<<முந்திய பக்கம்

சிதம்பரக் கவிராயர் இயற்றிய உசிதசூடாமணி நிகண்டு - தொடரடைவு

பா - முதல் சொற்கள்
பாக்கியம் 2
பாகன் 2
பாகு 1
பாங்கற்கூட்டம் 1
பாங்கி 2
பாங்கியர்க்கு 1
பாங்கியிற்கூட்டம் 1
பாங்கின் 1
பாசாங்குசமொடு 1
பாசுபதம் 1
பாஞ்சாலிக்கு 1
பாட 3
பாடல் 1
பாடலுற்றாம் 1
பாடாண்திணை 1
பாடாண்திணையும் 1
பாடாண்திணையே 1
பாடும் 7
பாணம் 1
பாத 1
பாதம் 1
பாதாதி 1
பாதுகாத்து 1
பாம்பு 1
பாமால் 1
பாய் 1
பாயல் 1
பாயும் 1
பார் 2
பார்க்கும் 5
பார்கொள் 1
பார்த்து 2
பார்ப்பது 1
பார்ப்பினிமார்கள் 1
பார்ப்பு 1
பார்வைக்கு 1
பார 1
பாரத 1
பாரதி 2
பாராட்டும் 1
பாராள் 1
பாரி 1
பாரிசாதம் 1
பாரித்து 1
பால் 4
பாலகன் 1
பாலன் 1
பாலிகை 1
பாலின் 1
பாலுக்கு 1
பாலை 4
பாலைக்கு 1
பாவால் 2
பாவு 1
பாவை 3
பாவையார் 1
பாளை 4
பாளையும் 1
பாற்கடல் 1
பாற்கடலில் 1
பாற்கடலை 1
பாற்று 1
பான்மையின் 1



இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    பாக்கியம் (2)
மறுவுஇலா பாக்கியம் கல்வி மகிழும் தவம் தானம் வீரம் - 3.இராசசின்னம்:3 6/1
பாக்கியம் இலங்கு முகம் கல்வி பரவு நாவின் தானம் கை - 3.இராசசின்னம்:3 8/1

 TOP
 
    பாகன் (2)
சுகமது உறவும் துயில் அடக்கும் தோகை பாகன் அடி தொழுது - 6.ஆண்பருவம்:6 1/2
புரவி ஏழு பச்சை நிறம் பொருந்தும் அருணன் அவன் பாகன்
  விரவு கலை சேர் விது ஊர்தி விமானம் திகிரி மூன்று ஈர்க்கும் - 18.உதாரணமொழிபு:18 3/2,3

 TOP
 
    பாகு (1)
பாகு கரும்பு கற்கண்டு பாடும் யாழ் முக்கனி சீனி - 14.பாதாதியுவமை:14 19/2

 TOP
 
    பாங்கற்கூட்டம் (1)
இயற்கைப்புணர்ச்சி இடந்தலைப்பாடு ஏத்து பாங்கற்கூட்டம் மொழி - 8.புணர்ச்சிவகை:8 3/1

 TOP
 
    பாங்கி (2)
நன்றின் பாங்கி முதல் தூது நவின்று தலைவன்தனக்கு உரைப்ப - 8.புணர்ச்சிவகை:8 5/3
கொண்டல் பாங்கி மயில் பூவை குயில் பூம் பொதியமலை தென்றல் - 13.விரகப்பெண்பகை:13 6/1

 TOP
 
    பாங்கியர்க்கு (1)
உரிய பாங்கியர்க்கு ஏவல் உவந்து புரியாள் மனம் இறந்தே - 13.விரகப்பெண்பகை:13 4/4

 TOP
 
    பாங்கியிற்கூட்டம் (1)
நயத்தின் பாங்கியிற்கூட்டம் நான்கும் களவின் புணர்ச்சியவாம் - 8.புணர்ச்சிவகை:8 3/2

 TOP
 
    பாங்கின் (1)
பாங்கின் நிமிரும் பூங்காவின் படி சேர் மலர் வாவி கரையில் - 9.புணர்தற்குரியவகை:9 4/1

 TOP
 
    பாசாங்குசமொடு (1)
விண்ட உருத்திரன்தனை வேட்ட விமலி பாசாங்குசமொடு வில் - 1.தேவசரித்திரம்:1 16/3

 TOP
 
    பாசுபதம் (1)
பினாகம் பாசுபதம் சூலம் பிறங்கு மயில் வச்சிரம் கட்கம் - 18.உதாரணமொழிபு:18 2/1

 TOP
 
    பாஞ்சாலிக்கு (1)
தோயும் மத குஞ்சரம் காத்தோன் துகில் பாஞ்சாலிக்கு இனிது அளித்தோன் - 1.தேவசரித்திரம்:1 12/2

 TOP
 
    பாட (3)
பாவால் உளம் மகிழ்ந்து பாட வரம்தந்து அருள - 18.உதாரணமொழிபு:0 1/3
சத்த சுரம் பாட தொடங்கும் தருண மொழியாள் புயல் கண்டு - 5.பெண்பருவம்:5 5/1
பாட இசையும் அல்குல் உறு பருவ மங்கை திருவினளே - 5.பெண்பருவம்:5 10/4

 TOP
 
    பாடல் (1)
அருளும் கோவைத்துறை நானூறு ஆக பாடல் அகப்பாட்டே - 17.முப்பொருள்வகை:17 10/4

 TOP
 
    பாடலுற்றாம் (1)
பாவால் தேவசரித்திரத்தை பாடும் தொகுப்பு பாடலுற்றாம் - 1.தேவசரித்திரம்:1 1/4

 TOP
 
    பாடாண்திணை (1)
தொலைவுஇல் பாடாண்திணை என்று சொற்றார் இயல்நூல் கற்றாரே - 17.முப்பொருள்வகை:17 9/4

 TOP
 
    பாடாண்திணையும் (1)
திட்பம் உறு காஞ்சியும் பாடாண்திணையும் மொழியும் புறப்புறமே - 17.முப்பொருள்வகை:17 7/4

 TOP
 
    பாடாண்திணையே (1)
இரந்து சொலும் கைக்கிளை புறனுக்கு இசைவின் வரு பாடாண்திணையே - 17.முப்பொருள்வகை:17 8/4

 TOP
 
    பாடும் (7)
சூட்டு கவி நாவலர் பாடும் துகள் தீர் செய்யுட்கு உறுபயனா - 18.உதாரணமொழிபு:0 3/1
பாவால் தேவசரித்திரத்தை பாடும் தொகுப்பு பாடலுற்றாம் - 1.தேவசரித்திரம்:1 1/4
பரிவில் பிறவும் சிவசரிதம் பாடும் இயல்பில் பகர்வாரே - 1.தேவசரித்திரம்:1 8/4
பெருகும் இயல்பின் வாசகங்கள் பிறக்க பாடும் தமிழ் வல்லோர் - 10.பிரிவின்வகை:10 2/3
பாகு கரும்பு கற்கண்டு பாடும் யாழ் முக்கனி சீனி - 14.பாதாதியுவமை:14 19/2
பாதுகாத்து தக்க வகை பாடும் இயல்பில் பகர்வாயே - 16.புருடஉவமை:16 4/4
பாடும் சுரும்பு கோகிலம் விண் பறக்கும் பொறி செம் சிறை காடை - 18.உதாரணமொழிபு:18 11/2

 TOP
 
    பாணம் (1)
பற்றாய் தொடுத்து நின்று எய்யும் பஞ்ச பாணம் ஐந்து ஆமே - 4.காமசின்னம்:4 9/4

 TOP
 
    பாத (1)
பாத முன் பின் விருத்தியுமாம் பகர் மன்னவர்க்கு ஆம் பரி இயல்பே - 3.இராசசின்னம்:3 11/4

 TOP
 
    பாதம் (1)
பாதம் ஆதி மடவர்க்கு பகரும் உவமை அலங்காரம் - 18.உதாரணமொழிபு:0 7/1

 TOP
 
    பாதாதி (1)
நவமது உறும் ஒண் தட வரை நேர் நாரியார்தம் பாதாதி
  உவமை அலங்காரம் புகலல் உற்றாம் கவி எண் மூன்றாறால் - 14.பாதாதியுவமை:14 1/3,4

 TOP
 
    பாதுகாத்து (1)
பாதுகாத்து தக்க வகை பாடும் இயல்பில் பகர்வாயே - 16.புருடஉவமை:16 4/4

 TOP
 
    பாம்பு (1)
தந்தி மழுமான் முயலகன் செம் தழல் பாம்பு உழுவை துடி முதலா - 1.தேவசரித்திரம்:1 3/2

 TOP
 
    பாமால் (1)
ஒசியும் ஒரு விண்மீன் வயங்கல் ஒப்பாமேனும் மெய் பாமால்
  முசிவு இலாத தமிழ் புலவோர் மொழிநூல் உசிதப்பொருளை அமைத்து - 18.உதாரணமொழிபு:0 5/2,3

 TOP
 
    பாய் (1)
வரைவோன் இருநால் புயன் நான்ற வாயான் மதி பாய் சடை முடியான் - 1.தேவசரித்திரம்:1 17/3

 TOP
 
    பாயல் (1)
தொத்து கதலி கடல் ஆம்பல் சூழும் குளிரி பூம் பாயல்
  நத்து கவிய அடர் கங்குல் நறும் தண் பனி நீர் இவை பத்தும் - 13.விரகப்பெண்பகை:13 2/2,3

 TOP
 
    பாயும் (1)
வாய்ந்த முலையாள் இரு தோட்டின் வழி போய் பாயும் மான்விழியாள் - 5.பெண்பருவம்:5 11/3

 TOP
 
    பார் (2)
பார் ஆர் இளைஞர் இருதயமும் பனி முல்லையும் ஆர செருகி - 5.பெண்பருவம்:5 17/3
துன்னு கருமத்திறன் அமைந்தோன் தொல் பார் புரக்கும் மன்னவனே - 18.உதாரணமொழிபு:18 12/4

 TOP
 
    பார்க்கும் (5)
பத்தி குலவ வந்த மயில் பழக பார்க்கும் நடை அன்ன - 5.பெண்பருவம்:5 5/2
மூட்டும் காம வழி தேடி முட்டி பார்க்கும் அல்குலினாள் - 5.பெண்பருவம்:5 6/2
தேனில் பொதிந்த மென்மொழியாள் சிமிழ் நீர்க்குமிழி நிகர் பார்க்கும்
  மானித்து இருக்கும் பூண் முலையாள் மயல் தந்து அணைக்கும் மருக்கொழுந்து - 5.பெண்பருவம்:5 8/3,4
எஞ்சல் இல்லாது அடர்ந்து இடம் கொண்டு இணைத்து விம்மி இசை பார்க்கும்
  குஞ்சரத்தின் இரு கோடும் குறிக்க ஏந்தும் கொங்கையினாள் - 5.பெண்பருவம்:5 15/2,3
திட்டமுடனே சென்று அரசு செலுத்த பார்க்கும் இரு தனத்தாள் - 5.பெண்பருவம்:5 20/2

 TOP
 
    பார்கொள் (1)
பார்கொள் புகழ் மேழி துவசன் பற்றார் விரும்பி பணி பதத்தான் - 18.உதாரணமொழிபு:0 8/3

 TOP
 
    பார்த்து (2)
கயலில் காலம் பார்த்து அடங்கும் கடல் கொல்லா நஞ்சு அன விழியாள் - 5.பெண்பருவம்:5 3/1
பார்த்து முயங்க நாள் கொளும் அ பருவ பெதும்பை பதுமினியே - 5.பெண்பருவம்:5 7/4

 TOP
 
    பார்ப்பது (1)
ஈட்டும் பத்தாயம் புகுதும் எலி போம் வழி பார்ப்பது போல - 5.பெண்பருவம்:5 6/1

 TOP
 
    பார்ப்பினிமார்கள் (1)
உரிய மறை ஆகம வடிவான் உன்னா முனி பார்ப்பினிமார்கள்
  பரிய தாருகாவனம் சென்று அழித்து பலி ஏற்றான் என்றே - 1.தேவசரித்திரம்:1 8/2,3

 TOP
 
    பார்ப்பு (1)
தேற்று நகையாள் அன பார்ப்பு தீஞ்சொல் பழக வரும் கிள்ளை - 5.பெண்பருவம்:5 4/2

 TOP
 
    பார்வைக்கு (1)
மன்னும் பார்வைக்கு இணை பிணையாய் வழுத்தும் பிறவும் மதித்து உரையே - 15.பெண்ணுவமை:15 4/4

 TOP
 
    பார (1)
பார சிலை வேள் அரண்மனையும் பசும்பொன் தட்டும் பரி செவியும் - 5.பெண்பருவம்:5 13/2

 TOP
 
    பாரத (1)
புரை தீர் மருப்பு ஒன்று ஒடித்து மலை புறத்திலே வெம் பாரத போர் - 1.தேவசரித்திரம்:1 17/2

 TOP
 
    பாரதி (2)
துதி மேவு பிரமணி வாணி சொல்லாள் இனிய கலைமகள் பாரதி
  சாரதியின் உடன் ஆம் சீர் ஆரும் வால பரமேட்டி - 1.தேவசரித்திரம்:1 20/1,2
திரு மேனகை பாரதி மதி செந்தேன் செங்கரும்பு மருக்கொழுந்து - 15.பெண்ணுவமை:15 3/1

 TOP
 
    பாராட்டும் (1)
விஞ்சை மதநூல் வழி காண விதம் பாராட்டும் மதியுடையாள் - 5.பெண்பருவம்:5 15/4

 TOP
 
    பாராள் (1)
பரிவில் வளர்க்கும் கிள்ளை முகம் பாராள் மானை கையணையாள் - 13.விரகப்பெண்பகை:13 4/2

 TOP
 
    பாரி (1)
வெண்தாமரையாள் அவன் நாவில் விரும்பும் பாரி சதுர்வதனம் - 1.தேவசரித்திரம்:1 19/2

 TOP
 
    பாரிசாதம் (1)
பவம் என் பாரிசாதம் கற்பகம் என்று ஐந்தும் ஐந்தருவே - 18.உதாரணமொழிபு:18 6/4

 TOP
 
    பாரித்து (1)
பத்தி தரு மும்முரசு தினம் பாரித்து இசைக்கு முன்றிலினான் - 18.உதாரணமொழிபு:0 9/3

 TOP
 
    பால் (4)
சென்று தயிர் பால் உறி வெண்ணெய் திருடி நுகர்ந்து கட்டுண்டோன் - 1.தேவசரித்திரம்:1 9/2
உண்ணும் பால் ஓதன விருப்பும் உற்ற கேள்வனுடன் இன்பும் - 9.புணர்தற்குரியவகை:9 3/3
உரவால் நகுதல் அயன் மறைத்தல் உண்ணும் பால் ஓதனம் கைத்தல் - 11.பெண்விரகம்:11 3/4
வாகின் உறு தீம் பால் செழும் தேன் வண்ண பசும் பூங்கிளி அமுதம் - 14.பாதாதியுவமை:14 19/1

 TOP
 
    பாலகன் (1)
பாலுக்கு பாலகன் இரங்க பரிந்து பாற்கடலை ஈந்தோன் - 1.தேவசரித்திரம்:1 6/2

 TOP
 
    பாலன் (1)
உன்னும் பாலன் மீளி மறவோனே திறலோன் காளையொடு - 6.ஆண்பருவம்:6 2/1

 TOP
 
    பாலிகை (1)
சங்கு செம்பு பாலிகை பூசனிப்பூ சூல் கொள் இளம் கமுகு - 14.பாதாதியுவமை:14 16/1

 TOP
 
    பாலின் (1)
பாலின் பாளை உள் குரும்பை பந்து தராசு சிப்பி இவை - 14.பாதாதியுவமை:14 3/3

 TOP
 
    பாலுக்கு (1)
பாலுக்கு பாலகன் இரங்க பரிந்து பாற்கடலை ஈந்தோன் - 1.தேவசரித்திரம்:1 6/2

 TOP
 
    பாலை (4)
பிறந்த பாலை ஒன்று ஒழிய பேசுவது நால் நிலம் ஆகும் - 17.முப்பொருள்வகை:17 2/3
நண்பகலும் பாலை முல்லை படு கார் மாலை கார் முதலாயினவும் - 17.முப்பொருள்வகை:17 4/2
குன்றில் புணர்ச்சி அரும் பாலை கொடிய பிரிவு செறி முல்லை - 17.முப்பொருள்வகை:17 5/1
மட்டில் குறிஞ்சி முல்லை கிளர் மருதம் நெய்தல் பாலை ஐந்தும் - 17.முப்பொருள்வகை:17 7/1

 TOP
 
    பாலைக்கு (1)
புரந்த வாகை பாலைக்கு புறன் ஆம் காஞ்சி பெருந்திணைக்கு ஆம் - 17.முப்பொருள்வகை:17 8/3

 TOP
 
    பாவால் (2)
பாவால் உளம் மகிழ்ந்து பாட வரம்தந்து அருள - 18.உதாரணமொழிபு:0 1/3
பாவால் தேவசரித்திரத்தை பாடும் தொகுப்பு பாடலுற்றாம் - 1.தேவசரித்திரம்:1 1/4

 TOP
 
    பாவு (1)
பாவு தரளம் தாமரை பொன் பச்சை நீல நிறத்து ஒன்றும் - 3.இராசசின்னம்:3 12/2

 TOP
 
    பாவை (3)
ஆவல் பயிலா வடிவுடையாள் அடர் பொன் பாவை விளையாட்டாள் - 5.பெண்பருவம்:5 2/4
பயில் சேர் கொல்லி அம் பாவை பசும் பூம் கொம்பு சஞ்சீவி - 15.பெண்ணுவமை:15 2/3
பன்னும் வடிவின் பாவை திரு பைம்பொன் மலர் செந்தளிர் மேனி - 15.பெண்ணுவமை:15 4/1

 TOP
 
    பாவையார் (1)
பரவு உரோம பொலிவொடு ஒத்தல் பாவையார் சொல் வசைக்கு இரங்கல் - 11.பெண்விரகம்:11 3/3

 TOP
 
    பாளை (4)
புல்லும் கமுகின் நறும் பாளை பொற்பால் இரட்டும் சாமரை ஆம் - 4.காமசின்னம்:4 4/2
பாலின் பாளை உள் குரும்பை பந்து தராசு சிப்பி இவை - 14.பாதாதியுவமை:14 3/3
விரவு தேம் பூ விரி பாளை வேணு காளம் வரால் ஐந்தும் - 14.பாதாதியுவமை:14 4/3
கன்னி கமுகின் பூம் பாளை கரிய பிடி யானை துதிக்கை - 14.பாதாதியுவமை:14 27/1

 TOP
 
    பாளையும் (1)
சாலும் புறம் கால் கமடமும் பொத்து அகமும் கமுகின் பாளையும் ஆம் - 14.பாதாதியுவமை:14 3/2

 TOP
 
    பாற்கடல் (1)
அடரும் சத்திபீடம் மதன் ஆலவட்டம் குளமடை பாற்கடல்
  தூ விளக்கு சங்கநிதி கள்ளன் தளிர் வெற்றிலை விண்ணில் - 14.பாதாதியுவமை:14 7/1,2

 TOP
 
    பாற்கடலில் (1)
ஆலில் அரவில் பாற்கடலில் அணுக ஓங்கி பசு மேய்க்கும் - 1.தேவசரித்திரம்:1 10/1

 TOP
 
    பாற்கடலை (1)
பாலுக்கு பாலகன் இரங்க பரிந்து பாற்கடலை ஈந்தோன் - 1.தேவசரித்திரம்:1 6/2

 TOP
 
    பாற்று (1)
பாற்று சஞ்சீவினிக்கு அன்றாம் பருவ பேதை பசும் கிளியே - 5.பெண்பருவம்:5 4/4

 TOP
 
    பான்மையின் (1)
திகழ் பான்மையின் முன்னூல் பலவும் சேரும் உசிதசூடாமணி என்று - 18.உதாரணமொழிபு:0 2/3

 TOP