<<முந்திய பக்கம்

பொதிகை நிகண்டு - முதற்பகுதி - சொற்கள் - எண்ணிக்கை

தலைப்புநூற்பாக்கள்அடிகள்சொற்கள்
----------------------- -------- ----------- ------------------
0. காப்பு 14 16
1. தெய்வப் பெயர்த் தொகுதி 53 212 2154
2. மக்கள் பெயர்த் தொகுதி59 236+1 2526
3. விலங்கின் பெயர்த் தொகுதி 37 148 1616
4. மரப் பெயர்த் தொகுதி36 144 1593
5. இடப் பெயர்த் தொகுதி 33 1321494
6. இயற்கைச் செயற்கைப் பலபொருள் பெயர்த் தொகுதி 48192 2195
7. பண்பு பற்றிய பெயர்த் தொகுதி 40 160 1996
8. ஒலி பற்றிய பெயர்த் தொகுதி 17 68 740
9. செயல் பற்றிய பெயர்த் தொகுதி 29 116 1276
10. ஒரு சொல் பல்பொருள் பெயர்த் தொகுதி 144576 8065
---- ----------------- ----------- -----------
மொத்தம் 496+11989 23671
---- ----------------- -------- -----------
மொத்தம் தனிச்சொற்கள் 12105
விளக்கம்
விளக்கம் 1. வழக்காறு-1 ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி முழுமையாகக் கொடுக்கப்படும். அதனை அடுத்து அந்த அடி இடம்பெறும் நூலின் பெயரும் கொடுக்கப்படும். அதனை அடுத்து அச் சொல் இடம்பெறும் பகுதியின் எண் கொடுக்கப்படும். அதனை அடுத்து அந்தப் பகுதியில் அச் சொல் இடம்பெறும் நூற்பாவின் எண்ணும், அந் நூற்பாவில் அச் சொல் இடம்பெறும் அடியின் எண்ணும் கொடுக்கப்படும். 2. வழக்காறு-2 ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும். ஆனால், அச்சொல், ஒரு அதிகாரத்தின் இறுதி அடியில் இருந்தாலோ அல்லது அச்சொல்லின் பொருள் அதே அடியில் முடிவடைந்தாலோ அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது. எ.காட்டு ஆகுலம் (3) அயர்வே ஆகுலம் அணங்கு கசிவே - 8.பண்பு:8 164/2 வறுமை பருவரல் புன்கண் நோ ஆகுலம் உறுவல் கவ்வை பனி வெய்துறல் மம்மர் - 8.பண்பு:8 175/7,8 ஆகுலம் புலம்பல் கோடணை அரவம் - 10.ஒலிப்பெயர்:10 174/2 3. வழக்காறு-3 ஓர் அடியில் ஒரே சொல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வந்தால், அந்த அடி அத்தனை முறை கொடுக்கப்பெறும்.