<<முந்திய பக்கம்

சிதம்பரக் கவிராயர் இயற்றிய உசிதசூடாமணி நிகண்டு - தொடரடைவு

க - முதல் சொற்கள்
கங்குல் 4
கங்கை 1
கச்சபமே 1
கச்சும் 1
கச 1
கசிவின் 1
கஞ்ச 1
கஞ்சம் 1
கஞ்சன் 1
கட்கம் 2
கட்டில் 1
கட்டுண்டோன் 1
கட்டுரைத்த 1
கடந்த 1
கடல் 7
கடலாலும் 1
கடலினவே 1
கடலும் 1
கடலை 1
கடற்கரையும் 1
கடன் 2
கடி 4
கடிவாளம் 1
கடை 1
கடைக்கண் 1
கடைசொல்லே 1
கடைந்த 1
கடைந்தோன் 1
கண் 6
கண்ட 2
கண்டம் 1
கண்டன் 1
கண்டால் 1
கண்டு 6
கண்டும் 1
கண்ணாடி 2
கண்ணாள் 1
கண்ணு 1
கண்ணும் 1
கணபதியே 1
கணம் 2
கணமும் 1
கணிதம் 1
கணியா 1
கணை 2
கணைக்காலுக்கு 1
கணைகள் 1
கணைவிடுத்தோன் 1
கத்திரிகை 1
கதலி 5
கதலிக்குருத்தும் 1
கதலிப்பூ 1
கதனம் 1
கதி 1
கதிக்கு 1
கதித்த 1
கதிர் 1
கதிரோன் 2
கந்தரம் 1
கபாடம் 1
கம்பம் 1
கமடமும் 1
கமல 1
கமலம் 4
கமழ் 3
கமழும் 2
கமுகின் 3
கமுகு 2
கயம் 1
கயல் 2
கயலில் 1
கயலும் 1
கயிலை 1
கயிலையினில் 1
கயிலையினை 1
கயிறு 1
கர 2
கரகம் 1
கரட்டுக்கு 1
கரண்டகம் 1
கரணம் 1
கரந்தை 1
கரம் 1
கரவாய் 1
கரிய 2
கரியன் 1
கருங்குவளை 1
கருங்குழலாள் 1
கருணை 2
கருணையினால் 1
கருணையுமாய் 1
கருத்தன் 1
கருத்தாள் 1
கருத்தினால் 1
கருத்து 1
கருதி 6
கருது 2
கருதும் 4
கருப்பு 2
கருப்பொருள் 1
கரும்பாம்பு 1
கரும்பு 3
கரும்பே 1
கரும 1
கருமத்திறன் 1
கருமம் 2
கருமை 2
கருவி 1
கருவும் 1
கருவூலம் 1
கரையில் 1
கல்லார் 1
கல்லாரிடத்து 1
கல்வி 3
கல்வியின் 1
கலங்கும் 2
கலசம் 1
கலணை 2
கலத்து 1
கலந்து 1
கலவ 1
கலவி 1
கலித்துறையில் 1
கலை 5
கலைக்கியானி 1
கலைசேர்மன் 1
கலைமகள் 1
கவசம் 1
கவர்ந்தோன் 1
கவர 1
கவளம் 1
கவி 10
கவிகள் 1
கவிகை 1
கவிஞர் 1
கவிதை 6
கவிதையால் 1
கவிதையில் 1
கவிய 1
கவியில் 1
கவியின் 1
கவியும் 1
கவிவாணர் 1
கவிழும் 1
கவின் 1
கவுந்தன் 1
கவுளினுக்கு 1
கழங்கு 2
கழல் 1
கழலில் 1
கழலை 1
கழறும் 1
கழனி 1
கழுத்திற்கு 1
கழை 1
கள் 2
கள்ளன் 1
களஞ்சியம் 1
களத்தில் 1
களப 1
களபத்தின் 1
களபம் 2
களவின் 2
களவு 3
களித்து 1
களித்தோர் 1
களிறு 3
களைகள் 1
கற்கண்டு 1
கற்பகம் 1
கற்பனையாள் 1
கற்பாம் 1
கற்பின் 3
கற்பு 1
கற்புடையோர் 1
கற்பூரம் 1
கற்ற 1
கற்றார் 1
கற்றாரே 1
கற்றோர் 1
கறி 1
கறுத்த 1
கறை 1
கன்றியூர்க்கு 1
கன்று 1
கன்னல் 2
கன்னலுடையான்தனக்கு 1
கன்னி 3
கன 1
கனமாய் 1
கனல் 4
கனலும் 1
கனி 4

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    கங்குல் (4)
நிலை ஆர் கங்குல் முரசு கடல் நெடிய துவசம் கயல் கருப்பு அம் - 4.காமசின்னம்:4 13/3
நத்து கவிய அடர் கங்குல் நறும் தண் பனி நீர் இவை பத்தும் - 13.விரகப்பெண்பகை:13 2/3
தன்றன் இதயம் சூல் மேகம் சவரி கருமை அடர் கங்குல்
  மன்றல் கமழும் அஞ்சனிப்பூ வயங்கு சிறை வண்டு இனம் சோலை - 14.பாதாதியுவமை:14 25/2,3
விதமா மலர் கோகிலம் அன்றில் மிளிர் வேய்ங்குழல் சே மணி கங்குல்
  சிதமார் பொதியத்து இருந்து வரும் இனிய தென்றல் கடன் மதி அற்புத - 18.உதாரணமொழிபு:18 10/1,2

 TOP
 
    கங்கை (1)
கங்கை இரதம் பசு நிருபர் கன கோபுரம் வெண் கொடி மடவார் - 18.உதாரணமொழிபு:18 14/1

 TOP
 
    கச்சபமே (1)
சங்கம் பதுமம் மகாபதுமம் சாற்றும் மகரம் கச்சபமே
  அங்கம் மருவும் முகுந்தம் இனிது அமரும் குந்தம் உயர் நீலம் - 18.உதாரணமொழிபு:18 4/1,2

 TOP
 
    கச்சும் (1)
இலங்கு பணியும் பைம் தொடியும் இசைந்த கொங்கைக்கு அணி கச்சும்
  துலங்கு முத்து வடமொடு பூம் தொடையும் புனையாள் இரு விழிக்கு - 13.விரகப்பெண்பகை:13 3/1,2

 TOP
 
    கச (1)
வாவா கச தாசுவா - 18.உதாரணமொழிபு:0 1/4

 TOP
 
    கசிவின் (1)
காண்டல் வேட்கை சிந்தித்தல் கசிவின் மெலிதல் மெலியாத - 12.புருடவிரகம்:12 2/1

 TOP
 
    கஞ்ச (1)
கஞ்ச பதம் ஒன்று எடுத்து எதிரே காளி நாண நடம்புரிந்தோன் - 1.தேவசரித்திரம்:1 7/4

 TOP
 
    கஞ்சம் (1)
மயில் பூம் கஞ்சம் அமுத புஞ்சம் வாடா விளக்கு ரசகுளிகை - 15.பெண்ணுவமை:15 2/4

 TOP
 
    கஞ்சன் (1)
உலவி நடந்தோன் கோசலைதன் குமரன் கஞ்சன் உடல் பிளந்தோன் - 1.தேவசரித்திரம்:1 13/3

 TOP
 
    கட்கம் (2)
அல்லி ஈட்டி வாழை இலை அமர் சால் கட்கம் மதன் தண்டு - 4.காமசின்னம்:4 6/1
பினாகம் பாசுபதம் சூலம் பிறங்கு மயில் வச்சிரம் கட்கம்
  பல் நாக மழு அங்குசம் கண்டம் பகர்ந்த சிவன் ஆயுதம் பத்து ஆம் - 18.உதாரணமொழிபு:18 2/1,2

 TOP
 
    கட்டில் (1)
ஈங்கு வேண்டும் இடத்தில் இனிது இயங்கு சிங்காசன கட்டில் - 9.புணர்தற்குரியவகை:9 4/4

 TOP
 
    கட்டுண்டோன் (1)
சென்று தயிர் பால் உறி வெண்ணெய் திருடி நுகர்ந்து கட்டுண்டோன்
  குன்று குடையா மழை தடுத்தோன் குளிக்கும் ஆயர் குல மாதர் - 1.தேவசரித்திரம்:1 9/2,3

 TOP
 
    கட்டுரைத்த (1)
கருது நெறியின் கட்டுரைத்த களவின் பிரிதல் இரு வகைத்தே - 10.பிரிவின்வகை:10 2/4

 TOP
 
    கடந்த (1)
கடந்த மோனத்து அரும்தவரும் கண்டால் மயங்கும் பிடிநடையாள் - 5.பெண்பருவம்:5 14/1

 TOP
 
    கடல் (7)
கடலை அடைத்தோன் கடல் கடைந்தோன் கடல் நீர் சுவர கணைவிடுத்தோன் - 1.தேவசரித்திரம்:1 11/1
கடலை அடைத்தோன் கடல் கடைந்தோன் கடல் நீர் சுவர கணைவிடுத்தோன் - 1.தேவசரித்திரம்:1 11/1
பரவு படைவீடு ஆம் முரசு பரந்த கடல் ஆம் கொடி மகரம் - 4.காமசின்னம்:4 2/3
நிலை ஆர் கங்குல் முரசு கடல் நெடிய துவசம் கயல் கருப்பு அம் - 4.காமசின்னம்:4 13/3
கயலில் காலம் பார்த்து அடங்கும் கடல் கொல்லா நஞ்சு அன விழியாள் - 5.பெண்பருவம்:5 3/1
மதவேள் சசி புள் கார் கடல் கான் மந்தான் நிலம் மற்று இவற்றினொடும் - 11.பெண்விரகம்:11 4/2
தொத்து கதலி கடல் ஆம்பல் சூழும் குளிரி பூம் பாயல் - 13.விரகப்பெண்பகை:13 2/2

 TOP
 
    கடலாலும் (1)
அன்றிலாலும் கடலாலும் அந்தி வரு சே மணியாலும் - 13.விரகப்பெண்பகை:13 5/2

 TOP
 
    கடலினவே (1)
கோடு பவளம் உவர் குக்குல் குலா வெண் முத்தம் கடலினவே - 3.இராசசின்னம்:3 13/4

 TOP
 
    கடலும் (1)
சகமும் திசையும் உயர் செம்பொன் சயில பொருப்பு நெடும் கடலும்
  சுகமது உறவும் துயில் அடக்கும் தோகை பாகன் அடி தொழுது - 6.ஆண்பருவம்:6 1/1,2

 TOP
 
    கடலை (1)
கடலை அடைத்தோன் கடல் கடைந்தோன் கடல் நீர் சுவர கணைவிடுத்தோன் - 1.தேவசரித்திரம்:1 11/1

 TOP
 
    கடற்கரையும் (1)
செகும் வாள் உறையும் கடற்கரையும் செப்பும் புருவம் ஒப்பு ஆமே - 14.பாதாதியுவமை:14 23/4

 TOP
 
    கடன் (2)
ஆதவனை கண் காணும் முனும் அந்தி கண்டும் கடன் இயற்றி - 2.வருணாச்சிரமவொழுக்கம்:2 2/4
சிதமார் பொதியத்து இருந்து வரும் இனிய தென்றல் கடன் மதி அற்புத - 18.உதாரணமொழிபு:18 10/2

 TOP
 
    கடி (4)
கற்றார் புகழும் மாம்பூவும் கடி சேர் தண் தாமரை பூவும் - 4.காமசின்னம்:4 9/2
சூதிடத்தில் பொலியும் விளையாட்டாள் எழுதேன் கூவல் கடி தடத்தாள் - 5.பெண்பருவம்:5 19/2
சாலும் நெறியாள் பரந்து அமுதம் ததும்பும் வாவி கடி தடத்தாள் - 5.பெண்பருவம்:5 22/3
கடி சேம்புஇலையும் மதிப்பிளவும் கதலிக்குருத்தும் இணை ஆமே - 14.பாதாதியுவமை:14 8/4

 TOP
 
    கடிவாளம் (1)
கதிக்கு இலைஞ்சி கடிவாளம் கன்னல் சல்லி புன்னை அம் பூ - 4.காமசின்னம்:4 5/2

 TOP
 
    கடை (1)
உருவின் பல மென் நறும் பூவும் ஒக்க செருகி கடை குழன்று - 14.பாதாதியுவமை:14 26/2

 TOP
 
    கடைக்கண் (1)
விஞ்சை மதன் ஆகமம் வழிய விழைக்கும் கடைக்கண் வேல் ஆமே - 14.பாதாதியுவமை:14 22/4

 TOP
 
    கடைசொல்லே (1)
வெம்பு சினம் கொல் உயர்வு எனலாம் விதித்த யானை கடைசொல்லே - 3.இராசசின்னம்:3 10/4

 TOP
 
    கடைந்த (1)
காலின் விரல் சேர் உகிர் படிகம் கணம் பத்து ஆக கடைந்த மதி - 14.பாதாதியுவமை:14 3/1

 TOP
 
    கடைந்தோன் (1)
கடலை அடைத்தோன் கடல் கடைந்தோன் கடல் நீர் சுவர கணைவிடுத்தோன் - 1.தேவசரித்திரம்:1 11/1

 TOP
 
    கண் (6)
கோலின் மகிழ்ந்து கண் துயில்வோன் கூறும் பதினாறாயிரம் பெண் - 1.தேவசரித்திரம்:1 10/2
கண் தாமரையான்தனது உந்தி கமலம் பிறப்பு படை மறைநூல் - 1.தேவசரித்திரம்:1 19/3
ஆதவனை கண் காணும் முனும் அந்தி கண்டும் கடன் இயற்றி - 2.வருணாச்சிரமவொழுக்கம்:2 2/4
கிம்புரி வெண் கூர் மருப்பு கிளர் செங்கனல் கண் கறை அடி மால் - 3.இராசசின்னம்:3 10/3
கரவாய் நினைத்தல் மெய் வெளிறல் கருத்து உள் அடங்கா துயருற கண்
  விரவா துயில் நெட்டுயிர்ப்பு எறிதல் விரும்பி கூடல் இழைத்து அயர்தல் - 11.பெண்விரகம்:11 3/1,2
நினையும் வனச மதி முகம் கண் நிழற்றும் கமலம் சிலை மார்பு - 16.புருடஉவமை:16 7/1

 TOP
 
    கண்ட (2)
கண்ட பரிபூரணி ஞானக்கடல் மூவரையும் பெற்றவரில் - 1.தேவசரித்திரம்:1 16/2
கண்ட நறும் பூ மட அன்னம் கருதும் நெஞ்சம் பசும் கிள்ளை - 13.விரகப்பெண்பகை:13 6/2

 TOP
 
    கண்டம் (1)
பல் நாக மழு அங்குசம் கண்டம் பகர்ந்த சிவன் ஆயுதம் பத்து ஆம் - 18.உதாரணமொழிபு:18 2/2

 TOP
 
    கண்டன் (1)
விதுரன் துருவன் மகம் மேரு வியாழன் கண்டன் இடியேறு - 16.புருடஉவமை:16 3/1

 TOP
 
    கண்டால் (1)
கடந்த மோனத்து அரும்தவரும் கண்டால் மயங்கும் பிடிநடையாள் - 5.பெண்பருவம்:5 14/1

 TOP
 
    கண்டு (6)
சத்த சுரம் பாட தொடங்கும் தருண மொழியாள் புயல் கண்டு
  பத்தி குலவ வந்த மயில் பழக பார்க்கும் நடை அன்ன - 5.பெண்பருவம்:5 5/1,2
வேனில் கண்டு கூவு குயில் வீசும் வாள் நஞ்சு அன விழியாள் - 5.பெண்பருவம்:5 8/1
கானில் புயல் கண்டு ஆடு மயில் களித்து பூவைக்கு உரை கூட்டும் - 5.பெண்பருவம்:5 8/2
தலைவன் போதும் உலா வீதி சார்ந்து கண்டு தொழிற்கு இசையும் - 5.பெண்பருவம்:5 23/1
தொலைவின் மூத்தோர் களித்தோர் கண்டு துயின்றோர் பயந்தோர் கலை மாறல் - 7.மணவிவரம்:7 8/3
கண்டு மொழிந்தார் ஈர் இதழ்க்கும் கனி வாய்க்கு இணை ஆம் செங்குமுதம் - 14.பாதாதியுவமை:14 17/4

 TOP
 
    கண்டும் (1)
ஆதவனை கண் காணும் முனும் அந்தி கண்டும் கடன் இயற்றி - 2.வருணாச்சிரமவொழுக்கம்:2 2/4

 TOP
 
    கண்ணாடி (2)
சந்த சாணை பரி கலணை சாரும் மூக்கின் கண்ணாடி
  அந்த கவுளினுக்கு உவமை ஆம் எள்பூவும் குமிழ் அரும்பும் - 14.பாதாதியுவமை:14 20/1,2
மன்னும் எழில் கண்ணாடி துத்தி வயங்கும் விரிந்த பட நாகம் - 18.உதாரணமொழிபு:18 12/2

 TOP
 
    கண்ணாள் (1)
வைத்து வளைத்தல் அனைய கண்ணாள் மதனை எழுதும் விளையாட்டாள் - 5.பெண்பருவம்:5 5/4

 TOP
 
    கண்ணு (1)
கண்ணு மனத்தில் குடியிருந்து காக்கும் திரிமூர்த்தியை பரவி - 13.விரகப்பெண்பகை:13 1/2

 TOP
 
    கண்ணும் (1)
சகத்துக்கு இறைவன் நுதல் கண்ணும் தயங்கு நாகரத்நமுமே - 14.பாதாதியுவமை:14 24/4

 TOP
 
    கணபதியே (1)
உரை சேர் முதல்வன் வினாயகன் மெய் உறுதி தருவோன் கணபதியே - 1.தேவசரித்திரம்:1 17/4

 TOP
 
    கணம் (2)
காலின் விரல் சேர் உகிர் படிகம் கணம் பத்து ஆக கடைந்த மதி - 14.பாதாதியுவமை:14 3/1
பொன் தட்டு அனங்கன் அரண்மனை வேள் போக விடம் கா கணம் பூம் பை - 14.பாதாதியுவமை:14 6/1

 TOP
 
    கணமும் (1)
கணமும் அடியார் உளம் பிரியா கருணை மூர்த்தி நளின பதம் - 12.புருடவிரகம்:12 1/1

 TOP
 
    கணிதம் (1)
கணிதம் உறு மோக தலைவன் கற்பின் பிரிதல் அறு வகைத்தே - 10.பிரிவின்வகை:10 3/4

 TOP
 
    கணியா (1)
கர வேள் சரவண நோற்பவன் சூர் கணியா சுப்பிரமணியன்னே - 1.தேவசரித்திரம்:1 18/4

 TOP
 
    கணை (2)
உர வேள் ஐந்து கணை எய்தற்கு உற்ற தானம் ஐந்து ஆமே - 4.காமசின்னம்:4 10/4
முத்தை நிரைத்த மூரலினாள் முளை நஞ்சு ஒருவ வில் கணை நாண் - 5.பெண்பருவம்:5 5/3

 TOP
 
    கணைக்காலுக்கு (1)
உரவு கணைக்காலுக்கு இணங்கும் உவமை ஆம் என்று உரைப்பாரே - 14.பாதாதியுவமை:14 4/4

 TOP
 
    கணைகள் (1)
இன மென் நறும் பூம் கணைகள் தொடுத்து எய்தே பூசல் முடிப்பானே - 4.காமசின்னம்:4 12/4

 TOP
 
    கணைவிடுத்தோன் (1)
கடலை அடைத்தோன் கடல் கடைந்தோன் கடல் நீர் சுவர கணைவிடுத்தோன்
  அடர எதிர்ந்த பெரும் குருகின் அலகை இடந்தோன் சகடு உதைத்தோன் - 1.தேவசரித்திரம்:1 11/1,2

 TOP
 
    கத்திரிகை (1)
நகு பூம் வள்ளை பொன் ஊசல் நவில் கத்திரிகை தராசு அலை மான் - 14.பாதாதியுவமை:14 23/1

 TOP
 
    கதலி (5)
ஓதும் எழு சாண் அமைதி பெறும் உயர்வின் கதலி மடல் செவியாய் - 3.இராசசின்னம்:3 11/3
நாடு கதலி கழை செந்நெல் நறும் செங்கழுநீர் சிறுபயறு - 3.இராசசின்னம்:3 13/1
தொத்து கதலி கடல் ஆம்பல் சூழும் குளிரி பூம் பாயல் - 13.விரகப்பெண்பகை:13 2/2
சலமில் ஈனா இளம் கதலி தம்பம் அல்குல் தடம் நீந்த - 14.பாதாதியுவமை:14 5/3
சேர் இந்து இக்கு வெதிர் பூகம் செந்நெல் கதலி தந்தி மருப்பு - 18.உதாரணமொழிபு:18 13/3

 TOP
 
    கதலிக்குருத்தும் (1)
கடி சேம்புஇலையும் மதிப்பிளவும் கதலிக்குருத்தும் இணை ஆமே - 14.பாதாதியுவமை:14 8/4

 TOP
 
    கதலிப்பூ (1)
சொல் வெற்பு இளநீர் கதலிப்பூ சொன்ன தாளம் சிவலிங்கம் - 14.பாதாதியுவமை:14 11/3

 TOP
 
    கதனம் (1)
கதனம் உறும் வெம் பரி தொகையை கானல் உழலும் நரி தொகையாய் - 17.முப்பொருள்வகை:17 1/1

 TOP
 
    கதி (1)
மல்லல் மயில் வானரம் முயல் கூர் வாளி துரக கதி ஐந்து ஆம் - 18.உதாரணமொழிபு:18 9/1

 TOP
 
    கதிக்கு (1)
கதிக்கு இலைஞ்சி கடிவாளம் கன்னல் சல்லி புன்னை அம் பூ - 4.காமசின்னம்:4 5/2

 TOP
 
    கதித்த (1)
கன்னல் மொழி மங்கையர்தமக்கு கதித்த பெதும்பை பருவம் முதல் - 16.புருடஉவமை:16 6/3

 TOP
 
    கதிர் (1)
கதிர் பூம் பச்சை தண்டும் வெறி கமழும் பசிய மாந்தண்டும் - 4.காமசின்னம்:4 7/1

 TOP
 
    கதிரோன் (2)
அஞ்ச கதிரோன் பல்லை உதிர்த்து அம்மான் சிரமும் கொய்து அழித்தோன் - 1.தேவசரித்திரம்:1 7/3
கதிரோன் சேடன் சீராமன் கலை தேர் முனிவன் இலக்குமணன் - 16.புருடஉவமை:16 3/2

 TOP
 
    கந்தரம் (1)
நாரியர் கந்தரம் உடும்பு நாகம் முதலை கார் ஏனம் - 18.உதாரணமொழிபு:18 13/2

 TOP
 
    கபாடம் (1)
தொண்டை வீழி அமுத துண்டம் சொல் கபாடம் மாதுளம்பூ - 14.பாதாதியுவமை:14 17/2

 TOP
 
    கம்பம் (1)
கம்பம் புரசை நிகள மதம் கவிழும் சுவடு புழை தடக்கை - 3.இராசசின்னம்:3 10/1

 TOP
 
    கமடமும் (1)
சாலும் புறம் கால் கமடமும் பொத்து அகமும் கமுகின் பாளையும் ஆம் - 14.பாதாதியுவமை:14 3/2

 TOP
 
    கமல (1)
துதிக்கும் கருப்பு அம் தண்டும் அளி சூழும் கமல பூந்தண்டும் - 4.காமசின்னம்:4 7/3

 TOP
 
    கமலம் (4)
கண் தாமரையான்தனது உந்தி கமலம் பிறப்பு படை மறைநூல் - 1.தேவசரித்திரம்:1 19/3
திங்கள் படிமக்கலம் கமலம் செண்டு பூந்தட்டு இவை தரணி - 14.பாதாதியுவமை:14 16/3
வண்டு கவியும் செம் குமுத மலர் தூதளை செம் கமலம் ஒப்பு - 14.பாதாதியுவமை:14 17/3
நினையும் வனச மதி முகம் கண் நிழற்றும் கமலம் சிலை மார்பு - 16.புருடஉவமை:16 7/1

 TOP
 
    கமழ் (3)
கலங்கும் விரக துடியாலே கமழ் பூங்குழலும் முடியாளே - 13.விரகப்பெண்பகை:13 3/4
முந்த கமழ் செம்பக அரும்பும் முருகு ஆர் இலவின் பூங்காம்பும் - 14.பாதாதியுவமை:14 20/3
காட்டும் ஏலம் இலவங்கம் கமழ் தக்கோலம் சாதிக்காய் - 18.உதாரணமொழிபு:18 7/3

 TOP
 
    கமழும் (2)
கதிர் பூம் பச்சை தண்டும் வெறி கமழும் பசிய மாந்தண்டும் - 4.காமசின்னம்:4 7/1
மன்றல் கமழும் அஞ்சனிப்பூ வயங்கு சிறை வண்டு இனம் சோலை - 14.பாதாதியுவமை:14 25/3

 TOP
 
    கமுகின் (3)
புல்லும் கமுகின் நறும் பாளை பொற்பால் இரட்டும் சாமரை ஆம் - 4.காமசின்னம்:4 4/2
சாலும் புறம் கால் கமடமும் பொத்து அகமும் கமுகின் பாளையும் ஆம் - 14.பாதாதியுவமை:14 3/2
கன்னி கமுகின் பூம் பாளை கரிய பிடி யானை துதிக்கை - 14.பாதாதியுவமை:14 27/1

 TOP
 
    கமுகு (2)
சங்கு செம்பு பாலிகை பூசனிப்பூ சூல் கொள் இளம் கமுகு
  மங்கலம் சேர் சுருள் ஏந்து மடலும் கழுத்திற்கு உவமை பெறும் - 14.பாதாதியுவமை:14 16/1,2
கொன்றைக்கனி கல்லார் மனது கூந்தல் கமுகு பொதுமடந்தை - 14.பாதாதியுவமை:14 25/1

 TOP
 
    கயம் (1)
சொல்லும் இரதம் கயம் வாவும் துரகம் காலாள் என நான்கும் - 18.உதாரணமொழிபு:18 9/2

 TOP
 
    கயல் (2)
நிலை ஆர் கங்குல் முரசு கடல் நெடிய துவசம் கயல் கருப்பு அம் - 4.காமசின்னம்:4 13/3
சால்பின் உறு அஞ்சனம் கயல் சேல் சகோரம் வழி போய் குழை அடர்ந்து - 14.பாதாதியுவமை:14 21/3

 TOP
 
    கயலில் (1)
கயலில் காலம் பார்த்து அடங்கும் கடல் கொல்லா நஞ்சு அன விழியாள் - 5.பெண்பருவம்:5 3/1

 TOP
 
    கயலும் (1)
துஞ்சு கயலும் சேலும் என சுழலும் விழியாள் பொன்மலை போல் - 5.பெண்பருவம்:5 15/1

 TOP
 
    கயிலை (1)
உடுத்தோன் கயிலை எடுத்தவனை உடன் ஓர் விரலால் ஈடு அழித்தோன் - 1.தேவசரித்திரம்:1 4/4

 TOP
 
    கயிலையினில் (1)
பூ ஆர் செழும் தண் கயிலையினில் பொலிந்து சபையின் முனிவர் தொழ - 1.தேவசரித்திரம்:1 1/1

 TOP
 
    கயிலையினை (1)
திரம்கொண்டு இருந்த கயிலையினை சென்று ஓர் அரக்கன் எடுத்தலுமே - 8.புணர்ச்சிவகை:8 1/1

 TOP
 
    கயிறு (1)
மொட்டு என்று உவமை உந்திக்கு மொழிவார் சலாகை வார் கயிறு
  துட்ட மதனன் நாண் ஒழுக்கம் தும்பி துதிக்கை எறும்பு ஒழுக்கம் - 14.பாதாதியுவமை:14 9/2,3

 TOP
 
    கர (2)
கர வேள் சரவண நோற்பவன் சூர் கணியா சுப்பிரமணியன்னே - 1.தேவசரித்திரம்:1 18/4
வளமை கர ஊழ் காரணமாய் வழங்கும் உலக நடை இயல்பின் - 8.புணர்ச்சிவகை:8 4/3

 TOP
 
    கரகம் (1)
தெல்லு கரகம் கோங்கு அரும்பு சிமிழ் பம்பரம் பொன் குடம் கிண்ணம் - 14.பாதாதியுவமை:14 11/4

 TOP
 
    கரட்டுக்கு (1)
நாலும் கரட்டுக்கு உவமை என நவில்வர் இயல்நூல் கவி வலரே - 14.பாதாதியுவமை:14 3/4

 TOP
 
    கரண்டகம் (1)
செண்டு குமிழ் வார் கூடாரம் சேவின் திமில் பொன் கரண்டகம் மென் - 14.பாதாதியுவமை:14 12/1

 TOP
 
    கரணம் (1)
திடத்தின் கரணம் முழுதும் உணர் தெரிவை பருவ சேயிழையே - 5.பெண்பருவம்:5 19/4

 TOP
 
    கரந்தை (1)
கரந்தை வெட்சி குறிஞ்சி வஞ்சி கான் ஆர் முல்லை புறன் ஆகும் - 17.முப்பொருள்வகை:17 8/1

 TOP
 
    கரம் (1)
முனை கொள் கரம் கார் தரு வனச மொழியும் புருடர் உறுப்பின் அணி - 16.புருடஉவமை:16 7/2

 TOP
 
    கரவாய் (1)
கரவாய் நினைத்தல் மெய் வெளிறல் கருத்து உள் அடங்கா துயருற கண் - 11.பெண்விரகம்:11 3/1

 TOP
 
    கரிய (2)
விட்ட கரிய மணிக்கோவை விதிரிட்டு ஏகும் மத தாரை - 14.பாதாதியுவமை:14 9/4
கன்னி கமுகின் பூம் பாளை கரிய பிடி யானை துதிக்கை - 14.பாதாதியுவமை:14 27/1

 TOP
 
    கரியன் (1)
நேய விசயன் தேர்ப்பாகன் நிறத்தால் கரியன் தேவகிதன் - 1.தேவசரித்திரம்:1 12/3

 TOP
 
    கருங்குவளை (1)
வேல் வாள் அமுதம் கருங்குவளை வேலை மாவின் வடு வகிர் மான் - 14.பாதாதியுவமை:14 21/1

 TOP
 
    கருங்குழலாள் (1)
கார் ஆர் புயல் மீன் காட்டுதல் போல் காட்டும் பலின கருங்குழலாள் - 5.பெண்பருவம்:5 17/4

 TOP
 
    கருணை (2)
கணமும் அடியார் உளம் பிரியா கருணை மூர்த்தி நளின பதம் - 12.புருடவிரகம்:12 1/1
நவில் சிங்காரமொடு வீர நகையே சாந்தம் கருணை குற்சை - 18.உதாரணமொழிபு:18 5/1

 TOP
 
    கருணையினால் (1)
மூன்று சங்கத்து அதிகரித்த முதல்விதனது கருணையினால்
  மூன்று சபையும் மெச்சும்வகை மொழியும் உசிதசூடாமணிக்கு - 18.உதாரணமொழிபு:0 4/2,3

 TOP
 
    கருணையுமாய் (1)
வஞ்சமுடன் கோரமும் மிகுந்து மையல் பூட்டும் கருணையுமாய்
  துஞ்சும் மதர்ப்பினொடு கருமை சூழ்ந்து கூர்மை நனி உடைத்தாய் - 14.பாதாதியுவமை:14 22/2,3

 TOP
 
    கருத்தன் (1)
விரியும் அண்ட பிண்டம் எலாம் விளங்கும் பொருளை தொழில் கருத்தன்
  உரிய மறை ஆகம வடிவான் உன்னா முனி பார்ப்பினிமார்கள் - 1.தேவசரித்திரம்:1 8/1,2

 TOP
 
    கருத்தாள் (1)
பூட்டு மைய மயல் கருத்தாள் பூக்கும் தருண பூங்கொடியாள் - 5.பெண்பருவம்:5 6/3

 TOP
 
    கருத்தினால் (1)
காட்சி முதலாய் அறிந்து அணையும் கருத்தினால் ஓர்தலைவேட்கை - 17.முப்பொருள்வகை:17 12/1

 TOP
 
    கருத்து (1)
கரவாய் நினைத்தல் மெய் வெளிறல் கருத்து உள் அடங்கா துயருற கண் - 11.பெண்விரகம்:11 3/1

 TOP
 
    கருதி (6)
மூவா முதல்வன் ஆதி பெறு முதன்மை கருதி நாலைந்து - 1.தேவசரித்திரம்:1 1/3
உலகில் பிற உயிர் தம் உயிர் போல் கருதி பழி அஞ்சி - 2.வருணாச்சிரமவொழுக்கம்:2 6/4
காலம் கருதி இடமறிந்து கருமம் விடாமல் விவகார - 3.இராசசின்னம்:3 7/2
கருதி சந்து இயைய கூறுவோன் தானாபதியே - 3.இராசசின்னம்:3 7/4
வட்டம் உறு தன் முக சந்திரன் மதிக்கு போதாது என கருதி
  இட்ட நிலவு பிறை அணியாள் இரண்டு விழியும் அமுதம் அன்னாள் - 5.பெண்பருவம்:5 20/3,4
களவு கற்பாம் இரு கைகோள் கருதி களவு ஊழ் காரணமாய் - 8.புணர்ச்சிவகை:8 4/1

 TOP
 
    கருது (2)
கருது நெறியின் புகழை நிறீஇ காவல் புரிவோன் காவலனே - 2.வருணாச்சிரமவொழுக்கம்:2 8/4
கருது நெறியின் கட்டுரைத்த களவின் பிரிதல் இரு வகைத்தே - 10.பிரிவின்வகை:10 2/4

 TOP
 
    கருதும் (4)
அற்றம் அறியா கூழ் பொலிவும் அறத்தை கருதும் மந்திரியும் - 2.வருணாச்சிரமவொழுக்கம்:2 9/2
காடு நாவி மயில் பீலி கருதும் சவரி தேன் அரக்கு ஆம் - 3.இராசசின்னம்:3 13/3
கண்ட நறும் பூ மட அன்னம் கருதும் நெஞ்சம் பசும் கிள்ளை - 13.விரகப்பெண்பகை:13 6/2
கலவ பெறும் அவ் விரல் உகிர்க்கு கருதும் கிளிமூக்கு ஒப்பு ஆமே - 14.பாதாதியுவமை:14 14/4

 TOP
 
    கருப்பு (2)
துதிக்கும் கருப்பு அம் தண்டும் அளி சூழும் கமல பூந்தண்டும் - 4.காமசின்னம்:4 7/3
நிலை ஆர் கங்குல் முரசு கடல் நெடிய துவசம் கயல் கருப்பு அம் - 4.காமசின்னம்:4 13/3

 TOP
 
    கருப்பொருள் (1)
புகல விளங்கும் கருப்பொருள் ஆம் பொருந்த மருளின் காரணத்தால் - 17.முப்பொருள்வகை:17 6/3

 TOP
 
    கரும்பாம்பு (1)
கரும்பாம்பு இளநீர்க்காம்பு நறும் களபத்தின் தண் துளி தாரை - 14.பாதாதியுவமை:14 10/2

 TOP
 
    கரும்பு (3)
கொண்ட கரும்பு ஐங்கணை இவை கை கொண்டாள் எமையாள் உமையாளே - 1.தேவசரித்திரம்:1 16/4
இன்னல் தவிர்க்கும் சஞ்சீவி இனிக்கும் இரசதாளி கரும்பு - 5.பெண்பருவம்:5 9/4
பாகு கரும்பு கற்கண்டு பாடும் யாழ் முக்கனி சீனி - 14.பாதாதியுவமை:14 19/2

 TOP
 
    கரும்பே (1)
இயல்பின் மார்பத்து அடங்கு தன இரதம் முற்றா இளம் கரும்பே - 5.பெண்பருவம்:5 3/4

 TOP
 
    கரும (1)
மதியின் வேந்தன் உரை தழுவி வகுக்கும் கரும முறை தெரிந்து - 3.இராசசின்னம்:3 5/3

 TOP
 
    கருமத்திறன் (1)
துன்னு கருமத்திறன் அமைந்தோன் தொல் பார் புரக்கும் மன்னவனே - 18.உதாரணமொழிபு:18 12/4

 TOP
 
    கருமம் (2)
காலம் கருதி இடமறிந்து கருமம் விடாமல் விவகார - 3.இராசசின்னம்:3 7/2
புனைவர் கருமம் பயன் மெய் உரு புகலும் நான்கின் பொருள் புணர்வு ஒத்து - 16.புருடஉவமை:16 7/3

 TOP
 
    கருமை (2)
துஞ்சும் மதர்ப்பினொடு கருமை சூழ்ந்து கூர்மை நனி உடைத்தாய் - 14.பாதாதியுவமை:14 22/3
தன்றன் இதயம் சூல் மேகம் சவரி கருமை அடர் கங்குல் - 14.பாதாதியுவமை:14 25/2

 TOP
 
    கருவி (1)
வெல்லும் கொடிய போர்த்தொழிற்கு வேண்டும் கருவி நால் கூறே - 18.உதாரணமொழிபு:18 9/4

 TOP
 
    கருவும் (1)
முதலும் உரியும் கருவும் என மொழியப்படும் முப்பொருள் வகையை - 17.முப்பொருள்வகை:17 1/3

 TOP
 
    கருவூலம் (1)
மாரற்கு இனிய கருவூலம் வழுத்தும் வீணை இசை தொழிலாள் - 5.பெண்பருவம்:5 16/3

 TOP
 
    கரையில் (1)
பாங்கின் நிமிரும் பூங்காவின் படி சேர் மலர் வாவி கரையில்
  ஓங்கு தென்றல் அசை முன்றில் உயர் பொன் சிகர மாடத்தில் - 9.புணர்தற்குரியவகை:9 4/1,2

 TOP
 
    கல்லார் (1)
கொன்றைக்கனி கல்லார் மனது கூந்தல் கமுகு பொதுமடந்தை - 14.பாதாதியுவமை:14 25/1

 TOP
 
    கல்லாரிடத்து (1)
காட்டும் சொருகு குழல் கற்றோர் கல்லாரிடத்து கற்பனையாள் - 5.பெண்பருவம்:5 6/4

 TOP
 
    கல்வி (3)
மறுவுஇலா பாக்கியம் கல்வி மகிழும் தவம் தானம் வீரம் - 3.இராசசின்னம்:3 6/1
பாக்கியம் இலங்கு முகம் கல்வி பரவு நாவின் தானம் கை - 3.இராசசின்னம்:3 8/1
நீதி வேள்வி வெற்றி கொடை நிலைமை செல்வம் கல்வி தனம் - 16.புருடஉவமை:16 4/1

 TOP
 
    கல்வியின் (1)
பணிவின் கல்வியின் பிரிதல் பரிந்து காவலின் பிரிதல் - 10.பிரிவின்வகை:10 3/2

 TOP
 
    கலங்கும் (2)
கலங்கும் விரக துடியாலே கமழ் பூங்குழலும் முடியாளே - 13.விரகப்பெண்பகை:13 3/4
கன்றியூர்க்கு மலர் விளைக்கும் கலங்கும் பொழுது நலம் இறவே - 13.விரகப்பெண்பகை:13 5/4

 TOP
 
    கலசம் (1)
தேய்ந்த பிறையை நிகர் நுதலாள் தெங்க இளநீர் பொன் கலசம்
  ஆய்ந்து மதன் செங்கோல் செலுத்தி அரசுபுரிதற்கு அணி மகுடம் - 5.பெண்பருவம்:5 11/1,2

 TOP
 
    கலணை (2)
பதிக்கு மதனன் பரி கலணை பன்னு நறும் பூ மல்லிகை ஆம் - 4.காமசின்னம்:4 5/1
சந்த சாணை பரி கலணை சாரும் மூக்கின் கண்ணாடி - 14.பாதாதியுவமை:14 20/1

 TOP
 
    கலத்து (1)
திகழ்ந்தார் நறும் செங்குங்குமமும் திமிர்ந்தே மலர் தாள் கலத்து அகமும் - 9.புணர்தற்குரியவகை:9 2/3

 TOP
 
    கலந்து (1)
மண மெல்லிய பூவணையின் அகம் மகிழ்ந்து தினமும் கலந்து இனிது - 12.புருடவிரகம்:12 1/3

 TOP
 
    கலவ (1)
கலவ பெறும் அவ் விரல் உகிர்க்கு கருதும் கிளிமூக்கு ஒப்பு ஆமே - 14.பாதாதியுவமை:14 14/4

 TOP
 
    கலவி (1)
தோய்ந்து கலவி தொழில் பழகும் சுரத காம கலைக்கியானி - 5.பெண்பருவம்:5 11/4

 TOP
 
    கலித்துறையில் (1)
பொருளும் முதலாக கிளத்தி பொது பெண் புணர்வின் கலித்துறையில்
  அருளும் கோவைத்துறை நானூறு ஆக பாடல் அகப்பாட்டே - 17.முப்பொருள்வகை:17 10/3,4

 TOP
 
    கலை (5)
பொசியும் அமுத கலை நிரம்பும் பூர்ண சந்திரோதயம் முன்னே - 18.உதாரணமொழிபு:0 5/1
தொலைவின் மூத்தோர் களித்தோர் கண்டு துயின்றோர் பயந்தோர் கலை மாறல் - 7.மணவிவரம்:7 8/3
உயிர் மான் ஆசை களஞ்சியம் பொன் ஓங்கு காம கலை கியானம் - 15.பெண்ணுவமை:15 2/2
கதிரோன் சேடன் சீராமன் கலை தேர் முனிவன் இலக்குமணன் - 16.புருடஉவமை:16 3/2
விரவு கலை சேர் விது ஊர்தி விமானம் திகிரி மூன்று ஈர்க்கும் - 18.உதாரணமொழிபு:18 3/3

 TOP
 
    கலைக்கியானி (1)
தோய்ந்து கலவி தொழில் பழகும் சுரத காம கலைக்கியானி - 5.பெண்பருவம்:5 11/4

 TOP
 
    கலைசேர்மன் (1)
புக்க கலைசேர்மன் பரிதி பொங்கு கனல் என்று இவை இசைந்த - 1.தேவசரித்திரம்:1 5/3

 TOP
 
    கலைமகள் (1)
துதி மேவு பிரமணி வாணி சொல்லாள் இனிய கலைமகள் பாரதி - 1.தேவசரித்திரம்:1 20/1

 TOP
 
    கவசம் (1)
மதிக்கு அவன் மெய் இடு கவசம் மலிந்த விரை தோழன் வசந்தன் - 4.காமசின்னம்:4 5/3

 TOP
 
    கவர்ந்தோன் (1)
நின்று காண துகில் கவர்ந்தோன் நிலை சேர் குருந்தம் ஒசித்த பிரான் - 1.தேவசரித்திரம்:1 9/4

 TOP
 
    கவர (1)
இச்சை கவர உயிர் அழுந்தி இசையும் புணர்ப்பு நன் புணர்ப்பான் - 8.புணர்ச்சிவகை:8 2/3

 TOP
 
    கவளம் (1)
கும்ப நால்வாய் தழை செவி அங்குசம் போர் புகர் முகம் கவளம்
  கிம்புரி வெண் கூர் மருப்பு கிளர் செங்கனல் கண் கறை அடி மால் - 3.இராசசின்னம்:3 10/2,3

 TOP
 
    கவி (10)
சூட்டு கவி நாவலர் பாடும் துகள் தீர் செய்யுட்கு உறுபயனா - 18.உதாரணமொழிபு:0 3/1
பொருவுஇல் உயர் நால் கவி வலர் சொல் போற்றி மறையோர் செயல் விளக்கி - 2.வருணாச்சிரமவொழுக்கம்:2 8/1
முரண் பெறாது கவி நான்கின் முயங்கும் தலைவன் தலைவியொடும் - 8.புணர்ச்சிவகை:8 1/3
புணர்த்தல் குறியின் செய்கைதனை போந்த கவி ஐந்தால் உரைப்பாம் - 9.புணர்தற்குரியவகை:9 1/4
அருந்தி சரச கவி படிக்க அனங்கன் நாவே சங்கதித்து - 9.புணர்தற்குரியவகை:9 6/1
அலகுஇல் சோதி வடிவான் சேவடியை இறைஞ்சி கவி நான்கின் - 11.பெண்விரகம்:11 1/2
உவமை அலங்காரம் புகலல் உற்றாம் கவி எண் மூன்றாறால் - 14.பாதாதியுவமை:14 1/4
நாலும் கரட்டுக்கு உவமை என நவில்வர் இயல்நூல் கவி வலரே - 14.பாதாதியுவமை:14 3/4
கழலில் பொலியும் அடியவர் பூம் கழலை தொழுது கவி மூன்றில் - 15.பெண்ணுவமை:15 1/2
செவியான் விரவான் மதிச்சடையான் திரு தாள் தொழுது கவி ஆறில் - 16.புருடஉவமை:16 1/2

 TOP
 
    கவிகள் (1)
பொருள் ஆம் திரிமூர்த்தியை பரவி புகலும் கவிகள் பதினொன்றால் - 2.வருணாச்சிரமவொழுக்கம்:2 1/2

 TOP
 
    கவிகை (1)
பந்தம் நிழற்றும் கவிகை எழில் பசும்பொன் தந்த சிவிகையினான் - 18.உதாரணமொழிபு:0 10/4

 TOP
 
    கவிஞர் (1)
பந்த கவிஞர் எல்லோரும் பகர்வார் நாசிக்கு இணை எனவே - 14.பாதாதியுவமை:14 20/4

 TOP
 
    கவிதை (6)
உயர் வான் பரவும் ஒரு முதலை உன்னி கவிதை பதின்மூன்றில் - 3.இராசசின்னம்:3 1/1
இரு பொன் பதத்தை பணிந்து இறைஞ்சி இயம்பும் கவிதை பன்னிரண்டில் - 4.காமசின்னம்:4 1/2
மீறும் இரு கைகோள் பகுப்பில் வினவு கவிதை இரண்டில் எட்டா - 10.பிரிவின்வகை:10 1/3
அணவு நினைவால் தொழுது ஏத்தி அருளும் கவிதை ஒன்றில் உற - 12.புருடவிரகம்:12 1/2
எண்ணும் கவிதை ஓர் ஐந்தால் இயம்பு முறையால் இனி விரக - 13.விரகப்பெண்பகை:13 1/3
உதவு கவிதை பன்னொன்றால் உணரும்படி தேர்ந்து உரைக்கலுற்றாம் - 17.முப்பொருள்வகை:17 1/4

 TOP
 
    கவிதையால் (1)
அடர் உதாரண ஒழிபு ஈரேழ் ஆன கவிதையால் உரைப்பாம் - 18.உதாரணமொழிபு:18 1/4

 TOP
 
    கவிதையில் (1)
வருந்தாது ஏழு கவிதையில் எண் வகை சேர் மணமது இயம்பல் உற்றாம் - 7.மணவிவரம்:7 1/4

 TOP
 
    கவிய (1)
நத்து கவிய அடர் கங்குல் நறும் தண் பனி நீர் இவை பத்தும் - 13.விரகப்பெண்பகை:13 2/3

 TOP
 
    கவியில் (1)
புகலும் முறையில் பருவமொடு போந்த வயதும் ஒரு கவியில்
  பகரும் விதமாய் எழு வகை ஆண் பருவ தொகுப்பை அறைகின்றாம் - 6.ஆண்பருவம்:6 1/3,4

 TOP
 
    கவியின் (1)
கவியின் வசன சாரத்தின் காணும் இனிய நவரசமே - 18.உதாரணமொழிபு:18 5/4

 TOP
 
    கவியும் (1)
வண்டு கவியும் செம் குமுத மலர் தூதளை செம் கமலம் ஒப்பு - 14.பாதாதியுவமை:14 17/3

 TOP
 
    கவிவாணர் (1)
துங்க இயல் சேர் கவிவாணர் துதித்தற்கு உரிய நவநிதியே - 18.உதாரணமொழிபு:18 4/4

 TOP
 
    கவிழும் (1)
கம்பம் புரசை நிகள மதம் கவிழும் சுவடு புழை தடக்கை - 3.இராசசின்னம்:3 10/1

 TOP
 
    கவின் (1)
கவின் ஆர் புருட உவமை அலங்காரம் வருமாறு இயம்பல் உற்றாம் - 16.புருடஉவமை:16 1/4

 TOP
 
    கவுந்தன் (1)
வந்த பகை வீறொடும் கவுந்தன் வயமா அடக்கி உவந்து கொண்டோன் - 1.தேவசரித்திரம்:1 3/3

 TOP
 
    கவுளினுக்கு (1)
அந்த கவுளினுக்கு உவமை ஆம் எள்பூவும் குமிழ் அரும்பும் - 14.பாதாதியுவமை:14 20/2

 TOP
 
    கழங்கு (2)
ஊசல் கழங்கு அம்மனை விளையாட்டு உன்னாக்கிடை மெய் அணி திருத்தல் - 11.பெண்விரகம்:11 5/2
அரிய கழங்கு அம்மனை சுனை நீராடாள் கான் ஏர் இசை பயிலாள் - 13.விரகப்பெண்பகை:13 4/1

 TOP
 
    கழல் (1)
தவ மெய்ஞ்ஞானர் உளத்து இனிக்கும் தண் தேன் அனையான் கழல் பேணி - 14.பாதாதியுவமை:14 1/1

 TOP
 
    கழலில் (1)
கழலில் பொலியும் அடியவர் பூம் கழலை தொழுது கவி மூன்றில் - 15.பெண்ணுவமை:15 1/2

 TOP
 
    கழலை (1)
கழலில் பொலியும் அடியவர் பூம் கழலை தொழுது கவி மூன்றில் - 15.பெண்ணுவமை:15 1/2

 TOP
 
    கழறும் (1)
காட்டும் உசித பொருள் வகுத்து கழறும் உசிதசூடாமணிக்கு - 18.உதாரணமொழிபு:0 3/2

 TOP
 
    கழனி (1)
கள் அறா மென் குவளை அலர் கழனி புடை சூழ் திருப்புகலி - 18.உதாரணமொழிபு:0 12/1

 TOP
 
    கழுத்திற்கு (1)
மங்கலம் சேர் சுருள் ஏந்து மடலும் கழுத்திற்கு உவமை பெறும் - 14.பாதாதியுவமை:14 16/2

 TOP
 
    கழை (1)
நாடு கதலி கழை செந்நெல் நறும் செங்கழுநீர் சிறுபயறு - 3.இராசசின்னம்:3 13/1

 TOP
 
    கள் (2)
கள் அறா மென் குவளை அலர் கழனி புடை சூழ் திருப்புகலி - 18.உதாரணமொழிபு:0 12/1
வேறுபடுக்கும் கள் குறளை விரும்பாது அறிஞர்க்கு இனன் ஆகி - 2.வருணாச்சிரமவொழுக்கம்:2 7/4

 TOP
 
    கள்ளன் (1)
தூ விளக்கு சங்கநிதி கள்ளன் தளிர் வெற்றிலை விண்ணில் - 14.பாதாதியுவமை:14 7/2

 TOP
 
    களஞ்சியம் (1)
உயிர் மான் ஆசை களஞ்சியம் பொன் ஓங்கு காம கலை கியானம் - 15.பெண்ணுவமை:15 2/2

 TOP
 
    களத்தில் (1)
களத்தில் அரசை பேணி முனை காட்டி செருநர்தமை வெல்லும் - 3.இராசசின்னம்:3 4/2

 TOP
 
    களப (1)
மலை ஆர் களப முலையாரும் மால் மோகினி வாவியும் காவும் - 4.காமசின்னம்:4 13/1

 TOP
 
    களபத்தின் (1)
கரும்பாம்பு இளநீர்க்காம்பு நறும் களபத்தின் தண் துளி தாரை - 14.பாதாதியுவமை:14 10/2

 TOP
 
    களபம் (2)
முத்து களபம் மருக்கொழுந்து முல்லை பிச்சி முதலாம் பூம் - 13.விரகப்பெண்பகை:13 2/1
தொடர்ந்து களபம் ஒழுக நறும் தொய்யில் இலக வெண் தரள - 14.பாதாதியுவமை:14 13/3

 TOP
 
    களவின் (2)
நயத்தின் பாங்கியிற்கூட்டம் நான்கும் களவின் புணர்ச்சியவாம் - 8.புணர்ச்சிவகை:8 3/2
கருது நெறியின் கட்டுரைத்த களவின் பிரிதல் இரு வகைத்தே - 10.பிரிவின்வகை:10 2/4

 TOP
 
    களவு (3)
களவு கற்பாம் இரு கைகோள் கருதி களவு ஊழ் காரணமாய் - 8.புணர்ச்சிவகை:8 4/1
களவு கற்பாம் இரு கைகோள் கருதி களவு ஊழ் காரணமாய் - 8.புணர்ச்சிவகை:8 4/1
தெருள் ஐந்திணையின் இன்புறு காந்திருவ மணத்தின் களவு கற்பு என்று - 17.முப்பொருள்வகை:17 10/1

 TOP
 
    களித்து (1)
கானில் புயல் கண்டு ஆடு மயில் களித்து பூவைக்கு உரை கூட்டும் - 5.பெண்பருவம்:5 8/2

 TOP
 
    களித்தோர் (1)
தொலைவின் மூத்தோர் களித்தோர் கண்டு துயின்றோர் பயந்தோர் கலை மாறல் - 7.மணவிவரம்:7 8/3

 TOP
 
    களிறு (3)
இடபம் உயர் வெம் களிறு அடர்த்தோன் இணை சேர் மருதம் பிளந்து எறிந்தோன் - 1.தேவசரித்திரம்:1 11/3
தலை ஆர் நாடு ஊர் மகிழ் மாலை தண்டு பரி பூங்கிளி களிறு
  நிலை ஆர் கங்குல் முரசு கடல் நெடிய துவசம் கயல் கருப்பு அம் - 4.காமசின்னம்:4 13/2,3
வெற்பு நதி நாடு ஊர் விரை தார் வெண் மா களிறு கொடி முரசு - 18.உதாரணமொழிபு:18 8/1

 TOP
 
    களைகள் (1)
கூறும் களைகள் ஆங்கு ஒறுத்து கொடுங்கோல் பிறர்தம் மனை காமம் - 2.வருணாச்சிரமவொழுக்கம்:2 7/3

 TOP
 
    கற்கண்டு (1)
பாகு கரும்பு கற்கண்டு பாடும் யாழ் முக்கனி சீனி - 14.பாதாதியுவமை:14 19/2

 TOP
 
    கற்பகம் (1)
பவம் என் பாரிசாதம் கற்பகம் என்று ஐந்தும் ஐந்தருவே - 18.உதாரணமொழிபு:18 6/4

 TOP
 
    கற்பனையாள் (1)
காட்டும் சொருகு குழல் கற்றோர் கல்லாரிடத்து கற்பனையாள் - 5.பெண்பருவம்:5 6/4

 TOP
 
    கற்பாம் (1)
களவு கற்பாம் இரு கைகோள் கருதி களவு ஊழ் காரணமாய் - 8.புணர்ச்சிவகை:8 4/1

 TOP
 
    கற்பின் (3)
செயற்கைப்படும் இ புணர்வு இரண்டும் தெளிந்த கற்பின் புணர்ச்சியவே - 8.புணர்ச்சிவகை:8 3/4
புளக முலையாள்தனை விரும்பி புணர்தல் கற்பின் புணர்வு ஆமே - 8.புணர்ச்சிவகை:8 4/4
கணிதம் உறு மோக தலைவன் கற்பின் பிரிதல் அறு வகைத்தே - 10.பிரிவின்வகை:10 3/4

 TOP
 
    கற்பு (1)
தெருள் ஐந்திணையின் இன்புறு காந்திருவ மணத்தின் களவு கற்பு என்று - 17.முப்பொருள்வகை:17 10/1

 TOP
 
    கற்புடையோர் (1)
ஆறில் ஒன்று குடியிறைகொண்டு அரிய தவத்தோர் கற்புடையோர்
  தேறு நிலையா தரவு அமைந்து செற்றார் செறுத்து கொலையினரை - 2.வருணாச்சிரமவொழுக்கம்:2 7/1,2

 TOP
 
    கற்பூரம் (1)
ஊட்டும் நறும் கற்பூரம் என உரைக்கும் பஞ்சமணம் ஆமே - 18.உதாரணமொழிபு:18 7/4

 TOP
 
    கற்ற (1)
கற்ற நீதி தெரி நட்பும் காவல் உறு நால் வகை அரணும் - 2.வருணாச்சிரமவொழுக்கம்:2 9/3

 TOP
 
    கற்றார் (1)
கற்றார் புகழும் மாம்பூவும் கடி சேர் தண் தாமரை பூவும் - 4.காமசின்னம்:4 9/2

 TOP
 
    கற்றாரே (1)
தொலைவுஇல் பாடாண்திணை என்று சொற்றார் இயல்நூல் கற்றாரே - 17.முப்பொருள்வகை:17 9/4

 TOP
 
    கற்றோர் (1)
காட்டும் சொருகு குழல் கற்றோர் கல்லாரிடத்து கற்பனையாள் - 5.பெண்பருவம்:5 6/4

 TOP
 
    கறி (1)
கோட்டம் அகில் குங்குமம் கறி தக்கோல மலையின் அவை ஐந்து ஆம் - 3.இராசசின்னம்:3 14/1

 TOP
 
    கறுத்த (1)
நெஞ்சு கறுத்த பேதைக்கு நிகழ்த்தும் விழி செங்குமுதம் ஒப்பு ஆம் - 14.பாதாதியுவமை:14 22/1

 TOP
 
    கறை (1)
கிம்புரி வெண் கூர் மருப்பு கிளர் செங்கனல் கண் கறை அடி மால் - 3.இராசசின்னம்:3 10/3

 TOP
 
    கன்றியூர்க்கு (1)
கன்றியூர்க்கு மலர் விளைக்கும் கலங்கும் பொழுது நலம் இறவே - 13.விரகப்பெண்பகை:13 5/4

 TOP
 
    கன்று (1)
கன்று குணிலா எடுத்து விளங்கனியை உகுத்தோன் ஆயர் மனை - 1.தேவசரித்திரம்:1 9/1

 TOP
 
    கன்னல் (2)
கதிக்கு இலைஞ்சி கடிவாளம் கன்னல் சல்லி புன்னை அம் பூ - 4.காமசின்னம்:4 5/2
கன்னல் மொழி மங்கையர்தமக்கு கதித்த பெதும்பை பருவம் முதல் - 16.புருடஉவமை:16 6/3

 TOP
 
    கன்னலுடையான்தனக்கு (1)
கன்னலுடையான்தனக்கு ஆண்மை காட்டும் வடிவாள் காம விடாய் - 5.பெண்பருவம்:5 9/3

 TOP
 
    கன்னி (3)
பத்தி பெரும் ஆறிரண்டு ஆட்டை பருவ கன்னி தலைப்பூ போய் - 7.மணவிவரம்:7 3/2
கன்னி கமுகின் பூம் பாளை கரிய பிடி யானை துதிக்கை - 14.பாதாதியுவமை:14 27/1
அங்கம் சிவிகை கன்னி பரி யானை வில்வவனம் பதுமம் - 18.உதாரணமொழிபு:18 14/2

 TOP
 
    கன (1)
கங்கை இரதம் பசு நிருபர் கன கோபுரம் வெண் கொடி மடவார் - 18.உதாரணமொழிபு:18 14/1

 TOP
 
    கனமாய் (1)
கனமாய் பொருந்தும் காமம் அது காந்திருவம் என் மணம் ஆகும் - 7.மணவிவரம்:7 6/2

 TOP
 
    கனல் (4)
செக்கர் வான்மீன் பவள நிறம் செப்பும் சடையான் கனல் பவழம் - 1.தேவசரித்திரம்:1 5/1
புக்க கலைசேர்மன் பரிதி பொங்கு கனல் என்று இவை இசைந்த - 1.தேவசரித்திரம்:1 5/3
எஞ்ச கொய்து விது வினை கால் இட்டே தேய்த்து கனல் கை அறுத்து - 1.தேவசரித்திரம்:1 7/2
காற்றின் அடிபட்டு அயர்வுற்ற கனல் சேர் குழல் சூழியத்தினாள் - 5.பெண்பருவம்:5 4/3

 TOP
 
    கனலும் (1)
வியல் கொள் வெய்யிலில் கனலும் வித்தின் முளையும் அடங்குதல் போல் - 5.பெண்பருவம்:5 3/3

 TOP
 
    கனி (4)
காத்த மருமத்து உற்று முகம் காட்டும் இலந்தை கனி முலையாள் - 5.பெண்பருவம்:5 7/3
வல்லு சக்கிரவாகமதன் மகுடம் எலுமிச்சம் கனி பூம் - 14.பாதாதியுவமை:14 11/1
வில்வ கனி மாங்கனி தேங்காய் விளவின்கனி கோபுரத்தூவி - 14.பாதாதியுவமை:14 11/2
கண்டு மொழிந்தார் ஈர் இதழ்க்கும் கனி வாய்க்கு இணை ஆம் செங்குமுதம் - 14.பாதாதியுவமை:14 17/4

 TOP