** பரமபதிதுணை
** சிதம்பரக் கவிராயர் இயற்றிய உசிதசூடாமணி நிகண்டு
@0 காப்பு / பாயிரம்
** நேரிசை வெண்பா – விநாயகமூர்த்தி
**1
#1
ஐங்கர சொரூப திரியம்பகனே ஆதி சிவ
சங்கர சுதா தயா தற்பரனே இங்கு எனது
பாவால் உளம் மகிழ்ந்து பாட வரம்தந்து அருள
வாவா கச தாசுவா
** அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
** சிவபெருமான்
**2
#2
புகழ் சேர் மறை ஆறு அங்கம் முதல் போந்த சனகாதியர்க்கு அருளை
இகழாது ஓங்கும் தனிப்பொருளை இயம்பாது இயம்பும் குரு அருளால்
திகழ் பான்மையின் முன்னூல் பலவும் சேரும் உசிதசூடாமணி என்று
அக ஆதரவினால் ஒரு நூல் அரனை இறைஞ்சி உரைசெய்வாம்
** மூத்த பிள்ளையார்
**3
#3
சூட்டு கவி நாவலர் பாடும் துகள் தீர் செய்யுட்கு உறுபயனாக்
காட்டும் உசிதப் பொருள் வகுத்துக் கழறும் உசிதசூடாமணிக்கு
நாட்டும் நெடிய புழைக்கரத்து நால்வாய் ஒற்றைக் கிம்புரி வெண்
கோட்டு முமதப் புகர்முகத்துக் கோமான் எம் முன் நிற்குகவே
** சரசோதி, இளையபிள்ளையார்
**4
#4
மூன்று தமிழின் இயல்பு உணர்ந்த முன்னோர் உசிதநூல் பொருளின்
மூன்று சங்கத்து அதிகரித்த முதல்விதனது கருணையினால்
மூன்று சபையும் மெச்சும்வகை மொழியும் உசிதசூடாமணிக்கு
மூன்று மத சிந்துரமுகத்து முன்னோன் பின்னோன் காப்பு ஆமே
** அவையடக்கம்
**5
#5
பொசியும் அமுத கலை நிரம்பும் பூர்ண சந்திரோதயம் முன்னே
ஒசியும் ஒரு விண்மீன் வயங்கல் ஒப்பாமேனும் மெய்ப் பாமால்
முசிவு இலாத தமிழ்ப் புலவோர் மொழிநூல் உசிதப்பொருளை அமைத்து
உசிதசூடாமணி எனலால் ஓங்கும் சிதமீன் தகவு எனவே
** பாயிரம்
**6
#6
தேவசரித்திரம் வருணாச்சிரம ஒழுக்கம் இராசசின்னம்
பூவில் எயும் வில் காமசின்னம் புகலும் எழுபெண் ஆண் பருவம்
ஆவலுறும் எண்மணம் புணர்ச்சி அணுகு புணர்தல் குறி பிரிவு
மேவற்கு உரிய பெண் புருட விரகம் விரகப் பெண்ணின் பகை
**7
#7
பாதம் ஆதி மடவர்க்குப் பகரும் உவமை அலங்காரம்
ஓத இசையும் பெண் புருட உவமை அலங்காரம் பொருள் மூன்று
ஏதம்இல் உதாரண ஒழிபாய் இசைந்த தொகுப்புப் பதினெட்டும்
பேதம்அற முன்னோர் நூலில் பேணும் இயல்பின் ஆராய்ந்து
**8
#8
சீர்கொள் அடி கை வரை மேவும் திரிமூர்த்திகள்தம் சேவடியை
வார் கொடுதியில் சென்று தினம் வணங்கும் நியதி பெறும் மனத்தான்
பார்கொள் புகழ் மேழித் துவசன் பற்றார் விரும்பிப் பணி பதத்தான்
ஏர்கொள் வீரத் தனு விசயன் இயம்பு நிச வாசக நிபுணன்
**9
#9
சித்திரகூட மேடை உயர் சிகர மாடக் கார் வழியான்
நித்தியம் சுப மங்கல ஓதை நிகழ ஓங்கும் வாசலினான்
பத்தி தரு மும்முரசு தினம் பாரித்து இசைக்கு முன்றிலினான்
எத்தில் ஏந்திரன் ஆதிகத்துக்கு இயல்பில் சிறந்த பிரதானி
**10
#10
மந்தமருத்துத் தடங்கிரியும் மகமேருவும் சமானமது என்று
இந்தப் புவனம் புகல் பெருமைக்கு ஏற்ற கொங்கநாட்டு அதிபன்
தம்திக்குதயன் ஐங்கதியில் தாண்டு பரிக்கும் நகுல நிகர்
பந்தம் நிழற்றும் கவிகை எழில் பசும்பொன் தந்தச் சிவிகையினான்
**11
#11
பருவ முகில் போல் யாவருக்கும் பரிசில் உதவு சீர்த்தியினான்
செருவில் வீமன் அளகர் குல திலகன் குவளை மணிமார்பன்
தருவை நிகரும் மதலை அருள் தனையன் மநுநூல் வழிதெரிந்த
துருவன் சுக்கிரி மகிபாலசுமுகன் மகிழ்ந்து இனிது கேட்ப
**12
#12
கள் அறா மென் குவளை அலர் கழனி புடை சூழ் திருப்புகலி
வள்ளல் குக சந்தன மரபில் வந்த மால் சங்கரமூர்த்தி
விள்ளல்அரு மெய்த் தவப்புதல்வன் மேலாம் சிதம்பரக்கவிஞன்
உள்ளம் மகிழ நயந்து உசிதசூடாமணிநூல் உரைத்தனனே
** பாயிரம் முற்றும்
** நூல்
@1 முதலாவது - தேவசரித்திரத் தொகுப்பு
**13
#1
பூ ஆர் செழும் தண் கயிலையினில் பொலிந்து சபையின் முனிவர் தொழ
ஓவா நடம்செய் திருப்பதத்தை உள்ளம் பிரியாது அமைத்து இறைஞ்சி
மூவா முதல்வன் ஆதி பெறு முதன்மை கருதி நாலைந்து
பாவால் தேவசரித்திரத்தைப் பாடும் தொகுப்புப் பாடலுற்றாம்
** சிவபெருமான்
**14
#2
திங்கள் பிறை வெண்டலை மாலை திகழ் வெள்ளெருக்கு ஆர் அறுகு வில்வம்
தங்கு திரிபதகை கொன்றைச் சடையான் திரிசூலப்படையான்
பொங்கு அரவும் ஆமையும் அக்கும் பூண்டோன் சங்கக் குழை அண்ணல்
அங்கை ஏந்தி ஈமத்தில் ஆடி பிரமச்சிரகரத்தான்
**15
#3
முந்து தவத்தோர் யாகத்தின் முயன்று வருந்திப் பொர விடுத்த
தந்தி மழுமான் முயலகன் செம் தழல் பாம்பு உழுவை துடி முதலா
வந்த பகை வீறொடும் கவுந்தன் வயமா அடக்கி உவந்து கொண்டோன்
சுந்தரன் தூதன் தனதன் தோழன் தோடுடையசெவியன்
**16
#4
அடுத்த காலன்தனை மார்க்கண்டனுக்காய் உதைத்தோன் மலர் அம்பு
தொடுத்த மதனை எரித்தவன் நஞ்சு உண்டு தேவர் உயிர் காத்தோன்
படுத்த திரிபுரத்தை அழல்படுத்த நகையான் திக்கு உடையாய்
உடுத்தோன் கயிலை எடுத்தவனை உடன் ஓர் விரலால் ஈடு அழித்தோன்
**17
#5
செக்கர் வான்மீன் பவள நிறம் செப்பும் சடையான் கனல் பவழம்
தக்க படிவம் எனும் உருவம் சாரும் உவமைத் திருவடிவான்
புக்க கலைசேர்மன் பரிதி பொங்கு கனல் என்று இவை இசைந்த
முக்கண்ணுடையான் கொடி ஊர்தி மூரி விடையன் உமைபாகன்
**18
#6
மாலுக்குச் சக்கரம் அளித்தோன் மாலும் அயனும் காண்பரியோன்
பாலுக்குப் பாலகன் இரங்கப் பரிந்து பாற்கடலை ஈந்தோன்
கோலித் தடுத்த மோகினியைக் கூடிச் சாத்தன்தனை அளித்தோன்
ஆலித்து எழுந்த சலந்தரனை அடர்த்தோன் பஞ்சாக்கரமுகத்தோன்
**19
#7
வஞ்சத் தக்கன் மகம் சிதைத்து வாணி நாக்கும் பொறி மூக்கும்
எஞ்சக் கொய்து விது வினைக் கால் இட்டே தேய்த்துக் கனல் கை அறுத்து
அஞ்சக் கதிரோன் பல்லை உதிர்த்து அம்மான் சிரமும் கொய்து அழித்தோன்
கஞ்சப் பதம் ஒன்று எடுத்து எதிரே காளி நாண நடம்புரிந்தோன்
**20
#8
விரியும் அண்ட பிண்டம் எலாம் விளங்கும் பொருளைத் தொழில் கருத்தன்
உரிய மறை ஆகம வடிவான் உன்னா முனி பார்ப்பினிமார்கள்
பரிய தாருகாவனம் சென்று அழித்துப் பலி ஏற்றான் என்றே
பரிவில் பிறவும் சிவசரிதம் பாடும் இயல்பில் பகர்வாரே
** விண்டுமூர்த்தி
**21
#9
கன்று குணிலா எடுத்து விளங்கனியை உகுத்தோன் ஆயர் மனை
சென்று தயிர் பால் உறி வெண்ணெய் திருடி நுகர்ந்து கட்டுண்டோன்
குன்று குடையா மழை தடுத்தோன் குளிக்கும் ஆயர் குல மாதர்
நின்று காணத் துகில் கவர்ந்தோன் நிலை சேர் குருந்தம் ஒசித்த பிரான்
**22
#10
ஆலில் அரவில் பாற்கடலில் அணுக ஓங்கிப் பசு மேய்க்கும்
கோலின் மகிழ்ந்து கண் துயில்வோன் கூறும் பதினாறாயிரம் பெண்
மாலின் இவர்ந்தே அவரவர்தம் மனைகள்தோறும் ஒரு வடிவாய்
மோலி தெரிய மயல் காட்டி முயங்கும் மாயச் சொரூபத்தான்
**23
#11
கடலை அடைத்தோன் கடல் கடைந்தோன் கடல் நீர் சுவரக் கணைவிடுத்தோன்
அடர எதிர்ந்த பெரும் குருகின் அலகை இடந்தோன் சகடு உதைத்தோன்
இடபம் உயர் வெம் களிறு அடர்த்தோன் இணை சேர் மருதம் பிளந்து எறிந்தோன்
படரும் கொடிய அலகை முலை பருகுமா போல் உயிர்கவர்ந்தோன்
**24
#12
ஆயர் பெருமான் எனும் நந்தன் அருள் சேய் அசுரர் கிளை அறுத்தோன்
தோயும் மத குஞ்சரம் காத்தோன் துகில் பாஞ்சாலிக்கு இனிது அளித்தோன்
நேய விசயன் தேர்ப்பாகன் நிறத்தால் கரியன் தேவகிதன்
சேயன் இசை வேய்ங் குழல் ஊதிச் சென்றே நின்று ஆன் நிரை மேய்த்தோன்
**25
#13
உலகம் அளந்து காத்து இடந்தோன் உண்டும் உமிழ்ந்தோன் சானகி பூதலமின்
உருக்குமணி கேள்வன் சலசலோசன் பின் அரவிற்கு
உலவி நடந்தோன் கோசலைதன் குமரன் கஞ்சன் உடல் பிளந்தோன்
அலர வாணன் தோள் பலவும் அரிந்தோன் வாலிதனைச் செற்றோன்
**26
#14
மச்சம் எனப் போய் மறை கொணர்ந்தோன் மடங்கல் உருவாய்த் தூணில் எழுந்து
எச்சம் அறவே குடர்மாலை இட்டே இரணியனை வதைத்தோன்
உச்சப் பகலைத் திகிரியினால் ஒளித்தோன் பஞ்சவர்கள் தூதன்
மெச்சப்பெறும் யசோதை சுதன் விறல் சேர் வசுதேவன் புதல்வன்
**27
#15
ஆமை உருக்கொண்டு அடைகிடந்தோன் அட்டாக்கரத்தான் வைகுந்தன்
தீமை புரிந்த அரக்கன் உடல் செகுத்தோன் தசரதன் புதல்வன்
தூய்மையுறு பூம் பை ஐந்து உளவோன் சுரிச் சங்கு ஆழிப்படையன் சத்ய
வாய்மை கொழுநன் எனப் பிறவும் மாலின் சரிதம் வகுத்துரையே
** உமையவள்
**28
#16
அண்டர் அண்டம் பூத்தவள் வெற்பு அரையன் மடந்தை அறம் வளர்த்தல்
கண்ட பரிபூரணி ஞானக்கடல் மூவரையும் பெற்றவரில்
விண்ட உருத்திரன்தனை வேட்ட விமலி பாசாங்குசமொடு வில்
கொண்ட கரும்பு ஐங்கணை இவை கைக் கொண்டாள் எமையாள் உமையாளே
** கணபதி
**29
#17
தரை மா மருகன் ஐங்கரத்தான் சால் போல் வயிற்றான் பிள்ளைஇயார்
புரை தீர் மருப்பு ஒன்று ஒடித்து மலைப் புறத்திலே வெம் பாரதப் போர்
வரைவோன் இருநால் புயன் நான்ற வாயான் மதி பாய் சடை முடியான்
உரை சேர் முதல்வன் வினாயகன் மெய் உறுதி தருவோன் கணபதியே
** குமரன்
**30
#18
பரவும் இருமூன்று அக்கரத்தான் பரனுக்கு உபதேசம் புகன்றோன்
விரவும் அறுவர் முலை உண்டோன் வேலை சுவற வேல் விடுத்த
உரவோன் ஆறு படைவீட்டை உடையோன் ஆறு முகன் பனிரு
கர வேள் சரவண நோற்பவன் சூர் கணியாச் சுப்பிரமணியன்னே
** பிரமன்
**31
#19
தண் தாமரை ஆசனம் ஆகம் தவளம் கோவில் மறையோரில்
வெண்தாமரையாள் அவன் நாவில் விரும்பும் பாரி சதுர்வதனம்
கண் தாமரையான்தனது உந்திக் கமலம் பிறப்புப் படை மறைநூல்
வண் தாமரைத் தார் அனம் துவசம் வாகனமும் ஆம் பிரமனுக்கே
** சரசோதி
**32
#20
துதி மேவு பிரமணி வாணி சொல்லாள் இனிய கலைமகள் பாரதி
சாரதியின் உடன் ஆம் சீர் ஆரும் வால பரமேட்டி
மதி சேர் ஞானி தாரணியாய் வனசப் பொகுட்டில் வீற்றிருக்கும்
விதி சேர் பிரமன் உரிமை என விளம்பும் அட்ட சரச்சுவதியே
** பேரின்பம்
**33
#21
தன் தத்துவ காயத்து இயல்பும் தனக்கு ஆம் துணையும் ஓர்ந்து உலகில்
ஒன்றற்கு உரிய பொன் ஆசை உள்ளிட்டவற்றால் வரும் துயரும்
துன்பப் பிறப்பும் இறப்பும் இவை தொலையத் தொலையாப் பொருள் கூறின்
அன்பின் செயலை இனி அடியேற்கு அருள் என்று ஓதல் பேரின்பே
** முதலாவது தேவசரித்திரத் தொகுப்பு முற்றும்
** பாயிரமுட்பட விருத்தம் – 28
@2 இரண்டாவது வருணாச்சிரம ஒழுக்கத் தொகுப்பு
**34
#1
தெருள் நாகரிக முகில் சுக்கிரிதீரன் இறைஞ்ச அருள்புரி மெய்ப்
பொருள் ஆம் திரிமூர்த்தியைப் பரவிப் புகலும் கவிகள் பதினொன்றால்
அருள் நான்மறையோர் முதல் நால்வர் அடைவில் தமது நெறி ஒழுகும்
வருணாச்சிரம ஒழுக்கமதை வழுத்தும் தொகுப்புச் சொல்கின்றாம்
** பிராமணன்
**35
#2
வேத முறை ஓதுதல் ஓதுவித்தல் வேட்டல் வேட்பித்தல்
ஈதல் ஏற்றல் இவை ஆறும் இசையும் மறையோர் தொழில் என்ப
தீதின் நான்கு ஆச்சிரம முறை செப்பும் அவர்க்கு அவ் விதி பேணி
ஆதவனைக் கண் காணும் முனும் அந்தி கண்டும் கடன் இயற்றி
**36
#3
ஆதி வேத முதல் தொடங்கி அடைவே காண்டம் பகுத்து ஓதி
நீதி இயல்பின் பொருள் அறிந்து நெறி வழாமல் நிலைநின்று
வாதில் தருமம் முதல் மூன்று மருவும் படிக்காம் வழி இயற்றி
ஓதும் பிரம நண்ணு நெறி உற்றே யோகம் பொருந்துவரால்
** சத்திரியன்
**37
#4
மனு விக்கியானநூல் ஓதல் மறைநூல் வழியின் வேட்டிடுதல்
இனிதின் ஈதல் உலகு ஓம்பல் ஏற்ப வளந்து படை தாங்கல்
தனுவில் தக்க வகை தேர்ந்து தளரா தூக்கிச் சமர் விளைத்தல்
துனியில் புவி ஆள் மன்னவர்க்குச் சொற்றவாறு தொழில் ஆமே
**38
#5
பொருளைக் குறித்துச் சமய வழி போற்றித் தரும நெறி விருப்பின்
அருளில் சூழ்வோர் ஐந்தும் இன்மை ஐந்தும் ஓம்பிக் குடி தழுவித்
தெருளில் தளர்ந்த குடி தாங்கித் தினமும் நகரி சோதித்து
மருள் அற்று இயல்பின் ஒழுகும் உண்மை மதி மந்திரி சொல் உடன்படுத்து
**39
#6
சாரும் குடியை ஆதரித்தும் சாராக் குடியை ஈடழித்தும்
நேரும் கொடுமைச் செயல் விளைத்தும் நிதி காட்டு அமைச்சர் உரை மறுத்தும்
தேரும் அறிவு பொறுமை கொடை திடம் அஞ்சாமை அன்பின் இவற்றோரும்
உலகில் பிற உயிர் தம் உயிர் போல் கருதிப் பழி அஞ்சி
**40
#7
ஆறில் ஒன்று குடியிறைகொண்டு அரிய தவத்தோர் கற்புடையோர்
தேறு நிலையா தரவு அமைந்து செற்றார்ச் செறுத்துக் கொலையினரைக்
கூறும் களைகள் ஆங்கு ஒறுத்துக் கொடுங்கோல் பிறர்தம் மனைக் காமம்
வேறுபடுக்கும் கள் குறளை விரும்பாது அறிஞர்க்கு இனன் ஆகி
**41
#8
பொருவுஇல் உயர் நால் கவி வலர் சொல் போற்றி மறையோர் செயல் விளக்கிப்
பெருகு கான மயில் முறைமை பிழையாது அன்னத்து இயல்பு ஆகி
மருவு மனுவின் செங்கோன்மை வழியே முறைகேட்டு எவ்வுலகும்
கருது நெறியின் புகழை நிறீஇக் காவல் புரிவோன் காவலனே
**42
#9
வெற்றி தருதற்கு உறுபடையும் விரும்பு செல்வக் குடிச் செறிவும்
அற்றம் அறியாக் கூழ்ப் பொலிவும் அறத்தைக் கருதும் மந்திரியும்
கற்ற நீதி தெரி நட்பும் காவல் உறு நால் வகை அரணும்
உற்ற நீதி மன்னவனுத் துங்க அரசர் சிங்கு ஏறே
** வசியன்
**43
#10
அறிவின் ஓதல் மகம் இயற்றல் அதிதிக்கு இயல்பான் உணவு அளித்தல்
உறுதிதரு வாணிபம் இயற்றல் உவந்து தினமும் நிரை காத்தல்
செறிவின் உழவுசெய்தல் எனத் தெரிந்து பகரும் இவை ஆறும்
பொறுதி உடைய வசியருக்குப் போந்த தொழிலாப் புகலுவரே
**44
#11
வழுக்கின் மூவசியர் இயல் பூவசியர் என்னும் வேளாளர்
இழுக்கில் வேதாகமப் பகுதி இயல்பின் வேத சித்தாந்த
ஒழுக்கின் வழி நான்கு ஆச்சிரமத்து உயர் சற்குரவரால் பொருள் தேர்ந்து
அழுக்குஇல் மெய் அன்பால் தினமும் அருச்சித்து அரிய பதம் அடைவார்
** சூத்திரன்
**45
#12
பகர் மூவசியர் தொழில் ஆன பசுவை ஓம்பல் பொருள் ஈட்டல்
புகர்இல் உழவர் தொழில் இயற்றல் போற்றும் மறையோர்க்கு ஏவல்செய்தல்
நிகர்இல் குயிலுவத் தொழிலில் நிலை தேர்ந்து இசையின் இயற்றிடுதல்
அகல்வுஇல் காருகத்தொழிற்கு ஆளாதல் சூத்திரர்க்கு அறுதொழிலே
** இரண்டாவது வருணாச்சிரம ஒழுக்கத் தொகுப்பு முற்றும்
** பாயிரமுட்பட விருத்தம் – 40
@3 மூன்றாவது இராசசின்னத் தொகுப்பு
**46
#1
உயர் வான் பரவும் ஒரு முதலை உன்னிக் கவிதை பதின்மூன்றில்
செய வேந்தரும் வந்து எதிர் போற்றும் தீரன் ஏற்று உபேந்திரதுரை
வய மால் அரசு செய் சுக்கிரிமகிபன் உரைக்கும் நெறி மனுவின்
இயல்பாய் உலகம் புரந்து அருளும் இராசசின்னம் இயம்பல் உற்றாம்
** ஐங்குழு - ஐந்தினம்
**47
#2
சொல்லும் மந்திரி புரோகிதர் நல் தூதர் சேனாபதி ஒற்றர்
ஒல்லும் அரசர் ஐங்குழு என்று உரைக்கும் அடுத்த நட்பாளர்
வெல்லும் அந்தணாளர் படைவீரர் நிமித்தகாரருடன்
புல்லும் ஆயுள் வேதியர் ஆம் பொருநர்க்கு ஓதும் ஐந்தினமே
** மந்திரி
**48
#3
தேர்ந்து செயற்பாலவை இயற்றல் தெரிந்து விவகாரம் பிரித்துக்
கூர்ந்து பொதுக்கோடல் தீரக் குற்றம் நீக்கிக் குணம் பேணல்
நேர்ந்து குடி காத்து உலகு ஓம்பல் நெறியின் ஒன்னார் குறும்பு அகற்றல்
ஓர்ந்து ராசன் மதிக்கு இணங்க உன்னிச் சொல்வோன் மந்திரியே
** தளகர்த்தன்
**49
#4
உளத்தின் மாற்றார் வலி காலம் உறு தன் வலி சீர்தூக்கி அமர்க்
களத்தில் அரசைப் பேணி முனை காட்டிச் செருநர்தமை வெல்லும்
வளத்தில் படைத்தலைவரொடு நால் வகைச் சேனையும் சூட்சித்து இனிது
தளத்தை ஓம்பிப் படைக்கு முன் போய்ச் சதிர் செய்வோனாம் தளகர்த்தன்
** பிரதானி
**50
#5
சதிரின் உறு சீமையும் குடியும் தனமும் ஐந்து திரவியமும்
பதிவினால் கூறு இயற்றிடு நால் படையும் பேணி யூகித்து
மதியின் வேந்தன் உரை தழுவி வகுக்கும் கரும முறை தெரிந்து
திதியின் யாவும் தன்முகமாய்த் திட்டம்செய்வோன் பிரதானி
** சேனாதிபதி
**51
#6
மறுவுஇலாப் பாக்கியம் கல்வி மகிழும் தவம் தானம் வீரம்
உறுதி பயக்கும் திட விசயம் ஓங்கு நலம் ஆர் சந்தானம்
சறுவ சாம்பிராச்சியம் என்று தக்கோர் புகலும் மநுநீதி
பெறு தசாங்கத்து அதிபன் உறப் பேணுவோன் தானாபதியே
** இதுவுமது
**52
#7
சீலம் தரு சொல் வன்மையொடு தினம் வேந்து இயற்கை உணர்ந்து அறிவில்
காலம் கருதி இடமறிந்து கருமம் விடாமல் விவகார
மூலம் தெரிந்து சோர்வுபடா மொழியால் இறுதி தரினும் அநுகூலம்
கருதிச் சந்து இயையக் கூறுவோன் தானாபதியே
** அரசன் இயற்கை இலக்கணம்
**53
#8
பாக்கியம் இலங்கு முகம் கல்வி பரவு நாவின் தானம் கை
தாக்கும் வீரம் புயம் நெஞ்சின் தைரியம் வாளின் முனை விசயம்
ஆக்கும் பெருமைச் சந்தானம் அணி சேர் வயிறு புவி பணியத்
தேக்கும் சறுவ சாம்பிராச்சியம் திரண்ட ஊருப் பெறும் அன்றே
** பட்டத்துயானையின் இலக்கணம்
**54
#9
கை வால் கோசம் நிலத்து உற நால் காலும் பொருவுஇல் உகிர் வெளுப்பாய்
தவ்வாது ஏழு முழம் உயர்ந்து தருபன் மூன்று முழச் சுற்றின்
ஒவ்வாச் சூழி மத்தகம் வாய்ந்து உயர்ந்த முன்பாய்ப் பின் பணிந்து
செவ்வாய் ஏந்து கொம்பின் முறச் செவியார் இபம் மன்னவர்க்கு ஆமே
** ஓர் வகையின் யானைக் கடைசொல்
**55
#10
கம்பம் புரசை நிகள மதம் கவிழும் சுவடு புழைத் தடக்கை
கும்ப நால்வாய் தழை செவி அங்குசம் போர் புகர் முகம் கவளம்
கிம்புரி வெண் கூர் மருப்புக் கிளர் செங்கனல் கண் கறை அடி மால்
வெம்பு சினம் கொல் உயர்வு எனலாம் விதித்த யானைக் கடைசொல்லே
** பட்டத்துக்குதிரையின் இலக்கணம்
**56
#11
மாதர் மணத்தை நிகர் மணத்தாய் வாய்ந்த நிறத்து ஐங்கதி உடைத்தாய்த்
தீது இலாத சுழி உளதாய்த் திருக்கு இலா நல் குணத்தினதாய்
ஓதும் எழு சாண் அமைதி பெறும் உயர்வின் கதலி மடல் செவியாய்ப்
பாத முன் பின் விருத்தியுமாம் பகர் மன்னவர்க்கு ஆம் பரி இயல்பே
** இதுவுமது
**57
#12
மாவின் தளிர் போல் ஒளிர் நாக்கும் மலி வெண் நுரை பொங்கிய வாயும்
பாவு தரளம் தாமரை பொன் பச்சை நீல நிறத்து ஒன்றும்
ஓவுஇல் இடபம் மத்தளம் சங்கு உவரித் திரை மேகம் தொனியில்
கூவும் சத்தம் வரல் என்று குறிக்கப்பெறும் அவ் வாம் பரிக்கே
** நாடு, நகர், காடு, கடல், மலை, - படுதிரவியங்கள்; அரண்
**58
#13
நாடு கதலி கழை செந்நெல் நறும் செங்கழுநீர் சிறுபயறு
ஆடி பித்தன் கார் ஆனை அரசன் யூக நகரினவாம்
காடு நாவி மயில் பீலி கருதும் சவரி தேன் அரக்கு ஆம்
கோடு பவளம் உவர் குக்குல் குலா வெண் முத்தம் கடலினவே
**59
#14
கோட்டம் அகில் குங்குமம் கறி தக்கோல மலையின் அவை ஐந்து ஆம்
ஈட்ட விசையும் திரவியங்கள் இயம்பும் அரசர்க்கு உரித்து என்ப
சோட்டு மதிலும் உயர் வரையும் சுரமும் இரு தண் புனலும் என
வாட்டில் அட்ட மங்கலத்தான் வழுத்தும் மன்னர்க்கு அரண் நான்கே
** மூன்றாவது இராசசின்னத் தொகுப்பு முற்றும்
** பாயிர முட்பட விருத்தம் – 54
@4 நான்காவது காமசின்னத் தொகுப்பு
**60
#1
பொரும் வல் அசுரர் புரம் மூன்றும் பொடிசெய்திடும் வண் கைக் குரிசில்
இரு பொன் பதத்தைப் பணிந்து இறைஞ்சி இயம்பும் கவிதை பன்னிரண்டில்
தருவை நிகர் சுக்ரீமகிபன்தனது வடிவின் செயல் போலும்
உருவம் விரும்பும் காமசின்னம் ஓதும் தொகுப்பு அது உரை செய்வாம்
** மன்மதனின் சதுரங்க சேனை முதலியன
**61
#2
இரதம் வசந்தம் மத யானை இரவு ஆம் பூவை பசுங்கிள்ளை
புரவி படை மங்கையர் வாசம் பொலியும் இணர் மென் பூம் சோலை
பரவு படைவீடு ஆம் முரசு பரந்த கடல் ஆம் கொடி மகரம்
உரவு மன்றில் வன காளம் உயர் வெண்குடை இந்து அனங்கனுக்கே
**62
#3
சொன்ன குடைக் கால் மதிக் கிரணம் சுரி மென் குழலார் பூசுவன
உன்னும் வதுவை அவன் பரிசை ஓங்கித் தளிர்க்கும் விருகு இலை ஆம்
சின்ன மன்றில் குயில் கூறும் தேரின் உருள் சந்தனச் சாணை
என்னும் நறு மாந்தளிர் பட்டு ஆம் எழில் கைச் சரம் மாதுள மருவே
**63
#4
வெல்லும் மதனவேள் மார்பில் விளங்கும் மாலை இலைஞ்சி மஞ்சள்
புல்லும் கமுகின் நறும் பாளை பொற்பால் இரட்டும் சாமரை ஆம்
செல்லும் அவன் காளாஞ்சி மலர் செண்பகம் மல்லிகை வனசம்
ஒல்லும் வேனில் அவன் திருநாள் உடைவாள் ஓலைப்பூ ஆமே
**64
#5
பதிக்கு மதனன் பரிக் கலணை பன்னு நறும் பூ மல்லிகை ஆம்
கதிக்கு இலைஞ்சி கடிவாளம் கன்னல் சல்லி புன்னை அம் பூ
மதிக்கு அவன் மெய் இடு கவசம் மலிந்த விரை தோழன் வசந்தன்
விதிக்குப்பினவன் தேர்ப்பாகன் விரும்பும் வசந்தன் எனல் ஆமே
**65
#6
அல்லி ஈட்டி வாழை இலை அமர் சால் கட்கம் மதன் தண்டு
வெல்லும் தண்டாயுதம் ஆகும் வேட்கும் தேவதாரியொடு
புல்லும் இரதி என இரு பேர் போந்த மனை ஆர் மாரனுக்குச்
சொல்லும் சாமன் என்பவனே துணை ஆம் தம்பி எனல் ஆமே
** வில்
**66
#7
கதிர்ப் பூம் பச்சைத் தண்டும் வெறி கமழும் பசிய மாந்தண்டும்
மதுக் கொண்டு அலர வழிந்து ஒழுகும் வாசம் உறு மல்லிகைத் தண்டும்
துதிக்கும் கருப்பு அம் தண்டும் அளி சூழும் கமலப் பூந்தண்டும்
விதுத் தண் குடையான் எடுத்த பஞ்ச வில் என்று உணர்ந்தோர் சொல்வாரே
** நாணி
**67
#8
பிச்சிக் கொடியும் மடல் விளங்கும் பிரசம் நறும் தாமரை நூலும்
மெச்சப் பொலிவின் மணம் வீசும் வெட்டிவேரும் கார் வண்டும்
பச்சைப் பசு மாந்தளிர் எனவே பகர்ந்த தனுக்கள் ஐந்தினுக்கும்
மச்சக்கொடியோன் பூட்டிய நாண் வகை ஐந்து என்பர் தகவுடையோர்
** கணை
**68
#9
சொல் தார் நறு முல்லைப் பூவும் தூய் அசோகப் பூவும் மிகக்
கற்றார் புகழும் மாம்பூவும் கடி சேர் தண் தாமரைப் பூவும்
பொற்பாய் அலர் நீலப்பூவும் போரின் மதவேள் செம் கையினால்
பற்றாய்த் தொடுத்து நின்று எய்யும் பஞ்ச பாணம் ஐந்து ஆமே
**69
#10
சிரசின் முல்லை நேத்திரத்தில் திகழ் அசோகு தனம் மீது
விரவு சூதம் மார்பின்கண் விளங்கு முளரி வயங்கு பொறி
அரவப் படத்து நறு நீலம் அணுகச் சமரில் குறி நோக்கி
உர வேள் ஐந்து கணை எய்தற்கு உற்ற தானம் ஐந்து ஆமே
**70
#11
ஏற்ற முல்லை கிடை காட்டும் எதிர்ந்து அசோகு சென்று பல
தோற்றம் காட்டிக் கிடை பொருத்தா சூதம் உடலில் பசலை தரும்
தேற்றம் உறு செந்தாமரைப் பூச் சிந்தை அயர நினைவு உய்க்கும்
கூற்றம் அனைய நறு நீலம் கொலும் வேள் அம்பின் குணம் ஐந்தே
**71
#12
மனதின் மோகம் சனித்தவுடன் மதனன் விரைவின் மனோபவனாய்த்
தனது சொரூபம் அரூபம் எனும் தன்மை தோன்ற மெய் பொலிந்து
சினவி எழும்பிச் சன்னதமாய்ச் சிலையைக் குனித்து நாண் பூட்டி
இன மென் நறும் பூம் கணைகள் தொடுத்து எய்தே பூசல் முடிப்பானே
**72
#13
மலை ஆர் களப முலையாரும் மால் மோகினி வாவியும் காவும்
தலை ஆர் நாடு ஊர் மகிழ் மாலை தண்டு பரி பூங்கிளி களிறு
நிலை ஆர் கங்குல் முரசு கடல் நெடிய துவசம் கயல் கருப்பு அம்
சிலையான் மலரால் யாரையும் தன் செயலில் படுக்கும் ஆணையினான்
** நான்காவது காமசின்னத் தொகுப்பு முற்றும்
** பாயிர முட்பட விருத்தம் – 67
@5 ஐந்தாவது - எழுவகைப் பெண்பருவத் தொகுப்பு
**73
#1
ஒருவன் உபய பதம் போற்றி உருவம் உறு மெய்க் குணம் செய்கை
மருவும் வயது பிறவும் உற வகுத்துத் தகும் ஆறாக அமைத்து
இருபதுடன் ஓர் இரண்டு செய்யுள் இசையும் தொகுப்பில் எழு வகைப் பெண்
பருவ முறையாய்த் தனித்தனியே பன்னும் தொகுப்புப் பகர்கின்றாம்
** பேதை
**74
#2
கூவத் தெரியாக் குயில் பேடு குதலை பிதற்றும் மென்மொழியாள்
மேவச் சிறுவீடு இழைத்து மகார் விரும்பும் சிறுசோறு அடும் குணத்தாள்
பூ வில் சிலை வேள் அரண்மனையைப் பூட்டும் தகைமை அல்குலினாள்
ஆவல் பயிலா வடிவுடையாள் அடர் பொன் பாவை விளையாட்டாள்
**75
#3
கயலில் காலம் பார்த்து அடங்கும் கடல் கொல்லா நஞ்சு அன விழியாள்
பெயலை இளநீர் சுழி தாழ்ந்த பெற்றி போல் வட்டக்குறியாள்
வியல் கொள் வெய்யிலில் கனலும் வித்தின் முளையும் அடங்குதல் போல்
இயல்பின் மார்பத்து அடங்கு தன இரதம் முற்றா இளம் கரும்பே
**76
#4
போற்றும் சிருட்டி முதல் மூன்றும் பொலிவித்து அப்பால் புன் சிருட்டி
தேற்று நகையாள் அனப் பார்ப்பு தீஞ்சொல் பழக வரும் கிள்ளை
காற்றின் அடிபட்டு அயர்வுற்ற கனல் சேர் குழல் சூழியத்தினாள்
பாற்று சஞ்சீவினிக்கு அன்றாம் பருவப் பேதைப் பசும் கிளியே
** பெதும்பை
**77
#5
சத்த சுரம் பாடத் தொடங்கும் தருண மொழியாள் புயல் கண்டு
பத்தி குலவ வந்த மயில் பழகப் பார்க்கும் நடை அன்ன
முத்தை நிரைத்த மூரலினாள் முளை நஞ்சு ஒருவ வில் கணை நாண்
வைத்து வளைத்தல் அனைய கண்ணாள் மதனை எழுதும் விளையாட்டாள்
**78
#6
ஈட்டும் பத்தாயம் புகுதும் எலி போம் வழி பார்ப்பது போல
மூட்டும் காம வழி தேடி முட்டிப் பார்க்கும் அல்குலினாள்
பூட்டு மைய மயல் கருத்தாள் பூக்கும் தருணப் பூங்கொடியாள்
காட்டும் சொருகு குழல் கற்றோர் கல்லாரிடத்துக் கற்பனையாள்
**79
#7
ஆர்த்த மதவேள் கூடாரத்து ஆதாரம் போல் அடிக் கொண்டு
கூத்துச் சமைந்தோர் திரைக்குள் நின்று குறிப்பின் முகம் காட்டுதல் எனவே
காத்த மருமத்து உற்று முகம் காட்டும் இலந்தைக் கனி முலையாள்
பார்த்து முயங்க நாள் கொளும் அப் பருவப் பெதும்பைப் பதுமினியே
** மங்கை
**80
#8
வேனில் கண்டு கூவு குயில் வீசும் வாள் நஞ்சு அன விழியாள்
கானில் புயல் கண்டு ஆடு மயில் களித்துப் பூவைக்கு உரை கூட்டும்
தேனில் பொதிந்த மென்மொழியாள் சிமிழ் நீர்க்குமிழி நிகர் பார்க்கும்
மானித்து இருக்கும் பூண் முலையாள் மயல் தந்து அணைக்கும் மருக்கொழுந்து
**81
#9
அன்னம் போலும் நல் நடையாள் அறல் கார் அனைய குழல் சொருக்குப்
பின்னல் உடையாள் முகை விரிக்கும் பிரச நறும் பூங்கொடியாள் வில்
கன்னலுடையான்தனக்கு ஆண்மை காட்டும் வடிவாள் காம விடாய்
இன்னல் தவிர்க்கும் சஞ்சீவி இனிக்கும் இரசதாளிக் கரும்பு
**82
#10
நாடு இரதி மோகனப் பண்டம் நயந்து சூட்டும் பருவத்தாள்
சேடிமார் நின்று அலங்கரிக்கத் திகைக்கும் இடையாள் பணம் தாழ்ந்த
கோடி அரவும் வாவி அலர் கோகனகத்து முகிழும் இணை
பாட இசையும் அல்குல் உறு பருவ மங்கைத் திருவினளே
** மடந்தை
**83
#11
தேய்ந்த பிறையை நிகர் நுதலாள் தெங்க இளநீர் பொன் கலசம்
ஆய்ந்து மதன் செங்கோல் செலுத்தி அரசுபுரிதற்கு அணி மகுடம்
வாய்ந்த முலையாள் இரு தோட்டின் வழி போய்ப் பாயும் மான்விழியாள்
தோய்ந்து கலவித் தொழில் பழகும் சுரத காமக் கலைக்கியானி
**84
#12
சரச மொழியினாள் விரகதாபம் தணிக்கும் மது மாலை
பரவும் மனத்துக்கு இனிய நடை பயிற்றிக் காட்டும் மென்நடையாள்
உரவிலனுக்கும் இசை தொழிலாள் உவக்கு மணியிற்கு அணிஅன்னாள்
விரவு நடுநாயகம் என்ன விளங்கும் பருவப் பெண்ணரசு
**85
#13
சேரத் துவளும் மின்இடையாள் தெளியப் பழகும் பணிப் படமும்
பாரச் சிலை வேள் அரண்மனையும் பசும்பொன் தட்டும் பரிச் செவியும்
நேரச் செறியும் அல்குலினாள் நெய்த்துத் தகரம் ஆர மணம்
வாரச் செருகும் சொருக்குடையாள் மடந்தைப் பருவ மாதினளே
** அரிவை
**86
#14
கடந்த மோனத்து அரும்தவரும் கண்டால் மயங்கும் பிடிநடையாள்
தடம் தேர்த்தட்டின் நிதம்பம் உறும் தகவினாள் சிற்றெறும்பு ஒழுக்கின்
படர்ந்த ரோமத்து ஒழுங்கினள் செம் பதுமம் பூத்த கொடியிடையாள்
அடர்ந்து காம சல ராசி ஆரத் தழுவும் ஆசையினாள்
**87
#15
துஞ்சு கயலும் சேலும் எனச் சுழலும் விழியாள் பொன்மலை போல்
எஞ்சல் இல்லாது அடர்ந்து இடம் கொண்டு இணைத்து விம்மி இசை பார்க்கும்
குஞ்சரத்தின் இரு கோடும் குறிக்க ஏந்தும் கொங்கையினாள்
விஞ்சை மதநூல் வழி காண விதம் பாராட்டும் மதியுடையாள்
**88
#16
வீரச் சிலைவேள் குருபீடம் விந்தைக் குழற்சிக் கூந்தலினாள்
சேரச்சேரத் தெவிட்டாமல் சித்தத்து இனிக்கும் தேம்பாகு
மாரற்கு இனிய கருவூலம் வழுத்தும் வீணை இசைத் தொழிலாள்
ஆரப் பண்பு தரும் மொழியாள் அரிவைப் பருவத்து அணங்கினளே
** தெரிவை
**89
#17
சீராய்க் குலவும் பிடிக்கு நடை திருத்திக்காட்டும் எழில் நடையாள்
நேராய்த் துவளும் கேசரி போல் நிகழ்த்தும் மருங்குல் பணிமொழியாள்
பார் ஆர் இளைஞர் இருதயமும் பனி முல்லையும் ஆரச் செருகிக்
கார் ஆர் புயல் மீன் காட்டுதல் போல் காட்டும் பலினக் கருங்குழலாள்
**90
#18
நலம் கொள் அமுது நஞ்சும் இணை நவிலும் விழியாள் விது மறுப்போ
இலங்கும் இவள்தன் முகச்செவ்வி இசைய மருந்து தேடி நிதம்
தலம்கொள் மேரு வலம்கொள்ளத் தயங்கும் செந்தாமரை முகத்தாள்
துலங்கு தெண்ணீர் பருகு மதத் தும்பிக் கோட்டுச் சரி முலையாள்
**91
#19
புடத்தில் தெளியும் அபரஞ்சிப் பொன் போல் ஒளிரும் மேனியள்
சூதிடத்தில் பொலியும் விளையாட்டாள் எழுதேன் கூவல் கடி தடத்தாள்
நடத்தின் குலவு சிற்றடியாள் நயந்து காமநூல் பகுத்துத்
திடத்தின் கரணம் முழுதும் உணர் தெரிவைப் பருவச் சேயிழையே
** பேரிளம் பெண்
**92
#20
அட்டகிரியும் வென்று அடக்கி அப்பால் விந்தைக் கிரியினையும்
திட்டமுடனே சென்று அரசு செலுத்தப் பார்க்கும் இரு தனத்தாள்
வட்டம் உறு தன் முகச் சந்திரன் மதிக்குப் போதாது எனக் கருதி
இட்ட நிலவுப் பிறை அணியாள் இரண்டு விழியும் அமுதம் அன்னாள்
**93
#21
பரிவில் அணி கால் அணி அவை காற்பணி என்று அணியாள் தனிக் காமன்
வெருவு நடையாள் மழை கான்று விட்ட எழிலிச் சிகழிகையாள்
ஒரு சங்கையினால் இரு சங்கை உற்று நால் சங்கையும் இசையாள்
தெரியும் காமநூல் மடவார் சிந்தைக்கு உணர்த்தும் செய்கையினாள்
**94
#22
ஆலும் பரத வித மகளிர்க்கு அறிவில் பயிற்றும் குரு அனையாள்
கோலும் தரும நினைவும் இன்சொல் குறிப்பில் பயிலும் பசப்பும் உறச்
சாலும் நெறியாள் பரந்து அமுதம் ததும்பும் வாவிக் கடி தடத்தாள்
ஏலு நிகர்இல் இடையினள் பேரிளம்பெண் பருவத்து ஏந்திழையே
** பெண்களின் பருவ ஆண்டு
**95
#23
தலைவன் போதும் உலா வீதி சார்ந்து கண்டு தொழிற்கு இசையும்
இலையம் பழகும் பேதை முதல் ஏழு பருவக் குணம் தரும் ஆண்டு
உலைவுஇல் ஏழ் பன்னொன்று பன்மூன்று ஓது பதிற்றொன்பான் ஐயைந்து
அலைவுஇல் ஆறைந்துஒன்று அடைந்தாய் அடைவில் எண் ஐந்து அருளினரே
** ஐந்தாவது எழுவகைப் பெண் பருவத்தொகுப்பு முற்றும்
** பாயிரமுட்பட விருத்தம்- 90
@6 ஆறாவது எழுவகை ஆண் பருவத் தொகுப்பு
**96
#1
சகமும் திசையும் உயர் செம்பொன் சயிலப் பொருப்பு நெடும் கடலும்
சுகமது உறவும் துயில் அடக்கும் தோகை பாகன் அடி தொழுது
புகலும் முறையில் பருவமொடு போந்த வயதும் ஒரு கவியில்
பகரும் விதமாய் எழு வகை ஆண் பருவத் தொகுப்பை அறைகின்றாம்
**97
#2
உன்னும் பாலன் மீளி மறவோனே திறலோன் காளையொடு
பன்னும் விடலை முதுமகன் ஆண் பருவம் ஏழாம் என்பர் இவை
மன்னும் ஆண்டு ஏழ் ஈரைந்து வரும் ஈரேழு மூவைந்து
துன்னும் ஈரெட்டு ஐயாறு சொல்லுமாறு எட்டு அளவினவே
** ஆறாவது எழுவகை ஆண் பருவத்தொகுப்பு முற்றும்
** பாயிரமுட்பட விருத்தம்- 92
@7 ஏழாவது எண்வகை மணவிவரணத் தொகுப்பு
**98
#1
இருந்து ஆகமமும் ஆரணமும் இயம்பும் இறைவன் அடி போற்றிப்
பொருந்தாக் காமச் செயல் நான்கும் பொருந்தும் காமச் செயல் ஒன்றும்
திருந்தா ஒருதலைக்காமச் செயல் ஓர் மூன்றுமாய் விதந்து
வருந்தாது ஏழு கவிதையில் எண் வகை சேர் மணமது இயம்பல் உற்றாம்
**99
#2
சதிரால் விளங்கும் பிரமம் பிரசாபத்தியம் ஆரிடம் தெய்வம்
எதிர் சேர் காந்திருவம் அசுரம் இராக்கதம் பைசாசம் என
விதி கூர் மணம் எட்டாம் இவற்றின் விளங்கும் பிரமம் முதல் நான்கு
மதியார் பொருந்தாக்காமம் இரு மனமும் பொருந்தாமணம் ஆமே
**100
#3
ஒத்த குலத்தில் ஆண்டு ஆறெட்டு உற்ற பிரமசாரியற்குப்
பத்தி பெரும் ஆறிரண்டு ஆட்டைப் பருவக் கன்னி தலைப்பூப் போய்
நத்தும் இரண்டாம்பூ வரும் முன் நாரிக்கு இசையும் அணியிட்டுத்
தெத்தம்கொடுத்தல் பிரமம் எனச் செப்பும் வேதநெறியாமே
**101
#4
குலத்துள் உரியோன் வேட்பதற்குக் கொடுத்த பரிசத்தினுக்கு இரட்டி
பலத்தின் கொடுத்துவிடல் பிரசாபத்தியம் கோடு குளம்பு பொன்னால்
நலத்தின் செய்து புனைந்து ஆச்சே நடுவண் இவரைப் பணிசெய் நிறீஇ
நிலத்தில் இவை போல் வாழ்திர் என நீரால் கொடுத்தல் ஆரிடமே
**102
#5
தொக்க மறையின் இயல்பு உணர்ந்து சொற்றபடிக்கு அவ் விதி பேணித்
தக்க நெறியின் மகம் வேட்டோர் தம்மில் ஒருவன்தனை வரித்து
மிக்க விதிநூல் செயலாக விரும்பும் அவர்க்கு அவ் வேள்வி முன்னர்த்
தெக்கு அணையதாய் மகள்கொடுத்தல் தெய்வம் எனவே புகல்வாரே
**103
#6
இனமாய் வருகைக் கிளை நான்கில் இருவர் மனமும் ஐந்திணையின்
கனமாய்ப் பொருந்தும் காமம் அது காந்திருவம் என் மணம் ஆகும்
தனமாய் இருவர் தம்மில் ஒரு தலையார் காம முறை சேர்த்து உற்பனமாய்
விரும்பு மணம் கைக்கிளை பன்னும் அசுரம் முதன் மூன்றே
**104
#7
அகன்ற அசுரம் மணம் பகையை அடர்ந்து துரத்தி உரம் மீறும்
திகழ்ந்த திமில் ஏற்றினை ஒடுங்கச் சேர்த்துத் திரி பன்றியை எய்து
சகங்கள் துதிப்ப எதிர் என்று தங்கு பலத்தில் தனு வளைத்துப்
புகன்ற சபதம் முடித்த திறம் போற்றித் தமது மகள் கொடுத்தல்
**105
#8
தலைவி இசைவின் அன்றி வரு தமர்கள் இசைவின் அன்றியுமே
வலுவின் கொள்ள இராக்கதத்தின் மணம் பைசாசமணம் இயம்பின்
தொலைவின் மூத்தோர் களித்தோர் கண்டு துயின்றோர் பயந்தோர் கலை மாறல்
அலைவுஇல் மயக்கின் தனிமையின் தூய்து அழிந்த இழிந்தோர்ச் சேர்தலுமே
** ஏழாவது எண்வகை மணவிவரணத் தொகுப்பு முற்றும்
** பாயிரமுட்பட விருத்தம்- 100
@8 எட்டாவது புணர்ச்சி வகைத் தொகுப்பு
**106
#1
திரம்கொண்டு இருந்த கயிலையினைச் சென்று ஓர் அரக்கன் எடுத்தலுமே
உரம்கொண்டு அலற விரல் நுதி ஒன்று ஊன்றி அடர்த்தோன் தாள் பரவி
முரண் பெறாது கவி நான்கின் முயங்கும் தலைவன் தலைவியொடும்
இரண்டு பகுப்பில் அறு வகையாய் இசையும் புணர்ச்சி வகை சொல்வாம்
**107
#2
மெச்சு பெருமையுடன் தலைவன் மேவல் ஆலு நாணம் மடம்
அச்சம் அடைவின் தலைவிதனக்கு அமைதலாலும் இருவர் உளத்து
இச்சை கவர உயிர் அழுந்தி இசையும் புணர்ப்பு நன் புணர்ப்பான்
நச்சிய அவத்தை இருவருக்கு நண்ணுவது மெய்யுறுபுணர்ப்பே
**108
#3
இயற்கைப்புணர்ச்சி இடந்தலைப்பாடு ஏத்து பாங்கற்கூட்டம் மொழி
நயத்தின் பாங்கியிற்கூட்டம் நான்கும் களவின் புணர்ச்சியவாம்
வயத்தின் குரவர் தரப் புணர்தல் வாயிலால் சென்று உடன் புணர்தல்
செயற்கைப்படும் இப் புணர்வு இரண்டும் தெளிந்த கற்பின் புணர்ச்சியவே
**109
#4
களவு கற்பாம் இரு கைகோள் கருதிக் களவு ஊழ் காரணமாய்
அளவில் உள மாண்பு ஒத்து இருவர் அறிந்த காமப் புணர்ப்பு ஆகும்
வளமை கர ஊழ் காரணமாய் வழங்கும் உலக நடை இயல்பின்
புளக முலையாள்தனை விரும்பிப் புணர்தல் கற்பின் புணர்வு ஆமே
**110
#5
இன்பத் தலைவி தன் விரகத்து இயல்பு மதனம் புலி அன்றில்
தென்றல் பிற ஆகிய பகையின் திறனும் அவள் வாட்டமும் என்று
நன்றின் பாங்கி முதல் தூது நவின்று தலைவன்தனக்கு உரைப்ப
அன்பிற்கு உரிய தலைவன் சென்று மருவல் பிறவும் சிற்றின்பே
** எட்டாவது புணர்ச்சி வகைத் தொகுப்பு முற்றும்
** பாயிரமுட்பட விருத்தம்- 105
@9 ஒன்பதாவது - புணர்தற்குரிய வகைத் தொகுப்பு
**111
#1
தினத்தின் சினந்த காமாரி திருத்தாள் பணிந்து சாத்துவிக
குணத்தைப் பெறு சுக்கிரீதீரன் குலவு வரை மின் ஆர் போல
மனத்திற்கு உரிய தலைவனொடு மகிழ்ந்து தலைவி புணர்ந்து இருக்கும்
புணர்த்தல் குறியின் செய்கைதனைப் போந்த கவி ஐந்தால் உரைப்பாம்
**112
#2
புகழ்ந்து ஆபரணம் தரித்து நுதல் பூட்டும் வசியத் திலதம் இட்டுச்
சுகந்தாதிகள் மென் குழற்கு அணிந்து தொய்யில் இரு பூண் முலைக்கு எழுதித்
திகழ்ந்தார் நறும் செங்குங்குமமும் திமிர்ந்தே மலர்த் தாள் கலத்து அகமும்
நிகழ்ந்தே இலகப் புழுகு பனி நீரால் சாந்தம் உடல் பூசி
**113
#3
வண்ண மகளிர் அலங்கரிப்பும் மதனன் உரவும் உண்டாட்டின்
நண்ணும் மனமும் கிளி பூவை நவிலும் இன்சொற்கு அக மகிழ்வும்
உண்ணும் பால் ஓதன விருப்பும் உற்ற கேள்வனுடன் இன்பும்
விண்ணின் மதி தென்றலை வேட்டு வீணை பயில்வின் வீற்றிருப்பும்
**114
#4
பாங்கின் நிமிரும் பூங்காவின் படி சேர் மலர் வாவிக் கரையில்
ஓங்கு தென்றல் அசை முன்றில் உயர் பொன் சிகர மாடத்தில்
தூங்கும் ஊஞ்சல் செய்குன்றில் துலங்கும் சித்திர மண்டபத்தில்
ஈங்கு வேண்டும் இடத்தில் இனிது இயங்கு சிங்காசனக் கட்டில்
**115
#5
மிசையின் பஞ்சசயனத்தின் மீது விரை சேர் மலர் இனங்கள்
நசையின் காம்பு கொய்து பெய்து நறு மெல்லிய வெண் மடியதன் மேல்
இசைய விரித்துப் பட்டு அருகும் எழில் கொட்டைகளும் பரப்பி மஞ்சம்
அசைய மேற்கொண்டு இருந்து சுருள் அஞ்சு மணத்தோடு எதிர்மாறி
**116
#6
அருந்திச் சரச கவி படிக்க அனங்கன் நாவே சங்கதித்து
விருந்தின் உபரிக் கொக்கோக விதத்தின் கொங்கை குலுங்க இடை
வருந்தித் துவளப் புள் குரலும் வகுத்த தாடனமும் முழங்கப்
பொருந்தி மகிழ்நனொடு குலவிப் புணர்தற்கு அறியும் குறிப்பு ஆமே
** ஒன்பதாவது புணர்தற்குறிய வகைத் தொகுப்பு முற்றும்
** பாயிரமுட்பட விருத்தம்- 111
@10 பத்தாவது பிரிவின் வகைத் தொகுப்பு
**117
#1
ஆறும் ஆரு மதிக்கொழுந்தும் அணிந்த சடையான் உமையை ஒரு
கூறு மேவி உலகு அருளும் கோமான் அடியைப் பணிந்து ஏத்தி
மீறும் இரு கைகோள் பகுப்பில் வினவு கவிதை இரண்டில் எட்டாத்
தேறு பிரிவின் வகையினது செயலை வியந்து கூறல் உற்றாம்
**118
#2
மருவி ஒரு வழிப் பிரிதல் மையலுடனே வரைவிடை வைத்து
உருகும் அன்பின் உறு கேள்வன் உவந்து பொருள்வயின் பிரிதல்
பெருகும் இயல்பின் வாசகங்கள் பிறக்கப் பாடும் தமிழ் வல்லோர்
கருது நெறியின் கட்டுரைத்த களவின் பிரிதல் இரு வகைத்தே
**119
#3
துணிவின் பரத்தையின் பிரிதல் தூதின் பிரிதல் மதி கூர்ந்து
பணிவின் கல்வியின் பிரிதல் பரிந்து காவலின் பிரிதல்
திணிதின் உதவியின் பிரிதல் தேடும் பொருள்வயின் பிரிதல்
கணிதம் உறு மோகத் தலைவன் கற்பின் பிரிதல் அறு வகைத்தே
** பத்தாவது பிரிவின் வகைத் தொகுப்பு முற்றும்
** பாயிரமுட்பட விருத்தம்- 114
@11 பதினோராவது - பெண் விரக வகைத் தொகுப்பு
**120
#1
உலகம் யாவும் ஒரு பொருளாய் உயிருக்குயிராய் நிறைந்து ஓங்கும்
அலகுஇல் சோதி வடிவான் சேவடியை இறைஞ்சிக் கவி நான்கின்
குலவு மதனும் ரதியும் போல் கொஞ்சி அணையும் உயிர்த் தலைவன்
விலகும்போது தனித்து உறு பெண் விரகம் உறுமாறு இயம்பல் உற்றாம்
**121
#2
தளவ நகையார் விரகத்தின் தயங்கின் புகுதல் முகம்புரிதல்
அளகம் சரிதல் உத்தரியம் அகலல் உடுத்த துகில் சோர்தல்
வளைகள் சிதற நாண் அழிதல் மடலூர்தற்கு மனம் துணிதல்
புளக முலை பொன் பசலை கொண்டு பொருமல் அணை முள் போன்றிடுதல்
**122
#3
கரவாய் நினைத்தல் மெய் வெளிறல் கருத்து உள் அடங்காத் துயருறக் கண்
விரவாத் துயில் நெட்டுயிர்ப்பு எறிதல் விரும்பிக் கூடல் இழைத்து அயர்தல்
பரவு உரோமப் பொலிவொடு ஒத்தல் பாவையார் சொல் வசைக்கு இரங்கல்
உரவால் நகுதல் அயன் மறைத்தல் உண்ணும் பால் ஓதனம் கைத்தல்
**123
#4
பதி வாய் உருவின் எழில் நோக்கிப் பணிந்து பரதவித்து அறலை
மதவேள் சசி புள் கார் கடல் கான் மந்தான் நிலம் மற்று இவற்றினொடும்
எதிர்கண்டு இரந்து புலம்புறல் கை இரண்டும் இசைய மேலெடுத்தல்
துதி சொல் குறளை மெய் வருடல் சோர்வின் காம சலம் பெருகல்
**124
#5
மூசும் விரகாக்கினியின் நுதல் வெயர்த்தல் அணி முத்தம் பொரிதல்
ஊசல் கழங்கு அம்மனை விளையாட்டு உன்னாக்கிடை மெய் அணி திருத்தல்
மாசுஇல் உடையைப் பெயர்த்து உடுத்தன் மயங்கிப் பிதற்றல் தனி இருக்கை
கூசி மேனி நடுங்கல் எனக் கூறும் அவத்தை ஐயாறே
** பதினோராவது பெண் விரக வகைத் தொகுப்பு முற்றும்
** பாயிரமுட்பட விருத்தம்- 119
@12 பன்னிரண்டாவது - புருட விரகத் தொகுப்பு
**125
#1
கணமும் அடியார் உளம் பிரியாக் கருணை மூர்த்தி நளின பதம்
அணவு நினைவால் தொழுது ஏத்தி அருளும் கவிதை ஒன்றில் உற
மண மெல்லிய பூவணையின் அகம் மகிழ்ந்து தினமும் கலந்து இனிது
புணரும் தலைவிதனைப் பிரியும் புருட விரகச் செயல் உரைப்பாம்
**126
#2
காண்டல் வேட்கை சிந்தித்தல் கசிவின் மெலிதல் மெலியாத
ஈண்ட அயலுக்கு இயம்புதல் நாண் இழத்தல் காணும் அவை எல்லாம்
தூண்டு மனதின் குறிக்கு ஏற்கத் தோன்றல் பிதற்றல் மோகித்தல்
மீண்டும் மாழ்கல் இவை புருட விரக அவத்தை பத்து ஆமே
** பன்னிரண்டாவது புருட விரகத் தொகுப்பு முற்றும்
** பாயிரமுட்பட விருத்தம்- 121
@13 பதின்மூன்றாவது - விரகப் பெண்ணின் பகையாதிய தொகுப்பு
**127
#1
விண்ணும் அகன்ற புவி அனைத்தும் விளங்கும் புகழ்ச் சுக்கிரீமகிபன்
கண்ணு மனத்தில் குடியிருந்து காக்கும் திரிமூர்த்தியைப் பரவி
எண்ணும் கவிதை ஓர் ஐந்தால் இயம்பு முறையால் இனி விரகப்
பெண்ணின் பகை ஆதி அவற்றைப் பேணி விதந்து கூறல் உற்றாம்
** பகை
**128
#2
முத்துக் களபம் மருக்கொழுந்து முல்லை பிச்சி முதலாம் பூம்
தொத்துக் கதலி கடல் ஆம்பல் சூழும் குளிரி பூம் பாயல்
நத்துக் கவிய அடர் கங்குல் நறும் தண் பனி நீர் இவை பத்தும்
பித்துப் பொலிய வரும் விரகப் பெண்ணின் பகை என்று எண்ணுவரால்
** நீக்கல்
**129
#3
இலங்கு பணியும் பைம் தொடியும் இசைந்த கொங்கைக்கு அணி கச்சும்
துலங்கு முத்து வடமொடு பூம் தொடையும் புனையாள் இரு விழிக்கு
நலம் கொண்டு ஒளிர் அஞ்சனம் தீட்டாள் நயந்து திலக நுதற்கு அணியாள்
கலங்கும் விரகத் துடியாலே கமழ் பூங்குழலும் முடியாளே
**130
#4
அரிய கழங்கு அம்மனை சுனை நீராடாள் கான் ஏர் இசை பயிலாள்
பரிவில் வளர்க்குங் கிள்ளை முகம் பாராள் மானைக் கையணையாள்
பிரியம் தரு சொல் பூவையையும் பேணாள் விரகக் கொடுமையினால்
உரிய பாங்கியர்க்கு ஏவல் உவந்து புரியாள் மனம் இறந்தே
** துயர்க்கு ஏது
**131
#5
தென்றலாலும் குயிலாலும் திங்களாலும் வேயாலும்
அன்றிலாலும் கடலாலும் அந்தி வரு சே மணியாலும்
வென்றி மதவேளாலும் இசை வீணையாலும் நொந்து மனம்
கன்றியூர்க்கு மலர் விளைக்கும் கலங்கும் பொழுது நலம் இறவே
** தூது
**132
#6
கொண்டல் பாங்கி மயில் பூவை குயில் பூம் பொதியமலைத் தென்றல்
கண்ட நறும் பூ மட அன்னம் கருதும் நெஞ்சம் பசும் கிள்ளை
வண்டு விறலி பிறவும் இவள் வருத்தம் அகலும்படி தூது
விண்டு தலைவன் புயமாலை வேண்டித் தருதற்கு இயல்பினவே
** பதின்மூன்றாவது விரகப் பெண்ணின் பகையாதிய தொகுப்பு முற்றும்
** பாயிரமுட்பட விருத்தம்- 127
@14 பதினான்காவது - மகளிர் பாதாதியுவமைத் தொகுப்பு
**133
#1
தவ மெய்ஞ்ஞானர் உளத்து இனிக்கும் தண் தேன் அனையான் கழல் பேணித்
துவ மா மேரு கிரி அணை தோள் சுக்கிரீமகிப தோன்றல் உயர்
நவமது உறும் ஒண் தட வரை நேர் நாரியார்தம் பாதாதி
உவமை அலங்காரம் புகலல் உற்றாம் கவி எண் மூன்றாறால்
** உள் அடிக்கும் கால்விரலுக்கும் இணை
**134
#2
வனசம் அனை மாந்தளிர் முயலின் வயிறு செயலை அனத் தூவி
சுனகன் நாக்குச் செம்பஞ்சு துகள் தீர் அனிச்சம் இவை மடவார்
வினவு உள் அடி நேர் பெறும் காலின் விரல்கள்தமக்கு மஞ்சள் முளை
அன என்று உரைப்பார் துவர்க் கொம்பும் ஆம் என்று உவந்து சொல்வாரே
** காலின் உகிர்க்கும் புறங்காலுக்கும் கரட்டுக்கும் இணை
**135
#3
காலின் விரல் சேர் உகிர் படிகம் கணம் பத்து ஆகக் கடைந்த மதி
சாலும் புறம் கால் கமடமும் பொத்து அகமும் கமுகின் பாளையும் ஆம்
பாலின் பாளை உள் குரும்பை பந்து தராசு சிப்பி இவை
நாலும் கரட்டுக்கு உவமை என நவில்வர் இயல்நூல் கவி வலரே
** குதிங்காலுக்கும் கணைக்காலுக்கும் இணை
**136
#4
பரவு சிறு தூரிகைப் பெட்டி பந்து சங்கு வனசம் முகிழ்
இரச நறு மாங்கனி குதிங்கால் ஏற்கும் உவமை பெரும் தூணி
விரவு தேம் பூ விரி பாளை வேணு காளம் வரால் ஐந்தும்
உரவு கணைக்காலுக்கு இணங்கும் உவமை ஆம் என்று உரைப்பாரே
** முழந்தாளுக்கும் தொடைக்கும் இணை
**137
#5
அலவன் பசு மூக்கு உற்ற திரடு ஆள்வான் பணி கேடகத்தின் குமிழ்
சுலவு முழந்தாட்கு உவமை எனச் சொல்வர் தொடைக்கு ஆனைத் துதிக்கை
சலமில் ஈனா இளம் கதலித் தம்பம் அல்குல் தடம் நீந்தக்
குலவு தெப்பம் தூண் ஆனங் குறி சேர் உவமை நெறியினவே
** நிதம்பத்திற்கும் குறிக்கும் இணை
**138
#6
பொன் தட்டு அனங்கன் அரண்மனை வேள் போக விடம் காக் கணம் பூம் பை
தெற்று தேன்கூடு அரவ படம் செந்தாமரைப்பூ மதுக் குழாஅய்
பற்றும் வாழைப்பூ மடல் பொன் பதக்கம் குதிரைச் செவி தேர்த் தட்டு
உற்ற அமுதம் சருக்கரைக் கூடு உடும்பின் வாய் பைந்தேன் கிணறு
**139
#7
அடரும் சத்திபீடம் மதன் ஆலவட்டம் குளமடை பாற்கடல்
தூ விளக்குச் சங்கநிதி கள்ளன் தளிர் வெற்றிலை விண்ணில்
படரும் அரசின்இலை பட்டம் பருவம் ஏழுக்கு அல்குல்தனைத்
தொடரும் உவமை பெண்குறிக்குச் சொல்லத்தகும் மான்குளம்பு என்றே
** இடைக்கும் வயிற்றுமடிப்புக்கும் வயிற்றுக்கும் இணை
**140
#8
கொடி நூல் துரும்பு தேய்ந்த பிறைக்கொழுந்து சிங்கமதன் வஞ்சி
துடி விண்மீன் கைப்பிடி குலிசம் சுருதி இடைக்கு ஒப்பு ஆம் ஏறும்
படி நீர்த் திரை ஒவ்வும் மடிப்பும் பயிலும் வயிற்றிற்கு ஆல்இலையும்
கடி சேம்புஇலையும் மதிப்பிளவும் கதலிக்குருத்தும் இணை ஆமே
** உந்திக்கும் வயிற்று ரோமத்திற்கும் இணை
**141
#9
வட்டச் சோகி மல்லிகைப்பூ வரு நீர்ச்சுழி நந்தியாவர்த்த
மொட்டு என்று உவமை உந்திக்கு மொழிவார் சலாகை வார்க் கயிறு
துட்ட மதனன் நாண் ஒழுக்கம் தும்பித் துதிக்கை எறும்பு ஒழுக்கம்
விட்ட கரிய மணிக்கோவை விதிரிட்டு ஏகும் மத தாரை
**142
#10
விரும்பு ஆல்இலையின் நடு நரம்பு விண்டு கிடந்த இரதவடம்
கரும்பாம்பு இளநீர்க்காம்பு நறும் களபத்தின் தண் துளித் தாரை
அரும்பு ஆர் வனசப் பூம் பசும்தாள் அவிர் வான் தாரை என்று இயைய
வரும் பேர் உவமை பெறு மடிப்பின் வயிற்று ரோமத்து ஒழுங்கினுக்கே
** கொங்கைக்கு இணை
**143
#11
வல்லுச் சக்கிரவாகமதன் மகுடம் எலுமிச்சம் கனி பூம்
வில்வக் கனி மாங்கனி தேங்காய் விளவின்கனி கோபுரத்தூவி
சொல் வெற்பு இளநீர் கதலிப்பூ சொன்னத் தாளம் சிவலிங்கம்
தெல்லுக் கரகம் கோங்கு அரும்பு சிமிழ் பம்பரம் பொன் குடம் கிண்ணம்
**144
#12
செண்டு குமிழ் வார் கூடாரம் சேவின் திமில் பொன் கரண்டகம் மென்
புண்டரீகம் முகிழ் பந்து புன்னைக்காய் மாதுளங்கனி மேல்
கொண்ட புளகப் பிடி செம்பு கொட்டைப்பாக்குப் பரிதி மதி
மிண்டும் இபம் மத்தக மருப்பு மிளிரும் முட்டை பசும்பொன் தேர்
**145
#13
படர்ந்த செப்பு மாவிலங்கம் பழம் ஆறு ஏழும் இணைந்து இறுமாந்து
அடர்ந்து விம்மிச் சுணங்கு அரும்பி அண்ணாந்து இளகிப் பணைத்து எழுந்து
தொடர்ந்து களபம் ஒழுக நறும் தொய்யில் இலக வெண் தரள
வடம் கொள் புளக முலைக்கு உவமை வழுத்தாய் பருவத் திறன் உணர்ந்தே
** விரலுக்கும் விரலுகிர்க்கும் இணை
**146
#14
அலரிக்காய் முத்திரைக்கோல் பொன் ஆழி துலங்கும் பயற்றங்காய்
குலவப்படு மாந்தளிர் பவளக் கொம்பு கெளிறு கிட்டிக் கோல்
நிலவச் சுழற்றும் திறவுக்கோல் நெருங்கும் இரு கை விரற்கு உவமை
கலவப் பெறும் அவ் விரல் உகிர்க்குக் கருதும் கிளிமூக்கு ஒப்பு ஆமே
** கைக்கும் முன்கைக்கும் தோளுக்கும் இணை
**147
#15
தளம் சேர் செந்தாமரை காந்தள் தயங்கும் முச்சில் திலகம் என
வளம் சேர் அங்கை பெறும் உவமை மானும் முன்கை யாழ்ங்கோடு
விளங்கும் எழில் பூரணகும்பம் இசையில் தரித்த மாலிகை வேய்
கிளர்ந்த மலர்ப் பஞ்சணை மூன்றும் கிளர் மென் தோளுக்கு இணை ஆமே
** கழுத்துக்கும் முகத்துக்கும் வேர்வைக்கும் இணை
**148
#16
சங்கு செம்பு பாலிகை பூசனிப்பூச் சூல் கொள் இளம் கமுகு
மங்கலம் சேர் சுருள் ஏந்து மடலும் கழுத்திற்கு உவமை பெறும்
திங்கள் படிமக்கலம் கமலம் செண்டு பூந்தட்டு இவை தரணி
எங்கும் புகழும் திருமுகத்துக்கு இசையும் முத்தம் வியர்வு ஆமே
** அதரத்துக்கும் வாய்க்கும் இணை
**149
#17
கொண்ட பவளம் முருக்கின் இதழ் கோபம் இலவு செவ்வரத்தம்
தொண்டை வீழி அமுத துண்டம் சொல் கபாடம் மாதுளம்பூ
வண்டு கவியும் செம் குமுத மலர் தூதளை செம் கமலம் ஒப்புக்
கண்டு மொழிந்தார் ஈர் இதழ்க்கும் கனி வாய்க்கு இணை ஆம் செங்குமுதம்
** எயிற்றிற்கும் நகைக்கும் இணை
**150
#18
முத்துத் தளவு புனை அரும்பு முருந்து மாதுளங்கனியின்
வித்துப் பதுமராகம் இணை விரும்பும் எயிற்றிற்கு ஆம் பரிவில்
சித்துப் பொலியும் நகைக்கு உவமை திகழ் வெண் நிலவு ஆம் எயிறு சற்றே
ஒத்துச் சிவந்தால் பவளமும்தான் ஒவ்வாது என்றே உரைப்பாரே
** மொழிக்கு இணை
**151
#19
வாகின் உறு தீம் பால் செழும் தேன் வண்ணப் பசும் பூங்கிளி அமுதம்
பாகு கரும்பு கற்கண்டு பாடும் யாழ் முக்கனி சீனி
ஏகு பூவை சருக்கரை வண்டு இரங்கும் இசை கோகிலம் குழல் என்று
ஆகும் இவை பன்னேழும் இனித்து அருளும் சொல்லுக்கு இணை ஆமே
** கவுளிற்கும் மூக்கிற்கும் இணை
**152
#20
சந்தச் சாணை பரிக் கலணை சாரும் மூக்கின் கண்ணாடி
அந்தக் கவுளினுக்கு உவமை ஆம் எள்பூவும் குமிழ் அரும்பும்
முந்தக் கமழ் செம்பக அரும்பும் முருகு ஆர் இலவின் பூங்காம்பும்
பந்தக் கவிஞர் எல்லோரும் பகர்வார் நாசிக்கு இணை எனவே
** விழிக்கு இணை
**153
#21
வேல் வாள் அமுதம் கருங்குவளை வேலை மாவின் வடு வகிர் மான்
கோல் பங்கய மஞ்சனம் குடங்கை கூற்று விடம் வண் துவலை மழை
சால்பின் உறு அஞ்சனம் கயல் சேல் சகோரம் வழி போய்க் குழை அடர்ந்து
மால் விதாதா சிவன் உருவின் வயங்கும் விழிக்கு ஒப்பு இவை ஆமே
** விரகப் பெண் விழிக்கு இணை
**154
#22
நெஞ்சு கறுத்த பேதைக்கு நிகழ்த்தும் விழி செங்குமுதம் ஒப்பு ஆம்
வஞ்சமுடன் கோரமும் மிகுந்து மையல் பூட்டும் கருணையுமாய்த்
துஞ்சும் மதர்ப்பினொடு கருமை சூழ்ந்து கூர்மை நனி உடைத்தாய்
விஞ்சை மதன் ஆகமம் வழிய விழைக்கும் கடைக்கண் வேல் ஆமே
** காதிற்கும் புருவத்திற்கும் இணை
**155
#23
நகு பூம் வள்ளை பொன் ஊசல் நவில் கத்திரிகை தராசு அலை மான்
புகுதும் வாசல் நாராங்கி புகழும் காதுக்கு உவமை உறும்
தகு நீலாஞ்சனமும் சலசத் தாளினொடு சிங்காடி வில்லும்
செகும் வாள் உறையும் கடற்கரையும் செப்பும் புருவம் ஒப்பு ஆமே
** நுதலுக்கும் திலகத்திற்கும் இணை
**156
#24
அகத்தி அரும்பும் வாசிகையும் அனுக்கக் குனிக்கும் பூம் சிலையும்
பகுத்த பிறையும் கொக்கு இறகும் பகரும் நுதலுக்கு இணை ஆகும்
வகுத்த நுதலின் இடும் திலகம் மானும் தினகரோதயமும்
சகத்துக்கு இறைவன் நுதல் கண்ணும் தயங்கு நாகரத்நமுமே
** குழலுக்கு இணை
**157
#25
கொன்றைக்கனி கல்லார் மனது கூந்தல் கமுகு பொதுமடந்தை
தன்றன் இதயம் சூல் மேகம் சவரி கருமை அடர் கங்குல்
மன்றல் கமழும் அஞ்சனிப்பூ வயங்கு சிறை வண்டு இனம் சோலை
துன்ற வரு பைம் புனல் கொழிக்கும் தூய அறல் இந்திரநீலம்
**158
#26
இருள் சைவலம் ஓர் மூவைந்தும் இணங்கும் இளைஞர் ஆருயிரும்
உருவின் பல மென் நறும் பூவும் ஒக்கச் செருகிக் கடை குழன்று
வரும் ஐந்தழகு போன்று நெய்த்து வண்டு சூழ்ந்து குய் ஆர்ந்து
தரு தேன் துளிப்ப வழிந்து ஒழுகும் தகரக் குழலுக்கு இணை ஆமே
** சடைக்கு இணை
**159
#27
கன்னிக் கமுகின் பூம் பாளை கரிய பிடி யானைத் துதிக்கை
என்னக் கூறும் மதிப்பகையும் ஏற்கும் பிச்சி மருக்கொழுந்தும்
புன்னைப்பூச் செண்பகம் முல்லைப்பூச் செவ்வந்தி பொலிந்து இலகப்
பின்னுக்கு அழகாய் வகுப்பெடுத்துப் பின்னிவிடு பூம் குழற்கு இணையே
** பதினான்காவது மகளிர் பாதாதியுவமைத் தொகுப்பு முற்றும்
** பாயிரமுட்பட விருத்தம்- 154
@15 பதினைந்தாவது - பெண்ணின் உவமை அலங்காரத் தொகுப்பு
**160
#1
விழவில் பொலியும் அடி கை மலை மேவும் எந்தை நளின மலர்க்
கழலில் பொலியும் அடியவர் பூம் கழலைத் தொழுது கவி மூன்றில்
நிழலில் பொலியும் சுக்கிரீப நிருப நாட்டு வனிதையர் போல்
அழகில் பொலியும் பெண் உவமை அலங்காரத்தை அறைகின்றாம்
**161
#2
குயில் மோகினி தேன்பாகு கிள்ளை கொடி மின் காமன் அபிடேகம்
உயிர் மான் ஆசைக் களஞ்சியம் பொன் ஓங்கு காமக் கலைக் கியானம்
பயில் சேர் கொல்லி அம் பாவை பசும் பூம் கொம்பு சஞ்சீவி
மயில் பூம் கஞ்சம் அமுத புஞ்சம் வாடா விளக்கு ரசகுளிகை
**162
#3
திரு மேனகை பாரதி மதி செந்தேன் செங்கரும்பு மருக்கொழுந்து
மருவே தென்றல் உருப்பசி சூர் மகளிர் காமன் குருபீடம்
விருது ஏ தெய்வம் அயிராணி வெண் முத்தாரம் மட அன்னம்
முருவே பிடி என்று இவை பிறவும் ஓதும் பெண்கட்கு ஒப்பு ஆமே
** வடிவு மேனி தேமல், சாயல் நடை பார்வை இவைகட்கு உவமை
**163
#4
பன்னும் வடிவின் பாவை திருப் பைம்பொன் மலர் செந்தளிர் மேனி
பொன்னும் வேங்கை நறும் பூவும் பொலிந்த தேமற்கு இணை கூறும்
மின்னும் மயிலும் சாயல் ஒக்கும் விகங்கம் பிடி மென் நடை நிகரும்
மன்னும் பார்வைக்கு இணை பிணையாய் வழுத்தும் பிறவும் மதித்து உரையே
** பதினைந்தாவது பெண்ணின் உவமை அலங்காரத் தொகுப்பு முற்றும்
** பாயிரமுட்பட விருத்தம்- 158
@16 பதினாறாவது - புருட உவமை அலங்காரத் தொகுப்பு
**164
#1
நவி கூர் மழு ஏந்திய வேத நாத கீதன் ஓங்கு குழைச்
செவியான் விரவான் மதிச்சடையான் திருத் தாள் தொழுது கவி ஆறில்
புவிமாதொடு பூமலர்மாது புணர் மால் சுக்கிரிமகிபன் எனக்
கவின் ஆர் புருட உவமை அலங்காரம் வருமாறு இயம்பல் உற்றாம்
**165
#2
திருமால் முருகன் அளகேசன் தென்னன் இந்திரன் தேனு முகில்
உரு ஆர் மதனன் பஞ்சவர்கள் உண்மைவாசகன் குமுணன்
வரு சீவகன் மூவேழ் வள்ளல் வனச சங்கநிதி பஞ்ச
தரு மார்க்கண்டன் அப்பாச்சி சயந்தன் உதயன் யூகி மந்திரி
**166
#3
விதுரன் துருவன் மகம் மேரு வியாழன் கண்டன் இடியேறு
கதிரோன் சேடன் சீராமன் கலை தேர் முனிவன் இலக்குமணன்
துதி சேர் வாணன் சிங்கேறு சோமன் பிறவும் புருடருக்கு
மதி தேர் புலவர் உவந்து இனிது வழுத்தும் உவமைச் சிறப்பினவே
**167
#4
நீதி வேள்வி வெற்றி கொடை நிலைமை செல்வம் கல்வி தனம்
ஓதும் மேன்மை யூகம் அழகு உண்மை பெருமை காப்பு வலி
போதம் பிறவும் பொருட்கு உவமை பொருந்த மறையோர் முதலோர்க்கும்
பாதுகாத்துத் தக்க வகை பாடும் இயல்பில் பகர்வாயே
**168
#5
தோற்று நிந்தைதுதி நிந்தாத்துதி என்று இயம்பும் வகை மூன்றும்
ஏற்றும் தக்க இயல்பு தகா இயல்பு நோக்கி இழிபு உயர்வின்
போற்றும் முறை ஆம் ஈர் இயல்பின் பொருள் சார்பு அறிந்து பொருந்தும் நெறி
சாற்றும் உவமை அணி கொடுத்துச் சான்றோர் மதிக்கச் சாற்றுவையே
**169
#6
மன்னர் ஈன்ற புதல்வருக்கு வயது ஈராறு முதலா மேல்
பன்ன வரும் ஈரெட்டு அளவும் பரவும் முருகன் ஒப்பு ஆகும்
கன்னல் மொழி மங்கையர்தமக்குக் கதித்த பெதும்பைப் பருவம் முதல்
சொன்ன அரிவைப் பருவம் வரை சொற்ற திருவுக்கு இணை ஆமே
**170
#7
நினையும் வனச மதி முகம் கண் நிழற்றும் கமலம் சிலை மார்பு
முனை கொள் கரம் கார் தரு வனச மொழியும் புருடர் உறுப்பின் அணி
புனைவர் கருமம் பயன் மெய் உருப் புகலும் நான்கின் பொருள் புணர்வு ஒத்து
இனைய உவமை அலங்காரம் எல்லாம் அமையும் இயல்பு ஆமே
** பதினாறாவது புருட உவமை அலங்காரத்தொகுப்பு முற்றும்
** பாயிரமுட்பட விருத்தம் – 165
@17 பதினேழாவது - முப்பொருள் வகைத் தொகுப்பு
**171
#1
கதனம் உறும் வெம் பரித் தொகையைக் கானல் உழலும் நரித் தொகையாய்
இதம் உற்று இயங்கும் அடியவற்காய் இயற்றினோன் பொன் பதம் ஏத்தி
முதலும் உரியும் கருவும் என மொழியப்படும் முப்பொருள் வகையை
உதவு கவிதை பன்னொன்றால் உணரும்படி தேர்ந்து உரைக்கலுற்றாம்
**172
#2
குறிஞ்சி முதல் ஆயின ஐந்தும் குறியாய் அவை சார் இடன் ஐந்தும்
அறிந்து கொளும் அவ் ஈரைந்தும் அடைவே இரண்டில் ஐந்திணை ஆம்
பிறந்த பாலை ஒன்று ஒழியப் பேசுவது நால் நிலம் ஆகும்
திறன் செய் பொழுது நிலனும் எனச் செப்புவது ஆம் முதல்பொருளே
**173
#3
பகு கார் கூதிர் முன் பின் பனி பகரும் இள முதிய வேனில்
புகும் ஆவணி தொட்டு இரண்டிரண்டாய்ப் பொருந்துமாறும் பெரும்பொழுது ஆம்
உகு மாலை யாமம் வைகறை உற்ற காலை உச்சி எற்பாடு
இகு செங்கதிர் அமையம் தொடங்கி ஈரைம் பதம் மற்று இவை ஆமே
**174
#4
மனு கூதிரும் முன்பனியும் யாமமும் ஆம் குறிஞ்சி வேனிலும் பின்பனி
நண்பகலும் பாலை முல்லை படு கார் மாலை கார் முதலாயினவும்
வைகுறுவும் இரண்டும் இசையும் மருதம் பெரும்பொழுதுந்துனும்
ஓர் ஆறு சிறுபொழுதின் சொலும் எற்பாடு நெய்தலுக்கே
**175
#5
குன்றில் புணர்ச்சி அரும் பாலை கொடிய பிரிவு செறி முல்லை
ஒன்றும் இருப்புத் தண் மருதம் ஊடல் நெய்தல் இரங்கல் ஐந்தும்
துன்றும் இவற்றின் நிமித்தம் ஐந்தும் தொகையாய் நின்ற ஈரைந்தும்
வென்றி தரு நூல் இயல்பு உணர்ந்த மேலோர் விரும்பும் உரிப்பொருளே
**176
#6
பகரும் தெய்வம் நீர் இருபாலோர் பறை புள் விலங்கு ஊர் தரு நறும் பூ
தகவுஇல் உணவு பண்ணொடு யாழ் தகைசெய் தொழில் என்று ஈரேழும்
புகல விளங்கும் கருப்பொருள் ஆம் பொருந்த மருளின் காரணத்தால்
மகிழ் முப்பொருளும் தத்தம் திணை மாவும் மயக்கம்பெற வருமால்
**177
#7
மட்டில் குறிஞ்சி முல்லை கிளர் மருதம் நெய்தல் பாலை ஐந்தும்
கிட்டும் அகம் ஆம் பெருந்திணை கைக்கிளையும் மொழியும் அகப்புறம்பும்
வெட்சி வஞ்சி உழிஞை தும்பை வீர வாகை ஐம்புறம் ஆம்
திட்பம் உறு காஞ்சியும் பாடாண்திணையும் மொழியும் புறப்புறமே
**178
#8
கரந்தை வெட்சி குறிஞ்சி வஞ்சி கான் ஆர் முல்லைப் புறன் ஆகும்
பரந்த மருதத்திற்கு உழிஞை பகர் நொச்சியும் ஆம் நெய்தல் தும்பை
புரந்த வாகை பாலைக்குப் புறன் ஆம் காஞ்சி பெருந்திணைக்கு ஆம்
இரந்து சொலும் கைக்கிளைப் புறனுக்கு இசைவின் வரு பாடாண்திணையே
**179
#9
நிலையில்லாத பொருள் ஒன்றை நிறுவி எடுத்து நிலையினவாய்ப்
பலமது உறவே கொளல் காஞ்சி பகரும் ஒருதலைக்காமம்
விலகு குமர புரவலர்க்கு விதியின் எடுத்து விளம்புவது
தொலைவுஇல் பாடாண்திணை என்று சொற்றார் இயல்நூல் கற்றாரே
**180
#10
தெருள் ஐந்திணையின் இன்புறு காந்திருவ மணத்தின் களவு கற்பு என்று
இரு கைகோளில் காட்சி முதல் இயம்பு நான்கும் கைக்கிளையின்
பொருளும் முதலாகக் கிளத்திப் பொதுப் பெண் புணர்வின் கலித்துறையில்
அருளும் கோவைத்துறை நானூறு ஆகப் பாடல் அகப்பாட்டே
**181
#11
திணை கைகோள் பன்மூன்று ஆகத் தெளியும் கூற்றுக் கேட்போரைப்
பிணைவின் இகழும் இடம் காலம் பெட்பாய் முற்றப் படுபயனே
இணைவில் இருநால் வகை மெய்ப்பாடு எச்சம் தகவில் சொல்லும் முன்னம்
அணையும் பொருளின் வகை துறை என்று அகப்பாட்டு உறுப்பு ஈராறு ஆமே
**182
#12
காட்சி முதலாய் அறிந்து அணையும் கருத்தினால் ஓர்தலைவேட்கை
ஆட்சி அதனால் எதிர்புலம்ப அருளும் காட்சி முதலாகக்
கூட்டம் இலது ஓர்தலைக்காமம் கொடும் கையறு துயரில் புலம்பல்
கேட்குமவர் இல்லா மொழியில் கெணிக்க இரண்டாம் கைக்கிளையே
** பதினேழாவது முப்பொருள் வகைத்தொகுப்பு முற்றும்
** பாயிர முட்பட விருத்தம் – 177
@18 பதினெட்டாவது -
** உதாரண ஒழிபு என்ற உசிதப் பொருளலங்காரத் தொகுப்பு
**183
#1
தட மத்தக வேழத்தை உரி தாணுவவனேசரைப் பணியும்
வட பூதரசம் ஆன புயன் மதுரகவி நாவலர் புகழும்
திட விசய சுக்கிரிமகிபன் செப்பும் உசிதப் பொருள் வேண்டும்
அடர் உதாரண ஒழிபு ஈரேழ் ஆன கவிதையால் உரைப்பாம்
** சிவ விண்டுக்களின் ஆயுதங்கள்
**184
#2
பினாகம் பாசுபதம் சூலம் பிறங்கு மயில் வச்சிரம் கட்கம்
பல் நாக மழு அங்குசம் கண்டம் பகர்ந்த சிவன் ஆயுதம் பத்து ஆம்
சுனாசி முதலோர் தொழும் மாலின் துலங்கு பஞ்சாயுதம் சங்கம்
வினவு திகிரியொடு தண்டு வில் வாள் எனவும் இயம்புவரே
** சூரிய சந்திரர்களின் தேர் குதிரை ஆதியன
**185
#3
இரவி ஊர்தி தேர் ஆகும் இயம்பும் சகடு ஒன்று அதை ஈர்க்கும்
புரவி ஏழு பச்சை நிறம் பொருந்தும் அருணன் அவன் பாகன்
விரவு கலை சேர் விது ஊர்தி விமானம் திகிரி மூன்று ஈர்க்கும்
தரவு பெறு வெண் பரி பத்து ஆம் சங்கபாலன் சாரதியே
** நவநிதி
**186
#4
சங்கம் பதுமம் மகாபதுமம் சாற்றும் மகரம் கச்சபமே
அங்கம் மருவும் முகுந்தம் இனிது அமரும் குந்தம் உயர் நீலம்
பொங்கம் இசையும் வயிரமுமாப் புகலப்படும் இவ் ஒன்பானும்
துங்க இயல் சேர் கவிவாணர் துதித்தற்கு உரிய நவநிதியே
** நவரசம்
**187
#5
நவில் சிங்காரமொடு வீர நகையே சாந்தம் கருணை குற்சை
குவி அற்புதம் அச்சம் கோபம் குறிப்பினால் இவ் ஒன்பானும்
புவியின் வேட்கும் வினையத்தின் புலவர் வியந்து சொல்வர் நல
கவியின் வசன சாரத்தின் காணும் இனிய நவரசமே
** அட்டமங்கலமும் பஞ்சதருக்களும்
**188
#6
சவரி நிறைந்த குடம் தோட்டி தருப்பணம் தீபந்துவசம்
இவரும் முரசம் இணைக்கயல் என்று இயம்பும் அட்டமங்கலம் ஆம்
அவனி புகழும் சந்தானம் அரி சந்தனம் மந்தாரம் எழில்
பவம் என் பாரிசாதம் கற்பகம் என்று ஐந்தும் ஐந்தருவே
** பஞ்சசயனமும் பஞ்சவாசமும்
**189
#7
ஈட்டும் இரு தார் மயில் சேணம் இலவின்பஞ்சு செம்பஞ்சு
பூட்டும் வெண்பஞ்சு அனத்தூவி புகலும் பஞ்சசயனம் ஐந்தாம்
காட்டும் ஏலம் இலவங்கம் கமழ் தக்கோலம் சாதிக்காய்
ஊட்டும் நறும் கற்பூரம் என உரைக்கும் பஞ்சமணம் ஆமே
** தசாங்கம்
**190
#8
வெற்பு நதி நாடு ஊர் விரைத் தார் வெண் மா களிறு கொடி முரசு
நிற்கும் ஆணை இவை பத்தும் நிகழ்த்தும் தசாங்கம் ஆம் இவற்றை
அற்பின் மகுட மன்னர் முதலார்க்கும் சிறப்பித்து ஒவ்வொன்றாய்ப்
பொற்பின் வகுத்துத் தகும் வகையில் புலவோர் மதிக்கப் புகலுவரால்
** துரககதி, சதுரங்கசேனை, யுத்தக்கருவிகள்
**191
#9
மல்லல் மயில் வானரம் முயல் கூர் வாளி துரக கதி ஐந்து ஆம்
சொல்லும் இரதம் கயம் வாவும் துரகம் காலாள் என நான்கும்
கொல்ல எதிர் நால்வகைச் சேனை குத்தல் வெட்டல் அரிதல் எய்தல்
வெல்லும் கொடிய போர்த்தொழிற்கு வேண்டும் கருவி நால் கூறே
** மதன் பரிவாரம்
**192
#10
விதமா மலர் கோகிலம் அன்றில் மிளிர் வேய்ங்குழல் சே மணி கங்குல்
சிதமார் பொதியத்து இருந்து வரும் இனிய தென்றல் கடன் மதி அற்புத
வேர் மாடத் தத்தை உருப் பொலியும் இக்கோடு அளி பலவும்
மதவேளினுக்கே இணங்கு பரிவாரம் என்னப் புகல்வாரே
** புள்குரல்
**193
#11
ஆடும் தோகை மயில் செம்போத்து அன்னம் மாடப்புறாவொடு பண்
பாடும் சுரும்பு கோகிலம் விண் பறக்கும் பொறிச் செம் சிறைக் காடை
ஆடும் கானாங்கோழி என உரைக்கும் எட்டுப் புள் குரலும்
கூடும் பொழுதும் மிடற்று இசையில் குறிக்கும் காமன் தொழிலாமே
**194
#12
பன்னும் இரவி சுழல் வண்டு பன்றி மஞ்ஞை நாரை கொக்கு
மன்னும் எழில் கண்ணாடி துத்தி வயங்கும் விரிந்த பட நாகம்
அன்னம் உத்தி வானரம் என்று அறிந்தோர் பகரும் ஈரைந்தின்
துன்னு கருமத்திறன் அமைந்தோன் தொல் பார் புரக்கும் மன்னவனே
** முத்துப் பிறப்பிடம்
**195
#13
சாரும் நந்து சலஞ்சலமீன் தலை கொக்கு ஆவின் பல் வனசம்
நாரியர் கந்தரம் உடும்பு நாகம் முதலை கார் ஏனம்
சேர் இந்து இக்கு வெதிர் பூகம் செந்நெல் கதலி தந்தி மருப்பு
ஆரும் இப்பி சனம் திருத்தோள் அடைவின் முத்தம் தரும் இனமே
** செல்வமாது இருப்பிடம்
**196
#14
கங்கை இரதம் பசு நிருபர் கன கோபுரம் வெண் கொடி மடவார்
அங்கம் சிவிகை கன்னி பரி யானை வில்வவனம் பதுமம்
சங்கம் ஒளிர் சாமரை சவுரி சத்திய வாக்கி அரி மார்பம்
துங்க விடை நல் பவளம் நறும் துணர் பூம் திரு மாது இருப்பிடமே
** ஐம்பால் – அட்டைச்சுவரியம்
**197
#15
கொண்டை தொங்கல் பூஞ்சுரியல் கோலப் பனிச்சை சுருள் ஐந்தும்
கெண்டை விழியார் ஐம்பாலாக் கிளத்தும் புவி தானியம் பொன்னு
மிண்டும் ஊர்தி மனை புத்ரர் வேண்டும் அடியார் சுற்றம் எட்டு
மண்டலாதிபதிக்கு இசைய வகுக்கும் அட்ட ஐசுவர்யமே
**** பதினெட்டாவது உதாரண ஒழிபு என்ற
** உசிதப் பொருளலரங்காரத் தொகுப்பு முற்றும்
** பாயிர முட்பட விருத்தம் – 192
** உசிதசூடாமணி நிகண்டு முற்றும்**
** பரமபதிதுணை
** சிதம்பரக் கவிராயர் இயற்றிய உசிதசூடாமணி நிகண்டு
@0 காப்பு
** நேரிசை வெண்பா – விநாயகமூர்த்தி
**1
#1
ஐங்கரசொ ரூபதிரி யம்பகனே யாதிசிவ
சங்கரசு தாதயா தற்பரனே யிங்கெனது
பாவா லுளமகிழ்ந்து பாடவரந் தந்தருள
வாவா கசதாசு வா
** அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
** சிவபெருமான்
**2
#2
புகழ்சேர் மறையா றங்கமுதற் போந்த சனகா தியர்க்கருளை
யிகழா தோங்குந் தனிப்பொருளை யியம்பா தியம்புங் குருவருளாற்
றிகழ்பான் மையின்முன் னூல்பலவுஞ் சேருமுசிதசூ டாமணியென்
றகவா தரவி னாலொருநூ லரனை யிறைஞ்சி யுரைசெய்வாம்
** மூத்த பிள்ளையார்
**3
#3
சூட்டு கவிநா வலர்பாடுந் துகடீர் செய்யுட் குறுபயனாக்
காட்டு முசிதப் பொருள்வகுத்துக் கழறு முசிதசூ டாமணிக்கு
நாட்டு நெடிய புழைக்கரத்து நால்வா யொற்றைக் கிம்புரிவெண்
கோட்டு முமதப் புகர்முகத்துக் கோமா னெம்மு னிற்குகவே
** சரசோதி, இளையபிள்ளையார்
**4
#4
மூன்று தமிழி னியல்புணர்ந்த முன்னோ ருசித நூற்பொருளின்
மூன்று சங்கத் ததிகரித்த முதல்வி தனது கருணையினான்
மூன்று சபையு மெச்சும்வகை மொழியு முசிதசூ டாமணிக்கு
மூன்று மதசிந் துரமுகத்து முன்னோன் பின்னோன் காப்பாமே
** அவையடக்கம்
**5
#5
பொசியு மமுத கலைநிரம்பும் பூர்ண சந்திரோ தயமுன்னே
யொசியு மொருவிண் மீன்வயங்க லொப்பா மேனு மெய்ப்பாமான்
முசிவி லாத தமிழ்ப்புலவோர் மொழிநூ லுசிதப் பொருளையமைத்
துசித சூடா மணியெனலா லோங்குஞ் சிதமீன் றகவெனவே
** பாயிரம்
**6
#6
தேவ சரித்தி ரம்வருணாச் சிரம வொழுக்க மிராசசின்னம்
பூவி லெயும்விற் காமசின்னம் புகலு மெழுபெ ணாண்பருவ
மாவ லுறுமெண் மணம்புணர்ச்சி யணுகு புணர்தற் குறிபிரிவு
மேவற் குரிய பெண்புருட விரகம் விரகப் பெண்ணின்பகை
**7
#7
பாத மாதி மடவர்க்குப் பகரு முவமை யலங்கார
மோத விசையும் பெண்புருட வுவமை யலங்கா ரம்பொருண்மூன்
றேத மிலுதா ரணவொழிபா யிசைந்த தொகுப்புப் பதினெட்டும்
பேத மறமுன் னோர்நூலிற் பேணு மியல்பி னாராய்ந்து
**8
#8
சீர்கொ ளடிகை வரைமேவுந் திரிமூர்த் திகடஞ் சேவடியை
வார்கொ டுதியிற் சென்றுதினம் வணங்கு நியதி பெறுமனத்தான்
பார்கொள் புகழ்மே ழித்துவசன் பற்றார் விரும்பிப் பணிபதத்தான்
ஏர்கொள் வீரத் தனுவிசய னியம்பு நிசவா சகநிபுணன்
**9
#9
சித்தி ரகூட மேடையுயர் சிகர மாடக் கார்வழியா
னித்தி யஞ்சுபமங் கலவோதை நிகழ வோங்கும் வாசலினான்
பத்தி தருமும் முரசுதினம் பாரித் திசைக்கு முன்றிலினான்
எத்தி லேந்தி ரனாதிகத்துக் கியல்பிற் சிறந்த பிரதானி
**10
#10
மந்த மருத்துத் தடங்கிரியு மகமே ருவுஞ்ச மானமதென்
றிந்தப் புவனம் புகல்பெருமைக் கேற்ற கொங்க நாட்டதிபன்
றந்திக் குதய னைங்கதியிற் றாண்டு பரிக்கு நகுலநிகர்
பந்த நிழற்றுங் கவிகையெழிற் பசும்பொற் றந்தச் சிவிகையினான்
**11
#11
பருவ முகில்போல் யாவருக்கும் பரிசி லுதவு சீர்த்தியினான்
செருவில் வீம னளகர்குல திலகன் குவளை மணிமார்பன்
தருவை நிகரு மதலையருட் டனையன் மநுநூல் வழிதெரிந்த
துருவன் சுக்கிரி மகிபால சுமுகன் மகிழ்ந்தி னிதுகேட்ப
**12
#12
கள்ள றாமென் குவளையலர் கழனி புடைசூழ் திருப்புகலி
வள்ளல் குகசந் தனமரபில் வந்த மால்சங் கரமூர்த்தி
விள்ள லருமெய்த் தவப்புதல்வன் மேலாஞ் சிதம்ப ரக்கவிஞ
னுள்ள மகிழ நயந்துசித சூடா மணிநூ லுரைத்தனனே
** பாயிரம் முற்றும்
** நூல்
@1 முதலாவது - தேவ சரித்திரத் தொகுப்பு
**13
#1
பூவார் செழுந்தண் கயிலையினிற் பொலிந்து சபையின் முனிவர் தொழ
வோவா நடஞ்செய் திருப்பதத்தை யுள்ளம் பிரியா தமைத்திறைஞ்சி
மூவா முதல்வ னாதிபெறு முதன்மை கருதி நாலைந்து
பாவாற் றேவ சரித்திரத்தைப் பாடுந் தொகுப்புப் பாடலுற்றாம்
** சிவபெருமான்
**14
#2
திங்கட் பிறைவெண் டலைமாலை திகழ்வெள் ளெருக்கா ரறுகுவில்வந்
தங்கு திரிப தகைகொன்றைச் சடையான் றிரிசூலப் படையான்
பொங்க ரவுமா மையுமக்கும் பூண்டோன் சங்கக் குழையண்ண
லங்கை யேந்தி யீமத்தி லாடி பிரமச் சிரகரத்தான்
**15
#3
முந்து தவத்தோர் யாகத்தின் முயன்று வருந்திப் பொரவிடுத்த
தந்தி மழுமான் முயலகன்செந் தழற்பாம் புழுவை துடிமுதலா
வந்த பகைவீ றொடுங்கவுந்தன் வயமா யடக்கி யுவந்துகொண்டோன்
சுந்த ரன்றூ தன்றனதன் றோழன் றோடு டையசெவியன்
**16
#4
அடுத்த காலன் றனைமார்க்கண் டனுக்கா யுதைத்தோன் மலரம்பு
தொடுத்த மதனை யெரித்தவனஞ் சுண்டு தேவ ருயிர்காத்தோன்
படுத்த திரிபு ரத்தையழற் படுத்த நகையான் றிக்குடையா
யுடுத்தோன் கயிலை யெடுத்தவனை யுடன்றோர் விரலா லீடழித்தோன்
**17
#5
செக்கர் வான்மீன் பவளநிறஞ் செப்புஞ் சடையான் கனல்பவழந்
தக்க படிவ மெனுமுருவஞ் சாரு முவமைத் திருவடிவான்
புக்க கலைசேர் மன்பரிதி பொங்கு கனலென் றிவையிசைந்த
முக்க ணுடையான் கொடியூர்தி மூரி விடைய னுமைபாகன்
**18
#6
மாலுக் குச்சக் கரமளித்தோன் மாலு மயனுங் காண்பரியோன்
பாலுக் குப்பா லகனிரங்கப் பரிந்து பாற்க டலையீந்தோன்
கோலித் தடுத்த மோகினியைக் கூடிச் சாத்தன் றனையளித்தோன்
ஆலித் தெழுந்த சலந்தரனை யடர்த்தோன் பஞ்சாக் கரமுகத்தோன்
**19
#7
வஞ்சத் தக்கன் மகஞ்சிதைத்து வாணி நாக்கும் பொறிமூக்கும்
எஞ்சக் கொய்து விதுவினைக்கா லிட்டே தேய்த்துக் கனற்கையறுத்
தஞ்சக் கதிரோன் பல்லையுதிர்த் தம்மான் சிரமுங் கொய்தழித்தோன்
கஞ்சப் பதமொன் றெடுத்தெதிரே காளி நாண நடம்புரிந்தோன்
**20
#8
விரியு மண்ட பிண்டமெலாம் விளங்கும் பொருளைந் தொழிற்கருத்த
னுரிய மறையா கமவடிவா னுன்னா முனிபார்ப் பினிமார்கற்
பரிய தாரு காவனஞ்சென் றழித்துப் பலியேற் றானென்றே
பரிவிற் பிறவுஞ் சிவசரிதம் பாடு மியல்பிற் பகர்வாரே
** விண்டுமூர்த்தி
**21
#9
கன்று குணிலா வெடுத்துவிளங் கனியை யுகுத்தோ னாயர்மனைச்
சென்று தயிர்பா லுறிவெண்ணெய் திருடி நுகர்ந்து கட்டுண்டோன்
குன்று குடையா மழைதடுத்தோன் குளிக்கு மாயர் குலமாதர்
நின்று காணத் துகில்கவர்ந்தோன் நிலைசேர் குருந்த மொசித்தபிரான்
**22
#10
ஆலி லரவிற் பாற்கடலி லணுக வோங்கிப் பசுமேய்க்குங்
கோலின் மகிழ்ந்து கண்டுயில்வோன் கூறும் பதினாறா யிரம்பெண்
மாலி னிவர்ந்தே யவரவர்தம் மனைக டோறு மொருவடிவாய்
மோலி தெரிய மயல்காட்டி முயங்கு மாயச் சொரூபத்தான்
**23
#11
கடலை யடைத்தோன் கடல்கடைந்தோன் கடனீர் சுவரக் கணைவிடுத்தோன்
அடர வெதிர்ந்த பெருங்குருகி னலகை யிடந்தோன் சகடுதைத்தோன்
இடப முயர்வெங் களிறடர்த்தோ னிணைசேர் மருதம் பிளந்தெறிந்தோன்
படருங் கொடிய வலகைமுலை பருகு மாபோ லுயிர்கவர்ந்தோன்
**24
#12
ஆயர் பெருமா னெனுநந்த னருள்சே யசுரர் கிளையறுத்தோன்
றோயு மதகுஞ் சரங்காத்தோன் றுகில்பாஞ் சாலிக் கினிதளித்தோன்
நேய விசயன் றேர்ப்பாக னிறத்தாற் கரியன் றேவகிதன்
சேய னிசைவேய்ங் குழலூதிச் சென்றே நின்றா னிரைமேய்த்தோன்
**25
#13
உலக மளந்து காத்திடந்தோ னுண்டு முமிழ்ந்தோன் சானகிபூ
தலமி னுருக்கு மணிகேள்வன் சலச லோசன் பின்னரவிற்
குலவி நடந்தோன் கோசலைதன் குமரன் கஞ்ச னுடல்பிளந்தோ
னலர வாணன் றோள்பலவு மரிந்தோன் வாலி தனைச்செற்றோன்
**26
#14
மச்ச மெனப்போய் மறைகொணர்ந்தோன் மடங்க லுருவாய்த் தூணிலெழுந்
தெச்ச மறவே குடர்மாலை யிட்டே யிரணி யனைவதைத்தோன்
உச்சப் பகலைத் திகிரியினா லொளித்தோன் பஞ்ச வர்கடூதன்
மெச்சப் பெறும சோதைசுதன் விறல்சேர் வசுதே வன்புதல்வன்
**27
#15
ஆமை யுருக்கொண் டடைகிடந்தோ னட்டாக் கரத்தான் வைகுந்தன்
தீமை புரிந்த வரக்கனுடல் செகுத்தோன் றசர தன்புதல்வன்
தூய்மை யுறுபூம் பைந்துளவோன் சுரிச்சங் காழிப் படையன்சத்ய
வாய்மை கொழுந னெனப்பிறவு மாலின் சரிதம் வகுத்துரையே
** உமையவள்
**28
#16
அண்ட ரண்டம் பூத்தவள்வெற் பரையன் மடந்தை யறம்வளர்த்தல்
கண்ட பரிபூ ரணிஞானக் கடன்மூ வரையும் பெற்றவரில்
விண்ட வுருத்தி ரன்றனைவேட் டவிம லிபாசாங் குசமொடுவிற்
கொண்ட கரும்பைங் கணையிவைகைக் கொண்டா ளெமையா ளுமையாளே
** கணபதி
**29
#17
தரைமா மருக னைங்கரத்தான் சால்போல் வயிற்றான் பிள்ளைஇயார்
புரைதீர் மருப்பொன் றொடித்துமலைப் புறத்திலேவெம் பாரதப்போர்
வரைவோ னிருநாற் புயனான்ற வாயான் மதிபாய் சடைமுடியா
னுரைசேர் முதல்வன் வினாயகன்மெய் யுறுதி தருவோன் கணபதியே
** குமரன்
**30
#18
பரவு மிருமூன் றக்கரத்தான் பரனுக் குபதே சம்புகன்றோன்
விரவு மறுவர் முலையுண்டோன் வேலை சுவற வேல்விடுத்த
வுரவோ னாறு படைவீட்டை யுடையோ னாறு முகன்பனிரு
கரவேள் சரவ ணோற்பவன்சூர் கணியாச் சுப்பி ரமணியன்னே
** பிரமன்
**31
#19
தண்டா மரையா சனமாகந் தவளங் கோவில் மறையோரில்
வெண்டா மரையா ளவனாவில் விரும்பும் பாரி சதுர்வதனங்
கண்டா மரையான் றனதுந்திக் கமலம் பிறப்புப் படைமறைநூல்
வண்டா மரைத்தா ரனந்துவசம் வாக னமுமாம் பிரமனுக்கே
** சரசோதி
**32
#20
துதிமே வுபிர மணிவாணி சொல்லா ளினிய கலைமகள்பா
ரதிசா ரதியி னுடனாஞ்சீ ராரும் வால பரமேட்டி
மதிசேர் ஞானி தாரணியாய் வனசப் பொகுட்டில் வீற்றிருக்கும்
விதிசேர் பிரம னுரிமையென விளம்பு மட்டச ரச்சுவதியே
** பேரின்பம்
**33
#21
தன்றத் துவகா யத்தியல்புந் தனக்காந் துணையு மோர்ந்துலகி
லொன்றற் குரிய பொன்னாசை யுள்ளிட் டவற்றால் வருந்துயரும்
துன்பப் பிறப்பு மிறப்புமிவை தொலையத் தொலையாப் பொருள்கூறின்
அன்பிற் செயலை யினியடியேற் கருளென் றோதல் பேரின்பே
** முதலாவது தேவசரித்திரத் தொகுப்பு முற்றும்
** பாயிரமுட்பட விருத்தம் – 28
@2 இரண்டாவது - ,வருணாச்சிரம வொழுக்கத் தொகுப்பு
**34
#1
தெருணா கரிக முகில்சுக்கி ரிதீர னிறைஞ்ச வருள்புரிமெய்ப்
பொருளாந் திரிமூர்த் தியைப்பரவிப் புகலுங் கவிகள் பதினொன்றால்
அருணான் மறையோர் முதனால்வ ரடைவிற் றமது நெறியொழுகும்
வருணாச் சிரம வொழுக்கமதை வழுத்துந் தொகுப்புச் சொல்கின்றாம்
** பிராமணன்
**35
#2
வேத முறையோ துதலோது வித்தல் வேட்டல் வேட்பித்த
லீத லேற்ற லிவையாறு மிசையு மறையோர் தொழிலென்ப
தீதி னான்காச் சிரமமுறை செப்பு மவர்க்கவ் விதிபேணி
யாத வனைக்கண் காணுமுனு மந்தி கண்டுங் கடனியற்றி
**36
#3
ஆதி வேத முதற்றொடங்கி யடைவே காண்டம் பகுத்தோதி
நீதி யியல்பிற் பொருளறிந்து நெறிவ ழாம னிலைநின்று
வாதில் தரும முதன்மூன்று மருவும் படிக்காம் வழியியற்றி
யோதும் பிரம நண்ணுநெறி யுற்றே யோகம் பொருந்துவரால்
** சத்திரியன்
**37
#4
மனுவிக் கியான நூலோதன் மறைநூல் வழியின் வேட்டிடுத
லினிதி னீத லுலகோம்ப லேற்ப வளந்து படைதாங்கல்
தனுவிற் றக்க வகைதேர்ந்து தளரா தூக்கிச் சமர்விளைத்தல்
துனியில் புவியாள் மன்னவர்க்குச் சொற்ற வாறு தொழிலாமே
**38
#5
பொருளைக் குறித்துச் சமயவழி போற்றித் தரும நெறிவிருப்பி
னருளிற் சூழ்வோ ரைந்துமின்மை யைந்து மோம்பிக் குடிதழுவித்
தெருளிற் றளர்ந்த குடிதாங்கித் தினமு நகரி சோதித்து
மருளற் றியல்பி னொழுகுமுண்மை மதிமந் திரிசொ லுடன்படுத்து
**39
#6
சாருங் குடியை யாதரித்துஞ் சாராக் குடியை யீடழித்தும்
நேருங் கொடுமைச் செயல்விளைத்து நிதிகாட் டமைச்ச ருரைமறுத்தும்
தேரு மறிவு பொறுமைகொடை திடமஞ் சாமை யன்பினிவற்
றோரு முலகிற் பிறவுயிர்தம் முயிர்போற் கருதிப் பழியஞ்சி
**40
#7
ஆறி லொன்று குடியிறைகொண் டரிய தவத்தோர் கற்புடையோர்
தேறு நிலையா தரவமைந்து செற்றார்ச் செறுத்துக் கொலையினரைக்
கூறுங் களைகட் டாங்கொறுத்துக் கொடுங்கோற் பிறர்தம் மனைக்காமம்
வேறுப டுக்குங் கட்குறளை விரும்பா தறிஞர்க் கினனாகி
**41
#8
பொருவி லுயர்நாற் கவிவலர்சொற் போற்றி மறையோர் செயல்விளக்கிப்
பெருகு கான மயின்முறைமை பிழையா தன்னத் தியல்பாகி
மருவு மனுவிற் செங்கோன்மை வழியே முறைகேட் டெவ்வுலகுங்
கருது நெறியிற் புகழைநிறீஇக் காவல் புரிவோன் காவலனே
**42
#9
வெற்றி தருதற் குறுபடையும் விரும்பு செல்வக் குடிச்செறிவு
மற்ற மறியாக் கூழ்ப்பொலிவு மறத்தைக் கருது மந்திரியுங்
கற்ற நீதி தெரிநட்புங் காவலுறுநால் வகையரணு
முற்ற நீதி மன்னவனுத் துங்க வரசர் சிங்கேறே
** வசியன்
**43
#10
அறிவி னோதன் மகமியற்ற லதிதிக் கியல்பா னுணவளித்தல்
உறுதி தருவா ணிபமியற்ற லுவந்து தினமு நிரைகாத்தல்
செறிவி னுழவு செய்தலெனத் தெரிந்து பகரு மிவையாறும்
பொறுதி யுடைய வசியருக்குப் போந்த தொழிலாப் புகலுவரே
**44
#11
வழுக்கின் மூவ சியரியல்பூ வசிய ரென்னும் வேளாளர்
இழுக்கில் வேதா கமப்பகுதி யியல்பின் வேத சித்தாந்த
வொழுக்கின் வழிநான் காச்சிரமத் துயர்சற் குரவராற் பொருடேர்ந்
தழுக்கின் மெய்யன் பாற்றினமு மருச்சித் தரிய பதமடைவார்
** சூத்திரன்
**45
#12
பகர்மூ வசியர் தொழிலான பசுவை யோம்பல் பொருளீட்டல்
புகரி லுழவர் தொழிலியற்றல் போற்று மறையோர்க் கேவல்செய்தல்
நிகரில் குயிலு வத்தொழிலி னிலைதேர்ந் திசையி னியற்றிடுதல்
அகல்வில் காரு கத்தொழிற்கா ளாதல் சூத்திரர்க் கறுதொழிலே
** இரண்டாவது வருணாச்சிரம வொழுக்கத் தொகுப்பு முற்றும்
** பாயிரமுட்பட விருத்தம் – 40
@3 மூன்றாவது இராச சின்னத் தொகுப்பு
**46
#1
உயர்வான் பரவு மொருமுதலை யுன்னிக் கவிதை பதின்மூன்றிற்
செயவேந் தரும்வந் தெதிர்போற்றும் தீர னேற்று பேந்திரதுரை
வயமா லரசு செய்சுக்கிரி மகிப னுரைக்கும் நெறிமனுவி
னியல்பா யுலகம் புரந்தருளு மிராச சின்ன மியம்பலுற்றாம்
** ஐங்குழு - ஐந்தினம்
**47
#2
சொல்லு மந்திரி புரோகிதர்நற் றூதர்சேனா பதியொற்றர்
ஒல்லு மரச ரைங்குழுவென் றுரைக்கு மடுத்த நட்பாளர்
வெல்லு மந்த ணாளர்படை வீரர் நிமித்த காரருடன்
புல்லு மாயுள் வேதியராம் பொருநர்க் கோது மைந்தினமே
** மந்திரி
**48
#3
தேர்ந்து செயற்பா லவையியற்றல் தெரிந்து விவகா ரம்பிரித்துக்
கூர்ந்து பொதுக்கோ டல்தீரக் குற்றம் நீக்கிக் குணம்பேணல்
நேர்ந்து குடிகாத் துலகோம்பல் நெறியி னொன்னார் குறும்பகற்றல்
ஓர்ந்து ராசன் மதிக்கிணங்க வுன்னிச் சொல்வோன் மந்திரியே
** தளகர்த்தன்
**49
#4
உளத்தின் மாற்றார் வலிகால முறுதன் வலிசீர் தூக்கியமர்க்
களத்தி லரசைப் பேணிமுனை காட்டிச் செருநர் தமைவெல்லும்
வளத்திற் படைத்த லைவரொடுநால் வகைச்சே னையுஞ்சூட் சித்தினிது
தளத்தை யோம்பிப் படைக்குமுன்போய்ச் சதிர்செய் வோனாந் தளகர்த்தன்
** பிரதானி
**50
#5
சதிரி னுறுசீ மையுங்குடியுந் தனமு மைந்து திரவியமும்
பதிவி னாற்கூ றியற்றிடுநாற் படையும் பேணி யூகித்து
மதியின் வேந்த னுரைதழுவி வகுக்குங் கரும முறைதெரிந்து
திதியின் யாவுந் தன்முகமாய்த் திட்டஞ் செய்வோன் பிரதானி
** சேனாதிபதி
**51
#6
மறுவி லாப்பாக் கியங்கல்வி மகிழுந் தவந்தா னம்வீரம்
உறுதி பயக்குந் திடவிசய மோங்கு நலமார் சந்தானம்
சறுவ சாம்பிராச் சியமென்று தக்கோர் புகலு மநுநீதி
பெறுத சாங்கத் ததிபனுறப் பேணு வோன்றா னாபதியே
** இதுவுமது
**52
#7
சீலந் தருசொல் வன்மையொடு தினம்வேந் தியற்கை யுணர்ந்தறிவிற்
காலங் கருதி யிடமறிந்து கருமம் விடாமல் விவகார
மூலந் தெரிந்து சோர்வுபடா மொழியா லிறுதி தரினுமநு
கூலங் கருதிச் சந்தியையக் கூறு வோன்றா னாபதியே
** அரச னியற்கை யிலக்கணம்
**53
#8
பாக்கிய மிலங்கு முகங்கல்வி பரவு நாவிற் றானங்கை
தாக்கும் வீரம் புயநெஞ்சிற் றைரியம் வாளின் முனைவிசய
மாக்கும் பெருமைச் சந்தான மணிசேர் வயிறு புவிபணியத்
தேக்குஞ் சறுவ சாம்பிராச்சி யந்திரண் டவூருப் பெறுமன்றே
** பட்டத்து யானையி னிலக்கணம்
**54
#9
கைவால் கோச நிலத்துறநாற் காலும் பொருவி லுகிர்வெளுப்பாய்
தவ்வா தேழு முழமுயர்ந்து தருபன் மூன்று முழச்சுற்றி
னொவ்வாச் சூழி மத்தகம்வாய்ந் துயர்ந்த முன்பாய்ப் பின்பணிந்து
செவ்வா யேந்து கொம்பின்முறச் செவியா ரிபமன் னவர்க்காமே
** ஓர் வகையின் யானைக் கடைசொல்
**55
#10
கம்பம் புரசை நிகளமதங் கவிழுஞ் சுவடு புழைத்தடக்கை
கும்ப நால்வாய் தழைசெவியங் குசம்போர் புகர்மு கங்கவளங்
கிம்பு ரீவெண் கூர்மருப்புக் கிளர்செங் கனற்கண் கறையடிமால்
வெம்பு சினங்கொல் லுயர்வெனலாம் விதித்த யானைக் கடைசொல்லே
** பட்டத்துக் குதிரையினிலக்கணம்
**56
#11
மாதர் மணத்தை நிகர்மணத்தாய் வாய்ந்த நிறத்தைங் கதியுடைத்தாய்த்
தீதி லாத சுழியுளதாய்த் திருக்கி லாநற் குணத்தினதாய்
ஓது மெழுசா ணமைதிபெறு முயர்விற் கதலி மடற்செவியாய்ப்
பாத முன்பின் விருத்தியுமாம் பகர்மன் னவர்க்காம் பரியியல்பே
** இதுவுமது
**57
#12
மாவின் றளிர்போ லொளிர்நாக்கும் மலிவெண் ணுரைபொங் கியவாயும்
பாவு தரளந் தாமரைபொன் பச்சை நீல நிறத்தொன்று
மோவி லிடப மத்தளஞ்சங் குவரித் திரைமே கந்தொனியிற்
கூவுஞ் சத்தம் வரலென்று குறிக்கப் பெறுமவ் வாம்பரிக்கே
** நாடு, நகர், காடு, கடல், மலை, - படுதிரவியங்கள்; அரண்
**58
#13
நாடு கதலி கழைசெந்நெல் நறுஞ்செங் கழுநீர் சிறுபயறு
ஆடி பித்தன் காரானை யரசன் யூக நகரினவாம்
காடு நாவி மயிற்பீலி கருதுஞ் சவரி தேனரக்காங்
கோடு பவள முவர்குக்குல் குலாவெண் முத்தங் கடலினவே
**59
#14
கோட்ட மகில்குங் குமங்கறிதக் கோல மலையி னவையைந்தா
மீட்ட விசையுந் திரவியங்க ளியம்பு மரசர்க் குரித்தென்ப
சோட்டு மதிலு முயர்வரையுஞ் சுரமு மிருதண் புனலுமென
வாட்டி லட்ட மங்கலத்தான் வழுத்து மன்னர்க் கரணான்கே
** மூன்றாவது இராசசின்னத் தொகுப்பு முற்றும்
** பாயிர முட்பட விருத்தம் – 54
@4 நான்காவது - காமசின்னத் தொகுப்பு
**60
#1
பொரும்வல் லசுரர் புரமூன்றும் பொடிசெய் திடும்வண் கைக்குரிசி
லிருபொற் பதத்தைப் பணிந்திறைஞ்சி யியம்புங் கவிதை பன்னிரண்டிற்
றருவை நிகர்சுக் ரீமகிபன் றனது வடிவின் செயல்போலு
முருவம் விரும்புங் காமசின்ன மோதுந் தொகுப்ப துரைசெய்வாம்
** மன்மதனின் சதுரங்க சேனை முதலியன
**61
#2
இரதம் வசந்த மதயானை யிரவாம் பூவை பசுங்கிள்ளை
புரவி படைமங் கையர்வாசம் பொலியு மிணர்மென் பூஞ்சோலை
பரவு படைவீ டாமுரசு பரந்த கடலாங் கொடிமகரம்
உரவு மன்றில் வனகாள முயர்வெண் குடையிந் தனங்கனுக்கே
**62
#3
சொன்ன குடைக்கால் மதிக்கிரணஞ் சுரிமென் குழலார் பூசுவன
வுன்னும் வதுவை யவன்பரிசை யோங்கித் தளிர்க்கும் விருகிலையாம்
சின்ன மன்றில் குயில்கூறுந் தேரி னுருள்சந் தனச்சாணை
யென்னு நறுமாந் தளிர்பட்டா மெழிற்கைச் சரமா துளமருவே
**63
#4
வெல்லு மதன வேண்மார்பில் விளங்கு மாலை யிலைஞ்சிமஞ்சள்
புல்லுங் கமுகி னறும்பாளை பொற்பா லிரட்டுஞ் சாமரையாஞ்
செல்லு மவன்கா ளாஞ்சிமலர் செண்ப கம்மல் லிகைவனச
மொல்லும் வேனி லவன்றிருநா ளுடைவா ளோலைப் பூவாமே
**64
#5
பதிக்கு மதனன் பரிக்கலணை பன்னு நறும்பூ மல்லிகையாங்
கதிக்கு மிலைஞ்சி கடிவாளங் கன்னற் சல்லி புன்னையம்பூ
மதிக்கு மவன்மெய் யிடுகவசம் மலிந்த விரைதோ ழன்வசந்தன்
விதிக்குப் பினவன் றேர்ப்பாகன் விரும்பும் வசந்த னெனலாமே
**65
#6
அல்லி யீட்டி வாழையிலை யமர்சால் கட்க மதன்றண்டு
வெல்லுந் தண்டா யுதமாகும் வேட்குந் தேவ தாரியொடு
புல்லு மிரதி யெனவிருபேர் போந்த மனையார் மாரனுக்குச்
சொல்லுஞ் சாம னென்பவனே துணையாந் தம்பி யெனலாமே
** வில்
**66
#7
கதிர்ப்பூம் பச்சைத் தண்டும்வெறி கமழும் பசிய மாந்தண்டும்
மதுக்கொண் டலர வழிந்தொழுகும் வாச முறுமல் லிகைத்தண்டுந்
துதிக்குங் கருப்பந் தண்டுமளி சூழுங் கமலப் பூந்தண்டும்
விதுத்தண் குடையா னெடுத்தபஞ்ச வில்லென் றுணர்ந்தோர் சொல்வாரே
** நாணி
**67
#8
பிச்சிக் கொடியு மடல்விளங்கும் பிரச நறுந்தா மரைநூலு
மெச்சப் பொலிவின் மணம்வீசும் வெட்டி வேருங் கார்வண்டும்
பச்சைப் பசுமாந் தளிரெனவே பகர்ந்த தனுக்க ளைந்தினுக்கும்
மச்சக் கொடியோன் பூட்டியநாண் வகையைந் தென்பர் தகவுடையோர்
** கணை
**68
#9
சொற்றார் நறுமுல் லைப்பூவுந் தூய சோகப் பூவுமிகக்
கற்றார் புகழு மாம்பூவுங் கடிசேர் தண்டா மரைப்பூவும்
பொற்பா யலர்நீ லப்பூவும் போரின் மதவேள் செங்கையினாற்
பற்றாய்த் தொடுத்து நின்றெய்யும் பஞ்ச பாண மைந்தாமே
**69
#10
சிரசின் முல்லை நேத்திரத்திற் றிகழ சோகு தனமீது
விரவு சூத மார்பின்கண் விளங்கு முளரி வயங்குபொறி
யரவப் படத்து நறுநீல மணுகச் சமரிற் குறிநோக்கி
யுரவே ளைந்து கணையெய்தற் குற்ற தான மைந்தாமே
**70
#11
ஏற்ற முல்லை கிடைகாட்டு மெதிர்ந்த சோகு சென்றுபல
தோற்றங் காட்டிக் கிடைபொருத்தா சூத முடலிற் பசலைதருந்
தேற்ற முறுசெந் தாமரைப்பூச் சிந்தை யயர நினைவுய்க்குங்
கூற்ற மனைய நறுநீலங் கொலும்வே ளம்பின் குணமைந்தே
**71
#12
மனதின் மோகஞ் சனித்தவுடன் மதனன் விரைவின் மனோபவனாய்த்
தனது சொரூப மரூபமெனுந் தன்மை தோன்ற மெய்பொலிந்து
சினவி யெழும்பிச் சன்னதமாய்ச் சிலையைக் குனித்து நாண்பூட்டி
யினமென் நறும்பூங் கணைகடொடுத் தெய்தே பூசல் முடிப்பானே
**72
#13
மலையார் களப முலையாரும் மால்மோ கினிவா வியுங்காவுந்
தலையார் நாடூர் மகிழ்மாலை தண்டு பரிபூங் கிளிகளிறு
நிலையார் கங்குல் முரசுகடல் நெடிய துவசங் கயல்கருப்பஞ்
சிலையான் மலரால் யாரையுந்தன் செயலிற் படுக்கு மாணையினான்
** நான்காவது காமசின்னத் தொகுப்பு முற்றும்
** பாயிர முட்பட விருத்தம் – 67
@5 ஐந்தாவது - எழுவகைப் பெண்பருவத் தொகுப்பு
**73
#1
ஒருவ னுபய பதம்போற்றி யுருவ முறுமெய்க் குணஞ்செய்கை
மருவும் வயது பிறவுமுற வகுத்துத் தகும்வா றாகவமைத்
திருப துடனோ ரிரண்டுசெய்யு ளிசையுந் தொகுப்பி லெழுவகைப்பெண்
பருவ முறையாய்த் தனித்தனியே பன்னுந் தொகுப்புப் பகர்கின்றாம்
** பேதை
**74
#2
கூவத் தெரியாக் குயிற்பேடு குதலை பிதற்று மென்மொழியாள்
மேவச் சிறுவீ டிழைத்துமகார் விரும்புஞ் சிறுசோ றடுங்குணத்தாள்
பூவிற் சிலைவே ளரண்மனையைப் பூட்டுந் தகைமை யல்குலினாள்
ஆவற் பயிலா வடிவுடையா ளடர்பொற் பாவை விளையாட்டாள்
**75
#3
கயலிற் காலம் பார்த்தடங்குங் கடல்கொல் லாநஞ்சன விழியாள்
பெயலை யிளநீர் சுழிதாழ்ந்த பெற்றி போல்வட் டக்குறியாள்
வியல்கொள் வெய்யி லிற்கனலும் வித்தின் முளையு மடங்குதல்போல்
இயல்பின் மார்பத் தடங்குதன விரத முற்றா விளங்கரும்பே
**76
#4
போற்றுஞ் சிருட்டி முதன்மூன்றும் பொலிவித் தப்பாற் புன்சிருட்டி
தேற்று நகையா ளனப்பார்ப்பு தீஞ்சொற் பழக வருகிள்ளை
காற்றி னடிபட் டயர்வுற்ற கனஞ்சேர் குழற்சூ ழியத்தினாள்
பாற்று சஞ்சீ வினிக்கன்றாம் பருவப் பேதைப் பசுங்கிளியே
** பெதும்பை
**77
#5
சத்த சுரம்பா டத்தொடங்குந் தருண மொழியாள் புயல்கண்டு
பத்தி குலவ வந்தமயில் பழகப் பார்க்கு நடையன்ன
முத்தை நிரைத்த மூரலினாள் முளைநஞ் சொருவ விற்கணைநாண்
வைத்து வளைத்த லனையகண்ணாள் மதனை யெழுதும் விளையாட்டாள்
**78
#6
ஈட்டு பத்தா யம்புகுது மெலிபோம் வழிபார்ப் பதுபோல
மூட்டு காமம் வழிதேடி முட்டிப் பார்க்கு மல்குலினாள்
பூட்டு மைய மயற்கருத்தாள் பூக்குந் தருணப் பூங்கொடியாள்
காட்டுஞ் சொருகு குழல்கற்றோர் கல்லா ரிடத்துக் கற்பனையாள்
**79
#7
ஆர்த்த மதவேள் கூடாரத் தாதா ரம்போ லடிக்கொண்டு
கூத்துச் சமைந்தோர் திரைக்குணின்று குறிப்பின் முகங்காட் டுதலெனவே
காத்த மருமத் துற்றுமுகங் காட்டு மிலந்தைக் கனிமுலையாள்
பார்த்து முயங்க நாட்கொளுமப் பருவப் பெதும்பைப் பதுமினியே
** மங்கை
**80
#8
வேனிற் கண்டு கூவுகுயில் வீசும் வாள்நஞ் சனவிழியாள்
கானிற் புயல்கண் டாடுமயில் களித்துப் பூவைக் குரைகூட்டும்
தேனிற் பொதிந்த மென்மொழியாள் சிமிணீர்க் குமிழி நிகர்பார்க்கும்
மானித் திருக்கும் பூண்முலையாள் மயறந் தணைக்கு மருக்கொழுந்து
**81
#9
அன்னம் போலு நன்னடையா ளறல்கா ரனைய குழற்சொருக்குப்
பின்ன லுடையாள் முகைவிரிக்கும் பிரச நறும்பூங் கொடியாள்விற்
கன்ன லுடையான் றனக்காண்மை காட்டும் வடிவாள் காமவிடா
யின்ன றவிர்க்குஞ் சஞ்சீவி யினிக்கு மிரசதா ளிக்கரும்பு
**82
#10
நாடி ரதிமோ கனப்பண்டம் நயந்து சூட்டும் பருவத்தாள்
சேடி மார்நின் றலங்கரிக்கத் திகைக்கு மிடையாள் பணந்தாழ்ந்த
கோடி யரவும் வாவியலர் கோக னகத்து முகிழுமிணை
பாட விசையு மல்குலுறு பருவ மங்கைத் திருவினளே
** மடந்தை
**83
#11
தேய்ந்த பிறையை நிகர்நுதலாள் தெங்க விளநீர் பொற்கலசம்
ஆய்ந்து மதன்செங் கோல்செலுத்தி யரசு புரிதற் கணிமகுடம்
வாய்ந்த முலையா ளிருதோட்டின் வழிபோய்ப் பாயு மான்விழியாள்
தோய்ந்து கலவித் தொழில்பழகுஞ் சுரத காமக் கலைக்கியானி
**84
#12
சரச மொழியி னாள்விரக தாபந் தணிக்கு மதுமாலை
பரவு மனத்துக் கினியநடை பயிற்றிக் காட்டு மென்னடையாள்
உரவி லனுக்கு மிசைத்தொழிலா ளுவக்கு மணியிற் கணியன்னாள்
விரவு நடுநா யகமென்ன விளங்கும் பருவப் பெண்ணரசு
**85
#13
சேரத் துவளு மின்னிடையாள் தெளியப் பழகும் பணிப்படமும்
பாரச் சிலைவே ளரண்மனையும் பசும்பொற் றட்டும் பரிச்செவியும்
நேரச் செறியு மல்குலினாள் நெய்த்துத் தகர மாரமணம்
வாரச் செருகுஞ் சொருக்குடையாள் மடந்தைப் பருவ மாதினளே
** அரிவை
**86
#14
கடந்த மோனத் தருந்தவருங் கண்டான் மயங்கும் பிடிநடையாள்
தடந்தேர்த் தட்டி னிதம்பமுறுந் தகவி னாள்சிற் றெறும்பொழுக்கிற்
படர்ந்த ரோமத் தொழுங்கினள்செம் பதுமம் பூத்த கொடியிடையாள்
அடர்ந்து காம சலராசி யாரத் தழுவு மாசையினாள்
**87
#15
துஞ்சு கயலுஞ் சேலுமெனச் சுழலும் விழியாள் பொன்மலைபோ
லெஞ்ச லில்லா தடர்ந்திடங்கொண் டிணைத்து விம்மி யிசைபார்க்குங்
குஞ்ச ரத்தி னிருகோடுங் குறிக்க வேந்துங் கொங்கையினாள்
விஞ்சை மதநூல் வழிகாண விதம்பா ராட்டு மதியுடையாள்
**88
#16
வீரச் சிலைவேள் குருபீடம் விந்தைக் குழற்சிக் கூந்தலினாள்
சேரத் சேரத் தெவிட்டாமற் சித்தத் தினிக்குந் தேம்பாகு
மாரற் கினிய கருவூலம் வழுத்தும் வீணை யிசைத்தொழிலாள்
ஆரப் பண்பு தருமொழியா ளரிவைப் பருவத் தணங்கினளே
** தெரிவை
**89
#17
சீராய்க் குலவும் பிடிக்குநடை திருத்திக் காட்டு மெழினடையாள்
நேராய்த் துவளுங் கேசரிபோ னிகழ்த்து மருங்குற் பணிமொழியாள்
பாரா ரிளைஞ ரிருதயமும் பனிமுல் லையுமா ரச்செருகிக்
காரார் புயல்மீன் காட்டுதல்போற் காட்டும் பலினக் கருங்குழலாள்
**90
#18
நலங்கொ ளமுது நஞ்சுமிணை நவிலும் விழியாள் விதுமறுப்போ
யிலங்கு மிவடன் முகச்செவ்வி யிசைய மருந்து தேடிநிதந்
தலங்கொண் மேரு வலங்கொள்ளத் தயங்குஞ் செந்தா மரைமுகத்தாள்
துலங்கு தெண்ணீர் பருகுமதத் தும்பிக் கோட்டுச் சரிமுலையாள்
**91
#19
புடத்திற் றெளியு மபரஞ்சிப் பொன்போ லொளிரு மேனியள்சூ
திடத்திற் பொலியும் விளையாட்டா ளெழுதேன் கூவற் கடிதடத்தாள்
நடத்திற் குலவு சிற்றடியா ணயந்து காம நூற்பகுத்துத்
திடத்திற் கரண முழுதுமுணர் தெரிவைப் பருவச் சேயிழையே
** பேரிளம் பெண்
**92
#20
அட்ட கிரியும் வென்றடக்கி யப்பால் விந்தைக் கிரியினையுந்
திட்ட முடனே சென்றரசு செலுத்தப் பார்க்கு மிருதனத்தாள்
வட்ட முறுதன் முகச்சந்திரன் மதிக்குப் போதா தெனக்கருதி
யிட்ட நிலவுப் பிறையணியா ளிரண்டு விழியு மமுதமன்னாள்
**93
#21
பரிவி லணிகா லணியவைகாற் பணியென் றணியாள் தனிக்காமன்
வெருவு நடையாள் மழைகான்று விட்ட வெழிலிச் சிகழிகையா
ளொருசங் கையினா லிருசங்கை யுற்றுநாற் சங்கை யுமிசையாள்
தெரியுங் காம நூன்மடவார் சிந்தைக் குணர்த்துஞ் செய்கையினாள்
**94
#22
ஆலும் பரத விதமகளிர்க் கறிவிற் பயிற்றுங் குருவனையாள்
கோலுந் தரும நினைவுமின்சொற் குறிப்பிற் பயிலும் பசப்புமுறச்
சாலு நெறியாள் பரந்தமுதந் ததும்பும் வாவிக் கடிதடத்தாள்
ஏலு நிகரி லிடையினள்பே ரிளம்பெண் பருவத் தேந்திழையே
** பெண்களின் பருவ ஆண்டு
**95
#23
தலைவன் போது முலாவீதி சார்ந்து கண்டு தொழிற்கிசையு
மிலையம் பழகும் பேதைமுத லேழு பருவக் குணந்தருமாண்
டுலைவி லேழ்பன் னொன்றுபன்மூன் றோது பதிற்றொன் பானையைந்
தலைவி லாறைந் தொன்றடைந்தா யடைவி லெண்ணைந் தருளினரே
** ஐந்தாவது எழுவகைப் பெண் பருவத்தொகுப்பு முற்றும்
** பாயிரமுட்பட விருத்தம்- 90
@6 ஆறாவது எழுவகை ஆண் பருவத் தொகுப்பு
**96
#1
சகமுந் திசையு முயர்செம்பொற் சயிலப் பொருப்பு நெடுங்கடலுஞ்
சுகம துறவுந் துயிலடக்குந் தோகை பாக னடிதொழுது
புகலு முறையிற் பருவமொடு போந்த வயது மொருகவியிற்
பகரு விதமா யெழுவகையாண் பருவத் தொகுப்பை யறைகின்றாம்
**97
#2
உன்னும் பாலன் மீளிமற வோனே திறலோன் காளையொடு
பன்னும் விடலை முதுமகனாண் பருவ மேழா மென்பரிவை
மன்னு மாண்டே ழீரைந்து வருமீ ரேழு மூவைந்து
துன்னு மீரெட் டையாறு சொல்லு மாறெட் டளவினவே
** ஆறாவது எழுவகை ஆண் பருவத்தொகுப்பு முற்றும்
** பாயிரமுட்பட விருத்தம்- 92
@7 ஏழாவது - எண்வகை மணவிவரணத் தொகுப்பு
**98
#1
இருந்தா கமமு மாரணமு மியம்பு மிறைவ னடிபோற்றிப்
பொருந்தாக் காமச் செயனான்கும் பொருந்துங் காமச் செயலொன்றும்
திருந்தா வொருத லைக்காமச் செயலோர் மூன்று மாய்விதந்து
வருந்தா தேழு கவிதையிலெண் வகைசேர் மணம தியம்பலுற்றாம்
**99
#2
சதிரால் விளங்கும் பிரமம்பிர சாபத் தியமா ரிடந்தெய்வ
மெதிர்சேர் காந்தி ருவமசுர மிராக்க தம்பை சாசமென
விதிகூர் மணமெட் டாமிவற்றின் விளங்கும் பிரம முதனான்கு
மதியார் பொருந்தாக் காமமிரு மனமும் பொருந்தா மணமாமே
**100
#3
ஒத்த குலத்தி லாண்டாறெட் டுற்ற பிரம சாரியற்குப்
பத்தி பெருமா றிரண்டாட்டைப் பருவக் கன்னி தலைப்பூப்போய்
நத்து மிரண்டாம் பூவருமுன் னாரிக் கிசையு மணியிட்டுத்
தெத்தங் கொடுத்தல் பிரமமெனச் செப்பும் வேத நெறியாமே
**101
#4
குலத்து ளுரியோன் வேட்பதற்குக் கொடுத்த பரிசத் தினுக்கிரட்டி
பலத்திற் கொடுத்து விடல்பிரசா பத்தியங் கோடு குளம்புபொன்னால்
நலத்திற் செய்து புனைந்தாச்சே நடுவணி வரைப்ப ணிசெய்நிறீஇ
நிலத்தி லிவைபோல் வாழ்திரென நீராற் கொடுத்த லாரிடமே
**102
#5
தொக்க மறையி னியல்புணர்ந்து சொற்ற படிக்கவ் விதிபேணித்
தக்க நெறியின் மகம்வேட்டோர் தம்மி லொருவன் றனைவரித்து
மிக்க விதிநூற் செயலாக விரும்பு மவர்க்கவ் வேள்விமுன்னர்த்
தெக்க ணையதாய் மகட்கொடுத்தல் தெய்வ மெனவே புகல்வாரே
**103
#6
இனமாய் வருகைக் கிளைநான்கி லிருவர் மனமு மைந்திணையிற்
கனமாய்ப் பொருந்துங் காமமது காந்தி ருவமென் மணமாகும்
தனமா யிருவர் தம்மிலொரு தலையார் காம முறைசேர்த்துற்
பனமாய் விரும்பு மணங்கைக்கி ளைபன்னு மசுர முதன்மூன்றே
**104
#7
அகன்ற வசுர மணம்பகையை யடர்ந்து துரத்தி யுரமீறுந்
திகழ்ந்த திமிலேற் றினையொடுங்கச் சேர்த்துத் திரிபன் றியையெய்து
சகங்க டுதிப்ப வெதிரென்று தங்கு பலத்திற் றநுவளைத்துப்
புகன்ற சபத முடித்ததிரம் போற்றித் தமது மகட்கொடுத்தல்
**105
#8
தலைவி யிசைவி னன்றிவரு தமர்க ளிசைவி னன்றியுமே
வலுவிற் கொள்ள விராக்கதத்தின் மணம்பை சாச மணமியம்பிற்
றொலைவின் மூத்தோர் களித்தோர்கண் டுயின்றோர் பயந்தோர் கலைமாற
லலைவின் மயக்கிற் றனிமையிற்றூய் தழிந்த விழிந்தோர்ச் சேர்தலுமே
** ஏழாவது எண்வகை மணவிவரணத் தொகுப்பு முற்றும்
** பாயிரமுட்பட விருத்தம்- 100
@8 எட்டாவது - புணர்ச்சி வகைத் தொகுப்பு
**106
#1
திரங்கொண் டிருந்த கயிலையினைச் சென்றோ ரரக்க னெடுத்தலுமே
வுரங்கொண் டலற விரனுதியொன் றூன்றி யடர்த்தோன் தாள்பரவி
முரண்பெ றாது கவிநான்கின் முயங்குந் தலைவன் றலைவியொடு
மிரண்டு பகுப்பி லறுவகையா யிசையும் புணர்ச்சி வகைசொல்வாம்
**107
#2
மெச்சு பெருமை யுடன்றலைவன் மேவ லாலு நாணமட
மச்ச மடைவிற் றலைவிதனக் கமைத லாலு மிருவருளத்
திச்சை கவர வுயிரழுந்தி யிசையும் புணர்ப்பு நன்புணர்ப்பா
னச்சி யவத்தை யிருவருக்கு நண்ணு வதுமெய் யுறுபுணர்ப்பே
**108
#3
இயற்கைப் புணர்ச்சி யிடந்தலைப்பா டேத்து பாங்கற் கூட்டமொழி
நயத்திற் பாங்கி யிற்கூட்ட நான்குங் களவிற் புணர்ச்சியவாம்
வயத்திற் குரவர் தரப்புணர்தல் வாயி லாற்சென் றுடன்புணர்தல்
செயற்கைப் படுமிப் புணர்விரண்டுந் தெளிந்த கற்பிற் புணர்ச்சியவே
**109
#4
களவு கற்பா மிருகைகோள் கருதிக் களவூழ் காரணமா
யளவி லுளமாண் பொத்திருவ ரறிந்த காமப் புணர்ப்பாகும்
வளமை கரவூழ் காரணமாய் வழங்கு முலக நடையியல்பிற்
புளக முலையா டனைவிரும்பிப் புணர்தல் கற்பின் புணர்வாமே
**110
#5
இன்பத் தலைவி தன்விரகத் தியல்பு மதனம் புலியன்றில்
தென்றற் பிறவா கியபகையின் றிறனு மவள்வாட் டமுமென்று
நன்றிற் பாங்கி முதற்றூது நவின்று தலைவன் றனக்குரைப்ப
வன்பிற் குரியத லைவன்சென்று மருவல் பிறவுஞ் சிற்றின்பே
** எட்டாவது புணர்ச்சி வகைத் தொகுப்பு முற்றும்
** பாயிரமுட்பட விருத்தம்- 105
@9 ஒன்பதாவது - புணர்தற்குரிய வகைத் தொகுப்பு
**111
#1
தினத்திற் சினந்த காமாரி திருத்தாள் பணிந்து சாத்துவிக
குணத்தைப் பெறுசுக் கிரீதீரன் குலவு வரைமின் னார்போல
மனத்திற் குரிய தலைவனொடு மகிழ்ந்து தலைவி புணர்ந்திருக்கும்
புணர்த்தற் குறியின் செய்கைதனைப் போந்த கவியைந் தாலுரைப்பாம்
**112
#2
புகழ்ந்தா பரணந் தரித்துநுதற் பூட்டும் வசியத் திலதமிட்டுச்
சுகந்தா திகள்மென் குழற்கணிந்து தொய்யி லிருபூண் முலைக்கெழுதித்
திகழ்ந்தார் நறுஞ்செங் குங்குமமுந் திமிர்ந்தே மலர்த்தாட் கலத்தகமு
நிகழ்ந்தே யிலகப் புழுகுபனி நீராற் சாந்த முடற்பூசி
**113
#3
வண்ண மகளீ ரலங்கரிப்பு மதன னுரவு முண்டாட்டி
னண்ணு மனமுங் கிளிபூவை நவிலு மின்சொற் ககமகிழ்வு
முண்ணும் பாலோ தனவிருப்பு முற்ற கேள்வ னுடனின்பும்
விண்ணின் மதிதென் றலைவேட்டு வீணை பயில்வின் வீற்றிருப்பும்
**114
#4
பாங்கி னிமிரும் பூங்காவிற் படிசேர் மலர்வா விக்கரையி
லோங்கு தென்ற லசைமுன்றி லுயர்பொற் சிகர மாடத்திற்
றூங்கு மூஞ்சல் செய்குன்றிற் றுலங்கு சித்திர மண்டபத்தி
லீங்கு வேண்டு மிடத்திலினி தியங்கு சிங்கா சனக்கட்டில்
**115
#5
மிசையிற் பஞ்ச சயனத்தின் மீது விரைசேர் மலரினங்க
ணசையிற் காம்பு கொய்துபெய்து நறுமெல் லியவெண் மடியதன்மே
லிசைய விரித்துப் பட்டருகு மெழிற்கொட் டைகளும் பரப்பிமஞ்ச
மசைய மேற்கொண் டிருந்துசுரு ளஞ்சு மணத்தோ டெதிர்மாறி
**116
#6
அருந்திச் சரச கவிபடிக்க வனங்க னாவே சங்கதித்து
விருந்தி னுபரிக் கொக்கோக விதத்திற் கொங்கை குலுங்கவிடை
வருந்தித் துவளப் புட்குரலும் வகுத்த தாட னமுமுழங்கப்
பொருந்தி மகிண னொடுகுலவிப் புணர்தற் கறியுங் குறிப்பாமே
** ஒன்பதாவது புணர்தற்குறிய வகைத் தொகுப்பு முற்றும்
** பாயிரமுட்பட விருத்தம்- 111
@10 பத்தாவது - பிரிவின் வகைத் தொகுப்பு
**117
#1
ஆறு மாரு மதிக்கொழுந்து மணிந்த சடையா னுமையையொரு
கூறு மேவி யுலகருளுங் கோமா னடியைப் பணிந்தேத்தி
மீறு மிருகை கோட்பகுப்பில் வினவு கவிதை யிரண்டிலெட்டாத்
தேறு பிரிவின் வகையினது செயலை வியந்து கூறலுற்றாம்
**118
#2
மருவி யொருவ ழிப்பிரிதல் மைய லுடனே வரைவிடைவைத்
துருகு மன்பி னுறுகேள்வ னுவந்து பொருள்வ யிற்பிரிதல்
பெருகு மியல்பின் வாசகங்கள் பிறக்கப் பாடுந் தமிழ்வல்லோர்
கருது நெறியிற் கட்டுரைத்த களவிற் பிரித லிருவகைத்தே
**119
#3
துணிவிற் பரத்தை யிற்பிரித றூதிற் பிரிதன் மதிகூர்ந்து
பணிவிற் கல்வி யிற்பிரிதல் பரிந்து காவ லிற்பிரித
றிணிதி னுதவி யிற்பிரித றேடும் பொருள்வ யிற்பிரிதல்
கணித முறுமோ கத்தலைவன் கற்பிற் பிரித லறுவகைத்தே
** பத்தாவது பிரிவின் வகைத் தொகுப்பு முற்றும்
** பாயிரமுட்பட விருத்தம்- 114
@11 பதினோராவது - பெண் விரக வகைத் தொகுப்பு
**1 20
#1
உலகம் யாவு மொருபொருளா யுயிருக்குயிராய் நிறைந்தோங்கும்
அலகில் சோதி வடிவான்சே வடியை யிறைஞ்சிக் கவிநான்கிற்
குலவு மதனும் ரதியும்போற் கொஞ்சி யணையு முயிர்த்தலைவன்
விலகும் போது தனித்துறுபெண் விரக முறுமா றியம்பலுற்றாம்
**121
#2
தளவ நகையார் விரகத்திற் றயங்கிற் புகுதல் முகம்புரித
லளகஞ் சரித லுத்தரிய மகல லுடுத்த துகில்சோர்தல்
வளைகள் சிதற னாணழிதன் மடலூர் தற்கு மனந்துணிதல்
புளக முலை பொற் பசலைகொண்டு பொரும லணைமுட் போன்றிடுதல்
**122
#3
கரவாய் நினைத்தல் மெய்வெளிறல் கருத்து ளடங்காத் துயருறக்கண்
விரவாத் துயினெட் டுயிர்ப்பெறிதல் விரும்பிக் கூட லிழைத்தயர்தல்
பரவு ரோமப் பொலிவொடொத்தல் பாவை யார்சொல் வசைக்கிரங்க
லுரவா னகுத லயன்மறைத்த லுண்ணும் பாலோ தனங்கைத்தல்
**123
#4
பதிவா யுருவி னெழினோக்கிப் பணிந்து பரத வித்தறலை
மதவேள் சசிபுட் கார்கடல்கான் மந்தா னிலமற் றிவற்றினொடு
மெதிர்கண் டிரந்து புலம்புறல்கை யிரண்டு மிசைய மேலெடுத்தல்
துதிசொல் குறளை மெய்வருடல் சோர்விற் காம சலம்பெருகல்
**124
#5
மூசும் விரகாக் கினியினுதல் வெயர்த்த லணிமுத் தம்பொரித
லூசல் கழங்கம் மனைவிளையாட் டுன்னாக் கிடைமெய் யணிதிருத்தன்
மாசி லுடையைப் பெயர்த்துடுத்தன் மயங்கிப் பிதற்ற றனியிருக்கை
கூசி மேனி நடுங்கலெனக் கூறு மவத்தை யையாறே
** பதினோராவது பெண் விரக வகைத் தொகுப்பு முற்றும்
** பாயிரமுட்பட விருத்தம்- 119
@12 பன்னிரண்டாவது - புருட விரகத் தொகுப்பு
**125
#1
கணமு மடியா ருளம்பிரியாக் கருணை மூர்த்தி நளினபத
மணவு நினைவாற் றொழுதேத்தி யருளுங் கவிதை யொன்றிலுற
மணமெல் லியபூ வணையினக மகிழ்ந்து தினமுங் கலந்தினிது
புணருந் தலைவி தனைப்பிரியும் புருட விரகச் செயலுரைப்பாம்
**126
#2
காண்டல் வேட்கை சிந்தித்தல் கசிவின் மெலிதன் மெலியாத
வீண்ட வயலுக் கியம்புதனா ணிழத்தல் காணு மவையெல்லாந்
தூண்டு மனதின் குறிக்கேற்கத் தோன்றல் பிதற்றன் மோகித்தன்
மீண்டு மாழ்க லிவைபுருட விரக வவத்தை பத்தாமே
** பன்னிரண்டாவது புருட விரகத் தொகுப்பு முற்றும்
** பாயிரமுட்பட விருத்தம்- 121
@13 பதின்மூன்றாவது - விரகப் பெண்ணின் பகையாதிய தொகுப்பு
**127
#1
விண்ணு மகன்ற புவியனைத்தும் விளங்கும் புகழ்ச்சுக் கிரீமகிபன்
கண்ணு மனத்திற் குடியிருந்து காக்குந் திரிமூர்த் தியைப்பரவி
யெண்ணுங் கவிதை யோரைந்தா லியம்பு முறையா லினிவிரகப்
பெண்ணின் பகையா தியவற்றைப் பேணி விதந்து கூறலுற்றாம்
** பகை
**128
#2
முத்துக் களப மருக்கொழுந்து முல்லை பிச்சி முதலாம்பூந்
தொத்துக் கதலி கடலாம்பல் சூழுங் குளிரி பூம்பாயல்
நத்துக் கவிய வடர்கங்குல் நறுந்தண் பனிநீ ரிவைபத்தும்
பித்துப் பொலிய வரும் விரகப் பெண்ணின் பகையென் றெண்ணுவரால்
** நீக்கல்
**129
#3
இலங்கு பணியும் பைந்தொடியு மிசைந்த கொங்கைக் கணிகச்சுந்
துலங்கு முத்து வடமொடுபூந் தொடையும் புனையா ளிருவிழிக்கு
நலங்கொண் டொளிரஞ் சனந்தீட்டா ணயந்து திலகநுதற்கணியாள்
கலங்கும் விரகத் துடியாலே கமழ்பூங் குழலு முடியாளே
**130
#4
அரிய கழங்கம் மனைசுனைநீ ராடாள் கானே ரிசைபயிலாள்
பரிவில் வளர்க்குங் கிள்ளைமுகம் பாராள் மானைக் கையணையாள்
பிரியந் தருசொற் பூவையையும் பேணாள் விரகக்கொடுமையினா
லுரிய பாங்கி யர்க்கேவ லுவந்து புரியாள் மனமிறந்தே
** துயர்க்கேது
**131
#5
தென்ற லாலுங் குயிலாலுந் திங்க ளாலும் வேயாலு
மன்றி லாலுங் கடலாலு மந்தி வருசே மணியாலும்
வென்றி மதவே ளாலுமிசை வீணை யாலு நொந்துமனங்
கன்றி யூர்க்கு மலர்விளைக்குங் கலங்கும் பொழுது நலமிறவே
** தூது
**132
#6
கொண்டல் பாங்கி மயில்பூவை குயில்பூம் பொதிய மலைத்தென்றல்
கண்ட நறும்பூ மடவன்னங் கருது நெஞ்சம் பசுங்கிள்ளை
வண்டு விறலி பிறவுமிவள் வருத்த மகலும் படிதூது
விண்டு தலைவன் புயமாலை வேண்டித் தருதற் கியல்பினவே
** பதின்மூன்றாவது விரகப் பெண்ணின் பகையாதிய தொகுப்பு முற்றும்
** பாயிரமுட்பட விருத்தம்- 127
@14 பதினான்காவது - மகளிர் பாதாதியுவமைத் தொகுப்பு
**133
#1
தவமெய்ஞ் ஞான ருளத்தினிக்குந் தண்டே னனையான் கழல்பேணித்
துவமா மேரு கிரியணைதோட் சுக்கிரீ மகிப தோன்றலுயர்
நவம துறுமொண் டடவரைநேர் நாரி யார்தம் பாதாதி
யுவமை யலங்கா ரம்புகல லுற்றாங் கவியெண் மூன்றாறால்
** உள்ளடிக்கும் கால்விரலுக்கு மிணை
**134
#2
வனச மனைமாந் தளிர்முயலின் வயிறு செயலை யனத்தூவி
சுனக நாக்குச் செம்பஞ்சு துகடீ ரனிச்ச மிவைமடவார்
வினவுள் ளடிநேர் பெறுங்காலின் விரல்க டமக்கு மஞ்சண்முளை
யனவென் றுரைப்பார் துவர்க்கொம்பு மாமென் றுவந்து சொல்வாரே
** காலினுகிர்க்கும் புறங்காலுக்கும் பரட்டுக்கு மிணை
**135
#3
காலின் விரல்சே ருகிர்படிகங் கணம்பத் தாகக் கடைந்தமதி
சாலும் புறங்கால் கமடமும்பொத் தகமுங் கமுகின் பாளையுமாம்
பாலின் பாளை யுட்குரும்பை பந்து தராசு சிப்பியிவை
நாலுங் கரட்டுக் குவமையென நவில்வ ரியனூற் கவிவலரே
** குதிங்காலுக்கும் கணைக்காலுக்கு மிணை
**136
#4
பரவு சிறுதூ ரிகைப்பெட்டி பந்து சங்கு வனசமுகி
ழிரச நறுமாங் கனிகுதிங்கா லேற்கு முவமை பெருந்தூணி
விரவு தேம்பூ விரிபாளை வேணு காளம் வராலைந்து
முரவு கணைக்கா லுக்கிணங்கு முவமை யாமென்றுரைப்பாரே
** முழந்தாளுக்கும் தொடைக்கு மிணை
**137
#5
அலவன் பசுமூக் குற்றதிர டாள்வான் பணிகே டகத்தின் குமிழ்
சுலவு முழந்தாட் குவமையெனச் சொல்வர் தொடைக்கா னைத்துதிக்கை
சலமி லீனா விளங்கதலித் தம்ப மல்குற் றடநீந்தக்
குலவு தெப்பந் தூணானங் குறிசே ருவமை நெறியினவே
** நிதம்பத்திற்குங் குறிக்கு மிணை
**138
#6
பொற்றட் டனங்க னரண்மனைவேள் போக விடங்காக் கணம்பூம்பை
தெற்று தேன்கூ டரவபடஞ் செந்தா மரைப்பூ மதுக்குழாஅய்
பற்றும் வாழைப் பூமடல்பொற் பதக்கங் குதிரைச் செவிதேர்த்தட்
டுற்ற வமுதஞ் சருக்கரைக்கூ டுடும்பின் வாய்பைந் தேன்கிணறு
**139
#7
அடருஞ் சத்தி பீடமத னாலவட்டங் குளமடைபாற்
கடறூ விளக்குச் சங்கநிதி கள்ளன் றளிர்வெற் றிலைவிண்ணிற்
படரு மரசி னிலைபட்டம் பருவமேழுக் கல்குறனைத்
தொடரு முவமை பெண்குறிக்குச் சொல்லத் தகுமான் குளம்பென்றே
** இடைக்கும் வயிற்றுமடிப்புக்கும் வயிற்றுக்கு மிணை
**140
#8
கொடிநூல் துரும்பு தேய்ந்தபிறைக் கொழுந்து சிங்க மதன்வஞ்சி
துடிவிண் மீன்கைப் பிடிகுலிசஞ் சுருதி யிடைக்கொப் பாமேறும்
படிநீர்த் திரையொவ் வும்மடிப்பும் பயிலும் வயிற்றிற் காலிலையுங்
கடிசேம் பிலையு மதிப்பிளவுங் கதலிக் குருத்து மிணையாமே
** உந்திக்கும் வயிற்று ரோமத்திற்கு மிணை
**141
#9
வட்டச் சோகி மல்லிகைப்பூ வருநீர்ச் சுழிநந் தியாவர்த்த
மொட்டென் றுவமை யுந்திக்கு மொழிவார் சலாகை வார்க்கயிறு
துட்ட மதன னாணொழுக்கந் தும்பித் துதிக்கை யெறும்பொழுக்கம்
விட்ட கரிய மணிக்கோவை விதிரிட் டேகு மததாரை
**142
#10
விரும்பா லிலையி னடுநரம்பு விண்டு கிடந்த விரதவடங்
கரும்பாம் பிளநீர்க் காம்புநறுங் களபத் தின்றண் டுளித்தாரை
யரும்பார் வனசப் பூம்பசுந்தா ளவிர்வான் றாரை யென்றியைய
வரும்பே ருவமை பெறுமடிப்பின் வயிற்று ரோமத் தொழுங்கினுக்கே
** கொங்கைக்கிணை
** 143
#11
வல்லுச் சக்கி ரவாகமதன் மகுட மெலுமிச் சங்கனிபூம்
வில்வக் கனிமாங் கனிதேங்காய் விளவின் கனிகோ புரத்தூவி
சொல்வெற் பிளநீர் கதலிப்பூ சொன்னத் தாளஞ் சிவலிங்கந்
தெல்லுக் கரகங் கோங்கரும்பு சிமிழ்பம் பரம்பொற் குடங்கிண்ணம்
**144
#12
செண்டு குமிழ்வார் கூடாரஞ் சேவின் றிமில்பொற் கரண்டகமென்
புண்ட ரீக முகிழ்பந்து புன்னைக் காய்மா துளங்கனிமேற்
கொண்ட புளகப் பிடிசெம்பு கொட்டைப் பாக்குப் பரிதிமதி
மிண்டு மிபமத் தகமருப்பு மிளிரு முட்டை பசும்பொற்றேர்
**145
#13
படர்ந்த செப்பு மாவிலங்கப் பழமா றேழு மிணைந்திறுமாந்
தடர்ந்து விம்மிச் சுணங்கரும்பி யண்ணாந் திளகிப் பணைத்தெழுந்து
தொடர்ந்து களப மொழுகநறுந் தொய்யி லிலக வெண்டரள
வடங்கொள் புளகமுலைக் குவமை வழுத்தாய் பருவத் திறனுணர்ந்தே
** விரலுக்கும் விரலுகிர்க்கு மிணை
**146
#14
அலரிக் காய்முத் திரைக்கோல்பொன் னாழி துலங்கும் பயற்றங்காய்
குலவப் படுமாந் தளிர்பவளக் கொம்பு கெளிறு கிட்டிக்கோல்
நிலவச் சுழற்றுந் திறவுக்கோல் நெருங்கு மிருகை விரற் குவமை
கலவப் பெறுமவ் விரலுகிர்க்குக் கருதுங் கிளிமூக் கொப்பாமே
** கைக்கும் முன்கைக்கும் தோளுக்கு மிணை
**147
#15
தளஞ்சேர் செந்தா மரைகாந்தள் தயங்கு முச்சிற் றிலகமென
வளஞ்சே ரங்கை பெறுமுவமை மானு முன்கை யாழ்ங்கோடு
விளங்கு மெழிற்பூ ரணகும்ப மிசையிற் றரித்த மாலிகைவேய்
கிளர்ந்த மலர்ப்பஞ் சணைமூன்றுங் கிளர்மென் றோளுக் கிணையாமே
** கழுத்துக்கும் முகத்துக்கும் வேர்வைக்கு மிணை
**148
#16
சங்கு செம்பு பாலிகைபூ சனிப்பூச் சூல்கொ ளிளங் கமுகு
மங்க லஞ்சேர் சுருளேந்து மடலுங் கழுத்திற் குவமைபெறுந்
திங்கள் படிமக் கலங்கமலஞ் செண்டு பூந்தட் டிவைதரணி
யெங்கும் புகழுந் திருமுகத்துக் கிசையு முத்தம் வியர்வாமே
** அதரத்துக்கும் வாய்க்கு மிணை
**149
#17
கொண்ட பவள முருக்கினிதழ் கோப மிலவு செவ்வரத்தந்
தொண்டை வீழி யமுததுண்டஞ் சொற்க பாட மாதுளம்பூ
வண்டு கவியுஞ் செங்குமுத மலர்தூ தளைசெங் கமலமொப்புக்
கண்டு மொழிந்தா ரீரிதழ்க்குங் கனிவாய்க் கிணையாஞ் செங்குமுதம்
** எயிற்றிற்கும் நகைக்கு மிணை
**150
#18
முத்துத்தளவு புளகரும்பு முருந்து மாது ளங்கனியின்
வித்துப் பதும ராகமிணை விரும்பு மெயிற்றிற் காம்பரிவிற்
சித்துப் பொலியு நகைக்குவமை திகழ்வெண் ணிலவா மெயிறுசற்றே
யொத்துச் சிவந்தாற் பவளமுந்தா னொவ்வா தென்றே யுரைப்பாரே
** மொழிக்கிணை
**151
#19
வாகி னுறுதீம் பால்செழுந்தேன் வண்ணப் பசும்பூங் கிளியமுதம்
பாகு கரும்பு கற்கண்டு பாடும் யாழ்முக் கனிசீனி
யேகு பூவை சருக்கரைவண் டிரங்கு மிசைகோ கிலங்குழலென்
றாகு மிவைபன் னேழுமினித் தருளுஞ் சொல்லுக் கிணையாமே
** கவுளிற்கும் மூக்கிற்கு மிணை
**152
#20
சந்தச் சாணை பரிக்கலணை சாரு மூக்கின் கண்ணாடி
யந்தக் கவுளி னுக்குவமை யாமெட் பூவும் குமிழரும்பு
முந்தக் கமழ் செம் பகவரும்பு முருகா ரிலவின் பூங்காம்பும்
பந்தக் கவிஞ ரெல்லோரும் பகர்வார் நாசிக் கிணையெனவே
** விழிக்கிணை
**153
#21
வேல்வா ளமுதங் கருங்குவளை வேலை மாவின் வடுவகிர்மான்
கோல்பங் கயமஞ் சனங்குடங்கை கூற்று விடம்வண் டுவலைமழை
சால்பி னுறுகஞ் சனங்கயல்சேல் சகோரம் வழிபோய்க் குழையடர்ந்து
மால்வி தாதா சிவனுருவின் வயங்கும் விழிக்கொப் பிவையாமே
** விரகப் பெண் விழிக்கிணை
**154
#22
நெஞ்சு கறுத்த பேதைக்கு நிகழ்த்தும் விழிசெங் குமுதமொப்பாம்
வஞ்ச முடன்கோ ரமுமிகுந்து மையல் பூட்டுங் கருணையுமாய்த்
துஞ்சு மதர்ப்பி னொடுகருமை சூழ்ந்து கூர்மை நனியுடைத்தாய்
விஞ்சை மதனா கமம்வழிய விழைக்குங் கடைக்கண் வேலாமே
** காதிற்கும் புருவத்திற்கு மிணை
**155
#23
நகுபூம் வள்ளை பொன்னூசல் நவில்கத் திரிகை தராசலைமான்
புகுதும் வாசல் நாராங்கி புகழுங் காதுக் குவமையுறுந்
தகுநீ லாஞ்ச னமுஞ்சலசத் தாளி னொடுசிங் காடிவில்லுஞ்
செகும்வா ளுறையுங் கடற்கரையுஞ் செப்பும் புருவ மொப்பாமே
** நுதலுக்கும் திலகத்திற்கு மிணை
**156
#24
அகத்தி யரும்பும் வாசிகையு மனுக்கக் குனிக்கும் பூஞ்சிலையும்
பகுத்த பிறையுங் கொக்கிறகும் பகரு நுதலுக் கிணையாகும்
வகுத்த நுதலி னிடுந்திலக மானுந் தினக ரோதையமுஞ்
சகத்துக் கிறைவ னுதற்கண்ணுந் தயங்கு நாக ரத்நமுமே
** குழலுக்கிணை
**157
#25
கொன்றைக் கனிகல் லார்மனது கூந்தற் கமுகு பொதுமடந்தை
தன்ற னிதயஞ் சூன்மேகஞ் சவரி கருமை யடர்கங்குன்
மன்றல் கமழு மஞ்சனிப்பூ வயங்கு சிறைவண் டினஞ்சோலை
துன்ற வருபைம் புனல்கொழிக்குந் தூய வறலிந் திரநீலம்
**158
#26
இருள்சை வலமோர் மூவைந்து மிணங்கு மிளைஞ ராருயிரு
முருவின் பலமென் னறும்பூவு மொக்கச் செருகிக் கடைகுழன்று
வருமைந் தழகு போன்றுநெய்த்து வண்டு சூழ்ந்து குய்யார்ந்து
தருதேன் றுளிப்ப வழிந்தொழுகுந் தகரக் குழலுக் கிணையாமே
** சடைக்கிணை
**159
#27
கன்னிக் கமுகின் பூம்பாளை கரிய பிடியா னைத்துதிக்கை
யென்னக் கூறு மதிப்பகையு மேற்கும் பிச்சி மருக்கொழுந்தும்
புன்னைப் பூச்செண் பகமுல்லைப் பூச்செவ் வந்தி பொலிந்திலகப்
பின்னுக் கழகாய் வகுப்பெடுத்துப் பின்னி விடுபூங் குழற்கிணையே
** பதினான்காவது மகளிர் பாதாதியுவமைத் தொகுப்பு முற்றும்
** பாயிரமுட்பட விருத்தம்- 154
@15 பதினைந்தாவது - பெண்ணினுவமை யலங்காரத் தொகுப்பு
**160
#1
விழவிற் பொலியு மடிகைமலை மேவு மெந்தை நளினமலர்க்
கழலிற் பொலியு மடியவர்பூங் கழலைத் தொழுது கவிமூன்றில்
நிழலிற் பொலியுஞ் சுக்கிரீப நிருப நாட்டு வனிதையர்போ
லழகிற் பொலியும் பெண்ணுவமை யலங்கா ரத்தை யறைகின்றாம்
**161
#2
குயின்மோ கினிதேன் பாகுகிள்ளை கொடிமின் காம னபிடேக
முயிர்மா னாசைக் களஞ்சியம்பொன் னோங்கு காமக் கலைக்கியானம்
பயில்சேர் கொல்லி யம்பாவை பசும்பூங் கொம்பு சஞ்சீவி
மயில்பூங் கஞ்ச மமுதபுஞ்சம் வாடா விளக்கு ரசகுளிகை
**162
#3
திருமே னகைபா ரதிமதிசெந் தேன்செங் கரும்பு மருக்கொழுந்து
மருவே தென்ற லுருப்பசிசூர் மகளிர் காமன் குருபீடம்
விருதே தெய்வ மயிராணி வெண்முத் தார மடவன்ன
முருவே பிடியென் றிவைபிறவு மோதும் பெண்கட் கொப்பாமே
** வடிவு மேனி தேமல், சாயல் நடை பார்வை யிவைகட்கு உவமை
**163
#4
பன்னும் வடிவிற் பாவைதிருப் பைம்பொன் மலர்செந் தளிர்மேனி
பொன்னும் வேங்கை நறும்பூவும் பொலிந்த தேமற் கிணைகூறும்
மின்னும் மயிலுஞ் சாயலொக்கும் விகங்கம் பிடிமென் னடைநிகரு
மன்னும் பார்வைக் கிணைபிணையாய் வழுத்தும் பிறவு மதித்துரையே
** பதினைந்தாவது பெண்ணினுவமை யலங்காரத் தொகுப்பு முற்றும்
** பாயிரமுட்பட விருத்தம்- **158
@16 பதினாறாவது - புருட வுவமை யலங்காரத் தொகுப்பு
**164
#1
நவிகூர் மழுவேந் தியவேத நாத கீத னோங்குகுழைச்
செவியான் விரவான் மதிச்சடையான் திருத்தாட் டொழுது கவியாறிற்
புவிமா தொடுபூ மலர்மாது புணர்மால் சுக்கிரி மகிபனெனக்
கவினார் புருட வுவமையலங் காரம் வருமா றியம்பலுற்றாம்
**165
#2
திருமால் முருக னளகேசன் றென்ன னிந்திரன் றேனுமுகி
லுருவார் மதனன் பஞ்சவர்க ளுண்மை வாச கன்குமுணன்
வருசீ வகன்மூ வேழ்வள்ளல் வனச சங்க நிதிபஞ்ச
தருமார்க் கண்ட னப்பாச்சி சயந்த னுதயன் யூகிமந்திரி
**166
#3
விதுரன் றுருவன் மகம்மேரு வியாழன் கண்ட னிடியேறு
கதிரோன் சேடன் சீராமன் கலைதேர் முனிவ னிலக்குமணன்
துதிசேர் வாணன் சிங்கேறு சோமன் பிறவும் புருடருக்கு
மதிதேர் புலவ ருவந்தினிது வழுத்து முவமைச் சிறப்பினவே
**167
#4
நீதி வேள்வி வெற்றிகொடை நிலைமை செல்வங் கல்விதன
மோது மேன்மை யூகமழ குண்மை பெருமை காப்புவலி
போதம் பிறவும் பொருட்குவமை பொருந்த மறையோர் முதலோர்க்கும்
பாது காத்துத் தக்கவகை பாடு மியல்பிற் பகர்வாயே
**168
#5
தோற்று நிந்தை துதிநிந்தாத் துதியென் றியம்பும் வகைமூன்று
மேற்றுந் தக்க வியல்புதகா வியல்பு நோக்கி யிழிபுயர்விற்
போற்று முறையா மீரியல்பிற் பொருட்சார் பறிந்து பொருந்துநெறி
சாற்று முவமை யணிகொடுத்துச் சான்றோர் மதிக்கச் சாற்றுவையே
**169
#6
மன்ன ரீன்ற புதல்வருக்கு வயதீ ராறு முதலாமேற்
பன்ன வருமீ ரெட்டளவும் பரவு முருக னொப்பாகுங்
கன்னன் மொழிமங் கையர்தமக்குக் கதித்த பெதும்பைப் பருவமுதற்
சொன்ன வரிவைப் பருவம்வரை சொற்ற திருவுக் கிணையாமே
**170
#7
நினையும் வனச மதிமுகங்க ணிழற்றுங் கமலஞ் சிலைமார்பு
முனைகொள் கரங்கார் தருவனச மொழியும் புருட ருறுப்பினணி
புனைவர் கருமம் பயன்மெயுருப் புகலு நான்கின் பொருட்பணர்வொத்
தினைய வுவமை யலங்கார மெல்லா மமையு மியல்பாமே
** பதினாறாவது புருட வுவமை யலங்காரத்தொகுப்பு முற்றும்
** பாயிரமுட்பட விருத்தம் – 165
@17 பதினேழாவது - முப்பொருள் வகைத் தொகுப்பு
**171
#1
கதன முறும்வெம் பரித்தொகையைக் கான லுழலு நரித்தொகையா
யிதமுற் றியங்கு மடியவற்கா யியற்றி னோன்பொற் பதமேத்தி
முதலு முரியுங் கருவுமென மொழியப் படுமுப் பொருள்வகையை
யுதவு கவிதை பன்னொன்றா லுணரும்படிதேர்ந் துரைக்கலுற்றாம்
**172
#2
குறிஞ்சி முதலா யினவைந்துங் குறியா யவைசா ரிடனைந்து
மறிந்து கொளுமவ் வீரைந்து மடைவே யிரண்டி லைந்திணையாம்
பிறந்த பாலை யொன்றொழியப் பேசு வதுநா னிலமாகுந்
திறன்செய் பொழுது நிலனுமெனச்செப்பு வதுவா முதற்பொருளே
**173
#3
பகுகார் கூதிர் முன்பின்பனி பகரு மிளமு தியவேனில்
புகுமா வணிதொட் டிரண்டிரண்டாய்ப் பொருந்து மாறும் பெரும்பொழுதா
முகுமா லையியா மம்வைகறை யுற்ற காலை யுச்சியெற்பா
டிகுசெங் கதிரமை யந்தொடங்கி யீரைம் பதமற் றிவையாமே
**174
#4
மனுகூ திருமுன் பனியுமியா மமுமாங் குறிஞ்சி வேனிலும்பின்
பனிநண் பகலும் பாலைமுல்லை படுகார் மாலை கார்முதலா
யினவும் வைகுறு வுமிரண்டு மிசையு மருதம் பெரும்பொழுதுந்
துனுமோ ராறு சிறுபொழுதிற் சொலுமெற் பாடு நெய்தலுக்கே
**175
#5
குன்றிற் புணர்ச்சி யரும்பாலை கொடிய பிரிவு செறிமுல்லை
யொன்று மிருப்புத் தண்மருத மூட னெய்த லிரங்கலைந்துந்
துன்று மிவற்றி னிமித்தமைந்துந் தொகையாய் நின்ற வீரைந்தும்
வென்றி தருநூ லியல்புணர்ந்த மேலோர் விரும்பு முரிப்பொருளே
**176
#6
பகருந் தெய்வநீ ரிருபாலோர் பறைபுள் விலங்கூர் தருநறும்பூ
தகவி லுணவு பண்ணொடுயாழ் தகைசெய் தொழிலென் றீரேழும்
புகல விளங்குங் கருப்பொருளாம் பொருந்த மருளின் காரணத்தான்
மகிழ்முப் பொருளுந் தத்தந்திணை மாவு மயக்கம் பெறவருமால்
**177
#7
மட்டில் குறிஞ்சி முல்லைகிளர் மருத நெய்தல் பாலையைந்துங்
கிட்டு மகமாம் பெருந்திணைகைக் கிளையு மொழியு மகப்புறம்பும்
வெட்சி வஞ்சியு ழிஞைதும்பை வீர வாகை யைம்புறமாந்
திட்ப முறுகாஞ் சியும்பாடாண் டிணையு மொழியும் புறப்புறமே
**178
#8
கரந்தை வெட்சி குறிஞ்சிவஞ்சி கானார் முல்லைப் புறனாகும்
பரந்த மருதத் திற்குழிஞை பகர்நொச் சியுமா நெய்தறும்பை
புரந்த வாகை பாலைக்குப் புறனாங் காஞ்சி பெருந்திணைக்கா
மிரந்து சொலுங்கைக் கிளைப்புறனுக் கிசைவின் வருபா டாண்டிணையே
**179
#9
நிலையில் லாத பொருளொன்றை நிறுவி யெடுத்து நிலையினவாய்ப்
பலம துறவே கொளல்காஞ்சி பகரு மொருத லைக்காமம்
விலகு குமர புரவலர்க்கு விதியி னெடுத்து விளம்புவது
தொலைவில் பாடாண் டிணையென்று சொற்றா ரியனூல் கற்றாரே
**180
#10
தெருளைந் திணையி னின்புறுகாந் திருவ மணத்திற் களவுகற்பென்
றிருகை கோளிற் காட்சிமுத லியம்பு நான்குங் கைக்கிளையின்
பொருளு முதலா கக்கிளத்திப் பொதுப்பெண் புணர்விற் கலித்துறையி
லருளுங் கோவைத் துறைநானூ றாகப் பாட லகப்பாட்டே
**181
#11
திணைகை கோள்பன் மூன்றாகத் தெளியுங் கூற்றுக் கேட்போரைப்
பிணைவி னிகழு மிடங்காலம் பெட்பாய் முற்றப் படுபயனே
யிணைவி லிருநால் வகைமெய்ப்பா டெச்சந் தகவிற் சொல்லுமுன்ன
மணையும் பொருளின் வகைதுறையென் றகப்பாட் டுறுப்பீ ராறாமே
**182
#12
காட்சி முதலா யறிந்தணையுங் கருத்தி னாலோர் தலைவேட்கை
யாட்சி யதனா லெதிர்புலம்ப வருளுங் காட்சி முதலாகக்
கூட்ட மிலதோர் தலைக்காமங் கொடுங்கை யறுதுய ரிற்புலம்பல்
கேட்கு மவரில் லாமொழியிற் கெணிக்க விரண்டாங் கைக்கிளையே
** பதினேழாவது முப்பொருள் வகைத்தொகுப்பு முற்றும்
** பாயிர முட்பட விருத்தம் – 177
@18 பதினெட்டாவது -
** உதாரண வொழிபென்ற உசிதப் பொருளலங்காரத் தொகுப்பு
**183
#1
தடமத் தகவே ழத்தையுரி தாணு வவனே சரைப்பணியும்
வடபூ தரச மானபுயன் மதுர கவிநா வலர்புகழும்
திடவி சயசுக் கிரிமகிபன் செப்பு முசிதப் பொருள்வேண்டு
மடரு தாரண வொழிபீரே ழான கவிதை யாலுரைப்பாம்
** சிவ விண்டுக்களின் ஆயுதங்கள்
**184
#2
பினாகம் பாசு பதஞ்சூலம் பிறங்கு மயில்வச் சிரங்கட்கம்
பனாக மழுவங் குசங்கண்டம் பகர்ந்த சிவனா யுதம்பத்தாஞ்
சுனாசி முதலோர் தொழுமாலின் துலங்கு பஞ்சா யுதஞ்சங்கம்
வினவு திகிரி யொடுதண்டு வில்வா ளெனவு மியம்புவரே
** சூரிய சந்திரர்களின் தேர் குதிரை யாதியன
**185
#3
இரவி யூர்தி தேராகு மியம்புஞ் சகடொன் றதையீர்க்கும்
புரவி யேழு பச்சைநிறம் பொருந்து மருண னவன்பாகன்
விரவு கலைசேர் விதுவூர்தி விமானந் திகிரி மூன்றீர்க்குந்
தரவு பெறுவெண் பரிபத்தாஞ் சங்க பாலன் சாரதியே
** நவநிதி
**186
#4
சங்கம் பதும மகாபதுமஞ் சாற்று மகரங் கச்சபமே
யங்க மருவு முகுந்தமினி தமருங் குந்த முயர்நீலம்
பொங்க மிசையும் வயிரமுமாப் புகலப் படுமிவ் வொன்பானுந்
துங்க வியல்சேர் கவிவாணர் துதித்தற் குரிய நவநிதியே
** நவரசம்
**187
#5
நவில்சிங் கார மொடுவீர நகையே சாந்தங் கருணைகுற்சை
குவியற் புதமச் சங்கோபம் குறிப்பி னாலிவ் வொன்பானும்
புவியின் வேட்கும் வினையத்திற் புலவர் வியந்து சொல்வர்நல
கவியின் வசன சாரத்திற் காணு மினிய நவரசமே
** அட்டமங்கலமும் பஞ்சதருக்களும்
**188
#6
சவரி நிறைந்த குடந்தோட்டி தருப்ப ணந்தீ பந்துவச
மிவரு முரச மிணைக்கயலென் றியம்பு மட்ட மங்கலமா
மவனி புகழுஞ் சந்தான மரிசந் தனமந் தாரமெழிற்
பவமென் பாரி சாதங்கற் பகமென் றைந்து மைந்தருவே
** பஞ்ச சயனமும் பஞ்சவாசமும்
**189
#7
ஈட்டு மிருதார் மயிற்சேண மிலவின் பஞ்சு செம்பஞ்சு
பூட்டும் வெண்பஞ் சனத்தூவி புகலும் பஞ்ச சயனமைந்தாங்
காட்டு மேல மிலவங்கங் கமழ்தக் கோலஞ் சாதிக்கா
யூட்டு நறுங்கற் பூரமென வுரைக்கும் பஞ்ச மணமாமே
** தசாங்கம்
**190
#8
வெற்பு நதிநா டூர்விரைத்தார் வெண்மா களிறு கொடிமுரசு
நிற்கு மாணை யிவைபத்து நிகழ்த்து தசாங்க மாமிவற்றை
யற்பின் மகுட மன்னர்முத லார்க்குஞ் சிறப்பித் தொவ்வொன்றாய்ப்
பொற்பின் வகுத்துத் தகும்வகையிற் புலவோர் மதிக்கப் புகலுவரால்
** துரககதி, சதுரங்கசேனை, யுத்தக்கருவிகள்
**191
#9
மல்ல மயில்வா னரமுயல்கூர் வாளி துரக கதியைந்தாஞ்
சொல்லு மிரதங் கயம்வாவுந் துரகங் காலா ளெனநான்குங்
கொல்ல வெதிர்நால் வகைச்சேனை குத்தல் வெட்ட லரிதலெய்தல்
வெல்லுங் கொடிய போர்த்தொழிற்கு வேண்டுங் கருவி நாற்கூறே
** மதன் பரிவாரம்
**192
#10
விதமா மலர்கோ கிலமன்றில் மிளிர்வேய்ங் குழல்சே மணிகங்குல்
சிதமார் பொதியத் திருந்துவரு மினிய தென்றல் கடன்மதியற்
புதவேர் மாடத் தத்தையுருப் பொலியு மிக்கோ டளிபலவு
மதவே ளினுக்கே யிணங்குபரி வார மென்னப் புகல்வாரே
** புட்குரல்
**193
#11
ஆடுந் தோகை மயில்செம்போத் தன்ன மாடப் புறாவொடுபண்
பாடுஞ் சுரும்பு கோகிலம்விண் பறக்கும் பொறிச்செஞ் சிறைக்காடை
யாடுங் கானாங் கோழியென வுரைக்கு மெட்டுப் புட்குரலுங்
கூடும் பொழுது மிடற்றிசையிற் குறிக்குங் காமன் தொழிலாமே
** அரசற்கு வேண்டுங் குணப்பகுதி
**194
#12
பன்னு மிரவி சுழல்வண்டு பன்றி மஞ்ஞை நாரைகொக்கு
மன்னு மெழிற்கண் ணாடிதுத்தி வயங்கும் விரிந்த படநாக
மன்ன முததி வானரமென் றறிந்தோர் பகரு மீரைந்திற்
துன்னு கருமத் திறனமைந்தோன் தொல்பார் புரக்கு மன்னவனே
** முத்துப் பிறப்பிடம்
**195
#13
சாரு நந்து சலஞ்சலமீன் றலைகொக் காவின் பல்வனசம்
நாரி யர்கந் தரமுடும்பு நாக முதலை காரேனஞ்
சேரிந் திக்கு வெதிர்பூகஞ் செந்நெல் கதலி தந்திமருப்
பாரு மிப்பி சனந்திருத்தோ ளடைவின் முத்தந் தருமினமே
** செல்வமாதிருப்பிடம்
**196
#14
கங்கை யிரதம் பசுநிருபர் கனகோ புரம்வெண் கொடிமடவா
ரங்கஞ் சிவிகை கன்னிபரி யானை வில்வ வனம்பதுமஞ்
சங்க மொளிர்சா மரைசவுரி சத்திய வாக்கி யரிமார்பந்
துங்க விடைநற் பவளநறுந் துணர்பூந் திருமா திருப்பிடமே
** ஐம்பால் – அட்டைச்சுவரியம்
**197
#15
கொண்டை தொங்கல் பூஞ்சுரியல் கோலப் பனிச்சை சுருளைந்துங்
கெண்டை விழியா ரைம்பாலாக் கிளத்தும் புவிதா னியம்பொன்னு
மிண்டு மூர்தி மனைவிபுத்ரர் வேண்டு மடியார் சுற்றமெட்டு
மண்ட லாதி பதிக்கிசைய வகுக்கு மட்ட யிச்சுவர்யமே
** பதினெட்டாவது உதாரண வொழிபென்ற
** உசிதப் பொருளலரங்காரத் தொகுப்பு முற்றும்
** பாயிர முட்பட விருத்தம் – 192
** உசிதசூடாமணி நிகண்டு முற்றும்
**
|