|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
ஏ (1)
ஏ உரை சுவர்க்கம் வேந்தன் இரங்கல் வெற்பு ஈரேழ் ஆமே - 19.ஓரெழுத்துபலபொருள்:19 6/4
TOP
ஏகமே (1)
எக்கலே பொருதல் ஏறல் ஏகமே தனிமை ஒன்று - 1.ககரவெதுகை:1 16/1
TOP
ஏகல் (1)
ஏகல் போகுதல் நடத்தல் உயர்ச்சியும் இயம்பும் முப்பேர் - 1.ககரவெதுகை:1 33/3
TOP
ஏகனே (1)
ஏகனே கடவுள் ஈசன் இகலனே நரி ஓரி பேர் - 1.ககரவெதுகை:1 30/2
TOP
ஏகாந்தப்பேர் (1)
ஒருவந்தம் சம்பந்தத்தோடு ஒற்றுமை ஏகாந்தப்பேர் - 12.ரகரவெதுகை:12 35/4
TOP
ஏங்கல் (3)
அகவல் பா ஏங்கல் கூத்து ஆம் அகலமே விரிவு மார்பு - 1.ககரவெதுகை:1 8/4
விமலனே கடவுள் ஈசன் விம்மலே ஒலித்தல் ஏங்கல்
திமிர்தலே வளர்தல் பூசல் தீம் என்பது இமிழ் சுவாது - 10.மகரவெதுகை:10 4/2,3
ஆலலே ஒலித்தல் ஏங்கல் ஆடுதல் முப்பேர் ஆமே - 13.லகரவெதுகை:13 31/4
TOP
ஏங்கலே (1)
ஏங்கலே உரோதனம் மிக்கு இரங்குதல் உட்கலோடு - 2.ஙகரவெதுகை:2 12/1
TOP
ஏட்டை (1)
எள்ளலே நகைப்பு நிந்தை எளிமையே தனிமை ஏட்டை
அள்ளலே நிரையம் சேறோடு அள்ளுதல் முப்பேர் ஆகும் - 16.ளகரவெதுகை:16 18/2,3
TOP
ஏடகம் (1)
ஏடகம் பனை நல்லாடை இலாங்கலி பலகை தோடு - 5.டகரவெதுகை:5 26/2
TOP
ஏடனே (1)
ஏடனே வதிரன் பாங்கன் இடும்பையே துன்பம் அச்சம் - 5.டகரவெதுகை:5 32/1
TOP
ஏண் (2)
ஏணம் மான் அயிணம் பீடு ஏண் எண்ணலே மதித்தல் தேர்ச்சி - 6.ணகரவெதுகை:6 24/2
மானமே அளவு இலச்சை விமானம் ஏண் பெருமை குற்றம் - 18.னகரவெதுகை:18 17/2
TOP
ஏணம் (1)
ஏணம் மான் அயிணம் பீடு ஏண் எண்ணலே மதித்தல் தேர்ச்சி - 6.ணகரவெதுகை:6 24/2
TOP
ஏணியே (1)
ஏணியே உலகோடு எல்லை இறைவை மான் என்றும் சொல்லும் - 6.ணகரவெதுகை:6 25/4
TOP
ஏத்துதலும் (1)
பரவல் சொல்லுதல் இறைஞ்சல் பரத்தல் ஏத்துதலும் ஆமே - 12.ரகரவெதுகை:12 6/4
TOP
ஏதமே (1)
ஏதமே துன்பம் கேடு குற்றமும் இயம்பும் நாமம் - 7.தகரவெதுகை:7 34/3
TOP
ஏதி (1)
ஏதி ஆயுதம் வாள் என்ப இதரர் அந்நியர் கீழ்மக்கள் - 7.தகரவெதுகை:7 37/4
TOP
ஏது (4)
நிபம் ஏது உவமை ஆகும் நீப்பு என்ப துறவு நீத்தல் - 9.பகரவெதுகை:9 1/1
பரியின்கல்லணை சீமூதம் பல்லியம் தொடர்பு ஏது ஆமே - 12.ரகரவெதுகை:12 58/4
மூலம் ஓர் நோய் கிழங்கு முதல் வேர் ஏது ஓர் நாள் ஆகும் - 13.லகரவெதுகை:13 30/2
திறம் குணம் வகையோடு ஏது திடன் நரம்புஎஞ்சியாழ் ஆம் - 17.றகரவெதுகை:17 3/3
TOP
ஏந்தல் (1)
ஏந்தல் பீடு உயர்ச்சி அண்ணல் இறைவன் ஏந்துதல் வெற்பு என்ப - 8.நகரவெதுகை:8 15/3
TOP
ஏந்தலும் (1)
இந்திரன் வலாரி மும்மீன் ஏந்தலும் இயம்பற்பாற்று ஆம் - 8.நகரவெதுகை:8 13/3
TOP
ஏந்திரங்கள் (1)
பொறி மரக்கலமே செல்வம் பூமகள் ஏந்திரங்கள்
அறிவு இலாஞ்சனை எழுத்தோடு ஐம்பொறி வரி ஒன்பான்பேர் - 17.றகரவெதுகை:17 27/1,2
TOP
ஏந்துதல் (1)
ஏந்தல் பீடு உயர்ச்சி அண்ணல் இறைவன் ஏந்துதல் வெற்பு என்ப - 8.நகரவெதுகை:8 15/3
TOP
ஏமம் (1)
ஏமம் பொன் கடவுள் வேந்தன் என இவை ஈரைம்பேரே - 10.மகரவெதுகை:10 27/4
TOP
ஏமமே (1)
ஏமமே இரா உன்மத்தம் இன்பம் பொன் விசிதம் காவல் - 10.மகரவெதுகை:10 26/1
TOP
ஏமமோடு (1)
இருள் கரி கறுப்பு உன்மத்தம் ஏமமோடு இருள்நிலப்பேர் - 12.ரகரவெதுகை:12 30/2
TOP
ஏமாப்பு (1)
இமிழ் ஒலி இனிமை ஆகும் ஏமாப்பு களிப்பே எண்ணம் - 10.மகரவெதுகை:10 6/3
TOP
ஏர் (29)
தகடு அடர்பு இலை ஐம்மை பேர் தகைமை ஏர் இயல்பு பீடு ஆம் - 1.ககரவெதுகை:1 6/2
சேகரம் தலை மா ஏர் ஆம் திகை திசை சுணங்கும் ஆமே - 1.ககரவெதுகை:1 24/4
மஞ்சு பூண் பனி ஏர் மேகம் வலி யானைமுதுகு நாகு - 4.ஞகரவெதுகை:4 2/2
விடங்கம் ஏர் கொடி கொடுங்கை முகடு ஆண்மை விளம்பும் ஐம்பேர் - 5.டகரவெதுகை:5 2/4
சேடு என்ப பெருமை நன்மை திரட்சி ஏர் குழவு ஐம்பேர் ஆம் - 5.டகரவெதுகை:5 28/2
அணங்கு நோய் ஏர் சூர் அச்சம் ஆசை பெண் கொலை அரம்பை - 6.ணகரவெதுகை:6 4/1
அணி தொடை பணி பீடு ஏர் நன்று அலங்காரம் நிரை ஊகப்பேர் - 6.ணகரவெதுகை:6 8/4
வண்மை ஏர் வழங்கல் வாய்மை வளம் புகழ் வலி ஆம் என்ப - 6.ணகரவெதுகை:6 18/3
வண்ணம் ஏர் நன்மை பண்பு வடிவு அலங்காரம் கேழ் ஆம் - 6.ணகரவெதுகை:6 19/2
மதன் வலி வண்மை வேள் ஏர் மாட்சிமை கலக்கம் என்ப - 7.தகரவெதுகை:7 3/1
பத்திரம் சுரிகை வெற்பு ஏர் படை இலை சிறகு அம்பு ஆணு - 7.தகரவெதுகை:7 24/2
மாதவன் வசந்தன் மால் ஆம் மாதர் ஏர் மகளிர் ஆசை - 7.தகரவெதுகை:7 46/1
காந்தி ஏர் பிரவையோடு காவி வைடூரியப்பேர் - 8.நகரவெதுகை:8 19/2
பந்தம் ஏர் சிவிறி கொண்டை பதணம் கட்டு உறவு புஞ்சம் - 8.நகரவெதுகை:8 20/3
அமலமே ஏர் அழுக்கின்மை பேர் அமுதமே அமிழ்தம் கீரம் - 10.மகரவெதுகை:10 5/3
அம்மை ஏர் மறுமை கந்தி ஆய் உமை இயக்கி என்ப - 10.மகரவெதுகை:10 11/1
கொம்மை ஏர் இளமை வட்டம் கொங்கை கைகுவித்துக்கொட்டல் - 10.மகரவெதுகை:10 11/4
காமுகன் விடன் மால் என்ப காமர் ஏர் ஒளி அவாவே - 10.மகரவெதுகை:10 19/4
வியல் அகழ் மேன்மை நீர் ஏர் விளம்பு ஈராறுபேர் ஆகும் - 11.யகரவெதுகை:11 28/2
ஆரி ஏர் கொடுமை மேன்மை அபயனும் புதனும் என்ப - 12.ரகரவெதுகை:12 43/3
ஏர் அழகு உழுபெற்றப்பேர் இராசியே ஓரை கூட்டம் - 12.ரகரவெதுகை:12 51/1
நலம் உபகாரம் இன்பம் நன்மை கண்ணோட்டம் ஏர் ஆம் - 13.லகரவெதுகை:13 10/1
அலரி கண்வரி நீர் வாவி அருக்கன் ஓர் மரம் ஏர் தேனீ - 13.லகரவெதுகை:13 13/1
செவ்வி ஏர் பொழுதினோடு சித்திரை பருவம் ஆகும் - 14.வகரவெதுகை:14 15/2
நவ்வி ஏர் இளமை அத்தநாளொடு தோணி மான் ஆம் - 14.வகரவெதுகை:14 16/3
ஈழம் ஏர் மடமை இன்ன எழுபேர் இயம்பல் ஆமே - 15.ழகரவெதுகை:15 21/4
மனை மனைக்கிழத்தி இல் ஆம் மனோகரம் ஏர் இச்சை பேர் - 18.னகரவெதுகை:18 4/4
தன்மை ஏர் இயல்பினோடு மூவிடத்தொன்றும் சாற்றும் - 18.னகரவெதுகை:18 16/3
பை பைம்மை ஏர் அராவின்பணமொடு பை நாற்பேர் ஆம் - 19.ஓரெழுத்துபலபொருள்:19 3/2
TOP
ஏரண்டம் (1)
சிகண்டி ஓர் பண் ஏரண்டம் செழு மயில் அலி நாற்பேரே - 1.ககரவெதுகை:1 7/2
TOP
ஏரல் (1)
எருந்து உரல் ஏரல் என்ப ஏரியே குளம் பிண்டி பேர் - 12.ரகரவெதுகை:12 14/3
TOP
ஏரி (1)
இலஞ்சி மா மகிழ் புன்கு ஏரி எயில் கொப்பூழ் குணமும் ஏற்கும் - 13.லகரவெதுகை:13 3/3
TOP
ஏரியே (1)
எருந்து உரல் ஏரல் என்ப ஏரியே குளம் பிண்டி பேர் - 12.ரகரவெதுகை:12 14/3
TOP
ஏரோடு (1)
அம் பயோதரம் நீர் ஏரோடு அசைச்சொல் சாரியையும் ஆமே - 10.மகரவெதுகை:10 12/4
TOP
ஏல்வையே (1)
எலி பூரம் களிமம் என்ப ஏல்வையே தடாகம் காலம் - 13.லகரவெதுகை:13 4/3
TOP
ஏலம் (2)
துடி கலை உதடு உடுக்கை சூர்ப்பகையாடல் ஏலம்
கொடிறு என்ப கதுப்பு பூசம் பற்றிரும்பு எனவும் கூறும் - 5.டகரவெதுகை:5 4/3,4
கோடரம் குரங்கு சோலை கொம்பு எட்டி துரகம் ஏலம்
ஆடவர் புருடர் நாமம் ஆம் இளையவர்க்கும் ஆமே - 5.டகரவெதுகை:5 30/3,4
TOP
ஏலமே (1)
ஏலமே மயிர்ச்சாந்தோடு வாசனைப்பண்டம் என்ப - 13.லகரவெதுகை:13 33/3
TOP
ஏவல் (5)
அகல் அல்குல் தகழி ஏவல் அகிலமே எல்லாம் பூமி - 1.ககரவெதுகை:1 14/2
கிங்கிரர் ஏவல் செய்வோர் கிங்கிர கணமும் ஆமே - 2.ஙகரவெதுகை:2 7/4
பணி ஏவல் மொழி பாம்பு ஈகை பட்டு தோல்கருவி பூண் ஆம் - 6.ணகரவெதுகை:6 5/4
வியங்கோள் என்பதுவே ஐம்பால் மூவிடம் விளக்கும் ஏவல்
முயங்கலே தழுவவோடு புணர்தலும் மொழியல் ஆமே - 11.யகரவெதுகை:11 11/3,4
ஏவு என்ப வருத்தம் ஏவல் அத்திரம் முப்பேர் என்ப - 14.வகரவெதுகை:14 23/1
TOP
ஏவலே (1)
ஏவலே வியங்கோள் ஆணை இலம்பாடும் இசைக்கும் முப்பேர் - 14.வகரவெதுகை:14 21/2
TOP
ஏவு (1)
ஏவு என்ப வருத்தம் ஏவல் அத்திரம் முப்பேர் என்ப - 14.வகரவெதுகை:14 23/1
TOP
ஏவுவானொடு (1)
வியவனே பதிகன் ஏவுவானொடு மீளியும் பேர் - 11.யகரவெதுகை:11 1/2
TOP
ஏழ் (2)
சத்தியம் சபதம் மெய் ஆம் சத்தம் ஏழ் ஒலியும் ஆமே - 7.தகரவெதுகை:7 22/4
உந்திய சகடம் பற்றுக்கோல் இருசு ஓதும் ஏழ் பேர் - 8.நகரவெதுகை:8 21/2
TOP
ஏழ்கிழமை (1)
வாரம் ஏழ்கிழமை அன்பு மலைச்சாரல் உரிமை பங்கோடு - 12.ரகரவெதுகை:12 64/3
TOP
ஏழ்பேர் (12)
உகைத்தலே உயர்த்தல் என்ப ஒடித்தலும் உரைக்கும் ஏழ்பேர் - 1.ககரவெதுகை:1 40/4
தேக்கிய வஞ்சம் நுண்மை சிவாகமம் ஒன்றும் ஏழ்பேர்
தூக்கு உறி நிறையே ஆசான் துலாம் கவி தெளிதலோடு - 1.ககரவெதுகை:1 45/2,3
கோடுறு கரியின்பந்தி மலைமுடி கூறும் ஏழ்பேர் - 5.டகரவெதுகை:5 39/4
திண்டி வெண்குடை சகுந்தம் செய்ய கோகனகம் ஏழ்பேர்
முண்டகம் தாழை நெற்றி முளரி முத்தகம் முள்மூலம் - 6.ணகரவெதுகை:6 33/2,3
கண்ணியர்ஆடல் மாவின்துயிலிடம் ஏழ்பேர் காட்டும் - 6.ணகரவெதுகை:6 35/4
துதிபெறு கற்பின்மிக்காள் உரோகிணி சொல்லும் ஏழ்பேர்
பதி மனை இடம் ஊர் கேள்வன் பார்த்திபன் நகரம் மூத்தோன் - 7.தகரவெதுகை:7 53/2,3
அம்பகம் குலம் யானை மகன் முறை அறையும் ஏழ்பேர்
உம்பரே வானோர் பார்ப்பார் உயர்ச்சி உவ்விடத்தினோடே - 10.மகரவெதுகை:10 29/2,3
பொரும் களம் திருவரங்கம் சத்திரம் போற்றும் ஏழ்பேர்
மரக்கால் ஆயிலியம் வீழ்க்கை வள்ளம் நாரணியின் கூத்தோடு - 12.ரகரவெதுகை:12 56/2,3
திரமுறு கலவி கூத்து ஐம்பொறி திறம் செப்பும் ஏழ்பேர் - 12.ரகரவெதுகை:12 57/4
நாரியர்தொகுதி அற்றம் என இவை நவிலும் ஏழ்பேர்
தோரை வேயரிசி ஓர் நெல் சோணிதம் ஓர் எண் அங்கை - 12.ரகரவெதுகை:12 69/2,3
பாரும் சல்லகியும் பாகும் சோதியும் பகரும் ஏழ்பேர் - 12.ரகரவெதுகை:12 71/4
மேவு சாதனத்தினோடு பீடிகை விளம்பும் ஏழ்பேர்
தாவு என்பது இகல் வருத்தம் தஞ்சம் தற்செல்வமோடு - 14.வகரவெதுகை:14 28/2,3
TOP
ஏழ்பேராம் (1)
அந்த நன்னிலத்து பாடை யாறு வாமனன் ஏழ்பேராம் - 8.நகரவெதுகை:8 21/4
TOP
ஏழ்பேரே (1)
மேலும் நோய் இயல்பு ஒழுங்கு வேந்தன்இல் இரா ஏழ்பேரே - 13.லகரவெதுகை:13 48/4
TOP
ஏழன்உருபு (1)
தீம் பச்சையுடனே ஏழன்உருபு இருநால் பேர் செப்பும் - 10.மகரவெதுகை:10 28/4
TOP
ஏழும் (1)
ஓதிய ஏழும் மண்ணே ஆதியா உற்ற ஐந்து - 7.தகரவெதுகை:7 59/2
TOP
ஏழையே (1)
ஏழையே அறிவிலான் பெண் இலம்பாட்டோன் என முப்பேர் ஆம் - 15.ழகரவெதுகை:15 15/2
TOP
ஏற்கும் (2)
வடிவு விம்மிதம் சிறப்பு வரைவு ஆடல் ஐயம் ஏற்கும்
கடிஞை சீக்கிரம் கரிப்பு காலம் கத்திகை மனத்தோடு - 5.டகரவெதுகை:5 40/2,3
இலஞ்சி மா மகிழ் புன்கு ஏரி எயில் கொப்பூழ் குணமும் ஏற்கும்
அலங்கலே கலுழ்தல் மாலை அசைவு இலங்குதல் தளிர்ப்பேர் - 13.லகரவெதுகை:13 3/3,4
TOP
ஏற்றமரமே (1)
துலை கனம் நிறையினோடு துலாம் ஏற்றமரமே தூரம் - 13.லகரவெதுகை:13 20/1
TOP
ஏற்றமே (1)
ஏற்றமே அதிகம் பூட்டை இவர்தலும் புகழும் என்ப - 17.றகரவெதுகை:17 26/2
TOP
ஏற்றல் (1)
முட்டி காஞ்சிரமே பிச்சை முடுகலே கடுகல் ஏற்றல்
விட்டிலே சலபம் புக்கி வீடு என்ப மனை முத்தி பேர் - 5.டகரவெதுகை:5 25/1,2
TOP
ஏற்றலே (1)
ஏற்றலே இரத்தல் கோடல் எதிர்ந்துபோர்செயல் எழுப்பல் - 17.றகரவெதுகை:17 24/1
TOP
ஏறல் (1)
எக்கலே பொருதல் ஏறல் ஏகமே தனிமை ஒன்று - 1.ககரவெதுகை:1 16/1
TOP
ஏறு (14)
பகடு இபம் பெருமை ஏறு பஃறி ஆண்மேதி தெப்பம் - 1.ககரவெதுகை:1 6/1
தக்க ஆன் ஏறு கோழி சாற்றும் மூவிருபேர் ஆமே - 1.ககரவெதுகை:1 41/4
பசு ஏறு சீவன் ஆ ஆம் பசப்பு என்ப பசலை பொன்மை - 3.சகரவெதுகை:3 2/1
குண்டை ஏறு இடபம் ஆகும் கோணாய் ஆண்நரி தோண்டான் ஆம் - 6.ணகரவெதுகை:6 17/1
பூணி ஏறு இடபராசி புணர்ப்பு என்பது உடம்பு கூடல் - 6.ணகரவெதுகை:6 29/3
பாண்டிலே கிணி இடிஞ்சில் பண்டி ஏறு இடபம் பீரம் - 6.ணகரவெதுகை:6 36/1
கோபதி வலாரி ஏறு கோபமே சினம் மூதா ஆம் - 9.பகரவெதுகை:9 7/2
வையமே உரோணி ஏறு வசுந்தரை சகடமோடு - 11.யகரவெதுகை:11 29/3
நரை சரை கவரி வெண்மை நாரை வெண்பரி ஏறு ஆமே - 12.ரகரவெதுகை:12 37/4
ஊர்தி கூவிரியே பாண்டில் உம்பல் ஏறு அணிகம் வாசி - 12.ரகரவெதுகை:12 50/1
மூரி ஏறு எருமை சோம்பல் முந்தும் ஊழ் இடபராசி - 12.ரகரவெதுகை:12 66/1
கூளி பேய் தொகுதி ஏறு குறள் படைத்தலைவன் குற்றம் - 16.ளகரவெதுகை:16 29/3
ஏறு இடி முதல்நாள் ஆகும் இடபமோடு எருதும் ஆமே - 17.றகரவெதுகை:17 22/4
சே என்பது இடபம் ஏறு சிவப்பொடு விலங்குஏறு ஆமே - 19.ஓரெழுத்துபலபொருள்:19 4/4
TOP
ஏறுதல் (1)
இவர்தலே எழுச்சி ஆசை ஏறுதல் மேவல் என்ப - 14.வகரவெதுகை:14 2/2
TOP
ஏறும் (1)
விடை எதிர்மொழியும் ஏறும் விடுத்தலோடு இடபமும் பேர் - 5.டகரவெதுகை:5 13/1
TOP
ஏறோடு (1)
நந்தியே குண்டை செக்கான் நந்தீச்சுரன் ஏறோடு
சந்திரமவுலிஅண்ணல் சிறுபறை அறுபேர் சாற்றும் - 8.நகரவெதுகை:8 22/3,4
TOP
ஏனம் (2)
கோண் கொடுங்கோன்மை கோட்டம் கோணியே ஏனம் ஓர் எண் - 6.ணகரவெதுகை:6 30/1
ஏனம் ஓலைக்குடை பேர் எறுழியும் மறமும் என்ப - 18.னகரவெதுகை:18 22/3
TOP
ஏனலே (1)
ஏனலே செந்தினை பேர் தினைப்புனம் கதிரே என்ப - 18.னகரவெதுகை:18 21/4
TOP
ஏனாதி (2)
மங்குல் கார் இருள் விண் முப்பேர் மங்கலன் குசன் ஏனாதி
பங்கியே பிற மயிர்க்கும் பகரும் ஆண்மயிர்க்கும் பேர் ஆம் - 2.ஙகரவெதுகை:2 4/1,2
ஏனாதி மஞ்சிகன் மந்திரியும் தந்திரியும் என்ப - 18.னகரவெதுகை:18 23/3
TOP
ஏனையே (1)
ஏனையே ஒழிவு மற்றை எனும் இடைச்சொல்லும் ஆகும் - 18.னகரவெதுகை:18 19/3
TOP
|
|
|