் ஈசானம் என்ப 
குலவு தோல் துளை நரம்பு கூறிடும் கஞ்சம் கண்டம் 
இலகும் இவ் ஐந்தால் ஆகும் இசைக்கருவிகள் ஐந்து ஆமே 
** 5, 5 பெயர்கள் 44 
**1088

#45
** ஐவகை வேள்வி ஐவகைத் தாயர் 
தெய்வமே பிரமம் பூதம் தென்புலத்தோர் மனித்தர் 
ஐவகையோரை ஓம்பல் ஐவகைவேள்வி ஆமே 
உய்வகை பாராட்டும்தாய் ஊட்டும்தாய் முலைத்தாய் கைத்தாய் 
செய்வகை அறிந்து போற்றும் செவிலித்தாய் ஐவர் தாயர் 
** 5, 5 பெயர்கள் 45 
**1089

#46
** ஐவகைத் தொழில் உடம்பின் ஐவகை அவத்தை 
இலகிய எண்ணல் ஊசி எழுதலே இலையைக் கிள்ளல் 
மலர் தொடுத்திடுதலே யாழ் வாசித்தல் தொழில் ஐந்தாகும் 
குலவு கொட்டாவி நெட்டை குறுகுறுப்பே மூச்சீடே 
அலமர ஒடுங்கி நட்டு விழுதல் மெய் அவத்தை ஐந்தே 
** 5,5 பெயர்கள் 46 
**1090

#47
** காடுபடு திரவியம் ஐந்து கடல் படு திரவியம் ஐந்து 
அரக்கு இறால் இனிய தேனே ஆய் மயிற்பீலி நாவி 
நெருக்கிய காட்டில் உற்ற  நெடுந் திரவியங்கள் ஐந்தாம் 
திரைக் கடல் படுவ உப்பு செய்ய ஒண் பவளம் வெண் முத்து 
இரைத்து எழு சங்கு ஓர்க்கோலை இவ் ஐந்தும் என்னலாமே 
** 5, 5 பெயர்கள் 47
**1091

#48
** நாடு படு திரவியம் ஐந்து நகர் படு திரவியம் ஐந்து 
செந்நெல் செவ்விளநீர் மற்றைச் சிறுபயறுடனே வாழை 
கன்னல் இவ் ஐந்தும் நாட்டில் கருதிய திரவியப்பேர் 
மின்னு கண்ணாடி பித்தன் வெம் திறல் மந்தி யானை 
மன்னவன் நகர் இயைந்து வரும் திரவியங்கள் என்ப 
** 5, 5 பெயர்கள் 48 
**1092

#49
** மலைபடு திரவியம் ஐந்து ஐம்புலன் 
கறியொடு கோட்டம் மிக்க கார் அகிலொடு தக்கோலம் 
நறிய குங்குமம் ஐந்து என்ப நல் மலைத்திரவியப்பேர் 
துறையில் ஐம்பொறி நுகர்ச்சி சுவை ஒளி ஊறே ஓசை 
அறையும் நாற்றங்கள் என்னும் அடைவு இவையாகும் அன்றே 
** 5, 5 பெயர்கள் 49 
**1093

#50
** மன்மதபாணம் ஐந்து அவற்றின் பெயர் ஐந்து 
அசைவிலா வனசம் சூதம் அசோகமே முல்லை நீலம் 
ஒசியும் வேள் கணைகள் ஆகும் உன்மத்தம் மதனம் மோகம் 
வசைஇல் சந்தாபத்தோடு வசீகரணம் கணைப் பேர் 
இசையும் மற்று இவைகள் செய்தே இடும் அவத்தையும் மேற்சொல்வாம் 
** 5, 5 பெயர்கள் 50 
**1094

#51
** ஐங்கணை அவத்தை சுப்பிரயோகத்தின் 
** தன்மை விப்பிரயோகத்தின் தன்மை 
பெருகு சுப்பிரயோகம் பின் பிறந்த விப்பிரயோகம் மேல் 
மருவிய சோகம் மோகம் மரணமும் முறையே செய்யும் 
பெருகு சுப்பிரயோகம்தான் பேச்சொடு நினைவும் ஆகும் 
விரவு விப்பிரயோகம்தான் வெய்துயிர்த்து இரங்கல் ஆமே 
** 5, 2, 2 பெயர்கள் 51 
**1095

#52
** சோகத்தின் தன்மை மோகத்தின் தன்மை 
** மரணத்தின் தன்மை 
சோகமே வெதுப்பினோடு துய்ப்பவை தெவிட்டல் செய்யும் 
மோகமே அழுதலோடு மொழி பல பிதற்றல் என்ப 
வேகமாம் மரணம்தானே மிகு மயக்கோடு அயர்ப்பு ஆம் 
பாகு அடர் சொல்லின் நல்லாய் பகரும் நூல் இயல்பு இதாமே 
** 2, 2, 2 பெயர்கள் 52 
**1096

#53
** அந்தணர்க்குரிய ஆறு தொழில் அரசர்க்குரிய ஆறு தொழில் 
ஓதலே ஓதுவித்தலுடன் வேட்டல் வேட்பித்திட்டல் 
ஈதலே ஏற்றல் ஆறும் ஏற்கும் அந்தணர்தொழில் பேர் 
ஓதலே வேட்டல் ஈதல் உலகுஓம்பல் படைபயிற்றல் 
மேதகு போர்செய்து ஈட்டல் வேந்தர் செய் தொழில்கள் ஆறே 
** 6, 6 பெயர்கள் 53 
**1097

#54
** அரசர்க்குரிய ஆறு அங்கம் வைசியர்க்குரிய ஆறு தொழில் 
படை குடி கூழ் அமைச்சு பற்றிய நட்பினோடு 
நெடு மதில் அரசியற்கு நிகழ்த்திய ஆறு பேதம் 
மிடைஅற ஓதல் வேட்டல் வேளாண்மை வாணிகத்தின் 
உடன் நிரைகாத்தல் ஏரை உழல் ஆறும் வசியர்க்கு ஆமே 
** 6, 6 பெயர்கள் 54
**1098

#55
** சூத்திரர்க்குரிய ஆறு தொழில் 
வசியர்தம் தொழில்கள் ஆறுள் வகுத்த முத்தொழில்களான 
பசுஓம்பல் பொருளைஈட்டல் பயிரிடல் புராணம் ஆதி 
நசையுற ஓதல் ஈதல் நண்ணும் அந்தணர் முன்னோர்க்கு 
வசை தவிர் அநுகூலம் ஆம் வகைத் தொழில் சூத்திரர்க்கு ஆம்
**1099

#56
** மன்னவர்கள் ஆறு 
அரிச்சந்திரன் நளனே வெற்றி ஆம் முசுகுந்தனோடு 
பொருப்புறப் புகழை வைத்த புருகுச்சன் புரூரவாவே 
விரித்த பூந் தாமக் கார்த்தவீரியன் என்று இன்னோரே 
தெரித்து முன் எடுத்து வைத்த திகிரி மன்னவர்கள் ஆறே 
** 6 பெயர்கள் 56 
**1100

#57
** வேதாங்கம் ஆறு உட்பகை ஆறு 
ஆறு அங்கம் சிக்ஷை கற்பம் ஆம் வியாகரணம் மற்றும் 
வீறிய நிருத்தம் சந்தோவிசிதம் சோதிடம் என்று ஆகும் 
கூறிடும் கொடிய காமம் குரோதமே உலோபம் மோகம் 
பாறிய மதங்களே மாற்சரியம் உட்பகை ஆறு என்ப 
** 6, 6 பெயர்கள் 57 
**1101

#58
** ஆறு வகைத் தானை 
** ஆறு வகைப் படை ஆறு சுவை 
ஒத்த வில் வேல் வாள் யானை உயர் பரி தேரோடு ஆறே 
சுத்த மூலம் கான் கூலி துணை பகை நாடு என்று ஆறே 
தித்தித்தல் புளித்தல் கூர்த்தல் சேரவே துவர்த்தல் காழ்த்தல் 
கைத்தலே அறுசுவைக்குக்  காட்டிய அபிதானங்கள் 
** 6, 6, 6 பெயர்கள் 58 
**1102

#59
** ஆறு வகை அகச் சமயம் 
அரிய உட்சமயம் ஆறே ஆவன சைவம் தூய்மை 
பெருகு பாசுபதத்தோடு பிறங்கு மாவிரதம் மற்றும் 
கருதிய வீடுபேறு காட்டு காளாமுகம்தான் 
மருவிய வாமம் மிக்க வைரவம் என்னலாமே 
** 6 பெயர்கள் 59 
**1103

#60
** ஆறு வகைப் புறச் சமயம் 
அறு புறச் சமயம்தானே அறை உலோகாயதம் பின் 
உறைதரு பெளத்தமே ஆருகதம் மீமாஞ்சமோடு 
குறி பெறு மாயாவாதம் கூறிய பாஞ்சராத்ரம் 
நெறி பெறும் இவையே என்ன நிகழ்த்துவர் நூல்வல்லோரே 
** 6 பெயர்கள் 60 
**1104

#61
** நாட்டின் ஆறு வகைச் சிறப்பு அறுவகை அரசியல் 
செல்வமே விளைவு மிக்க செழு வளம் செங்கோல் உண்மை 
ஒல்கு நோய் குறும்புஇலாமை உற்ற நாட்டு அமைதி ஆறு ஆம் 
நல் அறம் மறம்தான் மேலே நாட்டிய அறம் பொருட்கள் 
ஒல்லும் இன்பங்கள் ஆறும் ஓங்கு அரசியலின் பேதம் 
** 6, 6 பெயர்கள் 61
**1105

#62
** அறநிலை அறம் மறநிலை அறம் 
தந்தமின் வருணக்காப்பின் தரும் பொருளாலே பேணல் 
அந்த ஆறு இயற்கைதம்முள் அறநிலை அறம் என்று ஆகும் 
முந்து இகல் அறுத்தல் செஞ்சோற்று உதவி இல்லோர்ச் செகுத்தல் 
வந்த ஆனிரையை மீட்டல் மறநிலை அறம் என்று ஆமே 
** 1, 3 பெயர்கள் 62
**1106

#63
** அறநிலைப் பொருள் மறநிலைப் பொருள் 
நெறி வழி நின்று தத்தம் நிலையினால் உழந்து உழந்து 
பெறு பொருள் அறநிலைக்குப் பேசிய முறைமை ஆகும் 
செறுநர்தம் பொருளும் மற்றத் தெண்டத்தின் பொருளும் சூதின் 
மறுகிய பொருளும் அம்ம மறநிலைப் பொருளின்பேரே 
** 1, 3 பெயர்கள் 63
**1107

#64
** அறநிலை இன்பம் மறநிலை இன்பம் 
கூறும் ஓர் பருவம் நல்ல குலம் ஒத்ததாகத் தீ வேட்டு 
ஆறிய இல்லிருத்தல் அறநிலை இன்பம் ஆகும் 
ஏறுதான் தழுவல் வில்லால் இலக்கம் எய்திடுதல் எல்லாம் 
மாறுடை நெறியில் கூட்டம் மறநிலை இன்பம் ஆமே 
** 1, 3 பெயர்கள் 64 
**1108

#65
** கரும பூமிக்குரிய ஆறு தொழில் 
வரைவொடு தொழிலே வித்தை வாணிகம் உழவே சிற்பம் 
உரைசெயும் போக பூமி ஒழிவினில் ஆதிகாலம் 
விரை செறி பிண்டி வேந்தன் விதித்தலின் அஃதே அம்ம 
கருமபூமி என்னும் பேர் கண்டது ஒன்று உண்டு நூலின் 
** 6 பெயர்கள் 65 
**1109

#66
** போக பூமி 
விதியுளி பதினாறாண்டு மேவிய பன்னீராண்டு 
பதியொடு மனைவி தெய்வப் பத்துப் பூந்தருவும் வேண்டும் 
புதிய போகம் கொடுப்பப் புணர்ந்து தாம் பிரியார் ஆகி 
மதியொடு மறுவும் என்ன வாழ்வது போகபூமி
**1110

#67
** அறுவகைப் போக பூமி 
வரும் ஆதியரிவஞ்சம் பார் மதித்த நல்லரிவஞ்சம் பைம் 
பொருள் ஆர் ஏமதவஞ்சம் மேல் புகழ் பெறும் ஏமவஞ்சம் 
ஒரு தேவ குருவத்தோடே உத்தர குருவம் என்ன 
வரு போகபூமி ஆறு வகைப்படும் இயல்பதாமே 
** 6 பெயர்கள் 67 
**1111

#68
** ஏழுவகை மாதர்கள் ஏழு வகைத் தாது 
வரு நல் அபிராமி மற்றை மகேச்சுவரியொடு கெளமாரி 
மருள் தீர் வைணவி வராகி மகேந்திரியொடு சாமுண்டி 
இருமை ஏழ் திருக்கள் பேர் ஆம் இரதமே உதிரம் என்பு 
பரவு தோல் இறைச்சி மூளை பற்று சுக்கிலம் தாது ஏழே 
** 7, 7 பெயர்கள் 68 
**1112

#69
** மன்னர்க்குரிய ஏழுவகைப் பேறு எழு வகைப் பிறப்பு 
அறமொடு பொருளே இன்பம் அன்பொடு புகழ் மதிப்பு 
மறுமை என்று ஏழும் செங்கோல் மன்னவர் பேறே ஆகும் 
அறிவுள தேவர் மக்கள் அறிவுஇல் மீன் விலங்கு செந்து 
பறவை தாவரங்கள் என்ப பகரும் ஏழ்பிறப்பின்பேரே 
** 7,7 பெயர்கள் 69 
**1113

#70
** எழுவகைப் பிறப்பில் எண்பத்து நான்கு 
** நூறாயிர யோனிபேதம் 
ஊர்வன பதினொன்றாகும் ஒன்பான் மாநுடர்தம் பேதம் 
நீரினில் விலங்கு புள்ளு பப்பத்தாம் நெடிய தேவர் 
சாரும் ஈரேழ் நாலைந்தே தாவர யோனி பேதம் 
ஆரும் எண்பானான் கோடே அமைத்த நூறாயிரங்கள்
**1114

#71
** ஏழு தீவு ஏழு கடல் 
இவர்தரு நாவலோடே இறலியே குசை கிரவுஞ்சம் 
புவி புகழ் இலவு தெங்கு புட்கரம் தீவு ஏழின்பேர் 
உவர் கரும்பின் சாறோடே ஒண் மது நெய் சிறந்த 
நவமதாம் தயிர் பால் அப்பு நாட்டிய கடல் ஏழின்பேர் 
** 7, 7 பெயர்கள் 71 
**1115

#72
** ஏழு மேல் உலகம் 
நவம் ஆம் பூலோகம் மற்றும் நாட்டிய புவலோகம்தான் 
சுவலோகம் மகலோகம்மே சொற்றிடும் சனலோகம்மே 
தவலோகம் அதனினோடு சத்தியலோகம் இன்ன 
உவமானம் இல்லா மேல் ஏழ்உலகு எனும் அறிவன் நூலே 
** 7 பெயர்கள் 72 
**1116

#73
** ஏழு கீழ் உலகம் 
** கீழ் மேல் பதினான்கு உலகங்கள் 
அதலமே விதலம் மற்றும் அடைவான சுதலத்தோடும் 
இதமுறு தராதலம்மே ரசாதலம் மகாதலம்தான் 
புதிய பாதலத்தினோடு போற்றும் கீழ் ஏழுலோகம் 
உதவிய உலக நூல் ஈரேழு எனும் உலகுதாமே 
** 7 பெயர்கள் 73 
**1117

#74
** எழு வகை நிரய வட்டம் 
பெருகிய களிற்றின் வட்டம் பெரு மணல் வட்டம் பொங்கும் 
எரி பரல் வட்டம் மற்றும் எறி அரிபடையின் வட்டம் 
பொருஅற இரண்டும் மாழ்கப் போர்த்திடும் புகையின் வட்டம் 
இருள் வட்டம் பெருங் கீழ் வட்டம் என்ப ஏழ் நிரயவட்டம் 
** 7 பெயர்கள் 74 
**1118

#75
** ஏழு நரகம் ஏழு நதி 
குழைவுறு கூடசாலம் இரெளரவம் கும்பி பாகம் 
விழு பூதி அள்ளல் செந்து விதித்த மாபூதி ஆமே 
வழி கங்கை யமுனையே நன்மதை சரஸ்வதி காவேரி 
விழுமிய குமரி கோதாவரி எழுநதியின்பேரே 
** 7, 7 பெயர்கள் 75 
**1119

#76
** ஏழு முனிவர் நாட்டில் வரும் ஏழு குற்றம் 
புவி புகழ் கும்ப யோனி புலத்தியன் அங்கிராவே 
கவுதமன் வசிட்டன் மற்றைக் காசிபனொடு மார்க்கண்டன் 
இவர் எழுமுனிவர் விட்டில் தொட்டியர் ஏனம் கள்வர் 
அவமழை நால்வாய் கிள்ளை ஆம் இவை நாட்டு ஏழ்குற்றம் 
** 7, 7 பெயர்கள் 76 
**1120

#77
** ஏழு முகில் 
பொழியும் ஆவர்த்தம் எங்கும் போர்த்த புட்கலம் சங்காரம் 
கழியும் ஆசவனமே நீர்க்காரி ஏர் உதி சொற்காரி 
மொழி சிலாவருடம் என்ப முகில்கள் ஓர் ஏழின்நாமம் 
அழிவு காலத்தில் தோன்றி அடாவன படர்வ வானே 
** 7 பெயர்கள் 77 
**1121

#78
** எட்டுத் திசை யானை 
களிற்று அயிராவதம் சீர் காட்டு புண்டரீகம் தானம் 
குளித்த வாமனம் பொன்னோடைக் குமுதம் அஞ்சனம் வெம்போரை 
விளைத்திடும் புட்பதந்தம் மேவிய சார்வபெளமம் 
பிளிற்று சுப்பிரதீகம்தான் பெருத்த எண் திசையானைப் பேர் 
** 8 பெயர்கள் 78 
**1122

#79
** எட்டு மலை 
மன்னிய இமயத்தோடு மந்தரம் கைலை விந்தம் 
கொன் வளர் நிடதம் ஏமகூடமே நீல வெற்பு 
துன்னிய கந்தமாதனத்தொடு சூழ் வெற்பு எட்டு ஆம் 
இன்னவை உலக நூலின் இயற்கையே என்று காண்மின் 
** 8 பெயர்கள் 79 
**1123

#80
** எட்டு வகைப் பாம்பு 
மன்னு வாசுகி அனந்தன் மருவிய தக்கன் சங்கன் 
பன்னிய குளிகனோடு பதுமன் மாபதுமன் மற்றைக் 
கொன் எயிற்று அழல் விழிக் கார்க்கோடகன் என்ற எட்டும் 
முன்னிய கடவுள் பாம்பின் மொழி அபிதானம் ஆமே
** 8 பெயர்கள் 80 
**1124

#81
** எட்டுத் திக்குப் பாலகர் அவர்க்குரிய இசை 
** சூரிய சந்திரர் சார் திசைகள் 
திண் திறல் மகவான் அங்கி செறி யமன் நிருதியோடு 
கொண்டிடும் வருணன் வாயு குபேரன் ஈசானன் என்ப 
எண் திசை உலோகபாலர் இவர் கீட்டிசை தொட்டு எண்ணும் 
கண்ட கீழ்பால் வடக்கு கதிரொடு திங்கட்கு ஆமே 
**1125

#82
** எட்டுத் திக்குக் குறி அட்ட மூர்த்தம் 
கொடி புகை சீயம் சீறிக் குரைத்து வள் என்னும் ஞாளி 
இடபமே கழுதை யானை ஏகு காகம் திக்கு அங்கம் 
படி நீர் தீ வளி ஆகாயம் பரிதியே விரவு திங்கள் 
அடல் புனை இயமானன் மற்று அட்ட மூர்த்தங்கள் ஆமே 
** 8, 8 பெயர்கள் 82 
**1126

#83
** எட்டு வகைச் சித்தி 
மன்னிய அணிமா மற்றை மகிமாவே கரிமாவோடு 
பின்னுறு லகிமா பிராத்தி பெறும் பிராகாமியங்கள் 
முன்னுறும் ஈசத்துவம் பின் முற்றிய வசித்துவம்தான் 
உன்னிய நூல்கள் ஓதும் ஓதும் ஓர் இருநான்கு சித்தி 
** 8 பெயர்கள் 83
**1127

#84
** எட்டு யோகாங்கம் 
இயமமே நியமம் முந்தி ஏற்ற ஆசனத்தினோடு 
நயனுறு பிராணாயாமம் நாட்டிய பிரத்தியாகாரம் 
சயமுறு தியானத்தோடு தாரணை சமாதி எட்டும் 
வியனுறும் யோகம்  என்று விதித்தனர் மதித்த நூலோர் 
** 8 பெயர்கள் 84 
**1128

#85
** எட்டுத் தருமாங்கம் 
அறம் ஐயப்படாமை மற்றை அவாவின்மை உவர்ப்பு ஒன்று இன்மை 
நெறி கெழு மயக்கம்இன்மை நின்ற அப் பழியை நீக்கல் 
உறுதியின் நிறுத்தல் பேரன்புடைமையே அறம் விளக்கல் 
இறைவனது அறத்துள் கூறும் எட்டு உறுப்பு இவைகள் ஆமே 
** 8 பெயர்கள் 85
**1129

#86
** அருகனது எண்குணம் 
கடையிலா ஞானத்தோடு காட்சி வீரியமே இன்பம் 
மிடையுறு நாமம்இன்மை விதித்த கோத்திரங்கள்இன்மை 
அடைவுஇலா ஆயுவின்மை அந்தராயங்கள்இன்மை 
உடையவன் இறைவன் என்ன உரைக்கும் ஆருகதநூலே 
** 8 பெயர்கள் 86
**1130

#87
** சிவனுக்குரிய எண் குணம் 
இன்னவை அருகநூலின் இசைக்கும் எண்குணங்கள் மற்றும் 
தன் வயம் தூய தேகம் தகும் இயல்புணர்வு மேலாப் 
பன்னும் முற்றுணர்வினோடு பாசங்கள் இயல்பின் நீங்கல் 
முன்னே பேரருளே மற்றை முடிவிலா ஆற்றல் பின்னும் 
** 8 பெயர்கள் 87 
**1131

#88
** கடவுளின் இலக்கணம் 
வரம்புஇலா இன்பம் என்றே வாய்த்திடும் குணங்கள் எட்டும் 
தரம்பெறு சைவநூவின் சாற்றிய தொகையாம் என்ப 
திருந்தும் இக் குணங்கள்தானே சேர்ந்தவன் யாவன் என்னில் 
பொருந்திய உலகம் எல்லாம் புரந்திடும் கடவுள் ஆமே
**1132

#89
** அருகனுக்கு ஆகா என விலக்கப்பட்ட எட்டுக் குற்றம் 
மன்னிய அறிவு காட்சி மறைத்தல் வேதநீயத்தோடு 
துன்னு மோகநீயம் ஆயு தொடர் நாம கோத்திரங்கள் 
முன்னுறும் அந்தராயம் மொழிந்த எண்குற்றம் ஆகும் 
இன்னவை தீர்ந்தோன் யாவன் யாவர்க்கும் இறைவன் ஆமே 
** 8 பெயர்கள் 89 
**1133

#90
** வைசியர்க்குரிய எண் வகைக் குணம் 
பெறுவது தெரிதல் ஈட்டல் பேணி மற்று அவை பகுத்தல் 
இறுவது அஞ்சாமை என்றும் இடன் அறிந்து ஒழுகல் வந்தே 
உறு பெருந் தனிமையாற்றல் உடன் முனிவிலனே ஆதல் 
மறு அறு பொழுதில் கூடல் வசியர்தம் குணங்கள் எட்டே 
** 8 பெயர்கள் 90 
**1134

#91
** அட்ட கணிதம் அட்ட மங்கலம் 
குணகாரம் பரியச்சம்தான் குறித்த பாற்கரமே மூலம் 
தணவா மானதமே கன்மம் சலிதியே தருதம் எட்டும் 
கணியார்தம் கணிதம் தீபம் கவரி கண்ணாடி தோட்டி 
புணர் மீனே முரசு கும்பம் பொலி கொடி சுபம் ஓர் எட்டே 
** 8, 8 பெயர்கள் 91
**1135

#92
** எண் வகை மெய்ப்பரிசம்
** நாட்டில் வரும் எண்வகைக் கேடு 
தட்டலே பற்றலோடு தடவலே தீண்டல் குத்தல் 
வெட்டலே கட்டல் ஊன்றல் மெய்ப் பரிசங்கள் எட்டு ஆம் 
விட்டில் தன் அரசு நால்வாய் மிகு மழை மிகு காற்றோடே 
நட்டம் வேற்று அரசு கிள்ளை நாடுறும் கேடு எட்டு என்ப 
** 8, 8 பெயர்கள் 92 
**1136

#93
** எண் வகை மணம் 
பிரமமே பிரசாபத்தியம் பெருகும் ஆரிடமே தெய்வம் 
கருது காந்தருவத்தோடே காட்டிய அசுரம் மற்றும் 
பரவிய இராக்கதங்கள் பைசாசம் இருநான்கு என்ப 
மருவிய உலகு இயற்கை வகுத்திடு மணங்களின்பேர் 
** 8 பெயர்கள் 93
**1137

#94
** எண் வகை மாலை 
நிரைகவர்ந்திடுதல் வெட்சி நிரைமீட்டல் கரந்தை என்ப
வெருவார் மேல் சேறல் வஞ்சி மீட்டு எதிர்ஊன்றல் காஞ்சி 
வரும் நொச்சி  புரிசைகாத்தல் வளைத்திடல் உழிஞை ஆகும் 
பொருவது தும்பை என்ப போர்வெல்லல் வாகை ஆமே 
** 8 பெயர்கள் 94 
**1138

#95
** அரசர்க்குரிய எண்பேராயம் 
கரணத்தின் திரள்கள் வாய்ந்த கடைகாப்போர் நகரிமாக்கள் 
தரு படைத்தலைவர் மற்றும் தன் கிளைச் சுற்றம் யானை 
புரவி ஊர்வோரே என்றும் போற்று காவிதியர் என்றும் 
விரவிய எண்பேராயம் வேந்தருக்கு அமைத்ததாமே
** 8 பெயர்கள்
**1139

#96
** எண் வகை உடற்குறை செய்யுளுக்குரிய 
** எண் வகைக் கணம் 
குறளொடு செவிடு மூங்கை கூன் மருள் குருடு மாவே 
உறும் உறுப்பு இல்லாப் பிண்டம் ஓதிய எண் மெய் எச்சம் 
நிறையும் நீர் நிலனே தேயு நிகழ் சுடர் மதியே வானம் 
பெறும் இயமானன் வாயு பேசிய கணங்கள் எட்டே 
** 8, 8 பெயர்கள் 96 
**1140

#97
** நல்ல கணம் தீய கணம் 
நிலனொடு நீர் வெண் திங்கள் நேர் இயமானன் வெய்யோன் 
உலவு தீ வாயு விண் என்று ஓதிய கணங்கள் எட்டில் 
நலமுறு கவிதை முன்னர் நாட்டிய நான்கும் நன்று ஆம் 
கலகம் ஆம் பின்னர் நான்கு கணங்களும் காணுங்காலே 
** 8 8 பெயர்கள் 97 
**1141

#98
** எண் வகைக் கணத்துக்கு உரிய சீர் 
நிரையது மூன்றுதானே நிலக்கணம் நேர் முன் ஆகி 
நிரையிணை பின்னர் ஆயின் நீரே நேரிணை பின் ஆகி 
நிரையது முன்னர் ஆயின் நெடிய வெண் திங்கள் என்ப 
புரையற நேர் மூன்று ஆகில் பொருந்திய இயமானன்தான்
**1142

#99
** எண் வகைக் கணத்துக்கு உரிய சீர் (தொடர்ச்சி) 
நிரை நடுவாக மற்றை நேர் இருபாலும் வெய்யோன் 
நிரை இருபாலும் நிற்க நேர் நடு தீ என்று ஆகும் 
நிரை இறுவாக மற்று  நேரிணை முன்னே வாயு 
நிரையிணை முன்னர் ஆகி நேர் இறின் நீள் ஆகாயம்
**1143

#100
** பெரியோர்க்குச் செய்யும் நவ புண்ணியம் 
எதிர்கொளல் பணிதலோடும் இருக்கை கால்கழுவல் நாறும் 
புது விரை நறும் பூ தூபம் புனை விளக்கு அடைவே ஏத்தல் 
விதியின் வாள் அரவு தோலும் விடமும் நீத்தென்ன நீத்த 
அதிகருக்கு அமுதம் ஏந்தல் அவை நவ புண்ணியம்தான் 
** 9 பெயர்கள் 100 
**1144

#101
** நவகண்டம் 
வடபாலே தென்பால் கீழ்பால் வகுத்த மேல்பால் விதேகம் 
வடபாலே தென்பால் மீது வைத்திடும் இரேபதங்கள் 
வடபாலே தென்பால் மீது வைத்திடு பரதத்தோடு 
வடிவாம் மத்திம கண்டங்கள் வரு நவகண்டம் ஆமே 
** 9 பெயர்கள் 101
**1145

#102
** நவ தாரணை 
வைத்த நாமங்கள் மாயை வச்சிரம் சித்திரங்கள் 
சத்தமே வத்துவோடு சதுரங்கம் செய்யுள் எட்டும் 
புத்தரே காணப்பட்ட பொருட் குறை நிறைவே என்றும் 
ஒத்த தாரணைகள் என்ப ஓதும் ஒன்பானும் ஈதே 
** 9 பெயர்கள் 102 
**1146

#103
** செய்யுளுக்குரிய நட்சத்திரம் ஒன்பதாகப் பிரித்தறிதல் 
தனது நாளின் பின் நாளும் சார்ந்திடு நாலும் ஆறும் 
வினவிய எட்டு ஒன்பானும் விருத்தம் ஒன்றில்லை தன் நாள் 
இனைய மூன்றுடன் ஐந்தாம் நாள் ஏழாம் நாள் இவை பொருந்தா 
நினையும் இம் மூன்று ஒன்பான் நாள் நேர்படும் மூன்று வட்டம்
**1147

#104
** நவ தாளம் 
அடியினில் சமதாளத்தோடு அருமமே அரிதாளம் மேல் 
படிமமே துருவதாளம் பற்றிய சித்திரம்தான் 
விடதாளம் சயமே மற்றும் மேவிய நிவிர்ததாளம் 
நடையுறு புலவர் ஓதும் நவதாளம் இவைகள் ஆமே 
** 9 பெயர்கள் 104 
**1148

#105
** நவமணிகள் 
மரகதம் பவளம் நீலம் வச்சிரம் பதுமராகம் 
விரவிய தரளமே கோமேதகம் புருடராகம் 
உரவிய காந்தி விட்டே உமிழ் வயிடூரியம்தான்  
பெருகிய நவமணிக்குப் பெயர் இவை ஆகும் என்ப 
** 9 பெயர்கள் 105 
**1149

#106
** நவரசம் பத்து வகைச் சிற்பத் தொழில் உறுப்பு 
நல்ல சிங்காரம் வீரம் நகை சாந்தம் கருணை குற்சை 
ஒல்லும் அற்புதம் பயத்தோடு உறு கோபம் இரதம் ஒன்பான் 
கல் உலோகம் மண் செங்கல் கண்டசர்க்கரை மெழுக்கு 
சொல்லிய மரமே தந்தம் சுதை வண்ணம் தொழில் சிற்பர்க்கு ஆம் 
** 9 10 பெயர்கள் 106 
**1150

#107
** தசாங்கம் பத்து வகைத் துவர்
நெடு மலை யாறு நாடு ஊர் நீண்ட தார் புரவி யானை 
கொடி முரசுடனே தானை கூறிய தசாங்கம் என்ப 
படி புனை நாவலே முப்பழம் நாற்பால் மரம் முத்தக் கா
சொடு மாவின் தவிர் பத்து என்ப ஓதிய துவரின்பேரே 
** 10, 10 பெயர்கள் 107 
**1151

#108
** அரி திருமால் அவதாரம் பத்து 
நாமம் மீன் ஆமை பன்றி நாரசிங்கத்தினோடு 
வாமனன் பரசுராமன் வானரர் தொழும் இராமன் 
பாமலி வாசுதேவன் பலதேவனுடனே கற்கி 
ஆம் இவை பத்தும்தானே அரி அவதாரம் என்ப 
** 10 பெயர்கள் 108 
**1152

#109
** வேளாளருடைய பத்து வகைச் செய்கை 
வரு விருந்து ஓம்பல் ஆணை வழி நிற்றல் ஒழுக்கம் ஊக்கம் 
கரில் அகத்து இன்மை என்றும் கைக்கடன் ஆற்றல் அன்றே 
உரியதாம் இறை இறுத்தல் ஒற்றுமை கோடல் போற்றல் 
விரவு மாண்வினைதொடங்கல் வேளாளர் செய்கை பத்தே 
** 10 பெயர்கள் 109 
**1153

#110
** பெண்களால் மலரும் பத்து வகை மரங்கள் 
ஏடு அவிழ் மகிழ் சுவைக்க எழில் பாலை நண்பு கூட 
பாடலம் நிந்திக்க தேன் படி முல்லை நகைக்க புன்னை 
ஆட நீள் குரா அணைக்க அசோகு உதைத்திட வாசந்தி 
பாட மா பார்க்க வார் சண்பகம் நிழல்படத் தளிர்க்கும் 
** 10 பெயர்கள் 110
**1154

#111
** கரந்து உறை கோள்கள் பத்து 
பரிதி இந்து இரண்டு சீறும் பை நாகக் கோள் இரண்டோடு 
இருசுடர் வளைந்து சூழும் பரிவேடம் நெடுக ஈண்டுப் 
பெருகிய வான் மீன் வானிற் பெருந் தூமம் எதிர்ந்த வில்லுக் 
கருதும் இவ்வெல்லாம் பேசில் கரந்துறை கோள்கள் ஆமே 
** 10 பெயர்கள் 111 
**1155

#112
** ஆண்பிள்ளைக் கவி உறுப்புப் பத்து 
சாற்று காப்பு செங்கீரை தாலே சப்பாணி முத்தம் 
போற்று வாரானையே அம்புலி சிற்றில் சிறுபறை பின் 
ஏற்றிடும் சிறுதேர் ஆம் இப் பருவம் பத்தையும் இசைக்கும் 
தேற்றும் ஆண் பிள்ளைப் பாட்டு ஆசிரியம் சேர் விருத்தப் பாவே 
** 10 பெயர்கள் 112 
**1156

#113
** பெண்பிள்ளைக் கவி உறுப்புப் பத்து இக் கவிகள் 
** கேட்கப்படும் மாதங்கள் 
அரிவையர்க்கு ஆகில் ஈற்றில் அறை மூன்று பருவம் ஆகா 
உரியதாம் கழங்கு அம்மானை ஊசல் முன் ஏழினோடு 
வரும் மூன்றே ஆதி மூவேழ் மதிகாறு ஒற்றித்த மாதத்து 
இருபாலாரையும் கேட்பித்தல் இனிது ஐந்து ஏழாண்டுதானே 
** 10 பெயர்கள் 113
**1157

#114
** உயிர்க்குரிய பன்னிரு வகை வேதனை 
அனலுடன் அசனி சீதம் ஆயுதம் விடம் மருந்து 
புனல் வளி விடத்தையும்தான் புசிப்பிக்கும் பசியே தாகம் 
நனி மிகும் முனிவு அறாமை நாட்டிய பிணியினோடே 
இனையும் வேதனை ஈராறும் எய்திடும் துன்பம் என்ப 
** 12 பெயர்கள் 114
**1158

#115
** பன்னிரு வகைத் தானை பத்தி சேனாமுகம் குல்மம் 
தந்தி ஒன்றே தேர் ஒன்று சாதி ஆம் புரவி மூன்று
வந்து அடும் பதாதி ஐந்து வகுத்திடும் பத்தி என்ப 
உந்தும் அப் பத்தி மூன்றே உறின் சேனாமுகம் என்று ஆகும் 
முந்து சேனாமுகம்தான் மும்மடி குல்மம் ஆமே 
**1159

#116
** கணம் வாகினி பிருதனை சமூ 
மருவிய குல்மம் மூன்று மடிதானே கணமதாகும் 
கருதிய கணமே மூன்று காட்டிய வாகினிப் பேர் 
பெருகு வாகினிதான் மூன்று பிருதனை ஆகும் என்ப 
வரு பிருதனைதான் மூன்று வகுத்திடும் சமூ ஆகும்மே 
**1160

#117
** பிரளயம் சமுத்திரம் சங்கு அநீகம் அக்குரோணி 
பேரியல் சமூவே மூன்று பிரளயம் பிரளயம்தான் 
ஓர் மூன்றே சமுத்திரம் ஆகும் உயர் சமுத்திரம் ஓர் மூன்று 
தேர்தரு சங்கு சங்கு மூன்றதே அநீகம் என்ப 
சோர்வுஇலா அநீகம் மூன்றே சொல்லும் அக்குரோணி ஆமே
**1161

#118
** பதினெண் தேவகணங்கள் 
விரவு சாரணரே சித்தர் விஞ்சையர் பசாசர் பூதர் 
கருட கின்னரர் இயக்கர் காந்தருவர் சுரர் தைத்யர் 
உரகர் ஆகாசவாசர் உத்தர குருவோர் போகர்  
நிருதர் கிம்புருடர் விண்மீன் நிறை கணம் மூவாறு ஆமே
** 18 பெயர்கள் 118 
**1162

#119
** பதினெண் வகை மங்கலச் சொல் 
சீர் மணி பரிதி யானை திரு நிலம் உலகு திங்கள் 
கார் மலை சொல் எழுத்து கங்கை நீர் கடல் பூ தேர் பொன் 
ஏர் உறும் இவை மூவாறும் இதில் பரியாயப் பேரும் 
ஆரும் மங்கலச்சொல் செய்யுள் ஆய்ந்து முன் வைக்க நன்று ஆம்
** 18 பெயர்கள் 119 
**1163

#120
** உடம்புக்குரிய பதினெண் வகைக் குற்றம் 
பசி அதிசயமே உள்ளல் பயமே கையறவு மூப்பு 
கசிவு நீர்வேட்டல் வேண்டல் கதம் மதம் கேதத்தோடே 
ஒசியும் நோய் பிறப்பு இறப்போடு உவகையே உறக்கம் இன்பம் 
இசையும் ஈரொன்பான் குற்றம் இவை தீர்ந்தோன் இறைவன் ஆமே 
** 18 பெயர்கள் 120
**1164

#121
** பதினெட்டுப் புராணம் 
மச்சமே கூர்மம் சைவம் வைணவம் வராகம் லிங்கம் 
பத்மம் வாமனமே காந்தம் பவிடியம் ஆக்கினேயம் 
கற்புள பிரமம் கைவர்த்தம்மே நாரதம் மார்க்கண்டம் 
உற்ற பாகவதமே காருடம் பிரமாண்டம் தொன்னூல் 
** 18 பெயர்கள் 121 
**1165

#122
** அரசர்க்குரிய 21 வகைச் சின்னம் 
முடி குடை கவரி தோட்டி முரசு சக்கரமே நால்வாய் 
கொடி மதில் தோரணம் நீர்க்குடம் மலர் மாலை சங்கு 
கடலொடு மகரம் ஆமை கயல் இணை அரிமா தீபம் 
இடபம் ஆசனம் மூவேழும் இறை திருப்பொறிகள் ஆமே 
** 21 பெயர்கள் 122 
**1166

#123
** பேடிக்குரிய 25 வகை இலக்கணம் 
இச்சையால் பேடி செய்யும் இலக்கணம் இப்பால் கேண்மின் 
நச்சவே பேசலோடு நல்லிசை ஓர்ந்து நிற்றல் 
அச்சம் ஒன்றில்லாதாகி ஆண் பெண் ஆம் அடைவு இயற்றல் 
உச்சியில் கையை வைத்தல் ஒரு கரம்தானே வீசல்
**1167

#124
விழிகளை வேறாச்செய்தல் வெம் முலை நலித்து நிற்றல் 
சுழலவே நோக்கல் நக்கு நாணல் தொந்தோம் என்று ஒத்தல் 
கழி நடம் பயிற்றல் வேறு காரணம் இல்லாக் கோபம் 
அழுதிடல் நடுநடுங்கி ஆங்கு ஒரு பக்கம் பார்த்தல்
**1168

#125
இரங்குதல் வருந்துதல் யாரும் இரங்கவே பேசிக்காட்டல் 
குரங்கல் கோதாடல் கூடல் கூவிளி கொண்டு நிற்றல் 
மருங்கினில் கையை வைத்தல் வாங்குதல் பாங்கிதன்னைத் 
திருந்தவே நோக்கல் ஏலேல் என்றலும் செய்கை ஆமே 
** 25 பெயர்கள் 125 
**1169

#126
** 28 செய்யுள் அலங்காரம் 
உருவகம் உவமையோடே ஊன்றிய அடி மடக்கே 
விரி சுடர் நிலை மடக்கே வேற்றுமை வெளிப்படுத்தல் 
மருவிய நோக்கே உட்கோள் வரும் தொகைமொழியே மற்றைத் 
தரும் மிகைமொழியே வார்த்தை தன்மை வேறு அருத்தம் வைப்பே
**1170

#127
** 28 செய்யுள் அலங்காரம் (தொடர்ச்சி)
சிறப்பதாம் நிலை சிலேடை மறுத்திடு நிலையின் வார்த்தை 
நிறுத்து உடனிலையில் கூட்டம் உவமாரூபகத்தினோடு 
வெறுப்பிலா மகிழ்ச்சி செய்து மிகும் நுவலா நுவற்சி 
உறுத்தியே இடும் தலைக்கூட்டு உயர் அணி தெரிசனங்கள்
**1171

#128
** (முன்னதன் தொடர்ச்சி) நல்லாசிரியன் இலக்கணம் 
உரை கெழு பாராட்டோடே ஒருங்கியல் நிலையே ஐயம் 
விரவிய நிலை வாழ்த்து என்ன விதித்திடும் இருபத்தெட்டாம் 
மருவிய அலங்காரத்தை வரிசையில் பாடவல்லோன் 
பரிவுறும் எழுத்தும் சொல்லும் பொருள் யாப்போடு இவை அறிந்தோன்
** 28 பெயர்கள் 128 
**1172

#129
** நல்லாசிரியன் இலக்கணம் (தொடர்ச்சி) 
இந்த நல்லிலக்கணத்தில் இசைந்திடு துறையும் வல்லோன் 
நந்தம் முத்தமிழினோடு நாற்கவி பாட வல்லோன் 
வந்து நற்குலத்து உதித்தோன் வடிவமோடு ஒழுக்கம் உள்ளோன் 
அந்த ஆறையாண்டு ஏகி ஆண்டு எழுபான் நீங்காதோன் 
**1173

#130
** புலவர்கவிதையை அரசர் ஏற்கும் முறை 
வழுக்கள் தீர் கவிதைதன்னை வசையிலார் கொள்ளுங்காலை 
கொழிப்பில் தோரணங்கள் நாட்டி கொடி மாடம் எடுத்து உயர்த்தி 
விழுத்தகு கோலம் செய்து மென் துகில் விரித்த பின்றை 
தெழித்திடும் பல்லியம்தான் முகில் எனத் திமிதிம் என்ன 
**1174

#131
அட்ட மங்கலங்கள் ஏந்த அரிவையர் பலரும் வாழ்த்த 
மட்டு அவிழ் பாளை வேய்ந்த மணிக்குடம் தீபம் மல்க 
பட்ட பல் உணா முளைத்த பாலிகை விதானப்பந்தர் 
இட்ட மாமனையில் சான்றோர் இயல்புளி இரீஇய பின்னை 
**1175

#132
மன்னும் ஆசனத்து இருத்தி வளம் மலி கவிதை கேட்டுப் 
பொன்னொடு துகிரும் தூசும் பூண் முடி கடகத்தோடும் 
இன்னவை பலவும் ஈந்திட்டு ஏழடி புலவன் பின் போய் 
நின்ம் என நிற்றல் மன்னர் நிலம் மிசை வழக்கது ஆமே 
**1176

#133
** பரிசு கொடாத உலோபியர்க்குச் செய்யுள் செய்வகை 
பாட்டுடைத் தலைவன்தானே பரிசில் ஈயாத காலை 
மீட்டு ஒரு பெரியன் ஊர் பேர் வேறு சொல் இயற்றிச் சேர்க்கின் 
ஈட்டு செல்வங்கள் பொன்றி ஈங்கு இவன் திருவும் மாய்ந்து 
நாட்டிய அவனுக்கு ஆகும் நவின்ற நூல் வழக்கு இது ஆமே 
**1177

#134
** பரிசில் கொடாதவன் அடையும் கதி 
பரிசில் ஈயாத பாவி பாமாலை செம்பூச் சூட்டி 
வரி அரவு உறை வன்மீகம் மாகாளி முன்றில்தன்னில் 
உரிய நீள் மனைப் புறத்தில் ஒள் எரி கொளுத்தில் வீயும் 
தெரியும் ஓராண்டில் என்றே செப்பினன் முனிவன்தானே 
**1178

#135
** முப்பத்திரண்டு அறம் 
ஆதுலர்சாலை ஐயம் அறுசமயத்தோர்க்குஉண்டி 
ஓதுவார்க்குஉணவு சேலை உறும் ஏறுவிடல் காதோலை 
மாதுபோகம் மகப்பால் மகப்பேறு மகவளர்த்தல் 
வேதை நோய் மருந்து கொல்லா விலை கொடுத்து உயிர் நோய்தீர்த்தல்
**1179

#136
கண்ணாடி பிறர்இல்காத்தல் கன்னிகாதானம் காவே 
வண்ணார் நாவிதரே சுண்ணம் மடம் தடம் கண்மருந்து 
தண்ணீர் பெய்பந்தல் கோலத் தலைக்குஎண்ணெய் சிறைச்சோறோடு
பண்ணான விலங்குஊண்நல்கல் பசுவின்வாயுறைகொடுத்தல்
**1180

#137
** முப்பத்திரண்டு அறம் (தொடர்ச்சி)
அறவையாம் பிணம்அடக்கல் அறவைத்தூரியம் வருந்தா 
நிறுவியே இடம் விடாமல் நிறையத் தின்பண்டம்நல்கல் 
உறுதி ஆ உரிஞ்சுகின்ற தறி இவை ஓதும் எண்ணான்கு 
அறநிலை அபிதானங்கள் அம்பிகை செய்யுமாறே
**1181

#138
** ஓரறிவுயிர் ஈரறிவுயிர் மூவறிவுயிர் நாலறிவுயிர் 
உற்று அறி புலன் ஒன்றால் புல் மரமே ஓரறிவின் சீவன் 
முற்றும் ஈரறிவின் சீவன் முரள் நந்தே ஆதி நாவால் 
செற்ற மூவறிவின் சீவன் சிதல் எறும்பு ஆதி மூக்கால் 
சொற்ற நாலறிவின் சீவன் தும்பி வண்டு ஆதி கண்ணால் 
**1182

#139
** ஐயறிவுயிர் மன அறிவு 
வானவர் மனிதர்  கீழ் போய் மாழ்கிய நரகரோடு 
கான் உறை விலங்கு புள்ளு காட்டும் நாலறிவினோடே 
ஊனம் இல் செவியும் ஆங்கே உறுவினை அறிவின் சீவன்
மான் அமர் நோக்கின் நல்லாய் மனமும் ஒன்று அதிகம் ஆமே 
**1183

#140
** காப்புக்கு முன் எடுக்கும் கடவுள் 
காப்புக்கு முன் எடுக்கும் கடவுள்தான் மாலே ஆகும் 
பூப் புனை மலரின் செல்வி புனைபவன் ஆதலானும் 
காப்பவன் ஆதலானும் கதிர்முடி கடகத்தோடு 
வாய்ப்பதாம் மதாணி பூணூல் வரிசையின் புனைதலானும்
**1184

#141
** அருகன் ஊர்தி படை கொடி சிவன் வாகனம் படை 
அருகனது ஊர்தி தானே அம்புயம் படை நற் காட்சி 
பெருகிய ஞான சீலம் பெருங் கொடி அருளே என்ப 
மரு மலர்க் கொன்றையார்க்கு வாகனம் இடபம் ஆகும் 
பரசொடு கடிய சூலம் பினாக வில் படைகள் ஆமே
**1185

#142
** திருமால் வாகனம் கொடி படை 
** பிரமன் வாகனம் படை கொடி 
கரிய மால் துவசம் ஊர்தி கலுழன் என்று உரைக்கற்பாற்றே 
வரி சிலை ஆழி சங்கு வாள் கதை படை ஐந்து ஆகும் 
பிரமனது ஊர்தி அன்னம் பெரும்படை பாசம் ஆகும் 
அருமறை கொடியே ஆகும் அந்தணர்தமக்கும் ஆமே
**1186

#143
** பலதேவன் படை கொடி யமன வாகனம் படை
** காலன் படை குபேரன் வாகனம் 
பரிவுள பலதேவற்குப் படை நாஞ்சில் கொடியே பெண்ணை 
எருமையே யமன்தன் ஊர்தி எறிபடை பாசம் தண்டு ஆம் 
கரியதோர் கூற்றினுக்குக் கடும்படை கணிச்சி ஆகும் 
புரி நரவாகனம் பூம் புட்பகம் குபேரன் ஊர்தி 
**1187

#144
** சூரியன் சந்திரன் ஊர்திகள் முருகன் ஊர்தி 
** படை கொடி 
குறைவுஇலாத் தனிக்கால் பொற்றேர் கூறிய அருக்கன் ஊர்தி 
நிறைதரு மதியின் ஊர்தி நீள் முத்து விமானம் என்ப 
அறுமுகன் ஊர்திதானே யானையும் மயிலும் என்ப 
உறு படை வேல் ஆம் மற்றை ஒண் கொடி கோழி ஆமே
**1188

#145
** இந்திரன் ஊர்தி சோலை குதிரை மண்டபம் 
** மாளிகை கொடி 
கரி அயிராவதம் பூங் கற்பகக் காவே சோலை 
உரிய வெம் பரியின்பேரே உச்சயிச்சிரவம் ஆகும் 
மருவு மண்டபம் சுதன்மை மாளிகை வசந்தம் என்ப 
பெருகிய உருமு மற்றைப் பெரும் கொடி புரந்தரற்கு ஆம்
**1189

#146
** காளி ஊர்தி கொடி துர்க்கை படை ஊர்தி 
** மூதேவி வாகனம் படை கொடி 
அழகிய காளிஊர்தி யாளியே துவசம் பேய் ஆம் 
பழுதுஅறு துர்க்கை பற்றும் படை வாள் ஆம் கலையே ஊர்தி 
கெழுமு மூதேவி ஊரும் கிளர்ந்த வாகனத்தின்நாமம் 
கழுதை ஆம் படை துடைப்பம் காக்கை அம் பதாகைதானே
**1190

#147
** சத்தமாதர் வாகனமும் ஊர்தியும் படையும் 
அன்னமே இடபம் தோகை அணி மயில் கலுழன் சீயம் 
பின்னியல் யானையோடு பேய் எழு பெண்கள் ஊர்தி 
மன்னும் நூல் மறை பினாக வார் சிலை சத்தி ஆழி 
துன்னிய கலப்பை வச்ரம் சூலம் வெம் படைகள் ஆமே 
**1191

#148
** சேரன் சோழன் பாண்டியன் கொடி - மாலை 
** புலவர் கொடி 
மன்னிய சேரனுக்கு வரி சிலைக்கொடி பனந்தார் 
பொன்னி அம் துறைச் சோழற்கே புலிக்கொடி ஆத்திமாலை 
தென்னவன்தனக்குத்தானே சேல்கொடி வேப்பந்தார் ஆம் 
பன்னிய கேழல் வேழப் பதாகையும் புலவருக்கே
**1192

#149
** அரசு உவாவின் இலக்கணம் 
கால் ஒரு நாலும் கோசம் கை வால் ஏழ் நிலத்தின் தோய்ந்து 
பாலொடு சங்கு போலும் பதத்து உகிர் விதத்தின் சூழ்ந்து 
வாலொடு கால் மெய் கை வெண் மருப்பினால் உயிரைக் கொன்றே
ஏல ஏழு உயர்ந்து ஒன்பான் நீண்டு ஈரைந்து முழத்தது ஆகி
**1193

#150
பெறுமுறை முன்பு உயர்ந்து பின் பணிந்து அழகிதாய 
தறுகண்ணது ஆகி சூழி சார்ந்த மத்தகத்தது ஆகி 
முறம் நிகர் கன்னதானம் மூரி மால் யானைதானே 
அறநெறி செலுத்தும் செங்கோல் அரசு உவா ஆகும் என்ப 
**1194

#151
** அரசர்க்குரிய குதிரையின் இலக்கணம் 
மாதர்தம் மனத்தை ஒத்த மனத்ததாய் வாழை உற்ற 
கோதுஇலா மடலே போலக் கொழுந்துள செவியது ஆகிப் 
பாதம் முன் வெந்^ எருத்து பகர் முகம் பால்மைத்தாகி 
ஓதும் எண்பத்திரண்டு அங்குலி உயர் பரி மன்னர்க்கு ஆம் 
**1195

#152
** பேரெண்களின் வகை 
ஒரு பதினாயிரம் பத்து உரை அதியுகம் என்று ஆகும் 
வரும் அதியுகம்தான் மீள மதித்த நூறாயிரங்கள் 
பிரமம் ஆம் பிரமம் நூறாயிரம் அது கோடிதானே 
அரியதோர் கோடி பத்து ஆம் அர்ப்புதம் என்று சொல்லும் 
**1196

#153
** பேரெண்களின் வகை (தொடர்ச்சி) 
கரு தரு கோடி நூறு கணகம் ஆம் கணகம் பத்து 
பெருகிய கற்பம் ஆகும் பேணும் அக் கற்பம் பத்து 
திரு மிகு நிகற்பம் ஆகும் நிகற்பம் ஈரைந்து சங்கம் 
தரம் உள சங்கம் பத்து சமுத்திரம் என்றே சாற்றும் 
**1197

#154
உரைத்த இப் பல்பேர்க்கூட்டத்து ஒருபெயர்த்தொகுதிதன்னில் 
விருத்தம் மூவைம்பதின் மேல் மிகுதி ஓரிரண்டு செய்தான் 
திருக் கிளர் குணபத்திரன் தாள் சென்னியில் சூடிக் கொண்டோன்
மருக் கிளர் பொழில் சூழ் வீரை மன்னன் மண்டலவன்தானே 
** பன்னிரண்டாவது 
** பல் பெயர்க் கூட்டத்து ஒருபெயர்த் தொகுதி முற்றிற்று 
**
  
** மண்டல புருடர் இயற்றிய சூடாமணி நிகண்டு 

@1 சிறப்புப் பாயிரம்
**1

#1
பொன்னும் நல் மணியும் முத்தும் புனைந்த முக்குடை நிழற்ற 
மின்னு பூம் பிண்டி நீழல் வீற்றிருந்தவனை வாழ்த்தி 
மன்னிய நிகண்டு சூடாமணி என ஒன்று சொல்வன் 
இந் நிலம்தன்னில் மிக்கோர் யாவரும் இனிது கேண்மின் 
**2

#2
பூ மலி அசோகின் நீழல் பொலிந்த எம் அடிகள் முன் நாள் 
ஏமமா முதல் நூல் சொல்ல கணதரர் இயன்ற பாவால் 
தாம் ஒரு வழிநூல் சொல்ல சார்பு நூல் பிறரும் சொல்ல 
தோம் இலா மூன்று நூலும் துவம் என உதித்த அன்றே 
**3

#3
அங்கு அது போய பின்றை அலகு இல் நூல் பிறந்த மற்றும் 
செங்கதிர் வரத்தில் தோன்றும் திவாகரர் சிறப்பின் மிக்க 
பிங்கலர் உரை நூற்பாவில் பேணினர் செய்தார் சேர 
இங்கு இவை இரண்டும் கற்க எளிது அல என்று சூழ்ந்து 
**4

#4
சொல்லொடு பொருள் உணர்ந்தோன் சோதிட நீதி வல்லோன் 
நல் அறிவாளன் எங்கள் நறுங் குன்றை ஞான மூர்த்தி 
பல் உயிர்க்கு ஒரு தாய் ஆகும் பரமன் மாமுனிவன் மெய்ந்நூல் 
வல்லுநர் வல்லார்க்கு எல்லாம் வரை அற தரையில் வந்து 
**5

#5
பரிதி ஒன்று உதயம் செய்து பங்கயம் அநேக கோடி 
முருகு எழ மலர்வித்தென்ன முகமுடன் அகம் மலர்த்தி 
மருவு முத்தமிழை முன் நாள் வளர்த்த பாண்டியனே போலக் 
கருதிய எல்லாம் தந்து கவிமணி மாலை சூடி 
**6

#6
செகம் எனும் பளிங்கு மாடத் திகிரி வேந்தரையே போல 
புகழ் எனும் பஞ்சி சேர்த்துப் பொலிவுறு பேர் அத்தாணி 
மகிழ் குணபத்திரன் எங்கள் வழித் தெய்வம் போல்வான் சொல்ல 
இகபரம் இரண்டும் வேண்டி இயல் இசை வல்லோர் கேட்ப 
**7

#7
விரவிய தேவர் மக்கள் விலங்கொடு மரம் இடம் பல் 
பொருள் செயும் வடிவு பண்பு போற்றிய செயல் ஒலிப் பேர் 
ஒரு சொல் பல் பொருளினோடும் உரைத்த பல் பெயர்க் கூட்டந்தான் 
வருமுறை திவாகரம் போல் வைத்து பிங்கலந்தை தன்னில் 
**8

#8
ஒருங்கு உள பொருளும் ஓர்ந்திட்டு உரைத்தனன் விருத்தம் தன்னில் 
இருந்த அவை நல்லோர் குற்றம் இயம்பிடார் என்பது எண்ணி 
திருந்திய கமல வூர்தி திருப்புகழ் புராணம் செய்தோன் 
பரந்த சீர்க் குணபத்திரன் தாள் பணிந்த மண்டலவன்தானே 

@1. தேவப் பெயர்த் தொகுதி
**9

#9
** அருகன் 
அருகன் எண்குணன் நிச்சிந்தன் அறவாழி வேந்தன் வாமன் 
சினன் வரன் உறுவன் சாந்தன் சினேந்திரன் நீதிநூலின் 
முனைவன் மாசேனன் தேவன் மூவுலகுணர்ந்த மூர்த்தி 
புனிதன் வென்றோன் விராகன் பூமிசை நடந்தோன் போதன் 
**10

#10
பண்ணவன் கமல ஊர்தி பரமேட்டி காதிவென்றோன் 
புண்ணியன் புலவன் புத்தன் பூரணன் பொன்னெயில் கோன் 
விண்ணவன் விமலன் வீரன் விநாயகன் வீதசோகன் 
அண்ணல் வில் மதனை வென்றோன் அருட்கொடி வேந்தன் ஆசான்
**11

#11
முத்தன் மாமுனி கருத்தன் முக்குடைச் செல்வன் முன்னோன் 
சித்தன் எண்சிறப்பும் உள்ளோன் திகம்பரன் கொல்லாவேதன் 
நித்தன் நின்மலன் நின்னாமன் நிராயுதன் நேமிநாதன் 
அத்தன் ஆநந்தன் சோதி அரியணைச் செல்வன் ஆதி
**12

#12
ஆத்தன் குற்றங்கள் இல்லான் அசோகு அமர் கடவுள் ஆதன் 
சாத்தன் வேதாந்தன் நாதன் சமி அநாமயன் சுயம்பு 
நீத்தவன் பிதா விதாதா நிரம்பரன் அனந்த ஞானி 
தீர்த்தன் மால் பகவன் சாமி சீபதி சீமான் செய்யோன்
**13

#13
நிருமலன் வரதன் சாது நிரஞ்சனன் விறலோன் யோகி 
தருமராசன் யுகாதி சதுர்முகன் சாதரூபி 
திருமறுமார்பன் நீடு சிவகதிக்குஇறை தொண்ணூறே 
அருகன் பேர் ஆகும் மற்றும் அபிதானம் அநந்தம் ஆமே 
** 90 பெயர்கள் 13 
**14

#14
** சிவன் 
சங்கரன் இறையோன் சம்பு சதாசிவன் பேயொடு ஆடி 
பொங்கு அரவு அணிந்த மூர்த்தி புராந்தகன் பூத நாதன் 
கங்கை வேணியன் கங்காளன் கடுக்கையங் கண்ணி சூடி
மங்கை ஓர் பாகன் முன்னோன் மகேச்சுரன் வாமதேவன்
**15

#15
நீலகண்டன் மாதேவன் நிருமலன் குன்றவில்லி 
சூல பாணியன் ஈசானன் பசுபதி சுடலை ஆடி 
கால காலன் கபாலி உருத்திரன் கைலை ஆளி 
ஆல் அமர் கடவுள் நித்தன் ஐம்முகன் பரசு பாணி
**16

#16
அந்தி வண்ணன் முக்கண்ணன் அழல் ஆடி பாண்டரங்கன் 
சந்திரசேகரன் ஆனந்தன் சடைமுடி அனந்தன் ஆதி 
தந்தி ஈர் உரியோன் நம்பன் தற்பரன் நீறு அணிந்தோன் 
நந்தி ஈச்சுரன் ஏறு ஊர்ந்தோன் நக்கன் மா ஞானமூர்த்தி
**17

#17
வரன் மறை முதலி ஈசன் மான் இடம் ஏந்தி சோதி 
பிரமன் மாற்கு அரியோன் தாணு பிஞ்சகன் பினாக பாணி 
பரமன் எண்தோளன் பர்க்கன் பவன் யோகி பகவான் ஏகன் 
அரன் உமாபதி சிவன் பேர் அறுபத்தாறு அநந்தம் மற்றும் 
** 66 பெயர்கள் 17 
**18

#18
** பல தேவன் 
இலகும் ஓர் குண்டலன் மற்று இரேவதி கொண்கன் முற்றும் 
நிலவிய முசலி வெள்ளை நிகழ் நீலாம்பரன் அநந்தன் 
அலம் உறு படையாக் கொண்டோன் அச்சுதன் முன்னர் வந்தோன் 
பலபத்திரன் காமபாலன் பனந்தாமன் பலதேவன் பேர் 
** 11 பெயர்கள் 18 
**19

#19
** அரி 
மாதவன் மாயன் செய்ய வாமனன் வாசுதேவன் 
சீதரன் நந்தகோபன் திருமகன் உவணம் ஏற்ற 
கேதனன் பதுமநாபன் கேசவன் பஞ்சவர்க்குத் 
தூதனே சார்ங்கபாணி சுரிமுகச் சங்கம் ஏந்தி
**20

#20
கொண்டல் வண்ணன் காகுத்தன் கோவிந்தன் அச்சுதன் மால் 
விண்டு வேலையில் துயின்றோன் விரகினால் உந்தி பூத்தோன் 
வண் துழாய் மெளலி ஆதி வராகன் வைகுண்ட நாதன் 
முண்டகாசனை கேள்வன் தாமோதரன் முராரி நேமி
**21

#21
வலவன் தேவகிதன் மைந்தன் வனமாலி படி இடந்தோன் 
சலசலோசனன் அனந்த சயனன் பீதாம்பரன் பேர் 
உலகு அளந்தருள்வோன் பஞ்சாயுதன் உலகு உண்ட பெம்மான் 
அலகைதன் முலையோடு ஆவி அருந்தினோன் நாரசிங்கன்
**22

#22
அரவணைச் செல்வன் கண்ணன் அறிதுயில் அமர்ந்த மூர்த்தி 
பிரமனைப் பெற்ற தாதை பின்னை கேள்வன் முகுந்தன் 
கரியவன் நெடியோன் காவற்கடவுள் நாரணன் ஏழ் ஏழே 
அரியின் பேர் ஆகும் மற்றும் அபிதானம் அனந்தம் ஆமே 
** 49 பெயர்கள் 32 
**23

#23
** பிரமன் 
பிரமன் மேதினி படைத்தோன் பிதாமகன் பிதா விதாதா 
வரன் அயன் மலரோன் இந்த மண் பொதுத் தந்தை வேதா 
இரணிய கருப்பன் போதன் இனிய மால் உந்தி வந்தோன் 
குரவன் ஓதிமம் உயர்த்த கொடியினன் அன்ன ஊர்தி 
**24

#24
இறை சதானந்தன் நீண்ட எண்கணன் விதி சுயம்பு 
மறையவன் அனந்தன் ஞானி மால்மகன் வாணி கேள்வன் 
முறைதெரி பகவன் வானோர்முதல்வன் நான்முகன் விரிஞ்சன் 
நறை மலி கமல யோனி நாமம் ஆறைந்தும் ஆமே 
** 30 பெயர்கள் 24 
**25

#25
** புத்தன் 
தரும ராசன் முனீந்திரன் சினன் பஞ்சதாரை விட்டே 
அருள் சுரந்து அவுணர்க்கு ஊட்டும் ததாகதன் ஆதி தேவன் 
விரவு சாக்கியனே சைனன் விநாயகன் சினம் தவிர்ந்தோன் 
அரசு நீழலில் இருந்தோன் அறிவரன் பகவன் செல்வன்
**26

#26
அண்ணலே மாயா தேவி சுதன் அகளங்க மூர்த்தி 
நண்ணிய கலைகட்கெல்லாம் நாதன் முக்குற்றம் இல்லோன் 
எண்ணில் கண் உடையோன் வாமன் ஏற்ற புண்ணியத்தின் மூர்த்தி 
புண்ணிய முதல்வன் சாந்தன் பூமிசை நடந்தோன் புத்தன் 
** 24 பெயர்கள் 26 
**27

#27
** இந்திரன் 
மேக வாகனன் வேள்விக்கு வேந்தன் விண் முழுதும் ஆளி 
பாக சாதனனே வச்சிரபாணி கோபதி சிறப்பாம் 
நாக நீள் நகர்க்கு நாதன் நால் மருப்பு யானை ஊர்தி 
போகி வாசவனே வேந்தன் புரந்தரன் புலவன் சக்கிரன்
**28

#28
மருத நல் நிலத்து வேந்தன் மருத்துவன் வானோர் கோமான் 
புருகூதன் சசிமணாளன் புரோகிதன் கெளசிகன்னே 
கரியவன் சுனாசீரன் ஆகண்டலன் உடன் வலாரி 
அரி சதக்கிரது நீண்ட ஆயிரங் கண்ணன் இந்திரன் 
** 28 பெயர்கள் 28 
**29

#29
** விநாயகன் 
அங்குச பாசம் ஏந்தி அம்பிகை தனயன் முன்னோன் 
ஐங்கரன் மூத்தோன் ஒற்றை அணி மருப்பினன் ஏரம்பன் 
கங்கை பெற்றோன் முக்கண்ணன் கணபதி ஈசன் மைந்தன் 
வெம் கய முகனே ஆகுவாகனன் விநாயகன் பேர் 
** 13 பெயர்கள் 29 
**30

#30
** வீரபத்திரன் 
உக்கிரன் அழற்கண் வந்தோன் உமை மகன் சிம்புள் ஆனோன் 
முக்கணன் சடையோன் யானை முகவனுக்கு இளையோன் வில்லி
செக்கர் வான் நிறத்தன் குரோதன் சிறு விதி மகம் சிதைத்தோன் 
மிக்க பத்திரைக்குக் கேள்வன் வீரபத்திரன் பேர் ஆமே 
** 12 பெயர்கள் 30 
**31

#31
** கந்தன் 
முருகன் வேள் சாமி ஆறுமுகன் குகன் குழகன் மாயோன் 
மருகன் சேய் கார்த்திகேயன் வரை பக எறிந்தோன் செட்டி 
அரன் மகன் கங்கை மைந்தன் ஆண்டலைக் கொடி உயர்த்தோன் 
சரவண பவன் கடம்பன் தாரகற் செற்றோன் ஆசான்
**32

#32
வேய்ந்த பூங் குறிஞ்சி வேந்தன் வேலினுக்கு இறை விசாகன் 
சேந்தன் காங்கேயன் செவ்வேள் சிலம்பன் மா மஞ்ஞை ஊர்தி 
வாய்ந்த சூர்ப் பகைவன் வள்ளிமணவாளன் தெய்வயானை 
காந்தனே குமரன் கந்தன் கலை உணர் புலவனும் பேர் 
** 31 பெயர்கள் 32 
**33

#33
** காமன் 
திருமகள் மைந்தன் மாரன் சித்தசன் சம்பராரி 
உரு இலி மன்மதன் மீன்  உறு கொடி உயர்த்த தோன்றல் 
இரதி காதலன் வசந்தன் எழில் பெறு வேனில்ஆளி 
கருதிய கருப்பு வில்லி கந்தர்ப்பன் மதன் பூ வாளி
**34

#34
திங்கள் வெண் குடையோன் தென்றல் தேரினன் வில்லி மோகன் 
ஐங்கணைக் கிழவன் எய்யும் மலர்க்கணை வேள் அநங்கன் 
செங்கண் மால் மைந்தன் மிக்க திறல் மனோபவன் மனோசன் 
அங்கசன் மனோபுவே நீர் ஆழி வெம் முரசோன் காமன் 
** 27 பெயர்கள் 34 
**35

#35
** வைரவன் 
முத்தனே குமரன் பிள்ளை முடுவல் வெம் படையோன் காரி 
சித்தன் கேத்திர பாலன்னே செந்தொடைக்குரிய கோமான் 
வித்தகன் ஞாளி ஊர்தி விறல் கருங்குதிரை ஆளி 
வைத்த சீர் வடுகன் இன்ன வைரவன் நாமம் ஆமே 
** 12 பெயர்கள் 35 
**36

#36
** ஐயன் 
காரியே புறத்தவன் பூங் கடல் வண்ணன் நெடிய சாத்தா 
பூரணை கேள்வன் யோகி புட்கலைதன் மணாளன்
ஓரும் மாசாத்தன் செண்டாயுதன் வெள்ளை யானை ஊர்தி 
ஆரியன் அறத்தைக் காப்போன் அரிகர குமரன் ஐயன் 
** 13 பெயர்கள் 36 
**37

#37
** குபேரன் 
அரனது தோழனே கின்னரர் பிரான் அளகை ஆளி 
புருட வாகனனே சோமன் புட்பக விமானம் உள்ளோன் 
இருநிதிக் கிழவன் ஏக பிங்கலன் இயக்கர் கோமான் 
மரகதன் தனதன் மந்திரி வைச்சிரவணன் குபேரன் 
** 13 பெயர்கள் 37 
**38

#38
** யமன், காலன் 
சமன் செங்கோல் கடவுள் கூற்று தருமன் அந்தகனே சண்டன் 
நமன் வைவச்சுதனே மற்றை நடுவனே தென்றிசைக் கோன் 
யமன் அரி மறலியே மற்று எருமை ஊர்தியும் ஆம் இப்பால் 
கமை இல் கால் மறல் மடங்கல் காலன் பாசத்தனும் பேர் 
** 13,4 பெயர்கள் 38 
**39

#39
** தரும தேவதை
மரகத வல்லி பூக மா நிழல் உற்ற வஞ்சி 
பரம சுந்தரி இயக்கி பகவதி அம்மை எங்கள் 
அருகனை முடி தரித்தாள் அம்பிகை அறத்தின் செல்வி 
தரும தேவதை பேர் அம்பாலிகை என்றும் சாற்றலாமே 
** 10 பெயர்கள் 39 
**40

#40
** உமை 
அரன் இடத்தவள் காமக் கோட்டத்தி அம்பிகையே மாதா 
தருமத்தின் செல்வி தேவி சாம்பவி மலை மடந்தை 
பரை சிவை கெளரி முக்கண் பார்ப்பதியொடு பவானி 
உரை கெழு சத்தி நாரி உமை பெயர் மூவைந்து ஆமே 
** 15 பெயர்கள் 40 
**41

#41
** கங்கை, காடுகாள் 
வரநதி நீடு மந்தாகினி திரிபதகை மற்றைச் 
சுரநதி கங்கை பேர் சானவி பகீரதியும் சொல்லும் 
பெருகு மூதணங்கு மோடி பேசிய கொற்றி சூரி 
மருவிய வடுகி மாரி வடுகன்தாய் காடுகாள் பேர் 
** 6, 7 பெயர்கள் 41
**42

#42
** திருமகள் 
மாக் கடல் பிறந்த கோதை மா அரிப்பிரியை செய்யாள் 
ஆக்கம் பொன் பொறி சீதேவி அலர்மகள் பொருளின் செல்வி 
தாக்கணங்கு இளையாள் பூமின் இலக்குமி சலசை செல்வம் 
தேக்கும் இந்திரை ஈரெட்டும் திருமகள் நாமம் ஆமே 
** 16 பெயர்கள் 42 
**43

#43
** நா மகள் 
கலை மகள் பனுவலாட்டி காயத்திரி ஞானமூர்த்தி 
உலக மாதா பிராமி ஒள்ளிய வெள்ளை மெய்யாள் 
இலகு வெண் சலசம் உற்றாள் பாரதி இசை மடந்தை 
மலர் அயன் மனைவி வாக்காள் வாணி நாமகள் பேர் ஆமே 
** 13 பெயர்கள் 43 
**44

#44
** மூதேவி 
சேட்டை இந்திரைக்கு மூத்தாள் சீர்கேடி சிறப்பிலாதாள் 
நீட்டிய ஏகவேணி நெடுங் காகத் துவசம் உற்றாள் 
கேட்டையே கெடலணங்கு கழுதை வாகனி கேடு எல்லாம் 
மூட்டிய கலதி தெளவை முகடி மூதேவி ஆமே 
** 12 பெயர்கள் 44 
**45

#45
** இந்திரன் மனைவி, இந்திரன் மைந்தன், அமரர் மாது
** தெய்வ மெல்லியர் - பொதுப் பெயர் 
பொரு இல் இந்திராணி செய்ய புலோமசை சசி பேரின்பம் 
தரும் அயிராணி இந்திரன் மனைவி பேர் சயந்தன் மைந்தன் 
அரமகள் அரம்பை என்ப அமரர்தம் மாதின் பேரே 
விரவு சூர் அணங்கு தெய்வ மெல்லியர் பொதுப் பேர் சொல்லும் 
** 4, 1, 2, 2 பெயர்கள்
**46

#46
** காளி இடாகினி, காளிதன் ஏவல் செய்வாள் 
சூரி மாலினி எண்தோளி சூலி சண்டிகையே தேவி 
வீரி மாதரி கங்காளி வேதாளியொடு மாதங்கி 
தாரகற் செற்ற தையல் பைரவி சிவை சாமுண்டி 
ஆரணி வல்லணங்கோடு ஐயை யாமளை முக்கண்ணி
**47

#47
அலகை வெம் கொடி உயர்த்தாள் மதுபதி ஆளி ஊர்தி 
உலவிய மாயை உற்ற யோகினி காளி நாமம் 
வலவை சூர்மகள்தனோடு மாயவள் இடாகினிப் பேர் 
இலகு சன்மினி வஞ்சப் பெண் காளிதன் ஏவல் செய்வாள் 
** 25, 3 2 பெயர்கள் 47 
**48

#48
** துர்க்கை 
அமரி எண்தோளி வெற்றி அந்தரி அம்பணத்தி 
சமரி பாலைக் கிழத்தி சயமகள் வீரச் செல்வி 
குமரி மா மகிடற் செற்றாள் கொற்றவை சக்கிரபாணி 
விமலை வண் கலையானத்தி விசையை நாரணியே விந்தை
**49

#49
நீலியே நெடிய காத்தியாயினி மேதிச் சென்னி 
மேல் இடர் உற மிதித்த மெல்லியல் கெளரி ஐயை 
மாலினுக்கு இளைய நங்கை பகவதி வாள் கைக் கொண்டாள் 
சூலி சண்டிகையே கன்னி சுந்தரி துர்க்கை நாமம் 
** 30 பெயர்கள் 49 
**50

#50
** தேவர் 
அமரர் பண்ணவர் புத்தேளிர் கடவுளர் அண்டர் உம்பர் 
இமையவர் விபுதர் வானோர் இலேகரே புலவர் விண்ணோர் 
அமுதர் ஆதித்தர் மேலோர் ஐயரே சுரரே தீர்த்தர் 
உமிழ் சுடர் மெளலி சூட்டும் உயர்நிலத்தவரும் தேவர் 
** 19 பெயர்கள் 50 
**51

#51
** தெய்வம் அசுரர் 
ஈனம் இல் அணங்கு புத்தேள் ஏற்ற சூர் கடவுள் தேவே 
ஆன தெய்வதம்மே தெய்வம் ஆம் என உரைப்பர் நூலோர் 
தானவர் அவுணரோடு தைத்தியர் திதியின் மைந்தர் 
ஏனைய அசுரர் ஆகும் நிசாசரர் என்றும் ஏற்கும் 
** 6, 5 பெயர்கள் 51 
**52

#52
** இராக்கதர் விஞ்சையர் கந்தருவர் 
நிருதரே பிசித ஊணர் நிசாசரர் அரக்கர் தீமை 
தரும் இராக்கதர் பேர் சால கடங்கடர் தானும் ஆகும் 
விரவு விஞ்சையர் பேர் வித்தியாதரரே கேசரரும் ஆம் கந்
தருவர் யாழ் வல்லோரே காந்தருவர் கின்னரரும் ஆமே 
** 5, 2, 3 பெயர்கள் 52 
**53

#53
** பூதம் பேய் 
குறள் கிருத்திமமே கூளி பாரிடம் சாதகம் செந்
நெறி இல் பூதப் பேர் ஐந்தாம் நீள் பிரேதம் வேதாளம் 
வெறி மயல் பிசாசம் பாசம் வியந்தரம் மண்ணை சோகோடு 
அறிவு அழி கழுது கூளி அலகை பேய் கடி சாவும் பேர் 
** 5, 14 பெயர்கள்
**54

#54
** ஆகாயம் 
அண்டம் வான் உலகு மங்குல் அந்தரம் அம்பரம் கோ 
குண்டலம் ககனம் காயம் குடிலம் புட்கரம் அநந்தம் 
கண்டிடா வெளியே மீ மாகத்தோடு ஆசினி நபம் கம் 
விண்தலம் விசும்பு வேணி வியோமம் ஆகாயம் ஆமே 
** 23 பெயர்கள் 54 
**55

#55
** காற்று 
வாதம் கால் வளி மருத்து வாடையே பவனம் வாயு 
கூதிர் மாருதம் மால் கோதை கொண்டலே உலவை கோடை 
ஊதை வங்கூழ் சிறந்த ஒலி சதாகதி உயிர்ப்பு 
காது அரி கந்தவாகன் பிரபஞ்சனன் சலனன் காற்றே 
** 23 பெயர்கள் 55 
**56

#56
** மேல் காற்று கீழ் காற்று வாடை 
** பனிக்காற்று சுழல் காற்று 
கோடை மேல் காற்றின் நாமம் கொண்டல் கீழ் காற்றிற்கு ஏற்கும் 
வாடையின் நாமம் வீசு வடகாற்று வடந்தை என்ப 
கூடிய கூதிர் ஊதை குளிர் பனிக்காற்றின் நாமம் 
சாடிய சுழல் காற்றின் பேர் சாரிகை சூறை ஆமே 
** 1, 1, 2, 2 பெயர்கள் 56 
**57

#57
** தென்றல் நெருப்பு 
வரு தென்கால் சிறுகால் தென்றி மலயக்கால் வசந்தன் தென்றல் 
அரி வசு தகனன் அங்கி அனல் அயவாகனன் தீ 
எரி சுசி சிகியே ஆரல் இயங்கு காற்றின் சகாயன் 
கருநெறி கனலியே அங்காரகன் சித்திர பானு 
**58

#58
தழல் உதாசனன் சிறந்த தனஞ்சயன் சாத வேதா 
செழுமைய முளரி தென்கீழ்த்திசை இறை சேர்ந்தார்க் கொல்லி 
எழுவித நாவே வன்னி ஏற்ற பாவகனே தேயு 
அழல் சுடர் ஞெகிழி இன்ன நெருப்பின் பேர் ஆறைந்து ஆமே 
** 5,30 பெயர்கள் 58 
**59

#59
** ஊழித்தீ, கனல் ஒழுங்கு 
** விண் வீழ் கொள்ளி, நறும்புகை 
வடவை தீத்திரள் மடங்கல் வரு வடவாமுகம் சூழ் 
கடையனல் ஊழித் தீ ஆம் கனல் ஒழுங்கு அது சுவாலை 
அடைவு இல் விண் வீழுங் கொள்ளி உற்கை என்று அறையலாமே 
வெடி நறை குய் இம் மூன்றும் மிகு நறும் புகையின் நாமம் 
** 5, 1, 1,3,பெயர்கள்
**60

#60
** காட்டழல், தீக்கடைகோல், விளக்கு, புகை, தீப்பொறி
** தீத்தெய்வம், தீத்தெய்வத்தின் பாரி 
தாவம் காட்டழல் அத் தீயைத் தரு கோலே ஞெலிகோல் என்ப 
தீவிகை தீபம் மற்றைத் திகழ் சுடர் ஒளி விளக்கே 
ஆவி தூபம் தூமத்தோடு அரி புகை பொறி புலிங்கம் 
பாவகன் அத் தீத் தெய்வம் பாரியே சுவாகாதேவி 
** 1, 1, 4, 4, 1,1,1 பெயர்கள் 60 
**61

#61
** நீர், புனல், வேந்தன் 
வாரி ஆலம் கீலாலம் மழையலர் கமலம் காண்டம் 
நீரம் புட்கரமே சிந்து நெடும் புனல் சலிலம் பாணி 
கார் அறல் புவனம் நாரம் கன விரதம் கவந்தம் 
மாரி அம்பு உதமே அப்பு வருணம் சீவனம் வனம் வார்
**62

#62
பயம் மழை உதகம் தோயம் பயசு சம்பரம் பானீயம் 
வயமொடு சீவனீயம் வரு தீர்த்தம் கீரம் சீதம் 
அயம் அளத்தோடு ஆம் அம் அமுதம் கம் சலம் நீர் ஆகும் 
நயன் உறு வருணன் இந்த நற் புனல் வேந்தன் நாமம் 
** 45, 1 பெயர்கள் 62 
**63

#63
** சூரியன், பரிதியின் வட்டம், பரிதியின் கிரணம் 
பரிதி பாற்கரன் ஆதித்தன் பனிப்பகை சுடர் பதங்கன் 
இருள் வலி சவிதா சூரன் எல்லு மார்த்தாண்டன் என்றூழ் 
அருணன் ஆதவனே மித்திரன் ஆயிரம் சோதி உள்ளோன் 
தரணி செங்கதிரோன் சண்டன் தபனனே ஒளியே சான்றோன்
**64

#64
அனலியே அரியே பானு அலரியே அண்டயோனி 
கனலியே விகர்த்தனன் வெங் கதிரவன் பகலோன் வெய்யோன் 
தினகரன் பகலே சோதி திவாகரன் அரியமாவே 
இனன் உடன் உதயன் ஞாயிறு எல்லையே கிரணமாலி
**65

#65
விரவும் ஏழ் பரியோன் வேந்தன்  விரிச்சிகன் விரோசனன் பேர் 
இரவி விண்மணி அருக்கன் ஏழ் ஏழும் சூரியன் பேர் 
பரிதியின் வட்டம் தானே விசயம் ஆம் பரிதி வீசும் 
கிரணமே கரமும் மற்றைக் கிளர்ந்த தீவிரமும் ஆகும் 
** 49, 1, 2 பெயர்கள் 65 
**66

#66
** சந்திரன் 
நிலவு சோமன் களங்கன் நிசாபதி பிறை குளிர்ந்த 
கலையினன் உடுவின் வேந்தன் கலாநிதியொடு குபேரன் 
அலவனே சசியே திங்கள் அம்புலி நிசாகரன் வான் 
உலவு இமகிரணன் சாந்தம் உற்ற தண்ணவன் குரங்கி 
**67

#67
மதி இராக் கதிரே இந்து மருவு தானவனே அல்லோன் 
விதுவொடு குமுத நண்பன் சுதாகரன் வேந்தன் ஆலோன் 
சிதைவு இலா முயலின் கூடு பசுங்கதிர்த் தே என்று எல்லாம் 
புதிய சந்திரன் மூவேழும் எட்டுமே புகன்ற நாமம் 
** 29 பெயர்கள்
**68

#68
** செவ்வாய் 
கருதிய செந்தீ வண்ணன் காட்டும் அங்காரகன் சேய் 
குருதி வக்கிரனே பெளமன் குசன் நிலமகன் அரத்தன் 
மருவிய அழலோன் மற்றை மங்கலன் உடனே ஆரல் 
விரவிய உதிரன் இன்ன மேவு செவ்வாயின் நாமம் 
** 13 பெயர்கள் 68 
**69

#69
** புதன் 
சிந்தை கூரியன் கணக்கன் தேர்ப்பாகன் அருணன் சாமன் 
வந்த தூதுவனே மாலே மதிமுகன் அறிஞன் பாகன் 
அந்தம் ஆம் புலவன் மற்றை அனுவழி மேதை பச்சை 
புந்தி பண்டிதன் ஈரெட்டும் புதன் பெயர் ஆகும் அன்றே 
** 16 பெயர்கள் 69 
**70

#70
** வியாழன், வெள்ளி 
தீது இலாத தெய்வ மந்திரி சிகண்டிசன் அமைச்சன் சீவன் 
வேதன் ஆண்டளப்பான் ஆசான் வேந்தன் பொன் வியாழன் பேராம்
ஓதிய அசுர மந்திரி உசனன் பார்க்கவனே சுங்கன் 
கோது இல் சுக்கிரன் பளிங்கு புகர் கவி மழைக்கோள் வெள்ளி 
** 9,9 பெயர்கள் 70 
**71

#71
** சனி, இராகு, கேது 
கதிர் மகன் மந்தன் காரி கரியவன் செளரி மேற்கோள் 
முதுமகன் பங்கு நீலன் முடவன் நோய்முகன் சனிப் பேர் 
மதி உணும் இராகு நாமம் மற்று அது தமம் கறுப்பு ஆம் 
அதிகம் ஆம் கேது செம்மை சிகி கதிர்ப்பகையும் ஆமே 
** 11, 2, 3பெயர்கள் 71 
**72

#72
** மேடம் இடபம் மிதுனம் கர்க்கடகம் 
கொண்ட மை வருடை ஆடு கொறி மறி மேடம் என்ப 
குண்டை சே மூரி புல்லம் கோ விடை இடபம் ஆகும் 
தண்டு யாழ் விழவு இரட்டை சவைமகள் மிதுனம்தானே 
நண்டு ஞெண்டு அலவன் சேக்கை நள்ளி கர்க்கடகம் ஆமே 
** 5, 6, 5, 5 பெயர்கள் 72
**73

#73
** சிங்கம் கன்னி துலாம் விருச்சிகம் 
கொலை அரி யாளி மாவே கொடும் புலி சிங்கம் என்ப 
முலை மடந்தையர் பேர் எல்லாம் மொழிந்திடும் கன்னி தானே 
துலை நிறை நிறுப்பான் சீர் கோல் தூக்கு வாணிகன் துலாப் பேர் 
உலைவுறு தெறுக்கால் தேளே ஓதிய விருச்சிகப் பேர் 
** 4, 1, 7, 2 பெயர்கள் 73
**74

#74
** தனு மகரம் கும்பம் மீனம் 
கொடுமரம் துரோணம் சாபம் சிலை தனு நாற் பேரே 
வடிவின் மான் கலை சுறாவே மகர ராசிக்கு முப்பேர்
குடமொடு கரீரம் சாடி குடங்கரே கும்பம் என்ப 
நெடிய மீன் மயிலை மற்சம் சலசரம் நேரும் மீனம் 
** 4, 3, 4, 4 பெயர்கள் 74 
**75

#75
** அச்சுவினி பரணி 
பரி மருத்துவ நாள் வாசி பரவும் ஐப்பசி  யாழ் ஏறோடு 
இரலையே முதல்நாள் சென்னி என்பது அச்சுவினியின் பேர் 
பரணியே கிழவன் சோறு பகலவன் தராசு தாழி 
தருமன் நாள் அடுப்பு பூதம் தாசி முக்கூட்டு தானே 
** 9 10 பெயர்கள் 75
**76

#76
** கார்த்திகை உரோகிணி 
எரி பிறந்திடு நாள் ஆரல் இறால் அறுவாய் அளக்கர் 
கருது நாவிதனே அங்கி கார்த்திகை அளகும் ஏற்கும் 
பிரமன் நாள் சகடு பண்டி பேசிய சதியே வையம் 
உருள் விமானம் தேர் ஊற்றால் உரோணியே உரோகிணிப் பேர் 
** 8, 10 பெயர்கள் 76 
**77

#77
** மிருகசீரிடம் திருவாதிரை 
திங்கள் நாள் மதி பேராளன் சேர்ந்த மான் தலையே மாழ்கு 
பொங்கு மார்கழியே மும்மீன் புகழ் நரிப்புறமே பாலை 
இங்கு இவை ஒன்பது என்ப மிருக சீரிடத்தின் நாமம் 
செங்கை மூதிரை யாழ் ஈசன் தினம் இவை ஆதிரைப் பேர் 
** 9, 4 பெயர்கள் 77 
**78

#78
** புனர் பூசம் பூசம் ஆயிலியம் 
கருதிய அதிதி நாளே கழை புனர்தம் கரும்பு 
பொரு இலாப் புனிதம் பிண்டி ஆவணம் புனர் பூசப் பேர் 
குருவின் நாள் கொடிறு வண்டு குறித்த காற் குளமே பூசம் 
அரவின் நாள் கவ்வை பாம்பே ஆயில் ஆயிலியம் நாற்பேர் 
** 7, 4, 4 பெயர்கள் 78 
**79

#79
** மகம் பூரம் 
கொடு நுகம் வேள்வி வாய்க்கால் குறித்த வேட்டுவனே மாசி 
வடு அற முதலில் தோன்றி வரும் சனி மகநாள் என்ப 
இடை எழும் சனியே தூர்க்கை எலி பகவதி நாளோடு 
கடிய நாவிதனே எய்யும் கணை இரு முப்பேர் பூரம் 
** 6, 6 பெயர்கள் 79 
**80

#80
** உத்தரம், அத்தம்
பங்குனி கடையில் வந்து பற்றிய சனியினோடு 
செங்கதிர் பிறந்த நாளும் சிறந்த உத்தரம் என்று ஆகும் 
தங்கு காமரமே அங்கி  சார்ந்த நாள் கெளத்துவத்தோடு 
அங் கைம்மீன் களிறு நவ்வி ஐவிரல் அத்தம் ஏழ் பேர் 
** 3,7 பெயர்கள் 80 
**81

#81
** சித்திரை சோதி 
அளக்கும் நெய் பயறு மீனே அறுவையே ஆடை தூசு 
துளக்கு இலா நடு நாள் தச்சன் துவட்டா நாள் சித்திரைப் பேர் 
விளக்கொடு மரக்கால் வீழ்க்கை வெறுநுகம் காற்றின் நாளே 
கிளத்திய காற்று தீபம் கேடு இலாச் சோதி ஏழ் பேர் 
** 9, 7 பெயர்கள் 81 
**82

#82
** விசாகம் அனுடம் 
முற்றில் வைகாசி காற்று முந்து நாள் முறத்தினோடு 
வெற்றி சேர் சுளகு சேட்டை விசாக நாள் இரு முப்பேரே 
புல் தாளி பெண்ணை தேளே போந்தை மித்திர நாள் ஆறும் 
சொற்றனர் அனுடம் என்று சோர்வு இலா நூலோர் தாமே 
** 6, 6 பெயர்கள் 82 
**83

#83
** கேட்டை மூலம் 
சேட்டை இந்திரன் நாள் வேதி செந்தழல் எரி இவ் ஐந்தும் 
கேட்டை வல்லாரை என்றும் கிளத்துப வளத்த நூலோர் 
தேட்கடை குருகு கொக்கு சிலையுடன் அன்றில் ஆனி 
ஈட்டிய அசுர நாள் இவ் ஏழ் பெயர் மூலம் என்ப 
** 6, 7 பெயர்கள் 
**84

#84
** பூராடம் உத்தராடம் திருவோணம் 
உடைகுளம் முற்குளம் நீர் உதித்த நாள் பூராடப் பேர் 
கடையினில் குளமே ஆனி கருது விச்சுவநாள் ஆடி 
மிடை இல் உத்தராடம் என்ப மேவிய ஓணம் மாயோன் 
அடையும் நாள் உலக்கை முக்கோல் சிரவணம் சோணை ஆமே 
** 3, 4,5 பெயர்கள் 84 
**85

#85
** அவிட்டம் சதயம் 
மருவிய காகப் புள்ளு வசுக்கள் நாள் பறவை புள்ளு 
விரவும் ஆவணி அவிட்டம் விளம்பிய நாமம் ஐந்தாம் 
பெருகிய செக்கு சுண்டன் பேசிய போரே குன்று 
வருணன் நாள் சதயம் ஐந்தும் வகுத்த பேர் தொகுத்ததாமே 
** 5,5 பெயர்கள்
**86

#86
** பூரட்டாதி உத்தரட்டாதி இரேவதி 
பொரு இல் முற் கொழுங்கால் நாழி புரட்டையே பூரட்டாதி 
முரசு பிற்கொழுங்கால் மன்னன் உத்தரட்டாதி முப்பேர் 
இரவி நாள் கலமே தோணி ஏற்றம் ஆம் தொழுவே நாவாய் 
பெருகிய கடைநாள் சூலம் பெருநாள் எட்டு இரேவதிப் பேர் 
** 3, 3, 8பெயர்கள் 86 
**87

#87
** அருந்ததி விண்மீன் நாழிகை கால நுட்பம் 
வட மீனே சாலி என்ப மற்று அருந்ததியின் பேரே 
உடுவே தாரகையே பம்மே உற்கையே சுக்கை விண்மீன் 
கடிகை நாழிகை ஆம் கன்னல் இரித்தையும் அதுவே காட்டும் 
துடி கலை விகலை முப்பேர் சொல்லிய கால நுட்பம்
** 2, 5, 3, 3பெயர்கள் 87 
**88

#88
** காலம், நெடும் போழ்து 
வேலையே அமையம் செவ்வி ஏல்வையே பொழுது பாணி 
காலை கொன் பதமே போழ்து காலப் பேர் ஈரைந்து ஆகும் 
சால நீட்டித்தலோடு சார்ந்த பாணித்தல் தானும் 
நீல உண் கண்ணாய் மற்று நெடித்தலும் நெடும் போழ்து என்ப 
** 3, 10 பெயர்கள் 88 
**89

#89
** கால விரைவு மத்தியானம் இராசி 
ஒல்லையே இறையே உற்ற சிறுவரையுடன் இலேசம் 
வல்லை மாத்திரைகள் காலவிரைவின் பேர் வகுக்கில் ஆறாம் 
நல்ல நண்பகலே உச்சி நடுப்பகல் மத்தியானம் 
இல்லுடன் பவனம் ஓரை இராசியின் பெயராம் என்ப 
** 6, 3, 3 பெயர்கள் 89 
**90

#90
** இரா பகல் நாள் 
அல் விபாவரியே கங்குல் அல்கல் யாமினியே நத்தம் 
எல்லியோடு யாமம் மாலை இரசனி நிசி இரா ஆம் 
எல்லொடு திவா பகல் பேர் ஏல்வையே திவசம் வைகல் 
அல்கலே தினமே எல்லை ஆனியம் பகலே நாள் ஆம் 
** 11, 2, 8 பெயர்கள் 90 
**91

#91
** இருள், முன்னை நாள், பின்னை நாள் 
சருவரி அந்தகாரம் கச்சளம் தமம் துவாந்தம் 
இருள் என்ப திமிரமோடு துணங்கறல் என்றும் ஏற்கும் 
நெருநலும் நென்னலும்தான் நிகழ்த்துப முன்னை நாளை 
பெருகிய பின்றை பிற்றை பின்னை என்று இயம்பலாமே
** 7, 2, 2 பெயர்கள் 91 
**92

#92
** வைகறை நிலவு வெய்யில் மாலை சாமம் பருவம் 
புலரி வைகறையின் நாமம் விடியலும் போற்றும்  அப் பேர் 
நிலவு சந்திரிகை வெய்யில் நிகழ்ந்த ஆதபமே என்றூழ் 
இலகிய மாலை சாயம் சந்தி ஆம் யாமம் சாமம் 
அலைவு அறு பருவம் தானே ஆனியம் இருது ஆகும் 
** 2, 1, 2, 2, 1, 2 பெயர்கள் 92 
**93

#93
** ஒரு கலை மாதம் மதி தெரி கலை இரா 
** மதி மறை கலை இரா 
திதியொடு பக்கம் தானே ஒருகலை தெரிக்கும் என்ப 
மதியொடு திங்கள் சொல்லின் மாதமே பேதம் இல்லை 
மதி தெரி கலை இராப் பேர் வரும் சினீ வாலி ஆகும் 
மதி மறை கலை இராவின் வரும் பெயர் குகு என்று ஆமே 
** 2, 2, 1, 1 பெயர்கள் 93 
**94

#94
** பூரணை அமாவாசை முதல் பக்கம் தொட்டு 
** மூன்று வட்டமாக வரும் லந்து பக்கங்கள் 
அந்தம் ஆம் உவாவே பவ்வம் பூரணை இரு பேர் ஆகும் 
இந்துவோடு இரவி கூட்டம் அமாவாசை அமையும் என்ப 
நந்தை பத்திரையினோடு நாட்டிய சயை இரித்தை 
முந்து பூரணை ஆம் பக்கம் முதல் தொட்டு மூன்று வட்டம் 
**2, 2, 5  பெயர்கள் 94 
**95

#95
** ஆவணி முதல் இரண்டிரண்டு மாதம் 
** ஆகிய அறுவகைப் பருவம் 
பரவிய காரே கூதிர் முன் பினிற் பனிகளோடு 
விரவிய இளைய வேனில் விரைந்திடு முதிர்ந்த வேனில் 
மருவும் ஆவணியே ஆதி மற்று இரண்டு இரண்டு மாதம் 
பருவம் மூவிரண்டும் ஆய்ந்து பார்த்திடின் வாய்த்த பேராம் 
** 6 பெயர்கள் 95 
**96

#96
** வருடம், ஆண்டில் பாதி, ஊழி, வாழ்நாள் 
** அயன் வாழ்நாள் 
இகழ்வு இல் வற்சரமே ஆண்டே சமை முப்பேர் வருடம் என்ப 
பகரில் ஆயனமும் அப் பேர் அயனமே ஆண்டில் பாதி 
உகமுடிவுடன் மடங்கல் ஊழி ஆம் ஆயுள் வாழ்நாள் 
மகிழ்வுறு கற்பம் தானே மலர் அயன் வாழ்நாள் என்ப 
** 4, 1, 2, 1, 1 பெயர்கள் 96 
**97

#97
** மழை பெருமழை விடா மழை 
சொரி துளி திவலை தூவல் சீகரம் தூறல் மாரி 
வருடமோடு உறையே ஆலி வானமும் மழைப் பேர் பத்தாம் 
பெருமழை என்ப தானே பேசில் ஆசாரம் ஆகும் 
விரவிய பனித்தல் சோனை விடாமழை இரு பேர் ஆமே 
** 10, 1, 2 பெயர்கள் 97 
**98

#98
** துளி, ஆலங்கட்டி, மேல், கீழ் 
வாலிய திவலை தூவல் வண் சிதர் சீகரத்தோடு 
ஆலியே தளியே மிக்க உறை துளி ஆக ஏழ் பேர் 
ஆலியே கரகம் மற்றைக் கனோபலம் ஆலங்கட்டி 
மேலின் நாமம்தான் உம்பர் மேக்கும் ஆம் கிழக்கு கீழே 
** 7, 3, 2, 1 பெயர்கள் 98
**99

#99
** மேகம் 
பயன் உறு மங்குல் சீதம் பயோதரம் தாராதாரம் 
குயின் மழை எழிலி மஞ்சு கொண்டல் சீமுதம் கொண்மூ 
வியன் முகில் விண் விசும்பு விளையும் மால் சலதரம் செல் 
புயல் கனம் கந்தரம் கார் போற்று மை மாரி மேகம் 
** 23 பெயர்கள் 99 
**100

#100
** இடி மின் 
வெடி ஒலி அசனி செல்லு விண்ணேறு மடங்கல் ஆறே 
இடியின் பேர் உருமும் மற்றை அனலேறும் இதன் பேர் என்ப 
நெடு வித்துத்து தடித்து நீள் சம்பை சபலையோடு 
கடிய சஞ்சலையே மின்னல் கனருசி மின்னின் ஏழ் பேர் 
** 8, 7பெயர்கள் 100 
**101

#101
** பனி பரிவேடம் வானவில் 
பனி இமம் துகினமும் பேர் பரிவேடம் ஊர்கோள் வட்டம் 
தனி இடு வானவில்லே இந்திர தனு என்று ஆகும் 
இனையவை தேவர் ஈட்டச் செய்யுள் நூற்றொன்று இசைத்தான் 
புனை குணபத்திரன் தாள் போற்றும் மண்டலவன் தானே 
** 2, 2, 1 பெயர்கள் 101 
** முதலாவது தேவப் பெயர்த் தொகுதி முற்றிற்று 

@2.  மக்கட் பெயர்த் தொகுதி 
**102

#1
** தெய்வ வணக்கமும் தோற்றுவாயும் 
தேன் அவிழ்த்து அளிகள் எல்லாம் செவ்வழி பாடா நின்ற 
பூ நகைத்து இலங்கு கஞ்சப் பொகுட்டின் மீதே ஒதுங்கு 
நான்முகக் கடவுள் பாதம் நாவினால் நவிற்றி ஏத்தி 
மானவர்க்கு இயன்ற பேரை வகுத்திடும் தொகுதி சொல்வாம்
**103

#2
** முனிவர் 
துறவர் சார்பில்லோர் நீத்தோர் தூய் தவர் முனைவர் மெய்யர் 
அறவர் மாதவர் கடிந்தோர் அந்தணர் அடிகள் ஐயர் 
உறுவர் தாபதர் விளங்கும் இருடிகள் உயர்ந்தோர் யோகர் 
அறிஞர் பண்ணவர் சிறந்த அருந்தவர் முனிவர் ஆமே 
** 20 பெயர்கள் 2 
**104

#3
** சமண நீத்தோர் சைவத்தோர் 
** மால் சமயத்தோர் புத்தர் 
தா இல் செளமியரே யோகர் திகம்பரர் சமண நீத்தோர் 
மாவிரதியரே பாசுபதர் காளாமுகர் சைவத்தோர் 
மேவு மால்சமயத்தோர் பேர் மிக்க பாகவதர் ஆகும் 
சீவகர் பெளத்தரோடு தேரர் சாக்கியரே புத்தர் 
** 3, 3, 1, 4 பெயர்கள் 3 
**105

#4
** சமணரில் சித்தி பெற்றோர் 
** சடை முடித்த படிவர் அகத்தியன் 
நீரினில் பூவில் வானில் நினைத்துழி ஒதுங்குகின்ற 
சாரணர் எண்மர் ஆவார் சமணரில் இருத்தி பெற்றோர் 
பாரிய சடை முடித்த படிவர் தாபதரே என்ப 
கூரிய கும்ப யோனி குறுமுனி அகத்தியன் பேர் 
** 1,1,2 பெயர்கள் 4 
**106

#5
** மறையவர் பிரமசாரி துரோணாசாரியன் 
ஐயர் வேதியரே நூலோர் அறுதொழிலாளர் ஆய்ந்தோர் 
மை இல் பூசுரரே செந்தீ வளர்ப்பவர் தொழுகுலத்தோர் 
பொய் இல் அந்தணரே ஆதி வருணர் முப்புரிநூல் மார்பர் 
மெய்யர் விப்பிரரே வேதபாரகர் வேள்வியாளர் 
**107

#6
இரு பிறப்பாளர் பார்ப்பார் ஏற்ற மேற்குலர் உயர்ந்தோர் 
வரு மறையவர்தம் பேராம் வன்னியே பிரமசாரி 
அரு மறைக் கொடியோன் வின்னூலாளன் பாரத்துவாசன் 
தரு நெறி வழாத் துரோணாசாரியன் பேர் மூன்று ஆமே 
** 19 1 3 பெயர்கள் 6 
**108

#7
** அறிஞர் ஆசாரியன் மாணாக்கன் 
சான்றவர் மிக்கோர் நல்லோர் தகுதியோர் மேலோர் ஆய்ந்தோர் 
ஆன்றவர் உலகம் மேதாவியர் அறிஞர்கள் பேர் ஆசான் 
ஊன்று தேசிகனே ஓசன் உபாத்தியாயன் பணிக்கள் 
ஏன்ற ஆசாரியன் பேர் ஏற்ற மாணாக்கன் கற்போன் 
** 9, 5, 1 பெயர்கள் 7 
**109

#8
** பண்டிதர் கலைஞர் ஒத்துரைப்போர் 
கலைஞர் மேதையரே மூத்தோர் கற்றவர் அவை விற்பன்னர் 
தலைமை ஆம் கவிஞர் சங்கம் சாரதி சூரி சாடு 
புலவர் பண்டிதர் பேர் போற்றில் அறிஞரும் புதரும் ஆகும் 
கலைஞரே கவி வல்லோர் ஆம் கணக்காயர் ஓத்துரைப்போர் 
** 14, 1, 1 பெயர்கள் 8 
**110

#9
** மூத்தோன் பெருமையின் சிறந்தோன் 
குரவன் ஐயன் சுவாமி கோமானே அடிகள் அத்தன் 
பரவிய உரவோன் ஈசன் பதி இறை மூத்தோன் பேர் ஆம் 
குரிசிலோடு அண்ணல் ஏந்தல் கூறிய தோன்றல் செம்மல் 
பெருமையில் சிறந்தோன் என்று பேசினர் மாசு இல் நூலோர் 
** 10, 5 பெயர்கள் 9 
**111

#10
** எப்பொருட்கும் இறை உயர்ந்தவர் 
நாதனே கொழுநன் காந்தன் நாட்டிய பதி கோன் ஈசன் 
ஆதிபன் அதிபன் செம்மல் அரன் பிரான் ஆதி மன்னன் 
ஏதில் எப்பொருட்கும்தானே இறை பெயர் இவை பன்மூன்றாம் 
ஓது சீர் உலகம் என்பது உயர்ந்தவர்க்கு இயம்பும் நாமம் 
** 13, 1 பெயர்கள் 10 
**112

#11
** திரண்டோர் பெண்கள் கூட்டம் 
சவை சமவாயம் சங்கம் சமுதாயம் சமூகம் கோட்டி 
அவை குழாம் குழுவே கூட்டம் அடர் திரள் கணங்கள் ஈராறு 
இவை திரண்டோர் பேர் பண்ணை எய்திய ஓரை பொய்தல் 
அவை பெண்கள் கூட்டம் ஆயம் கெடவரல் அதுவும் ஆமே 
** 12, 5 பெயர்கள் 11 
**113

#12
** அரசன் 
புரவலன் பெருமான் ஏந்தல் பூபாலன் வேந்தன் மன்னன் 
நரபதி பொருநன் சக்கிரி நகை முடி நிருபனோடு 
குரிசில் பார்த்திவனே கோவே கொற்றவன் இறைவன் அண்ணல் 
அரசன் பேர் இவை ஈரெட்டாம் தலைவன் காவலனும் ஆமே 
** 18 பெயர்கள் 12
**114

#13
** வீட்டுமன் குருகுல வேந்தர் 
தரு தெய்வ விரதன் கங்கை தனயன் சந்தனுமுன் பெற்றோன் 
கருதிய பிரமசாரி காங்கேயன் வீட்டுமன் பேர் 
பரவு பாரதரே மற்றைப் பெளரவர் என்னும் நாமம் 
குருகுல வேந்தர்க்கு ஆகும் கெளரவர் என்றும் கூறும் 
** 5, 3 பெயர்கள் 13 
**115

#14
** தருமன் 
தரம் மிகு குவளைத்தாரான் யுதிட்டிரன் பொறையன் சாற்றும் 
முரசு உயர் கொடியோன் நீதி மொழியும் நல் அறத்தின் சேயே 
குருகுலப் பாண்டு மைந்தன் குந்திதன் புதல்வன் மெய்ம்மை 
விரதமாக் கொள்வோன் மேன்மைத் தருமன் பேர் எட்டும் ஆமே 
** 8 பெயர்கள் 14 
**116

#15
** துரியோதனன் 
மருவு காந்தாரி மைந்தன் நந்தியா வர்த்தத் தாமன் 
அரவுயர்த்தவன் வணங்காமுடியினன் அரசர் மன்னன் 
உரை கெழு சுயோதனன் கண்ணொன்றும் இல்லாதோன் ஆன 
திருதராட்டிரன்தன் செல்வன் சீர்த் துரியோதனன் பேர்  
** 7 பெயர்கள் 15
**117

#16
** கன்னன் வீமன் 
கடுங் கதிர் மதலை வீசும் கவச குண்டலனே கச்சை 
நெடுங் கொடியினன் கானீனன் நீள் அங்கர் கோமான் கன்னன் 
மடங்கலின் கொடியோன் வெய்ய மாருதி வாயு மைந்தன் 
இடிம்பைதன் கொழுநன் வீமன் கதாயுதன் என்றும் ஏற்கும் 
** 5, 5 பெயர்கள் 16 
**118

#17
** அருச்சுனன் 
குற்றம் இல் கிருட்டிணன் பற்குனன் தனஞ்சயன் காண்டீவன் 
வெற்றி சேர் சவ்வியசாசி வீபற்சு விசயன் பார்த்தன் 
சொற்ற கேசவற்குத் தோழன் சுவேதவாகனன் கிரீடி 
அற்றம் இல் அருச்சுனற்கே அமைந்த பேர் பன்னொன்றாமே 
** 11 பெயர்கள் 17 
**119

#18
** சேரன் 
வில்லவன் கொங்கன் வஞ்சி வேந்தனே போந்தின் தாரோன் 
கொல்லி வெற்பன் குடக் கோ குட்டுவன் குடகன் கோதை 
மல்லல் சேர் உதியன் வான வரம்பனே மலையமானே 
செல்லல் தீர் பொருநையாற்றோன் சேரலன் சேரன் பேரே 
** 14 பெயர்கள் 18 
**120

#19
** சோழன் 
நேரியன் சென்னி பொன்னித் துறைவனே நேரி வெற்பன் 
ஆரின் மாலையனே கிள்ளி அபயனே கோழி வேந்தன் 
சீரிய வளவன் மிக்க செம்பியன் புலி உயர்த்தோன் 
சூரியன் புனனாடன் கோச் சோழன் மால் என்றும் சொல்லும் 
** 14 பெயர்கள் 19 
**121

#20
** பாண்டியன் 
செழியனே கூடற்கோமான் தென்னவன் வேம்பின் தாரோன் 
வழுதியே குமரிச் சேர்ப்பன் வைகையந் துறைவன் மாறன் 
விழைவுறு பொதிய வெற்பன் மீனவன் கைதவன் சொல் 
பழைய பஞ்சவனே வெய்ய கெளரியன் பாண்டியன் பேர் 
** 13 பெயர்கள் 20 
**122

#21
** குறுநில மன்னர் அமைச்சர் 
குறும்பரே அரட்டர் வேளிர் குறுநில மன்னர் ஆகும் 
செறிந்திடும் புரோசரும் பேர் தேர்ச்சியில் துணைவர் எண்ணர் 
உறைந்திடு நூலோர் சூழ்வோர் உழையர் மந்திரரே நீதி 
அறிந்திடு முதுவர் முன்னோர் அமாத்தியர் அமைச்சர் நாமம் 
** 4, 9 பெயர்கள் 21 
**123

#22
** படைத் தலைவன் நிமித்திகன் கணக்கர் 
** வழியினுள்ளார் பரிவாரம் 
பெருகிய பொருநன் சேனாபதி படைத் தலைவன் பேரே 
வரு நிமித்திகன் பேர் சாக்கை வள்ளுவன் என்றும் ஆகும் 
கருது காவிதியர் என்ப கணக்கர்தம் வழியின் உள்ளார் 
பரவிய பரிவாரப் பேர் பரியாளம் என்னல் ஆமே 
** 2, 2, 1, 1 பெயர்கள் 22 
**124

#23
** முதல் வள்ளல் எழுவர் இடை வள்ளல் எழுவர் 
மிக்க செம்பியனே காரி விராடனே நிருதி தானும் 
தக்க துந்துமாரி தானும் சகரனும் நளனும் தாம் முன் 
அக்குரன் சந்திமானோடு அந்திமான் சிசுபாலன்னே 
வக்கிரன் கன்னன் சந்தன் இடைவள்ளல் வகுத்தவாறே 
** 7, 7பெயர்கள் 23 
**125

#24
** கடை வள்ளல் எழுவர் 
பாரி ஆய் எழிலி நள்ளி பசுந்தொடை மலையன் பேகன் 
ஓரியே கடையில் உற்றோர் உறு பொருள் தண்டாது ஈந்தும் 
வாரியில் இரந்தோர்க்கு இட்டும் வளர் புகழ் துதிக்க ஈந்தும் 
பேர் இயல் வையம் எண்ணப்பெற்றனர் முப்பால் ஆகும் 
** 7 பெயர்கள் 24 
**126

#25
** வைசியர் 
இளங்கோக்கள் மன்னர் பின்னர் இப்பர் எட்டியரே நாய்கர் 
வளம் பெறு வணிகர் நல் ஆன் காவலர் உழவர் மற்றும் 
விளங்கிய பரதர் மேய வினைஞர் செட்டியர் பன்னொன்றும் 
உளம்கெழு வைசியர் பேர் ஆம் உறு சிரேட்டிகளும் ஆகும் 
** 12 பெயர்கள் 25 
**127

#26
** சூத்திரர் 
மண்மகள் புதல்வர் வாய்ந்த வளமையர் களமர் என்றும் 
உண்மைசால் சதுர்த்தர் மாறா உழவர் மேழியர் வேளாளர் 
திண்மைகொள் ஏரின் வாழ்நர் காராளர் வினைஞர் செம்மை 
நண்ணு பின்னவர் பன்னொன்றும் நவின்ற சூத்திரர்தம் பேரே 
** 11 பெயர்கள் 26 
**128

#27
** மருத்துவர் குயவன் 
வெம்பிய பிடகர் ஆயுள்வேதியர் மருத்துவர்க்கு ஆம் 
அம்புவி மற்றும் மாமாத்திரர் என்றும் அவர்க்கே கூறும் 
கும்பகாரன் குலாலன் குறித்த வேட்கோவன் சக்கிரி 
நம்பும் மட்பகைவன் ஐந்தும் நாட்டிய குயவன் நாமம் 
** 3, 5 பெயர்கள் 27 
**129

#28
** சித்திரகாரர் கண்ணாளர் 
சிற்பர் ஓவியரே மோகர் சித்திரகாரர் நாமம் 
சிற்பியர் துவட்டர் ஓவர் தபதியர் சிறப்பின் மிக்க 
அற்புதர் யவனர் கொல்லர் அக்கசாலையர் புனைந்தோர் 
கற்பில் கம்மியரே கண்ணுள்வினைஞர் கண்ணாளர் நாமம் 
** 3, 11 பெயர்கள் 28 
**130

#29
** கொல்லர் தச்சர் தட்டார் 
கருமரே மனுவர் கொல்லர் காட்டிய நாமம் ஆகும் 
மரவினையாளன் மற்றை மயனொடு தபதி தச்சன் 
புரியும் பொன் செய்யும் கொல்லர் பொன் வினை மாக்கள் தட்டார் 
உரைகெழு சொன்னகாரர் அக்க சாலையரும் ஓதும் 
** 2, 3, 4 பெயர்கள் 29 
**131

#30
** சிற்பாசாரியர் பொருளினை உருக்கும் தட்டார் 
** பணித் தட்டார் முத்தம் கோப்பார் 
தருமுறை தெரிந்த சிற்பாசாரியர் மண்ணீட்டாளர் 
பொருளினை உருக்கும் தட்டார் பொன் செய்யும் புலவர் என்ப 
பெருகிய பணித்தட்டார்தம் பேர் கலந்தருநர்தாமே 
வருமுறை முத்தம் கோப்பார் மணி குயிற்றுநர் என்று ஆமே 
** 1, 1, 1, 1 பெயர்கள் 30 
**132

#31
** கன்னார் அநாரியர் சோனகர் உப்பு வணிகர்
கலத்தைச் செய் கஞ்சகாரர் கன்னுவர் கன்னார் ஆகும் 
மிலைச்சரே அநாரியர்க்கு ஆம் மிலேச்சரும் விதித்த பேரே 
துலைப்படும் யவனர் என்ப சோனகர் உவச்சரும் பேர் 
மலைப்பு இலா உமணர் உப்புவாணிகர் காணுங்காலே 
** 2 2 2 1 பெயர்கள் 31 
**133

#32
** வண்ணார் நாவிதர் வேதகாரர் நெய்வார் 
இருந்த காழியரே தூசர் ஈரங்கோலியரே வண்ணார் 
வரும் பெரு மஞ்சிகன் சீமங்கிலி மாசு தீர்த்துத் 
திருந்தும் ஏனாதி மூன்றும் சிறந்த நாவிதன் பேர் ஆகும் 
பொருந்தரே வேதகாரர் போற்றும் காருகர் நெய்வார் பேர் 
** 3, 3, 1, 1 பெயர்கள் 32 
**134

#33
** துன்னர் தோல் துன்னர் கூவனூலோர் 
** சங்கறுப்போர் ஊன் விற்போர் 
** தோல் வினை மாக்கள் 
பொல்லரே துன்னர் என்ப புகன்ற தோல் துன்னர் செம்மார் 
உல்லியர் கூவனூலோர் ஒளி வளை போழ்நர் தாமே 
மெல்லிய சங்கறுப்போர் சூனர் ஊன் விற்போர் என்ப 
சொல்லிய பறம்பர் தாமே தோல் வினை மாக்கள் நாமம் 
** 1, 1, 1,1,1,1 பெயர்கள் 33 
**135

#34
** சண்டாளர் பாணர் 
கொலைஞரே களைஞர் வங்கர் குணுங்கர் மாதங்கரோடு 
புலைஞரே இழிஞர் ஏழ்பேர் பொருந்து சண்டாளர் நாமம் 
உலவு சென்னியரே பண்டர் ஓவர் வந்தித்து நிற்போர் 
பலர் புகழ் மதங்கர் சூதர் பண்ணவர் பாணர் ஆமே 
** 7, 7 பெயர்கள் 34 
**136

#35
** செக்கான் கள் விற்போர் மீகாமன் 
சக்கிரி நந்தி செக்கான்தன் பெயர் ஆகும் என்ப 
தொக்க கள் விற்போர் நாமம் செளண்டிகர் துவசரோடு 
தக்கதோர் பிழியர் மற்றும் படுவரும் சாற்றும் அன்றே 
மிக்க மீகாமன் நாமம் மீகான் மாலுமி நீகான் ஆகும் 
** 2, 4, 3 பெயர்கள் 35 
**137

#36
** பண்ணுவார் யானைப் பாகர் 
** மெய்காப்பாளர் உறைகாரர் 
மாவலர் வதுவரோடு வாதுவர் பண்ணுவார் பேர் 
சோர்வு இலாப் பாகரோடு ஆதோரணர் யானைப்பாகர் 
காவலர் மெய்காப்பாளர் கஞ்சுகி என்றும் காட்டும் 
மேவு காரோடர் என்ப உறைகாரர் விதித்த பேரே 
** 3, 2, 2, 1 பெயர்கள் 36 
**138

#37
** தேர்ப்பாகன் ஒற்றர் மடையர் 
தூய தேர்ப்பாகன் சூதன் வலவன் சாரதியும் சொல்லும் 
வேயர் சாரணரே ஒற்றர் விதித்த பேர் மடையர் நாமம் 
ஏய வாலுவரே மிக்க கூவியர் என்றும் நூலை 
ஆயும் பானசிகர் என்றும் பாசகர் என்றும் ஆமே 
** 3, 2 பெயர்கள் 37 
**139

#38
** கூத்தர் தமிழ்க் கூத்தர் கழாயர் 
நாடகர் கண்ணுளாளர் நடர் வயிரியர் நிருத்தர் 
கோடியர் பொருநர் கூத்தர் அவிநயர் என்றும் கூறும் 
நீடிய வாயிலோரே நெடுந் தமிழ்க் கூத்தர் என்பர் 
ஆடும் வேழம்பர் என்ப கழாயருக்கு அடைத்த நாமம் 
** 8, 1, 1 பெயர்கள் 38 
**140

#39
** நரம்புக் கருவியாளர் தோற் கருவியாளர் 
** வெறியாட்டாளன் தேவராட்டி அயலவர் 
குயிலுவர் நரம்பின் ஆய கருவியைக் கொளுத்தும் மாக்கள் 
இயலும் தோற்கருவியாளர் இயவர் ஆம் வெறியாட்டாளன் 
சயமுறு தேவராளன் சாலினி தேவராட்டி 
அயலவர் நொதுமலாளர் வம்பலர் என்றும் ஆமே 
** 1,1, 1, 1, 2 பெயர்கள் 39 
**141

#40
** புதியவர் வழிச் செல்வோன் ஏவுவான்
** மூதுணர்ந்தோர் உரியோர் குறிக் கொள்வோர் 
புதியவர் விருந்தோர் என்ப அதிதி வம்பலரும் போற்றும் 
பதிகனே வழிச்செல்வோன் ஆம் வியவனே ஏவுவான் பேர் 
முதுவர் மூதுணர்ந்தோர் நாமம் கிழவரே உரியோர் பேர் ஆம் 
அதிகம் ஆம் குறிக்கொள்வோர் பாராயணர் என்பதாமே 
** 3, 1, 1, 1, 1,1  பெயர்கள் 40 
**142

#41
** தூதர் அடிமை 
வித்தகர் வினை உரைப்போர் விதியுளி வழியுரைப்போர் 
உத்தமம் ஆன பண்புற்றுரைப்பவர் தூதர் ஆகும் 
தொத்தொடு கிணகர் தாசர் தொழும்பொடு தொறு விருத்தி 
அத்தகு தொண்டு சேடர் ஆள் இவை அடிமை ஆமே 
** 4, 9 பெயர்கள் 41
**143

#42
** தோழன் தோழன் முன்னிலைப் பெயர் 
** தோழி தோழி முன்னிலைப் பெயர் 
சிலதனே நண்பன் பாங்கன் சேடனே துணைவன் தோழன் 
எலுவனும் ஆம் இவன் முன்னிலைப் பெயர் ஏடா என்ப 
சிலதியே சகியே பாங்கி சேடியே இகுளை தோழி 
நலமுறும் முன்னிலைப் பேர் நாடின் மற்று ஏடி எல்லா 
** 6 1 5 2 பெயர்கள் 42 
**144

#43
** குருடன் கூன் குறள் செவிடு முடம் ஊமை அவி 
அந்தகன் சிதடன் என்ப குருடன் ஆம் கோணல் கூன் பேர் 
சிந்து வாமனமே குஞ்சம் குறள் வதிர் செவிடு என்று ஆகும் 
முந்திய முடமே பங்கு குணி ஊமை மூகை மூங்கை 
தந்த பெண்டகனே பேடி நபுஞ்சகள் அலியே சண்டன் 
** 2, 1 3, 1, 2, 2, 4 பெயர்கள் 43 
**145

#44
** கொலையாளி வேதனைசெய்வோன் அச்சம் 
** உள்ளோன் வேகி வஞ்சகன் 
காதகன் சாருகன் தான் கடுங் கொலையாளி நாமம் 
வேதனை செய்வோன் பேரே அருந்துதன் விளம்பல் ஆகும் 
பீதனே சகிதனோடு பீருவும் அச்சம் உள்ளோன் 
ஓதிய சவனன் வேகி உற்ற வஞ்சகன் நிசாதன் 
** 2, 1,3, 1, 1 பெயர்கள் 44 
**146

#45
** தூர்த்தர் நாகரிகர் கிராமம் உற்றோன் 
படிறர் பல்லவர் பரத்தர் பகர் இடங்கழியரோடு 
விடரும் காமுகரும் தூர்த்தர் மிக்க நாகரிகர் என்ப 
கடிநகர்ப் பதி வாழ்கின்ற சதுரர் காமுகர் என்றும் பேர் 
அடைவுள கிராமம் உற்றோன் கிராமியன் ஆகும் அன்றே 
** 6, 2, 1 பெயர்கள் 45 
**147

#46
** வல்லோன் மாட்டார் குலம் உளோன் 
** கரியவன் நோய் உற்று ஒழிந்தோன் காலாள் 
** ஆயத்தமானோன் 
வலவை வல்லுநனே வல்லோன் மாட்டார் பேர் வல்லார் என்ப 
குலம் உளோன் குலீனன் ஆகும் கரியவன் குறித்த கள்வன் 
உலவு நோய் உற்று ஒழிந்தோன் உல்லாகன் பதாதி காலாள் 
அலைவு இல் சந்நத்தன் என்பது ஆயத்தமானோன் பேரே 
** 2, 1, 1, 1, 1, 1, 1 பெயர்கள் 46 
**148

#47
** கூர்மை'இல்லோன் நிர்வாணி மிகு புகழாளன் 
** அருளோன் கடிகை மாக்கள் 
மந்தனே கூர்மை இல்லோன் நக்கன் நிர்வாணி நாமம் 
வெந் திறல் இயவுள் என்ப மிகு புகழாளன் பேரே 
உந்திய அருளோனே காருண்ணியன் என்பர் எட்டர் 
வந்திகள் கவிகள் கற்றோர் வண்டரே கடிகை மாக்கள் 
** 1, 1, 1, 1, 5 பெயர்கள் 47 
**149

#48
** கொடையுளோன் வரைவறக் 
** கொடுத்தளிப்போன் ஏற்போன் 
புரவலன் ஈகையாளன் போற்றும் வேளாளன் தியாகி 
உரைகெழு வேள்வியாளன் உபகாரி கொடையுளோன் ஆம் 
வரைவறக் கொடுத்தளிப்போன் வள்ளியோன் என்று கூறும் 
இரவலன் பரிசிலாளன் யாசகன் தீனன் ஏற்போன் 
** 6, 1, 4 பெயர்கள் 48 
**150

#49
** திருடர் தரித்திரன் 
கரவடர் சோரர் தேனர் பட்டிகர் புரையோர் கள்வர் 
திருடர் ஆம் தரித்திரன் பேர் அகிஞ்சனன் தீனன் பேதை 
மருவு நல்கூர்ந்தோன் இல்லோன் வறியன் ஆதுலனே ஏழை 
விரவிய உறுகணாளன் இலம்பாட்டோன் மிடியன் ஆமே 
** 6, 11 பெயர்கள் 49 
**151

#50
** திண்ணியன் தானைத் தலைவர் 
வயவனே திறலோன் மற்றை வண்டனே மிண்டன் மள்ளன் 
வியவனே விறலோன் மீளி வீரனே திண்ணியன் பேர் 
நயம் இல் கூளியர் ஏறாளர் நாட்டும் வாள் உழவர் மள்ளர் 
சயம் மிகு மறவர் தானைத்தலைவர் ஆம் படரும் ஆமே 
** 9, 6 பெயர்கள் 50 
**152

#51
** பகைவர் 
அரிகளே செறுநர் சேரார் அமரார் உள்ளாரே நள்ளார் 
மருவலர் தெவ்வர் மாணார் மாற்றலர் மன்னார் ஒன்னார் 
தரியலர் ஒட்டார் வட்கார் சார்பிலார் பற்றார் செற்றார் 
பரரொடு கேளார் ஒல்லார் பகைவர் பேர் எழு மூன்றாமே 
** 21 பெயர்கள் 51 
**153

#52
** மேவினர் 
ஒல்லுநர் தொடர்ந்தார் சேர்ந்தார் ஒட்டுநர் பெட்டார் வேட்டார் 
புல்லுநர் பசைந்தார் மித்திரர் புரிந்தார் ஆர்வலர் விழைந்தார் 
நல்லவர் காதலித்தார் நள்ளுநர் நயந்தார் கூட்டம் 
மெல்ல ஒன்றுநர் மூவாறும் மேவினர் நாமம் ஆமே 
** 18 பெயர்கள் 52 
**154

#53
** சுற்றம் 
உற்றவர் இகுளை நட்டோர் உறவு ஒக்கல் கிளையே சார்ந்தோர் 
பற்றினர் சிறந்தோர் நட்பு பந்தமே பரிசனம் கேள் 
குற்றம் இல் நண்பு கூளி குடும்பமே கடும்பு நள்ளி 
சுற்றம் மூவாறு பேரும் சூழ்ந்த பாசனமும் சொல்லும் 
** 19 பெயர்கள் 53 
**155

#54
** கீழோர் 
பொறியிலார் கயவர் நீசர் புள்ளுவர் புல்லர் தீயோர்
சிறிய சிந்தையர் கனிட்டர் தீக்குணர் தீம்பர் தேரார் 
முறையிலார் முசுண்டர் மூர்க்கர் முசுடர் பல்லவரே கையர் 
மறைவு இலாக் கலர் மூவாறும் மன்னு பூரியரும் கீழோர்  
** 19 பெயர்கள் 54 
**156

#55
** அறிவிலான் தொழில் செய்வோர் வாயில் காப்போர் 
முழுமகன் சிதடன் பேதை மூடனே மண்ணை அஞ்ஞை 
இழுதையே மடனே ஆதன் ஏழையே அறிவிலான் பேர் 
தொழுவர் கம்மியரே மற்றைத் தொழில் செய்வோர் நாமம் ஆகும்
வழு இலா வாயிலாளர் வாயில் காப்போர் தம் பேரே 
** 10, 2, 1 பெயர்கள் 55 
**157

#56
** பெண் 
அரிவை அங்கனை மடந்தை ஆடவள் ஆட்டி மாயோள் 
சுரி குழல் மகடூஉ காந்தை சுந்தரி வனிதை மாது 
தெரிவை மானினியே நல்லாள் சிறுமியே தையல் நாரி 
பிரியை காரிகை அணங்கு பிணா பெண்டு பேதை பெண் பேர் 
** 24 பெயர்கள் 56 
**158

#57
** புருடன் ஆண் பெண்ணைச் சிறப்பிக்கும் நாமம் 
ஆடவன் மைந்தன் காளை ஆடூஉவே மகன் புமானே 
நீடிய குமரன் ஏழும் நிருமித்த புருடன் நாமம் 
நாடிய நம்பியோடு நங்கை என்று இரண்டு ஆண் பெண்ணைத் 
தேடிய கவிகள் எல்லாம் சிறப்பிக்கும் நாமம் ஆமே 
** 7, 1, 1 பெயர்கள் 57 
**159

#58
** பெண்பாற்குரிய பருவம் ஆண்டு 
பேதையே பெதும்பை மங்கை பெருகிய மடந்தையோடு 
தீது இலா அரிவை மற்றைத் தெரிவை பேரிளம் பெண் என்ப 
ஏதம் இல் பருவம் ஆண்டு ஏழ் எய்து பன்னொன்று பன்மூன்று 
ஓது பத்தொன்பான் ஐயைந்து உடன் முப்பத்தொன்று எண்ணைந்தே 
** 7 பெயர்கள் 58 
**160

#59
** கைம்மை பெற்றோன் வேற்றோர்க்குப் 
** பெற்ற பிள்ளை கன்னி பெற்ற பிள்ளை 
முன்னிய கைம்மை பெற்றோன் மொழிந்த கோளகனே ஆகும் 
பின்னை வேற்றோர்க்குப் பெற்ற பிள்ளை குண்டகனே என்ப 
பன்னி வாழ்க்கைப்படா முன் படர்ந்தொரு களவினாலே 
கன்னியே பெற்ற பிள்ளை கானீனன் என்றே ஓதும் 
** 1, 1, 1 பெயர்கள் 59 
**161

#60
** நாற்குலத்துள் உயர்குலத்து ஆணும் 
** இழிகுலப் பெண்ணும் கூடிப் பெற்ற பிள்ளை 
** உயர்குலப் பெண்ணும் இழிகுலத்து ஆணும் 
** கூடிப் பெற்ற பிள்ள 
உயர்ந்த நாற்குலத்தில் ஆண் பெண் உயர்பு இழிவு இரண்டும் கூடி 
இயங்கிய பிள்ளைப் பேரே அநுலோமன் என்று கூறும் 
நயந்த அப் பெண்ணும் ஆணும் நண்ணிய உயர்வு தாழ்வில் 
வியந்திடும் பிள்ளைப் பேரே விறல் பிரதிலோமன் ஆமே 
** 1,1 பெயர்கள் 60
**162

#61
** அநுலோமத்தாணும் பிரதிலோமப் பெண்ணும் 
** கூடிப் பெற்ற பிள்ளை அநுலோமப் பெண்ணும் 
** பிரதிலோமத்தாணும் கூடிப் பெற்ற பிள்ளை 
பெருத்த அவ் அநுலோமன்னே பிரதிலோமன் என்ற பேரில் 
உரைத்த ஆண் பெண்ணில் வந்தே உற்றவன் அந்தராளன் 
நிரைத்தவர் மாறிக் கூடிப் பிறந்தவன் நீண்ட பேரே 
விரித்தது வினவிக் கேட்கில் விராத்தியன் என்னும் நூலே 
** 1, 1 பெயர்கள் 61 
**163

#62
** தலைவி நோற்பாள் 
முந்திய குரத்தி அத்தை முதல்வி கோமாட்டி ஆசாள் 
தந்திடும் இறைவி ஐயை சாமியே தலைவி நாமம் 
நந்திய பிண்டி வாமன் நன்னெறி வழாது நோற்பாள் 
கந்தியே அவ்வை அம்மை கன்னியே கெளந்தி என்ப 
** 8, 5 பெயர்கள் 62
**164

#63
** அமங்கலை மலடி கோலம் செய்வாள் 
கைம்மையே கைனி பூண்ட கலன் கழி மடந்தை ஏங்கி 
விம்மிய விதவை நான்கே அமங்கலை விளங்கு நாமம் 
மைம்மையே வந்தி என்ப மலடிக்கு வகுத்த பேராம் 
செம்மையாம் கோலம் செய்வாள் திகழ் வண்ண மகளே என்ப 
** 4, 2, 1 பெயர்கள் 63 
**165

#64
** வேசை மூத்தாள் குமரி நாடகக் கணிகை 
பரத்தையே கணிகை சூளை பயனிலாள் வரைவின் மாது 
பொருட்பெண்டு பெறுவ கொள்வாள் விலைமகள் போற்றும் வேசை
விருத்தையே மூத்தாள் என்ப மின்னிடைக் குமரி கன்னி 
நிருத்தம் செய் மாது கூத்தி நாடகக் கணிகை நீள் பேர் 
** 8, 1, 1, 2 பெயர்கள் 64 
**166

#65
** அசதி பதினாறாண்டிற் பெண் பாடுவிச்சி  தம்பதி 
குட்டினி தொழுத்தை கூளி குறளியே படுவி குண்டம் 
துட்டையே அசதி ஆகும் சூழ்ந்திடும் யுவதியே ஈ
ரெட்டாண்டிற் பெண் மதங்கி எய்திய விறலி என்ப 
திட்டம் ஆம் பாடுவிச்சி தம்பதி இரட்டை ஆண் பெண் 
** 7, 1, 2, 2, பெயர்கள் 65 
**167

#66
** குறிஞ்சி மாக்கள் குறிஞ்சிப் பெண் 
** குறிஞ்சி நிலத்து இறைவன் 
குறவர் கானவரே மள்ளர் குன்றவர் புனவரோடும் 
இறவுளர் குறிஞ்சி தன்னில் இன்புறும் மாக்கள் பேரே 
குறி அறி குறத்தி மற்றைக் கொடிச்சி பெண் இறைவன் தானே 
திறன் மிகு மலையன் வெற்பன் சிலம்பன் கானக நாடன் பேர் 
** 6, 2, 4 பெயர்கள் 66 
**168

#67
** பாலையாளர் பாலைப் பெண் 
** பாலை நிலைத் தலைவன் 
கோளுறும் மறவரோடும் எயினரே குறித்த பாலை
யாளர் புள்ளுவர் இறுக்கர் அனைத்தும் ஆம் அவரோடு ஆடும் 
வாள் விழி எயிற்றி வன்கட் பிணாவொடு மறத்தி பெண் பேர் 
மீளியே காளை என்ப விடலையும் தலைவன் நாமம் 
** 4, 3, 3 பெயர்கள் 67 
**169

#68
** புளிஞர் 
குறவர் மாகுலவர் வெய்ய குன்றவர் கிராதர் மற்றை 
மறவர் கானவரே தீய வனசரர் சவரர் சொல்லும் 
முறை அழி கொலைஞர் பாவமூர்த்திகள் முருடர் சற்றும் 
பொறையிலார் எயினர் வேடர் புளிஞர் ஈரேழ் பொதுப்பேர் 
** 14 பெயர்கள் 68 
**170

#69
** முல்லையின் மாக்கள் 
முல்லையர் பொதுவர் அண்டர் முந்து கோவிந்தரே ஆன்
வல்லவர் குடவர் பாலர் மதித்த கோவலர் கோபாலர் 
சொல்லிய அமுதர் ஆயர் தொறுவரே இடையர் என்ப 
முல்லையின் மாக்கள் பேர்தாம் முந் நான்கும் ஒன்றும் ஆமே 
** 13 பெயர்கள் 69 
**171

#70
** முல்லை நிலத்தின் பெண், முல்லையின் தலைவன் 
தொறுவியே பொதுவி ஆய்ச்சி சூழ்ந்திடும் குடத்தி மற்றை 
நிறை புணர் இடைச்சி முல்லை நிலத்தின் பெண் நாமம் ஐந்து ஆம் 
குறைவு அறு கானநாடன் குறும்பொறை நாடனோடு 
முறை செயும் அண்ணல் தோன்றல் முல்லையின் தலைவன் நாமம் 
** 5 4 பெயர்கள் 70 
**172

#71
** மருத மாக்கள் மருத நிலப் பெண் 
** மருத நிலத் தலைவன் 
களமரே தொழுவர் மள்ளர் கம்பளர் உழவரோடு 
விளைஞரே கடைஞர் ஏழ் பேர் விளைவு உறு மருத மாக்கள் 
அளவு அறு கடைச்சி மற்றை ஆற்றுக் காலாட்டி பெண் பேர் 
உளம் மகிழ் மகிழ்நன் ஊரன் கிழவனும் தலைவன் ஆமே 
** 7, 2, 3 பெயர்கள் 71 
**173

#72
** நெய்தல் மாக்கள் நெய்தல் நிலப் பெண் 
பரதவர் நுளையரோடு பஃறியர் திமிலர் சாலர் 
கருதிய கடலர் கோலக் கழியரே நெய்தல் மாக்கள் 
விரவிய பரத்தி மேவு நுளைச்சியே அளத்தி நீண்டு 
பெருகிய கடற்பிணாவே நெய்தலில் பெண்ணின் நாமம் 
** 7, 4  பெயர்கள் 72 
**174

#73
** நெய்தல் தலைவன் உப்பமைப்போர் 
கொண்கனே துறைவனோடு குறித்த மெல்லம் புலம்பன் 
தண் கடல் சேர்ப்பன் நெய்தல்தலைவனைச் சாற்றும் நாமம் 
பண்படும் அளவர் தாமே பகர்ந்திடும் அந்நிலத்தில் 
உண்படும் உப்பமைப்போர் உமணரும் விதித்த பேரே 
** 4, 2 பெயர்கள் 73 
**175

#74
அணியினின் பண்பின் உற்ற உவமையின் மகடூஉ ஆடூஉ 
தணிவு இல் முன்னிலைப்பேர் வேறு சாற்றிய தோற்றமாக 
உணரும் ஐந்திணைப் பாற்பட்ட கருப்பொருள் உரைத்தாம் இப்பால் 
கணிதம் இல் முறைப்பேர் காட்டி காயத்தின் பேரும் சொல்வாம்
**176

#75
** பாட்டன் ஈன்றவன் 
தாதைதன் தாதையே மூதாதையே பாட்டன் நாமம் 
பேதம் ஒன்று இல்லா மற்றும் பிதாமகன் என்றும் ஆகும் 
தாதையே அப்பன் ஐயன் தந்தையே அம்மான் அத்தன் 
ஏதம் இல் பிதா என்று ஏழும் என்றவன் நாமம் ஆமே 
** 3, 7 பெயர்கள் 75 
**177

#76
** ஈன்றவள் வளர்த்த தாதி முன் பிறந்தாள் தங்கை 
அவ்வை அம்மனை பயந்தாள் அம்மையே யாயே அன்னை 
எவ்வம் இல் ஆயி மோய் தாய் ஈன்றவள் நாமம் ஒன்பான் 
செவ்விதின் வளர்த்த தாதி செவிலி கோடாய் கைத்தாய் ஆம் 
தவ்வை முன்பிறந்தாள் சேட்டை தங்கையே பின்னை தானே 
** 9 3 2 1 பெயர்கள் 76 
**178

#77
** தம் குடியிற் சுற்றம் மாமன் ஓர் குடியில் 
** கொண்டோன் மூத்தோன் பின்னோன் 
ஞாதியர் தாயத்தாரே நாட்டும் தம் குடியின் சுற்றம் 
மாதுலன் அம்மான் மாமன் சகலன் ஓர்குடியில் கொண்டோன் 
மூதுணர் சேட்டன் தம்முன் முன்னவன் அண்ணன் மூத்தோன் 
பேதம் இல் இளவல் பின்னே அநுசனே கனிட்டன் பின்னோன் 
** 2, 2, 1, 4, 4 பெயர்கள் 77 
**179

#78
** காதலன் 
கணவனே கொழுநன் வேட்டோன் கண்டன் வல்லவனே பத்தா 
துணைவனே தலைவன் கொண்கன் சூழ்ந்திடும் தவனே காந்தன் 
மணமகன் உரியோன் அன்பன் மணவாளன் பதியே கேள்வன் 
அணையும் காதலன் பேர் பன்னேழ் அன்றி நாயகனும் ஆமே 
**  18 பெயர்கள் 78 
**180

#79
** தேவி 
இல்லவள் உரிமை பன்னி குடும்பினி இல்லே இல்லாள் 
வல்லவை களமே தாரம் மனையாட்டி மனை விருந்தம் 
சொல்லிய பாரி வாழ்க்கைத்துணை களத்திரமே காந்தை 
நல்ல காதலி விரும்பு நாயகி தேவி நாமம் 
** 18 பெயர்கள் 79 
**181

#80
** மகன் 
சந்ததி மதலை சூனு தனயன் காதலனே மெய்யன் 
நந்தனன் சிறுவன் தோன்றல் குட்டனே நாட்டும் செம்மல் 
முந்திய மருமான் பிள்ளை முளை சுதன் புதல்வன் புத்திரன் 
மைந்தன் கால் பொருள் சேய் எச்சம் வழி பிறங்கடை மகன் பேர் 
** 24 பெயர்கள் 80 
**182

#81
** புதல்வி மகன் மகள் என்னும் இருபாற்கும் பொது 
** பிள்ளைப் பன்மை 
சிறுவி புத்திரியினோடு சிறந்திடும் தனயை ஐயை 
மறுஇல் பந்தனை மதிப்பா மகள் சுதை புதல்வி ஏழ் பேர் 
இறை ஆகும் எச்சம்தான் இவ் இருபாற்கும் ஏற்கும் என்ப 
குறுமக்கள் மகார் சிராரைக் கூறுப இவர்தம் பன்மை 
** 7, 1, 3 பெயர்கள் 81 
**183

#82
** படை 
தானையே பதாதி வெய்ய தந்திரம் தளமே தண்டம் 
வானியே ககனம் யூகம் வாகினி அனீகம் பாடி 
சேனையே கவனம் கூடிச் செறி பலம் பரிகலம்தான் 
ஊனம் இல் படை மூவைந்து ஆம்  உறு பதாகினியும் அப் பேர் 
** 16 பெயர்கள் 82 
**184

#83
** படை வகுப்பு படை உறுப்பு பின்னணி 
** கொடிப் படை படையறற்பேர் 
அணி உண்டை ஒட்டே யூகம் ஆய்வை படை வகுப்பு ஆம் 
அணி நெற்றி கையே தூசி அடு படை உறுப்பின் பேர் ஆம் 
அணி பின்னின் கூழை ஆம் தார் கொடிப்படை ஆகும் என்ப 
பணியக் கீழறுதலோடே அறை போதல் படையறற் பேர் 
** 4, 4, 1, 1, 2 பெயர்கள் 83
**185

#84
** மனிதர் மக்கட் பரப்பு 
மக்களே நரரே மாக்கள் மானவர் மாந்தர் மண்ணோர் 
தக்க ஆண்டையரே மைந்தர் சாற்றிய மனுடர் இன்பம் 
தொக்க மானுடர் ஈரைந்தும்  சொல்லிய மனிதர் பேர் ஆம் 
மக்கள்தம் பரப்பிற்குப் பேர் மன்பதை பைஞ்ஞீல் என்ப 
** 10, 2 பெயர்கள் 84 
**186

#85
** உடம்பு 
உடல் உறுப்பு அங்கம் யாக்கை உயிர்நிலை தேகம் காயம் 
சடலமே மூர்த்தம் மெய்யே தாவரம் தனு ஆதாரம் 
கடமொடு புதை புணர்ப்பு காத்திரம் பூட்சி ஆகம் 
புடைகொள் பூதிகம் சரீரம் புற்கலம் உடம்பின் பேரே 
** 22 பெயர்கள் 85 
**187

#86
** வடிவு பிணம் உடற்குறை 
வடிவமோடு உருவம் மேனி சட்டகம் வடிவின் பேர் ஆம் 
கடியும் நீள் பிரேதம் வேறு காட்டிய சவம் பிணப் பேர் 
அடையும் மற்று அப்பேர்தானே களேவரம் அழனம் என்று ஆம் 
உடலினில் குறை கவந்தம் அட்டை யூபமும் உரைக்கும் 
** 4, 4, 3 பெயர்கள் 86 
**188

#87
** கால் கரடு கணைக்கால் முழந்தாள் 
சரணமே பதமே மற்றைத் தாளொடு அங்கிரியே பாதம் 
கருதிய சலனம் மற்றைக் கழலுடன் அடியும் கால் ஆம் 
பரடு என்ப கரட்டின் நாமம் பற்றிய கணைக்கால் சங்கம் 
தரு முழந்தாள் முழந்து சானுவும் அதன் பேர்தானே 
** 8, 1, 1, 2 பெயர்கள் 87 
**189

#88
** தொடை அல்குல் இடை மருங்கின் பக்கம் 
நெடிய ஊரு குறங்கு நீள் வாமம் கவான் தொடைப் பேர் 
கடிதடம் நிதம்பம் என்ப கவின் திகழ் அல்குலின் பேர்
நடு நுசுப்பொடு மருங்கு நாட்டு மத்திமமே உக்கம் 
இடையின் பேர் மருங்கின் பக்கம் ஒக்கலை என்பதாமே 
** 4, 2, 5, 1 பெயர்கள் 88 
**190

#89
** வயிறு தேமல் கொப்பூழ் ஆண்குறி பெண்குறி 
உதரம் மோடு அகடு குக்கியுடன் பண்டி வயிற்றின் பேர் ஆம் 
திதலையே பொறியே துத்தி தேமல் ஆம் சுணங்கும் ஆமே 
இதலையே உந்தி நாபி இலஞ்சியே போகில் கொப்பூழ் 
புதிய ஆண்குறியே கோசம் பூப்பகம் பெண்ணின் சின்னம் 
** 5, 4, 5,1, 1 பெயர்கள் 89 
**191

#90
** மார்பு முலை முலைக்கண் 
அகலமே மருமம் நெஞ்சே ஆகமே உரமே மார்பு ஆம் 
நகிலமே கொம்மை கொங்கை நறுங் குயம் தனம் குருக் கண் 
பகர் பயோதரம் சுவர்க்கம் பறம்பு இவை முலையின் பல் பேர் 
திகழ் முலைக் கண்ணின் நாமம் சிலீமுகம் சூசுகங்கள் 
** 5, 9, 2 பெயர்கள் 90 
**192

#91
** கைத்தலம் முழங்கை மணிக்கட்டு 
** உள்ளங்கை விரல் நகம் 
கரம் அத்தம் பாணி தோளே கைத்தலம் நாற்பேர் ஆம் கூர்ப்
பரம் முழங்கை கிலுத்தம் பணித்திடும் மணிக்கட்டு என்ப 
உரவிய அகங்கை அங்கை குடங்கையே உள்ளங்கைப் பேர் 
விரல்கள் அங்குலி என்று ஆகும் மிகும் உகிர் நகமது ஆமே 
** 4, 1, 1, 3, 1, 1 பெயர்கள் 91 
**193

#92
** தோள் கழுத்து முதுகு பிடர் தோள்மேல் 
விறல் மிகு புயமும் மொய்ம்பும் மேவிய வாகுவும் தோள் 
கறை இல் கந்தரம் கிரீவம் களம் கண்டம் கழுத்தின் நாமம் 
புறம் வெரிந்^ அபரம் வென்னே போற்றிய முதுகு நாற்பேர் 
சிறுபுறம் கயில் எருத்தம் சுவல் பிடர் நிகலம் தோள்மேல் 
** 3, 4, 4, 4, 1 பெயர்கள் 92 
**194

#93
** முகம் உதடு மேல் உதடு கழ் உதடு பல் 
வதனம் ஆனனமே துண்டம் வத்திரம் முகம் என்று ஆகும் 
இதழ் உதடு அதரமே பாலிகை முத்தம் என்றும் பேர் மேல்
உதடதே ஓட்டம் ஆம் கீழ்உதட்டின் பேர் அதரம் என்று ஆம் 
விதம் உறும் எயிறு தந்தம் மேவிய தசனம் பல்லே 
** 4, 4, 1, 1, 3 பெயர்கள் 93 
**195

#94
** பல்லும் நகையும் மோவாய் நாக்கு காது 
பன்னிய முறுவல் மூரல் பல்லும் ஆம் நகையும் ஆகும் 
முன்னிய தாடி கட்டம் சுவுகம் மோவாயின் பேர் ஆம் 
மன்னும் நா சிகுவை தாரை மற்றைத் தாலுவும் நாக்கு ஆகும் 
கன்னமே அள்ளு கேள்வி காதின் பேர் செவியும் ஆமே 
** 2, 3, 4, 4 பெயர்கள் 94 
**196

#95
** மிடறு உள்நாக்கு மேல்வாய்ப்புறம் கதுப்பு மூக்கு 
அணல் மிடறு ஆகும் மற்றை அண்ணமே உண்ணாக்கின் பேர் 
அணரியே அணலே அண்ணம் ஆன மேல்வாய்ப்புறப் பேர் 
குணம் உறு கவுள் கபோலம் கொடிறு அனு கதுப்பின் கூற்று ஆம் 
துணை செய் ஆக்கிராணம் கோணம் துண்டமே நாசி மூக்கு ஆம் 
** 1, 1, 3, 4, 4 பெயர்கள் 95 
**197

#96
** கண் கண்மணி கண் இமை 
நயனம் நேத்திரமே அக்கம் நாட்டம் கோ நோக்கம் சக்கு 
வியனுறும் பார்வை தாரை விலோசனம் விழியே அக்கி 
செயம் உறு திருக்கு திட்டி திருட்டி அம்பகமே கண் ஆம் 
மயம் உறு தாரை கண்ணின் மணி விளிம்பு இமையின் நாமம் 
** 16, 1, 1 பெயர்கள் 96 
**198

#97
** புருவம் தெற்றி 
பிருகுடி நுதலே நீண்ட பீருவே புரூரம் பூரு 
புருவம் ஆம் புகுடியும் பேர் புடைபடு நிடலத்தோடு 
திரு நுதல் குளம் இலாடம் சேர்ந்த மத்தகமே நெற்றி 
மருவிய பாலம் முண்டம் அளிகமும் வகுக்கலாமே 
** 6, 8 பெயர்கள் 97 
**199

#98
** தலை குடுமி உச்சி
உரவிய தலையே மூர்த்தம் உவ்வியோடு உத்தமாங்கம் 
சிரம் முடி சென்னி முண்டம் சிகரம் மத்தகமும் ஆகும் 
திரு முடி சிமிலி சிக்கம் சிகை இவை குடுமி நாற்பேர் 
விரவிய சுடிகை சூழி மேவிய நவிரம் உச்சி 
** 9, 4, 3 பெயர்கள் 98 
**200

#99
** ஆண் மயிர் ஆண் பெண் மயிர்ப் பொது 
உளை நவிர் குடுமி பித்தை ஓரியே குழல் கார் குஞ்சி 
தளை சிகை தொங்கல் பங்கிதான் ஈராறு ஆண்மயிர்ப் பேர் 
வளர் குழல் கதுப்பு கேசம் மருவிய சுரியல் நான்கும் 
இளைய மைந்தர்க்கும் மற்றை இளங்கொடியார்க்கும் ஏற்கும் 
** 12, 4 பெயர்கள் 99 
**201

#100
** பெண் மயிர் மயிர்முடி 
குருள் குழல் விலோதம் ஓதி கூழை குந்தளம் மராட்டம் 
குரல் ஐம்பால் அளகம் பத்தும் பெண்மயிர் கூந்தலும் பேர் 
பெருகிய கொப்பு முச்சி பின்னகம் கொண்டை பந்தம் 
திருமிகு தம்மில்லம் பொன் சிகழிகை மயிர் முடிப் பேர் 
** 11, 7பெயர்கள் 100 
**202

#101
** பிறமயிர் செறி மயிர் மயிர்க்குழற்சி 
ஓரியே கேசம் பங்கி உளை உரோமம் மராட்டம் 
நேரும் இப் பேர்கள் ஆறும் பிற மயிர் நிகழ்த்தும் என்ப 
சேரும் அவ் உரோமம் மற்றைச் சிரோந்தமும் செறி மயிர்ப் பேர் 
வாரும் குந்தளம் விலோதம் மயிர்க் குழற்சிப் பேர் வைக்கும் 
** 6, 2, 2 பெயர்கள் 101 
**203

#102
** சடை அவயவம் சந்து 
குடிலமே வேணி நீண்ட கோடீரம் பின்னலோடு 
சடிலம் என்று ஐந்து பேரும் சடை என அடைவே சாற்றும் 
நெடிய காத்திரம் உறுப்பு நீள் அங்கம் அவயவப் பேர் 
கடிய மூட்டும் கொளுத்தும் கந்தும் சந்து ஆகும் அன்றே 
** 5, 3, 3 பெயர்கள் 102 
**204

#103
** நரம்பு கழலை கோழை உடல் தழும்பு இறை நரை 
சிரையே சங்கனனம் நாடி திருந்திய நரம்பு முப்பேர் 
அரலையே கழலை கோழை ஐயொடு காசம் ஆகும் 
மருவும் அங்கிதமே சேக்கை வசி வடு உடல் தழும்பு ஆம் 
தரு பொறி வரை இறைப் பேர் சரை நரை பலிதமும் பேர் 
** 3, 1, 2, 4, 2, 2 பெயர்கள் 103 
**205

#104
** தலை ஓடு எலும்பு கழியுடல் முழுவெலும்பு இந்திரியம் 
அழி தலையோட்டின் நாமம் கபாலமே அத்தி என்பு 
கழிவுறும் எலும்பின் நாமம் களேவரம் என்றும் காட்டும் 
கழியுடல் முழுவெலும்பு கங்காளம் என்பர் நூலோர் 
விழை பொறி கரணம் கந்தம் மேவும் இந்திரியம் முப் பேர் 
** 1, 3, 1, 3 பெயர்கள் 104
**206

#105
** சுவை ஒளி முதலியன ஓரும் கருவி உயிர் 
தரு சுவை ஒளி ஊறு ஓசை சாற்றிய நாற்றம் ஓரும் 
கருவி நா கண்ணே மெய்யே காதொடு மூக்கும் ஆகும் 
தெரிதரும் உயிரே ஆதன் சேதனன் பசுவே சீவன் 
அரிய புற்கலனே கூத்தன் அணு இயமானன் ஆன்மா 
** 5, 9 பெயர்கள் 105 
**207

#106
இருபதோடு இருபான் முப்பான் இருபான் ஈரைந்து மேலும் 
மருவிய ஆறு செய்யுள் மக்கள்தம் பெயர்க்குச் செய்தான் 
குரு நறுங் குன்றை வேந்தன் குணபத்திரன் தந்த நோன்மை 
தரு நெறி நோற்கும் வீரை தழைத்த மண்டலவன்தானே 
** இரண்டாவது மக்கட் பெயர்த் தொகுதி முற்றிற்று 

@3. விலங்கின் பெயர்த் தொகுதி
**208

#1
** காப்பு 
துலங்கு முக்குடை நிழற்ற துந்துபி முழங்க தேவர் 
நலம்பெறு கவரி வீச நன்மலர் மாரி தூவ 
அலங்கு உளை அரியணைக் கீழ் அமர்ந்த நான்முகனைப் போற்றி 
விலங்கின் பேர்த் தொகுதி தன்னை மேதினி வியப்பச் சொல்வாம்
**209

#2
** சிங்கம் யானையாளி 
அரி வயப்போத்து சீயம் அறுகு கேசரியே பூட்கை 
மருவிய மிருகராசன் வயமாவே மடங்கலோடு 
பரவு கண்டீரவம் பஞ்சானனம் சிங்கப் பல்பேர் 
பெருகிய யானையாளிப் பேர் யாளி அறுகு பூட்கை 
** 11, 3 பெயர்கள் 2 
**210

#3
** புலி 
வல்லியம் வயமாவோடு சித்திரகாயம் மற்றும் 
வெல்லு மா உழுவை பாய் மா வியாக்கிரம் தரக்கு வேங்கை 
கொல்லவே எழுந்து சீறும் குயவரி கொடுஞ் சார்த்தூலம் 
புல்லொடு புண்டரீகம் கொடுவரி புலியின் நாமம் 
** 14 பெயர்கள் 3 
**211

#4
** யானை 
தும்பி மாதங்கம் தூங்கல் தோல் கறையடி எறும்பி 
உம்பல் வாரணம் புழைக் கை ஒருத்தல் வல் விலங்கு நாகம் 
கும்பி நால் வாயே பூட்கை குஞ்சரம் கரேணு அத்தி 
கம்ப வேழம் உவாவே கரி கயம் களிறு கைம்மா
**212

#5
சிந்துரம் வயா வேகம் செறி இபம் புகர்முகங்கள் 
தந்தியே மதாவளம் தந்தாவளம் வழுவை ஆம்பல் 
மந்த மா மருண் மா மற்றை மத கயம் போதகத்தோடு 
உந்தும் ஏழைந்தும் மேலும் இரண்டும் மற்று உயர்ந்த யானை 
** 37 பெயர்கள் 5 
**213

#6
** யானைக் கூட்டத்துத் தலையானை மதகயம் 
** யானை வால் யானை வால் நுனி யானை முதுகு 
** யானை மத்தகம் 
உதவி செய்து இனத்தைக் காக்கும் உம்பலே யூதநாதன் 
மத கயம் மதோற்கடம் பின் வாலின் பேர் தாலவட்டம் 
அதன் நுனி வேசகம்தான் ஆம் முதுகின் பேர் மஞ்சு ஆம் 
மதகமும் கும்பந்தானும் மத்தகம் என்று கூறும் 
** 1,1,1,1,1,2 பெயர்கள் 6 
**214

#7
** யானை மதம் பாய் சுவடு யானைக் கைந் நுதி 
** யானை மதம் யானைக் கொம்பின் நடு 
** யானைத் தந்தம் யானைக் கடைக் கண் 
கரடமே மதம் பாய்கின்ற சுவடு கைந் நுதிகளே புட்
கரம் அது ஆம் மதத்தின் நாமம் கடம் கடாம் தானம் ஆகும் 
பெருகிய பிரதிமானம் பேசு கொம்பின் நடுப் பேர் 
கருது கோடு எயிறு தந்தம் நிரியாணம் கடைக் கண் ஆமே 
** 1, 1, 3, 1,,2,,1 பெயர்கள் 7 
**215

#8
** யானைச் செவியடி யானைக் கவுள் யானைத் துதிக்கை 
** உமிழ்நீர் யானைப் பல்லடி யானை முன் கால் 
** யானைப் பின் கால் யானைத் துதிக்கை 
கண்டிடும் செவியடிப் பேர் சூளிகை கவுள் கதுப்பு ஆம் 
விண்ட கை உமிழும் நீரே விலாழி பல்லடி கரீரம் 
கொண்ட காத்திரமே முன் கால் கூறிய அபரம் பின்கால்
தொண்டை தொண்டலம் துதிக்கை சுண்டையும்  அப்பேர் ஆமே 
** 1,1,1,1,1,1,3 பெயர்கள் 8 
**216

#9
** பிடி யானைத் திரள் யானைக் கன்று 
** யானை படுகுழி யானை நோய் 
வடவை அத்தினி இரண்டும் பிடிகள் ஆம் கரிணியும் பேர் 
கடகம் யானைத் திரள் பேர் கயந்தலை போதகங்கள் 
துடியடி களபமோடு கயமுனி யானைக் கன்று ஆம் 
படுகுழி பயம்பு ஆம் என்ப பாகலம் யானை நோயே 
** 3, 1, 5, 1, 1 பெயர்கள்  9 
**217

#10
** குதிரை குதிரை மயிர் குதிரைக் குளம்பு 
** குதிரைபோம் மார்க்கம் 
பரி துரகம் சிறந்த பாடலம் கிள்ளை பாய்மா 
துரகதம் வாசி உன்னி தூசி கந்தருவம் கற்கி 
அரி அயம் இவுளி மாவே அச்சுவம் புரவி கோரம் 
குரகதம் கோணம் கொக்கு கொய்யுளை சடிலம் கோடை
**218

#11
கந்துகம் கனவட்டம் போர் காட்டும் பத்திரி துரங்கம் 
குந்தம் அத்திரி ஆறைந்தும் குதிரையின் நாமம் ஆகும் 
வந்த மேசகத்தினோடு சுவல் குசை மயிர் குளம்பு 
வந்த பேர் குரம் குரச்சை மாதிகம் அது போம் மார்க்கம் 
** 30, 3, 2, 1 பெயர்கள் 11 
**219

#12
** பசு தெய்வப்பசு மலட்டுப் பசு 
** ஈன்ற பசு கன்று 
குலவிய பசுப் பேர் கூலம் கோ குடம் சுரபி ஆவே 
இலகிய நிரையே தேனு பெற்றம் இவ்வெட்டும் ஆகும் 
பலமுறு கபிலை தேனு பரவு தெய்வப் பசுப் பேர் 
மலடு தான் வசை ஆம் ஈற்றா வற்சலை கன்று வற்சம் 
** 8, 2, 1, 1, 1 பெயர்கள் 12 
**220

#13
** ஓர் ஈற்றுப் பசு நற்பசு பசு முலை உதை காற் பசு 
** முலை மடி பசுக் கூட்டம் 
பரவும் ஓர் ஈற்றா கிட்டி பத்திரை நற் பசுப் பேர்  
சுரை முலை ஆகும் மற்றைச் சுதை உதை காற் பசுப் பேர் 
திரு முலை மடியின் நாமம் செருத்தல் ஆபீனம் என்ப 
நிரை தொறு காலி கோட்டம் நீண்ட காலேயம் கூட்டம் 
** 1, 1, 1, 1, 2, 5 பெயர்கள் 13 
**221

#14
** எருத்து எருத்தின் முரிப்பு 
** பேரெருத்து இடபம் 
பாறல் சே பெற்றம் பூணி பாண்டில் கொட்டியம் இறாலே 
ஏறொடு மூரி புல்லம் எருத்தின் பேர் இமில் முரிப்பு ஆம் 
பாறல் பேரெருத்தின் நாமம் பகடும் தூர்வகமும் ஆகும் 
ஏறு உக்கம் நரையே நந்தி இடபம் ஆம் கூளியும் பேர் 
** 10, 1, 3, 5 பெயர்கள் 14 
**222

#15
** பொதியெருது எருமை எருமை ஆண் 
** மலட்டெருமை 
தூர்வகம் துரியம் என்ப பொதியெருது எருமையின் பேர் 
காரானே வடவை மேதி சைரிபம் கவரி காரா 
மூரியே மகிடம் எட்டும் மொழியும் மற்று ஆண் பொதுப் பேர் 
பாரிய கடாவினோடு பகடு ஆம் மை மலட்டின் நாமம் 
** 2,8, 2, 1 பெயர்கள் 15 
**223

#16
** ஆட்டின் பொது 
அருணம் செம்மறியே மோத்தை அசம் உதள் உடுவே கொச்சை 
துருவை ஏழகம் வற்காலி துள்ளலே பள்ளை வெள்ளை 
வருடை மேடம் கடா மை மறி வெறி கொறியே சாகம் 
புருவையே தகர் மூவேழும் இரண்டும் ஆட்டின் பொதுப் பேர் 
** 23 பெயர்கள் 16 
**224

#17
** செம்மறியாடு செம்மறியாட்டு ஆண் 
** ஆட்டுக் குட்டி 
துருவை மை கொறி முப்பேரும் தோற்றும் செம்மறியாட்டின் பேர்
செரு மலி தகர் கடாவே திண்ணகம் ஏழகங்கள் 
பரவு கம்பளம் என்று ஐந்தும் பற்றும் அவ் ஆணின் பல் பேர் 
மருவிய குட்டன் சோரன் மறி பறழ் குட்டி ஆமே 
** 3, 5, 4 பெயர்கள் 17 
**225

#18
** வெள்ளாடு வெள்ளாட்டுக்குட்டி 
** வெள்ளாட்டு ஆண் வரையாடு 
வெள்ளை வற்காலி கொச்சை வெள்ளாட்டின் நாமம் ஆகும் 
வெள்ளையே அதன் மறிப் பேர் மேவிய செச்சை சாகம் 
தள்ளிய மோத்தை முப் பேர் சாற்றுமே இவற்றின் ஆண் பேர் 
வள்ளிய சரபத்தோடு வருடையும் வரையாடு ஆமே 
** 3,1,3,2 பெயர்கள் 18 
**226

#19
** பன்றி 
கேழலே அரி குரோடம் கிரி கிடி கிருட்டி ஏனம் 
மோழலே இருளி முந்து வல்லுளி களிறு மைம்மா 
போழ்முகக் கோட்டுமாவே போத்திரி வராகம் கோலம் 
சூழும் ஈரெட்டும் பன்றி சூகரம் எறுழியும் பேர் 
** 18 பெயர்கள் 19 
**227

#20
** முட்பன்றி, முட்பன்றி முள், கரடி 
சல்லியம் முளவுமா எய் சல்லகம் முட்பன்றிப் பேர் 
சொல்லும் இப் பன்றி முள்ளு சூழ் சலம் சலலம் என்ப 
பல்லுகம் உளியம் எண்கு பல்லூகம் எலுவினோடு 
பல்லமே கரடி நாமம் பகர் குடாவடியும் ஆமே 
** 4 2 7 பெயர்கள் 20 
**228

#21
** சாமரம் கவரி மா காட்டா கீரி 
சவரி சீகரமே வீசும் சாமரம் கவரியும் பேர் 
கவரிமா படகம் பட்டம் மான மா எகினும் காட்டும் 
கவய மா ஆமா காட்டா காத்திரி நகுலம் என்னா 
இவை இருபேரும் அன்றித் தீர்வையும் கீரி ஆமே 
** 3 4 2 3 பெயர்கள் 21 
**229

#22
** மான் கலை புல்வாய் 
அரிணம் சாரங்கம் நவ்வி அடல் உழை பிணையே சூனம் 
மிருகமே மறி குரங்கம் மேவும் மான் ஏணமும் பேர் 
இரலை வச்சயமே புல்வாய் கலை கருமானும் ஏற்கும் 
இரலை புல்வாய்க்கும் பேர் ஆம் என்றனர் குன்றா நூலோர் 
** 10 4 1 பெயர்கள் 22 
**230

#23
** கழுதை கோவேறு கழுதை ஒட்டகம் 
கழுதையின் பேர் வாலேயம் கர்த்தபம் காளவாயே 
அழ குஇல் அத்திரியே கோகு வேசரி கரமும் ஆகும் 
குழைவுறா வேசரிப் பேர் கோவேறுகழுதைக் கூற்றாம் 
அழிவு இல் ஒட்டகம் தாசேரம் அத்திரி நெடுங்கழுத்தல் 
** 7 1 3 பெயர்கள் 23 
**231

#24
** நரி முசு 
ஓரி கோமாயு ஊளன் ஒண்டனே இகலன் சம்பு 
பூரிமாயன் குரோட்டா சிருகாலன் நரியே போற்றும் 
ஓரியே கோலாங்கூலம் உற்ற மைம் முகனே கள்வன் 
சீரிய கலையோடு ஐந்தும் முசு எனச் செப்பலாமே 
** 9, 5 பெயர்கள் 24 
**232

#25
** நாய் பெண்ணாய் செந்நாய் 
சூரனே முடுவல் பாசி புரோகதி சுனகன் குக்கல் 
கூரனே எகினன் அக்கன் குரைமுகன் ஞமலி ஞாளி 
சாரமேயன் சுணங்கன் சுவாவே நாய் தான் ஐம் முப் பேர் 
வீரிய முடுவல் பெண்ணாய் விருகம் கொக்கு இரண்டும் செந்நாய் 
** 15, 1, 2 பெயர்கள் 25 
**233

#26
** பூஞை கத்தூரி நாவி 
வெருகுடன் அலவன் ஓதி விடாரகம் விலாளம் பூசை 
பொருது மார்ச்சாலம் பாக்கன் இற்புலி பூஞை ஒன்பான் 
மருமிகு துருக்கம் நானம் மான்மதம் நரந்தம் நான்கும் 
கருது கத்தூரியின் பேர் காட்டிய மறுவி நாவி 
** 9, 4, 1 பெயர்கள் 26 
**234

#27
** குரங்கு கருங்குரங்கு 
வலிமுகம் கடுவன் பாயும் வானரம் அரியே மந்தி 
பிலவங்கம் கோகிலம் கான் பெயர்ந்த கோடரமே யூகம் 
கலக மர்க்கடமே நாகம் கவி குரங்கு இவை ஈராறு ஆம் 
குலவு காருகமே யூகம் கூறிய கருங் குரங்கே 
** 12, 2 பெயர்கள் 27 
**235

#28
** ஓந்தி மூஞ்சூறு எலி 
சாய்ந்த சாயானதங்கள் சரடமே காமரூபி 
ஏய்ந்த தண்டு ஓமான் ஓதி இசை கோம்பி முசலி ஓத்தி 
ஓந்தி ஆம் சுவவு சுண்டன் உறு சுசுந்தரி மூஞ்சூறே 
ஆய்ந்திடு சிகரி ஆகோடு இரும்பனும் அகழ் எலிப் பேர் 
** 9, 3, 3 பெயர்கள் 28 
**236

#29
** காரெலி பெருச்சாளி அணில் உடும்பு முயல் 
கருப்பை காரெலியின் நாமம் களதம் துந்துளமே ஆகு 
பெருச்சாளி மூடிகத்தோடு  உந்துரு என்றும் பேர் ஆம் 
வரிப்புறம் வெளில் அணில் பேர் வரும் தடி முசலி கோதா 
தரித்து எழும் உடும்பின் நாமம் சசம் முயல் என்னலாமே
** 1, 5, 2, 3, 1 பெயர்கள் 29 
**237

#30
** விலங்கின் ஆண் மரபு 
** விலங்கின் ஆண் பெயர் - கடுவன் மா 
கடுவன் மா ஒருத்தல் போத்து கலை தகர் களிறு சேவி
னொடு பகடு உம்பல் ஏறோடு ஓரி ஈராறும் ஆண் பேர் 
வடு அறு குரங்கு பூஞை மற்று இவை கடுவன் ஆமே 
அடு திறல் யானை பன்றி ஆடல் வெம் புரவி மா ஆம் 
** 12, 2, 3 பெயர்கள் 30 
**238

#31
** ஒருத்தல் போத்து கலை 
கரடி புல்வாய் மான் யானை கவரியோடு எருமை பன்றி 
பொரு புலி மரை என்று ஒன்பான் புகன்றிடும் ஒருத்தல் ஆகும் 
மரை பசு புலியே பூஞை மற்றைப் புல்வாயும் போத்து ஆம் 
கருதிய முசுவும் மானும் கலை எனக் காட்டலாமே 
** 9, 5, 2 பெயர்கள் 31 
**239

#32
** தகர் களிறு சே பகடு உம்பல் 
துருவாடு வேழம் யாளி சுறா தகர் என்றே சொல்லும் 
கரியொடு சுறவு பன்றி களிறு எனக் காட்டலாமே 
செரு மலி குதிரை பெற்றம் புல்வாயே சே என்று ஆகும் 
எருமையோடு யானை பெற்றம் பகடு இபம் உம்பல் ஆமே 
** 4, 3, 3, 3, 1 பெயர்கள் 32 
**240

#33
** ஏறு ஓரி 
ஆனுடன் எருமை பன்றி ஆய் மயிர்க் கவரி சங்கு 
மானொடு மரை புல்வாயும் மாறு கொள் சுறவும் ஏறு ஆம் 
ஊன் நுகர் நரியினோடு முசு இவை ஓரி ஆகும் 
மான நூல் விலங்கின் ஆணின் மரபு என அடைத்தவாறே 
** 9, 2 பெயர்கள் 33
**241

#34
** விலங்கின் பெண் மரபு 
** விலங்கின் பெண்பால் பிடி பிணை 
பிடி பிணை பெட்டை மந்தி பிணாவோடு ஆ நாகு பாட்டி 
கொடு விலங்கின் பெண்பால் ஆம் குஞ்சரம் கவரியோடு 
நெடிய ஒட்டகம் இம் மூன்றும் நெடும் பிடி நிகழ்த்தும் நாமம் 
வடிவுள உழை புல்வாய் நாய் வராகமே பிணையின் வைக்கும் 
** 8, 3, 4 பெயர்கள் 34 
**242

#35
** பெட்டை மந்தி பிணா ஆ 
ஒட்டகம் கழுதை வாசி உறு சிங்கம் மரை இவ் ஐந்தும் 
பெட்டை ஆம் முசுவோடு ஊகம் பேசிய குரங்கு மந்தி 
பட்ட புல்வாய் நாய் பன்றி பகர்ந்திடும் பிணா எனும் பேர் 
கட்டிய எருமை பெற்றம் காட்டுள மரையே ஆ ஆம் 
** 5, 3, 3, 3 பெயர்கள் 35 
**243

#36
** நாகு பாட்டி விலங்கின் பெண் பால் பொது 
** விலங்கின் ஆண் பொது 
எருமையே மரையே பெற்றம் ஏற்ற நீர்ச்சாதி நாகு ஆம் 
நரி பன்றி நாய் இம் மூன்றும் நாட்டிய பாட்டி ஆகும் 
பெருகு பெண்பால் பிணா பெண் பேணும் ஆண் எவையும் ஆண் ஆம் 
பொரு இல் நூல் உணர்ந்து சொன்ன புலவர்தம் வாக்குத் தானே 
** 4 3 2 1 பெயர்கள் 36 
**244

#37
** விலங்கின் பிள்ளை மரபு 
** விலங்கின் பிள்ளை பறழ் குருளை குட்டி 
பறழ் பிள்ளை குழவி குட்டி பார்ப்பொடு குருளை கன்று 
மறியே போதகம் இவ் ஒன்பான் வல் விலங்கின் பிள்ளைப் பேர் 
பறழொடு குருளை குட்டி பற்றிய மூன்று பேரும் 
உறு புலி முயல் வராகம் ஓதிய நரி நாய் ஆமே 
** 9, 5 பெயர்கள் 37 
**245

#38
** பிள்ளையும் மறியும் (பறழ் பிள்ளை குழவி குட்டி 
** பார்ப்பு) எனும் ஐந்தும் 
முறுகு நாய் அன்றி மற்றை மொழிந்திடும் பிள்ளை என்ப 
மறி என்பது ஆடு அழுங்கும் மானொடு குதிரை வைக்கும் 
பறழ் பிள்ளை குழவி குட்டி பார்ப்பு என ஐந்து பேரும் 
குறியுள குரங்கே ஆதி கோட்டில் வாழ் விலங்கின் பிள்ளை 
** 4 பெயர்கள் 38 
**246

#39
** கன்று குழவி போதகம் 
கடமை மான் எருமை பெற்றம் கவயம் ஒட்டகமே யானை 
விடு பரி மரை கராமே மேவிய கவரி கன்று ஆம் 
கடமை மான் எருமை யானை காட்டிய குழவி ஆகும் 
அடு புலி சிங்கம் யானை ஆன போதகம் என்று ஆமே 
** 11, 4, 3 பெயர்கள் 39 
**247

#40
** பறழ் குட்டி பிள்ளை பறழ் குட்டி பறழ் பிள்ளை 
முறுகிய கீரி பூனை முயல் அணில் என்ப நான்கும் 
பறழொடு குட்டி பிள்ளை பன்னிய மூன்றும் ஆகும் 
பறழொடு குட்டி தானே பாக்கனும் அணிலும் என்ப 
பறழ் பிள்ளை இரண்டும் சொல்லில் பார்ப்பொடு தவழ் சாதிப் பேர் 
** 4, 2, 2 பெயர்கள் 40 
**248

#41
** குருளை கன்று குழவி குருளை விலங்கினிற் பொது 
குருளையும் கன்றும் மானில் கொள்ளுப குழவியோடு 
குருளையும் யாளி கொள்ளும் குழவியே முசுவின் ஆகும் 
குருளையும் முசுவின் கூற்று ஆம் கூறிய மாவே மானே 
மிருகமே குரங்கே நான்கும் விலங்கினிற் பொதுப்பேர் ஆமே 
** 1, 1, 1, 1, 4 பெயர்கள் 41 
**249

#42
** விலங்கின் கூட்டம் விலங்கின் வால் 
** விலங்கினது வாலின் &ழ் 
சாலமே வியூகம் யூதம் சாற்றிய குலம் விருந்தம் 
கோலம் ஆர் கணம் விலங்கின் கூட்டம் ஆம் பிறவும் ஏற்கும் 
கூலம் வேசகமே தோகை  குறித்திடும் இலாங்கூலம் வால் 
வாலதி என்றும் பேர் ஆம் வாலின் கீழ் வெருகம் ஆமே 
** 6, 5, 1 பெயர்கள் 42 
**250

#43
** விலங்கின் கொம்பு 
** கொம்பு இலா விலங்கு தோல் 
மருப்பொடு சிருங்கம் கோடு மற்றைய உலவை கொம்பு ஆம் 
குருத்திடும் விடாணமும் பேர் குமரம் கொம்பு இலா விலங்கு ஆம் 
கிருத்தியே புறணி போர்வை கிளர் அதள் ஒலியல் தொக்கு 
துருத்தியே சருமம் பச்சை துவக்கு உரி வடகம் தோல் ஆம் 
** 5, 1, 12 பெயர்கள் 43
**251

#44
** ஊன் புலால் பசுவினது இறைச்சி 
தசை புலால் புலவு புண்ணே தடியொடு புளிதம் தூவே 
மிசிதம் வள்ளுரம் விடக்கு பேசில் ஊனின் பேர் பத்து ஆம் 
பொசிதரும் முடையே ஊழ்த்தல் பூதியே தசை புலால் ஆம் 
பசுவினது இறைச்சிதானே பகர்ந்த வள்ளுரம் அது ஆமே 
** 10, 4, 1 பெயர்கள் 44 
**252

#45
** இரத்தம் கொழுப்பு 
எருவையே நெய்த்தோர் சோரி இயம்பிடும் உதிரம் புண்ணீர் 
குருதி செம்பால் புலால் நீர் குறித்த சோணிதமே செந்நீர் 
கருதிய சுடுவன் மற்றைக் கறை ஈராறு இரத்தத்தின் பேர் 
விரவிய நிணம் கொழுப்பு விளரொடு விழுக்கும் ஆமே 
** 12, 3 பெயர்கள் 45 
**253

#46
** கருப்பம் வழும்பூ ஈரல் முடை மாசு உள்ளின் மாசு 
கருவொடு சினை பீள் சூலே கருப்பமே வயாவும் ஆகும் 
மருவிய வழும்பின் நாமம் வழுக்கு என்ப ஈருள் ஈரல் 
கருதிய முடையின் நாமம் காட்டிய புலவோடு ஊத்தை 
உருவிய மலமே மாசே உபமலம் உள்ளின் மாசு ஆம் 
** 5, 1, 1, 2, 1, 1 பெயர்கள் 46 
**254

#47
** பாம்பு சாரைப்பாம்பு 
அரவு கட்செவியே போகி அகி அரி வியாளம் சர்ப்பம் 
உரகம் பன்னகமே நாகம் உற்ற மாசுணமே சக்கிரி
பரவிய புயங்கம் பாந்தள் அங்கதம் பணி பாம்பின் பேர் 
இரைகொளும் துண்டம் சாரை இராசிலம் என்பதும் பேர் 
** 16, 2 பெயர்கள் 47 
**255

#48
** மண்டலி கண் குத்திப் பாம்பு 
** பெரும் பாம்பு நாகம் 
விடம் உமிழ் மண்டலிக்கு மேவு கோளகமே நாமம் 
நெடிய மால் உதானனே கண்குத்திப் பாம்பு என்று கூறும் 
நெடிய மாசுணமே பாந்தள் நீள் பெரும் பாம்பின் நாமம் 
முடியவே எழுந்து சீறும் மூர்க்கனே நாகம் என்ப 
** 1, 1, 2, 1 பெயர்கள் 48 
**256

#49
** கருவழலை பறவை நாகம் பாம்பின் படம் 
** படப்பொறி பாம்பின் நச்சுப் பல 
** பாம்புயிர்ப்பு காற்று 
வரு கரு வழலையின் பேர் இராசமா நாகம் ஆகும் 
குரவிய பறவை நாகம் குக்குட சர்ப்பம் என்ப 
பரவிய படம் பணம் பை படப் பொறி உத்தி துத்தி 
கருதிய தட்டம் நஞ்சு காலும் பல் அதட்டம் காற்று ஆம் 
** 1, 1, 2, 2, 1, 1 பெயர்கள் 49 
**257

#50
** அன்னம் மயில் 
எகினம் ஓதிமம் மராளம் விகங்கம் வக்கிராங்கம் அன்னம் 
சிகியொடு ஞமலி தோகை சிகாவளம் சிகண்டி மஞ்ஞை 
ஒகரமே மயூரம் மற்றும் உறு பிணி முகம் கலாபி 
மகிழ்வுறு நவிரம் பீலி கேகயம் மயில் பன் முப் பேர் 
** 5, 13 பெயர்கள் 50 
**258

#51
** மயிற்பீலி மயிற்குரல் மயிலிறகு, அன்னத்தின் இறகு 
சரணமே சிகண்டம் கூந்தல் சந்திரகம் கலாபம் கூழை 
பெருகிய தோகை தொங்கல் பீலி ஆம் தூவியும் பேர் 
மருவிய அகவல் ஆலல் மயிற்குரல் ஏங்கலும் பேர் 
வரும் முருந்து இறகின் முள்ளாம் மற்று அன்னச் சிறகு தூவி 
** 9, 3, 1, 1 பெயர்கள் 51
**259

#52
** கருடன் சாதகப்பறவை 
மன்னிய கலுழன் மற்றை வைனனே வைனதேயன் 
பன்னக வைரியோடு தார்க்கியன் பறவை வேந்தன் 
உன்னிய கருடன் நாமம் உவணமும் அதற்கே கூறும் 
சொன்ன சாதகப் புள் தானே சூழ்ந்த சாரங்கம் என்ப 
** 7, 1 பெயர்கள் 52 
**260

#53
** எண்காற் புள் சக்கரவாகப் புள் 
சிம்புள் வாருண்டம் மற்றைச் செப்பிய வருடையோடு 
சம்பரம் துரோணம் வெய்ய சரபம் எண்காற் புள் பேராம் 
வெம்பிய நேமிப் புள்ளு விரும்பு சக்கரவாகப் புள் 
கொம்பிய கோகம் யானைக் குருகு என்று கூறலாமே 
** 6, 3 பெயர்கள் 53
**261

#54
** சுழுகு பருந்து அசுணமா 
இருந்த புண்டரமே கங்கம் எருவையே பவணையோடு 
கருஞ் சிறை உவணம் ஐந்தும் கழுகு என்ப சகுந்தமும் பேர் 
திருந்திய சேனம் பாரசிகை பாறு சேரும் கங்கம் 
பருந்தின் பேர் அசுணமாவே பகரில் கேகயம் என்று ஓதும் 
** 6, 4, 1 பெயர்கள் 54 
**262

#55
** கிளி கருங்கிளி நிலாமுகி செம்போத்து 
சாருவே அரியே வன்னி தத்தையே சுகமே கிள்ளை 
கீரமே சுவாகதம்தான் கிளி அவந்திகையும் ஆகும் 
கீரமும் கிள்ளைதானும் கிளர் கருங்கிளியின் நாமம் 
சாரமா நிலாமுகிப் பேர் சகோரம் செம்போத்து குக்கில் 
** 9, 2, 1, 1 பெயர்கள் 55 
**263

#56
** குயில் கோட்டான் நாகண வாய்ப்புள் 
கோகிலம் களகண்டம்மே கோரகை குயிலின் பேர்தான் 
ஆகுமே பிகத்தினோடு பரபுட்டம்தானும் அப் பேர் 
கூகையும் உலூகமும் பேர்க் குடிஞையும் குராலும் கோட்டான் 
நாகணவாய்ப் புள் பூவை நவிற்றும் சாரிகையும் ஆமே 
** 5, 4, 2 பெயர்கள் 56 
**264

#57
** வலியன் காரிப்பிள்ளை கரிக்குருவி 
கஞ்சனம் கிகிணியோடு வயவனே கஞ்சரீடம் 
விஞ்சு பாரத்துவாசம் வலியனை விதித்த பேரே 
வஞ்சுளன் வயவன் மற்றை வயான் என்ப காரிப் பிள்ளை
கஞ்சனம் கயவாய் என்ப கரிக் குருவிப் பேர்தானே 
** 5, 3, 2 பெயர்கள் 57 
**265

#58
** சிச்சிலி கூகை கோழி 
சிரல் கவுதம் பொன் வாய்ப் புள் தித்திரி சிச்சிலிப் பேர்
கருதிய பெரும்புள்ளோடு கெளசிகம் ஊமன் கூகை 
குருகு காலாயுதம் பேர்க் குக்குடம் ஆண்டலைப் புள் 
பெருகு வாரணம் என்று ஐந்தும் பேசிய கோழி ஆமே 
** 4, 3,,5 பெயர்கள் 58 
**266

#59
** ஊர்க்குருவி நிலங்கு கானங்கோழி 
** வானம்பாடி காடை சிவல் 
குலிங்கமே சடகமே ஊர்க் குருவி ஆம் புலிங்கமும் பேர் 
நிலங்கு பூழ் ஆம் காதம்பம் நெடிய கானங்கோழிப் பேர் 
கலிங்கமே கம்புள் வானம்பாடியாம் குறும்பூழ் காடை 
இலங்கு கோரசமே புல்லோடு இதல் சிவல் இவை முப்பேரே 
** 3, 1, 2, 1, 3,பெயர்கள் 59 
**267

#60
** கவுதாரி பகண்டை பொரய்யாப்புள் காகம் ஆந்தை 
சிரவமே கெளதாரிப் பேர் சில்லையே பகண்டை ஆகும் 
மருவிய சலாங்குதானே வாய்த்த பொய்யாப்புள் ஆமே 
கரடம் வாயசம் அரிட்டம் கரும்பிள்ளை கொடியே காகம் 
இருடி பிங்கலையே ஆந்தை கின்னரம் என்பதும் பேர்
** 1, 1, 1, 5, 3 பெயர்கள் 60 
**268

#61
** கரும்புறா புறாவின் பொது மாடப்புறா 
** உள்ளான் தூக்கணங்குருவி 
கரும்புறாவின் பேர் பாராவதம் என்ப கபோதமும் பேர் 
பொருந்து தூதுணம் கபோதம் களரவம் புறாப் பொதுப் பேர் 
பரிந்து கல் மேய்வு காளபதமே மாடப்புறா ஆம் 
திருந்திய உள்ளல் உள்ளான் சிதகம் தூக்கணங் குரீஇயே 
** 2, 3, 2, 1, 1 பெயர்கள் 61 
**269

#62
** சம்பங்கோழி அன்றில் கொய்யடிநாரை 
** பெருநாரை கருநாரை வெள்ளைநாரை 
கருதிய கம்புள் சம்பங்கோழி ஆம் கவுஞ்சம் அன்றில் 
குருகு வண்டானம் என்ப கொய்யடி நாரையின் பேர் 
பெருகிய பிதாவே போதா பெருநாரை சிகரி ஒன்றே
கருநிறநாரை வெள்ளைநாரை சாரசம் என்று ஆமே 
** 1, 1, 1, 2, 1, 1 பெயர்கள் 62
**270

#63
** நீர்க்காக்கை கொக்கு நீர் வாழ் பறவை 
மன்னு நீர்க் காக்கை அர்க்கம் மற்றும் காரண்டமும் பேர் 
பன்னிய குரண்டம் கொக்கு ஆம் வலாகமும் பகமும் அப் பேர் 
உன்னமே கிராமம் மற்றை உற்குரோசரத்தினோடு 
கின்னரம் இன்ன நீரில் கிளர்ந்தெழு பறவை ஆமே 
** 2, 3, 4 பெயர்கள் 63 
**271

#64
** வண்டு 
அரி அளி ஞிமிறு மந்தி அறுபதம் சிலீமுகம் சஞ்
சரிகமே சரகமே சஞ்சாளிகம் சுரும்பு கீடம் 
பிரமரம் மாவே கீதம் பிருங்கமே பிரசம் புள்ளு 
வரிகொள் புண்டரீகம் தும்பி மதுபம் நாலைந்தும் வண்டு ஆம் 
** 20 பெயர்கள் 64 
**272

#65
** பெண் வண்டு ஆண் வண்டு துருஞ்சில் 
** வாவல் இந்திரகோபம் தேனீ 
கரும் புளே கேசவம் தேன் கண்ட பெண் வண்டின் நாமம் 
சுரும்பொடு மதுகரங்கள் சொற்றிடும் தும்பி ஆண் பேர் 
துருஞ்சில் ஆலாலம் என்ப சோர்வில் அஞ்சலிகை வாவல் 
தரும் கோபம் ஈயல் மூதா சரகமே பிரசம் தேனீ 
** 3, 3, 1, 1, 2, 2 பெயர்கள் 65 
**273

#66
** சிள்வீடு விட்டில் நுளம்பு மின்மினி கொதுகு 
சிதடி சில்லிகையே சில்லை சிள் வீடு சிமிலியும் பேர் 
பதமுறு சலபம் விட்டில் பறவையாம் பதங்கமும் பேர்
விதமுறு நுளம்புதானே நிலத்தி மின்மினி கச்சோதம் 
கொதுகின் பேர் மசகம் துள்ளல் கூறின் மற்று அசவலும் பேர்
** 4, 2, 1, 1, 3 பெயர்கள் 66 
**274

#67
** பறவை ஆண் பெண் மரபு மயிலும் எழாலும் அல்லனவாகிய 
** புள்ளின் ஆண் மயில் எழால் இரண்டின் 
** ஆண் கோழி கூகைகளின் பெண் பறவைப் பெண் 
மயில் எழால் அல்லாப் புள்ளின் வகுத்த ஆண் சேவல் என்ப 
மயில் எழால் எனும் இரண்டில் வாய்த்த ஆண் போத்து அது ஆகும் 
அயர்வுறு கோழி கூகை அல்லாப் பெண் அளகு என்று ஓதார் 
பெயர்பெறும் எல்லாப் புள்ளின் பெண் பெடை பெட்டை பேடை 
** 1, 1, 1, 3 பெயர்கள் 67 
**275

#68
** பறவையின் பொது 
விகங்கம் ஆசுகியே வீயே விகிரமே குடிஞை பக்கி 
சகுந்தம் பத்திரி பதங்கம் தாழ் பிணி முகத்தினோடு 
பகர்ந்திடும் ககமே கோலப் பறவையே பதகம் போகில் 
புகழ்ந்திடு குரீஇ மூவைந்தும் புள்பொது வயானமும் பேர் 
** 160 பெயர்கள் 68 
**276

#69
** இறகு முட்டை 
சிறகொடு சதனம் வாசம் சிறை பிஞ்சம் கூரல் பக்கம் 
பறை சதம் தூவி தோகை பத்திரம் குரலே கூழை 
இறை என உரைத்த மூவைந்தும் ஏற்றதும் இறகின் பேரே 
அறை தரும் அரிட்டம் கோசம் அண்டமே சினையே முட்டை 
** 15, 4 பெயர்கள் 69 
**277

#70
** பறவைக் குஞ்சு பறவை மூக்கு புள் சிறகடித்துப் 
** புடைத்தல் புள்ளீட்டத்தின் ஒசை பறவைக்கூட்டம் 
பிள்ளையும் பார்ப்பும் குஞ்சின் பேர் சுச்சு சுவவு துண்டம் 
ஒள்ளிய அலகு மூக்காம் ஓசனிக்கின்றதென்ப 
புள் எழச் சிறகடித்துப் புடைத்தலின் நாமம் ஆகும் 
துள்ளு புள்ளீட்டத்து ஒசை துழனி ஆம் தொழுதி கூட்டம் 
** 2, 4, 1,1,1 பெயர்கள் 70 
**278

#71
** மகர மீன் பெரு மீன் யானை மீனை விழுங்கும் மீன் 
** திமிங்கிலத்தை விழுங்கு மீன் 
கலை சுறா மீனேறு என்ப காட்டிய மகரம் ஆகும் 
செலமுறு யானை மீனே திமி பெருமீனின் நாமம் 
அலைவுறு திமிங்கிலப் பேர் ஆனையை விழுங்கும் மீனாம் 
மலை திமிங்கிலகிலம்தான் மற்று அதை விழுங்கும் மீனே 
** 3, 2, 1, 1 பெயர்கள் 71 
**279

#72
** சங்கு வலம்புரிச்சங்கு சலஞ்சலம் 
நலம் தரு நந்து சுத்தி நாகொடு வளை கம்பு கோடு 
இலங்கிய வாரணம் வண்டு இடம்புரி வெள்ளை சங்கு ஆம் 
வலம்புரி நாமம் தானே வைத்த கொக்கரை என்று ஓதும் 
சலஞ்சலம் பணிலம் என்று சாற்றினர் ஏற்ற நூலோர் 
** 10, 1, 1 பெயர்கள் 72 
**280

#73
** இடம்புரி வலம்புரி சலஞ்சலம் பாஞ்ச சன்னியம் 
இப்பி ஆயிரமே சூழ்ந்தது இடம்புரி என்று கூறும் 
ஒப்பில் சங்கு ஆயிரம் சூழ் உறு வலம்புரி என்று ஓதும் 
அப்படி அதுவும் சூழ்ந்த சலஞ்சலம் ஆகும் மற்றைத் 
தப்பிலாச் சலஞ்சலங்கள் சார்ந்தது பாஞ்சசன்னியம்
**281

#74
** முதலை ஆண் முதலை ஆமை 
** பெண் ஆமை மலங்கு மீன் 
இடங்கர் சிஞ்சுமாரம் வன்மீன் எழில் கராம் முதலையின் பேர் 
கொடும் திறல் கராம் மற்று ஆண் பேர் கூர்மமே உறுப்படக்கி 
ஒடுங்கு கச்சபமே ஆமை கமடமும் உரைக்கற்பாற்றாம் 
மடங்கிய துளி பெண்ணாமை மலங்கின் பேர் நூறை என்ப 
** 4, 1, 4, 1, 1பெயர்கள் 74 
**282

#75
** கிளிஞ்சில் இறால் மீன் ஆரால் மீன் கெண்டை மீன் 
** நத்தை அட்டை மீனின் பொதுப்பெயர் 
ஏரலோடு எருந்தே ஊரல் கிளிஞ்சில் ஆம் இறவு இறால் மீன் 
ஆரலே ஆராலின் பேர் கெண்டைமீன் சபரம் சேல் ஆம் 
ஊர் கரு நந்து ஆம் நத்தை நாகும் ஆம் உருவே அட்டை 
நீருறும் மயிலை மற்சம் நெடும் புழல் மீன் பொதுப் பேர் 
** 3, 1, 1, 2, 2, 1, 3 பெயர்கள் 
**283

#76
** பல்லி நாகர வண்டு சிலம்பி எறும்பு நாங்கூழ் செல் 
புள்ளியே கெவுளி பல்லி போற்றும் கோகிலமும் அப் பேர் 
நொள்ளை நாகர வண்டின் பேர் உலூதையே நோன் சிலம்பி 
ஒள்ளிய பிலஞ்சுலோபம் பிபீலிகை ஊர் எறும்பு ஆம் 
தெள்ளு நாங்கூழ் பூநாகம் சிதலையே கறையான் செல்லே 
** 3, 1, 1,2 ,1, 2 பெயர்கள் 
**284

#77
** தேள் ஞெண்டு (நண்டு) உளு தவளை 
நளிவிடம் தெறுக்கால் துட்டன் நாட்டிய விருச்சிகம் தேள் 
களவனே குளிரம் நள்ளி கவைத் தாள் கர்க்கடகம் ஞெண்டே 
உளு உசுவாகும் என்ப உற்ற மண்டூகம் தேரை 
தளர் அரி நுணலை நீகம் தவளை ஆம் பேகமும் பேர் 
** 4, 5, 1, 6 பெயர்கள் 
**285

#78
** புழு உலண்டு கோற்றேன் தேன் கூடு 
கிருமியே புழு பொட்டும் பேர் கீடம் கோல் புழு உலண்டு ஆம் 
பிரசம் கோல் தேன் இறாலே பேசிய தேனின் கூடு ஆம் 
விர,விய விலங்கின் ஈட்டம் விருத்தம் ஓர் எழுபத்தெட்டும் 
வருமுறை உரைத்தான் வீரை மன்னன் மண்டலவன்தானே
** 2, 2, 1, 1 பெயர்கள் 
** மூன்றாவது - விலங்கின் பெயர்த் தொகுதி முற்றிற்று 

@4 மரப்பெயர்த் தொகுதி 
**286

#1
** காப்பு 
திருக் கிளர் தேவர் கோமான் ஏவலின் குபேரன் செய்த 
விருப்புறு பொன்னெயிற்குள் விளங்க எண் எழுத்து இரண்டும் 
பரப்பிய ஆதி மூர்த்தி பங்கயப் பாதம் போற்றி 
மரப் பெயர்த் தொகுதி தன்னை வருமுறை கூறலுற்றாம் 
**287

#2
** ஐந்தருக்கள் சந்தன மரம் 
சந்தானம் வேண்டிற்றெல்லாம் தரும் அரி சந்தனம் பூ 
மந்தாரம் பாரிசாதம் கற்பகம் மற்று ஓர் ஐந்து ஆம் 
சந்து ஆரம் சாந்து சாந்தம் சந்திர திலகத்தோடு 
வந்து ஏறு படீரம் பூசு மலயசம் சந்தனப் பேர்
** 5, 7 பெயர்கள் 
**288

#3
** கற்பகத் தருவின் படர் கொடி அகில் 
** பாதிரி மகிழ மரம் 
மகிழும் அக் கற்பகத்தில் வளர்கொடி காமவல்லி 
அகருவே காகதுண்டம் அகில் என்ப பூழிலும் பேர் 
பகரும் புன்காலியோடு பாடலம் பாதிரிப் பேர்
வகுளமே இலஞ்சி என்ப மகிழ் ஆம் கேசரமும் ஆமே 
** 1, 3, 2, 3 பெயர்கள் 
**289

#4
** கோங்கு சண்பகம் புன்னை சுரபுன்னை நாரத்தை 
மன்னிய கோங்கின் நாமம் வரும் துருமோற்பலம் பூங் 
கன்னிகாரமும் ஆம் என்ப சம்பகம் சண்பகப் பேர் 
புன்னை புன்னாகம் நாகம் வாழை சுரபுன்னைப் பேரே 
நல் நிற நரந்தம் நாரம் நாரங்கம் நாரத்தைப் பேர் 
** 2, 1, 2, 1, 3 பெயர்கள் 
**290

#5
** குருக்கத்தி சிறு சண்பகம் பித்திகை மஞ்சாடி 
** மகர வாழை வன மல்லிகை 
குருகு நாகரி வாசந்தி மாதவி குருக்கத்திப் பேர் 
தரு சிறுசண்பகப் பேர் சாதி மாலதியும் ஆகும் 
கருமுகை பித்திகைப் பேர் திலகம் மஞ்சாடி காட்டும் 
மருகுதான் மகரவாழை வனமல்லிகைப் பேர் மெளவல் 
** 4, 2, 1, 1, 1, 1 பெயர்கள் 
**291

#6
** மல்லிகை காயா வெட்சி துளசி 
மல்லிகையே பூருண்டி மாலதி அனங்கமும் பேர் 
அல்லி புன்காலி காசை அஞ்சனி பூவை காயா 
குல்லையே செச்சை வெட்சி கொந்து ஆர் சிந்தூரமும் பேர் 
குல்லை பூந் துளவினோடு துளாய் வனம் துளசி கூறும் 
** 3, 5, 3, 4 பெயர்கள் 6 
**292

#7
** செருந்தி அழிஞ்சில் குங்கும மரம் அனிச்ச மரம் 
செங்கோடு பஞ்சரம்தான் செருந்தியே பொருந்தி நிற்கும் 
அங்கோலம் சே அழிஞ்சில் சேமரம் என்றும் ஆகும் 
கொங்கு ஆரும் துருக்கம் என்ப குங்குமம் மரவமும் பேர் 
அம் கான அனிச்சம்தானே அருப்பலம் நறவம் சுள்ளி 
** 2, 3, 2, 3,பெயர்கள் 7 
**293

#8
** அலரி மருக்கொழுந்து இருவேலி இருவாட்சி 
கரவீரம் கவீரம் மற்றைக் கணவீரம் அலரியின் பேர் 
விரை மேவு தமனகம்தான் மேவிய மருக்கொழுந்தே 
இருவேலி மூலகந்தம் வேரி பீதகமும் ஏற்கும் 
மரு மேவும் இருவாட்சிக்கு மயிலையும் அனங்கமும் பேர் 
** 3, 1, 3, 2 பெயர்கள்
**294

#9
** தாழை பட்டிகை நந்தியாவர்த்தம் செவ்வரத்தம் 
முண்டகம் முடங்கல் கைதை முசலியே மடியே தாழை 
கண்டல் கேதகையும் அப் பேர் பறிவை பட்டிகையே காட்டும் 
வண்டு உளர் வலம்புரிப் பேர் நந்தியா வர்த்தம் என்ப 
விண்ட பூஞ் செவ்வரத்தம் மேவும் மந்தாரம் ஆமே 
** 7, 1, 1, 1 பெயர்கள் 9 
**295

#10
** பனை கூந்தற் பூகம் கமுகு பாக்கு 
தாலமே பெண்ணை புல்லு தாளி புற்பதி பனைப் பேர் 
தாலமே கூந்தற்பூகம் தரு கந்தி பூகம் பூக்கம் 
சால நீள் கமுகு முப் பேர் சாற்றிடும் துவர்க்காய் பாகு 
கோலம் என்று இந்த மூன்றும் குறித்த பாக்கிற்கு நாமம் 
** 5, 1, 3, 3 பெயர்கள் 10 
**296

#11
** பலா ஈரப் பலா மாமரம் தேமா 
பனசமே வருக்கை பாகல் பலவு இவை பலாவின் பேரே 
அனைய ஈரப் பலாவே ஆசினி என்பதாகும் 
வினவிய மாந்தி சூதம் மேவும் ஆமிரமே கொக்கே 
சினை படு மாழை மா ஆம் சேதாரம் தேமாவின் பேர் 
** 4, 1,  5, 1 பெயர்கள் 11 
**297

#12
** தெங்கு பன்னாடை வாழை கரும்பு 
தாழை தென் நாளிகேரம் இலாங்கலிதாம் தெங்கின்பேர் 
சூழும் நெய்யரி பன்னாடை சொல்லிய நாரியும் பேர் 
வாழையே கதலி ஆகும் மற்று அரம்பையும் அதன் பேர் 
வேழமே கன்னல் இக்கு மென் கழை கரும்பு நாற்பேர் 
** 4, 2, 2, 4 பெயர்கள் 12 
**298

#13
** மூங்கில் 
காம்பு பாதிரி முடங்கல் கழை பணை விண்டு நேமி 
தூம்பு வேய் தட்டை முந்தூழ் துளை கிளை முளையே வேணு 
ஆம்பல் கீசகம் வேல் வேரல் அரி அமை திகிரி வேழம் 
மேம்படு வரை மூவெட்டும் மூங்கில் ஆம் வெதிரும் அப் பேர் 
** 25 பெயர்கள் 13 
**299

#14
** ஆலமரம் வெட்பாலை குடைவேல் புன்கு 
வடம் உடன் நியக்குரோதம் பூதம் கான்மரம் வான் ஓங்கிப் 
படரும் தொன்மரமே கோளி பழுமரம் ஆலின் பேரே 
குடசம் வெட்பாலை என்ப கிரி மல்விகையுமே கூறும் 
உடை என்ப குடைவேல் ஆகும் உறு கரஞ்சகமே புன்கு 
** 7, 2, 1, 1 பெயர்கள் 14 
**300

#15
** அசோகு அரசு 
விரை செறி செயலை பிண்டி மேவு காகோளி மூன்றும் 
அருகன் எம்மான் இருந்தே அறம் பகர் அசோகின் பேர் ஆம் 
அரசின் பேர் சுவலை குஞ்சராசனம் அச்சுவத்தம் 
திருமரம் பணையே போதி கணவம் பிப்பலமும் செப்பும் 
** 3, 8 பெயர்கள் 15 
**301

#16
** புளிய மரம் தேக்கு கொன்றை முள்முருங்கை 
சிந்திகம் ஆமிலம் சிந்தூரமே எகின் புளிப் பேர்
திந்திடீகமும்  அப் பேரே தேக்கின் பேர் சாகம் சாதி 
வந்து எழும் இதழி தாமம் மதலையே கடுக்கை கொன்றை 
முந்து கிஞ்சுகத்தினோடு கவிரும் முள்முருக்கின் நாமம் 
** 5, 2, 4, 2 பெயர்கள் 16 
**302

#17
** நாவல் குழி நாவல் வேம்பு எலுமிச்சை 
சம்பு நேரேடு நாவல் சாதேவம் குழி நாவல் பேர் 
நிம்பமே வேம்பின் நாமம் நீள் பிசுமர்த்தமும் பேர் 
சம்பீரம் முருகனோடு சதாபலம் எலுமிச்சைப் பேர் 
அம் புவி இலிகுசத்தோடு அருணம் சம்பளமும் நாட்டும் 
** 2, 1 2, 6 பெயர்கள் 17 
**303

#18
** அத்தி புளிமா இலந்தை இலந்தைக் கனி 
அதவுடன் உதும்பரங்கள் கோளியே அதமே அத்தி 
இதமுறும் மாழை சிஞ்சம் எகின் மூன்றும் புளிமாவின் பேர் 
வதரி கோற்கொடி இலந்தை வளர் கோலி குவலியும் பேர் 
விதமுறு கோலம் கோண்டை வினவில் அக் கனியின் பேரே 
** 4, 3, 4, 2 பெயர்கள் 18 
**304

#19
** மாதுளை தாது மாதுளை பிரம்பு ஆத்தி 
மாதுளம் மாதுளுங்கம் கழுமுளே மாதுளைப் பேர் 
தாது மாதுளையின் நாமம் தாடிமம் என்றே சாற்றும் 
சாதி வேத்திரமே சூரல் சாற்றிய பிரம்பு முப் பேர் 
தாதகி ஆத்தி ஆரே சல்லகி எல்லாம் ஒன்றும் 
** 3, 1, 3, 3 பெயர்கள் 19 
**305

#20
** தேற்று மரம் வாகை வில்வம் பராய் மரம்
**  கிலுகிலுப்பையின் பெயர் ஓடையின் பெயர் 
சில்லமே இல்லம் தேற்று ஆம் சிரீடமே பாண்டில் வாகை 
வில்லம் மாலூரமே கூவிளம் இவை வில்வப் பேரே 
புல்லிய பசு நா விட்டில் புக்கு இவை பராயின் பேரே 
பல் இணர்க் கிலுகிலுப்பை பகன்றை ஆம் உலவை ஓடை 
** 2, 2, 3, 3, 1, 1 பெயர்கள் 20 
**306

#21
** வாடாக் குறிஞ்சி குறிஞ்சி பேரீந்து கோட்டம் 
** மழை வண்ணக் குறிஞ்  நாயுருவி 
குரவகம் என்ப வாடாக்குறிஞ்சி ஆம் குரண்டகம்தான் 
பெருகிய குறிஞ்சி ஆகும் பேரீந்தின் பேர் கர்ச்சூரம் 
குரவமே கோட்டம் என்ப மழைவண்ணக்குறிஞ்சி பாணம் 
தரு கரமஞ்சரிப் பேர் சாற்று நாயுருவி ஆமே 
** 1,1,1,,1, 1, 1 பெயர்கள் 21 
**307

#22
** முல்லை களா கருங்காலி விளா வெண் கடுகு 
தளவு மாகதியே மெளவல் யூதிகை முல்லை சாற்றும் 
களவு என்ப களாவின் நாமம் கதிரமே கருங்காலிப் பேர் 
விளவொடு கபித்தம் வெள்ளில் விளா கடிப்பகையினோடு 
விளையும் ஐயவி சித்தார்த்தம் வெண்சிறுகடுகு இம் முப்பேர் 
** 4, 1, 1, 3, 3 பெயர்கள் 22
**308

#23
** மருத மரம் வேங்கை மரம் முந்திரிகை அதி மதுரம் 
மருது பூதவத்தினோடு மற்று அருச்சுனமும் ஏற்கும் 
பெருகிய கணியும் பீதசாலமும் திமிசும் வேங்கை 
திரு மிகு மதுரசம் கோத்தனியே முந்திரிகை ஆகும் 
வரும் அதிமதுரம் யட்டி மதுகமே அதிங்கம் என்ப 
** 2, 3, 2, 3,பெயர்கள் 23 
**309

#24
** செங்காந்தள் வெண்காந்தள் புனமுருக்கு வன்னி நுணா 
காந்தள் செங்காந்தள் பற்றை இலாங்கலி தோன்றியும் பேர் 
காந்துகம் கோடல் கோடை கருது வெண்காந்தள் ஆகும் 
பூந் துணர்ப் பலாசுதானே புனமுருக்கின் பேர் என்ப 
சாய்ந்து எழு சமியே வன்னி நுணாவின் பேர் தணக்குத்தானே 
** 4, 3, 1, 1, 1 பெயர்கள் 24 
**310

#25
** குருந்தம் குமிழ் குன்றி கடம்பு 
** வெண்ணொச்சி சத்திக் கொடி 
குந்தமே குருந்தம் என்ப குமிழ் கூம்பல் குஞ்சம் குன்றி 
இந்துளம் மரா கதம்பம் இயைந்த நீபம் கடம்பு ஆம் 
சிந்துவாரம் நீர்க்குண்டி செப்பில் வெண்ணொச்சி ஆகும் 
தந்த சத்திக்கொடிப் பேர் தாடி மஞ்சம் தானாமே 
** 1, 1, 1, 4, 2 1 பெயர்கள் 25 
**311

#26
** கடுமரம் நெல்லி தான்றி திப்பலி கொத்துமலி 
அரிதகி பத்தியங்கள் கடுவே ஆமலகம் நெல்லி 
கருதிய தான்றிதானே கலித்துருமம் தானாகும் 
பரவும் மாகதி காமன் திப்பலி என்ப கலினியும் பேர் 
உருளரிசிப் பேர் கொத்துமலி என உரைக்கலாமே 
** 2, 1, 1, 3, 1 பெயர்கள் 26 
**312

#27
** கருவிளை துரிஞ்சில் ஆடாதோடை பருத்தி 
கன்னி காக்கணம் இரண்டும் கருவிளை கிகிணியும் பேர் 
முன்னமே துரிஞ்சிலின் பேர் மொழிந்த சீக்கிரியும் ஆகும் 
மன்னிய ஆடாதோடை வாசை என்று அறையலாமே 
பன்னல் கார்ப்பாசம் இன்ன பருத்தியின் பெருத்த நாமம் 
** 3, 2, 1, 2 பெயர்கள் 27 
**313

#28
** இத்தி ஆமணக்கு இருப்பை எட்டி 
இத்தியே சுவி இரத்தி இரத்திரி இறலி ஆகும் 
சித்திரகம் ஏரண்டம் சிறந்த ஆமணக்கின் நாமம் 
வைத்திடும் இருப்பைதானே மதுகம் ஆம் குலிகமும் பேர் 
கைத்த கோடரமே காளம் காஞ்சிரை முட்டி எட்டி 
** 4, 2, 2, 4 பெயர்கள் 28 
**314

#29
** செங்கருங்காலி ஆச்சாமரம் இலவம் வழுதலை 
செங்கருங்காலி நாமம் சிறுமாரோடம் தானாகும் 
தங்கிய சாலம் சுள்ளி மராமரம் ஆவே ஆச்சா 
பொங்கர் சான்மலியினோடு பூரணி இலவம் முப் பேர் 
வங்கமே வழுதலைப் பேர் வழுதுணை என்றும் ஆமே 
** 1, 4, 3, 2 பெயர்கள் 29 
**315

#30
** கழற்கொடி கழற்காய் கற்றாழை புலிதொடக்கி 
** ஈகை சிறுபூளை ஊமத்தை 
கழலின் நாமம் கர்ச்சூரம் கழற்காயே கழங்கு மற்று 
முழலும் ஆம் கற்றாழைப் பேர் முதிர்விலாக் குமரி கன்னி 
இழைவுறு புலி தொடக்கி இண்டு ஆம் ஈகை ஈங்கை 
உழிஞையே சிறு பூளைப் பேர் உன்மத்தம் ஊமத்தைப் பேர் 
** 1, 2, 2, 1, 1, 1, 1 பெயர்கள் 30 
**316

#31
** அகத்தி எருக்கு பச்சிலைமரம் சுண்டி 
** வறட்சுண்டி சதுரக் கள்ளி 
அச்சமே முனி கரீரம் அகத்தி ஆம் எருக்கு அருக்கம் 
பச்சிலைமரம் தமாலம் பசும்பிடி என்றும் பேரே 
சுச்சுவே சுண்டி என்ப சமங்கையே வறட்சுண்டிப் பேர் 
வச்சிராங்கம் கண்டீர்வம் வச்சிரம் சதுரக்கள்ளி 
** 3, 1, 2, 1, 1, 3 பெயர்கள் 31 
**317

#32
** மலைப் பச்சை ஞாழல் சிறுகீரை சேம்பு 
** வள்ளை கொத்தான் நறுவிலி 
பல் இணர்க் குளவிதானே மலைப் பச்சை பலினி ஞாழல் 
சில்லியே மேகநாதம் சாகினி சிறுகீரைப் பேர் 
சொல்லிய சகுடம் சேம்பாம் சூழ்ந்த நாளிகமே வள்ளை 
நல்ல நந்தைப் பேர் கொத்தான் நறுவிலி அலி என்றாமே 
** 1, 1, 3, 1, 1, 1, 1 பெயர்கள் 32 
**318

#33
** சாறடை கூதாவி வெள்ளரி கக்கரி 
** காஞ்சொறி தாவி சிவேதை 
திரிபுரி சாறடைப் பேர் சிறந்த கூதளம் கூதாளி 
விரவிய உருவாரம்தான் வெள்ளரி விளங்கும் நாமம் 
கருது கக்கரி வாலுங்கி கண்டூதி காஞ்சொறிப் பேர் 
பரவு மஞ்சிகமே தாளி பகன்றை ஆம் சிவேதை தானே 
** 1, 1, 1, 1, 1, 1, 1 பெயர்கள் 33
**319

#34
** ஏலம் இசங்கு பாகல் பாலை மரம் 
ஏலம் ஆம் துடியோடு ஆஞ்சி இரண்டுமே இசங்கினுக்கு 
கோலு முத்தாபலம் பேர் குண்டலி என்றும் ஆகும் 
கூலமே காரவல்லி கூறிய பாகலின் பேர் 
பாலையின் பேர் சீவந்தி சீவனி என்றும் பன்னும் 
** 2, 2, 2, 2 பெயர்கள் 34 
**320

#35
** கொவ்வை பசிரி தும்பை சுரை கொடிக்கொத்தான்
** முருங்கை இலைக்கறி பீர்க்கு பெரும் பீர்க்கு 
விம்பமே தொண்டை கொவ்வை பசிரி பாவிரி துரோணம் 
தும்பையே அலாபு மற்றைச் சுரை நூழில் கொடிக் கொத்தான் ஆம் 
கொம்பர் சேர் முருங்கையே சிக்குரு அடகு இலைக்கறிப் பேர்
பம்பிய பீரம் பீர்க்கு ஆம் படலிகை பெரும்பீர்க்கு ஆமே 
** 2, 1, 1, 1, 1, 1, 1, 1 பெயர்கள் 35 
**321

#36
** பாற் சொற்றி சீந்திக் கொடி கொடி நாணல் 
பரவு பாற்சொற்றி நாமம் பாயசம் என்று கூறும் 
விரவிய அமுதவல்லி மேய சீவந்தி சீந்தி 
மருவிய இலதை வள்ளி வல்லி வண் கொடி முப் பேராம் 
சரமொடு காசை காசம் சாற்றிடு நாணலின் பேர்
** 1, 2, 3, 3 பெயர்கள் 36 
**322

#37
** வெற்றிலைக் கொடி மிளகு 
நறிய தாம்பூலவல்லி தாம்பூலி நாகவல்லி 
செறிதரும் இலைக் கொடிப் பேர் திரையல் மெல்லிலையும் ஆகும் 
கறியொடு மரீசம் காயம் கலினை கோளகம் திரங்கல் 
செறிதரும் மிளகின் நாமம் மிரியலும் செப்பல் ஆமே 
** 5, 7 பெயர்கள் 37 
**323

#38
** நெல் செந்நெல் பயிர் கதிர் இளஞ்சூல் இளங்கதிர் 
வரி சொல்லு விரீகி சாலி வளர் நெல் ஆம் யவமும் ஆகும் 
தெரியும் நல் நெல்லினோடு செஞ்சாலி செந்நெல்லின் பேர் 
பரியும் பைங்கூழ் பசும்புல் பயிர் கதிர் குரலோடு ஏனல் 
பெருகிய இளஞ்சூல் பீட்டை பீள் இளங்கதிரின் பேரே 
** 5 2, 2, 2, 1, 1 பெயர்கள் 38 
**324

#39
** பதர் நெற்போர் தூற்றாத நெற்பொலி 
** கோதுமை அரிசி வைக்கோல் மலைநெல் 
பழுதுறு பதரின் பேரே பதடி ஆம் போரே சும்மை 
பொழியத் தூற்றாத நெல்லின் பொலியே பொங்கழி என்று ஆகும் 
தழுவு கோதுமையே கோதி தண்டுலம் அரிசிதானே 
வழுது வை பலாலம் வைக்கோல் மலைநெல் ஐவனமே வைக்கும் 
** 1, 1, 1, 1, 1, 3, 1 பெயர்கள் 39 
**325

#40
** வேய் மூங்கில் அரிசி குளநெல் கம்பு 
**தினை பைந்தினை கருந்தினை தினைத்தாள் 
தந்த வேய் அரிசி தோரை குளநெல்லுத்தான் நீவாரம் 
செந்தினை கவலை கம்பு ஆம் தினையின் பேர் ஏனல் என்ப 
பைந்தினைதானும் ஏனல் பகர்ந்திடும் கருந்தினைப் பேர் 
அந்தமாம் இறடி கங்கே அருவியும் இருவியும் தாள் 
** 1, 1, 2, 1, 1, 2, .2 பெயர்கள் 40 
**326

#41
** துவரை கடலை அவரை உழுந்து பயறு 
** கொள் துவரை கடலை முதலியன காராமணி 
துவரை ஆடகமே ஆம் மஞ்சூரமே கடலையின் பேர் 
அவரை சிக்கடியே சிம்பை அழுந்திய உழுந்து மாடம் 
கவர்தரு பயறு முற்கம் காணமே குலத்தம் கொள் ஆம் 
இவை எலாம் முதிரை கூலம் இதை காராமணியின் நாமம் 
** 1, 1, 2, 1, 1, 2, 2, 1 பெயர்கள் 41 
**327

#42
** சோளம் எள் எள்ளிளங்காய் இளையெள் வரகு 
நண்ணிய சொன்னல் சோளம் நாட்டிய இறுங்கும் ஆமே 
எண்ணொடு திலமும் நூவும் எள் கவ்வை இளங்காயின் பேர் 
பண்ணிய குமிகைதானே பயனுறும் இளையெள் ஆகும் 
மண்ணிய வரகின் நாமம் மருவு கோத்திரவம் ஆமே 
** 2, 3, 1, 1, 1 பெயர்கள் 42
**328

#43
** தருப்பை அறுகு இளம்புல் மஞ்சள் இஞ்சி 
குசையொடு குமுதம் கூர்ச்சம் குசம் தர்ப்பை என்று கூறும் 
பசையுறு பதமே தூர்வை பச்சறுகு இளம்புல் சட்பம் 
நிசி அரிசனமே பீதம் நிகரில் காஞ்சனியே மஞ்சள் 
நசையுறும் இஞ்சி அல்லம் நறுமருப்பு என்றும் ஆமே 
** 4, 2, 1, 4, 2 பெயர்கள் 43 
**329

#44
** கருணைக் கிழங்கு மரப் பொதுவின் பெயர் 
கருணையின் நாமம் கந்தம் சூரணம் என்றும் காட்டும் 
தரு அகலியம் விருக்கம் தாவரம் விடபி தாரு 
துருமமே குசம் என்று எட்டும் சொல்லிய மரப் பொதுப் பேர் 
பரவு பூருகமே சாகி பாதபம் என்றும் பன்னும் 
** 2, 11 பெயர்கள் 44 
**330

#45
** கிழங்கு முளை வேர் மரக் கொம்பு 
மூலமே சகுனம் கந்தம் மூலகம் கிழங்கின் நாமம் 
காலொடு அங்குரம் முளைப் பேர் கருது தூர் சவையே வேர் ஆம் 
கோல் இபம் விடபம் கொம்பர் கோடரம் பொங்கர் சாகை 
பால் அமர் கவடு தாரு பணை சினை உலவை கொம்பு ஆம் 
** 4, 2, 2, 12 பெயர்கள் 45 
**331

#46
** மர வயிரம் இலை தழை மரக் கன்று 
கலையொடு ஆசினியே சேகு காழ்ப்பு காழ் வயிரம் ஆகும்  
தலம் அடை தகடு பன்னம் சதனம் பத்திரம் பலாசம் 
இலை தமாலமும் ஆம் மற்றும் இதில் தழை உலவை என்ப 
புலன் உறு குழவி பிள்ளை போதகம் போத்து கன்று ஆம் 
** 5, 8, 1, 4 பெயர்கள் 46 
**332

#47
** இளங் கொம்பு கப்பு தவிர் குருத்து தளிர்த்தல் 
மெல்லியல் இளங்கொம்பின் பேர் மேவிய கவரே கப்பு ஆம் 
வல்லரி கிசலயம் பூ மஞ்சரி முறி அலங்கல் 
பல்லவம் குழை தளிர்ப் பேர் பகர் குருத்தே முருந்து 
சொல்லுங்கால் குழைத்தலோடே இலிர்த்தலும் தவிர்த்தலின் பேர் 
** 1, 1, 7, 1, 2 பெயர்கள் 47 
**333

#48
** அரும்பு பூ 
முகை நனை கலிகை போகில் முகுளமே மொக்குள் மொட்டு 
மகிழ்வுறு கோரகங்கள் மற்றைச் சாலகம் அரும்பு ஆம் 
தகை பெறு குசுமம் போது தார் அலர் சுமனசம்தான் 
மிகு மண மலரே தாமம் வீ இணர் துணர் பூவின் பேர் 
** 9, 10 பெயர்கள் 48 
**334

#49
** பூங் கொத்து பூந் தாது பூந் தேன் தாதில் தாள் 
தொத்து மஞ்சரியினோடு துணர் இணர் குலை ஐந்தும் பூங்
கொத்தின் பேர் மகரம் செய்ய கொங்கு கேசரம் பூந்தாது ஆம் 
வைத்திடும் துணரும் ஆகும் மகரந்தம் பூந்தேன் என்ப 
பைத்தெழும் தாதில் தூளே பராகம் ஆம் பிரசமும் பேர் 
** 5, 4, 1, 2 பெயர்கள் 49 
**335

#50
** மலர்தல் விரி மலர் பழம்பூ பூவின் இதழ் 
அலர்தலே அவிழ்தல் விள்ளல் மலர்தல் ஆம் நெகிழ்தலும் பேர் 
இலகிய விரி மலர்ப் பேர் இக மலர் வெதிர் தொடர்ப் பூ 
பலம் அறு சாம்பல் செம்மல் பழம் பூ ஆம் தேம்பலும் பேர் 
புலனுறும் ஏடு தோடு தளம் மடல் பூவிதழ்ப் பேர் 
** 4, 3, 3, 4 பெயர்கள் 50 
**336

#51
** அகவிதழ் புறவிதழ் காய் பழம் விதை 
அல்லியே அகவிதழ்ப் பேர் அறைந்திடும் புறவிதழ்ப் பேர் 
புல்லியே வடுவும் பிஞ்சும் போற்றும் தீவிளியும் காய் ஆம் 
பல் இயல் கவிஞர் சொற்ற பழம் கனி பலமும் ஆகும் 
மெல்லிய பரலும் காழும் பீசமும் விதை வித்தும் பேர் 
** 1,1,3, 2, 4 பெயர்கள் 51 
**337

#52
** கொத்தின் பெயர் பலமிலா மரம் காய்த்திருந்த மரம் 
** உலர்ந்த மரம் பூவாது காய்க்கும் மரம் 
குலை குச்சம் தாறு சாறு குடும்பொடு படுவும் கொத்து ஆம் 
மலர் அவகேசிதானே வரு பலமிலா மரப் பேர் 
பலினம் காய்த்திருந்த தாரு பகர் உலர் மரமே வானம் 
புலர்வு இலாக் கோளியோடு வனபதி பூவாக் காய்க்கும் 
** 6, 1, 1, 1, 2 பெயர்கள் 52 
**338

#53
** விறகு மரச் செறிவு மரப்பொந்து முள் 
இந்தனம் முருடு கட்டை இடு கறல் சமிதை காட்டம் 
வெந்திடும் ஞெகிழி ஏழும் விறகு என்ப முளரியும் பேர் 
வந்த கோடரம் பொதும்பர் மரச் செறிவு ஆகும் பொந்து 
முந்து பேர் பொள்ளல் ஆகும் முள் கடு கண்டகம்மே 
** 8, 2, 1, 2 பெயர்கள் 53
**339

#54
** சோலை ஊர் சூழ் சோலை 
துடவை நந்தன வனம் பூந்தோட்டமே அரி உய்யானம் 
கடி பொழில் உத்தியானம் கா மரச்செறிவு ஆராமம் 
நெடிய தண்டலையினோடு நீள் உபவனமே சோலை 
வடிவுடை ஊர் சூழ் சோலை வனம் என வைக்கலாமே 
** 12, 1 பெயர்கள் 54 
**340

#55
** காடு 
அடவி கான் புறவம் பொச்சை ஆரணியம் காந்தாரம் 
கடம் வனம் முளரி தில்லம் ககனம் கண்டகமே தாவம் 
விடர் சுரம் பழுவம் கானல் விபினமே கட்சி கானம் 
கடறு கானனமே அத்தம் களரி காடு இருபானாற்பேர் 
** 24 பெயர்கள் 55 
**341

#56
** பெருந்தூறு சிறுதாறு குறுங்காடு 
** பெருங்காடு காவற்காடு 
நிறை தரு தூறு குன்மம் நீள் பஞ்சி விடபமும் பேர் 
அறல் இறல் பதுக்கை முப்பேர் அறியலாம் சிறிய தூறு 
குறிய காடு இறும்பு என்று ஆகும் கூறிய பெருங்கான் வல்லை 
மறை அரண் இளை இரண்டும் வைத்த காவற் காட்டின் பேர் 
** 3, 3, 1, 1, 2 பெயர்கள் 56 
**342

#57
** முதிர்காடு கரிகாடு வேலி ஆண்மரம் 
** பெண்மரம் அலி மரம் 
முதையலே இலை உதிர்ந்த முதிர் காட்டின் நாமம் ஆகும் 
பொதி கரிகாடு பொச்சை பொருந்துமே இளை வேலிப் பேர் 
அதிகம் மற்று அகங்காழ்த்திட்டது ஆண் மரம் புறக் காழ் பெண்ணும் 
விதியுள் இவ்விரண்டும் இல்லா வெளிறு அலி யாகும் என்ப 
** 1, 2, 1, 1, 1, 1 பெயர்கள் 57 
**343

#58
** தாமரை 
புண்டரீகத்தினோடு அம்போருகம் குசேசயம் பூ 
முண்டகம் அரவிந்தம்மே முளரி பங்கயம் வாரீசம் 
இண்டை அம்புயம் சரோசம் எழில் சதபத்திரி சூழ்ந்து 
வண்டு உளர் நளினம் கஞ்சம் வனசம் தாமரையின் நாமம் 
**344

#59
** தாமரை தாமரை மலர் தாமரைக் கொட்டை 
சலசமே கமலம் மற்றும் சார்ந்த கோகனதத்தோடு 
தலம் உணும் திருமால் உந்தி சரோருகம் பதுமமும் பேர் 
மலரின் பேர் இறும்பு வாகும் மற்று இராசீவமும் பேர் 
புலர்வு இல் பொன்னிறத்த கொட்டை பொகுட்டே கன்னிகையும் ஆகும் 
** 21, 2, 2 பெயர்கள் 59 
**345

#60
** தாமரைச் சுருள் தாமரைக் காய் செங்கழுநீர் 
விரித்திடும் சுருளின் நாமம் விசியொடு வளையம் ஆகும் 
மருக் கிளர் தாமரைக் காய் வராடகம் என்ப நூலோர் 
அரத்த உற்பலமே வாசம் அடர்ந்த செங் குவளை கோலத் 
திருக் கிளர் கல்லாரங்கள் செங்கழுநீரின் பேரே 
** 2, 1, 2 பெயர்கள் 60 
**346

#61
** கருங்குவளை கருநெய்தல் வெண்ணெய்தல் 
கோலம் ஆர் பானல் காவி குவலயம் மணத்தை மொண்டு 
காலத் தேன் உலவுகின்ற கருங்குவளைக்கு நாமம் 
நீலம் இந்தீவரம் தான் நிகழ் கருநெய்தல் என்ப 
கோல உற்பலமும் ஆகும் குமுதம் வெண்ணெய்தல் பேரே 
** 3, 1, 1 பெயர்கள் 61 
**347

#62
** அரக்காம்பல் வெள்ளாம்பல் திரள் கோரை வாட்கோரை 
செங் குமுதம் செவ்வல்லி சேதாம்பல் அரக்காம்பல் பேர் 
வெங்கள்ளு நாறும் அல்லி கைரவம் வெள்ளாம்பல் பேர் 
தங்கிய திரள் கோரைப் பேர் சாய் பஞ்சாய்க் கோரை என்ப 
அங்குள செருந்தி தானே அடர்ந்த வாட் கோரை ஆமே 
** 3, 2, 2, 1 பெயர்கள் 62 
**348

#63
** முள்ளியின் பெயர் முள்ளுடை 
** மூலமெல்லாவற்றிற்கும் பெயர் 
** பாசியின் பெயர் நீர்க் குளிரியின் பெயர் 
ஒள்ளிய கண்டல் முள்ளி உரைத்த முண்டகமே அன்றி 
முள்ளுடை மூலம் யாவும் முண்டகம் என்றே சாற்றும் 
தள்ளிய நாரம் பாசி சைவலம் சடைச்சியும் பேர் 
வள்ளிய கல்லாரம் தான் மற்றை நீர்க் குளிரி ஆமே 
** 2, 1, 3, 1 பெயர்கள் 63 
**349

#64
** மருந்து என்பன வேல் தைத்த புண் மாற்று மருந்தின் பெயர்
**  துணிபட்ட உறுப்பைப் பொருத்தும் மருந்தின் பெயர் 
** விரணந் தீர்க்கும் மருந்தின் பெயர் 
வல்லியும் புல்லும் பூடும் மரம் முதல் மருந்து என்று ஆகும் 
சல்லிய கரணி கூர் வேல் தைத்த புண் மாற்றும் துண்டம் 
புல்லிய செய்வதானே சந்தான கரணி போலும் 
மெல்லிய விரணம் தீர்க்கும் சமனிய கரணி வேறே
**350

#65
** மூர்ச்சை தீர்த்துக் குற்றுயிர் தரும் மருந்து 
** மருந்தின் பொதுப் பெயர் 
மறைவிலா மிருத சஞ்சீவனி அமுது இரண்டும் 
குறைவற மூர்ச்சை தீர்த்தே குற்றுயிர் தரும் மருந்து ஆம் 
உறையொடு குளியம் யோகம் உறு மருந்தின் பொதுப் பேர் 
அறையுங்கால் அந்தப் பேரே அதகமும் ஆகும் என்ப 
** 2, 4 பெயர்கள் 65 
**351

#66
** மாலை 
அலங்கலே பிணையல் ஆரம் சிகழிகை அணி சுருக்கை 
இலம்பகம் தெரியல் சுக்கை ஏற்ற கத்திகையே தாமம் 
துலங்கிய படலை கண்ணி தொடை தொங்கல் ஒலியல் கோதை 
மலர்ந்த தார் இவை மூவாறும் மாலை மஞ்சரியும் அப் பேர் 
** 19 பெயர்கள் 66 
**352

#67
** நுதல் அணியின் பெயர், வாசிகையின் பெயர் வாகை 
சூட்டுடன் இலம்பகங்கள் சூழ் நுதலணி என்றாகும் 
தீட்டு வாசிகையின் பேரே சிகழிகை படலை என்ப 
ஈட்டிய கல்வி கேள்வி இருங் குடி கொடை படைக்குள் 
வாட்டம்இல்லவரை வென்று மெளலி சூட்டுவது வாகை 
** 2, 2, 5 பெயர்கள் 67 
**353

#68
பரப்பு நீர் உலகுதன்னில் பாவலர் கிளைஞர் உற்ற 
நிரப்பு அடும் குணபத்திரன்தான் நித்தலும் போற்றி செய்து 
விருப்புறு விரத சீலன் வீரை மண்டலவன் செய்தான் 
மரப்பெயர்க்கு அறுபத்தெட்டு மன்னிய கவிதைதானே
** நான்காவது மரப்பெயர்த் தொகுதி முற்றிற்று 

@5 இடப் பெயர்த் தொகுதி 
**354

#1
** காப்பு 
கடல் எழும் இரவி கோடி கால் சீத்துப் பொடித்தது என்ன 
மடல் அவிழ் கமலவூர்தி வந்த வாமனையே போற்றி 
அடைவுள திணை தேம் ஊர் வான் அகம் புறம் ஆதியாய 
இடனுடைத்தாக வைத்த இடப் பெயர்த் தொகுதி சொல்வாம்  
**355

#2
** மோக்கத்தின் பெயர் 
கேடிலா அபவருக்கம் கேவலத்தோடு சித்தி 
வீடு கைவல்லியம்மே மீளாத கதியே நூலோர் 
பாடு நிர்வாணத்தோடு பர கதி சிவமே முத்தி 
நீடும் ஈரைந்தும் மோக்கம் அமுதமும் நிகழ்த்தலாமே 
** 11 பெயர்கள் 2 
**356

#3
** தேவலோகம் 
உயர்நிலை உவணை புத்தேள் உலகு பொன்னுலகு தானம் 
வியன் உலகம் துறக்கம் மேல் உலகம் விமானம் 
நயன் உறு சுவர்க்கம் கற்பம் நாகம் விண்ணுலகோடு உம்பர் 
செயம் உறு தேவலோகம் சிறந்திடும் ஈரேழ் பேரே 
** 14 பெயர்கள் 3 
**357

#4
** நாகலோகம் விஞ்சையர் ஊர் நரகம் 
பரவிய நாகலோகம் பவனம் ஆம் சேடி சேணி 
விரவு விஞ்சையர் ஊர் மற்றும் வீழ் அதோகதி பாதாளம் 
நிரயமே அளறே தீயே நீள் சுவப்பிரமே ஊழல் 
நரகு இருள் பவர்க்கம் பத்தும் நரகம் ஆம் பூதியும் பேர் 
** 1, 2, 11 பெயர்கள் 4 
**358

#5
** திக்கு கிழக்கு தெற்கு 
அரிதம் மாதிரம் விசும்போடு அம்பரம் உலகு காட்டை 
கருதிய திசை கோ ஆசை ககுபமும் திகையும் திக்கு ஆம் 
பெருகு பூருவம் குணக்கே பிராசி ஐந்திரி கிழக்கு ஆம் 
தெரியும் யாமியம் அவாசி தக்கணம் சிவேதை தெற்கே 
** 11, 4, 4 பெயர்கள் 5 
**359

#6
** மேற்கு வடக்கு நிலம் 
குடக்கு வாருணமே மேக்கு  குறித்த பச்சிமமே மேற்கு ஆம் 
நடத்திய பிரத்தியக்கும் மற்றதன் பேரே நாட்டும் 
வடக்கு உதக்கு உதீசி என்ப மற்றை உத்தரமும் ஆகும் 
விடப்படாத் திணையே மாவே வேலி பூ நிலம் நாற் பேரே 
** 5, 3, 4 பெயர்கள் 6 
**360

#7
** பூமி 
அவனி காசினி சகத்தோடு அகலிடம் அகிலம் பாரி 
குவலயம் விபுலை மற்றைக் கோத்துரை கோவே குவ்வே 
புவனி மண்டலம் தலம் பூ பொழில் வசுந்தரை உடன் பார் 
பவனம் தாரணியினோடு படி புவி தரணி வையம்
**361

#8
தாலமே அசலை நேமி வசுமதி தாரை தரித்திரி 
ஞாலம் தாத்திரி அளக்கர் நாடு பூதலம் கிடக்கை 
பாலமே பூதிகங்கள் பார்த்திவம் பொறை அனந்தை 
வேலை சூழ் மகி ஆறேழும் மேதினி உலகும் பூமி 
** 44 பெயர்கள் 8 
**362

#9
** நாட்டின் பெயர் 
பாடி மண்டலமே சும்மை பைதிரம் உலகு தேயம் 
நீடிய அகலுள் ஏணி நீவரம் கோட்டம் கண்டம் 
பீடுறு சனபதங்கள் பெரும் பொழில் இவை பன்மூன்றும் 
நாடு தண்ணடையும் ஆகும் அழுவமும் நாட்டும் அப்பேர் 
** 15 பெயர்கள் 9 
**363

#10
** மலை 
விலங்கலே பொறை வேதண்டம் விண்டு மாதிரமே வெற்பு 
சிலம்பு கோத்திரம் அடுக்கல் சிலோச்சயம் சிமயம் பொங்கர் 
நலங் கொள் குத்திரம் பறம்பு நகம் குறும்பொறையே நாகம் 
இலங்கிய வரையே பொச்சை இறும்பு கல்லகமே ஓங்கல்
**364

#11
பொருப்பொடு குவடு கல்லு பொகுட்டு ஓதி திகிரி குன்று 
பருப்பதம் சைலம் சாரல் பாதவம் பதலை தாணு 
பெருத்த பூதரமே சையம் பிறங்கல் அத்திரியே பீலி 
உருத் திகழ் கிரி மலைப் பேர் ஒன்றுடன் எண்ணைந்து என்ப 
** 41 பெயர்கள் 11
**365

#12
** சிறு மலை மலைப்பக்கம் மலையுச்சி 
புடைபடும் இறும்பு குன்று பொற்றையே சிறுமலைப் பேர் 
படு குறும்பொறையே பொச்சை பதலையும் அதன்பேர் வாரம் 
தடமொடு சாரல் சானு தகு மலைப்பக்கம் கோடு 
கொடுமுடி சிகரம் கூடம் குவடு இவை மலையின் உச்சி 
** 6, 4, 5 பெயர்கள் 12 
**366

#13
** பொன்மலை வெள்வி மலை பொதிய மலை 
நிலைபெறும் பொன்மலைப் பேர் நீள் சுராலயமே மேரு 
விலை இல் வெண்மலை வேதண்டம் விசயார்த்தம் வெள்ளி வெற்பு ஆம் 
மலையம் தென்மலையே தென்றல் வருமலை சிமயம் நான்கும் 
புலமை சேர் கும்பயோனி பொதிய மா மலையின் நாமம் 
** 2 3 4 பெயர்கள் 13 
**367

#14
** துறுகல் கற்பாழி மலைமுழை அறை (பாறை) 
** கீழறை குகை சிறுதிடர் 
பொறை துறுகல் என்றாகும் புகலும் கற் பாழி காண்டை 
முறைமையாம் விவரத்தோடு முடுக்கர் கந்தரம் முழைப்பேர் 
அறை முரஞ்சு ஆம் பிலம் கீழறை என்ப குகை நிகுஞ்சம் 
சிறுகிய திடர் பதுக்கை திட்டையும் இட்ட நாமம் 
** 1, 1, 3, 1, 1, 1, 2 பெயர்கள் 14
**368

#15
** கல் திரண்ட கல் பருக்கைக் கல் மேடு 
சிலையொடு கன்னே சையம் சிராவணம் உபலம் கல் ஆம் 
உலம் என்ப திரண்டகல் பேர் உறும் பரல் பருக்கை என்ப 
துலை பெறு திடறு திட்டை சுவல் மெட்டு குவாலே குப்பை 
குலவிய திடரே மேடு குவை என்றும் இவையே கூறும் 
** 5, 1, 1, 8 பெயர்கள் 15 
**369

#16
** கடல் 
பரவை தெண் திரையே சிந்து பெளவமே பாராவாரம் 
நரலை ஆர்கலியே உந்தி நதிபதி அம்புராசி 
குரவையே சக்கரம் கார்கோள் வேலாவலயம் முந்நீர் 
அரி மகராலயம் நீராழி அம்பரமே வேலை 
**370

#17
வாரிதி அளக்கர் நீண்ட வாரியே உததி ஓதம் 
வீரை அன்னவமே அத்தி வெள்ளம் சாகரமே ஆழி 
சாருறு சலதி உப்பு சலநிதி சமுத்திரம் சூழ் 
வாரணம் இவை ஆறாறும் மறி கடல் உவரியும் பேர் 
** 37பெயர்கள் 17 
**371

#18
** கடற்கரை திரை அலை நீர்க்கரை வரம்பு 
பாரிய பாராவாரம் பகர் வேலை கடற்கரைப் பேர் 
ஆரும் சீகரம் கல்லோலம் அறல் தரங்கம் திரைப் பேர் 
வாரமே பாரம் கோடு வரை அணை தடமே கூலம் 
தீரமே நீர்க்கரைப் பேர் செறி வரம்பிற்கும் பேரே 
** 2, 4, 8, 8 பெயர்கள் 18 
**372

#19
** அருவி பேரருவி மலைச்சாரலாறு உவர்நீர் செய்கரை 
அருவியே கழிமுகம் பேர் அருவிப் பேர் உவதையாகும் 
அருவியே மலையின் சாரல் ஆற்று அபிதானம் என்ப 
உரை செயில் உவர் நீர் தானே உறை என்ப குரம்புதான் செய்
கரையின் பேர் குலையும் சேதும் காட்டுப மீட்டு அதற்கே 
** 1, 1, 1, 1, 3  பெயர்கள் 19 
**373

#20
** யாறு முல்லைக் கான் யாறு கழிமுகம் 
உந்தியே துறையே மற்றை ஒலியலே குடிஞை ஓணம் 
சிந்துவே நதியே வீசும் திரை வரு புனலே ஆறு ஆம் 
கந்தம் ஆர் கலுழி முல்லைக் கான்யாறாம் கழிமுகப் பேர் 
முந்திய கயவாய் என்ப புகார் அதோமுகமும் ஆமே 
** 8, 1, 3 பெயர்கள் 20 
**374

#21
** கழி கழிநிலம் உப்பளம் மணற்குன்று உவராத் தரை 
கழியின் பேர் முரம்பு காயல் கானல் உப்பளம் என்றாகும் 
கழிநிலம் உப்பளப்பேர் காட்டும் உப்பளமே காயல் 
அழிவிலா உவளகத்தோடு அளக்கர் ஆம் புளினம் என்ப 
ஒழிவிலா மணற்குன்றின் பேர் உவர்த் தரை இரிணம் ஆமே 
** 4, 1, 3, 1, 1 பெயர்கள் 21 
**375

#22
** காவேரி பொருதை தாமிரபர்ணி கன்னி 
** கெளதமை கோதாவரி 
பொன்னி காவிரி இரண்டும் பொருந்து காவேரியின் பேர் 
பன்னிய பொருநையின் பேர் பகர்ந்த தண் பொருந்தம்தானே 
கன்னியே குமரி என்ப கெளதமையின் பேர் கோதை 
மின்னிய விருத்த கங்கை விமலை கோதாவரிப் பேர் 
** 2, 1, 1,1, 2 பெயர்கள் 22
**376

#23
** நீர் நிலை 
படுகரே தாங்கல் கேணி பல்வலம் படுவே பட்டம் 
மடு உவளகமே பண்ணை வாவியே சுனையே வட்டம் 
தடமொடு கயம் பயம் பூந் தடாகமே குளமே குட்டம் 
அடைவுள கிடங்கு சூழி  அலந்தையே குண்டம் பங்கம்
**377

#24
** நீர்நிலை தெளிந்த நீர் யாற்றிடைச் குறை 
இலஞ்சி கோட்டகமே பொய்கை ஏல்வையே ஓடை ஏரி 
நிலம்தனில் குளிர்ந்த நீரின் நிலை ஆறைந்தொன்று நீங்க 
தலந்தனில் தெளிந்த நீரைச் சற்சலம் என்றிசைப்பர் 
இலங்கையே துருத்தி ஆற்றின் இடைக்குறை அரங்கமும் பேர் 
** 29, 1, 3 பெயர்கள் 24 
**378

#25
** நீர்க் குமிழி நுரை நீர்ச் சுழி வெள்ளம் 
நுரை மொக்குள் பெளவத்தோடு நொவ்விய புற்புதங்கள் 
குரை கொள் நீர்க்குமிழி ஐந்தாம் கொப்புளும் அப் பேர்தானே 
நுரையின் பேர் பேனம் ஆகும் நொய்ய நீர்ச்சுழியே உந்தி 
பிரளயம் வாரி நீத்தம் பெருக்கு ஓதம் ஓகம் வெள்ளம் 
** 5, 1, 1, 6 பெயர்கள் 25 
**379

#26
** நிறை புனல் நீந்து புனல் கலங்கல் நீர் ஆழம் 
மண்டிய நிறை புனல் பேர் வழாறொடு பிராறும் ஆகும் 
மிண்டிய அகாதம் நீந்தும் வெம் புனல் என்ப நூலோர் 
கண்டிடும் கலங்கல் நீரே கலுழி ஆவிலமும் ஆகும் 
குண்டு அழுந்தொடு கயங்கள் கூறு கம்பீரம் ஆழம் 
** 2, 1, 2, 4 பெயர்கள் 26 
**380

#27
** நீரோட்டம் கிணறு ஊறு புனல் 
** ஊரிலுள்ளார் உண்ணும் நீர் 
கோலமே பெருகுகின்ற கொழுந்து நீரோட்டம் என்ப 
கோலிய கிணறு கூபம் கூவலே அசும்பும் கூறும் 
மேலிடா அஃகி ஊறும் வெம் புனல் உறவி ஊற்று ஆம் 
ஓலம் இட்டு ஊரில் உள்ளார் உண்பது ஊருணி என்று ஓதும் 
** 1, 3, 3, 1 பெயர்கள் 27 
**381

#28
** சேறு சேற்றிற் புள்வி அருவருத்த சேறு 
அள்ளல் சேதகமே தோணி அளறுடன் அளக்கர் தொய்யல் 
கொள்ளமே செதும்பு பங்கம் குழையொடு குழம்பு காலாழ் 
தெள்ளிய அசறு செய்யல் ஈரேழும் சேறு ஆம் சேற்றில் 
புள்ளியே குமிழ் பொகுட்டாம் நொதி அருவருத்த சேறு 
** 14, 2, 1 பெயர்கள் 28 
**382

#29
** பசும்புல் தரை பாழ் நிலம் வெண் மணல் 
** நுண் மணல்   மணல் 
பரவு சாட்டுவலம் என்ப பசும்புல்லுத் தரையின் பேரே 
விரவிய கரம்பு பாழ் ஆம் வாலுகம் வெண்மணல் பேர் 
மருவிய அதரினோடே அயிரும் நுண்மணல் ஆம் ஆற்றில் 
கரைதனில் கொழித்த நுண்மைக் கருமணல் அறல் என்று ஓதும்
** 1, 1, 1, 2, 1 பெயர்கள் 29 
**383

#30
** மலைசார்ந்த நிலம் வனம் சார்ந்த நிலம் நாடு சார்ந்த 
** நிலம் கடல் சார்ந்த நிலம் படுதிலம் 
கோடு சூழ் மலையின் சாரல் குறிஞ்சி ஆம் வனம் சார் முல்லை 
நாடு சார் மருதம் ஆகும் நல் கடல் சார்வு நெய்தல் 
நீடிய கொடுங்கோல் மன்னர் நெடுங்குடைக் கீழ் வாழ்கின்ற 
பாடு இலாக் குடிகள் போலப் படு நிலம் பாலை ஆமே 
**384

#31
** விளை நிலம் சிறு செய் 
பழனமே செறு வரம்புள் பணை பானல் கைதை பண்ணை 
கழனியே ஆலவாலம் காட்டிய தடி புலம் செய் 
விழைவுறு வயலே மாவே விளைநிலம் ஈரேழ் பேராம் 
குழைவுறு பாத்தியோடு குண்டிலும் சிறுசெய் கூறும் 
** 14, 2 பெயர்கள் 31 
**385

#32
** செந்நெல் விளையும் நிலம் எல்லாம் விளையும் நிலம்
** மருத நிலம் வரம்பு வரம்பருகு 
செந்நெலே விளைவதான சிறப்புடை நிலம் சலேயம் 
இன்னது என்னாமல் உண்டாம் உருவரை என்ப தானே 
மன்னிய அகணி பானல் வயல் பணை மருதம் நாற்பேர் 
அந்நில வரம்புதானே குரம்பு அதன் அருகு கங்கு 
** 1, 1, 4, 1, 1 பெயர்கள் 32
**386

#33
** முலலைக்கும் குறிஞ்சிக்கும் பெயர் வன்பால் 
** மென்பால் கருநிலம் 
புறவொடு புறம்பணைப் பேர் புணர் முல்லை குறிஞ்சிக்கும் பேர் 
பறையும் வன்பால் குறிஞ்சி பாலையாம் மருதம்தானே 
நிறையும் மென்பால் ஆம் வெற்பில் நீரினில் வெவ்^ வனத்தில் 
கறைபடு மிகுதிதானே கருநிலம் ஆகும் என்ப 
** 2, 2,1 பெயர்கள் 33 
**387

#34
** ஊர்
பாக்கமே இருக்கை பாழி பட்டினம் பள்ளி முட்டம் 
பூக்கம் சம்வாகம் நொச்சி பூரியம் பாடி பூண்டி 
மாக் கிளர் கோட்டம் வாழ்க்கை மடப்பமே குடி குடிக்காடு 
ஆக்கமாம் குறிச்சி குப்பம் அருப்பமே நத்தம் சம்மை
**388

#35
** ஊர் நீரும் வயலும் சூழ்ந்த ஊர் 
அகரமே புரமே சேரி அகலுள் வைப்பு உறையுள் வேலி 
நகரம் பக்கணம் கிராமம் நவில் கருவடம் குறும்பு 
நிகர் இல் வேசனமே தாமம் நிவேசனம் பதியே பேடு 
பகர் புரி எண்ணைந்து ஊர் நீர் பண்ணை சூழ் ஊர் கிராமம் 
** 40, 1 பெயர்கள் 35 
**389

#36
** சிறு கிராமம் பெருங் கிராமம் இராசதானி 
குடி நூறு பட இருந்தால் குறைவுள கிராமம் ஆகும் 
நெடியது குடி ஐஞ்ஞூறு நிறைந்தது பெருங்கிராமம் 
வடிவுடை இராசதானி மணி மதில் கோபுரங்கள் 
புடைபடும் அகழால் சூழ்ந்த புரம் புரி நகரமும் பேர் 
** 3 பெயர்கள் 36 
**390

#37
** மலை செறிந்த ஊர் மலையும் யாறும் சூழ்ந்த ஊர் 
** ஐஞ்ஞூறு கிராமத்திற்குத் தலைமைக் கிராமம் 
** பல தீவிற் பண்டம் விற்கும் ஊர் 
மலை செறிவதுவே கேடம் மலையுடன் ஆறு சூழ் ஊர் 
அலைவறு கருவடங்கள் ஐஞ்ஞூறு கிராமத்திற்கே 
தலைமை பெற்றது மடப்பம் தாழ் கடல் தீரம் தன்னில் 
பலபல தீவில் பண்டம் பகர்வ பட்டனம் என்று ஆமே 
** 1,1,1,1 பெயர்கள் 37 
**391

#38
** நெல்லும் புல்லும் நிறைந்த மலையின்  ஊர் 
** கழியிருக்கை சிற்றூர்
மட்டறு நெல்லும் புல்லும் மத்தகம் தன்னில் ஏற்றுத் 
தட்டறு மலையின் ஊரே சம்வாகம் என்றும் சாற்றும் 
தொட்ட தோணாமுகம்தான் சூழ் கழியிருக்கை என்ப 
பட்டும் நொச்சியுமே சிற்றூர் பள்ளியும் அதன் பேர் பன்னும் 
** 1, 1, 3 பெயர்கள் 38
**392

#39
** குறிஞ்சி நிலத்து ஊர் முல்லை நிலத்து ஊர் 
** நெய்தல் நிலத்து ஊர் பாலை நிலத்து ஊர், பாசறை 
குறிஞ்சி சிற்றூரே சீறூர் குறிஞ்சி நன்னிலத்தூர்ப் பேர் ஆம் 
பறித்திடு முல்லையூரே பாடி பட்டினமே நெய்தல் 
குறித்து எழு குறும்பர் ஊரே குறும்பு பாலைக்கே கூற்றாம் 
பறித்த பாசறையே தெவ்வர்முனைப் பதி பாடிவீடு 
** 3, 1, 1, 1, 2 பெயர்கள் 39 
**393

#40
** மருத நிலத்து ஊர் 
புரி குடம் நகரம் பூக்கம் புரம் குடி நிகாயம் பள்ளி 
சரணம் ஆவாசம் பாக்கம் தாவளம் நிகமம் தாமம் 
பரவிய நிலயம் கோட்டம் பதி வாழ்க்கை சேர்வு பாழி 
மருத நன்னிலத்து ஊர் ஈரைந்து இரட்டியாம் வசதியும் பேர் 
** 21 பெயர்கள் 40 
**394

#41
** கடாரம் காசி சிங்களம் கருவூர் உறையூர் 
** மதுரை காஞ்சி அவந்தி நகர் 
காழகம் கடாரம் ஆம் வாராணசி காசி என்ப 
ஈழமே சிங்களம் வீறு  எய்திய கருவூர் வஞ்சி 
கோழியே உறையூர் மாறன் கூடலே மதுரை ஆகும் 
தாழ்விலாக் காஞ்சி கச்சி சாற்றிடில் அவந்தி உஞ்சை 
** 1,1,1, 1, 1, 1, 1, 1 பெயர்கள் 41 
**395

#42
** மிதிலை காவிரிப்பூம்பட்டினம் அயோத்தி 
** சிதம்பரம் திருவாரூர் 
மிதிலையே விதேகை ஆம் காவிரிப்பூம்பட்டினம் புகார் ஆம் 
விதமுறு வினிதை கோலம் மிக்க கோசலை சாகேதம் 
நிதி வளர் அயோத்தி நாமம் நிமலமாம் புலியூர் தில்லை 
கதிதரு சிதம்பரப் பேர் கமலையே திருவாரூர் ஆம் 
** 1, 1, 3, 2, 1 பெயர்கள் 42 
**396

#43
** மதில் 
பெருகிய கடகம் காப்பு பிராகாரம் நொச்சி ஆரல் 
புரிசை வேணகையே வாரி புகழ் உவளகமே இஞ்சி 
அரணமே எயிலே ஓதை அரும் சிறை வேதி சாலம் 
மருவிய அகப்பா வேலி அறுமூன்றும் மதிலின் நாமம் 
** 18 பெயர்கள் 43 
**397

#44
** அகழ் மதிலுறுப்பு மதிலுள் உயர்ந்த மேடை 
பரிகமே கிடங்கு கேணி பாம்புரி உடுவே ஓடை 
விரவிய அகழ் ஆறே பேர் மேவும் எந்திரமே கோசம் 
மருவிய நாஞ்சில் தோணி ஞாயில் அம் மதில் உறுப்பாம் 
பரிகமே அகப்பாவோடு பதணம் உள் உயர்ந்தமேடை 
** 6 5 3 பெயர்கள் 44 
**398

#45
** நகர வாயில் நகர வாயிற் கதவில் விட்டுப் 
** புகும் வழி நகர வாயில் திண்ணை 
** நகர வாயிற் படிச் சுருள் 
விரிந்த கோபுரமே கோட்டி மிகும் புர வாயிலின் பேர் 
பொருந்தும் அக் கதவில் விட்டுப் புகும் வழி புதவுதானே 
திருந்தும் அவ் வழிச் சார் திண்ணை அளிந்தம் ஆம் சிறந்த வாயில் 
பரந்திடும் படிச்சுருட்குப் பகர் அத்தினகமே நாமம் 
** 2, 1, 1, 1 பெயர்கள் 45 
**399

#46
** அங்காடி குதிரை வையாளி வீதி வீதி அரசர் வீதி 
கோது இல் ஆவணம் அங்காடி கூலம் பீடிகையும் அப்பேர் 
தீது இல் வையாளி வீதி திகழ் செண்டு வெளியே என்ப 
சாதியாம் புரவி வட்டம் திருமுற்றம்தானும் அப் பேர் 
வீதியின் பேரே ஞெள்ளல் பூரியம் அரசர் வீதி 
** 3, 3, 1, 1 பெயர்கள் 46 
**400

#47
** நெடுந்தெரு குறுந்தெரு கோணத்தெரு முச்சந்தி 
நெடுந்தெரு மன்றம் மார்க்கம் நிகமம் இம் முப்பேர் செப்பும் 
ஒடுங்கிய குறுந்தெருக்கள் ஓதிய மறுகுதானே 
முடங்கிய கோணந்தன்னை முடுக்கு எனல் அடுக்கும் இப் பால் 
அடங்கிய முச்சந்திப் பேர் அந்தி என்று அறையலாமே 
** 3, 1, 1, 1 பெயர்கள் 47 
**401

#48
** சந்து நாற்சந்தி சிரேணி ஆயர்வீதி சிற்பர் வீதி 
தக்க சந்து ஆம் சதுக்கம் தரும் சிருங்காடகம்தான் 
ஒக்கும் நாற்சந்தி ஆகும் ஓதிய சதுக்கமும் பேர் 
திக்குறும் வாடை சேடி சிரேணி ஆம் ஆயர் வீதி 
மிக்க ஆபீனம் ஆம் ஆவேசனம் சிற்பர் வீதி 
** 1, 2, 2, 1,1 பெயர்கள் 48 
**402

#49
** வேடர் வீதி அம்பலம் சித்திர கூடம் அரசிருக்கை 
பற்றிய வேடர் வீதி பக்கணம் ஆகும் என்ப
மற்றை அம்பலமே மன்றம் பொதி பொது சபையும் ஆகும்
தெற்றியம்பலம்தான் ஒன்றே சித்திரகூட நாமம் 
வெற்றி அத்தாணியோடு வேத்தவை அரசிருக்கை 
** 1, 4, 1, 2 பெயர்கள் 49 
**403

#50
** அரசர் இல் தேவர் கோயில் அறச் சாலை ஓதும் பள்ளி 
சாலை மாளிகை குலங்கள் சாற்றிய பவனம் கோயில் 
மாலை வேல் அரசர்இல் பேர் மந்திரம் நிலையம் கோட்டம் 
ஆலயம் சினகரம் சேதிமம் தளி தேவர் கோயில் 
சாலை மற்று அறத்தின் சாலை அறப்புறம் ஓதும் பள்ளி 
** 5, 7, 1, 1 பெயர்கள் 50 
**404

#51
** ஓம மண்டபம் மன்னன் தேவி இல் வீடு பண்ட சாலை 
வனைதரு சமித்தம் ஓமமண்டபம் மன்னன் தேவி 
புனை இல்லம் கந்தவாரம் போற்றும் அந்தப்புரப் பேர் 
மனை இல்லம் புக்கில் மாடம் மந்திரம் வசதி வீடு ஆம் 
புனை கலன் இருக்கைதானே போற்றிய பண்டசாலை 
** 1 2 6 1 பெயர்கள் 51
**405

#52
** வீட்டிறப்பு முகடு வேயுள் வேயா மாடம் 
** முற்றம் கல்வி பயிலிடம் 
விரவு இறை வீட்டிறப்பே வளவியும் ஆம் விடங்கம் 
தரு முகட்டின் பேர் வேயுள் வேய்தல் ஆம் தகு மண்ணீடு 
மருவிய வேயா மாடம் அங்கணம் முன்றில் முற்றம் 
கருது கல்விக் களப் பேர் கழகம் கல்லூரி ஆமே 
** 2, 1, 1, 1, 2, 2 பெயர்கள் 52 
**406

#53
** ஆயுதம் சூது கூத்துப் பயில் களம் வாயில் தாழ்வாரம்
** தரம்புவாய் சுவர் நிலாமுற்றம் 
ஆயுதம் சூது கூத்துப் பயில் களம் அரங்கம் என்ப 
வாயிலே கடை துவாரம் வாரி ஆம் சோபானம்மே 
தூய தாழ்வாரம் என்ப அங்கணம் தூம்புவாய் ஆம் 
ஆய பித்திகை சுவர்க்கு ஆம் அரமியம் நிலாமுற்றப் பேர் 
** 1, 3, 1, 1, 1, 1 பெயர்கள் 53
**407

#54
** யானைக்கூடம் குதிரைப்பந்தி பலகணி கரந்த கற்படை 
ஆலயம் ஓளி வாரி யானையின் கூடம் ஆமே 
சாலை மந்துரை இரண்டும் வாசியின் பந்தி தானே 
சாலகம் சாளரம் வாதாயனம் குறுங்கண் சாலம் 
காலதர் பலகணிப் பேர் கரந்த கற்படை சுருங்கை 
** 3, 2, 6, 1 பெயர்கள் 54 
**408

#55
** கற்படுத்தநிலம் திண்ணை சிற்றில் குடில் 
** அடிச் சேரி மடைப்பள்ளி 
குட்டிமம் படுத்த பூமி குறடு வேதிகை மண்ணீடு 
திட்டையே திண்ணை சிற்றில் கூரை ஆம் குடில் குரம்பை 
தட்டு உறா அடிச்சேரிப் பேர்தான் அடிக்குடில் என்று ஆமே 
அட்டிலே பாகசாலை அடுக்களை மடைப்பள்ளிப் பேர் 
** 1, 4, 1, 1, 1, 3 பெயர்கள் 55 
**409

#56
** அடுப்பு ஒமகுண்டம் முனிவர்வாசம் 
காழ் உறு குமுதம் சுல்லி காமரம் அடுப்பு முப் பேர் 
தாழும் உத்தானமும் பேர் தடவொடு வேள்விக் குண்டம் 
வேள்வியே ஓம குண்டம் நித்தமும் வேதியும் பேர் 
பாழி தாபதம் கரண்டை பள்ளியே முனிவர் வாசம் 
** 4, 5, 4 பெயர்கள் 
**410

#57
** மட்கலம் சுடு சூளை பண்ணும்கூடு கூடு குதிர் 
மஞ்செனப் புகை சூழ் சுள்ளை மட்கலம் சுடு சூளைப் பேர் 
பஞ்சரம் பண்ணும் கூடு ஆம் பகர் குலாயனமும் அப்பேர் 
குஞ்சு உறை கட்சி கூண்டு குடம்பையே கூட்டின் பேராம் 
விஞ்சு நெல் முதலாம் பண்டம் வீழ் குதிர்  புகல் என்று ஓதும் 
** 1, 2, 3, 1 பெயர்கள் 57 
**411

#58
** மனிதர் துயிலிடம் விலங்கு துயிலிடம் யானைதுயிலிடம் 
சட்டகம் பாயல் பள்ளி சயனமே உறையுள் பாழி 
கட்சியே அமளி சேக்கை கண்படை மனிதர் பாலாம் 
பட்டமே போத்து சேக்கை பண்ணையும் விலங்கின்பாலாம் 
இட்ட சேவகமே தண்டம் யானையின்துயிலிடப் பேர்
** 10, 4,  2 பெயர்கள் 58 
**412

#59
** சுடலை பிணம்வீழ்களம் 
சுடுகாடு புறங்காட்டோடு தொடர் காளவனம் பிணக் காடு 
இடு காடு பிதிர் வனத்தோடு ஈமமே வனம் மயானம் 
படு காடு சுடு நிலங்கள் பன்னொன்றும் சுடலையின் பேர் 
கடிதாம் செம்புலம் பிணம் வீழ் களம் பறந்தலையும் ஆமே 
** 11, 2 பெயர்கள் 59 
**413

#60
** பொருகளம் புற்று ஒதுக்கிடம் ஏகாந்தம் 
வெற்றி கொள் களரியே ஆகவபூமி விளாகமே மொய் 
செற்றிடும் போர்க்களம் வெஞ் செருக்களம் பொருகளப் பேர் 
புற்று வன்மீகம் என்ப புகும் ஒதுக்கிடமே துச்சில் 
உற்ற வேறிடம் ஏகாந்தம் ஒருவந்தம் என்றும் பேரே 
** 6, 1, 1, 2 பெயர்கள் 60 
**414

#61
** பள்ளம் பழங்கொல்லை புதுக்கொல்லை உழவு 
இழிவு கீழ் பயம்பு தாழ்வே ஏற்றிடும் படுகர் ஞெள்ளல் 
குழி உவளகம் கிழக்கு கூறு அவல் பள்ளம் பத்தாம் 
பழையதாம் கொல்லைப் பேரே பகர் முதைப்புனம் ஆம் என்ப 
விழைவுறு புதிய கொல்லை இதைப்புனம் உழவு தொய்யல் 
** 10, 1, 1, 1 பெயர்கள் 61 
**415

#62
** வழி 
வதி சுரம் வட்டை நீண்ட வகுந்தொடு வயவை வாரி 
அதர் நெறி செலவு தாரி அயனமே இடவை மார்க்கம் 
பதவையே அத்தம் செப்பம் பட்டமே இயவை பாதை 
உதவிய சரியே தாரை ஒழுக்கமே நடவை ஆறு
**416

#63
** வழி அருநெறி கவர் வழி யானை செல் வழி! 
தெரு வகிர் கிறி மூவொன்பான் செப்பிய வழியின் பேரே 
அருநெறிப் பேர் சுரத்தோடு அத்தமும் கடமும் ஆகும் 
கருதிய கவலைதானே கவர்ந்திடு வழிப் பேர் என்ப 
பெரு மத யானை செல்லும் பிற வழி தண்டம் ஆமே 
** 27, 3, 1, 1 பெயர்கள் 63 
**417

#64
** சிறு வழி கற்படி நீள்வழி புது வரம்பின் வழி 
சிறுவழி விடங்கர் ஆகும் சிறந்த கற்படியின் நாமம் 
மறுவில் சோபானமே ஆரோகணம்தானும் அற்று ஆம் 
நெறிபடும் அளக்கர் என்ப நீள்வழி நாமம்தானே 
உறுதி ஆம் புது வரம்பின் உறு வழி மரிசி என்ப 
** 1, 2, 1, 1 பெயர்கள் 64 
**418

#65
** இடம் 
இடை உழி வழி நிலம் பால் இல் உழை உளி கண் பக்கம் 
புடை தலை முதல் வளாகம் புலம் வலம் சூழல் பாங்கர் 
கடை வயின் பட்டி வைப்பு கால் களம் தேயம் பாடே 
இடம் என்ப முன் பின் சார் வாய் கீழ் மேலும் அதுவே என்ப 
** 32 பெயர்கள் 65 
**419

#66
** பக்கம் நடு 
பாங்கர் பாரிசம் மருங்கு பால் புடை புறமே பக்கம் 
ஞாங்கரும் சிறையும் மாடும் நாட்டுப அதுவே மீட்டும் 
நாம் கிளர் நள்ளு நாப்பண் நனந்தலை பிரமம் மையம் 
ஆங்குறும் மத்தியத்தோடு ஆகும் நா நடு ஏழ் பேரே
** 9, 7 பெயர்கள் 66 
**420

#67
** இவ்விடம் இம்பர் எவ்விடம் யாங்கு அவ்விடம் 
** கூப்பிடு தூரம் யோசனை தூரம் காதம் 
ஈண்டே இவ்விடம் என் பேராம் இம்பரே இவண் எனும் சொல்  
யாண்டே எவ்விடம் என் பேராம் யாங்கு என்ப எவண் எனும் சொல் 
ஆண்டே அவ்விடம் என் பேர்தான் ஆகும் கூப்பிடு குரோசம் 
காண்டும் யோசனை புகைப் பேர் காவதம் காதம் ஆமே 
** 1, 1, 1, 1, 1, 1, 1, 1 பெயர்கள் 67 
**421

#68
** ஞாங்கர் முன்னர் 
முன்னொடு மேலும் மற்றும் மொழியும் அஞ்ஞாங்கர்தானே 
முன்னரே தலைத்தாள் ஆகும் முதலொடு புரமும் அப்பேர் 
அன்னது இவ்விடப் பேர்க்கு எட்டோடு அறுபது விருத்தம் செய்தான் 
மன்னு சீர்க் குணபத்திரன் தாள் வணங்கும் மண்டலவன்தானே
** 2, 3 பெயர்கள் 68 
** ஐந்தாவது இடப் பெயர்த் தொகுதி முற்றிற்று 

@6. பல்பொருட் பெயர்த் தொகுதி 
**422

#1
** காப்பு 
உலகு எலாம் இறைஞ்சி ஏத்த உலகு எலாம் உணர்ந்த மூர்த்தி 
அலகிலா ஞானவாரி ஆறிரு குணங்களோடும் 
இலகு மூ எயிலுள் யாளி எழில் அணை இருந்தோன் பாதம் 
பலமுறை வணங்கி ஏத்தி பல்பொருட்பெயரும் சொல்வாம்
**423

#2
** பொன் 
மாசை பீதகமே பீதம் மாடையே மாடு வேங்கை 
ஆசையே சுவணம் காரம் அருத்தம் காஞ்சனமே காணம் 
தேசிகம் கனகம் கைத்து செந்தாது பொலமே அத்தம் 
பேசிய சாமி வித்தம் பெரும் தனம் உடலே பண்டம்
**424

#3
இரணியம் நிதி வெறுக்கை ஈகை கல்யாணம் ஏமம் 
பொருள் உரை சந்திரம் சாம்பூனதம் பூரி ஈழம் 
திரவியம் சாதரூபம் செங்கொல்லு நிதானம் மாழை 
அரி தபனியம் ஆறேழும் செம்பொன் ஆடகமும் ஆமே 
** 43 பெயர்கள் 3 
**425

#4
** பஞ்சலோகம் ஏழ் உலோகம் நவமணி 
** கடவுள் மணி பொற்காசு 
எதிர் இல் பொன் வெள்ளி செம்போடு இரும்பு ஈயம் பஞ்சலோகம் 
பொதி கஞ்சம் தராவும் கூட்டிப் புகன்றிடின் ஏழுலோகம் 
கதிர் நவமணியின் பேரும் கடவுள் மா மணியின் பேரும் 
நிதி நிதானங்கள் என்ப நீண்ட பொற்காசு காணம் 
** 5, 7, 1, 1, 1 பெயர்கள் 4 
**426

#5
** மணிப் பொது தெய்வ மணிப் பொது 
** மாணிக்கம் பதுமராகம் 
கருதிய மணிப் பொதுப் பேர் காசொடு மனவும் ஆகும் 
அரதனம் சலாகை தெய்வ அகன் மணிப் பொதுப் பேர்தானே 
மருவு செம்மணியே மற்றை மாமணி மாணிக்கப் பேர் 
பரவிய பதுமராகம் கெளத்துபம் என்று பன்னும் 
** 2, 2, 2, 1 பெயர்கள் 5 
**427

#6
** வைடூரியம் நீலமணி மரகதம் வைரம் முத்து 
வரைவு அறு வாலவாயம் வைடூரியத்தின் நாமம் 
நிரை பெறு மணி எனும் பேர் நீலமாமணியின் பேரே 
மரகதம் அரியே பச்சை வச்சிரம் வைரம் ஆரம் 
தரளம் நித்திலமே முத்து மெளத்திகம்தானும் அப் பேர் 
** 1, 1, 2, 1, 4 பெயர்கள் 6 
**428

#7
** பவளம் உலோகக் கட்டி 
துப்புடன் துவர் அரத்தம் துகிர் பிரவாளம் ஐந்தும் 
மெய்ப்படு பவளம் என்ப வித்துருமம்தானும் பேர் 
கைப்படு தகணை மாழை காட்டும் வங்காரம் முப்பேர் 
ஒப்பவே உருக்கிக் கூட்டும் உலோகத்தின் கட்டி ஆமே 
** 6, 3 பெயர்கள் 7 
**429

#8
** சங்கநிதி பதுமநிதி பண்டாரம் உருக்கு 
சங்க நீள் நிதியத்தோடு தாமரை நிதியம்தானே 
அங்கண் மா ஞாலத்தே அவ் இரு உரு ஆகும் என்ப 
பொங்கிய கோசம் தண்டம் போற்று பண்டாரம் ஆகும் 
தங்கிடும் உருக்கின் நாமம் எஃகு எனச் சாற்றலாமே 
** 2, 1 பெயர்கள் 8 
**430

#9
** வெள்ளி காரீயம் செம்பு இவற்றின் பொதுப் பெயர்  
கருதிய சுல்லு தாரம் களதெளதம் வெண் பொன்னோடும் 
இரசதம் வெள்ளியின் பேர் ஏற்ற காரீயம் நாகம் 
எருவையே உதும்பரம் தாமிரமொடு வடுவே செம்பு ஆம் 
பொருவு அறு சீருள் சிக்கம் இவைகளின் பொதுப் பேர் ஆமே 
** 5, 1, 4, 2 பெயர்கள் 9 
**431

#10
** ஈயம் பித்தளை வெண்கலம் தரா இரும்பு 
திருந்திய ஈயம் வங்கம் சீருளே சீசமும் பேர் 
புரிந்த பித்தளையே மாயாபுரி ஆர கூடமும் பேர் 
கருங் கஞ்சம் உறைகளே வெண்கலம் மதுகம் தரா ஆம் 
கருங் கொல்லே அயமே சொன்ன கரும்பொன்னும் இரும்பின் நாமம் 
** 3, 2, 2, 1, 3 பெயர்கள் 10 
**432

#11
** இரும்பு உள் வாங்கும் சலாகை சந்திர கிரணத்தில் 
** நீர் கால் சலாகை சூரியன் ஒளியில் தீக் கால் 
** சலாகை காவிக் கல் 
தொந்தமாய் இரும்பு உள் வாங்கும் சலாகை சும்பகமே என்ப 
சந்திரகிரணம் நீர் கால் சலாகையே சந்திர காந்தம் 
வந்த சூரியகாந்தம்தான் மற்று அதன் ஒளி தீக் காலும் 
நந்து கைரிகமே தாது நற் செங்கல் காவிக் கல்லே 
** 1, 1, 1, 3 பெயர்கள் 11 
**433

#12
** பளிங்கு பலகறை பல பண்டம் 
கண்ணிய பளிங்கின் நாமம் காழ் படிகம் பருக்கை 
மண்ணிய கவுடி சோகி வராடியே பலகறைப் பேர்
பண்ணியம் வளமே கூலம் பண்டாரம் பண்ணிகாரம் 
நண்ணிய பலபண்டப் பேர் நடைப் பரிகாரமும் பேர் 
** 3, 3, 6,பெயர்கள் 12
**434

#13
** அரும் பண்டம் கருப்பூரம் கத்தாரி 
** நால்வகைச் சாந்து 
விருப்பம் ஆம் அரும்பண்டப் பேர் மேவிய தாரம் ஆகும் 
கருப்பூரம் பளிதத்தோடு கனசாரம் சசி முப் பேரே 
பிரித்த மான்மதம் கத்தூரி பீதமே கலவையோடு 
பொருத்தும் வட்டிகையும் மற்றைப் புலியும் நால்வகையின் சாந்து 
** 1, 3, 1, 4 பெயர்கள் 13 
**435

#14
** சாந்து குங்குமம் மயிர்ச் சாந்து கலவை 
கலவைச்சேறே காலேகவண்ணமே களபமே மெய் 
குலவிய விரையே சாந்து ஆம் குங்குமப் பேர் செஞ்சாந்து ஆம் 
இலகிய தகரம் ஏலம் காசறை மயிர்ச் சாந்தின் பேர் 
கலவையே களபம் என்ப கலம்பகம் கண்டபேரே 
** 4, 1, 3, 2 பெயர்கள் 14 
**436

#15
** செறிகுழம்பு அப்பல் பூசுதல் மெம்ப் பூச்சு 
உலப்பு இலாத் தேய்வை செச்சை செறிகுழம்பு உற்ற பேர் கைத்
தலத்தினின் கொட்டல் அப்பல் சாத்துதல் சதுர்த்தலும் பேர் 
புலர்த்தலே வரித்தல் என்ப பூசுதலின் பேர்தானே 
அலைத்து மெய்ப் பூசும் பூச்சின் அபிதானம் அங்கராகம் 
** 2, 3, 2, 1 பெயர்கள் 15 
**437

#16
** முலையினும் தோளினும் எழுது கோலம் 
** திலகம் நெற்றிக் குறி 
இலகிய எழுது கோலால் இளையவர் முலையும் தோளும் 
நலம் மிக எழுது கோலம் நவின்றிடும் தொய்யில் என்ப 
திலகமே சுடிகை சுட்டி திலதமும் அதன் பேர் செப்பும் 
திலகம் புண்டரங்கள் என்ப செறி நெற்றிக் குறிகள் ஆமே 
** 1, 3, 2 பெயர்கள் 16 
**438

#17
** சாதிலிங்கம் குங்குலியம் சிந்தூரம் 
** பெருங்காயம் செம்பஞ்சு 
இங்குலிகம்தான் சாதிலிங்கம் ஆம் குலிகமும் பேர் 
குங்குலியம்தானே குங்குலுவாம் குக்குலுவும் அப் பேர் 
செங்கதிர்க் கிரணம் போலும் சிந்தூரப் பேர் சேலேகம் 
இங்குவே பெருங்காயப் பேர் எழில் அலத்தகம் செம்பஞ்சு
** 2, 2, 1, 1, 1 பெயர்கள் 17
**439

#18
** அரக்கு அரிதாரம் அக்கதம் பிரப்பு
பறை அரக்கு அரத்தம் துப்பு ஆம் பழுப்பு என்பது அரிதாரப் பேர்
அறுகு வெள்ளரிசி கூட்டி அணிவது அக்கதம் என்றாகும்
குறுணி ஒவ்வொன்றதாகக் கொள் கலம் பல்லுணாக்கள்
பெருமுறை பரப்பி வைப்ப பிரப்பு எனப் பேசலாமே
** 2, 1, 1, 1 பெயர்கள் 18
**440

#19
** ஓம விறகு நெருப்புறு விறகு கரி கடைக் கொள்ளி 
வெந்திடும் சமிதை ஓமவிறகு என் அறையலாகும்
நிந்தை செய் ஞெகிழி கொள்ளி நெருப்புறு விறகின் பேரே
கந்துளே இருந்தை நல்லம் கரி என்ப கடைக் கொள்ளிக்கு 
முந்து பேர் அலாதம் உற்கம் முளரியோடு இராதம் ஆமே
** 1, 2, 3, 4 பெயர்கள் 19
**441

#20
** சாம்பர் திருநீறு சாணி புழுதி சுண்ணச்சாண்நு
அடலை வெண்பலி சாம்பர்ப் பேர் ஆம் திருநீறே பற்பம்
பொடியொடு விபூதி காப்பு ஆம் புண்ணிய சாந்தம் சாணி
பொடி துகள் சுண்ணம் தூளி பூழியே புழுதி ஆகும்
சுடு சுண்ணச் சாந்து மண் ஆம் சுதையொடு களபமும் பேர்
** 2, 4, 1, 5, 3 பெயர்கள் 20
**442

#21
** இலவம் பஞ்சு பருத்திப் பஞ்சு, பஞ்சு
** நூற்கும் பஞ்சின் தொடர் நுனி பிசின்
நொய்யதோர் இலவின்பஞ்சு நுவன்ற பேர் பூளைதானே
பை எனும் பருத்தி பன்னல் பரியும் ஆம் தூலம் பஞ்சு ஆம்
ஐய நுண்ணிடையார் நூற்கும் அப் பஞ்சின் தொடர் நுனிப் பேர்
துய் எனும் நாமம் ஆகும் தொடர் பிசின் பயின் ஒன்றே பேர் 
** 1, 2, 1,1 1 பெயர்கள் 21 
**443

#22
** சோறு
அடிசில் போனகமே மூரல் அமலையே அயினி பொம்மல்
மடை மிசை உணா புழுக்கல் வல்சி பாளிதமே அன்னம்
தொடு பதம் மிதவை பாத்து துற்று உண்டி சொன்றி புன்கம்
ஒடு சரு அசனம் ஊண் கூழ் ஓதனம் புகாவே சோறு ஆம் 
** 26 பெயர்கள் 22
**444

#23
**விண்ணோர் உணவு பொதி சோறு மிகு பொருள் 
**  எச்சில் பேருண்டி 
மெச்சு அமிழ்து அவியினோடு  பலி சரு விண்ணோர் ஊண் ஆம் 
அச்சம் இல் பொதி சோறு என்பது ஆற்றுணா தோட்கோப்பும் பேர் 
மிச்சிலோடு எச்சம் சேடம் மிகு பொருள் என்ப முப்பேர் 
உச்சிட்டம் ஒன்றே எச்சில் பிரப்பு பேருண்டி ஆமே 
** 4, 2, 3, 1, 1 பெயர்கள் 23 
**445

#24
** பாற் சோறு பொரியல் பிட்டு உக்காரி 
** வறையல் பிண்ணாக்கு 
நிறைய நெய் பொதி பாற்சோறு  நிகழ்த்து பாயசம் என்றாகும் 
நறை இடும் கருனைதானே நாட்டிய பொரியலின் பேர்
அறைதரு வெந்தை பிட்டு ஆம் அஃகுல்லி உக்காரிப் பேர்
வறையலின் பேரே ஓச்சை மலாவகம் பிண்ணாக்கின் பேர் 
** 1, 1, 1, 1, 1, 1 பெயர்கள் 24 
**446

#25
** மாவின் பெயர் அப்பவர்க்கம் சிற்றுண்டி 
நொடிதரில் அருப்பம் பிட்டம் நுவணையே பிண்டி மாப் பேர் 
இடியும் ஆம் இலட்டுகத்தோடு ஏற்ற மோதகமே தோசை 
அடை நொலை அபூபம் கஞ்சம் அண்டகை அப்பவர்க்கம்
இடையற நுகர்வோர்தங்கட்கு இவைகள் சிற்றுண்டி ஆமே 
** 5, 8, 8 பெயர்கள் 25
**447

#26
** புளிங்கறி கறி கஞ்சி குழம்பு பால் 
கூடிய துவை எனும் சொல் புளிங்கறி கூட்டமைத்து
நீடியே சமைப்பதாகும் நீடாணம் கறிகளின் பேர் 
காடியே யவாகு மோழை கஞ்சி பாகே குழம்பு ஆம் 
பாடிலா அமிழ்து கீரம் பயசு துத்தம் பயம் பால் 
** 1, 1, 3, 1, 5 பெயர்கள் 26 
**448

#27
** தயிர் மோர் வெண்ணெய் நெய் 
ததி தயிர் பெருகும் ஆகும் தக்கிரம் காலசேயம் 
மதிதமோடு அளை அருப்பம் மச்சிகை முசரே மோர்ப் பேர் 
விதம் உறு ஐயங்கவீனம் நவநீதம் வெண்ணெய் ஆம் நெய் 
இதம் உறு கிருதம் நேயம் இழுது ஆச்சியம் துப்பு ஆமே 
** 2, 7, 2, 5 பெயர்கள் 27 
**449

#28
** கண்டசர்க்கரை சர்க்கரை தேன் 
கண்டம் பாளிதங்கள் என்ப கண்டசர்க்கரையின் நாமம் 
கண்டதே அயிரும் புல்லகண்டமும் அதற்கே கூற்றாம் 
விண்டு எழு கட்டி கன்னல் விசயமே குளம் அக்காரம் 
பிண்ட சர்க்கரை ஐந்தே பேர் பிரசம் தேன் மதுவும் அப் பேர் 
** 4, 5, 2 பெயர்கள் 28 
**450

#29
** கள் 
அரியல் பாடலி தேன் மட்டே அரிட்டமே சுண்டை தொண்டி 
முருகு சாயனமே கெளவை முண்டகம் சாதி சாலி 
பிரசம் மாதவமே மேதை பிழி சேறு தணியல் மாரி 
சுரை மது சுமாலி மாலி சுலோகியே சொல் விளம்பி
**451

#30
** கள் (தொடர்ச்சி) 
நறவொடு ஆசவமே தொப்பி நனை இக்கு ஞாளி குந்தி 
வெறி வெடி சாறு பானம் விகுணியே சோபம் வேரி 
மறவி தேம் சுவிகை தேறல் மகரந்தம் மதிரை ஆம்பல் 
அறிவு அழி படு ஆறெட்டும் கள்ளினுக்கு அமைந்த பேரே 
** 48 பெயர்கள் 30 
**452

#31
** அமிழ்து நஞ்சு பானம் எண்ணெய் 
அரியதோர் அமிழ்துதானே அமரியே சுதை மருந்து ஆம் 
கரளமே ஆலம் காரி கடுவுடன் காளம் சிங்கி 
விரவிய ஆலகாலம் விடம் எட்டும் நஞ்சின் பேரே 
பருகுதல் துவையே பானம் பகர் நேயம் தைலம் எண்ணெய் 
** 3, 8, 2, 2 பெயர்கள் 31 
**453

#32
** உண்பன தின்பன இலை நுகர் விலங்குணா 
** பறவையொரு சார் விலங்கு ஊண் 
அலைவு அறு துற்றி உண்ப ஆம் திற்றி தின்ப ஆகும் 
இலை நுகர் விலங்கு உணாவே குளகு என இயம்பல் ஆகும் 
நலன் உறு பறவையோடு நாட்டு ஒரு சார் விலங்கின் 
உலகின் ஊண் உண்டி ஊட்டி உணவு இரை உறையும் ஆமே 
** 1, 1, 1, 5 பெயர்கள் 32 
**454

#33
** துணைக்காரணம் இரண்டு என்னும் இலக்கம் 
துப்புடன் ஏது என்னும் சொல் துணைக்காரணப் பேர்  
ஒப்பவே சாதனத்தோடு உபகரணமும் ஆம் அப் பேர் 
செப்பிய யுகளத்தோடு சேர்ந்திடும் உபயம் என்ப 
அப்படி இரண்டு இலக்கத்து அபிதானம் ஆகும்தானே 
** 4, 2 பெயர்கள் 33 
**455

#34
** கானல் சல்லி நெல்மணி பலகறை மகிழ்விதை 
** என்பவற்றின் பெயர் வரிசையின் பெயர் 
பணிவு உறு கானல் வெண்தேர் பாழ்த்த பேய்த்தேரும் ஆகும் 
துணி அறை தூக்குத்தானே சல்லி ஆம் சொல்லும் நெல்லின் 
மணி பலகறையினோடு மகிழ்விதை அலகு என்றாகும் 
அணி ஒழுங்கு ஓளி பந்தி நிரை நிரல் வரிசை ஆமே 
** 2, 3, 1, 6பெயர்கள் 34 
**456

#35
மகர கேதனனை வென்ற வாமற்கே தொழும்பு செய்வோன்
இகல் இலாக் குணபத்திரன்தன் இரு சரண் இதயம் வைத்தோன் 
மிகு புகழ் புனையா நின்ற வீரை மண்டலவன் செய்தான் 
பகர்தரும் முப்பத்தைந்து பல்பொருட்பெயர்க்குச் செய்யுள்
** ஆறாவது பல்பொருட்பெயர்த் தொகுதி முற்றிற்று 

@7 செயற்கை வடிவப் பெயர்த் தொகுதி 
**457

#1
** காப்பு
முழுமதி முக்குடைக் கீழ் மூர்த்தி தாள் போற்றல் செய்தே
எழுவகை உலோகம் தன்னில் ஏற்ற மண் மரங்கள்தம்மில்
பழுதுஅறு தோலின் நூலின் பற்பல விதங்களாக
வழு உறாது இடும் செயற்கை வடிவப் பேர்த் தொகுதி சொல்வாம் 
**458

#2
** மழுப்படை சக்கரத்தின் பெயர் 
பரசொடு நவியம் தண்ணம் பாலமே கணிச்சி என்ப 
விரவிய மழுப்படைப் பேர் மேவு சக்கரப் பேர் நேமி 
பரிதியே வலயம் எஃகம் பகர் சுதரிசனம் ஆழி
திரு மிகும் ஒளிவட்டம்மே திகிரி ஆம் வளையும் அப் பேர்
** 5, 9 பெயர்கள் 2 
**459

#3
** வில் திருமாலின் வில் ஈசன் வில் 
தனுவொடு சிந்துவாரம் தடி சராசனம் கோதண்டம்
குனி சிலை துரோணம் சாபம் கொடுமரத்தோடு வேணு
முனி தவர் சராரோபம் கார்முகம் ஈரேழ் இவை வில்லின் பேர் 
இனியதோர் சார்ங்கம் மால் வில் ஈசன் வில் பினாகம் ஆமே 
** 14, 1, 1 பெயர்கள் 3
**460

#4
** வில்லின் நாணி அம்பு 
பூரியே தொடையே ஆவம் பூட்டே சிஞ்சினி நரம்பு
நாரியே வடம் குணம்தான் நாணி ஒன்பானே நாமம்
கூரிய சரமே வாளி கொடுங் கணை பகழி வண்டு
பாரிய கதிரம் கங்கபத்திரம் அத்திரம் கோல்   
** 9 பெயர்கள் 4 
**461

#5
** அம்பு (தொடர்ச்சி) அம்புக்கட்டு குப்பி 
** குதை மொட்டம்பு 
பாணம் ஆசுகமே பூதை பத்திரி விசிகம் புங்கம் 
தோணி சாயகமே பல்லம் தொடை சிலீமுகம் ஏ அம்பு ஆம்
பூண் உறும் அம்புக் கட்டு புதை புழுகு ஆகும் குப்பி 
கோண் இலாக் குலையே புங்கம் குதை உதண் மொட்டம்பு ஆமே 
** 21, 1, 1, 2, 1 பெயர்கள் 5
**462

#6
** அம்புக்கூடு விற்குதை அம்புச் சிறகு 
** அம்பு கட்டும் பாசம் 
ஆவமே தூணி ஆவநாழிகை அம்புக்கூடு ஆம் 
கோவை செய் வில்லின் இட்ட குதைதானும் குலை என்று ஓதும் 
மேவிய உடுவே ஈர்க்கில் விரவிய சிறகு ஆம் அம்பு 
பாவகமாகக் கட்டும் பாசம் பற்றாக்கை ஆமே 
** 3, 1, 2, 1 பெயர்கள் 6 
**463

#7
** வேலாயுதம் வச்சிராயுதம் அரிவாள்
அயில் சத்தி எஃகம் ஞாங்கர் உடம்பிடி ஐந்தும் வேல் ஆம்
வயிரமே குலிசம் சம்பம் வச்சிராயுதத்தின் பேரே 
சயம் உறும் அசனி என்றும் சதகோடி என்றும் சாற்றும் 
குயமொடு புள்ளம் மற்றைக் கொடுவாளே அரிவாளின் பேர் 
** 5, 5, 3 பெயர்கள் 7 
**464

#8
** கழுக்கடை கைவாள் சூலம் சுழல் படை எழு 
கழுமுளே கழுக்கடைப் பேர் கைப் பிடி வாளே கண்டம் 
கழுமுள் மூவிலைவேல் காளம் கழுவொடு சத்தி சூலம் 
சுழல் படை வட்டம் பாராவளை எனச் சொல்லும் இப்பால் 
எழு என்ப கணையத்தோடே பரிகமும் என்னலாமே 
** 1, 1, 5, 2, 2 பெயர்கள் 8 
**465

#9
** வாள் கூன் வாள் 
அசி நவிர் ஏதி நாட்டம் ஆன நாந்தகமே கட்கம் 
வசி மட்டாயுதம் தூவத்தி வஞ்சமே உவணி கோணம் 
இசையும் கண்டகம் வாள் வேணு கரவாளம் என்றும் ஏற்கும் 
நசை உறு கோணம் என்ப நாட்டிய கூன் வாள் ஆமே 
** 15, 1 பெயர்கள் 9 
**466

#10
** உடைவாள் பிண்டிபாலம் ஈட்டி விட்டேறு 
** இருப்பு முள் நாராசம் 
கொண்டு எழும் உடைவாளின் பேர் குறும்பிடி சுரிகை ஆகும் 
பிண்டி பாலத்தின் நாமம் பீலித்தண்டு எஃகமும் பேர் 
விண்டு அடர் இட்டி ஈட்டி விட்டேற்றின் பேரே கோல் ஆம் 
தண்டில் தாறு இருப்பு முள் ஆம் சலாகை நாராசம் ஆமே 
** 2, 2,1, 1, 1, 1 பெயர்கள் 10 
**467

#11
** சிறு சவளம் பெருஞ் சவளம் ஈர்வாள் தறிகை உளி 
குந்தமே படையை வெல்லும் கொடும் சிறு சவளம் என்ப 
குந்தம் தோமரம் இரண்டும் கொடும் பெருஞ் சவளம் ஆகும் 
வந்த வேதினமே ஈரும் வாள் கரபத்திரமும் பேர் 
உந்திய தறிகைதானே கணிச்சி ஆம் உளிக்கும் பேரே 
** 1, 2, 2, 1, 1 பெயர்கள் 11
**468

#12
** கைவேல் கோடாலி இலை மூக்கு அரி கத்தி 
** சுவர் அகழ் கருவி 
கவி புகழ் கைவேலின் பேர் கப்பணம் தோமரம்தான் 
நவியமே மழு கோடாலி நாட்டிய குடாரமும் பேர் 
குவி இலை மூக்கு அரிந்த கத்தியே குளிர் என்று ஓதும் 
சுவர் அகழ் கருவி நாமம் சொன்ன பேர் கன்னம் ஆமே 
** 2, 3, 1, 1 பெயர்கள் 12 
**469

#13
** தண்டு கிளி கடி கருவி குறுந்தடி கவண் 
தடி கதை எறுழே தண்டு ஆம் தட்டையும் தழலும் கிள்ளை 
கடி கருவிப் பேர் ஆகும்  குணில் குறுந்தடிப் பேர் காட்டும் 
கொடியது ஓர் கவணின் நாமம் குணிலொடு கவணையோடே 
ஒடிசிலும் குளிரும் என்றே உரைத்திடல் ஆகும் என்ப 
** 3, 2, 1, 4 பெயர்கள் 13 
**470

#14
** அஞ்சனக்கோல் எழுதுகோல் ஊசி 
** ஊசித்துளை எழுத்தாணி 
ஏசு இல் அஞ்சனக்கோல் கோல் ஆம் தூலிகை எழுதுகோலே 
சூசியே ஊசி என்ப சொற்ற ஊசித் துளைப் பேர் 
பாசம் ஆம் ஓலை தீட்டும் படை கண்டத்துடனே ஆணி 
ஊசியே எழுத்தாணிப் பேர் இலேகனி என்றும் ஓதும் 
** 1, 1, 1, 1 பெயர்கள் 14 
**471

#15
** சங்கிலி பற்றிரும்பு கைவிடு படை கைவிடாப் படை 
தைத்திடும் தொடர் துவக்கே இடங்கணி சங்கிலிப் பேர் 
வைத்த கற்பொறியே அள்ளு வலி பெறப் பற்று இரும்பு ஆம் 
அத்திரம் என்பது அம்பே ஆதியா விடு படைப் பேர் 
சத்திரம் என்ப செங்கைத் தலம் விடாப் படையின் நாமம் 
** 3, 2, 1, 1 பெயர்கள் 15 
**472

#16
** ஆயுதப் பொதுப் பெயர் கூர்மை படையுறை நுனி 
படை தானை கழுமுளே வேல் படைக்கலம் சுதனம் துப்பு 
கடும் ஏதி கருவி எஃகம் கடியும் ஆயுதப் பொதுப் பேர் 
அடைவாம் வை நிசிதம் பூ வள் அயில் வசி ஆறும் கூர்மை 
தடறொடு கருவிப் புட்டில் படையுறை நுதி நுனிப் பேர் 
** 10, 6, 2,1 பெயர்கள் 16 
**473

#17
** கைக்கட்டி தலைத்திராணம் கவசம் 
கருதிய கோதையே கைக்கட்டி கைப்புடையும் ஆகும் 
சிரகம் கீசகம் இரண்டும் செப்பிய தலைத்திராணம் 
அரணம் சாலிகை சடாரி ஆசு கந்தளமே கண்டம் 
பருமம் மெய்யுறையே கச்சை பரம் பத்தும் கவசப் பல் பேர் 
** 2, 2, 10 பெயர்கள் 17 
**474

#18
** பலகை தோற்பலகை பரிசை 
சேடகம் கடகம் தட்டி சேரும் வேதிகையே வட்டம் 
கேடகம் தோலினோடு கிடுகு எட்டும் பலகையின் பேர் 
சூடும் தோற்பலகை தட்டு தோற்பரம் தோலும் ஆகும் 
நீடிய பரிசையே மாவட்டணம் நெடிய வட்டம் 
** 8, 3, 2 பெயர்கள் 18 
**475

#19
** பிரம்பின் வட்டம் யானை முக படாம் 
** யானைப் புரசை யானை கழுத்திடு கயிறு 
** யானை மேல் தவிசு 
நிலைபெறு பிரம்பின் வட்டம் நீள் வள்ளித் தண்டை ஆகும் 
மலைவு இல் மந்தனமே சூழி மத யானை முகபடாப் பேர் 
கலைவிலாப் புரசை தூசு ஆம் கழுத்திடு கயிறே கச்சை 
இலகடம் பலகாரங்கள் யானை மேல் தவிசின் நாமம் 
** 1, 2, 1, 1, 2 பெயர்கள் 19 
**476

#20
** குதிரைக் கலணை குதிரை அங்கவடி 
** குதிரைச் சம்மட்டி 
பரியினில் கலணையின் பேர் பகர்ந்திடின் பரமும் பண்ணும் 
பருமமும் படையும் பன்னும் பல்லணம்தானும் ஆகும் 
பரவிய கச்சமோடு படி அங்கவடியின் பேரே 
மருவு சம்மட்டியே கோல் வாய்த்த மத்திகையும் அப் பேர் 
** 5, 2, 2 பெயர்கள் 20 
**477

#21
** குதிரை வாயின் வடம் கடிவாளம்
** குதிரைக்கு அணி மயிர் விலங்கு 
மறுவறு குதிரை வாயின் வடம் வடி கயிறு வற்கம் 
கறுழொடு கலியம் கெளவும் கடிவாளம் கலினமும் பேர் 
நிறுவி மற்று அதற்கு அணிந்த நெடு மயிர் உளை என்றோதும் 
செறி புனை தளை விலங்கு ஆம் சிருங்கலை நிகளமும் பேர் 
** 2, 3, 1, 4 பெயர்கள் 21 
**478

#22
** முடி முடிமாலை முடிஉறுப்பு ஐந்து 
சுடிகை சேகரம் கிரீடம் சூடிகை மகுடம் மெளலி 
முடியின் பேர் ஓர் ஆறு ஆகும் முடிமாலையே கரோடி 
முடிஉறுப்பு ஐந்தாம் தாமம் முகுடமே பதுமத்தோடு 
நெடிய கோடகமே மற்றும் நேர்ந்த கிம்புரி என்று ஆமே 
** 6, 1, 5 பெயர்கள் 22 
**479

#23
** பதக்கம் வாகுவலயம் தோடு குண்டலம் காதணி 
அம் பொன் ஆரம் பதக்கம் கண்டிகை மதாணியும் பேர் 
செம்பொன் அங்கதம் கேயூரம் திகழ் வாகுவலயத்தின் பேர் 
பம்பு தாடங்கம் தோடு ஆம் பகர் குழை குண்டலப் பேர் 
கம்பி வல்லிகை குணுக்கு கடிப்பிணை காதணிப் பேர் 
** 3, 2, 1, 1, 4 பெயர்கள் 23 
**480

#24
** கங்கணம் கைவளை பிள்ளைக் கைவளை சுட்டி பட்டம் 
கருது கங்கணத்தின் நாமம் கடகமே தொடியும் ஆகும் 
சரி தொடி குருகு வண்டு சங்கு சூடகமே கன்று 
பெருகு கைவளை ஆம் பிள்ளைக் கைவளை பிடிகம் என்ப 
விரவிய சுடிகை சுட்டி விட்டொளிர் ஓடை பட்டம் 
** 2, 7, 1, 1, 1 பெயர்கள் 24 
**481

#25
** பாத கிங்கிணி நூபுரம் காற்சரி கைச்சரி 
** சிலம்பு சதங்கை 
பரிபுரம் என்பதானே பாத கிங்கிணியின் நாமம் 
பெரிய நூபுரம் சிலம்பின் பேதமே வேறொன்றில்லை 
பரியகம் காற்சரிப் பேர் பகர்ந்த கைச்சரிக்கும் பேரே 
அரவமே சிலம்பின் நாமம் ஆம் சிறுமணி சதங்கை 
** 1, 1, 1, 1, 1, 1 பெயர்கள் 25 
**482

#26
** பாடகம் ஒசை செய் தளை பாதத்து அணியின் 
** பொதுப் பெயர் ஆடவர் கொடை வீரத்தால் 
** அணிவதன் பெயர் 
நீடு பாடகத்தின் நாமம் நெடும் பாத கடகம் என்ப 
தேடிய குடச்சூல் ஓசை செய்தளை ஞெகிழமும் பேர் 
பாடுறு பாத சாலம் பதத்தணிப் பொதுப் பேர் ஆகும் 
ஆடவர் கொடை வீரத்தால் அணிவது கழல் என்று ஆமே 
** 1, 2, 1 ,1 பெயர்கள் 26 
**483

#27
** 7 கோவை மணி 8 கோவை மணி 
** 76 கோவை மணி 18 கோவை மணி 
** 32 கோவை மணி 
ஏழு கோவைகளால் சூழ்ந்த எழில் மணி மேகலைப் பேர் 
காழ் இருநான்கே காஞ்சி கலாபம் ஈரெட்டுத் தாமம் 
தாழும் மூவாறு கோவை சாற்றிய பருமம் என்ப 
வீழும் எண்ணான்கு கோவை விரிசிகை என்பதாமே 
** 1, 1, 1, 1, 1 பெயர்கள் 27 
**484

#28
** சரிமணி அரைப்பட்டிகை அரைநாண் 
** ஆபரணத் தொங்கல் செவி மலர்ப் பூ 
சரிமணி நாமம்தானே சாற்றிய கலாபம் தோரை 
அரையினில் பட்டிகைப் பேர் அத்தொடு மனாவும் என்பர் 
இரதனம் அரைநாணின் பேர் ஏற்றிடும் தொங்கல் உத்தி 
மருவிய செவி மலர்ப் பூ மன்னு கன்னாவதஞ்சம் 
** 2, 2, 1, 1, 1 பெயர்கள் 28 
**485

#29
** மோதிரம் மணிவடம் வயிரச் சங்கிலி பூணு நூல் 
விரலணி ஆழி வீகம் இலச்சினை மோதிரப் பேர் 
சரமொடு காழே ஆரம் தாமமே மணிவடப் பேர் 
மருவு சங்கிலியே என்ப வயிரச் சங்கிலியின் நாமம் 
உருவியல் மார்பில் இட்ட உபவீதம் பூணுநூலே 
** 4, 4, 1, 1 பெயர்கள் 29 
**486

#30
** நுதலணி தெய்வ உத்தி தலைக் கோலம் 
** தலைப் பாளை கல் அழுத்தும் குழி வட்டம் 
இலம்பகம் புல்லகம் சூட்டு இவை நுதல்அணி முப்பேரே 
பொலம் புனை திருவே தெய்வஉத்தி ஆம் பிஞ்ஞகம்தான் 
துலங்கிய தலைக்கோலப் பேர் தொய்யகம் தலைப்பாளைப் பேர்
குலம் பெறு கல் அழுத்தும் குழி வட்டம் கேவணம்தான் 
** 3, 1, 1, 1, 1 பெயர்கள் 30 
**487

#31
** அணிகளின் கடைப்புணர்வு பூண் ஆபரணம் 
அணிகளின் கடைப்புணர்ப்பே அது மடை கயிலும் ஆகும் 
புணரும் கோளகையே தாங்கி வயிரம் கிம்புரி பூண் நாற்பேர் 
அணிகலன் வள்ளி பூணே அணியொடு கலமே மஞ்சு 
பணி இழை பூடணங்கள் பகரில் ஆபரணம் ஆமே 
** 2, 4, 9 பெயர்கள் 31 
**488

#32
** உண்கலம் வட்டில் சிறு வட்டில் 
** நாழிகை வட்டில் சட்டுவம் 
தட்டம் பாசனமே தாலம் தளிகை உண்கலத்தின் பேரே 
வட்டிலே சடகம் கோரம் வள்ளம் ஆம் சிறுவட்டில் பேர் 
கிட்டிய கிண்ணம் கன்னல் கிளந்த நாழிகை வட்டில் பேர் 
சட்டுவம் சிலகம் என்ப தவ்வியும் தருவியும் பேர் 
** 4, 3, 1, 1, 3 பெயர்கள் 32 
**489

#33
** கண்ணாடி கலசப் பானை படிக்கம் 
விஞ்சு தர்ப்பணமே ஆடி மிகும் ஒளிவட்டம் வேறு 
வஞ்சியர் உருவம் காட்ட வரும் படிமக் கலம் பொற் 
கஞ்சனம் முகுரம் அத்தம் புளகம் எண்பேர் கண்ணாடி 
கஞ்சனை கலசப் பானை படியகம் படிக்கம் காட்டும் 
** 8, 1, 1 பெயர்கள் 33 
**490

#34
** நெய்த் துடுப்பு தூபமுட்டி தூபமணி தாளம் 
தொட்ட நெய்த்துடுப்பினுக்கு சுருக்கொடு சுருவம் ஆம் பேர் 
இட்டமாம் தூப முட்டி இந்தளம் தடவும் ஏற்கும் 
மட்டு அமர்கின்ற தூபமணியே கைம்மணி என்று ஆகும் 
கிட்டியே பாண்டில் கஞ்சம் கிணின் என்னும் தாளம் முப்பேர் 
** 2, 2, 1, 3 பெயர்கள் 34 
**491

#35
** பெருமணி கைம்மணி எறி மணி சின்னம் காளம் 
அடிபடு பெருமணிப் பேர் அறைந்திடும் கண்டை ஆகும் 
படலிகை பரந்த வட்டம் கைம்மணி பகர்ந்த பேரே 
திடுதிடு என்றிடத் தெழித்த சேகண்டி எறிமணிப் பேர் 
கடுகிய பீலி சின்னம் காகளம் காளம் ஆமே 
** 1, 2, 1, 1, 1 பெயர்கள் 35 
**492

#36
** கொம்பு பூண் கொள் கலம் பரணி பெட்டி பேழை 
கோடு உடன் இரலை ஆம்பல் கொம்பின் பேர் வயிரும் கூறும் 
பீடிகை துமானம் காண்டம் பேணும் கண்டிகை கடிப்பம் 
கோடிகம் இரு முப்பேர் பூண் கொள்கலம் பரணி கோயே 
நீடு மஞ்சிகமே பெட்டி நெடிய மஞ்சிகையே பேழை 
** 4, 6, 1, 1, 1 பெயர்கள் 36 
**493

#37
** கமண்டலம் கெண்டி வெண்குடை 
குண்டிகை கரகம் நீர் பெய் கோலம் ஆர் காண்டகங்கள் 
கண்ட நல் கமண்டலப் பேர் கடிப்பம் கோடிகமே கெண்டி 
கொண்ட வெண்குடையின் நாமம் குளிர் தொங்கல் கவிப்பு பிச்சம் 
தண்டு சேர் கவிகை ஆதபத்திரம் சத்தி சத்திரம் 
** 3, 2, 8 பெயர்கள் 37 
**494

#38
** பேரால வட்டம் சுற்றால வட்டம் 
ஆலவட்டத்தினோடும் அடுத்திடும் கால் செய் வட்டம் 
மேவிடும் உக்கம் தாலவிருந்தம் பேராலவட்டம் 
பிலி வீசனம் சாந்தாற்றி பெருகிய விசிறி நான்கும் 
சீலம் ஆம் காற்று வீசும் சிற்றால வட்டம் தானே 
** 4, 4 பெயர்கள் 38 
**495

#39
** இடக்கை முழவு படகம் கடிப்பு 
** ஒரு கண் பறை பேரிகை சிறுபறை 
இடக்கையின் பேர் ஆமந்திரிகை ஆம் குளிர் முழா ஆம் 
படித்தெழு பணவம் திண்டி ஆனகம் படகம் முப்பேர் 
கடிப் பின் பேர் குணில் ஆம் மொந்தைதான் ஒருகட்பறைப் பேர் 
அடித்த பேரிகைப் பேர் நந்தி ஆகுளி சிறுபறைப் பேர் 
** 1, 1, 3, 1,1,1,1 பெயர்கள் 39 
**496

#40
** திமிலை நிசாளம் பன்றிப் பறை 
** ஒரு கண் பகுவாய்ப் பறை கரடிப் பறை 
சல்லரி திமிலை என்ப தண்ணுமை நிசாளம் ஆகும் 
பல் உள கொடிய பன்றிப்பறை குடப்பறை என்று ஆமே 
கல்லெனும் பகுவாய் ஆம் ஓர்கண்பறை பதலைதானே 
ஒல்லெனும் கரடி நாமம் உறு பறை தட்டை ஆமே 
** 1,1,1,1, 1 பெயர்கள் 40 
**497

#41
** குறிஞ்சிப்பறை பாலைப் பறை முல்லைப் பறை 
** மருதப் பறை 
தொண்டகம் முருகியம் போர்த் துடி குறிஞ்சிப்பறைப் பேர் 
மிண்டிய துடியே பாலை வேடர்தம் பறையின் நாமம் 
கொண்டு எழு பம்பை ஏறங்கோட்பறை முல்லைக்கு ஆகும் 
கிண்டிய மருதம் உற்ற கிளர் பறை கிணை என்று ஆமே 
** 3, 1, 2, 1 பெயர்கள் 41
**498

#42
** நெய்தற் பறை உவகைப் பறை தண்ணுமை 
** இடைசுருங்கு பறை மார்ச்சனை 
நிறுவு சாப் பறையே என்ப நெய்தலில் பறையின் நாமம் 
பெறும் உவகைப்பறைக்குப் பேரே தூரியம் என்று ஓதும் 
உறுமிய தண்ணுமைப் பேர் உடுக்கை ஆம் இடை சுருங்கு 
பறையின் பேர் துடி மருங்கின் மார்ச்சனை பகரின் மண் ஆம் 
** 1, 1,1, 1, 1 பெயர்கள் 42
**499

#43
** வாத்தியப் பொது 
தூரியம் முழவு திண்டி துந்துபி முருடு தக்கை 
பேரியே தகுணிச்சம் போர்ப் பீலியே தடாரி பம்பை 
வீரிய முரசு தண்ணம் மேவு கோடணை இயங்கள் 
வாரியின் அதிர் சகண்டை வாச்சியப் பொது ஈரெண் பேர் 
** 16 பெயர்கள் 43 
**500

#44
** தேர் தேருருள் 
இரதமே கொடிஞ்சியோடும் இயந்திரம் குயவு வையம் 
அரியொடு கூவிரம் தேர் ஆம் சயந்தனமும் அப் பேர் 
பரிதியே சில்லி ஆழி பாரிய காலே நேமி 
உருளுடன் உருளி தேரின் உருள் என்ப உந்தியும் பேர் 
** 8, 8 பெயர்கள் 44 
**501

#45
** தேரின் அகத்தில் செறி கதிர் தேர் நடு தேர்ப் பலகைப் பா
** தேர்க் கொடிஞ்சி தேர் மொட்டு தேர் மரச் சுற்று 
ஆர் எனும் நாமம் தேரின் அகத்தினுள் செறி கதிர்ப் பேர்
தேர் நடுப் பேரே தட்டு செப்பிய நாப்பணும் பேர் 
சார் பலகைப் பா பார் ஆம் சார்ந்த கூவிரம் கொடிஞ்சி 
தேர்மொட்டு கூம்பு தேரின் மரச்சுற்று கிடுகுதானே 
** 1, 2, 1,1,1,1 பெயர்கள் 45 
**502

#46
** பரி இழுக்கும் ஊர்தி பண்டி பண்டி உள்ளிரும்பு 
பாண்டில் கஞ்சிகை வையம் போர்ப் பரிகள் பூண்டு ஈர்க்கும் ஊர்தி 
தாண்டிய சகடு வையம் சாகாடே ஒழுகை சாடு 
தூண்டிய உருளினோடு சகடமும் சொல்லும் பண்டி 
ஈண்டிய பண்டி உள்ளின் இரும்பு கந்து இருசும் ஆமே 
** 3, 7, 2 பெயர்கள் 46 
**503

#47
** முத்துச் சிவிகை சிவிகை இராசவாகனம் 
விஞ்சிய முத்தின் ஊர்தி வெண் முத்தின் சிவிகைதானே 
தஞ்சம் ஆம் சிவிகை வையம் தண்டிகை அனிகம் யானம் 
கஞ்சிகை மணிக்காற்பள்ளி என்பன கதிர்வேல் மன்னர் 
எஞ்சல் இல் சிறப்பின் ஏறும் இராசவாகனமது ஆமே 
** 1, 4, 2 பெயர்கள் 47 
**504

#48
** கலப்பை தூண் யானைத் தூண் வேள்வித் தூண் குறுந்தறி 
அலம் உழுபடை தொடுப்போடு ஆலமே படைவாள் நாஞ்சில் 
கலனையே கலப்பை ஏழ் பேர் கந்து எழு மதலை தம்பம் 
நிலைபெறு தறி கால் தாணு நெடுந் தூணாம் வெளில் யானைத்தூண் 
புலைஇல் வேள்வித்தூண் யூபம் போதிகை குறுந்தறிப் பேர் 
** 7, 6, 1, 1, 1 பெயர்கள் 48 
**505

#49
** கதவு தாழ் யானைத் தோட்டி 
கதவின் பேர் அரரி வாரி காப்பொடு கவாடம் தோட்டி 
புதவும் ஆம் காழும் சீப்பும் போற்றிய கடிகையும் தாழ் 
மதம் உறும் யானைதன்னை வணக்கும் அங்குசமே தோட்டி 
விதம் உறு கோணம் என்றும் விளம்புவர் அளந்த நூலோர் 
** 6, 3, 2 பெயர்கள் 49 
**506

#50
** அடைகுறடு உலையாணிக் கோல் 
** பெருங் குறடு சம்மட்டி கொழு 
பட்டடை அடைகுறட்டின்பாலதாம் உலையாணிக் கோல் 
சுட்டுக் கோல் என்று நாமம் சொல்லுப நல்லநூலோர் 
முட்டிய பெருங் குறட்டை முருடு என மொழிப ஓங்கிக் 
கொட்டும் சம்மட்டி கூடம் கோள் கொழு என்று கூறும் 
** 1, 1, 1, 1, 1 பெயர்கள் 50
**507

#51
** மரக்கலம் மரக்கலத்தின் பாய் 
பாதையே வங்கம் தோணி பாரதி பஃறி அம்பி 
போதமே மதலை யானம் புணை சதா நெளவே நாவாய் 
பேதம் இல் பாறு தொள்ளை பேணுறும் மரக்கலப் பேர் 
வாதை தீர் மரக்கலப்பாய் இதை என வழங்கல் ஆமே 
** 15, 1 பெயர்கள் 51 
**508

#52
** ஓடம் தோணி தெப்பம் விச கட்டில் 
பகடு அம்பி பஃறி ஓடம் பகர் பெயர் திமிலே தோணி 
பகடு பட்டிகையே அம்பி படுவையே புணையே தெப்பம் 
மிகைபடு மிதவையும் பேர் விசியின் பேர் அரி என்று ஆகும் 
பகர்தரு பாரி மஞ்சம் பரியங்கம் பாண்டில் கட்டில் 
** 3, 1, 6, 1 பெயர்கள் 52 
**509

#53
** தவத்தோர் பீடம் சிங்காதனம் உரல் உலக்கை 
விட்டரம் தவத்தோர் பீடம் விளங்கும் பீடிகையும் அப் பேர் 
இட்ட சிங்காதனம் பத்திராசனம் என்பது ஆமே 
திட்டையே கறையே மற்றுச் செப்பிய உலூகலம்தான் 
முட்டிய உரலின் முப்பேர் முசலமே தடி உலக்கை 
** 2, 1, 3, 2 பெயர்கள் 53 
**510

#54
** உறி ஊஞ்சல் ஏணி கண்ணேணி மரக்கால் 
உறி சிதர் சிக்கம் தூக்கோடு ஓதிய சிமிலி நாற்பேர் 
நிறுவிய உஞ்சல் ஊசல் நீண்ட விண்டாண்டும் அப் பேர் 
இறைவையே சேணி ஏணி மால்பு கண்ணேணியின் பேர் 
குறைவில் அம்பணம் தூம்போடு குளகம் கச்சமும் மரக்கால் 
** 4, 2, 2, 1, 4 பெயர்கள் 54 
**511

#55
** நாழி கொந்தளிப்பாய் புற்பாய் பிரப்பம்பாய் 
** தோற்பாய் தடுக்கு குழாய் பூந்தட்டு பூப்பெட்டி 
விரவிய குஞ்சம் நாழி விரிந்த கொந்தளிப்பாய் ஆரை 
பெருகிய சாப்பை புற்பாய் பிரப்பம்பாய் சாதிப்பாய் ஆம் 
சருமம் தோற்பாய் தடுக்கே தவிசு ஆகும் குழாயே தண்டு ஆம் 
பெருகு கோடிகம் பூந்தட்டே பெட்டியே மூழிவாய் ஆம் 
** 1, 1, 1, 1, 1, 1, 1, 1, 1 பெயர்கள் 55 
**512

#56
** சட்டம் விளக்குத் தண்டு முறம் புட்டில் கூடை 
சட்டமே கிடுகு ஆம் என்ப சாற்றிய கம்பம் தம்பம் 
விட்டொளிர் கெளசிகங்கள் மத்திகை விளக்குத் தண்டு ஆம் 
தட்டொடு சின்னம் சேட்டை தரும் முறம் முற்றிலும் பேர் 
புட்டிலே இறைவை என்ப வட்டிகை கூடை ஆமே 
** 1, 4, 4, 1, 1 பெயர்கள் 56 
**513

#57
** சுளகு துடைப்பம் அகப்பை மத்து 
** தயிர்கடை தறி பாவாற்றி நூல் நாழி 
சுளகின் பேர் சூர்ப்பம் என்ப துடைப்பம் சோதனி மாறும் பேர் 
வளம் உறும் மூழி மூழை அகப்பை ஆம் மத்து மத்தம் 
வெளில் தயிர்கடைதறிப் பேர் மெச்சும் பாவாற்றி குச்சு ஆம் 
அளவுஇல் காருகர் நாடா நூனாழியே ஆகும் என்ப 
** 1, 2, 2, 1, 1, 1, 1 பெயர்கள் 57 
**514

#58
** ஆம்பி இறை கூடை நீர்ப்பத்தர் சூது 
** கவற்றில் தாயம் சாரி 
கிழார் பூட்டை காம்பி அம்பி கிளந்த கார் ஆம்பி ஆகும் 
பிழார் இடார் இறை கூடைப் பேர் பெருந்தூம்பு அம்பணம் நீர்ப்பத்தர்
துழாவிய காசு வல்லு சூதின் பேர் கழங்கும் ஆகும் 
தழாது உருள் கவற்றின் தாயம் ஆயம் ஆம் சாரி நாய் ஆம் 
** 4, 2, 2, 3, 1, 1 பெயர்கள் 58 
**515

#59
** துண்டம் வகிர் சும்மாடு வலை வலைக்கயிறு நூல் 
கடிகையே துணியே துண்டம் காட்டிய வகிர் வார் வள் ஆம் 
சுடுவொடு சுமடு தாங்கும் சுமையடை சும்மாட்டின் பேர் 
வடிவுறு வலையே சாலம் மற்று அதில் கயிறும் ஆமே 
தொடர் உறு நூலே தந்து சூத்திரம் பனுவலும் பேர் 
** 2, 2, 3, 1, 1, 3 பெயர்கள் 59 
**516

#60
** கயிறு பசுக் கட்டும் கயிறு காற்றாடி 
பழுதையே தாமம் கச்சை பாசமே இரச்சே நாணே 
வழுவு இலாத் தாம்பே அக்கம் வடம் புரி கயிறு அது ஆமே 
தழுவு தாமணியே தாம்பு பசுக்கட்டும் கயிறு தானாம் 
சுழல் கறங்கே காற்றாடி சொல்லிய கதலியும் பேர் 
** 10, 2, 3 பெயர்கள் 60 
**517

#61
** மட்டத் துருத்தி பெருந் துருத்தி சீப்பு 
** மகளிர் ஆடும் களம் செருப்பு 
பந்து மட்டத் துருத்தி பகர் பெருந்துருத்தி நீரைச் 
சிந்திய சிவிறி ஆகும் சீப்பு கங்கதமே சிக்கம் 
பைந்தொடி மகளிர் ஆடப் படுங் களம் ஓரை என்ப 
தொந்தமாம் பாதங் காப்பு கழல் தொடு தோல் செருப்பு ஆம் 
** 1, 1, 2, 1, 3 பெயர்கள் 61 
**518

#62
** மிதியடி மிதியடியின் மேல் கொட்டை 
** பற் சீவும் கோல் தூண்டில் அம்மானை 
** பந்து தவிடு நொய் 
இட்ட பாதுகையே பாவல் மிதியடி இதன் மேல் இட்ட 
கொட்டை ஆம் குடை பற் சீவுங் கோல் மெல்கோல் வளிசம் தூண்டில் 
பட்ட அம்மனை அம்மானை பந்து கந்துகம் என்று ஓதும் 
முட்டையே தவிட்டின் நாமம் முடையும் ஆம் நொறுங்கு நொய்யே 
** 2, 1, 1, 1, 1, 1, 2, 1 பெயர்கள் 62 
**519

#63
** உலைத் துருத்தி கொல் உலை மூக்கு செத்தை பாடை சாணைக்கல் 
ஊதிய உலைத் துருத்தி உதியும் அத்திரியும் ஆகும் 
கோது இலாச் சிவையினோடு குருகு கொல் உலைமூக்கின் பேர் 
சோதனி சீக்கும் காடு துரால் நரல் மயலே செத்தை 
சா துயர்ப் பாடை வெள்ளில் சிலாவட்டம் சாணைக்கல்லே 
** 2, 2, 4, 1, 1 பெயர்கள் 63 
**520

#64
** சாடி நீர்ச் சால் கர்ப்பரை குடம் 
தடம் படு பதலை தாழி தளம் சாடி அகளமும் பேர் 
இடங்கரே நிறையே வட்டம் ஏற்ற நீர்ச்சால் இம் முப்பேர் 
கிடந்த கர்ப்பரை தசும்பு கடாகம் ஆம் குடத்தின் நாமம் 
குடங்கரே இடங்கர் தாழி குணம் கடம் கலசம் கும்பம் 
** 4, 3, 2, 7 பெயர்கள் 64 
**521

#65
** மிடா பானை தயிர்கடைதாழி 
தடாவொடு கரீரம் நீரைத் தரும் முகை குழிசி நான்கும் 
மிடா என்ப பானையின் பேர் மேவிய குண்டத்தோடு 
மிடாவும் ஆம் விரும்பு நல்லார் வெண் தயிர் கடையும் தாழி 
விடாத மந்தினியினோடு கர்க்கரி விளம்பல் ஆமே 
** 4, 2, 2 பெயர்கள் 65 
**522

#66
** கரகம் ஏற்கும் மட்கலம் 
சிரகம் கர்க்கரியே கன்னல் சீகரம் நான்கு பேரும் 
கரகத்தின் நாமம் ஆகும் கருது வற்கரியும் என்ப 
திரு அறம் செய்யார் ஏற்கும் தீய மட்கலத்தின் நாமம் 
பரவிய கடிஞை ஐயம் பாத்திரம் என்றும் ஏற்கும் 
** 5, 3 பெயர்கள் 66 
**523

#67
** தகழி குடுவை சட்டி அகல் கொள்கலம் 
** யாவற்றிற்கும் பெயர் 
இடிஞ்சிலே பாண்டில் என்ப எரிசுடர்த் தகழி நாமம் 
ஒடுங்கிய குடுவை குண்டம் ஒளி பெறு விசளை சட்டி 
அடங்கு சுத்திகையினோடு சராவமே அகலின் பேர்தான்  
இடுங்கலம் பாண்டம் ஏற்கும் கொள்கலம் எவற்றிற்கும் பேர் 
** 2, 1, 1, 2, 3 பெயர்கள் 67 
**524

#68
** புடைவை 
கோடி கோடிகம் படாமே கோசிகம் கூறை பஞ்சி 
சாடி நீவியமே சீரை சம்படம் கலை கலிங்கம் 
சூடி காடிகமே புட்டம் தூசு காழகமே வட்டம் 
ஆடை ஆவரணம் தானை அறுவை அம்பரம் ஆசாரம்
**525

#69
** புடைவை (தொடர்ச்சி) துல் நல்லாடை 
மடி பரிவட்டம் சேலை வத்திரம் உடுக்கை வாசம் 
இடையறு புடைவை ஆறைந்து இலக்காரம் என்றும் பேராம் 
இடையல் வேதகமே பட்டே ஏடகம் இவை துகில் பேர் 
நடைபெறு நாகம் பாரி நல்லாடை இரு பேர் ஆமே 
** 31, 4, 2 பெயர்கள் 69 
**526

#70
** பட்டு வர்க்கம் பட்டு பட்டு விகற்பம் 
** நற் பணித் தரசு மயிர்ப் படாம் 
பட்டு வர்க்கத்தின் நாமம் பாளிதம் கோகிகம் பேர் 
பட்டு நேத்திரம் ஆம் காம்பு படும் அதன் விகற்ப நாமம் 
இட்ட நற்பணித் தூசின் பேர் ஏற்றிடும் தேவாங்கம்தான் 
மட்டமாம் முரிகம் சூழும் மயிரகம் மயிர்ப்படாமே 
** 2, 1, 1, 1, 2 பெயர்கள் 70 
**527

#71
** அத்தவாளம் சித்திரப் படாம் போர்வை 
** முன்றானை மாதர் கொய்சகம் உத்தரீயம் 
அத்தவாளம்தானே உல்லாசம் ஆம் வடகமும் பேர் 
புத்தகம் என்ப சித்திரப்படாம் ஆகும் போர்வை மீக்கோள் 
வைத்த முன் தானை தோகை மாதர் கொய்சகமே நீவி 
உத்தரீயம் ஏகாசம் உத்தராசங்கமும் பேர் 
** 2, 1, 1, 1, 1, 2 பெயர்கள் 71 
**528

#72
** கம்பளிப்படாம் கச்சு விடும் தலைப்பு மேற்கட்டி 
கம்பலம் கம்பளங்கள் கம்பளிப்படாத்தின் வர்க்கம் 
வம்பு வார் விசிகை கச்சு ஆம் வைத்த பட்டிகையும் ஆகும் 
விம்பு வட்டுடையும் அப்பேர் விரி கஞ்சம் விடுந் தலைப்பு ஆம் 
கம்பலம் படங்கு வானி விதானம் மேற்கட்டி ஆமே 
** 2, 5, 1, 4 பெயர்கள் 72 
**529

#73
** சட்டை இடுதிரை 
கஞ்சுளி அங்கி மற்றைக் காஞ்சுகமொடு குப்பாயம் 
விஞ்சு கஞ்சுகமே மெய்ப்பை மிளிரும் வாரணமே சட்டை 
கஞ்சிகை அவிடியோடு காண்டமே எழினி கண்டம் 
தஞ்சம் ஆம் படாம் படங்கள் சடுதியில் இடுதிரைப் பேர் 
** 7, 7 பெயர்கள் 73 
**530

#74
** மெத்தை தலையணை பெருங்கொடி 
** வீதியில் கட்டிய கொடி 
தவிசு அணை தளிமம் மெத்தை உபதானம் தலையணைப் பேர் 
துவசமே சத்தி வானி தோகை கேதனம் பதாகை 
தவழ் விலோதனம் படங்கு தரும் படாம் பெருங்கொடிப் பேர்
நுவலுங்கால் வீதிக் கட்டி நுடங்கிய கொடி விடங்கம் 
** 3, 1, 9, 1 பெயர்கள் 74 
**531

#75
** சிறுகொடி தேரில் கட்டும் கொடி துணி 
** சித்திரம் எழுதுதல் 
கத்திகை சிறு கொடிப் பேர் கருது கூவிரம் தேர்க்கட்டும் 
சத்தியாம் துணி சிதார் ஆம் சாற்றிய சிதவலும் பேர் 
சித்திரம் ஓவியம் சீர் தீட்டும் வட்டிகை ஆம் என்ன 
வைத்தனர் பொறித்தல் தீட்டல் வரைதலும் எழுதல் ஆமே 
** 1, 1 ,2, 2, 3 பெயர்கள் 75 
**532

#76
** மரவுரி உடுத்தல் இறுக்கல் 
மற்ற வற்கலை இறைஞ்சி மரவுரி சீரையும் பேர் 
சுற்றலே உடுத்தல் என்ப தற்றலே இறுக்கல் ஆகும் 
குற்றம் இல் எழுபத்தாறு தொடர் செய்தான் குணபத்திரன் தாள் 
நிற்றலும் வணங்கி நீதி நிறுத்த மண்டலவன்தானே 
** 3, 1, 1 பெயர்கள் 76 
** ஏழாவது செயற்கை வடிவப் பெயர்த் தொகுதி முற்றிற்று 

@8 பண்பு பற்றிய பெயர்த் தொகுதி 
**533

#1
** காப்பு 
கடி மலர்ப் பிண்டி நீழல் காவலன் சரணம் போற்றி 
வடிவினில் அளவுதன்னில் வண்ணத்தில் காட்சி ஆகும் 
நெடியது ஓர் பொருளின் மற்று நீள் உணர்வாலே காணப்
படு பொருளின் குணப் பேர் பண்பதாம் தொகுதி சொல்வாம்
**534

#2
** வட்டம் 
நல்ல கோளகையே கொம்மை நாட்டிய வலயம் தட்டு 
சொல்லிய பரிதி பாண்டில் சூழ்ந்திடு கடகம் நேமி 
சில்லி மண்டலமே ஆழி திகிரி பாலிகை விருத்தம் 
வல்லை சக்கரம் ஈரெட்டும் வட்டம் என்றிட்ட நாமம் 
** 16 பெயர்கள் 2 
**535

#3
** திரட்சி 
உண்டையே குவவு கொம்மையொடு பந்தம் புஞ்சம் சேடு 
முண்டமே கணையே வட்டு முத்தையே துறுமல் சோகம் 
கொண்ட சேர்வுடனே மாழை குவிதலே தொழு பூகம் 
பிண்டம் மூவாறு பேரும் திரட்சி ஆம் பிழம்பும் ஆமே 
** 19 பெயர்கள் 3 
**536

#4
** கூட்டம் தகடு 
தொழுதியே குவவு தோடு தொகை சமுதாயம் சங்கம் 
தழுவிய குழுவே கோட்டி சமவாயம் நிகாயம் குப்பை 
குழுமலே குவால் இராசி குவிதல் மூவைந்தும் கூட்டம் 
அழகிய தகட்டின் நாமம்  அரி அடர் ஐம்மை ஆமே 
** 15, 3பெயர்கள் 4 
**537

#5
** வளைவு பரந்த வடிவு குமிழ்ப்பு வடிவு 
** மொக்குள் வடிவு 
குடிலமே குலாவல் கோணல் கோட்டம் கூன் கோண் வளாவல் 
வடிவுள தட்டு வாங்கல் வணர் பத்தும் வளைவின் பேரே 
படலையே படர்ச்சி பம்பல் பரந்திடும் வடிவின் நாமம் 
புடைபடு குமிழ்ப்புத்தானே புளகம் ஆம் மொக்குள் கொப்புள் 
** 10, 3, 1, 1 பெயர்கள் 5 
**538

#6
** உள்துளை துளையுடைய பொருள் சர்ச்சரை
** மயிர்த்தொகுதி கதிர்த் தொகுதி போல்வன 
குழல் சுகிர் தூம்பு நாழி கூறிய புரை வேய் வேணு 
ஒழுகிய சுரை நாளத்தோடு ஒன்பதும் உள்துளைப் பேர் 
புழை குழல் துளை உடைத்தாம் பொருள் பிணர் சர்ச்சரைப் பேர் 
செழு மயிர் கதிர் போலச் சேர்ந்திடும் தொகுதி கற்றை 
** 9, 2, 1, 1 பெயர்கள் 6 
**539

#7
** மிகுதி 
மதம் நனி பெருகல் ஊக்கல் மற்றைய விதப்பு சால 
அதிகமே சிறப்பு இறப்போடு அலை தவ அமலை ஆன்றல் 
கதழ்வொடு பிறங்கல் கூரே கழுமல் பூரிப்பே ஊங்கு 
புதுமையே உருத்தல் மூவேழ் மிகுதி ஆம் பொங்கலும் பேர் 
** 22 பெயர்கள் 7 
**540

#8
** உயர்ச்சி 
மன்னும் மோடு ஊக்கம் ஓங்கல் வார்தல் சேண் ஒழுக்கம் பொங்கல் 
பன்னிய நிமிர்தல் புங்கம் பரி புரை உச்சம் துங்கம் 
மின்னிய நிவப்பு உகப்பு மிசை மேடு பிறங்கல் ஏந்தல் 
உன்னதம் சிகரம் மூவேழ் உயர்ச்சி உத்துங்கமும் பேர் 
** 22 பெயர்கள் 8 
**541

#9
** விரிவு பரப்பு கூடல் பருமை 
விரிவின் பேர் விசாலம் ஆகும் விபுலமும் ஆம் பரப்பு 
பரவை பப்பு அழுவம் தாவல் பாய்தல் ஆம் ஞெமிர்தலும் பேர் 
மருவிய பயினி சங்கம் மற்றிவை இரண்டும் கூடல் 
பருமையின் நாமம் பீனம் பனம் பரூஉ என்றும் பேரே 
** 2, 6, 2, 3 பெயர்கள் 9 
**542

#10
** பெருமை 
பாடு மாண் பாழி மீளி பணை பொழில் பகடு மூரி 
மோடு மால் தடவே வீறு முடலை கொன் கருமை அண்ணல் 
ஈடு மா நளியே மானம் இருமையே கயவோடு ஏந்தல் 
பீடு வான் குவவு செம்மை பெருமைப் பேர் இருபத்தேழே 
** 27 பெயர்கள் 10 
**543

#11
** நுண்மை அற்பம் 
அணு நுழை முளரி நுட்பம் ஆய்தல் முள் அயிர் நுணங்கு 
நுணுகொடு நுவணை நூழை நொசிவு ஈராறு இவை நுண்மைப் பேர்
கணம் இறை வறிது சின்னம் கன்று ஆசு தன்னம் ஒட்டே 
அணைதரு கிலமே தோகம் அற்பம் இட்டிடையும் ஆமே 
** 12, 11 பெயர்கள் 11 
**544

#12
** அகலம் செவ்வை தூரம் 
அகறல் கண்ணறையே பாழி ஆய்வொடு படர்தல் ஆன்றல் 
அகலுளே வியலிடங்கள் அகலம் இவ்வெட்டும் ஆகும் 
திகழ் செம்மை இருசு செப்பம் செவ்வன் நேர் செவ்வை ஐந்தாம் 
நிகழும் சேண் சேய்மை தூரம் நீளிடைதானும் அப் பேர் 
** 8, 5, 3 பெயர்கள் 18 
**545

#13
** நீளம் முழுவதும் 
வடிதலே ஒழுகல் போகல் வரி உறை வார்தல் தீர்தல் 
நெடிலொடு ஆயதமே நேர்பு நெடுமை சேண் கொடி நீளப் பேர் 
அடைய எல்லாம் சமத்தம் அடங்கலே அகிலம் யாவும் 
முடியவே அனைத்து அகண்டம் முழுவது ஆம் முற்றும் அப் பேர் 
** 13, 10 பெயர்கள் 13 
**546

#14
** குறைதல் நெருங்கல் 
குறைதலின் பேர் நிரப்பே குன்றலே அருகல் அஃகல் 
சிறுகலே ஈனம் ஊனம் சிங்கலே எஞ்சல் தேய்வு ஆம் 
துறுமலே சடிலத்தோடு துன்னலே கஞறல் வீங்கல் 
செறி நவி பொதுளல் செற்று திணுங்கல் பத்தும் நெருங்கல் 
** 10, 10 பெயர்கள் 14 
**547

#15
** நிறைந்திடல் பாதி பாரம் 
பிறங்குதல் திளைத்தல் ஆர்தல் பெருகுதல் கழுமல் மல்கல் 
நிறைந்திடல் ஆம் துவன்றல் பூரணம் கமமும் நேரும் 
பறைந்த பால் பயல் அருத்தம் பாகம் கூறு ஐந்தும் பாதி 
அறைந்த சீர் குரு கனம் ஞாட்பு அதி பாரம் பொறையும் ஆமே 
** 9, 5, 5 பெயர்கள் 15 
**548

#16
** மென்மை தொய்மை சலியாது நிற்றல் பற்றுக்கோடு 
மிருதுவே சுகுமாரம் கோமளம் சாயல் கயவு மென்மை 
மருவிய இலகு நொவ்வோடு இலேச இசை வகுக்கும் நொய்மை 
துருவமே துவமே சற்றும் சலியாது தோன்றி நிற்றல் 
கருது பற்றுக்கோடு ஊற்றம் கந்து தூ தஞ்சமும் பேர் 
** 5, 3, 2, 4 பெயர்கள் 16 
**549

#17
** அளத்தல் அளவின்மை மிடைதல் உள்ளது சிறத்தல் 
அளவையே கடனே கச்சம் அளத்தலின் நாமம் முப்பேர் 
அளவின்மை அமானம் மற்றை அபாரமே அநந்தமும் பேர் 
வெளிபடாத் துதைதலோடு ததைதலும் மிடைதல் என்ப 
ஒளிபெறு கழிவும் கூர்ப்பும் உள்ளது சிறத்தலின் பேர் 
** 3, 3, 2, 2 பெயர்கள் 17 
**550

#18
** அடி இடை கடை 
அடி முதல் எழுவாய் மோனை ஆதி பூருவம் தலைத்தாள் 
இடை சமன் பகலே நாப்பண் எய்து மத்தியம் நள்ளும் பேர் 
கடையின் பேர் இறுதி அந்தம் காட்டிய பின்னே முற்று 
முடிவு உடன் எல்லை ஆகும் மொழிந்திடும் ஈறும் அப் பேர் 
** 6, 5, 7 பெயர்கள் 18 
**551

#19
** அளவு எல்லை 
தாறொடு வரையே மானம்தனை துணை அவதி மட்டே 
காறொடு பரிமாணங்கள் அளவின் பேர் கருதில் ஒன்பான் 
கூறிய எல்லையின் பேர் கொற்றமே வரைப்பு காட்டை 
ஏறிய பரியந்தத்தோடு ஏணி இவ்வைந்தும் என்ப 
** 9, 5 பெயர்கள் 19 
**552

#20
** வெண்மை சிவப்பு 
குருகு பால் தவளம் வெள்ளை குருத்து வால் சுவேதம் பாண்டு 
நரை விளர் பத்தும் வெண்மை சிதமும் சுக்கிலமும் நாட்டும் 
குருதி கிஞ்சுகம் இராகம் குறித்திடும் சேது பூவல் 
அருணம் சேய் சோணம் செக்கர் அரத்தம் சேப்பு இவை சிவப்பு ஆம் 
** 12, 11 பெயர்கள் 20 
**553

#21
** பச்சை பொன்மை புகர் நிறம் மாசு 
பாசு பை அரிதம் சாமம் பசுமை சாமளமே பச்சை 
பேசு பிங்கலம் பசப்பு பீதகம் பீதம் பொன்மை 
பூசிய குரால் புற்கோடு புகர் கபிலமும் ஆம் என்ப 
மாசின் பேர் கறை களங்கம் மலினம் ஆம் கசடும் அப் பேர் 
** 6, 4, 3, 4 பெயர்கள் 21 
**554

#22
** கறுப்பு ஒளி 
இருள் மணி நீலம் நல்லம் ஏற்ற காழகமே காளம் 
கருள் களம் காரி கார் மால் கறை மாயம் கறுப்பின் பேரே 
விரியல் மின் நிலவு வில் வாள் வெயில் நிழல் வாமம் நீமம் 
அரி நகை கிரணம் காந்தி ஆம் சோதி ஒளி ஈரேழ் பேர் 
** 13, 14 பெயர்கள் 22 
**555

#23
** ஒளி செயல் 
அலங்குதல் நகல் விளங்கல் அவிர்தலினொடு வயங்கல் 
இலங்குதல் மிளிர்தல் மின்னல் இலகுதலுடன் இமைத்தல் 
துலங்குதல் ஒளிர்தல் எங்கும் சுடருதல் பிறழ்தல் ஈரேழ் 
நலம்கொள ஒளிசெயல் பேர் தயங்கலும் நாட்டலாமே 
** 15 பெயர்கள் 23 
**556

#24
** அழகு 
எழில் வண்ணம் யாணர் மாமை இராமம் ஏர் நவ்வி நோக்கு 
செழுமையே சேடு செவ்வி சித்திரம் நலமே மாதர் 
குழகொடு பொற்பு நன்கு கோலமே மணி வனப்பு 
பழிபடா விடங்கம் மாழை பத்திரம் தோட்டி பாங்கு
**557

#25
** அழகு (தொடர்ச்சி) மழுங்கல் 
சுந்தரம் அணங்கு மஞ்சு சொக்கு தேசிகம்  அம் பொன்னே 
சந்தம் காரிகை கவின் பூ தளிமமே வாமம் காமர் 
அந்தமே மயமே ஒண்மை ஆய்ந்த ஆறேழும்தானே 
வந்திடும் அழகின் பேராம் வட்கல் புல்லெனல் மழுங்கல் 
** 42, 2 பெயர்கள் 25 
**558

#26
** நிறம் கட்டழகு பேரழகு 
வரி புகர் சாயல் சந்தம் மாமை கேழ் பசப்பு வண்ணம் 
குரு உரு வருணம் மேனி ஈராறும் நிறப் பேர் கூறும் 
கருது கட்டழகு காமர் கருது அலங்காரமும் பேர் 
பெருகிய விசித்திரம்தான் பேரழகு ஆகும் என்ப 
**  12, 2, 1 பெயர்கள் 26 
**559

#27
** இளமை மூப்பு வண்ணம் வடிவு 
குருளையே மழவு வெண்மை குழவு கோமளமே கொம்மை 
புருவை யெளவனமே நாகு போதகம் தருணம் நவ்வி 
முருகு இளை இளமை ஈரேழ் முற்றலே விருத்தம் மூப்பு ஆம் 
மருவிய வண்ணம் சந்தம் வடிவின் பேர் செண்ணம் ஆமே 
** 14, 2, 1, 1 பெயர்கள் 27 
**560

#28
** வலி 
மிடல் வயம் திண்மை மைந்து மெய்ந் நலம் தீரம் உம்பல் 
முடலை கொன் வாய்மை கூளி  மூரியே ஊக்கம் மீளி 
அடல் விறல் ஈடே ஏணே ஆண்மையே திறலே நோன்மை 
முடுகலே மல்லல் பாழி மொய்ம்பு உரன் முரணே துப்பு
**561

#29
** வலி (தொடர்ச்சி) வீரம் 
தானமே மதமே தோற்றம் சத்துவம் தாவே ஆற்றல் 
மானம் மல் உரமே முன்பு மதுகையே எறுழ் எண்ணைந்தும் 
ஊனம் இல் வலி வீரப் பேர் உறு பராக்கிரமம் சூரம் 
ஈனம் இல் செளரியம் வீரியமே சேவகமும் ஆமே 
** 40, 5 பெயர்கள் 29 
**562

#30
** மாட்சிமை குளிர் வளப்பம் கொழுமை 
தளவு இலா அமைதி ஆன்றல் சால்பொடு செழுமை வாய்த்தல் 
வளம் நிறை மாண்பு மாண்டல் மாண் பத்தும் மாட்சிமைப் பேர் 
நளிர் பனி அளி சீதம் தண் நன் மழை சாந்தம் ஏழும் 
குளிர் வளப்பம் கொழுப்பு ஆம் கொழுமையே செழுமை என்ப 
** 10, 1, 1, 1 பெயர்கள் 30 
**563

#31
** அறிவு சுத்தம் 
மேதை ஞாபகம் தெருட்சி மிகும் மதி உணர்வு ஞானம் 
போதமே தெளிவு புந்தி புலன் உரன் அறிவின் பேராம் 
மேதகு புனிதம் தூவே மேத்தியம் செளசம் தூய்மை 
தூய்து பாவனமே சுத்தம் சசி பவித்திரம் துப்பும் பேர் 
** 11, 10 பெயர்கள் 31
**564

#32
** வெற்றி செல்வம் 
குறைவிலா வலனே வென்றி கொற்றமே வெற்றம் முல்லை 
விறல் சயம் வாகை ஆடு விசயம் பத்து இவை வெற்றிப் பேர் 
மறு இல் சீர் விபவம் மாடு வாழ்க்கையே விருத்தி ஆக்கம் 
பொறி இடம் திரு பெருக்கம் போற்றிய வெறுக்கை செல்வம் 
** 10, 11 பெயர்கள் 32 
**565

#33
** அன்பு அருள் எழுமையும் தொடர்ந்த அன்பு 
பரிவு நார் வாரம் ஈரம் பற்று அளி பாசம் அன்பு ஆம் 
புரிவு ஆணம் நேயமும் பேர் போற்றிய தயை இரக்கம் 
கருணையே கிருபை மற்றுக் கருதிய தகவு இவ் ஐந்தும் 
அருளின் பேர் உழுவல் என்பது எழுமையும் தொடர்ந்த அன்பு 
** 10, 5, 1 பெயர்கள் 33
**566

#34
** மனம் குறிப்பு 
உன்னமே அகமே சித்தம் உள்ளமே இதயம் நெஞ்சு 
முன்னம் ஏழ் மனத்தின் பேர் ஆம் முதிர் சிந்தை நினைவு சேத்து 
சொன்ன இங்கிதம் கருத்து சூழல் எண்ணம் குறிப்பு ஆம் 
வன்மை நாட்டியம் தியானம் மதம் வினை ஏடலும் பேர் 
** 7, 13 பெயர்கள் 34 
**567

#35
** குறித்தல் வரையறுத்தல் 
கண்ணலே கருதல் பேணல் காணலே நுதலல் சுட்டல் 
எண்ணலே புகறல் எட்டும் குறித்திடல் என்னலாகும் 
நண்ணிய கணித்தலோடு நாட்டிய குணித்தல் எல்லாம் 
மண்ணுளோர் வரையறுத்தல் பெயர் என்ப மதித்தலும் பேர்
** 8, 3 பெயர்கள் 35 
**568

#36
** நினைத்தல் ஏமாப்பு - இறுமாப்பு வீற்றிருத்தல் 
உன்னலே படர்தல் ஊழ்த்தல் உள்ளுதலொடு சிந்தித்தல் 
முன்னலே வலித்தல் ஊகம் மொழிபவே நினைத்தல் எண் பேர் 
மன்னு செம்மாப்பு ஏமாப்பு மற்றை ஏக்கழுத்தமும் பேர் 
இன்னவை இறுமாப்பாகும் இவையே வீற்றிருத்தல் என்ப 
** 8, 2, 2, 2 பெயர்கள் 36 
**569

#37
** உள்ளக் களிப்பு நல்லுணர்வு 
தருக்கொடு மலர்ச்சி மத்தம் தன்கு பாடவம் களிப்பு 
செருக்கு அபிமானம் ஏமம் திகழ் பெருமிதம் மதர்ப்பு 
பொருத்திடும் மதர்வு ஈராறும் புகலும் உள்ளக் களிப்பு ஆம் 
உருத்திடு ஞானம் சீலம் ஓதும் நல்லுணர்வின் நாமம் 
** 12, 2 பெயர்கள் 37 
**570

#38
** இன்பம் பேரின்பம் தெளிவு பொறை 
நகை கடி மகிழ்ச்சி ஏமம் நயம் சுகம் தொய்யல் இன்பம் 
மகிழும் ஆனந்தம் ஒன்றே மன்னு பேரின்பம் என்ப 
திகழ் நனவு உணர்வு தேறல் தேற்றம் நல் தெளிவு நாற்பேர் 
புகழ்பெறு கமித்தல் நோன்றல் சகித்திடல் பொறை முப்பேரே 
** 7, 1, 4, 3 பெயர்கள 38 
**571

#39
** நன்று தருமம் ஊழ் 
நறுமையே விழுமம் சேடு நயம் நன்றி யாணர் நன்னர் 
உறுதியாம் கடவுள் ஒண்மை உத்தமம் பத்தும் நன்று ஆம் 
அறம் என்ப தருமம்தானே ஆகும் ஊழின் பேர் தெய்வம் 
நிறுவிய விதியே உண்மை வரன்முறை நியதியும் பேர் 
** 10, 1, 5 பெயர்கள் 39 
**572

#40
** தவம் உவகை கண்ணோட்டம் நிலையுடைமை 
தவம் என்ப விரதம் நோன்பு ஆம் உவவொடு தவசும் ஆகும் 
உவகை மாராயம் மற்றை ஓகையே பிரியமும் பேர் 
நவமதாம் கேண்மை கண்ணே நாகரிகம் கண்ணோட்டம் 
இவை நயப்புணர்வும் ஆமே ஏண் நிலையுடைமை என்ப 
** 4, 3, 4, 1 பெயர்கள் 40 
**573

#41
** நட்பு உள்ளத்தின் மிகுதி கூறுபாடு இலாபம் 
தூக்கிய கேண்மையே கேள் தொடர்பு என்ப நட்பு முப்பேர் 
ஊக்கமே உரன் இரண்டும் உள்ளத்தின் மிகுதி என்ப 
நீக்கிலா வகை திறங்கள் நிகர்இலாக் கூறுபாடே 
ஆக்கமே பலன் பயம் பேறு அதிகம் ஊதியம் இலாபம் 
** 3, 2, 2, 6 பெயர்கள் 41 
**574

#42
** அவாவின்மை அமையுமென்றல் துறத்தல் வெட்கம் 
வெறுப்பொடு முனைவு ஒல்லாமை வேண்டாமை உவர்ப்பே மாவே 
அறுத்திடல் அவாவின்மைப் பேர் அலம் என்பது அமையும் என்றல் 
துறத்தல் சார்பறுத்தலோடு  துறவியே விரத்தி முப்பேர் 
மறுத்தல் நாண் சமழ்ப்பு வெள்கல் வட்கல் உட்கு இலச்சை வெட்கம்
** 7, 1, 3, 7 பெயர்கள் 42
**575

#43
** ஒற்றுமை சகாயம் நிலைபெறுதல் ஏவல் 
ஒருமை தொட்டிமை குறிப்போடு ஒற்றுமை என்ப முப்பேர்
தரு பெருந்துணையே துப்பு சகாயமே இணையமும் பேர் ஆம் 
பெருகிய மன்னல் துஞ்சல் திதி நிலைபெறுதல் முப்பேர் 
விரவிய தாணுவும் பேர் மேவிய ஆணை ஏவல் 
** 3, 3, 4, 1 பெயர்கள் 43 
**576

#44
** ஒழுக்கம் நீதி அழுக்கின்மை 
செயல் முறை நடை ஆசாரம் செய்தி கையறையே கையே 
இயல்பு மஞ்சரியே நீள் சாரித்திரம் ஒழுக்கம் பத்தாம் 
மயல் அறும் நெறி நியாயம் மரியாதை நீதி முப்பேர் 
வியன் உறும் அழுக்கின்மைக்கு விமலமும் அமலமும் பேர்
** 10, 3, 2 பெயர்கள் 44 
**577

#45
** பழமை புதுமை 
தொல்லை முன் பண்டு முந்தை தொன்று பூருவம் புராணம் 
ஒல்லையே புராதனத்தோடு உற்ற ஊழ் பழமை பத்தாம் 
நல்ல நூதனம் விருந்து நவம் கடி புத்தேள் கோடி 
புல்லிய யாணர் வம்பு புனிறு ஒன்பான் புதுமையின் பேர்
** 10, 9 பெயர்கள் 45 
**578

#46
** பொலிவு நிச்சயம் ஆக்கம் பெயர் 
நீக்கிலாத் துப்பு மல்லல் நெடிய மங்கலமே பூவே 
போக்கமே மலர்ச்சி பொம்மல் பொற்பு இவை பொலிவு எண் பேர் ஆம் 
தீர்க்கமே தரிப்பு மன்ற தேறு இவை நிச்சயப் பேர் 
ஆக்கமே நந்தல் என்ப அபிதானம் நாமம் பேர் ஆம் 
** 8, 4, 1, 2 பெயர்கள் 46 
**579

#47
** உரித்து கணிதம் நிலை நீங்காமை முறைமை 
பாங்கொடு காணி தாயம் பால் கெழுதகைமை ஆட்சி 
ஈங்கு இவை உரித்தின் நாமம் எண்ணமே கணிதம் என்ப 
நீங்கரு நிலை தண்டாமை நிகர் இல் ஆனாமையும் பேர் 
பாங்குறும் மரபு பாரம்பரியமே முறைமை ஆகும் 
** 6, 1, 2, 2 பெயர்கள் 47 
**580

#48
** அதிசயம் காரணம் பின் 
வியப்பு விம்மிதத்தினோடு விசித்திரம் இறும்பூது இன்ன 
மயக்கு இலா அதிசயப் பேர் மற்றை அற்புதமும் ஆகும் 
செயத்தகு காரணப் பேர் திறம் ஏது பொருட்டு வாயில் 
நயத்தகு நிமித்தமும் பேர் நாடுங்கால் வழியே பின் ஆம் 
** 5, 5, 1 பெயர்கள் 48 
**581

#49
** வருவாய் பொருந்தல் பற்பலமுறை குடி வெகுவிதம் 
மல்லொடு வளமே வாரி பகுதியும் வருவாயின் பேர் 
புல்லுதல் கெழுமல் என்ப பொருந்தலே அமைவும் அப் பேர் 
பற்பல முறையின் பேரே பரியாயம் திணை குடிப் பேர் 
நல்லதாம் வெகுவிதம் நாநாவிதம் விவிதம் ஆமே 
** 4, 3, 1, 1, 2 பெயர்கள் 49 
**582

#50
** அறிவுடைப் பொருள் அறிவு இல் பொருள் 
** அறிந்தும் அறியார் போலுதல் 
அறிந்திடும் பொருள் பேர் சித்து சேதனம் என்பர் ஆய்ந்தோர் 
அறிந்திடாப் பொருள் அசித்தோடு அசேதனம் சடமும் ஆகும் 
சிறந்திட உயிர்கள் ஈசன் செய்திடும் சீல நூலை 
அறிந்தும் அஃது அறியாதாரைப் போறலே அறிமடம்தான் 
** 2, 3, 1 பெயர்கள் 50 
**583

#51
** அறிவின்மை பேரறிவு அழிவின்மை உறவு நிறைவேறல் 
அறிவின்மை மடம் எய்யாமை மருட்சி பேதைமை என்றாகும் 
பெறும் முதுக்குறைவுதானே பேரறிவு என்று கூறும் 
குறைவு இலாக் கோணை கன்னி குமரியே அழிவின்மைப் பேர் 
உறவியே உறவின் பேராம் நிறைவேறல் சபலம் ஆமே 
** 4, 1, 3, 1, 1 பெயர்கள் 51 
**584

#52
** கழி பிறப்பு வரு பிறப்பு இப் பிறப்பு 
** ஒரு பிறப்பு எப்பிறப்பும் எழு பிறப்பு 
உம்மையே கழிபிறப்பு ஆம் ஒழிந்திடு வருபிறப்பிற்கு 
அம்மையும் மறுமையும் பேர் ஆன இப் பிறப்பின் நாமம் 
இம்மை ஆம் ஒரு பிறப்பே இயம்பிடில் ஒருமைதானே 
எம்மை எப்பிறப்பும் என்ப ஏழ் பவம் எழு பிறப்பு ஆம் 
** 1, 2, 1, 1, 1,1 பெயர்கள் 52 
**585

#53
** மணம் மிகுமணம் நாறுதல் துர்க்கந்தம் 
முருகு தேன் கடி ஆமோதம் மோதவம் கந்தம் வேரி 
விரை நறை மன்றல் வம்பு வெறி மரு மணம் பன் முப்பேர் 
பரிமளம் மிகுமணப் பேர் பரவி நாறுதல் கந்தித்தல் 
விரவிய கமழ்தலும் பேர் மேவு துர்க்கந்தம் பூதி
** 13, 1, 2, 1 பெயர்கள் 53 
**586

#54
** இனிமை தித்திப்பு கைத்தல் புளிப்பு கார்ப்பு 
தூய சேறு அமுது சாரம் சுவை தீம் தேம் இனிமையின் பேர் 
தீய தேம் கனி தித்திப்பு ஆம் மதுரமும் ஆகும் தித்தம் 
ஆயது கைத்தலின் பேர் ஆமிலம் புளிப்பதாகும் 
காயமே கடுகம் காழ்ப்பு கரில் காரம் கடு கார்ப்பு ஆமே 
** 6, 3, 1, 1, 5 பெயர்கள் 54 
**587

#55
** அச்சம் கலக்கம் 
வெருவு சூர் பீர் வெறுப்பு வெறி வெடி கவலை பீதி 
உருவு பேம் விறப்பு கொன்னே உட்கு நாம் பனிப்பு அணங்கு 
தரு புலம்பு அதிர்ப்பு அடுப்பு தரம் பயம் உரும் அச்சப் பேர் 
துரிதமே பிரமம் வந்து சூழ் கதனம் கலக்கம் 
** 22, 3 பெயர்கள் 55 
**588

#56
** அச்சக் குறிப்பு தாழ்வு 
நிலைபெறாது ஓடல் தேங்கல் ஞெரேலெனல் கூசல் திட்கல் 
உலமரல் அளுக்கல் ஞொள்கல் ஒடு துடுக்கெனலே துட்கல் 
குலைதல் வெய்துறலே அச்சக் குறிப்பு துண்ணெனலும் கூறும் 
தலையிழிபுடனே சாய்ப்பு தஞ்சமே தண்மை தாழ்வு 
** 13, 4 பெயர்கள் 56 
**589

#57
** நடுக்கம் எளிமை புல்லறிவு 
விதிர்ப்பொடு விதப்பு கம்பம் விதலை கம்பிதம் பனிப்பு 
பொதிர்ப்பு உலைவு இவை நடுக்கம் பொருந்திடும் எளிமை எண்மை 
மதிப்பிலாப் பரிபவங்கள் மற்று இழிதகவும் ஆகும் 
பிதற்று சிற்றறிவு வெண்மை வெளிறு புல்லறிவின் பேரே 
** 8, 3, 3 பெயர்கள் 57 
**590

#58
** குற்றம் 
ஆசு தோம் பிழையே போக்கே அரில் கரில் பழி அரிப்பு 
காசு மை தவறே மானம் கறை குறை மிறை கழிப்பு 
மாசொடு துகளே தப்பு மறு நவை வசை கொழிப்பே 
ஏசொடு புரையே கோதே ஏதம் மூவொன்பான் குற்றம் 
** 27 பெயர்கள் 58 
**591

#59
** மறத்தல் இழிவு தளர்ச்சி இரக்கம் 
வழுக்கொடு மறவி புன்மை மறலொடு பொல்லாங்கே கீழ் 
இழுக்கொடு சோர்வு பொச்சாப்பு இகழ்ச்சியும் மறத்தலின் பேர் 
பழித்திடும் துவ்வும் மன்னும் பகர்ந்திடும் இழிவுதானே 
இழைத்திடும் தளர்ச்சி ஏட்டை அசாவும் ஆம் இனைவு இரக்கம் 
** 10, 2, 1, 1 பெயர்கள் 59 
**592

#60
** உட்டிணம் கொடுமை 
கடுகிய வெம்மை கோரம் கருமையே உருமம் வெப்பம் 
உடன் அழல் அழனம் தாபம் உருப்பம் உட்டிணப் பேர் ஒன்பான்
கொடுமையின் பேரே சண்டம் கோடணை கடினம் கோரம் 
கடுமை உக்கிரம் உறைப்பு கலாம் சடம் வஞ்சம் பூதி 
** 9, 11 பெயர்கள் 60 
**593

#61
** வறுமை பகை 
குறை இலம்பாடு மிச்சை குறுவாழ்க்கை மிடி நிரப்பு 
சிறுமையே ஒற்கம் இன்மை தீய நல்குரவே அல்கல் 
வறுமையின் பெயர் பன்னொன்றாம் வரு தரித்திரமும் ஆகும் 
மறல் இகல் முனை முரண் தா மடி தெவ்வோடு அரி பகைப் பேர் 
** 12, 8 பெயர்கள் 61 
**594

#62
** கோபம் கோபக் குறிப்பு 
வெறுத்தலே சினம் குரோதம் வெகுளி மற்று அரிப்பு சீற்றம் 
செறித்திடும் கலாம் கதங்கள் செயிர் ஒன்பான் கோபத்தின் பேர்
கறுப்பொடு சிவப்பே போதக் கன்றலே புழுங்கல் சீறிக் 
குறித்திடும் புகைதல் பொங்கிக் கொதித்தல் கோபக்குறிப்பு ஆம்
** 9, 6 பெயர்கள் 62 
**595

#63
** முன்கோபம் பெருங்கோபம் வைரம் 
குருத்த முன் கோபம் வெம்பல் கொந்தலே கனிதல் கோம்பல் 
பெருத்த கோபம் விடைத்தல் பெருகிய முனைதல் சீறல் 
உருத்தலே உலறல் காய்தல் உடற்றல் தீவிரமும் ஆகும் 
தரித்திடும் வயிரம் செற்றம் சலம் பவம் தொந்தம் வேரம் 
** 4, 8, 5 பெயர்கள் 63 
**596

#64
** வருத்தம் மேன்மை 
உயவு அனுக்கம் கவற்சி உயங்குதல் கசிவு அணங்கே 
அயர்வொடு நொசிவே நோவே ஆய்வொடு மிறை சமழ்த்தல் 
வயாவொடு ஆகுலம் அழுங்கல் வருத்தம் மூவைந்தும் வைக்கும் 
வியல் மிகும் ஏற்றம் ஞெள்ளல் சாலூரம் மேதை மேன்மை 
** 15, 4 பெயர்கள் 64 
**597

#65
** வேறுபாடு தனிமை 
வீற்றொடு விகிர்தம் பின்னம் விபரீதம் விரூபம் விள்ளல் 
வேற்றுமை திரிபு பேதம் விகடம் ஈரைந்தும்தானே 
ஏற்றிய வேறுபாட்டுக்கு இயம்பிய நாமம் ஆகும் 
போற்றிய தனிமை ஏகம் புலம்பு கேவலமும் ஆமே 
** 10, 3 பெயர்கள் 65 
**598

#66
** மயக்கம் 
இருள் உணராமை மத்தம் இளமை மாழாத்தல் பித்தம் 
வெருள் களி கழுமல் மோகம் மேவும் உன்மத்தம் மாழ்கல் 
கருதிய அனந்தர் ஏமம் களன் பேது மையல் மைந்து 
மருள் மறல் மான்றல் மூவேழ் மயக்கம் ஆம் மயர்வும் அப் பேர் 
** 22 பெயர்கள் 66 
**599

#67
** தீது சோம்பு 
தீங்கு கோள் அந்தராயம் செப்பு விக்கினம் முட்டுப்பாடு 
ஓங்கிய அலாபம் தட்டே ஊறே அந்தரமும் தீது ஆம் 
ஆங்குள அலைசல் ஆஞ்சி அழுங்கலே மடியே ஞொள்கல் 
தூங்கலே அசைவே மந்தம் சோகம் ஆலசியம் சோம்பு ஆம் 
** 9, 10 பெயர்கள் 67 
**600

#68
** வஞ்சம் குணம்இன்மை தாமதம் 
குடிலம் புள்ளுவமே கூடம் குத்திரம் மாயை குய்யம் 
படிறு சாட்டியமே வஞ்சம் பட்டிமைதானும் அப்பேர் 
செடி சீத்தை சிதம்பினோடு சீரணம் குணம் இன்மைப் பேர் 
மிடி தரும் தாமதப் பேர் விளம்பனம் விளம்பம் தாமே 
** 9, 4, 2 பெயர்கள் 68 
**601

#69
** கேடு இகழ்ச்சி அருவருப்பு 
இழிவொடு திரிதல் நந்தல் இறுதலே முறிதல் கந்தல் 
வழு கயம் சிதைவு அழுங்கல் மடி சுதம் கேடு ஆம் நிந்தை 
இழிவு எள்ளல் நகல் ஒல்லாமை இகழ்ச்சி ஆம் உவர்ப்பும் அப் பேர்
குழைவுறா அருவருப்பு குற்சிதம் பயிர்ப்பும் ஆமே 
** 12, 6, 2 பெயர்கள் 69 
**602

#70
** பாவம் பயனிலாமை சந்தேகம் ஒருதலைக் காமம் 
மறம் அகம் கலுடம் பங்கம் வரும் செடி துரிதம் பாவம் 
வறிது கொன் வீண் விருதா மன்னிய பயனிலாமை 
அறைதரு சந்தேகப் பேர் அயிர்ப்பு ஐயம் கடுத்தல் சங்கை 
கறை இல் ஓர்தலைக்காமப் பேர் கைக்கிளை ஆகும் என்ப 
** 6, 4, 4,1 பெயர்கள் 70 
**603

#71
** பிறப்பு சூதகம் ஈன்றணிமை 
** தோகைமார் தொடாப் பொருட்டு 
சிறந்திடும் சன்மம் தோற்றம் செனனமே பவம் சனிப்பு 
பிறந்தை உற்பவம் என்றேழும் பிறப்பாம் உற்பத்தியும் பேர் 
அறைந்த சூதகம் ஆசெளசம் புனிறே ஈன்றணிமையின் பேர் 
துறந்த வாலாமை பூப்பு தோகைமார் தொடாப்பொருட்டே 
** 8, 1, 1, 2 பெயர்கள் 71 
**604

#72
** அதிசயமுற இரங்கல் மனக்கோட்டம் அழுக்காறு 
அன்னோவோடு அந்தோ ஆ ஓ அத்தோவோடு அச்சோ ஐயோ 
என்னே எற்று எவன் எனும் சொல் அதிசயம் உற இரங்கல் 
மன்னும் ஒளவியமே என்ப மனக்கோட்டம் அழுக்காற்றின் பேர் 
சொன்ன நோனாமை கூரம் சூழ்ந்திடும் பொறாமை முப் பேர்
** 10, 1, 3 பெயர்கள் 
**605

#73
** துன்பம் 
அல்லலே அலக்கண் மம்மர் அரந்தை கோட்டாலை பீழை 
செல்லல் கேதம் கலக்கம் சிறுமை சூர் உறுகண் புன்கண் 
சொல்லும் இட்டளம் இன்னாவே துனி பருவரலே துக்கம் 
ஒல்லும் நோ அழுங்கல் பீடை உலமரல் அல்லகண்டம்
**606

#74
** துன்பம் (தொடர்ச்சி) 
கவ்வை யாதனை பழங்கண் கையாறு நடலை பையுள் 
எவ்வம் ஏதம் வெறுப்பே இடும்பையே இடுக்கண் இன்னல் 
வவ்விய படர் பனித்தல் வறுமை வெய்துறவே பைதல் 
வெவ்விய கவலை தீய விழுமம் ஆறேழும் துன்பம் 
** 42 பெயர்கள் 
**607

#75
** ஆசை 
மாதர் நச்சு இச்சை ஏடை வயா நம்பு நசை நயப்பு 
காதல் வெப்பம் விருப்பம் காமமே இராகம் பற்றே 
ஆதரம் பெட்பு வேட்கை ஆர்வமே மேவல் வெஃகல் 
ஓதிய விழைவு மூவேழ் உறு பெயர் ஆசை ஆமே 
** 21 பெயர்கள் 
**608

#76
** வேட்கைப் பெருக்கம் காமநோய் 
சூழ்தரும் மோகம் நம்பல் சொற்றிடும் இரதி வெஃகல் 
தாழ்தலே கவர்தல் பெட்டல் சார்புடன் இவறல் வேண்டல் 
வீழ்தல் வேணவா ஈராறும் வேட்கையின் பெருக்கம் என்ப 
மாழ்கிய விரகம் காமம் மதனமே காமநோய் ஆம் 
** 12, 3 பெயர்கள் 76
**609

#77
** நோய் வேதனை பண்ணும் நோய் நரக நோய் 
மாரி ஆமயமே புன்கண் மடி நிழல் மடங்கல் பையுள் 
சூர் பிணி உரோகம் குந்தம் சூழ் அணங்கு ஈராறும் நோய் 
பாரிய வாதை பீதி வேதனை பண்ணும் நோய் ஆம் 
ஓரும் யாதனை கொல்லா நோன்புறார் உறும் நரக நோயே 
** 12, 2, 1 பெயர்கள் 77 
**610

#78
** உவமை 
அன்னவே அனைய செத்தே ஆங்கு ஒப்ப புரைய போல 
என்னவே பொருவ எள்ள இகலவே கடுப்ப மான 
சொன்ன கேழ் தகவு தூக்கு துணை இணை நிகர நேர 
மன்னும் வீழ்வு உறழ அற்றே மலைவு எண் மூன்று உவமைப் பேரே
** 24 பெயர்கள் 78 
**611

#79
** குணம் பண்பு 
மாலை நீர் தகவு பெற்றி மரபொடு கிழமை வண்மை 
சால்பொடு தகுதி பான்மை தகைமையே இயல்பு தன்மை 
பால் விதி கொள்கை பண்பு படி முறை பரிசு இவ்வெல்லாம் 
கோலம் ஆர் குணம் நாலைந்தாம் குணம் நிறம் இரண்டும் பண்பாம்
** 20, 2 பெயர்கள் 79 
**612

#80
** கை ஒழியாமை ஒழுக்கம் செயல் அறல் 
** அடைக்கலம் உரிமை 
கையொழியாமை கைதூவாமை ஆம் கை ஒழுக்கம் 
கையறல் செயலறல் பேர் கையடை அடைக்கலப் பேர் 
மைஇலா உரிமையின் பேர் வரு கெழுதகைமையோடு 
பொய்யிலாக் கிழமை மற்றை உரித்து எனப் புகலலாமே 
** 1, 1, 1, 1, 3 பெயர்கள் 80 
**613

#81
** ஒருபலம் காற்பலம் தக்கு நூறுபலம் 
** ஒன்று பத்து நூறு ஆயிரம் 
தொடி ஒரு பலம் ஆம் கஃசு சொற்ற கால் பலம் ஆம் தூக்கு 
நெடிய கா துலாங்கள் என்ப நிறை நூறு பலமே ஆகும் 
படியில் ஒன்று ஏகம் என்ப பத்து என்ப தசம் ஆம் நூறு 
நொடிதரின் சதம் என்று ஆகும் ஆயிரம் நூற்றுப்பத்தே 
** 1, 1, 2, 1, 1, 1, 1, 1 பெயர்கள் 81
**614

#82
தேங்கிய புகழான் குன்றைக் குணபத்திரன் திருத்தாள் போற்றி 
வீங்கு நீர்ப் பழனம் சூழ்ந்த வீரை மண்டலவன் செய்தான் 
பாங்கினால் விளங்கு பண்பு பற்றிய பெயரின் ஈட்டம் 
ஓங்கிய கவிதை எண்ணில் ஒன்பதிற்றொன்பது ஒன்றே
** எட்டாவது - பண்பு பற்றிய பெயர்த் தொகுதி முற்றிற்று 

@9. செயல் பற்றிய பெயர்த் தொகுதி 
**615

#1
** காப்பு 
வியன் மிக்க வைரத்தால் வேர் வீழ்த்து பொற் கவடு கொண்டு 
மயம் மிக்க மரகதத்தால் வண் தழை பொதுளி பூந் தொத்து 
இயல் உற்ற பதுமராகம் எதிர் பிண்டி இறை தாள் போற்றி 
செயல் பற்றும் பெயர்க் கூட்டத்தைச் செப்புவம் இப்பால் கேண்மின்
**616

#2
** செய்தொழில் செய்தல் பிறப்பித்தல் 
செயல் விதி கருமம் கன்மம் செய்தொழில் வினையும் அப் பேர் 
அயர்தலே வனைதல் ஆற்றல் குயிறலோடு இழைத்தல் செய்தல் 
நியமித்தல் விதித்தல் மற்றும்  திருமித்தலொடு சிட்டித்தல் 
பயன் உறப் படைத்தலோடு பாரித்தல் பிறப்பித்தல் பேர் 
** 5, 5, 6 பெயர்கள் 2 
**617

#3
** மகளிர் விளையாட்டு பொழுது போக்கல் மெச்சல் 
தொடலை உண்டாட்டு பொய்தல் சூழ் விலாசனையே வண்டல் 
கெடவரல் பண்ணை உப்பு கிரீடையே கேளி ஓரை 
புடை முலையார் ஆடல் பேர் பொழுது போக்கே வினோதம் 
படி பாராட்டுதல் குலாவல் பரிந்து கொண்டாடல் மெச்சல் 
** 11, 1, 3 பெயர்கள் 3 
**618

#4
** விவாகம் உற்சவம் 
வதுவை கைப்பற்றலே தீவலம்செய்தல் மணம் கல்யாணம் 
விதியுளி வேட்டல் மன்றல் விவாகம் எண் பேர் விளங்கும் 
புது விழா முருகு சாறு புத்தேள் உற்சவம் ஆம் சேறு 
துதை மலர் கொண்டு போற்றும் துணங்கறல் இரண்டும் அப் பேர் 
** 8, 5 பெயர்கள் 4 
**619

#5
** ஒப்பனை சூடுதல் சொருகுதல் 
புனைதல் கை செய்தல் வேய்தல் பொற்புடன் அலங்கரித்தல் 
வனைதலே அணிதல் பூசல் மண்ணல் ஒப்பனை ஒன்பானாம் 
வன மலர் மிலைதல் வேய்தல் மலைதல் சூடுதல் இம் முப்பேர் 
சினை மலர் அடைச்சலோடு செருகுதல் சொருகுதல் பேர் 
** 9, 3, 2 பெயர்கள் 5 
**620

#6
** உண்ணல் விழுங்கல் 
அருந்திடல் துய்த்தல் மாந்தல் அயிறலே அழுது செய்தல் 
பொருந்தவேதாம் கை தொட்டல் புசித்தல் போசனமே ஆர்தல் 
பரிந்தனர் நுகர்தல் தின்றல் பாரணம் மிசைதல் துற்றல் 
இருந்து உணல் பேர் விழுங்கல் இசைதரு நொண்டல் நுங்கல் 
** 14,2 பெயர்கள் 6 
**621

#7
** நித்திரை நிரம்பாத் தூக்கம் எழுப்பல் 
துயிலல் கண் வளர்தல் பள்ளி துயிறலே உறங்கல் துஞ்சல் 
பயிலும் கண்படை அனந்தர் படை கனவோடு பத்தும் 
இயலும் நித்திரையாம் தூங்கல் என்பது நிரம்பாத் தூக்கம் 
அயலவர் எடுத்தல் எற்றல் ஆங்கு அவை எழுப்பல் ஆமே 
** 10, 1, 2 பெயர்கள் 7 
**622

#8
** அழுதல் காண்டல் கடைக்கணித்தல் 
விரவிய அழுதலின் பேர் விம்மலே கலுழ் கலக்கம் 
பொருமுதல் கசிவே ஏங்கல் உரோதனம் இரங்கல் எட்டாம் 
தெரிசனம் பார்வை நோக்கம் சிறப்பின் கண்ணுறல் காண்டல் பேர் 
அருமையின் சிறக்கணித்தல் அபாங்கமே கடைக் கணித்தல் 
** 8, 4, 2 பெயர்கள் 8 
**623

#9
** கொடை 
புரவு தானம் பகுத்தல் பொழிதலே உதவல் நீட்டல் 
விரவு உபகாரம் வேள்வி விதரணம் கவிகை வண்மை 
அருளல் வேளாண்மை ஈகை அளித்தலே உதாரம் வீசல் 
தருதலினொடு தியாகம் கொடை கடப்பாடும் சாற்றும் 
** 20 பெயர்கள் 9 
**624

#10
** வரையாது கொடுத்தல் 
படை மயக்குற்ற போதும் படைமடம் ஒன்றிலாதான் 
மடை செறி கடகத்தோளான் மதிக்குடை மன்னர்மன்னன் 
கெடிமன்னர் வணங்கும் தாளான் கிருட்டிண ராயன் கை போல் 
கொடை மடம் என்று சொல்ப வரையாது கொடுத்தல் ஆமே 
** 1 பெயர் 10 
**625

#11
** பிச்சை இரத்தல் கரத்தல் 
போற்றிய பயிக்கம் பாகம் பொருந்திய பலியே பிண்டம் 
சாற்றிய பிடிதம் ஐயம் சரிதை ஏழ் பிச்சையின் பேர் 
ஏற்றலே குறைகோள் பின் சென்று இரத்தலே வேண்டலும் பேர் 
மாற்றலே கரத்தல் ஆகும் மறுத்தலும் நிறுத்தலும் பேர் 
** 7, 3, 3 பெயர்கள் 11
**626

#12
** எழுதுதல் எழுத்து அரக்குதல் தூய்தாக்கல் 
தெரித்தலே வரைதலோடு தீட்டுதல் பொறித்தல் கீறல் 
வரித்தலே எழுதுதல் பேர் வரி பொறி கணக்கு இரேகை 
விரித்த அக்கரம் எழுத்து ஆம் விரகொடு சிதைத்தல் தேய்த்தல் 
அரக்குதல் கீழ்தலும் பேர் அடைவே தூய்தாக்கல் சீத்தல் 
** 6, 5, 3, 1 பெயர்கள் 12
**627

#13
** பூசை யாகம் மீதூரல் 
அர்ச்சனை வழிபாடே ஆராதனை மூன்றும் பூசை 
எச்சமே கிரது வேள்வி இட்டியே அசனம் ஓமம் 
மெச்சிய மகமே யூபம் விதியுளி யாகம் ஆகும் 
நிச்சயம் மீதூரல் போர் இடங்கழி நெருங்கலும் பேர் 
** 3, 9, 2 பெயர்கள் 13
**628

#14
** வேர்வு வருத்தம் தீர்தல் வடுப்படல் விடுதல் 
** அடங்கல் சோர்வு வழு 
வியர்த்தலே சுவேதம் வேர்வு ஆம் கசிவும் ஆம் அயாவுயிர்த்தல் 
மயக்கு அற வருத்தம் தீர்தல் வடுப்படல் கதுவாய் ஆமே 
உயிர்த்தலே விடுதல் என்ப ஒருங்கு என்ப அடங்கல்தானே 
கயக்கு சோர்வு ஆம் பிறக்கு காட்டிய வழுவின் பேரே 
** 3, 1, 1, 1, 1, 1, 1 பெயர்கள் 14
**629

#15
** மூடுதல் பரத்தல் மஞ்சனம் குளித்தல் பிறகிடல் 
மூடுதல் கவித்தல் மூய்தல் முடியவே பரத்தல் ஊர்தல் 
நீடிய நானம் என்ப நிகழ்த்து மஞ்சனத்தின் நாமம் 
ஆடலே படிதல் தோய்தல் ஆம் இவை குளித்தல் என்ப 
பீடு அறப் பிறகிடல் பேர் பிறக்கிடல் பின்றல் ஆமே 
** 2, 1, 1, 3, 2 பெயர்கள் 15 
**630

#16
** அடக்கம் தங்கல் பாந்தல் தேய்த்தல் 
முடக்கமே மடங்கல் குத்தி முணங்கொடு நொறில் ஒடுக்கம் 
அடக்கம் ஆம் வதிதல் வைகல் அல்கலே இறுத்தல் தாழ்தல் 
விடுத்தல் ஆறும் தங்கல் பேர் வசித்தலோடு இறையும் அப் பேர் 
ஒடுக்கமே பதுங்கல் பாந்தல் உரைத்தலே உரிஞ்சல் தேய்த்தல் 
** 6, 8, 2, 2 பெயர்கள் 16 
**631

#17
** காதலோர் கூட்டம் புலத்தல் புலவி நீட்டம் 
மெலிவு இல் மைதுனம் புணர்ச்சி விழைச்சொடு விழைவு தல்லே 
கலவியே கிரீடை ஆடல் காதலோர் கூட்டம் எண் பேர் 
புலவியே புலத்தல் என்ப ஊடலும் அதன் பொருட்டே 
நலம் மிகு துனி எனும் சொல் நாட்டிய புலவி நீட்டம் 
** 8, 2, 1 பெயர்கள் 17 
**632

#18
** கூடியும் கூட்டமின்மை நணுகாராகி உரை 
** மறுத்திருத்தல் ஆடவர் நீங்க உள்ளே 
** அடைத்திருத்தல் ஊடலைத் தீர்த்தல் 
கூடியும் கூட்டம் இன்மை குலவிய புலவி என்ப 
ஊடலே நணுகாராகி  உரை மறுத்திருத்தல் ஆகும் 
ஆடவர் நீங்க உள்ளே அடைத்துறல் துனியே என்பர் 
ஊடலைத் தீர்த்தலின் பேர் உணர்த்தல் ஒல்லல் ஆகும் 
** 1, 1, 1, 2 பெயர்கள் 18 
**633

#19
** தண்டனிடல் ஆலிங்கனம் கும்பிடல் 
வந்தனம் பணிதல் காணல் வழிபடல் பணிவு இறைஞ்சல் 
தம் தலை வணங்கல் பார்த்தல் தாழ்தல் ஒன்பானும் தண்டன் 
முந்திய தழுவல் விள்ளல் முயங்கல் ஆலிங்கனப் பேர் 
அந்தமாத் தொழல் கை கூப்பல் அஞ்சலி கும்பிடல் பேர் 
** 9, 3, 3 பெயர்கள் 19 
**634

#20
** சாவு 
துஞ்சலே வீடல் மாளல் சொற்றிடும் விளிவு வீவு 
முஞ்சலே உலத்தல் பொன்றல் முடிதலே துவன்றல் மாய்தல் 
எஞ்சிய மரணம் வியோகம் இல்லெனல் கழிவு இறத்தல் 
அஞ்சிய தபுதல் சாவின் அபிதானம் பன்னேழ் ஆமே 
** 17 பெயர்கள் 20 
**635

#21
** முறிதல் சாய்தல் 
பரிதலே ஞெமிர்தல் பற்றாது ஒடிதலே இடிதல் சால 
முரிதலே இறுதல் ஆறும் முறிதலே ஒசிதலும் பேர் 
இரிதலே நெரிதல் சோரல் இடைதலே உடைதலோடு 
சரிதலே கெடுதல் ஏழும் சாய்தலின் நாமம் ஆமே 
** 7, 7 பெயர்கள் 21 
**636

#22
** முறித்தல் துவளல் இசைப்பு 
ஒசித்தலே அகைத்தல் கோடல் ஒடித்தலே முறித்தலின் பேர் 
இசித்தலே ஞெமிர்த்தலோடே இறுத்தலும் அதன் பேர் என்ப 
ஒசிந்திடல் அசைதல் சாய்ந்தே உவளலும் துவளல் ஆமே 
இசைப்பின் பேர் புணர்ச்சி மற்றை இசைவும் ஆம் இயைபும் ஆமே 
** 7, 3, 3 பெயர்கள் 22 
**637

#23
** வளைத்தல் பிடித்தல் கட்டல் 
வசப்பட வலித்தல் சூழ்தல் வளாகமும் வளைத்தல் முப்பேர் 
இசைத்திடின் பிடித்தலின் பேர் தொடல் பற்றல் இரு பேர் ஆகும் 
விசித்தலே தொடுத்தல் பந்தம் வீக்குதல் சிமிழ்த்தல் யாப்பே 
அசைத்தலே பிணித்தல் ஆர்த்தல் ஒன்பதும் கட்டல் ஆமே 
** 3, 2, 9பெயர்கள் 23 
**638

#24
** அரிதல் வெட்டல் 
அரிதலின் பேர் சேதித்தல் அறுத்திடல் விடுவாய் செய்தல் 
விரிவுறச் சூலல் கொய்தல் விதியுளி ஈர்தல் ஆறாம் 
பரிதல் கண்டித்தலோடு பகுத்திடல் தடிதல் எற்றல் 
தரம் உறத் துமித்தல் ஆறும் வெட்டல் ஆம் தறித்தலும் பேர் 
** 6, 7 பெயர்கள் 24
**639

#25
** கீறல் கிளைத்தல் கொழித்தல் வழிப்பறித்தல் 
கீறலே கீளல் கீண்டல் கிழித்திடல் கீன்றல் கீழ்தல் 
பீறல் ஆறாம் பேர் மற்றுப் பிளிறலே ஞெண்டல் கிண்டல் 
மாறிடக் கிளைத்தல் முப்பேர் வரன்றல் தெள்ளுதல் கொழித்தல் 
ஆறலை வழிப்பறித்தல் அதர்கோளும் அப் பேர் ஆமே 
** 6, 3, 2, 2 பெயர்கள் 25 
**640

#26
** பறித்தல் கத்தரித்தல் குட்டல் தோண்டுதல் தடுத்தல் 
கட்டலே களைதல் குற்றல் பறித்தல் கத்தரித்தல் கொய்தல் 
குட்டலே தகர்த்தல் ஆகும்  உடைத்தலும் கூறும் அப் பேர் 
தொட்டலே அகழ்தலோடு தொடுதல் தோண்டுதலின் பேராம் 
தட்டல் வாரித்தல் ஆணை தகைதலே தடுத்தலின் பேர் 
** 3, 1, 2, 3, 4 பெயர்கள் 26 
**641

#27
** ஐம்பொறி நுகர்வு விடுத்தல் அடுக்குதல் 
** ஒழிதல் தாழ்தல் 
அடுத்த துப்புரவும் துவ்வும் ஐம்பொறி நுகர்வ ஆகும் 
விடுத்தல் மோசனமே மோக்கம் வீதமாம் தீர்தலும் பேர் 
அடுக்குதல் பேரே ஏற்றல் ஆம் ஓவல் ஒழிதல் என்ப 
நடுக்குறத் தாழ்தலின் பேர் குரங்குதல் குனிவும் நாட்டும் 
** 2, 4, 1, 1, 2 பெயர்கள் 27 
**642

#28
** முடைதல் மாற்றல் மிசை நிலைப்படச் செய்தல்
** நிறுத்தல் சொலித்திடல் வகிர்தல் 
வலத்தலே நிணத்தல் என்ப முடைதல் ஆம் மாற்றலின் பேர் 
விலக்கல் ஆம் மிசையின் பேரே மீமிசை யாம் தாபித்தல் 
நிலைப்படச் செய்தலின் பேர் நிறுத்தலே நோன்றல் என்ப 
சொலித்திடல் இடத்தல் ஆகும் துவர்தலே வகிர்தல் என்ப 
** 2, 1, 1, 1, 1, 1, 1 பெயர்கள் 28 
**643

#29
** சிந்தல் வீசுதல் முட்டல் அவித்தல் 
சிதர்த்தலே உகுத்தல் தூவல் சிந்தலே உளர்தலும் பேர் 
எதிர்த்து வீசுதலே ஓச்சல் செலவிடல் எறிதல் முப்பேர் 
இதத்தொடு பொருத்தல் மாட்டல் இரு பெயர் மூட்டல் என்ப 
நதுத்தலே நொதுத்தலோடு நவித்தலும் அவித்தல் பேரே 
** 4, 3, 2, 3 பெயர்கள் 29 
**644

#30
** குத்தல் அடித்தல் வசமாக்கல் முண்டிதமாக்கல் 
புடைத்தலே எறிதல் எற்றல் பொத்தெனக் குத்தல் முப் பேர் 
அடித்தலே கொட்டல் மொத்தல் அறைதலே அகைத்தல் எற்றல் 
பிடித்தனர் அதுக்கல் மோதல் பேசிய வழுக்கல் என்ப 
வடித்தலே வசமாக்கல் பேர் மழித்தல் முண்டிதமே ஆக்கல் 
** 3, 8, 1, 1 பெயர்கள் 30 
**645

#31
** செறித்தல் துளைத்தல் வாருதல் கொள்ளை 
அளித்தல் பாதீடு பெய்தல் ஆம் முப்பேர் செறித்தல் என்ப 
துளைத்தலின் பேர் திளைத்தல் குயிறல் ஆம் தொள்ளலும் பேர் 
வளைத்தலே கவர்தல் வௌவல் வாருதல் கொளலும் ஆகும் 
கிளத்துங்கால் சூறை கொண்டி கேடுறும் கொள்ளை ஆமே 
** 3, 3, 4, 2 பெயர்கள் 31
**646

#32
** தடவல் பரத்தல் முகத்தல் தூவல் அசைதல் 
வருடல் தைவரலே நீவல் வரும் முப்பேர் தடவல் ஆகும் 
விரியலே பரத்தல் என்ப விளம்பு பாரித்தலும் பேர் 
தெரியவே தோண்டல் நோண்டல் சேரவே முகத்தலின் பேர் 
சொரிதலே பொழிதல் தூவல் துயல்வரல் அசைதலின் பேர் 
** 3, 2, 2, 2, 1 பெயர்கள் 32 
**647

#33
** காத்தல் காவல் பாதுகாத்தல் 
திதி நிலை பெறுத்தல் நோக்கல் சிறப்பொடு புரத்தல் நான்கும் 
விதமுடன் காத்தலின் பேர் வேலியே ஏமம் சேமம் 
கதவு அரண் காப்பு தட்டி கடி எட்டும் காவல் பேரே 
பதம் உற ஓம்பல் போற்றல் பாதுகாத்தல் பேராகும் 
** 4, 8, 2 பெயர்கள் 33 
**648

#34
** பகுத்தல் விரித்தல் பொதிதல் புதைத்தல் 
** குற்றல் நெரித்தல் 
பகுத்தலே பாத்து பாகம் பங்கீடு பாதியும் பேர் 
இகுத்தலே விரித்தலின் பேர் ஏற்றிடும் பொதிதல் வீக்கம் 
மிகைப்படப் புதைத்தலின் பேர் தணித்தல் சேமித்தல் என்ப 
திகைக்கவே அவைத்தல் குற்றல் தெறுதல் என்பது நெரித்தல் 
** 4, 1, 1, 2, 1, 1 பெயர்கள் 34 
**649

#35
** கொலைசெய்தல் கொலை வேட்டை 
எருக்கல் காதுதல் சவட்டல் எற்றுதல் ஒழித்தல் கோறல் 
முருக்கல் வீட்டுதல் படுத்தல் முதிர் கொலை செய்தல் ஒன்பான் 
உரைத்த மாரணமும் அப் பேர் ஊறு கோள் அணங்கு வேட்டம் 
வரித்திடின் கொலையின் நாற்பேர் வேட்டை பாபத்தி என்ப 
** 10, 4, 1 பெயர்கள் 35 
**650

#36
** மெய்கோட்டிக் கைகுவித்தல் தேடல் 
** துவட்டல் தொடுதல் 
குடமே மெய்கோட்டிக் கையைக் குவித்தலின் நாமம்தானே 
கடுகிய நாடல் நேடல் கையரிக்கொளலே தேடல் 
தொடர்புறு துருவும் ஆகும் துவட்டலே நுடக்கல் என்ப 
தொடுதலே திவளல் ஊறு பரிசனம் துவளலும் பேர் 
** 1, 4, 7, 4 பெயர்கள் 36 
**651

#37
** நடத்தல் 
கடத்தலே படர்தல் சேறல் கழிதலே இவறல் ஏகல் 
விடுத்திடல் இறத்தல் போகல் மெல்லென வழங்கல் நீங்கல் 
தடத்தினில் செலவே இல்லல் தணத்தலே இயங்கல் தீர்தல் 
நடத்தலின் பேர் ஈரெட்டாம் ஒதுங்கலும் நாட்டும்  அப் பேர் 
** 17 பெயர்கள் 37 
**652

#38
** குதித்தல் எழுச்சி 
மிதித்திடல் உகளல் பாய்தல் விரைவுடனே உறுக்கல் 
குதித்தலின் பேரே நான்காம் குப்புறல்  இதுவும் அப் பேர் 
கதித்தலே அகைத்தல் பம்பல் கஞறலே பொலிவு பாய்ச்சல் 
இதத்துடன் ஒதுக்கல் ஏர்பு என்று எட்டுமே எழுச்சியின் பேர்
** 5, 8 பெயர்கள் 38 
**653

#39
** கடுப்பு விரைவு 
கடுமையே கதழ்வு வல்லை கதனமே துரிதம் ஒல்லை 
அடைவுள நொறில் என்று ஏழும் கடுப்பு என அறையலாகும் 
முடுகலே விசையே தாரை முந்திய கவனம் வேகம் 
சடிதி சீக்கிரமே ஈண்டே விரைவின் பேர் விதுப்பும் சாற்றும்
** 7, 9 பெயர்கள் 39 
**654

#40
** விரைவுக் குறிப்பு மந்தம் 
ஐயெனலொடு பொள்ளென்றல் ஆன குத்திரமே சண்டம் 
நொய்தென்றல் கதுமென்றிட்டல் நொடியினில் பொருக்கென்றிட்டல் 
வெய்தென்றல் ஞெள்ளல் கோரம் விரைவினில் குறிப்பு பத்தாம் 
மெய்யெனலோடு மெல்லென்றல் பையெனல் தாழ்த்தல் மந்தம் 
** 10, 4 பெயர்கள் 40 ,
**655

#41
** சுழலல் கடத்தல் 
தெருமரல் மறுகலோடே அலமரல் திரிதல் கொட்கல் 
சொரிதலே சூர்த்தலோடு பிரமரி சுழலல் எட்டாம் 
பரிகரி தாவல் சேறல் பாறுதல் ஓவல் மீளல் 
வரிசையில் தாண்டல் தத்தல் வாவல் தாவுதல் கடத்தல் 
** 8. 10 பெயர்கள் 41 
**656

#42
** ஓடல் நேரோடல் மண்டலமாக ஓடல் உலாப் போதல் 
நீதியில் பாறல் ஓடல் நிமிர்தல் நீளுதலும் அப் பேர் 
ஆதியே வீதி என்ப இரு பெயர் இவை நேர் ஓடல் 
மாதி சாரிகையே சுற்று வாளி மண்டலமா ஓடல் 
ஓதிய பவனி ஒன்றே உலாப்போதல் ஆகும் என்ப 
** 3, 2, 4 1 பெயர்கள் 42
**657

#43
** கிட்டுதல் நீங்குதல் உலாவல் 
மருவுதல் நண்ணல் சார்தல் மற்றைய அணுகல் புல்லல் 
அருகுறல் சிவணல் துன்னல் அண்ணல் ஒன்பான் பேர் கிட்டல் 
ஒருவுதல் துறத்தல் வல்லி உணர்வொடு தணப்பு நீங்கல் 
வருமுறை உலாவலின் பேர் வழங்கலோடு அசைதல் ஆமே 
** 9, 5, 2 பெயர்கள் 43 
**658

#44
** செலுத்தல் உராய்ப்போதல் குழைவு 
நடவலே உகைத்தல் ஒய்தல் நலமொடு தூண்டல் ஊர்தல் 
கடவலே அகைத்தல் உய்த்தல் கடிது ஓட்டல் செலுத்தல் ஒன்பான் 
உடன் உராய்ப் போதலின் பேர் உரிஞ்சலோடு உரோஞ்சல் ஆகும் 
படியவே நெகிழ்தல் ஒல்கல் இரு பெயர் குழைவின்பாலாம் 
** 9, 2, 2 பெயர்கள் 44 
**659

#45
** வலியழித்தல் வழிப்படுத்தல் எதிர்கொண்டுபோதல் உழக்கல் 
ஆற்றறுத்திடுதல்தானே ஆம் வலி அழித்தலின் பேர் 
ஆற்றிய வழிப்படுத்தல் பெயர் ஆற்றுப்படை என்றாகும் 
ஏற்றல் போதரல் எனும் சொல் எதிர் கொடு போதல் என்ப 
மாற்றிய உழுதலோடு மடித்தலே உழக்கல் ஆகும் 
** 1, 1, 2, 2 பெயர்கள் 45 
**660

#46
** போர் 
முரண் வினை சமரே ஆர்ப்பு மொய் தும்பை ஞாட்பு தாக்கு 
செரு மறல் காளபங்கள் சினவலே அமர் மலைப்போடு 
இரணம் ஆகவம் நிகர்த்தல் இகலே வெஞ் சமம் உடன்றல்  
பொருதல் சங்கிராமம் தெவ்வு பூசல் ஆயோதனம் போர் 
** 25 பெயர்கள் 46 
**661

#47
** எதிர்தல் ஒட்டலர் நாடழித்தல் ஒட்டுநர் மேற்சாராமை 
முட்டுதலுடனே தாக்கல் தலைப்படல் முடுகல் ஏற்றல் 
கிட்டலே எதிர்தல் ஆகும் கிடைத்தலும் அதன் பேர்தானே 
ஒட்டலர் நாடு அழித்தல் உற்ற பேர் கொற்றவள்ளை 
ஒட்டுநர் மேல் சாராமை உரைத்த பேர் தழிஞ்சி ஆமே 
** 7,1,1 பெயர்கள் 47 
**662

#48
** கூத்து ஆடல் 
நடம் நட்டம் நடனம் வாணி நாடகம் நிருத்தம் தூக்கு 
படிதம் நாட்டியமே கண்ணுள் பத்தும் தாண்டவமும் கூத்து ஆம் 
நடையும் நட்டணமும் அப் பேர் நடித்திடல் பெயர்தல் ஆலல்
அடைவிலே அகவல் தூங்கல் அசைவொடு ஆறு இவை ஆடல் பேர் 
** 13, 6 பெயர்கள் 48 
**663

#49
** கூத்தின் விகற்பம் சிரமம் செய்தல் பழகல் 
பிரமரி வீரட்டானம் பேசில் உப்பிதம் மலைப்பு 
புரியமே இலயம் மற்றும் போற்றும் உள்ளாளனம்மே 
கரணமே பரதம் ஒன்பான்  கருது கூத்தின் விகற்பம் 
பருமித்தல் சிரமம்செய்தல் பழகலே உழத்தல் என்ப 
** 9, 1, 1 பெயர்கள் 49 
**664

#50
** சிவன் நிருத்தம் திருமகள் ஆடல் கொண்டல் 
** வண்ணன் கூத்து குமரன் ஆடல் 
கொடுகொட்டி பாண்டரங்கம் கூறு காபாலம் மூன்றும் 
பொடி அணி சிவன் நிருத்தம் போற்றிய பரவை செய்யாள் 
குடம் மல்லோடு அல்லியம்தான் கொண்டல்வண்ணன்தன் கூத்து ஆம் 
குடையொடு துடி இரண்டும் குமரனது ஆடல் ஆமே 
** 3, 1, 3, 2 பெயர்கள் 50 
**665

#51
** எழுவகை மாதராடல் அயிராணியாடல் 
** துர்க்கை ஆடல் காமன் ஆடல் 
துடி என்பது எழுவர் மாதர் தூங்கலின் நாமம் ஆகும் 
கடையமே அயிராணிக்குக் காட்டிய நாட்டியப் பேர் 
வடிவு அமை துர்க்கை தூக்கு மற்று அது மரக்கால் என்ப 
நெடிய காமன் கொண்டு ஆடும் நிருத்தமே விதித்த பேடு ஆம் 
** 1, 1, 1, 1 பெயர்கள் 51 
**666

#52
** வெறியாட்டு கைகோத்துஆடல் முடக்கிய 
** இருகை பழுப்புடையொற்றியாடல் 
அடுத்திடும் வெறி கழங்கோடு அணங்கு இவை வெறியாட்டின் பேர் 
தொடுத்த கைகோத்தாடல் பேர் சொல்லிய குரவை என்ப 
முடக்கிய இருகைதானும் பழுப்புடை முறையே ஒற்றித் 
துடக்கிய நடையின் நாமம் துணங்கை என்று இயம்பல் ஆமே 
** 3, 1, 1 பெயர்கள் 52
**667

#53
** கை கூப்பி மெய் கோட்டி நிற்றல் குடங்கையைக் 
** குவித்துக் கொட்டல் வாய்கையாற் கொட்டல் 
** குந்தி நிற்றல் 
குடந்தம் கைகூப்பி மெய்யைக் கோப்பொடு கோட்டி நிற்றல் 
குடங்கையைக் குவித்துக் கொட்டல் கொம்மை கொட்டுதல் என்றாகும் 
அடர்ந்து வாய் கையால் கொட்டல் ஆவலங்கொட்டல் என்ப 
படம் குந்தி நிற்றலின் பேர் பகரின் குஞ்சித்தல் ஆமே 
** 1, 2,1,1 பெயர்கள் 53
**668

#54
** தாளம் போடல் தாள ஒற்று 
வட்டித்தல் ஒற்றறுத்தல் வட்டணையுடனே மற்றும் 
தட்டல் என்று இந்த நான்கும் தாளம் போடுதலின் பேரே 
கிட்டிய தாளவொற்றுக் கிளர்ந்த பேர் சதியே சீர் என்று 
இட்ட பேர் இரண்டும் ஆம் என்று இயம்பினர் வியந்தநூலோர்  
** 4, 2 பெயர்கள் 54 
**669

#55
** துரய்மை செய்தல் ஏறுதல் இறங்குதல் மெளனம் 
உவளித்தல் தூய்மை செய்தல் உபலாளனமும் அப் பேர் 
இவர்தலே மீக்கோள் என்ப இரண்டும் ஏறுதலின் நாமம் 
அவா மற்றும் இறங்குதல் பேர் சுதம் அவதாரம் ஆகும் 
மவுனப் பேர் மூகம் மோனம் வாளா கேளா என்று ஆமே 
** 2, 2, 3, 4 பெயர்கள் 55 
**670

#56
** அரசிறை குடியிறை சுங்கவிறை உடன்பாடு 
திறை மிறை கப்பமே பாகுடம் அரசிறைப் பேர் செப்பும் 
கறை கடன் வரி இறுப்பு கரம் குடியிறை ஐந்தே பேர் 
துறைபடும் உல்கே ஆயம் சுங்கம் சாரிகையும் ஆகும் 
நெறியொடு வலித்தல் ஒட்டல் நேரலே உடன்பாடு என்ப 
** 4, 5,3, 3 பெயர்கள் 56 
**671

#57
** உற்சாகம் மிக்க செயல் அருமை செய்தல் 
முயற்சி தாளாண்மை ஊக்கம் முந்து தாள் உத்தியோகம் 
இயற்றலே உஞற்று உழப்போடு ஆள்வினை இவை உற்சாகம் 
வியக்கும் ஊராண்மை ஒன்றே மிக ஓங்கிச் சேறல் ஆகும் 
நயக்கும் பேராண்மை ஒன்றே நாட்டிய அருமை செய்தல் 
** 9, 1, 1 பெயர்கள் 57 
**672

#58
** களவு சித்து 
கரப்பொடு கட்டல் பட்டி கரவடம் கயவு கள்ளம் 
திருட்டொடு படிறு சோரம் தேயமும் களவு ஈரைந்தாம் 
விரித்திடும் தேனுவோடு செளரியம் ஈண்டும்  அப் பேர் 
தரித்த சம்பிரதம் என்ப தக்கதாம் சித்தின் பேரே 
** 12,1 பெயர்கள் 58 
**673

#59
** சுமத்தல் அருவல் நீக்கல் மாறுபாடு தைத்தல் 
தரித்தலே பொறுத்தலோடு தாங்குதல் சுமத்தலின் பேர் 
பரித்தலும் ஆகும் என்ப பருவரல் அருவலின் பேர் 
தெரித்து ஒன்றை வரைவே நீக்கல் தெற்றலே மாறுபாடு ஆம் 
விரித்திடும் தைத்தல் அத்து மேவிய பொல்லம் துன்னம் 
** 4, 1 ,1, 1,3 பெயர்கள் 59 
**674

#60
** சுடல் மறைப்பு அழுந்துதல் உலைப்பு 
சுறுக்கெனச் சுடல் சந்தாபம் தூபிதம் இரு பேர் சொல்லும் 
மறைப்பே ஆவரணம் ஆகும் மாய்த்தலும் அப் பேர்தானே 
நெறிப்பட அழுந்துதல் பேர் ஞெமுங்குதல் என்று கூறும் 
மிறைத்தலே அகைத்தல் சால வேதனை உலைப்பு முப்பேர் 
** 2, 2, 1, 3 பெயர்கள் 60 
**675

#61
** இளைத்தல் ஒடுங்கல் மேற்கோள் 
நாம்பலே பழங்கணோடு நாட்டிய மெலிவு ஞொள்கல் 
தேம்பலே கிருசம் போதச் சிக்கல் ஏழ் இளைத்தலின் பேர் 
சாம்பலே கூம்பல் என்ப இருபெயர் ஒடுங்கல் சாற்றும் 
மேம்படச் சொல்லுகின்ற மேற்கோளே பூட்கை என்ப 
** 7, 2, 1 பெயர்கள் 61 
**676

#62
** வற்புறுத்தல் முளைத்தல் அலர்தல் தள்ளல் 
வருட்டலே தெருட்டல் இன்ன வற்புறுத்தல் பேர்தானே 
உருத்தலே நாறல் தோற்றல் முளைத்தல் ஆம் பொடித்தலும் பேர் 
விரித்திடல் எதிர்தல் விள்ளல் அவிர்தலே அலர்தல் ஆகும் 
தரிப்பற நூக்கல் ஊன்றல் நோன்றலும் தள்ளல் முப் பேர் 
** 2, 4, 3, 3 பெயர்கள் 62 
**677

#63
** சிரித்தல் அவமதிச் சிரிப்பு விடல் கூடல் பிணக்கு 
முறுவலே நகையே ஆர்ப்பு மூரலே இளியே ஆசம் 
அறிவொடு சிரித்தல் ஆறே அசி அவமதிச் சிரிப்பு ஆம் 
குறியொடு விடல் வியோகம் கூடலே யோகம் என்ப 
மறல் அரில் அபரமோடு வரும் துவக்கு இவை பிணக்கு ஆம் 
** 6, 1, 1, 1, 4 பெயர்கள் 63 
**678

#64
** விற்றல் ஒற்றுமை ஒற்று தலைக்காவல் கிடைத்தல் 
விற்றல் பேர் பகர்தல் கூறல் விலை நொடை மாறல் ஐந்தாம் 
ஒற்றுமை குறிக்கோள் என்ப ஒற்று வேய் சொற்ற பேரே 
இற்று இவை நிற்க மற்றை இளை தலைக்காவல் பேரே 
பெற்றிடல் பயத்தல் வாய்த்தல் கிடைத்தல் ஆம் பேசும் முப்பேர் 
**  5, 1, 1, 1,3 பெயர்கள் 64 
**679

#65
** காய்தல் கொப்பளித்தல் மறைபுகல் ஏவல் 
** வறுமை எய்தல் 
முளிதலே வறத்தலோடு முதிர்ந்திடல் உலரல் காய்தல் 
பிளிற்றலே பில்கல் காலல் உமிழ்தல் கொப்பளித்தல் பேரே 
தளர்ச்சியாம் மறைபுகல் பேர் சரண்புகல் ஆகும் என்ப 
விளக்கிய வியங்கோள் ஏவல் வீதலே வறுமை எய்தல் 
** 4, 4, 1, 1, 1 பெயர்கள் 65 
**680

#66
** அலையல் சொறி துழாவல் 
அலைசலே ஞெகிழ்தல் ஞொள்கல் அலையலே ஆஞ்சியும் பேர் 
உலைவுறு சொறி கண்டூதி தினவு என இரு பேர் ஓதும் 
கலவலே அளாவலோடு கலம்பகமே கலாவல் 
துலைபெறுகின்ற சங்கீரணம் ஐந்தும் துழாவலின் பேர் 
** 4, 2, 5 பெயர்கள் 66 
**681

#67
** சத்தி செய்தல் வாந்தி எடுத்தல் மூச்சு கொட்டாவி 
விம்மியே உமிழ்தல் கான்றல் மேவும் உற்காரம் சத்தி 
தும்மலே சுவாசம் மூச்சு ஆம் கொட்டாவியே ஆவித்தல் 
அம்ம இச் செயல் பற்றும் பேர்க்கு அறுபத்தேழ் விருத்தம் செய்தான்
மைம் முகில் குணபத்திரன் தாள் வணங்கும் மண்டலவன்தானே 
** 3, 2, 1 பெயர்கள் 67 
** ஒன்பதாவது செயல் பற்றிய பெயர்த் தொகுதி முற்றிற்று 

@10. ஒலி பற்றிய பெயர்த் தொகுதி
**682

#1
** காப்பு 
வலி உற்ற வெவ்வினைப் பேர் மாற்றியே அநந்த ஞானம் 
பொலிவுற்ற கேவலப் பெண் புணர்ந்து வீற்றிருந்த போதன் 
மலர் உற்று நடந்த வாமன் மரை புரை பாதம் போற்றி 
ஒலி பற்றும் பெயர்க் கூட்டத்தை உணர்த்துவம் இப்பாற் கேண்மின்
**683

#2
** சொல் 
மாற்றமே மொழியே கீரே வாணியே கதை எதிர்ப்பு 
கூற்று உரை பனுவல் செப்பு குயில் வினா கிளவி காதை 
ஏற்றிடும் நொடி இயத்தோடு இசை பறை வாக்கு பாணி 
தோற்றமாம் நுவலினோடு மூவேழும் சொல்லின் பேரே 
** 21 பெயர்கள் 2 
**684

#3
** வாசகம் பதம் இயம்புதல் பல்கால் விளம்புதல் 
வசித்தல் பாசுரமே வார்த்தை வாசகம் வசனமும் பேர் 
திசைப்படும் உரையே பாழி சிதைவிலாப் பதம் என்று ஓதும் 
இசைத்தலே பிதற்றல் பேசல் இயம்புதல் இறுத்தலும் பேர் 
விசைப்பின் மீதுரையே பல்கால் விளம்புதல் ஆகும் என்ப 
** 4, 2, 4, 1 பெயர்கள் 3
**685

#4
** வாழ்த்தல் வாழ்த்து பழித்தல் 
பழிச்சல் ஏத்துதல் துதித்தல் பரசுதல் பரவல் போற்றல் 
வழுத்தல் தோத்திரமே மெச்சல் வாழ்த்தல் ஆம் துதியும் ஏற்கும் 
அழிப்பிலா ஆசி வாழ்த்தே ஆசிடை என்றும் கூறும் 
பழிச்சொலே சிறு சொல் தீச் சொல் பரிவாதம் பழித்தல் என்ப 
** 10, 2, 4 பெயர்கள் 4 
**686

#5
** சொல்லல் 
விரித்தலே கதைத்தலோடு மிழற்றுதல் விளம்பல் கூறல் 
உரைத்தலே நொடித்தல் சாற்றல் ஓதுதல் குயிறல் சொற்றல் 
தெரித்தலே நவிலலோடு வலித்திடல் செப்பல் ஆடல் 
பரப்புடன் மொழிதலோடு பணித்தல் பன்னெட்டும் சொல்லல் 
** 18 பெயர்கள் 5 
**687

#6
** மெய் பொய் 
சாதம் வாய் வாய்மை ஆணை சத்தியம் திடம் வேளாண்மை 
நீதியாம் நிலைமை உண்மை நிச்சயம் சரதம் மெய்ப் பேர் 
வாதையாம் மிச்சை தள்ளல் வலக்காரம் வழுது பெட்டு 
சாதனை மாயம் வஞ்சம் சடம் பிசி படிறு பொய்ப் பேர் 
** 11, 11 பெயர்கள் 6 
**688

#7
** படித்தல் விடாது பேசல் மறைத்த சொல் உறுதிச் சொல் 
படித்தல் வாசித்தல் ஓதல் பாடல் அத்தியயனமும் பேர் 
பிடித்து ஒன்றை விடாது பேசல் பிதற்றுதல் என்று பேரே 
இடக்கரே மறைத்த சொல் பேர் என்ப கூகனமும் ஆமே 
இடித்தலே கழறல் என்ப இரு பெயர் உறுதிச் சொல்லே 
** 4, 1, 2, 2 பெயர்கள் 7 
**689

#8
** பழிமொழி சிலர் அறிந்து புறங்கூறல் 
** பலரும் தூற்றல் பலர் அறி சொல் 
அம்பலே கெளவை ஏசல் அலர் பழிமொழி நாற்பேரே 
அம்பலே சிலர் அறிந்திட்டது புறங்கூறல் ஆகும் 
அம்புவிப் பலரும் தூற்றும் அம் மொழி அலரே என்ப 
வெம்பிய பெருஞ்சொல் என்ப மிகப் பலர் அறி சொல் ஆமே 
** 4, 1, 1, 1 பெயர்கள் 8 
**690

#9
** நிரம்பா மென் சொல் புறங் கூறல் 
மிழலையே குதலை கொஞ்சல் வினவும் உல்லாபம் உற்ற 
மழலையே ஒற்று நீங்கி வழுப்பட நிரம்பா மென்சொல் 
பிழைபடும் கொடுவாய் குஞ்சம் பிசுனம் கொண்டியம் தொடுப்பு 
விழைவிலாக் குறளை ஆறும் வெறும் புறங்கூற்றின் பேரே 
** 5, 6 பெயர்கள் 9 
**691

#10
** சத்தியம் மூதுரை பழமொழி கதை 
வழுவிலாச் சபதம் ஆணை வஞ்சினமொடு வட்டித்தல் 
தழுவிய பிரமாணம் சூள் சத்தியம் விரதமும் பேர் 
மொழிமை மூதுரை முன்சொல்லும் முதுசொல்லும் பழஞ் சொல்லும் பேர்
பழமொழி முதுமை ஆகும் படுங் கதை காரணச் சொல் 
** 7, 4, 7, 1 பெயர்கள் 10
**692

#11
** திசைச்சொல் நன்னிமித்தம் பொரஅழைத்தல் முகமன் 
தரித்திடும் திசைச்சொல் என்ப சாரும் தேசிகம் என்றாகும் 
விரிச்சியே வாய்ப்புள் என்ப மிக்க நற்சொல் நிமித்தம் 
அரிப்புறப் பொரஅழைத்தல் அறைகூவல் ஆகும் என்ப 
உரைத்திடும் முகமனின் பேர் உபசாரம் நயம் சம்மானம் 
** 1, 2, 1, 3  பெயர்கள் 11 
**693

#12
** வினாவல் எதிர்மொழி வினாவிடை கூடிய பொருள் 
** தன் மேம்பாட்டைத்தானே கூறல் அசதியாடல் 
வினாவலே கடாவல் ஆகும் விடை அதற்கு எதிர்மொழிப் பேர் 
வினாவொடு விடையும் கூடி விரும்பிய பொருள் சல்லாபம் 
தனது மேம்பாட்டுரைப் பேர்தான் நெடுமொழி என்று ஆமே 
இனா நகை நயச்சொல் என்ப எய்துமே அசதியாடல் 
** 1, 1, 1, 1, 3 பெயர்கள் 12 
**694

#13
** தேற்றம் பொருளின்மை கேளா என்பது கூறியது கூறல் 
கடைப்பிடி ஓர்ப்பு வேறு காட்டிய குறிக்கோள் தேற்றம் 
அடுத்த நற் பொருள்இலாமை அநர்த்தமே ஆகும் என்ப 
எடுத்த வாளா எனும் சொல் இது கேளா ஆகும் என்ப 
கொடுத்திடும் புனருத்திப் பேர் கூறியகூறலாமே 
** 3, 1, 1, 1 பெயர்கள் 13 
**695

#14
** அழைத்தல் கீழறுத்தல் 
கூவலே உளைத்தலோடு குறுகவே இகுத்தல் கேதல் 
வாவெனல் கரைதலே ஆகருடணமொடு விளித்தல் 
மேவும் மற்று அகவல் ஒன்பான் வினாவியே அழைத்தல் பேரே 
ஆவலால் கீழ் அறுத்தல் அறைபோதல் ஆகும் என்ப 
** 11, 1 பெயர்கள் 14 
**696

#15
** சொல்மாலை ஏற்றம் மேம்பாடு புகழ் மிகுபுகழ் 
தோற்றம் சீர் சுலோகம் மெய்ப்பே சொன்மாலை நாற்பேர் சொல்லும் 
ஏற்றமே கியாதி என்ப இயன்ற மேம்பாட்டின் நாமம் 
ஊற்றம் ஆம் சீர்த்தி கீர்த்தி ஒளி புகழ் மீக்கூற்றும் பேர் 
மேல் திகழ் சீர்த்தி கீர்த்தி மிகுபுகழ் இரு பேர் ஆமே 
** 4, 1,1, 4, 2 பெயர்கள் 15
**697

#16
** முன்னிலையசைச் சொல் அசைச்சொல் 
** உடன் நிகழ்ச்சி இடைச்சொல் 
இக மியா மதி மோ வாழி இகும் சின் முன்னிலையசைச்சொல் 
இக மியா அரோ போ மாதோடு இருந்து ஓரும் ஏழ் அசைச்சொல் 
புகலுங்கால் ஒப்பிலாத போலும் அப்பொருட்டே ஆகும் 
நிகர்இலா ஒடுவும் ஓடும் நேருமே உடனிகழ்ச்சி
** 7, 8, 2 பெயர்கள் 16 
**698

#17
** இடைச்சொல் சாரியை 
அம்மோடு ஆம் தம் நம் நும் ஏ அல் ஆல் வான் பாக்கு தில்லே 
எம்மோடு ஏம் மன்னே பானே உம் ஈரெட்டு இடைச்சொல் என்ப 
அம்மோடு இற்று அற்றே அத்தே அல் இல் அன் ஆனே ஐயே 
தம் நும்மே அவ்வே குவ்வே சாரியை பன்மூன்று என்ப 
** 16, 13 பெயர்கள் 17 
**699

#18
** எழுத்தின் சாரியை வேற்றுமையுருபு 
கரமொடு கானே காரம் காட்டிய அகரம் என்ப 
தரம் உற எழுத்துக்கு ஏற்ற சாரியை நான்கே சாற்றும் 
கருதிடில் ஐயே ஆலே குவ்வொடு இன் அதுவே கண்ணே 
விரவிய ஆறும்தானே வேற்றுமையுருபின் நாமம் 
** 4, 6 பெயர்கள் 18 
**700

#19
** ஐயச் சொல் சுட்டு இடத்து ஐயச் சொல் இகழ்ச்சிச் சொல் 
என்னை கொல் எவனே யாதே இவை ஐயக்கிளவி நாற்பேர் 
உன்னிடில் அவ்வே இவ்வே உவ்வொடு மூன்றும் சுட்டு ஆம் 
மன்னிய யாண்டும் யாங்கும் மற்று இடத்து ஐயுறற் சொல் 
என் இளி ஏயே சீச்சீ ஏளனம் இகழ்ச்சி ஆமே 
** 4, 3, 2, 5 பெயர்கள் 19 
**701

#20
** கல்வி கற்றல் ஓதல் 
உலவிய விஞ்சை வித்தை ஊதியம் சாலம் ஓதி 
கலையுடன் உறுதி கேள்வி இருநான்கும் கல்வியின் பேர் 
நலமுறக் கெழுமல் கற்றல் நவிலலே பயிலலும் பேர் 
பலம் உற ஓதலின் பேர் பாடம் மையாடல் ஆமே 
** 8, 3, 2 பெயர்கள் 20 
**702

#21
** வேதம் வேத நூற் பொருள் 
ஆதி நூல் எழுதாக் கேள்வி ஆரணம் ஓத்து சாகை 
ஏதம் இல் சுருதி தன்னோடு இருக்கு இவை ஏழும் வேதம் 
வேதநூற் பொருளின் நாமம் விதித்திடும் ஞான பாகை 
ஆதியாம் கரும பாகை அருத்த பாகையும் ஆம் என்ப 
** 7, 3 பெயர்கள் 21 
**703

#22
** வேதத்தின் ஞான பாகை வேதத்துட் பொருள் 
** வேத மார்க்கம் ஆதி வேதம் 
மெய் தெரி ஆரணம்தான் வேதத்தின் ஞான பாகை 
மை இல் உட்பொருளின் நாமம் மற்று உபநிடதம் என்ப 
வைதிகம் வேதம் உற்ற மார்க்கமே பார்க்குங்காலை 
ஐயம் இல் இருக்கினோடு பெளடிகம் ஆதிவேதம் 
** 1, 1, 1, 2 பெயர்கள் 22\
**704

#23
** இரண்டாம் வேதம் மூன்றாம் வேதம் நான்காம் வேதம் 
ஏமம் ஆம் இரண்டாம் வேதம் இசை தைத்திரியத்தோடு 
தோம் இலா யசுவாம் என்று சொல்லுவர் நல்ல நூலோர் 
சாமமே மூன்றாம் வேதம் தகைபெறு கீதம் சாரும் 
வாமம் ஆர் நான்காம் வேதம் அதர்வம் ஆம் வகுக்குங்காலே 
** 2, 1, 1 பெயர்கள் 23 
**705

#24
** பாயிரம் நூல் 
தந்துரை புனைந்துரைத்தல் சார் முகவுரையினோடு 
முந்திய பதிகமே நூன்முகம் இவை பாயிரப் பேர் 
அந்தம் ஆம் ஆகமத்தோடு ஆரிடம் பிடகம் மற்றுத் 
தந்திரம் பனுவலோடு சமயம் சூத்திரமும் நூல் பேர் 
** 5, 7 பெயர்கள் 24 
**706

#25
** நூல் முடிபு சூத்திர யாப்பு 
படலமே சருக்கம் காண்டம் பரிச்சேதம் அத்தியாயம் 
இடர் அறும் இலம்பகங்கள் நூன்முடிபு இரு முப்பேரே 
தொடை அடி வரை இன்றிச் சூத்திரம் குறித்த யாப்பு ஆம் 
படி புகழ்கின்ற நூற்பா அகவலைப் பகருங்காலே 
** 6,1 பெயர்கள் 25 
**707

#26
** ஓத்து படலம் 
நேரின மணியை ஓர்ந்து நிரல்பட வைத்திட்டாங்கே 
ஓரினப் பொருளை ஆய்ந்திட்டு ஒரு வழி வைப்பது ஓத்தாம் 
ஆரும் ஓர் நெறியே அன்றி அருத்தங்கள் விராய்ச் சிறந்த 
பாரிய பொதுச்சொல்தானே படர்வது படலம் என்ப
**708

#27
** வேற்றிசைப்பா உரைப்பொருள் பொழிப்பு 
சருக்கத்தின் முடிவில் மற்றுச் சார் இலம்பகத்தின் ஈற்றில் 
விருத்தமாம் நடையே ஆகும் வேற்றிசைப்பாவின் நாமம் 
விரித்துரை அதனினோடு மெய்யுரை உரைப் பொருட் பேர் 
பெருத்திடும் பொழிப்பு எனும் சொல் பிண்டமாக் கொண்டு கூறும் 
** 2 பெயர்கள் 27 
**709

#28
** பதிகம் உதாரணம் அரும் பொருள் 
பலத்தினைத் தருவதாய பதிகம் பல்வகைப் பொருட்கள் 
துலக்கமே ஆகிக் காணத் தொகுதி செய்திடுவது ஆகும் 
இலக்கியம் எடுத்துக்காட்டல் இதிகாசம் உதாரணப் பேர்
அலக்கண் தீர் ஞாபகம்தான் அரும் பொருள் பிசியும் ஆமே 
** 3, 2 பெயர்கள் 28 
**710

#29
** பாட்டு வெண்பா அகவல் கலிப்பா அராகம் 
காட்டிய யாப்பு தூக்கு கவி செய்யுள் கவிதை பாவே 
பாட்டு எனப்படும் வெண்பாவில் படும் பெயர் வெள்ளை முற்பா 
சூட்டிய அகவல் பேர் ஆசிரியமே தொகை கலிப்பா 
மூட்டிய பேர் முரற்கை முடுகியல் அராகம் ஆமே 
** 6, 2, 2, 1, 1 பெயர்கள் 29 
**711

#30
** குளகம் சந்தப்பாட்டு தாண்டகம் 
குற்றெழுத்துத் தொடர்ந்த செய்யுளே குளகம் என்ப 
இற்றென இருபத்தாறே எழுத்து நான்கடியும் ஆகி 
உற்றது சந்தப்பாட்டு ஆம் அதின் மிகல் உவந்த நாமம் 
சற்றெனும் மருங்கு நல்லாய் தாண்டகம் என்பதாமே
**712

#31
** கணக்கு எண் எழுத்து ஒற்று 
கற்று அறி எழுத்தும் எண்ணும் கணக்கு எனச் சொல்லும் நாமம் 
சொற்றிடும் கரணமோடு சூழ்ந்திடும் கணிதம் எண் ஆம்
மற்று உறு பெயரெழுத்து வடிவு தன்மையில் எழுத்து ஆம் 
ஒற்றின் பேர் உடல் உடம்போடு உறுப்பு மெய் புள்ளி ஆமே 
** 2, 2, 3, 5 பெயர்கள் 31 
**713

#32
** இசைப்பாட்டு நாற்பண் 
வரி இராகம் பண் கேயம் மன் விளி கொளையினோடு 
பரவு காந்தருவம் கீதம் பாணி காமரம் இசைப்பாட்டு 
உரவிய பாலையாழே உலாவிய குறிஞ்சியாழே 
மருதம் செவ்வழி யாழ் என்ன வகுத்த நாலிசையும் நாற்பண் 
** 10, 4 பெயர்கள் 32 
**714

#33
** பாலையாழ்த் திறங்கள் குறிஞ்சி யாழ்த்திறங்கள் 
நிறைந்திடும் அராகத்தோடு நேர் திறம் உறுப்பு மற்றைக் 
குறுங்கலி ஆசான் ஐந்தும் குறித்த பாலைத்திறங்கள் 
பறைந்த நைவளம் காந்தாரம் படுமலை மருள் அயிர்ப்பு 
செறிந்த பஞ்சுரம் மெய் ஆற்றுச் செந்நிறம் குறிஞ்சி என்ப 
** 5, 8 பெயர்கள் 33 
**715

#34
** மருதயாழ்த்திறம் முல்லையாழ்த் திறம் 
** நெய்தல் யாழ்த் திறம் 
பெரு நவிர் படு குறிஞ்சி பியந்தை என்று இந்த நான்கும் 
மருதயாழ்த்திறனே ஆகும் வகுக்கும் நேர் திறத்தினோடு 
தரு பெயர் திறமே யாமை சாதாரி நான்கும் முல்லை 
விரவிய திறனில் யாழும் விளரியும் நெய்தல் ஆமே 
** 4, 4, 2 பெயர்கள் 34 
**716

#35
** நரல்வகை யாழ் ஏழிசை 
தளர்வறு பேரியாழே சகோடயாழ் மகரயாழே 
வளையும் செங்கோட்டியாழே மற்றை நால் வகை யாழ்ப் பேர் ஆம் 
களை அறு குரலே துத்தம் கைக்கிளை உழையினோடே 
இளியொடு விளரி தாரம் என்ப ஏழிசையின் நாமம் 
** 4, 7 பெயர்கள் 35 
**717

#36
** ஏழிசைக்குப் பிறப்பிடங்கள் 
குரல் மிடறு ஆகும் துத்தம் கூறு நா கிளையே அண்ணம் 
சிரம் உழை இளியே நெற்றி சேர்ந்திடும் விளரி நெஞ்சாம் 
தரம் உள தாரம் நாசி தனித்தனிப் பிறக்கும் என்னப் 
பொருவிலா ஆதிமூர்த்தி புலவருக்கு உரைத்தவாறே 
** 7 பெயர்கள் 36 
**718

#37
** ஏழிசைக்கு மாத்திரைகள் ஏழிசை அக்கரங்கள் 
நான்கொடு நான்கும் மூன்றும் நலம் பெறும் இரண்டினோடு 
நான்கு மூன்று இரண்டினோடு நல்ல மாத்திரைகள் ஆகும் 
ஆங்குள ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்னும் ஏழும் 
தீங்கிலா அக்கரங்கள் செப்பும் ஏழிசைக்கும்தானே 
** 7, 7 பெயர்கள் 37 
**719

#38
** ஏழிசைக்கும் உரிய மணங்கள் சுவைகள் 
கால் கிளர் மெளவல் முல்லை கடம்பொடு வஞ்சி நெய்தல் 
மேலுள வீரை புன்னை விரும்பிய மணங்கள் ஏழாம் 
பாலொடு தேன்கள்தாமே பகர் தயிர் நெய்யினோடே 
ஏலமே வாழையே தாடிமக்கனி ஏழ் சுவைக்கு ஆம் 
** 7, 7  பெயர்கள் 38 
**720

#39
** ஏழிசையோசை ஏழிசையீசர் 
வண்டொடு கிள்ளை வாசி மத யானை தவளை தேனு 
ஒண் திறல் ஆடு என்று ஏழும் ஓதும் ஏழிசையில் ஓசை 
திண் திறல் விசுவாமித்திரன் யமன் அங்கி திங்கள் வெய்யோன் 
கண்ட சொல் கெளதமன் சீர்க் காசிபன் ஈசர் ஆமே 
** 7, 7 பெயர்கள் 39
**721

#40
** மந்தவோசை சமனிசை வல்லிசை 
** குரலினுக்குரிய படுமலைப் பாலை முதலிய திறம் ஏழும் 
** பாலையாழ்த் திறன் 
கருது மந்தரத்தினோடு காகுளி மந்த ஓசை 
மருவிய மந்தத்தோடு மத்திமம் சமனிசைப் பேர் 
உரன் உறு தாரம் நீண்ட உச்சமே வல்லிசைப் பேர்
குரலினுக்கு உரித்தாய் நின்ற கூறும் ஆசான் திறங்கள் 
** 2, 2, 2 பெயர்கள் 40 
**722

#41
** துறையிரண்டு பண் திறம் யாழின் எழும் இன்னிசை 
துறை இரண்டு என்ப வெள்ளை தோற்றும் செந்துறைகள் ஆகும்
நிறை நரம்பதுவே கூடல் நிகழும் பண்ணாகும் என்ப 
குறை நரம்பது திறங்கள் என்பது கூறும் யாழின் 
உறையும் இன்னிசை எழாலே ஓதிய நூலின் பண்பாம் 
** 2, 1 பெயர்கள் 41 
**723

#42
** இன்னிசைக் குழல் வீணை யாழ் 
இன்னிசைக் குழலின் நாமம் ஏற்ற வங்கியமே வாரி 
கின்னரம் வீணையின் பேர் கிளத்திய தண்டும் ஆகும் 
மன்னிய யாழ்ப் பேர் கோடவதியொடு விபஞ்சி ஆகும் 
முன்னிய கருவியோடு மொழிந்திடும் கலமும் அப் பேர் 
** 1, 3, 4 பெயர்கள் 42 
**724

#43
** யாழ்வலிக்கட்டு முறுக்காணி நரம்பு 
வரும் பிரமாணம் தன்னில் வலிக்கட்டு திவவு என்று ஓதும் 
திரும்பிய முறுக்காணிப் பேர் தேரின் மாடகம் என்று ஆமே 
நரம்பின் பேர் குரலே கோலே துயரியே நாடின் முப்பேர் 
புரிந்த தந்திரியும் அப் பேர் போதன் முன் புகன்றவாறே 
** 1, 1, 4 பெயர்கள் 43 
**725

#44
** ஒலி 
அரவமே களனே ஓதை ஆகுலம் ஆரவாரம் 
சுருதி கோடணை புலம்பு தொனி இயம் துழனி ஓசை 
உரை இசை இடியே நாதம் உரைத்த கோசணையே பாடே 
இரை சும்மை வகுணி மூவேழ் இவைகளே ஒலியின் நாமம் 
** 21 பெயர்கள் 44 
**726

#45
** எடுத்தலோசை அசையுஞ் சீலையானும் 
** இலையானும் எழும் ஒலி 
தெளிறலே முரலல் முக்கல் சிரற்றுதல் பயிலல் வேறு 
குளிறலே நரலலோடு குருமித்தல் நெளிர்தல் சாலப் 
பிளிறலே உளையும் போதப் பிரற்றலும் எடுத்தலோசை 
வளியினால் அசையும் சீலை இலையொலி மருமராஞ்சம் 
** 12, 1 பெயர்கள் 45 
**727

#46
** ஒலித்தல் 
சிரற்றலே தொனித்தலோடு தெழித்தலே குமிறல் விம்மல் 
உரற்றலே அரற்றல் வேறும் உரைத்தலே உளைத்தல் ஏங்கல் 
இரைத்தலே இரட்டல் சால இடித்தலே இமிழ்த்தல் மற்றைக் 
குரைத்தலே முழக்கல் வீசிக் குளிறலே இசைத்தலோடு
**728

#47
சிலம்பலே இயம்பலோடு சிலைத்தலே துவைத்தல் கூடி 
அலம்பலே கறங்கல் சீறி அழுங்கலே தழங்கலோடு 
சிலும்பலே கலித்தல் போதத் தெவிட்டலே கனைத்தலோடே 
உலம்புதல் புலம்பல் எண்ணான்கு இவை ஒலித்தலின் பேர் என்ப 
** 32 பெயர்கள் 47 
**729

#48
** அனுகரண ஓசை 
இம்மெனல் கல்லென்றிட்டல் இழுமெனல் வல்லென்றிட்டல் 
பொம்மெனல் ஒல்லென்றிட்டல் பொள்ளெனல் நெரேலென்றிட்டல் 
கொம்மெனல் விடேலென்றிட்டல் குறிப்பொடு முகேரென்றிட்டல் 
அம்மெனல் சரேலென்றிட்டல் அனுகரணத்தின் ஓசை 
** 13 பெயர்கள் 48 
**730

#49
** உபய ஓசை 
படபட என்றொலித்தல் சாலப் பத பத கள கள என்றல்
மொடு மொடு என்றிட்டல் வேறு மொக மொக கொள கொள என்றல் 
திடு திடு என்றிட்டலோடு நெட நெட நெறு நெறு என்றல் 
கட கட கல கல என்றல் கருதிய உபய ஒசை 
** 11 பெயர்கள் 49 
**731

#50
** ஒன்று அல்லாத பேரொலி 
பூசலே தமரம் மற்றுப் பொருந்திய குமுறல் ஆர்ப்பு 
கோசணை உலம்பலோடு கோடணை கோலாகலம் 
வீசிய கலகம் வேறு மிக உளறுதல் தெழித்தல் 
பேசும் ஆகுலம் ஒன்று அல்லாப் பேரொலி ஈராறும் பேர் 
** 12 பெயர்கள் 50 
**732

#51
** பேரொலி கமையிலாது அழைத்தல் அதட்டல் 
திமிர்தலே எடுத்து வந்த திமிலமே களகளங்கள் 
குமுதமே பேரொலிப் பேர் கூப்பிடல் அலறல் கத்தல் 
கமை இலாது அழைத்தல் ஆகும் கதறலும் ஆம் தெழித்தல் 
அமைவர உரப்பல் சீறி அதிர்த்திடல் அதட்டலின் பேர் 
** 4, 4, 3 பெயர்கள் 51 
**733

#52
இறந்ததும் நிகழ்வும் மற்றை எதிர்வும் ஆம் புராணம் செய்தோன் 
அறம் தரு குணபத்திரன் தாள் அரண் எனச் சரணம் ஆனோன் 
மறம் தலைப்படாத வீரை மன்னன் மண்டலவன் செய்தான் 
சிறந்திடும் ஒலி பற்றும் பேர்ச் செய்யுள் ஐம்பத்திரண்டே
** பத்தாவது ஒலி பற்றிய பெயர்த் தொகுதி முற்றிற்று 

@11.  ஒரு சொற் பல்பொருட் பெயர்த் தொகுதி 
**734

#1
** காப்பு 
முடிவு இல் இன்பத்து மூவா முதல்வனைப் போற்றி செய்தே 
அடிதொறும் இரண்டும் ஒன்றும் ஆதியில் பொருள் அடக்கி 
நடைபெறு ககரமாதி னகர வீறு எதுகையாகப் 
படியில் ஓர் சொல் பல்பொருள் பல்விதத் தொகை பகரல் உற்றாம்
**735

#2
** ககரவெதுகை 
** பகவன் பகல் மகரம் வசி அகம் 
பகவனே ஈசன் மாயோன் பங்கயன் சினனே புத்தன் 
பகலே நாள் ஒரு முகூர்த்தம் பகலவன் நடுவே தேசு 
மகரமே சுறா பூந்தாது ஆம் வசி கூர்மை வசியம் வாளே 
அகம் மனம் மனையே பாவம் அகலிடம் உள்ளும் ஆமே 
** 5, 5, 2, 3, 5 பெயர்கள் 2 
**736

#3
** சிகரி சிகழிகை சிகரம் மகம் மாய்வு 
சிகரி கோபுரமே வெற்பு சீறு எலி கருநாரைப் பேர் 
சிகழிகை மயிர்முடிப் பேர் சிறந்த வாசிகை தேமாலை 
சிகரமே மலையின் உச்சி திரை சென்னி திவலை வெற்பு ஆம் 
மகம் யாகம் ஓர் நாள் என்ப மாய்வு என்ப மறைவும் சாவும் 
** 4, 3, 5, 2, 2 பெயர்கள் 3
**737

#4
** இகல இகுளை புகர் நகம் நகை ககனம் கடவுள் 
இகல் பகை வலி போர் முப் பேர் இகுளையே தோழி நட்பாம் 
புகர் என்ப மழைக்கோள் குற்றம் புற்கெனும் நிறமும் முப்பேர் 
நகம் மலை உகிர் மரப் பேர் நகை மகிழ்வு ஒளி சிரிப்பு ஆம் 
ககனம் விண் படை காடு என்ப கடவுள் தே முனி நன்மைப் பேர்
** 3, 2, 3, 3, 3, 3, 3 பெயர்கள் 4 
**738

#5
** சாகம் பாகல் யூகம் நாகம் 
சாகம் சாகினி வெள்ளாடு தேக்கெனும் தருவும் ஆமே 
பாகலே காரவல்லி பலா என்றும் பகரலாமே 
யூகமே கருங்குரங்கோடு உட்பொருள் உணர்தல் தர்க்கம் 
நாகம் விண் குரங்கு புன்னை நற்றூசு மலை பாம்பு யானை 
** 3,2, 3, 7 பெயர்கள் 5 
**739

#6
** திகிரி சக ஞெகிழி எகினம் 
திகிரியே மூங்கில் வட்டம் தேர் உருள் ஆழி வெற்பு ஆம் 
சிகி என்ப மஞ்ஞை தீயாம் தீதுறு கேதுவும் பேர் 
ஞெகிழியே சிலம்பின் நாமம் நெருப்புறு கொள்ளிக்கும் பேர் 
எகினமே புளிமா ஞாளி கவரிமா நீர்நாய் அன்னம் 
** 6, 3, 2, 5  பெயர்கள் 6 
**740

#7
** ஆகு யோகம் போக போகில் கோகிலம் குடங்கர் 
ஆகுவே எலியின் நாமம் ஆம் பெருச்சாளிக்கும் பேர் 
யோகமே தியானம் கூட்டம் உபாயம் ஆம் உயர்ச்சிக்கும் பேர் 
போகி இந்திரன் பாம்பு என்ப போகில் புட்பொது பூ மொட்டு ஆம் 
கோகிலம் குயில் பல்லிப் பேர் குடங்கரே குடிசை கும்பம் 
** 2, 4, 2, 2, 2, 2 பெயர்கள் 7 
**741

#8
** பொகுட்டு இகுத்தல் புகை அகைத்தல் 
பொகுட்டு தாமரைப்பூங்கொட்டை பொருப்பு சேற்றெழுந்த கொப்புள் 
இகுத்தலே செகுத்தல் வீழ்த்தல் இரித்தலோடு அழைத்தல் ஈதல் 
புகைக்கிடும் நாமம் தூமம் போற்றும் யோசனைக்கும் பேரே 
அகைத்தல் வேதனை ஒடித்தல் அறுத்திடல் உயர்த்தல் ஆமே 
** 3, 5, 2, 4 பெயர்கள் 8 
**742

#9
** சிக்கம் கொக்கு வக்கிரம் சக்கிரி 
சிக்கமே குடுமி நாமம் சீப்பு உடன் உறியும் ஏற்கும் 
கொக்கு மாமரமே செந்நாய் குரண்டமே குதிரை மூலம் 
வக்கிரம் கொடுமை மீளல் மடங்குதல் உடனே வட்டம் 
சக்கிரி குயவன் செக்கான் தராபதி நெடுமால் பாம்பு 
** 3, 5, 4, 5 பெயர்கள் 9 
**743

#10
** தூக்கு பாக்கு மேக்கு மெய் ஊக்கம் 
தூக்கு என்ப பாட்டும் கூத்தும் துலாமும் ஆராய்தலும் பேர் 
பாக்கு என்பது எதிர்காலத்தைப் பகர் இடைச்சொல் துவர்க்காய்
மேக்கு மேற்றிசை மேலும் பேர் மெய் உண்மை உடலும் ஆமே 
ஊக்கமே வலி உற்சாகம் உள்ளத்தின் மிகுதிக்கும் பேர் 
** 4, 2, 2, 2, 3 பெயர்கள் 10 
**744

#11
** பகடு தகடு தபனன் அகடு அருள் மகரந்தம் 
பகடு இபம் பெருமை ஏறு பஃறி ஆண் மேதி ஐம்பேர் 
தகடு இலை ஐம்மை என்ப தபனனே இரவி தீ ஆம் 
அகடு என்ப நடுவே குக்கி அருள் என்ப கருணை சத்தி 
மகரந்தம் கள்ளும் தேனும் மலர்த் தாதும் வழங்கும் முப்பேர் 
** 5, 2, 2, 2, 2, 3 பெயர்கள் 11
**745

#12
** சகுந்தம் சடை சிகண்டி சகுனி சமம் சகுனம் 
சகுந்தம் புட்பொதுவே கங்கம் சடை என்ப வேணி வேர் ஆம் 
சிகண்டியே பாலையாழின்திறத்திசை மயில் அலிப் பேர் 
சகுனி புள் நிமித்தம் பார்ப்போன் சமம் என்பது அமர் ஒப்பு ஆகும் 
சகுனமே கிழங்கு புள்ளின் சாதியும் நிமித்தமும் பேர் 
** 2, 2, 3, 2, 2, 3 பெயர்கள் 12
**746

#13
** சக்கரம் பக்கம் நக்கன் 
சக்கரம் பெருமை ஓர் புள் தரணியே பிறப்பு வட்டம் 
மிக்க தேர் உருளே ஆழி வரை என விளம்பும் எண்பேர்
பக்கம் புள் சிறகு நட்பு பகர் திதி அருகும் ஆகும் 
நக்கனே அருகன் சம்பு நிருவாணி நாட்டும் முப்பேர் 
** 8, 4, 3 பெயர்கள் 13 
**747

#14
** பூகம் புன்கண் வாகு மாசி பாகம் பயோதரம் வாகை 
பூகமே திரளை பூகம் புன்கண் என்பது நோய் துன்பம் 
வாகுவே அழகு தோள் ஆம் மாசியே மகம் ஓர் மாதம் 
பாகமே பிச்சை பங்கு ஆம் பயோதரம் புயலே கொங்கை 
வாகை பண்பு ஒழுக்கம் வெற்றி தவம் தொழில் வழங்கல் மிக்கு ஆம்
** 2, 2, 2, 2, 2, 2, 7 பெயர்கள் 14 
**748

#15
** நோக்கு நுதல் சேக்கை பூக்கம் புலிங்கம் ஆக்கம் அறல் 
நோக்கு என்பது அழகு பார்வை நுதல் என்ப புருவம் நெற்றி 
சேக்கையே மிருகம் துஞ்சும்இடம் முலை சிறந்த பாயல் 
பூக்கமே கமுகு ஊர் என்ப புலிங்கம் தீப் பொறி ஊர்ப் புள் ஆம் 
ஆக்கம் பூ மகள் செல்வப் பேர் அறல் கருமணல் நீர் ஆமே 
** 2, 2, 3, 2, 2, 2, 2 பெயர்கள் 15 
**749

#16
** சீகரம் சாகரம் காகுளி ஈகை இரவி 
சீகரம் கரகம் வீசும் கவரியும் திவலையும் பேர் 
சாகரம் துயிலொழித்தல் சமுத்திரம் இருபேர் சாற்றும் 
காகுளி தவிசு கண்டத்து எழும் ஒலி இசையும் காட்டும் 
ஈகை பொன் கொடை ஈங்கைப் பேர் இரவியே மலை ஆதித்தன் 
** 3, 2, 3, 3, 2 பெயர்கள் 16
**750

#17
** தகை  அகி அரிட்டம் ககம் கடுத்தல் அகவல் அந்தம் 
தகை என்பது அழகு பண்பு தயையொடு பெருமை நாற்பேர் 
அகி என்பது அரவு இரும்பு ஆம் அரிட்டமே கள்ளு காக்கை 
ககம் என்பது அம்பு புள்ளாம் கடுத்தல் ஒப்பு ஐயம் வேகம் 
அகவல் பா மயிற்குரல் கூத்து அந்தமே அழகு ஈறு என்ப 
** 4, 2, 2, 2, 3, 3, 2 பெயர்கள் 17 
**751

#18
** அக்கு நக்கல் ஞாட்பு இக்கு ஈரம் மக்கள் வரைதல் 
அக்கு என்பு விடை முரிப்பும் அணி சங்கு மணியும் ஆகும் 
நக்கலே நகை உண்டல் பேர் ஞாட்பு அமர் பாரம் கூட்டம் 
இக்கு என்ப கரும்பு கள்ளாம் ஈரமே குளிர்ச்சி அன்பு 
மக்கள் மானுடர் சிறார் பேர் வரைதலே கொள்ளல் நீக்கல் 
** 3, 2, 3, 2, 2, 2, 2 பெயர்கள் 18
**752

#19
** கேகயம் தோகை போகம் போகுதல் 
கேகயம் மஞ்ஞை ஓர் பண் அசுணமா கிளத்தும் முப்பேர் 
தோகையே மயில்வால் மஞ்ஞை விலங்கின் வால் சொல்லும் முப்பேர்
போகமே பாம்பின் மெய்யும் போகத்தின் விகற்பும் ஆகும் 
போகுதல் நெடுமை நேர்மை போகுதல் எனும் முப்பேரே 
** 3, 3, 2, 3 பெயர்கள் 19 
**753

#20
** கைக்கிளை சுக்கை சூத்திரம் எக்கர் மொக்குள் 
கைக்கிளை இசை விகற்பம் ஒருதலைக் காமமும் பேர் 
சுக்கை தாரகை மாலைப் பேர் சூத்திரம் பொறி நூல் நூற்பா 
எக்கரே சொரிதலோடு குவிதலும் இருபேர் என்ப 
மொக்குளே குமிழி பூவின் முகிழ் என மொழியலாமே 
** 2, 2, 3, 2, 2 பெயர்கள் 20 
**754

#21
** ஙகர எதுகை 
** புங்கம் இங்கள் சித்திரன் கங்கு தொங்கல் 
புங்கமே உயர்ச்சி அம்பு பொரும் அம்பின் குதை முப்பேரே 
திங்கள் அம்புலி மாதப் பேர் சித்திரன் ஓவன் தச்சன் 
கங்கு என்ப வரம்பின் பக்கம் கருந் தினை பருந்தும் ஆமே 
தொங்கலே பீலிக் குஞ்சம் தூக்கொடு தொடுத்த மாலை 
** 3, 2, 2, 3, 3 பெயர்கள் 21
**755

#22
** சங்கம் பங்கு வங்கம் அங்கணம் 
சங்கமே கணைக்கால் ஓர் எண் சபை சங்கு புலவர் நெற்றி 
பங்கு என்ப முடமே ஆகும் பாதியும் சனியும் ஏற்கும் 
வங்கமே வெள்ளி நாவாய் வழுதலை ஈயம் ஆமே 
அங்கணம் சேறு முற்றம் ஆம் சலதாரைக்கும் பேர்
** 6, 3, 4, 3 பெயர்கள் 22 
**756

#23
** ஞாங்கர் தூங்கல் வாங்கல் வை வேங்கை வீ 
ஞாங்கர் வேல் பக்கம் முன்பு மேல் என நான்கும் ஆகும் 
தூங்கலே நிருத்தம் யானை துயில் சோம்பு தராசு தாழ்தல் 
வாங்கலே வளைத்தல் கொள்ளல் வை என்ப கூர்மை வைக்கோல் 
வேங்கை பொன் புலி மரப் பேர் வீ நீக்கம் பூ புள் சா ஆம் 
** 4, 6, 2, 2, 3, 4 பெயர்கள் 23 
**757

#24
** மங்குல் மருந்து பங்கி அங்கதம் பங்கம் 
மங்குல் கார் இருள் விண் முப்பேர் மருந்து அமுதொடு மருந்து ஆம்
பங்கியே பிற மயிர்க்கும் பகரும் ஆண்மயிர்க்கும் பேர் ஆம் 
அங்கதம் பன்னகம் தோள் அணி உடன் வசைச் சொல் ஆகும் 
பங்கமே சேறு தூசு பழுதொடு பின்னம் ஆமே 
** 3, 2, 2, 3, 4 பெயர்கள் 24 
**758

#25
** அங்கம் பிங்கலம் பொங்கர் பொங்கல் பொச்சாப்பு 
அங்கமே உடல் உறுப்பு என்பு ஆறு அங்கம் கட்டில் ஐம்பேர் 
பிங்கலம் பொன்னும் பொன்னின் நிறத்தையும் பேசல் ஆகும் 
பொங்கரே மரத்தின் கோடு பொருப்பு உயர் இலவு முப்பேர் 
பொங்கலே கொதித்தல் மிக்கு ஆம் பொச்சாப்பு மறவி தீது ஆம் 
** 5, 2, 3, 2,  2 பெயர்கள் 25 
**759

#26
** சகர எதுகை 
** பாசனம் வாசம் கோசம் தேசிகன் 
பாசனம் என்ப சுற்றம் பாண்டம் உண்கலமும் பன்னும் 
வாசமே இருப்பிடம் பூமணம் புள்ளின் சிறகு தூசு ஆம் 
கோசமே மதில்உறுப்பு ஆண்குறி முட்டை முறை பண்டாரம் 
தேசிகன் வணிகன் தேசாந்தரியொடு குருவும் ஆமே 
** 3, 4, 5, 3 பெயர்கள் 26 
**760

#27
** மூசல் முடலை கீசகம் கேழ் வீசல் வெம்மை 
** கேசரம் கிருட்டி 
மூசல் மொய்த்திடல் சா என்ப முடலையே திரட்சி உண்டை 
கீசகம் குரங்கு வேய் ஆம் கேழ் நிறம் ஒளி ஒப்பு ஆகும் 
வீசலே எறிதல் ஈவு ஆம் வெம்மை உட்டணம் விருப்பம் 
கேசரம் மகிழ் பூந்தாது ஆம் கிருட்டி ஓர் ஈற்று ஆ பன்றி 
** 2, 2, 2, 3, 2, 2, 2, 2 பெயர்கள் 
**761

#28
** அசி நிசி நீர் பிசி சுசி சுடர் 
அசி படைக்கலமே வாளே அவமதிச் சிரிப்பு முப்பேர் 
நிசி இரா மஞ்சள் பொன் ஆம் நீர் புனல் குணம் பூராடம் 
பிசி என்ப பொய்யும் சோறும் பேசு அரும் பொருளும் முப்பேர் 
சுசி கோடை சுத்தம் தீ ஆம் சுடர் விளக்கு இரவி அங்கி 
** 3, 3, 3, 3, 3, 3 பெயர்கள் 
**762

#29
** ஆசு காசு ஆசினி தேசிகம் 
ஆசு என்ப விரைவு குற்றம் அற்பம் மெய்க் கவசம் நாற்பேர் 
காசு என்ப கோழை குற்றம் கதிர் விடும் மணி முப்பேரே 
ஆசினி பலா விசேடம் மரவுரி மரக்காழ் விண் ஆம் 
தேசிகம் அழகு காந்தி திசைச்சொல் ஓர் கூத்து செம்பொன் 
** 4, 3, 4, 5 பெயர்கள் 
**763

#30
** பச்சை கச்சை செச்சை திகை மிச்சை 
பச்சையே மரகதம் தோல் பரிமளப்புதல் மால் புந்தி 
கச்சை என்பது தழும்பு கயிறொடு கவசம் முப்பேர் 
செச்சை மை வெட்சி தேய்வை திகை என்ப திசை சுணங்கு ஆம் 
மிச்சையே பொய்த்தல் ஆகும் மிடித்தல் அஞ்ஞானம் முப்பேர் 
** 5, 3, 3, 2, 3 பெயர்கள் 
**764

#31
** பிச்சம் கச்சம் எச்சம் இபம் அச்சம் 
பிச்சம் ஆண்மயிரும் பீலிக்குடையும் வெண்குடையும் ஆகும் 
கச்சம் யானைக்கழுத்தின் கயிறு அளவொடு மரக்கால் 
எச்சமே குறை சேய் யாகம் இபம் என்ப மரக் கோடு யானை 
அச்சமே அகத்தி ஐம்மை அஞ்சல் இம் முப் பேர் ஆமே 
** 3, 3, 3, 2, 3 பெயர்கள் 31 
**765

#32
** ஆசை ஆகுலம் காசை காமர் பாசம் தூசு 
ஆசையே திசை பொன் அன்பு ஆம் ஆகுலம் வருத்தம் ஓசை 
காசையே காயா நாணல் காமர்தான் அழகு காதல் 
பாசமே கயிறு கூளி பகர் ஊசித்துளை அன்பு ஆகும் 
தூசு என்பது ஆடை யானைப்புரசை தூசிப்படைப் பேர் 
** 3, 2, 2, 2, 4, 3 பெயர்கள் 32 
**766

#33
** தாசி தளி வேசரி ஆசுகம் அந்தரி கோசிகம் 
தாசியே பரணி சூளை தளி என்ப துளியே கோயில் 
வேசரி கழுதையே கோவேறு வேசரியும் ஆகும் 
ஆசுகம் பகழி காற்று ஆம் அந்தரி உமையே துர்க்கை 
கோசிகம் சாமவேதம் கூறு பட்டு ஆடைக்கும் பேர் 
** 2, 2, 2, 2, 2, 3 பெயர்கள் 33 
**767

#34
** பசு பாரதி வசு அசம் அணை சசி 
பசு ஏறு சீவன் ஆ ஆம் பாரதி வாணி தோணி 
வசுவே ஆன் கன்றும் பொன்னும் வசுக்களும் தீயும் நாற்பேர்  
அசம் மூ ஆண்டு உறு நெல் ஆடு ஆம் அணை என்ப கரையே மெத்தை
சசி என்ப கர்ப்பூரம் சந்திரன் அயிராணி முப் பேர் 
** 3, 2, 4, 2, 2, 3 பெயர்கள் 34 
**768

#35
** விசும்பு தசும்பு சாத்தன் இசை ஏங்கல் பிசுனன் 
விசும்பு பொன்னுலகு மேகம் விண்ணொடு திசையும் நாற் பேர் 
தசும்பு நற் குடம் மிடா ஆம் சாத்தனே அருகன் ஐயன் 
இசை புகழ் கிளவி பாட்டு ஆம் ஏங்கலே ஒலி இரங்கல் 
பிசுனனே கோளன் பொய்யன் உலோபனும் பேசும் முப் பேர் 
** 4, 2, 2, 3, 2, 3 பெயர்கள் 35 
**769

#36
** வச்சிரம் நொச்சி  தச்சன் உச்சி உறுப்பு 
வச்சிரம் சதுரக்கள்ளி வைரமே குலிசம் முப்பேர் 
நொச்சியே சிந்துவாரம் மதில் சிற்றூர் நுவலல் ஆமே 
தச்சனே சித்திரைப் பேர் தபதியன்தானும் ஆகும் 
உச்சி நண்பகல் உச்சிப் பேர் உறுப்பு அவயவம் உடம்பு ஆம் 
** 3, 3, 2, 2, 2 பெயர்கள் 36 
**770

#37
** பாசு பப்பு மாசு கேசம் வாசி 
பாசு என்ப பசுமை மூங்கில் பப்பு என்ப பரப்போடு ஒப்பு ஆம் 
மாசு என்ப சிறுமை குற்றம் மழை அழுக்கொடு நாற் பேரே 
கேசம் பெண் மயிர்க்கும் ஆண்பால் மயிருக்கும் கிளத்தல் ஆகும் 
வாசியே குழல் முன் நாள் மா வாசி என் ஏவல் நாற் பேர் 
** 2, 2, 4, 2, 4 பெயர்கள் 37 
**771

#38
** மிசை விசயம் முசலி வசதி வரன் 
மிசை என்பது உணவு மேடு மீமிசைச் சொல்லு முப்பேர் 
விசயமே வென்றி வெல்லம் வெங் கதிர் மண்டலப் பேர் 
முசலியே உடும்பு தாழை முந்திய இராமன் ஓந்தி 
வசதி நல்லிடம் ஊர் வீடு ஆம் வரன் அயன் பரமன் காந்தன் 
** 3, 3, 4, 3, 3 பெயர்கள் 38 
**772

#39
** ஞகர வெதுகை 
** துஞ்சல் பஞ்சரம் பரதர் கஞ்சம் குஞ்சம் 
துஞ்சலே நிலைபேறு ஆகும் துயில் சோம்பு சாவும் ஆகும் 
பஞ்சரம் செருந்தி கூடு ஆம் பரதரே கழியர் நாய்கர் 
கஞ்சமே தாளம் குல்லை கமலம் வெண்கலம் வட்டு அப்பம் 
குஞ்சம் ஈயோட்டி நாழி குறள் குன்றி குறளைச் சொல்லே 
** 4,2, 2, 5,  5 பெயர்கள் 39
**773

#40
** நெஞ்சு நிழல் மஞ்சு வஞ்சி தஞ்சம் 
நெஞ்சு என்ப மனம்  மார்பின் பேர் நிழல் செல்வம் குளிர்ச்சி சாயை
மஞ்சு பூண் வலி வனப்பு மழை யானை முதுகு இவ்வைந்தே 
வஞ்சி மேற்செலவு ஓர் ஊர் பா வல்லி மென்மருங்குல் பெண்ணும் 
தஞ்சமே எளிமை என்ப தரு பற்றுக்கோடும் ஆமே 
** 2, 3, 5, 5, 2 பெயர்கள் 40 
**774

#41
** அஞ்சனம் மஞ்சரி அஞ்சலி இஞ்சி எறுழ் 
அஞ்சனம் கறுப்பு மை திக்கானையில் ஒன்று முப்பேர் 
மஞ்சரியே பூங் கொத்து மாலை செந்தளிரும் ஆகும் 
அஞ்சலி வணங்கல் வாவல் பறவையும் ஆகும் என்ப 
இஞ்சியே புரிசை இஞ்சி எறுழ் என்ப வலி தண்டு ஆமே 
** 3, 3 2, 2, 2 பெயர்கள் 41
**775

#42
** கிஞ்சுகம் கிருட்டிணன் கஞ்சனம் பஞ்சம் 
** பகழி வஞ்சனை மாயன் 
கிஞ்சுகம் முருக்கு செம்மை கிருட்டிணன்தான் மால் பார்த்தன் 
கஞ்சனமே கண்ணாடி கரிக் குருவிக்கும் பேரே 
பஞ்சமே சிறுமை ஐந்து ஆம் பகழி அம்பு இதன் குதைப் பேர் 
வஞ்சனை மாயை பொய் ஆம் மாயன் மால் கருநிறத்தோன் 
** 2, 2, 2, 2, 2, 2, 2 பெயர்கள் 42 
**776

#43
** குஞ்சி வஞ்சம் மாயம் கஞ்சன் களங்கம் கஞ்சிகை 
குஞ்சி ஆண் மயிர் புட்பார்ப்பு குன்றியின் கொடி முப்பேரே 
வஞ்சமே கபடம் வாள் ஆம் மாயம் வஞ்சனை பொய் என்ப 
கஞ்சனே குறளன் வேதன் களங்கம்தான் அழுக்கு குற்றம் 
கஞ்சிகை சிவிகை ஆடை கட்டு இடு திரையும் ஆமே 
** 3, 2, 2, 2, 2, 3 பெயர்கள் 43 
**777

#44
** டகர எதுகை 
** நடலை மடல் படர் குடம் 
நடலை வஞ்சனை பொய் என்ப நடுங்கிய நுடக்கம் முப்பேர்  
மடல் பனையேடு போல்வ மலர் இதழ் ஓர் நூற்கும் பேர் 
படர் நடை நினைப்பு நோவாம் பகர்ந்திடில் வீரர்க்கும் பேர் 
குடம் நகர் பசு ஓர் கூத்து கும்பமே கரும்பின்கட்டி 
** 3. 3. 4, 5 பெயர்கள் 44 
**778

#45
** மாடம் மழை கூடம் சேடன் கேடகம் 
மாடமே உழுந்தோடு இல்லாம் மழை என்ப குளிர்ச்சி மேகம் 
கூடம் இல் மறைவு கொல்லன் சம்மட்டி குவட்டின் உச்சி 
சேடன் ஓர் சாதி பாங்கன் செகம் தாங்கும் அனந்தன் என்ப 
கேடகம் பரிசை வேறு ஓர் கேடு இல் ஊர் பலகை முப் பேர் 
** 2, 2, 4, 3, 3 பெயர்கள் 
**779

#46
** இடங்கர் முடங்கல் படங்கு விடங்கம் மிதவை 
இடங்கரே முதலை தூர்த்தர் குடங்கர் இம் முப்பேர் என்ப 
முடங்கரே மடங்கல் கைதை மூங்கில் நோய் ஓலை ஐம்பேர்  
படங்கு மேற்கட்டி என்ப பகர் பெருங்கொடியும் ஆகும் 
விடங்கம் ஏர் கொடி கொடுங்கை மிதவையே தெப்பம் சோறு ஆம் 
** 3, 5, 2, 3, 2 பெயர்கள் 
**780

#47
** குடிஞை தடி தொடி மடி 
குடிஞை புட் பொதுவும் யாறும் கூகையும் ஆகும் என்ப 
தடி வயல் உலக்கை வில்லு தண்டு மின் தசை உடும்பு ஆம் 
தொடி வளை ஒரு பலப் பேர் சூழ்ந்த கங்கணமும் ஆகும் 
மடி அடங்குதலே சோம்பு வயிறு நோய் புடைவை தாழை 
** 3, 7, 3, 6 பெயர்கள் 
**781

#48
** படிவம் பந்தம் வெடி துடி தூ கொடிறு குரவை 
படிவமே வடிவம் நோன்பு ஆம் பந்தமே கிளையும் கட்டும் 
வெடி அச்சம் பரிமளிக்கும் மென்புகை வெளி இம் முப்பேர் 
துடி ஏலம் பறை காலப் பேர் தூ தூய்து ஊன் பற்றுக்கோடு ஆம் 
கொடிறு பூசம் கதுப்பு ஆம் குரவையே கடல் ஓர் கூத்து 
** 2, 2, 3, 3, 3, 2, 2 பெயர்கள் 
**782

#49
** கடிகை படிறு பகர்தல் சுடிகை இடி 
கடிகை நாழிகையே துண்டம் கதவு இடு தாழே முப்பேர் 
படிறு பொய் களவு இரண்டு ஆம் பகர்தலே விற்றல் பேசல் 
சுடிகையே மகுடம் உச்சி சுட்டியும் இட்ட பேரே 
இடி இடிப் பேரே நெல் மா ஏற்றிடும் உறுதிச் சொல்லே 
** 3, 2, 2, 3, 3 பெயர்கள் 
**783

#50
** நாடி நந்தல் பாடி கோடிகம் குடம்பை கோடி குடுமி 
நாடி நாழிகை நரம்பு ஆம் நந்தல் கேடு உடனே ஆக்கம் 
பாடியே நகரம் நாடு பாசறை ஆயர் ஊர்ப் பேர் 
கோடிகம் துகில் பூந்தட்டு ஆம் குடம்பையே முட்டை கூடு 
கோடி எண் புதுமை தூசு ஆம் குடுமியே வெற்றி உச்சி 
** 2, 2, 4, 2, 2, 3, 2 பெயர்கள் 50 
**784

#51
** உடு கடு படு படுதல் 
உடு விண் மீன் கிடங்கு நாவாய் ஓட்டும் கோல் அம்பில் ஈர்க்காம் 
கடு விடம் முள்ளு தானே அரிதகி கசப்பு நாற்பேர் 
படு மரக் குலையே கள்ளு பரவும் நீர் நிலை நன்மைப் பேர் 
படுதலே ஒலி இன்றாதல் பகரில் உண்டாதல் பூத்தல் 
** 4, 4, 4, 4 பெயர்கள் 51 
**785

#52
** மாடு வைகல் சேடு பாடு பட்டு ஈடு 
மாடு பொன் பக்கம் செல்வம் வைகல் வைகறை நாள் தங்கல் 
சேடு என்ப பெருமை நன்மை திரட்சியே அழகு நாற்பேர் 
பாடு இடம் பெருமை ஓசை பட்டே பட்டாடை சிற்றூர் 
ஈடு என்ப குழைவே ஒப்பே வலியொடு பெருமையும் பேர் 
** 3, 3, 4, 3, 2, 4 பெயர்கள் 52 
**786

#53
**  மடைபடை இடை மடம் 
மடை என்ப மதகு சோறு மணிப் பணிக் கடைப் பூட்டும் பேர் 
படை படைக்கலம் கலப்பை படுக்கை பல்லணமே தானை 
இடை நடு என்ப மற்றும் இடப்பெயர் நுசுப்பும் ஆமே 
மடம் அறியாமை சத்திரம் மன்னிய முனி வாசப் பேர் 
** 3. 5, 3, 3 பெயர்கள் 53
**787

#54
** வாடை ஆடு அல்கல் கோடை ஒடை 
வாடை என்பது தான் வீதி வடகாற்றுத் தானும் ஆமே 
ஆடு மேழகம் வெற்றிப் பேர் அல்கல் நாள் சுருங்கல் வைகல் 
கோடை மேல் காற்றினோடு குதிரை வெண்காந்தள் என்ப 
ஓடை நீர்நிலை கிடங்கே ஒருமரம் வல்லி பட்டம் 
** 2, 2, 3, 3, 5 பெயர்கள் 54 
**788

#55
** அடுப்பு வடு மத்தகம் இடக்கர் கடைப்பிடி 
அடுப்பு என்ப பரணி நாளே அச்சமே சுல்லி முப்பேர் 
வடு செம்பு தழும்பு வண்டு ஆம் மத்தகம் நெற்றி சென்னி 
இடக்கரே மறைத்த வார்த்தை கும்பமும் என்ப நூலோர் 
கடைப்பிடி மறப்பிலாமை கருதிய தேற்றம் ஆமே 
** 3, 3, 2, 2, 2 பெயர்கள் 55
**789

#56
** பட்டம் புட்டம் குட்டம் வட்டம் 
பட்டமே ஓடை தூசு பதவி வாள் கவரிமாவாம் 
புட்டமே காகம் ஆகும் புடைவையும் நிறைவும் முப் பேர் 
குட்டமே தொழுநோய் ஆழம் குளம் எனப் பெயர் முப் பாற்றே 
வட்டமே பரிசை நீர்ச் சால் வலயம் கைம் மணி தூசு ஊர்கோள் 
** 5, 3, 3, 6 பெயர்கள் 56 
**790

#57
** திட்டை தட்டை கிட்டி கட்டளை 
திட்டையே உரலும் மேடும் திண்ணையும் நண்ணும் முப் பேர் 
தட்டை வேய் தினைத்தாள் கிள்ளைதனைக் கடிகோலே முண்டம் 
கிட்டியே தலை ஈற்று ஆ ஆம் கிருட்டி ஆம் தாளம் முப் பேர் 
கட்டளை நிறை கல் ஒப்பே இட்டிகை இயற்றல் ஆணி 
** 3, 4, 3, 4 பெயர்கள் 57 
**791

#58
** நாட்டம் நாகு ஒட்டம் உயிர் கோட்டம் தோட்டி துளை 
நாட்டம் கண் ஓர் பண் வாள் ஆம் நாகு சங்கு இளமை நத்தை 
ஓட்டம் மேல் உதடே தோல்வி உயிர் என்ப காற்றே சீவன் 
கோட்டம் கோண் படப்பை நாடு கோயில் அவ்வியம் ஆன் கொட்டில் 
தோட்டி அங்குசம் கபாடம் துணை என்பது அளவும் ஒப்பும் 
** 3, 3, 2, 2, 6, 2, 2 பெயர்கள் 58 
**792

#59
** தடம் அடல் அருத்தம் உடல் ஒங்கல் விடபம் 
தடம் மலை பெருமை கோணல் சரி கரை அகலம் வாவி 
அடல் கொலை வலி போர் ஆகும் அருத்தமே பொருள் பொன் பாதி 
உடல் பொருள் ஆகம் என்ப ஓங்கல் வெற்பு உயரம் மூங்கில் 
விடபமே இடப ராசி விடை மரக் கொம்பு முப்பேர் 
** 7, 3, 3, 2, 3, 3பெயர்கள் 59 
**793

#60
** கடகம் வடகம் வலம் படுவி பரம் நொடி நானம் 
கடகமே சேனை வட்டம் கை வளை மதில் நாற்பேரே 
வடகம் தோல் அத்தவாளம் வலம் என்பது இடமே வெற்றி 
படுவி கள் விற்பாள் குண்டம் பரம் என்ப கவசம் மெய் ஆம் 
நொடி பிதிர் கிளவி ஆகும் நூனம் நிச்சயமே குன்றல் 
** 4, 2, 2, 2, 2, 2, 2 பெயர்கள் 60 
**794

#61
** கடம் மடங்கல் படம் 
கடம் கயிறு உவாக்கதுப்பு கான் சுரம் உடம்பு நீதி 
குடம் கடாம் ஈமம் யானைக்குழாம் கடன் முழவு ஐந்து ஏழாம் 
மடங்கலே அசனி சீயம் மறலி நோய் யுகம் ஊழித்தீ 
படம் கரி முக படாம் நல் துகில் பாம்பின் பணம் முப்பேரே 
** 12, 6, 3 பெயர்கள் 61 
**795

#62
** ஆடல் பாடலம் கோடரம் ஆடவர் 
ஆடலே பெண் ஆண் கூடல் வார்த்தை கூத்தாடல் வென்றி 
பாடலம் சிவப்பினோடு பாதிரி குதிரை முப்பேர் 
கோடரம் குரங்கு சோலை கொம்பொடு குதிரை ஆகும் 
ஆடவர் புருடநாமம் ஆம் இளையவர்க்கும் பேரே 
** 4, 3, 4, 2 பெயர்கள் 62 
**796

#63
** கடி வடுகு வடவை 
கடி மணம் விரைவு கூர்மை காலம் பேய் விளக்கம் காப்பு 
வடிவு அச்சம் வாசம் ஐயம் வரைவு விம்மிதம் ஏழ் ஆறு ஆம் 
வடுகே இந்தளராகப் பேர் மருதயாழ்த் திறனும் ஆமே 
வடவையே குதிரைப் பெட்டை உவாப் பிடி வடவைத்தீ ஆம் 
** 13, 2, 3 பெயர்கள் 63
**797

#64
** கோடு மோடு முறுவல் ஆடி
கோடு சங்கு ஊதுகொம்பு மரக்கொம்பு விலங்கின் கொம்பு 
நீடு செய் வரம்பு குன்றின் முகடு நீர்க்கரை ஏழ் பேர் ஆம் 
மோடு மேடு உதரம் ஆகும் முறுவலே நகைத்தல் பல் ஆம் 
ஆடியே ஓர் மாதம் கண்ணாடி உத்தராடம் ஆமே 
** 7, 2, 2, 3 பெயர்கள் 
**798

#65
** தட்டு செட்டி செப்பு மட்டு மார்க்கம் பட்டிகை 
தட்டு தேர் நடுவு குற்றம் தட்டொடு பரிசை முட்டு ஆம் 
செட்டி வாணிகன் செவ்வேள் ஆம் செப்பு உரை கரண்டகப் பேர் 
மட்டு என்பது எல்லை கள் ஆம் மார்க்கமே சமயம் வீதி 
பட்டிகை என்ப கச்சு பகட்டுடன் இரதனம் ஆமே 
** 5, 2, 2, 2, 2, 3 பெயர்கள் 
**799

#66
** கடை களேவரம் உடை உடுக்கை அடை நடை நார் 
கடை முடிவு இடம் வாயில் பேர் களேவரம் பிணம் உடம்பாம் 
உடை துகில் செல்வம் என்ப உடுக்கை தண்ணுமை துகில் பேர் 
அடை இலை கனமே அப்பம் அடுத்தல் செல்வழி ஐம்பேர் ஆம் 
நடை வழி ஒழுக்கம் செல்வம் நார் என்ப கயிறு அன்பு ஆமே 
** 3, 2, 2, 2, 5, 3, 2  பெயர்கள் 66
**800

#67
** விடை கிடை கீதம் படி குடி கொடி 
விடை எதிர்மொழியும் ஏறும் விடுத்தலும் விளம்பும் முப் பேர் 
கிடை சடை உவமை நெட்டி கீதமே இசையும் வண்டும் 
படி அங்கவடி சோபானம் பகை குணம் உவமை பார் ஆம் 
குடி குலம் புருவம் ஊர் ஆம் கொடி வல்லி துவசம் காக்கை 
** 3, 3, 2, 6, 3, 3 பெயர்கள் 
**801

#68
** நட்டம் நகர் தொட்டல் தட்டல் தை கட்டல் 
நட்டமே நடனம் கேடு ஆம் நகர் என்ப மனையும் ஊரும் 
தொட்டல் என்பதுவே உண்டல் தோண்டல் கை தீண்டல் முப்பேர்
தட்டலே தடை கிட்டல் பேர் தை ஒரு மாதம் பூசம் 
கட்டல் என்பது தடுத்தல் களைதல் பந்தித்தல் கள்ளல் 
** 2, 2, 3, 2, 2, 4 பெயர்கள் 68 
**802

#69
** புட்கரம் வெட்சி பெட்பு பிரசம் 
புட்கரம் நிறைவு பாண்டமுகம் தீர்த்தம் புனல் வான் சேனம் 
கட்கம் பங்கயமே யானைக்கைந் நுனி குருகு ஈரைந்து ஆம் 
வெட்சி என்பதுவே செச்சை மிகு நிரை கவர்தல் என்ப 
பெட்பு என்ப பெருமை அன்பு ஆம் பிரசம் தேன் மது வண்டு ஆமே 
** 10, 2, 2, 3 பெயர்கள் 69 
**803

#70
** அடுதல் சடிலம் படலை கடுகு 
அடுதலே அட்டல் என்ப அடர்தலும் கொலையும் முப் பேர் 
சடிலமே நெருங்கலோடு சடை குதிரையும் முப் பேரே 
படலையே படர்தல் மாலை பதலையே வாசிக் கோவை 
கிடுகு தேர்மரச் சுற்றின் பேர் பரிசைக்கும் கிளத்தல் ஆமே 
** 3, 3, 4, 2 பெயர்கள் 70 
**804

#71
** படலிகை கொடியன் குண்டு தொடு முடி 
படலிகை பீர்க்கு வட்டம் பரந்த கைம் மணி பூந் தட்டு ஆம் 
கொடியனே கொடியன் கேது ஆம் குண்டு ஆழம் தாழ்வு ஆண்மாவே 
தொடு என்ப மருதப் பூமி தோட்டம் கைதவம் முப்பேரே 
முடி மயிர் முடியே சென்னி மகுடமும் மொழியலாமே 
** 4, 2, 3, 3 ,3பெயர்கள் 71 
**805

#72
** ஆடகம் அஞர் கோடகம் பீடிகை தோடு 
ஆடகம் துவரை பொன் ஆம் அஞர் அறிவிலரே துக்கம் 
கோடகம் முடியுறுப்பும் குதிரையும் புதுமையும் பேர் 
பீடிகை ஆவணம் பூந்தட்டொடு பீடம் முப்பேர் 
தோடு பூவிதழே பெண்ணைமடல் போல்வ தொகுதிக்கும் பேர்
** 2, 2, 3, 3, 3, 3பெயர்கள் 72 
**806

#73
** அடர் விடர் விடலை அடி 
அடர் என்ப நெருங்குதல் பேர் ஐம்மையின் வடிவும் ஆகும் 
விடர் முனி இருப்பு தூர்த்தர் கமர் வெற்பின் முழை காடு ஐம் பேர் 
விடலையே தலைவன் பேரும் விறலோன்தன் பேரும் ஆகும் 
அடி செண்டுவெளி தாள் ஆதி கவிதையின் பாதம் ஆமே 
** 2, 5, 2, 4 பெயர்கள் 
**807

#74
** ணகர எதுகை 
** புணர்வு பொழில் உணர்வு குணம் கணம் 
புணர்வு தோய்ந்திடல் இசைப்பு ஆம் பொழில் புவி பெருமை சோலை 
உணர்வு என்ப தெளிவே ஊடலொழிதலே அறிவும் ஆகும் 
குணம் என்ப கயிறு பண்பு கும்பம் வில்நாணி நாற் பேர் 
கணம் உடு நோய் திரட்சி காலநுட்பம் பேய் வட்டம் 
** 2, 3, 3, 4, 6 பெயர்கள் 
**808

#75
** ஆணம் அலம் ஓணம் ஊதியம் காணம் கோணல் 
ஆணமே குழம்போடு அன்பு ஆம் அலம் நாஞ்சில் அமையும் என்றல் 
ஓணம் மாயோன் நாள் ஆறு ஆம் ஊதியம் இலாபம் கல்வி 
காணமே பரி ஊண் செக்கு ஓர் காணம் பொற் காசு நாற்பேர் 
கோணலே மாறுபாடும் கூனும் ஆம் வளைவும் ஆமே 
** 2, 2, 2, 2, 4, 3 பெயர்கள் 
**809

#76
** குணில் குல்லை மணி துணி துளி பிணிமுகம் பிசிதம் 
குணில் குறுந்தடி கடிப்பு ஆம் குல்லையே துளவு வெட்சி 
மணி நவமணியே கண்டை வனப்பொடு கருமை நன்மை 
துணி சோதிநாளே துண்டம் துளி மழைத் துளி பெண் ஆமை 
பிணிமுகம் மயில் புள் பேர் ஆம் பிசிதம் நீர் இறைச்சி வேம்பு 
** 2, 2, 5, 2, 2, 2, 3 பெயர்கள் 
**810

#77
** நாண் தோணி வாணி ஏணி 
நாண் இலச்சைப் பேர்தானே கயிறு என்றும் நாட்டல் ஆகும் 
தோணியே கடைநாள் வங்கம் தொடு கணை தெப்பம் சேறு 
வாணியே ஓர் கூத்தின் பேர் வாக்கு நாமகளும் ஆமே 
ஏணியே உலகோடு எல்லை இறைவை மான் என்றும் சொல்லும் 
** 2, 5, 3, 4 பெயர்கள் 
**811

#78
** திணை செவி பிணை பிலவங்கம் கணை கட்சி பணை 
திணை நிலம் குலம் ஒழுக்கம் செவி என்ப காது கேள்வி 
பிணை ஆசை விலங்கின் பெண் பேர் பிலவங்கம் குரங்கு தேரை 
கணை அம்பு திரட்சியும் பேர் கட்சியே காடும் கூடும் 
பணை வயல் பரியின் பந்தி பருத்தல் வேய் அரசு பீடு ஆம் 
** 3, 2, 2, 2, 2, 2, 6 பெயர்கள் 78 
**812

#79
** யாணர் பாணம் சேண் ஆணை 
யாணரே புதுமை தச்சர் எய்திய வனப்பு நன்மை 
பாணம் தான் மேகவண்ணக் குறிஞ்சி எய் கணை பூம் பட்டு ஆம் 
சேண் என்பது அகலம் நீளம் செப்பிடில் உயரம் முப்பேர் 
ஆணை மெய்யுடனே வென்றி சூள் ஏவல் ஆக நாற்பேர் 
** 4, 3, 3, 4 பெயர்கள் 79 
**813

#80
** அண்டம் அயில் துண்டம் கண்டம் முண்டகம் 
அண்டம் ஆகாயம் முட்டை அயில் என்ப வேலே கூர்மை 
துண்டமே சாரைப்பாம்பு துணியொடு வதனம் மூக்கு ஆம் 
கண்டமே கவசம் வெல்லம் கழுத்து இடு திரை வாள் துண்டம் 
முண்டகம் தாழை கள்ளு முளரி மத்தகம் முள் மூலம் 
** 2, 2, 4, 6,5 பெயர்கள் 80 
**814

#81
** அண்டர் சுண்டன் கண்டல் கரைதல் பண்டம் பாகு 
அண்டரே பகைவர் வானோர் ஆயர் என்று ஆகும் முப் பேர் 
சுண்டனே சதயநாளும் சூறனும் வேறு காட்டும் 
கண்டல் கேதகை முள்ளிப் பேர் கரைதலே விளித்தல் ஓசை 
பண்டம் பொன் பணிகாரப் பேர் பாகு பால் குழம்பு பாக்கு ஆம் 
** 3, 2, 2, 2, 2, 3 பெயர்கள் 81 
**815

#82
** விண்டு தொண்டு தண்டு வண்டு 
விண்டு என்ப மாயோன் வெற்பு மேகமே மூங்கில் காற்று ஆம் 
தொண்டு என்ப பழமை ஒன்பான் தொழும்பொடு வழிபாடு ஆமே 
தண்டு என்ப குழாயே வீணை தடி படை மிதுனம் ஓந்தி 
வண்டு என்ப சங்கு குற்றம் வளை அளி வாளி ஐம்பேர் 
** 5, 4, 6,5 பெயர்கள் 82
**816

#83
** உண்டை தொண்டை கொண்டை கண்டிகை 
உண்டையே திரளை ஆகும் உறு படை வகுப்பும் என்ப 
தொண்டை ஆதொண்டை கொவ்வை தூங்கும் யானைத் துதிக்கை 
கொண்டையே மயிர் முடிக்கும்  இலந்தையின் கனிக்கும் கூற்றாம்
கண்டிகை பதக்கம் வாகுவலயமே கலன் பெய் செப்பு 
** 2, 3, 2, 3 பெயர்கள் 83 
**817

#84
** தண்ணம் வண்ணம் மறை பண் மண் 
தண்ணம் ஓர் கட்பறைப் பேர் தறித்திடும் மழுவும் ஆகும் 
வண்ணம் ஏர் சந்தம் பண்பு ஆம் மறை இராசியமே வேதம் 
பண் என்ப பாட்டும் பண்ணும் பரிமாவின் கலணையும் பேர் 
மண் அணு ஒப்பனைப் பேர் முழவின் மார்ச்சனையும் ஆமே 
** 2, 3, 2, 3, 3 பெயர்கள் 84 
**818

#85
** அணங்கு துணங்கை குணுங்கர் துணங்கறல் தோன்றல்
அணங்கு நோய் அழகு தெய்வம் ஆசை பெண் கொலை வருத்தம்
துணங்கையே விழா பேய் கூத்து ஆம் ஆதிரை நாளும் சொல்லும் 
குணுங்கர் தோற்கருவி மாக்கள் குயிலுவர் இழிஞர் முப்பேர் 
துணங்கறல் இருள் விழா ஆம் தோன்றலே சுதன் நாதன் பேர்
** 7, 4, 3, 2, 2 பெயர்கள் 85 
**819

#86
** புணரி பணிலம் கணி பணி
புணரியே வாரி நீரின் பொரு திரை கரை முப்பேராம் 
பணிலமே சலஞ்சலம் சங்கு இருபெயர் பகரலாமே 
கணி வேங்கை மரமதாகும் கழனி சூழ் மருதமும் பேர் 
பணியே தோற்கருவி வார்த்தை பாம்பு செய்தொழிலும் ஆமே 
** 3, 2, 8, 4 பெயர்கள் 86 
**820

#87
** பாணி தாணு வேணி வியாளம் 
பாணி ஊர் நீர் கை ஓசை பற்று கான் போது நாடு 
சேண் உறு சோலை பண்டம் சிறந்த பல்லியம் பன்னொன்றாம் 
தாணுவே சைலம் குற்றி சங்கரன் நிலை தூண் ஐம்பேர் 
வேணியே சடை விசும்பு ஆம் வியாளமே புலியும் பாம்பும் 
** 11, 5, 2, 2 பெயர்கள் 87 
**821

#88
** குண்டலம் குபேரன் மண்டலம் மந்தி 
** கொண்டல் கோட்டி மண்டலி 
குண்டலம் குழை விசும்பு ஆம் குபேரனே தனதன் சோமன் 
மண்டலம் பரி ஊர் வட்டம் மந்தியே ஊகம் வண்டு 
கொண்டலே முகில் கீழ்காற்று ஆம் கோட்டியே வாயில் கூட்டம் 
மண்டலி பூனை பாம்பு மண்ணொடு நாயும் ஆமே 
** 2, 2, 3, 2, 2, 2, 4 பெயர்கள் 88 
**822

#89
** புண்டரீகம் தண்டம் பிண்டி பிதா கண்டகம் களவு 
புண்டரீகம் திக்கானை புலி வண்டு கழுகு கஞ்சம் 
தண்டமே யானை செல்லும் வழி தண்டாயுதம் குடைக் கால் 
பிண்டி நென்மா அசோகு ஆம் பிதா சிவன் பிரமன் நாரை 
கண்டகம் சுரிகை முள் வாள் களவு என்ப களா சோரப் பேர் 
** 5, 3, 2, 3, 3, 2 பெயர்கள் 89 
**823

#90
** பண்ணவன் தண்ணடை வண்மை ஒண்மை 
பண்ணவன் முனிவன் தேவன் பகர் குரு அருகன் நாற்பேர் 
தண்ணடை மருதம் சார் ஊர் நாடு என இருபேர் சாற்றும் 
வண்மையே வழங்கல் வாய்மை வளம் புகழ் வலி ஆம் என்ப 
ஒண்மையே மிகுதி நன்மை ஒழுங்கு அறிவு அழகு ஐம்பேரே 
** 4, 2, 5, 5 பெயர்கள் 90 
**824

#91
** எண் கண் காஞ்சி விண் விபுலம் பண்ணை 
எண் வலி எள் இலக்கம் எளிமை சோதிடம் விசாரம் 
கண் இடம் கணு வேய்க் கண் ஆம் காஞ்சி மேகலை ஓர் பண் ஆம் 
விண் முகில் சுவர்க்கம் வான் ஆம் விபுலம் பார் விரிவு பீடு 
பண்ணையே வயல் நீர்த்தாழ்வு மருதம் மா துயிலும் பாழி 
** 6, 3, 2, 3, 3, 4 பெயர்கள் 91
**825

#92
** காண்டம் பாண்டில் ஈண்டு 
காண்டமே திரை காடு அம்பு கமண்டலம் கலன் பெய் செப்பு 
நீண்ட கோல் முடிவு தூசு நீர் படைக்கலம் ஈரைந்தாம் 
பாண்டில் ஏறு ஊர்தி வட்டம் பணை கட்டில் விளக்கு தாளம் 
ஈண்டு என்பது இவ்விடத்தோடு இப்படி சடிதியும் பேர் 
** 10, 7, 3 பெயர்கள் 92 
**826

#93
** அண்டசம் சண்டன் தாள் சுண்டை சொர்க்கம் 
அண்டசம் முதலை ஓந்தி அரணை புள் உடும்பு பல்லி 
நண்டு மீன் தவளை ஆமை நாகம் இப்பியும் ஈராறாம் 
சண்டன் கூற்று அலி வெய்யோன் ஆம் தாள் கதவு உறு தாள் பாதம் 
சுண்டையே சுண்டை கள் ஆம் சொர்க்கமே சுவர்க்கம் கொங்கை 
** 12, 3, 2, 2, 2 பெயர்கள் 93 
**827

#94
** பணம் மணம் பணவை பையுள் நுணவை நுனி 
பணம் என்பது அரவின் பையும் பாம்பும் பொற்காசும் முப்பேர் 
மணம் என்ப வாசம் கூட்டம் வதுவையும் ஆகும் என்ப 
பணவையே பரணும் பேயும் பையுளே சிறுமை நோய் ஆம் 
நுணவை எண்ணோலை பிண்டி நுனி என்ப நுதி நுண்மைப் போர் 
** 3. 3, 2, 2, 2, 2 பெயர்கள் 94 
**828

#95
** தகர எதுகை 
** மதலை சிதலை சீதம் பதலை கதலி 
மதலையே கொன்றை பிள்ளை மரக்கலம் கொடுங்கை தூண் ஆம் 
சிதலை நோய் துணி செல் என்ப சீதம் நீர் குளிரே மேகம் 
பதலை ஓர் கட்பறைப் பேர் பருவரை தாழிக்கும் பேர் 
கதலியே வாழை தேற்று காற்றாடி துவசம் நாற்பேர் 
** 5, 3, 3, 3, 4 பெயர்கள் 95 
**829

#96
** இதழ் கதழ்வு கவி மதுகம் சிதடன் திதி 
இதழ் பனையேடு பூவின் இதழ் உதடு என இம் முப்பேர் 
கதழ்வு வேகம் சிறப்பு ஆம் களி செருக்கொடு குழம்பு 
மதுகமே இருப்பை எட்டி மதுரம் ஆம் தராவும் ஆமே 
சிதடன் அந்தகன் மூடன் பேர் திதி பக்கம் நிலை பேறும் பேர் 
** 3, 2, 2, 4, 2, 2 பெயர்கள் 96 
**830

#97
** ஆதன் அங்கி போதகம் ஏதம் ஈமம் சூதன் சுவேதம்
ஆதன் ஆர் உயிர் ஓர்வு இல்லான் அங்கி என்பது தீ சட்டை 
போதகம் யானைக் கன்று போற்றிய இளமைக்கும் பேர் 
ஏதம் துன்பம் குற்றப் பேர் ஈமமே மயானம் காட்டம் 
சூதன்  தேர்ப் பாகன் சூதன் சுவேதமே வெயர்வு வெண்மை 
** 2, 2, 2, 2, 2, 2, 2 பெயர்கள் 97 
**831

#98
** சூதம் சூதகம் பூதம் மாதவம் வாதம் 
சூதம் மாமரமே வண்டு சூதுடன் இரதம் தோன்றல் 
சூதகமே ஆசெளசம் தோகைமார் தோயாப் பூப்பு ஆம் 
பூதம் ஆல் இறந்த காலம் புனிதம் ஐம்பூதம் சீவன் 
மாதவம் தவம் வசந்தம் வாதமே தருக்கம் காற்று ஆம் 
** 5, 2, 5, 2, 2 பெயர்கள் 98 
**832

#99
** மதன் வலித்தல் பதங்கம் பலி சிதம் நிதம்பம் 
மதன் வலி வேள் வனப்பு ஆம் வலித்தலே வளைத்தல் பேசல் 
பதங்கம் புட்பொது விட்டில் பேர் பலி பூசை பிச்சை நீறு ஆம் 
சிதம் விண்மீன் ஞானம் வெள்ளை செயம் உறப்பட்டது ஆமே 
நிதம்பமே அல்குல் என்ப நெடு மலைப் பக்கமும் பேர் 
** 3, 2, 2, 2. 4, 2 பெயர்கள் 99 
**833

#100
** சதி விதி வேட்டுவன் பதி பதுக்கை பிதிர் பிண்டம் 
சதி உரோகிணி கற்பாட்டி வஞ்சனை தாளவொத்து 
விதி என்ப வினை அயன் பேர் வேட்டுவன் மகநாள் வேடன் 
பதி இறை கேள்வன் ஊர் ஆம் பதுக்கையே பாறை தூறு 
பிதிர் கதை நொடி தூவல் பேர் பிண்டமே திரளை பிச்சை 
** 4,2,2,3,2,3,2 பெயர்கள் 100 
**834

#101
** ஆதி பூதியம் பொம்மல் பாதிரி ஏதி இழை 
ஆதியே முதல் நேரோடல் அருகன் மால் ஈசன் வேதன் 
பூதியம் புவி உடல் பேர் பொம்மலே பொலிவும் சோறும் 
பாதிரி பாடலப் பேர் பணைத்து எழும் மூங்கிற்கும் பேர் 
ஏதி ஆயுதம் வாள் என்ப இழை நூல் ஆபரணம் ஆமே 
** 6, 2, 2, 2, 2, 2 பெயர்கள் 101
**835

#102
** சாதி போதம் புகல் ஓதி ஒதிமம் உருத்தல் 
சாதியே பிரம்பு கள் ஓர் தரு சிறு சண்பகப் பேர் 
போதம் ஞானம் தோணிப் பேர் புகல் குதிர் உடல் சொல் வெற்றி 
ஓதி பெண்மயிரே பூனை ஓந்தி மெய்ஞ்ஞானம் வெற்பு ஆம் 
ஓதிமம் அன்னம் வெற்பு ஆம் உருத்தலே தோற்றல் கோபம் 
** 4, 2, 4, 5, 2, 2 பெயர்கள் 102 
**836

#103
** சுதை புதை மது கதை 
சுதை மகள் கறவாத் தேனு சுண்ணச்சாந்து அமுது நாற்பேர் 
புதை என்ப கணையின்கட்டும் புதுமையும் மறைவும் முப்பேர் 
மது என்ப நறவும் தேனும் வசந்தகாலமும் ஆம் என்ப 
கதை தண்டாயுதமே வார்த்தை காரணம் இம் முப்பேரே 
** 4, 3, 3, 3 பெயர்கள் 103 
**837

#104
** சீதை மேதை கோதை ஓதை உக்கம் 
சீதையே பொன்னாங்காணி படைச்சால் சீராமன்தேவி 
மேதை தோல் புதன் இறைச்சி மிக்க பேரறிவு கள் ஆம் 
கோதை முன்கைத் தோற்கட்டி குழல் தார் காற்று ஒழுங்கு சேரன் 
ஓதை பேரொலி மதில் பேர் உக்கம் தீ இடை ஆன் ஏறு 
** 3, 5, 6, 2, 4 பெயர்கள் 104 
**838

#105
** அத்தம் புத்தகம் நத்தம் துத்தம் 
அத்தம் பொன் பாதி கை கண்ணாடி சொற்பொருள் காடு ஓர்நாள்
புத்தகம் கோசம் என்ப சித்திரப் படாமும் ஆமே 
நத்தமே இருளும் ஊரும் நந்துடன் இரவு நாற்பேர் 
துத்தம் ஓர் இசை நாய் பாலே வயிறு கண்மருந்தும் சொல்லும் 
** 7, 2, 4,5  பெயர்கள் 105 
**839

#106
** அத்து தொத்து தாம்பு தத்தை தழல் உத்தரம் 
அத்து என்ப அரைஞாண் செம்மை அசைச்சொலோடு இசைப்பு நாற்பேர் 
தொத்து பூங்கொத்து தொண்டாம் தூம்பு வேய் துளை மரக்கால் 
தத்தை மூத்தாள் கிளிக்கு ஆம் தழல் கிளிகடிகோல் செந் தீ
உத்தரம் ஊழித் தீ மேல் ஒடு மறுமொழி வடக்கு ஆம் 
** 4, 2, 3, 2, 2, 4 பெயர்கள் 106 
**840

#107
** கூத்தன் கலம் ஊழ்த்தல் பாத்து தீர்த்தம் தீர்த்தன் 
கூத்தனே உயிர் நடன் பேர் குலம் குடி கோயில் கூட்டம் 
ஊழ்த்தலே நினைத்தல் செவ்வி உறு பதன்அழிவு முப்பேர் 
பாத்து என்ப கஞ்சி சோறு பகுத்திடல் வகுத்த முப்பேர் 
தீர்த்தமே விழாவும் நீரும் தீர்த்தனே அருகன் ஆசான் 
** 2, 3, 3, 3, 2, 3 பெயர்கள் 707 
**841

#108
** குத்தி கோணம் பத்தி அத்தி சத்தியம் தபுதல் 
குத்தி மண் அடக்கம் என்ப கோணம் வாள் குதிரை மூக்கு ஆம் 
பத்தியே முறை ஒழுக்கம் பகர் வழிபாடு முப்பேர் 
அத்தி ஆர்கலியே யானை அதவு எலும்பு ஆக நாற்பேர் 
சத்தியம் சபதம் மெய் ஆம் தபுதலே சாவும் கேடும் 
** 2, 3, 3, 4, 2, 2 பெயர்கள் 108 
**842

#109
** பித்திகை கத்திகை உத்தி துத்தி 
பித்திகை கருமுகைக்குப் பெயர் சுவர்த்தலமும் ஆகும் 
கத்திகை தொடை விகற்பம் துவசமே கமழ் வாசந்தி 
உத்தி செந்திரு உறுப்பு சுணங்கு உரையாடல் முப்பேர் 
துத்தியே சுணங்கு பாம்பின் சுடர்ப் பொறி புதல் ஒன்று ஆமே 
** 2, 3, 3, 3 பெயர்கள் 109 
**843

#110
** சித்திரபானு பத்திரம் சித்திரம் சத்திரம் 
சித்திரபானு செந் தீ திவாகரன் ஆண்டு ஒன்றின் பேர் 
பத்திரம் இலை வனப்பு படை நன்மை சிறகே பாணம் 
சித்திரம் அழகு ஓர் பாடல் சிறந்த விம்மிதம் ஏரண்டம் 
சத்திரம் குடையே அன்னசாலை கை விடா வேல் வேள்வி 
** 3, 6, 4, 4 பெயர்கள் 110 
**844

#111
** காத்திரம் நேத்திரம் நீலி கோத்திரம் பாத்தி 
காத்திரம் கனம் மெய் சீற்றம் களிற்றின்முன்காலே கீரி 
நேத்திரம் கண் பட்டாடை நீலியே கருமை துர்க்கை 
கோத்திரம் புடவிதானே குலமொடு மலையும் ஆமே 
பாத்தியே சிறுசெய் இல்லம் பகுத்தலும் வகுத்த நாமம் 
** 5, 2, 2, 3, 3 பெயர்கள் 111
**845

#112
** சதம் சத்தம் கதவம் கழங்கு பதம் மதி 
சதம் இலை இறகு நூறு சத்தமே ஓசை ஏழ் ஆம் 
கதவமே கதவு காப்பு ஆம் கழங்கு பேய்நடம் கழற்சி 
பதம் மூரல் இன்பம் செவ்வி பதவி தாள் வரிசை வார்த்தை 
மதி ஓர் முன்னிலை அசைச்சொல் மாதம் அம்புலி புத்திப் பேர் 
** 3, 2, 2, 2, 7, 4 பெயர்கள் 112 
**846

#113
** பீதகம் சாதகம் சேதகம் தேயம் மாதர் 
பீதகம் சாந்து பொன்மை பெருந் தனம் இரு வேலிப் பேர் 
சாதகம் வானம்பாடி சனனம் பாரிடம் முப்பேரே 
சேதகம் சேறு செம்மை தேயம்தான் உடம்பு நாடு ஆம் 
மாதர் ஓர் இடைச்சொல் காதல் வனப்பொடு மகளிர் ஆமே 
** 4, 3,2 , 2, 4 பெயர்கள் 113
**847

#114
** சோதி பூதி வீதி மேல் மாதிரம் 
சோதி மால் அருகன் பானு சுடர் விளக்கு ஈசன் ஓர் நாள் 
பூதியே நரகம் செல்வம் துர்க்கந்தம் புழுதி நீறு ஆம் 
வீதியே தெரு நேரோடல் மேல் என்பது இடம் விண் மேற்கு ஆம் 
மாதிரம் திசை ஆகாயம் மலை யானை நிலம் ஐம்பேரே 
** 7, 5, 2, 3, 5 பெயர்கள் 114 
**848

#115
** தாது வேதிகை வெதிர் கேது கிள்ளை 
தாது பொன் முதலாம் ஏழும் சடம் உறு தாது ஓரேழும் 
பூதம் ஓர் ஐந்தும் காவிக்கல்லுடன் புகலும் நாற்பேர் 
வேதிகை பலகை திண்ணை வெதிர் என்ப செவிடு வேணு 
கேதுவே சிகி பதாகை கிள்ளைதான் குதிரை தத்தை 
**4, 2, 2, 2, 2 பெயர்கள் 115 
**849

#116
** கதுப்பு விதப்பு வித்தம் அதிர்ப்பு அகப்பா 
** ஒதுக்கம் ஒருத்தல் 
கதுப்பே ஆண்மயிரும் பெண்பால்மயிரொடு கவுளும் முப்பேர் 
விதப்பே கம்பிதம் மிக்கு ஆகும் வித்தம் பொன் பழிப்பு ஞானம் 
அதிர்ப்பு ஒலி நடுக்கம் என்ப அகப்பாவே புரிசை மேடை 
ஒதுக்கமே நடை மறைப்பு ஆம் ஒருத்தல் ஆண்விலங்கு வேழம் 
** 3, 2, 3, 2, 2, 2, 2 பெயர்கள் 116 
**850

#117
** பத்திரி அத்திரி சத்தி சுத்தி 
பத்திரி பறவை காளி பரி இலை பாணம் ஐம்பேர் 
அத்திரி கழுதை விண் ஒட்டகம் பரி அசலம் அம்பு ஆம் 
சத்தியே உமை வேல் கான்றல் குடை வலி துவசம் தானாம் 
சுத்தியே அகல் வெண்சங்கம் சுத்தம் ஓர் கருவிக்கும் பேர் 
** 5, 6, 6, 4 பெயர்கள் 117 
**851

#118
** புத்தன் பூழில் புத்தேள் பூட்கை தைத்தல் சாறு முத்தம் 
புத்தன் மால் அருகன் சாத்தன் பூழில்தான் அகில் பூமிப் பேர் 
புத்தேளே புதுமை தே ஆம் பூட்கை தோல் மேற்கோள் யாளி 
தைத்தல் துன்னம் கைத்தல் பேர் சாறு கள் விழவு தாறு ஆம் 
முத்தமே பிரியம் ஓட்டம் மருத நன்னிலம் முத்து ஆமே 
** 3, 2, 2, 3, 2, 3, 4 பெயர்கள் 118 
**852

#119
** அத்தன் சித்தம் சேகரம் கைத்தல் கஞறல் சித்து செய் 
அத்தனே மூத்தோன் தந்தை அரனொடு குருவும் நாற்பேர் 
சித்தமே திடம் உள்ளம் பேர் சேகரம் தலை மா ஏர் ஆம் 
கைத்தலே சினம் கைப்பு ஆகும் கஞறலே பொலிவு கன்றல் 
சித்து என்ப சயமே ஞானம் செய் என்ப நிலம் ஏவல் பேர் 
** 4, 2, 3,2, 2, 2, 2 பெயர்கள் 119 
**853

#120
** உத்தரம் பைத்தல் மத்திகை மத்து 
உத்தரம் சித்திரம் சேர்ந்து ஒளிரும் இல் உறுப்போடு ஓர் நாள் 
பைத்தலே முனிவினோடு பசுத்தலும் பகரல் ஆகும் 
மத்திகையே சம்மட்டி சுடர் நிலைத் தண்டு மாலை 
மத்து என்ப தயிர் மத்தோடு மத்தமும் இரு பேர் ஆமே 
** 2, 2, 3, 2 பெயர்கள் 120 
**854

#121
** மதர்வு புதவு புணர்ச் சிதர் அதர் 
மதர்வு மேவுதல் வனப்பு வலி இடம் மிகுதி ஐம்பேர் 
புதவு என்ப கதவு ஓர் புல்லாம் புணர்ச்சியே கலவி கூடல் 
சிதர் உறி திவலை வண்டு சீலையின் துணி நாற்பேரே 
அதர் வழி புழுதி ஆட்டின் அதரும் நுண்மணலும் ஆமே 
** 5, 2, 2, 4, 4 பெயர்கள் 121 
**855

#122
** முதலை அதம் கதி மதம் மாயை 
முதலை செங்கிடை இடங்கர் முருந்து என மொழியல் ஆகும் 
அதம் இறங்குதல் பாதாளம் கீழும் என்று அறையும் முப்பேர் 
கதி நடை விரைவே நான்கு கதியொடு கதியும் காட்டும் 
மதம் இப மதம் செருக்கு ஆம்  மாயையே மாயம் சத்தி 
** 3, 3, 4, 2, 2 பெயர்கள் 122 
**856

#123
** பீதம் பேதை வாதுவர் மூதிரை 
பீதமே சாந்து மஞ்சள் பிங்கலத்தொடு பொன்மைப் போர் 
பேதை ஓர் பருவம் மூடன் பெண் தரித்திரனே நாற்பேர் 
வாதுவர் யானைப் பாகர் வயப் பரிமா வடிப்போர் 
மூதிரை ஆதிரைப் பேர் முக்கணன் பேரும் ஆமே 
** 4, 4, 2, 2 பெயர்கள் 123 
**857

#124
** தாதி போது போர்வை சாதம் தகைமை வீதல் 
தாதியே பரணி நாளும் அடிமையும் இருபேர் சாற்றும் 
போதுதான் காலம் பூ ஆம் போர்வை தோல் கவசம் மீக்கோள் 
சாதமே திடம் பதப் பேர் தகைமை ஏர் இயல்பு பீடு ஆம் 
வீதலே கெடுதல் சாவே இலம்பாடும் விளம்பும் முப்பேர் 
** 2, 2, 3, 2, 3, 3 பெயர்கள் 124 
**858

#125
** நகர எதுகை 
** இந்தனம் சந்தம் கந்தம் மந்திரம் 
இந்தனம் மிசையே காட்டம் எரி இடு கனலும் ஆகும் 
சந்தமே நிறம் வனப்பு சாற்றிய கவிதை சாந்தம் 
கந்தம் இந்தியம் பகுத்தல் கழுத்தடி கிழங்கு நாற்றம் 
மந்திரம் விசாரம் கோயில் வாசியின் குழாம் வீடே கள் 
** 3, 4, 5, 5 பெயர்கள் 125 
**859

#126
** அந்தில் - ஆங்கு அணவல் சந்தி நந்தி உந்தி 
அந்தில் ஆங்கு அசை இடப் பேர் அணவலே அணுகல் புல்லல் 
சந்தியே அந்தி மூங்கில் சதுக்கமும் இசைப்பும் அப் பேர் 
நந்தியே சிவனும் ஏறும் நந்தியீச்சுரனும் முப்பேர் 
உந்தி தேருருளே யாறே உவரி நீர்ச் சுழியே கொப்பூழ் 
** 2, 2, 2, 4, 3, 5 பெயர்கள் 126
**860

#127
** கந்து கந்துகம் கனம் பந்து குந்தளம் 
கந்து பண்டியுள் இரும்பும் கம்பமும் யாக்கை மூட்டும் 
கந்துகம் குதிரை பந்து ஆம் கனம் என்ப புயல் பாரப் பேர் 
பந்து கந்துகமும் மட்டுப் பட நீர் தூம் துருத்தியும் பேர் 
குந்தளம் மாதர் ஓதி குழல் கொத்து குருளை முப்பேர் 
** 3, 2, 2, 2, 3 பெயர்கள் 127 
**861

#128
** வேந்தன் காந்தாரம் காழகம் ஏந்தல் எஃகு 
** கூந்தல் குவலயம் 
வேந்தனே அரசன் திங்கள் வியாழன் இந்திரன் ஆதித்தன் 
காந்தாரம் இசை காடு என்ப காழகம் கருமை தூசு ஆம் 
ஏந்தலே பெருமை மேடு ஆம் எஃகு உருக்கொடு வேல் கூர்மை 
கூந்தல் பெண்மயிர் பீலிப் பேர் குவலயம் குவளை பூமி 
** 5, 2, 2, 2, 3, 2, 2 பெயர்கள் 128 
**862

#129
** அந்தரம் கந்தரம் மந்தாரம் சிந்துரம் 
அந்தரம் முடிவு பேதம் அண்டமோடு இடை நாற்பேரே 
கந்தரம் என்ப மேகம் கழுத்தொடு மலை முழைப் பேர் 
மந்தாரம் தருமரம் செவ்வரத்தமும் ஆகும் என்ப 
சிந்துரம் புளியே யானை செங்குடை திலகம் செம்மை 
** 4, 3, 2, 5 பெயர்கள் 129 
**863

#130
** கந்தருவம் கவந்தம் குந்தம் செந்து சிந்து 
கந்தருவம் பண் வாசி கவந்தம் என்பது நீர் மட்டை 
குந்தமே ஒரு வியாதி குருந்தொடு குதிரை கைவேல் 
செந்து ஓர் நரகம் ஓரி சீவனோடு அணுவும் நாற்பேர் 
சிந்து நீர் முச்சீர் ஆறு கடல் குறள் ஒரு தேசப் பேர் 
** 2, 2, 4, 4, 6 பெயர்கள் 130 
**864

#131
** அந்தி நந்து நாறுதல் மைந்தன் வசந்தம் வந்தியர் 
அந்தி முச்சந்தி பாலையாழிசை இரவு மாலை 
நந்து என்ப நத்தை சங்கு ஆம் நாறுதல் மணம் உண்டாதல் 
மைந்தனே திறலோன் சேய் ஆம் வசந்தமே வேனில் வாசம் 
வந்தியர் புகழ்வோர் பேரும் மலடிகள் பேரும் ஆமே 
** 4, 2, 2, 2, 2, 2 பெயர்கள்
**865

#132
** விந்தம் விருத்தம் அந்தணர் அணி அந்தகன் 
** அங்காரகன் மந்தன் 
விந்தம் ஓர் எண்ணும் வெற்பும் விருத்தமே வட்டம் மூப்பு ஆம் 
அந்தணர் அறவோர் பார்ப்பார் அணி படைவகுப்பு அணிப் பேர் 
அந்தகன் குருடன் கூற்று ஆம் அங்காரகன் தீ செவ்வாய் 
மந்தன் சனி கூர்ப்பு இல்லா மனுடனும் இருபேர் ஆமே 
** 2, 2, 2, 2, 2, 2, 2 பெயர்கள் 132
**866

#133
** பகர எதுகை 
** உப்பு செப்பம் துப்பு கப்பணம் 
உப்பு மெல்லியலார் ஆடல் உவர் கடல் இனிமை நாற்பேர் 
செப்பமே நடுநிலைப் பேர் தெருவொடு நெஞ்சும் ஆகும் 
துப்பு அரக்கு ஊற்றம் தூய்மை துகிர் பகை அனுபவப் பேர் 
கப்பணம் இரும்பிற்செய்தநெருஞ்சில் முள் கைவேல் ஆமே 
** 4, 3, 6, 2 பெயர்கள் 133
**867

#134
** தாபரம் நீபம் யூபம் சாபம் தளிமம் 
தாபரம் மலைபோல்நிற்றல் சடமொடு தருவும் முப்பேர் 
நீபம் உத்தரட்டாதிப் பேர் நிமித்தம் நீர்க் கடம்பும் ஆகும் 
யூபமே கவந்தம் வேள்விக்கு உறு தம்பம் படைவகுப்பு ஆம் 
சாபமே சபித்தல் வில் ஆம் தளிமமே அழகு மெத்தை 
** 3, 3, 3, 2, 2 பெயர்கள் 134 
**868

#135
** சீப்பு நாப்பண் காப்பு யாப்பு இறால்
சீப்பு என்ப கதவின் தாழும் சீவு கங்கமும் ஆம் என்ப 
நாப்பண் என்பது தேர்த் தட்டும் நடுவும் யாழுறுப்பும் முப்பேர் 
காப்பு என்ப காவலோடு கதவும் வெண்ணீறும் ஆகும் 
யாப்பு என்ப கவிதை கட்டு ஆம் இறால் தேன் கூடு எருது மீனே 
**2,  3, 3,  2, 3 பெயர்கள் 135 
**869

#136
** மகர எதுகை 
** சமன் சலம் கமலம் கலாம் குமரி ஞமலி நனை 
சமன் யமன் நடுவும் ஆகும் சலம் என்ப வயிரம் நீர் பொய் 
கமலம் நீர் வனசமும் பேர் கலாம் சினம் கொடுமை ஆகும் 
குமரி கற்றாழை கன்னி கொற்றவை காளிக்கும் பேர் 
ஞமலி நாய் மயில் கள் என்ப நனை கள்ளு மலர் மொட்டும் பேர் 
** 2, 3, 2, 2, 4, 3, 2 பெயர்கள் 136 
**870

#137
** சாமம் வாமம் பூ ஏமம் 
சாமம் ஓர் வேதம் பச்சை சாமமே கருமை நாற்பேர் 
வாமமே குறள் இடப்பால் வனப்பொடு தொடையும் ஆமே 
பூ மலர் வனப்பு கூர்மை பொலிவொடு பிறப்பு பூமி 
ஏமமே சேமம் காவல் இன்பம் பொன் இரவே மையல் 
** 4, 4, 6, 6 பெயர்கள் 137 
**871

#138
** உம்பர் வம்பு கும்பம் தும்பு சுகம் 
உம்பரே தேவர் ஆகும் உயர்நிலமுடன் மேலும் பேர் 
வம்பு என்ப புதுமை கச்சு மணம் நிலையின்மை நாற்பேர்
கும்பமே குடம் இராசி கும்பி மத்தகமும் ஆகும் 
தும்பு என்ப சிம்பு தோடு ஆம் சுகம் என்ப கிளியே இன்பம் 
** 3, 4, 3, 2, 2 பெயர்கள் 138 
**872

#139
** ஆம்பல் சாம்பல் தமிழ் தாம்பு காம்பு 
ஆம்பல் வேய் கள்ளு கவ்வை அல்லி வங்கியமே யானை 
சாம்பல் கூம்புதல் பழம் பூ தமிழ் என்பது இனிமை நீர்மை 
தாம்பு என்ப கயிறுதானே தாமணிதனக்கும் பேராம் 
காம்பு வேய் மலர்த் தாள் பட்டே கடி மலர்க் கொம்பு நாற்பேர் 
** 6, 2, 2, 2, 4 பெயர்கள் 139 
**873

#140
** அம்மை சும்மை செம்மை திரிதல் கொம்மை 
அம்மையே வரு பிறப்பும் அழகும் ஆம் தாயும் ஆகும் 
சும்மை என்பதுவே நெற்போர் நாடு ஒலி சுமையும் சொல்லும் 
செம்மை செவ்வையும் சிவப்பும் திரிதலே உலாவல் கேடு ஆம் 
கொம்மையே இளமை வட்டம் கொங்கை கை குவித்துக் கொட்டல் 
** 3, 4, 2, 2, 4 பெயர்கள் 140 
**874

#141
** அம் அழனம் கம் செம்மல் கம்மியர் 
அம் அழகு அசைச் சொல் நீர் ஆம் அழனம் தீ பிணமும் ஆகும் 
கம் என்ப தலை ஆகாயம் கனம் கால் நீர் விதி வெளுப்பு 
செம்மலே பழம் பூ ஈசன் சினேந்திரன் சிறந்தோன் மைந்தன் 
கம்மியர் கை வினைப் பேர் கண்ணாளர் தாமும் ஆமே 
** 3, 2, 7, 5, 2 பெயர்கள் 141
**875

#142
** வாமனம் காமரம் நேமி தேம் 
வாமனம் குறள் புராணம் மாதிரக் கயத்தில் ஒன்று ஆம் 
காமரம் அத்தநாளோடு அடுப்பு இசைப் பொதுவும் காட்டும் 
நேமி சக்கரம் பார் வட்டம் நேமிப் புள் கடல் ஐம்பேரே 
தேம் என்பது இடம் தித்திப்பு தேன் நாற்றம் திசை தேசப் பேர் 
** 3, 3, 5, 6 பெயர்கள் 142 
**876

#143
** தாமம் சோமன் சுரும்பு சாமி 
தாமம் வெற்பு ஒழுங்கு கொன்றை சாந்து ஒளி நகரம் தாம்பு 
பூ மணிக்கோவை மாலை பொரு களம் கரி ஈராறாம் 
சோமன் ஓர் வள்ளல் இந்து சுரும்பு என்ப மலையும் வண்டும் 
சாமியே முதல்வன் செவ்வேள் தலைவி ஆசான் வெறுக்கை 
** 12, 2, 2, 5 பெயர்கள் 143 
**877

#144
** குமுதம் சிமயம் தீ அமறல் அரில் சிமிலி 
குமுதமே அடுப்பு ஓர் திக்கின் குஞ்சரம் ஒலி வெண்ணெய்தல் 
சிமயமே மலை வெற்புச்சி தீ தீயே நரகு தீங்கு ஆம் 
அமறலே பொலிவு துன்னல் அரில் தூறு பிணக்கம் மாசு 
சிமிலியே குடுமி சிக்கம் சிள் வீடு தானும் ஆமே 
** 4, 2, 3, 2, 3, 3 பெயர்கள் 144 
**878

#145
** சம்பு தும்பி துன்னல் கம்புள் அம்பரம் அண்ணல் 
சம்புவே இரவி நாவல் சங்கரன் அயன் மால் ஓரி 
தும்பியே களிறு வண்டு ஆம் துன்னலே செறிதல் சேர்தல் 
கம்புளே சங்கு சம்பங்கோழி என்று இருபேர் காட்டும் 
அம்பரம் கடல் விண் தூசு ஆம் அண்ணலே தலைவன் பீடு 
** 6, 2, 2, 2, 3, 2 பெயர்கள் 145 
**879

#146
** கிம்புரி கேட்டை கும்பி குலை உம்பல் அம்பல் 
கிம்புரி முடி தந்தப்பூண் கேட்டைதான் முகடி ஓர்நாள் 
கும்பி சேறு ஆனை பூதி குலைதான் செய் கரை காய்க் கொத்து ஆம் 
உம்பல் ஆண் விலங்கு வேழம் உயர் குலம் எழுச்சிக்கும் பேர் 
அம்பலே பழிச்சொல் சில்லோர் அறிந்து அலர் தூற்றல் ஆமே 
** 2, 2, 3, 2, 4, 2 பெயர்கள் 146 
**880

#147
** கம்பலை செம்புலம் தம்பம் சமழ்த்தல் கம்பம் கந்தன் 
கம்பலை அச்சம் ஓசை கம்பிதம் துன்பம் நாற்பேர் 
செம்புலம் பாலை சேரும் திணை செருக் களம் இரண்டாம் 
தம்பமே கவசம் தூண் ஆம் சமழ்த்தலே வருத்தம் நாணம் 
கம்பமே நடுக்கம் தம்பம் கந்தனே அருகன் செவ்வேள் 
** 4, 2, 2, 2, 2, 2 பெயர்கள் 147 
**881

#148
** அமரர் அவந்தி அமுது அமலை தமம் சார்ங்கம் 
அமரரே விபுதர் தெவ்வர் அவந்திதான் கிளி ஓர் ஊர் ஆம் 
அமுது பால் தேவர் உண்டி ஆகும் இன் சுதையும் முப்பேர் 
அமலையே ஆரவாரம் அயினியோடு உமையும் முப்பேர் 
தமம் இருள் இராகுவின் பேர் சார்ங்கம் விற்பொது மால் வில் ஆம் 
** 2, 2, 3, 3, 2, 2 பெயர்கள் 148 
**882

#149
** ஆம்பிரம் சாம்பு தாண்டவம் பாம்பு பை ஆம்பி அயிராணி 
ஆம்பிரம் புளி மா தே மா ஆம் புளிப்பினுக்கும் அப் பேர் 
சாம்பு பொன் பறை ஆம் என்ப தாண்டவம் கூத்தே தாவல் 
பாம்பு என்ப கரை மராளம் பை அராப் படமே பச்சை
ஆம்பியே ஒலி காளான் ஆம் அயிராணி உமை இந்திராணி 
** 3, 2, 2, 2, 2, 2, 2 பெயர்கள் 149 
**883

#150
** காமன் காமம் கணிச்சி பூமன் புரையோர் 
** சேமம் தெக்கிணம்  
காமனே வாசவன் வேள் கழுதும் திப்பிலியும் ஆகும் 
காமமே விரகம் ஆசை கணிச்சிதான் மழுவே தோட்டி 
பூமனே பிரமன் செவ்வாய் புரையோரே கீழோர் மேலோர் 
சேமமே காவல் இன்பம் தெக்கிணம் வலம் தெற்கு ஆகும் 
** 4, 2, 2, 2, 2, 2, 2 பெயர்கள் 150 
**884

#151
** காமுகன் காது கோமளம் கலித்தல் மாமை மலயசம் 
காமுகன் விடன் வேள் மால் ஆம் காது என்ப கொலையும் காதும் 
கோமளம் பசு வனப்பு கூறிய இளமைக்கும் பேர் 
நாமம் ஆம் கலித்தல் மிக்கு நற்பொலிவு எழுச்சி ஓசை 
மாமையே நிறம் வனப்பு ஆம் மலயசம் சந்து அம் தென்றல் 
** 3, 2, 3, 4, 2, 2 பெயர்கள் 151 
**885

#152
** யகர எதுகை 
** காயம் நேயம் நிறம் ஆயம் சாயல் 
காயம் மெய் விண் வெண் காயம் பெருங் காயம் கறி கரித்தல் 
நேயம் நெய் எண்ணெய் அன்பு ஆம் நிறம் என்ப மருமம் காந்தி 
ஆயமே கவற்றின் தாயம் ஆதாயம் மாதர் கூட்டம் 
சாயல் என்பது மேம்பாடு தரும் அழகுடனே மென்மை 
** 6, 3, 2, 3, 3 பெயர்கள்
**886

#153
** வயம் வயல் சயம் கடம் நியமம் இயம் 
வயம் நீர் புட் பொது வலிப் பேர் வயல் வெளி பழனமும் பேர் 
சயம் வெற்றி சருக்கரைப் பேர் சடம் உடல் வஞ்சம் பொய் ஆம் 
நியமமே நியதி வீதி நிச்சயம் நகரம் கோயில் 
இயம் என்ப ஒலியே வார்த்தை வாச்சியம் இம் முப்பேரே 
** 3, 2, 2, 3, 5, 3 பெயர்கள் 153 
**887

#154
** அயம் கயம் பயம் அயனம் 
அயம் என்ப நீர் தடாகம்  ஆடு வெம் பரி இரும்பு ஆம் 
கயம் மென்மை குளமே ஆழம் களிறு கீழ் பெருமை தேய்வு ஆம் 
பயம் என்ப சுதை நீர் அச்சம் பாலொடு பயன் பேர் ஐந்தே 
அயனமே வழியின் நாமம் ஆண்டினில் பாதிக்கும் பேர் 
** 5, 7, 5, 2 பெயர்கள் 154 
**888

#155
** பயிர் கயினி வயிரம் கயில் 
பயிர் ஒலி பயிலே பைங்கூழ் பறக்கும் புட்குரல் இந் நாற்பேர் 
கயினியே அத்தநாளும் கைம்மையும் இரு பேர் காட்டும் 
வயிரமே செற்றம் கூர்மை வச்சிரம் ஓர் மணியே சேகு 
கயில் பிடர்த்தலையே பூணின் கடைப்புணர்வு இரு பேர் தானே 
** 4, 2, 5, 2 பெயர்கள் 155 
**889

#156
** ஐயம் ஐயன் தொய்யல் மொய் 
ஐயமே பிச்சை ஏற்கும் ஓடு அனுமானம் பிச்சை 
ஐயனே மூத்தோன் சாத்தன் அப்பன் ஈச்சுரன் நாற்பேரே 
தொய்யலே உழவும் சேறும் துயரமும் மகிழ்ச்சியும் பேர் 
மொய் செருக்களம் போர் யானை மூசல் வண்டொடு திரட் பேர் 
** 3, 4, 4, 6 பெயர்கள் 156 
**890

#157
** வயவன் குயிறல் வயின் வயா மயல் மறவர் 
வயவனே வீரனோடு வலியான் காதலனும் ஆகும் 
குயிறலே செறிதல் கூவல் குடைதல் பண்ணுதல் நாற்பேரே 
வயின் இடம் உதரம் வீடு ஆம் வயா வருத்தம் காதல் 
மயல் செத்தை மயக்கம் பேய் ஆம் மறவரே வயவர் வேடர் 
** 3, 4, 3, 3, 3, 2 பெயர்கள் 157 
**891

#158
** குயில் வயமா வியல் வேய் மயிலை 
குயிலே கோகிலமும் சொல்லும் கொண்மூவும் துளையும் நாற்பேர் 
வய மாவே குதிரை சிங்கம் மத கரி புலியும் ஆகும் 
வியல் என்ப விசாலம் பீடு ஆம் வேய் துளை ஒற்று மூங்கில் 
மயிலையே மீன ராசி மீன் இருவாட்சி முப்பேர் 
** 4, 4, 2, 3, 3 பெயர்கள் 158 
**892

#159
** சயிந்தவம் குயம் நயந்தோன் நலம் பயம்பு 
சயிந்தவம் குதிரையோடு தலையும் இந்துப்பும் ஆகும் 
குயம் தனம் இளமையோடு கூர் அரிவாளும் முப் பேர் 
நயந்தோனே நண்பன் கொண்கன் நலம் விருச்சிகமே நன்மை 
பயம்பு என்ப யானை வீழும் படுகுழி பள்ளம் ஆமே 
** 3, 3, 2, 2, 2 பெயர்கள் 159 
**893

#160
** இயல் ஏல்வை குய் செயிர் சேடி உயவை 
இயல் நடை தமிழ் சாயல் பேர் ஏல்வையே பொழுது வாவி 
குய் என்ப கறி கரித்தல் குளிர் நறும் புகை இரண்டாம் 
செயிர் என்ப சினம் குற்றப் பேர் சேடி விஞ்சையர் ஊர் பாங்கி 
உயவை காக்கணமே முல்லை உற்ற கான்யாறும் ஆமே 
** 3, 2, 2, 2, 2, 3 பெயர்கள் 160 
**894

#161
** செய்யல் நெய்தல் வெய்யோன் ஐயை 
செய்யலே ஒழுக்கம் காவல் சேறு செய் வினை நாற்பேரே 
நெய்தலே கடல் சார் பூமி நெய்தற் பூ சாப்பறைப் பேர் 
வெய்யோன் ஆதவனே தீயோன் விரும்பினன்தனக்கும் அப் பேர்
ஐயையே உமையாள் துர்க்கை மகள் அருந் தவப் பெண் ஆசாள் 
** 4, 3, 3, 5 பெயர்கள் 161 
**895

#162
** ஐ மை கை வையம் 
ஐ அழகு இடைச்சொல் கோழை அரசனோடு இருமல் சாமி 
மை என்பது அஞ்சனம் கார் மலடு இருள் ஆடு மாசு ஆம் 
கை இடம் படையுறுப்பு ஒப்பனை செங்கை சிறுமை சீலம் 
வையம் தேர் ஏறு உரோணி வசுந்தரை சிவிகை ஊர்தி 
** 6, 6, 6, 6 பெயர்கள் 162 
**896

#163
** சேய் வாய் மாருதி ஆய்தல் ஆறு வேய்தல் விநாயகன் 
சேய் குகன் இளமை தூரம் செம்மை சேண் சிறுவன் செவ்வாய் 
வாய் குழல் இடம் வாய்மைப் பேர் மாருதி அனுமன் வீமன் 
ஆய்தலே நுணுக்கம் தேர்தல் ஆறு என்ப வழி நதிப் பேர் 
வேய்தல் சூடுதல் மூடல் பேர் விநாயகன் அருகன் முன்னோன் 
** 7, 3, 2, 2, 2, 2, 2 பெயர்கள் 163 
**897

#164
** அயிர் செயல் தெய்வம் நயம் பெயர் 
அயிர் கரும்பின் தேம் கட்டி ஆன்ற நுண் மணலே நுண்மை 
செயல் தொழில் ஒழுக்கம் என்ப தெய்வமே கடவுள் ஊழ் ஆம் 
நயம் என்ப மகிழ்ச்சி இன்பம் நன்மை நற்பயன் நாற்பேரே 
பெயர் என்ப பெருமை கீர்த்தி பேசும் நாமப் பேர் ஆமே 
** 3, 2, 2, 4, 3 பெயர்கள் 164 
**898

#165
** ரகர எதுகை 
** சிரகம் கரகம் மரபு மறல் சரபம் 
சிரகமே கரகம் ஆகும் சென்னியின் சோடும் அப் பேர் 
கரகமே ஆலங்கட்டி கமண்டலம் துளி நீர் கங்கை 
மரபுதான் முறைமை தொன்மை மறல் என்ப பிணக்கும் கூற்றும் 
சரபம் எண்கால் புள் என்ப வரையாடு தானும் ஆமே 
** 2, 5, 2, 2, 3 பெயர்கள் 165 
**899

#166
** இரதம் அரணம் கரணம் சரணம் தன்னம் 
இரதமே புணர்ச்சி சூதம் இன்சுவை அரை ஞாண் பொன் தேர் 
அரணமே கவசம் காடே அணி மதில் வேலி நாற்பேர் 
கரணம் எண் மனாதி கூத்து கலவி காரணம் ஐம் பேரே 
சரணம் தாள் மறை புகல் பேர் தன்னம் ஆன் கன்றே அற்பம் 
** 5, 4, 5, 2, 2 பெயர்கள் 166 
**900

#167
** உரம் சிரம் புரம் புரவலன் கரம் 
உரம் என்ப வலியே ஞானம் ஊக்கமே மார்பு நாற்பேர் 
சிரம் என்ப நெடுங் காலப் போர் சென்னியும் அன்னதேயாம் 
புரம் என்ப புரி முன் மெய்ப் பேர் புரவலன் வள்ளல் வேந்தன் 
கரம் என்ப கிரணம் செங்கை கழுதை நஞ்சு இறுத்தலும் பேர் 
** 4, 2, 3, 2, 5 பெயர்கள் 167 
**901

#168
** அரவம் ஆய்வு பரவை இரலை அரசு அம்பி 
அரவம் நூபுரம் பாம்பு ஓசை ஆய்வு என்ப வருத்தம் ஆய்தல் 
பரவை வாரிதி பரப்பு பங்கயமாதின் கூத்தே 
இரலையே கலை ஊதுங்கொம்பு இரண்டுடன் முதல் நாள் என்ப 
அரசு மன் இராச்சியப் பேர் அம்பி நாவாயே தெப்பம் 
** 3, 2, 3, 3, 2, 2 பெயர்கள் 768 
**902

#169
** அரம்பை ஆணு சரம் நரந்தம் சுருங்கை 
அரம்பை தெய்வப் பெண் வாழை ஆணுவே இரதம் நன்மை 
சரம் தனி மணிவடம் போர் சாயகம் நாணற் புல் பேர் 
நரந்தம் என்பது நாரத்தை நாறுங் கத்தூரிக்கும் பேர் 
சுருங்கையே கரந்து பண்ணும் கற்படை நுழை வாயில் பேர் 
** 2, 2, 4, 2, 2 பெயர்கள் 1ல 
**903

#170
** ஆரம் வாரம் தாரம் கோரம் 
ஆரமே பதக்கம் முத்தம் ஆத்தி சந்தனமே மாலை 
வாரம் நீர்க்கரையே அன்பு மலைச்சாரல் கிழமை பங்கு ஆம் 
தாரம் வல்லிசை நா வெள்ளி தலைவி ஓர் இசை கண் என்ப 
கோரம் சோழன் மா வட்டில் கொடுமை பூ மொட்டு வாசி 
** 5, 5, 6, 5 பெயர்கள் 170 
**904

#171
** இராசியம் இறப்பு பராகம் துரோணம் இராகம் 
இராசியம் மறைவே யோனி இறப்பு என்ப மிகுதி போக்கு ஆம் 
பராகமே இரேணு ஆகும் பரிமள மலர்த் தூளும் பேர் 
துரோணமே சிம்புள் காக்கை தும்பை வில்லொடு பதக்கு ஆம் 
இராகமே கீதம் செம்மை இச்சையே நிறமும் ஏற்கும் 
** 2, 2, 2, 5, 4 பெயர்கள் 171 
**905

#172
** பரி புரி பரிதல் வரி 
பரி பரி சுமத்தல் வேகம் பாதுகாத்திடல் வருத்தம் 
புரி வளை விரும்பல் செய்தல் புரத்தொடு கயிறு கட்டு ஆம் 
பரிதலே அறுத்தல் அன்பு பகர்ந்திடில் இரங்கலும் பேர் 
வரி சுணங்கு எழுத்து பாட்டு வாரிதி இறையே நெல்லு 
** 5, 6, 3, 6 பெயர்கள் 172 
**906

#173
** சரி சராவம் கரியவன் பரிகம் கரில் காதை 
சரி கரவளை வழிப் பேர் சராவமே அகல் சலாகை 
கரியவன் சனியின் பேர் ஆம் கண்ணன் இந்திரனும் ஆமே 
பரிகமே கிடங்கு மேடை பகர் மதில் கணையம் நாற்பேர் 
கரில் குற்றம் காழ்த்தலும் பேர் காதை சொல் கதையும் ஆமே 
** 2, 2, 3, 4, 2, 2 பெயர்கள் 173 
**907

#174
** மூரி வாரி நாரி பாரி 
மூரி ஏறு எருமை ஆற்றல் முறை பீடு நெரிவும் ஆமே 
வாரி நீர் கதவு வெள்ளம் மதில் கடல் வருவாய் வட்டை 
நாரி பன்னாடை பெண்ணே நறவு வில் நாணி நாற்பேர் 
பாரி ஓர் வள்ளல் கட்டில் பாரி கள் தூசு முந்நீர் 
** 6, 7, 4, 6 பெயர்கள் 174 
**908

#175
** அருகல் அமுதம் பொருள் குரு அருணம் 
அருகலே சுருங்கல் சார்தல் அமுதமே சுதை நீர் மோக்கம் 
பொருளே சொற்பொருள் பல்பண்டம் பொன் பண்பு பிள்ளை வாய்மை 
குரு நிறம் ஓர் நோய் தேயம் குரவன் பாரம் வியாழன் 
அருணம் என்பது மான் செம்மை ஆடு எலுமிச்சை நாற்பேர் 
** 2, 3, 6, 6, 4 பெயர்கள் 175 
**909

#176
** முருகு மருமான் இருசு கருமை 
முருகு கள் இளமை நாற்றம் முருகவேள் விழா வனப்பு ஆம் 
மருமானே மருமகன் பேர் வழித் தோன்றல் பேரும் ஆமே 
இருசு பண்டியுள் இரும்பு செவ்வை என்று இருபேர் என்ப 
கருமையே பெருமை ஆகும் கறுப்பொடு வலியும் ஆமே 
** 6, 2, 2, 3 பெயர்கள் 176 
**910

#177
** கிருத்திமம் விருத்தி துருத்தி அரத்தம் 
கிருத்திமம் தோலே பண்ணல் கெட்ட பொய் விட்ட பூதம் 
விருத்தியே தொழில் இலாபம் விரி பொருள் வளர்ச்சிக்கும் பேர் 
துருத்தி ஆற்றிடைக் குறைப் பேர் தோலும் ஆம் துட்டைக்கும் பேர் 
அரத்தமே இரத்தம் செம்மை அரக்கொடு உற்பலம் கடம்பு 
** 4, 4, 3, 5 பெயர்கள் 177 
**911

#178
** சீர் தார் சூர் கார் 
சீர் செல்வம் தாளவொத்து சீர்த்தி கா தண்டே பாரம் 
தார் கொடிப்படை பூ தண்டு தாமம் கிங்கிணியின் கோவை 
சூர் என்ப நோயே அச்சம் அஞ்சாமை அணங்கும் சொல்லும் 
கார் நீர் வெள்ளாடு மேகம் கறுப்பு இருள் மாரிக்காலம் 
** 6, 5, 4, 6 பெயர்கள் 178
**912

#179
** ஆர் பீர் வார் நேர் 
ஆர் கூர்மை ஆத்தி தேரின் அகத்துறு கதிரும் ஆகும் 
பீர் என்ப முலையின்பாலும் பீர்க்கொடு பசலைக்கும் பேர் 
வார் என்ப நெடுமை கச்சு மன்னு நீர் நேர்மை நாற்பேர் 
நேர் சமம் ஈதல் பாதி நெடில் உடன்பாடு நுட்பம் 
** 3, 3, 4, 6 பெயர்கள் 179 
**913

#180
** அருணன வருணம் மகன் தரணி தையல் கரிணி 
அருணன் சூரியன் தேர்ப்பாகன் ஆதித்தன் புதன் முப்பேரே 
வருணமே குலம் நீர் ஆகும் மகன் என்ப சிறந்தோன் மைந்தன் 
தரணி பார் இரவி வெற்பு ஆம் தையல் பெண் அழகும் ஆகும் 
கரிணியே முழையும் வெற்பும் களிற்றொடு பிடியும் காட்டும் 
** 3, 2, 2, 3, 2, 4 பெயர்கள்
**914

#181
** மாரி ஓரி காரி தூரியம் 
மாரியே விளிவு கள்ளு வடுகி நோய் மேகம் ஐம்பேர் 
ஓரி ஆண்மயிர் ஓர் வள்ளல் முதுநரி முசு என்றோதும் 
காரி ஓர் வள்ளல் ஐயன் கடு சனி வடுகன் காக்கை 
தூரியம் இடபம் ஆடை துந்துபி எழுதுகோலே 
** 5, 4, 6, 4 பெயர்கள் 181
**915

#182
** பிரமம் அரசன் அம்பணம் குரல் 
பிரமமே வேதம் வேள்வி மந்திரம் பிரமன் மாலோடு 
இரவி தீ முனிவர் முத்தி ஈசன் அம்புலி பன்னொன்றே 
அரசனே வியாழன் மன் ஆம் அம்பணம் தோணி ஆமை 
குரல் கதிர் சிறகு மாதர்கூந்தல் யாழ் நரம்பு நாற்பேர் 
** 11, 2, 2, 4 பெயர்கள் 182 
**916

#183
** தோரை ஆரை அகலுள் ஓரை தாரை 
தோரை நெல் விகற்பம் மூங்கில்அரிசி கைவரை சொல் முப்பேர்
ஆரையே மதில் புற்பாய் ஆம் அகலுளே பரப்பு ஊர் நாடே 
ஓரையே மாதர் கூடி விளையாடலுடன் இராசி 
தாரை கண் மழை நேரோடல் தாரகை வழியே கூர்மை 
** 3, 2, 3, 2, 6 பெயர்கள் 183
**917

#184
** ஊர்தி ஆர்வம் அகலம் ஆர்வலர் அணு ஆர்தல் அகளம் 
ஊர்தி தேர் விமானம் பாண்டில் உம்பலே சிவிகை பாய் மா 
ஆர்வம் ஓர் நரகம் அன்பு ஆம் அகலம் மார்பொடு விசாலம் 
ஆர்வலர் கொண்கர் அன்பர் அணு என்பது உயிர் நுண்மைப் பேர் 
ஆர்தலே நிறைதல் உண்டல் அகளம்தான் மிடா நல் தாழி 
** 6, 2, 2, 2, 2, 2, 2 பெயர்கள் 184 
**918

#185
** பாரம் சூரன் துகள் சாரங்கம் 
பாரமே கவசம் தோணி பல்லணம் பொறையினோடு 
நீர் உறு கரை வன் பாரம் நிறை தரை நிகழ்த்தும் எண் பேர் 
சூரனே இரவி தீ நாய் துகள் என்ப குற்றம் தூள் ஆம் 
சாரங்கம் மானும் வண்டும் சாதகப் புள்ளும் ஆமே 
** 8, 3, 2, 3 பெயர்கள் 185 
**919

#186
** ஆரல் சாரல் மூரல் முரம்பு கூரல் 
ஆரல் கார்த்திகை நாள் செவ்வாய் அரண் உறுப்பு ஒரு மீன் நாற்பேர்
சாரலே மருத யாழின் இசையொடு சைலப் பக்கம் 
மூரலே நகை பல் சோறு ஆம் முரம்பு என்ப மேடு பாறை 
கூரல் புட் சிறகும் மாதர் ஓதியும் இரு பேர் கூறும் 
** 4, 2, 3, 2, 2 பெயர்கள் 186 
**920

#187
** சாரிகை காரிகை வாரணம் பூருவம் 
சாரிகை பூவை சுங்கம் சுழல் காற்று தானும் ஆகும் 
காரிகை அழகு பெண்ணே கலித் துறை ஓர் நூற்கும் பேர் 
வாரணம் கவசம் கோழி தடை சங்கு வாரி கைம் மா 
பூருவம் முதுமை முன்பு கிழக்கு என்றும் புகலல் ஆமே 
** 3, 4, 6, 3 பெயர்கள் 187 
**921

#188
** ஏர் இராசி பார் பயல் போர் பீரு 
ஏர் அழகு உழு பெற்றப் பேர் இராசி தான் ஓரை கூட்டம் 
பார் உலகம் தேர்ப் பார் ஆம் பயல் பள்ளம் பாதி சிற்றாள் 
போர் அமர் சதயத்தோடு புகலும் நெல் முதலாம் சும்மை 
பீருவே அச்சம் உள்ளோன் பெயரொடு புருவம் ஆமே 
** 2, 2, 2, 3, 3, 2 பெயர்கள் 188
**922

#189
** அருப்பம் மரக்கால் நிரப்பு நிறை துருக்கம் 
அருப்பம் ஆர் இடம் நோய் காடு ஆம் அரணுடன் ஊரும் அப் பேர் 
மரக்கால் ஆயிலியம் சோதி மாயவன் ஆடல் முப்பேர் 
நிரப்பு என்ப மிடி நிறைப் பேர் நிறை அழியாமை நீர்ச் சால் 
துருக்கமே அரண் கத்தூரி குங்கும மரமும் சொல்லும் 
** 5, 3, 2, 2, 3 பெயர்கள் 189 
**923

#190
** குருதி பரிதி சுருதி சுரம் இரதி 
குருதியே சிவப்பு இரத்தம் குசன் எனக் கூறும் முப்பேர் 
பரிதியே ஊர்கோள் வட்டம் பாற்கரன் நேமி நாற்பேர் 
சுருதியே ஒலி வேதப் பேர் சுரம் அருநெறி கான் மார்க்கம் 
இரதி பித்தளை பெண் யானை மதன் தேவி இச்சை நாற்பேர் 
** 3, 4, 2, 3, 4 பெயர்கள் 190 
**924

#191
** புரை விரை வீரை நரை சுரை துளும்பல் 
புரை குற்றம் உவமை இல்லம் புழை உயர்ச்சியும் ஐம்பேரே 
விரை மணம் சாந்து தூபம் வீரைதான் துயரம் வாரி 
நரை வெள்ளை இவுளி வெண்மை நந்தி நற் சவரி நாரை 
சுரை கள் ஆன் முலை துளைப் பேர் துளும்பலே திமிறல் துள்ளல் 
** 5, 3, 2, 5, 3, 2 பெயர்கள் 191 
**925

#192
** மருள் இருள் பொருநர் இருபிறப்பு 
மருள் என்ப குறிஞ்சியாழின் திறத்தொடு மயக்கமும் பேர் 
இருள் ஒரு நரகம் மையல் இருளொடு கருமை என்ப 
பொருநர் போர்த் தலைவர் கூத்தர் புரவலர் பாணர் வீரர் 
இரு பிறப்பு எயிறும் பார்ப்பும் இந்துவும் புள்ளும் ஆமே 
** 2, 4, 5, 4 பெயர்கள் 192 
**926

#193
** மருதம் எருவை தரும ராசன் கரி 
மருதமே ஒரு மரம் செய் மருதம் அந் நிலப் பாடல் பேர் 
எருவையே கொறுக்கை கோரை கழுகு செம்பு இரத்தம் என்ப 
தருமராசன்தான் புத்தன் சண்டனோடு அருகன்தான் ஆம் 
கரி என்பது இருந்தை சான்று கறையடி சேகு நாற்பேர் 
** 4, 5, 3, 4 பெயர்கள் 193 
**927

#194
** கருவி சுரிகை துவை 
கருவி பல்லியம் துணைக்காரணங்கள் யாழ் கவசம் ஈட்டம் 
பொரு படைக்கலம் தொடர்ச்சி புயல் பல வினைப் பேர் கூட்டம் 
பரியின் பல்லணமே ஆடை கசை பதின் முப்பேர் பன்னும் 
சுரிகையே கவசம் வாள் ஆம் துவை பிண்ணாக்கு இறைச்சி ஓசை
** 13, 2, 3 பெயர்கள்
**928

#195
** குருகு முரசு தரளம் சார்வு 
குருகு புள் இளமை நாரை கொல் உலை மூக்கு கோழி 
சரி வெள்ளை மூல நாள் வாசந்தி ஒன்பான் பேர் சாற்றும் 
முரசே உத்தரட்டாதிப் பேர் இயம் என்றும் மொழியலாமே 
தரளமே உருட்சி முத்து ஆம் சார்வு என்பது இடமும் பற்றும் 
** 9, 2, 2, 2 பெயர்கள் 195 
**929

#196
** முரண் மொய்ம்பு உரை உவா ஞெரேல் 
** நிதி உரு ஓதனம் 
முரண் வலி பகை ஆம் என்ப மொய்ம்பு தோள் வலியும் ஆகும்  
உரை என்ப களவி தேய்வு ஆம் உவா தந்தி இளையோன் பெளவம்
ஞெரேல் ஒலி விரைவும் ஆகும் நிதி இருநிதி பொன் என்ப 
உரு நிறம் வடிவு அட்டைப் பேர் ஓதனம் சோறே உண்டி 
** 2, 2, 2, 3, 2, 3, 3, 2 பெயர்கள் 196 
**930

#197
** அரி 
அரி கிளி புணரி மால் தேர் ஐம்மை இந்திரன் கால் காந்தி 
பரி புகர் பன்றி சிங்கம் பகை புகை பாயல் சோலை 
வரி மதி சேகு தேரை வானரம் இயமன் மூங்கில் 
எரி புரை நிறம் பொன் பாந்தள் இரவி கண் வரி தார் பச்சை
**931

#198
** அரி (தொடர்ச்சி) அரிதம் ஆர்ப்பு 
அரிசி நெற் கதிர் கள் கூர்மை அளி படைக்கலமே ஈர் வாள் 
அரிதலே சயனம் நேமி அடல் விசி  பறை அரித்தல் 
பரிபுரம் அதனுட் பெய்த பரலோடு இவ் ஆறேழைந்தாம் 
அரிதமே பசுமை திக்கு ஆம் ஆர்ப்பு ஒலி சிரித்தல் பேரே 
** 47, 2, 2 பெயர்கள் 198 
**932

#199
** அருவி அரலை கரடம் சுரியல் 
அருவியே மலைச்சார்வு ஆறும் அரி தினைத்தாளும் ஆகும் 
அரலையே கனி வித்து ஆழி மரல் கழலையும் ஆம் என்ப 
கரடமே மதம் பாய்கின்ற சுவட்டொடு காக்கை ஆகும் 
சுரியல்தான் பெண் மயிர்க்கே சொல்லும் ஆண் மயிர்க்கும் பேராம்
** 2, 5, 2, 2 பெயர்கள் 199 
**933

#200
** திரு பரிவு கரை கைத்து சுரகுரு 
திரு என்ப கமலை செல்வம் சிறப்பொடு முப்பேர் செப்பும் 
பரிவு என்ப துன்பம் இன்பம் பகரும் அன்பிற்கும் அப் பேர் 
கரையே நீர்க் கரை சேர்வு ஆகும் கைத்து நீள் நிதி வெறுப்பு ஆம் 
சுரகுரு மகவான் தேவமந்திரி இரு பேர் சொல்லும் 
** 3, 3, 2, 2, 2 பெயர்கள் 200 
**934

#201
** அரற்றல் ஐது இரத்தம் இலாங்கலி அரக்கு 
** அருச்சுனம் அறிக்கை 
அரற்றலே அழுகை ஓசை ஐது என்ப விரைவு நொய்து ஆம் 
இரத்தம் செந்நீர் சிவப்பு ஆம் இலாங்கலி அலம் தென் காந்தள் 
அரக்கு என்ப மெழுகு கள்ளின் விகற்பமும் சிவப்பும் ஆகும் 
அருச்சுனம் மருது வெண்மை அறிக்கைதான் அறிவு பற்று ஆம் 
** 2, 2, 2, 3, 3, 2, 2 பெயர்கள் 201 
**935

#202
** அரந்தை அருந்தல் அவித்தல் அரங்கம் அரங்கு 
அரந்தை என்பது குறிஞ்சியாழிசை துன்பம் ஆகும் 
அருந்தலே அருமை உண்டல் அளித்தல்தான் கொடுத்தல் காத்தல்
அரங்கம் ஆற்றிடைக் குறைப் பேர் ஆடிடம் சபையும் அப் பேர் 
அரங்கு போரிடம் வட்டாடும் இடம் சபை மனைவி கற்பு ஆம் 
** 2, 2, 2, 3, 4 பெயர்கள் 202 
**936

#203
** முருந்து விருந்தம் குரங்கு எருந்து இடம் 
முருந்து என்ப மயிலின் தோகை  முதல் முள்ளு தவளம் ஆகும் 
விருந்தமே கிளையின் கூட்டம் விலங்கின் கூட்டமும் என்றாகும் 
குரங்கு வானரம் விலங்கின் பொது மிகு கோணல் ஆகும் 
எருந்து உரல் கிளிஞ்சில் என்பர் இடம் செல்வம் விசாலம் வாமம் 
** 2, 2, 3, 2, 3 பெயர்கள் 203 
**937

#204
** ஆரியர் ஆன் ஆரி காருகர் தாரகாரி 
ஆரியர் மிலேச்சர் நல்லோர் ஆன் என்பது இடைச்சொல் ஆவாம் 
ஆரியே கதவு சோழன் அழகொடு மேன்மைக்கும் பேர் 
காருகர் தந்துவாயர் கடுங் கொலையாளர் வண்ணார் 
தாரகாரி என்ப காளி சண்முகன்தானும் ஆமே 
** 2, 2, 4, 3, 2 பெயர்கள் 204 
**938

#205
** சார் சான்றோன் வேர் விழைச்சு பாராவாரம் சாரணர் 
சார் கூடல் ஒரு தாருப் பேர் சான்றோன் மான் தலை நாள் பானு 
வேர் என்ப மரவேர் வேர்வு ஆம் விழைச்சு நல் இளமை போகம் 
பாராவாரம் தான் வாரி  கடற் கரை இரு பேர் பன்னும் 
சாரணர் ஒற்றர் என்ப சமண் முனிவர்க்கும் பேர் ஆம் 
** 2, 2, 2, 2, 2, 2 பெயர்கள் 205 
**939

#206
** அராகம் கரேணு கிராணம் கரீரம் 
அராகமே செந்நிறமே பாலையாழ் முடுகியற்பாட்டு ஆசை 
கரேணுவே பிடி யானைக்கும் கடுங் கொலை யானைக்கும் பேர் 
கிராணமே கிராணம் மூக்கு ஆம் கிளர் சிறுவட்டிலும் பேர் 
கரீரமே மிடா அகத்தி கரியின் பல்லடி முளைப் பேர் 
** 4, 2, 3, 4 பெயர்கள் 206 
**940

#207
** லகர எதுகை 
** புலவர் வலவன் அலகு அலரி 
புலவர் பாடுநரே கூத்தர் புதன் உம்பர் கவிகள் ஓவர் 
வலவனே வெற்றியாளன் மருவும் தேர்ப்பாகன் மாயோன் 
அலகு நெற்கதிரே ஆதி பலகறை நுளம்பு எண் ஏதி 
அலரி கண் வரி அருக்கன் அழகு ஒரு மரம் பூ ஆமே 
** 6, 3, 5, 5  பெயர்கள் 207 
**941

#208
** ஆலம் மூலம் சீலம் சாலம் 
ஆலமே வட விருக்கம் அடு நஞ்சோடு அலர் பூ நீர் ஆம் 
மூலம் வேர் முதலே ஏது முதிர்வுறு கிழங்கு ஓர் நாள் ஆம் 
சீலமே குணம் தண்டித்தல் திகழ் சரித்திரம் முப் பேரே 
சாலமே வலை சாலேகம் மராமரம் சபை மதில் பேர்
** 4, 5, 3, 5 பெயர்கள் 208 
**942

#209
** காலம் கலம் சாலகம் தாலம் ஆலல் அறுவை 
காலம் வைகறை காலப் பேர் கலம் அலம் யாழ் பூண் நாவாய் 
சாலகம் காலதர்ப் பேர்தானே பூ மொட்டும் ஆகும் 
தாலம் உண்கலமே நாவே தராதலம் பனையே நாற்பேர் 
ஆலல் ஆடுதல் ஒலிப் பேர் அறுவை சித்திரை நாள் ஆடை 
** 2, 4, 2, 4, 2, 2 பெயர்கள் 209 
**943

#210
** இலம்பகம் இலஞ்சி பலம் அலங்கல் 
இலம்பகம் அத்தியாயம் நுதற்சூட்டு என்று இருபேர் ஆமே 
இலஞ்சி மா வாவி கொப்பூழ் எயில் குணம் மகிழே ஏரி 
பலம் கனி பயன் காய் சேனை பலம் கிழங்கு அறுபேர் ஆகும் 
அலங்கல் என்பது பூ மாலை அசைவொடு தளிர் இலங்கல் 
** 2, 7, 6, 4 பெயர்கள் 210 
**944

#211
** ஒலி ஒலியல் கலுழி கலை 
ஒலி என்பது இடியே காற்றே ஓசை என்று ஆகும் முப்பேர் 
ஒலியலே ஆறும் தோலும் உடுத்த ஆடையும் பைந் தாரும் 
கலுழியே கான் யாறு என்ப கலங்கிய நீரும் ஆமே 
கலை மதிப் பங்கு தூசு கல்வி நூல் இரலை காஞ்சி 
** 3, 4, 2, 6 பெயர்கள்
**945

#212
** பீலி பாலிகை வேலி மெத்தை தோல் 
பீலியே ஆலவட்டம் பெருவரை கலாபி தோகை 
பாலிகை உதடு வட்டம் படைவாளின் முட்டியும் பேர் 
வேலி ஊர் மதில் காவற் பேர் மெத்தை மெல்லணையே சட்டை 
தோல் இபம் வனப்பு வார்த்தை துருத்தி தோற்பலகை ஐம்பேர் 
** 4, 3, 3, 2, 5 பெயர்கள் 212 
**946

#213
** பாலை வேலை மாலை சாலை 
பாலை ஓர்மரம் நிலம் அந்நிலத்தினில் பாடலும் பேர் 
வேலையே கடல் அதற்கு மேவிய கரையே காலம் 
மாலையே இரவோடு அந்தி மாலிகை ஒழுங்கு நாற்பேர் 
சாலையே குதிரைப் பந்தி அறப்புறம் தானும் ஆமே 
** 3, 3, 4, 2 பெயர்கள் 213
**947

#214
** அல்லி அல் ஆகம் சில்லி வல்லி 
அல்லி வெள்ளாம்பல் காயா அகவிதழ் ஆக முப்பேர் 
அல் இரா இருளே என்ப ஆகம் மார்பு உடலும் ஆமே 
சில்லியே வட்டம் கீரை தேர் உருள் சிள் வீடு என்ப 
வல்லி ஆய்ப்பாடி வள்ளி வரைவொடு நிகளம் ஆமே 
** 3, 2, 2, 4, 4 பெயர்கள் 214 
**948

#215
** இல் மல் சில்லை ஒல்லை 
இல் இல்லாள் இல்லையென்றல் இராசி சா இடம் வீடு ஆறே 
மல் வளம் வலியினோடு மாயவன் ஆடல் முப்பேர் 
சில்லை என்பது பிரண்டை சிள் வீடு தூர்த்தைக்கும் பேர் 
ஒல்லையே விரைவு தொல்லை கடுப்புடன் சிறுபோது ஆமே 
** 6, 3, 3, 4 பெயர்கள் 215
**949

#216
**  வில் வல் மலர்தல் புல் கொல் 
வில் என்ப மூலநாள் ஆம் வெஞ்சிலை ஒளியும் அப்பேர் 
வல் வலி விரைவு சூது ஆம் மலர்தலே எதிர்தல் தோன்றல் 
புல் புலி புணர்ச்சி புன்மை புதல் பனை அனுட நாள் ஆம் 
கொல் என்பது அசைச்சொல் ஐயம் கொலை ஏவல் வருத்தம் நாற்பேர்
** 3, 3, 2, 6, 4 பெயர்கள் 216
**950

#217
** மால் ஆல் அல் வால் வசந்தன் சால்பு 
மால் புதன் பெருமை மேகம் மாயவன் மயக்கம் காற்றே 
ஆலோடு அல் இரண்டு சொல்லும் ஆம் என்பது அல்லவும் பேர் 
வால் வெண்மை மிகுதி தூய்து ஆம் வசந்தனே தென்றல் காமன் 
சால்பு மாட்சிமை சான்றாண்மை சாற்றிய இரு பேர் தானே 
** 6, 1, 1, 3, 2, 2 பெயர்கள் 217 
**951

#218
** வலம்புரி புலம்பு பொய் சிலம்பு செருந்தி விலங்கு 
வலம்புரி சங்கு நந்தியாவர்த்தம் ஓர் மரம் முப்பேரே 
புலம்பு ஒலி தனிமை அச்சம் பொய் என்ப பொக்கம் பொந்து ஆம் 
சிலம்பு ஒலி ஞெகிழி குன்று ஆம் செருந்தி பஞ்சரம் வாட் கோரை 
விலங்கு கால் தளை குறுக்கு மிருகத்தின் பொதுவும் ஆமே 
** 3, 3, 2, 3, 2, 3 பெயர்கள் 218 
**952

#219
** உலகம் அலவன் இலயம் வலவை வருடை 
உலகமே திசை விண் பூமி உயர்குணம் சனம் உயர்ந்தோர் 
அலவனே ஞெண்டு பூஞை அம்புலி கடக ராசி 
இலயமே கூத்தும் கூத்தின் விகற்பமும் இரு பேர் என்ப 
வலவை வஞ்சப் பெண் வல்லோன் வருடைதான் சிம்புள் ஆடு ஆம்
** 6, 4, 2, 2, 2 பெயர்கள் 219 
**953

#220
** கலாபம் சிலீமுகம் சலாகை விலோதம் விடம் 
கலாபமே மணி வடம் மேகலை மயிலிறகு முப் பேர்
சிலீமுகம் முலைக்கண் வண்டு சித்திரபுங்கம் தானாம்
சலாகை நன் மணி நாராசம் சவளமும் ஆகும் என்ப
விலோதம் பெண்மயிர் பதாகை விடம் என்ப நஞ்சும் தேளும்
** 3,3,3,2,2 
**954

#221
செல் இடி ஏவல் மேகம் சிதலை ஆகும் என்ப
எல் ஒளி பகல் இகழ்ச்சி இரவுடன் இரவி ஐம்பேர்
சொல் உரை கீர்த்தி நெல் ஆம் தொடுத்தலே வளைத்தல் கட்டல்
கல் ஒலி மலை கல் என்ப கரண்டம் நீர்க்காக்கை செப்பாம்
** 4,5,3,3,2
**955

#222
கலி வஞ்சம் ஒலியே வாரி கடையுகம் வலி ஐம்பேரே
சிலை ஒலி மலை கல் வில் ஆம் செடி ஒளி செறிவு தீதாம்
தலம் என்பது இலை புவிப் பேர் தலை இடம் தலை விண் ஆதி
திலமே மஞ்சாடி எள் ஆம் திலகம் மஞ்சாடி பொட்டு ஆம்
** 5, 4, 3, 2, 4, 2, 2
**956

#223
வல்லை கான் விரைவு மைந்து ஆம் வடம் மணிவடம் ஆல் தாம்பு
பல்லம் ஓர் கணக்குப் பாணம் பல்லணம் கரடி நாற்பேர்
மல்லலே வலி வளப் பேர் வாயில் ஐம்புலன் கடைப் பேர்
முல்லை மல்லிகையே வென்றி முல்லை நல் நிலம் கற்பு ஆமே
** 3,3, 4, 2, 2, 4
**957

#224
கோல் என்பது ஈட்டி வாட்கோல் துகிலிகை துலாம் சம்மட்டி
சீல மன்னவன்தன் செங்கோல் திரட்சி யாழ்நரம்போடு அம்பு
நீல அஞ்சனக்கோலோடு நீள் இலந்தையும் பன்னோர் பேர்
காலிலி அருணன் பாம்பு காற்றொடு முப்பேராமே
** 11,3
**958

#225
கூலமே பண்ணிகாரம் புனல்கரை கோ விலங்கின்
வாலோடு ஆவணமே பாகல் வரம்பொடு குரங்கு எண்பேரே
கால் இடம் மரக்கால் பிள்ளை குறுந்தறி வனம் காம்பு ஊற்றம்
காலன் அங்குரம் கால் வாய்க்கால் காற்றுத் தேருருள் பன்மூன்றே
** 8, 13
**959

#226
கோலமே அழகு பன்றி பாக்கு நீர்க்கொழுந்து பீர்க்காம்
மாலியே இரவி கள்ளாம் மாந்தலே மரித்தல் உண்டல்
வேல் அயில் படைக்கலப் பேர் வேதண்டம் கைலை வெற்பாம்
சாலி நெற்பொதுவும் கள்ளும் அருந்ததிதானும் ஆமே
** 5, 2, 2, 2, 2, 3
**960

#227
உலவை கால் மரத்தின்கொம்போடு உறு தழை விலங்கின்கோடாம்
மலைதலே பொரல் சூடல் பேர் மந்திரி குபேரன் வெள்ளி
அலர் பழி விரி பூ நீராம் அவிர்தலே ஒளி பீறல் பேர்
எலி பூரநாள் எலிப் பேர் இரணம் பொன் கடன் மாணிக்கம்
** 4, 2, 2, 3, 2, 2, 3
**961

#228
ஆலயம் நகரம் கோயில் யானையின்கூடம் முப்பேர்
பாலமே மழு நெற்றிப் பேர் பவித்தரம் சுசி தருப்பை
நூலோர் மந்திரிகள் பார்ப்பார் நுவல் கவிப் புலவர்க்கும் பேர்
வேலாவலயம்தான் பூமி விரி கடல் இருபேர் ஆமே
** 3, 2, 2, 3, 2
**962

#229
சூலியே கருப்பப்பெண்ணும் துர்க்கையும் சிவனும் முப்பேர்
வாலியே அலாயுதன் கிட்கிந்தையின் மன்னன் பேராம்
பால் புடை இயல்பு திக்குப் பகுத்தல் பால் என்னும் ஐம்பேர்
ஏலமே மயிர்சாந்தோடே ஏலத்தின் பேரும் ஆமே
** 3, 2, 5, 2
**963

#230
** வகரவெதுகை
நவம் என்ப புதுமை கேண்மை ஒன்பது நற் கார் காலம்
கவனமே கலக்கம் வெம்மை குதிரையின்கதி போர் காடாம்
உவணமே கலுழன் ஆகும் உயர்ச்சிக்கும் கழுகுக்கும் பேர்
பவனமே இராசி பூமி படர் காற்று மனையே கோயில்
** 4, 5, 3, 5
**964

#231
புவனம் நீர் புவியும் ஆகும் புரத்தலே காத்தல் வண்மை
நுவணை நூல் நுண்மை பிண்டி நூலே சாத்திரமும் தந்தும்
தவ என்ப மிகுதி குன்றல் தந்தே நூல் சாத்திரப் பேர்
சிவம் நன்மை குறுணி முத்தி சீவனே உயிர் வியாழன்
** 2, 2, 3, 2, 2, 2, 3, 2
**965

#232
இவறலே மறவி ஆசை என்ப பேரிச்சைக்கும் பேர்
இவர்தலே எழுச்சி ஆசை ஏறுதல் சேறல் மேவல்
சுவவு என்ப புள்ளின்மூக்கும் சுவர்க்கமும் சுண்டனும் பேர்
குவவு என்ப திரட்சி மற்றும் குவிதலே பெருமைக்கும் பேர்
** 3, 5, 3, 3
**966

#233
தவிசு என்ப தடுக்கு மெத்தை இலகடம் முப்பேர்தானே
சவி மணிக்கோவை செவ்வை சாற்றிய வனப்புக் காந்தி
நவிரமே மஞ்ஞை புன்மை நன் மலையுடனே உச்சி
நவிலல் சொல்லுதல் பண்ணல் பேர் நவியமே மழுக் கோடாலி
** 4, 4, 4, 2, 2
**967

#234
கவுசிகம் விளக்குத்தண்டு ஓர் பண் பட்டுக் கடிய கோட்டான்
சவுரியே திருமால் கள்வன் சனி யமன் இனைய நாற்பேர்
மவுலியே முடி கோடீரம் வட்கல் என்பது நாண் கேடாம்
கவலை செந்தினை ஓர் வல்லி கவர்வழி துன்பம் நாற்பேர்
** 4, 4, 2, 2, 4
**968

#235
சேவகம் வீரம் யானைதுயிலிடம் துயிலும் செப்பும்
சீவனி ஓர் மருந்து செவ்வழித்திறத்தோர் ஓசை
ஆவணம் புனர்தம் வீதி அங்காடி உரிமை நாற்பேர்.
நீவியே துடைத்தல் ஆடை நெருங்கு கொய்சகம் முப்பேரே
** 3, 2, 4, 3
**969

#236
உவளகம் மதில் ஓர் பக்கம் ஊருணி பள்ளம் உள்ளில்
கவடு என்ப கப்பி யானைக் கழுத்திடு புரசைக்கும் பேர்
சிவை உமை மரவேர் கொல்லன் உலைமுகம் திரியும் ஓரி
கவையே ஆயிலியம் காடு கவர்வழி எள்இளங்காய்
** 5,2,4,4
**970

#237
சிவப்பு என்ப சினமும் செம்மையுடன் சினக்குறிப்பு முப்பேர்
உவப்பு என்ப மகிழ்சி மேடாம் ஒழுக்கமே வழி ஆசாரம்
தெவிட்டலே அடைத்தல் கான்றல் நிறைதலும் ஒலியும் செப்பும்
துவக்கே தோல் பிணக்கு இரண்டாம் சூழலே இடம் விசாரம்
** 3, 2, 2, 4, 2, 2
**971

#238
சேவலே காவலோடு சேறு புள்ளாண் முப்பேரே
கேவலம் தனிமை முத்தி கீரம் என்பது பால் கிள்ளை
பூவை சாரிகை காயாவாம் புலி சிங்கம் உழுவை சாந்தே
வாவல் அஞ்சலிகைப் புள்ளும் தாவலும் வகுக்கலாமே 
** 3, ,2, 2, 2, 3, 2 பெயர்கள் 238 
**972

#239
** சுவல் கவி கழி நவிர் நாஞ்சில் கவிகை கடிப்பம் 
சுவல் பிடர் தோள்மேல் மேடு துரகதக் குசை நாற்பேரே 
கவி மந்தி புலவன் சுங்கன் கழி என்ப மிகுதி காயல் 
நவிர் உளை மருத யாழ் வாள் நாஞ்சில் எந்திரம் கலப்பை 
கவிகையே குடை கொடைப் பேர் கடிப்பம் காதணி பூண் செப்பு ஆம் 
** 4, 3, 2, 3, 2, 2, 2 பெயர்கள் 239 
**973

#240
** மா கோ 
மா வண்டு பெருமை பிண்டி வாசி கூப்பிடல் வெறுத்தல் 
காவுறு விலங்கு செல்வம் கரு நிறம் கமலை பத்தாம் 
கோ விழி பசு நீர் திக்கு குலிசம் விண் கிரணம் பூமி 
ஏ உரை சுவர்க்கம் வேந்தன் இரங்கல் வெற்பு ஈரேழ் ஆமே 
** 10 14 பெயர்கள் 240 
**974

#241
** ஆவி கூவிரம் குவடு காவி நாவிதன் 
ஆவியே வாவி நாற்றம் ஆர் உயிர் புகை மூச்சு ஐம்பேர் 
கூவிரம் தேர் தேர்மொட்டு ஆம் குவடு நீள் மலை வெற்பு உச்சி 
காவியே குவளை காவிக் கல்லொடு கள்ளு முப்பேர் 
நாவிதன் மஞ்சிகன் கார்த்திகை பூரநாளும் ஆமே 
** 5, 2, 2, 3, 3 பெயர்கள் 241 
**975

#242
** ஆ கா பா தா 
ஆ என்பது இரக்கம் பெற்றம் ஆச்சாவோடு இசை வியப்பு ஆம் 
கா என்ப துலாம் பூஞ்சோலை காத்தல் தோட்சுமை நாற்பேரே 
பா என்ப பனுவல் நூற்பா பரவுதல் பரப்பும் ஆகும் 
தா என்ப பகை வருத்தம் தாண்டுதல் வலி கேடு ஐம்பேர் 
** 5, 4, 4, 5 பெயர்கள் 242 
**976

#243
** கவ்வை பவ்வம் தவ்வை நவ்வி நன்று 
கவ்வையே பழிச்சொல் துன்பம் கள் ஒலி எள்இளங்காய் 
பவ்வமே குமிழி வாரி பரு மரக் கணு உவா ஆம் 
தவ்வை முன்பிறந்தாளோடு தாயும் மூதேவியும் பேர் 
நவ்வியே தோணி மான் ஆம் நன்று என்ப பெருமை நன்மை 
** 5, 4, 3, 2, 2 பெயர்கள் 243 
**977

#244
** அவல் செவிலி கவுடம் சுவடு சுபம் 
அவலே சிற்றுண்டி பள்ளம் நீர்நிலை ஆகும் முப்பேர் 
செவிலியே வளர்த்த கைத்தாய் முன் பிறந்தவளும் செப்பும் 
கவுடம் ஓர் கொடி ஓர் தேசம் இரு பெயர் கழறலாமே 
சுவடு வச்சிராங்கி ஓர் எண் சுபம் என்பது அழகு வெண்மை 
** 3, 2, 2, 2, 2 பெயர்கள் 244 
**978

#245
** பவம் பாவம் சவுரியம் தண்மை யவம் யவனர் 
பவம் என்ப சனனம் பாவம் பாவம்தான் வினை தியானம் 
சவுரியம் களவு வீரம் தண்மைதான் குளிர்ச்சி தாழ்வு 
யவம் ஒரு தானியப் பேர் என்ப நெல்லிற்கும் அப் பேர் 
யவனர் சோனகர் கண்ணாளர் சித்திரகாரர் என்ப 
** 2, 2, 2, 2, 2, 3 பெயர்கள் 245 
**979

#246
** ஆவரணம் ஏவல் ஓவியர் ஓ 
ஆவரணம்தான் சட்டை தடை மறைப்பு அரணம் ஆடை 
ஏவலே வியங்கோள் என்ப எய்திய வறுமைக்கும் பேர் 
ஓவியர் சிற்பநூலோரொடு சித்திரகாரரும் பேர் 
ஓ இரக்கச் சொல் நீக்கமோடு நீர் தகை கபாடம் 
** 5,2, 2, 3 பெயர்கள் 246 
**980

#247
** அவ்வை செவ்வி தெவ் தீவினை சைவம்
அவ்வையே தாயின் பேரும் ஒளவையோடு இருபேர் ஆமே 
செவ்வி ஏர் பொழுதினோடு செப்பிய பருவம் ஆகும் 
தெவ்^ அமர் பகை இரண்டாம் தீவினை கொடுமை பாவம் 
சைவம் ஓர் புராணம் ஈசன் சமயத்தின் விகற்பும் ஆமே 
** 2, 3, 2, 2, 2 பெயர்கள் 247 
**981

#248
** ழகர எதுகை
விழவு என்ப மிதுனராசி விளங்கும் உற்சவமும் ஆகும்
கழை என்ப புனர்தம் மூங்கில் கரும்பு என விரும்பும் முப்பேர்
கழல் கழங்கொடு செருப்புக் காலணி கால் இந் நாற்பேர்
கிழமை மூப்பு உரிமை பண்பாம் கிழி நிதிப்பொதி கீறு ஆமே
** 2, 3, 4, 3, 2
**982

#249
சூழியே சுனையும் வெய்ய தும்பியின் முகபடாமும்
பாழியே வலி விலங்கின்படுக்கை ஊர் பற்றிலாரூர்
நாழியே அளக்கும் நாழி நாழிகை பூரட்டாதி
ஆழி மோதிரமே நேமி அலை கடல் கரையே வட்டம்
** 2, 4, 3, 5
**983

#250
இழுமெனல் ஓசை என்ப இனிமையும் இயம்பும் அப் பேர்
விழுமமே சிறப்புச் சீர்மை இடும்பையும் விதித்த பேரே
தொழு என்பது உழலைதானே இரேவதி நாளும் சொல்லும்
செழுமையே வளம் கொழுப்பாம் தேன் என்ப நறவும் வண்டும்
** 2, 3, 2, 2, 2
**984

#251
கழுது பேய் பரண் வண்டு என்ப கயவு கீழ் பெருமை மென்மை
அழுவமே பரப்பும் நாடும் அழுங்கலே இரங்கல் கேடாம்
கழுமல் பற்றொடு மயக்கம் காதலே ஆசை கோறல்
கழிதல் என்பதுவே சாதல் கடந்திடல் மிகுதி முப்பேர்
** 3, 3, 2, 2, 2, 2, 3
**985

#252
மாழை பொன் உலோகக்கட்டி மடமை ஏர் புளிமா ஓலை
கூழையே சிறகு மாதர்கூந்தல் வெம் படை உறுப்பாம்
தாழை கேதகை தெங்கு ஆகும் சாகினி சேம்பு கீரை
ஊழ் முறை வெயில் பகைப் பேர் ஊசியே சூசி ஆணி
** 6, 3, 2, 2, 3, 2
**986

#253
உழை என்பது இடம் மான் யாழினோர்நரம்பிற்கும் பேராம்
குழை என்ப தளிர் துவாரம் குண்டலம் சேறு நாற்பேர்
விழைவு என்ப புணர்ச்சி காதல் வெறுக்கை என்பது பொன் செல்வம்
வழி மரபு இடம் பின் மார்க்கம் வழங்கலே கொடை உலாவல்
** 3, 4, 2, 2, 4, 2
**987

#254
ஈழம் பொன் கள் ஓர் தேசம் எல்லையே அளவை வெய்யோன்
மேழகம் கவசம் ஆடாம் வேளாண்மை கொடையே மெய்மை
காழியர் வண்ணார் உப்புவாணிகர் இருபேர் காட்டும்
வேழமே கரும்பு யானை கொறுக்கைச்சி வேணு நாற்பேர்
** 3, 2, 2, 2, 2, 4
**988

#255
கூழ் என்பது உணவும் பொன்னும் பயிர் என்றும் கூறும் முப்பேர்
காழ் என்ப மணியின் கோவை கற்பரல் சேகு வித்தாம்
யாழ் என்ப மிதுனம் வீணை இரலை நாள் ஆதிரைப் பேர்
கீழ் என்பது இடம் கீழ்சாதி கீழ்த்திசை கயமை நாற்பேர்
** 3, 4, 4, 4
**989

#256
கோழியே குருகு ஓர் ஊராம் குய்யமே மறைவு யோனி
மூழியே வாவி சேறோடு அகப்பையும் மொழியும் முப்பேர்
மூழையே அகப்பை சோறாம் முறம் சுளகொடு விசாகம்
நூழிலே கோறல் யானை நுண்கொடி கொடிக்கொத்தான் பேர்
** 2, 2, 3, 2, 2, 4
**990

#257
** தொழுதி தொறு கெழுவுதல் கீலாலம் குழல் அழிவு அவி 
தொழுதி புள்ளொலி கூட்டப் பேர் தொறு நிரை அடிமை கூட்டம் 
கெழுவுதல் மயக்கம் பற்று ஆம் கீலாலம் கறை நீர் காடி 
குழல் துளையுடைப்பொருள் பேர் மயிர் இசைக்குழல் முப்பேரே 
அழிவு என்ப வீதல் கேடு ஆம் அவி நெய் சோறு அமரர் உண்டி 
** 2, 3, 2, 3, 3, 2, 3 பெயர்கள் 257 
**991

#258
** ளகர எதுகை 
** குளம் களம் வளமை வாருணம் விளவு விம்மல் 
குளம் நுதல் கரும்பின்கட்டி குட்டமும் இட்ட நாமம் 
களம் அமர்க்களமே கண்டம் களா விடம் கறுப்பே இல்லாள் 
வளமை மாட்சிமை கொழுப்பு ஆம்  வாருணம் கடலும் மேற்கும் 
விளவு என்ப கமர் விளா ஆம் விம்மல் ஏங்குதல் ஒலித்தல் 
** 3, 6, 2, 2, 2, 2 பெயர்கள் 258 
**992

#259
** முளரி விளர் களபம் உளர்தல் 
முளரியே விறகு செந்தீ முண்டகம் சிறுமை காடு ஆம் 
விளர் என்பது இளமைதானே வெளுப்பொடு கொழுப்பும் ஆகும் 
களபமே யானைக் கன்று கமழ் சாந்து கலவை முப்பேர் 
உளர்தலே சிதறல் ஆகும் தடவலும் உரைக்கற் பாற்றே 
** 5, 3, 3, 2 பெயர்கள் 259 
**993

#260
** குளிர் நளிர் ஒளி வட்டம் இளி 
குளிர் மழு நண்டு இருத்தல் குளிர் கவண் முழா மீன் தாரை 
நளிர் குளிர் பெருமை ஞெண்டு நாட்டிய செறிவு நாற்பேர் 
ஒளி வட்டம்தான் கண்ணாடி சக்கரம் இருபேர் ஓதும் 
இளி இசை இசித்தல் எல்லே இணங்குதல் உரித்தற்கும் பேர் 
** 7, 4, 2, 5 பெயர்கள் 260 
**994

#261
** பளிதம் வெளில் களிறு ஒளி 
பளிதம் என்பது கர்ப்பூரம் பல்லம் என் கணக்கும் ஆகும் 
வெளில் அணில் வேழத்தம்பம் வெண் தயிர்கடைதறிப் பேர் 
களிறு என்ப அத்த நாளே கறையடி சுறவு பன்றி 
ஒளி இரு சுடரே தீயே ஒளிப்பிடம் புகழும் ஆமே 
** 2, 3, 4, 5 பெயர்கள் 261 
**995

#262
** பாளிதம் ஓளி கோளி மீளி 
பாளிதம் சோறு கண்டசருக்கரை குழம்பு பட்டு ஆம் 
ஓளியே யானைக்கூடம் ஒழுங்கு என்றும் வழங்கும் நூலே 
கோளி தொன் மரமே அத்தி கொள்வோனும் கொழிஞ்சியும் பேர் 
மீளி திண்ணியன் வலிப் பேர் மேன் மகன் பெருமைக்கும் பேர் 
** 4, 2, 4, 4  பெயர்கள் 262 
**996

#263
** அளை அசனி உளை கிளை இளை 
அளை தயிர் முழை புற்று ஆகும் அசனியே உருமு வச்ரம் 
உளை பரி மீது கட்டும் மயிர் பிற மயிரும் ஓதும் 
கிளை என்பது ஓர் பண் மூங்கில் கேளொடு கிளைத்தலும் பேர் 
இளை புயல் இளமை வேலி தலைக் காவல் இவை நாற்பேரே 
** 3, 2, 2, 4, 4 பெயர்கள் 263
**997

#264
** உள்ளல் உழப்பு ஞெள்ளல் எள்ளல் யாமம் ஞொள்கல் 
உள்ளலே நினைவு உள்ளான் பேர் உழப்பு என்ப வலி உற்சாகம் 
ஞெள்ளலே பள்ளம் மேன்மை நீண்ட வீதியும் முப்பேரே 
எள்ளலே நகை இழிப்பு ஆம் யாமம் தெற்கு இரவு சாமம் 
ஞொள்கல் சோம்பு இளைத்தல்  அச்சக்குறிப்பு என்று நுவலற்பாலாம்
** 2, 2, 3, 2, 3, 3 பெயர்கள் 264 
**998

#265
** வள் வெள்ளை கள்வன் பள்ளி 
வள் என்ப காது கூர்மை வலி வளம் வாளே வார் ஆம் 
வெள்ளையே முசலி சங்கு வெளிறு வெள்ளாடு வெண்பா 
கள்வனே முசு ஞெண்டு யானை கருநிறத்தவனே சோரன் 
பள்ளி ஊர் சிற்றூர் கோயில் பாயல் கண்படை நீத்தோர்ஊர் 
** 6, 5, 5, 6 பெயர்கள் 265 
**999

#266
** விளக்கு வேள்வி அளக்கர் இளைத்தல் இளைத்தல் என்றூழ் 
விளக்கு ஒளி சோதி நாள் ஆம் வேள்வியே மகம் நாள் ஈதல் 
அளக்கரே புடவி சேறு உப்பளம் கடல் கார்த்திகைப் பேர் 
திளைத்தலே அனுபவித்தல் செறிதலே நிறைதல் முப்பேர் 
இளைத்தலே இளைப்பு இரங்கல் என்றூழே இரவி வெய்யில் 
** 2, 3, 5, 3, 2, 2 பெயர்கள் 266 
**1000

#267
** பிள்ளை பெட்டல் மள்ளர் உள்ளம் உஞற்று வள்ளி 
பிள்ளையே வடுகன் காக்கை பெட்டல்தான் விரும்பல் வேண்டல் 
மள்ளரே மள்ளர் வீரர் மறவர்க்கும்  குறவர்க்கும் பேர் 
உள்ளமே முயற்சி நெஞ்சு ஆம் உஞற்று இழுக்கொடு தாளாண்மை ' 
வள்ளியே வல்லி செங்கை வளை புனை இழை முப்பேரே 
** 2, 2, 4, 2, 2, 3 பெயர்கள் 267 
**1001

#268
** காளம் வேள் விபூதி கோள் ஞானி நான்முகன் 
காளமே ஊது கொம்பு கழு நஞ்சு கருமை நாற்பேர் 
வேள் அறுமுகன் காமன் பேர் விபூதி ஊன் கொடுமை செல்வம் 
கோள் இடையூறு ஒன்பான் கோள் கொலை குணம் வலி பொய் கொள்கை 
ஞாளியே சுணங்கன் கள் ஆம் நான்முகன் அருகன் வேதா 
** 4, 2, 3, 7, 2, 2 பெயர்கள் 268 
**1002

#269
** களர் தளம் அளகம் தளை 
களர் என்ப மிடறு கோட்டி களர்நிலம் கருமை நாற்பேர் 
தளம் இலை படையே சாந்து தாழி பூவிதழே மேடை 
அளகமே மாதர் ஓதி அறல் மயிர்க்குழற்சி முப்பேர் 
தளை விலங்கொடு தொடர்ச்சி தாள் சிலம்பு ஆண்மயிர்ப் பேர் 
** 4, 6, 3, 4 பெயர்கள் 269 
**1003

#270
** புள் புளகம் கள் கனலி அள் வெள்ளம் வேணு 
புள்ளு வண்டு அவிட்டம் புட் பேர் புளகம் தர்ப்பணம் குமிழ்ப்பு ஆம் 
கள் என்ப களவு கள் ஆம் கனலி தீ இரவி பன்றி 
அள் உரம் செறிவு காதோடு அயிலும் பற்று இரும்பும் ஆகும் 
வெள்ளம் எண் மிகுதி முந்நீர் வேணுவே மூங்கில் வில் வாள் 
** 3, 2, 2, 3, 5, 3, 3 பெயர்கள் 270 
**1004

#271
** வாள் வல்லரி கூளி தோள் சுந்தரி தேள் 
வாள் என்பது ஒளி கட்கப் பேர் வல்லரி தளிர் பைங்காய் ஆம் 
கூளி பேய் தமர் ஏறு ஆசு குறள் படைத்தலைவன் கூட்டம் 
தோள் என்ப புயம் கை ஆகும் சுந்தரி உமையே சுண்டன் 
தேள் என்பது அனுடநாளே விருச்சிகம் தெறுக்காலும் பேர் 
** 2, 2, 7, 2, 2, 3 பெயர்கள்
**1005

#272
** அளி அளவை ஆசாரம் விளரி வளம் 
அளி என்ப நறவும் வண்டும் அன்பொடு கொடையும் நாற்பேர் 
அளவையே எல்லை நாள் ஆம் ஆசாரம் துகில் தூ மாரி 
விளரியே இளமை யாழில் ஓர் நரம்பு யாழ் நீள் வேட்கை 
வளம் என்ப பதவியும் பல்பண்டமும் வனப்பும் ஆகும் 
** 4, 2, 3, 4, 3 பெயர்கள் 272 
**1006

#273
** வள்ளம் வள்ளுரம் அள்ளல் அம்பு வெள்ளில் வேலன் 
வள்ளமே மரக்கால் வட்டில் கடிகை வட்டிற்கும் அப் பேர் 
வள்ளுரம் பசு இறைச்சி வரைந்த ஊன் பொதுவும் ஆகும் 
அள்ளலே நரகம் சேறு ஆம் அம்பு நீர் புயல் வேய் ஏ ஆம் 
வெள்ளிலே விளா பாடைப் பேர் வேலன் வேள் வெறியாட்டாளன்
** 3, 2, 2, 4, 2, 2 பெயர்கள் 273 
**1007

#274
** காளை கூளியர் கோளகை கேள்வி கிடங்கு 
காளையே எருது பாலைக்கு அதிபன் நல் இளமையோன் பேர் 
கூளியர் நண்பர் பூதகண வீரர் கொலைத்திறத்தோர் 
கோளகை வட்டமோடு மண்டலிப் பாம்பும் கூறும் 
கேள்வியே செவி கல்விப் பேர் கிடங்கு அகழ் வாவி ஆமே 
** 3, 3, 2, 2, 2 பெயர்கள் 274 
**1008

#275
** இளமை அளறு அக்காரம் கிளர் களரி 
இளமையே தண்மை காமம் இளமையின் பருவம் முப்பேர் 
அளறு என்ப நரகம் சேறு ஆம் அக்காரம் புடைவை வெல்லம் 
கிளர் என்ப கிரணத்தோடு கிளர் கோட்டு மலர்ப் பூந்தாது ஆம் 
களரி போர்க்களம் காடு என்ப கருமம் செய் இடமும் ஆமே 
** 2,2,2,2, 3 பெயர்கள் 275
**1009

#276
** றகர எதுகை 
** இறைவை கூர் குறடு கொண்மூ புறவம் புறணி 
இறைவையே புட்டில் ஏணி என்ப கூர் மிகுதி கூர்மை 
குறடு என்ப பலகை திண்ணை கொண்மூ என்பது விண் மேகம் 
புறவம் ஓர் புள்ளும் காடும் முல்லை நல் நிலனும் போற்றும் 
புறணியே குறிஞ்சி முல்லை நிலத்தொடு புறமும் தோலும் 
** 2, 2, 2, 2, 3, 4  பெயர்கள் 276 
**1010

#277
** மறம் குறிஞ்சு பிறங்கல் குறும்பொறை 
மறம் சினம் பிணக்கு கூற்று ஆம் மலைந்த சேவகமும் ஆகும் 
குறிஞ்சி ஓர் இசை ஓர் பண்ணே குறிஞ்சி செம்முள்ளிக்கும் பேர் 
பிறங்கலே மிகுதி வெற்பு நிறைவு ஒலி பெருமை ஐம்பேர் 
குறும்பொறை குன்று காடு குறிஞ்சி நல் நிலத்து ஊர் முப்பேர் 
**  4, 4, 5, 3 பெயர்கள் 277 
**1011

#278
** தாறு சேறு ஊறு ஏறு 
தாறு வில்குதையே எல்லை தாழ் மரக் குலை முள்கோல் ஆம் 
சேறு என்ப கும்பி சாரம் தித்திப்பு விழவு கள்ளே 
ஊறு என்ப தீமை தீண்டல் உயிர்க்கொலை இடையூறு என்ப 
ஏறு இடி முதல்நாள் ஆகும் இடபமோடு எருதும் அப் பேர் 
** 4, 5, 4, 4 பெயர்கள் 278 
**1012

#279
** சிறை கறை முறை பிறழ்தல் 
சிறையே வேறிடம் ஆம் புள்ளின் சிறகொடு காவலும் பேர் 
கறை இறுத்திடல் இரத்தம் கறுப்பு உரல் விடம் பேர் ஐந்தே 
முறை என்ப கோசமே ஊழ் முறைமை இம் முப்பேர் என்ப 
பிறழ்தலே நடுக்கம் வேறு பெயர்தலோடு ஒளிவிடல் பேர் 
** 3, 5, 3, 3 பெயர்கள் 279 
**1013

#280
** ஏற்றல் ஆற்றல் தோற்றல் போற்றல் புறம் 
ஏற்றலே கோடல் என்ப எதிர்ந்து போர்செய்தலும் பேர் 
ஆற்றலே பொறை முயற்சி அதிகமே வலியே ஞானம் 
தோற்றலே வலி பிறப்பு தோன்றுதல் புகழே நாற்பேர் 
போற்றலே புகழ்தல் ஓம்பல் புறம் என்ப முதுகு வீரம் 
** 2, 5, 4, 2, 2 பெயர்கள் 280 
**1014

#281
** அற்றம் குற்றல் குரை எற்று கொற்றி 
அற்றமே மறைவும் சோர்வும் அவகாசம்தானும் ஆகும் 
குற்றல் குற்றுதல் பறித்தல் குரை என்பது இடைச்சொல் ஓசை 
எற்று என்பது இரக்கம் ஒத்தல் எறிதல் எத்தன்மைத்து என்றல் 
கொற்றியே துர்க்கை நாமம் கோ இளங்கன்றும் கூறும் 
** 3, 2, 2, 4, 2 பெயர்கள் 281
**1015

#282
** உறழ்வு உறவி உறுகண் உறுவன் உலக்கை 
உறழ்வு என்ப புணர்வு காலம் செறிவு இடையீடு ஒப்பு ஐம்பேர் 
உறவியே எறும்பு நீர்ஊற்று உலைக்களம் உறவு உயிர்ப் பேர் 
உறுகண் என்பதுவே துன்பம் உறு பயம் மிடி நோய் நாற்பேர் 
உறுவனே முனி புத்தன் பேர் உலக்கையே உரோங்கல் ஓணம் 
** 5, 5, 4, 2, 2 பெயர்கள் 282 
**1016

#283
** விறப்பு பொறுத்தல் புந்தி இறுத்தல் கறுப்பு கன்று 
விறப்பு என்ப செறிவு வெற்றி வெருவுதல் பொருதல் நாற்பேர் 
பொறுத்தலே பொறை தாங்கல் பேர் புந்திதான் புதனே புத்தி 
இறுத்தலே ஒடித்தல் தங்கல் இயம்புதல் முப்பேர் என்ப 
கறுப்பு இருள் சினக்குறிப்பு ஆம் கன்று கைவளை கன்று ஆமே 
** 4, 2, 2, 3, 2, 2 பெயர்கள் 283 
**1017

#284
** பொறி வெறி 
பொறி மரக்கலமே செல்வம் பூமகள் எந்திரங்கள் 
அறிவு இலாஞ்சனை எழுத்தோடு ஐம்பொறி வரி ஒன்பான் பேர்
வெறி வெருவுதல் கலக்கம் வெறியாட்டு வட்டம் நாற்றம் 
குறிய பேய் துருவை கள்ளு கூறு நோய் ஒன்பது ஆமே 
** 9, 9 பெயர்கள் 284 
**1018

#285
** உறை அறை 
உறை பொருள் மருந்து வாழ்நாள் உணவு வெண்கலமே காரம் 
எறி படைக்கலத்தின் கூடே எண் குறித்து இறுதி பெய்தல் 
நறிய பால் பிரை இடைச்சொல் நகரம் நீர்த்துளி ஈராறு ஆம் 
அறை முழை மோதல் பாறை திரை சிற்றில் மொழி ஆறு ஆமே 
** 12, 6 பெயர்கள் 285 
**1019

#286
** இறை உறையுள் உறுதி பொறை 
இறை சிவன் கடன் வேந்தன் கையிறை இறுப்பிறை சிறந்தோன் 
சிறுமை புள்ளிறகு தங்கல் சென்னி கூன் இறப்பு ஈராறே 
உறையுள் என்பது நாடு ஊர் ஆம் உறுதியே நன்மை கல்வி 
பொறை மலை துறுகல் பாரம் பொறை சுமை கருப்பம் பூமி 
** 12, 2, 2, 7 பெயர்கள் 286 
**1020

#287
** இறும்பு இறும்பூது கறங்கல் கதிர் பறம்பு பாய்மா 
இறும்பு தாமரையின் பூவே மலை குறுங்காடும் ஏற்கும் 
இறும்பூது தகைமை வெற்போடு அதிசயம் குழை தூறு என்று ஆம் 
கறங்கலே சுழலல் ஓசை கதிர் என்பது இரவி சோதி 
பறம்பு உயர் மலை முலைப் பேர் பாய்மாவே குதிரை வேங்கை 
** 3, 5, 2, 2, 2, 2 பெயர்கள் 287 
**1021

#288
** கூற்று கோமான் நாற்றம் நனவு ஊற்று நோற்றல் நுணங்கு 
கூற்று என்பது இயமன் சொல் ஆம் கோமானே மூத்தோன் பன்றி 
நாற்றம் நாறுதல் தோன்றல் பேர் நனவு என்பது அகலம் தேற்றம் 
ஊற்று என்பது ஊன்றுகோலும் உறவியும் இருபேர் ஓதும் 
நோற்றலே பொறை தவப் பேர் நுணங்கு என்ப நுண்மை தேமல் 
** 2, 2, 2, 2, 2,2 ,2 பெயர்கள் 288 
**1022

#289
** கற்பம் பொற்பு பற்பம் பழங்கண் உற்கை உண்டி 
கற்பமே பிரமன் வாழ்நாள் கற்பக தரு சுவர்க்கம் 
பொற்பு என்பது அழகினோடு பொலிவும் ஒப்பனையும் ஆகும் 
பற்பமே பதுமம் தூள் ஆம் பழங்கணே துன்பம் ஓசை 
உற்கை தாரகை தீக்கொள்ளி உண்டிதான் புசித்தல் சோறே 
** 3, 3, 2, 2, 2, 2 பெயர்கள் 289 
**1023

#290
** முற்றல் நெற்றி கொற்றம் எற்றுதல் 
முற்றல் காழ்கோடல் மூப்பு முடிவுடன் வளைத்தல் நாற்பேர் 
நெற்றியே நுதலின் பேரும் நெடும் படையுறுப்பும் ஆகும் 
கொற்றமே வன்மை வெற்றி கோ அரசியல் முப்பேரே 
எற்றுதல் புடைத்தலோடே எறிதலும் இருபேர் ஆமே 
** 4, 2, 3, 2 பெயர்கள் 290 
**1024

#291
** அறுகு வறிது மறலி மறவி குறள் 
அறுகு என்ப சிங்கம் ஓர் புல் யாளியும் ஆகும் முப்பேர் 
வறிது என்பது அருகலே சற்று அறியாமை பயன் இல் வார்த்தை 
மறலியே மயக்கம் கூற்று ஆம் மறவி கள் மறதி ஈனம்
குறள் என்ப குறளும் பேயும் குறுமையும் கூறும் முப்பேர் 
** 3, 4, 2, 3, 3பெயர்கள் 291
**1025

#292
** விறல் விழைந்தோன் நொறில் நெறி 
** நிருமித்தல் பறை 
விறல் என்ப வலி வென்றிப் பேர் விழைந்தோனே நண்பன் வேட்டோன் 
நொறில் என்ப விரைவினோடு நுடக்கமும் இருபேர் ஆமே 
நெறி வழி நீதி என்ப நிருமித்தல் படைப்பு ஆராய்தல் 
பறை பறை வசனத்தோடு பறக்கும் புள் இறகு முப்பேர் 
** 2, 2, 2, 2, 2, 3 பெயர்கள் 292 
**1026

#293
** னகர எதுகை 
** மனவு வரை தனி சாந்தம் முனை முளை இனம் எழில் 
மனவு நன் மணி சங்கு அக்கு ஆம் வரை மலை இறை வேய் மட்டு ஆம் 
தனி தமி ஒப்பின்மைப் பேர் சாந்தமே கமையும் சாந்தும் 
முனை பகை நுனி வெறுப்பு ஆம் முளை வேய் அங்குரமே பிள்ளை 
இனம் இரும் கிளை அமைச்சு ஆம் எழில் வண்ணம் இளமைக்கும் பேர் 
** 3, 4, 2, 2, 3, 3, 2, 2 பெயர்கள் 293 
**1027

#294
** ஆனகம் மானம் பானல் பாங்கர் மானல் வருடம் 
ஆனகம் படகத்தின் பேர் ஆகும் துந்துபியும் அப் பேர் 
மானமே அளவு இலச்சை விமானமே பெருமை குற்றம் 
பானலே பழனம் நெய்தல் பாங்கரே இடம் பக்கப் பேர் 
மானலே மயக்கம் ஒப்பு ஆம் வருடமே மழையும் ஆண்டும் 
** 2, 5, 2, 2, 2, 2 பெயர்கள் 294 
**1028

#295
** தானம் பீனம் பேடு நானம் வானம் 
தானமே மதம் நீராட்டு தரு கொடை சுவர்க்கம் நாற்பேர் 
பீனமே பருமை பாசி பேடு என்ப பேடி ஊரே 
நானமே பூசும் பூச்சு நானமும் குளிக்கும் நீரும் 
வானம் ஆகாயம் என்ப மழை உலர் மரமும் ஆமே 
** 4, 2, 2, 3, 3பெயர்கள் 
**1029

#296
** வானி ஆனி ஏனை ஆனியம் அனந்தை 
வானி மேற்கட்டி சேனை வண் துகிற்கொடி முப்பேரே 
ஆனி உத்தராடம் மூலம் சேதம் ஓர் மாதம் என்ப 
ஏனையே ஒழிபு மற்றை எனும் இடைச்சொற்கும் அப் பேர் 
ஆனியம் பொழுது நாள் ஆம் அனந்தை ஓர் சத்தி பூமி 
** 3, 4, 2, 2, 2 பெயர்கள் 296 
**1030

#297
** முன்னல் முன்னம் கன்னல் மன்னன் கின்னரம் கிடக்கை 
முன்னலே நினைவு நெஞ்சு ஆம் முன்னம் சீக்கிரியோடு எண்ணம் 
கன்னல் சர்க்கரை கரும்பு கரகம் நாழிகை வட்டில் பேர் 
மன்னன் உத்தரட்டாதிப் பேர் மன்னவன்தானும் ஆகும் 
கின்னரம் நீர்ப் புள் யாழ் ஆம் கிடக்கை பூதலம் பாயல் பேர் 
** 2, 2, 5, 2, 2, 2 பெயர்கள் 297 
**1031

#298
** பின்னை கொன் பொன் மன் வாழி 
பின்னையே பின்றை தங்கை பெரிய மாற்கு உரிய தேவி 
கொன் பயனிலாமை காலம் கூறிய பெருமை அச்சம் 
பொன் என்ப வனப்பு இரும்பு பூமகள் வியாழன் நாற்பேர் 
மன் நிலை மிகுதி வேந்தே வாழி வாழ்கெனல் இடைச்சொல் 
** 3, 4, 4, 3, 2 பெயர்கள் 298 
**1032

#299
** வன்னி சென்னி சீருள் கன்னி தென் 
வன்னியே பிரமசாரி வளர் கிளி சமி செந்தீ ஆம் 
சென்னி கம் பாணன் சோழன் சீருள் ஈயம் செம்பு ஆகும் 
கன்னி பெண் அழிவிலாமை கட்டிளமைக்கும் பேரே 
தென் இசை வனப்பு தாழை தெற்கொடு கற்பும் ஆமே 
** 4, 3, 2, 3, 5 பெயர்கள் 299 
**1033

#300
** குன்று அன்றில் மன்றம் மன்றல் 
குன்று வேதண்டம் ஆகும் குறைவொடு சதயம் முப்பேர் 
அன்றில் ஓர் புள்ளும் மூலநாள் என ஆம் இரண்டே 
மன்றமே வெளியின் நாமம் வாசம் அம்பலமும் அப் பேர் 
மன்றலே பரிமளப் பேர் மருவு கல்யாணமும் பேர் 
** 3, 2, 3, 2 பெயர்கள் 300 
**1034

#301
** தனம் கனவு கலிங்கம் கனை கவரி பனுவல் படப்பை 
தனம் முலை பொன் ஆன் கன்று சந்தம் முத்தனம் ஐம்பேராம் 
கனவு நித்திரை மையல் பேர் கலிங்கம் சாதகப்புள் ஆடை 
கனை செறிவு ஒலி ஆம் என்ப கவரியே சவரி மேதி 
பனுவலே கிளவி நூல் ஆம் படப்பை ஊர்ப்புறமே தோட்டம் 
** 5, 2, 2, 2, 2, 2, 2 பெயர்கள் 301 
**1035

#302
** அனந்தன் அனந்தம் அனங்கம் தனஞ்சயன் 
அனந்தனே சிவன் மால் சேடன் அலாயுதன் அருகன் ஐந்தே 
அனந்தமே முடிவிலாமை ஆடகம் விண் முப்பேரே 
அனங்கமே இருவாட்சிப் பேர் ஆகும் மல்லிகைக்கும் அப் பேர் 
தனஞ்சயன் பார்த்தனே செந்தழல் ஒரு காற்றும் ஆமே 
** 5, 3, 2, 3 பெயர்கள் 302 
**1036

#303
** சானகி தனு சானு சோனை கானல் 
சானகி சீதை மூங்கில் தனு என்பது உடல் வில் அற்பம் 
சானுவே மலை முழந்தாள் மலைப்பக்கம்தானும் ஆகும் 
சோனையே ஓணநாளும் விடாமழைசொரிதலும் பேர் 
கானலே மலைச் சார் சோலை கடற்கரைச்சோலை பேய்த்தேர் 
** 2, 3, 3, 2, 3 பெயர்கள் 303 
**1037

#304
** வான் தானை கானம் ஏனல் 
வான் என்ப விசும்பு மேகம் மழையொடு பெருமை நாற்பேர் 
தானையே சேனை ஆடை படைக்கலம்தானும் ஆகும் 
கானம் தேர் இசையே பேதை காடு தற்பாடி ஐம்பேர் 
ஏனலே செந்தினைப் பேர் தினைப்புனம் என்றும் ஆமே 
** 4, 3, 5, 2 பெயர்கள் 304 
**1038

#305
** முனி துனி பனி சினை 
முனி என்பது யானைக் கன்று முனிவன் வில் அகத்தி நாற்பேர் 
துனி என்ப புலவி நீட்டம் துன்பம் நோய் ஆறு கோபம் 
பனி என்ப நடுக்கம் துன்பம் பயம் குளிர் இமம் ஐம்பேரே 
சினை என்ப முட்டை பீள் ஆம் மரக்கொம்பும் செப்பும்  அப் பேர் 
**  4, 5, 5, 3 பெயர்கள் 305 
**1039

#306
** மான் கான் கல்லி ஏனாதி மீன் 
மானே சாரங்கம் மாவின் பொதுவொடு மகர ராசி 
கானே நன் மணம் காடு என்ப கல்லி ஊர்க்குருவி ஆமை 
ஏனாதி மஞ்சிகன் மந்திரியும் தந்திரியும் என்ப 
மீனே சித்திரைநாள் வான் மீன் மயிலையும் மேவும் அப் பேர் 
** 3, 2, 2, 3, 3 பெயர்கள் 306 
**1040

#307
** ஞானம் யானம் ஏனம் மேனி 
ஞானமே அறிவு கல்வி நல்ல தத்துவ நூல் முப்பேர் 
யானமே மரக்கலத்தோடு எழில் ஊர்தி விகற்பு இரண்டாம் 
ஏனம் ஓலைக்குடைப் பேர் எறுழியும் மறமும் அப் பேர் 
மேனியே வடிவம் என்ப நிறத்தையும் விளம்பல் ஆமே 
** 3, 2, 3, 2  பெயர்கள் 307 
**1041

#308
** அன்னை அன்னம் ஆகாரம் தன்மை பன்னல் 
அன்னையே முன் பிறந்தாள் தோழி தாய் ஆகும் என்ப 
அன்னம் ஓதிமமே சோறு ஆம் ஆகாரம் உடல் நெய் உண்டி 
தன்மை ஏர் இயல்பினோடு தன்மையின் இடமும் சாற்றும் 
பன்னவே நெருக்கம் வார்த்தை பருத்தியின் பேரும் ஆமே 
** 3, 2, 3, 3, 3 பெயர்கள் 308 
**1042

#309
** வனம் மனு மண்ணை புனை மனை வதுவை 
வனமே நீர் மிகுதி காடு வளர் சோலை துளசி ஈமம் 
மனுவே மந்திரம் ஓர் நூல் ஆம் மண்ணை பேய் இளமை மூடன் 
புனை என்பது அழகினோடு பொலிவும் ஒப்பனையும் ஆகும் 
மனை என்ப மனைவி வீடு ஆம் வதுவையே மணம் கல்யாணம் 
** 6, 2, 3, 3, 2, 2 பெயர்கள் 309 
**1043

#310
** அன் கனைத்தல் 
அன் வினையொடு பெயர்க்கும் விகுதி சாரியையும் ஆகும் 
மன்னிடும் கனைத்தல் என்பது இருள் ஒசை இருபேர் வைக்கும் 
இன்னன ஒரு சொல் பல் பேர்க்கு இயற்கவி முந்நூற்றொன்பான் 
சொன்னவன் குணபத்திரன் தாள் சூடும் மண்டலவன்தானே 
** 3 2 பெயர்கள் 310 
** பதினோராவது 
** ஒரு சொற் பல்பொருட் பெயர்த் தொகுதி முற்றிற்று 

@12 பல் பெயர்க் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி
**1044

#1
** காப்பு 
சொல் வகை எழுத்து எண் எல்லாம் தொல்லை நாள் எல்லையாக 
நல் வகை ஆக்கும் பிண்டி நான்முகன் நாளும் தீமை 
வெல் வினை தொடங்கச் செய்து வீடு அருள்வோன் தாள் போற்றி 
பல்வகைப் பெயர்க் கூட்டத்தின் ஒரு பெயர் பகரல் உற்றாம்
**1045

#2
** ஒன்று 
கூறிய கூறினாலும் குற்றம் ஒன்றிலை அருத்தம் 
வேறு உளதாயின் என்று விதித்தலின் விரித்து முன்னம் 
ஊறு இலாச் சிறப்பு வர்க்கம் உரைத்து இவண் பொதுவர்க்கத்தில்  ' 
ஏறிய ஊழும் சொல்வாம் ஏகமே வீடுபேறு 
** 1 பெயர் 2 
**1046

#3
** இருமை இருவினை இருவகைத் தோற்றம் இருசுடர் 
இருமையே இம்மையோடு மறுமை நல் வினையினோடு 
மருவு தீவினைகள் என்ப மற்று இரு வினையின் நாமம் 
இருவகைத் தோற்றம் என்றே இடும் சர அசரங்கள் என்ப 
இரு சுடர் மதியம் மற்றை இரவி என்று இயம்பலாமே 
** 2, 2, 2, 2 பெயர்கள் 3 
**1047

#4
** இரு மரபு இரு வகைக் கந்தம் இருவகை அறம் 
** இரு வகைப் பொருள் 
இரு மரபு அன்னை தந்தை எய்திய வழி ஆம் கந்தம் 
இருவகை நற்கந்தங்கள் ஏற்ற துர்க்கந்தம் என்ப 
இருவகை அறங்கள் என்ப இல்லறம் துறவறங்கள் 
இருவகைப் பொருள்கள் கல்வி ஏற்ற செல்வங்கள் ஆமே 
** 2, 2, 2, 2 பெயர்கள் 4 
**1048

#5
** இரு வகைக் கூத்து முப் பழங்கள் 
**மூவகைப் பாவ புண்ணிய வழக்கம் 
இருவகைக் கூத்துத்தானே இயன்ற தேகமே மார்க்கம் 
கருது முப்பழங்களின் பேர் கதலி மா பலா என்று ஆமே 
விரைவொடு செய்தலே செய்வித்தலே உடம்பாடு என்ன 
வருமுறை பாவமொடு புண்ணிய வழக்கம் ஆமே 
** 2, 3, 3 பெயர்கள் 5 
**1049

#6
** மும்மை முப்பொறி முக்காலம் முச்செய்கை 
மும்மையே உம்மை இம்மை மொழிந்திடும் மறுமை என்ப 
செம்மையாம் வாக்கு காயம் திகழ் மனம் முப் பொறிப் பேர் 
மும்மையாம் காலப் பேரின் மொழி இறப்பு எதிர் நிகழ்ச்சி 
மும்மையாம் செய்கை பண்ணல் முறை காத்தல் சிதைத்தல் ஆமே 
** 3, 5, 3, 3 பெயர்கள் 6 
**1050

#7
** மூன்று இடம் முந்நிலங்கள் முக்குற்றம் முச்சுடர் 
மூன்றிடம் என்ப தன்மை முன்னிலை படர்க்கை ஆகும் 
ஆன்ற முந் நிலங்கள் பூமி அந்தரம் சுவர்க்கம் என்ப 
மூன்று குற்றங்கள் காமம் முதிர் சினம் மயக்கம்தானே 
மூன்று செஞ்சுடரே திங்கள் முளைத்து எழு பரிதி அங்கி 
** 3, 3, 3, 3 பெயர்கள் 7 
**1051

#8
** மூவகை மொழி மூவகை வேதத்தீ மூவகை உயிர்த்தீ 
பழித்திடல் புகழ்தல் மெய்ம்மை பயக்கும் மும் மொழிப் பேர் ஆகும் 
கழிப்பு இல் வேதத்தின் முத்தீ காருக பத்தியத்தோடு 
அழிப்பு இலாத் தெற்கில் அங்கி ஆகவ நீயம் என்ப 
ஒழிப்பு இலா உயிரில் அங்கி உதரம் விந்து உறு சினத்தீ 
** 3, 3, 3 பெயர்கள் 8 
**1052

#9
** முக்குணம் சாத்துவிகச் செயல் 
ஏற்ற சாத்துவிகத்தோடே இராசதம் தாமதங்கள் 
ஆற்று முக்குணங்கள் ஆகும் அதில் சாத்துவிகமே ஞானம் 
சாற்றிய தவமே மெய்ம்மை சால்பு நல்லருள் உண்டாதல் 
போற்றிய ஆமை போல் ஐம்புலன் அடக்குதலும் ஆமே 
** 3, 6 பெயர்கள் 9 
**1053

#10
** இராசதச் செயல் 
தானமே தவமே மெய்ம்மை தருமம் பேணுதலினோடு 
ஞானமே கல்வி கேள்வி நலன் இவை தெரிதல் தாமே 
ஈனம் ஒன்றில்லார் வைத்த இராசத குணங்கள் என்ப 
ஊனம் இல் உறுவன் முன்னாள் உரைத்திடும் முறைமைதானே 
** 7 பெயர்கள் 10 
**1054

#11
** தாமதச் செயல் 
தாமதம் நிறை பேருண்டி சாம்புதல் சோம்பு மூரி 
காமமே நீதி கேடு கண்ணுறக்கம் பொச்சாப்பு 
நாமம் ஆம் சலமே வஞ்சம் நாட்டிய  முப்பாலும் 
மா மலிவுடனே மற்றை மெலிவொடு சமனும் ஆமே 
** 10, 3 பெயர்கள் 11
**1055

#12
** மூவகைத் தானம் உத்தம தானத்தின் இயல்பு 
மறுவறு தானம் மூன்று வகைதமில் உத்தமம்தான் 
பெறு முறை ஓம்பி வைத்துப் பேணிய பொருளைத்தானே 
குறுகியே பெறுக என்று குறை இரந்து அடங்கி நோற்கும் 
உறு தவர்க்கு உவந்து தாழ்ந்தே உபகாரம் செய்தல் ஆமே 
** 3 பெயர்கள் 12 
**1056

#13
** மத்திமதானம் அதமதானம் 
சீர் உறுப்பில்லார் மாதர் சிதடர் ஆதுலர்க்கு நல்கல் 
வார் உறு கொங்கை நல்லாய் மத்திமதானம் என்ப 
ஆர்வமே புகழ் கண்ணோட்டம் அச்சம் கைம்மாறு மற்றைக் 
காரணம் இன்ன எல்லாம் கடைப்படுதானம் ஆமே
**1057

#14
** திரிகடுகம் திரிபலை திரிபுரம் அருக்கன் சூரியன் வீதி 
திரிகடுகம் சுக்கோடு திப்பலி மிளகு செப்பும் 
திரிபலை என்பதானே திகழ் கடு நெல்லி தான்றி 
புரம் மூன்று செம்பொன் வெண்பொன் போற்றிய கரும்பொன் என்ப
விரவிய மேடம் ஏறு மிதுனமே அருக்கன் வீதி 
** 3, 3, 3, 3 பெயர்கள் 14 
**1058

#15
** நால்வகை நிலம் நாற்கதி நால்வகை அங்கம் 
முல்லையே குறிஞ்சி நெய்தல் மொழிந்திடும் மருதம் என்ப 
நல்ல நானிலம் என்று ஓதும் நாற்கதி உம்பர் மக்கள் 
சொல்லிய விலங்கினோடு நரகர் சாதுரங்கம் என்ப 
வெல்லும் மால் யானை தேரே வெம் பரி காலாள் ஆமே 
** 4, 4, 4 பெயர்கள் 15 
**1059

#16
** நால்வகை இழிசொல் நால்வகை வேதம் 
குறளை பொய் கடுஞ்சொல்லோடு கூறிய பயன் இல் வார்த்தை 
நறுநுதல் கேட்டி மற்றை நால்வகை இழிசொல் ஆகும் 
மறு இலா இருக்கினோடு வளம் மிகும் யசுவே சாமம் 
அறைதரும் அதர்வம் என்பவாம் இவை வேதம் நான்கே 
** 4, 4 பெயர்கள் 16 
**1060

#17
** நாற்பொருள் நால்வகைக் கேள்வி நால்வகை அரண்
** ஆடவர்க்குரிய நால்வகைக் குணம் 
அறமொடு பொருள் இன்பம் வீடு ஆன நாற்பொருள்கள் ஆகும் 
உறும் இவைதம்மைக் கேட்டல் ஒத்த நால்வகைக் கேள்விப் பேர் 
செறி கடம் வெற்பு நீரே திணி மதில் அரணம் நான்கு ஆம் 
அறிவொடு நிறையே ஓர்ப்பு கடைப்பிடி குணம் நான்கு ஆமே 
** 4, 4, 4 பெயர்கள் 17 
**1061

#18
** மகளிர் நாற்குணம் நால்வகைப் புண்ணியத் தோற்றம் 
நாணமே மடமே அச்சம் நாட்டிய பயிர்ப்பு நான்கும் 
மாணிழை மடநல்லார்க்கு வைத்த நாற்குணங்கள் ஆகும் 
பேணிய தவம் ஒழுக்கம் பெருங் கொடை கல்வி நான்கின் 
பூணு நற்பொருள்கள் நான்கும் புண்ணியத் தோற்றம் ஆமே 
** 4, 4 பெயர்கள் 18 
**1062

#19
** நால்வகைப் பொன் நால்வகைப் பூ 
சொல்லிய சாதரூபம் கிளிச்சிறை துலங்குகின்ற 
நல்ல ஆடகமே சாம்பூநதம் இவை நால்வகைப் பொன் 
மெல்லிய கொடிப்பூ கோட்டில் விளங்கும் பூ நீர்ப்பூ வேறு 
புல்லிய புதல்பூ என்னப் பொருந்து நால்வகையின் பூவாம் 
** 4, 4 பெயர்கள் 19 
**1063

#20
** நால்வகை உண்டி நான்கு ஊறுபாடு உபாயம் நான்கு 
நடைபட உண்ப தின்ப நக்குப பருகல் நான்காம் 
எறிதலே குத்தல் வெட்டல் எய்தல் நான்கு ஊறுபாடாம் 
முறைபடு சாமம் பேதம் முந்திய தானம் தண்டம் 
நெறிபடும் உபாயம் நான்கும் நிருபர்தம் முறைமை ஆமே 
** 4, 4, 4 பெயர்கள் 20 
**1064

#21
** நால்வகை உயிர்த் தோற்றம் நால்வகைப் புலவர் 
துவமதாம் குடல் போர்வைக்குள் தொடர்புறு முட்டைதன்னில் 
நவையறு நிலத்தில் வேர்வில் நல் உயிர்த்தோற்றம் நான்காம் 
கவியொடு கமகன் வாதி காசுஇலா வாக்கி என்ப 
புவியின் மேல் நால்வகைத்தாம் புலமையர் இயல்புதானே 
** 4, 4 பெயர்கள் 21 
**1065

#22
** கவி கமகன் 
தீட்டிய ஆசினோடு மதுரம் சித்திரம் வித்தாரப்
பாட்டு இவை யாரும் மெச்சப் பாடுவோன் கவி என்றாகும் 
நாட்டிய அரும்பொருட்கள் செம்பொருள் நடையவாகக் 
காட்டியே விவகரிப்போன் கமகன் என்று அறையலாமே
**1066

#23
** வாதி வாக்கி 
ஏதுவும் மேற்கோளும்தான் எடுத்து உடன் காட்டி ஆங்கே 
வாதினில் பிறன்கோள் எல்லாம் மறுப்பவன் வாதி என்ப 
ஓதிய அறம் பொருட்கள் உற்றிடும் இன்பம் வீடு 
கோதுஇன்றிக் கேட்க வேட்கக் கூறுவோன் வாக்கி ஆமே
**1067

#24
** ஆசுகவி 
கொடுத்திடும் பொருளின் மற்றுக் கூறிய இனத்திற்கு ஓட்டி 
அடுத்திடும் எப்போது அப்போது அசைவின்றி யாரும் மெச்ச 
எடுத்து இயல்பாகப் பாடும் எவன் அவன் ஆசு சொல்வான் 
வடுப் பிளவு அனைய ஒண் கண் மடமொழி வல்லி நல்லாய் 
**1068

#25
** மதுர கவி 
பொருளினில் பொலிவும் சொல்லில் பொருந்திய பொலிவும் மற்றைத்
தரு தொடை தொடை விகற்பம் தாம் துதைந்து அமிர்தம் ஊற 
உருவகம் முதலா வைத்தே ஓதிய அலங்காரத்தோடு 
இருள் அற ஓசை தோன்றி  இருந்தது மதுரம் ஆமே 
**1069

#26
** சித்திர கவி 
சொற்றிடும் மாலைமாற்றே சுழிகுளம் ஏகபாதம் 
குற்றம் இல் சக்கரத்தின் கூறு எழு கூற்றிருக்கை 
கற்றிடும் அடி மயக்கு காட்டும் பாவின் புணர்ப்போடு 
ஒற்று எழுத்து யாவும் தீர்ந்த ஒருபொருள் பாட்டினோடும் 
**1070

#27
** சித்திர கவி (தொடர்ச்சி)
சித்திரப்பாவே மற்ற விசித்திரப்பா வினாவோடு 
உத்தரம் குற்றம்இல்லா ஓரெழுத்தினத்திற் பாட்டே 
வைத்திடும் காதைதன்னை மறைப்பது கரந்துறைப்பா 
தைத்த கோமூத்திரி கூட சதுர்த்தம் என்று இசைத்த பாட்டு 
**1071

#28
சருப்பதோபத்திரங்கள் சார்ந்திடும் எழுத்தினோடு 
வருக்கமும் வடநூல் வைத்து வரும் உதாரணமும் நோக்கி 
விரித்திட இசைத்து வைத்த மிறைக்கவிப் பாட்டு மற்றும் 
தெரித்தது பாட வல்லோன் சித்திரகவி என்று ஆமே 
** 19 பெயர்கள் 
**1072

#29
** வித்தார கவி 
தெரித்த மும்மணியின் கோவை செப்பு பன்மணியின் மாலை 
வருத்தம் தீர் மடலையூர்தல் மறத்தொடு கலி வெண்பாவே 
உருத்த பாசண்டம் மற்றும் உறும் இயல் இசையே கூத்து 
விரித்துறப் பாடவல்லோன் வித்தாரகவி என்று ஆமே 
** 9 பெயர்கள் 29 
**1073

#30
** வில்வீரர் நிற்கும் நால்வகை நிலை பைசாசம் 
வரி சிலை இயற்றுவோர்க்கு வகுத்த நால்வகையே நிற்றல் 
பரவு பைசாசம் மற்றும் பகர்ந்த ஆலீடத்தோடு 
பெருகிய மண்டலம்தான் பிரத்தியாலீடம் ஆகும் 
ஒருகால் நின்று ஒருகால்தன்னை முடக்கல் பைசாசம் என்ப 
** 4 பெயர்கள் 30 
**1074

#31
** ஆலிடம் மண்டலித்தல் பிரத்தியாலீடம் 
வலப்பதம் மண்டலித்து வாமபாதம்தான் முந்து 
நிலைப்பெயரே ஆலீடம் நின்ற மண்டலத்தின் நாமம் 
இலக்கணத்தோடே கூட இருகாலும் மண்டலித்தல் 
வலப்பதம் முந்திப் பிற்கால் மண்டலம் பிரத்தியாலீடம்
**1075

#32
** ஐவகைத் தானப் பொருத்தம் 
பாலனே குமரன் மன்னன் படு முதிர் கிழவன் சாவு 
கோலும் தன் பேர் எழுத்துக் குறித்து அது முதலாக் கொள்க 
ஏலும் முன் எழுத்து மூன்றும் இன்பம் பின் இரண்டும் தீது ஆம் 
சாலும் மூவகைச் சீர்தானே சாற்றிய கவிதைக்கு இன்பம்
**1076

#33
** பஞ்சபட்சி அவற்றுக்குரிய எழுத்து தொழில் 
அகரமே ஆதியாக ஐந்து குற்றெழுத்தும்தானே 
புகல் வல்லூறு ஆந்தை காக்கை போர்க் கோழியொடு கலாபி 
தொகும் உண்டி போக்கு வேந்து துயில் சாவு தொழில்கள் ஆகும் 
பகரும் ஐந்தெழுத்துள் யாது பற்றினும் அதுவே முன் ஆம் 
** 5, 5, 5 பெயர்கள் 33 
**1077

#34
** பஞ்சபட்சிகளும் தொழில்களும் இருபக்கத்திலும் 
** அமையும் முறை 
பிற்பக்கம் ஆகில் வேறு பேதிக்கும் யாதோ என்னில் 
அற்புத உண்டி சாவே அறி துயில் அரசு போக்கு 
பொற்பு அறு மரணம் தூக்கம் இல்லாத பொழுதை ஓர்ந்து 
பற்பல செய்யுள்தானே பகர்ந்திடின் மிகுந்த நன்மை
**1078

#35
** ஐம்புலன்களால் உயிர் இழப்பன 
சுவையின் மீன் அளி நாற்றத்தின் தும்பியே பரிசம்தன்னில் 
நவைஇலா அசுணம்தானே நல் இசைதனில் பதங்கம் 
உவகையாம் ஒளியை வேட்டே உயிரினை இழக்கும் ஐந்தாம் 
இவை எலாம் உடையோர்தம்பால் ஆர் உயிர் இழந்திடாதார் 
** 5 பெயர்கள் 35 
**1079

#36
** ஐந்திணை பஞ்சவாசம் 
கோலிய ஐந்திணைப் பேர் குறிஞ்சியே செறிந்த முல்லை 
பாலையே நெய்தலோடு பரவிய மருதம் ஆமே 
ஏலம் தக்கோலம் மற்றை இலவங்கத்தொடு சாதிக்காய் 
சாலும் கர்ப்பூரம் ஐந்தும் சாற்றிய பஞ்ச வாசம் 
** 5, 5 பெயர்கள் 36 
**1080

#37
** ஐவகை விரை ஐவகை அகிற்கூட்டு 
சந்தனம் அகிலினோடு தகரம் குங்குமமே கோட்டம் 
இந்த ஐந்து என்று சொல்லும் எய்திய விரைகளின் பேர் 
உந்து சந்தனம் கர்ப்பூரம் உடன் எரிகாசு செந்தேன் 
அந்த ஏலங்கள் என்ப அகில் கூட்டு ஓர் ஐந்தும்தாமே 
** 5, 5 பெயர்கள் 37 
**1081

#38
** அரசன் ஐம்பெருங்குழு ஐம்பெருஞ்சுற்றம் 
தடுக்கும் மந்திரி புரோகிதன் தொழில் தூதன் ஒற்றன் 
எடுத்து வந்து இருந்த சேனைக்கு இறைவன் ஐங்குழு என்று ஆகும்
படைத்தொழிலோர் நிமித்தம் பார்ப்பவர் ஆயுள்வேதர் 
அடுத்த நட்பாளர் பார்ப்பார் ஐவகை உறுதிச் சுற்றம் 
** 5, 5 பெயர்கள் 38 
**1082

#39
** ஐவகைக் குரவர் ஐம்பால் 
அரசனே உபாத்தியாயன் அன்னையே ஐயன் மூத்தோன் 
குரவர் ஓர் ஐவர் என்றே கூறினர் வேறு நூலோர் 
ஒருவனே ஒருத்தி மற்றும் உரைத்திடும் பலரே ஒன்று 
விரவிய பல என்று ஐந்தும் மேவிய ஐம்பால் ஆமே 
** 5, 5 பெயர்கள் 39 
**1083

#40
** பஞ்சாங்கம் பஞ்சபாதகம் 
பஞ்சாங்கம் திதியே வாரம் பகர்ந்த நாள் யோகத்தோடு 
துஞ்சாத கரணம் என்ப சூழ் கொலை களவு பொய்யே 
அஞ்சாத கள்அருந்தல் ஆர் குருநிந்தை என்ப 
பஞ்சார் மெல்லடி நல்லாய் கேள் பஞ்ச பாதகத்தின் பேரே 
** 5, 5 பெயர்கள் 40 
**1084

#41
** பஞ்சசயனம் கூந்தலின் ஐவகைப் பகுதி 
மயில் தூவி இலவின் பஞ்சு மற்றைச் செம்பஞ்சு வெண்பஞ்சு 
அயிர்ப்பு இலா அன்னத்தூவி ஆம் பஞ்சசயனத்தின் பேர் 
வியக்கும் ஐம்பால் வகைப் பேர் மேவிய முடியே கொண்டை 
குயிற்றிய குழல் பனிச்சை கோல வார் சுருளும் கூறும் 
** 5, 5 பெயர்கள் 41
**1085

#42
** ஐவகைத் துரக (குதிரை) ஐவகை உணவு 
மல்லமே மயூரம் மற்றை வானரம் வல்லியம்மே 
சொல்லிய சரமே என்ப துரகத கதிகள் ஐந்து ஆம் 
பல்லினால் கடித்தல் நக்கல் பருகலே விழுங்கல் மற்றும் 
மெல்லவே சுவைத்தல் ஆகும் வினவில் ஐந்து உணவுதானே 
** 5, 5 பெயர்கள் 42 
**1086

#43
** ஐவகை வினா ஐம்பூதம் 
அறியாதான் வினாவல் பின்னை அறிவு ஒப்புக் காண்டலோடு 
குறியுடன் ஐயம் தீர்தல் குறித்து அவன் அறிவு கோடல் 
கறை அற மெய் அவர்க்குக் காட்டல் ஐவகைவினா ஆம் 
பெறு நிலம் நீர் தீ காற்றே பெரு விசும்பு ஐந்துபூதம் 
** 5, 5 பெயர்கள் 43
**1087

#44
** ஈசுரன் ஐம்முகம் ஐவகை இசைக்கருவி 
தலைவன் ஐம்முகங்கள் ஆவ சத்தியோசாதம் வாமம் 
புலன் உறும் அகோரமே தற்புருடம் ஈசானம் என்ப 
குலவு தோல் துளை நரம்பு கூறிடும் கஞ்சம் கண்டம் 
இலகும் இவ் ஐந்தால் ஆகும் இசைக்கருவிகள் ஐந்து ஆமே 
** 5, 5 பெயர்கள் 44 
**1088

#45
** ஐவகை வேள்வி ஐவகைத் தாயர் 
தெய்வமே பிரமம் பூதம் தென்புலத்தோர் மனித்தர் 
ஐவகையோரை ஓம்பல் ஐவகைவேள்வி ஆமே 
உய்வகை பாராட்டும் தாய் ஊட்டும் தாய் முலைத்தாய் கைத்தாய் 
செய்வகை அறிந்து போற்றும் செவிலித்தாய் ஐவர் தாயர் 
** 5, 5 பெயர்கள் 45 
**1089

#46
** ஐவகைத் தொழில் உடம்பின் ஐவகை அவத்தை 
இலகிய எண்ணல் ஊசி எழுதலே இலையைக் கிள்ளல் 
மலர் தொடுத்திடுதலே யாழ் வாசித்தல் தொழில் ஐந்தாகும் 
குலவு கொட்டாவி நெட்டை குறுகுறுப்பே மூச்சீடே 
அலமர ஒடுங்கி நட்டு விழுதல் மெய் அவத்தை ஐந்தே 
** 5,5 பெயர்கள் 46 
**1090

#47
** காடுபடு திரவியம் ஐந்து கடல் படு திரவியம் ஐந்து 
அரக்கு இறால் இனிய தேனே ஆய் மயிற் பீலி நாவி 
நெருக்கிய காட்டில் உற்ற  நெடுந் திரவியங்கள் ஐந்தாம் 
திரைக் கடல் படுவ உப்பு செய்ய ஒண் பவளம் வெண் முத்து 
இரைத்து எழு சங்கு ஓர்க்கோலை இவ்வைந்தும் என்னலாமே 
** 5, 5 பெயர்கள் 47
**1091

#48
** நாடு படு திரவியம் ஐந்து நகர் படு திரவியம் ஐந்து 
செந்நெல் செவ்விளநீர் மற்றைச் சிறுபயறுடனே வாழை 
கன்னல் இவ்வைந்தும் நாட்டில் கருதிய திரவியப் பேர் 
மின்னு கண்ணாடி பித்தன் வெந்திறல் மந்தி யானை 
மன்னவன் நகர் இயைந்து வரும் திரவியங்கள் என்ப 
** 5, 5 பெயர்கள் 48 
**1092

#49
** மலைபடு திரவியம் ஐந்து ஐம்புலன் 
கறியொடு கோட்டம் மிக்க கார் அகிலொடு தக்கோலம் 
நறிய குங்குமம் ஐந்து என்ப நன்மலைத் திரவியப் பேர் 
துறையில் ஐம்பொறி நுகர்ச்சி சுவை ஒளி ஊறே ஓசை 
அறையும் நாற்றங்கள் என்னும் அடைவு இவையாகும் அன்றே 
** 5, 5 பெயர்கள் 49 
**1093

#50
** மன்மதபாணம் ஐந்து அவற்றின் பெயர் ஐந்து 
அசைவிலா வனசம் சூதம் அசோகமே முல்லை நீலம் 
ஒசியும் வேள் கணைகள் ஆகும் உன்மத்தம் மதனம் மோகம் 
வசை இல் சந்தாபத்தோடு வசீகரணம் கணைப் பேர் 
இசையும் மற்று இவைகள் செய்தே இடும் அவத்தையும் மேற்சொல்வாம் 
** 5, 5 பெயர்கள் 50 
**1094

#51
** ஐங்கணை அவத்தை சுப்பிரயோகத்தின் 
** தன்மை விப்பிரயோகத்தின் தன்மை 
பெருகு சுப்பிரயோகம் பின் பிறந்த விப்பிரயோகம் மேல் 
மருவிய சோகம் மோகம் மரணமும் முறையே செய்யும் 
பெருகு சுப்பிரயோகம்தான் பேச்சொடு நினைவும் ஆகும் 
விரவு விப்பிரயோகம்தான் வெய்துயிர்த்து இரங்கல் ஆமே 
** 5, 2, 2 பெயர்கள் 51 
**1095

#52
** சோகத்தின் தன்மை மோகத்தின் தன்மை 
** மரணத்தின் தன்மை 
சோகமே வெதுப்பினோடு துய்ப்பவை தெவிட்டல் செய்யும் 
மோகமே அழுதலோடு மொழி பல பிதற்றல் என்ப 
வேகமாம் மரணம்தானே மிகு மயக்கோடு அயர்ப்பு ஆம் 
பாகு அடர் சொல்லின் நல்லாய் பகரும் நூல் இயல்பு இதாமே 
** 2, 2, 2 பெயர்கள் 52 
**1096

#53
** அந்தணர்க்குரிய ஆறு தொழில் அரசர்க்குரிய ஆறு தொழில் 
ஓதலே ஓதுவித்தலுடன் வேட்டல் வேட்பித்திட்டல் 
ஈதலே ஏற்றல் ஆறும் ஏற்கும் அந்தணர்தொழில் பேர் 
ஓதலே வேட்டல் ஈதல் உலகு ஓம்பல் படைபயிற்றல் 
மேதகு போர்செய்து ஈட்டல் வேந்தர் செய் தொழில்கள் ஆறே 
** 6, 6 பெயர்கள் 53 
**1097

#54
** அரசர்க்குரிய ஆறு அங்கம் வைசியர்க்குரிய ஆறு தொழில் 
படை குடி கூழ் அமைச்சு பற்றிய நட்பினோடு 
நெடு மதில் அரசியற்கு நிகழ்த்திய ஆறு பேதம் 
மிடை அற ஓதல் வேட்டல் வேளாண்மை வாணிகத்தின் 
உடன் நிரைகாத்தல் ஏரை உழல் ஆறும் வசியர்க்கு ஆமே 
** 6, 6 பெயர்கள் 54
**1098

#55
** சூத்திரர்க்குரிய ஆறு தொழில் 
வசியர்தம் தொழில்கள் ஆறுள் வகுத்த முத்தொழில்களான 
பசு ஓம்பல் பொருளை ஈட்டல் பயிரிடல் புராணம் ஆதி 
நசையுற ஓதல் ஈதல் நண்ணும் அந்தணர் முன்னோர்க்கு 
வசை தவிர் அநுகூலம் ஆம் வகைத் தொழில் சூத்திரர்க்கு ஆம்
**1099

#56
** மன்னவர்கள் ஆறு 
அரிச்சந்திரன் நளனே வெற்றி ஆம் முசுகுந்தனோடு 
பொருப்புறப் புகழை வைத்த புருகுச்சன் புரூரவாவே 
விரித்த பூந் தாமக் கார்த்தவீரியன் என்று இன்னோரே 
தெரித்து முன் எடுத்து வைத்த திகிரி மன்னவர்கள் ஆறே 
** 6 பெயர்கள் 56 
**1100

#57
** வேதாங்கம் ஆறு உட்பகை ஆறு 
ஆறு அங்கம் சிக்ஷை கற்பம் ஆம் வியாகரணம் மற்றும் 
வீறிய நிருத்தம் சந்தோவிசிதம் சோதிடம் என்று ஆகும் 
கூறிடும் கொடிய காமம் குரோதமே உலோபம் மோகம் 
பாறிய மதங்களே மாற்சரியம் உட்பகை ஆறு என்ப 
** 6, 6 பெயர்கள் 57 
**1101

#58
** ஆறு வகைத் தானை 
** ஆறு வகைப் படை ஆறு சுவை 
ஒத்த வில் வேல் வாள் யானை உயர் பரி தேரோடு ஆறே 
சுத்த மூலம் கான் கூலி துணை பகை நாடு என்று ஆறே 
தித்தித்தல் புளித்தல் கூர்த்தல் சேரவே துவர்த்தல் காழ்த்தல் 
கைத்தலே அறுசுவைக்குக்  காட்டிய அபிதானங்கள் 
** 6, 6, 6 பெயர்கள் 58 
**1102

#59
** ஆறு வகை அகச் சமயம் 
அரிய உட்சமயம் ஆறே ஆவன சைவம் தூய்மை 
பெருகு பாசுபதத்தோடு பிறங்கு மாவிரதம் மற்றும் 
கருதிய வீடு பேறு காட்டு காளாமுகம் தான் 
மருவிய வாமம் மிக்க வைரவம் என்னலாமே 
** 6 பெயர்கள் 59 
**1103

#60
** ஆறு வகைப் புறச் சமயம் 
அறு புறச் சமயம் தானே அறை உலோகாயதம் பின் 
உறைதரு பெளத்தமே ஆருகதம் மீமாஞ்சமோடு 
குறி பெறு மாயாவாதம் கூறிய பாஞ்சராத்ரம் 
நெறி பெறும் இவையே என்ன நிகழ்த்துவர் நூல் வல்லோரே 
** 6 பெயர்கள் 60 
**1104

#61
** நாட்டின் ஆறு வகைச் சிறப்பு அறுவகை அரசியல் 
செல்வமே விளைவு மிக்க செழு வளம் செங்கோல் உண்மை 
ஒல்கு நோய் குறும்பு இலாமை உற்ற நாட்டு அமைதி ஆறு ஆம் 
நல் அறம் மறம்தான் மேலே நாட்டிய அறம் பொருட்கள் 
ஒல்லும் இன்பங்கள் ஆறும் ஓங்கு அரசியலின் பேதம் 
** 6, 6 பெயர்கள் 61
**1105

#62
** அறநிலை அறம் மறநிலை அறம் 
தந்தமின் வருணக்காப்பின் தரும் பொருளாலே பேணல் 
அந்த ஆறு இயற்கைதம்முள் அறநிலை அறம் என்று ஆகும் 
முந்து இகல் அறுத்தல் செஞ்சோற்று உதவி இல்லோர்ச் செகுத்தல் 
வந்த ஆனிரையை மீட்டல் மறநிலை அறம் என்று ஆமே 
** 1, 3 பெயர்கள் 62
**1106

#63
** அறநிலைப் பொருள் மறநிலைப் பொருள் 
நெறிவழி நின்று தத்தம் நிலையினால் உழந்து உழந்து 
பெறு பொருள் அறநிலைக்குப் பேசிய முறைமை ஆகும் 
செறுநர்தம் பொருளும் மற்றத் தெண்டத்தின் பொருளும் சூதின் 
மறுகிய பொருளும் அம்ம மறநிலைப் பொருளின் பேரே 
** 1, 3 பெயர்கள் 63
**1107

#64
** அறநிலை இன்பம் மறநிலை இன்பம் 
கூறும் ஓர் பருவம் நல்ல குலம் ஒத்ததாகத் தீ வேட்டு 
ஆறிய இல்லிருத்தல் அறநிலை இன்பம் ஆகும் 
ஏறுதான் தழுவல் வில்லால் இலக்கம் எய்திடுதல் எல்லாம் 
மாறுடை நெறியில் கூட்டம் மறநிலை இன்பம் ஆமே 
** 1, 3 பெயர்கள் 64 
**1108

#65
** கரும பூமிக்குரிய ஆறு தொழில் 
வரைவொடு தொழிலே வித்தை வாணிகம் உழவே சிற்பம் 
உரைசெயும் போக பூமி ஒழிவினில் ஆதிகாலம் 
விரை செறி பிண்டி வேந்தன் விதித்தலின் அஃதே அம்ம 
கரும பூமி என்னும் பேர் கண்டது ஒன்று உண்டு நூலின் 
** 6 பெயர்கள் 65 
**1109

#66
** போக பூமி 
விதியுளி பதினாறாண்டு மேவிய பன்னீராண்டு 
பதியொடு மனைவி தெய்வப் பத்துப் பூந்தருவும் வேண்டும் 
புதிய போகம் கொடுப்பப் புணர்ந்து தாம் பிரியார் ஆகி 
மதியொடு மறுவும் என்ன வாழ்வது போக பூமி
**1110

#67
** அறுவகைப் போக பூமி 
வரும் ஆதியரிவஞ்சம் பார் மதித்த நல்லரிவஞ்சம் பைம் 
பொருள் ஆர் ஏமத வஞ்சம் மேல் புகழ் பெறும் ஏம வஞ்சம் 
ஒரு தேவ குருவத்தோடே உத்தர குருவம் என்ன 
வரு போக பூமி ஆறு வகைப்படும் இயல்பதாமே 
** 6 பெயர்கள் 67 
**1111

#68
** ஏழுவகை மாதர்கள் ஏழு வகைத் தாது 
வரு நல் அபிராமி மற்றை மகேச்சுவரியொடு கெளமாரி 
மருள் தீர் வைணவி வராகி மகேந்திரியொடு சாமுண்டி 
இருமை ஏழ் திருக்கள் பேர் ஆம் இரதமே உதிரம் என்பு 
பரவு தோல் இறைச்சி மூளை பற்று சுக்கிலம் தாது ஏழே 
** 7, 7 பெயர்கள் 68 
**1112

#69
** மன்னர்க்குரிய ஏழுவகைப் பேறு எழு வகைப் பிறப்பு 
அறமொடு பொருளே இன்பம் அன்பொடு புகழ் மதிப்பு 
மறுமை என்று ஏழும் செங்கோல் மன்னவர் பேறே ஆகும் 
அறிவுள தேவர் மக்கள் அறிவுஇல் மீன் விலங்கு செந்து 
பறவை தாவரங்கள் என்ப பகரும் ஏழ்பிறப்பின் பேரே 
** 7,7 பெயர்கள் 69 
**1113

#70
** எழுவகைப் பிறப்பில் எண்பத்து நான்கு 
** நூறாயிர யோனிபேதம் 
ஊர்வன பதினொன்றாகும் ஒன்பான் மாநுடர்தம் பேதம் 
நீரினில் விலங்கு புள்ளு பப்பத்தாம் நெடிய தேவர் 
சாரும் ஈரேழ் நாலைந்தே தாவர யோனி பேதம் 
ஆரும் எண்பானான் கோடே அமைத்த நூறாயிரங்கள்
** ஏழு தீவு ஏழு கடல் 
**1114

#71
இவர்தரு நாவலோடே இறலியே குசை கிரவுஞ்சம் 
புவி புகழ் இலவு தெங்கு புட்கரம் தீவு ஏழின் பேர் 
உவர் கரும்பின் சாறோடே ஒண் மது நெய் சிறந்த 
நவமதாம் தயிர் பால் அப்பு நாட்டிய கடல் ஏழின் பேர் 
** 7, 7 பெயர்கள் 71 
**1115

#72
** ஏழு மேல் உலகம் 
நவம் ஆம் பூலோகம் மற்றும் நாட்டிய புவலோகம்தான் 
சுவலோகம் மகலோகம்மே சொற்றிடும் சனலோகம்மே 
தவலோகம் அதனினோடு சத்தியலோகம் இன்ன 
உவமானம் இல்லா மேல் ஏழ்உலகு எனும் அறிவன் நூலே 
** 7 பெயர்கள் 72 
**1116

#73
** ஏழு கீழ் உலகம் 
** கீழ் மேல் பதினான்கு உலகங்கள் 
அதலமே விதலம் மற்றும் அடைவான சுதலத்தோடும் 
இதமுறு தராதலம்மே ரசாதலம் மகாதலம்தான் 
புதிய பாதலத்தினோடு போற்றும் கீழ் ஏழு லோகம் 
உதவிய உலக நூல் ஈரேழு எனும் உலகுதாமே 
** 7 பெயர்கள் 73 
**1117

#74
** எழு வகை நிரய வட்டம் 
பெருகிய களிற்றின் வட்டம் பெரு மணல் வட்டம் பொங்கும் 
எரி பரல் வட்டம் மற்றும் எறி அரிபடையின் வட்டம் 
பொருஅற இரண்டும் மாழ்கப் போர்த்திடும் புகையின் வட்டம் 
இருள் வட்டம் பெருங் கீழ் வட்டம் என்ப ஏழ் நிரயவட்டம் 
** 7 பெயர்கள் 74 
**1118

#75
** ஏழு நரகம் ஏழு நதி 
குழைவுறு கூடசாலம் இரெளரவம் கும்பி பாகம் 
விழு பூதி அள்ளல் செந்து விதித்த மாபூதி ஆமே 
வழி கங்கை யமுனையே நன்மதை சரஸ்வதி காவேரி 
விழுமிய குமரி கோதாவரி எழுநதியின் பேரே 
** 7, 7 பெயர்கள் 75 
**1119

#76
** ஏழு முனிவர் நாட்டில் வரும் ஏழு குற்றம் 
புவி புகழ் கும்ப யோனி புலத்தியன் அங்கிராவே 
கவுதமன் வசிட்டன் மற்றைக் காசிபனொடு மார்க்கண்டன் 
இவர் எழுமுனிவர் விட்டில் தொட்டியர் ஏனம் கள்வர் 
அவமழை நால்வாய் கிள்ளை ஆம் இவை நாட்டு ஏழ்குற்றம் 
** 7, 7 பெயர்கள் 76 
**1120

#77
** ஏழு முகில் 
பொழியும் ஆவர்த்தம் எங்கும் போர்த்த புட்கலம் சங்காரம் 
கழியும் ஆசவனமே நீர்க்காரி ஏர் உதி சொற்காரி 
மொழி சிலாவருடம் என்ப முகில்கள் ஓர் ஏழின் நாமம் 
அழிவு காலத்தில் தோன்றி அடாவன படர்வ வானே 
** 7 பெயர்கள் 77 
**1121

#78
** எட்டுத் திசை யானை 
களிற்று அயிராவதம் சீர் காட்டு புண்டரீகம் தானம் 
குளித்த வாமனம் பொன்னோடைக் குமுதம் அஞ்சனம் வெம்போரை 
விளைத்திடும் புட்பதந்தம் மேவிய சார்வ பெளமம் 
பிளிற்று சுப்பிரதீகம்தான் பெருத்த எண் திசையானைப் பேர் 
** 8 பெயர்கள் 78 
**1122

#79
** எட்டு மலை 
மன்னிய இமயத்தோடு மந்தரம் கைலை விந்தம் 
கொன் வளர் நிடதம் ஏமகூடமே நீல வெற்பு 
துன்னிய கந்தமாதனத்தொடு சூழ் வெற்பு எட்டு ஆம் 
இன்னவை உலக நூலின் இயற்கையே என்று காண்மின் 
** 8 பெயர்கள் 79 
**1123

#80
** எட்டு வகைப் பாம்பு 
மன்னு வாசுகி அனந்தன் மருவிய தக்கன் சங்கன் 
பன்னிய குளிகனோடு பதுமன் மாபதுமன் மற்றைக் 
கொன் எயிற்று அழல் விழிக் கார்க்கோடகன் என்ற எட்டும் 
முன்னிய கடவுட் பாம்பின் மொழி அபிதானம் ஆமே
** 8 பெயர்கள் 80 
**1124

#81
** எட்டுத் திக்குப் பாலகர் அவர்க்குரிய இசை 
** சூரிய சந்திரர் சார் திசைகள் 
திண் திறல் மகவான் அங்கி செறி யமன் நிருதியோடு 
கொண்டிடும் வருணன் வாயு குபேரன் ஈசானன் என்ப 
எண் திசை உலோக பாலர் இவர் கீட்டிசை தொட்டு எண்ணும் 
கண்ட கீழ்பால் வடக்கு கதிரொடு திங்கட்கு ஆமே 
**1125

#82
** எட்டுத் திக்குக் குறி அட்ட மூர்த்தம் 
கொடி புகை சீயம் சீறிக் குரைத்து வள் என்னும் ஞாளி 
இடபமே கழுதை யானை ஏகு காகம் திக்கு அங்கம் 
படி நீர் தீ வளி ஆகாயம் பரிதியே விரவு திங்கள் 
அடல் புனை இயமானன் மற்று அட்ட மூர்த்தங்கள் ஆமே 
** 8, 8 பெயர்கள் 82 
**1126

#83
** எட்டு வகைச் சித்தி 
மன்னிய அணிமா மற்றை மகிமாவே கரிமாவோடு 
பின்னுறு லகிமா பிராத்தி பெறும் பிராகாமியங்கள் 
முன்னுறும் ஈசத்துவம் பின் முற்றிய வசித்துவம்தான் 
உன்னிய நூல்கள் ஓதும் ஓதும் ஓர் இருநான்கு சித்தி 
** 8 பெயர்கள் 83
**1127

#84
** எட்டு யோகாங்கம் 
இயமமே நியமம் முந்தி ஏற்ற ஆசனத்தினோடு 
நயனுறு பிராணாயாமம் நாட்டிய பிரத்தியாகாரம் 
சயமுறு தியானத்தோடு தாரணை சமாதி எட்டும் 
வியனுறும் யோகம்  என்று விதித்தனர் மதித்த நூலோர் 
** 8 பெயர்கள் 84 
**1128

#85
** எட்டுத் தருமாங்கம் 
அறம் ஐயப்படாமை மற்றை அவாவின்மை உவர்ப்பு ஒன்று இன்மை 
நெறி கெழு மயக்கம்இன்மை நின்ற அப் பழியை நீக்கல் 
உறுதியின் நிறுத்தல் பேரன்புடைமையே அறம் விளக்கல் 
இறைவனது அறத்துள் கூறும் எட்டு உறுப்பு இவைகள் ஆமே 
** 8 பெயர்கள் 85
**1129

#86
** அருகனது எண்குணம் 
கடையிலா ஞானத்தோடு காட்சி வீரியமே இன்பம் 
மிடையுறு நாமம்இன்மை விதித்த கோத்திரங்கள்இன்மை 
அடைவுஇலா ஆயுவின்மை அந்தராயங்கள்இன்மை 
உடையவன் இறைவன் என்ன உரைக்கும் ஆருகத நூலே 
** 8 பெயர்கள் 86
**1130

#87
** சிவனுக்குரிய எண் குணம் 
இன்னவை அருகநூலின் இசைக்கும் எண்குணங்கள் மற்றும் 
தன் வயம் தூய தேகம் தகும் இயல்புணர்வு மேலாப் 
பன்னும் முற்றுணர்வினோடு பாசங்கள் இயல்பின் நீங்கல் 
முன்னே பேரருளே மற்றை முடிவிலா ஆற்றல் பின்னும் 
** 8 பெயர்கள் 87 
**1131

#88
** கடவுளின் இலக்கணம் 
வரம்புஇலா இன்பம் என்றே வாய்த்திடும் குணங்கள் எட்டும் 
தரம்பெறு சைவநூவின் சாற்றிய தொகையாம் என்ப 
திருந்தும் இக் குணங்கள்தானே சேர்ந்தவன் யாவன் என்னில் 
பொருந்திய உலகம் எல்லாம் புரந்திடும் கடவுள் ஆமே
**1132

#89
** அருகனுக்கு ஆகா என விலக்கப்பட்ட எட்டுக் குற்றம் 
மன்னிய அறிவு காட்சி மறைத்தல் வேத நீயத்தோடு 
துன்னு மோக நீயம் ஆயு தொடர் நாம கோத்திரங்கள் 
முன்னுறும் அந்தராயம் மொழிந்த எண்குற்றம் ஆகும் 
இன்னவை தீர்ந்தோன் யாவன் யாவர்க்கும் இறைவன் ஆமே 
** 8 பெயர்கள் 89 
**1133

#90
** வைசியர்க்குரிய எண் வகைக் குணம் 
பெறுவது தெரிதல் ஈட்டல் பேணி மற்று அவை பகுத்தல் 
இறுவது அஞ்சாமை என்றும் இடன் அறிந்து ஒழுகல் வந்தே 
உறு பெருந் தனிமையாற்றல் உடன் முனிவிலனே ஆதல் 
மறு அறு பொழுதில் கூடல் வசியர்தம் குணங்கள் எட்டே 
** 8 பெயர்கள் 90 
**1134

#91
** அட்ட கணிதம் அட்ட மங்கலம் 
குணகாரம் பரியச்சம்தான் குறித்த பாற்கரமே மூலம் 
தணவா மானதமே கன்மம் சலிதியே தருதம் எட்டும் 
கணியார்தம் கணிதம் தீபம் கவரி கண்ணாடி தோட்டி 
புணர் மீனே முரசு கும்பம் பொலி கொடி சுபம் ஓர் எட்டே 
** 8, 8 பெயர்கள் 91
**1135

#92
** எண் வகை மெய்ப்பரிசம்
** நாட்டில் வரும் எண்வகைக் கேடு 
தட்டலே பற்றலோடு தடவலே தீண்டல் குத்தல் 
வெட்டலே கட்டல் ஊன்றல் மெய்ப் பரிசங்கள் எட்டு ஆம் 
விட்டில் தன் அரசு நால்வாய் மிகு மழை மிகு காற்றோடே 
நட்டம் வேற்று அரசு கிள்ளை நாடு உறும் கேடு எட்டு என்ப 
** 8, 8 பெயர்கள் 92 
**1136

#93
** எண் வகை மணம் 
பிரமமே பிரசாபத்தியம் பெருகும் ஆரிடமே தெய்வம் 
கருது காந்தருவத்தோடே காட்டிய அசுரம் மற்றும் 
பரவிய இராக்கதங்கள் பைசாசம் இருநான்கு என்ப 
மருவிய உலகு இயற்கை வகுத்திடு மணங்களின் பேர் 
** 8 பெயர்கள் 93
**1137

#94
** எண் வகை மாலை 
நிரை கவர்ந்திடுதல் வெட்சி நிரை மீட்டல் கரந்தை என்ப
வெருவார் மேல் சேறல் வஞ்சி மீட்டு எதிர் ஊன்றல் காஞ்சி 
வரும் நொச்சி  புரிசை காத்தல் வளைத்திடல் உழிஞை ஆகும் 
பொருவது தும்பை என்ப போர் வெல்லல் வாகை ஆமே 
** 8 பெயர்கள் 94 
**1138

#95
** அரசர்க்குரிய எண்பேராயம் 
கரணத்தின் திரள்கள் வாய்ந்த கடைகாப்போர் நகரிமாக்கள் 
தரு படைத்தலைவர் மற்றும் தன் கிளைச் சுற்றம் யானை 
புரவி ஊர்வோரே என்றும் போற்று காவிதியர் என்றும் 
விரவிய எண்பேராயம் வேந்தருக்கு அமைத்ததாமே
** 8 பெயர்கள்
**1139

#96
** எண் வகை உடற்குறை செய்யுளுக்குரிய 
** எண் வகைக் கணம் 
குறளொடு செவிடு மூங்கை கூன் மருள் குருடு மாவே 
உறும் உறுப்பு இல்லாப் பிண்டம் ஓதிய எண் மெய் எச்சம் 
நிறையும் நீர் நிலனே தேயு நிகழ் சுடர் மதியே வானம் 
பெறும் இயமானன் வாயு பேசிய கணங்கள் எட்டே 
** 8, 8 பெயர்கள் 96 
**1140

#97
** நல்ல கணம் தீய கணம் 
நிலனொடு நீர் வெண் திங்கள் நேர் இயமானன் வெய்யோன் 
உலவு தீ வாயு விண் என்று ஓதிய கணங்கள் எட்டில் 
நலம் உறு கவிதை முன்னர் நாட்டிய நான்கும் நன்று ஆம் 
கலகம் ஆம் பின்னர் நான்கு கணங்களும் காணுங்காலே 
** 8 8 பெயர்கள் 97 
**1141

#98
** எண் வகைக் கணத்துக்கு உரிய சீர் 
நிரையது மூன்றுதானே நிலக்கணம் நேர் முன் ஆகி 
நிரையிணை பின்னர் ஆயின் நீரே நேரிணை பின்னாகி 
நிரையது முன்னர் ஆயின் நெடிய வெண் திங்கள் என்ப 
புரையற நேர் மூன்று ஆகில் பொருந்திய இயமானன்தான்
**1142

#99
** எண் வகைக் கணத்துக்கு உரிய சீர் (தொடர்ச்சி) 
நிரை நடுவாக மற்றை நேர் இருபாலும் வெய்யோன் 
நிரை இருபாலும் நிற்க நேர் நடு தீ என்று ஆகும் 
நிரை இறுவாக மற்று  நேரிணை முன்னே வாயு 
நிரையிணை முன்னர் ஆகி நேர் இறின் நீள் ஆகாயம்
**1143

#100
** பெரியோர்க்குச் செய்யும் நவ புண்ணியம் 
எதிர்கொளல் பணிதலோடும் இருக்கை கால் கழுவல் நாறும் 
புது விரை நறும் பூ தூபம் புனை விளக்கு அடைவே ஏத்தல் 
விதியின் வாள் அரவு தோலும் விடமும் நீத்தென்ன நீத்த 
அதிகருக்கு அமுதம் ஏந்தல் அவை நவ புண்ணியம்தான் 
** 9 பெயர்கள் 100 
**1144

#101
** நவகண்டம் 
வடபாலே தென்பால் கீழ்பால் வகுத்த மேல்பால் விதேகம் 
வடபாலே தென்பால் மீது வைத்திடும் இரேபதங்கள் 
வடபாலே தென்பால் மீது வைத்திடு பரதத்தோடு 
வடிவாம் மத்திம கண்டங்கள் வரு நவகண்டம் ஆமே 
** 9 பெயர்கள் 101
**1145

#102
** நவ தாரணை 
வைத்த நாமங்கள் மாயை வச்சிரம் சித்திரங்கள் 
சத்தமே வத்துவோடு சதுரங்கம் செய்யுள் எட்டும் 
புத்தரே காணப்பட்ட பொருட் குறை நிறைவே என்றும் 
ஒத்த தாரணைகள் என்ப ஓதும் ஒன்பானும் ஈதே 
** 9 பெயர்கள் 102 
**1146

#103
** செய்யுளுக்குரிய நட்சத்திரம் ஒன்பதாகப் பிரித்தறிதல் 
தனது நாளின் பின் நாளும் சார்ந்திடு நாலும் ஆறும் 
வினவிய எட்டு ஒன்பானும் விருத்தம் ஒன்றில்லை தன் நாள் 
இனைய மூன்றுடன் ஐந்தாம் நாள் ஏழாம் நாள் இவை பொருந்தா 
நினையும் இம் மூன்று ஒன்பான் நாள் நேர்படும் மூன்று வட்டம்
**1147

#104
** நவ தாளம் 
அடியினில் சமதாளத்தோடு அருமமே அரிதாளம் மேல் 
படிமமே துருவதாளம் பற்றிய சித்திரம்தான் 
விடதாளம் சயமே மற்றும் மேவிய நிவிர்த தாளம் 
நடை உறு புலவர் ஓதும் நவதாளம் இவைகள் ஆமே 
** 9 பெயர்கள் 104 
**1148

#105
** நவமணிகள் 
மரகதம் பவளம் நீலம் வச்சிரம் பதுமராகம் 
விரவிய தரளமே கோமேதகம் புருடராகம் 
உரவிய காந்தி விட்டே உமிழ் வயிடூரியம்தான்  
பெருகிய நவமணிக்குப் பெயர் இவை ஆகும் என்ப 
** 9 பெயர்கள் 105 
**1149

#106
** நவரசம் பத்து வகைச் சிற்பத் தொழில் உறுப்பு 
நல்ல சிங்காரம் வீரம் நகை சாந்தம் கருணை குற்சை 
ஒல்லும் அற்புதம் பயத்தோடு உறு கோபம் இரதம் ஒன்பான் 
கல் உலோகம் மண் செங்கல் கண்டசர்க்கரை மெழுக்கு 
சொல்லிய மரமே தந்தம் சுதை வண்ணம் தொழில் சிற்பர்க்கு ஆம் 
** 9 10 பெயர்கள் 106 
**1150

#107
** தசாங்கம் பத்து வகைத் துவர்
நெடு மலை யாறு நாடு ஊர் நீண்ட தார் புரவி யானை 
கொடி முரசுடனே தானை கூறிய தசாங்கம் என்ப 
படி புனை நாவலே முப்பழம் நாற்பால் மரம் முத்தக் கா
சொடு மாவின் தவிர் பத்து என்ப ஓதிய துவரின் பேரே 
** 10, 10 பெயர்கள் 107 
**1151

#108
** அரி திருமால் அவதாரம் பத்து 
நாமம் மீன் ஆமை பன்றி நாரசிங்கத்தினோடு 
வாமனன் பரசுராமன் வானரர் தொழும் இராமன் 
பாமலி வாசுதேவன் பலதேவனுடனே கற்கி 
ஆம் இவை பத்தும்தானே அரி அவதாரம் என்ப 
** 10 பெயர்கள் 108 
**1152

#109
** வேளாளருடைய பத்து வகைச் செய்கை 
வரு விருந்தோம்பல் ஆணைவழிநிற்றல் ஒழுக்கம் ஊக்கம் 
கரில்அகத்துஇன்மை என்றும் கைக்கடன்ஆற்றல் அன்றே 
உரியதாம் இறைஇறுத்தல் ஒற்றுமைகோடல் போற்றல் 
விரவு மாண்வினைதொடங்கல் வேளாளர் செய்கை பத்தே 
** 10 பெயர்கள் 109 
**1153

#110
** பெண்களால் மலரும் பத்து வகை மரங்கள் 
ஏடு அவிழ் மகிழ் சுவைக்க எழில் பாலை நண்பு கூட 
பாடலம் நிந்திக்க தேன் படி முல்லை நகைக்க புன்னை 
ஆட நீள் குரா அணைக்க அசோகு உதைத்திட வாசந்தி 
பாட மா பார்க்க வார் சண்பகம் நிழல்படத் தளிர்க்கும் 
** 10 பெயர்கள் 110
**1154

#111
** கரந்து உறை கோள்கள் பத்து 
பரிதி இந்து இரண்டு சீறும் பை நாகக் கோள் இரண்டோடு 
இருசுடர் வளைந்து சூழும் பரிவேடம் நெடுக ஈண்டுப் 
பெருகிய வான் மீன் வானில் பெருந் தூமம் எதிர்ந்த வில்லுக் 
கருதும் இவ்வெல்லாம் பேசில் கரந்துறை கோள்கள் ஆமே 
** 10 பெயர்கள் 111 
**1155

#112
** ஆண்பிள்ளைக் கவி உறுப்புப் பத்து 
சாற்று காப்பு செங்கீரை தாலே சப்பாணி முத்தம் 
போற்று வாரானையே அம்புலி சிற்றில் சிறுபறை பின் 
ஏற்றிடும் சிறுதேர் ஆம் இப் பருவம் பத்தையும் இசைக்கும் 
தேற்றும் ஆண்பிள்ளைப்பாட்டு ஆசிரியம் சேர் விருத்தப்பாவே 
** 10 பெயர்கள் 112 
**1156

#113
** பெண்பிள்ளைக் கவி உறுப்புப் பத்து இக் கவிகள் 
** கேட்கப்படும் மாதங்கள் 
அரிவையர்க்கு ஆகில் ஈற்றில் அறை மூன்று பருவம் ஆகா 
உரியதாம் கழங்கு அம்மானை ஊசல் முன் ஏழினோடு 
வரும் மூன்றே ஆதி மூவேழ் மதிகாறு ஒற்றித்த மாதத்து 
இருபாலாரையும் கேட்பித்தல் இனிது ஐந்து ஏழாண்டுதானே 
** 10 பெயர்கள் 113
**1157

#114
** உயிர்க்குரிய பன்னிரு வகை வேதனை 
அனலுடன் அசனி சீதம் ஆயுதம் விடம் மருந்து 
புனல் வளி விடத்தையும்தான் புசிப்பிக்கும் பசியே தாகம் 
நனி மிகும் முனிவுஅறாமை நாட்டிய பிணியினோடே 
இனையும் வேதனை ஈராறும் எய்திடும் துன்பம் என்ப 
** 12 பெயர்கள் 114
**1158

#115
** பன்னிரு வகைத் தானை பத்தி சேனாமுகம் குல்மம் 
தந்தி ஒன்றே தேர் ஒன்று சாதியாம் புரவி மூன்று
வந்து அடும் பதாதி ஐந்து வகுத்திடும் பத்தி என்ப 
உந்தும் அப் பத்தி மூன்றே உறின் சேனாமுகம் என்று ஆகும் 
முந்து சேனாமுகம்தான் மும்மடி குல்மம் ஆமே 
**1159

#116
** கணம் வாகினி பிருதனை சமூ 
மருவிய குல்மம் மூன்று மடிதானே கணமதாகும் 
கருதிய கணமே மூன்று காட்டிய வாகினிப் பேர் 
பெருகு வாகினிதான் மூன்று பிருதனை ஆகும் என்ப 
வரு பிருதனைதான் மூன்று வகுத்திடும் சமூ ஆகும்மே 
**1160

#117
** பிரளயம் சமுத்திரம் சங்கு அநீகம் அக்குரோணி 
பேரியல் சமூவே மூன்று பிரளயம் பிரளயம்தான் 
ஓர் மூன்றே சமுத்திரம் ஆகும் உயர் சமுத்திரம் ஓர் மூன்று 
தேர்தரு சங்கு சங்கு மூன்றதே அநீகம் என்ப 
சோர்வு இலா அநீகம் மூன்றே சொல்லும் அக்குரோணி ஆமே
**1161

#118
** பதினெண் தேவகணங்கள் 
விரவு சாரணரே சித்தர் விஞ்சையர் பசாசர் பூதர் 
கருட கின்னரர் இயக்கர் காந்தருவர் சுரர் தைத்யர் 
உரகர் ஆகாசவாசர் உத்தர குருவோர் போகர்  
நிருதர் கிம்புருடர் விண்மீன் நிறை கணம் மூவாறு ஆமே
** 18 பெயர்கள் 118 
**1162

#119
** பதினெண் வகை மங்கலச் சொல் 
சீர் மணி பரிதி யானை திரு நிலம் உலகு திங்கள் 
கார் மலை சொல் எழுத்து கங்கை நீர் கடல் பூ தேர் பொன் 
ஏர் உறும் இவை மூவாறும் இதில் பரியாயப் பேரும் 
ஆரும் மங்கலச் சொல் செய்யுள் ஆய்ந்து முன் வைக்க நன்று ஆம்
** 18 பெயர்கள் 119 
**1163

#120
** உடம்புக்குரிய பதினெண் வகைக் குற்றம் 
பசி அதிசயமே உள்ளல் பயமே கையறவு மூப்பு 
கசிவு நீர்வேட்டல் வேண்டல் கதம் மதம் கேதத்தோடே 
ஒசியும் நோய் பிறப்பு இறப்போடு உவகையே உறக்கம் இன்பம் 
இசையும் ஈரொன்பான் குற்றம் இவை தீர்ந்தோன் இறைவன் ஆமே 
** 18 பெயர்கள் 120
**1164

#121
** பதினெட்டுப் புராணம் 
மச்சமே கூர்மம் சைவம் வைணவம் வராகம் லிங்கம் 
பத்மம் வாமனமே காந்தம் பவிடியம் ஆக்கினேயம் 
கற்புள பிரமம் கைவர்த்தம்மே நாரதம் மார்க்கண்டம் 
உற்ற பாகவதமே காருடம் பிரமாண்டம் தொன்னூல் 
** 18 பெயர்கள் 121 
**1165

#122
** அரசர்க்குரிய 21 வகைச் சின்னம் 
முடி குடை கவரி தோட்டி முரசு சக்கரமே நால்வாய் 
கொடி மதில் தோரணம் நீர்க்குடம் மலர் மாலை சங்கு 
கடலொடு மகரம் ஆமை கயல் இணை அரிமா தீபம் 
இடபம் ஆசனம் மூவேழும் இறை திருப்பொறிகள் ஆமே 
** 21 பெயர்கள் 122 
**1166

#123
** பேடிக்குரிய 25 வகை இலக்கணம் 
இச்சையாற் பேடி செய்யும் இலக்கணம் இப்பால் கேண்மின் 
நச்சவே பேசலோடு நல்லிசை ஓர்ந்து நிற்றல் 
அச்சம் ஒன்றில்லாதாகி ஆண் பெண் ஆம் அடைவு இயற்றல் 
உச்சியிற் கையை வைத்தல் ஒரு கரம்தானே வீசல்
**1167

#124
விழிகளை வேறாச்செய்தல் வெம் முலை நலித்து நிற்றல் 
சுழலவே நோக்கல் நக்கு நாணல் தொந்தோம் என்று ஒத்தல் 
கழி நடம் பயிற்றல் வேறு காரணம் இல்லாக் கோபம் 
அழுதிடல் நடுநடுங்கி ஆங்கு ஒரு பக்கம் பார்த்தல்
**1168

#125
இரங்குதல் வருந்துதல் யாரும் இரங்கவே பேசிக் காட்டல் 
குரங்கல் கோதாடல் கூடல் கூவிளி கொண்டு நிற்றல் 
மருங்கினில் கையை வைத்தல் வாங்குதல் பாங்கி தன்னைத் 
திருந்தவே நோக்கல் ஏலேல் என்றலும் செய்கை ஆமே 
** 25 பெயர்கள் 125 
**1169

#126
** 28 செய்யுள் அலங்காரம் 
உருவகம் உவமையோடே ஊன்றிய அடி மடக்கே 
விரி சுடர் நிலை மடக்கே வேற்றுமை வெளிப்படுத்தல் 
மருவிய நோக்கே உட்கோள் வரும் தொகை மொழியே மற்றைத் 
தரும் மிகை மொழியே வார்த்தை தன்மை வேறு அருத்தம் வைப்பே
**1170

#127
** 28 செய்யுள் அலங்காரம் (தொடர்ச்சி)
சிறப்பதாம் நிலை சிலேடை மறுத்திடு நிலையின் வார்த்தை 
நிறுத்து உடனிலையிற் கூட்டம் உவமாரூபகத்தினோடு 
வெறுப்பிலா மகிழ்ச்சி செய்து மிகும் நுவலா நுவற்சி 
உறுத்தியே இடும் தலைக்கூட்டு உயர் அணி தெரிசனங்கள்
**1171

#128
** (முன்னதன் தொடர்ச்சி) நல்லாசிரியன் இலக்கணம் 
உரை கெழு பாராட்டோடே ஒருங்கியல் நிலையே ஐயம் 
விரவிய நிலை வாழ்த்து என்ன விதித்திடும் இருபத்தெட்டாம் 
மருவிய அலங்காரத்தை வரிசையில் பாடவல்லோன் 
பரிவுறும் எழுத்தும் சொல்லும் பொருள் யாப்போடு இவை அறிந்தோன்
** 28 பெயர்கள் 128 
**1172

#129
** நல்லாசிரியன் இலக்கணம் (தொடர்ச்சி) 
இந்த நல்லிலக்கணத்தில் இசைந்திடு துறையும் வல்லோன் 
நந்தம் முத்தமிழினோடு நாற்கவி பாட வல்லோன் 
வந்து நற்குலத்து உதித்தோன் வடிவமோடு ஒழுக்கம் உள்ளோன் 
அந்த ஆறையாண்டு ஏகி ஆண்டு எழுபான் நீங்காதோன் 
**1173

#130
** புலவர்கவிதையை அரசர் ஏற்கும் முறை 
வழுக்கள் தீர் கவிதைதன்னை வசையிலார் கொள்ளுங்காலை 
கொழிப்பில் தோரணங்கள் நாட்டி கொடி மாடம் எடுத்து உயர்த்தி 
விழுத்தகு கோலம் செய்து மென் துகில் விரித்த பின்றை 
தெழித்திடும் பல்லியம்தான் முகில் எனத் திமிதிம் என்ன 
**1174

#131
அட்ட மங்கலங்கள் ஏந்த அரிவையர் பலரும் வாழ்த்த 
மட்டு அவிழ் பாளை வேய்ந்த மணிக்குடம் தீபம் மல்க 
பட்ட பல் உணா முளைத்த பாலிகை விதானப்பந்தர் 
இட்ட மாமனையில் சான்றோர் இயல்புளி இரீஇய பின்னை 
**1175

#132
மன்னும் ஆசனத்து இருத்தி வளம் மலி கவிதை கேட்டுப் 
பொன்னொடு துகிரும் தூசும் பூண் முடி கடகத்தோடும் 
இன்னவை பலவும் ஈந்திட்டு ஏழடி புலவன் பின்போய் 
நின்ம் என நிற்றல் மன்னர் நிலமிசை வழக்கது ஆமே 
**1176

#133
** பரிசு கொடாத உலோபியர்க்குச் செய்யுள் செய்வகை 
பாட்டுடைத் தலைவன் தானே பரிசில் ஈயாத காலை 
மீட்டு ஒரு பெரியன் ஊர் பேர் வேறு சொல் இயற்றிச் சேர்க்கின் 
ஈட்டு செல்வங்கள் பொன்றி ஈங்கு இவன் திருவும் மாய்ந்து 
நாட்டிய அவனுக்கு ஆகும் நவின்ற நூல் வழக்கு இது ஆமே 
**1177

#134
** பரிசில் கொடாதவன் அடையும் கதி 
பரிசில் ஈயாத பாவி பாமாலை செம்பூச்சூட்டி 
வரி அரவு உறை வன்மீகம் மாகாளி முன்றில் தன்னில் 
உரிய நீள் மனைப் புறத்தில் ஒள் எரி கொளுத்தில் வீயும் 
தெரியும் ஓராண்டில் என்றே செப்பினன் முனிவன்தானே 
**1178

#135
** முப்பத்திரண்டு அறம் 
ஆதுலர் சாலை ஐயம் அறுசமயத்தோர்க்கு உண்டி 
ஓதுவார்க்கு உணவு சேலை உறும் ஏறு விடல் காதோலை 
மாது போகம் மகப் பால் மகப்பேறு மக வளர்த்தல் 
வேதை நோய் மருந்து கொல்லா விலை கொடுத்து உயிர் நோய் தீர்த்தல்
**1179

#136
கண்ணாடி பிறர் இல் காத்தல் கன்னிகாதானம் காவே 
வண்ணார் நாவிதரே சுண்ணம் மடம் தடம் கண் மருந்து 
தண்ணீர் பெய் பந்தல் கோலத் தலைக்கு எண்ணெய் சிறைச் சோறோடு
பண்ணான விலங்கு ஊண் நல்கல் பசுவின் வாயுறை கொடுத்தல்
**1180

#137
** முப்பத்திரண்டு அறம் (தொடர்ச்சி)
அறவையாம் பிணம் அடக்கல் அறவைத் தூரியம் வருந்தா 
நிறுவியே இடம் விடாமல் நிறையத் தின்பண்டம் நல்கல் 
உறுதி ஆ உரிஞ்சுகின்ற தறி இவை ஓதும் எண்ணான்கு 
அறநிலை அபிதானங்கள் அம்பிகை செய்யுமாறே
**1181

#138
** ஓரறிவுயிர் ஈரறிவுயிர் மூவறிவுயிர் நாலறிவுயிர் 
உற்று அறி புலன் ஒன்றால் புல் மரமே ஓரறிவின் சீவன் 
முற்றும் ஈரறிவின் சீவன் முரள் நந்தே ஆதி நாவால் 
செற்ற மூவறிவின் சீவன் சிதல் எறும்பு ஆதி மூக்கால் 
சொற்ற நாலறிவின் சீவன் தும்பி வண்டு ஆதி கண்ணால் 
**1182

#139
** ஐயறிவுயிர் மன அறிவு 
வானவர் மனிதர்  கீழ் போய் மாழ்கிய நரகரோடு 
கான் உறை விலங்கு புள்ளு காட்டும் நாலறிவினோடே 
ஊனம்இல் செவியும் ஆங்கே உறுவினை அறிவின் சீவன்
மான் அமர் நோக்கின் நல்லாய் மனமும் ஒன்று அதிகம் ஆமே 
**1183

#140
** காப்புக்கு முன் எடுக்கும் கடவுள் 
காப்புக்கு முன் எடுக்கும் கடவுள்தான் மாலே ஆகும் 
பூப் புனை மலரின் செல்வி புனைபவன் ஆதலானும் 
காப்பவன் ஆதலானும் கதிர்முடி கடகத்தோடு 
வாய்ப்பதாம் மதாணி பூணூல் வரிசையின் புனைதலானும்
**1184

#141
** அருகன் ஊர்தி படை கொடி சிவன் வாகனம் படை 
அருகனது ஊர்திதானே அம்புயம் படை நல் காட்சி 
பெருகிய ஞான சீலம் பெருங் கொடி அருளே என்ப 
மரு மலர்க் கொன்றையார்க்கு வாகனம் இடபம் ஆகும் 
பரசொடு கடிய சூலம் பினாக வில் படைகள் ஆமே
**1185

#142
** திருமால் வாகனம் கொடி படை 
** பிரமன் வாகனம் படை கொடி 
கரிய மால் துவசம் ஊர்தி கலுழன் என்று உரைக்கற் பாற்றே 
வரி சிலை ஆழி சங்கு வாள் கதை படை ஐந்து ஆகும் 
பிரமனது ஊர்தி அன்னம் பெரும்படை பாசம் ஆகும் 
அருமறை கொடியே ஆகும் அந்தணர் தமக்கும் ஆமே
**1186

#143
** பலதேவன் படை கொடி யமன வாகனம் படை
** காலன் படை குபேரன் வாகனம் 
பரிவுள பலதேவற்குப் படை நாஞ்சில் கொடியே பெண்ணை 
எருமையே யமன்தன் ஊர்தி எறிபடை பாசம் தண்டு ஆம் 
கரியதோர் கூற்றினுக்குக் கடும்படை கணிச்சி ஆகும் 
புரி நரவாகனம் பூம் புட்பகம் குபேரன் ஊர்தி 
**1187

#144
** சூரியன் சந்திரன் ஊர்திகள் முருகன் ஊர்தி 
** படை கொடி 
குறைவு இலாத் தனிக்கால் பொற்றேர் கூறிய அருக்கன் ஊர்தி 
நிறைதரு மதியின் ஊர்தி நீள் முத்து விமானம் என்ப 
அறுமுகன் ஊர்திதானே யானையும் மயிலும் என்ப 
உறு படை வேல் ஆம் மற்றை ஒண் கொடி கோழி ஆமே
**1188

#145
** இந்திரன் ஊர்தி சோலை குதிரை மண்டபம் 
** மாளிகை கொடி 
கரி அயிராவதம் பூங் கற்பகக் காவே சோலை 
உரிய வெம் பரியின் பேரே உச்சயிச்சிரவம் ஆகும் 
மருவு மண்டபம் சுதன்மை மாளிகை வசந்தம் என்ப 
பெருகிய உருமு மற்றைப் பெரும் கொடி புரந்தரற்கு ஆம்
**1189

#146
** காளி ஊர்தி கொடி துர்க்கை படை ஊர்தி 
** மூதேவி வாகனம் படை கொடி 
அழகிய காளி ஊர்தி யாளியே துவசம் பேய் ஆம் 
பழுது அறு துர்க்கை பற்றும் படை வாள் ஆம் கலையே ஊர்தி 
கெழுமு மூதேவி ஊரும் கிளர்ந்த வாகனத்தின் நாமம் 
கழுதையாம் படை துடைப்பம் காக்கை அம் பதாகைதானே
**1190

#147
** சத்தமாதர் வாகனமும் ஊர்தியும் படையும் 
அன்னமே இடபம் தோகை அணி மயில் கலுழன் சீயம் 
பின்னியல் யானையோடு பேய் எழு பெண்கள் ஊர்தி 
மன்னும் நூல் மறை பினாக வார் சிலை சத்தி ஆழி 
துன்னிய கலப்பை வச்ரம் சூலம் வெம் படைகள் ஆமே 
**1191

#148
** சேரன் சோழன் பாண்டியன் கொடி - மாலை 
** புலவர் கொடி 
மன்னிய சேரனுக்கு வரி சிலைக் கொடி பனந் தார் 
பொன்னி அம் துறைச் சோழற்கே புலிக் கொடி ஆத்தி மாலை 
தென்னவன்தனக்குத்தானே சேல் கொடி வேப்பந்தார் ஆம் 
பன்னிய கேழல் வேழப் பதாகையும் புலவருக்கே
**1192

#149
** அரசு உவாவின் இலக்கணம் 
கால் ஒரு நாலும் கோசம் கை வால் ஏழ் நிலத்தின் தோய்ந்து 
பாலொடு சங்கு போலும் பதத்து உகிர் விதத்தின் சூழ்ந்து 
வாலொடு கால் மெய் கை வெண் மருப்பினால் உயிரைக் கொன்றே
ஏல ஏழு உயர்ந்து ஒன்பான் நீண்டு ஈரைந்து முழத்தது ஆகி
**1193

#150
பெறுமுறை முன்பு உயர்ந்து பின் பணிந்து அழகிதாய 
தறுகண்ணது ஆகி சூழி சார்ந்த மத்தகத்தது ஆகி 
முறம் நிகர் கன்ன தானம் மூரி மால் யானைதானே 
அற நெறி செலுத்தும் செங்கோல் அரசு உவா ஆகும் என்ப 
**1194

#151
** அரசர்க்குரிய குதிரையின் இலக்கணம் 
மாதர்தம் மனத்தை ஒத்த மனத்ததாய் வாழை உற்ற 
கோது இலா மடலே போலக் கொழுந்துள செவியது ஆகிப் 
பாதம் முன் வெந்^ எருத்து பகர் முகம் பால்மைத்தாகி 
ஓதும் எண்பத்திரண்டு அங்குலி உயர் பரி மன்னர்க்கு ஆம் 
**1195

#152
** பேரெண்களின் வகை 
ஒரு பதினாயிரம் பத்து உரை அதியுகம் என்று ஆகும் 
வரும் அதியுகம்தான் மீள மதித்த நூறாயிரங்கள் 
பிரமம் ஆம் பிரமம் நூறாயிரம் அது கோடிதானே 
அரியதோர் கோடி பத்தாம் அர்ப்புதம் என்று சொல்லும் 
**1196

#153
** பேரெண்களின் வகை (தொடர்ச்சி) 
கரு தரு கோடி நூறு கணகம் ஆம் கணகம் பத்து 
பெருகிய கற்பம் ஆகும் பேணும் அக் கற்பம் பத்து 
திரு மிகு நிகற்பம் ஆகும் நிகற்பம் ஈரைந்து சங்கம் 
தரம் உள சங்கம் பத்து சமுத்திரம் என்றே சாற்றும் 
**1197

#154
உரைத்த இப் பல் பேர்க் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதிதன்னில் 