<<முந்திய பக்கம்

மண்டல புருடர் இயற்றிய சூடாமணி நிகண்டு - தொடரடைவு

நெ - முதல் சொற்கள்
நெகிழ்தல் 1
நெகிழ்தலும் 1
நெஞ்சு 5
நெஞ்சும் 1
நெஞ்சே 1
நெட்டி 1
நெட்டை 1
நெடநெட 1
நெடித்தலும் 1
நெடிய 18
நெடியது 2
நெடியோன் 1
நெடில் 1
நெடிலொடு 1
நெடு 5
நெடுக 1
நெடுங்கழுத்தல் 1
நெடுங்குடை 1
நெடுந்தெரு 1
நெடும் 12
நெடுமால் 1
நெடுமை 3
நெடுமொழி 1
நெய் 7
நெய்த்துடுப்பினுக்கு 1
நெய்த்தோர் 1
நெய்தல் 6
நெய்தல்தலைவனை 1
நெய்தல்மாக்கள் 1
நெய்தலில் 2
நெய்தலே 1
நெய்தலோடு 1
நெய்தற்பூ 1
நெய்யரி 1
நெய்யினோடே 1
நெய்வார் 1
நெரித்தல் 1
நெரிதல் 1
நெரிவும் 1
நெருக்கம் 1
நெருக்கிய 1
நெருங்கல் 1
நெருங்கலும் 1
நெருங்கலோடு 1
நெருங்கு 1
நெருங்குதல் 1
நெருஞ்சில்முள் 1
நெருநலும் 1
நெருப்பின்பேர் 1
நெருப்புறு 2
நெரேலென்றிட்டல் 1
நெல் 6
நெல்மா 2
நெல்லி 2
நெல்லிற்கும் 1
நெல்லின் 2
நெல்லினோடு 1
நெல்லு 1
நெல்லும் 1
நெளிர்தல் 1
நெற்கதிர் 1
நெற்கதிரே 1
நெற்பொதுவும் 1
நெற்போர் 1
நெற்றி 6
நெற்றிக்குறிகள் 1
நெற்றிப்பேர் 1
நெற்றியே 1
நெறி 8
நெறிப்பட 1
நெறிபடும் 2
நெறியில் 1
நெறியே 1
நெறியொடு 1
நெறுநெறு 1
நென்னலும்தான் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    நெகிழ்தல் (1)
படியவே நெகிழ்தல் ஒல்கல் இரு பெயர் குழைவின்பாலாம் - 9.செயல்:9 44/4

 TOP
 
    நெகிழ்தலும் (1)
அலர்தலே அவிழ்தல் விள்ளல் மலர்தல் ஆம் நெகிழ்தலும் பேர் - 4.மரப்பெயர்:4 50/1

 TOP
 
    நெஞ்சு (5)
உன்னமே அகமே சித்தம் உள்ளமே இதயம் நெஞ்சு
  முன்னம் ஏழ் மனத்தின்பேர் ஆம் முதிர் சிந்தை நினைவு சேத்து - 8.பண்பு:8 34/1,2
சிரம் உழை இளியே நெற்றி சேர்ந்திடும் விளரி நெஞ்சு ஆம் - 10.ஒலிப்பெயர்:10 36/2
நெஞ்சு என்ப மனம் மார்பின்பேர் நிழல் செல்வம் குளிர்ச்சி சாயை - 11.ஒருசொல்பல்பொருள்:11 40/1
உள்ளமே முயற்சி நெஞ்சு ஆம் உஞற்று இழுக்கொடு தாளாண்மை - 11.ஒருசொல்பல்பொருள்:11 267/3
முன்னலே நினைவு நெஞ்சு ஆம் முன்னம் சீக்கிரியோடு எண்ணம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 297/1

 TOP
 
    நெஞ்சும் (1)
செப்பமே நடுநிலை பேர் தெருவொடு நெஞ்சும் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 133/2

 TOP
 
    நெஞ்சே (1)
அகலமே மருமம் நெஞ்சே ஆகமே உரமே மார்பு ஆம் - 2.மக்கள்பெயர்:2 90/1

 TOP
 
    நெட்டி (1)
கிடை சடை உவமை நெட்டி கீதமே இசையும் வண்டும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 67/2

 TOP
 
    நெட்டை (1)
குலவு கொட்டாவி நெட்டை குறுகுறுப்பே மூச்சீடே - 12.பல்பொருள்கூட்டம்:12 46/3

 TOP
 
    நெடநெட (1)
திடுதிடு என்றிட்டலோடு நெடநெட நெறுநெறு என்றல் - 10.ஒலிப்பெயர்:10 49/3

 TOP
 
    நெடித்தலும் (1)
நீல உண்கண்ணாய் மற்று நெடித்தலும் நெடும் போழ்து என்ப - 1.தேவப்பெயர்:1 88/4

 TOP
 
    நெடிய (18)
காரியே புறத்தவன் பூம் கடல்வண்ணன் நெடிய சாத்தா - 1.தேவப்பெயர்:1 36/1
நீலியே நெடிய காத்தியாயினி மேதிச்சென்னி - 1.தேவப்பெயர்:1 49/1
நெடிய மீன் மயிலை மற்சம் சலசரம் நேரும் மீனம் - 1.தேவப்பெயர்:1 74/4
நெடிய ஊரு குறங்கு நீள் வாமம் கவான் தொடை பேர் - 2.மக்கள்பெயர்:2 88/1
நெடிய காத்திரம் உறுப்பு நீள் அங்கம் அவயவப்பேர் - 2.மக்கள்பெயர்:2 102/3
நெடிய ஒட்டகம் இ மூன்றும் நெடும் பிடி நிகழ்த்தும் நாமம் - 3.விலங்கின்பெயர்:3 34/3
நெடிய மால் உதானனே கண்குத்திப்பாம்பு என்று கூறும் - 3.விலங்கின்பெயர்:3 48/2
நெடிய மாசுணமே பாந்தள் நீள் பெரும்பாம்பின்நாமம் - 3.விலங்கின்பெயர்:3 48/3
நிலங்கு பூழ் ஆம் காதம்பம் நெடிய கானங்கோழி பேர் - 3.விலங்கின்பெயர்:3 59/2
நெடிய தண்டலையினோடு நீள் உபவனமே சோலை - 4.மரப்பெயர்:4 54/3
நீடிய பரிசையே மாவட்டணம் நெடிய வட்டம் - 7.செயற்கைவடிவ:7 18/4
நெடிய கோடகமே மற்றும் நேர்ந்த கிம்புரி என்று ஆமே - 7.செயற்கைவடிவ:7 22/4
நீடு மஞ்சிகமே பெட்டி நெடிய மஞ்சிகையே பேழை - 7.செயற்கைவடிவ:7 36/4
நீக்கிலா துப்பு மல்லல் நெடிய மங்கலமே பூவே - 8.பண்பு:8 46/1
நெடிய கா துலாங்கள் என்ப நிறை நூறு பலமே ஆகும் - 8.பண்பு:8 81/2
நெடிய காமன் கொண்டு ஆடும் நிருத்தமே விதித்த பேடு ஆம் - 9.செயல்:9 51/4
நீரினில் விலங்கு புள்ளு பப்பத்தாம் நெடிய தேவர் - 12.பல்பொருள்கூட்டம்:12 70/2
நிரையது முன்னர் ஆயின் நெடிய வெண் திங்கள் என்ப - 12.பல்பொருள்கூட்டம்:12 98/3

 TOP
 
    நெடியது (2)
நெடியது குடி ஐஞ்ஞூறு நிறைந்தது பெருங்கிராமம் - 5.இடப்பெயர்:5 36/2
நெடியது ஓர் பொருளின் மற்று நீள் உணர்வாலே காணப்படு - 8.பண்பு:8 1/3

 TOP
 
    நெடியோன் (1)
கரியவன் நெடியோன் காவற்கடவுள் நாரணன் ஏழ்ஏழே - 1.தேவப்பெயர்:1 22/3

 TOP
 
    நெடில் (1)
நேர் சமம் ஈதல் பாதி நெடில் உடன்பாடு நுட்பம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 179/4

 TOP
 
    நெடிலொடு (1)
நெடிலொடு ஆயதமே நேர்பு நெடுமை சேண் கொடி நீளப்பேர் - 8.பண்பு:8 13/2

 TOP
 
    நெடு (5)
நெடு வித்துத்து தடித்து நீள் சம்பை சபலையோடு - 1.தேவப்பெயர்:1 100/3
நிறுவி மற்று அதற்கு அணிந்த நெடு மயிர் உளை என்று ஓதும் - 7.செயற்கைவடிவ:7 21/3
நிதம்பமே அல்குல் என்ப நெடு மலை பக்கமும் பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 99/4
நெடு மதில் அரசியற்கு நிகழ்த்திய ஆறு பேதம் - 12.பல்பொருள்கூட்டம்:12 54/2
நெடு மலை யாறு நாடு ஊர் நீண்ட தார் புரவி யானை - 12.பல்பொருள்கூட்டம்:12 107/1

 TOP
 
    நெடுக (1)
இருசுடர் வளைந்து சூழும் பரிவேடம் நெடுக ஈண்டு - 12.பல்பொருள்கூட்டம்:12 111/2

 TOP
 
    நெடுங்கழுத்தல் (1)
அழிவுஇல் ஒட்டகம் தாசேரம் அத்திரி நெடுங்கழுத்தல் - 3.விலங்கின்பெயர்:3 23/4

 TOP
 
    நெடுங்குடை (1)
நீடிய கொடுங்கோல் மன்னர் நெடுங்குடை கீழ் வாழ்கின்ற - 5.இடப்பெயர்:5 30/3

 TOP
 
    நெடுந்தெரு (1)
நெடுந்தெரு மன்றம் மார்க்கம் நிகமம் இ முப்பேர் செப்பும் - 5.இடப்பெயர்:5 47/1

 TOP
 
    நெடும் (12)
நீட்டிய ஏகவேணி நெடும் காகத்துவசம்உற்றாள் - 1.தேவப்பெயர்:1 44/2
நீரம் புட்கரமே சிந்து நெடும் புனல் சலிலம் பாணி - 1.தேவப்பெயர்:1 61/2
நீல உண்கண்ணாய் மற்று நெடித்தலும் நெடும் போழ்து என்ப - 1.தேவப்பெயர்:1 88/4
நெடும் கொடியினன் கானீனன் நீள் அங்கர்கோமான் கன்னன் - 2.மக்கள்பெயர்:2 16/2
நீடிய வாயிலோரே நெடும் தமிழ் கூத்தர் என்பர் - 2.மக்கள்பெயர்:2 38/3
நெடிய ஒட்டகம் இ மூன்றும் நெடும் பிடி நிகழ்த்தும் நாமம் - 3.விலங்கின்பெயர்:3 34/3
நீருறும் மயிலை மற்சம் நெடும் புழல் மீன்பொதுப்பேர் - 3.விலங்கின்பெயர்:3 75/4
நீடு பாடகத்தின்நாமம் நெடும் பாத கடகம் என்ப - 7.செயற்கைவடிவ:7 26/1
நிலைபெறு தறி கால் தாணு நெடும் தூண் ஆம் வெளில் யானைத்தூண் - 7.செயற்கைவடிவ:7 48/3
சிரம் என்ப நெடும் கால போர் சென்னியும் அன்னதேயாம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 167/2
நெற்றியே நுதலின் பேரும் நெடும் படைஉறுப்பும் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 290/2
நெருக்கிய காட்டில் உற்ற நெடும் திரவியங்கள் ஐந்தாம் - 12.பல்பொருள்கூட்டம்:12 47/2

 TOP
 
    நெடுமால் (1)
சக்கிரி குயவன் செக்கான் தராபதி நெடுமால் பாம்பு - 11.ஒருசொல்பல்பொருள்:11 9/4

 TOP
 
    நெடுமை (3)
நெடிலொடு ஆயதமே நேர்பு நெடுமை சேண் கொடி நீளப்பேர் - 8.பண்பு:8 13/2
போகுதல் நெடுமை நேர்மை போகுதல் எனும் முப்பேரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 19/4
வார் என்ப நெடுமை கச்சு மன்னு நீர் நேர்மை நாற்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 179/3

 TOP
 
    நெடுமொழி (1)
தனது மேம்பாட்டுரை பேர்தான் நெடுமொழி என்று ஆமே - 10.ஒலிப்பெயர்:10 12/3

 TOP
 
    நெய் (7)
அளக்கும் நெய் பயறு மீனே அறுவையே ஆடை தூசு - 1.தேவப்பெயர்:1 81/1
நிறைய நெய் பொதி பாற்சோறு நிகழ்த்து பாயசம் என்றாகும் - 6.பல்பொருள்:6 24/1
விதமுறு ஐயங்கவீனம் நவநீதம் வெண்ணெய் ஆம் நெய்
  இதமுறு கிருதம் நேயம் இழுது ஆச்சியம் துப்பு ஆமே - 6.பல்பொருள்:6 27/3,4
நேயம் நெய் எண்ணெய் அன்பு ஆம் நிறம் என்ப மருமம் காந்தி - 11.ஒருசொல்பல்பொருள்:11 152/2
அழிவு என்ப வீதல் கேடு ஆம் அவி நெய் சோறு அமரர் உண்டி - 11.ஒருசொல்பல்பொருள்:11 257/4
அன்னம் ஓதிமமே சோறு ஆம் ஆகாரம் உடல் நெய் உண்டி - 11.ஒருசொல்பல்பொருள்:11 308/2
உவர் கரும்பின் சாறோடே ஒண் மது நெய் சிறந்த - 12.பல்பொருள்கூட்டம்:12 71/3

 TOP
 
    நெய்த்துடுப்பினுக்கு (1)
தொட்ட நெய்த்துடுப்பினுக்கு சுருக்கொடு சுருவம் ஆம் பேர் - 7.செயற்கைவடிவ:7 34/1

 TOP
 
    நெய்த்தோர் (1)
எருவையே நெய்த்தோர் சோரி இயம்பிடும் உதிரம் புண்ணீர் - 3.விலங்கின்பெயர்:3 45/1

 TOP
 
    நெய்தல் (6)
நாடு சார் மருதம் ஆகும் நல் கடல் சார்வு நெய்தல்
  நீடிய கொடுங்கோல் மன்னர் நெடுங்குடை கீழ் வாழ்கின்ற - 5.இடப்பெயர்:5 30/2,3
பறித்திடு முல்லைஊரே பாடி பட்டினமே நெய்தல்
  குறித்து எழு குறும்பர்ஊரே குறும்பு பாலைக்கே கூற்று ஆம் - 5.இடப்பெயர்:5 39/2,3
விரவிய திறனில் யாழும் விளரியும் நெய்தல் ஆமே - 10.ஒலிப்பெயர்:10 34/4
கால் கிளர் மெளவல் முல்லை கடம்பொடு வஞ்சி நெய்தல்
  மேல் உள வீரை புன்னை விரும்பிய மணங்கள் ஏழாம் - 10.ஒலிப்பெயர்:10 38/1,2
பானலே பழனம் நெய்தல் பாங்கரே இடம் பக்கப்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 294/3
முல்லையே குறிஞ்சி நெய்தல் மொழிந்திடும் மருதம் என்ப - 12.பல்பொருள்கூட்டம்:12 15/1

 TOP
 
    நெய்தல்தலைவனை (1)
தண் கடல் சேர்ப்பன் நெய்தல்தலைவனை சாற்றும் நாமம் - 2.மக்கள்பெயர்:2 73/2

 TOP
 
    நெய்தல்மாக்கள் (1)
கருதிய கடலர் கோல கழியரே நெய்தல்மாக்கள்
  விரவிய பரத்தி மேவு நுளைச்சியே அளத்தி நீண்டு - 2.மக்கள்பெயர்:2 72/2,3

 TOP
 
    நெய்தலில் (2)
பெருகிய கடற்பிணாவே நெய்தலில் பெண்ணின்நாமம் - 2.மக்கள்பெயர்:2 72/4
நிறுவு சாப்பறையே என்ப நெய்தலில் பறையின்நாமம் - 7.செயற்கைவடிவ:7 42/1

 TOP
 
    நெய்தலே (1)
நெய்தலே கடல் சார் பூமி நெய்தற்பூ சாப்பறை பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 161/2

 TOP
 
    நெய்தலோடு (1)
பாலையே நெய்தலோடு பரவிய மருதம் ஆமே - 12.பல்பொருள்கூட்டம்:12 36/2

 TOP
 
    நெய்தற்பூ (1)
நெய்தலே கடல் சார் பூமி நெய்தற்பூ சாப்பறை பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 161/2

 TOP
 
    நெய்யரி (1)
சூழும் நெய்யரி பன்னாடை சொல்லிய நாரியும் பேர் - 4.மரப்பெயர்:4 12/2

 TOP
 
    நெய்யினோடே (1)
பாலொடு தேன்கள்தாமே பகர் தயிர் நெய்யினோடே
  ஏலமே வாழையே தாடிமக்கனி ஏழ் சுவைக்கு ஆம் - 10.ஒலிப்பெயர்:10 38/3,4

 TOP
 
    நெய்வார் (1)
பொருந்தரே வேதகாரர் போற்றும் காருகர் நெய்வார் பேர் - 2.மக்கள்பெயர்:2 32/4

 TOP
 
    நெரித்தல் (1)
திகைக்கவே அவைத்தல் குற்றல் தெறுதல் என்பது நெரித்தல் - 9.செயல்:9 34/4

 TOP
 
    நெரிதல் (1)
இரிதலே நெரிதல் சோரல் இடைதலே உடைதலோடு - 9.செயல்:9 21/3

 TOP
 
    நெரிவும் (1)
மூரி ஏறு எருமை ஆற்றல் முறை பீடு நெரிவும் ஆமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 174/1

 TOP
 
    நெருக்கம் (1)
பன்னவே நெருக்கம் வார்த்தை பருத்தியின் பேரும் ஆமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 308/4

 TOP
 
    நெருக்கிய (1)
நெருக்கிய காட்டில் உற்ற நெடும் திரவியங்கள் ஐந்தாம் - 12.பல்பொருள்கூட்டம்:12 47/2

 TOP
 
    நெருங்கல் (1)
செறி நவி பொதுளல் செற்று திணுங்கல் பத்தும் நெருங்கல் - 8.பண்பு:8 14/4

 TOP
 
    நெருங்கலும் (1)
நிச்சயம் மீதூரல் போர் இடங்கழி நெருங்கலும் பேர் - 9.செயல்:9 13/4

 TOP
 
    நெருங்கலோடு (1)
சடிலமே நெருங்கலோடு சடை குதிரையும் முப்பேரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 70/2

 TOP
 
    நெருங்கு (1)
நீவியே துடைத்தல் ஆடை நெருங்கு கொய்சகம் முப்பேரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 235/4

 TOP
 
    நெருங்குதல் (1)
அடர் என்ப நெருங்குதல் பேர் ஐம்மையின் வடிவும் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 73/1

 TOP
 
    நெருஞ்சில்முள் (1)
கப்பணம் இரும்பிற்செய்த நெருஞ்சில்முள் கைவேல் ஆமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 133/4

 TOP
 
    நெருநலும் (1)
நெருநலும் நென்னலும்தான் நிகழ்த்துப முன்னைநாளை - 1.தேவப்பெயர்:1 91/3

 TOP
 
    நெருப்பின்பேர் (1)
அழல் சுடர் ஞெகிழி இன்ன நெருப்பின்பேர் ஆறைந்து ஆமே - 1.தேவப்பெயர்:1 58/4

 TOP
 
    நெருப்புறு (2)
நிந்தை செய் ஞெகிழி கொள்ளி நெருப்புறு விறகின்பேரே - 6.பல்பொருள்:6 19/2
ஞெகிழியே சிலம்பின்நாமம் நெருப்புறு கொள்ளிக்கும் பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 6/3

 TOP
 
    நெரேலென்றிட்டல் (1)
பொம்மெனல் ஒல்லென்றிட்டல் பொள்ளெனல் நெரேலென்றிட்டல்
  கொம்மெனல் விடேலென்றிட்டல் குறிப்பொடு முகேரென்றிட்டல் - 10.ஒலிப்பெயர்:10 48/2,3

 TOP
 
    நெல் (6)
வரி சொல்லு விரீகி சாலி வளர் நெல் ஆம் யவமும் ஆகும் - 4.மரப்பெயர்:4 38/1
விஞ்சு நெல் முதலாம் பண்டம் வீழ் குதிர் புகல் என்று ஓதும் - 5.இடப்பெயர்:5 57/4
அசம் மூ ஆண்டு உறு நெல் ஆடு ஆம் அணை என்ப கரையே மெத்தை - 11.ஒருசொல்பல்பொருள்:11 34/3
தோரை நெல் விகற்பம் மூங்கில்அரிசி கைவரை சொல் முப்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 183/1
போர் அமர் சதயத்தோடு புகலும் நெல் முதலாம் சும்மை - 11.ஒருசொல்பல்பொருள்:11 188/3
சொல் உரை கீர்த்தி நெல் ஆம் தொடுத்தலே வளைத்தல் கட்டல் - 11.ஒருசொல்பல்பொருள்:11 221/3

 TOP
 
    நெல்மா (2)
இடி இடி பேரே நெல்மா ஏற்றிடும் உறுதிச்சொல்லே - 11.ஒருசொல்பல்பொருள்:11 49/4
பிண்டி நெல்மா அசோகு ஆம் பிதா சிவன் பிரமன் நாரை - 11.ஒருசொல்பல்பொருள்:11 89/3

 TOP
 
    நெல்லி (2)
அரிதகி பத்தியங்கள் கடுவே ஆமலகம் நெல்லி
  கருதிய தான்றிதானே கலித்துருமம் தானாகும் - 4.மரப்பெயர்:4 26/1,2
திரிபலை என்பதானே திகழ் கடு நெல்லி தான்றி - 12.பல்பொருள்கூட்டம்:12 14/2

 TOP
 
    நெல்லிற்கும் (1)
யவம் ஒரு தானியப்பேர் என்ப நெல்லிற்கும் அ பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 245/3

 TOP
 
    நெல்லின் (2)
பொழிய தூற்றாத நெல்லின் பொலியே பொங்கழி என்று ஆகும் - 4.மரப்பெயர்:4 39/2
துணி அறை தூக்குத்தானே சல்லி ஆம் சொல்லும் நெல்லின்
  மணி பலகறையினோடு மகிழ்விதை அலகு என்றாகும் - 6.பல்பொருள்:6 34/2,3

 TOP
 
    நெல்லினோடு (1)
தெரியும் நல் நெல்லினோடு செஞ்சாலி செந்நெல்லின்பேர் - 4.மரப்பெயர்:4 38/2

 TOP
 
    நெல்லு (1)
வரி சுணங்கு எழுத்து பாட்டு வாரிதி இறையே நெல்லு - 11.ஒருசொல்பல்பொருள்:11 172/4

 TOP
 
    நெல்லும் (1)
மட்டறு நெல்லும் புல்லும் மத்தகம்தன்னில் ஏற்று - 5.இடப்பெயர்:5 38/1

 TOP
 
    நெளிர்தல் (1)
குளிறலே நரலலோடு குருமித்தல் நெளிர்தல் சால - 10.ஒலிப்பெயர்:10 45/2

 TOP
 
    நெற்கதிர் (1)
அரிசி நெற்கதிர் கள் கூர்மை அளி படைக்கலமே ஈர்வாள் - 11.ஒருசொல்பல்பொருள்:11 198/1

 TOP
 
    நெற்கதிரே (1)
அலகு நெற்கதிரே ஆதி பலகறை நுளம்பு எண் ஏதி - 11.ஒருசொல்பல்பொருள்:11 207/3

 TOP
 
    நெற்பொதுவும் (1)
சாலி நெற்பொதுவும் கள்ளும் அருந்ததிதானும் ஆமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 226/4

 TOP
 
    நெற்போர் (1)
சும்மை என்பதுவே நெற்போர் நாடு ஒலி சுமையும் சொல்லும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 140/2

 TOP
 
    நெற்றி (6)
அணி நெற்றி கையே தூசி அடு படை உறுப்பின்பேர் ஆம் - 2.மக்கள்பெயர்:2 83/2
திரு நுதல் குளம் இலாடம் சேர்ந்த மத்தகமே நெற்றி
  மருவிய பாலம் முண்டம் அளிகமும் வகுக்கலாமே - 2.மக்கள்பெயர்:2 97/3,4
சிரம் உழை இளியே நெற்றி சேர்ந்திடும் விளரி நெஞ்சு ஆம் - 10.ஒலிப்பெயர்:10 36/2
நோக்கு என்பது அழகு பார்வை நுதல் என்ப புருவம் நெற்றி
  சேக்கையே மிருகம்துஞ்சும்இடம் முலை சிறந்த பாயல் - 11.ஒருசொல்பல்பொருள்:11 15/1,2
சங்கமே கணைக்கால் ஓர் எண் சபை சங்கு புலவர் நெற்றி
  பங்கு என்ப முடமே ஆகும் பாதியும் சனியும் ஏற்கும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 22/1,2
வடு செம்பு தழும்பு வண்டு ஆம் மத்தகம் நெற்றி சென்னி - 11.ஒருசொல்பல்பொருள்:11 55/2

 TOP
 
    நெற்றிக்குறிகள் (1)
திலகம் புண்டரங்கள் என்ப செறி நெற்றிக்குறிகள் ஆமே - 6.பல்பொருள்:6 16/4

 TOP
 
    நெற்றிப்பேர் (1)
பாலமே மழு நெற்றிப்பேர் பவித்தரம் சுசி தருப்பை - 11.ஒருசொல்பல்பொருள்:11 228/2

 TOP
 
    நெற்றியே (1)
நெற்றியே நுதலின் பேரும் நெடும் படைஉறுப்பும் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 290/2

 TOP
 
    நெறி (8)
தரு நெறி வழா துரோணாசாரியன்பேர் மூன்று ஆமே - 2.மக்கள்பெயர்:2 6/4
தரு நெறி நோற்கும் வீரை தழைத்த மண்டலவன்தானே - 2.மக்கள்பெயர்:2 106/4
அதர் நெறி செலவு தாரி அயனமே இடவை மார்க்கம் - 5.இடப்பெயர்:5 62/2
மயல் அறும் நெறி நியாயம் மரியாதை நீதி முப்பேர் - 8.பண்பு:8 44/3
நெறி வழி நீதி என்ப நிருமித்தல் படைப்பு ஆராய்தல் - 11.ஒருசொல்பல்பொருள்:11 292/3
நெறி பெறும் இவையே என்ன நிகழ்த்துவர் நூல்வல்லோரே - 12.பல்பொருள்கூட்டம்:12 60/4
நெறி வழி நின்று தத்தம் நிலையினால் உழந்து உழந்து - 12.பல்பொருள்கூட்டம்:12 63/1
நெறி கெழு மயக்கம்இன்மை நின்ற அ பழியை நீக்கல் - 12.பல்பொருள்கூட்டம்:12 85/2

 TOP
 
    நெறிப்பட (1)
நெறிப்பட அழுந்துதல் பேர் ஞெமுங்குதல் என்று கூறும் - 9.செயல்:9 60/3

 TOP
 
    நெறிபடும் (2)
நெறிபடும் அளக்கர் என்ப நீள்வழி நாமம்தானே - 5.இடப்பெயர்:5 64/3
நெறிபடும் உபாயம் நான்கும் நிருபர்தம் முறைமை ஆமே - 12.பல்பொருள்கூட்டம்:12 20/4

 TOP
 
    நெறியில் (1)
மாறுடை நெறியில் கூட்டம் மறநிலை இன்பம் ஆமே - 12.பல்பொருள்கூட்டம்:12 64/4

 TOP
 
    நெறியே (1)
ஆரும் ஓர் நெறியே அன்றி அருத்தங்கள் விராய் சிறந்த - 10.ஒலிப்பெயர்:10 26/3

 TOP
 
    நெறியொடு (1)
நெறியொடு வலித்தல் ஒட்டல் நேரலே உடன்பாடு என்ப - 9.செயல்:9 56/4

 TOP
 
    நெறுநெறு (1)
திடுதிடு என்றிட்டலோடு நெடநெட நெறுநெறு என்றல் - 10.ஒலிப்பெயர்:10 49/3

 TOP
 
    நென்னலும்தான் (1)
நெருநலும் நென்னலும்தான் நிகழ்த்துப முன்னைநாளை - 1.தேவப்பெயர்:1 91/3

 TOP