0.கடவுள் வாழ்த்து
1.தேவப் பெயர்த் தொகுதி
2.மக்கள் பெயர்த் தொகுதி
3.விலங்கின் பெயர்த் தொகுதி
4.மரப் பெயர்த் தொகுதி
5.இடப் பெயர்த் தொகுதி
6.பல் பொருள் பெயர்த் தொகுதி
7.செயற்கை வடிவின் பெயர்த் தொகுதி
8.பண்புப் பெயர்த் தொகுதி
9.செயல் பற்றிய பெயர்த் தொகுதி
10.ஒலி பற்றிய பெயர்த் தொகுதி
11.ஒரு சொல் பல் பொருள் பெயர்த் தொகுதி
12.பல் பெயர்க்கொரு பெயர்த் தொகுதி
|
** காங்கேயர் செய்த உரிச்சொல் நிகண்டு
** வீ. ஆறுமுகஞ்சேர்வை அவர்களால் பார்வையிடப்பெற்றது
** 1914
@0 கடவுள் வாழ்த்து
**1
#1
** விநாயக வணக்கம்
மதி பாய் சடை முடித்து மாசுணப் பைம் பூட்டுச்
சதி பாய் குறும் தாட்டுத் தானம் நதி பாய்
இரு கவுட்டு முக்கட்டு நால் வாய்த்து என் உள்ளம்
உருகவிட்டு நின்ற ஒளி
**2
#2
** சிவ வணக்கம்
திருமாலும் செங்கமலமேயானும் காணாப்
பெருமான் பிறை சூடும் பெம்மான் அருள் மூர்த்தி
நன் நெஞ்சின் நான்மறையோன் தில்லை நடம்புரிவோன்
என் நெஞ்சின் மேய இறை
@1 தேவப் பெயர்த் தொகுதி
** சிவன் பெயர்
**3
#1
சங்கரன் தாணு சயம்பு திரியம்பகன்
அங்கணன் ஆதி அழலேந்தி பைம் கயிலை
வெற்பன் விடையன் விமலன் விடி சடையன்
நல் பன்னகப்பூணினான்
** 12 பெயர்கள்
**4
#2
அரவன் புராரி புராந்தகன் அண்ணல்
பரமன் பரசுதரன் பித்தன் அரனே
கிரியைவளைத்தோன் கிரிசன் கிரீசன்
வரி உழுவைத்தோலோன் வரன்
** 13 பெயர்கள்
**5
#3
ஐந்துமுகத்தோன் அழற்கரத்தோன் அண்டர் எலாம்
உய்ந்திட நஞ்சுண்டோன் உருத்திரன் தந்தி
உரிப்போர்வை போர்த்தோன் உமாபதி மாதேவன்
பர அரியோன் பூதபதி
** 9 பெயர்கள்
**6
#4
நக்கன் பசுபதி நாரிபாகன் சிவன்
அக்கரவார்த்தோன் அழலாடி முக்கண்ணன்
ஈசுரன் எண்தோளன் ஏறூர்ந்தோன் அந்திவண்ணன்
பாசுபதன் பஞ்சானனன்
** 12 பெயர்கள்
**7
#5
காலகாலன் காளகண்டன் கபாலி திரி
சூலபாணி எண்மூர்த்தி சோமதரன் ஆலதரன்
நீறாடி மன்றாடி நித்தன் அத்தன் எண்குணன்
ஆறானனன்தாதை ஆம்
** 13 பெயர்கள்
**8
#6
ஈசன் பசுபதி ஈசானன் எஞ்ஞான்றும்
நாசமிலாதோன் நடன் நம்பன் மாசறு சீர்க்
கங்கைதரித்தோன் கறைக்கண்டன் கண்ணுதலோன்
இங்கு இவை எல்லாம் சிவன் பேர் ஆம்
** 9 பெயர்கள்
**9
#7
** உமையின் பெயர்
ஆரியை ஐயை அயிராணி அம்பிகை
நாரி பரை அமலை நாயகி சார் இமய
வல்லி சிவை சாம்பவி மாதா உருத்திரை
வெல்லும் விமலை உமை
** 14 பெயர்கள்
**10
#8
** காளியின் பெயர்
தாருகன்காய்ந்தாள் பயிரவி சாமுண்டி
கூரிய மூவிலைவேல்குமரி பேரெழில்
ஆளியூர் சூலி அலகைக்கொடியாள் கங்
காளி இவை காளியின் பேர்
** 7 பெயர்கள்
**11
#9
** துர்க்கையின் பெயர்
இகல் மகிடன்காய்ந்தாள் எழில் குமரி நீலி
சுக நிறத்து அந்தரி துர்க்கை பகவதி
வெய்ய சயமகள் விந்தை விறல் கொற்றவை
ஐயை அடல் ஆரியை
** 10 பெயர்கள்
**12
#10
** விநாயகன் பெயர்
பால் புரை நீற்றோன் மகன் பார்ப்பதி மைந்தன்
மால்மருகன் காமவேள்மைத்துனன் வேல் முருகன்
முன்னோன் கணபதி மூவா விநாயகன்
என் நோன் பகை தணிக்கும் ஏறு
** 6 பெயர்கள்
**13
#11
அங்குசபாசதரன் ஆகுவாகனன்
ஐங்கரத்தோன் ஆறு நிகர் மதத்தன் வெங்கண்
இரு மருப்பு மா முகத்தன் முக்கண் இறைவன்
ஒருமருப்பன் என் உள்ளத்தோன்
** 7 பெயர்கள்
**14
#12
** முருகன் பெயர்
முருகன் விசாகன் முதல்வன்சேய் மாயோன்
மருகன் குகன் குமரன் வானோர்க்கு ஒரு தலைவன்
கங்கைமகன் கந்தன் கார்த்திகேயன் பொருப்பின்
மங்கைமகன் என் சேமவைப்பு
** 10 பெயர்கள்
**15
#13
ஆறிரண்டுதோளான் அயிலான் மயிலூர்தி
ஆறுமுகத்தான் அமரர்க்காச் சீற உணர்
போர்கடிந்தான் தாரகனைக்காய்ந்தான் பொருப்பெறிந்தான்
சூர்தடிந்தான் வேள் என் துணை
** 9 பெயர்கள்
**16
#14
** திருமாலின் பெயர்
ஆயிரம்பேரான் அனந்தன் பணிசயனன்
நேயமுடன் எங்குமாய் நின்ற பிரான் தூயவன்
இல்லதும் உள்ளதும் ஆம் எம் கோன் திருமடந்தை
வல்லவன் பின்னைக்குமன்
** 8 பெயர்கள்
**17
#15
நெடியோன் குறளுருவன் நேமியோன் புள்சேர்
கொடியோன் கரியோன் கோவிந்தன் படியிடந்தோன்
ஆயன் முராரி அரி கேசவன் கண்ணன்
மாயன் உலகளந்தான் மால்
** 14 பெயர்கள்
**18
#16
** செந்திருவின் பெயரும் மன்மதன் பெயரும்
தாமரையாள் செய்யாள் கரிய அரிதேவி
மாமலராள் இந்திரை பொன் செந்திருவின் நாமம் ஆம்
மன்மதன் மீனுயர்த்தோன் மாரன் அநங்கன் கருப்பு
வில் மதனன் வீப் பகழி வேள்
** 7, 5 பெயர்கள்
**19
#17
காமன் இரதிபதி சம்பரசூதன்
தோமின் மதுசகன் சித்தசன் பூமகள்
மைந்தன் மகரக்கொடியோன் மனோபவன் அம்
பைந்துடையோன் கந்தர்ப்பன் ஆம்
** 10 பெயர்கள்
**20
#18
** பிரமன் பெயர்
பிரமன் பிதாமகன் நான்முகன் போதன்
இரணியகர்ப்பன் இறைசூதன் பரமேட்டி
தாதா விரிஞ்சன் சயம்பு சதாநந்தன் அயன்
வேதா விதாதா விதி
** 14 பெயர்கள்
**21
#19
** நாமகள் பெயரும் பொன்னுலகின் பெயரும்
நாமகள் பாரதி வாணி கலைமகள்
பூமகன்தேவி ஆம் பொன்னுலகின் நாமம்
சுரருலகம் நாகம் கோ வானம் சுவர்க்கம்
விரி துறக்கம் மேலுலகம் விண்
** 4, 8 பெயர்கள்
**22
#20
** இந்திரன் பெயர்
மகவான் புரந்தரன் வச்சிரபாணி
இகல் வாசவன் அமரர்க்கீசன் முகிலூர்தி
அந்தரநாதன் அயிராவதப்பாகன்
இந்திரன் வானோர்க்கிறை
** 9 பெயர்கள்
**23
#21
** தேவர் பெயர்
அமுதாசனர் விபுதர் ஆதித்தர் விண்ணோர்
இமையோர் புத்தேளிர் இலேகர் அமரர்
வரர் தானவர்பகைவர் பொன்னுலகில்வாழ்நர்
சுரர் வானவர் சுவர்க்கத்தோர்
** 14 பெயர்கள்
**24
#22
** அசுரர் அரக்கர் பெயர்கள்
தானவர் தண்டார் அவுணர் திதிபுதல்வர்
வானவர் மாற்றலர் வல்லசுரர் மேனி
கரப்போர் நிருதர் நிசாசரர் கார்வண்ணர்
அரக்கர் பிசிதாசனர்
** 4, 5 பெயர்கள்
**25
#23
** குபேரன் பெயர்
நிறைசெல்வன் புட்பகத்தேரோன் நிதியோன்
உறு தனதன் கூற்றை உதைத்த இறைவற்கு
அபேத சகாயன் அடல் இயக்கர்கோமான்
குபேரன் அளகையார்கோன்
** 7 பெயர்கள்
**26
#24
** இயமன் வருணன் பெயர்கள்
சமன் மறலி அந்தகன் தண்டதரன் கூற்று
நமன் தருமன் காலன் நடுவன் யமன் பேர்
வல நதிகேள்வன் வருணபகவான்
சலபதி பாசதரன்
** 9, 3 பெயர்கள்
**27
#25
** சூரியன் பெயர்
இரவி தபனன் இனன் பதங்கன் வெய்யோன்
அருணன் மார்த்தாண்டன் அருக்கன் தரணி
உதயன் ஆதித்தன் தினகரன் பானு
கதிரவன் சூரியன் ஆம் காண்
** 14 பெயர்கள்
**28
#26
** சந்திரன் பெயர்
அமுதகதிரோன் விது அம்புலி ஆலோன்
குமுதசகாயன் குபேரன் இமகரன்
இந்து மதி திங்கள் இரவோன் உடுபதி
சந்திரன் சோமன் சசி
** 14 பெயர்கள்
**29
#27
** செவ்வாய் புதன் பெயர்கள்
அங்காரகன் சேய் அழல் வக்கிரன் பௌமன்
தங்கார் குசனே தரைமகன் பொங்கு ஆரல்
செவ்வாய் புதன் புந்தி மேதை நிபுணன் புலவன்
கைவார் கணக்கன் மால் காண்
** 8, 6 பெயர்கள்
**30
#28
** வியாழன் வெள்ளி சனி பெயர்கள்
அரசன் பொன் பீதகன் அந்தணன் மந்திரி
சுரகுரு நாமம் வியாழன் மருவு புகர்
சுக்கிரன் பார்க்கவன் சுங்கன் கவி வெள்ளி
மைக் காரி மந்தன் சனி
** 6, 5, 3 பெயர்கள்
**31
#29
** மேடம் இடபம் மிதுனம் கர்க்கடகம் பெயர்கள்
கூறும் அருணம் கொறி மறி மேடம் இவை
ஏறு விடை மூரி இடபம் ஆம் தேறிய
தண்டு மிதுனம் சவை இரட்டை யாழ் விழவு
ஞெண்டு நள்ளி கர்க்கடகம் ஆம்
** 3, 3, 5, 2 பெயர்கள்
**32
#30
** சிங்கம் கன்னி துலாம் விருச்சிகம் தனு பெயர்கள்
கொலை அரி ஆளி கொடும்புலி சிங்கம்
முலை மடந்தை பேர் கன்னி முற்றாம் துலை நிறை
தூக்குத் துலாம் ஆகும் சொல்லும் தெறுக்கால் தேள்
தாக்கும் சிலை வில் தனு
** 3, 3, 2, 2 பெயர்கள்
**33
#31
** மகரம் கும்பம் மீனம் பெயர்கள் இராசியின் பெயர்
வடி மீன் கலை சுறா மானே மகரம்
குடம் கரீரம் சாடி கும்பம் நெடு மயிலை
வல்ல சலசர மீன் மச்சம் இவை மீனம்
இல் ஓரை ராசி இவையாம்
** 4, 3, 4, 2 பெயர்கள்
**34
#32
** விண்மீன் திக்கு பெயர்கள்
தாரகை சோதி தயங்கு தாராகணம்
ஏருடை நல் நாள் உடு மீனின்பேர் ஆம்
இசை புலம் மாதிரம் கோ காட்டை அரிதம்
திசை ககுபம் ஆசை தேம் திக்கு
** 6, 8 பெயர்கள்
**35
#33
** ஆகாயம் மேகம் பெயர்கள்
ஆகாயம் அந்தரம் மீ வான் அம்பரம் விசும்பு
மாகம் வெளி மாதிரம் கொண்டல் மேகம் முகில்
கார் கனம் விண் கொண்மூ பயோதரம் வான் அம்புதம்
வார் புயல் மை மாரி மழை
** 8, 13 பெயர்கள்
**36
#34
** எரி பெயர்
சாதவேதாவே தபனன் தனஞ்சயன்
சோதி உதாசனனே தூமகேது
சுசியே சுவலனே சித்திரபானு
வசு அரி அவ் வாயு சகன்
** 12 பெயர்கள்
**37
#35
** எரி காற்று பெயர்கள்
கனல் அழல் தீத் தழல் பாவகன் வன்னி
அனல் சிகி அங்கி எரி ஆம் அநிலம் கால்
ஊதை பவனன் உயிர்ப்பு ஒலி வங்கூழ் சலனன்
வாதம் வளி மாருதம்
** 9, 11 பெயர்கள்
**38
#36
கந்தவகனே சமீரன் சதாகதி
கந்தவாகன் பிரபஞ்சனன் வந்து
பரிசனன் ஆசுகன் பவமானன் வாயு
அரி மாபலனே காற்று ஆம்
** 12 பெயர்கள்
**39
#37
** புனல் பெயர்
வாரி சலம் சலிலம் தோயம் வனம் புவனம்
நீரம் கீலாலம் கவந்தம் கார் நாரம்
பயம் உதகம் பானீயம் கம் கமலம் பாணி
அயம் அமுதம் அப்பு அம்பு ஆம்
** 22 பெயர்கள்
**40
#38
வார் வருணம் ஆலம் அலரே அகிலமுகம்
சீவனீயம் குசம் புட்கரம் சீவனம்
சம்பரம் காண்டம் கனரதம் கோ அறல்
அம் புனலின் நாமங்கள் ஆம்
** 15 பெயர்கள்
**41
#39
** நதி கங்கை பெயர்கள்
தீபவதி சிந்து உந்தி துளி தடினி
ஆபகை தீர்த்திகை யாறு நதி பாபம் தீர்
பாகீரதி விமலை கங்கை திரிபதகை
நாகாலயத்தோர் நதி
**8 , 4 பெயர்கள்
**42
#40
** பூதம் பேய் பெயர்கள்
ஆய குறள் பாரிடம் பூதம் கடி மண்ணை
பேய் குணபாசி பிசாசு அலகை ஓய் கழுது
வேதாளம் கூளி அழனே சவம் குணுங்கு
ஓதும் பிரேதம் பிணம்
** 2 , 13 பெயர்கள்
**43
#41
** தினம் பகல் இரவு பெயர்கள்
எல்லுத் திவசம் தினம் திவா ஆம் பகல்
எல்லி விபாவரி யாமினி அல்லே
இரசனி கங்குல் நிசா நிசி நத்தம்
இரவின் பெயராம் இவை
** 2, 1, 9 பெயர்கள்
**44
#42
** இடி மின் பெயர்கள்
வெடி அசனி செல்லு விண்ணேறு உருமு
இடியின் பேர் மின்னல் இலங்கல் கடியவாம்
சஞ்சலை சம்பை சபலை கனருசி
மிஞ்சு தடித்தும் இவை மின்
** 5, 7 பெயர்கள்
** தேவப்பெயர்த் தொகுதி முற்றுப்பெற்றது
@2 மக்கட்பெயர்த் தொகுதி
**45
#1
** முனிவர் பெயர்
ஐயர் துறந்தோர் அருந்தவர் பற்றற்றோர்
பொய்யிகந்தோர் ஐந்துபுலன்வென்றோர் மெய்யர்
கனிமூலசாகாசனர் கோபங்காய்ந்தோர்
முனிவர் அறவோர் மொழி
** 10 பெயர்கள்
**46
#2
** பார்ப்பார், அரசர் பெயர்
மறையவர் வேதியர் வையகத்தேவர்
அறுதொழிலோர் அந்தணர் பார்ப்பார் இறைவன்
நரபதி கொற்றவன் வேந்தன் முதல்வன்
புரவலன் கோ பூபதி
** 5, 8 பெயர்கள்
**47
#3
** வைசியர் சூத்திரர் பெயர்
ஒத்த பொருள்செய்வோர் அயனுருவில்வந்தோர்
முத்தொழிலோர் வணிகர் மொய் தனத்தோர் மெய்த்தும்
எழில் மலரோன் பாதத்தில்வந்தோர் இசை ஏர்த்
தொழிலுடையோர் சூத்திரர்
** 5, 2 பெயர்கள்
**48
#4
** மனிதர் ஆடவர் பெண் பெயர்
நரர் மனிதர் மானுடர் மானவர் மாக்கள்
புருடன் ஆண் ஆடவன் ஆடூஉ அரிவை பிணா
அங்கனை நாரி வனிதை மகடூஉ மாது
மங்கை மடந்தை பெண் பேர்
** 4, 3, 9 பெயர்கள்
**49
#5
** பேடி குறள் கூன் பிண்டமில்லா உறுப்பு
பேடி கிலீவம் அலி பெண்டகம் சண்டமே
நீடில் குறள் வாமனம் சிந்து கோடிய
கூன் பெயர் ஆகும் முடம் முடங்கல் கொள்கையில்லா
ஊன் பிண்டம்இல்லா உறுப்பு
** 4, 2, 2, 1 பெயர்கள்
**50
#6
** தந்தை தாய் மகன் பெயர்
தாதை பிதா ஐயன் அத்தன் அப்பன் தந்தை
ஏதம்இல் அன்னை ஈன்றாள் பயந்தாள் மாதா தாய்
சந்ததி தோன்றல் சிறுவன் சேய் புத்திரன்
மைந்தன் புதல்வன் மகன்
** 5, 4, 7 பெயர்கள்
**51
#7
** மணவாளன் மனைவி பெயர்
கணவன் பதி காந்தன் காதலன் அன்பன்
துணைவன் தலைவன் கொழுநன் மணவாளன்
தன் பாரியை துணைவி தாரம் இல்லாள் மனைவி
கற்பான்மிக்காள் காதலி
** 8, 6 பெயர்கள்
**52
#8
** உறவின் பெயர்
குடும்பம் துணை நட்புக் கூளி கேள் சுற்றம்
கடும்பு தமர் மித்திரர் நட்டார் அடைந்தவர்
பற்றாயார் பந்தம் விருந்தம் தொடர் ஒக்கல்
உற்றார் கிளைஞர் உறவு
** 18 பெயர்கள்
**53
#9
** வேடர் இடையர் பெயர்
குறவர் சவரர் புளிஞர் கிராதர்
மறவர் எயினர் வியாதர் விறல் வேடர்
கானவர் பேர் அண்டர் கோவலர் கோபாலர்
ஆன் இடையர் ஆயர் பெயராம்
** 8, 4 பெயர்கள்
**54
#10
** பெரியோர் கீழ்மக்கள் பெயர்
ஆரியர் நல்லோர் அறிவுடையோர் பண்டிதர்
சீரியர் சான்றோர் பெரியோர் பேர் பூரியர்
நில்லா மனத்து அசடர் நீசர் நெறியில்லார்
கல்லார் கயவர் கலர்
** 6, 7 பெயர்கள்
**55
#11
** பகைவர் பெயர்
மன்னாதார் மாற்றார் மருவலர் வேண்டார் அடையார்
இன்னாதார் கூடார் இகலினார் ஒன்னாதார்
செற்றார் அமித்திரர் சேரார் நண்ணார் செறுநர்
பற்றார் பகைவர் பரர்
** 16 பெயர்கள்
**56
#12
** படைவீரர் பெயர்
வீரர் வயவர் மறவர் மிகு மள்ளர்
தீரர் அபயர் தெறும்தொழிலோர் சூரர்
பொருநர் அயிலுழவர் போகா விறலோர்
செருநர் செருத்தொழிலோர்
** 12 பெயர்கள்
**57
#13
** கொடிப்படை படையுறுப்பு படைவகுப்பு
** சதுரங்கசேனை சேனை பெயர்கள்
துறுபடை முன்செல்லல் தார் தூசி அணி நெற்றி
உறுபடை கை ஒட்டு உண்டை யூகம் தெறு சேனை
யானை தேர் மாச் சதுரங்கம் ஆகும் தண்டம்
தானை கடகம் தந்திரம்
** 1, 3, 3, 4, 4 பெயர்கள்
**58
#14
** பாதம் முழந்தாள் தொடை அல்குல் இடை பெயர்கள்
சரண் அடி பாதம் தாள் சானு முழந்தாள்
திரளும் குறங்கு கவான் ஊரு அரை நிதம்பம்
அல்குல் மருங்குல் நடுவு நுசுப்பு இவை
ஒல்கும் இடைக்கு ஒத்த பெயர்
** 3, 1, 3, 2, 3 பெயர்கள்
**59
#15
** வயிறு கொப்பூழ் குயம் மார்பு கை பெயர்கள்
வயிறு வயின் உதரம் நாபி உந்தி கொப்பூழ்
குயம் நகில் கொங்கை தனம் சொர்க்கம் பயோதரம்
மொய் கதிர்ப் பூண் ஆகம் உரம் மருமம் மார்பு அகலம்
கை புயம் தோள் அத்தம் கரம்
** 2, 2, 5, 4, 4 பெயர்கள்
**60
#16
** விரல் நகம் கழுத்து காது உதடு பெயர்கள்
விரல் அங்குலி ஆம் நகம் உகிர் ஆகும்
சிரதரம் கண்டம் கழுத்துக் கிரீவம்
களம் ஆம் செவி கன்னம் காது அதரம் ஓட்டம்
உளவாகும் முத்தம் உதடு
** 1, 1, 4, 2, 3 பெயர்கள்
**61
#17
** நா பல் மூக்கு கண் நெற்றி பெயர்கள்
நாக்கு நாத் தாலு நகை முறுவல் பல் எயிறு
மூக்கின் பெயர் நாசி துண்டம் ஆம் நோக்கம்
நயனம் விழி நாட்டம் நேத்திரம் கோக் கண்
இயல் நுதல் நெற்றி இலாடம்
** 2, 3, 2, 6, 2 பெயர்கள்
**62
#18
** ஆண் மயிர் பெண் மயிர் பெயர்கள்
பங்கி நவிர் குஞ்சி ஓரி மயிர் பித்தை
மங்கலமாம் மைந்தர்க்கு மாதர்க்குக் கொங்கார்
குரல் ஐம்பால் கூந்தல் குழல் கூழை ஓதி
சுருள் அளகம் குந்தளமாச் சொல்
** 5, 8 பெயர்கள்
**63
#19
** தலை முதுகு மேல்வாய் தேமல் பெயர்கள்
சிரம் உத்தமாங்கம் கம் சென்னி தலை ஆம்
வெரிந் முதுகு தாடி அண்ணம் மேல்வாய் புரி குழல் சேர்
தேமொழியாய் தேமல் பொறி திதலை துத்தி சுணங்கு
ஆம் என்று உரைப்பர் அறிஞர்
** 4, 1, 2, 4 பெயர்கள்
**64
#20
** உடலின் பெயர்
புரம் கடம் விக்கிரகம் தேகம் உடம்பு ஆகம்
குரம்பையுடன் மேனி பிண்டம் நிரம்பு உருவம்
மூர்த்தம் களேவரம் யாக்கை தனு அங்கம்
காத்திரம் மெய் காயம் ஆம்
** 18 பெயர்கள்
**65
#21
** நாதம் உயிர் மனம் அறிவு தெளிவு பெயர்கள்
விந்து பொறி ஆவி பிராணன் உயிர் சீவன்
சிந்தை மனம் நெஞ்சு சித்தம் உளம் புந்தி ஆம்
போற்றும் அறிவு உணர்வு ஞானம் புலன் போதம்
தேற்றம் துணிவு தெளிவு
** 2, 3, 4, 5, 2 பெயர்கள்
** இரண்டாவது மக்கட்பெயர்த்தொகுதி முற்றுப்பெற்றது
@3 விலங்கின் பெயர்த்தொகுதி
**66
#1
** சிங்கத்தின் பெயர்
முடங்குளை கோளரி கேசரி சிங்கம்
அடும் திறல் சீயம் வயமா மடங்கலே
பஞ்சானனம் ஆளி கண்டீரவம் அரி
அஞ்சா நகாயுதமும் ஆம்
** 11 பெயர்கள்
**67
#2
** புலியின் பெயர்
வெருஇல் வியாக்கிரம் தீவி சார்த்தூலம்
வரி உழுவை வேங்கை வயமா மிருகாதி
திண் திறல் வல்லியம் சித்திரகாயம் தரக்குப்
புண்டரிகம் புல்லுப் புலி
** 13 பெயர்கள்
**68
#3
** யானையின் பெயர்
தும்பி கயம் யானை கறையடி குஞ்சரம் தோல்
உம்பல் இபம் வேழம் கரி அத்தி வெம் பகடு
போதகம் வாரணம் தந்தி உவாக் களிறு
மாதங்கம் நாகம் கைம்மா
** 19 பெயர்கள்
**69
#4
** பெண்யானை யானைமதம் யானைப்பட்டம்
** யானைக்கொம்பு பெயர்கள்
தம்பேரமை இரதி சிந்துரம் சாமோற்பவை
கம்ப மதம் தானம் கடம் கடாம் கும்பம் சேர்
ஓடை ஆம் பட்டம் ஒளிர் கிம்புரி மருப்புக்
கோடு எயிறு தந்தம் ஆம் கொம்பு
** 4, 3, 1, 4 பெயர்கள்
**70
#5
** குதிரையின் பெயர்
குரகதம் வாசி குதிரை இவுளி
துரகம் புரவி துரங்கம் பரி அரி
கோடகம் பாய்மா சயிந்தவம் கந்தருவம்
ஆடல் வயமா வயம்
** 14 பெயர்கள்
**71
#6
** பன்றியின் பெயர்
கருமாவே கேழல் எறுழி கோலம் சூ
கரம் ஏனம் கோணி வராகம் குரோடம் அரி
போத்திரி பூதாரம் கிருட்டி கிரி கிடி
போர்த்தகு பன்றியின் பேர்
** 15 பெயர்கள்
**72
#7
** குரங்கின் பெயர்
பிலவங்கம் நாகம் நிரந்தரம் கீசகம்
வலிமுகம் சாகாமிருகம் கொலை கடுவன்
வானரம் மர்க்கடம் மந்தி குரங்கு அரி
கானவன் யூகம் கவி
** 13 பெயர்கள்
**73
#8
** கரடி இரலை பெயர்கள்
வெண்பல்லம் வல்லூகம் வேக உளியம் எலு
திண் பல்லூகம் செங்கண்மா கரடி எண்கு
கவை நெடும் கோட்டுக் கலை புல்வாய் நவ்வி
இவையாம் இரலையின் பேர்
** 7, 3 பெயர்கள்
**74
#9
** மான், செந்நாய், நரி, காட்டுப்பசு பெயர்கள்
அரிணம் மான் சாரங்கம் ஏணம் குரங்கம்
விருகம் செந்நாய் கொக்கும் ஆகும் நரி இகலன்
கோமாயு சம்புகம் பூரிமாயுக் குரோட்டா
ஆமாவின் பேர் கவயமா
** 4, 2, 5, 1 பெயர்கள்
**75
#10
** கருங்குரங்கு, முசு, கழுதை ஒட்டகம் உடும்பு பெயர்கள்
கரியகுரங்கு யூகம் முசுக் கோலாங்கூலம்
கரமொடு வாலேயம் கழுதை கரபம்
இரவணம் தாசேரகம் ஒட்டகம் ஆகும்
உரம் மிகு கோதா உடும்பு
** 1, 1, 3, 2, 1 பெயர்கள்
**76
#11
** மரை முள்பன்றி பூஞை கவரிமா பெயர்கள்
ஆவிதம் கானக்குதிரை மரை ஆகும்
தாவும் முள்மா எய்யே சல்லியம் மேவிய
மீன் கவர் மார்ச்சாலம் வெருகு விலாளம் பூஞை
வான் சவரிமா கவரிமா
** 2, 3, 3, 1 பெயர்கள்
**77
#12
** முயல் நாய் பெயர்கள்
தக்க வயமும் சசமும் முயல் சுணங்கன்
குக்கனே சாரமேயன் சுனகன் மிக்க சுவா
கோளிரை தேரும் எகினம் கொடு முடுவல்
ஞாளி ஞமலி பட்டி நாய்
** 2, 10 பெயர்கள்
**78
#13
** ஓந்தி எலி பெருச்சாளி அணில் பெயர்கள்
கோம்பி சரடம் காமரூபி கொடு முசலி
பாம்பு அஞ்சும் தோகைப்பகை ஓந்திக்கு ஆம் பெயராம்
வேக எலி கருப்பை மூடிகம் வெவ் விடர்
ஆகு அணில் வெளில் ஆம்
** 5, 1, 3, 1 பெயர்கள்
**79
#14
** பசு எருது பெயர்
தேனுவும் பெற்றமும் கோவும் செழும் பசுவும்
ஆனும் சுரபியும் ஆ ஆகும் ஆன் ஏறு
இடபம் விடை எருது கோபதி புல்லம்
திட மூரி புங்கவம் சே
** 6, 9 பெயர்கள்
**80
#15
** எருமை செம்மறியாடு வெள்ளாடு பெயர்கள்
கரு மகிடம் கவரி கார் மேதி காரான்
எருமையின் பேர் ஆகும் என்ப துருவை மை
ஆகும் உரப்பிரம் வெள்ளாடு அயம் தகர்
சாகம் சகம் சாகளம்
** 4, 2, 6 பெயர்கள்
**81
#16
** கருடன் மயில் குயில் பெயர்கள்
ககபதி நாகாசனனே கலுழன்
திகழ் வைனதேயன் கருடன் சிகியே
மயில் மஞ்ஞை தோகை மயூரம் கலாபி
குயில் களகண்டம் கோகிலம்
** 4, 5, 2 பெயர்கள்
**82
#17
** வண்டு கிளி பெயர்கள்
வரி அளி தேன் மா மதுகரம் தும்பி
அரி அறுகால் வண்டு கழுது பிரமரம்
கள் உண் சாரங்கம் ஞிமிறு சுரும்பு ஆகும்
கிள்ளை சுகம் தத்தை கிளி
** 13, 3 பெயர்கள்
**83
#18
** அன்னம் புறா பருந்து பெயர்கள்
சிறை அன்னம் செங்கால் பிணிமுகம் அஞ்சம் நீர்
உறை எகினம் ஓதிமம் ஆகும் புறா ஆம்
திருந்து பாராவதம் தீதில் கபோதம்
பருந்து சேனம் கங்கம் பாறு
** 4, 2, 3 பெயர்கள்
**84
#19
** சிள்வீடு காடை நீர்ப்பறவை பெயர்கள்
சில்லிகை சில்லை நெடி சிமிலி சிள்வீடு
புல்லிய காடை குறும்பூழே சொல்லிடில்
உன்னம் கிராமம் ஆம் உற்குரோசத்தினொடு
கின்னரம் நீர்ப்பக்கி எனக் கேள்
** 4, 1, 4 பெயர்கள்
**85
#20
** சக்கரவாகம் ஊர்க்குருவி செம்போத்து
** வெண்குருகு பூவை பெயர்கள்
சக்கரவாகம் கோகம் சக்கரம் நேமிப்புள்
தக்க சடகம் புலிங்கம் ஊர்க்குருவி குக்கில் ஆம்
செம்போத்து வெண்குருகு சாரசம் புட்கரம்
அம் பூவை சாரிகை ஆம்
** 3, 2, 1, 2, 1 பெயர்கள்
**86
#21
** கோழி கொக்கு போதா ஆந்தை காக்கை பெயர்கள்
குக்குடம் வாரணம் கோழி சரணாயுதம்
கொக்குக் குரண்டம் பிதாப் போதா பொற்கண்
இருடி கூன் பிங்கலை கின்னரம் ஆந்தை
கரடம் காகம் கொடி காக்கை
** 3, 1, 1, 4, 3 பெயர்கள்
**87
#22
** பாம்பின் பெயர்
வெஞ்சினக் காத்திரவேயம் விடதரம்
கஞ்சுகி காகோதரம் இரும்பை நஞ்சு உமிழ்
கூடபதம் சக்கிரி கும்பிநசம் அரி
ஆடும் பவனாசனம்
** 10 பெயர்கள்
**88
#23
** பாம்பின் பெயர் (தொடர்ச்சி)
நாகம் புயங்கம் பணி கட்செவி தந்தசூகம்
அகி மாசுணம் சர்ப்பம் போகி
உரகம் மராளமே பந்நகம் பாந்தள்
அரவு வியாளம் பாம்பு ஆம்
** 15 பெயர்கள்
**89
#24
** பெரும்பாம்பு நஞ்சு பாம்பின்படம் பெயர்கள்
கோல வரி மாசுணம் பாந்தள் பெரும்பாம்பு ஆம்
ஆலம் களம் கரளம் காரியே நீலம்
விடம் கடு வெம் காளம் நஞ்சின் பெயராம்
படம் பை விரிந்த பணம்
** 2, 8, 2 பெயர்கள்
**90
#25
** இராசநாகம் கீரி அண்டங்காக்கை நிலாமுகி பெயர்கள்
கருதும் இராசநாகம் கார்வழலை
திரன் நகுலம் கீரி தீர்வை மருவிய
காகோலமே அண்டங்காக்கை நிலாமுகி
பாகார் சகுனம் எனப் பார்
** 1, 2, 1, 1 பெயர்கள்
**91
#26
** மீன் ஆமை முதலை ஞெண்டு
** அட்டை கறையான் பெயர்கள்
மச்சம் சகுலி வகுலி சலசரம் மீன்
கச்சபம் ஆமை கரா முதலை நச்சும்
களவன் குளிரம் ஞெண்டு கர்க்கடகம் அட்டை
செளுகம் கறையான் சிதல்
** 4, 1, 1, 3, 1, 1 பெயர்கள்
** மூன்றாவது விலங்கின்பெயர்த்தொகுதி முற்றுப்பெற்றது
@4 மரப்பெயர்த் தொகுதி
**92
#1
** மரம் படர்கொடி பெயர்கள்
தரு விடபி பாதபம் பூருகம் சாகி
துருமம் அகமம் துரு சாலம் மரம் ஆம்
எழில் இலதை வள்ளி பிரததி ஏடு ஆர்
கொழு மலர் வல்லி கொடி
** 9, 4 பெயர்கள்
**93
#2
** சோலை காடு பெயர்கள்
வண்டு அமர் சோலை மலர்ப் பொழில் ஆராமம்
கொண்டல் மலி காத் தருக்குழாம் தண்டலை
கானம் ககனம் வனம் அடவி காந்தாரம்
கானகம் ஆரணியம் காடு
** 5, 7 பெயர்கள்
**94
#3
** இலை அரும்பு பெயர்கள்
தலம் அடை பன்னம் சதனம் பலாசம்
இலை சதம் பத்திரம் என்ப கலிகை
முகிழ் சாலகம் நனை கோரகை மொட்டு
முகுளம் அரும்பு முகை
** 7, 8 பெயர்கள்
**95
#4
** கிழங்கு வேர் மரக்கப்பு தளிர் பெயர்கள்
கந்தம் கிழங்கு மூலம் தூர் சடை சிவை வேர்
கொந்து அலர் பூம் கொம்பு பணை கவடு முந்திய
பொங்கர் சினை சாகை கப்பு முறி பல்லவம்
அம் கிசலயம் தளிர்ப் பேர் ஆம்
** 2, 3, 6, 4 பெயர்கள்
**96
#5
** மலர் பூங்கொத்து குலை பழம் பெயர்கள்
மணம் மலி பூ வீ மலர் போது அலர் ஆம்
துணர் மஞ்சரி கொத்துத் தொத்தோடு இணர் ஆம்
நலம் சேர் குலை தாறு வல்லரி ஆகும்
பலம் காய் கனி ஆம் பழம்
** 4, 4, 2, 3 பெயர்கள்
**97
#6
** கதிர் தோல் விதை முளை
** முளைத்தல் குருத்து பெயர்கள்
கதிர் ஆம் குரல் செங்கனி மேவிய தோல்
செதிள் ஆகும் காழ் கொட்டை செப்பில் விதை ஆகும்
கால் ஆம் முளை பொடித்தல் அங்குரித்தல் நாறுதல்
பாலார் குருத்துப் பயிர்
** 1, 1, 2, 1, 3, 1 பெயர்கள்
**98
#7
** வாசனை கள் பெயர்கள்
வெறி கடி வாசம் விரை மணம் கான் கந்தம்
நறை மன்றலே முருகு நாற்றம் பொறி வண்டு ஆர்
கள் தண் தேன் வேரி பிரசம் நறா நறவு
மட்டு மகரந்தம் மது
** 11, 8 பெயர்கள்
**99
#8
** நொச்சி குளநெல் கோரை களா செந்நெல் கரும்பு பெயர்கள்
வளர் நொச்சி ஆம் சிந்துவாரம் நீவாரம்
குளநெல் எருவை சாய் கோரை களம் களா
செந்நெல் விரீகியொடு செஞ்சாலி வேழம் பைம்
கன்னல் கழை இக்குக் கரும்பு
** 1, 1, 2, 1, 2, 4 பெயர்கள்
**100
#9
** எருக்கு ஆத்தி முள்முருக்கு குருக்கத்திக்கொடி
** வேம்பு மகிழ் பாதிரி பெயர்கள்
அருக்கம் எருக்கு ஆகும் தாதகி ஆர் ஆத்தி
முருக்குக் கவிர் கிஞ்சுகம் ஆம் குருக்கத்தி
மாதவி நிம்பம் ஆம் வேம்பு மகிழ் வகுளம்
பாதிரி ஆகும் பாடலம்
** 1, 2, 2, 1, 1, 1, 1 பெயர்கள்
**101
#10
** அரசு மருது மா பலா சுரபுன்னை மாதுளை பெயர்கள்
அரசு திருமரம் பிப்பலம் போதி
மருதம் அருச்சுனம் மா கொக்கு விரை ஆரும்
சூதம் பனசம் பலா சுரபுன்னை வழை
மாதுளுங்கம் ஆம் மாதுளை
** 3, 1, 2, 1, 1, 1 பெயர்கள்
**102
#11
** பனை நாவல் கடம்பு கமுகு புன்னை ஆச்சா தேக்கு பெயர்கள்
தடம் பெண்ணை தாலம் பனை சம்பு நாவல்
கடம்பு ஆகும் நீபம் கதம்பம் நெடும் கமுகு
பூகம் ஆம் புன்னாகம் புன்னை ஆ ஆச்சா ஆம்
சாகம் ஆம் தேக்கு ஆம் தரு
** 2, 1, 2, 1, 1, 1, 1 பெயர்கள்
**103
#12
** தெங்கு வாழை தாழை கொன்றை கோங்கு பெயர்கள்
தாழை தென் நாளிகேரம் தெங்கு தண் கதலி
வாழை அரம்பை மடி கைதை தாழை
செழும் கேதகை இதழி தேம் கடுக்கை கொன்றை
கொழும் கன்னிகாரம் ஆம் கோங்கு
** 3, 2, 3, 2, 1 பெயர்கள்
**104
#13
** அகில் அத்தி புன்கு இலவு ஈந்து அலரி பெயர்கள்
அகரு அகில் அதவு உதும்பரம் அத்தி
தகு நத்தம் காஞ்சனம் புன்கு நிகர்இல்
இலவு ஆகும் சான்மலி கர்ச்சூரம் ஈந்து ஆம்
அலரி கரவீரம் ஆம்
** 1, 2, 1, 1, 1, 1 பெயர்கள்
**105
#14
** பலாசம் அசோகு குருந்து வெட்பாலை சந்தனம் பெயர்கள்
பிரமதரு ஆம் பலாசம் செயலை
அரி மருவு பிண்டி அசோகு விரி மலர்க்
குந்தம் குருந்தம் குடசம் ஆம் வெட்பாலை
சந்தனம் ஆரம் சந்தம் சாந்து
** 1, 2, 1, 1, 3 பெயர்கள்
**106
#15
** கடு நெல்லி தான்றி வில்வம் விளா ஆல் அழிஞ்சில் பெயர்கள்
நல்ல கடு ஆம் அரிதகி ஆமலகம்
நெல்லி ஆம் தான்றி கலித்துருமம் வில்லுவம்
மாலூரம் கூவிளை வெள்ளில் விளா வடம்
ஆல் அழிஞ்சில் அங்கோலம் ஆம்
** 1, 1, 1, 2, 1, 1, 1 பெயர்கள்
**107
#16
** தேவதாரு குரா மரா வஞ்சி ஏலம் பெயர்கள்
சுரதுருமம் தேவதாருத் துணர்ப் பூம்
குராமரம் ஆம் கோவிதாரம் மராமரம் ஆம்
சாலம் வானீரம் தளிர் வஞ்சுளம் வஞ்சி
ஏலம் ஆம் என்பர் துடி
** 1, 1, 1, 2, 1 பெயர்கள்
**108
#17
** இஞ்சி மிளகு திப்பிலி அதிமதுரம்
** இருப்பை காயா பெயர்கள்
கா மலி ஆர்த்திரகம் இஞ்சி கறி மரீசம்
மா மிளகு திப்பிலி மாகதி ஆம் தே மதுகம்
யட்டி மதுரம் மதூகம் இருப்பை ஆம்
கட்டரும் பூவை காயா
** 1, 2, 1, 2, 1, 1 பெயர்கள்
**109
#18
** மல்லிகை சிறுசண்பகம் இருவாட்சி மௌவல்
** வாடாக்குறிஞ்சி அவுரி பெயர்கள்
மல்லிகை ஆம் பூருண்டி சண்பகம் பித்திகை
எல் இணர்ச் சாதி இருவாட்சி நல் அநங்கம்
மாலதி மௌவல் சகசரி ஆம் குறிஞ்சி
நீலி நிகழ் அவுரி ஆம்
** 1, 2, 1, 1. 1, 1 பெயர்கள்
**110
#19
** மூங்கில் பெயர்கள்
கிளை வேணு வேரல் அமை கீசகம் விண்டு
முளை அரி கண் சந்தி பணை மூங்கில் கிளை வரை வேய்
தூம்பு வெதிர் தட்டை அம்பு முந்தூழ் துளை ஓங்கல்
காம்பு திகிரி கழை
** 23 பெயர்கள்
**111
#20
** வள்ளை சேம்பு வெள்ளாம்பல்
** செங்குவளை கருங்குவளை பெயர்கள்
செழும் நாளிகம் வள்ளை சேம்பு சகுடம்
கொழு மலர் ஆம்பல் குமுதம் கழுநீர் ஆம்
செங்குவளை உற்பலம் இந்தீவரம் நீலம்
பைம் குவளை நீலோற்பலம்
**112
#21
** நந்தியாவர்த்தம் கொவ்வை செவ்வரத்தை பெயர்கள்
வலம்புரி நந்தியாவர்த்தமே ஆகும்
குலம் போல் ஆதொண்டை கொவ்வை நலம் சேரும்
விண்ட பூம் செவ்வரத்தை மேவிய மந்தாரம்
கொண்ட பேர் ஆகும் குறி
** 1, 1, 1 பெயர்கள்
**113
#22
** தாமரை பெயர்கள்
முண்டகம் அம்புயம் அம்போருகம் முளரி
வண் தாமரை வனசம் வாரிசம் புண்டரிகம்
பங்கயம் கஞ்சம் பதுமம் அரவிந்தம்
அம் கமலம் கோகனகம் ஆம்
** 13 பெயர்கள்
** நாலாவது மரப்பெயர்த்தொகுதி முற்றுப்பெற்றது
@5 இடப்பெயர்த்தொகுதி
**114
#1
** இடம் பெயர்கள்
கடை தலை கால் மருங்கு கண் மாடு உழை மேல்
புடை வலம் தாமம் புறம் கீழ் இடை வயின் வாய்
பின் அயல் உள் இல் பதி தானம் சார்வு உளி
முன் அகம் முற்றும் இடம்
** 26 பெயர்கள்
**115
#2
** பூமி பெயர்கள்
அவனி பொழில் பார் அகலிடம் வையம்
புவனி புவி புடவி பூமி குவலயம்
ஞாலம் தரை தாரிணி காசினி படி
தாலம் தரணி தலம்
** 17 பெயர்கள்
**116
#3
** பூமி பெயர்கள் (தொடர்ச்சி)
வசுந்தரை பூ உலகு மண் கு நிலம் நேமி
வசுமதி சாந்தை வசுதை அசலை
உகமே நகம் தறை கோவே விபுலை
சகம் மேதினி தாத்திரி
** 19 பெயர்கள்
**117
#4
** மலை பெயர்கள்
வரை திகிரி ஓங்கல் குவடு மலை பூ
தரம் அசலம் குன்று சயிலம் கிரி கல்
சிலம்பு பொருப்புச் சிகரி அடுக்கல்
விலங்கல் சிலை பிறங்கல் வெற்பு
** 18 பெயர்கள்
**118
#5
** மலை பெயர்கள் (தொடர்ச்சி)
இரவி பருப்பதம் விண்டு நகம் மா
திரம் ஓதிமம் இறும்பு நாகம் தராதரம்
குத்திரம் பொற்றை சிலோச்சயம் கோத்திரம்
அத்திரி வேதண்டம் ஆம்
** 15 பெயர்கள்
**119
#6
** கயிலாயம் மேரு பெயர்கள்
சயிலாதி வெள்ளியங்குன்றம் தண் சோலைக்
கயிலாயம் கண்ணுதலோன்வெற்பு துயிலாதார்
ஆலயம் பொன்னசலம் மேரு அமரர்க்காய்
வேலை விடமுண்டான்கைவில்
** 3, 3 பெயர்கள்
**120
#7
** இமயம் பொதியமலை பெயர்கள்
இமவான் மலையரசன் எம் இறைவன் பாகத்து
உமையாளைப் பெற்ற உரவோன் சிமயப்
பொதியமலை மலயம் தென்மலை பூமிக்கு
மதி தமிழையீந்தான்மலை
** 3, 3 பெயர்கள்
**121
#8
** சமுத்திரம் பெயர்கள்
நீர் புணரி நேமி பரவை வேலாவலயம்
ஆர்கலி அத்தி திரை நரலை வாரிதி
பாராவாரம் பௌவம் வேலை முந்நீர் உவரி
கார் ஆழி வாரி கடல்
** 18 பெயர்கள்
**122
#9
** சமுத்திரம் பெயர்கள் (தொடர்ச்சி)
சலராசி தோயநிதி அம்பரம் உப்புச்
சலநிதியே உததி சிந்து சலதி
அளப்பரும் வெள்ளம் நதிபதி வீரை
அளக்கர் சமுத்திரம் ஆம்
** 12 பெயர்கள்
**123
#10
** கரை கடல்திரை நீர்க்குமிழி நீர்நுரை பெயர்கள்
கூலம் பாரம் தீரம் கோடு தடம் கரை கல்
லோலம் தரங்கம் அலை திரை வேலையில்
தங்கும் குமிழியே புற்புதம் ஆகும் பேனம்
பொங்கு நுரை என்றே புகல்
** 5, 3, 1, 1 பெயர்கள்
**124
#11
** ஐவகை நிலம் மேடு பள்ளம் பெயர்கள்
மொய் குறிஞ்சி வன் பாலை முல்லை செழு மருதம்
நெய்தல் இவை ஐந்து நிலன் ஆகும் மை தீர்
நிவப்பு மிசை மீது மேடு உயரம் ஆகும்
அவல் பயம்பு பள்ளம் தாழ்வு ஆம்
** 5, 4, 3 பெயர்கள்
**125
#12
** கிணறு, வயல் வரம்பு வரம்பின்பக்கம்
** களர்நிலம் பெயர்கள்
செழு நீர்க் கிணறு ஆகும் கூவல் செறுச் செய்
கழனி பழனம் வயல் ஆம் பழுதுஇல்
வரம்பு ஆம் மரீசி வரம்பருகு ஆம் கங்கு
கரம்பு உவர் ஆகும் களர்
** 1, 4, 1, 1, 2 பெயர்கள்
**126
#13
** சுடுகாடு மட்கலம்சுடுபூமி நிலப்பிளப்பு பெயர்கள்
ஈமம் மயானம் சுடலை சுடுகாடு
தூமம் மிகு சுள்ளை ஆம் தொல் குயவர்தாம் மட்
கலம் சுடு பூமி கமரும் விடரும்
நிலம்பிளந்தது என்றே நிகழ்த்து
** 3, 1, 2 பெயர்கள்
**127
#14
** துர்க்கம் கற்கள் நெருங்கும் இடம்
** வெளியிடம் பக்கம் நடு பெயர்கள்
துர்க்கம் அருப்பம் சென்று துன்னற்கரிய இடம்
கற்கள் நெருங்கும் இடம் முரம்பு ஆம் நிற்கும் ஒரு
வெள்ளிடை ஆகும் வெளி மருங்கு பக்கம் ஆம்
நள் இடை நாப்பண் நடு
** 2, 1, 1, 1, 3 பெயர்கள்
**128
#15
** நாகலோகம் நரகம் பெயர்கள்
வடவாமுகம் தாழ் பிலம் கீழுலோகம்
பட நாகலோகம் பாதாளம் கொடிய
இருள் அந்தகாரம் துவாந்தம் திமிரம்
நரகு நிரையம் நரகம்
** 4, 6 பெயர்கள்
**129
#16
** வழி பெயர்கள்
அதர் நெறி அத்தம் செலவு ஒழுக்கு ஆறு
வதி இகுவை மார்க்கம் வகுந்து பதவை
சரி கடறு தாரை இயவை நடவை
வரி சுரம் வட்டை வழி
** 19 பெயர்கள்
**130
#17
** தெரு கவர்வழி சதுக்கம் கடைவீதி பெயர்கள்
தெருவு மறுகு திகழ் வீதி ஞெள்ளல்
வரை வேய் கவர்த்த வழி ஆம் திரி கவலை
பூவணி சந்து சிருங்காடகம் சதுக்கம்
ஆவணம் அங்காடி கடை ஆம்
** 3, 2, 3, 1 பெயர்கள்
**131
#18
** மதில் கோபுரவாயில் கதவு நகர் பெயர்கள்
மதில் எயில் இஞ்சி அரண் புரிசை ஆரல்
புதவு உயர் கோபுரவாயில் கதவு ஆகும்
வாரி கபாடம் நகரம் நகரி புரம்
ஊர் நகர் ஆகும் புரி
** 5, 1, 2, 5 பெயர்கள்
**132
#19
** அம்பலம் நிலாமுற்றம் குதிரைப்பந்தி
** மடைப்பள்ளி யானைக்கூடம் பெயர்கள்
மரு அம்பலம் பொதுவில் மன்றம் நிலாமுற்றம்
அரமியம் மந்திரம் ஆகும் புரவியின்
பந்தி மடைப்பள்ளி அடுக்களை சேவகம்
சிந்துரத்தின் கூடம் எனச் செப்பு
** 2, 1, 1, 1, 1 பெயர்கள்
**133
#20
** வீடு திண்ணை முற்றம் பெயர்கள்
நகர் மாளிகை குலம் மாடம் பவனம்
அகம் மனை வீடு புக்கில் இல்லம் புகலலாம்
தென்றல் ஆர் வேதிகை திண்ணை ஆம் அங்கணமும்
முன்றிலும் முற்றமே ஆம்
** 9, 1, 2 பெயர்கள்
**134
#21
** தடாகம் பெயர்கள்
இலஞ்சி கயம் கேணி கோட்டகம் ஏரி
மலங்கல் மடு ஓடை வாவி சலந்தரம்
வட்டம் தடாகம் நளினி மடுப் பொய்கை
குட்டம் கிடங்கு குளம்
** 17 பெயர்கள்
**135
#22
** போர்க்களம் பெயர்களம்
அடுகளம் மிக்க அமர்க்களம் வெய்ய
படுகளம் செங்களம் பற்றார் முடுகிய
போர்க்களம் ஆகவபூமி புலால் கவர் புள்
ஆர்க்கும் பறந்தலை ஆம்
** 6 பெயர்கள்
** ஐந்தாவது இடப்பெயர்த்தொகுதி முற்றுப்பெற்றது
@6 பலபொருட்பெயர்த்தொகுதி
**136
#1
** பொன் பெயர்கள்
மாசை அரி பீதம் மாடு காணம் பொலம்
தேசிகம் ஈகை ஆடகம் சொன்னம் பேசும்
நிதி அருத்தம் வித்தம் நிதானம் வெறுக்கை
பொதி தனம் மிக்க பொருள்
** 17 பெயர்கள்
**137
#2
** பொன் பெயர்கள் (தொடர்ச்சி)
சாமீகரம் சாதரூபம் தமனியம்
மா மாடை மாழை சாம்பூநதம் ஏமம்
கனகம் இரணியம் காஞ்சனம் ஈழம்
புனை பூரி சந்திரம் பொன்
** 13 பெயர்கள்
**138
#3
** வெள்ளி செம்பு பித்தளை வெண்கலம் பெயர்கள்
தாரம் இரசதம் வெள்ளி களதவுதம்
தேரின் உதும்பரம் தாமிரம் பேர் செம்பு ஆம்
ஆரகூடம் இரதி பித்தளை மாயாபுரி
ஆரும் வெண்கலம் கஞ்சம் ஆம்
** 3, 2, 3, 1 பெயர்கள்
**139
#4
** இரும்பு காரீயம் ஈயம் புதையல் செல்வம் பெயர்கள்
கருந்தாது அயம் இரும்பு காரீயம் நாகம்
திருந்து வங்கம் சீருள் ஈயம் பெரும் தரையில்
புல்லிய நிக்கேபம் புதையல் ஆகும் பூதி
செல்வம் விபவம் திரு
** 2, 1,2,1,3 பெயர்கள்
**140
#5
** சங்கு முத்து பவளம் பெயர்கள்
வலம்புரி கோடு வளை கம்பு நத்துச்
சலஞ்சலம் சங்கு பணிலம் இலங்கிய
நித்திலம் முத்து ஆரம் தரளம் துகிர் துப்பு
வித்துருமம் வில் பவளம் ஆம்
** 7, 3, 3 பெயர்கள்
**141
#6
** நவமணிகள் பெயர்கள்
மாணிக்கம் முத்து மரகதம் நீலமணி
பேணும் வயிடூரியம் வைரம் பூணும்
பவளம் கோமேதகம் புருடராகம்
நவமணியின் நாமங்கள் ஆம்
**142
#7
** சோறு பெயர்கள்
உன் அயினி சொன்றி உணா அசனம் போசனம்
நன்னர் உணவு ஓதனம் போனகம் அன்னம்
மடை நிமிர்தல் மூரல் புழுக்கல் பதம் கூழ்
அடிசில் சருப் புகா சோறு
** 18 பெயர்கள்
** ஆறாவது பலபொருட்பெயர்த்தொகுதி முற்றுப்பெற்றது
@7 செயற்கைவடிவின் பெயர்த்தொகுதி
**143
#1
** வில் அம்பு பெயர்கள்
கார்முகம் கோதண்டம் தனு வில் கொடுமரம்
வார் சிலை சாபம் சராசனம் கூர் வாளி
வெம் பகழி கோப் பல்லம் பாணம் ககம் காண்டம்
அம்பு கணை கோல் சரம் ஆம்
** 7, 10 பெயர்கள்
**144
#2
** வில் அம்பு பெயர்கள் (தொடர்ச்சி)
சித்திரப் புங்கம் சிலீமுகம் ஏ கங்க
பத்திரம் மார்க்கணம் தோணி ஆம் அத்திரம்
வெய்ய விசிகமே ஆசுகம் சாயகம்
எய்யும் கதிரம் எனலாம்
** 11 பெயர்கள்
**145
#3
** சூலம் மழு சக்கரம் வச்சிரம் வாள் பெயர்கள்
முக்குடுமி வேல் சூலம் ஆம் பரசு மொய் கணிச்சி
மிக்க மழு ஆழி நேமி வளை சக்கரம் ஆம்
வெம் குலிசம் போர் அசனி வச்சிரம் நாந்தகம் வாள்
அம் கரவாளம் கட்கம் ஆம்
** 1, 2, 3, 2, 3 பெயர்கள்
**146
#4
** வேலாயுதம் தண்டு ஈர்வாள் கைவேல் பெயர்கள்
ஓங்கு அயில் சத்தி உடம்பிடி வேல் எஃகம்
தாங்கும் ஒரு கதை தண்டு ஈர்வாள் ஓங்கு
கரபத்திரம் வேதினம் கப்பணம் தோ
மரமே கைவேல் விகற்பம் ஆம்
** 4, 1, 4, 5 பெயர்கள்
**147
#5
** தாழ் பரண் ஊஞ்சல் உரல் கலப்பை பெயர்கள்
கதவில் செறிக்கும் தாழ் சீப்பு ஆகும் காவல்
இதணம் கழுது பரண் என்பர் உதைந்தாடும்
ஊஞ்சல் ஆம் ஊசல் உலூகலம் என்பது உரல்
நாஞ்சில் அலம் கலப்பை நாட்டு
** 1, 3, 1, 1, 2 பெயர்கள்
**148
#6
** சேலை பெயர்கள்
மடி துகில் கோசிகம் காழகம் சேலை
புடைவை கலிங்கம் தானை தூசு படம் ஆடை
புட்டம் அறுவை புனை சாடி அம்பரம்
பட்டு உடை கூறை படாம்
** 19 பெயர்கள்
**149
#7
** மாலை பெயர்கள்
தொங்கல் பிணையல் தொடை வண்டு சூழ் அணியல்
அம் கண்ணி செந்தேன் மலி அலங்கல் பைம் கோதை
தேம் என் ஒலியல் தெரியல் இலம்பகம் பூம்
தாமம் ஒளிர் மாலை தார்
** 12 பெயர்கள்
**150
#8
** தோளணி மோதிரம் மேகலாபரணம் மணிவடம் பெயர்கள்
கேயூரம் அங்கதம் தோளணி ஆம் என்பர்
தூய மணி ஆழி மோதிரம் சேய் ஒளி
சேரும் கலாபம் செறி மேகலை காஞ்சி
ஆரம் மணிவடம் காழ் ஆம்
** 2, 1, 2, 2 பெயர்கள்
**151
#9
** ஆபரணம் கிரீடம் கங்கணம் குண்டலம் பெயர்கள்
அணி இழை பூண் கலன் ஆபரணம் ஆகும்
மணி மகுடம் மௌலி கிரீடம் மணி முடி ஆம்
கங்கணம் ஆகும் கடகம் தொடி வளை
அம் குழை குண்டலம் தோடு ஆம்
** 4, 3, 3, 2 பெயர்கள்
**152
#10
** காற்சிலம்பு பரியகம் சதங்கை பாடகம் பெயர்கள்
பரிபுரம் நூபுரம் பைம்பொன் ஞெகிழி
அரி பெய் சிலம்பின் பெயர் ஆம் பரியகம்
பாதசாலம் புலம்பு கிங்கிணி ஆம் சதங்கை
பாதகடகம் பாடகம்
** 3, 1, 1, 1 பெயர்கள்
**153
#11
** உறி வேள்வித்தூண் குறியதறி தூண்
** யானைத்தூண் தனக்கச்சு பெயர்கள்
உறி சிமிலி சிக்கம் மறையோதுவோர் வேள்வித்
தறி யூபம் போதிகை தானே குறியதறி
தம்பம் மதலை தூண் யானைத்தறி வெளில்
வம்பு தனக்கச்சு வார்
** 2, 1, 1, 2, 1, 2 பெயர்கள்
** செயற்கைவடிவின் பெயர்த்தொகுதி முற்றுப்பெற்றது
@8 பண்புப் பெயர்த்தொகுதி
**154
#1
** வெளுப்பு பெயர்கள்
பாண்டுரம் கௌரம் சிதம் சுவேதம் தவளம்
பாண்டரம் பால் வால் அருச்சுனம் பாண்டு
சுசி அவதாதம் சுதை சுப்பிரமே
விசதம் விளர் கம் வெளுப்பு
** 17 பெயர்கள்
**155
#2
** கருமை சிவப்பு பெயர்கள்
கருமை கறை அசிதம் காழகம் காளம்
இருள் நீலம் சாமளம் சாமம் அருணம் ஒளி
கூடு அரத்தம் சோணம் உலோகிதம் அஞ்சிட்டம்
பாடலம் பூவல் சிவப்பு
** 8, 7 பெயர்கள்
**156
#3
** பச்சை பொன்னிறம் புகர் கபிலம் பெயர்கள்
அரித்துப் பலாசம் அரிதம் அரி பச்சை
அரித்திராபம் பீதம் பொன்மை தரித்த
புகர் நிறம் புன்மை ஆம் போற்றும் குரால் ஆம்
நிகர்இல் கபில நிறம்
** 4, 2, 1, 1 பெயர்கள்
**157
#4
** ஒளிர்தல் ஒளி பெயர்கள்
இலங்குதல் மின்னல் ஒளிர்தல் நிலவல்
துலங்கல் விளங்கல் துளங்கல் நலம்கொள்
படர் ஒளி தேசு கிளர் கதிர் எல் வில் வாள்
சுடர் விரியல் சோதி எனச் சொல்
** 6, 9 பெயர்கள்
**158
#5
** அன்பு இளமை பெயர்கள்
ஈரமும் நேயமும் காதலும் காமமும்
ஆர்வமும் இட்டமும் அன்பிற்குப் பேர் ஆம்
குழவும் தருணமும் கோமளமும் நாகும்
எழிலும் மழவும் இளமை
** 6, 6 பெயர்கள்
**159
#6
** அழகு பெயர்கள்
ஆரியம் மனோகரம் காந்தம் அணி சோபம்
காரிகை பூ வனப்புச் சுந்தரம் ஏர் எழில்
வாமம் யாணர் மாமை வாகு தகை கவின் இ
ராமம் அபிராமம் அழகு ஆம்
** 19 பெயர்கள்
**160
#7
** இன்பம் ஆனந்தம் நல்லொழுக்கம் பொருந்தல் பெயர்கள்
சுகம் ஏமம் தொய்யல் நகை மகிழ்ச்சி இன்பம்
அகமலர்ச்சி ஆனந்தம் ஆகும் தகும் சரிதை
நல்லொழுக்கம் சாரித்திரம் சீலம் ஆம் சிவணல்
ஒல்லல் கூடல் பொருந்தல் ஆம்
** 5, 1, 3, 3 பெயர்கள்
**161
#8
** சத்திசெயல் எப்போழ்தும் இனி இப்போழ்து பெயர்கள்
அனுசிதம் சத்தியவிரதம் என்றும்
அனவரதம் சந்ததம் நித்தம் அநாரதம்
எப்போழ்தும் ஆகும் இனி மற்று மேல் இன்று இன்னே
இப்போழ்து என இயம்பலாம்
** 1, 6, 2, 2 பெயர்கள்
**162
#9
** துன்பம் பெயர்கள்
கேதம் நடுக்கம் கிலேசம் தாபம் கவலை
வாதை அரந்தை வயா மம்மர் வேதனை
வன் படர் பீழை இடுக்கண் இடர் இடும்பை
துன்பம் அஞர் துக்கம் துயர்
** 18 பெயர்கள்
**163
#10
** அகலம் உயரம் நீளம் பாரம் பெயர்கள்
மேய விசாலம் விரிவு வியல் விபுலம்
ஆய்வு நியக்குரோதம் ஆம் அகலம் மீ உயர்தல்
நேர்மை ஒழுகல் நெடுமை நெடில் நீளம்
சீர்மை கனம் பாரம் எனச் செப்பு
** 6, 1, 4, 2 பெயர்கள்
**164
#11
** களிப்பு சுகம் துக்கம் எல்லாம் பெயர்கள்
மதம் அபிமானம் களிப்பு மத்தம் செருக்கு ஆம்
இதம் சுகம் ஆம் அகிதம் துக்கம் சிதைவுஇல்
சகலம் நிகிலம் முழுதும் அகண்டம்
அகிலம் எல்லாம் முற்றும் ஆம்
** 4, 1, 1, 6 பெயர்கள்
**165
#12
** நடுக்கம் சஞ்சலம் பெயர்கள்
அதிர்ப்பு நடுக்கம் குலைதல் பனிப்பு
விதிர்ப்புத் தளம்பல் அழுங்கல் பொதிர்ப்புக்
கலங்கல் கம்பித்தல் கசடு தரளம்
சலம் கம்பிதம் சஞ்சலம்
** 9, 4 பெயர்கள்
**166
#13
** உவமை பெயர்கள்
இணைதல் பொருவல் கடுத்தல் நிகர்த்தல்
துணை கேழ் சமம் ஒத்தல் தூக்கோடு அணையல் நிபம்
மானல் உறழ்தலே அன்ன படி உவமைக்
கான பெயர் என்னலாம்
** 15 பெயர்கள்
**167
#14
** கூட்டம் பெயர்கள்
சவை தொகுதி சங்கம் கணம் சமவாயம்
அவை சமுதாயம் கதம்பம் நிவகமே
கோட்டி நிகாயம் பூகம் புஞ்சம் சயம் சமூகம்
கூட்டம் திரள் குழு ஆம்
** 17 பெயர்கள்
**168
#15
** வலி வளைவு நினைத்தல் இகழ்ச்சி பெயர்கள்
உரம் துப்பு எறுழ் மிடல் மைந்து வலி ஆம் வக்
கிரம் குடிலம் வாங்கல் கூன் கோடல் குரங்குதல்
உள்ளுதல் சிந்தித்தல் உன்னல் நினைத்தல் ஆம்
எள்ளல் நகை இகழ்ச்சி ஆம்
** 5, 6, 3, 2 பெயர்கள்
**169
#16
** தனி மறைவு ஆசை பெயர்கள்
நிசனம் தனியே நிர்ச்சனம் ஏகாந்தம்
நிசனகம் வெற்றிடம் நீங்கல் வசனம் இது
மாசில் மறைவு ஆகும் காமம் நசை வாஞ்சை
ஆசை நச்சு இச்சை அவா
** 5, 1, 6 பெயர்கள்
**170
#17
** விகற்பம் சந்தேகம் புதுமை பெயர்கள்
ஊகம் விகற்பம் விகடம் பிராந்தி சந்
தேகம் ஐயம் சங்கை விப்பிரமம் ஆகும்
நவமும் நவீனமும் நூதனமும் வம்பும்
அவிநவமும் புதுமை ஆம்
** 3, 3, 5 பெயர்கள்
**171
#18
** முதல் முடிவு அன்பு அச்சம் பெயர்கள்
முன் பூர்வம் ஆதி முதல் அக்கிரம் தலை ஆம்
பின்பு அபரம் அந்தம் கடை முடிவு ஆம் அன்பு
தயவு ஆம் அருள் கருணை ஈரம் இரக்கம்
பயானகம் அச்சம் பயம்
** 5, 4, 5, 2 பெயர்கள்
**172
#19
** நிறைதல் குறைதல் புளகம் கூம்புதல் நாண் பெயர்கள்
நிறைதல் கமம் பூரணம் மலிதல் எஞ்சல்
குறைதல் ஈனம் சிங்கல் குன்றல் குறை ஆம்
குமிழ்ப்புப் புளகம் ஆம் கூம்புதல் சாம்பல்
சமழ்ப்பு நாண் மானம் இலச்சை
** 3, 5, 1, 1, 3 பெயர்கள்
**173
#20
** பெருமை பொலிவு சிறுமை பெயர்கள்
பெருமை தடம் மால் கயம் நளி பீடு
குரு மலிவு மல்லல் பொலிவு மருவுரு
ஆகும் சிறுமை இலேசம் தனு இலகு
தோகம் அணு அற்பம் துடி
** 6, 2, 7 பெயர்கள்
**174
#21
** பழுது பெயர்கள்
மாசு தவறு வடுக் களங்கம் தீங்கு மறு
காசு நவை கோது கசடு பழி ஆசு தோம்
சீர்இல் செயிர் போக்குக் குற்றம் அரில் அழுக்குத்
தேரில் புகர் பழுதாச் செப்பு
** 19 பெயர்கள்
**175
#22
** வஞ்சகம் பழமை பெயர்கள்
வஞ்சகம் கைதவம் கூடம் குய்யம் கபடம்
வஞ்சனை சாட்டியம் மாயையே எஞ்சாத
தொன்மை புராணம் புராதனம் தொன்று புதி
தன்மை பூருவம் பழமை ஆம்
** 8, 6 பெயர்கள்
**176
#23
** வெற்றி தோற்றல் வதை கோபம் பெயர்கள்
போற்றும் சயம் விசயம் வென்றி அடல் வெற்றி
ஆற்றல் கெடல் தொலைதல் அஞ்சுதல் ஆம் தோற்றல் அடல்
கோறல் வதை செகுத்தல் கோபம் கதம் கடுத்தல்
சீறலே சீற்றம் சினம்
** 4, 4, 3, 5 பெயர்கள்
** பண்புப்பெயர்த்தொகுதி முற்றுப்பெற்றது
@9 செயல்பற்றிய பெயர்த்தொகுதி
**177
#1
** செய்தொழில் செய்தல் படைத்தல் பெயர்கள்
செயல் விதி கன்மம் கருமம் செய்தொழிலே
அயர்தல் வனைதலே ஆற்றல் குயிறல் ஆம்
சிட்டித்தல் மற்றும் சிருட்டித்தல் உண்டாக்கல்
ஒட்டல் படைத்தல் ஆகும்
** 3, 4, 4 பெயர்கள்
**178
#2
** வணங்கல் தழுவல் பெயர்கள்
வந்தனை காணல் வணங்கல் பணிதலே
தம் தலைதாழ்தல் சலாம்செய்தல் முந்தித்
தொழுதலே தண்டன் தொடர்ந்து முயங்கல்
தழுவலே விள்ளல் எனச் சாற்று
** 7, 2 பெயர்கள்
**179
#3
** கலியாணம் கிரீடை பெயர்கள்
வதுவை மன்றல் கைப்பற்றல் மா மணம் கலியாணம்
விதியுளி வேட்டல் விவாகம் புதிய
தொடலை விலாசனை வண்டல் கிரீடை
கெடவரல் கேளிக்கை ஆம்
** 7, 5 பெயர்கள்
**180
#4
** புசித்தல் மிக்கபொருள் எச்சில் பெயர்கள்
அசனம் நுகர்தல் அயிறல் அருந்தல்
புசித்தல் உணல் துய்த்தல் மாந்தல் மிசைதல் ஆம்
மிச்சில் மிகை சேடம் மிக்க பொருள் ஆகும் என்பர்
எச்சில் உச்சிட்டம் எனலாம்
** 8, 3, 1 பெயர்கள்
**181
#5
** நடத்தல் பள்ளி நித்திரை பெயர்கள்
திரிதல் இயங்கல் செலல் ஏகல் போதல்
வருதல் சரித்தல் நடத்தற்கு உரிய பெயர்
பஞ்சி அணை பாய் பள்ளி கண்படை நித்திரை
துஞ்சல் உறக்கம் துயில்
** 7, 2, 4 பெயர்கள்
**182
#6
** உடைதல் தேடல் சுமத்தல் பெயர்கள்
ஓடல் இரிதல் கெடுதல் உடைதல் ஆம்
நாடலும் நேடலும் தேர்தலும் தேடல்
பரித்தல் பொறுத்தல் சுமத்தல் எடுத்தல்
தரித்தல் இவை தாங்குதல்
** 3, 3, 5 பெயர்கள்
**183
#7
** ஒடித்தல் படித்தல் பக்கபாதம் மதர்த்தல் குரூரம் பெயர்கள்
ஒடித்தல் இறுத்தல் ஒசித்தல் முறித்தல்
படித்தல் ஓதல் கற்றல் ஆகும் பிடித்ததோர்
வாரம் ஓரம் பக்கபாதம் மதம் மதர்த்தல்
கோரம் சண்டம் குரூரம்
** 3, 2, 2 1, 2 பெயர்கள்
**184
#8
** தவிர்தல் கட்டுதல் அழுந்துதல் உராய்ப்போதல் பெயர்கள்
தணத்தல் ஆம் தீர்தல் தவிர்தல் பந்தித்தல்
பிணித்தல் ஆம் கட்டுதல் ஆர்த்தல் பிணைத்தல்
அரங்கல் அழுங்கல் அழுந்துதல் ஆகும்
உரிஞ்சல் உராய்ப்போதல் ஆம்
** 2, 4, 2, 1 பெயர்கள்
**185
#9
** வெட்டல் அரிதல் சுடல் பெயர்கள்
காதுதல் கண்டித்தல் எறிதல் துணித்தல்
பேதித்தல் துண்டித்திடல் காய்தல் சேதித்தல்
வெட்டல் துமித்தல் அரிதல் அறுத்திடல்
சுட்டல் எரித்தல் சுடல்
** 9, 1, 2 பெயர்கள்
**186
#10
** வறுமை கொடுத்தல் முயற்சி பெயர்கள்
இன்மை மிடி அல்கல் இலம்பாடு இவை வறுமை
புன்மையிலா வண்மை புரவு கொடை நன் கவிகை
வேளாண்மை ஈதல் வழங்கல் கொடுத்தலே
தாளாண்மை ஆம் முயற்சி தாள்
** 4, 7, 2 பெயர்கள்
**187
#11
** கிட்டுதல் தன்மை பெயர்கள்
கிட்டுதல் சேர்தல் பொருந்துதல் கூடுதல்
ஒட்டுதல் ஒன்றல் அணைதல் ஆம் கட்டு
மரபு முறை உழுவல் மாலை பெற்றி தன்மை
பரிசு கிழமை விதி பால்
** 6, 9 பெயர்கள்
**188
#12
** நெருங்கல் பெயர்கள்
துதைதல் நிபிடம் நிரந்தரம் துன்றல்
பொதுளல் விரளமே துன்னல் அதிகம்
மிடைதல் செறிதலே மிண்டுதல் பம்பல்
அடர்தல் நெருங்குதல் ஆம்
** 12 பெயர்கள்
**189
#13
** விழா வேண்டல் உரிமை நிழல்
** பெண்கள் விளையாட்டு பெயர்கள்
விழவு ஆம் சாறும் சேறும் வேண்டல் விருப்பு ஆம்
கிழமை உரிமை தலைமை நிழல் சாயை
பண்ணை கெடவரல் ஓரை பொய்தல் இவை
வெண்ணகையார் விளையாட்டு ஆம்
** 3, 1, 2, 1, 4 பெயர்கள்
**190
#14
** போர் பெயர்கள்
அமர் ஞாட்பு நேர் மலைதல் ஆகவம் பூசல்
சமரம் எதிர்தல் சமீகம் சமரே
செரு வெஞ்சமம் சங்கிராமம் சினப் போர்
இரணம் கலகம் இகல்
** 15 பெயர்கள்
**191
#15
** சீக்கிரம் பிரிவு பெயர்கள்
கடுகல் விரைவு கதழ்வு துனைவு
சடிதி துரிதம் கவனம் முடுகலே
சீக்கிரம் ஆசு கடுப்புத் தணப்பு விடல்
நீக்கம் பிரிவு அகறல் நீப்பு
** 10, 5 பெயர்கள்
** செயல்பற்றிய பெயர்த்தொகுதி முற்றுப்பெற்றது
@10 ஒலிபற்றிய பெயர்த்தொகுதி
**192
#1
** சொல் சொல்லுதல் பெயர்கள்
கிளவி மொழி பேச்சு வாசகம் சொல் மாற்றம்
அளவில் உரை வாணி வார்த்தை விளம்பல்
புகறல் நுவலல் அறைதல் இசைத்தல்
பகர்தல் இவை பன்னுதலே ஆம்
** 8, 6 பெயர்கள்
**193
#2
** தொழுதல் கூத்து இசைப்பாடல் பெயர்கள்
வழுத்தல் புகழ்ச்சி துதி வாழ்த்து ஏத்தல் போற்றல்
பழிச்சல் பரசல் பரவல் தொழல் பெயர் ஆம்
ஆடல் நிருத்தம் நடம் நட்டம் கூத்து இசைப்
பாடல் கீதம் கானம் பண்
** 9, 4, 3 பெயர்கள்
**194
#3
** மெய் பொய் தருமம் பாவம் பெயர்கள்
மெய் உண்மை சத்தியம் வாய்மை திடம் சரதம்
பொய் சடம் கூடம் இச்சை பொக்கம் ஆம் செய் தரும
மே அறம் புண்ணியம் நல்வினை தீவினை
பாவம் மறம் பாதகம்
** 5, 4, 3, 3 பெயர்கள்
**195
#4
** மழலை மென்சொல் பழிச்சொல் பெயர்கள்
மழலை மிழற்றல் வரும் குதலை கொஞ்சல்
மிழலை நிரம்பாத மென்சொல் பழிமொழியே
அம்பல் அபவாதம் அங்கதச் சொல் ஆகுமே
வெம்பு சிறுசொல் தீச்சொல் தூறு
** 5, 6 பெயர்கள்
**196
#5
** குறளை மறைச்சொல் பெயர்கள்
குஞ்சம் குறளை கொடுவாயே குண்டியம்
விஞ்சு பிசுநம் விரி தொடுப்புத் துஞ்சு பெயர்
ஆசில் இடக்கரடக்கலுடன் கூகனம்
பேசின் மறைச்சொல் பெயர்
** 5, 2 பெயர்கள்
**197
#6
** கொண்டாடல் பெருஞ்சொல் நயச்சொல்
** பயனில்சொல் பெயர்கள்
கொண்டாடல் மெச்சல் குலாவலே பாராட்டுப்
பண்பார் பெருஞ்சொல் பலரறிசொல் தண்டா
நயச்சொல் நளினச்சொல் நாடும் அநர்த்தம்
பயனில்மொழி ஆம் பகர்
** 3, 1, 1, 1 பெயர்கள்
**198
#7
** கூறியதுகூறல் நகைச்சொல் விடாதுபேசல் பெயர்கள்
கூறியதுகூறல் குறிக்கில் புனருத்தி
ஏறு நகைச்சொல் இயல் அசதி ஈறில்லா
மிக்குச் சிரித்துவிளம்பல் விடாதுரைத்தல்
கத்தல் பிதற்றலாக் காண்
** 1, 2, 1 பெயர்கள்
**199
#8
** தேவர் இழிசனர் உயர்ந்தோர் மொழி
** ஆரியத்திரிபு மொழி, பொதுமொழி திசைச்சொல் பெயர்கள்
சங்கதம் தேவர் சொல் சாலார்க்கு அவப்பிரஞ்சம்
துங்கர் பிராகிருதம் சூழுவார் இங்கு இதில் சேர்
தற்பவம் ஆரியம் தற்சமம்தான் பொது
வில் தேசிகம் திசைச்சொல் வேண்டு
** 1, 1, 1, 1, 1, 1 பெயர்கள்
**200
#9
** வினாவல் விடை வினாவிடை உபசாரம் பெயர்கள்
வினாவல் கடாவல் விடை உத்தரமே
வினாவிடை கூட்டி விளம்பல்தனை உரைப்பின்
சல்லாபம் சொல் முகமன் சம்மானம் இன்னயம்
எல்லாம் உபசாரம் மேல்
** 1, 1, 1, 3 பெயர்கள்
**201
#10
** நூல் மயக்கம் தூயதன்மை அலரி பழி பெயர்கள்
நூல் ஆகமம் கலை தந்திரம் நுண் பனுவல்
மால் ஆகும் ஐயன் மருள் மயக்கம் வாலாமை
சூதகம் தூயதன்மை சொல்லும் அலர் கவ்வை அம்பல்
பாதகம் பாவம் பழி
** 4, 3, 2, 2, 2 பெயர்கள்
**202
#11
** ஓசை பெயர்கள்
சிலம்பல் இசை நாதம் கம்பலை சும்மை
அலம்பல் அரவம் துழனி ஆர்ப்புப் புலம்பல்
கலித்தல் இரங்கல் கரங்கல் துவைத்தல்
ஒலித்தல் இரட்டு ஓசை ஆம்
** 10, 5 பெயர்கள்
**203
#12
** பேரொலி பெயர்கள்
திமிலம் துவைத்தல் தெழித்தல் அதிர்ச்சி
குமுதம் உரற்றல் குமுறல் தமரம்
கலகம் குமிலம் களகளம் பூசல்
வலு பேரொலிக்கு ஆம் வழக்கு
** 12 பெயர்கள்
**204
#13
** அநுகரண ஓசை பெயர்கள்
அம்மெனல் ஒல்லெனல் ஆர்ந்திட்டு இழுமெனல்
கொம்மெனல் கல்லெனல் கோவெனல் இம்மெனல்
வல்லெனல் பொள்ளெனல் வாய்ந்த இவை ஆயுங்கால்
சொல்லில் அனுகரணம் சூழ்
** 9 பெயர்கள்
**205
#14
** உபயஓசை பெயர்கள்
கடகடெனலோடு கலகலெனல் சாலப்
படபடெனல் இன்னும் பகரில் திடுதிடெனல்
இட்ட நெறுநெறெனல் ஈது உபயச்சத்தம் எனத்
திட்டமுடன் சொன்னார் தெளிந்து
** 5 பெயர்கள்
**206
#15
** பறவைச்சத்தம் விலங்கு ஒலி
** இலை இவற்றால் எழும் ஒலி பூணின் ஒலி
துழனி கலகலம் சொல் பறவைச் சத்தம்
கழி பெரும் கோலாகலமே குழு விலங்கின்
அம் சத்தம் சோலை இலை ஆலன் மருமராஞ்சம்
சிஞ்சிதம் பூணின் சிலை
** 2, 1, 1, 1 பெயர்கள்
**207
#16
** மந்தஇசை சமன் இசை வல்லிசை பெயர்கள்
மந்தரம் காகுளி மந்தஇசைப் பெயர்
சந்தமுறு மத்திமம் சால் மதுரம் முந்து சமன்
ஓசை ஆம் தாரமுடன் உச்சமது வல்லிசை ஆம்
பேசின் ஒலிப் பேதம் பேண்
** 2, 2, 2 பெயர்கள்
**208
#17
** படலம் இயல் பெயர்கள்
படலம் சருக்கம் பரிச்சேதம் காண்டம்
இடர் இலம்பகம் எல்லாம் தொடர்பினுறப்
பல்பொருள்கள் வைப்பு ஆம் பகரின் இனப்பொருட்கள்
சொல் இயல் ஓத்து என்றே சூழ்
** 5, 1 பெயர்கள்
**209
#18
** பாட்டு வெண்பா ஆசிரியப்பா பெயர்கள்
கவி கவிதை செய்யுள் கவின் தொடர்பு தூக்கு
நவில் யாப்புப் பா பாட்டின் நாமம் இவையாகும்
வெண்பாவின் பேர் முதற்பா வெள்ளை விளங்கு அகவல்
பண்பு ஆகும் ஆசிரியப்பா
** 7, 2, 1 பெயர்கள்
**210
#19
** பாயிரம் உதாரணம் சபதம் பெயர்கள்
பதிகம் புனைந்துரை பாயிரம் ஆகும்
இதிகாசம் காட்டு என்று இசைப்பர் உதாரணப் பேர்
வஞ்சினம் சத்தியம் வட்டித்தல் ஆணை எலாம்
எஞ்சில் சபதம் இசை
** 2, 2, 4 பெயர்கள்
**211
#20
** வாசகம் பதம் உறுதிச்சொல் பெயர்கள்
பாசுரம் வார்த்தை பகர் வசனம் வாசகம்
தேசாரும் பாழி திகழ் பதம் ஆம் கூசாக்
கழறல் இடித்தல் கதித்து உறுதிச்சொல் என்று
இழிபின்று உரைத்தார் இயைந்து
** 3, 1, 2 பெயர்கள்
**212
#21
** போர்க்கழைத்தல் மூதுரை
** தன் மேம்பாட்டுச்சொல் பெயர்கள்
அறைகூவல் போர்க்கழைத்தல் ஆகும் முதுசொல்
முறை சேரும் மூதுரை முன்சொல் திறமுடனே
தன்னை மேம்பாட்டுச்சொல் தானா நெடுமொழி
மன்னி வியப்பின் வரும்
** 1, 2, 1 பெயர்கள்
**213
#22
** அசைச்சொல் பெயர்கள்
அந்தில் இருந்து இட்டு அரோ இகும் தில் இக போ
தம் தாம் பிற பிறக்குத் தான் நின்று மன் மன்னோ
மா மாது மாதோ வான் மற்று அத்து அன்று ஓரும் சின்
நாமம் ஈது எல்லாம் அசை
** 25 பெயர்கள்
**214
#23
** வியங்கோள் அசை உரை அசை முன்னிலை அசை பெயர்கள்
மாவே வியங்கோள் வரும் அசை அம்ம உரை
மேவு அசை என்றே விளம்புவர் பாவார்
இக மியா மோ மதி அத்தை இத்தை மாள
பகர் முன்னிலை அசையாப் பார்
** 1, 1, 7 பெயர்கள்
** ஒலிபற்றிய பெயர்த்தொகுதி முற்றுப்பெற்றது
@11 ஒருசொல் பல்பொருள்பெயர்த் தொகுதி
**215
#1
** அரி கோ பெயர்கள்
அரி பன்றி தேரை கிளி பச்சை அளி சிங்கம்
பரி கவி பாம்பு இந்திரன் மால் கால் கூற்று இருசுடர் தீ
கோ இறை திக்குக் கிரணம் சலம் குலிசம்
ஆ வரை கண் பார் சுவர்க்கம் அம்பு
** 16, 11 பெயர்கள்
**216
#2
** கம் வசு வித்தம் காண்டம் பெயர்கள்
கம் தலை வாயுப் பிரமன் சலம் சுவர்க்கம்
புந்தி வசு மணி கோ தனம் தீ அந்தரத்தோர்
தீய பழிப்புப் பொன் திரள் அறிவு வித்தம் நீர்
ஆயுதம் காடு ஆடை காண்டம்
** 6, 5, 4, 4 பெயர்கள்
**217
#3
** நாகம் துப்பு கமலம் பெயர்கள்
வாகு புன்னை ஆடை காரீயம் மலை யானை
வேக விட அரவம் மேலுலகம் நாகம் ஆம்
துப்புப் பவளம் வலி அரக்குத் தாமரை
அப்புக் கமலம் எனலாம்
** 7, 3, 2 பெயர்கள்
**218
#4
** குபேரன் வனம் கனம் அணங்கு பொருள் பெயர்கள்
தனபதி சோமன் குபேரன் ஆம் கான் நீர்
வனம் ஆம் கார் பொன் செறிவு பாரம் கனம் ஆம்
நலம் தெய்வம் ஆசை நலி மாது அணங்கு ஆம்
பொலம் திசை சேய் புந்தி பொருள்
** 2, 2, 4, 4, 4 பெயர்கள்
**219
#5
** மல்லல் சிலை தரணி குலம் பெயர்கள்
மல்லல் வலியும் வளனும் மிகுதியும் ஆம்
கல் ஒலி வில் மூலம் கடும் சிலைக்கு ஆம் நல்ல
தலம் ஆயிரம் கதிரோன் தாணுத் தரணி
குலம் இனம் இல்லம் குடி
** 3, 4, 3, 3 பெயர்கள்
**220
#6
** அம்பரம் கோடு ககம் கழுது பெயர்கள்
அம்பரம் ஆகாயம் ஆடை கடல் வெற்புச்சி
கொம்பு பணிலம் கரை கோடு என்பர் அம்பு
பறவை ககம் ஆம் இதணமும் பேயும்
அறுபதமும் கழுதுக்கு ஆம்
** 3, 4, 2, 3 பெயர்கள்
**221
#7
** வாமம் தாமம் நேமி பயோதரம் அரவம் பெயர்கள்
வாமம் இடப்பால் வனப்புக் குறங்கு குறள்
தாமம் அலங்கல் ஒளி தாமணி ஆம் நேமி
பரவை திகிரி பயோதரம் கார் கொங்கை
அரவம் ஒலி நாகம் ஆம்
** 4, 3, 2, 2, 2 பெயர்கள்
**222
#8
** கீலாலம் உதகம் தக்கிணம் கவி பொழில் பெயர்கள்
சலம் உதிரம் காடி கீலாலம் பானீயம்
நிலம் உதகம் தக்கிணம் தெற்கு வலம் ஆம்
கவி கவிதை வானரம் சுக்கிரன் ஆம் சோலை
புவி பெருமை நாடு பொழில்
** 3, 2, 2, 3, 4 பெயர்கள்
**223
#9
** அத்தி ஆரம் நகம் புண்டரிகம் பெயர்கள்
அத்தி அதவு ஆனை ஆர்கலி என்பு ஊறு ஆகும்
சுத்த மணிவடம் பூண் சந்து ஆத்தி முத்தாரம்
பூ மரம் பொற்றை உகிர் நகம் புண்டரிகம்
தாமரை திக்கானை புலி வண்டு
** 5, 5, 4, 4 பெயர்கள்
**224
#10
** வச்சிரம் வம்பு காந்தாரம் வாரணம் பெயர்கள்
வச்சிரம் ஓர்கள்ளி வயிரமணி குலிசம்
கச்சு நவம் வம்பு காந்தாரம் பண் அச்சும் இசை
கானம் ஆம் கோழி கவசம் தடை கடல்
யானை மெய்ப்பை சங்கு வாரணம்
** 3, 2, 3, 7 பெயர்கள்
**225
#11
** தானம் சாரங்கம் வையம் பாணி பெயர்கள்
தானம் இடம் கொடை சாரும் வலிமையுடன்
யானைமதம் தேவலோகம் ஆம் மான் வண்டு
சாரங்கம் ஆம் வையம் பண்டி உரோகணி தேர்
பாரம் கை நீர் சொல் பாணி ஆம்
** 5, 2, 4, 3 பெயர்கள்
**226
#12
** இரவி அயம் மாலை திகிரி படி பெயர்கள்
இரவி அருக்கன் பருப்பதம் என்பர்
புரவி நீர் சேறு ஆடு அயம் ஆம் இரவு இயல்பு
தார் மாலை சக்கரம் மூங்கில் மலை திகிரி
பார் மானல் பெற்றி படி
** 2, 4, 3, 3, 3 பெயர்கள்
**227
#13
** சக்கரம் கருமை பெயர்கள்
படை தேர்க்கால் வட்டம் பறவை பெருமை
புடவி பிறப்புப் பொருப்புக் கடலே
கிரிமல்லிகை சக்கரம் ஆம் கிளவி
கருமை பெருமை கறுப்பு
** 10, 2 பெயர்கள்
**228
#14
** கடி மடி இறும்பு புரை பெயர்கள்
கடி புதுமை கூர்மை மணம் நாற்றம் பேய் காவல்
முடுகல் அச்சம் காலம் மிகுதி மடி வயிறு
சோம்பு பொய் சீலை மலை தூறு கஞ்சப்பூ இறும்பே
ஆம் புரை ஒப்பு உயரம் மாசு
** 10, 4, 3, 3 பெயர்கள்
**229
#15
** புட்கரம் எஃகு கண்டிகம் பெயர்கள்
யானைத்துதிக்கைத்தலை பருந்து தீர்த்தநீர்
பான்மை கமலம் வாள் பாண்டமுகம் வான் நிறைவு
புட்கரம் எஃகு ஆம் உருக்குக் கூர்மை வேல் வாள் காடு
முள் கண்டகம் ஆம் மொழி
** 10, 3, 3 பெயர்கள்
**230
#16
** தலம் குயம் வில் கரி சிலம்பு பெயர்கள்
இலையும் நிலமும் தலம் கொடுவாளும்
முலையும் குயம் வில் ஒளியும் சிலையும்
கரி யானை சான்று இருந்தை ஆம் சிலம்பு குன்றம்
அரி நூபுரம் ஒலியே ஆம்
** 2, 2, 2, 3, 3 பெயர்கள்
**231
#17
** தாது ஓதிமம் தார் பெயர்கள்
தாது பஞ்சலோகம் இரத்தாதிஏழு ஐந்து
பூதம் நல் செங்கல் தாதுமாதுளை தூள் ஓதிமம்
பூமன் சிறை அன்னம் பூதரம் மானமா
தாமம் கொடிப்படை தார்
** 6, 3, 2 பெயர்கள்
**232
#18
** விசயம் அயில் படர் விளிவு சடை பெயர்கள்
சயமே சருக்கரை ஊர்கோள் விசயம்
அயில் வேல் இரும்பு கூர் நாஞ்சில் துயர் பகை
போதல் உள்ளல் மார்க்கம் படர் ஆம் விளிவு கெடல்
சாதல் வேர் வேணி சடை
** 3, 4, 5, 2, 2 பெயர்கள்
**233
#19
** கவிகை படை ஆலம் உறழ்தல் தாலம் பெயர்கள்
குடையும் கொடையும் கவிகை ஆம் என்பர்
படை சேனை ஆயுதம் ஆகும் வடம் விடம்
ஆலம் ஆம் ஒத்தல் பகைத்தல் உறழ்தல் ஆம்
தாலம் ஆம் பெண்ணை தலம்
** 2, 2, 2, 2, 2 பெயர்கள்
**234
#20
** ஆழி பாழி தாழை ஒலியல் பெயர்கள்
ஆழி வேலாவலயம் சக்கரம் மோதிரம் ஆம்
பாழி பெருமை இடம் வலி ஆம் தாழைதான்
தெங்கு மடல் கைதை சீலை தெருத் தோலும் நதி
தொங்கல் ஒலியல் எனும் சொல்
** 3, 3, 2, 5 பெயர்கள்
**235
#21
** கந்தம் கந்தரம் கழை கறை நகர் சிறை பெயர்கள்
கந்தம் மணம் கிழங்கு கார் கழுத்து வெற்பின்அளை
கந்தரம் ஆகும் கழை கரும்பு சந்தி
கறை ஆகும் செம்பால் கருமை நகர் இல் ஊர்
சிறை ஆகும் காவல் சிறகு
** 2, 3, 2, 2, 2, 2 பெயர்கள்
**236
#22
** சிகி சிகரி நியமம் கட்சி குரை வான் பெயர்கள்
சிகி மயிலும் தீயும் சிலம்பும் அரவும்
சிகரி வரை கோபுரம் அங்காடி வகிர் நியமம்
கான் ஆகும் கூடு ஆகும் கட்சி குரை ஒலி மா
வான் ஆம் ஆகாயம் மழை
** 4, 2, 2, 2, 2, 2 பெயர்கள்
**237
#23
** பிரமம் பெயர்கள்
பிரமம் வேதா வேதம் மந்திரம் மால் வேள்வி
இரவி மதி தீ முனிவர் முத்தி தருமநூல்
தன்மை உலகவழக்கம் தவம் ஈசன்
மென்மை இயல்பு விதி
** 18 பெயர்கள்
**238
#24
** அண்டசம் வல்லி அரில் பெயர்கள்
அரவு தவளை முதலை மீன் ஆமை
அரணை உடும்பு ஓந்தி இப்பி விரி பறவை
பல்லி நண்டு அண்டசம் ஆகும் பதாகை கொடி
வல்லி அரில் பிணக்கு மாசு
** 12, 2, 2 பெயர்கள்
**239
#25
** சிந்து மதலை கதலி பொறி வெறி பெயர்கள்
உததி நதி நீர் சிந்து ஆம் தூண் கலம் சேய் கொன்றை
மதலை ஆம் தேறு கொடி வாழை கதலி
பொறி ஆம் மதி திருப் புள்ளி செல்வம் தேமல்
வெறி ஆடு அச்சம் கள் விரை
** 3, 4, 3, 5, 4 பெயர்கள்
**240
#26
** பிறங்கல் கன்னல் இருள் வீதல் தகை பெயர்கள்
பெருமை மலை பிறங்கல் கன்னல் கடிகை
கரகம் திமிரம் நரகம் இருள் ஆம்
ஒழிதல் கெடுதல் வறுமையே வீதல்
அழகு அன்பு பாடு தகை ஆம்
** 2, 2, 2, 3, 3 பெயர்கள்
**241
#27
** தட்டை சினை ஓடை வல் மை பெயர்கள்
தட்டை தினைத்தாள் மழித்தல் தத்தைகடிகோல் மூங்கில்
முட்டை உறுப்புக் கவடு சினை பட்டம் மடு
ஓடை ஆம் வல் விரைவு மேடு வன்மை சூது ஆகும்
ஆடு குற்றம் மால் கறுப்பு மை
** 4, 3, 2, 4, 4 பெயர்கள்
**242
#28
** களங்கம் அங்கணம் குற்றம் வேலை வாள் பிண்டம் பெயர்கள்
குற்றம் கறை களங்கம் ஆம் அங்கணம் சேறு
முற்றம் ஆம் கோதும் சிறுமையும் குற்றம் ஆம்
மாக் கடல் காலம் கருமம் வேலை வள் கூர் காது வாள்
யாக்கை திரள் சோறு பிண்டம் ஆம்
** 2, 2, 2, 3, 3, 2 பெயர்கள்
**243
#29
** யாணர் மணம் நளி தளிமம் சாகம் அத்தம் பெயர்கள்
வளம் நவம் யாணர் மணம் கூட்டம் நாற்றம்
நளி பெருமை சீதம் செறிவும் தளிமம் ஆம்
மெத்தை அழகு தழை தேக்குச் சாகம் ஆம்
அத்தம் நடை கை நாள் பொன் ஆம்
** 2, 2, 3, 2, 2, 4 பெயர்கள்
**244
#30
** அருத்தம் பவித்திரம் கூடம் போதி பெயர்கள்
அருத்தம் தனம் சொல் பொருள் பயன் பாதி
கருத்துப் பவித்திரம் சுத்தம் தருப்பை
திரள் மாயம் பொய் கூடம் ஆம் வலிய வெற்பும்
அரசும் இவை போதி என்பதாம்
** 5, 2, 2, 2 பெயர்கள்
**245
#31
** திரட்சி கரேணு கடகம் வெளில் பெயர்கள்
முடலை தரளம் திரட்சி கரேணு
பிடி களிறு என்று இவற்றின் பேர் ஆம் கடகம் மதில்
தானை தொடி வட்டம் தயிர்கடையும்தூண் அணில்
யானைத்தறி வெளில் ஆம்
** 3, 3, 3, 3, 5 பெயர்கள்
**246
#32
** அற்றம் அருப்பம் சிரகம் கனை பொருள்
அவகாசம் அச்சம் மெலிவு சோர்வு அற்றம்
கவலை நோய் காடு ஊர் அருப்பம் திவலை
கரகம் இவை சிரகம் ஆகும் கனைதான்
அரவம் நிறைவு நெருக்கம்
** 4, 4, 2, 3 பெயர்கள்
**247
#33
** வாரம் தண்ணடை பூவை சுசி பெயர்கள்
வாரம் கரை பாகம் அன்பு மருத நிலத்து
ஊர் அகலுள் பச்சிலை தண்ணடை ஆம் சாரிகை
காயா மடமாது பூவை சுசி வெண்மை
தீ ஆடி சுத்தம் குடை
** 3, 3, 3, 5 பெயர்கள்
**248
#34
** பலாசம் பாடலம் அருச்சுனம் அருணம் பெயர்கள்
தலம் பச்சை வண்ணம் பலாசு பலாசம் பா
டலம் சிவப்புப் பாதிரி பாய்மா ஆம் பொலமே
மருது எருக்கு வெண்மை அருச்சுனம் ஆகும்
அருணம் மான் ஆடு சிவப்பு ஆம்
** 3, 3, 4, 3 பெயர்கள்
**249
#35
** குளம் களம் கும்பம் தனம் பெயர்கள்
குளம் ஆகும் நெற்றி சருக்கரை குட்டம்
களம் ஆகவபூமி கண்டம் களரி
குடம் கரிமத்தகம் சாடி கும்பம் என்பர்
தடம் கொங்கை வித்தம் தனம்
** 3, 3, 3, 2 பெயர்கள்
**250
#36
** ஞானம் நூனம் மறை மா பெயர்கள்
ஞானம் அறிவு கல்வி நல்லொழுக்கம் ஆம் என்பர்
நூனம் ஆம் குன்றலும் நிச்சயமும் மான
மறை மந்திரம் வேதம் மா ஆம் புரவி
சிறை வண்டு சூதம் திரு
** 3, 2, 2, 4 பெயர்கள்
** ஒருசொல் பல்பொருட்பெயர்த்தொகுதி முற்றுப்பெற்றது
@12 பல்பெயர்க்கு ஒருபெயர்த்தொகுதி.
**251
#1
** ஏகம் இருமை பெயர்கள்
கூறியதே கூறினும் குற்றம் இலை நற்பொருள்
வேறு பெறின் என்றே விதித்தலால் தேறு உரை கொள்
ஏகமே வீடு மறுமையோடு இம்மை என்று
ஆகும் இருமை அறி
** 1, 2 பெயர்கள்
**252
#2
** மூவிடம் மும்மூர்த்தி முக்காலம் பெயர்கள்
முன்னிலை தன்மை படர்க்கை ஆம் மூன்றிடம்
பன்னு சிவன் மாயன் பங்கயனே மும்மூர்த்தி
காலம் ஒரு மூன்றாம் கருதும் இறப்புடனே
சால நிகழ்வு எதிர்வும்தான்
** 3, 3, 3 பெயர்கள்
**253
#3
** நாற்கவி நாற்பொருள் பெயர்கள்
ஆசு மதுரமே சித்திரம் நல் வித்தாரம்
ஏசில் கவி நான்கு என்று இயம்புவார் பேசும்
அறம் பொருள் இன்பம் வீடு ஆம் கேள்வி நான்கும்
திறம்பாத நாற்பொருளாய்த் தேறு
** 4, 4 பெயர்கள்
**254
#4
** ஐவகை வினா பெயர்கள்
அறியான்வினாவல் அறிவொப்புக்காண்டல்
குறியின் ஐயந்தீர்த்தல் குறித்தோனறிவுகொளல்
மெய்யவற்குக்காட்டல் வினவில் அரிய வினா
ஐவகையாம் என்றே அறி
** 5 பெயர்கள்
**255
#5
** ஐங்குரவர் ஐம்பால் பெயர்கள்
அரசன் உபாத்தியாயப்பன் மூத்தோன்
குரவர் ஓர் ஐவர் எனக் கூறும் ஒருவன்
ஒருத்தி பலர் ஒன்று பல ஓதும் இவை ஐந்தும்
விரித்திடும் ஐம்பாலாக வேண்டு
** 5, 5 பெயர்கள்
**256
#6
** ஐந்து நிலங்கள் பஞ்சாங்கம்
மொய் குறிஞ்சி பாலை மருதம் செழு முல்லை
நெய்தல் இவை ஐந்தும் நிலம் என்பர் மெய் சேரும்
பஞ்சாங்கம் தானே திதி வாரம் பார்த்திடும் நாள்
எஞ்சில் யோகம் கரணம் மேல்
** 5, 5 பெயர்கள்
**257
#7
** ஐம்பூதம் ஐந்து பட்சி பெயர்கள்
பிருதிவி அப்புத் தேயு பேசு மருத்து
மருவிடும் ஆகாயம் ஐம்பூதம் பொருவரிய
வல்லூறே ஆந்தை வளர் காகம் கோழி எழில்
வெல்லும் மயில் பஞ்சபட்சி மேல்
** 5, 5 பெயர்கள்
**258
#8
** திருமால் ஆயுதம் ஈசன் ஐம்முகம் பெயர்கள்
வரி சிலை சங்கு ஆழி வாள் கதை இவ் ஐந்தும்
அரிதன் படைக்கலம் என்றாகும் அரன் முகமே
தற்புருடம் ஈசானம் சத்யோசாதம் வாமம்
வில் சீர் அகோரம் விரி
** 5, 5 பெயர்கள்
**259
#9
** நாடுபடு திரவியங்கள் ஐந்து
** நகர்படு திரவியங்கள் ஐந்து பெயர்கள்
கன்னல் பயறு கதலியொடு செவ்விளநீர்
செந்நெல் இவை நாட்டின் திரவியம் ஆம் மன்னனுடன்
கண்ணாடி பித்தன் கருங்குரங்கு தந்தி ஐந்தும்
திண்ணம் நகர்ப்பொருளாச் செப்பு
** 5, 5 பெயர்கள்
**260
#10
** காடுபடு திரவியங்கள் ஐந்து
** கடல்படு திரவியங்கள் ஐந்து பெயர்கள்
நாவி மயிற்பீலி நறும் தேன் அரக்கு இறால்
கானின் திரவியமாக் கட்டுரைப்பர் மேவியுறும்
உப்புத் தரளம் உயர் சங்கோடு ஓர்க்கோலை
துப்பும் கடற்பொருளாச் சொல்
** 5, 5 பெயர்கள்
**261
#11
** மலைபடு திரவியங்கள் ஐந்து ஐம்புலம் பெயர்கள்
குங்குமம் தக்கோலம் அகில் கோட்டம் மிளகு இவைகள்
தங்கு மலைப்பொருளாச் சாதிப்பர் பொங்கு
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் இவை ஐந்தும்
நவையில் புலன் என்றே நாடு
** 5, 5 பெயர்கள்
**262
#12
** எழுத்துத்தானம் ஐந்து பெயர்கள்
பாலன் குமரன் பகர் அரசன் மூப்புடன் சாக்
கோலும் பேர் முன்னெழுத்துக் கொண்டாதி சாலில்
கவிதனக்கு முன் மூன்றும் இன்பம் கடைய
நவை ஆகும் என்றே நவில்
** 5 பெயர்கள்
**263
#13
** உட்சமயம் ஆறு பெயர்கள்
உட்சமயம் ஆறும் உரைக்குங்கால் சைவமுடன்
பட்சமுறும் பாசுபதத்தோடே நிச்சயம் சேர்
வாமம் மிகும் காளாமுகம் பின்னர் மாவிரதம்
சேம வைரவமும் சேர்
** 6 பெயர்கள்
**264
#14
** புறச்சமயம் பெயர்கள்
புத்தம் அருகம் புகல் பாஞ்சராத்திரமே
சித்தமுறும் பட்டாசாரியம் சித்திரமாய்க்
கூறிய மீமாஞ்சம் குறித்து உலோகாயதத்தோடு
ஆறும் புறச்சமயம் ஆம்
** 6 பெயர்கள்
**265
#15
** ஆறங்கம் பெயர்கள்
ஆறங்கம் மந்திரத்தோடு ஆகும் வியாகரணம்
தேறு நிகண்டுடன் சந்தோபிசிதம் கூறு
நிருத்தமே சோதிடம் கணிச்சயித்துக்கொண்டு
திருத்தமுறச் சொன்னார் தெளிந்து
** 6 பெயர்கள்
**266
#16
** எழு பிறப்பு எழு சமுத்திரம் பெயர்கள்
தேவர் விலங்கு மக்கள் சேண் பறவை ஊர்வன
தாவரம் நீர்வாழ்வ எழுபிறப்பு ஆம் தாவும்
உவர் பால் தயிர் கரும்பு ஒண்ணீர் மது நெய்
சிவணும் எழுகடலும் தேர்
** 7, 7 பெயர்கள்
**267
#17
** எழுமுனிவர் பெயர்கள்
போற்று கும்பயோனி புலத்தியன் மார்க்கண்டன்
சாற்று ஆங்கீரன் வசிட்டன் கௌதமனும் ஏற்று புகழ்
காசிபனோடு எழுவர் காணும் கலை முனிவர்
ஆசில் பெரியோர்கள் ஆம்
** 7 பெயர்கள்
**268
#18
** மேலேழுலகம் பெயர்கள்
பூலோகமே புவலோகம் தவலோகம்
மேல் சநலோகம் சுவலோகம் வாலிய சீர்ச்
சத்தியலோகம் மகலோகம் தாம் இவை
உத்தமமார் மேலேழுலகு
** 7 பெயர்கள்
**269
#19
** கீழேலுலகம் பெயர்கள்
அதல விதலம் அடைவு ஆம் சுதலம்
நிதலம் ரசாதலம் பாதாளம் முதுபோகம்
துன்னும் தராதலங்கள் என்றே தொடர்பினுடன்
மண்ணின் கீழேலுலகம் ஆம்
** 7 பெயர்கள்
**270
#20
** சத்தநதி பெயர்கள்
கங்கை யமுனை சரசுவதி காவேரி
பொங்கு குமரி நருமதை தங்கு சீர்க்
கோதாவரியுடன் ஏழும் குலநதி என்று
ஓதும் தமிழின் உரை
** 7 பெயர்கள்
**271
#21
** எட்டுவகை மணம் பெயர்கள்
கந்தருவம் தெய்வம் கவின் பிரமம் பைசாசம்
பந்தமுறும் பிரசாபத்தியம் நந்தல்இல
தாம் என்னும் ஆரிடம் ஆசுரம் இராக்கதம்
சேம மணம் எட்டு எனவே செப்பு
** 8 பெயர்கள்
**272
#22
** அட்டதிக்குப்பாலகர் பெயர்கள்
இந்திரன் அங்கி இயமன் நிருதியுடன்
உந்து வருணன் உயர் வாயு விந்தை மிகு
பண்டு ஏர் குபேரன் பரிவில் ஈசானனோடு
எண் திசை வாழ் பாலகர் என்று எண்
** 8 பெயர்கள்
**273
#23
** அட்டநாகம் பெயர்கள்
வாசுகி தக்கன் அனந்தன் பதுமனொடு
பேசு குளிகன் மகாபதுமன் ஏசிலாக்
கார்க்கோடகனுடனே சங்கன் இவை எண் திசையும்
ஆர்க்கும் அரவு எட்டு என்பவாம்
** 8 பெயர்கள்
**274
#24
** அட்டதிசையானை பெயர்கள்
அயிராவதம் குமுதம் புண்டரிகம் பின்னும்
சய வாமனம் அஞ்சனமும் வயன் ஏரும்
புட்பதந்தம் சுப்பிரதீகம் சாருவபௌமம்
அட்ட திசையானை எனலாம்
** 8 பெயர்கள்
**275
#25
** அட்டகுல பருவதம் பெயர்கள்
இமயகிரி கைலை மந்தரம் நீலம்
அமை ஏமகூடம் நிடதம் சிமையமுறும்
கந்தமலை விந்தம் பார் காத்து நிவந்து இலங்கு
மந்த மலை எட்டும் ஆம்
** 8 பெயர்கள்
**276
#26
** அட்டமங்கலம் பெயர்கள்
தீபமுடன் கவரி கண்ணாடி சீர்த் தோட்டி
தாபம் தீர் கும்பம் தனி முரசம் சோபம்
மலி கொடி மீன்இரட்டை மங்கலம் எட்டு என்று
உலகில் பெரியோர் உரை
** 8 பெயர்கள்
**277
#27
** சிறப்பிலா எண்பெயரெச்சம் எண்கணம் பெயர்கள்
குறள் செவிடு மூங்கை முடம் கூன் குருடு
துறுபிண்டம் பேடுடனே எச்சமுறு எட்டாம்
அம்புலி பானு அனல் கால் இயமானன்
கம் புவி நீர் ஓர் எண்கணம்
** 8, 8 பெயர்கள்
**278
#28
** ஒன்பது வாயில் நவரசம் பெயர்கள்
கண் செவி மூக்குக் கவின் வாய் குதம் குய்யம்
நண்ணிய வாயில் நவம் என்ப ஒண்மை தரும்
குற்சை நகை கருணை கோபம் பயம் வீரம்
அற்புதம் சாந்தம் அணி
** 9, 9 பெயர்கள்
**279
#29
** நவகிரகம் பெயர்கள்
கதிர் திங்கள் செவ்வாய் கணக்கன் அரசன்
முதிர் வெள்ளி காரி ஒளிர் விண் பதி மேவும்
கார் ஆர் இராகு கவி கேது தான் அவம் ஆம்
பேர் ஆர் கோள் என்றே பிரி
** 9 பெயர்கள்
**280
#30
** பன்னிரண்டு இராசி பெயர்கள்
மேடம் இடபம் மிதுனமே கர்க்கடகம்
காடகம் சேர் சிங்கம் கன்னி துலாம் நீடு
விருச்சிகம் சாபம் மகரம் கும்பமுடன் மீனம்
தெருட்டு ஓரை பன்னிரண்டும் தேர்
** 12 பெயர்கள்
**281
#31
** பதினெண்கணம் பெயர்கள்
சுரர் அசுரர் சித்தர் பேய் தூய விஞ்சர் பூதர்
உரகர் யக்கர் மோநர் காந்தர்வர் குருவர்
நிருதர் அண்டர் அந்தரர் கின்னரர் ஏர்க் கிம்
புருடர் கருடர் தைத்தியர்
** 12 பெயர்கள்
**282
#32
** பதினெண் புராணம் பெயர்கள்
கூர்மமே மச்சம் பிரமமுடன் வாமனம்
காருடம் விண்டு கவின் சைவம் ஓரும்
பதுமம் பவுடிகம் நாரதீயம் லிங்கம்
மதி மார்க்கண்டம் வராகம்
**283
#33
** பதினெண் புராணம் பெயர்கள் (தொடர்ச்சி)
ஆக்கினேயம் பிரமகைவர்த்தம் ஆசில் சீர்
வாக்கு ஆம் பிரமாண்டம் பாகவதம் மீக்கு உயர்த்தும்
பொற்பு ஆரும் காந்தம் புராணம் ஈரொன்பான் என்று
அற்பாய் உணர்ந்தே அறை
** 18 பெயர்கள்
**284
#34
** அரசர்க்குரிய யானை பெயர்கள்
கால் நாலும் வால் கோசம் கையும் நிலம் தோயப்
பால் சங்கு போலப் பதத்தின் மேல் சாலும் உகிர்
ஏழு உயர்ந்து ஒன்பான் நீண்டு ஈராறோடு ஒன்றுமே
சூழும் முழம் சுற்றாய்த் தொடர்ந்து
**285
#35
** அரசர்க்குரிய யானை பெயர்கள் (தொடர்ச்சி)
முன் உயர்ந்து பின் பணிந்து மும்மதம் கொண்டே சுளித்துத்
தன் நிழலைச் சாடி மிதிதான் இட்டு மின்னும்
சிறு கண் படைத்து அழகு சேர்ந்து உளது மோலி
இறைவர் கய வாகனம் என்று எண்
** 18 பெயர்கள்
**286
#36
** அரசர் குதிரை
மாதர் மணம் ஒத்த மணத்ததாய் வாழை பெறும்
கோதின் மடல் போல் கொழும் செவியாய்ப் பாதம் முன் பின்
மெய்ப் பார் இருத்தி விரல் அளவு எண்பத்திரண்டே
வைப்பு உயர்வு ஆம் மன்னவர் பாய்மா
**287
#37
** நூலின் முதலில் வைக்கும் மங்கலச்சொல் பெயர்கள்
சீர் எழுத்துப் பொன் பூ திரு மணி நீர் திங்கள்
கார் பரிதி யானை கடல் உலகம் தேர் மலை சொல்
கங்கை நிலம் பிறவும் காண் தகைய முன்மொழிக்கு
மங்கலம் ஆம் சொல்லின் வகை
** 18 பெயர்கள்
** பல்பெயர்க்கு ஒரு பெயர்த்தொகுதி முற்றுப்பெற்றது
** ஆகச் செய்யுள் - 2+285
** உரிச்சொல் நிகண்டு முற்றுப்பெற்றது
|
** காங்கேயர் செய்த உரிச்சொல் நிகண்டு
** வீ. ஆறுமுகஞ்சேர்வை அவர்களால் பார்வையிடப்பெற்றது
** 1914
@0 கடவுள் வாழ்த்து
**1
#1
** விநாயக வணக்கம்
மதிபாய் சடைமுடித்து மாசுணப்பைம் பூட்டுச்
சதிபாய் குறுந்தாட்டுத் தான நதிபாய்
இருகவுட்டு முக்கட்டு நால்வாய்த்தென் னுள்ளம்
உருகவிட்டு நின்ற வொளி
**2
#2
** சிவ வணக்கம்
திருமாலுஞ் செங்கமல மேயானுங் காணாப்
பெருமான் பிறைசூடும் பெம்மா னருண்மூர்த்தி
நன்னெஞ்சி னான்மறையோன் றில்லை நடம்புரிவோ
னென்னெஞ்சின் மேய விறை
@1 தேவப் பெயர்த் தொகுதி
** சிவன் பெயர்
**3
#1
சங்கரன் றாணு சயம்புதிரி யம்பக
னங்கண னாதி யழலேந்தி பைங்கயிலை
வெற்பன் விடையன் விமலன் விடிசடையன்
நற்பன் னகப்பூணி னான்
** 12 பெயர்கள்
**4
#2
அரவன் புராரி புராந்தக னண்ணல்
பரமன் பரசுதரன் பித்த னரனே
கிரியை வளைத்தோன் கிரிசன் கிரீசன்
வரியுழுவைத் தோலோன் வரன்
** 13 பெயர்கள்
**5
#3
ஐந்து முகத்தோ னழற்கரத்தோ னண்டரெலா
முய்ந்திடநஞ் சுண்டோ னுருத்திரன் றந்தி
யுரிப்போர்வை போர்த்தோ னுமாபதிமா தேவன்
பரவரியோன் பூத பதி
** 9 பெயர்கள்
**6
#4
நக்கன் பசுபதி நாரிபா கன்சிவன்
அக்கர வார்த்தோ னழலாடி முக்கண்ணன்
ஈசுர னெண்டோள னேறூர்ந்தோ னந்திவண்ணன்
பாசுபதன் பஞ்சா னனன்
** 12 பெயர்கள்
**7
#5
காலகா லன்காள கண்டன் கபாலிதிரி
சூலபாணி யெண்மூர்த்தி சோமதர னாலதர
னீறாடி மன்றாடி நித்தனத்த னெண்குணன்
ஆறா னனன்றாதை யாம்
** 13 பெயர்கள்
**8
#6
ஈசன் பசுபதி யீசான னெஞ்ஞான்றும்
நாச மிலாதோ னடனம்பன் மாசறுசீர்க்
கங்கை தரித்தோன் கறைக்கண்டன் கண்ணுதலோன்
இங்கிவையெல் லாஞ்சிவன்பே ராம்
** 9 பெயர்கள்
**9
#7
** உமையின் பெயர்
ஆரியை யையை யயிராணி யம்பிகை
நாரி பரையமலை நாயகி சாரிமய
வல்லிசிவை சாம்பவி மாதா வுருத்திரை
வெல்லும் விமலை யுமை
** 14 பெயர்கள்
**10
#8
** காளியின் பெயர்
தாருகற் காய்ந்தாள் பயிரவி சாமுண்டி
கூரிய மூவிலை வேற்குமரி பேரெழி
லாளியூர் சூலி யலகைக் கொடியாள்கங்
காளியிவை காளியின் பேர்
** 7 பெயர்கள்
**11
#9
** துர்க்கையின் பெயர்
இகன்மகிடற் காய்ந்தா ளெழிற்குமரி நீலி
சுகநிறத் தந்தரி துர்க்கை பகவதி
வெய்ய சயமகள் விந்தைவிறற் கொற்றவை
யையை யடலாரி யை
** 10 பெயர்கள்
**12
#10
** விநாயகன் பெயர்
பால்புரை நீற்றோன் மகன்பார்ப் பதிமைந்தன்
மான்மருகன் காமவேண் மைத்துனன் வேன்முருகன்
முன்னோன் கணபதி மூவா விநாயக
னென்னோன் பகைதணிக்கு மேறு
** 6 பெயர்கள்
**13
#11
அங்குச பாச தரனாகு வாகன
னைங்கரத்தோ னாறு நிகர்மதத்தன் வெங்கண்
ணிருமருப்பு மாமுகத்தன் முக்க ணிறைவ
னொருமருப்ப னென்னுள்ளத் தோன்
** 7 பெயர்கள்
**14
#12
** முருகன் பெயர்
முருகன் விசாகன் முதல்வன்சேய் மாயோன்
மருகன் குகன்குமரன் வானோர்க் கொருதலைவன்
கங்கைமகன் கந்தன் கார்த்திகே யன்பொருப்பின்
மங்கைமக னென்சேம வைப்பு
** 10 பெயர்கள்
**15
#13
ஆறிரண்டு தோளா னயிலான் மயிலூர்தி
யாறுமுகத்தா னமரர்க்காச் சீறவுணர்
போர்கடிந்தான் றாரகனைக் காய்ந்தான் பொருப்பெறிந்தான்
சூர்தடிந்தான் வேளென் றுணை
** 9 பெயர்கள்
**16
#14
** திருமாலின் பெயர்
ஆயிரம் பேரா னனந்தன் பணிசயன
னேயமுட னெங்குமாய் நின்றபிரான் றூயவ
னில்லது முள்ளதுமா மெங்கோன் றிருமடந்தை
வல்லவன் பின்னைக்கு மன்
** 8 பெயர்கள்
**17
#15
நெடியோன் குறளுருவ னேமியோன் புட்சேர்
கொடியோன் கரியோன்கோ விந்தன் படியிடந்தோ
னாயன் முராரி யரிகேச வன்கண்ணன்
மாய னுலகளந்தான் மால்
** 14 பெயர்கள்
**18
#16
** செந்திருவின் பெயரும் மன்மதன் பெயரும்
தாமரையாள் செய்யாள் கரிய வரிதேவி
மாமலரா ளிந்திரைபொன் செந்திருவி னாமமா
மன்மதன் மீனுயர்த்தோன் மாரனநங் கன்கருப்பு
வின்மதனன் வீப்பகழி வேள்
** 7, 5 பெயர்கள்
**19
#17
காம னிரதி பதிசம் பரசூதன்
றோமின் மதுசகன் சித்தசன் பூமகண்
மைந்தன் மகரக் கொடியோன் மனோபவனம்
பைந்துடையோன் கந்தர்ப்ப னாம்
** 10 பெயர்கள்
**20
#18
** பிரமன் பெயர்
பிரமன் பிதாமக னான்முகன் போத
னிரணிய கர்ப்பனிறை சூதன் பரமேட்டி
தாதா விரிஞ்சன் சயம்புசதா நந்தனயன்
வேதா விதாதா விதி
** 14 பெயர்கள்
**21
#19
** நாமகள் பெயரும் பொன்னுலகின் பெயரும்
நாமகள் பாரதி வாணி கலைமகள்
பூமகன் றேவியாம் பொன்னுலகி னாமஞ்
சுரருலக நாகங்கோ வானஞ் சுவர்க்கம்
விரிதுறக்க மேலுலகம் விண்
** 4, 8 பெயர்கள்
**22
#20
** இந்திரன் பெயர்
மகவான் புரந்தரன் வச்சிர பாணி
யிகல்வா சவனமரர்க்கீசன் முகிலூர்தி
யந்தர நாத னயிரா வதப்பாக
னிந்திரன் வானோர்க் கிறை
** 9 பெயர்கள்
**23
#21
** தேவர் பெயர்
அமுதா சனர்விபுத ராதித்தர் விண்ணோர்
இமையோர்புத் தேளி ரிலேகர் அமரர்
வரர்தா னவர்பகைவர் பொன்னுலகில் வாழ்நர்
சுரர்வா னவர்சுவர்க்கத் தோர்
** 14 பெயர்கள்
**24
#22
** அசுரர் அரக்கர் பெயர்கள்
தானவர் தண்டா ரவுணர் திதிபுதல்வர்
வானவர் மாற்றலர் வல்லசுரர் மேனி
கரப்போர் நிருதர் நிசாசரர்கார் வண்ணர்
அரக்கர் பிசிதா சனர்
** 4, 5 பெயர்கள்
**25
#23
** குபேரன் பெயர்
நிறைசெல்வன் புட்பகத் தேரோ னிதியோ
னுறுதனதன் கூற்றை யுதைத்த விறைவற்
கபேத சகாய னடலியக்கர் கோமான்
குபேர னளகையார் கோன்
** 7 பெயர்கள்
**26
#24
** இயமன் வருணன் பெயர்கள்
சமன்மறலி யந்தகன் றண்டதரன் கூற்று
நமன்றருமன் கால னடுவன் யமன்பேர்
வலநதி கேள்வன் வருண பகவான்
சலபதி பாச தரன்
** 9, 3 பெயர்கள்
**27
#25
** சூரியன் பெயர்
இரவி தபன னினன்பதங்கன் வெய்யோ
னருணன்மார்த் தாண்ட னருக்கன் றரணி
யுதய னாதித்தன் றினகரன் பானு
கதிரவன் சூரியனாங் காண்
** 14 பெயர்கள்
**28
#26
** சந்திரன் பெயர்
அமுதகதி ரோன்விது வம்புலி யாலோன்
குமுத சகாயன் குபேர னிமகர
னிந்துமதி திங்க ளிரவோ னுடுபதி
சந்திரன் சோமன் சசி
** 14 பெயர்கள்
**29
#27
** செவ்வாய் புதன் பெயர்கள்
அங்கார கன்சே யழல்வக் கிரன்பௌமன்
றங்கார் குசனே தரைமகன் பொங்காரல்
செவ்வாய் புதன்புந்தி மேதைநிபு ணன்புலவன்
கைவார் கணக்கன்மால் காண்
** 8, 6 பெயர்கள்
**30
#28
** வியாழன் வெள்ளி சனி பெயர்கள்
அரசன்பொன் பீதக னந்தணன் மந்திரி
சுரகுரு நாமம் வியாழன் மருவுபுகர்
சுக்கிரன் பார்க்கவன் சுங்கன் கவிவெள்ளி
மைக்காரி மந்தன் சனி
** 6, 5, 3 பெயர்கள்
**31
#29
** மேடம் இடபம் மிதுனம் கர்க்கடகம் பெயர்கள்
கூறு மருணங் கொறிமறி மேடமிவை
ஏறு விடை மூரி யிடபமாந் தேறிய
தண்டு மிதுனஞ் சவையிரட்டை யாழ்விழவு
ஞெண்டுநள்ளி கர்க்கடக மாம்
** 3, 3, 5, 2 பெயர்கள்
**32
#30
** சிங்கம் கன்னி துலாம் விருச்சிகம் தனு பெயர்கள்
கொலையரி யாளி கொடும்புலி சிங்கம்
முலைமடந்தை பேர்கன்னி முற்றாந் துலைநிறை
தூக்குத் துலாமாகுஞ் சொல்லுந் தெறுக்காறேள்
தாக்குஞ் சிலைவிற் றனு
** 3, 3, 2, 2 பெயர்கள்
**33
#31
** மகரம் கும்பம் மீனம் பெயர்கள் இராசியின் பெயர்
வடிமீன் கலைசுறா மானே மகரங்
குடங்கரீ ரஞ்சாடி கும்ப நெடுமயிலை
வல்ல சலசரமீன் மச்சமிவை மீன
மில்லோரை ராசியிவை யாம்
** 4, 3, 4, 2 பெயர்கள்
**34
#32
** விண்மீன் திக்கு பெயர்கள்
தாரகை சோதி தயங்குதா ராகண
மேருடை நன்னா ளுடுமீனின் பேரா
மிசைபுல மாதிரங்கோ காட்டை யரிதந்
திசைககுப மாசைதேந் திக்கு
** 6, 8 பெயர்கள்
**35
#33
** ஆகாயம் மேகம் பெயர்கள்
ஆகாய மந்தரமீ வானம் பரம்விசும்பு
மாகம் வெளிமா திரங்கொண்டன் மேகமுகில்
கார்கனம்விண் கொண்மூ பயோதரம்வா னம்புதம்
வார்புயன்மை மாரி மழை
** 8, 13 பெயர்கள்
**36
#34
** எரி பெயர்
சாதவே தாவே தபனன் றனஞ்சயன்
சோதி யுதாசன னேதூம கேது
சுசியே சுவலனே சித்திர பானு
வசுவரியவ் வாயு சகன்
** 12 பெயர்கள்
**37
#35
** எரி காற்று பெயர்கள்
கனலழ றீத்தழல் பாவகன் வன்னி
யனல்சிகி யங்கி யெரியா மநிலங்கா
லூதை பவன னுயிர்ப்பொலிவங் கூழ்சலனன்
வாதம் வளிமா ருதம்
** 9, 11 பெயர்கள்
**38
#36
கந்த வகனே சமீரன் சதாகதி
கந்தவா கன்பிர பஞ்சனன் வந்து
பரிசன னாசுகன் பவமானன் வாயு
வரிமா பலனேகாற் றாம்
** 12 பெயர்கள்
**39
#37
** புனல் பெயர்
வாரி சலஞ்சலிலந் தோயம் வனம்புவனம்
நீரங்கீ லாலங் கவந்தங்கார் நாரம்
பயமுதகம் பானீயங் கங்கமலம் பாணி
யயமமுத மப்பம்பு வாம்
** 22 பெயர்கள்
**40
#38
வார்வருண மால மலரே யகிலமுகஞ்
சீவனீ யங்குசம் புட்கரஞ் சீவனஞ்
சம்பரங் காண்டங் கனரதங் கோவற
லம்புனலி னாமங்க ளாம்
** 15 பெயர்கள்
**41
#39
** நதி கங்கை பெயர்கள்
தீப வதிசிந்து வுந்தி துளிதடினி
யாபகை தீர்த்திகை யாறுநதி பாபந்தீர்
பாகீ ரதிவிமலை கங்கை திரிபதகை
நாகா லயத்தோர் நதி
**8 , 4 பெயர்கள்
**42
#40
** பூதம் பேய் பெயர்கள்
ஆயகுறள் பாரிடம் பூதங் கடிமண்ணை
பேய்குண பாசி பிசாசலகை யோய்கழுது
வேதாளங் கூளி யழனே சவங்குணுங்
கோதும் பிரேதம் பிணம்
** 2 , 13 பெயர்கள்
**43
#41
** தினம் பகல் இரவு பெயர்கள்
எல்லுத் திவசந் தினந்திவா வாம்பகல்
லெல்லி விபாவரி யாமினி யல்லே
யிரசனி கங்கு னிசாநிசி நத்த
மிரவின் பெயரா மிவை
** 2, 1, 9 பெயர்கள்
**44
#42
** இடி மின் பெயர்கள்
வெடியசனி செல்லு விண்ணே றுருமு
இடியின்பேர் மின்ன லிலங்கல் கடியவாஞ்
சஞ்சலை சம்பை சபலை கனருசி
மிஞ்சு தடித்துமிவை மின்
** 5, 7 பெயர்கள்
** தேவப்பெயர்த் தொகுதி முற்றுப்பெற்றது
@2 மக்கட்பெயர்த் தொகுதி
**45
#1
** முனிவர் பெயர்
ஐயர் துறந்தோ ரருந்தவர் பற்றற்றோர்
பொய்யிகந்தோ ரைந்து புலன்வென்றோர் மெய்யர்
கனிமூல சாகா சனர்கோபங் காய்ந்தோர்
முனிவ ரறவோர் மொழி
** 10 பெயர்கள்
**46
#2
** பார்ப்பார், அரசர் பெயர்
மறையவர் வேதியர் வையகத் தேவ
ரறுதொழிலோ ரந்தணர் பார்ப்பா ரிறைவ
னரபதி கொற்றவன் வேந்தன் முதல்வன்
புரவலன் கோபூ பதி
** 5, 8 பெயர்கள்
**47
#3
** வைசியர் சூத்திரர் பெயர்
ஒத்தபொருள் செய்வோ ரயனுரு வில்வந்தோர்
முத்தொழி லோர்வணிகர் மொய்தனத்தோர் மெய்த்தும்
எழின்மலரோன் பாதத்தில் வந்தோ ரிசை ஏர்த்
தொழிலுடை யோர்சூத் திரர்
** 5, 2 பெயர்கள்
**48
#4
** மனிதர் ஆடவர் பெண் பெயர்
நரர்மனிதர் மானுடர் மானவர் மாக்கள்
புருடனா ணாடவ னாடூஉ வரிவைபிணா
அங்கனை நாரி வனிதைமக டூஉமாது
மங்கை மடந்தைபெண் பேர்
** 4, 3, 9 பெயர்கள்
**49
#5
** பேடி குறள் கூன் பிண்டமில்லா உறுப்பு
பேடி கிலீவமலி பெண்டகஞ் சண்டமே
நீடில் குறள்வா மனஞ்சிந்து கோடிய
கூன்பெய ராகு முடம்முடங்கல் கொள்கையில்லா
வூன்பிண்ட மில்லா வுறுப்பு
** 4, 2, 2, 1 பெயர்கள்
**50
#6
** தந்தை தாய் மகன் பெயர்
தாதை பிதாவைய னத்தனப் பன்றந்தை
யேதமி லன்னையீன் றாள்பயந்தாண் மாதாதாய்
சந்ததி தோன்றல் சிறுவன்சேய் புத்திரன்
மைந்தன் புதல்வன் மகன்
** 5, 4, 7 பெயர்கள்
**51
#7
** மணவாளன் மனைவி பெயர்
கணவன் பதிகாந்தன் காதல னன்பன்
றுணைவன் றலைவன் கொழுநன் மணவாளன்
றற்பா ரியைதுணைவி தாரமில் லாண்மனைவி
கற்பான்மிக் காள்கா தலி
** 8, 6 பெயர்கள்
**52
#8
** உறவின் பெயர்
குடும்பந் துணைநட்புக் கூளிகேள் சுற்றங்
கடும்புதமர் மித்திரர் நட்டா ரடைந்தவர்
பற்றாயார் பந்தம் விருந்தந் தொடரொக்க
லுற்றார் கிளைஞ ருறவு
** 18 பெயர்கள்
**53
#9
** வேடர் இடையர் பெயர்
குறவர் சவரர் புளிஞர் கிராதர்
மறவ ரெயினர் வியாதர் விறல்வேடர்
கானவர் பேரண்டர் கோவலர் கோபால
ரானிடைய ராயர்பெய ராம்
** 8, 4 பெயர்கள்
**54
#10
** பெரியோர் கீழ்மக்கள் பெயர்
ஆரியர் நல்லோ ரறிவுடையோர் பண்டிதர்
சீரியர் சான்றோர் பெரியோர்பேர் பூரியர்
நில்லா மனத்தசடர் நீசர் நெறியில்லார்
கல்லார் கயவர் கலர்
** 6, 7 பெயர்கள்
**55
#11
** பகைவர் பெயர்
மன்னாதார் மாற்றார் மருவலர்வேண் டாரடையார்
இன்னாதார் கூடா ரிகலினா ரொன்னாதார்
செற்றா ரமித்திரர் சேரார்நண் ணார்செறுநர்
பற்றார் பகைவர் பரர்
** 16 பெயர்கள்
**56
#12
** படைவீரர் பெயர்
வீரர் வயவர் மறவர் மிகுமள்ளர்
தீர ரபயர் தெறுந்தொழிலோர் சூரர்
பொருந ரயிலுழவர் போகா விறலோர்
செருநர் செருத்தொழி லோர்
** 12 பெயர்கள்
**57
#13
** கொடிப்படை படையுறுப்பு படைவகுப்பு
** சதுரங்கசேனை சேனை பெயர்கள்
துறுபடைமுன் செல்லறார் தூசியணி நெற்றி
யுறுபடை கையொட்டுண்டை யூகந் தெறுசேனை
யானைதேர் மாச்சது ரங்கமா குந்தண்டம்
தானைகட கந்தந் திரம்
** 1, 3, 3, 4, 4 பெயர்கள்
**58
#14
** பாதம் முழந்தாள் தொடை அல்குல் இடை பெயர்கள்
சரணடி பாதந்தாள் சானு முழந்தாள்
திரளுங் குறங்குகவா னூரு வரைநிதம்ப
மல்குன் மருங்கு னடுவு நுசுப்பிவை
யொல்குமிடைக் கொத்த பெயர்
** 3, 1, 3, 2, 3 பெயர்கள்
**59
#15
** வயிறு கொப்பூழ் குயம் மார்பு கை பெயர்கள்
வயிறு வயினுதர நாபியுந்தி கொப்பூழ்
குயநகில் கொங்கைதனஞ் சொர்க்கம் பயோதர
மொய்கதிர்ப்பூ ணாக முரமரும மார்பகலங்
கைபுயந்தோ ளத்தங் கரம்
** 2, 2, 5, 4, 4 பெயர்கள்
**60
#16
** விரல் நகம் கழுத்து காது உதடு பெயர்கள்
விரலங் குலியா நகமுகி ராகுஞ்
சிரதரங் கண்டங் கழுத்துக் கிரீவங்
களமாஞ் செவிகன்னங் காததர மோட்ட
முளவாகு முத்த முதடு
** 1, 1, 4, 2, 3 பெயர்கள்
**61
#17
** நா பல் மூக்கு கண் நெற்றி பெயர்கள்
நாக்குநாத் தாலு நகைமுறுவல் பல்லெயிறு
மூக்கின் பெயர்நாசி துண்டமா நோக்க
நயனம் விழிநாட்ட நேத்திரங் கோக்க
ணியனுத னெற்றியிலா டம்
** 2, 3, 2, 6, 2 பெயர்கள்
**62
#18
** ஆண் மயிர் பெண் மயிர் பெயர்கள்
பங்கி நவிர்குஞ்சி யோரி மயிர்பித்தை
மங்கலமா மைந்தர்க்கு மாதர்க்குக் கொங்கார்
குரலைம்பால் கூந்தல் குழல்கூழை யோதி
சுருளளகங் குந்தளமாச் சொல்
** 5, 8 பெயர்கள்
**63
#19
** தலை முதுகு மேல்வாய் தேமல் பெயர்கள்
சிரமுத்த மாங்கங்கஞ் சென்னி தலையாம்
வெரிந்முதுகு தாடியண்ண மேல்வாய் புரிகுழல்சேர்
தேமொழியாய் தேமல் பொறிதிதலை துத்திசுணங்
காமென் றுரைப்பரறி ஞர்
** 4, 1, 2, 4 பெயர்கள்
**64
#20
** உடலின் பெயர்
புரங்கடம் விக்கிரகந் தேகமுடம் பாகங்
குரம்பை யுடன்மேனி பிண்ட நிரம்புருவ
மூர்த்தங் களேவரம் யாக்கை தனுவங்கம்
காத்திர மெய்காய மாம்
** 18 பெயர்கள்
**65
#21
** நாதம் உயிர் மனம் அறிவு தெளிவு பெயர்கள்
விந்துபொறி யாவி பிராண னுயிர்சீவன்
சிந்தை மனநெஞ்சு சித்தமுளம் புந்தியாம்
போற்று மறிவுணர்வு ஞானம் புலன்போதந்
தேற்றந் துணிவுலொ தெளிவு
** 2, 3, 4, 5, 2 பெயர்கள்
** இரண்டாவது மக்கட்பெயர்த்தொகுதி முற்றுப்பெற்றது
@3 விலங்கின் பெயர்த்தொகுதி
**66
#1
** சிங்கத்தின் பெயர்
முடங்குளை கோளரி கேசரி சிங்க
மடுந்திறற் சீயம் வயமா மடங்கலே
பஞ்சா னனமாளி கண்டீ ரவமரி
யஞ்சா நகாயுதமு மாம்
** 11 பெயர்கள்
**67
#2
** புலியின் பெயர்
வெருவில் வியாக்கிரந் தீவிசார்த் தூலம்
வரியுழுவை வேங்கை வயமா மிருகாதி
திண்டிறல் வல்லியஞ் சித்திரகா யந்தரக்குப்
புண்டரிகம் புல்லுப் புலி
** 13 பெயர்கள்
**68
#3
** யானையின் பெயர்
தும்பிகயம் யானை கறையடி குஞ்சரந்தோல்
உம்பலிபம் வேழங் கரியத்தி வெம்பகடு
போதகம் வாரணந் தந்தி யுவாக்களிறு
மாதங்க நாகங்கைம் மா
** 19 பெயர்கள்
**69
#4
** பெண்யானை யானைமதம் யானைப்பட்டம்
** யானைக்கொம்பு பெயர்கள்
தம்பே ரமையிரதி சிந்துரஞ்சா மோற்பவை
கம்பமதந் தானங் கடங்கடாங் கும்பஞ்சே
ரோடையாம் பட்ட மொளிர்கிம் புரிமருப்புக்
கோடெயிறு தந்தமாங் கொம்பு
** 4, 3, 1, 4 பெயர்கள்
**70
#5
** குதிரையின் பெயர்
குரகதம் வாசி குதிரை யிவுளி
துரகம் புரவி துரங்கம் பரியரி
கோடகம் பாய்மா சயிந்தவங் கந்தருவ
மாடல் வயமா வயம்
** 14 பெயர்கள்
**71
#6
** பன்றியின் பெயர்
கருமாவே கேழ லெறுழிகோ லஞ்சூ
கரமேனங் கோணி வராகங் குரோடமரி
போத்திரிபூ தாரங் கிருட்டி கிரிகிடி
போர்த்தகு பன்றியின் பேர்
** 15 பெயர்கள்
**72
#7
** குரங்கின் பெயர்
பிலவங்க நாக நிரந்தரங் கீசகம்
வலிமுகஞ் சாகா மிருகம் கொலைகடுவன்
வானர மர்க்கட மந்தி குரங்கரி
கானவன் யூகங் கவி
** 13 பெயர்கள்
**73
#8
** கரடி இரலை பெயர்கள்
வெண்பல்லம் வல்லூகம் வேக வுளியமெலு
திண்பல்லூ கஞ்செங்கண் மாகரடி யெண்கு
கவைநெடுங் கோட்டுக் கலைபுல்வாய் நவ்வி
யிவையா மிரலையின் பேர்
** 7, 3 பெயர்கள்
**74
#9
** மான், செந்நாய், நரி, காட்டுப்பசு பெயர்கள்
அரிணமான் சாரங்க மேணங் குரங்கம்
விருகஞ்செந் நாய்கொக்கு மாகும் நரியிகலன்
கோமாயு சம்புகம் பூரிமா யுக்குரோட்டா
ஆமாவின் பேர்கவய மா
** 4, 2, 5, 1 பெயர்கள்
**75
#10
** கருங்குரங்கு, முசு, கழுதை ஒட்டகம் உடும்பு பெயர்கள்
கரியகுரங் கியூக முசுக்கோலாங் கூலங்
கரமொடுவா லேயங் கழுதை கரப
மிரவணந்தா சேரக மொட்டக மாகு
முரமிகு கோதா வுடும்பு
** 1, 1, 3, 2, 1 பெயர்கள்
**76
#11
** மரை முள்பன்றி பூஞை கவரிமா பெயர்கள்
ஆவிதங் கானக் குதிரை மரையாகுந்
தாவுமுண் மாவெய்யே சல்லிய மேவிய
மீன்கவர் மார்ச்சாலம் வெருகுவிலா ளம்பூஞை
வான்சவரி மாகவரி மா
** 2, 3, 3, 1 பெயர்கள்
**77
#12
** முயல் நாய் பெயர்கள்
தக்க வயமுஞ் சசமு முயல்சுணங்கன்
குக்கனே சாரமே யன்சுனகன் மிக்கசுவா
கோளிரை தேரு மெகினங் கொடுமுடுவல்
ஞாளி ஞமலிபட்டி நாய்
** 2, 10 பெயர்கள்
**78
#13
** ஓந்தி எலி பெருச்சாளி அணில் பெயர்கள்
கோம்பிசர டங்காம ரூபி கொடுமுசலி
பாம்பஞ்சுந் தோகைப் பகையோந்திக் காம்பெயராம்
வேக வெலிகருப்பை மூடிகம் வெவ்விட
ராகு வணில்வெளி லாம்
** 5, 1, 3, 1 பெயர்கள்
**79
#14
** பசு எருது பெயர்
தேனுவும் பெற்றமுங் கோவுஞ் செழும்பசுவு
மானுஞ் சுரபியு மாவாகு மானே
றிடபம் விடையெருது கோபதி புல்லந்
திடமூரி புங்கவஞ் சே
** 6, 9 பெயர்கள்
**80
#15
** எருமை செம்மறியாடு வெள்ளாடு பெயர்கள்
கருமகி டங்கவரி கார்மேதி காரா
னெருமையின் பேராகு மென்ப துருவைமை
யாகு முரப்பிரம் வெள்ளா டயந்தகர்
சாகஞ் சகஞ்சா களம்
** 4, 2, 6 பெயர்கள்
**81
#16
** கருடன் மயில் குயில் பெயர்கள்
ககபதி நாகா சனனே கலுழன்
றிகழ்வைன தேயன் கருடன் சிகியே
மயின்மஞ்ஞை தோகை மயூரங் கலாபி
குயில்களகண் டங்கோ கிலம்
** 4, 5, 2 பெயர்கள்
**82
#17
** வண்டு கிளி பெயர்கள்
வரியளி தேன்மா மதுகரந் தும்பி
யரியறுகால் வண்டு கழுது பிரமரங்
கள்ளுண்சா ரங்க ஞிமிறு சுரும்பாகுங்
கிள்ளைசுகந் தத்தை கிளி
** 13, 3 பெயர்கள்
**83
#18
** அன்னம் புறா பருந்து பெயர்கள்
சிறையன்னஞ் செங்காற் பிணிமுகமஞ் சம்நீ
ருறையெகின மோதிம மாகும் புறாவாந்
திருந்துபா ராவதந் தீதில் கபோதம்
பருந்துசே னங்கங்கம் பாறு
** 4, 2, 3 பெயர்கள்
**84
#19
** சிள்வீடு காடை நீர்ப்பறவை பெயர்கள்
சில்லிகை சில்லை நெடிசிமிலி சிள்வீடு
புல்லிய காடை குறும்பூழே சொல்லிடில்
உன்னங் கிராமமா முற்குரோ சத்தினொடு
கின்னரநீர்ப் பக்கியெனக் கேள்
** 4, 1, 4 பெயர்கள்
**85
#20
** சக்கரவாகம் ஊர்க்குருவி செம்போத்து
** வெண்குருகு பூவை பெயர்கள்
சக்கரவா கங்கோகஞ் சக்கர நேமிப்புட்
டக்கசட கம்புலிங்க மூர்க்குருவி குக்கிலாஞ்
செம்போத்து வெண்குருகு சாரசம் புட்கர
மம்பூவை சாரிகை யாம்
** 3, 2, 1, 2, 1 பெயர்கள்
**86
#21
** கோழி கொக்கு போதா ஆந்தை காக்கை பெயர்கள்
குக்குடம் வாரணங் கோழிசர ணாயுதங்
கொக்குக் குரண்டம் பிதாப்போதா பொற்க
ணிருடிகூன் பிங்கலை கின்னர மாந்தை
கரடங்கா கங்கொடிகாக் கை
** 3, 1, 1, 4, 3 பெயர்கள்
**87
#22
** பாம்பின் பெயர்
வெஞ்சினக் காத்திர வேயம் விடதரங்
கஞ்சுகி காகோ தரமிரும்பை நஞ்சுமிழ்
கூடபதஞ் சக்கிரி கும்பி நசமரி
யாடும் பவனா சனம்
** 10 பெயர்கள்
**88
#23
** பாம்பின் பெயர் (தொடர்ச்சி)
நாகம் புயங்கம் பணிகட் செவி தந்த
சூகமகிமா சுணஞ் சர்ப்பம் போகி
யுரக மராளமே பந்நகம் பாந்த
ளரவு வியாளம்பாம் பாம்
** 15 பெயர்கள்
**89
#24
** பெரும்பாம்பு நஞ்சு பாம்பின்படம் பெயர்கள்
கோலவரி மாசுணம் பாந்தள் பெரும்பாம்பா
மாலங் களங்கரளங் காரியே நீலம்
விடங்கடு வெங்காள நஞ்சின் பெயராம்
படம்பை விரிந்த பணம்
** 2, 8, 2 பெயர்கள்
**90
#25
** இராசநாகம் கீரி அண்டங்காக்கை நிலாமுகி பெயர்கள்
கருது மிராசநா கங்கார் வழலை
திரநகு லங்கீரி தீர்வை மருவிய
காகோல மேயண்டங் காக்கை நிலாமுகி
பாகார் சகுனமெனப் பார்
** 1, 2, 1, 1 பெயர்கள்
**91
#26
** மீன் ஆமை முதலை ஞெண்டு
** அட்டை கறையான் பெயர்கள்
மச்சஞ் சகுலி வகுலி சலசரமீன்
கச்சப மாமை கராமுதலை நச்சுங்
களவன் குளிரஞெண்டு கர்க்கடக மட்டை
செளுகங் கறையான் சிதல்
** 4, 1, 1, 3, 1, 1 பெயர்கள்
** மூன்றாவது விலங்கின்பெயர்த்தொகுதி முற்றுப்பெற்றது
@4 மரப்பெயர்த் தொகுதி
**92
#1
** மரம் படர்கொடி பெயர்கள்
தருவிடபி பாதபம் பூருகஞ் சாகி
துருமமக மந்துரு சால மரமா
மெழிலிலதை வள்ளி பிரததி யேடார்
கொழுமலர் வல்லி கொடி
** 9, 4 பெயர்கள்
**93
#2
** சோலை காடு பெயர்கள்
வண்டமர் சோலை மலர்ப்பொழி லாராமங்
கொண்டன் மலிகாத் தருக்குழாந் தண்டலை
கானங் ககனம் வனமடவி காந்தாரங்
கானக மாரணியங் காடு
** 5, 7 பெயர்கள்
**94
#3
** இலை அரும்பு பெயர்கள்
தலமடை பன்னஞ் சதனம் பலாச
மிலைசதம் பத்திர மென்ப கலிகை
முகிழ்சா லகநனை கோரகை மொட்டு
முகுள மரும்பு முகை
** 7, 8 பெயர்கள்
**95
#4
** கிழங்கு வேர் மரக்கப்பு தளிர் பெயர்கள்
கந்தங் கிழங்குமூ லந்தூர் சடைசிவைவேர்
கொந்தலர்பூங் கொம்பு பணைகவடு முந்திய
பொங்கர் சினைசாகை கப்புமுறி பல்லவ
மங்கிசல யந்தளிர்ப்பே ராம்
** 2, 3, 6, 4 பெயர்கள்
**96
#5
** மலர் பூங்கொத்து குலை பழம் பெயர்கள்
மணமலி பூவீ மலர்போ தலராந்
துணர்மஞ் சரிகொத்துத் தொத்தோ டிணரா
நலஞ்சேர் குலைதாறு வல்லரி யாகும்
பலங்காய் கனியாம் பழம்
** 4, 4, 2, 3 பெயர்கள்
**97
#6
** கதிர் தோல் விதை முளை
** முளைத்தல் குருத்து பெயர்கள்
கதிராங் குரல்செங் கனிமே வியதோல்
செதிளாகுங் காழ்கொட்டை செப்பில் விதையாகும்
காலா முளைபொடித்த லங்குரித்த னாறுதல்
பாலார் குருத்துப் பயிர்
** 1, 1, 2, 1, 3, 1 பெயர்கள்
**98
#7
** வாசனை கள் பெயர்கள்
வெறிகடி வாசம் விரைமணங்கான் கந்தம்
நறைமன்ற லேமுருகு நாற்றம் பொறிவண்டார்
கட்டண்டேன் வேரி பிரச நறாநறவு
மட்டுமக ரந்த மது
** 11, 8 பெயர்கள்
**99
#8
** நொச்சி குளநெல் கோரை களா செந்நெல் கரும்பு பெயர்கள்
வளர்நொச்சி யாஞ்சிந்து வாரநீ வாரங்
குளநெல் லெருவைசாய் கோரை களங்களா
செந்நெல் விரீகியொடு செஞ்சாலி வேழம்பைங்
கன்னல்கழை யிக்குக் கரும்பு
** 1, 1, 2, 1, 2, 4 பெயர்கள்
**100
#9
** எருக்கு ஆத்தி முள்முருக்கு குருக்கத்திக்கொடி
** வேம்பு மகிழ் பாதிரி பெயர்கள்
அருக்க மெருக்காகுந் தாதகியா ராத்தி
முருக்குக் கவிர்கிஞ் சுகமாங் குருக்கத்தி
மாதவி நிம்பமாம் வேம்பு மகிழ்வகுளம்
பாதிரியா கும்பா டலம்
** 1, 2, 2, 1, 1, 1, 1 பெயர்கள்
**101
#10
** அரசு மருது மா பலா சுரபுன்னை மாதுளை பெயர்கள்
அரசு திருமரம் பிப்பலம் போதி
மருத மருச்சுனமா கொக்கு விரையாருஞ்
சூதம் பனசம் பலாசுர புன்னைவழை
மாதுளுங்க மாமா துளை
** 3, 1, 2, 1, 1, 1 பெயர்கள்
**102
#11
** பனை நாவல் கடம்பு கமுகு புன்னை ஆச்சா தேக்கு பெயர்கள்
தடம்பெண்ணை தாலம் பனைசம்பு நாவல்
கடம்பாகு நீபங் கதம்ப நெடுங்கமுகு
பூகமாம் புன்னாகம் புன்னையா வாச்சாவாஞ்
சாகமாந் தேக்காந் தரு
** 2, 1, 2, 1, 1, 1, 1 பெயர்கள்
**103
#12
** தெங்கு வாழை தாழை கொன்றை கோங்கு பெயர்கள்
தாழைதென் னாளிகே ரந்தெங்கு தண்கதலி
வாழை யரம்பை மடிகைதை தாழை
செழுங்கே தகையிதழி தேங்கடுக்கை கொன்றை
கொழுங்கன்னி காரமாங் கோங்கு
** 3, 2, 3, 2, 1 பெயர்கள்
**104
#13
** அகில் அத்தி புன்கு இலவு ஈந்து அலரி பெயர்கள்
அகரு வகிலதவு தும்பர மத்தி
தகுநத்தங் காஞ்சனம் புன்கு நிகரி
லிலவாகுஞ் சான்மலி கர்ச்சூர மீந்தா
மலரி கரவீர மாம்
** 1, 2, 1, 1, 1, 1 பெயர்கள்
**105
#14
** பலாசம் அசோகு குருந்து வெட்பாலை சந்தனம் பெயர்கள்
பிரம தருவாம் பலாசஞ் செயலை
யரிமருவு பிண்டி யசோகு விரிமலர்க்
குந்தங் குருந்தங் குடசமாம் வெட்பாலை
சந்தனமா ரஞ்சந்தஞ் சாந்து
** 1, 2, 1, 1, 3 பெயர்கள்
**106
#15
** கடு நெல்லி தான்றி வில்வம் விளா ஆல் அழிஞ்சில் பெயர்கள்
நல்ல கடுவா மரிதகி யாமலக
நெல்லியாந் தான்றி கலித்துருமம் வில்லுவ
மாலூரங் கூவிளை வெள்ளில் விளாவட
மாலழிஞ்சி லங்கோல மாம்
** 1, 1, 1, 2, 1, 1, 1 பெயர்கள்
**107
#16
** தேவதாரு குரா மரா வஞ்சி ஏலம் பெயர்கள்
சுரதுரு மந்தேவ தாருத் துணர்ப்பூங்
குராமர மாங்கோவி தார மராமரமாஞ்
சாலம்வா னீரந் தளிர்வஞ் சுளம்வஞ்சி
யேலமா மென்பர் துடி
** 1, 1, 1, 2, 1 பெயர்கள்
**108
#17
** இஞ்சி மிளகு திப்பிலி அதிமதுரம்
** இருப்பை காயா பெயர்கள்
காமலி யார்த்திரக மிஞ்சி கறிமரீச
மாமிளகு திப்பிலி மாகதியாந் தேமதுகம்
யட்டி மதுர மதூக மிருப்பையாங்
கட்டரும் பூவைகா யா
** 1, 2, 1, 2, 1, 1 பெயர்கள்
**109
#18
** மல்லிகை சிறுசண்பகம் இருவாட்சி மௌவல்
** வாடாக்குறிஞ்சி அவுரி பெயர்கள்
மல்லிகையாம் பூருண்டி சண்பகம் பித்திகை
யெல்லிணர்ச் சாதி யிருவாட்சி நல்லநங்க
மாலதி மௌவல் சகசரி யாங்குறிஞ்சி
நீலி நிகழவுரி யாம்
** 1, 2, 1, 1. 1, 1 பெயர்கள்
**110
#19
** மூங்கில் பெயர்கள்
கிளைவேணு வேரலமை கீசகம் விண்டு
முளையரிகண் சந்திபணை மூங்கில் கிளைவரைவேய்
தூம்புவெதிர் தட்டையம்பு முந்தூழ் துளையோங்கல்
காம்பு திகிரி கழை
** 23 பெயர்கள்
**111
#20
** வள்ளை சேம்பு வெள்ளாம்பல்
** செங்குவளை கருங்குவளை பெயர்கள்
செழுநாளி கம்வள்ளை சேம்பு சகுடங்
கொழுமல ராம்பல் குமுதங் கழுநீராஞ்
செங்குவளை யுற்பல மிந்தீ வரநீலம்
பைங்குவளை நீலோற் பலம்
**112
#21
** நந்தியாவர்த்தம் கொவ்வை செவ்வரத்தை பெயர்கள்
வலம்புரி நந்தியா வர்த்தமே யாகும்
குலம்போலி யாதொண்டை கொவ்வை நலஞ்சேரும்
விண்டபூஞ் செவ்வரத்தை மேவிய மந்தாரங்
கொண்டபே ராகுங் குறி
** 1, 1, 1 பெயர்கள்
**113
#22
** தாமரை பெயர்கள்
முண்டக மம்புய மம்போ ருகமுளரி
வண்டா மரைவனசம் வாரிசம் புண்டரிகம்
பங்கயங் கஞ்சம் பதும மரவிந்த
மங்கமலங் கோகனக மாம்
** 13 பெயர்கள்
** நாலாவது மரப்பெயர்த்தொகுதி முற்றுப்பெற்றது
@5 இடப்பெயர்த்தொகுதி
**114
#1
** இடம் பெயர்கள்
கடைதலை கான்மருங்கு கண்மா டுழைமேல்
புடைவலந் தாமம் புறங்கீ ழிடைவயின்வாய்
பின்னய லுள்ளில் பதிதானஞ் சார்வுளி
முன்னக முற்று மிடம்
** 26 பெயர்கள்
**115
#2
** பூமி பெயர்கள்
அவனி பொழில்பா ரகலிடம் வையம்
புவனி புவிபுடவி பூமி குவலய
ஞாலந் தரைதா ரிணிகா சினிபடி
தாலந் தரணி தலம்
** 17 பெயர்கள்
**116
#3
** பூமி பெயர்கள் (தொடர்ச்சி)
வசுந்தரை பூவுலகு மண்குநில நேமி
வசுமதி சாந்தை வசுதை யசலை
யுகமே நகந்தறை கோவே விபுலை
சகமே தினிதாத் திரி
** 19 பெயர்கள்
**117
#4
** மலை பெயர்கள்
வரைதிகிரி யோங்கல் குவடு மலைபூ
தரமசலங் குன்று சயிலங் கிரிகல்
சிலம்பு பொருப்புச் சிகரி யடுக்கல்
விலங்கல் சிலைபிறங்கல் வெற்பு
** 18 பெயர்கள்
**118
#5
** மலை பெயர்கள் (தொடர்ச்சி)
இரவி பருப்பதம் விண்டு நகமா
திரமோ திமமிறும்பு நாகந் தராதரங்
குத்திரம் பொற்றை சிலோச்சயங் கோத்திர
மத்திரி வேதண்ட மாம்
** 15 பெயர்கள்
**119
#6
** கயிலாயம் மேரு பெயர்கள்
சயிலாதி வெள்ளியங் குன்றந்தண் சோலைக்
கயிலாயங் கண்ணுதலோன் வெற்பு துயிலாதா
ராலயம் பொன்னசல மேரு வமரர்க்காய்
வேலைவிட முண்டான்கை வில்
** 3, 3 பெயர்கள்
**120
#7
** இமயம் பொதியமலை பெயர்கள்
இமவான் மலையரச னெம்மிறைவன் பாகத்
துமையாளைப் பெற்ற வுரவோன் சிமயப்
பொதிய மலைமலயந் தென்மலைபூ மிக்கு
மதிதமிழை யீந்தான் மலை
** 3, 3 பெயர்கள்
**121
#8
** சமுத்திரம் பெயர்கள்
நீர்புணரி நேமி பரவைவே லாவலய
மார்கலி யத்தி திரைநரலை வாரிதி
பாராவா ரம்பௌவம் வேலைமுந் நீருவரி
காராழி வாரி கடல்
** 18 பெயர்கள்
**122
#9
** சமுத்திரம் பெயர்கள் (தொடர்ச்சி)
சலராசி தோயநிதி யம்பர முப்புச்
சலநிதி யேயுததி சிந்து சலதி
யளப்பரும் வெள்ள நதிபதி வீரை
யளக்கர் சமுத்திர மாம்
** 12 பெயர்கள்
**123
#10
** கரை கடல்திரை நீர்க்குமிழி நீர்நுரை பெயர்கள்
கூலம்பா ரந்தீரங் கோடு தடங்கரைகல்
லோலந் தரங்க மலைதிரை வேலையிற்
றங்குங் குமிழியே புற்புதமா கும்பேனம்
பொங்குநுரை யென்றே புகல்
** 5, 3, 1, 1 பெயர்கள்
**124
#11
** ஐவகை நிலம் மேடு பள்ளம் பெயர்கள்
மொய்குறிஞ்சி வன்பாலை முல்லை செழுமருத
நெய்தலிவை யைந்து நிலனாகு மைதீர்
நிவப்பு மிசைமீது மேடுயர மாகு
மவல்பயம்பு பள்ளந்தாழ் வாம்
** 5, 4, 3 பெயர்கள்
**125
#12
** கிணறு, வயல் வரம்பு வரம்பின்பக்கம்
** களர்நிலம் பெயர்கள்
செழுநீர்க் கிணறாகுங் கூவல் செறுச்செய்
கழனி பழனம் வயலாம் பழுதில்
வரம்பா மரீசி வரம்பருகாங் கங்கு
கரம்புவ ராகுங் களர்
** 1, 4, 1, 1, 2 பெயர்கள்
**126
#13
** சுடுகாடு மட்கலம்சுடுபூமி நிலப்பிளப்பு பெயர்கள்
ஈம மயானஞ் சுடலை சுடுகாடு
தூமமிகு சுள்ளையாந் தொல்குயவர் தாமட்
கலஞ்சுடு பூமி கமரும் விடரு
நிலம்பிளந்த தென்றே நிகழ்த்து
** 3, 1, 2 பெயர்கள்
**127
#14
** துர்க்கம் கற்கள் நெருங்கும் இடம்
** வெளியிடம் பக்கம் நடு பெயர்கள்
துர்க்கமருப் பஞ்சென்று துன்னற் கரியவிடங்
கற்க ணெருங்கு மிடமுரம்பா நிற்குமொரு
வெள்ளிடை யாகும் வெளிமருங்கு பக்கமா
நள்ளிடை நாப்ப ணடு
** 2, 1, 1, 1, 3 பெயர்கள்
**128
#15
** நாகலோகம் நரகம் பெயர்கள்
வடவா முகந்தாழ் பிலங்கீ ழுலோகம்
படநாக லோகம்பா தாளங் கொடிய
விருளந்த காரந் துவாந்தந் திமிர
நரகு நிரையநர கம்
** 4, 6 பெயர்கள்
**129
#16
** வழி பெயர்கள்
அதர்நெறி யத்தஞ் செலவொழுக் காறு
வதியிகுவை மார்க்கம் வகுந்து பதவை
சரிகடறு தாரை யியவை நடவை
வரிசுரம் வட்டை வழி
** 19 பெயர்கள்
**130
#17
** தெரு கவர்வழி சதுக்கம் கடைவீதி பெயர்கள்
தெருவு மறுகு திகழ்வீதி ஞெள்ளல்
வரைவேய் கவர்த்த வழியாந் திரிகவலை
பூவணி சந்து சிருங்கா டகஞ்சதுக்க
மாவணமங் காடிகடை யாம்
** 3, 2, 3, 1 பெயர்கள்
**131
#18
** மதில் கோபுரவாயில் கதவு நகர் பெயர்கள்
மதிலெயி லிஞ்சி யரண்புரிசை யாரல்
புதவுயர் கோபுர வாயில் கதவாகும்
வாரி கபாட நகர நகரிபுர
மூர்நக ராகும் புரி
** 5, 1, 2, 5 பெயர்கள்
**132
#19
** அம்பலம் நிலாமுற்றம் குதிரைப்பந்தி
** மடைப்பள்ளி யானைக்கூடம் பெயர்கள்
மருவம்பலம் பொதுவில் மன்றநிலா முற்ற
மரமிய மந்திர மாகும் புரவியின்
பந்திமடைப் பள்ளி யடுக்களை சேவகஞ்
சிந்துரத்தின் கூடமெனச் செப்பு
** 2, 1, 1, 1, 1 பெயர்கள்
**133
#20
** வீடு திண்ணை முற்றம் பெயர்கள்
நகர்மா ளிகைகுல மாடம் பவன
மகமனை வீடுபுக்கி லில்லம் புகலலாந்
தென்றலார் வேதிகை திண்ணையா மங்கணமு
முன்றிலு முற்றமே யாம்
** 9, 1, 2 பெயர்கள்
**134
#21
** தடாகம் பெயர்கள்
இலஞ்சி கயங்கேணி கோட்டக மேரி
மலங்கன் மடுவோடை வாவி சலந்தரம்
வட்டந் தடாக நளினி மடுப்பொய்கை
குட்டங் கிடங்கு குளம்
** 17 பெயர்கள்
**135
#22
** போர்க்களம் பெயர்களம்
அடுகள மிக்க வமர்க்களம் வெய்ய
படுகளஞ் செங்களம் பற்றார் முடுகிய
போர்க்கள மாகவ பூமி புலால்கவர்புள்
ளார்க்கும் பறந்தலை யாம்
** 6 பெயர்கள்
** ஐந்தாவது இடப்பெயர்த்தொகுதி முற்றுப்பெற்றது
@6 பலபொருட்பெயர்த்தொகுதி
**136
#1
** பொன் பெயர்கள்
மாசை யரிபீத மாடுகா ணம்பொலந்
தேசிகமீ கையா டகஞ்சொன்னம் பேசு
நிதியருத்தம் வித்த நிதானம் வெறுக்கை
பொதிதன மிக்க பொருள்
** 17 பெயர்கள்
**137
#2
** பொன் பெயர்கள் (தொடர்ச்சி)
சாமீ கரஞ்சாத ரூபந் தமனிய
மாமாடை மாழைசாம் பூநத மேமங்
கனக மிரணியங் காஞ்சன மீழம்
புனைபூரி சந்திரம் பொன்
** 13 பெயர்கள்
**138
#3
** வெள்ளி செம்பு பித்தளை வெண்கலம் பெயர்கள்
தார மிரசதம் வெள்ளி களதவுதந்
தேரி னுதும்பரந் தாமிரம் பேர்செம்பா
மாரகூ டம்மிரதி பித்தளைமா யாபுரி
யாரும்வெண் கலங்கஞ்ச மாம்
** 3, 2, 3, 1 பெயர்கள்
**139
#4
** இரும்பு காரீயம் ஈயம் புதையல் செல்வம் பெயர்கள்
கருந்தா தயமிரும்பு காரீய நாகந்
திருந்துவங் கஞ்சீரு ளீயம் பெருந்தரையிற்
புல்லியநிக் கேபம் புதையலா கும்பூதி
செல்வம் விபவந் திரு
** 2, 1,2,1,3 பெயர்கள்
**140
#5
** சங்கு முத்து பவளம் பெயர்கள்
வலம்புரி கோடு வளைகம்பு நத்துச்
சலஞ்சலஞ் சங்கு பணில மிலங்கிய
நித்திலமுத் தாரந் தரளந் துகிர்துப்பு
வித்துருமம் விற்பவள மாம்
** 7, 3, 3 பெயர்கள்
**141
#6
** நவமணிகள் பெயர்கள்
மாணிக்க முத்து மரகத நீலமணி
பேணும் வயிடூரி யம்வைரம் பூணும்
பவளங் கோமே தகம்புருட ராகம்
நவமணியி னாமங்க ளாம்
**142
#7
** சோறு பெயர்கள்
உன்னயினி சொன்றி யுணாவசனம் போசன
நன்னருண வோதனம் போனக மன்னம்
மடைநிமிர் தல்மூரல் புழுக்கல் பதங்கூ
ழடிசில் சருப் புகா சோறு
** 18 பெயர்கள்
** ஆறாவது பலபொருட்பெயர்த்தொகுதி முற்றுப்பெற்றது
@7 செயற்கைவடிவின் பெயர்த்தொகுதி
**143
#1
** வில் அம்பு பெயர்கள்
கார்முகங்கோ தண்டம் தனுவிற் கொடுமரம்
வார்சிலை சாபஞ் சராசனங் கூர்வாளி
வெம்பகழி கோப்பல்லம் பாணங் ககங்காண்ட
மம்புகணை கோல்சரமே யாம்
** 7, 10 பெயர்கள்
**144
#2
** வில் அம்பு பெயர்கள் (தொடர்ச்சி)
சித்திரப் புங்கஞ் சிலீமுக மேகங்க
பத்திர மார்க்கணந் தோணியா மத்திரம்
வெய்ய விசிகமே யாசுகஞ் சாயக
மெய்யுங் கதிரமென லாம்
** 11 பெயர்கள்
**145
#3
** சூலம் மழு சக்கரம் வச்சிரம் வாள் பெயர்கள்
முக்குடுமி வேல்சூல மாம்பரசு மொய்கணிச்சி
மிக்க மழுவாழி நேமிவளை சக்கரமாம்
வெனஙகுலிசம் போரசனி வச்சிர நாந்தகம்வா
ளங்கரவா ளங்கட்க மாம்
** 1, 2, 3, 2, 3 பெயர்கள்
**146
#4
** வேலாயுதம் தண்டு ஈர்வாள் கைவேல் பெயர்கள்
ஓங்கயில் சத்தி யுடம்பிடிவே லெஃகந்
தாங்கு மொருகதை தண்டீர்வா ளோங்கு
கரபத் திரம்வே தினங்கப் பணந்தோ
மரமேகை வேல்விகற்ப மாம்
** 4, 1, 4, 5 பெயர்கள்
**147
#5
** தாழ் பரண் ஊஞ்சல் உரல் கலப்பை பெயர்கள்
கதவிற் செறிக்குந்தாழ் சீப்பாகுங் காவ
லிதணங் கழுதுபர ணென்ப ருதைந்தாடு
மூஞ்சலா மூச லுலூகல மென்பதுரல்
நாஞ்சி லலங்கலப்பை நாட்டு
** 1, 3, 1, 1, 2 பெயர்கள்
**148
#6
** சேலை பெயர்கள்
மடிதுகில் கோசிகங் காழகஞ் சேலை
புடைவைகலிங் கந்தானை தூசு படமாடை
புட்ட மறுவை புனைசாடி யம்பரம்
பட்டுடை கூறை படாம்
** 19 பெயர்கள்
**149
#7
** மாலை பெயர்கள்
தொங்கல் பிணைய றொடைவண்டு சூழணிய
லங்கண்ணி செந்தேன் மலியலங்கல் பைங்கோதை
தேமெ னொலிய றெரிய லிலம்பகம்பூந்
தாம மொளிர்மாலை தார்
** 12 பெயர்கள்
**150
#8
** தோளணி மோதிரம் மேகலாபரணம் மணிவடம் பெயர்கள்
கேயூர மங்கதந் தோளணி யாமென்பர்
தூய மணியாழி மோதிரஞ் சேயொளி
சேருங் கலாபஞ் செறிமே கலைகாஞ்சி
யார மணிவடங்கா ழாம்
** 2, 1, 2, 2 பெயர்கள்
**151
#9
** ஆபரணம் கிரீடம் கங்கணம் குண்டலம் பெயர்கள்
அணியிழை பூண்கல நாபரண மாகு
மணிமகுட மௌலி கிரீட மணிமுடியாங்
கங்கண மாகுங் கடகந் தொடிவளை
யங்குழை குண்டலந்தோ டாம்
** 4, 3, 3, 2 பெயர்கள்
**152
#10
** காற்சிலம்பு பரியகம் சதங்கை பாடகம் பெயர்கள்
பரிபுர நூபுரம் பைம்பொன் ஞெகிழி
யரிபெய் சிலம்பின் பெயராம் பரியகம்
பாதசா லம்புலம்பு கிங்கிணி யாஞ்சதங்கை
பாதகட கம்பா டகம்
** 3, 1, 1, 1 பெயர்கள்
**153
#11
** உறி வேள்வித்தூண் குறியதறி தூண்
** யானைத்தூண் தனக்கச்சு பெயர்கள்
உறிசிமிலி சிக்கமறை யோதுவோர் வேள்வித்
தறியூபம் போதிகை தானே குறியதறி
தம்ப மதலைதூண் யானைத் தறிவெளில்
வம்பு தனக்கச்சு வார்
** 2, 1, 1, 2, 1, 2 பெயர்கள்
** செயற்கைவடிவின் பெயர்த்தொகுதி முற்றுப்பெற்றது
@8 பண்புப் பெயர்த்தொகுதி
**154
#1
** வெளுப்பு பெயர்கள்
பாண்டுரங் கௌரஞ் சிதஞ்சுவே தந்தவளம்
பாண்டரம் பால்வா லருச்சுனம் பாண்டு
சுசியவ தாதஞ் சுதைசுப் பிரமே
விசதம் விளர்கம் வெளுப்பு
** 17 பெயர்கள்
**155
#2
** கருமை சிவப்பு பெயர்கள்
கருமை கறையசிதங் காழகங் காள
மிருணீலஞ் சாமளஞ் சாம மருணமொளி
கூடரத்தஞ் சோண முலோகிதமஞ் சிட்டம்
பாடலம் பூவல் சிவப்பு
** 8, 7 பெயர்கள்
**156
#3
** பச்சை பொன்னிறம் புகர் கபிலம் பெயர்கள்
அரித்துப் பலாச மரிதமரி பச்சை
யரித்திரா பம்பீதம் பொன்மை தரித்த
புகர்நிறம் புன்மையாம் போற்றுங் குராலாம்
நிகரில் கபில நிறம்
** 4, 2, 1, 1 பெயர்கள்
**157
#4
** ஒளிர்தல் ஒளி பெயர்கள்
இலங்குதன் மின்ன லொளிர்த னிலவ
றுலங்கல் விளங்க றுளங்க னலங்கொள்
படரொளி தேசு கிளர்கதிரெல் வில்வாள்
சுடர்விரியல் சோதியெனச் சொல்
** 6, 9 பெயர்கள்
**158
#5
** அன்பு இளமை பெயர்கள்
ஈரமு நேயமுங் காதலுங் காமமு
மார்வமு மிட்டமு மன்பிற்குப் பேராங்
குழவுந் தருணமுங் கோமளமு நாகு
மெழிலு மழவுமிள மை
** 6, 6 பெயர்கள்
**159
#6
** அழகு பெயர்கள்
ஆரிய மனோகரங் காந்த மணிசோபங்
காரிகை பூவனப்புச் சுந்தர மேரெழில்
வாமமியா ணர்மாமை வாகு தகைகவினி
ராமமபி ராமமழ காம்
** 19 பெயர்கள்
**160
#7
** இன்பம் ஆனந்தம் நல்லொழுக்கம் பொருந்தல் பெயர்கள்
சுகமேமந் தொய்ய னகைமகிழ்ச்சி யின்ப
மகமலர்ச்சி யானந்த மாகுந் தகுஞ்சரிதை
நல்லொழுக்கஞ் சாரித் திரஞ்சீல மாஞ்சிவண
லொல்லல்கூ டல்பொருந்த லாம்
** 5, 1, 3, 3 பெயர்கள்
**161
#8
** சத்திசெயல் எப்போழ்தும் இனி இப்போழ்து பெயர்கள்
அனுசிதஞ் சத்தி யவிரத மென்று
மனவரதஞ் சந்தத நித்த மநாரத
மெப்போழ்து மாகுமினி மற்றுமே லின்றின்னே
யிப்போழ் தெனவியம்ப லாம்
** 1, 6, 2, 2 பெயர்கள்
**162
#9
** துன்பம் பெயர்கள்
கேத நடுக்கங் கிலேசந்தா பங்கவலை
வாதை யரந்தை வயாமம்மர் வேதனை
வன்படர் பீழை யிடுக்க ணிடரிடும்பை
துன்பமஞர் துக்கந் துயர்
** 18 பெயர்கள்
**163
#10
** அகலம் உயரம் நீளம் பாரம் பெயர்கள்
மேய விசாலம் விரிவு வியல்விபுல
மாய்வு நியக்குரோத மாமகல மீயுயர்த
னேர்மை யொழுக னெடுமை நெடினீளஞ்
சீர்மைகனம் பாரமெனச் செப்பு
** 6, 1, 4, 2 பெயர்கள்
**164
#11
** களிப்பு சுகம் துக்கம் எல்லாம் பெயர்கள்
மதமபிமா னங்களிப்பு மத்தனஞ செருக்கா
மிதஞ்சுக மாமகிதந் துக்கஞ் சிதைவில்
சகல நிகில முழுது மகண்டம்
அகிலமெல் லாமுற்று மாம்
** 4, 1, 1, 6 பெயர்கள்
**165
#12
** நடுக்கம் சஞ்சலம் பெயர்கள்
அதிர்ப்பு நடுக்கங் குலைதல் பனிப்பு
விதிர்ப்புத் தளம்ப லழுங்கல் பொதிர்ப்புக்
கலங்கல்கம் பித்தல் கசடு தரளஞ்
சலங்கம் பிதஞ்சஞ் சலம்
** 9, 4 பெயர்கள்
**166
#13
** உவமை பெயர்கள்
இணைதல் பொருவல் கடுத்த னிகர்த்தல்
துணைகேழ் சமமொத்த றூக்கோ டணையனிபம்
மான லுறழ்தலே யன்ன படியுவமைக்
கான பெயரென்ன லாம்
** 15 பெயர்கள்
**167
#14
** கூட்டம் பெயர்கள்
சவைதொகுதி சங்கங் கணஞ்சம வாய
மவைசமு தாயங் கதம்ப நிவகமே
கோட்டிநிகா யம்பூகம் புஞ்சஞ் சயஞ்சமூகங்
கூட்டந் திரள்குழு வாம்
** 17 பெயர்கள்
**168
#15
** வலி வளைவு நினைத்தல் இகழ்ச்சி பெயர்கள்
உரந்துப் பெறுழ்மிடன் மைந்துவலி யம்வக்
கிரங்குடிலம் வாங்கல்கூன் கோடல் குரங்குத
லுள்ளுதல் சிந்தித்த லுன்ன னினைத்தலா
மெள்ள னகையிகழ்ச்சி யாம்
** 5, 6, 3, 2 பெயர்கள்
**169
#16
** தனி மறைவு ஆசை பெயர்கள்
நிசனந் தனியே நிர்ச்சனமே காந்த
நிசனகம் வெற்றிட நீங்கல் வசனமிது
மாசின் மறைவாகுங் காம நசைவாஞ்சை
யாசைநச் சிச்சை யவா
** 5, 1, 6 பெயர்கள்
**170
#17
** விகற்பம் சந்தேகம் புதுமை பெயர்கள்
ஊகம் விகற்பம் விகடம் பிராந்தி சந்
தேகமை யஞ்சங்கை விப்பிரம மாகு
நவமு நவீனமு நூதனமும் வம்பு
மவிநவ மும்புதுமை யாம்
** 3, 3, 5 பெயர்கள்
**171
#18
** முதல் முடிவு அன்பு அச்சம் பெயர்கள்
முன்பூர்வ மாதி முதலக் கிரந்தலையாம்
பின்பபர மந்தங் கடைமுடிவா மன்பு
தயவா மருள்கருணை யீர மிரக்கம்
பயானக மச்சம் பயம்
** 5, 4, 5, 2 பெயர்கள்
**172
#19
** நிறைதல் குறைதல் புளகம் கூம்புதல் நாண் பெயர்கள்
நிறைதல் கமம்பூ ரணமலித லெஞ்சல்
குறைதலீ னஞ்சிங்கல் குன்றல் குறையாங்
குமிழ்ப்புப் புளகமாங் கூம்புதல் சாம்பல்
சமழ்ப்புநாண் மானமிலச் சை
** 3, 5, 1, 1, 3 பெயர்கள்
**173
#20
** பெருமை பொலிவு சிறுமை பெயர்கள்
பெருமை தடமால் கயநளி பீடு
குருமலிவு மல்லல் பொலிவு மருவுரு
வாகுஞ் சிறுமை யிலேசஞ் தனுவிலகு
தோகமணு வற்பந் துடி
** 6, 2, 7 பெயர்கள்
**174
#21
** பழுது பெயர்கள்
மாசு தவறு வடுக்களங்கந் தீங்குமறு
காசுநவை கோது கசடுபழி யாசுதோஞ்
சீரில் செயிர்போக்குக் குற்ற மரிலழுக்குத்
தேரிற் புகர்பழுதாச் செப்பு
** 19 பெயர்கள்
**175
#22
** வஞ்சகம் பழமை பெயர்கள்
வஞ்சகங் கைதவங் கூடங்குய் யங்கபடம்
வஞ்சனை சாட்டியம் மாயையே எஞ்சாத
தொன்மை புராணம் புராதனந் தொன்றுபுதி
தன்மைபூரு வம்பழமை யாம்
** 8, 6 பெயர்கள்
**176
#23
** வெற்றி தோற்றல் வதை கோபம் பெயர்கள்
போற்றுஞ் சயம்விசயம் வென்றியடல் வெற்றி
யாற்றல் கெடறொலைத லஞ்சுதலாந் தோற்றலடல்
கோறல் வதைசெகுத்தல் கோபங் கதங்கடுத்தல்
சீறலே சீற்றஞ் சினம்
** 4, 4, 3, 5 பெயர்கள்
** பண்புப்பெயர்த்தொகுதி முற்றுப்பெற்றது
@9 செயல்பற்றிய பெயர்த்தொகுதி
**177
#1
** செய்தொழில் செய்தல் படைத்தல் பெயர்கள்
செயல்விதிகன் மங்கரு மஞ்செய் தொழிலே
யயர்தல் வனைதலே யாற்றல் குயிறலாம்
சிட்டித்தன் மற்றுஞ் சிருட்டித்த லுண்டாக்க
லொட்டல் படைத்தலா கும்
** 3, 4, 4 பெயர்கள்
**178
#2
** வணங்கல் தழுவல் பெயர்கள்
வந்தனை காணல் வணங்கல் பணிதலே
தந்தலை தாழ்தல் சலாஞ்செய்தன் முந்தித்
தொழுதலே தண்டன் றொடர்ந்து முயங்கல்
தழுவலே விள்ளலெனச் சாற்று
** 7, 2 பெயர்கள்
**179
#3
** கலியாணம் கிரீடை பெயர்கள்
வதுவை மன்றல்கைப் பற்றன்மா மணங்க லியாணம்
விதியுளி வேட்டல் விவாகம் புதிய
தொடலை விலாசனை வண்டல் கிரீடை
கெடவரல் கேளிக்கை யாம்
** 7, 5 பெயர்கள்
**180
#4
** புசித்தல் மிக்கபொருள் எச்சில் பெயர்கள்
அசன நுகர்த லயிற லருந்தல்
புசித்த லுணறுய்த்தன் மாந்தன்ல் மிசைதலா
மிச்சின் மிகைசேட மிக்கபொரு ளாகுமென்ப
ரெச்சிலுச் சிட்டமென லாம்
** 8, 3, 1 பெயர்கள்
**181
#5
** நடத்தல் பள்ளி நித்திரை பெயர்கள்
திரித லியங்கல் செலலேகல் போதல்
வருதல் சரித்த னடத்தற் குரியபெயர்
பஞ்சியணை பாய்பள்ளி கண்படை நித்திரை
துஞ்ச லுறக்கந் துயில்
** 7, 2, 4 பெயர்கள்
**182
#6
** உடைதல் தேடல் சுமத்தல் பெயர்கள்
ஓட லிரிதல் கெடுத லுடைதலா
நாடலு நேடலுந் தேர்தலுந் தேடல்
பரித்தல் பொறுத்தல் சுமத்த லெடுத்த
றரித்த லிவைதாங் குதல்
** 3, 3, 5 பெயர்கள்
**183
#7
** ஒடித்தல் படித்தல் பக்கபாதம் மதர்த்தல் குரூரம் பெயர்கள்
ஒடித்த லிறுத்த லொசித்தன் முறித்தல்
படித்தலோ தல்கற்ற லாகும் பிடித்ததோர்
வாரமோ ரம்பக் கபாத மதமதர்த்தல்
கோரஞ்சண் டங்குரூ ரம்
** 3, 2, 2 1, 2 பெயர்கள்
**184
#8
** தவிர்தல் கட்டுதல் அழுந்துதல் உராய்ப்போதல் பெயர்கள்
தணத்தலாந் தீர்த றவிர்தல்பந் தித்தல்
பிணித்தலாங் கட்டுத லார்த்தல் பிணைத்த
லரங்க லழுங்க லழுந்துத லாகும்
உரிஞ்ச லுராய்ப்போத லாம்
** 2, 4, 2, 1 பெயர்கள்
**185
#9
** வெட்டல் அரிதல் சுடல் பெயர்கள்
காதுதல்கண் டித்த லெறித றுணித்தல்
பேதித்த றுண்டித் திடல்காய்தல் சேதித்தல்
வெட்ட றுமித்த லரித லறுத்திடல்
சுட்ட லெரித்தல் சுடல்
** 9, 1, 2 பெயர்கள்
**186
#10
** வறுமை கொடுத்தல் முயற்சி பெயர்கள்
இன்மைமிடி யல்க லிலம்பா டிவைவறுமை
புன்மையிலா வண்மை புரவுகொடை நன்கவிகை
வேளாண்மை யீதல் வழங்கல் கொடுத்தலே
தாளாண்மை யாமுயற்சி தாள்
** 4, 7, 2 பெயர்கள்
**187
#11
** கிட்டுதல் தன்மை பெயர்கள்
கிட்டுதல் சேர்தல் பொருந்துதல் கூடுத
லொட்டுத லொன்ற லணைதலாங் கட்டு
மரபு முறையுழுவல் மாலைபெற்றி தன்மை
பரிசு கிழமைவிதி பால்
** 6, 9 பெயர்கள்
**188
#12
** நெருங்கல் பெயர்கள்
துதைத னிபிட நிரந்தரந் துன்றல்
பொதுளல் விரளமே துன்ன லதிகம்
மிடைதல் செறிதலே மிண்டுதல் பம்ப
லடர்தல் நெருங்குத லாம்
** 12 பெயர்கள்
**189
#13
** விழா வேண்டல் உரிமை நிழல்
** பெண்கள் விளையாட்டு பெயர்கள்
விழவாஞ்சா றுஞ்சேறும் வேண்டல் விருப்பாங்
கிழமை யுரிமை தலைமை நிழல்சாயை
பண்ணை கெடவர லோரைபொய் தல்லிவை
வெண்ணகை யார்விளையாட் டாம்
** 3, 1, 2, 1, 4 பெயர்கள்
**190
#14
** போர் பெயர்கள்
அமர்ஞாட்பு நேர்மலைத லாகவம் பூசல்
சமர மெதிர்தல் சமீகஞ் சமரே
செருவெஞ் சமஞ்சங் கிராமஞ் சினப்போ
ரிரணங் கலக மிகல்
** 15 பெயர்கள்
**191
#15
** சீக்கிரம் பிரிவு பெயர்கள்
கடுகல் விரைவு கதழ்வு துனைவு
சடிதி துரிதங் கவனம் முடுகலே
சீக்கிர மாசு கடுப்புத் தணப்புவிட
னீக்கம் பிரிவகற னீப்பு
** 10, 5 பெயர்கள்
** செயல்பற்றிய பெயர்த்தொகுதி முற்றுப்பெற்றது
@10 ஒலிபற்றிய பெயர்த்தொகுதி
**192
#1
** சொல் சொல்லுதல் பெயர்கள்
கிளவி மொழிபேச்சு வாசகஞ்சொல் மாற்ற
மளவி லுரைவாணி வார்த்தை விளம்பல்
புகற னுவல லறைத லிசைத்தல்
பகர்தலிவை பன்னுதலே யாம்
** 8, 6 பெயர்கள்
**193
#2
** தொழுதல் கூத்து இசைப்பாடல் பெயர்கள்
வழுத்தல் புகழ்ச்சிதுதி வாழ்த்தேத்தல் போற்றல்
பழிச்சல் பரசல் பரவல் தொழற்பெயரா
மாட னிருத்த நடநட்டங் கூத்திசைப்
பாடல்கீ தங்கானம் பண்
** 9, 4, 3 பெயர்கள்
**194
#3
** மெய் பொய் தருமம் பாவம் பெயர்கள்
மெய்யுண்மை சத்தியம் வாய்மை திடஞ்சரதம்
பொய்சடங் கூடமிச்சை பொக்கமாஞ் செய்தரும
மேவறம் புண்ணிய நல்வினை தீவினை
பாவ மறம்பாத கம்
** 5, 4, 3, 3 பெயர்கள்
**195
#4
** மழலை மென்சொல் பழிச்சொல் பெயர்கள்
மழலை மிழற்றல் வருங்குதலை கொஞ்சன்
மிழலை நிரம்பாத மென்சொல் பழிமொழியே
அம்ப லபவாத மங்கதச்சொ லாகுமே
வெம்புசிறு சொற்றீச்சொற் றூறு
** 5, 6 பெயர்கள்
**196
#5
** குறளை மறைச்சொல் பெயர்கள்
குஞ்சங் குறளை கொடுவாயே குண்டியம்
விஞ்சு பிசுநம் விரிதொடுப்புத் துஞ்சுபெயர்
ஆசி லிடக்க ரடக்கலுடன் கூகனம்
பேசின் மறைச்சொற் பெயர்
** 5, 2 பெயர்கள்
**197
#6
** கொண்டாடல் பெருஞ்சொல் நயச்சொல்
** பயனில்சொல் பெயர்கள்
கொண்டாடன் மெச்சல் குலாவலே பாராட்டுப்
பண்பார் பெருஞ்சொற் பலரறிசொல் தண்டா
நயச்சொ னளினச்சொ னாடு மநர்த்தம்
பயனின் மொழியாம் பகர்
** 3, 1, 1, 1 பெயர்கள்
**198
#7
** கூறியதுகூறல் நகைச்சொல் விடாதுபேசல் பெயர்கள்
கூறியது கூறல் குறிக்கிற் புனருத்தி
யேறு நகைச்சொ லியலசதி ஈறில்லா
மிக்குச் சிரித்து விளம்பல் விடாதுரைத்தல்
கத்தல் பிதற்றலாக் காண்
** 1, 2, 1 பெயர்கள்
**199
#8
** தேவர் இழிசனர் உயர்ந்தோர் மொழி
** ஆரியத்திரிபு மொழி, பொதுமொழி திசைச்சொல் பெயர்கள்
சங்கதந் தேவர்சொல் சாலார்க் கவப்பிரஞ்சந்
துங்கர் பிராகிருதஞ் சூழுவார் இங்கிதிற்சேர்
தற்பவ மாரியந் தற்சமந் தான்பொது
விற்றே சிகந்திசைச்சொல் வேண்டு
** 1, 1, 1, 1, 1, 1 பெயர்கள்
**200
#9
** வினாவல் விடை வினாவிடை உபசாரம் பெயர்கள்
வினாவல் கடாவல் விடையுத் தரமே
வினாவிடை கூட்டி விளம்ப றனையுரைப்பின்
சல்லாபஞ் சொன்முகமன் சம்மான மின்னய
மெல்லா முபசார மேல்
** 1, 1, 1, 3 பெயர்கள்
**201
#10
** நூல் மயக்கம் தூயதன்மை அலரி பழி பெயர்கள்
நூலாக மங்கலை தந்திர நுண்பனுவல்
மாலாகு மையன் மருண்மயக்கம் வாலாமை
சூதகந் தூயதன்மை சொல்லுமலர் கவ்வையம்பல்
பாதகம் பாவம் பழி
** 4, 3, 2, 2, 2 பெயர்கள்
**202
#11
** ஓசை பெயர்கள்
சிலம்பலிசை நாதங் கம்பலை சும்மை
யலம்பலர வந்துழனி யார்ப்புப் புலம்பல்
கலித்த லிரங்கல் கரங்க றுவைத்த
லொலித்த லிரட்டோசை யாம்
** 10, 5 பெயர்கள்
**203
#12
** பேரொலி பெயர்கள்
திமிலந்து வைத்த றெழித்த லதிர்ச்சி
குமுத முரற்றல் குமுற றமரங்
கலகங் குமிலம் களகளம் பூசல்
வலுபே ரொலிக்காம் வழக்கு
** 12 பெயர்கள்
**204
#13
** அநுகரண ஓசை பெயர்கள்
அம்மென லொல்லென லார்ந்திட் டிழுமெனல்
கொம்மெனல் கல்லெனல் கோவென லிம்மெனல்
வல்லெனல் பொள்ளெனல் வாய்ந்தவிவை யாயுங்காற்
சொல்லி லனுகரணஞ் சூழ்
** 9 பெயர்கள்
**205
#14
** உபயஓசை பெயர்கள்
கடகடென லோடு கலகலெனல் சாலப்
படபடென லின்னும் பகரிற் றிடுதிடெனல்
இட்ட நெறுநெறென லீதுபயச் சத்தமெனத்
திட்டமுடன் சொன்னார் தெளிந்து
** 5 பெயர்கள்
**206
#15
** பறவைச்சத்தம் விலங்கு ஒலி
** இலை இவற்றால் எழும் ஒலி பூணின் ஒலி
துழனி கலகலஞ் சொல்பறவைச் சத்தம்
கழிபெருங் கோலா கலமே குழுவிலங்கி
னஞ்சத்தஞ் சோலையிலை யாலன் மருமராஞ்சம்
சிஞ்சிதம் பூணின் சிலை
** 2, 1, 1, 1 பெயர்கள்
**207
#16
** மந்தஇசை சமன் இசை வல்லிசை பெயர்கள்
மந்தரங் காகுளி மந்தவி சைப்பெயர்
சந்தமுறு மத்திமஞ் சான்மதுரம் முந்துசம
னோசையாந் தாரமுட னுச்சமது வல்லிசையாம்
பேசி னொலிப்பேதம் பேண்
** 2, 2, 2 பெயர்கள்
**208
#17
** படலம் இயல் பெயர்கள்
படலஞ் சருக்கம் பரிச்சேதங் காண்ட
மிடரி லம்பக மெல்லாந் தொடர்பினுறப்
பல்பொருள்கள் வைப்பாம் பகரி நினப்பொருட்கள்
சொல்லிய லோத்தென்றே சூழ்
** 5, 1 பெயர்கள்
**209
#18
** பாட்டு வெண்பா ஆசிரியப்பா பெயர்கள்
கவிகவிதை செய்யுள் கவின்றொடர்பு தூக்கு
நவில்யாப்புப் பாபாட்டி னாம மிவையாகும்
வெண்பாவின் பேர்முதற்பா வெள்ளை விளங்ககவல்
பண்பாகு மாசிரியப் பா
** 7, 2, 1 பெயர்கள்
**210
#19
** பாயிரம் உதாரணம் சபதம் பெயர்கள்
பதிகம் புனைந்துரை பாயிர மாகு
மிதிகாசங் காட்டென் றிசைப்ப ருதாரணப்பேர்
வஞ்சினஞ் சத்தியம் வட்டித்த லாணையெலா
மெஞ்சில் சபத மிசை
** 2, 2, 4 பெயர்கள்
**211
#20
** வாசகம் பதம் உறுதிச்சொல் பெயர்கள்
பாசுரம் வார்த்தை பகர்வசனம் வாசகம்
தேசாரும் பாழி திகழ்பதமாங் கூசாக்
கழற லிடித்தல் கதித்துறுதிச் சொல்லென்
றிழிபின் றுரைத்தா ரியைந்து
** 3, 1, 2 பெயர்கள்
**212
#21
** போர்க்கழைத்தல் மூதுரை
** தன் மேம்பாட்டுச்சொல் பெயர்கள்
அறைகூவல் போர்க்கழைத்த லாகும் முதுசொன்
முறைசேரு மூதுரை முன்சொற் றிறமுடனே
தன்னைமேம் பாட்டுச்சொற் றானா நெடுமொழி
மன்னி வியப்பின் வரும்
** 1, 2, 1 பெயர்கள்
**213
#22
** அசைச்சொல் பெயர்கள்
அந்திலி ருந்திட் டரோவிகுந் தில்லிகபோ
தந்தாம் பிறபிறக்குத் தானின்று மன்மன்னோ
மாமாது மாதோவான் மற்றத்தன் றோருஞ்சின்
னாமமீ தெல்லா மசை
** 25 பெயர்கள்
**214
#23
** வியங்கோள் அசை உரை அசை முன்னிலை அசை பெயர்கள்
மாவே வியங்கோள் வருமசை யம்மவுரை
மேவசை யென்றே விளம்புவர் பாவா
ரிகமியா மோமதி யத்தையித்தை மாள
பகர்முன் னிலையம்சையாப் பார்
** 1, 1, 7 பெயர்கள்
** ஒலிபற்றிய பெயர்த்தொகுதி முற்றுப்பெற்றது
@11 ஒருசொல் பல்பொருள்பெயர்த் தொகுதி
**215
#1
** அரி கோ பெயர்கள்
அரிபன்றி தேரைகிளி பச்சையளி சிங்கம்
பரிகவிபாம் பிந்திரன்மால் கால்கூற் றிருசுடர்தீ
கோவிறை திக்குக் கிரணஞ் சலங்குலிச
மாவரைகண் பார்சுவர்க்க மம்பு
** 16, 11 பெயர்கள்
**216
#2
** கம் வசு வித்தம் காண்டம் பெயர்கள்
கந்தலை வாயுப் பிரமன் சலஞ்சுவர்க்கம்
புந்தி வசுமணி கோதனந்தீ யந்தரத்தோர்
தீயபழிப் புப்பொன் றிரளறிவு வித்தநீ
ராயுதங்கா டாடைகாண் டம்
** 6, 5, 4, 4 பெயர்கள்
**217
#3
** நாகம் துப்பு கமலம் பெயர்கள்
வாகுபுன்னை யாடைகா ரீய மலையானை
வேக விடவரவ மேலுலக நாகமாந்
துப்புப் பவளம் வலியரக்குத் தாமரை
யப்புக் கமலமென லாம்
** 7, 3, 2 பெயர்கள்
**218
#4
** குபேரன் வனம் கனம் அணங்கு பொருள் பெயர்கள்
தனபதி சோமன் குபேரனாங் கானீர்
வனமாங்கார் பொன்செறிவு பாரங் கனமா
நலந்தெய்வ மாசை நலிமா தணங்காம்
பொலந்திசை சேய்புந்தி பொருள்
** 2, 2, 4, 4, 4 பெயர்கள்
**219
#5
** மல்லல் சிலை தரணி குலம் பெயர்கள்
மல்லல் வலியும் வளனு மிகுதியுமாங்
கல்லொலிவின் மூலங் கடுஞ்சிலைக்கா நல்ல
தலமா யிரங்கதிரோன் றாணுத் தரணி
குலமின மில்லங் குடி
** 3, 4, 3, 3 பெயர்கள்
**220
#6
** அம்பரம் கோடு ககம் கழுது பெயர்கள்
அம்பர மாகாய மாடைகடல் வெற்புச்சி
கொம்புபணி லங்கரை கோடென்ப ரம்பு
பறவை ககமா மிதணமும் பேயு
மறுபத முங்கழுதுக் காம்
** 3, 4, 2, 3 பெயர்கள்
**221
#7
** வாமம் தாமம் நேமி பயோதரம் அரவம் பெயர்கள்
வாம மிடப்பால் வனப்புக் குறங்குகுற
டாம மலங்கலொளி தாமணியா நேமி
பரவை திகிரி பயோதரங்கார் கொங்கை
யரவ மொலிநாக மாம்
** 4, 3, 2, 2, 2 பெயர்கள்
**222
#8
** கீலாலம் உதகம் தக்கிணம் கவி பொழில் பெயர்கள்
சலமுதிரங் காடிகீ லாலம்பா னீய
நிலமுதகந் தக்கிணந் தெற்கு வலமாங்
கவிகவிதை வானரஞ் சுக்கிரனாஞ் சோலை
புவிபெருமை நாடு பொழில்
** 3, 2, 2, 3, 4 பெயர்கள்
**223
#9
** அத்தி ஆரம் நகம் புண்டரிகம் பெயர்கள்
அத்தி யதவானை யார்கலியென் பூறாகுஞ்
சுத்த மணிவடம்பூண் சந்தாத்தி முத்தாரம்
பூமரம் பொற்றை யுகிர்நகம் புண்டரிகந்
தாமரைதிக் கானைபுலி வண்டு
** 5, 5, 4, 4 பெயர்கள்
**224
#10
** வச்சிரம் வம்பு காந்தாரம் வாரணம் பெயர்கள்
வச்சிரமோர் கள்ளி வயிர மணிகுலிசங்
கச்சுநவம் வம்புகாந் தாரம்பண் ணச்சுமிசை
கானமாங் கோழி கவசந் தடைகடல்
யானைமெய்ப்பை சங்குவார ணம்
** 3, 2, 3, 7 பெயர்கள்
**225
#11
** தானம் சாரங்கம் வையம் பாணி பெயர்கள்
தான மிடங்கொடை சாரும் வலிமையுடன்
யானை மதந்தேவ லோகமா மான்வண்டு
சாரங்க மாம்வையம் பண்டி யுரோகணிதேர்
பாரங்கை நீர்சொல்பா ணியாம்
** 5, 2, 4, 3 பெயர்கள்
**226
#12
** இரவி அயம் மாலை திகிரி படி பெயர்கள்
இரவி யருக்கன் பருப்பத மென்பர்
புரவிநீர் சேறா று டயமா மிரவியல்பு
தார்மாலை சக்கர மூங்கில் மலைதிகிரி
பார்மானல் பெற்றி படி
** 2, 4, 3, 3, 3 பெயர்கள்
**227
#13
** சக்கரம் கருமை பெயர்கள்
படைதேர்க்கால் வட்டம் பறவை பெருமை
புடவி பிறப்புப் பொருப்புக் கடலே
கிரிமல் லிகைசக் கரமாங் கிளவி
கருமை பெருமை கறுப்பு
** 10, 2 பெயர்கள்
**228
#14
** கடி மடி இறும்பு புரை பெயர்கள்
கடிபுதுமை கூர்மைமண நாற்றம்பேய் காவல்
முடுகலச்சங் கால மிகுதி மடிவயிறு
சோம்புபொய் சீலைமலை தூறுகஞ்சப் பூவிறும்பே
யாம்புரை யொப்புயர மாசு
** 10, 4, 3, 3 பெயர்கள்
**229
#15
** புட்கரம் எஃகு கண்டிகம் பெயர்கள்
யானைத் துதிக்கைத் தலைபருந்து தீர்த்தநீர்
பான்மை கமலம்வாள் பாண்டமுகம் வானிறைவு
புட்கரமெஃ காமுருக்குக் கூர்மைவேல் வாள்காடு
முட்கண் டகமாம் மொழி
** 10, 3, 3 பெயர்கள்
**230
#16
** தலம் குயம் வில் கரி சிலம்பு பெயர்கள்
இலையு நிலமுந் தலங்கொடு வாளு
முலையுங் குயம்வில் லொளியுஞ் சிலையுங்
கரியானை சான்றிருந்தை யாஞ்சிலம்பு குன்ற
மரிநூ புரமொலியே யாம்
** 2, 2, 2, 3, 3 பெயர்கள்
**231
#17
** தாது ஓதிமம் தார் பெயர்கள்
தாதுபஞ்ச லோக மிரத்தாதி யேழைந்து
பூதநற்செங் கற்றாது மாதுளைதூ ளோதிமம்
பூமன் சிறையன்னம் பூதர மானமா
தாமங் கொடிப்படை தார்
** 6, 3, 2 பெயர்கள்
**232
#18
** விசயம் அயில் படர் விளிவு சடை பெயர்கள்
சயமே சருக்கரை யூர்கோள் விசய
மயில்வே லிரும்புகூர் நாஞ்சில் துயர்பகை
போதலுள்ளல் மார்க்கம் படராம் விளிவுகெடல்
சாதல்வேர் வேணி சடை
** 3, 4, 5, 2, 2 பெயர்கள்
**233
#19
** கவிகை படை ஆலம் உறழ்தல் தாலம் பெயர்கள்
குடையுங் கொடையுங் கவிகையா மென்பர்
படைசேனை யாயுத மாகும் வடம்விட
மாலமா மொத்தல் பகைத்த லுறழ்தலாம்
தாலமாம் பெண்ணை தலம்
** 2, 2, 2, 2, 2 பெயர்கள்
**234
#20
** ஆழி பாழி தாழை ஒலியல் பெயர்கள்
ஆழிவே லாவலயஞ் சக்கர மோதிரமாம்
பாழி பெருமை யிடம்வலியாந் தாழைதான்
தெங்குமடற் கைதை சீலைதெருத் தோலுநதி
தொங்க லொலியலெனுஞ் சொல்
** 3, 3, 2, 5 பெயர்கள்
**235
#21
** கந்தம் கந்தரம் கழை கறை நகர் சிறை பெயர்கள்
கந்த மணங்கிழங்கு கார்கழுத்து வெற்பினளை
கந்தர மாகுங் கழைகரும்பு சந்தி
கறையாகுஞ் செம்பால் கருமைநக ரில்லூர்
சிறையாகுங் காவல் சிறகு
** 2, 3, 2, 2, 2, 2 பெயர்கள்
**236
#22
** சிகி சிகரி நியமம் கட்சி குரை வான் பெயர்கள்
சிகிமயிலுந் தீயுஞ் சிலம்பு மரவுஞ்
சிகரிவரை கோபுரமங் காடி வகிர்நியமங்
கானாகுங் கூடாகுங் கட்சி குரையொலிமா
வானாமா காய மழை
** 4, 2, 2, 2, 2, 2 பெயர்கள்
**237
#23
** பிரமம் பெயர்கள்
பிரமம்வே தாவேத மந்திரமால் வேள்வி
இரவிமதி தீமுனிவர் முத்தி தருமநூல்
தன்மை யுலக வழக்கந் தவமீசன்
மென்மை யியல்பு விதி
** 18 பெயர்கள்
**238
#24
** அண்டசம் வல்லி அரில் பெயர்கள்
அரவு தவளை முதலைமீ னாமை
யரணை யுடும்போந்தி யிப்பி விரிபறவை
பல்லிநண் டண்டச மாகும் பதாகைகொடி
வல்லி யரில்பிணக்கு மாசு
** 12, 2, 2 பெயர்கள்
**239
#25
** சிந்து மதலை கதலி பொறி வெறி பெயர்கள்
உததிநதி நீர்சிந்தாந் தூண்கலஞ்சேய் கொன்றை
மதலையாந் தேறுகொடி வாழை கதலி
பொறியா மதிதிருப் புள்ளிசெல்வந் தேமல்
வெறியாடச் சங்கள் விரை
** 3, 4, 3, 5, 4 பெயர்கள்
**240
#26
** பிறங்கல் கன்னல் இருள் வீதல் தகை பெயர்கள்
பெருமை மலைபிறங்கல் கன்னல் கடிகை
கரகந் திமிர நரக மிருளா
மொழிதல் கெடுதல் வறுமையே வீத
லழகன்பு பாடுதகை யாம்
** 2, 2, 2, 3, 3 பெயர்கள்
**241
#27
** தட்டை சினை ஓடை வல் மை பெயர்கள்
தட்டைதினைத் தாண்மழித்தல் தத்தைகடி கோன்மூங்கில்
முட்டை யுறுப்புக் கவடுசினை பட்டமடு
வோடையாம் வல்விரைவு மேடுவன்மை சூதாகு
மாடுகுற்ற மால்கறுப்பு மை
** 4, 3, 2, 4, 4 பெயர்கள்
**242
#28
** களங்கம் அங்கணம் குற்றம் வேலை வாள் பிண்டம் பெயர்கள்
குற்றங் கறைகளங்க மாமங்கணஞ் சேறு
முற்றமாங் கோதுஞ் சிறுமையுங் குற்றமாம்
மாக்கடல்கா லங்கருமம் வேலைவள்கூர் காதுவாள்
யாக்கைதிரள் சோறுபிண்ட மாம்
** 2, 2, 2, 3, 3, 2 பெயர்கள்
**243
#29
** யாணர் மணம் நளி தளிமம் சாகம் அத்தம் பெயர்கள்
வளநவம் யாணர் மணங்கூட்ட நாற்றம்
நளிபெருமை சீதஞ் செறிவு தளிமமா
மெத்தை யழகு தழைதேக்குச் சாகமா
மத்தநடை கைநாள்பொன் னாம்
** 2, 2, 3, 2, 2, 4 பெயர்கள்
**244
#30
** அருத்தம் பவித்திரம் கூடம் போதி பெயர்கள்
அருத்தந் தனஞ்சொற் பொருள்பயன் பாதி
கருத்துப் பவித்திரஞ் சுத்தந் தருப்பை
திரண்மாயம் பொய்கூட மாம்வலிய வெற்பு
மரசுமிவை போதியென்ப தாம்
** 5, 2, 2, 2 பெயர்கள்
**245
#31
** திரட்சி கரேணு கடகம் வெளில் பெயர்கள்
முடலை தரளந் திரட்சி கரேணு
பிடிகளி றென்றிவற்றின் பேராங் கடகமதி
றானைதொடி வட்டந் தயிர்கடையுந் தூணணில்
யானைத் தறிவெளி லாம்
** 3, 3, 3, 3, 5 பெயர்கள்
**246
#32
** அற்றம் அருப்பம் சிரகம் கனை பொருள்
அவகாச மச்ச மெலிவுசோர் வற்றங்
கவலைநோய் காடூ டு ரருப்பந் திவலை
கரக மிவைசிரக மாகுங் கனைதா
னரவ நிறைவுநெருக் கம்
** 4, 4, 2, 3 பெயர்கள்
**247
#33
** வாரம் தண்ணடை பூவை சுசி பெயர்கள்
வாரங் கரைபாக மன்பு மருதநிலத்
தூரகலுள் பச்சிலை தண்ணடையாஞ் சாரிகை
காயா மடமாது பூவை சுசிவெண்மை
தீயாடி சுத்தங் குடை
** 3, 3, 3, 5 பெயர்கள்
**248
#34
** பலாசம் பாடலம் அருச்சுனம் அருணம் பெயர்கள்
தலம்பச்சை வண்ணம் பலாசுபலா சம்பா
டலஞ்சிவப்புப் பாதிரிபாய் மாவாம் பொலமே
மருதெருக்கு வெண்மை யருச்சுன மாகு
மருணமா னாடுசிவப் பாம்
** 3, 3, 4, 3 பெயர்கள்
**249
#35
** குளம் களம் கும்பம் தனம் பெயர்கள்
குளமாகு நெற்றி சருக்கரை குட்டங்
களமா கவபூமி கண்டங் களரி
குடங்கரி மத்தகஞ் சாடிகும்ப மென்பர்
தடங்கொங்கை வித்தந் தனம்
** 3, 3, 3, 2 பெயர்கள்
**250
#36
** ஞானம் நூனம் மறை மா பெயர்கள்
ஞான மறிவுகல்வி நல்லொழுக்க மாமென்பர்
நூனமாங் குன்றலு நிச்சயமு மான
மறைமந் திரம்வேத மாவாம் புரவி
சிறைவண்டு சூதந் திரு
** 3, 2, 2, 4 பெயர்கள்
** ஒருசொல் பல்பொருட்பெயர்த்தொகுதி முற்றுப்பெற்றது
@12 பல்பெயர்க்கு ஒருபெயர்த்தொகுதி.
**251
#1
** ஏகம் இருமை பெயர்கள்
கூறியதே கூறினுங் குற்றமிலை நற்பொருள்
வேறு பெறினென்றே விதித்தலாற் றேறுரைகொள்
ஏகமே வீடு மறுமையோ டிம்மையென்
றாகு மிருமை யறி
** 1, 2 பெயர்கள்
**252
#2
** மூவிடம் மும்மூர்த்தி முக்காலம் பெயர்கள்
முன்னிலை தன்மை படர்க்கையா மூன்றிடம்
பன்னு சிவன்மாயன் பங்கயனே மும்மூர்த்தி
காலமொரு மூன்றாங் கருது மிறப்புடனே
சாலநிகழ் வெதிர்வுந் தான்
** 3, 3, 3 பெயர்கள்
**253
#3
** நாற்கவி நாற்பொருள் பெயர்கள்
ஆசு மதுரமே சித்திரநல் வித்தார
மேசில்கவி நான்கென் றியம்புவார் பேசும்
அறம்பொரு ளின்பம்வீ டாங்கேள்வி நான்குந்
திறம்பாத நாற்பொருளாய்த் தேறு
** 4, 4 பெயர்கள்
**254
#4
** ஐவகை வினா பெயர்கள்
அறியான் வினாவ லறிவொப்புக் காண்டல்
குறியினையந் தீர்த்தல் குறித்தோ னறிவுகொளன்
மெய்யவற்குக் காட்டல் வினவி லரியவினா
ஐவகையா மென்றே யறி
** 5 பெயர்கள்
**255
#5
** ஐங்குரவர் ஐம்பால் பெயர்கள்
அரச னுபாத்தி யாயப்பன் மூத்தோன்
குரவரோ ரைவரெனக் கூறு மொருவன்
ஒருத்திபல ரொன்றுபல வோதுமிவை யைந்தும்
விரித்திடுமைம் பாலாக வேண்டு
** 5, 5 பெயர்கள்
**256
#6
** ஐந்து நிலங்கள் பஞ்சாங்கம்
மொய்குறிஞ்சி பாலை மருதஞ் செழுமுல்லை
நெய்தலிவை யைந்து நிலமென்பர் மெய்சேரும்
பஞ்சாங்கந் தானே திதிவாரம் பார்த்திடுநா
ளெஞ்சில்யோ கங்கரண மேல்
** 5, 5 பெயர்கள்
**257
#7
** ஐம்பூதம் ஐந்து பட்சி பெயர்கள்
பிருதிவியப் புத்தேயு பேசுமருத்து
மருவிடுமா காயமைம் பூதம் பொருவரிய
வல்லூறே யாந்தை வளர்காகங் கோழியெழில்
வெல்லுமயில் பஞ்சபட்சி மேல்
** 5, 5 பெயர்கள்
**258
#8
** திருமால் ஆயுதம் ஈசன் ஐம்முகம் பெயர்கள்
வரிசிலை சங்காழி வாள்கதையிவ் வைந்து
மரிதன் படைக்கலமென் றாகு மரன்முகமே
தற்புருட மீசானம் சத்யோசா தம்வாமம்
விற்சீ ரகோரம் விரி
** 5, 5 பெயர்கள்
**259
#9
** நாடுபடு திரவியங்கள் ஐந்து
** நகர்படு திரவியங்கள் ஐந்து பெயர்கள்
கன்னல் பயறு கதலியொடு செவ்விளநீர்
செந்நெலிவை நாட்டின் றிரவியமா மன்னனுடன்
கண்ணாடி பித்தன் கருங்குரங்கு தந்தியைந்துந்
திண்ண நகர்ப்பொருளாச் செப்பு
** 5, 5 பெயர்கள்
**260
#10
** காடுபடு திரவியங்கள் ஐந்து
** கடல்படு திரவியங்கள் ஐந்து பெயர்கள்
நாவிமயிற் பீலி நறுந்தே னரக்கிறால்
கானின் றிரவியமாக் கட்டுரைப்பர் மேவியுறும்
உப்புத் தரள முயர்சங்கோ டோர்க்கோலை
துப்புங் கடற்பொருளாச் சொல்
** 5, 5 பெயர்கள்
**261
#11
** மலைபடு திரவியங்கள் ஐந்து ஐம்புலம் பெயர்கள்
குங்குமந் தக்கோலமகில் கோட்ட மிளகிவைக
டங்கு மலைப்பொருளாச் சாதிப்பர் பொங்கு
சுவையொளியூ றோசை நாற்றமிவை யைந்து
நவையில் புலனென்றே நாடு
** 5, 5 பெயர்கள்
**262
#12
** எழுத்துத்தானம் ஐந்து பெயர்கள்
பாலன் குமரன் பகரரசன் மூப்புடன்சாக்
கோலும்பேர் முன்னெழுத்துக் கொண்டாதி சாலிற்
கவிதனக்கு முன்மூன்று மின்பங் கடைய
நவையாகு மென்றே நவில்
** 5 பெயர்கள்
**263
#13
** உட்சமயம் ஆறு பெயர்கள்
உட்சமய மாறு முரைக்குங்காற் சைவமுடன்
பட்சமுறும் பாசு பதத்தோடே நிச்சயஞ்சேர்
வாமமிகுங் காளா முகம்பின்னர் மாவிரதஞ்
சேம வைரவமுஞ் சேர்
** 6 பெயர்கள்
**264
#14
** புறச்சமயம் பெயர்கள்
புத்த மருகம் புகல்பாஞ்ச ராத்திரமே
சித்த முறும்பட்டா சாரியஞ் சித்திரமாய்க்
கூறியமீ மாஞ்சங் குறித்துலோ காயதத்தோ
டாறும் புறச்சமய மாம்
** 6 பெயர்கள்
**265
#15
** ஆறங்கம் பெயர்கள்
ஆறங்க மந்திரத்தோ டாகும் வியாகரணந்
தேறு நிகண்டுடன்சந் தோபிசிதங் கூறு
நிருத்தமே சோதிடங்க ணிச்சயித்துக் கொண்டு
திருத்தமுறச் சொன்னார் தெளிந்து
** 6 பெயர்கள்
**266
#16
** எழு பிறப்பு எழு சமுத்திரம் பெயர்கள்
தேவர் விலங்குமக்கள் சேண்பறவை யூர்வன
தாவரம்நீர் வாழ்வ வெழுபிறப்பாம் தாவு
முவர்பா றயிர்கரும் பொண்ணீர் மதுநெய்
சிவணு மெழுகடலும் தேர்
** 7, 7 பெயர்கள்
**267
#17
** எழுமுனிவர் பெயர்கள்
போற்றுகும்ப யோனி புலத்தியன் மார்க்கண்டன்
சாற்றாங்கீ ரன்வசிட்டன் கௌதமனு மேற்றுபுகழ்க்
காசிப னோடெழுவர் காணுங் கலைமுனிவ
ராசில் பெரியோர்க ளாம்
** 7 பெயர்கள்
**268
#18
** மேலேழுலகம் பெயர்கள்
பூலோக மேபுவ லோகந் தவலோக
மேல்சந லோகஞ் சுவலோகம் வாலியசீர்ச்
சத்திய லோகம் மகலோகந் தாமிவை
யுத்தமமார் மேலே ழுலகு
** 7 பெயர்கள்
**269
#19
** கீழேலுலகம் பெயர்கள்
அதல விதல மடைவானஞ சுதல
நிதலம் ரசாதலம்பா தாள முதுபோகந்
துன்னுந் தராதலங்க ளென்றே தொடர்பினுடன்
மண்ணின்கீ ழேலுலக மாம்
** 7 பெயர்கள்
**270
#20
** சத்தநதி பெயர்கள்
கங்கை யமுனை சரசுவதி காவேரி
பொங்கு குமரி நருமதை தங்குசீர்க்
கோதா வரியுட னேழுங் குலநதியென்
றோதுந் தமிழி னுரை
** 7 பெயர்கள்
**271
#21
** எட்டுவகை மணம் பெயர்கள்
கந்தருவந் தெய்வங் கவின்பிரமம் பைசாசம்
பந்த முறும்பிரசா பத்திய நந்தலில
தாமென்னு மாரிட மாசுர மிராக்கதஞ்
சேமமண மெட்டெனவே செப்பு
** 8 பெயர்கள்
**272
#22
** அட்டதிக்குப்பாலகர் பெயர்கள்
இந்திர னங்கி யியம னிருதியுட
னுந்து வருண னுயர்வாயு விந்தைமிகு
பண்டேர் குபேரன் பரிவிலீ சானனோ
டெண்டிசைவாழ் பாலகரென் றெண்
** 8 பெயர்கள்
**273
#23
** அட்டநாகம் பெயர்கள்
வாசுகி தக்க னனந்தன் பதுமனொடு
பேசு குளிகன் மகாபதும னேசிலாக்
கார்க்கோ டகனுடனே சங்கனிவை யெண்டிசையு
மார்க்குமர வெட்டென்ப வாம்
** 8 பெயர்கள்
**274
#24
** அட்டதிசையானை பெயர்கள்
அயிரா வதங்குமுதம் புண்டரிகம் பின்னுஞ்
சயவா மனமஞ் சனமும் வயனேரும்
புட்பதந்தஞ் சுப்பிரதீ கஞ்சா ருவபௌம
மட்டதிசை யானையென லாம்
** 8 பெயர்கள்
**275
#25
** அட்டகுல பருவதம் பெயர்கள்
இமய கிரிகைலை மந்தர நீல
மமையேம கூட நிடதஞ் சிமையமுறுங்
கந்தமலை விந்தம்பார் காத்து நிவந்திலங்கு
மந்த மலையெட்டு மாம்
** 8 பெயர்கள்
**276
#26
** அட்டமங்கலம் பெயர்கள்
தீப முடன்கவரி கண்ணாடி சீர்த்தோட்டி
தாபந்தீர் கும்பந் தனிமுரசஞ் சோப
மலிகொடி மீனிரட்டை மங்கல மெட்டென்
றுலகிற் பெரியோ ருரை
** 8 பெயர்கள்
**277
#27
** சிறப்பிலா எண்பெயரெச்சம் எண்கணம் பெயர்கள்
குறள்செவிடு மூங்கை முடங்கூன் குருடு
துறுபிண்டம் பேடுடனே யெச்ச முறுமெட்டா
மம்புலி பானு வனல்கா லியமானன்
கம்புவிநீ ரோரெண் கணம்
** 8, 8 பெயர்கள்
**278
#28
** ஒன்பது வாயில் நவரசம் பெயர்கள்
கண்செவி மூக்குக் கவின்வாய் குதங்குய்ய
நண்ணிய வாயி னவமென்ப வொண்மைதருங்
குற்சை நகைகருணை கோபம் பயம்வீர
மற்புதஞ் சாந்த மணி
** 9, 9 பெயர்கள்
**279
#29
** நவகிரகம் பெயர்கள்
கதிர்திங்கள் செவ்வாய் கணக்க னரசன்
முதிர்வெள்ளி காரி யொளிர்விண் பதிமேவுங்
காரா ரிராகு கவிகேது தானவமாம்
பேரார்கோ ளென்றே பிரி
** 9 பெயர்கள்
**280
#30
** பன்னிரண்டு இராசி பெயர்கள்
மேட மிடப மிதுனமே கர்க்கடகம்
காடகஞ் சேர்சிங்கங் கன்னிதுலா நீடு
விருச்சிகஞ்சா பம்மகரங் கும்பமுடன் மீனந்
தெருட்டோரை பன்னிரண்டுந் தேர்
** 12 பெயர்கள்
**281
#31
** பதினெண்கணம் பெயர்கள்
சுரரசுரர் சித்தர்பேய் தூயவிஞ்சர் பூத
ருரகர்யக்கர் மோநர்காந் தர்வர் குருவர்
நிருதரண்ட ரந்தரர் கின்னர ரேர்க்கிம்
புருடர்கரு டர்தைத் தியர்
** 12 பெயர்கள்
**282
#32
** பதினெண் புராணம் பெயர்கள்
கூர்மமே மச்சம் பிரமமுடன் வாமனங்
காருடம் விண்டு கவின்சைவ மோரும்
பதுமம் பவுடிகம் நாரதீயம் லிங்கம்
மதிமார்க்கண் டம்வரா கம்
**283
#33
** பதினெண் புராணம் பெயர்கள் (தொடர்ச்சி)
ஆக்கினே யம்பிரம கைவர்த்த மாசில்சீர்
வாக்காம் பிரமாண்டம் பாகவத மீக்குயர்த்தும்
பொற்பாருங் காந்தம் புராணமீ ரொன்பானென்
றற்பா யுணர்ந்தே யறை
** 18 பெயர்கள்
**284
#34
** அரசர்க்குரிய யானை பெயர்கள்
கானாலு வால்கோசங் கையு நிலந்தோயப்
பால்சங்கு போலப் பதத்தின்மேற் சாலுமுகிர்
ஏழுயர்ந் தொன்பானீண் டீராறோ டொன்றுமே
சூழுமுழஞ் சுற்றாய்த் தொடர்ந்து
**285
#35
** அரசர்க்குரிய யானை பெயர்கள் (தொடர்ச்சி)
முன்னுயர்ந்து பின்பணிந்து மும்மதங்கொண் டேசுளித்துத்
தன்னிழலைச் சாடிமிதி தானிட்டு மின்னுஞ்
சிறுகண் படைத்தழகு சேர்ந்து ளதுமோலி
யிறைவர்கய வாகனமென் றெண்
** 18 பெயர்கள்
**286
#36
** அரசர் குதிரை
மாதர்மண மொத்த மணத்ததாய் வாழைபெறுங்
கோதின் மடல் போல் கொழும் செவியாய்ப் பாதமுன்பின்
மெய்ப்பா ரிருத்தி விரலளவெண் பத்திரண்டே
வைப்புயர்வா மன்னவர்பாய் மா
**287
#37
** நூலின் முதலில் வைக்கும் மங்கலச்சொல் பெயர்கள்
சீரெழுத்துப் பொன்பூ திரு மணி நீர் திங்கள்
கார்பரிதி யானை கடலுலகந் தேர்மலைசொல்
கங்கை நிலம்பிறவுங் காண்டகைய முன்மொழிக்கு
மங்கலமாஞ் சொல்லின் வகை
** 18 பெயர்கள்
** பல்பெயர்க்கு ஒரு பெயர்த்தொகுதி முற்றுப்பெற்றது
** ஆகச் செய்யுள் - 2+285
** உரிச்சொல் நிகண்டு முற்றுப்பெற்றது
|