<<முந்திய பக்கம்

ஈசுவர பாரதி இயற்றிய வட மலை நிகண்டு
தேவையான தலைப்பின் மேல் சொடுக்கவும்
தலைப்பு சொற்பிரிப்பு மூலம் சீர் பிரிப்பு மூலம்
0.பாயிரம்

1.உயிர் வருக்கம்

2.ககர வருக்கம்

3.சகர வருக்கம்

4.ஞகர வருக்கம்

5.தகர வருக்கம்

6.நகர வருக்கம்

7.பகர வருக்கம்

8.மகர வருக்கம்

9.யகர வருக்கம்

10.வகர அகர
வருக்கம்


** ஈசுரபாரதி இயற்றிய 
** வட மலை நிகண்டு

@0 பாயிரம்
** காப்புப் பாயிரம்
**1

#1
கொல்லம் எண்ணூற்றெழுபத்தாறு எனக்
  கணிதப்பாவாணர் குறித்த ஆண்டின்
மல்கிய சீர் விக்கிரமவருடத்து
  ஆவணிமூல வளம் சேர் நாளின்
எல்லைநகர் வடிவு உகந்த வேய் முகத்தைப்
  பணிந்து உலகின் நெடுநாள் நிற்கப்
பல்கலை தேர் வடமலை நல் நிகண்டினை
  ஈசுரகவிஞன் பகர்ந்திட்டானே
**2

#2
பார் புகழ் திருநெல்வேலி அம் பதி வாழ்
ஐங்கரத்து ஒருகோட்டு ஆனையை வடிவேல்
சிங்கம்தன்னைச் சிறப்புடன் ஈன்ற
பிடி வடிவுடைய பெண்கொடி பாகத்து
அடிகள் செம்பொன் அடிகளை வணங்கி
ஒருபெயர் ஒருபொருள் உரைக்கும் காண்டமும்
ஒருபொருள் பலபெயர் ஓதும் காண்டமும்
பலபெயர்க்கூட்டத்து ஒருபெயர்க் காண்டமும்
சொற்பொருள் காண்டத்தொகை மூன்று ஆக்கி
ஈட்டு புகழ் இரையூர் வடமலைநிகண்டு என
நாட்டினன் மடசை நன்னகர் வாழும்
சிதம்பரபாரதிசேய் தினம் உமையாள்
பதம் பணி ஈசுரபாரதிதானே
** காப்புப் பாயிரம் முற்றும்
**3

#3
கண்ணனும் கண்ணனைக் காத்த நெல்வேலிக்
கண்ணனும் செந்தமிழ்க் காப்பு ஆகுவரே
**4

#4
திக்கு அன்புறு பெயர் நூல் செய்ய வடி வாள் உகந்த
நக்கன் புகழ் நெல்லை நாயக முக்கண் நிறை
சாரதிதான் எவ்வுலகும் தந்தோன் செந்நாவினில் சேர்
பாரதி தாள் வாழ்த்தி நினைப்பாம்
** காப்புப் பாயிரம் முற்றும்

@1 உயிர் வருக்கத் தொகுதியில்
** அகர வருக்கம்
** 1

#1
அருள் எனும் பெயர் சிவசத்தியினுடனே
கருணையின்பெயரும் கருதப்பெறுமே 
** 2

#2
அனந்தன் என்னும் பெயர் சிவனும் மாதவனும்
சினம் தவிர் அருகனும் நாலிருதெய்வமும்
சேடனும் எனவே செப்புவர் புலவர் 
** 3

#3
அரம்பை எனும் பெயர் தெய்வப்பெண் பெயரும்
வாழையின்பெயரும் வழங்கப்பெறுமே 
** 4

#4
அரி எனும் பெயர் நித்திரையும் இரு சுடரும்
பரியும் சிங்கமும் பகையும் தேரையும்
பொன்னும் காற்றும் புரந்தரனும் மாலும்
செந்நெற்கதிரும் கிளியும் காந்தியும்
தேரும் ஐம்மையும் சேகும் வரியும்
கூர்மையும் நிறமும் கூற்றும் வண்டும்
வேயும் பன்றியும் விசியும் புகையும்
பாயலும் சிலம்பின் பரலும் சோலையும்
கண்ணில் வரியும் கடலும் உரகமும்
எண்ணிய திகிரியும் இகலியர் வாளும்
தகரும் வலியும் அரிசியும் குரங்கும்
புகரும் நெருப்பும் புரையும் சயனமும்
எறிதரும் முரசமும் எண்படைக்கலமும்
குறிதரு பச்சையும் கூறிய மதுவும்
அரிதலும் நாற்பான்எழு பெயர் ஆமே 
** 5

#5
அண்டர் எனும் பெயர் விண்தலத்து அமரரும்
இடையரும் பகைஞரும் இயம்புவர் புலவர் 
** 6

#6
அலரி எனும் பெயர் அரலர்க்கணை ஐந்தும்
இரவியும் மலரும் ஓர் மரமும் நீராவியும்
தேனீயும் அழகும் செப்பப்பெறுமே 
** 7

#7
அருணன் எனும் பெயர் அருக்கனும் அவன் தேர்ப்பாகனும்
புதனும் பகர்ந்தனர் புலவர் 
** 8

#8
அளக்கர் எனும் பெயர் சேறும் உப்பளமும்
கடலும் புடவியும் கார்த்திகைநாளும் ஆம் 
** 9

#9
அத்தம் எனும் பெயர் அருநெறியுடனே
ஒரு நாள்மீனும் உறு கவிப்பொருளும்
காடும் கனகமும் கையும் பாதியும்
கண்ணாடியும் எனக் கருதுவர் புலவர் 
** 10

#10
அணங்கன் எனும் பெயரே ஆசையும் அழகும்
வருத்தமும் கொலையும் மையல்நோயும்
தெய்வமும் தெய்வத்து உவமை சொல் மாதும் ஆம் 
** 11

#11
அங்கதம் எனும் பெயர் அரவும் தோளணியும்
வசை புகல் கவிதையும் வழங்கப்பெறுமே 
** 12

#12
அரவம் எனும் பெயர் ஓசையும் பாம்பும்
சிலம்பும் எனவே செப்புவர் புலவர் 
** 13

#13
அண்டம் எனும் பெயர் முட்டையும் விசும்பும் ஆம் 
** 14

#14
அம்பரம் எனும் பெயர் ஆடையும் விசும்பும்
கடலும் எனவே கருதப்பெறுமே 
** 15

#15
அஞ்சனம் எனும் பெயர் கருமைநிறமும்
ஒரு திசையானையும் எழுது கண்மையும் ஆம் 
** 16

#16
அங்கி எனும் பெயர் அனலும் சட்டையும் 
** 17

#17
அயம் எனும் பெயரே அறலும் குதிரையும்
குளமும் இரும்பும் தகரும் கூறுவர் 
** 18

#18
அளகம் எனும் பெயர் புனலும் மயிரும்
மயிர்க்குழற்சியும் என வகுத்தனர் புலவர் 
** 19

#19
அளறு எனும் பெயரே நரகமும் சேறும் ஆம் 
** 20

#20
அந்தரி எனும் பெயர் துர்க்கையும் உமையும் ஆம் 
** 21

#21
அல்கல் எனும் பெயர் தங்கலும் நாளும்
கருங்கலும் இரவும் சிறுமையும் சொல்லுவர் 
** 22

#22
அந்தி எனும் பெயர் பாலையாழ்த்திறத்து ஓர்
ஓசைப் பெயரும் மாலையும் இரவும் ஆம் 
** 23

#23
அடுப்பு எனும் பெயரே இயமன்நாளும்
அச்சப்பெயரும் உத்தானமும் ஆமே 
** 24

#24
அறுவை எனும் பெயர் சித்திரைநாளும்
தூசும் எனவே சொல்லப்பெறுமே 
** 25

#25
அன்றில் எனும் பெயர் மூலநாளும் ஓர்
புள்ளும் எனவே புகன்றனர் புலவர் 
** 26

#26
அகி எனும் பெயரே அரவும் இரும்பும் ஆம் 
** 27

#27
அணு எனும் பெயரே நுண்மையும் உயிரும்
மந்திரப்பெயரும் வழங்கப்பெறுமே 
** 28

#28
அகலுள் எனும் பெயர் ஊரும் நாடும்
பரப்பும் எனவே பகரப்பெறுமே 
** 29

#29
அவந்தி எனும் பெயர் கிளியின்பெயரும்
உஞ்சேனை நகரமும் உரைத்தனர் புலவர் 
** 30

#30
அருப்பம் எனும் பெயர் ஊர்ப்பொதுப் பெயரும்
சோலையின்பெயரும் நோயும் காடும் ஆம் 
** 31

#31
அடை எனும் பெயரே இலையின்பெயரும்
அடுத்தலும் கனமும் அப்பமும் வழியும் ஆம் 
** 32

#32
அருவி எனும் பெயர் மலைச்சார்நதியும்
தினைத்தாள் பெயரும் செப்பப்பெறுமே 
** 33

#33
அயிரி எனும் பெயர் நுண்மணல் பெயரும்
மீன்முள் அரித்திடுகருவியும் விளம்புவர் 
** 34

#34
அணை எனும் பெயரே மெத்தையும் சயனமும்
செய்கரைப் பெயரும் செப்பப்பெறுமே 
** 35

#35
அகம் எனும் பெயர் மரப்பொதுவும் சயிலமும்
இல்லமும் மனமும் இடமும் பாவமும்
ஐந்திணைப்பொருளுடன் உள்ளும் ஆமே 
** 36

#36
அங்கணம் எனும் பெயர் தூம்பு வாயிலும்
முன்றிலும் சேறும் மொழிந்தனர் புலவர் 
** 37

#37
அரசன் எனும் பெயர் வியாழமும் மன்னனும் 
** 38

#38
அன்னை எனும் பெயர் முன்பிறந்தாளும்
தாயும் துணைவியும் சாற்றப்பெறுமே 
** 39

#39
அம்மை எனும் பெயர் தாயும் மறுபிறப்பும்
யாப்பின் ஓர் வனப்பும் இயம்பப்பெறுமே 
** 40

#40
அணி எனும் பெயரே அழகும் பெருமையும்
படையினதுஉறுப்பும் இலக்கணஅணியும்
பூணும் ஒப்பனையும் புகன்றனர் புலவர் 
** 41

#41
அரத்தம் எனும் பெயர் அரத்தமும் சிவப்பும்
அரக்கும் கடம்புமரத்த உற்பலமும் ஆம் 
** 42

#42
அடி எனும் பெயரே முதன்மையும் காலும்
கவிதையின் பாதமும் செண்டும் வெளியும் ஆம் 
** 43

#43
அரலை எனும் பெயர் அருங்கனிவிதையும்
மரலும் கழலையின்பெயரும் வழங்குவர் 
** 44

#44
அன்னம் எனும் பெயர் சோறும் ஓதிமமும் ஆம் 
** 45

#45
அக்காரம் என்னும் பெயர் சருக்கரையும்
புடவையும் எனவே புகன்றனர் புலவர் 
** 46

#46
அழனம் எனும் பெயர் அனலும் பிணமும் ஆம் 
** 47

#47
அளி எனும் பெயர் அன்பும் நறவமும்
கொடையும் வண்டின்பெயரும் கூறுவர் 
** 48

#48
அரிட்டம் எனும் பெயர் பிறவியில்குற்றமும்
கள்ளும் காக்கையும் கருதப்பெறுமே 
** 49

#49
அத்து எனும் பெயரே அசைச்சொல்லும் சிவப்பும்
இசைப்பும் துன்னமும் அரைப்பட்டிகையும் ஆம் 
** 50

#50
அக்கு எனும் பெயரே சங்கின்மணியும்
ஏற்றின் முரிப்பும் எலும்பும் இயம்புவர் 
** 51

#51
அராகம் எனும் பெயர் பாலையாழ்த்திறமும்
செந்நிறப்பெயரும் முடுகியல்கவிதையும்
ஆசையின்பெயரும் ஆம் என வழங்குவர் 
** 52

#52
அனந்தம் எனும் பெயர் பொன்னும் ஆகாயமும்
அளவின்மைப்பொருள் பெயரும் ஆமே 
** 53

#53
அலங்கல் எனும் பெயர் அசைவும் தொடையலும்
இலங்கலும் தளிரும் இயம்புவர் புலவர் 
** 54

#54
அரத்தை எனும் பெயர் குறிஞ்சியாழிசையும்
துன்பமும் என்னச் சொல்லுவர் புலவர் 
** 55

#55
அடல் எனும் பெயரே சமரும் பெலமும்
வென்றியும் எனவே விளம்பப்பெறுமே 
** 56

#56
அயில் எனும் பெயரே வேலும் கூர்மையும்
ஆர்தலின்பெயரும் ஆகும் என்ப 
** 57

#57
அரணம் எனும் பெயர் காவற்காடும்
வேலும் காவலும் மதிலும் கவசமும் 
** 58

#58
அம்பணம் என்னும் பெயர் மரக்கலமும்
கதலித்தண்டும் நீர்ப்பந்தலும் தூம்பும்
ஆமையின்பெயரும் ஆம் எனப் புகலுவர் 
** 59

#59
அளித்தல் எனும் பெயர் கொடுத்தலும் காத்தலும்
செறிவும் எனவே செப்புவர் புலவர் 
** 60

#60
அச்சம் எனும் பெயர் அகத்தியும் பயமும் ஆம் 
** 61

#61
அருணம் எனும் பெயர் செம்மறியாடும்
மானும் எலுமிச்சும் சிவப்பும் வழங்குக 
** 62

#62
அந்தம் எனும் பெயர் அழகும் முடிவும் ஆம் 
** 63

#63
அம்பல் எனும் பெயர் பழிமொழியுடனே
சிலர் அறிந்து தம்முள் புறங்கூறல் செப்புவர் 
** 64

#64
அலர் எனும் பெயர் பழிமொழியும் பூவும்
பலர் அறிந்து அலர் தூற்றுதலும் பகருவர் 
** 65

#65
அரற்றல் எனும் பெயர் அழுகையும் ஒலித்தலும் 
** 66

#66
அஞ்சலி எனும் பெயர் அஞ்சலித்து இறைஞ்சலும்
வாவல்பறவையும் வகுத்தனர் புலவர் 
** 67

#67
அலகு எனும் பெயரே நுளம்பும் சோதிடமும்
நெற்கதிராதியும் பலகறைப்பெயரும்
மகிழின் பரலும் புள்வாயும் துடைப்பமும் 
** 68

#68
அல்லி எனும் பெயர் காசைமரமும்
வெள்ளாம்பலும் அகவிதழும் விளம்புவர் 
** 69

#69
அதம் எனும் பெயர் பாதாளமும் கீழும்
இறங்குதல் பெயரும் இயம்புவர் புலவர் 
** 70

#70
அரம் எனும் பெயரே பலபொருள் வடிவின்
அருகும் அராவும் கருவியும் ஆமே 
** 71

#71
அகைத்தல் எனும் பெயர் அறுத்தலும் ஒலித்தலும்
ஈர்த்தலும் எனவே இயம்பப்பெறுமே 
** 72

#72
அசி எனும் பெயரே அவமதிச்சிரிப்பும்
வசிதரு வாளும் படைக்கலப்பொதுவும் ஆம் 
** 73

#73
அமரர் எனும் பெயர் அடு படைவீரரும்
தேவரும் எனவே செப்புவர் புலவர் 
** 74

#74
அந்தணர் எனும் பெயர் அறவோர் பெயரும்
பூசுரர் பெயரும் புகலுவர் புலவர் 
** 75

#75
அள் எனும் பெயரே காதும் கூர்மையும்
வரி பத்திரும்பும் வன்மையும் செறிவும் ஆம் 
** 76

#76
அலம் எனும் பெயரே அமைவும் கலப்பையும் 
** 77

#77
அயிர் எனும் பெயரே சருக்கரைப் பெயரும்
நுண்மணல் பெயரும் நுண்மையும் நுவலுவர் 
** 78

#78
அண்டசம் எனும் பெயர் அரவும் தவளையும்
நண்டு முதலையும் ஆமையும் மீனும்
உடும்பும் ஓந்தியும் பல்லியும் அரணையும்
பறவையும் இப்பியும் பகர்ந்தனர் புலவர் 
** 79

#79
அற்றம் எனும் பெயர் மறைவும் அவகாசமும்
முடிவும் எனவே மொழியப்பெறுமே 
** 80

#80
அருச்சுனம் எனும் பெயர் மருதுவும் வெளுப்பும் ஆம் 
** 81

#81
அத்தி எனும் பெயர் அதவும் யானையும்
உவரியும் எலும்பும் உரைக்கப்பெறுமே 
** 82

#82
அந்தில் எனும் பெயர் அசைச்சொல்லும் இடமும் ஆம் 
** 83

#83
அம் எனும் பெயரே அசைச்சொல்லும் அழகும்
புனலின்பெயரும் புகலப்பெறுமே 
** 84

#84
அம்பு எனும் பெயரே மேகமும் புனலும்
கணையும் மூங்கிலும் கருதப்பெறுமே 
** 85

#85
அகளம் எனும் பெயர் தாழியும் மிடாவும் ஆம் 
** 86

#86
அங்காரகம் எனும் பெயர் பூசுவனவும்
நெருப்பும் எனவே நிகழ்த்துவர் புலவர் 
** 87

#87
அஞர் எனும் பெயரே அறிவிலோர் பெயரும்
துக்கமும் எனவே சொல்லுவர் புலவர் 
** 88

#88
அந்தகர் எனும் பெயர் குருடரும் கூற்றும் ஆம் 
** 89

#89
அரக்கு எனும் பெயரே மதுவில் ஓர் விகற்பமும்
சிவப்பும் சென்னிறமெழுகும் செப்புவர் 
** 90

#90
அகவல் எனும் பெயர் கூத்தும் ஆசிரியப்பாவும் 
** 91

#91
அரங்கம் எனும் பெயர் ஆற்றிடைக்குறையும்
போரிடம் வட்டாடிடமும் சபையும்
கூத்தாடுமிடப்பெயரும் கூறுவர் 
** 92

#92
அள்ளல் எனும் பெயர் நாகமும் சேறும் ஆம் 
** 93

#93
அழுங்கல் எனும் பெயர் ஆரவாரமும்
இரங்கலும் கேடும் இசைக்கப்பெறுமே 
** 94

#94
அறல் எனும் பெயரே நீரும் நீர்த்திரையும்
விழவும் நுண்மணலும் விளம்புவர் புலவர் 
** 95

#95
அளை எனும் பெயரே தயிரும் வன்மீகமும்
உம்மையும் பாளியும் மோர் இன்மைப் பெயரும் ஆம் 
** 96

#96
அங்கம் எனும் பெயர் உடலும் உறுப்பும்
ஆறங்கமும் கட்டிலும் எலும்பும் ஆமே 
** 97

#97
அழுவம் எனும் பெயர் துருக்கமும் பரப்பும்
நாடும் எனவே நவின்றனர் புலவர் 
** 98

#98
அறுகு எனும் பெயரே யாளியும் சிங்கமும்
புலியும் யானையும் புல்லினோர்விகற்பும் ஆம் 
** 99

#99
அத்திரி எனும் பெயர் மலையும் குதிரையும்
கழுதையும் ஒட்டகப்பெயரும் கருதுவர் 
** 100

#100
அறை எனும் பெயர் மலைமுழையும் பாறையும்
சிற்றிலும் மொழியும் செப்பப்பெறுமே 
** 101

#101
அரில் எனும் பெயர் சிறுதூறும் பிணக்கமும்
குற்றமும் பரலும் கூறுவர் புலவர் 
** 102

#102
அவல் எனும் பெயர் நீர்நிலையும் பள்ளமும்
முளையும் நெல் பெறு சிற்றுண்டியும் மொழிகுவர் 
** 103

#103
அண்ணை எனும் பெயர் அறிவிலோன் பெயரும்
பேயின்பெயரும் பேசப்பெறுமே 
** 104

#104
அகப்பா எனும் பெயர் மதிளும் உள்ளுயரத்துப்
பொருந்திய மேடையின்பெயரும் புலம்புவர் 
** 105

#105
அசம் எனும் பெயர் புருவையாடும்
மூவாட்டை நெல்லின்பெயரும் மொழிகுவர் 
** 106

#106
அசனி எனும் பெயர் வச்சிராயுதமும்
இடியின்பெயரும் இயம்பப்பெறுமே 
** 107

#107
அல் எனும் பெயரே இரவும் இருளும் ஆம் 
** 108

#108
அரிதம் எனும் பெயர் பசுமையும் திசையும்
பசும்புல்தரையும் பகரப்பெறுமே 
** 109

#109
அகடு எனும் பெயரே வயிறும் புறமும் ஆம் 
** 110

#110
அமரல் எனும் பெயர் மிடைதலும் பொலிவும் ஆம் 
** 111

#111
அருகல் எனும் பெயர் கருங்கலும் சார்தலும் 
** 112

#112
அடுதல் எனும் பெயர் அடர்தலும் கொலையும்
பலபொருள் பாகப்படுத்தலின்பெயரும் ஆம் 
** 113

#113
அவிர்தல் எனும் பெயர் பீறலும் ஒளியும் ஆம் 
** 114

#114
அம்பி எனும் பெயர் தெப்பமும் தோணியும்
நீர்மேலோடுவனவும் நிகழ்த்துவர் 
** 115

#115
அந்தரம் எனும் பெயர் பேதமுடிவும்
விண்ணினிடமும் விளம்பப்பெறுமே 
** 116

#116
அங்காரகன் எனும் பெயர் உதாசனனும்
செவ்வாய்ப் பெயரும் செப்பப்பெறுமே 
** 117

#117
அடர் எனும் பெயரே ஐமைவடிவும்
நெருங்குதல் பெயரும் நிகழ்த்தப்பெறுமே 
** 118

#118
அரங்கு எனும் பெயரே மனையின்விகற்பமும்
சபையும் வட்டாடிடமும் போரிடமும் ஆம் 
** 119

#119
அயனம் எனும் பெயர் ஆண்டில்பாதியும்
வழியும் எனவே வகுத்தனர் புலவர் 
** 120

#120
அமலை எனும் பெயர் உமையவள் பெயரும்
ஆரவாரமும் சபைப் பெயரும் ஆம் 
** 121

#121
அலவன் எனும் பெயர் நண்டும் பூஞையும்
நிலவும் கடகராசியும் நிகழ்த்துவர் 
** 122

#122
அரசு எனும் பெயர் ஓர் தருவும் மன்னனும்
ராச்சியப்பெயரும் இயம்பப்பெறுமே 
** 123

#123
அறிக்கை எனும் பெயர் அறிதலின்பெயரும்
பற்றுவித்தலின்பெயரும் பகருவர் 
** 124

#124
அதர் எனும் பெயரே புழுதியும் வழியும்
நுண்மணல் பெயரும் நுவலப்பெறுமே 
** 125

#125
அருந்தல் எனும் பெயர் அருமையும் பொசித்தலும் 
** 126

#126
அத்தன் எனும் பெயர் ஈசனும் குருவும்
தந்தையும் எனவே சாற்றினர் புலவர் 
** 127

#127
அனித்தியம் எனும் பெயர் நிலையாமை பொய்யும் ஆம் 
** 128

#128
அண்ணல் எனும் பெயர் தலைவனும் பெருமையும் 
** 129

#129
அச்சுதன் எனும் பெயர் அமுது இறை பெயரும்
கண்ணனும் அசோகமர்கடவுள் பெயரும் ஆம் 
** 130

#130
அனு எனும் பெயரே தொடர்ச்சியும் கவுளும் ஆம் 
** 131

#131
அமுதம் எனும் பெயர் முத்தியும் பெருமையும்
புனலும் பயசும் புலவருணவுடன்
மேகமும் எனவே விளம்புவர் புலவர் 
** 132

#132
அம்பரம் எனும் பெயர் அம்புடன் ஆனையின்
பிறகாலும் எனப் பேசுவர் புலவர் 
** 133

#133
அலை எனும் பெயரே கடலும் கடல்திரைப்
பெயரும் எனவே பேசப்பெறுமே 
** 134

#134
அராவல் எனும் பெயர் புரைதலும் குறுகலும் 
** 135

#135
அரணி எனும் பெயர் தீக்கடைகோலும்
கவசமும் மதிலும் கருதப்பெறுமே 
** 136

#136
அற்பம் எனும் பெயர் சிறுமையும் நாயும் ஆம் 
** 137

#137
அழுக்காறு எனும் பெயர் பொறாமையின்பெயரும்
மனக்கோட்டத்தின்பெயரும் வழங்குவர் 
** 138

#138
அனங்கம் எனும் பெயர் மல்லிகைப் பெயரும்
இருவாட்சியும் என இயம்புவர் புலவர் 
** 139

#139
அசை எனும் பெயர் ஈரசைகளும் அசைச்சொல்லும் 
** 140

#140
அமுது எனும் பெயரே பாலும் இன்சுதையும்
தெய்வவுணவின்விகற்பமும் செப்புவர் 
** 141

#141
அசோகம் எனும் பெயர் அசோகின் தருவும்
இன்பமும் எனவே இயம்பப்பெறுமே 
** 142

#142
அசைத்தல் எனும் பெயர் அசைத்தலின்பெயரும்
கட்டுதல் பெயரும் கருதுவர் புலவர் 
**அகர வருக்கம் முற்றும்
** ஆகார வருக்கம்
** 143

#143
ஆதி எனும் பெயர் அரன்திருநாமமும்
மாதவனும் ஒற்றியில் வைத்த பொருளும்
அருகனும் முதலும் நேரோடலும் ஆமே 
** 144

#144
ஆரல் எனும் பெயர் அங்காரகனும்
கார்த்திகைநாளும் கடி மதில்உறுப்பும்
ஒரு மீன் பெயரும் உரைத்தனர் புலவர் 
** 145

#145
ஆவணம் எனும் பெயர் தெருவும் அங்காடியும்
அடிமையோலையும் புனர்பூசமும் ஆம் 
** 146

#146
ஆடி எனும் பெயர் மாதத்திலொன்றும்
நாடில் உத்திராடமும் கண்ணாடியும் ஆம் 
** 147

#147
ஆசை எனும் பெயர் திசையும் காதலும்
பொன்னும் எனவே புகன்றனர் புலவர் 
** 148

#148
ஆழி எனும் பெயர் நேமிப்புள்ளும்
கடலும் வட்டவடிவும் தேர்க்காலும்
சக்கராயுதமும் மோதிரமும் கரையும் ஆம் 
** 149

#149
ஆலம் எனும் பெயர் அறலும் விடமும்
ஆலமரமும் மலர்ந்திடுபூவும் ஆம் 
** 150

#150
ஆசாரம் என்னும் பெயர் நல்லொழுக்கமும்
தூசின்பெயரும் மழைப் பெயரும் சொல்லுவர் 
** 151

#151
ஆர்வம் எனும் பெயர் விருப்பொடு நரகும் ஆம் 
** 152

#152
ஆறு எனும் பெயரே வழியும் நதியும் ஓர்
எண்ணும் எனவே இயம்புவர் புலவர் 
** 153

#153
ஆலையம் எனும் பெயர் தேவர்கோயிலும்
நகரமும் யானைக்கூடமும் நவிலுவர் 
** 154

#154
ஆரை எனும் பெயர் கொத்தளிப்பாய் புரிசை ஆம்
நீர்செறி ஆரையின்பெயரும் நிகழ்த்துவர் 
** 155

#155
ஆடவர் எனும் பெயர் ஆண்பால்பொதுவும்
இளைஞர் பெயரும் இயம்பப்பெறுமே 
** 156

#156
ஆர்வலர் எனும் பெயர் அன்புடையோனும்
கணவனும் எனவே கருதுவர் புலவர் 
** 157

#157
ஆகம் எனும் பெயர் தேகமும் மார்பும் ஆம் 
** 158

#158
ஆகாரம் எனும் பெயர் அசனமும் நெய்யும்
தேகமும் எனவே செப்பப்பெறுமே 
** 159

#159
ஆம்பல் எனும் பெயர் ஆனையும் குமுதமும்
இசையின் குழலும் கள்ளும் மூங்கிலும்
ஒலியின்பெயரும் உரைத்தனர் புலவர் 
** 160

#160
ஆரம் எனும் பெயர் அத்திமரமும்
அணிகலப்பொதுவும் தரளமும் மாலையும்
சந்தனமும் மணிவடமும் பதக்கமும் 
** 161

#161
ஆடல் எனும் பெயர் வென்றியும் நடனமும்
உரையாடலும் என உரைத்தனர் புலவர் 
** 162

#162
ஆர்ப்பு எனும் பெயரே ஆரவாரித்தலும்
அமரும் சிரிப்பும் ஆகும் என்ப 
** 163

#163
ஆர் எனும் பெயரே ஆத்தியும் கூர்மையும்
தேராழிஉறுப்பும் நிறைவும் செப்புவர் 
** 164

#164
ஆசு எனும் பெயரே அற்பமும் குற்றமும்
மெய்புகுகருவியும் விரைவும் ஓர் கவியும் ஆம் 
** 165

#165
ஆற்றல் எனும் பெயர் ஆண்மையும் மிகுதியும்
பொறுமையும் சுமத்தலும் பெலமும் பொய்யாமையும்
ஞானமும் உண்டாக்குதலும் நவிலுவர் 
** 166

#166
ஆடு எனும் பெயரே ஆட்டின்விகற்பமும்
மேடஇராசியும் வென்றியும் விளம்புவர் 
** 167

#167
ஆகுலம் எனும் பெயர் சத்தஒலியுடன்
வருத்தமும் எனவே வழங்கப்பெறுமே 
** 168

#168
ஆர்தல் எனும் பெயர் உண்டலும் நிறைதலும்
அணிதலின்பெயரும் ஆகும் என்ப 
** 169

#169
ஆணை எனும் பெயர் இலாஞ்சனையும் உண்மையும்
சத்தியவசனமும் ஏவலும் சாற்றுவர் 
** 170

#170
ஆசினி எனும் பெயர் மரவயிரத்தொடு
பலாவின் ஓர் விகற்பமும் விசும்பும் பகருவர் 
** 171

#171
ஆக்கம் எனும் பெயர் அன்பு செயம் இலாபம்
பாக்கிய இயல்பும் பயில் பூந்திருவும் ஆம் 
** 172

#172
ஆரி எனும் பெயர் அழகும் கதவும் ஆம் 
** 173

#173
ஆணம் எனும் பெயர் அன்பும் குழம்பும் ஆம் 
** 174

#174
ஆகு எனும் பெயர் எலியின்விகற்பமும்
மூடிகப்பெயரும் மொழியப்பெறுமே 
** 175

#175
ஆதித்தியர் எனும் பெயர் விண்ணவரும்
சூரியர் பெயரும் சொல்லுவர் புலவர் 
** 176

#176
ஆவரணம் எனும் பெயர் அரணமும் மறைவும்
சட்டையும் கவசமும் தடையும் துகிலும் ஆம் 
** 177

#177
ஆதன் எனும் பெயர் அறிவிலோன்பெயரும்
சீவனும் எனவே செப்பப்பெறுமே 
** 178

#178
ஆங்கு எனும் பெயரே அவ்விடப்பெயரும்
அசைச்சொல் பெயரும் உவமையும் ஆமே 
** 179

#179
ஆயம் எனும் பெயர் அரிவையர் கூட்டமும்
ஆதாயத்தொடு கவற்றின் தாயமும் ஆம் 
** 180

#180
ஆயல் எனும் பெயர் ஆய்தலும் வருத்தமும் 
** 181

#181
ஆய்தல் எனும் பெயர் தேர்தலும் நுணுக்கமும் 
** 182

#182
ஆலல் எனும் பெயர் நடனமும் ஒலியும் ஆம் 
** 183

#183
ஆல் எனும் பெயரே அசைச்சொலும் புனலும்
பழமரப்பெயரும் பகருவர் புலவர் 
** 184

#184
ஆனி எனும் பெயர் கெடுதலின்பெயரும்
மாதத்திலொன்றும் மூலநாள் பெயரும் ஆம் 
** 185

#185
ஆனகம் எனும் பெயர் துந்துமிப் பெயரும்
படகமும் எனவே பகர்ந்தனர் புலவர் 
** 186

#186
ஆனியம் எனும் பெயர் நாளும் பொழுதும் ஆம் 
** 187

#187
ஆசுகம் எனும் பெயர் அம்பும் காற்றும் ஆம் 
** 188

#188
ஆவி எனும் பெயர் வாவியும் உயிரும்
புகையும் நாற்றமும் மூச்சும் புகலுவர் 
** 189

#189
ஆ எனும் பெயரே இரக்கக்குறிப்பும்
உயிரும் பசுவும் உரைக்கப்பெறுமே 
** 190

#190
ஆடகம் எனும் பெயர் துவரையும் பொன்னும் ஆம் 
** 191

#191
ஆம்பிரம் எனும் பெயர் தேமாப் பெயரும்
புளிமாப் பெயரும் புளிப்பும் புகலுவர் 
** 192

#192
ஆரியர் எனும் பெயர் அறிவுடையோரும்
ஆரியதேசத்தவரும் ஆமே 
** 193

#193
ஆணி எனப் பெயர் எழுத்தாணியும் அழகும்
ஆணி மானவிகற்பமும் சயனமும் ஆமே 
**ஆகார வருக்கம் முற்றும்
** இகர வருக்கம்
** 194

#194
இரவி எனும் பெயர் எழும் சூரியனுடன்
மலையும் வாணிகத்தொழிலும் வழங்குவர் 
** 195

#195
இருள் எனும் பெயரே கருமையும் மயக்கமும்
நரகமும் திமிரமும் நவின்றனர் புலவர் 
** 196

#196
இரலை எனும் பெயர் மானின்ஏறும்
அசுபதியும் ஊதும்கொம்பும் ஆமே 
** 197

#197
இறை எனும் பெயரே சிவனும் இல்லிறப்பும்
தலைமையும் தலைவன்பெயரும் தங்கலும்
புள்ளிறகும் கைவரையும் சிறுமையும்
குடியிறைப் பெயரும் சொல்லும் கூறுவர் 
** 198

#198
இடி எனும் பெயரே நெல்மாமுதலும்
உறுதிவார்த்தையும் அசனியும் ஓதுவர் 
** 199

#199
இறால் எனும் பெயர் கார்த்திகையும் இடபமும்
தேன்கூடும் ஒரு மீனும் செப்புவர் 
** 200

#200
இறும்பு எனும் பெயரே தாமரைப்பூவும்
மலையும் காடும் வழங்கப்பெறுமே 
** 201

#201
இலஞ்சி எனும் பெயர் மகிழமரப்பெயரும்
கொப்புளும் தடாகமும் கூறுவர் புலவர் 
** 202

#202
இடை எனும் பெயரே இடமும் நுசுப்பும்
நடுவும் எனவே நவிலப்பெறுமே 
** 203

#203
இகுளை எனும் பெயர் சுற்றமும் பாங்கியும் 
** 204

#204
இரதம் எனும் பெயர் தேரும் இன்சுவையும்
அரைநாண் புணர்ச்சி பாதரதமும் ஆம் 
** 205

#205
இலம்பகம் எனும் பெயர் அத்தியாயமும்
நுதலணிப் பெயரும் தொடையலும் நுவலும் 
** 206

#206
இந்தனம் எனும் பெயர் இசையும் காட்டமும்
நெருப்பிடுகலனும் நிகழ்த்துவர் புலவர் 
** 207

#207
இளி எனும் பெயர் ஓர் இசையும் யாழ்நரம்பும்
இகழ்ச்சியில் வருக்கப்பெயரும் இயம்புவர் 
** 208

#208
இலையம் எனும் பெயர் கூத்தின்விகற்பமும்
கூத்தின்பெயரும் கேடும் கூறுவர் 
** 209

#209
இறைவை எனும் பெயர் ஏணி நீர்ப்புட்டில் ஆம் 
** 210

#210
இழுக்கம் எனும் பெயர் பிழைத்தல் பொல்லாங்கும் ஆம் 
** 211

#211
இறப்பு எனும் பெயரே இறத்தலும் மிகுதியும்
நடத்தலும் இல்லிறப்பும் நவிலுவர் 
** 212

#212
இலாங்கலி எனும் பெயர் தென்னமரமும்
கலப்பைப் பெயரும் வெண்காந்தளும் கருதுவர் 
** 213

#213
இகுத்தல் எனும் பெயர் கொடுத்தலும் வீழ்த்தலும்
செகுத்தலும் அவிர்தலும் இளைத்தலும் செப்புவர் 
** 214

#214
இல் எனும் பெயரே இல்லை என்றலும்
இராசியும் மனைவியும் மனையும் இடமும் ஆம் 
** 215

#215
இராசி எனும் பெயர் ஓசையும் கூட்டமும் 
** 216

#216
இராசியம் எனும் பெயர் யோனியும் மறைவும் ஆம் 
** 217

#217
இபம் எனும் பெயரே மரத்தின்கொம்பும்
யானையின்பெயரும் இயம்புவர் புலவர் 
** 218

#218
இகல் எனும் பெயரே பெலமும் சமரமும்
பகையும் எனவே பகரப்பெறுமே 
** 219

#219
இடம் எனும் பெயர் இடப்புறமும் விசாலமும்
இடங்களின்விகற்பமும் செல்வமும் இயம்புவர் 
** 220

#220
இடக்கர் எனும் பெயர் குடத்தின்பெயரும்
மறைத்திடுவார்த்தையும் வழங்கப்பெறுமே 
** 221

#221
இதழ் எனும் பெயர் பூவினிதழும் அதரமும்
பனைமடல் போலவும் பகரப்பெறுமே 
** 222

#222
இயம் எனும் பெயரே உரையும் ஓசையும்
வாத்தியப்பெயரும் வழங்கப்பெறுமே 
** 223

#223
இருபிறப்பு எனும் பெயர் எயிறும் பறவையும்
பார்ப்பு எனும் சாதியும் நிலவும் பகருவர் 
** 224

#224
இருசு எனும் பெயரே பண்டியுள்இரும்பும்
செவ்வையும் எனவே செப்புவர் புலவர் 
** 225

#225
இவர்தல் எனும் பெயர் ஏறலும் விரும்பலும் 
** 226

#226
இவறல் எனும் பெயர் ஓசையும் மறப்பும் ஆம்
** 227

#227
இழுமெனல் எனும் பெயர் இனிமையும் ஒலியும் ஆம் 
** 228

#228
இறத்தல் எனும் பெயர் மிகுத்தலும் கடத்தலும்
மரணமும் எனவே வழங்கப்பெறுமே 
** 229

#229
இறுத்தல் எனும் பெயர் தங்கலும் இயம்பலும்
ஒடித்தலும் எனவே உரைத்தனர் புலவர் 
** 230

#230
இளமை எனும் பெயர் தண்மையும் காமமும்
இளமையின் பருவமும் இயம்பப்பெறுமே 
** 231

#231
இரதி எனும் பெயர் மதனன்தேவியும்
பித்தளைப் பெயரும் பிடியானையும் ஆம் 
** 232

#232
இக்கு எனும் பெயரே மதுவும் கரும்பும் ஆம் 
** 233

#233
இறும்பூது எனும் பெயர் மலையும் அதிசயமும்
சிறுதூறும் குழையும் தகைமையும் செப்புவர் 
** 234

#234
இடங்கர் எனும் பெயர் குடமும் தூர்த்தரும்
முதலையும் எனவே மொழிந்தனர் புலவர் 
** இகர வருக்கம் முற்றும்
** ஈகார வருக்கம்
** 235

#235
ஈழம் எனும் பெயர் பொன்னின்பெயரும்
சிங்களதேசமும் நறவும் செப்புவர் 
** 236

#236
ஈகை எனும் பெயர் ஈங்கையும் கொடுத்தலும்
பொன்னும் எனவே புகன்றனர் புலவர் 
** 237

#237
ஈடு எனும் பெயரே பெலமும் குழைவும்
பெருமையும் உவமையும் பேசுவர் புலவர் 
** 238

#238
ஈமம் எனும் பெயர் எரியிடுகலனும்
மயானமும் விறகும் வழங்கப்பெறுமே 
** 239

#239
ஈண்டு எனும் பெயரே இவ்விடப்பெயரும்
ஈங்கையின்பெயரும் இயம்புவர் புலவர் 
** 240

#240
ஈரம் எனும் பெயர் அன்பும் குளிர்ச்சியும்
பகுத்தலும் எனவே பகரப்பெறுமே 
** 241

#241
ஈன்றான் எனும் பெயர் பிரமனும் பிதாவும் ஆம் 
** ஈகார வருக்கம் முற்றும்
** உகர வருக்கம்
** 242

#242
உடு எனும் பெயரே ஒளி வான்மீனும்
பகழியும் அம்புத் தலையொடு நாவாய்
நடத்திய மரக்கலக்கோலும் நவிலுவர் 
** 243

#243
உத்திரம் எனும் பெயர் ஒரு நாளுடனே
சித்திரமாளிகை சேர்ந்ததோர் உறுப்பே 
** 244

#244
உத்தி எனும் பெயர் உரகப்பொறியுடன்
திருவின்உறுப்பொடு நுண்மைப்பொருளும் ஆம் 
** 245

#245
உத்திரம் எனும் பெயர் மேலும் வடக்கும்
மறுவார்த்தையும் என வழங்கப்பெறுமே 
** 246

#246
உலவை எனும் பெயர் மரத்தின்கோடும்
விலங்கின்மருப்பும் காற்றும் தழையும் ஆம் 
** 247

#247
உந்தி எனும் பெயர் நீரும் நீர்ச்சுழியும்
தேரின்தட்டும் நாபியும் கடலும்
பெண்கள்விளையாடலும் நதியும் பேசுவர் 
** 248

#248
உப்பு எனும் பெயரே மகளிர்விளையாடலும்
கடலும் இனிமையும் கடல்விளைஉவரும் ஆம் 
** 249

#249
உறை எனும் பெயரே நீர்த்துளி முதலாம்
துளியும் நீர்நோய்தொலைத்திடுமருந்தும்
பெருமையும் பாலும் பிரையும் விழுமமும்
வெண்கலப்பெயரும் இடைச்சொலும் உணவும்
ஊழியும் காரமும் உவர்நீரும் நீளமும்
படையுறையுடனே நன்னிலஊரும்
எண்குறித்திறுதியெய்வதும் இயம்புவர்
** 250

#250
உலகு எனும் பெயர் உயர்ந்தோரும் பூமியும்
திசையும் ஆகாயமும் நாடும் செப்புவர் 
** 251

#251
உலக்கை எனும் பெயர் ஓணநாளும்
உரோங்கலும் எனவே உரைத்தனர் புலவர் 
** 252

#252
உறுவன் எனும் பெயர் அசோகமர்கடவுளும்
இருடியும் எனவே இயம்பப்பெறுமே 
** 253

#253
உறையுள் எனும் பெயர் ஊரும் நாடும்
வீட்டின்பெயரும் விளம்புவர் புலவர் 
** 254

#254
உயவை எனும் பெயர் கானையாறும்
காக்கணம் கருவிளைப் பெயரும் கருதுவர் 
** 255

#255
உழை எனும் பெயரே யாழின்நரம்பும்
இடமும் மானும் இயம்புவர் புலவர் 
** 256

#256
உம்பல் எனும் பெயர் விலங்கின்ஆண் பெயரும்
குடிவழித்தோன்றலும் யானையும் கூறுவர் 
** 257

#257
உவா எனும் பெயர் இளையோனும் யானையும்
ஈருவாவின்பெயர்தானும் விளம்புவர் 
** 258

#258
உண்டை எனும் பெயர் படையினதுஉறுப்பும்
திரண்டவடிவின்பெயரும் செப்புவர் 
** 259

#259
உளை எனும் பெயரே பரிக்கடிவாளத்து
அணிமயிராயவும் அஃறிணை மயிரும்
ஆண்பால்மயிரொடு சத்தஒலியும் ஆம் 
** 260

#260
உடை எனும் பெயரே செல்வமும் கூறையும்
குடைவேலும் உடைமைப் பெயரும் கூறுவர் 
** 261

#261
உணர்வு எனும் பெயரே உளத்தின் தெளிவும்
ஞானமும் எனவே நவிலப்பெறுமே 
** 262

#262
உரை எனும் பெயரே சத்தஒலியும்
தேய்தலும் மொழியும் செப்புவர் புலவர் 
** 263

#263
உவளகம் எனும் பெயர் மதிலும் பள்ளமும்
ஆயர்ஊரும் ஓர்பக்கமும் வாவியும் 
** 264

#264
உயிர் எனும் பெயரே சீவனும் காற்றும் ஆம் 
** 265

#265
உறழ்வு எனும் பெயர் இடையீடும் உவமையும்
புணர்வும் செறிவும் புகலப்பெறுமே 
** 266

#266
உருத்தல் எனும் பெயர் தோன்றுதல் சினமும் ஆம் 
** 267

#267
உக்கம் எனும் பெயர் இடையின்பக்கமும்
விசிறியும் இடபப்பெயரும் விளம்புவர் 
** 268

#268
உம்பர் எனும் பெயர் உயர்நிலமேடையும்
தேவரும் விசும்பும் செப்பப்பெறுமே 
** 269

#269
உரம் எனும் பெயரே ஊக்கமும் ஞானமும்
பெலமும் மருமமும் பேசுவர் புலவர் 
** 270

#270
உரு எனும் பெயரே நிறமும் வடிவமும்
அட்டையின்பெயரும் ஆகும் என்ப 
** 271

#271
உவப்பு எனும் பெயரே உயரமும் மகிழ்ச்சியும் 
** 272

#272
உறவி எனும் பெயர் உயிர்நிலைக்களமும்
நீரூற்றும் உறவும் எறும்பும் உணர்த்துவர் 
** 273

#273
உறுப்பு எனும் பெயரே உடலும் அங்கமும்
படையினதுஉறுப்பும் பகர்ந்தனர் புலவர் 
** 274

#274
உடல் எனும் பெயரே உடம்பும் பொருளும் ஆம் 
** 275

#275
உவணம் எனும் பெயர் கழுகும் பருந்தும் ஆம் 
** 276

#276
உளர்தல் எனும் பெயர் உதறலும் வருடலும் 
** 277

#277
உள்ளம் எனும் பெயர் நெஞ்சமும் நினைவும் ஆம் 
** 278

#278
உழப்பு எனும் பெயரே வலியும் உச்சாகமும் 
** 279

#279
உள்ளம் எனும் பெயர் முயற்சியின்பெயரும்
நெஞ்சின்பெயரும் நிகழ்த்துவர் புலவர் 
** 280

#280
உறுகண் எனும் பெயர் நோயும் துன்பமும்
மிடியும் பயமும் விளம்பப்பெறுமே 
** 281

#281
உஞற்று எனும் பெயரே வழுக்குடன் ஒளிர்ச்சியும்
தாளாண்மையும் எனச் சாற்றினர் புலவர் 
** 282

#282
உறுதி எனும் பெயர் கல்வியும் நன்மையும் 
**உகர வருக்கம் முற்றும்
**ஊகார வருக்கம்
** 283

#283
ஊக்கம் எனும் பெயர் உள்ளத்தின் மிகுதியும்
பெலமும் உச்சாகமும் பேசப்பெறுமே 
** 284

#284
ஊழ் எனும் பெயரே பகையும் பழமையும்
மரபும் வெயிலும் விதியும் வழங்குவர் 
** 285

#285
ஊதியம் எனும் பெயர் லாபமும் கல்வியும் 
** 286

#286
ஊழ்த்தல் எனும் பெயர் பதனழிவும் செவ்வியும்
நினைத்தலும் எனவே நிகழ்த்தப்பெறுமே 
** 287

#287
ஊசி எனும் பெயர் எழுத்தாணியும் சூரியும் 
** 288

#288
ஊறு எனும் பெயரே தீண்டலும் தீமையும்
கொலையும் இடையூறும் கூறப்பெறுமே 
** 289

#289
ஊற்று எனும் பெயரே ஊற்றினுடனே
ஊன்றியகோலும் உரைத்தனர் புலவர் 
** 290

#290
ஊர்தி எனும் பெயர் விமானமும் தேரும்
யானையும் பரியும் சிவிகையும் பாண்டிலும் 
** ஊகார வருக்கம் முற்றும்
** எகர வருக்கம்
** 291

#291
என்றூழ் எனும் பெயர் இரவியும் வெயிலும்
கோடைக்காலமும் கூறப்பெறுமே 
** 292

#292
எல் எனும் பெயரே இரவியும் ஒளியும்
இருளும் இகழ்ச்சியும் இயம்புவர் பெரியோர் 
** 293

#293
எலி எனும் பெயரே எலியின்விகற்பமும்
பூரநாளொடு மதுவும் புகலுவர் 
** 294

#294
எருவை எனும் பெயர் கொறுக்கையுடனே
கழுகும் தாம்பிரப்பெயரும் கருதுவர் 
** 295

#295
எறுழ் எனும் பெயரே தண்டாயுதமும்
பெலமும் எனவே பேசப்பெறுமே 
** 296

#296
எக்கர் எனும் பெயர் சொரிதலும் குவிதலும் 
** 297

#297
எகினம் என்னும் பெயர் புளிமாவும் அன்னமும்
கவரிமாவும் நீர்நாயும் புளியின்தருவும் புகலப்பெறுமே 
** 298

#298
எஃகு எனும் பெயரே வேலும் கூர்மையும்
உருக்கும் எனவே உரைத்தனர் புலவர் 
** 299

#299
எள்தல் எனும் பெயர் இகழ்தலும் நகையும் ஆம் 
** 300

#300
எற்று எனும் பெயரே இரக்கமும் எறிதலும்
அடித்தலும் எத்தன்மைத்தென்றலும் ஆமே 
** 301

#301
எற்றுதல் எனும் பெயர் எறிதலும் புடைத்தலும் 
** 302

#302
எண் எனும் பெயரே எள்ளும் இலக்கமும்
சோதிடப்பெயரும் விசாரமும் எளிமையும் 
** 303

#303
எழில் எனும் பெயரே இளமையும் அழகும் ஆம் 
** 304

#304
எல்லை எனும் பெயர் அளவையும் இரவியும் 
** எகர வருக்கம் முற்றும்
** ஏகார வருக்கம்
** 305

#305
ஏல்வை எனும் பெயர் வாவியும் பொழுதும் ஆம் 
** 306

#306
ஏமம் எனும் பெயர் இன்பமும் வெண்ணீறும்
சேமமும் பொன்னும் ஏமாப்பும் மயக்கும்
காவலும் இரவும் கருதுவர் புலவர் 
** 307

#307
ஏறு எனும் பெயர் இடியேற்றின்பெயரும்
விலங்கின்ஆண்பால் பெயரும் இடபமும்
அசுபதிப் பெயரும் ஆகும் என்ப 
** 308

#308
ஏனல் எனும் பெயர் தினை தினைப்புனமும் ஆம் 
** 309

#309
ஏனாதி எனும் பெயர் மயிர்வினையோனும்
மந்திரித் தந்திரிப் பெயரும் வழங்குக 
** 310

#310
ஏந்தல் எனும் பெயர் பெருமையும் உயரமும்
தலைவனும் எனவே சாற்றினர் புலவர் 
** 311

#311
ஏதி எனும் பெயர் ஆயுதப்பொதுவும்
வாளும் எனவே வகுத்தனர் புலவர் 
** 312

#312
ஏதம் எனும் பெயர் குற்றமும் துன்பமும் 
** 313

#313
ஏணி எனும் பெயர் எல்லையும் உலகமும்
மானும் கண்ணேணியுமே வழங்குவர் 
** 314

#314
ஏங்கல் எனும் பெயர் ஒலியும் இரங்கலும்
ஏங்குதல் பெயரும் இயம்புவர் புலவர் 
** 315

#315
ஏற்றல் எனும் பெயர் எதிர்ந்துபோர்செய்தலும்
கோடலின்பெயரும் கூறுவர் புலவர் 
** 316

#316
ஏர் எனும் பெயரே அழகும் உழுபெற்றமும்
உழவுடையோனும் உரைக்கப்பெறுமே 
** 317

#317
ஏனை எனும் பெயர் இடைச்சொல்லும் ஒலியும் ஆம் 
** 318

#318
ஏவல் எனும் பெயர் வியங்கோளும் வறுமையும் 
** 319

#319
ஏலம் எனும் பெயர் ஏலவிகற்பமும்
மயிர்ச்சாந்தும் என வழங்குவர் புலவர் 
** ஏகார வருக்கம் முற்றும்
** ஐகார வருக்கம்
** 320

#320
ஐயம் எனும் பெயர் பிச்சைகொள்கலனும்
பிச்சையும் வெண்ணெயும் சந்தேகமும் ஆம் 
** 321

#321
ஐயை எனும் பெயர் உமையும் துர்க்கையும்
அருந்தவப்பெண்ணும் அரசாளும் காளியும்
புதல்வியும் என்னப் புகன்றனர் புலவர் 
** 322

#322
ஐ எனும் பெயரே குருவும் அரசனும்
எழிலும் இருமலும் இடைச்சொல்லும் கோழையும்
தலைவனும் தாரமும் சாற்றப்பெறுமே 
** 323

#323
ஐயன் எனும் பெயர் குருவும் சாத்தனும்
தந்தையும் முதல்வனும் அந்தணன் பெயரும் ஆம் 
** 324

#324
ஐது எனும் பெயரே நொய்தும் விரைவும் ஆம் 
** ஐகார வருக்கம் முற்றும்
** ஒகர வருக்கம்
** 325

#325
ஒளி எனும் பெயரே ஒண்சுடரோனும்
விதுவும் கனலும் விளக்கொடு கீர்த்தியும்
கேட்டையும் ஒளிப்பினிடமும் கிரணமும் 
** 326

#326
ஒலி எனும் பெயரே ஓசையும் காற்றும்
இடியும் எனவே இயம்பப்பெறுமே 
** 327

#327
ஒழுக்கம் எனும் பெயர் வழியும் குலமும்
ஆசாரமும் என அறியப்பெறுமே 
** 328

#328
ஒலியல் எனும் பெயர் ஒண் புனல் யாறும்
அணில்லும் சருமமும் உடுத்த ஆடையும் ஆம் 
** 329

#329
ஒளிவட்டம் எனும் பெயர் சக்கராயுதமும்
கண்ணாடியும் எனக் கருதுவர் புலவர் 
** 330

#330
ஒண்மை எனும் பெயர் நன்மையும் அழகும்
மிகுதியும் ஒழுங்கும் அறிவும் விளம்புவர் 
** 331

#331
ஒதுக்கம் எனும் பெயர் மறைவும் நடையும் ஆம் 
** 332

#332
ஒன்று எனும் பெயர் ஓர் எண்ணும் முத்தியும் ஆம் 
** 333

#333
ஒல்லை எனும் பெயர் சிறு பொழுதும் விரைவும்
தொல்லையும் எனவே சொல்லுவர் புலவர் 
** 334

#334
ஒதுங்கல் எனும் பெயர் ஒதுங்குதல் நடையும் ஆம் 
** ஒகர வருக்கம் முற்றும்
** ஓகார வருக்கம்
** 335

#335
ஓணம் எனும் பெயர் மாதவன்நாளும்
வரு புனல் யாறும் வகுத்தனர் புலவர் 
** 336

#336
ஓரை எனும் பெயர் அரிவையர்கூட்டமும்
அவர் விளையாடலும் விளையாடுகலனும்
இராசியின்பொதுவும் இடைச்சொல்லும் ஆமே 
** 337

#337
ஓங்கல் எனும் பெயர் உயரமும் மலையும்
மேடும் மூங்கிலும் தலைவனும் விளம்புவர் 
** 338

#338
ஓடை எனும் பெயர் வாவியின்பெயரும்
யானை நுதலணிபட்டமும் கிடங்கும்
ஒரு கொடிப் பெயரும் உரைத்தனர் புலவர் 
** 339

#339
ஓதை எனும் பெயர் சத்தஒலியும்
புரிசையுள்ளுயர்வும் பொருந்திய மேடையும்
நதியும் நகரமும் நவிலப்பெறுமே 
** 340

#340
ஓரி எனும் பெயர் முசுவும் நரியும்
அரிவையர் மயிரொழித்து எல்லா மயிரும்
கொடை தரும் ஒரு வள்ளல் பெயரும் கூறுவர் 
** 341

#341
ஓவியர் எனும் பெயர் சித்திரகாரரும்
சிற்பநூல்வினைஞரும் செப்பப்பெறுமே 
** 342

#342
ஓட்டம் எனும் பெயர் மேலுதடும் தோல்வியும்
ஓடுதல் பெயரும் உரைத்தனர் புலவர் 
** 343

#343
ஓதனம் எனும் பெயர் உணவும் சோறும் ஆம் 
** 344

#344
ஓ எனும் பெயரே நீர்த்தகைகதவும்
நீக்கமும் இரக்கக்குறிப்பின்வார்த்தையும் ஆம் 
** 345

#345
ஓதிமம் எனும் பெயர் அன்னமும் வெற்பும்
கவரிமாவின்பெயரும் கருதுவர் 
** 346

#346
ஓதி எனும் பெயர் வெற்பும் மனனமும்
பெண்பால்மயிரும் அறிவும் பூஞையும்
ஓந்தியும் எனவே உரைக்கப்பெறுமே 
** 347

#347
ஓளி எனும் பெயர் யானைக்கூட்டமும்
ஒழுங்கும் எனவே உரைத்தனர் புலவர் 
** ஓகார வருக்கம் முற்றும்

@2 ககரவருக்கத் தொகுதி
** ககர அகர வருக்கம்
** 348

#1
கலை எனும் பெயரே கல்வியும் நூலும்
மானின்ஏறும் மகரஇராசியும்
மதியின்பங்கும் மரத்தின்கவடும்
ஆண்முசுப்பெயரும் காலநுட்பமும்
புடைவையும் செகு மேகலையும் புகலுவர்
** 349

#2
கனலி எனும் பெயர் கனலும் அருக்கனும்
பன்றியும் எனவே பகரப்பெறுமே 
** 350

#3
கரம் எனும் பெயரே கையும் கழுதையும்
கிரணமும் நஞ்சும் குடியிறைப் பெயரும் ஆம் 
** 351

#4
கழி எனும் பெயரே காலைக்காலமும்
மிகுதியும் கழிமுகப்பெயரும் விளம்புவர் 
** 352

#5
கவி எனும் பெயரே கவிவல்லோனும்
குதிரைவாய்ப்பெய்கருவியும் குரங்கும்
வெள்ளியும் கவிதைவிகற்பமும் விளம்புவர் 
** 353

#6
கவை எனும் பெயரே கவரும் காடும்
எள்ளிளங்காயும் ஆயிலியநாளும் ஆம் 
** 354

#7
கணை எனும் பெயரே அம்பும் திரட்சியும்
பூரநாளும் புகலப்பெறுமே 
** 355

#8
களிறு எனும் பெயரே அத்தநாளும்
எள்ளும் சுறா முதல் இவற்றின் ஆண்பாலும்
யானையும் புகல்வர் இனிது உணர்ந்தோரே 
** 356

#9
கள்வன் எனும் பெயர் கடகஇராசியும்
கருநிறத்தவனொடு களிறும் ஞெண்டும்
சோரனும் முசுவும் சொல்லுவர் புலவர் 
** 357

#10
கன்னி எனும் பெயர் பெண்ணும் இளமையும்
அழிவிலாப்பொருளும் குமரியாறும்
கற்றாழையினொடு கன்னிஇராசியும்
துர்க்கையும் எனவே சொல்லப்பெறுமே 
** 358

#11
கள் எனும் பெயர் தேன் மதுவும் களவும் ஆம் 
** 359

#12
கலி எனும் பெயரே கடையுகப்பெயரும்
வலியும் ஒலியும் வலியோன் பெயரும் ஆம் 
** 360

#13
கணம் எனும் பெயரே காலநுட்பமும்
உடுவும் கூட்டமும் நோயும் வட்டமும்
திரட்சியின்பெயரின்விகற்பமும் செப்புவர் 
** 361

#14
கன்னல் எனும் பெயர் கரகமும் கரும்பும்
நாழிகை வட்டமும் நாழிகைப் பெயரும்
சருக்கரைப் பெயரும் குப்பமும் சாற்றுவர் 
** 362

#15
கடிகை எனும் பெயர் கதவொடு தாளும்
துண்டமும் நாழிகைப் பெயரும் சொல்லுவர் 
** 363

#16
கடி எனும் பெயரே காவலும் விரைவும்
அச்சமும் கூர்மையும் வரைவும் சிறப்பும்
விளக்கமும் புதுவையும் மணமும் முடுகலும்
பேயும் நெற்கரிப்பும் பேசுவர் புலவர் 
** 364

#17
கழுது எனும் பெயரே காவல்பரணும்
வண்டும் பேயும் வழங்கப்பெறுமே 
** 365

#18
கம்மெனும் பெயரே ககனமும் பிரமனும்
தலைவனும் வெளுப்பும் புலனும் வாயுவும்
சுவர்க்கமும் புத்தியும் சொல்லுவர் புலவர் 
** 366

#19
கயம் எனும் பெயரே களிறும் ஆழமும்
குளமும் புனலும் குறைவும் ஓர் நோயும் ஆம் 
** 367

#20
கமலம் எனும் பெயர் தாமரை புனலும் ஆம் 
** 368

#21
கவந்தம் எனும் பெயர் தலைகுறைபிணமும்
நீரும் பேயும் நிகழ்த்துவர் புலவர் 
** 369

#22
கனம் எனும் பெயரே மேகமும் பாரமும்
தேகமும் அடைகொடுத்தலும் செம்பொன்னும்
முட்டிய வண்டிலின் முலைக்கனமும் ஆமே 
** 370

#23
கரகம் எனும் பெயர் ஆலாங்கட்டியும்
கங்கையும் துளியும் கமண்டலமும் ஆமே 
** 371

#24
கந்தரம் எனும் பெயர் கழுத்தும் மேகமும்
மலைமுழையும் என வழங்கப்பெறுமே 
** 372

#25
ககனம் எனும் பெயர் காடும் சேனையும்
விசும்பும் எனவே விளம்பப்பெறுமே 
** 373

#26
கழை எனும் பெயரே கரும்பும் மூங்கிலும்
புனர்தநாள் பெயரும் புகலப்பெறுமே 
** 374

#27
கயினி எனும் பெயர் அத்தநாளும்
விதவையும் எனவே விளம்பப்பெறுமே 
** 375

#28
கடம் எனும் பெயரே யானைத்திரளும்
மற்று அதன் கொடிறும் மதமும் கானமும்
யாக்கையும் அருஞ்சுரப்பெயரும் கயிறும்
நீதியும் கும்பமும் நெடு மலைச்சாரலும்
எதிர்ப்பை கடன் குடமுழவும் இயம்புவர்
** 376

#29
கவலை எனும் பெயர் கவர்படுவழியும்
துன்பமும் செந்தினைப் பெயரும் ஓர் கொடியும் ஆம் 
** 377

#30
கடகம் எனும் பெயர் கங்கணப்பெயரும்
வட்டவடிவும் மலையின்பக்கமும்
படைவீடும் எனப் பகர்ந்தனர் புலவர் 
** 378

#31
கட்சி எனும் பெயர் காடும் கூடும்
கிடப்பிடமும் எனக் கிளத்துவர் புலவர் 
** 379

#32
கண்டகம் எனும் பெயர் வாளும் சுரிகையும்
முள்ளும் கானமும் மொழியப்பெறுமே 
** 380

#33
கணி எனும் பெயரே மருதநன்னிலமும்
வேங்கைமரமும் விளம்புவர் புலவர் 
** 381

#34
கங்கு எனும் பெயர் கருந்தினை வரம்பு அருகும் ஆம் 
** 382

#35
களம் எனும் பெயர் களாமரமும் கழுத்தும்
கருநிறமும் போர்க்களமும் விடமும் ஆம் 
** 383

#36
கடை எனும் பெயரே கதவும் முடிவும்
இடமும் எனவே இயம்பப்பெறுமே 
** 384

#37
கறை எனும் பெயரே கருமையும் உரலும்
குருதி மாசும் குடியிறைப் பெயரும் ஆம் 
** 385

#38
கண்டம் எனும் பெயர் கரியின் கச்சையும்
துண்டமும் மெய்புகுகருவியும் வாளும்
கண்டசர்க்கரையும் தேசமும் கழுத்தும்
இடுதிரைப் பெயரும் இயம்புவர் புலவர் 
** 386

#39
கதுப்பு எனும் பெயரே இருபால்மயிரும்
கொடிறும் விலங்கின்திரளும் கூறுவர் 
** 387

#40
கந்து எனும் பெயரே பண்டியுள் இரும்பும்
கம்பமும் திரட்சி யாக்கையின் மூட்டும்
ஆதாரநிலையும் காய்க்கும்மரமும் ஆம் 
** 388

#41
கடிப்பம் எனும் பெயர் காதணிப்பொதுவும்
அணிகலச்செப்பும் அக்கமணியும்
வாச்சியத்து ஒன்றும் பதக்கம் எனவே
பகர்ந்தனர் புலவர் 
** 389

#42
கன்று எனும் பெயரே ஒருசார் விலங்கினது
கன்றும் இளமரக்கன்றும் சிறுமையும்
கைவளைவிகற்பமும் கருதப்பெறுமே 
** 390

#43
கலாபம் எனும் பெயர் மேகலைப் பெயரும்
மணிவடப்பெயரும் மயிலிறகும் ஆமே 
** 391

#44
கரண்டம் எனும் பெயர் அணிகலச்செப்பும்
நீர்க்காக்கையும் என நிகழ்த்துவர் புலவர் 
** 392

#45
கரணம் எனும் பெயர் மெய்க்கூத்தின்விகற்பமும்
கலவியும் கணிதமும் புலனும் கருதுவர் 
** 393

#46
கல் எனும் பெயரே அருவியும் ஓசையும்
மலையும் கல்பொதுப் பெயரும் வழங்குப 
** 394

#47
கவிகை எனும் பெயர் குடையும் கொடையும் ஆம் 
** 395

#48
கணிச்சி எனும் பெயர் மழுவும் தறிகையும்
தோட்டியும் உளியும் சொல்லுவர் புலவர் 
** 396

#49
கதை எனும் பெயரே காரணச்சொல்லும்
தண்டாயுதமொடு வார்த்தையும் சாற்றுவர் 
** 397

#50
கச்சம் எனும் பெயர் புரோசக்கயிறும்
மரக்காலும் அளவும் வழங்கப்பெறுமே 
** 398

#51
கதவு எனும் பெயரே கபாடமும் காவலும் 
** 399

#52
கறுப்பு எனும் பெயரே கருமையும் சினமும்
வெறுத்திடு சினக்குறிப்பும் என விளம்புவர் 
** 400

#53
கம்பலை எனும் பெயர் நடுக்கமும் அச்சமும்
துன்பமும் சத்தஒலியும் சொல்லுவர் 
** 401

#54
கம்பம் எனும் பெயர் நடுக்கமும் தூணும் ஆம் 
** 402

#55
கண்டூ எனும் பெயர் காஞ்சொறி தினவும் ஆம் 
** 403

#56
கந்தம் எனும் பெயர் மணமும் ஐம்புலனும்
கிழங்கும் எனவே கிளத்துவர் புலவர் 
** 404

#57
கறங்கு எனும் பெயரே காற்றாடி வட்டமும்
கழலும் சத்தஒலியும் சொல்லுவர் 
** 405

#58
கஞறல் எனும் பெயர் பொலிவும் சிறுமையும் 
** 406

#59
கரிணி எனும் பெயர் கடகரிப் பெயரும்
பிடியின்பெயரும் பேசுவர் புலவர் 
** 407

#60
கதலி எனும் பெயர் காற்றாடியுடனே
வாழையும் துவசமும் தேற்றாமரமும் ஆம் 
** 408

#61
கடவுள் எனும் பெயர் நன்மையும் தெய்வமும்
முனிவன் பெயரும் மொழியப்பெறுமே 
** 409

#62
கணக்கு எனும் பெயரே கலைகளின்விகற்பமும்
எண்ணின்பெயரும் இயம்புவர் புலவர் 
** 410

#63
கச்சை எனும் பெயர் கவசமும் கயிறும்
தழும்பும் எனவே சாற்றினர் புலவர் 
** 411

#64
கயில் எனும் பெயர் பூணின்கடைப்புணர்வும்
பிடர்த்தலை பெயரும் பேசப்பெறுமே 
** 412

#65
கஞ்சம் எனும் பெயர் கமலமும் தாளமும்
வெண்கலசமும் அப்பவிகற்பமும் கஞ்சாவும்
கண்ணாடியும் எனக் கருதுவர் புலவர் 
** 413

#66
கலிங்கம் எனும் பெயர் ஊர்க்குருவியும் புடைவையும்
வானம்பாடியும் கலிங்கதேசமும் ஆம் 
** 414

#67
கந்தருவம் எனும் பெயர் பெண்ணோடு குதிரை ஆம் 
** 415

#68
சுகம் எனும் பெயரே புள்ளின்பொதுவும்
அம்பின்பெயரும் ஆகும் என்ப 
** 416

#69
கவடு எனும் பெயரே புரோசக்கயிறும்
மரத்தின்கவடும் மனக்கபடமும் ஆம் 
** 417

#70
கருமை எனும் பெயர் கறுப்பும் பெருமையும்
பெலமும் புலவோர் பேசப்பெறுமே 
** 418

#71
கரேணு எனும் பெயர் கொலையானையினொடு
பிடியானையும் எனப் பேசப்பெறுமே 
** 419

#72
கனைத்தல் எனும் பெயர் ஒலித்தலின்பெயரும்
திரண்ட இருளின்பெயரும் செப்புவர் 
** 420

#73
கடைப்பிடி எனும் பெயர் மறப்பிலாதவனும்
தேற்றமும் எனவே செப்பப்பெறுமே 
** 421

#74
கட்டளை எனும் பெயர் இட்டிகை இயற்றலும்
தத்துவவிகற்பமும் நிறையறிகருவியும்
பிறஇனஒப்பும் ஓர் இராசியும் பேசுவர் 
** 422

#75
கண்டல் எனும் பெயர் கைதை நீர்முள்ளி ஆம் 
** 423

#76
கரைதல் எனும் பெயர் ஒலித்தல் கூவுதலும் ஆம் 
** 424

#77
கதழ்வு எனும் பெயரே சிறப்பும் வேகமும் ஆம் 
** 425

#78
களி எனும் பெயரே களிப்பொடு குழம்பும் ஆம் 
** 426

#79
கத்திகை எனும் பெயர் சிறுகொடிப் பெயரும்
தொடையல்விகற்பமும் வாசந்தியும் சொல்லுவர் 
** 427

#80
கந்துகம் எனும் பெயர் குதிரையும் பந்தும் ஆம் 
** 428

#81
கப்பணம் எனும் பெயர் கைவேல்விகற்பமும்
இரும்பினில் புரிந்திடும் நெருஞ்சிமுள் பெயரும் ஆம் 
** 429

#82
கலாம் எனும் பெயரே கொடுமையும் சினமும் ஆம் 
** 430

#83
கரி எனும் பெயரே களிறும் சாட்சியும்
இருந்தையும் எனவே இயம்புவர் புலவர் 
** 431

#84
கரீரம் எனும் பெயர் மிடாவும் அகத்தியும்
தந்தியின் பல்லடிப் பெயரும் சாற்றுவர் 
** 432

#85
கனவு எனும் பெயரே கனாவும் மயக்கமும் 
** 433

#86
கட்டல் எனும் பெயர் களைதலும் பிணித்தலும்
தடுத்தலும் எனவே சாற்றினர் புலவர் 
** 434

#87
கந்தன் எனும் பெயர் முருகனும் அருகனும் 
** 435

#88
களரி எனும் பெயர் போர்க்களமும் காடும்
கருமம்செய்யிடமும் கருதுவர் புலவர் 
** 436

#89
கறங்கல் எனும் பெயர் சுழற்றுதலும் ஒலியும்
வளைதடிப் பெயரும் வழங்கப்பெறுமே 
** 437

#90
கற்பகம் எனும் பெயர் கற்பகத்தருவும்
சொர்க்கமும் பிரமன் வாழ்நாளும் சொல்லுவர் 
** 438

#91
கடுத்தல் எனும் பெயர் உவமையும் விரைவும் ஆம் 
** 439

#92
கதவம் எனும் பெயர்க் கபாடமும் காவலும் 
** 440

#93
கரியவன் எனும் பெயர் கண்ணன் இந்திரனுடன்
சனியின்பெயரும் சாற்றப்பெறுமே 
** 441

#94
கரில் எனும் பெயரே கொடுமையும் குற்றமும்
காழ்த்தலும் எனவே கருதுவர் புலவர் 
** 442

#95
கலுழி எனும் பெயர் கான்யாறும்
கலங்கியநீரும் கருதப்பெறுமே 
** 443

#96
கவனம் எனும் பெயர் காடும் கலக்கமும்
விரைவும் எனவே விளம்புவர் புலவர் 
** 444

#97
கழித்தல் எனும் பெயர் மிகுதலும் சாதலும்
கடத்தலும் எனவே கருதப்பெறுமே 
** 445

#98
கழல் எனும் பெயரே கழங்கும் செருப்பும்
காலும் காலணிப் பெயரும் கருதுவர் 
** 446

#99
கழுமல் எனும் பெயர் மயக்கமும் பற்றும்
நிறைவின்பெயரும் நிகழ்த்துவர் புலவர் 
** 447

#100
கயம் எனும் பெயரே மென்மையும் பெருமையும்
களவின்பெயரும் கருதப்பெறுமே 
** 448

#101
களபம் எனும் பெயர் யானைக்கன்றும்
கலவையும் சாந்தும் கருதப்பெறுமே 
** 449

#102
கம்புள் எனும் பெயர் சம்பங்கோழியும்
சங்கின்பெயரும் சாற்றப்பெறுமே 
** 450

#103
கண் எனும் பெயரே கணுவும் மூங்கிலும்
இடத்தின்பெயரும் விழியும் இயம்புவர் 
** 451

#104
கருவி எனும் பெயர் கவசமும் யாழும்
பலவினைப் பெயரும் தொடர்பும் ஈட்டமும்
துணைக்காரணமும் துகிலும் ஆயுதமும்
கசையும் பல்லியப்பெயரும் கலனையும்
தொகுதியும் எனவே சொல்லுவர் புலவர் 
** 452

#105
கடு எனும் பெயரே கடுமரப்பெயரும்
விடமும் கடுத்தலும் விளம்பப்பெறுமே 
** 453

#106
கழங்கு எனும் பெயரே வேலனாடலும்
கொடியின் கழலும் கூறுவர் புலவர் 
** 454

#107
கலம் எனும் பெயர் ஓர் எண்ணும் ஆபரணமும்
உண்கலம் மரக்கலம் மட்கலம் யாவும் ஆம் 
** 455

#108
கஞ்சன் எனும் பெயர் பிரமனும் குறளனும் 
** 456

#109
கவ்வை எனும் பெயர் கவலையும் துன்பமும்
ஆரவாரத்தின்பெயரும் ஆமே 
** 457

#110
கரை எனும் பெயர் நீர்க்கரையும் சேர்க்கையின்
சொல்லின்பெயரும் சொல்லப்பெறுமே 
** 458

#111
கண்ணுதல் எனும் பெயர் கறைமிடற்று இறையையும்
நினைத்தலின்பெயரும் நிகழ்த்துவர் புலவர் 
** ககர வருக்கம் முற்றும்
** ககர ஆகார வருக்கம்
** 459

#112
காரி எனும் பெயர் சனியும் சாத்தனும்
கருமையும் காகமும் கரிக்குருவியும்
வடுகக்கடவுளும் தெய்வேந்திரனும்
கடுவும் ஓர் வள்ளலும் கருதப்பெறுமே 
** 460

#113
காலம் எனும் பெயர் விடியற்காலமும்
விடிந்த பிற்காலமும் முக்காலமும் ஆமாம் 
** 461

#114
கால் எனும் பெயரே காற்றும் கூற்றும்
தாளும் பொழுதும் தறியும் அளவையும்
வழியும் தேரினுருளும் வாய்க்காலும்
பெலமும் மலர்க்காம்பும் இடமும் பிள்ளையும்
முளையும் எனவே மொழிந்தனர் புலவர் 
** 462

#115
காளம் எனும் பெயர் கருமையும் நஞ்சும்
ஊது சின்னத்தின் வருக்கமும் உரைப்பர் 
** 463

#116
கார் எனும் பெயரே மாரிக்காலமும்
கறுவிய கருமம் கடைமுடிவளவும்
தவிராச் சினமும் நீரும் கருங்குரங்கும்
உழவின்பருவமும் மேகமும் கூந்தலும்
கருமையும் இருளும் வெள்ளாடும் கருதுவர் 
** 464

#117
காஞ்சி எனும் பெயர் காஞ்சி நன்னகரமும்
மேகலைப் பெயரும் ஓர் பண்ணும் ஓர் மரமும் ஆம் 
** 465

#118
காண்டை எனும் பெயர் கற்பாழியினொடு
தவத்தோரிடமும் சாற்றப்பெறுமே 
** 466

#119
காந்தாரம் எனும் பெயர் இசையும் காடும் ஆம் 
** 467

#120
காமரம் எனும் பெயர் இசைப்பொதுப் பெயரும்
அத்தநாளும் ஓர் இசையும் அடுப்பும் ஆம் 
** 468

#121
காளை எனும் பெயர் பாலைக்கதிபனும்
இளமையோன் பெயரும் எருதும் இயம்புவர் 
** 469

#122
காயம் எனும் பெயர் கறியின்கரிப்பும்
ஆகமும் விசும்பும் பெருங்காயமும் ஆம் 
** 470

#123
காத்திரம் எனும் பெயர் களிற்றின்முற்காலும்
ஆக்கையும் கனமும் கோபமும் ஆமே 
** 471

#124
காசு எனும் பெயரே மணியின்கோவையும்
குற்றமும் காசின்விகற்பமும் கூறுவர் 
** 472

#125
காவி எனும் பெயர் கள்ளும் குவளையும்
காவிக்கல்லும் கருதப்பெறுமே 
** 473

#126
காழகம் எனும் பெயர் கருநிறம் தூசும் ஆம் 
** 474

#127
கானம் எனும் பெயர் காடும் இசையும் ஆம் 
** 475

#128
காகுளி எனும் பெயர் மந்தஇசையொடு
நாசியினெழுமொலி தவிசும் நவிலுவர் 
** 476

#129
கானல் எனும் பெயர் கடற்கரைச்சோலையும்
மலைசார்சோலைப் பெயரும் நல்லொளியும்
பேய்த்தேர்ப் பெயரும் பேசப்பெறுமே 
** 477

#130
கா எனும் பெயரே காடி மலர்ச்சோலையும்
துலாமும் காத்தலும் தோள்சுமைப் பெயரும் ஆம் 
** 478

#131
காசை எனும் பெயர் புற்பிடிப் பெயரும்
நாணலும் காசைமரமும் நவிலுவர் 
** 479

#132
காணம் எனும் பெயர் பொன்னும் பொற்காசும்
பரியூணும் செக்கும் ஓர்கண்செந்தும் ஆம் 
** 480

#133
காம்பு எனும் பெயர் மலர்க்காம்பும் மூங்கிலும்
பட்டின்விகற்பமும் பகரப்பெறுமே 
** 481

#134
காழ் எனும் பெயரே மணியின்கோவையும்
மரத்தின்வயிரமும் விதையும் பரலும் ஆம் 
** 482

#135
காழியர் எனும் பெயர் கடற்கழிப் பரதரும்
ஈரங்கோலியர் பெயரும் இயம்புவர் 
** 483

#136
கான் எனும் பெயரே காடும் மணமும் ஆம் 
** 484

#137
காப்பு எனும் பெயர் வெண்ணீறும் காவலும்
தூசும் கதவும் சொல்லுவர் புலவர் 
** 485

#138
காதல் எனும் பெயர் விருப்பமும் கோறலும் 
** 486

#139
காலிலி எனும் பெயர் அருணனும் சனியும்
பாம்பும் எனவே பகரப்பெறுமே 
** 487

#140
காண்டம் எனும் பெயர் காடும் தீர்த்தமும்
தூசும் நூல்முடிவும் படைக்கலப்பொதுவும்
அம்பும் கோலும் அணிகலச்செப்பும்
குதிரையும்  கமண்டலமும் இயம்புவர் 
** 488

#141
காதை எனும் பெயர் கதையொடு சொல்லும் ஆம் 
** 489

#142
காமன் எனும் பெயர் கணைவேள் பெயரும்
ஐந்தருஇறைவன் பெயரும் ஆமே 
** 490

#143
காமர் எனும் பெயர் கட்டழகுடனே
விருப்பமும் எனவே விளம்புவர் புலவர் 
** 491

#144
காமம் எனும் பெயர் விரகமும் விருப்பும் 
** ககர ஆகார வருக்கம் முற்றும்
** ககர இகர வருக்கம்
** 492

#145
கிடக்கை எனும் பெயர் கிளர் புவிப் பெயரும்
சயனமும் என்னச் சாற்றப்பெறுமே 
** 493

#146
கிழமை எனும் பெயர் குணமும் உரிமையும்
வாரமும் எனவே வழங்குவர் புலவர் 
** 494

#147
கிளை எனும் பெயரே மூங்கிலும் சுற்றமும்
கிளைத்தலும் ஓர் பண் பெயரும் கிளத்துவர் 
** 495

#148
கிட்டி எனும் பெயர் தலையீற்றாவும்
தாளமும் எனவே சாற்றுவர் புலவர் 
** 496

#149
கின்னரம் எனும் பெயர் கின்னரமிதுனமும்
யாழின்பெயரும் நீர்ப்பறவையும் ஆந்தையும் 
** 497

#150
கிடுகு எனும் பெயரே தேர்மரச்சுற்றும்
பரிசையும் எனவே பகரப்பெறுமே 
** 498

#151
கிளர் எனும் பெயரே கிளர்த்து எழு கிரணமும்
கோட்டு மலர்ப் பூந்தாதும் கூறுவர் 
** 499

#152
கிஞ்சுகம் எனும் பெயர் முள்முருக்குடனே
சென்னிறப்பெயரும் செப்பப்பெறுமே 
** 500

#153
கிள்ளை எனும் பெயர் கிளியும் குதிரையும் 
** 501

#154
கிருட்டினன் எனும் பெயர் கேசவன் பெயரும்
அருச்சனன் பெயரும் ஆகும் என்ப 
** 502

#155
கிருத்திமம் எனும் பெயர் தொழிலும் சருமமும்
பூதமும் பொய்யும் புகலப்பெறுமே 
** 503

#156
கிம்புரி எனும் பெயர் கிரீடவிகற்பமும்
களிற்றின் மருப்பின் பூணும் கருதுவர் 
** 504

#157
கிழி எனும் பெயரே கிழிபடு துகிலும்
இருநிதிப் பெயரும் எழுதுபடமும் ஆம் 
** 505

#158
கிருட்டி எனும் பெயர் பன்றியின்பெயரும்
ஓரீற்றாவும் உரைக்கப்பெறுமே 
** ககர இகர வருக்கம் முற்றும்
** ககர ஈகார வருக்கம்
** 506

#159
கீரம் எனும் பெயர் கிளியும் பாலும் ஆம் 
** 507

#160
கீசகம் எனும் பெயர் மூங்கிலும் குரங்கும் ஆம் 
** 508

#161
கீதம் எனும் பெயர் இசையுடன் வண்டும் ஆம் 
** 509

#162
கீலாலம் எனும் பெயர் நீரும் காடியும்
உதிரமும் எனவே உரைக்கப்பெறுமே 
** 510

#163
கீழ் எனும் பெயரே கிழக்கும் கீழ்மையும்
கீழ்ப்படுசாதியும் இடமும் கிளத்துவர் 
** ககர ஈகார வருக்கம் முற்றும்
** ககர உகர வருக்கம்
** 511

#164
குருதி எனும் பெயர் குசனும் சிவப்பும்
உதிரமும் எனவே உரைக்கப்பெறுமே 
** 512

#165
குலம் எனும் பெயர் இரேவதியும் கூட்டமும்
வருணவிகற்பமும் மனையும் கோயிலும் 
** 513

#166
கும்பம் எனும் பெயர் கும்பஇராசியும்
வெங்கிரி நெற்றியும் குடமும் விளம்புவர் 
** 514

#167
கும்பி எனும் பெயர் யானையும் சேறும்
நிரயமும் எனவே நிகழ்த்தப்பெறுமே 
** 515

#168
குமுதம் எனும் பெயர் மிகும் பேரோசையும்
அடுப்பும் நெய்தலும் ஓர் திசையானையும் ஆம் 
** 516

#169
குண்டு எனும் பெயரே குதிரைஆண்பெயரும்
ஆழமும் கொலையும் தாழ்வும் ஆமே 
** 517

#170
குயில் எனும் பெயரே கோகிலமும் துளையும்
உரையும் கருமுகில் பெயரும் ஓதுவர் 
** 518

#171
குவலையம் எனும் பெயர் குவளையும் புவியும் ஆம் 
** 519

#172
குமரி எனும் பெயர் அழிவிலாமாதரும்
உமையும் துர்க்கையும் அழிவிலாப்பொருளும்
சத்தமாதாக்களில் சாற்றும் ஓர் அணங்கும்
கற்றாழையும் ஓர் நதியும் கருதுவர் 
** 520

#173
குருகு எனும் பெயரே கொல்லுலைமூக்கும்
கோழியும் கைவளையும் குருக்கத்தியும்
நாரை பெயரோடு மூலநாளும்
புள்ளின்பொதுவும் வெண்மையும் இளமையும் 
** 521

#174
குன்று எனும் பெயரே வருணன் ஆளும்
சிறுமலைப் பெயர் பெருமலையும் செப்புவர் 
** 522

#175
குரு எனும் பெயரே குரவனும் நிறமும்
அரசனும் வியாழமும் பாரமும் பெருமையும்
தாளத்தின் இரு மாத்திரையும் ஓர் நோயும் ஆம் 
** 523

#176
குடி எனும் பெயரே கோத்திரவிகற்பமும்
குலத்தின்பெயரும் ஊர்ப்பொதுவும் புருவமும் 
** 524

#177
குறிஞ்சி எனும் பெயர் மலைச்சார்புநிலமும்
அந்நிலயாழும் ஓர் மரமும் ஆமே 
** 525

#178
குவடு எனும் பெயர் மரக்கோடும் சயிலமும்
மலையின்உச்சியும் வழங்கப்பெறுமே 
** 526

#179
குறும்பொறை எனும் பெயர் குறிஞ்சியூரும்
காடும் எனவே கருதுவர் புலவர் 
** 527

#180
குடிஞை எனும் பெயர் கூகையும் யாறும்
புள்பொதுப் பெயரும் புகலப்பெறுமே 
** 528

#181
குளம் எனும் பெயரே நுதலும் பொய்கையும்
சருக்கரைப் பெயரும் சாற்றுவர் புலவர் 
** 529

#182
குழை எனும் பெயரே சேறும் துவாரமும்
தளிரும் குண்டலப்பெயரும் சாற்றுவர் 
** 530

#183
குடம் எனும் பெயரே கும்பமும் பசுவும்
கொட்டிக் கைகள் குவித்தாடு கூத்தும்
நகரும் அக்காரமும் நவிலப்பெறுமே 
** 531

#184
குணுங்கர் எனும் பெயர் தோல்கருவியருடன்
புலைஞரும் எனவே புகன்றனர் புலவர் 
** 532

#185
குஞ்சம் எனும் பெயர் குறளைச் சொல்லும்
நாழியும் குறளும் நவிலப்பெறுமே 
** 533

#186
குரல் எனும் பெயரே வாசிக்கோவையும்
கிண்கிணிமாலையும் கிளர் நெல்கதிரும்
கோதையர்மயிரும் யாழ்நரம்பிலொன்றும்
புள்ளின்சிறகும் புகன்றனர் புலவர் 
** 534

#187
குணில் எனும் பெயர் கவணும் குறுந்தடியும்
கடிப்பு எனும் பணையும் கருதப்பெறுமே 
** 535

#188
குளிர் எனும் பெயரே குடமுழவும் ஞெண்டும்
குளிர்ச்சியும் இலைமூக்கரியும்கருவியும்
கவணும் மழுவும் கருதப்பெறுமே 
** 536

#189
குரை எனும் பெயரே குதிரைப் பெயரும்
ஒலியும் இடைச்சொல்லும் உரைக்கப்பெறுமே 
** 537

#190
குலை எனும் பெயர் காய்க்கொத்தும் செய்கரையும்
அம்பின்குதையும் வில்குதையும் ஆமே 
** 538

#191
குய் எனும் பெயரே குளிர் மணப்புகையுடன்
கறிகரித்தலின்பெயர்தானும் கருதுவர் 
** 539

#192
குடம்பை எனும் பெயர் முட்டையும் கூடும் ஆம் 
** 540

#193
குஞ்சி எனும் பெயர் குன்றியின் புதலும்
பறவைஇளமையும் ஆண்பால்மயிரும் ஆம் 
** 541

#194
குழல் எனும் பெயரே துளையுடைப்பொருளும்
இசையின் குழலும் இருபால்மயிரும் ஆம் 
** 542

#195
கும்பசன் எனும் பெயர் செந்தமிழ்முனியும்
துரோணாசாரியன் பெயரும் சொல்லுவர் 
** 543

#196
குடுமி எனும் பெயர் மலையின்உச்சியும்
வென்றியும் ஆண்பால்மயிரும் விளம்புவர் 
** 544

#197
குயம் எனும் பெயரே இளமையும் முலையும்
கொடுவாள் எனவும் கூறப்பெறுமே 
** 545

#198
குட்டம் எனும் பெயர் குளமும் ஆழமும்
தொழுநோய் எனவும் சொல்லுவர் புலவர் 
** 546

#199
குணம் எனும் பெயரே கும்பமும் இயல்பும்
கயிறும் குணத்தின்விகற்பமும் கருதுவர் 
** 547

#200
குல்லை எனும் பெயர் வெட்சியும் துளசியும்
கஞ்சாவின்பெயர் அதனையும் கருதுவர் 
** 548

#201
குத்தி எனும் பெயர் அடக்கமும் மண்ணும் ஆம்  
** 549

#202
குபேரன் எனும் பெயர் வயிச்சிரவணனோடு
மதியின்பெயரும் வழங்கப்பெறுமே 
** 550

#203
குறள் எனும் பெயரே குறளர்தம்பெயரும்
பாரிடப்பெயரும் குறுமையும் பகருவர் 
** 551

#204
குறடு எனும் பெயரே திண்ணையும் பலகையும் 
** 552

#205
குற்றல் எனும் பெயர் கோறலும் பறித்தலும் 
** 553

#206
குந்தம் எனும் பெயர் குருந்தமும் வியாதியும்
கைவேல் குதிரைப் பெயரும் கருதுவர் 
** 554

#207
குயிறல் எனும் பெயர் கூவலும் குடைதலும்
செறிதலும் செய்தலும் செப்பப்பெறுமே 
** 555

#208
குவவு எனும் பெயரே குவிதலும் திரட்சியும்
பெருமையும் எனவே பேசப்பெறுமே 
** 556

#209
குய்யம் எனும் பெயர் யோனியும் மறைவும் ஆம் 
** 557

#210
குரங்கு எனும் பெயரே வளைவும் வானரமும்
மிருகப்பொதுவின்பெயரும் விளம்புவர் 
** ககர உகர வருக்கம் முற்றும்
** ககர ஊகார வருக்கம்
** 558

#211
கூற்று எனும் பெயரே கூற்றனும் வார்த்தையும் 
** 559

#212
கூனி எனும் பெயர் குடும்பமும் கூட்டமும்
பேயும் சேனைத்தலைவனும் பேசுவர் 
** 560

#213
கூடம் எனும் பெயர் மலையின்குவடும்
கூட்டமும் மறைவும் மனவஞ்சனையும்
கொல்லன் சம்மட்டியையும் கூறுவர் 
** 561

#214
கூலம் எனும் பெயர் பாகலும் பகவும்
வரம்பும் விலங்கின்வாலும் நீர்க்கரையும்
தெருவும் பலபண்டமும் அங்காடியும் ஆம் 
** 562

#215
கூளியர் எனும் பெயர் பூதகணவீரரும்
கொலைத்திறலோரும் நட்பாளரும் கூறுவர் 
** 563

#216
கூந்தல் எனும் பெயர் மயிலின்தோகையும்
கோதையர் குழலும் கூறப்பெறுமே 
** 564

#217
கூவிரம் எனும் பெயர் தேரின் கொடிஞ்சியும்
தேரும் எனவே செப்புவர் புலவர் 
** 565

#218
கூத்தன் எனும் பெயர் உயிரின்பெயரும்
நடிப்போன் பெயரும் நவிலப்பெறுமே 
** 566

#219
கூழ் எனும் பெயரே பலவகையுணவும்
நெல்பயிர் முதலவும் கனகமும் நிகழ்த்துவர் 
** 567

#220
கூர் எனும் பெயரே கூர்மையும் மிகுதியும் 
** 568

#221
கூரல் எனும் பெயர் மாதர்தம்மயிரும்
புள்ளின்சிறகும் புகலப்பெறுமே 
** 569

#222
கூழை எனும் பெயர் கொடும்படையுறுப்பும்
புள்சிறகு பெண்பால்மயிரும் புகலுவர் 
** ககர ஊகார வருக்கம் முற்றும்
** ககர எகர வருக்கம்
** 570

#223
கெழுவுதல் எனும் பெயர் மயக்கமும் பற்றும் ஆம் 
** 571

#224
கெதி எனும் பெயர் பரகெதி நடைவிரைவும் ஆம் 
** ககர எகர வருக்கம் முற்றும்
** ககர ஏகார வருக்கம்
** 572

#225
கேடகம் எனும் பெயர் ஊர்ப்பொதுப் பெயரும்
பரிசையும் பலகையும் பகர்ந்தனர் புலவர் 
** 573

#226
கேசம் எனும் பெயர் பெண்பால்மயிரும்
ஆண்பால்மயிரும் அஃறிணைமயிரும் ஆம் 
** 574

#227
கேழ் எனும் பெயரே நிறமும் ஒளியும்
உவமையும் எனவே உரைத்தனர் புலவர் 
** 575

#228
கேசரம் எனும் பெயர் மகிழமரப்பெயரும்
பூந்தாதும் எனவே புகலப்பெறுமே 
** 576

#229
கேது எனும் பெயர் ஒன்பான்கிரகமும்
துவசமும் நெருப்பும் சொல்லுவர் புலவர் 
** 577

#230
கேவலம் எனும் பெயர் தனிமையும் முத்தியும் 
** 578

#231
கேட்டை எனும் பெயர் புரந்தரன்நாளும்
அசைச்சொல் பெயரும் மூதேவியும் ஆமே 
** 579

#232
கேள்வி எனும் பெயர் கல்வியும் செவியும் ஆம் 
** 580

#233
கேகயம் எனும் பெயர் மயிலும் ஓர் பண்ணும்
அசுணமாவின்பெயரும் ஆமே 
** ககர ஏகார வருக்கம் முற்றும்
** ககர ஐகார வருக்கம்
** 581

#234
கை எனும் பெயர் அலங்கரித்தலும் சிறுமையும்
தானையினுறுப்பும் தங்கையும் செங்கையும்
ஒழுக்கமும் இடமும் குற்றமும் சார்பும் ஆம் 
** 582

#235
கைத்தல் எனும் பெயர் கைப்பும் சினமும் ஆம் 
** 583

#236
கைக்கிளை எனும் பெயர் ஒருதலைக்காமமும்
இசையின்விகற்பமும் இயம்பப்பெறுமே 
** ககர ஐகார வருக்கம் முற்றும்
** ககர ஒகர வருக்கம்
** 584

#237
கொடிறு எனும் பெயர் அசுரர்குருவின்நாளும்
கவுளியின்பெயரும் கருவிப்பற்றும் ஆம் 
** 585

#238
கொக்கு எனும் பெயரே குதிரையும் மூலமும்
பேகமும் செந்நாயும் மாமரமும் பேசுவர் 
** 586

#239
கொன் எனும் பெயரே ஓர் அசைச்சொல்லும்
பெருமையும் காலமும் வறிதும் அச்சமும்
பயனிலாததும் பகருவர் புலவர் 
** 587

#240
கொற்றி எனும் பெயர் கோ இளங்கன்றும்
துர்க்கையும் கொத்தியும் சொல்லப்பெறுமே 
** 588

#241
கொண்மூ எனும் பெயர் மேகம் ஆகாயமும் ஆம் 
** 589

#242
கொந்தளம் எனும் பெயர் கோதையர்மயிரும்
குருளையும் கருங்குழல்கொத்தும் ஆமே 
** 590

#243
கொடியன் எனும் பெயர் கொடியவன் பெயரும்
கேதுவின்பெயரும் கிளர்த்தப்பெறுமே 
** 591

#244
கொம்மை எனும் பெயர் கொங்கையும் பெலமும்
இளமையும் அங்கை குவித்துக்கொட்டலும்
வட்டவடிவும் திடரும் வழங்குவர் 
** 592

#245
கொண்டை எனும் பெயர் இரந்தையின்கனியும்
மயிர்முடிப் பெயரும் வழங்கப்பெறுமே 
** 593

#246
கொற்றம் எனும் பெயர் அரசியல் பெயரும்
வெற்றியின்பெயரும் விளம்புவர் புலவர் 
** 594

#247
கொல் எனும் பெயர் கொலையேவலும் அசைச்சொல்லும்
ஐயமும் வருத்தமும் செங்கொல்லும் கருங்கொல்லும்  
** 595

#248
கொடி எனும் பெயரே ஒழுங்கும் வல்லியும்
துவசமும் காக்கையின்பெயரும் சொல்லுவர் 
** ககர ஒகர வருக்கம் முற்றும்
** ககர ஓகார வருக்கம்
** 596

#249
கோடை எனும் பெயர் மேற்றிசைக்காற்றும்
குதிரையும் வெயிலும் வெண்காந்தளும் கூறுவர் 
** 597

#250
கோ எனும் பெயரே குலிசமும் தலைவனும்
அம்பும் பூமியும் அறலும் கிரணமும்
சுவர்க்கமும் விழியும் சூழ் பெருந்திசையும்
மலையும் பதவும் வானமும் இரக்கமும்
குறிப்பின் வார்த்தையும் கூறுவர் புலவர் 
** 598

#251
கோள் எனும் பெயரே ஒன்பான்கிரகமும்
வலியும் கொள்கையும் கொலையும் இடையூறும்
குறளையின் புன்சொல்லும் கூறப்பெறுமே 
** 599

#252
கோலம் எனும் பெயர் கொழுந்தும் நீரோட்டமும்
பாக்கும் பீர்க்கும் பன்றியும் அழகும்
இரந்தையும் இரந்தைக்கனிக்கும் இயம்புவர் 
** 600

#253
கோட்டம் எனும் பெயர் கோயிலும் நாடும்
கோட்டமும் வளைவும் உண்கலனும் ஆன்கொட்டிலும்
குரவும் மனக்கோட்டமும் எனக் கூறுவர் 
** 601

#254
கோத்திரம் எனும் பெயர் குடியும் மலையும்
புவனியும் எனவே புகன்றனர் புலவர் 
** 602

#255
கோடு எனும் பெயரே மலையின்குவடும்
வார் புனல்கரையும் விலங்கின்மருப்பும்
மரத்தின்பணையும் ஊதும்கொம்பும்
சங்கின்பெயரும் சாற்றப்பெறுமே 
** 603

#256
கோசம் எனும் பெயர் மதில்உறுப்பும் முட்டையும்
பொத்தகமும் பொருள் பொருந்து பெட்டகமும்
ஆண்குறிப் பெயரும் ஆகும் என்ப 
** 604

#257
கோட்டி எனும் பெயர் கோபுரவாயிலும்
ஈட்டு பலசபையும் இயம்பப்பெறுமே 
** 605

#258
கோதை எனும் பெயர் மடந்தையர்குழலும்
சேரனும் உடும்பும் சிறந்த கைக்கட்டியும்
மாலையும் காற்றின்பெயரும் வழங்குவர் 
** 606

#259
கோண் எனும் பெயரே வளைவும் கூனும் ஆம் 
** 607

#260
கோடகம் எனும் பெயர் முடியினதுஉறுப்பும்
குதிரையும் புதுமையும் கூறப்பெறுமே 
** 608

#261
கோரம் எனும் பெயர் கொடுமையும் வட்டிலும்
சோழன்குதிரையும் சொல்லப்பெறுமே 
** 609

#262
கோசிகம் எனும் பெயர் பட்டும் கூறையும்
சாமவேதமும் எனச் சாற்றுவர் புலவர் 
** 610

#263
கோடிகம் எனும் பெயர் கூறையின்பெயரும்
பூவின்தட்டும் புகலப்பெறுமே 
** 611

#264
கோடரம் எனும் பெயர் குரங்கும் குதிரையும்
மரத்தின்கோடும் எட்டிமரச்செறிவும் ஆம் 
** 612

#265
கோகுலம் எனும் பெயர் குயிலொடு குரங்கும்
பல்லியும் எனவே பகர்ந்தனர் புலவர் 
** 613

#266
கோளி எனும் பெயர் கொளிஞ்சிமரமும்
அத்தி ஆல் பூவாதுகாய்க்கும்மரமும் ஆம் 
** 614

#267
கோழி எனும் பெயர் சோழன் உறையூரும்
ஆண்டலைப்புள்ளும் ஆம் என உரைப்பர் 
** 615

#268
கோணம் எனும் பெயர் குதிரையும் மூக்கும்
அங்குசமும் கூன்வாளும் ஆமே 
** 616

#269
கோடி எனும் பெயர் தூசும் புதுமையும்
ஓர் எண் பெயரும் உரைக்கப்பெறுமே 
** 617

#270
கோணல் எனும் பெயர் கூனலும் வளைதலும்
மாறுபடுகுணத்தின்பெயரும் வழங்கும் 
** 618

#271
கோல் எனும் பெயரே யாழின்நரம்பும்
அம்பும் துலாமும் தூரிகைக்கோலும்
அஞ்சனக்கல்லும் அளந்திடுகோலும்
குதிரை மத்திகையும் திரட்சியும் ஈட்டியும்
இறைமுறை நடத்தல் வாட்கோலும் இயம்புவர் 
** ககர ஓகார வருக்கம் முற்றும்
** ககர ஒளகார வருக்கம்
** 619

#272
கெளசிகம் எனும் பெயர் ஓர் இசையுடன்
கூகையும் சுடர்நிலைத்தண்டும் பட்டும் ஆம் 
** 620

#273
கௌவை எனும் பெயர் கள்ளும் துன்பமும்
எள்ளிளங்காயும் பழிச்சொலும் ஓசையும் 
** 621

#274
கெளந்தி எனும் பெயர் பாண்டவரன்னையும்
அருந்தவப்பெண் பெயரும் ஆமே 
** 622

#275
கெளடம் எனும் பெயர் ஒரு தேசத்துடன்
ஒரு கொடிப் பெயரும் உரைக்கப்பெறுமே 
** ககர ஔகார வருக்கம் முற்றும்
** ககர வருக்கம் முற்றும்

@3 வது சகர வருக்கத் தொகுதி
** சகர வருக்கம்
** 623

#1
சம்பு எனும் பெயர் சங்கரன் திருமால்
நான்முகன் நாவல் நரியும் ஓர் புல்லும்
சூரியன் பெயரும் சொல்லப்பெறுமே 
** 624

#2
சத்தி எனும் பெயர் வேலும் பெலமும்
உமையும் துவசமும் குடை முற்காரமும் 
** 625

#3
சமன் எனும் பெயரே இயமனும் நடுவும் ஆம் 
** 626

#4
சதி எனும் பெயரே தாளவொத்துடன்
உரோகிணிப் பெயரும் கற்பாட்டியும் ஆம் 
** 627

#5
சந்தி எனும் பெயர் அந்திப்பொழுதும்
மூங்கிலும் சதுக்கமும் மொழியப்பெறுமே 
** 628

#6
சரி எனும் பெயர் கைவளையும் வழியும் ஆம் 
** 629

#7
சரணம் எனும் பெயர் தாளும் கரமும்
சார்பும் எனவே சாற்றுவர் புலவர் 
** 630

#8
சடை எனும் பெயர் கோடீரமும் வேரும் ஆம் 
** 631

#9
சவி எனும் பெயரே அழகும் பெலமும்
மணிக்கோவை வடமும் ஒளியும் வழங்கும் 
** 632

#10
சரம் எனும் பெயரே தனி மணிவடமும்
அம்பும் சமரும் கொறுக்கச்சியும் ஆம் 
** 633

#11
சலாகை எனும் பெயர் சவளப்பெயரோடு
நாராசமும் நல் மணியும் நவின்றனர் 
** 634

#12
சகுனி எனும் பெயர் நிமித்தம்பார்ப்பவனும்
பறவையின்பொதுவும் பகரப்பெறுமே 
** 635

#13
சத்திரம் எனும் பெயர் அன்னசாலையும்
கைவிடாப்படையும் கவின்பெறு குடையும்
குடையினது இரும்பும் வேள்வியும் கூறுவர் 
** 636

#14
சடம் எனும் பெயரே பொய்யும் சரீரமும்
கொடுமையும் எனவே கூறப்பெறுமே 
** 637

#15
சகுந்தம் எனும் பெயர் புள்ளின்பொதுவும்
கழுகும் எனவே கருதுவர் புலவர் 
** 638

#16
சகுனம் எனும் பெயர் புள்பொதுப் பெயரும்
நிமித்தமும் கிழங்கும் நிகழ்த்தப்பெறுமே 
** 639

#17
சடிலம் எனும் பெயர் சடையும் நெருக்கமும் 
** 640

#18
சக்கிரி எனும் பெயர் தராபதி அரவுடன்
மிக்க சீர் முகுந்தன் செக்கான் குயவன் ஆம் 
** 641

#19
சசி எனும் பெயரே மதியும் கற்பூரமும்
இந்திரன்மனைவியும் வெண்மையும் இயம்புவர் 
** 642

#20
சங்கம் எனும் பெயர் அன்பும் சபையும்
வென்றியும் கவிஞரும் ஓர் எண் பெயரும்
கணைக்கால் சங்கின்பெயரும் கருதுவர் 
** 643

#21
சண்டன் எனும் பெயர் சூரியன் யமனுடன்
நபுஞ்சகன் பெயரும் நவிலப்பெறுமே 
** 644

#22
சக்கரம் எனும் பெயர் சுதரிசனமும்
சக்கரயூகமும் சகதலப்பெயரும்
தேரினுருளும் பெருமையும் பிறப்பும்
நேமிப்புள்ளும் கடலும் சகடமும்
வட்டமும் திகிரி வரையும் செப்புவர் 
** 645

#23
சத்தியம் எனும் பெயர் சபதமும் மெய்யும் ஆம் 
** 646

#24
சந்தம் எனும் பெயர் நிறமும் அபிராமமும்
சாந்தமும் இனம்பெறு கவிதையும் சாற்றுவர் 
** 647

#25
சலம் எனும் பெயரே பொய்யும் கோபமும்
புள்ளின்பெயரும் நடுக்கமும் புகலுவர் 
** 648

#26
சயம் எனும் பெயரே சருக்கரை வென்றி ஆம் 
** 649

#27
சரபம் எனும் பெயர் சிம்புள் வரையாடும் ஆம் 
** 650

#28
சராவம் எனும் பெயர் விளக்கின் தகளியும்
சலாகையும் எனவே சாற்றினர் புலவர் 
** 651

#29
சமழ்த்தல் எனும் பெயர் அழித்தலும் நாணமும் 
** 652

#30
சயிந்தவம் எனும் பெயர் கலையும் குதிரையும்
இந்துப்பின்பெயர்தானும் இயம்புவர் 
** 653

#31
சகம் எனும் பெயரே புள்ளின்சிறகும்
இலையும் ஓர் இலக்கமும் இயம்பப்பெறுமே 
** சகர அகர வருக்கம் முற்றும்
** சகர ஆகார வருக்கம்
** 654

#32
சான்றார் எனும் பெயர் சார்புள் எனும் பெயரும்
அருக்கனும் மிருகசீரிடமும் மானே 
** 655

#33
சாதகம் எனும் பெயர் பூதமும் சனனமும்
வானம்பாடிப்புள்ளும் வழங்குவர் 
** 656

#34
சாமி எனும் பெயர் தலைவனும் அரசனும்
குரவனும் வியாழமும் கூறுவர் புலவர் 
** 657

#35
சாமம் எனும் பெயர் பச்சைநிறமும்
யாமமும் இரவும் ஓர் வேதமும் இயம்புவர் 
** 658

#36
சானு எனும் பெயர் மலையின்பக்கமும்
மலையும் முழந்தாள் பெயரும் வழங்கும் 
** 659

#37
சாரல் எனும் பெயர் மலையின்பக்கமும்
மருதயாழ்த்திறத்துஓர்ஓசையும் வழங்கும் 
** 660

#38
சானகி எனும் பெயர் சீதையும் மூங்கிலும் 
** 661

#39
சாம்பல் எனப் பெயர் பழம்பூவும் சாம்பரும்
முற்றுதல் எனவும் மொழியப்பெறுமே 
** 662

#40
சாலம் எனும் பெயர் ஆச்சாரமரமும்
மதிலும் சாளரப்பெயரும் வலையும் ஆம் 
** 663

#41
சாலேகம் என்னும் பெயர் பூ அரும்பும்
வாதாயனமும் வகுக்கப்பெறுமே 
** 664

#42
சாதி எனும் பெயர் பிரம்பும் தேறலும்
தேனும் தேக்கும் சிறுசண்பகமும்
சாதியின்விகற்பமும் சாற்றப்பெறுமே 
** 665

#43
சாறு எனும் பெயரே தாழமரக்குலையும்
வேரியும் உயர் திருவிழாவும் ஆமே 
** 666

#44
சாலி எனும் பெயர் நெல்பொதுப் பெயரும்
வேரியும் அருந்ததிப் பெயரும் விளம்புவர் 
** 667

#45
சார்ங்கம் எனும் பெயர் வில்பொதுப் பெயரும்
மாயோன்சிலையும் வகுத்துரைத்தனரே 
** 668

#46
சாபம் எனும் பெயர் சபித்தலும் சிலையும் ஆம் 
** 669

#47
சாகம் எனும் பெயர் சாகினிவிகற்பமும்
தேனீப் பெயரும் வெள்ளாடும் தேக்கும் ஆம் 
** 670

#48
சாகினி எனும் பெயர் தழைத்திடு சேம்பொடு
கீரையின்விகற்பமும் கிளத்தப்பெறுமே 
** 671

#49
சாரங்கம் எனும் பெயர் மானும் வண்டும் ஆம் 
** 672

#50
சாரிகை எனும் பெயர் சூறையும் சுங்கமும்
நாகணவாய்ப்புள் பெயரும் நவிலுவர் 
** 673

#51
சாயல் எனப் பெயர் மெய்ப்பாட்டின் அழகும்
மேன்மையும் எனவே விளம்பப்பெறுமே 
** 674

#52
சாகரம் எனும் பெயர் துயிலொழிந்திடுதலும்
ஏழ்கடல் பெயரும் இயம்புவர் புலவர் 
** 675

#53
சாலை எனும் பெயர் குதிரைப்பந்தியும்
அறப்புறமடமும் அரசர்தம்கோயிலும்
வழிநடைச்சாலையும் வழங்கப்பெறுமே 
** 676

#54
சால்பு எனும் பெயர் சான்றாண்மையும் இயல்பும் ஆம் 
** 677

#55
சாந்தம் எனும் பெயர் சந்தனமும் பொறுமையும் 
** 678

#56
சாம்பு எனும் பெயர் பறையொடு பொன்னும் ஆம் 
** 679

#57
சார்பு எனும் பெயரே சார்தலும் இடமும் ஆம் 
** 680

#58
சாத்தன் எனும் பெயர் அய்யனும் அருகனும்
புத்தனும் எனவே புகலுவர் புலவர் 
** 681

#59
சாதம் எனும் பெயர் மெய்மையும் பூதமும் 
** 682

#60
சால் எனும் பெயரே உழவின்சாலும்
நீர் பெய் பசானமும் நிகழ்த்துவர் புலவர் 
** சகர ஆகார வருக்கம் முற்றும்
** சகர இகர வருக்கம்
** 683

#61
சிவை எனும் பெயரே நவையிலா உமையுடன்
கொல்லன் உலையும் பெரும் நரியும் ஆம் 
** 684

#62
சிதம் எனும் பெயரே செயமுறப்படுதலும்
ஞானமும் வெளுப்பும் வான்மீனும் ஆம் 
** 685

#63
சிந்து எனும் பெயரே நீரும் கடலும்
நதியும் குறளும் யாப்பின் முச்சீரும்
ஓர் தேசமும் என உரைத்தனர் புலவர் 
** 686

#64
சிதர் எனும் பெயரே சீலைத்துணியும்
துவலையும் முறியும் வண்டும் சொல்லுவர் 
** 687

#65
சிமையம் எனும் பெயர் சிகரமும் குடுமியும் 
** 688

#66
சிலை எனும் பெயரே மலையும் பாறையும்
வில்லும் எனவே விளம்புவர் புலவர் 
** 689

#67
சினை எனும் பெயரே செழும் மரக்கோடும்
கருவின்பெயரும் முட்டையும் உறுப்பும் ஆம் 
** 690

#68
சிலீமுகம் எனும் பெயர் அம்பும் வண்டும்
முலைக்கணின்பெயரும் மொழியப்பெறுமே 
** 691

#69
சிமிலி எனும் பெயர் உறியும் கீழ்வீடும்
குடுமியும் எனவே கூறுவர் புலவர் 
** 692

#70
சிக்கம் எனும் பெயர் சீப்பும் குடுமியும்
உறியும் எனவே உரைத்தனர் புலவர் 
** 693

#71
சிந்துரம் எனும் பெயர் திலகமும் வெட்சியும்
செந்நிறப்பொருள்களும் செங்குடைப் பெயரும்
மதகரிப் பெயர் புளிமாவும் வழங்கும் 
** 694

#72
சிரகம் எனும் பெயர் கரகமும் வட்டிலும்
சென்னியில்கோடும் செப்பப்பெறுமே 
** 695

#73
சிதலை எனும் பெயர் செல்லொடு துணியும் ஆம் 
** 696

#74
சிகண்டி எனும் பெயர் பாலையாழ்த்திறத்தின்
ஓசையும் அலியும் மயிலும் ஆமே 
** 697

#75
சில்லி எனப் பெயர் சிள்வீடும் வட்டமும்
தேருருளும் சிறுகீரையும் செப்புவர் 
** 698

#76
சிறை எனும் பெயரே புள்ளின்இறகும்
காவலும் ஓர்பால் இடமும் கரையும் ஆம் 
** 699

#77
சிவப்பு எனும் பெயரே செம்மையும் சினமும்
சினக்குறிப்பும் எனச் செப்புவர் புலவர் 
** 700

#78
சில்லை எனும் பெயர் பகண்டைப்புள்ளும்
சிள்வீடும் கிலுகிலுப்பையும் செப்புவர் 
** 701

#79
சிகரி எனும் பெயர் மலையும் எலியும்
கருநாரையும் கோபுரமும் கருதுவர் 
** 702

#80
சித்தம் எனும் பெயர் திடமும் உளமும் ஆம் 
** 703

#81
சித்திரன் எனும் பெயர் சித்திரகாரனும்
தச்சனும் எனவே சாற்றப்பெறுமே 
** 704

#82
சிகி எனும் பெயரே மயிலும் கேதுவும்
நெருப்பும் நூபுரமும் நிகழ்த்தப்பெறுமே 
** 705

#83
சித்திரம் எனும் பெயர் சித்திரகவிதையும்
மெய் போல் பொய்யை உரைத்தலும் அழகும்
துணித்தபலபொருளும் அதிசயமும்
செய்சொல்வடிவும் காடும் ஆமணக்கும் ஆம் 
** 706

#84
சித்திரபானு எனும் பெயர் நெருப்பும்
சூரியன் பெயரும் ஓர் ஆண்டும் சொல்லுவர் 
** 707

#85
சிலம்பு எனும் பெயரே மலையும் ஓசையும்
பரிபுரப்பெயரும் பகர்ந்தனர் புலவர் 
** 708

#86
சிகரம் எனும் பெயர் திரையும் திவலையும்
மலையின்உச்சியும் சென்னியும்
கவரிமாவின்பெயரும் கருதுவர் 
** 709

#87
சிகழிகை எனும் பெயர் மயிர்முடிப் பெயரும்
மாலையின்பெயரும் வழங்கப்பெறுமே 
** 710

#88
சிதடன் எனும் பெயர் குருடனும் மூடனும் 
** 711

#89
சிரம் எனும் பெயர் நெடுங்காலமும் சென்னியும் 
** 712

#90
சிவம் எனும் பெயரே முத்தியும் பெருமையும்
குறுணியின்பெயரும் கூறப்பெறுமே 
** 713

#91
சித்து எனும் பெயரே செயமும் ஞானமும் ஆம் 
** சகர இகர வருக்கம் முற்றும்
** சகர ஈகார வருக்கம்
** 714

#92
சீதம் எனும் பெயர் மேகமும் பாலும்
குளிர்ச்சியும் புனலும் கூறுவர் புலவர் 
** 715

#93
சீவன் எனும் பெயர் வியாழமும் உயிரும் 
** 716

#94
சீருள் எனும் பெயர் செல்வமும் செம்பும்
ஈயமும் எனவே இயம்பப்பெறுமே 
** 717

#95
சீவனி எனும் பெயர் செவ்வழியாழ்த்திறத்து
ஓர் இசைப் பெயரும் உயிர்தருமருந்தும் ஆம் 
** 718

#96
சீர் எனும் பெயரே செல்வமும் கீர்த்தியும்
பாரமும் அழகும் பகர்ந்திடு சீர்மையும்
தாளவொத்தும் தடியும் காத்தண்டும்
சொற்சீர் எனவும் சொல்லுவர் புலவர் 
** 719

#97
சீப்பு எனும் பெயரே கதவின் தாழும்
மயிர் வார் சீப்பும் வழங்கப்பெறுமே 
** 720

#98
சீகரம் எனும் பெயர் திரையும் திவலையும்
கவரிமாவும் கருதுவர் புலவர் 
** 721

#99
சீலம் எனும் பெயர் ஒழுக்கமும் குணமும்
தருமமும் எனவே சாற்றுவர் புலவர் 
** 722

#100
சீதை எனும் பெயர் உழுபடைச் சாலும்
இராமன்தேவியும் இயம்பப்பெறுமே 
** சகர ஈகார வருக்கம் முற்றும்
** சகர உகர வருக்கம்
** 723

#101
சுந்தரி எனும் பெயர் உமையும் துர்க்கையும்
சூரனும் எனவே சொல்லுவர் புலவர் 
** 724

#102
சுக்கை எனும் பெயர் வான்மீனொடு
மாலையும் எனவே வகுத்தனர் புலவர் 
** 725

#103
சுசி எனும் பெயரே கோடைக்காலமும்
சுத்தமும் கனலின்பெயரும் சொல்லுவர் 
** 726

#104
சுதை எனும் பெயரே சுண்ணச்சாந்தும்
மறி கடல் அமுதமும் புதல்வியும் வழங்குவர் 
** 727

#105
சுடர் எனும் பெயரே சூரியன் மதி கனல்
விளக்கும் ஒளியும் விளம்பப்பெறுமே 
** 728

#106
சுவவு எனும் பெயர் சுவர்க்கத்தின்பெயரும்
புள்ளின்மூக்கும் சுண்டனும் புகலுவர் 
** 729

#107
சுண்டன் எனும் பெயர் சூரனும் சதையமும் 
** 730

#108
சும்மை எனும் பெயர் ஊர்ப்பொதுப் பெயரும்
நெல் முதல் போரும் நிறைந்த நீர்நாடும்
சுமையோடு சத்தஒலியும் சொல்லுவர் 
** 731

#109
சுவல் எனும் பெயரே தோளின்மேலும்
மேடும் குரகதக்குசையின்மயிரும்
பிடர்த்தலைப் பெயரும் பேசப்பெறுமே 
** 732

#110
சுருங்கை எனும் பெயர் கரந்த கற்படையும்
நுழைவாய்தலும் என நுவலப்பெறுமே 
** 733

#111
சுரியல் எனும் பெயர் ஆண்பால்மயிரும்
பெண்பால்மயிரும் பேசுவர் புலவர் 
** 734

#112
சுரை எனும் பெயரே உள்துளைவடிவும்
ஆவின்முலையும் நறவும் அலாபும் ஆம் 
** 735

#113
சுடிகை எனும் பெயர் சுட்டியும் மகுடமும்
உச்சியும் எனவே மொழியப்பெறுமே 
** 736

#114
சுரிகை எனும் பெயர் உடைவாளுடனே
மெய்புகுகருவியும் விளம்புவர் புலவர் 
** 737

#115
சுகம் எனும் பெயரே இன்பமும் கிளியும் ஆம் 
** 738

#116
சுரர்குரு எனும் பெயர் தேவர்மந்திரியும்
இந்திரன் பெயரும் இயம்பப்பெறுமே 
** 739

#117
சுவேதம் எனும் பெயர் வெண்மையும் வெயர்வும் ஆம் 
** 740

#118
சுவாமி எனும் பெயர் முருகனும் வியாழமும்
குருவும் தலைவனும் கூறுவர் புலவர் 
** 741

#119
சுருதி எனும் பெயர் வேதமும் ஒலியும் ஆம் 
** 742

#120
சுரம் எனும் பெயரே வழியும் காடும்
அருநெறிப் பெயரும் பாலைநிலமும் ஆம் 
** சகர உகர வருக்கம் முற்றும்
** சகர ஊகார வருக்கம்
** 743

#121
சூரன் எனும் பெயர் சூரியன் பெயரும்
தீரனும் அருகனும் நாயையும் செப்புவர் 
** 744

#122
சூர் எனும் பெயரே தெய்வமும் நோயும்
வஞ்சமும் அஞ்சாமையுமே வழங்கும் 
** 745

#123
சூழி எனும் பெயர் கரி முகபடாமும்
வாவியும் எனவே வகுத்துரைத்தனரே 
** 746

#124
சூதகம் எனும் பெயர் பிறப்பின்பெயரும்
ஆசூசப்பெயர்தானும் ஆமே 
** 747

#125
சூத்திரம் எனும் பெயர் நூற்பா அகவலும்
நூற்கும் வெண்ணூலும் நுவல் பல்பொறியும் ஆம் 
** 748

#126
சூதன் எனும் பெயர் சூதாடுபவனும்
சூதுசேருளத்தனும் தேர்ப்பாகனும் ஆம் 
** 749

#127
சூதம் எனும் பெயர் பரதாரத்தொடு
மாமரம் எனவும் வழங்குவர் புலவர் 
** 750

#128
சூழல் எனும் பெயர் விசாரமும் இடமும் ஆம் 
** சகா ஊகார வருக்கம் முற்றும்
** சகர எகர வருக்கம்
** 751

#129
செவ்வி எனும் பெயர் பொழுதும் பருவமும் 
** 752

#130
செல் எனும் பெயரே இடியும் மேகமும்
முன்னிலைஏவலும் சிதலும் மொழிந்தனர் 
** 753

#131
செந்து எனும் பெயரே சீவனும் சிவப்பும்
ஓரியும் அணுவும் நரகத்தில்ஒன்றும் ஆம் 
** 754

#132
செப்பம் எனும் பெயர் நடுநிலைப் பெயரும்
தெருவும் செவ்வையும் நெஞ்சமும் செப்புவர் 
** 755

#133
செம்புலம் எனும் பெயர் வன்பாலைநிலமும்
பொருகளமும் எனப் புகன்றனர் புலவர் 
** 756

#134
செய்யல் எனும் பெயர் சேறும் ஒழுக்கமும்
காவலும் எனவே கருதப்பெறுமே 
** 757

#135
செம்மல் எனும் பெயர் சீவனும் செயினனும்
தலைவனும் சிறுவனும் வீரனும் பெருமையும்
பழம்பூவும் எனப் பகர்ந்தனர் புலவர் 
** 758

#136
செவிலி எனும் பெயர் முன்பிறந்தாளும்
வளர்த்த கைத்தாயும் வகுத்தனர் புலவர் 
** 759

#137
செழுமை எனும் பெயர் வளமையும் கொழுப்பும்
வனப்பும் மாட்சிமையும் வழங்குவர் புலவர் 
** 760

#138
செடி எனும் பெயரே ஒளியும் செறிவும்
பாவமும் குணமின்மைப் பெயரும் பகர்ந்தனர் 
** 761

#139
செத்து எனும் பெயரே செம்மையும் உவமையும்
அசைச்சொலும் உறுப்பும் கருத்தும் சந்தேகமும் 
** 762

#140
செட்டி எனும் பெயர் முருகன் பெயரும்
வணிகனும் எனவே வழங்கப்பெறுமே 
** 763

#141
செச்சை எனும் பெயர் வெள்ளாட்டுஏறொடு
வெட்சி செஞ்சாந்தும் விளம்புவர் புலவர் 
** 764

#142
செவி எனும் பெயரே கேள்வியும் காதும் ஆம் 
** 765

#143
செம்மை எனும் பெயர் சிவப்பும் செவ்வையும் 
** 766

#144
செப்பு எனும் பெயர் பணிச்செப்பும் செப்பலும் 
** 767

#145
செய் எனும் பெயரே செய்தொழில் பெயரும்
ஒழுக்கமும் எனவே உரைக்கப்பெறுமே 
** 768

#146
செயிர் எனும் பெயரே சினமும் குற்றமும் 
** சகர எகர வருக்கம் முற்றும்
** சகர ஏகார வருக்கம்
** 769

#147
சே எனும் பெயரே சிவப்பும் செவ்வேளும்
செவ்வாய்க்கிரகமும் சிறுவனும் நீளமும்
தூரமும் இளமையும் சொல்லுவர் புலவர் 
** 770

#148
சேடி எனும் பெயர் விஞ்சையர் நகரமும்
சிலதியும் எனவே செப்பப்பெறுமே 
** 771

#149
சேக்கை எனும் பெயர் முலையும் சயனமும்
விலங்குதுயிலிடமும் விளம்புவர் புலவர் 
** 772

#150
சேடன் எனும் பெயர் அனந்தனும் பாங்கனும்
இளையோன் பெயருடன் அடிமையும் இயம்புவர் 
** 773

#151
சேண் எனும் பெயரே அகலமும் நீளமும்
உயரமும் எனவே உரைக்கப்பெறுமே 
** 774

#152
சேடு எனும் பெயரே சிறப்பும் நன்மையும்
அழகும் திரட்சியும் இளமையும் ஆமே 
** 775

#153
சேதகம் எனும் பெயர் சேறும் செந்நிறமும் ஆம் 
** 776

#154
சேவல் எனும் பெயர் புள்ளின்ஆண்பாலும்
காவலும் சேறும் சாவலும் கருதுவர் 
** 777

#155
சேவகம் எனும் பெயர் யானைதுயிலிடமும்
வீரமும் எனவே விளம்புவர் புலவர் 
** 778

#156
சேதாரம் எனப் பெயர் தேமாவும் வெட்சியும்
பொன்னின்பெயரும் புகன்றனர் புலவர் 
** சகர ஏகார வருக்கம் முற்றும்
** சகர ஐகார வருக்கம்
** 779

#157
சைவம் எனும் பெயர் புராணத்திலொன்றும்
சிவசமயத்தின்விகற்பமும் செப்புவர் 
** சகர ஐகார வருக்கம் முற்றும்
** சகர ஒகர வருக்கம்
** 780

#158
சொல் எனும் பெயரே கீர்த்தியும் வார்த்தையும்
நெல்லும் பல்கலைப்பெயரும் நிகழ்த்துவர் 
** 781

#159
சொர்க்கம் எனும் பெயர் சுவர்க்கமும் முலையும் ஆம் 
** சகர ஒகர வருக்கம் முற்றும்
** சகர ஓகார வருக்கம்
** 782

#160
சோதி எனும் பெயர் ஒரு நாள்மீனும்
அருகனும் அரனும் ஆதித்தனும் விளக்கும்
தாராகணமும் விளம்புவர் புலவர் 
** சகர ஓகார வருக்கம் முற்றும்
** சகர ஒளகார வருக்கம்
** 783

#161
செளரி எனும் பெயர் சளியும் கன்னனும்
இமயனும் கண்ணனும் யமுனைநதியும் ஆம் 
** 784

#162
செளரியம் எனும் பெயர் வீரமும் களவும் ஆம் 
** சகர ஒளகார வருக்கம் முற்றும்
** சகர வருக்கத் தொகுதி முற்றும்

@4  வது ஞகர வருக்கத் தொகுதி
** ஞகர அகர வருக்கம்
** 785

#1
ஞமலி எனும் பெயர் நாயும் மயிலும்
கள்ளும் எனவே கருதப்பெறுமே 
** ஞகர அகர வருக்கம் முற்றும்
** ஞகர ஆகார வருக்கம்
** 786

#2
ஞாளி எனும் பெயர் நறவும் நாயும் ஆம் 
** 787

#3
ஞாட்பு எனும் பெயரே பாரமும் கூட்டமும்
செருவும் எனவே செப்புவர் புலவர் 
** 788

#4
ஞானம் எனும் பெயர் கல்வியும் அறிவும்
தத்துவநூலும் சாற்றப்பெறுமே 
** 789

#5
ஞாங்கர் எனும் பெயர் பக்கமும் மேலும்
வேலும் எனவே விளம்பப்பெறுமே 
** ஞகர ஆகார வருக்கம் முற்றும்
** ஞகர எகர வருக்கம்
** 790

#6
ஞெள்ளல் எனும் பெயர் தெருவும் மேன்மையும்
பள்ளமும் எனவே பகர்ந்தனர் புலவர் 
** 791

#7
ஞெரேல் எனும் பெயர் விரைவும் ஒலியும் ஆம் 
** 792

#8
ஞெமிர்தல் எனும் பெயர் முறிதலும் பரத்தலும் 
** 793

#9
ஞெகிழி எனும் பெயர் நெருப்புறு விறகும்
தீயுடன் அனல் பொறி சிலம்பும் ஆமே 
** ஞகர எகர வருக்கம் முற்றும்
** ஞகர ஒகர வருக்கம்
** 794

#10
ஞொள்கல் எனும் பெயர் நொய்படுவனவும்
இளைத்தலும் அச்சக்குறிப்போடு சோம்பும் ஆம் 
**ஞகர ஒகர வருக்கம் முற்றும்
** ஞகர வருக்கத் தொகுதி முற்றும்

@5 வது தகர வருக்கத் தொகுதி
** தகர அகர வருக்கம்
** 795

#1
தரணி எனும் பெயர் தரு கதிர் இரவியும்
நிலமும் சயிலமும் நிகழ்த்துவர் புலவர் 
** 796

#2
தமம் எனும் பெயரே ராகுவும் இருளும் ஆம் 
** 797

#3
தண்டு எனும் பெயரே தடியும் மிதுனமும்
சிவிகையின்பெயரும் செருமிகு தானையும்
வரம்பும் வீணையும் குழாயும் வழங்குவர் 
** 798

#4
தழல் எனும் பெயரே கிளிகடிகருவியும்
நெருப்பும் எனவே நிகழ்த்துவர் புலவர் 
** 799

#5
தண்ணடை எனும் பெயர் மருதநிலவூரும்
நாடும் எனவே நவிலப்பெறுமே 
** 800

#6
தண்டம் எனும் பெயர் தண்டாயுதமும்
சேனையும் யானைசெல்வழியும் தெண்டித்தலும் 
** 801

#7
தடம் எனும் பெயரே மலையும் பொய்கையும்
பெருமையும் அகலமும் மலையடிவழியும்
வளைவும் குளக்கரைப் பெயரும் வழங்குவர் 
** 802

#8
தடி எனும் பெயரே தனுவும் உலக்கையும்
தசையும் உடும்பும் தண்டாயுதமும்
வயலொடு மின்னும் வகுத்தனர் புலவர் 
** 803

#9
தனஞ்செயன் எனும் பெயர் சவ்வியசாசியும்
மெய்யின் மாருதவிகற்பத்தின் ஒன்றும்
நெருப்பும் எனவே நிகழ்த்துவர் புலவர் 
** 804

#10
தளிமம் எனும் பெயர் சயனமும் மெத்தையும்
அழகின்பெயரும் ஆகும் என்ப 
** 805

#11
தத்தை எனும் பெயர் முன்பிறந்தாளும்
கிளியும் எனவே கிளத்துவர் புலவர் 
** 806

#12
தனு எனும் பெயரே சடமும் சிறுமையும்
வில்லின்பெயரும் ஓர் இராசியும் விளம்புவர் 
** 807

#13
தளை எனும் பெயரே தமிழ்நூல்பாதமும்
மலர்முகைமுறுக்கும் ஆண்பால்மயிரும்
தொடரொடு சிலம்பும் தொடையலும் சொல்லுவர் 
** 808

#14
தனம் எனும் பெயர் சந்தனமும் பொன்னும்
முத்திறப்பொருளும் முலையும் ஆன்கன்றும் ஆம் 
** 809

#15
தவிசு எனும் பெயரே மெத்தையும் தடுக்கும்
பலகையும் பீடமும் பகர்ந்தனர் புலவர் 
** 810

#16
தளம் எனும் பெயரே தாழியும் சாந்தமும்
படையும் பூவிதழ்ப் பெயரும் பகர்ந்தனர் 
** 811

#17
தண்ணம் எனும் பெயர் தரித்தடா மழுவும்
ஒருகண்பறையும் உரைக்கப்பெறுமே 
** 812

#18
தட்டை எனும் பெயர் கரடிகைப்பறையும்
கிளிகடிகருவியும் தினைத்தாளும் முண்டமும்
மூங்கிலும் எனவே மொழிந்தனர் புலவர் 
** 813

#19
தம்பம் எனும் பெயர் மெய்புகுகருவியும்
கம்பமும் பற்றுக்கோடும் கருதுவர் 
** 814

#20
தண்மை எனும் பெயர் தாழ்வும் எளிமையும்
குளிர்ச்சியும் புலவோர் கூறப்பெறுமே 
** 815

#21
தகடு எனும் பெயரே ஐமைவடிவும்
இலையும் எனவே இயம்புவர் புலவர் 
** 816

#22
தரா எனும் பெயரே சங்கும் மதுகமும் 
** 817

#23
தருமராசன் எனும் பெயர் யமனும்
அருகனும் புத்தனும் பாண்டுமைந்தனும் ஆம் 
** 818

#24
தட்டு எனும் பெயரே நடுவள்தேரும்
திரிகையும் பரிசையும் பகுத்தலும் தடுத்தலும்
வட்டமும் பூத்தட்டு முதலவும் வழங்கும் 
** 819

#25
தன்மை எனும் பெயர் தன்மையின் இடமும்
இயல்பும் எனவே இயம்புவர் புலவர் 
** 820

#26
தளி எனும் பெயரே துளியும் கோயிலும்
தளம் நடத்திய சமர்த்தலமும் புகலுவர் 
** 821

#27
தகை எனும் பெயரே பெருமையும் அழகும்
அன்பும் பண்பும் இயல்பும் ஆமே 
** 822

#28
தபுதல் எனும் பெயர் சாதலும் கேடும் ஆம் 
** 823

#29
தமிழ் எனும் பெயரே தமிழின்விகற்பமும்
நீர்மையும் இனிமையும் நிகழ்த்தினர் புலவர் 
** 824

#30
தன்னம் எனும் பெயர் சிறுமை ஆன்கன்றும் ஆம் 
** 825

#31
தபனன் எனும் பெயர் தழலும் அருக்கனும் 
** 826

#32
தலம் எனும் பெயரே பச்சைநிறமும்
இலையும் புவியும் இயம்புவர் புலவர் 
** 827

#33
தசும்பு எனும் பெயரே குடமும் மிடாவும் ஆம் 
** 828

#34
தட்டல் என் பெயர் ஒத்தறுத்தலினுடனே
தடுத்தலின்பெயரும் சாற்றப்பெறுமே 
** 829

#35
தலை எனும் பெயரே இடமும் சென்னியும்
விசும்பும் முதன்மையும் விளம்பப்பெறுமே 
** 830

#36
தவவு எனும் பெயரே மிகுதியும் குறைவும் ஆம் 
** 831

#37
தந்து எனும் பெயரே சாத்திரப்பெயரும்
நூலின்பெயரும் நுவலப்பெறுமே 
** 832

#38
தகைமை எனும் பெயர் அழகும் பெருமையும்
இயல்பும் எனவே இயம்பப்பெறுமே 
** 833

#39
தனி எனும் பெயர் ஒப்பின்மைப் பெயரும்
தனிமையின்பெயரும் சாற்றப்பெறுமே 
** 834

#40
தன்னை எனும் பெயர் முன்பிறந்தானும்
அன்னையும் செவிலியும் ஆகும் என்ப 
** தகர அகர வருக்கம் முற்றும்
** தகர ஆகார வருக்கம்
** 835

#41
தாணு எனும் பெயர் சங்கரன்பெயரும்
தூணும் மலையும் நிலையும் சொல்லிய
ஆ உரிஞ்சு தறிப் பெயரும் ஆமே 
** 836

#42
தாதி எனும் பெயர் அடிமையும் பரணியும் 
** 837

#43
தாலம் எனும் பெயர் கூந்தல்கமுகொடு
ஞாலமும் பனையும் உண்கலமும் நாவும் ஆம் 
** 838

#44
தாரை எனும் பெயர் வழியும் விழியும்
ஒழுங்கும் சின்னமும் உரைக்கப்பெறுமே 
** 839

#45
தாமம் எனும் பெயர் தாரும் பூவும்
மணிவடப்பெயரும் நகரமும் கயிறும்
ஒளியும் கொன்றையும் இருப்பிடப்பொதுவும் ஆம் 
** 840

#46
தாரம் எனும் பெயர் தராவும் நாவும்
வல்லிசைப் பெயரும் வாழ்க்கைத்துணைவியும்
அரும்பண்டப்பெயரும் யாழ்நரம்பிலொன்றும்
வெள்ளியும் எனவே விளம்பப்பெறுமே 
** 841

#47
தானை எனும் பெயர் சேனையும் துகிலும்
ஆயுதப்பொதுவும் ஆகும் என்ப 
** 842

#48
தார் எனும் பெயர் பூந்தாமமும் மலரும்
மாவினுக்குஅணியும் கிண்கிணிமாலையும்
ஒழுங்கோடு தூசிப்படையையும் உரைப்பர் 
** 843

#49
தாழ் எனும் பெயரே கதவிடு தாழும்
பதமும் முயற்சியும் பகரப்பெறுமே 
** 844

#50
தாறு எனும் பெயர் மரக்குலையும் அளவும்
வில்குதைப் பெயரும் முள்கோலும் விளம்புவர் 
** 845

#51
தாது எனும் பெயரே எழுவகைத்தாதும்
பொன்முதலேழும் புவிமுதலைந்தும்
காவிக்கல்லும் கருதப்பெறுமே 
** 846

#52
தாண்டவம் எனும் பெயர் தாவலும் கூத்தும் ஆம் 
** 847

#53
தானம் எனும் பெயர் தருமக்கொடையும்
பல்வகையுதவியும் மதமும் நீராடலும்
சுவர்க்கமும் புலவோர் சொல்லப்பெறுமே 
** 848

#54
தாழை எனும் பெயர் நாளிகேரமும்
கைதையின்பெயரும் கருதப்பெறுமே 
** 849

#55
தா எனும் பெயரே பகையும் கெடுதலும்
பெலமும் வருத்தமும் தாண்டுதல் பெயரும் ஆம் 
** 850

#56
தாம்பு எனும் பெயரே தாமணிக்கயிறும் ஆம் 
** 851

#57
தாபரம் எனும் பெயர் மரமுடன் மலை போல்
நிற்பன யாவையும் உடம்பும் நிகழ்த்துவர் 
** 852

#58
தாசி எனும் பெயர் இயமன்நாளும்
தொழும்பு செய் பெண்ணின்பெயரும் சொல்வர் 
** 853

#59
தாடு எனும் பெயரே தலைமையும் வலியும் ஆம் 
** 854

#60
தாளி எனும் பெயர் தாளிப்புதலும்
பனையும் எனவே பகர்ந்தனர் புலவர் 
** தகர ஆகார வருக்கம் முற்றும்
** தகர இகர வருக்கம்
** 855

#61
திங்கள் எனும் பெயர் மதியும் மாதமும் ஆம் 
** 856

#62
திகை எனும் பெயரே திசையும் சுணங்கும் ஆம் 
** 857

#63
திதி எனும் பெயர் நிலைபேறும் பக்கமும்
காத்தலும் எனவே கருதுவர் புலவர் 
** 858

#64
திணை எனும் பெயரே குலமும் ஒழுக்கமும்
ஐந்திணைப் பெயரும் ஆகும் என்ப 
** 859

#65
திட்டை எனும் பெயர் திண்ணையும் உரலும்
மேடும் எனவே விளம்புவர் புலவர் 
** 860

#66
திகிரி எனும் பெயர் தேரும் தேராழியும்
மலையும் மூங்கிலும் வட்டவடிவும்
சக்கரமும் நேமிப்புள்ளும் சாற்றுவர் 
** 861

#67
திலம் எனும் பெயரே எள்ளும் மஞ்சாடியும் 
** 862

#68
திரு எனும் பெயரே சிறப்பும் செல்வமும்
கமலையும் எனவே கருதப்பெறுமே 
** 863

#69
திரிதல் எனும் பெயர் உலாவும் கெடலும் ஆம் 
** 864

#70
திளைத்தல் எனும் பெயர் அனுபவப்பெயரும்
நிறைவின்பெயரும் நெருங்குதல் பெயரும் ஆம் 
**தகர இகர வருக்கம் முற்றும்
** தகர ஈகார வருக்கம்
** 865

#71
தீ எனும் பெயரே தீமையும் கனலும்
நரகமும் எனவே நவிலப்பெறுமே 
** 866

#72
தீவினை எனும் பெயர் பாவமும் கொடுமையும் 
** 867

#73
தீர்த்தம் எனும் பெயர் திருவிழாவுடனே
புண்ணியதீர்த்தப்பெயரும் புகலுவர் 
** 868

#74
தீர்த்தன் எனும் பெயர் தேவனும் குருவும் ஆம் 
** தகர ஈகார வருக்கம் முற்றும்
** தகர உகர வருக்கம்
** 869

#75
துணங்கறல் என்னும் பெயர் திருவிழாவும்
இருளும் எனவே இயம்புவர் புலவர் 
** 870

#76
துடி எனும் பெயரே காலநுட்பமும்
சிற்றேலமும் ஏழ்மாதர்நிருத்தமும்
சிறுபறையும் கூதாளமும் செப்புவர் 
** 871

#77
துத்தி எனும் பெயர் முலையின் சுணங்கும்
பாம்பின் படத்தின் பொறியும் ஓர் புதலும் ஆம் 
** 872

#78
துண்டம் எனும் பெயர் சாரைப்பாம்பும்
கண்டமும் முகமும் மூக்கும் கருதுவர் 
** 873

#79
துருத்தி எனும் பெயர் ஆற்றிடைக்குறையும்
சருமமும் எனவே சாற்றுவர் புலவர் 
** 874

#80
துகள் எனும் பெயர் நுண்பொடியும் குற்றமும் 
** 875

#81
துவக்கு எனும் பெயரே தோலும் பிணக்கும் ஆம் 
** 876

#82
துத்தம் எனும் பெயர் யாழின்நரம்பும்
எழுவகையினோர்விகற்பமும் வயிறும்
பாலும் ஓர் மருந்தும் பகரப்பெறுமே 
** 877

#83
துப்பு எனும் பெயரே துணைக்காரணமும்
அரக்கும் ஆயுதமும் பெலமும் பவளமும்
நெய்யும் பொலிவும் அனுபவப்பெயரும் ஆம் 
** 878

#84
துரோணம் எனும் பெயர் தும்பையும் சிம்புளும்
பதக்கொடு காகமும் சிலையும் பகருவர் 
** 879

#85
துணி எனும் பெயரே துண்டமும் சீரையும்
சோதிநாள் பெயரும் சொல்லுவர் புலவர் 
** 880

#86
தும்பி எனும் பெயர் சுரையும் யானையும்
வண்டும் மதுவும் வழங்கப்பெறுமே 
** 881

#87
துளி எனும் பெயர் மழைத்துளி பெண்ஆமை ஆம் 
** 882

#88
துஞ்சல் எனப் பெயர் நிலைபேறும் உறக்கமும்
மரணமும் எனவே வழங்கப்பெறுமே 
** 883

#89
துணை எனும் பெயரே உழவும் சகாயமும்
உவமையும் உவமையும் உரைத்தனர் புலவர் 
** 884

#90
தும்பு எனும் பெயரே தோடும் சிம்புளும் 
** 885

#91
துவை எனும் பெயர் பிண்ணாக்கும் இறைச்சியும்
பருகுவ புளிங்கறிப் பெயரும் பகருவர் 
** 886

#92
துனி எனும் பெயரே புலவிநீடுதலும்
கோபமும் வரியும் கூறுவர் புலவர் 
** 887

#93
துன்னல் எனும் பெயர் குறுகலும் செறிவும் ஆம் 
** 888

#94
துணங்கை எனும் பெயர் திருவிழாவுடனே
மெய்க்கூத்து எனவும் விளம்புவர் புலவர் 
** 889

#95
துளும்பல் எனும் பெயர் அலைதலும் திமிறலும் 
** 890

#96
துணிதல் எனும் பெயர் துணிபடல் பெயரும்
தெளிவும் எனவே செப்பப்பெறுமே 
** தகர உகர வருக்கம் முற்றும்
** தகர ஊகார வருக்கம்
** 891

#97
தூம்பு எனும் பெயரே உள்துளைவடிவும்
நீர்நுழையிடமும் மரக்காலும் மூங்கிலும் 
** 892

#98
தூசு எனும் பெயரே தூசிப்படையும்
புரோசைக்கயிறும் புடவையும் யானையும் 
** 893

#99
தூ எனும் பெயரே சுசியும் இறைச்சியும்
பற்றுக்கோடும் பகரப்பெறுமே 
** 894

#100
தூரியம் எனும் பெயர் பேரெருதுடனே
முரசமும் எனவே மொழியப்பெறுமே 
** 895

#101
தூக்கு எனும் பெயரே உறியும் துலாமும்
கூத்தும் ஆராய்தலும் கூறு சொற்கலையும் ஆம் 
** 896

#102
தூங்கல் எனும் பெயர் துயிலும் சோம்பும்
குறைவும் தந்தியும் கூத்தின்பெயரும் ஆம் 
** தகர ஊகார வருக்கம் முற்றும்
** தகர எகர வருக்கம்
** 897

#103
தெய் எனும் பெயரே கொலையும் தெய்வமும் 
** 898

#104
தென் எனும் பெயரே தெற்கும் அழகும்
கற்புடன் இசையும் இலாங்கலிப் பெயரும் ஆம் 
** 899

#105
தெவ் எனும் பெயரே பகையும் சமரும் ஆம் 
** 900

#106
தெவிட்டல் எனும் பெயர் நிறைதலும் ஒலியும்
கான்றலும் அடைத்திடல் பெயரும் கருதுவர் 
** 901

#107
தெய்வம் எனும் பெயர் புத்தேளும் வாசமும் 
** தகர எகர வருக்கம் முற்றும்
** தகர ஏகார வருக்கம்
** 902

#108
தேள் எனும் பெயரே தெறுக்காலுடனே
விருச்சிகராசியும் அனுடமும் விளம்புவர் 
** 903

#109
தேசிகன் எனும் பெயர் குருவும் வணிகனும்
தேசாந்திரியையும் செப்பப்பெறுமே 
** 904

#110
தேம் எனும் பெயரே தித்திப்பும் வாசமும்
தேசமும் திசையும் இடமும் செப்புவர் 
** 905

#111
தேசிகம் எனும் பெயர் திசைச்சொல்லும் ஒளியும்
அரும் பொன்னும் கூத்தின்விகற்பும் அழகும் ஆம் 
** 906

#112
தேர்தல் எனும் பெயர் கொள்கையின்பெயரும்
ஆராய்தலுமே ஆகும் என்ப 
** 907

#113
தேன் எனும் பெயரே வண்டும் மதுவும் ஆம் 
** தகர ஏகார வருக்கம் முற்றும்
** தகர ஐகார வருக்கம்
** 908

#114
தைத்தல் எனும் பெயர் துன்னத்தின்பெயரும்
தைத்திடுதொழிலும் சாற்றப்பெறுமே 
** 909

#115
தையல் எனும் பெயர் பெண்ணுடன் அழகும் ஆம் 
** 910

#116
தை எனும் பெயரே பூசநாளும்
மகரமாதத்தின்பெயரும் வழங்கும் 
** தகர ஐகார வருக்கம் முற்றும்
** தகர ஒகர வருக்கம்
** 911

#117
தொழு எனும் பெயரே இரேவதிநாளும்
உழலைத் தொழுவும் உரைத்தனர் புலவர் 
** 912

#118
தொடு எனும் பெயரே தோட்டமும் வஞ்சமும்
மருதநிலமும் வழங்கப்பெறுமே 
** 913

#119
தொய்யில் எனும் பெயர் சேறும் இன்பமும்
துயிரும் முலைமேல் தொய்யிலும் உழவும் ஆம் 
** 914

#120
தொத்து எனும் பெயர் பூங்கொத்தும் தொழும்பும் ஆம்
** 915

#121
தொறு எனும் பெயரே தோழமும் நிரையும்
தொகுதியும் எனவே சொல்லுவர் புலவர் 
** 916

#122
தொடி எனும் பெயர் கைவளையும் ஓர் பலமும்
கங்கணப்பெயரும் கருதப்பெறுமே 
** 917

#123
தொங்கல் எனும் பெயர் பீலிக்குஞ்சமும்
வெண்குடைப் பெயரும் மாலையும் தூக்கமும் 
** 918

#124
தொண்டை எனும் பெயர் யானைத்துதிக்கையும்
ஆதொண்டையினொடு கோவையும் ஆமே 
** 919

#125
தொண்டு எனும் பெயரே தொழும்பும் பழமையும்
ஒன்பதும் நுழைவழிப் பெயரும் ஓதுவர் 
** 920

#126
தொட்டல் எனும் பெயர் தோண்டுதல் பெயரும்
தொடுதல் பெயரும் உணவும் சொல்லுவர் 
** 921

#127
தொடுத்தல் எனும் பெயர் பிணித்தலும் வளைத்தலும்
பற்றுதல் எனவும் பகரப்பெறுமே 
** 922

#128
தொழுதி எனும் பெயர் புள்ளொலியும் கூட்டமும்
** தகர ஒகர வருக்கம் முற்றும்
** தகர ஓகார வருக்கம்
** 923

#129
தோணி எனும் பெயர் இரேவதிநாளும்
நீரும் சேறும் எயிலதுஉறுப்பும்
தெப்பமும் ஓடமும் பகழியும் செப்புவர் 
** 924

#130
தோட்டி எனும் பெயர் அங்குசப்படையும்
கதவும் என கருதப்பெறுமே 
** 925

#131
தோன்றல் எனும் பெயர் சுதனும் நாதனும் ஆம் 
** 926

#132
தோல் எனும் பெயரே தோல்வியும் யானையும்
கேடகப்பலகையும் கிளத்திடு சருமமும்
இயாப்பின் ஓர் வனப்பும் இயம்புவர் புலவர் 
** 927

#133
தோற்றம் எனும் பெயர் ஏற்றமும் பிறப்பும்
ஆற்றலும் உண்டாக்குதலும் உயர்ச்சியும்
தோன்றுதல் பெயரும் சொல்லப்பெறுமே 
** 928

#134
தோடு எனும் பெயரே பனைமடல்போலவும்
பூவினிதழும் தொகுதியும் புகலுவர் 
** 929

#135
தோள் எனும் பெயரே துணையும் புயமும் ஆம் 
** 930

#136
தோரை எனும் பெயர் மூங்கிலரிசியும்
கைவரையோடு நெல்விகற்பமும் கருதுவர் 
** தகர ஓகார வருக்கம் முற்றும்
** தகர ஒளகார வருக்கம்
** 931

#137
தெளவை எனும் பெயர் தாயும் முன்பிறந்தாளும்
மூதேவியும் சாற்றப்பெறுமே 
** தகர ஒளகார வருக்கம் முற்றும்
** தகர வருக்கத் தொகுதி முற்றும்

@6  வது நகர வருக்கத் தொகுதி
** நகர அகர வருக்கம்
** 932

#1
நந்தி எனும் பெயர் ஈசனும் இடபமும்
சிறுபேரிகையொடு செக்கான்பெயரும் ஆம் 
** 933

#2
நலம் எனும் பெயரே நல் உபகாரமும்
சுகமும் விருச்சிகராசியும் சொல்லுவர் 
** 934

#3
நவம் எனும் பெயரே ஒன்பதும் கேண்மையும்
புதுமையும் கார்காலமும் எனப் புகலுவர் 
** 935

#4
நடை எனும் பெயரே வழியும் ஒழுக்கமும் 
** 936

#5
நகம் எனும் பெயரே மரப்பொதுப் பெயரும்
உகிரும் மலையும் உரைக்கப்பெறுமே 
** 937

#6
நவிரம் எனும் பெயர் மலையின்உச்சியும்
மலையும் புன்மையும் வகுத்தனர் புலவர் 
** 938

#7
நயந்தோன் எனும் பெயர் நட்புடையோனும்
கணவனும் எனவே கருதப்பெறுமே 
** 939

#8
நகை எனும் பெயரே மகிழ்ச்சியும் ஒளியும்
எயிறும் சிரிப்பும் இயம்புவர் புலவர் 
** 940

#9
நவிர் எனும் பெயரே ஆண்பால்மயிரும்
தக்கேசிஇசையும் மருதயாழ்த்திறமும்
வாளாயுதமும் வழங்கப்பெறுமே 
** 941

#10
நனை எனும் பெயரே பூவின்முகையும்
நறவும் எனவே நவிலுவர் புலவர் 
** 942

#11
நவியம் எனும் பெயர் மழுவும் குடாரியும் 
** 943

#12
நயம் எனும் பெயரே நன்மையும் சுகமும் ஆம் 
** 944

#13
நரை எனும் பெயரே ஆனின்ஏறும்
வெண்ணிறக்குதிரையும் மிகு பெருநாரையும்
கவரியும் தவளநிறமும் கருதுவர் 
** 945

#14
நளி எனும் பெயரே சீதமும் செறிவும்
பெருமையும் உரைப்பர் பெரிது உணர்ந்தோரே 
** 946

#15
நரந்தம் எனும் பெயர் நாரத்தைமரமும்
கத்தூரியும் எனக் கருதப்பெறுமே 
** 947

#16
நந்து எனும் பெயரே நத்தையும் சங்கும் ஆம் 
** 948

#17
நடலை எனும் பெயர் வஞ்சமும் பொய்யும் ஆம் 
** 949

#18
நந்தல் எனும் பெயர் ஆக்கமும் கேடும் ஆம் 
** 950

#19
நகர் எனும் பெயரே நகரமும் வீடும் ஆம் 
** 951

#20
நத்தம் எனும் பெயர் நகரின்கெடுதியும்
இரவும் பணிலமும் இருளும் இயம்புவர் 
** 952

#21
நன்று எனும் பெயரே நன்மையும் பெரிதும் ஆம் 
** 953

#22
நட்டம் எனும் பெயர் நடனமும் கேடும் ஆம் 
** 954

#23
நவிலல் எனும் பெயர் பண்ணுதல் சொல்லுதல் 
** 955

#24
நக்கல் எனும் பெயர் நகையும் தின்றலும் 
** 956

#25
நக்கன் எனும் பெயர் சிவனும் அருக்கனும்
நின்மாணியும் என நிகழ்த்துவர் புலவர் 
** 957

#26
நன்பு எனும் பெயரே அகலமும் தெளிவும் ஆம் 
** 958

#27
நயன் எனும் பெயரே இன்பமும் மகிழ்வும்
பயனும் நன்மையும் பகரப்பெறுமே 
** நகர அகர வருக்கம் முற்றும்
** நகர ஆகார வருக்கம்
** 959

#28
நாழி எனும் பெயர் உள்துளைவடிவும்
அளக்கும் நாழியும் பூரட்டாதியும்
நாழிகைப் பெயரும் நவின்றனர் புலவர் 
** 960

#29
நாகம் எனும் பெயர் நல் மத யானையும்
வெற்பும் கடவுளருலகும் காரீயமும்
ஒரு மரப்பெயரும் குரங்கும் பாம்பும்
நல் தூசும் புன்னைப் பெயரும் நவிலுவர் 
** 961

#30
நாவிதன் எனும் பெயர் பூரநாளும்
கார்த்திகைநாளும் மயிர்வினைஞனும் ஆம் 
** 962

#31
நாஞ்சில் எனும் பெயர் கலப்பைப்படையும்
எயிலுறுப்பும் என இயம்பப்பெறுமே 
** 963

#32
நாட்டம் எனும் பெயர் நயனமும் வாளும்
பண்ணின்விகற்பமும் பகரப்பெறுமே 
** 964

#33
நாரி எனும் பெயர் நறவும் பன்னாடையும்
பெண்ணும் சிலைநாண் பெயரும் பேசுவர் 
** 965

#34
நாப்பண் எனும் பெயர் நடுவள்தேரும்
நடுவும் எனவே நவிலப்பெறுமே 
** 966

#35
நானம் எனும் பெயர் ஞானமும் பாசமும்
பூசுவனவும் புனலாடுதலும்
கத்தூரியும் எனக் கருதப்பெறுமே 
** 967

#36
நாடி எனும் பெயர் நாழிகை நரம்பும் ஆம் 
** 968

#37
நாகு எனும் பெயரே ஈனாஇளமையும்
இளமரக்கன்றும் சங்கும் நத்தையும்
ஒருசார் விலங்கின்பெண்பாலும் ஓதுவர் 
** 969

#38
நாண் எனும் பெயரே மாதர்மங்கலமும்
பூணும் இலச்சையும் கயிறும் புகலுவர் 
** 970

#39
நார் எனும் பெயரே அன்பும் கயிறும் ஆம் 
** 971

#40
நாறுதல் எனும் பெயர் உண்டாதல் மணமும் ஆம் 
** 972

#41
நான்முகன் எனும் பெயர் அருகனும் பிரமனும் 
** நகர ஆகார வருக்கம் முற்றும்
** நகர இகர வருக்கம்
** 973

#42
நிறை எனும் பெயர் துலாராசிப் பெயரும்
துலையும் நீர்ச்சாலும் அழியாநிலைமையும் 
** 974

#43
நிசி எனும் பெயரே கங்குல்பொழுதும்
மஞ்சளும் பொன்னும் வகுக்கப்பெறுமே 
** 975

#44
நிதம்பம் எனும் பெயர் மலையின்பக்கமும்
அல்குலின்பெயரும் ஆகும் என்ப 
** 976

#45
நியமம் எனும் பெயர் நியதியும் நகரமும்
தெருவும் அங்காடியும் தேவராலையமும்
நிச்சயப்பெயரும் நிகழ்த்துவர் புலவர் 
** 977

#46
நிருமித்தல் என்னும் பெயர் ஆராய்தலும்
படைத்தலும் எனவே பகர்ந்தனர் புலவர் 
** 978

#47
நிறம் எனும் பெயரே நிறங்களும் மார்பும்
காந்தியும் எனவே கருதுவர் புலவர் 
** 979

#48
நிரப்பு எனும் பெயர் குறைபாடும் வறுமையும் 
** 980

#49
நிழற்றல் எனும் பெயர் நிழல்செயலுடனே
நுணுக்கம் எனவே நுவன்றனர் புலவர் 
** நகர இகர வருக்கம் முற்றும்
** நகர ஈகார வருக்கம்
** 981

#50
நீலி எனும் பெயர் பாலைக்கிழத்தியும்
கருநிறமும் ஒரு புதலும் கருதுவர் 
** 982

#51
நீர் எனும் பெயரே நீர்மையும் புனலும்
பூராடநாளும் புகலப்பெறுமே 
** 983

#52
நீபம் எனும் பெயர் உத்திரட்டாதியும்
நிமித்தமும் கடம்பும் நிகழ்த்துவர் புலவர் 
** 984

#53
நீவி எனும் பெயர் ஆடையும் துடைத்தலும்
நெருங்கிய கொய்சகப்பெயரும் நிகழ்த்துவர் 
** நகர ஈகார வருக்கம் முற்றும்
** நகர உகர வருக்கம்
** 985

#54
நுதல் எனும் பெயரே நெற்றியும் புருவமும் 
** 986

#55
நுணங்கல் எனும் பெயர் நுண்மையும் தேமலும் 
** 987

#56
நுனி எனும் பெயரே நுண்மையும் நுனியும் ஆம் 
** 988

#57
நுணவை எனும் பெயர் நுண் பிண்டியினுடன்
எண்ணோலையும் என இயம்பப்பெறுமே 
** 989

#58
நுவணை எனும் பெயர் தினையின் பிண்டியும்
நூலும் நுண்மையும் நுவன்றனர் புலவர் 
** நகர உகர வருக்கம் முற்றும்
** நகர ஊகார வருக்கம்
** 990

#59
நூலோர் எனும் பெயர் அந்தணருடனே
மந்திரியர் பெயர் புலவோரும் வழங்குவர் 
** 991

#60
நூழில் எனும் பெயர் யானையும் கோறலும்
கொடியின்பெயரும் கொடிக்கொற்றானும்
பொடியின்பெயரும் புகன்றனர் புலவர் 
** 992

#61
நூல் எனும் பெயரே வேதநூலொடு
சாத்திரவிகற்பமும் தந்தும் பேசுவர் 
** 993

#62
நூணம் எனும் பெயர் குறைவும் நிச்சயமும் ஆம் 
** நகர ஊகார வருக்கம் முற்றும்
** நகர எகர வருக்கம்
** 994

#63
நெறி எனும் பெயரே நீதியும் வழியும் ஆம் 
** 995

#64
நெற்றி எனும் பெயர் நெடும்படையுறுப்பும்
நுதலும் எனவே நுவன்றனர் புலவர் 
** 996

#65
நெய்தலின் பெயர் ஓர் நிலமும் கடலும்
நெய்தல்பூவொடு சாப்பறை நிகழ்த்துவர் 
** நகர எகர வருக்கம் முற்றும்
** நகர ஏகார வருக்கம்
** 997

#66
நேத்திரம் எனப் பெயர் பட்டின்விகற்பமும்
கண்ணும் எனவே கருதப்பெறுமே 
** 998

#67
நேயம் எனும் பெயர் நெய்யும் எண்ணெயும்
அன்பின்பெயரும் ஆம் என உரைப்பர் 
** 999

#68
நேமி எனும் பெயர் திகிரியும் வண்டிலும்
பூமியும் புணரியும் புகலப்பெறுமே 
** 1000

#69
நேர் எனும் பெயரே கொடுத்தலும் பாதியும்
தனிமையும் நிகரும் நுட்பமுடன் பரஞ்சமமும்
மிகுதியும் தலைப்படல் விலையும் ஆமே 
** நகர ஏகார வருக்கம் முற்றும்
** நகர ஒகர வருக்கம்
** 1001

#70
நொச்சி எனும் பெயர் சிந்துவாரமும்
சிற்றூரும் மதிலும் எயில்காத்தலும் ஆம் 
** 1002

#71
நொடி எனும் பெயர் கைநொடியும் வார்த்தையும் 
** 1003

#72
நொறில் எனும் பெயரே நுடக்கமும் விரைவும்
ஒடுக்கமும் எனவே உரைக்கப்பெறுமே 
** நகர ஒகர வருக்கம் முற்றும்
** நகர ஓகார வருக்கம்
** 1004

#73
நோனாமை என்னும் பெயர் பொறாமையும்
தவம்பண்ணாமையும் சாற்றுவர் புலவர் 
** 1005

#74
நோக்கு எனும் பெயரே அழகும் விழியும் ஆம் 
** 1006

#75
நோற்றல் எனும் பெயர் பொறையும் தவமும் ஆம் 
** 1007

#76
நோனார் எனும் பெயர் தவமில்லோருடன்
பகைஞர்தம்பெயரும் பகர்ந்தனர் புலவர் 
** நகர ஓகார வருக்கம்
** நகர ஒளகார வருக்கம்
** 1008

#77
நௌவியம் எனும் பெயர் மரக்கலப்பெயரும்
மானும் எனவே வழங்கப்பெறுமே 
** நகர ஒளகார வருக்கம் முற்றும்
** நகர வருக்கத் தொகுதி முற்றும்

@7  வது பகர வருக்கத் தொகுதி
** பகர அகர வருக்கம்
** 1009

#1
பருதி எனும் பெயர் பரிவேடத்துடன்
வட்டவடிவும் இரவியும் நேமியும் 
** 1010

#2
பகல் எனும் பெயர் பகல்போதும் பிரிவும்
நடுவும் பரணிநாளும் இயம்புவர் 
** 1011

#3
பச்சை எனும் பெயர் பசுமையும் புதனும்
தோலும் இலாபமும் மரகதமணியும் ஆம் 
** 1012

#4
பங்கு எனும் பெயரே பகுத்தலும் சனியும்
முடமும் பாதியும் மொழிந்தனர் புலவர் 
** 1013

#5
பக்கம் எனும் பெயர் அருகும் இறகும்
திதியும் அண்மையும் செப்பப்பெறுமே 
** 1014

#6
பதம் எனும் பெயரே பாதமும் சோறும்
வரிசையும் விழாவும் வழியும் வார்த்தையும்
உணவும் ஈரமும் செவ்வியும் சேமமும்
பொழுதும் எனவே புகன்றனர் புலவர் 
** 1015

#7
பணி எனும் பெயரே பணம் உடைப் பாம்பும்
தொழிலும் தொழில்படுகலனும் சொல்லுவர் 
** 1016

#8
பயம் எனும் பெயரே பாலும் சலிலமும்
அச்சமும் அமுதும் இலாபமும் ஆமே 
** 1017

#9
பரவை எனும் பெயர் பரப்பும் கடலும் ஆம் 
** 1018

#10
பயோதரம் எனும் பெயர் மேகமும் முலையும் ஆம் 
** 1019

#11
பனி எனும் பெயரே துன்பமும் நடுக்கமும்
அச்சமும் குளிர்ச்சியும் இமமும் ஆமே 
** 1020

#12
பகவன் எனும் பெயர் பரமனும் மாலும்
பிரமனும் அருகனும் குருவும் புத்தனும் 
** 1021

#13
பண்ணவன் எனும் பெயர் முனியும் தேவனும்
குருவும் திறலோன் பெயரும் கூறுவர் 
** 1022

#14
பசு எனும் பெயர் வெண் பெற்றமும் உயிரும் ஆம் 
** 1023

#15
படி எனும் பெயரே பகையும் குணமும்
புவனமும் உலகமும் புகலப்பெறுமே 
** 1024

#16
படப்பை எனும் பெயர் நாடும் நகரமும்
தோட்டமும் பசுநிரைப் பெயரும் சொல்லுவர் 
** 1025

#17
பட்டு எனும் பெயரே பட்டின்விகற்பமும்
சிற்றூர்ப் பெயரும் துகிலும் செப்புவர் 
** 1026

#18
பள்ளி எனும் பெயர் தவத்தோரிடமும்
துயில்தலும் பாயலும் சிற்றூர்ப் பெயரும்
கோயிலின்பெயரும் கூறப்பெறுமே 
** 1027

#19
பட்டம் எனும் பெயர் மேம்படுபதவியும்
வழியும் கவரிமாவும் துகிலும்
வாயிலும் மதகரிமுகபடாமும்
விலங்குதுயிலிடமும் படமும் விளம்புவர் 
** 1028

#20
பதுக்கை எனும் பெயர் பாறையும் மேடும்
சிறுதூறும் எனச் செப்புவர் புலவர் 
** 1029

#21
பதலை எனும் பெயர் மலையும் தாழியும்
ஒருகண் பரந்தவாய்ப் பறையும் ஓதுவர் 
** 1030

#22
பணை எனும் பெயரே பருத்தலும் மூங்கிலும்
மருதநிலமும் வயலும் முரசமும்
குதிரையின்பந்தியும் மரத்தின்கொம்பும் ஆம் 
** 1031

#23
பண்ணை எனும் பெயர் வயலும் வாவியும்
சபையும் மகளிர் விளையாடிடமும்
விலங்குதுயிலிடமும் விளம்புவர் புலவர் 
** 1032

#24
படு எனும் பெயரே மரத்தின்குலையும்
மதுவும் நன்மையும் வாவியும் ஆமே 
** 1033

#25
பயம்பு எனும் பெயரே பகடுபடுகுழியும்
நீர்நிலைப் பெயரும் நிகழ்த்தினர் புலவர் 
** 1034

#26
பங்கம் எனும் பெயர் சேறும் துகிலும்
பின்னமும் தீவினைப் பெயரும் பேசுவர் 
** 1035

#27
பரிகம் என் பெயர் கணைப்படைக்கலமும்
புரிசையுள் உயர்ந்த நிலமும் அகழியும்
மேடையும் எனவே விளம்புவர் புலவர் 
** 1036

#28
பணவை எனும் பெயர் பரணும் கழுதும் ஆம் 
** 1037

#29
படை எனும் பெயரே பரிமாக்கலனையும்
ஆயுதப்பொதுவும் அடர் கொடும் சேனையும்
கண்படையுடனே கலப்பையும் கருதுவர் 
** 1038

#30
பலம் எனும் பெயரே பழமும் கிழங்கும்
சேனையும் லாபமும் நிறையும் செப்புவர் 
** 1039

#31
பங்கி எனும் பெயர் ஆண்பால்மயிரும்
அஃறிணைப்பொதுவின்பெயரும் ஆமே 
** 1040

#32
பண்டம் எனும் பெயர் பண்ணிகாரத்துடன்
விண்டு ஒளிர் பொன்னும் விளம்பப்பெறுமே 
** 1041

#33
படலிகை என்னும் பெயர் பெரும் பீர்க்கும்
கைமணி வட்டமும் பூத்தட்டின்பெயரும் ஆம் 
** 1042

#34
படங்கு என் பெயர் பெருங்கொடியும் மேல்கட்டியும் 
** 1043

#35
படலை எனும் பெயர் வாசிக்கோவையும்
படர்தலும் தொடையலும் பரந்தவாய்ப் பறையும் ஆம்
** 1044

#36
பண் எனும் பெயரே பரிமாக்கலனையும்
பாட்டின் பண்ணும் பகரப்பெறுமே 
** 1045

#37
பறை என் பெயர் புள்ளின்இறகும் பணையும்
வசனமும் எனவே வழங்கப்பெறுமே 
** 1046

#38
பகழி எனும் பெயர் பகழிக்குதையும்
கணையும் எனவே கருதப்பெறுமே 
** 1047

#39
பரம் எனும் பெயரே பரிமாக்கலனையும்
மெய்யும் மெய்புகுகருவியும் பாரமும்
முன்பும் மேலும் மொழிந்தனர் புலவர் 
** 1048

#40
பழங்கண் எனும் பெயர் ஓசையும் துன்பமும் 
** 1049

#41
படிறு எனும் பெயரே பொய்யொடு களவும் ஆம் 
** 1050

#42
பந்தம் எனும் பெயர் சீரின்தொடர்ச்சியும்
அழகும் திரட்சியும் கிளையொடு கட்டும் ஆம் 
** 1051

#43
பத்திரம் எனும் பெயர் அழகும் நன்மையும்
சுரிகையும் சிங்காசனமும் புள்இறகும்
இலையும் எனவே இயம்பப்பெறுமே 
** 1052

#44
பலி எனும் பெயரே தேவபூசையும்
பிச்சையும் பலித்தலும் பேசுவர் புலவர் 
** 1053

#45
பரி எனும் பெயரே பாதுகாத்தலும்
பருத்தியும் சுமத்தலும் குதிரையும் பெருமையும் 
** 1054

#46
பகடு எனும் பெயரே பெருமையும் எருதும்
எருமைஆண்பெயரும் தோணியும் களிறும் ஆம் 
** 1055

#47
பதங்கம் எனும் பெயர் விட்டில்பறவையும்
புள்பொதுப் பெயரும் புகலப்பெறுமே 
** 1056

#48
பயல் எனும் பெயர்ச் சிற்றாளும் பள்ளமும்
பந்தியும் எனவே பகருவர் புலவர் 
** 1057

#49
பணிலம் எனும் பெயர் சலஞ்சலப்பெயரும்
சங்கின்பெயரும் சாற்றுவர் புலவர் 
** 1058

#50
பப்பு எனும் பெயரே பரப்பும் உவமையும் 
** 1059

#51
பந்து எனும் பெயர் கந்துகமும் கட்டும்
நீர் தூவும் சிறுதுருத்தியும் நிகழ்த்துவர் 
** 1060

#52
பவனம் எனும் பெயர் பாரும் காற்றும்
இராசியும் கோயிலும் நாடும் இல்லமும் ஆம் 
** 1061

#53
படம் எனும் பெயரே பாம்பின்பணமும்
சித்திரப்படமும் சிலையும் கொடியும் ஆம் 
** 1062

#54
பறம்பு எனும் பெயரே மலையும் முலையும் ஆம் 
** 1063

#55
பரதர் எனும் பெயர் தனவைசியர் பேரும்
நெய்தல்நிலமாக்களும் நிகழ்த்தப்பெறுமே 
** 1064

#56
பவம் எனும் பெயரே பாவமும் பிறப்பும் ஆம் 
** 1065

#57
பண்ணல் எனும் பெயர் சொல்லும் நெருக்கமும்
பருத்தியின்பெயரும் பகரப்பெறுமே 
** 1066

#58
பயிர் எனும் பெயரே ஒலியும் பைங்கூழும்
விதந்து கட்டிய வழக்கும் புள்குரலும்
விலங்கின்குரலும் விளம்புவர் புலவர் 
** 1067

#59
படர் எனும் பெயரே பரியும் நோயும்
வீரரும் நினைத்தலும் நடையும் விளம்புவர் 
** 1068

#60
பவித்திரம் எனும் பெயர் தருப்பையும் சுசியும் ஆம் 
** 1069

#61
படிவம் எனும் பெயர் வடிவமும் நோன்பும் ஆம் 
** 1070

#62
படுத்தல் எனும் பெயர் ஒலியும் உண்டாதலும்
பூத்தலும் இன்மைப்பெயரும் புகலுவர் 
** 1071

#63
பதி எனும் பெயரே கணவனும் நாகமும்
தலைவனும் எனவே சாற்றப்பெறுமே 
** 1072

#64
பத்தி என் பெயர் வழிபாடும் ஒழுங்கும்
அடைப்பதும் முறைமையும் ஆம் என இயம்புவர் 
** 1073

#65
பரித்தல் எனும் பெயர் அறுத்தலும் வெட்டலும்
இரங்கலும் அன்பும் இசைக்கப்பெறுமே 
** 1074

#66
பஞ்சம் எனும் பெயர் ஐந்தும் சிறுமையும் 
** 1075

#67
பனுவல் எனும் பெயர் செய்யுளும் நூலும் ஆம் 
** 1076

#68
பராகம் என் பெயர் மலர்த்தாதுவும் இரேணுவும் 
** 1077

#69
பல்லம் எனும் பெயர் பாணமும் கரடியும்
கணக்கில் ஓர் குணிப்பும் கருதப்பெறுமே 
** 1078

#70
பத்திரி எனும் பெயர் பறவையும் பரியும் ஆம் 
** 1079

#71
பட்டிகை எனும் பெயர் பணையும் ஈரமும்
கச்சும் எனவே கருதப்பெறுமே 
** 1080

#72
பரிவு எனும் பெயரே இன்பமும் துன்பமும்
அன்பும் இதன் பெயர் ஆம் என இயம்புவர் 
** 1081

#73
பற்பம் எனும் பெயர் பதுமமும் தூளும் ஆம் 
** 1082

#74
பரணி எனும் பெயர் தருமன்நாளும்
அழுந்திடுகலனும் மதகரிப் பெயரும் ஆம் 
** 1083

#75
பனை எனும் பெயரே போந்தையின்தருவும்
அநுடநாள் பெயரும் ஆகும் என்ப 
** 1084

#76
பணம் எனும் பெயரே பாம்பின்படமும்
அரவும் செம்பொற்காசும் ஆமே 
** பகர அகர வருக்கம் முற்றும்
** பகர ஆகார வருக்கம்
** 1085

#77
பாரதி எனும் பெயர் பனுவலாட்டியும்
தோணியும் எனவே சொல்லப்பெறுமே 
** 1086

#78
பாண்டில் எனும் பெயர் இடபராசியும்
சகடமும் மூங்கிலும் தாங்குறு சிவிகையும்
காளையும் கட்டிலும் விளக்கின் தகளியும்
வட்டமும் எனவே வழங்கப்பெறுமே 
** 1087

#79
பாணி எனும் பெயர் பதியொடு சேர்ந்த
சோலையும் நாடும் காடும் நீரும்
பாடல் பல்லியமும் பாட்டும் ஓர் இசையும்
கையும் பொழுதுநீட்டித்தலும் கருதுவர் 
** 1088

#80
பாராவாரம் எனும் பெயர் கடலும்
கடற்கரைப் பெயரும் கருதப்பெறுமே 
** 1089

#81
பாசு எனும் பெயரே பசுமையும் மூங்கிலும் 
** 1090

#82
பார் எனும் பெயரே தேரின் பரப்பும்
உரோகிணிப் பெயரும் புவனியும் உரைப்பர் 
** 1091

#83
பாம்பு எனும் பெயரே பன்னகவிகற்பமும்
வரம்பின்பெயரும் வழங்கப்பெறுமே 
** 1092

#84
பாரி எனும் பெயர் பாரின்பெயரும்
கட்டிலின்பெயரும் நல் ஆடையும் முந்நீரும்
மனைவி பெயரும் ஓர் வள்ளலும் ஆமே 
** 1093

#85
பாடி எனும் பெயர் ஊரும் நாடும்
நகரமும் படைவீடும் நவிலுவர் 
** 1094

#86
பானல் எனும் பெயர் கருநிறக்குவளையும்
மருதநிலமும் வயலும் வழங்கும் 
** 1095

#87
பாத்தி எனும் பெயர் பகுத்தலும் வீடும்
சிறுசெய்யும் என்னச் செப்புவர் புலவர் 
** 1096

#88
பாழி எனும் பெயர் தவத்தோர்சாலையும்
நகரமும் பெலமும் நண்ணலர்ஊரும்
படுக்கையும் பாயலும் பாழ்படுபொருளும்
மலைமுழை விலங்குதுயிலிடமும் ஆமே 
** 1097

#89
பால் எனும் பெயரே பகுத்தலும் பக்கமும்
கீரமும் இயல்பும் இடமும் கிளத்துவர் 
** 1098

#90
பாசனம் எனும் பெயர் பாண்டமும் சுற்றமும்
உண்கலப்பெயரும் உரைக்கப்பெறுமே 
** 1099

#91
பாடு எனும் பெயரே பக்கமும் படுதலும்
பெருமையும் சத்தஒலியும் பேசுவர் 
** 1100

#92
பாலிகை எனும் பெயர் பட்டவாள்முட்டும்
அதரமும் வட்டப்பெயரும் ஆமே 
** 1101

#93
பாகு எனும் பெயரே பாக்கின்பெயரும்
பகுத்தலும் குழம்பும் பாலும் பாகனும்
சருக்கரைப் பெயரும் சாற்றப்பெறுமே 
** 1102

#94
பாளிதம் எனும் பெயர் கண்டசர்க்கரையும்
குழம்பும் பட்டாடையுமே கூறுவர் 
** 1103

#95
பாணம் எனும் பெயர் பட்டின்விகற்பமும்
அம்பும் பவளவண்ணக்குறிஞ்சியும் ஆம் 
** 1104

#96
பாகம் எனும் பெயர் பாதியும் பிச்சையும்
நாவலர் கவிதைப் பாகமும் நவிலுவர் 
** 1105

#97
பாகல் எனும் பெயர் பலாவின்தருவும்
மூவகைக் காரவல்லியும் மொழிகுவர் 
** 1106

#98
பாதிரி எனும் பெயர் பாதிரிமரமும்
மூங்கிலும் எனவே மொழியப்பெறுமே 
** 1107

#99
பாலம் எனும் பெயர் நெற்றியும் மழுவும்
நீரிடைப் பரப்பு கற்பாலமும் நிகழ்த்துவர் 
** 1108

#100
பாவம் எனும் பெயர் பாவகப்பெயரும்
தீவினைப் பெயரும் செப்பப்பெறுமே 
** 1109

#101
பாய்மா எனும் பெயர் பரியொடு புலியும் ஆம் 
** 1110

#102
பாக்கு எனும் பெயர் செம்பழுக்காய்ப் பெயரும்
எதிர்காலத்தைப் பகர் இடைச்சொல்லும் ஆம் 
** 1111

#103
பாடலம் எனும் பெயர் சிவப்பும் பாதிரியும்
குதிரையும் எனவே கூறப்பெறுமே 
** 1112

#104
பாத்து எனும் பெயரே பகுத்தூண் பெயரும்
அடிசில் பெயரொடு கஞ்சியும் ஆமே 
** 1113

#105
பாரம் எனும் பெயர் கவசமும் பொறையும்
கலனையும் பாரும் நீரின் கரையும்
வன் பாரமும் மரக்கலமும் வழங்கும் 
** 1114

#106
பா எனும் பெயரே பரத்தலும் பனுவலும் 
** 1115

#107
பாலை எனும் பெயர் பாலைநிலமும்
அந்நிலப்பாடலும் பிரிவதுரைத்தலும்
பொருள்மேல்பிரிதலும் புணர்ந்துடன்போதலும்
புனர்பூசமும் ஓர் மரமும் புகலுவர் 
** 1116

#108
பார்த்தல் என்னும் பெயர் பரப்புதலும்
தோற்றுதல் பெயரும் சொல்லப்பெறுமே 
** 1117

#109
பாவை எனும் பெயர் சித்திரப்பாவையும்
திருமகள்ஆடலும் செப்புவர் புலவர் 
** 1118

#110
பாயசம் எனும் பெயர் பால்சோற்றினுடனே
பால்குறண்டி என் பெயர்தானும் பகருவர் 
** பகர ஆகார வருக்கம் முற்றும்
** பகர இகர வருக்கம்
** 1119

#111
பிள்ளை எனும் பெயர் வடுகக்கடவுளும்
காரிப்புள்ளுடன் இளமரக்கன்றும்
மகவின்பெயரும் வகுத்துரைத்தனரே 
** 1120

#112
பிதா எனும் பெயர் சிவபெருமான் பெயரும்
பிரமன் பெயரும் தாதைதன்பெயரும்
பெருநாரைப்புள் பெயரும் பேசுவர் 
** 1121

#113
பிசிதம் எனும் பெயர் நீறும் புலாலும்
வேம்பின்பெயரும் விளம்புவர் புலவர் 
** 1122

#114
பிச்சம் எனும் பெயர் பீலிக்குடையும்
ஆண்பால்மயிரும் வெண்குடையும் ஆமே 
** 1123

#115
பிசி எனும் பெயரே பேசுதல்பொருளும்
பொய்யும் சோறும் புகலப்பெறுமே 
** 1124

#116
பிண்டி எனும் பெயர் நெல்மா முதலவும்
அசோகமரமும் பிண்ணாக்கும் ஆமே 
** 1125

#117
பிரசம் எனும் பெயர் தேனீப் பெயரும்
தேனின்பெயரும் இறாலும் செப்புவர் 
** 1126

#118
பிறங்கல் எனும் பெயர் பெருமையும் நிறைவும்
மலையும் உயரமும் வகுக்கப்பெறுமே 
** 1127

#119
பிணை எனும் பெயரே விலங்கின்பெண்பாலும்
விருப்பமும் மானும் விளம்புவர் புலவர் 
** 1128

#120
பிணிமுகம் எனும் பெயர் புள்பொதுப் பெயருடன்
மயிலும் அன்னமும் வகுத்துரைத்தனரே 
** 1129

#121
பிங்கலம் எனும் பெயர் செங்கனகத்தொடு
பொன்னின்நிறமும் புகன்றனர் புலவர் 
** 1130

#122
பின்னை எனும் பெயர் பிற்றைப்பொழுதும்
தங்கையும் கண்ணன்மனைவியும் சாற்றுவர் 
** 1131

#123
பிண்டம் எனும் பெயர் பிச்சையும் திரட்சியும்
தேகமும் என்னச் செப்புவர் புலவர் 
** 1132

#124
பிரமம் எனும் பெயர் சிவனும் மாயனும்
பிரமனும் இரவியும் மதியும் கனலும்
மந்திரமும் வேதமும் முத்தித் தருமமும்
வேள்வியும் முனிவரும் விளம்பப்பெறுமே 
** 1133

#125
பிப்பிலம் எனும் பெயர் திப்பிலி அரசும் ஆம் 
** 1134

#126
பிலவங்கம் என் பெயர் தேரையும் குரங்கும் ஆம் 
** 1135

#127
பிதிர் எனும் பெயரே தென்புலத்தெய்வமும்
நொடித்தலும் திவலையும் கிளியின்விகற்பமும்
கதையும் எனவே கருதப்பெறுமே 
** 1136

#128
பித்திகை எனும் பெயர் சுவர்த்தலத்துடனே
கொத்து அவிழ் கருமுகைப் பெயரும் கூறுவர் 
** 1137

#129
பிறழ்தல் எனும் பெயர் பெயர்தலும் ஒளிர்தலும் 
** 1138

#130
பிசினம் எனும் பெயர் பொய்யனும் கோளனும் 
** பகர இகர வருக்கம் முற்றும்
** பகர ஐகார வருக்கம்
** 1139

#131
பை எனும் பெயரே பசுமைநிறமும்
பாம்பின்படமும் கூறையின்விகற்பும் ஆம் 
** 1140

#132
பையுள் எனும் பெயர் நோயும் சிறுமையும் 
** 1141

#133
பைத்தல் எனும் பெயர் பசுத்தலும் முனிவும் ஆம் 
** பகர ஐகார வருக்கம் முற்றும்
** பகர ஒகர வருக்கம்
** 1142

#134
பொறி எனும் பெயரே பொடித்து எழு நுண் சிறு
கலனோடு மரக்கலம் செல்வம் இலாஞ்சினை
திருவும் ஐம்புலனும் மோதிரமும் எழுத்தும் ஆம் 
** 1143

#135
பொன் எனும் பெயரே பொறியும் கனகமும்
அழகும் வியாழமும் திருவும் குபேரனும்
இரும்பும் எனவே இயம்புவர் புலவர் 
** 1144

#136
பொழில் எனும் பெயரே உலகமும் சோலையும்
பெருமையும் எனவே பேசப்பெறுமே 
** 1145

#137
பொறை எனும் பெயரே பூமியும் பொறுமையும்
துறுகல்லுடனே மலையும் சொல்லுவர் 
** 1146

#138
பொங்கர் எனும் பெயர் மரத்தின்கோடும்
பொருப்பும் இலவமரமும் புகலுவர் 
** 1147

#139
பொருட்டு எனும் பெயரே பொருப்பும் மொக்குளும்
பங்கயப் பொன்னிறக் கொட்டையும் பகருவர் 
** 1148

#140
பொருநர் எனும் பெயர் பொரு படைவீரரும்
கொற்றவர் பெயரும் கூத்தர்தம் பெயரும்
திண்ணியோர் பெயரும் செப்பப்பெறுமே 
** 1149

#141
பொகில் எனும் பெயரே புள்பொதுப் பெயரும்
கொப்புளும் முகையும் கூறப்பெறுமே 
** 1150

#142
பொம்மல் எனும் பெயர் பொலிவும் சோறும் ஆம் 
** 1151

#143
பொங்கல் எனும் பெயர் மிகுதியும் கொதித்தலும் 
** 1152

#144
பொய்த்தல் எனும் பெயர் மகளிர்விளையாடலும்
பொய்த்திடுசொல்லும் புகலப்பெறுமே 
** 1153

#145
பொத்தகம் எனும் பெயர் சித்திரப்படாமும்
திருமுறைப் பெயரும் செப்புவர் புலவர் 
** 1154

#146
பொய் எனும் பெயரே பொந்தும் பொய்மையும் 
** 1155

#147
பொச்சாப்பு எனும் பெயர் மறவி பொல்லாங்கும் ஆம்
**பகர ஒகர வருக்கம் முற்றும்
** பகர ஓகார வருக்கம்
** 1156

#148
போகி எனும் பெயர் புரந்தரன் பெயரும்
பாம்பின்பெயரும் பகரப்பெறுமே 
** 1157

#149
போர் எனும் பெயரே நெல்முதல்சும்மையும்
சதையநாளொடு சமரும் ஆமே 
** 1158

#150
போக்கு எனும் பெயரே இளமரக்கன்றும்
வழியும் குற்றமும் போதலும் பொய்யும் ஆம் 
** 1159

#151
போதகம் எனும் பெயர் அப்பவருக்கமும்
மதகரிக்கன்றொடு மரத்தின்கன்றும்
இளமையும் ஞானமும் இயம்பப்பெறுமே 
** 1160

#152
போகம் எனும் பெயர் போகவிகற்பமும்
பாம்பினதுஉடம்பும் பகரப்பெறுமே 
** 1161

#153
போர்வை எனும் பெயர் தோலின்பெயரும்
சாலிகைப் பெயரொடு போர்த்தலும் சாற்றுவர் 
** 1162

#154
போதம் எனும் பெயர் ஞானமும் தோணியும் 
** பகர ஓகார வருக்கம் முற்றும்
** பகர ஒளகார வருக்கம்
** 1163

#155
பெளவம் எனும் பெயர் கடலும் கணுவும்
** பகர ஒளகார வருக்கம் முற்றும்
** பகர வருக்கத் தொகுதி முற்றும்

@8  வது மகர வருக்கத் தொகுதி
** மகர அகர வருக்கம்
** 1164

#1
மன்னன் எனும் பெயர் உத்திரட்டாதியும்
மன்னவன்பெயரும் வகுத்தனர் புலவர் 
** 1165

#2
மதி எனும் பெயரே முன்னிலைஅசைச்சொலும்
உடுபதிப் பெயரும் உணர்வும் மாதமும் ஆம் 
** 1166

#3
மரக்கால் எனும் பெயர் மாதவன்ஆடலும்
சோதிநாளும் அளவையும் சொல்லுவர் 
** 1167

#4
மயிலை எனும் பெயர் மலர் இருவாட்சியும்
மீனராசியும் மீன்பொதுப் பெயரும் ஆம் 
** 1168

#5
மடங்கல் எனும் பெயர் இடியும் மறலியும்
முடங்கலும் நோயுடன் ஊழியும் சிங்கமும் 
** 1169

#6
மறலி எனும் பெயர் மறப்பும் அழுக்காறும்
கூற்றனும் எனவே கூறுவர் புலவர் 
** 1170

#7
மருள் எனும் பெயரே மயக்கத்தின்பெயரும்
குறிஞ்சியாழ்த்திறமும் பேயும் கூறுவர் 
** 1171

#8
மஞ்சு எனும் பெயரே வலிமையும் இளமையும்
மேகமும் பணியும் வேழத்தின் முதுகும்
எழிலும் எனவே இயம்பினர் புலவர் 
** 1172

#9
மதன் எனும் பெயரே மாட்சிமைப் பெயரும்
அனங்கனும் பெலமும் அழகும் ஆமே 
** 1173

#10
மண்டலி எனும் பெயர் நாயும் பூஞையும்
மண்டலிஅரவும் வழங்கப்பெறுமே 
** 1174

#11
மண்டலம் எனும் பெயர் நாடும் குதிரையும்
வட்டமும் குதிரைச்சாரியும் வழங்கும் 
** 1175

#12
மன்றம் என் பெயர் அம்பலமும் வாசமும் 
** 1176

#13
மந்திரம் எனும் பெயர் குதிரைப்பந்தியும்
கோயிலும் விசாரமும் மதுவும் இல்லமும்
இறையவர்நாமஎழுத்தும் ஆமே 
** 1177

#14
மறவர் எனும் பெயர் வனசரர் பெயரும்
படைவீரர் பெயரும் பகரப்பெறுமே 
** 1178

#15
மள்ளர் எனும் பெயர் வன் சமர்வீரரும்
திண்ணியோர் பெயரும் மருதநிலமாக்களும் 
** 1179

#16
மதலை எனும் பெயர் மரக்கலப்பெயரும்
புதல்வர் பெயரும் கொடுங்கைப்பாவும்
கொன்றையும் தூணும் சார்பினவையும் ஆம் 
** 1180

#17
மடை எனும் பெயர் மணிப்பணிப்பூட்டும்
புனலின்மடையும் அடிசிலும் புகலுவர் 
** 1181

#18
மட்டு எனும் பெயரே அளவும் மதுவும் ஆம் 
** 1182

#19
மனவு எனும் பெயரே மணிப்பொதுப் பெயரும்
அக்குமணியின்பெயரும் ஆமே 
** 1183

#20
மணி எனும் பெயரே வனப்பும் நன்மையும்
கருநிறமும் நவமணியும் கண்டையும்
இசையும் எனவே இயம்பப்பெறுமே 
** 1184

#21
மதுகம் எனும் பெயர் வண்டும் தராவும்
இருப்பையும் அட்டிமதுரமும் இயம்புவர் 
** 1185

#22
மடி எனும் பெயரே வயிறும் தாழையும்
சோம்பும் புடைவையும் துன்பநோயும் ஆம் 
** 1186

#23
மன்றல் எனும் பெயர் மணமும் கல்யாணமும்
பாலையாழ்த்திறமும் பகரப்பெறுமே 
** 1187

#24
மத்திகை எனும் பெயர் மாலையின்பெயரும்
சம்மட்டியினோடு சுடர்நிலைத்தண்டும் ஆம் 
** 1188

#25
மல் எனும் பெயரே மாயோன்ஆடலும்
வளமும் பெலமும் வகுத்துரைத்தனரே 
** 1189

#26
மல்லிகை எனும் பெயர் மாலதிப்புதலும்
சுடர்நிலைத்தண்டும் சொல்லுவர் புலவர் 
** 1190

#27
மறம் எனும் பெயரே பாவமும் கொடுமையும்
சினமும் எனவே செப்பப்பெறுமே 
** 1191

#28
மஞ்சரி எனும் பெயர் மலர்ப்பூங்கொத்தும்
மாலையும் தளிரும் வகுத்தனர் புலவர் 
** 1192

#29
மகரம் எனும் பெயர் மலர்ப் பூந்தாதும்
சுறவும் மகரஇராசியும் சொல்லுவர் 
** 1193

#30
மந்தாரம் எனும் பெயர் ஐந்தருவிலொன்றும்
செம்பரத்தையும் எனச் செப்புவர் புலவர் 
** 1194

#31
மத்து எனும் பெயரே தயிர்கடைதறிமுதல்
மத்தின்விகற்பமும் மத்தும் உணர்த்துவர் 
** 1195

#32
மல்லல் எனும் பெயர் வலிமையும் வளமும் ஆம் 
** 1196

#33
மடம் எனும் பெயரே முனிவர்வாசமும்
அறியாமையும் சத்திரமனையும் மென்மையும் 
** 1197

#34
மகன் எனும் பெயரே மைந்தன் பெருமையும்
மகிமையில் சிறந்தோன் பெயரும் வழங்கும் 
** 1198

#35
மணம் எனும் பெயரே கல்யாணமும் வாசமும்
கூட்டமும் எனவே கூறப்பெறுமே 
** 1199

#36
மறை எனும் பெயர் மந்திரமும் வேதமும்
பரிசையும் மறைவும் ராசியப்பெயரும் ஆம் 
** 1200

#37
மகம் எனும் பெயர் மகநாளுடன் யாகம் ஆம் 
** 1201

#38
மடல் எனும் பெயர் பனைமடல்போல்வனவும்
பூவினிதழும் ஓர் நூலும் புகலுவர் 
** 1202

#39
மத்தகம் எனும் பெயர் நெற்றியும் தலையும் ஆம் 
** 1203

#40
மண் எனும் பெயரே முழவின் மார்ச்சனையும்
அலங்கரித்தலும் நல் அவனியும் ஆமே 
** 1204

#41
மது எனும் பெயரே வசந்தகாலமும்
இனிமையும் நறவொடு தேனும் இயம்புவர் 
** 1205

#42
மரபு எனும் பெயரே பழமையும் இயல்பும் ஆம் 
** 1206

#43
மறல் எனும் பெயரே மயக்கமும் கூற்றும் ஆம் 
** 1207

#44
மருமான் எனும் பெயர் வழித்தோன்றலுடனே
மருமகன் பெயரும் வழங்கப்பெறுமே 
** 1208

#45
மயல் எனும் பெயரே மயக்கமும் செற்றையும்
பேயின்பெயரும் பேசுவர் புலவர் 
** 1209

#46
மலைதல் எனும் பெயர் மறுத்தலும் பொருதலும்
சூடலும் எனவே சொல்லப்பெறுமே 
** 1210

#47
மருதம் எனும் பெயர் மருதநிலமும்
அந்நிலப்பாடலும் வயலும் ஓர் மரமும் ஆம் 
** 1211

#48
மங்குல் எனும் பெயர் மேகமும் விசும்பும்
இருளும் எனவே இயம்புவர் புலவர் 
** 1212

#49
மன் எனும் பெயரே அசைச்சொலும் வேந்தனும்
நிலைபேறும் மிகுதிப் பெயரும் நிகழ்த்துவர் 
** 1213

#50
மலர்தல் எனும் பெயர் எதிர்தலும் தோன்றலும்
மலர்தலின்பெயரும் வகுத்தனர் புலவர் 
** 1214

#51
மகரந்தம் என்னும் பெயர் மலர்த்தேனும்
நறவும் பூந்தாதும் நவிலப்பெறுமே 
** 1215

#52
மதவு எனும் பெயரே வன்மையும் மிகுதியும் 
** 1216

#53
மதம் எனும் பெயர் கரிமதமும் செருக்கும் ஆம் 
** 1217

#54
மனை எனும் பெயரே மனைவியும் வீடும் ஆம் 
** 1218

#55
மருந்து எனும் பெயரே மருந்தின்விகற்பமும்
அமரர்உணவின்பெயரும் ஆமே 
** 1219

#56
மந்தி எனும் பெயர் வண்டும் ஆதித்தனும்
குரங்கின்விகற்பமும் கூறப்பெறுமே 
** 1220

#57
மன்ற எனும் பெயர் தேற்றமும் இடைச்சொலும்
மருவும் எனவே வழங்கப்பெறுமே 
* மகர அகர வருக்கம் முற்றும்
** மகர ஆகார வருக்கம்
** 1221

#58
மால் எனும் பெயர் திருமாலொடு மதிமகன்
காரிநிற வலாரியும் காற்றொடு சோழனும்
கண்குத்திப்பாம்பும் கருமையும் பெருமையும்
மயக்கமும் விருப்பும் கண்ணேணியும் ஆகும் 
** 1222

#59
மா எனும் பெயர் ஒரு மரமும் அழைத்தலும்
திருவும் குதிரையும் செல்வமும் கறுப்பும்
விலங்கின்பொதுவும் விளைநிலமும் அழகும்
வண்டும் ஓர் இலக்கமும் பெருமை நிறமும்
நெல்மா முதலவும் நிகழ்த்தப்பெறுமே 
** 1223

#60
மாலை எனும் பெயர் ஒழுக்கமும் இயல்பும்
நதியும் இரவும் மலரால் மணியால்
சொல்லால் பொன்னால் தொடுத்திடு தொடையும் ஆம்
** 1224

#61
மான் எனும் பெயரே மகரஇராசியும்
விலங்கின்பொதுவுடன் உழையையும் விளம்புவர் 
** 1225

#62
மாரி எனும் பெயர் மழையும் மேகமும்
வடுகியும் மதுவும் மரணமும் வழங்கும் 
** 1226

#63
மாதிரம் எனும் பெயர் திசையும் யானையும்
மலையும் எனவே வழங்கப்பெறுமே 
** 1227

#64
மாதவம் எனும் பெயர் வளர் தவப்பெயரும்
இளவேனில் பெயரும் மதுவும் இயம்புவர் 
** 1228

#65
மார்க்கம் எனும் பெயர் வழியும் தெருவும்
சமையவிகற்பமும் சாற்றப்பெறுமே 
** 1229

#66
மாடம் எனும் பெயர் மனையும் உழுந்தும் ஆம் 
** 1230

#67
மாழை எனும் பெயர் உலோகக்கட்டியும்
பொன்னும் அழகும் புளிமாவும் ஓலையும்
திரண்டவடிவும் செப்புவர் புலவர் 
** 1231

#68
மாசு எனும் பெயரே மேகமும் அழுக்கும்
சிறுமையும் குற்றமும் செப்பப்பெறுமே 
** 1232

#69
மாதர் எனும் பெயர் இடைச்சொலும் அழகும்
காதலும் அரிவையர் பெயரும் கருதுவர் 
** 1233

#70
மாந்தல் எனும் பெயர் மரித்தலும் குடித்தலும்
உண்டலும் எனவே உரைத்தனர் புலவர் 
** 1234

#71
மாயன் எனும் பெயர் மாதவன் பெயரும்
கருநிறமுடையோன் பெயரும் கருதுவர் 
** 1235

#72
மாய்தல் எனும் பெயர் மறைதலும் மரணமும் 
** 1236

#73
மாருதி எனும் பெயர் அநுமன் பெயரும்
வீமன்பிதாவின்பெயரும் விளம்புவர் 
** 1237

#74
மாயம் எனும் பெயர் வஞ்சனைப் பெயரும்
பொய்யும் கருநிறப்பெயரும் புகலுவர் 
** 1238

#75
மாயை எனும் பெயர் மாயமும் சத்தியும் 
** 1239

#76
மாடு எனும் பெயரே தனமும் பக்கமும்
மணியும் செல்வமும் நிரையும் வழங்கும் 
** 1240

#77
மாலிகை எனும் பெயர் மதுவும் மாலியும் 
** 1241

#78
மானுதல் எனும் பெயர் மயக்கமும் உவமையும்
இலச்சையும் எனவே இயம்புவர் புலவர் 
** 1242

#79
மானம் எனும் பெயர் லச்சையும் அளவும்
விமானமும் குற்றமும் பெருமையும் விளம்புவர் 
** மகர ஆகார வருக்கம் முற்றும்
** மகர இகர வருக்கம்
** 1243

#80
மிசை எனும் பெயரே மீமிசைச் சொல்லும்
உணவுடன் மேடும் உரைக்கப்பெறுமே 
** 1244

#81
மிச்சை எனும் பெயர் மிடித்தலும் பொய்த்தலும்
அறிவின்மைப் பெயர்தானும் ஆமே 
** 1245

#82
மிதவை எனும் பெயர் தெப்பமும் சோறும் ஆம் 
** மகர இகர வருக்கம் முற்றும்
** மகர ஈகார வருக்கம்
** 1246

#83
மீன் எனும் பெயரே வான்மீனோடு
மச்சமும் சித்திரைநாளும் வழங்கும் 
** 1247

#84
மீளி எனும் பெயர் மிடலும் பெருமையும்
தலைவனும் விறலோன் பெயரும் சாற்றுவர் 
** 1248

#85
மீக்கூறு எனும் பெயர் சொல்செலவுடனே
கீர்த்திப் பெயரும் கிளத்தப்பெறுமே 
** மகர ஈகார வருக்கம் முற்றும்
** மகர உகர வருக்கம்
** 1249

#86
முறம் எனும் பெயரே வியாகமும் சுளகும் ஆம் 
** 1250

#87
முறிகுளம் எனும் பெயர் பூராடநாளும்
உடைகுளப்பெயரும் உரைத்தனர் புலவர் 
** 1251

#88
முரசு எனும் பெயரே முரசின்விகற்பமும்
உத்திரட்டாதியும் உரைக்கப்பெறுமே 
** 1252

#89
முனி எனும் பெயர் தவமுனிவன் பெயரும்
தந்தியின்கன்றும் தனுஇராசியும்
வில்லும் புலவோர் விளம்பப்பெறுமே 
** 1253

#90
முதலை என் பெயர் செங்கிடையும் இடங்கரும்
மயிலிறகின்முதல்முள்ளும் வழங்கும் 
** 1254

#91
முரம்பு எனும் பெயரே மேடும் பாறையும்
பரலடுத்துயர்ந்தநிலமும் பகருவர் 
** 1255

#92
முளை எனும் பெயரே மூங்கிலும் சுதனும்
அங்குரத்தின்பெயர்தானும் ஆமே 
** 1256

#93
முறுவல் எனும் பெயர் தந்தமும் முகையும் ஆம் 
** 1257

#94
முன்னல் எனும் பெயர் நெஞ்சமும் நினைவும் ஆம் 
** 1258

#95
முனை எனும் பெயரே முரண்பெறு பகையும்
கூர்மையும் வெறுப்பும் கூறுவர் புலவர் 
** 1259

#96
முரண் எனும் பெயரே பெலமும் பகையும் ஆம் 
** 1260

#97
முருகு எனும் பெயரே முருகக்கடவுளும்
இளமையும் விழாவும் எழிலும் வாசமும்
மதுவும் எலுமிச்சும் வழங்கப்பெறுமே 
** 1261

#98
முறை எனும் பெயரே முறைப்பெயர்விகற்பமும்
இயல்பும் பொத்தகப்பெயரும் இயம்புவர் 
** 1262

#99
முடலை எனும் பெயர் திரண்டவடிவும்
பெருமையும் என்னப் பேசுவர் புலவர் 
** 1263

#100
முன்னம் எனும் பெயர் முற்காலத்தொடு
சிங்கமும் குறிப்பும் சீக்கிரமும் ஆமே 
** 1264

#101
முடங்கல் எனும் பெயர் மடங்கலும் தாழையும்
மூங்கிலும் நோயும் மொழியப்பெறுமே 
** 1265

#102
முத்தம் எனும் பெயர் அதரமும் பிரியமும்
முத்தும் மருதநிலமும் மொழிகுவர் 
** 1266

#103
முண்டகம் எனும் பெயர் முள்ளுடைமூலமும்
கமலமும் தாழையும் கள்ளும் நீர்முள்ளியும்
நெற்றியும் எனவே நிகழ்த்தப்பெறுமே 
** 1267

#104
முல்லை எனும் பெயர் முல்லைநன்னிலமும்
மல்லிகைப் பெயரும் வெற்றியும் கற்பும் ஆம் 
** 1268

#105
முடி எனும் பெயர் மயிர்முடியும் தலையும்
மகுடமும் எனவே வழங்குவர் புலவர் 
** 1269

#106
முச்சி என் பெயர் மயிர்முடியும் உச்சியும் 
** 1270

#107
முற்று எனும் பெயரே முழுதும் வளைத்தலும் 
** 1271

#108
முற்றல் எனும் பெயர் சூழ்போதலும் வெறுத்தலும்
முதுமையும் முடிவின்பெயரும் மொழிகுவர் 
** 1272

#109
முளரி எனும் பெயர் விறகும் சிறுமையும்
கமலமும் காடும் கனலும் முள்மரமும் ஆம் 
** மகர உகர வருக்கம் முற்றும்
** மகர ஊகார வருக்கம்
** 1273

#110
மூதிரை எனும் பெயர் முக்கண்ணன் பெயரும்
ஆதிரைநாளும் ஆம் என நவில்வர் 
** 1274

#111
மூலம் எனும் பெயர் கிழங்கும் ஓர் நாளும்
முதலும் நிமித்தமும் வேரும் மொழிந்தனர் 
** 1275

#112
மூரல் எனும் பெயர் முறுவலும் தந்தமும்
சோறும் எனவே சொல்லுவர் புலவர் 
** 1276

#113
மூரி எனும் பெயர் முரணும் பெருமையும்
எருமையும் இடபமும் சோம்பும் நெரிவும் ஆம் 
** 1277

#114
மூசல் எனும் பெயர் மொய்த்தலும் சாவும் ஆம் 
** 1278

#115
மூழி எனும் பெயர் வாவியும் சேறும்
அகப்பையின்பெயரும் ஆகும் என்ப 
** 1279

#116
மூழை எனும் பெயர் அகப்பையும் சேறும் ஆம் 
** மகர ஊகார வருக்கம் முற்றும்
** மகர எகர வருக்கம்
** 1280

#117
மெய் எனும் பெயரே மெய்மையும் ஞானமும்
சடமும் ஒற்றெழுத்தும் மெய்ப்பொருளும் சாற்றுவர் 
** 1281

#118
மெத்தை எனும் பெயர் சட்டையும் அணையும் ஆம் 
** மகர எகர வருக்கம் முற்றும்
** மகர ஏகார வருக்கம்
** 1282

#119
மேதை எனும் பெயர் அறிவும் புதனும்
இறைச்சியும் எனவே இயம்புவர் புலவர் 
** 1283

#120
மேல் எனும் பெயரே மேல்பால்திசையும்
இடமும் விசும்பும் இயல்புளோர் பெயரும் ஆம் 
** 1284

#121
மேக்கு எனும் பெயரே மேலும் மேற்றிசையும் ஆம் 
** 1285

#122
மேனி எனும் பெயர் நிறைவும் வடிவும் ஆம் 
** மகர ஏகார வருக்கம் முற்றும்
** மகர ஐகார வருக்கம்
** 1286

#123
மை எனும் பெயரே மேடஇராசியும்
ஆடும் குற்றமும் அஞ்சனமும் கறுப்பும்
மேகமும் எனவே விளம்புவர் புலவர் 
** 1287

#124
மைந்தன் எனும் பெயர் திறலோன் பெயரும்
புதல்வன் பெயரும் புகலப்பெறுமே 
** மகர ஐகார வருக்கம் முற்றும்
** மகர ஒகர வருக்கம்
** 1288

#125
மொக்குள் எனும் பெயர் பூவின் முகுளமும்
குமிழியும் எனவே கூறுவர் புலவர் 
** 1289

#126
மொய் எனும் பெயர் போர்க்களமும் யானையும்
வண்டும் கூட்டமும் வகுக்கப்பெறுமே 
** 1290

#127
மொய்ம்பு எனும் பெயரே பெலமும் புயமும் ஆம் 
** மகர ஒகர வருக்கம் முற்றும்
** மகர ஓகார வருக்கம்
** 1291

#128
மோடு எனும் பெயரே உயரமும் பெருமையும்
வயிறும் எனவே வகுத்தனர் புலவர் 
** மகர ஓகார வருக்கம் முற்றும்
** மகர ஒளகார வருக்கம்
** 1292

#129
மெளலி எனும் பெயர் சடையும் கிரீடமும் 
** மகர ஒளகார வருக்கம் முற்றும்
** வது மகர வருக்கத் தொகுதி முற்றும்

@9 வது யகர வருக்கத் தொகுதி
** யகர அகர வருக்கம்
** 1293

#1
யவனர் எனும் பெயர் சோனகர் பெயரும்
சித்திரகாரர்தம்பெயரும் செப்புவர் 
** யகர அகர வருக்கம் முற்றும்
** யகர ஆகார வருக்கம்
** 1294

#2
யாமம் எனும் பெயர் இரவும் தெற்கும்
சாமமும் எனவே சாற்றப்பெறுமே 
** 1295

#3
யாழ் எனும் பெயரே வீணைக்கருவியும்
ஆதிரைநாளும் அசுபதிப் பெயரும்
மிதுனராசியும் விளம்புவர் புலவர் 
** 1296

#4
யாணர் எனும் பெயர் அழகும் புதுமையும்
நன்மையும் யாழ்பயில்நல்லோர் பெயரும்
தச்சரும் எனவே சாற்றப்பெறுமே 
** 1297

#5
யாப்பு எனும் பெயரே கவிதையும் கட்டும் ஆம் 
** 1298

#6
யானம் எனும் பெயர் ஊர்தியின்விகற்பமும்
மரக்கால் பெயரும் வழங்கப்பெறுமே 
** 1299

#7
யானு எனும் பெயர் நன்மையும் அழகும் ஆம் 
** யகர ஆகார வருக்கம் முற்றும்
** யகர ஊகார வருக்கம்
** 1300

#8
யூபம் எனும் பெயர் படையினதுஉறுப்பும்
கபந்தமும் வேள்வித்தறியும் கருதுவர் 
** 1301

#9
யூகம் எனும் பெயர் உட்பொருளுணர்த்தலும்
கோட்டானும் கருங்குரங்கும் தருக்கமும்
உடற்குறையும் என உரைக்கப்பெறுமே 
** யகர ஊகார வருக்கம் முற்றும்
** யகர ஓகார வருக்கம்
** 1302

#10
யோகம் எனும் பெயர் உபாயமும் முயற்சியும்
தியானமும் கூட்டமும் செல்வமும் சிறப்பும் ஆம் 
** யகர ஓகார வருக்கம் முற்றும்
** யகர வருக்கத் தொகுதி முற்றும்

@10  வது வகர வருக்கத் தொகுதி
** வகர அகர வருக்கம்
** 1303

#1
வலவை எனும் பெயர் வஞ்சப்பெண்ணொடு
வெறியாட்டாளனும் வல்லோன் பெயரும் ஆம் 
** 1304

#2
வருடம் எனும் பெயர் மழையும் யாண்டும் ஆம் 
** 1305

#3
வன்னி எனும் பெயர் ஒரு மரப்பெயரும்
நெருப்பும் கிளியும் பிரமசாரியும் ஆம் 
** 1306

#4
வயல் எனும் பெயரே செய்யும் வெளியும்
மருதநன்னிலமும் வழங்கப்பெறுமே 
** 1307

#5
வசி எனும் பெயர் வாளும் வடுவும்
வசிகமும் கூர்மையும் வழங்கப்பெறுமே 
** 1308

#6
வடவை எனும் பெயர் வடவாஅனலும்
குதிரைப்பெட்டையும் மதகரிப்பிடியும்
பெண்பால்எருமைப் பெயரும் பேசுவர் 
** 1309

#7
வயம் எனும் பெயரே வலிமையும் புனலும்
புள்பொதுப் பெயரும் புகலுவர் புலவர் 
** 1310

#8
வழி எனும் பெயரே மரபும் தொடர்ச்சியும்
தருமமும் இடமும் தனையனும் நடவையும் 
** 1311

#9
வஞ்சனை எனும் பெயர் மாயையும் பொய்யும்
வஞ்சகப்பெயரும் வழங்கப்பெறுமே 
** 1312

#10
வரை எனும் பெயரே மலையும் மூங்கிலும்
அளவும் கைவரையும் ஆகும் என்ப 
** 1313

#11
வசதி எனும் பெயர் மனையும் ஊரும்
சிறப்புறுமிடமும் செப்புவர் புலவர் 
** 1314

#12
வயவன் எனும் பெயர் வலிமான்குருவியும்
விறலோன் காதலன் பெயரும் விளம்புவர் 
** 1315

#13
வயா எனும் பெயரே வருத்தமும் விருப்பமும்
நோயும் கருப்பமும் நுவலுவர் புலவர் 
** 1316

#14
வள் எனும் பெயரே வல்லி பற்றிரும்பும்
கூர்மையும் காதும் வகிர்தலும் கூறுவர் 
** 1317

#15
வண்டு எனும் பெயர் கைவளையும் குற்றமும்
பூசமும் சுரும்பும் புரியும் வெண்பணிலமும்
மாதர்விளையாடலும் அம்பும் வழங்கும் 
** 1318

#16
வட்டம் எனும் பெயர் பாராவளையமும்
பரிசையும் திகிரியும் பரந்த கைமணியும்
வட்டவடிவும் தடாகமும் நீர்ச்சாலும்
துகிலும் ஊர்கோளும் சொல்லுவர் புலவர் 
** 1319

#17
வஞ்சி எனும் பெயர் மாதும் ஓர் கொடியும்
பாவின்விகற்பமும் போர்மேல்செலவும்
மருதயாழ்த்திறமும் வகுத்துரைத்தனரே 
** 1320

#18
வடுகு எனும் பெயரே இந்தளஇசையும்
மருதயாழ்த்திறமும் வகுத்துரைத்தனரே 
** 1321

#19
வஞ்சகம் எனும் பெயர் வாளும் கபடும் ஆம் 
** 1322

#20
வயிரம் எனும் பெயர் வச்சிரமணியும்
மரத்தின்வயிரமும் வச்சிராயுதமும்
சினமும் கூர்மையும் செப்புவர் புலவர் 
** 1323

#21
வறிது எனும் பெயரே பயனில்வார்த்தையும்
சிறிதும் அறியாமையும் அருகலும் செப்புவர் 
** 1324

#22
வம்பு எனும் பெயரே மணமும் மிடாவும்
நிலையின்மையும் முலைக்கச்சும் புதுமையும் 
** 1325

#23
வதுவை எனும் பெயர் மணமும் கலியாணமும் 
** 1326

#24
வழங்கல் எனும் பெயர் உலாவலும் உரைத்தலும்
கொடுத்தலும் எனவே அறைந்தனர் புலவர் 
** 1327

#25
வலித்தல் எனும் பெயர் நினைத்தலும் பேசலும் 
** 1328

#26
வலம்புரி எனும் பெயர் சலஞ்சலப்பெயரும்
நந்தியாவத்தமும் நவிலப்பெறுமே 
** 1329

#27
வலவன் எனும் பெயர் வெற்றியாளனும்
தேர்ப்பாகனும் எனச் செப்புவர் புலவர் 
** 1330

#28
வள்ளம் என் பெயர் மரக்காலும் வட்டிலும் 
** 1331

#29
வக்கிரம் எனும் பெயர் மடங்கலும் கொடுமையும்
வட்டமும் எனவே வழங்கப்பெறுமே 
** 1332

#30
வசந்தன் எனும் பெயர் மதனும் தென்காலும் ஆம் 
** 1333

#31
வரி எனும் பெயர் நெல்பொதுவும் வாரியும்
எழுத்தும் சுணங்கும் இன்னிசைப்பாடலும்
குடியிறைப் பெயரும் சந்தித்தெருவும்
நீளமும் எனவே நிகழ்த்துவர் புலவர் 
** 1334

#32
வனம் எனும் பெயரே ஊர் சூழ் சோலையும்
நீரும் துழாயும் காடும் மிகுதியும்
ஈரமும் எனவே இயம்பப்பெறுமே 
** 1335

#33
வடகம் எனும் பெயர் வடகஉடையும்
தோலின்பெயரும் சொல்லப்பெறுமே 
** 1336

#34
வங்கம் எனும் பெயர் வழுதுணைப் பெயரும்
வெள்ளீயத்தினொடு தோணியும் விளம்புவர் 
** 1337

#35
வசந்தம் எனும் பெயர் வசந்தகாலமும்
புரந்தரன்மாளிகை மணமும் புகலுவர் 
** 1338

#36
வல்லி எனும் பெயர் கொடியும் ஆய்ப்பாடியும்
நிகளமும் எனவே நிகழ்த்தப்பெறுமே 
** 1339

#37
வல் எனும் பெயரே வலிமையும் விரைவும்
சூதும் எனவே சொல்லுவர் புலவர் 
** 1340

#38
வடு எனும் பெயரே குற்றமும் சிறுமையும்
தழும்பும் சுரும்பொடு சோம்பும் காய்ப்பிஞ்சும் ஆம் 
** 1341

#39
வண்ணம் எனும் பெயர் வடிவும் ஓசையும்
நிறங்களின்விகற்பமும் நிகழ்த்தப்பெறுமே 
** 1342

#40
வயின் எனும் பெயரே வயிறு இடம் மனையும் ஆம் 
** 1343

#41
வண்மை எனும் பெயர் வளமையும் கொடுத்தலும்
வலிமையும் புகழும் வாய்மையும் வழங்கும் 
** 1344

#42
வசு எனும் பெயரே பொன்னும் கனலும்
எண்வகைஅமரரும் பசுவின்கன்றும் ஆம் 
** 1345

#43
வலம் எனும் பெயரே கனமும் வெற்றியும்
இடமும் வலப்பால் பெயரும் இயம்புவர் 
** 1346

#44
வன்மை எனும் பெயர் வன்மையும் காடும்
விரைவும் எனவே விளம்புவர் புலவர் 
** 1347

#45
வளம் எனும் பெயரே வனப்பும் பலவகை
வளமும் பதவியும் வழங்கப்பெறுமே 
** 1348

#46
வள்ளி என் பெயர் கைவளையும் கொடியும் ஆம் 
** 1349

#47
வட்கல் எனும் பெயர் நாணமும் கேடும் ஆம் 
** 1350

#48
வரைதல் எனும் பெயர் நீக்கமும் கொளலும் ஆம் 
** 1351

#49
வடம் எனும் பெயர் ஆலமரமும் கயிறும்
மணிவடப்பெயரும் வழங்குவர் புலவர் 
** 1352

#50
வயமா எனும் பெயர் வாசியும் யானையும்
சிங்கமும் புலியும் செப்பப்பெறுமே 
** வகர அகர வருக்கம் முற்றும்
** வகர ஆகார வருக்கம்
** 1353

#51
வாரம் என் பெயர் மலைச்சார்பும் பகுத்தலும்
கடலும் நீர்க்கரையும் கரு ஏழ்கிழமையும்
புரிவுறும் அன்பையும் புகலுவர் புலவர் 
** 1354

#52
வான் எனும் பெயரே வானமும் பெருமையும்
மேகமும் மழையும் விளம்பப்பெறுமே 
** 1355

#53
வாருணம் எனும் பெயர் நீரும் கடலும்
மேற்கும் எனவே விளம்புவர் புலவர் 
** 1356

#54
வாடை என் பெயர் வடகாற்றும் வீதியும்
சிற்றூர்ப் பெயரையும் செப்பப்பெறுமே 
** 1357

#55
வாரி எனும் பெயர் கடலும் நீர்மிகுதியும்
நீரும் விளைவும் கதவின்விகற்பமும்
மதிலின்சுற்றும் வரு புனல் மடையும்
வாய்தலும் செல்வவரத்தும் வழியும்
ஆனைபடுக்குமிடமும் ஆமே 
** 1358

#56
வாமனம் எனும் பெயர் குறளும் ஓர் சமயமும்
திசைநிலைக் குஞ்சரத்தொன்றும் செப்புவர் 
** 1359

#57
வானம் எனும் பெயர் மழையும் ஆகாயமும்
உலர்மரப்பெயர் அதன் கனியையும் உணர்த்துவர் 
** 1360

#58
வாணி எனும் பெயர் வார்த்தையின்பெயரும்
பாரதி பெயரும் பகழியும் நடமும் ஆம் 
** 1361

#59
வாசம் எனும் பெயர் புள்ளின்சிறகும்
பூவின் மணமும் புடைவையின்பெயரும்
இருப்பிடமும் என இயம்புவர் புலவர் 
** 1362

#60
வாயில் என் பெயர் ஐம்புலனும் ஏதுவும்
கதவின்விகற்பமும் இடமும் கருதுவர் 
** 1363

#61
வானி எனும் பெயர் சேனையும் துவசமும்
மேற்கட்டியும் என விளம்பப்பெறுமே 
** 1364

#62
வாள் எனும் பெயரே வாளாயுதமும்
ஒளியும் எனவே உரைத்தனர் புலவர் 
** 1365

#63
வால் எனும் பெயரே பெருமையும் சுத்தமும்
விலங்கின்வாலும் வெண்மைநிறமும் ஆம் 
** 1366

#64
வாரணம் எனும் பெயர் மதகரிப் பெயரும்
சங்கும் கவசமும் தடுத்தலும் கோழியும்
கடலும் எனவே கருதப்பெறுமே 
** 1367

#65
வாங்கல் எனும் பெயர் வளைத்தலும் கொளலும் ஆம் 
** 1368

#66
வாசி எனும் பெயர் குழலிசைவிகற்பமும்
குதிரையின்பெயரும் கூறப்பெறுமே 
** 1369

#67
வாலி எனும் பெயர் அலாயுதன்பெயரும்
கிட்கிந்தைஅரசன் பெயரும் கிளத்துவர் 
** 1370

#68
வாதம் எனும் பெயர் தர்க்கமும் காற்றும் ஆம் 
** 1371

#69
வாமம் என் பெயர் இடப்பாலும் அழகும்
குறளும் ஓர் சமையப்பெயரும் கூறுவர் 
** 1372

#70
வார் எனும் பெயர் முலைக்கச்சும் நெடுமையும்
நீரும் நேர்மையும் வகிர்தலும் நிகழ்த்துவர் 
** 1373

#71
வாய் எனும் பெயர் வருவாயும் வாய்மையும்
வாய்தலும் வாயின்பெயரும் இடமும் ஆம் 
** 1374

#72
வாகை எனும் பெயர் ஒழுக்கமும் தவமும்
தருமக்கருமமும் சால்பும் மிகுதியும்
ஆள்வினை முதலாம் செய்கைநலமும்
கைவலம் முதலாம் கல்வியாண்மையும்
ஒருவரிலொருவர் வென்றியும் ஓர் மரமும்
பண்பும் மிகையும் பகரப்பெறுமே 
** 1375

#73
வாழி எனும் பெயர் வாழ்க என் சொல்லும்
இடைச்சொலின்பெயரும் இயம்புவர் புலவர் 
** வகர ஆகார வருக்கம் முற்றும்
** வகர இகர வருக்கம்
** 1376

#74
விண்டு எனும் பெயரே மேகமும் மூங்கிலும்
மாயனும் காற்றும் மலையும் விளம்புவர் 
** 1377

#75
விசும்பு எனும் பெயரே விண்ணும் சுவர்க்கமும்
மேகமும் திசையும் விளம்பப்பெறுமே 
** 1378

#76
விசையம் எனும் பெயர் வென்றியினொடு சர்க்கரையும்
கதிர்மண்டலமும் கருதுவர் 
** 1379

#77
விழவு எனும் பெயரே மிதுனராசியும்
உத்சவப்பெயரும் உரைக்கப்பெறுமே 
** 1380

#78
விடம் எனும் பெயரே நஞ்சும் தேளும்
ஒரு மரப்பெயரும் உரைத்தனர் புலவர் 
** 1381

#79
விடர் எனும் பெயரே வெற்பின் முழையும்
கமரும் தவத்தோரிடமும் காடும் ஆம் 
** 1382

#80
விளவு எனும் பெயரே விளமரமும் கமரும் ஆம் 
** 1383

#81
விடங்கம் எனும் பெயர் வீதிக்கொடியும்
ஆண்மையும் அழகும் கொடுங்கையும் மனையின்
முகடும் எனவே மொழிந்தனர் புலவர் 
** 1384

#82
விடலை எனும் பெயர் விறலோன் பெயரும்
தலைவன் பெயரும் சாற்றுவர் புலவர் 
** 1385

#83
விழைந்தோன் எனும் பெயர் வேட்டோன் பெயரும்
கொண்கனும் எனவே கூறப்பெறுமே 
** 1386

#84
விலோதம் எனும் பெயர் பெண்பால்மயிரும்
மயிர்ச்சுருளும் என வழங்குவர் புலவர் 
** 1387

#85
விறல் எனும் பெயரே வென்றியும் பலமும் ஆம் 
** 1388

#86
விதப்பு எனும் பெயரே மிகுதியும் பெலமும் ஆம் 
** 1389

#87
விறப்பு எனும் பெயரே அச்சமும் பெலமும்
செறிவும் எனவே செப்புவர் புலவர் 
** 1390

#88
வியப்பு எனும் பெயர் சினக்குறிப்பும் சினமும்
அதிசயப்பெயரும் ஆகும் என்ப 
** 1391

#89
விழைச்சு எனும் பெயரே விருப்பும் நல் இளமையும்
புணர்ச்சியனுபோகப்பெயரும் புகலுவர் 
** 1392

#90
விடை எனும் பெயர் எதிர்மொழியும் எருதும்
ஏவுதல் பெயரும் இயம்புவர் புலவர் 
** 1393

#91
விந்தம் என் பெயர் தாமரையும் ஓர் கிரியும் ஆம் 
** 1394

#92
விம்மல் எனும் பெயர் ஒலித்தலும் அழுகையும் 
** 1395

#93
வியல் எனும் பெயரே பெருமையும் அகலமும் 
** 1396

#94
விபுலம் எனும் பெயர் பெருமையும் அகலமும் 
** 1397

#95
வில் எனும் பெயரே மூலநாளும்
ஒளியும் வார் சிலையும் உரைக்கப்பெறுமே 
** 1398

#96
விதி எனும் பெயரே பிரமனும் தொழிலும்
இயல்பும் ஊழ்முறையும் இயம்பப்பெறுமே 
** 1399

#97
விருகோதரன் எனும் பெயர் யமராயனும்
வீமன் பெயரும் விளம்பப்பெறுமே 
** 1400

#98
வித்தம் எனும் பெயர் அறிவும் கனகமும்
பழித்தலும் எனவே பகரப்பெறுமே 
** 1401

#99
விளிவு எனும் பெயரே வீதலும் கேடும் ஆம் 
** 1402

#100
விருத்தி எனும் பெயர் விரித்திடுபொருளும்
தன் தொழில் இலாபமும் ஆக்கத்தின்பெயரும் ஆம் 
** 1403

#101
விபூதி எனும் பெயர் செல்வமும் நீறும்
கொடுமையும் தசையும் குற்றமும் நரகும் ஆம் 
** 1404

#102
விடபம் எனும் பெயர் மரக்கொம்பும் காளையும்
இடபராசியும் இயம்புவர் புலவர் 
** 1405

#103
விளரி எனும் பெயர் வேட்கையின்மிகுதியும்
இளமையும் யாழில் ஓர் நரம்பும் யாழும் ஆம் 
** 1406

#104
விழுமம் எனும் பெயர் சீர்மையும் சிறப்பும்
இடும்பையும் எனவே இயம்பப்பெறுமே 
** 1407

#105
விளர் எனும் பெயரே வெளுப்பும் இளமையும்
கொழுப்பும் எனவே கூறுவர் புலவர் 
** 1408

#106
விண் எனும் பெயரே விசும்பும் மேகமும் ஆம் 
** 1409

#107
விரை எனும் பெயரே சாந்தும் தூமமும்
மணமும் எனவே வழங்கப்பெறுமே 
** 1410

#108
வியாளம் எனும் பெயர் அரவும் புலியும் ஆம் 
** 1411

#109
விலங்கு எனும் பெயரே மிருகமும் தளையும் ஆம் 
** 1412

#110
விநாயகன் எனும் பெயர் விறல் கரிமுகனும்
அருகனும் புத்தனும் ஆகும் என்ப 
** வகர இகர வருக்கம் முற்றும்
** வகர ஈகார வருக்கம்
** 1413

#111
வீரை எனும் பெயர் விரி கடல் பெயரொடு
துயரையும் ஒரு மரப்பெயரையும் சொல்லுவர் 
** 1414

#112
வீதி எனும் பெயர் நேரோடுதலும்
தெருவும் எனவே செப்பப்பெறுமே 
** 1415

#113
வீ எனும் பெயரே வீதலும் நீக்கமும்
பூவும் புள்ளின்பொதுவும் ஆமே 
** 1416

#114
வீசல் எனும் பெயர் எறிதலும் கொடையும் ஆம் 
** 1417

#115
வீதல் எனும் பெயர் கெடுதலும் சாதலும் 
** வகர ஈகார வருக்கம் முற்றும்
** வகர எகர வருக்கம்
** 1418

#116
வெள்ளை எனும் பெயர் வெளிறும் வெண்பாவும்
வெள்ளாட்டுஏறும் வெண்மையும் மதுவும்
பெலதேவனும் வெண்சங்கும் பேசுவர் 
** 1419

#117
வெறி எனும் பெயரே அணங்குஆட்டு வட்டமும்
அச்சமும் பேயும் மணம்பெறு நாற்றமும்
ஆடும் கலகமும் நோயும் ஆமே 
** 1420

#118
வெள்ளம் என் பெயர் நீர்மிகுதியும் கடலும்
கடல் திரைப் பெயரும் ஓர் எண்ணும் கருதுவர் 
** 1421

#119
வெதிர் எனும் பெயரே செவிடனும் மூங்கிலும் 
** 1422

#120
வெறுக்கை எனும் பெயர் விபவமும் கனகமும்
வெறுத்தலும் புலவோர் விளம்பப்பெறுமே 
** 1423

#121
வெளில் எனும் பெயரே வேழத்தம்பமும்
அணிலும் பாடையும் தயிர்கடைதறியும் ஆம் 
** 1424

#122
வெடி எனும் பெயரே அச்சமும் வெளியும்
பரிமளப்புகையும் பகரப்பெறுமே 
** 1425

#123
வெம்மை எனும் பெயர் விருப்பும் உட்டிணமும்
விரைவும் எனவே விளம்பப்பெறுமே 
** 1426

#124
வெள்ளில் எனும் பெயர் விளவும் பாடையும் 
** 1427

#125
வெய்யோன் எனும் பெயர் விருப்பினன் பெயரும்
இரவியும் கொடியோன் பெயரும் இயம்புவர் 
** 1428

#126
வெள்ளி எனும் பெயர் அசுரர்மந்திரியும்
இரசதப்பெயரும் இயம்புவர் புலவர் 
** வகர எகர வருக்கம் முற்றும்
** வகர ஏகார வருக்கம்
** 1429

#127
வேள் எனும் பெயரே வேல் குமரேசனும்
வில்வேளும் சழுக்கிவேந்தரும் ஆமே 
** 1430

#128
வேட்டுவன் எனும் பெயர் வேடனும் மகமும்
குழவிச்சிறுபுள் பெயரும் கூறுவர் 
** 1431

#129
வேலை எனும் பெயர் கடலுடன் கடற்கரை
பொழுதும் எனவே புகன்றனர் புலவர் 
** 1432

#130
வேணி எனும் பெயர் விசும்பும் கோடீரமும் 
** 1433

#131
வேள்வி எனும் பெயர் வேள்விக்குண்டமும்
கொடுத்தலும் யாகமும் குறைவில் பூசனையும்
மகநாள் பெயரும் வழங்குவர் புலவர் 
** 1434

#132
வேலி எனும் பெயர் ஊரும் காவலும்
விளைநிலமும் பயிர்வேலியும் மதிலும் ஆம் 
** 1435

#133
வேய்தல் எனும் பெயர் வேயுள் சூடுதலும் ஆம் 
** 1436

#134
வேதிகை எனும் பெயர் பலகையும் திண்ணையும் 
** 1437

#135
வேளாளர் என் பெயர் தனவசியர் பேரும்
தியாகியர் பெயருடன் சிறந்த காராளரும் 
** 1438

#136
வேங்கை எனும் பெயர் புலியும் ஓர் தருவும்
பொன்னும் எனவே புகன்றனர் புலவர் 
** 1439

#137
வேல் எனும் பெயரே மரத்தின்விகற்பமும்
படைக்கலப்பொதுவும் வேல்படையும் பகருவர் 
** 1440

#138
வேளாண்மை எனும் பெயர் மெய்யும் கொடையும் ஆம் 
** 1441

#139
வேய் எனும் பெயரே ஒற்றும் மூங்கிலும்
உள்துளைவடிவும் உரைத்தனர் புலவர்
** 1442

#140
வேணு எனும் பெயர் உள்துளைப்பொருளும்
மூங்கிலும் வில்லும் வாளும் மொழிகுவர் 
** 1443

#141
வேழம் எனும் பெயர் வேழப்பூச்சியும்
கரும்பும் மூங்கிலும் கொறுக்கச்சியும் யானையும் 
** 1444

#142
வேசரி எனும் பெயர் கோவேறுகழுதையும்
மூதேவிஊர்தியும் மொழியப்பெறுமே 
** 1445

#143
வேந்தன் எனும் பெயர் வியாழமும் அரசனும்
சந்திரன் பெயரும் தரு கதிர் இரவியும்
இந்திரன் பெயரும் இயம்புவர் புலவர் 
** 1446

#144
வேலாவலயம் எனும் பெயர் கடலும்
பூமியும் எனவே புகன்றனர் புலவர் 
** 1447

#145
வேர் எனும் பெயர் மரவேரும் வெயர்வும் ஆம் 
** 1448

#146
வேதண்டம் என் பெயர் வெள்ளிமலையும்
பொருப்பின் பொதுவும் புகலப்பெறுமே
** 1449

#147
வேலன் எனும் பெயர் செவ்வேள் பெயரும்
வெறியாட்டாளன் பெயரும் இயம்புவர்
** வகர ஏகார வருக்கம் முற்றும்
** வகர ஐகார வருக்கம்
** 1450

#148
வைகல் எனும் பெயர் தங்கலும் தினமும்
புலரிக்காலமும் புகன்றனர் புலவர்
** 1451

#149
வை எனும் பெயரே நெல்லின்தாளும்
கூர்மையும் புல்லும் கூறப்பெறுமே
** 1452

#150
வையம் எனும் பெயர் உரோகிணி நாளும்
ஆனேறும் சகடஊர்தியும் சிவிகையும்
பாரும் தேரும் பகரப்பெறுமே
****
********
** 
*
** ஈசுரபாரதி இயற்றிய 
** வட மலை நிகண்டு

@0 பாயிரம்
** காப்புப் பாயிரம்
**1

#1
கொல்லமெண்ணூற் றெழுபத்தா றெனக்
  கணிதப்பாவாணர் குறித்த வாண்டின்
மல்கியசீர் விக்கிரம வருடத்
  தாவணிமூல வளஞ்சேர் நாளி
னெல்லைநகர் வடிவுகந்த வேய்முத்தைப்
  பணிந்துலகி னெடுநா ணிற்கப்
பல்கலைதேர் வடமலைநன் னிகண்டினை
  யீசுர கவிஞன் பகர்ந்திட்டானே
**2

#2
பார்புகழ் திருநெல் வேலியம் பதிவா
ழைங்கரத் தொருகோட் டானையை வடிவேற்
சிங்கந் தன்னைச் சிறப்புட னீன்ற
பிடிவடி வுடைய பெண்கொடி பாகத்
தடிகள் செம்பொன் னடிகளை வணங்கி
ஒருபெய ரொருபொருள் உரைக்குங் காண்டமும்
ஒருபொருள் பலபெயர் ஓதுங் காண்டமும்
பலபெயர்க் கூட்டத் தொருபெயர்க் காண்டமும்
சொற்பொருட் காண்டத் தொகைமூன் றாக்கி
ஈட்டுபுகழ் இரையூர் வடமலை நிகண்டென
நாட்டினன் மடசை நன்னகர் வாழும்
சிதம்பர பாரதி சேய்தின முமையாள்
பதம்பணி யீசுர பாரதி தானே
** காப்புப் பாயிரம் முற்றும்
**3

#3
கண்ணனுங் கண்ணனைக் காத்த நெல்வேலிக்
கண்ணனுஞ் செந்தமிழ்க் காப்பா குவரே
**4

#4
திக்கன் புறுபெயர் நூல்செய்யவடி வாளுகந்த
நக்கன் புகழ்நெல்லை நாயகமுக்கண்ணிறை
சாரதிதா னெவவ்வுலகந் தந்தோன்செந் நாவினிற்சேர்
பாரதிதாள் வாழ்த்திநினைப் பாம்
** காப்புப் பாயிரம் முற்றும்

@1 உயிர் வருக்கத் தொகுதியில்
** அகர வருக்கம்
** 1

#1
அருளெனும் பெயர்சிவ சத்தியி னுடனே
கருணையின் பெயருங் கருதப்பெறுமே 
** 2

#2
அனந்த னென்னும் பெயர்சிவனு மாதவனும்
சினந்தவிர் அருகனு நாலிரு தெய்வமும்
சேடனும் எனவே செப்புவர் புலவர் 
** 3

#3
அரம்பை யெனும்பெயர் தெய்வப்பெண் பெயரும்
வாழையின் பெயரும் வழங்கப் பெறுமே 
** 4

#4
அரியெனும் பெயர்நித் திரையுமிரு சுடரும்
பரியுஞ் சிங்கமும் பகையுந் தேரையும்
பொன்னும் காற்றும் புரந்தரனு மாலும்
செந்நெற் கதிரும் கிளியும் காந்தியும்
தேரும் ஐம்மையுஞ் சேகும் வரியும்
கூர்மையு நிறமும் கூற்றும் வண்டும்
வேயும் பன்றியும் விசியும் புகையும்
பாயலுஞ் சிலம்பின் பரலும் சோலையும்
கண்ணில் வரியும் கடலும் உரகமும்
எண்ணிய திகிரியும் இகலியர் வாளும்
தகரும் வலியும் அரிசியும் குரங்கும்
புகரு நெருப்பும் புரையுஞ் சயனமும்
எறிதரு முரசமும் எண்படைக் கலமும்
குறிதரு பச்சையும் கூறிய மதுவும்
அரிதலும் நாற்பா னெழு பெயராமே 
** 5

#5
அண்ட ரெனும்பெயர் விண்டலத் தமரரும்
இடையரும் பகைஞரும் இயம்புவர் புலவர் 
** 6

#6
அலரி யெனும்பெய ரலர்க்கணை ஐந்தும்
இரவியு மலருமோர் மரமு நீராவியுந்
தேனீயும் அழகும் செப்பப் பெறுமே 
** 7

#7
அருண னெனும்பெய ரருக்கனும் அவன்தேர்ப்
பாகனும் புதனும் பகர்ந்தனர் புலவர் 
** 8

#8
அளக்க ரெனும்பெயர் சேறும் உப்பளமும்
கடலும் புடவியுங் கார்த்திகை நாளுமாம் 
** 9

#9
அத்த மெனும்பெய ரருநெறி யுடனே
ஒருநாள் மீனும் உறுகவிப் பொருளும்
காடும் கனகமும் கையும் பாதியும்
கண்ணா டியுமெனக் கருதுவர் புலவர் 
** 10

#10
அணங்கனெனும் பெயரே ஆசையும் அழகும்
வருத்தமும் கொலையும் மையனோயும்
தெய்வமுந் தெய்வத்து வமைசொல் மாதுமாம் 
** 11

#11
அங்கத மெனுபெய ரரவுந் தோளணியும்
வசைபுகல் கவிதையும் வழங்கப் பெறுமே 
** 12

#12
அரவ மெனுபெய ரோசையும் பாம்பு
சிலம்பும் எனவே செப்புவர் புலவர் 
** 13

#13
அண்ட மெனும்பெயர் முட்டையும் விசும்புமாம் 
** 14

#14
அம்பர மெனும்பெய ராடையும் விசும்பும்
கடலு மெனவே கருதப்பெறுமே 
** 15

#15
அஞ்சன மெனும்பெயர் கருமை நிறமும்
ஒருதிசை யானையு மெழுதுகண் மையுமாம் 
** 16

#16
அங்கி யெனும்பெய ரனலும் சட்டையும் 
** 17

#17
அயமெனும் பெயரே அறலும் குதிரையும்
குளமும் இரும்பும் தகருங் கூறுவர் 
** 18

#18
அளக மெனுபெயர் புனலு மயிரும்
மயிர்க்குழற் சியுமென வகுத்தனர் புலவர் 
** 19

#19
அளறெனும் பெயரே நரகமும் சேறுமாம் 
** 20

#20
அந்தரி யெனும்பெயர் துர்க்கையும் உமையுமாம் 
** 21

#21
அல்கல் எனும் பெயர் தங்கலு நாளும்
கருங்கலும் இரவும் சிறுமையும் சொல்லுவர் 
** 22

#22
அந்தி யெனும்பெயர் பாலையாழ்த் திறத்தோர்
ஓசைப் பெயரு மாலையும் இரவுமாம் 
** 23

#23
அடுப்பெனும் பெயரே யியம னாளும்
அச்சப் பெயருமுத் தானமு மாமே 
** 24

#24
அறுவை யெனும்பெயர் சித்திரை நாளும்
தூசும் எனவே சொல்லப் பெறுமே 
** 25

#25
அன்றில் எனும்பெயர் மூல நாளுமோர்
புள்ளும் எனவே புகன்றனர் புலவர் 
** 26

#26
அகியெனும் பெயரே அரவும் இரும்புமாம் 
** 27

#27
அணுவெனும் பெயரே நுண்மையும் உயிரும்
மந்திரப் பெயரும் வழங்கப் பெறுமே 
** 28

#28
அகலுள் எனும் பெயர் ஊரு நாடும்
பரப்பும் எனவே பகரப் பெறுமே 
** 29

#29
அவந்தி யெனும் பெயர் கிளியின் பெயரும்
உஞ்சேனை நகரமும் உரைத்தனர் புலவர் 
** 30

#30
அருப்பம் எனும்பெயர் ஊர்ப்பொதுப் பெயரும்
சோலையின் பெயரும் நோயும் காடுமாம் 
** 31

#31
அடையெனும் பெயரே இலையின் பெயரும்
அடுத்தலும் கனமும் அப்பமும் வழியுமாம் 
** 32

#32
அருவி யெனும்பெயர் மலைச்சார் நதியுந்
தினைத்தாள் பெயரும் செப்பப் பெறுமே 
** 33

#33
அயிரி யெனும்பெயர் நுண்மணற் பெயரு
மீன்முள் ளரித்திடு கருவியும் விளம்புவர் 
** 34

#34
அணையெனும் பெயரே மெத்தையும் சயனமும்
செய்கரைப் பெயரும் செப்பப் பெறுமே 
** 35

#35
அகமெனும் பெயர்மரப் பொதுவும் சயிலமும்
இல்லமு மனமும் இடமும் பாவமும்
ஐந்திணைப் பொருளு டனுள்ளு மாமே 
** 36

#36
அங்கணம் எனும்பெயர் தூம்பு வாயிலு
முன்றிலுஞ் சேறும் மொழிந்தனர் புலவர் 
** 37

#37
அரச னெனும்பெயர் வியாழமு மன்னனும் 
** 38

#38
அன்னை யெனும்பெயர் முன்பிறந் தாளுந்
தாயும் துணைவியும் சாற்றப் பெறுமே 
** 39

#39
அம்மை யெனும்பெயர் தாயு மறுபிறப்பும்
யாப்பினோர் வனப்பும் இயம்பப் பெறுமே 
** 40

#40
அணியெனும் பெயரே அழகும் பெருமையும்
படையின துறுப்பும் இலக்கண அணியும்
பூணும் ஒப்பனையும் புகன்றனர் புலவர் 
** 41

#41
அரத்தம் எனும்பெயர் அரத்தமும் சிவப்பும்
அரக்கும் கடம்பு மரத்தவுற் பலமுமாம் 
** 42

#42
அடியெனும் பெயரே முதன்மையும் காலுங்
கவிதையின் பாதமும் செண்டும் வெளியுமாம் 
** 43

#43
அரலையெனும் பெயர் அருங்கனி விதையும்
மரலும் கழலையின் பெயரும் வழங்குவர் 
** 44

#44
அன்னமெனும் பெயர் சோறும் ஓதிமமுமாம் 
** 45

#45
அக்கார மென்னும் பெயர்சருக் கரையும்
புடவையும் எனவே புகன்றனர் புலவர் 
** 46

#46
அழனம் எனும்பெயர் அனலும் பிணமுமாம் 
** 47

#47
அளியெ னும்பெய ரன்பும் நறவமும்
கொடையும் வண்டின் பெயரும் கூறுவர் 
** 48

#48
அரிட்டம் எனும்பெயர் பிறவியிற் குற்றமும்
கள்ளும் காக்கையும் கருதப் பெறுமே 
** 49

#49
அத்தெனும் பெயரே அசைச்சொல்லும் சிவப்பும்
இசைப்புந் துன்னமும் அரைப்பட் டிகையுமாம் 
** 50

#50
அக்கெனும் பெயரே சங்கின் மணியும்
ஏற்றின் முரிப்பும் எலும்பும் இயம்புவர் 
** 51

#51
அராகம் எனும்பெயர் பாலையாழ்த் திறமும்
செந்நிறப் பெயரு முடுகியற் கவிதையும்
ஆசையின் பெயரு மாமென வழங்குவர் 
** 52

#52
அனந்தம் எனும்பெயர் பொன்னும் ஆகாயமும்
அளவின் மைப்பொருட் பெயரு மாமே 
** 53

#53
அலங்கல் எனும்பெயர் அசைவும் தொடையலும்
இலங்கலும் தளிரும் இயம்புவர் புலவர் 
** 54

#54
அரத்தை யெனும்பெயர் குறிஞ்சி யாழிசையும்
துன்பமும் என்னச் சொல்லுவர் புலவர் 
** 55

#55
அடலெனும் பெயரே சமரும் பெலமும்
வென்றியும் எனவே விளம்பப் பெறுமே 
** 56

#56
அயிலெனும் பெயரே வேலுங் கூர்மையும்
ஆர்தலின் பெயரு மாகு மென்ப 
** 57

#57
அரணம் எனும்பெயர் காவற் காடும்
வேலுங் காவலும் மதிலும் கவசமும் 
** 58

#58
அம்பண மென்னும் பெயர்மரக் கலமும்
கதலித் தண்டும் நீர்ப்பந்தலுந் தூம்பும்
ஆமையின் பெயரு மாமெனப் புகலுவர் 
** 59

#59
அளித்தல் எனும்பெயர் கொடுத்தலும் காத்தலும்
செறிவும் எனவே செப்புவர் புலவர் 
** 60

#60
அச்சம் எனும்பெயர் அகத்தியும் பயமுமாம் 
** 61

#61
அருணம் எனும் பெயர் செம்மறி யாடும்
மானும் எலுமிச்சுஞ் சிவப்பும் வழங்குக 
** 62

#62
அந்தம் எனும்பெயர் அழகு முடிவுமாம் 
** 63

#63
அம்பல் எனும்பெயர் பழிமொழி யுடனே
சிலரறிந்து தம்முட் புறங்கூறல் செப்புவர் 
** 64

#64
அலரெனும் பெயர்பழி மொழியும் பூவும்
பலரறிந் தலர்தூற் றுதலும் பகருவர் 
** 65

#65
அரற்றல் எனும்பெயர் அழுகையும் ஒலித்தலும் 
** 66

#66
அஞ்சலி எனும்பெயர் அஞ்சலித் திறைஞ்சலும்
வாவற் பறவையும் வகுத்தனர் புலவர் 
** 67

#67
அலகெனும் பெயரே நுளம்பும் சோதிடமும்
நெற்கதி ராதியும் பலகறைப் பெயரும்
மகிழின் பரலும் புள்வாயுந் துடைப்பமும் 
** 68

#68
அல்லி யெனும் பெயர் காசை மரமும்
வெள்ளாம் பலுமக விதழும் விளம்புவர் 
** 69

#69
அதமெனும் பெயர்பா தாளமும் கீழும்
இறங்குதற் பெயரும் இயம்புவர் புலவர் 
** 70

#70
அரமெனும் பெயரே பலபொருள் வடிவின்
அருகும் அராவும் கருவியு மாமே 
** 71

#71
அகைத்தல் எனும்பெயர் அறுத்தலும் ஒலித்தலும்
ஈர்த்தலும் எனவே இயம்பப் பெறுமே 
** 72

#72
அசியெனும் பெயரே அவமதிச் சிரிப்பும்
வசிதரு வாளும் படைக்கலப் பொதுவுமாம் 
** 73

#73
அமரர் எனும்பெயர் அடுபடை வீரரும்
தேவரும் எனவே செப்புவர் புலவர் 
** 74

#74
அந்தணர் எனும்பெயர் அறவோர் பெயரும்
பூசுரர் பெயரும் புகலுவர் புலவர் 
** 75

#75
அள்ளெனும் பெயரே காதும் கூர்மையும்
வரிபத் திரும்பும் வன்மையும் செறிவுமாம் 
** 76

#76
அலம்எனும் பெயரே அமைவும் கலப்பையும் 
** 77

#77
அயிரெனும் பெயரே சருக்கரைப் பெயரும்
நுண்மணற் பெயரும் நுண்மையும் நுவலுவர் 
** 78

#78
அண்டசம் எனும்பெயர் அரவும் தவளையும்
நண்டு முதலையு மாமையு மீனும்
உடும்பும் ஓந்தியும் பல்லியும் அரணையும்
பறவையும் இப்பியும் பகர்ந்தனர் புலவர் 
** 79

#79
அற்றம் எனும்பெயர் மறைவும் அவகாசமு
முடிவும் எனவே மொழியப் பெறுமே 
** 80

#80
அருச்சுனம் எனும்பெயர் மருதுவும் வெளுப்புமாம் 
** 81

#81
அத்தி யெனும்பெய ரதவு மியானையும்
உவரியும் எலும்பும் உரைக்கப் பெறுமே 
** 82

#82
அந்தில் எனும்பெயர் அசைச்சொல்லு மிடமுமாம் 
** 83

#83
அம்மெனும் பெயரே அசைச்சொல்லு மழகும்
புனலின் பெயரும் புகலப் பெறுமே 
** 84

#84
அம்பெனும் பெயரே மேகமும் புனலும்
கணையு மூங்கிலுங் கருதப் பெறுமே 
** 85

#85
அகளம் எனும்பெயர் தாழியும் மிடாவுமாம் 
** 86

#86
அங்காரக மெனும்பெயர் பூசு வனவும்
நெருப்பும் எனவே நிகழ்த்துவர் புலவர் 
** 87

#87
அஞரெனும் பெயரே அறிவிலோர் பெயரும்
துக்கமும் எனவே சொல்லுவர் புலவர் 
** 88

#88
அந்தகர் எனும் பெயர் குருடருங் கூற்றுமாம் 
** 89

#89
அரக்கெனும் பெயரே மதுவிலோர் விகற்பமும்
சிவப்புஞ் சென்னிற மெழுகும் செப்புவர் 
** 90

#90
அகவல் எனும்பெயர் கூத்துமாசிரியப்பாவும் 
** 91

#91
அரங்கம் எனும்பெயர் ஆற்றிடைக் குறையும்
போரிடம் வட்டா டிடமும் சபையும்
கூத்தா டுமிடப் பெயருங் கூறுவர் 
** 92

#92
அள்ளல் எனும்பெயர் நாகமும் சேறுமாம் 
** 93

#93
அழுங்கல் எனும்பெயர் ஆர வாரமும்
இரங்கலும் கேடும் இசைக்கப் பெறுமே 
** 94

#94
அறலெனும் பெயரே நீரு நீர்த்திரையும்
விழவும் நுண்மணலும் விளம்புவர் புலவர் 
** 95

#95
அளையெனும் பெயரே தயிரும் வன்மீகமும்
உம்மையும் பாளியும் மோர்இன்மைப் பெயருமாம் 
** 96

#96
அங்கம் எனும்பெயர் உடலும் உறுப்பும்
ஆறங்கமும் கட்டிலும் எலும்பு மாமே 
** 97

#97
அழுவ மெனும்பெயர் துருக்கமும் பரப்பும்
நாடும் எனவே நவின்றனர் புலவர் 
** 98

#98
அறுகெனும் பெயரே யாளியும் சிங்கமும்
புலியும் யானையும் புல்லினோர் விகற்புமாம் 
** 99

#99
அத்திரி யெனும்பெயர் மலையும் குதிரையும்
கழுதையும் ஒட்டகப் பெயரும் கருதுவர் 
** 100

#100
அறையெனும் பெயர்மலை முழையும் பாறையும்
சிற்றிலும் மொழியும் செப்பப் பெறுமே 
** 101

#101
அரிலெனும் பெயர்சிறு தூறும் பிணக்கமும்
குற்றமும் பரலும் கூறுவர் புலவர் 
** 102

#102
அவலெனும் பெயர்நீர் நிலையும் பள்ளமும்
முளையு நெற்பெறு சிற்றுண்டியு மொழிகுவர் 
** 103

#103
அண்ணை யெனும்பெயர் அறிவிலோன் பெயரும்
பேயின் பெயரும் பேசப் பெறுமே 
** 104

#104
அகப்பா வெனும்பெயர் மதிளுமுள் ளுயரத்துப்
பொருந்திய மேடையின் பெயரும் புலம்புவர் 
** 105

#105
அசமெ னும்பெயர் புருவை யாடும்
மூவாட்டை நெல்லின் பெயரு மொழிகுவர் 
** 106

#106
அசனி யெனும்பெயர் வச்சிரா யுதமும்
இடியின் பெயரும் இயம்பப் பெறுமே 
** 107

#107
அல்லெனும் பெயரே இரவும் இருளுமாம் 
** 108

#108
அரிதம் எனும்பெயர் பசுமையும் திசையும்
பசும்புற் றரையும் பகரப் பெறுமே 
** 109

#109
அகடெனும் பெயரே வயிறும் புறமுமாம் 
** 110

#110
அமரல் எனும்பெயர் மிடைதலும் பொலிவுமாம் 
** 111

#111
அருகல் எனும்பெயர் கருங்கலுஞ் சார்தலும் 
** 112

#112
அடுதல் எனும்பெயர் அடர்தலும் கொலையும்
பலபொருள் பாகப் படுத்தலின் பெயருமாம் 
** 113

#113
அவிர்தல் எனும்பெயர் பீறலும் ஒளியுமாம் 
** 114

#114
அம்பி யெனும்பெயர் தெப்பமும் தோணியும்
நீர்மே லோடு வனவு நிகழ்த்துவர் 
** 115

#115
அந்தர மெனும்பெயர் பேத முடிவும்
விண்ணி னிடமும் விளம்பப் பெறுமே 
** 116

#116
அங்கா ரகனெனும் பெயருதா சனனும்
செவ்வாய்ப் பெயரும் செப்பப் பெறுமே 
** 117

#117
அடரெனும் பெயரே ஐமை வடிவும்
நெருங்குதற் பெயரு நிகழ்த்தப் பெறுமே 
** 118

#118
அரங்கெனும் பெயரே மனையின் விகற்பமும்
சபையும் வட்டா டிடமும்போ ரிடமுமாம் 
** 119

#119
அயன மெனும்பெயர் ஆண்டிற் பாதியும்
வழியும் எனவே வகுத்தனர் புலவர் 
** 120

#120
அமலை யெனும்பெயர் உமையவள் பெயரும்
ஆர வார மும்சபைப் பெயருமாம் 
** 121

#121
அலவன் எனும்பெயர் நண்டும் பூஞையும்
நிலவுங் கடக ராசியும் நிகழ்த்துவர் 
** 122

#122
அரசெனும் பெயரோர் தருவு மன்னனும்
ராச்சியப் பெயரும் இயம்பப் பெறுமே 
** 123

#123
அறிக்கை எனும்பெயர் அறிதலின் பெயரும்
பற்று வித்தலின் பெயரும் பகருவர் 
** 124

#124
அதரெனும் பெயரே புழுதியும் வழியும்
நுண்மணற் பெயரு நுவலப் பெறுமே 
** 125

#125
அருந்த லெனும்பெயர் அருமையும் பொசித்தலும் 
** 126

#126
அத்தன் எனும்பெயர் ஈசனும் குருவும்
தந்தையும் எனவே சாற்றினர் புலவர் 
** 127

#127
அனித்தியம் எனும்பெயர் நிலையாமை பொய்யுமாம் 
** 128

#128
அண்ணல் எனும்பெயர் தலைவனும் பெருமையும் 
** 129

#129
அச்சுதன் எனும்பெயர் அமுதிறை பெயருங்
கண்ணனும் அசோகமர் கடவுள் பெயருமாம் 
** 130

#130
அனுவெனும் பெயரே தொடர்ச்சியும் கவுளுமாம் 
** 131

#131
அமுதம் எனும்பெயர் முத்தியும் பெருமையும்
புனலும் பயசும் புலவ ருணவுடன்
மேகமும் எனவே விளம்புவர் புலவர் 
** 132

#132
அம்பரம் எனும்பெயர் அம்புடன் ஆனையிற்
பிறகா லுமெனப் பேசுவர் புலவர் 
** 133

#133
அலையெனும் பெயரே கடலும் கடற்றிரைப்
பெயரும் எனவே பேசப் பெறுமே 
** 134

#134
அராவல் எனும்பெயர் புரைதலும் குறுகலும் 
** 135

#135
அரணி யெனும்பெயர் தீக்கடை கோலும்
கவசமு மதிலும் கருதப் பெறுமே 
** 136

#136
அற்பம் எனும்பெயர் சிறுமையும் நாயுமாம் 
** 137

#137
அழுக்கா றெனும்பெயர் பொறாமையின் பெயரும்
மனக்கோட் டத்தின் பெயரும் வழங்குவர் 
** 138

#138
அனங்கம் எனும்பெயர் மல்லிகைப் பெயரும்
இருவாட் சியுமென இயம்புவர் புலவர் 
** 139

#139
அசையெனும் பெயரீ ரசைகளும் அசைச்சொல்லும் 
** 140

#140
அமுதெனும் பெயரே பாலும் இன்சுதையும்
தெய்வ வுணவின் விகற்பமும் செப்புவர் 
** 141

#141
அசோக மெனும்பெய ரசோகின் தருவும்
இன்பமும் எனவே இயம்பப் பெறுமே 
** 142

#142
அசைத்தல் எனும் பெயர் அசைத்தலின் பெயரும்
கட்டுதற் பெயரும் கருதுவர் புலவர் 
**அகர வருக்கம் முற்றும்
** ஆகார வருக்கம்
** 143

#143
ஆதி யெனும்பெய ரரன்றிரு நாமமு
மாதவனும் ஒற்றியில் வைத்த பொருளும்
அருகனு முதலு நேரோடலு மாமே 
** 144

#144
ஆரல் எனும்பெயர் அங்கா ரகனும்
கார்த்திகை நாளும் கடிமதில் உறுப்பும்
ஒருமீன் பெயரும் உரைத்தனர் புலவர் 
** 145

#145
ஆவணம் எனும்பெயர் தெருவும் அங்காடியும்
அடிமை யோலையும் புனர்பூ சமுமாம் 
** 146

#146
ஆடி யெனும்பெயர் மாதத்தி லொன்றும்
நாடி லுத்திராடமும் கண்ணா டியுமாம் 
** 147

#147
ஆசை யெனும்பெயர் திசையும் காதலும்
பொன்னும் எனவே புகன்றனர் புலவர் 
** 148

#148
ஆழி யெனும்பெயர் நேமிப் புள்ளும்
கடலும் வட்ட வடிவுந் தேர்க்காலும்
சக்கரா யுதமு மோதிரமுங் கரையுமாம் 
** 149

#149
ஆலம் எனும்பெயர் அறலும் விடமும்
ஆல மரமும் மலர்ந்திடு பூவுமாம் 
** 150

#150
ஆசார மென்னும் பெயர்நல் லொழுக்கமும்
தூசின் பெயரும் மழைப்பெயருஞ் சொல்லுவர் 
** 151

#151
ஆர்வம் எனும்பெயர் விருப்பொடு நரகுமாம் 
** 152

#152
ஆறெனும் பெயரே வழியும் நதியுமோர்
எண்ணும் எனவே இயம்புவர் புலவர் 
** 153

#153
ஆலையம் எனும்பெயர் தேவர் கோயிலும்
நகரமும் யானைக் கூடமும் நவிலுவர் 
** 154

#154
ஆரை எனும்பெயர் கொத்தளிப்பாய் புரிசையாம்
நீர்செறி யாரையின் பெயரு நிகழ்த்துவர் 
** 155

#155
ஆடவர் எனும்பெயர் ஆண்பாற் பொதுவும்
இளைஞர் பெயரும் இயம்பப் பெறுமே 
** 156

#156
ஆர்வல ரெனும்பெயர் அன்புடை யோனும்
கணவனும் எனவே கருதுவர் புலவர் 
** 157

#157
ஆக மெனும்பெயர் தேகமு மார்புமாம் 
** 158

#158
ஆகார மெனும்பெயர் அசனமு நெய்யுந்
தேகமும் எனவே செப்பப் பெறுமே 
** 159

#159
ஆம்பல் எனும்பெயர் ஆனையுங் குமுதமும்
இசையின் குழலும் கள்ளு மூங்கிலும்
ஒலியின் பெயரும் உரைத்தனர் புலவர் 
** 160

#160
ஆரம் எனும்பெயர் அத்தி மரமும்
அணிகலப் பொதுவுந் தரளமு மாலையும்
சந்தன முமணி வடமும் பதக்கமும் 
** 161

#161
ஆடல் எனும்பெயர் வென்றியு நடனமும்
உரையா டலுமென வுரைத்தனர் புலவர் 
** 162

#162
ஆர்ப்பெனும் பெயரே ஆரவா ரித்தலும்
அமருஞ் சிரிப்பும் ஆகும் என்ப 
** 163

#163
ஆரெனும் பெயரே யாத்தியும் கூர்மையும்
தேராழி யுறுப்பு நிறைவும் செப்புவர் 
** 164

#164
ஆசெனும் பெயரே அற்பமும் குற்றமும்
மெய்புகு கருவியும் விரைவுமோர் கவியுமாம் 
** 165

#165
ஆற்ற லெனும்பெயர் ஆண்மையு மிகுதியும்
பொறுமையும் சுமத்தலும் பெலமும் பொய்யாமையும்
ஞானமும் உண்டாக் குதலும் நவிலுவர் 
** 166

#166
ஆடெனும் பெயரே யாட்டின் விகற்பமும்
மேடவி ராசியும் வென்றியும் விளம்புவர் 
** 167

#167
ஆகுலம் எனும்பெயர் சத்த வொலியுடன்
வருத்தமும் எனவே வழங்கப் பெறுமே 
** 168

#168
ஆர்த லெனும்பெயர் உண்டலும் நிறைதலும்
அணிதலின் பெயரு மாகு மென்ப 
** 169

#169
ஆணையெனும் பெயரி லாஞ்சனையு முண்மையும்
சத்திய வசனமும் ஏவலும் சாற்றுவர் 
** 170

#170
ஆசினி யெனும்பெயர் மரவயி ரத்தொடு
பலாவினோர் விகற்பமும் விசும்பும் பகருவர் 
** 171

#171
ஆக்கம் எனும்பெயர் அன்புசெய மிலாபம்
பாக்கிய வியல்பும் பயில்பூந் திருவுமாம் 
** 172

#172
ஆரி எனும்பெயர் அழகும் கதவுமாம் 
** 173

#173
ஆணம் எனும்பெயர் அன்பும் குழம்புமாம் 
** 174

#174
ஆகு வெனும்பெயர் எலியின் விகற்பமும்
மூடிகப் பெயரும் மொழியப் பெறுமே 
** 175

#175
ஆதித் தியரெனும் பெயர்விண் ணவரும்
சூரியர் பெயரும் சொல்லுவர் புலவர் 
** 176

#176
ஆவரணம் எனும்பெயர் அரணமு மறைவும்
சட்டையுங் கவசமும் தடையும் துகிலுமாம் 
** 177

#177
ஆதன் எனும்பெயர் அறிவிலோன் பெயரும்
சீவனும் எனவே செப்பப் பெறுமே 
** 178

#178
ஆங்கெனும் பெயரே யவ்விடப் பெயரும்
அசைச்சொற் பெயரும் உவமையு மாமே 
** 179

#179
ஆயம் எனும்பெய ரரிவையர் கூட்டமும்
ஆதா யத்தொடு கவற்றின் றாயமுமாம் 
** 180

#180
ஆயல் எனும்பெயர் ஆய்தலும் வருத்தமும் 
** 181

#181
ஆய்தல் எனும்பெயர் தேர்தலு நுணுக்கமும் 
** 182

#182
ஆலல் எனும்பெயர் நடனமும் ஒலியுமாம் 
** 183

#183
ஆலெனும் பெயரே யசைச்சொலும் புனலும்
பழமரப் பெயரும் பகருவர் புலவர் 
** 184

#184
ஆனி எனும்பெயர் கெடுதலின் பெயரும்
மாதத்தி லொன்று மூலநாட் பெயருமாம் 
** 185

#185
ஆனகம் எனும்பெயர் துந்துமிப் பெயரும்
படகமும் எனவே பகர்ந்தனர் புலவர் 
** 186

#186
ஆனியம் எனும்பெயர் நாளும் பொழுதுமாம் 
** 187

#187
ஆசுகம் எனும்பெயர் அம்பும் காற்றுமாம் 
** 188

#188
ஆவி எனும்பெயர் வாவியும் உயிரும்
புகையு நாற்றமு மூச்சும் புகலுவர் 
** 189

#189
ஆவெனும் பெயரே இரக்கக் குறிப்பும்
உயிரும் பசுவும் உரைக்கப் பெறுமே 
** 190

#190
ஆடகம் எனும்பெயர் துவரையும் பொன்னுமாம் 
** 191

#191
ஆம்பிரம் எனும்பெயர் தேமாப் பெயரும்
புளிமாப் பெயரும் புளிப்பும் புகலுவர் 
** 192

#192
ஆரியர் எனும்பெயர் அறிவுடை யோரும்
ஆரிய தேசத் தவரு மாமே 
** 193

#193
ஆணி யெனப்பெயர் எழுத்தாணியும் அழகும்
ஆணி மானவிகற்பமும் சயனமு மாமே 
**ஆகார வருக்கம் முற்றும்
** இகர வருக்கம்
** 194

#194
இரவி எனும்பெயர் எழுஞ்சூ ரியனுடன்
மலையும் வாணிகத் தொழிலும் வழங்குவர் 
** 195

#195
இருளெனும் பெயரே கருமையு மயக்கமும்
நரகமுந் திமிரமு நவின்றனர் புலவர் 
** 196

#196
இரலை யெனும்பெயர் மானி னேறும்
அசுபதியு மூதுங் கொம்பு மாமே 
** 197

#197
இறையெனும் பெயரே சிவனும் இல்லிறப்பும்
தலைமையுந் தலைவன் பெயருந் தங்கலும்
புள்ளிற குங்கை வரையும் சிறுமையும்
குடியிறைப் பெயரும் சொல்லும் கூறுவர் 
** 198

#198
இடியெனும் பெயரே நென்மா முதலும்
உறுதி வார்த்தையும் அசனியும் ஓதுவர் 
** 199

#199
இறாலெனும் பெயர்கார்த் திகையும் இடபமும்
தேன்கூ டுமொரு மீனுஞ் செப்புவர் 
** 200

#200
இறும்பெனும் பெயரே தாமரைப் பூவும்
மலையும் காடும் வழங்கப் பெறுமே 
** 201

#201
இலஞ்சி யெனும்பெயர் மகிழமரப் பெயரும்
கொப்புளுந் தடாகமும் கூறுவர் புலவர் 
** 202

#202
இடையெனும் பெயரே இடமும் நுசுப்பும்
நடுவும் எனவே நவிலப் பெறுமே 
** 203

#203
இகுளை யெனும்பெயர் சுற்றமும் பாங்கியும் 
** 204

#204
இரதம் எனும்பெயர் தேரும் இன்சுவையும்
அரைநாண் புணர்ச்சி பாத ரதமுமாம் 
** 205

#205
இலம்பக மெனும்பெய ரத்தி யாயமும்
நுதலணிப் பெயருந் தொடையலு நுவலும் 
** 206

#206
இந்தனம் எனும்பெயர் இசையும் காட்டமும்
நெருப்பிடு கலனு நிகழ்த்துவர் புலவர் 
** 207

#207
இளியெனும் பெயரோ ரிசையும் யாழ்நரம்பும்
இகழ்ச்சியில் வருக்கப் பெயரும் இயம்புவர் 
** 208

#208
இலையம் எனும்பெயர் கூத்தின் விகற்பமும்
கூத்தின் பெயருங் கேடுங் கூறுவர் 
** 209

#209
இறைவை யெனும்பெயர் ஏணிநீர்ப்புட்டிலாம் 
** 210

#210
இழுக்கம் எனும்பெயர் பிழைத்தல் பொல்லாங்குமாம் 
** 211

#211
இறப்பெனும் பெயரே யிறத்தலும் மிகுதியும்
நடத்தலு மில்லி றப்பும் நவிலுவர் 
** 212

#212
இலாங்கலி யெனும்பெயர் தென்ன மரமும்
கலப்பைப் பெயரும் வெண்காந்தளும் கருதுவர் 
** 213

#213
இகுத்தல் எனும்பெயர் கொடுத்தலும் வீழ்த்தலும்
செகுத்தலு மவிர்தலும் இளைத்தலும் செப்புவர் 
** 214

#214
இல்லெனும் பெயரே யில்லை யென்றலும்
இராசியு மனைவியு மனையும் இடமுமாம் 
** 215

#215
இராசி யெனும்பெய ரோசையுங் கூட்டமும் 
** 216

#216
இராசிய மெனும்பெயர் யோனியும் மறைவுமாம் 
** 217

#217
இபமெனும் பெயரே மரத்தின் கொம்பும்
யானையின் பெயரும் இயம்புவர் புலவர் 
** 218

#218
இகலெனும் பெயரே பெலமும் சமரமும்
பகையும் எனவே பகரப் பெறுமே 
** 219

#219
இடமெனும் பெயரிடப் புறமும் விசாலமும்
இடங்களின் விகற்பமும் செல்வமும் இயம்புவர் 
** 220

#220
இடக்க ரெனும்பெயர் குடத்தின் பெயரும்
மறைத்திடு வார்த்தையும் வழங்கப் பெறுமே 
** 221

#221
இதழெனும் பெயர்பூ வினிதழு மதரமும்
பனைமடல் போலவும் பகரப் பெறுமே 
** 222

#222
இயமெனும் பெயரே யுரையும் ஓசையும்
வாத்தியப் பெயரும் வழங்கப் பெறுமே 
** 223

#223
இருபிறப் பெனும்பெய ரெயிறும் பறவையும்
பார்ப்பெனும் சாதியும் நிலவும் பகருவர் 
** 224

#224
இருசெனும் பெயரே பண்டியுள் இரும்பும்
செவ்வையும் எனவே செப்புவர் புலவர் 
** 225

#225
இவர்தல் எனும்பெயர் ஏறலும் விரும்பலும் 
** 226

#226
இவறல் எனும்பெயர் ஓசையு மறப்புமாம்
** 227

#227
இழுமென லெனும்பெயர் இனிமையும் ஒலியுமாம் 
** 228

#228
இறத்தல் எனும்பெயர் மிகுத்தலும் கடத்தலும்
மரணமும் எனவே வழங்கப் பெறுமே 
** 229

#229
இறுத்த லெனும்பெயர் தங்கலும் இயம்பலும்
ஒடித்தலும் எனவே யுரைத்தனர் புலவர் 
** 230

#230
இளமை யெனும்பெயர் தண்மையும் காமமும்
இளமையின் பருவமு மியம்பப் பெறுமே 
** 231

#231
இரதி யெனும்பெயர் மதனன் றேவியும்
பித்தளைப் பெயரும் பிடியா னையுமாம் 
** 232

#232
இக்கெனும் பெயரே மதுவும் கரும்புமாம் 
** 233

#233
இறும்பூ தெனும்பெயர் மலையும் அதிசயமும்
சிறுதூறும் குழையுந் தகைமையும் செப்புவர் 
** 234

#234
இடங்க ரெனும்பெயர் குடமும் தூர்த்தரும்
முதலையு மெனவே மொழிந்தனர் புலவர் 
** இகர வருக்கம் முற்றும்
** ஈகார வருக்கம்
** 235

#235
ஈழ மெனும்பெயர் பொன்னின் பெயரும்
சிங்கள தேசமு நறவுஞ் செப்புவர் 
** 236

#236
ஈகை யெனும்பெயர் ஈங்கையும் கொடுத்தலும்
பொன்னும் எனவே புகன்றனர் புலவர் 
** 237

#237
ஈடெனும் பெயரே பெலமும் குழைவும்
பெருமையு முவமையும் பேசுவர் புலவர் 
** 238

#238
ஈமம் எனும்பெய ரெரியிடு கலனும்
மயானமும் விறகும் வழங்கப் பெறுமே 
** 239

#239
ஈண்டெனும் பெயரே யிவ்விடப் பெயரும்
ஈங்கையின் பெயரும் இயம்புவர் புலவர் 
** 240

#240
ஈர மெனும்பெயர் அன்புங் குளிர்ச்சியும்
பகுத்தலும் எனவே பகரப் பெறுமே 
** 241

#241
ஈன்றா னெனும்பெயர் பிரமனும் பிதாவுமாம் 
** ஈகார வருக்கம் முற்றும்
** உகர வருக்கம்
** 242

#242
உடுவெனும் பெயரே யொளிவான் மீனும்
பகழியும் அம்புத் தலையொடு நாவாய்
நடத்திய மரக்கலக் கோலு நவிலுவர் 
** 243

#243
உத்திர மெனும்பெய ரொருநா ளுடனே
சித்திர மாளிகை சேர்ந்த தோருறுப்பே 
** 244

#244
உத்தி யெனும் பெய ருரகப் பொறியுடன்
திருவினு றுப்பொடு நுண்மைப் பொருளுமாம் 
** 245

#245
உத்திர மெனும்பெயர் மேலும் வடக்கும்
மறுவார்த் தையுமென வழங்கப்பெறுமே 
** 246

#246
உலவை யெனும்பெயர் மரத்தின் கோடும்
விலங்கின் மருப்புங் காற்றுந் தழையுமாம் 
** 247

#247
உந்தி யெனும்பெயர் நீரும்நீர்ச் சுழியும்
தேரின் றட்டும் நாபியும் கடலும்
பெண்கள் விளையாடலு நதியும் பேசுவர் 
** 248

#248
உப்பெனும் பெயரே மகளிர் விளையாடலும்
கடலும் இனிமையும் கடல்விளையு வருமாம் 
** 249

#249
உறையெனும் பெயரே நீர்த்துளி முதலாந்
துளியு நீர்நோய் தொலைத்திடு மருந்தும்
பெருமையும் பாலும் பிரையும் விழுமமும்
வெண்கலப் பெயரும் இடைச்சொலு முணவும்
ஊழியுங் காரமும் உவர்நீரு நீளமும்
படையுறை யுடனே நன்னில வூரும்
எண்குறித் திறுதி யெய்வதும் இயம்புவர்
** 250

#250
உலகெனும் பெயருயர்ந் தோரும் பூமியும்
திசையு மாகாயமு நாடுஞ் செப்புவர் 
** 251

#251
உலக்கை யெனும்பெய ரோண நாளு
முரோங்கலு மெனவே யுரைத்தனர் புலவர் 
** 252

#252
உறுவ னெனும்பெயர் அசோகமர் கடவுளும்
இருடியு மெனவே யியம்பப் பெறுமே 
** 253

#253
உறையுள் எனும்பெய ரூரு நாடும்
வீட்டின் பெயரும் விளம்புவர் புலவர் 
** 254

#254
உயவை யெனும்பெயர் கானை யாறுங்
காக்கணங் கருவிளைப் பெயருங் கருதுவர் 
** 255

#255
உழையெனும் பெயரே யாழி னரம்பும்
இடமும் மானும் இயம்புவர் புலவர் 
** 256

#256
உம்பல் எனும்பெயர் விலங்கினாண் பெயருங்
குடிவழித் தோன்றலும் யானையுங் கூறுவர் 
** 257

#257
உவாவெனும் பெயரிளை யோனும் யானையும்
ஈருவா வின்பெயர் தானும் விளம்புவர் 
** 258

#258
உண்டை யெனும்பெயர் படையின துறுப்பும்
திரண்ட வடிவின் பெயருஞ் செப்புவர் 
** 259

#259
உளையெனும் பெயரே பரிக்க டிவாளத்
தணிம யிராயவு மஃறிணை மயிரும்
ஆண்பான் மயிரொடு சத்த வொலியுமாம் 
** 260

#260
உடையெனும் பெயரே செல்வமும் கூறையும்
குடைவேலு முடைமைப் பெயரும் கூறுவர் 
** 261

#261
உணர்வெனும் பெயரே உளத்தின் தெளிவும்
ஞானமு மெனவே நவிலப் பெறுமே 
** 262

#262
உரையெனும் பெயரே சத்த வொலியும்
தேய்தலு மொழியுஞ் செப்புவர் புலவர் 
** 263

#263
உவளக மெனும்பெயர் மதிலும் பள்ளமும்
ஆய ரூருமோர் பக்கமும் வாவியும் 
** 264

#264
உயிரெனும் பெயரே சீவனுங் காற்றுமாம் 
** 265

#265
உறழ்வெனும் பெயரிடை யீடு முவமையும்
புணர்வும் செறிவும் புகலப் பெறுமே 
** 266

#266
உருத்த லெனும்பெயர் தோன்றுதல் சினமுமாம் 
** 267

#267
உக்கம் எனும்பெய ரிடையின் பக்கமும்
விசிறியு மிடபப் பெயரும் விளம்புவர் 
** 268

#268
உம்ப ரெனும்பெயர் உயர்நில மேடையும்
தேவரும் விசும்பும் செப்பப் பெறுமே 
** 269

#269
உரமெனும் பெயரே யூக்கமும் ஞானமும்
பெலமு மருமமும் பேசுவர் புலவர் 
** 270

#270
உருவெனும் பெயரே நிறமும் வடிவமும்
அட்டையின் பெயரு மாகு மென்ப 
** 271

#271
உவப்பெனும் பெயரே யுயரமு மகிழ்ச்சியும் 
** 272

#272
உறவி யெனும்பெயர் உயிர்நிலைக் களமும்
நீரூற்றும் உறவும் எறும்பும் உணர்த்துவர் 
** 273

#273
உறுப்பெனும் பெயரே யுடலு மங்கமும்
படையின துறுப்பும் பகர்ந்தனர் புலவர் 
** 274

#274
உடலெனும் பெயரே யுடம்பும் பொருளுமாம் 
** 275

#275
உவணம் எனும்பெயர் கழுகும் பருந்துமாம் 
** 276

#276
உளர்தல் எனும்பெயர் உதறலும் வருடலும் 
** 277

#277
உள்ள மெனும்பெயர் நெஞ்சமு நினைவுமாம் 
** 278

#278
உழப்பெனும் பெயரே வலியு முச்சாகமும் 
** 279

#279
உள்ள மெனும்பெயர் முயற்சியின் பெயரும்
நெஞ்சின் பெயரு நிகழ்த்துவர் புலவர் 
** 280

#280
உறுகண் எனும்பெயர் நோயும் துன்பமும்
மிடியும் பயமும் விளம்பப் பெறுமே 
** 281

#281
உஞற்றெனும் பெயரே வழுக்குடன் ஒளிர்ச்சியுந்
தாளாண் மையுமெனச் சாற்றினர் புலவர் 
** 282

#282
உறுதி யெனும்பெயர் கல்வியும் நன்மையும் 
**உகர வருக்கம் முற்றும்
**ஊகார வருக்கம்
** 283

#283
ஊக்க மெனும்பெய ருள்ளத்தின் மிகுதியும்
பெலமு முச்சாகமும் பேசப் பெறுமே 
** 284

#284
ஊழ்எனும் பெயரே பகையும் பழமையும்
மரபும் வெயிலும் விதியும் வழங்குவர் 
** 285

#285
ஊதிய மெனும்பெயர் லாபமும் கல்வியும் 
** 286

#286
ஊழ்த்த லெனும்பெயர் பதனழிவுஞ் செவ்வியும்
நினைத்தலும் எனவே நிகழ்த்தப் பெறுமே 
** 287

#287
ஊசி யெனும்பெயர் எழுத்தாணியுஞ் சூரியும் 
** 288

#288
ஊறெனும் பெயரே தீண்டலுந் தீமையும்
கொலையும் இடையூறுங் கூறப் பெறுமே 
** 289

#289
ஊற்றெனும் பெயரே யூற்றி னுடனே
ஊன்றிய கோலும் உரைத்தனர் புலவர் 
** 290

#290
ஊர்தி யெனும்பெயர் விமானமுந் தேரும்
யானையும் பரியும் சிவிகையும் பாண்டிலும் 
** ஊகார வருக்கம் முற்றும்
** எகர வருக்கம்
** 291

#291
என்றூழ் எனும்பெயர் இரவியும் வெயிலும்
கோடைக் காலமும் கூறப்பெறுமே 
** 292

#292
எல்லெனும் பெயரே யிரவியும் ஒளியும்
இருளு மிகழ்ச்சியும் இயம்புவர் பெரியோர் 
** 293

#293
எலியெனும் பெயரே யெலியின் விகற்பமும்
பூர நாளொடு மதுவும் புகலுவர் 
** 294

#294
எருவை யெனும் பெயர் கொறுக்கையுடனே
கழுகுந் தாம்பிரப் பெயரும் கருதுவர் 
** 295

#295
எறுழெனும் பெயரே தண்டா யுதமும்
பெலமு மெனவே பேசப் பெறுமே 
** 296

#296
எக்கர் எனும்பெயர் சொரிதலும் குவிதலும் 
** 297

#297
எகின மென்னும்பெயர் புளிமாவு மன்னமும்
கவரிமாவு நீர்நாயும் புளியின்றருவும் புகலப்பெறுமே 
** 298

#298
எஃகெனும் பெயரே வேலுங் கூர்மையும்
உருக்கு மெனவே யுரைத்தனர் புலவர் 
** 299

#299
எள்த லெனும்பெயர் இகழ்தலு நகையுமாம் 
** 300

#300
எற்றெனும் பெயரே யிரக்கமும் எறிதலும்
அடித்தலும் எத்தன்மைத் தென்றலு மாமே 
** 301

#301
எற்றுதல் எனும்பெயர் எறிதலும் புடைத்தலும் 
** 302

#302
எண்ணெனும் பெயரே யெள்ளு மிலக்கமுஞ்
சோதிடப் பெயரும் விசாரமு மெளிமையும் 
** 303

#303
எழிலெனும் பெயரே யிளமையு மழகுமாம் 
** 304

#304
எல்லை யெனும்பெயர் அளவையும் இரவியும் 
** எகர வருக்கம் முற்றும்
** ஏகார வருக்கம்
** 305

#305
ஏல்வை யெனும்பெயர் வாவியும் பொழுதுமாம் 
** 306

#306
ஏமம் எனும்பெயர் இன்பமும் வெண்ணீறுஞ்
சேமமும் பொன்னுமே மாப்பு மயக்கும்
காவலும் இரவுங் கருதுவர் புலவர் 
** 307

#307
ஏறெனும் பெயரிடி யேற்றின் பெயரும்
விலங்கி னாண்பாற் பெயரு மிடபமும்
அசுபதிப் பெயரு மாகு மென்ப 
** 308

#308
ஏனல் எனும்பெயர் தினைதினைப் புனமுமாம் 
** 309

#309
ஏனாதி யெனும்பெயர் மயிர்வினை யோனும்
மந்திரித் தந்திரிப் பெயரும் வழங்குக 
** 310

#310
ஏந்த லெனும்பெயர் பெருமையு முயரமும்
தலைவனும் எனவே சாற்றினர் புலவர் 
** 311

#311
ஏதி யெனும்பெயர் ஆயுதப் பொதுவும்
வாளும் எனவே வகுத்தனர் புலவர் 
** 312

#312
ஏதம் எனும்பெயர் குற்றமும் துன்பமும் 
** 313

#313
ஏணி யெனும்பெயர் எல்லையு முலகமு
மானுங் கண்ணே ணியுமே வழங்குவர் 
** 314

#314
ஏங்கல் எனும்பெயர் ஒலியும் இரங்கலும்
ஏங்குதற் பெயரும் இயம்புவர் புலவர் 
** 315

#315
ஏற்றல் எனும்பெயர் எதிர்ந்துபோர் செய்தலும்
கோடலின் பெயருங் கூறுவர் புலவர் 
** 316

#316
ஏரெனும் பெயரே யழகுமுழு பெற்றமும்
உழவுடை யோனும் உரைக்கப் பெறுமே 
** 317

#317
ஏனையெனும் பெயரிடைச் சொல்லும் ஒலியுமாம் 
** 318

#318
ஏவலெனும் பெயர் வியங்கோளும் வறுமையும் 
** 319

#319
ஏல மெனும்பெய ரேலவி கற்பமும்
மயிர்ச்சாந் துமென வழங்குவர் புலவர் 
** ஏகார வருக்கம் முற்றும்
** ஐகார வருக்கம்
** 320

#320
ஐயம் எனும்பெயர் பிச்சைகொள் கலனும்
பிச்சையும் வெண்ணெயுஞ் சந்தே கமுமாம் 
** 321

#321
ஐயை யெனும்பெயர் உமையும் துர்க்கையும்
அருந்தவப் பெண்ணும் அரசாளும் காளியும்
புதல்வியும் என்னப் புகன்றனர் புலவர் 
** 322

#322
ஐயெனும் பெயரே குருவும் அரசனும்
எழிலும் இருமலு மிடைச்சொல்லுங் கோழையும்
தலைவனும் தாரமும் சாற்றப் பெறுமே 
** 323

#323
ஐயன் எனும்பெயர் குருவுஞ் சாத்தனுந்
தந்தையு முதல்வனு மந்தணன் பெயருமாம் 
** 324

#324
ஐதெனும் பெயரே நொய்தும் விரைவுமாம் 
** ஐகார வருக்கம் முற்றும்
** ஒகர வருக்கம்
** 325

#325
ஒளியெனும் பெயரே யொண்சுட ரோனும்
விதுவும் கனலும் விளக்கொடு கீர்த்தியும்
கேட்டை யுமொளிப் பினிடமுங் கிரணமும் 
** 326

#326
ஒலியெனும் பெயரே ஓசையும் காற்றும்
இடியு மெனவே யியம்பப் பெறுமே 
** 327

#327
ஒழுக்க மெனும்பெயர் வழியும் குலமும்
ஆசா ரமுமென அறியப் பெறுமே 
** 328

#328
ஒலியல் எனும்பெயர் ஒண்புனல் யாறும
ணில்லுஞ் சருமமும் உடுத்த ஆடையுமாம் 
** 329

#329
ஒளிவட்ட மெனும்பெயர் சக்கரா யுதமும்
கண்ணா டியுமெனக் கருதுவர் புலவர் 
** 330

#330
ஒண்மை யெனும்பெயர் நன்மையு மழகும்
மிகுதியும் ஒழுங்கு மறிவும் விளம்புவர் 
** 331

#331
ஒதுக்க மெனும்பெயர் மறைவும் நடையுமாம் 
** 332

#332
ஒன்றெனும் பெயரோ ரெண்ணு முத்தியுமாம் 
** 333

#333
ஒல்லை யெனும்பெயர் சிறுபொழுதும் விரைவும்
தொல்லையும் எனவே சொல்லுவர் புலவர் 
** 334

#334
ஒதுங்கல் எனும்பெயர் ஒதுங்குதல் நடையுமாம் 
** ஒகர வருக்கம் முற்றும்
** ஓகார வருக்கம்
** 335

#335
ஓண மெனும்பெயர் மாதவ னாளும்
வருபுனல் யாறும் வகுத்தனர் புலவர் 
** 336

#336
ஓரை யெனும்பெயர் அரிவையர் கூட்டமும்
அவர்விளை யாடலும் விளையாடு கலனும்
இராசியின் பொதுவு மிடைச்சொல் லுமாமே 
** 337

#337
ஓங்க லெனும்பெய ருயரமு மலையும்
மேடு மூங்கிலுந் தலைவனும் விளம்புவர் 
** 338

#338
ஓடை யெனும்பெயர் வாவியின் பெயரும்
யானை நுதலணி பட்டமும் கிடங்கும்
ஒருகொடிப் பெயரும் உரைத்தனர் புலவர் 
** 339

#339
ஓதை யெனும்பெயர் சத்த வொலியும்
புரிசையுள் ளுயர்வும் பொருந்திய மேடையும்
நதியும் நகரமும் நவிலப் பெறுமே 
** 340

#340
ஓரி யெனும்பெயர் முசுவும் நரியும்
அரிவையர் மயிரொழித் தெல்லா மயிரும்
கொடைதரு மொருவள்ளல் பெயருங் கூறுவர் 
** 341

#341
ஓவியரெனும் பெயர் சித்திர காரரும்
சிற்பநூல் வினைஞரும் செப்பப் பெறுமே 
** 342

#342
ஓட்ட மெனும்பெயர் மேலுதடும் தோல்வியும்
ஓடுதற் பெயரும் உரைத்தனர் புலவர் 
** 343

#343
ஓதனம் எனும்பெயர் உணவும் சோறுமாம் 
** 344

#344
ஓவெனும் பெயரே நீர்த்தகை கதவும்
நீக்கமும் இரக்கக் குறிப்பின் வார்த்தையுமாம் 
** 345

#345
ஓதிமம் எனும்பெயர் அன்னமும் வெற்பும்
கவரி மாவின் பெயருங் கருதுவர் 
** 346

#346
ஓதி யெனும்பெயர் வெற்பு மனனமும்
பெண்பான் மயிரு மறிவும் பூஞையும்
ஓந்தியு மெனவே யுரைக்கப் பெறுமே 
** 347

#347
ஒளியெனும் பெயர் யானைக் கூட்டமும்
ஒழுங்கு மெனவே யுரைத்தனர் புலவர் 
** ஓகார வருக்கம் முற்றும்

@2 ககரவருக்கத் தொகுதி
** ககர அகர வருக்கம்
** 348

#1
கலையெனும் பெயரே கல்வியு நூலு
மானி னேறு மகர விராசியும்
மதியின் பங்கு மரத்தின் கவடு
மாண்முசுப் பெயருங் கால நுட்பமும்
புடைவை யுஞ்செகுமே கலையும் புகலுவர்
** 349

#2
கனலி யெனும்பெயர் கனலு மருக்கனும்
பன்றியு மெனவே பகரப் பெறுமே 
** 350

#3
கரமெனும் பெயரே கையுங் கழுதையும்
கிரணமு நஞ்சுங் குடியிறைப் பெயருமாம் 
** 351

#4
கழியெனும் பெயரே காலைக் காலமு
மிகுதியுங் கழிமுகப் பெயரும் விளம்புவர் 
** 352

#5
கவியெனும் பெயரே கவிவல் லோனும்
குதிரை வாய்ப்பெய் கருவியுங் குரங்கும்
வெள்ளியுங் கவிதை விகற்பமும் விளம்புவர் 
** 353

#6
கவையெனும் பெயரே கவருங் காடும்
எள்ளிளங் காயு மாயிலிய நாளுமாம் 
** 354

#7
கணையெனும் பெயரே யம்புந் திரட்சியும்
பூர நாளும் புகலப் பெறுமே 
** 355

#8
களிறெனும் பெயரே யத்த நாளும்
எள்ளும் சுறாமுத லிவற்றி னாண்பாலும்
யானையும் புகல்வரி னிதுணர்ந் தோரே 
** 356

#9
கள்வ னெனும்பெயர் கடக விராசியுங்
கருநிறத் தவனொடு களிறு ஞெண்டுஞ்
சோரனு முசுவுஞ் சொல்லுவர் புலவர் 
** 357

#10
கன்னி யெனும்பெயர் பெண்ணு மிளமையு
மழிவிலாப் பொருளுங் குமரி யாறும்
கற்றாழை யினொடு கன்னி யிராசியுந்
துர்க்கையு மெனவே சொல்லப் பெறுமே 
** 358

#11
கள்ளெனும் பெயர்தேன் மதுவுங் களவுமாம் 
** 359

#12
கலியெனும் பெயரே கடையுகப் பெயரும்
வலியு மொலியும் வலியோன் பெயருமாம் 
** 360

#13
கணமெனும் பெயரே கால நுட்பமும்
உடுவுங் கூட்டமும் நோயும் வட்டமும்
திரட்சியின் பெயரின் விகற்பமுஞ் செப்புவர் 
** 361

#14
கன்ன லெனும்பெயர் கரகமுங் கரும்பும்
நாழிகை வட்டமு நாழிகைப் பெயரும்
சருக்கரைப் பெயருங் குப்பமுஞ் சாற்றுவர் 
** 362

#15
கடிகை யெனும்பெயர் கதவொடு தாளுந்
துண்டமும் நாழிகைப் பெயருஞ் சொல்லுவர் 
** 363

#16
கடியெனும் பெயரே காவலும் விரைவும்
அச்சமுங் கூர்மையும் வரைவுஞ் சிறப்பும்
விளக்கமும் புதுவையு மணமு முடுகலும்
பேயு நெற்கரிப்பும் பேசுவர் புலவர் 
** 364

#17
கழுதெனும் பெயரே காவற் பரணும்
வண்டும் பேயும் வழங்கப் பெறுமே 
** 365

#18
கம்மெனும் பெயரே ககனமும் பிரமனும்
தலைவனும் வெளுப்பும் புலனும் வாயுவும்
சுவர்க்கமும் புத்தியுஞ் சொல்லுவர் புலவர் 
** 366

#19
கயமெனும் பெயரே களிறும் ஆழமுங்
குளமும் புனலுங் குறைவுமோர் நோயுமாம் 
** 367

#20
கமல மெனும்பெயர் தாமரை புனலுமாம் 
** 368

#21
கவந்த மெனும்பெயர் தலைகுறை பிணமும்
நீரும் பேயு நிகழ்த்துவர் புலவர் 
** 369

#22
கனமெனும் பெயரே மேகமும் பாரமும்
தேகமும் அடைகொடுத் தலுஞ்செம் பொன்னும்
முட்டிய வண்டிலின் முலைக்கன முமாமே 
** 370

#23
கரக மெனும்பெயர் ஆலாங் கட்டியும்
கங்கையுந் துளியுங் கமண்டல முமாமே 
** 371

#24
கந்தர மெனும்பெயர் கழுத்து மேகமும்
மலைமுழை யுமென வழங்கப் பெறுமே 
** 372

#25
ககன மெனும்பெயர் காடுஞ் சேனையும்
விசும்பு மெனவே விளம்பப் பெறுமே 
** 373

#26
கழையெனும் பெயரே கரும்பு மூங்கிலும்
புனர்த நாட்பெயரும் புகலப் பெறுமே 
** 374

#27
கயினி யெனும்பெயர் அந்த நாளும்
விதவையு மெனவே விளம்பப் பெறுமே 
** 375

#28
கடமெனும் பெயரே யானைத் திரளும்
மற்றதன் கொடிறு மதமும் கானமும்
யாக்கை யும்அருஞ் சுரப்பெயருங் கயிறும்
நீதியுங் கும்பமு நெடுமலைச் சாரலும்
எதிர்ப்பை கடன்குட முழவு மியம்புவர்
** 376

#29
கவலை யெனும்பெயர் கவர்படு வழியும்
துன்பமுஞ் செந்தினைப் பெயருமோர் கொடியுமாம் 
** 377

#30
கடக மெனும்பெயர் கங்கணப் பெயரும்
வட்ட வடிவு மலையின் பக்கமும்
படைவீ டுமெனப் பகர்ந்தனர் புலவர் 
** 378

#31
கட்சி யெனும்பெயர் காடுங் கூடும்
கிடப்பிட முமெனக் கிளத்துவர் புலவர் 
** 379

#32
கண்டக மெனும்பெயர் வாளுஞ் சுரிகையும்
முள்ளுங் கானமு மொழியப் பெறுமே 
** 380

#33
கணியெனும் பெயரே மருத நன்னிலமும்
வேங்கை மரமும் விளம்புவர் புலவர் 
** 381

#34
கங்கெனும் பெயர்கருந் தினைவரம் பருகுமாம் 
** 382

#35
களமெனும் பெயர்களா மரமுங் கழுத்தும்
கருநிற மும்போர்க் களமும் விடமுமாம் 
** 383

#36
கடையெனும் பெயரே கதவு முடிவும்
இடமு மெனவே யியம்பப் பெறுமே 
** 384

#37
கறையெனும் பெயரே கருமையு முரலுங்
குருதி மாசுங் குடியிறைப் பெயருமாம் 
** 385

#38
கண்ட மெனும்பெயர் கரியின் கச்சையுந்
துண்டமு மெய்புகு கருவியும் வாளுங்
கண்ட சர்க்கரையுந் தேசமுங் கழுத்தும்
இடுதிரைப் பெயரும் இயம்புவர் புலவர் 
** 386

#39
கதுப்பெனும் பெயரே யிருபான் மயிரும்
கொடிறும் விலங்கின் றிரளுங் கூறுவர் 
** 387

#40
கந்தெனும் பெயரே பண்டி யுளிரும்பும்
கம்பமும் திரட்சி யாக்கையின் மூட்டும்
ஆதார நிலையும் காய்க்கு மரமுமாம் 
** 388

#41
கடிப்ப மெனும்பெயர் காதணிப் பொதுவும்
அணிகலச் செப்பும் அக்க மணியும்
வாச்சியத் தொன்றும் பதக்க மெனவே
பகர்ந்தனர் புலவர் 
** 389

#42
கன்றெனும் பெயரே யொருசார் விலங்கினது
கன்றும் இளமரக் கன்றும் சிறுமையும்
கைவளை விகற்பமுங் கருதப் பெறுமே 
** 390

#43
கலாப மெனும்பெயர் மேகலைப் பெயரும்
மணிவடப் பெயரு மயிலிறகு மாமே 
** 391

#44
கரண்ட மெனும்பெய ரணிகலச் செப்பும்
நீர்க்காக் கையுமென நிகழ்த்துவர் புலவர் 
** 392

#45
கரண மெனும்பெயர் மெய்க்கூத்தின் விகற்பமும்
கலவியுங் கணிதமும் புலனுங் கருதுவர் 
** 393

#46
கல்லெனும் பெயரே யருவியு மோசையும்
மலையுங் கற்பொதுப் பெயரும் வழங்குப 
** 394

#47
கவிகை யெனும்பெயர் குடையுங் கொடையுமாம் 
** 395

#48
கணிச்சி யெனும்பெயர் மழுவுந் தறிகையுந்
தோட்டியு முளியுஞ் சொல்லுவர் புலவர் 
** 396

#49
கதையெனும் பெயரே காரணச் சொல்லுந்
தண்டா யுதமொடு வார்த்தையுஞ் சாற்றுவர் 
** 397

#50
கச்ச மெனும்பெயர் புரோசக் கயிறும்
மரக்காலு மளவும் வழங்கப் பெறுமே 
** 398

#51
கதவெனும் பெயரே கபாடமும் காவலும் 
** 399

#52
கறுப்பெனும் பெயரே கருமையும் சினமும்
வெறுத்திடு சினக்குறிப் புமென விளம்புவர் 
** 400

#53
கம்பலை யெனும்பெயர் நடுக்கமு மச்சமுந்
துன்பமுஞ் சத்த வொலியுஞ் சொல்லுவர் 
** 401

#54
கம்பம் எனும்பெயர் நடுக்கமும் தூணுமாம் 
** 402

#55
கண்டூ வெனும்பெயர் காஞ்சொறி தினவுமாம் 
** 403

#56
கந்த மெனும்பெயர் மணமு மைம்புலனும்
கிழங்கு மெனவே கிளத்துவர் புலவர் 
** 404

#57
கறங்கெனும் பெயரே காற்றாடி வட்டமும்
கழலுஞ் சத்த வொலியும் சொல்லுவர் 
** 405

#58
கஞற லெனும்பெயர் பொலிவும் சிறுமையும் 
** 406

#59
கரிணி யெனும்பெயர் கடகரிப் பெயரும்
பிடியின் பெயரும் பேசுவர் புலவர் 
** 407

#60
கதலி யெனும்பெயர் காற்றா டியுடனே
வாழையுந் துவசமும் தேற்றா மரமுமாம் 
** 408

#61
கடவு ளெனும்பெயர் நன்மையுந் தெய்வமும்
முனிவன் பெயரு மொழியப் பெறுமே 
** 409

#62
கணக்கெனும் பெயரே கலைகளின் விகற்பமும்
எண்ணின் பெயரும் இயம்புவர் புலவர் 
** 410

#63
கச்சை யெனும்பெயர் கவசமும் கயிறும்
தழும்பு மெனவே சாற்றினர் புலவர் 
** 411

#64
கயிலெனும் பெயர்பூ ணின்கடைப் புணர்வும்
பிடர்த்தலை பெயரும் பேசப் பெறுமே 
** 412

#65
கஞ்ச மெனும்பெயர் கமலமுந் தாளமும்
வெண்கலசமும் அப்ப விகற்பமுங் கஞ்சாவும்
கண்ணா டியுமெனக் கருதுவர் புலவர் 
** 413

#66
கலிங்க மெனும்பெயர் ஊர்க்குருவியும் புடைவையும்
வானம் பாடியும் கலிங்க தேசமுமாம் 
** 414

#67
கந்தருவ மெனும்பெயர் பெண்ணோடு குதிரையாம் 
** 415

#68
சுகமெனும் பெயரே புள்ளின் பொதுவும்
அம்பின் பெயரு மாகு மென்ப 
** 416

#69
கவடெனும் பெயரே புரோசக் கயிறும்
மரத்தின் கவடு மனக்க படமுமாம் 
** 417

#70
கருமை யெனும்பெயர் கறுப்பும் பெருமையும்
பெலமும் புலவோர் பேசப் பெறுமே 
** 418

#71
கரேணு வெனும்பெயர் கொலையானை யினொடு
பிடியா னையுமெனப் பேசப் பெறுமே 
** 419

#72
கனைத்த லெனும்பெயர் ஒலித்தலின் பெயரும்
திரண்ட விருளின் பெயருஞ் செப்புவர் 
** 420

#73
கடைப்பிடி யெனும்பெயர் மறப்பிலா தவனும்
தேற்றமு மெனவே செப்பப் பெறுமே 
** 421

#74
கட்டளை யெனும்பெயர் இட்டிகை யியற்றலுந்
தத்துவ விகற்பமு நிறையறி கருவியும்
பிறவின ஒப்பும் ஓரிராசியும் பேசுவர் 
** 422

#75
கண்ட லெனும்பெயர் கைதைநீர் முள்ளியாம் 
** 423

#76
கரைதல் எனும்பெயர் ஒலித்தல் கூவுதலுமாம் 
** 424

#77
கதழ்வெனும் பெயரே சிறப்பும் வேகமுமாம் 
** 425

#78
களியெனும் பெயரே களிப்பொடு குழம்புமாம் 
** 426

#79
கத்திகை யெனும் பெயர் சிறுகொடிப் பெயரும்
தொடையல் விகற்பமும் வாசந்தியும் சொல்லுவர் 
** 427

#80
கந்துக மெனும்பெயர் குதிரையும் பந்துமாம் 
** 428

#81
கப்பண மெனும்பெயர் கைவேல் விகற்பமும்
இரும்பினிற் புரிந்திடு நெருஞ்சிமுட் பெயருமாம் 
** 429

#82
கலாமெனும் பெயரே கொடுமையும் சினமுமாம் 
** 430

#83
கரியெனும் பெயரே களிறுஞ் சாட்சியும்
இருந்தையு மெனவே யியம்புவர் புலவர் 
** 431

#84
கரீர மெனும்பெயர் மிடாவும் அகத்தியும்
தந்தியின் பல்லடிப் பெயருஞ் சாற்றுவர் 
** 432

#85
கனவெனும் பெயரே கனாவு மயக்கமும் 
** 433

#86
கட்ட லெனும்பெயர் களைதலும் பிணித்தலும்
தடுத்தலு மெனவே சாற்றினர் புலவர் 
** 434

#87
கந்த னெனும்பெயர் முருகனும் அருகனும் 
** 435

#88
களரி யெனும்பெயர் போர்க்களமும் காடும்
கருமஞ் செய்யிடமுங் கருதுவர் புலவர் 
** 436

#89
கறங்க லெனும்பெயர் சுழற்றுதலு மொலியும்
வளைதடிப் பெயரும் வழங்கப் பெறுமே 
** 437

#90
கற்பக மெனும்பெயர் கற்பக தருவும்
சொர்க்கமும் பிரமன் வாழ்நாளுஞ் சொல்லுவர் 
** 438

#91
கடுத்தல் எனும்பெயர் உவமையும் விரைவுமாம் 
** 439

#92
கதவ மெனும்பெயர்க் கபாடமும் காவலும் 
** 440

#93
கரியவ னெனும்பெயர் கண்ணனிந் திரனுடன்
சனியின் பெயரும் சாற்றப் பெறுமே 
** 441

#94
கரிலெனும் பெயரே கொடுமையுங் குற்றமும்
காழ்த்தலு மெனவே கருதுவர் புலவர் 
** 442

#95
கலுழி யெனும்பெயர் கானி யாறும்
கலங்கிய நீருங் கருதப் பெறுமே 
** 443

#96
கவன மெனும்பெயர் காடுங் கலக்கமும்
விரைவு மெனவே விளம்புவர் புலவர் 
** 444

#97
கழித்த லெனும்பெயர் மிகுதலுஞ் சாதலும்
கடத்தலு மெனவே கருதப் பெறுமே 
** 445

#98
கழலெனும் பெயரே கழங்குஞ் செருப்பும்
காலுங் காலணிப் பெயருங் கருதுவர் 
** 446

#99
கழும லெனும்பெயர் மயக்கமும் பற்றும்
நிறைவின் பெயரு நிகழ்த்துவர் புலவர் 
** 447

#100
கயமெனும் பெயரே மென்மையும் பெருமையும்
களவின் பெயருங் கருதப் பெறுமே 
** 448

#101
களப மெனும்பெயர் யானைக் கன்றும்
கலவையுஞ் சாந்தும் கருதப் பெறுமே 
** 449

#102
கம்புள் எனும்பெயர் சம்பங் கோழியுஞ்
சங்கின் பெயருஞ் சாற்றப் பெறுமே 
** 450

#103
கண்ணெனும் பெயரே கணுவு மூங்கிலும்
இடத்தின் பெயரும் விழியு மியம்புவர் 
** 451

#104
கருவி யெனும்பெயர் கவசமும் யாழும்
பலவினைப் பெயருந் தொடர்பு மீட்டமுந்
துணைக்கா ரணமுந் துகிலு மாயுதமும்
கசையும் பல்லியப் பெயருங் கலனையுந்
தொகுதியு மெனவே சொல்லுவர் புலவர் 
** 452

#105
கடுவெனும் பெயரே கடுமரப் பெயரும்
விடமும் கடுத்தலும் விளம்பப் பெறுமே 
** 453

#106
கழங்கெனும் பெயரே வேல னாடலுங்
கொடியின் கழலுங் கூறுவர் புலவர் 
** 454

#107
கலமெனும் பெயரோ ரெண்ணுமா பரணமும்
உண்கல மரக்கல மட்கலம் யாவுமாம் 
** 455

#108
கஞ்ச னெனும்பெயர் பிரமனுங் குறளனும் 
** 456

#109
கவ்வை யெனும்பெயர் கவலையுந் துன்பமும்
ஆர வாரத்தின் பெயரு மாமே 
** 457

#110
கரையெனும் பெயர்நீர்க் கரையுஞ் சேர்க்கையின்
சொல்லின் பெயருஞ் சொல்லப் பெறுமே 
** 458

#111
கண்ணுத லெனும்பெயர் கறைமிடற் றிறையையும்
நினைத்தலின் பெயரு நிகழ்த்துவர் புலவர் 
** ககர வருக்கம் முற்றும்
** ககர ஆகார வருக்கம்
** 459

#112
காரி யெனும்பெயர் சனியுஞ் சாத்தனுங்
கருமையுங் காகமுங் கரிக்கு ருவியும்
வடுகக் கடவுளுந் தெய்வேந் திரனும்
கடுவுமோர் வள்ளலுங் கருதப் பெறுமே 
** 460

#113
கால மெனும்பெயர் விடியற் காலமும்
விடிந்த பிற்காலமு முக்கா லமுமாம் 
** 461

#114
காலெனும் பெயரே காற்றுங் கூற்றுந்
தாளும் பொழுதுந் தறியு மளவையும்
வழியுந் தேரி னுருளும் வாய்க்காலும்
பெலமு மலர்க்காம்பு மிடமும் பிள்ளையும்
முளையு மெனவே மொழிந்தனர் புலவர் 
** 462

#115
காள மெனும்பெயர் கருமையு நஞ்சும்
ஊது சின்னத்தின் வருக்கமு முரைப்பர் 
** 463

#116
காரெனும் பெயரே மாரிக் காலமும்
கறுவிய கருமங் கடைமுடி வளவும்
தவிராச் சினமு நீருங் கருங்குரங்கும்
உழவின் பருவமு மேகமுங் கூந்தலுங்
கருமையு மிருளும் வெள்ளாடுங் கருதுவர் 
** 464

#117
காஞ்சி யெனும்பெயர் காஞ்சி நன்னகரமும்
மேகலைப் பெயருமோர் பண்ணுமோர் மரமுமாம் 
** 465

#118
காண்டை யெனும்பெயர் கற்பா ழியினொடு
தவத்தோ ரிடமுஞ் சாற்றப் பெறுமே 
** 466

#119
காந்தார மெனும்பெய ரிசையுங் காடுமாம் 
** 467

#120
காமர மெனும்பெய ரிசைப் பொதுப்பெயரும்
அத்த நாளு மோரிசையு மடுப்புமாம் 
** 468

#121
காளை யெனும்பெயர் பாலைக் கதிபனும்
இளமையோன் பெயரு மெருதும் இயம்புவர் 
** 469

#122
காய மெனும்பெயர் கறியின் கரிப்பும்
ஆகமும் விசும்பும் பெருங்கா யமுமாம் 
** 470

#123
காத்திர மெனும்பெயர் களிற்றின் முற்காலும்
ஆக்கையுங் கனமும் கோப முமாமே 
** 471

#124
காசெனும் பெயரே மணியின் கோவையும்
குற்றமுங் காசின் விகற்பமும் கூறுவர் 
** 472

#125
காவி யெனும்பெயர் கள்ளும் குவளையும்
காவிக் கல்லுங் கருதப் பெறுமே 
** 473

#126
காழக மெனும்பெயர் கருநிறந் தூசுமாம் 
** 474

#127
கான மெனும்பெயர் காடு மிசையுமாம் 
** 475

#128
காகுளி யெனும்பெயர் மந்த விசையொடு
நாசியி னெழுமொலி தவிசு நவிலுவர் 
** 476

#129
கான லெனும்பெயர் கடற்கரைச் சோலையும்
மலைசார் சோலைப்பெயரு நல்லொளியும்
பேய்த்தேர்ப் பெயரும் பேசப் பெறுமே 
** 477

#130
காவெனும் பெயரே காடிமலர்ச் சோலையும்
துலாமுங் காத்தலுந் தோட்சுமைப் பெயருமாம் 
** 478

#131
காசை யெனும்பெயர் புற்பிடிப் பெயரும்
நாணலும் காசை மரமு நவிலுவர் 
** 479

#132
காண மெனும்பெயர் பொன்னும் பொற்காசும்
பரியூ ணுஞ்செக்கு மோர்கட் செந்துமாம் 
** 480

#133
காம்பு எனும்பெயர் மலர்க்காம்பு மூங்கிலும்
பட்டின் விகற்பமும் பகரப் பெறுமே 
** 481

#134
காழெனும் பெயரே மணியின் கோவையு
மரத்தின் வயிரமும் விதையும் பரலுமாம் 
** 482

#135
காழிய ரெனும்பெயர் கடற்கழிப் பரதரும்
ஈரங் கோலியர் பெயரும் இயம்புவர் 
** 483

#136
கானெனும் பெயரே காடு மணமுமாம் 
** 484

#137
காப்பு எனும்பெயர் வெண்ணீறுங் காவலும்
தூசுங் கதவும் சொல்லுவர் புலவர் 
** 485

#138
காத லெனும்பெயர் விருப்பமுங் கோறலும் 
** 486

#139
காலிலி யெனும்பெய ரருணனும் சனியும்
பாம்பு மெனவே பகரப் பெறுமே 
** 487

#140
காண்ட மெனும்பெயர் காடுந் தீர்த்தமுந்
தூசு நூன்முடிவும் படைக்கலப் பொதுவும்
அம்புங் கோலு மணிகலச் செப்பும்
குதிரை யுங்கமண் டலமு மியம்புவர் 
** 488

#141
காதை யெனும்பெயர் கதையொடு சொல்லுமாம் 
** 489

#142
காம னெனும்பெயர் கணைவேள் பெயரும்
ஐந்தரு விறைவன் பெயரு மாமே 
** 490

#143
காம ரெனும்பெயர் கட்ட ழகுடனே
விருப்பமு மெனவே விளம்புவர் புலவர் 
** 491

#144
காம மெனும்பெயர் விரகமும் விருப்பும் 
** ககர ஆகார வருக்கம் முற்றும்
** ககர இகர வருக்கம்
** 492

#145
கிடக்கை யெனும்பெயர் கிளர்புவிப் பெயரும்
சயனமு மென்னச் சாற்றப் பெறுமே 
** 493

#146
கிழமை யெனும்பெயர் குணமு முரிமையும்
வாரமு மெனவே வழங்குவர் புலவர் 
** 494

#147
கிளையெனும் பெயரே மூங்கிலும் சுற்றமும்
கிளைத்தலு மோர்பண் பெயருங் கிளத்துவர் 
** 495

#148
கிட்டி யெனும்பெயர் தலையீற் றாவும்
தாளமு மெனவே சாற்றுவர் புலவர் 
** 496

#149
கின்னர மெனும்பெயர் கின்னர மிதுனமும்
யாழின் பெயரு நீர்ப்பறவையு மாந்தையும் 
** 497

#150
கிடுகெனும் பெயரே தேர்மரச் சுற்றும்
பரிசையு மெனவே பகரப் பெறுமே 
** 498

#151
கிளரெனும் பெயரே கிளர்த்தெழு கிரணமும்
கோட்டு மலர்ப்பூந் தாதுங் கூறுவர் 
** 499

#152
கிஞ்சுக மெனும்பெயர் முண்முருக் குடனே
சென்னிறப் பெயருஞ் செப்பப் பெறுமே 
** 500

#153
கிள்ளை யெனும்பெயர் கிளியுங் குதிரையும் 
** 501

#154
கிருட்டின னெனும்பெயர் கேசவன் பெயரும்
அருச்சனன் பெயரு மாகு மென்ப 
** 502

#155
கிருத்திம மெனும்பெயர் தொழிலுஞ் சருமமும்
பூதமும் பொய்யும் புகலப் பெறுமே 
** 503

#156
கிம்புரி யெனும்பெயர் கிரீட விகற்பமும்
களிற்றின் மருப்பின் பூணுங் கருதுவர் 
** 504

#157
கிழியெனும் பெயரே கிழிபடு துகிலும்
இருநிதிப் பெயரு மெழுது படமுமாம் 
** 505

#158
கிருட்டி யெனும்பெயர் பன்றியின் பெயரும்
ஓரீற் றாவும் உரைக்கப் பெறுமே 
** ககர இகர வருக்கம் முற்றும்
** ககர ஈகார வருக்கம்
** 506

#159
கீர மெனும்பெயர் கிளியும் பாலுமாம் 
** 507

#160
கீசகமெனும் பெயர் மூங்கிலுங் குரங்குமாம் 
** 508

#161
கீதமெனும்பெயர் இசையுடன் வண்டுமாம் 
** 509

#162
கீலால மெனும்பெயர் நீருங் காடியும்
உதிரமு மெனவே யுரைக்கப் பெறுமே 
** 510

#163
கீழெனும் பெயரே கிழக்குங் கீழ்மையும்
கீழ்ப்படு சாதியு மிடமுங் கிளத்துவர் 
** ககர ஈகார வருக்கம் முற்றும்
** ககர உகர வருக்கம்
** 511

#164
குருதி யெனும்பெயர் குசனும் சிவப்பும்
உதிரமு மெனவே யுரைக்கப் பெறுமே 
** 512

#165
குலமெனும் பெயரி ரேவதியுங் கூட்டமும்
வருண விகற்பமு மனையுங் கோயிலும் 
** 513

#166
கும்ப மெனும்பெயர் கும்ப விராசியும்
வெங்கிரி நெற்றியுங் குடமும் விளம்புவர் 
** 514

#167
கும்பி யெனும்பெயர் யானையும் சேறும்
நிரயமு மெனவே நிகழ்த்தப் பெறுமே 
** 515

#168
குமுத மெனும்பெயர் மிகும்பே ரோசையும்
அடுப்பு நெய்தலு மோர்திசை யானையுமாம் 
** 516

#169
குண்டெனும் பெயரே குதிரை ஆண்பெயரும்
ஆழமும் கொலையுந் தாழ்வு மாமே 
** 517

#170
குயிலெனும் பெயரே கோகிலமுந் துளையும்
உரையுங் கருமுகிற் பெயரும் ஓதுவர் 
** 518

#171
குவலைய மெனும்பெயர் குவளையும் புவியுமாம் 
** 519

#172
குமரி யெனும்பெயர் அழிவிலா மாதரும்
உமையுந் துர்க்கையு மழிவிலாப் பொருளும்
சத்த மாதாக்களிற் சாற்று மோரணங்கும்
கற்றா ழையுமோர் நதியுங் கருதுவர் 
** 520

#173
குருகெனும் பெயரே கொல்லுலை மூக்கும்
கோழியுங் கைவளை யுங்குருக் கத்தியும்
நாரை பெயரோடு மூல நாளும்
புள்ளின் பொதுவும் வெண்மையும் இளமையும் 
** 521

#174
குன்றெனும் பெயரே வருண னாளும்
சிறுமலைப் பெயர்பெரு மலையுஞ் செப்புவர் 
** 522

#175
குருவெனும் பெயரே குரவனு நிறமும்
அரசனும் வியாழமும் பாரமும் பெருமையும்
தாளத்தி னிருமாத் திரையுமோர் நோயுமாம் 
** 523

#176
குடியெனும் பெயரே கோத்திர விகற்பமும்
குலத்தின் பெயருமூர்ப் பொதுவும் புருவமும் 
** 524

#177
குறிஞ்சி யெனும்பெயர் மலைச்சார்பு நிலமும்
அந்நில யாழுமோர் மரமு மாமே 
** 525

#178
குவடெனும் பெயர்மரக் கோடுஞ் சயிலமும்
மலையி னுச்சியும் வழங்கப் பெறுமே 
** 526

#179
குறும்பொறை யெனும்பெயர் குறிஞ்சி யூரும்
காடு மெனவே கருதுவர் புலவர் 
** 527

#180
குடிஞை யெனும்பெயர் கூகையும் யாறும்
புட்பொதுப் பெயரும் புகலப் பெறுமே 
** 528

#181
குளமெனும் பெயரே நுதலும் பொய்கையும்
சருக்கரைப் பெயருஞ் சாற்றுவர் புலவர் 
** 529

#182
குழையெனும் பெயரே சேறுந் துவாரமும்
தளிருங் குண்டலப் பெயருஞ் சாற்றுவர் 
** 530

#183
குடமெனும் பெயரே கும்பமும் பசுவும்
கொட்டிக் கைகள் குவித்தாடு கூத்தும்
நகரு மக்காரமு நவிலப் பெறுமே 
** 531

#184
குணுங்க ரெனும்பெயர் தோற்கரு வியருடன்
புலைஞரு மெனவே புகன்றனர் புலவர் 
** 532

#185
குஞ்ச மெனும்பெயர் குறளைச் சொல்லும்
நாழியுங் குறளு நவிலப் பெறுமே 
** 533

#186
குரலெனும் பெயரே வாசிக் கோவையும்
கிண்கிணி மாலையும் கிளர்நெற் கதிரும்
கோதையர் மயிரும் யாழ்நரம் பிலொன்றும்
புள்ளின் சிறகும் புகன்றனர் புலவர் 
** 534

#187
குணிலெனும் பெயர்கவ ணுங்குறுந் தடியுங்
கடிப்பெனும் பணையுங் கருதப் பெறுமே 
** 535

#188
குளிரெனும் பெயரே குடமுழவும் ஞெண்டும்
குளிர்ச்சியு மிலைமூக் கரியுங் கருவியுங்
கவணு மழுவுங் கருதப் பெறுமே 
** 536

#189
குரையெனும் பெயரே குதிரைப் பெயரும்
ஒலியுமிடைச் சொல்லு முரைக்கப் பெறுமே 
** 537

#190
குலையெனும் பெயர்காய்க் கொத்துஞ் செய்கரையும்
அம்பின் குதையும் விற்குதையு மாமே 
** 538

#191
குய்யெனும் பெயரே குளிர்மணப் புகையுடன்
கறிகரித் தலின்பெயர் தானுங் கருதுவர் 
** 539

#192
குடம்பை யெனும்பெயர் முட்டையும் கூடுமாம் 
** 540

#193
குஞ்சி யெனும்பெயர் குன்றியின் புதலும்
பறவை யிளமையு மாண்பான் மயிருமாம் 
** 541

#194
குழலெனும் பெயரே துளையுடைப் பொருளும்
இசையின் குழலும் இருபான் மயிருமாம் 
** 542

#195
கும்பச னெனும்பெயர் செந்தமிழ் முனியும்
துரோணா சாரியன் பெயருஞ் சொல்லுவர் 
** 543

#196
குடுமி யெனும்பெயர் மலையி னுச்சியும்
வென்றியு மாண்பான் மயிரும் விளம்புவர் 
** 544

#197
குயமெனும் பெயரே யிளமையு முலையுங்
கொடுவா ளெனவுங் கூறப்பெறுமே 
** 545

#198
குட்ட மெனும்பெயர் குளமு மாழமுந்
தொழுநோ யெனவுஞ் சொல்லுவர் புலவர் 
** 546

#199
குணமெனும் பெயரே கும்பமு மியல்புங்
கயிறுங் குணத்தின் விகற்பமும் கருதுவர் 
** 547

#200
குல்லை யெனும்பெயர் வெட்சியுந் துளசியும்
கஞ்சா வின்பெய ரதனையுங் கருதுவர் 
** 548

#201
குத்தி யெனும்பெயர் அடக்கமு மண்ணுமாம்  
** 549

#202
குபேர னெனும்பெயர் வயிச்சிர வணனோடு
மதியின் பெயரும் வழங்கப் பெறுமே 
** 550

#203
குறளெனும் பெயரே குறளர்தம் பெயரும்
பாரிடப் பெயரும் குறுமையும் பகருவர் 
** 551

#204
குறடெனும் பெயரே திண்ணையும் பலகையும் 
** 552

#205
குற்ற லெனும்பெயர் கோறலும் பறித்தலும் 
** 553

#206
குந்த மெனும்பெயர் குருந்தமும் வியாதியும்
கைவேல் குதிரைப் பெயருங் கருதுவர் 
** 554

#207
குயிறல் எனும்பெயர் கூவலும் குடைதலும்
செறிதலும் செய்தலும் செப்பப் பெறுமே 
** 555

#208
குவவெனும் பெயரே குவிதலுந் திரட்சியும்
பெருமையு மெனவே பேசப் பெறுமே 
** 556

#209
குய்யம் எனும்பெயர் யோனியு மறைவுமாம் 
** 557

#210
குரங்கெனும் பெயரே வளைவும் வானரமும்
மிருகப் பொதுவின் பெயரும் விளம்புவர் 
** ககர உகர வருக்கம் முற்றும்
** ககர ஊகார வருக்கம்
** 558

#211
கூற்றெனும் பெயரே கூற்றனும் வார்த்தையும் 
** 559

#212
கூனியெனும்பெயர் குடும்பமுங் கூட்டமும்
பேயுஞ் சேனைத் தலைவனும் பேசுவர் 
** 560

#213
கூட மெனும்பெயர் மலையின் குவடும்
கூட்டமு மறைவு மனவஞ் சனையும்
கொல்லன் சம்மட் டியையுங் கூறுவர் 
** 561

#214
கூல மெனும்பெயர் பாகலும் பகவும்
வரம்பும் விலங்கின் வாலு நீர்க்கரையும்
தெருவும் பலபண்ட முமங்கா டியுமாம் 
** 562

#215
கூளிய ரெனும்பெயர் பூதகண வீரரும்
கொலைத்திற லோருநட் பாளருங் கூறுவர் 
** 563

#216
கூந்தலெனும் பெயர் மயிலின் றோகையும்
கோதையர் குழலுங் கூறப் பெறுமே 
** 564

#217
கூவிர மெனும்பெயர் தேரின் கொடிஞ்சியுந்
தேரு மெனவே செப்புவர் புலவர் 
** 565

#218
கூத்த னெனும்பெய ருயிரின் பெயரும்
நடிப்போன் பெயரு நவிலப் பெறுமே 
** 566

#219
கூழெனும் பெயரே பலவகை யுணவும்
நெற்பயிர் முதலவுங் கனகமு நிகழ்த்துவர் 
** 567

#220
கூரெனும் பெயரே கூர்மையு மிகுதியும் 
** 568

#221
கூர லெனும்பெயர் மாதர்தம் மயிரும்
புள்ளின் சிறகும் புகலப் பெறுமே 
** 569

#222
கூழை யெனும் பெயர் கொடும்படை யுறுப்பும்
புட்சிறகு பெண்பான் மயிரும் புகலுவர் 
** ககர ஊகார வருக்கம் முற்றும்
** ககர எகர வருக்கம்
** 570

#223
கெழுவுத லெனும்பெயர் மயக்கமும் பற்றுமாம் 
** 571

#224
கெதியெனும் பெயர்பர கெதிநடை விரைவுமாம் 
** ககர எகர வருக்கம் முற்றும்
** ககர ஏகார வருக்கம்
** 572

#225
கேடக மெனும்பெயர் ஊர்ப்பொதுப் பெயரும்
பரிசையும் பலகையும் பகர்ந்தனர் புலவர் 
** 573

#226
கேச மெனும்பெயர் பெண்பான் மயிரும்
ஆண்பான் மயிரு மஃறிணை மயிருமாம் 
** 574

#227
கேழெனும் பெயரே நிறமும் ஒளியும்
உவமையு மெனவே யுரைத்தனர் புலவர் 
** 575

#228
கேசர மெனும்பெயர் மகிழமரப் பெயரும்
பூந்தாது மெனவே புகலப் பெறுமே 
** 576

#229
கேது வெனும் பெயர் ஒன்பான் கிரகமும்
துவசமு நெருப்புஞ் சொல்லுவர் புலவர் 
** 577

#230
கேவல மெனும்பெயர் தனிமையு முத்தியும் 
** 578

#231
கேட்டை யெனும்பெயர் புரந்தர னாளும்
அசைச்சொற் பெயரு மூதேவியு மாமே 
** 579

#232
கேள்வி யெனும்பெயர் கல்வியும் செவியுமாம் 
** 580

#233
கேகய மெனும்பெயர் மயிலுமோர் பண்ணும்
அசுண மாவின் பெயரு மாமே 
** ககர ஏகார வருக்கம் முற்றும்
** ககர ஐகார வருக்கம்
** 581

#234
கையெனும் பெயரலங் கரித்தலுஞ் சிறுமையும்
தானையி னுறுப்பும் தங்கையும் செங்கையும்
ஒழுக்கமு மிடமுங் குற்றமுஞ் சார்புமாம் 
** 582

#235
கைத்த லெனும்பெயர் கைப்புஞ் சினமுமாம் 
** 583

#236
கைக்கிளை யெனும்பெய ரொருதலைக் காமமும்
இசையின் விகற்பமு மியம்பப் பெறுமே 
** ககர ஐகார வருக்கம் முற்றும்
** ககர ஒகர வருக்கம்
** 584

#237
கொடிறெனும் பெயரசுரர் குருவி னாளுங்
கவுளியின் பெயருங் கருவிப் பற்றுமாம் 
** 585

#238
கொக்கெனும் பெயரே குதிரையு மூலமும்
பேகமுஞ் செந்நாயு மாமரமும் பேசுவர் 
** 586

#239
கொன்னெனும் பெயரே ஓரசைச் சொல்லும்
பெருமையுங் காலமும் வறிது மச்சமும்
பயனி லாததும் பகருவர் புலவர் 
** 587

#240
கொற்றி யெனும்பெயர் கோவிளங் கன்றும்
துர்க்கையுங் கொத்தியுஞ் சொல்லப் பெறுமே 
** 588

#241
கொண்மூ வெனும்பெயர் மேகமா காயமுமாம் 
** 589

#242
கொந்தள மெனும்பெயர் கோதையர் மயிரும்
குருளையுங் கருங்குழற் கொத்து மாமே 
** 590

#243
கொடிய னெனும்பெயர் கொடியவன் பெயரும்
கேதுவின் பெயருங் கிளர்த்தப் பெறுமே 
** 591

#244
கொம்மை யெனும்பெயர் கொங்கையும் பெலமும்
இளமையும் அங்கை குவித்துக் கொட்டலும்
வட்ட வடிவுந் திடரும் வழங்குவர் 
** 592

#245
கொண்டை யெனும்பெயர் இரந்தையின் கனியும்
மயிர்முடிப் பெயரும் வழங்கப் பெறுமே 
** 593

#246
கொற்ற மெனும்பெயர் அரசியற் பெயரும்
வெற்றியின் பெயரும் விளம்புவர் புலவர் 
** 594

#247
கொல்லெனும் பெயர்கொலை யேவலு மசைச்சொல்லும்
ஐயமும் வருத்தமும் செங்கொல்லும் கருங்கொல்லும்  
** 595

#248
கொடியெனும் பெயரே யொழுங்கும் வல்லியும்
துவசமுங் காக்கையின் பெயருஞ் சொல்லுவர் 
** ககர ஒகர வருக்கம் முற்றும்
** ககர ஓகார வருக்கம்
** 596

#249
கோடை யெனும்பெயர் மேற்றிசைக் காற்றும்
குதிரையும் வெயிலும் வெண்காந்தளுங் கூறுவர் 
** 597

#250
கோவெனும் பெயரே குலிசமுந் தலைவனும்
அம்பும் பூமியும் அறலுங் கிரணமும்
சுவர்க்கமும் விழியுஞ்சூழ் பெருந்திசையும்
மலையும் பதவும் வானமு மிரக்கமும்
குறிப்பின் வார்த்தையுங் கூறுவர் புலவர் 
** 598

#251
கோளெனும் பெயரே யொன்பான் கிரகமும்
வலியுங் கொள்கையுங் கொலையு மிடையூறும்
குறளையின் புன்சொல்லுங் கூறப் பெறுமே 
** 599

#252
கோல மெனும்பெயர் கொழுந்து நீரோட்டமும்
பாக்கும் பீர்க்கும் பன்றியு மழகும்
இரந்தையும் இரந்தைக் கனிக்கும் இயம்புவர் 
** 600

#253
கோட்ட மெனும்பெயர் கோயிலு நாடும்
கோட்டமும் வளைவும் உண்கலனு மான்கொட்டிலும்
குரவு மனக்கோட்ட முமெனக் கூறுவர் 
** 601

#254
கோத்திர மெனும்பெயர் குடியு மலையும்
புவனியு மெனவே புகன்றனர் புலவர் 
** 602

#255
கோடெனும் பெயரே மலையின் குவடும்
வார்புனற் கரையும் விலங்கின் மருப்பும்
மரத்தின் பணையு மூதுங் கொம்பும்
சங்கின் பெயருஞ் சாற்றப் பெறுமே 
** 603

#256
கோச மெனும்பெயர் மதிலுறுப்பு முட்டையும்
பொத்தகமும் பொருள் பொருந்து பெட்டகமும்
ஆண்குறிப் பெயரு மாகு மென்ப 
** 604

#257
கோட்டி யெனும்பெயர் கோபுர வாயிலும்
ஈட்டு பலசபையு மியம்பப் பெறுமே 
** 605

#258
கோதை யெனும்பெயர் மடந்தையர் குழலுஞ்
சேரனு முடும்புஞ் சிறந்த கைக்கட்டியும்
மாலையுங் காற்றின் பெயரும் வழங்குவர் 
** 606

#259
கோணெனும் பெயரே வளைவும் கூனுமாம் 
** 607

#260
கோடக மெனும்பெயர் முடியின துறுப்பும்
குதிரையும் புதுமையுங் கூறப் பெறுமே 
** 608

#261
கோர மெனும்பெயர் கொடுமையும் வட்டிலும்
சோழன் குதிரையுஞ் சொல்லப் பெறுமே 
** 609

#262
கோசிக மெனும்பெயர் பட்டும் கூறையும்
சாமவேத முமெனச் சாற்றுவர் புலவர் 
** 610

#263
கோடிக மெனும்பெயர் கூறையின் பெயரும்
பூவின் றட்டும் புகலப் பெறுமே 
** 611

#264
கோடர மெனும்பெயர் குரங்கும் குதிரையும்
மரத்தின் கோடும் எட்டிமரச் செறிவுமாம் 
** 612

#265
கோகுல மெனும்பெயர் குயிலொடு குரங்கும்
பல்லியு மெனவே பகர்ந்தனர் புலவர் 
** 613

#266
கோளி யெனும்பெயர் கொளிஞ்சி மரமும்
அத்தியால் பூவாது காய்க்கு மரமுமாம் 
** 614

#267
கோழி யெனும்பெயர் சோழ னுறையூரும்
ஆண்டலைப் புள்ளு மாமென வுரைப்பர் 
** 615

#268
கோண மெனும்பெயர் குதிரையு மூக்கும்
அங்குச முங்கூன் வாளு மாமே 
** 616

#269
கோடி யெனும்பெயர் தூசும் புதுமையும்
ஓரெண் பெயரு முரைக்கப் பெறுமே 
** 617

#270
கோண லெனும்பெயர் கூனலும் வளைதலும்
மாறுபடு குணத்தின் பெயரும் வழங்கும் 
** 618

#271
கோலெனும் பெயரே யாழி னரம்பும்
அம்புந் துலாமுந் தூரிகைக் கோலும்
அஞ்சனக் கல்லு மளந்திடு கோலும்
குதிரை மத்திகையுந் திரட்சியு மீட்டியும்
*இறைமுறை நடத்தல் வாட்கோலு மியம்புவர் 
** ககர ஓகார வருக்கம் முற்றும்
** ககர ஒளகார வருக்கம்
** 619

#272
கெளசிக மெனும்பெய ரோரி சையுடன்
கூகையும் சுடர்நிலைத் தண்டும் பட்டுமாம் 
** 620

#273
கௌவை யெனும்பெயர் கள்ளும் துன்பமும்
எள்ளிலங் காயும் பழிச்சொலு மோசையும் 
** 621

#274
கெளந்தி யெனும்பெயர் பாண்டவ ரன்னையும்
அருந்த வப்பெண் பெயரு மாமே 
** 622

#275
கெளட மெனும்பெய ரொருதே சத்துடன்
ஓருகொடிப் பெயரு முரைக்கப் பெறுமே 
** ககர ஔகார வருக்கம் முற்றும்
** ககர வருக்கம் முற்றும்

@3 வது சகர வருக்கத் தொகுதி
** சகர வருக்கம்
** 623

#1
சம்பு வெனும்பெயர் சங்கரன் றிருமால்
நான்முக னாவன ரியுமோர் புல்லுஞ்
சூரியன் பெயருஞ் சொல்லப் பெறுமே 
** 624

#2
சத்தி யெனும்பெயர் வேலும் பெலமும்
உமையுந் துவசமுங் குடைமுற் காரமும் 
** 625

#3
சமனெனும் பெயரே யியமனு நடுவுமாம் 
** 626

#4
சதியெனும் பெயரே தாள வொத்துடன்
உரோகிணிப் பெயருங் கற்பாட் டியுமாம் 
** 627

#5
சந்தி யெனும்பெய ரந்திப் பொழுது
மூங்கிலுஞ் சதுக்கமு மொழியப் பெறுமே 
** 628

#6
சரியெனும் பெயர்கை வளையும் வழியுமாம் 
** 629

#7
சரண மெனும்பெயர் தாளுங் கரமுஞ்
சார்பு மெனவே சாற்றுவர் புலவர் 
** 630

#8
சடையெனும் பெயர்கோ டீரமும் வேருமாம் 
** 631

#9
சவியெனும் பெயரே யழகும் பெலமும்
மணிக்கோவை வடமு மொளியும் வழங்கும் 
** 632

#10
சரமெனும் பெயரே தனிமணி வடமும்
அம்புஞ் சமரும் கொறுக்கச் சியுமாம் 
** 633

#11
சலாகை யெனும்பெயர் சவளப் பெயரோடு
நாரா சமுநன் மணியு நவின்றனர் 
** 634

#12
சகுனி யெனும்பெயர் நிமித்தம் பார்ப்பவனும்
பறவையின் பொதுவும் பகரப் பெறுமே 
** 635

#13
சத்திர மெனும்பெயர் அன்ன சாலையும்
கைவிடாப் படையுங் கவின்பெறு குடையும்
குடையின திரும்பும் வேள்வியும் கூறுவர் 
** 636

#14
சடமெனும் பெயரே பொய்யுஞ் சரீரமும்
கொடுமையு மெனவே கூறப் பெறுமே 
** 637

#15
சகுந்த மெனும்பெயர் புள்ளின் பொதுவும்
கழுகு மெனவே கருதுவர் புலவர் 
** 638

#16
சகுன மெனும்பெயர் புட்பொதுப் பெயரும்
நிமித்தமும் கிழங்கு நிகழ்த்தப் பெறுமே 
** 639

#17
சடில மெனும்பெயர் சடையு நெருக்கமும் 
** 640

#18
சக்கிரி யெனும்பெயர் தராபதி யரவுடன்
மிக்கசீர் முகுந்தன் செக்கான் குயவனாம் 
** 641

#19
சசியெனும் பெயரே மதியும் கற்பூரமும்
இந்திரன் மனைவியும் வெண்மையு மியம்புவர் 
** 642

#20
சங்க மெனும்பெய ரன்புஞ் சபையும்
வென்றியுங் கவிஞரு மோரெண் பெயரும்
கணைக்கால் சங்கின் பெயருங் கருதுவர் 
** 643

#21
சண்டனெனும்பெயர் சூரியன் யமனுடன்
நபுஞ்சகன் பெயரு நவிலப் பெறுமே 
** 644

#22
சக்கர மெனும்பெயர் சுதரி சனமும்
சக்கர யூகமும் சகதலப் பெயரும்
தேரி னுருளும் பெருமையும் பிறப்பும்
நேமிப் புள்ளுங் கடலும் சகடமும்
வட்டமுந் திகிரி வரையுஞ் செப்புவர் 
** 645

#23
சத்திய மெனும்பெயர் சபதமு மெய்யுமாம் 
** 646

#24
சந்த மெனும்பெயர் நிறமும பிராமமுஞ்
சாந்தமு மினம்பெறு கவிதையுஞ் சாற்றுவர் 
** 647

#25
சலமெனும் பெயரே பொய்யுங் கோபமும்
புள்ளின் பெயரு நடுக்கமும் புகலுவர் 
** 648

#26
சயமெனும் பெயரே சருக்கரை வென்றியாம் 
** 649

#27
சரப மெனும்பெயர் சிம்புள்வரை யாடுமாம் 
** 650

#28
சராவ மெனும்பெயர் விளக்கின் தகளியும்
சலாகையு மெனவே சாற்றினர் புலவர் 
** 651

#29
சமழ்த்த லெனும்பெய ரழித்தலு நாணமும் 
** 652

#30
சயிந்தவ மெனும்பெயர் கலையும் குதிரையும்
இந்துப் பின்பெயர் தானு மியம்புவர் 
** 653

#31
சகமெனும் பெயரே புள்ளின் சிறகும்
இலையுமோ ரிலக்கமு மியம்பப் பெறுமே 
** சகர அகர வருக்கம் முற்றும்
** சகர ஆகார வருக்கம்
** 654

#32
சான்றா ரெனும்பெயர் சார்புளெனும் பெயரும்
அருக்கனு மிருக சீரிடமு மானே 
** 655

#33
சாதக மெனும்பெயர் பூதமுஞ் சனனமும்
வானம் பாடிப் புள்ளும் வழங்குவர் 
** 656

#34
சாமி யெனும்பெயர் தலைவனு மரசனும்
குரவனும் வியாழமுங் கூறுவர் புலவர் 
** 657

#35
சாம மெனும்பெயர் பச்சை நிறமும்
யாமமு மிரவுமோர் வேதமு மியம்புவர் 
** 658

#36
சானு வெனும்பெயர் மலையின் பக்கமும்
மலையு முழந்தாட் பெயரும் வழங்கும் 
** 659

#37
சார லெனும்பெயர் மலையின் பக்கமும்
மருத யாழ்த்திறத் தோரோசையும் வழங்கும் 
** 660

#38
சானகி யெனும்பெயர் சீதையு மூங்கிலும் 
** 661

#39
சாம்ப லெனப்பெயர் பழம்பூவும் சாம்பரும்
முற்றுத லெனவு மொழியப்பெறுமே 
** 662

#40
சால மெனும்பெயர் ஆச்சார மரமும்
மதிலுஞ் சாளரப் பெயரும் வலையுமாம் 
** 663

#41
சாலேக மென்னும் பெயர்பூ வரும்பும்
வாதா யனமும் வகுக்கப் பெறுமே 
** 664

#42
சாதி யெனும்பெயர் பிரம்புந் தேறலும்
தேனும் தேக்குஞ் சிறுசண் பகமும்
சாதியின் விகற்பமுஞ் சாற்றப் பெறுமே 
** 665

#43
சாறெனும் பெயரே தாழமரக் குலையும்
வேரியு முயர்திரு விழாவுமாமே 
** 666

#44
சாலி யெனும்பெயர் நெற்பொதுப் பெயரும்
வேரியு மருந்ததிப் பெயரும் விளம்புவர் 
** 667

#45
சார்ங்க மெனும்பெயர் விற்பொதுப் பெயரும்
மாயோன் சிலையும் வகுத்து ரைத்தனரே 
** 668

#46
சாப மெனும்பெயர் சபித்தலும் சிலையுமாம் 
** 669

#47
சாக மெனும்பெயர் சாகினி விகற்பமும்
தேனீப் பெயரும் வெள்ளாடுந் தேக்குமாம் 
** 670

#48
சாகினி யெனும்பெயர் தழைத்திடு சேம்பொடு
கீரையின் விகற்பமும் கிளத்தப் பெறுமே 
** 671

#49
சாரங்க மெனும்பெயர் மானும் வண்டுமாம் 
** 672

#50
சாரிகை யெனும்பெயர் சூறையும் சுங்கமும்
நாகண வாய்ப்புட் பெயரு நவிலுவர் 
** 673

#51
சாய லெனப்பெயர் மெய்ப்பாட் டினழகும்
மேன்மையு மெனவே விளம்பப் பெறுமே 
** 674

#52
சாகர மெனும்பெயர் துயிலொழிந் திடுதலும்
ஏழ்கடற் பெயரும் இயம்புவர் புலவர் 
** 675

#53
சாலை யெனும்பெயர் குதிரைப் பந்தியும்
அறப்புற மடமும் அரசர்தங் கோயிலும்
வழிநடைச் சாலையும் வழங்கப் பெறுமே 
** 676

#54
சால்பெனும் பெயர்சான் றாண்மையு மியல்புமாம் 
** 677

#55
சாந்த மெனும்பெயர் சந்தனமும் பொறுமையும் 
** 678

#56
சாம்பு வெனும்பெயர் பறையொடு பொன்னுமாம் 
** 679

#57
சார்பெனும் பெயரே சார்தலு மிடமுமாம் 
** 680

#58
சாத்த னெனும்பெயர் அய்யனும் அருகனும்
புத்தனு மெனவே புகலுவர் புலவர் 
** 681

#59
சாத மெனும்பெயர் மெய்மையும் பூதமும் 
** 682

#60
சாலெனும் பெயரே யுழவின் சாலும்
நீர்பெய் பசானமு நிகழ்த்துவர் புலவர் 
** சகர ஆகார வருக்கம் முற்றும்
** சகர இகர வருக்கம்
** 683

#61
சிவையெனும் பெயரே நவையிலா வுமையுடன்
கொல்ல னுலையும் பெரும் நரியுமாம் 
** 684

#62
சிதமெனும் பெயரே செயமுறப் படுதலும்
ஞானமும் வெளுப்பும் வான் மீனுமாம் 
** 685

#63
சிந்தெனும் பெயரே நீருங் கடலும்
நதியுங் குறளும் யாப்பின் முச்சீரும்
ஓர்தேச முமென வுரைத்தனர் புலவர் 
** 686

#64
சிதரெனும் பெயரே சீலைத் துணியுந்
துவலையு முறியும் வண்டுஞ் சொல்லுவர் 
** 687

#65
சிமைய மெனும்பெயர் சிகரமுங் குடுமியும் 
** 688

#66
சிலையெனும் பெயரே மலையும் பாறையும்
வில்லு மெனவே விளம்புவர் புலவர் 
** 689

#67
சினையெனும் பெயரே செழுமரக் கோடுங்
கருவின் பெயரு முட்டையு முறுப்புமாம் 
** 690

#68
சிலீமுக மெனும்பெயர் அம்பும் வண்டும்
முலைக்கணின் பெயரு மொழியப் பெறுமே 
** 691

#69
சிமிலி யெனும்பெயர் உறியுங் கீழ்வீடும்
குடுமியு மெனவே கூறுவர் புலவர் 
** 692

#70
சிக்க மெனும்பெயர் சீப்புங் குடுமியும்
உறியு மெனவே யுரைத்தனர் புலவர் 
** 693

#71
சிந்துர மெனும்பெயர் திலகமும் வெட்சியும்
செந்நிறப் பொருள்களுஞ் செங்குடைப் பெயரும்
மதகரிப் பெயர்புளி மாவும் வழங்கும் 
** 694

#72
சிரக மெனும்பெயர் கரகமும் வட்டிலுஞ்
சென்னியிற் கோடுஞ் செப்பப் பெறுமே 
** 695

#73
சிதலை யெனும்பெயர் செல்லொடு துணியுமாம் 
** 696

#74
சிகண்டி யெனும்பெயர் பாலையாழ்த் திறத்தின்
ஓசையும் அலியு மயிலு மாமே 
** 697

#75
சில்லி யெனப்பெயர் சிள்வீடும் வட்டமும்
தேருரு ளுஞ்சிறு கீரையும் செப்புவர் 
** 698

#76
சிறை யெனும்பெயரே புள்ளி னிறகும்
காவலு மோர்பா லிடமும் கரையுமாம் 
** 699

#77
சிவப்பெனும் பெயரே செம்மையும் சினமும்
சினக்குறிப் புமெனச் செப்புவர் புலவர் 
** 700

#78
சில்லை யெனும்பெயர் பகண்டைப் புள்ளும்
சிள்வீடுங் கிலுகிலுப் பையுஞ் செப்புவர் 
** 701

#79
சிகரி யெனும்பெயர் மலையு மெலியும்
கருநா ரையுங் கோபுரமுங் கருதுவர் 
** 702

#80
சித்த மெனும்பெயர் திடமும் உளமுமாம் 
** 703

#81
சித்திர னெனும்பெயர் சித்திர காரனுந்
தச்சனு மெனவே சாற்றப் பெறுமே 
** 704

#82
சிகியெனும் பெயரே மயிலும் கேதுவும்
நெருப்பு நூபுரமு நிகழ்த்தப் பெறுமே 
** 705

#83
சித்திர மெனும்பெயர் சித்திர கவிதையும்
மெய்போற் பொய்யை யுரைத்தலு மழகும்
துணித்த பலபொரு ளுமதி சயமுஞ்
செய்சொல் வடிவுங் காடுமா மணக்குமாம் 
** 706

#84
சித்திர பானு வெனும்பெயர் நெருப்புஞ்
சூரியன் பெயரு மோராண்டுஞ் சொல்லுவர் 
** 707

#85
சிலம்பெனும் பெயரே மலையு மோசையும்
பரிபுரப் பெயரும் பகர்ந்தனர் புலவர் 
** 708

#86
சிகர மெனும்பெயர் திரையுந் திவலையு
மலையி னுச்சியும் சென்னியுங்
கவரி மாவின் பெயருங் கருதுவர் 
** 709

#87
சிகழிகை யெனும்பெயர் மயிர்முடிப் பெயரும்
மாலையின் பெயரும் வழங்கப் பெறுமே 
** 710

#88
சிதட னெனும்பெயர் குருடனு மூடனும் 
** 711

#89
சிரமெனும் பெயர்நெடுங் காலமுஞ் சென்னியும் 
** 712

#90
சிவமெனும் பெயரே முத்தியும் பெருமையும்
குறுணியின் பெயருங் கூறப் பெறுமே 
** 713

#91
சித்தெனும் பெயரே செயமும் ஞானமுமாம் 
** சகர இகர வருக்கம் முற்றும்
** சகர ஈகார வருக்கம்
** 714

#92
சீதம் எனும்பெயர் மேகமும் பாலும்
குளிர்ச்சியும் புனலுங் கூறுவர் புலவர் 
** 715

#93
சீவ னெனும்பெயர் வியாழமு முயிரும் 
** 716

#94
சீரு ளெனும்பெயர் செல்வமுஞ் செம்பும்
ஈயமு மெனவே இயம்பப் பெறுமே 
** 717

#95
சீவனி யெனும்பெயர் செவ்வழி யாழ்த்திறத்
தோரிசைப் பெயரு முயிர்தரு மருந்துமாம் 
** 718

#96
சீரெனும் பெயரே செல்வமுங் கீர்த்தியும்
பாரமு மழகும் பகர்ந்திடு சீர்மையும்
தாள வொத்துந் தடியுங் காத்தண்டுஞ்
சொற்சீர் எனவுஞ் சொல்லுவர் புலவர் 
** 719

#97
சீப்பெனும் பெயரே கதவின் றாழும்
மயிர்வார் சீப்பும் வழங்கப் பெறுமே 
** 720

#98
சீகர மெனும்பெயர் திரையுந் திவலையும்
கவரி மாவுங் கருதுவர் புலவர் 
** 721

#99
சீல மெனும்பெய ரொழுக்கமுங் குணமும்
தருமமு மெனவே சாற்றுவர் புலவர் 
** 722

#100
சீதை யெனும்பெயர் உழுபடைச் சாலும்
இராமன் றேவியு மியம்பப் பெறுமே 
** சகர ஈகார வருக்கம் முற்றும்
** சகர உகர வருக்கம்
** 723

#101
சுந்தரி யெனும்பெயர் உமையுந் துர்க்கையும்
சூரனு மெனவே சொல்லுவர் புலவர் 
** 724

#102
சுக்கை யெனும்பெ யர்வான் மீனொடு
மாலையு மெனவே வகுத்தனர் புலவர் 
** 725

#103
சுசியெனும் பெயரே கோடைக் காலமும்
சுத்தமுங் கனலின் பெயருஞ் சொல்லுவர் 
** 726

#104
சுதையெனும் பெயரே சுண்ணச் சாந்தும்
மறிகட லமுதமும் புதல்வியும் வழங்குவர் 
** 727

#105
சுடரெனும் பெயரே சூரியன் மதிகனல்
விளக்கு மொளியும் விளம்பப் பெறுமே 
** 728

#106
சுவவெனும் பெயர்சுவர்க் கத்தின் பெயரும்
புள்ளின் மூக்குஞ் சுண்டனும் புகலுவர் 
** 729

#107
சுண்ட னெனும்பெயர் சூரனுஞ் சதையமும் 
** 730

#108
சும்மை யெனும்பெயர் ஊர்ப்பொதுப் பெயரும்
நென்முதற் போரும் நிறைந்த நீர்நாடுஞ்
சுமையோடு சத்த வொலியுஞ் சொல்லுவர் 
** 731

#109
சுவலெனும் பெயரே தோளின் மேலும்
மேடுங் குரகதக் குசையின் மயிரும்
பிடர்த்தலைப் பெயரும் பேசப் பெறுமே 
** 732

#110
சுருங்கை யெனும்பெயர் கரந்த கற்படையும்
நுழைவாய் தலுமென நுவலப் பெறுமே 
** 733

#111
சுரிய லெனும்பெயர் ஆண்பான் மயிரும்
பெண்பால் மயிரும் பேசுவர் புலவர் 
** 734

#112
சுரையெனும் பெயரே யுட்டுளை வடிவும்
ஆவின் முலையும் நறவும் அலாபுமாம் 
** 735

#113
சுடிகை யெனும்பெயர் சுட்டியு மகுடமும்
உச்சியு மெனவே மொழியப் பெறுமே 
** 736

#114
சுரிகை யெனும்பெய ருடைவா ளுடனே
மெய்புகு கருவியும் விளம்புவர் புலவர் 
** 737

#115
சுகமெனும் பெயரே யின்பமுங் கிளியுமாம் 
** 738

#116
சுரர்குரு வெனும்பெயர் தேவர் மந்திரியும்
இந்திரன் பெயரும் இயம்பப் பெறுமே 
** 739

#117
சுவேத மெனும்பெயர் வெண்மையும் வெயர்வுமாம் 
** 740

#118
சுவாமி யெனும்பெயர் முருகனும் வியாழமும்
குருவுந் தலைவனுங் கூறுவர் புலவர் 
** 741

#119
சுருதி யெனும்பெயர் வேதமும் ஒலியுமாம் 
** 742

#120
சுரமெனும் பெயரே வழியுங் காடும்
அருநெறிப் பெயரும் பாலை நிலமுமாம் 
** சகர உகர வருக்கம் முற்றும்
** சகர ஊகார வருக்கம்
** 743

#121
சூர னெனும்பெயர் சூரியன் பெயரும்
தீரனு மருகனு நாயையுஞ் செப்புவர் 
** 744

#122
சூரெனும் பெயரே தெய்வமு நோயும்
வஞ்சமு மஞ்சா மையுமே வழங்கும் 
** 745

#123
சூழி யெனும்பெயர் கரிமுக படாமும்
வாவியு மெனவே வகுத்துரைத் தனரே 
** 746

#124
சூதக மெனும்பெயர் பிறப்பின் பெயரும்
ஆசூ சப்பெயர் தானு மாமே 
** 747

#125
சூத்திர மெனும்பெயர் நூற்பா வகவலும்
நூற்கும் வெண்ணூலும் நுவல்பல் பொறியுமாம் 
** 748

#126
சூத னெனும்பெயர் சூதாடு பவனும்
சூது சேருளத்தனும் தேர்ப்பா கனுமாம் 
** 749

#127
சூத மெனும்பெயர் பரதா ரத்தொடு
மாமர மெனவும் வழங்குவர் புலவர் 
** 750

#128
சூழ லெனும்பெயர் விசாரமு மிடமுமாம் 
** சகா ஊகார வருக்கம் முற்றும்
** சகர எகர வருக்கம்
** 751

#129
செவ்வி யெனும்பெயர் பொழுதும் பருவமும் 
** 752

#130
செல்லெனும் பெயரே யிடியு மேகமும்
முன்னிலை யேவலுஞ் சிதலு மொழிந்தனர் 
** 753

#131
செந்தெனும் பெயரே சீவனுஞ் சிவப்பும்
ஓரியு மணுவும் நரகத்தி லொன்றுமாம் 
** 754

#132
செப்ப மெனும்பெயர் நடுநிலைப் பெயரும்
தெருவுஞ் செவ்வையு நெஞ்சமுஞ் செப்புவர் 
** 755

#133
செம்புல மெனும்பெயர் வன்பாலை நிலமும்
பொருக ளமுமெனப் புகன்றனர் புலவர் 
** 756

#134
செய்ய லெனும்பெயர் சேறு மொழுக்கமும்
காவலு மெனவே கருதப் பெறுமே 
** 757

#135
செம்ம லெனும்பெயர் சீவனும் செயினனும்
தலைவனுஞ் சிறுவனும் வீரனும் பெருமையும்
பழம்பூ வுமெனப் பகர்ந்தனர் புலவர் 
** 758

#136
செவிலி யெனும்பெயர் முன்பிறந் தாளும்
வளர்த்த கைத்தாயும் வகுத்தனர் புலவர் 
** 759

#137
செழுமை யெனும்பெயர் வளமையும் கொழுப்பும்
வனப்பு மாட்சிமையும் வழங்குவர் புலவர் 
** 760

#138
செடியெனும் பெயரே யொளியுஞ் செறிவும்
பாவமுங் குணமின் மைப்பெயரும் பகர்ந்தனர் 
** 761

#139
செத்தெனும் பெயரே செம்மையு முவமையும்
அசைச்சொலு முறுப்புங் கருத்துஞ் சந்தேகமும் 
** 762

#140
செட்டி யெனும்பெயர் முருகன் பெயரும்
வணிகனு மெனவே வழங்கப் பெறுமே 
** 763

#141
செச்சை யெனும்பெயர் வெள்ளாட் டேறொடு
வெட்சி செஞ்சாந்தும் விளம்புவர் புலவர் 
** 764

#142
செவியெனும் பெயரே கேள்வியுங் காதுமாம் 
** 765

#143
செம்மை யெனும்பெயர் சிவப்புஞ் செவ்வையும் 
** 766

#144
செப்பெனும் பெயர்பணிச் செப்புஞ் செப்பலும் 
** 767

#145
செய்யெனும் பெயரே செய்தொழிற் பெயரும்
ஒழுக்கமு மெனவே யுரைக்கப் பெறுமே 
** 768

#146
செயிரெனும் பெயரே சினமும் குற்றமும் 
** சகர எகர வருக்கம் முற்றும்
** சகர ஏகார வருக்கம்
** 769

#147
சேயெனும் பெயரே சிவப்புஞ் செவ்வேளும்
செவ்வாய்க் கிரகமும் சிறுவனு நீளமும்
தூரமு மிளமையுஞ் சொல்லுவர் புலவர் 
** 770

#148
சேடி யெனும்பெயர் விஞ்சையர் நகரமும்
சிலதியு மெனவே செப்பப் பெறுமே 
** 771

#149
சேக்கை யெனும்பெயர் முலையும் சயனமும்
விலங்கு துயிலிடமும் விளம்புவர் புலவர் 
** 772

#150
சேடனெ னும்பெயர் அனந்தனும் பாங்கனும்
இளையோன் பெயருட னடிமையு மியம்புவர் 
** 773

#151
சேணெனும் பெயரே யகலமு நீளமும்
உயரமு மெனவே யுரைக்கப் பெறுமே 
** 774

#152
சேடெனும் பெயரே சிறப்பு நன்மையும்
அழகுந் திரட்சியு மிளமையு மாமே 
** 775

#153
சேதக மெனும்பெயர் சேறு செந்நிறமுமாம் 
** 776

#154
சேவ லெனும்பெயர் புள்ளி னாண்பாலும்
காவலுஞ் சேறுஞ் சாவலும் கருதுவர் 
** 777

#155
சேவக மெனும்பெயர் யானை துயிலிடமும்
வீரமு மெனவே விளம்புவர் புலவர் 
** 778

#156
சேதார மெனப்பெயர் தேமாவும் வெட்சியும்
பொன்னின் பெயரும் புகன்றனர் புலவர் 
** சகர ஏகார வருக்கம் முற்றும்
** சகர ஐகார வருக்கம்
** 779

#157
சைவ மெனும்பெயர் புராணத்தி லொன்றும்
சிவசம யத்தின் விகற்பமும் செப்புவர் 
** சகர ஐகார வருக்கம் முற்றும்
** சகர ஒகர வருக்கம்
** 780

#158
சொல்லெனும் பெயரே கீர்த்தியும் வார்த்தையும்
நெல்லும் பல்கலைப் பெயரு நிகழ்த்துவர் 
** 781

#159
சொர்க்க மெனும்பெயர் சுவர்க்கமு முலையுமாம் 
** சகர ஒகர வருக்கம் முற்றும்
** சகர ஓகார வருக்கம்
** 782

#160
சோதி யெனும்பெய ரொருநாள் மீனும்
அருகனும் அரனும் ஆதித்தனும் விளக்கும்
தாரா கணமும் விளம்புவர் புலவர் 
** சகர ஓகார வருக்கம் முற்றும்
** சகர ஒளகார வருக்கம்
** 783

#161
செளரி யெனும்பெயர் சளியுங் கன்னனும்
இமயனுங் கண்ணனும் யமுனை நதியுமாம் 
** 784

#162
செளரிய மெனும்பெயர் வீரமும் களவுமாம் 
** சகர ஒளகார வருக்கம் முற்றும்
** சகர வருக்கத் தொகுதி முற்றும்

@4  வது ஞகர வருக்கத் தொகுதி
** ஞகர அகர வருக்கம்
** 785

#1
ஞமலி யெனும்பெயர் நாயும் மயிலும்
கள்ளு மெனவே கருதப் பெறுமே 
** ஞகர அகர வருக்கம் முற்றும்
** ஞகர ஆகார வருக்கம்
** 786

#2
ஞாளி யெனும்பெயர் நறவு நாயுமாம் 
** 787

#3
ஞாட்பெனும் பெயரே பாரமும் கூட்டமும்
செருவு மெனவே செப்புவர் புலவர் 
** 788

#4
ஞான மெனும்பெயர் கல்வியு மறிவுந்
தத்துவ நூலுஞ் சாற்றப் பெறுமே 
** 789

#5
ஞாங்க ரெனும்பெயர் பக்கமு மேலும்
வேலு மெனவே விளம்பப் பெறுமே 
** ஞகர ஆகார வருக்கம் முற்றும்
** ஞகர எகர வருக்கம்
** 790

#6
ஞெள்ள லெனும்பெயர் தெருவு மேன்மையும்
பள்ளமு மெனவே பகர்ந்தனர் புலவர் 
** 791

#7
ஞெரே லெனும்பெயர் விரைவு மொலியுமாம் 
** 792

#8
ஞெமிர்த லெனும்பெயர் முறிதலும் பரத்தலும் 
** 793

#9
ஞெகிழி யெனும்பெயர் நெருப்புறு விறகும்
தீயுடன் அனற்பொறி சிலம்பு மாமே 
** ஞகர எகர வருக்கம் முற்றும்
** ஞகர ஒகர வருக்கம்
** 794

#10
ஞொள்க லெனும்பெயர் நொய்படு வனவும்
இளைத்தலு மச்சக் குறிப்போடு சோம்புமாம் 
**ஞகர ஒகர வருக்கம் முற்றும்
** ஞகர வருக்கத் தொகுதி முற்றும்

@5 வது தகர வருக்கத் தொகுதி
** தகர அகர வருக்கம்
** 795

#1
தரணி யெனும்பெயர் தருகதிர் இரவியும்
நிலமுஞ் சயிலமு நிகழ்த்துவர் புலவர் 
** 796

#2
தமமெனும் பெயரே ராகுவு மிருளுமாம் 
** 797

#3
தண்டெனும் பெயரே தடியு மிதுனமுஞ்
சிவிகையின் பெயரும் செருமிகு தானையும்
வரம்பும் வீணையுங் குழாயும் வழங்குவர் 
** 798

#4
தழலெனும் பெயரே கிளிகடி கருவியும்
நெருப்பு மெனவே நிகழ்த்துவர் புலவர் 
** 799

#5
தண்ணடை யெனும்பெயர் மருத நிலவூரும்
நாடு மெனவே நவிலப் பெறுமே 
** 800

#6
தண்ட மெனும்பெயர் தண்டா யுதமும்
சேனையும் யானை செல்வழியுந் தெண்டித்தலும் 
** 801

#7
தடமெனும் பெயரே மலையும் பொய்கையும்
பெருமையு மகலமு மலையடி வழியும்
வளைவுங் குளக்கரைப் பெயரும் வழங்குவர் 
** 802

#8
தடியெனும் பெயரே தனுவு முலக்கையும்
தசையு முடும்புந் தண்டா யுதமும்
வயலொடு மின்னும் வகுத்தனர் புலவர் 
** 803

#9
தனஞ்செய னெனும்பெயர் சவ்விய சாசியும்
மெய்யின் மாருத விகற்பத்தி னொன்றும்
நெருப்பு மெனவே நிகழ்த்துவர் புலவர் 
** 804

#10
தளிம மெனும்பெயர் சயனமு மெத்தையும்
அழகின் பெயரு மாகு மென்ப 
** 805

#11
தத்தை யெனும்பெயர் முன்பிறந் தாளும்
கிளியு மெனவே கிளத்துவர் புலவர் 
** 806

#12
தனுவெனும் பெயரே சடமும் சிறுமையும்
வில்லின் பெயரு மோரிராசியும் விளம்புவர் 
** 807

#13
தளையெனும் பெயரே தமிழ்நூற் பாதமு
மலர்முகை முறுக்கு மாண்பான் மயிரும்
தொடரொடு சிலம்புந் தொடையலுஞ் சொல்லுவர் 
** 808

#14
தனமெனும் பெயர்சந் தனமும் பொன்னும்
முத்திறப் பொருளு முலையுமான் கன்றுமாம் 
** 809

#15
தவிசெனும் பெயரே மெத்தையுந் தடுக்கும்
பலகையும் பீடமும் பகர்ந்தனர் புலவர் 
** 810

#16
தளமெனும் பெயரே தாழியும் சாந்தமும்
படையும் பூவிதழ்ப் பெயரும் பகர்ந்தனர் 
** 811

#17
தண்ண மெனும்பெயர் தரித்தடா மழுவும்
ஒருகட் பறையு முரைக்கப் பெறுமே 
** 812

#18
தட்டை யெனும்பெயர் கரடிகைப் பறையும்
கிளிகடி கருவியுந் தினைத்தாளு முண்டமும்
மூங்கிலு மெனவே மொழிந்தனர் புலவர் 
** 813

#19
தம்ப மெனும்பெயர் மெய்புகு கருவியும்
கம்பமும் பற்றுக் கோடுங் கருதுவர் 
** 814

#20
தண்மை யெனும்பெயர் தாழ்வும் எளிமையும்
குளிர்ச்சியும் புலவோர் கூறப்பெறுமே 
** 815

#21
தகடெனும் பெயரே ஐமை வடிவும்
இலையு மெனவே யியம்புவர் புலவர் 
** 816

#22
தராவெனும் பெயரே சங்கும் மதுகமும் 
** 817

#23
தரும ராச னெனும்பெயர் யமனும்
அருகனும் புத்தனும் பாண்டு மைந்தனுமாம் 
** 818

#24
தட்டெனும் பெயரே நடுவட் டேரும்
திரிகையும் பரிசையும் பகுத்தலும் தடுத்தலும்
வட்டமும் பூத்தட்டு முதலவும் வழங்கும் 
** 819

#25
தன்மை யெனும்பெயர் தன்மை யினிடமும்
இயல்பு மெனவே இயம்புவர் புலவர் 
** 820

#26
தளியெனும் பெயரே துளியும் கோயிலும்
தளநடத் தியசமர்த் தலமும் புகலுவர் 
** 821

#27
தகையெனும் பெயரே பெருமையு மழகும்
அன்பும் பண்பு மியல்பு மாமே 
** 822

#28
தபுத லெனும்பெயர் சாதலும் கேடுமாம் 
** 823

#29
தமிழெனும் பெயரே தமிழின் விகற்பமும்
நீர்மையு மினிமையு நிகழ்த்தினர் புலவர் 
** 824

#30
தன்ன மெனும்பெயர் சிறுமையான் கன்றுமாம் 
** 825

#31
தபன னெனும்பெயர் தழலு மருக்கனும் 
** 826

#32
தலமெனும் பெயரே பச்சை நிறமும்
இலையும் புவியும் இயம்புவர் புலவர் 
** 827

#33
தசும்பெனும் பெயரே குடமு மிடாவுமாம் 
** 828

#34
தட்ட லென்பெய ரொத்தறுத்த லினுடனே
தடுத்தலின் பெயருஞ் சாற்றப் பெறுமே 
** 829

#35
தலையெனும் பெயரே இடமும் சென்னியும்
விசும்பு முதன்மையும் விளம்பப் பெறுமே 
** 830

#36
தவவெனும் பெயரே மிகுதியும் குறைவுமாம் 
** 831

#37
தந்தெனும் பெயரே சாத்திரப் பெயரும்
நூலின் பெயரு நுவலப் பெறுமே 
** 832

#38
தகைமை யெனும்பெயர் அழகும் பெருமையும்
இயல்பு மெனவே யியம்பப் பெறுமே 
** 833

#39
தனியெனும் பெயரொப் பின்மைப் பெயருந்
தனிமையின் பெயருஞ் சாற்றப் பெறுமே 
** 834

#40
தன்னை யெனும்பெயர் முன்பிறந் தானும்
அன்னையும் செவிலியு மாகு மென்ப 
** தகர அகர வருக்கம் முற்றும்
** தகர ஆகார வருக்கம்
** 835

#41
தாணு வெனும்பெயர் சங்கரன் பெயரும்
தூணு மலையு நிலையுஞ் சொல்லிய
ஆவு ரிஞ்சுதறிப் பெயரு மாமே 
** 836

#42
தாதி யெனும்பெயர் அடிமையும் பரணியும் 
** 837

#43
தால மெனும்பெயர் கூந்தற் கமுகொடு
ஞாலமும் பனையு முண்கலமு நாவுமாம் 
** 838

#44
தாரை யெனும்பெயர் வழியும் விழியும்
ஒழுங்குஞ் சின்னமு முரைக்கப் பெறுமே 
** 839

#45
தாம மெனும்பெயர் தாரும் பூவும்
மணிவடப் பெயரு நகரமுங் கயிறும்
ஒளியுங் கொன்றையு மிருப்பிடப் பொதுவுமாம் 
** 840

#46
தார மெனும்பெயர் தராவும் நாவும்
வல்லிசைப் பெயரும் வாழ்க்கைத் துணைவியும்
அரும்பண்டப் பெயரும் யாழ்நரம்பி லொன்றும்
வெள்ளியு மெனவே விளம்பப் பெறுமே 
** 841

#47
தானை யெனும்பெயர் சேனையுந் துகிலும்
ஆயுதப் பொதுவு மாகு மென்ப 
** 842

#48
தாரெனும் பெயர்பூந் தாமமு மலரும்
மாவினுக் கணியுங் கிண்கிணி மாலையும்
ஒழுங்கோடு தூசிப் படையையு முரைப்பர் 
** 843

#49
தாழெனும் பெயரே கதவிடு தாழும்
பதமு முயற்சியும் பகரப் பெறுமே 
** 844

#50
தாறெனும் பெயர்மரக் குலையு மளவும்
விற்குதைப் பெயரு முட்கோலும் விளம்புவர் 
** 845

#51
தாதெனும் பெயரே யெழுவகைத் தாதும்
பொன்முத லேழும் புவிமுத லைந்தும்
காவிக் கல்லுங் கருதப் பெறுமே 
** 846

#52
தாண்டவ மெனும்பெயர் தாவலும் கூத்துமாம் 
** 847

#53
தான மெனும்பெயர் தருமக் கொடையும்
பல்வகை யுதவியு மதமு நீராடலுஞ்
சுவர்க்கமும் புலவோர் சொல்லப் பெறுமே 
** 848

#54
தாழை யெனும்பெயர் நாளி கேரமும்
கைதையின் பெயருங் கருதப் பெறுமே 
** 849

#55
தாவெனும் பெயரே பகையும் கெடுதலும்
பெலமும் வருத்தமும் தாண்டுதற் பெயருமாம் 
** 850

#56
தாம்பெனும் பெயரே தாமணிக் கயிறுமாம் 
** 851

#57
தாபர மெனும்பெயர் மரமுடன் மலைபோல்
நிற்பன யாவையு முடம்பு நிகழ்த்துவர் 
** 852

#58
தாசி யெனும்பெய ரியம னாளும்
தொழும்பு செய்பெண்ணின் பெயருஞ் சொல்வர் 
** 853

#59
தாடெனும் பெயரே தலைமையும் வலியுமாம் 
** 854

#60
தாளி யெனும்பெயர் தாளிப் புதலும்
பனையு மெனவே பகர்ந்தனர் புலவர் 
** தகர ஆகார வருக்கம் முற்றும்
** தகர இகர வருக்கம்
** 855

#61
திங்க ளெனும்பெயர் மதியு மாதமுமாம் 
** 856

#62
திகையெனும் பெயரே திசையுஞ் சுணங்குமாம் 
** 857

#63
திதியெனும் பெயர்நிலை பேறும் பக்கமும்
காத்தலு மெனவே கருதுவர் புலவர் 
** 858

#64
திணையெனும் பெயரே குலமும் ஒழுக்கமும்
ஐந்திணைப் பெயரு மாகு மென்ப 
** 859

#65
திட்டை யெனும்பெயர் திண்ணையு முரலும்
மேடு மெனவே விளம்புவர் புலவர் 
** 860

#66
திகிரி யெனும்பெயர் தேருந் தேராழியும்
மலையு மூங்கிலும் வட்ட வடிவும்
சக்கரமு நேமிப் புள்ளும் சாற்றுவர் 
** 861

#67
திலமெனும் பெயரே யெள்ளு மஞ்சாடியும் 
** 862

#68
திருவெனும் பெயரே சிறப்பும் செல்வமும்
கமலையு மெனவே கருதப் பெறுமே 
** 863

#69
திரிதல் எனும்பெய ருலாவுங் கெடலுமாம் 
** 864

#70
திளைத் தலெனும்பெய ரனுபவப் பெயரும்
நிறைவின் பெயரும் நெருங்குதற் பெயருமாம் 
**தகர இகர வருக்கம் முற்றும்
** தகர ஈகார வருக்கம்
** 865

#71
தீயெனும் பெயரே தீமையும் கனலும்
நரகமும் எனவே நவிலப் பெறுமே 
** 866

#72
தீவினை எனும்பெயர் பாவமும் கொடுமையும் 
** 867

#73
தீர்த்த மெனும்பெயர் திருவிழா வுடனே
புண்ணிய தீர்த்தப் பெயரும் புகலுவர் 
** 868

#74
தீர்த்த னெனும்பெயர் தேவனும் குருவுமாம் 
** தகர ஈகார வருக்கம் முற்றும்
** தகர உகர வருக்கம்
** 869

#75
துணங்கற லென்னும் பெயர்திரு விழாவும்
இருளு மெனவே யியம்புவர் புலவர் 
** 870

#76
துடியெனும் பெயரே கால நுட்பமும்
சிற்றேல முமேழ் மாதர் நிருத்தமும்
சிறுபறை யுங்கூ தாளமும் செப்புவர் 
** 871

#77
துத்தி யெனும்பெயர் முலையின் சுணங்கும்
பாம்பின் படத்தின் பொறியுமோர் புதலுமாம் 
** 872

#78
துண்ட மெனும்பெயர் சாரைப் பாம்பும்
கண்டமு முகமு மூக்குங் கருதுவர் 
** 873

#79
துருத்தி யெனும்பெயர் ஆற்றிடைக் குறையும்
சருமமு மெனவே சாற்றுவர் புலவர் 
** 874

#80
துகளெனும் பெயர்நுண் பொடியுங் குற்றமும் 
** 875

#81
துவக்கெனும் பெயரே தோலும் பிணக்குமாம் 
** 876

#82
துத்த மெனும்பெயர் யாழி னரம்பும்
எழுவகை யினோர்வி கற்பமும் வயிறும்
பாலுமோர் மருந்தும் பகரப் பெறுமே 
** 877

#83
துப்பெனும் பெயரே துணைக்கா ரணமும்
அரக்கு மாயுதமும் பெலமும் பவளமும்
நெய்யும் பொலிவும் அனுபவப் பெயருமாம் 
** 878

#84
துரோண மெனும்பெயர் தும்பையுஞ் சிம்புளும்
பதக்கொடு காகமுஞ் சிலையும் பகருவர் 
** 879

#85
துணியெனும் பெயரே துண்டமுஞ் சீரையும்
சோதிநாட் பெயரும் சொல்லுவர் புலவர் 
** 880

#86
தும்பி யெனும்பெயர் சுரையும் யானையும்
வண்டு மதுவும் வழங்கப் பெறுமே 
** 881

#87
துளியெனும் பெயர்மழைத் துளிபெண்ணாமையாம் 
** 882

#88
துஞ்ச லெனப்பெயர் நிலைபேறு முறக்கமும்
மரணமு மெனவே வழங்கப் பெறுமே 
** 883

#89
துணையெனும் பெயரே யுழவும் சகாயமும்
உவமையு முவமையும் உரைத்தனர் புலவர் 
** 884

#90
தும்பெனும் பெயரே தோடுஞ் சிம்புளும் 
** 885

#91
துவையெனும் பெயர்பிண் ணாக்கும் இறைச்சியும்
பருகுவ புளிங்கறிப் பெயரும் பகருவர் 
** 886

#92
துனியெனும் பெயரே புலவி நீடுதலும்
கோபமும் வரியுங் கூறுவர் புலவர் 
** 887

#93
துன்ன லெனும்பெயர் குறுகலுஞ் செறிவுமாம் 
** 888

#94
துணங்கை யெனும்பெயர் திருவிழா வுடனே
மெய்க்கூத் தெனவும் விளம்புவர் புலவர் 
** 889

#95
துளும்ப லெனும்பெய ரலைதலுந் திமிறலும் 
** 890

#96
துணித லெனும்பெயர் துணிபடற் பெயரும்
தெளிவு மெனவே செப்பப் பெறுமே 
** தகர உகர வருக்கம் முற்றும்
** தகர ஊகார வருக்கம்
** 891

#97
தூம்பெனும் பெயரே யுட்டுளை வடிவும்
நீர்நுழை யிடமு மரக்காலு மூங்கிலும் 
** 892

#98
தூசெனும் பெயரே தூசிப் படையும்
புரோசைக் கயிறும் புடவையு மியானையும் 
** 893

#99
தூவெனும் பெயரே சுசியு மிறைச்சியும்
பற்றுக் கோடும் பகரப் பெறுமே 
** 894

#100
தூரிய மெனும்பெயர் பேரெரு துடனே
முரசமு மெனவே மொழியப் பெறுமே 
** 895

#101
தூக்கெனும் பெயரே யுறியுந் துலாமும்
கூத்து மாராய்தலுங் கூறுசொற் கலையுமாம் 
** 896

#102
தூங்க லெனும்பெயர் துயிலும் சோம்புங்
குறைவுந் தந்தியுங் கூத்தின் பெயருமாம் 
** தகர ஊகார வருக்கம் முற்றும்
** தகர எகர வருக்கம்
** 897

#103
தெய்வெனும் பெயரே கொலையுந் தெய்வமும் 
** 898

#104
தென்னெனும் பெயரே தெற்கு மழகும்
கற்புட னிசையு மிலாங்கலிப் பெயருமாம் 
** 899

#105
தெவ்வெனும் பெயரே பகையுஞ் சமருமாம் 
** 900

#106
தெவிட்ட லெனும்பெயர் நிறைதலு மொலியும்
கான்றலு மடைத்திடற் பெயருங் கருதுவர் 
** 901

#107
தெய்வ மெனும்பெயர் புத்தேளும் வாசமும் 
** தகர எகர வருக்கம் முற்றும்
** தகர ஏகார வருக்கம்
** 902

#108
தேளெனும் பெயரே தெறுக்கா லுடனே
விருச்சிக ராசியும் அனுடமும் விளம்புவர் 
** 903

#109
தேசிக னெனும்பெயர் குருவும் வணிகனும்
தேசாந் திரியையுஞ் செப்பப் பெறுமே 
** 904

#110
தேமெனும் பெயரே தித்திப்பும் வாசமும்
தேசமுந் திசையு மிடமுஞ் செப்புவர் 
** 905

#111
தேசிக மெனும்பெயர் திசைச்சொல்லு மொளியும்
அரும் பொன்னுங் கூத்தின் விகற்பும் அழகுமாம் 
** 906

#112
தேர்தல் எனும்பெயர் கொள்கையின் பெயரும்
ஆராய் தலுமே யாகும் என்ப 
** 907

#113
தேனெனும் பெயரே வண்டு மதுவுமாம் 
** தகர ஏகார வருக்கம் முற்றும்
** தகர ஐகார வருக்கம்
** 908

#114
தைத்த லெனும்பெயர் துன்னத்தின் பெயரும்
தைத்திடு தொழிலுஞ் சாற்றப் பெறுமே 
** 909

#115
தைய லெனும்பெயர் பெண்ணுட னழகுமாம் 
** 910

#116
தையெனும் பெயரே பூச நாளும்
மகர மாதத்தின் பெயரும் வழங்கும் 
** தகர ஐகார வருக்கம் முற்றும்
** தகர ஒகர வருக்கம்
** 911

#117
தொழுவெனும் பெயரே யிரேவதி நாளும்
உழலைத் தொழுவு முரைத்தனர் புலவர் 
** 912

#118
தொடுவெனும் பெயரே தோட்டமும் வஞ்சமும்
மருத நிலமும் வழங்கப் பெறுமே 
** 913

#119
தொய்யி லெனும்பெயர் சேறும் இன்பமும்
துயிரு முலைமேற் றொய்யிலு முழவுமாம் 
** 914

#120
தொத்தெனும் பெயர்பூங் கொத்துந் தொழும்புமாம்
** 915

#121
தொறுவெனும் பெயரே தோழமு நிரையும்
தொகுதியு மெனவே சொல்லுவர் புலவர் 
** 916

#122
தொடியெனும் பெயர்கை வளையு மோர்பலமும்
கங்கணப் பெயருங் கருதப் பெறுமே 
** 917

#123
தொங்க லெனும் பெயர்பீலிக் குஞ்சமும்
வெண்குடைப் பெயரு மாலையுந் தூக்கமும் 
** 918

#124
தொண்டை யெனும்பெயர் யானைத் துதிக்கையும்
ஆதொண்டை யினொடு கோவையு மாமே 
** 919

#125
தொண்டெனும் பெயரே தொழும்பும் பழமையும்
ஒன்பது நுழைவழிப் பெயரு மோதுவர் 
** 920

#126
தொட்ட லெனும்பெயர் தோண்டுதற் பெயரும்
தொடுதற் பெயரும் உணவும் சொல்லுவர் 
** 921

#127
தொடுத்தல் எனும்பெயர் பிணித்தலும் வளைத்தலும்
பற்றுத லெனவும் பகரப் பெறுமே 
** 922

#128
தொழுதி யெனும்பெயர் புள்ளொலியுங் கூட்டமும்
** தகர ஒகர வருக்கம் முற்றும்
** தகர ஓகார வருக்கம்
** 923

#129
தோணி யெனும்பெயரி ரேவதி நாளும்
நீருஞ் சேறு மெயில துறுப்பும்
தெப்பமு மோடமும் பகழியுஞ் செப்புவர் 
** 924

#130
தோட்டி யெனும்பெயர் அங்குசப் படையும்
கதவு மென கருதப் பெறுமே 
** 925

#131
தோன்ற லெனும்பெயர் சுதனு நாதனுமாம் 
** 926

#132
தோலெனும் பெயரே தோல்வியும் யானையும்
கேடகப் பலகையுங் கிளத்திடு சருமமும்
இயாப்பினோர் வனப்பும் இயம்புவர் புலவர் 
** 927

#133
தோற்ற மெனும்பெயர் ஏற்றமும் பிறப்பும்
ஆற்றலும் உண்டாக் குதலும் உயர்ச்சியுந்
தோன்றுதற் பெயரும் சொல்லப் பெறுமே 
** 928

#134
தோடெனும் பெயரே பனைமடல் போலவும்
பூவி னிதழும் தொகுதியும் புகலுவர் 
** 929

#135
தோளெனும் பெயரே துணையும் புயமுமாம் 
** 930

#136
தோரை யெனும்பெயர் மூங்கி லரிசியும்
கைவரை யோடுநெல் விகற்பமும் கருதுவர் 
** தகர ஓகார வருக்கம் முற்றும்
** தகர ஒளகார வருக்கம்
** 931

#137
தெளவை யெனும்பெயர் தாயுமுன் பிறந்தாளு
மூதேவியுஞ் சாற்றப் பெறுமே 
** தகர ஒளகார வருக்கம் முற்றும்
** தகர வருக்கத் தொகுதி முற்றும்

@6  வது நகர வருக்கத் தொகுதி
** நகர அகர வருக்கம்
** 932

#1
நந்தி யெனும் பெயர் ஈசனு மிடபமும்
சிறுபே ரிகையொடு செக்கான் பெயருமாம் 
** 933

#2
நலமெனும் பெயரே நல்லுப காரமும்
சுகமும் விருச்சிக ராசியும் சொல்லுவர் 
** 934

#3
நவமெனும் பெயரே யொன்பதுங் கேண்மையும்
புதுமையுங் கார்கா லமுமெனப் புகலுவர் 
** 935

#4
நடையெனும் பெயரே வழியு மொழுக்கமும் 
** 936

#5
நகமெனும் பெயரே மரப்பொதுப் பெயரும்
உகிரு மலையும் உரைக்கப் பெறுமே 
** 937

#6
நவிர மெனும்பெயர் மலையி னுச்சியும்
மலையும் புன்மையும் வகுத்தனர் புலவர் 
** 938

#7
நயந்தோ னெனும்பெயர் நட்புடை யோனும்
கணவனு மெனவே கருதப் பெறுமே 
** 939

#8
நகையெனும் பெயரே மகிழ்ச்சியும் ஒளியும்
எயிறும் சிரிப்பும் இயம்புவர் புலவர் 
** 940

#9
நவிரெனும் பெயரே யாண்பான் மயிரும்
தக்கேசி யிசையு மருதயாழ்த் திறமும்
வாளா யுதமும் வழங்கப் பெறுமே 
** 941

#10
நனையெனும் பெயரே பூவின் முகையும்
நறவு மெனவே நவிலுவர் புலவர் 
** 942

#11
நவிய மெனும்பெயர் மழுவும் குடாரியும் 
** 943

#12
நயமெனும் பெயரே நன்மையுஞ் சுகமுமாம் 
** 944

#13
நரையெனும் பெயரே ஆனி னேறும்
வெண்ணிறக் குதிரையு மிகுபெரு நாரையும்
கவரியுந் தவள நிறமும் கருதுவர் 
** 945

#14
நளியெனும் பெயரே சீதமுஞ் செறிவும்
பெருமையு முரைப்பர் பெரிது ணர்ந்தோரே 
** 946

#15
நரந்த மெனும்பெயர் நாரத்தை மரமும்
கத்தூ ரியுமெனக் கருதப் பெறுமே 
** 947

#16
நந்தெனும் பெயரே நத்தையுஞ் சங்குமாம் 
** 948

#17
நடலை யெனும்பெயர் வஞ்சமும் பொய்யுமாம் 
** 949

#18
நந்த லெனும்பெயர் ஆக்கமும் கேடுமாம் 
** 950

#19
நகரெனும் பெயரே நகரமும் வீடுமாம் 
** 951

#20
நத்த மெனும்பெயர் நகரின் கெடுதியும்
இரவும் பணிலமு மிருளும் இயம்புவர் 
** 952

#21
நன்றெனும் பெயரே நன்மையும் பெரிதுமாம் 
** 953

#22
நட்ட மெனும்பெயர் நடனமும் கேடுமாம் 
** 954

#23
நவிலல் எனும்பெயர் பண்ணுதல் சொல்லுதல் 
** 955

#24
நக்க லெனும்பெயர் நகையுந் தின்றலும் 
** 956

#25
நக்க னெனும்பெயர் சிவனும் அருக்கனும்
நின்மா ணியுமென நிகழ்த்துவர் புலவர் 
** 957

#26
நன்பெனும் பெயரே அகலமுந் தெளிவுமாம் 
** 958

#27
நயனெனும் பெயரே இன்பமும் மகிழ்வும்
பயனு நன்மையும் பகரப் பெறுமே 
** நகர அகர வருக்கம் முற்றும்
** நகர ஆகார வருக்கம்
** 959

#28
நாழி யெனும்பெயர் உட்டுளை வடிவும்
அளக்கு நாழியும் பூரட் டாதியும்
நாழிகைப் பெயரு நவின்றனர் புலவர் 
** 960

#29
நாக மெனும்பெயர் நன்மத யானையும்
வெற்புங் கடவுள ருலகுங் காரீயமும்
ஒருமரப் பெயரும் குரங்கும் பாம்பும்
நற்றூசும் புன்னைப் பெயரு நவிலுவர் 
** 961

#30
நாவிதன் எனும்பெயர் பூர நாளும்
கார்த்திகை நாளு மயிர்வினை ஞனுமாம் 
** 962

#31
நாஞ்சில் எனும்பெயர் கலப்பைப் படையும்
எயிலு றுப்புமென வியம்பப் பெறுமே 
** 963

#32
நாட்ட மெனும்பெயர் நயனமும் வாளும்
பண்ணின் விகற்பமும் பகரப் பெறுமே 
** 964

#33
நாரி யெனும்பெயர் நறவும் பன்னாடையும்
பெண்ணுஞ் சிலைநாண் பெயரும் பேசுவர் 
** 965

#34
நாப்பண் எனும்பெயர் நடுவட் டேரும்
நடுவு மெனவே நவிலப் பெறுமே 
** 966

#35
நான மெனும்பெயர் ஞானமும் பாசமும்
பூசு வனவும் புனலா டுதலும்
கத்தூ ரியுமெனக் கருதப் பெறுமே 
** 967

#36
நாடி யெனும்பெயர் நாழிகை நரம்புமாம் 
** 968

#37
நாகெனும் பெயரே யீனா விளமையும்
இளமரக் கன்றும் சங்கும் நத்தையும்
ஒருசார் விலங்கின் பெண்பாலு மோதுவர் 
** 969

#38
நாணெனும் பெயரே மாதர் மங்கலமும்
பூணு மிலச்சையுங் கயிறும் புகலுவர் 
** 970

#39
நாரெனும் பெயரே அன்பும் கயிறுமாம் 
** 971

#40
நாறுதல் எனும்பெயர் உண்டாதல் மணமுமாம் 
** 972

#41
நான்முகன் எனும்பெயர் அருகனும் பிரமனும் 
** நகர ஆகார வருக்கம் முற்றும்
** நகர இகர வருக்கம்
** 973

#42
நிறையெனும் பெயர்துலா ராசிப் பெயரும்
துலையு நீர்ச்சாலு மழியா நிலைமையும் 
** 974

#43
நிசியெனும் பெயரே கங்குற் பொழுதும்
மஞ்சளும் பொன்னும் வகுக்கப் பெறுமே 
** 975

#44
நிதம்ப மெனும்பெயர் மலையின் பக்கமும்
அல்குலின் பெயரு மாகு மென்ப 
** 976

#45
நியமம் எனும்பெயர் நியதியு நகரமும்
தெருவும் அங்காடியுந் தேவரா லையமும்
நிச்சயப் பெயரும் நிகழ்த்துவர் புலவர் 
** 977

#46
நிருமித்த லென்னும் பெயரா ராய்தலும்
படைத்தலு மெனவே பகர்ந்தனர் புலவர் 
** 978

#47
நிறமெனும் பெயரே நிறங்களு மார்பும்
காந்தியு மெனவே கருதுவர் புலவர் 
** 979

#48
நிரப்பு எனும்பெயர் குறைபாடும் வறுமையும் 
** 980

#49
நிழற்ற லெனும்பெயர் நிழற்செய லுடனே
நுணுக்க மெனவே நுவன்றனர் புலவர் 
** நகர இகர வருக்கம் முற்றும்
** நகர ஈகார வருக்கம்
** 981

#50
நீலி யெனும்பெயர் பாலைக் கிழத்தியும்
கருநிற முமொரு புதலுங் கருதுவர் 
** 982

#51
நீரெனும் பெயரே நீர்மையும் புனலும்
பூராட நாளும் புகலப் பெறுமே 
** 983

#52
நீப மெனும்பெயர் உத்திரட் டாதியும்
நிமித்தமும் கடம்பு நிகழ்த்துவர் புலவர் 
** 984

#53
நீவி யெனும்பெயர் ஆடையுந் துடைத்தலும்
நெருங்கிய கொய்சகப் பெயரு நிகழ்த்துவர் 
** நகர ஈகார வருக்கம் முற்றும்
** நகர உகர வருக்கம்
** 985

#54
நுதலெனும் பெயரே நெற்றியும் புருவமும் 
** 986

#55
நுணங்க லெனும்பெயர் நுண்மையுந் தேமலும் 
** 987

#56
நுனியெனும் பெயரே நுண்மையும் நுனியுமாம் 
** 988

#57
நுணவை யெனும்பெயர் நுண்பிண் டியினுடன்
எண்ணோ லையுமென இயம்பப் பெறுமே 
** 989

#58
நுவணை யெனும் பெயர் தினையின் பிண்டியும்
நூலு நுண்மையு நுவன்றனர் புலவர் 
** நகர உகர வருக்கம் முற்றும்
** நகர ஊகார வருக்கம்
** 990

#59
நூலோ ரெனும்பெய ரந்தண ருடனே
மந்திரி யர்பெயர் புலவோரும் வழங்குவர் 
** 991

#60
நூழி லெனும்பெயர் யானையுங் கோறலும்
கொடியின் பெயரும் கொடிக்கொற் றானும்
பொடியின் பெயரும் புகன்றனர் புலவர் 
** 992

#61
நூலெனும் பெயரே வேத நூலொடு
சாத்திர விகற்பமும் தந்தும் பேசுவர் 
** 993

#62
நூண மெனும்பெயர் குறைவு நிச்சயமுமாம் 
** நகர ஊகார வருக்கம் முற்றும்
** நகர எகர வருக்கம்
** 994

#63
நெறியெனும் பெயரே நீதியும் வழியுமாம் 
** 995

#64
நெற்றி யெனும்பெயர் நெடும்படை யுறுப்பும்
நுதலு மெனவே நுவன்றனர் புலவர் 
** 996

#65
நெய்தலின் பெயரோர் நிலமும் கடலும்
நெய்தற் பூவொடு சாப்பறை நிகழ்த்துவர் 
** நகர எகர வருக்கம் முற்றும்
** நகர ஏகார வருக்கம்
** 997

#66
நேத்திர மெனப்பெயர் பட்டின் விகற்பமும்
கண்ணு மெனவே கருதப் பெறுமே 
** 998

#67
நேய மெனும்பெயர் நெய்யும் எண்ணெயும்
அன்பின் பெயரு மாமென வுரைப்பர் 
** 999

#68
நேமி யெனும்பெயர் திகிரியும் வண்டிலும்
பூமியும் புணரியும் புகலப் பெறுமே 
** 1000

#69
நேரெனும் பெயரே கொடுத்தலும் பாதியும்
தனிமையும் நிகரும் நுட்பமுடன் பரஞ்சமமு
மிகுதியுந் தலைப்படல் விலையு மாமே 
** நகர ஏகார வருக்கம் முற்றும்
** நகர ஒகர வருக்கம்
** 1001

#70
நொச்சி யெனும்பெயர் சிந்து வாரமும்
சிற்றூரு மதிலும் எயில் காத்தலுமாம் 
** 1002

#71
நொடியெனும் பெயர்கை நொடியும் வார்த்தையும் 
** 1003

#72
நொறிலெனும் பெயரே நுடக்கமும் விரைவும்
ஒடுக்கமு மெனவே யுரைக்கப் பெறுமே 
** நகர ஒகர வருக்கம் முற்றும்
** நகர ஓகார வருக்கம்
** 1004

#73
நோனாமை யென்னும் பெயர்பொ றாமையும்
தவம்பண்ணா மையுஞ் சாற்றுவர் புலவர் 
** 1005

#74
நோக்கெனும் பெயரே யழகும் விழியுமாம் 
** 1006

#75
நோற்ற லெனும்பெயர் பொறையும் தவமுமாம் 
** 1007

#76
நோனா ரெனும்பெயர் தவமில் லோருடன்
பகைஞர்தம் பெயரும் பகர்ந்தனர் புலவர் 
** நகர ஓகார வருக்கம்
** நகர ஒளகார வருக்கம்
** 1008

#77
நெளவிய மெனும்பெயர் மரக்கலப் பெயரும்
மானு மெனவே வழங்கப் பெறுமே 
** நகர ஒளகார வருக்கம் முற்றும்
** நகர வருக்கத் தொகுதி முற்றும்

@7  வது பகர வருக்கத் தொகுதி
** பகர அகர வருக்கம்
** 1009

#1
பருதி யெனும்பெயர் பரிவே டத்துடன்
வட்ட வடிவு மிரவியு நேமியும் 
** 1010

#2
பகலெனும் பெயர்பகற் போதும் பிரிவும்
நடுவும் பரணி நாளும் இயம்புவர் 
** 1011

#3
பச்சை யெனும்பெயர் பசுமையும் புதனும்
தோலும் இலாபமு மரகத மணியுமாம் 
** 1012

#4
பங்கெனும் பெயரே பகுத்தலும் சனியும்
முடமும் பாதியும் மொழிந்தனர் புலவர் 
** 1013

#5
பக்க மெனும்பெய ரருகு மிறகுந்
திதியு மண்மையுஞ் செப்பப் பெறுமே 
** 1014

#6
பதமெனும் பெயரே பாதமும் சோறும்
வரிசையும் விழாவும் வழியும் வார்த்தையும்
உணவு மீரமுஞ் செவ்வியுஞ் சேமமும்
பொழுது மெனவே புகன்றனர் புலவர் 
** 1015

#7
பணியெனும் பெயரே பணமுடைப் பாம்பும்
தொழிலுந் தொழில்படு கலனுஞ் சொல்லுவர் 
** 1016

#8
பயமெனும் பெயரே பாலும் சலிலமு
மச்சமும முதுமி லாபமு மாமே 
** 1017

#9
பரவை யெனும்பெயர் பரப்புங் கடலுமாம் 
** 1018

#10
பயோதர மெனும்பெயர் மேகமு முலையுமாம் 
** 1019

#11
பனியெனும் பெயரே துன்பமு நடுக்கமும்
அச்சமுங் குளிர்ச்சியு மிமமு மாமே 
** 1020

#12
பகவ னெனும்பெயர் பரமனு மாலும்
பிரமனும் அருகனும் குருவும் புத்தனும் 
** 1021

#13
பண்ணவ னெனும்பெயர் முனியும் தேவனும்
குருவுந் திறலோன் பெயருங் கூறுவர் 
** 1022

#14
பசுவெனும் பெயர்வெண் பெற்றமு முயிருமாம் 
** 1023

#15
படியெனும் பெயரே பகையும் குணமும்
புவனமு முலகமும் புகலப் பெறுமே 
** 1024

#16
படப்பை யெனும்பெயர் நாடு நகரமும்
தோட்டமும் பசுநிரைப் பெயருஞ் சொல்லுவர் 
** 1025

#17
பட்டெனும் பெயரே பட்டின் விகற்பமும்
சிற்றூர்ப் பெயரும் துகிலுஞ் செப்புவர் 
** 1026

#18
பள்ளி யெனும்பெயர் தவத்தோ ரிடமும்
துயிறலும் பாயலுஞ் சிற்றூர்ப் பெயரும்
கோயிலின் பெயருங் கூறப் பெறுமே 
** 1027

#19
பட்ட மெனும்பெயர் மேம்படு பதவியும்
வழியுங் கவரி மாவுந் துகிலும்
வாயிலு மதகரி முகப டாமும்
விலங்கு துயிலிடமும் படமும் விளம்புவர் 
** 1028

#20
பதுக்கை யெனும்பெயர் பாறையு மேடும்
சிறுதூ றுமெனச் செப்புவர் புலவர் 
** 1029

#21
பதலை யெனும்பெயர் மலையுந் தாழியும்
ஒருகட் பரந்த வாய்ப்பறையு மோதுவர் 
** 1030

#22
பணையெனும் பெயரே பருத்தலு மூங்கிலும்
மருத நிலமும் வயலு முரசமும்
குதிரையின் பந்தியு மரத்தின் கொம்புமாம் 
** 1031

#23
பண்ணை யெனும்பெயர் வயலும் வாவியும்
சபையு மகளிர் விளையா டிடமும்
விலங்கு துயிலிடமும் விளம்புவர் புலவர் 
** 1032

#24
படுவெனும் பெயரே மரத்தின் குலையும்
மதுவும் நன்மையும் வாவியு மாமே 
** 1033

#25
பயம்பெனும் பெயரே பகடுபடு குழியும்
நீர்நிலைப் பெயரு நிகழ்த்தினர் புலவர் 
** 1034

#26
பங்க மெனும்பெயர் சேறும் துகிலும்
பின்னமுந் தீவினைப் பெயரும் பேசுவர் 
** 1035

#27
பரிக மென்பெயர் கணைப்படைக் கலமும்
புரிசை யுள்ளுயர்ந்த நிலமும் அகழியும்
மேடையு மெனவே விளம்புவர் புலவர் 
** 1036

#28
பணவை யெனும்பெயர் பரணுங் கழுதுமாம் 
** 1037

#29
படையெனும் பெயரே பரிமாக் கலனையும்
ஆயுதப் பொதுவு மடர்கொடுஞ் சேனையும்
கண்படை யுடனே கலப்பையுங் கருதுவர் 
** 1038

#30
பலமெனும் பெயரே பழமும் கிழங்கும்
சேனையும் லாபமும் நிறையும் செப்புவர் 
** 1039

#31
பங்கி யெனும்பெயர் ஆண்பான் மயிரும்
அஃறிணைப் பொதுவின் பெயரு மாமே 
** 1040

#32
பண்ட மெனும்பெயர் பண்ணி காரத்துடன்
விண்டொளிர் பொன்னும் விளம்பப் பெறுமே 
** 1041

#33
படலிகை யென்னும் பெயர்பெரும் பீர்க்கும்
கைமணி வட்டமும் பூத்தட்டின் பெயருமாம் 
** 1042

#34
படங்கென் பெயர்பெருங் கொடியு மேற்கட்டியும் 
** 1043

#35
படலை யெனும்பெயர் வாசிக் கோவையும்
படர்தலுந் தொடையலும் பரந்தவாய்ப் பறையுமாம்
** 1044

#36
பண்ணெனும் பெயரே பரிமாக் கலனையும்
பாட்டின் பண்ணும் பகரப் பெறுமே 
** 1045

#37
பறையென் பெயர்புள்ளி னிறகும் பணையும்
வசனமு மெனவே வழங்கப் பெறுமே 
** 1046

#38
பகழி யெனும்பெயர் பகழிக் குதையும்
கணையு மெனவே கருதப் பெறுமே 
** 1047

#39
பரமெனும் பெயரே பரிமாக் கலனையும்
மெய்யு மெய்புகு கருவியும் பாரமும்
முன்பு மேலு மொழிந்தனர் புலவர் 
** 1048

#40
பழங்கணெனும்பெய ரோசையும் துன்பமும் 
** 1049

#41
படிறெனும் பெயரே பொய்யொடு களவுமாம் 
** 1050

#42
பந்த மெனும்பெயர் சீரின் தொடர்ச்சியும்
அழகும் திரட்சியும் கிளையொடு கட்டுமாம் 
** 1051

#43
பத்திர மெனும்பெய ரழகும் நன்மையும்
சுரிகையும் சிங்கா சனமும் புள்ளிறகும்
இலையு மெனவே இயம்பப் பெறுமே 
** 1052

#44
பலியெனும் பெயரே தேவ பூசையும்
பிச்சையும் பலித்தலும் பேசுவர் புலவர் 
** 1053

#45
பரியெனும் பெயரே பாது காத்தலும்
பருத்தியுஞ் சுமத்தலுங் குதிரையும் பெருமையும் 
** 1054

#46
பகடெனும் பெயரே பெருமையு மெருதும்
எருமை யாண்பெயருந் தோணியுங் களிறுமாம் 
** 1055

#47
பதங்க மெனும்பெயர் விட்டிற் பறவையும்
புட்பொதுப் பெயரும் புகலப் பெறுமே 
** 1056

#48
பயலெனும் பெயர்ச்சிற் றாளும் பள்ளமும்
பந்தியு மெனவே பகருவர் புலவர் 
** 1057

#49
பணில மெனும்பெயர் சலஞ்சலப் பெயரும்
சங்கின் பெயருஞ் சாற்றுவர் புலவர் 
** 1058

#50
பப்பெனும் பெயரே பரப்பும் உவமையும் 
** 1059

#51
பந்தெனும் பெயர்கந் துகமும் கட்டும்
நீர்தூவுஞ் சிறுது ருத்தியும் நிகழ்த்துவர் 
** 1060

#52
பவன மெனும்பெயர் பாருங் காற்றும்
இராசியும் கோயிலு நாடு மில்லமுமாம் 
** 1061

#53
படமெனும் பெயரே பாம்பின் பணமும்
சித்திரப் படமும் சிலையும் கொடியுமாம் 
** 1062

#54
பறம்பெனும் பெயரே மலையு முலையுமாம் 
** 1063

#55
பரத ரெனும்பெயர் தனவைசியர் பேரும்
நெய்தனில மாக்களு நிகழ்த்தப் பெறுமே 
** 1064

#56
பவமெனும் பெயரே பாவமும் பிறப்புமாம் 
** 1065

#57
பண்ணல் எனும்பெயர் சொல்லு நெருக்கமும்
பருத்தியின் பெயரும் பகரப் பெறுமே 
** 1066

#58
பயிரெனும் பெயரே யொலியும் பைங்கூழும்
விதந்து கட்டிய வழக்கும் புட்குரலும்
விலங்கின் குரலும் விளம்புவர் புலவர் 
** 1067

#59
படரெனும் பெயரே பரியும் நோயும்
வீரரு நினைத்தலு நடையும் விளம்புவர் 
** 1068

#60
பவித்திர மெனும்பெயர் தருப்பையுஞ் சுசியுமாம் 
** 1069

#61
படிவ மெனும்பெயர் வடிவமு நோன்புமாம் 
** 1070

#62
படுத்த லெனும்பெய ரொலியு முண்டாதலும்
பூத்தலு மின்மைப் பெயரும் புகலுவர் 
** 1071

#63
பதியெனும் பெயரே கணவனும் நாகமும்
தலைவனு மெனவே சாற்றப் பெறுமே 
** 1072

#64
பத்தி யென்பெயர் வழிபாடு மொழுங்கும்
அடைப்பது முறைமையு மாமென வியம்புவர் 
** 1073

#65
பரித்தல் எனும்பெயர் அறுத்தலும் வெட்டலும்
இரங்கலு மன்பும் இசைக்கப் பெறுமே 
** 1074

#66
பஞ்ச மெனும்பெயர் ஐந்துஞ் சிறுமையும் 
** 1075

#67
பனுவ லெனும்பெயர் செய்யுளும் நூலுமாம் 
** 1076

#68
பராக மென்பெயர் மலர்த்தாதுவு மிரேணுவும் 
** 1077

#69
பல்ல மெனும்பெயர் பாணமும் கரடியும்
கணக்கிலோர் குணிப்பும் கருதப் பெறுமே 
** 1078

#70
பத்திரி யெனும்பெயர் பறவையும் பரியுமாம் 
** 1079

#71
பட்டிகை யெனும்பெயர் பணையு மீரமும்
கச்சு மெனவே கருதப் பெறுமே 
** 1080

#72
பரிவெனும் பெயரே யின்பமுந் துன்பமும்
அன்பு மிதன்பெய ராமென வியம்புவர் 
** 1081

#73
பற்ப மெனும்பெயர் பதுமமுந் தூளுமாம் 
** 1082

#74
பரணி யெனும்பெயர் தரும னாளும்
அழுந்திடு கலனு மதகரிப் பெயருமாம் 
** 1083

#75
பனையெனும் பெயரே போந்தையின் தருவும்
அநுடநாட் பெயரு மாகு மென்ப 
** 1084

#76
பணமெனும் பெயரே பாம்பின் படமும்
அரவுஞ் செம்பொற் காசு மாமே 
** பகர அகர வருக்கம் முற்றும்
** பகர ஆகார வருக்கம்
** 1085

#77
பாரதி யெனும்பெயர் பனுவ லாட்டியும்
தோணியு மெனவே சொல்லப் பெறுமே 
** 1086

#78
பாண்டி லெனும்பெய ரிடப ராசியும்
சகடமு மூங்கிலுந் தாங்குறு சிவிகையும்
காளையுங் கட்டிலும் விளக்கின் றகளியும்
வட்டமு மெனவே வழங்கப் பெறுமே 
** 1087

#79
பாணி யெனும்பெயர் பதியொடு சேர்ந்த
சோலையு நாடுங் காடு நீரும்
பாடற் பல்லியமும் பாட்டுமோ ரிசையும்
கையும் பொழுது நீட்டித்தலுங் கருதுவர் 
** 1088

#80
பாரா வார மெனும்பெயர் கடலும்
கடற்கரைப் பெயருங் கருதப் பெறுமே 
** 1089

#81
பாசெனும் பெயரே பசுமையு மூங்கிலும் 
** 1090

#82
பாரெனும் பெயரே தேரின் பரப்பும்
உரோகிணிப் பெயரும் புவனியு முரைப்பர் 
** 1091

#83
பாம்பெனும் பெயரே பன்னக விகற்பமும்
வரம்பின் பெயரும் வழங்கப் பெறுமே 
** 1092

#84
பாரி யெனும்பெயர் பாரின் பெயருங்
கட்டிலின் பெயருநல் லாடையு முந்நீரும்
மனைவி பெயருமோர் வள்ளலு மாமே 
** 1093

#85
பாடி யெனும்பெயர் ஊரு நாடும்
நகர மும்படை வீடு நவிலுவர் 
** 1094

#86
பானல் எனும்பெயர் கருநிறக் குவளையும்
மருத நிலமும் வயலும் வழங்கும் 
** 1095

#87
பாத்தி யெனும்பெயர் பகுத்தலும் வீடும்
சிறுசெய்யு மென்னச் செப்புவர் புலவர் 
** 1096

#88
பாழி யெனும்பெயர் தவத்தோர் சாலையும்
நகரமும் பெலமும் நண்ணல ரூரும்
படுக்கையும் பாயலும் பாழ்படு பொருளும்
மலைமுழை விலங்கு துயிலிடமு மாமே 
** 1097

#89
பாலெனும் பெயரே பகுத்தலும் பக்கமும்
கீரமும் இயல்பும் இடமுங் கிளத்துவர் 
** 1098

#90
பாசன மெனும்பெயர் பாண்டமுஞ் சுற்றமும்
உண்கலப் பெயரும் உரைக்கப் பெறுமே 
** 1099

#91
பாடெனும் பெயரே பக்கமும் படுதலும்
பெருமையுஞ் சத்த வொலியும் பேசுவர் 
** 1100

#92
பாலிகை யெனும்பெயர் பட்டவாள் முட்டும்
அதரமும் வட்டப் பெயரு மாமே 
** 1101

#93
பாகெனும் பெயரே பாக்கின் பெயரும்
பகுத்தலும் குழம்பும் பாலும் பாகனும்
சருக்கரைப் பெயருஞ் சாற்றப் பெறுமே 
** 1102

#94
பாளித மெனும் பெயர் கண்ட சர்க்கரையும்
குழம்பும் பட்டா டையுமே கூறுவர் 
** 1103

#95
பாணமெனும் பெயர் பட்டின் விகற்பமும்
அம்பும் பவள வண்ணக் குறிஞ்சியுமாம் 
** 1104

#96
பாக மெனும்பெயர் பாதியும் பிச்சையும்
நாவலர் கவிதைப் பாகமும் நவிலுவர் 
** 1105

#97
பாக லெனும்பெயர் பலாவின் தருவும்
மூவகைக் கார வல்லியு மொழிகுவர் 
** 1106

#98
பாதிரி யெனும்பெயர் பாதிரி மரமும்
மூங்கிலு மெனவே மொழியப் பெறுமே 
** 1107

#99
பால மெனும்பெயர் நெற்றியு மழுவும்
நீரிடைப் பரப்புகற் பாலமு நிகழ்த்துவர் 
** 1108

#100
பாவ மெனும்பெயர் பாவகப் பெயருந்
தீவினைப் பெயரும் செப்பப் பெறுமே 
** 1109

#101
பாய்மா வெனும்பெயர் பரியொடு புலியுமாம் 
** 1110

#102
பாக்கெனும் பெயர்செம் பழுக்காய்ப் பெயரும்
எதிர்கா லத்தைப் பகரிடைச் சொல்லுமாம் 
** 1111

#103
பாடல மெனும்பெயர் சிவப்பும் பாதிரியும்
குதிரையு மெனவே கூறப் பெறுமே 
** 1112

#104
பாத்தெனும் பெயரே பகுத்தூண் பெயரும்
அடிசிற் பெயரொடு கஞ்சியு மாமே 
** 1113

#105
பார மெனும்பெயர் கவசமும் பொறையும்
கலனையும் பாரும் நீரின் கரையும்
வன்பா ரமுமரக் கலமும் வழங்கும் 
** 1114

#106
பாவெனும் பெயரே பரத்தலும் பனுவலும் 
** 1115

#107
பாலை யெனும்பெயர் பாலை நிலமும்
அந்நிலப் பாடலும் பிரிவ துரைத்தலும்
பொருண்மேற் பிரிதலும் புணர்ந்துடன் போதலும்
புனர்பூ சமுமோர் மரமும் புகலுவர் 
** 1116

#108
பார்த்த லென்னும் பெயர்பரப் புதலும்
தோற்றுதற் பெயருஞ் சொல்லப் பெறுமே 
** 1117

#109
பாவை யெனும்பெயர் சித்திரப் பாவையும்
திருமக ளாடலுஞ் செப்புவர் புலவர் 
** 1118

#110
பாயச மெனும்பெயர் பாற்சோற் றினுடனே
பாற்குறண் டியென் பெயர்தானும் பகருவர் 
** பகர ஆகார வருக்கம் முற்றும்
** பகர இகர வருக்கம்
** 1119

#111
பிள்ளை யெனும்பெயர் வடுகக் கடவுளுங்
காரிப் புள்ளுட னிளமரக் கன்றும்
மகவின் பெயரும் வகுத்துரைத் தனரே 
** 1120

#112
பிதா வெனும்பெயர் சிவபெருமான் பெயரும்
பிரமன் பெயரும் தாதைதன் பெயரும்
பெருநா ரைப்புட் பெயரும் பேசுவர் 
** 1121

#113
பிசித மெனும்பெயர் நீறும் புலாலும்
வேம்பின் பெயரும் விளம்புவர் புலவர் 
** 1122

#114
பிச்ச மெனும்பெயர் பீலிக் குடையும்
ஆண்பான் மயிரும் வெண்குடையு மாமே 
** 1123

#115
பிசியெனும் பெயரே பேசுதற் பொருளும்
பொய்யுஞ் சோறும் புகலப் பெறுமே 
** 1124

#116
பிண்டி யெனும்பெயர் நென்மா முதலவும்
அசோக மரமும் பிண்ணாக்கு மாமே 
** 1125

#117
பிரச மெனும்பெயர் தேனீப் பெயரும்
தேனின் பெயரு மிறாலுஞ் செப்புவர் 
** 1126

#118
பிறங்க லெனும்பெயர் பெருமையு நிறைவும்
மலையு முயரமும் வகுக்கப் பெறுமே 
** 1127

#119
பிணையெனும் பெயரே விலங்கின் பெண்பாலும்
விருப்பமு மானும் விளம்புவர் புலவர் 
** 1128

#120
பிணிமுக மெனும்பெயர் புட்பொதுப் பெயருடன்
மயிலு மன்னமும் வகுத்து ரைத்தனரே 
** 1129

#121
பிங்கல மெனும்பெயர் செங்கன கத்தொடு
பொன்னி னிறமும் புகன்றனர் புலவர் 
** 1130

#122
பின்னை யெனும்பெயர் பிற்றைப் பொழுதும்
தங்கையுங் கண்ணன் மனைவியுஞ் சாற்றுவர் 
** 1131

#123
பிண்ட மெனும்பெயர் பிச்சையுந் திரட்சியும்
தேகமு மென்னச் செப்புவர் புலவர் 
** 1132

#124
பிரம மெனும்பெயர் சிவனு மாயனும்
பிரமனும் இரவியு மதியுங் கனலும்
மந்திரமும் வேதமும் முத்தித் தருமமும்
வேள்வியு முனிவரும் விளம்பப் பெறுமே 
** 1133

#125
பிப்பில மெனும்பெயர் திப்பிலி அரசுமாம் 
** 1134

#126
பிலவங்க மென்பெயர் தேரையுங் குரங்குமாம் 
** 1135

#127
பிதிரெனும் பெயரே தென்புலத் தெய்வமும்
நொடித்தலும் திவலையுங் கிளியின் விகற்பமும்
கதையு மெனவே கருதப் பெறுமே 
** 1136

#128
பித்திகை யெனும்பெயர் சுவர்த்த லத்துடனே
கொத்தவிழ் கருமுகைப் பெயருங் கூறுவர் 
** 1137

#129
பிறழ்த லெனும்பெயர் பெயர்தலும் ஒளிர்தலும் 
** 1138

#130
பிசின மெனும்பெயர் பொய்யனுங் கோளனும் 
** பகர இகர வருக்கம் முற்றும்
** பகர ஐகார வருக்கம்
** 1139

#131
பையெனும் பெயரே பசுமை நிறமும்
பாம்பின் படமும் கூறையின் விகற்புமாம் 
** 1140

#132
பையுள் எனும்பெயர் நோயும் சிறுமையும் 
** 1141

#133
பைத்த லெனும்பெயர் பசுத்தலு முனிவுமாம் 
** பகர ஐகார வருக்கம் முற்றும்
** பகர ஒகர வருக்கம்
** 1142

#134
பொறியெனும் பெயரே பொடித்தெழு நுண்சிறு
கலனோடு மரக்கலம் செல்வம் இலாஞ்சினை
திருவும் ஐம்புலனு மோதிரமு மெழுத்துமாம் 
** 1143

#135
பொன்னெனும் பெயரே பொறியுங் கனகமும்
அழகும் வியாழமும் திருவுங் குபேரனும்
இரும்பு மெனவே யியம்புவர் புலவர் 
** 1144

#136
பொழிலெனும் பெயரே யுலகமுஞ் சோலையும்
பெருமையு மெனவே பேசப் பெறுமே 
** 1145

#137
பொறையெனும் பெயரே பூமியும் பொறுமையும்
துறுகல் லுடனே மலையுஞ் சொல்லுவர் 
** 1146

#138
பொங்க ரெனும்பெயர் மரத்தின் கோடும்
பொருப்பும் இலவ மரமும் புகலுவர் 
** 1147

#139
பொருட்டெனும் பெயரே பொருப்பு மொக்குளும்
பங்கயப் பொன்னிறக் கொட்டையும் பகருவர் 
** 1148

#140
பொருந ரெனும்பெயர் பொருபடை வீரரும்
கொற்றவர் பெயரும் கூத்தர்தம் பெயரும்
திண்ணியோர் பெயரும் செப்பப் பெறுமே 
** 1149

#141
பொகிலெனும் பெயரே புட்பொதுப் பெயரும்
கொப்புளு முகையுங் கூறப் பெறுமே 
** 1150

#142
பொம்ம லெனும்பெயர் பொலிவுஞ் சோறுமாம் 
** 1151

#143
பொங்க லெனும்பெயர் மிகுதியுங் கொதித்தலும் 
** 1152

#144
பொய்த்த லெனும்பெயர் மகளிர் விளையாடலும்
பொய்த்திடு சொல்லும் புகலப் பெறுமே 
** 1153

#145
பொத்தக மெனும்பெயர் சித்திரப் படாமும்
திருமுறைப் பெயருஞ் செப்புவர் புலவர் 
** 1154

#146
பொய்யெனும் பெயரே பொந்தும் பொய்மையும் 
** 1155

#147
பொச்சாப் பெனும்பெயர் மறவி பொல்லாங்குமாம்
**பகர ஒகர வருக்கம் முற்றும்
** பகர ஓகார வருக்கம்
** 1156

#148
போகி யெனும்பெயர் புரந்தரன் பெயரும்
பாம்பின் பெயரும் பகரப் பெறுமே 
** 1157

#149
போரெனும் பெயரே நென்முதற் சும்மையும்
சதைய நாளொடு சமரு மாமே 
** 1158

#150
போக்கெனும் பெயரே யிளமரக் கன்றும்
வழியுங் குற்றமும் போதலும் பொய்யுமாம் 
** 1159

#151
போதக மெனும்பெய ரப்ப வருக்கமும்
மதகரிக் கன்றொடு மரத்தின் கன்றும்
இளமையும் ஞானமு மியம்பப் பெறுமே 
** 1160

#152
போக மெனும்பெயர் போக விகற்பமும்
பாம்பின துடம்பும் பகரப் பெறுமே 
** 1161

#153
போர்வை யெனும்பெயர் தோலின் பெயரும்
சாலிகைப் பெயரொடு போர்த்தலுஞ் சாற்றுவர் 
** 1162

#154
போத மெனும்பெயர் ஞானமும் தோணியும் 
** பகர ஓகார வருக்கம் முற்றும்
** பகர ஒளகார வருக்கம்
** 1163

#155
பெளவ மெனும்பெயர் கடலும் கணுவும்
** பகர ஒளகார வருக்கம் முற்றும்
** பகர வருக்கத் தொகுதி முற்றும்

@8  வது மகர வருக்கத் தொகுதி
** மகர அகர வருக்கம்
** 1164

#1
மன்ன னெனும்பெய ருத்திரட் டாதியும்
மன்னவன் பெயரும் வகுத்தனர் புலவர் 
** 1165

#2
மதியெனும் பெயரே முன்னிலை யசைச்சொலும்
உடுபதிப் பெயரு முணர்வு மாதமுமாம் 
** 1166

#3
மரக்கா லெனும்பெயர் மாதவ னாடலும்
சோதி நாளு மளவையுஞ் சொல்லுவர் 
** 1167

#4
மயிலை யெனும்பெயர் மலரிரு வாட்சியும்
மீன ராசியும் மீன்பொதுப் பெயருமாம் 
** 1168

#5
மடங்க லெனும்பெய ரிடியு மறலியும்
முடங்கலு நோயுட னூழியுஞ் சிங்கமும் 
** 1169

#6
மறலி யெனும்பெயர் மறப்பு மழுக்காறும்
கூற்றனு மெனவே கூறுவர் புலவர் 
** 1170

#7
மருளெனும் பெயரே மயக்கத்தின் பெயரும்
குறிஞ்சி யாழ்த்திறமும் பேயுங் கூறுவர் 
** 1171

#8
மஞ்செனும் பெயரே வலிமையு மிளமையும்
மேகமும் பணியும் வேழத்தின் முதுகும்
எழிலு மெனவே யியம்பினர் புலவர் 
** 1172

#9
மதனெனும் பெயரே மாட்சிமைப் பெயரும்
அனங்கனும் பெலமு மழகு மாமே 
** 1173

#10
மண்டலி யெனும்பெயர் நாயும் பூஞையும்
மண்டலி யரவும் வழங்கப் பெறுமே 
** 1174

#11
மண்டல மெனும்பெயர் நாடுங் குதிரையும்
வட்டமுங் குதிரைச் சாரியும் வழங்கும் 
** 1175

#12
மன்ற மென்பெயர் அம்பலமும் வாசமும் 
** 1176

#13
மந்திர மெனும்பெயர் குதிரைப் பந்தியும்
கோயிலும் விசாரமு மதுவு மில்லமும்
இறையவர் நாம வெழுத்து மாமே 
** 1177

#14
மறவ ரெனும்பெயர் வனசரர் பெயரும்
படைவீரர் பெயரும் பகரப் பெறுமே 
** 1178

#15
மள்ளர் எனும் பெயர் வன்சமர் வீரரும்
திண்ணியோர் பெயரு மருதநில மாக்களும் 
** 1179

#16
மதலை யெனும்பெயர் மரக்கலப் பெயரும்
புதல்வர் பெயரும் கொடுங்கைப் பாவும்
கொன்றையும் தூணும் சார்பின வையுமாம் 
** 1180

#17
மடை யெனும்பெயர் மணிப்பணிப் பூட்டும்
புனலின் மடையும் அடிசிலும் புகலுவர் 
** 1181

#18
மட்டெனும் பெயரே யளவு மதுவுமாம் 
** 1182

#19
மனவெனும் பெயரே மணிப்பொதுப் பெயரும்
அக்கு மணியின் பெயரு மாமே 
** 1183

#20
மணியெனும் பெயரே வனப்பு நன்மையும்
கருநிற முநவ மணியுங் கண்டையும்
இசையு மெனவே யியம்பப் பெறுமே 
** 1184

#21
மதுக மெனும்பெயர் வண்டுந் தராவும்
இருப்பையு மட்டி மதுரமும் இயம்புவர் 
** 1185

#22
மடியெனும் பெயரே வயிறுந் தாழையும்
சோம்பும் புடைவையுந் துன்ப நோயுமாம் 
** 1186

#23
மன்ற லெனும்பெயர் மணமும் கல்யாணமும்
பாலையாழ்த் திறமும் பகரப் பெறுமே 
** 1187

#24
மத்திகை யெனும்பெயர் மாலையின் பெயரும்
சம்மட்டி யினோடு சுடர்நிலைத் தண்டுமாம் 
** 1188

#25
மல் லெனும்பெயரே மாயோ னாடலும்
வளமும் பெலமும் வகுத்துரைத் தனரே 
** 1189

#26
மல்லிகை யெனும்பெயர் மாலதிப் புதலும்
சுடர்நிலைத் தண்டுஞ் சொல்லுவர் புலவர் 
** 1190

#27
மறமெனும் பெயரே பாவமும் கொடுமையும்
சினமு மெனவே செப்பப் பெறுமே 
** 1191

#28
மஞ்சரி யெனும்பெயர் மலர்ப்பூங் கொத்தும்
மாலையுந் தளிரும் வகுத்தனர் புலவர் 
** 1192

#29
மகர மெனும்பெயர் மலர்ப்பூந் தாதும்
சுறவு மகர விராசியுஞ் சொல்லுவர் 
** 1193

#30
மந்தார மெனும்பெய ரைந்தரு விலொன்றும்
செம்பரத் தையுமெனச் செப்புவர் புலவர் 
** 1194

#31
மத்தெனும் பெயரே தயிர்கடை தறிமுதன்
மத்தின் விகற்பமு மத்து முணர்த்துவர் 
** 1195

#32
மல்ல லெனும்பெயர் வலிமையும் வளமுமாம் 
** 1196

#33
மடமெனும் பெயரே முனிவர் வாசமும்
அறியாமை யுஞ்சத்திர மனையு மென்மையும் 
** 1197

#34
மகனெனும் பெயரே மைந்தன் பெருமையும்
மகிமையிற் சிறந்தோன் பெயரும் வழங்கும் 
** 1198

#35
மணமெனும் பெயரே கல்யாணமும் வாசமும்
கூட்டமு மெனவே கூறப் பெறுமே 
** 1199

#36
மறையெனும் பெயர்மந் திரமும் வேதமும்
பரிசையு மறைவும் ராசியப் பெயருமாம் 
** 1200

#37
மகமெனும் பெயர்மக நாளுடன் யாகமாம் 
** 1201

#38
மடலெனும் பெயர்பனை மடல்போல் வனவும்
பூவி னிதழு மோர்நூலும் புகலுவர் 
** 1202

#39
மத்தக மெனும்பெயர் நெற்றியுந் தலையுமாம் 
** 1203

#40
மண்ணெனும் பெயரே முழவின் மார்ச்சனையும்
அலங்கரித்தலு நல்ல வனியு மாமே 
** 1204

#41
மதுவெனும் பெயரே வசந்த காலமும்
இனிமையு நறவொடு தேனு மியம்புவர் 
** 1205

#42
மரபெனும் பெயரே பழமையும் இயல்புமாம் 
** 1206

#43
மறலெனும் பெயரே மயக்கமும் கூற்றுமாம் 
** 1207

#44
மருமான் எனும்பெயர் வழித்தோன் றலுடனே
மருமகன் பெயரும் வழங்கப் பெறுமே 
** 1208

#45
மயலெனும் பெயரே மயக்கமும் செற்றையும்
பேயின் பெயரும் பேசுவர் புலவர் 
** 1209

#46
மலைத லெனும்பெயர் மறுத்தலும் பொருதலும்
சூடலு மெனவே சொல்லப் பெறுமே 
** 1210

#47
மருத மெனும்பெயர் மருத நிலமும்
அந்நிலப் பாடலும் வயலுமோர் மரமுமாம் 
** 1211

#48
மங்கு லெனும்பெயர் மேகமும் விசும்பும்
இருளு மெனவே இயம்புவர் புலவர் 
** 1212

#49
மன்னெனும் பெயரே அசைச்சொலும் வேந்தனும்
நிலைபேறு மிகுதிப் பெயரு நிகழ்த்துவர் 
** 1213

#50
மலர்தல் எனும்பெயர் எதிர்தலுந் தோன்றலும்
மலர்தலின் பெயரும் வகுத்தனர் புலவர் 
** 1214

#51
மகரந்த மென்னும் பெயர்மலர்த் தேனும்
நறவும் பூந்தாது நவிலப் பெறுமே 
** 1215

#52
மதவெனும் பெயரே வன்மையு மிகுதியும் 
** 1216

#53
மதமெனும் பெயர்கரி மதமும் செருக்குமாம் 
** 1217

#54
மனையெனும் பெயரே மனைவியும் வீடுமாம் 
** 1218

#55
மருந்தெனும் பெயரே மருந்தின் விகற்பமும்
அமர ருணவின் பெயரு மாமே 
** 1219

#56
மந்தி யெனும்பெயர் வண்டும் ஆதித்தனும்
குரங்கின் விகற்பமும் கூறப் பெறுமே 
** 1220

#57
மன்ற வெனும்பெயர் தேற்றமும் இடைச்சொலும்
மருவு மெனவே வழங்கப் பெறுமே 
* மகர அகர வருக்கம் முற்றும்
** மகர ஆகார வருக்கம்
** 1221

#58
மாலெனும் பெயர்திரு மாலொடு மதிமகன்
காரிநிற வலாரியுங் காற்றொடு சோழனும்
கண்குத்திப் பாம்பும் கருமையும் பெருமையும்
மயக்கமும் விருப்பும் கண்ணே ணியுமாகும் 
** 1222

#59
மாவெனும் பெயரொரு மரமு மழைத்தலும்
திருவுங் குதிரையும் செல்வமும் கறுப்பும்
விலங்கின் பொதுவும் விளைநிலமு மழகும்
வண்டு மோரிலக்கமும் பெருமை நிறமும்
நென்மா முதலவு நிகழ்த்தப் பெறுமே 
** 1223

#60
மாலை யெனும்பெய ரொழுக்கமு மியல்பும்
நதியும் இரவும் மலரான் மணியாற்
சொல்லாற் பொன்னாற் றொடுத்திடு தொடையுமாம்
** 1224

#61
மானெனும் பெயரே மகர விராசியும்
விலங்கின் பொதுவுட னுழையையும் விளம்புவர் 
** 1225

#62
மாரி யெனும்பெயர் மழையு மேகமும்
வடுகியு மதுவு மரணமும் வழங்கும் 
** 1226

#63
மாதிர மெனும்பெயர் திசையும் யானையும்
மலையு மெனவே வழங்கப் பெறுமே 
** 1227

#64
மாதவ மெனும்பெயர் வளர்தவப் பெயரும்
இளவேனிற் பெயரு மதுவு மியம்புவர் 
** 1228

#65
மார்க்க மெனும்பெயர் வழியுந் தெருவும்
சமைய விகற்பமுஞ் சாற்றப் பெறுமே 
** 1229

#66
மாட மெனும்பெயர் மனையும் உழுந்துமாம் 
** 1230

#67
மாழை யெனும்பெயரு லோகக் கட்டியும்
பொன்னு மழகும் புளிமாவும் ஓலையும்
திரண்ட வடிவும் செப்புவர் புலவர் 
** 1231

#68
மாசெனும் பெயரே மேகமும் அழுக்கும்
சிறுமையுங் குற்றமும் செப்பப் பெறுமே 
** 1232

#69
மாத ரெனும்பெய ரிடைச்சொலு மழகும்
காதலும் அரிவையர் பெயரும் கருதுவர் 
** 1233

#70
மாந்த லெனும்பெயர் மரித்தலும் குடித்தலும்
உண்டலு மெனவே யுரைத்தனர் புலவர் 
** 1234

#71
மாய னெனும்பெயர் மாதவன் பெயரும்
கருநிற முடையோன் பெயரும் கருதுவர் 
** 1235

#72
மாய்த லெனும்பெயர் மறைதலும் மரணமும் 
** 1236

#73
மாருதி யெனும்பெயர் அநுமன் பெயரும்
வீமன் பிதாவின் பெயரும் விளம்புவர் 
** 1237

#74
மாய மெனும்பெயர் வஞ்சனைப் பெயரும்
பொய்யுங் கருநிறப் பெயரும் புகலுவர் 
** 1238

#75
மாயை யெனும்பெயர் மாயமும் சத்தியும் 
** 1239

#76
மாடெனும் பெயரே தனமும் பக்கமும்
மணியுஞ் செல்வமு நிரையும் வழங்கும் 
** 1240

#77
மாலிகை யெனும்பெயர் மதுவு மாலியும் 
** 1241

#78
மானுத லெனும்பெயர் மயக்கமு முவமையும்
இலச்சையு மெனவே இயம்புவர் புலவர் 
** 1242

#79
மான மெனும்பெயர் லச்சையு மளவும்
விமானமுங் குற்றமும் பெருமையும் விளம்புவர் 
** மகர ஆகார வருக்கம் முற்றும்
** மகர இகர வருக்கம்
** 1243

#80
மிசையெனும் பெயரே மீமிசைச் சொல்லும்
உணவுடன் மேடு முரைக்கப் பெறுமே 
** 1244

#81
மிச்சை யெனும்பெயர் மிடித்தலும் பொய்த்தலும்
அறிவின் மைப்பெயர் தானு மாமே 
** 1245

#82
மிதவை யெனும்பெயர் தெப்பமுஞ் சோறுமாம் 
** மகர இகர வருக்கம் முற்றும்
** மகர ஈகார வருக்கம்
** 1246

#83
மீனெனும் பெயரே வான்மீ னோடு
மச்சமும் சித்திரை நாளும் வழங்கும் 
** 1247

#84
மீளி யெனும்பெயர் மிடலும் பெருமையும்
தலைவனும் விறலோன் பெயருஞ் சாற்றுவர் 
** 1248

#85
மீக்கூ றெனும்பெயர் சொற்செல வுடனே
கீர்த்திப் பெயருங் கிளத்தப் பெறுமே 
** மகர ஈகார வருக்கம் முற்றும்
** மகர உகர வருக்கம்
** 1249

#86
முறமெனும் பெயரே வியாகமுஞ் சுளகுமாம் 
** 1250

#87
முறிகுள மெனும்பெயர் பூராட நாளும்
உடைகுளப் பெயரு முரைத்தனர் புலவர் 
** 1251

#88
முரசெனும் பெயரே முரசின் விகற்பமும்
உத்திரட் டாதியு முரைக்கப் பெறுமே 
** 1252

#89
முனியெனும் பெயர்தவ முனிவன் பெயரும்
தந்தியின் கன்றுந் தனுவி ராசியும்
வில்லும் புலவோர் விளம்பப் பெறுமே 
** 1253

#90
முதலை யென்பெயர் செங்கிடையு மிடங்கரும்
மயிலிறகின் முதன் முள்ளும் வழங்கும் 
** 1254

#91
முரம்பெனும் பெயரே மேடும் பாறையும்
பரலடுத் துயர்ந்த நிலமும் பகருவர் 
** 1255

#92
முளையெனும் பெயரே மூங்கிலும் சுதனும்
அங்குரத் தின்பெயர் தானு மாமே 
** 1256

#93
முறுவ லெனும்பெயர் தந்தமு முகையுமாம் 
** 1257

#94
முன்ன லெனும்பெயர் நெஞ்சமு நினைவுமாம் 
** 1258

#95
முனையெனும் பெயரே முரண்பெறு பகையும்
கூர்மையும் வெறுப்பும் கூறுவர் புலவர் 
** 1259

#96
முரணெனும் பெயரே பெலமும் பகையுமாம் 
** 1260

#97
முருகெனும் பெயரே முருகக் கடவுளும்
இளமையும் விழாவு மெழிலும் வாசமும்
மதுவு மெலுமிச்சும் வழங்கப் பெறுமே 
** 1261

#98
முறையெனும் பெயரே முறைப்பெயர் விகற்பமும்
இயல்பும் பொத்தகப் பெயரும் இயம்புவர் 
** 1262

#99
முடலை யெனும்பெயர் திரண்ட வடிவும்
பெருமையு மென்னப் பேசுவர் புலவர் 
** 1263

#100
முன்ன மெனும்பெயர் முற்கா லத்தொடு
சிங்கமும் குறிப்பும் சீக்கிரமு மாமே 
** 1264

#101
முடங்க லெனும்பெயர் மடங்கலுந் தாழையும்
மூங்கிலு நோயு மொழியப் பெறுமே 
** 1265

#102
முத்த மெனும்பெயர் அதரமும் பிரியமும்
முத்து மருத நிலமு மொழிகுவர் 
** 1266

#103
முண்டக மெனும்பெயர் முள்ளுடை மூலமும்
கமலமும் தாழையும் கள்ளுநீர் முள்ளியும்
நெற்றியு மெனவே நிகழ்த்தப் பெறுமே 
** 1267

#104
முல்லை யெனும்பெயர் முல்லை நன்னிலமும்
மல்லிகைப் பெயரும் வெற்றியுங் கற்புமாம் 
** 1268

#105
முடியெனும் பெயர்மயிர் முடியும் தலையும்
மகுடமு மெனவே வழங்குவர் புலவர் 
** 1269

#106
முச்சி யென்பெயர் மயிர்முடியு முச்சியும் 
** 1270

#107
முற்றெனும் பெயரே முழுதும் வளைத்தலும் 
** 1271

#108
முற்ற லெனும்பெயர் சூழ்போதலும் வெறுத்தலும்
முதுமையு முடிவின் பெயரு மொழிகுவர் 
** 1272

#109
முளரி யெனும்பெயர் விறகுஞ் சிறுமையும்
கமலமும் காடும் கனலும் முண்மரமும்மாம் 
** மகர உகர வருக்கம் முற்றும்
** மகர ஊகார வருக்கம்
** 1273

#110
மூதிரை யெனும்பெயர் முக்கண்ணன் பெயரும்
ஆதிரை நாளு மாமென நவில்வர் 
** 1274

#111
மூல மெனும்பெயர் கிழங்கு மோர்நாளும்
முதலு நிமித்தமும் வேரு மொழிந்தனர் 
** 1275

#112
மூர லெனும்பெயர் முறுவலும் தந்தமும்
சோறு மெனவே சொல்லுவர் புலவர் 
** 1276

#113
மூரி யெனும்பெயர் முரணும் பெருமையும்
எருமையு மிடபமுஞ் சோம்பு நெரிவுமாம் 
** 1277

#114
மூச லெனும்பெயர் மொய்த்தலுஞ் சாவுமாம் 
** 1278

#115
மூழி யெனும்பெயர் வாவியுஞ் சேறும்
அகப்பையின் பெயரு மாகு மென்ப 
** 1279

#116
மூழை யெனும்பெயர் அகப்பையுஞ் சேறுமாம் 
** மகர ஊகார வருக்கம் முற்றும்
** மகர எகர வருக்கம்
** 1280

#117
மெய்யெனும் பெயரே மெய்மையும் ஞானமும்
சடமும் ஒற்றெழுத்தும் மெய்ப்பொருளும் சாற்றுவர் 
** 1281

#118
மெத்தை யெனும்பெயர் சட்டையு மணையுமாம் 
** மகர எகர வருக்கம் முற்றும்
** மகர ஏகார வருக்கம்
** 1282

#119
மேதை யெனும்பெயர் அறிவும் புதனும்
இறைச்சியு மெனவே யியம்புவர் புலவர் 
** 1283

#120
மேலெனும் பெயரே மேல்பால் திசையும்
இடமும் விசும்பு மியல்புளோர் பெயருமாம் 
** 1284

#121
மேக்கெனும் பெயரே மேலு மேற்றிசையுமாம் 
** 1285

#122
மேனி யெனும்பெயர் நிறைவும் வடிவுமாம் 
** மகர ஏகார வருக்கம் முற்றும்
** மகர ஐகார வருக்கம்
** 1286

#123
மையெனும் பெயரே மேட விராசியும்
ஆடுங் குற்றமும் அஞ்சனமும் கறுப்பும்
மேகமு மெனவே விளம்புவர் புலவர் 
** 1287

#124
மைந்த னெனும்பெயர் திறலோன் பெயரும்
புதல்வன் பெயரும் புகலப் பெறுமே 
** மகர ஐகார வருக்கம் முற்றும்
** மகர ஒகர வருக்கம்
** 1288

#125
மொக்கு ளெனும்பெயர் பூவின் முகுளமும்
குமிழியு மெனவே கூறுவர் புலவர் 
** 1289

#126
மொய்யெனும் பெயர்போர்க் களமும் யானையும்
வண்டுங் கூட்டமும் வகுக்கப் பெறுமே 
** 1290

#127
மொய்ம்பெனும் பெயரே பெலமும் புயமுமாம் 
** மகர ஒகர வருக்கம் முற்றும்
** மகர ஓகார வருக்கம்
** 1291

#128
மோடெனும் பெயரே உயரமும் பெருமையும்
வயிறு மெனவே வகுத்தனர் புலவர் 
** மகர ஓகார வருக்கம் முற்றும்
** மகர ஒளகார வருக்கம்
** 1292

#129
மெளலி யெனும்பெயர் சடையும் கிரீடமும் 
** மகர ஒளகார வருக்கம் முற்றும்
** வது மகர வருக்கத் தொகுதி முற்றும்

@9 வது யகர வருக்கத் தொகுதி
** யகர அகர வருக்கம்
** 1293

#1
யவன ரெனும்பெயர் சோனகர் பெயரும்
சித்திர காரர்தம் பெயரும் செப்புவர் 
** யகர அகர வருக்கம் முற்றும்
** யகர ஆகார வருக்கம்
** 1294

#2
யாம மெனும்பெயர் இரவும் தெற்கும்
சாமமு மெனவே சாற்றப் பெறுமே 
** 1295

#3
யாழெனும் பெயரே வீணைக் கருவியும்
ஆதிரை நாளும் அசுபதிப் பெயரும்
மிதுன ராசியும் விளம்புவர் புலவர் 
** 1296

#4
யாண ரெனும்பெய ரழகும் புதுமையும்
நன்மையும் யாழ்பயி னல்லோர் பெயரும்
தச்சரு மெனவே சாற்றப் பெறுமே 
** 1297

#5
யாப்பெனும் பெயரே கவிதையும் கட்டுமாம் 
** 1298

#6
யான மெனும்பெயர் ஊர்தியின் விகற்பமும்
மரக்கால் பெயரும் வழங்கப் பெறுமே 
** 1299

#7
யானு வெனும்பெயர் நன்மையு மழகுமாம் 
** யகர ஆகார வருக்கம் முற்றும்
** யகர ஊகார வருக்கம்
** 1300

#8
யூப மெனும்பெயர் படையின துறுப்பும்
கபந்தமும் வேள்வித் தறியுங் கருதுவர் 
** 1301

#9
யூக மெனும்பெய ருட்பொரு ளுணர்த்தலும்
கோட்டா னுங்கருங் குரங்குந் தருக்கமும்
உடற்குறை யுமென வுரைக்கப் பெறுமே 
** யகர ஊகார வருக்கம் முற்றும்
** யகர ஓகார வருக்கம்
** 1302

#10
யோக மெனும்பெயர் உபாயமு முயற்சியும்
தியானமுங் கூட்டமுஞ் செல்வமும் சிறப்புமாம் 
** யகர ஓகார வருக்கம் முற்றும்
** யகர வருக்கத் தொகுதி முற்றும்

@10  வது வகர வருக்கத் தொகுதி
** வகர அகர வருக்கம்
** 1303

#1
வலவை யெனும்பெயர் வஞ்சப் பெண்ணொடு
வெறியாட் டாளனும் வல்லோன் பெயருமாம் 
** 1304

#2
வருட மெனும்பெயர் மழையும் யாண்டுமாம் 
** 1305

#3
வன்னி யெனும்பெயர் ஒருமரப் பெயரும்
நெருப்புங் கிளியும் பிரம சாரியுமாம் 
** 1306

#4
வயலெனும் பெயரே செய்யும் வெளியும்
மருத நன்னிலமும் வழங்கப் பெறுமே 
** 1307

#5
வசியெ னும்பெயர் வாளும் வடுவும்
வசிகமுங் கூர்மையும் வழங்கப் பெறுமே 
** 1308

#6
வடவை யெனும்பெயர் வடவா வனலும்
குதிரைப் பெட்டையு மதகரிப் பிடியும்
பெண்பா லெருமைப் பெயரும் பேசுவர் 
** 1309

#7
வயமெனும் பெயரே வலிமையும் புனலும்
புட்பொதுப் பெயரும் புகலுவர் புலவர் 
** 1310

#8
வழியெனும் பெயரே மரபுந் தொடர்ச்சியும்
தருமமு மிடமுந் தனையனும் நடவையும் 
** 1311

#9
வஞ்சனை யெனும்பெயர் மாயையும் பொய்யும்
வஞ்சகப் பெயரும் வழங்கப் பெறுமே 
** 1312

#10
வரையெனும் பெயரே மலையு மூங்கிலும்
அளவுங் கைவரையு மாகு மென்ப 
** 1313

#11
வசதி யெனும்பெயர் மனையு மூரும்
சிறப்புறு மிடமும் செப்புவர் புலவர் 
** 1314

#12
வயவன் எனும்பெயர் வலிமான் குருவியும்
விறலோன் காதலன் பெயரும் விளம்புவர் 
** 1315

#13
வயாவெனும் பெயரே வருத்தமும் விருப்பமும்
நோயும் கருப்பமும் நுவலுவர் புலவர் 
** 1316

#14
வள்ளெனும் பெயரே வல்லி பற்றிரும்பும்
கூர்மையுங் காதும் வகிர்தலும் கூறுவர் 
** 1317

#15
வண்டெனும் பெயர்கை வளையும் குற்றமும்
பூசமும் சுரும்பும் புரியும் வெண்பணிலமும்
மாதர் விளையாடலும் அம்பும் வழங்கும் 
** 1318

#16
வட்ட மெனும்பெயர் பாரா வளையமும்
பரிசையுந் திகிரியும் பரந்த கைமணியும்
வட்ட வடிவுந் தடாகமு நீர்ச்சாலுந்
துகிலு மூர்கோளுஞ் சொல்லுவர் புலவர் 
** 1319

#17
வஞ்சி யெனும்பெயர் மாதுமோர் கொடியும்
பாவின் விகற்பமும் போர்மேற் செலவும்
மருத யாழ்த்திறமும் வகுத்துரைத் தனரே 
** 1320

#18
வடுகெனும் பெயரே யிந்தள விசையும்
மருத யாழ்த்திறமும் வகுத்துரைத் தனரே 
** 1321

#19
வஞ்சக மெனும்பெயர் வாளுங் கபடுமாம் 
** 1322

#20
வயிர மெனும்பெயர் வச்சிர மணியும்
மரத்தின் வயிரமும் வச்சிரா யுதமும்
சினமும் கூர்மையும் செப்புவர் புலவர் 
** 1323

#21
வறிதெனும் பெயரே பயனில் வார்த்தையும்
சிறிதும் அறியாமையு மருகலுஞ் செப்புவர் 
** 1324

#22
வம்பெனும் பெயரே மணமு மிடாவும்
நிலையின் மையு முலைக்கச்சும் புதுமையும் 
** 1325

#23
வதுவை யெனும்பெயர் மணமும் கலியாணமும் 
** 1326

#24
வழங்க லெனும்பெய ருலாவலு முரைத்தலும்
கொடுத்தலு மெனவே யறைந்தனர் புலவர் 
** 1327

#25
வலித்த லெனும்பெயர் நினைத்தலும் பேசலும் 
** 1328

#26
வலம்புரி யெனும்பெயர் சலஞ்சலப் பெயரும்
நந்தியா வத்தமு நவிலப் பெறுமே 
** 1329

#27
வலவ னெனும்பெயர் வெற்றி யாளனும்
தேர்ப்பா கனுமெனச் செப்புவர் புலவர் 
** 1330

#28
வள்ள மென்பெயர் மரக்காலும் வட்டிலும் 
** 1331

#29
வக்கிர மெனும்பெயர் மடங்கலும் கொடுமையும்
வட்டமு மெனவே வழங்கப் பெறுமே 
** 1332

#30
வசந்த னெனும்பெயர் மதனுந் தென்காலுமாம் 
** 1333

#31
வரியெனும் பெயர்நெற் பொதுவும் வாரியும்
எழுத்துஞ் சுணங்கு மின்னிசைப் பாடலும்
குடியிறைப் பெயரும் சந்தித் தெருவும்
நீளமு மெனவே நிகழ்த்துவர் புலவர் 
** 1334

#32
வனமெனும் பெயரே யூர்சூழ் சோலையும்
நீருந் துழாயும் காடு மிகுதியும்
ஈரமு மெனவே யியம்பப் பெறுமே 
** 1335

#33
வடக மெனும்பெயர் வடக வுடையும்
தோலின் பெயரும் சொல்லப் பெறுமே 
** 1336

#34
வங்க மெனும்பெயர் வழுதுணைப் பெயரும்
வெள்ளீ யத்தினொடு தோணியும் விளம்புவர் 
** 1337

#35
வசந்த மெனும்பெயர் வசந்த காலமும்
புரந்தரன் மாளிகை மணமும் புகலுவர் 
** 1338

#36
வல்லி யெனும்பெயர் கொடியும் ஆய்ப்பாடியும்
நிகளமு மெனவே நிகழ்த்தப் பெறுமே 
** 1339

#37
வல்லெனும் பெயரே வலிமையும் விரைவும்
சூது மெனவே சொல்லுவர் புலவர் 
** 1340

#38
வடுவெனும் பெயரே குற்றமும் சிறுமையும்
தழும்புஞ் சுரும்பொடு சோம்புங் காய்ப் பிஞ்சுமாம் 
** 1341

#39
வண்ண மெனும்பெயர் வடிவு மோசையும்
நிறங்களின் விகற்பமு நிகழ்த்தப் பெறுமே 
** 1342

#40
வயினெனும் பெயரே வயிறிட மனையுமாம் 
** 1343

#41
வண்மை யெனும்பெயர் வளமையும் கொடுத்தலும்
வலிமையும் புகழும் வாய்மையும் வழங்கும் 
** 1344

#42
வசுவெனும் பெயரே பொன்னும் கனலும்
எண்வகை யமரரும் பசுவின் கன்றுமாம் 
** 1345

#43
வலமெனும் பெயரே கனமும் வெற்றியும்
இடமும் வலப்பாற் பெயரு மியம்புவர் 
** 1346

#44
வன்மை யெனும்பெயர் வன்மையுங் காடும்
விரைவு மெனவே விளம்புவர் புலவர் 
** 1347

#45
வளமெனும் பெயரே வனப்பும் பலவகை
வளமும் பதவியும் வழங்கப் பெறுமே 
** 1348

#46
வள்ளி யென்பெயர் கைவளையுங் கொடியுமாம் 
** 1349

#47
வட்க லெனும்பெயர் நாணமும் கேடுமாம் 
** 1350

#48
வரைதல் எனும்பெயர் நீக்கமும் கொளலுமாம் 
** 1351

#49
வடமெனும் பெயரால மரமும் கயிறும்
மணிவடப் பெயரும் வழங்குவர் புலவர் 
** 1352

#50
வயமா வெனும்பெயர் வாசியும் யானையும்
சிங்கமும் புலியும் செப்பப் பெறுமே 
** வகர அகர வருக்கம் முற்றும்
** வகர ஆகார வருக்கம்
** 1353

#51
வார மென்பெயர் மலைச்சார்பும் பகுத்தலும்
கடலு நீர்க்கரை யுங்கரு ஏழ்கிழமையும்
புரிவுறு மன்பையும் புகலுவர் புலவர் 
** 1354

#52
வானெனும் பெயரே வானமும் பெருமையும்
மேகமும் மழையும் விளம்பப் பெறுமே 
** 1355

#53
வாருண மெனும்பெயர் நீருங் கடலும்
மேற்கு மெனவே விளம்புவர் புலவர் 
** 1356

#54
வாடை யென்பெயர் வடகாற்றும் வீதியும்
சிற்றூர்ப் பெயரையுஞ் செப்பப் பெறுமே 
** 1357

#55
வாரி யெனும்பெயர் கடலு நீர் மிகுதியும்
நீரும் விளைவுங் கதவின் விகற்பமும்
மதிலின் சுற்றும் வருபுனல் மடையும்
வாய்தலுஞ் செல்வ வரத்தும் வழியும்
ஆனை படுக்கு மிடமு மாமே 
** 1358

#56
வாமன மெனும்பெயர் குறளுமோர் சமயமும்
திசைநிலைக் குஞ்சரத் தொன்றும் செப்புவர் 
** 1359

#57
வான மெனும்பெயர் மழையு மாகாயமும்
உலர்மரப் பெயரதன் கனியையு முணர்த்துவர் 
** 1360

#58
வாணி யெனும்பெயர் வார்த்தையின் பெயரும்
பாரதி பெயரும் பகழியு நடமுமாம் 
** 1361

#59
வாச மெனும்பெயர் புள்ளின் சிறகும்
பூவின் மணமும் புடைவையின் பெயரும்
இருப்பிட முமென வியம்புவர் புலவர் 
** 1362

#60
வாயி லென்பெயர் ஐம்புலனு மேதுவும்
கதவின் விகற்பமும் இடமும் கருதுவர் 
** 1363

#61
வானி யெனும்பெயர் சேனையும் துவசமும்
மேற்கட்டி யுமென விளம்பப் பெறுமே 
** 1364

#62
வாளெனும் பெயரே வாளா யுதமும்
ஒளியு மெனவே யுரைத்தனர் புலவர் 
** 1365

#63
வாலெனும் பெயரே பெருமையுஞ் சுத்தமும்
விலங்கின் வாலும் வெண்மை நிறமுமாம் 
** 1366

#64
வாரணம் எனும்பெயர் மதகரிப் பெயரும்
சங்கும் கவசமும் தடுத்தலும் கோழியும்
கடலு மெனவே கருதப் பெறுமே 
** 1367

#65
வாங்கல் லெனும்பெயர் வளைத்தலுங் கொளலுமாம் 
** 1368

#66
வாசி யெனும்பெயர் குழலிசை விகற்பமும்
குதிரையின் பெயரும் கூறப் பெறுமே 
** 1369

#67
வாலி யெனும்பெய ரலாயுதன் பெயரும்
கிட்கிந்தை யரசன் பெயரும் கிளத்துவர் 
** 1370

#68
வாத மெனும்பெயர் தர்க்கமும் காற்றுமாம் 
** 1371

#69
வாம மென்பெய ரிடப்பாலு மழகும்
குறளு மோர்சமையப் பெயருங் கூறுவர் 
** 1372

#70
வாரெனும் பெயர்முலைக் கச்சு நெடுமையு
நீரு நேர்மையும் வகிர்தலும் நிகழ்த்துவர் 
** 1373

#71
வாயெனும் பெயர்வரு வாயும் வாய்மையும்
வாய்தலும் வாயின் பெயரு மிடமுமாம் 
** 1374

#72
வாகை யெனும்பெய ரொழுக்கமும் தவமும்
தருமக் கருமமுஞ் சால்பு மிகுதியும்
ஆள்வினை முதலாஞ் செய்கை நலமும்
கைவல முதலாங் கல்வி யாண்மையும்
ஒருவரி லொருவர் வென்றியுமோர் மரமும்
பண்பு மிகையும் பகரப் பெறுமே 
** 1375

#73
வாழி யெனும்பெயர் வாழ்கவென் சொல்லும்
இடைச்சொலின் பெயரும் இயம்புவர் புலவர் 
** வகர ஆகார வருக்கம் முற்றும்
** வகர இகர வருக்கம்
** 1376

#74
விண்டெனும் பெயரே மேகமும் மூங்கிலும்
மாயனும் காற்றும் மலையும் விளம்புவர் 
** 1377

#75
விசும்பெனும் பெயரே விண்ணுஞ் சுவர்க்கமும்
மேகமுந் திசையும் விளம்பப் பெறுமே 
** 1378

#76
விசைய மெனும்பெயர் வென்றியி னொடுசர்க்
கரையுங் கதிர்மண் டலமுங் கருதுவர் 
** 1379

#77
விழவெனும் பெயரே மிதுன ராசியும்
உத்சவப் பெயரு முரைக்கப் பெறுமே 
** 1380

#78
விடமெனும் பெயரே நஞ்சுந் தேளும்
ஒருமரப் பெயரு முரைத்தனர் புலவர் 
** 1381

#79
விடரெனும் பெயரே வெற்பின் முழையும்
கமருந் தவத்தோ ரிடமும் காடுமாம் 
** 1382

#80
விளவெனும் பெயரே விளமரமும் கமருமாம் 
** 1383

#81
விடங்க மெனும்பெயர் வீதிக் கொடியும்
ஆண்மையு மழகும் கொடுங்கையு மனையின்
முகடு மெனவே மொழிந்தனர் புலவர் 
** 1384

#82
விடலை யெனும்பெயர் விறலோன் பெயரும்
தலைவன் பெயரும் சாற்றுவர் புலவர் 
** 1385

#83
விழைந்தோ னெனும்பெயர் வேட்டோன் பெயரும்
கொண்கனு மெனவே கூறப் பெறுமே 
** 1386

#84
விலோத மெனும்பெயர் பெண்பான் மயிரும்
மயிர்ச்சுரு ளும்மென வழங்குவர் புலவர் 
** 1387

#85
விறலெனும் பெயரே வென்றியும் பலமுமாம் 
** 1388

#86
விதப்பெனும் பெயரே மிகுதியும் பெலமுமாம் 
** 1389

#87
விறப்பெனும் பெயரே யச்சமும் பெலமும்
செறிவு மெனவே செப்புவர் புலவர் 
** 1390

#88
வியப்பெனும் பெயர்சினக் குறிப்புஞ் சினமும்
அதிசயப் பெயரு மாகு மென்ப 
** 1391

#89
விழைச்செனும் பெயரே விருப்பு நல்லிளமையும்
புணர்ச்சி யனுபோகப் பெயரும் புகலுவர் 
** 1392

#90
விடையெனும் பெயரெதிர் மொழியு மெருது
மேவுதற் பெயரும் இயம்புவர் புலவர் 
** 1393

#91
விந்த மென்பெயர் தாமரையு மோர்கிரியுமாம் 
** 1394

#92
விம்ம லெனும்பெயர் ஒலித்தலும் அழுகையும் 
** 1395

#93
வியலெனும் பெயரே பெருமையும் அகலமும் 
** 1396

#94
விபுல மெனும்பெயர் பெருமையும் அகலமும் 
** 1397

#95
வில்லெனும் பெயரே மூல நாளும்
ஒளியும் வார்சிலையு முரைக்கப் பெறுமே 
** 1398

#96
விதியெனும் பெயரே பிரமனுந் தொழிலும்
இயல்புமூழ் முறையு மியம்பப் பெறுமே 
** 1399

#97
விருகோ தரனெனும் பெயர்யம ராயனும்
வீமன் பெயரும் விளம்பப் பெறுமே 
** 1400

#98
வித்த மெனும்பெயர் அறிவும் கனகமும்
பழித்தலு மெனவே பகரப் பெறுமே 
** 1401

#99
விளிவெனும் பெயரே வீதலும் கேடுமாம் 
** 1402

#100
விருத்தி யெனும்பெயர் விரித்திடு பொருளும்
தன்றொழி லிலாபமும் ஆக்கத்தின் பெயருமாம் 
** 1403

#101
விபூதி யெனும்பெயர் செல்வமு நீறும்
கொடுமையுந் தசையுங் குற்றமு நரகுமாம் 
** 1404

#102
விடப மெனும்பெயர் மரக்கொம்புங் காளையும்
இடப ராசியும் இயம்புவர் புலவர் 
** 1405

#103
விளரி யெனும்பெயர் வேட்கையின் மிகுதியும்
இளமையும் யாழிலோர் நரம்பும் யாழுமாம் 
** 1406

#104
விழும மெனும்பெயர் சீர்மையும் சிறப்பும்
இடும்பையு மெனவே யியம்பப் பெறுமே 
** 1407

#105
விளரெனும் பெயரே வெளுப்பு மிளமையுங்
கொழுப்பு மெனவே கூறுவர் புலவர் 
** 1408

#106
விண்ணெனும் பெயரே விசும்பு மேகமுமாம் 
** 1409

#107
விரையெனும் பெயரே சாந்தும் தூமமும்
மணமு மெனவே வழங்கப் பெறுமே 
** 1410

#108
வியாள மெனும்பெயர் அரவும் புலியுமாம் 
** 1411

#109
விலங்கெனும் பெயரே மிருகமுந் தளையுமாம் 
** 1412

#110
விநாயக னெனும்பெயர் விறற்கரி முகனும்
அருகனும் புத்தனு மாகு மென்ப 
** வகர இகர வருக்கம் முற்றும்
** வகர ஈகார வருக்கம்
** 1413

#111
வீரை யெனும்பெயர் விரிகடற் பெயரொடு
துயரையு மொருமரப் பெயரையுஞ் சொல்லுவர் 
** 1414

#112
வீதி யெனும்பெயர் நேரோ டுதலுந்
தெருவு மெனவே செப்பப் பெறுமே 
** 1415

#113
வீயெனும் பெயரே வீதலு நீக்கமும்
பூவும் புள்ளின் பொதுவு மாமே 
** 1416

#114
வீச லெனும்பெயர் எறிதலும் கொடையுமாம் 
** 1417

#115
வீதல் எனும்பெயர் கெடுதலும் சாதலும் 
** வகர ஈகார வருக்கம் முற்றும்
** வகர எகர வருக்கம்
** 1418

#116
வெள்ளை யெனும்பெயர் வெளிறும் வெண்பாவும்
வெள்ளாட் டேறும் வெண்மையு மதுவும்
பெலதே வனும்வெண் சங்கும் பேசுவர் 
** 1419

#117
வெறியெனும் பெயரே யணங்காட்டு வட்டமும்
அச்சமும் பேயு மணம்பெறு நாற்றமும்
ஆடுங் கலகமு நோயு மாமே 
** 1420

#118
வெள்ள மென்பெயர் நீர்மிகுதியுங் கடலும்
கடற்றிரைப் பெயரு மோரெண்ணுங் கருதுவர் 
** 1421

#119
வெதிரெனும் பெயரே செவிடனு மூங்கிலும் 
** 1422

#120
வெறுக்கை யெனும்பெயர் விபவமும் கனகமும்
வெறுத்தலும் புலவோர் விளம்பப் பெறுமே 
** 1423

#121
வெளிலெனும் பெயரே வேழத் தம்பமும்
அணிலும் பாடையும் தயிர்கடை தறியுமாம் 
** 1424

#122
வெடியெனும் பெயரே யச்சமும் வெளியும்
பரிமளப் புகையும் பகரப் பெறுமே 
** 1425

#123
வெம்மை யெனும்பெயர் விருப்பு முட்டிணமும்
விரைவு மெனவே விளம்பப் பெறுமே 
** 1426

#124
வெள்ளி லெனும்பெயர் விளவும் பாடையும் 
** 1427

#125
வெய்யோ னெனும்பெயர் விருப்பினன் பெயரும்
இரவியுங் கொடியோன் பெயரு மியம்புவர் 
** 1428

#126
வெள்ளி யெனும்பெயர் அசுரர் மந்திரியும்
இரசதப் பெயரு மியம்புவர் புலவர் 
** வகர எகர வருக்கம் முற்றும்
** வகர ஏகார வருக்கம்
** 1429

#127
வேளெனும் பெயரே வேற்கும ரேசனும்
வில்வேளுஞ் சழுக்கி வேந்தரு மாமே 
** 1430

#128
வேட்டுவ னெனும்பெயர் வேடனு மகமும்
குழவிச் சிறுபுட் பெயருங் கூறுவர் 
** 1431

#129
வேலை யெனும்பெயர் கடலுடன் கடற்கரை
பொழுது மெனவே புகன்றனர் புலவர் 
** 1432

#130
வேணி யெனும்பெயர் விசும்புங் கோடீரமும் 
** 1433

#131
வேள்வி யெனும்பெயர் வேள்விக் குண்டமும்
கொடுத்தலும் யாகமும் குறைவில் பூசனையும்
மகநாட் பெயரும் வழங்குவர் புலவர் 
** 1434

#132
வேலி யெனும்பெயர் ஊருங் காவலும்
விளைநில மும்பயிர் வேலியு மதிலுமாம் 
** 1435

#133
வேய்த லெனும்பெயர் வேயுள் சூடுதலுமாம் 
** 1436

#134
வேதிகை யெனும்பெயர் பலகையுந் திண்ணையும் 
** 1437

#135
வேளாள ரென்பெயர் தனவசியர் பேரும்
தியாகியர் பெயருடன் சிறந்த காராளரும் 
** 1438

#136
வேங்கை யெனும்பெயர் புலியுமோர் தருவும்
பொன்னு மெனவே புகன்றனர் புலவர் 
** 1439

#137
வேலெனும் பெயரே மரத்தின் விகற்பமும்
படைக்கலப் பொதுவும் வேற்படையும் பகருவர் 
** 1440

#138
வேளாண்மை யெனும்பெயர் மெய்யும் கொடையுமாம் 
** 1441

#139
வேயெனும் பெயரே யொற்று மூங்கிலும்
உட்டுளை வடிவு முரைத்தனர் புலவர்
** 1442

#140
வேணு வெனும்பெய ருட்டுளைப் பொருளும்
மூங்கிலும் வில்லும் வாளு மொழிகுவர் 
** 1443

#141
வேழ மெனும்பெயர் வேழப் பூச்சியுங்
கரும்பு மூங்கிலுங் கொறுக்கச்சியும் யானையும் 
** 1444

#142
வேசரி யெனும்பெயர் கோவேறு கழுதையும்
மூதேவி யூர்தியும் மொழியப் பெறுமே 
** 1445

#143
வேந்த னெனும்பெயர் வியாழமு மரசனும்
சந்திரன் பெயரும் தருகதி ரிரவியும்
இந்திரன் பெயரு மியம்புவர் புலவர் 
** 1446

#144
வேலா வலய மெனும்பெயர் கடலும்
பூமியு மெனவே புகன்றனர் புலவர் 
** 1447

#145
வேரெனும் பெயர்மர வேரும் வெயர்வுமாம் 
** 1448

#146
வேதண்ட மென்பெயர் வெள்ளி மலையும்
பொருப்பின் பொதுவும் புகலப் பெறுமே 
** 1449

#147
வேல னெனும்பெயர் செவ்வேள் பெயரும்
வெறியாட் டாளன் பெயரு மியம்புவர்
** வகர ஏகார வருக்கம் முற்றும்
** வகர ஐகார வருக்கம்
** 1450

#148
வைக லெனும்பெயர் தங்கலுந் தினமும்
புலரிக் காலமும் புகன்றனர் புலவர்
** 1451

#149
வையெனும் பெயரே நெல்லின் றாளும்
கூர்மையும் புல்லும் கூறப் பெறுமே
** 1452

#150
வைய மெனும்பெயர் உரோகிணி நாளும்
ஆனே றுஞ்சகட வூர்தியும் சிவிகையும்
பாருந் தேரும் பகரப் பெறுமே
****
********
** 
*