<< முந்திய பக்கம்

முத்தொள்ளாயிரத்தில் உள்ள சொற்கள்/சீர்-தளைகள் எண்ணிக்கை

விவரம் பாடல்கள் அடிகள் சொற்கள் பிரிசொற்கள் கட்டுருபன்கள் அடைவுச்சொற்கள் தனிச்சொற்கள்
மொத்தம் 109 436 2306 30 29 2365 1426
சீர்கள்
நாள்மலர்காசுபிறப்பு
16 (14.7%) 33 (30.3%) 35 (32.1%) 25 (22.9%)
தேமாபுளிமாகூவிளம்கருவிளம்
402 (26.3%) 154 (10.1%) 164 (10.7%) 116 (7.6%)
தேமாங்காய்புளிமாங்காய்கூவிளங்காய்கருவிளங்காய்
244 (16.0%) 142 (9.3%) 170 (11.1%) 134 (8.8%)
தளைகள்
இயற்சீர்வெண்வெண்சீர்வெண்
836 (54.8%) 690 (45.2%)

விளக்கம்

சொற்கள் :-	words between spaces
பிரிசொற்கள்:-	words with underscores ; taken as separate words (மயிர்_குறை_கருவி)
கட்டுருபன்கள்:-	words with hyphen – செல்-மின்
அடைவுச்சொற்கள்:- words for concordance - இந்த மூன்றனின் கூட்டுத்தொகை 

சொல் = இரு_தலை_கொள்ளி (1)			சொல் = செல்-மின் (1)
பிரிசொற்கள் = இரு, தலை, கொள்ளி (3)		கட்டுருபன் = -மின் (1)
அடைவுச்சொற்கள் = 4				அடைவுச்சொற்கள் = 2

1. பிரிசொற்கள்
பிரிசொற்கள் என்பன கூட்டுச்சொல்லின் பகுதிகள். ஈர்_ஆறு, புளி_மரம், துன்_அரும், ஆ_கோள் போன்றன. சொல்லின் பகுதிகள் அடிக்கோட்டால் இணைக்கப்பெறும். முழுச்சொல்லும், அவற்றின் பகுதிகளும் தனித்தனியே கணக்கிடப்படும். காட்டாக, இரு_தலை_கொள்ளியின் என்ற சொல்லுக்குரிய பிரிசொற்கள் இரு, தலை, கொள்ளியின் ஆகிய மூன்றும். எனவே இரு_தலை_கொள்ளியின் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் இரு, தலை, கொள்ளியின் ஆகிய மூன்று சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும். 
 
எ.காட்டு

    இரு (2)
இரு_தலை_கொள்ளியின் உள் எறும்பு போல - முத்தொள் 29/3
இரு கோடும் செய்தொழில் வேறு ஆல் ஒரு கோடு - முத்தொள் 100/2

    கொள்ளியின் (1)
இரு_தலை_கொள்ளியின் உள் எறும்பு போல - முத்தொள் 29/3

    தலை (6)
இரு_தலை_கொள்ளியின் உள் எறும்பு போல - முத்தொள் 29/3
முடி தலை வெள் ஓட்டு மூளை நெய்யாக - முத்தொள் 51/1
செறிவார் தலை மேல் நடந்து மறி திரை - முத்தொள் 66/2
தலை படுப தார் வேந்தர் மார்பு - முத்தொள் 87/4
அரு மணி ஐம் தலை ஆடு அரவம் வானத்து - முத்தொள் 96/1
கொடி தலை தார் தென்னவன் தோற்றான் போல் நின்றான் - முத்தொள் 107/1

2. கட்டுருபன்
கட்டுருபன் என்பது ஒட்டுச்சொல் போன்றது. அதே பொருளில் தனித்து வர இயலாதது. தோறும், கொல், மன், மின், கண்(ஏழன் உருபு) போன்றது. அகற்சி-கண்ணும், உற்றன-கொல், முடியும்-மன், பொலி-மின் போன்றவற்றில் வரும் ஒட்டுச்சொற்கள் இடைக்கோட்டால் இணைக்கப்பெறும். இவை முழுச்சொல்லாகவும், ஒட்டுச்சொல்லாகவும் எடுத்துக்கொள்ளப்படும். 

எ.காட்டு
என்-கொல் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், என்-கொல், -கொல் என்ற இரு சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும். என் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்களில் இது இடம்பெறாது.

    என்-கொல் (1)
என்-கொல் இவர் அறிந்தவாறு - முத்தொள் 6/4

    -கொல் (3)
என்-கொல் இவர் அறிந்தவாறு - முத்தொள் 6/4
நெடும் கடை நின்றது-கொல் தோழி நெடும் சின வேல் - முத்தொள் 7/2
என்னை-கொல் கைம்மாறு இனி - முத்தொள் 53/4

3. வழக்காறு-1
ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி முழுமையாகக் கொடுக்கப்படும். அதனை அடுத்து அச் சொல் இடம்பெறும் காதையின் எண்/அடியின் எண் கொடுக்கப்படும்.

4. வழக்காறு-2
ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும். ஆனால், அச்சொல், ஒரு பாடலின் இறுதி அடியில் இருந்தால் அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது.

எ.காட்டு

    அடி (4)
திருந்து அடி புண்ணாகி செவ்வி இலனே - முத்தொள் 47/3
துடி அடி தோல் செவி தூங்கு கை நால் வாய் - முத்தொள் 72/1
அடி மிசையே காணப்படும் - முத்தொள் 91/4
ஏம மணி பூண் இமையார் திருந்து அடி
 பூமி மிதியா பொருள் - முத்தொள் 97/3,4

    கதவு (3)
கண்டு உலாஅம் வீதி கதவு - முத்தொள் 2/4
காணிய சென்று கதவு அடைத்தேன் நாணி - முத்தொள் 8/2
கண்ணார காண கதவு - முத்தொள் 24/4

5. வழக்காறு-3
ஓர் அடியில் ஒரே சொல் இரண்டு முறை வந்தால், அந்த அடி இரண்டு முறை கொடுக்கப்பெறும்.

எ.காட்டு

    யான் (9)
தெங்கு உண்ட தேரை படுவழி பட்டேன் யான் திண் தேர் வளவன் திறத்து - முத்தொள் 27/3,4
விலங்கி யான் வேண்டா எனினும் நலன் தொலைந்து - முத்தொள் 28/2
மண் ஆளும் செங்கோல் வளவனை யான் இதன்றோ - முத்தொள் 31/3
உரையாயோ யான் உற்ற நோய் - முத்தொள் 38/4
என் காண்பேன் என் அலால் யான் - முத்தொள் 61/4
பிடியே யான் நின்னை இரப்பல் கடி கமழ் தார் - முத்தொள் 72/2
யான் ஊட தான் உணர்த்த யான் உணராவிட்டதன் பின் - முத்தொள் 85/1
யான் ஊட தான் உணர்த்த யான் உணராவிட்டதன் பின் - முத்தொள் 85/1
தான் ஊட யான் உணர்த்த தான் உணரான் தேன் ஊறு - முத்தொள் 85/2