<<முந்திய பக்கம்

மண்டல புருடர் இயற்றிய சூடாமணி நிகண்டு - தொடரடைவு

ஏ - முதல் சொற்கள்
ஏ 5
ஏக்கழுத்தமும் 1
ஏக 1
ஏகபாதம் 1
ஏகம் 2
ஏகமே 1
ஏகல் 1
ஏகவேணி 1
ஏகன் 1
ஏகாசம் 1
ஏகாந்தம் 1
ஏகி 1
ஏகு 1
ஏங்கல் 2
ஏங்கலும் 1
ஏங்கலே 1
ஏங்கி 1
ஏங்குதல் 1
ஏசல் 1
ஏசுஇல் 1
ஏசொடு 1
ஏட்டை 1
ஏடகம் 1
ஏடலும் 1
ஏடா 1
ஏடி 1
ஏடு 2
ஏடை 1
ஏண் 1
ஏணமும் 1
ஏணி 4
ஏணியே 1
ஏணே 1
ஏத்த 1
ஏத்தல் 1
ஏத்தி 2
ஏத்துதல் 1
ஏதம் 3
ஏதம்இல் 3
ஏதி 4
ஏதில் 1
ஏது 3
ஏதுவும் 1
ஏந்த 1
ஏந்தல் 5
ஏந்தலே 1
ஏந்தி 1
ஏம் 1
ஏமகூடமே 1
ஏமதவஞ்சம் 1
ஏமம் 6
ஏமமா 1
ஏமமே 1
ஏமவஞ்சம் 1
ஏமாப்பு 1
ஏய்ந்த 1
ஏய 1
ஏயே 1
ஏர் 11
ஏர்பு 1
ஏரண்டம் 2
ஏரம்பன் 1
ஏரலோடு 1
ஏரி 2
ஏரின்வாழ்நர் 1
ஏரை 1
ஏல்வையே 4
ஏல 1
ஏலங்கள் 1
ஏலத்தின் 1
ஏலம் 4
ஏலமே 2
ஏலும் 1
ஏலேல் 1
ஏவல் 8
ஏவலின் 1
ஏவலே 1
ஏவுவான்பேர் 1
ஏழ் 14
ஏழ்குற்றம் 1
ஏழ்பரியோன் 1
ஏழ்பிறப்பின்பேரே 1
ஏழ்பேர் 7
ஏழ்பேரே 1
ஏழகங்கள் 1
ஏழகம் 1
ஏழடி 1
ஏழாண்டுதானே 1
ஏழாம் 2
ஏழ்ஆறு 1
ஏழிசைக்கும்தானே 1
ஏழிசையில் 1
ஏழிசையின்நாமம் 1
ஏழின்நாமம் 1
ஏழின்பேர் 2
ஏழினோடு 1
ஏழு 2
ஏழும் 12
ஏழ்உலகு 1
ஏழுலோகம் 2
ஏழே 1
ஏழ்ஏழும் 1
ஏழ்ஏழே 1
ஏழை 1
ஏழைந்தும் 1
ஏழையே 1
ஏளனம் 1
ஏற்கும் 22
ஏற்போன் 1
ஏற்ற 20
ஏற்றதும் 1
ஏற்றம் 2
ஏற்றமே 1
ஏற்றல் 4
ஏற்றலே 2
ஏற்றிடும் 7
ஏற்றிய 1
ஏற்று 1
ஏறங்கோட்பறை 1
ஏறாளர் 1
ஏறிய 2
ஏறு 12
ஏறுதல் 1
ஏறுதலின்நாமம் 1
ஏறுதான் 1
ஏறும் 3
ஏறுவிடல் 1
ஏறுஊர்ந்தோன் 1
ஏறொடு 1
ஏறோடு 2
ஏன்ற 1
ஏனம் 3
ஏனல் 3
ஏனலே 1
ஏனாதி 2
ஏனைய 1
ஏனையே 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    ஏ (5)
தோணி சாயகமே பல்லம் தொடை சிலீமுகம் ஏ அம்பு ஆம் - 7.செயற்கைவடிவ:7 5/2
அம்மோடு ஆம் தம் நம் நும் ஏ அல் ஆல் வான் பாக்கு தில்லே - 10.ஒலிப்பெயர்:10 17/1
ஆங்குள ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்னும் ஏழும் - 10.ஒலிப்பெயர்:10 37/3
ஏ உரை சுவர்க்கம் வேந்தன் இரங்கல் வெற்பு ஈரேழ் ஆமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 240/4
அள்ளலே நரகம் சேறு ஆம் அம்பு நீர் புயல் வேய் ஏ ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 273/3

 TOP
 
    ஏக்கழுத்தமும் (1)
மன்னு செம்மாப்பு ஏமாப்பு மற்றை ஏக்கழுத்தமும் பேர் - 8.பண்பு:8 36/3

 TOP
 
    ஏக (1)
இருநிதிக்கிழவன் ஏக பிங்கலன் இயக்கர்கோமான் - 1.தேவப்பெயர்:1 37/3

 TOP
 
    ஏகபாதம் (1)
சொற்றிடும் மாலைமாற்றே சுழிகுளம் ஏகபாதம்
  குற்றம்இல் சக்கரத்தின் கூறு எழு கூற்றிருக்கை - 12.பல்பொருள்கூட்டம்:12 26/1,2

 TOP
 
    ஏகம் (2)
போற்றிய தனிமை ஏகம் புலம்பு கேவலமும் ஆமே - 8.பண்பு:8 65/4
படியில் ஒன்று ஏகம் என்ப பத்து என்ப தசம் ஆம் நூறு - 8.பண்பு:8 81/3

 TOP
 
    ஏகமே (1)
ஏறிய ஊழும் சொல்வாம் ஏகமே வீடுபேறு - 12.பல்பொருள்கூட்டம்:12 2/4

 TOP
 
    ஏகல் (1)
கடத்தலே படர்தல் சேறல் கழிதலே இவறல் ஏகல்
  விடுத்திடல் இறத்தல் போகல் மெல்லென வழங்கல் நீங்கல் - 9.செயல்:9 37/1,2

 TOP
 
    ஏகவேணி (1)
நீட்டிய ஏகவேணி நெடும் காகத்துவசம்உற்றாள் - 1.தேவப்பெயர்:1 44/2

 TOP
 
    ஏகன் (1)
பரமன் எண்தோளன் பர்க்கன் பவன் யோகி பகவான் ஏகன்
  அரன் உமாபதி சிவன்பேர் அறுபத்தாறு அநந்தம் மற்றும் - 1.தேவப்பெயர்:1 17/3,4

 TOP
 
    ஏகாசம் (1)
உத்தரீயம் ஏகாசம் உத்தராசங்கமும் பேர் - 7.செயற்கைவடிவ:7 71/4

 TOP
 
    ஏகாந்தம் (1)
உற்ற வேறிடம் ஏகாந்தம் ஒருவந்தம் என்றும் பேரே - 5.இடப்பெயர்:5 60/4

 TOP
 
    ஏகி (1)
அந்த ஆறையாண்டு ஏகி ஆண்டு எழுபான் நீங்காதோன் - 12.பல்பொருள்கூட்டம்:12 129/4

 TOP
 
    ஏகு (1)
இடபமே கழுதை யானை ஏகு காகம் திக்கு அங்கம் - 12.பல்பொருள்கூட்டம்:12 82/2

 TOP
 
    ஏங்கல் (2)
பொருமுதல் கசிவே ஏங்கல் உரோதனம் இரங்கல் எட்டாம் - 9.செயல்:9 8/2
உரற்றலே அரற்றல் வேறும் உரைத்தலே உளைத்தல் ஏங்கல்
  இரைத்தலே இரட்டல் சால இடித்தலே இமிழ்த்தல் மற்றை - 10.ஒலிப்பெயர்:10 46/2,3

 TOP
 
    ஏங்கலும் (1)
மருவிய அகவல் ஆலல் மயிற்குரல் ஏங்கலும் பேர் - 3.விலங்கின்பெயர்:3 51/3

 TOP
 
    ஏங்கலே (1)
இசை புகழ் கிளவி பாட்டு ஆம் ஏங்கலே ஒலி இரங்கல் - 11.ஒருசொல்பல்பொருள்:11 35/3

 TOP
 
    ஏங்கி (1)
கைம்மையே கைனி பூண்ட கலன்கழிமடந்தை ஏங்கி
  விம்மிய விதவை நான்கே அமங்கலை விளங்கு நாமம் - 2.மக்கள்பெயர்:2 63/1,2

 TOP
 
    ஏங்குதல் (1)
விளவு என்ப கமர் விளா ஆம் விம்மல் ஏங்குதல் ஒலித்தல் - 11.ஒருசொல்பல்பொருள்:11 258/4

 TOP
 
    ஏசல் (1)
அம்பலே கெளவை ஏசல் அலர் பழிமொழி நாற்பேரே - 10.ஒலிப்பெயர்:10 8/1

 TOP
 
    ஏசுஇல் (1)
ஏசுஇல் அஞ்சனக்கோல் கோல் ஆம் தூலிகை எழுதுகோலே - 7.செயற்கைவடிவ:7 14/1

 TOP
 
    ஏசொடு (1)
ஏசொடு புரையே கோதே ஏதம் மூவொன்பான் குற்றம் - 8.பண்பு:8 58/4

 TOP
 
    ஏட்டை (1)
இழைத்திடும் தளர்ச்சி ஏட்டை அசாவும் ஆம் இனைவு இரக்கம் - 8.பண்பு:8 59/4

 TOP
 
    ஏடகம் (1)
இடையல் வேதகமே பட்டே ஏடகம் இவை துகில் பேர் - 7.செயற்கைவடிவ:7 69/3

 TOP
 
    ஏடலும் (1)
வன்மை நாட்டியம் தியானம் மதம் வினை ஏடலும் பேர் - 8.பண்பு:8 34/4

 TOP
 
    ஏடா (1)
எலுவனும் ஆம் இவன் முன்னிலைப்பெயர் ஏடா என்ப - 2.மக்கள்பெயர்:2 42/2

 TOP
 
    ஏடி (1)
நலமுறும் முன்னிலைப்பேர் நாடின் மற்று ஏடி எல்லா - 2.மக்கள்பெயர்:2 42/4

 TOP
 
    ஏடு (2)
புலனுறும் ஏடு தோடு தளம் மடல் பூவிதழ் பேர் - 4.மரப்பெயர்:4 50/4
ஏடு அவிழ் மகிழ் சுவைக்க எழில் பாலை நண்பு கூட - 12.பல்பொருள்கூட்டம்:12 110/1

 TOP
 
    ஏடை (1)
மாதர் நச்சு இச்சை ஏடை வயா நம்பு நசை நயப்பு - 8.பண்பு:8 75/1

 TOP
 
    ஏண் (1)
இவை நயப்புணர்வும் ஆமே ஏண் நிலையுடைமை என்ப - 8.பண்பு:8 40/4

 TOP
 
    ஏணமும் (1)
மிருகமே மறி குரங்கம் மேவும் மான் ஏணமும் பேர் - 3.விலங்கின்பெயர்:3 22/2

 TOP
 
    ஏணி (4)
நீடிய அகலுள் ஏணி நீவரம் கோட்டம் கண்டம் - 5.இடப்பெயர்:5 9/2
இறைவையே சேணி ஏணி மால்பு கண்ணேணியின்பேர் - 7.செயற்கைவடிவ:7 54/3
ஏறிய பரியந்தத்தோடு ஏணி இவ் ஐந்தும் என்ப - 8.பண்பு:8 19/4
இறைவையே புட்டில் ஏணி என்ப கூர் மிகுதி கூர்மை - 11.ஒருசொல்பல்பொருள்:11 276/1

 TOP
 
    ஏணியே (1)
ஏணியே உலகோடு எல்லை இறைவை மான் என்றும் சொல்லும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 77/4

 TOP
 
    ஏணே (1)
அடல் விறல் ஈடே ஏணே ஆண்மையே திறலே நோன்மை - 8.பண்பு:8 28/3

 TOP
 
    ஏத்த (1)
உலகு எலாம் இறைஞ்சி ஏத்த உலகு எலாம் உணர்ந்த மூர்த்தி - 6.பல்பொருள்:6 1/1

 TOP
 
    ஏத்தல் (1)
புது விரை நறும் பூ தூபம் புனை விளக்கு அடைவே ஏத்தல்
  விதியின் வாள் அரவு தோலும் விடமும் நீத்தென்ன நீத்த - 12.பல்பொருள்கூட்டம்:12 100/2,3

 TOP
 
    ஏத்தி (2)
நான்முக கடவுள் பாதம் நாவினால் நவிற்றி ஏத்தி
  மானவர்க்கு இயன்ற பேரை வகுத்திடும் தொகுதி சொல்வாம் - 2.மக்கள்பெயர்:2 1/3,4
பலமுறை வணங்கி ஏத்தி பல்பொருட்பெயரும் சொல்வாம் - 6.பல்பொருள்:6 1/4

 TOP
 
    ஏத்துதல் (1)
பழிச்சல் ஏத்துதல் துதித்தல் பரசுதல் பரவல் போற்றல் - 10.ஒலிப்பெயர்:10 4/1

 TOP
 
    ஏதம் (3)
ஏசொடு புரையே கோதே ஏதம் மூவொன்பான் குற்றம் - 8.பண்பு:8 58/4
எவ்வம் ஏதம் வெறுப்பே இடும்பையே இடுக்கண் இன்னல் - 8.பண்பு:8 74/2
ஏதம் துன்பம் குற்றப்பேர் ஈமமே மயானம் காட்டம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 97/3

 TOP
 
    ஏதம்இல் (3)
ஏதம்இல் பருவம் ஆண்டு ஏழ் எய்து பன்னொன்று பன்மூன்று - 2.மக்கள்பெயர்:2 58/3
ஏதம்இல் பிதா என்று ஏழும் என்றவன்நாமம் ஆமே - 2.மக்கள்பெயர்:2 75/4
ஏதம்இல் சுருதி தன்னோடு இருக்கு இவை ஏழும் வேதம் - 10.ஒலிப்பெயர்:10 21/2

 TOP
 
    ஏதி (4)
அசி நவிர் ஏதி நாட்டம் ஆன நாந்தகமே கட்கம் - 7.செயற்கைவடிவ:7 9/1
கடும் ஏதி கருவி எஃகம் கடியும் ஆயுதப்பொதுப்பேர் - 7.செயற்கைவடிவ:7 16/2
ஏதி ஆயுதம் வாள் என்ப இழை நூல் ஆபரணம் ஆமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 101/4
அலகு நெற்கதிரே ஆதி பலகறை நுளம்பு எண் ஏதி
  அலரி கண்வரி அருக்கன் அழகு ஒரு மரம் பூ ஆமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 207/3,4

 TOP
 
    ஏதில் (1)
ஏதில் எப்பொருட்கும்தானே இறை பெயர் இவை பன்மூன்றாம் - 2.மக்கள்பெயர்:2 10/3

 TOP
 
    ஏது (3)
துப்புடன் ஏது என்னும் சொல் துணைக்காரணப்பேர் - 6.பல்பொருள்:6 33/1
செயத்தகு காரணப்பேர் திறம் ஏது பொருட்டு வாயில் - 8.பண்பு:8 48/3
மூலம் வேர் முதலே ஏது முதிர்வுறு கிழங்கு ஓர் நாள் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 208/2

 TOP
 
    ஏதுவும் (1)
ஏதுவும் மேற்கோளும்தான் எடுத்து உடன் காட்டி ஆங்கே - 12.பல்பொருள்கூட்டம்:12 23/1

 TOP
 
    ஏந்த (1)
அட்ட மங்கலங்கள் ஏந்த அரிவையர் பலரும் வாழ்த்த - 12.பல்பொருள்கூட்டம்:12 131/1

 TOP
 
    ஏந்தல் (5)
குரிசிலோடு அண்ணல் ஏந்தல் கூறிய தோன்றல் செம்மல் - 2.மக்கள்பெயர்:2 9/3
புரவலன் பெருமான் ஏந்தல் பூபாலன் வேந்தன் மன்னன் - 2.மக்கள்பெயர்:2 12/1
மின்னிய நிவப்பு உகப்பு மிசை மேடு பிறங்கல் ஏந்தல்
  உன்னதம் சிகரம் மூவேழ் உயர்ச்சி உத்துங்கமும் பேர் - 8.பண்பு:8 8/3,4
ஈடு மா நளியே மானம் இருமையே கயவோடு ஏந்தல்
  பீடு வான் குவவு செம்மை பெருமை பேர் இருபத்தேழே - 8.பண்பு:8 10/3,4
அதிகருக்கு அமுதம் ஏந்தல் அவை நவ புண்ணியம்தான் - 12.பல்பொருள்கூட்டம்:12 100/4

 TOP
 
    ஏந்தலே (1)
ஏந்தலே பெருமை மேடு ஆம் எஃகு உருக்கொடு வேல் கூர்மை - 11.ஒருசொல்பல்பொருள்:11 128/3

 TOP
 
    ஏந்தி (1)
சார்ங்கபாணி சுரிமுகச்சங்கம் ஏந்தி - 1.தேவப்பெயர்:1 19/4

 TOP
 
    ஏம் (1)
எம்மோடு ஏம் மன்னே பானே உம் ஈரெட்டு இடைச்சொல் என்ப - 10.ஒலிப்பெயர்:10 17/2

 TOP
 
    ஏமகூடமே (1)
கொன் வளர் நிடதம் ஏமகூடமே நீல வெற்பு - 12.பல்பொருள்கூட்டம்:12 79/2

 TOP
 
    ஏமதவஞ்சம் (1)
பொருள் ஆர் ஏமதவஞ்சம் மேல் புகழ் பெறும் ஏமவஞ்சம் - 12.பல்பொருள்கூட்டம்:12 67/2

 TOP
 
    ஏமம் (6)
இரணியம் நிதி வெறுக்கை ஈகை கல்யாணம் ஏமம்
  பொருள் உரை சந்திரம் சாம்பூனதம் பூரி ஈழம் - 6.பல்பொருள்:6 3/1,2
செருக்கு அபிமானம் ஏமம் திகழ் பெருமிதம் மதர்ப்பு - 8.பண்பு:8 37/2
நகை கடி மகிழ்ச்சி ஏமம் நயம் சுகம் தொய்யல் இன்பம் - 8.பண்பு:8 38/1
கருதிய அனந்தர் ஏமம் களன் பேது மையல் மைந்து - 8.பண்பு:8 66/3
விதமுடன் காத்தலின்பேர் வேலியே ஏமம் சேமம் - 9.செயல்:9 33/2
ஏமம் ஆம் இரண்டாம் வேதம் இசை தைத்திரியத்தோடு - 10.ஒலிப்பெயர்:10 23/1

 TOP
 
    ஏமமா (1)
ஏமமா முதல்நூல் சொல்ல கணதரர் இயன்ற பாவால் - 1.தேவப்பெயர்:1 2/2

 TOP
 
    ஏமமே (1)
ஏமமே சேமம் காவல் இன்பம் பொன் இரவே மையல் - 11.ஒருசொல்பல்பொருள்:11 137/4

 TOP
 
    ஏமவஞ்சம் (1)
பொருள் ஆர் ஏமதவஞ்சம் மேல் புகழ் பெறும் ஏமவஞ்சம்
  ஒரு தேவ குருவத்தோடே உத்தர குருவம் என்ன - 12.பல்பொருள்கூட்டம்:12 67/2,3

 TOP
 
    ஏமாப்பு (1)
மன்னு செம்மாப்பு ஏமாப்பு மற்றை ஏக்கழுத்தமும் பேர் - 8.பண்பு:8 36/3

 TOP
 
    ஏய்ந்த (1)
ஏய்ந்த தண்டு ஓமான் ஓதி இசை கோம்பி முசலி ஓத்தி - 3.விலங்கின்பெயர்:3 28/2

 TOP
 
    ஏய (1)
ஏய வாலுவரே மிக்க கூவியர் என்றும் நூலை - 2.மக்கள்பெயர்:2 37/3

 TOP
 
    ஏயே (1)
என் இளி ஏயே சீச்சீ ஏளனம் இகழ்ச்சி ஆமே - 10.ஒலிப்பெயர்:10 19/4

 TOP
 
    ஏர் (11)
எழில் வண்ணம் யாணர் மாமை இராமம் ஏர் நவ்வி நோக்கு - 8.பண்பு:8 24/1
விடங்கம் ஏர் கொடி கொடுங்கை மிதவையே தெப்பம் சோறு ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 46/4
வண்ணம் ஏர் சந்தம் பண்பு ஆம் மறை இராசியமே வேதம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 84/2
சித்தமே திடம் உள்ளம் பேர் சேகரம் தலை மா ஏர் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 119/2
சாதமே திடம் பதப்பேர் தகைமை ஏர் இயல்பு பீடு ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 124/3
ஏர் அழகு உழு பெற்றப்பேர் இராசிதான் ஓரை கூட்டம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 188/1
செவ்வி ஏர் பொழுதினோடு செப்பிய பருவம் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 247/2
மாழை பொன் உலோகக்கட்டி மடமை ஏர் புளிமா ஓலை - 11.ஒருசொல்பல்பொருள்:11 252/1
தன்மை ஏர் இயல்பினோடு தன்மையின் இடமும் சாற்றும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 308/3
கழியும் ஆசவனமே நீர்க்காரி ஏர் உதி சொற்காரி - 12.பல்பொருள்கூட்டம்:12 77/2
ஏர் உறும் இவை மூவாறும் இதில் பரியாய பேரும் - 12.பல்பொருள்கூட்டம்:12 119/3

 TOP
 
    ஏர்பு (1)
இதத்துடன் ஒதுக்கல் ஏர்பு என்று எட்டுமே எழுச்சியின்பேர் - 9.செயல்:9 38/4

 TOP
 
    ஏரண்டம் (2)
சித்திரகம் ஏரண்டம் சிறந்த ஆமணக்கின்நாமம் - 4.மரப்பெயர்:4 28/2
சித்திரம் அழகு ஓர் பாடல் சிறந்த விம்மிதம் ஏரண்டம்
  சத்திரம் குடையே அன்னசாலை கைவிடாவேல் வேள்வி - 11.ஒருசொல்பல்பொருள்:11 110/3,4

 TOP
 
    ஏரம்பன் (1)
ஐங்கரன் மூத்தோன் ஒற்றை அணி மருப்பினன் ஏரம்பன்
  கங்கைபெற்றோன் முக்கண்ணன் கணபதி ஈசன்மைந்தன் - 1.தேவப்பெயர்:1 29/2,3

 TOP
 
    ஏரலோடு (1)
ஏரலோடு எருந்தே ஊரல் கிளிஞ்சில் ஆம் இறவு இறால் மீன் - 3.விலங்கின்பெயர்:3 75/1

 TOP
 
    ஏரி (2)
இலஞ்சி கோட்டகமே பொய்கை ஏல்வையே ஓடை ஏரி
  நிலம்தனில் குளிர்ந்த நீரின் நிலை ஆறைந்தொன்று நீங்க - 5.இடப்பெயர்:5 24/1,2
இலஞ்சி மா வாவி கொப்பூழ் எயில் குணம் மகிழே ஏரி
  பலம் கனி பயன் காய் சேனை பலம் கிழங்கு அறுபேர் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 210/2,3

 TOP
 
    ஏரின்வாழ்நர் (1)
திண்மைகொள் ஏரின்வாழ்நர் காராளர் வினைஞர் செம்மை - 2.மக்கள்பெயர்:2 26/3

 TOP
 
    ஏரை (1)
உடன் நிரைகாத்தல் ஏரை உழல் ஆறும் வசியர்க்கு ஆமே - 12.பல்பொருள்கூட்டம்:12 54/4

 TOP
 
    ஏல்வையே (4)
வேலையே அமையம் செவ்வி ஏல்வையே பொழுது பாணி - 1.தேவப்பெயர்:1 88/1
எல்லொடு திவா பகல் பேர் ஏல்வையே திவசம் வைகல் - 1.தேவப்பெயர்:1 90/3
இலஞ்சி கோட்டகமே பொய்கை ஏல்வையே ஓடை ஏரி - 5.இடப்பெயர்:5 24/1
இயல் நடை தமிழ் சாயல் பேர் ஏல்வையே பொழுது வாவி - 11.ஒருசொல்பல்பொருள்:11 160/1

 TOP
 
    ஏல (1)
ஏல ஏழு உயர்ந்து ஒன்பான் நீண்டு ஈரைந்து முழத்தது ஆகி - 12.பல்பொருள்கூட்டம்:12 149/4

 TOP
 
    ஏலங்கள் (1)
அந்த ஏலங்கள் என்ப அகில் கூட்டு ஓர் ஐந்தும்தாமே - 12.பல்பொருள்கூட்டம்:12 37/4

 TOP
 
    ஏலத்தின் (1)
ஏலமே மயிர்சாந்தோடே ஏலத்தின் பேரும் ஆமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 229/4

 TOP
 
    ஏலம் (4)
ஏலம் ஆம் துடியோடு ஆஞ்சி இரண்டுமே இசங்கினுக்கு - 4.மரப்பெயர்:4 34/1
இலகிய தகரம் ஏலம் காசறை மயிர்ச்சாந்தின்பேர் - 6.பல்பொருள்:6 14/3
துடி ஏலம் பறை காலப்பேர் தூ தூய்து ஊன் பற்றுக்கோடு ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 48/3
ஏலம் தக்கோலம் மற்றை இலவங்கத்தொடு சாதிக்காய் - 12.பல்பொருள்கூட்டம்:12 36/3

 TOP
 
    ஏலமே (2)
ஏலமே வாழையே தாடிமக்கனி ஏழ் சுவைக்கு ஆம் - 10.ஒலிப்பெயர்:10 38/4
ஏலமே மயிர்சாந்தோடே ஏலத்தின் பேரும் ஆமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 229/4

 TOP
 
    ஏலும் (1)
ஏலும் முன் எழுத்து மூன்றும் இன்பம் பின் இரண்டும் தீது ஆம் - 12.பல்பொருள்கூட்டம்:12 32/3

 TOP
 
    ஏலேல் (1)
திருந்தவே நோக்கல் ஏலேல் என்றலும் செய்கை ஆமே - 12.பல்பொருள்கூட்டம்:12 125/4

 TOP
 
    ஏவல் (8)
இலகு சன்மினி வஞ்சப்பெண் காளிதன் ஏவல் செய்வாள் - 1.தேவப்பெயர்:1 47/4
விரவிய தாணுவும் பேர் மேவிய ஆணை ஏவல் - 8.பண்பு:8 43/4
விளக்கிய வியங்கோள் ஏவல் வீதலே வறுமை எய்தல் - 9.செயல்:9 65/4
வாசியே குழல் முன்நாள் மா வாசி என் ஏவல் நாற்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 37/4
ஆணை மெய்யுடனே வென்றி சூள் ஏவல் ஆக நாற்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 79/4
சித்து என்ப சயமே ஞானம் செய் என்ப நிலம் ஏவல் பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 119/4
கொல் என்பது அசைச்சொல் ஐயம் கொலை ஏவல் வருத்தம் நாற்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 216/4
செல் இடி ஏவல் மேகம் சிதலை ஆகும் என்ப - 11.ஒருசொல்பல்பொருள்:11 221/1

 TOP
 
    ஏவலின் (1)
திரு கிளர் தேவர் கோமான் ஏவலின் குபேரன் செய்த - 4.மரப்பெயர்:4 1/1

 TOP
 
    ஏவலே (1)
ஏவலே வியங்கோள் என்ப எய்திய வறுமைக்கும் பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 246/2

 TOP
 
    ஏவுவான்பேர் (1)
பதிகனே வழிச்செல்வோன் ஆம் வியவனே ஏவுவான்பேர்
  முதுவர் மூதுணர்ந்தோர் நாமம் கிழவரே உரியோர் பேர் ஆம் - 2.மக்கள்பெயர்:2 40/2,3

 TOP
 
    ஏழ் (14)
அம் கைம்மீன் களிறு நவ்வி ஐவிரல் அத்தம் ஏழ் பேர் - 1.தேவப்பெயர்:1 80/4
கிளத்திய காற்று தீபம் கேடுஇலா சோதி ஏழ் பேர் - 1.தேவப்பெயர்:1 81/4
ஈட்டிய அசுரநாள் இவ் ஏழ் பெயர் மூலம் என்ப - 1.தேவப்பெயர்:1 83/4
ஏதம்இல் பருவம் ஆண்டு ஏழ் எய்து பன்னொன்று பன்மூன்று - 2.மக்கள்பெயர்:2 58/3
முன்னம் ஏழ் மனத்தின்பேர் ஆம் முதிர் சிந்தை நினைவு சேத்து - 8.பண்பு:8 34/2
எம்மை எப்பிறப்பும் என்ப ஏழ் பவம் எழு பிறப்பு ஆம் - 8.பண்பு:8 52/4
சாற்றிய பிடிதம் ஐயம் சரிதை ஏழ் பிச்சையின்பேர் - 9.செயல்:9 11/2
தேம்பலே கிருசம் போத சிக்கல் ஏழ் இளைத்தலின்பேர் - 9.செயல்:9 61/2
இக மியா அரோ போ மாதோடு இருந்து ஓரும் ஏழ் அசைச்சொல் - 10.ஒலிப்பெயர்:10 16/2
ஏலமே வாழையே தாடிமக்கனி ஏழ் சுவைக்கு ஆம் - 10.ஒலிப்பெயர்:10 38/4
சதம் இலை இறகு நூறு சத்தமே ஓசை ஏழ் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 112/1
இருமை ஏழ் திருக்கள் பேர் ஆம் இரதமே உதிரம் என்பு - 12.பல்பொருள்கூட்டம்:12 68/3
இருள் வட்டம் பெரும் கீழ் வட்டம் என்ப ஏழ் நிரயவட்டம் - 12.பல்பொருள்கூட்டம்:12 74/4
கால் ஒரு நாலும் கோசம் கை வால் ஏழ் நிலத்தின் தோய்ந்து - 12.பல்பொருள்கூட்டம்:12 149/1

 TOP
 
    ஏழ்குற்றம் (1)
அவமழை நால்வாய் கிள்ளை ஆம் இவை நாட்டு ஏழ்குற்றம் - 12.பல்பொருள்கூட்டம்:12 76/4

 TOP
 
    ஏழ்பரியோன் (1)
விரவும் ஏழ்பரியோன் வேந்தன் விரிச்சிகன் விரோசனன்பேர் - 1.தேவப்பெயர்:1 65/1

 TOP
 
    ஏழ்பிறப்பின்பேரே (1)
பறவை தாவரங்கள் என்ப பகரும் ஏழ்பிறப்பின்பேரே - 12.பல்பொருள்கூட்டம்:12 69/4

 TOP
 
    ஏழ்பேர் (7)
ஆலியே தளியே மிக்க உறை துளி ஆக ஏழ்பேர்
  ஆலியே கரகம் மற்றை கனோபலம் ஆலங்கட்டி - 1.தேவப்பெயர்:1 98/2,3
கடிய சஞ்சலையே மின்னல் கனருசி மின்னின் ஏழ்பேர் - 1.தேவப்பெயர்:1 100/4
புலைஞரே இழிஞர் ஏழ்பேர் பொருந்து சண்டாளர் நாமம் - 2.மக்கள்பெயர்:2 34/2
விளைஞரே கடைஞர் ஏழ்பேர் விளைவுறு மருதமாக்கள் - 2.மக்கள்பெயர்:2 71/2
மறுஇல் பந்தனை மதிப்பா மகள் சுதை புதல்வி ஏழ்பேர்
  இறை ஆகும் எச்சம்தான் இவ் இருபாற்கும் ஏற்கும் என்ப - 2.மக்கள்பெயர்:2 81/2,3
கலனையே கலப்பை ஏழ்பேர் கந்து எழு மதலை தம்பம் - 7.செயற்கைவடிவ:7 48/2
நீடு செய் வரம்பு குன்றின் முகடு நீர்க்கரை ஏழ்பேர் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 64/2

 TOP
 
    ஏழ்பேரே (1)
ஆங்குறும் மத்தியத்தோடு ஆகும் நா நடு ஏழ்பேரே - 5.இடப்பெயர்:5 66/4

 TOP
 
    ஏழகங்கள் (1)
செரு மலி தகர் கடாவே திண்ணகம் ஏழகங்கள்
  பரவு கம்பளம் என்று ஐந்தும் பற்றும் அவ் ஆணின் பல் பேர் - 3.விலங்கின்பெயர்:3 17/2,3

 TOP
 
    ஏழகம் (1)
துருவை ஏழகம் வற்காலி துள்ளலே பள்ளை வெள்ளை - 3.விலங்கின்பெயர்:3 16/2

 TOP
 
    ஏழடி (1)
இன்னவை பலவும் ஈந்திட்டு ஏழடி புலவன் பின் போய் - 12.பல்பொருள்கூட்டம்:12 132/3

 TOP
 
    ஏழாண்டுதானே (1)
இருபாலாரையும் கேட்பித்தல் இனிது ஐந்து ஏழாண்டுதானே - 12.பல்பொருள்கூட்டம்:12 113/4

 TOP
 
    ஏழாம் (2)
மேல் உள வீரை புன்னை விரும்பிய மணங்கள் ஏழாம்
  பாலொடு தேன்கள்தாமே பகர் தயிர் நெய்யினோடே - 10.ஒலிப்பெயர்:10 38/2,3
இனைய மூன்றுடன் ஐந்தாம் நாள் ஏழாம் நாள் இவை பொருந்தா - 12.பல்பொருள்கூட்டம்:12 103/3

 TOP
 
    ஏழ்ஆறு (1)
வடிவு அச்சம் வாசம் ஐயம் வரைவு விம்மிதம் ஏழ்ஆறு ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 63/2

 TOP
 
    ஏழிசைக்கும்தானே (1)
தீங்கிலா அக்கரங்கள் செப்பும் ஏழிசைக்கும்தானே - 10.ஒலிப்பெயர்:10 37/4

 TOP
 
    ஏழிசையில் (1)
ஒண் திறல் ஆடு என்று ஏழும் ஓதும் ஏழிசையில் ஓசை - 10.ஒலிப்பெயர்:10 39/2

 TOP
 
    ஏழிசையின்நாமம் (1)
இளியொடு விளரி தாரம் என்ப ஏழிசையின்நாமம் - 10.ஒலிப்பெயர்:10 35/4

 TOP
 
    ஏழின்நாமம் (1)
மொழி சிலாவருடம் என்ப முகில்கள் ஓர் ஏழின்நாமம்
  அழிவு காலத்தில் தோன்றி அடாவன படர்வ வானே - 12.பல்பொருள்கூட்டம்:12 77/3,4

 TOP
 
    ஏழின்பேர் (2)
புவி புகழ் இலவு தெங்கு புட்கரம் தீவு ஏழின்பேர்
  உவர் கரும்பின் சாறோடே ஒண் மது நெய் சிறந்த - 12.பல்பொருள்கூட்டம்:12 71/2,3
நவமதாம் தயிர் பால் அப்பு நாட்டிய கடல் ஏழின்பேர் - 12.பல்பொருள்கூட்டம்:12 71/4

 TOP
 
    ஏழினோடு (1)
உரியதாம் கழங்கு அம்மானை ஊசல் முன் ஏழினோடு
  வரும் மூன்றே ஆதி மூவேழ் மதிகாறு ஒற்றித்த மாதத்து - 12.பல்பொருள்கூட்டம்:12 113/2,3

 TOP
 
    ஏழு (2)
ஏழு கோவைகளால் சூழ்ந்த எழில் மணி மேகலை பேர் - 7.செயற்கைவடிவ:7 27/1
ஏல ஏழு உயர்ந்து ஒன்பான் நீண்டு ஈரைந்து முழத்தது ஆகி - 12.பல்பொருள்கூட்டம்:12 149/4

 TOP
 
    ஏழும் (12)
நீடிய குமரன் ஏழும் நிருமித்த புருடன்நாமம் - 2.மக்கள்பெயர்:2 57/2
ஏதம்இல் பிதா என்று ஏழும் என்றவன்நாமம் ஆமே - 2.மக்கள்பெயர்:2 75/4
வெந்திடும் ஞெகிழி ஏழும் விறகு என்ப முளரியும் பேர் - 4.மரப்பெயர்:4 53/2
நளிர் பனி அளி சீதம் தண் நன் மழை சாந்தம் ஏழும்
  குளிர் வளப்பம் கொழுப்பு ஆம் கொழுமையே செழுமை என்ப - 8.பண்பு:8 30/3,4
பிறந்தை உற்பவம் என்று ஏழும் பிறப்பு ஆம் உற்பத்தியும் பேர் - 8.பண்பு:8 71/2
சரிதலே கெடுதல் ஏழும் சாய்தலின்நாமம் ஆமே - 9.செயல்:9 21/4
அடைவுள நொறில் என்று ஏழும் கடுப்பு என அறையலாகும் - 9.செயல்:9 39/2
ஏதம்இல் சுருதி தன்னோடு இருக்கு இவை ஏழும் வேதம் - 10.ஒலிப்பெயர்:10 21/2
ஆங்குள ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்னும் ஏழும்
  தீங்கிலா அக்கரங்கள் செப்பும் ஏழிசைக்கும்தானே - 10.ஒலிப்பெயர்:10 37/3,4
ஒண் திறல் ஆடு என்று ஏழும் ஓதும் ஏழிசையில் ஓசை - 10.ஒலிப்பெயர்:10 39/2
தாது பொன் முதலாம் ஏழும் சடம் உறு தாது ஓரேழும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 115/1
மறுமை என்று ஏழும் செங்கோல் மன்னவர் பேறே ஆகும் - 12.பல்பொருள்கூட்டம்:12 69/2

 TOP
 
    ஏழ்உலகு (1)
உவமானம் இல்லா மேல் ஏழ்உலகு எனும் அறிவன் நூலே - 12.பல்பொருள்கூட்டம்:12 72/4

 TOP
 
    ஏழுலோகம் (2)
பொதி கஞ்சம் தராவும் கூட்டி புகன்றிடின் ஏழுலோகம்
  கதிர் நவமணியின் பேரும் கடவுள் மாமணியின்பேரும் - 6.பல்பொருள்:6 4/2,3
புதிய பாதலத்தினோடு போற்றும் கீழ் ஏழுலோகம்
  உதவிய உலக நூல் ஈரேழு எனும் உலகுதாமே - 12.பல்பொருள்கூட்டம்:12 73/3,4

 TOP
 
    ஏழே (1)
பரவு தோல் இறைச்சி மூளை பற்று சுக்கிலம் தாது ஏழே - 12.பல்பொருள்கூட்டம்:12 68/4

 TOP
 
    ஏழ்ஏழும் (1)
இரவி விண்மணி அருக்கன் ஏழ்ஏழும் சூரியன்பேர் - 1.தேவப்பெயர்:1 65/2

 TOP
 
    ஏழ்ஏழே (1)
கரியவன் நெடியோன் காவற்கடவுள் நாரணன் ஏழ்ஏழே
  அரியின்பேர் ஆகும் மற்றும் அபிதானம் அனந்தம் ஆமே - 1.தேவப்பெயர்:1 22/3,4

 TOP
 
    ஏழை (1)
மருவு நல்கூர்ந்தோன் இல்லோன் வறியன் ஆதுலனே ஏழை
  விரவிய உறுகணாளன் இலம்பாட்டோன் மிடியன் ஆமே - 2.மக்கள்பெயர்:2 49/3,4

 TOP
 
    ஏழைந்தும் (1)
உந்தும் ஏழைந்தும் மேலும் இரண்டும் மற்று உயர்ந்த யானை - 3.விலங்கின்பெயர்:3 5/4

 TOP
 
    ஏழையே (1)
இழுதையே மடனே ஆதன் ஏழையே அறிவிலான்பேர் - 2.மக்கள்பெயர்:2 55/2

 TOP
 
    ஏளனம் (1)
என் இளி ஏயே சீச்சீ ஏளனம் இகழ்ச்சி ஆமே - 10.ஒலிப்பெயர்:10 19/4

 TOP
 
    ஏற்கும் (22)
ஏனைய அசுரர் ஆகும் நிசாசரர் என்றும் ஏற்கும் - 1.தேவப்பெயர்:1 51/4
கோடை மேல்காற்றின்நாமம் கொண்டல் கீழ்காற்றிற்கு ஏற்கும்
  வாடையின்நாமம் வீசு வடகாற்று வடந்தை என்ப - 1.தேவப்பெயர்:1 56/1,2
கருது நாவிதனே அங்கி கார்த்திகை அளகும் ஏற்கும்
  பிரமன்நாள் சகடு பண்டி பேசிய சதியே வையம் - 1.தேவப்பெயர்:1 76/2,3
இருள் என்ப திமிரமோடு துணங்கறல் என்றும் ஏற்கும்
  நெருநலும் நென்னலும்தான் நிகழ்த்துப முன்னைநாளை - 1.தேவப்பெயர்:1 91/2,3
இடிம்பைதன்கொழுநன் வீமன் கதாயுதன் என்றும் ஏற்கும் - 2.மக்கள்பெயர்:2 16/4
இறை ஆகும் எச்சம்தான் இவ் இருபாற்கும் ஏற்கும் என்ப - 2.மக்கள்பெயர்:2 81/3
இளைய மைந்தர்க்கும் மற்றை இளங்கொடியார்க்கும் ஏற்கும் - 2.மக்கள்பெயர்:2 99/4
இரலை வச்சயமே புல்வாய் கலை கருமானும் ஏற்கும்
  இரலை புல்வாய்க்கும் பேர் ஆம் என்றனர் குன்றாநூலோர் - 3.விலங்கின்பெயர்:3 22/3,4
கோலம் ஆர் கணம் விலங்கின்கூட்டம் ஆம் பிறவும் ஏற்கும்
  கூலம் வேசகமே தோகை குறித்திடும் இலாங்கூலம் வால் - 3.விலங்கின்பெயர்:3 42/2,3
இருவேலி மூலகந்தம் வேரி பீதகமும் ஏற்கும்
  மரு மேவும் இருவாட்சிக்கு மயிலையும் அனங்கமும் பேர் - 4.மரப்பெயர்:4 8/3,4
மருது பூதவத்தினோடு மற்று அருச்சுனமும் ஏற்கும்
  பெருகிய கணியும் பீதசாலமும் திமிசும் வேங்கை - 4.மரப்பெயர்:4 23/1,2
இசையும் கண்டகம் வாள் வேணு கரவாளம் என்றும் ஏற்கும்
  நசையுறு கோணம் என்ப நாட்டிய கூன் வாள் ஆமே - 7.செயற்கைவடிவ:7 9/3,4
இட்டமாம் தூபமுட்டி இந்தளம் தடவும் ஏற்கும்
  மட்டு அமர்கின்ற தூபமணியே கைம்மணி என்று ஆகும் - 7.செயற்கைவடிவ:7 34/2,3
திரு அறம் செய்யார் ஏற்கும் தீய மட்கலத்தின்நாமம் - 7.செயற்கைவடிவ:7 66/3
பரவிய கடிஞை ஐயம் பாத்திரம் என்றும் ஏற்கும் - 7.செயற்கைவடிவ:7 66/4
இடுங்கலம் பாண்டம் ஏற்கும் கொள்கலம் எவற்றிற்கும் பேர் - 7.செயற்கைவடிவ:7 67/4
வழுத்தல் தோத்திரமே மெச்சல் வாழ்த்தல் ஆம் துதியும் ஏற்கும்
  அழிப்புஇலா ஆசி வாழ்த்தே ஆசிடை என்றும் கூறும் - 10.ஒலிப்பெயர்:10 4/2,3
சிக்கமே குடுமி நாமம் சீப்பு உடன் உறியும் ஏற்கும்
  கொக்கு மாமரமே செந்நாய் குரண்டமே குதிரை மூலம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 9/1,2
பங்கு என்ப முடமே ஆகும் பாதியும் சனியும் ஏற்கும்
  வங்கமே வெள்ளி நாவாய் வழுதலை ஈயம் ஆமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 22/2,3
இராகமே கீதம் செம்மை இச்சையே நிறமும் ஏற்கும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 171/4
இறும்பு தாமரையின்பூவே மலை குறுங்காடும் ஏற்கும்
  இறும்பூது தகைமை வெற்போடு அதிசயம் குழை தூறு என்று ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 287/1,2
ஈதலே ஏற்றல் ஆறும் ஏற்கும் அந்தணர்தொழில் பேர் - 12.பல்பொருள்கூட்டம்:12 53/2

 TOP
 
    ஏற்போன் (1)
இரவலன் பரிசிலாளன் யாசகன் தீனன் ஏற்போன் - 2.மக்கள்பெயர்:2 48/4

 TOP
 
    ஏற்ற (20)
சீதரன் நந்தகோபன் திருமகன் உவணம் ஏற்ற
  கேதனன் பதுமநாபன் கேசவன் பஞ்சவர்க்குத்தூதனே - 1.தேவப்பெயர்:1 19/2,3
எண்ணில்கண்உடையோன் வாமன் ஏற்ற புண்ணியத்தின்மூர்த்தி - 1.தேவப்பெயர்:1 26/3
ஈனம்இல் அணங்கு புத்தேள் ஏற்ற சூர் கடவுள் தேவே - 1.தேவப்பெயர்:1 51/1
எழுவித நாவே வன்னி ஏற்ற பாவகனே தேயு - 1.தேவப்பெயர்:1 58/3
இருபிறப்பாளர் பார்ப்பார் ஏற்ற மேற்குலர் உயர்ந்தோர் - 2.மக்கள்பெயர்:2 6/1
ஏன்ற ஆசாரியன்பேர் ஏற்ற மாணாக்கன் கற்போன் - 2.மக்கள்பெயர்:2 7/4
எருமையே மரையே பெற்றம் ஏற்ற நீர்ச்சாதி நாகு ஆம் - 3.விலங்கின்பெயர்:3 36/1
சலஞ்சலம் பணிலம் என்று சாற்றினர் ஏற்ற நூலோர் - 3.விலங்கின்பெயர்:3 72/4
இலம்பகம் தெரியல் சுக்கை ஏற்ற கத்திகையே தாமம் - 4.மரப்பெயர்:4 66/2
இரசதம் வெள்ளியின்பேர் ஏற்ற காரீயம் நாகம் - 6.பல்பொருள்:6 9/2
இடியும் ஆம் இலட்டுகத்தோடு ஏற்ற மோதகமே தோசை - 6.பல்பொருள்:6 25/2
எழுவகை உலோகம்தன்னில் ஏற்ற மண் மரங்கள்தம்மில் - 7.செயற்கைவடிவ:7 1/2
இடங்கரே நிறையே வட்டம் ஏற்ற நீர்ச்சால் இம் முப்பேர் - 7.செயற்கைவடிவ:7 64/2
இருள் மணி நீலம் நல்லம் ஏற்ற காழகமே காளம் - 8.பண்பு:8 22/1
தரம் உற எழுத்துக்கு ஏற்ற சாரியை நான்கே சாற்றும் - 10.ஒலிப்பெயர்:10 18/2
இன்னிசை குழலின்நாமம் ஏற்ற வங்கியமே வாரி - 10.ஒலிப்பெயர்:10 42/1
இருவகை நற்கந்தங்கள் ஏற்ற துர்க்கந்தம் என்ப - 12.பல்பொருள்கூட்டம்:12 4/2
இருவகை பொருள்கள் கல்வி ஏற்ற செல்வங்கள் ஆமே - 12.பல்பொருள்கூட்டம்:12 4/4
ஏற்ற சாத்துவிகத்தோடே இராசதம் தாமதங்கள் - 12.பல்பொருள்கூட்டம்:12 9/1
இயமமே நியமம் முந்தி ஏற்ற ஆசனத்தினோடு - 12.பல்பொருள்கூட்டம்:12 84/1

 TOP
 
    ஏற்றதும் (1)
இறை என உரைத்த மூவைந்தும் ஏற்றதும் இறகின்பேரே - 3.விலங்கின்பெயர்:3 69/3

 TOP
 
    ஏற்றம் (2)
இரவிநாள் கலமே தோணி ஏற்றம் ஆம் தொழுவே நாவாய் - 1.தேவப்பெயர்:1 86/3
வியல் மிகும் ஏற்றம் ஞெள்ளல் சாலூரம் மேதை மேன்மை - 8.பண்பு:8 64/4

 TOP
 
    ஏற்றமே (1)
ஏற்றமே கியாதி என்ப இயன்ற மேம்பாட்டின்நாமம் - 10.ஒலிப்பெயர்:10 15/2

 TOP
 
    ஏற்றல் (4)
அடுக்குதல் பேரே ஏற்றல் ஆம் ஓவல் ஒழிதல் என்ப - 9.செயல்:9 27/3
ஏற்றல் போதரல் எனும் சொல் எதிர்கொடுபோதல் என்ப - 9.செயல்:9 45/3
முட்டுதலுடனே தாக்கல் தலைப்படல் முடுகல் ஏற்றல்
  கிட்டலே எதிர்தல் ஆகும் கிடைத்தலும் அதன்பேர்தானே - 9.செயல்:9 47/1,2
ஈதலே ஏற்றல் ஆறும் ஏற்கும் அந்தணர்தொழில் பேர் - 12.பல்பொருள்கூட்டம்:12 53/2

 TOP
 
    ஏற்றலே (2)
ஏற்றலே குறைகோள் பின் சென்று இரத்தலே வேண்டலும் பேர் - 9.செயல்:9 11/3
ஏற்றலே கோடல் என்ப எதிர்ந்து போர்செய்தலும் பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 280/1

 TOP
 
    ஏற்றிடும் (7)
இழிவு கீழ் பயம்பு தாழ்வே ஏற்றிடும் படுகர் ஞெள்ளல் - 5.இடப்பெயர்:5 61/1
இரதனம் அரைநாணின்பேர் ஏற்றிடும் தொங்கல் உத்தி - 7.செயற்கைவடிவ:7 28/3
இட்ட நற்பணி தூசின்பேர் ஏற்றிடும் தேவாங்கம்தான் - 7.செயற்கைவடிவ:7 70/3
இகுத்தலே விரித்தலின்பேர் ஏற்றிடும் பொதிதல் வீக்கம் - 9.செயல்:9 34/2
ஏற்றிடும் நொடி இயத்தோடு இசை பறை வாக்கு பாணி - 10.ஒலிப்பெயர்:10 2/3
இடி இடி பேரே நெல்மா ஏற்றிடும் உறுதிச்சொல்லே - 11.ஒருசொல்பல்பொருள்:11 49/4
ஏற்றிடும் சிறுதேர் ஆம் இ பருவம் பத்தையும் இசைக்கும் - 12.பல்பொருள்கூட்டம்:12 112/3

 TOP
 
    ஏற்றிய (1)
ஏற்றிய வேறுபாட்டுக்கு இயம்பிய நாமம் ஆகும் - 8.பண்பு:8 65/3

 TOP
 
    ஏற்று (1)
மட்டறு நெல்லும் புல்லும் மத்தகம்தன்னில் ஏற்று
  தட்டறு மலையின் ஊரே சம்வாகம் என்றும் சாற்றும் - 5.இடப்பெயர்:5 38/1,2

 TOP
 
    ஏறங்கோட்பறை (1)
கொண்டு எழு பம்பை ஏறங்கோட்பறை முல்லைக்கு ஆகும் - 7.செயற்கைவடிவ:7 41/3

 TOP
 
    ஏறாளர் (1)
நயம்இல் கூளியர் ஏறாளர் நாட்டும் வாள் உழவர் மள்ளர் - 2.மக்கள்பெயர்:2 50/3

 TOP
 
    ஏறிய (2)
ஏறிய பரியந்தத்தோடு ஏணி இவ் ஐந்தும் என்ப - 8.பண்பு:8 19/4
ஏறிய ஊழும் சொல்வாம் ஏகமே வீடுபேறு - 12.பல்பொருள்கூட்டம்:12 2/4

 TOP
 
    ஏறு (12)
ஏறு உக்கம் நரையே நந்தி இடபம் ஆம் கூளியும் பேர் - 3.விலங்கின்பெயர்:3 14/4
மானொடு மரை புல்வாயும் மாறுகொள் சுறவும் ஏறு ஆம் - 3.விலங்கின்பெயர்:3 33/2
வந்து ஏறு படீரம் பூசு மலயசம் சந்தனப்பேர் - 4.மரப்பெயர்:4 2/4
பகடு இபம் பெருமை ஏறு பஃறி ஆண்மேதி ஐம்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 11/1
பசு ஏறு சீவன் ஆ ஆம் பாரதி வாணி தோணி - 11.ஒருசொல்பல்பொருள்:11 34/1
பாண்டில் ஏறு ஊர்தி வட்டம் பணை கட்டில் விளக்கு தாளம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 92/3
ஓதை பேரொலி மதில் பேர் உக்கம் தீ இடை ஆன் ஏறு - 11.ஒருசொல்பல்பொருள்:11 104/4
வையம் தேர் ஏறு உரோணி வசுந்தரை சிவிகை ஊர்தி - 11.ஒருசொல்பல்பொருள்:11 162/4
மூரி ஏறு எருமை ஆற்றல் முறை பீடு நெரிவும் ஆமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 174/1
கூளி பேய் தமர் ஏறு ஆசு குறள் படைத்தலைவன் கூட்டம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 271/2
ஏறு இடி முதல்நாள் ஆகும் இடபமோடு எருதும் அ பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 278/4
விரவிய மேடம் ஏறு மிதுனமே அருக்கன்வீதி - 12.பல்பொருள்கூட்டம்:12 14/4

 TOP
 
    ஏறுதல் (1)
இவர்தலே எழுச்சி ஆசை ஏறுதல் சேறல் மேவல் - 11.ஒருசொல்பல்பொருள்:11 232/2

 TOP
 
    ஏறுதலின்நாமம் (1)
இவர்தலே மீக்கோள் என்ப இரண்டும் ஏறுதலின்நாமம்
  அவா மற்றும் இறங்குதல் பேர் சுதம் அவதாரம் ஆகும் - 9.செயல்:9 55/2,3

 TOP
 
    ஏறுதான் (1)
ஏறுதான் தழுவல் வில்லால் இலக்கம் எய்திடுதல் எல்லாம் - 12.பல்பொருள்கூட்டம்:12 64/3

 TOP
 
    ஏறும் (3)
எஞ்சல்இல் சிறப்பின் ஏறும் இராசவாகனமது ஆமே - 7.செயற்கைவடிவ:7 47/4
விடை எதிர்மொழியும் ஏறும் விடுத்தலும் விளம்பும் முப்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 67/1
நந்தியே சிவனும் ஏறும் நந்தியீச்சுரனும் முப்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 126/3

 TOP
 
    ஏறுவிடல் (1)
ஓதுவார்க்குஉணவு சேலை உறும் ஏறுவிடல் காதோலை - 12.பல்பொருள்கூட்டம்:12 135/2

 TOP
 
    ஏறுஊர்ந்தோன் (1)
நந்தி ஈச்சுரன் ஏறுஊர்ந்தோன் நக்கன் மா ஞானமூர்த்தி - 1.தேவப்பெயர்:1 16/4

 TOP
 
    ஏறொடு (1)
ஏறொடு மூரி புல்லம் எருத்தின்பேர் இமில் முரிப்பு ஆம் - 3.விலங்கின்பெயர்:3 14/2

 TOP
 
    ஏறோடு (2)
பரி மருத்துவநாள் வாசி பரவும் ஐப்பசி யாழ் ஏறோடு
  இரலையே முதல்நாள் சென்னி என்பது அச்சுவினியின்பேர் - 1.தேவப்பெயர்:1 75/1,2
பகடு உம்பல் ஏறோடு ஓரி ஈராறும் ஆண் பேர் - 3.விலங்கின்பெயர்:3 30/2

 TOP
 
    ஏன்ற (1)
ஏன்ற ஆசாரியன்பேர் ஏற்ற மாணாக்கன் கற்போன் - 2.மக்கள்பெயர்:2 7/4

 TOP
 
    ஏனம் (3)
கேழலே அரி குரோடம் கிரி கிடி கிருட்டி ஏனம்
  மோழலே இருளி முந்து வல்லுளி களிறு மைம் மா - 3.விலங்கின்பெயர்:3 19/1,2
ஏனம் ஓலைக்குடை பேர் எறுழியும் மறமும் அ பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 307/3
இவர் எழுமுனிவர் விட்டில் தொட்டியர் ஏனம் கள்வர் - 12.பல்பொருள்கூட்டம்:12 76/3

 TOP
 
    ஏனல் (3)
பரியும் பைங்கூழ் பசும்புல் பயிர் கதிர் குரலோடு ஏனல்
  பெருகிய இளஞ்சூல் பீட்டை பீள் இளங்கதிரின்பேரே - 4.மரப்பெயர்:4 38/3,4
செந்தினை கவலை கம்பு ஆம் தினையின்பேர் ஏனல் என்ப - 4.மரப்பெயர்:4 40/2
பைந்தினைதானும் ஏனல் பகர்ந்திடும் கருந்தினை பேர் - 4.மரப்பெயர்:4 40/3

 TOP
 
    ஏனலே (1)
ஏனலே செந்தினை பேர் தினைப்புனம் என்றும் ஆமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 304/4

 TOP
 
    ஏனாதி (2)
திருந்தும் ஏனாதி மூன்றும் சிறந்த நாவிதன்பேர் ஆகும் - 2.மக்கள்பெயர்:2 32/3
ஏனாதி மஞ்சிகன் மந்திரியும் தந்திரியும் என்ப - 11.ஒருசொல்பல்பொருள்:11 306/3

 TOP
 
    ஏனைய (1)
ஏனைய அசுரர் ஆகும் நிசாசரர் என்றும் ஏற்கும் - 1.தேவப்பெயர்:1 51/4

 TOP
 
    ஏனையே (1)
ஏனையே ஒழிபு மற்றை எனும் இடைச்சொற்கும் அ பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 296/3

 TOP