விளக்கம்
விளக்கம்
1. வழக்காறு-1
ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து
அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது.
அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி முழுமையாகக்
கொடுக்கப்படும். அதனை அடுத்து அந்த அடி இடம்பெறும் நூலின் பெயரும் கொடுக்கப்படும்.
அதனை அடுத்து அச் சொல் இடம்பெறும் பகுதியின் எண் கொடுக்கப்படும். அதனை அடுத்து அந்தப் பகுதியில்
அச் சொல் இடம்பெறும் நூற்பாவின் எண்ணும், அந் நூற்பாவில் அச் சொல் இடம்பெறும் அடியின் எண்ணும் கொடுக்கப்படும்.
2. வழக்காறு-2
ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும்.
ஆனால், அச்சொல், ஒரு அதிகாரத்தின் இறுதி அடியில் இருந்தாலோ அல்லது அச்சொல்லின் பொருள்
அதே அடியில் முடிவடைந்தாலோ அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது.
எ.காட்டு
சேட்டை (3)
சேட்டை என்ன விளம்புவர் - 2.வானவர் :2 96/2
அன்னை செவிலி தெளவை சேட்டை
முன்னவள் மூத்தாள் முன்பிறந்தாள் பெயர் - 5.ஆடவர் :5 188/1,2
சின்னம் தட்டு சேட்டை முச்சில் முறம் - 6.அநுபோக :6 583/1
3. வழக்காறு-3
ஓர் அடியில் ஒரே சொல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வந்தால், அந்த அடி அத்தனை முறை கொடுக்கப்பெறும்.