<< முந்திய பக்கம்

மண்டல புருடர் இயற்றிய சூடாமணி நிகண்டு - சொற்கள் - எண்ணிக்கை

தலைப்பு நூற்பாக்கள் அடிகள் சொற்கள்
1. தேவப் பெயர்த் தொகுதி1014042334
2. மக்கள் பெயர்த் தொகுதி1064242495
3. விலங்கின் பெயர்த் தொகுதி783121952
4. மரப் பெயர்த் தொகுதி682721636
5. இடப் பெயர்த் தொகுதி682721692
6. பல் பொருள் பெயர்த் தொகுதி35140852
7. செயற்கை வடிவப் பெயர்த் தொகுதி763041872
8. பண்பு பற்றிய பெயர்த் தொகுதி823282131
9. செயல் பற்றிய பெயர்த் தொகுதி672681616
10. ஒலி பற்றிய பெயர்த் தொகுதி522081257
11. ஒரு சொல் பல் பொருள் பெயர்த் தொகுதி31012408580
12. பல் பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி1546163742
மொத்தம் 1197 4788 30159
மொத்தம் தனிச்சொற்கள் 14470

விளக்கம்

1. வழக்காறு-1

ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ், அச் சொல் வரும் அடி முழுமையாகக் கொடுக்கப்படும். அதனை அடுத்து அந்த அடி இடம்பெறும் நூலின் பெயரும் கொடுக்கப்படும்.

அதனை அடுத்து அச் சொல் இடம்பெறும் பகுதியின் எண் கொடுக்கப்படும். அதனை அடுத்து அந்தப் பகுதியில் அச் சொல் இடம்பெறும் நூற்பாவின் எண்ணும், அந் நூற்பாவில் அச் சொல் இடம்பெறும் அடியின் எண்ணும் கொடுக்கப்படும்.

2. வழக்காறு-2

ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும். ஆனால், அச்சொல், ஒரு அதிகாரத்தின் இறுதி அடியில் இருந்தாலோ அல்லது அச்சொல்லின் பொருள் அதே அடியில் முடிவடைந்தாலோ அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது.

எ.காட்டு

    துரோணம் (4)
கொடுமரம் துரோணம் சாபம் சிலை தனு நால் பேரே - 1.தேவப்பெயர்:1 74/1
சம்பரம் துரோணம் வெய்ய சரபம் எண்கால்புள் பேராம் - 3.விலங்கின்பெயர்:3 53/2
விம்பமே தொண்டை கொவ்வை பசிரி பாவிரி துரோணம்
  தும்பையே அலாபு மற்றை சுரை நூழில் கொடிக்கொத்தான் ஆம் - 4.மரப்பெயர்:4 35/1,2
குனி சிலை துரோணம் சாபம் கொடுமரத்தோடு வேணு - 7.செயற்கைவடிவ:7 3/2

3. வழக்காறு-3

ஓர் அடியில் ஒரே சொல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வந்தால், அந்த அடி அத்தனை முறை கொடுக்கப்பெறும்.