<< முந்திய பக்கம்

அகராதி நிகண்டு -3 - சொற்கள் - எண்ணிக்கை

தலைப்பு நூற்பாக்கள் அடிகள் சொற்கள்
1. உயிர் வருக்கம்3393492179
2. ககர வருக்கம்2762871781
3. சகர வருக்கம்162163992
4. ஞகர வருக்கம்101062
5. தகர வருக்கம்125127803
6. நகர வருக்கம்7575450
7. பகர வருக்கம்1731771126
8. மகர வருக்கம்119120763
9. யகர வருக்கம்9951
10. வகர வருக்கம்131384
மொத்தம் 1301 1330 8291
மொத்தம் தனிச்சொற்கள் 4346

விளக்கம்

1. வழக்காறு-1

ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ், அச் சொல் வரும் அடி முழுமையாகக் கொடுக்கப்படும். அதனை அடுத்து அந்த அடி இடம்பெறும் நூலின் பெயரும் கொடுக்கப்படும்.

அதனை அடுத்து அச் சொல் இடம்பெறும் பகுதியின் எண் கொடுக்கப்படும். அதனை அடுத்து அந்தப் பகுதியில் அச் சொல் இடம்பெறும் நூற்பாவின் எண்ணும், அந் நூற்பாவில் அச் சொல் இடம்பெறும் அடியின் எண்ணும் கொடுக்கப்படும்.

2. வழக்காறு-2

ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும். ஆனால், அச்சொல், ஒரு அதிகாரத்தின் இறுதி அடியில் இருந்தாலோ அல்லது அச்சொல்லின் பொருள் அதே அடியில் முடிவடைந்தாலோ அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது.

எ.காட்டு

    ஆகுலம் (3)
அயர்வே ஆகுலம் அணங்கு கசிவே - 8.பண்பு:8 164/2
வறுமை பருவரல் புன்கண் நோ ஆகுலம்
  உறுவல் கவ்வை பனி வெய்துறல் மம்மர் - 8.பண்பு:8 175/7,8
ஆகுலம் புலம்பல் கோடணை அரவம் - 10.ஒலிப்பெயர்:10 174/2

3. வழக்காறு-3

ஓர் அடியில் ஒரே சொல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வந்தால், அந்த அடி அத்தனை முறை கொடுக்கப்பெறும்.