<< முந்திய பக்கம்

காங்கேயர் செய்த உரிச்சொல் நிகண்டு
அருணாசலம் சதாசிவம் பிள்ளை என்பவரால் பரிசோதித்துத் திருத்திச் சேர்க்கப்பட்டது - 1858
சொற்கள் - எண்ணிக்கை

தலைப்பு நூற்பாக்கள் அடிகள் சொற்கள்
0. காப்பு1420
1. தேவப்பெயர்த் தொகுதி41164696
2. மக்கள் பெயர்த் தொகுதி2288419
3. விலங்கின் பெயர்த் தொகுதி25100455
4. மரப் பெயர்த் தொகுதி2288446
5. இடப் பெயர்த் தொகுதி2080363
6. பல் பொருள் பெயர்த் தொகுதி624109
7. செயற்கை வடிவின் பெயர்த் தொகுதி936187
8. பண்புப் பெயர்த் தொகுதி2288424
9. செயல் பற்றிய பெயர்த் தொகுதி936155
10. ஒலி பற்றிய பெயர்த் தொகுதி25100460
11. ஒரு சொல் பல் பொருள் பெயர்த் தொகுதி612441221
12. பல் பெயர்க்கு ஒரு பெயர்த் தொகுதி46184882
மொத்தம் 309 1236 5787
மொத்தம் தனிச்சொற்கள் 3966

விளக்கம்

1. வழக்காறு-1
ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ், அச் சொல் வரும் அடி முழுமையாகக் கொடுக்கப்படும். அதனை அடுத்து அந்த அடி இடம்பெறும் நூலின் பெயரும் கொடுக்கப்படும்.

அதனை அடுத்து அச் சொல் இடம்பெறும் பகுதியின் எண் கொடுக்கப்படும். அதனை அடுத்து அந்தப் பகுதியில் அச் சொல் இடம்பெறும் நூற்பாவின் எண்ணும், அந் நூற்பாவில் அச் சொல் இடம்பெறும் அடியின் எண்ணும் கொடுக்கப்படும்.

2. வழக்காறு-2
ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும். ஆனால், அச்சொல், ஒரு அதிகாரத்தின் இறுதி அடியில் இருந்தாலோ அல்லது அச்சொல்லின் பொருள் அதே அடியில் முடிவடைந்தாலோ அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது.

எ.காட்டு
    ஆகுலம் (3)
அயர்வே ஆகுலம் அணங்கு கசிவே - 8.பண்பு:8 164/2
வறுமை பருவரல் புன்கண் நோ ஆகுலம்
  உறுவல் கவ்வை பனி வெய்துறல் மம்மர் - 8.பண்பு:8 175/7,8
ஆகுலம் புலம்பல் கோடணை அரவம் - 10.ஒலிப்பெயர்:10 174/2

3. வழக்காறு-3
ஓர் அடியில் ஒரே சொல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வந்தால், அந்த அடி அத்தனை முறை கொடுக்கப்பெறும்.