<<முந்திய பக்கம்

சிதம்பரக் கவிராயர் இயற்றிய உசிதசூடாமணி நிகண்டு - தொடரடைவு

பு - முதல் சொற்கள்
புக்க 1
புகர் 1
புகர்முகத்து 1
புகர்இல் 1
புகல் 1
புகல்வாரே 2
புகல 1
புகலப்படும் 1
புகலல் 1
புகலும் 6
புகலுவரால் 1
புகலுவரே 1
புகழ் 3
புகழ்ந்து 1
புகழும் 5
புகழை 1
புகன்ற 1
புகன்றோன் 1
புகுதல் 1
புகுதும் 2
புகும் 1
புஞ்சம் 1
புடத்தில் 1
புடை 1
புண்டரீகம் 1
புணர் 1
புணர்ச்சி 3
புணர்ச்சியவாம் 1
புணர்ச்சியவே 1
புணர்த்தல் 1
புணர்தல் 4
புணர்தற்கு 1
புணர்ந்து 1
புணர்ப்பான் 1
புணர்ப்பு 2
புணர்வின் 1
புணர்வு 3
புணரும் 1
புத்ரர் 1
புதல்வருக்கு 1
புதல்வன் 2
புயம் 1
புயமாலை 1
புயல் 3
புயன் 2
புரக்கும் 1
புரசை 1
புரந்த 1
புரந்து 1
புரம் 1
புரவலர்க்கு 1
புரவி 2
புரிந்த 1
புரியாள் 1
புரிவோன் 1
புருட 5
புருடர் 1
புருடருக்கு 1
புருவம் 1
புரை 1
புரோகிதர் 1
புல்லும் 3
புலம்பல் 1
புலம்புறல் 1
புலவர் 2
புலவோர் 2
புலி 1
புவனம் 1
புவி 4
புவிமாதொடு 1
புவியின் 1
புழுகு 1
புழை 1
புழைக்கரத்து 1
புள் 4
புளக 4
புறத்திலே 1
புறப்புறமே 1
புறம் 1
புறன் 2
புறனுக்கு 1
புன் 1
புன்னை 1
புன்னைக்காய் 1
புன்னைப்பூ 1
புனல் 1
புனலும் 1
புனை 1
புனைந்து 1
புனையாள் 1
புனைவர் 1


இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    புக்க (1)
புக்க கலைசேர்மன் பரிதி பொங்கு கனல் என்று இவை இசைந்த - 1.தேவசரித்திரம்:1 5/3

 TOP
 
    புகர் (1)
கும்ப நால்வாய் தழை செவி அங்குசம் போர் புகர் முகம் கவளம் - 3.இராசசின்னம்:3 10/2

 TOP
 
    புகர்முகத்து (1)
கோட்டு முமத புகர்முகத்து கோமான் எம் முன் நிற்குகவே - 18.உதாரணமொழிபு:0 3/4

 TOP
 
    புகர்இல் (1)
புகர்இல் உழவர் தொழில் இயற்றல் போற்றும் மறையோர்க்கு ஏவல்செய்தல் - 2.வருணாச்சிரமவொழுக்கம்:2 12/2

 TOP
 
    புகல் (1)
இந்த புவனம் புகல் பெருமைக்கு ஏற்ற கொங்கநாட்டு அதிபன் - 18.உதாரணமொழிபு:0 10/2

 TOP
 
    புகல்வாரே (2)
தெக்கு அணையதாய் மகள்கொடுத்தல் தெய்வம் எனவே புகல்வாரே - 7.மணவிவரம்:7 5/4
மதவேளினுக்கே இணங்கு பரிவாரம் என்ன புகல்வாரே - 18.உதாரணமொழிபு:18 10/4

 TOP
 
    புகல (1)
புகல விளங்கும் கருப்பொருள் ஆம் பொருந்த மருளின் காரணத்தால் - 17.முப்பொருள்வகை:17 6/3

 TOP
 
    புகலப்படும் (1)
பொங்கம் இசையும் வயிரமுமா புகலப்படும் இவ் ஒன்பானும் - 18.உதாரணமொழிபு:18 4/3

 TOP
 
    புகலல் (1)
உவமை அலங்காரம் புகலல் உற்றாம் கவி எண் மூன்றாறால் - 14.பாதாதியுவமை:14 1/4

 TOP
 
    புகலும் (6)
பூவில் எயும் வில் காமசின்னம் புகலும் எழுபெண் ஆண் பருவம் - 18.உதாரணமொழிபு:0 6/2
பொருள் ஆம் திரிமூர்த்தியை பரவி புகலும் கவிகள் பதினொன்றால் - 2.வருணாச்சிரமவொழுக்கம்:2 1/2
சறுவ சாம்பிராச்சியம் என்று தக்கோர் புகலும் மநுநீதி - 3.இராசசின்னம்:3 6/3
புகலும் முறையில் பருவமொடு போந்த வயதும் ஒரு கவியில் - 6.ஆண்பருவம்:6 1/3
புனைவர் கருமம் பயன் மெய் உரு புகலும் நான்கின் பொருள் புணர்வு ஒத்து - 16.புருடஉவமை:16 7/3
பூட்டும் வெண்பஞ்சு அனத்தூவி புகலும் பஞ்சசயனம் ஐந்தாம் - 18.உதாரணமொழிபு:18 7/2

 TOP
 
    புகலுவரால் (1)
பொற்பின் வகுத்து தகும் வகையில் புலவோர் மதிக்க புகலுவரால் - 18.உதாரணமொழிபு:18 8/4

 TOP
 
    புகலுவரே (1)
பொறுதி உடைய வசியருக்கு போந்த தொழிலா புகலுவரே - 2.வருணாச்சிரமவொழுக்கம்:2 10/4

 TOP
 
    புகழ் (3)
புகழ் சேர் மறை ஆறு அங்கம் முதல் போந்த சனகாதியர்க்கு அருளை - 18.உதாரணமொழிபு:0 2/1
பார்கொள் புகழ் மேழி துவசன் பற்றார் விரும்பி பணி பதத்தான் - 18.உதாரணமொழிபு:0 8/3
விண்ணும் அகன்ற புவி அனைத்தும் விளங்கும் புகழ் சுக்கிரீமகிபன் - 13.விரகப்பெண்பகை:13 1/1

 TOP
 
    புகழ்ந்து (1)
புகழ்ந்து ஆபரணம் தரித்து நுதல் பூட்டும் வசிய திலதம் இட்டு - 9.புணர்தற்குரியவகை:9 2/1

 TOP
 
    புகழும் (5)
கற்றார் புகழும் மாம்பூவும் கடி சேர் தண் தாமரை பூவும் - 4.காமசின்னம்:4 9/2
எங்கும் புகழும் திருமுகத்துக்கு இசையும் முத்தம் வியர்வு ஆமே - 14.பாதாதியுவமை:14 16/4
புகுதும் வாசல் நாராங்கி புகழும் காதுக்கு உவமை உறும் - 14.பாதாதியுவமை:14 23/2
வட பூதரசம் ஆன புயன் மதுரகவி நாவலர் புகழும்
  திட விசய சுக்கிரிமகிபன் செப்பும் உசித பொருள் வேண்டும் - 18.உதாரணமொழிபு:18 1/2,3
அவனி புகழும் சந்தானம் அரி சந்தனம் மந்தாரம் எழில் - 18.உதாரணமொழிபு:18 6/3

 TOP
 
    புகழை (1)
கருது நெறியின் புகழை நிறீஇ காவல் புரிவோன் காவலனே - 2.வருணாச்சிரமவொழுக்கம்:2 8/4

 TOP
 
    புகன்ற (1)
புகன்ற சபதம் முடித்த திறம் போற்றி தமது மகள் கொடுத்தல் - 7.மணவிவரம்:7 7/4

 TOP
 
    புகன்றோன் (1)
பரவும் இருமூன்று அக்கரத்தான் பரனுக்கு உபதேசம் புகன்றோன்
  விரவும் அறுவர் முலை உண்டோன் வேலை சுவற வேல் விடுத்த - 1.தேவசரித்திரம்:1 18/1,2

 TOP
 
    புகுதல் (1)
தளவ நகையார் விரகத்தின் தயங்கின் புகுதல் முகம்புரிதல் - 11.பெண்விரகம்:11 2/1

 TOP
 
    புகுதும் (2)
ஈட்டும் பத்தாயம் புகுதும் எலி போம் வழி பார்ப்பது போல - 5.பெண்பருவம்:5 6/1
புகுதும் வாசல் நாராங்கி புகழும் காதுக்கு உவமை உறும் - 14.பாதாதியுவமை:14 23/2

 TOP
 
    புகும் (1)
புகும் ஆவணி தொட்டு இரண்டிரண்டாய் பொருந்துமாறும் பெரும்பொழுது ஆம் - 17.முப்பொருள்வகை:17 3/2

 TOP
 
    புஞ்சம் (1)
மயில் பூம் கஞ்சம் அமுத புஞ்சம் வாடா விளக்கு ரசகுளிகை - 15.பெண்ணுவமை:15 2/4

 TOP
 
    புடத்தில் (1)
புடத்தில் தெளியும் அபரஞ்சி பொன் போல் ஒளிரும் மேனியள் - 5.பெண்பருவம்:5 19/1

 TOP
 
    புடை (1)
கள் அறா மென் குவளை அலர் கழனி புடை சூழ் திருப்புகலி - 18.உதாரணமொழிபு:0 12/1

 TOP
 
    புண்டரீகம் (1)
புண்டரீகம் முகிழ் பந்து புன்னைக்காய் மாதுளங்கனி மேல் - 14.பாதாதியுவமை:14 12/2

 TOP
 
    புணர் (1)
புவிமாதொடு பூமலர்மாது புணர் மால் சுக்கிரிமகிபன் என - 16.புருடஉவமை:16 1/3

 TOP
 
    புணர்ச்சி (3)
ஆவலுறும் எண்மணம் புணர்ச்சி அணுகு புணர்தல் குறி பிரிவு - 18.உதாரணமொழிபு:0 6/3
இரண்டு பகுப்பில் அறு வகையாய் இசையும் புணர்ச்சி வகை சொல்வாம் - 8.புணர்ச்சிவகை:8 1/4
குன்றில் புணர்ச்சி அரும் பாலை கொடிய பிரிவு செறி முல்லை - 17.முப்பொருள்வகை:17 5/1

 TOP
 
    புணர்ச்சியவாம் (1)
நயத்தின் பாங்கியிற்கூட்டம் நான்கும் களவின் புணர்ச்சியவாம்
  வயத்தின் குரவர் தர புணர்தல் வாயிலால் சென்று உடன் புணர்தல் - 8.புணர்ச்சிவகை:8 3/2,3

 TOP
 
    புணர்ச்சியவே (1)
செயற்கைப்படும் இ புணர்வு இரண்டும் தெளிந்த கற்பின் புணர்ச்சியவே - 8.புணர்ச்சிவகை:8 3/4

 TOP
 
    புணர்த்தல் (1)
புணர்த்தல் குறியின் செய்கைதனை போந்த கவி ஐந்தால் உரைப்பாம் - 9.புணர்தற்குரியவகை:9 1/4

 TOP
 
    புணர்தல் (4)
ஆவலுறும் எண்மணம் புணர்ச்சி அணுகு புணர்தல் குறி பிரிவு - 18.உதாரணமொழிபு:0 6/3
வயத்தின் குரவர் தர புணர்தல் வாயிலால் சென்று உடன் புணர்தல் - 8.புணர்ச்சிவகை:8 3/3
வயத்தின் குரவர் தர புணர்தல் வாயிலால் சென்று உடன் புணர்தல்
  செயற்கைப்படும் இ புணர்வு இரண்டும் தெளிந்த கற்பின் புணர்ச்சியவே - 8.புணர்ச்சிவகை:8 3/3,4
புளக முலையாள்தனை விரும்பி புணர்தல் கற்பின் புணர்வு ஆமே - 8.புணர்ச்சிவகை:8 4/4

 TOP
 
    புணர்தற்கு (1)
பொருந்தி மகிழ்நனொடு குலவி புணர்தற்கு அறியும் குறிப்பு ஆமே - 9.புணர்தற்குரியவகை:9 6/4

 TOP
 
    புணர்ந்து (1)
மனத்திற்கு உரிய தலைவனொடு மகிழ்ந்து தலைவி புணர்ந்து இருக்கும் - 9.புணர்தற்குரியவகை:9 1/3

 TOP
 
    புணர்ப்பான் (1)
இச்சை கவர உயிர் அழுந்தி இசையும் புணர்ப்பு நன் புணர்ப்பான்
  நச்சிய அவத்தை இருவருக்கு நண்ணுவது மெய்யுறுபுணர்ப்பே - 8.புணர்ச்சிவகை:8 2/3,4

 TOP
 
    புணர்ப்பு (2)
இச்சை கவர உயிர் அழுந்தி இசையும் புணர்ப்பு நன் புணர்ப்பான் - 8.புணர்ச்சிவகை:8 2/3
அளவில் உள மாண்பு ஒத்து இருவர் அறிந்த காம புணர்ப்பு ஆகும் - 8.புணர்ச்சிவகை:8 4/2

 TOP
 
    புணர்வின் (1)
பொருளும் முதலாக கிளத்தி பொது பெண் புணர்வின் கலித்துறையில் - 17.முப்பொருள்வகை:17 10/3

 TOP
 
    புணர்வு (3)
செயற்கைப்படும் இ புணர்வு இரண்டும் தெளிந்த கற்பின் புணர்ச்சியவே - 8.புணர்ச்சிவகை:8 3/4
புளக முலையாள்தனை விரும்பி புணர்தல் கற்பின் புணர்வு ஆமே - 8.புணர்ச்சிவகை:8 4/4
புனைவர் கருமம் பயன் மெய் உரு புகலும் நான்கின் பொருள் புணர்வு ஒத்து - 16.புருடஉவமை:16 7/3

 TOP
 
    புணரும் (1)
புணரும் தலைவிதனை பிரியும் புருட விரக செயல் உரைப்பாம் - 12.புருடவிரகம்:12 1/4

 TOP
 
    புத்ரர் (1)
மிண்டும் ஊர்தி மனை புத்ரர் வேண்டும் அடியார் சுற்றம் எட்டு - 18.உதாரணமொழிபு:18 15/3

 TOP
 
    புதல்வருக்கு (1)
மன்னர் ஈன்ற புதல்வருக்கு வயது ஈராறு முதலா மேல் - 16.புருடஉவமை:16 6/1

 TOP
 
    புதல்வன் (2)
மெச்சப்பெறும் யசோதை சுதன் விறல் சேர் வசுதேவன் புதல்வன் - 1.தேவசரித்திரம்:1 14/4
தீமை புரிந்த அரக்கன் உடல் செகுத்தோன் தசரதன் புதல்வன்
  தூய்மையுறு பூம் பை ஐந்து உளவோன் சுரி சங்கு ஆழிப்படையன் சத்ய - 1.தேவசரித்திரம்:1 15/2,3

 TOP
 
    புயம் (1)
தாக்கும் வீரம் புயம் நெஞ்சின் தைரியம் வாளின் முனை விசயம் - 3.இராசசின்னம்:3 8/2

 TOP
 
    புயமாலை (1)
விண்டு தலைவன் புயமாலை வேண்டி தருதற்கு இயல்பினவே - 13.விரகப்பெண்பகை:13 6/4

 TOP
 
    புயல் (3)
சத்த சுரம் பாட தொடங்கும் தருண மொழியாள் புயல் கண்டு - 5.பெண்பருவம்:5 5/1
கானில் புயல் கண்டு ஆடு மயில் களித்து பூவைக்கு உரை கூட்டும் - 5.பெண்பருவம்:5 8/2
கார் ஆர் புயல் மீன் காட்டுதல் போல் காட்டும் பலின கருங்குழலாள் - 5.பெண்பருவம்:5 17/4

 TOP
 
    புயன் (2)
வரைவோன் இருநால் புயன் நான்ற வாயான் மதி பாய் சடை முடியான் - 1.தேவசரித்திரம்:1 17/3
வட பூதரசம் ஆன புயன் மதுரகவி நாவலர் புகழும் - 18.உதாரணமொழிபு:18 1/2

 TOP
 
    புரக்கும் (1)
துன்னு கருமத்திறன் அமைந்தோன் தொல் பார் புரக்கும் மன்னவனே - 18.உதாரணமொழிபு:18 12/4

 TOP
 
    புரசை (1)
கம்பம் புரசை நிகள மதம் கவிழும் சுவடு புழை தடக்கை - 3.இராசசின்னம்:3 10/1

 TOP
 
    புரந்த (1)
புரந்த வாகை பாலைக்கு புறன் ஆம் காஞ்சி பெருந்திணைக்கு ஆம் - 17.முப்பொருள்வகை:17 8/3

 TOP
 
    புரந்து (1)
இயல்பாய் உலகம் புரந்து அருளும் இராசசின்னம் இயம்பல் உற்றாம் - 3.இராசசின்னம்:3 1/4

 TOP
 
    புரம் (1)
பொரும் வல் அசுரர் புரம் மூன்றும் பொடிசெய்திடும் வண் கை குரிசில் - 4.காமசின்னம்:4 1/1

 TOP
 
    புரவலர்க்கு (1)
விலகு குமர புரவலர்க்கு விதியின் எடுத்து விளம்புவது - 17.முப்பொருள்வகை:17 9/3

 TOP
 
    புரவி (2)
புரவி படை மங்கையர் வாசம் பொலியும் இணர் மென் பூம் சோலை - 4.காமசின்னம்:4 2/2
புரவி ஏழு பச்சை நிறம் பொருந்தும் அருணன் அவன் பாகன் - 18.உதாரணமொழிபு:18 3/2

 TOP
 
    புரிந்த (1)
தீமை புரிந்த அரக்கன் உடல் செகுத்தோன் தசரதன் புதல்வன் - 1.தேவசரித்திரம்:1 15/2

 TOP
 
    புரியாள் (1)
உரிய பாங்கியர்க்கு ஏவல் உவந்து புரியாள் மனம் இறந்தே - 13.விரகப்பெண்பகை:13 4/4

 TOP
 
    புரிவோன் (1)
கருது நெறியின் புகழை நிறீஇ காவல் புரிவோன் காவலனே - 2.வருணாச்சிரமவொழுக்கம்:2 8/4

 TOP
 
    புருட (5)
மேவற்கு உரிய பெண் புருட விரகம் விரக பெண்ணின் பகை - 18.உதாரணமொழிபு:0 6/4
ஓத இசையும் பெண் புருட உவமை அலங்காரம் பொருள் மூன்று - 18.உதாரணமொழிபு:0 7/2
புணரும் தலைவிதனை பிரியும் புருட விரக செயல் உரைப்பாம் - 12.புருடவிரகம்:12 1/4
மீண்டும் மாழ்கல் இவை புருட விரக அவத்தை பத்து ஆமே - 12.புருடவிரகம்:12 2/4
கவின் ஆர் புருட உவமை அலங்காரம் வருமாறு இயம்பல் உற்றாம் - 16.புருடஉவமை:16 1/4

 TOP
 
    புருடர் (1)
முனை கொள் கரம் கார் தரு வனச மொழியும் புருடர் உறுப்பின் அணி - 16.புருடஉவமை:16 7/2

 TOP
 
    புருடருக்கு (1)
துதி சேர் வாணன் சிங்கேறு சோமன் பிறவும் புருடருக்கு
  மதி தேர் புலவர் உவந்து இனிது வழுத்தும் உவமை சிறப்பினவே - 16.புருடஉவமை:16 3/3,4

 TOP
 
    புருவம் (1)
செகும் வாள் உறையும் கடற்கரையும் செப்பும் புருவம் ஒப்பு ஆமே - 14.பாதாதியுவமை:14 23/4

 TOP
 
    புரை (1)
புரை தீர் மருப்பு ஒன்று ஒடித்து மலை புறத்திலே வெம் பாரத போர் - 1.தேவசரித்திரம்:1 17/2

 TOP
 
    புரோகிதர் (1)
சொல்லும் மந்திரி புரோகிதர் நல் தூதர் சேனாபதி ஒற்றர் - 3.இராசசின்னம்:3 2/1

 TOP
 
    புல்லும் (3)
புல்லும் ஆயுள் வேதியர் ஆம் பொருநர்க்கு ஓதும் ஐந்தினமே - 3.இராசசின்னம்:3 2/4
புல்லும் கமுகின் நறும் பாளை பொற்பால் இரட்டும் சாமரை ஆம் - 4.காமசின்னம்:4 4/2
புல்லும் இரதி என இரு பேர் போந்த மனை ஆர் மாரனுக்கு - 4.காமசின்னம்:4 6/3

 TOP
 
    புலம்பல் (1)
கூட்டம் இலது ஓர்தலைக்காமம் கொடும் கையறு துயரில் புலம்பல்
  கேட்குமவர் இல்லா மொழியில் கெணிக்க இரண்டாம் கைக்கிளையே - 17.முப்பொருள்வகை:17 12/3,4

 TOP
 
    புலம்புறல் (1)
எதிர்கண்டு இரந்து புலம்புறல் கை இரண்டும் இசைய மேலெடுத்தல் - 11.பெண்விரகம்:11 4/3

 TOP
 
    புலவர் (2)
மதி தேர் புலவர் உவந்து இனிது வழுத்தும் உவமை சிறப்பினவே - 16.புருடஉவமை:16 3/4
புவியின் வேட்கும் வினையத்தின் புலவர் வியந்து சொல்வர் நல - 18.உதாரணமொழிபு:18 5/3

 TOP
 
    புலவோர் (2)
முசிவு இலாத தமிழ் புலவோர் மொழிநூல் உசிதப்பொருளை அமைத்து - 18.உதாரணமொழிபு:0 5/3
பொற்பின் வகுத்து தகும் வகையில் புலவோர் மதிக்க புகலுவரால் - 18.உதாரணமொழிபு:18 8/4

 TOP
 
    புலி (1)
இன்ப தலைவி தன் விரகத்து இயல்பு மதனம் புலி அன்றில் - 8.புணர்ச்சிவகை:8 5/1

 TOP
 
    புவனம் (1)
இந்த புவனம் புகல் பெருமைக்கு ஏற்ற கொங்கநாட்டு அதிபன் - 18.உதாரணமொழிபு:0 10/2

 TOP
 
    புவி (4)
துனியில் புவி ஆள் மன்னவர்க்கு சொற்றவாறு தொழில் ஆமே - 2.வருணாச்சிரமவொழுக்கம்:2 4/4
ஆக்கும் பெருமை சந்தானம் அணி சேர் வயிறு புவி பணிய - 3.இராசசின்னம்:3 8/3
விண்ணும் அகன்ற புவி அனைத்தும் விளங்கும் புகழ் சுக்கிரீமகிபன் - 13.விரகப்பெண்பகை:13 1/1
கெண்டை விழியார் ஐம்பாலா கிளத்தும் புவி தானியம் பொன்னு - 18.உதாரணமொழிபு:18 15/2

 TOP
 
    புவிமாதொடு (1)
புவிமாதொடு பூமலர்மாது புணர் மால் சுக்கிரிமகிபன் என - 16.புருடஉவமை:16 1/3

 TOP
 
    புவியின் (1)
புவியின் வேட்கும் வினையத்தின் புலவர் வியந்து சொல்வர் நல - 18.உதாரணமொழிபு:18 5/3

 TOP
 
    புழுகு (1)
நிகழ்ந்தே இலக புழுகு பனி நீரால் சாந்தம் உடல் பூசி - 9.புணர்தற்குரியவகை:9 2/4

 TOP
 
    புழை (1)
கம்பம் புரசை நிகள மதம் கவிழும் சுவடு புழை தடக்கை - 3.இராசசின்னம்:3 10/1

 TOP
 
    புழைக்கரத்து (1)
நாட்டும் நெடிய புழைக்கரத்து நால்வாய் ஒற்றை கிம்புரி வெண் - 18.உதாரணமொழிபு:0 3/3

 TOP
 
    புள் (4)
வருந்தி துவள புள் குரலும் வகுத்த தாடனமும் முழங்க - 9.புணர்தற்குரியவகை:9 6/3
மதவேள் சசி புள் கார் கடல் கான் மந்தான் நிலம் மற்று இவற்றினொடும் - 11.பெண்விரகம்:11 4/2
பகரும் தெய்வம் நீர் இருபாலோர் பறை புள் விலங்கு ஊர் தரு நறும் பூ - 17.முப்பொருள்வகை:17 6/1
ஆடும் கானாங்கோழி என உரைக்கும் எட்டு புள் குரலும் - 18.உதாரணமொழிபு:18 11/3

 TOP
 
    புளக (4)
புளக முலையாள்தனை விரும்பி புணர்தல் கற்பின் புணர்வு ஆமே - 8.புணர்ச்சிவகை:8 4/4
புளக முலை பொன் பசலை கொண்டு பொருமல் அணை முள் போன்றிடுதல் - 11.பெண்விரகம்:11 2/4
கொண்ட புளக பிடி செம்பு கொட்டைப்பாக்கு பரிதி மதி - 14.பாதாதியுவமை:14 12/3
வடம் கொள் புளக முலைக்கு உவமை வழுத்தாய் பருவ திறன் உணர்ந்தே - 14.பாதாதியுவமை:14 13/4

 TOP
 
    புறத்திலே (1)
புரை தீர் மருப்பு ஒன்று ஒடித்து மலை புறத்திலே வெம் பாரத போர் - 1.தேவசரித்திரம்:1 17/2

 TOP
 
    புறப்புறமே (1)
திட்பம் உறு காஞ்சியும் பாடாண்திணையும் மொழியும் புறப்புறமே - 17.முப்பொருள்வகை:17 7/4

 TOP
 
    புறம் (1)
சாலும் புறம் கால் கமடமும் பொத்து அகமும் கமுகின் பாளையும் ஆம் - 14.பாதாதியுவமை:14 3/2

 TOP
 
    புறன் (2)
கரந்தை வெட்சி குறிஞ்சி வஞ்சி கான் ஆர் முல்லை புறன் ஆகும் - 17.முப்பொருள்வகை:17 8/1
புரந்த வாகை பாலைக்கு புறன் ஆம் காஞ்சி பெருந்திணைக்கு ஆம் - 17.முப்பொருள்வகை:17 8/3

 TOP
 
    புறனுக்கு (1)
இரந்து சொலும் கைக்கிளை புறனுக்கு இசைவின் வரு பாடாண்திணையே - 17.முப்பொருள்வகை:17 8/4

 TOP
 
    புன் (1)
போற்றும் சிருட்டி முதல் மூன்றும் பொலிவித்து அப்பால் புன் சிருட்டி - 5.பெண்பருவம்:5 4/1

 TOP
 
    புன்னை (1)
கதிக்கு இலைஞ்சி கடிவாளம் கன்னல் சல்லி புன்னை அம் பூ - 4.காமசின்னம்:4 5/2

 TOP
 
    புன்னைக்காய் (1)
புண்டரீகம் முகிழ் பந்து புன்னைக்காய் மாதுளங்கனி மேல் - 14.பாதாதியுவமை:14 12/2

 TOP
 
    புன்னைப்பூ (1)
புன்னைப்பூ செண்பகம் முல்லைப்பூ செவ்வந்தி பொலிந்து இலக - 14.பாதாதியுவமை:14 27/3

 TOP
 
    புனல் (1)
துன்ற வரு பைம் புனல் கொழிக்கும் தூய அறல் இந்திரநீலம் - 14.பாதாதியுவமை:14 25/4

 TOP
 
    புனலும் (1)
சோட்டு மதிலும் உயர் வரையும் சுரமும் இரு தண் புனலும் என - 3.இராசசின்னம்:3 14/3

 TOP
 
    புனை (1)
முத்து தளவு புனை அரும்பு முருந்து மாதுளங்கனியின் - 14.பாதாதியுவமை:14 18/1

 TOP
 
    புனைந்து (1)
நலத்தின் செய்து புனைந்து ஆச்சே நடுவண் இவரை பணிசெய் நிறீஇ - 7.மணவிவரம்:7 4/3

 TOP
 
    புனையாள் (1)
துலங்கு முத்து வடமொடு பூம் தொடையும் புனையாள் இரு விழிக்கு - 13.விரகப்பெண்பகை:13 3/2

 TOP
 
    புனைவர் (1)
புனைவர் கருமம் பயன் மெய் உரு புகலும் நான்கின் பொருள் புணர்வு ஒத்து - 16.புருடஉவமை:16 7/3

 TOP