0.பாயிரம்
1.ககர எதுகை
2.ஙகர எதுகை
3.சகர எதுகை
4.ஞகர எதுகை
5.டகர எதுகை
6.ணகர எதுகை
7.தகர எதுகை
8.நகர எதுகை
9.பகர எதுகை
10.மகர எதுகை
11.யகர எதுகை
12.ரகர எதுகை
13.லகர எதுகை
14.வகர எதுகை
15.ழகர எதுகை
16.ளகர எதுகை
17.றகர எதுகை
18.னகர எதுகை
19.ஓரெழுத்தொருசொற் பல்பொருள்
|
** வேதகிரியார் சூடாமணி நிகண்டு
** ஒருசொற் பலபொருட்பெயர்த் தொகுதி
@0 பாயிரம்
#1
இஃது வீரை மண்டலவன் நிகண்டினுள் அடங்காத பொருள்கள்
பற்பல நிகண்டகராதிகளுள் காணப்பட்டனவற்றுள் கற்போர்க்கு
உபயோகமானவற்றையும் அந்நிகண்டின் ஒரு சொல் பலபொருள்
தொகுதியுள் சேர்த்துச் சொல்லி அங்குறும் பொருள் துகளற
உணர்ந்து கல்வியங் கடற்கரை காணுறீஇ ஓங்கித்
தொண்டை நன்நாட்டுத் துளுவவேளாளருள்
எண்தரும் களத்தூர்க்கு இறைமைசேர் சாமிசெய்
நற்றவத்து உதித்த நாற்கவிராயன்
பொற்புவி வியப்புறும் புலவர் சிகாமணி
தாதவிழ் குவளை அம் தாமமார் புயவரை
வேதகிரிமுதலியார் எனச் செந்தமிழ்
நாடெங்கணும் விளங்காநின்ற நாமமுடையார்
இயற்றிய சில செய்யுட்களையும் கோத்துக்
கற்போர்க்கு எளிதில் கற்கவோர் வழியா
யாழ்ப்பாணத்துப் புத்தகசங்கத்தாரால்
கிறிஸ்து வருஷம் சூஅளசஙக்குச்
சரியாக நிகழாநின்ற சோபகிருது வருஷம்
பிரசித்தஞ் செய்யப்பட்டது
** சிறப்புப் பாயிரம்
#2
சொல்லிடைப்பொருள் போல் எங்கும் துவன்றிய பகவன் பாதம்
எல்லியும் பகலும் போற்றி இரும்பெயர் பொருள் முன்வைத்து
நல்லியல் ககரம் ஆதி னகர ஈறு எதுகையாகப்
பல்பொருள் ஒருசொல் உற்ற தொகுதியைப் பகர்தல் உற்றாம்
@1 ககர எதுகை
**1
#1
பகவனே ஈசன் மாயோன் பங்கயன் சினனே புத்தன்
பகல் நடு நாள் முகுர்த்தம் பதியாணி பரிதி தேசு
மகரம் ஓர் இராசி வன்மீன் மலர்த்தாது சுறவு காதல்
அகம் மனம் மனை உள் பாவம் அகலியம் இடம் ஆன்மாவே
**2
#2
சிகரி கோபுரமே வெற்பு சீறெலி கருநாரைப்பேர்
சிகழிகை மயிர்முடிப் பேர் சிறந்த வாசிகை தேமாலை
சிகரம் வெற்பு அலை கோடு உச்சி கவரிமா திவலை காக்கை
மகம் யாகம் ஓர் நாள் என்ப மகன் மைந்தன் சிறந்தோன் ஆமே
**3
#3
இகல் பகை வலி போர் ஒப்பு ஆம் இகுளையே தோழி நட்பு
புகர் என்ப மழைக்கோள் குற்றம் புற்கு எனும் நிறமும் அப்பேர்
நகம்மலை உகிர் மரப்பேர் நகர் மனை கோயில் ஊர் ஆம்
ககனம் விண் படையினோடு காடும் புள்பொதுவும் ஆமே
**4
#4
திகிரி தேர் மூங்கில் வட்டம் தேருருள் ஆழி வெற்பு ஆம்
சிகி என்ப பரிபுரம் தீ தீதுறு கேது மஞ்ஞை
ஞெகிழி நூபுரம் புலிங்கம் நெருப்புறு கொள்ளி தீ ஆம்
எகினம் நாய் புளி மா நவ்வி கவரிமா நீர்நாய் அன்னம்
**5
#5
பொகுட்டுத் தாமரைப் பூங்கொட்டை பொருப்பு சேற்று எழுந்த கொப்புள்
நகைத்தலே சிரித்தலோடு நிந்தித்தல் இருபேர் நாட்டும்
புகைக்கு இடும் நாமம் தூமம் போற்றும் யோசனைக்கும் பேரே
செகுத்தலே அழித்தல் கொல்லல் தெகுளமே பெருகல் ஆர்தல்
**6
#6
பகடு இபம் பெருமை ஏறு பஃறி ஆண்மேதி தெப்பம்
தகடு அடர்பு இலை ஐம்மைப் பேர் தகைமை ஏர் இயல்பு பீடு ஆம்
அகடு ஈனம் நடு உள் மேடு ஆம் அகலுளே பரப்பு ஊர் நாடு
மகரந்தம் கொங்கு தேன் கள் வகிர் என்ப வழி வார் ஆமே
**7
#7
சகுந்தம் புள்பொதுவே பூகம் சகண்டையே முரசு இயப்பேர்
சிகண்டி ஓர் பண் ஏரண்டம் செழு மயில் அலி நாற்பேரே
சகுனி புள் நிமித்திகன் பேர் சாகினி சேம்பு கீரை
சகுனமே கிழங்கு புள்ளின்சாதியும் நிமித்தமும் பேர்
**8
#8
தகை என்பது அழகு இளைப்பு தகைமை அன்பொடு பண்பு ஆகும்
அகி என்பது அரவு இரும்பு ஆம் அகளமே மிடா நல் தாழி
ககம் என்பது அம்பு புள் ஆம் காகம் கற்பகமே காக்கை
அகவல் பா ஏங்கல் கூத்து ஆம் அகலமே விரிவு மார்பு
**9
#9
உகம் என்பது அரவு நாளும் உலகமும் முடிவும் ஆகும்
பகம் கொக்கு செல்வம் ஞானம் பற்றின்மை சீர்த்தி குய்யம்
சகம் ஒரு தேயம் பூமி சட்டை மார்கழி மாதப்பேர்
யுகம் நுகம் உபயம் பூமி ஓர் காலத்து அளவும் ஆமே
**10
#10
அகற்றலே விரித்தல் நீத்தல் அகணி உள் மருதம் செய் ஆம்
இகத்தலே கடத்தல் போகல் இகழ்ச்சியே மறதி ஈனம்
உகுத்தலே சொரிதல் சிந்தல் விடுத்தலோடு ஒருமூன்று ஆமே
பகுத்தலே தறித்தல் ஈதல் பங்கிடல் வெட்டல் நாற்பேர்
**11
#11
தொகுதியே திரட்சி கூட்டம் சுகிர்தமே அறம் நெய் நன்மை
மிகுதி பூரிப்பு அநேகம் வினைமுற்று பொலிவு கூட்டம்
பகுதியே இறை பகுத்தல் படை பதவுறுப்பு இயல் பேர்
தகுதியே அறிவு ஒழுக்கம் சாந்தம் பண்பு உரிமை ஆமே
**12
#12
நகுதலே இகழ்தல் மின்னல் நகைத்தலும் வகுத்த முப்பேர்
நெகிழ்தலே குழைதலோடு மலர்தலும் நிகழ்த்தல் ஆகும்
பகழியே அம்பும் அம்பின் குதையும் என்று இருபேர் பன்னும்
புகல் குதிர் உடம்பு வார்த்தை வென்றியும் புகலும் நாற்பேர்
**13
#13
நகரமே அரசர் கோயில் நகர் மருதப்பதிப்பேர்
நிகர் ஒளி உவமை ஆகும் நிகமமே நகரம் வேதம்
நுகர்தலே அனுபவித்தல் நுங்கலும் புசித்தலும் பேர்
தகரமே மயிர்ச்சாந்து ஈயம் தகரம் வாசப்பொருள் பேர்
**14
#14
தகம் வெப்பம் எரித்தல் ஆகும் தாகம் நீர்வேட்கை ஆசை
அகல் அல்குல் தகழி ஏவல் அகிலமே எல்லாம் பூமி
சிகல் கேடு குறைதல் என்ப சிக்கலே கிடைத்தல் நைதல்
முகம் இடம் வதனம் நீர்பாய்கழிமுகம் மூன்றும் ஆமே
**15
#15
புகைத்தலே சினக்குறிப்பு புகையச் செய்திடலும் ஆகும்
இகைத்தலே நடத்தல் ஈதல் இகுள் என்பது ஆரல் ஓர் மீன்
உகைத்தலே எழல் செலுத்தல் உகளலே கடத்தல் பாய்தல்
தகைத்தலே இளைத்தல் ஆணைதனையிடல் தடுத்தல் முப்பேர்
**16
#16
எக்கலே பொருதல் ஏறல் ஏகமே தனிமை ஒன்று
தொக்கு உடல் தோலும் ஆகும் சொக்குப் பொன் அழகு சோர்வு ஆம்
பக்கம் புள்சிறகு நட்பு பகர் திதி அருகும் ஆகும்
நக்கனே அருகன் சம்பு நிருவானி நாட்டும் முப்பேர்
**17
#17
அக்கு என்பு விடைமுரிப்பும் அணி சங்குமணியும் ஆகும்
நக்கலே உண்டல் சொன்றி நகைத்தலோடு ஒளியும் நாற்பேர்
இக்கு என்ப கரும்பு கள் ஆம் இகரம் சாந்து இகரம் என்ப
மக்கள் மானுடர் சிறார் ஆம் வகுளமே மகிழ் இலஞ்சி
**18
#18
துக்கம் நோய் நராலை தீது ஆம் சுகம் கிளி இன்பம் நன்மை
பொக்கம் பொய் பொலிவு கூட்டம் மிகுதியும் புகலல் ஆகும்
அக்கமே கயிறு கண் ஆம் அகலலே பிரிதல் நீங்கல்
ஒக்கலே இடையின்பக்கம் உறவு ஒத்தல் குடி மூட்டல் பேர்
**19
#19
ஒக்கம் ஊர் உயர்ச்சி என்ப உக்கிரன் சிவன் குரோதன்
தெக்கணம் வலப்பாலோடு தென்திசை தானும் ஆகும்
தக்கையே தெப்பம் பம்பை சடை பலவகைப்பறைப் பேர்
செக்கு என்ப சதயம் செக்கு ஆம் செக்கரே சிவப்புச் செவ்வான்
**20
#20
பக்கணம் வேடர் வீதி ஊர்ப்பொது பகரும் நாமம்
சுக்கிலம் இரதம் வெண்மை திங்களின் சுவேதபக்கம்
உக்கிரம் கொடுமையோடு தலைக்காவல் இருபேர் ஓதும்
கொக்கரை வலையே பாந்தள் கொடுமரம் வலம்புரிப்பேர்
**21
#21
செக்கர்வான்நிறத்தோன் ஈசன் சிறுவிதி மகம் சிதைத்தோன்
முக்கணன் குரோதன் ஈசன் கரிமுகன் முப்பேர் சொல்லும்
புக்கிலே உடல் வீடு என்ப புகலிடம் தஞ்சம் ஊர் ஆம்
முக்கணி பவானி துற்கை மூக்கு என்பது அலகு மோர்ப்பம்
**22
#22
கைக்கிளை இசை விகற்பம் ஒருதலைக் காமமும் பேர்
சுக்கை தாரகை மாலைப்பேர் துகள் என்ப குற்றம் தூள் ஆம்
எக்கரே சொரிதலோடு குவிதலும் இடக்கரும் பேர்
மொக்குள் நீர்க்குமிழி பூவின் முகிழ் என மொழியலாமே
**23
#23
சிக்கமே குடுமி உச்சி சீப்பு உறி மெலிவு காவல்
கொக்கு மாமரமே மூலம் குரண்டமே குதிரை செந்நாய்
வக்கிரம் கொடுமை மீளமடங்குதல் கோணல் வட்டம்
சக்கிரி குயவன் செக்கான் தராபதி நெடுமால் பாம்பு
**24
#24
சாகம் சாகினி வெள்ளாடு தேக்கு சஞ்சரிகம் தேனீ
பாகல் ஓர் கொடி பலாப் பேர் பகர்தலே விற்றல் பேசல்
ஆகமே உடலும் மார்பும் அகப்பாவே புரிசை மேடை
சேகரம் தலை மா ஏர் ஆம் திகை திசை சுணங்கும் ஆமே
**25
#25
ஆகு எலி கவரி கொப்பூழ் ஆம் பெருச்சாளிக்கும் பேர்
யோகம் சா தியானம் உச்சம் உபாயம் தாள் கூட்டம் கூடல்
போகி இந்திரன் பாம்பு என்ப போகில் புள் பூமொட்டு உந்தி
கோகிலம் குயிலே பல்லி குரங்கொடு புழையும் ஆமே
**26
#26
சீகரம் கவரி தூறல் திரை கரகம் துளிப்பேர்
சாகரம் துயில் ஒழித்தல் சமுத்திரம் இருபேர் சாற்றும்
காகுளி தவிசு கண்டத்து எழும் ஒலி இசையும் காட்டும்
ஈகை பொன் கொடை கார் என்ப இண்டும் கற்பகமும் ஆகும்
**27
#27
சோகமே உண்டை துன்பம் சோம்பலும் தொடையும் ஆகும்
மாகமே மகநாள் மாசிமாதம் ஆகாயம் முப்பேர்
மோகமே காமம் ஆசை உன்மத்தம் மூன்றும் காட்டும்
வீகம் மோதிரம் பூட்டு ஆகும் வேகமே கடுமை கோபம்
**28
#28
பூகமே திரளை கூந்தல்கமுகொடு கழுகு பூகம்
வாகுவே அழகு தோள் ஆம் வைகல் வைகறை நாள் தங்கல்
பாகம் ஓர் அளவு பிச்சை பங்கு என்ப பாதியும் பேர்
பாகு கூறு ஆணம் பாக்கு பரணி கண்டு அணை பால் பாகன்
**29
#29
கேகயம் அசுணம் பண் வில் கேதாரம் பருந்து ஓர் தேயம்
ஆகுலம் ஒலி நோவு என்ப அக்காரம் புடைவை வெல்லம்
போகம் பாம்புடலம் செல்வம் அனுபோகம் புணர்ச்சி நாற்பேர்
போகுதல் நெடுமை நேர்மை போகுதல் எனும் முப்பேரே
**30
#30
பாகனே புதன் தேர்ப்பாகன் பகரமே அணி சிறப்பு ஆம்
ஏகனே கடவுள் ஈசன் இகலனே நரி ஓரிப் பேர்
மேகம் ஓர் நோய் விண் ஆகும் மிகை துன்பம் மிகுதி கேடு ஆம்
பாகி பக்குவன் நாய் என்ப பகவதி அம்மை துற்கை
**31
#31
போகலே உயர்தல் நீளல் போகுதல் புகலும் முப்பேர்
யோகியே அருகன் ஈசன் உயர்முனி ஐயன் என்ப
நீகமே தவளை மேகம் நிகழ்தலே நடத்தல் மின்னல்
கோகமே சகோரம் செந்நாய் குகம் என்ப முழை நுண்மைப்பேர்
**32
#32
ஊகம் வானரம் புலிக்கு ஆம் உகளமே இரண்டு இட்டப்பேர்
சாகசம் விறல் மெய் யானை சகோரமே குக்கில் கோகம்
சூகை ஓர் எறும்பினோடு தும்பியும் இருபேர் சொல்லும்
கோகனம் என்ப கையான் நிலக்கடம்பு எனவும் கூறும்
**33
#33
ஆகமம் முதல்வன் வாக்கோடு அகலியம் கல்வி முப்பேர்
ஆகவம் மொய் போர் தூசு ஆம் ஆகாரம் உணா நெய் வீடு
ஏகல் போகுதல் நடத்தல் உயர்ச்சியும் இயம்பும் முப்பேர்
காகப்புள் கொடி அவிட்டம் ககுபமே மருது திக்கு ஆம்
**34
#34
தேக்கு என்பது இனிமை பூகம் தேக்கு எனும் தருவும் ஆகும்
பாக்கு என்பது எதிர்காலத்தைப் பகர் இடைச்சொல் துவர்க்காய்
மேக்கு மேல் உயர்ச்சி மேற்கு ஆம் மீக்கூறல் புகழ்தல் மெச்சல்
ஊக்கம் உற்சாகம் உள்ளக்கிளர்ச்சி மெய் வலி உயர்ச்சி
**35
#35
நோக்கே கண் அழகு பார்வை நோக்கலே காணல் காத்தல்
சேக்கையே விலங்கின் பாழி வடு முலை சிறந்த பாயல்
பூக்கமே மதுவும் ஊரும் பூகமும் என முப்பேரே
ஆக்கம் பூமகள் செல்வப்பேர் அக்கரம் எழுத்து ஓர் நோய் ஆம்
**36
#36
தாக்கலே எதிர்த்தல் பாய்தல் சகசமே உண்மை வட்டில்
நீக்கலே அகற்றல் கொல்லல் நீளுதல் மாறுபாடு ஆம்
நோக்கமே அழகு உயர்ச்சி நோக்கு என்ப பார்வையும் பேர்
மோக்கமே தீர்தல் முத்தி முகையே பூவரும்பு கூட்டம்
**37
#37
தீக்கையோன் அரன் ஆசான் பேர் திகம்பரன் அருகன் நக்கன்
தூக்கம் காதணியினோடு துயிலும் சல்லியும் முப்பேரே
தோக்கை மேற்போர்வையோடு துகில் இருபேரும் சொல்லும்
தூக்கல் ஆராய்தல் என்ப தூக்குதல் நிறுத்தலும் பேர்
**38
#38
தகர் சுறா மேடராசி தந்தியாண் யாழியாணினோடு
அகிலம் மேழகம் பராகம் துருவாட்டுஏறு ஆகும் எண்பேர்
தகவு அறிவு உரிமை தேர்ச்சி தயை பண்பு நல்லொழுக்கம்
தகுதியே நன்மை நீதி தருபெயர் ஒன்பான் ஆமே
**39
#39
சகடம் ஊற்றாலே வட்டில் சடகம் ஆசவுசம் பண்டி
அகமுறு பாண்டில் பூண்ட ஊர்தியும் ஆகும் அப்பேர்
நகை மகிழ்வு ஒளி இகழ்ச்சி நகைப்பு இன்பம் எயிறு பூவின்
முகை அணிகலன் மலர்ச்சி தந்தமும் மொழியலாமே
**40
#40
இகுத்தலே அழைத்தல் வீழ்த்தல் எறிதலே தாழ்த்தலோடு
செகுத்தல் தாண்டுதல் மறித்தல் சீத்தல் ஈகுதலும் ஒன்பான்
அகைத்தல் வேதனை முறித்தல் அறுத்திடல் இவர்தலே மற்று
உகைத்தலே உயர்த்தல் என்ப ஒடித்தலும் உரைக்கும் ஏழ்பேர்
**41
#41
சக்கரம் பெருமை ஓர் புள் தரணியே பிறப்பு வட்டம்
மிக்க தேருருளே ஆழி வீரை வற்சகமே வெற்பு ஆம்
உக்கமே ஆலவட்டம் உதாசனன் மருங்குலோடு
தக்க ஆன் ஏறு கோழி சாற்றும் மூவிருபேர் ஆமே
**42
#42
நாகம் காரீயம் வெற்பு ஞாழல் நல் தூசு புன்னை
வேகம் ஆர் கரி விண் ஓசை விண்ணாடு சிகி குரங்குஆம்
யூகமே கவந்தம் தர்க்கம் உலூகம் உட்பொருள் ஆராய்தல்
ஆகும் கார் ஊகம் ஓர் புல் அணி மந்தி படையும் ஆமே
**43
#43
தோகையே பெண் முன்றானை சுற்று ஆரல் தூவி மஞ்ஞை
வாகை சேர் பதாகையே வால் மயில்பீலியுடன் எண்பேர் ஆம்
சாகையே பிரிவு சாதல் தங்கிடம் இலை தருக்கொம்பு
ஆகிய வேதநூலின் பிரிவு அகம் புயம் வட்டில் பேர்
**44
#44
நாகு இளமரமே சங்கு நத்தை புற்று இளமை பெண்மீன்
வாகு உறு மரை ஆன் மேதிப் பெண்ணுமாய் வகுப்பர் நூலோர்
வாகை ஓர் மரம் ஒழுக்கம் நலன் தவம் வாய்மை பண்போடு
ஈகையே மிகுதி வென்றி அறத்துறை ஈர் ஐம்பேர் ஆம்
**45
#45
சூக்குமம் தவறு ஓர் தேகம் தூய நுண்ணறிவு தேவன்
தேக்கிய வஞ்சம் நுண்மை சிவாகமம் ஒன்றும் ஏழ்பேர்
தூக்கு உறி நிறையே ஆசான் துலாம் கவி தெளிதலோடு
தூக்கமே உயர்ச்சி கூத்து தூக்கணங்குரீஇ ஈர் ஐந்தாம்
** ( ககர எதுகை முற்றிற்று )
@2 ஙகர எதுகை
**46
#1
புங்கமே உயர்ச்சி அம்பு பொரும் அம்பின்குதை நல் தூசு
திங்கள் அம்புலி மாதப்பேர் சிங்கலே இளைத்தல் குன்றல்
கங்கு என்ப வரம்பின் பக்கம் கருந்தினை கழுகு பாறு
அங்கி தீ கவசம் ஆரல் ஆங்கே அவ்விடம் அசைச்சொல்
**47
#2
சங்கதம் பொருந்தல் நட்பு ஆம் சாங்கம் சங்கோசை சாயல்
பங்கு என்ப முடமே ஆகும் பாதியும் சனியும் அப்பேர்
வங்கம் ஓர்தேயம் நாவாய் வழுதுணை ஈயம் வெள்ளி
அங்கணம் சேறு முற்றம் ஆம் சலதாரைக்கும் பேர்
**48
#3
கங்கமே பருந்து சீப்புக் கனற்பொறி மூன்றுங் காட்டும்
மங்கலந் தருமம் அட்டசுபம் பொலிவொடு மணப்பேர்
கொங்கு தேன் மணம் ஓர்தேயம் மலர்த்தாதும் குறிக்கல் ஆகும்
கங்குலே இருள் இராவே கருதிய பரணிநாள் ஆம்
**49
#4
மங்குல் கார் இருள் விண் முப்பேர் மங்கலன் குசன் ஏனாதி
பங்கியே பிற மயிர்க்கும் பகரும் ஆண்மயிர்க்கும் பேர் ஆம்
அங்கதம் வசைச்சொல் மார்போடு அரவு தோளணிபொய் ஆகும்
பங்கம் சேறு ஆடை பாவம் குளம் முடம் பழுது பின்னம்
**50
#5
அங்கம் என்பு உடல் உறுப்பு ஓர்தேயம் ஆறு அங்கம் கட்டில்
பிங்கலம் வடக்கு பொன் பொன்னிறமும் ஓர் நூலும் பேசும்
பொங்கரே மரத்தின் கோடு பொருப்பு உயர் இலவு சோலை
பொங்கலே பொலிவு மிக்கு ஆம் புங்கவன் குரு தே புத்தன்
**51
#6
சங்கு கூர்த்திகை பொருந்தல் சரி நுதல் கணைக்கால் நந்து
துங்கமே உயர்ச்சி பீடு சுத்தமும் சொல்லும் முப்பேர்
அங்கிநாள் கயினி ஆரல் அங்ஙனே அவண் அத்தன்மை
பிங்கலை உமையே ஆந்தை சூரிய சரமும் பேசும்
**52
#7
சங்கமம் கூடல் கூட்டம் சரப்பொருள் ஆற்றுச்சங்கம்
சங்கடம் அயர்வு ஒடுக்கம் மிதவை இட்டிகையும் சாற்றும்
இங்கு இவண் பெருங்காயப் பேர் ஈங்கு சாந்து இவண் இண்டு என்ப
கிங்கிரர் ஏவல் செய்வோர் கிங்கிர கணமும் ஆமே
**53
#8
ஞாங்கர் வேல் பக்கம் முன்பு மேல் இடம் நாட்டும் ஐம்பேர்
தூங்கல் சா கரி கூத்து ஓசை துயில் சோம்பு தராசு தாழ்தல்
வாங்கலே வளைதல் கொள்ளல் வளைவோடு வளைத்தலும் பேர்
வேங்கை பொன் புலி ஓர் தாரு வீங்கலே பொருமல் தூங்கல்
**54
#9
தாங்கலே சுமத்தல் காத்தல் தடாகம் இ முப்பேர் சாற்றும்
சோங்கு நாவாயே சோர்வு குருகு எனச் சொல்லும் முப்பேர்
பாங்கு அணி உரிமை பால் ஆம் பங்கயன் பிரமன் பானு
தீங்கு என்ப தீமை குற்றம் செங்கை கை ஆதிரைப் பேர்
**55
#10
நீங்கலே பிரிதல் போகல் நீங்குதல் மாற்றல் நாற்பேர்
நூங்கு அண்ணல் மிகுதி ஆகும் நுங்கலே விழுங்கல் உண்டல்
தேங்கல் அச்சக்குறிப்பு நிறைதலும் இருபேர் செப்பும்
பாங்கரே வளாகம் நண்பர் பக்கமும் முப்பேர் ஆமே
**56
#11
சங்கம் ஓர் எண் கணைக்கால் சவை வளை புலவர் நெற்றி
பொங்கும் ஓர் நிதி சங்கோடு புணர்ச்சியும் புகலல் ஆகும்
தொங்கலே பீலி பீலிக்குடை மாலை தூக்கு குஞ்சம்
பங்கி வெண்குடையே துக்கம் பகர் பெயர் இரு நான்கு ஆமே
**57
#12
ஏங்கலே உரோதனம் மிக்கு இரங்குதல் உட்கலோடு
தூங்குறும் மயிலின் ஓசை துவைத்தலும் சொல்லும் ஐம்பேர்
ஓங்கலே உயர்ச்சி நாவாய் ஒருத்தல் மேடு இவர்தல் வன்மை
மூங்கில் கக்குதல் பொருப்பு முதலவனும் ஈரைந்து ஆமே
** ( ஙகர எதுகை முற்றிற்று )
@3 சகர எதுகை
**58
#1
அசி படைக்கலமே வாளே அவமதிச்சிரிப்பு முப்பேர்
நிசி இரா மஞ்சள் பொன் ஆம் நிசாதனம் இடமே உண்மை
பிசி என்ப பொய்யும் சோறும் பேசஅரும்பெருளும் முப்பேர்
சுசி ஆடிமாதம் சுத்தம் சுவேதம் வெண்குடை நெருப்பு ஆம்
**59
#2
பசு ஏறு சீவன் ஆ ஆம் பசப்பு என்ப பசலை பொன்மை
வசுவே ஆன்கன்று தீ பொன் வசுக்கணம் கிரணம் என்ப
அசம் மூவாண்டுறு நெல் ஆடு ஆம் ஆசனம் இருப்புப் பீடம்
சசி அயிராணி மாரி சந்திரன் கடல் கர்ப்பூரம்
**60
#3
விசும்பு பொன்னுலகு மேகம் விண்ணொடு திசை நாற்பேரே
தசும்பு பொன் குடம் மிடாவே தசம் என்ப சிவிகை பத்து ஆம்
கசம் கயம் இரும்பு கோலி கரியும் ஓர் அளவுங் காட்டும்
குசம் மரப்பொது தருப்பை கொங்கை நீர் புறங்கூறல் பேர்
**61
#4
இசை புகழ் வண்மை பொன் சொல் இனிமை பண்பு இசைப்பும் பாட்டும்
பிசிதமே உதகம் வேம்பும் இறைச்சியும் பேசும் முப்பேர்
வசி கூர்மை வருட்டல் குற்றம் வசியம் வாள் வடு திரட்சி
அசைதலே துவளல் சோம்பல் ஆடுதல் தயங்கலும் பேர்
**62
#5
மிசை என்ப வறுமை உண்டி மேடு மேல் உயர்ச்சி சோறு ஆம்
விசயமே வென்றி வெல்லம் வெண்கதிர்மண்டலப்பேர்
முசலி தண்டு உடும்பு தாழை முதலை நல் பல்லி வெள்ளை
வசதி நல்லிடம் ஊர் வீடு ஆம் மச்சு மேனிலை குற்றப்பேர்
**63
#6
விசனம் பேராசை துன்பம் விசிறி மானிடரில்லாப்பால்
அசனமே உணவு சோறே ஆம் வேங்கைமரமும் ஆகும்
கசிவு என்ப வருத்தம் வேர்வை கலுழ்தல் அன்பொடு நாற்பேரே
அசலமே மலையும் பாரும் அசையாதநிலையும் ஆமே
**64
#7
வசந்தம் தென்காலே வாசம் வலாரிமாளிகையே வேனில்
பிசின் பஞ்சின்நூல் வானீரம் பேச்சு என்ப வார்த்தை சொல்லல்
வசந்தன் மன்மதன் தென்கால் ஆம் மாசேனன் அருகன் தேவன்
துசம் தவிடு உமியே பல்லு துவசம் குங்கிலியமும் பேர்
**65
#8
ஒசிதலே முரிதல் ஊசல் ஊசியே ஆணி சூசி
குசை குசம் சுவல் முட்டோடு வாய்வட்டம் கூறும் நாற்பேர்
வசை பழிச்சொல்லே குற்றம் மாசியே மகம் ஓர் மாதம்
பிசுனனே பொய்யன் கோளன் உலோபனும் பேசும் முப்பேர்
**66
#9
மச்சமே மீன் ஓர் தேயம் மயிலை ஓர் புராணம் என்ப
கச்சையே பழுதை யானைக்கயிறு கஞ்சுகி வடுப்பேர்
செச்சை மை வெட்சி தேய்வை தில்லம் நீறு உகளம் என்ப
மிச்சையே பொய்த்தல் ஆகும் மிடிமை அஞ்ஞானமும் பேர்
**67
#10
பிச்சமே இறகு பித்தை வெண்குடை பீலிக்குஞ்சம்
இச்சை பொய் ஆசை என்ப இடித்தலும் இயம்பும் அப்பேர்
எச்சமே குறை உச்சிட்டம் யாகம் சேய் தனையை சேடம்
அச்சமே அகத்தி ஐமை அஞ்சல் இ முப்பேர் ஆமே
**68
#11
வச்சிரம் சதுரக்கள்ளி வயிரமே குலிசம் முப்பேர்
நொச்சியே சிந்துவாரம் மதில் சிற்றூர் நொச்சிமாலை
தச்சனே அறுவை தச்சன் தசை என்ப புலால் ஊன் ஆகும்
உச்சி ஆண்மயிரே சென்னி நடுப்பகல் உச்சி நாய் ஆம்
**69
#12
நச்சு நஞ்சு ஆசை என்ப நசை அவா ஒழுக்கம் ஆகும்
பொச்சையே அடவி வெற்பு கரிகாடு பொற்றை நாற்பேர்
துச்சில் சூட்டு ஒதுக்கிடப்பேர் சுசிகரம் நேர்மை தூய்மை
அச்சு அடையாளம் வையத்தச்சு உயிர் ஆகும் முப்பேர்
**70
#13
ஆசியம் அசி முகப்பேர் அச்சுதன் கடவுள் வாமன்
நீசகம் எளிமை நீர் ஆம் நிசாந்தம் வைகறை வீடு ஆகும்
பூசை அற்சனை பூனைப் பேர் பொச்சாப்பு மறவி தீது ஆம்
யோசனை தியானமே ஓர் எல்லையின்அளவு ஒலித்தல்
**71
#14
ஈசன் மால் அரன் கோன் மூத்தோன் இறை குரு கடவுள் வேதன்
பாசி நாய் வருணன் நீரில்படர்பாசி நெட்டி நாற்பேர்
சாசனம் வலையர்சேரி தண்டனை இறையிராவூர்
கேசவன் திருமால் சோழன் கெழு நிறைமயிருளோன் ஆம்
**72
#15
ஓசையே சீர்த்தி வாழை ஒலியொடு முப்பேர் ஆகும்
கூசல் நாணுதலே அச்சக்குறிப்பொடு பயமும் என்ப
பீசமே விதை மோவாயோடு இராசீவச்சுருள் முப்பேர் ஆம்
காசறை மயிர்ச்சாந்தோடு கத்தூரி மணியும் ஆமே
**73
#16
பாசனம் என்ப சுற்றம் பாண்டம் உண்கலனும் பன்னும்
வாசம் ஊர் இறகு அம்பு ஆடை மணம் இருப்பிடமே வேகம்
கோசமே மதிலுறுப்பு ஆண்குறி முட்டை முறை பண்டாரம்
தேசிகன் வணிகன் தேசாந்திரி குரு அரசனும் பேர்
**74
#17
மூசல் மொய்த்திடல் சா என்ப மோசனம் தீர்தல் ஓர் நெல்
கீசகம் குரங்கு மூங்கில் சித்தகம் கிளத்தும் முப்பேர்
வீசலே எறிதல் ஈவு ஆம் விச்சையே மறுகு வித்தை
கேசரம் மகிழ் பூந்தாது கேசவம் என முப்பேரே
**75
#18
ஆசு கைக்கவசம் அங்கி அற்பம் ஓர் கவி மாசு ஒல்லை
காசு பொன் மணியே மாதர்அணிவடம் கபம் கறைப் பேர்
ஆசினி பலா விசேடம் மரவுரி மரம் விண் சேகு ஆம்
தேசிகம் அழகு காந்தி திசைச்சொல் ஓர் கூத்து செம்பொன்
**76
#19
ஆசையே திசை பொன் அன்பு ஆம் அசனி வச்சிரம் இடிப் பேர்
காசையே காயா நாணல் கச்சு என்ப வம்பு தீ மீன்
பாசமே கயிறு கூளி பற்று ஊசித்துளையே அங்கி
தூசு சித்திரைநாள் ஆடை துகள் தூசி புரோசையும் பேர்
**77
#20
பாசு என்ப பசுமை மூங்கில் பசை என்பது இலாபம் ஆசை
மாசு அற்பம் கருமை குற்றம் மழை முகில் அழுக்கும் அப்பேர்
கேசமே சுரியல் பங்கி கிளர் வாசிஉளை முப்பேரே
வாசி புள் முதல்நாள் அம்பு மா இசை மிகுதி ஆமே
**78
#21
தாசியே அடிமை சைரேயகமொடு தருமநாள் ஆம்
வேசரி கழுதையே கோவேறுவேசரியும் ஆகும்
ஆசுகம் வயானம் காற்றோடு அத்திரம் முப்பேர் என்ப
கோசிகம் சாமவேதம் கூறை பட்டாடையும் பேர்
**79
#22
பச்சை ஓர் புதரே நற்கோள் பரிமளம் புரணி பைமை
அச்சுதனுடன் இலாபம் ஆம் மரகதமும் எண்பேர்
கச்சமே வார் முன்றானை கடன் படி மரக்காலோடு
கச்சையே அளவு தேற்றம் கயிறும் பேர் ஒன்பானாமே
** சகர எதுகை முற்றிற்று
@4 ஞகர எதுகை
**80
#1
துஞ்சலே நிலைபேறோடு துயில் சோம்பு சாவும் ஆகும்
பஞ்சரம் செருந்தி கூடு குயிலாயம் பகரும் முப்பேர்
கஞ்சமே தாளம் குல்லை கமலம் வெண்கலம் நீர் அப்பம்
குஞ்சம் ஈயோட்டி நாழி குறளை கூன் குன்றி சிந்து ஆம்
**81
#2
நெஞ்சு என்ப மனமும் மார்பும் துணிவுமே நிகழ்த்தும் முப்பேர்
மஞ்சு பூண் பனி ஏர் மேகம் வலி யானைமுதுகு நாகு
வஞ்சி மேற்செலவு ஓர் ஊர் பா வல்லி பெண் இயக்கி என்ப
தஞ்சம் அன்பு எளிமை பீடு பற்றுக்கோல் துணை தாழ்வு ஆமே
**82
#3
அஞ்சனம் கறுப்பு மை திக்கானையில்ஒன்று முப்பேர்
மஞ்சரி தளிர் பூங்கொத்து மாலை பூத்திரள் ஓர் நூல் ஆம்
அஞ்சலி வணங்கல் வாவல்பறவையும் ஆகும் என்ப
இஞ்சி ஆத்திரதம் வாவி எயிலொடு பரிசையும் பேர்
**83
#4
கிஞ்சுகம் முள்முருக்கு கேகயம் சிவப்பு முப்பேர்
கஞ்சனம் வயவன் ஆடி காரிப்புள்ளொடு கைத்தாளம்
பஞ்சமே சிறுமை ஐந்து ஆம் பாஞ்சாலம் அழகு ஓர் தேயம்
வஞ்சனை அணங்கு பொய்யே மாயையும் வகுக்கும் முப்பேர்
**84
#5
குஞ்சி ஓர் அளவு பங்கி குன்றியின்புதர் முப்பேரே
வஞ்சமே சிறுமை பொக்கம் வாளொடு கொடுமையும் பேர்
கஞ்சனே குறளன் வேதன் காஞ்சனமே பொன் புன்கு ஆம்
கஞ்சிகை சிவிகை ஆடை கட்டிடு திரையும் ஆமே
**85
#6
மஞ்சிகை தாளி பேழை வல்லிகை பொருள்பெண்டு என்ப
முஞ்சல் முற்றுதலே சாவு ஆம் முஞ்சி ஓர் நாணல் முஞ்சி
கஞ்சனை கலசப்பானை கண்ணாடி இருபேர் காட்டும்
அஞ்சல் அஞ்சுதல் தோல்விப் பேர் அஞர் துன்பம் அறிவிலார் ஆம்
**86
#7
பஞ்சி நூல் பருத்தி தூசு ஆம் பஞ்சமம் செவ்வி ஓர் பண்
கஞ்சியே மோழை காஞ்சி கஞறலே அடர்பு எழுச்சி
அஞ்சிதம் பூத்தல் ஒத்தல் ஆஞ்சியே சோம்பல் கூத்து ஆம்
அஞ்சனை அனுமன்தாயே வடதிசையானைப்பெண் பேர்
**87
#8
கஞ்சுகி எழினி பாம்பு காவலன் அங்கி நாற்பேர்
சஞ்சலம் அசைவு மின்னல் சாற்றும் உட்கவலை என்ப
பிஞ்சம் மாரணம் தூவிப் பேர் பிஞ்சகன் அரன் விநாசன்
வஞ்சனி வலவை மாது மாதரிக்குஏவல்செய்வாள்
** ஞகர எதுகை முற்றிற்று
@5 டகர எதுகை
**88
#1
நடலை வஞ்சனையும் பொய்யும் நடுக்கமும் துன்பமும் பேர்
மடல் பனையேடு போல்வ மலரிதழ் ஓர் நூல் என்ப
படர் நடை வருத்தம் சிந்தை பகை மேடு வழி நோய் வீரர்
குடம் நகர் கொடிறு ஓர் கூத்து கும்பம் ஆன் தசும்பு கட்டி
**89
#2
இடங்கரே முதலை நீர்ச்சால் குடம் இடங்கழியர் என்ப
முடங்கலே மடங்கல் கைதை மூங்கில் நோய் ஓலை ஐம்பேர்
படங்கு மேற்கட்டி என்ப பகர் பெரும்கொடியும் ஆகும்
விடங்கம் ஏர் கொடி கொடுங்கை முகடு ஆண்மை விளம்பும் ஐம்பேர்
**90
#3
குடிஞை புள்பொதுவும் யாறும் கூகையும் குடிசையும் பேர்
தடி வயல் உலக்கை வில்லு தண்டு மின் தசை உடும்பு ஆம்
தொடி வளை ஒரு பலப்பேர் சூழ்ந்த கங்கணமும் ஆமே
மடி அடங்குதல் பொய் சோறு வயிறு சோம்பு உடை நோய் தாழை
**91
#4
படிவம் மெய் வடிவம் நோன்பு ஆம் படப்பை ஊர்ப்புறமே தோட்டம்
வெடி அச்சம் அசனி தேறல் வெளி நறும்புகையும் ஐம்பேர்
துடி கலை உதடு உடுக்கை சூர்ப்பகையாடல் ஏலம்
கொடிறு என்ப கதுப்பு பூசம் பற்றிரும்பு எனவும் கூறும்
**92
#5
கடிகை நாழிகையே துண்டம் கதவின்தாள் சமயம் வேதம்
படிறு பொய் களவு வஞ்சம் பட்டே பட்டாடை சீறூர்
சுடிகையே மகுடம் உச்சி சுட்டி தம்மிலமும் ஆகும்
இடி இடி பிட்டு நெல்மா இசை சுண்ணம் உறுதிச்சொல்
**93
#6
உடு விண்மீன் கிடங்கு ஆடு அம்பு ஓடக்கோல் அம்பிலீர்க்கு ஆம்
கடு விடம் முள்ளுத்தானே அரிதகி கசப்பு நாற்பேர்
படு மரக்குலையே கள்ளு பரவு நீர்நிலையே நன்மை
படுதல் சா ஒலிஇன்றாதல் பகரில் உண்டாதல் பூத்தல்
**94
#7
மடை மதகு அவி துவாரம் அணிப் பணிக்கடைப்பூட்டும் பேர்
படை படைக்கலம் கலப்பை படுக்கை பல்லணம் போர் தானை
இடை நடு நுசுப்பு யானை இடம் நிறை பக்கம் என்ப
மடம் அறியாமை சத்திரம் மனை முனிவாசமும் பேர்
**95
#8
அடுப்பு என்ப பரணிநாளே அச்சமே சுல்லி முப்பேர்
வடுச் செம்பு தழும்பு குற்றம் வண்டு இளங்காய் கூர்வாள் ஆம்
இடக்கரே மறைத்தவார்த்தை விடர் கும்பம் நெருங்கல் என்ப
கடைப்பிடி மறப்பிலாமை கருதிய துணிவே தேற்றம்
**96
#9
விடம் நஞ்சு தெறுக்கால் ஆகும் வேட்டுவன் மகநாள் வேடன்
அடல் வலி கொலை சமைத்தல் அமர் வென்றி அறையும் ஐம்பேர்
உடல் பொருள் உடம்பு ஒற்று ஆகும் ஒடுங்கலே முணங்கு ஒதுங்கல்
விடபமே இடபராசி விடை மரக்கொம்பு முப்பேர்
**97
#10
இடம் அகம் விண் பீடு ஆக்கம் இடப்புறம் ததம் வளாகம்
வடகம் தோல் அத்தவாளம் வட்கலே நாண் கேடு ஆகும்
படுவி சாலினி குண்டு அப்பேர் பட்டிமை களவு மாயம்
நொடி பிதிர் கிளவி காலநுட்பமும் சொல்லும் முப்பேர்
**98
#11
சுடர் ஒளி தளிர் விளக்கு சோமன் ஆதவனே செந்தீ
சடம் உடல் கொடுமை பொய் ஆம் சாடு சாதுரியம் பண்டி
வடுகு உபநயனம் தேசம் மருதயாழ் இந்தளப்பேர்
வடவையே குதிரைப்பெட்டை உவாப்பிடி வடவைத்தீ ஆம்
**99
#12
கடை இடம் சோரி ஈறு கடை தடங்கடை கீழ் பாதை
உடை துகில் குடை வேல் செல்வம் உடைமையும் கலணையும் பேர்
அடை இலை கனமே அப்பம் அடுத்தல் செல்வழி ஐம்பேர் ஆம்
நடை வழி ஒழுக்கம் செல்வம் நடம் நடை நவிலும் ஐம்பேர்
**100
#13
விடை எதிர்மொழியும் ஏறும் விடுத்தலோடு இடபமும் பேர்
கிடை சடை உவமை என்ப கிடக்கையும் கிளத்தல் ஆகும்
படி அங்கவடி சோபானம் பகை குணம் உவமை பார் ஆம்
குடி குலம் புருவம் ஊர் ஆம் கொடி வல்லி துவசம் காக்கை
**101
#14
அடுதலே அட்டல் என்ப அடர்தலும் கொலையும் முப்பேர்
சடிலமே நெருங்கலோடு சடை குதிரையும் முப்பேரே
படலையே படர்தல் மாலை பதலையே வாசிக்கோவை
கிடுகு கேடகம் தேர்ச்சுற்று கிளர் சட்டப்பலகை முப்பேர்
**102
#15
படலிகை பீர்க்கு வட்டம் பரந்த கைம்மணி பூந்தட்டு
கொடியனே துட்டன் கேது ஆம் கொட்பு கோண் உலாவல் சூர்த்தல்
தொடு என்ப மருதப்பூமி தோட்டம் கைதவமும் ஆகும்
முடி சிகை துளவு நாறுமுடி சிரம் மகிடம் ஐம்பேர்
**103
#16
அடர் தகடுடன் நெருங்கல் ஐமையின்வடிவம் ஆகும்
விடர் முனிவாசம் தூர்த்தர் கமர் வெற்பின்முழை காடு ஐம்பேர்
விடலையே தலைவன் பேரும் விறலோன்தன் பேரும் ஆகும்
அடி செண்டுவெளி தாள் ஆதி கவிதையின்பாதம் நாற்பேர்
**104
#17
தொடை அம்பு நாணி மாலை தொடை மதில்சுற்று ஐம்பேர் ஆம்
முடை நாற்றம் புலால் குடைப் பேர் முடவன் பங்கு அருணன் மந்தன்
குடை உடை பிச்சம் கொட்டை குமரவேள்ஆடல் நாற்பேர்
நடு இடை நீதி பூமி நாட்டியமே கூத்து எண்ணம்
**105
#18
செடி ஒளி செறிவு தீது திடம் என்ப வலியே உண்மை
சடையே வேர் வேணி என்ப தடிதலே கொலை தறித்தல்
தடை அங்கி தகைதல் ஆகும் தடாரி பேரிகையே தக்கை
புடை இடம் பக்கம் என்ப புடம் இடம் புறமும் ஆமே
**106
#19
வடம் கயிறு ஊர் சாலேகம் வடமரம் வகுக்கும் நாற்பேர்
அடம் கீணமொடு சஞ்சாரம் ஆட்சியே உரிமை ஆண்மை
கிடங்கு அகழ் வாவி ஆகும் கேட்டை வல்லாரை தௌவை
மடங்கு நோய் அளவே என்ப வடி சுவா மது நீளப்பேர்
**107
#20
ஒடுக்கம் ஈறு அடக்கம் என்ப உடன்றலே பொருதல் கோபம்
விடுத்தலே தங்கல் உய்த்தல் வேட்டையே வேட்டம் நோய் ஆம்
கடுத்தலே உவமை ஐயம் கலாம் வேகம் கருதும் நாற்பேர்
தொடுத்தலே வளைத்தல் பற்றல் கட்டுதல் முப்பேர் சொல்லும்
**108
#21
சட்டகம் வடிவு சேக்கை தாபரம் முப்பேர் சாற்றும்
புட்டமே காகம் ஆகும் புடைவையும் நிறையும் அப்பேர்
குட்டமே தொழுநோய் ஆழம் குளம் எனப் பெயர் முப்பாற்றே
பெட்பு அன்பு பெருமை ஆகும் பேடு அலி மதன்கூத்து ஊர் ஆம்
**109
#22
திட்டையே உரலும் மேடும் திண்ணையும் நண்ணும் முப்பேர்
தட்டை வேய் தினைத்தாள் கிள்ளைதனிக்கடிகோல் தீ முண்டம்
கிட்டி கைத்தாளம் கிட்டி கிருட்டி நாழிகைவட்டில் பேர்
கட்டளை நிறை தூக்கு ஒப்பு கருவி இட்டிகை செய்சட்டம்
**110
#23
தட்டு தேர்நடுவு குற்றம் தட்டு ஆழி பலகை முட்டு
செட்டி வாணிகன் செவ்வேள் ஆம் திடன் என்ப வலியே வாய்மை
வெட்சி என்பதுவே செச்சை மிகு நிரைகவர்தல் ஆகும்
பட்டிகை அரைஞாண் கச்சு பஃறி தெப்பம் துகில் பேர்
**111
#24
நட்டமே நடனம் கேடு ஆம் ஞாட்பு அமர் பாரம் கூட்டம்
தொட்டல் என்பதுவே உண்டல் தோண்டல் கைதீண்டல் முப்பேர்
கட்டலே தடை பிணித்தல் கள்ளலோடு அகழ்தல் மூடல்
தட்டலே ஆணைசெய்தல் தடுத்தல் கிட்டுதலும் ஆமே
**112
#25
முட்டி காஞ்சிரமே பிச்சை முடுகலே கடுகல் ஏற்றல்
விட்டிலே சலபம் புக்கி வீடு என்ப மனை முத்தி பேர்
தட்டி கேடகமே சேமம் சட்பமே மயிர் இளம்புல்
வட்டிலே புட்டில் கூடை வள்ளம் முந்தரம் நாற்பேரே
**113
#26
மாடமே உழுந்து இல்லப்பேர் மடுவே நீர்நிலை பயம்பு ஆம்
ஏடகம் பனை நல்லாடை இலாங்கலி பலகை தோடு
சேடனே இளையோன் பாங்கன் சிலதனோடு அனந்தன் காளை
கேடகம் பரிசை வேறுஓர்கேடுஇல்ஊர் பலகை முப்பேர்
**114
#27
நாடி குந்தளம் நரம்பு நாசிகை நவிலும் முப்பேர்
பாடி தார் நகரம் நாடு பாசறை தடை ஆய்ப்பாடி
கோடிகம் துகில் பூந்தட்டு ஆம் குடம்பையே முட்டை கூடு
கோடி வில் புதுமை தூசு எண் குடுமியே கொற்றம் உச்சி
**115
#28
மாடு பொன் பக்கம் செல்வம் மணி நிரை இடமும் ஆகும்
சேடு என்ப பெருமை நன்மை திரட்சி ஏர் குழவு ஐம்பேர் ஆம்
பாடு இடம் பெருமை ஓசை படுதல் கேடு அன்பே பண்பு
ஈடு என்ப குழைவே ஒப்பே வலியொடு பெருமையும் பேர்
**116
#29
வாடையே பொதுவர்சேரி வடகாற்று வீதியும் பேர்
ஆடு மேழகமே கூர்மை அடல் மேடராசி கூத்து ஆம்
கோடை மேல்காற்றுக் கோடை குரகதம் கோடல் என்ப
ஓடை நீர்நிலை கிடங்கே ஓர் தரு நெற்றிப்பட்டம்
**117
#30
ஆடலே குளித்தல் கூடல் வார்த்தை கூத்து அமரே வென்றி
பாடலம் சிவப்பு வாசி பாதிரி சேரனூர்தி
கோடரம் குரங்கு சோலை கொம்பு எட்டி துரகம் ஏலம்
ஆடவர் புருடர் நாமம் ஆம் இளையவர்க்கும் ஆமே
**118
#31
ஆடகம் துவரை பொன் ஆம் அடவியே பொழில் காடு என்ப
கோடகம் சதுக்கம் வாசி கோடியே முடியுறுப்பு ஆம்
பீடிகை கடை பூந்தட்டு பீடமும் துமானமும் பேர்
தோடு இதழ் பன்னம் பெண்ணைமடல்போல்வ அணை தொகைப் பேர்
**119
#32
ஏடனே வதிரன் பாங்கன் இடும்பையே துன்பம் அச்சம்
காடு கானகம் ஊர் எல்லை களம் நரல் பரணிநாள் ஆம்
கோடல் காந்துகமே கோணல் கொள்ளுதல் முறித்தலும் பேர்
நாடு இடம் பக்கம் பூமி நடமே கூத்து ஓர் பண் ஆமே
**120
#33
நாட்டம் கண் நடனம் ஓர் பண் நாந்தகம் நவலும் நாற்பேர்
ஓட்டம் மேலுதடே தோல்வி உட்கு என்ப நாணம் அச்சம்
மூட்டம் மூளுதல் மூடல் பேர் முடுவல் அண்டிகம் சுவாவே
தோட்டி அங்குசம் கபாடம் துட்டனே தீயன் தேள் ஆம்
**121
#34
கூட்டமே தொகுதி யுத்தம் கூடுதல் மலாவகப்பேர்
சாட்டியம் வஞ்சம் நோய் ஆம் சாடி தூசு அகளி கும்பம்
காட்டை கால் நுனி திக்கு எல்லை காட்சியே அறிவு பார்வை
வாட்டமே தோட்டம் வீதி வழி வாடல் நாற்பேர் ஆமே
**122
#35
கடம் கடன் உடல் வான் சாரல் கடாம் சுரம் கரடம் நீதி
குடம் கடறு ஈமம் யானைக்குழாம் முழா விசும்பு ஈரேழ் பேர்
தடம் கரை விரிவு சாரல் சரி அணை யானைத்தண்டம்
கிடங்கு கோண் நிதம்பம் வேதி கிரி பீடு முந்நான்காமே
**123
#36
மடங்கலே அசனி சீயம் மறலி கேதகை ஊழித்தீ
முடங்கல் மீளுதலே ஊழி நோய் என மொழியும் ஒன்பான்
படம் கரிமுகபடாம் நல் துகில் கிழி பணிப்பணத்தோடு
இடுந்திரை கதலிகைக்கும் எய்திய நாமம் ஆமே
**124
#37
புட்கரம் நிறைவு பாண்டமுகம் தீர்த்தம் புனல் வான் சேனம்
கட்கம் பங்கயமே யானைக்கைநுனி குருகு ஈரைந்தாம்
பட்டி சிற்றூர் தூசு அம்பி பலகறை வளாகம் கள்ளல்
குட்டன் ஓர் செடியினோடு கூறும் எண்பேரது ஆமே
**125
#38
பட்டமே ஓடை கட்கம் பதவை கேடகம் தூசு ஆறு
குட்டமோடு அமளி நானம் பணவமும் ஈரைங்கூற்று ஆம்
வட்டம் நீர்ச்சால் குண்டு ஆழி வலயம் எல்லரி தட்டு ஊர்கோள்
புட்டம் ஆசனமே வாவி போற்றிய ஈரைம்பேரே
**126
#39
கோடு சங்கு ஊதும்கொம்பு மரக்கொம்பு விலங்கின்கொம்பு
நீடு செய்வரம்பு குன்றின்முகடு நீர்க்கரை மாடு எண்பேர்
கூடம் இல் மறைவு வஞ்சம் கொல்லன் சம்மட்டி கூட்டம்
கோடுறு கரியின்பந்தி மலைமுடி கூறும் ஏழ்பேர்
**127
#40
கடி மணம் புதுமை காப்பு கடித்தல் பேய் இன்பம் அச்சம்
வடிவு விம்மிதம் சிறப்பு வரைவு ஆடல் ஐயம் ஏற்கும்
கடிஞை சீக்கிரம் கரிப்பு காலம் கத்திகை மனத்தோடு
அடைவுறு விளக்கம் நாற்றம் ஐயமும் இருபத்தொன்றே
**128
#41
கோட்டமே ஓடை வாசம் கோவில் அவ்வியம் ஆன்கொட்டில்
நீட்டு உவா மருதத்துஊர் கோண் நீள் வயல் கவி படப்பை
நாட்டுடன் ஈமம் வீணை நல்லறம் அமரர்கற்பம்
கூட்டம் நீர்நிலை வளாகம் குராமரம் இருபான்பேரே
** ( டகர எதுகை முற்றும் )
@6 ணகர எதுகை
**129
#1
புணர்வு தோய்ந்திடல் இசைப்பு ஆம் புணர்ச்சியே கலவி கூடல்
உணர்வு என்ப தெளிவே ஊடல் ஒழித்தலும் அறிவும் ஆகும்
குணம் பண்பு கயிறு சீர்மை கும்பம் கேழ் நாணி என்ப
கணம் உடு நோய் திரட்சி காலநுட்பம் பேய் வட்டம்
**130
#2
குணில் கயிறொடு கடிப்பு குறுந்தடி கூறும் முப்பேர்
மணி நவமணியே கண்டை வனப்பொடு கருமை நன்மை
துணி ஒளி சோதி துண்டம் தூக்கமே தெளிவும் ஆகும்
பிணிமுகம் எகினம் மஞ்ஞை புள்பொது பேசும் முப்பேர்
**131
#3
துணை இணை சகாயம் ஒப்போடு அளவு எனச் சொல்லும் நாமம்
பிணை நசை தொடையல் கட்டு பெண்விலங்கு உடன்பாடு ஐம்பேர்
கணை அம்பு திரட்சி பூரம் கனை பாராவளையம் என்ப
துணைவன் ஓர்உதரத்துற்றோன் தோழன் மந்திரி வேட்டோன் ஆம்
**132
#4
அணங்கு நோய் ஏர் சூர் அச்சம் ஆசை பெண் கொலை அரம்பை
துணங்கையே விழா பேய் கூத்து ஆதிரை நாளும் சொல்லும்
குணுங்கர் தோல்கருவிமாக்கள் குயிலுவர் இழிஞர் முப்பேர்
துணங்கறல் இருள் விழா ஆம் துணர் மலர் இணர் பூங்கொத்தே
**133
#5
புணரியே வாரி நீரில்பொரும்திரை கரை முப்பேர் ஆம்
பணிலமே சலஞ்சலம் சங்கு இருபெயர் பகரலாமே
கணி வேங்கைமரம் ஓர் சாதி கழனி சூழ் மருதமும் பேர்
பணி ஏவல் மொழி பாம்பு ஈகை பட்டு தோல்கருவி பூண் ஆம்
**134
#6
பிணி கட்டு துன்பம் நோய் ஆம் பிணாப் பட்டம் சுவாவே கேழல்
குணி ஊமை பண்பி வில் ஆம் குணக்குக் கீழ்த்திசை கோணல்
இணை துணை உவமை கூந்தல் இச்சையும் இயம்பல் ஆகும்
புணை தெப்பம் விலங்கு வேய் ஆம் புண்ணியம் அறம் தூய்மைப் பேர்
**135
#7
பணம் என்பது அரவின் துத்தி பாம்பு பொற்காசு பீனம்
மணம் என்ப வாசம் கூட்டம் வதுவையும் மதர்ப்பும் ஆகும்
நுணவையே தணக்கு மா எண்ணோலையும் நுவலும் முப்பேர்
பணவை பேய் இதணம் புள் ஆம் பாண் மது இசைப்பாட்டு ஆமே
**136
#8
அணு உயிர் நுண்மை அற்பம் ஆணுவே இரதம் நன்மை
பிணைவு சையோகம் பின்னல் பெண் என்ப பிணவல் மாது
அணை என்ப குரம்பு சேது அமளி நீர்க்கரையும் ஆகும்
அணி தொடை பணி பீடு ஏர் நன்று அலங்காரம் நிரை ஊகப்பேர்
**137
#9
கண்டனே புருடன் கிள்ளி கணக்கு என்ப எழுத்து எண் ஆகும்
சண்டனே நடுவன் பேடி சதாசிவன் பருதி காலன்
முண்டமே கவந்தம் மொட்டை மூர்த்தினி அவையல் என்ப
சுண்டமே மதகயத்தின் துதிக்கையும் மதுவும் ஆமே
**138
#10
அண்டம் ஆகாயம் முட்டை அழுப்புகம் பிரமாண்டப்பேர்
துண்டமே வதனம் கோணம் துணி அரா சிலமேசு அஞ்சாம்
கண்டமே அயிரம் மெய்ப்பை கழுத்து ஆணி திரை வாள் துண்டம்
கண்டையே துகில் யானைமணி பெருமணியும் காட்டும்
**139
#11
நொண்டலே நுங்கல் நொண்டல் நுணங்கு என்ப சுணங்கே நுண்மை
தண்டலை சோலையே பூந்தோட்டம் ஓர் ஊரும் சாற்றும்
மண்டலே மிகல் நெருங்கல் மாணலே மாட்சி நன்று ஆம்
கண்டகர் அவுணர் கையல் நிருதரும் கருதும் முப்பேர்
**140
#12
அண்டரே பகைவர் வானோர் ஆயர் என்று ஆகும் முப்பேர்
சுண்டனே சதயம் சூறன் அறிவிலி முப்பேர் சொல்லும்
கண்டல் கேதகை முள்ளிப் பேர் கண்ணுதல் கருதல் ஈசன்
பண்டம் மெய்யறிவு சொன்னம் பரிகாரம் பகரும் முப்பேர்
**141
#13
குண்டலம் குழை விண் வட்டம் குண்டமே பானை குண்டம்
மண்டிலம் நடம் போர் வாளி வாசி மண்டலம் நாடு ஆகும்
கொண்டலே முகில் கீழ்காற்று ஆம் குண்டு உலம் கயம் தாழ்வு ஆண்மா
மண்டலி சுவாவே கூட்டம் மனைப்புலி புவி பாம்பு ஆமே
**142
#14
கண்டி தோளணி பதக்கம் கடிப்பம் ஓர் அளவும் ஆகும்
குண்டி மீன்சினை ஈரல் பேர் குண்டலி காளி பாம்பு ஆம்
சுண்டியே மது நீர்ச்சுண்டி சுக்கொடு முப்பேர் ஆகும்
பண்டியே சடரம் ஊற்றால் சகடமும் பகரற்பாற்றே
**143
#15
விண்டு என்ப மாயோன் வெற்பு மேகம் ஓர் நூல் வேய் காற்று ஆம்
தொண்டு என்ப பழமை ஒன்பான் தொழும்பு வந்தனை சுக்கு ஆகும்
தண்டு வேய் குழாயே வீணை தடி படை மிதுனம் ஓந்தி
வண்டு சங்கு இழிவு பூசம் வளை அளி வாளி ஆமே
**144
#16
உண்டையே திரளை ஆகும் உறு படைவகுப்பும் என்ப
தொண்டை ஆதொண்டை கொவ்வை களம் யானைத்துதிக்கை நாற்பேர்
கொண்டை பின்னகமே கோலம் கொண்மூவே மேகம் விண் ஆம்
கண்டிகை வலையம் கரண்டம் கடகமே மதாணியும் பேர்
**145
#17
குண்டை ஏறு இடபம் ஆகும் கோணாய் ஆண்நரி தோண்டான் ஆம்
மண்டை கப்பரை கபாலம் வண்டரே இயவர் எட்டர்
சண்டிகை துற்கை காளி சண்டமே கரில் பேடு ஒல்லை
இண்டை முண்டகமே மாலை ஈங்கையும் இயம்பும் முப்பேர்
**146
#18
பண்ணவன் முனிவன் தேவன் பரமேட்டி யவணன் ஆசான்
தண்ணடை துடி கான் நாடு தமாலமே மருதம்சார்ஊர்
வண்மை ஏர் வழங்கல் வாய்மை வளம் புகழ் வலி ஆம் என்ப
ஒண்மையே மிகுதி நன்மை ஒழுங்கு அறிவு அழகு ஐம்பேரே
**147
#19
தண்ணமே பரசு காடு ஓர்கண்பறை தண்மையும் பேர்
வண்ணம் ஏர் நன்மை பண்பு வடிவு அலங்காரம் கேழ் ஆம்
பண் அரிக்கலனை பண்ணை பாட்டு நீர்நிலை பண் ஆகும்
மண் அணு கழுவல் பூமி முழவின் மாற்சனை மாண்பு ஒப்பு ஆம்
**148
#20
கண்ணி தாம்பு அரும்பு பட்சிக்கண்ணி பூங்கொத்து மாலை
வெண்மையே மடமையோடு வெளிறு கோமளம் மூன்று ஆமே
மண்ணலே கழுவல் வேய்தல் மணத்தலே கமழ்தல் கூடல்
பெண்ணை மித்திரநாள் நீலம் ஓர் நதி பேசும் முப்பேர்
**149
#21
கண்மையே நசை கண்ணோட்டம் கணிச்சியே பரசு தோட்டி
மண்ணையே இளமை அஞ்ஞை வியந்திரம் வகுக்கும் முப்பேர்
உண்மை மெய் அறிவு ஊழ் ஆகும் ஒண்ணுதல் பொருந்தல் பெண் ஆம்
தண்மை புல்லறிவு சீதம் தாழ்வு எண்மை பரிபவப்பேர்
**150
#22
விண் தலை சுவவு மேகம் விசும்புடன் இளமை ஐம்பேர்
பிண்டமே உடல் சோறு உண்டை பிச்சை மொய் கவளம் என்ப
கண்டகம் சரிகை முள் ஆம் கட்கம் கானகமும் ஆகும்
பிண்டி மா அசோகு கூட்டம் பிண்ணாக்கு புணர்தம் ஐம்பேர்
**151
#23
ஆணமே குளம்போடு அன்பு கொள்கலன் ஆகும் முப்பேர்
ஓணம் மாயோன்நாள் ஆறு ஆம் உண்டி புள்ஊண் சோறு உண்டல்
காணமே பரிஊண் செக்கு ஓர் கண்ணல் பொற்காசு அளத்தல்
கோணலே மாறுபாடு கூன் சிந்து வளைவும் ஆமே
**152
#24
தூணம் ஆவம் தூண் ஊழ் ஆம் துணுக்கம் உள்ளோசை அச்சம்
ஏணம் மான் அயிணம் பீடு ஏண் எண்ணலே மதித்தல் தேர்ச்சி
சோணிதம் குலிகம் செம்பால் துணைவியே சேடி பன்னி
காணியே குறிக்கோள் ஓர் எண் நிலன் எனக் கருதும் முப்பேர்
**153
#25
நாண் இலச்சைப் பேர்தானே கயிறு என்றும் நாட்டல் ஆகும்
தோணி நீர் கடைநாள் வங்கம் தொள்ளம் சேறு அம்பே நாயில்
வாணி ஓர் கூத்து சொல்லல் வாக்கு நாமகளும் ஆகும்
ஏணியே உலகோடு எல்லை இறைவை மான் என்றும் சொல்லும்
**154
#26
யாணரே புதுமை தச்சர் எழில் வளம் நன்மை ஐம்பேர்
பாணம்தான் மேகம்வண்ணக்குறிஞ்சியே கணை பூம்பட்டு ஆம்
சாணமே சிலாபட்டத்தொடு ஆப்பியும் இருபேர் சாற்றும்
ஆணை மெய் தடை சூழ் வென்றி அறிகுறி பணியும் ஆமே
**155
#27
பேணலே கருதல் ஓம்பல் பேரவா விருப்பம் நாற்பேர்
தூணி ஓர் அளவே ஆவம் துணர் என்ப மலர் பூந்தாது ஆம்
கோணை அச்சுதமே வெம்மை கொண்கனே மெல்லன் பத்தா
வேணியே சடிலம் ஆயர்வீதி யாறுடன் ஆகாயம்
**156
#28
கோணம் அங்குசம் வளாவல் குதிரை தெரு வளைந்தகட்கம்
நாணல் நாணுதல் நாணல்புல் ஞாண் என்ப கயிறு வில்நாண்
ஆணரே பாணர் நன்மை அணவல் அணுகல் புல்லல்
காணலே குறித்தல் எண்ணல் வணங்கலும் கருதும் முப்பேர்
**157
#29
கேணியே துரவு கூவம் கிடங்கொடு குளமும் ஆகும்
சேணி கேசரர்ஊர் என்ப இறைவையும் செப்பும் நாமம்
பூணி ஏறு இடபராசி புணர்ப்பு என்பது உடம்பு கூடல்
தாணுவே தண்டம் குற்றி சங்கரன் நிலை தூண் ஆமே
**158
#30
கோண் கொடுங்கோன்மை கோட்டம் கோணியே ஏனம் ஓர் எண்
சேண் நீளம் அகலம் தூரம் உயரம் விண் செப்பும் ஐம்பேர்
தூண் பற்றுக்கோலே தம்பம் தூண்டலே எடுப்பல் உய்த்தல்
ஆண் மகன் தலைமை என்ப ஆண்விலங்கு எனவும் ஆமே
**159
#31
காண்டலே இறைஞ்சல் எய்தல் காணுதல் கருதும் முப்பேர்
நோண்டலே அகழ்தல் கீண்டல் முகத்தலும் நுவலல் ஆகும்
வேண்டலே அவா விருப்போடு இரத்தலும் விளம்பும் நாமம்
ஈண்டு சீக்கிரம் இவ்வண்ணம் இவ்விடம் இண்டையும் பேர்
**160
#32
பணை பரிப்பந்தி பீனம் பறை சினை மருதம் மூங்கில்
கிணை வயல் சுவலை பாழி பிழைத்தலும் கிழத்தும் நாமம்
திணை இருதிணை ஒழுக்கம் அகப்புறத்திணைகளோடு
நணுகு இடம் குடியே வையம் குலமுமே நாட்டும் பேர் ஆம்
**161
#33
புண்டரீகம் வெண்கஞ்சம் புலி வண்டு தென்கீழ்த்திக்கில்
திண்டி வெண்குடை சகுந்தம் செய்ய கோகனகம் ஏழ்பேர்
முண்டகம் தாழை நெற்றி முளரி முத்தகம் முள்மூலம்
தெண்திரை வாரி முள்ளி மது இருநாற்பேர் செப்பும்
**162
#34
அண்ணல் பீடு அருகன் செம்மல் அணவுதல் குரிசில் முல்லைக்
கண்ணிய தலைவன் புத்தன் ஆகும் முன்னவனும் எண்பேர்
எண் அளவு எள் இலக்கம் எளிமை சோதிடநூலோடு
திண்மை எண்ணிக்கை மற்றை எண்ணலும் செப்பும் அப்பேர்
**163
#35
கண் இடம் பெருமை வேரல் கணு நயப்புணர்வு நாட்டம்
எண்ணும் ஓர் உருவின் பேரோடு இயம் சந்திரகம் எண்பேர்
பண்ணையே குளம் நீர்த்தாழ்வு பணை பொய்தல் அகனி நீலுண்
கண்ணியர்ஆடல் மாவின்துயிலிடம் ஏழ்பேர் காட்டும்
**164
#36
பாண்டிலே கிணி இடிஞ்சில் பண்டி ஏறு இடபம் பீரம்
நீண்ட வேய் தேயம் மஞ்சம் கோளகை நிகழ்த்தும் பத்தாம்
காண்டமே நீர் காடு எல்லை கரகம் கோல் எழினி உண்டை
தூண்டுகோல் படை துமானம் துகில் பரி வரை பன்மூன்றே
**165
#37
தண்டம் ஊன்றிடுகோல் நாடு தண்டிப்பு துதிக்கை தஞ்சம்
கொண்ட தெண்டு யானைசெல்லும்வழி குடைக்கால் குரம்பு
எண்தரும் அனீகம் ஊர்தி இடுதண்டமொடு பண்டாரம்
தெண்டனிட்டிடுதலோடு செப்பும் ஈரேழு பேர் ஆமே
**166
#38
பாணி புட்கரமே ஊரே பரிகாரம் இசைப்பாட்டு அங்கை
வாணிதம் ஓசை கூத்து மாற்றம் சங்கீதம் நாடு
சேணுறு சோலை காலம் சிறந்த பல்லியம் பற்றோடு
பூணுறு விளம்பம் என்னப் போற்றும் ஈரெண்பேர் ஆமே
** ணகர எதுகை முற்றிற்று
@7 தகர எதுகை
**167
#1
மதலையே கொன்றை பிள்ளை மரக்கலம் கொடுமை தூண் ஆம்
சிதலை நோய் துணி செல் என்ப சீதம் நீர் குளிரே மேகம்
பதலை வெற்பு அகளி ஓர்கண்பறையும் தண்ணுமையும் ஆகும்
கதலியே வாழை தேறு காற்றாடி துவசம் ஆமே
**168
#2
இதழ் பனையேடு பூவினிதழ் உதடு இமையும் நாற்பேர்
கதழ்வு வேகம் விதப்பு கலந்தையும் சிறப்பும் ஆகும்
சிதடன் அந்தகன் மூடன் பேர் திதி பக்கம் நிலையே காத்தல்
மதுகமே இருப்பை எட்டி மதுரமா தராவும் ஆமே
**169
#3
மதன் வலி வண்மை வேள் ஏர் மாட்சிமை கலக்கம் என்ப
பதங்கம் புள்பொது விட்டில் பேர் பதுக்கையே பாறை தூறு
சிதம் விண்மீன் வெண்மை ஞானம் செயமுறப்பட்டது ஆமே
நிதம்பமே அல்குல் என்ப நெடு மலைப்பக்கமும் பேர்
**170
#4
சுதை மகள் கறவாத்தேனு சுண்ணச்சாந்து அமுதம் வெண்மை
புதை மறை ஆகம் அம்பின்கட்டு அம்பு புதுமை என்ப
மது இணர் வசந்தம் தேன் கள் வண்டு மால் சைத்திரைப் பேர்
கதை தண்டாயுதமே வார்த்தை காரணச்சொல்லே தண்டு ஆம்
**171
#5
சதம் இலை இறகு நூறு நிலைமையும் சாற்றும் நாமம்
கதவமே கபாடம் சேவல் காத்தலும் கருதும் முப்பேர்
வதுவையே மணம் கல்யாணம் மாது என்பது அசைச்சொல் பெண் ஆம்
நுதல் நெற்றி புருவம் ஆகும் நோதல் நோய் கெடுதல் ஆமே
**172
#6
கதுப்பே பெண்மயிர் ஆன்கூட்டம் கவுளும் ஆண்மயிரும் ஆகும்
விதப்பு ஒல்லை மதிலுறுப்பு ஆம் மிகுதி கம்பிதமும் அப்பேர்
அதிர்ப்பு ஒலி நடுக்கம் அச்சம் அதிர்தலும் அறையும் நாமம்
ஒதுக்கமே நடை மறைப்பு ஆம் ஓதனம் உணா போர் ஆமே
**173
#7
மதர்வு என்ப களி வனப்பு வலி இடம் மிகுதி ஆகும்
புதவு என்ப கதவு ஓர் புல்லு பூழையும் புகலும் முப்பேர்
சிதர் உறி திவலை வண்டு சீலையின்துணி பூந்தாது ஆம்
அதர் வழி புழுதி ஆட்டின்அதரும் நுண்மணலும் ஆமே
**174
#8
முதலை செங்கிடை இடங்கர் முருந்து என மொழியல் ஆகும்
அதம் இறங்குதல் பாதாளம் அத்தி கீழ் சிரத்தல் ஐம்பேர்
கதி நடை விரைவு நான்குகதி வழி புகலே முத்தி
மதம் இபமதம் செருக்கு சமயம் சம்மதம் வலிப் பேர்
**175
#9
விதி விதம் தொழில் நீர் செல்வம் வேதன் ஊழ் நியமம் உண்மை
அதிகமே படை இலாபம் அலைத்துவமொடு வாசந்தி
மதி உடுபதி நிதானம் மாதம் கற்கடகம் ஒண்மை
முதுமையே பழமை மூப்பு முதுமொழி என முப்பேரே
**176
#10
உதகம் நீர் திவலை வைப்பு ஆம் உதவியே சகாயம் ஈகை
சிதகன் தூதுணமே சுங்கன் சிதன் என்ப மழைக்கோள் பீரு
பதணமே பரிகம் ஞாயில் பதமமே மதி புள் விட்டில்
இதம் என்பது உரிமை சொல் ஆம் இனிமையும் இயம்பும் முப்பேர்
**177
#11
கதம்பம் ஆன்கூட்டம் நீபம் கந்தமார்பொடி மராவம் ஆம்
விதம் பக்கியொடு விதப்பேர் விது என்ப மதி மால் ஆகும்
நதம் வளைவு என்ப மேற்குஓடுஆறுமாய் நவில்வர் மேலோர்
கதம் வலி கொடுமை கோபம் அரவு எனக் கருதலாமே
**178
#12
முதல் அகநிலையே ஆதி மூலகம் முப்பேர் சாற்றும்
குதலையே மழலை அஞ்ஞை குதையே சைவலம் குலைப் பேர்
புதல் என்ப புருவம் புல் ஆம் புதன் புந்தி கவிஞன் தேவன்
முதல்வனே கடவுள் சாது முக்கணன் அரசன் ஆமே
**179
#13
சிதவல் சீதாரம் சீரை சிதடியே பேதை சில்லை
பதவியே உலகம் செல்வம் பதவையும் கதியும் என்ப
மிதவையே உடுபம் தோரி வித்தமே சிதம் பொன் ஆகும்
கதவு என்ப கபாடம் காப்பு ஆம் கதிரம் கோல் கருங்காலிப் பேர்
**180
#14
மதர் அலைத்துவம் களிப்பு ஆம் மதலிகை சல்லி தூக்கம்
கதனமே சமர் கடுப்பு கலக்கமும் கருதல் ஆகும்
சதனம் இல் இலை தூவிப் பேர் சாதனம் குறி சார் ஊர் ஆம்
மதனமே மோனம் காதல் மதித்தலும் வகுக்கல் ஆமே
**181
#15
பிதா அரன் அருகன் தந்தை பெருநாரை கடவுள் வேதன்
நிதானமே படை பொன் ஆதிகாரணம் நிச்சயப்பேர்
விதானமே வானி வட்டம் விதம் உபாயமும் ஆம் என்ப
சதா நிரந்தரம் நாவாய் ஆம் ததி அளை பருவம் ஆமே
**182
#16
திதி நிலைபெறுதல் பக்கம் திரம் புரந்திடல் என்று ஆகும்
வெதிர் என்ப செவிடு வேய் ஆம் வேதிகை பலகை திண்ணை
நிதி இருநிதி செந்தாது நிறைவொடு மதலிகைப் பேர்
பொதி கிழி கரிக்காடு ஓலைக்குடையும் அம்பலமும் போற்றும்
**183
#17
உதி பதித்திரி ஒதிப் பேர் ஊதியம் இலாபம் கல்வி
இதி கழுது உறுதி ஆகும் இதரம் அந்நியமே ஈனம்
யதி முனி மோனை என்ப யாதனம் பஃறி ஓடம்
வதி வழி அள்ளல் ஆகும் வதானியன் தனதன் வள்ளல்
**184
#18
விதித்தலே பயத்தல் செய்கை விளம்பலும் விளம்பும் நாமம்
கதித்தலே எழுச்சி ஆர்த்தல் காதையே கலை சொல் என்ப
உதித்தல் வீங்குதலே தோன்றல் உதியனே வழுதி கொங்கன்
மதித்தலே ஞெலிதல் பேணல் மதத்தலும் வகுக்கலாமே
**185
#19
கதிர் பயிர்க்கதிர் அருக்கன் காந்தி தீவிரம் ஆர் ஆலோன்
எதிர் முன் ஒப்பொடு மாறு ஆகும் ஈதலே சொரிதல் ஈகை
கது வடுப்படல் வெடிப்பு ஆம் காதுதல் வகிர்தல் கொல்லல்
பிதிர் கதை நொடி பராகம் பிதிர்களும் திவலையும் பேர்
**186
#20
பொதிர்ப்பு அச்சம் நடுக்கம் என்ப புதுமை நூதனமே சால்பு
விதிர்ப்பு என்ப நடுக்கம் பீரே வேதண்டம் கைலை ஓங்கல்
மதிப்பகை இராகு கேது ஆம் மாதங்கி காளி துர்க்கை
வெதிர்ப்பே கம்பிதம் கலக்கம் மிகுசினக்குறிப்பும் ஆமே
**187
#21
அத்து என்ப அரைஞாண் செம்மை அசைச்சொல் சாரியை இசைப்பு
தொத்துப் பூங்கொத்து தொன்மை தொழும்பு எனச் சொல்லும் முப்பேர்
தத்தை மூத்தாள் கிளிக்கு ஆம் தத்துவம் வலி மெய் என்ப
உத்தரம் ஊழித்தீ மேலொடு மறுமொழி வடக்கு ஆம்
**188
#22
குத்தி மண் அடக்கம் என்ப கோத்திரை புவி வேதண்டம்
பத்தி நார் முறை ஒழுக்கம் வழிபாடு படைத்தொகைப் பேர்
அத்தி ஆர்கலியே யானை அதவு எறும்பொடு விநாசம்
சத்தியம் சபதம் மெய் ஆம் சத்தம் ஏழ் ஒலியும் ஆமே
**189
#23
பித்திகை கருமுகைக்குப் பெயர் சுவர்த்தலமும் ஆகும்
கத்திகை தொடை விகற்பம் துவசமே கமழ் வாசந்தி
உத்தி செந்திரு உறுப்பு சுணங்கு உரை உத்தி துத்தி
துத்தி நெய் விழவு நாள் ஓர் புதல் படப்பொறி சுணங்கு ஆம்
**190
#24
சித்திரபானு செந்தீ திவாகரன் ஆண்டு ஒன்றின் பேர்
பத்திரம் சுரிகை வெற்பு ஏர் படை இலை சிறகு அம்பு ஆணு
மித்திரன் நண்பன் பானு வித்தையே கல்வி ஞானம்
வத்திரம் முகம் தூசே போர்க்கருவியும் வகுக்கும் முப்பேர்
**191
#25
பத்திரி பறவை காளி பரி இலை பாணம் ஐம்பேர்
அத்திரி கழுதை விண் ஒட்டகம் பரி அசலம் அம்பு ஆம்
சத்தி கேது உமை வேல் கான்றல் தரம் குடை உதியே சூலம்
சுத்தியே அகல் வெண்சங்கம் சுத்தம் ஓர் கருவிக்கும் பேர்
**192
#26
புத்தனே உலகளந்தோன் புண்ணியன் அசைனன் என்ப
புத்தேளே புதுமை தேவு ஆம் புதர் புதர் புலவர் என்ப
தைத்தல் துன்னம் கைத்தல் பேர் சதாநந்தன் கடவுள் வேதா
முத்தமே அதரம் மென்பால் முத்தொடு பிரியமும் பேர்
**193
#27
முத்தனே அருகன் ஈசன் முத்தியோன் வாமன் காரி
சித்தனே குமரன் சாது சிவனொடு முப்பேர் செப்பும்
பித்தனே கள்வன் சம்பு பித்தன் கேத்திரபாலன் பேர்
சுத்தனே வேதனோடு சூலபாணியன் அசோகன்
**194
#28
அத்தனே மூத்தோன் தந்தை அரன் குரு கடவுள் சாந்தன்
சித்தமே திடம் உள்ளப்பேர் செதுக்கு அள்ளல் கணமே மந்தி
கைத்தலே அவைத்தல் கோபம் கசப்பு அலங்கரித்தல் ஆகும்
சித்து அடல் இட்டி ஞானம் செப்பிய மாயவித்தை
**195
#29
உத்திரம் சித்திரம் சேர்ந்து ஒளிரும் இல்லுறுப்பொடு ஓர் நாள்
பைத்தலே முனிவு பாம்புபடம்விரித்திடல் பசுத்தல்
மத்திகையே சம்மட்டி சுடர்நிலைத்தண்டு மாலை
மத்தம் உன்மத்தம் மத்து மகிழ்ச்சி ஊமத்தையும் பேர்
**196
#30
முத்தகம் என்பதே ஓர் செய்யுள் கத்திகை என்று ஆகும்
யுத்தமே நியாயம் கூடல் உசிதம் ஞாட்பு எனவும் நாற்பேர்
நித்தனே கடவுள் சாது நீறணிகடவுள் என்ப
ஒத்தலே பொருந்தல் மத்தி ஒத்துதல் ஒப்பும் ஆமே
**197
#31
மத்தகம் சென்னி பொல்லாநிலம் நுதல் வகுக்கும் முப்பேர்
முத்தை மிக்குஅறிவிலாளே முடலையே கவளம் என்ப
சித்தி எண்சித்தி முத்தி சித்தித்தல் முப்பேர் செப்பும்
மெத்தை அட்டாளம் சேக்கை விதை என்ப வித்தே பீடு ஆம்
**198
#32
கத்தியம் துகில் நல்லாடை இலக்கணக்கவிபோல்பாடல்
பத்தியம் கடுமரத்தோடு ஆந்திரப்பாட்டு இதப்பேர்
மத்தியம் இடையே நாப்பண் மது என வகுக்கற்பாலாம்
குத்திரம் அகாதம் ஒல்லை கோத்திரை முப்பேர் கூறும்
**199
#33
துத்தம் மத்திமம் நாய் கீரம் அகடு கண்மருந்தும் சொல்லும்
புத்தகம் கோசம் என்ப சித்திரப்படமும் போற்றும்
வித்தகம் அகலம் ஞானம் விம்மிதம் விளம்பும் முப்பேர்
பித்தமே மயக்கம் கூத்தின் விகற்பம் முப்பிணியின் ஒன்று ஆம்
**200
#34
ஆதன் ஆருயிரே பேதை அருகனோடு ஆசான் என்ப
வாதம் காற்று இரதவாதம் வாது முப்பிணியுள் ஒன்று ஆம்
ஏதமே துன்பம் கேடு குற்றமும் இயம்பும் நாமம்
சூதன் பப்புவன் தேர்ப்பாகன் சூதனும் பாணனும் பேர்
**201
#35
சூதம் பாரதம் எகின் மா சூது அளி பாரிசாதம்
சூதகம் சூசம் தோற்றம் தோகையர்பூப்பு தொன்மை
பூதம் ஆல் சுசி பேய் பாகு ஐம்பூதம் செல்காலம் சீவன்
மாதவம் தவம் வைகாசி வசந்தம் கள் இனிமை ஆமே
**202
#36
ஆதரம் சிவப்பு ஊர் ஆசை ஆதாரம்தான் மெய் மாரி
தூதுணம் புறவு சிந்தன் சுதம் என்ப முறைமை கேடு ஆம்
ஆதுரன் நோய்யுற்றோனோடு அவாவினன் எனவும் ஆகும்
தாதா ஈன்றோன் தியாகி தாமரைக்கிழவன் முப்பேர்
**203
#37
ஓதிமம் படகம் அன்னம் ஓங்கல் என்று ஓதும் முப்பேர்
போதமே பஃறி ஞானம் போற்றிய பரணிநாள் ஆம்
பாதிரி பாடலம் வேய் பதாதியே படை காலாள் ஆம்
ஏதி ஆயுதம் வாள் என்ப இதரர் அந்நியர் கீழ்மக்கள்
**204
#38
வீதி கால் ஒழுங்கு தாரை கடைவீதி தெருவும் என்ப
பூதியம் உடல் புவிப் பேர் பூதாரன் வேந்தன் மால் ஆம்
மாதிரம் திசை ஆகாயம் வரை புவியொடு மாதங்கம்
கேது ஓர் கோள் சின்னம் கேதனம் கிளத்தும் முப்பேர்
**205
#39
சீதையே பொன்னாங்காணி படைச்சால் சீராமன்தேவி
மேதை தோல் தசை மால் மிக்கோன் மேன்மை கள் அறிவு நாடி
கோதை நெற்சுமை கைக்கட்டி குழல் தார் காற்று அணி பெண் சேரன்
ஓதையே ஒலி உரற்றல் உவளகம் பதணமும் பேர்
**206
#40
பீதமே கசற்பம் சாத்து பிங்கலம் பொன்மை நாற்பேர்
பேதை ஓர் பருவம் மூடன் பெண் தரித்திரன் கள் பேடி
வாதுவர் யானைப்பாகர் வயப் பரிமாவடிப்போர்
மூதுரை ஆதிரைப் பேர் முக்கணன் பேரும் ஆமே
**207
#41
தாதியே அடிமை கைத்தாய் தருமநாள் முப்பேர் சாற்றும்
போதுதான் முகிழம் காலம் புட்பமும் செப்பும் முப்பேர்
நாதனே கடவுள் ஈசன் நரபதி குரு நிச்சிந்தன்
வீதலே கெடுதல் சாவு மிடிமையும் விளம்பும் முப்பேர்
**208
#42
பீதகம் சாந்து மூலகந்தம் பிங்கலம் பசப்பு ஆம்
ஓதம் ஆர்கலி தரங்கம் உற்ற நீர்ப்பெருக்கு முப்பேர்
காதம் நாற்சதுரக்கூவம் காவதம் கொலை கள் என்ப
பாதவம் விடபி கொல்லை பருப்பதம் உரைக்கும் முப்பேர்
**209
#43
ஆதல் ஆகுதல் நுணுக்கம் கல்விநூல் நடனம் ஆய்தல்
காதலி தனையை தோழி காந்தையும் முப்பேர் காட்டும்
ஊதலே பொருமல் ஆரவாரமோடு ஊதை என்ப
போதலே அகலல் நீளல் போகுதல் வரல் என்று ஆமே
**210
#44
சாதகம் பிறப்பு கூளி சனனப்பத்திரிகை கம்புள்
சேதகம் தொள்ளி செம்மை சித்திரன் தச்சன் ஓவன்
காதகம் கொலை வருத்தல் காதலே ஆசை கோறல்
பூதவம் ககுபம் ஆல் ஆம் போதி பிப்பிலம் வெற்பு ஆமே
**211
#45
சாதமே பிறப்பு பூதம் சரதம் சோறு எனவும் ஆகும்
வேதன் பீதகனே வேதா வேதாந்தன் விளம்பும் நாமம்
போதன் அற்புதனே வேதன் பொன்எயில்கோன் முப்பேர் ஆம்
ஆதபம் ஒளியே வெய்யில் ஆதபத்திரமும் ஆமே
**212
#46
மாதவன் வசந்தன் மால் ஆம் மாதர் ஏர் மகளிர் ஆசை
ஆதனம் துகில் விருப்பு ஆம் ஆதவன் மறையோன் பானு
கூதிர் ஓர் பருவம் காற்று குளிர் பனிக்காற்றும் ஆகும்
கீதமே மிஞிறு பாணி கிளர் நெட்டில் கிளந்தும் முப்பேர்
**213
#47
வேதி வேதிகையே வேள்விக்குண்டம் வேணகை வல்லாரை
வாதியே வாதம்செய்வோன் வகுக்கும் ஓர் கவியும் ஆகும்
பாதியே பால் வாரப்பேர் பாதையே கிறி நாவாய் ஆம்
சோதினி நரல் மாறு என்ப தூதுவன் புதனே தூதன்
**214
#48
சூது வஞ்சனையே ஆடும்சூது தோடகமும் ஆகும்
சேது செய்கரை சிவப்பே சேதாரம் வெட்சி தேமா
சாது சற்குணன் சினன் பேர் சதுமுகன் விதி அசோகன்
காது மாரணம் அள் ஆகும் கைதையே கழனி கண்டல்
**215
#49
கூத்தனே உயிர் நடன் பேர் குதம் குசம் குதமும் ஆகும்
நேத்திரம் கண் பட்டாடை நீதியே நியாயம் உண்மை
பாத்தியே சிறுசெய் இல்லம் பகுத்திடல் வகுத்த முப்பேர்
பாத்து என்ப கஞ்சி சோறு பாதியும் பங்கும் ஆமே
**216
#50
நீத்தலே துறவு ஒழுக்கம் நீங்குதல் பிரிதல் நாற்பேர்
பூத்தல் அஞ்சிதம் பயத்தல் புட்பித்தல் எனவும் செப்பும்
சாத்தனே காரி ஐயன் தண்டிப்போன் சாதரூபி
கோத்திரம் புடவி சையம் குலம் என முப்பேர் கூறும்
**217
#51
பாத்திரம் தளிகை மண்டை தகுதி பாத்திரபதப்பேர்
வேத்திரம் பதரி சூரல் விடு சரம் விளம்பும் நாமம்
காத்திரி நகுலம் எஃகு கைத்து என்ப நிதி வெறுப்பு ஆம்
சூத்திரம் இயந்திரம் நூல் பஞ்சின்நூல் எனவும் சொல்லும்
**218
#52
மாத்திரை குளிகை காலநுட்பமே அளவு வல்லை
சீத்தை பூரியர் சிதம்பு ஆம் சீத்தல் தூய்தாக்கல் நீக்கல்
ஒத்து இயல் மறை என்று ஆகும் ஒதுக்கமே நடை ஒதுங்கல்
சேத்து மண்டுதலே செம்மை தியானமும் முப்பேர் செப்பும்
**219
#53
சதி உமை அடிசில் வட்டம் தாளவொத்து அகாதமோடு
துதிபெறு கற்பின்மிக்காள் உரோகிணி சொல்லும் ஏழ்பேர்
பதி மனை இடம் ஊர் கேள்வன் பார்த்திபன் நகரம் மூத்தோன்
மதி புனை சடிலன் ஆசான் மருதத்துஊர் அதிபனும் பேர்
**220
#54
அத்தம் சொற்பொருள் காடு ஓர் நாள் அருநெறி முகுரம் பாதி
கைத்தலம் வழி காங்கேயம் கருதிய நாமம் ஒன்பான்
நத்தமே இருள் ஊர் மூக்கு நாகு யாமினி நள் ஆக்கம்
நத்தை நத்தமாலமோடு நாட்டிய ஒன்பான் பேரே
**221
#55
ஆதி மால் ஈசன் வேதன் அருகன் சாக்கியன் கோ நாதன்
சோதி அம் கதிரோன் தொன்மை தொடக்கமும் ஈரைம்பேர் ஆம்
ஓதியே ஞானம் கல்வி ஓந்தி மார்ச்சாலம் துற்று
போதி பெண்மயிர் தெருட்சி போற்றும் நாலிருபேர் ஆமே
**222
#56
சோதி மால் அருகன் ஈசன் சுடர் விளக்கு ஓர் நாள் அங்கி
நீதி அம் கடவுள் விண்மீன் கதிரவன் நிகழ்த்தும் பத்தாம்
பூதியே கொடுமை சாம்பர் புழுதி துர்க்கந்தம் செல்வம்
தீதுறு பவர்க்கம் நீறு வள்ளுரம் எண்பேர் செப்பும்
**223
#57
போத்து நீர்ச்சாதிஆணும் புகன்ற பல் விலங்குள்ஆணும்
மாத்துயில்பாழி குக்கில் மரக்கன்றும் வகுக்கும் ஐம்பேர்
காத்திரம் களிற்றின்முன்கால் கனம் உடல் சீற்றத்தோடு
காத்திரி பருமம் அங்கம் கட்செவியுடன் எண்பேரே
**224
#58
பதம் அழகு அறுகு காலம் பட்டி தாள் வரிசை மாற்றம்
இதமுறு அடிசில் உண்டல் இலாஞ்சனை கடிகை சேமம்
விதமுறு இயல் கொக்கு இன்பம் மெல்லாடை அமைதல் ஈரம்
பதவையே குழைவு என்னப் பகர் பெயர் இருபான் ஆமே
**225
#59
தாது பொன்னாதிஏழும் சடமுறும் இரதமாதி
ஓதிய ஏழும் மண்ணே ஆதியா உற்ற ஐந்து
பூதமும் நரம்பும் காவிக்கல்லும் பூந்தாதினோடு
தாதுமாதளையும் என்னச் சாற்றிய எழுபேர் ஆமே
**( தகர எதுகை முற்றிற்று )
@8 நகர எதுகை
**226
#1
இந்தனம் மிசையே காட்டம் எரிக்கனல் நறும்புகைப் பேர்
சந்தமே நிறம் வனப்பு சட்டகம் கவிதை சாந்தம்
நந்தலே கெடுதல் நிந்தை ஆக்கமும் நாட்டும் முப்பேர்
சிந்தகம் எகினமோடு சிதகனும் இருபேர் செப்பும்
**227
#2
அந்தில் ஆங்கு அசை இடப்பேர் அநித்தியம் பொய் அற்காமை
சந்தியே அந்தி வேணு சதுக்கமோடு இசைப்பும் அப்பேர்
அந்தமே முடிவு நானம் அழகு பஞ்சதையும் ஆகும்
சுந்தரி உமை பெண் துர்க்கை சுண்டன் இந்திராணியும் பேர்
**228
#3
சந்து சந்தனமே மூட்டு சதுக்கமும் தூதும் சாற்றும்
கந்துகம் இவுளி பந்து குறும்பரின்பரியும் காட்டும்
குந்தளம் குருளை கேசம் குழல் குழல்கொத்து ஓர் தேயம்
பந்து கந்துகம் துருத்தி பாசனம் திரட்சியும் பேர்
**229
#4
அந்தரி உமையே துர்க்கை அந்தனே சிதடன் மந்தன்
கந்தரம் என்ப மேகம் கழுத்தொடு மலைமுழைப் பேர்
சிந்துரம் எகினம் யானை செங்குடை திலகம் செம்மை
மந்தாரம் தருமரம் செவ்வரத்தமும் வகுத்த பேரே
**230
#5
கந்தருவம் பண் வாசி கலவியின்வகை ஒன்றின் பேர்
குந்தமே சவளம் பீலி குருந்து அயில் பரி ஓர் கண்நோய்
செந்து ஓர் நிரயம் ஓரி சீவனோடு அணுவும் என்ப
ஐந்திணை நிலன் ஓர் ஐந்தும் அன்புடைக்காமமும் பேர்
**231
#6
அந்தி முச்சந்தி பாலையாழிசை இரவு மாலை
நந்து என்ப நத்தை சங்கு ஆம் நந்தனன் மகன் மால் ஆகும்
மைந்தனே திறலோன் சேய் ஆம் மாந்தலே பருகல் உண்டல்
வந்தியர் புகழ்வோர் பேரும் மலடிகள் பேரும் ஆமே
**232
#7
விந்தமே மலை ஓர் எண் ஆம் விநாயகன் அருகன் முன்னோன்
அந்தணன் முனிவன் மேற்கோள் அயன் அரன் அருகன் பொன் ஆம்
அந்தகன் மறலி நீலன் அழித்தோனே சிதடன் என்ப
மந்தனே சனி கூர்ப்பில்லோன் வந்தையே மைமை பீடு ஆம்
**233
#8
மந்தம் நோய் கூர்மையின்மை மத்து அற்பம் சோம்பல் ஐம்பேர்
தந்தம் பல் யானைக்கோடு ஆம் சந்திரம் கருப்பூரம் பொன்
எந்திரம் மதிலுறுப்பு சூத்திரம் இரதமும் பேர்
தந்திரம் நூல் உபாயம் தானை யாழ் நரம்பும் ஆமே
**234
#9
இந்து சந்திரன் இருந்தோடு எண்கு என இயம்பும் நாமம்
சிந்துவாரம் நீர்க்குண்டி சிலை வேலாவலையமும் பேர்
கந்தை நல்லாடை பீறல் கருதில் அக்காரம் என்ப
சிந்தையே கருத்து துன்பம் செப்பிய குறிப்பு முப்பேர்
**235
#10
விந்தை ஆச்சரியம் துர்க்கை விநயமே அறம் வணக்கம்
கொந்தலே சினக்குறிப்பு கொந்துதல் பெருங்கோபப்பேர்
நந்தை சந்திரன் முன்பக்கம் நாட்டிய கொத்தான் என்ப
குந்தியே பிரதை கள்ளு கொந்தே கதிர் பூங்கொத்து ஆம்
**236
#11
மந்தரம் துறக்கமே ஓர் மலை மந்தவிசை முப்பேர் ஆம்
பந்தர் காவணம் பதிப் பேர் பந்தனை மகள் பந்தித்தல்
தந்து தந்திரம் நூலோடு சாத்திரம் முப்பேர் சாற்றும்
இந்தளம் தூபமுட்டி இராகமோடு இருபேர் ஆமே
**237
#12
நந்தனம் கா ஓர் ஆண்டு நாகாதிபதி பூந்தோட்டம்
வந்தனம் பணிதலோடு வழுத்திய விநயம் ஆமே
பந்தனம் காவல் கட்டல் பந்தியே சபை ஒழுங்கு
கந்தி கந்தகமே ஆசாள் கமுகு என முப்பேர் காட்டும்
**238
#13
புந்தியே அறிவு புத்தி புதன் என்ப போற்றும் முப்பேர்
கொந்தளம் ஐம்பால் கூத்தின்விகற்பமும் இருபேர் கூறும்
இந்திரன் வலாரி மும்மீன் ஏந்தலும் இயம்பற்பாற்று ஆம்
மந்தி பெண்குரங்கினோடு வண்டு பெண்முசுவும் ஆமே
**239
#14
விந்து நீர்த்துளி ஓர் புள்ளி விளங்கிய குறியே வட்டம்
புந்தியர் கவிகள் மிக்கோர் போந்து என்பது அனுடம் பெண்ணை
கந்தனே அருகன் சூதபாடாணமொடு காங்கேயன்
தொந்தமே சலஞ்சாதித்தல் தொடர்பு இரண்டு ஊழும் ஆமே
**240
#15
வேந்தனே அரசன் திங்கள் வியாழம் இந்திரன் ஆதித்தன்
காந்தாரம் இசை ஓர் தேயம் குறிஞ்சியாழ்த்திறமே கானம்
ஏந்தல் பீடு உயர்ச்சி அண்ணல் இறைவன் ஏந்துதல் வெற்பு என்ப
கூந்தல் பெண்மயிரே பீலி குசை கூந்தல்பனை ஓலைப் பேர்
**241
#16
காந்தமே ஊசிக்காந்தம் கவின் கந்தபுராணம் என்ப
பாந்தளே பெரும்பாம்போடு பாம்பு என்ப பகரும் நாமம்
சாந்தன் எண்குணன் புத்தன் பேர் தந்தி யாழ்நரம்பு யானை
கந்தனே தலைவன் வேந்தன் கருதும் ஆதிபனும் முப்பேர்
**242
#17
காந்தையே மனைவியோடு காரிகை இருபேர் ஆகும்
போந்தையே அனுடநாளும் இளம்பனை பனையும் போற்றும்
சாந்தையே பூமி கங்கை தந்தையே அப்பன் வேதன்
சாந்திரம் நிறைவினோடு நெருக்கமும் சாற்றலாமே
**243
#18
சேந்து தீ சிவப்பு அசோகு சிந்தனே சிதகன் குள்ளன்
சாந்தமே பொறுமை சாணி சந்தனம் குளிர்ச்சி என்ப
காந்தலே முதிரவேதல் சினக்குறிப்பு இருபேர் காட்டும்
சாந்து சந்தனம் பராகம் சாந்தமும் சாற்றும் முப்பேர்
**244
#19
மாந்தல் உள்ளழிதல் உண்டல் பருகலும் வகுக்கும் நாமம்
காந்தி ஏர் பிரவையோடு காவி வைடூரியப்பேர்
ஆந்திரம் மரணமே ஓர் தேயம் அந்நிலத்துப்பாடை
சாந்தாற்றி கால்செய்வட்டம் சமாலமும் இருபேர் ஆமே
**245
#20
கந்தமே கரணை பங்கு கழுத்தடி கிழங்கு நாற்றம்
இந்தியமுடனே பொன் என்று இயம்பிய எழுபேர் ஆகும்
பந்தம் ஏர் சிவிறி கொண்டை பதணம் கட்டு உறவு புஞ்சம்
முந்திய முடிப்பு நார் கைவிளக்கு என மொழியும் பேரே
**246
#21
கந்து தூண் யானைத்தம்பம் கழுத்தடி யாக்கைமூட்டோடு
உந்திய சகடம் பற்றுக்கோல் இருசு ஓதும் ஏழ் பேர்
சிந்து நீர் கடல் ஓர் பா முச்சீரடி ஓர் தேயத்தோடு
அந்த நன்னிலத்துப் பாடை யாறு வாமனன் ஏழ்பேராம்
**247
#22
உந்தி தேருருள் ஆன்கூடம் உயர்ச்சி நீர்ச்சுழி பரப்பு
சிந்து நள் இதலையோடு திரைக்கடல் யாழ்உறுப்பும் ஆம்
நந்தியே குண்டை செக்கான் நந்தீச்சுரன் ஏறோடு
சந்திரமவுலிஅண்ணல் சிறுபறை அறுபேர் சாற்றும்
**248
#23
அந்தரம் இடை ஆகாயம் அளவு இருள் தனிமை கூட்டம்
வெம் தொழில் தேவர்கோயில் வேறுபாடு ஈறு ஈரைந்தாம்
மந்திரி தனதன் புந்தி வருமுறைஉரைப்போன் வெள்ளி
தந்திரி வியாழம் என்னச் சாற்றும் மூவிருபேர் ஆமே
**249
#24
மந்திரம் தேவர்கோயில் மன்னர்வாழ்இல்லம் வீடு
கந்திருவத்தின்கூட்டம் கருதுதல் மது ஓர் தேயம்
மந்தணம் புடைநாப் பேராவகையின் உச்சரித்தல் வாசிப்
பந்தி நீர்க்கடல் உள் என்னப் பகர் பெயர் முந்நான்கு ஆமே
** ( நகர எதுகை முற்றிற்று )
@9 பகர எதுகை
**250
#1
நிபம் ஏது உவமை ஆகும் நீப்பு என்ப துறவு நீத்தல்
அபயமே அச்சமின்மை அடைக்கலம் தயை முப்பேர் ஆம்
சபலமே ஆயம் சூதம் சம்பலை நிறைவேறல் பேர்
அபரம் வெந் கவசம் ஊழல் மறல் யானைப் பின்கால் பக்கம்
**251
#2
தபம் தவம் மாசிமாதம் சபம் என்ப விழுது மூங்கில்
உபலம் கல் சிறுகல் ஆகும் உபகாரம் சகாயம் ஈகை
நபம் என்பது ஆகாயப்பேர் நாட்டும் ஆவணி களாசி
விபுதரே அறிஞர் வானோர் மிகக்கற்றோர் மேவும் நாமம்
**252
#3
உப்பு உவர் அராகம் வாரி உறு சுவை மகளிர்ஆடல்
செப்பமே நெஞ்சு பாதை தெரு நடுநிலை செப்பு ஆகும்
தப்பு என்ப குற்றம் பொய் ஆம் தபனன் செந்தீயே பானு
கப்பணம் இரும்பில் செய்த நெருஞ்சில்முள் கைவேல் ஆமே
**253
#4
இப்பர் செட்டிகள் வேளாளர் இடையர் வைசியர் பொதுப்பேர்
கொப்பு என்பது ஓர் கன்னப்பூண் கொண்டையும் மரக்கொம்பும் பேர்
துப்பை போர் வெற்றிலைப் பேர் சுப்பிரம் ஒளியே வெண்மை
குப்பை என்பதுவே கூட்டம் குவிவொடு மேடும் ஆமே
**254
#5
பப்பு என்ப பரப்பு ஒப்பு ஆகும் பப்பரம் பணம் ஓர் தேயம்
ஒப்பு அழகொடு பொருந்தல் உவமையும் உரைக்கும் முப்பேர்
வெப்பம் உட்டணம் அவா ஆம் விபுலம் பார் விரிவு பீடு
துப்புரவு அணி துவ்வு என்ப சுபம் வெண்மை அழகும் ஆமே
**255
#6
தாபரம் அகமம் பூமி ததல் உடல் சைலம் கோயில்
நீபம் பிற்கொழுங்கோலோடு நிமித்தமும் கடம்பும் ஆகும்
பூபமே கவந்தம் வேள்விக்குறுதம்பம் கிருது யூகம்
சாபமே தனுவும் வில்லும் சபித்தலும் சாற்றும் முப்பேர்
**256
#7
சீபதி கடவுள் மாயன் சிவன் அயன் அருகன் ஐம்பேர்
கோபதி வலாரி ஏறு கோபமே சினம் மூதா ஆம்
சோபம் ஆலசியம் தேறல் சோர்வுடன் அழகு நாற்பேர்
தாபமே அடவி கோரம் இடும்பையும் சாற்றும் நாமம்
**257
#8
தீபமே விளக்கு வீழ்க்கை செப்பு என்ப கரண்டகம் சொல்
தாபிதம் தூபிதப்பேர் தாபித்தல் எனவும் சாற்றும்
கோபி ஓர் மண் சினத்தோன் குபேரனே தனதன் சோமன்
நூபுரம் ஞெகிழியோடு பரியகம் நொடித்த பேரே
**258
#9
சீப்பு என்ப கதவின்தாழும் சீத்தலும் சீப்பும் முப்பேர்
நாப்பண் என்பது தேர்த்தட்டு நடுவும் யாழ்உறுப்பும் அப்பேர்
காப்பு அரண் காவல் ஆடை கதவு வெண்ணீறும் ஆகும்
யாப்பு என்ப கவிதை கட்டு ஆம் இபம் கரி மரக்கோடு ஆமே
**259
#10
துப்பு அரக்கு அடிசில் வண்ணம் துகிர் பகை போகம் சுத்தம்
தப்பு வன்படை சிவப்பு சகாயம் பூரிப்பு வெள்ளம்
செப்புறு துணை அநேகம் சேர் துணைக்காரணத்தோடு
ஒப்பரும் இழுது ஆகாரம் ஒன்பதிற்றிரட்டி ஆமே
** ( பகர எதுகை முற்றும் )
@10 மகர எதுகை
**260
#1
சமன் யமன் நடுவே காலன் தமரமே அரக்கு உரற்றல்
கமலமே வனசம் நீர் அம் செம்படாம் கருதும் முப்பேர்
குமரி கற்றாழை கன்னி கொற்றவை காளி கோணை
ஞமலி நாய் மயில் கள் ஆகும் நாமம் பேர் தீட்டும் நாமம்
**261
#2
அமரர் மாற்றலர் விண்ணோர் ஆம் அமிழ்து பால் சுவை மருந்து
சிமிலி சிள்வீடு பூளை சிகை உறி செப்பும் நாற்பேர்
தமம் அகக்கரணதண்டம் இராகு இருள் முப்பேர் சாற்றும்
அமலை சால்பு அடிசில் ஓதை அம்பிகை நாற்பேர் ஆமே
**262
#3
விமலை கோகநகை ஐயை வீரி என்று ஆகும் முப்பேர்
அமலனே கடவுள் ஈசன் அருகன் என்று அறையல் ஆகும்
நிமிர்தலே உயர்தல் ஓடல் நெருங்குதல் வளர்தல் சோறு ஆம்
அமரியே விடமே துற்கை அமிழ்தொடு சிறுநீர் ஆமே
**263
#4
இமை மயில் கரடி கண்ணின்இமை நொடிப்பொழுதே அற்பம்
விமலனே கடவுள் ஈசன் விம்மலே ஒலித்தல் ஏங்கல்
திமிர்தலே வளர்தல் பூசல் தீம் என்பது இமிழ் சுவாது
உமிழ்தல் கொப்பளித்தல் சோனை ஒலித்தலும் தெவிட்டலும் பேர்
**264
#5
அமுது பால் கவை நீர் மூரல் அமுதமும் அறையும் ஐம்பேர்
திமிலமே பெருமீன் ஆர்ப்பு சிமயமே குவடு வெற்பு ஆம்
அமலமே ஏர் அழுக்கின்மைப் பேர் அமுதமே அமிழ்தம் கீரம்
அமர்தலே மிகுதி வைகல் அமருதல் பெருமை ஆமே
**265
#6
சமி வன்னிமரம் விராகன் சமமே போர் சமானம் நாப்பண்
சமர் செரு முள்மா என்ப சமரியே அரவம் துர்க்கை
இமிழ் ஒலி இனிமை ஆகும் ஏமாப்பு களிப்பே எண்ணம்
தமிழே ஓர் பாடை நீர்மை இனிமையும் முப்பேர் சாற்றும்
**266
#7
கம்பலம்தான் மேற்கட்டி கம்பளி செய்யஆடை
சம்பரம் எண்கால்புள்ளும் சலமும் நற்சீலையும் பேர்
பம்பலே வலி எழுச்சி பரவலே நெருங்கல் என்ப
சம்பளம் கரை பண்டாரம் அதர்உணா பொறாமை சாற்றும்
**267
#8
கம்பு செந்தினையே நந்து கம்பு கோடரமே நாற்பேர்
தும்பை ஓர் செடி ஓர் மாலை தொழுதி மெல்லிலை உடன்றல்
சம்பை ஓர் தாளம் மின்னல் சமயமே மதம் மற்று அப்பேர்
விம்பமே கோவை வட்டம் விக்கிரகம் பிரதிவிம்பம்
**268
#9
இம்மியே பொன்மை நுண்மை புலம் ஓர் எண் இசைக்கலாகும்
அம்மியம் சிறுசின்னத்தோடு ஆசவம் காளம் என்ப
உம்மை முற்பிறப்பினோடு வருபிறப்பு எனவும் ஓதும்
வெம்மையே கடுமை ஆர்வம் வெப்பமும் முப்பேர் ஆமே
**269
#10
அம்பகம் எழுச்சி கண் ஆம் அம்பலம் சமுகம் தெற்றி
வம்பு என்ப புதுமை கச்சு மணம் மிடா நிலையின்மைப் பேர்
கும்பம் ஓர் ராசி யானை மத்தகம் குடம் முப்பேர் ஆம்
தும்பு என்ப சிம்பு தோடு ஆம் சுமடு சிம்புரி எய்யாமை
**270
#11
அம்மை ஏர் மறுமை கந்தி ஆய் உமை இயக்கி என்ப
சும்மை ஊர் நகரம் நெற்போர் நாடு ஒலி சுமையும் சொல்லும்
செம்மையே சிவப்பு பீடு செப்பம் முப்பேரே என்ப
கொம்மை ஏர் இளமை வட்டம் கொங்கை கைகுவித்துக்கொட்டல்
**271
#12
அம்பரம் ககனம் திக்கோடு அறுவை ஆர்கலி என்று ஆகும்
கம்புளே சம்பங்கோழி காருணி நந்து முப்பேர்
தும்பி வண்டு ஒருத்தல் என்ப சுரையும் ஆண்வண்டும் ஆகும்
அம் பயோதரம் நீர் ஏரோடு அசைச்சொல் சாரியையும் ஆமே
**272
#13
கிம்புரி முடி தந்தப்பூண் கேயூரமொடு பூண் என்ப
கும்பியே சிவதை சேறு குஞ்சரம் நிரயம் நாற்பேர்
சம்பமே குலிசம் காழ் ஆம் சமழ்த்தலே வருத்தம் நாணம்
அம்பலே பழிச்சொல் சில்லோர் அறிந்து அலர் தூற்றல் ஆமே
**273
#14
கம்பலை ஒலி பீர் அச்சம் கவலை செய் அகணி வருத்தம்
செம்புலம் சுடலை பாலை நிலம் செருக்களம் முப்பேர் ஆம்
தம்பம் தூண் பற்றுக்கோடு சங்கீதம் நிலையே அங்கி
கம்பமே விளக்குத்தண்டு கம்பிதம் அசைவு தூண் ஆம்
**274
#15
அம்பி தாம்பணியே ஓடம் கிழார் மிடா அறையும் நாற்பேர்
அம்பு சம்பிரமே மூங்கில் அத்திரம் கிசம் நீர் மேகம்
கொம்பு கோடரம் விலங்கின்கொம்பு ஊதும்கொம்பு முப்பேர்
அம்பிகை உமை இயக்கி அந்தரி முப்பேர் ஆமே
**275
#16
கம்பளம் தகர் செவ்வாடை கம்பளி துருவாட்டுஏறு
நம்பல் நம்புதல் அவா ஆம் நாம் அச்சமொடு தன்மைப் பேர்
வெம்பலே உருத்திரத்தோடு உணங்கலும் விளம்பற்பாற்றாம்
பம்பை ஓர் நதியே முல்லைப்பறை பம்பைவாச்சியப்பேர்
**276
#17
சாமம் ஓர் உபாயம் மை ஓர் வேதம் சாமளமே யாமம்
வாமனம் சிந்து தென்பால்வாரணம் ஓர் புராணம்
காமரம் சுல்லி ஐம்மீன் இசைப்பொது இசை பூங்கா ஆம்
கோமளம் இளமைச்செவ்வி கொம்மை ஆன் உவகையும் பேர்
**277
#18
சோமன் ஓர் வள்ளல் இந்து துகில் எனச் சொல்லும் முப்பேர்
காமமே குடி அன்பு ஆசை காமநோய் ஊரும் ஆகும்
பூமனே விரிஞ்சன் ஆரல் பொம்மலே பொலிவு சோறு ஆம்
காமனே வாசவன் வேள் கருது திப்பிலியும் ஆமே
**278
#19
தூமமே தூமம் சுள்ளை சோம்பலே அழுங்கல் சோம்பு
கோமயம் ஆநீர் சாணம் கோவினுக்குரியபண்டம்
மாமையே நிறம் வனப்பு மம்மரே மயக்கம் துன்பம்
காமுகன் விடன் மால் என்ப காமர் ஏர் ஒளி அவாவே
**279
#20
சாமனே காமன்தம்பி சௌமியன் இருபேர் சாற்றும்
ஊமனே பெரும்புள் மூகை ஓமமே மகம் ஓர் பூண்டு ஆம்
பூமகள் பொறி பூமின் ஆம் போம் அச்சம் அசைச்சொல் ஆகும்
ஆம் என்பது இடைச்சொல் ஈரம் ஆம் எனல் நீரும் ஆமே
**280
#21
ஆம்பிலம் எகினம் கள்ளோடு ஆமிலம் ஆகும் முப்பேர்
சாம்பவன் எண்கின்வேந்தன் சங்கரன் இருபேர் சாற்றும்
தூம்பு வேய் வழி மரக்கால் சுருங்கொடு புழையே வாயில்
கோம்பலே சினக்குறிப்பு பெரும்கோபம் இருபேர் கூறும்
**281
#22
கூம்பலே குவிவு ஒடுங்கல் கடம்பலும் முப்பேர் கூறும்
தேம்பலே பழம்பூ வாடல் மெலிதலும் செப்பும் அப்பேர்
சாம்பல் கூம்புதல் பழம்பூ சாம்பரும் முப்பேர் சாற்றும்
காம்பு வேய் மலர்த்தாள் பட்டு கடி மரக்கொம்பு நாற்பேர்
**282
#23
ஆம்பிரம் புளிமா தேமா ஆம் புளிப்பினுக்கும் அப்பேர்
சாம்பு பொன் பறையும் ஆகும் தாம்பு தாமணியே நாண் ஆம்
பாம்பு என்ப கரை மராளம் அரவின்நாள் பகரும் முப்பேர்
ஆம்பியே ஒலி காளான் ஆம் அமர் எயில் இரணம் ஆமே
**283
#24
அமுதமே தேவருண்டி அவுடதம் சலிலம் முத்தி
அமிழ்தம் மாட்சிமையே மேகம் விசும்பு இவையாகும் எண்பேர்
குமுதமே தென்மேல்திக்கின் குஞ்சரம் குசை வெண்நெய்தல்
தமரமும் படையினுற்றதொகை ஒன்றும் சாற்றும் நாமம்
**284
#25
கம் பயோதரமே வேணி கால் சிரம் பாண்டரத்தோடு
அம்புதம் பதுமபீடத்துஅயனும் என்று அறைவர் நூலோர்
சம்பு நேரேடம் ஓர் புல் சதுமுகன் முகுந்தன் ஈசன்
சம்பம் என்றூழ் குரோட்டம் சதாபலம் அருகனும் பேர்
**285
#26
ஏமமே இரா உன்மத்தம் இன்பம் பொன் விசிதம் காவல்
சேமம் ஆமோதம் கட்டும்திரை வலி இவை ஈரைந்து ஆம்
வாமமே தொடை இடப்பால் வனப்பு அரன் ஐம்முகத்து ஒன்று
ஆம் ஒளி சிந்து என்னும் அறுபெயர் அறையலாமே
**286
#27
நேமி தேருருளை ஆழி நெட்டில் வட்டணை நேமிப்புள்
ஆமம் ஆர் வேலை ஞாலம் சகுனமும் எண்பேர் ஆகும்
சாமி வேள் அசோகன் ஆசான் தலைவன் கோமான் குரத்தி
ஏமம் பொன் கடவுள் வேந்தன் என இவை ஈரைம்பேரே
**287
#28
ஆம்பலே கவ்வை ஓர் எண் அம்புலி ஊதும்கொம்பு
காம்பு கள் அல்லி ஓர் பண் கரி இசைக்குழலும் ஆகும்
தேம் பிழி வளாகம் கொங்கு தேசம் மாதிரத்தினோடு
தீம் பச்சையுடனே ஏழன்உருபு இருநால் பேர் செப்பும்
**288
#29
உம்பல் ஆன் எருமை யானை யாடு இவற்று ஆண் ஒருத்தல்
அம்பகம் குலம் யானை மகன் முறை அறையும் ஏழ்பேர்
உம்பரே வானோர் பார்ப்பார் உயர்ச்சி உவ்விடத்தினோடே
அம்பரம் மேக்கும் என்ன அறுபெயர் அறையல் ஆமே
**289
#30
செம்மலே பழம்பூ வாடாமலர் மகன் சிறந்தோன் வீரன்
செம்முதல் கைகுவித்துக்கொட்டுதல் திறல் வனப்பு
அம்மம் மண்டலம் கங்காளன் அதிபதி வாரி மாண்பு
செம்மலர்ப் பிண்டி நீழல் சினன் இவை ஈரெண் பேரே
**290
#31
தாமமே முடிஉறுப்பு தார் உடல் பிறப்பு சாந்தம்
தேம் அணைகயிறு ஒழுங்கு சீர்த்தி வெற்பு இதழி இல்லம்
மா மணிக்கோவை இன்பம் மலர் ஒளி நகரமோடு
தாமணி தந்தி பீடு சாற்றும் நாலைந்து பேரே
** ( மகர எதுகை முற்றிற்று )
@11 யகர எதுகை
**291
#1
இயவையே துவரை பாதை இயம்பிய தோரைநெல் ஆம்
வியவனே பதிகன் ஏவுவானொடு மீளியும் பேர்
அயர்வு உயவு ஆதி சோம்போடு அகலம் உன்மத்தம் என்ப
இயவர் தோல்கருவியாளர் இழிஞர் சண்டாளர் ஆமே
**292
#2
வியம் பக்கி மூர்த்தம் என்ப வியத்திகை எனவும் ஆகும்
சயம்புவே அருகன் ஈசன் அரி என்றும் சாற்றும் முப்பேர்
இயங்கலே உலாவல் சேறல் இலகுதல் இறுத்தல் என்ப
சுயம்புவே அருகனோடு துய்ய தற்பரன் வேதாவே
**293
#3
வயம் அசம் பரி இரும்பு வலி நீர் புள்பொது வசப்பேர்
சயம் குழு விறல் கை மாலை சருக்கரை இரவி நெய்தல்
இயம் என்ப ஒலியே வார்த்தை வாச்சியம் ஈ நாற்பேர் ஆம்
அயனம் உற்பவமே பாதை ஆண்டினில்பாதிக்கும் பேர்
**294
#4
பயிர் ஒலி கலகலம் பைங்கூழ் பயில் விலங்கொலிப் பேர்
கயினி ஐவிரலே கைமை கயவாயே வலியான் கூடல்
வயிரம் ஓர் மணி வை சேகு வச்சிரம் ஓணம் செற்றம்
கயில் பிடர் மடையும் ஆகும் கையரே திருடர் நீசர்
**295
#5
வயவனே வீரனொடு வலியான் காதலனே மிண்டன்
குயிறலே செறிதல் கூவல் குடைதல் பண்ணுதல் விளம்பல்
வயின் இடம் உதரம் வீடு ஆம் வயா கர்ப்பம் வருத்தம் காதல்
மயல் செத்தை மயக்கம் சோகோடு உன்மத்தம் வகுக்கும் நாற்பேர்
**296
#6
குயிலே கோகிலமும் சொல்லும் கொண்மூவும் தொளையும் நாற்பேர்
வயமாவே குதிரை சீயம் மதகரி புலியும் ஆகும்
வியல் என்ப விசாலம் பீடு விபினமும் விளம்பும் முப்பேர்
மயிலையே மீனராசி மீன் இருவாட்சி ஆமே
**297
#7
சயிந்தவம் குதிரையோடு தலையும் இந்துப்பும் ஆகும்
குயம் தனம் இளமையோடு கூர் அரிவாளும் முப்பேர்
நயந்தோனே நண்பன் கொண்கன் நசையினன் நாட்டும் முப்பேர்
பயம்பு என்பது ஆனை வீழும் படுகுழி பள்ளம் ஆமே
**298
#8
அயிர் கரும்பின்தீங்கட்டி ஆன்ற நுண்மணலே நுண்மை
செயல் என்பது ஒழுக்கம் காவல் சேறோடு தொழிலும் ஆகும்
நயம் இன்பம் மகிழ்வு நீதி உபசாரம் அபயம் நன்மைப் பேர்
பெயர் புகழ் பெருமையோடு பேர் எனப் பேசும் முப்பேர்
**299
#9
இயைபு என்ப பொருத்தம் யாப்பின்ஓர்உறுப்பு இசைப்பு முப்பேர்
கயவர் கீழ்மக்கள் மிக்கோர் கள்வரும் கருதல் ஆகும்
உயவை காக்கணம் கான்யாறோடு ஊதிகை எனவும் ஓதும்
குயவு என்ப கறி கரிப்பு குளிர்நறும்புகை தேர் ஆமே
**300
#10
அயன் விதி அசோகன் ஆகும் அயல் இடம் அருகிடப்பேர்
பயன் இடம்பாடு இலாபம் பாகு சொல்லுரையும் ஆகும்
நயன் இன்பம் பயன் மகிழ்ச்சி நன்மையும் நவிலற்பாற்று ஆம்
பயம் என்ப சுதை நீர் அச்சம் பால் குளம் பகரும் ஐம்பேர்
**301
#11
வயங்கலே தயங்கல் சேறல் மயம் என்பது அழகு ஒட்டைப் பேர்
தயங்கலே ஒளிசெய்தல் பேர் அசைதலும் சாற்றல் ஆகும்
வியங்கோள் என்பதுவே ஐம்பால் மூவிடம் விளக்கும் ஏவல்
முயங்கலே தழுவவோடு புணர்தலும் மொழியல் ஆமே
**302
#12
இயக்கனே தனதன் ஞாளி இயவு என்ப சுரம் ஊர் மார்க்கம்
பயப்பு என்ப தயாளம் சாயல் பசப்பு எனப் பகரும் முப்பேர்
வியத்தலே அதிசயித்தல் துதித்தலும் விளம்பல் ஆகும்
உயிர்த்தல் வாய்விடல் விடுத்தல் பயத்தலும் முப்பேர் ஓதும்
**303
#13
இயல் நடை பண்பு சாயல் இயற்றமிழ் இசை ஒத்து ஆகும்
முயல் செரு சசமும் ஆகும் மொய்த்தலே நெருங்கல் மூடல்
பயல் பள்ளம் பாதி சிற்றாள் பயசு என்ப சலிலம் பால் ஆமே
வயல் வெளி ஆலவாலம் மருதநன்னிலமும் ஆமே
**304
#14
கயவு என்ப களவு மேன்மை கழிமுகம் மிகுதி பீடு ஆம்
இயறலே முத்தி போதல் எயிறே பல் யானைத்தந்தம்
வியம் உடல் விகங்கம் பீடு ஆம் மெய் உடல் சரதம் ஒற்று
பெயர்தலே துடங்கல் போகல் பேதித்தல் உரிஞ்சலும் பேர்
**305
#15
குயிறலே இழைத்தல் சொல்லல் குயிற்றலே கசிதம் பண்ணல்
பயிலல் கூடுதலே சொல்லல் பழகுதல் படித்தலும் பேர்
அயில் கைவேல் இரும்பு கூர்மை அழகொடு கோரை நாஞ்சில்
எயில் மதில் திரிபுரத்தோடு இயம்பும் ஊர்ப்பொதுவும் ஆமே
**306
#16
வெய்யில் ஆதபம் என்றூழ் ஆம் வியப்பு விம்மிதம் துதிப் பேர்
பையுள் நோய் சிறுமை ஆகும் பயில் மொழி சைகை என்ப
தையலே அழகு துன்னம் சாற்றிடில் வனிதைக்கும் பேர்
குய்யமே மறைவு யோனி குத்திரம் முப்பேர் கூறும்
**307
#17
நெய் என்பது இழுது நெய்த்தோர் நிணமொடு துவட்டாநாள் ஆம்
பொய் மரப்பொந்து பொக்கம் புயல் என்பது எழிலி விசுங்கன்
செய்தியே ஒழுக்கம் செய்தி செய்யலே செயல் சேறு ஆகும்
ஐயரே முனிவர் வானோர் அந்தணர் முப்பேர் ஆமே
**308
#18
செய்கையே தொழில் ஒழுக்கம் தியக்கமே வெறி உலோலம்
எய்தலே அடைதல் உய்த்தல் இயக்கமே தகை இயங்கல்
பொய்தலே இகுளை ஆயம் பூவையராடல் முப்பேர்
குய்யே இந்தனம் தாளித்தகறி என இருபேர் கூறும்
**309
#19
சையமே மலை கல் ஆகும் சாயமே அந்தி சந்தம்
மையல் என்பதுவே பேது மயக்கம் என்று இருபேர் ஓதும்
ஐயனே குரவன் அப்பன் ஆசான் மாசாத்தன் மூத்தோன்
கையறல் ஒழுக்கமின்மை செயலின்மை இருபேர் காட்டும்
**310
#20
செய்யலே ஒழுக்கம் காவல் சேறு செய்வினை நாற்பேரே
நெய்தலே நிலமே ஓர் பூ நெய்குதல் சாப்பறைப் பேர்
வெய்யோன் ஆதவனே தீயோன் விரும்பினனொடு மும்மீன் ஆம்
ஐயையே காளி துர்க்கை உமை மகள் தலைவி ஆசாள்
**311
#21
ஐயமே பொழுது பிச்சை அனுமானம் கடிஞை என்ப
பெய்தலே விடுதல் மாரிபெய்தல் போடுதல் செறித்தல்
மொய் செருக்களம் போர் கூட்டம் மூசல் ஆர்பதம் மாதங்கம்
தொய்யிலே எழுதும்தொய்யில் உழுநிலம் இருபேர் சொல்லும்
**312
#22
தாயம் வல் உரித்து துன்பம் தந்தைதன் வழியில் சுற்றம்
சாயை சூரியன்தன்தேவி நிழல் நிறம் முப்பேர் சாற்றும்
ஆய் அயர்வு அன்னை என்ப ஆயுதம் படை அரங்கம்
சாயமே அந்திநேரம் சந்தமோடு இருபேர் ஆமே
**313
#23
காயம் மெய் விண் வெண்காயம் பெருங்காயம் மரிசம் கார்ப்பு
நேயம் நெய் எண்ணெய் அன்பு நன்மையும் நிகழ்த்தும் அப்பேர்
மாயம் பொய் கறுப்பு தீமை வஞ்சமும் அழகும் ஆகும்
காயல் ஓர் நகரம் கானல் கழிமுகம் முப்பேர் காட்டும்
**314
#24
வாயில் காரணமே தூது வாசல் ஐம்பொறியும் ஆகும்
தேயம் நாடு இடம் மெய் சோரம் தீயரே கிராதர் நீசர்
பாயசம் பாளிதப்பேர் பாற்சோற்றிச்செடியும் ஆகும்
மாயை பொன் இரதி காளி வஞ்சம் ஓர் புரி பொய் ஆமே
**315
#25
சேய் குகன் இளமை தூரம் செம்மை வேய் மகன் சேண் செவ்வாய்
வாய் குழல் இடமே வாக்கு வாய்மையும் வாயும் அப்பேர்
ஆய்தலே நுணுக்கம் தேர்தல் ஒடித்தலும் அப்பேர் ஆகும்
வேய்தலே அணிதல் சூடல் வேயுள் மூடுதலும் ஆமே
**316
#26
தேய்வு எச்சம் பழங்கண் ஆகும் சேய்மையே நீளம் தூரம்
ஆய்வு என்ப வருத்தம் தேர்ச்சி அகலமும் நுணுக்கமும் பேர்
மாய்வு என்ப மறைவு சோர்வு ஆம் மாயன் மால் கருநிறத்தோன்
வாய்மையே உண்மை சொல்லு வலி முப்பேர் வகுக்கற்பாற்றே
**317
#27
வேய் துளை ஒற்று வேரல் வீணையும் விளம்பும் நாற்பேர்
காய்தலே துணித்தல் கோபம் காய்ப்பு என்ப வடு வெறுப்பு ஆம்
தோய்தலே புல்லல் நீரில்குடைதலும் துழாவலும் பேர்
பாய்தலே குதித்தலோடு பரவல் தாண்டுதலும் ஆமே
**318
#28
கயம் ஒரு நோய் கீழ் ஆழம் கரி குளம் இளமை கேடு
வியல் அகழ் மேன்மை நீர் ஏர் விளம்பு ஈராறுபேர் ஆகும்
அயம் நிலன் இரும்பு பங்கம் ஆடு நல்வினை விழா நீர்
வயமுறு புரவி பொய்கை வருபெயர் ஒன்பான் ஆமே
**319
#29
தொய்யலே உழவினோடு துயர் அகமகிழ்ச்சி இன்பம்
துய்ய பொற்பு அள்ளல் ஈடு சொற்றிடும் எழுபேர் ஆகும்
வையமே உரோணி ஏறு வசுந்தரை சகடமோடு
செய்ய தேர் பாண்டில் பூண்ட ஊர்தியும் சிவிகையும் பேர்
**320
#30
ஆயம் ஆதாயம் நாணி அன்னை மெல்லரி கவற்றில்
தாயமோடு இகுளை சுங்கம் ஓரையும் எண்பேர் சாற்றும்
சாயலே மேன்மை நுண்மை சந்தம் மேம்பாட்டினோடே
வேயும் நல் அழகு ஒப்பும் இயம்பிய நாமம் ஆமே
**321
#31
நியமம் அங்காடி வீதி நெடுந்தெரு நியதி யோகம்
பயமுறு அகணி கோயில் பரியம் நிச்சயம் வளாகம்
வியனகர் குருவி வெய்ய பிதிர்வனம் விரதம் என்ன
இயலும் ஈரேழுபேரும் எய்திய நாமம் ஆமே
** ( யகர எதுகை முற்றிற்று )
@12 ரகர எதுகை
**322
#1
சிரகமே கரகம் ஆகும் சென்னியில்சோடும் அப்பேர்
கரகமே ஆலங்கட்டி கமண்டலம் துளிநீர் கங்கை
மரபு நீர் முறைமை தொன்மை வமிசமும் வழங்கும் நாற்பேர்
சரபமே வருடையாடு சம்பரம் குறும்பாடு ஆமே
**323
#2
இரதமே புணர்ச்சி சூதம் இன்சுவை அரைஞாண் பொன்தேர்
சரணமே புகல் கலாபம் தாள் மனை மருதத்துஊர் ஆம்
தரளம் முத்து அசைவே உண்டை சரளமே தகுதி தாரை
இரதனம் பரியகத்தோடு எயிறு அரைநூல் முப்பேரே
**324
#3
உரம் மதில் வலியே ஞானம் ஊக்கம் மார்போடு ஐம்பேர்
சிரம் நெடுங்காலம் சென்னி உயரமும் செப்பல் ஆகும்
புரம் உடல் புரி முன் ஊர் ஆம் புரவலன் வள்ளல் வேந்தன்
கரம் என்ப கிரணம் செங்கை கழுதை நஞ்சு இறையும் ஆமே
**325
#4
அரவம் நூபுரம் பாம்பு ஓசை ஆயில்நாள் ஆகும் நாற்பேர்
பரவை வாருதி பரப்பு பங்கயமாதின்கூத்து ஆம்
இரலையே கலை ஊதும்கொம்பு இரண்டுடன் முதல்நாள் புல்வாய்
அரசு மன் வியாழம் நாடு ஓர் தரு இராச்சியமும் ஆமே
**326
#5
அரம்பையே அமரர்மாதோடு அரலை சேகிலி என்று ஆகும்
சரம் கணை கொறுக்கை நாணல் தனி மணிவடம் தொடைப் பேர்
நரந்தம் வாசனையே காக்கை நாரங்கமொடு கத்தூரி
சுருங்கையே கரந்து பண்ணும் கற்படை நுழைவாயில் பேர்
**327
#6
அரலையே கழலைக்கட்டி அம்புதி மரலே கோட்டை
சிரல் முடிவிடமே பொன்வாய்ப்புள் என இருபேர் செப்பும்
தரவு என்ப கலியுறுப்பு தலைவன் கட்டளை பிடர்ப் பேர்
பரவல் சொல்லுதல் இறைஞ்சல் பரத்தல் ஏத்துதலும் ஆமே
**328
#7
சிரவம் கோரசமே அள் ஆம் சிரவணம் கேள்வி ஓணம்
இரவு யாமினி இரத்தல் இரவியே சயிலம் வெய்யோன்
புரவி முன்னாளே பாய்மா புரத்தலே அளித்தல் ஈதல்
குரவை வாருதியே அங்கைகோத்தாடல் கூத்தும் ஆமே
**329
#8
இரத்தம் வித்துருமம் செம்பால் இரகமும் இயம்பும் முப்பேர்
கரத்தலே மறைப்பு ஈயாமை கள்ளலும் முப்பேர் காட்டும்
சிரத்தலே அழித்தல் ஆர்ப்பு ஆம் சீரை வற்கலை துகில் பேர்
சுரத்தலே பயத்தல் ஆதல் ஈதலும் அப்பேர் சொல்லும்
**330
#9
பரம் தனு கடவுள் அங்கி பல்லணம் மிகுதி பாரம்
குரம்பையே முட்டை தேகம் குயிலாயம் குடிஞை என்ப
வரம்பு அணை வழியே எல்லை வரிதலே வரைதல் கட்டல்
குரம் பவித்திரியே தேனு குதிரையின் குழம்பும் ஆமே
**331
#10
புரணி ஊன் சருமம் ஆகும் புரிதலே இயற்றல் ஓம்பல்
பரணமே கவசம் பட்டு ஆம் பரிசனம் உழையோர் சுற்றம்
அரணியே ஞெலிகோல் அங்கி ஆரை என்று ஆகும் முப்பேர்
தரணி பூதலமே வெய்ய தபனன் வேதண்டம் ஆமே
**332
#11
பிரசம் தேன் சாகம் கள்ளு பிருங்கமோடு இறாலும் ஐம்பேர்
குரகம் நீர்ப்பறவை பூவை குரங்கமே விலங்கு மான் ஆம்
சுரசமே இரதம் சாறு சிறுகிழங்கு எனவும் சொல்லும்
வரதனே அருகன் ஈசன் மாயவன் முப்பேர் ஆமே
**333
#12
திரள் என்பது உண்டை கூட்டம் சேனையும் முப்பேர் செப்பும்
தரம் அச்சம் கூட்டம் வெற்பு சமானம் பக்குவம் வலிப் பேர்
குரவர் மந்திரியர் மூத்தோர் குருக்களோடு அன்னை தந்தை
வரம் நவநிதியில்ஒன்று வழங்கு அருள் மேன்மை ஆமே
**334
#13
முரண் பகை திரிபினோடு மொய்ம்பு என மொழியும் முப்பேர்
சுரம் அருநெறி காடு ஓர் நோய் துறை எனச் சொல்லல் ஆகும்
அரண் என்பது அழகு காவல் அணி மதில் காவற்காடு ஆம்
பரணி தூம்பு ஓர் நாள் கூத்து ஓர் பாமாலை கடிப்பமும் பேர்
**335
#14
அரங்கு போர்க்களம் வட்டாடுமிடம் சபை மனை விகற்பம்
குரங்கு மர்க்கடம் விலங்கின்பொதுவொடு கோணலும் பேர்
எருந்து உரல் ஏரல் என்ப ஏரியே குளம் பிண்டிப் பேர்
அரந்தை என்பது குறிஞ்சி யாழிசை துன்பம் ஆமே
**336
#15
இராசியம் புதை உள்வீடும் யோனியும் இயம்பும் நாமம்
பராகமே இரேணு ஆகும் பரிமளமலர்த்தூளும் பேர்
துரோணமே சரபம் காக்கை தும்பை வில் தனு பதக்கு ஆம்
இராகமே கீதம் செம்மை இச்சையும் நிறமும் ஆமே
**337
#16
அராமம் ஆராமம் பைங்கூழ் அரற்றலே அழல் ஒலித்தல்
தராவே காற்குளம் ஓர் கீரை சங்கொடு மதுகம் என்ப
மராளமே எகினம் போகி மாதளை வகுக்கும் முப்பேர்
குரால் என்ப கபிலை புற்கு கோட்டானும் குறித்தபேரே
**338
#17
துரால் என்ப நரலே துன்பம் சுரியே ஆண்நரி சுழற்சி
சராவமே அகல் சலாகை தரணமே தரித்தல் தாண்டல்
அராகமே செம்பொன் பாலையாழ் முடுகியலே ஆசை
மராமரம் ஆச்சா அச்சுவதத்தமும் நீபமும் பேர்
**339
#18
இராடம் கத்தவம் ஓர் தேயம் இரணமே புண் போர் என்ப
புராணம் காவியமே காதை பழைமையும் போற்றும் முப்பேர்
வராகம் ஓர் புராணம் கேழல் மரகதம் பசுமை பச்சை
இராசி நண்பகல் மேடாதி ஈட்டமோடு ஒழுங்கும் ஆமே
**340
#19
சிராவணம் நபம் சிலைப் பேர் திரங்கலே திரைதல் காயம்
கிராணம் ஆக்கிராணம் கிண்ணம் கிரகணம் கிளத்தும் முப்பேர்
தராசு என்பது துலை துலாக்கோல் தருமநாள் எனவும் சாற்றும்
மராடம் பெண்மயிர் வளாகம் புறமயிர் வகுத்த பேரே
**341
#20
சரி கரவளை ஒப்பு ஈட்டம் சாரலும் தரம் என்று ஆகும்
கரியவன் சனி மால் ஈசன் கள்வன் இந்திரனும் என்ப
பரிகமே கிடங்கு மேடை பகர் மதில் கணையம் நாற்பேர்
கரில் குற்றம் காழ்த்தல் என்ப கொடுமையும் கருதல் ஆமே
**342
#21
குரை என்பது ஒலியே வாசி கூர் என்ப மிகுதி கூர்மை
கிரி மருள்பன்றி ஓங்கல் கிருட்டியும் கிளத்தும் முப்பேர்
பரிகையே மதிலுள்மேடை பரிவு அகழ் பகரும் நாமம்
அரிதம் புன்நிலமே பொன்மை ஆசை சாமளம் நாற்பேர்
**343
#22
துரிதமே கலக்கம் பாவம் துன்பம் சீக்கிரம் கேடு ஆகும்
இரிதலே கெடுதல் ஓடல் இடைதல் அஞ்சுதலும் என்ப
சொரிதலே சுழலல் ஈதல் பொழிதலும் சொல்லும் முப்பேர்
திரிதலே இயங்கல் சூர்த்தல் செல்லுதல் கெடுதல் ஆமே
**344
#23
தெரியலே காணல் ஆய்தல் தேமலர்த் தொடையலும் பேர்
துரியம் ஓர் அவத்தையோடு தூர்வகம் சுமத்தலும் பேர்
பிரியையே சிலதி தாரம் பெண் என முப்பேர் பேசும்
சுரியலே உந்தி ஐம்பால் சுழலுதல் சுரித்தல் ஆமே
**345
#24
பரிவு இன்பம் துன்பம் அன்பு ஆம் பரிசு என்ப குணமே ஈகை
இரியல் வென்னிடல் நல்லாடை இரத்தியே பதரி இத்தி
சரியை நன்னிலை பிச்சைப் பேர் சரவணம் கொறுக்கை நாணல்
அரில் பகை பிணக்கு குற்றம் ஆம் சிறுதூறும் ஆமே
**346
#25
அருகலே வீதல் சார்தல் அஃகுதல் விடல் என்று ஆகும்
கருமையே பெருமை ஆலம் கறுப்பொடு வலியும் ஆகும்
அருணம் ஓர் தேயம் செம்மை ஆடு செம்பீரமே நவ்வி
இருசு பண்டியுளிரும்பு செவ்வையும் இருபேர் ஆமே
**347
#26
கிருத்திமம் தோலே பண்ணல் கெட்ட பொய் விட்ட பூதம்
விருத்தி தொண்டு இலாபம் பத்தி விரிபொருள் வளர்தல் செல்வம்
துருத்தி அத்திரி இலங்கை ஆற்றிடைக்குறை தோல் துட்டை
அருத்தியே நிருத்தம் பாதம் ஆசையும் முப்பேர் ஆமே
**348
#27
அருணன் சூரியன் தேர்ப்பாகன் ஆதித்தன் புதன் முப்பேரே
வருணமே குலம் எழுத்து மாமை நீர் என நாற்பேர் ஆம்
கரிணியே முழையும் வெற்பும் களிறொடு பிடியும் ஆகும்
அருவியே புகார் தினைத்தாள் உவதையும் முப்பேர் ஆமே
**349
#28
எருக்கலே சுமத்தல் கொல்லல் வெட்டலும் முப்பேர் என்ப
முருக்கு கஞ்சுகமே நூழில் சதாபலம் மொழியும் முப்பேர்
துருக்கம் காடு அரண் கலக்கம் குங்குமமரம் கத்தூரி
நிரப்பு என்ப மிடிமை குன்றல் நிறைத்தலும் உரைத்த பேரே
**350
#29
குருதியே சிவப்பு இரத்தம் குசன் எனக் கூறும் முப்பேர்
பருதி சக்கரமே பானு பரிவேடம் உருள் கேழ் வட்டம்
இரதியே மதனன்தேவி இச்சை பித்தளை பெண்யானை
சுருதி ஆரணமே காதோடு ஒலி என முப்பேர் சொல்லும்
**351
#30
மருள் மயல் குறிஞ்சியாழின்திறமொடு மயக்கம் என்ப
இருள் கரி கறுப்பு உன்மத்தம் ஏமமோடு இருள்நிலப்பேர்
பொருநர் போர்த்தலைவர் வீரர் புரவலர் பாணர் கூத்தர்
இருபிறப்பு இந்து பார்ப்பார் அண்டசம் இறகு பல்லே
**352
#31
மருதம் மீக்குவம் செய் மென்பால் மருதநன்னிலத்தின்பாடல்
எருவை செம்பு யானை கோரை இரத்தம் கர்த்தபம் சகுந்தம்
தருமராசன்தான் புத்தன் சமன் அறன்மைந்தன் என்ப
கரி கடு இருந்தை சான்று கறையடி சேகு ஐம்பேரே
**353
#32
எரி புநர்பூசம் அங்கி இந்திரநாள் பவர்க்கம்
சுரிகையே உடைவாள் அங்கி சுரும்பு என்ப ஞிமிறு வெற்பு ஆம்
விரிதலே அலர்தல் மின்னல் அகலமும் பரவலும் பேர்
பரிதலே அறுத்தல் வேட்டல் பற்று இரங்குதலும் ஆமே
**354
#33
கரு நடு கருப்பத்தோடு கருப்பொருள் முட்டை மேடு ஆம்
திரு என்ப செல்வம் செய்யாள் சிறப்பு எனச் செப்பும் முப்பேர்
இருமையே துக்கம் இம்மை மறுமை பீடு இருதன்மைப் பேர்
உருஉடல் சளுகம் சந்தம் உள் வடிவொடு நோய் ஆமே
**355
#34
அருந்தலே பருகல் உண்டல் அருமையும் முப்பேர் ஆகும்
செருந்தி வாட்கோரையோடு செங்கோடு மணித்தக்காளி
விருந்தம் என்பது விலங்கின்கூட்டமே கிளையின்கூட்டம்
முருந்து இறகடியிலுற்றமுதல்முள்ளு தவளம் ஆமே
**356
#35
உருளே தேருருளை பன்றி உரோகணி ஓதும் முப்பேர்
கருள் என்பது இருள் நல்லாடை கறுப்பு என முப்பேர் காட்டும்
பொருள் பலபண்டம் வாய்மை பொன் மகவு அர்த்தம் என்ப
ஒருவந்தம் சம்பந்தத்தோடு ஒற்றுமை ஏகாந்தப்பேர்
**357
#36
மருளலே மயங்கல் அஞ்சல் வரிசையே முறைமை ஈகை
முருகனே இளையோன் வேலன் முருகவேள் மொழியும் முப்பேர்
அருள் சிவசத்தி ஈகை அபயமும் முப்பேர் ஆகும்
அரிவை ஐயைந்தாம்ஆண்டில்பெண் அரமகள் மாது ஆமே
**358
#37
புரை குற்றம் உவமை இல்லம் புழையுடன் உயர்ச்சி ஐம்பேர்
விரை மணம் சாந்து தூபம் வித்து என விளம்பற்பாறாம்
சுரை ஆவின்முலை கள் அம்பின்தலை சுரைக்கொடி புழைப் பேர்
நரை சரை கவரி வெண்மை நாரை வெண்பரி ஏறு ஆமே
**359
#38
வரைவு அளவு எல்லை நீங்கல் மாறுபாடு எனவும் நாற்பேர்
திரை கடல் எழினி யாறு திரைதல் நீர்த்திரையும் என்ப
கரை முடிவு எல்லை நீரின்கரை மொழியொடு சேர்வு ஆகும்
நுரை நவநீதம் பேனம் குமிழியும் நுவலல் ஆமே
**360
#39
வரை கரை அளவு வேரல் மலை விரலிறை வரம்பு ஆம்
உரை ஒலி அருத்தம் தேய்வோடு உயர்ச்சி பொன் சொல்லும் ஆகும்
வரைதலே எழுதல் கொள்ளல் நீக்குதல் மன்றல் மாற்றல்
நிரை தொறு ஒழுங்கு தூசி நிரையசை நிகழ்த்தும் நாற்பேர்
**361
#40
நாரி நெய்யரி வில்நாணி நறுநாற்றம் சிவையே பெண் ஆம்
பாரி ஓர் வள்ளல் இல்லாள் பார் கடல் மஞ்சம் ஆடை
காருகர் நெய்வோர் தூசர் கடும் கொலையாளர் என்ப
மாரி நீர் மழை சா மேகம் வடுகி நோய் மதுவும் ஆமே
**362
#41
ஆரையே நீருள்ஆரை அரணம் கொத்தளியும் முப்பேர்
கீரமே பாகு தீபம் கருங்கிளி கிள்ளை என்ப
வீரை அன்னவம் ஓர் தாரு வேதனை விளம்பும் முப்பேர்
சூரன் ஓர் அசுரன் வீரன் சுவா அனலி ரவி ஆமே
**363
#42
ஆரல் கார்த்திகைநாள் செவ்வாய் அரண் ஒரு மீனே ஆம்
சாரலே மருதயாழினிசை வரைச்சாரல் கிட்டல்
மூரலே நகையும் சோறும் மொழியுடன் எயிறும் ஆகும்
கூரல் புள்சிறகு மாதர்ஓதியும் இருபேர் கூறும்
**364
#43
சாரிகை பூவை சுங்கம் தைப்பை வல் மாதி சூறை
காரிகை அழகு பெண் ஓர் நூல் கலித்துறையும் ஆகும்
ஆரி ஏர் கொடுமை மேன்மை அபயனும் புதனும் என்ப
ஆரியர் மிலேச்சர் நல்லோர் கவிஞர் ஆசிரியர் ஆமே
**365
#44
சாரசமே வெண்நாரை தாமரை குருகும் ஆகும்
கூரமே பொறாமை ஓர் ஊர் கொடுமையும் பாகலும் பேர்
சாரம் மேடு இனிமை சேகு சகோரம் ஓர் மருந்து ஒழுக்கம்
வீரம் வீரியம் தற்செல்வம் வெற்பு சைவீரம் ஆமே
**366
#45
ஆரியன் கவிஞன் பானு ஐயன் ஆசிரியன் சான்றோன்
வாருணி சதயம் மேக்கு மது அகத்தியனும் நாற்பேர்
பூரி ஓர் இசை பொன் நாணி கலப்புநெல் பொம்மல் என்ப
ஆரிடம் இழுக்கல் பூசை ஆகமம் மணம் நூல் ஆமே
**367
#46
பீரமே சிரீடமோடு பீர்க்கு பூவரசும் ஆகும்
சூரமே கடலை வீரம் அச்சமும் சொல்லும் முப்பேர்
நாரம் சைவலம் நீர் அன்பு நாரங்கமொடு நார் ஆகும்
ஊரல் ஊருதல் கிளிஞ்சில் உரிஞ்சலும் முப்பேர் ஆமே
**368
#47
சாரியை பவனி சூறை தாயமும் சாற்றும் முப்பேர்
சூரியே வடுகி கற்றோர் சூலியும் முப்பேர் சொல்லும்
வேரியே மூலகந்தம் விரை மது விளம்பற்பாற்றாம்
ஆரியை காளி துற்கை அம்பிகை முப்பேர் ஆமே
**369
#48
சாரணர் ஒற்றர் என்ப சமண்முனிவருக்கும் ஆகும்
வாருணம் ஓர் புராணம் மறி கடவொடு மேக்கு என்ப
வேர் என்ப சுவேதம் மூலம் வீரனே அசோகன் மீளி
பூருவம் பழமை ஆதி இந்திரி முப்பேர் போற்றும்
**370
#49
வார் நேர்மை கச்சு நீளம் வாரி கொண்மூவும் ஆகும்
பீர் என்ப முலைப்பாலோடு பீர்க்கு அச்சம் பசலையும் பேர்
சார்வு என்பது இடமும் பற்றும் சார்தலும் முப்பேர் சாற்றும்
பார் புவி உரோணி தேரின்பரப்பு வேதியரும் ஆமே
**371
#50
ஊர்தி கூவிரியே பாண்டில் உம்பல் ஏறு அணிகம் வாசி
ஆர்வமே நிரையம் அன்போடு ஆசை தூசு ஒலி வில் ஆகும்
கார் முகில் பள்ளை ஓர் நெல் கருமை ஓர் பருவம் நீர் ஆம்
பீருவே அச்சமுற்றோன் பெயரொடு புருவம் ஆமே
**372
#51
ஏர் அழகு உழுபெற்றப்பேர் இராசியே ஓரை கூட்டம்
சார் இடம் அழகு பற்று ஓர் தாருவும் சாற்றும் நாமம்
ஆர்வலன் நண்பன் கொண்கன் அரசனே மன்னன் பொன் ஆம்
சூர் அரமகளே அச்சம் துன்பம் தெய்வதமும் ஆமே
**373
#52
தேர் உருள் இரதம் ஆகும் தீர்க்கம் நிச்சயமே நீளம்
நீர் உடைகுளமே வாரி நீர்மை முன்னிலைப்பன்மைப் பேர்
போர் அமர் சதயம் பொள்ளல் புகலும் நெல் முதலாம் சும்மை
ஆர்தலே தங்கல் மல்கல் அருந்தலும் பருகலும் பேர்
**374
#53
ஈரமே குளிர்ச்சி அன்போடு எழிலொடு மிகுதி ஆகும்
ஊர்தல் ஊருதல் பரத்தல் செலுத்தலும் உரைக்கற்பாற்றாம்
தீர்தலே துணிவு நீளம் செலல் விடல் முடித்தலும் பேர்
வார்தலே தெரிதல் நீளல் வாருதல் உயர்ச்சி ஆமே
**375
#54
ஆர்த்தலே பொருத்தல் கட்டல் அணிதலோடு ஒலித்தல் என்ப
மார்க்கம் மார்கழியினோடு வழி நெடுந்தெருவும் ஆகும்
தேர்ச்சியே எண்ணல் கல்வி தெளிவு என முப்பேர் செப்பும்
மூர்த்தம் ஈர்கடிகைப்போதோடு உடல் என மொழியல் ஆமே
**376
#55
ஈர்த்தலே அறுத்தல் என்ப இழுத்தலும் பிளத்தலும் பேர்
பார்த்தல் ஆராய்தல் காணல் வணங்கலும் பகரற்பாற்றாம்
தீர்த்தனே அருகன் ஆசான் சிவனொடு குருவே மாயோன்
மூர்த்தியே அருகன் புத்தன் முக்கணன் உருவம் ஆமே
**377
#56
அரங்கமே சவை இலங்கை ஆடிடம் சாலையோடு
பொரும் களம் திருவரங்கம் சத்திரம் போற்றும் ஏழ்பேர்
மரக்கால் ஆயிலியம் வீழ்க்கை வள்ளம் நாரணியின் கூத்தோடு
உருக்கினர் முகுந்தன்கூத்து ஓர் அளவை உப்பளமும் ஆமே
**378
#57
அரணமே கணையம் வேலி ஆரல் வேல் கபாடம் மஞ்சம்
அரலை மெய்க்கவசம் பாதகுறடு என அறையும் ஒன்பான்
கரணம் எண் மனாதி மின்னார் கலவியில்கொள்ளும் எண்ணம்
திரமுறு கலவி கூத்து ஐம்பொறி திறம் செப்பும் ஏழ்பேர்
**379
#58
புரி கயிறு ஆசை கட்டு ஊர் புரம் புரி அரணமோடு
சுரிமுகம் மருதத்துஊர் நல் சுருள் இவை ஈரைம்பேர் ஆம்
கருவி ஆயுதம் யாழ் நட்பு கசை குழு கவசமோடு
பரியின்கல்லணை சீமூதம் பல்லியம் தொடர்பு ஏது ஆமே
**380
#59
குருகு மாதவி புள் வெண்மை குக்குடம் சிவை வண்டானம்
கரவளை மழவு மூலநாள் இவை கருதும் ஒன்பான்
முருகு சம்பிரம் எழுச்சி முருகவேள் இளமை வேலன்
தரும் எழில் நாற்றம் கள் உற்சவம் அகில் ஈரைந்து ஆமே
**381
#60
குருளை புல் யாளி பன்றி குரோட்டம் மைமுகன் நாய் சீயம்
அரிணம் என்று இவற்றின் குட்டி முயல்குட்டி இளமை ஆகும்
குரு நிறம் ஓர் நோய் பாரம் குரவன் பீதகன் ஓர் தேயம்
இருநொடிப்பொழுதினோடு பெருமையும் எண்பேராமே
**382
#61
அருப்பமே மருதத்துஊர் மோர் ஆரிடம் துக்கம் கோட்டை
தருக்குறு நறவு மா ஊர் சங்கிரம் நூழில் ஆகும்
அரத்தம் செங்குவளை செம்பொன் அலர்த்தகம் செம்மை துப்போடு
இரத்தம் செம்பரத்தம் நீபம் இருநாற்பேர் இயம்பல் ஆமே
**383
#62
பரி சுமை வழி கார்ப்பாசம் பாது சீக்கிரம் உயர்ச்சி
புரவி ஆகுலம் பீடு அன்பு பொம்மல் காளிமம் ஈராறாம்
வரி குடியிறை எழுத்து வழி சாலி சுணங்கு நீளம்
விரலிறை ஒழுக்கம் பாட்டு வீரை தீ வடிவும் ஆமே
**384
#63
பாரமே கலணை அங்கி பார்த்திவம் சுமை குரம்பு
நீரம் ஆர் கரை நவ்வோடு நிறை பொறை நிகழ்த்தும் ஒன்பான்
தாரை கண்மணி நேரோடல் சாகதம் நடவை விண்மீன்
கூர்மை கண் மழை ஒழுங்கு கொடிப்படை சின்னம் நாவே
**385
#64
ஆரமே தொடை இரீதி ஆத்தி நந்தனம் பூண் முத்தம்
ஈரம் ஆர் படீரம் நீபம் எழில் சரம் மதாணி என்ப
வாரம் ஏழ்கிழமை அன்பு மலைச்சாரல் உரிமை பங்கோடு
ஆர்கலி பரம்பு கூலம் அலை இவை ஒன்பான் ஆமே
**386
#65
தாரம் யாழ்நரம்பில்ஒன்று தாலு வல்லிசை கண் வெள்ளி
பாரி ஓர் மருந்து பச்சைப்பாம்பின்நஞ்சொடு கஞ்சப்பேர்
கோரம் பூமொட்டு வாசி கொடுமை சீக்கிரமே சோழன்ஊர்தியோடு
அச்சம் வட்டில் உட்டணமுடன் எண்பேரே
**387
#66
மூரி ஏறு எருமை சோம்பல் முந்தும் ஊழ் இடபராசி
தீரம் மாட்சிமை எருத்துத்திமில் நெரிவு இவை ஒன்பான் ஆம்
வாரி நீர் பயம்பு வாய்தல் மதில் வழி பகுதி வெள்ளம்
வீரை நூல் உழி கபாடம் இசைக்குழல் விளம்பும் பேரே
**388
#67
ஓரியே விலங்கின்சேக்கை ஊளன் ஆண்முசு உரோமம்
சாரும் ஆண்மயிர் ஓர் வள்ளல் முதுநரி எழுபேர் சாற்றும்
தூரியம் முரசம் ஓகைப்பறை துகிலிகை நல் தூசு
மூரி கப்பணமோடு ஈயம் எறிபடை மொழியும் பேரே
**389
#68
வாரணம் விடுதல் கோழி வளை கடல் ஆணை அங்கி
பார மாதங்கம் தட்டு பன்றி உன்மத்தம் என்ப
சீர் அணி செல்வம் நன்மை சித்திரம் தண்டை சீர்த்தி
பாரம் காத்தண்டு யாப்பின்உறுப்பொடு சதி பத்து ஆமே
**390
#69
ஓரையே கலன்கள் வண்டல் உண்டாட்டு பவனம் கூட்டம்
நாரியர்தொகுதி அற்றம் என இவை நவிலும் ஏழ்பேர்
தோரை வேயரிசி ஓர் நெல் சோணிதம் ஓர் எண் அங்கை
சார்தரு வரையினோடு சரமணிக்கோவை ஆமே
**391
#70
தார் படை முகிழம் போது தாமம் கிண்கிணியின்கோவை
சார்தரும் ஒழுங்கு தூசி சத்திரம் எண்பேர் சாற்றும்
காரியே வடுகன் காக்கை கருமை நோய்முகன் காரிப்புள்
பூரணை கேள்வன் நஞ்சு போற்றும் ஓர் வள்ளல் எண்பேர்
**392
#71
நேர் உடன்பாடு பாதி நெடில் சமம் செவ்வை நுட்பம்
சேர் பொலிவு எதிரினோடு ஓர் அசை இவை செப்பும் ஒன்பான்
ஆர் கமம் கூர்மையும் தேராழியுட்செறிஉறுப்பும்
பாரும் சல்லகியும் பாகும் சோதியும் பகரும் ஏழ்பேர்
**393
#72
பிரமமே முத்தி ஞானம் பிஞ்ஞகன் மாயன் வேள்வி
இரவி மந்திரம் வேதாந்தம் எண்கணன் செந்தீ வேதம்
பரவு சந்திரிகை மாயை பயம் நடு ஓர் புராணம்
இருடி தத்துவம் குற்றத்தோடு ஈறிலி என நாலைந்தே
**394
#73
அரி கடல் பன்றி மாயோன் ஆயுதம் நெருக்கம் கூர்மை
எரி விசி வலி கள் ஈர்வாள் எறி பறை தொடையல் மஞ்சம்
பரிபுரமதனுள் உய்த்த பருக்கைக்கல் பகை தேர் கண்ணில்வரி
நமன் தவளை செம்பொன் வானரம் படுக்கை தூவல்
** (ரகர எதுகை முற்றிற்று )
@13 லகர எதுகை
**395
#1
சிலம்பு ஒளி அரிசி பச்சை சேகு மேழகம் பாம்பு ஊதை
விலங்கல் கேழ் அடர்பு தூமம் வேணு நெற்கதிர் கா ஐமை
அலங்கு உளைஅரி களங்கம் அளி மரகதம் மா கிள்ளை
இலங்கு செங்கதிரோன் ஆழி இந்து தூம்பு எனப் பத்து ஆமே
**396
#2
புலவர் பாடுநரே கூத்தர் புத்தேளிர் கவிகள் ஓவர்
வலவனே வெற்றியாளன் மாயன் தேர்ப்பாகன் ஆகும்
அலம் என்ப சுழற்சி நாஞ்சில் அமைவு சஞ்சலம் தேள் ஆகும்
வலம் இடம் கனமே வெற்றி வலப்புறம் வலி மேல் ஆமே
**397
#3
இலம்பகம் அத்தியாயம் நுதல்சூட்டுத் தெரியல் என்ப
பலம் கனி கிழங்கு ஊன் நெற்றி படை பயன் வலி பொன் ஆகும்
இலஞ்சி மா மகிழ் புன்கு ஏரி எயில் கொப்பூழ் குணமும் ஏற்கும்
அலங்கலே கலுழ்தல் மாலை அசைவு இலங்குதல் தளிர்ப்பேர்
**398
#4
ஒலி இடி ஒளி ஆர்ப்பு ஓசை ஊதையும் ஓதும் ஐம்பேர்
ஒலியல் நோய் ஆறு சீலை உரிவை பூந்தாரே வீதி
எலி பூரம் களிமம் என்ப ஏல்வையே தடாகம் காலம்
கலுழியே கான்யாறோடு கலங்கல்நீர் எனவும் காட்டும்
**399
#5
வலம்புரி சங்கு ஓர் தாரு நந்தியாவர்த்தம் ஆகும்
புலம்பு ஒலி தனிமை துன்பம் புலம்புறல் அச்சம் என்ப
சிலம்பே நூபுரம் சிலம்பல் சிலோச்சயம் முப்பேர் செப்பும்
விலங்கு கால்தளை குறுக்கம் மிருகத்தின்பொதுவும் ஆமே
**400
#6
உலகமே திசை விண் பூமி உயர்குணம் சனம் உயர்ந்தோர்
அலவனே ஞெண்டு பூஞை அம்புலி கடகராசி
இலயமே கூத்து கூத்தின்விகற்பமும் இறப்பும் முப்பேர்
வலவையே காளி வல்லோன் இடாகினி வஞ்சப்பெண் ஆம்
**401
#7
தலம் இடம் இலையினோடு தரை உலகின் பொதுப்பேர்
கலகம் போரொலி போர் என்ப கலசமே கும்பம் பால் ஆம்
இலகு என்பது அகரு நுண்மை இலந்தையே பதரி வாவி
திலகம் மஞ்சாடி பொட்டு சிந்தூரம் முப்பேர் ஆமே
**402
#8
குலம் மனை கடைநாள் கூட்டம் சாதியும் கூறும் நாமம்
சலம் நீர் பொய் அசைவு முள்மா தணியாதகோபம் ஆகும்
அலமரல் சுழலல் அச்சம் துன்பமும் அப்பேர் என்ப
கலம்பகம் கலப்பு சாந்து ஓர் பிரபந்தம் முப்பேர் காட்டும்
**403
#9
கலக்கம் பேரோதை துன்பம் அச்சமும் கருதும் முப்பேர்
வலத்தலே நிணத்தல் சொல்லல் வளைத்தலும் வருக்கல் ஆகும்
இலக்கமே ஒளி கணக்கு ஓர் எண் குறிப்பு என நாற்பேர் ஆம்
உலக்கையே அழிவு சோனை உரோங்கலும் முப்பேர் ஆமே
**404
#10
நலம் உபகாரம் இன்பம் நன்மை கண்ணோட்டம் ஏர் ஆம்
உலைவு என்ப நடுக்கம் அச்சம் உலைதல் என்று ஓதும் முப்பேர்
பிலமே கீழறையினோடு பாதலம் குகை முப்பேர் ஆம்
புலம் இடம் அறிவு செய் ஐம்புலன் திசை போற்றும் ஐம்பேர்
**405
#11
அலம்பலே ததும்பலோடு கழுவுதல் ஒலித்தல் ஆகும்
சிலம்பனே குறிஞ்சிவேந்தன் முருகனும் இருபேர் செப்பும்
விலங்கலே கலுழி வெற்பு விலங்குதல் விளம்பும் முப்பேர்
கலங்கலே சேற்றுநீரும் கலுழல் அஞ்சுதலும் ஆமே
**406
#12
விலகலே எறிதல் நீங்கல் மறைதலும் விளம்பும் முப்பேர்
நிலயம் பார் தேவர்கோவில் நிருத்தமே மருதத்துஊர் ஆம்
வலயம் கைக்கடகம் சுற்று வட்டம் வாருதி தடாகம்
மலைதலே அணிதல் பூசல் மறுத்தலும் வகுக்கல் ஆமே
**407
#13
அலரி கண்வரி நீர் வாவி அருக்கன் ஓர் மரம் ஏர் தேனீ
மலர்தலே விரிதல் தோன்றல் மல்கலோடு எதிர்தல் ஆகும்
கலவையே அழறு சாந்து கலப்பு என முப்பேர் காட்டும்
இலவம் சான்மினி ஓர் தீவோடு எண்கணப்போதும் ஆமே
**408
#14
அலர் பழிச்சொல் நீர் மாலை அலர்ந்தபூ எனவும் ஆகும்
பொலம் அழகொடு பொன் ஆகும் புலவு என்ப நரகம் ஊன் ஆம்
மலங்கல் குண்டு அலைதல் என்ப வல்லரி தளிர் பூங்கொத்து
இலிங்கம் இங்குலிகம் கோசம் இலாஞ்சனை சிவலிங்கப்பேர்
**409
#15
அலி செலு வெளிறு பேடி ஆகும் செந்தீயும் என்ப
குலிகம் இங்குலிகம் செம்மை மதுகமும் முப்பேர் கூறும்
பலி காய்த்தமரம் விண்ணோர்ஊண் பைக்கம் சோறொடு நீறு ஆகும்
புலியே நால்வகையில்சாந்து கொடும்புலி புல்லும் ஆமே
**410
#16
வலி வன்மை பற்றிரும்பு வலிப்பு என வகுக்கும் முப்பேர்
குலிசம் வச்சிரம் இருப்பை தமனியும் முப்பேர் கூறும்
பொலிதலே வீற்றிருத்தல் பொம்மலோடு எழுச்சி என்ப
நலிதலே வருந்தல் வாடல் அழிதலும் நவிலல் ஆமே
**411
#17
கலித்தலே பொலிவு எழுச்சி கனைத்தலும் தழைத்தலும் பேர்
சலித்தல் சஞ்சலித்தல் எய்த்தல் ஒலித்தலும் அப்பேர் சாற்றும்
பலித்தல் ஊதிபம் சித்தித்தல் பலன் என்ப கனி இலாபம்
வலித்தலே வலிப்போடு எண்ணல் உடன்படல் வகுத்தபேரே
**412
#18
சிலீமுகம் முலைக்கண் வண்டு தெறு கணை செப்பும் முப்பேர்
சலாகையே சராவம் ஈட்டி சலாகு ஊசிக்காந்தம் என்ப
விலோதமே அளகம் ஐம்பால் விலோதனம் விளம்பு முப்பேர்
பலாசமே இலை முருக்கு பைமையும் பகரல் ஆமே
**413
#19
அலை கருமணல் நீரின்அலையும் அம்புதியும் ஆகும்
குலை அம்பின்குதை நடுக்கம் சேது வில்குதை காய்க்கொத்து ஆம்
சிலை ஒலி கல் வில் வெற்பு தேட்கடை செப்பும் ஐம்பேர்
தலை மிசை இடம் பீடு ஆதி தலைமை விண் சிரமும் ஆமே
**414
#20
துலை கனம் நிறையினோடு துலாம் ஏற்றமரமே தூரம்
நிலை பொழுது இடம் பார் நீர்மை நெறி பூணின்தொங்கலும் பேர்
மலைவு என்ப மயக்கம் வெம் போர் மாறுபாடு உவமை ஆகும்
அலைதலே துன்பம் சோம்பல் வருந்தலும் அப்பேர் ஆமே
**415
#21
அல்லி வெள்ளாம்பல் காயா அகவிதழ் இரா பூந்தாது ஆம்
அல் இரா இருள் மார்த்தாண்டன் ஆரையோடு இடைச்சொல் ஐம்பேர்
சில்லி சிள்வீடு வட்டம் சிறுகீரை தேரின்சில்லு
வல்லியே கொடி ஆய்ப்பாடி வரைவு கால்விலங்கும் ஆமே
**416
#22
இல் இல்லாள் இல்லையென்றல் இராசி சா இடம் வீடு என்ப
மல் வண்மை மாயோன்ஆடல் வலி கூத்தின்விகற்பம் ஆகும்
சில்லை என்பது பிரண்டை சிள்வீடு தூர்த்தை என்ப
ஒல்லையே தொல்லை வல்லை கடுப்பொடு சிறுபோதும் பேர்
**417
#23
தில் ஒழியிசையே சாலம் விழைவு என முப்பேர் செப்பும்
வல் என்ப விரைவு தாயம் வலியொடு மேடும் ஆகும்
அல்கலே வறுமை தங்கல் ஆனியம் சுருங்கல் நத்தம்
ஒல்கலே தளர்தலோடு குழைதலும் துவளலும் பேர்
**418
#24
செல் இடியேறு மேகம் சிதலை விண் அயிலும் ஐம்பேர்
எல் ஒளி பகல் இகழ்ச்சி இரவு நாள் வெயில் என்றூழ் ஆம்
கல் ஒலி சிலை வேதண்டம் கலாம் என்ப கொடுமை கோபம்
சொல் உரை கீர்த்தி செந்நெல் சுலோகி நெற்கதிரும் ஆமே
**419
#25
வில் ஒளி மூலம் சேரன்பதாகையே வேணு என்ப
வல்லவன் புருடன் வல்லோன் இடையனும் வகுக்கும் முப்பேர்
புல் புலி புணர்ச்சி புன்மை புதல் பனை அனுடநாள் ஆம்
கொல் என்பது அசைச்சொல் ஐயம் வருத்தமும் கூறல் ஆமே
**420
#26
வல்லை கான் விரைவு மேடு வட்டம் ஓர் நோய் கோட்டை
மல்லலே வளமை வன்மை மிகுதியும் வகுக்கல் ஆகும்
முல்லையே தளவம் வென்றி மொழியும் ஓர் நிலம் கற்பு என்ப
பல்லம் ஓர் கணக்கு பாணம் பல்லணம் கரடி ஆமே
**421
#27
சில்லிகை துகில் நல்லாடை சிள்வீடுதானும் ஆகும்
மல்லிகை கடிஞை தீபமத்திகையொடு பூருண்டி
சல்லியம் ஆயுதத்தின் நுதியின் முள் சரம் என்பு ஆகும்
வல்லியம் கொல்லிவெற்பு வரிப் புலி இடையர்ஊரே
**422
#28
மல்லையே கடிஞை வட்டம் மலைப்பு என்ப மலைவு ஞாட்பு ஆம்
கொல்லை ஊர்ப்புறமே சோலை படப்பையும் குறிக்கல் ஆகும்
குல்லையே துளவு கஞ்சம் வெட்சியும் குறிக்கும் முப்பேர்
எல்லையே அளவு நாளோடு இரவியும் முடிவும் ஆமே
**423
#29
வல்லிகை காதணிக்கு வகுத்த பேர் யாழும் ஆகும்
வில்லி அங்கசன் குரோதன் வல்லாளன் விளம்பும் முப்பேர்
இல்லமே சில்லம் புக்கில் எல்லியே நிசி வெய்யோன் ஆம்
புல்லலே அமைதல் சார்தல் புணர்தல் கூடுதலும் ஆமே
**424
#30
ஆலம் தொன்மரமே தூறல் அரவின்நஞ்சு அலர்ந்தபூ நீர்
மூலம் ஓர் நோய் கிழங்கு முதல் வேர் ஏது ஓர் நாள் ஆகும்
சீலம் பண்பு அறம் ஒழுக்கம் சீந்தில் கையாறு காட்சி
வேல் அயில் கைவேல் எஃகு வேணு முள்வேலும் ஆமே
**425
#31
காலமே பொழுது வைகல் கலுழ்தலே அழல் கலங்கல்
சாலகம் வலை புள்கூடு சலதாரை சாலம் போகில்
தாலம் உண்கலம் நாவு ஆனைச்செவி புவி தாழி ஐம்பேர்
ஆலலே ஒலித்தல் ஏங்கல் ஆடுதல் முப்பேர் ஆமே
**426
#32
சாலியே கவசம் செந்நெல் அருந்ததி சாயனப்பேர்
பாலிகை உதடு வட்டம் பாலிகை படைவாள் முட்டி
வேலி ஊர் அரணம் காவல் விளைநிலத்துஅளவை என்ப
மாலி கள் இரவியோடு ஓர் அரக்கனும் வகுக்கல் ஆமே
**427
#33
ஆலயம் இல்லம் கோயில் ஆனையின்குழாமும் ஆகும்
பாலமே ஆற்றுப்பாலம் மழு நுதல் சினையே பார் ஆம்
ஏலமே மயிர்ச்சாந்தோடு வாசனைப்பண்டம் என்ப
சீலமே பிசின் சுவாலை ஆணியும் கிளத்தல் ஆமே
**428
#34
சூலியே சூரி மாரி சுந்தரி சினையாள் ஈசன்
வாலியே அலாயுதன் கிட்கிந்தையின்மன்னன் என்ப
பாலி தொன்மரம் கள் ஆகும் பாலித்தல் புரத்தல் ஈதல்
காலிலி அருணன் பாம்பு காற்று என முப்பேர் ஆமே
**429
#35
மாலதி தளவு சாதி மல்லிகை வகுக்கும் முப்பேர்
ஓலமே பாராவாரம் ஒலியும் சிம்மகமும் ஆகும்
தூலமே பருமே இல்லின்உத்திரம் பஞ்சும் சொல்லும்
நீலம் நஞ்சு இருள் கறுப்பு நீல்நிறம் பனை காற்று ஆமே
**430
#36
கோலல் சூழ்ந்திடல் வளைத்தல் முகத்தலும் குறிக்கல் ஆகும்
கீலாலம் காடி செம்பால் உதகமும் கிளத்தற்பாற்றாம்
ஆலாலம் விடமே வௌவால் அலந்தையே தடாகம் துன்பம்
மாலம் குங்குமமரம் பேய் வாலமே மயிர் வால் ஆமே
**431
#37
ஆலி காற்று அமுதம் ஆலாங்கட்டி கள் மழை துமிப் பேர்
காலியே தொறு விரேயம் கழிவுநாள் முப்பேர் காட்டும்
கோலி கோற்கொடி மயிர்ப் பேர் குலிங்கம் ஓர் தேயம் கல்லி
சாலினி என்ப தேவர்க்குஆடுவாள் படுவிதானே
**432
#38
சாலையே குதிரைப்பந்தி அறப்புறம் மன்னர்தம்இல்
வேலையே பாராவாரம் வினை கடல் காலமும் பேர்
சாலேகம் சாளரம் பூவரும்பு சந்தனம் சிந்தூரம்
காலேயம் அருப்பம் காலி கத்தூரிமஞ்சள் ஆமே
**433
#39
ஆலையே கருப்பமாலை அம்மியம் கழையும் ஆகும்
ஓலை தென்பனை இவற்றின் இலை ஒலி திருமுகப்பேர்
காலையே விடியற்காலம் பொழுது என இருபேர் காட்டும்
சேலேகம் சந்தனம் சிந்தூரமும் செப்பல் ஆமே
**434
#40
நூலோர் மந்திரிகள் பார்ப்பார் அறிஞரும் நுவலும் முப்பேர்
மேலோர் புத்தேளிர் சான்றோர் மேற்குலத்தவரும் ஆகும்
ஆலோலம் நீரொலிப் பேர் புள்ளோச்சல்தானும் ஆகும்
வேலாவலயம்தான் பூமி விரிகடல் இருபேர் ஆமே
**435
#41
ஆல் பழுமரம் அசைச்சொல் ஆம்என்பது அல்லஎன்றல்
சால்பு மாட்சிமை சான்றாண்மை தகுதி ஊதியமும் ஆகும்
வால் வெண்மை மிகுதி தூய்மை வாலகம் இளமை ஐம்பேர்
சால் படைச்சாலே நீர்ச்சால் சால்பு என முப்பேர் சாற்றும்
**436
#42
நூல் என்பது எண்ணல் பஞ்சின்நூல் கல்விநூலும் ஆகும்
நீல் என்ப நீலம் காற்று ஆம் நிலவு சந்திரிகை ஆலோன்
மேல் இனி அகலம் மேக்கு மேற்றிசையுடன் ஆகாயம்
போல் என்ப பதரே மூங்கில் உவமையும் புகலல் ஆமே
**437
#43
உலவை கான்யாறு வள்ளி ஊதை கோடரம் மருப்பு
குலம் மரப்பொந்து ஊர் ஓடைக்கொடி தழை குடி பன்னொன்றாம்
பலம் ஒரு நிறை ஊன் நெற்றி படை கனி பயன் கிழங்கு
வலமொடு செம்பொன் காயும் வழங்கும் ஐயிருபேர் ஆமே
**438
#44
அலகு எண் நெற்கதிரே ஆதி ஆயுதம் மகிழின்வித்து
பலகறை துடைப்பம் நுண்மை பறவைமூக்கு எண்பேர் பன்னும்
கலம் அலம் அகலம் பாண்டம் உண்கலன் யாழ் நாவாயோடு
இலகு பூண் கடைநாள் என்ப ஓர் அளவு எனவும் ஆமே
**439
#45
கலை சுறா மகரம் கல்வி காழ் விலங்குஏறு தூசு
குலவும் ஆண்முசு நூல் காலநுட்பம் பட்டிகை கூறு ஆகும்
கலி வளம் ஞாட்பு வஞ்சம் கடையுகம் முந்நீர் ஓர் பா
ஒலி முதுமகன் விதப்போடு உறுகணும் ஒருபான் ஆமே
**440
#46
கோலம் ஒப்பனையே கேழல் கொண்டை யௌவனம் பல்வேடம்
சாலும் நீரோட்டம் ஓடம் சகுனம் பீர்க்கொடு துவர்க்காய்
கூலமே பண்ணிகாரம் குரங்கு கோ அணை விலங்கின்வாலொடு
ஆவணமே பாகல் வார் புனல்கரையும் ஆமே
**441
#47
சாலமே விசாலம் கூட்டம் சபை மரப்பொது பூமொட்டு
சாலகம் விலங்கின்கூட்டம் யாலமும் அரணும் சாற்றும்
பீலி பொன் ஆலவட்டம் பிறங்கல் வாச்சியம் கலாபி
கோலம் ஆர் மயூரம் மாதர்காலணி அரணும் கூறும்
**442
#48
பாலை ஓர் நிலமே மற்று அந்நிலத்தினில்பாடல் மும்மீன்
வேலையோடு அதிதிநாள் ஓர் தரு என்ப வெம்மையும் பேர்
மாலை பூவாதிகொண்டு வகுத்திடும் தொடை பாமாலை
மேலும் நோய் இயல்பு ஒழுங்கு வேந்தன்இல் இரா ஏழ்பேரே
**443
#49
மால் புயல் கருமை புந்தி மாயவன் மயக்கம் பீடு
கால் வரை தொன்மை வேட்கை கௌசிகன் வளவனும் பேர்
பால் என்ப வளாகம் பங்கு பக்கம் பண்பு உரிமை பாதி
வாலொடு சுவைசேர் கீரம் மாதிரம் இவை ஒன்பானே
**444
#50
கோல் என்பது துலை சம்மட்டி கொண்டை யாழ்நரம்பு தெப்பம்
நீல அஞ்சனக்கோல் ஈட்டி நீண்ட கோடரம் தராசு
கோலுறு படிசம் ஊற்றுக்கோல் அளந்திடுகோலோடு
சீலம் ஆர் மன்னர் செங்கோல் துகிலிகை எனவும் செப்பும்
** ( லகர எதுகை முற்றிற்று )
@14 வகர எதுகை
**445
#1
உவணமே கலுழன் சேனம் உயர்ச்சியும் கழுகும் என்ப
கவனமே கலக்கம் வெம்மை கடுப்பு மாக்கதி போர் காடு ஆம்
நுவணை நூல் நுண்மை பிண்டி பஞ்சின்நூல் நுவலற்பாற்றாம்
தவ குன்றல் மிகுதி என்ப தவனன் தீ அனலி ஆமே
**446
#2
இவறலே மறவி ஆசை என்ப பேரிச்சைக்கும் பேர்
இவர்தலே எழுச்சி ஆசை ஏறுதல் மேவல் என்ப
குவவு என்ப திரட்சி பூமி கூம்பல் மாண்புடனே கூட்டம்
சுவவு என்ப புள்ளின்மூக்கு சுவர்க்கமும் சுண்டனும் பேர்
**447
#3
நவிரே ஆண்மயிர் பண் வாள் ஆம் நவிலலே பண்ணல் சொல்லல்
சவி மணிக்கோவை செவ்வி சாற்றிய வனப்பு காந்தி
நவிரம் வாள் மஞ்ஞை புன்மை நகம் உச்சி பிச்சம் சென்னி
தவிசு என்ப தடுக்கு மெத்தை இலகடம் முப்பேர்தானே
**448
#4
துவக்கு உடல் பிணக்கு தோல் ஆம் துவசம் கேதனமே சின்னம்
சவட்டலே துவட்டல் மெல்லல் காதுதல் முப்பேர் சாற்றும்
சிவப்பு என்ப சினமே செம்மையுடன் சினக்குறிப்பும் ஆகும்
உவப்பு என்ப மகிழ்ச்சி பொம்மல் உயரமும் விளையாட்டும் பேர்
**449
#5
சுவல் பிடர் தோள்மேல் மேடு துரகதக்குசை வென் என்ப
கவி என்ப பா குரங்கு கவிஞன் பார்க்கவன் என்று ஆகும்
நவியமே குடாரம் தண்ணம் புதுமையும் நவிலற்பாற்றாம்
கவிகையே குடை கவித்தல் ஈதலும் முப்பேர் காட்டும்
**450
#6
தவர் என்ப முனிவர் சாபம் தவறலே கடத்தல் வீதல்
துவரையே அவரையோடு துவாரகை எனவும் சொல்லும்
கவரியே சவரம் பொன்தேர் மானமாவோடு காரான்
புவனமே புவியும் நீரும் உலகத்தின்பொதுவும் ஆமே
**451
#7
நுவணம் சாத்திரமே தந்து நுண்மை பிண்டியும் ஆம் என்ப
உவணை உவ்விடம் துறக்கம் உவட்டலே பெருக்கு ஒல்லாமை
குவடு உண்டை சிகரம் வெற்பு கோடரம் எனவும் கூறும்
கவடு கோடரம் புரோசை கழுத்திடுகயிறும் ஆ மே
**452
#8
அவலே சிற்றுண்டி பள்ளம் நீர்நிலைதானும் அப்பேர்
செவிலியே வளர்த்தகைத்தாய் முன்பிறந்தாளும் செப்பும்
கவுரி சாம்பவி பத்தாண்டுப்பெண்ணொடு காளி என்ப
கவுடம் ஓர் கொடி ஓர் தேயம் இருபெயர் கழறல் ஆமே
**453
#9
பவம் என்ப சனனம் நாசம் பாவம் என்று ஆகும் முப்பேர்
சுவடு என்ப குறியோடு ஓர் எண் தழும்பு என முப்பேர் சொல்லும்
யவம் ஒரு தானியப்பேர் என்ப நெல்லிற்கும் ஆகும்
யவனர் சோனகர் கண்ணாளர் சித்திரகாரர் ஆமே
**454
#10
அவரையே துவரை கொள்ளு முதிரையும் அறையல் ஆகும்
சவம் என்ப குணவம் சோகு சடிதியும் முப்பேர் சாற்றும்
கவர்தல் ஆசைப்பெருக்கம் கடைதல் வாருதலே கள்ளல்
சிவம் என்ப குறுணி நன்மை முத்தியும் செப்பல் ஆமே
**455
#11
திவலையே உதகத்தோடு சிதறு நீர்த்துளியும் ஆகும்
அவை என்ப சவையே கூட்டம் அறிஞரும் ஆகும் முப்பேர்
நவை குற்றம் இகழ்ச்சி என்ப நாவலர் புலவர் கற்றோர்
குவை குப்பை திரட்சி மேடு கூட்டமும் நாற்பேர் கூறும்
**456
#12
கவுசிகம் விளக்குத்தண்டு ஓர் பண் பட்டு கடிய கோட்டான்
சவுரி மால் அங்கர்கோமான் சனி நமன் கலுழன் கள்வன்
மவுலியே சிகை கோடீரம் மகுடம் பாடலியும் ஆகும்
அவி தேவருணவு துப்போடு அன்னமும் முப்பேர் ஆமே
**457
#13
செவி காது கேள்வி ஆகும் சீவனம் புனல் வாழ்தல் பேர்
குவிதல் கூடுதல் திரட்சி கூம்புதல் முப்பேர் கூறும்
அவிர்தலே ஒளிர்தல் பீறல் அவா என்பது இறங்கல் ஆசை
துவர் பகை பவளம் செம்மை துவர்ப்பொடு விறகும் ஆமே
**458
#14
கவை மரக்கப்பு கோட்டை கவர்வழி காடும் ஆகும்
சிவை பதித்திரி வேர் நாரி குருகு ஓரி எனவும் செப்பும்
சவை கூட்டம் புலவர் என்ப தவாவினை வரையே முத்தி
துவை புளிங்கறியும் ஊனும் துழனியும் வறையலும் பேர்
**459
#15
அவ்வையே பகவற்கு ஆதி தரும் சுதை ஆய் தவப்பெண்
செவ்வி ஏர் பொழுதினோடு சித்திரை பருவம் ஆகும்
தெவ்வு அமர் பகை கொள்கைப் பேர் தீவினை கொடுமை பாவம்
சைவம் ஓர் புராணம் ஈசன் சமயமோடு இளமை ஆமே
**460
#16
கவ்வை கள் எள்ளிளங்காய் கம்பலை பழிச்சொல் துன்பம்
பவ்வமே குமிழி வாரி பரு மரக்கணு உவா ஆம்
நவ்வி ஏர் இளமை அத்தநாளொடு தோணி மான் ஆம்
தவ்வை முன்பிறந்தாளோடு தாயும் மூதேவியும் பேர்
**461
#17
எவ்வமே தனிமை தீராநோய் துன்பம் இயம்பும் முப்பேர்
வவ்வலே கொள்ளை செய்தல் வாருதல் பிடித்தல் என்ப
துவ்வு அனுபவத்தினோடு சொல்லும் ஐம்பொறி நுகர்ச்சி
கெவ் என்ப சங்கிராமம் விரோதமும் கிளத்தல் ஆமே
**462
#18
தாவம் வேசனத்தினோடு சங்கிரம் காட்டுத்தீ ஆம்
காவலே சிறைசெய்சாலை காத்தலோடு அரண் மதில் பேர்
கூவலே கிணறு பள்ளம் கூறுதல் விரித்தல் என்ப
தூவலே சொரிதல் சிந்தல் மழைத்தூவல் எனவும் சொல்லும்
**463
#19
சேவல் பாது அளறு புள்ளின்ஆண் கோழிச்சேவல் நாற்பேர்
கேவலம் தனிமை முத்தி ஒருங்கு எனக் கிளத்தல் ஆகும்
பூவை சாரிகை பெண் காயா கிளி பரபுட்டம் என்ப
வாவலே நசை கடத்தல் துரிஞ்சிலும் வகுத்த பேரே
**464
#20
ஆவியே வாவி நாற்றம் பிட்டு உயிர் புகை மூச்சு ஆகும்
கூவிரம் தேர் தேர்மொட்டு கூவிளை எனவும் கூறும்
காவியே குவளை காவிக்கல்லொடு கள்ளும் முப்பேர்
நாவிதன் ஆரல் பூரநாளும் மஞ்சிகனும் ஆமே
**465
#21
ஆவரணம்தான் சட்டை தடை மறைவு அரணம் ஆடை
ஏவலே வியங்கோள் ஆணை இலம்பாடும் இசைக்கும் முப்பேர்
பாவகன் தூய்மைசெய்வோன் உதாசனன் இருபேர் பன்னும்
மேவலே உண்டல் ஆசைப்பெருக்கம் விருப்பமும் பேர்
**466
#22
ஓவியர் சிற்பநூலோர் சித்திரகாரரும் பேர்
தேவியே துர்க்கை காளி சிவை வாழ்க்கைத்துணைவி என்ப
தூவியே அன்னத்தூவி மயில்தோகை இறகும் சொல்லும்
தீவிரம் நரகம் கோபம் செங்கதிர்க்கிரணம் ஆமே
**467
#23
ஏவு என்ப வருத்தம் ஏவல் அத்திரம் முப்பேர் என்ப
கோவை ஓர் கொடி தார் ஓர் நூல் கோத்தல் ஓர் நகரும் ஆகும்
தீவு இடைக்குறை சுவைப் பேர் சீவனே உயிர் வியாழம்
பாவை ஓவியமும் பெண்ணும் பதணமும் முப்பேர் பன்னும்
**468
#24
சீவினி ஓர் மருந்து செவ்வழித்திறத்தோர் ஓசை
காவலர் புருடர் வேந்தர் கவந்தமே பயசு முண்டம்
கோவமே கோபம் பொன் ஆம் குவலயம் குவளை வையம்
மாவலர் குதிரைப்பாகர் வாதுவர் இருபேர் ஆமே
**469
#25
வேவு ஒற்று வேய்தல் ஆகும் விவரம் உள்துளை பகுப்பு
தூவே தூவுதல் ஊன் என்ப சுவேதமே கசிவு வெண்மை
சாவு என்ப மரணம் சோகு ஆம் சவரம் சாமரம் மயிர்ப் பேர்
ஓவர் கம்மாளர் பாடற்கீழ்மக்கள் எனவும் ஓதும்
**470
#26
பவனம் வானுலகம் இல்லம் பாவனை விலாளம் கோயில்
புவனம் கால் ஓரை நாகலோகமும் புகலும் ஒன்பான்
கவலை ஓர் வல்லி அச்சம் கம்பு நோய் துன்பமோடு
கவர்வழி மரக்கொம்பு என்னக் கருதும் ஓர் எழுபேர் ஆமே
**471
#27
நவம் நடம் ஒன்பான் போகி நண்பு கார்காலம் தொன்மை
புவியொடு புதுமை தொண்டு புகன்றிடும் ஒன்பான் ஆகும்
உவளகம் குளம் ஆய்ப்பாடி ஓர் பக்கம் மதில் இரண்டு
சவரின் உப்பளம் அந்தப்புரம் பயம்பு எண்பேர் சாற்றும்
**472
#28
ஆவணம் தெரு அங்காடி அதிதிநாள் உரிமை சின்னம்
மேவு சாதனத்தினோடு பீடிகை விளம்பும் ஏழ்பேர்
தாவு என்பது இகல் வருத்தம் தஞ்சம் தற்செல்வமோடு
மாவின்நன்னடையே தாவல் வகுத்த மூவிருபேர் ஆமே
** ( வகர எதுகை முற்றிற்று )
@15 ழகர எதுகை
**473
#1
விழவு என்ப மிதுனராசி உற்சவம் விளம்பும் நாமம்
கழனி செய் மருதம் சேறு கட்டிடு திரையும் ஆகும்
கிழமையே வாரம் மூப்பு கெழுதகை மாட்சி பண்பு ஆம்
கழல் கழங்கொடு செருப்பு காலணி கால் என்று ஆமே
**474
#2
இழும்எனல் ஓசை என்ப இனிமையும் இயம்பும் நாமம்
விழுமமே சிறப்பு சீர்மை விழுப்பமும் இடும்பையும் பேர்
தொழு பெருநாள் ஆன்கோட்டம் தொழுமரம் எனவும் சொல்லும்
செழுமையே வளம் கொழுப்பு செவ்வி மாண்பு எனவும் செப்பும்
**475
#3
தழல் கிளிகடிகோல் ஆரல் தகனனும் கவணையும் பேர்
அழல் வெப்பம் கேட்டை செவ்வாய் அள்ளல் செந்தீ ஐம்பேரே
கழை என்ப புணர்தம் மூங்கில் கரும்பு என விரும்பும் முப்பேர்
புழல் ஓர் ஊர் சலதாரைக்கும் புழையுடைப்பொருட்கும் ஆமே
**476
#4
வழங்கலே உலாவல் ஈகை வசனித்தல் நடத்தல் ஆகும்
கழங்கே ஓர் ஆடலோடு கழற்கொடி வெறியாட்டு என்ப
குழம்பு என்ப மோழை ஆணம் குழைசேறு முப்பேர்
உழப்பு என்ப வலி முயற்சி ஊக்கமும் முப்பேர் ஆமே
**477
#5
கிழக்கு கீழத்திசை கீழ் ஆகும் கிழவியே தலைவி மூப்பாள்
உழக்கல் போர்இயற்றலோடு கலக்கலும் இருபேர் ஓதும்
நிழற்றலே நுண்மை மென்சொல் நிழல்செய்தல் நிகழ்த்தும் முப்பேர்
மிழற்றலே நிரம்பாமென்சொல் விளம்பலும் விளம்பற்பாற்றே
**478
#6
எழில் வலி அழகு வண்ணம் இளமையும் இயம்பும் நாற்பேர்
கிழி நிதிப்பொதியினோடு சித்திரப்படமே கீற்று ஆம்
சுழிகை ஓர் தலமும் கள்ளும் சுழிதலும் முப்பேர் சொல்லும்
கிழவரே உரியோரோடு விருத்தரும் கிளத்தல் ஆமே
**479
#7
பொழில் என்ப படப்பை நாடு புடவி ஆராமம் ஆகும்
குழி குளம் வயிறு பள்ளம் கூவமும் கூறும் நாற்பேர்
இழிவு என்ப பயம்பு நிந்தை ஈனம் தாழ்வொடு கேடு ஆகும்
அழுவம் கம்பிதம் பரப்பும் அறை முரசொடு நாடும் பேர்
**480
#8
வழி உண்டை இடம் பின் மார்க்கம் மகன் தொன்மை முறைமை ஆகும்
கழி நனி காயல் என்ப கழறலே கஞறல் பன்னல்
புழை குழை நாளம் ஆகும் பூழிலே அகரு வையம்
மழை என்ப குளிர்ச்சி நீரம் மங்குலும் வகுக்கல் ஆமே
**481
#9
கழுது பைசாசம் வண்டு காவலும் பரணும் ஆகும்
கழிதலே நடத்தல் சாதல் கடந்திடல் மிகுதி என்ப
அழிவு என்ப வீதல் கேடு குற்றமும் அறையலாகும்
கழுமலே நிறைதல் பற்று கலிப்பொடு மயக்கம் ஆமே
**482
#10
தொழுதி புள்ஒலியே கூட்டம் திரட்சியும் சொல்லும் முப்பேர்
கெழுவுதல் மயக்கம் பற்று மிகுதியும் கிளத்தும் நாமம்
குழல் மயிர் இசைக்குழற்கும் துளையுடைப்பொருட்கும் கூற்றாம்
நிழல் அருள் குளிர்ச்சி சாயை நிறை செல்வம் ஒளி நோய் ஆமே
**483
#11
ஒழுகலே உயர்ச்சி நீளம் ஒழுக்கமும் பாய்தலும் பேர்
இழுதை பொய் அறிவிலான் பேர் இழை என்ப பணி நூல் ஆகும்
உழுவலே தொடர்ந்தஅன்போடு உயர்குணம் முறைமையும் பேர்
கொழுமையே வளமை சந்தம் கொழுப்பு என முப்பேர் கூறும்
**484
#12
உழை என்பது இடம் மான் யாழில் ஓர் நரம்பிற்கும் ஆகும்
குழை என்ப தளிர் துவாரம் குண்டலம் சேறும் அப்பேர்
விழைவு என்ப புணர்ச்சி காதல் உள்ளோசை விளம்பும் நாமம்
தழை இலை மயிலின்தோகை தளிர் பீலிக்குடையும் ஆமே
**485
#13
அழுங்கல் கேடு இரங்கல் சோம்பல் அச்சம் நோய் ஒலித்தல் மட்கல்
பழங்கணே புன்கண் ஓசை பயனின்மை பழுதும் ஆகும்
விழைச்சு என்பது இளமையோடு புணர்ச்சியும் விளம்பற்பாற்றாம்
ஒழுக்கமே வழி ஆசாரம் ஒழுங்கு உயர்குலம் பண்பு ஆமே
**486
#14
மேழகம் துருவாட்டேறு மெய்யுறை திண்ணகப்பேர்
ஞாழலே கன்னிகாரம் நறவமும் இருபேர் சாற்றும்
ஊழியே உறைகாலத்தோடு உகமுடிவு உலகம் என்ப
தாழியே பரணிநாளும் சாடியும் குடமும் ஆமே
**487
#15
பூழியே பராகம் சேறு புழுதி சேற்று எழுந்த கொப்புள்
ஏழையே அறிவிலான் பெண் இலம்பாட்டோன் என முப்பேர் ஆம்
கோழையே கொடுமை காசம் கோழியே குருகு ஓர் ஊர் ஆம்
வேழமே கழை கொறுக்கை வேணு மாதங்கம் ஆமே
**488
#16
சூழியே முச்சி சிக்கம் சுனை குளம் கடல் படப்பேர்
நாழி நாழிகை அளக்கும்நாழி உள்துளை புரட்டை
காழியர் தூசர் உப்புவாணிகர் இருபேர் காட்டும்
மூழி கோரிகையும் உண்ணும் மூரலும் வாவியும் பேர்
**489
#17
காழகம் கருமை தூசு கத்தபம் முப்பேர் காட்டும்
மூழையே துடுப்பு மத்தும் முகவையும் மொழியும் முப்பேர்
தாழையே நாளிகேரம் கேதகை இருபேர் சாற்றும்
சூழலே இடம் ஆராய்தல் குறிப்பு என முப்பேர் சொல்லும்
**490
#18
கீழ் என்ப மறதி பள்ளம் கிழக்கு ஈனம் கடிவாளப்பேர்
கூழ் என்பது உணவும் பொன்னும் பயிர் என்றும் கூறற்பாற்றாம்
யாழ் என்ப முதல்நாள் வீணை ஈசர்நாள் மிதுனம் என்ப
ஊழ் முறை பான்மை தொன்மை உறு பகை வெயிலும் ஆமே
**491
#19
வாழ்க்கை ஊர் செல்வம் வாழ்தல் மனைவி நல் மருதத்துஊர் ஆம்
வீழ்க்கையே சோதிநாளும் வீழ்த்தலும் விளம்பல் ஆகும்
ஆழ்த்தல் தாழ்த்துதல் கட்டல் பேர் அழகு சர்க்கரை வனப்பு ஆம்
ஊழ்த்தலே நினைத்தல் செவ்வி ஊன் பதனழிவும் ஆமே
**492
#20
ஆழி அங்குலியம் நேமி அணை வட்டம் வாரணத்தின்நீள்கரம்
பௌவம் தேர்ச்சில் நிகழ்த்திய எழுபேர் ஆகும்
நூழிலே குவிதல் செக்கு நுண்கொடி திரை விநாசம்
வேழமும் கொடிக்கொத்தானும் விளம்பிய எழுபேர் ஆமே
**493
#21
கூழையே நாப்பண் மாதர்கூந்தல் சேறு உரகம் பீலி
மாழை வெம் படைஉறுப்பு சிறகொடு வகுக்கும் எண்பேர்
மாழையே புளிமா உண்டை மாமரம் உலோகக்கட்டி
ஈழம் ஏர் மடமை இன்ன எழுபேர் இயம்பல் ஆமே
**494
#22
பாழி ஊர் அகலம் பாயல் காடு பற்றில்லார்தம்ஊர்
ஆழ் வலி விலங்கின்சேக்கை தாபதம் உரை ஆகாசம்
நீள் கடல் மருதத்துஊர் நல் நிகேதனம் குகையினோடு
பாழ் சிறுகுளம் என்று இன்ன பதினாறு நாமம் ஆமே
** ( ழகர எதுகை முற்றிற்று )
@16 ளகர எதுகை
**495
#1
குளம் நுதல் கரும்பின்கட்டி குட்டமும் முப்பேர் கூறும்
களம் மொய் நெற்களம் நஞ்சு இல்லாள் கழுத்து மை களா பரப்பு ஆம்
வளமை மாட்சிமை கொழுப்போடு உபகாரம் வகுக்கும் முப்பேர்
விளவு என்ப சாறு வெள்ளில் வெள்ளிலே விளவு பாடை
**496
#2
களர் என்ப மிடறு கோட்டி களர்நிலம் கருமை நாற்பேர்
தளம் இலை படை சாந்தோடு தாழி பூவிதழே மேடை
அளகமே மாதர்ஓதி அறல் பன்றிமுள் விலோதம்
தளை விலங்கொடு தொடர்ச்சி தாள்சிலம்பு ஆண்மயிர்ப் பேர்
**497
#3
முளரி முள்செடி காடு அங்கி முண்டகம் விறகு நுண்மை
விளர் நிணம் இளமையோடு வெளுப்பு எனக் கொழுப்பும் ஆகும்
களபமே கலவை பீதம் கயமுனி சுதை நாற்பேர் ஆம்
உளர்தலே சிதறலோடு தடவலும் உரைக்கற்பாற்றே
**498
#4
சுளகு என்ப விசாகநாளும் சூர்ப்பமும் இருபேர் ஆகும்
அளம் என்ப நெருக்கம் கூர்மை உப்பளம் அறையும் முப்பேர்
களன் என்ப மருதப்பூமி கம்பலை இடம் உன்மத்தம்
நளம் என்ப நியக்குரோதம் நளினமும் இருபேர் ஆமே
**499
#5
இளமை உன்மத்தம் தாழ்மை இளமையின்பருவம் முப்பேர்
அளவையே எல்லை நாளோடு அளவும் என்று அறையற்பாற்றாம்
கிளர் என்பது ஒளியினோடு கிளர்தல் பூந்தாதும் ஆகும்
வளம் என்ப பதவி செல்வம் வனப்பு பல்பண்டம் ஆமே
**500
#6
களவு என்ப திருட்டு உன்மத்தம் களா என முப்பேர் காட்டும்
புளகம் கஞ்சனம் உரோமச்சிலிர்ப்பொடு புடைப்பு சோறு ஆம்
அளகு என்ப கோழிகூகைஅல்லாப் புள்பெண்ணோடு ஆரல்
குளவி ஓர் வண்டு சாகம் மலைப்பச்சை எனவும் கூறும்
**501
#7
விளக்கு ஒளி சோதிநாள் ஆம் வேளாண்மை நலம் மெய் ஈகை
அளக்கர் நீள்வழியே சேறு உப்பளம் கடல் ஆரல் பூமி
திளைத்தலே அனுபவித்தல் செறிதலும் நிறைதலும் பேர்
இளைத்தல் எய்ப்பு இரங்கலொடு மெலிதலும் இயம்பற்பாற்றே
**502
#8
களரி போரிடம் நீள் கானம் கருமம்செய்யிடம் கறுப்பு ஆம்
விளரி யாழ் மிகுதி யாழில் ஓர் நரம்பு இளமை வேட்கை
அளறு என்ப நிரையம் சேறு ஆம் அளிகம் கட்டழகு நெற்றி
இளவலே குழவி பின்னோன் இளையோன் என்று இ முப்பேரே
**503
#9
நளிர் குளிர் வெறுப்பு பீடு நண்டொடு செறிவும் ஐம்பேர்
இளி இசை சிரிப்பு இணக்கம் இழுத்தல் சையெனல் உரித்தல்
தளி தூவலொடு விளக்குத்தண்டு என்ப கோயிலும் பேர்
ஒளிவட்டம்தான் கண்ணாடி சக்கரம் இருபேர் ஓதும்
**504
#10
பளிதம் என்பது கர்ப்பூரம் பல்லம்என்கணக்கும் ஆகும்
வெளில் அணில் யானைத்தம்பம் வெண் தயிர்கடைதறிப் பேர்
களிறு அத்தம் சுறவின்ஏறு கறையடி விலங்கின்ஆண் ஆம்
வெளிறு அலி செலு எய்யாமை வெண்மையும் விளம்பல் ஆமே
**505
#11
அளி மது குளிர்ச்சி வண்டோடு அன்பு கள் ஈகை காய் ஆம்
நளி கூட்டம் குளிர்ச்சி பீடு நனம் செறிவொடு தேள் ஆகும்
தெளிவு என்ப துணிவு ஞானம் தெளிதலும் செப்பும் முப்பேர்
விளிதலே கெடுதல் சாதல் மறிதலும் விளம்பல் ஆமே
**506
#12
ஒளி சுடர் புகழ் விளக்கோடு ஒளிப்பிடம் வெயில் செந்தீ ஆம்
களி மது மருள் செருக்கு களிப்பொடு குளமும் ஆகும்
தளிமமே அழகு திண்ணை தவிசு மக்கள்படுக்கை
துளி மழைத்துளி பெண்ஆமை திவலையும் முப்பேர் சொல்லும்
**507
#13
அளித்தலே புரத்தல் ஈகை அடர்தல் பாதீடும் ஆகும்
தெளித்தலே கொழிப்பு ஒலித்தல் சிதறலும் தூவலும் பேர்
வளைத்தலே குனித்தல் கட்டல் வாருதலொடு தடுத்தல்
கிளைத்தலே நெருங்கலோடு கிண்டலும் நிறைதலும் பேர்
**508
#14
அளை தயிர் முடுக்கர் புற்றோடு அருப்பமும் வளையும் ஆகும்
உளை பரிமீதுகட்டும்மயிர் நவிர் உரோமமும் பேர்
கிளை தளிர் ஓர் பண் சுற்றம் கீசகம் மரக்கிளைப் பேர்
களை அயர்வுடனே குற்றம் கவின் என முப்பேர் காட்டும்
**509
#15
துளை என்ப வெதிரே வாயில் துவாரமும் முப்பேர் சொல்லும்
முளை சுதன் கதையினோடு மூங்கில் அங்குரம் தறிப் பேர்
விளைவு செய் விளைதலோடு மேகமும் விளம்பும் முப்பேர்
வளை நுழைவளையே ஆழி வண்டு கைவளையும் ஆமே
**510
#16
வெள்ளியே மழைக்கோள் வெண்பொன் வெண்மையும் விளம்பும் முப்பேர்
புள்ளி ஒற்று இலக்கப்புள்ளி பொறி பல்லி மதிப்பு ஞெண்டு ஆம்
நள்ளி கற்கடகராசி நண்டு உறவுடன் ஓர் வள்ளல்
சுள்ளி மா ஞாழல் ஆச்சா அனிச்சமும் சொல்லல் ஆமே
**511
#17
விள்ளலே மலர்தலோடு வேறுஆதல் தழுவல் சொல்லல்
துள்ளல் கூத்து ஆடு தாண்டல் கொதுகு என நாற்பேர் சொல்லும்
தொள்ளமே சேறு தெப்பம் துளங்கலே அசைதல் மின்னல்
நள் உச்சிப்போது மாயோன்நாளொடு நடுவும் ஆமே
**512
#18
உள்ளலே நினைவு உள்ளான் ஆம் உள்ளே உள்ளிடம் மனப்பேர்
எள்ளலே நகைப்பு நிந்தை எளிமையே தனிமை ஏட்டை
அள்ளலே நிரையம் சேறோடு அள்ளுதல் முப்பேர் ஆகும்
ஞொள்கல் சோம்பு இளைத்தல் அச்சக்குறிப்பு என நுவலல் ஆமே
**513
#19
பிள்ளை சேய் வடுகன் காரிப்புள் எனப் பேசும் முப்பேர்
மள்ளரே உழவர் வீரர் மறவர் குறவரும் பேர்
உள்ளமே மனம் கருத்தோடு ஊக்கமும் முப்பேர் என்ப
வெள்ளமே கடல் ஓர் எண் நீர்ப்பெருக்கொடு மிகுதி ஆமே
**514
#20
புள்ளு வண்டு அவிட்டநாளும் பறவையின்பொதுவும் ஆகும்
கள் என்ப நறவு பொக்கம் களவொடு மதுவும் நாற்பேர்
அள் உரம் செறிவு காதோடு அயிலும் பற்றிரும்பும் ஆகும்
வள்ளுரம் பசுஇறைச்சி ஊன்பொது வகுக்கப்பாற்றே
**515
#21
வள்ளம் ஓர்மரத்தில் தோண்டும் சிறு தோணி மரக்கால் வட்டில்
பொள்ளலே அப்பவர்க்கம் பொளிதலும் மரப்பொந்தும் பேர்
கள்வனே கருநிறத்தோன் கரி முசு ஞெண்டு சோரன்
வெள்ளை நந்து ஓர் பா வெண்மை வெள்ளாடு முசலி ஆமே
**516
#22
காளமே கருமை நஞ்சு கழு ஊதும்கொம்பு மேகம்
வேள் அலர்க்கணையோனோடு விசாகன் ஆண்மகனும் ஆகும்
கோள் வலி கிரகம் ஊறு கொலை குணம் பொய் கோட்பாடு ஆம்
நாளியே சுணங்கன் கள் ஆம் நளினி பொன் குளம் ஓர் பண் ஆம்
**517
#23
பாளிதம் அயிரம் சோறு பளிதம் நல் குழம்பு பட்டு ஆம்
ஓளியே யானைகூடம் ஒழுங்கு என்றும் வழங்கும் நூலே
கோளி தொன்மரமே அத்தி கொள்வோனும் கொழிஞ்சியும் பேர்
மீளி பீடு அரசன் வன்மை மேல்மகன் திண்ணியன் பேர்
**518
#24
காளையே எருது பாலைக்குஅதிபன் நல் இளமையோன் பேர்
கூளியர் நண்பர் பூதகணவீரர் கொலைத்திறத்தோர்
கோளகை வட்டமோடு மண்டலிப்பாம்பும் கூறும்
கேள்வியே செவியே கல்வி யாழ் எனக் கிளத்தும் முப்பேர்
**519
#25
காளி சாமுண்டி சிங்கம் கௌரியும் முப்பேர் காட்டும்
வாளி சாரிகையோடு அம்பு மாதர்காதணியுள்ஒன்று ஆம்
கேளியே மகளிர்ஆடல் இலாங்கலி கிளத்தும் நாமம்
தாளி புற்றாளியோடு தாலம் ஓர் கொடியும் ஆமே
**520
#26
வேள்வியே ஓமகுண்டம் வேட்டுவன் யாகம் ஈகை
தேள் விருச்சிகமே போந்தை தெறுக்கால் என்று ஆகும் முப்பேர்
தாள் என்பது அடி முயற்சி ஆதியும் முப்பேர் சாற்றும்
பீள் இளங்கதிரினோடு கருப்பமும் பேசற்பாற்றே
**521
#27
வள் என்ப வளம் நெருக்கம் வாளுறை காது கூர்மை
மள்ளலும் வாரும் என்ன எழுபெயர் வகுக்கற்பாற்றாம்
ஞெள்ளலே வீதி மேன்மை ஞெளிர் உடன்பாடு பூசல்
பள்ளமோடு அதிகம் சோர்வு பகர்ந்திடும் எண்பேர் ஆமே
**522
#28
பள்ளி கண்படையே சிற்றூர் பாயல் ஊர் மடம் நல் கோயில்
வெள்ள நீர் வயல்சூழ் வாழ்க்கை மிக்க தாபதமும் எண்பேர்
வள்ளி ஓர் கொடி செங்கையில்வளை படர்கொடி ஓர் கூத்தோடு
அள்இலை வேலோன்தேவி அணி இழை எழுபேர் ஆமே
**523
#29
ஆளியே ஒழுங்கு சீயம் ஆளுவோன் சேது வாரம்
யாளியே சிங்கராசி என இவை எழுபேர் என்ப
கூளி பேய் தொகுதி ஏறு குறள் படைத்தலைவன் குற்றம்
கேளிரும் மொய்ம்பினோடு கிருத்திமம் எனவும் ஆமே
**( ளகர எதுகை முற்றிற்று )
@17 றகர எதுகை
**524
#1
இறவையே கடவை புட்டில் இறப்பே சா மிகுதி போதல்
குறடு பாதுகமே திண்ணை பலகையும் குறிக்கல் ஆகும்
புறவமே குறிஞ்சி கானம் புறவொடு முல்லையும் பேர்
புறணி தோல் குறிஞ்சி முல்லைநிலம் நிறம் புகலல் ஆமே
**525
#2
மறம் சினம் நமன் பிணக்கு வலி கொலை வீரம் பாவம்
குறிஞ்சி ஓர் இசை செம்முள்ளி குறிஞ்சிநன்னிலம் ஓர் பண் ஆம்
பிறங்கல் வெற்பு ஒலி ஒழுக்கம் பீடொடு நிறைவு உயர்ச்சி
குறும்பொறை குன்று காடு குறிஞ்சிநன்னிலத்துஊர் ஆமே
**526
#3
திறல் பகை சமரினோடு திண்மை முப்பேர் ஆகும்
நறவம் குங்குமம் அனிச்சம் ஞாழல் வாசனை தேன் ஐம்பேர்
திறம் குணம் வகையோடு ஏது திடன் நரம்புஎஞ்சியாழ் ஆம்
இறல் கேடு கிளிஞ்சில் என்ப இறுதலும் இயம்பல் ஆமே
**527
#4
உறல் கிட்டல் வருத்தம் என்ப உறுக்கலே கடத்தல் கோபம்
பிறப்பு அச்சம் பவம் நெருக்கம் பிறக்கமே மரக்கொம்பு அச்சம்
சிறப்பு அதிகம் விசேடம் சீறலே அதட்டல் கோபம்
பறவை புள்ளிறகு அவிட்டம் பக்கியும் முப்பேர் ஆமே
**528
#5
இறத்தலே நடத்தல் சாதல் மிகுதியும் இயம்பல் ஆகும்
வெறுப்பு அச்சம் சினம் கலக்கம் வேண்டாமை செறிவு துன்பம்
இறுத்தலே ஒடித்தல் சொல்லல் இறையிறுத்திடலே தங்கல்
செறித்தலே அழித்தல் மூழ்கல் செகுத்தலும் நெரித்தலும் பேர்
**529
#6
உறழ்வு என்பது உணர்வு காலம் செறிவு இடையீடு ஒப்பு ஐம்பேர்
உறவியே எறும்பு நீரூற்று உலைக்களம் உறவு உயிர்ப் பேர்
உறுகண் என்பதுவே துன்பம் உறு பயம் மிடி நோய் என்ப
உறுவனே அருகனோடு முனிவனும் உரைக்கற்பாற்றே
**530
#7
அறல் கருமணல் தரங்கம் அறுதல் நீர் சிறுதூறு ஆகும்
மறலி அந்தகன் மயக்கம் மறு என்ப மாசு குற்றம்
குறளை கோள்சொல்லல் குள்ளம் குறுகலே அணுகல் குன்றல்
சுறவு என்ப மகரராசி சுறா என இருபேர் சொல்லும்
**531
#8
விறப்பு அச்சம் செறிவு ஞாட்பு வென்றியும் பெருக்கமும் பேர்
பொறுத்தல் தாங்குதல் பொறைப் பேர் புறம் மதில் வெரின் சார் வீரம்
உறுத்தல் ஒற்றுதல் பயத்தல் வருவித்தல் முப்பேர் ஓதும்
கறுப்பு என்ப சினக்குறிப்பு கருமையும் சினமும் ஆமே
**532
#9
விறல் வலி சூரம் பீடு வென்றியும் விளம்பும் நாமம்
நொறில் என்ப விரைவினோடு முணங்கு என நுவலற்பாற்றாம்
நெறி என்ப நடவை செவ்வை நீதியும் நிகழ்த்தும் முப்பேர்
பறையே வாச்சியம் சொல்லோடு பக்கியின்இறகும் ஆமே
**533
#10
தறி நெய்யும்தறியே கட்டுத்தறி முளை தம்பம் ஆகும்
முறி இலை தளிரினோடு சாதனம் மொழியும் முப்பேர்
எறிதல் வீசுதல் அடித்தல் குத்தல் வெட்டுதலே என்ப
மறி அளுங்கு ஆடு வாசி மான் மேடராசி ஆமே
**534
#11
குறை அரசிறையே குற்றம் குறுவாழ்க்கை முப்பேர் கூறும்
மிறை குற்றம் அச்சம் என்ப விறலோன் திண்ணியன் அசோகன்
துறை வழி ஆறு பாவின்துறை இடம் நீர்த்துறைப் பேர்
நறை நறும்புகையே குற்றம் நறவு வாசனையும் ஆமே
**535
#12
அறை திரை சிற்றில் பாறை அறைதல் சொல் முழையும் ஆகும்
உறையுளே நாடு ஊர் ஆகும் உறுதியே திடம் நன்மைப் பேர்
பொறை சுமை துறுகல் பாரம் புவி மலை சுமை கருப்பம்
சிறுமையே துன்பம் அச்சம் தரித்திரம் முப்பேர் செப்பும்
**536
#13
சிறை இடம் இறகு காவல் சிறைச்சாலை மதில் பக்கப்பேர்
கறை குற்றம் உதிரம் மாசு கறுப்பு உரல் கடல் நஞ்சு ஆகும்
முறை குணம் ஒழுக்கம் தொன்மை முறைமை புத்தகமும் ஐம்பேர்
பிறழ்தல் காய்ப்பு உரைத்தல் மின்னல் பெயர்தல் கம்பிதமும் ஆமே
**537
#14
இறும்பு என்ப மலை குறுங்காடு இராசீவம் வியப்பு தூறு
கறங்கல் பேய் ஒலி சுழற்சி கணையமும் கருதும் நாற்பேர்
பறம்பு என்ப முலை வெற்பு ஆகும் பறந்தலை விளாகம் ஈமம்
நிறம் என்ப மருமம் காந்தி குணம் என நிகழ்த்தல் ஆமே
**538
#15
அறுகு என்ப யாளி சீயம் ஆனை வல்லியம் ஓர் புல் ஆம்
வறிது என்பது அருகல் சற்றோடு அறியாமை பயனில்வார்த்தை
மறவியே மறதி ஈனம் மது என வகுக்கும் முப்பேர்
குறள் கிருத்திமமே குள்ளம் குறுமையும் முப்பேர் கூறும்
**539
#16
கற்பே இல்மகளிர்கற்பு கல்வியும் முல்லையும் பேர்
தற்பம் மக்கள்படுக்கை தாரம் மேனிலையும் ஆகும்
அற்பமே சிறுமை நாய் ஆம் அறிவு உணர்வு அறிதல் கல்வி
அற்புதம் ஓர் எண் வானோடு அதிசயம் முப்பேர் ஆமே
**540
#17
அற்றம் அற்றது மெய் நாய் சோர்வு அவகாசம் மறைவு சற்று ஆம்
குற்றல் குற்றுதல் பறித்தல் நெரித்தலும் முப்பேர் கூறும்
எற்று என்பது இரக்கம் ஒத்தல் எறிதல் எத்தன்மைத்துஎன்றல்
கொற்றியே துர்க்கை மாரி கோஇளங்கன்றும் ஆமே
**541
#18
கற்பமே பிரமன்ஆயுள் கற்பகதரு சுவர்க்கம்
பொற்பு என்பது அழகினோடு பொலிவும் ஒப்பனையும் ஆகும்
பற்பம் ஓர் புராணம் நீறு பதுமமும் முப்பேர் பன்னும்
உற்கை விண்வீழும்கொள்ளி உடுவும் தீக்கொள்ளியும் பேர்
**542
#19
முற்றல் காழ்க்கோடல் மூப்பு முடிவு கோண் வளைத்தல் ஐம்பேர்
நெற்றியே நுதலும் மேலும் நெடும் படைவகுப்பும் ஆகும்
கொற்றமே வன்மை வென்றி அரசியல் முப்பேர் கூறும்
எற்றுதல் புடைத்தலோடே எறிதலும் இயம்பல் ஆமே
**543
#20
ஒற்று மெய்யெழுத்து வேவோடு ஒற்றுதல் முப்பேர் ஓதும்
தெற்றி சித்திரகூடப்பேர் திண்ணையும் அப்பேர் ஆகும்
துற்றலே குவிதல் உண்டல் நிறைதலும் முப்பேர் சொல்லும்
பொற்றையே சிறுதூறோடு பொருப்பு எனப் புகலல் ஆமே
**544
#21
வீறு புண்ணியம் விளக்கம் வெறுப்பொடு தனிமை பீடு ஆம்
மாறலே தவிர்தல் விற்றல் விடுதலும் வகுக்கல் ஆகும்
சாறு என்ப குலை கள்ளோடு விழவு என முப்பேர் சாற்றும்
ஆறு என்பது ஒழுக்கம் ஓர் எண் அதர் நதி எனவும் ஆமே
**545
#22
தாறு வில்குதையே எல்லை தாழ் மரக்குலை முள்கோல் ஆம்
சேறு என்ப கும்பி சாரம் தித்திப்பு விழவு கள்ளு
ஊறு என்ப தீமை தீண்டல் உயிர்க்கொலை இடையூறு என்ப
ஏறு இடி முதல்நாள் ஆகும் இடபமோடு எருதும் ஆமே
**546
#23
தூறலே பழிச்சொல் வானத்துளி மழைபெய்தல் ஆகும்
தேறலே நிச்சயம் தேன் தெளிவொடு தங்கல் என்ப
பாறலே பொருதல் ஓடல் பகடுடன் இடபராசி
நாறலே மணத்தல் தோன்றல் முளைத்தலும் நவிலல் ஆமே
**547
#24
ஏற்றலே இரத்தல் கோடல் எதிர்ந்துபோர்செயல் எழுப்பல்
ஆற்றலே பொறை முயற்சி அதிகமே வலியே ஞானம்
தோற்றலே வலி பிறப்பு தோன்றுதல் புகழ் நாற்பேர் ஆம்
போற்றலே வணங்கல் ஓம்பல் புகழ்தலும் முப்பேர் ஆமே
**548
#25
கூற்று என்ப மறலி வார்த்தை காலனும் முப்பேர் கூறும்
நாற்றம் நாறுதலே தோன்றல் நறவமும் நவிலற்பாற்றாம்
ஊற்று என்பது ஊன்றுகோலும் உறவியும் இருபேர் ஓதும்
நோற்றலே நியமமோடு பொறை தவம் நுவலல் ஆமே
**549
#26
ஊற்றமே புகழோடு ஆற்றல் ஊன்றுகோல் எனவும் ஓதும்
ஏற்றமே அதிகம் பூட்டை இவர்தலும் புகழும் என்ப
தேற்றமே குறிக்கோள் மன்றம் தெருள் என முப்பேர் செப்பும்
மாற்றம் வேற்றுமையினோடு வாசகம் பகையும் ஆமே
**550
#27
பொறி மரக்கலமே செல்வம் பூமகள் ஏந்திரங்கள்
அறிவு இலாஞ்சனை எழுத்தோடு ஐம்பொறி வரி ஒன்பான்பேர்
வெறி வெருவுதல் கலக்கம் வெறியாட்டு வட்டம் நாற்றம்
குறிய பேய் துருவை கள்ளு கூறும் நோய் ஒன்பது ஆமே
**551
#28
இறை என்ப கடவுள் ஈசன் இறையிறுப்பு அரசன் புள்ளின்இறகு
கூன் சிரம் இறப்போடு இறுத்தல் பீடு உயர்ச்சி அற்பம்
நறை மலர்க்கடவுள் மூத்தோன் நாதன் கையிறை உயர்ந்தோர்
உறு கடன் வடவை துன்பம் ஒரு பதிற்றிரட்டி ஆமே
**552
#29
உறை பொருள் மருந்து வாழ்நாள் உணவு வெண்கலம் மேகாரம்
எறி படைக்கலத்தின்கூடே எண்குறித்திறுதிபெய்தல்
நறிய பால்பிரை இடைச்சொல் நகரம் நீர்த்துளி உயர்ச்சி
புறமொடு மழையே நீளம் புகன்ற நாநான்கும் ஆமே
** ( றகர எதுகை முற்றிற்று )
@18 னகர எதுகை
**553
#1
மனவு சங்கு அக்கு நீலமணி மணிப்பொதுவே ஆடை
தனி கலப்பின்மையோடு சமமின்மை தமி முப்பேர் ஆம்
முனை நுனி பகை வெறுப்பு முதன்மையும் மொழியும் நாற்பேர்
இனம் என்ப சுற்றம் கூட்டம் இரும் குலம் அமைச்சும் ஆமே
**554
#2
தனம் முலை பொன் ஆன்கன்று சந்தம் முத்தன்மைப் பேர் ஆம்
கனவு கண்படை மயக்கம் கனா என முப்பேர் காட்டும்
கனை ஒலி நிறைவினோடு நெருக்கமும் கருதும் முப்பேர்
பனுவல் ஆகமமே நூலே பாவுடன் உரையும் ஆமே
**555
#3
அனந்தனே சிவன் மால் சேடன் அலாயுதன் அருகன் ஐம்பேர்
அனந்தமே முடிவிலாமை ஆடகம் விண் முப்பேரே
அனங்கம் மல்லிகை உடம்பில்லாமையோடு இருவாட்சிப் பேர்
தனஞ்செயன் பார்த்தன் செய்ய தழல் ஒரு காற்றும் ஆமே
**556
#4
வனம் ஈமம் துழாய் நீர் புற்று வனப்பு கா மிகுதி காடு ஆம்
மனுவே மந்திரமோடு ஓர் நூல் மான்ஏறு கதிர்நாள் ஆண்மான்
புனை தளை துகில் வனப்பு பொலிவு ஒப்பனையும் ஆகும்
மனை மனைக்கிழத்தி இல் ஆம் மனோகரம் ஏர் இச்சைப் பேர்
**557
#5
அனகமே பாவமின்மை மாசின்மை இருபேர் ஆகும்
நனி இடங்கழிமை பீடு மிகுதியும் நாட்டும் முப்பேர்
கனி மணிதோன்றிடம் தித்திப்பொடு காஞ்சனப்பேர்
முனைவு என்ப வெறுப்பு கோபம் முட்டுதல் முப்பேர் ஆமே
**558
#6
கனலி ஆதவனே செந்தீ கருமா என்று இவை முப்பேர் ஆம்
நனவு என்ப தெளிவினோடு நனம் களன் நவிலும் முப்பேர்
சினன் என்பது அருகன் புத்தன் தினையே ஓர் பயிரே அற்பம்
முனைவரே முனிவர் நாமம் பகைவரும் மொழியல் ஆமே
**559
#7
முனி என்பது யானைக்கன்று முனிவன் வில் அகத்தி நாற்பேர்
துனி அச்சம் புலவிநீட்டம் துன்பம் நோய் ஆறு கோபம்
பனி என்ப நடுக்கம் துன்பம் பயம் குளிர் இமமும் ஐம்பேர்
சினை என்பது உறுப்பு முட்டை பீள் மரச்சினை அரும்பே
**560
#8
வினை என்ப தொழில் கருத்து வெஞ்சமர் விளம்பும் முப்பேர்
பனை என்பது அனுடநாள் ஓர் மீன் பனைமரமும் பன்னும்
இனன் என்பது அரசன் இந்தோடு இரவியும் முப்பேர் என்ப
அனு கவுள் தொடர்ச்சி என்ப அனந்தர் நித்திரை பித்து ஆமே
**561
#9
துன்னர் தோல்துன்னரோடு பொல்லரும் சொல்லும் நாமம்
பின்னம் வேற்றுமை பராகம் பிணக்கொடு முப்பேர் பேசும்
சின்னமே பராகம் காளம் சிறுமை தட்டு அடையாளப்பேர்
கன்னமே கதுப்பு காது கன்னக்கோல் நரம்பும் ஆமே
**562
#10
அன்னியம் குயில் அயல் பேர் அனுங்கலே வருந்தல் வாடல்
முன்னையே அக்காள் முன்னைமரமோடு மூத்தோன் தொன்மை
உன்னமே நினைவு நீர்வாழ்பறவை நெஞ்சு ஓதிமப்பேர்
நன்னிலை தவம் ஒழுக்கம் நாட்டிய சுகம் மூன்றாமே
**563
#11
பின் கடை வழியினோடு பெருமை காரணமும் ஆகும்
என் இகழ்ச்சிக்குறிப்போடு இசைச்சொல் ஐயச்சொல் என்ப
முன் பக்கம் பழமை முன்பு முதல் மேலோடு ஐம்பேர் கூறும்
மின் ஒளி தெரிவையோடு மின்னலும் விளம்பல் ஆமே
**564
#12
முன்னலே நினைவு நெஞ்சு ஆம் முன்னம் சீக்கிரியோடு எண்ணம்
கன்னல் சர்க்கரை கரும்பு கரகம் நாழிகைவட்டில் பேர்
மன்னன் உத்திரட்டாதிப் பேர் மன்னவன்தானும் ஆகும்
கின்னரம் முற்குரோசம் கிழத்தும் யாழ் கூனும் ஆமே
**565
#13
பின்னையே பின்றை தங்கை பெரிய மாற்குரியதேவி
கொன் பயனிலாமை காலம் கூறிய பெருமை அச்சம்
பொன் பொலிவு அழகு இரும்பு பூமகள் வியாழம் செம்பொன்
மன் நிலைபேறு அசைச்சொல் மன்னவன் மிகுதி ஆமே
**566
#14
வன்னியே பிரமசாரி வளர் கிளி சமி செந்தீ ஆம்
சென்னி கம் பாணன் சோழன் சீருள் ஈயம் செம்பு ஆகும்
கன்னி பெண் துர்க்கை அத்தம் கற்றாழை நாகு ஓர் ஆறு ஆம்
தென் இசை வனப்பு தாழை தெற்கொடு கற்பும் ஆமே
**567
#15
குன்று வேதண்டம் ஆகும் குறைவொடு சதயமும் பேர்
அன்றில் ஓர் பறவை மூலநாள் என அறைவர் நூலோர்
மன்றம் நிச்சயமே வீதி வாசனை சவை வெளிப் பேர்
மன்றலே வாசம் வீதி மருவு கல்யாணம் ஆமே
**568
#16
அன்னை முன்பிறந்தாள் தோழி ஆய் இவை முப்பேர் என்ப
அன்னமே படகம் ஓர் புள் அவி இவை முப்பேர் ஆகும்
தன்மை ஏர் இயல்பினோடு மூவிடத்தொன்றும் சாற்றும்
பன்னலே நெருக்கம் வார்த்தை பருத்தியின் பேரும் ஆமே
**569
#17
ஆனகம் தேவதாரு பணவம் துந்துமியும் ஆகும்
மானமே அளவு இலச்சை விமானம் ஏண் பெருமை குற்றம்
பானலே பழனம் நெய்தல் பனிப்பு என்ப நடுக்கம் அச்சம்
மானலே மயக்கம் ஒப்பு ஆம் வானவன் விதியே சேரன்
**570
#18
தானமே மதம் நீராட்டு தரு கொடை சுவர்க்கம் திண்மை
பீனமே பருமை பாசி பினாகியே பெண்ணை ஈசன்
நானமே குளித்தல் கானம் நாவியும் கவரிமாவும்
வானம் ஆகாயம் என்ப மழை உலர்மரமும் ஆமே
**571
#19
வானி மேற்கட்டி சேனை வண் துகில்கொடி முப்பேரே
ஆனி உத்திராடம் மூலம் அரும் கேட்டை ஆனி கேடு ஆம்
ஏனையே ஒழிவு மற்றை எனும் இடைச்சொல்லும் ஆகும்
ஆனியம் பொழுது நாள் ஆம் அனந்தை ஓர் சத்தி பூமி
**572
#20
சானகி சீதை மூங்கில் தனு என்பது உடல் வில் அற்பம்
சானுவே மலை முழந்தாள் மலைப்பக்கம்தானும் ஆகும்
சோனையே ஓணநாளும் விடாமழைசொரிதலும் பேர்
கானல் உப்பளமே சோலை கழி கதிர் கிரணம் பேய்த்தேர்
**573
#21
வான் என்ப விசும்பு மேகம் மழையொடு பெருமை நாற்பேர்
தானையே சேனை ஆடை படைக்கலம்தானும் ஆகும்
கானம் தேர் இசையே பேதை காடு தற்பாடி ஐம்பேர்
ஏனலே செந்தினைப் பேர் தினைப்புனம் கதிரே என்ப
**574
#22
ஞானமே அறிவு கல்வி நல்ல தத்துவநூல் முப்பேர்
யானமே மரக்கலத்தோடு எழில் ஊர்தி கள் இ முப்பேர்
ஏனம் ஓலைக்குடைப் பேர் எறுழியும் மறமும் என்ப
மேனியே வடிவத்தோடே நிறமும் உடலுருவம் மேவும்
**575
#23
மான் உரு மாவினோடு மகரமீன் மகரராசி
கானம் நல்மணம் காடு என்ப கனம் முகில் அகலம் பொன் ஆம்
ஏனாதி மஞ்சிகன் மந்திரியும் தந்திரியும் என்ப
மீனே சித்திரைநாள் வான்மீன் மயிலையும் மேவும் அப்பேர்
**576
#24
கூனலே பிறை சங்கோடு கோணலும் கூறும் முப்பேர்
பானம் தேன் துவை குடித்தல் பருகுவனப்பொதுப் பேர்
தேனு மா எருமை பெற்றம் திருட்டு தேவப்பசுப் பேர்
சேனை ஆயுதம் அங்காடி சிறந்திடும் படையும் ஆமே
**577
#25
ஆன்றல் மாட்சிமையினோடே அகலமும் மிகுதியும் பேர்
ஊன்றலே சார்தல் தள்ளல் நட்டலும் முப்பேர் ஓதும்
நோன்றல் தள்ளுதல் நிறுத்தல் பொறுத்தலும் நுவலற்பாற்றாம்
தோன்றியே இரத்தத்தோடு காந்தளும் சொல்லற்பாற்றே
** ( னகர எதுகை முற்றிற்று )
@19 ஓரெழுத்தொருசொற் பல்பொருள்
**578
#1
ஆ பசு இரக்கம் இச்சை ஆன் வியப்பு இசையே ஆச்சா
கா வலி பொழில் வருத்தம் காவடி துலை காத்தல் பேர்
பா என்ப பரப்பு நூற்பா பரவுதல் பனுவல் என்ப
தா வலி வருத்தம் கேடு தாண்டுதல் பகை ஐம்பேரே
**579
#2
ஈ என்ப கேசவத்தோடு இக்கு முன்னிலைஅசைச்சொல்
சீயே பாரதி பொன் ஐயை சீயெனல் விடமே காந்தி
தீ அறிவு அளறு செந்தீ தீமை தீம் இவை ஐம்பேர் ஆம்
வீ மலர் புள் சா நீக்கம் மீ என்ப மேல் விண் ஆமே
**580
#3
மை தகர் இளமை மாசு வடு மலடு அஞ்சனம் செல்
பை பைம்மை ஏர் அராவின்பணமொடு பை நாற்பேர் ஆம்
தை என்ப மகரராசி சாற்றும் ஓர் மதியே பூசம்
வை என்ப புல்லு கூர்மை வைக்கோல் என்று இவை முப்பேர்
**581
#4
ஓ இரக்கச்சொல் நீக்கமோடு நீர்த்தகைகபாடம்
தூ பகை தசை பற்றுக்கோல் சுத்தம் புள்இறகு வெண்மை
பூ மலர் அழகு வையம் பொலிவு இலை பிறப்புக் கூர்மை
சே என்பது இடபம் ஏறு சிவப்பொடு விலங்குஏறு ஆமே
**582
#5
ஐ என்ப கடவுள் ஆசான் ஆதிபன் அழகு இடைச்சொல்
நை கபம் இருமல் நுண்மை நாதன் சாரியை மந்தாரம்
கை என்ப சிறுமை சார்பு கறை இடம் சீலம் செங்கை
வெய்ய போரணியினோடு ஒப்பனை இவை மேவும் எண்பேர்
**583
#6
மா வண்டு பெருமை பிண்டி வாசி கூப்பிடல் வெறுத்தல்
காவுறு விலங்கு செல்வம் காநிறம் கமலை பத்து ஆம்
கோ விழி பசு நீர் திக்கு குலிசம் விண் கிரணம் பூமி
ஏ உரை சுவர்க்கம் வேந்தன் இரங்கல் வெற்பு ஈரேழ் ஆமே
** ( ஓரெழுத் தொருசொற் பல்பொருள் முற்றிற்று )
**வேதகிரியார் சூடாமணி முற்றிற்று
**
|